கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொடர்பு 1994.07-08

Page 1
Those
Who Bear the Who Wear the C
ല്ല ല
JULY – AUC
 

Cross in Earth rown in Heaven
ല്ല്യ
GUST 1994

Page 2
நுகர்வோரின் வசதிக்காக.
ஜீவ கிரீடம் --- 2
எக்காள முழக்கம் VM· பழிக்குப்பழி வாங்குதலும் கிறிஸ்தவர்களின் - பொறுப்பும் --- 7 ரசித்ததும் ருசித்ததும் 9 - ܘܗ ܚ வேதாகமப் புதிர் - இல. 017 .19 -- -ܫܫܝܚ கவிதைக் களம் 13 , - - ܢ விசுவாசம் என்பது என்ன? -- 7 ஆத்தும நேசரின் அங்க மகத்துவம் em ኃ2 ஏனோக்கு - ஏ - நோக்கு 25 வாசகர் பார்வையில். தொடர்பு ---- ጋ8 கொக்ரக்கோ! 29 ܝ ܚ
அன்பார்ந்த வாசகர்களே,
:
★
சஞ்சிகையை வாசித்த பின் சகலருக்கும் அறிமுகம் செய்யுங்கள். நண்பர்களின் விலாசங்களை எமி க்கு அனுப்பி வையுங்கள் . உரிய வேளையில் சஞ்சிகை வெளிவர ஊக்கமாய் ஜெபியுங்கள். கடிதத் தொடர்புகள் - ஆக்கங்கள், வேதாகமப் புதிர்விடைகள் The Editor, Thodarpu, Dason's, 90 Kandy Road, Kengalla என்ற விலாசத்துக்கும், SFjö35Tr — 5657 Go)35 IT GOL — 55 Gir Mrs. B. K. Thurairajah, Director, “Biblecor - Lanka”. 6, Bala henamulla Lane, Colombo-6, 6 rör so விலாசத்துக்கும் அனுப்பப்படல் வேண்டும். ஆண்டுச் சந்தா தபாற் செலவுடன் எழுபது ரூபா. காசோலை / காசுக்கட்டளை/ முத்திரைகள் மூலமாக இதை அனுப்பலாம். காசுக்கட்டளையாயின் காசு பெறும் தபாற் கந்தோர் *வெள்ளவத்தை" எனக் குறிப்பிட மறவாதீர்கள்.
Thodarpu - Christian Tamil Magazine for the whole family. Founder - (Late) Rev. Rajakumar Thurairajah Director - Mrs. B. K. Thurairajah Editor - Bro. Devadason Jeyasingh
Letterpress - Kumaran Press,
201, Dam Street, Colombo- 12. Phone : 42 38 8
7th issue 大 THODARPU 大 Ist July 1994

1994
அன்பார்ந்த வாசக்ரே,
எல்லாம் வல்ல இயேசுவின் இனிய நாமத்தில் உங்களை வாழ்த்தி இதழ் பதினேழுக்கு வரவேற்கின்றேன்.
கால நீரோட்டத்தின் பெறுபேறாக, நாளும் கோளும் நகர்ந்து தேவையும் சேவையும் திசைமாறிப் போகின்ற காலகட்டம் இது. எங்கு பார்த்தாலும் "முன்னர் இவ்வாறில்லை" எனப் பெருமூச்சு விடுவோர் - "இந்தக் காலம் இப்படித்தான்’ எனச் சலித்துக் கொள் வோர் - "இனி எப்படியிருக்குமோ?" என ஏங்குவோர் - ஒருபுறம். மறுபுறமோ காலத்திற்கேற்ப நாமும் மாறிக் கொள்ள வேண்டி யதுதான்" என எதையும் மேலோட்டமாகவும், இலகுவாகவும் நோக்குவோரும் இருக்கின்றார்கள்.
* பரதநாட்டியம்" என்றொரு கலையை நாம் அறிவோம், அரங்கு கள் வித்தியாசப்படினும் அபிநயங்கள் மாறுவதில்லை. முன்னிருந்து ரசிப்போர் வேற்று நாட்டவராயினும் முத்திரைகளில் மாற்றம் ஏற்படுவதில்லை. அக்கலைக்கென்றே அமைந்த தனித்துவம் அப்படி. இடம், பொருள், ஏவல் மாறுபடினும் அதன் அடிப்படை நுணுக் கங்கள் அசையா உறுதி பெற்றிருப்பதால் ஆண்டாண்டு காலமாக அது நின்று நிலைக்கின்றது.
இதே போல் அனைத்து நிலைக்ளிலும் உள்ள தனித்துவம் பேணப்படுமாயின் அதில் ஒரு புனிதத்துவம் இருந்து கொண்டே யிருக்கும்.
"உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு; திடன் கொள் ளுங்கள். நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்க ளாய் நடந்து கொள்ளுங்கள். உங்களை அழைப்பவர் உண்மை யுள்ளவர். ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள். முடிவு பரியந் தம் நிலை நிற்பவனே இரட்சிக்கப்படுவான்" என்றெல்லாம் வேதா கமம் போதிக்கின்றது.
எனவே, உலகக் கவலை, ஐசுவரியத்தின் மயக்கம், கண்களின் இச்சை, ஜீவியத்தின் பெருமை ஆகியவற்றுக்கு அடிமைப்பட்டு விடாமல் அல்லது சந்தர்ப்பத்துக் கேற்ற ஜதி போடாமல் எதிலும் உறுதியாய் நிற்கப் பழகிக் கொள்ளுவோமாக.
தற்சமயம் தொடர்பு வாசகர்களின் தொகை மூவாயிரம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதன் வளர்ச்சிக்காக தொடர்ந் தும் ஜெபிக்கவும், உழைக்கவும் முன்வருவீர்களாாக:
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்துவின் பணியில் தேவதர்சன் ஜெயசிங்

Page 3
| ஜீவ கிரீடம்
-- Mrs. B. K. THURAI RAJAH --
போட்டிகளில் வெற்றியீட்ட வேண்டும்; G6N6v uquunt fiks பரிசில் களைப் பெறவேண்டும்; வெள்ளிக் கிண்ணங்களை அள்ளவேண்டும்; கேடயங்களைச் சுவீகரிக்க வேண்டும். பதக்கங்களைத் தட்டிக் கொள்ள வேண்டும். அழகுராணிப் போட்டிக்கான அலங்காரக் கிரீடங்களை அணிய வேண்டும்.
இவையெல்லாம் இன்றைய கால கட்டத்தில் வயது, தகைமை, தராதரம் என்ற வேறுபாடின்றி எல்லாரது எண்ண அலைகளிலும் இழையோடி நிற்கும் விருப்பங்களாகும். வெற்றியடைதல்; வெகுமதி பெறவிரும்புதல்; தவறல்ல-நல்ல காரியமே.
உலஃகை உருவகித்த இறைவன் நிறைவாகவே அதைப் படைத் தார். இறைவன் வேண்டாம் என விலக்கிய கனியை ஆதிமனிதரான ஆதாமும் ஏவாளும் விரும்பிய காரணத்தால் பாவம் உலகில் புகுந் தது. மனித உள்ளத்தில் நிறைவு நீங்கியது. குறைவு குடிகொண்டது. ஏதோ ஒருபக்கம் ஒன்றுமில்லாத மாதிரி ஒரு தன்மை-வெறுமை நிலவியது. அவ்வெறுமை நிலையை நிவர்த்தி செய்வதற்காக மனிதன் வேலைக்கு மேல் வேலை செய்தான். திருப்தி காண்பதற்காகப் பல திட்டங்களை வகுத்தான் ஒன்றுமில்லாத வெற்றிடத்தை நிரப்ப, திருப்தியீனத்தைத் திருப்தி செய்ய பலவித வழிபாடுகளையும் மேற் கொண்டான். ஆனால் எவ்வகையிலுமே பாவத்திற்குப் பரிகாரம் கிடைக்கவில்லை.
விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்த இயேகிகிறிஸ்துவோ எல்லா ருடைய பாவங்களுக்காகவும் தம்மைத் தாமே பலியாக்கி சிலுவை மரணத்தையும் வென்று மூன்றாம் நாள் உயிர்த் தெழுந்தார். * மண்ணின் மகுடம் ፅ
உலக வெகுமதிகளைப் பெற விரும்பும் அநேகர் அதற்காகக் கடினமாய் உழைப்பதுண்டு. நேரம், பணம் எல்லாவற்றையும் விரயம்
திருமறைக் குறள்பல பக்கம் பக்கமாய் அருமையாய் உண்டிங்கு பாரீர். - ஆசிரியர்
= 2 =

செய்து பரிசுகளையும் வெகுமதிகளையும் எதிர்பார்ப்பதுண்டு இதனால் பகை, சண்டை முதலியன ஏற்படுவதுமுண்டு. வெற்றியும் வெகுமதியும் பெற்றால் ஒருவித திருப்தியும் பெருமகிழ்வும். மாறாக தோல்வி யென்றால் சஞ்சலமும் துக்கமும். வெற்றியில் போற்றும் உலகம் தோல்வியில் தூற்றுகிறது. என்றாலும் இவ்வுலக வெற்றிக ளுக்கான வெகுமதிகள், கிரீடங்கள், கேடயங்கள் எல்லாமே என்றோ ஒரு நாள் அழியக்கூடியன:
மரதன் ஓட்டம் பற்றி நாம் அறிவோம். பண்டைக் காலத்தில் இவ்வோட்டத்தில் வெற்றி பெறுவோருக்கு ஒலிவமர இலைகளினால் செய்யப்பட்ட கிரீடம் ஒன்று அணியப்படுமாம். காலப்போக்கில் நாகரிக வளர்ச்சி காரணமாக நம் நாட்டிலசுட அழகுராணிகளுக்கு கிரீடம் அணியும் பழக்கம் ஏற்பட்டது. இவை தரமான தங்கக் கிரீட மாக அமைந்தாலும் கூட தற்காலிகமானவையே. நிலையற்ற பூமியில் நிலையற்ற மனிதர்களால் சூட்டப்படும் நிலையறற கிரீடது கள் நிச்சயம் அழியக்கூடியவையே. மனனர்களின் வாழ்வும், அவர்கள் சூடிய மகுடங்களும், எத்தனைக் காலம் நின்று நிலைத்தன எனப தற்கு வரலாறு சான்று பகரும். ஆனால். "இறைவன நமக்கு வாடா ததும் மாசற்றதும் அழியாததுமான சுதந்திரத்தை வாக்குப பண்ணி யுள்ளார், பேதுரு 14 மேலும், "பிரதான மேய்ப்பர் வெளிபபடும் போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப பெறுவீர்கள். (1 பேதுரு 5:4) என்பதாக இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறித்துக் கூறப்பட்டுள்ளது.
வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மகிமையின கிரீடமானது மனிதராலோ, மணிகளாலோ ஆக்கப்பட்டது அல்ல. இறைவன் தரும் நிரந்தர வெகுமதியின் சின்னம் அது.
* விண்ணின் கிரீடம்
உலகின் பாவத்தைப் போக்க தம்மையே பாவ நிவாரணபவி u umri 6uu இயேசுவை விசுவாசிப்போருக்கு இவ்விண்ணின் கிரீடம் உறுதியாக்கப்பட்டுள்ளது. தம்மை ஏற்போருக்கு வெகுமதியாக அம் மகிமையின் கிரீடத்தை தயார்ப்படுத்தியுள்ளார் இயேசு. அதே வேளை நமது வாழ்நாளில் தமது மகிமைக்காக ஜீவிக்கும்படி நம்மை வற்புறுத்தியுள்ளார். ஆனால், அவ்வாறு ஜீவிக்க ஆரம்பித்ததுமே
எலும்பொன்றால் இருதனத் தழகிதோன்ற மனம் கரும்பொன்றாய்க் கலந்தது சாறு. - ஆதி, 2 : 23
ബ 8 , -

