கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொடர்பு 1996.05-06

Page 1
ஜ் 'தேவனிடத்தில் அல் என்று - ஒருவன் ே தன் சகோதரனைப் அவன் பொய்யன்: தான் கண்ட சகோ அன்பு கூராமல் இரு தான் காணாத தே
எப்படி அன்பு கருவி'
ஜ் வசனத்தினாலும்,
கிரிபையினாலும், !
அன்புக் கூரக் கூட:ே
ကြီér " Â Ât
MAY - JUI
 

எபு கூருகிறேன்"
சொல்வியும்;
பகைத்தால்
தரனிடத்தில் நக்கிறவன் வனிடத்தில்
Tī - 1 ir ti 20
நாவினாலும் அல்ல உண்மையினாலும்
in - 1 Giri II it - 3 - 18
NE - 1996

Page 2
* வாசகரின் வசதிக்காக .
விடயம் V, பக்கம் * ஆசிரியரிடமிருந்து . ... 1 * கிறிஸ்தவம் G. C. E. O/L . ... 2 * இராட்சதனை வீழ்த்திய இரட்சகன் . 5 * நீ படப் போகும் பாடுகள் . ... 9 * உங்கள் விசுவாசம் . 13 " ஆட்டுக் கால்கள் வேண்டாம் ! 21 * உன் கையில் இருப்பது என்ன ? ... 22 * உன் தொழில் என்ன ? ... 23 * அவிசுவாசம் எமை ஆளுமுன் . ... 25 * பரிசுத்த கன்னி மரியாள் . ... 27 * படைப்பும், படிப்பும் . .., 30 * வேதாகமப் புதிர் - இல. 28 ... 32
アマ
* ஆண்டுச் சந்தா 100 ரூபா. தனிப் பிரதி 20 ரூபா. * காசோலை - காசுக் கட்டளை - மூலமாக சந்தாவை
அனுப்பி வைக்கலாம். காசுக் கட்டளை எழுதும்போது Kengalla தபாற் கந்தோருக்கே எழுதப்படல் வேண்டும்.
* & 5 Q) 5 q-5 lëj 5 GT51 b, Devadason Jeyasingh - (Editor)
Dasons, 90, Kandy Road, Kengal la, - Sri Lanka.
என்ற விலாசத்திற்கு அனுப்பப்படல் வேண்டும்.
လျှို ၃ 影。影 တွံ႔၃
Thodarpu : Christian Literary Magazine Founded : 25 12 1991 --
Founder : (Late) Rev. Rajakumar Thurairajah Editor Bro. Devadason Jeyasingh Co-Editor : R. J. A. Medona Ranie
Letter press : Zidny - 258, D. S. S. Weediya, Kandy.
28th issue 来源 Thodarpu * 1st June 1996

Gld
gosöiv
1996
கிறிஸ்துவுக்குள் அன்பார்ந்த வாசகரே,
இதோ உலகின் முடிவு பரியந்தம் உங்களுடனே கூட இருக்கி றேன் என்று உறுதி கூறிய உண்மைத் தெய்வத்தின் உன்னத நாமத் தில் உங்களை வாழ்த்துகிறேன்.
தொடர்பு - ஜெப் பீடத்தின் மூலமாக அநேகர் ஆசீர்வாதங் களைப் பெற்று வருவதையிட்டுக் கர்த்தரை ஸ்தோத்திரிக்கின்றேன். உங்களுடைய ஜெப தேவைகளையும், சாட்சி அனுபவங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்; மேலும் ஆசீர்வாதமாக அமையும்.
24.03.96 இல் அவிசாவளை பரி. பர்னபா ஆலயத்தில் தொடர்பு சஞ்சிகையின் அறிமுகக் கூட்டம் நடைப்ெற்றது. சபையார் அனை வருமே சஞ்சிகையை சந்தோஷமாய் வரவேற்றார்கள். அநேகர் புதிய சந்தாதாரராய் இணைந்து கொண்டார்கள் . கர்த்தருக்கு ஸ்தோத்திரம். எம்மை அங்கு வரவேற்று உபசரித்த குருவானவர், அவரது குடும்பத்தினர், ஆலய நிர்வாகிகள், சபையார் அனைவரை யுமே கர்த்தர் வானத்தின் பல கணிகளைத் திறந்து ஆசீர்வதிப் LITT UT IT SH5 .
தொடர்பு சஞ்சிகைப் பணி இடர்ப்பாடின்றி தொடரவும், இதற்குத் தேவையான நிதியுதவிகைளை கர்த்தர் தாமே தம் அடி யார்கள் மூலமாக நிறைவேற்றவும், விசேஷமாக நாம் ஆரம்பிக்க விருக்கும் சிறுவர் மாதாந்தப் பத்திரிகைக்காகவும் ஊக்கமாய் ஜெபி யுங்கள். இவ்வூழியத்திற்குக் கரம் கொடுக்கும் ஒவ்வொருவரையும் ஆண்டவர் ஆச்சரியமாக ஆசீர்வதித்து வருகிறார்.
தொடர்பு சஞ்சிகை பற்றிய உங்கள் கருத்துக்களை அடிக்கடி எழுதி அனுப்புங்கள். பயனுள்ளவை | பயனற்றவைகளைச் சுட்டிக் காட்டுங்கள். சஞ்சிகை வளருவதற்கு அவை வழி வகுக்கும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக,
கிறிஸ்துவின் பணியில், - தேவதாசன் ஜெயசிங் -

Page 3
|கிறிஸ்தவம் ...G..C.E. OIL
Rev. C. BALRAJ
2 சவுலின் மனமாற்றம்
தமஸ்குவுக்குச் செல்லும் வீதியில் சவுலுக்கு ஏற்பட்ட அனுபவம் திருச்சபை வரலாற்றில் மிகவும் முக்கிய இடத்தைப் பெறுவதும் புகழ் பெற்றதுமான ஓர் அனுபவமாகக் கருதப்படுகின்றது. இது கிறிஸ்தவர்கள் அனைவரும் அறிந்திருக்கும் ஒரு வேதாகமச் சம்பவ மென்றும் குறிப்பிடலாம். இச்சம்பவத்தை லுக்கா தனது நூலில் பல முறை குறிப்பிடுகின்றார். (அப், 9:1-31, 22:4- 16, 26 11 - 16) ஆனாலும், இன்றைய கிறிஸ்தவ மனமாற்றத்தின் கட்டாய மாதிரி வடிவமாக இதைக் குறிப்பிடவில்லை. இயற்கைக்கு மாறான இறை கிருபையின் செயலாகக் குறிப்பிடுகின்றார்.
வைராக்கியமுள்ள யூதனாக வளர்க்கப்பட்டு, கற்றுக் கொடுக் கப்பட்டு, யூத பாரம்பரியங்களை முழுமையாகவும் வன்மையாகவும் கடைப்பிடித்த சவுல், யூத மதத்தின் போதனைக்குச் சவாலாக அமையும் எதனையுமே எதிர்ப்பவனாக இருப்பது ஆச்சரியமான தொன்றல்ல, ஒவ்வொரு யூதனும் தனது மதத்திற்கும் கடவுளுக் கும் செய்யும் தொண்டாகவே அதைத் கருதுவான். இவ்வாறு, சவாலாகக் காணப்பட்ட ஸ்தேவானின் கொலைக்குக் காரணமான வர்களின் வ ஸ் தி ரங்களுக்கு க் காவலாளியாகவும் (7 58), அக் கொலைக்குச் சம்மதித்த யூதருள் ஒருவனாகவும் (8 : ) இருந்த சவுல், வீடுகளுக்குச் சென்று "வழியின் மக்கள்' என்று அழைக்கப் பட்ட கிறிஸ்துவின் சீடர்களை இழுத்து காவலில் போடுவித்தான். (8 : 3) இவ்வாறு தேசமுழுவதும் கிறிஸ்தவருக்கெதிராக துன் ப அலை பெருகிக்கொண்டிருந்த போது, அவர்கள் பல இடங்சளுக் கும் சிதறிச் சென்று, அவ்வவ் இடங்களிலே சுவிசேஷத்தை அறிவித் தனர். சவுலோ வைராக்கியம் நிறைந்தவனாக, எருசலேமில் உள்ள யூதர்கள் மாத்திரமல்ல; எருசலேமுக்கு வெளியே உள்ள யூதரும் இப்புதிய இயக்கத்தின் செல்வாக்கிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்று விரும்பினான். மக்களை அழிப்பதற்கு எருசலேம் ஆலயத்தின் பிரதான ஆசாரியரிடமிருந்து தமஸ்குவிலுள்ள ஜெப ஆலயங்களுக்கு அதிகாரக் கடிதங்களைப் பெற்றுச் சென்றான். ஸ்தேவானின் மரணம்
- 2 -

சவுலில் ஏற்படுத்திய உடனடித் தாக்கம் இதுவே. சவுலின் மனதை உருகச் செய்யாமல் மேலும் வைராக்கியமுள்ளவனாக - பகைமையில் நிறைந்தவனாக - செயற்பட்ட 1ான். (26 11)
அதிகாரக் கடிதத்துடன் சவுலும் அவனது குழுவினரும் 150 மைல்களுக்கு அப்பால் உள்ள தமஸ்கு நகரத்தை அண்மித்துக் கொண்டிருந்தனர். ஏறத்தாள ஒரு வார காலம் பிரயாணம் செய் திருப்பார்கள். தமஸ்கு சிரியாவின் தலைநகரம். நாக மானின் பிறப் பிடம், பாலைவனப் பசுஞ்சோலைகளைக் கொண்ட பாலை நிலத் தால் சூழப்பட்ட பிரதேசமாகும். இந்நகரத்தைச் சவுல் அண்மித்த போது, வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது. (9 : 37) அது மத்தியான வேளையாக இருந்தது (22 ; 6) அகிரிப்பா அரசனின் முன்னிலையில் சவுல் தனது மனமாற்றத்தைக் குறித்துப் பேசுகையில், அவ்வொளி தன்னுடனே இருந்தவர்களைச் சுற்றிலும் பிரகாசித்ததாகவும், அவர்கள் எல்லாரும் தரையில் விழுந்ததாகவும் கூறியதாக லூக்கா குறிப்பிடுகின்றார். (26 : 4) அந்த ஒளியானது சவுலைக் குருடனாக மாற்றியது. அப்பொழுது : “ சவுலே சவுலே ! நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகின்றாய் ? என்றொரு சத்தம் கேட்டது. இறைவனின் பிள்ளைகள் துன்பப்படும் போது இயேசு வும் துன்பப்படுகின்றார். மக்கள் அனைவரோடும் தன்னை இனம் காணும் இயேசு, 'சிறியவர்களாகிய இவர்களுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள்' என்று கூறியதை ந ம் இங்கு நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். (மத். 25:40, 45)
ஒலி, ஒளி என்பன இங்கு இறைவனின் வெளிப்பாடு, இறை பிரசன்னம் என்பவற்றைக் குறிக்கின்றன. இயேசுவின் திருமுழுக்கு மறுரூபம், மோசேயின் அழைப்பு போன்ற சம்பவங்களிலும் இறை வனின் வெளிப்பாட்டை இவ்வாறான அடையாளங்கள் உணர்த்தின.
ஆண்டவரின் சத்தத்தைத் தொடர்ந்து, ஆண்டவரே ! நான் என்ன செய்ய சித்தமாய் இருக்கின்றீர்? என்று சவுல் கேட்கின்றான். 'நீ எழுந்து பட்டணத்துக்குள் போ; நீ செய்ய வேண்டியது அங்கே உனக்குச் செய்யப்படும்" என்ற பதில் சவுலுக்குக் கிடைக்கின்றது. சவுலுடன் சென்றவர்கள் சத்தத்தைக் கேட்டு ஒருவரையும் கா மல் திகைத்து நின்றனர். பின் சவுலின் கரங்களைப் பிடித்து தமஸ் குவுக்கு அழைத்துச் சென்றனர். எதிரிகளை அழிக்க தன்னம்பிக்கை யுடன், அனேகருக்குத் தலைவனாய், திட்டங்கள் உடையவனாய் தமஸ்குவை அடைய முயற்சித்த சவுல், அடுத்து என்ன நடை பெறப் போகின்றது என்ற திட்ட மின்றி, பிறரால் கைலாகு கொடுத்து அழைத்துச் செல்லப்படுகின்ற தாழ்மையான, பார்வையற்றவனாய், தான் எதிர்த்த கிறிஸ்துவின் கைதியாய் தமஸ்குவுக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அழிக்கும் நோக்கத்தில் சென்றவன் இவ்வனு
- 3 -

