கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1961.04.13

Page 1
Gas T6
壽鄂
உரும்பராய் கரு
>
多
الملك .
*행(學識 : ****
│ │ │} 』
s
 
 
 

ಔಟ್ತ ty
離
隆
慈
Wー
క్రై
ཏེ་ངོ་
墨
ணுகரப்பிள்ளையார்
6.
鑑
孵籌氰

Page 2
×-*************
****++++++++++++++++半
Nష్ణా ܥܳܠ
() ஆத்ம ஜோ
妙+***→今今今→外→岭令今→令→令→今→今令今→今今令→今→今→今→令→今→今今今→今今今今今*******
(ஒர் ஆத்மீக மாத வெளியீடு)
தி
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும் இறைவன் ஆலயமே.--சுத்தானந்தர்
半++++++++++++++++++++ ܠ ܐ
ஜோதி 13 சித் திரை மீ" 1-ந் வட(13 4-61)|| 3. La 6
பொருளடக்கம் கருணுகர விநாயகர் - காவடிச்சிந்து உரும்பராய் . u iiiT iiimI u II fi சாத்தானந்தரின் கடிதங்கள் மகாத்மாவின் மணிக்குரல் பராசக்தியே பரிந்தெனைப்பார் கோழைகள் நம்மவர் குறிக்கோளும் கடமையும் திருமுறைக் காட்சி
10 சுவாமி அபே தானந்த. சம்பாஷணை
161 162 163 165 169 172 173 178 183 187 92
ஆத்மஜோதி சந்தா விபரம்
*****→→→濠>+++++++ ஆயுள் சந்தாரூ. 75-00
தனிப்பிரதி சதம் 30 கெளரவ ஆசிரியர் :- க. இராமச்சந்திரன் பதிப்பாசிரியர் :- நா. முத்தையா * ஆத்ம ஜோதி நிலையம் ” நாவலப்பிட்டி,
(சிலோன்]
வருடச் சந்தா ரூ. 3-00
f
 
 
 

Y.
கருணுகர விநாயகர் - கலிவெண்பா
( க. வேலுப்பிள்ளை )
449శ్రీపాత్రప్రాతప్రాక్షసాక్టP
பொன்கதிரைத் தன்கதியைப் பூவிலொரு பாற்பரப்ப வெங்சதிரி னுதவனும் வெட்கமுறிஇ - அம்புவியில் ஈதீழ தேசமென வெண்ணிவான் புக்கவந்தக் காரணத்தா லீழமெனக் கண்டபதி - மேலோர் சிரமாம்வி ஞபுரமன் றிலத மெனக்கால் பதியா முரும்பைப் பரத்தைப் - புலமேல் கருணுகரக்கற் பகக்கன்ரு ய் வந்த குருவை யடியனையாட் கொள்ளுந் - திருவேதார்க் கோனே மருமானே கோவிந்தன் பூமினுக்குத்
தேனேநா னுன்பதியைத் தேடிவந்து - நானடையுந்
துன்பத்தை யோதிச் சுகம்பெறரீ காணுமல் இங்கொளித்தால் நீதியென்று யார் சொல்வார் - வஞ்சக்
குணம் மாய முங்களுக்குக் கோத்திரத்துக் குள்ள
குண மென்ற துண்மையென்று கொள்ளத் - தடையேது பெற்ற பிள்ளை கண்ணிர் பெருகவழு தங்குமிங்குஞ்
சுற்றியையா ஐயா எனச் சோப - முற்றுக் கதறி யழைக்கவவர் கண்ணெதிரே யோடி
அணையாத வன்கணுடை யாராய் - மறையுமன்னை தந்தையெங்கு முண்டோ தயாபரமே நீ மறைந்தால் இங்குநா னுறுவது யார்க்குரைத்தோ - என்கருணை வள்ளல்நீ யுன்னரிய மைந்தன்நா னென்பதைநீ அல்லவென்று சொல்லிவிட ஆகுமோ - பிள்ளையென்முன் வந்து குறை கேட்டு வழங்கவரு ளென்னதடை எந்தவிதந் தள்ளிவிட எண்ணினும்நீ - எந்தையுனை நானே விடேனேழை நானேசுவது முன்னை நான்திட்டி வைவதும்பின் நானழுதென் - நாதா எனவிருகை கூப்பிக்கும் பிட்டேத் துவது மெதினன னெய்துமிட ராலென் - றறிவாய்நீ பின்னைநான் விட்டுப் பிரிவதெவ்வா றிம்பரென் கண் முன்னேவா மூவிகமேற் கொண்டுகுறை - என்னே எனக்கேளென் மேலே யிரங்கென் பிழையைப் பொறுத்தாள் பரத்தைப் புலத்தைங் - கரத்துப் பெருமானே பேழை வயிற்ருனே யேரம்ப கருணுகரக் கடவுளே.

Page 3
62 ஆத்ம
TT
காவடிச் சிந்து ( க. வே. )
<><><><>a<>a<><>
Ki
கந்தனுக்கு முன்பு வந்த சுந்தர கருணுகரேச கற்பகக் கன்றே யெனைக் கண் பாரையா - உனநான்
காண வென்முன் வந்து கிருபை கூரையா
பாலர் முதியோரெனப் பல்லோர் மடவாராடவர்தம் பாடுசொல்லி ஆற வரமோனமேன் - எம் பதியெனு முனக்கிதவ - மானமேன்
என்துயரைச் சொல்லியழ ஒன்றிரண்டோ என்னிலுன் னிரக்கமில்லை யென்கிலென்ன செய்குவேன் - ஏழை எப்படி நாணிப்படியி - லுய்குவேன்
தொட்ட வண்டமாயிரத்து எட்டையு மரசு செய்த சூரனல்ல நானுேரேழையே பையா - உனது சோதனையிதைப் பொறுப்பெ னேதுய்யா பூர்வகர்ம போகமெனி னனுனைப் பணிவதைப் போக்கவென நீ யறியவில்லையோ - இல்லைப் போவெனி லுனக் கதிழி - பல்லவோ அடிப்பது முன்கையெனை யணைப்பது முன்கையெனை யடியனறிவேன் கிருபை கூரையா - இதோ அன்புவைத் தெனது முகம் - பாரையா ஐந்தெழுத்தை யோதவறியே னரகர்ாவென அறைய வறியேன்கதியெற் கென்னையா - அறி வற்ற நாயென் னேடுனக்குச் - சன்னையா
s
}{<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>త
பேசாத வார்த்தைக்கு நீ எசமான்; பேசின வார்த்
{) தை உனக்கு எசமான். ()
- பழமொழி s ఘ
{} Kỳ
உறுதியைப்போல உழைப்பும் இருந்தால் நீ வெற்றி காணுவாய்.
- ஷெல்லி
va
రక్ష<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>ళ్ల
 
 

ஜோதி 163
உரும்பராய் பரத்தைப் புலக் கருணுகரப்
( ஆசிரியர்)
ogg opಣ್ತಿಲ್ಲಅನ್ತಮ್ಹಣ್ತಿಲ್ಲಿ ಇggggggggggggggggggggggggggg
மக்கள் வணங்கும் மூர்த்தங்களுள்ளே பிள்ளையார் மிக இலகுவாகக் கிடைக்கக் கூடியவர். ஊருக்கொரு கோயில் என்பது போய் மரத்திற்கொரு பிள்ளையார் என்றல் அது மிகைப்படுத்திச் சொல்வதன்று. அவர் ஞான சொரூபர்; முக்கண்ணர்; சிவபிரானின் மூத்த குமாரர்; அவருடைய
ஏகப் பிரதிநிதி.
பிள்ளையார் இருக்கிற இடத்திற்கேற்ப அவ்விடப் பெய ரையே தமக்கு ஆக்கிக் கொண்டு விடுவார். அத்தியடிப் பிள் 2ளயார், ஆலடிப் பிள்ளையார், முரிகண்டிப் பிள்ளையார், தில் லையம்பலப் பிள்ளையார், மாணிக்கப் பிள்ளையார் என இப் படி ஆயிரக் கணக்கான உதாரணங்களைக் கூறலாம்.
யாழ்ப்பாணம், வன்னிநாடுவரை நீண்டகாலம் தமிழ் அர சர்களால் ஆளப்பெற்று வந்தது. விசய கூளங்கைச்சக்கரவர் த் தி காலத்திலே பல கோயில்கள் கட்டப்பெற்றன. அவற் றுள் உரும்பராய் பரத்தைப் புலக் கருணுகரப் பிள்ளையார் கோயிலும் ஒன்றகும். இக்கோயில் சரித்திரப் பழமை வாய் ந்ததென்பது முன்னுேருடைய ஐதீகமாகும்.
பலவித மரங்களடர்ந்த ஒருசோலை. அச் சோலையின் நடு வே ஒரு அரசமரம். அது மரங்களுக்கெல்லாம் அரசுபோல் உயர்ந்து பருத்து அகன்று நின்றது. அம்மரத்தின் கீழே இவெண்கல்லா லான ஒரு பிள்ளையார் திரு உருவம் இருந்தது. அத்திருஉரு தோன்றியகாலமோ அன்றித் தோன்றிய வித மோ எவர்க்குந் தெரியாது, வழிப்போக்கர்களும் உரும்பராய்க் கிராம வாசிகளும் மிகப் பக்தி சிரத்தையோடு வணங்கி வந் Y. தனர். அவ்வழியே ஒருநாள் சென்ற விசய g_67Tiâlaಾ5 #

Page 4
164 ஆத்ம
சக்கரவர்த்தியும் அப்பிள்ளையாரைப் பூசிக்கும் பேறு பெற் றர். தன் கோரிக்கை நிறைவேறினுல் பிள்ளையாருக்கு ஒரு ஆலயம் அமைப்பதாகச் சக்கரவர்த்தி நேர்த்திக் கடன் செய் ប្រព័.
பிள்ளையாரின் கருனேயினுல் சக்கரவர்த்தியின் கோரிக் கை அநுகூலமாய் முடிந்தது. உடனே சக்கரவர்த்தி செங் கற்களால் ஒரு சிறு ஆலயத்தைக் கட்டுவித்தார். அக்கட்ட டம் ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்திலே இடிக்கப் பெற்றது. சிறிது காலத்தின் பின்னர் கருணுகரர் எனப் பெயரிய அந் தனரொருவர் குழைமண் கொண்டு கோயிலைப் புதுப்பித் தார். அந்தணர் தம் பெயரை முன்னிட்டுக் * கருணுகரப் 15T2aTusT fair” GT53T 'ı (GN 1. juu sir வைத்தார் என்பது கர்ண பரம் பரைக்கதையாகும்.
கருணுகரருடைய வழித் தோன்றலாய் வந்தவர் சபாபதி ஐயராகும். அவர் இற்றைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன் இருந்தவர். அவர் பூஜை செய்த காலத்திலே உரும்பரா யில் தில்லையர் வேலாயுதர் என்னும் ஒர் அன்பர் வாழ்ந்து வந் தார். அவர் மண்கட்டிடத்தைச் சாந்துக் கட்டிடமாக மாற்றி ஞர். அத்துடன் நாளாந்தப் பூஜையும் கிரமமாக நடைபெற ஒழுங்குகள் செய்தார்.
சபாபதி ஐயரின் மகன் பரமஐயர். அவருடைய புத்திரன் அப்புக்குட்டி ஐயர். அப்புக்குட்டி ஐயரின் முயற்சியினுல் மகா மண்டபம், நிருத்த மண்டபம், தம்ப மண்டபம், ஆதியன நிறைவேறின. அக்க லந் தொட்டு நித்திய நைமித்தியங்கள் சிறப்புற நடந்து வருகின்றன. விசேட காலங்களில் அலங் கார விழாவும், கந்தபுராணப் படிப்பும் செவ்வனே நடை பெற்று வந்தன. ஆணுல் கொடித்தம்பம் நாட்டி துவஜா ரோகணம், அவரோகனம், இரதோற்சவம், தீர்த்தோற்சவம் என்பன நடத்தப்படவில்லை. -
இதன்பின் 1910 ஆம் வருடம் ஆவணி மீ" 26 ஆம் திகதி உரும்பராய்ப் பிரபல வைத்தியராகிய வயிரவநாதர் வல்லி% புரம் என்பவர் தம் செலவில் ஒர் கொடித்தம்பத்தைச் செய் வித்துக் கொடுத்து ஒரு விழாவையுமேற்று நடப்பித்து வந் தார். அன்று முதல் ஆவணிச் சட்டியில் கொடியேற்று விழா ஆரம்பமாகி விழாக் கொண்டாடப்பட்டு வருகிறது.
 
