கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலசம் 1993.10-12

Page 1
*@š、
லண்டனிலிருந்து வெளிவரும்
 
 
 
 
 
 

இக் கலச இதழின் அச்சர் செலவுகளை முழுமையாகப் பொறுப்பேற்ற விம்பிள்டன் பூரீ கணபதி ஆலய நிர்வாகத்தினர்க்கு ஆயிரம்கோடி at , , ta si
தல் ஆத்மீகக் காலாண்டிதழ்

Page 2
தெண்னவண் திருவருட்ஜநை தெய்வீக லீ இத்தனையோ 4 லிங்களது ஆத்மீக
ஆசிரியர் குழுவும்,
இணை ஆசிரியர்கள் リごずg]
முநற்குணதயாளன் சஆனந்ததியாகர்
நிர்வாகத் தொடர்பு
வ.இ.இராமநாதன்
<ණිජ්
பொருளாதாரத் தொடர்பு 6uDL சிவ.அசோகன் ఆ6
திரு
பொதுமக்கள் தொடர்பு ԼՈ6Ճ மாணிக்கம் சுரேஸ் ତୁରୀ
朝 朝 Lமகளிர் பகுதித் தொடர்பு ஒத் திருமதி உமா ஜெயக்குமார் l J(
வெளியீடு IbľIL சைவ முன்னேற்றச் சங்கம் (U.K) լ 16Ն (LX
அச்சமைப்பும் வடிவமைப்பும் Ibl சைவ முன்னேற்றச் சங்க பதிப்பகம் பன்
அச்சுப்பதிவு
செல்வம் அச்சகம் 3L"
Thé
தொடர்பு முகவரி
KALASAM 3, GAYFERE ROAD CLAYHALL
LFORD ESSEX IG5 0JG ENGLAND
 
 

அத்தனைக்கும்
வணக்கங்கள்
வாசகள்களும்
நெறி பரப்ப இன்தமிழ் வளர்ப்போம்”
உள்ளடக்கம்
சிரியர் தலையங்கம். l -சியம் தோற்றுவித்த. 2 னைமுகனுக்கு. 5 நவோடு தந்த. 6 fதனை புனிதனாக்குவது. 8 வை அமுதம். 1Ο வுளின் பாட்டு. 12 வோம் திருவாசகம். l4 மோற்சவம் கண்ட. 17 பகியராய் மாறிய. 19
தெய்வங்களேன். 32O நகப்பெருமானுக்குரிய. 22 6ITé ජී6තඛතං.... 24 ானிரு திருமுறை. 26 ம் தீர்க்கும். 28 2த்துலகில் இளைய. 99 டுக்கு மண் சுமந்த. 3O : drifting mind................................ 39)
எமது மனப்பூர்வமான நன்றிகள்

Page 3
6
“ ஈசன் நெறி பரப்ப
நேற்றுத்தான் தொடங் நான்காவது இதழுக் ஒவ்வொரு இதழிலும் நீங்கள் கடிதவாயிலாக நாம் புளகாங்கிதம் அ நிற்கிறோம்.உலகத்ை சூழ்ந்து நிற்கின்றன.அ அன்புப் பார்ை ஆத்மீக வரட்சி 6 ஆண்டவனுடைய ெ படியாதவரை ஆத் போவதில்லை.நாளு துதிப்போம். அ6 நாளும் உச் இதைத் தவிர ே
செய்ய
நான் என்ற அக நாம் என்று நாளுட் மதத்தின் பெயரால் பேதம் பாராட்டுவதை
புதிய வருடம் இப் புதிய வருடத்தில் வாழ சங்கற்பம் கலசத்தின் அன்பு
இதுத
ஈசன உலகுக
அவன் நெறி பரப்ப இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்தமிழ் வளர்ப்போம்”
لعليا
கியது போலிருக்கிறது. >கு வந்து விட்டோம். நாம் வளர்ந்திருப்பதாக எமக்குக் கூறும்போது டைந்து பூரித்துப்போய் தைப் போர்மேகங்கள் ஆண்டவனை நோக்கிய வகள் அகன்று ாங்கும் தெரிகிறது.
நறியை புரியாதவரை மீக வரட்சி நீங்கப் நம் ஆண்டவனைத் வன் நாமங்களை
=சரிப்போம்.
வேறு என்ன நாம் முடியும்? ங்காரத்தை விட்டு ம் கூறி வாழ்வோம். கடவுளின் பெயரால் த விட்டொழிப்போம். வரப்போகிறது. ல் புதிய மனிதர்களாக
கொள்வோம்.
வேண்டுகோளும் 56.
க்கொருவன்.
ன் தமிழ் வளர்ப்போம்.
L60I
சிரியர்கள்