Page 4
பவத்தின் பின் அணைக்கும் நோக்கத்தில் பயணத்தைத் தொடர் கின்றான். நடத்தையில் மாற்றம் கண்டு, சிந்தனையில் மாற்றம் கண்டு, தனது வாழ்க்கைப் பயணம் நேர்எதிர்த் திசையில் செல்வதை சவுல் உணர்கின்றான். அதாவது மனம்மாறியவனாக சவுல் தமஸ் குவை அடைகின்றான். இவ்வனுபவத்தை, தேவன் கிருபையினால் நற்செய்தியை அறிவிக்க அழைத்ததாகக் குறிப்பிடுகின்றார். (கலா . 1 : 18 - 16) மேலும் இந்நோக்கத்திற்காக கிறிஸ்து தன்னைப் பிடித் ததாகக் (பிலி 3 12) காண்கின்றார். எனவே பவுல் தனது மன மாற்றத்தை கிறிஸ்து கிருபையினால் ஆரம்பித்ததாகவும் தான் அதைப் பிடித்துக் கொண்டதாகவும் கூறுகின்றார்.
தமஸ்குவை அடைந்த சவுல் 3 நாள் பார்வை அற்று, உண்வுபானம் அருந்தாமல் இருந்தான். அவ்வேளையில் கர்த்தர் அனணி யாவுக்கு தரிசனமாகி, யூதாவின் வீட்டில் ஜெபம் பண்ணிக் கொண் டிருக்கும் தர்சு பட்டணத்தானாகிய சவுல் என்பவனைத் தேடும் படியும், அனனியா என்னும் பேருள்ள ஒருவன் வந்து தான் பார்வை அடையும் படி தன்மேல் கைகளை வைப்பதாக சவுல் தரிசனம் கண்டான் என்றும் கூறினார். அனனியா சவுலைக் குறித்த பயத் தைத் தெரிவித்தான். அதற்குக் கர்த்தர் "நற்செய்தியை அறிவிக்கும் பாத்திரமாக அவனைத் தெரிந்து கொண்டேன்' என்று கூறி, அனணி யாவை அனுப்புகின்றார். அனனியா சவுலைக் கண்டு சகோதரனா கிய சவுலே, நீ பார்வை அடையும் படிக்கும், பரிசுத்த ஆவியினா லே நிரப்பப்படும் படிக்கும் உனக்கு வழியிலே தரிசனமான இயேசு வாகிய கர்த்தர் என்னை அனுப்பினார் என்றான். அப்பொழுது சவுல் பார்வையடைந்தான். திருமுழுக்குப் பெற்று கிறிஸ்துவை தேவ னுடைய குமாரன் என்று அறிவித்தான். பரிசேயனாகிய பவுல் வாரத் திற்கு 2 முறை உபவாசித்து ஜெபித்திருந்திருப்பான். இயேசு (கண்டித்த பரிசேயன் லூக் 18 10 - 22). இப்போது சவுல் 3 தினங் கள் தொடர்ந்து உபவாசித்து ஜெபித்து கிறிஸ்துவை அறிக்கை செய் கின்றவனாக மனமாற்றம் அடைந்திருக்கின்றான்.
சவுலைக் கண்டு பயந்த திருச்சபை இப்போது சவுலின் போத னையால் பலப்படுகின்றது. மக்களைச் சிதறடித்த சவுல் இப்போது மக்களின் ஆதரவால் உயிர்பிழைக்கின்றான். மக்களை அழிப்பதற்கு தமஸ்கு நோக்கிவந்த சவுல், தமஸ்குவிலேயே கொலை பயமுறுத்த லூக்கு ஆளாகின்றான். மக்கள் சவுலை ஒரு கூடையில் வைத்து மதில் வழியாய் இறக்கிவிட்டார்கள். அங்கிருந்து எருசலேமை அடைந்து சீடர்களுடன் சேர முற்பட்டான். அவர்கள் பயந்து ஒதுங்கிய வேளையில் பர்னபா என்பவன் சவுலைச் சேர்த்துக் கொண்டு அப் போஸ்தலரிடம் அழைத்துச் சென்றான். * அப்போஸ்தலர் அவனை ஏற்றுக் கொண்டனர். - தொடரும்

இராட்சதனை வீழ்த்திய இரட்சகன்!
நமது ஆவிக்குரிய கிறிஸ்தவ ஜீவியத்திலே நம்மைத் தினம் தினம் கலங்கப்பண்ணி, ஆத்துமாவைக் கொல்லும் ஒரு இராட்சதனாக எதிராளிபாகிய பிசாசு இருக்கிறான். இவன் சில சமயங்களில் வெள்ளம் போல் வெகுண்டெழுந்து, நம் மு டைய ஆவிக்குரிய ஜீவியத்தைக் குலைத்துச் சீர்கெடச் செய்து, சவால் விட்டபடியே இருக்கிறான். பலவிதமான சோதனைகளையும், துன்பங்களையும், இன்னல் இடையூறுகளையும், சமாதானம் , ஐக்கியச் சீர் குலைச்சல் களையும் உண்டுபண்ணிக் கலகம் பண்ணுகிறான். இதனால், மன முடைந்து ஆவிக்குரிய கிறிஸ்தவ வாழ்க்கையிலிருந்து பின் மாற்ற மடைந்தோர் பலர்; ஏமாற்றமடைந்து ஏங்கித் தவிக்கும் வாலிபர் கள் பல ர், பயத்தினாலும், கலக்கத்தினாலும் பரிதபிப்போர் இன்னும் பலர் எனலாம்.
PASTOR. S. J. PATH NATHAN
இச் சத்துருவாகிய இராட்சதனை (சாத்தானை) எதிர்த்துப் ப்ோராடவும், அவனுடைய சகல சவால்களையும் முறியடிக்கவும், ஆவிக்குரிய கிறிஸ்தவர்களுக்கு தேவ ஆவியானவரின் பெலன் மிக மிகத் தேவையாக இருக்கிறது. கர்த்தரிலும், அவருடைய சத்து வத்தின் வல்லமையிலும் நாம் பெலப்படும் போதும், "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவின் நாமத்தினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு' என்கிற விசுவாச வார்த்தையைத் தரித்துக் கொள்ளுகிறபோதும் மட்டுமே நாம் இந்த இராட்சதனை எதிர்த்து வீழ்த்த முடியும். யாக்கோபு கூறுவது போல,
தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். * பிசாசுக்கு (இராட்சதனுக்கு) எதிர்த்து நில்லுங்கள்.
* அப்பொழுது அவன் (பிசாசு) உங்களை விட்டு ஓடிப் போவான் என்பது நிச்சயமாக உண்மையாகும். இந்த
- 5 -

Page 5
எதிர்ப்புச் சக்தி கிறிஸ்தவர்களிடம் நிச்சயம் காணப்பட வேண்டும்.
* 1 &nԱՔ. 17 ஆம் அதிகாரத்தை வாசித்துப் பாருங்கள்.
கோலியாத் என்கிற பெலிஸ்த இராட்சதன் ஒருவன் வந்து, சவுல் ராஜாவையும், இஸ்றாயேலரையும் தொடர்ந்து 40 நாட்கள் காலையிலும், மாலையிலும் திகிலடையச் செய்து, வீரா வேசமாகப் பேசி, தன்னுடன் யுத்தம் செய்ய வரும்படி வீர அழைப்புக் கொடுத் துக் கொண்டேயிருந்தான், இஸ்றா யேலரையும், சவுலையும் நோக்கி அசட்டை வார்த்தைகளைக் கூறி, நிந்தித்தான். ராஜாவாகிய சவுலும், இஸ்றாயேலரும் கலங்கினார்கள், பயந்தார்கள், செய்வ தறியாது திகைத்துப் போய் ஒதுங்கினார்கள், யாருமே இவனை எதிர்க்கவோ வீழ்த்தவோ முன் வரவில்லை.
அச் சமயத்தில் தான் இஸ்ரவேல் ஜனங்களுக் கென்று இரட்ச கனாகத் தேவனால் அபிஷேகம் பண்ணித் தெரிந்து கொள்ளப் பட்ட இளம் வாலிபனாகிய சின்னப் பையன் தாவீது, இராட்சதனை எதிர் கொள்வதற்குச் சினங் கொண்டெழுந்தான். நேராக சவுல் ராஜாவிடம் சென்று விஷயத்தைக் கூறினான். ஆனால் தாவீதுக் கோ அச் சிறிய வயதில் யுத்தம் செய்யும் அனுபவம் எதுவுமே இல்லை. ஒரு சண்டைப் பயிற்சியுமே தெரியாதவனாக இருந்தான். ஆனால் அவன் கோலியாத் என்னும் அந்த இராட்சதனை வீழ்த் துவதற்கு வீறு நடைபோட்டு வீதிக்கு வந்த்ான்.
அவன் கையில் ஈட்டியோ, கேடகமோ, எந்தவித யுத்த ஆயுதங் களோ இருக்கவில்லை. சவுல் ராஜா அவைகளை அவனுக்குப் டோடு வித்து, யுத்த உடுப்புகளை உடுத்துவித்த போதிலும், தாவீது அவை களை எல்லாம் வெறுத்தான். தனது கையிலே சாதாரணமான ஒரு தடியைப் பிடித்துக் கொண்டு, 5 கூழாங் கற்களைப் பொறுக்கி (மேய்ப்பருக்குரிய) தனது பை யி லே போட்டுக்கொண்டு தன் கவணைத் தன் கையிலே பிடித்துக்கொண்டு அப் பெரிய மனிதனை6 முழம் ஒரு சாண் உயரமுள்ள அந்த இராட்சதனை - எதிர்க்கச் சென்றான். இஸ்றாயேலரின் சத்துருவாக எதிர்த்து நின்று வீரச்சவால் களை விட்ட காத் ஊரானாகிய இராட்சதன் கோலியாத்தை, வீழ்த்துவதற்கு இளைஞனாகிய தாவீது விஷேசமாக 6 காரியங் களை முக்கியமாக மேற்கொண்டான் என்பதை 1 சாமு , 17 : 48, 49 ஆம் வசனங்களிலிருந்து பரிசுத்த ஆவியானவர் என்னோடு பேசி யதை நான் கீழே சுருக்கமாக விபரிக்கிறேன்.
ー 6 ー。

ஓடு ?" தாவீது இராட்சதனாகிய கோலியாத்தை
நேருக்கு நேர் எதிர்த்து ஓடினான்.
போடு :- தன் கையை அடைப்பத்திலே போட்டான்.
எடு: அதிலிருந்து ஒரு கல்லை எடுத்தான்.
வை: அதைக் கவணிலே வைத்தான்.
சுழற்று :- சுழற்றினான்.
எறி :- இராட்சத பெலிஸ்தனின் நெற்றியிலே பட
எறிந்தான்
சத்துருவாகிய இராட்சதன் கோலியாத் நெற்றியில் கல் பட்ட தும் வீழ்ந்தான், தாவீது ஓடிப்போய் அப் பெலிஸ்தனின் பட்டயத் தை அவனது இடுப்பிலிருந்து உருவி, அதனாலேயே அவன் தலையை வெட்டிக் கொன்று போட்டான்.
அதே போல், நாமும் நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்திலே றுக்கிட்டு வீரச்சவால்களை மேற்கொண்டு நம்மைக் குட்டிச் சுவ ராக்கி விடும். இராட்சதனும், பொல்லாங்கனும், பொல்லாத ஆவி களின் சேனைகளின் தலைவனுமாகிய சத்துருவானவனை மேற் கொள்ள சத்தியம் என்னும் கச்சையை அரையில் கட்டிக் கொண்டு எதிர் கொண்டு ஒடுவோம். "சத்தியத்தை அறிவீர்கள்; சத்தியம் களை விடுதலையாக்கும் நீர்னே சித்தியம்,” என்று கூறிய இரட்சகர் இயேசுவைத் தரித்துக் கொண்டு, சத்துருவுக்கு முகங் கொடுத்து பயமில்லாமல் ஒடுவோம். நீதியென்னும் மார்க் கவசத்
"நமது இருதயத்தில் போடுவோம் சுவிசேஷமாகிய ஆயத்தம் என்னும் பாதரட்சையையும் எடுத்து எந்நேரமும் சத்துருவுக்குப் பதிலடி கொடுக்க ஆயத்தமாக இருப்போம், விசுவாசம் எனும் oகடகத்தை நமது கையில் வைத்துக் கொன்ரூவோம். ‘விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.
மேலும், எப்பொழுதும் இரட்ச்னியம் என்னும் தலைச் சீராவை upaiba கொண்டவர்களாகவே சுழன்று திரிய வேண்டும். இரட் ப்ெபு என்னும் தலைச் சீரா நமக்கு இல்லாவிடில், எந்த மூலையில் ருந்தும் இராட்சதனாகிய சத்துரு நம்மைத் தாக்குவான்.அடுத்து. 0தவ வசனமாகிய ஆவியின் பட்டயத்தைக் கையில் எடுத்து பிசா ன்ெ சோத்ணைகள் வரும் போது வார்த்தைகளைப் பிரயோகித்து எறிய வேண்டும். நமது இரட்சகர் இயேசுவையும், 40 நாட்கள்
سے 7 سے