 

ஜோதி 1.65
சுத்தானந்தரின்
க டி தங்க ள்
தலைமை ஆசிரியர், காட்டுப்புத்தூர்
அன்புமிக்க நண்பருக்கு, என் மனச்சாட்சி சொல்லுகிற படியே, நான் நடக்க வேண்டியருக்கிறது. ஆங்கிலத்தில் என் ராஜினுமாவை ஏற்றருள்க என்று ஒரு மாதத் தவணை கொடு த்துவிட்டேன். அது தோரணைக்காக அனுப்பியது; இக்கடிதம் விதரணக்காக வருகிறது. தங்களை நான் தந்தைபோலக் கருதி அபிமானித்தேன். தாங்களும் என்னிடம் மிகவும் பிரிய மாகயிருந்து, எனது போதனுமுறைகளைக் கண்டு மகிழ்ந்தீர் கள், நம்மிருவருக்கும் எவ்வித மனத்தாங்கலும் இல்லை. ஆனல் இருவருக்கும் மேலேயுள்ள கடவுள் எனக்குப் புதியவழி காட் டியிருக்கிருர், அதன் துரதனுக, மனச்சாட்சி என்னை விடுதலை பெறத் தூண்டுகிறது. நான் செல்லுமுன் தங்களிடம் தனதா கச் சில செய்திகளைச் சொல்லநினைத்ததுண்டு; நேரமில்லையாத லால் அவற்றை எழுதியனுப்பலானேன்:
(1) மகாத்மாவை, தேசாபிமானம் உள்ள மாணவருட னும், இவ்வூர் இந்து முஸ்லீம் நண்பர்களுடனும் நான் கட் டளை ஸ்டேசஷனிலும் பிறகு திருச்சியிலும் தரிசித்ததுமுதல், அவரது சத்திய வாழ்வில் எனக்குப் பெருமதிப்பு உண்டா யிற்று. தியாகமும், அயராப் பொதுநலமும், தருமலட்சியமும் கொண்ட அவர், நமது நாட்டிற்குப் புதியவழி காட்டியிருக்
கிருர், ஆயுதமில்லாது பலமிழந்த அடிமைநாட்டிற்கு, அவர்
சொல்லும்சத்தியாக்கிரகமே உய்யும் வழி என்று எனக்குத்
தோன்றுகிறது. அவ்வழியை ஒரு கருமயோக சாதனமாகவே
நான் பின்பற்றத் துணிகிறேன்.
(2) அத்தகைய மகானின் கட்டளைப்படியே நான், கதர் ஆடை உண்டாக்கல், மது, சீதனத்தை ஒழித்தல், இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு உழைத்தல், தேசியக்கல்வியைப் பரப் பல், தீண்டாமை விலக்கல் ஆகிய ஐங்கடமை பூண்டேன்.

Page 5
166 ஆத்ம
என்னிடம் அன்புடைய மாணவருக்கும் இக்கடமைகளையே உணர்த்தினேன். சர்க்கார் பள்ளிக்கூடத்திலிருந்து இப்படி நான் செய்யத் துணிந்தது உங்களுக்கெல்லாம் வருத்தமாக யிருந்ததை யுணர்ந்தேன். எனினும், என்ன வந்தாலும் இந்த ஐங்கடமையை தேசத்திற்காகவே காக்க வேண்டியிருக்கிறது. வேலையிலிருந்துகொண்டு தாராளமாக நான் என் மனச்சாட் சியைத் திருப்தி செய்ய முடியவில்லையாதலால், என் பொறுப் பிலேயே விடுதலை பெற்று தேசவூழியம் செய்யத் துணிந்
துள்ளேன்.
(3) தற்காலக் கல்வி முறையில் குறையிருப்பதை ஆசிரி யர் சங்கத்தில் நாமெல்லாரும் பன்முறை பேசினேம். எஸ். பூரீநிவாசையங்கார் தலைமையில் நடந்த நமது ஜில்லா ஆசிரி யர் சங்கத்திலும் நான் விரிவாகக் கல்விச் சீர்திருத்தத்தைப் பற்றிப் பேசினேன். அவர் ஆமோதித்தார். இக் கல்விமுறை யில் யாருக்கும் திருப்தி யில்லை. இதைக் கஞ்சிப்படிப்பு, கஞ்சி க்கு மாரடிப்பு’ என்று அழுத்தமாகச் சொல்ல வேண்டியிருக் கிறது. இதில் தியாகபுத்தி கிடையாது. பணத்திற்கு ஐந்து மணி நேரம் புத்தகத்தில் உள்ளதைக் கிளிப்பிள்ளைக்குப் பாடஞ் சொல்லுவதுபோலச் சொல்லுகிருேம். மாணவரும் நாலு காசு சம்பாதித்துக் குடும்பம் பிழைக்கவே இக்கல்வி யைக் கற்கிருர்கள்; பெற்ருேரும் அதையே நாடுகிருர்கள்; படித்தவர்களும் வேலையில்லாமல் திண்டாடுகிருர்கள். பள் ளிக்கூடத்தில் புகுந்துபார்த்தாலோ, உபாத்தியாயருள் ஒற் றுமை யில்லை. ஆசிரியர் மாணவருக்கு உதாரணமாக நடக்க வில்லை. மாணவர் ஒழுக்கம் வளர இங்கே இடமே யில்லை. ஆசிரியர்கள் காலத்திற் கேற்ற புதிய புதிய அறிவை வளர்க்
காமல், பழைய மாமூலிலேயே பிடிவாதம் செய்து, பிரம்பும்
பாடப்புத்தகமுமாகப் பிழைப்பைத் தள்ளுகிறர்கள். தேசத் திற்கும் மாணவருக்கும் சம்பந்தமே யில்லாதிருக்கிறது.
(4) ஆசிரியர் சங்கம் பெயருக்குக் கூட்டம் போட்டு, t
வாய்ச்சிலம்பம் அடித்துச் செல்வதைத் தவிர வேறு புண்ணிய மில்லை. பாடபுத்தகங்கள் வைப்பதிற்கூட லஞ்சமும் தாண்டவ மாடுகின்றன.
 
 

ஜோதி 67
சுதந்தரமாக மாணவரை வெளியே அழைத்துச் )5( ܢ . *சென்று காலத்திற் கேற்ற கல்வி யளிக்க நான் முனைந்தேன்; அவர்களுக்கு நூற்றல், நெசவு முதலிய சில தொழில்களில் பயிற்சி யுண்டாக்க முயன்றேன். 'நமது தேசம் நம் உரிமை; அதற்காக நாம் இவ்வழியில் தொண்டு செய்ய வேண்டும். { ........##ဓါကြံချွံခ7ဖြိုး இந்தியர்; ஒரே குலத்தவர். சாதிமத வேறு "பாடுகள் மனிதரின் மனமயக்கம். எல்லாரும் ஒற்றுமையாக இருந்தால் நமக்கு அசாத்தியமான பலம் உண்டாகும். பிறகு எளிதாகச் சுதந்தரம் பெறலாம். அதற்காகத் திலகர், காந்தி, லாலாஜி போன்ற மகான்கள் இப்படித் தியாகம் செய்கிரு ர் கள். என்று விளக்கினேன்; தேச உணர்ச்சி மிக்க பத்திரிகை களைப் படிக்கச் செய்தேன். இவையெல்லாம் எனக்குப் பல பிரதிவாதிகளையே உண்டுபண்ணின; எல்லாம் காலத்தின் வினையைத் தவிர வேறில்லை.
(6) பழய அத்யாத்ம ஞானமும், இக்காலம் பெருமை கொண்ட விஞ்ஞானக் கலைகளும் சேர்ந்த பிரமசரியக் குரு குலக் கல்விதான் நமது நாட்டிற்கு கதிமோட்சம் என்று எனக் குத் தோன்றுகிறது. அக்கல்வி முறையில் ஆசிரியரும் யோக சாதனங்கள் செய்து, மாணவரும் சாதகர்களாக பிரமசரியம் காத்து ஞானத்தவம் செய்ய வேண்டும். முதலில் தமிழ் ஆரியம், பிறகு ஆங்கிலம் இந்தி ஆகிய மொழிகளைக் கற்று, வெறும் பாஷாஞானம் மட்டுமின்றி அரிய கலைகளைத் தேர்ந்து, கல்வியுந் தொழிலும் ஒழுக்கமும் தார்மீகவுணர்வும் வீரதீர பராக்ரமமுங்கூறிய நிபுணர்களே உண்டாக்கக் கூடிய குருகுல க்கல்வியே கல்வியென ஆராய்ச்சியால் அறிகிறேன். அடுத்த கிராமத்தில் அப்படி ஒருகலாநிலயம் நாட்ட முயன்றது உண்டு; காலவினை அதைத் தடுத்தது.
. ஆதலால் அத்தகைய குருகுலம் தமிழ்நாட்டில் அமைந்து எனக்கும் அழைப்பு வருமட்டும், நான் யோகசாதனங்களைச் செய்துகொண்டும், சிறந்த கவிதைகளையும் இலக்கியங்களை யும் சிருஷ்டித்துக்கொண்டும் அடக்கமாகத் தவம் புரிய y விரும்புகிறேன்.