Page 4
கட்டாயமாக எதிர்ப்பு, வீழ்ச்சி, துன்பம் வரப்பார்க்கும். வரும். நம்மை விழுத்துவதற்குப் பிரதான எதிரியான சாத்தான் சந்தர்ப்பம் பார்த்தபடி இருப்பான். எனவே அவனை எதிர்த்துப் போராட எப்போதும் விசுவாசம் என்னும் கேடயத்துடன் தயாராக இருக்க வேண்டும்.
இறைவனுக்கென்று வாழ முற்பட்ட பவுல் அநேக இம்சைகளுக் கூடாக நடந்தான். வெற்றி பெற்றான். எனவேதான். "நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது. நல்ல போராட்டத்தைப் போராடினேன். ஓட்டத்தை முடித்தேன். விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இது முதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட் டிருக்கிறது. நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனககுத் தந்தருளுவார். எனக்கு மாத்திரமல்ல; அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்' (2தீமோத்தேயு 4:6-8) என்பதாக எழுதுகிறான்,
இவ்வாறு விசுவாசிகளுக்கு அருளப்படும் கிரீடம் நிலையானது. நிரந்தரமானது. விலைமதிப்பற்றது. அழியாதது. இதை எமது சுய சித்தத்தினாலோ, முயற்சினாலோ பெற்றுவிட முடியாது. இயேசு கிறிஸ்துவினூடாக அளிக்கப்பெற்றுள்ள கிருபையினாலாகும்.
'நீ மரண பரியந்தமும் உண்மையாயிரு; அப்பொழுது ஜீவகிரீ டத்தை உனக்குத் தருவேன்.'" (வெளி 2:10) என்கிறார் இயேசு. முடிவு பரியந்தம் நிலை நிற்பவனே இரட்சிக்கப்படுவான் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆதலால் ஆரம்ப முதல் இறுதிமட்டும் உறுதியாய் உண்மையாய் இருக்கவேண்டும், இயேசுவின் வருகைக்காக முறை யோடு காத்திருக்க வேண்டும். 'ஒருவன் மல்யுத்தம் பண்ணினாலும் சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான்'" (2 தீமோத் தேயு 2:5) என்கிறான் பவுல். எனவே, மணவாளனாகிய இயேசு மீண்டும் வரும்போது எம்மை யேற்று அந்த மகிமையின் கிரீடத்தைஜீவ கிரீடத்தை எமக்குத் தரிப்பிக்க நாம் எம்மைத் தகுதியுள்ளவர்க ளாக்கிக் கொள்ள வேண்டும்.
"இதோ! சிக்கிரமாய் வருகிறேன். ஒருவனும் உன் கிரிடத்தை எடுத்துக் கொள்ளாதபடி உனக்குள்ளதைப் பற்றிக் கொண்டிரு” (வெளி: 3:11)
மண்ணில் சிலுவையைத் தாங்குவோர் விண்ணில் கிரீடத்தைத் தாங்குவர் ★
இடையினில் உடையிலா திருந்தும் வெட்கம் அடையிலர் அன்பினால் காண். - ஆதி. 2 : 25
- 4 -

எக்காள முழக்கம்
தேவ ஊழியர் - S.J. பத்திநாதன்
* MAKE THEE TWO TRUMPETS OF SILVER
அன்று. தேவசேனை எக்காளம் ஊதிப் புறப்படும் காட்சி கண் கொள்ளாததாய் அமைந்திருக்கும் சபையைக்கூடி வரவழைப்ப தற்கும், பாளயங்களைப் பிரயாணப்படுத்துவதற்கும் உபயோகமாக இரண்டு வெள்ளிப் பூரிகைகளைச் செய்து கொள்ளும்படி கர்த்தர் மோசேயிடம் கூறுகிறார். அதுமட்டுமல்ல, "நீங்கள் பெருந்தொனி யாய் அதை முழக்கும்போது கிழக்கே இறங்கியிருக்கிற பாளயங்கள் பிரயானப்படக் கடவது" என்றும் கூறுகிறார். (எண். 10:1-10) அன்றைய இஸ்ராயேலின் வனாந்தரப் பயணத்திலே இந்த "எக்காள சத்தம் மிக முக்கியமான ஒரு காரியத்தை அவர்களுக்கு அறிவித்துக் கொண்டேயிருக்கிறது.
இதை வாசிக்கும் சகோதரனே! சகோதரியே இதோ இந்த "எக்காளம்-தேவசெய்தி" எம்மை நல்வழியில் நடத்துவதற்கும், நமது ஆன்மீக வாழ்க்கையைத் தட்டி எழுப்புவதற்கும், இந்த கடைசி நாட்களில் தூங்கிக் கொண்டிருக்கும் நம்மை எக்காள சத்தத்தின் மூலம் விழித்தெழச் செய்வதற்கும் ஏதுவாக அமைந்திருக்கிறது. பழைய ஏற்பாட்டின் காலத்தில் இந்த எக்காள முழக்கத்தின் போது என்னென்ன நிகழ்ந்தன என நோக்குவோம். a.
1. யுத்த தளபதியாகிய யோசுவாவின் எக்காள முழக்கம்
அன்று. இஸ்ராயேலருக்கும் தனக்கும் எதிராகவும், தடையா கவும் இருந்த எரிகோ மதிலாகிய எதிரியின் கோட்டையைத் தகர்க்க எக்காளங்களைப் பயன்படுத்தினான் யோசுவா. எக்காளங்கள் ஊதப்படுகையில் ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள். அவர்கள் மகா சத்தமாய் முழங்கும்போது அலங்கம் இடிந்து விழுந்தது. அப்பொழுது இஸ்ராயேலர் பட்டணத்தைப் பிடித்துக் கொண்டார்கள். (யோசுவா 6:20)
இன்று.எங்கு பார்த்தாலும் எமது எதிராளியான சாத்தான் ஆவிக்குரிய ஜீவியம் செய்ய முற்படுகிறவர்களுக்கு விரோதமாக இன்னல்களையும், இடையூறுகளையும் ஏற்படுத்திக் கோண்டே யிருக்கிறான். கெர்ச்சிக்கிற சிங்கம்போல யாரை விழுங்கலாமோ என வகைதேடிச் சுற்றித் திரிகிறான்." (1 பேதுரு 5.8). ஆகவே,
கனியுண்ணும் ஆசையை ஊட்டினான். தீயோன் இனியென்ன இழவுதான் பார், ஆதி. 3 06
جس 5 ہ

Page 5
நாம் தெளிந்த புத்தியுள்ள்வர்களாயிருந்தும், விழித்திருந்தும் ஜெப மாகிய எக்காளத் தொனியுடன், துதியுடன் தேவனை ஆராதிக்கும் போது சத்துருவான பிசாசு நம்மை விட்டு ஓடிப்போவான். அவனது கோட்டையைத் தகர்க்கவும் நம்மால் முடியும்.
* ''எக்காளத் தொனியோடே அவரைத் துதியுங்கள்’’.சங்.150:3.
2. யோவேல் தீாக்கதரிசியின் எச்சரிப்பின் எக்காளம்
சீயோனிலே எக்காளம் ஊதுங்கள் - (யோவேல் 2 : 1, 15) எக்காளத்தை ஊதுங்கள்; ஜனத்தை ஆயத்தப்படுத்துங்கள்" என யோவேல் தீர்க்க கரிசி மீண்டும் மீண்டும் அறிவுறுத்துகிறான். இனிக் காலமில்லை! "சீயோனிலே எக்காளம் ஊதுங்கள்! என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்! ஏனெனில், கர்த்தருடைய நாள் வருகிறது; அது சமீபமாய் இருக்கிறது."
"சமீபமாய் இருக்கிறது" என்று குறிப்பிடக் கூடிய காரணம் யாதெனில் எங்கு பார்த்தாலும் யுத்தங்கள்; யுத்தங்களின் செய்திகள், ஜனத்திற்கு விரோதமாய் ஜனம் ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யம் பஞ்சங்கள்! கொள்ளை நோய்கள்! பயங்கர அழிவுகள்! மனுஷ கொலைகள்! ஜனங்கள் துரத்துவாரின்றியே ஒடுகிறார்கள். மனித இரத்தம் வீதிகளிலே சிந்தப்படுகிறது. இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பமாக-அடையாளமாக அமைவது மட்டு மல்ல; தேவ வார்த்தையாகிய வேதாகமம் இவை யாவும் எவைக ளுக்கு அடையாளம் எனக் கூறுகின்றது.
இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் அவரிடம் உம்முடைய வருகைக்கும் உலகின் முடிவுக்கும் அடையாளம் என்ன?’ என்று கேட்டபோது அவர் கூறிய பதிலை மத்தேயு சுவிசேஷம் 24: 4-14 வரை வாசித்துப் பாருங்கள். அன்று இயேசு கூறியவற்றை இன்று நம்முடைய கண்களி னாலே காண்கிறோம். காதுகளினாலே கேட்கிறோம். அனுபவிக் கிறோம். எனவே, தேவ எக்காளம் முழங்கும் கடைசிக்கால கட்டத் திற்கு நாம் சமீபித்து விட்டோம்." " கர்த்தர் தாமே ஆரவாரத் தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத் தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார்" - (1 தெச. 14:16). எனவே, தாமதிக்க வேண்டாம். இன்றே-இப்பொழுதே ஆயத்தப் படுங்கள். மத், 24:36, 1 பேதுரு. 1:13, 2 பெதுரு 3:9 வாசியுங்கள். "கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிற விதமாய் வரும்.”* (2 பேதுரு. 3:10).
எனவே, இன்னும் தேவ எக்காளத்தை - எச்சரிப்பின் சத்தத்தை அசட்டைபண்ண நேரமில்லை. எழுந்திருங்கள்! விழித்திருங்கள் "சிதறடிக்கிறவன் உன் முன்பாக வருகிறான். அரணைக் காத்துக் கொள்! வழியைக் காவல் பண்ணு! அரையைக் கெட்டியாய்க் கட்டிக் கொள்! உன் பெலனை மிகவும் ஸ்திரப்படுத்து (நாகூம் 2:1) அல்லேலூயா! *
இரத்தம் சிந்துதல் ஆகாதே ஆகும் இரத்தமே சிந்துவார் சிந்தில். எண். 35 33
a 6 m

பழிக்குப்பழி வாங்குதலும் கிறிஸ்தவர்களின் பொறுபடம்
வேதபாடம் (1 சாமு. 26:1-11)
அருள்திரு K. நித்தியானந்தன்-கரவெட்டி.
ஆயுதப் போராட்டங்கள் நடைபெற்று வரும் நாடுகளில் அப்பாவி மக்கள் பலியிடப்படுவதும ; பழிவாங்கபபடுவதும் சர்வ சாதாரண மான நிகழ்வுகளாகி விட்டன. அரச படையினர் தாக்கபபடும் பட்சத்தில் அவர்களது கோபம் அப்பாவிப் பொதுமக்கள்மேல் திருமபு வதும், அதேபோல் போராட்டக் குழுக்கள் பாதிக்கப்படும்போது தமது கோபத்தைப் பொது மக்கள் மீது காட்டுவதும் இன்று நடை முறையாகி விட்டன.
எமது நாட்டிற்கும் இது விதிவிலக்கானதல்ல. ஏன்? கிறிஸ்த வர்கள் கூட தமது இனம் தாக்கப்படும்போது அனுதாபப்படுவதும் அதற்குப் பழிவாங்கப்பட வேண்டும் என எதிர்பார்பபதும், அதன பெறுபேறாகத் தமது சகோதர இனங்களில கொலைகள இடம பெறும்போது எமக்குள் சந்தோஷம் கொள்ளுவதும், முன்னேற்ற மடையாத சில தனமைகளையே காட்டுகின்றன. இப்படியான பழி வாங்கும் நிகழ்வுகளை மறைமுகமாக சிலவேளை நேரடியாக வர வேற்பவர்கள் கூறிக்கொள்ளும ஒரேயொரு சமாதானம ' 'உரிமை களுக்காகப் போராடும்போது இவை இடமபெறத் தான் வேண்டும் பழிவாங்குதல் தவிர்க்க முடியாதது" என்பதாகும.
பழிவாங்குதலை திருமறைக் கண்ணோட்டத்தோடு நாம் பார்க்
கும்போது ஆரம்பத்திலிருநதே "பழிவாங்குதல் மனிதருககுரியதலல" என்பது தெளிவாகிறது. வாக்களிக்கப்பட்ட நாட்டில குடிமயற்றுவ தற்காகவும், தமது திருநாட்டை நிலைநிறுத்துவதறகாகவும் இஸ்ரா யேல் மக்களை புத்தததிற்கு ஏவும் காததா தம இனத்தற்கு ஏற் பட்ட தீமைகளுககாகப பழிவாங்கும் விடயததை மட்டும தனக குரியது என்கிறார். காரணம; பழிவாங்கும் எண்ணம் மனிதனுக்குத தோன்றும்போதெல்லாம் சரியான பாதையை அவனுக்கு உணர்தது பவராகவும் இருககிறார்.
1 சாமுவேல் 26:1-11 வரையுள்ள திருமறைப் பகுதியில் கர்த்தர் மனிதனைத் தனிப்பட்ட பழிவாங்குதலிலிருந்து விடுவித்துக் காப்ப தைக் காணலாம். சவுல் தாவீதைக் கொலலுவதற்குப் பொறாமை கொண்டவனாக அலைகிறான். தாவீதோ இருக்க இடமற்று, நிம்மதி யற்றவனாய் அலைகின்றான். அவ் வேளைகளில் தன் எதிரியான சவுலைக் கொல்லுவதற்கு தாவீதுக்கு அருமையான பல சந்தர்ப் பங்கள் ஏற்படுகினறன. தாவீதோடிருந்தவர்கள் சவுலைக் கொன்று
ஏனோக்கு இறைவனுடன் நடந்தான் வானோக்கி வானோரின் வடிவானான் வாழ்த்து. ஆதி. 5 : 24
- 7 -

