கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1962.05.14

Page 1
UN
s
محمحم۔
ܐܝ ܢ
*\\ -- as
 

அம்மை

Page 2
எல்லா உலகிற்கும் இறைவன் ஒரு வ ன எல்லா உடலு ம் இறைவன் ஆலயமே.
- சுத்தானந்தர்
ஜோதி 14 |சுபகிருதுளு வைகாசி மீ" 1 வட (14-5-62) | 3. La 7
பொருளடக்கம்
கீதாஞ்சலி 241. 2 பூரீ ஆனந்தமாயி அம்மையாரின் அற்புத வாழ்க்கை 243 3 தேவி தரிசனம் 247 4 தத்துவ விசாரணை 248 5 பிரம்மத்தை அடையலாம் 249 6 பொன்னடிக்கே வருவேன்! 253 7 சக்தி வணக்கம் 254 8 சக்தி தத்துவம் 255 9 பகவானுக்கு எழுதிய கடிதம் 260 10 சக்தி வணக்கம் 263 11 நெஞ்சம் மலராதோ? 267 12 பரசிவ வெள்ளம் 268 13 சுவாமி பிரமானந்தர் O73 14 விசயனும் வேட விகிர்தனும் ஆடிய திருவேட்டை 276
ஆத்மஜோதி சந்தா விபரம்
+++++++→平+++++++→ ஆயுள் சந்தா ரூ. 75-00 வருடச் சந்தா ரு. 3-00
தனிப்பிரதி சதம் 30. கெளரவ ஆசிரியர்:- க. இராமச்சந்திரன் பதிப்பாசிரியர் :- நா. முத்தையா ஆத்ம ஜோதி நிலையம் ” நாவலப்பிட்டி (பிலோன்)
 

மகாகவி தாகூரின்
கீதா ஞ் சலி 23. எவ்வழியில்?
இன்பப் பயணம் புறப்பட்ட
இனிய நண்பா! ஏணுே, இத் துன்பப் புயலில் காரி ருளில்
துணிந்து வெளியிற் கிளம்பினையோ?
நம்பிக் கையற் றவன், அதிர்ந்து
நாளும் துன்பப் படுவது போல்
பம்பிப் படர்ந்தும் நீள்வானம்
பயந்து காற்றல் அலறிடுதே!
இரவெல் லாம்கண் இமையாமல்
இன்றென் கதவை அடிக்கடியான் திறந்தே இருண்ட வெளியெல்லாம்
திகைத் துன் வரவை நோக்குகிறேன்!
நண்பா, எந்த வழியிலென
நாடி வருவாய்? இருள்வெள்ளம்
பம்பிப் பெருகும் நதிக்கரையின்
பாதை தனிலோ வருகின்ற ய்
அச்சம் தரும்பேய்க் கான்வழியோ?
அகண்ட விலங்குப் புதர் வழியோ?
நச்சிருள் கவிந்த எவ் வழியே நடந்து வருகின் றயோ நீ?
24. இருட்போர்வை
பகற்குமுறல் அடங்கியதும்
பறவைப்பாட் டொடுங்கியதும், பாய்ந்தடித்த காற்றயர்ந்து
படுத்ததும், கா ரிருட் திரையால்
முகம் கால்கை தேகமெலாம்
மூடியெனப் போர்த்திவிடு: முழு மாலைப் பொழுதினிலே
முகம் வாடிச் சோர்ந்தயர்ந்த

Page 3
242. ஆத்மஜோதி
புகழ்க்கமல இதழ்களைநி
பொன்றது குவிப்பதுபோல், பூமியெங்கும் நல்லுறக்கப் | ši
போர்வையினுற் போர்த்துதல் போல்,
அகம் சோர்ந்து வாடிய, என்
ஆருயிர்க்குத் தெம்புதர அருள் கனத்த இருளால், என் ".
அங்கமெலாம் மூடி விடு!
நீளுலகப் பெரும் பயணம்
நிறைவேறும் இறுதியில், இந் நெடுந்துார யாத்ரிகனின்
நிகழ்கைப்பை வறிதாச்சு;
மேலாடை கிழிந்தழுக்கின்
வெடிநாற்றம் கடிந்தொதுக்க, விறலிழந்து, திறலிழந்து,
வட்கத்தால், துக்கத்தால்,
சூழ்கொடிய வறுமையினுல்,
சொலற்கரிய களைப் புணர்வால்,
சேர்ர்ந்தயர்ந்து வீழ்ந்து விட்ட
தொலைப்பயணி என, நின்றன்
ஆழ்கருணை இருட்போர்வைக் கடியினிலே துமிலூட்டி,
அழகு புது மலர்போ லென்
ஆருயிர்க்கு வீறருள் வாய்
* "பரமஹம்சதாசன்'
స్త్రీస్గ (p శ్రీ 9 స్క్రిXXXX
எவன் ஐம்பொறிகளை அடக்கி ஆள்கின்ருனே,எவன் அவா, வெகுளி அச்சம் மூன்றையும் அறவே விளக்குகின்முனே, அவனே வித்தி பெறுப வன். பகவான் கூறுகிருர் - என்னிடத்திலேயே சரண் புகுவாய், எல்லாப் பாவங்களினின்றும் உன்னை விடுவிப்பேன். துக்கப்படாதே.
காமம், சினம், அவா மூன்றுமே நரகத்தின் வாயில்கள். அவையே ஆன்மாவை அழிப்பன. இருள் நிறைந்த இந்த வாயில்களிடம் செல்லாத வனே எப்பொழுதும் பரகதி அடைவான். பகவத்கீதை,
A
 

ஆத்மஜோதி 243
யூனி ஆனந்தமாயி அம்மையாரின் அற்புத வாழ்க்கை.
- ஆசிரியர் ܒܚ
இன்றைய பாரமார்த்திக விண்ணில் ஞான சூரியனுக விளங்கி கோடிக்கணக்கான மக்களின் அகவிருள் போக்கி ஆனந்தம் அளிக்கும் முறையில், உலகின் நாலா பக்கங்களுக்கும் சக்திக் கதிர் வீசிக் கொண்டி ருப்பவர் பூரீ ஆனந்தமாயி அம்மையார். ஜகன்மாதாவே மனித உடல் தாங்கி இந்த மங்கையர்க்கரசியாக உலாவுகின்றரெனப் பக்த சனங்கள் கொண்டாடுகின்றனர். பராசக்தியின் கல்யாண குணங்களான அன்பு அழகு,அறிவு, அடக்கம், அமைதி, ஆனந்தம், ஆற்றல். இனிமை பொறுமை, சமரஸம் முதலானவற்றை அவரிடம் காண்கிருேம். என வே, அறுபத்தாழுவது ஆண்டு நிறைவுத் தொடர்பில் வெளிவரும் இந்த மலரின் இன்னேர்பக்கத்தில் தரப்பட்டுள்ள தேவி தோத்திரம் அவருக்குச் சாலவும் பொருத்தமுடைத்து. நான்கு முக்கிய சிரகங்கள் உச்சமடைந் திருக்கும் சுப வேளையில் அவதரித்த இந்த மாது சிரோன்மணி இன்று உலக மாதாவாகப் பல்வேறு சமயப் பிரிவினைச் சேர்ந்த மக்களால் போற்றப்படுவதில் வியப்பொன்றுமில்லை.
ஆண்டவன் அடியார்களின் வரலாறுகளின் கணக்கில், அவை எக்காலத்திலும், எல்லா நாடுகளிலும், எல்லா மதங்களிலும் எல்லா மொழிகளிலுமுள்ளன.இந்தப் பேருண்மையை அடிப்படையாகக் கொண் டதே சுந்தார் செந்தமிழில் வரும் 'அப்பாலும் அடிச் சார்ந்தார் அடியார்க் கும் அடியேன்' என்ற மணிவாக்கு. இவ்வரலாறுகளில் இன்றைய உல கைப் பொறுத்தமட்டில் சமயத் துறையில் இன்றைய சூழ் நிலைக்குப் பொருந்திய மட்டில், இப்புண்ணியவதியின் புனித சரிதை மிகவும் அற் புதமானது; அழகானது; பக்தியும் ஞானமும் இணைந்தது; க ற் போர்
உளத்தில் அன்பைப் பெருக்கி ஆர்வக் கனலைத் தூண்டி ஆத்ம ஞானம்
மிளிரச் செய்யும் அருள் சக்தி வாய்ந்தது.
கிழக்கு வங்காளத்தைச் சேர்ந்த திரிபுரா ஜில்லாவிலுள்ள ஓர் குக் கிராமத்தில், தாதா மஹா சயாவின் மகளாய்த் தோன்றி, நிர்மலா தேவி என்னும் பெயர் தாங்கி வளர்ந்து, இளம் பிராயத்திலேயே இயல் பாகவே பவசமாதி நிலையை அடையும் பேறு பெற்று, பன்னிரண்டாவது வயசில் ரமணி மோகன சக்கரவர்த்தியென்னும் உத்தமருக்குப் பிரிய பத் தினியாகி அன்னருடன் பரிசுத்தமான இல்லற நெறி நின்று, பரிபூரண நிலையடைந்த பின் சதா சகச சமாதியில் இருந்த வண்ணம். ஆன்மீகத் துறையில் அருந்தொண்டாற்றி வரும் இப்பக்தசிரோன்மணியின் ஞானச் செல்வியின் மகிமை சொல்லற்கரிது; அன்னையாரின் லீலாமிர்தம் அளப் பரிது. இவரின் குடும்ப வாழ்க்கையில் நடந்த சில அசாதாரண நிகழ்ச்

Page 4
ஆத்மஜோதி - 244
சிகள் காரைக்காலம்மையாரின் இல்லற வாழ்வில் என்றும் பாராட்டப் படும் அரும் பெரும் பண்புகளை நமக்கு நினைவூட்டுகின்றன. அந்த அம் மையாரைப்போலவே இந்த அன்னையாரும் தமது சொந்த நாயகனலேயே குலதெய்வமாகத் தொழப்படும் பெரும் பேற்றையடைந்துள்ளார்.
காரைக்காலம்மையாரின் இறவாத இன்ப அன்பு திறத்தை உலகுக்கு உணர்த்த வந்த சேக்கிழார் சுவாமிகள்.
SS S SS S SS SS S SS S SS SS SSL SSL SS SS 0 LS S S S S S S SL S L S LS S SL S S S S S S L C C குலவிய தாண்டவத்திலவர் எடுத்தரு ளுஞ் சேவடிக் கீழ் என்று மிருக்கின்றரை அடுத்த பெரும் சீர் பரவல் ஆரளாவாயின தம்மா!' என அவையடக்கம் கூறுகின்றர். அதேபோல வே, இன்று ஹிந்தி, ஆங்கிலம், ஃபிறெஞ்சு, ஜேர்மன் முதலாய மொழி களில் ஆனந்தமாயியின் சீர்பரவ விரும்புகிறவர்களும் தத்தம் மொழியில் வணக்கமான அடக்கவுரை வரைகின்றர்கள்.
அன்னையாரின் ஜென்ம ஊர் ஒர் முஸ்லிம் கிராமம், இந்துக்கள் அங்கே சிறுபான்மையினராகவே வாழ்ந்தனர். அவர்கள் எல்லோரும் தேவி வழி பாட்டினர். திருமணமான பின்னர் டக்கா நகருக்கருகிலுள்ள றம்னு என்ற ஊரில் வாழ்ந்த காலத்து அவர்கள் குடியிருந்த இல்லமும் தோட்டமும் ஒர் முஸ்லிம் செல்வருடையது. பிறந்த மனையிற் போலவே இங்கும் தேவி உபாசனைக்குப் போதிய வசதிகள் அளிக்கப்பட்டன. அந் தச் சொந்தக்காரனின் மனைவியும் மக்களுங் கூட நிர்மலாவின் ஆத்ம சாதனையில் பிரியங் கொண்டு வழிபாட்டில் கலந்து கொள்வதுண்டு அதிகார வெறிபிடித்த அரசியல்வாதிகள் மக்கள் வாழ்வில் புகுந்து சாதிப் பிணக்குகளையும் சமய பூசல்களையுங் கிழப்பி விடாத காலமான படியால் இருவகுப்பினரும் சகோதரர்களாய் வாழ்ந்து இன்ப துன்பங்களிலும் தெய்வ வழிபாடுகளிலும் விழாக்களிலும் பங்கெடுத்தனர்,
மேலே குறிப்பிட்ட தோட்டத்தில் ஒர் அராபிய மகாத்மாவின் சமாதிப் பள்ளியுண்டு. அதில் இஸ்லாமிய பக்தர்கள் வந்து நமாஸ் சொல் வதுண்டு. அருகில் வகித்த நிர்மலாவுக்கும் அவர்களைப் பின்பற்றி அப் பெரியார் சமாதி முன் வணக்கஞ் செலுத்த ஆர்வம் உதித்தது. ஒருநாள் அவர் நமாஸ் சொல்லும் வேலையில் ஒர் முஸ்லிம் அருகே வந்து விட்டார். நிர்மலாவின் வாயிலிருந்து வந்தவை திருக்குரானின் அமிர்த வசனங் களென அறிந்து கொண்ட அந்த முஸ்லிம் அயலாருக்கும் நவாபுக்கும் விஷ யத்தை வெளிப்படுத்தி விட்டனர். தாய் மொழியான வங்க பாஷையிலே யே ஒரு வசனத்தை வாசிக்கக் கூடிய போதிய கல்வி அறிவில்லாத நிர் மலா எப்போ எவரிடம் எங்கே திருக்குரானேக் கற்றனர். என்ற கேள்வி கள் கிளம்பின. பலர் முன் நமாஸ் செய்து காட்டுமாறு விண்ணப்பமும் வந்து விட்டது. இயல்பாகவே நாணம் முதலிய பெண்மைக்குரிய குணங் கள் அமைந்த நிர்மலாவுக்குத் தனது அத்யாத்ம வாழ்வில் கிடைத்துள்ள அற்புத அனுபவங்களை வாய் விட்டுக் கூற மனம் வரவில்லை. மக்களின்
 
 

