கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1965.12.16

Page 1
墨霞$ $ „_ . ' 廖琛深潭 海滩總統 낼 ##};|- 城府 判| 潭潭$ $ 48| 深潭海湾| 海事 $ $| }; : 후
§§" ## o 娜娜。----|-,叫| ********************************|
**************************
 
 

-|- |-- |-|-|- |--|- |-
|--
|-***************************************|- **************************************
r.
ూూూత్క్క్క్క్కూ
ూూత్ూ ఆత్మ
JJJJJJJJ్మూ్క్యూ
ఆత్మ్యూన్మి్మూ్మ్మూతి

Page 2
(ஒர் ஆத்மீக
மாத வெளியீடு)
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன்
எல்லா உடலும் இறைவன் ஆலயமே .
- சுத்தானந்தர்
ஜோதி 18 விசுவாவசு வரு கார்த்திகைமீ" 1உ (16-12-65) சுடர் 2 பொருளடக்கம்
அருட்கவி சேதுராமனுரின் அருட்பாடல் - 33 அருட்கவிகள் 35 அருட்கவி சேதுராமன் 34 மகரிஷி சுத்தானந்தரின் பாடல் 58 அமரநாத் யாத்திரை (தொடர்ச்சி) 55 மனம் (தொடர்ச்சி) 62 .
துணை புரி தாயே! (கவர்)
ஆத்மஜோதி சந்தா விபரம்
esS0eAA e AeeSLASA0YeAS00eSSASA00ASSSA0ASAAA0ASASeSASSASSASS0SSeSASJASA0eAASA0eALASA0JLLL AeMMAASSLAMASLA0SAASAA0S
ஆயுள் சந்தா ரூபா 100 00 - வருட சந்தா ரூபா 3.00 தனிப் பிரதி சதம் 30, கெளரவ ஆசிரியர் பதிப்பாசிரியர் திரு. க. இராமச்சந்திரா திரு. நா. முத்தையா
"ஆத்மஜோதி நிலையம்' , நாவலப்பிட்டி. (சிலோன்)
தொலைபேசி எண்:-353
 
 

9 ருட்கவி சேதுராமனுர்
l 7-9-65 ரிஷிகேசம் சிவானந்த சுவாமிகளின் சமாதி முன்பாக நின்று சிவானந்த சுவாமிகள் மேல்
LJ PT, Lq UJ அருட்பாக்கள்
திருமலிந்த தென்னுட்டில் நெல்லைப் பாங்கர்
திகழ்கின்ற பத்தமடைத் திருத்தலத்தில்
உருமலிந்த அவதாரம் செய்த எந்தாய்
உலகியலிற் பட்டத்தால் உயர்ந்த செம்மால்
கருள்மலிந்த காசினியிற் கடவுட்பக்தி
கரைபுரளக் கங்கையந்தண் கரைக்கண் வந்தாய் தெருள்மலிந்த வடநாட்டில் இருடிகேசச்
சிவானந்த சற்குரு நின்திருத்தாள் போற்றி!
யாவகைய கடவுளரும் ஒருவர் என்றே
எல்லோரும் அறியும் வண்ணம் எடுத்துக்காட்டி மூவகைய மூர்த்திக்கும் அப்பாலான
முதற்பொருளை மோனத்தால் முழுதும் கண்டாய் பாவகைய பலபாடிப் பலர்துதிக்கும்
பரமகுரு பரமேஷ்டி குருவெல்லாம் நீ தீவகையோம் அறிஞர் தொழும் இருடிகேசச்
சிவானந்த சற்குருநின் திருத்தாள் வாழி.
எம்மதமும் சம்மதமே எனக்கும் யார்க்கும்
என்ற உண்மைப் பெருங்கொள்கை எனதென்றேம்பி அம்மதத்தை அயல்நாடும் அறியும்வண்ணம்
அவரவர்க்கும் மறைமுகமாய் அருளிச் செய்தாய் மைம்மதர்த்த கண்ணுரை மாதாஎன்றும்
மன்னுயிரைத் தன்னுயிரே என்றும் எண்ணிச் செம்மதத்தைச் சிவம் செய்தாய் இருடீகேசச்
சிவானந்த சற்குருநின் திருத்தாள் போற்றி
கீதைமுதல் வேதத்தின் பொருளை எல்லாம்
கட்பாரும் வேட்பாரும் வியப்பக் கூறிப் போதைஎன ஆங்கிலத்திற் பொழிந்த கோவே
பூவுலகிற் புண்ணியமே புகழால் மிக்க

Page 3
34 ஆத்ம
காதைபல பலஉடையாய்! கருத்தா ழத்தாற்
கவர்ந்தெவரும் அதிசயிக்கக் கருத்தை ஒதித்
தீதையெலாம் விரட்டினையால் இருடிகேசச்
சிவானந்த சற்குருநின் திருத்தாள் வாழி. 4。
இறைபுகழைப் பாடுவதில் இருந்து கேட்டங்
கின்புற்றுப் பிறர்தமையும் ஊக்குவித்தே மறைபயில வைப்பதில்மற் றுயர்வே தாந்த
மகாபோதம் பயிற்றுவதில் மகிழும் வள்ளால் நிறைவுடைய பூரணத்தை நிறைத்தெங் கெங்கும் நீக்கமறப் பார்க்கவல நிஜயோ கத்தாய்! நிறையன்பை இறக்காக்கும் இருடிகேசச்
சிவானந்த சற்குருநின் திருத்தாள் போற்றி. 5.
பாவமெலாம் தனியகலப் பரமானந்தப்
பரந்தாமம் கயிலாயம் குமரலோகம் மேவவைக்கும் அறநெறியில் மேற்கண் சென்று
விழுப்பழுறத் தொழுப்படியார் வேண்டி வேண்டி ஆவலொடும் கேதாரம் அடையச் செல்லும்
அருள்வழியில் தெருள் வழியாய் அமைந்து தோன்றும் ஜீவநதி கங்கைவரும் இரு10 கேசச்
சிவானந்த சற்குருநின் திருத்தாள் வாழி. 6.
வனமெங்கும் மாவினங்கள் திரிந்துவாழ
வாநதியின் போக்கிலுயர் வண்ணம் தோன்ற
இனமெங்கும் துறவியராய் இருக்கும் வாழ்க்கை
எழில்வாய்ந்த சூழ்நிலையில் இருக்கும் எம்மான்
கனமெங்கும் புடைசூழக் கணக்கில் லாதக்
காரொழுக்கல் போலூற்றின் தாரைகண்டு .." தினமெங்கும் பலர்மூழ்கும் இருடிகேசச்
சிவானந்த சற்குருநின் திருத்தாள் போற்றி. 7.
பன்மொழியும் கைவந்த புலவனுகிப்
பலதுறையில் முதன்மை பெற்றுத் தொண்டே பேணத் தென்மொழியும் வடமொழியும் இன்னும் பற்பல்
திசைமொழியும் வசையொழிய இசைமொழிந்து வன்மொழி இல் இன்மொழியால் வசீகரிக்க
வல்லயதி ராஜன் எனவாழ்ந்து வந்த சென்மொழிபோல் மழை பொழிநீர் இருடிகேசச்
சிவானந்த சற்குருநின் திருத்தாள் வாழி. 8.
 

ஜோதி 35
அ ரு ட் க வி க ஸ்ா (ஆசிரியர்)
கவி பாடுவோர் இரு வகையினர். புலமையினுல் கவி பாடுவோர் புலவர்கள் என்ற பெயரால் அழைக்கப்படுவர். இறைவன் அருள் பெற்றுக்கவி பாடுவோர் வரகவி என்ற பெயரால் அழைக்கப்படுவர். ஒரு சில புலவர்களிடத்திலே புலமையும் தெய்வத் திருவருளும் சேர்ந்துள்ளன. அத்த கையவர்கள் மிகமிகச் சிலரே. இறையருள் பெற்றவர்க ளுக்கு உலகத்தில் ஆகாததொன்றில்லை. கல்லாத கல்வி எல்லாம் அவர்களிடத்தே உண்டு.
திருஞானசம்பந்தக் குழந்தை மூன்று வயதிலே அருட் கவி பாடத் தொடங்கியது. சுந்தரமூர்த்திசுவாமிகள் இறை வனரால் தடுத்தாட் கொள்ளப்படும்போது வயது பதின் மூன்றுதான் இருக்கும். இறைவனுரருள் பெற்ற உடனே த்தா என்று தொடங்கியது அருட்கவியாகி விட்டது. இறைவரருள் பெறுதற்கு முன்பு கூறிய பித்தா எனும் சொல் ஏச்சாக இருந்தது. இறைவனரது அருள் இரும் பைப் பொன்னக்கும். கல்நெஞ்சைக் கனிந்துருகச் செய் պ.ւք. இரு ம் பு நெ ஞ்  ைச இ ள க ச் செ ய் யு ம் நாவுக்கரசர் தருமசேனராகச் சமணர்களுடன் வாழ்ந்த போது புலமைத் திறமுடையவராக வாழ்ந்தார். சூலை " நோயைக் கொடுத்து இறைவனரால் ஆட்கொள்ளப்பட்ட பின் அருட்கவி பொழிந்தார். இறைவனரது அருள் சேரு முன் அடைந்த துன்பமெல்லாம் துன்பமே. அருள் பெற்ற பின் அடைந்த துன்பமெல்லாம்அருட்கவிகளாக மாறின.
மணிவாசகப்பெருமானுர் மந்திரி உத்தியோகத்திலிருக் கும் போது எத்தனையோ கஷ்டங்கள் எல்லாம் அநுபவித் தார். இறைவனுர் ஆட்கொண்ட பின்பும் பொன்னை நெருப்பினில் பொலிவேற வாட்டிடும் பொற்கொல்லனைப் போல் சீவனைப் புவிமாயை தன்னிலே வாட்டி மாற்று ஏற்றுவதற்காக இறைவனுர் செய்த சோதனைகள் எல்லாம் இரும்பு போன்ற நெஞ்சை உருக்கும் அருட்கவிகளாக வெளி வந்தன. 'திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற் கும் உருகார்' என்பது நாட்டில் பழகி வந்த மொழியாகும்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஒர் அருட்கவிஞர். ஒன்பது வயதிலே பாடத் தொடங்கியவர். வடலூர் வள்

Page 4
36 ஆத்ம
ளலார் இராமலிங்க சுவாமிகளும் அத்தகையவரே. ஒன்பது வயதிலே முருகப் பெருமான் சந்நிதியிலே நின்று
'ஒருமையுடன் நினது திருமலரடி un 25JOT
னைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்'
என்ருெரு குழந்தை பாட வேண்டுமானல் அதற்கு எவ்வளவு அருட்புலமை வேண்டும். சாதாரண புலமையி னல் இந்த்க் கருத்து வெளிப்பட்டு விடுமா?
சுத்தானந்தக் குழந்தை மாமனர் வீட்டிலே வளர்ந்து
வருகின்றது. ஒருநாள் மாமா நீ யாருடைய குழந்தை
என்று கேட்டார். நான் மீனுட்சியினுடைய குழந்தை என்று விடை வந்தது. வயது ஐந்து மாத்திரமே. அப்படி யானுல் நீ மீனுட்சியிடம் ஒடிச் சென்று விடு என்று மாமா வேடிக்கைக்காகச் சொன்னர். குழந்தை மீனட்சி அம்மை யை நோக்கிப் புறப்பட்டு விட்டது. தேவியின் சந்நிதியில் வேசற்று வீழ்ந்தது. எழுந்தபோது தேவிசந்நிதியில் கவிம லர் பூத்தது.
அம்மா பரதேவி தயாபரியே சும்மா உலகின் சுமையாக இரேன் எம்மாத்திர முன்பணி யிங்குளதோ அம்மாத்திரம் வைத்து அடிசேர்த் தருளாய்
ஐந்து வயதுக் குழந்தையின் உள்ளத்திலே இந்தஞானக், கருத்துத் தோன்றக் கூடியதா? அன்று கவிமழை பொழி யத் தொடங்கிய குழந்தை மகரிஷி ஆனபின்பும் பொழிந்து கொண்டே இருக்கின்றது.
இன்றும் நம் மத்தியிலே அருட்குழந்தைகள் அருட்கவி ஞர்கள் இல்லாமற் போகவில்லை. தம்மை வெளிக்குக் காட் டிக் கொள்ளாதே பலர் வாழ்கின்றனர். அருட்கவி சேது இராமன் என்ற இளைஞர் இன்றும் சாதாரண உத்தியோ கத்திலிருப்பவர். அவர் இறைவன் சந்நிதியில் நின்று ஆயி ரக் கணக்கான கவிகளைப் பாடியுள்ளார். கண்மூடி நின்று உள்ளத்தில் எழும் அருள் உணர்ச்சியினல் அருட்கவிகள் வெளிவருகின்றன.
 