Page 6
168 ஆத்ம
சிலர் என்னைப் பத்திரிகை நடத்தச் சொல்லுகிருர்கள். நல்ல வழி பிறந்தால், பேணுவை அத்துறையில் நாட்ட என்றும் தயாரா யிருப்பேன். எல்லாம் இனி என்னை உள்ளி ருந்து நடத்தும் அந்தர்குருவான இறைவன் செய்கை, முதலில் விடுதலை பெறவே அவன்துரண்டுகிறன்; அவன் விட்ட வழியில் கீதையைக் கையிலேந்திச் செல்கிறேன்; வேறுவழி தோன்ற* வில்லை. சர்வாந்தர்யா மியான அவன் என்னை இனி நடத்தட்
டும். மாணவரும் ஆசிரியரும் எனக்குச் செய்த மரியாதை களையும் பேசிய புகழுரைகளையும் என் உயிர்த்தலைவனுன பரமாத்மனுக்கே அர்ப்பணிக்கிறேன்.
நண்பரே, தங்களால் நான் எவ்வளவோ பயன் பெற் றேன். காட்டுப்புத்தூர் எனக்குப் புதிய வாழ்வளித்தது. மேலே நான் சொல்லிய குறைகளையெல்லாம் பொதுக்கருத் திற் கொள்ள வேண்டும். காட்டுப்புத்தூருக்கும் ஜமீன் பள் ளிக்கூடத்திற்கும் நான் என்றென்றும் தன்றியுள்ளவனுக இருப்பேன். இந்தப் பள்ளிக்கூடத்தில் நான் ஆசிரியனுக மட்டுமன்று - ஒவ்வொருநாளும் புதிய புதிய கலைஞானத்தை வளர்த்த - மாணவனுகவும் இருந்தேன். இந்த நிலயத்திலிருக் கும் ஆராய்ச்சிச்சாலை, எனது ஜீவரசாயன சாலேயாகஇருந்தது.
எல்லாருக்கும் மனமார்ந்த நன்றி செலுத்தி, எல்லா வுயிர்களையும் திருமேனியாகக் கொண்ட இறைவன் விட்ட வழியே செல்லுகிறேன். வழியும் அவனே, விழியும் அவனே! ஒம், ஒம், ஒம்!
o N அனபு
சுத்தானந்தன்.
LL LLLLLLmmmLLLLLLL LLLLLLLLSLL T TTLTLLT LLLLLKLLLLLmL LTTTLLLLLLLL LLLL S நாம் பணக்காரர்களாக இருக்கக் கடமைப் பட்டில்லை; ့စ္ဗဇ် အမေ ஒழுக்க முள்ளவர்களாக இருக்கக் கடமைப் பட்டிருக்கிருேம்.
-பெர்ணுர்ட்ஷா
LLLLLS OS S SLLLSL L LLLL SOOSLL OO O S LL0SLLSL S LLLLL OOSOOSOLLO O0OOO GLOLL00T
 
 
 
 

ஜோதி
மகாத்மாவின் மணிக்குரல் లెం లెలె రెంజెలెస్లెర్రెలెం రెంూ9లెgరెంూ9
அன்பு அன்பே உயிரினத்தின் ஆணிவேர்; அஃதின்றி மன்புவியுண் டென்னல் வசை!
சாதி, மத,வகுப்பு, தாழ்வு உயர்வுமனப் பேதம் கடந்ததன்புப் பேறு!
ஆசியா பாரிற் களித்தஉப தேசமெலாம், மாசற்ற அன்பு,சத்ய மாம்!
சத்தியம் அன்பகிம்சை தன்னை முரசடித்து, எத்திசையும் இன்பவிளக் கேற்று
அடக்கம்
வானுலகில் தேவரென்பார் இல்லை; மனவடக்க
மானிடமே தேவ மரபு!
மனத்தால் விலங்காக வாழ்வோன், சுயேச்சை மனிதனெனல் முற்றும் வழு!
உளறுகின்ற நாவதனை உள்ளடக்கிப் பேசுபவன், அளவிறந்த பேச்சாள னும்!
திண்டாமை
ஆண்டவன் முன்பு அனைத்துயிரும் ஒன்றேயாம்; வேண்டாம்தீண் டாமை வெறி!
கற்கோயில் தம்மைவிட மாந்தர்தம் கட்டுடலே, அற்புதநற் தேவா லயம்!
தீண்டாமைப் பேய் முற்றும் தீய்ந்தொழியா விட்டாலே மாண்டொழியும் இந்து மதம்!
மனித குலத்திற்கே மாருப் பகைவன், அணியாயத் தீண்டாமையாம்!
மாசுடையா ரேயெனினும்,மாதேவன் சந்நிதியில் தேசுடையா ராவார் தெளி!
69
2.
22
23
24
26
27
28
29
30
3 II
32

Page 7
170
ஆண்மை
உயிர்கொடுக்க நேர்ந்திடினும், உண்மை பிறழாத் தயிரியமே ஆண்மையென்ப தாம்! அச்சமுளார்க் கில்லை அகிம்சையும் சத்தியமும் நிக்சயம்நல் லாண்மைக்கே தேர்!
ஆசையே அச்சத்திற் காதாரம்; அஃதொழிந்தால் தேசுற்ற அஞ்சாமை நேர்!
அஞ்சாமை யென்ப தகந்தையல: நெஞ்சத்திற் கொஞ்சமும் அச்சமிலாக் கூறு!
கன்னத் தறைந்தார்க்குக் கழுத்தையும் ஈந்துவப்பேன் என்னினும் யார்க்குமஞ் சேன்!
அச்சம்
பயமே கொடிய பகைப்பிணி; மாந்தர்க்(கு)
அயலிற் பகையில்லை யாம்!
பயமெனும் பேய்க்குப் பணிந்துலகில் வாழலினும் உயிர்விடுதல் சால உயர்வு!
பிணியால் மடிவரினும் பெரும்பயத்தாற் சாவோர் அணியாயமாய் மிகுதி யாம்
கோழைத் தனத்தைவிடக் கொடிய பலாத்காரம் சாலச் சிறந்ததெனச் சாற்று!
மனிதர்க் கொருமரணம்; மாருத கோழைக்குத் தினமும் மரணமெனத் தேர்!
ஆரோக்கியம்
ஆரோக்ய நல்வழியை அலட்சியம் செய்திடுதல் கோர மிடியிற் கொடிது!
GT66), if
மண்ணுக்குத் தக்க வளமுண்டாம்; மாந்தர்தம்
எண்ணத்திற் கேற்றவாழ் வே!
36
37
38
39
4)
4 I
42
43
 
 

ஜோதி 171
பழிக்குப் பழிநினைவு பாம்பின் கொடியவிடம்;
у) அழிவே அதனிறுதி யாம் 45
கைராட்டு கைராட் டளிக்கும் கனித்த இசை யமுதே, மெய்சோர்ந்தார்க் கூட்டுமின்ப வீறு 46 நூற்பும் கதருடுப்பும். நூல்கற்றல் போலென்றும் ஏற்க மாணுக்கர் இசைந்து! 47
தொண்டு சமுதாயத் தேவை, அதன் தன்மை, தனையுணர்ந்த அமைதியாய் நற்பணிகள் ஆற்று! 4& அன்பு வழியால் அடைந்த சுதந்திரத்தை, அன்பாலே காப்ப தறிவு ! 49 அந்தரங்க சுத்தியுடன் ஆற்றும் பணிமறைதல் எந்தக் காலத்தும் இல்லை! 50
சிறுபான்மை மக்களுயிர் காக்குந் திறனின்றேல், இறப்பேன்யான் அம்முயற்சி யில்! 5. - பரம ஹம்ச தாசன்.
'உள்ளத்தனேயது உயர்வு'
தமிழ் மறைக் கழகம். (முகவரி: 58, 31ஆம் ஒழுங்கை, கொழும்பு 6.) உலகெங்குமுள்ள தமிழர்களுக்கு வேண்டுகோள். * வைகாசி அனுடம் வள்ளுவர் திருநாள். சென்ற ஆண்டுகளிற்போல
இவ்வாண்டும் ஒவ்வொரு விட்டிலுங் கொண்டாடுக. இவ்வாண்டுத் திருவள்ளுவர் திருநாள் மேத்திங்கள் முப்பதாந் தேதி (30-5-61) செவ் திருவள்ளுவர் தொடர் ஆண்டின வழங்குக. - 6. திருவள்ளுவரின் ஈராயிரம் ஆண்டு நிறைவு விழாவை 1969இல் வை காசித் திங்கள் முழுவதுங் கொண்டாட இப்பொழுதே திட்டங்கள் வகுத்து ஆவன செய்க. தி. ஆ. 2000 முடியவுள்ள திருவள்ளுவர் திருநாள்களைக் கீழே காண்க.
தி. ஆ. 1993 - (கி. பி. 1962) மே 20 - ஞாயிறு
y sy 1994 - ( , 1963) யூன் 6 - வியாழன் , , 1995 - ( , , 1964) மே 26 - செவ்வாய்
, , 1996 - ( , 1965) யூன். 12- சனி , 1997 - ( , 1966) யூன் 2 - வியாழன் , , 1998 - ( , 1967) மே 23 - செவ்வாய் , 1999 - ( , 1968) யூன் 9 - ஞாயிறு , 2000 - ( , 1969) மே 31 - சனி தி. ஆ. 1992, தை 9, கா. பொ. இரத்தினம். (தலைவர்)

Page 8
172 ஆத்ம
sTeSeTSe ee eTeS sMSe TMLeS se se eTeAeS TeM ese M sMT L e MeTS eMeMLeMe MeMeM ese TMLS SLMSMe eMT eMSeMMSeeeSeee eeeS
பராசக்தியே பரிந்தெனைய T6
( சங்கீதபூஷணம் அ. கி. ஏரம்பமூர்த்தி )
இராகம் :- சங்கராபரணம் ஆரோகனம் - ஸ்ரிகமபதநீஸ் 29வது தாளம் - ரூபகம் அவரோகணம்:- ஸ்நிதபமகரிஸ் மேள
கர்த்தா
பரா சக்தி யே பரிந் தெனையாள்
பரணிடப் பாகத் தமரும் தேவியே
அநுபல்லவி சரா சரங்கள் அனைத் தையு மீன்று
சந்த தம் காத்திடும் தாயே கிருபாகரி
( பராசக்தியே)
சரணங்கள் مح۔ கயமுகணுெடு கந்தனின் தாய் நீயே
கானத்திலாடிடும் காளியும் நீதானே துயர் அனைத்தையும் தீர்த்திடுவாய் தாயே
தூய நவசக்தியாய் வருவாய் நீயே
(பராசக்தியே ) சிங்கத் தமர்ந்து சூலத்தினேக் கையேந்தி
சினங் கொண்டு மகுடனைச் சங்கரித்தாய் திங்களனி சிவனுடன் நடம் செய்தாய்
தினம் பணிந்திட்டேன் தருணமிதுவே
( பராசக்தியே)
。
சுந்தரி சூலினி மீனுட்சி காமாட்சி
சங்கரி சாம்பவி நீலமால் சோதரி வந்தெனை யாதரி மாயா வினுேதினி
வரமருள் கெளரி கல்யாணி ஓங்காரி
( பராசக்தியே ) 狮
 
 
 
 
 

ஜோதி 173
கோழைகள் அல்ல, சிங்கங்களாவீர்!
சமுதாபாத் தலைமையை ஏற்க பெண்களுக்கு வேண்டுகோள்
உலகில் பிரச்சினைகள் பல நாளுக்கு நாள் சிக்கலாகி வரு வதை உணர்கிறேன். நேபாளத்தில் மக்கள் சபையைக் கலைத் துவிட்டு அரசன் ஆட்சியைத் தானே ஏற்றுக் கொண்டான்; பாகிஸ்தானிலும் ஒரே மனிதரின் அதிகாரம் நடந்து வருகி றது. இவ்வாறு எகிப்திலிருந்து நேபாளம் வரையில் எல்லா நாடுகளிலுமே தனிமனிதர்கள் ஆட்சி நடத்துவதைப் பார்க் கிருேம். ஒரே மனிதன் அதிகாரம் செலுத்துவதென்றல் அது ராணுவத்தைக்கொண்டு நடத்துவதாய்த் தா னிருக்கும். இந் தப் போக்கு, உலகத்தில் கடந்த 200 ஆண்டுகளாக எவ்வள வோ முயற்சியின்மேல் அமைந்த ஜனநாயக ஏற்பாட்டிற்கு
0S SSLSLSSLSLSSLSLSSLSLLLSLSLLLSLSLLLLLS SLL LS SLLLLS LALY ❖ “5 %**m**m°°mo *ሯ°°m *ሯ**m ❖ ❖ *Ꮉ Ꮉ• ᎹᎹ Ꭽ Ꭽ**Ᏹ %***Ꮉ*Ꮉ*Ꮉ *Ꮝ*
**************************
வினுேபா அடிகள். *****るる...&ぐ*****ふふふふふるふふふふふふふふふく************る*********● நேர்மாறனது. உலகம் தனிநபரின் ஆட்சிக்கு உட்படத்தொ டங்கிவிட்டதை இது எடுத்துக் காட்டுகிறது. இது நம்மைச் சுற்றிலும் நடைபெறும் நிகழ்ச்சி. இங்கு அந்நிலைமை தோன் ருதபடி நாம் செய்யவேண்டும். இதற்குக் காரணமான குறை களை அகற்றிச் சிர்திருத்தியாக வேண்டும். பெரிய குறை ஒன்று இன்று உள்ளது. ஆண்களில் பெரும்பாலோர் பழைய வர லாற்றில் மூழ்கி மிதந்து கொண்டிருப்பதால் பழைய முறையி லேயே சிந்தித்து வரு கிருர்கள்; வேறு வகையில் சிந்திக்க முடி யவில்லை.
இதனல் தீரவேண்டிய சிக்கல்கள் நாளுக்கு நாள் மேலும் சிக்கலாகின்றன. இந்த நிலைமையை மாற்றுவதற்கு நாம் "புதிய முறையை, புதிய சக்தியை இதில் புகுத்த வேண்டும்.
இப்பொழுது நமக்குக் கிடைத்துள்ள புதிய சக்தி சர்வோ தய சக்திதான். அது தலையிட்டால் எல்லாச் சிக்கல்களும் y தீர்ந்துவிடும். ஆனல் சர்வோதய சக்தி புகுந்து செயல்படு