ஆத்மஜோதி 245
அன்பும் ஆர்வமுமே இக்கேள்விகளை வற்புறுத்தும் காரண்மென நன்கு ணர்ந்த நிர்மலா, தாம் வஜிற்பூரில் வசித்த காலத்திலேயே குறித்த சமா தியில் உறையும் தெய்வ சக்தி அதன் பழைய மானிட உடலில் முன் தோன்றி, தம்மை இந்த இடத்திற்கு வந்து வசிக்குமாறு கேட்டுக் கொண்ட உண்மையைத் தெரியச் செய்தார். இந்த உண்மை வெளியா னதும் பக்தர் கூட்டம் பெருகத் தொடங்கியது. நிர்மலாதேவி ஆனந்த மாயியானுர், கன்னிமை நீங்காமலேயே பல மக்களை சாதி, மத, நிற வேற்றுமையின்றிப் பெறும் பாக்கியத்தைப் பெற்றனர். அவர்களுள் பெரும்பாலானேர் புத்திரிகள், இக்கூட்டத்தில் குருப்பிரியதேவி என்பவர் முக்கிய இடம் பெற்றுள்ளார். ஆனல் நிர்மலாதேவியை ஜகன் மாதா வாகப் பேணி முதலில் வழிபட்ட பெருமை வஜிற்பூரைச் சேர்ந்த ஹர குமார் வைத்தியரைச் சார்ந்ததாகும். ஏறக்குறைய ஐம்பது ஆண்டு கட்கு முன் முழுப் பைத்தியமெனப் பலரால் பரிகாசம் பண்ணப்பட்ட இப்பெரியார் வாக்கிலிருந்து அம்மையாரின் பிற்கால மகிமை குறித்து வெளிவந்த சொற்கள் இன்று தீர்க்கதரிசனம் உபதேசங்களாக அமைந் துள்ளன. தெய்வ சக்தி எந்த நேரத்தில், எவர் வாய் மூலம் பேசும் என் பதை புத்தி தத்துவங் கொண்டு நாம் நிர்ணயிக்க முடியாது.
அம்மையார் தமது வாழ்க்கையால் பக்தி மார்க்கத்தை விளக் குகிருர், ஆனல், அவரது உபதேச மொழிகளில் தத்துவ ஞானப் புலமை யைக் காண்கிருேம், இரண்டையும் பிணைத்துத் துருவி ஆராயும் போது பரபக்தியும் ஞானமும் வேறல்ல, இரண்டும் ஒன்றே என்ற உண்மையை உணர்கின்ருேம். உள்ள பொருள் ஒன்ரு இரண்டா அல்லது மூன்ரு என்ற வாதப்போர் அம்மையார் முன்னிலையில் தலை காட்டுவது கிடையாது.
அம்மையார் கைலையிலிருந்து கன்னியா குமரி வரைக்கும் யாத் திரை செய்துள்ளார். தென்னுட்டில் யாத் திரை ஒருதரந்தான். அதுவும் பூரீ ரமண மூர்த்தியின் சமாதிக்கு முன் கட்டப்படும் தியான மண்டபத் திற்கு அத்திவாரக்கல் நாட்டும் பணிக்கென திருவண்ணுமலைக்கு வந்த தொடர்பிலாகும்.
அம்மையாரின் தலைமை ஆச்சிரம் காசியில் அமைந்துள்ளது, ஆஞல், அவர் அதில் நிரந்தரமாய்த் தங்குவது கிடையாது. கல்கத்தா, பம்பாய். பூன, புது டில்லி, டேராடொன் முதலிய பல பட்டினங்களில் அவர் தங்கிப் பக்த கோடிகட்குத் தரிசனம் கொடுப்பதற்காகக் கிளை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. எனவே, தேவியார் சதா சுற்றிக் கொண்டே வாழ்கிறர். இந்த முறையால், பல கோடிக் கணக்கான மக் கள், ஏழைகள், எளியவர்கள், பிரயாணச் செலவுக்குப் பண வசதியற்ற வர்கள், அவரது திவ்ய முக தரிசனம் பெறும் பாக்கியத்தை அடைகிருர் கள். அவர்கள் எல்லோருக்கும் தாம் ஓர் குழந்தையென்ற பாவனையில் நடந்து கொள்கிருர், கல்லூரி மாணவர்களைக் கூட அவர் "அப்பா'
(Baba) எனவே அழைக்கிறார்.

Page 5
246 ஆத்மஜோதி
இந்துமத தர்மத்தின் மகிமையை உலகுக்கு பிரகாசிக்கச் செய்ய இப் புண்ணியவதி செய்து வரும் சேவையை விபரமாகக் கூற இக் கட்டு ரை இடந்தராது. வெளிப்பகட்டற்ற, அமைதியான, அடக்கமான சிவத் தொண்டு இது; ஈடும் இணையும் அற்றது. இதுவரையில் அவர் ஒருவர்க் காவது சந்நியாசங்கொடுத்ததேயில்லை. சந்நியாச விஷயத்தில் அவர் பூரீ ரமண மூர்த்தியின் கொள்கையையே பின்பற்றுகிருரெனலாம். குடும்ப
வாழ்விலிருந்து கொண்டே நிஷ்கா மியமாகக் கடமைகளைச் செய்து படிப் ܐܬܐ
படியாகப் பற்றற்ற நிலையையடைந்து பரமபதத்தைச் சேர முடியும் என் பதை வற்புறுத்துகிருர், இக்கட்டுரையை முடிக்கு முன் அண்மையில் நடந்த இரு முக்கிய சம்பவங்களை மாத்திரம் இங்கு குறிப்பிட விரும்பு கின்ருேம்.
முதலாவதாக, 1959ம் ஆண்டு ஆகஸ்ட் மாசம் 24ந் தேதி மாலை புது டில்லியிலுள்ள அம்மையாரது ஆச்சிரமத்தில் அவரது தரிசனங் கோரி வந்த பிரதமர் நேருவின் கழுத்தில் தமது ஆசிக்கு அறிகுறியாக அன்னர் உருத்திராக்ஷ மாலையும் துளசி மாலையும் அணிந்த காட்சி, இந் துக்களின் தெய்வங்களான சிவனும் விஷ்ணுவும்ஒன்றே என்பதற்கு இது ஓர் சின்னமாக அமைந்ததோடு, எல்லோருக்கும் பண்டிதர் நேரு அவர்கள் பொது மனிதன் என்பதையும் இச் சம்பவம் விளக்குகின்றது. இந்து மத சம்பிரதாயத்திலுள்ள யாகம், மந்திர ஜெபம், தீர்த்த யாத்திரை முத லிய வழக்கங்களைத் தயங்காமல் கண்டிக்கும் பிரதமருக்கு அம்மையாரின் முறை வியப்பைக் கொடுத்திருக்கலாம். சித்தத்தை u urrfi அறிவார்? அவர் கட்டளைப்படி இரண்டு பக்கம் நி  ைற ய எழுதப்பட்டு பிரதமர் கையில் நேரே கொடுக்கப்பட்ட கடிதத்திலடங்கிய விஷயங்கள் இன்னும் பரம ரகசியமாயுள்ளன. இற்றைக்கு ஏழு மாசங்கட்கு முன் மறுபடியும் புது டில்லிக்கு அம்மையார் விஜயஞ் செய்த போது, பிரதம
ரின் அன்பழைப்புக் கிணங்க அவரது வாசஸ்தானத்திற்குச் சென்று ஆசி
கொடுத்ததாக அறிகின்ருேம்,
இரண்டாவதாகக் குறிப்பிட வேண்டிய விஷயம் பழைய நைமி
சாரணியத்தின் மறுமலர்ச்சி பற்றிய ஒன்று. வியாச முனிவரின் முக்கிய சீடரும் பிரபல தெய்வதபோதனருமான சூதமுனிவர் கோமதி நதி தீரத் திலிருந்த தபோவனமான நைமிசாரணியத்தில், அவர் காலத்தில் அங்கு
வசித்த இருடிகளுக்கு நாற்பது லக்ஷத் தெண்ணுயிரம் கிரந்த முடைய
பதினெண் புராணங்களையும் உபதேசித்த கதையை பல நூல்களில் படித் துள்ளோம். இவ்விதம் தனிச் சிறப்புற்ற அப்புண்ணிய பூமியில் இற் றைக்குப் பதினெட்டு மா சங்கட்கு முன், அப்புராணங்களில் ஒன்றினது பிரதி தானும் அங்கு இருக்கவில்லை. அங்கு குடியிருக்கும் மக்கள் எவரா வது அவற்றைப் பற்றிக் கேள்விப் பட்டதுமில்லை. இப்பெருங் குறையை நிவர்த்தி செய்ய திருவுளங் கொண்ட அம்மையார் அங்கு 1960ம் ஆண் டில் விஜயஞ் செய்த உடனே கோமதி நதிக்கரையில் புராண மடமொன்
 
 
 

ஆத் 24.7
று கட்ட திட்டம் போடப்பட்டது. அதில் இப்போது ஒழுங்காகப் புரா ணங்களைப் படனஞ் செய்ய ஒர் பண்டிதரும் நியமிக்கப்பட்டுள்ளார். இத் தொடர்பில் தேவியார் அடிக்கடி விஜயஞ் செய்யுங் காரணத்தால் அந் தப் பழைய கோத்திரம் பல நூற்ருண்டுகளாக இழந்திருந்த மகிமையை மறுபடியும் பெற்றுள்ளது.
இங்கு தரப்பட்ட இரு நிகழ்ச்சிகளிலிருந்து, பாரத நாட்டின் பழம் பெருமையை நிலை நா ட் ட அம்மையார் அடக்கமாகச் செ ய் து வரும் அத்தியாத்ம சேவையின் அளப்பருந் தன்மை தெற்றென விளங் கும். அன்னரின் முகப்பொலிவுடன் வெளிவரும் இந்த மலர் அன்பர் கட்கு அதிகம் நன்மை பயக்குமென நம்புகிருேம்.
H, ఉష్ X
 ேத வி த ரி ச ன ம்
ASeqMASaAASSMSASSASLSSASSASSASSASSMASSASSASSqAASSqAASSqAASS SAAAASS AAAAS
L მვს) ძე;ff)] (ஆதி
தரிசனம் செய்திடுவோம் - ஜகன் மாதாவை சக்தி ஓம் சக்தி ஒம் என்று வணங்கி நின்று
(தரி)
அனுபல்லவி
பரம சுகானந்தம் பாலிக்கும் அன்னையை பவ்ய ஜனங்க ளெல்லாம் திவ்ய ஜீவனம் பெற
(தரி1
ағрт600 тt b
அருண நகை முகமும் கருணை பொழி அகமும்
அஞ்ச லென்றருள்செய்யும் செஞ்சுடர்க் கரங்களும்
மரண பயம் ஒழிக்கும் கிரண விழிக்கனலும்
மங்கள சாந்தமும் பொங்கும் மகேஸ்வரியை
(தரி1
கவியோகி. சுத்தானந்த பாரதியார்,

Page 6
248
ஆத்மஜோதி
தத்துவ விசாரணை.
[ செ. சேதுபதி /
SPM.

Page 7
250 ஆத்மஜோதி
மாயாசக்தி. அது அவனுக்கு சரீரம் போன்று அமைந்திருக் கிறது. விஷ்ணுவுக்கு 'மஹாமாய' என்பது ஒரு பெயர்.
மாயையைக் கையாளுதலில் மிகப் பெரியவன் என்பது அதன்
பொருள். அவன் தன் சொரூபத்தை மாயையினுல் மறைத்து வைத்திருக்கிருன். ஆனல் அவனிடத்து அடைக்கலம் புகுந்த வர்களுக்கோ தன்னைக் காட்டி அருள் கிருன். க யி ற்  ைற ப் பாம்பென நினைத்தவர்கள் எப்படித் தெளிந்து அதைக் கயி
றென்றறிகிருர்களோ அதுபோல இறைவளை மாயையென நினைத்து மயங்கியவர்கள் அறிவு பிறந்ததும், 'அது இறைவ னே' என அறிகிருரர்கள்.மெய்க்காட்சி தோன்றியதும் பொய்க்
காட்சி மறைகிறது.
மாயையினுல் உண்டாகும் மயக்கத்தை மாய்க்க மஹா
மாயவனின் அருள் வேண்டும். அவனுடைய அருளோடு தின் மும் அவனை வழிபட வேண்டும் 'காதலாகிக் கசிந்து க ன் னிர் மல்கி, ஒதுவார்தமை நன்னெறிக் குய்ப்பது வேத நான்கினும் மெய்ப்பொருளாவது, நாதன் நாமநமச்சிவா யவே' என்று தெளிந்து, உளம் நெக்குருகி, இதயத்தால் உணர்ந்து, நெஞ்சத்து உணர்ச்சி கண்ணிராகச் சோர,
வேதம் நான்கும் கூறும் மெய்ப்பொருளான நமச்சிவாயத் தை ஒதினுல் அது நல்வழி காட்டி நம்மை அவனிடத்து நடத்திச் செல்லும், என் கிருர் அப்பர். 'உண்ணு நாள் பசியாவ தொன்றில்லை, ஒவாதே நமோ நாராயணு
வென்று எண்ணு நாளும், இருக்கு, யசுர், சாம, வேத
நாண்மலர் கொண்டு உன் பாதம் நண்ணு நாள் அவை தத்துறுமாகில் அன்றெனக்கவை பட்டினி நாளே' என்கி முர் பெரியாழ்வார். நான் உணவு சாப்பிடாத நாட்கள்
எனக்குப் பசிதரும் நாட்களல்ல. ஆனல் இருக்கு, யசுர், சாமம் முதலிய வேதங்களால் உன் பாதங்களை நண்ணுத
நாட்கள், இடைவிடாது ‘நமோ நாராயணு வென்று ஒதாத நாட்கள், எனக்கு உணவு சாப்பிட்ட போதும்
பட்டினி நாட்கள் என்று பெரியாழ்வார் விளக்குகிறார்.
இவ்வுலகில் வாழும் பல பேர்கள் தங்களுக்குத் தெய்வத்
தை வணங்கவோ அல்லது தெய்வ வழியில்போகவோ வசதி யில்லையென்று நினைக்கிருர்கள். அப்படி நினைப்பது தவறு. தன் முன்னேற்றத்திற்குத் தடையாயிருப்பது தன் எதிரி அல்லது குழந்தை தன் பிழையைப் பிறர்மேல் போடுவ தில் சமர்த்தன் மனிதன். ஆணுல் அப்படிப்பட்ட பகைவ னேயே தன் முன்னேற்றத்திற்கு உற்ற துணையாகக் கொள் வான் முன்னேற விரும்புபவன்.
 