Page 6
விடும்படி தாவீதை ஊக்குவிக்கின்றனர். "கர்த்தர்தான் இந்த அருமையான சந்தர்ப்பத்தைத் தந்தார்" எனவும் உற்சாகமூட்டுகின் றனர். ஆனால் தாவீதோ தன்னைப் பகைவனாக எண்ணி தனக்குத் தீமைசெய்ய முற்படுபவனை பழிவாங்க விரும்பாதவனாக "கர்த்தர் அபிஷேகம் பண்ணினவர்மேல் என் கையைப் போடமாட்டேன்’ என்கிறான், பழிவாங்குதலுக்குத் தனக்கு அருமையாகக் கிடைத்த அச்சந்தர்ப்பத்தைக் கூட தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள தாவீது விரும்பவில்லை. இச்சம்பவம் தாவீதுக்கு ஒரு சோதனையாகவே வருகின்றது. பகைவனைத் தாவீதின் முன் கொண்டுவந்த கர்த்தர் இச்சந்தர்ப்பத்தில் தாவீது எவ்விதம் செயற் படப்போகிறான்? கடவுளால் கொடுக்கப்பட்ட ஞானத்தை எப்படிப் பாவிக்கப் போகிறான் என்பவற்றை உன்னிப்பாகக் கவனிக்கிறார். தாவீது கர்த்தர் தனக்குக் கொடுத்த கொடையான ஞானத்தைச் சரியான தருணத்தில் பாவித்து இச் சோதனையை வெற்றி கொள்ளு கிறான்.
தாவீது நடந்துகொண்டமுறை அன்று அவனோடிருந்த மக்க ளால் பரிகாசம் பண்ணப்பட்டிருக்கலாம். ஆனால் அவனது நடத்தை கடவுளுக்கு முன் உத்தமமானதாயிருக்கும் அதே வேளை சவுல் தன் னைப் பற்றியும், தான் கொல்லத் துடிக்கும் தாவீதைப் பற்றியும் உணர்ந்து கொள்ளச் சந்தர்ப்பம் அளிப்பதையும் காண்கிறோம். பழைய ஏற்பாட்டுக்கால வரலாற்றில் பழிக்குப் பழி வலியுறுத்தப் பட்டிருந்த போதிலும் சமுதாயம் அறிவு பூர்வமாக முன்னேற்ற மடைந்துவரும்போது இக்கருத்தும் மாறுபடுவதைக் காணலாம்.
புதிய ஏற்பாட்டில் ஒரு திருப்பம். அதாவது இயேசு "அன்பினால் அரவணையுங்கள்; தீமை செய்பவர்களையும் சிநேகியுங்கள்" என் கிறார். தன் சீடன் வெட்டியதைக் கண்டிப்பவராகவும், அந்த ஊனத் தைச் சுகமாக்குபவராகவும், தனக்குக் கொடுமை செய்பவர்களுக்காக சிலுவையில் தொங்கிக் கொண்டே மன்றாடுபவராகவும் காணப்படு கிறார். அவ்வகையில் இயேசுவே எமக்கு முன் உதாரணமாகத் திகழு Sontri.
இன்று அநேக நாடுகளில் "கொலைக்குற்றம் செய்தவனைக் கொலை செய்தல்" என்ற தண்டனை நீக்கப்பட்டு வருவதையும் பார்க்கிறோம். எனவே கிறிஸ்தவம் என்ன சொல்லுகிறது? தீமைக் குத் தீமை செய்யாதிருங்கள் என்றே திருமறை கூறுகின்றது. பழிக்குப் பழியென்பது மாபெரும் தவறான காரியம். இத்தகைய வெறியால் நாம் தூண்டப்படும்போது கடவுள் தந்த ஞானத்தைப் பாவிப்போ மாக. ஏனைய சமூகத்தவரை எதிரியாக நோக்காமல், தீமை செய்ப வனை அதை உணர்த்துவதன் மூலம் மன்னித்து மனந்திருந்த இடம ளிப்போம். இவ்வண்ணமாய் கிறிஸ்தவப் பொறுப்புக்களை நிறை வேற்ற முன்வருவோமா? ★
ஒலிவமரத் துளிரோடு ஓடிவந்த புறாதுாது
தெரியலையோ ? சமாதானப் புறா. ஆதி : 11
E
8
— 8 amr

ரசித்ததும் ருசித்ததும்
O DAMARIS GNANAMANICKAM
* வேதாகமம் இல்லாவிட்டால்.
முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவ ஜீவியம் "தொடர்ந்து வேதாகமத் தைப் படித்தல்" என்னும் அஸ்திபாரத்தின் மீதே கட்டியெழுப்பப் படுகிறது. தொடர்ச்சியாக வேதாகமத்தைப் படித்தாலொழிய நிறை வான ஆவிக்குரிய வாழ்வை அனுபவிக்க முடியாது. பில்லிகிரகாம் என்பவரின் கூற்றுப்படி வேதாகமத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர் களில் 12 வீதமானோர் மட்டுமே அதைத் தினமும் உண்மையாக வாசிக்கிறார்கள். 34 வீதமானோர் கிழமைக்கு ஒரு தடவையும், 42 வீதமானோர் இருந்திருந்தும் வாசிக்க ஏனையோர் ஆலய ஆரா தனைகளில் கேட்கும் வசனங்களை மட்டுமே அறிகின்றார்கள்.
பத்திரிகையை அனுதினமும் வாசிப்போர் "பைபிள்" வாசிக்க நேரமில்லை என்பார்கள். சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் பத்திரிகை வாசிப்போர் ஏராளம். அந்த அளவு நேரம் வேதாகமம் வாசிக்கப்படு மானால் ஒரு வருடத்தில் முழுவதையுமே வாசித்து விடலாம். புதிய ஏற்பாட்டை இருமுறை வாசித்து விடலாம்.
* வேதாகமம் இல்லாவிட்டால்.
எது சரி? எது பிழை? என்று கடவுள் தரும் அறிவை இழந்து விடுவோம். நல் நடத்தை எது? எது தீயது? என்ற ஒழுங்கை உணராத வர்களாகிவிடுவோம். பொலிவியாவின் ஒரு காட்டுப் பகுதியில் நான் ஊழியம் செய்த நாட்களில் ஓர் அனுபவம்.
ஒரு நாள் இரவு ஊழியர் ஒருவர் வந்து ஆராதனைக்கு வருகிறீர் க்ளா? இரவு 8 மணிக்கு ஆராதனை என்றார். "கோயில் எங்கே? என்றேன். "இங்கேயேதான்" என்றார்-ஒரு அர்த்தமுள்ள சிரிப்போடு. அரை மணி நேரத்துக்குள் ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் அங்கு கூடினார்கள். சற்று நேரத்தில் சிறிய உருவம் உள்ள ஒரு மனிதர் தன் நெஞ்சோடு வைத்திருந்த சிறிய புத்தகம் ஒன்றை எடுத்தார்.
பலியினால் வந்ததோ சுகந்தவாசனை ; பலியை நுகர்ந்ததோ இறைவனின் உள்வாசனை. ஆதி. 8 : 21
- 9 -

Page 7
அது 1 கொரிந்தியர் நிருபம். அவர் எழுந்து அரை மணி நேரம் பிரசங்கித்தார். இரண்டாவதாக எழுந்தவர் அந்தக் கிராமத்திலே இருந்த ஒரே ஒரு எபேசியர் நிருபத்தை எடுத்துப் பிரசங்கித்தார்.
பின்னர் இன்னொருவரும் பிரசங்கித்தார், ஒரே ஆராதனையில் 3 பிரசங்கங்கள்.
திடீரென எனக்கருகில் இருந்த ஒரு பெண் அழ ஆரம்பித்தார். கர்த்தர் அவள் உள்ளத்தைத் தொட்டபடியால் அவள் எழும்பி தன் பாவங்களையெல்லாம் அறிக்கையிட்டுக் கர்த்தரிடத்திலும் சபை யோரிடத்திலும் மன்னிப்புக் கோரினாள். அவள் மன்னிப்புப்பெற்று சபையில் சேர்த்துக் கொள்ளப்பட்டாள். இவையெல்லாம் அங்கு நடைபெறக் காரணம். அப்போஸ்தலருடைய நடபடிகள் அங்கு வாசித்து விளங்கப் பெற்றமையே. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அச்சபையில் வேதாகமம் இல்லை. மன்னிப்பும் இல்லை. எது சரி, எது பிழையென அறியும் பக்குவம் இல்லை.
* வேதாகமம் இல்லாவிட்டால்.
வாழ்க்கையின் ஆழ்ந்த கேள்விகளுக்கு கர்த்தரின் விடைகளை அறியமாட்டோம். விடைதர முடியாத பல கேள்விகளை நாம் கேட்போம். நான் யார்? எங்கிருந்து வந்தேன்? ஏன் இங்கு இருக் கிறேன்? எங்கு போகிறேன்? என்ற கேள்விகளுக்கு விஞ்ஞானத்தில் விடைகாண விழைவோம். காலையில் ஒவ்வொரு நாளும் எழுந்து நாம் ஏன் இங்கே இருக்கிறோம் என அறியாமல் விழித்தால் எப்படி இருக்கும்? நாம் காணாமற் போனவர்கள்போல இருப்போம்.
* வேதாகமம் இல்லாவிட்டால்.
வேதாகமத்தின் உண்மைகளை விசுவாசிக்காத அறிவாளிகள் வாழ்க்கையில் பயனில்லை என்றி முடிவுக்கே வருவார்கள். நாம். தோன்றியது ஒரு விபத்து. எமது வாழ்க்கையில் அர்த்தமில்லை. எனவே மரணத்திற்குப் பின்னர் என்ன நடக்கும் என்பதை அறிய விரும்புவதுமில்லை. வேதாகமத்தை வாசிக்காவிட்டால் வாழ்க்கை யின் கேள்விகளுக்கு விடைகாண முடியாது. கர்த்தர் நம் நல்ல வாழ்
பழியும் இரத்தமும் நான்வாங்கு வேன்பிறர் பிழியும் இரத்தம் சிந்திடில். - ஆதி. 9 : 56
-- 10 -۔

வுக்கு விதித்த விதிகளையும் இழந்து விடுவோம். ஒரு காரியத்து காகப் பணம் செலழித்தால் அதனால் பயனடைகிறோம். அதே போல் வேதாகமம் வாசித்தால் நிச்சயம் பயனுண்டு,
* வேதாகமம் இல்லாவிட்டால்.
சுவிசேஷ ஊழியம், புதுப்பித்தல், மாற்றம் என்பவற்றுக்காக கர்த்தர் எமக்குத் தரும் அழைப்பை இழந்துவிடுவோம். எமது பாவங் களைப்போக்க இயேசுகிறிஸ்து சிலுவையில் மாண்டார் என்னும் சுவிசேஷ செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் மாட் டோம். விசேட செய்தி ஏதும் எம்மிடம் இருக்காது. பத்தரிகைச் செய்திகளைப் படிப்போம். உலக நிலைமைகளைக் குறைவற அறிந் திருப்போம். ஆனால் பாவத்துக் கெதிரான பிரசங்கங்களை அறிய மாட்டோம். இரட்சிப்படைய வழி இருக்காது. r
* வேதாகமம் இல்லாவிட்டால்.
கர்த்தரை அறிந்து கொள்ளும் இரகசியம் நிலைக்கமாட்டாது. எமது இதயங்கள் கர்த்தருக்காக ஏங்கும். பரமபிதாவை அடையும் வழி என்ன என்பதை அறிய முடியாது. பயமும் திகிலும் எம்மை ஆட்கொள்ளும். சங்கீத புத்தகத்தை வாசித்தால் நம்மைக் கட்டி யெழுப்ப, இந்தப் பாதையில் வேறு மனிதரும் சென்றிருக்கிறார்கள் என அறிவிகக கர்த்தர் அதைப் பாவித்திருக்கிறார் என்பது விளங்கும். வேதாகமம் இல்லாவிட்டால் இவற்றை நாம் அறியமுடியாது. அநேக நற்காரியங்களையும் அறிய மாட்டோம்.
நாளாந்த வேத வாசிப்பு மட்டும் போதாது. வேத அறிவைப் பெற்றுவிட்டால் போதாது. அதை வாழ்க்கையில் உபயோகிகக. கர்த்தருட்ன் நடக்க-பயில வேண்டும். எத்தனையோ கிறிஸ்தவர்கள். இன்று வேதாகமம் இருந்தும், இல்லாதவர்களாகவே வாழுகிறார்கள். வசனம் என் கால்களுக்குத் தீபமும் என் பாதைக்கு اقوها به வெளிச்சமுமாய் இருக்கிறது" என்றான் மாமன்னன் தாவீது. உம் முடைய விஷயம் எப்படி ?
-Thanks - BRUCE WILKINSON
என்வில்லை நினைவாக வைத்தேன் வானில் எந்நாளும் காத்திட உண்மை. ஆதி. 9 - 04
سس II - ماست.