Page 9
174. ஆத்ம
வதற்கு அரசியலில் இறங்கிக் கெட்டுப்போகாத ஆன்மா வேண்டும். நான் இதுபற்றி யோசிக்கும் பொழுதெல்லாம் எனக்கு நம் சகோதரிகளின் நினைவுதான் வருகிறது. அவர்கள்
தான் இதுவரை அரசியலில் உழன்று அறிவைக்கெடுத்துக்
கொள்ளாமலிருக்கிருர்கள். எனவே பெண்கள் முயன்ருல்)
எவ்வளவோ சச்சரவுகஃாத் தீர்த்து வைக்கமுடியும். இதுவரை” பொதுவாழ்வில் இறங்காமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ள பெண்கள் இப்பொழுது வெளியே வந்து ஏற்ற முறையில் பணியாற்றினல் எத்தனையோ பிரச்சினைகள் எளிதில் தீர்ந்து விடும்.
துப்பாக்கி எடுக்கவேண்டாம்!
பெண்களைப் பொதுப்பணியில் ஈடுபடுத்த இதுவரை முயற்சி நடைபெறவில்லை என்பதல்ல; ஆனல் அவையெல் லாம் பெண்களும் ஆண்களைப் போலவே வேலை செய்யுமாறு செய்யப்பட்ட முயற்சிகளாகும். அவர்களிடம் “தேர்தலில் கலந்து கொள்ளுங்கள், "ரைட் லெஃப்ட்' என்று கவாத்துச் செய்யுங்கள், குறிவைத்துச் சுடப்பழகுங்கள்’ என்று சொல்லி அவர்களையும் சிப்பாய்களாக்க முயற்சி செய்யப் படுகிறது. இவ்வாறு ஆண்களைப்போல பெண்களும் துப்பாக்கி தாங்கி, கவாத்துப்பழகி தாங்கள் முன்னேறி வருவதாக எண்ணிக் கொள்ளுவதைப் போன்ற மடமை வேறில்லை.
இதனுல் அவர்கள் முன்னேற்ற மெதுவும் எய்தமுடி யாது. ஏனெனில் அவர்களுக்கில்லாத பல தடைகள் அவர் களுக்கு பிறவியிலேயே ஏற்பட்டுள்ளன. எனவே பலாத்கார வழியென்ருல் அதில் ஆண்களால்தான் முன்னே நிற்க முடி யும்; பெண்களால் முடியாது. ஆனல் அகிம்சா மார்க்கத் திலோ பெண்களுக்கு ஈடுகொடுக்க ஆண்களால் முடியவே முடியாது. அகிம்சா மார்க்கம் பெண்களுக்கே உரியது. அகிம்சை வழியில், அன்பு வழியில், கருணை வழியில் செல்லு வதற்கென்றே பிறந்தவர்கள் அவர்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜோதி 75
சிக்கல் தீரும்வழி
ў? பாபு லோக சேவகர் சங்கம் அமைக்க வேண்டுமென்று
சொன்னர். இப்பொழுது பெண்கள் முன்வந்து, 'நாங்கள் காந்தியடிகள் சொன்னபடி லோக சேவகர் சங்கம் அமைக் கப் போகிறேம். ஆண்கள் செய்யத் தவறியதை நாங்கள் நிறை هي வேற்றப் போகிருேம்” என்று சொல்லுவார்களானுல் சமூகத் தில் அவர்களுக்கு மிக்க மதிப்பு ஏற்படும்; வரவிருக்கும் பொதுத் தேர்தலின் தன்மையே அதனுல் மாறிவிடும். சாந்தி சைனிக்குகளாக எந்தக் கட்சியிலும் சேராமல் தனித்து இருந்து கொண்ட சமுதாயத் தலைமையை ஏற்பதற்குப் பெண்கள் முன்வருவார்களானுல் இன்றைய சிக்கல்களில் பல தாமே தீர்ந்துவிடும்.
ஊமையர் ஆக வேண்டாம்!
சாந்தி வித்தியாலயத்தில் அளிக்கும் கல்வியில் சாந்தி சேனைக்குத் தேவையான எல்லாவிஷயங்களும் போதிக்கப் படவேண்டும்.
உலகத்தில் எங்கெங்கே அமைதி இயக்கம் இதுவரை நடந்திருக்கிறது, யார் யார் நடத்தியிருக்கிருர்கள் என்பது பற்றி எடுத்துரைக்க வேண்டும். அதோடுகூட இன்னுெரு விஷயமும் இங்கே பயிற்சியில் இடம் பெறவேண்டும். அதா வது, பெண்கள் நல்ல பேச்சாளர்களாக ஆகப்பழக வேண்டும்.
பெண்களுக்கு அதிகப் பேச்சுக் கூடாது, வாய் திறக்கா மல் வேலை செய்து கொண்டு போவதுதான் அவர்களுக்கு
அழகு என்று சொல்வதுண்டு. ஆணுல் பேசவேண்டிய சமயத் தில் மெளனமாய் இருத்தல் தவறு. கடவுள் நமக்கருளியுள்ள இந்த சக்தியை நாம் பயன்படுத்த வேண்டும். பெண்கள் சொல்லின் செல்வர்களாய், நாற்றிசையும் சென்று சிங்கம் போல கர்ஜிப் பவர்களாய் ஆக வேண்டும். அக்கர்ஜனையில் அவர்களது தூய நடத்தை வெளியாக வேண்டும். உண்மை அறிவின் ஒளி வீசவேண்டும்.

Page 10
176 ஆத்ம
சாந்திசேனைப் பயிற்சி பெறுவோர் ஒருவரை யொருவர் நன்கு அறிந்து கொண்டு வேற்றுமை யுணர்ச்சியின்றி, நெருங் கிப்பழக வேண்டும். பெண்கள் கோழைகள், அதட்டினல் நடுங்கிப் போகிருர்கள் என்று சொல்லுவதற்கே இடமிருக் கக் கூடாது. அவர்கள் எங்கு போனலும் நல்ல ஆற்றலுள்ள வர்கள் என்ற பெயர் எடுக்க வேண்டும். சொற்றிறத்தோடு அறிவாற்றலுள்ளவர் களாகவும் அவர்கள் ஆக வேண்டும். அவர்கள் செய்யும் காரியங்களெல்லாம் சாந்தி சேனைக்கு உதவுபவையாய் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.
'தலைவர்'களின் உபதேசம்
நிர்மாணப்பணி புரிவோர் அதிகம் பேசக் கூடாது, வேலை செய்வதிலேயே கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்லு கிருர்கள். ஆஞல் இவ்வாறு சொல்லுபவர்கள் யார்? ஒயா மல் பேசிக்கொண்டு உருப்படியாக வேலை எதுவும் செய் யாமல் சமூகத்தில் குழப்பம் விளைவிப்பவர்கள்தான். அவர் கள் நிர்மாணவேலை செய்வோரிடம், "நீங்கள் வாயைத் திறக் ’ என்று உபதேசம் செய்கிருர்கள். இந்தப் புத்தி யில் லாத நிர்மாண ஊழியர்களும் தலைவர்கள், தலைவர்கள் என்று அவர்களைக் கொண்டு திறப்புவிழாக்கள் நடத்தவும், அவர்களது ஆசி தங்களுக்கு இருந்தால் போதும் என்று எண்ணி மகிழவும் செய்கிருர்கள். இந்தத் தலைவர்கள் பிறரை வாய் திறக்கக்கூடாது என்று சொல்லுவதற்குக் காரணம் தங்களுக்குப் போட்டி இருக்கக்கூடாது என்ற எண்ணம்தான். இந்த உபதேசம் ஒருவேளை ஆண்களுக்குப் பொருந்தினுலும் பெண்களுக்குப் பொருந்தவே பொருந்தாது. பெண்கள் சமு தாயத்தில் தமக்குரிய இடத்தை அடைந்தாக வேண்டும். அதற்குத் தங்கள் ஆற்றல் முழுவதையும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
கக் கூடாது
உமாதேவிகள் ஆவீர்!
சரஸ்வதி தேவி யார்? அவர் பெண்தானே, ஆணல்லவே? சரஸ்வதிதான் எல்லோரையும் நல்ல காரியங்கள் செய்யுமாறு
*
 

ஜோதி 177 )
ஏவுகிருளாம்; எல்லோருக்கும் நல்லறிவைப் புகட்டுபவள் அவள்தானும், கல்விக்கு, சொல்லுக்குத் தேவதை சரஸ்வதி யே. எனவே அந்த சரஸ்வதியினிட மிருந்து அதிகாரம் பெற்றுவந்துள்ள பெண்கள் வாய்திறக்கக் கூடாது. நிமிர்ந்து பார்க்கக் கூடாது,முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்,கைகால் களில் விலங்குகள் பூணவேண்டும் என்பதெல்லாம் அர்த்த மற்றவை. அந்த விலங்குகள் தங்க விலங்குகளாயிருப்பதால் அதன் பளு உறைக்கா விட்டாலும் அவை விலங்குகளே என் பதில் சந்தேக மென்ன? அவற்றின் பளு அதிகமாக ஆக அதற் குச் சிறப்பு அதிகம் என்று கருதப்படுவதை என்னென்பது?
ஞானத்திலும் விஞ்ஞானத்திலும் பெண்கள் முன்னணி யில் நிற்க வேண்டும் என்பது என் ஆவல். கல்வியில் அவர் களுக்கு எவ்விதமான குறைபாடும் இருக்கக் கூடாது. நான் ஆண்களிடம், "நீங்கள் செயலில் ஈடுபடுங்கள், விவசாயம் செய்யுங்கள், மாடுகளோடு சேர்ந்து பாடுபடுங்கள், ஆணுல் நீங்களும் மாடுகளாகிவிடாதீர்கள்!' என்று சொல்லுவேன். ஆனல் பெண்களோ கல்வி முழுவதையும் அடைய வேண்டும். வேதத்தில் சொல்லியிருக்கிறது,அக்கினியும் இந்திரனும் தவம் புரிந்தார்களாம். ஆனல் அவர்களுக்கு பிரம்மன் காட்சியளிக்க மறுத்து விட்டாராம். அப்பொழுது அவர்களிடம் கருணை கொண்ட உமா தேவி அவர்கள் முன்வந்து ஆன்மஞானம் அளித்தாளாம். இதைப்போன்று உலகத்தாருக்கு ஆன்மஞா னம் நல்கக் கூடிய உமாதேவிகள் இப்பொழுது தோன்ற வேண்டும்.
- கிராமராஜ்யம் -
ZSMSMS SeeLJTeeeSeeeSeJreeS eeeS eMMSMMLMLMLMMLMLMLMLM SLMLMLMeMMeSreTeekeLeLrMereTeSekeeLeLeeLTeLLeSLTLLL
கொடியர் சிலரின் நியமனத்திற்குப் பதிலாக தகுதியற்ற பலர், சிலரைத் தேர்ந்தெடுப்பது என்பதை ஜனநாயகம் ஒரு மாற்றகக் கொடுத்திருக்கிறது.
- பெர்ணுர்ட்ஷா
SeSeTeeeeTeTeLeLeTeLeTeSkTeSeTeTeTeSekeLeLeeLeLeLeeLeLeeLeLe LkeeTeeTeSeeeeS