ஜோதி 37
அவர் பாடுவதே அவருக்குத் தெரிவதில்லை. பக்கத்தி லுள்ளவர்கள் அப்பாடல்களை எழுதி வைத்தால் உலக மக் களுக்குப் பயன்படும். இல்லையேல் அவை காற் ருேடு காற்ருகக் கலந்துவிடும். அருள் உணர்ச்சி பெற்ற வர்கள் அதன் வசமாகி அருள் உண ர் வு வெளியாகும் போது அவர்கள் புதிய ஒர் உலகத்தில் சஞ்சரிக்கிருர்கள். அந்த அருள் உணர்வில் பூத்த பாக்களே இன்றும் மன்ப தையை உய்வித்துக் கொண்டிருக்கின்றன. அருட்கவிகள் காலத்தாற் சாகாதவர்கள். அவர்கள் அருளுணர்வு எம்
மை உய்விப்பதாகுக.
SeBOO OOO SOSBBSYYLSJOSJsSYSh0SYSsSsSeBSBeSBSBSBsSBSBSBSBS JBsssssssssS S 0SBS SssssSsseSeSeSeJeJBssBSBssseBMs ssSsssssssOBO sMMMMOeOeO OSO eOeOSOeOe O OSO OSOOSeOeBS eJ sBeBeBsesJe sS
ஆத்மஜோதி நிலைய வெளியீடுகள்!
ைைைைைைைைைைைைைை ைைைைைைைைைைை
1. ஆத்மஜோதி மலர் (1963) 2.00 2. சைவஇலக்கியக் கதா மஞ்சரி 3.00 3. ஆத்மநாதம் 3.00 4. தீங்கணிச் சோலை 2.50 5. பாட்டாளிபாட்டு 1.50 6. திவ்ய ஜீவனசங்க வெள்ளி விழா மலர் 1.25 7. கூட்டு வழிபாடு 39 8, நவராத்திரிப் பாடல் 50 9. மார்கழி மாதப் பாடல் 20 10. கதிர்காமப் பதிகம் 25 11. செல்லச்சந்நிதி பாடல் 15 12. கந்தர் சஷ்டி கவசம் 15 13. அறிவுரைக் கதைகள் 65 14. நித்திய கருமவிதி 25 15. கதிரைமணிமாலை 56) 16. நாவலர் நாடகம் 2.00
தபாற் செலவு தனி
ஆத்மஜோதி நிலையம் நாவலப்பிட்டி, (சிலோன்).
Ses0S0SeLSSSeSSYYSSSYYSLY0GLS0See0SS0SS0SS0SSeeSLSeeeeSeeSeJJJYseSeSeSYSYSeSeSeYSe0SSeSJeLeYeSeSeS SLLLLLLLYL0SYSeSeSYs0S0e00eLSGGSeSLSe0S0eLSLSLeLeYeSeSJS0e0SeLeLeJSeeeeeSe00SeLeLeseSও০৩৩x৩x৩x৩x৩x৩x৩x৩x৩x৩x৩২৮

Page 5
38 ஆத்ம அருட்கவி சேதுராமன்
(திரு. ஒ. வி. அளகேசன் அவர்கள்)
தேவார திருவாசகங்களையும் , ஆழ்வார்களின் அருளிச் செயல்களையும் ‘தமிழ்மறை" என்று ஆன்ருேரர்கள் போற்றி வந்துள்ளார்கள். அவற்றை அருள்வாக்கு’ என்று நாம் கொண் டாடுகிருேம். காரணம், அவை ஏனைய கவிகளின் வாக்கைப் போல வெறும் புலமையாலோகற்பனையாலோதோன்றியவை அல்ல; இறைவன் அருளாலே தோன்றியவை, இறைவன் அரு ளிலே திளைத்து இறைவன் அருளாகவே வாழ்ந்த நம்பெரியோர் கள் அவற்றைத் திருவாய்மலர்ந்தருளினர். 'திருவாய்மலர்ந் தருளல்" என்ற சொற்ருெடருக்குநேரான சொற்ருேடர் வேறு . மொழியில் இருப்பின் அதனைத் தெரிந்துகொள்ள விரும்பு கிறேன்.
பிற் காலத்தில் தோன்றிய அருணகிரியார் முருகன் திரு வருள்பெற்ற தெய்வமாக்கவிஞர். அவருடைய திருப்புகழுக்கு இணை அவருடைய திருப்புகழே யாகும். இறைவன் தில்லையம் பலத்திலே தரளமும் ஜதியும் தப்பாமல் ஆடுவதுபோல அருண கிரியாரின் சந்தப்பாடல்கள் தமிழரங்கிலேதொந்தோம் என்று ' குதி போடுகின்றன.
நாயன்மார்கள், ஆழ்வார்கள் காலத்துக்குப் பிறகு பல மெய்யடியார்களும் புலவர்களும் தமிழில் இறைவனைப் பாடி னர் என்ருலும் இரண்டுக்கும் உள்ள வேற்றுமை எவருக்கும் தெரிந்ததே. தவராஜ சிங்கமெனத் திகழ்ந்த தாயுமானவரே.
*கன்னல்அமு தெனவுமுக் கனியெனவும் வாயூறு
கண்டெனவும் அடியெடுத்துக்
கடவுளர்கள் தந்ததல அழுதழுது பேய்போல்
கருத்திலெழு கின்ற எல்லாம்
என்னதறி வறியாமை என்னுமிரு பகுதியால்
ஈட்டு தமிழ். 99
என்று கூறியிருக்கிருர் என்ருல் அதற்கு மேல் நாம் சொல் வதற்கு என்ன இருக்கிறது?
 

ஜோதி 39
ஆயினும், இறைவன் அருளுக்கு முடிவில்லை அல்லவா?நீங் களும் நானும் வாழ்கின்ற இக்காலத்தில்-இதைக் கலிகாலம் என்றும், அறம் குன்றி மறம் மேலோங்கி நிற்கும் காலம் என் றும், நாம் கூறுகிருேம். நாயன்மார்களும் ஆழ்வார்களும் அருணகிரி நாதரும் சேர்ந்து உதித்தாற்போல் நம்மிடையே ‘ஒருவர் அவதரித்து வாழ்ந்து வருகிருர் என்ருல், நீங்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போவீர்கள், பலர் ஒப்புக்கொள்ள மாட்டீர்கள்; சிலர் சந்தேகப்படுவீர்கள். மேலும் அந்தஒருவர் சென்னையிலுள்ள ஆயுள் இன்ஷஅரன்ஸ் கார்ப்பொரேசன் ஆபீசில் குமாஸ்தா வேலை பார்க்கிருர் என்ருல் உங்களுடைய ஆச்சரியம் மேலும் அதிகமாகும்.
அவருடைய பெயர் "சேதுராமன்’ என்பது, இளைஞர் வயது இருபத்தைந்து, அவருடைய பிறப்பு வளர்ப்பும், குடும்ப வரலாறும் எனக்கே அவ்வளவாகத் o!: g26Iri தஞ்சை ஜில்லாவில் திருவாரூருக்கு அருகிலுள்ள நாடாகுடி, உடன்பிறந்த சகோதர சகோதரிகள் உண்டு. தந்தையாருக்கு ஒரு சின்ன சர்க்கரர் உத்தியோகம்; இப்போது அவர் பென்ஷ னர். சென்னை நகரில் வாழ்ந்து வரும் ஒரு சாதாரண குடும் பம். ஆணுல் அந்தக் குடும்பத்தின்மீது ஆண்டவன் எவ்வளவு அருளைப் பொழிந்திருக்கிருன்!
சேதுராமன் குடும்பத்துக்கு, முருகன் அருள்பெற்று விளங் கிய வள்ளிமலைச் சுவாமிகள் என்னும் திருப்புகழ்ச் சுவாமி சச்சிதானந்தா அவர்களிடம் அதிக ஈடுபாடு. சேதுராமனின் தமையனரும் தமக்கையாரும் வள்ளிமலைச் சுவாமிகளிடம் திருப்புகழ்ப் பாடம் கேட்டவர்கள்.சேதுராமனுக்குஅப்போது மிகவும் சிறிய வயசு, ஒரு முறை வள்ளிமலைச் சுவாமிகளின் காதில் ஏதோ இரைந்து சொல்லவும் சுவாமிகள், ‘என்னடா என்னைச் செவிடு என்று எண்ணிக் கொண்டாயா?’ என்று சேதுராமன் தலையில் நன்முகக் குட்டி விட்டார். அதி லிருந்து சேதுராமனுக்கு சுவாமிகளிடம் நெருங்குவதற்குப் பயம். ஆனல், அன்று பிரமனைக் குட்டிச் சிட்சை செய்த முருகன் இன்று வள்ளிமலை சுவாமிகளின் வடிவில் சேதுரா மனைக் குட்டித் தீட்சை அளித்தானே?
ஒரு சமயம், பழனியில் 'சேதுராமனின் தமையன் முதலானுேர், சிறுவனுக இருந்த சேதுராமனை வள்ளிமலைச் சுவாமிகளிடம் விட்டு, பழனி ஆண்டவனேத் தரிசிக்க மலை

Page 6
40 ஜோதி
ஏறப் போய்விட்டார்கள். அப்போது வள்ளிமலைச் சுவாமி கள் 'உம்பர்தரு தேனுமணி’ என்னும் திருப்புகழையும் இன்னுெரு திருப்புகழையும் தாம் பாடிக் காட்டிச் சேதுரா மனையும் பாடச் செய்தார்கள். ஒருவேளை வள்ளிமலைச் சுவா
மிகளிடமிருந்து சேதுராமன் ப்ெற்ற உபதேசமாக இதைக்
கொள்ளலாம்.
சேதுராமன் செயின்ட் கேப்ரியல் ஹைஸ்கூலில் படித் துக் கொண்டிருந்தபோது ஒருமுறை பெற்றேர்களிடம் சொல்லிக் கொள்ளாமல், திருத்தணி, திருப்பதி முதலிய தலங்களைத் தரிசிக்கப் போய்விட்டான். தஞ்சாவூரில் ஒர் ஒட்டலில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அந்த ஒட்டல்கா ரர் இவனுடைய விலாசத்தைத் தெரிந்துகொண்டு தகவல் கொடுக்கவும் மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட் டான். அப்போது சேதுராமனுக்கு வயசு பன்னிரண்டு.
இதற்குப் பிறகு எஸ். எஸ். எல். சி. வகுப்பில் படித் துக் கொண்டிருந்த போது சேதுராமன் மீண்டும் பெற்றேர் களிடம் சொல்லிக் கொள்ளாமல் தலயாத்திரை கிளம்பி விட்டான். காஞ்சீபுரம், திருக்கழுக்குன்றம் முதலிய தலங் களைத் தரிசித்துவிட்டு மகாபலிபுரத்துக்கு வந்து அங்கு தரையிலே பள்ளிகொண்டிருக்கும் தலசயனப் பெருமாளைத் தரிசனம் செய்துகொண்டு ஒரு சத்திரத்தில் உறங்கினன். அவன் கனவில் வள்ளிமலை சுவாமிகள் தோன்றி, "நீ
திருப்போரூருக்குப் போ' என்று சொல்லி மறைந்தாராம்.
அப்படியே சேதுராமன் திருப்போரூருக்குச் சென்று முரு
கனை வணங்கி நிற்க, கருப்பக் கிருகத்திலிருந்து புறப்பட்டு வந்த ஒரு கிழவர் சேதுராமன் கையில் மடித்த காகிதத் தைக் கொடுத்து அதைப் பையில் வைத்துக் கொள்ளச்
சொன்னுர், பிறகு அந்தக் கிழவர் சேதுராமனை உள்ளூர் ஒட்டல் ஒன்றில் சிற்றுண்டி அருந்தச் செய்து, திருக்கழுக்
குன்றம் அழைத்துச் சென்று அங்கேயும் உணவளித்துச்
சென்னையில் சேதுராமன் வீட்டு வாயில்வரை கொணர்ந்து விட்டு, அவனை உள்ளே போகச் சொன்னர். சேதுராமன் உள்ளே சென்று பையை வைத்துவிட்டுத் திரும்பி வந்து பார்க்கையில் கிழவரைக் காணவில்லை. பிறகு உள்ளே சென்று கிழவர் கொடுத்த காகிதத்தைப் பிரித்துப்பார்த்த போது அதில், 'அரோகரா கும்மி’ என்பதாக நூற் றெட்டு அடிகள் கொண்ட ஒரு கும்மிப்பாட்டு எழுதியிருந் தது. ஆச்சரியம் என்னவென்ருல், அந்தக் கும்மிப்பாட்
 