Page 8
வேதாகமப் புதிர் - இல. 017
சகல வினாக்களுக்கும் சரியான விடை எழுதியவர்களுள் தேர்ந் தெடுக்கப்படும் முதல் மூவருக்கும் பொக்கட் சைஸ் புதிய ஏற் பாடு வழங்கப்படும். ஏனையோரின் பெயர்கள் பிரசுரமாகும். விடைகள் தபால் அட்டையில் எழுதப்பட்டு 30-07-94க்குள் ஆசிரியர் விலாசத்துக்கே அனுப்பப்படல் வேண்டும். விடைகளுடன் உங்கள் விலாசமும் தொடர்பு அங்கத்துவ எண்ணும் குறிக்கப்படல் வேண்டும். அங்கத்துவு எண் இல்லா தோர் ஆண்டுச் சந்தா ரூபா எழுபதை பணிப்பாளருக்கு அனுப்பி அதைப் பெறலாம். அங்கத்துவ எண் அற்ற, விடைகள் பரிசீலிக் ssal u l-LDT il-T.
இவை யார்? யாருக்குச் சொன்னவை? 1. பகலில் களவு போனதையும் இரவில் களவு போனதையும்
என் கையில் கேட்டு வாங்கினிர்? 2. உம்முடைய முகத்தைக் கண்டது தேவனுடைய முகத்தைக்
கண்டதுபோல் இருக்கிறது. 3. என்னைப் போன்ற மனிதன் உயிர் பிழைக்கும்படி தேவால
யத்தில் போய்ப் பதுங்குவானோ? 4. எனக்காகக் காத்திரு, நானும் உனக்காக காத்திருப்பேன்.
(பழைய ஏற்பாட்டுச் சம்பவங்கள் இவை)
புதிர்-இல. 016 - சரியான விடைகள், 1. யோசேப்பு-(ஆதி.4114) 2. யோசேப்பு-(ஆதி,50:26) 3. லோத்தும் மக்ள்களும்- 4. மெத்தூசலா - (ஆதி.5:27)
(ஆதி. 19:30) 5. சர்ப்பம்-சாத்தான் (ஆதி,3:5.) பாராட்டுப் பெறுவோர். E. போல்ராஜ்-ரத்மலானை, S. அப்பாதுரை-அம்பிட்டிய A. வேதபாலகன்-மட்டக்களப்பு, M. ராஜமணி- பேராதெணிய, பரிசு பெறுவோர். K. கலாபரன், டெம்பிள் றோட், கல்முனை. A, மறே, புறொட்டொப்ட், றம்பொட. S.டேனியல், 585, கெட்டியாதன்ன, கஹவத்தை.
வெறியுண்ட உலகில் நெறிகாத்த நோவாநல் நெறிபிறழ்ந்து பழியானான் பாரில். - ஆதி. 9, 21
ത്ത 12 -

கவிதைக் களம்
"தொடர்பு" மே - ஜூன்இதழில் வெளிவந்த
*மனிதனைக் காணவில்லையே” என்ற
கவிதைக்கு மறு மொழியாக.
1. எனது சாயலைத் தேடிடும் என் மகளே!
எனது சாயலில்
படைத்த மனிதனைத்
蜗
ஃ. உனது தேடலில்
தேடிடும் Trt GooñGu!
கிடைத்த யாவரும் சிலுவையின் ஆணியே! கிணற்று நீரை இழுத்த வாளியில் என்னைத் தெரியலையோ? முகத்துப் பவுடரைப் பார்க்கும் தாழியில் உண்மை புரியலையோ?
படைத்து மனிதனை பகுத்துப் பார்த்திட கொடுத்த ஞானத்திலே! தொகுத்துப் பலதை மறைத்துக் கொண்டனன் பாவமென் சாயலையே!
நினைத்து நினைத்து
- கிறிஸ்து கவி மலைவாணன்
அணைத்துச் சேர்த்திட கொடுத்த வாய்ப்பின்ையே! ஏற்க மறுத்து ஏய்த்துப் பிழைத்து மாறிவிட்டான் சாயலே!
மழைக்குக் கூரையின் ஒரமாய் நான்வந்து நடுங்கி நிற்கையிலே பார்த்து வெளுத்து இழுத்துக் கதவை மூடிய வேளையிலே * கிறிஸ்துவே எங்கள் இல்லத் தலைமகன்' என்றவோர் வாசகத்தை நினைத்துப் பார்த்து சிரித்த துண்டு; நான் மறைத்துச் சாயலையே!
சாபம் ஏற்றதோ கானான் பாவ
நோயைச் செய்ததோ
நோவா.
re- ஆதி, 9 : 25
- 13 -

Page 9
உழைத்துக் கரங்கள் உலர்ந்த வேளை உறவு வெறுக்கையிலே! களைத்து இளைத்துப் பசித்து நானும் கரத்தை நீட்டையிலே மலைத்துச் சலித்து சில்லறை கொடுத்து மறந்து போகையிலே! எனது சாயலை மறைத்த துண்டு; நான் நினைத்துத் தீர்ப்பினையே!
இனத்து மோதல்கள் இயற்கைச் சேதங்கள் இருக்கும் வேளையிலே! இருந்த துண்டு; நான் அகதிமு காம்களில் மனித சாயலிலே! குணத்து ரோஜாக்கள் கனத்த பைகளில் உதவி கொடுக்கையிலே! விரித்த துண்டு; நான் மறைத்துச் சாயலை ஜீவ புத்தகத்தை!
நீதிக்காய்த் துணிந்து எழுந்து நிமிர்ந்து முன்சென்ற வேளையிலே! பின்னிருந் திழுத்த பேயின் கரங்களை முறித்த வேளையிலே! போராட்ட மெதற்கு மோட்சமே நமக்கு என்றவோர் சத்தத்தையே கேட்ட துண்டு; நான் இரும்புக் கம்பிக்குள் இருந்த சாயலிலே!
அற்புத வல்லமை எனது நாமத்தில் இருப்ப தையறிந்தே அடிக்கும் "போஸ்டரில்" தமது நாமத்தைப் பெரிதாக வடித்தே நகர்ச்சுவர்களில் ஊழிய கூட்டங்கள் இருப்ப தாயுரைத்தே ஒட்டிடும் போதுநான்
சிரித்த துண்டுதான்
மறைத்துச் சாயலையே!
பக்கத்து வீட்டினர் பசித்தி ருக்கையில்
புசித்த உணவினிலே
உப்புக் குறைவென உரத்த குரலில் கூறிய வேளையிலே! கேட்ட துண்டு; நான் மிருக சாயலில் மேசைக் கடியினிலே விழுந்த துணிக்கையும் விழுங்க முடியாது வெந்து துயரினிலே!
**உனைப்போல் பிறனை நேசித்து வாழென்ற" எந்தன் கற்பனையே! யாவரும் அறிந்த ஞாயிறு சந்தையில் நல்லதோர் விற்பனையே! வாங்கிப் போனதும் "பஸ்" வண்டிச் சீட்டுக்காய் முண்டிய டிக்கையிலே உடைந்து போவதைக்
தாறுமாறின் தலைநகர் பாபேலாச்சி ; மனிதன் தன்னையுயர்த்திய தலைக்கணம் போச்சு: - ஆதி. 10 09

கண்ட துண்டு நான் தேவை தான்மகளே!
நொண்டியாய் நிற்கையிலே! எனது சாயலில்
சாயலைத் உள்ளவை என்பது னது 岛 கள்வனைப் போன்றதுவே!
தேடி யலைவதும்
வீணே என்மகளே! மறைந்து வாழ்ந்திட உனது தேடலில் மற்றவை யனைத்தும் உள்ளவை யாவும் தேவை; என்மகளே.
2. நான் உன்னில் வருவேன்
போதகர் ஏ. சொலமன்ராஜ் (முன்னாள் பத்திரிகையாளர்)
எங்கும் ஓடி அலையாதே மகளே! உனக்குள் ஏற்றிடு வந்திடுவேன் தங்கும் இடம்நான் வேறில்லை - என் பங்கும் பாத்ரமும் உன் இதயம்
ஒன்று கொரிந்தியர் மூன்றுபதி னாறு பின்பு ஆறு பத்தொன்ப தை யோவான் மூன்று பதினாறை யும் ஒன்று பன்னிரண்டும் படிமக ளே!
வெளியக மனிதரில் எனைத்தே டி விரக்தி யடைதல் பிழைமக ளே! பிழிதினம்வேதா கமம்திற; ஜெபி; எனைத் தேடு; விளக்குவேன் - துயர்தவிர்
இரட்சிப்பு மனிதனின் மனமாற் றம் பரிசுத்த ஆவியால் உண்டா கும் உள்மாற்ற மேயன்றி வேறல்ல; அதனால் மாறுநீ! மாற்றிடு மற்றோர் பலரை
உலகுக்குள் ஒடியெனைத் தேடுமுன் மகளே! உனக்குள் எனையேற்றி ஜெபிதினம் மகளே! மனத்துக்குள் சமாதானம் வந்திடும் மகளே! குறைதவிர் நீக்கிடு பிறர் குறை மகளே!
ஆபிரகாம் என்பவன் யூதத்தந் தைதேவன் அமைத்ததோ அவனிலே புதியசிந்தை, - ஆதி. 12 :
ー I5'-

Page 10
3. விடுதலை.
ராணி aussma
ஓ! இறைவா;. இன்று. நீயோ! பலதரப்பட்ட சபைகளின் சிறைக்குள் உன் வார்த்தைகளோ! பற்றிக் கொள்ளக்கூடா கரங்களின் சிறைக்குள் அழுக்கும் அநியாயமும் வெள்ளணிகளின் சிறைக்குள் பெண்மையோ! அடிமைத் தனங்களின் சிறைக்குள் ஆணவமும் அக்கிரமும் ஆண்களின் சிறைக்குள் சுதந்திரமும் சமத்துவமும் வெடிகுண்டுகளின் சிறைக்குள் விசுவாசமும் நம்பிக்கையும் பணப்பெட்டிகளின் சிறைக்குள் ஏழையும் இல்லாதவனும் அகதிகளின் சிறைக்குள் ஏன்? முழுஉலகுமே. மனித கரங்களின் சிறைக்குள் எங்கே! எப்போ! யாரால்! இவற்றிலிருந்து விடுதலையோ?
4. மனிதன் யார்? அவன் எங்கே? - பாவலர் + கிரான் ஜீவன் -
உலகை வென்ற உயர்ந்த ஞானம் உள்ளதென்றே சொல்லும் நிலவு மீதில் கொடியை நாட்டி . பெருமை கொள்ளும் மனிதன் - அண்ட வெளியைச் சுற்றி விந்தை புரிய எண்ணும் இந்த மனிதன் - இந்த உலகமீதில் உண்மைமனிதன் ஆகவில்லை.
ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதுபோல் அவன் ஆவலாகப் பறப் பான் கூலிக்கு மாரடித்து மறைப்புக்கு வேலிகட்டி தான்மட்டும் வாழஎண்ணு வான் சாதிக்குப் பெயர்வைப் பான் சத்தியத்தின் வேரை அழித்து தினம்தினம் நீரூற்று வான் மரம்கருகிச் செத்து விடும் வேறு (என்ன?) ஒன்றுமில்லை நாள் தோறும் பாய்ச்சிய நீர் நாலுவிஷம் கலந்த நீர்
கூடார வாழ்விலே குடிபுகுந் தோர்நாளும் வாடாத வாழ்விலே தலைசிறந்தோர். ஆதி. 13:10
ー I6 ー