Page 6
உபவாச வேளையில் சத்துரு சோதித்தான்; தாக்கினான், அவரோ தேவ வாக்குகளிைழ் கொண்டும், ஆவியானவரின் பெலத்தினாலும் அவனை மடங்கடித்தார். நம்முன் நிற்கிற அந்தகார லோகாதிபதி, கெர்ச்சிக்கிற பால சிங்கமாகிய சாத்தான் யேசுவின் வல்லமையுள்ள வார்த்தையினாலும், நாமத்தினாலும் தொப்பென்று வீழ்ந்து விடு வான். அவனை எளிதில் ஜெயித்து விடுவோம்.
** உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்து போவேன், என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்' (சங் , 18 : 29) என் றான் தாவீது, இராட்சதனாகிய சாத்தானை ஜெயிப்பதற்கும், அரண்களை நிர்மூலமாக்குவதற்கும், தேவபலமுள்ள போராயுதங் கள் நமக்குத் தேவை. தாவீதின் போராயுதமாக கர்த்தருடைய நாமம், - தேவனின் சர்வா யுத வர்க்கம் - இருந்தது. ஆதலால் மாம் சத்திற்குரிய சவுலின் போரா யுதங்களை நிராகரித்து உதறித் தள்ளி
விட்டான்.
இன்று சத்துருவாகிய (இராட்சதன்) சாத்தானை வீழ்த்து வதற்கு தாவீதைப் போல, இரட்சக இளைஞர்கள் அதிகம் தேவை. நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் நாமத்தைத் தரித்துக் கொண்டு, தேவனின் சர்வாயுத வர்க்கங்களை எடுத்துக் கொண்டு, இன்றே ! யுத்த களத்தில் இறங்குவோம், சத்துருவாகிய இராட்சதன் பிசாசை ஜெயித்திடுவோம். *
"இறை வார்த்தையெனும் வாளேந்தி
எதிரியை வென்றிடுவோம்”
★ ་་ kr ★ சாதகமான வேத வசனம்
தான் ஒரு "கொமிற்றட் கிறிஸ்டியன்' என்று அவள் தன்னைப் பற்றிக் கூறிக் கொள்ளுவாள். நல்ல அழகி, தான் வேலை செய்யும் கம்பெனியில் கிறிஸ்துவை அறியாத ஒரு இளைஞனோடு நட்புக் கொண்டிருந்தாள். இது தவறு என்று பலர் அவளுக்குக் கூறிய போதும் அவள் அலட்டிக் கொள்ளவில்லை. ஒரு நாள் தேவ ஊழி யர் ஒருவரிடம் இதுபற்றி அவள் விவாதித்தாள் ‘விசுவாசிக்கு அவி சுவாசியுடனே பங்கேது ? என்ற பொருள் பட 2 கொரி 6:14-17க் கூடாக விளக்கம் கொடுத்தார் அவர். அவளோ வேதத்திற் கூடாக கர்த்தர் எனக்கு ஒ. கே. பண்ணிவிட்டார் என்றாள். தூக்கி வாசிப் போட்டது தேவ ஊழியருக்கு. வெளி, 3 11 ஐ வா சித் து க் காடடினாள.
*ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக் கொள்ளாதபடி உனக் குள்ளதைப் பற்றிக் கொண்டிரு' * இப்படித்தான் அநேகர் தமக்குச் சாதகமான வேத வசனங்களை மட்டும் எடுத்துக் கொண்டு கர்த்தருடைய சித்தத்தைப் புறக்கணிக் கிறார்கள். *

“நீ படப்போகும்
பாடுகளைக் குறித்துக் கொஞ்சமும் பயப்படாதே’
(வெளி. 32 : 10) அருட்திரு. கே. நித்தியானந்தன்
சிமிர்னா ஒரு முக்கியமான பண்டைய கிரேக்க நகரம். 6 அம் நூற்றாண்டில் வீதியா என்னும் ஆதிக்கவாதிகளால் அழிக்கப்பட்டு மீண்டும் அலெக்சாந்தரின் வழித்தோன்றல்களால் கட்டியெழுப்பப் பட்டது. ஆசியாவில் முதல் மாநகரமாக எழும்பி எபேசுவையும் பெர்கமு நகரையும் மிஞ்சும் அளவிற்கு வளர்ந்தது. இந்நகரில் ரோமர் களின் தேவதையான *ரோமா' என்னும் பெண் தெய்வத்திற்கும் அரசன் திபேரியேஸிற்கும் கோயில்கள் இருந்தன.
ஆனால் சிமிர்னா சபை இறைவிசுவாசத்தில் பின் வாங்காத சபையென நற்சாட்சி பெறுகின்றது. கலாபனைகளில் எல்லாம் கிறிஸ்துவை மறுதலிக்காத சபையாக இருந்தது. இச்சபையிலிருந்தே பொலிகார்ப் எ ன் னும் பேராயர் இறைமகன் இயேசுவிற்காக இரத்தச் சாட்சியாக மரித்தார். இவரை எரியும் மெழுகுவர்த்தியாக உயிருடன் எரித்தனர் என்று சரித்திரம் கூறுகிறது. அவ்வளவு உறுதி பாக கிறிஸ்துவுக்குச் சாட்சியாக வாழ்ந்த இச் சிமிர்னா சபை யோவானின் பார்வையிலும் உயிருள்ள ச பை யா க ச் சா ட்சி பெறுகிறது.
இச்சபையின் விசுவாசத்திற்கு அடிப்படையாக அமைந்தது சடையின் பொருளாதார நிலையாகும். ஒன்றில் வறிய சபையாக வோ அல்லது நடுத்தர வர்க்கத்தைக் கொண்டதாகவோ இச்சபை இருந்திருக்க வேண்டும். இங்கு பணக்காா வர்க்கத்தினரின் ஆடம் பரங்கள், பெருமை மிகுந்த சம்பிரதாயங்கள் சுட்டிக் காட்டப்பட வில்லை, ஏழைகளாக அவர்கள் வாழ்ந்ததனால் ரோம - கிரேக்க களியாட்டங்கள் இவர்களைப் பாதிக்கவில்லை. அக் களியாட்ட விருந்துகளில் பரிமாறப்படும் பிற தெய்வ விக்கிரகங்களுக்குப் படைக் கப்பட்ட உணவுகள் - நடைமுறைகள் இம் மக்களைக் கறைப்படுத்த
- 9 -

Page 7
வில்லை. இவர்களின் பொருளாதார நிலை காரணமாக ? எதை விரும்பினாலும் செய்யலாம்’ என்கிற பணக்கார - வசதி படைத்த கிறிஸ்தவர்களுக்கே உரிய சுதந்திர போதனை இம் மக்களிடையே இருக்கவில்லை. இறைவனின் பார்வையில் பயந்தவர்களாக உண்மை யும், நேர்மையும் உள்ளவர்களாக இம் மக்கள் வா ழ் ந் தி ரு க் க வேண்டும். பொருளாதாரத்தில் வறியவர்களாக வாழ்ந்தாலும் இறை விசுவாசத்தில் செல்வந்தர்களாக இம்மக்கள் வாழ்வதை யோவான் சுட்டிக் காட்டினார். (வெளி. 29)
இச் சிமிர்னா திருச்சபை மக்களின் அமைதியான வாழ்வில் இன்னும் ஒரு பிரச்சினையையும் எதிர்கொண்டது. இந்த ஏழை மக்சளின் விசுவாசத்தைப் பார்த்து உயர் மட்டத்தினர் அதிலும் யூதர் கள் இம் மக்களுக்கெதிராகப் ப்ல அவதூறுகளைக் கிளப்புகின்றனர். சிலவேளை இது ஒருவகைக் காட்டிக் கொடுப்பாகவும் இருந்திருக் கலாம். விசுவாசத்தைக் குழப்பும் முயற்சியாகவும், அதேவேளை தமது செல்வாக்கைக் காட்டுவதற்காக ஆட்சியாளர்களான ரோம அதிகாரிகளிடம் இம் மக்களைக் குற்றப்படுத்தும் நடவடிக்கை யாகவும் இது அமைந்திருந்தது. இதனையே யோவான் யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் என்னுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணம் (2 : 9) என்கிறார். ஏனெனில், உண்மையான யூதன் தனது கடவுளுக்கு உண்மையாக வாழ்பவன். நீதிச்சட்டம், நியாயப்பிரமாணம் என்பவற்றில் உறுதியாக இருப்பவன். யூதரின் இந்த உறுதியான வாழ்வினாலேயே யூதரை அடிமையாக வைத் திருப்பதற்குக்கூட அந்நிய நாட்டவர் தயங்கினர். பிற தெய்வ வணக்கம் விலக்கப்பட்ட உணவு, ஒய்வு தாள் அனுசரிப்பு என்பன யூதர்களின் கட்டாய அனுஷ்டான முறைகள். இவற்றை மீறுவதற்கு எந்த யூதனும் உடன்படமாட்டான். ஆனால் இங்கு செல்வாக்கு படைத்த பல யூதர்கள் தமது செல்வாக்கு, பதவி பணபலம் என்பவற்றைக் காப்பாற்றுவதற்காக ரோம ஆட்சியாளர்களின் அடிவருடிகளாக மாறியிருந்தனர். "ம ன தி ல் பக்தி இருந்தால் போதும்; எதை வேண்டுமானாலும் செய்யலாம்" என்கிற ரீதியில் தம் இறை விசுவாசத்தைத் தமக்கேற்ற வண்ணமாக மாற்றி ரோம ஆட்சியாளர்களிடையே லாபம் தேட முற்பட்டனர். இதற்காக பகடைக் காய்களாக இவ் விசுவாசக் கூட்டத்தைப் பயன்படுத்த முற்பட்டனர். இயேசுவானவராலும், பின்பு அவரது சீடர்களாலும் யூத மதத்துக்கும், யூத நடைமுறைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட லாமென யூதச் சமயத் தலைவர்களால் கருதப்பட்டது போலவே இங்கும் இந்த யூதர்கள் நிலமையைத் தமக்கு சாதகமாய்ப் பயன் படுத்த முற்பட்டனர். இச்செயலையே யோவான் "சாத்தானின்
-- 10 س

கூட்டத்தாரின் செயல்' என்கிறார். இதன் காரணமாகவே இந்த அச்சுறுத்தல்களைக் குறித்துப் பயப்படாதே" என்று உற்சாகமூட்டு கிறார். (2 10) இறைவிசுவாசத்தில் உறுதியாக இருப்பதால்தான் ரனைய 6 சபைகளுக்கும் எழு தி ய கடிதங்களில் காணப்படும்
எச்சரிப்பு' இச்சபையின் கடிதத்தில் காணப்படுவதில்லை.
சிமிர்னா திருச்சபை எதிர் கொண்ட பிரச்சினைகள் இன்று நவீன வடிவத்தில் திருச்சபையிலும், திருச்சபைப் பிரிவுகளிலும் எதிர் கொள்ளப்படுகின்றன. திருச்சபைக்கு வெளியே அல்லாது திருச்சபைக்குள்ளும் இந்நிலமை எழுவது இன்று நகைப்புக்கு இட மாகக் காணப்படுகிறது. கிறிஸ்துவே முதன்முதலாக இவ்வாறான அவதூறுகளுக்கு உட்பட்டவர், "பெயல்செபூலின் வல்லமையால் பிசாசுகளைத் துரத்துகிறான்' என்று ம், மதிமயங்கியுள்ளான்' என்றும், தேவதூஷணம் பேசுகிறான்" என்றும் அவதூறு செய்யப் பட்டார். இந்த அவதூறுகள் அவரைக் கொலை செய்யும் வரை தொடர்ந்தன. இன்று இவை புதிய வடிவம் பெற்று மக்களைக் குழப்புகின்றன. திருச்சபைக்குள்ளே பல புதிய சபைப்பிரிவுகள் எழுந்து பிரதான சபைகளைக் குற்றம் சாட்டுகின்றன. ஆவியில் லாத சபைகள், விசுவாசத்தில் உறுதியில்லாத சபைகள் எனக் குற்றச் சாட்டுகள் தொடர்ந்து கொண்டிருக்க, இப் பிரதான சபை களைச் சேர்ந்தோர் புதிய புதிய சபைகளை வெறும் கூச்சல் கூட்ட மெனவும் மக்களை மதிமயங்கவும் திருமறையின் போதனைகளை தமக்கேற்ற வண்ணமாக மாற்றி மக்களைப் பயமுறுத்தும் கூட்ட மெனவும் மாறிமாறி அவதூறு செய்கின்றனர். இவ்வாறு அவதூறுகள் எழுவதினால் திருச்சபையின் உண்மையான சாட்சி எங்கே? எனும் கேள்வி மக்களுக்குள் எழுகின்றது. எது விசுவாசம்? எனும் குழப்பம் உருவாகின்றது. விசுவாசமென்றால் இன்ன இன்ன வரையறைகள் இருக்கவேண்டும்; அவையில்லாவிட்டால் உண்மையான விசுவாச மாகாது என கி றி ஸ் து வை வரையறைக்குட்படுத்த இ ன் று எல்லாச் சபைகளும் முற்படுகின்றன. இந்நிலை ஏட்டிக்குப் போட்டி நிலையே தவிர விசுவாசத்தின் வெளிப்பாடு ஆகாது.
சபைகளுக்குள்ளே ஏழை - பணக்காரப் பாகுபாடு இ ன் று ம் காணப்படுகின்றது. வழமையாக வசதி குறைந்த சபைகள் விசுவாசத் இல் உறுதியாக இருப்பதையும் செல்வாக்கிலும், செல்வத்திலும் பெருகிய சபைகள் ஆடம்பரத்திலும், களியாட்டங்களிலும் மனதைச் செலுத்தி, குறைந்த்து ஞாயிறு ஆராதனை தவிர்ந்த ஏனைய திரு மறைப் படிப்பு போன்றவற்றிற்குஇடம் கொடுக்க முன்வராத தன் மையும் இன்றும் நாம் காணும் நிகழ்வுகள். இன்றுப் கூட ஞாயிறு தவிர்ந்த ஏனைய நாட்களில் அநேக ஆலயங்கள் பூட்டப்பட்டுள்ளன. இவற்றில் ஏனைய நாட்களில் ஆன்மீக விடயங்களை நடப்பிப்ப தற்குக் கூட இன்று பலர் தயக்கம் காட்டுவதும் தடை போட முயலுவதும் ஒவ்வொரு கிறிஸ்தவனும் தலைகுனிய வேண்டிய
سے 11 --