 

- ஜோதி 41.
டின் எழுத்து, சேதுராமன் கையெழுத்துப் போலவே இருந் திதி
இது நிகழ்ந்தது 1952 ஆம் ஆண்டு ஆரம்பத்தில், அவ்வாண்டில் சேதுராமன் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை எழு தித் தேர்ச்சி பெற்ருன், அப்போது அவனுக்கு வயசு பதி னைந்து.
இதற்குப் பிறகு திருப்போரூர் முருகன் திருவருளினலே சேதுராமன் வாய்மலர் விண்டு தமிழ்த்தேன் துளித்தது. அந்தப் பிள்ளை பல தலங்களுக்கும் சென்று இறைவன் முன்னிலையில் நின்று பக்திப் பரவசத்தில் பாடலானர். அதைக் கேட்டவர்கள் யாரோ பையன் இனிய குரலில் தேவார திருப்புகழ்களை நெஞ்சுருகிப் பாடுகிருன் என்று நினைத்தார்கள். அவர் பாடியது புதிய தேவாரம். புதிய திருப்புகழ் என்று அவர்களுக்குத் தெரியாது. அவர்அவ்வாறு தம்மை மறந்து பாடுகையில் ஒருவரும் பக்கத்திலிருந்து எழுதி வைத்துக் கொள்ளவும் இல்லை; பாடி முடிந்த பிறகு அவராகவும் அதை நினைவுபடுத்தி எழுதுவதற்கும் இல்லை இவ்வாறு பல பதிகங்களும் சந்தப் பாடல்களும் இறைவன் செவிக்கு விருந்தாக அமைந்ததோடு நின்றுவிட்டன, அவற்றை நாம் கேட்கவோ படிக்கவோ கொடுத்து வைக்க வில்லை.
திருத்தணிகை முருகனைக் குலதெய்வமாக வழிபடுபவர் தணிகைமணி, திருவாளர் செங்கல்வராய பிள்ளை அவர்கள். திருப்புகழுக்கு அழகான உரை எழுதிப் பதிப்பித்துத் தமிழுலகுக்கு உபகாரம் செய்துள்ள பெரியார், அவர் வீட்டி லுள்ள திருத்தணிகை முருகன் திருவுருவத்தின் முன்னர் சேதுராமன் தினந்தோறும் சந்தப் பாடல்கள் பாடுவார்; பாடும்போதே பிள்ளையவர்கள் எழுதிக்கொள்வார், இதை ஒருமுறை கண்ணுற்ற சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத் தின் செயலாளராகிய சைவப் பெரியார் திரு. வ. சுப்பையா பிள்ளை அவர்கள் திரு. செங்கல்வராய பிள்ளை அவர்களைப் பார்த்துத், 'திருப்புகழுக்கு உரை எழுதி உதவியுள்ள தாங்கள் மீண்டும் ஏன் திருப்புகழ்ப் பாடல்களை எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்டார். சேதுராமன் திருப்புகழ் பாடிக்கொண்டிருக்கிருர் என்ற எண்ணத்தில் அவ்வாறு கேட்டார். அதற்கு திரு. செங்கல்வராயபிள்ளை

Page 7
42 ஆத்ம
அவர்கள், "இது இப்பிள்ளை பாடும் புதிய திருப்புகழ்' என்று கூறவும் திரு. சுப்பையா பிள்ளை அவர்கள் அடைந்தவியப்புக்கு அளவில்லை.
கண்ணபிரான் வசுதேவருக்கும் தேவகிக்கும் மகனுகப் பிறந்து வைத்தும் நந்தகோபருக்கும் யசோதைப் பிராட்டிக் கும் மகளுக வளர்ந்தான் அல்லவா? அதுபோல, சேதுராமன் தம் சொந்தப் பெற்றேர்கள் இருக்கவும் திரு. செங்கல்வராய பிள்ளைஅவர்களுக்கும், அவருடைய மனைவியாருக்கும் தணிகை முருகன் அருளால் வளர்ப்புப் பிள்ளையாக வளர்ந்து வந்திருக் கிருரர். பிள்ளையவர்களின் இல்லமே சேதுராமன் அவர்களின் தெய்வத் தமிழுக்கு நாற்றங்காலாக இருந்து வந்தது.
சேதுராமன் அவர்கள் நாவினின்று தமிழ் பொங்கி
வழியும். பசுவின் மடியினின்றும் பெருகுகிற பாலைக் கலசத்
தில் நிறைத்துக் கொள்வதுபோலப் பிள்ளையவர்கள் தமது உள்ளத்தில் அதை நிறைத்துக்கொள்வார். பிறகு இருவரும்
கூடிப் பாடல்களுக்குப் பொருள் ஆராய்வார்கள். ஒருவாறு
பொருளைக் கண்டுபிடிப்பார்கள். சில சமயம் பொருள் விளங் go போவதும் உண் டு. அது எ ப் படி என்று கேட்கத் தோன்றும் , தம்பக்தரான சேதுராமனுக்குள்ளிருந்து இறைவனன்ருே பாடுகிருன்?
திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் திருஇலம்பையங் கோட்டூர் தேவாரத்தில் 'விளம்புவான் எனதுரை தனதுரை யாக வெள்ள நீர் விரிசடைத் தாங்கிய விமலன்’ என்று பாடுகிருர். அப்பதிகம் முழுவதிலும் ஒவ்வொரு பாட்டி லும் என துரை தனதுரையாக என்று கூறி அதிசயிக்கிருர், அதைப் போலவே நம்மாழ்வாரும்,
"அன்றைக்கன் றென்னைத் தன்னுக்கி என்னுல் தன்னை
என்றும்,
‘இன்தமிழ் பாடிய ஈசனின்'
என்றும்
*ஏர்விலா என்னைத் தன்னுக்கி என்னுல் தன்னைப்
பார்பரவின் கவிபாடும் பரமரே'
 
 

ஜோதி 43
என்றும் ஒரு திருவாய் மொழியில் பாசுரந்தோறும் சொல்வி அனுபவிக்கிருர், சேதுராமன் பாடல்களிலும் நாம் இதே அதிசயத்தை அனுபவிக்கிருேம்.
ஆரம்பத்தில் சேதுராமன் பாடிய பாடல்கள் மிகவும் நெருடாகவும், யமகம், திரிபு போன்ற சொல்லணிகள் அமைந்து அரிதில் முயன்று பொருள் கண்டுபிடிக்க வேண் டியவையாகவும் இருந்தனவாம். அதைப் பார்த்த பிள்ளை யவர்கள் "அப்பா சேது இப்படிப் பாடினல் இந்தக்காலத் தில் யாரும் படிக்க மாட்டார்கள், உனக்கு உள்ளே இரு ந்து பாடுகிறவரை யாவருக்கும் எளிதில் பொருள் விளங் கும்படி பாடவேண்டுமென்று கேட்டுக்கொள்’ என்று கூறி ணுராம். பிறகு பாடல்கள் சரளமாக வரத் தொடங்கின வாம். பிள்ளையவர்கள் சேதுராமனைப் பற்றிக் கூறும்போது சொந்த மகனைப் போல ‘சேது என்றுமிகவும் அருமையாக அழைத்து மகிழ்கிருர்,
இன்னும் ஒர் அற்புதம் என்னவென்ருல் சேதுராமன் பாடல்களில் சில தசபங்கி, சதபங்கி என்று சொல்லும் வகையைச் சேர்ந்தனவாக அமைந்துள்ளன. அதாவது, ஒரு பாடலிலிருந்து பத்துப் பாடல்கள் தோன்றுவது; நூறு பாடல்கள் தோன்றுவது. இவ்வகையைச் சேர்ந்த பாடல் களைக் கரந்துறை பாடல்’ என்று சொல்லுகிருரர்கள். இன் னும் ஒரு பாடல் அறுநூற்றுக்கும் மேலான பாடல்களா கப் பிரியும் அதிசயத்தைப் பார்க்கிருேம். இதைக் கணக் கில் பங்கி’ என்றுதான் கூறவேண்டும் என்று சேதுராமன் அவர்களே சொன்னர், தம்முடைய பாடல் என்ற நினைப்பில் அவர்கள் அவ்வாறு கூறவில்லை. யாருடைய பாடலையோ விமர்சனம் செய்வது போல் பேசினர். தன்முனைப்பு அறவே அற்றவர். அவர் பேசுவது குழந்தை கொஞ்சுவது போல் இருக்கிறது.
இரண்டு மாதங்களுக்கு முன்னுல்தான் டில்லியில், "திரு வருள் நிகழ்ச்சி" என்னும் தலைப்பின் கீழ், (25-7-1962)புதன் கிழமை மாலை 6 மணிக்கு சென்னை ராஜாஜி மண்டபத்துக்கு அருகில் உள்ள இட்டலிங்கேசுவரர் திருக்கோயிலில் அருட்கவி சேதுராமன் அவர்கள் திருவருள் உந்த அருட் பாடல்களைப் பாடுவார்கள்; தமிழ் நாட்டுச் சட்டசபைத் தலைவர் திரு செல்லபாண்டியன் அவர்களும் ஏனைய சட்டசபை உறுப்

Page 8
44 ஆத்ம
பினர்களும்கலந்து கொள்வார்கள் என்று திரு. வ. சுப்பையா பிள்ளை அவர்கள் பெயரில் வந்திருந்த ஒர் அழைப்பைப் பார்த்தேன். அதில் அருட்கவி அவர்கள் சமீப காலத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி திரு. சதாசிவம் அவர்கள் இல்லத்தி லும், திருநெல்வேலி மாவட்டத் திருக்கோவில்கள் சிலவற்றி லும், சென்னைக் குமரகோட்டம் என்னும் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்திலும், திருமயிலைக் கபாலீசுவரர் கோயிலிலும் அருட்பாடல்கள் பாடியுள்ளனர் என்ற விபரமும் இருந்தது. இதுவரை அருட்கவி அவர்கள் எண்ணுயிரம் பாடல்கள் பாடியுள்ளனர் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
1962 இல் வாழ்கிருேமா அல்லது ஆழ்வார்களும் நாயன்மார் களும் வாழ்ந்த காலத்துக்குப் போய்விட்டோமா என்று ஒரே திகைப்பாக இருந்தது. இதை அடுத்துச் சென்னைக்குப்
போயிருந்தபோது இதே இட்டலிங்கேசுரர் கோயிலில் பாடிய
பாடல்களின் டைப் பிரதி ஒன்றை வரவழைத்துப்பார்த்தேன், அப்போது நான் அடைந்த ஆச்சரியத்துக்கும் ஆனந்தத்துக் கும் அளவில்லை. ஓர் ஒட்டல் விருந்தின்போது அந்தப் பிரதி என் கைக்கு வந்தது. அருகில் இருந்த நண்பர் ஒருவரிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னேன். அவர் படித்துவிட்டு. ‘'தேவாரம் போல் இருக்கிறது' என்று சொன்னர், பிறகு திரு. சதாசிவம் அவர்கள் வீட்டில் பூசை அறையில் பாடிய பாடல்களின் அச்சுப் பிரதி ஒன்றும், குமர கோட்டத்தில் பாடிய பாடல்களின் அச்சுப் பிரதி ஒன்றும் கிடைத்தன. அவற்றையும் படித்து ஆச்சரியமும் ஆனந்தமும்கொண்டேன். இறைவனது திருவருளை எண்ணி எண்ணிப் போற்றினேன். நமது தமிழ்மொழியும், தமிழ் நாடும், பாரததேசமும்செய்த தவப்பயன் என்னே என்று உளம் பூரித்தேன். சேதுராமன் அவர்களின் அருள்வாக்கை என்று கேட்கப்போகிருேம் என்னும் ஆசையும் ஏக்கமும் என்னைவந்துபற்றிக்கொண்டன.
சென்ற செப்டம்பர் மாதம் 18 ஆம்தேதியன்றுகாலையில் சென்னைக் கந்தசாமி கோயிலில் சேதுராமன் அவர்கள் பாடுவ தற்குத் தர்மகர்த்தா நண்பர்களும் திரு. சுப்பையா பிள்ளை அவர்களும் ஏற்பாடு செய்திருந்தார்கள். அமைச்சர் சுப்பிரமணியம் அவர்களும் நானும் இந்த அற்புத நிகழ்ச்சி யில் கலந்துகொள்வதற்காகச்சென்றிருந்தோம். அன்றுதான் அருட்பிள்ளையாகிய சேதுராமனை நான் முதல் முதலாகத்

