கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உலகத் தமிழாய்வின் தந்தை தனி நாயகம்

Page 1
உலகத் தமிழாய் தந்தை தனி நாயகம்
மயிலங்கூடலூர் பி. நடராச
தொண்டன் தனிநாயகம் அடிகளார் நி மட்டக்களப்பு.
15 س-9-س-1984

Iଗíଇଁ]]
னவுச் சிறப்பிதழ்

Page 2


Page 3
அனைத்துலகத் தந்தை: தனி ந
அடிகளார் தந்தையா ?
அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத் தின் தொழிற்பாடுகளின் பின்னணியில் நின்று அதனை இயக்கியவர் அதன் ஆத்மீகத் தந்தை யாகிய வண. தனிநாயகம் அடிகளாரே. ஆடிகளாரின் பணிகளுக்கு அவ்வப்போது பலர் உதவி வந்தாலும் அடிகளார் தாமே தனி யொருவராகக் கால் நூற்ருண்டுக்கு மேலாய் விடாது முயன்றமையும் அவர் மூலமுதலில் வழங்கிய அகத்தூண்டுதலுமே அணைத்துல கத் தமிழாராய்ச்சி ம ன் றம் உருவாகவும் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடைபெறவும் உலகனைத்தும் பரந்துள்ள பண் பாட்டியலாளர் தமது உள்ளங்களில் தமிழுக்கு உரிய இடமளிக்கவும் காரணமாய் அமைந் தன.? அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற முன்னணி உறுப்பினராய் தமிழியல் ஆய்வாளர் இருவரின் கூற்றுக்களின் வாய்மை உறுதிப் பாட்டை (Validity) வாய்ப்புப்பார்க்க முற் பட்டதன் விளைவாக எழுந்ததே இக்கட்டுரை.
திராவிடம் தோற்றது?
தமிழ் தொன்மையான மொழி. நெடும் காலமாய்த் தமிழ் மொழியும் தமிழ்ப்பண் பாடும் உலக நாடுகள் பலவற்ருேடும் தொடர் புற்றிருந்தன. பதினேழாம் நூற்றண்டு முதல் ஐரோப்பியரும் அமெரிக்கரும் தமிழ், தமிழ்ப் பண்பாடு தொடர்பான ஆய்வுகளை மேற் கொண்டு சில கருத்துக்களை வெளியிட்டு வந் தனர். எனினும் மேற்கு நாட்டாரது கவனம் இந்தோ - ஆசிய மொழிகளினல் ஈர்க்கப்பட் டது. சிறப்பாகத் தம்மைத் தூய ஆரிய இனத்

தமிழியலாய்வின்
TL5ló
மயிலங்கூடலூர் பி. நடராசன்
தினர் என்று கருதிய சேர்மனியர் சமஸ்கிரு தத்தின் தொன்மை பற்றியும் மேன்மை பற்றி யும் பல கோட்பாடுகளை வெளியிட்டனர்.
இந்தோ - ஐரோப்பிய, இந்தோ - ஆரிய மொழிக் குடும்பங்கன் தொடர்பான ஆய்வு ஆரவாரத்தில் தமிழும் பிற திராவிட மொழி களும் ஒதுக்கப்பட்டன. திராவிட மொழிகளின் சிறப்புக்களெனத் திராவிடவியலாளர் சிலர் கூறிய கருத்துக்கள் இந்தியவியலாளரால் புறக் கணிக்கப்பட்டன. இதனல், சம்ஸ்கிருதமும் ஆரியப் பண்பாடுமே இந்தியாவிற்குரிய தொன் மையானவை; தமிழும் தமிழ்ப் பண்பாடும் இந்தியப் பண்பாட்டில் எத்துணை முக்கியத் துவமும் அற்றவை; சமஸ்கிருத, ஆரியப் பண் பாடுகளின் வழிவழிப்பட்டவை என்ற கருத் துக்கள் மேலோங்கின. எம். பி. எமனே, தோமஸ் பருே ஆகிய மொழியியற் பேராசிரி யர்கள் சம்ஸ்கிருதச் சொற்களின் வேர்களை வடமொழியில் தேடித் தோல்வியுற்றுத் திரா விட மொழிகளில் அவற்றைக் கண்டறிந்தனர். அப்போது நிலைமையில் புகட்சிகர மாற்றம் ஏற்பட்டது. எனினும், இம்முடிவுகளை அனைத் துலக ஆய்வாளர்களுக்கு அறிவிக்கும் அமைப்பு எதுவும் இல்லாததால் எதிர்பார்த்த பயன் ஏற்படவில்லை.
தமிழியலில் அடிகளார்.
தமிழியலாய்வு, கீழைத்தேயவியல் ஆய்வு, இந்தியவியல் ஆய்வு ஆகியவற்றில் புறக்கணிக் கத்தக்க நுண்சுருகவே இடம் பெற்றது தமி ழரும் தமிழ்க் காதலரான பிறநாட்டார் சில ரும் தனிப்பட்ட நிலையிலேயே ஆய்வுகளை மேற் கொண்டனர். தமிழர் மறைவாகத் தமக்
25