ஆத்மஜோதி 251
"ஆயிரக் கணக்கான மனிதர்களுள் யாரோ ஒருவன் மனநிறைவின் பொருட்டு முயல்கிருன் முயல்கின்ற பெரு வாய்ப்புள்ளோர்களில் யாரோ ஒருவன் என்னை உள்ளபடி அறிகிருன்' இவ்வாறு பகர்கிருர் பகவத்கீதையில் பக வான் பார்த்தனுக்கு.
மனுஷ்யாணும் ஸஹஸ்ரேஷடு கஸ்சித் பததி வித்த:ே யததாமபி வலித்தானும் கஸ்சின் மாம் வேத்தி தத்வத
எத்தனையோ பேர்களுக்குப் பெருவாய்ப்புகள் இருக் கின்றன . அவர்கள் அந்த வாய்ப்புக்களை அசட்டை செய்து கர்மத்தனை மிகுந்த, காரிருள் சூழ்ந்த, உலக வாழ்க்கையே நிலையென நம்பி அதில் தலைகீழாக வீழ்கின்றனர். இவை யனைத்தையும் விட்டு கருணு மூர்த்தியாம் கைலாய நாத னின் கழலிணை யடைய இராமலிங்க சுவாமிகள் இலகு வழி சொல்லித் தருகிருர்,
'ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் தம் உறவு கலவாமை வேண்டும் பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும் பொய்மை பேசா திருக்க வேண்டும் மதமான பேய் என்னைப் பிடியாதிருக்க வேண்டும் மருவு பெண்ணு சையை மறக்க வேண்டும் உனை மறவா திருக்க வேண்டும் மதி வேண்டும் நின் கருணே நிதி வேண்டும் நோயற்ற வாழ்வை நான் வாழ வேண்டும்.
மேலே சொல்லியவற்றிற் கிணங்க வாழ்ந்து இறை வனை நாம் வழிபட்டால் அவன் நம் முன் வந்தே தீரு வான். அப்படி வந்தவனுக்கு நாம் இருக்க இடங்கொ டுக்க வேண்டாமா? அதற்கு வேறு எங்கும் தேட வேண் பயதில்லை. நம் நெஞ்சமே இருக்கிறதே! 'மார்பம் என் டிதோர் கோயிலமைத்து, அதில் மாதவம் என்னுந் தெய் வத்தை நாட்டி, ஆர்வம் என்பதோர் பூவிட்டு வழிபட் Lால் ' உய்வடையலாம்.
இறைவனை அடைவதற்கு மிக இலகுவான வழி பக்தி செய்வதே. அந்தப் பக்தி வழிப் பாதை பரந்து, விரிந்து, முட்களற்று, நன்கு செப்பனிடப் பட்டிருக்க, வெளிச்சம்

Page 8
252 ஆத்மஜோதி
பொருந்தியதாயிருக்க நாம் அதன் வழி செல்லாது குறு கலான, இடர் நிறைந்த இருள் நிறைந்த கள்ளர் பயம் நிறைந்த பாதை வழியே செல்கின்ருேம். இந்த இடர் நிறைந்த பாதை நம்மை எங்கும் கொண்டு விடாது. முன்பின் தெரியாத காட்டிற்குள் நுழைந்த ஒருவனுக்கு எவ்வழி போனுலும் அது மீண்டும் மீண்டும் மேலும் அடர்ந்த காட்டிற்குள் கொண்டு விடுமேயன்றிக காட்டு வெளியே நகர்ப் புறத்திற்குக் கொண்டு செல்லாது. அதே போல நாமும் இந்த இடர்ப்பட்ட வழியிலே செல்லுவோ மானுல் அழுக்கு நிறைந்த இந்த சம்சார சாகரத்துள் விழுந்து அழுந்தி மடிவோம். இதை நோக்கியே மணிவா சகனரும் 'முக்தி நெறி அறியாத மூர்க்கரொடு முயல்வே னைப் பக்தி நெறி அறிவித்துப் பழவினைகள் பாறும் வண் ணம்' என்று கேட்கின்ருர்,
நீருடன் கலந்த எண்ணெய் அந்த நீரை மறைத்து மேலே மிதப்பது போல நமது ஆத்மாவில் காமக் குரோத லோப மோஹ மத மாற்சர்யமாம் எண்ணெயும் நம்முள் இருக்கும் சத் குணங்களை மறைத்து நம்முள் மேலெழு ந்து நிற்கிறது. ஆணுல் நாம் அந்த எண்ணெயை நீரிலி ருந்து பிரித்தெடுக்க வேண்டும். அப்படிப் பிரித்தெடுத்து விட்டால் நம் மனது சுத்தமாகி விடும். பக்தி என்னுஞ் சவர்க்காரத்தை நம் மனதில் தோய்த்தால் அது இன்னும் சுத்தமாகி சத்வ குணமுள்ளதாக மாறும். அகத் தூய்மை யான சத்வ குணத்தால் நாம் மேலான பிரம்மத்தை அடை
16) TLD.
பெண்
கடவுள் ஆணுக்கு விடப் பெண்ணுக்கே அதிக அறி வை அளித்துளன். காம இச்சையுடன் பெண்ணின் கணுக் காலைப் பார்த்தாலும் சோரம் செய்தவனேயாவான். பெண்ணை அழும்படி செய்யாதே. ஆண்டவன் அவள் கண் னிரை அளந்து பார்ப்பான்.
- எபிரேய மதம்
நான் பெண்ணுகப் பிறந்திருந்தால் பெண் ஆணின்
விளையாட்டுப் பொருள் என்று ஆண் கூறும் அபத்தத்தை எதிர்த்து எழுவேன் - - காந்தி.

ஆத்மஜோதி 253 பொன்ன டிக்கே வ ருவே 6!
(திமிலைக் கண்ணன்)
சொல்லும் இனிக்குதடா! - முருகா! - உண்மை; சொல்லத் துணிந்து விட்டால் கல்லும் கதைக்குதடா! - முருகா! - நெஞ்சக் கல்லும் நெகிழ்ந்து விட்டால்;
எல்லே குறையுதடா! - முருகா! - உனே; எண்ணி நடந்து விட்டால் தொல்லே அகலு தடா! - முருகா! - உண்மைத் தொண்ட னெனப் பணிந்தால்
இல்லையட இடர் கள்! . - முருகா - என; எண்ணம் நிலத்து விட்டால் முல்லே மணக்கு தடா! - முருகா - என;
மூன்று முறை அணிந்தால்
செல்வம் நிறையு தடா! - முருகா! - அருட் செல்வம் நிலைத்து விட்டால் சொல்லும் பலிக்குதடn - முருகா - ஆன்ம சுதந்திரம் பெற்று விட்டால்.
இல்லை யடi பிறவி - இனித் - துயர்; இல்லை யென்றே யறைவேன். பெல்லா உலகை விட்டு - "முருகா - உன் பொன் னடிக்கே வருவேன்!
*முருகன் நாமத்தைச் சந்தத்திற் கேற்ப ஒரு முறையோ அல்லது இருமுறையோ, மூன்று முறையோ சேர்த்துப்
JITLG) IT LÈ),
பெண்
ஆண் பெண் இருவரில் நான் பெண்ணைப் பலவீன மானவள் என்று கூற மட்டேன். அவளே உயர்ந்தவள். அவளே தியாகத்திற்கும் பணிவுக்கும் சேவைக்கும் உருவா SISI 5. i 6T. - காந்தி

Page 9
254 ஆத்மஜோதி
சக்தி வணக்கம்
யோகதாசன். வ. புண் ணியமூர்த்தி
ஓம்சக்திஓம் ஓம்சக்திஓம் ஓம்சக்திஓம் ஓம்சக்திஓம் ஓம்சக்திஓம் ஓம்சக்திஓம் ஓம்சக்திஓம் ஒம்சக்திஓம்
மந்த்ர சொரூபி வானவர் தலைவி
சந்ததம் உண்பதம் சரணம் தாயே!
எந்த னகந்தை இருளையகற்றி
உன் னருளொளியை ஊட்டிடுவாயே
(ஒம்சக்திஓம்)
எண்ணறு உயிர்களை ஈன்று நீ யாண்டும்
இளமை குன்ற எழிலுருவுடனே
அண்ட சராசரம் அனைத்துல கெல்லாம்
அணியெனக் கொண்டு இலங்கிடுந்தாயே!
(ஒம்சக்திஓம்)
தலைவியா யாகி சகலது மியக்கி
தானென நின்று சேர்ந்துமே இயங்கி
ஆன்ம மீட்சியுங் கொடுத்து மெல்லென உயிர்களை உன்னிடஞ் சேர்ப்பாய்
(ஒம்சக்திஓம்)
மதியர வாட மணிசடை யாட
மகிழ்ந்துமே தேவர்கள் சேர்ந்து நின்ருட பதியவர் ஆடிய பரமானந்தத்
திருநடமதில் நீ சேர்ந்து நின்றயே!
(ஒம்சக்திஓம்)
பலபல உருவாய்ப் பக்தர்கள் போற்றிடப்
பாக்களும் பூக்களும் சாத்தி மகிழ்ந்திட
பலபல உருவிற் பரிந்து நீ அன்பாய்
பரம பதந்தனை உகந்தருள்வாயே!
(ஒம்சக்திஒம்)
அன்பருக் கடயம் அளித்திடுந் தேவி
அடியனுக் கிரங்கி அருள் புரிவாயே!
உன்பதம் நிதமும் உருகி யன்பாக
எந்த நல்நாளும் இறைஞ்சிடச் செய்வாய்
(ஒம்சக்திஓம்)
 
 
 
 

ஆத்மஜோதி 255 சக்தி தத்துவம்
(சுவாமி அத் வயானந்த சரசுவதி)
நட0க்குள் ஏதோ ஒரு சக்தி இருக்கின்றது. நாம் அறி யாமல் இருக்கும் போதே இடைவிடாமல் மூச்சு விடச் செய்கின்றது. இரத்தத்தை ஒடச் செய்கின்றது. உண் னும் உணவைச் சீரணிக்கச் செய்து உடலில் உரோமம் நகம் முதல் எல்லா அவயவங்களுக்கும் தக்க அளவில் ரசத்தை ஊட்டி உடலை வளர்க்கின்றது. இந்தச் சக்தி நம்முள் இல்லாவிடின் நாம் உயிர் வாழ முடியாது. நம க்கு நல்ல காலம் இருக்கும்போது நல்ல யோசனைகளைத் தோன்றச் செய்கின்றது. அதனல் நாம் எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெறுகின்ருேம். நமக்குத் தீயகாலம் இருக்கும்போது நாம்தான் புத் தி சா லி 6 iT 6ტF நினைத்துக் கொண்டு நமக்குத் தோன்றியவாறு செய்கின் ருேம் முடிவில் தோல்வி அடைகின்ருேம். இவைகளெல் லாம் நமது அனுபவமாகும். அனுபவத்திற்குப் புத்தி என்று பெயர்.
நமது பூமி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகி யவை எல்லாம் ஒவ்வொரு முறைப்படி ஆகாயத்திற் சுழ ன்று கொண்டே இருக்கின்றன. கடலுக்குக் கரையில்லா திருந்தும் கரைபுரண்டு போவதில்லை. இவற்றைக்கொண்டு ஏதோ ஒரு சக்தி இருந்து இயக்குகின்றது என்று உணரு கின்ருேம். இது யுக்தியாகும்.
'நானே எல்லாமாகவும் இருந்து எல்லாவற்றையும் செய்கின்றேன்' என்று தேவி உபநிஷதமாகிய அதர்வண வேதம் கூறுகின்றது. இது கேள்வி.
இவ்வாறு சக்தி ஒன்றே கடவுள் என்று புத்தியாலும் யுக்தியாலும் கேள்வியாலும் தெரிகின்றது. அத்தகைய சக்தியாகிய பூரீ லலிதாம்பிகையை உபாசித்துப் பக்தி செய் வோமானுல் நாம் உய்வோம். முத்தி நம்முடைய கை யில் இருப்பதாகும்.

Page 10
256 ஆத்மஜோதி
சக்தி ஒன்றே தெய்வமாம்
புத்தி யுக்தி கேள்வியே
பக்தி செய்தே உய்வமே
முத்தி எங்கள் கையிலே
நாம் செய்கின்ற காரியங்கள் சில இடையூறுகளால் தடைப்படுகின்றன. இடையூறுகளுக்கு விக்னம் என்று பெயர். கணபதி பூசை செய்து விட்டுக் காரியங்களைத் தொடங்குவோமானுல் அவர் சர்வ விக்னங்களையும் நீக்கி விடுவார். அவரிடம் அவ்வித சக்தி இருக்கின்றது.
முருகப் பெருமானிடத்தும் சக்தி இருப்பதனுலேயே சூரபத்மன் முதலிய பகைவர்களை ஒழித்து விடுகின்றர்.
சக்தி கொண்டே கணபதி
சர்வ விக்நம் நீக்குவார்
சக்தி கொண்டே முருகன்
சத்ரு தம்மைப் போக்குவார்
‘பிரம்ம தேவனும் தன்னிடத்துள்ள சக்தியினலேயே
எல்லா உலகங்களையும் படைக்கின்ருர், திருமாலும் அவ ரிடமுள்ள சக்தியினலேயே உலகத்தைக் காத்து ரட்சிக் கின்றர்.
சக்தி கொண்டே பிரம்மனும் சகல உலகும் ஆக்குவார்
சக்தி கொண்டே விஷ்ணுவும்
சகத்தைக் காத்துப் போற்றுவார்
உருத்திரன் தன்னிடமுள்ள சக்தியால் உலகத்தை
அழித்து ஒடுக்குகின்ற தொழிலைச் செய்கின்ருர், மகேசு
வரன் தன்னிடமுள்ள சக்தியால் உலகில் மறைத்தல் தொ ழிலைச் செய்கின்ருர் .
சக்தி கொண்டே ருத்திரன்
சகத்தை அழித்தே ஒடுக்குவார்
சக்தி கொண்டே மகேசனும்
சகத்தில் மறைத்தல் செய்குவார்
சதாசிவன் தன்னிடத்துள்ள சக்தியால் அஞ்ஞான மறைப்பை நீக்கி சர்வமுமாயிருக்கின்ற அ ம் பி  ைக யி ன்
ہی بہت
 
 

ஆத்மஜோதி 257
ஞானத்தை அருள் செய்வார். சூரியனிடத்தில் சக்தி
இருப்பதனலேயே அந்தச் சூரியன் தன்னைச் சுற்றி வரும் கிரகங்களை இழுக்கும் ஆகர்ஷண சக்தியையும் பிரகாசத் தையும் பரப்புகின்றர்.
சக்தி கொண்டே சதாசிவன்
சர்வ ஞானம் அருளுவார்
சக்தி கொண்டே சூரியன்
சக்தி ஒளியைப் பரப் பிஞர்
ஏசு நாதரிடத்தில் சக்தி இருப்பதனலேயே அதைக் கொண்டு உலகத்தில் நோய் தீர்த்தல் இறந்து எழுந்தி ருத்தல் முதலிய அற்புதங்கள் செய்தார். முகம்மது நபி யானவர் தன்னிடத்தில் உள்ள சக்தியாலேயே தனது இஸ் லாமிய மதத்தைப் பரப்பினர்.
சக்தி கொண்டே ஏசுவும்
சகத்தில் செய்தார் அற்புதம்
சக்தி கொண்டே முகம்மது
தனது மதத்தைப் பரப்பினுர்
புத்தரும் தம்மிடத்திலுள்ள சக்தியாலேயே எந்தப் பிராணியையும் கொலை செய்யக் கூடாதென்று கொலே செய்யும் கொள்கைகளை மறுத்தார். சித்தர்களெல்லாம் தம்மிடமுள்ள சக்தியாலேயே தச மஹா சித்திகளும் ஆடு கின்றர்கள்.
சக்தி கொண்டே புத் தரும்
சகல கொலேயும் நீக்கினுர்
சக்தி கொண்டே சித்தர்கள்
சர்வ சித்தி பாடுவார்
மனிதர்களாகிய நாமெல்லாம் நம்மிடத்தில் சக்தி உள்ளதினலேயே உலகத்தில் எல்லாக் காரியங்களையும் செய்கின்ருேம் கணபதி, முருகர், பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் சூரியன், யேசுக் கிறிஸ்து, நபிநாயகம், புத்தர், சித்தர்கள், மனிதர்கள் முதலிய எல்லாருமே தங்களிடத்தில் சக்தி இல்லாவிட் டால் சவமாகவே அதாவது பிணமாகவே ஆவார்கள். சக்தியிருக்குமானுல் சிவமாக அதாவது மங்களகரமான வாழ்க்கையுடையவர்களாக ஆவார்கள்.