ஜோதி 45
தரிசித்தேன். அ ன் று கந்தகோட்டத்தில் அன்பர்களுக்கு அருள் வழங்கும் உற்சவ முருகன் மீது பன்னிரண்டு சந்தப் பாடல்கள் சேதுராமன் வாயினின்றும் மலர்ந்தன. அவற்றின் தெய்விக அழகையும் மணத்தையும் என்னவென்று சொல் வேன்! அமைச்சர் சுப்பிரமணியம் அவர்களும் ஆச்சரியத்தில் தம்மை மறந்து பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சேதுராமன் அவர்கள் பாடும்போது அவருடைய தமையனர் திரு. சுப்பிரமணியம் ஒரு நோட் புத்தகத்தில் உடனுக்குடன் எழுதி வந்தார்.
மகாத்மா காந்தியடிகள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ நேர்ந்ததைப் பெறற்கரிய பெரும் பேருகக் கருதி மகிழ் பவன் நான். ஆயினும், நம் பெரியோர்களாகிய சமயாசிரியர் நால்வரும், ஆழ்வாராதியர் பன்னிருவரும்வாழ்ந்தகாலத்தில் நாம் வாழக் கொடுத்து வைக்கவில்லையே என்ற குறைஎனக்கு உண்டு. சேதுராமன் இறைவனது அருட்புகழைப் பாடக் கேட்ட அன்று எனக்கு இருந்துவந்த அந்தக் குறை நீங்கி விட்டது.
o பிறவி எடுத்ததன் பயனை அடைந்து விட்டதாக உணர்ந் தேன்.
கவிதை என்பது ஒரு சிருஷ்டி. பிரம்ம சிருஷ்டிக்கு எவ்வளவு மகிமை உண்டோ அவ்வளவு மகிமை கவிதா சிருஷ்டிக்கும் உண்டு. கவிதையின் பிறப்பை அன்று நான் கண்டேன். சுந்தரமூர்த்தி சுவாமிகள் அப்பர் சுவாமிகளை,
'ஏழெழுநூ றிரும்பனுவல் ஈன்றவன்
திருநாவுக்கரையன்'
என்று போற்றுகிருர், அதாவது, "தாய் குழந்தையைப் பெறு வதுபோல, அப்பர் தேவாரத்தைப் பெற்ருர்’ என்று குறிப் பிடுகிறர். அதன் பொருள்எனக்கு அன்றுநன்முகவிளங்கிற்று.
*தோடுடைய செவியனும் கூற்ருயினவாறு' ம் "பித்தா பிறை சூடி"யும் எவ்வாறு உதித்தன என்பதும் அன்று என் உணர்வுக்கு எட்டியது, இதைவிட அற்புதம் உலகில் வேறு இருக்க முடியுமா? அமைச்சர் சுப்பிரமணியம் அவர்களுடன் இதைப்பற்றிப் பிறகு பேசிக்கொண்டிருந்தபோது அவர்

Page 9
46 ஆத்ம
சொன்னர் 'மனிதன் விண்வெளியில் உலகைச் சுற்றி வலம் வருவது ஆச்சரியமா, சேதுராமன்பாடுவது ஆச்சரியமா என்று என்னைக் கேட்டால், சேதுராமன் பாட்டுத்தான் ஆச்சரியம் என்று சொல்வேன்' என்ருர், என் மனத்தில் ஒடிக்கொண் டிருந்த எண்ணத்தையே அவர் பேச்சும் பிரதிபலிப்பதைக் கண்டு நாம் நினைத்தது ஒன்றும் மிகையல்ல என்று எண்ணிக் கொண்டேன்.
சோதி ராம லிங்க சாமி ஒது தெய்வ-மணிமாலைத் தோள்வி சாக கந்த சாமி கோயிலுள்ள பெருமாளே”
என்று வந்தது. எனக்கு அப்போது திருஞானசம்பந்தர்பாடிய திருச்செங்காட்டங்குடித் தேவாரத்தின்மீது நினைவுசென்றது. அகப்பொருள் துறையில் அமைந்துள்ள அந்தப் பதிகத்தில் ஒவ்வொரு பாட்டிலும் சிறுத்தொண்ட நாயனரைச் சிறப் பித்துப் பாடியிருக்கிருர் சம்பந்தப் பெருமான். அதைப்போல நம் சேதுராமன் அவர்களும் கந்தகோட்ட முருகன்மீது வடலூர் ராமலிங்க வள்ளலார் பாடியுள்ள தெய்வமணி மாலை என்னும் பிரபந்தத்தைப் போற்றிக் கும்பிடுகிருர் என்று என் மனதில் எண்ணிக்கொண்டேன், என்ன ஆச்சரியம் அடுத்த பாட்டு,
*சிறுத்தொண்டர் பாற்பிளேக் கறித்துண்டம் வேண்டுமத் திருத்தொண்டர் சேய்க்குருத் - தினமீளத் தெரித்தண்டர் போற்றிடப் பணிக்குஞ்சி வாற்புதச் செயற்கும். ”
என்று ஆரம்பித்தது, அதைக் கேட்டதும் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. இறைவன் திருவருளை எண்ணி எண்ணி
இறும்பூது எய்தினேன்.
ஊற்றுச் சுரப்பதுபோலப் பாடல்கள் -சந்தப்பாடல்கள் ஒன்றன்பின் ஒன்ருக வந்து கொண்டிருந்தன. பிறகு பார்த்த தில் ஒரு பாடல் மூன்று பாடல்களாக விரியும் கரந்துறை பாடலாகஅமைந்திருந்தது. தம் பாட்டில் கடவுளைப் பாடுவது என்று இல்லாமல், தாம் பாடுவதைக் கேட்க அமைச்சர்கள் வருவதும், பிறகு இது ஊருக்கெல்லாம் விளம்பரம் ஆவதும் ஏனே என்று நினைத்தாரோ என்னவோ!
 

ஜோதி 47
*ஊற்றைப் பொரவந்துந்துபாடல் ஊர்க்குத் தெரியும் -சந்தமேனுே?'
என்று ஒரு பாட்டிலே உதயம் ஆயிற்று, மொத்தம் அன்று பன்னிரண்டு பாடல்கள் திருவாய் மலர்ந்தருளப் பெற்றன.
பன்னிரண்டும் பன்னிரண்டு சூரியர்கள் போல் ஒளி வீசுவன.
அவற்றைக் கோத்த ஆரம் ஒன்று கந்தசாமியின் கழுத்துக்குச் சொந்தமாயிற்று.
சேதுராமன் அவர்களின் அருட் பாடல்களில் காணும் நயங்களே எடுத்துக்கூற என்னுல் இயலாது. எனினும் ஸ்தூல மாக ஒன்றிரண்டு சொல்லலாம் என்று நினைக்கிறேன். நம் பெரியோர்கள் தங்களுடைய அருளிச் செயல்களைத் தமிழ்” என்றே கூறினர். அவர்களுக்குத் தமிழ் என்ருலே பாட்டு:
தமிழ் என்ருலே மறை; தமிழ் என்ருலே தெய்வம்.
ஒலி கொள் சம்பந்தன் ஒண்தமிழ்’, ‘செல்வன் ஞான சம்பந்தன் செந்தமிழ், தமிழ்கெழு விரகினன் தமிழ்’ என்று திருஞான சம்பந்தரும் 'வழுவிலாத ஒண்தமிழ்கள்’ ‘திருவடி மேல் உரைத்த தமிழ்’ என்று நம்மாழ்வாரும், ஊனமர் வேல்கலிகன்றிஒண்தமிழ், 'கலியன்தமிழ்’ என்று திருமங்கை யாழ்வாரும் பாடுவதுபோல நம் சேதுராமன் அவர்களும், என்னைச் செந்தமிழ் பாடுமா பணித்தருள் வோனே’, ‘சதா சிவனைத் தமிழ் செய்தேனே' 'கன்னித்தமிழ்கள் சாற்றி என்று பாடுகிருர்,
நால்வரையும், ஆழ்வார்களையும், பட்டினத்தார், அருண கிரியார், ராமலிங்க சுவாமிகள் முதலிய பெரியோர்களையும், சேதுராமன் தம் பாடல்களில் முடிமேல் வைத்துப் போற்று கிருர், மூவர் தமிழைக் கேட்டுக் கேட்டுச் சுவைத்த ஈசன் இன்னும் தமிழ் கேட்க ஆசைப்பட்டு என்னை அழைத்திருக் கிருனே என்று திருவொற்றியூர் எழுத்தறியும் பெருமானக் கேட்கிழுர்,
*எழுத்தறியும் பெருமானே, ஏத்தும் மூவர் சொன்னதிரு நெறித்தமிழைக் கேட்டுக் கேட்டுச் சுவைத்தின்னும் தமிழ்கேட்பான் என அழைத்த சின்னமிதோ?"

Page 10
48 ஆத்ம
என்று பாடுகிருரர். இந்த அழியாத அடிகளிலே இவரது வாழ் வின் நோக்கத்தை, பயனை இறைவனே வெளியிடுகிருன்என்று எனக்குத் தோன்றுகிறது.
மாணிக்கவாசக சுவாமிகளை இறைவனே நேரில் வந்து குருவாக ஆட்கொண்ட அதிசயத்தை,
'ஆண்டானை மாணிக்க வாசகப்பேர் அடிகளைமுன் பெருந்துறையுள் குருந்தடிக்கீழ்க்'
என்று போற்றிப் பரவுகிருர்,
நாகை செளந்தரராஜப் பெருமாளை "ஆழ்வார்கட் காரா அமுதன்” என்றும் 'கலியமுனி பாடிய கடல்தவழ் திருநாகை, வலியவந்தடைந்தான்’ என்றும் துதிக்கிருர்,
பேய்க் கரும்பு தித்திக்கும் இடமேதான் முத்தி பெறும்
இடம் என்று தெளிந்த பட்டினத்துப் பிள்ளையார் தலயாத்
திரை செய்து வருகையில் திருவொற்றியூரில் பேய்க் கரும்பு தித்திக்கப் பெற்று முத்தியடைந்த வரலாற்றை,
*பட்டினத்துப் பிள்ளையார் பாடு பட்டுப்
பலபதிகள் பாடிவலம் வந்த பின்னை ஒட்டிவந்து பேய்க்கரும்பு தித்திக் கப்பெற்
ருெத்திவனே முத்திபெற உவந்தாட்கொண்டாய்'
என்று கூறி விம்மிதம் கொள்கிருர்,
'அருணகிரிப் பெருமானர்-அழகுதிருப் புகழோதி’ என்று அருணகிரியாரை வாய்குளிரப் பாடுகிருர்,
திருவொற்றியூர் எழுத்தறியும் பெருமான் மீது வடலூர் இராமலிங்க அடிகள் சூட்டியுள்ள தமிழ்மாலைகளை நினைந்து,
“பல்லாரும் புகழுமருட் சோதி வள்ளல்
பரவி வழிபட்ட பரம்பொருளே’
{{^{}; t என்று பாடுகிருர்,