Page 4
குள்ளே பழங்கதைகள் பேசிக்கொண்டிருந்த னர். பிறநாட்டாரோ தமது சூழலில் ஆதரவு அற்ற நிலையில் சிறிய அளவிலேயே தொண் டாற்றினர். இந்நிலையில் தனிநாயகம் அடி ‘களார் தமிழியலுக்குள் அடி எடுத்து வைத் தார். அப்போது இந்தியவியலாய்வு இருந்த நிலையையும் தமிழியலாய்வு இருந்த நிலையை யும் அடிகளார் ஐயந்திரிபற உணர்ந்திருந்தார். யாழ்ப்பாணத்துத் திருநெல்வேலியிலே நடை பெற்ற வளர்ச்சிக் கழகத்தின் நான்காம் தமிழ் விழாவிலே (1951) பேசும்போது அடிகளார்.
"இந்தியப் பண்பு, இந்திய நாகரீகம், இந்தியக் கலை கள், இந்திய மொழிகள் என அவர் (மாக்ஸ்முல்லர், வின்றர்னிட்ஸ் முதலாகப் பலரும்) மொழிவனவெல்லாம் திராவிடப் பண்பு, திராவிட நாகரீகம், திராவிடக் கலைகள், இவற்றையே அடிப் படையாகப் கொண்டவை. ஆயினும், பல்லாண்டுகளாக நடுவுநிலை கடந்தோர் பலர் இவ்வுண்மையை மறைத்தும் திரித் தும் ஒழித்தும் நூல்கள் யாத்தமையின் இன்று இவ்வுண்மையை எடுத்துக்கூறுவ தும் மக்கள் மனதில் ஐயம் விளைப்பதாக இருக்கின்றது. அங்ங்னம் எடுத்துக்கூறு தற்கும் பெரிதும் மனத்துணிவு வேண்டற் படுவதாயிற்று."3 என உண்மை நிலையை எடுத்துரைத்தார்
அடிகளார் கருத்துரைப்பதோடு நின்றுவிட வில்லை. நிலையை மாற்றியமைப்பதற்காக திட் டங்களையும் வெளியிட்டார்.
"தமிழராகிய நாமும் நமது இந் தி ய மொழிகளிலேனும் நம் தமிழைப்பற்றிய உண்மைகளை இதுகாறும் கூறினுேம் அல் லேம். ஆதலின் உலகம் நம்மை உண ராமலும் நாமே நம்மையுணராமலும் பாமரராய், விலங்குகளாய், உலகனைத்துப் இகழ்ச்சி சொல, பான்மைகெட்டு, நாட மது தமிழரெனக்கொண்டு இங்கு உயி வாழ்ந்து வந்துள்ளோம். இன்று இ தமிழ்க் கோயிலில் நிகழும் தமிழர் விழ உலகில் தமிழ் நாட்டின் பெருமையையு தமிழ் மொழியின் பெருமையையும் நி3 நாட்டும் புதியதோர் இயக்கத்தை உன் டாக்க வல்லது."4
ஆதல் வேண்டுமென அடிகளார் குறைதீர் கும் முறையையும் எடுத்துரைத்தார். அ
24

场
களார் வாழ்ந்த காலத்திலே பலர் "தமிழ்"
செய்தனர். ஆனல் அடிகளாரோ "தமிழை
நன்முகச் செய்யவேண்டும்" என்ற உறுதி பெற் றிருந்தார். இதனை மெய்ப்படுத்தும் வகையில் அடிகளார்,
என்னை நன்றக இறைவன் படைத்தனன் தன்னை நன்றகத் தமிழ்செய்யு மாறே என்ற திருமூலரின் பாடலைத் தமது குறிக்
கோளாய்க் கொண்டார். அதுமட்டுமன்றி.
புறநானூற்றுப் புலவராகிய கணியன் பூங்
குன்றனரின்,
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்ற உயரிய கருத்தையும் தமது குறிக்கோ ளுடன் இணைத்துக்கொண்டார். சேரநன்னட்டு
மன்னாாய் முடிசூட இருந்த இளங்கோவை
இளங்கோவடிகள் ஆக்கி நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தைத் தமிழுக்கு மணியாரமாகச் செய்தளிக்கத் தூண்டிய "பாலது ஆணையே’ தனிநாயக அடிகளார் வாழ்விலும் குறுக்கிட் டுப் பல திடீர்த் திருப்பங்களை ஏற்படுத்தி அவர் முழுமையாகத் தம்மைத் தமிழியலுக்கே அர்ப்பணிக்க வழிவகுத்தது என்பதை தவரு காது. திருத்தொண்டு செய்யாது தமிழ்ப்பணி யும் சமூகப்பணியும் கல்விப்பணியும் செய்வதற் கான திருச் சபை ஆணையைப் பெற்றுக் கொண்டதாலேயே அடிகளார் முழுமையாகத் தமிழியலுக்குத் தொண்டாற்றும் வாய்ப்பைப் பெற்ருர், கத்தோலிக்க நெறியின் சிறிய இழப் புத் தமிழியலுக்கு மாபெரும் பேருக அமைந் தது.8 - ܐ܀
இயக்கமும் தமிழ்த்துாதும்
நன்ருகத் தமிழ் செய்யும் ஆணையைப் பெற்றுக்கொண்ட அடி க ளார் ‘புதியதேர் இயக்கம்’ என்ற தமது கனவை நனவாக்கும் வகையில் பல முன்னேடிப் பணிகளை ஆற்றி ஞர். இயக்கம், தமிழ்த் தூது, தொடர்புகள்" வெளியீடுகள், பேரியக்கம் என அவற்றை நிரற் படுத்திக்கூறலாம்.
இயக்கம் என்ற வகையில் அடிகளார் இத் தாலியில் இறையியற் பயிற்சி பெற்றுக்கொண் டிருந்த காலத்தில் (1934, 39) அமைத்த வீர மாமுனிவர் கழகத்தை முன்னுேடி முயற்சி எனக்கூறலாம். பின்னர் 1947இல் அடிகளார் தூத்துக்குடியில் தமிழ் இலக்கியக் கழகத்தை நிறுவிப் பணியாற்றினர். தமிழியற் பணிகளை