Page 11
258 ஆத்மஜோதி
சக்தி கொண்டே நாமெலாம்
சகத்தில் எல்லாம் செய்கிறேம்
சக்தி யின்றேல் சவமதாம்
சக்தி யுண்டேல் சிவமதே
உலகில் நடக்கின்ற எல்லாக் காரியங்களும் சக்தியி ணுலேயே நடைபெறுகின்ற படியால் அறிவு நிறைந்தோர் கள் மகாபரா சக்தியாகிய லலிதாம்பிகையையே கடவுள் என்றுணர்ந்து உபாசனை செய்வார்கள். ஆதலால் நாமும் அவ்விதமான புத்தியுடையவர்களாய் பூரீலலிதாம்பிகை யான சக்தியையே துதி செய்து வாழ்வோம்.
புத்தி யுள்ளோர் சக்தியே
கடவுள் என்று போற்றுவார்
புத்தி கொண்டே சக்தியைப்
போற்றி நாமும் வாழ்த்துவோம்
உடல்களுக்குள்ளே இருக்கின்ற உயிர் மட்டும்தான் என்பதில்லை. உடல்களாகவும் ஆகியிருப்பது சக்தியேயா கும். ஆதலால் யானை முகத்தையுடைய விநாயகப் பெரு மானும் சக்தியேயாவார் ஞானம் நிறைந்த குருவும் சக்
தியே. வாக்குச் சித்திகளைத் தருகின்ற கலைமகளும் சக்
தியே, இலக்குமியும் பார்வதி தேவியும் சக்தியே.
அத்தி முகனும் சக்தியே
ஆன்ற குருவும் சக்தியே
சித்தி வாணி சக்தியே
செல்வி உமையும் சக்தியே
சக்தியேதான் முருகராகவும் சிவனுகவும் இருக்கின்
றது. திருமாலாகவும் அல்லாவாகவும் இருப்பவள் சக் தியே. அருகக் கடவுளும் புத்தரும் சக்தியே. சூரியனும் ஏசுநாதரும் சக்தியே.
முருகர் சிவனும் சக்தியே
முகுந்தன் அல்லா சக்தியே அருகர் புத்தர் சக்தியே
அருக்கன் ஏசு சக்தியே
கடவுள் உண்டு என்று சொல்லுகின்ற ஆஸ்திகரும் கடவுள் இல்லையென்று சொல்லுகின்ற நாஸ்திகரும் ஆகிய
{::

ஆத்மஜோதி 2$9
எல்லோருள்ளும் அந்தச் சக்தியே இருந்து அவ்வவ்வாறு பேசச் செய்கின்ருள். யானை முதல்"எறும்பு ஈருக உள்ள எல்லாப் பிராணிகளுள்ளும் எல்லாப் பொருள்களினுள்ளும்
அந்தச் சக்தியே இருக்கின்றது.
அஸ்தி நாஸ்தி சொல்லுவார்
அனை வ ருள்ளும் சக்தியே ஹஸ்தி முதலாய் எறும்பிலும்
அனைத்தி னுள்ளும் சக்தியே
பூரீ லலிதாம்பிகையாகிய சக்தி ஒன்றே எல்லாப் பொ ருள்களுமாகி எல்லா உலகங்களாகவும் ஆகியிருப்பதனல் சக்தியைத் தவிர வேறு இருக்கின்றது என்று சொல்லுவ தற்கு ஒன்றுமே இல்லவே இல்லை.
சக்தி ஒன்றே பொருள்களாய்
சகல உலகும் ஆனதால்
சக்தி யன்றி ஒன்றுமே
சாற்ற இல்லை இல்லையே
என்றும் உள்ள சத்தாயிருப்பது லலிதா சக்தியே. அறிவு வடிவமான சித்தாக இருப்பதும் லலிதா சக்தியே. பரவஸ்து என்று சொல்லப்படுவதும் லலிதா சக்தியே. எல் லாவற்றிற்கும் காரண பீஜமாயிருப்பதும் லலிதா சக்தியே.
சத்தும் லலிதா சக்தியே
சித்தும் லலிதா சக்தியே
வஸ்தும் லலிதா சக்தியே
வித்தும் லலிதா சக்தியே
அன்பு என்பதும் லலிதா சக்தியே. ஆன ந் த மு ம் லலிதா சக்தியே. பிரபஞ்சம் தோற்றுவதற்கு முன்பு இருந் ததும் லலிதா சக்தியே. பிரபஞ்சம் எல்லாம் அழிந்த பிறகு இருப்பதும் லலிதா சக்தியே யாவாள்.
அன்பும் லலிதா சக்தியே
இன்பும் லலிதா சக்தியே
முன்பும் லலிதா சக்தியே
பின்பும் லலிதா சக்தியே
வேண்டுவார்க்கு வேண்டியவற்றையெல்லாம் அளிப்ப

Page 12
260 ஆத்மஜோதி
பகவானுக்கு எழுதிய கடிதம்
(சுவாமி நிர்மலானந்தா)
நாம் கடிதம் எழுதுவது எல்லாம் நம் பந்துக்களுக்கும், உற்ருர் உறவினர்களுக்கும், சிநேகிதர்களுக்கும், தொழில் சம்பந்தப் பட்டவர்களுக்கும்தான் எமது சுக துக்கம் பற் றியும் எழுதுவோம். ஆனல் ஒரு பக்தன் அப்படி மனித னுக்குக் கடிதம் எழுத மாட்டான். அவன் தன் பிரபு பகவானுக்குத்தான் எழுதுவான். ஏன்? அவனைத் தவிர வேறு யார் அறிவார்.
வங்கத்தில் ஒரு ஏழை அனுதைப் பெண் தன் கண வர் இறந்து போகத் தன் கை மகவை வைத்துக் கொண்டு பிச்சை எடுத்து வயிறு வளர்த்து வந்தாள். ஒருநாள் கடைவீதியில் ஒரு மிட்டாய்க் கடையில் ஒரு தனவானின் மகன் நிறைய மிட்டாய்களை வாங்கி உண்டு இலையை வெளியே எறிந்தான். அப்போது அந்த அனுதை ஏழைப் பையன் ‘அம்மா அந்தப் பையன் மாத்திரம் நிறைய மிட் டாய் தின்கிறன். நீ எனக்கு ஏன் வாங்கித் தர மாட் டேன் என்கிருய். தினம் பழைய சாதமும், காய்ந்த ரொட்டியும் தானே தருகிருய் என்ருன்.
அந்த ஏழைப் பெண் அவனுக்குத் தகப்பன் உண்டு. அவர் வாங்கிக் கொடுக்கிருர், உனக்கோ தகப்பன் வாங் கித் தராது வைகுண்டம் போய் விட்டார் என்ருள். பை யன் நான் இன்று மிட்டாய் சாப்பிடவேண்டும் என்ருன்,
வள் பூரீ லலிதாம்பிகையே யாதலால் அந்த லலிதா சக்தி யையே நாம் நாள் தோறும் தியானித்து வணங்கி வாழ்த் துவோம். அதனுல் எவ்விதத் துன்பமுமின்றி வாழ்வோம். இறுதியில் அந்த இறைவியின் பதத்தைச் சேர்ந்து என்றும் அழிவின்றி இருப்போம்.
லலிதா சக்தி தன்னையே
நாளும் வணங்கி வாழ்த்துவோம்
கலிதான் இன்றி வாழுவோம்
கிடவுள் பத்த்தைச் சேருவோம்
磷

ஆத்மஜோதி 261
தாய், "நீயும் உன் தந்தைக்குக் கடிதம் எழுது; அவர் வந்து வாங்கித் தருவார் என்ருள். பெயர் என்ன? விலா சம் என்ன? என்று கேட்டான். தாய், உன் தந்தையின் பெயர் நாராயணன், ஊர் வைகுண்டம், என்ருள். உட னேயே பையன் தாய் சொல்லே நம்பி ஒரு கடிதத்தைக் கொண்டு வந்து தன் பிஞ்சுக் கரத்தைக் கொண்டு ஏதோ கிறுக்கினன். ஒரு மேல் உறையும் செய்து அதில் உலக நாயகர் நாராயணன், வைகுண்டம் என்று எழுதி அம்மாவிடம் காட்டினன்.
தன் தாய் சொன்னது உண்மை என்று நம்பியே தன் இதய தாபத்தைக் காட்டி எழுதிய கடிதத்தைப் போஸ்ட் பெட்டியில் போடச் சென்ருன். அ ப் போது பெற்ற தாய் தன் அறியாக் குழந்தையிடம் பொய் சொன் னதை நினைத்து அழுது பூரீ வைகுண்ட பதியை நினைத்து பிரார்த்தித்தாள். ஏ பிரபு அன்று நீ பிரஹலாதனுக் கும், துருவனுக்கும், யானைக்கும் காட்சி தரவில்லையா? என்று உள்ளம் கசிந்து உருகினுள். இந்த உருக்கம் ஏன் பிரபு அறிய மாட்டான். அவனுக்குப் பக்தன் படும் கஷ் டம் சகிக்க முடியாதுதானே! தாய் சரீர போதம் இல் லாது மயங்கிக் கிடந்தாள். மகனை பூரீமந் நாராயணன் மடியில் எடுத்து வைத்துத் தடவும் காட்சியை அகத்தில் கண்டு களித்தாள்.
தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தைப் பெட்டியில் போடப் பார்த்தான். ஆனல் பெட்டி உயரத்தில் இருப் பதால் எட்டவில்லை. குதித்துத் தாவிப் பார்த்தான். முடியவில்லை. அதே சமயம் ஒரு கோடீஸ்வரன் தான் ஒரு அவசரமான கடிதத்தைப் பெட்டியில் போட காரில் வந்தவர் இந்த ஏழைப் பையன் மேல் கருணை கொண்டு “உன் கடிதத்தைத் தா. நான் போடுகிறேன் என்று ஒரு கையில் வாங்கி அதைத் தன் சட்டைப் பையில் வைத்துக் * கொண்டு தன் கடிதத்தைப் பெட்டியில் போட்டு விட்டுப் போய் விட்டார். காரில் போகும்போது இந்த ஏழைப் பையன் யாருக்குக் கடிதம் எழுதியிருக்கிருன்? இவனுக்கு என்ன எழுத வேண்டியிருக்கிறது? இப்படிப் பலவாறு யோசனை செய்து கொண்டு போனுர் -
தன் இருப்பிடம் சென்று தன் பையில் உள்ள கடிதத்
。

Page 13
262 ஆத்மஜோதி
தினை எடுத்துப் பார்த்தார் விலாசம் பூரீ வைகுண்ட பதிக்கு இருக்கிறது. மிக்க ஆச்சரியம் வந்து இதுவரை இந்த மாதிரி யாரும் கடிதம் எழுதியதை பார்க்க வில் லையே என்று எண்ணிப் பார்த்தால் பிரமிக்கச் செய்யும் செய்தி இருந்தது. அதன் விபரம். ஏ! தந்தையே இந்தச் சிசு உன்னுடைய என்பது தெரியாதா? உலகத்தில் தகப்பன் தன் குழந்தைக்கு உண்ணவும் உடுக்கவும் வாங் கித் தந்து ஆனந்திக்கச் செய்கிருன். ஆனல் நீயோ என் தாயையும் என்னையும் விட்டு விட்டு எங்கோ இருக்கிருய். இதுவரையும் இனி என்னை ஏமாற்ற முடியாது. நீ வந்து அணைத்தால் சரி. இல்லை நான் அங்கு வருவேன் இதற்கு மேல் என்ன எழுதுவது என்று தன் மழலை மொழியில் கீறி வைத்து இருந்தததைக் கண்டு அந்தப் பிரபுவிற்கு ஒரு பரபரப்பு ஏற்பட்டு, உடனே திரும்பி வந்து பையனை அழைத்துக் கொண்டு போய்த் தன் ஐஸ்வரியத்தை முழு வதும் அவன் பேரில் எழுதி விட்டுத் தன் ஆவியை அந்த வைகுண்ட நாதரிடம் சமர்ப்பித்து விட்டான்.
*
இதுதான் பகவான் லீலை. அவனுக்கு ஏழை, பணக் காரன், மேல்ஜாதி, கீழ்ஜாதி வயது முதிர்ந்தவன், வயது குறைந்தவன், படித்தவன், படிக்காதவன் என்ற பேதம் கிடையாது. யார் தன்னிடம் பூரண பிரேமா பக்தி கொள் ளுகிறர்களோ அவருக்கு எவ்விதமாவது வந்து உதவி செய்வான். பக்த தாசன் அல்லவா? ஏழை பங்காளன் அல்லவா? நம்பிக்கையுடன் இருப்பின் அவன் நம்மைக் கைவிட மாட்டான்.
/
பெண்
பெண்களே! ஆசைகளுக்கும் ஆண்களுக்கும் அடிமைக ளாயிருக்க மறுத்து விடுங்கள். அலங்காரம் செய்ய மறுத்து விடுங்கள். வாசனைத் திரவியங்களைத் துறந்து விடுங்கள்: உண்மையான மணம் உள்ளத்திலிருந்து எழட்டும். அப் பொழுது தனி மனிதனை மட்டுமன்று மனித ஜாதியையே கொள்ளை கொண்டு விடுவீர்கள். அதுதான் உங்கள் பிறப் புரிமையாகும்.
E}
- காந்தி.
 

