கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொடர்பு 1992.12/1993.01

Page 1


Page 2
நுகர்வோரின் வசதிக்காக . . . . . . கிறிஸ்மஸ் கிறிஸ்தவர்கள் 0YYLLLYLLLLLL000000LLLLLLL0LLLLLLLL0LLLLLLLLL0L0LLL00YLLLL கிறிஸ்மஸ் செய்தி ! LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL0LLLLLLLLLL0LLLLLL0L00LL0LL0LL0L பிறந்தவர் இன்றிப் பிறந்த நாள் விழாவா? . நமக்கு ஒரு பாலகன் பிறந்தார் . 2 இயேசு பாலனுக்கு உன் காணிக்கை என்ன? . 16
கவிதைக் களம் கிறிஸ்துவை உணர்ந்தபோது "அன்று பிறந்த நாதனே "- வாழ்த்துகின்றோம் ! வாசகர் பார்வையில் - தொடர்பு புத்தாண்டின் புதிய எதிர்பார்ப்புகள் கிறிஸ்துவை ராஜாவாக்குதல் இது என்ன ?
இத் தொடர்பு . . . . .
* இயேசுகிறிஸ்துவை' அறியாதவர்கள் அவரைப் பற்றி அறிந்து
கொள்வதற்கும்.
* இயேசுகிறிஸ்துவை அறிந்துகொண்டவர்கள் விசுவாசத்தில்
வளர்ச்சி பெறுவதோடு, அவருடைய சாட்சிகளாக விளங்குவதற்கும்.
* இயேசு கிறிஸ்துவை அறிந்துகொண்டு, அவரைப் பின்பற்றி
சமூகத்திற்குப் பயன்படும் நற்பிரஜைகளாகப் புறப்படுவதற்கும்.
* எமது இலவச வேதாகம அஞ்சல் வழிக்கல்வி நிலைய -
BIBLECOR - மாணவர்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதற்குமாகும்.
நீங்கள் வீடு மாறினால். இன்றே உங்கள் புதிய முகவரியை எங்களுக்கு அறிவியுங்கள் !! (பழைய முகவரியையும் இணைக்க மறவாதீர்கள்)
 
 
 

இதழ் - 7 மார்கழி - "92 தை - 9
--
வாசக நேயர்களுக்கு, -
வல்ல இயேசுவின் நாமத்தில் நத்தார் - நவ வருட வாழ்த்துக்கள்.
1991 கிறிஸ்மஸ் நாளில் எமக்குள் ஏற்பட்ட இத் தொடர்பு இத்துணை நெருக்கமாகி - புதிய ஆண்டொன்றுள் எம்மை வழிநடத்திய கர்த்தருக்கு மகிமை யுண்டாவதாக.
ஏதேனில் இன்பமான வாழ்வு பெற்றிருந்த ஆதாம் இடையில் ஏற்பட்ட அனர்த்தத்தால் விருஷங்களுக்குள்ளே பதுங்கிய போது இறைவன் அவனை இப்படி வினவினார்.
* நீ எங்கே இருக்கிறாய்? (ஆதி.5:9)
வறுமையில் வாடிய லாசரு ஆபிரகாமின் மடியில் விடப்பட்டான். இது இயேசுவின் உவமை. சிறுமையில் வாழ்ந்த ஆகார் ஆபிரகாமுடன் வாழ விடப்பட்டாள். இது ஆதி வரலாறு. ஆனால் அவளோ, தனக்கருளப்பட்ட வாழ்வினின்றும் ஒதுங்கினாள். ஓடிப்போனாள். அப்பொழுது ஆண்டவர் அவளிடம் இப்படிக் கேட்டார். -
* எங்கேயிருந்து வருகிறாய்? * எங்கே போகிறாய்? (ஆதி. 16:8) ஆண்டொன்றைக் கழித்து அடுத்த ஆண்டுக்குள் பிரவேசிக்கும் நாம், கர்த்தர் அன்று வினவிய அதே முன்று வினாக்களையும் நம்மிடமே கேட்டுப் பார்ப்போம்.
* நான் எங்கேயிருந்து வருகிறேன்? * எங்கே இருக்கிறேன்? * எங்கே போகிறேன்?
கர்த்தர் தாமே நம்மனைவரையும் தமக்குகந்த பார்த்திரமாகப் பாவிக்க நம்மை அர்ப்பணிப்போமாக.
- கிறிஸ்துவின் பணியில்,
தேவதாசன் ஜெயசிங்( 1)

Page 3
பணிப்பாளரிடமிருந்து.
(கிறிஸ்மஸ் கி றிஸ்தவர்கள்)
"கிறிஸ்மஸ் முடிவடைந்து விட்டால் எல்லாமே நிறைவு பெற்று விடும். எனவே, இருப்பிலுள்ள எல்லாப் பொருள்களையும் வெளியேற்றுவது நம்மீது விழுந்த கடமையாயிருக்கிறது’
இது பண்டகசாலை முகாமையாளர் ஒருவரின் குரல்.
கிறிஸ்மஸை ஒரேநாளில் தீர்த்துக் கட்டி விடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். கிறிஸ்துவின் பிறப்புக்கு அதி முக்கியத்துவம் கொடுத்து அந்நாளைக் கொண்டாடி முடித்தபின்னர் அப்புறம் அவரைப் பற்றிய சிந்தனை எதுவுமே இருப்பதில்லை. இத்தகைய வகுப்பினரைக் குறித்து கர்த்தருடைய ஊழியர் ஒருவர் பின்வருமாறு குறிப்பிட்டார்.
"கிறிஸ்மஸ் கிறிஸ்தவர்கள்" என்போர் ஒரு வகையில் வரையறுக்கப்பட்ட கிறிஸ்தவர்களே. இவர்கள் இயேசு கிறிஸ்துவை ஒரு குழந்தையாக - பத்திரமாக - முன்னணையிலே அல்லது தொட்டிலிலே உள்ளடக்கி வைக்க முயலுபவர்கள். அதேசமயம் ஆசீர்வாதமான அரிய பெரும் காரியங்களை இழந்து விட்டவர்கள். அது அவர்களது வாழ்வின் அமைப்பிலும் பணிகளிலும் அடங்கியிருக்கிறது. பெத்லகேம் என்பதற்குப் பொருள் உண்டு. ஆகவே (அவருடைய பிறப்பினை மட்டுமல்ல) அவரது மரணத்தையும் நாம் உங்கு இணைத்து நோக்க வேண்டும்"
உண்மை என்னவெனில், கிறிஸ்மஸ் என்பது ஓர் ஆரம்பமே. சிலுவைக்கு முன்னடையாளமான - முதற்படியாக அது அமைகின்றது. எப்பொழுதுமே பெத்லகேமின் பாலனாக இருந்து புகழப்படுவதற்காக இயேசு உலகத்துள் வரவில்லை. கல்வாரியை நோக்கிச் செல்லும் கிறிஸ்துவாகவே அவர் வந்தார். பாவக் கட்டிலிருந்து எம்மை மீட்டெடுத்தது அவருடைய இரத்தமேயொழிய அவரது பிறப்பு அல்ல. எனவே, "கிறிஸ்மஸ் கிறிஸ்தவர் ' என வருணிக்கப்படுவோர் சுவிசேஷ நற்செய்தியின் சரியான தன்மையை

இன்னமும் உணர்ந்து கொள்ளவில்லை யெனக் குறிப்பிடுதலே பொருத்தமாகும். தேவன் இயேசு கிறிஸ்துவை வேடிக்கைக்காகவோ, அல்லது வெறுமையாகவோ இவ்வுலகுக்கு அனுப்பினார் என்பதல்ல இந் நற்செய்தி. ஆகப் பெரிய அற்புதம் அது. அதாவது, தேவன் உலகுக்கு ஓர் இரட்சகரையே அனுப்பினார்.
உண்மையில் இதை பூமியிலே நிகழ்ந்த கிறிஸ்துவின் ஊழியத்தின் பலதரப்பட்ட நிலைகளுக்கும் பூமிக்கு மேலாக நிகழ்ந்த பணிக்கும் இடையிலான ஆழ்ந்த அறிவுள்ள ஒரு தொடர்பு என்று கூறலாம். அதிசயமான அவரது பிறப்பு - பாவமற்ற அவரது ஜீவியம் - அதிகார தோரணையிலான அவரது போதனைகள்,
ஆச்சரியமான அவரது அற்புதங்கள், மலைப்பை யேற்படுத்தக் கூடிய அவரது மரணம்,மரணத்தை வெற்றி கொண்ட அவரது உன்னத உயிர்த்தெழுதல், பகிரங்கமான அவரது பரமேறல், தொடர்ந்து பரலோகில் அவரது பணி. இவையெல்லாம் அவரது தீர்க்க்ாலோசனையெனும் திட்டமிடப்பட்ட பொற்சங்கிலியில் பொருத்தப்பட்ட வளையங்களாகும்.
எனவே, கிறிஸ்மஸ் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் பிறப்பில் உள்ள முழுமையான கருத்தினைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. அவர் ஒரு பாலகனாக தொட்டிலுக்குள் அடக்கப்படக் கூடியவரல்ல; மாறாக, எம்மைப் பாவப் பிடியிவிருந்து மீட்டெடுக்கும் சிலுவைப் பலியின் ஆட்டுக்குட்டியாக இருக்கின்றார்.
அன்பர்களே, இத்தகைய ஜீவியத்தைக் குறித்து இக் கிறிஸ்மஸ் நாட்களில் எச்சரிக்கையாயிருங்கள். ஒரு நாளில் கொண்டாடி முடித்துவிடக் கூடிய ஒரு பண்டிகையல்ல கிறிஸ்மஸ். அது எமது மீட்புப் பணிக்காக அருளப்பட்ட மகத்துவமான காலப்பகுதியில் வரும் ஒரு நாளாகும். என்பதை நாம் ஒவ்வொரு வரும் இந் நாட்களில் நினைவு கூருவோம்.
சர்வ வல்லவரின் ஆசீர்வாதம் சகல நாட்களிலும் உங்களுடனே கூட இருப்பதாக,
உங்கள் ஊழியன்,
அருள் திரு. ஆர். துரைராஜா,
( 3 )

Page 4
(கிறிஸ்மஸ் செய்தி)
"எல்லா ஜனத்திற்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் - ஒரு நற் செய்தி" (Pastor - எஸ். ஜே. பத்திநாதன், வட்டுக்கோட்டை)
இன்றைய இலங்கை வாழ் ஜனங்கள் யாவரும் ஒரு நல்ல நற் செய்தியைக் கேட்பதென்றால், அருமையிலும் அருமையாகவே இருக்கிறது, என்று கூறுவது மிகையாகாது. தினசரி பத்திரிகைகளைத் திறந்து வாசித்தால், இலங்கையில் மட்டுமல்ல; உலகின் பல பாகங்களிலும், கொலைகள், கற்பழிப்புகள், கொள்ளைகள், களவுகள், யுத்தம், யுத்தங்களின் செய்திகள், யுத்த அழிவுகள், திடீர் மரணங்கள், விபத்து மரணங்கள், இயற்கையின் அழிவுகள், பூமியதிர்ச்சி, பஞ்சம், கொள்ளை நோய்கள், அரசியல் குளறுபடிகள். இவைகளையே ஒரு (Bad news) துர்ச் செய்திகளாக வாசித்து வருகிறார்கள். இதனால் இந்தப் பூமிவாழ் ஒவ்வொரு வருடைய இரு தயங்களும் , சந்தோஷமில்லாமல் பயத்தினால் இன்று என்ன நடக்கும்? நாளை என்ன நடக்குமென இருள் சூழ்ந்த உலகத்தில் கலங்கித் தவிக்கிறார்கள். எல்லா ஜனங்களும், ஏகமாய்த் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். (ரோமர்,7:24 ல்) பவுல் எழுதிய பிரகாரம்:- " நிர்ப்பந்தமான மனுஷன் நான், இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? என்று சந்தோஷம், விடுதலைஇல்லாமல் கலங்குகிறார்கள்.
இந்தச் சமயத்தில் நமது கைகளில் தவழும் பரிசுத்த வேதாகமம் நமக்குக் கூறுவதென்ன? 'கலங் காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகள் எல்லாம் சம்பவிக்க வேண்டியதே. ஆனாலும் முடிவு உடனே வராது’ என்றும், இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம் எனவும் விபரமாக தேவ வார்த்தை எச்சரிக்கிறதை (மத், 24:6ம் 8ம்) வசனங்களில் காணக் கூடியதாகவும் இருக்கிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில், இப் பூமி வாழ் ஜனங்கள் யாவரும் பயம்
பீதியுடன், இருதயம் பலட்சயமாய்ப் போயிருக்கும் வேளையிலே
1992 ம் ஆண்டின் இந்த இறுதி மாதத்திலே நமக்கு ஒரு
நற்செய்தி"யை கர்த்தருடைய தூதன் கொண்டுவந்திருக்கிறார்!
I 4)