Page 5
முறைப்படி மேற்கொண்ட முயற்சியாக இத னைக் கருதலாம். இக்கழகத்தின் சார்பிலேயே 1949, 1950ஆம் ஆண்டுகளில் அடிகளார் உல கத் தமிழ்த்தூதை மேற்கொண்டார். தமிழ் மொழி, தமிழ் ப் பண்பாடு என்பவற்றின் பெருமைகளைப் பிறருக்கு அறிவிக்கவும் பிற பண்பாடுகளுடன் தமிழுக்கும் தமிழ்ப் பண் பாட்டுக்கும் ஏற்பட்ட தொடர்புகளை அறிய வும் தமிழியலுக்குத் தொண்டாற்றும் நிறு வனங்கள், அறிஞர்களுடன் நேர்முகத் தொடர் பினை ஏற்படுத்திக்கொள்ளவும் பிறபண்பாடு களின் சிறப்பியல்புகளையும் பெருமைகளையும் உணர்ந்துகொள்ளவும் அனைத்துலகத் தமிழ்த் தூது அடிகளாருக்குப் பயன்பட்டது. வாழ் நாள் முழுவதும் அடிகளார் தமிழ்த் தூதரா கவே செயற்பட்டார். தமிழகத்தில் வாழ்ந்த அடிகளார் பல்கலைக்கழகக் கல்வித்துறையில் பணியாற்ற ஈழம் வந்தபோது கொழும்பில்
தமிழ்மொழியின் தனிச்சிறப்புகள் ஐந்து
(1) இனிய மொழி, எளிய மொழி, சிறந்த மொழி, பழைய மொழி, தனித்த மொழி என்ற ஐந்து அடைமொழிகளுக்கும் த மிழ் ஒன்றுதான் தகுதியானது.
뜯
를
를
(2) ஐயாயிரம் ஆண்டுகளுக்குமுன்பே இலக்கணம் பெற்றது இம்மொழி.
틀
(3) கண்ணுல் காணப்படாத, மனத் தால் நினைக்கப்படுகின்ற பொருள் களுக்கும் இலக்கணம் கூறுகின்ற அகப்பொருள் இலக்கணத்தைக் கொண்டது.
를
(4) பிற மொழிகளில் காணப்படாத ‘ழ’ என்று ஒலிக்கும் எழுத்தைக் கொண்டது.
를
劃
汉
를
(5) ஒழுக்கத்தை மட்டும் வற்புறுத் திக் கூறும் தனி நூல்கள் பலவற் றைக் கொண்டது.
를
- கி. ஆ. பே. விஸ்வநாதம்.
اجت
LLSLLLLLSOgLLLSLLLLLLLSLLLL SLL

தமிழ்ப் பன்பாட்டுக் கழகத்தை நிறுவித் தமி ழியல் தொண்டைச் செய்தார்.
தமிழியல் ஏடு
தமிழியல் அறிஞர்கள் தங்கள் கருத்துக் களைக் கட்டுரையாக்கி வெளியிட்டுப் பிறரு டைய கருத்துக்களை அறிந்துகொள்ளவும் திற ஞய்வு செய்யவும் வாய்ப்பளிக்கும் ஏடு எதுவும் இருக்கவில்லை. அடிகளார் தூத்துக்குடியில் வாழ்ந்தபோது அமைத்த தமிழிலக்கியக் கழ கச் சார்பில் 1952ஆம் ஆண்டு தமிழ்ப் பண் பாடு (Tamil Culture) என்ற தமிழியல் ஏட்டை வெளியிட்ட்ார். பதினைந்து ஆண்டுகள் வெளி வந்ததாக அறியப்படும் இவ்வேடு தமிழியல் அறிஞர்கள் சந்திக்கும் களமாகவும் கருத்துப் பரிமாறும் அரங்காகவும் அமைந்தது. இதன் மூலம் தனித்தனியாக நெருங்கிய தொடர் பின்றி தமிழியற் பணியாற்றிய அறிஞர்கள் ஒரே அணியில் இணையும் வாய்ப்பு ஏற்பட்டது. தமிழ்த்துரதின் மூலம் அடிகளார் ஏற்படுத்திய தொடர்புகள் "தமிழ்ப் பண்பாடு ஏட்டின் மூலம் வலுப்பெற்றன. இத்தொடர்புகளும் இதனல் விளைந்த நட்புமே பேரியக்கமொன்றை அடிகளார் உருவாக்கத் துணை செய் த ன. அடிகளார் வெளியிட்ட இவ்வேடே இப்போது அனைத்துலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினல் 5uf patia 66 (Journal of Tamil Studies) என்ற பெயரோடு வெளிவருகின்றது.8
தமிழியல் வெளியீடுகள்
தமிழ்ப் பண்பாட்டின் பெருமையையும் தொன்மையையும் உலகம் ஏற்றுக்கொள்ள மறுப்பதற்குச் சங்ககால இலக்கியங்களை அறி யாததே காரணம் என்பதை உணர்ந்த அடி களார் சங்ககால இலக்கியச் சிறப்பை உலகு அறியும் வகையில் ஆங்கிலத்தில் நூல்களை எழுதி வெளியிட்டார். "தொல் தமிழ்க் கவி தையில் இயற்கை", "செவ்வியல் இலக்கியக் காலத் தமிழர் மனிதநேயம்" என்பன அவற் றுட் சில, தமிழியலில் மேற்கொள்ளட்பட்ட ஆய்வுகள் பற்றிய கட்டுரைகள். நூல்கள் என்பவற்றை ஆய்வாளர்கள் அறிந்துகொண் டால் மீண்டும் மீண்டும் ஒரே பொருளில் ஆராய்ச்சி நிகழ்த்துவதைத் தவிர்க்கலாம். முன் வைக்கப்பட்ட கரு த் து க் கள், முடிவுகளை அறிந்துகொண்டால் அவ்விடத்திலிருந்து ஆய் வைத் தொடரலாம். தமிழ்ப்பண்பாடு பற்றிய
25