ஆத்மஜோதி 263
சக்தி வ ண க்க ம்
( சுவாமி சிவானந்தர் )
எல்லா ஜீவராசிகளிலும் அறிவு, தயை, அழகு ஆகிய ரூபத்தில் மிளிர்கின்ற தெய்வத் தாய்க்கு வணக்கங்கள். அவ ஞக்கு வந்தனங்கள், வந்தனங்கள், வந்தனங்கள் -
நேசமுள்ள ஒமாதாவே! நீ ஆதார சக்தியாக இருக்கின் ருய். உன்னிடம் இரண்டு அம்சங்கள் இருக்கின்றன, அதாவது ஒன்று பயங்கரம், மற்ருென்று அமைதி, நீ எளிமை, மிருதுத் தன்மை, கூச்சம், பெருந்தன்மை, தைரியம் சகிப்புத்தன்மை பொறுமை ஆகியவைகளாய் விளங்குகின்ருய்.நீ பக்தர்களின் உள்ளத்தில் நம்பிக்கையாகவும், பெரியோரிடத்தில் பெருந் தன்மையாகவும், வீரர்களிடத்தில் வீரமாகவும், புலிகளிடத் தில் பயங்கரத் தன்மையாகவும் இருக்கிருய். இந்திரியங்களை யும், மனதையும் அடக்குவதற்கு எனக்கு பலத்தைக் கொடுத் தருள். உன்னில் நா ன் வசிக்கத் தகுதியுடையவனுக்கு. உனக்கு எனது வணக்கங்கள், !
பூஜிக்கத் தக்க ஒமாதா வே! நீஇந்த மாயையை உற்பத்தி செய்திருக்கிருய். அதன் காரணமாக மக்கள் இந்த உலகில் மயங்கிய நிலையில் நடக்கின்றனர். எல்லா அஞ்ஞானங்களும் உன்னிடமிருந்து வந்திருக்கின்றன. உன்னுடைய கருணையின் றேல் ஆத்மீக சாதனையில் யாரும் வெற்றிபெற முடியாது. முடிவில் விடுதலையும் பெற முடியாது இவ்வுலகிற்கு நீ வித் தாக இருக்கிருய். உன்னிடம் இரண்டு அம்சங்கள் இருக்கின் றன. அதாவது புலப்படாத அம்சம் அல்லது அவ்யக்தம் ஒன்று. மற்ருெ?ன்று புலப்படும் அம்சம் அல்லது இந்த ஸ்தூலப் பிரபஞ்சம். பிரளய காலத்தில் அகில உலகமும் அவ்யக்தத் தில் கரைந்துவிடுகின்றது. எனக்கு அந்தத் தெய்வீக திருஷ்டி யைக் கொடு. நான் உன்னுடைய உண்மையான கம்பீரத் தோற்றத்தைப் பார்க்கக் கடவேணுக. இந்த மாயையைக் கடக்க எனக்கு உதவி செய்.
ஒ இனிய மாதாவே, வணக்கங்கள், சிவபிரானின் தேவி யே! பார்வதித் தாயே! நீ இலட்சுமி, நீ சரஸ்வதி, நீ காளி, துர்க்கை, குண்டலினி, நீ எல்லா சக்திகளின் அம்சம்.
பராசக்தி, நீ எல்லாப் பொருள் வடிவாகவும் இருக்கின்ரு ய், நீ எல்லாருக்குமான ஒரே அடைக்கலம். நீ அகில உலகையும்
தி

Page 14
264 ஆத்மஜோதி
மயக்கி விட்டாய். பிரபஞ்சம் முழுவதும் உன்னுடைய முக் குண லீலையே. நான் உன்னை எவ்வாறு புகழ்வேன். உன் பெருமையை வர்ணிக்க முடியாது. உனது மகிமையை வார்த் தையால் விளக்கவொண்ணுது, என்னைக் காப்பாற்று. எனக்கு
வழிகாட்டு.
இரக்கமுள்ள தாயே! நான் உன்னை வணங்குகிறேன். நீ என்னை காப்பவள். நீயே எனது இலட்சியம். நீயே எனது ஒரே ஆதரவு. நீயே எனது வழிகாட்டி,சகல இன்னல்களையும் டர் களை யு ம், து ன ப ங் க ளே பு ம் துடைப்பவள்
'ဇွိုမှီ
PKK
நீ மங்களகரமே உருவானவள். நீ பிரபஞ்சம் முழுவதி
லும் ஊடுருவியிருக்கின்ருய், பிரபஞ்சம் முழுவதும் உன்னல் நிரப்பப்பட்டுள்ளது. நீ சகல நற்குணத்தின் களஞ்சியம். என் னைக்காப்பாற்று. நான் உன்னைத் திரும்பத் திரும்ப வணங் குகிறேன்.
ஒ மேலான தாயே! எனக்கு எப்பொழுது சமநோக்கும், ஒரு நிலைப்பட்ட மனமும் கிட்டும். எப்பொழுது நான் அகிம் சை, சத்தியம், பிரம்மசரியத்தில் நிலைத்திருப்பேன் . உன்னு டைய திவ்யக் காட்சி எனக்கு எப்பொழுது கிட்டும்? நான் எப்பொழுது ஆழ்ந்த தியானத்திலும்,சமாதியிலும்புகுவேன். எனக்கு எப்பொழுது ஆழ்ந்த நிலையான சாந்தியும், சாஸ்வத மான ஆனந்தமுங் கிடைக்கும்.
பிரகாசமே உருவான ஒ மாதாவே நான் எந்த விதமான ஆத்மீக சாதனைகளோ, அல்லது குரு சேவையோ செய்ததில்லை. நான் எந்த விதமான விரதமும் அனுஷ்டிக்கவில்லை. யாத்தி ரையோ, தான தர்மமோ, ஜபமோ, தியானமோ, வழிபா பாடோ செய்தறியேன். நான் மத நூல்களைப் படித்தறியேன் என்னிடம் விவேகமோ அல்லது வைராக்கியமோ கிடையாது என்னிடம் தூய்மையோ, விடுதலை வேட்கையோ இல்லை. நீ தான் எனது ஒரே அடைக்கலம். உனக்கு என்னுடைய மெள
ன வந்தனங்கள் உரித்தாகுக. நான் உன்னுடைய தாசானு,
தாசன். அஞ்ஞானத் திரையை நீக்கியருள்வாய்.
கருணை பொருந்திய தாயே! உனக்கு என்னுடைய ச1 ஷ் டாங்க நமஸ்காரங்கள். நீ எங்கிருக்கிருய் என்னைக் கைவிட்டு விடாதே. நான் உன்னுடைய குழந்தை. என்னேப் பயமற்ற தன்மை, ஆனந்தம் என்கின்ற அக்கரைக்கு அழைத்துச் செல் வாய். நான் உன்னுடைய பாத கமலங்களே எ ன் னு  ைட ய சொந்த கண்களால் எப்பொழுது காண்பேன். நீ எல்லையற்ற கருணைக் கடல், தத்துவ ஞானியினுடைய கல்லானது இரும்

ஆத்மஜோதி 265
பைத் தங்கமாக மாற்றும் பொழுது, அசுத்த ஜலத்தை கங்கை சுத்த ஜலமாக மாற்றும் பொழுது, ஒ தெய்வத் தாயே நீ என் னை ஒரு தூய ஆத்மாவாக மாற்ற முடியாதா? எனது நா எப் பொழுதும் உனது திருநாமங்களை ஜெபித்துக் கொண்டிருக்
கட்டும்.
மகிமை பொருந்திய மாதா வே! உனக்கு வந்தனங்கள். எல்லாப் பெண்களும் உன்னுடைய அங்கங்கள், மனம், அகந் தை, அறிவு, உடல், பிரான இந்திரியங்கள் ஆகியவை எல் லாம் உன்னுடைய உருவங்கள். நீ பராசக்தி அல்லது பரா பிரகிருதி, அபரா பிரகிருதி, நீ மின்சார சக்தி, காந்த சக்தி, ஆகர்ஷண சக்தி, உற்பத்தி சக்தி, நடத்தும் சக்தி, மனுேசக்தி ஆகியவைகளாக இருக்கின்ருய். எல்லா உருவங்களும் உன்னு டைய உருவங்களே. உற்பத்தியின் ரகசியத்தை எனக்கு வெளிப்படுத்திக்காட்டு. தெய்வீக ஞானத்தை எனக்கருள்.
உன்னுடைய ஒளியாலே சூரியன் பிரகாசிக்கிருன், அறிவு இயங்குகிறது. இந்திரியங்கள் வேலை செய்கின்றன. உன்னு டைய சக்தியால் காற்று வீசுகிறது. நதிகள் கடலை நோக்கி ஒடுகின்றன. காந்தம் இரும்பைக் கவர்கின்றது. பூக்கள் மலரு கின்றன. அணுக்கள் நகருகின்றன. நீ மின்சார சக்தியாகவும் காந்த சக்தியாகவும், அல்ட்ரா வயலெட் கதிர்களாகவும் விளங்குகின்ருய். தகுதியற்ற நான் உன்னை எவ்வாறு வணங் குவேன் அல்லது ஹரி, பிரம்மா மற்றும் ஏனையோர்களாலும் வணங்கப்படுகின்ற உன்னை நான் எவ்வாறு புகழ்வேன்?
தெய்வீக தாயே! உன்னுடைய இனையடிகளிலிருந்து சொட்டிக் கொண்டிருக்கும் தேவாமிர்தத்தை (டிட்சக்கரங்க ளான மனம் முதலியவற்றின் இருப்பிடமாகிய வெளிப் பாட் டின் மீது தெளித்து உன்னுடைய மூலஸ்தானத்தை ஆறு விக் தக்ரந்தாவிருக்கும் உபதேச ஒளியால் திரும்பப்பெற்று உன் னுடைய உருவத்தை சர்ப்பரூபத்தில் மூன்றரைச்சுற்றுகளாக மாற்றி மூலாதாரத்திலுள்ள முக்கோண வடிவிலமைந்த பள் ளத்தில் உறங்கிக் கொண்டிருக்கின்ருய்.
ஒ குண்டலினித்தாயே! ஆறு சக்கரங்களையும் துளைத்துக் கொண்டு மூலாதாரத்திலுள்ள நான்கு தளங்கள் கொண்ட தாமரையில் உள்ள பிருதுவி அல்லது பூமியையும் சுவாதிஷ்டா னத்திலுள்ள ஆறு தளங்கள் கொண்ட தாமரையிலுள்ள தண்ணிரையும் மணி பூரத்திலுள்ள பத்து தளத்தாமரையி லுள்ள அக்கினியையும் அணுகதத்திலுள்ள பன்னிரண்டு தளங்

Page 15
266 ஆத்மஜோதி
களையுடைய தாமரையில் உள்ள வாயுவையும் விஷ9தத்தில் உள்ள பதினறு இதழ்களையுடைய தாமரையிலுள்ள ஆகாயத் தையும் ஆக்ஞாசக்கரத்தில் இருபுருவங்களுக்குமிடையில் ஈரி தழ் தாமரையில் உள்ள மனதையும் - ஆகிய இவைகளைத் துளைத்துக் கொண்டு நீ உன்னுடைய் பதி பரமசிவனுேடு ஆயி ரம் இதழ் கொண்ட தாமரையாகிய சகஸ்ராரத்தில் ஏகாந் தமாக லீலைபுரிந்து கொண்டிருக்கின்ருய்.
உங்களால் ஒரு பெரிய பாராங்கல்லைப் புரட்ட முடியா
விட்டாலோ அல்லது ஒரு மூட்டை அரிசியை தூக்க முடியா விட்டாலோ உங்களுடைய நண்பர்கள் உங்களிடம் சக்தியில்லே யென்று சொல்லுகிருர்கள். அவர்கள் ஒரு பொழுதும் உங் களிடம் விஷ்ணுவோ அல்லது சிவனே இல்லையென்று சொல் வது கிடையாது. இதிலிருந்து சக்திதான் முழுமுதல் தேவதை என்பதும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவளுடைய ஆணையை நிறைவேற்றி வைப்பவர்கள் என்பதும் தெளிவு. பூரீசங்கராசாரியாரால் எழுதப்பட்ட ஆனந்த லஹரியில் கீழ்க் காணும் வாக்கியத்தைக் காணலாம்.
'சிவன் சக்தியோடு இணைந்து இருக்கும் பொழுதுதான் அவனல் சிருஷ்டி செய்ய முடியும். அவளின்றி ஒரு சிறு அசை வையும் அவனல் செய்ய இயலாது” அத்தாயை வழி பட்டு அவள் கருணையைப் பெறுங்கள். அவள் உங்களுக்கு மோட்ச மாகிய விடுதலையைக் கொடுப்பாள்.
سعوہ جمگھڑیڑھی عجمی۔
கடவுள் உறைவிடம்.
حسبحصے حصے?--محصے محمحصے حصےح حمحصے
வென்றுளே புலன்களேந்தார் மெய்யுணர் உள்ளந்தோறும்
சென்றுளே யமுத மூற்றும் திருவருள் போற்றி ့်ပါ့
- பரஞ்சோதிமுனிவர்.
இன்பம் பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும் துன்பம் தொடர்வறுத்துச் சோதியாய் - அன்மைத்துச்
சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே ஊராகக் கொண்டான் உவந்து,
= மானிக்கவாசகர்
 

ஆத்மஜோதி 267
நெஞ்சம் மலராதோ?
(திமிலைத் துமிலன்)
நெஞ்சம் மலராதோ? வேலவ f னே!யெனும் போதினிலே - முருகா (நெஞ்சம்)
பிறவிப் பெரும் இருள்
வெள்ளத்திலே - பூக்கப் பேரொளி தேடியுந்தன்
பாதத்திலே குவியும் (நெஞ்சம்)
அறம்பொருள் இன்பமும் அன்பும் அகிம்சையும்
ஆனதெலாம் உனது
பாதக்கழல் அளிக்கும் (நெஞ்சம்)
சேற்றினிலே - உனது ஊக்கத்தின் துணைகொண்டு
பூக்கத் துடிக்குமெந்தன் (நெஞ்சம்)
ஆற்றின் அருகிலிட்ட
நாற்றுமேடை போல்-என அள்ளிக் கரைக்கவரும்
கள்ளப் பகைகருக (நெஞ்சம்)
காகிதப் பூக்களாய் நான்
வாழவிரும்பேன் - நறும்
கந்தம் சுமந்துன் அர
விந்தக் கழல் பிடிக்கும் (நெஞ்சம்)
கோகிலம் பாடத்துள்ளிக்
Gass Gaj, GG) TIL DE Lä,
குலவும் உனது அருட்
குளிர்த்தென்றல் தனில்எந்தன் (நெஞ்சம்)
கோழிக் கொடியும்வேலும்
குறப்பெண்ணின் குயிற்பாட்டும்
நாளும் தமிழ்வடிக்கும்
நலமூட்டும் அதில்தோய்ந்தென்
நெஞ்சம் மலராதோ? - வேலவ
னே எனும் போதினிலே - முருகா