விசுவாசம் என்பது என்ன?
M. பாலகிருஷ்ணன்
சர்வதேச வேதாகம சங்க தேசிய பணிப்பாளர்
* விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படா
தவைகளின் நிச்சயமுமாய் இருக்கிறது-எபி. 11:1.
* விசுவாசம் இல்லாமல் தேவனுக்குப் பிரியமாய் இருப்பது கூடாத
காரியம்-எபி. 11:6.
ஆபேல், ஏனோக்கு, நோவா, ஆபிரகாம் போன்ற அநேக விசு வாச வீரர்களைப் பற்றி எபிரேயர் 11 ஆம் அதிகாரத்தில் பார்க் கலாம். விசுவாசி ஒருவனைப் பொறுத்தமட்டில் ‘விசுவாசம்’ என் பது என்ன? என்பதை நோக்குவோம். இதை அடிப்படையாகவைத்து விசுவாச வீரர் இருவரைப் பற்றி இக்கட்டுரையில் ஆராய்வோம்.
1. நோவா
கப்பல் ஒன்றைக் கட்டுகிறான் இந்த நோவா, எந்தச் சூழ்நிலை யில் அவன் இதைச் செய்கிறான்? பெரு வெள்ளமொன்றை அனுப்பப் போவதாகவும், அதனால் கப்பல் ஒன்றைக் கட்டும்படியாகவும் கூறுகிறார் கர்த்தர். w
இந்த நோவாவின் இருப்பிடமே ஒரு பாலைவனம். ‘மழை” என்பதை அவன் கண்டதேயில்லை. என்றாலும் கடவுளின் கட்ட ளைப்படியே கப்பலைக்கட்ட ஆரம்பிக்கிறான். அதைக் கட்டிமுடிக்க நாட்கள்-மாதங்கள் அல்ல, ஆண்டுகள். அதுவும் 125 செல்கின்றன, அதற்குப் பின்னரே அங்கு மழை பெய்கிறது.
2. ஆபிரகாம்
பிறந்து வாழும் நாட்டை விட்டும், பழகிவரும் ஜனத்தை விட்டும் பாலைவனம் நோக்கிப் போகும்படி பணிக்கின்றார் கர்த்தர். அவன் வாழ்ந்துவரும் பட்டணமோ உயர் நாகரீகம் படைத்த ஒன்று. ஆனால் அவனோ கர்த்தரின் கட்டளைப்படி முன்பின் தெரியாத
எண்ணி அளந்திடு தேசம் ; உன்னில் எழுந்திடச் செய்வேன் பலதேசம், ஆதி. 13 : 07
ー 17ー

Page 11
அப்பாலைவனத்துள் அடியெடுத்து வைக்கிறான். அங்கே பல புதிய பிரச்சினைகளுக்கும், பஞ்சத்துக்கும் அவன் முகம்கொடுக்க வேண்டி நேரிடுகின்றது. ஆனாலும் அவன் அங்கு கூடாரமிட்டு வாழ ஆரம்பிக் கின்றான்.
இதன் பின் கர்த்தர் ஆபிரகாமுக்கு ஒரு மகனைத் தருவதாக வாக்களிக்கின்றார். ஆபிரகாம் 75 வயதும் சாராள் 65 வயதும் உடையவர்களாய் இருந்த நேரம் அது, மேலும் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நிறைவேறப் போகும் (அதாவது சாராள் குழந்தை யொன் றைப் பெறும் வரை) வாக்குத்தத் தத்திற்கு ஆபிரகாம் காத்திருக் கின்றான். அவ்வாறே மகனும் பிறக்கின்றான்,
ஈசாக்கு சிறுவனாய் இருக்கும் வேளையில் இப்படி ஒரு சம்பவம், மகனைப் பலியிடுமாறு ஆபிரகாமைப் பணிககின்றார் காத்தர். தன் இதயப் போராட்டங்கள் எல்லாவற்றின் மத்தியிலும் ஆபிரகாம் அதைச் செய்ய முன்வருகின்றான்.
நேரவா. கப்பலைக் கட்ட ஆரம்பிக்கின்றான். அதுவும் நீர் நிறைந்த ஓர் இடத்தில் அல்ல. அவன குடியிருக்கும் வெறும் பாலை வனத தரையிலேயே கப்பலைக் கட்டுகினறான். இவ்விதமாக அவன் கப்பலைக் கட்டும்போது அவன் எதிர்நோக்கிய பிரச்சினைகள் எவ் விதமாய் இருந்திருக்கும்? என்பதைச் சிந்தித்தால்..?
மலைப் பிரதேசம் ஒன்றில் குடியிருக்கும் ஒருவர் கப்பலொன் றைக் கட்டுவாரோ? சரி. பிரமாண்டமான வெள்ளம் ஒன்றுதான் வரப்போகிறது என வைத்துக் கொள்ளுவோம். கப்பலொன்றைக் கட்ட ஆரம்பிக்கிறார் ஒருவர், என்ன நேரிடும்? அயலவர் அவரைப் பார்த்து நகைக்க மாட்டார்களா? ஒவ்வொரு வருடமும் கழியும் போதும வெள்ளம் வராமல் போனால் கப்பலைக் கட்டுபவர் பரிகா சத்துக்கு உள்ளாகமாட்டாரா? அப்படியே சில வருடங்கள் வரை மழையும் பெய்யாமல், வெள்ளமும் வராமற் போனால் அவருக்குப் ‘பைத்தியக்காரப் பட்டம்' வராமல்போகும் என்பது என்ன நிச்சயம்?
இத்தகைய பிரச்சினைகளை நோவாவும் எதிர்கொள்ளத்தான் செய்தான். ஒன்றிரண்டு ஆண்டுகள் அல்ல; 125 ஆண்டுகள். அதாவது ஒன்றேகால் நூற்றாண்டு. ஆனாலும் அவன் அனுதினமும் விசுவா சத்தோடு வேலைசெய்து திருப்திகரமாக அப்பணியை நிறைவு செய் கிறான். அதன் பெறுபேறாக தனது குடும்பத்தைக் காப்பாற்ற
அப்பமும் ரசமும் பெற்று ஆபிரகாம் எப்பவும் மெல்கிசேதேக் ஆனான். ஆதி. 14 : 18
- 18 -

அவனால் முடிகின்றது. எத்தனையோ உலக ஏளனத்துக்கு மத்தியி லும் கர்த்தரின் வார்த்தையை விசுவாசத்தோடே கடைப்பிடித்த காரணத்தினாலே நோவா வெற்றியும் காண்கின்றான். வேதாகமத் திலும் விசுவாச வீரனாக இடம் பிடித்துக் கொள்ளுகிறான்.
மறுபுறத்தில் ஆபிரகாமின் நிலையை நோக்குவோம். ஆபிரகாம் தனது நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இது கர்த்தரின் கட்டளை. "ஆபிரகாமின் தகப்பனாகிய தேராகு தனது மகனாகிய ஆபிரகாமையும் அழைத்துக் கொண்டு 'ஊர்' என்னும் பட்டணத்தை விட்டுப் போனான்’ எனப் பார்க்கின்றோம். (ஆதி. 11:31) எனவே குடியிருந்த நாட்டைவிட்டு ஆரானுக்கு வரும்படி ஆபிரகாமைக் கர்த்தர் அழைத்தபோது அவனுடைய தந்தையும் அவனோடு சேர்ந்து கொண்டான் என்பது தெளிவாகின்றது. தேராகு இறக்கும் வரை (அதாவது 15 ஆண்டுகள்) அவர்கள் அங்கேயே தங்கிவிடுகிறார்கள்.
அப்படியானால், நடந்தது என்னவாக இருந்திருக்கும்? ஆபிரகாம் கடவுளின் அழைப்பையேற்று நாட்டைவிட்டு வெளியேற விரும்பிய போது அவனது தந்தை அவனைத் தடுத்து நிறுத்த முயன்றிருப்பான். ஏனெனில், சகல வசதிகளையும் கொண்ட பட்டணத்தை விட்டுப் பாலை நிலம் நோக்கிப் புறப்படும் ஒருவன் மடையனாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் ஆபிரகாமோ வெளியேறுவதில் உறுதி யாக இருக்கின்றான். எனவேதான் அவனும் மகனோடு போய் ஆரானிலே தங்குகின்றான். இதன் காரணமாகவே ஆபிரகாம் அங்கிருந்து அடியெடுத்து வைப்பதற்கு தனது தந்தை மரிக்கும் வரை காத்திருக்க வேண்டியதாகிறது:
"ஆபிரகாம் ஆரானிலே இருந்த நாட்களில் கடவுள் ஒரு நாளே னும் அவனோடு பேசவில்லை என்பது இங்கு கவனிக்கப்பட வேண் டிய தொன்றாகும். உரிமையோடு கூடிய ஒரு தந்தையின் அன்பினி மித்தம் கடவுளின் திட்டமொன்று தடைப்பட்டிருந்ததை இங்கே நாம் காண்கின்றோம். ፩
மேலும் தனது 75வது வயதில் தனக்கு ஒரு மகனைத் தருவதாக கடவுள் வாக்களித்த வேளை ஆபிரகாம் அதை இலகுவாக ஏற்றுக் கொண்டுவிட்டான். ஆனால் ஆண்டுகள் பல கடந்தன. காரியமோ எதுவுமே நடக்கவில்லை. எனவே அவன் சோர்வடைகின்றான். அவனது மனைவியோ அதை மேலும் மோசமாக்குகிறான். இந்த விடயம் சாத்தியப்படவே மாட்டாது என்ற முடிவுக்கு வருகிறாள்
உன்பெயரும் கோர்பிள்ளை தருவேன் மண்ணில் எந்நாளும் எண்ணற்ற திரளாய். - ஆதி. 15 05
سے 19 سے

Page 12
சார்ாள். எனவே, தனது பணிப் பெண்ணாகிய ஆகாரை ஆபிரகாம் மனையாளாக்க வேண்டும் என்ற யோசனையைக் கூறுகின்றாள்.
பத்தாண்டுக் காலமாக எதுவித பலனுமே இல்லாதபடியினால் அதற்குச் சம்மதிக்கின்றான் ஆபிரகாம். இப்புதிய உறவு காரணமாக இஸ்மவேல் பிறக்கின்றான். ஆனால், கடவுளின் திட்டம் அதுவல்ல. ஆபிரகாமுக்காக சாராள் ஒரு குழந்தையைப் பெறவேண்டும்' என்பதே அவரது வாக்குத்தத்தம். எனவே சாராள் தனது 90வது வயதில் ஈசாக்கைப் பெறுகின்றான்.
இச் சம்பவத்தில் "தனக்கு மகன் ஒருவன் பிறப்பான்’ என்ற கடவுளின் வாக்குத்தத்தத்தை நம்பிக்கொண்டிருப்பது ஆபிரகாமுக்கு இலகுவாக இருந்ததா? இல்லை. இயல்பாகக் கூறப்போனால் அது நடக்கக்கூடிய காரியம் அல்ல. அது நடக்கக் கூடாத காரியம் சான்ப தாக அவன்து மனைவியே குறிப்பிடுகின்றாள். ஆபிரகாமுக்கும் சந்தேகம் இருந்திருக்கலாம். ஆனாலும் அவன் 25 ஆண்டுக் காலம் ஒரு மகனுக்காகக் காத்திருக்கிறான். அவன் தோல்வி கண்டது ஏதோ உண்மைதான். என்றாலும் மீண்டும் அவன் விசுவாசிக்கின்றான் என்பதும் உண்மையே.
அடுத்த கட்டம் - அவனது அந்த ஒரே மகன் பலி செலுத்தப் படல் வேண்டும் என்பது கடவுளின் கட்டளை. இந்த வார்த்தையைக் கேட்ட தந்தையின் இதயம் என்ன பாடுபட்டிருக்கும்? எந்த மகனுக் காக 25 ஆண்டுகள் ஏக்கத்தோடு காத்திருந்தானோ அந்த மகனை தனது சொந்தக் கரங்களினாலேயே கொல்ல வேண்டியநிலை ஆனாலும் ஆபிரகாம் கீழ்ப்படிகிறான். தனது மனைவியிடம் கூடக் கூறிக்கொள்ளாமலேயே அதிகாலையிலேயே புறப்பட்டு விட்டான் என வேதாகம் கூறுகின்றது. ஏனெனில் பெற்றவளுக்கு இச்சம்பவம் தெரிய வந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை எம்மால் ஊகிக்க முடியும்.
ஆபிரகாமும் மகனுமாக மலையை நோக்கிப் போகின்றார்கள். மகனுடைய பல கேள்விகளுக்குத் தந்தை பதில் சொல்ல வேண்டிய நிலையேற்படுகிறது. அதேவேளை தனது மனப்போரட்டங்களுக்கும் அவன் முகம் கொடுக்க வேண்டியவனாகின்றான். 'உண்மையாகத் தான் இப்படிச் சொன்னாரோ?' என்ற கேள்வியைப் பல தடவை கள் அவனது மனம் அவனைக் கேட்டிருக்கும்.
ஆனாலும் அவன் அனைத்துச் சந்தேகங்களையும் மேற்கொண்டு நம்பிக்கையோடு கீழ்ப்படிகிறான். எனவே, விசுவாசம் என்பது
ஆகாரின் அங்கலாய்ப்பை ஆண்டவர் கேட்க நீங்காமல் நீரென்னைக் காண்போரென்றாள். ஆதி. 16:13