Page 8
விடயமாகும். ஆலய பரிபாலனங்களில் கூட இன்று வசதி படைத் தோர். அதிக இடத்தைப் பிடித்துக் கொண்டு சாதாரண நிலையில் உள்ள மக்களை எடுபிடிகளாய்ப் பாவிப்பதும் வருந்தத்தக்க விடயம். திறமை எங்கிருக்கிறதோ அதை இனங்கண்டு ஊக்குவிக்க வேண்டும் என்பதனைப் பலர் இன்று மறந்து போகின்றனர். இறை விசுவா சத்தில் அதிக ஈடுபாடு காட்டுபவர்கள் ப்ரிசுத்தவான்கள் என்றும், தமது தொழிலின் நிமித்தம் அல்லது தமது சூழ்நிலைகளின் நிமித்தம் சபையில் அதிக ஈடுபாடுகாட்ட முடியாதவர்கள் பாவிகள் எனவும் பரிகசிக்கப்படுதல் இறை சாட்சியை வெளிப்படுத்தாது.
இன்று எமது கிறிஸ்தவ கோட்பாடுகளைக் குறித்தும் பல ஐயப் பாடுகள் எழுப்பப்படுகின்றன. குறிப்பாக, திருமுழுக்கைக் குறித்துப் பல குழப்பங்கள் எழுகின்றன. சபை மக்கள் மத்தியில் குழந்தை திருமுழுக்கு, வளர்ந்தோர் திருமுழுக்கு 2 ஆம் திருமுழுக்கு என்! வற்றை இன்று பல புதிய சபைகள் பிழையான சிந்தனைகளைக் கொண்டு பரப்பி வருகின்றன. உதாரணமாக, "குழந்தையில் எடுத்த திருமுழுக்கு செல்லுபடியாகாது. அதிலும் தெளிப்புமுறை ஞானஸ் நானம் பலனற்றது, உங்கள் பாவங்களைக் சழுவ நீங்கள் முழுக்கு ஞானஸ்நானம் பெற வேண்டும் எனவும், "ஏற்கனவே திருமுழுக்குப் பெற்றிருந்தால் மீண்டும் வளர்ந்து உங்கள் பாவங்களுக்காக மனந் திரும்பி திருமுழுக்குப் பெற வேண்டும்" எனவும் வற்புறுத்தப்படு கின்றது. இத்தகைய விவாதங்களை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ திருமறையில் ஆதாரங்கள் நேரடியாகக் காணப்படாவிடினும் சிலர் இக்குழப்ப நிலையை உருவாக்குகின்றனர். இக் கருத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் விசுவாசத்தில் குறைந்தவர்கள் என எள்ளி நகையாடப்படுகின்றனர். இக் குழப்பவாதிகளின் மிரட்டல் பேச்சுக் களுக்கு இணங்கி மீண்டும் திருமுழுக்குப் பெற முனைபவர்கள், இதுவரை காலமும் திருமுழுக்கின் மூலம் தாம் திருச்சபையில் இணைந்திருந்ததையும், பூரண அங்கத்துவத்தின் மூலம் ஒரு திருச் சபையில் பூரண உரிமை பெற்றிருந்ததையும் நம்ப மறுத்து, பொய் என மறுதலிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்பது எனது அபிப்பி (ாயமாகும். அறிவுக்காக அல்லாமல் ஆணவத்துடன் இக் குழப்பங்களை உண்டாக்கும் கூட்டத்தினரையே யோவான் "சாத் தானின் கூட்டத்தார்’ எனக் குறிப்பிடுகிறார் என்பதை நாம் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.
அதிகார அச்சுறுத்தலின் நிமித்தம் ஏற்பட்ட தள்ளாட்டமான மனநிலை, செல்வாக்கை நாடும் தன்மை, இவை மட்டுமல்ல; உண் மையான இறைபக்தியை திருமறை வார்த்தைகளைக் கொண்டே குழப்புவதும் பிசாசின் தந்திரமாகும். இப் போராட்டங்களில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுபவன் இறைவனின் ஜீவ கிரீடத் தைப் பெறும் உன்னத நிலைக்குத் தள்ளப்படுவான். எனவே எமது பக்தியும் வெறும் குருட்டுப்பக்தியாய் இல்லாமல், சூழ்நிலைக்கு இழு படும் கவர்ச்சி நிறைந்ததாய் இல்லாமல் ஆராய்ந்து பார்க்கும் தெளிந்த நிலையாக இருக்க வேண்டும். அதற்காக நாம் எதிர்நோக் கும் பாடுகள், சோதனைகள் என்பவை நிச்சயம் எம்மை விசுவா சத்தின் வெற்றிப் பாதையில் வழிநடத்தும். *
- 12 -

உங்கள் விசுவாசம் மனுஷ ஞானத்திலல்ல; தேவனுடைய பெலத்தில் நிற்கவேண்டும் (1 கொரி. 2: 4)
சகோ. எம் பால் ராஜ் - தமிழ் நாடு - --
நம் விசுவாசம் மலுஷ ஞானத்தின்மேல் அல்லாது தேவ பெலத் தின் மேல் , வல்லமையின்மேல் கட்டப்பட்டதாக இருக்க வேண்டும். உலக ஞானம் தேவனுக்கு முன்பாக பைத்திய மாயிருக்கிறது. ஞானி எங்கே ? இப்பிரபஞ்சத் தர்க்க சாஸ்திரி எங்கே ? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா ? (1 கொரி 1 : 20) மனிதன் தனது ஞானத்தைப் பார்க்கிறதினாலும், கேட்கிறதினா லும் , ருசிப்பதினாலும், முகருவதினாலும் , தொட்டு உணர்வ் தி னாலும் அடைகிறான். ஆனால் இவை குறைவுள்ளது. மனிதனுக்கு மனிதன் இது மாறுபட்டதாயிருக்கிறது. ஆனால், தேவனுடைய வல்லமையோ குறைவற்றது. மனித எண்ணத்திற்கும் அப்பாற்
• التي سات السا
தேவனுடைய காரியங்களை தேவனுக்கடுத்தவைகளோடு ஒப் பிட்டுப் பார்க்கவேண்டும். மனுஷ ஞானத்தைக் கொண்டு தேவனு டைய காரியத்தை ஒருவனும் அறிந்து கொள்ள முடியாது. தேவ றுக்கடுத்தவைகளை அறிந்து கொள்ள தேவனுடைய ஆவியைப் பெற்றவர்களாக இருக்கவேண்டும். மனிதன்-ஆவி, ஆத்துமா, சரீரம் ஆகிய மூன்று நிலைகளை உடையவனாயிருக்கிறான். அவன் சரீரத் திலிருக்கும்போது சரீரத்திற்கடுத்த உலக காரியங்களைச் சிந்திக்கிற வனாகவும், ஆத்துமாவிற்கடுத்த அன்பு, பண்பு, பாசம் போன்ற நற் பண்புகளையுடையவனாகவும், இவை யாவுக்கும் மேலாக தனது ஆவியில் இருக்கும்போது தேவனுக்கடுத்தவைகளைச் சிந்தித்து தேவ 0னாடுகூட உறவாடுகிறவனாகவும் இருக்கிறான். தேவனுடைய ஆவி அவனிடத்தில் நிலைத்திருக்கும்போது தேவனோடுகூட அவ னால் உறவாட முடியும் ? தேவனுக்கடுத்த காரியங்களை உள்ள டியே எளிதில் அறிந்து கொள்ளுகிறவனாகவும் இருக்கிறான். 0தவனுடைய ஆவியேயன்றி ஒரு வனும் தேவனுக்குரியவைகளை
- 13 -

Page 9
அறியமாட்டான் (1 கொரி. 2 : 11). ஆகவே, நாம் உலகத்தின் ஆவியைப் பெறாமல் தேவனால் அருளப்பட்டவைகளை அறியும் படிக்கு தேவனிடத்திலிருந்து புறப்படும் ஆவியையே பெற்றுக்கொள் வோமாக 1 பரலோகத்திற்குரிய காரியங்களை மனுஷ ஞானத்திலே அறிந்துகொள்ள முற்படாமல் ஆவியான வரின் துணையால் ஆவிக் குரியவைகளை ஆவிக்குரியவற்றோடு சம்பந்தப்படுத்திப் பார்க்கிற வர்களாய் இருக்கவேண்டும். நமது விசுவாசம் தேவ வல்லமைமேல் கட்டப்பட்டதாய் இருக்கவேண்டும். தேவ வல்லமை அவர் வார்த் தையின்மூலம் வெளிப்படுகிறதாய் இருக்கிறது. தேவன் சொன்னது சொன்னதுதான்.
* வானமும், பூமியும் ஒழிந்துபோம்;
என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை (மத் , 24 : 35)
நமது விசுவாசம் தேவனுடைய வார்த்தையின் மீதும், அவரது வாக்குத்தத்தங்கள் மீதும் கட்டப்படவேண்டும்.
* விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும்
காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. (στι η. 11 : 1)
நாம் நம்புகின்ற காரியங்களில் உறுதியாக இருக்க வேண்டும். நமது நம்பிக்கை அசையாத விசுவாசமாக வளர வேண்டும். கண் களால் காணப்படாதவற்றை இருக்கிறவைகளாகவே நிச்சயமாய் நம்பி விசுவாசிக்கவேண்டும். உலகங்கள் தேவனுடைய வார்த்தை யால் உண்டாக்கப்பட்டன என்று விசுவாசிக்கிறோம். காணப்படா தவைகளாகிய மோட்சமும், நரகமும் உ ன் டு என்பதை நாம் காணாமலும் விசுவாசிக்கிறோம். எ ப் படி விசுவாசிக்கிறோம் ? தேவனுடைய வார்த்தையிலுள்ள வல்லமையினால் விசுவாசிக்கி றோம். உலக ஞானம் இவற்றை அறிந்துகொள்ளாது. ஏனெனில், அவர்கள் அற்புதங்களையும், அடையாளங்களையும் தேடுகிறவர் களாய் இருக்கிறார்கள்.
உயிர்த்தெழுந்த இயேசு தோமாவைப்பார்த்து, 'நீ என்னைக் கண்டதினால் விசுவாசித்தாய்; காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர் கள் பாக்கியவான்கள்' என்றார். (யோ , 20 29) காணாதிருந்தும் விசுவாசிக்கிறதுதான் மெய்யான விசுவாசம் என்பதைப் பார்க்கி றோம். ஏனெனில், நமது தேவன் இல்லாதவைகளை இருக்கிறவை
- 14 -

களைப்போல் அழைக்கிறவர். உதாரணமாக தேவனுடைய சிருஷ்டிப் பின் அதிசயங்களை எண்ணிப் பாருங்கள்.
தேவனாகிய கர்த்தர் ஆபிரகாமைப் பார்த்து, "உன்னை அநேக ஜாதிகளுக்குத் தகப்டன் ஆக்கினேன்' என்று சொன்ன போது அதை அவன் நம்புகிறதற்கு எந்த ஏதும் இல்லாதிருந்தது. அப்படியிருந்தும், அவன் கர்த்தரை விசுவாசித்தான். அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார் (ஆதி. 15 6) கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படி வது நமக்கு நீதியாக விளங்கும். நாம் செய்யும் புத்தியுள்ள செயல் அதுவே. தேவனுடைய வல்லமையையும் மகத்துவங்களையும் அறிந்து அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவது நமக்கு நீதியாகக் கருதப் படும்.
கர்த்தருடைய வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்கு வந்தபோது அவன் 100 வயதுள்ளவனாயிருந்தான். சாரா ள் 90 வயதுடையவ ளாயிருந்தாள். ஆபிரகாமுடைய சரீரம் செத்துப்போனது, சாராளு டைய கர்ப்பமும் நின்று போனதாகக் கருதப்பட்டது. மனுஷ ஞானம், "அவர்கள் காலம் கடந்தவர்கள்; அவர்களுக்கு இனி பிள்ளைப்பேறு இருக்க முடியாது' என்றுதான் கூறும். ஆனால் : மனுஷஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத் தியமாய் இருக்கிறது. ஆபிரகாம் கர்த்தரை விசுவாசித்தான். தேவ பெலத்தின்மேல் விசு வாசம் வைத்தான். தேவன் வாக்குத் தத்தம் பண்ணினதை நிறை வேற்ற வல்லவராயிருக்கிறார் என்று முழு நிச்சயமாய் நம்பி தேவ னை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான். (ரோமர் 4 : 19) காணப்படாததில் நிச்சயமுள்ளவனானான்.
"உன் சந்ததி வானத்தின் நட்சத்திரங்களுக்குள்ளும் அதிகமாய் இருக்கும்' என்று கர்த்தர் ஆபிரகாமுக்கு வாக்குப் பண்ணினவுடன் அது அவனுக்கு உடனே நடந்துவிடவில்லை. தேவனுடைய வல்ல மையுள்ள வாக்குத்தத்தத்தை அவன் உறுதியாய்ப் பிடித்துக்கொண்டு விசுவாசத்தில் வல்லவனானான் என்று வேதம் சொல்கிறது. தனது பெலத்தால் அல்ல; தேவபெலத்தின்மேல் ஆபிரகாம் தனது விசுவா சந்தைக் கட்ட வாக்குத்தத்தம் அசைக்கமுடியாத நிச்சயமாக மாறியது. "வாக்களித்தவர் உண்மையுள்ளவர்' என்பதை அவன் அறிந்திருந்தான். உலகம் அவனை க் கேலி செய்திருக்கலாம். ஆனால், அவன் தனது உறுதிப்பாட்டில் சற்றும் குறைந்தவனாய்க் காணப்படவில்லை. ஆபிரகாம் முதிர் வயதாயிருக்கையில் சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு
- 15 -