Page 6
பூரணமான அறிவும் தமிழியல் ஆய்வாளர் களுக்கு வேண்டியிருந்தது. இத்துறை சார்ந்த பல நூல்களையும் தொகுப்புக்களையும் அடி களார் வெளியிட்டார். ‘தமிழியல் ஆய்வு உசாத்துணை வழிகாட்டி (நூல்கள்)", "வெளி நாடுகளில் தமிழியல் ஆய்வு, "தமிழ்ப் பண் பாடும் நாகரிகமும்", "தமிழியல் ஆய்வுகள்? முதலிய ஆங்கில நூல்களையும் அடிகளார் வெளியிட்டார். இம்முயற்சி தமிழியற் பேசி யக்கத்துக்கான மிக முக்கிய முன் நிபந்தனை என்பதில் ஐயமில்லை.
புத்தியக்கப் பின்னணி
கீழைத்தேயவியலாளரின் அனைத்துலகப் பேரவையே (International Congress of Orientalists) தமிழியல் ஆய்வுக்கான களமாக அமைந்திருந்தது. இவ்வமைப்பில் அதற்குப் போதிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எனவே, தமிழியலாய்வுக்குப் புதியதோர் இயக்கம் வேண்டுமென்ற தேவை உணரப்பட்டது. 1958 - 1962ஆம் ஆண்டுக்கிடைப்பட்ட காலத் தில் அடிகளார், வி. ஐ. சுப்பிரமணியம், கமில் வி. சுவெலபில் ஆகியோருடைய கூட் டுறவில் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத் துக்கான சிந்தனைக் கரு உருவானதென்று கரு தப்படுகிறது.7
அடிகளார் இதுபற்றிக் குறித்த அறிஞர் சளுடனும் பிறருடனும் 1958 முதல் ஆராய்ந்த போதிலும் அடிகளாருடைய உள் ளத் தில் டிகியதோர் இயக்கம் 1951இலேயே கருவுயிர்த்து விட்டது என்பதை முன்னர்க் கண்டோம். அடிகளாரே இதனைப் பின்வருமாறு தெளி வுறுத்துகிருர் :
"அனைத்துலகத் தமிழாராய்ச்சி நிறு avgarh (international Association For Tamil Research - IATR) 1964 Faraj fugi) அமைக்கப்பட்ட நிறுவனமாகும் எனினும், ஆணிவேர்கள் 1952இல் 'தமிழ்ப் பண் urt G” (Tamil Culture) 6Tast p srrorTajar டிதழின் வெளியீட்டோடு தொடங்கிய ஒர் இயக்கத்தில் நிலைகொண்டுள்ளன. சென்னை யி ல் 1952இல் நிறுவப்பட்ட தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் கொழும்பில் அதே ஆண்டில் நிறுவப்பட்ட தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் என்பனவும் இவ்வியக் கம் வளர ஊக்கமளித்தன. "தமிழ்ப் பண்
26

பாடு ஏடு, மேற்படி கழகங்கள், அவற் றின் அமைப்பாளர்கள் ஏற்ப்டுத்திய நட் புறவுகள் என்பன மூலம் ஏற்படுத்தப் பட்ட அனைத்துலகத் தொடர்புகள் ஆகி பன மன்றம் உருவாகப் பேருதவி செப் தன.8
அடிகளாரின் இக்கூற்று உண்மை; வெறும் தற் புகழ்ச்சியல்ல என்பதைத் தொடர்ந்து வரும் செய்திகள் உறுதிசெய்யும்.
மூன்றண்டு முயற்சி
"அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் 1964இல் புதுதில்லியில் அமைக்கப்பட்டது” என அடிகளார் ஒரே வசனத்தில் கூறிவிட்டார். ஆஞல், 1981 முதல் 1964 வரை மூன்ருண்டுகள் அடிகளார் ஓயாது, ஒழியாது உழைக்க வேண் டியிருந்தது. தூங்காமை, கல்வி, துணிவு டைமை என்ற மூன்றும் நிலன் ஆள்பவாககு மட்டுமல்ல தமிழ் ஆள்பவர்க்கும் வேண்டுமென் பதை அடிகளார் இக்காலத்திலே ஆற்றிய பணிகள்மூலம் அறியமுடிகின்றது. இம்மூன்று ஆண்டுகளில் அறிவு, உரு, ஆராய்ந்த கல்வி ஆகிய மூன்றுடைய அடிகளார் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தை நிறுவச் செறி வுடன் செய்த வினைகளைச் சிறிது காண்போம்.
தமிழகத்தை நாடினுர்
தமிழியலுக்காகவே தமது வாழ்வை அர்ப் பணித்த அடிகளாருக்குப் பேராசிரியர்ப் பத வியை வழங்கியதன் மூலம் ஈழத்திலோ தமி ழகத்திலோ உள்ள பல்கலைக் கழகத் தமிழ்த் துறைகள் பெருத பெருமையை மலேசியப் பல்கலைக் கழகம் பெற்றுக்கொண்டது. 1961 ஆண்டு தமிழகத்துறைத் தலைவர்களோடும் பேராசிரியர்களோடும் சரியாசனத்திருக்கும் பதவியும் கனமும் கிடைத்ததும் அடிகளார் விரைந்து செயற்படத் தொடங்கினர். எனி னும் அவர் தமிழ்கூறும் நல்லுலகத்தின் "மூத் தவர்களான" தமிழகத்தார்க்கு முதன்மை யளிக்கத் தவறவில்லை. அடிகளார் தமிழகம் சென்ருர், மாண்புமிகு அமைச்சர் சி. சுப்பிர மணியத்தைச் சந்தித்தார். அண்ணுமலைப் பல் கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர், பேரா சிரியர் தெ. பொ. மீனுட்சிசுந்தரஞரையும் தாம் உறுப்பினராக இருந்த சென்னைத் தமி ழாராய்ச்சி வளர்ச்சிக் கழக அலுவலர்களையும்