அந்த " நற்செய்தி" என்ன?
லூக்கா, 2:11ஐ) வாசித்துப்பாருங்கள், "இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” என்பதே.
"அல்லேலூயா!'
இந்த நற்செய்தி” கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல; உலகில் வாழும் எல்லா ஜனத்திற்கும், என்பது (லூக்கா, 2:10)ல் கூறப்பட்டுள்ளது, அதுமட்டுமல்ல! கிறிஸ்து என்னும் இரட்சகர் (உங்களுக்கு) என்றும் தேவதூதன் கூறியது, மேய்ப்பர்களை மாத்திரமல்ல; எல்லோரையும் குறிக்கிறது என்பதில் ஐயமில்லை எனலாம்.
ஆம்! அன்பான சகோதரர்களே! பல விதமான இன்னல்களிலும் பயத்தின் மத்தியிலும் இருள் சூழ்ந்தபடி பாவ இருளானது, விஸ்வரூபமெடுத்துத் தலை விரித்துத் தாண்டவமாடிக் கொண்டிருக்கும் நமது மத்தியிலே நமக்குச் சந்தோஷத்தை, சமாதானத்தை, புதிய ஜீவ ஒளியைத் தந்து நம்மை இரட்சிப்பதற்காகவே இயேசுக் கிறிஸ்து என்னும் இரட்சகர் இவ்வுலகில் வந்தார்திவ்விய பாலகனாகப் பிறந்தார். அவர் "இம்மானுவேல் "தேவன்! நம்மோடிருக்கிறார்" (மத், 1:23) அல்லேலூயா!'
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் பாத்திரமானது' என்று அப், பவுலடியார் (தீமோ, 1:15ல் எழுதியது, எத்தனை நன்மை யென்பதைப் பார்த்தீர்களா?
ஆகவே கிறிஸ்மஸ் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, இந்த உலகில் வாழ் எல்லா ஜனங்களுக்கும், இயேசு இரட்சகராகப் பிறந்திருக்கிறார். (லூக், 19:10) இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்’ (லூக், 19:10)
(5)

Page 5
இந்த நல்ல நாளிலே "எல்லா ஜனத்திற்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் இந்த நற்செய்தி மிகுந்த ஆசீர்வாதமாக இருக்க, கர்த்தத்துவம், உள்ளவரும், அதிசயமானவரும், ஆலோசனைக் கர்த்தரும்வல்லமையுள்ள தேவனும், நித்தியபிதாவும் சமாதானப்பிரபுவுமாகிய எங்கள் அருமை அன்பு இரட்சகர் உங்கள் யாவருக்கும், சமாதானத்தையும் சந்தோஷத்தையும், ஆசீர் வாதத்தையும், பொழிந்தருளு வாராக,
அல்லேலூயா!
பூமியின் எல்லைகளில் உள்ளவர்கள் எல்லாரும் நமது தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்” (ஏசாயா, 52:10) "தீவுகளே (SRI LANKA) எனக்குச் செவி கொடுங்கள் தூரத்திலிருக்கிற ஜனங்களே, (ABROAD) கவனியுங்கள்." (gJ 3gF fTuu nr, 49:l) -x -C -x
பிறந்தவர் இன்றிப் பிறந்த நாள் விழாவா?
- M. S. GI JF ji5g5Gg5LDT ir -
மானிட வாழ்விலுள்ள மிகப் பெரிய குறைபாடு அவன் எவைகளை மறக்க வேண்டுமோ அவைகளை மறக்காமலும், எவைகளை மறக்கக் கூடாதோ அவைகளை மறந்து விடுவதுமேயாகும். அர்த்தமற்ற சம்பவங்கள் - அவசியமற்ற சஞ்சலங்கள் அனைத்தும் அவன் மனதை ஆட்கொண்டு விடுவதனால் ஆசீர்வாதமாய் அமையும் சத்தியங்களும் ஆனந்தத்தை அளித்திடும் சம்பவங்களும் அவன் மனத்தில் நிலைத்திருப்ப தேயில்லை. இதனால், காரணங்களை மறைக்கும் காரியங்களில் அவன் ஈடுபடுவது வாடிக்கையாகி விட்டது. அதாவது, அவன் செய்யும் அநேக காரியங்கள் கடமைக்காகவும் கட்டாயத்திற்காகவும் செய்யப்படுகின்றதே தவிர அதைச் செய்வதற்கான காரணம் என்ன என்பதும் அதன் சிறப்பம் சம், முக்கியத் துவம் ஆதியனவும் அவனால் மறக்கப்பட்டுவிடுகின்றன. கிறிஸ்தவர்களாகிய நாம் மட்டும் இதற்கு விதி விலக்கானவர்கள் என்று கூறமுடியாது.
(6)

கிறிஸ்தவர்களாகிய நாமும் மற்றவர்களைப் போலவே வர்கள் மத்தியில் வாழ்வதனால் அவர்களைப் போலவே நாமும் நேக சமயங்களில் மறக்க வேண்டியவைகளை மறக்காமலும், றக்கக் கூடாதவைகளை மறந்தும் விடுகிறோம். இதனால்தான் ஆண்டுதோறும் நத்தார் பண்டிகையை ஆசரித்து வந்தாலும் கூட பலதரப்பட்ட காரியங்களிலும் ஈடுபட்டு அதன் முக்கியமானசில காரணங்களை முற்றாகவே மறந்து விடுகிறோம். பரம்பரை பரம்பரையாக நத்தார் பண்டிகையை ஆசரித்து வருகின்றமையினால் அப்பழக்கத்தை விட்டுவிடக் கூடாது. என ஒரு சாரார் எண்ணுகையில் மறுசாரார் ஏனைய மதத்தவர்களுக்கு திருநாட்கள் இருப்பது போல கிறிஸ்தவர்களாகிய நமக்கு இப் பெருநாள் உள்ளது என கருதுகின்றனர். நத்தார் பண்டிகையைப் பற்றி இத்தகு காரணங்கள் நம் மனதில் இருப்பதனால் நம் மனதில் இருக்க வேண்டிய உண்மையான காரணங்களை மறந்தே விடுகிறோம். இவ்வாறு நாம் வருடாந்தம் மறந்துவிடும், ஆனால் மறக்கக் கூடாத முக்கிய காரணிகள் சிலவற்றை இம் முறை பண்டிகையை ஆசரிப்பதற்கு முன்பே சற்று ஆராய்ந்து பார்ப்போம்.
米 நத்தாரின் நடைமுறையை அனுசரிக்க மறத்தல்
நத்தார் பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடும் முகமாகப் பல காரியங்களில் ஈடுபடும் நாம் அநேகமாக மறந்துவிடும் காரியம்தான் அதன் நடைமுறையை அனுசரிப்பதாகும். நத்தார் பண்டிகையை எந்தளவுக்கு எளிமையான முறையில் அனுசரிக்க வேண்டும் என்பதை மறந்தவர்களாக கட்ன் பட்டேனும் பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடுகின்றோம். மற்ற மதத்தினர் எவ்வாறு தங்கள் திருநாட்களை பட்டுப்புடவைகள் பலகாரங்கள் பட்டாசு வெடிகள் சகிதம் வெகு அமர்க்களத்துடன் கொண்டாடுகிறார்களோ அதைப் போலவே நாமும் செயற்பட ஆசைப்படுகின்றோம். இதனால் நத்தாரின் நடைமுறையை அனுசரிக்க முற்றாக மறந்து விடுகிறோம். இதற்குக் காரணம், இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூருவதற்காய் ஆசரிக்கப்படும் இப்பண்டிகை நாளில் அவருடைய பிறப்புச் சம்பவங்களைப் பற்றி சிந்தித்துப் பாராமல் நம்மைச் சுற்றியுள்ளோர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதையே முக்கியமாகக் கருதிச் செயற்படுவதாகும்.
7)

Page 6
உண்மையில் இயேசு கிறிஸ்து பிறந்தது மாடமாளிகையில் அல்ல; மண்குடிசையிலேயே யாகும். அவர் செல்வச் செழிப்பில் அல்ல; ஏழ்மைக் கோலத்திலேயே பிறந்தார். அவருடைய பெற்றோர் வசதி படைத்தவர்கள் அல்ல; வறிய மக்களேயாவர். முதன் முதலாக அவரைத் தரிசிக்க வந்தவர்கள், சமுதாயத்தின் மேலிடத்திலுள்ளவர்கள் அல்ல; சாதாரண மேய்ப்பர்களே. இவை யாவும் நத்தார் பண்டிகையானது வீண் படாடோபங்க~ம் பகட்டுமன்றி, எளிமையான முறையில் அனுசரிக்கப்பட வேண்டும் என்பதையே நமக்குப் புலப்படுத்துகின்றன. எனவே, அனாவசியமான காரியங்களில் ஈடுபட்டு, நாம் மனதில் வைத்திருக்க வேண்டிய அவசியமான காரணமான அதன் நடை முறையைக் கவனிக்க மறந்து விடாமல் எளிமையான முறையில் இம் முறை நத்தார்
பண்டிகையை ஆசரிப்போமாக
* நத்தாரின் நன்மையை அனுபவிக்க மறத்தல்.
நம்மில் அநேகள் வருடம் தவறாமல் நத்தார் பண்டிகையை ஆசரித்து வந்தாலும் கூட அதன் நன்மையை அனுபவிக்க மறந்து விடுவதனால் அது அர்த்தமற்ற பெரும் கொண்டாட்டமாக மாறிவிடுகின்றது. நத்தார் பண்டிகையானது இயேசு கிறிஸ்துவின் மானிடப் பிறப்பை நினைவூட்டும் திரு நாள் என்பதை நாம் அறிந்திருந்தாலும் கூட அதனால் நமக்கு ஏற்பட்ட நன்மை என்ன என்பதை நாம் அறிந்திருந்தாலும் கூட அதனால் நமக்கு ஏற்பட்ட நன்மை என்ன என்பதை மறந்து விடுகின்றோம். இதனால் இப்பண்டிகையானது நமக்கு எவ்விதமான ஆசீர்வாதமும் அற்றதாகவே உள்ளது.
இயேசுகிறிஸ்து இவ்வுலகிற்கு சுற்றுப் பிரயாணம் ஒன்றை மேற்கொள்ள வரவில்லை. மக்கள் எவ்வாறு வாழ்கின்றார்கள் என்று பார்த்து விட்டு வருவோம் என்பதற்காகவும் அவர் விஜயம் செய்யவில்லை. மாறாக, நமக்கு நன்மை செய்ய வேண்டும் என்னும் நோக்கமுடனேயே தம்மைத் தாமே வெறுமையாக்கி அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார்’ (பிலி, 2:7)"அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்" (மத், 1:21) என்பதே அவருடைய பிறப்பைப் பற்றி அறிவிக்கப்பட்ட சத்தியமாகும்.
(8)

இச்சத்தியமானது மனிதர்களாகிய நமக்கு நன்மையளிப்பதாயுள்ளதால் இந்த நன்மையை மறந்தவர்களாக நத்தாரை ஆசரிப்பதன் அர்த்தம்தான் என்ன? இந்நன்மையை மனதிற் கொண்டவர்களாக நத்தார் பண்டிகையைக் கொண்டாடினால் மட்டுமே நாம் பிரயோஜனமான முறையில் இந்நாளை திருநாளாக ஆசரித்துள்ளோம் என்று சொல்லலாம்; எனவே, எதைமறந்தாலும் இந்த நன்மையை அனுபவிக்க மறந்துவிடாமல் இருந்தால் மட்டுமே இப்பண்டிகையின் பயனை அடைந்தவர்களாய் இருப்போம் என்பதனை மறுப்பதற்கில்லை.
* நத்தாரின் நன்றியை அளிக்க மறத்தல்
நத்தார் பண்டிகையானது நமக்கு நன்மையளிப்பதாய் இருப்பதனால் அந்த நன்மையை அனுபவிக்க மறந்து விடாமலிருக்க வேண்டிய நாம் அந் நன்மைக்காய் நம் நன்றிகளைச் செலுத்தவும் மறந்து விடாமலிருக்க வேண்டும். நத்தார் பண்டிகையை வருடந்தோறும் கொண்டாடும் நாம் பலருக்கு நம்முடைய உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். குறிப்பாக நமக்குப் பரிசில்கள் தந்தவர்களை உளமுவந்து பாராட்டுகிறோம். வாழ்த்து மடல்களை அனுப்புபவர்களுக்கு நம் வாழ்த்துக்களையும் நன்றியுடன் தெரிவிக்கின்றோம். புத்தாடை வாங்கித் தருபவர்களைப் புகழ்கிறோம். ஆனால், இவையெல்லாம் நமக்குக் கிடைக்கக் காரணமாயிருந்த இயேசுகிறிஸ்து தன்னையே நமக்கு தந்த போதிலும் கூட அவருக்கு நம்முடைய நன்றிகளைத் தெரிவிக்க மட்டும் ஏனோ மறந்து விடுகிறோம்.
உண்மையில், இயேசுவின் பிறப்பை முதலில் தரிசிக்கச் சென்ற மேய்ப்பர்களும் இச் செய்தியை அவர்களுக்கு அறிவித்த தேவதூதரும் கர்த்தர் மனுக்குலத்திற்குச் செய்த நன்மைக்காய் அவருக்கு நன்றி செலுத்தியது நாம் மறவாமல் மனதில் வைத்திருக்க வேண்டிய விடயமாய் உள்ளது.
“மேய்ப்பர்கள் தங்களுக்குச் சொல்லப்பட்டதன்படியே கேட்டு கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தித் துதித்துக் கொண்டு திரும்பிப் போனார்கள்'லூக் 2:20) இயேசுவின் பிறப்பை இவர்களுக்கு அறிவித்த தூதனும் பரம சேனையின் திரளுடன்
சேர்ந்து தேவனைத் துதித்தான். (9)