Page 10
குமாரனைப் பெற்றாள். (ஆதி. 21 : 2) . ஆபிரகாம் தனது குமார னுக்கு ஈசாக்கு என்று பெயரிட்டான். விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் (ரோமர் 1 : 17).
யோபின் வாழ்க்கையை எண்ணிப் பார்ப்போம். அவன் கர்த் த ரால் நற்சாட்சி பெற்றவன். ஆனால், திடீரென்று பெரிய ஆபத்த அவனுக்கு ஏற்பட்டது. அவன் பிள்ளைகள் எல்லாம் மரித்துப் போயினர். அவன் செல்வமெல்லாம் அழிந்துபோயிற்று. அவ ன் உடல் முழுவதும் கொடிய கொப்புளங்களால் வாதிக்கப்ப்ட்டது. என்ன செய்வதென்றே அவனுக்குத் தெரியவில்லை; அவன் மனைவி யோ, தேவனைத் துரஷித்து ஜீவனை வீடும்’ என்றாள். அவ்வளவு வேதனை 1
தங்கள் நண்பனுக்கு ஏற்பட்ட கொடிய விபத்தினைக் கேள்விப் பட்டு தூரதேசத்திலிருந்து அவன் நண்பர்கள் ஆறுதல் கூறுவதற் காய் வந்தனர். அவன் உருத் தெரியாதவனாய்க் காணப்பட்டான். அவன் துக்கம் மகா கொடிய துக்கம் என்று அவர்கள் கண்டு ஒரு வார்த்தையும் பேசக்கூடாமல் இரவு பகல் ஏழுநாட்கள் அவனோடு கூடத் தரையிலே உட்கார்ந்திருந்தார்கள் (யோபு 2 13).
ஏன் எனக்கு இத்தக் கொடிய துன்பம் வந்தது ? என்று யோபு கேள்விமேல் கேள்வி கேட்கிறான். அவனுக்குச் சரியான பதில் சொல்ல யாரும் இல்லை. அவன் நண்பர்கள் என்னென்ன காரணங் களையோ சொல்லிப் பார்த்தார்கள். ஆனாலும், யோபின் கேள்விக் குப் பதில் கிடைக்கவில்லை. எனக்கு ஏன் இந்தத் துன்பம் ? என்று வினா எழுப்பியவனாகவே காணப்பட்டான். தனது நண்பர்களை "அலட்டுண்டாக்குகிற தேற்றரவாளர்’ என்று யோபு கடிந்து கொண் டான் (யோபு 16 : 2). உலகத்தின் மீது அவனுக்கிருந்த நம்பிக்கை எல்லாம் விழுந்து போயிற்று. அவனுடைய நண்பர்களாலே அவனைத் தேற்றமுடியவில்லை. ஆனால், தேவன் மீது அவர் வல்லமை மீது அவனுக்கிருந்த விசுவாசம் குன்றிப்போகவில்லை.
என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும்
அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.
இந்த என்தோல் முதலானவைகள் அழுகிப் போனபின்பு, நான் என் மாம்சத்திலிருந்து தேவனைப் பார்ப்பேன்; அவரை நானே பார்ப்பேன். அந்நிய கண்கள் அல்ல; என் கண்களே அவரைக்காணும். (யோபு 19 : 25-27)
س- 16 -

"நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவது மில்லை" (எபி. 13 5) என்ற கர்த்தர், புயல் காற்றிலிருந்து யோபு வோடு பேசினார். தேவன் அவனோடு பேசியதும், யோ புக்கு தனது உள்ளத்திலிருந்து ஐயப்பாடுகள் யாவும் நீங்கிப்போயிற்று. எத்த னையோ நாட்களாக தனது நண்பர்களால் தனது சிறையிருப்பி லிருந்து தன்னை விடுவிக்கக் கூடாதிருந்தும் தேவன் அவனுடன் பேசினபோது அ வ ன் சிறையிருப்பு உடனடியாக அவனைவிட்டு நீங்கியது. அவன் தன்னைத் தேவனுக்கு முன்பாக முழுமையாகத் தாழ்த்தி தே வ னு டை ய வல்லமையையும், மகத்துவங்களையும் அறிந்து கொண்டான். தன்ன்ை ஒரு நீதிமான் என்று நினைத்துக் கொண்டிருந்ததிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான். தன்னு டைய நீதியெல்லாம் தேவனுக்கு முன்பாக அழுக்கான கந்தை என் 1தை உணர்ந்து கொண்டான். தன்னை சிருஷ்டித்தவராகிய சர்வ வல்லமையுடைய தேவனாகிய கர்த்தருக்கு தன்மீது முழு அதிகாரம் உண்டு என்பதை உணர்ந்தான். தான் குயவன் கையிலிருக்கும் களிமண் என்பதை உணர்ந்தான். தன்னைக் கர்த்தருக்கு முன்பாக முற்றிலுமாகத் தாழ்த்தினான்.
யோபின் செல்வமெல்லாம் தொலைந்து போனபோதும் அவன் கொடிய பருக்களால் வாதிக்கப்பட்ட போதிலும் தேவன்மேல் இருந்த - அவர் வல்லமைமேல் இருந்த அவனது விசுவாசம் குன்றிப் போகவில்லை. "தனது தோல் முதலானவை அழுகிப்போனாலும் தன் நேசரை மாம்சத்திலிருந்து பார்ப்பேன்’ என்ற விசுவாசம் அவனுக்கு இருந்தது. அந்த விசுவாசம் ஒன்றுதான் அவனை விடு வித்தது. அதைச் சாத்தானால் அசைக்க முடியவில்லை. அந்த விசு வாசம் மனுஷ ஞானத்திலல்ல; தேவபெலத்தில் நின்றது. ஆகவே தேவன் அவனைக் கனப்படுத்தினார். அவன் சிறையிருப்பை மாற்றி னார். அவன் இரண்டு மடங்காய் ஆசீர்வதிக்கப்பட்டான் . தேவன் அனுமதிக்கும் சோதனை பொறுமையோடு சகிக்கப்படுமேயானால் கன மகிமையை உண்டாக்கும். விசுவாசத்தில் வல்லவர்களாக மாற முடியும். (எபிரேயர் பதினோராம் அதிகாரத்தைப் பயிற்சி செய் வோம் )
விசுவாசிக்கிறவன் தேவனுடைய மகிமையைக் காண் பான்: 'ஜெ. ஆலயத் தலைவனின் மகள் மரண வேதனையில் இருக்கிறாள்" என்று ஆண்டவருக்குச் செய்தி கிடைக்கவே அவளை மரண வேத னையிலிருந்து விடுவிப்பதற்காக அங்கு சென்றார். திரள் கூட்ட ஜனம் அவருக்குப் பின் சென்றது. ஜனங்கள் முன்னும் பின்னும் இயேசுவை நெருக்குகிறவர்களாக நடந்து சென்றனர். இயேசு இவ் வழியாகச் செல்கிறார் என்று கேள்விப்பட்டு 12 வருடமாய்ப் பெரும்
-- 17 ہے

Page 11
பாடுள்ள ஒரு ஸ்திரீ எப்படியாவது அவரைத்தொடவேண்டும் என்று அக்கூட்டத்திற்கு நேராய் ஓடிச்சென்றாள். 12 வருடமாய் வேத னைப்பட்ட அந்த ஸ்திரீ எத்தனையோ மருத்துவர்களைத் தேடிச் சென்றிருப்பாள். ஆனாலும், அ வ ள் வேதனை அவளைவிட்டு மாறவில்லை. நான் ஒரு பெண்ணாக இருக்கிறேனே; என து அருவருக்கத்தக்க நோயுடன் எப்படி இத்தனை ஜனங்களையும் தாண்டி இயேசுவைத் தொடமுடியும் என்ற தயக்கம் அவளை முடக்கிவிடவில்லை. இயேசுவை அல்லது அவரது வஸ்திரத்தின் ஒரத்தையாவது தொட்டால் தனது வேதனை நீங்கும் என்பதை பூரணமாய் விசுவாசித்தாள். உலகத்தின் மீது அவள் வைத்த நம்பிக் கை அவளை இரட்சிக்கவில்லை. இனி அவளுக்கு ஒரே ஒரு நம்பிக் கைதான். அதுதான் இயேசுவின் மீது அவள் வைத்த நம்பிக்கை. தேவ வல்லமைமீது தனது விசுவாசத்தை வைத்தாள். ஒடினாள் ; கூட்டத்திற்குள் ஓடினாள். இயேசுவை அவளால் தொடமுடிய வில்லை. அத்தனை ஜனக் கூட்டத்தின் மத்தியில் இயேசுவின் வஸ் திரத்தை மாத்திரம் அவள் தொட்டாள். அவள் விசுவாசம் அவ ளை இரட்சித்தது. அவளுடைய உதிரத்தின் ஊறல் உடனே நின்று போயிற்று. அவள் வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை உடனே தன் சரீரத்தில் உணர்ந்தாள்.
தம்மிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டதை உணர்ந்த இயேசு, "என் வஸ்திரங்களைத் தொட்டது யார் ?’ என்று கேட்டார். இத் தனை ஜனக்கூட்டத்தில் யார் தொட்டது என்று சொல்லக்கூடும் என்று சீஷர்கள் இயேசுவை வினவினர். இயேசு சுற்றிலும் பார்த் தார். தன்னிடத்தில் அற்புதம் நிகழ்ந்ததை உணர்ந்த அந்த ஸ்திரீ பயந்து, நடுங்கி இயேசுவிடம் உண்மையெல்லாம் சொன்னாள் . இயேசு அவளைப்பார்த்து, * 'மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது,
நீ சமாதானத்தோடே போய், உன் வேதனை நீங்கி சுகமாயிரு’ என்றார். (மாற்கு 5 ; 34) கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரியே, பல்வேறு விதமான தேவைகளைக்குறித்து நீ கலங்கிக் கொண்டிருக்கலாம். எனக்குப் பிள்ளை இல்லையே என்று கலங்கிக்கொண்டிருக்கிறாயா? ஆபிரகாமின் தேவன் இன்று உன்னோடு கூடவும் இருக்கிறார். கலங்காதே ! கர்த்தர் சொல்கிறார். * பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்
செய்யாமலிருப்பேனோ என்று கர்த்தர் சொல்கிறார். பிரசவிக்கப் பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்கிறார். (9 : 66 חger Tu)
- 18 -

ஆபிரகாமும், சாராளும் தங்கள் பெலத்தில் நம் பி க் கை வைக்கவில்லை. அவன் சரீரம் செத்துப்போயிற்று என்பதை அறிந் தான். சாராளும் தனது கர்ப்பம் செத்துப்போயிற்று என்பதை அறிந்தாள். ஆனால். இருவருமே தேவனுடைய வாக்குத்தத்தத்தை உறுதியாய்ப் பிடித்துக்கொண்டனர். தேவபெலத்தில் நின்றார்கள். அவர்களுக்கு ஒரே எண்ணம், சிந்தனை; தேவன் ஒரு குமாரனைத் தருவார் என்பது மட்டுமே. வாக்களித்தவர் உண்மையுள்ளவர். மனம் மாற அவர் மனிதர் அல்ல. அவர் சர்வ வல்லமையுள்ள தேவன். அவர் வாக்குத்தத்தங்கள் இன்றும் அதே வல்லமையுடன் உன் முன் நிற்கிறது. உறுதியாய்ப் பிடித்துக்கொள். கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்து விடு. அவர் உன் விசுவாசத்தைக் கனப் படுத்துவார். அவர் உன் ஜீவியத்தில் அற்புதம் செய்வார்.
தேவன் சொல்கிறார், "நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக குமுன்னே உன்னை அறிந்தேன்” (எரே. 1 : 5). நீ பயப்பட வேண்டியதில்லை. பல்வேறுவிதமான சோதனைகள் உன்னை வாட்ட லாம். கர்த்தர்மேல் உறுதியாய் இரு. உலகமும், உலகத்திலுள்ளவர் களும் உனக்கு ஆறுதல் தர முடியாது. உனக்கு ஆறுதல்தர ஒருவர் உண்டானால் அவர்தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உன் தகுதிக்கு மேல் - சக்திக்குமேல் உனக்கு எந்தச் சோதனையும் வராது பார்த்துக்கொள்வார். சோதனை வந்துவிட்டதே என்று பதறி உலகத்தை நம்பி நீ ஓடவேண்டாம். தேவனை அறியாது எதுவும் நேரிடாது என்பதை நீ அறியாததல்ல. சோதனையோடுகூட ஒரு ப்ோக்கையும் அவர் ஏற்படுத்துவார். சோதனையைப் பொறுமை யோடு சகித்தால் நம்மில் உள்ள களிம்பு நீங்கி நம்மைச் சுத்தப் படுத்துவார். அதிக கன-மகிமையை நமக்குத் தருவார். யோ பின் ஜீவியத்தை நினைத்துப் பார். தனக்குச் சொந்தமானவை எல்லாம் அவனை விட்டு எடுபட்டபோதும் கர்த்தர்மேல் அவன் வைத்திருந்த விசுவாசம் கடுகளவும் குறையவில்லை. தனது தோல் அழுகிப்போ னாலும் மாம்சத்திலிருந்து தன்னை உண்டாக்கிய தேவனைக் காண் பென் என்ற விசுவாசம் அவனுக்கிருந்தது. நேசரின் சத்தம் அவனை ஆற்றித் தேற்றியது. அவன் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமை அதிகமாய் ஆசீர்வதிக்கப்பட்டதாய் இருந்தது. எந்தச் சூழ்நிலையிலும் கர்த்தரிடத்தில் விசுவாசமாய் இரு; அவர் உன்னை ஆதரிப்பார்.
இந்த உலகத்திலே நமக்கு உபத்திரவமுண்டு. ஆனாலும், இயேசு உலகத்தை ஜெயித்ததால் அவரை விசுவாசிக்கும் நமக்கும் ஜெயம் கொள்ள அதிகாரம் உண்டு. வியாதிகள், கஷ்டங்கள் வர லாம். நாம் செய்யவேண்டியது ஒன்றே. தமது சுயத்தின்மேல் நம்பிக்கை வைக்காது கர்த்தர்மேல்-தேவபெலத்தின்மேல் நம்பிக்கை
- 19 -