Page 7
LLLLLLLLLLLOLLLLLLLLLLLLLLLLLOLLLLLLOLLLLLLLL
துறந்தும் துறவாதவர்
**கண்கள் பஞ்சடைந்து போகி றது. கால்கள் நடக்க மறுக்கின்றன. ஆஞல், தமிழ்பற்று இன்னும் என்னே டிருக்கிறது"
- 56f5 Tu 6 u LG6iT
(வேலணையில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில்)
를
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
கண்டார். அவர்களோடு, ஆண்டுக்கொரு முறையாவது சென்னைத் தமிழாராய்ச்சி வளர்ச் சிக் கழக ஆதரவில் உலகெங்குமுள்ள பல்கலைக் கழகங்களின் தமிழ்த்துறைத் தலைவர்களின் மாநாட்டைத் தமிழாராய்ச்சி வளர்ச்சிக் கழ கம் நடத்த வேண்டுமென்றும் அண்ணுமலைப் பல்கலைக்கழகத் தமிழ் த் துறை த் தலைவர் அழைப்பாளராக இருக்கவேண்டுமென்றும் கோரும் கடிதத்தை அடிகளாரும் பேராசிரியர் தெ. பொ. மீ.யும் கழகத்தலைவரான மாண்பு மிகு சி. சுப்பிரமணியத்துக்கு 1961 ஒக்டோ
பர் 27ஆம் நாள் எழுதினர். 28-10-1961இல் "இந்தியன் எக்ஸ்பிறஸ்" செய்தித்தாள் அடி களாருடன் நிகழ்த்திய செவ்வியை வெளியிட் டது. அச்செவ்வி அடிகளாரே இத்திட்டத்தின் தந்தை என்பதை விளக்கும் சான்ருகும்.9 கழகத்தலைவர் தமிழகத்தைவிட்டு நடுவண் அரசின் அமைச்சரானதால் அடிகளார் முயற்சி தடைப்பட்டது.
மலேசியா உதவுமா ?
ஓராண்டு காலமாக எவ்வித முன்னேற்ற மும் ஏற்படாததால் அடிகளார் தாமே செயற் படமுனைந்தார். இந்தியாவில் அல்லது மலேசி யாவில் தமிழ் த் துறை த் தலை வர் க ள் மாநாட்டை நடத்த மலேசிய உதவி கிடைக் குமா என்பதை ஆராய முயன்ருர். இதன் பயனுய் 1962 ஓகஸ்ற் 12ஆம் நாள் மலேசியத் தேசிய கல்வி (இந்தியர் பாடசாலைகள்) வளர்ச் சிச் சபைச் செயலர் வி. செல்வநாயகம் இல் லத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. அடிகளார் கூட்டத்தின் நோக்கங்களை விளக்கினர். சபை

யின் தலைவரும் மலேசிய அமைச்சருமான மாண்புமிகு வி. மாணிக்கவாசகம் கூட்டத்திற் கலந்துகொண்டார். அடிகளாரின் கருத்துக்களை வரவேற்று நிதியுதவிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இக்கூட்டமே 1966 ஆம் ஆண்டு மலேசியாவில் வரலாற்றுப் பெருமைமிக்க முதலாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்குக் கால்கோளாக அமைந்தது. 'தமிழகம் செய்ய முடியாத உலகச்சாதனையை மலேசியா செய்தது" என்று தமிழக ஏடுகளே மலேசிய மாநாட்டைப் பாராட்ட இக்கூட்டமே வழி வகுத்தது.
மீண்டும் தமிழகத்தில்....
கீழைத்தேயவியலாரின் இருபத்காருவது அனைத்துலகப் பேரவை 1964 சனவரியில் புது தில்லியில் நடைபெறவிருந்தது. இம்மாநாட் டுக்கு வரும் தமிழ், திராவிடவியலாளர்களைச் சென்னை க் கும் அழைத்துத் தமிழியல் மாநாட்டை நடத்துவதன் மூலப்பொருளாதார நெருக்கடியைத் தவிர்க்க அடிகளார் விரும்பி ஞர். 1963 ஓகஸ்ற் திங் களி ல் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு. ம. பக்தவத்சலம் தலைமையில் நடை பெற்ற தமிழாராய்ச்சி வளர்ச்சிச் சபைக்கூட்டத்தில், அடிகளார் 1964 சனவரியில் தமிழியலாய்வு மாநாட்டை நடத் தும் தமது திட்டத்தை முன்மொழிந்தார். அடிகளாரின் முன்மொழிவு ஏற்கப்பட்டது. மாநாட்டுப் பொறுப்பு தமிழ் வெளியீட்டுக்
கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
மீண்டும் ஒரு தோல்வி :
1964 சனவரி மாநாடு பற்றித் தமிழ் வெளியீட்டுக் கழகச்சார்பில் அ. ச. ஞான சம் ந்தன் அடிகளாருக்குப்பல அஞ்சல்களை எழுதினர். இவ்வகையில் முதற்கடிதம் 1963 ஒக்ரோபர் 31 ஆம் நாள் எழுதப்பட்டது. கீழைத்தேயவியலாளர் பேரவையிற் கலந்து கொள்ளும் திராவிடவியலாளர் பட்டியலைப் பெற மேற்கொண்ட முயற்சிகளைக் குறிப்பிட்டு, அடிகளா ரே அப்பட்டியலைத் தரவேண்டும் என்று கேட்டிருந்தார். புதுதில்லி மாநாட்டு இணைச்செயலாளர் பேராசிரியர் தண்டேகார் நடுவண் அமைச்சர் மாண்புமிகு குமாயூன் கபீர் ஆகியோரிடம் கேட்டுப் பயன்கிடைக்காத தாலேயே அடிகளாரின் துணையை அ. ச. ஞா.
27