Page 7
(லூக் 2:15) தங்களுக்காக இயேசு கிறிஸ்து இவ்வுலகத்துக்கு வராத போதிலும் கூட தேவனுடைய நன்மையான ஈவை எண்ணி அவருக்குத் தங்கள் ந்ன்றியைத் தேவதூதர்கள் தெரிவித்தார்கள். அப்படியானால் மனிதராகிய நமக்காக நமக்கு நன்மையளிப்பதற்காக வந்தவருக்கு நாம் நம் நன்றிகளைத் தெரிவிக்க மறந்து விடுவது முறையாகுமா? எனவே, இம்முறை நத்தார் பண்டிகையைக் கொண்டாடுகையில், "அவருடைய நாமத்தைத் துதிக்கும் கனியாகிய ஸ்தோத்திர பலியை அவர் மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்" (எபி, 13:15) என்பதை மறந்து விடாது கிறிஸ்துவின் பிறப்பினால் நமக்குக் கிடைத்த நன்மைக்காக நமது நன்றிகளை அவருக்குச் செலுத்த வேண்டும்.
* நத்தாரின் நற்செய்தியை அறிவிக்க மறத்தல்.
நத்தார் பண்டிகையைக் கொண்டாடுகையில் பொதுவாக எல்லோரும் மறந்துவிடும் விடயம், அதன் நற் செய்தியை மற்றவர்களுக்கு அறிவிப்பதேயாகும். விருந்து, விழா என பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடும் நாம் பண்டிகையின் அமர்க்களத்தில் நற் செய்தியை மற்றவர்களுக்கு அறிவிக்க மறந்து விடுகிறோம். இவ்வாறு அப் பண்டிகையை ஆசரிப்பதற்கான காரணம் என்ன? இது நமக்களிக்கும் நற் செய்தி என்ன என்பதை ஆண்டவரை அறியாதவர்களுக்கு அறிவிக்க மறப்பது உண்மையிலேயே கவலைக்குரிய விடயமாகும். இங்கும் கூடத் தேவதூதர்களின் செயல் நமக்கு நல்லதோர் உதாரணமாய் நம் கடமையை நமக்கு நினைவூட்டும் செயலாய் உள்ளது. இயேசு பிறந்தார் எனும் நற்செய்தியை அதை அறியாத மேய்ப்பர்களுக்கு அவர்கள் அறிவித்தனர். (லூக் 2:9-12) தங்களுக்கு நன்மையளிக்காத செய்தியைத் தேவதூதர் மற்றவர்களுக்கு அறிவித்தால், மனிதர்களாகிய நமக்கு நன்மையளிக்கும் செய்தியை மற்றவர்களுக்கு அறிவிக்க நாம் மறந்து விடலாமா?
மற்ற மதத்தினர் தங்களுடைய பண்டிகை நாட்களில், தாங்கள் தயாரிக்கும் இனிய பலகாரங்களை கிறிஸ்தவர்களாகிய நமக்கும் கொண்டுவந்து தருவது நம் நாட்டுப் பழக்கம். அவர்கள் மனம் புண்பட்டு விடக் கூடாது. பக்கத்து வீட்டில் அவர்கள் வாழ்வதினால் அவர்களுடன் இன்முகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காய் அவர்கள் தருபவைகளை மலர்ந்த
(10)

முகத்துடன் நாம் வாங்கிக் கொள்கின்றோம். மட்டுமல்ல, அவர்களது செயல்களுக்கும் பிரதி உபகாரமாக நாமும் கூட நத்தார் பண்டிகை வந்தவுடன் நாம் தயாரிக்கும் பலகாரங்ளை அவர்களுக்கும் கொடுக்கின்றோம். அத்தோடு நம்மை நாடி வருபர்களுக்கு உதவிஉபகாரம் என்ற பணத்தை அள்ளிக் கொடுக்கின்றோம். உறவினர்களுக் கெல்வாம் பரிசுப் பொருள்களை வாங்கிக் கொடுக்கின்றோம். இத்தகைய காரியங்களில் நாம் ஈடுபடுவதனால் நாம் மற்றவர்களுக்கு முக்கியமாகக் கொடுக்க வேண்டியதை மறந்து விடுகின்றோம். நாம் மற்றவர்களுக்கு எவ்வளவுதான் பணத்தையும், பரிசில்களையும் அள்ளிக் கொடுத்தாலும், அவர்களுக்கு இரட்சகரான இயேசுவைக் கொடுக்கா விட்டால் நம்முடைய உதவி உபசாரங்கள் அனைத்துமே பிரயோசனமற்றவைகள் என்பதை மறுப்பதற்கில்லை. பண்டிகையைக் கொண்டாடும் நாம் இவ் வுண்மையை மறந்து விடக் கூடாது. இயேசு கிறிஸ்து கிறிஸ்தவர்களுக்காக மட்டும் பிறக்கவில்லை. அவருடைய பிறப்பு "எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற் செய்தி" (லூக், 2:10) ஆகும். எனவே, நாம் மற்றவர்களுக்கு எதைக் கொடுத்தாலும் இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்காகப் பிறந்திருக்கின்றார்ட் (லூக், 2:11) எனும் நற்செய்தியை அவர்களுக்கு அறிவிக்காமல் இருந்து விடக் கூடாது. இயேசு கிறிஸ்து மட்டுமே நாம் மற்றவர்களுக்குக் கொடுக்கக் கூடிய விலை மதிப் பற்றதும், எப்போதும் வைத் திருக்கக் கூடியதுமான பிரயோசனமான பரிசாகும் என்பதை மறந்து விடாமலிருப்போமாக.
* நத்தாரின் நாயகனை அறிய மறத்தல்.
நத்தார் பண்டிகையைக் கொண்டாடும் நாம் இதற்கு முன் கிறிஸ்து கொண்ட நான்கு காரணங்களையும் மறக்காமல் இருந்தும் அதன் நாயகரை அறிய மறந்து விடுபவர்களாயிருந்தால் நத்தார் திருநாளையே முற்றாக மறந்துவிடுவது மேலானது. உண்மையில் இன்று நத்தார் பண்டிகையைக் கொண்டாடும் அநேகர், அதன் நாயகரான இயேசு கிறிஸ்துவை அறியாதவர்களாக அவரை முற்றிலுமாய் மறந்தவர்களாக உல்லாசமாய்ப் பொழுதைப் போக்குவதையே தங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்களது பண்டிகைக் கொண்டாட்டங்கள் எதிலும் இயேசு கிறிஸ்துவுக்கு
இடமே இருப்பதில்லை.
(11)

Page 8
அவரைப் பற்றிய நினைவே அற்றவர்களாக நத்தார் திருநாளைக் கழித்து விடுகின்றனர். இது நம் மத்தியில் இல்லாத ஒருவருடைய பிறந்த தினத்தை நாம் கொண்டாடும் அர்த்தமற்ற செயலுக் கொப்பானது. நத்தார் பண்டிகை இயேசு கிறிஸ்துவின் பிறந்த தின விழாவாயிருப்பதனால் அவரில்லாமல் அத்தினத்தை நாம் கொண்டாடலாமா? அவரை மறந்துவிட்டு அவருடைய பிறந்த தினத்தை நாம் கொண்டாடுவதில் அர்த்தம் ஏதாவது உள்ளதா?
இத்தனை வருடங்களாக நாம் இயேசு கிறிஸ்து இல்லாமலேயே அவருடைய பிறந்த தினத்தைக் கொண்டாடுவதற்கு முன் நாம் நம்மைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்போம்.
* நம் வாழ்வில் இயேசு கிறிஸ்து இருக்கிறாரா? * நம் இதய நாயகராக அவர் நம்முடன் இருக்கின்றாரா
அவருடைய பிறந்த நாளை அவருடன் சேர்ந்துதான் நாம் கொண்டாட வேண்டும். பொதுவாக எந்த வொரு பிறந்த நாள் கொண்டாட்டத்திலும் அப்பிறந்த நாளுக்குரியவருக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும். மற்றவர்களது அவதானம் முழுவதும் அந்நபர் மீதே பதிந்திருக்கும். அவரை மகிழ்வுடன் வைத்திருப்பதே மற்றவரது நோக்கமாயிருக்கும். வாழ்த்துக்கள் பரிசில்கள் அனைத்தும் அவருக்கே கொடுக்கப்படும். அன்றையதின உணவு கூட அவருக்கு விருப்பமானதாகவே அமைந்திருக்கும். சகலவற்றிலும் அவரைத் திருப்திப் படுத்துவதிலேயே மற்றவர் ஈடுபடுவர். அத்தோடு அவருடைய மகிழ்வில் மற்றவர்களும் பங்கேற்று அந்நாளைச் சிறப்பான நாளாக மாற்றி விடுவர். சாதாரண மனிதன் ஒருவனின் பிறந்த நாளில் நாம் அவர் நலனுக்காக இத்தனை காரியங்களைச் செய்தால் நமக்காக இவ்வுலகுக்கு வந்த இயேசு கிறிஸ்துவினுடைய பிறந்த நாளில் அவருக்கு நாம் எத்தகைய காரியங்களைச் செய்ய வேண்டும்? அவரை மறந்து விட முடியுமா?
நத்தார் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு முன்பு நாம் அவரை அறியாதவர்களாயிருந்தால் அவரை நம்முடைய வாழ்வின் இரட்சகராகவும் கர்த்தராகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர் நம் வாழ்வின் நாயகராக நம்முடன் இருக்க வேண்டும் அதன் பின்னர் அவருடைய பிறந்த நாளைக் கொண்டாடும் நாம்
(12)

அவருக்குப் பிரியமான விதத்தில் இத்திருநாளை ஆசரிக்க வேண்டும். பிறந்த நாள் என்றால் பிறந்த நாளுக்குரியவருக்கு நாம் பரிசில்கள் கொடுத்தவருக்கு அவருடைய பிறந்த நாள் பரிசாக நாம் எதனைக் கொடுக்கலாம்? நம்மை முற்றிவுமாக அவர் பாதத்தில் அர்ப்பணிப்பதை விட வேறெதையும் நம்மால் அவருக்குக் கொடுக்க முடியுமா? ஆம், நம்மைத்தான் நாம் அவருக்குக் கொடுக்க வேண்டும். அதுவே, அவர் மனதுக்கு மகிழ்வைக் கொடுக்கும் பரிசாக அமையும். எனவே வழமையாக இவ்வுண்மைகளை மறந்து விடும். நாம் இம்முறை நத்தார் பண்டிகையின் போது இவைகளை மறந்து விடாமல் இருக்க தர்த்தர் கிருபை செய்வாராக.
X- X- X
நமக்கு
ஒரு பாலகன் பிறந்தார்.
(eᏗ Ꮿ- fᎢ , 9:6)
பாவிகளை இரட்சிக்க இயேசு கிறிஸ்து உலகத்தில் வந்தார். இவ்வாறு கூறுகின்றது விவிலியம்.
இறைவன் உலகினை உருவாக்கிய காலத்தில் மனிதனுக்குத் தேவையான அனைத்தையுமே பூமியிலிருந்து பெற்றுக் கொள்ளக் கூடியதாக உருவாக்கினார். ஒளிதரும் எரி பொருள் தொடக்கம் இருப்பிடத்தை அமைக்கக் கூடிய இரும்பு ஈறாக அனைத்தையுமே அடக்கியதோர் அவனியைப் படைத்த இறைவன் அவற்றை ஆளவும், அனுபவிக்கவும் தமது சாயலாகவே மனிதனொருவனைப் படைத்தார். அவ் வுருவினைக் கூட தான் படைத்த பூமியின் மண்ணினாலேயே அமைத்தார் என்னும் போது அவனியின் பெருமை மேலும் மெருகு பெறுகின்றது.
அகன்று பரந்த இந்த அவனியிலே மனிதன் ஒண்டிக் கட்ட்ையாக உலவுவதை விரும்பாத இறைவவன் அவனுக்கு உடந்தையாக பெண்ணொருத்தியையும் படைக்க திருவுளம்
(13)
கொண்டார்.

Page 9
எ ல் லாரும் பாவம் செய்து தேவமகிமை யற்றவர்களானர்கள்” ( ரோ. 3:23)
* மனுஷருடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும் அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும் கர்த்தர் கண்டு தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காக மனஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனமாய் இருந்தது.” (ஆதி. 6:5,6)
எனவே, பாவ விமோசனத்துக்காக பறவைகளையும் மிருகங்களையும் பலியிடுவதை விட உன்னதமான ஒரே பலியினாலே உலகை மீட்டெடுக்க இறைவன் சித்தங்கொண்டார். தீர்க்கதரிசிகள் இவரது சித்தத்தை முன்னறிவித்தார்கள்.
"இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்." - (ஏசா, 7:14)
எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே! நீயூதாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாய் இருந்தாலும் இஸ்ரவேலை ஆளப் போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு வருவார்." (மீகா 5:2)
இவ்வாறாக ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இறைவன் மனுவுருக் கொள்வதும், தம்மைத்தாமே ஏகபலியாக ஒப்புக் கொடுத்தலும் இறைவனாலேயே நிர்ணயிக்கப்பட்டு விட்டது. எனவே, வரலாற்று உண்மைகளின்படி இற்றைக்கு ஆயிரத்துத் தொளாயிரத்து தொண்ணுாற்றிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே மாட்டுக் கொட்டிலில் மரிமடிக் குழந்தையாக இயேசு பிறந்தார்.
ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி, இயேசு கிறிஸ்துவாக இவ்வுலகத்துக்குள் வந்தது.
'உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல் அவராலே
(14)