Page 12
வைக்கவேண்டும். உலகத்திலுள்ள மருத்துவர்கள் என்னை விடுவிப் பார்கள் என்று கருதுவீர்களானால் ஒருவேளை கைவிடப்படலாம். அந்த ஏழை ஸ்திரீ 12 வருஷ காலமாய் வேதனைப்பட்டாள். மருத்து வர்களால் அவளை விடுவிக்கமுடியவில்லை. இறு தி யா க தன்னைச் சிருஷ்டித்த சிருஷ்டிகரிடத்திலே தனது விசுவாசத்தை வைத்தாள். தன்னை முற்றிலுமாக வெறுமையாக்கினாள். அவளது ஆவி தன்னை உண்டாக்கிய கர்த்தரிடமாய் முறையிட்டது. நீ ஆவியிலே நிறைந்து ஏக சிந்தையோடுகூட எந்த ஒரு காரியத்திற் காயினும் கர்த்தரோடு யாக்கோபைப்போல் "நீர் என்னை ஆசீர் வதித்தாலொழிய உம்மைப் போ க வி டே ன் (ஆதி. 32 : 26). என்று தொடர்ந்து போராடி ஜெபிப்பாயென்றால் உ ன் னி லே வாசம் செய்யும் பரிசுத்தாவியானவரும் உனக்காக தேவனோடு இடைபட்டு உன் வாஞ்சையை நிறைவேற்றுவார். ஆபிரகாமைப் போல், யோபைப்போல், அந்த பெரும்பாடுள்ள ஸ்திரீயைப்போல் சுயத்திலே நம்பிக்கை கொள்ளாது தேவபெலத்திலே விசுவாசம் வைத்து அவர்கள் தேவனால் மகிமைப்படுத்தப்பட்டது போல நீயும் மகிமைப்படுவாய், உன்னிலே வாசம் செய்யும் பரிசுத்த ஆவியான வரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார் . ஆவியான வர்தாமே வாக்குக்கடங்காத பெரு மூச்சுகளோடு நமக்காக வேண்டு த ல் செய்கிறார் (ரோ. 8 : 26) உன்னுடைய ஆவி தேவனுடைய ஆவியோடுகூட உன் தேவைகளுக்காய்ப் போராடி ஜெபிக்கும்போது பரிசுத்த ஆவியானவரும் உனக்காகப் பரிந்து பேசுவார். தேவன் ஒருவரே. தேவனுக்கும், மனுவுருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. அவரே எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. (1 தீமோ. 2 : 5, 6). பிதாமா கிய தேவனும், கர்த்த ராகிய இயேசுகிறிஸ்துவும் நம்மோடு வாசம்செய்ய பரிசுத்தாவியான தேற்றரவாளனை அனுப்பியிருக்கிறார். அவர் உன்னிலே வாசம் செய்கிறார் (யோவான் 14 16) அவர் ந40 க்காக பிதாவினிடம் வேண்டுதல் செய்வார். நீ அதிசயங்களைக் காண் பாய்.
நன்றி அழைப்பின் எதிரொலி
நீங்கள் 515 III i III i . . . !
உங்களது புதிய முகவரியை உடனே எமக்கு எழுதுங்கள்!
* பழைய முகவரியையும் இணைக்க மறவாதீர்கள் !
- 20 -
 

எனக்கு! ஆட்டுக் கால்கள் வேண்டாம் !
முழு ஆடே வேண்டும்!
" கிறிஸ்து கவி மலைவாணன் -
*ாணாத ஆட்டினால் வாடி - சப்ைப்
போதகர் ஜெபித்தபின் கூடி
தானாகப் போனாரே நாடி - அந்த பேரோடு முகவரி தேடி,
மானாக வாசலில் ஜோடி - சிறு
குழந்தைகள் மண்விளை யாடி
தேனாகப் பார்த்தபின் தாடி - கொஞ்சம் குழைந்தன "யார்?" எனக் கூறி !
வெள்ளங்கி காணாத மேனி - அவை
மென்பட்டுக் கன்னங்கள் கோணி உள்ளங்கை மறைத்தபின் நாணி - முன்
தென்பட்டு ஒடின கூனி; விாசற் படிகளில் ஏறி - அவர்
கேட்டதும் எங்கென "டோணி’ பேசமுன் வந்தது "ராணி - அவள் தானந்த வீட்டெஜ மாணி !
வந்தனம் செய்யவு மில்லை ! 'உள்ளே வாருங்கள்' சொல்லவு மில்லை ! சங்கடம் போலந்த முல்லை - முகம்
கழித்ததும் நல்லது இல்லை! "அப்பா!' என்றவோர் சொல்லை உள்ளே
உரைத்தது ஒருசிறு பிள்ளை 1. தப்பா தவரின் சொல்லை - இவள் கூறிய தும் 'அவர் இல்லை”
م- 21 س

Page 13
எங்கென கேட்டபின் னாலே - பதில்
போனது தெரிய வில்லை” தொங்கிய "கேர்டினின் கீழே - அவர்
கால்கள் தெரிந்திட உள்ளே ! அப்படி யாஅம் மாளே! - நீங்க
கேளுங்க வந்த பின் னாலே எப்படி போனாரு இங்கே - சொந்தக்
கால்களை மறந்து வெளியே’ என்றதும் போதகர் அங்கே அந்தக்
கால்கள் நகர்ந்தன பின்னே வென்றது தாமெனும் முன்னே - ஒரு
போத்தலும் சாய்ந்திட உள்ளே ! கண்டது போதும்பின் னாலே - "ஏன் இங்கு நிற் பானென தானே வந்தவர் போத்கர் வீணே ! அங்கு
கண்டது கால்களைத் தானே !
★ 女 大 大 ருசித்ததும் "لق ظوظو 55 ســــــــــــــــ
உன் கையில்
இருப்பது என்ன?
- யாத். 4 : 2 றொஸ்லின்
தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்து கொண் Lirri. ானமானவைகளைத் தெரிந்து கொண்டார். இழிவான 6061Tuyb அற்ப்மாய் எண் ணப்பட்டவைகளையும், இல்லாத
b தெரிந்து கொண்டார்.
எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமை பாராட் அப்படிச் செய்தார். 1 கொரி, 1 : 27-29
66) and ഞഖ കഞണ്!!
女 udst bFLDs760
LT函山9-甲@
கிடாக் QgrpL56TT"" 。rá5men卤56f矶 ஒலி, மக்களின் ஆரவாரம் இவற்றினாலேயே 历厅岛西f எரிகோ பட்டன மதில்களை இடிந்து விழப் பண்ணினார்" - (Guurrgr. 6) இரண்டு பெண்கள் - தெபோராள், இஸ்றாயேலருக்கு அச்சமின்மை யை ஊட்டினாள் யாகேல் இஸ்றாயேலரைத கொடுமைப்படுத்திய வனைச் சுத்தியலையும் ஆணியையும கொண்டு, கொன்றாள்.
- (5) u T. 4, 5)
ー 22 ー

ID - ə ஒட்டும் ஒரு தாற்றுக்கோலினால் 600 பெலிஸ்தியர் சம் காரினால் கொல்லப்பட்டார்கள் - (நியா . 3 : 31)
எக்காளம் - ஒரு தீவர்த்தி - ஒரு மட்பானை - ஒரு கடிக்குரல். இவற்றாலும் கிதியோனாலும் மீதியானியரிடமிருந்து இஸ்றாயேலர் மீட்கப்பட்டனர். (நியா, 6, 7, 8)
கழுதையின் தாடை எலும்பு ஒன்று. அதன் வீச்சில் பெலிஸ்தியர் குவியல் குவியலாக வீழ்ந்த்னர். (நியா, 15)
ஒரு கவண் - ஒரு கூழாங்கல் - இவற்றால் இராட்சதன் கோலியாத் கொல்லப்பட்டான். - (1 சாமு. 17)
தேவனுடைய பிள்ளையே ! உலகத்தின் முன் நீ ஒதுக்கப்பட்ட வனாக - ஒன்றும் இல்லாதவனாகத் தோற்றலாம். ஆனால், 80 வயதுக் கிழவனான மோசேயின் கையில் இருந்த கோலை எண்ணிப் பார். அது மிகவும் உறுதியான - பாரமான ஒன்றாக இருந்திருக்க முடியாது. தள்ளாடும் கிழவனுக்கு மூன்றாவது காலாக - ஊன்றிச் செல்லும் கோலாகவே அது இருந்திருக்கும். அதைக் கொண்டு கர்த்தர் செய்த பெரிய காரியங்களைச் செய்ததை நீ மறந்து விட்டாயா ? கர்த்தர் மோசேயிடம், "உன் கையில் இருப்பது என்ன?" என்று கேட்டபோது அவன் 'இந்தக் காய்ந்த கோலைக் கொண்டு பென்ன செய்ய முடியும் ? இதைப் போய்க் கேட்கிறாரே ...' என்று நினைத்திருக்கக் கூடும்.
ஆனால், கர்த்தர் அதைக் கொண்டு நடப்பித்த அதிசயங்களோ அளப்பரியன, ஆகவே, தேவனுடைய பிள்ளையே சோ ர் ந் து போகாதே ! நீ யாராகவும் இருக்கலாம். உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்.
★ படித்ததும் சுவைத்ததும் . .
D * உன் தொழில் என்ன ? ல) * உன் தேசம் எது?
* நீ என்ன ஜாதியான் ? - (யோனா, 1 : 8)
பேரரசன் நெப்போலியன் ஒரு சமயம் தன் குதிரையில் ஏறியிருந்த வண்ணமே தனது படைகளை மேற்பார்வை செய்து கொண்டிருந் தான். அப்பொழுது அக் குதிரை சற்று முரட்டாட்டம் பண்ணியது. அதை அதட்டிக் கட்டளையிடும் வேளையில் தவறுதலாகத் தன் கையிலிருந்த கடிவாள வார்களைக் கீழே விட்டு விட்டான். எனவே,
- 23 -

Page 14
குதிரை முன்னோக்கிப் பாய, நெப்போலியன் கீழே விழுந்து விடும் ஆபத்தான நிலைக்குள்ளானானான். அதைக் கண்ட சாதாரண போர் வீரன் ஒருவன் பாய்ந்து ஓடி, கடிவாளத்தைப் பிடித்துக் குதிரையை நிறுத்தி, நெப்போலியனைக் காப்பாற்றினான். மகிழ்ச் சியுற்ற மன்னன் 'நன்றி, படைத் தலைவா ! என்று கூறினான். போர் வீரன் ஆச்சரியத்துடன் 'எந்தப் படைக்கு . அரசே ! ? ' என்று கேட்டான். அரசன், 'என் மெய் காப்பாளர் படைக்கு? என்று கூறி விட்டுப் போய்விட்டான்.
போர் வீரன் உடனே தன் கையிலிருந்த துப்பாக்கியைக் கீழே போட்டு விட்டு, 'யார் வேண்டுமானாலும் இதை எடுத்துக் கொள் ளுங்கள்; இனிமேல் இது எனக்குத் தேவையில்லை' என்று கூறிவிட் டுப் படைத் தலைவர்கள் நின்று கொண்டிருந்த இடத்திற்குப் போய் விட்டான். அங்கிருந்த ஒரு படைத் தலைவன் ‘இத் திமிர் பிடித்த பயலுக்கு இங்கு என்ன வேலை ?' என்றான். போர்வீரன் உடனே, திமிர் பிடித்த இந்தப் பயல் அரசனின் மெய் காப்பாளர் தலை வர்களில் ஒருவன க்கும்’ என்றான். அதைக் கேட்ட படைத் தலை வன், "உனக்குப் பைத்தியமா ? ஏன் அப்ப்டி உளறுகிறாய் ?" எனறான,
அதற்கு அப் போர் வீரன் துரரத்தில் போய்க் கொண்டிருந்த அரசனைக் காட்டி "அவர்தான் அப்படிச் சொன்னார்; அவரே தான் அதைக் கூறினார்' என்றான். தன்னை முட்டாளாக்கிய அத் தலை வர்களை அவரே அதைக் கூறினார்’ என்ற வார்த்தைகளினாலே சந்தித்தான். வெற்றியும் கண்டான். * நீங்களோ, தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாயும் ராஜரீக மான ஆசாரிய கூட்ட மாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள் - 1 பேதுரு. 2 :
ஆம். இதோ, நான் உ ன் னை உபத்திரவத்தின் குகையிலே தெரிந்து கொண்டேன் (ஏசா, 48 10) உன்னைப் பேர் சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன் (ஏசா. 43 : 1) என்பதாக அவரே கூறியிருக்கிறார். ஆகவே, நமது தொழில் எதுவாகவும் இருக்கல ம். நமது தேசம் - ஜாதி எதுவாகவும் இருக்கலாம். அவரே நம்மைப் பேர் சொல்லி அழைத்தவர். அப்படியானால், ...!!
இனியும் நாம் நம்முடைய இரு த யங் களி ல் எகிப்துக்குத் திரும்புவதா ? * கலப்பையின் மேல் கையை வைத் த பின் பின்னிட்டுத்
திரும்புவதா ?
சிந்தித்துச் செயற்படுவோம் ! *
- 24 -