பெரும் பிரச்சினைகளின் மத்தியிலும் கடவுளின் சித்தத்திற்குக் கீழ்ப் படியும் ஒரு தன்மையை ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய ஓர் ஆற்ற லாகும். உலகம் சிரிக்கிறதே என்று ஒதுங்கிப் போகும் தன்மையல்ல அது. சந்தேகத்தினாலோ அல்லது பெலவீனத்தினாலோ மேற்கொள் ளக்கூடியதுமல்ல. இடையில் சிலவேளை தோல்வியடைய நேரிட லாம். ஆனால், மீண்டும் எழும்பி பாவமன்னிப்புக் கோரி அதைத் தொடர வேண்டும்.
அந்த விசுவாச வீரர்களும் இதையேதான் செய்தார்கள். அவர் கள் பெலவீனமற்ற வலுவான மனிதர்கள் அல்ல. அவர்களும் எம் மைப் போன்றவர்களே. எமக்குள்ள அதே பயமும் சந்தேகங்களும் அவர்களுக்கும் உண்டு. இருப்பினும் கடவுளுக்குக் கீழ்ப்படிவதற்காக அவர்கள் பல வகையிலும் போராட வேண்டியிருந்தது. Sa
நாமும் விசுவாசிகள்தான். நம்பிக்கை கொண்டவர்கள்தான். கடவுளுக்குக் கீழ்ப்படிய நாமும் அழைக்கப்பட்டுள்ளோம். கப்பலைக் கட்டும்படியாகவோ, நாட்டை விட்டு வெளியேறும்படியாகவோ கடவுள் எம்மை அழையாதிருக்கலாம். ஆனால் அநேக வேறு காரியங் களைச் செய்ய நாம் அழைக்கப்பட்டுள்ளோம். எம் அயலவர்களில் அன்புகூர்ந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை நாம் செய்ய வேண்டுமென கர்த்தா எதிர்பார்க்கிறார். ஆனால் அது வெகு சிரம மான காரியமே. அப்படியே அவர்களைத் தனியாக விட்டுவிடுவது அதைவிட இலகுவானது, ஆனால் கடவுள் அவ்வாறு கூறவில்லையே.
மேலும், "உனக்கு விரோதமாய்த் தவறு செய்கிறவர்களை மன்னிப் பாயாக’ என்கிறார் கடவுள். அது இலேசான காரியமா? போத னைக்கு இலேசான காரியம்தான். ஆனால் அத்தகைய சூழ்நிலை ஒன்றைச் சந்திக்க நேரிடும்போது அது மிகக் கஷ்டமாகவே இருக்கும். "நான் வேதனைப்படுத்தப்பட்டேன். அந்த நோவை இன்னமும் மறக்க முடியவில்லை. அவ்வாறு எனக்குச் செய்த மனிதன் தண்டிக் கப்படவே வேண்டும். நான் துன்பப்படுத்தப்பட்டதுபோல அவரும் துன்பப்பட வேண்டும். அந்த மனிதன் கஷ்டப்படுவதைப் பாாத்தால் தான் எனக்கு நிம்மதியே ஏற்படும்’ என்று கூறுவது சரியா? இல்லை. மன்னிக்கும்படியாக கூறுகிறார் கர்த்தர். அதை எவ்வாறு என்னால் செய்ய முடியும்? எல்லாரும் என்னைப் பார்த்துச் சிரிப்பார்களே ! கோழை யெனக்கூறி கேலி செய்வார்களே! எனச் சிந்திப்பதா?
"வேதனைகளைப் பற்றி நான் அறிவேன். என்னையும் துன்பப் படுத்தினார்கள். நானும் அநியாயமாகத் தண்டிக்கப்பட்டேன். ( தொடர்ச்சி 24-ம் பக்கம் )
ஆபிரகாம் கேட்டதோ பத்துத்தி மான்கள் ஆண்டவர் கேட்டதோ ஒன்றேயொன்று. - ஆதி 18:32
-س- 231 --

Page 13
  

Page 14
காட்டிக் கொடுக்கப் போகும் யூதாசின் கால்களையும் கழுவுகிறாரே!!! என்ன தாழ்மை? என்ன அன்பு? ஆத்துமாவே! பன்னிருவரினதும் இருபத்தினான்கு கால்களையும் கழுவித் துடைக்க அவரது இடுப்பு நிமிராமல் இருந்த நிலைமையை நினைத்துப் பார்! * மரித்த பக்தரின் ஆவிகளே! அரசரின் ஆத்துமாக்களே! மந்திரி பிரதானிகளின் ஜீவன்களே! என்றாகிலும் நீங்கள் உங்கள் ஊழியங் களிலே மற்றவர்களின் பாதங்களைக் கழுவியதுண்டா? * காபிரியேலே! மிகாவேலே! கேரூபின் சேராபீன்களே! தேவ தூதரின் சர்வ சேனைகளே! நீங்கள் இவ்வாறு செய்ததுண்டா? * அன்பார்ந்த வாசகனே! உன்னுடைய கெளரவம் என்னும் வஸ் திரத்தைக் கழற்றி விட்டு என்றாவது இவ்வாறு செய்ய நீ எண்ணிய துண்டா? நில்! சொல்!
* "தாழ்ந்தார் அவர்; உயர்ந்தோம் நாம்
இதென்ன மாறுதல்? இதுன்னத சிநேகம்தான்
இதன்பின் ஆழங்கள்’’ - இன்னும் உண்டு
விசுவாசம் என்பது. (21ம் பக்கத் தொடர்) எனவே உங்களுடைய வேதனையை என்னிடம் கொண்டு வாருங்கள். அவைகளை உங்களிலிருந்து எடுத்துப் போட்டு உங்களுக்கான ஆறு தலை நான் தருவேன்’ என்கிறார் இயேசு.
எனவே நாம் மன்னிக்கும் போது நமது பகைவன் உண்மை யாகவே ஆச்சரிப்படுவான். நம்முடைய அர்ப்பணிப்பு அவனுடைய உள்ளத்தில் கிரியை செய்ய கர்த்தர் கிருபை செய்வார்.
மேலும் பல விடயங்களுக்கு உலக ஞானத்தினால் தீர்ப்பளிக்க நாம் முற்படுகிறோம். ஆனால் விசுவாச மனிதர்களோ அவ்வாறு செய்யவில்லை. கடவுள் சொல்லி விட்டாராயின் அது எவ்வளவு இயலாத காரியமாயினும் அதற்குக் கீழ்ப்படிந்தார்கள். அது அறி வீனம் போல் காணப்பட்டாலும் கீழ்ப்படிந்தார்கள். அதுதான் அவர்கள் கடவுள் மீது கொண்டிந்த விசுவாசம். கடவுள் சொல்லி விட்டாரென்றால் அது 25 வருடமோ 125 வருடமோ செய்தே தீருவார்.
விசுவாசம் எனப்படும் இம் மனப்பாங்கை நாம் உணருகிறோமா? அவ் விசுவாசத்தைக் கட்டியெழுப்ப அழைக்கப்படுகிறோம். மிகச் சிறிய காரியம் தொடக்கம் மிகப் பெரிய காரியம் வரை நாம் கடவு ளுக்குக் கீழ்ப்படியும்போது விசுவாசத்தில் நாம் வளர்ச்சியடையலாம். இவ் விசுவாசத்தை எம்மில் நிலைகொள்ளச் செய்ய கடவுள்
உதவி செய்வாராக , *
ஆகாருக் கொருபிள்ளை ஆண்டவ னால்அது அடங்காத பிள்ளை அவனியிலாம். -ஆதி. 16 12, 17:18
- 24 -

ஏைோக்கு - ஏ - நோக்கு
- தமிழ்நாடு J. சாம் ஜெபத்துரை -
7. காணவில்லை காணவில்லை!
* "ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்கையில்
காணப்படாமற் போனான்' - ஆதி, 5:24
* 'காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை, தேவத்துவம் என்பவைகள் உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளாலே, உலகமுண்டானது முதற் கொண்டு தெளிவாகக் காணப்
uGcQuib. ”” - G3print Drio I: 20
ஏனோக்கின் நாட்களுக்கு நேராய் என் மனதைத் திருப்புகிறேன். என் உள்ளம் காலத்தைப் பின்னே தள்ளி சிறகடித்து பழங் காலத்தை நோக்கிச் செல்கிறது. ஏனோக்கையும் அவரது குடும்பத் தையும் என் மனக்கண்கள் முன்பாகக் கொண்டு வருகிறேன்.
அது ஒரு மாலை நேரம். ஏனோக்கு முகம் கழுவிக் கொண்டு நிற்கிறார். அவர் உதடுகள் ஓர் அருமையான துதிப்பாடலை மீட்டிக்கொண்டிருக்கிறது. திடீரென்று வெளியே இருந்து "ஏனோக்" என்ற குரல் ஒலிக்கிறது. அந்தக் குரவில் தான் எவ்வளவு அன்பு, கனிவு, பாசம் அக்குரல் கேட்டவுடனே ஏனோக்கின் உள்ளம் பொங்குகிறது. மிக வேகமாக முகத்தைத் துடைக்கிறார். அவசரம் அவசரமாக உடைகளை மாற்றுகிறார். தன் மனைவியிடம் திரும்பி "ஆண்டவர் வந்திருக்கிறார். நான் அவரோடு கொஞ்ச தூரம் உலாவி விட்டு வந்து விடுகிறேன்" என்று சொல்லிப் புறப்படுகிறார். *"சீக்கிரமாக வந்து விடுங்கள்" என்று அன்போடு மனைவி சொல் லும் வார்த்தைகள் அவரது காதில் விழவில்லை. வாசலண்டை ஆவலோடு நிற்கும் ஆண்டவரோடு கரம்பிடித்து தெருவில் இறங்கி நடக்கிறார். நேசத்தால் இருவரின் உள்ளங்களும் பொங்குகின்றன. அமைதியாக நடக்கிறார்கள். ஊருக்கு வெளியே வருகிறார்கள்" மனித நடமாட்டம் குறைகிறது. கர்த்தர் பேச ஆரம்பிக்கிறார்.
நகைத்தாலும் ஒருபிள்ளை பெற்றாள் சாராள் ஈசாக்கென் றிட்டார் பெயரை. ஆதி. 21 : 03
sua 25 -