உடந்தையாக இருக்க வேண்டிய மடந்தை அவனுக்கு உகந்தவளாகவே இருக்க வேண்டும் என்பதற்காக மனிதனுடைய விலா எலும்பு ஒன்றை எடுத்து அதன் மூலமாக ஒரு பெண்ணைச் சிருஷ்டித்தார்.
சிருஷ்டிகரான இறைவன் தனது சிருஷ்டியாகிய மனிதனுக்குச் சில ஒழுங்கு விதிகளைக் கட்டளையிட்டார். அனைத்தையும் ஆக்கிய ஆண்டவர் அனைத்தும் தமக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டும் என்ற வாஞ்சையோடு மனிதனை அன்பினால் வழி நடத்தினார். எனினும், தான் ஒரு தலைவனாக அல்ல; ஒரு துணைவனாகவே அவனோடு உறவாடினார்.
ஆனால், சிருஷ்டிகருக்குக் கீழ்ப்படிய வேண்டிய மனிதனோ சிருஷ்டிக்குக் கீழ்ப்படிந்தான். தலைவனின் தாள்பணிய வேண்டிய மனிதன் தன் துணைவிக்குச் செவிசாய்த்தான். உலகினைப் படைத்த உன்னதாரின் கட்டளைகளுக்கு அடங்கி நடக்க வேண்டிய மனிதன் எலும்பொன்றிலிருந்து உருவாக்கப் பெற்ற தன் மனுஷிக்குக் கீழ்ப்படிந்தான்.
சிருஷ்டிகரால் தடுக்கப்பட்ட கனி அவரது சிருஷ்டியால் கொடுக்கப்பட்ட போது தான் கெடுக்கப்படுவதையும் உணராது அதை ஏற்றுக் கொண்டான்.
"கீழ்ப் படியாமையின் பிள்ளைகள் மேல் தேவ கோபாக்கினை வரும்” என வேதம் எச்சரிக்கிறது. தனக்குப் பணிய வேண்டிய சிருஷ்டி, தன்னால் படைக்கப்பட்ட பெண்ணுக்குக் கீழ்ப்படிந்து பாவத்துக்குள் பிரவேசித்த காரணத்தினாலே அன்புள்ள இறைவன் ஆத்திரம் கொண்டார். கோப மிகுதியினாலே சாபமுமிட்டார். இதனால், பாலும் தேனும் ஓடவேண்டிய பூமியிலே முள்ளும் புல்லும் தோன்ற- மனிதன் கஷ்டப்பட வேணர்டியதாயிற்று. கோபம், எரிச்சல், போட்டி, பொறாமை, சந்தேகம் இப்படியாக வளர்ந்த பாவங்கள் ஈற்றில் கொலை செய்யுமளவுக்கு மலைபோல் குவிந்தன.
"தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க தேவன் பரலோகத்திலிருந்து மனு புத் திரரை க் கண்ணோக்கினார். அவர்கள் எல்லோரும் வழி விலகி ஏகமாய்க் கெட்டுப் போனார்கள். (சங். 53:2,3)
(15)

Page 10
உலகம் ரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். (Gит. 3:17)
இவ்வாறாக, மனித சாயலாக உலகில் வந்த இறைவன் முப்பத்து மூன்றரை ஆண்டுகள் மனுஷகுமாரனாக இம் மண்ணுலகில் சஞ்சரித்து மகத்தான ஜீவியத்துக்கு வழிகாட்டி மனுக்குல மீட்புக்காக தம்மைத்தாமே பலியாக்கினார்.
புனித பவுல் எபிரேயருக்கு எழுதியது:- அவர் தம்மைத் தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும் பொருட்டாக இந்தக் கடைசிக் காலத்தில் ஒரே தரம் வெளிப்பட்டார்."
புனித மாற்கு எழுதியது:-
மனுஷ குமாரன் ஊழியங் கொள்ளும்படி வராமல், ஊழியம் செய்யவும் அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்’
ஆம், ஏசாயா தீர்க்கனின் வசனங்கள் இவற்றையெல்லாம் உறுதிப்படுத்தி நிற்கின்றன.
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார். கர்த்தத்துவம் அவர் தோளின் மேல் இருக்கும். அவர் நாமம் அதிசயமானவர்; ஆலோசனைக் கர்த்தா வல்லமையுள்ள
தேவன்; நித்திய பிதா சமாதான பிரபு என்னப்படும். (ஏசா. 9:6)
முப்பத்தி மூன்றரை ஆண்டுகள் இவ்வுலகில் சஞ்சரித்த பின்னர் சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன்; உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்." (Κόιμπ. 14:27)
எனக் கூறிச் சென்ற அந்த சமாதான பிரபுவின் பிறந்த காலத்தை நினைவு கூரும் இந்நாட்களில் ஒவ்வொரு உள்ளத்திற்கு மட்டு மல்ல: ஒவ்வொரு இல்லத்திற்கு மட்டுமல்ல; முழு உலகுக்கும் சமாதானம் வேண்டி பிரார்த்தனை செய்வதே மேலானதாகும்.
(16) X- X x

இயேசு பாலனுக்கு
உன் காணிக்கை என்ன?
ஆயத்துறையில் இருந்து அழைக்கப்பட்ட ஒரு சீடன்தான் ஆரம்ப சுவிசேஷத்தின் ஆக்கியோனான மத்தேயு,
ஏரோது ராஜாவின் நாட்களில் பெத்லகேமில் இயேசு பிறந்தபொழுது கிழக்கிலே உதயமான நவீன விடிவெள்ளியைக் கண்டு புறப்பட்ட ராஜாக்கள் என வருணிக்கப்படும் கீழைத்தேய சாஸ்திரிகள் இயேசு பாலனைக் கண்டு காணிக்கை படைத்துச் சென்ற வரலாற்றினை இவன் தனது சுவிசேஷத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளான்.
அச்சம்பவம் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. "தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து பொன்னையும், துபவர்க்கத்தையும், வெள்ளைப் போளத்தையும் அதற்கு (குழந்தைக்கு)க் காணிக்கையாக வைத்தார்கள்." - (மத் 2:1)
இங்கு குறிப்பிடப்படுபவர்கள் மன்னர்கள்; மாட்சிமை பொருந்தியவர்கள். வறியவர்கள் அல்லர்; வசதி படைத்தவர்கள். எனவே, தங்களது உயரிய பொக்கிஷங்களிருந்து உன்னத திரவியங்களைப் படைக்கிறார்கள்.
உலகியல் தலைவர்களாக இருந்த போதிலும் இவர்கள் இதய பூர்வமாகத் தங்கள் காணிக்கைகளைப் படைக்க முன்வருகின்றார்கள். தயங்காமல் தங்களது பொக்கிஷங்களைத் திறக்கின்றார்கள். பொன்னை அள்ளிப் படைக்கின்றார் ஒருவர். துபவர்க்கத்தைத் தூவுகின்றார் மற்றவர்.
வெள்ளைப் போளத்தை அள்ளி வைக்கின்றார் அடுத்தவர்.
அன்பனே, அன்று- பாலனாய் அவதரித்த இயேசுவுக்கு முப்பெருந் திரவியங்களைக் காணிக்கையாக்கினரே முன்று ராஜாக்கள். இப்புவியில் உனக்காக உருவெடுத்த அந்த உன்னத குமாரனுக்கு உகந்த பலியாக நீ என்ன படைக்கப் போகின்றாய்?
(17)

Page 11
பொன் இல்லை உன்னிடம். உன் பொருளாதாரம் அப்படி, தூபவர்க்கத்தினால் தூயவனை நினைவுகூர உன் துயர் வாழ்வில் இடமில்லை. வெள்ளைப் போளத்தினால் உன் சொந்த இரட்சகரைச் சுகந்தமிட உன்னிடம் சக்தியில்லை.
அப்படியானால் அன்பனே, நீ என்ன செய்வாய்? மன்னாதி மன்னனென மதித்துப் பொன்னைப் படைத்த மன்னனைப் போல் ஆசாரியர்களுக்கெல்லாம் தலையான ஆசாரியன் என எண்ணி தூபவர்க்கத்தைப் படைத்த மற்றவனைப் போல், மனுஷகுமாரனாக அவரைப் பூஜிக்க விழைந்து வெள்ளைப் போளத்தை அள்ளிக் குவித்த அடுத்தவனைப் போல் கர்த்தருக்குப் படைத்திடும் காணிக்கைகள் எதுவுமே உன்னிடத்தில் இல்லையா?
அன்பனே, உன் இதயமாகிய பொக்கிஷத்தைத் திறந்து பார். "நல்ல மனிதன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான். பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக் காட்டுகிறான். (லூக், 6:45) என்பதாக இயேசு கூறவில்லையா எனவே உன் இருதயத்தின் நல்லவைகளையே அவருக்குப் படைக் முன் வருவாயாக.
பொன்னைப் படைக்க உனக்கு வாய்ப்பில்லையா? இருக்கவே இருக்கிறது கண். உன் பார்வையை நல்லவற்றைப் பார்க்கும் நல்ல கண்களாக மாற்று. தூபவர்க்கம் இல்லையா? இதய ஜெப வர்க்கங்களைச் சமர்ப்பணம் செய். அள்ளிக் கொடுக்க வெள்ளைப்போளம் இல்லையா? அயர்ந்து போகாதே. இருக்கவே இருக்கின்றன இறைவனிந்த கரங்கள். கூப்பிய உனது கரங்களால் உனது விண்ணப்பங்களை அவர் பாதத்திலே படை.
இறைவனுக் குகந்த இன்மலர்கள் எவை யென கவியொன்று பின்வருமாறு கூறுகின்றது.
* வெள்ளைநிறப் பூவுமல்ல; வேறெந்த மலருமல்ல;
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.
( 18)

* காப்பவிழ்ந்த மலருமல்ல; கழுநீர்த் தொடையுமல்ல; கூப்பியகை காந்தளபடி கோமகனார் வேண்டுவது.
* பாட்டளிசேர் கொன்றையல்ல; பாரிலில்லாப் பூவுமல்ல;
நாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது.
கவிஜதத் " ""
இே[கர்த்தர் பிறந்த
久癸〕 கதையும் - கவியும்
தேவதாசன் ஜெயசிங் "அகஸ்துஸ்" என்றழைக்கப்படும் "சேசார் மன்னனின் ஆட்சிக் காலம் அது. மக்களின் எண்ணிக்கையைச் சிக்கலின்றி அறிந்து கொள்ள ஆவன செய்ய விரும்புகிறான் அரசன். எனவே, எவர் எங்கு வாழ்ந்து கொண்டிப்பினும் அவர்தம் பிறப்பிடம் செல்ல வேண்டும் என்பதாகப் பிறக்கின்றது கட்டளை.
சிற்றரசனாகிய சீரிய மன்னன் தம் நாட்டவர்க்கும் அரச கட்டளையதை அறியத் தருகின்றான். இச் சொல்லினைப் பெற்ற சூசையப்பர் (யோசேப்பு) கர்ப்பிணியான மரியாளுடன் கலிலேயாவின் நாசரேத்தை விட்டு பிறந்த ஊரான பெத்லகேம் என்ற யூதேயாவின் நிலப்பரப்புக்குப் புறப்பட்டு வருகின்றார்.
அங்குதான் அச் சம்பவம் நடைபெறுகின்றது. அது பற்றி என்றோ ஒரு நாள் இசையாஸ் என்னும் இறை வாக்குரைஞன் எடுத்தியம்பியதுண்டு.
அந்நகர் முழுவதும் ஆட்களால் prio
அமரவோர் இடமும் அமையா திருந்தனர்
வெளியூர் சென்று மீண்டவர் யாவரும்
விடுதிகள் தோறும் வீற்றிருந் தமையால்
வீடுகள் சாலைகள் வெள்ளமாய்க் கிடந்தன
சத்திரங் களிலும் ஜனத்திரள் வழிந்தது.
(19)

Page 12
ஆனபடியினால், அங்கிருந்த முன்னனை ஒன்றிலே புல்லணை செய்து மரியாளைப் பக்குவமாய் இருக்கச் செய்தார் சூசையப்பர், அங்குதான், அந்த இரவில் தான். அச்சம்பவம் நடைபெற்றது.
எபிரேய மொழியிலே "மிரியம்" எனக் கூறப்படும் இந்த மரியாள் சூசையப்பருக்கு மனைவியாக நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருந்த வேளை 'காபிரியேல்" என்னும் இறை தூதனால் அறிவிக்கப்பட்ட அச் செய்தி அன்று நிறை வேறுகின்றது. அன்று அவர் முன் தோன்றிய இறை தூதன்.
"அம்மையே நல்ல செய்தி
ஆண்டவன் குமரன் உந்தன் செம்மைசேர் மகனாய்த் தோன்றும்
சிறப்பினை அடையக் காண்பாய் இம்மையில் மறுமை காட்டும்
இறையவர் குமரன் தன்னைத் தம்மரும் மகனாய்க் காணும்
தவமுந்தன் தவமே யன்றோ"
எனப் பகர்ந்த அவ்வினிய மொழிகளெல்லாம் இப்போ மழலை மடியிலே தவழ்ந்தபோது மதுரகானமாய் ஒலிக்கின்றன. இதயத்துள் அவை தேனாய் இனிக்கின்றன. மரியவள் மடியினில், மார்கழிக் குளினில், மழலை இயேசு மகிழ்வுடன் இருந்த காட்சி கவிஞன் கண்ணதாசனின் கவிகளிலே எவ்வளவோ அழகாக வருணிக்கப்படுகின்றது. இதோ அக்கவிதைகள்.
:கன்னி ஒருத்தி கருவுற் றிருப்பாள்
தேவ குமாரனே திருமகன் ஆவான்
நாயகன் என்றும் நம்மோ டென்னும்
பொருளினை குறிக்கும் அருட் பெயராக இமானு வேலெனும் பேரிட்டு வளர்ப்பர்
அது மட்டுமல்ல,
யூதர்கள் மன்னன் யூதேயா நாட்டில்
பெத்லகேமிலே பிறப்பான்
சிறிய தல்ல அச்சீர் பெருநகரம் பெரிது பெரிது பெத்லகேம்
(20)