அவிசுவாசம் எமை ஆளுமுன். ராணி
அந்நிய நாட்டில் ஆண்டவனே 1 - எங்கள் அவலநிலையின் சோக கீதத்தை உன்னிடத்தில் நான் எங்ஙனம் பாடுவேன் ? நாங்கள் படும்பாட்டை நல்ல விதமாய்ப் பார்க்கும்ப்ோது நீயும் எங்களுக்கு அந்நியமோ ? என்னும் அவிசுவாசம் அடிக்கடிப் பிறக்கின்றது.
சிந்தித்தேன் இறைவா ! சிறகொடிந்த எங்கள் - பரிதாப நிலை நினைத்து அழுவதா சிரிப்பதா ? அதுவும் புரியவில்லை அழுகின்றோமோ இல்லையோ; நிச்சயம் சிரிக்கவில்லை அழப்பிறந்தவர்கள்
சிரிக்க நினைப்பது அபத்தமல்லவா ? அழுக்கு நிறைந்த தேசமதில் அழகாய்ப் பிறந்தவர்கள் நாங்கள் - அதனால் படிப்படியாய் அழுகிப் போகிறோம் 'மனிதம்' மரத்துவிட்ட மனித உலகத்தில் புறக்கணிக்கப்பட்ட புற்றுநோயாளிகள் சூரியனின் அழலும் வானின் நீர்த்துளியுமே - எங்கள் வருங்கால சொத்தும் சுயசம்பாத்தியமும் சாதிக்குள் சாதி பார்த்து சரித்திரம் படைத்து நாங்கள் சடுதியாய் சகதிக்குள் சங்கமமாகிச் சலிப்படைந்து நிற்கிறோம் இயற்கை கூட - இன்று எம்மை இனங்கண்டு துவேஷம் கொண்டு துவைத்தெடுக்க: - நிலா மகளோ எமைக் கண்டு நிலைகுலைந்து - தனக்கு நீரிழிவு நோயென்று - எங்களை ஒரங்கட்டி ஒடப்ப்ார்க்கிறாள்
இதயச் சிறைகளுக்குள் நோகாமல் எறியப்பட்டு இரக்கமின்றி அறையப்பட்டு உருக்குலைந்து, உருவிழந்த நிஷ்டூரச் சிலுவை மரங்கள் புயலும், பூகம்பமும் புதுப்புதுப் பிரளயமும் - வாழ்வில்
- 25 -

Page 15
பூக்கள்ாய்ப் பூத்து நிற்கும் புதுவிதமான தந்தவனங்க்ள் : மதக்கோட்பாடுக்ளும், குறிக்கோள்களும் - எங்கள்
மனிதத்துவத்திற்கு அப்பாற்பட்டவை
குட்டையிலே பிறந்து குருதியிலே தவழும் கொடுத்து வைக்காத எங்கள் தலைமுறைக்கு எதற்கிந்தக் கோட்பாடும், குறிக்க்ோளும் ஆண்டவனே ! உன் படைப்பின்
அவசியமும், அவசரமும் எங்களுக்குப் புரியவில்லை - ஆனாலும் எங்கள் அழுகையும், அவதிகளும் அர்த்தமில்லாதவைகளுமல்ல; எங்களுக்கும் விடிவுண்டு - அத்ற்கு எங்கள் விம்மல்களும், விழுமியங்களும்
விரயமாகிப் போன ஆன்மாக்களின் ஒலங்களும் - ஒரு நாள் வியக்கத்தக்கவகையில் வித்திட்டு விடியலுக்கு வழியமைக்கும். ஆண்டவனே ! உன்னிடத்தில் கேட்பதெல்லாம் ஒன்றேயொன்று
அலங்கோலமாய் வாழும் எங்களுக்கு
அரசனோ, ஆண்டவனோ - அவர்கள்
கருணையோ அருகில் இல்லை - எந்த
அற்புதமும் அவர்களால் எங்களுக்காய்
நிகழப்போவதில்லை என்ற
அவிசுவாசம் - எங்கள் நெஞ்சங்களில்
அச்சாணியாய், ஆணித்தரமாய் பதியுமுன் - ஆண்டவனே 1 நீவந்து உன் அன்புக் கரங்களுக்குள் எங்கள்ை அணைத்து விடு; இல்லையென்றால் கண்ட இடமெல்லாம் - தங்களைக்
கல்லறைக்குள் மறைத்துக் கொள்ளும் - எங்களின்
விசுவாசக் கறையை - அந்தக்
கல்லறைகள் வடிக்கும் கண்ணீர்த் துளிக்ளுக்குள்
நிச்சயமாய் - நிரந்தரமாய் இறைவா i கண்டுகொள்வாய்
- 26

பரிசுத்த கன்னி மரியாள்
- Sr. H. HoRSHINGToN -——
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் .
"'இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்.' என்ற தீர்க்கதரிசனத்தின்படி அநேக யூத கன்னிப் பெண்கள் - மேசியாவை தங்களுடைய கர்ப்பத்தில் எதிர்பார்த் திருந்திக்கக் கூடும். மரியாளும் கூட தனக்கு அந்த பாக்கியம் கிடைக் காதா என்ற எதிர்பார்ப்போடு இருந்திருக்கலாம். தேவன் அவளை யே இயசுவின் தாயாகத் தெரிந்து கொண்டார் என்பதைத் தூதன் மூலம் அறிந்து கொண்டபோது அவள் பரிசு த் த ஆவியனால் நிறைந்து ‘இது முதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கிய வதி என்பார்கள்" என்கிறாள்.
மரியாளின் பெற்றோரைப் பற்றியோ அவளது உடன் பிறப்புக் களைப் பற்றியோ வேதத்தில் எதுவும் கூறப்படவில்லை, ஆனால் யோசேப்பு அவளுக்கு எதிர்காலத் துணையாக நியமிக்கப்பட்டிருந் தான் என்பதைக் காணலாம்.
அவளில் காணப்பட்ட நல்ல பண்புகளே தேவன் அவளைத் தெரிந்து கொள்வதற்குக் காரணம் எனலாம்.
தாழ்மை :
வேதத்தில் "தாழ்மை உள்ளவர்களுக்கு தேவன் கிருபை அளிக் றார் (யாக் 4 : 6 , 1 பேதுரு. 5 5) மரியாள் இருந்த வீட்டிற்குள் பிா வேசித்த தேவதூதன் மரியாளை நோக்கி, "கிருபை பெற்றவளே வாழ்க 'நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய்' என்கிறான். மரியாளின் தாழ்பையை இதற்கடாகக் காணலாம். அதனால் தேவனிடத்தில் கிருபை பெற்றாள். தேவனுடைய பார்வையில் அவளது தாழ்மை யான குணம் காணப்படுகிறது. மேலும் 'அவர் தம் அடிமையின் தாழ்மையை நோக்கிப் பார்த்தார்' எனவும் தன் தாழ்மை நிலை யை அவள் வெளிப்படுத்துகிறாள். "இதோ ! நான் ஆண்டவருக்கு அடிமை” என தேவனுடைய பாதத்தில் தன்னைத் தாழ்த்தி அர்ப் பணிக்கிறாள்.
* அன்பு
"அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்’ (1 யோ 4:18)
- 27 -

Page 16
தூதன் மரியாளிடத்தில் தோன்றி அவளை வாழ்த்தியதும், இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ ? என அவள் கலக்கமடை கிறாள். தூதன் மீண்டும் "பயப்படாதே ! " எனக் கூறி, “நீ கர்ப்ப வதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு எனப் பெயரிடுவாயாக' என்கிறான்.
"உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் முழுப் பலத்தோடும் அன்பு கூருவாயாக" என்ற கற்பனையின்படி மரியாள் தேவனிடத்தில் அன்பு கூர்ந்து, மேசியாவை எதிர் பார்த்தவளாய்க் கூட இருந்திருப்பாள். எனவே, எதிர்த்து எதுவும் பேசாமல் தன் சந்தேகத்துக்குரிய ஒரே கேள் வியை மாத்திரம் அவனிடம் கேட்டிருக்கிறாள். "இது எப்படியாகும்? நான் புருஷ னை அறியேனே ! என்கிறாள். அதற்குத் தூதன், "பரி சுத்த ஆவி உன் மேல் வரும்; உன்னதமான வருடைய பவம் உன் மேல் நிழலிடும் என்று கூறியதும் மரியாளுக்கிருந்த பயமோ, கலக்க மோ, சந்தேகத்துக்குரிய கேள்வியோ இல்லாதபடி, தனக்குத் துணை யாக நியமிக்கப்பட்ட யோசேப்பு தன்னை ஏற்றுக் கொள்வாரோ? ஊர் ஜனம் என்ன சொல்லுமோ ? என்று எதையும் குறித்த பய மில்லாதவளாய், தேவன் மேல் தான் கொண்ட பூரண அன்பினி மித்தம் "இதோ நான் ஆண்டவருக்கு அடிமை” என இயேசுவின் தாயாகத் தன்னை அர்ப்பணிக்கிறாள்.
* விசுவாசம் கீழ்ப்படிதல் விசுவாசமே உலகத்தை ஜெயிக்கின்ற ஜெயம். (1. யோவா. 5 : 4)
இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி மரியாள் விசுவாசித் தாள். எனவே, தூதன் தன்னிடம் கூறிய ஒவ்வொரு வார்த்தைக் கும் செவி கொடுத்தாள். ஒரே ஒரு சந்தேகத்தை மாத்திரம் தூதனி டம் கேட்டுத் தெளிந்த பின் தேவனால் கூடாத காரியம் ஒன்று மில்லை" என தூதன் கூறி யதை விசுவாசித்தாள். ‘விசுவாச மானது நம்பப்படுகிறவைகளின் உறு தி யும் காணப்படாதவை களின் நிச்சயமுமாய் இருக்கிறது" (எபி 11 : 1) மரியாள் எலிச பெத்தைச் சந்தித்த போது அவள், ‘விசுவாசித்தவளே பாக்கியவதி; கர்த்தரால் அவளுக்குச் சொல்லப்பட்டது நிறைவேறும் என வாழ்த் துகிறாள். இவ்விதமாய் மரியாளுக்கு இருந்த விசுவாசத்தை எலிச பெத் அறிக்கையிடுகிறாள். மேலும், மசியாள், "நான் ஆண்டவருக்கு அடிமை" என மாத்திரம் அல்ல; அவருடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது" என முற்றிலுமான கீழ்படிதலையும் லிசு வாசத்தையும் அறிக்கையிடுகிறாள். * ஒப்புக் கொடுத்தல்
தூதன் மரியாளை வாழ்த்தி, ‘கர்த்தர் உன்னுடனே இருக்கி றார்." "நீ ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள்" எனக் கூறியதைச் சிந் தி க் கும் போது, மரியாளோடு கூட கர்த்தர்
- 28 -

இருந்திருப்பாரானால் அவளும் கர்த்தருக்குப் பயந்து - அவரில் அன்பு கூர்ந்து - தேவனை விசுவாசித்து - அவர் வார்த்தைகளுக்குச் செவி கொடுத்து- அவருடைய கற்பனைகளுக்கும், கட்டளைகளுக் கும் கீழ்ப்படிந்து - மேசியாவை எதிர் பார்த்து பரிசுத்தமான வாழ்க் கை வாழ்ந்து கொண்டிருந்திருப்பாள். அதனால் தான் தேவனு டைய தூதனால் 'ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்" என ஆசீர்வதிக்கப்படுகிறாள்.
தூதன் சொன்ன காரியத்தைக் கேட்டுத் தனக்கு நியமிக்கப் பட்ட யோசேப்பைப் பற்றி, தன் திருமண வாழ்க்கையைப் பற்றி உலகத்துக்குரிய எதையும் நாடாமல் அ த ற் குரிய ஆசைகளில் எண்ணம் அற்றவளாக.
"நான் ஆண்டவருக்கு அடிமை; உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக் கடவது" என மனப்பூர்வமாக, முழுமையாக தன்னை தேவனுக்கு ஒப்புக் கொடுக்கிறாள். ஒப்புக் கொடுத்தலே கிறிஸ்தவ ஜீவியத்தில் பரிபூரணமாகும். ஆகையால் தான் இன்று வரை அந்த அம்மாள் பரிசுத்த கன்னி மரியாள் என அழைக்கப்படுகிறார்கள். நாமும் அவர்களுடைய முன் மாதிரிகளைப் பின் பற்றி கர்த்தருக் குள் பரிசுத்தமாய் வாழ நம்மை முழுமையாக அர்ப்பணிப்போம்.
*கிருபை பெற்றவளே வாழ்க; கர்த்தர் உன்னுடனே இருக்கிறார் என்ற ஆசி மொழியைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்ற வினாவை எமது அன்றாட வாழ்வில் சிந்தனைக்கு எடுப் போம் .
- அடுத்த இதழில் நிறைவு பெறும் 大 -c 大 女
கொர்பான் காணிக்கை
- மாற்கு 7 : 11
"ஒரு பிரதிக்கினை செய்தால் அதை நிறைவேற்ற வேண்டும்" என்ற கட்டளை யூதருக்குள் இருந்தது. பிரதிக்கினை செய்ய வேண்டியதைப் பற்றியும் செய்யாமல் விட வேண்டியதைப் பற்றியும் சம்பந்தப்பட்டதாயிருந்தது. இப்படிப்பட்ட நிபந்தனைகளைக் கொண்டு குரு சம்பிரதாயக்காரர் ஒரு பொருத்தனை பண்ணிக் கொண்டால் "செய்ய வேண்டிய கடமைகளையும் செய்யாமல் விட லாம்’ எனப் போதித்தார்கள். அப் பொருத்தனையே கொர்பான், எனப்பட்டது. இதன் படியே 'ஒருவன் தன் காணி பூமியை தேவால பத்துக்கென பிரதிஷ்டை செய்தபின், கஷ்டப்படும் பெற்றோருச் காகிலும் உதவி செய்யாமல் விடலாம்" எனவும் அவர்கள் சொன் னார்கள். பி ர தி ஷ் டை செய்யப்பட்டதும் அக்காணியின் வரு மானத்தை அவர்களே எடுத்துக் கொள்வார்கள். இதையே இயேசு கண்டித்தார். *
- 29 -