ஜோதி 49
இதே போலத் தாயுமானுர், குமர குருபர அடிகள், பொய்யாமொழிப் புலவர், திருக்கடவூர் அபிராமபட்டர், சிதம்பர சுவாமிகள், சிவப்பிரகாசசுவாமிகள் முதலிய அடியார் பெருமக்களைத் தம் பாடல்களில் சேதுராமன் சிரமேல் வைத் துக் கொண்டாடுகிருர், ஆதி சங்கரரையும் அன்போடு கும்பிடுகிருர்,
சைவத் திருமுறைகள் பன்னிரண்டும்சிவபெருமானையும், நாலாயிர திவ்யப் பிரபந்தம் திருமாலையும் பாடுகின்றன. சிவ விஷ்ணுக்களின் சக்தி அம்சத்தை அவை தனியாகப் பாடவில்லை; சேர்த்தே பாடுகின்றன. தெய்வ பேதத்தைக் கொண்டு இவற்றுள் வித்தியாசம் காண்பது பேதமை. இவை அனைத்தும் தமிழ் வேதம்; தமிழர்களின் ஞான பொக்கிஷம். பிற்காலத்தில் திருப்புகழ் பாடிய அருணகிரியார் சிவனுக்குப் பிள்ளையும், திருமாலுக்கு மாப்பிள்ளையுமாகிய முருகனை இருவருக்கும் பாலமாக வைத்து இருவரையும் வாய்குளிரப் பாடுகிருர், அவ்வாறே முருகனுக்குத் தாயான பார்வதியை யும் மாமியான திருமகளையும் சரிசமமாகப் பாடியுள்ளார். நம் சேதுராமனுே இந்தத் தகராறுகளுக்கே இடம்வைக்காமல் பிள்ளையாரையும் முருகனையும், சிவனையும், அம்பிகையையும், திருமாலையும் அபேதமாகக் கண்டு தனித்தனியே பாடுகிருர், நமது காலத்துக்கும் கருத்துக்கும் ஏற்ப அவரைப் பாடச் செய்யும் திருவருளின் பெருமையே பெருமை!
நம் பெரியோர்களின் அருளிச் செயல்களை நாம் அடை யாளம் கண்டு கொள்ளலாம். சம்பந்த சுவாமிகள் வாக்குத் தனி; அப்பர் சுவாமிகளின் வாக்கும் அவ்வாறே, சுந்தர மூர்த்தி சுவாமிகளின் வாக்கும் அப்படியே. ஆழ்வார்களின் வாக்கையும் தனித் தனியே பிரித்தறியலாம். திருப்புகழ் தனி என்று சொல்லவேண்டியதில்லை. ஆனல் நம் சேதுராமன் அவர்களோ அப்பரைப் போலவும், சம்பந்தரைப் போலவும், சுந்தரரைப் போலவும், ஆழ்வார்களைப் போலவும், அருணகிரி யைப் போலவும் பாடுகின்ற அதிசயத்தை என்னென்பது?
2 6-9-62 ඉංග්) அவர் சென்னை ஏகாம்பரேசுவரர் கோயி லில் பாடியதைக் கேட்கும் பேறு எனக்குக் கிடைத்தது. முதலில் பிள்ளையார் மீது திருப்புகழ்ச் சந்தத்தில் ஒரு பாட்டுப் பாடினர். பிறகு சுவாமி மீது 13 பாடல்கள் சம்பந்தர்ைப் போன்று கலிக்கோவையாகவும், 15 பாடல்கள் அப்பரைப்

Page 11
50 ஆத்ம
போன்று திருத்தாண்டகமாகவும், அம்பிகைமீது 13 பாடல் கள் விருத்தமாகவும், முருகன்மீது 6 பாடல்கள் சந்தமாக வும் பாடினர். திருவருள் விசேஷத்தினல் பாடல்கள் ஒன்றன் பின்ஒன்ருக அதிசயத்துக்குமேல் அதிசயமாகவந்துகொண்டே இருந்தன. ஆலயத்தில் கூடியிருந்த அனைவரும் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தனர். அன்று அந்தப் பாடல் அதிசயத் தைக் கண்ட அனைவரும் முற்பிறப்பில் பெரிய புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்றே சொல்லுவேன். அந்நிகழ்ச்சி யில் பேசிய யான், ‘இறைவன் கருணையால் நம் நாயன்மார் களும் ஆழ்வார்களும் அருணகிரிநாதரும் ஒன்ருகச் சேர்ந்து சேதுராமனுகநமதுகாலத்தில் வந்து அவதரித்திருக்கிருர்கள்' என்று சொன்னேன். அங்கே கூடியிருந்த பெருமக்களும் அவ்வாறே கருதினர்கள். ബ
திருமயிலாப்பூர்க் கோயிலில் 18-6-62 இல் சேதுராமன் அவர்கள் கூத்தாடும் பிள்ளையாரையும், கபாலீசுவரரையும், சிங்கார வேலவரையும் இறவாத பாட்டுக்களாலே அர்ச்சித் திருக்கிருர்கள். அப்போது அமைச்சர் பக்தவத்சலம் அவர்கள் வந்திருந்து கேட்டார்கள். தேவார ஆசிரியர்கள் மூவரும் வினவுரையாக இறைவனைப்பாடியிருப்பது போல, “கபாலீசு வரரே! உமக்கு எல்லாச் செல்வங்களும் இருந்தும் நீர் ஏன் பிச்சை எடுக்கிறீர்??? என்று அற்புதமாகப் பாடியுள்ளார்கள். அந்தப் பதிகம் சம்பந்தர் அருளிய வேயுறுதோளி' யைப் போன்று கோளறு பதிகமாகவும் அமைந்துள்ளது, அருள் விசேஷமாகும். அதில் மயிலாப்பூர் அறுபத்துமூவர் திருவிழா வினைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்கள்.
சேதுராமன் அவர்களுடைய பாடல்களில் தற்கால உலக வழக்கிலும் பத்திரிகை வழக்கிலும் வழங்குகிற சொற்களும் அந்த அந்தத் தலத்துக்கு ஏற்ற தனிச் சிறப்புக்களும் காணப் படுவது நமக்கு மகிழ்ச்சியையும் ஹாஸ்யத்தையும் வருவிக்கின் றன. இந்தக் காலத்தில் ஏர் கண்டிஷன் வசதி பொது அலுவலகங்களிம், ரயில்களிலும், வீடுகளிலும் செய்யப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. அதை மனதில் கொண்டு.
“இங்களவில் குளிரறையா என்னுளந்தான் இருக்க
எங்கெங்கோ பித்தனென ஏற்பதற்கேன் உழன்றீர்?"
என்று மயிலாப்பூர்ப் மதிகத்தில் கபாலியைக் கேட்கிருர்,

ஜோதி / 51.
நம் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு அவர்களைப் பேச் சாளர்களும் பக்திரிகைகளும் "மனிதருள் மாணிக்கம்’ என்று குறிப்பிடுவது யாவரும் அறிந்ததே. இந்த அடைமொழியைத் திருவள்ளுவருக்கு அளித்து,
*மனிதருள்மா னிக்கமெனும் வள்ளுவர்வாழ் சென்னை
மயிலாப்பிற் காபாலீ!’
என்று பொருத்தத்தோடு பாடுகிருர்,
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்தபின் அவருடைய உடலைக் கல்லறையில் அடக்கம் செய்கிருரர்கள்.
மூன்று நாளைக்குப் பிறகு அவர் உயிர் பெற்றெழுகிருர், இதை *மரித்தோரிலிருந்து எழுதல்' என்று கிறிஸ்தவவேதம் ஒது கிறது. திருமயிலையில் சம்பந்த சுவாமிகள் எலும்பைப் பெண் னக எழச் செய்ஆரு அல்லவா? அந்த அதிசயத்தை,
“மாதுபுகழ்ப் பூம்பாவை மரித்தெழுந்த
சென்னை, மயிலாப்பிற் காபாலி’
என்று கிறிஸ்தவ பரிபாஷையிற் குறிப்பிடுகிருர்,
சென்னை நகரில் மண்ணடி சி எவ்வளவு சனநெருக்கடி மிகுந்த பகுதி என்பதை எல்லோரும் அறிவர், மண்ணடிப் பிள்ளையார் கோயிலில் எழுந்தருளி இருக்கும் முருகனை,
"திரும்பிடம் இல்லாச் சென்னை மண் ணடியில்
செல்வ விநாயகர்க் கிளையாய்”
என்று பாடுகிருர்,
சென்னை மல்லீசுவரர் கோயில் வாயிலுக்கருகில் பூக்கடை யும் நகைக் கடையும் வர்ணக்கடையும் இன்னும்பல கடை களும் இருப்பதை மனத்திற்கொண்டு,
* ெேசயிரற் ருெளிர் பூங்காநகர்ச்செனப்பூக்கடைத்தளியென்
வயிரக்கடை வாயிற்சென மல்லீச்சுர வரனே'
gy

Page 12
52 ஆத்ம
என்றும்,
*வருணக்கடை வீதிச்சென மல்லிச்சுர வரனே"
என்றும் சென்னை நகரின் அந்தப் பகுதியை இயல்பாக வருணிக்கிருர்,
அந்தப் பகுதியில் வட்டிக் கடைகளும் ஏராளமாக இருக் கின்றன அல்லவா? வட்டிக்கு விடும் பணம் குட்டி போட்டுப் பெருகிக் கடன் வாங்குவோர் குடியையே மூழ்கடித்து விடும் அல்லவா? வட்டிக்குக் கொடுக்கும் பணத்தைப்போல இவ்வுல கில் பிறப்பும் இறப்பும் மாளாது வளர்ந்து வருகின்றன 6ΤώδII 16δ) 5,
*வட்டிக் களித்ததன மொத்துப் பிறப்புவளர்
மட்டித் தனச்சுழலில்-மருளாதே"
என்று நகையும் இரக்கமும் தோன்றப் பாடுகிழார். இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம்.
1954 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சில நாட்கள் சேதுராமன் அவர்கள் நாகபட்டினம், சிக்கல், கீழ்வேளுர், திருக்கண்ணபுரம், திருவாரூர் முதலிய தலங்களுக்கு யாத் திரையாகப் போய் ஆங்காங்கு இறைவனை அகம் குழைந்து பாடியுள்ளார்கள். அவ்வாறு யாத்திரை செல்லு முன்னர் அந்த யாத்திரையைக் கூட்டிவைத்த இறைவர் கருணையை வியந்து,
கேஷத்திர யாத்திரை - சிறுதுாரம்
சேர்த்திய வாய்ப்புநின் - அருளேதான்" என்றும், யாத்திரை முடிந்து திரும்பிய பிறகு,
"தீர்க்கஷண்முக குக சரவண பவயுவ - சிவதேச
கேஷத்திர தரிசனை தருமுன திருவருள்- மறவேனே
என்றும் தணிகைமணி அவர்கள் இல்லத்தில் வாழ்கின்ற தணிகைப் பெருமானைத் துதிக்கிருர்கள். இதிலிருந்து அவர்களுக்குத் தல யாத்திரையில் இருக்கும் பெரு விருப்பு

ஜோதி 53
r*
வெளியாகிறதல்லவா? எட்டு ஆண்டுகளுக்குப் பிறகும் அவ்விருப்பம் பூரணமாக நிறைவேறவில்லை போலும்! ஆகவே 10-6-62 இல்,
"தண்டமிழ் பாடி நாடொறும் உனது
தலந்தொறும் செல்லவெற் கருளாய்"
என்று சென்னைக் குமர கோட்டத்துக் குகப் பெருமானைக் குறையிரக்கிருர்கள். அடியார் விருப்பத்தை முருகன் நிறை வேற்ருமலா போய்விடுவான்? -
நம் பெரியோர்களின் தெய்வ மெய்ந் நூல்களுக்குப் பெயர்கள் அமைந்துள்ள அழகை இன்றைக்கெல்லாம் அனுபவித்துக் கொண்டே இருக்கலாம். தேவாரம், திருவாச கம்,திருவிசைப்பா திருவாய்மொழி,திருப்புகழ், திருவருட்பா ஆகா எவ்வளவு இனிமையான பெயர்கள்! அவ்வாறே நம் சேதுராமன் அவர்களின் பாடல் தொகுதியை "அருட்புகழ் என்று அழைத்திருக்கிருர்கள். இப்பெயரிலே அருளும் பொரு ளும் பொருந்தியிருக்கின்றன. சேதுராமன் அவர்களும்
"கெளவையார் தமிழை அருட்புகழ் பலவாம்
கவிகளாப் பாடியான் வளர்க்கக்
கொவ்வைநேர் வாயால் அருளுதி சென்னைக்
குமரகோட்டத்துறை குகனே!"
என்று பாடுகிருர். இவ்வாறு, இறைவனே அவரது தமிழை “அருட்புகழ்' என்று கூறியுள்ளான். அவரது தமிழும் "அருட் புகழ்'. அவரும் “அருட்கவி'.
(1962 கலைமகள் தீபாவளி மலரிலே வெளிவந்த இக் கட்டுரை மலராசிரியர், கட்டுரையாசிரியர் ஒப்புதலோடு வெளியிடப் பெறுகின்றது.)