Page 11
178 ஆத்ம
நம்மவர் குறிக்கோளும்
- கடமையும் (கு. கி. நாராயணன், )
* வாசா மகோசுரமாகவும், “அனிர்வசனியமாகவும், ஏகமேவ அத்விதியம் பிரம்மமாகவும் விளங்கும் அந்த சர் வேச்வரனது படைப்புக்கள் பலவற்றிலும் மிக உயர்ந்த ஸ்தா ணேத்தைப் பெற்று விளங்குவதாகக் கருதப்படுவது மனித இனம். ஏனெனில் இது நல்லது இது தீயது, இது ஏற்கப் படவேண்டியது இது தவிர்த்தொதுக்கப்பட வேண்டியது, இதை ஏற்றுக் கொண்டால் நன்மை பயக்கும், இதை ஏற் முல் தின்மை விளையும் என்றிவ்வாருகப் பகுத்தறியும் பான் மையை இறையருளினுல் பெற்று விளங்குவதாலேயே ஜீவ ராசிகளெல்லாவற்றிலும் தலைசிறந்து விளங்குகின்ருன் மணி தன். இவ்வாருக எண்ணுகின்ற வேளையிலே இறைவன் மனித சிருஷ்டியில் ஏதோ ஒர் இரகசியத்தை மறைத்து வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அடிமனதில் எழு கிறது. மனித இனம் சிரேஷ்டமானதே. ஆம். ஆனல் எப் பொழுது அவன் சிரேஷ்ட பதவியை எய்துகின்றன்? தனது வாழ்க்கையின் குறிக்கோளைத் தன் நினைவில் எப்பொழுதும் இருத்தியவனுய், நெறி பிறழாது, தன் கடமையினின்றும் வழுவாது அப் பரமபதத்தை நோக்கிச் செல்ல முயலும் போதே அவன் உண்மை மனிதனுகிருன். அந் நிலையை அடை யும் வரை "மனிதரிலும் கல்லுண்டு மரமுண்டு. என்ற செய்யுளுக் கேற்ப கீழ் நிலையிலேயே இருக்கிருன். -
நிற்க, இனி இம் மாண்புமிக்க மனிதனின் குறிக்கோள் امیت எது? அவனது கடமை எது? என்பது பற்றி ஆராய்வோம்.
விலையுயர்ந்த பொருளொன்றை வீட்டினுள் தொலைத்து விட்டான் ஒருவன். ஆனல் வீட்டிற்குள்ளோ வெளிச்சம் இல்லை. வீட்டிற்கு வெளியேயோ பால் போன்ற நிலவு உல
 
 

ஜோதி 179
fogo, பிரகாசப் படுத்திக் கொண்டிருக்கிறது. ஆகவே அம் மூடமனிதன் வீட்டினுள் தொலைத்த பொருளை, வெளிச்ச மிருக்கும் காரணத்தால் வெளியே வந்து தேடித் தேடிக் காணமுடியாமல் அரற்றினனும். இந்நிலையிலேயே தற்பொ .s Φ Φ کچھ
*ழுதைய மனிதன் இருக்கிருன், இன்பம் -உண்மை இன்பம்
உள்ளே மறைந்து கிடக்க, அநித்யமான வெளி உலகப் பொருள்களின் பின் சென்று இன்பத்தை நாடுகிருன்; தேடு கிருன், கடைசியில் கண்டு கொள்ள இயலாமல் தத்தளிக்
இம் மானிட வாழ்வை அடைதல் பெறற்கரிய பேறு களில் ஒன்ருகும். ஏனெனில் இப் பிறப்பில் தான் கர்மங்களின் காரணமாக மறுமையில் அவனது நிலை நிர்ண யிக்கப் படுகிறது. ஆகவே இப் பெறற்கரிய பிறப்பில் நற் செய்கைகளைச் செய்வானேயாகில் நன் நிலையை அடைகி முன் தீய கருமங்களைச் செய்வதன் மூலம் தீய நிலையை அடைகின்றன்.
சாஸ்திரங்களின் வாயிலாகத் தன் கடமையை அறிந்து கொள்ள ஒருவன் முயல வேண்டும். அவ்வாறு சாஸ்திரங் கள் மூலம் அறிந்து கொள்வது கடினமாகத் தோன்றுமே யானுல், அவைகளையெல்லாம் கற்றுணர்ந்த ஞானிகளிடம் சென்று பயின்று கொள்ள வேண்டும். இப்பேர்ப்பட்டஞானி கள் கிடைப்பது அரிதாயிருக்குமேயா கில் தர்மத்தை அறிந்து தர்ம வாழ்க்கை நடாத்தும் புருஷரின் உதவியை நாட வேண்டும். இதுவும் துர்லபமேயானுல் தர்மவான் என்று தனக்குத் தெரியும் நபர் ஒருவரிடத்தில் சென்று தனது கடமையை அறிய முயல வேண்டும்.
” தன்னை மேல் நிலைக்குக் கொண்டு செல்பவனும் கீழ் நிலைக்குத் தள்ளுபவனும் தானேயாவான, உண்மை இது, இதன் வழி நின்ருல் நன்மை கிட்டும் என்று அறிந்துணர் ந்த பின்னும் எவனுெருவன் மேல் நிலையை அடைய முய ற்சிப்பதில்லையோ அlெம்ெ கீழ் நிலையை அடைகிருன் இதை பகவான் பகவத் கீதையில்,

Page 12
80 - ஆத்ம
'உத்தரேத் ஆத் மனத்மானம் நாத்மானம் அவஸா தயேத்
ஆத்மைவ ஹ்யாத்மனே பந்தராத்மைவ ரிபுராத்மன் என்ற சுலோகத்தின் மூலம் தெளிவு படுத்துகிருர்,
வாழ்வில் செல்வந்தனுக வாழ்தல், ஆரோக்யவானக * ஜீவித்தல் போன்றவை, பிராரப்தத்தின் விளைவாக ஏற்படு
கின்றன. ஆனல் சோகம், காமம், மோஹம் பயம் போன்ற வைகளைத் தவிர்ப்பதாலேயே சாத்யமாகிறது. இக் கருத் தையே பகவத் கீதையில்,
* அலோச்யானன் வஸோசத்வம் ப்ரக்ஞாவாதாம்ஸ்ச பாஷஸ்ே கதா சூனகதாசூம்ச நானுஸோசந்தி பண்டிதா ’ என்ற சுலோகத்தில் காண்கிருேம்.
உண்மை இன்பத்தை அடைவதே நமது குறிக்கோள்
அவ்வின்பம் எத்தகையது? ஆக்கக் கலப்பற்ற தூய இன்பம்
அத் தூய இன்பம் லெளகிகப் பொருள்களுக்கு அப்பாற் பட்டு எல்லையில்லா ஆதியந்தமில்லா சச்சிதானந்த சொரூ பமாய் விளங்கும் ஒரு பொருளிலிருந்தே தோன்ற வேண்டும்" அப் பரம்பொருளை அடைந்து தூய இன்பத்தில் என்றென் றும் திளைத்திருப்பதே நம்மவர் குறிக்கோளாகும்.
ஆகவே உண்மை இன்பத்தை அடைவதே நம் குறிக் கோளாயிருக்குமேயாகில், நாம் உண்மை அறிவைப் பெற்று விளங்க வேண்டும். ஞானத்தினலேயே அக்ஞானம் அகற் றப் படுகிறது. உதாரணமாக மிகச் சிறந்த நெய்யால் தயா
ரிக்கப் பெற்ற சுவைமிக்க இனிப்புப் பொருள்கள் ஏராள
மாக ஒருதட்டில் நம் முன் வைக்கப்பட்டிருக்கின்றன என
வைத்துக் கொள்வோம். நாம் அதை ஆவலுடன் உண்ணப்
போகும் சமயம் நமது நண்பன் அவிடம் வந்து, "இதில்
துளி விஷம் கலக்கப்பட்டிருக்கிறது” என்பானேயாகில், நாம் அதனை உண்ண விரும்பாதது மட்டுமல்ல, அவற்றைக் கண் காணுத இடத்தில் கொட்டிய பிறகே ஆறுதலடைவோம் இது போன்று இப்புலப் பொருள்களில் சொல்லொணுத
 
 

薰
ஜோதி 181.
துயரங்களைத் தரக் கூடிய சக்தி மறைந்து இருக்கிறது. இவ றறிலிருந்து பெறப்படுவதாகக் கருதப்படும் இன்பம் முடி வில் துன்பமாகிறது . ஏற்ற அறிவு உதயமாகும்வரை இப் புலப் பொருள்கள் கவர்ச்சிகரமாகக் காட்சியளிக்கின்றன அவ்வறிவைப் பெற்றபின் அவற்றைத் தூர ஒதுக்கிவிட்டு உண்மை இன்பத்தை நாடிக் கண்டு கொள்ள முயல்வதே நம் கடமையாகும். இதையே பகவான் கீதையில், விஷயேந்திரிய சம்யோகாத்தத்ததக்ரே அம்ருதோபமம் பரிணுமே விஷமிவ தத்சுகம் ராஜஸம் ஸ்மிருதம் என்று மொழிகிருர்,
தேவர்களும் கூட சுவர்க்கத்தை அடைய மனிதப் பிறப் டெடுக்க வேண்டியிருக்கிறது என்று நாம் அறிகிருேம். இப் பேர்ப்பட்ட பெறற்கரிய பேற்றை அடைந்த நாம், சத்விஷ யத்தைப் பயின்று சன்மார்க்கத்தில் வாழ்ந்து நன்நிலையை அடைய முயலாமல், புலப் பொருள்களின் பின் சென்று வா ழ்வை வினுக்குவோமேயாகில், நம்முடைய அறியாமையை என்னென்பது. -
இறைவனை யடைவதே நமது குறிக்கோளாயிருக்க வேண் டும். ஏனெனில் பரமாத்மனே அழியாத ஆனந்தம், நிலைத்த சாந்தியின் நிலைக்களமாகும். எல்லாவற்றிலும் உயர்ந்ததும் அடையப்படவேண்டிய வஸ்து பரமாத்மனேயாகும். அதை அடைவதில்தான் மனித வாழ்வின் பூரணத்துவம் அமைந்து கிடக்கின்றது.
பகவான் கீதையில், 'அணித்யம் அசுகம் லோகம் இமம்
ப்ராப்ய பஜஸ்வமாம்' என்று மனிதப் பிறப்பின் மேன்மை  ைப எடுத்துக் கூறி,மனித வாழ்வின் குறிக்கோளையும் எடுத்
தியம்புகிருர்,
உண்மை இன்பத்தை நாடிச் செல்லும் மார்க்கம் இடுக் கண்கள் பல நிறைந்தது. அவற்றையெல்லாம் பொறுத்து அப்பாற் செல்லும் சக்தி மனிதனிடம் நிலவ வேண்டும். சமதுக்க அகக் கூடிமி யாக அவன் விளங்க வேண்டும்.