என்பதாகவும் இயேசுவின் பிறப்பை மீகா என்னும் தீர்க்கதரிசியும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கூறிவைத்திருக்கின்றான். அந்த வாக்குகள் அனைத்துமே இந்த "அகுஸ்துஸ்" ராயனுடைய நாட்களிலே பெத்லகேமிலே சங்கமமாகின்றன.
ஆதியிலே இருந்தார் அவர்பெயர் "வாக்கு"
அவரிட மிருந்தே அனைத்தும் தோன்றின ஆவி என்பது அவருள் இருந்தது
உயிரெனும் அஃதே ஒளியாய் நின்றது ஒளியை உலகம் உணர மறுத்தது.
இருளோ ஒளியை ஏற்க மறுத்தது. எனினும் அந்த
வாக்கு மலர்ந்து மனுவுரு வானார்.
என்பதாக இயேசுகாவியம் சுட்டும் அச் சம்பவம் வந்த இடத்திலே நிறைவேறும் என்பதை சூசையப்பரோ அன்றி மரியாளோ எண்ணியிருக்கவில்லை. எனவே, எதற்குமே வசதியற்ற ஒரு சூழ்நிலையில்தான் அவர்கள் இருந்திருக்க வேண்டும்.
உலகெங்கிலுமிருந்து இடம் பெயர்ந்து இருப்பிடம் தேடி வரும் எல்லா ஜனங்களுக்கும் குடிமதிப்புக் கணக்கீடு நிறைவு பெறும் வரை தங்குமிட வசதி செய்து கொடுப்பதற்காக தற்காலிகக் கட்டிடங்கள் தாராளமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. என்றாலும் மரியாளும் சூசையப்பரும் அடிமேல் அடிபெயர்த்து அங்கு வந்தவேளை,
(21)

Page 13
திவ்ய யேசுபாலன்
-K. குலசேகரன்.
பாவியர் தம்மை இந்தப்
பாரினில் மீட்க வென்றே தேவனின் மைந்தன் எங்கள்
திவ்விய யேசு பாலன் ஆவினம் வாழு கின்ற
அச்சிறு தொழுவந் தன்னில் காவிய நாய கனாய்
கனிகொள வந்து தித்தார்
வல்லமை யெல்லாங் கொண்டு
வந்துமே பிறந்த பாலன் புல்லணை மீது ஆங்கே
புரண்டிடும் காட்சி காண பல்லோரும் திரண்டு வந்தார்
பணிந்துமே வணங்கி நின்றார் நல்லருள் பெற்றார் யேசு
நாமத்தைத் தினமு ரைத்தார்
வாழ்க்கையின் அர்த்தந் தன்னை
வையத்தார்க் குணர்த்த வென்றே தாழ்மையில் பிறந்தார் இயேசு
தத்துவப் பாடம் சொன்னார். ஆழ்ந்தநல் லறிவு போதம்
அளித்தவெம் இயேசு நாமம் வாழ்கவென் றவர்பி றந்த
நாளிதை வாழ்த்து வோமே.
(22)

காற்றொரு பாட்டுப் பரட
ககனமே விளக்கம் ஏந்த
ஊற்றென நிலவின் சாறு
உள்ளொளி பொங்கிப் பாய
நூற்றிலோர் பூவைப் போல
நுவலரும் முகத்தைக் காட்டி
ஆற்றல்சால் மைந்தன் தன்னை
அனைத்திருந் தனளே அன்னை.
துல்லிய பட்டுப் போன்ற
தூயவள் மரியாள் கையில் மெல்லிய பாலன் இயேசு
விளக்கெனப் புன்ன கைத்தான் நல்லவர் உள்ளம் போல
நலம் பெறப் பிறந்த செல்வம் இல்லையென் னாதவாறு
இருகரம் விரித்து நின்றான்.
மாளிகைச் செல்வம் தோற்கும்
மாணிக்கத் தொட்டில் தோற்கும் தூளிஇல் லாத போதும்
தூங்கினான் பாலன் இயேசு 'வாழிய" என்றார் தூதர்
வணங்கியே நின்றார் ஆயர் நாழிகை செல்லச் செல்ல
நல்லொழி மேலும் பல்கும்.
மாசு படிந்திலா இயேசுவின் பிறப்பை எண்ணிப் பார்க்கக் கூடியதான இனிமையான இக் கவிவடிவங்களை "இயேசு
காவியம்' எனும் நூலில் பார்க்கலாம்.
-K - C -C
(23)

Page 14
காத்து இரட்சிப்பார்) –g. Gler. LDT–
அருள்நிறை வேதநூல் கூறிய நாதனை
அன்புயர் ரட்சகப் புனிதனை எதிர்கொள
ஆண்டுகள் இரண்டு ஆயிரம் ஆகவே
வையத்து மாந்தரும் வானோக்கி வேண்டினர்
விண்ணில் புதியதோர் தாரகை தோன்றவே
வியப்புறு வகையினில் ஒளியினைச் சிந்தவே
விண்ணில் வதிநாதர் கானம் இசைத்தன்பு
வேந்தன் கிறிஸ்துவின் வரவை உரைத்தனர்
தூதரின் செய்தியை இடையரும் கேட்டனர்
துரிதமார் நடையுடன் கூடியே விரைந்தனர்
மாதரில் மாட்சிமை பெற்றவள் மைந்தனை
மகத்துவக் காட்சியில் கண்டு வணங்கினர்
மன்னரில் மன்னனைக் கண்டு தொழுதிட
மன்னர்கள் மூவரும் ஒட்டகம் மீதிலே
எண்ணரும் காதங்கள் பாலையில் சென்றனர்
எழிலுறு விண்ணொளி காட்டும் வழியிலே
விண்ணில் வதிபரன் ஈனப் புவிIசை
வந்து பிறந்ததின் நோக்கம் அறிவமே
மண்ணில் பலமெலாம் விட்டு ஒழிப்பமே
பரமன் வழிதனில் நித்தம் நடப்பமே
இடையரைப் போலநாம் ஏழ்மை மனத்தொடு ஏகிய மன்னர் போல் தாழ்மை நிலையொடு
இடைமனம் விட்டுநாம் இறைவன் முன்செல்லுவோம்
காத்துமே இரட்சிப்பார் கருணை நிறைமகன்
-x -x -x
(24)

~
s
தொடர்பு . தனது ஒராண்டு
நிறைவையொட்டி நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல்
பரிசு பெற்ற கதை. ク
கிறிஸ்துவை உணர்ந்த போது . . .
-செல்வி, D. சுகந்தி
ܓܠܠ
கிறிஸ்மஸ் சிறுகதைப்
போட்டி-1992
* 1 ஆம் பரிசு - ரூ.250/- பெறுபவர்
செல்வி, D. சுகந்தி - 35 மிஷன் இல்லம், வட்டவளை * 2 ஆம் பரிசு - ரூ.175/- பெறுபவர்
திருமதி பிரிசில்லா பெரெய்ரா,
D-32 சர்கியூலர் வீதி, பேராதனை * 3 ஆம் பரிசு ரூ.100/- பெறுபவர்
திரு. பி. தமிழ்ச் செல்வன் மாசிலாமணி தெமோதர குறுாப், தெமோதர. * ஆறுதல் பரிசு : தமிழ்ப் பாடல் ஒலி நாடா
திருமதி, R.S. தேவதாஸ் - ஸாரினா, பதுளை.
போட்டியில் பங்கு கொண்ட அனைவரு க்கும் எம்நன்றி. பரிசுகள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
(25) - இயக்குநர் -

Page 15
(கி றிஸ்துவை உணர்ந்தபோது . ..) செல்வி, டீ. சுகந்தி
ஆஹா என்ன கூட்டம் அது?. எல்லோரும் குதூகலமாகக் காணப்படுகிறார்கள். எங்கோ ஒரு மூலையில் ஒலிபெருக்கி ஓலமிடுகிறது. ஆ. அது என்னவாயிருக்கும்?. ம் ம். "விடுதலை. விடுதலை ’ எதிலிருந்து விடுதலை? சொலமன் தன் உள்ளத்தில் எண்ணுகின்றான். தன் கையிலுள்ள சிகரட் துண்டை தூர வீசி விட்டு, மெதுவாக . மிகவும் மெதுவாக கூட்டத்தை நோக்கி நகர்கின்றான். அங்கு காணப்பட்ட சுவரொட்டிகளை வாசிக்கின்றான். மிண்டும் வாசிக்கின்றான். ஐயோ கடவுளே! எனக்கும் விடுதலை உண்டா? என் பாவ வாழ்விலிருந்து எனக்கும் விடுதலை உண்டா? என தன் உள்ளத்தின் ஆழத்தில் கதறுகின்றான். 'வாலிபனே உன் வாலிப வயதில் உனது சிருஷ்டி கர்த்தரை நினை” . ஆனால். என் நாட்கள் . என் நடைகள் அப்படியா இருந்தன?
AL இறுதியாண்டில் பயின்று கொண்டிருக்கும் அவன் மிகவும் திறமைசாலி, எடுத்ததற்கெல்லாம் சொலமன் . என்றே ஆசிரியர்களும் அவன் மேல் அளவில்லாத நம்பிக்கையும் மதிப்பும் வைத்திருந்தார்கள். கடவுள் கொடுத்த ஞானம் அறிவு, செயற்திரன் எல்லாம் அவனிடம் காணப்பட்டன. அதே வேளை அவனும் கடவுளின் மேல் அளவில்லா அன்பும் நம்பிக்கையும் வைத்திருந்தான்.
ஒரு கிறிஸ்மஸ் தினம். அவனுடைய நண்பர்கள் அவன் வீட்டிற்கு வந்து சுவாரஸ்யமாக விருந்துண்டு மிகவும் சந்தோஷமாக இருந்தார்கள். அப்போது 'தம்பி எங்கட மகன் உங்கட வீட்டுக்கு வந்து கிறிஸ்மஸ் பாட்டிலயும் கலந்து கொண்டாரு, நீங்க மட்டும் எங்கட வீட்டுக்கு வரல; இன்னைக்கு டின்னர் எங்க வீட்டுல O.K. என்ற அந்த அன்பான வார்த்தைகளும் மயக்கும் தோரணையும் அவனை அங்கு அழைத்துச் செல்கின்றன. விருந்துபசார வேளையில் எல்லோரும் மதுவை அருந்துகிறார்கள். ' கமான் சொலமன்.டேக் இட், டேக் இட். என்ற அந்த சொற்களைக் கேட்டதும் அவன் தயங்குகிறான். கொஞ்சம் தா பிளிஸ் .என்ற கெஞ்சும் தோரணை, மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ? என்ற பயம் அவன்
(26)
 

உள்ளத்தை ஆட்கொள்ள "மென(ர்)ஸ்' என எண்ணியபடி சிறிது அருந்துகிறான். அது விரியனைப் போல தீண்டும் என்ற வேத உண்மையை அப்போது அறியவில்லை. சூழ உள்ளவர்களின் உற்சாகமுட்டும் சொற்கள் அவனை களிகூரப் பண்ணியது. அவ்வேளையில் மற்றவர்களை சந்தோஷப்படுத்த மீண்டும் அருந்துகிறான். தற்பொழுது அவன் தன் நண்பர்களைப் பிரியப்படுத்தும் ஒருவனாகவே காணப்படுகிறான். வீதியில் செல்லும் மனிதரைப்பார்த்து அவதூறான வார்த்தைகளைப் பேசுவதும் அவர்கள் மனம் நொந்து பேசும் வார்த்தைகளைப்பார்த்துச் சிரிப்பதும். நண்பர்களின் புகமுரைகளுக்கு அடிமையாவதும் அவனுக்கு கைவந்த கலையாகி விட்டன. நண்பர்கள் தான் அவன் உலகம்.
இப்படியான நிலையில் A/L பெறுபேறும் வருகின்றது all F, தாயார் ஒரு புறம் கலங்க அதனைச் சிறிதேனும் பொருட்படுத்தாத சொலமன் அருகிலுள்ள ஒரு கம்பனியில் சேல்ஸ் றெப் ஆக கடமை புரிகிறான். இப்படி இருக்கும் வேளையில் பதவி உயர்வு பெற்று கொழும்புக்குச் செல்கின்றான். மிகவும் செல்வசெழிப்புடன் தன் காலத்தைக் கழிக்கிறான். ஹோட்டல்களுக்குச் செல்வதும் சினிமா பார்ப்பதும் இன்னும் உலகப் பிரகாரமான ஆசைகளும் அவனுக்குத் தான் எத் தனை எத்தனை இனிமையானவையாகக் காட்சியளிக்கின்றன?
இப்பொழுது எல்லாம் அவன் காலையில் வேதத்தை வாசிப்பதும் இல்லை ஜெபிப்பதும் இல்லை. தன்னுடைய குடும்பம் வறுமையில் வாடுகின்றதே! அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும், படிக்கும் தங்கைகளுக்கும் தம்பிக்கும் செலவழிக்க வேண்டும். என்ற பொறுப்பு, உணர்ச்சி, சிறிதேனும் இல்லாதவனாகவே கானப்படுகின்றான். தனது நண்பர்கள் தான் அவனுக்கு உலகம். அதை வரிட அவர் களின் புக மு ைர களு க் கு அவன் அடிமையானவனாகவே காணப்பட்டான்.
காலங்கள் உருண்டோடின. நண்பர்களின் கீழ்த்தரமான செயல்களினால் அப்பாவியான சொலமன் வேலையிலிருந்து
(27)