Page 16
268 ஆத்மஜோதி
பரசிவ வெள்ளம்
செல்வி. சு. மாணிக்கம், உடுப்பிட்டி
செந்தமிழ்நாடு செய்த தவப்பயனக அவதரித்த அமர கவி பாரதியார் பாடிய பாட்டுக்களுள் தேசீயப் பாட்டுக் களே தமிழ் நாட்டு மக்களிடை அதிகம் செல்வாக்குப் பெற்று விளங்குகின்றன. பெரும்பாலார் அவரைத் தேசிய கவி எனவே எண்ணுகின்றனர். ஆனல் அவர் பாடிய தோத்திரப் பாடல்கள், ப்க்திப் பாடல்கள், வேதாந்தப் பாடல்கள் ஆதியன மக்களிடையே அதிகம் பரவாமலிருக் கின்றன. நமக்கு பக்தியை ஊட்டக் கூடிய பாடல்கள், கடவுளிடத்தில் அசையாத நம்பிக்கை வளர்க்கக் கூடிய பாடல்கள், அச்சத்தைப் போக்கக் கூடிய பாடல்கள், உயர்ந்த ஞானத்தைத் தர வல்ல பாடல்கள் - இத்த கைய பாடல்கள் பல பாரதியார் இயற்றியுள்ளார் என் பது நம்மவர் பலருக்குத் தெரியாது இருப்பது மிகவும் வியப்பேயாகும்.
சிறந்த ஆத்மாநு பூதி நிலையிலிருந்து பாரதியார் பாடிய பாடல்களுள் பரசிவ வெள்ளம் என்பது ஒர் அற் Ηέ5 LDΠ σ07 பாட்டாகும். ܥ
இவ் வழகிய பாட்டில் பாரதியார் கடவுள் உண்மை யை முதலில் கூறத் தொடங்கி, கடவுளை 'உள்ளும் புற முமாய் உள்ளதெலாம் தானுகும் வெள்ளமாக' உருவகிக் கின்ருர், பின்னர் அதன் பல்வேறு இயல்புகளை மிக நுட் பமாகவும் அழகாகவும் எடுத்துக் கூறுகின்ருர் காணப் படுவனவும், கருதப் படுவனவும், கருத்தைப் பேணுகின்ற னவாகிய உயிர்களும், ஆகிய யாவும் இந்த வெள்ளத்தி லேதான் பிறப்பன வென்றும்; அது யாதோர் எல்லையும், பிரிவும் பற்றுக் கோடுமின்றி, இல்லையென்றும், உண்டென் றும் அறிஞர்கள் மயக்கம் எய்துதற்கு ஏதுவாயிருப்பதென் றும், அகண்ட வெளியாய், எல்லையற்ற பேரறிவாய், எண் ணற்ற சக்திகளின் பிறப்பிடமாய், அணுக்களைக் கூட்டிக் குறைப்பதுவாய், தூலமாய், சூக்குமமாய், சூக்குமத்திற் சூக்குமமாய் - இங்ஙனம் எல்லாத் தன்மையும் தானேயாகி விளங்குவதென்றும்; அவ்வாறு விளங்கினும் சடப்பொருளின்
بربر
నీళ్ల

ஆத்மஜோதி 269
தன்மை சாராததாய், தான் ஒப்பற்ற தனிப் பொருளாய் இருப்பினும், எங்கும் கலந்து பல்வாய் நிற்பதென்றும், இதனையே பல மதத்தினரும் எங்கும் நிறைந்தவன், எல் லாம் வல்லவன், எல்லாம் அறிபவனெனக் கூறுவரென்றும், வேட்பாராயும், அவர் தம் வேட்கையாயும், வேட்கும் பொருளாயும், அப்பொருளை ஈட்டுவதாயும் நிற்பதும், காண்பாரும் காட்சியும் காண்பொருளுமாய் மாண்பார்ந்து இருக்கும் இதனை வகுத்துரைக்க முடியாதென்றும் பாரதி யார் பரம்பொருளின் இயல்புகளே எடுத்துக் கூறும் பகுதி படிக்குத் தோறும் மனத்தை உருக்கி இன்பம் பயப்பதா G55 LD.
உள்ளும் புறமுமாய் உள்ளதெலாந் தானுகும்
வெள்ளமொன்றுண் டா மதனைத் தெய்வ மென்பார் வேதி
யூரே.
காணுவன நெஞ்சிற் கருது வன உட்கருத்தைப் பேணுவன யாவும் பிறப்பதந்த வெள்ளத்தே 2
எல்லை பிரி வற்றதாய் யாதெனுமோர் பற்றிலதாய் இல்லையுள தென்றறிஞர் என்றும் மய லெய்துவதாய் 3
வெட்டவெளி யாயறிவாய் வேறுபல சக்திகளைக் 初 கொட்டுமுகி லாயணுக்கள் கூட்டிப் பிரிப்பது வாய்
தூல வணுக்களாய்ச் சூக்குமமாய்ச் சூக்குமத்திற் NA சாலவுமே நுண்ணியதாய்த் தன்மையெ லாந் தாணுகி 5
தன்மையொன் றிலாதது வாய்த் தானே ஒரு பொருளாய்த் தன்மை பல வுடைத்தாய்த் தான்பலவாய் நிற்பதுவே 6
எங்குமுளான் யாவும் வல்லான் யாவுமறி வானெனவே தங்குபல மதத்தோர் சாற்றுவதும் இங்கிதையே 7
வேண்டுவோர் வேட்கையாய் வேட்பாராய் வேட்பாருக்
கீண்டுபொரு ளாயதனை யீட்டுவதாய் நிற்குமிதே 8
காண்பார்தங் காட்சியாய்க் காண்பராய்க் காண்பொருளாய் மnண்பார்ந்திருக்கும், வகுத்துரைக்க வொண்ணுதே 9
எல்லையற்ற அண்டங்களிலுள்ள சிறியனவும், பெரிய

Page 17
270 ஆத்மஜோதி
னவும் உயிருள்ளனவும் இல்லனவும் ஆகிய எல்லாப் பெர் ருளும் தானக இப்பரம்பொருள் இருப்பினும் இதனை அறிய வல்லவர் மிகச் சிலரே என்று உண்மையை அறிந்த பெரி யோர்கள் கூறுவர்.
எல்லாந் தாணுகி யிருந்திடினும் இஃதறிய வல்லார் சிலரென்பர் வாய்மையெல்லாங் கண்டவரே O
ப் பரம் பொருளைக் கண்டவர்களின் அளவிடற்கரிய பெருமையினைப் பாரதியார் அழகுற எடுத்துரைக்கும் முறை அறிந்து இன்புறத் தக்கதாகும். அவர் கூறுவதாவது:- இப் பரம் பொருளைக் கண்டவர்கள் மும்மலங்களும் அவற் முல் விளையும் துன்பங்களும் ஆகியவற்றினின்றும் விடுதலை பெறுவார்கள். இதனைப் பற்றுக் கோடாகக் கொண்டவர் கள் தாம் அடைய வேண்டிய பயன்கள் அனைத்தையும் அடைவார்கள். அன்றியும் அவர்கள் இடரின் எல்லையைக் கடந்தவராய், எல்லாப் பேறுகளையும் பெற்று, இங்கு இன்ப
அடைவார்கள். அவர்கள் தாம் விரும்பிய எத யும் பெறவல்லராயினும் ஒன்றையும் ஆசையினுல் விரும்ப மாட்டார்கள். உலகத்து மக்கள் அவர்களைக் கடவுளெ னப் போற்றுவார்கள். இப் பரம் பொருளோடு என்றும் இரண்டற்ற நிலையில் இருப்பவர்கள் ஒன்றையும் வேண் டாது உலகனைத்தையும் ஆளுவார்கள்.
மற்றிதனைக் கண்டார் மலமற்றர் துன்ப மற்றர்; பற்றிதனைக் கொண்டார். பயன?னத்துங் கண்டாரே;
இப்பொருளைக் கண்டார் இடருக்கோர் எல்லே கண்டார்; எப்பொருளுந் தாம்பெற்றிங் கின்பநிலை யெய்துவரே. 2.
வேண்டுவவெலம் பெறுவார் வேண்டா ரெதனையுமற் நீண்டுபுவி யோரவரை யீசரெனப் போற்றுவரே. 13
ஒன்றுமே வேண்டா துலகனைத்தும் ஆளுவர்காண்;
என்றுமே யிப்பொருளோ டேகாந்தத் துள்ள வரே. 14
சிவ பரம்பொருளை வெள்ளமாக உருவகித்த பாரதி யார் - இவ் வெள்ளம் நாம் விரும்பியபோது நம் உள்ளத் தில் அமுத ஊற்ருகப் பொழியுமெனக் கூறியதோடு அமை யாது, எவ்விடத்தும் எக்காலத்தும் இந்த இன்பவெள்ளம்
 
 

ஆத்மஜோதி 271. நம்முள் வீழ்வதற்கு நாம் செய்ய வேண்டிய மிகவும் எளி தான ஒர் உபாயத்தையும் அழகாக எடுத்துரைக்கின்ருர், அவ்வுபாயந்தான் யாதோவெனில் பரம்பொருளை ஒருமை மனத்தோடும் அன்போடும் எண்ணுதலேயாகும். இதற்குக் காவித் துணியும் கற்றைச் சடையும் வேண்டாம். சாத்தி ரங்களும் சதுர்மறைகளும் வேண்டாம். சிவமொன்றே உள் ளதெனச் சிந்தை செய்தால் போதும் என்று இவ்வாருக நாமெல்லாம் இறைவனை அடைந்து இம்மையிலும் மறுமை யிலும் இன்புற்று வாழ்வதற்குரிய ஒப்பற்ற ஒரு நெறியை பாரதியார் விளக்கும் திறம் தெவிட்டாத இன்பம் பயப் lig5T (5 L D.
வெள்ளமடா தம்பி விரும்பியபோ தெய்திநின துள்ள மிசைத் தானமுத வூற்றாய்ப் பொழியுமடா 15
யாண்டுமிந்த இன்பவெள்ளம் என்றும்நின்னுள் வீழ்வதற்கே வேண்டு முபnயம் மிகவுமெளி தாகுமடா! 16
எண்ணமிட்டா லே போதும் எண்ணுவதே இவ்வின் பத் தண்ண முதையுள்ளே ததும்பப் புரியுமடா! 17
எங்கும் நிறைந்திருந்த ஈசவெள்ள மென்னகத்தே பொங்குகின்ற தென்றெண்ணிப் போற்றிநின்றற் போது மடா
யாதுமாம் ஈசவெள்ளம் என்னுள் நிரம்பியதென் ருேதுவதே போது மதை உள்ளுவதே போதுமடா 19
காவித் துணிவேண்டா, கற்றைச் சடைவேண்டா பாவித்தல் போதும் பரமநிலை எய்து தற்கே. 20
சாத்திரங்கள் வேண்டா, சதுர் மறைக ளேதுமில்லை தோத்திரங்க ளில்?லயுளந் தொட்டுநின்றற் போது மடா! 21
தவமொன்று மில்லையொரு சாதனையு மில்லையடா! சிவமொன்றே யுள்ளதெனச் சிந்தைசெய்தாற் போது மடா! 22
சந்ததமு மெங்குமெல்லாந் தாணுகி நின்றசிவம்; வந்தெனுளே பாயு தென்று வாய்சொன்னுற் போதுமடா 23
நித்த சிவ வெள்ளமென்னுள் வீழ்ந்து நிரம்புதென்றுன் சித்தமிசைக் கொள்ளுஞ் சிரத்தையொன்றே போதுமடா - 24

Page 18
272 ஆத்மஜோதி
பாரதியார் காட்டும் நன்னெறியைக் கடைப்பிடித்து நாமெல்லாம் உயர்ந்து உலகத்தையும் உய்விப்போமாக.
'நன்னெஞ்சே! உ2ணஇரந்தேன், நம்பெருமான் திருவடியே உன்னஞ்செய் திருகண்டாய் உய்வதனை வேண்டுதியேல்’
- திருஞானசம்பந்தர்
பெண்
பெண்ணைப் பலவீனமான வகுப்பினள் என்று கூறுவது அபவாதமாகும். அது ஆண், பெண்ணுக்குச் செய்யும் அநீதி. பலம் என்பது மிருக பலம் என்று பொருள்படு மானல் பெண் ஆணைவிடக் குறைந்த மிருகக் குணமுடை யவளே. பலம் என்பது ஆன்ம பலம் என்று பொருள்படு மானுல் பெண் ஆணைவிட அளவிறந்த மேன்மையுடையவ ώΥΤΙΤ6) / Π 6ΥΤ
அகிம்சையே மனித ஜாதியின் தர்மமானுல் பெண்ணே வருங்காலத்திற்கு அதிகாரிய வாள். அவளைவிட அதிகமா கப் பிறர் மனத்தை இளக்கக் கூடிய ஆற்றல் பெற்றவர்
u Tj ?
நம்முடைய வாழ்விலுள்ள தூய்மையான அம்சங்களைப்
பாதுகாத்து வருபவர் பெண்களே. அவர்கள் மூட வழக்
கங்களைச் சீக்கிரமாகத் துறப்பதில்லை என்பது உண்மை தான். அதுபோலவே அவர்கள் சீக்கிரமாகத் துறந்து விடு வதில்லை.
ஆணும் பெண்ணும் சம அந்தஸ்து உடையவர்களே
பன்றி ஒரே இனத்தவரல்லர், ஆணிடமில்லாத சிறப்பியல்
புகள் பெண்ணிடமுள. அதனுல் ஆணின்றிப் பெண்ணும் பெண்ணின்றி ஆணும் இருக்க முடியும் என்று எண்ணிப் பார்க்கக்கூட முடியாது.
- மகாத்மா காந்தி,

ஆத்மஜோதி 273 சு வா மி பி ர மா ன ந் தர்
( S) (5. Lost. Low, (8), his B. A. )
அபிநவ பாரதத்தின் 'ச க்திக்கனல் அகிலத்திற்களித்த பகவான் பூரீஇராமகிருஷ்ணருடைய சிறந்த சீடர்களிற் சுவாமி பிரமானந்தாவும் ஒருவர். தங்கம் நிகர் வங்காளம் தந்த மங் காத மாமணிகளிலே சுவாமி பிரமானந்தாவும் ஒளி குன்ற மணியாவார். பல்வளமும் நல்கிவளர் பறிசாட்தான் இவர்
பிறந்த கிராமமாகும். வசதிகள் பலவுள்ள ஜமீந்தார் குடும் பம். தாயார் கைலாஸ் கம்மினி அம்மையார் . கிருஷ்ண பக்தி மிகுந்தவர். தந்தையார் ஆனந்த மோகன் கோஷ். இவர் களுக்கு மைந்தனுக 1863ம் ஆண்டு தைத்திங்கள் 21ம் நாள்,
பிறந்தார். பெற்ருேர் இருக்கல் சந்திர கோஷ் எனப் பெயரிட்
டார்கள். இருக்கலின் ஐந்தாவது வயதிலே தாயார் இறந்து விட்டார். தந்தையார் மறுமணம் செய்து கொண்டார்.
இருக்கல் வளர்பிறை போல வளர்ந்தார். அழகிலும், ஆரோக்கியத்திலும், குணத்திலும் சிறந்து விளங்கினர். கண் டோர் எல்லோரும் இவருடைய குணத்தால் மருண்டனர். எல்லோருடைய நல்லிதயங்களாலும் புகழப்பட்டார்.
இளம் வயதில் இருக்கல் கிராமப் பாடசாலைக்குக் கல்வி பயில அனுப்பப்பட்டார். அங்குள்ள ஆசிரியர்கள், மாணவர் களைத் தண்டிப்பதில் மிகவும்கண்டிப்புடையோராய்க் காணப் பட்டனர். வகுப்பில் மற்ற மாணவர்கள் தண்டனையடைந் தால், இருக்கல் மிகவும் வேதனைப் படுவார். இதன் பயனுல், அப்பாடசாலை ஆசிரியர்கள் யாரையும் தண்டிக்கும் பழக்கத் தை, விட வேண்டியதாயிற்று. ஆசிரியர்கள், மாணவர்கள்
மத்தியிலும் இவர் மதிப்பு உயர்ந்தது.
இருக்கல் கல்வியிலே திறமை காட்டினர். மற்றத் துறை களிலும் தனது திறமையை நிலைநாட்டி ஆசிரியர்களின் நன் மதிப்பைப் பெற்றார். கிராம விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெற்று, அனைவரதும் பாராட்டுக்களையடைந்தார். விளையாட்டுக்களோடு மட்டும் இருக்கல் நின்றுவிடவில்லை. பாடசாலை அருகே இருந்த 'காளி கோவிலிலே தனது செயல் மறந்து நெடுநேரம் கழிப்பார். சில வேளைகளில் மண்ணில் அன்னையின் சிலைகளைச் செய்து தியானத்திருப்பார். துர்க்கை பூசை நடக்கும் காலங்களில் இருக்கல் அமைதியாக இ ரு ந் து