Page 13
182 ஆத்ம
576. ITLs) 6G615 tró0Ti5.5i 3.0/3.6ötCopii. ' Happiness presents
itself before man, wearing the crown of sorrow on its head He who welcomes it must also welcome sorrow. 9; GITT LÉ) 65). IT 60Tßg; † Go.g)6)5öT(UPff, lf pleasure increases in Arithmet ical progression, pair increases in geometical progression.
இவ்வாருக உண்மை இன்பத்தை , நிலையற்ற
இன்பத்திலிருந்து பகுத்தறிந்து, அதை அடைய இடைவி டாது முயற்சிப்பதே மனிதராய்ப் பிறந்த நம்மவரின் கட மையாகும்.
LL00LLLL0LLLLLLLzLLLLLLLLLLLKLLLLLLzKLLLSLSL0LL0L LLLL0LL0LLL0LLLLLLLLT LLLLLLLLMLSSLLLSS ஆத்மஜோதி அச்சக நன்கொடைகள்
சென்ற மாதக் கணக்கு 1905 - 50 திரு. ம. பொ. சிவநாதபிள்ளை கண்டி 18 - 00 , T. M. பார்த்தசாரதி அரக்கோணம் 2 - 00
, M. குப்புசாமி கடவளை I - 00 , செ. சின்னம்மா , 50 , , [b5. LDITrf) 9 50
மொத்தம் I 927 - 50
பிலவ வருஷ திருக்கணித பஞ்சாங்கம்
இது யாழ்ப்பாணம், மட்டுவில் திரு. சி. சுப்பிரமணிய ஐயர் F.R.A. S. அவர்களாற் கணிக்கப்பட்டது. மிக நுட்ப மாகவும் சுத்தமாகவுங் கணித்து வெளியிடப் பெற்று வரு வது விலை ரூபா 1, 25 தேவையானேர்
சி. சுப்பிரமணிய ஐயர், தில்லை வாசம், மட்டுவில், சாவகச்சேரி, ( சிலோன் ) என்ற விலாசத்திற்கு
எழுதிப் பெற்றுக் கொள்க.
O
o
Φ
ee eLeeS ALALA AeAe ee eLee eLeL eAe LLee eLeeS eeLeLeeS eke eeS eeeLeAeS keALeS LkeLeS SekLeS eLeeS eeeLeS LLLeAeS eeS eeeLee eLeLee eeeS AecLS ee ekeLee eeeS eLeAe eeeee LeeeLee LeeeeS LeASA cAe eAe eAeSe AA AeALALAe LALALLAAAALL cS YJ0 S 0eYSeYJYShJJSe J 0S00ekeJJ0eSJS0eSLeJ0eySeS 0eS0S0JJJ0eSe0e00ehJ00YeeSz0eh0Leh00eS
Φ
Φ
Φ
 
 

ஜோதி - 183
திருமுறைக்காட்சி-36.
回 - 圆 画回回 gԲ Θ e 圆画画 回回回 固面同 * @ರ್@ಶಿಪಿಲಿ
画画画画画(Up岛g)画画画画画画画
சீவனுக்கும் சிவனுக்கும் ஒருசுழியில் தான் வித்தியாசம். சீவன் சிவனுகாவாறு தடுப்பது அந்தச்சுழி, அதனை மும்மலங் கள் என்றும் மாயைத்திரை என்றும் கூறுவர். இந்தச் சீவன் யாருக்குச் சொந்தமானது? சிவனுக்கே தான் சொந்தமா னது. அகங்காரத்தால் சீவன் சிவனை விட்டுப்பிரிந்து செல் கின்றது. பாற்கடலிலுள்ள மீன் தான் பாற்சமுத்திரத்தில் வசிப்பதை அறியாதவாறு போல சீவனும் திருவருட் சமுத் திரத்தில் வசித்தும் சிவத்தை உணர்வதில்லை.
சிவத்தின் கருணைப் பெருக்கை எம்மால் உணரமுடிவ தில்லை. நாம் பிரிந்து வெகுதூரம் சென்ருலும் புறம் புறந்தி ரிந்து எம்மைத் தம் பக்கல் இழுத்துத்தம்மை உணர்த்திக் கொண்டே இருக்கிறது. இரும்பு தருமனத்தேனை ஈர்த்து ஈர்த்து என்புருக்கிக் கரும்புதருசுவை யெனக்குக் காட்டும் கழலிணைகளையுடையவன் எம்பெருமான். சீவனின்வினை அறு ந்து சிவமாவதற்குச் சிவனுக்குத் தனு, கரண, புவன போகங் களை அளித்துள்ளான் இறைவன், அதனைச் சீவர்கள் உணர் வதில்லை.
இவ்வுலக வாழ்க்கையிலே சிவனைப்புவிமாயையில் வாட் டும் பொருட்கள் சிலவுள, அவை:- மண், பெண், பொன் என்பன. இவற்றுள் எவற்றையாவது இச் சீவன் பிறக்கும் பொழுது கொண்டுவந்தததோ என்ருல் இல்லை என்றே பதில் கூறவேண்டும். எந்தக் குழந்தையாவது பிறக்கும்போது ஒரு தங்க அரைஞாண் கொடியோடாவது அன்றி ஒரு காசுமாலை யைக் கழுத்தில் போட்டுக் கொண்டாவது பிறந்ததை நாம் அறியோம். இலட்சக் கணக்காய் தேடுகிருன் மனிதன்.
s
R.

Page 14
184 ஆத்ம
கோடீஸ்வரர்கள் எத்தனையோபேரைப் பார்த்துள்ளோம். கோடீஸ்வரன் கடைசி காலத்திலே ஒரு செம்புச் சல்லியாவது கொண்டு செல்லமுடிகின்றதா? இல்லை என்றே அனுபவத்தில் உணர்ந்துள்ளோம்.
'தவத்தளவேயாகுமாம் தான் பெற்ற செல்வம்' என்பது ஒளவைவாக்கு. முற்பிறப்பிற் செய்த புண்ணியத்திற் கேற்கப் பணப்பெருக்கில் வாழுகின்றன். அப்பணத்தைக் கொண்டு புண்ணியத்தையே மேலும் மேலும் சம்பாதிப்பதை விட்டு பாவ மூட்டையைப் பெருக்கிக் கொள்வது மனித சுபாவ மாகி விட்டது. மனிதன், உடன் வாழ்பவர்கள் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கின்றன். அவனுக்குப் பல குழந்தைகள் பிறந்துள்ளன. எந்த ஒரு குழந்தையாவது பிறக்கும்போது ஏதாவதொன்றைக் கொண்டு வந்ததோ என்ருல், இல்லை என்பதை மறுக்க முடியாது. உடன் வாழ்ந்த கோடீஸ்வரன் ஏதாவதொன்றைக் கொண்டு சென்றனுே? என்ருல் அதுவும் இல்லை என்பதைப் பல அநுபவங்களுக்கூடே அறிந்துள்ளான்.
பிறக்கும் பொழுது கொடுவந்ததில்லை; பிறந்துமண்மே
லிறக்கும் பொழுது கொடுபோவதில்லை; இதனை நன்கு அறிந்திருந்தும் கொடுக்கும் பண்பு இவனிட த்து உண்டாக வில்லை. மக்கள் எல்லாம் மரிக்கக் கண்டும் தான்நூருண்டல்லநித்திய புருவுருகை வாழ்வதாகவே எண்ணு கின்றன். பாடு பட்டுத்தேடிப் பணத்தைப் புதைத்துவைத் துக் கெட்ட மனிதரைப் பார்த்திருந்தும் தருமசிந்தனை உண்டாகவில்லே ,
ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகள். ஒருவன் கோடீசுவர னக வாழ்கின்ருன், நால்வரும் அன்ருட வாழ்க்கைக்கே கஷ் டப் படுகின்றனர். காரணம் என்ன? ஒரேதாய் தந்தையரின் குழந்தைகள் ஐவரும் ஒரேமாதிரி யல்லவா வாழவேண்டும். இந்த இடத்திலே தான் ஒருண்மையை மனிதன் விளங்கிக் கொள்ளக் கடமைப் பட்டுள்ளான். பூர்வ புண்ணிய பாவ பலனே, யாம் இப்பிறவியில் அநுபவிப்பதாகும், 'தவத்தளவே
ܘܢ

ஜோதி 185
பாகுமாம் தான் பெற்ற செல்வம்' என்பதை உணர்ந்து கொண்டவன் எங்ங்னம் மேலும் மேலும் தவத்தைச் செய்யா திருக்க முடியும். எமது புண்ணிய பாவப்பயனை அளந்து நுகரவைப்பவன் ஆண்டவன். சென்றகால வினைப்பயனுல் இச்செல்வம், மேலும் மேலும் நல்வினைகளைச் செய்து நல்ல வணுக ஆகுமாறு இறைவனுல் கொடுக்கப் பெற்றது இச் செல்வம், பிறக்கும் பொழுது கொண்டுவந்தது மல்ல; இறக் கும் பொழுது கொண்டுபோவது மல்ல. இடைநடுவில் வந் தது. தானுக வந்ததல்ல; சிவன்தந்தது. சிவன்தந்த பணத் தைச் சிவகைங்கரியத்திற்கே செலவு செய்யக் கடமைப் பட் டுள்ளோம். நம்பிக்கைக்காகத் தரப்பட்ட செல்வம். அதனுல் சிவபுண்ணியத்தைத் தேடிக்கொள்ள வேண்டும்.
நாம் எத்தனை எத்தனே பிறவிகள் எடுத்தோமோ அத் தனக்கும் இதுபொருத்தம். வினைதீரும் வரை பிறப்பு உண்டு. பிறப்பு உண்டேல் இறப்பு முண்டு. இடைநடுவில் வந்த செல்வம் அவன் செய்த புண்ணிய பாவத்தினளவினதாகும்.
செல்வம் சடப்பொருளாதலின் தானுகச் செல்லமாட்டாது.
கன் மங்கொண்டு செலுத்துவது இறைவன் எமது புண்ணியத் திற்கேற்கத் தந்த செல்வமாதலின் அதனை உடனேயே
"என்னுறு மொன்றுதங் கையுறப் பெற்றக்காற் பின்னுவ தென்று பிடித்திரா - முன்னே கொடுத்தா ருபப்போவர்.' என்பதற்கேற்பக் கொடுக்க வேண்டும். அடுத்தகணம் இருப் போமென்பது நிச்சயமில்லையே! கொடுப்பதை இடதுகை யால் எடுத்தால் இடதுகையாலேயே கொடுத்துவிட வேண் டும் என்பார்கள். வலதுகைக்கு மாற்றுவதற் கிடையிலேயே மனம் மாறிவிடும். தினந்தோறும் விடிந்து எழுந்ததும் புதிய நாள் எனக் குதூகலிக்கின்ருேம் நாள் என்பது எமது ஆயுளை அறுக்கும் வாள் என்பதை நாம் உணர்வதில்லை.
“நின்றன நின்றன நில்லா வெனவுணர்ந் தொன்றின வொன்றின வல்லே - செயிற் செய்க சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன் வந்தது வந்தது கூற்று.’ -என்பது பெரியார் வாக்கு.