Page 4
GULLöfluh தோற்றுவித்த GDLévils lijTIJTuEDOTh
3,auth //محے ܔܠ எமது ஆத்மீக இதழான கலசத்தில் இலண்டனில் உள்ள இந்து சமய ஆலயங்கள் என்ற தொடரை
எழுதிவருகின்றோம். இம்முறை ஆதிசக்தியின் வடிவங்களில் ஒன்றும் செல்வத்திற்குக் குலமகள்
பூரீலட்சுமி தேவி, லட்சுமி நாராயணராக இணைந்து அருள் புரியும் பூரீலட்சுமி நாராயணர் ஆலயத்தைப் பற்றிய சில விடயங்களைத் தருகின்றோம். இது சம்பந்தமான எண்ணக்கருத்துக்களைப் பெற்றிட அவ்வாலயத்தின் ஸ்தாபகரும் தலைவருமான டாக்டர் திரு அழகராஜா அவர்களை நாடினோம். அவரோடு நடத்திய பேட்டியின் சுருக்கத்தை கீழே தருகின்றோம். வழமைக்கு மாறாக இப்பேட்டியின் போது ஆலயத்திற்கு வந்திருந்த பக்தர்களும், ஏனைய ஆலய நிர்வாகத்தினரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. வழமையாக நான் விடுக்கும் முதல் வினா ஆலயத்தின் தோற்றம் ஆலயம் அமைக்கப்பட்டதன் நோக்கம் ஆலயம் அமைந்துள்ள இடம் ஆகியவை ஆகும்.இங்கும் இக்கேள்விகளை நான் கேட்டேன். இதற்கு அணை திறந்த வெள்ளம் போல டாக்டர் அழகராஜா அவர்கள் ஒரு சொற்பொழிவையே நிகழ்த்தினார்
கடவுள் என்பவர் ஒரு பரப்பிரம்மம்.அவருக்கு மொழி, இனம் நாடு, என்ற பாகுபாடுகள் கிடையாது. முற்றுமுழுதான நம்பிக் கையோடு கும் பிடுப வர்களுக்கெல்லாம் அருள் புரிபவர் இறைவன். அழைக்கும் வடிவில் வருபவர் ஆண்டவன். 1984ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற றுரீமுருகன்
 