Page 19
274 ஆத்மஜோதி
பக்தியுடன் தியானிப்பார். இளமையிலிருந்து பஜனையில் மிக ஆர்வம் காட்டினர். பக்திப் பாடல்களைத் தன் நண்பர்களுட்ன் கூடிப் படிப்பார். பாடும் நேரங்களில் மெய் மறந்து நிற்பார்.
ஆரம்பக் கல்வி முடிந்தது. 1875ம் ஆண்டு கல்கத்தாவி லுள்ள ஆங்கில உயர்நிலைப் பள்ளியிற் சேர்ந்தார். கல்கத்தா வில் இருக்கலுக்கு நரேந்திரரின் (பின்பு, சுவாமி விவேகானந் தர்) நட்புக் கிட்டியது. நல்லுறவு அவர்களை நண்பர்களாக் கியது. நரேந்திரரோடு உடற்பயிற்சி, குஸ்தி முதலியவற்றை இருக்கல் கற்ருர், நரேந்திரர் இருக்கலைப் பிரக்ம சமாஜ நிலை யத்திற்குக் கூட்டிச் சென்று, ஒர் அங்கத்தவராக்கினர். இங் கே இவருடைய சமயப் பற்றும், வளர்ச்சியும். ஆர்வமும் Th. L-ULJUJ,
தனியாக இருந்து வாழ்க்கையின் மர்மங்களைப் பற்றிச் சிந்திப் பார். கடவுளைக் காண வேண்டும் என்ற அவா வந்தது. வாழ்க்கையின் மற்ற ஆசைகள் நீங்கின. கல்வியிலும் கவனம் குறைந்தது. இவருடைய பெற்ருேர் மிகக் கவலைப்பட்டனர். இருக்கலை மருட்டினர், வெருட்டினர், ஒன்றும் இவரது நம்பிக் கையை - இலட்சியத்தை உடைக்கவில்லை. மகன் மனத்தை மாற்ற இயலவில்லையென்று தந்தை நொந்தார். பொதுவாக “விவாகம்’ மனிதனைச் சிற்றின் பத்தில் ஈடுபடச் செய்யும் என்று எண்ணிய தந்தையார் ஆனந்த மோகன் கோஷ், தன் மகனுக்கு விவாகம் செய்து வைத்தார். ஆனல் விதி அவ்வாறி ருக்கவில்லை. இவ்விவாகம்தான் இருக்கல் பூரீஇராமகிருஷ்ண ரைக் கண்டு அவர் பாதத்திற் சரணடையக் காரணமாயிற்று.
தக்கினேஸ்வரத்திற்கு அ ரு கி லு ள் ள து கோண்நகர். கோண் நகரில் வசித்த மன்மோகன் மித்திராவினுடைய சகோ தரியே இவர் மனைவியாவர். மன்மோகனும் தாயாரும் பூரீ இராமகிருஷ்ணருடைய பக்தர்கள். மன்மோகன் இருக்கலைத் தக்கிணேஸ்வரத்திற்கு அழைத்துச்சென்ருர், பூறி இராமகிருஷ் னருடைய பாதங்களில் விழுந்து வணங்கினுர் . இருக்கலைக் கண்டதும் பூரீ இராமகிருஷ்ணருக்கு அளவிலா ஆனந்தம் வந் தது. இருக்கல் வீட்டிற்குப் போன பின்பும், பூரீ இராமகிருஷ் னருடைய ஞாபகத்தைத் தவிர, வேறு ஒன்றுமிருக்கவில்லை. இதனுல் இருக்கல் இன்னுெருமுறை தனியே தக்கினேஸ்வரத்
திற்குச் சென்ருர், பூரீ இராமகிருஷ்ணர் சமாதியடைந்த நிலை
யிலிருப்பதை இருக்கல் கண்டார்.
சுவாமி பிரமானந்தர் தக்னேஸ்வரத்திற்கு, வரமுன்
 
 
 
 
 
 

ஆத்மஜோதி 275
நிகழ்ந்த நிகழ்ச்சி இது. ஒருநாள் பூரீ இராமகிருஷ்ணர் காளி
யம் மையைத் தரிசித்தார். அம்மையாரும் பார்த்தாள். பூரீ இராமகிருஷ்ணருடைய உடல்முழுவதும் சிலிர்த்தது. அம்மை யார் ஒர் ஆண் குழந்தையைச் பூரீ இராமகிருஷ்ணருக்கு மக ஞகக் காட்டினர். சிற்றின்ப ஆசையை அறவே ஒழித்த பக வான் , தனக்கு ஒரு மகன் உண்டென்பதை நினைத்து "மரண நிலை அடைந்தார். அன்னையார் 'அக்குழந்தை தெய்வீகக் குழந்தை; அது உம்முடையது' என ஞாபகமூட்டிய போது தான் பூரீ இராமகிருஷ்ணருடைய மனம் தெளிந்தது.
1881ம் ஆண்டில் இருக்கலக் கண்டதும் 'இவரைத்தான் அ ன் னை குழந்தையாக எனக்குக் காட்டினர்' எ ன் ப  ைத உணர்ந்தார். பூரீஇராமகிருஷ்ணர், தாம் முன் கண்ட குழந் தைக்கும், தம் முன்னுல் நிற்கும் இருக்கலுக்கும் ஒருவித வித் தியாசமுமில்லே என்பதை அறிந்து தெளிந்தார். இருக்கலைத் தமது சொந்தக் குழந்தையெனக் கருதி அன்பு பாராட்டினர். பூரீ இராமகிருஷ்ணரைத் தந்தையெனக் கருதி இருக்கல் கட மையாற்றினுர், தந்தைக்கும் மகனுக்கும் இடையேயுள்ள உற வைக் கண்டவர்கள் மெச்சினுர்கள்.
மற்ற சீடர்கள் பகவானுக்குச் செய்யும் தொண்டுகளே மிக ஆவலுடன் செய்வார்கள், ஆனல் இருக்கல் பகவான் இடும் கட்டளைகளை நேரடியாக மறுப்பர். இதையிட்டுபகவான் கோபமடைவதில்லை: சந்தோஷப்படுவார். இருக்கல் தனது தந்தைக்கு ஆற்றவேண்டிய கடமைகள் அத்தனையும் குறை வின்றிச் செய்வார். பகவான் சமாதி நிலையில் இருக்கும் போது, இருக்கல் அவருடைய உடலைப் பாதுகாப்பார்.
இருக்கல் தக்கினேஸ்வரத்திற்கு அடிக்கடி செல்வது, அவர் தந்தையார் ஆனந்த மோகன் கோஷிற்குப் பிடிக்க வில்லை. மகனைத் தண்டித்தார். வெளியேறவிடாமல் தடை செ ய் தா ர், தடையுத்தரவுகளையெல்லா ம் ஆத் ம ஞா ன அ வா க் கொ ண் ட இருக்கல் உள்ளம் மீறியது. யாரும் அறியாவண்ணம் தக்கினேஸ்வரத்திற்குச் சென்ருர் பெற்ற தந்தை மகனைத் திருத்தும் முயற்சிகளைக் கைவிட்டார். மைந்தனின் ஆனந்தத்திற்கு எல்லேயிடமுடியாது. தன் குரு வின் அருகிருந்து தடைபோதுமின்றிப் பணிவிடையாற்றலாம் என மகிழ்ந்தார். பூரீ ராமகிருஷ்ணர் இரு க் க ல் லு க்குத் தந்தையும் குருவுமானுர்
பூரீ இராமகிருஷ்ணரின் தெய்வீக மகன் இருக்கல். இருக் கலுக்கு யோகசாதனைகளைக் கற்பித்தார். இரு க் கல் லின் குறைபாடுகளை நேரே கண்டித்துத் திருத்தினர்.
-தொடரும்

Page 20
276 ஆத்மஜோதி
விசயனும் வேட விகிர்தனும் ஆடிய திருவேட்டை
(பண்டிதர். செ. பூபால பிள்ளை அவர்கள் - மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலைத் தமிழ் விரிவுரையாளர்)
மண்ணுலகில் வாழும் நமக்கெலாம் விண்ணுலக இன்பந் தருவது இலக்கியம். மனத்தின் கண்ணே உணர்ச்சிகளே எழுப்பி இயற்கையில் ஈடுபடுத்தி அழகினை உணரச் செய்வது இலக்கியம். நன்மையிற் பற் றுண்டாக்கி நம்மை வாழ்வாங்கு வாழத் தூண்டுவது இலக்கியம். உண்மையே வடிவாகிய இறைவனுக்கு உவந்த அர்ச்சனையாக அமைந் துள்ளது பக்திப் பாடல்களால் ஆக்கப்பட்ட செய்யுள் இலக்கிய நூல்களே யாகும்.
இவற்ருல் நமது தமிழ் மக்கள் செய்யுள் இலக்கியம் படிப்பதைத் தமது வாழ்க்கையிற் தனி இன்பமாகக் கொண்டனர். மக்கள் ஒன்று கூடுங் கோவில்களிலும், மன்றங்களிலும் மடங்களிலும், புராணங்கள் காவியங்களைப் பாடிப் பயன் கூறி வந்தனர். வருகின்றனர். செய்யு ளேப் பாடும்போது பாடுபவருங், கேட்பவரும் இசையிலும் பொருளி லும் ஈடுபடுகின்றனர். செய்யுளில் அமைந்துள்ள நிகழ்ச்சிகளுங், காட்சிகளும் நேரிற் காண்பது போலவே அவர்களுக்கு இன்ப துன் பங்களையும் ஏனைய சுவைகளையும் உண்டாக்குகின்றன. இலக்கியச் சுவையில் ஈடுபடுவோர் நகை, அழுகை, இழிவரல், மருட்கை, அச் சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எண் வகைச் சுவைகளையும் மாறி மாறி அனுபவிக்கின்றனர். சுவை உணர்வைத் தமது மெய்ப் பாட்டால் வெளிப்படுத்துகின்றனர். கரும்பு தின்னக் கைக்கூலி கொடுப்பது போல இந்தச் செயல்கள் இவர்கள் வாழ்க்கையையே பண்படுத்தி மக்கட் பண்பை வளர்க்கிறது. இதனுல் நமது சமூக ஒழுக்கமும், பண்பும் உயர்ந்தோங்குகின்றன. இந்த வகையிற் பாரத தேசத் தமிழ் மக்களுக்குப் பெரும்பாலும் உதவி புரிந்தது கல்வியிற் பெரிய கம்பர் இன்ப இராமாயண காவியமாகும். வட இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவியது கச்சியப்ப சிவாசாரியார் களிப்புடன் உத விய கந்த புராணம் எனலாம். சிழக்கிலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவியது வில்லிபுத்தூராழ்வார் விருப்புடன் தந்த வீரச்சுவை நிரம் | Sluis LD5ITLIT LT gf;ub ம்.
历óLD <鹦@
இந்தப் பாரதத்திலே நாம் எடுத்துக் கொண்ட விசயனும் வேட விகிர்தனும் ஆடிய சூகரத் திருவேட்டை குறிப்பிடப்பட்டுள்ளது.
is
s

新
ஆத்மஜோதி 277
புண்ணியக் கன்ருகும் திருஞான சம்பந்தப் பிள்ளையாரும் தாம் இயற் றிய கோளறு திருப்பதிகத்தின் கண்ணே அருச்சுனனுக்கு அருள் புரி வதற்காக உலக மாதாவாகும் உமையம்மையாருடன் இறைவன் வேட் டுவத் திருவுருத் தாங்கிச் சூகர வேட்டையாட எழுந்தருளிய வர லாற்றினைக் குறிப்பிட்டுள்ளார். அது
"கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்' என்பது.
சைவ நன்மக்கள் தமது திருக்கோயில்களிலே திருவிழா எடுக்கும் போது தீர்த்தத்துக்கு முதல்நாள் இரவுத் திருவிழாவில் சூகரத் திரு
வேட்டைத் திருவிழா நடத்துவதனை இன்றும் நாம் காண்கிருேம்.
இந்த வரலாற்றினை வில்லி பாரதத்தை ஆதாரமாகக் கொண்டு இனி
ஒரு சிறிது ஆராய்வாம்.
பஞ்ச பாண்டவர், நூற்றுவருடன் சூதாடி இராச்சியத்தைத் தோற்ற பின்பு காமிய வனவாசஞ் செய்கின்றனர். அத்தருணம் அவர்களின் தந்தையின் தந்தையாகும் தவத்திற் சிறந்த வியாச மா முனிவர் வந்தடைகிருர், அவரைக் கண்டதும் பஞ்ச பாண்டவர் உவகையுடன் வணங்கித் தமக்கேற்பட்ட துன்பங்கள் அத்தனையையும் ஒன்றும் லிடாமல் எடுத்துரைக்கின்றனர். அவற்றையெல்லாங் கேட்ட வியாச மாமுனிவர் 'உள்ளது உண்டு. நீங்கள் ஒன்றுக்குங் கவலையுற வேண்டாம்" என்று கூறி அவர்களைத் தேற்றுகிருர் தேற்றிய பின்பு அருச்சுனன், பரமேஸ்வரன் பார்வதி தேவியுடன் எழுந்தருள் புரி கின்ற கயிலை மலைக்குச் சென்று அருந்தவம் புரிந்து இறைவனிடம் பாசுபதக்கணை வாங்கி வந்து சண்டை செய்யாவிட்டால் உங்கள் பகைவராகிய நூற்றுவரைக் குருக்கேத்திரப் போர்க்களத்தில் நீங்கள் வெல்ல மாட்டீர்கள்’ என்று உறுதி கூறுகிருர்,
அந்தத் திருவாக்கின்படி அவரை வணங்கி, அவரிடம் முறைப்படி ஒரு திருமந்திரத்தைப் பெற்றுச் சுப முகூர்த்தத்தில் அருச்சுனன் தவஞ் செய்வதற்காக இராம பிரானைப் போலத் தவவேடம் தாங்கி இமய மலைச் சாரலை அடைகிருன். அங்கு வருணமாமலை இருக்கின் றது. அதன் தென்பாகத்தைத் தவஞ் செய்வதற்கு ஏற்ற தலமாகத் தெரிகிருன் தெரிந்த அவன் வேதாகம முறைப்படி திருவைந்தெ ழுத்தைச் சொல்லி உடம்பெங்கும் பூசினன். ஒற்றைக் காலில் நெருப் பிடை நின்று மற்றைக் காலை நின்ற காலில் ஊன்றியபடி இரு கரங் களையும் சிரசின் மேல் உயர்ததி ஆகாயத்தை நோக்கி விரித்துக் கண் னிமையாது கண்ணிர் தாரை தாரையாகச் சொரிய மனமடக்கி நின்று உண்ணுதும், உறங்காதும் நெடுந்தவம் புரிகிறன். அருச்சுனன் அருந்தவம் புரியும் இந்தப் பெருந்தவ நிலையினை வில்லிபுத்தூராழ்வார் எடுத்துக் காட்டுகின்ற கவிச் சித்திரத்துடன் இணைந்து நாமெலாம்