Page 15
186 ஆத்ம
இறைவன்தந்த அறிவுபெரியது, அதைக்கொண்டே மனி தன் செல்வஞ்சேகரித்தான். ஆனல் செல்வம் பெற்றதாற் பெறும் பயனை அடைவதற்கு அவ்வறிவை உபயோகிக்கத் தவறிவிட்டான். தந்த அறிவை உபயோகிக்கத் தெரியாதவர் கள் கீழ்மக்கள் ஆகின்ருர்கள்.
கொடு, கொடு, கொடுத்துக் கொண்டே இரு என்பது சுவாமி சிவானந்தருடைய வாக்காகும். கொடையினலே தான் தியாகம் உண்டாகின்றது. மனிதன் சிவன் தந்தது என்று அறியாமல் தான் உழைத்த தாகக்கருதி விடுகிறன். அதனலேதான் நான், எனது என்ற அகங்கார மமகாரங்களுக் காளாகி கொடுக்கறியாதிருக்கின்றன். இக்கருத்துக்கள் அத் தனையையு மடக்கிய பட்டினத்தார் பாடலைப் பாருங்கள்.
பிறக்கும் பொழுது கொடுவந்த தில்லை; பிறந்து மண்மே லிறக்கும் பொழுது கொடுபோவதில்லை; யிடைநடுவிற்
குறிக்குமிச் செல்வஞ் சிவன்தந்த தென்று கொடுக்கறியா திறக்குங் குலாமருக் கென்சொல்லு வேன்கச்சியேகம்பனே
பொருள்:- அடியேன் பூமியில் பிறக்குங் காலத்தும் கொண்டு வந்ததாகிய பொருள் வேறென்றுங் கிடையாது; பூமியில் தோன்றி சாங்காலத்திலும் கொண்டு போகும் பொருள் இல்லையாம். இப்பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவணதாகிய வாழ்க்கைகள் தோன்றியதாக எண்ணப்படும் இந்தநிலையி லாச் செல்வம், எல்லாம்வல்லவனுகிய சிவமூர்த்தி ஆன்மாக் களின் கர்மங்களுக்கீடாகக் கொடுக்கப்பட்ட தென்றெண்ணி இரப்பார்க்குக் கொடுக்க அறியாது, வீணுகஉயிரைவிடும் கீழ் மக்களுக்கு நான் ஏது சொல்லுவேன் திருக்கச்சியைத் திருக் கோயிலாக்கொண்டெழுந்தருளியிருக்கும் ஏகாம்பரநாதனே,
qSLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLSMLMeS LALSMLMLSSSSSASLSMLTLSSMLeeSMseMMLALSMeeLSMTSSeeeSLLLLLLLAeLSLSLLTSeeeS తాతాతాతాహతాతాహకతాత
பணத்தை மட்டும் சேர்த்து விடு; உலகம் முழுவதும் சேர்ந்து
கொண்டு உன்னே ஒரு பண்பாளன் என்று கூறத்தயங்காது. - பெர்ணுர்ட்ஷா
qLTLLLMMTLMLLTLLTLS TMLL LTL LLTLS LMM TS LTLLTLS L MLMLMLL TLS TMS TTiTL LTMLLTLSLLMLMLMLMMSLMTLS LLLLLMMS
M! ||
 
 

ஜோதி 187
சுவாமி அபேதானந்த மஹராஜ் A
அவர்களுக்கும் ஒரு பக்தருக்கும் இடையே நடந்த சம்பாஷணை
Sya У И NN:42 N92 Myta NVA NWA V/ NYM УA
--- S.2 SY2 SA2 SY2 2. SA2 /th 2. SYR SA *赛<><>添<><>漂<><>赛<><>漂<><>漂<><>添<><>添<><才猴<><>添<><>漂
பக்தர்;- அபேத ஆசிரமத்தின் இலட்சியம் என்ன? சுவாமிகள்:- மக்களுக்கு கடவுள் நம்பிக்கை ஏற்பட்டு அது உறுதி பெற வேண்டும். இது பெற்றுவிட்டால் உல கில் அமைதியை நிலை நாட்ட முடியும்.
பக்தர். இந்துமத தத்துவங்களே மக்களிடையே பரப் புவதுதான் தங்களுடைய முக்கிய வேலைத் திட்டமா?
சுவாமிகள்:- எந்த மதத்தையும் தனிப்பட்ட முறை யில் பிரசாரம் செய்வது நோக்கமல்ல. எல்லா மதத்தின ருக்கும் இந்த ஆசிரமத்தில் இடம் உண்டு.
பக்தர்:- இங்கே நடந்துவரும் நாம ஜப யக்ஞம் என்ற கர்மத்தினுல் என்ன பிரயோசனம்? சுவாமிகள்:- நாம ஜப. பஜனை, ஆராதனை இவற்றில் இருந்து ஒசை அலைகள் பொங்கிப் பரவிய இடம் அனைத் தும் பரிசுத்தமாகும். கேட்டவர் மனதில் சாந்தி ஏற்படும். நாம ஜப ஒலிகளிலே பரவக் கூடிய அணுக்கள், தீய எண் ணங்களால் பரவிய அணுக்கள் முழுவதையும் அழித்து விடு கின்றன. அது எங்ஙனம் என்ற கேள்வி எழலாம். இறை வன் நாம ஜபம் செய்யும் பொழுது மனம் விகாரமடை யாது. கடவுள் காம வசப்பட்டவர் அல்ல. அது மட்டு மல்ல. திவ்ய நாமத்தின் அர்த்தத்தை உணர்ந்து பாடும் பொழுது பக்தர்களுடைய முகத்தில் தெய்வீகம் தெளிவா கக் காணப்படுகிறது. "யத் பாவம் தத் பவதி' ' just 26 you think you become' என்றெல்லாம் கூறுவதுண்டு. ஆக கடவுள் நாமத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லும்பொ ழுது மனம் அமைதி பெறுகிறது. Wi. பக்தர்;- மதம் என்ருல் என்ன என்று விளக்குவீர்களா?

Page 16
188 ஆத்ம
சுவாமிகள்:- கடவுளை அடைவதற்கு ஏற்ற முயற்சி மதம் எனப் பெயர் பெறுகிறது.
பக்தர், அப்படியானுல் ஏன் அநேக மதங்கள் தோன்றி யிருக்கின்றன?
சுவாமிகள்: ஒவ்வொரு ஆசாரியரும் காலம், இடம் இவற்றிற்கேற்ப தத்தம் கொள்கைகளையும், அபிப்பிராயங் களையும் வெளியிட்டிருக்கின்ருர்கள். எனினும் எல்லா மதங் களின் குறிக்கோளும் ஒன்றுதான். எல்லா மதஸ்தர்களும் மனச் சாந்தி அடையத்தான் முயன்று வருகிருர்கள். உலக விஷயங்களில் ஞானம், விஞ்ஞானத்தில் அடையும் தெளிவு முதலியன மனதிற்கு அமைதி நல்குவதில்லை. ஒவ்வொரு மனிதனும் தன் மனதை மாசு நீக்கி சாந்தி அடைந்ததாய் வைத்துக் கொண்டால்தான் உலக அமைதி ஏற்படக் கூடும். ஆதலால் ஒவ்வொரு மனிதனும் தனக்கு சாந்தி கிட்டுவதற்கு வழி தேடி முயற்சி பண்ண வேண்டும்.
பக்தர்: இக் காலத்தில் காணப்படும் மதப் பூசல்க ளும் சண்டை சச்சரவுகளும் மனத் தாங்கல்களும் அறவே
(Nእ
நீங்க நீங்கள் என்ன முயற்சி செய்கின்றீர்கள்?
சுவாமிகள் ;- பக்த பிரோன்மணிகளான சான்றேர்களி டத்தில் மதப் பூசல்கள் தலையிடுவதில்லை. மக்கள் மனதில் கடவுள் நம்பிக்கை அதிகம் உறுதி பெறும் அளவு சண்டை கள் குறையக்கூடும்.
பக்தர்: கடவுள் நம்பிக்கை உள்ளவர்களிடத்தில் அல் லவா மதச் சண்டைகள் உண்டாகின்றன?
சுவாமிகள்; கடவுள் ஒருவரே. மானிடன் தனது அந் தக் கரணத்தை பரிசுத்தப் படுத்தியதால் உண்டாகும் திவ்ய பாவனேதான் கடவுள். இந்தப் பாவனையின் மூலம் மனிதன் பேரின்பம் அடைகிருன்." ஏகம் ஸத் விப்ரா பகுதா வதந்தி' இந்த மகா வாக்கியத்தை உன்னிப்பாகப் பாருங்கள். ஸத் ஒன்றே, அதையே சான்றேர்கள் பல விதமாகப் பாடினர் கள் இயேசு இறைவனுடைய செல்வன். அல்லா இறை வடி வமேயாகும். நபி அல்லாவுடைய பிரசுர கர்த்தர் gu,3JTr†. %.
بیڑیا
 
 
 
 
 
 
 
 

ஜோதி 189
வேதாந்திகள் ஈசுவரனை பிரம்மம் என்கிருர்கள். மீமாம்ச வகுப்பினர் கர்மத்தை தெய்வமாகக்கருதுகிருர்கள். இயேசு, அல்லா, கர்மம், பிரும்மம் எல்லாம் அந்த ஒரே பொருள் தான். இந்த ஒரே பொருளைத்தான் கிறிஸ்தவர்கள் இயேசு என்றும், முஸ்லீம்கள் அல்லா என்றும், வேதாந்திகள் பிரும் மம் என்றும், வைணவர்கள் விஷ்ணு என்றும், ஜைனர்கள் அருஹன் என்றும் மீமாம்சர்கள் கர்மம் என்றும் கூறுகி றர்கள்.
பக்தர் :- இந்து மதத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட 5 வுள்கள் இருக்கிருர்களே?
சுவாமிகள்:- இந்துக்கள் அன்பு மிகுதியால் அவரவரு டைய மனப்பாங்கிற்கேற்ப பெயர்களைச் சூட்டி மகிழ்கிருர் கள். கடவுள் ஒருவரேயானலும், பல பெயர்கள் உள்ளவர், இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், மற்ற மதத்தினர் கள் ஆகிய எல்லோரும் வணங்கி வரும் கடவுள் ஒருவரே. பக்தர்: இந்துக்கள் போற்றிவரும் கடவுளுக்கு அந்நி யோன்யம், பந்தம் கற்பிக்கிருர்களே? சிலர் இறைவனுக்கு ஒரு குடும்பத்தை ஏற்படுத்தி அக் குடும்பத்தையே வணங்கு கிருர்களே?
சுவாமிகள்:- மானிடன் குடும்ப வாழ்க்கையிலேயே பழக்கப்பட்டவன். ஆகையால் அவன் இறைவனையும் ஒரு குடும்பியாக எண்ணி வணங்குகிருன் கீதையில் பகவான் கூறுகிறர் * பிதாஹம் அஸ்ய ஜகதோ மாதா, தாதா, பிதா பிதா மஹா வேத்யம் பவித்திரம், ஒங்காரம், ரிக் சாம, யஜூ ரேவ ச .' இதன் பொருள் உலகத்தினுடைய, அம்மை, அப் ப ன் , ப ா ட் டன் , அறிய க் கூ டி ய வ ஸ் து , பரிசுத்தமான வஸ்து, எல்லாவற்றிற்கும் நடுநாயகமாகிய ஓங்கார ரூபமும் ரிக் யஜீர் சாம, அதர்வண வேதங்க
ளும் எல்லாம் நானே ஆவேன்.
s
பக்தர்- கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களைப் பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
சுவாமிகள் :- அவர்கள் கர்ம வீரர்களாக (UDL?-UIT51.
உலக நன்மையில் நாட்டமுள்ளோர் அன்ருடம் பக்தி சிரத்