Page 8
நாடிஞர். அடிகளார் உடன் பதிலளித்த போதிலும் கடிதம் தொலைந்துவிட்டது. மீண் டும் அ. ச. ஞா. புதுதில்லி மாநாட்டு இணைச் செயலரான திருமதி கபிலா வத்ஸ்யாயணுவுக் கும் அமைச்சருக்கும் கடிதம் எழுதினர். 1963 டிசெம்பர் இரண்டாவது வாரத்திலேயே பட்டியல் தரமுடியுமென அவர்கள் கூறினர். இதனுல் செயலற்ற நிலை தோன்றியது. தேவை யான நிதியைப் பெறக்கூடிய ஏற்பாடுகளும் இருக்கவில்லை.
எனினும், 1963 நவம்பர் 28ஆம் நாள் சென்னை, அண்ணுமலை நகர், மதுரை ஆகிய இடங்களில் 13-01 - 1964 முதல் 17-01 - 1964 வரை (16ஆம் திகதி நீங்கலாக) நான்கு நாட் கள் நடைபெறவுள்ளன "உலகத் தமிழ் மகா நாடு" பற்றி அடிகளார் அமைப்பாளரிட மிருந்து ஒரு கடிதத்தைப் பெற்ருர். "அனைத் gavs 2. L-gy6MypL’ùy” (international Collaboration) என்ற பொருளில் அடிகளார் இருபது நிமிடங்களுக்குக் கட்டுரை படிக்க வேண்டு மென்று பணிக்கப்பட்டார். ஆணுலும், மாநாட் டுத் திட்டம் மெளனமாகவே கைவிடப்பட் هlسt
தோற்றது ஏன்?
இரண்டு ஆண்டுகள் தமிழகத் தலைவர் களும் அறிஞர்களும் முயன்றும் 1964 சனவரி யில் தமிழ் வெளியீட்டுக் கழகத்தால் நடத்த முடியாமற் போய்விட்டது. இது ஏன் நிகழ்ந் தது?" சென்னையில் நடைபெறவிருந்த முத லாவது மாநாடு மிகப் பல காரணங்களால் நடைபெறவில்லை" என அடிகளார் மலேசிய மாநாட்டு நிகழ்ச்சித் தொகுப்பிற் குறிப்பிட் டுள்ளார். 19 மாநாட்டு அமைப்பாளர்களிடம் தொலைநோக்கும் தி ட் டமிடும் ஆற்றலும் இருக்கவில்லை; மாநாட்டின்நோக்கும் பயனும் செயற்பாடுகளும் பற்றிய சாதகமான மனப் போக்கும் அவர்களிடம் இருக்கவில்லை. சாதனை யில் நம்பிக்கையற்ற நிலையில் திணிக்கப்பட்ட பணியைக் கடமைக்காக அவர்கள் நிறைவேற்ற முயன்றனர். இவ்வுண்மை பின்னர் 1964 சன வரி 7ஆம் நாள் புதுதில்லியில் வெளிப்பட்டது. நடைபெற்ற ஐந்து அனைத்துலகத் தமிழா ராய்ச்சி மாநாடுகளில் மூன்று மலேசியா, பிரான்சு, இலங்கை ஆகிய நாடுகளில் நடந் தன. இரண்டு மாநாடுகள் தமிழகத்தின் திரா விட இயக்க அரசுகளால் நடத்தப்பட்டன.
28

தமிழ்நாடு காங்கிரசு அமைச்சரவையால் முதல் மாநாட்டை நடத்த முடியவில்லை. இவை LDTBrt G) கருச்சிதைவடையக் காரணமான சூழலே விளக்கும்;
களத்தில் அடிகளார்
"எடுத்த காரியம் யாவினும் வெற்றி" என்ற கோட்பாட்டைக் கொண்ட அடிகளார் தூங்கிவிடவில்லை. கீழைத்தேயவியலாளரின் 26ஆவது அனைத்து லகப் பேரவை தரும் வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்துவது என அடிகளார் உறுதி பூண்டார். "தமிழ் கூறும் நல்லுலகம்", ’அனைத்துலகப் பொதுப் பண்பாடு" ஆகிய இரு கோட்பாடுகளிலும் நம் பிக்கை கொண்ட பலர் புதுதில்லி வர அடி *ளார் மறைமுகமாகச் செயற்பட்டார். 11 இம் 90 "அனத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம்’ (IATR) என்ற பெயரில் ஓர் இயக்கத்தை நிறுவ *4-க்ளார் முடிவுசெய்தார். 1964 சனவரி ஆம் நாள் புதுதில்லிக்கு வந்திருந்த தமி பூழியல் அறிஞர்களின் கூட்டத்தை நடத்த அடி *ளார் திட்டமிட்டார். தமிழகத்தை மீண்டும் முன்னணியில் விட அடிகளார் விரும்பினர். அனைத்துலக அடிப்படையில் அவமானத்தைத் தேடிக்கொண்டதாலும் உ ருவாக விருக்கும் மன்றத்தின் மதிப்பைச் சரியாக உணர்ந்து கொள்ளாததாலும், 12 தமிழக அறிஞர்கள் முன்னிலையில் நிற்கவிரும்பவில்லை. தமிழகத் திற்குப் பதில் கேரளம் அடிகளாருடன் இணைந் தது. கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரா சிரியர்,வி. ஐ. சுப்பிரமணியம்" கட்டத்திற் கான இணை அழைப்பாளராக அடிகளாருடன் ஒப்பமிட்டார். பேராசிரியர் ஜீன் பிலியோசா (பிரான்சு) பேராசியர் ஃப பி. யே. குய்ப் பர் (லெய்டன்), கலாநிதி வி. சுவெலபில் (செக்கோசிலவாகியா), கலாநிதி ஆர். ஈ.
Marin
حبر ہی حبرہم حبرس ہی حبر ہیبسبرہم sحیرہ مبرمحمحمحمحمحمحمحمحمحمح^
"நீதியென்ற கட்டிடத்தை இடித் துக்கொண்டு "நாம் நீதி க்காக ப் போராடவேண்டும்" என்று கூறுகின்ற
சிலரைப் பார்த்து நீதிமான்கள் வியப் புறுகின்றர்கள்"
- "எண்ணரங்கள்?
AINMNE
^-----------s^---------“------