Page 21
278 ஆத்மஜோதி
இனி அருச்சுனன் தவநிலையினை மனக் கண்ணுல் நேரிற் கண்டு இன் புறுவோம். -
ஒருதாளின் மிசைநின்று நின்ற தாளின் -
உருவின்மேல் ஒருதாளே ஊன்றி ஒன்றுங் கருதாமல் மனமடக்கி விசும்பி னுேடுங்
கதிரவனைக் கவர்வான்போல் கரங்கள் நீட்டி இருதாரை நெடுந்தடங் கண்ணிமை யாதோர்
ஆயிரங் கதிருந்த மரைப்போ தென்னநோக்கி நிருதாதி பரின்மனு வாய்த்தவஞ் செய்வாரில்
நிகரிவனுக் கார்கொலென நிலைபெற் றனே"
இதனை அவனுடைய ஆருயிர்த் தந்தையாகும் இந்திரன் அறிந்து பெரு மகிழ்வுறுகிருன் தனயனின் தவவலியைச் சோதித்தறிய எண் ணுகிருன் எண்ணிய அவன் தனது நடன மாதரர்கிய ஊர்வசி அரம்பை, மேனகை திலோத்தமை என்ற ஆடல் பாடல்களிற் சிறந்த அழகிகளைப் பூவுலகுக் கனுப்பி அருச்சுனனைக் காதல் வலையுள் அகப் படுத்த முயலுகிரு:ன். அவர்கள் புரிந்த இங்கிதங்களுக்கு அளவே இல்லை. அவை எவையும் விசயன் தவ வலியைக் குறைக்கவில்லே, அவர்கள் தேவேந்திரன் திருமுன்னிலையை அடைந்து தங்களுக்கேற் பட்ட தோல்வியையும், விசயற்கேற்பட்ட வெற்றியையும் விசயனது அசைக்க முடியாத தவவலியையும் எடுத்துக் கூறினர். தேவேந்திரன் இவற்றைக் கேட்டு அற்புதம் உற்ரு:ன். தன யன் தவம் புரியும் புண் னிய பூமியைத் தானே வந்து அடைந்து மீட்டுந் தனது மகனுடைய தவவலியை நேரிற் பரிசோதித்து அறிய எண்ணினன். எண்ணிய அவன் ஒரு விருத்த வேதிய வடிவங் கொண்டான். இமய மலைச் சாரலில் உள்ள வருணமா மலையின் தென்பக்கத்தை அடைந்து உண்
னது உடல் மெலிந்து அனலிடை ஒற்றைக் காலில் மன உறுதியுடன் நின்று அருந்தவம் புரிகின்ற தனையனைக் கண்ணுரக் கண்டு பேரானந் தம் அடைந்தான். அடைந்த அவன் விசயனை அணுகி
விருத்த வேதியன் :- இளைஞனே, நீ எதனை விரும்பி இத்தகைய அருந் தவம் புரிகிருய்
விசயன்; அருமறை அறிந்த அந்தணுள, அழகிய திருமுகத்தினையு டைய பார்வதி தேவியை இடப்பாகத்து வைத்தருளிய பரமசிவனை நேரிற் கண்டு வணங்கிப் பாசுபதக் கணை பெற இத் தவம் புரிகி றேன்.
விருத்த வேதியன்: பிரம, விஷ்ணுக்களாலும், வேதங்களாலும், கண் டறிய முடியாத பரம் யொருளாகிய பரமசிவன் பார்பதியாருடன் உன் முன்பு வருவாரா? உனது இந்தச் செயல் வெறுங் கேலிக் கூத் தாக அல்லவோ இருக்கிறது.
مع)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆத்மஜோதி 279
(விருத்த வடிவுடன் சென்ற தேவராசன் இங்ஙனம் கூறி அருச்
சுனன் பக்கத்தே நின்றபடி குடல் குலுங்க நகைக்கிருன், அருச்சுனனு 2 க்கு இவனது எள்ளல் நகையால் கோபம் உண்டாகிறது)
விசயன் - ஐயரே, நீர் ஏன் கண்ட விதமாகச் சிரிக்கிறீர்?
விருத்த வேதியன் ;- தம் பீ. கோபிக்காதே, நீ புரிகின்ற மாதவத் தால் வீண்பாடுங் கண் விழிப்புமே தவிர வேறு நீ காணப்போகிற பயன் ஒன்றுமே இல்லை. இதனை எண்ன எண்ண எனக்குச் சிரிப்புக் சிரிப்பாக வருகிறது.
(நெருப்பினுள் ஒற்றைக் காலில் நின்றபடியே விசயன் கண்ணெரி தவழி விருத்த வேதியனை நோக்கியபடி)
விசயன் - ஐயரே, எனது உயிர் இந்த உடம்பை விட்டுப் பிரியுமள வும் பார்பதி பரமேசுவரனைக் காணவேண்டும் என்ற கருத்தினையும் தவத்தினையும் ஒரு கணப்பொழுதும் நான் விடமாட்டேன். இதுவே எனது உறுதியான பிடிவாதம் என்பதை உணர்ந்து கொள்ளும்.
இதனைக் கேட்ட விருத்த வேதியன் ஒரு கணப்பொழுதில் தான் கொண்ட கிழ உருவத்தை மாற்றித் தனது சொந்த ரூபத்தை எடுக்
கிருன், தனது அன்பு மகனின் தவத் திரு இருவினை ஆயிரங் கண்க ளாலும் அள்ளி அள்ளிப் பருவி அற்புதம் அடைகி முன், பெருமிதங் கொள்ளுகிருன் பேரானந்தம் எய்துகிருன் "அன்பு மகனே செயற் கருஞ் செயல் புரிகிருய். உனது குறிக்கோள் இறைவன் அருளால் இனிது நிறைவேறுக’ என வாயார வாழ்த்தி மண்ணுலகை விட்டு விண்ணுல கெய்துகிருன். リ
இஃது இங்ஙனம் ஆக மலேமகளது சே டிமார் அருச்சுனன் புரியும்
அருந் தவத்தை எடுத்து விளக்குகின்றனர். இதனைக் கேள்வியுற்ற பார்பதி தேவியார் திருமணங்கனிந்து பரமசிவனது திருவடிகளை வணங்கி
பார்பதி:- சுவாமி, நமது மலையடிவாரத்து ஒரு நரன் அனலிடை ஒற்றைக் காலில் நின்று உண்ணுதும், உறங்காதும் நம்மைக் குறித்து
அருந்தவம் புரிகிரும்ை, ஐயோ! பாவம், ! இதனைப் பற்றி நீங்கள் ஏதேனும் அறிவிர்களோ?
பரமசிவன்:- பவளவாய்க் கிளிமொழியே, ஏற்றதொரு தருணத்தில்
நல்லதொரு விளுவினை வினவினய், பாண்டவரை வஞ்சனைச் சூதினல்
வென்று காட்டிடை அனுப்பிய துரியோதனன் ஏவுதலினலே மூகநாம. தானவன் என்ற கொடிய அசுரன் பன்றி உருத்தாங்கி அருந்தவம்
புரிகின்ற நமது பக்தனுகும் விசயனைக் கொலை புரிவதற்கு வந்திருக்கி றன். அவன் அருச்சுனனைக் கொலை செய்வதற்கு முன்பு நாம் அவ்வி

Page 22
280 ஆத்மஜோதி
டம் செல்ல வேண்டும். மூகநாமதானவனும் பன்றியைக் கொல்ல வேண்டும். விசயன் விரும்பும் வரத்தை நல்க வேண்டும்.
இங்ங்னங் கூறிய பரமசிவன் பக்கத்தே நின்ற நந்தியந் தேவ ரைப் பார்த்து 'நந்தியே, நாம் இன்று வருணமாமலையின் தென்பக் கம் போய்ப் பன்றி வேட்டையாட வேண்டும். நமது பக்தனுகிய அருச்சுனனைக் கொலைபுரிய வரும் மூகநாமதானவன் எடுத்த வஞ்சப் பன்றி உருவினை வதைக்க வேண்டும். விரைவில் நீயும் சிவகணங்க ளும் வேட்டுவ உருக் கொள்ளுங்கள்" எனத் திருவாய் மலர்ந்தருளி ஞர். தானும் பார்பதியும் வேட்டுவத் தலைவனுந் தலைவியுமாகத் திரு வுரு எடுத்தனர். வேதங்களை வேட்டை நாய்களாக்கினர். வேட்டு வத் தலைவனும், குறக்கொடி மணுளனைக் குழந்தையாகத் தூக்கிய கொடிச்சி அம்மையாரும், வேட்டுவ உருத் தாங்கிய சிவகணங்களும் நந்தியங்கே வரும் தம்மைச் சூழ்ந்து வரக் காடு கலைத்துப் பன்றி அடி பாாதது வருகின்றனர்.
தொடரும்.
தெய் வீக வ ாழ்க்கைச் சங்க
வெள்ளி விழா மலர்
மூவர்ண அட்டையுடன் 45க்கு மேற்பட்ட ܐ݂ܬܐ
ஆத்மீகக் கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது. ஆத்மீகச் செல்வத்தை அனைவரும் அள்ளிப் பருக வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மலர் மிகக் குறைந்த விலையில் கொடுக்கப்படுகிறது.
மலரின் தனிப்பிரதி ஒன்று - 1.25 விலையாகும் 10 மலருக்குக் குறையாமல் எடுப்
(தபாற் செலவு தனி)
10 மலருக்குக் குறையப் பெற விரும்புவோர் மலர் ஒன் றுக்கு 1.50 வீதம் முற்பணம் அனுப்பி வைத்தால் தபாற் பாசலில் மலர் அனுப்பி வைக்கப்படும்.
தமஜோதி நிலேயம், நாவலப்பிட்டி - சிலோன்.
போருக்கு - 1.00 விலையாகும்
s
 
 
 
 

ரிஷிகேசம் தெய்வீக வாழ்க்கைச் சங்கம் வெள்ளிவிழா நாமலிகித ஜெபம்
1962 ஏப்பரல் மாதம் முடிய உள்ள கணக்குவிபரம் .
சென்ற மாதக் கணக்கு 27 99.2 189 இயக்கச்சி 2 7 8 4 0 பென்ருெஸ் 5 i ( 0. கந்தர்மடம் 3 0 8 9 6 பருத்தித்துறை 0.368 திமிலைத்தீவு 10800 மத்துகம தோட்டம் 21 700 கற்றன் 16800 சச்சிதானந்த தபோவனம் ፲ 2 3 80 திருக்கோணமலை 99 300 காங்கேசன்துறை 64 மூதூர் | 4, 6 003
மஸ்கெலியா gr: பதுளை وأ وهي قر ஊரெழு 6 நல்லூர் 78325 மத்துகமப்பட்டினம் 33.884 சென்ஜோட்ஜ் தோட்டம் 1 80በእሶ) இலப்பந்துறபட்டினம் 34 OGG பாந்திய தோட்டம் 803 கல்வயல் 8 5 7 () டெனிஸ்ரன் தோட்டம் 64 இலப்பந்துற தோட்டம் 3< ஒமங்கந்தை ...... 11$وے 4 ب யட்டதொள 7776* (3G IIT 5320 ་་་་་་ எலதுவ தோட்டம் .\(\\ 8300 கல்கடுவு 17 28 ஒறவலை 7 3200 سي. (يا நவற்ருடுவா 20 16 அம்மேத்தன்ன 2925 இராமநாதபுரம் 1988
+ன் W 3 19 12
இருசுவில் 622 4 :ாழ்ப்பாணம் 18960 ஸ்ளக்கலேத்தோட்டம் I 1459 வெள்ளவத்தை 2.359579 கொக்குவில் 294.94 டுப்பிட்டி g 3 g {}
ஐரீகந்து) 堑7雀7 இல் படு ちむ雪 琴
மொத்தம்
ܐܸ ܨ

Page 23
Registered at the G.P.O. as
ஆத்ம ஜோதி நில
லை i
பத்திரி யாத்திை ஐ திரை மணி மாலை அறவுரைக் கதைகள் ராதையின் காதல் இளங்கோவின் கனவு
ஆத்ம நாதம் (
சந்தா நேய ஒன் புடையீர்
ஆம் ஆண்டுச்சோ-14 زره . கிடைக்கின்றது. சந்த உட6 அனுப்பிவைத்துச் சே
t
ஆத்மஜோதி நிலைய!
இந்தியாவிலுள்ள அன் வீரசம்பு, 3 D இன்டஸ்ரீஸ்
ஐ விலா சத்திற்கு அனுப் ப்படுத்த வேண்டுகின் ே
6n I FT UI 6n || (g
* உஷ்ணவாய்வு, முழங்கால்
() மலக்கட்டு, மலபந்தம், அஜிர் பசியின்மை, வயிற்று வலி,
() புளியேப்பம், நெஞ்சுக் கருப்
ಹಾಡಿಗೆ நீக்கி ஜீரண சக்திக்குப்
() மிகச்சிறந்த
தபால செலவு உட்பட
(பத்திய
8ம்பு இன்டஸ்ரீஸ் - அரிசி
இலங்கையில் கி
ஆத்ம ஜோதி நிலை
 
 
 
 
 
 
 

a Newspaper M. L. 59/300
一25 R (நா. முத்தையா) 1-50 -75 (பரமஹம்ச தாசன்) -50
(சுவாமி சிவானந்தர்) -65
(சுவாமி சிவானந்தர்) 1-00 (G.5 UTF6ਹੰr) 2-25 சுத்தானந்த பாரதியார்) அச்சில்
பர்களுக்கு.
தி ஏழ7 வது சுடர் உங்கள் ா இன்றுவரை அனுப்பாதோர் ாதியை ஆதரிக்க வேண்டுகின்
D - நாவலப்பிட்டி
சிலோன்.)
།
பர்கள் வழக்கம்போல்
அரிசிப்பாளையம், சேலம்-2. பிவைத்து, அதை எமக்கும்
OLD.
வாய்வு, இடுப்பு வாய்வு ணம், கைகால் அசதி பிடிப்பு
பித்த மயக்கம், பித்த சூலை பு, முதலிய வாய்வு ரோகங் தேகாரோக்கியத்திற்கும்
சூரணம்.
டின் ஒன்று 48ருபா 25,
* l
டைக்குமிடம்: ܐܝܕܐ
பம்-நாவலப்பிட்டி
iah, Athmajothi Nilayam, N’ piti ya lapitiya. (Ceylon) 4-5-62.