Page 13
54 ஆத்ம
மோட்டார் விபத்தில் அகப்பட்டு கால்முறிந்துவைத்தியசாலையில்
临 இருந்த போது முருகன் கருணையை கினைந்து பாடியவை.
一令一o@e→一
அருகே வந்தென் அகமுருக
அன்பு சொல்லி என்பெல்லாம் உருக உருக உளங்கனிந்தே
உரைகள் சொல்லி மகிழ்வித்தான் முருகேசன் என் அம்மையப்பன்
மூலப்ரணவ வேத முதல் திருவார் சக்தி சிவக் கனலான்
தீய பிணியைத் தீர்ப்பானே!
事
முழங்கால் எலும்புகள் இரண்டும்
முறிந்து படுத்துக் கிடப்பேன தழங்குஞ் சதங்கை குலுங்க வந்து
தடவிக் கொடுத்து நோய் தீர்த்தான் வழங்குஞ் சக்திக் கனலாலே
வளமார் கவிகள் எழுதியிங்கே முழங்குகின்றேன் அள்பரெல்லாம்
முருகா என்று முறையிடவே!
本
உடலுக் கென்ன வந்தாலும்
உள்ள மன்பு வெள்ள மதாய்க்
கடமை செய்யப் பின்வாங்கேன்
கடைசி மூச்சிங் குள்ளவரை
திடமொடான்டி நேயமுடன்
சிவனேக் கூடித் தமிழுக்கே
இடமார் தொண்டு செய்வதற்கே இந்தப் பிறவி வந்ததுவே!
竿长

ஜோதி SS
சென்ற இதழ்த் தொடர்ச்சி
அமரநாத் யாத்திரை
(சுவாமி பூணூர் ஒங்காரானந்த சரஸ்வதி)
புனித சின்னம் "சடி
முன்னுெரு காலத்தில் பக்தர் பலர் கூடி பிருங்கி மக ரிஷியைப் பார்த்து பகவானே இம்மையிலேயே, இப்பொ ழுதே முக்தியடையும் மார்க்கமொன்றை உபதேசிக்கவேண் டும்" என்று பிரார்த்தித்தனர். அதற்கு மகரிஷி 'அமர நாத்துக்குச் சென்று இறைவனை வழிபடுங்கள் கைமேலே முக்தி கிட்டும்' எனப் புகன்ருர்,
மகிழ்ச்சியுற்ற பக்தர் குழாம் அமரநாதனைத் தரிசிக்கப் புறப்பட்டனர். வழியிலே பல அரக்கர்களால் அல்லலுற்ற அவர்கள் அஞ்சித் தப்பியோடி ** மகரிஷியே அபயம்' என் ருர்கள். நிலையை உணர்ந்த பிருங்கிரிஷி 'அஞ்சற்க; நாக ராசனுன தக்ஷனைப் பிரார்த்தியுங்கள்; அவர் உங்களுக்குப் பரமேஸ்வர தண்டத்தைத் தந்தருளுவார்; அதைக்கையிலே கொண்டு சென்ருல் அரக்கர்கள் அஞ்சி ஒடி விடுவர்' என்று உபதேசித்தார். அவ்விதமே தக்ஷனை வணங்கி முனி வர்கள் சிவதண்டம் பெற்று யாத்திரையை இனிது முடித் தனர். அந்தச் ‘சடி" என்னும் புனிதச் சின்னத்தையே ன்னும் மடாதிபதி முன்னே கொண்டு செல்ல பக்தர்கள் பின்தொடர்ந்து செல்கின்றனர்.
சுமார் நாற்பது சாதுக்களைக் கொண்டிருந்த ஒரு பெரிய கூட்டமும் பஹல்காம் வந்து சேர்ந்தது. இவர்கள் வெள்ளியினுற் செய்யப்பட்ட இரு தண்டங்களைக் கையில் ஏந்திக் கொண்டு பொலிஸ் பந்தோபஸ்துடன் வந்தனர். அவர்களும் அவைகளை அங்கேயே ஓரிடத்தில் நிறுவித் தங் கள் கூடாரங்களையும் நிறுவிக் கொண்டு தங்கினர்கள்.
வழியில் யாத்திரிகர்களுக்கு உதவி புரிவதற்காக காஷ் மீர் அரசாங்கமும் சில ஏற்பாடு செய்வது வழக்கம். இப் பொறுப்புச் சபையினரை அங்கு 'தர்மார்த்தம் றஸ்ட்”

Page 14
56 ஆத்ம
என அழைப்பர். இவர்களும் தங்கள் ஏற்பாட்டின்படி அங்கு வந்து சேர்ந்தனர். இக் குழுவில் டாக்டர்கள், பொலிஸ் காவலர்கள் இராணுவ உதவியினர், கூலியாட் கள், குதிரைகள் எல்லாம் அடங்கியிருந்தன. சொந்தச் ச்ெலவில் வசதி செய்து கொள்ள முடியாது கஷ்டப்படும் யாத்திரிகர்களுக்கு இவர்களே தங்க இடம், உணவு, உடை மருந்து முதலியனவும் கொடுப்பார்கள். வழியில் நடக்க முடியாது கஷ்டப்படுபவர்களைக் குதிரைகளில் ஏற்றிக்கொண் டும் செல்வார்கள்.
9ம் திகதி காலை 6 மணிக்கு சடி கூட்டத்தைச் சேர்ந் தவர்கள் இரு தண்டங்களையும் சுமந்துகொண்டு முன்செல்ல ஏனைய எல்லா யாத்திரிகர்களும் அவர்களைப் பின்தொ டர்ந்து கால்நடையாகச் சென்றனர். நாங்களும் எங்கள் உடைகளையும் அணிந்து காலில் சப்பாத்தையும் மாட்டிக் கொண்டு கையிலுள்ள சாமான்களை ஒன்ருகக் கட்டி முது கில் போட்டுக் கொண்டு தடியைக் கையில் ஊன்றிக் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தோம். சுமார் நாலு மைல் தூரம் பாதை ஒருவாறு நன்ருக இருந்தது. பின் புள்ள 4 மைல்களும் மலை ஏற்றமாகவும் கரடு முரடான பாதையாகவும் இருந்தது. வழியில் களைப்பு, தாகம் ஏற் படும்போது அங்குள்ள நீர் அருந்துவதால் வயிற் று க் கோளாறு போன்ற சு கயினங்கள் ஏற்படுவது வழக்கம். ஆகவே நாங்களும் புறப்படும்போதே தேவை யான அளவு இனிப்புக் கட்டிகள் வாங்கி வைத்திருந்தோம்.
தாகம் ஏற்படும் போது அதில் ஒன்றை சுவைத்துக் கொண்டு நடந்து சென்ருேம். எப்படியோ .
ஒருவாறு கஷ்டங்களைச் சகித்துக் கொண்டு 9 மைல் தூரத் தை நடந்து பகல் 12 மணியளவில் 9500 அடி உயரத்தி
விருக்கும் சந்தன் வாரி என்ற இடத்தைச் சென்றடைந்
தோம். அதிகாலையில் பிரயாணத்தை ஆரம்பித்த கூட்டம் மாலை 6 மணிவரை சாரை சாரையாக எறும்பு ஊர்வது போன்று வந்து கொண்டேயிருந்தது.
நாங்கள் சென்றடைந்தது பகல் நேரமாகையால் வெயி லில் துணிகளைக் காயவைத்து ஸ்நானமும் செய்துகொண்டு ஏதோ கிடைத்த உணவையும் சாப்பிட்டு விட்டுக் கூடா ரம் சாமான்கள் வரும்வரை காத்திருந்தோம். சுமார் 3 மணியளவில் குதிரை ஏ சாமான்களைக் கொண்டு வந்தது.
 

ஆத்ம 57
கூடாரம் சிலரடித்து விட்டனர். நாங்கள் கூடாரம் அடித் துக் கொண்டிந்தோம். மழை பெய்ய ஆர ம் பி த் த து. கூடாரத்துக்காக காத்து நின்றவர்கள் தங்க இ டமி ன் றி வெளியிலேயே நின்று நனைந்தனர். கையில்குடையுள்ளவர் கள் பிடிக்க, மழைக்கோட் உள்ளவர்கள் அதைப் போட்டுக் கொண்டனர். வழியில் வந்தவர்களும் நனைந்து கொண்டே நடந்தனர். நாங்களும் கூடாரத்தினுள் நின்று கொண்டி ருந்தோம். கூடாரம் அடிப்பவர்கள் அதைச் சுற்றி ஒரு கானும் வெட்ட வேண்டும், நாங்கள் கான் வெட்டுவதற்கு முன்பு மழை தொடங்கி விட்டது. கூடாரத்தின் உள்ளும் தண்ணிர் பாய ஆரம்பித்தது. உடனேயே ஈரம் ஊ ரு த ஒரு துணியினுல் சாமான்களையெல்லாம் மூட்டையாகக் கட்டிக் குவித்து வைத்துவிட்டு நாங்கள் நின்று கொண்டி ருந்தோம். காலுக்கு மேல் 6 அங்குலம் அளவில் தண்ணிர் கூடாரத்துக்குள்ளேயே பாய்ந்தோட ஆரம்பித்தது. மாலை இருட்டும்வரை மழை தொடர்ந்து பெய்தது. வெளியில் எட்டிப் பார்த்தேன். எல்லா இடமும் கூடார ம ய மாக வே இருந்தது. வெளியில் சென்ருல் மீண்டும் எங்கள் கூடா ரம் எது என்று அறிந்து திரும்பிவர முடியாதவாறு எல் லாம் ஒன்று போன்றிருந்தது. வெளியில் செல்லவும் முடி யவில்லை. களைத்த உடல், ஒய்வை நாடிக் கொண்டிருந்தது. கூடாரத்திலுள்ளோ சேருகக் க ளி மண் குவிந்திருந்தது. நெடு நேரம நின்று கொண்டே யோசித்தோம். வேறு வழி ஏதும் தோன்றவில்லை. உடனேயே கையிலிருந்த துணிகளை அந்தச் சேற்றின் மேல் விரித்து அதன் மேல் படுத் து க்
கொண்டோம். காலை நாலுமணி யளவில் கண் விழித் த
போதுதான் சேற்றில் படுத்த ஞாபகம் வந்தது. 'பசித் தோருக்கு கறி தேவையில்லை' நித்திரை வந்தவனுக்குப் படுக் கை தேவை யி ல் லை' எ ன் று நா டோ டி யா க * மக்கள் சொல்லிக் கொள்வது அப்போது நினைவுக்கு வந்
தது. நாங்கள்தான் நாகரிக வசப்பட்டு ஏதேதோ செளகரியங் களேயெல்லாம் உடம்புக்குப் பலவந்தமாகத் தேடிக் கொடுக் கின்ருேம். சில காலம் அவ்வாருன வசதிகளுடன் பயின்று கொண்ட உடம்பானது பின்பு நாம் அவைகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையிலிருக்கும் போதுதான் பலவந்த மாக அவ்வசதிகளை வேண்டி நிற்கிறது. உறங்குவதற்கு, ஒய்வெடுப்பதற்கு பெரிதான நூமும், பஞ்சணை மெத்தை யும், காற்ருடியும், துளம்பு வலையும் தேவையே இல்லை என்ற உண்மை அப்போது இலகுவாகத் தெரிய வந்தது. மனம் எப்போதும் நம்மை ஏ மா ற் ற க் காத்திருக்கிறது.