Page 15
தான் பூமியிலே மனிதனாகப் பிறக்கப் போவதைத் தெரிவிக்கிறார். தான் பிறக்கப் போகுமிடம் வளரும் விதம் தெரிந்தெடுக்கப் போகும் சீஷர்களைக் குறித்தெல்லாம் விபரமாகக் கூறுகிறார். ஏனோக்கு களிகூர்ந்த இருதயத்தோடு காதுகுளிர அதையெல்லாம் கேட்டுக் கொண்டே வருகிறார், "ஆண்டவரே! நீர் மனுஷகுமாரனாய் இறங்கி வரும் போது நான் இருந்தால் நிச்சயமாக உமது சீஷனா யிருப்பேன். உம்மார்பில் தலைசாய்ந்து மகிழுவேன்' என்கிறார் ஏனோக்கு விரிந்த கண்களுடன்!
பேச்சு தொடர்ந்து கொண்டே போகிறது; கர்த்தர் கல்வாரியின் பாடுகளை விவரிக்கத தொடங்கியபோது ஏனோக்குவினால் தாங்க முடியவில்லை. கண்களில கண்ணிர் கட்டுககடங்காமல் வழிந்து கொண்டேயிருக்கிறது. எவ்வளவு நேரம் நடந்தார்களோ தெரிய வில்லை. இரவு இருவரும் வீடு திரும்புகிறார்கள். வீட்டின் அருகே வந்ததும் கர்த்தர் விடை பெற்றுக் கொள்கிறார். ஏனோக்கு கத வைத் தட்டியதும் மனைவியின் முகத்தில் சோகத்தைக் காண் கிறார். "ஏங்க. சீக்கிரமாய் வீட்டுக்குத் திரும்பக் கூடாதா? பிள்ளைகள் படிக்கிறார்களா இல்லையா என்பதைக் கவனிக்கக் கூடாதா? நாளைக்கு சமையலுக்கு அரிசி பருப்பு இல்லையே! வாங்கிப் போடக் கூடாதா? பக்தியிருக்க வேண்டியதுதான ஒரேயடி யாக இருக்கக் கூடாது. - பொரிந்து தளஞகிறாள மனைவி. சமாதானப்படுத்திவிட்டு குடும்ப ஜெபம் நடத்திவிட்டு சாப்பிட உட்காருகிறார்.
அடுத்த நாள், அதே மாலை வேளையில் "ஏனோக்" என்கிற குரல் கேட்கிறது. முகம் கழுவி விட்டு ஏனோக்கு மான்குட்டி போல துள்ளி கர்த்தரிடம் ஒடுகிறார். மனைவியின் குரலைக் காதி லேயே போட்டுக் கொள்ளவில்லை. ஊரின் எல்லை வந்ததும் இரு வரும் சம்பாஷிக்க ஆரம்பிக்கிறார்கள். கர்த்தர் தமது மகிமையான இரண்டாம் வருகையைக் குறித்து, வருகையில் எடுத்துக் கொள் ளப்படும் தேவனுடைய பிள்ளைகளைக் குறித்து; பலலோகத்தில் ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்தைக் குறித்து விவரித்துக் கொண்டே வருகிறார். ஏனோக்கு அமைதியாக, **ஆண்டவரே! மணவாளனாகிய உமக்குத் தோழனாக நான் நிற்பேன்" என்கி றார். ஆனந்த பரவசத்தோடு நேரம் போவதே தெரியவில்லை. இரவு பத்து மணியாகி விட்டது. ஏனோக்கு சொல்கிறார் **ஆண்டவரே நான் தினம் தினம் வீட்டிற்குப் பிந்திப் போவதால் என் மனைவி என்னைத் திட்டுகிறாள். நான் படும்பாடு உமக்குத் தெரியவில்லையே! 'அதற்கு ஆண்டவர் 'என் நண்பனே, உன்னை
ஈசாக்கைப் பலியிட இறைவன் கேட்க பேசாமல் துணிந்தான் ஆபிரகாம், - ஆதி. 22 1 18
- 26 -

விட்டுப் பரலோகம் செல்லவே எனக்கு பிரியமில்லை. உன்னைப் பூமியிலே விட்டு மேலே சென்றால் பரலோகமே எனக்கு வெறுமை யாக இருக்கிறது" என்கிறார்.
ஏனோக்கு வீடு திரும்ப இரவு 11 மணி ஆகிவிட்டது. கோப மும் எரிச்சலுமான மனைவி 'நீங்கள் ஏன் என்னைக் கலியாணம் செய்து கொண்டீர்கள்' உங்களுக்குக் குடும்பப் பொறுப்பு கொஞ் சமும் இல்லையே! முதலிலேயே சந்நியாசி ஆகி அந்த ஆண்டவரு டனேயே போயிருப்பதுதானே! அந்த ஆண்டவருக்குக் குடும்பமா? மனைவியா? அவர் உங்களோடு ஜாலியாக நேரத்தைச் செலவழிக் கிறார். உங்களுக்குக் கொஞ்சமாவது குடும்பப்பாரம் வேண்டாமா?" பொரிந்து தள்ளுகிறாள். "ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம் - சோறு போடு' என்கிறார் ஏனோக்கு.
ஒவ்வொரு நாளும் இச் சம்பவம் தொடர்ந்து கொண்டேயி ருக்கிறது. ஒரு நாள் அவர்கள் பேசிப் பேசி மிகத் தொலைவு சென்றுவிட்டார்கள். ஒருவருக்காக மற்ற வரின் உள்ளம் நேச அன் பினால் நிறைந்து வழிந்து கொண்டேயிருக்கிறது. இன்னும் தூர மாக நடந்து கடைசியில் கர்த்தர் தன்னோடு எப்பொழுதும் இருக் கும்படி ஏனோக்கைப் பரலோகத்திற்கு அழைத்துச் சென்றுவிட் டார். எத்தனையோ நூற்றாண்டுகள். ஆயிரம் ஆயிரம் ஆண்டு கள் ஓடி மறைந்து விட்டன. ஆனாலும் அவர்கள் ஒருவருக்கொரு வர் பேசிக்கொள்ள வேண்டிய காரியம் இன்னும் ஆயிரம் ஆயிர மாக இருக்கின்றன. அவர்களது அன்பின் ஆழத்தை - பேசி மகிழ்ந்த அன்பின் வார்த்தைகளை - சம்பாஷித்த இனிய உறவுகளை மிக அழகாக ஒரே வரியில் இரத்தினச் சுருக்கமாக வேதம் "ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்கையில் காணப்படாமற் போனான். தேவன் அவனை எடுத்துக் கொண்டார்.’’ எனக் கூறு கிறது. அதைச் சிந்திக்க சிந்திக்க அவ்வுறவை வார்த்தைகளினால் வருணிக்க முடியாமல் திண்டாடுகிறோம்.
ஆரம்பத்தில் அக்கிராம மக்கள் ஏனோக்கைக் கவனித்திருப் பார்கள். ஏதோ ஒரு புதிய பக்தி; கர்த்தரோடு கொஞ்ச நாள் கொஞ்ச தூரம் நடப்பார் என்று தான் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் ஏனோக்கோ பரலோகம் வரை நடந்தார். கூட நடப்பவர் மனிதனென்றால் அது பூமிக்குரிய தடையாயிருக்கும் பாவியோடு நடந்தால் அவன் சினிமாவுக்கும், குடிக்கும், கூத்துக்கும் கொண்டு செல்வான். ஆனால் ஏனோக்கு பரிசுத்தமும் நித்திய வாசியுமானவ ரோடு நடந்ததால் அவர் அவனைப் பொன்னொளி வீசும் பரலோ கத்துக்குக் கொண்டு சென்றார். அல்லேலூ யா! - இன்னும் உண்டு:
மம்ரேயின் மக்பேலா குகையில் மறைத்தான் மனைவி சாராள் மரித்தபோது. - ஆதி. 23 : 19
ー 27 ー

Page 16
* தொடர்பு தொடர்ந்து வளர்ந்து பெருக என் ஜெபங்கள். - மலர் கிங்ஸ்றன், பதுளை.
* கடந்த காலம் முழுவதும் தேவன் தாமே உங்களையும் உங்கள் ஊழியத்தையும் பாதுகாத்து வழிநடத்தியது போல இந்த வருடம் முழுவதும் உங்கள் ஊழியங்கள் மூலம் புதிய் ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படவும், அற்புதங்களைச் செய்யவும் கூடுதலான கிருபை யைப் பெருகச் செய்வாராக. எங்களிடம் வரும் சகல நோயாளிகளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே மெய்யான தேவன் என அறிந்து அவருடைய நாமத்தை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அனுப்பும் சஞ்சிகை பெரும் ஆசீர்வாதமாக அமையும் என நான் விசுவாசிக் கிறேன். - Dr. N. N. வின்சென்ட், மட்டக்களப்பு.
* தொடர்பு சஞ்சிகை மூலம் எமது பகுதி ஆவிக்குரிய கிறிஸ்தவ மக்கள் நற்பயனடைந்து பல ஆவிக்குரிய தத்துவங்களை அறிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும் மேலும் இது ஆவிக்குரிய கட்டுரைகள், தூதுகளினால் நிரம்பி இன்னும் பல
பக்க இதழ்களாய் துளிர்க்க வேண்டும்.
- Pastor S. J. Pathinathan-Jaffna.
* தொடர்பு மிக அருமையான கிறிஸ்தவ சஞ்சிகை. அனை வரையும் கவரக்கூடிய அமைப்பு. 16வது இதழில் "தொழிலாளர் தினம் மிக அருமையான கட்டுரை. "எஸ்தர் ஒரு விசுவாச மங்கை" - முழுப் புத்தகத்தையும் படித்த நிறைவைத் தருகிறது. "ஏனோக்குஏ-நோக்கு எம்மை ஆராய்ச்சியாளராக்குகிறது. "கொக்ரக்கோ"
நகைச்சுவை சிந்தனையைத் தூண்டுகிறது.
- போல்வில்சன்-கொழும்பு-14
* தொடர்பிலுள்ள புதிய ஆவிக்குரிய காரியங்கள் நல்ல கருத் துக்களையும் மனதுக்கு ஆறுதலையும் அளிக்கிறது. t
- J. P. D. சத்தியநாதன், கட்டபூலா;
கர்த்தரால் ஆசி பெற்றவரே, வாரும் ; காத்திருப்போம் உம்மகிமை காண. ஆதி. 24 : 3
-س 28 . --سسه
 

கொக்ரக்கோ!
--سے
அருள்திரு. ராஜ்பகதூர் அடிகளார்
O இவ்வாக்கத்தை
இச் சஞ்சிகையில் வெளியிட அனுமதித்த ஆக்கியோனுக்கு எமது நன்றிகள்
அத்தியாயம் - 9 சிறையில் கொக்ரக்கோ !
ஆலயத்தின் கோபுரத்தில் செங்கொடி ஒன்று பறந்து கொண் டிருந்தது. அதில் ஒரு புறம் சிலுவைச் சின்னமும் மறுபுறம் 'அரி வாள் கத்தி சின்னமும் இருந்தது.
காரில் இருந்து இறங்கியவுடன் கொடியிலுள்ள சின்னங்களின் விளக்கத்தைக் கேட்டான் வேதமாணிக்கம். சுந்தரம் மெளனம் சாதிக்கவே கொக்ரக்கோ தாமாக விளக்கம் கொடுக்கத் தொடங்கி னார். "கொடியில் உள்ள சிலுவை கிறிஸ்து பட்ட பாட்டைக் குறிப்பதுபோல் அரிவாளும் கத்தியும் "கிறிஸ்துவை மெய்யாய் விசுவாசிக்கிறவர்களை மற்றவர்கள் படுத்தும் பாட்டைக் குறிக்கி றது' என்றார்.
சுந்தரத்தின் கண்களில் தீப்பொறி பறந்தது. "வேதமாணிக் கம் உன் கோழியைக் கொஞ்சம் அடக்கிவை. இல்லையென்றால் நீங்கள் ஊர்போய்ச் சேருவது கஷ்டம்' என்றார்.
மொழி பெயர்ப்பாளர் சுந்தரத்தின் உதவியோடு அன்று ஒரு அருமையான பிரசங்கத்தை கொக்ரக்கோவும் வேதமாணிக்கமும் Gas L-60Trf.
இருமனை வியர்க்கு ஈராறு பிள்ளை பேருக்கு பெரியோன் யோசேப்பு. - ஆதி. 30 : 24