Page 17
190 ஆத்ம
தையுடன் பூஜை நாம ஜபம் செய்தல் அவசியம். பிரார்த் த னை செ ய் வ தா ல் எ ன் ண ங் க ள்  ைக கூ டு ம் , இ  ைற வனி ட த்து >9{ 60( )9- LL( ח" ,Eפ உ று தி யா ன ந ம் பி க் கை  ைவத் த ல் ஒவ் வொ ரு வ னு க் கு ம்
இன்றியமையாதது. எல்லா மதங்களும் இத் தத்துவத்
தையே பறைசாற்றுகிறது. மதமில்லாத மானிடர் உலகத் திற்கு ஒரு பெரும் சுமையாகவும், சமூகத்திற்கு ஆபத் தாகவும் இருப்பர். நாம் கண்டு வரும் பதை பதைப்புக்கும் கூ ச் ச லு க் கு ம், ப ய த் தி ற் கும் க IT ர ன - ம் மக்களிடையே கடவுள் நம்பிக்கை உறுதிப் படாததே. எந்த மானிடனுக்கும் நான் என்ற வார்த்தையை உபயோகிக்க அதிகாரம் இல்லை. ஈசுவரன், நான் என்ற இரு வார்த்தை களும் இறைவனையே குறிக்கும். இறைவனின் சக்திக்கு முன் ணுல் நான் என்று கூறுவது அபசாரமாகும். நான், எனக்கு என்னுடையது என்ற இந்த வார்த்தைகள் எல்லாம் நம் பேச்சில் தவிர்த்து பழகிவந்தால் நம் மனதை உள்நோக்கி திருப்புவதற்கும் சுலபமாக இருக்கும். அப்பொழுது சொல் லுதற்கு அரிய பேரின்பம் நமக்குக் கிட்டும். இங்கனம் மனிதன் தன்னை பண்படுத்தி வந்தால் அவனிடத்து அகங் காரம் சிறிது சிறிதாகத் தேயும்.
பக்தர் :- சில கோவில்களில் விக்கிரகத்தினிடத்தில் கண் ணுடி வைக்கிருர்களே? அதன் நோக்கம் என்ன?
சுவாமிகள் :- விக்கிரகங்களுக்குள் மிக மேலானது கண் ணுடி அது எல்லாவற்றையும் கிரகித்து பிரதிபலிக்கிறதல் லவா? மன அமைதிக்கு உதவியாக இருப்பது விக்கிரகமா கும். உடலின் வேறுபாடுகளை அனுசரித்து கோயில்கள் கட் டப் படுகின்றன. உடம்பு ஆலயமாகிறது. கலாசாலையிலே
ஏழை பணக்காரர்கள் என்ற பேதமின்றி எல்லோரும் வரு வது போன்று கோவில்களிலும் பேதமின்றி அவர்கள் இடம்
பெறுகின்றனர். அபேத ஆசிரமத்தின் நடைமுறையில்கடைப்
பிடிக்கின்ற முக்கிய விஷயம் சர்வமத சமரசமும் அவற் றின் முன்னேற்றமுமாகும்.
 
 

ஜோதி 19
பக்தர்; தங்கள் கருத்துப்படி கோவிலுக்குள் மக்கள் நுழைவதில் கட்டுப்பாடு ஏற்படுத்துதல் சரியாமா?
சுவாமிகள்:- மானசீக சம்ஸ்காரம் கோவில் மூலமா கக் கிட்டும். குற்றம் காண்பவர்க்கு அங்கு இடமில்லை. அந்த ரகத்தினரை கோவிலுள் அனுமதிக்கலாகாது. கோவிலின் சூழ்நிலை நாமஜபம், பஜனை, பூஜை நடத்தி பரிசுத்தம் பெற் MOUBI. S-9) @ðD 35 DfT3Er அடைவதற்குக் காரணமாக இருப் டோரை கோவிலில் நுழைய விடுவது தவறு. இதைத்தான் இந்து மதத்தினர் கடைப்பிடித்து வந்தனர் போலும்.
፩,፤ጀ SYKE ఫ్లోక్షజీూతొ4ఖాత ATMM rM TT Me MMS MM MMS MM MM SAAMTeMMMTeMeMMee MeeS eMeTLTLeMTMSeS eTeS eeMeSMeSzeeAeeS తూతకొతభౌతతాన్దేశిక్ష
திருமுறைக் காட்சி th
ஆத்மஜோதியில் தொடர்பாக மேற்படி தலைப் பின் கீழ் வெளிவந்த 23 கட்டுரைகள் முதலாம் பகுதியாக 8 வெளிவந்துள்ளன.
நால்வர் மத்தியிலே! நடராசர் திருவுருவம், மூவாணப் படத்துடன்
அருள் வடிவாய் விளங்குகின்றது. விலை 1 ரூபா 50 சதம். தபாற் செலவு 35 சதம். இந்தியாவில் உள்ள அன்பர்கள் R, வீரசம்பு, சம்பு இன்டஸ்றிஸ், சேலம் 2. என்ற விலாசத்திற்கு எழுதிப் பெற்றுக்கெர்ள்ளலாம்.
இந்தியாவில் வில 1 ரூபா 50 நயா பைசா ( புக் போஸ்ட்டில் சார்ச்சு 20 நயா பைசா.
&
பதிவுத் தபால் மூலம் 70 நயா பைசா. ஆத்மஜோதி நிலையம், நாவலப்பிட்டியா, சிலோன்.
3.
ప్రతPPతPతతాతాతాతలితాతతాత ఉతాతసాత అతణాతతాతాతా ఈ శతాతతాతాతతొ తొ తణా తాతజాతకొతళ్ల
: ಫ್ಲೆ$

Page 18
ggs, a gwarae gan R. R. C.
ሰ¥ r
XXXXXX, 'கணியூரான்”
நீண்டு பரந்திட்ட வானத்திலே - ஒளிக்
கோட்டை வரைந்தது யார்? - மனம் வீங்கித் துடித்திடும் நேரத்திலே - மணி
ஒசையை ஒளிப்பது யார்?
e ses
Markt Na
asks WW
s ar
t
an r
ar
கொஞ்சும் மழலையின் குரலினிலே - பெரும் குதலேயைத் தந்தது யார்? - மண்ணில்
நெஞ்சம் விம்மிடும் நேரத்திலே - ஒரு
நித்திரை தந்தது யார்?
e
t ኵ)
s
s
s
கோடி மலர்களை வானத்தே மேவியே
கொட்டி வைத்தவர் யார்? - மனம்
கோடிக் கனவினைக் காண்பதற்கே - அந்தக்
கோலத்தைக் குவித்தது யார்?
தேடிவரும் இன்பம் கூடிடவே - வழி
வகுத்துத் தந்தது யார்?
நாடி வரும் கன்னல் தேனினைப் போல்
இசைக் கோயிலைக் கண்டது யார்?
காலமெலாம் தமிழ் காவியம் பாடிட - அரும் காவியம் சமைத்தது யார்? - அருள்
ஞாலமெலாம் உய்யும் ஞானத்தை மண்ணில்
நெகிழ்ந்திட வைத்தது யார்?
மாயையைப் போக்கிடும் மாண்பினை - கீதை வடிவினில் அளித்தது யார்? - நிதம் வாழ்வையே போற்றிடும் அருளின் நாமத்தை
வழங்கிக் காப்பது யார்?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சென்ற மாதக் கணக்கு ஊவாக் கட்டவ% 3D - c. F60ST தருமபுரம் சங்குவேலி கந்தர் மடம் உடுவில் சிண்டிலிப்பாய் நாகெனித் தோட்டப் கட்டுவன் கொழும்பு காங்கேசன்துறை பதுளை கல்லெல்ல சாவக்கச்சேரி மத்துகமப்பட்டினம் மதுகெதறத் தோட்டம் | சென் ஜோட்ஜ், தோட்டம் கீக்கினகந்த, தோட்டம் மத்துகமத் இலப்பந்துறப் பட்டினம் பாந்திய தோட்டம் cᎦ5 N) Ꭷ; ᏓI 1ᎶᏂ) ஊரெழு மிருசுவில் தெல்லிப்பளை உருத்திபுரம்
TTL D/b/T,5 | | U | () கண்டி குஞ்சுப்பரந்தன் கிளிநொச்சி சுதுமலை வட்டக்கச்சி ஜெயந்திநகர் நல்லுரர் ע (60[LDg டம்பாரைத்தோட்டம்
லப்பந்துற தோட்டம்
ரீகந்துற *ழவாஞ்சிக்குடி டெனிஸ்ரன் தோட்டம்
பன்விலதோட்டம்
உடுப்பிட்டி பருத்தி துறை
மடடககளபட
பள்ளகொட தோட்டம்
燃 ானிப்பாய்
மஸ்கெலியா
மொத்தம்
ரிஷிகேசம் தெய்வீக வாழ்க்கைச் சங்கம் வெள்ளிவிழா நாமலிகித ஜெபம்
மார்ச் மாதம் முடிய உள்ள கணக்குவிபரம்
I 81 16 582 4 600 1 1724 40057 3 870 30 1 20 4510 I 84 80 83 20 27 000 8800 3 608 264 00 6 720 4920 1375 221 5 I 18 OO 6 4000 II 0 6 4 0 3459 57 20 I 525 84.40 6880 99.54 02319 1 OO 80 2400 28 16 I 4664 96 60 50344 4 8360 ኃ 0857 6080 il 2000 4 480 542&& 937 5 49.34 20 0 0 4000 A 29360 12 126 II 0 0 8 8 4 24 O 24 OO 2 1867
aus=o 190789 75
ســـــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ se-H1

Page 19
Registered at the G. P. O. as
சர்க்கரை கெட் (DABETES) GTGörgy கரை வியாதிக்கு மிகச் சிறந்த நீரில் வருகிற சர்க்கரையைப் குறைத்து கொழுப்பு ரஸ்னேக ததாதுக்களின் தித்திப்பைக் ( யாவும் மூலிகையில்ை சித்தர் தயாரிக்கப்
இலங்கையில் கி. ஆத்ம ஜோதி நிலைய - இந்தியாவில் கிை சம்பு இன்டஸ்ரீஸ்
மு. கணபதி அ
画画画画画画画画画画画彦
சந்தா நே
副
ஜோதி எடுக்கும் சந்தா நேயர்க
அனுப்பிவைக்குமாறு | பணம் அனுப்பும்போதும்விேலாச ம இலக்கத்தைத் தவறுது குறி இந்தியாவில் உள்ள அன்ட R வீரசம்பு, சம்பு இல 凹 என்ற விலாசத்திற்கு
இவ்விடமும் அ ஆதம ஜோதி நிலைய 同
「리 画画画画画画画画画画画画画画画画匾
| 1 in te d & Published by Mr. N. Muthiah at ATH MAJOTHI PRESS, NA WAL

a News Paper M. L., 59-300
ம் நீரழிவு, மதுமேகம் சர்க் 體 ந சூரணம். 圃 画
1ள் போவதைத் தடுத்து சப் குறைக்கும் அற்புதலுளடதம் களின் அனுபவ முறைப்படி பட்டது.
போக்தி புளிப்புச்சத்தை ܓ
டின் ஒன்று 6 ரூ 75 ச. மு. 画
டைக்குமிடம் 回 பம், நாவலப்பிட்டி டக்கும் இடம்:
சேலம் 2(S.I.) டைக்குமிடம்:- 體 அன் கம்பெனி
體 क्क्क्क्क्क्क्प् பர் க ளு க் கு 體
1ள் அனைவரும் தமது சந்தாப் 器 அன்புடன் ಘ್ನ |
ாற்றம் செய்யும்போதும் சந்தா ப்பிட வேண்டுகின்றுேம் 固
பர்கள் வழக்கம் போல
அனுப்பிவைப்பதோடு
Athma jothi Nilayam Naw alapit ya. APIT HY A. (Ceylon) i 3-4 . . .