Page 15
58 ஆத்ம
மனதுக்கு அடிமையாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்ற உண்மைகளை நம்மில் அனேகர் அறிந்து கொள்வ தில்லை. "மனமே! இன்றிலிருந்து நீ என்னைக் கஷ்டப் படுத் தக் கூடாது. ஏமாற்றத் துணியக் கூடாது. எந்த இடமா ணு,லும், படுத்து ஒய்வெடுக்கத் தயாராக இருக்க வேண் டும்’ என்று மனதுக்கு ஒரு சிறு கட்டளை மட்டும் போட்டு விட்டு மீண்டும் சாமான்களையெல்லாம் மூ ட்டை யாக க் கட்டி முதுகில் போட்டுக் கொண்டு காலை ஐந்து மணிக்கே தொடர்ந்து நடக்கலானுேம். பாதையோ ஒரே ஏற்றமா கவும் கரடுமுரடாகவும் இருந்தது. செங்குத்தான உ ய ர மான மலையில் கற்பாறையின் மீது ஏறி மற்றப் பாறையில் கையைப் பிடித்துக் கொண்டு அவதானமாக ஏற வேண்டி யிருந்தது. பாதை மிகவும் ஒடுக்கமாகவும் இருந்தது. சந் தன் வாரிக்குமேல் மலையில் எந்த மரஞ்செடிகளும் காணப் படவில்லை. கற்பாறைகளும் சிறிய புல் பூண்டுகளும்தான் காட்சியளித்தன. இடையிடையே பனிப் படலங்களின் மேல் அவதானமாக நடக்க வேண்டும். எட்டி நாலடிகால் எடுத்து வைத்தால் வேகமான மூச்சும் க ளை ப் பு ம், கால்வலியும் உண்டாகி விடும். முழங்கால் சில்லும் கழன்று விடுமோ என்று அஞ்சக் கூடியவாறு அமைந்திருந்தது அந்த ஏற்றம், யாத்திரிகர்கள் வாயில் இறைவனின் திவ்ய நாமங்களைத்
தவிர ஏனைய ஒலிகளெல்லாம் தானகவே மறைந்து விட் '
டன. பக்தி வெள்ளமும் தானுகவே பொங்கியது. சிறந்த திடசாலிகளும், ஜவான்களும் கூட முடியாது திண்டாடி னர்.
இவ்வாருக எறும்புபோல் 8 மைல் தூரத்தையும் சிறிது சிறிதாக நகர்ந்து சென்று ‘ஷேக்நாத்" என்ற இடத்தைப் பகல் ஒரு மணியளவில் சென்றடைந்தோம். தங்கள் கூடா ரங்களைக் கூலியாட்கள் மூலம் சுமந்து வந்தவர்கள் கூடா ரங்களை நிறுவித் தங்கட்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொண்டனர். அனேகர் இவைகளைச் சுமப்பதற்குக் குதி ரைகளையே ஒழுங்கு செய்திருந்தனர். நடந்த களையினல் அந்த இடத்தை அடைந்ததும், ஏதோ ஓரிடத்தில் விழுந்து படுத்துவிட்டேன். சிறிது நேரம் கழித்தெழுந்து கிடைத்த தைச் சாப்பிட்டு விட்டு கூடாரத்துக்காகக் குதிரையைக் காத்துக் கொண்டிருந்தோம். யாத்திரிகர்கள் மட்டும்தான் வந்துகொண்டிருந்தனர். குதிரைகள் எதையும் காணவில்லை வழியில் ஒர் பாலம் உடைந்து விட்டதாகவும் அ  ைத த்

ஜோதி 59
திருத்தி அமைக்கும் வரை குதிரைகள் எல்லாம் மறித்து நிறுத்தப்பட்டுள்ளனவென்று நடந்து வந்தவர்கள் கூறினர் கள். 'தனித்து வராது துன்பம்’ என்பதற்கு ஏற்ப துன் பத்துக்கு மேல் துன்பம் வந்து கொண்டே இருந்தது. மழை யும் பெய்ய ஆரம்பித்தது. இந்த இடமோ பன்னிராயி ரத்து ஐந்நூறு அடி உயரத்தில் அமைந்துள்ளது. சுற்றிவர எல்லாப் பாகங்களிலும் வெள்ளை வெளேரென்ற பனி மலை கள் காட்சியளிக்கின்றன. நடுவில் பெ ரிய தோ ர் குளம் அமைந்துள்ளது. அக்குளக்கரையில் ஐந்து தலை நாகங்கள் அதிகம் இருப்பதாவும் அவை யாருக்கும் தீங்கிழைப்பதில்வுை யெனவும் பார்த்த பலர் கூறினர். இந்நிலையில் குளிர் எப் படி இருந்திருக்கு மென்பதை சற்று சிந்தியுங்கள். அது மட்டுமா? அப்போது வீசிய காற்ருே உடலைத் துளைத்துச் செல்வது போன்று சில் என்றிருந்தது. இடையிடையே மூடு பனியும் மூடிக் கொண்டிருந்தது. அப்போது பக்கத்தில் நிற் பவர் கூட மறைந்து விடுவார். இதற்கிடையில் மழையோ தொடர்ந்து பெய்துகொண்டிருந்தது. நான் கையிலிருந்த மழைக்கோட்டை போர்த்துக் கொண்டேன். ஆ ன லும் எத்தனை நேரத்திற்கு நிற்க முடியும்?
யாத்திரிகர்களில் பெருந் தொகையினர் இக்கஷ்டத் துக்கு உள்ளாயினர். போதிய பொருள் வசதியுள்ள பலர் பெரிய கூடாரம் சமையல் சாமான்கள், சமையற்காரன் தேவைக்கும் அதிகமான கம்பளி உடைகள் போர்வைகள் இவைகளைச் சுமப்பதற்கு ஐந்தாறு குதிரைகள் எ ல் லா ம் ஒழுங்கு செய்திருந்தனர். குதிரைகள் வந்தாலல்லவோ இவைகளெல்லாம் உபயோகிக்கப் படும். ஆகவே, செல்வந் தர், வறியோர், பெரியோர், சிறியோர் எல்லாருமே இக் கஷ்டத்தை இறைவனின் பெயரால் அனுபவித்துக் கொண் டும் இறைவனின் துணையை நாடிக் கொண்டும் இருந்தனர். இது அமரநாதன் தன் பக்தர்களுக்கு விடுத்த பெருஞ் சோ தனபோலும். 'ஊருஞ் சதமல்ல உற்ருர் சதமல்ல. . " என்ற பட்டணத்தார் பாடல் ஞாபகத்தில் தோன்றியது. கட்டுக்கட்டாக கையில் இருந்த பணமெல்லாம் பெறுமதி யற்று வெறும் கடதாசியாகவே அப்போது மாறிவிட்டது. அந்நிலையில் யாருக்கு யார் உதவுவது?. அப்படியானல் இந்நிலையில் உதவி புரியக் கூடியது யாரரென்பது உங்கட்கு சொல்லாமலே விளங்கும். உளமார இறைவா! நீ த ர ன் சதம் என்று வேண்டி அழும் நிலை ஏற்பட்டது. துணை

Page 16
60 ஆத்ம
யென்று எண்ணியுள்ளவைகளெல்லாம் உதவாது போகின்ற போதுதான் மனிதனுக்கு இறைவன்மீது உண்மையான நம் பிக்கை ஏற்படுகிறது. அப்போதுதான் இறைவனிடம் பூர ணசரணுகதி யடைகிருன் மனிதன். இந்நிலையை மக்கட்கு ஏற்படுத்துவதற்குத்தான் இறைவன் இமய மலையிலும் குறிப் பாக கைலாசம், அமரநாத், பத்திரிநாத், கேதார்நாத், ஆகிய இடங்களிலும் அமர்ந்திருக்கிருர், ஆகவேதான் புரா ணங்களும் சிவபெருமான் கைலாசத்திலிருந்து கொ ன் டு கருணை புரிகின்றர் என்று கூறுகின்றன போலும்!
சிலர் அமரநாதனின் தரிசனம் பெருமலே கேஷிக்நாக் கிலிருந்தும் திரும்பிச் சென்று விட்டனர். இவ்வாருக நா னும் அச்சுதானந்த சுவாமிகளும் குதிரையின் வரவை எதிர் பார்த்துச் சலித்து விட்டோம், மாலை நேரமுமாகிவிட்டது. கை கால்களெல்லாம் அசைக்க முடியாதவாறு குளிரினுல் விறைத்து விட்டன. பற்களெல்லாம்ஒன்ருேடொன்றுதாளம் போட்டுக்கொண்டேயிருந்தன. எனது உலக யாத்த்திரை முடி வுறுவதற்காயநேரமும்கிட்டிவிட்டதாகவே நானும் எண்ணி னேன். 'சுவாமிஜி! எனது யாத்திரை முடிவுறப் போவது போல் தெரிகிறதே' என்று அச்சுதானந்த சுவாமிகளைக்
கேட்டேன். அவர் என்னைப் பார்த்து ‘நான் சற்று வயது
முதிர்ந்தவன்; எனது யாத்திரை உங்களுக்கு முன்பே முடிந்து விடலாம் என்று அவர் பதிலளித்தார். இந்நிலையில்தான் இறைவனின் கருணை தோன்றியது. அவர் பின்னுலிருந்து கவனித்தார் போலும். இவ்வாறு பேசி ஒரு நிமிடம் கூட இருக்காது. பக்கத்திலிருந்த கூடாரத்திலிருந்தவர் 'மஹ ராஜ்! தேனீர் போட்டிருக்கிருேம். குடித்துவிட்டுச் செல் : லுங்கள் என்று சொல்லிக் கொண்டே இரு குவளைகளில் நல்ல சூடான தேனிரை நீட்டினர். யா ர் தா ன் அதை மறுக்க முடியும்? உடனேயே கைகளை நீட்டி வாங்கி அருந் தினுேம், குடிக்கும் போதே இன்னும் சற்று உயிர் வாழ லாம் போன்று தோன்றியது. ஏனெனில் அத்தேனீர் அப் படி நல்ல சூடாக ஆவி பறந்து கொண்டிருந்தது. அந்த ஆவியை உள்ளே விட்டதும் எங்கள் ஆவியும் ஒடிப்போ காது மீண்டும் எங்களுடனேயே இருக்க உடன் பட்டது. இச்சந்தர்ப்பத்தில் தேனீரளித்தது யாருடைய  ைக யாக இருக்கலாமெனச் சிந்தித்துப் பாருங்கள்.
*வல்ல இறைவன் நம்மை வருத்துவது கொல்லவல்ல, கொல்லவல்ல, பொல்லா வினையறுக்க' ஆகவே, இறைவன்

ஜோதி 6.
மக்கள் வாழ்வில் கஷ்டத்தை ஏற்படுத்துகிருரென்ருல் அது நம்மை ஆட்கொள்வதற்காகத்தான். ஆகவே! கஷ்டத்தை வரவேற்க மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். -
எப்படி எப்படியோ வெல்லாம் இக் கஷ்டத்தையும் இறைவனது திருவிளையாடல்களையும் இரவு பதினுெரு மணி வரை அனுபவித்தோம். அதன்பின்புதான் குதிரைகள்வந்தன. உடனேயே கூடாரத்தை நிறுவி உள்ளே படுத்துவிட்டோம் மீண்டும் அதி காலையில் எழுந்து மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தோம். அந்த இடத்துக்கு மேல் அங்கு புற்கள்கூட அதிகம் இல்லை. வழியில் 14,700 அடி உயரத்திலுள்ள ** மகாகுணம்’ என்ற உயரமான மலை யைத் தாண்டவேண்டியிருந்தது. அமரநாத் யாத்திரையில் அதி உயரமான இடமும் இதுதான். இங்கு ஒருவிதமான விஷக்காற்றும் இடையிடையே வீசுவதுண்டு, அக்காற்று வீசும்போது யாத்திரிகர்கள் மூச்சுவிட முடியாதவாறு திண்டாடுவார்கள். அவர்களுக்கு அரசாங்க டாக்டர்கள்
பிராணவாயு கொடுத்து உயிரைக் காப்பாற்றுகின்றனர்.
மகா குணத்துக்குப் பின் பஞ்சதரணிவரை ஒரே இறக்கமான பாதை. பனிக்கட்டியின்மேல் இறங்கிச் செல்வது மிக ஆபத்
தானது. சற்றுக் கால் தவறினுல் பனிக்கட்டியில் வழுக்கி
எங்கேயோபோய்விழுந்துஆபத்துக்குள்ளாகவேண்டிநேரிடும். கையில் கொண்டு சென்ற கூரான தடியை பனிக் க ட் டி யி ல் குத் தி  ைல் சற் று ப் ப தி யு ம். அதை நிதானமாகப் பிடித்துக் கொண்டு ஒவ்வோர் காலா கத் தூக்கி வைக்க வேண்டும். அந்த வழியில் குதிரைகள்
a நடப்பதற்கு எவ்வளவோ கஷ்டப்படுகின்றன. எவ்
வளவு கவனமாகத்தான் நடந்த போதிலும் சிலர் தவறி விழுந்து விடுகின்றனர். நான் கூட ஒரு இறக்கத்தில் முழங் கால் அடிபட விழுந்து விட்டேன். இருந்தும் அமரநாதன் காப்பாற்றி விட்டார். ஆபத்தேதும் ஏற்படவில்லை. சிறிது நேரம் இருந்து காலில் விழுந்த இடத்தை நன்கு தடவிக் கொடுத்து விட்டு மீண்டும் நடக்கலானேன். இவ்வாறே இடையில் ஏற்பட்ட எத்தனையோ இன்னல்களையெல்லாம் சகித்துக் கொண்டு 8 மைல் தூரமும் தாண்டி பஞ்சதர னியை அடைந்தேன்.