Page 17
'படைப்பும் படிப்பும்
தொடர் கட்டுரை
ஏ. பி. வி. கோமஸ்
3 மரம், செடி, கொடி, கனி
தேவனானவன், புல்லையும், விதை பிறப்பிக்கும் பூண்டுகளை யும், விதைகளையுடைய கணிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது நல்லது எ ன் று கண்டார்" (ஆதி. 1 : 11 - 12) தேவனே நல்லது என்று கண்டார் என்றால் நாம் என்ன என்று சொல்லுவது ?
மிருக பட்சணியாகிய பூனைக்கும் புல் வேண்டும் என்பதை நாம் அறிவோம்தானே. நாம் மாமிசம் அருந்தினாலும், இந்தப் புல் பூண்டுதானே மூலாதாரம். மூலாதாரமான இவை நமக்கு மேலான படிப்பினைகளைத் தருவது நாம் காணக்கூடியதா யிருக் கிறது. மரம், செடி, கொடி எல்லாம் மேல் நோக்கியே வளர்கின்றன. மனிதனும் எப்பொழுதும் மேலான எண்ணங்களையே கொண்டிருக்க வேண்டும் என்று அவை சொல்லாமல் சொல்லுகின்றன. மனதுக்கு இதமான மகிழ்ச்சி தரும் மலர்களையும், நாவுக்கு உருசியான கனி களையும், உடலுக்கு சத்து சேர்க்கும் உன்னத தானியங்களையும் காய்களையும் இவை தருகின்றன. மற்றவர்களுக்காக இந்த மகத் தானவற்றைக் கொடுத்து விட்டு, அவை மண்ணோடு மண்ணாகி, மங்கி, மண்ணுக்கு இறையாகி மீண்டும் தன் இனத்துக்கு உரமூட் டுகின்றன. தம் இனம் வளமாய் வளர உதவுகின்றன.
நம்மை மீட்டு இரட்சித்த மாபரன் இயேசுவின் தன்மையை நாம் இங்கு காணலாம் மனித இனம் இரட்சிக்கப்பட தம்முயிர் கொடுத்து மாண்ட தன்மையைத்த ஈன் குறிப்பிடுகிறோம். ஆகை யால் இவ்வாறு நல்லவைகளைச் செய்யாமல் மாறாக நடப்படி களுக்கு எ ன் ன நடைபெறும் என்று இயேசு கூறவில்லையா ? இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேரருகே வைக்கப்பட் டிருக்கிறது ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட் டுண்டு அக்கினியில் போடப்படும்' - (மத், 3 10) மனிதர் கனிகளை கொடுப்பவர்களாக மாற வேண்டும் என்பதை உணர்த்த வில்லையா இந்நன் பதம்? மேலும், மரத்தின் கொப்பே கோடரிக் குப் பிடியாக மாறி, தன் இனத்தையே அழித்தொழிக்கிறது. என்ன
- 30 -

நின க்ைகிறீர்கள் ? மனிதனே மனித இனத்தை அழிக்கிற னே !
மேலும், இயேசு தம் உடலையும் இரத்தத்தையும், மனிதர் களுக்காகத் தியாகம் செய்து சென்றுள்ளார். இன்றுவரை அதை ஞாபகப்படுத்துகிறோம். அப்பத்துக்கு ஆதாரமான கோத மையும், இரசத்துக் காதாரமான திராட்சையும் செடி கொடியிலிருந்து முளைத்தவையே. இது துரும்பும் பல்குத்த உதவும் என்பதை உணர்த்தவில்லையா ? 'தூற்றுக்கூடை அவர் கையிலிருக்கிறது. அவர் தம் களத்தை நன்றாக விளக்கி, தமது கோதுமையை களத் தில் சேர்ப்பார்.; பதரையோ அவியாத அக்கினியால் சுட்டெரிப் பார்" (மத், 3 12) இங்கும் விதையும் பதருமே உவமைகளாகின. நம் நாதர் நவின்ற இன்னுமொரு உவமை (மத் , 7 15 - 20) *"அவர்களின் கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்" (மத், 7:10) "கனியிருக்கக் காய் கவர்ந்தற்று' என்று வள்ளுவர் கூறியதை வலி யுறுத்தவில்லையா ! சித்திப்போம்! சொல்லும் செயலும் கணிகளாக மாறட்டும்.
மரம் கூட காய்ந்த பின்னால் குளிர் போக்கவும், உணவு சமைக் கவும் விறகாகிறது. ஆனால் மனிதன் சாய்ந்து விட்டால் ஒன்றுக்கும் உதவமாட்டான். எனவே, நல்ல நிலையில் இருக்கும் பொழுதே நன்மைகள் செய்ய வேண்டும். இதனைச் செய்கிறார்களா? இல்லை யே. அதுதான் இயேசு கூறுகிறார். 'அறுப்பு மிகுதி, வேலையாட்க ளோ கொஞ்சம்' ஏன்? விதைக்கிறவன் உவமை நாமறியாததா? (மத், 13 : 18 - 23) இவ்வுவமை பற்றி நன்கு சிந்தித்துப் பாருங்கள்! நெல்விதையும், பயிரும் மட்டுமல்ல; சின்ன கடுகு என்ன சொல்கிறது? சின்னவர்களானாலும் பென்னம் பெரிய விடயங்களைச் செய்யலாம் என்று சொல்லாமற் சொல்லவில்லையா? (மத், 13 : 31 - 32) ஆம் , சின்னஞ்சிறிய கடுகுவிதை உவமையற்ற பரலோக இராச்சியத்துக்கே உவமையாகிறதே! நன்மைகளைச் செய்யும் பொழுது நாம் தீமை களை அகற்ற வேண்டும் என்று "களைகளும் நமக்கு படிப்பினை ஊட்டுகின்றன. "களைகளைப் பிடுங்கி அவைகளைச் சுட்டெ ரிக்கிற தற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள். (மத், 13 : 30) இன்னா செய்யாது இனியவை செய்யுங்கள் என்கின்றது. பிறப்பின் பொழுது படுக்கும் மெத்தையாய் மாறியது வைக்கோல்; இறக்கும் பொழுது அவமானச் சின்னத்தை அன்புச் சின்னமாக மாற்றியதும் சிலுவை மரமே ஆம். மரம், செடி, கொடி, புல், பூண்டு போன்றவற்றின் "படிப்பினைகள் பற்றி சிந்தித்தல் உண்மையில் ஈடில்லா நன்மை தரும்; இறை வனைக் காட்டும் - செய்வோமா ? *
- 31 -

Page 18
女
*
வேதாகமப் புதிர் - 28
பின்வரும் சொற்றொடர்கள் எங்கே இருக்கின்றன ? இராட்சத தேசம் எனப்படும் அர்கோப் சீமை. இரியோன் எனப்படும் சேனிர். பெராக்கா எனப்படும் ஸ்தோத்திரப் பள்ளத்தாக்கு. . அது கர்த்தருடைய தோட்டத்தைப் போலவும் . .
இருந்தது. ሆ* . அவைகள் கர்த்தர் நாட்டின சந்தன மரங்களைப்
போலவும் . இருக்கிறது. ܖ விடைகளைத் தபால் அட்டையிலேயே எழுதி அனுப்புங்கள் அதிஷ்டசாலிகள் ஐவருக்குப் பரிசுகள் அனுப்பப்படும். புதிர் 27 - சரியான விடைகள் 'பா. 28 : 37 - யோபு 17 : 6 - சங். 69 - 1 - எசேக். 12:22 2 பேதுரு. 2 : 22 பரிசு பெறுவோர். Mrs. R. S. Devadoss, Sarnia, Badu Ila, Mrs. . Oliver Kenneth, Nu vara Eliya Rd, Pusellava Mr. P. D. Abraham, 1512 Vidyalaya Rd, Mt Lavinia Sr. Rajamony, Creighead Estate, Udahan tanne Miss R. D. Noble Hilda, 86/88 Dutagemunu Mw,
Pel iyagoda
:
5
பாராட்டுப் பெறுவோர். Mr. A. Ve thaba lagan, 78/7 Pansa lawathe Wettegama Mrs. B. R. Manickam, Drayton Estate, Kotagala Mrs. D. R. Percy, 8614 Mendis Road, Hatton Miss. J. Aiyathurai, 461 Old Road, Balangoda Miss. P. G. Kandiah, Paugamam - Periya Porativu Mrs. A. M. S. Edward, Russigama, Palle pola
தொடர்பு - ஜெப பீட ஜெப வேளை
நான் தோறும் இரவு 8.00 - 8.30 மணி சனிக் கிழமை இரவு 7. 30 — 8.3 0 uD 65of? ஏகோபித்து ஜெபிப்போம்! எல்லாருக்காவும் ஜெபிப்போம்! உங்கள் ஜெப தேவைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் !
ஜெபமே பரலோக வாசலின் திறவுகோல்!
۔ ۔ ۔۔ 32 سے
 

தினகரன் பத்திரிகை பேசுகிறது . . . .
* தொடர்பு 25 வது இதழ் (சிறப்பு மலர்) கிடைக்கப் பெற்றோம். "சமாதானம் - அமைதி' ஆகியவற்றைத் தேடியலையும் ஒர் அழகிய புறாவின் தோற்றத்தை முன் அட்டையில் கொண்டு ಕ್ಷೌಹಾಗಿಸು அழகாக அச்சிடப்பட்டுள்ளது.
நான்கு வயதான இச்சஞ்சிகையில் உண்மையாகவே வளர்ச்சி' பிரதிபலிக்கின்றது. சஞ்சிகை அமைப்புக்கு ஆசிரியரினதும் அச்சகத் தாரினதும் இதயபூர்வமான அர்ப்பணிப்பே காரணம் என்பதும் புலனாகின்றது. 4 ஆண்டு வரலாற்றை ஆசிரி ய ர் கச்சிதமாக எடுத்துரைத்துள்ளார்.
அருள்திரு. றெக்ஸ் அடிகளார், அருள் திரு. பிலிப் அடிகளார், அருள் திரு. விக்டர் மோசஸ் ஆகியோரின் வாழ்த்துச் செய்திகளும் கூடவே தொண்டன், மன்றாடல் சஞ்சிசைகளின் ஆசியும் தொடர் பில் காண முடிகிறது. பல வாசகர்களின் கருத்துக்களும் காணப்ப டுகின்றன .
கடந்த 24 இதழ்களிலும் ஆக்கங்கள் அளித்த எழுத்தாளர்களின் பெயர்ப் பட்டியலைத் தந்து அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றார் ஆசிரியர். "தொடர்பே நீ வாழ்க!" என்ற ராணியின் கவிதை சஞ்சி கையின் வளர்ச்சியில் ஏற்பட்ட இடையூறுகளை சுட்டிக் காட்டுகிறது.
"'ஆலய மணி பேசுகிறது' என்ற ஒரு சிறப்புக் கட்டுாை கிறிஸ்து கவி மலைவாணனால் எழுதப்பட்டிருக்கிறது . ஆலயத்தில் வழமையாக வழிபடும் ஒருவனைப் பார்த்து ஆலய வாசலின் கால் துடைப்பம் முதல் ஆலய மணி வரை அனைத்துப் பொருள்களுமே யதார்த்த பூ வமான கேள்விகளைக் கேட்பதாக இது அமைக்கப் பட்டுள்ளது. அருமையான கட்டுரை ,
23 ஆம் சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட 'டி. வி. 23 ஆம் அலைவரிசை’ சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றது.
"இளம் நெஞ்சங்களின் இதயக் குமுறல்கள்' என்ற கட்டுரை இன்றைய நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது.
இது கிறிஸ்தவ சஞ்சிகை என்று கூறப்பட்டாலும் தமிழ் மொழி பேசும் ஒவ்வொருவரும் பார்த்துப் படிக்கக் கூடிய - படிக்க வேண் டிய ஒரு சஞ்சிகை என்றே குறிப்பிடலாம். மொத்தத்தில் அமைதி யான - சாந்தமான - ஒ அறிவு க் களஞ்சியமாக இச்சிறப்பிதழ் அமைந்துள்ளது.
- வாரமஞ்சரி - 4-2 - 1996

Page 19
- Our Sincert
Somerst West, S. A
Mrs. B. K. THORAIRAJA
* Mrs, C. M. SM|T.
Scarborough, Ontario,
* Mr. N, DHEWASAHAYAM
5, Dockyard Rd., T * Mrs. Š. KUNAN AY AGAM
48, Nanda na Garde
+ Mr. N.D. GUNARATNAM Ward MO ... 8. K a | Luw
* Mrs. M. R. JOSEPH
Trinity Collega, Ka
" Mr 5, N. KANDAH
68, Tennek, Lumbu ra,
* Rew, S. J. MANUELRAJ
Philade|phla ChLI TCh P. O. Box. 494,
* Rev. K. N THIYAN ANDHA Actchelu, Chun naka
* கிறிஸ்தவ ஆசிரியர்களுக்கு
கிறிஸ்தவ சிறார்களுக் ருக்கும் மாதாந்தப் பத்திரிை யர்கள் - மாணவர்களிடமிருந்து களுக்கு தொடர்பு ஆசிரியருட
Printed at Zidiny Enterprises, Kandy and Published By E DASONS - 90, Kandy Road, Ker

: Greetings
'rica
H
Canada
rico Tale
FS, Cạlombo 4.
- Chiku di
indy
Kandy
Co Comba 15
N
|ኸኸ
கென ஆயாராகிக் கொண்டி ஒன்றுக்கு கிறிஸ்தவ ஆசிரி ஆக்கங்கள் தேவை. விபரங் ன் தொடர்பு கொள்ளுங்கள்.
5B, D. S., Sena na yake Wee diya, ro. Devada son Jeyasi Ingh of ga | fä - Sri Lanka on 1-6-1996