Page 16
அங்கு ஜெபமே அவர்களின் உயிர் நாடியாகக் காணப்படுகின்றது. நோயைக் கண்ட மக்கள் படும் கஷ்டங்களை அனுபவிக்கவில்லை அவர்கள். அதன் வேதனை வடுக்கள் கூட அந்த முகத்தில் காணப்படவில்லை. மிகவும் மகிழ்ச்சிகரமாகவும் ஒரு தெய்வீக சந்தோஷத்துடனும் பிரகாசத்துடனும் அவர்கள் கிறிஸ்துவுக்குள் நித்திரையடைகின்றார்கள்.
என்றாலும் கூட தந்தையிடமோ தமையனிடமோ எவ்வித மாற்றமுமில்லை, அவர்களுக்கு கவலையாம். தந்தைக்கு மனைவியையும் மகனுக்கு தாயையும் இழந்த கவலையாம் என்று மது என்னும் கொடிய சாத்தானின் கைதிகளாகின்றனர். இந்நிலையில் தங்கைகளும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைக்குச் செல்கின்றனர். சொலமனின் வாழ்வோ அப்படியே தான் இருந்தது.
ஒலிபெரு க்கியின் ஒலம் வந்த திசையை நோக்கி நடக்கிறான். அங்கு யாரோ ஒருவர் வார்த்தைகளை அள்ளிக் கொட்டுகிறார். அவற்றைக் கேட்கக் கேட்க அவனுக்குள் புதுப்பெலன் ஏற்படுகின்றது. அவனின் காதுகளுக்கு தேனிலும் மதுரமானவையாக அவை காணப் படுகின்றன. அந்த நிம்மதியான இளைப்பாறுதலைப் பெற நான் தகுதியுள்ளவனா? என்று சிந்திக்கும் வேளையில்,
"வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” என்று யேசு கூறுகிறார் என்றும் மேலும் கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள். அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். வாலிபனே! உன் வாலிப நாட்களில் உன் சிருஷ்டி கர்த்தரை நினை’ என்றும் வேதம் கூறுகிறது. பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! நீங்கள் காலம் கடந்து விட்டோம் என்று கவலைப்படாதிருங்கள். வாலிப நாட்கள் பூவைப் போல வாடிவிடும். என்றாலும் உங்களைத் தம் சொந்தப் பிள்ளைகளாக தெரிந்தெடுத்த கர்த்தர், "மகனே! மகளே! நீ. என்னிடம் மீண் டும் வர மாட் டாயா ? ... எ ன் று ஏ க் கத் தோடு பார்த்துக்கொண்டேயிருக்கிறார். உன்னைக் குறித்து அவர் தீட்டிய திட்டம் நிறைவேற உன்னை அவர் அழைக்கிறார். உன் உள்ளத்தில் அவர் பிறக்க இடம் கொடுப்பாயா? என்ற வார்த்தைகளில்
(28)

நீக்கப்பட்டான். கலங்கரையற்ற கப்பலாகவும், தூண்டிலில் அகப்பட்ட மீனாகவும் துடித்தான், கலங்கினான். புகமுரைகள் சூட்டியவர்கள் பூதங்களாகக் காட்சியளித்தனர். பணத்திற்காக நட்பை நாடியவர்கள், நண்பர்களைப் போல நடித்தவர்கள் நாலுபக்கமாக ஒதுங்கிச் சென்றனர்.
இந்நிலையில் அவன் எங்கு செல்வான்?. வீட்டுக்குச் சென்றால் பெற்றோர் அவனை நன்றாக ஆதரிப்பார்கள். ஆனால் அவனின் மனம் அதற்கும் இடம் கொடுக்கவில்லை. வீதிகளிலும் பஸ் நிலையங்களிலும் தன் காலத்தைக் கழிக்கிறான். எதுவும் செய்யும் திறமை யுடையவனாயிற்றே. சொந்த உழைப்பே மேல் என்று நினைத்து தனியாக லியாபாரம் செய்கின்றான். எனினும், மாயையில் விமுப்புண்டவன் அதிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கின்றான். மதுவுக்கே அடிமையாகிறான்.
கல்வி எனும் கரையிலிருந்து மீண்ட தங்கைகள் கடவுளின் பெரிதான இரக்கத்தினால் ஆசிரியர்களாகக் கடமை ஏற்கின்றார்கள். பயிற்சிக்காலத்திலோ தமது தாயின் உழைப்பினால் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றார்கள். தந்தையோ எதையும் பொருட்படுத்துவதே இல்லை, மதுவை அருந்தினால் பிள்ளைகள் விடிய விடிய பாடல்களைப் பாடவேண்டும். அதுவும் கிறிஸ்தவ பாடல்கள். இப்படியான இந்த குடும்பத்திலும் வாழ்க்கை தொடர்கிறது. எதிலும் நிறைவு அல்ல, எங்கு பார்த்தாலும் கடன் தொல்லைகள், விடிய விடிய டியூசன் கொடுத்து தாயாரும் கடன் தீர்க்க முயலுவார். ஆனால் தந்தையும் மகனுமோ தங்களுக்குக் கிடைக்கும் பணத்தைக் கொண்டு மதுபானம் அருந்துவதிலேயே காலம் கழித்தனர்.
இந் நிலையில் யார் செய்த பாவமோ? அல்லது இவர்கள் செய்யும் செயல்களை நீ பார்க்காதே’ என்றோ தெரியவில்லை, அநேகருக்கு உதவிகள் செய்த அந்தத் தாயை புற்று நோய் எனும் கொடிய சாத்தான் பிடித்துக் கொள்கின்றான். படுக்கையில் இருக்கும் தாயாரைத் தேடி நல்ல பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் நாடி வருகிறார்கள். அந்நிலையில் மிகவும் மகிழ்ச்சியுடன் தாயார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றார்.
(29)

Page 17
நெஞ்சம் பிழியப்படுகின்றான். தன்னை நொந்து கொள்கிறான். தனது கறைபடிந்த வாழ்க்கையை நினைத்து அந்த இடத்திலேயே முழந்தாற்படியிடுகிறான். வெறுமையாக தோன்றும் வானத்தை அண்ணாந்து பார்க்கிறான். மிகவும் மெதுவாக தன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து தேவனைக் கூப்பிடுகிறான்.
"அப்பா பிதாவே, என் கண்கள் கண்ட காட்சிகளில் நடந்தேன். நண்பர்களையும் மதுவையும் நாடி உம்மை மறந்தேன். என்னை மன்னியும். என்னைப் போன்ற சகோதரர்களையும் சந்தியும். என் உள்ளத்தில் குழந்தை இயேசுவாக பிறந்திடும்." என்று நொறுங்குண்டவனாக கர்த்தரை நோக்குகிறான். அவனுக்குள் தெய்வீக சந்தோஷம், சமாதானம், அமைதி, தெளிவு பிறப்பதையும் உணர்கிறான். அவனிடம் காணப்பட்ட தீய செயல்களெல்லாம் எங்கோ செல்வதையும் தான் வெறுமையாகி விட்ட உணர்வையும் பெறுகிறான். காலத்தை மறந்தவன் கலண்டரைத் திருப்புகிறான். என்ன..? டிசம்பர் 25 அப்படியென்றால் இன்று கிறிஸ்மஸ் தினமல்லவா? மகிழ்ச்சியினால் அவன் உள்ளம் துள்ளுகிறது முழங்காலில் நிற்கிறான். பாவ வாழ்விலிருந்து என்னை மீட்டெடுக்கப் பிறந்த சுதனே! உம்மை என்வாழ்நாளெல்லாம் துதிப்பேன்; என துதிகீதங்களால் புகழ்கிறான். என்றுமில்லாத சந்தோஷத்துடன் தூசுகள் படிந்த வேதத்தை எடுத்துக்கொண்டு தேவாலயத்தை நோக்கி விரைகிறான். ஆலயத்தை நெருங்கியதும் டாங்.டாங்.டாங் எனும் மணியோசையும் கேட்கிறது.
Y.
 

இரண்டாவது பரிசு பெறும் சிறுகதை 2 அன்று பிறந்த நாதனே!
-பிரசில்லா பெரேய்ரா
சுரேஷூக்கு இன்று கண்மண் தெரியாத ஆனந்தம். இன்று நடந்த போட்டியில் அவனைத்தான் கிறிஸ்மஸ் நிகழ்ச்சியில் தனிப்பாடல் பாட தேர்ந்தெடுத்திருந்தார்கள். அத்தனை பேருக்கு நடுவில் அவன் குரல்தான் தேவகானமாய் ஒலித்திருக்கவேண்டும்.
அந்தக் கிறிஸ்மஸ் பாடலில் அன்று பிறந்த நாதனே!
இன்று பிறக்க வாரீரோட் என்ற தாள ஸ்வரத்தில் அவன் குரல் அசைந்து, நகர்ந்து, உணர்ச்சியோடு லயிப்பதை அவனே பரவசப்பட்டு ரசித்திருக்கிறான். மனம் சிலு சிலுத்துப் பொங்குகிறது. ஜில்லென்ற தென்றல் மன நரம்புகளை நெருடி கானமுண்டாக்குகிறது. அவனை டிவி'யில் எல்லோரும் பார்க்கப் போகிறார்கள் மன ஏடுகளில் பொறிப் பொறியாய் விழும் பெருமையின் தணல்கள்! வீட்டில், கிறிஸ்மஸ் வேலைகள் மும்முரமாய் நடக்கின்றன. அம்மா பலகாரம் செய்கிறாள். அக்கா புதுச் சட்டை தைக்கிறாள். சுரேஷின் அறையிலிருந்தோ எந்நேரமும் "அன்று பிறந்த நாதனே! இன்று பிறக்க வாரீரோ" என்ற கிறிஸ்மஸ் கீதம் ஒலிக்கிறது. அழகான கானம், அழகிய குரலில் வளைய வருகிறது. இருண்ட மனசின் முலைகளில் பிறக்கத் துடிக்கும் இயேசுபிரான் பாடல்களின் ஸ்ருதிகளில் மட்டும் பவனி வரும் சோகம்! இன்று டிசம்பர் 21ம் திகதி. 23ம் திகதி தான் சுரேஷ் டீவியில் பாடப்போகிறான். காலை 10 மணிக்கு "ரெகார்டிங்' மாலை 5 மணிக்கு ஒளிபரப்பு, அன்று சுரேஷின் வகுப்பில் படிக்கும் மாணவன் அரசு பஸ் நிறுத்தும் இடத்தில் நின்றுகொண்டிருந்த சுரேஷைக் கண்டுவிட்டான். அரசுவும் பாடல் தேர்விற்குப் போனவன்தான். சுரேஷிற்கு முதலிடம் கிடைத்ததை நினைத்து நினைத்து அவன் மனம் பொறாமையில் தகித்துக் கொண்டிருந்தது. எப்போது அவனைக் கிண்டல் பண்ணலாம் என தவித்துக் கொண்டிருந்த அரசு தனியே சுரேஷ் பஸ் நிறுத்துமிடத்தில் நிற்பதைக் கண்டதும்,
(31)

Page 18
அவனருகே வந்து கேலியாக, "ஐயா பெரிய டீவீ ஸ்டார் ஆகி விட்டதாக நினைப்பு அதனால் தான் எங்களைப் பார்க்கக் கூட நேரமில்லை போலும்" என்று கேலியாகச் சிரித்தபடி அவன் முதுகில் ஒரு தட்டு தட்டினான். சுரேஷின் மனதில் நெருப்பு வெள்ளமாய் கோபத்தின் கொந்தளிப்பு பாய்ந்து வந்து, அரசுவைப் பொசுக்க உந்து கிறது. ஜிவு ஜிவு என்று இரத்தம் உடம்பில் பாய்ந்து பரவ எங்கேயிருக்கிறோம் , என்ன செய்கிறோம் என்ற நினைவேயில்லாமல் கையை நீட்டி அரசுவின் கன்னத்தில் ஒரு அறை அறைந்தான். ஏற்கனவே பொறாமையின் தீயில் தகித்துக் கோண்டிருந்த அரசு அடிபட்ட நாகமாய்ச் சீறி எழுந்தான். அவன் கை மின்னல் வேகத்தில் சுரேஷின் தொண்டையைப்பிடித்து அழுத்தியது. சுரேஷ் பயங்கரமாய் அலறியபடி அரசுவின் கையைப் பிடித்துத் தள்ள முயன்று கொண்டிருந்தான். ஒரு நிமிட இறுக்கத்திக்குப் பின் தன் கையைத் தளர்த்திய அரசு நசுங்கிய தொண்டையுடன் நன்றாகப் பாடு” என்று கூறியபடி மின்னலாய் மறைந்தான். அப்போது தான் அரசுவின் கீழ்த்தரமான பொறாமையை ஊகித்து அறிந்த சுரேஷ் தொண்டைக்குள் ஏதோ அடைக்கும் உணர்வுடன் தடுமாறித் தத்தளித்தான். இந்தத் தொண்டைக்கு இந்த நேரம் ஏதாவது வந்து விட்டால் அவன் என்ன செய்வான்? சே! எத்தனை பொறாமையிருந்திருந்தால் அரசு இப்படித் தொண்டையைப் பிடித்து அழுத்துவான்? திடீரென்று ஒரு பயம் சுரேஷின் மனத்தைக் கெளவியது. ஐயோ! அவனுக்குப் பாட முடியுமா? பாட இயலுமா? மனம் துடித்துத் துவண்டது. மெதுவாக வாய்க்குள்ளேயே பாடிப் பார்த்துக் கொண்டான். வீடு சென்றபின் முழுப் பாட்டையும் பாடிப் பார்த்தான் சுரேஷ், மனம் அழுதது. அவனுக்கு மட்டும் சில மாற்றங்கள் தெரிந்தன. சில ஸ்வர அசைவுகள் வராதது போல் ஒரு பிரமை. தம்பி சுநந்தாவோ அப்படியொன்றுமில்லை அண்ணா! அரசுவை மறந்து ஆண்டவனை நினைத்துக் கொண்டு பாடு அண்ணா! அதுதான் முக்கியம்” எனஅறு ஞானிபோல் கூறிவிட்டு ஒதுங்கிக் கொண்டான். சுரேஷிற்கு ஆண்டவனை விட தன் குரலைப் பற்றிய நினைவே மேலோங்கி நின்றது. பாட்டைப் பழகிப் பழகி கடைசியாக பாடும் நாளும் வந்து சேர்ந்தது! அன்று எல்லோருக்கும் வீட்டில் ஒரு முக்கியமான நாள். சுரேஷின் மனதில் குரலைப் பற்றிய கவலை: ராகம் நன்றாக
(32)