Page 17
62 ஆத்ம
- பஞ்சதரணியம் சமுத்திர மட்டத்திற்கு மேல் பன்னி ராயித்து ஐந்நூறு அடி உயரத்தில் இருக்கிறது. சேஷநாக் போன்று கடும் குளிராகவே இருந்தது. இந்த இடத்தைச் சென்றடைந்ததும் அமரநாதனை நெருங்கி வி ட் டோ ம் நாளை தரிசனம் கிடைத்து விடும் என்ற மகிழ்ச்சி ஏற்பட் டது. இது காரணமாக பஞ்சதரணியில் அனுபவித்தது அவ்வளவு கஷ்டம் போன்று தோன்றவில்லை. இங்கிருந்து அமரநாதன் சந்நிதி நாலு மைல் தொலைவில்தான் உள்ளது.
(தொடரும்)
D 60 D
சென்ற இதழ்த் தொடர்
(தொகுப்பு: மாத்தளை அருணேசர்)
உலகம் பொய்த் தோற்றம் என்பதற்கு,
"விதிக்கும் பிரபஞ்ச மெல்லாம் சுத்த வெயின் மஞ்ச ளென் னவே வேதாகமங்கள் மதிக்கு மதனை மதியார் அவர் 。.° மார்க்கந் துன்மார்க்கஞ் சன்மார்க்கமோ மானே-சங்கர'
என்றும்,
*தேன்முகம் பிலிற்றும்பைந்தாட்செய்யபங்கயத்தின்மேவு நான்முகத் தேவே நின்னுல் நாட்டிய வகில மாயைக் கான் முயற் கொம்போ வென்கோ கானலம்புனலோ வென்கோ வான்முகமுளரியென்கோ மற்றென்கோ விளம்பல் வேண்டும்”
என்றும் ,
"பூதமுதனுதவரை பொய்யென்ற மெய்யரெல்லாங் காதலித்த வின்பக் கடலே பராபரமே?”
என்றும் மெய்ஞானச் செல்வராகிய தாயுமான சுவாமிகள் அருளியிருப்பதே சான்ருகும். -

ஜோதி 63
மனம் ஒன்றை நினைப்பதற்குக் காரணம் அது அவ் வஸ்துவின் மேல் வைத்திருக்கும் இச்சையே. இச்சையிலா விடத்து மனமெழாது. திடீரென்று மனம் ஒன்றை நினைக்கும் போது உடனே சிந்தித்துப் பார்த்தால் மனம் அந்த வஸ்து வின் மேலோ, அல்லது அதன் மூலமாய்வேருெரு பொருளின் மேலோ வைத்திருக்கும்இச்சையினலேயே நினைத்தது என்பது நன்ருய் விளங்கும்.
இவ்வாறு இச்சா சொரூபமாகிய இம் மனதினுலே நமது துன்பங்களுக் கெல்லாம் ஆதாரமாகிய இப் பிறவிப் பிணி சம்பவித்தது. இனி இம் மனமே நமக்கு நன்மையையும் எவ்வாறு செய்யக் கூடும் என்பதைப் பற்றிக் கூறுவோம்.
ஒருவனுக்கு ஒரு வியாதியை நீக்கவேண்டுமாயின் அவ் வியாதி உண்டானதன்காரணத்தை முந்திக் களையவேண்டும். அது இருந்து கொண்டே இருக்கு மட்டும் எப்படிப்பட்ட ஒளஷதங்களை ஈந்தாலும் அவ் வியாதி ஒழியாது. ஒருவன் சுருட்டுப் பிடிப்பதால் மார்நோய் வந்ததென்று வைத்துக் கொள்வோம். அவன் எப்போதும்போல் தினம் சுருட்டைப் பிடித்துக்கொண்டே எவ்வளவு மருந்தைச் சாப்பிட்டாலும் என்ன பயன்? முதல் சுருட்டுப் பிடிப்பதை ஒழிக்கவேண்டும். பிறகு அதனுல் உண்டான கெடுதியை நீக்க மருந்து அருந்த வேண்டும்.
- அதுபோல் நமக்குப் பிறவிப் பிணி நீங்கவேண்டுமாயின் முன்னர் அதற்குக் காரணமாகிய மனதை ஒழிக்கவேண்டும். மனமே எப்படிப் பிறவிக்குக் காரணமோ அப்படியே மனே நாசமே மோட்சத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டிருக் கிறது. மனதை அடக்குவதற்கே வேதாகமங்களில் அவரவர் களுடைய பக்குவத்திற்குத் தக்கபடி பல மார்க்கங்கள் கூறப்பட்டிருக்கின்றன. ஒருவன் எவ்வளவு புண்ணிய கருமங்
களைச் செய்தாலும், எத்தனை ஸ்தல யாத்திரை செய்தாலும் அதற்குத் தக்க நல்ல பயன் கிடைக்குமேயன்றி, மனம்
இறந்தாலொழிய பிறவி நீங்காது. இது நோக்கியே நம
தாயுமானசுவாமிகள் -
*சினமிறக்கக் கற்றலும் சித்தியெலாம் பெற்றலும் மனமிறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே” என்ருர்,

Page 18
64. ஆத்மஜோதி
தன்னை அறிந்தாலன்றித் தலைவனை அறியலாகாதென்றும் மோட்சமடையலாகா தென்றும் நூல்களில் கூறியிருக்கிறதே. எனின், அது உண்மையே. முதலாவது மனதை அடக்கினல் தான் தன்னை அறிய முடியும். ஆனல் மனம் முதலிலேயே அடியோடிறந்து விட்டால் பூரண நித்திரை போலல்லவோ இருக்கவேண்டும். பிறகு ஒரு விவகாரமும் நடவாதே எனின், அது உண்மையே, ஆயின் எவ்வாறு மனதை இறக்கச் செய்து பிறகு தன்னை அறிவதும் தலைவனிற் கலப்பதும் மோட்சமடை வதும் எனின்;
மனநாசம், உருவநாசம் என்றும் , அருவநாசம் என்றும் இரண்டு வகையாய் இருக்கின்றது. அதாவது-மனம், உருவ மனம் அருவ மனம் என்று இரண்டு பிரிவாயிருக்கிறது. இவற் றில் மனதின் இரஜோ தமோ குணங்களே அதன் உருவம் அவை இரண்டும் நீங்கினல் மனதின் உருவம் ஒழிந்தது. அதாவது உருவ மனம் அழிந்துபோயிற்று. மனதின் சத்துவ குணமே அதன் அருவநிலை. அத் குணத்தைக் கொண்டே மோட்சமடையவேண்டும். பிறகு முக்தியில் அந்த அருவ மனமும் போய்விடும் மயானத்தில் சவத்தைத் தீயிட் டெரிக்கும் வெட்டியான் ஒரு நீண்ட கழியால் காஷ்டத் தீயைக் கிளறிக் கிளறி சவத்தைக்கொளுத்துகிருன். அந்தக் கழியும் ஒரு நுனியிலிருந்து எரிந்து குறைந்துகொண்டே வருகிறது. கடைசியில் சவமும்எரிந்து முடியும் சமயம், மீதியா யிருக்கும் அக்கழித் துண்டையும் காஷ்டத்தில் போட்டு விடுகிருன். அத்தீயில் எரிந்து சவத்தோடு அத் துண்டுக் கழியும் சாம்பலாய் விடுகிறது.
அக்கழி காஷ்டத்தை எரிக்க உதவிபுரிந்துமுடிவில்தானும் எப்படி அக் காஷ்ட தீயிலேயே எரிந்துபோய்விட்டதோ , அது போலவே இச் சத்துவ குணமானது அஞ்ஞானத்தை அழித்து ஆன்மா தன்னை அறிய உதவியாயிருந்து, முடிவில் அங்குதய மான ஞானம் என்ற அக்கினியில் தானும் தகனமாய் விடும்.
இப்போது மனமே எவ்வாறு பிறவி, மோட்சம் இரண்டிற் கும் காரணமாயிருக்கிற தென்பது நன்கு விளங்குகிறது. இதனுல் கடவுள் நாம் மோட்சவீட்டை அடைய வேண்டும் என்றே எவ்வளவோ கருணையோடு நமக்கு இம் மனமெனும் கருவியை அளித்திருக்கிருர், அதைக்கொண்டு நன்மையடை யாது வினையைப் பெருக்கிப் பிறவிப் பெரும் பிணியால் வருந்தி உழல்வது நமது குற்றமே யன்றே?
 
 

து 2ண புரி தா யே
f போலபாரதி'
என்னை உனக்களித்து விட்டேன்; - இதில் ஏதும் மறுப்புரைப்ப தில்லை! உன்னே எனக் களித்தால் போதும்; - உல இன்பம் எதுவரினும் வேண்டேன்!
. துன்னும் இருள் வழியில் இன்னும், - வெகு
தூரம் நடந்தறிய மாட்டேன்! அன்னே அருட் பெருந்தாய் நீயே, - இந்த
அபலேக் கருள் புரிக தாயே!
வெம்மா துயர் உலகில், ஏழை - மிகு வேதனையே பட்டதினிப் போதும்; சும்மா என நினைத்து விட்டாய்; -கொடுந் தொல்லைப் படுநரகில் கெட்டேன்;
இம்மா வுலகு தரும் இன்பம், - என
இழிவு படுத்துமிருள் துன்பம்;
அம்மா, அருட்பெருந்தாய் நீயே! - இந்த
அபலேக் கிரங்கி யருள் தாயே!
நல்ல அறிவை எனக் கீந்தே - அதை நலிவு படுத்துவதேன் தாயே? வல்லமை தந்துவிடு அம்மா! - இன்றேல் மாய்த்து மடித்துவிடு சும்மா! கல்லே உருக்கி நெகிழ்வாக்கும், - அருட் கவிதை எனக் கருள வேண்டும்! எல்லே கடந்த சுத்த ஜோதி - என் இதயத்திடை பொலிய வேண்டும்!
எந்தப் பொழுதுமுனை நாடி-என் இதயச் சுமைகளறப் பாடி, சிந்தை கனிந்து கனிந்துருகி - உனச் சேரத் துடிக்குதம்மா ஆவல்!
இந்தப் பதர் உலக இன்பம், - எனக் கேதும் பிடிக்கவில்லை அம்மா! - மிகு பந்தப் படுமிருளேப் போக்கி - ஒளிப் பாதத்துணை புரிக தாயே!

Page 19
Registered at the G. P. O. a
__Xمحم^5 بر NA برxسمبرx^سمبرx
சந்தா கே
அன்புடையீர்!
இறைவன் திருவரும் 17 ஆண்டுகள் பூர்த் ஆரம்பமாகி இரண் வந்துள்ளது. LIGA களுடைய ஆதரவின தோறும் சுடர் வி கொண்டிருக்கிறது. பர்கள் அனைவரும் பு அனுப்பி வைக்குமா கின்ருேம். சந்தா ( இலக்கங்களேக் குறி கொள்கின்ருேம்.
இந்தியாவிலுள்ள சந்தா R. வீரசம்பு, ச1 அரிசிப்பாளையப்
என்ற விலாசத்திற்கு இவ்வீட்மும் அறி
ஆத்மஜோ
EsT6)J60üGull
அச்சிடுவோர்:- யூனி ஆத் அச்சிடுவிப்போர்:- ஆத் வெளியிட்டதேதி: - 16

sa Newspaper M. L. 59/300
ーへ/~~~~~ヘーへしこへ/~~~~~ー/~ー、ヘヘヘヘヘヘヘヘヘヘヘー ′。
யர்களுக்கு o
ால் ஆத்மஜோதிக்கு தியாகி 18வது ஆண்டு டாவது இதழும் வெளி
லேயே ஜோதி மாதந் *
ட்டுப் பிரகாசித்துக்
வழக்கம்போல அன் த்தாண்டுச் சந்தாவை று அன்புடன் வேண்டு
நேயர்கள் தமது சந்தா ப்ெபிடுமாறு கேட்டுக்
நேயர்கள் வழக்கம் போல் ம்பு இன்டஸ்ரீஸ்,
, கே ல ம் - 9 .
அனுப்பி வைப்பதோடு யத்தருவீர்களாக,
திை தி நிலையம், *
மஜோதி அச்சகத்தினர் மஜோதி நிலையத்தினர் 2-1965. ,