Page 9
ஆஷர் (லண்டன்) முதலிய வெளிநாட்டுத் தமிழியலறிஞர் உட்பட இருபத்தாறு பேரறி ஞர்கள் இக்கூட்டத்திற் கலந்தனர்.
முன்மொழிவும் எதிர்மொழிவும்
அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றக் கால்கோல் விழா 1964 சனவரி 7 ஆம் நாள் புதுதில்லி விஞ்ஞான பவனின் முதலாம் மாடி யில் "எஃப்" அறையில் மிக எளிமையாக நடை பெற்றது. பேராசிரியர் தெ. பொ. மீனுட்சி சுந்தரனர் கூட்டத்திற்குத் தலைமைதாங்கினர். அடிகளார் சிறப்புக் கூட்ட்த்தின் நோக்கங்களை விரித் தரைத்தார். யாழ்ப்பாணத்துத் திருநெல் வேலியில் தமிழ்ப் பெருங்குடி மக்கள் முன், 1951ஆம் ஆண்டு "புதியதோர் இயக்கம் வேண் டும்" என்ற விருப்பை முன்மொழிந்த அடி களார் 1964 சனவரி 7இல் பாந்து விரிந்த தமிழ்கூறும் நல்லுலகத்துத் தமிழியற் பேரறி ஞர் முன் ‘அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் நிறுவப்படவேண்டும்" என முன் மொழிந்தார். கலாநிதி கமில் வி. சுவெலபில் அதனை வழிமொழிந்தார். அடிகளாரின் முன் மொழிவு எளிதாக நிறைவேறிவிடவில்லை. சென்னைப் பல்கலைக்கழக இந்தி உயர் விரிவுரை யாளர் (Reader) சங்கர் ராஜ் நாயுடு 'திரா விட மொழிகள் அனைத்தையும் ஆய்வு செய்யக் கூடியதாக அம்மன்றம் அனைத்துலகத் திராவிட ஆராய்ச்சி மன்றமாக அமையவேண்டும்" எனத் திருத்தம் முன்மொழிந்து சலசலப்பை ஏற்படுத்தினுர்.
பேரியக்கம் பிறந்தது.
அமைப்பாளர்கள் தாம் கூட்டம்கூடிய நோக்கத்தை மீண்டும் விளக்கினர்கள். 'திரா விட மொழிகளின் ஒப்பியலாய்வு என்ற நோக் கத்திற்குத் தனியமைப்பை நிறுவலாம். குறித்த சிறப்புக் கூட்டம் தமிழியலாய்வுக்கு ஊக்க மளித்து, முன்னேற்றவே கூட்டப்பட்டது. தமி ழியல் ஆய்வில் நாட்டங்கொண்டவர்களை மட் டுமே இக்கூட்டத்திற்கு அழைத்திருக்கிருேம்" என அழைப்பாளர்கள் விளக்கமளித்துத் தமி ழாராய்ச்சி மன்றம் நிறுவ வழிவகுத்தனர்.
மன்றத்தின் தலைவராக ஜின் பிலியோசா தேர்ந்தெடுக்கப்பட்டார். தெ. பொ. மீனுட்சி சுந்தரர்ை, மு. வரதராசனுர், தோ. பருே, எம். பி. எமனுே, எஃப். பி. யே. குய்யபர் ஆகி

யோர் துணைத்ததலைவரானர்கள். கமில் வி. சுவெலபிலும் தனிநாயகம் அடிகளாரும் இணைச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
'திராவிடயலிற் பொதுவாகவும் தமி ழியலிற் சிறப்பாவும் ஆய்வை ஊக்குவிப்பதும் அவ்வாய்வுளை ஒன்றினைத்து மேலும் வளர்ப் பதற்கு உதவுவதும்" நோக்கமாகக் கொண்ட அனைத்துலக மன்றத்தை நிறுவிய பெருமை, அதன் தந்தை என்ற மதிப்பு அடிகளாருக்கே உரியது என்பதை இம்மன்ற வரலாறு காட்டு கிறது,
அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றதீைத இடைவிடாத முயற்சியின் மூலம் நிறுவி,
இதனை இதனுல் இவன்முடிக்கும்
என்ருய்ந்து அதனை அவன்கண் விடல்
என்ற பொய்யாமொழி இலக்கணத்துக்கு இலக் கியமானவர் அடிகளார். அனைத்துலகத் தமி ழாராய்ச்சி மன்றத்தை நிறுவி, அம்மன்றம் கடந்த காலத்தில் பெரும்பயன் விளைத்த ஐந்து உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளை நடத்த வழிவகுக்குமாறு அடி க ளா ரை விட்டவர் யார்? “என்னை நன்முக இறைவன் படைத் தனன் தன்னை நன்ருகத் தமிழ்செய்யு மாறே" என்ற அடிகளாரின் மேற்கோளைவிட இதற்குப் பதில் ஏது? W
தனி நாயகம்.
"இ ரா மனி ருக்கு மி டம் சீதை க்கு அயோத் தி" என்பதுபோல் அ டி க ளார் வாழ்ந்த - பணியாற்றிய - இடமே அனைத்துல கத் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடைபெறும் இடமென்பதை மலேசிய, பிரான்சிய, ஈழ மாநாடுகள் நிரூபித்தன. நடைபெற்ற ஐந்து மாநாடுகளில் நான்கு மாநாடுகள் அடிகளாரின் முயற்சியோடு, அவரது வழிகாட்டலோடு நடைபெற்றன. "மலையென வந்த தடைக ளெல்லாம் அடிகளாரது விடாமுயாற்சி என்ற தீயினில் தூசாகியதால் அவர் மறைந்தபின் ஐந்தாவது மாநாட்டை எவ்வித சிக்கலுமின் றிச் சிறப்பாக நடத்தமுடிந்தது. அடிகளார் அமைத்த பலமான அடிப்படையே இதற்குக் காரணம் என்பது உறுதி.
கலாநிதி ஆர். ஈ. ஆஷர் கூறுவதுபோல அடிகளாரைத் தவிர வேறெவராலும் இப் பணியைத் தனி யொ ரு தலைவராக - தனி நாயகமாக - நி ன் று ஆற்றியிருக்கமுடியாது என்பதை மன்றம் உருவான வரலாறு காட்டு கிறது. அடிகளாரின் பணியால் கீழைத்தேய வியலாளர் உள்ளங்களில் தமிழின் பெருமை
29