இவ்வளவு நாளும், தன்குரலையும், ஸ்வர அசைவுகளையும், பாடல் டீவீயில் அழகாய் ஒலிக்கவேண்டும் என்ற ஆர்வத்தையுமே மனதில் கொண்டிருந்த சுரேஷின் இதய அரங்கில், இப்போது என்ன புதுக்கருத்துடன் இப்பாட்டு ராஜ நடைபோடுகிறதே? இதை இந்த நேரம் ஆழமான கருத்தின் தெளிவோடு நர்த்தனமாட விடுவது யார்? அந்தப் பாடலின் அர்த்தச் செறிவை மனசில் ஒளிக் கோலமாய் வரைவது யார்? ஏன் இந்தப் பாட்டு இவ்வளவு
தெளிவாக அவன் மனதில் ஒடுகிறது?
ஆ! இந்த ஜோதிமயமான கணத்தில்தான் இயேசு நாதர் சுடர்க் கோலமாய் உள்ள ஆழத்தில் பிறக்கிறார். இயேசுநாதர் உள்ளத்தில் உயிர்க்க உயிர்க்க அவர் சொன்ன வார்த்தைகளைக் கைக் கொள்ளும் ஆர்வம் முந்துகிறது. "ஏழெழுபது தரம்” என மனம் அடித்துக் கொள்கிறது.
சுரேஷ் ஓடுகிறான். அரசுவினருகில் மண்டியிட்டுக் குனிகிறான். அவன் தலையருகில் அடிபட்டு இரத்தம். செந்நீர், மோட்டார் சைக்கிள்காரனுடன், கைதட்டி ஒரு "த்ரீ வீலரை” நிறுத்தி, அரசுவை அதில் அள்ளிப் போடுகிறான். "த்ரீ வீல்" ஆஸ்பத்திரிக்குப பறக்கிறது சுரேஷ், அரசுவின் அம்மா அப்பாவிடம் அரசுவின் நிலையை அறிவிக்க அரசுவின் வீட்டிற்கு விரைகிறான்.
சுரேஷ், அரசுவின் வீட்டுப் படியேறி வீட்டுக்குள் கால் வைக்கையில் எல்லோரும் "டீவீயின் முன் உட்கார்ந்திருக்கிறார்கள். அதோ! அவன் பாட்டு! அநாத கானமாய் ஒலிக்கிறது.
”அன்று பிறந்த நாதனே!
இன்று பிறக்க வாரீரோ"
இன்று அசைவுகளையும், ஸ்வரங்களையும், குரலையும் நினைக்கும நிலையில் சுரேஷ் இல்லை. அன்று பிறந்த நாதன், இன்று அவன் மனதில் ஜாஜ் வல்யமயமாய்ப் பிறந்து ஜோதிக் கதிர்களை வீசுகிறான். அந்த அழகான பாட்டிற்குள் அவன்! அவன்! அவன்!.
X- X- X-。
(33)

Page 19
* வாழ்த்துகின்றோம்!
1964 இல் டீக்கனாய்ப் பதவியேற்று 1965 இல் குருப்பட்டம் பெற்று மாத்தளை மாவட்ட திருச்சபையிலும் 1973 தொடக்கம் கண்டி மாவட்ட தமிழ்ச்சபையிலும் இறைபணி யேற்று நிறைபணிசெய்து 31.12.1992 தொடக்கம் ஒய்வு பெறும் மறைதிரு. கெனன் ஜோண் எஸ். ஐஸக்
அடிகளாருக்கு எம் வாழ்த்துக்கள்!
* வரவேற்கின்றோம்.
1993 ஜனுவரி தொடக்கம் கண்டி மாவட்ட தமிழ்ச்
சபையின் தலைமைக் குருவாய்ப் பணியேற்கும்
மறை திரு. G. ஷாந்தகுமார் பிரான்ஸிஸ்
அடிகளாருக்கு எம் வரவேற்புகள்!
്
* பேராயரே வருக!
கொழும்பு அத்தியட்சாதீனத்தின் புதிய பேராயர்
அருள் தந்தை. அவர்களை வருக! வருக வென வரவேற்கின்றோம்.
தொடர்பு - ク = -ܨܠ
(34)

* தொடர்பு ஆறாவது இதழ் ஏந்தி வந்த மார்ட்டின் லூத்தர் பற்றிய செய்திகள் பிரமாதம். தொடர்பு புத்தாண்டில் மேலும் பொலிவு பெற வாழ்த்துகிறேன்.
றொபட் ரவீந்திரன் - களுவாஞ்சிக்குடி
ஐப்பசி, காாத்திகை இதழ் மிகமிக சிறப்பானது. விசேஷமாக மார்ட்டின் லூதரைப்பற்றிய அனைத்து அம்சங்களும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. முக்கியமாக எனக்கு மார்ட்டின் லூதருடைய வாழ்க்கை வரலாற்றைப்பற்றி எதுவும் தெரியாது. எனவே இவ்விதழுக்கூடாக அவரைப்பற்றி தெளிவான பல அம்சங்களைப் படித்தது எனக்கும் இன்னும் எதிர்கால சந்ததிக்கும் மிகவும் அவசியமானதாகும். அத்தோடு எப்படி வளரும் திருச்சபை' என்று சகோ. போல் ஹீதரனின் கவிதைக்களம் மிகவும் அருமை. அதில் இருக்கும் ஒவ்வொரு வசனமும் மிகவும் அர்த்தமுள்ளவைகளாக இருப்பதால் படிக்கப் படிக்க மிகவும் வேதனையாகவுள்ளது. இன்றைய உலகிற்கு இது போன்ற கவிதைகள் மிக அவசியம். அதேபோல் ஆண்டவரே! யாரிடத்தில் போவோம், யோசுவாவைப் பற்றிய விசுவாசமுள்ள தலைவன் போன்ற அனைத்து அம்சங்களும் மிகவும் அருமை. அத்தோடு தொடர்பு மனிதனுடைய இருதயத்தை இறைமகனோடு தொடர்புவைக்க உதவுகின்றதால் தொடர்பிற்கு என் வாழ்த்துக்களும், அதில் அக்கறையோடு பங்கெடுக்கும் ஒவ்வொரு சகோதர சகோதரிகளுக்கும் என் ஜெபமும் என்றும் உண்டு.
மலர் கிங்ஸ்ற்றன் - பதுளை
* இறையியல் கல்லூரி போல் ஹீதரனின் எப்படி வளரும் திருச்சபை? என்ற கவிதை உண்மையை விளக்கி உயர்வு பெறுகின்றது. இது எல்லோருக்கும் ஓர் எச்சரிக்கையாக அமையட்டும் ”
திருமதி. J.P. ஜேசன் - கண்டி.
-x -x (35)

Page 20
புத்தாண்டின் புதிய )
எதிர்பார்ப்புகள்.
-திருமதி U.P. ஜேசன்
* தேவனுடைய பிள்ளையே
உனது எதிர் பார்ப்பு என்ன?
* அருள் வாக்கு:
"என் கிரு பை உனக்குப் போதும்."
போதும் என்ற சொல் எதையும் திருப்தியாகப் பெற்றபின் சொல்ல வேண்டிய ஒன்று. வருடமுழுவதும் வருத்தத்தையே சுமந்து சோர்ந்து போன உள்ளங்களிலே - தேடியும் பெற்றுக் கொள்ளாமல் குழுறிக் கொண்டிருக்கும் உள்ளங்களிலே - நோயினால் வாடி இனி நான் இல்லை என்று உடைந்து போன உள்ளங்களிலே - போட்டியிலும் பொறாமையிலும் அகப்பட்டு வெறுப்புற்ற உள்ளங்களிலே - கிறிஸ்து பிறந்திருப்பாரானால் . போதும் என்ற சொல் நிறைவு பெற்றுவிடும். "ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புதிய சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின; எல்லாம் புதிதாயின." (11 கொரி. 5:17)
சோர்ந்து போகவேண்டாம்; சிறுமைப் பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர். நெருக்கப்படுகிற காலங்களிலே அவரே தஞ்சமானவர். அவருடைய கிருபை நமக்குப் போதும் என்று தைரியம் கொள்ள வேண்டும். என்ன வந்தாலும் நம் நம்பிக்கை யேசுவில் இருக்க வேண்டும். "ஆண்டவரே! நீரே என்பங்கு என்று திருப்தி கொள்ள வேண்டும்.
சோர்ந்து போகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து சத்துவமில் வாதவனுக்கு சத்துவத்தைப் பெருகப் பண்ணுகிறார். இளைஞர் இளைப்படைந்து சோர்ந்து போவார்கள்.
(36)

வாலிபரும் இடறி விழுவார்கள், க்ர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப் பெலன் அடைந்து கழுகுகளைப் போல செட்டைகளை அடித்து எழும்புவார்கள். ஆகவே கர்த்தருக்குக் காத்திருப்போம். அவர் நம்மை ஆசீர்வதிக்கும் பொருட்டு அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருப்போம். எல்லாவற்றுக்கும் அவருடைய கிருபை நமக்குத் தேவை. அவருடைய கிருபையைப் பெற்றுக் கொள்ள கர்த்தருக்குப் பயந்து நடக்க வேண்டும்.
"கர்த்தருக்குப் பயந்து அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மநுஷன் பாக்கியவான். அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான். துர்ச் செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான். அவன் இருதயம் கர்த்தரை நம்பித்திடனாயிருக்கும்." (சங் 112)
ஆகையால் புதிய வருடத்தில் நாம் எதிர்பார்ப்பது என்ன?
"நான் தாழ்த்தப்பட்டு விட்டேன்; எப்போது உயர்த்தப் படுவேன்? மற்றவர்கள் என்னை விட பணக்காரர் ஆகி விட்டார்கள். எப்போது பணக்காரன் ஆகலாம்? என் சத்துருக்கள் எல்லாம் வெற்றி பெறுகிறார்களே! நான் எப்போது வெற்றிபெறுவேன்? என் கடன் எப்போது தீரும்? என் வியாதி எப்போது தீரும்? என்றெல்லாம் சிந்தித்துச் செயலிழந்து எங்கே ஓடலாம்? யாரைக் கேட்கலாம்? என்ன செய்யலாம்? என்று அங்கலாய்க்கின்றீர்களோ! உங்களைத் தடுத்து நிறுத்துகிறது ஒரு குரல். "என் கிருபை உனக்குப் போதும்" ஏற்றுக் கொள்ள முடியுமா? கடினமாக இருக்கிறதே. எல்லா ஆசைகளையும் எப்படி அடக்க முடியும். என்றாலும் சற்று நின்று யோசித்துப் பார்ப்போம். என் பரம பிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும் என்று கூறியிருக்கின்றாரே. அவரே நாற்றுக்களை நட நாம் இடம் கொடுப்போம். அவருடைய கிருபையை எவ்வளவு அதிகமாய்ப் பெற்றுள்ளோம் என்பதைக் கடந்த நாட்களை நினைவு கூர்ந்து அவரை ஸ்தோத்தாரிப் போம். புதிய வருடம் ஆசீர்வாதமாய் அமையட்டும். r
“நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு;
நிச்சயமாகவே முடிவு உண்டு. உன் நம்பிக்கை
4) வீண் போகாது” 大 大 大 (நீதி 23:17-18)
(37)

Page 21
(கிறிஸ்துவை ராஜாவாக்குதல்)
a- ತೈಅ । திரு . ஆர். துரைராஜா
s خ؟؟؟"i |
88፳፻፳ፋላ88?ኝኴ8A
Yes
Y.
இயேசு கிறிஸ்துவை ராஜாவாக்குவதே இன்றைய மெய்க் கிறிஸ்தவர்கள் அனைவரினதும் மேலான பணியாக இருக்கின்றது.
* அனைத்தையும்
அவருக்கே அளிப்பதன் முலமாக.
நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவுக்கு எம் இதய சாம்ராஜ்யத்தைக் கொடுக்கலாம். ஆனால், அவர் நமது முழு ஜீவியமாகிய அரியணையிலமர்ந்து எமது ஆசாபாசங்கள் - வாழ்வின் இலக்குகள் - விருப்புக்கள் - இதயவுணர்வுகள் அனைத்திலுமே நமது ராஜாவாக ஆகும் வரை தமது ராஜ்யத்தை உலகில் விரிவுபடுத்தும் பணியில் எம்மை உபயோகிக்க மாட்டார். நமது வாழ் வின் சகல நிலைகளிலும் அவருக்கே உன்னத ஸ்தானத்தையளித்து, இதயபூர்வமான முழு அன்பினால் அவருக்கு நம்மை அர்ப்பணிப்பதன் மூலமே இதைச் செயற்படுத்த முடியும்.
நமது தேவன் மட்டுமே நம்மை ஆளுகை செய்ய வேண்டும். அரசர்கள் நமக்கு இருக்கலாம்; ஆனால், இயேசுகிறிஸ்து ஒருவரே எம் எல்லாருடைய இதயங்களிலும் பேரரசராக விளங்க வேண்டும்
(38)
 