Page 17
போதகர் "ஐசுவரியவான் பரலோக இராச்சியத்தில் நுழைவ தைக் காட்டிலும் ஒட்டகமானது ஊசியின் காதில் நுழைவது எளி தாயிருக்கும்" என்ற பொருள்பற்றி ஆத்திரமாகப் பேசிக்கொண்டி ருந்தார்,
நம்முடைய "காம்ரேட் ஜீஸஸ் அன்றைக்கே அமெரிக்க ஏகாதி பத்தியவாதிகளைப்பற்றி எவவளவு அழகாகத் தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறார் பார்த்தீர்களா?" என்றார். அதைச் சுந்தரம் உற்சாகமாய் மொழி பெயர்த்தார்,
பாதிப்பிரசங்கம் நடந்து கொண்டிருக்கும்போது வேதமாணிக் கத்திடம் குல்லாவை எடுத்துத் தலையில போடச் சொன்னார் கொக்ரக்கோ.
மறு நிமிஷமே போதகர் "இந்தியாவிலிருந்து வந்திருக்கும் தோழர்களுக்கு நான் சில உண்மைகளைச் சொல்ல விரும்புகறேன். எங்களுடைய வேத ஆராய்ச்சியின் பயனாக நாங்கள் கண்ட சத்தி யங்கள் இவை. முதலாவதாக காம்ரேட் ஜீஸஸ் பிறந்த ஊர் எங்க ளுடைய மாஸ்கோவுக்குப் பக்கத்திலேயே உள்ள பெதலமி கிராமம். பலஸ்தீனாவிலுள்ள பெதலகேம் என்று ஏகாதிபத்தியவாதிகளு டைய பைபிளில் தவறாகப் போடப்பட்டிருக்கிறது. -
உலகில் புரட்சியை முதல் முதல் தோற்றுவித்தது நம்முடைய காம்ரேட் ஜீஸஸ் தான்! தரித தரருக்குக் கமயூனசம எனனும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, "பணககார முதலைகளை applit பேன்" என்று கங்கணம் கட்டிக் கொண்டு மாஸ்கோவிலுளள தேவாலயத்தல இருநத பணக்காரர்களை அனறு சவுக்கால் அடித் தார். பணக்காரப் பேடிகள் அல்றிக் கொணடு ஓடினார்கள, காம்ரேட் ஜீஸஸ் சிலுவையில் மரித்தார் என்று ஏகாதிபத்திய வாதிகள் தவறாகச் சொல்கிறார்கள், மாபெருந்தவறு இது. அவர் முதலாளிகளின் கைக்கூலிகளால் பரிதாபமாகக் கொலலப்பட்டார்! காமரேட் ஜீஸ்ஸின் கல்லறை நமது மாஸ்கோ நகரிலேயே அவரு டைய உண்மைச் சீடர்களான லெனின் ஸ்டாலின் குரோமிகோ, ட்ராட்ஸக்கி முதலிய பன்னிருவரின் கல்லறைக்கு நடுவே இருக்கிறது. எல்லோரும் கவனியுங்கள்! இன்னொரு முக்கியமான காரியம். காம்ரேட் ஜீஸஸ் உயிர்த்தெழவில்லை! இந்த மாபெரும் உண் மையை அகல உலகக் கிறிஸ்தவ சங்கத்தின் பெருந்தலைவர்க
எதிரிகளானார் சோதரர் இருவர் இதயம் துருவிடும் துயரச் செயல். ஆதி. 33 :

ளான நம்முடைய அருமை நண்பர்களும் கூட இப்போது உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.
இந்த இடத்தில் கொக்ரக்கோ "இல்லை இயேசு உயிர்த்
தெழுந்தார்11." என்று தமது முழுப் பலத்துடன் கத்தத் தொடங் கினார்.
O பிரசங்கம் நின்றது:
மறுநாள் வேதமாணிக்கத்திற்கும் கொக்ரக்கோவிற்கும் மாஸ்கோ நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இருவரும் பதி னைந்து நாள் கடுங்காவலில் வைக்கப்பட்டனர். "கிறிஸ்து உயிர்த் தெழவில்லை என்பதை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டால் இருவருக்கும் விடுதலை அளிக்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டது;
கடைசிநாள் வேதமாணிக்கம் "இயேசு உயிர்த்தெழவில்லை" என்று கூறி இயேசுவை மறுதலித்து வெளியே புறப்பட்டான்! கொக்ரக்கோ சிறையிலிருந்தபடியே மூன்று முறை கூவிப்பார்த் தார். வேதமாணிக்கம் திரும்பிக்கூடப் பார்க்காமல் நடந்துவிட்
lfTGT.
மறுநாள் காலையில் ரஷ்ய விமானம் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு கம்பீரமாகப் புறப்பட்டது. அதன் முன் சீட்டில் வேதமாணிக்கம் ஏறி உட்கார்ந்து கொண்டு மீண்டும் ஒரு முறை தனது டயறியைப் புரட்டி 'டாலர் அட்ரசுகளை" சரிபார்த்துக் கொண்டான். இப்போது சிறையில் வாடும் கொக்ரக்கோவின் நினைவுகூட அவனுக்கு வரவில்லை.
அதிகாலையில் சிறைக்கதவுகள் திறக்கப்பட்டன. மொழி பெயர்ப்பாளர் காம்ரேட் சுந்தரத்துடன் நான்கு இராணுவ வீரர் கள் ஒரு இரும்புக் கூண்டை தூக்கிக் கொண்டு தயாராக வந்து கொக்ரக்கோவின் முன்னே நின்று கொண்டிருந்தனர்.
'ம் கூண்டுக்குள்ளே ஏறி உட்காரு" என்று ரஷ்ய மொழியில் கர்ஜித்தான் ஒரு இராணுவ வீரன்.
கொஞ்ச நேரத்தில் கொக்ரக்கோவை ஏற்றிக்கொண்டு சென்ற அந்த இராணுவ வேன் ஒரு பிரமாண்டமான சிவப்பு மாளிகையின் முன் வந்து நின்றது.
அரைநூற் றாண்டு குறைவாய் ஆயிரம் (950) ஆண்டுகள் வாழ்ந்தான் ஆப்ராம். ஆதி. 9 29
- }! ഞ

Page 18
மிஸ்டர் சுந்தரம் கொக்ரக்கோவிடம் விஷயத்தை விவரித்தான். * 'இதுதான் இந்நாட்டு மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் முக் கிய மனிதர்கள் செயலாற்றுகிற தலைமைச் செயலகம். 2-6йт தலையை இன்று இவர்கள் "சூப்" போட்டு குடிக்கப் போகிறார் கள். "இயேசு உயிரோடு எழும்பவில்லை" என்பதை மரியாதையாக ஒப்புக் கொண்டு இவர்களிடம் மன்னிப்புக் கேட்டால் ஒருவேளை உன்தலை பிழைத்தாலும் பிழைக்கும்" என்றார்.
கொக்ரக்கோ அசட்டையாக ஒரு சிரிப்பு சிரித்தார். உடனே இராணுவ வீரர்களில் ஒருவன் துப்பாக்கியால் இரும்புக் கூண்டின் மேல் ஓங்கி ஒரு அடி அடித்தான். கொக்ரக்கோவின் உடலெல் லாம் நடுங்கியதோடு அவருக்கு ஒருவித மயக்கம் ஏற்பட்டது. அச் சிவப்பு மாளிகைக்குள் நுழைந்தவுடன் கொக்ரக்கோவை கூண்டை விட்டு வெளியே கொண்டு வந்தார்கள். இப்போது அவருக்கு மயக்கம் தெளிந்து விட்டது. ஒரு இராணுவ வீரனு டைய இரும்புப் பிடிக்குள் சிக்கி இருப்பதை அவர் உணர்ந்தார்.
சுமார் ஆயிரம் பேர் கூடியிருந்த "டிரெம்ளிங்' என்ற அந்த மாளி கையில் ஓர் உயர்ந்த ஆசனத்தில் மிலிட்டரி உடையணிந்து உட் காந்திருந்தார் ஒரு முக்கிய மனிதர். அவர் தோள் பட்டையில் சில கலர்பட்டைகளும் மார்பில் பல பதக்கங்களும் தொங்கிக் கொண் டிருந்தன. "ஜெரலிசிமோ கிரஷ்னோவ்" என்ற அந்த பெரிய மணி தர் மட்டுமே கொக்ரக்கோவிடம் சில கேள்விகளைக் கேட்டார்.
"கோழி உனக்குப் பேசக் கற்றுக் கொடுத்தது யார்??
‘கடவுள்"
இப்பதில் கேட்டு சபையோர் அதிர்ச்சி அடைந்தனர். ஜெரலி
சிமோ" மூர்ச்சை அடைந்தார்!
- இன்னும் உண்டு
6 ge
சுவைத்திரள்? சிரிப்பு மனித உடலுக்கு ஓர் ஒளஷதம் என்பார்கள். சிந் தனை அதிகமாகும் போதும் ஏற்படும் களைப்பை சிரிப்பு சில நொடிகளில் போக்கி விடுகிறது.
h− சுவைத்திரள் உங்களைச் சிரிக்க வைக்கும் ஒரு சஞ்சிகை. மீன் பாடும்தேன் நாட்டின் சிரிப்பிதழ் இச் சுவைத்திரள். விபரங்களுக்கு:-
K. S. தர்மகுலசிங்கம், 481 பார் றோட், மட்டிக்குளி, மட்டக்களப்பு
ஆவலாய்ப் படித்த அடிவரிக் கவிகளைப் "பாவலர் கிரான்"ஈந்தான் குறளாய், - நன்றி.
- 32 -

O அவரும நானும அடியேன் பணிசெய்ய நெடுநேரம் ஆனால்
ஆமையென்பார் என்னை அருமைத் தலைவரவர் அன்னவர் பணிபுரிய அதிகநேரம் எடுத்தால்
சிறப்பாய்ச் செய்வதாக செருக்குடன் சொல்வார்
அடியேன் எதுவும் செய்யாது விட்டால்
சோம்பேறி யென்டார் சுறுசுறுப் பாக
அன்னவர் எதுவும் செய்யாது போனால்
பலசோலிக் காரன் பார்நான் என்பார்.
சொல்லாம லே நான் பணியேதும் செய்தால்
சொல்லுவார் பெருமை உனக்குண் டென்று சொல்லாம லேதான் அவரும் செய்தால்
முற்போக் காளன் முறைஇது என்பார் அவரைப் பிரியப் படுத்த முனைந்தால்
எண்ணெய் பூசியோ மெழுகிறாய் என்பார் மேலதி காரியை அவர் - அது செய்தால்
ஒத்துழைக் கின்றேன் ஒழுங்காய் என்பார்
நான்செய்யும் நிறைகளை நினைக்கின்றா ரில்லை! நான்செய்யும் குறைகளை மறக்கின்றாரு மில்லை!
- T. ரட்னதேவி -
“My Boss and I என்ற ஆங்கிலக் கவியின் தமிழ் வடிவம்
நீங்கள் வீடு மாறினால்.
இன்றே உங்களது
புதிய முகவரியை
எமக்கு எழுதுங்கள் !
O பழைய முகவரியையும் இணைக்க
மறவாதீர்கள்.

Page 19
நான். வி
அப்படி யில்லை இது. இ எப்படிச் சொன்னாலும் பு ஆலயமணி ஏனோ ஒசையு ஆட்டி அதை அடிப்பதுவும் ஆலயத்துள் நுழைவதுவும்
சென்றமர்ந்து இருப்பதுவும் பாடகர்கள் பாடுவதில் ரா தெரிந்தெடுத்த பாடல்களு
வாத்தியத்தில் சுரமமைப்பு "வாசிக்கும் வேதத்திலும் ெ வாசித்த பிள்ளையதன் குர பொட்டுவைத்துப் பூமுடித் பிரசங்கம் செய்யும்விதம் ஆ உதாரணங்கள் கொடுத்ததி ஜெபவேளை தெரிந்தெடுத் முக்காடு முழங்கால்கள் டே
நற்கருணை கொடுத்ததிலே முடிந்தபின்பு போனவிதம்
ஆண்டவரே! என்னுடைய மூப்பர்களும் சங்கங்களும் ( நான்படித்த படிப்புக்கு இை இதனால்தான். நான்சந்தா
எனக்கேனோ வாய்சும்மா என்பேச்சை ஒருவருமே கே
எனைப்போன்று வேறொருள் முற்றறிந்த வித்துவன்நான்; கொடுத்தாலும் என்காய்ச்ச ஜெபித்தாலும் ஜெபிப்பவரி ஏனென்றால் எனக்குள்ளே
உடலெல்லாம் ஏற்படுது "த நானென்றால் எனக்கு வேை இல்லையென்றால் இங்கிருந்
தருவது. டன்ஸ்
Printed by Meenambal Ganeshaling Colombo-12. and Published by E 90, Kandy Road, Kengalla on 1.7.94

●
த்துவ காய்ச்சல் -
ப்படி யில்லை! ரியுது மில்லை!
மில்லை! அவ்வித மில்லை! அப்படி யில்லை!
இப்படி யில்லை! கமும் இல்லை! ம் பொருத்தமு மில்லை.
கொஞ்சமு மில்லை! மாழி சரியில்லை! ால் சரி யில்லை! த சடைசரி யில்லை! அப்படி யில்லை! லும் அர்த்தமு மில்லை! த ஜெபம் சரி யில்லை! ாடவு மில்லை!
நன்மையு மில்லை! அதுசரி யில்லை! போதகர்கள் முதலாய் முழுப்பேரும் பிழையே! வைசரி யில்லை!
கொடுப்பது மில்லை! இருக்குது மில்லை! ட்பது மில்லை!
வர் இவ்விடம் இல்லை!
எனக்கே வில்லை? ல் நீங்குது மில்லை! ல் நம்பிக்கை யில்லை! *வித்துவ காய்ச்சல்* த்துவ எரிச்சல்* ண்டும் நல்லொரு மேய்ச்சல் து உடனே பாய்ச்சல்!
ரன் எஸ். சாமுவேல்
am at Kumaran Press 201, Dam Street. Bro. Devadason Jeyasingh of "Dasons'