Page 10
பற்றிய சரியான விளக்கம் ஏற்பட்டுள்ளது. இதுவே அடிகளாருக்குரிய உயரிய நினைவுச் சின்னமாகும். 13
காப்பது கடமை.
அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் * ஆற்ற நினைத்த மிகப்பல பணிகளில் கச் சிலவற்றையே ஆற்றியுள்ளது. எனவே, மன்றம் தொடர்ந்து நிலைபெறவேண்டும். மன் றத்தில் உறுப்பினராக உள்ள தமிழ்க்காதலர் அனைவரும் தமிழரல்லர். பல்வேறு நாட்டினர்; பல்வேறு மொழியினர்; பல்வேறு மதத்தினர்; பல்வேறு அரசியற் சார்பினர். எனவே, இவர் கள் சிலவேளை வெவ்வேறு திசைகளிற் செல்ல நாடலாம். அனைவரையும் ஒரு குறிக்கோளை நோக்கி ஒற்றுமையாக இயங்கவைப்பதில் அடி களார் வெற்றிகண்டார். சில சுயநலமிகளின் போக்காலும் அரசின் தலையீட்டாலும் மன் றம் செயலற்றுப்போக நேருமா என்ற ஐயம் ஈழத்தில் நடைபெற்ற நான்காவது மாநாட் டின்போது ஏற்பட்டது. இரண்டாவது, ஐந் தாவது மாநாடுகளின்போது “உலகத் தமிழா ராய்ச்சி மாநாட்டு’க் காலங்களில் தமிழக அரசு “உலகத் தமிழ் மாநாடு"களை நடத்தியது. இரண்டையும் ஒன்றென மயங்கி மன்ற்த்தின் மீது கண்டனக் கணைதொடுத்தோர் சிலர். அடிகளாரையும் மன்றத்தின் நோக்கங்களையும் பின் தள்ளிவிட்டுத் தமிழகம் செயற்பட முயன்
அடிக்குறிப்புகள்
1. Zvelebil, Kamil V., “The Spir:
Theepan Institure, Jafna. 1983. 2. Asher, R. E., IATR : The Out
IntereST.” BID. P. 45. 3. தனிநாயகம் அடிகளார், தமிழ்த்தூ
கண்டி, 1962. பக். 28 - 29. 4. மு. கு. பக். 29. 5. Joachimpillai, Rev. Fr. C. A.,
Way of Looking at Fr. Thani Rajan Philipupillai, "A Biograph 6. Subramaniam, V. I., “His Long
P. 43. 7. Zvelebil, Kamil V., IBID. P. 41 8. Thani Nayagam, Rev. Xaviers., P NATIONAL CONFERENCE SEM IATR, Madras. 97 P. 874.
9. untridis; PROCEEDINGS OF T V− NCE SEVINAR OF Kuala Lumpur. 1969. 10, IBID. P., 879. 1 1. Zvelebil, Kamil V., TBIB P. 42. 12. Subramaniam, V. I., T BID P. 43 13. Asher, R. E , IBI D Pp. 45 - 46. 14. Emeneau, M. B., IBID. P. 27.
30

றதும் புதிய அமைப்புக்களை நிறுவியதும் மன்
றத்தின் எதிர்காலம் பற்றிய சில ஐயங்களைத்
தோற்றுவிப்பது இயல்பே. இவற்றின் சுருக்க
மாகத் தமிழியல் வரலாற்றில் புரட்சி செய்த -
பெருமை சேர்த்த - பேராசிரியர் எம்.
எமனே கூறுவது இங்கு நினைவுகூரத்தக்கது:
"அடிகளாரின் தோல்வி காணுத அமைதி யும் ஆற்றல்மிக்கதும் எழுச்சி தருவது மான செயலாட்சித் திறனுமே அனைத் துலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளின் பன்முகப்பட்ட பணிகளின் வெற்றிக்குக் காரணமாகும். அவரது ஆற்லல் கோலா லம்பூரிலும் பாரிசிலும் புலப்பட்டது. எனினும் அவர்களது செயலாட்சியின் திறன் சென்னையிலும் யாழ்ப்பாணத் திலும் நடந்த இன்னல் நிறைந்த மாநாடு களில் நன்கு உணரப்பட்டது. சில வேளை களில் வேறுபட்ட திசைகளிற் செல்ல நாடும் குதிரைகளைக் கட்டியாண்டு அனைத் துலகத் தமிழாராய்ச்சி மன்றம் என்ற தேரைச் செலுத்துவது எளிதான பணி
பல்ல. ? ?14
பேராசிரியர் எமனேவின் எச்சரிக்கையைப் புரிந்துகொண்டு, தமிழியல் ஆய்வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு, "தந்தை"யின் வழியில் தமி ழாராய்ச்சி மன்றத்தை நடத்துவது தமிழிய லாய்வுத் "தணயர்களின் தலையாய பணியா (eld.
tual, Father of IATR”, TAMIL ARAM, P. 42. come of His Original Inspiration and Sustained
து, கலைவாணி புத்தக நிலையம், யாழ்ப்பானம் +
“The Grace of Experiencing Natue - One Nayagam's Life”, TAMIL ARAM, P. 13. ical Sketch”, IBI] D Pp. 4 - 5.
Lasting Revolution in Tamil Studies', IBID.
ROCEEDTNGS OF THE SECOND TNTERMINAR CF TAM IL STUDIES - 1968· VOL. I.,
HE FIRST INTERNATIONAL CONFERETAM IL S 1 U DIES - Tr^ K VOL II, IATR, ... 874.

Page 11


Page 12