இன்று அவர்தம் மகிம்ைக்காக மக்கள் கூட்டத்தைத் தயார்படுத்திய வண்ணம் இருக்கின்றார். நொடிப் பொழுதேனும் அவரது ஆதிக்கத்திற்கு ஏற்படும் தடைகளை அகற்ற வல்ல மணவாட்டியின் அன்பை வழங்கக் கூடியதாக அவர் பின் செல்லும் ஆட்டுக் குட்டியைப் போல அவர்கள் அமைய வேண்டும். அது ஒரு சோதனையான காரியமும் தான்.
பிரியமானவர்களே, இயேசு கிறிஸ்துவுக்கு எம் இதயங்களைக் கொடுத்து விட்டோமா? அக்-ைகங்கரியத்தை இப்பொழுதே மகிழ்வுடன்
நடைமுறைப் படுத்துவோமா?
உங்களது மனச்சாட்சி தரும் பதிலே அச் சமர்ப்பணத்தின்
அரும் சோதனையாகும்.
* அவருக்கூடாக வெற்றிபெறுவதன் முலமாக.
உங்களுடைய பகைவர்களையும். பிரச்சினைகளையும் அவருக்குப் பாரப் படுத் துவதன் மூலமும் அவருடைய சத்துருக்களையும் உங்களுடைய எதிரிகளையும் மேற்கொண்டு ஆளுகை செய்யும் பணியினை அவரிடமே விட்டு விடுவதன் மூலமும் இயேசு கிறிஸ்துவை உங்கள் வாழ்வின் ராஜாவாக நீங்கள் ஆக்கிக் கொள்ளலாம். அதைத் தொடர்ந்து உங்களது வாழ்வில் நேருவனவெல்லாம் அவருக்கு உயரிய ஸ்தானத்தையும் உன்னத கிரீடத்தையும் அளிக்கும் காரியங்களாகவே இருக்கும். அவருக்கல்ல; அது உங்களுக்கே பலமிக்க தொன்றாக அது இருக்கும். உங்களால் செய்யப்பட்ட வாக்குறுதி சுயதேவைக்கு இலகுவாக இடமளிக்கும் ஆடம்பரமான நிகழ்வொன்றல்ல. மாறாக, எண்ணற்ற எதிரிகளையும், எப்பொழுதுமே கடினமானதும் நேர்மையானதுமான வெற்றிகளையும் கொண்ட ஒரு யுத்த களமாகும்.
பகைமையுணர்வுடன் உங்களைச் சந்திக்க வரும் மன்னர்களின் கும்பல் உங்கள் தலைவரது பெலத்தை நிரூபிக்க முற்படும் மற்றுமொரு சவால் என்றே குறிப்பிட வேண்டும். வீரர்களான அம் மன்னர்களைக் கண்டு பயந்து - பின்வாங்கி, "எதிரிகளின் படை பலம் வாய்ந்தது; போர் மிகக் கடுமையானது' என மிரளுவதற்குப் பதிலாக, அவர்கள் உங்களுடைய எதிரிகள் என்பதிலும் அவர்கள் அவருடைய எதிரிகளே என்பதை உணர்ந்து
(39)

Page 22
அவர்களை மேற்கொன்ரும் பணியினை அவருக்கே பாரப்படுத்தி விட வேண்டும்.
எதிரிகள் முழுமையாக அழிக்கப்பட வேண்டும் என்ற இறைவனின் திட்டமே அரசர்கள் பலர் அன்று யோசுவாவுக்கு விரோதமாக படையெடுத்தமைக்குக் காரணமாகும். கர்த்தரின் சித்தப்படியே ஆனாக்கின் குமாரர் அனைவரும் அன்று இஸ்ரேலிய படையினருக்கு எதிராக அணி வகுத்தனர். இது இஸ்ரவேலை அழிப்பதற்காக அல்ல; தங்களது அழிவைத் தாங்களே தேடிக் கொள்வதற்காகவே. எனவே, யுத்தம் என்பது எதிரிகளை நிர்மூலம் செய்வது எனக் கொள்ள முடியாது. எனவே, அவர் எமக்குச் சொல்வது. "உங்கள் பகைவர்களினால் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. அது அவர்களது அழிவுக்கு வெளிப்படையான அடையாளமாகும். அதே வேளை கர்த்தரால் உங்களுக்கு அருளப்படும் இரட்சிப்புமாகும்’
கிறிஸ்துவானவர் உங்களுடைய ஜீவியத்தைக் குறித்து ஆதிமுதலே அக்கறை கொண்டிருந்தார். உங்களைக் குறித்த அவரது தீர்மானங்களன்றி வேறெதுவும் உங்களது வாழ்வில் இடம் பெற்று விடவில்லை. அவருக்கு முழுமையான இடத்தை நீங்கள் கொடுத்தால் மகத்தான வெற்றிக்குள் உங்களை இட்டுச் செல்வார். அவருடைய இராஜ்ஜியத்தின் அர்த்தமே இதுதான். இவ்வாறாக அவர் நமக்கும் தமக்குமான கிரீடத்தை வெற்றி பெறுகின்றார்.
எனவே பிரியமானவர்களே,
உங்களுடைய சகல துன்ப - துயரங்களையும் அவரிடமே
ஒப் படைத் து அவரையே அனைத் துக் கும் அரச ராச
முடிசூட்டுவீர்களை7
* அவருக்காக உழைப்பதன் முலமாக.
- இலங்கையிலும், சர்வ பூமியிலும், அவருடைய சுவிசேஷத்தைப் பிரஸ்தாபிப்பதன் முலமும், அவருடைய மகிமை மிக்க சத்தியத்தையும் பணியையும் பரப்புவதன் மூலமும், கிறிஸ்துவை நாம் ராஜாவாக்க முடியும். ஏராளமான இதயங்களின் கிரீடங்களை அவருக்காகச் சம்பாதித்து அவருடைய மகத்துவமான வருகையைத்
(40)

துரிதப்படுத்து வோமாக,
இதனைச் செயற்படுத்துவதற்கு இரண்டு வழிகள் உள்ளன.
★ அ வரு டைய மண வாட் டி யை திரு ச் சபையின்
அந்நியோந்நியத்திலிருந்து முழுமையாக விலக்குவதாக அல்லாது
புனிதப்படுத்தப்பட்ட தன்மையில் வெளிக் கொணருவதே முதலாவதாகும்.
* வெறும் பேச்சளவிலல்லாமல் பாவத்திலிருந்து பரிபூரணமாக தமக்கென வேறுபடுத்தப்பட்ட மணவாட்டியை தாமே தெரிந்து கொள்ளுகிறார்.
* ஆயினும், உலகியல் பாவங்களிலிருந்து விடுபட்டு தம்மை வேறுபடுத்தி அவருடைய நேரிய வழிகளில் செல்பவர்கள் அவரால் விரும்பப்படும் மணவாட்டியாக அழைக்கப்படுவார்கள்.
இரண்டாவதாக, இரட்சிக்கப்படாதோர் மத்தியில் கிறிஸ்துவின் நற் செய்தியை அறிமுகப்படுத்த நமது நாட்டில் இச்செய்தி கிட்டாதோருக்கு இதை அனுப்புவதன் மூலம் நாம் இதை நிறைவு செய்யலாம். உலகெங்கும் சுவிசேஷம் கொண்டு செல்லப்பட வேண்டுமென்பதே நம் எஜமானரின் இன்றைய எதிர்பார்ப்பாகும். இப்பணி நிறைவு செய்யப்பட்டதும் அவருடைய வருகைக்குத் தடையேயில்லை. அவருடைய வருகைக்கான முயற்சிகளில் நாம் ஈடுபடுகிறோமா? அதாவது அவருடைய நற்செய்தியை அனைவருக்கும் எடுத்துச் செல்லுகிறோமா? இன்றைய திருச்சபைகளில் தேவன் எதிர்பார்ப்பது இதுவே. நிரந்தரமானதும் பெரியதுமான நிறுவனங்களையல்ல. வரவிருக்கும் ராஜாவைப் பற்றிய செய்திகளையும், உலகெங்கும் வினியோகிக்கும் செய்தியாளர்களாக நாம் இருக்க வேண்டும் என்பதே அவரின் எதிர்பார்ப்பு.
மாவீரன் நெபபோலியன் தனது ஆட்சிக்காலத்தில் மனித கரங்களினால் தனது சிரசில் மகுடம் சூட்டப்படுவதை மறுத்தான். மாறாக, தனது கரங்களினாலேயே தனது கிரீடத்தை அணிந்து கொண்டான். அதற்கு அவன் அளித்த விளக்கம் பின்வருமாறு:-
(4)

Page 23
"இவைகள் வெற்றிபெற்ற கரங்கள். இக்கரங்களே ஒரு சக்கர வர்த்தியின் சிரங்களில் முடியை யெற்றுவதற்குப் பொருத்தமானவை
ஆனால் , இயேசு பெருமானரின் எண் ண ம் அப்படிப்பட்டதல்ல. தன்னை நேசிக்கிறவர்களை கெளரவிக்கும் வகையில் அவர்களுடைய கரங்களினாலே தாம் முடிசூட்டப்படுவதை விரும்புகிறவர்.
அவருடைய ராஜ்யம் விரைவாய் வருவதற்கு அவருடைய மகிமையின் கிரீடங்கள் அதிகரிக்கும் வகையில் அவர் நமக்கு உதவிபுரிவார்.
உரு கிடத்தான் மெழுகு. கரைந்திடத்தான் உப்பு. அழிந்)த்திடத்தான் கற்பூரம் எரிந்)த்திடத்தான் விறகு (அடுப்பு)
இதுஎன்ன? தியாகமா?
d9F Tai T? அகும்சையா?
* பாவலர் + கிரான் ஜீவன்.
(42)
 

அன்பார்ந்த வாசகர்களே,
தொடர்பு' சஞ்சிகையைத் தொடர்ந்தும் பெற விரும்புகிறவர்களுக்காக சந்தாப் படிவமொன்றைக் கீழே தருகின்றோம். சுவிசேஷம் உலகெங்கும் செல்ல தொலைத் தொடர்பு சாதனங்கள் அவசியம் என்பதை அறிவீர்கள். அதில் ஒரு சிறு துளியளவையேனும் இத் தொடர்பு மூலம் நிறைவு செய்ய உங்களுடைய பங்களிப்பு அவசியமாகின்றது. நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள் என்றார் இயேசு. எனவே, உணவுப் பண்டங்களுக்குள் மறைந்தே நின்று சிறந்த ருசிந்த ருசியைத் தரும் உப்பைப் போன்று உங்கள் பங்கினை எதிர்பார்க்கின்றோம். புதிய தொரு அங்கத்த வரைத் தொடர்புடன் இணைப்பதன் மூலமாக நீங்கள் உங்கள் பங்கினை அளிக்கலாம்.
L119.6u gang 60 1î, Rev. R. Thurairajah, 6. Balahenamulla Lane, Colombo - 6. என்ற விலாசத்திற்கு 60/- ரூபாவுக்கான காசுக்கட்டளையுடன் அனுப்பி வையுங்கள். M.O. எடுக்கும் போது
காசு பெறும் கந்தோர் Wellawattu என்று பதிவு செய்யவும்.
SSSSSS LLSLL SLLLLLLLL LLLLLLLLSLLLLLL SL LSSSLLLLLLLLLSLLLLLSLLLLLSLLLSLCSLLCLLLLLLL LLLLCLLLLLLS LLL LLSLSLLSL LLLLL LLLL LSLLLLLLSLSLL LLLLCS0SSLLSLS SSLLLLLLSLL SS SLL C C LLLLLCCLC CCLLCLS 00CL0L LLL LLLLCLLLLCLCLLLCLCL q
தோடர்பு - சந்தாப் படிவம்
இத்துடன் ஆண்டுச்சந்தா ரூ . ஐ காசுக் கட்டளை ( இல
SL S SL S S LSL LSL LSL LSL LL LSL LSLSL S L LSL S LS LS ) மூலம் அனுப்பி வைக்கிறேன்.
பெயர் - . ................... ................. . . . . . . . . . . . .
☎*ဓU/for if *– ......................................................................................................................

Page 24

* அன்பார்ந்த வாசகர்களே,
அடுத்த இதழுக்கான தலைப்பு ‘சமாதானம்' என்பதாகும். எனவே, பொருத்தமான விடயங்களை எதிர்பார்க்கின்றோம். * gaietGld Fist goal Rev. R. Thurairajah, 6, Balahenamulla Lane,
Colombo 6. என்ற முகவரிக்கு M. O, மூலமாகவே அனுப்பி வையுங்கள். காசு பெறும் தபாற்கந்தோர் WELLAWATTE எனக்குறிப்பிடவும். * சஞ்சிகை சம்பந்தப்பட்ட விடயங்கள் - வினாக்கள் அனைத்தும் The Editor, Thodarpu, Dason's 90, Kandy Road, Kengalla grglid விலாசத்திற்கு அனுப்பப்படல் வேண்டும். * தயவு செய்து இவ் விரு விலாசங்களையும் ஞாபகத்திற்
கொள்ளவும். * உங்கள் ஆண்டுச் சந்தாவைச் செலுத்தி விட்டீர்களா? * புதிய அங்கத்தவர்களுக்கான விண்ணப்பப் படிவம் இணைக்கப் பட்டுள்ளது. இத்தமிழ்ப் பணியில் - மறை பணியில் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
- ஆசிரியர் * தொடர்பு - சந்தா விபரம் தபாற்செலவுடன் உள்ளூரில் இந்தியாவில் வெளியூரில் ஆண்டுச் சந்தா (8 பிரதி) ரூ. 60A ரூபா 100 US $ 15/- தனிப் பிரதி els 10A இலங்கை இலங்கை
ரூபா 200A esun 600A
* சஞ்சிகையை வாசித்து விட்டீர்களா? * பலருக்கு இதை அறிமுகப்படுத்துவதன் மூலம் இவ்வூழியத்துக்கு உதவி
ւյrflպն ծon. * உங்களுக்குத் தெரிந்தவர்களின் விலாசங்களை அனுப்பிவையுங்கள். * சஞ்சிகை பற்றிய கருத்துக்களோடு உங்கள் கட்டுரை, கதை, கவிதைகளையும்
ஆசிரியருக்கு அனுப்பி வையுங்கள்.
- நன்றி Thodarpu (magazine) - "BIBLECOR Lanka' Director - Rev. R. Thurairajah Editor - Bro. Devadson Jeyasingh Printers - Fine & Shine Printing Service
93/c2, Pratibimbarama Road, Dehiwala.

Page 25
வாசக நே 1992 கிறிஸ்ம
எமது வா!
 

ൺ -
தாண்டு 1993 pத்துக்கள்
~)