ஆலயநிர்வாகத்தில் தலைவராக இருந்த டாக்டர் அழகராஜா நிர்வாகத்தில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக மனக்கவலை அடைந்து அவ்வாலய நிர்வாகத்தை விட்டு நீங்கியதாகவும் அச்சந்தர்ப்பத்தில் திருமுருகன் சந்நிதியில் திருமாலுக்கும் ஒரு திருக்கோயில் அமைத்து லட்சுமி நாராயணர் கும்பாபிஷேகத்திற்கு ஒரு மாதத்திற்கு முன் மீண்டும் உன் சந்நிதிக்குள் வருவேன் என கூறிவிட்டு ஆலயத்தை விட்டு வெளியேறியதாகவும் கூறினார். தனி ஒரு மனிதனாக வெளிவந்த தான் எப்பொழுது கோவில் கட்டுவேன் எங்கே கட்டுவேன் எப்படிக்கட்டப்போகின்றேன் என இடைவிடாது சிந்தித்து மூன்று மாதத்திற்குள் அதாவது 1985 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் லட்சுமி நாராயணர் ஆலய அறக்கட்டளையொன்றை உருவாக்கினேன் என்று மகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். 86ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் ஆலயத்தின் கட்டிடத்திட்ட ஆரம்பம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு 1987ஆம் ஆண்டு கட்டிடம் கென்சிங்டன் வீதியில் வாங்கப்பட்டது என தொடாந்து கூறினார். இந்நேரத்தில் இவருக்கு நேரக்கரம் நீட்டிய மூன்று பேரை இந்த அறக் கட்டளையில் சேர் த்துக்கொண்டார். ஆண்டவன் ஒன்று என்பதை வலியுறுத்துவதற்காக இந்தத் திருமால் ஆலயத்திற்கு ஒரு சிவாச்சாரியாரைக் கொண்டு சங்க ஸ்தானம் செய்யப்பட்டது. இதனால் வைஷ்ணவம் வேறு, சைவம் வேறு என்ற வேறுபாடு அறவே ஒழிய வேண்டும் என்ற கருத்தோடு இதைச் செய்ததாக திரு அழகராஜா அவர்கள் குறிப்பீட்டார். 1990ஆம் ஆண்டு இக்கோவிலின் மகாகும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. யார் யார் தன்னுடன் பகையாடினார்களோ அவர்கள் எல்லாம் இங்கு வந்து வழிபடுவதை பெருமையாகக் குறிப்பிட் டார். இந்தக் கோவில் தான் ஐரோப்பாவிலுள்ள தென்னிந்தியக் கலாச்சார முறைப்படி அமைக்கப்பட்டது. முதல் திருமால் கோவில் என்றும் குறிப்பிட்டார். இப்படி ஒரு ஆலயம் எழுப்பப்பட வேண்டும் என்ற விதி இருந்தபடியால் தான் தனக்கு இப்படி ஒரு பிரச்சனையைக் கொடுத்து அதன் மூலம் தன்னை ஒரு கருவியாக்கி இறைவன் செயல்ப்பட்டான் என்று உணர்ச்சியுடன் குறிப்பிட்டார். எந்த ஒரு மனிதனும் உணர்ச்சியில் ஒரு வேகத்தில் எடுக்கும் சபதங்களெல்லாம் வெற்றியாக முடியாது. இது எல்லாம் ஆண்டவனின் விளையாட்டு என்று குறிப்பீட்டார்.
கண்டுகேட்டவர்: மாணிக்கம் சுரேஸ்
மனிதனை வழிப்படுத்த மதங்கள் அமைக்கப்பட்டதே ஒழிய மனிதனை மதம் கொள்ள வைக்க மதம் பாவிக்கப்படக் கூடாது.அப்படி நடக்கும் தருணத்தில் மனிதன் தன்னைத்தானே தாழ்த்திக் கொள்கிறான் என்றும், சொன்னார். சைவம், வைஸ்ணவம் பாகுபாடு அறவே ஒழிய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Page 5
ஆலயத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிபற்றிக் கேட்டபோது கோயிலின் இடவசதி பற்றிக்குறிப்பிட்ட அவர் இப்பொழுதே சிலர் ஆலயத்தின் அமைப்பு அதாவது ஆண்டவன் கீழ் தளத்தில் இருக்க மேல்தளத்தில் மனிதர்கள் நடப்பது பற்றிக் குறை கூறுவதாகக் குறிப்பிட்டார்.பக்கத்தில் உள்ள வியாபார ஸ்தாபனத்தை வாங்கி ஆலயத்தைப் பெரிப்பிக்கும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். அப்படிக் கிடைக்கும் பட்சத்தில் பெரிய அளவில் லட்சுமி நாராயணன் சிலைகளும் அவற்றிற்கிடையில் திருக்கமலப் பொற்பாதம் உள்ளதாகவும் அமைக்கப்படப்போவதாக கூறினார். தொடர்ந்து துர்க்ககை அம்மன் தனிக்கோயிலும் அதன் முன்னால் ஆத்மலிங்கமும் உள்ளதாக அமைக்கும் எண்ணத்தை தன் மனத்தில் ஆண்டவன் தோற்றுவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
என்னுடைய இரண்டாவது சற்று மாறான கேள்வியை திரு அழகராஜாவிடம் விடுத்தேன். அக்கேள்வியானது மேற்குநாடுகளாகிய இங்கிலாந்து போன்ற இடங்களில் போட்டிக்காக எழுப்பப்படுவது போல் பல ஆலயங்கள் இப்பொழுது உருவாகிக்கொண்டிருக்கின்றன. எமது தலைமுறையில் இவ்வாலயங்களின் பரிபாலனம் முறைப்படி செய்யப்பட்டாலும் கூட இனி வரும் காலங்களில் மேற்கு கலாச் சாரத் தால் பாதிக்கப்பட்டுள்ள எமது இளம் சந்ததியினர் முறைப்படி பரிபாலிப்பார்களா? அப்படிச் செய்யத் தவறும் தறுவாயில் தன்சானியா போன்ற நாடுகளில் இருப்பது போல பல ஆலயங்கள் இங்கும் கவனிப்பாரற்றுப் போகவேண்டிய தூரதிஷ்ட நிலை ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றதா என்று கேட்டேன் இந்தக் கேள்வியை நான் கேட்டவுடனே முற்றாக மறுப்புக் கூறிய திரு அழகராஜா அவர்கள் இந்து மதம் என்பது மக்களாலோ அல்லது தனி ஒரு மனிதனாலோ வளர்க்கப்பட்ட மதம் அல்ல என்று குறிப்பீட்டு தொடர்ந்து இந்தியாவிலும் பூரீலங்காவிலும் கூட இன்றைய இளம் சமுதாயத்தினர் கோவிலுக்குச் செல்லுகிறார்களா? அங்கு ஆங்கில ஆட்சியின் போது மக்கள் வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டும் பல இந்து மத ஆலயங்கள் அழிக்கப்பட்டும் கூட தலை நிமிர்ந்து நின்ற நிற்கின்ற இந்து மதம் நிட்சயமாக இங்கிலாந்து போன்ற மேற்கு நாடுகளில் அழியாமல் இருக்கவே செய்யும். அது மட்டுமல்ல மேன்மேலும் அது சிறப்புப் பெறும் என்றும் கூறினார். கடவுளின் தனித்துவம் இந்து மதத்திலுள்ள ஈர்ப்புச் சக்தி இவை இரண்டும் இந்து மதத்தை உலகின் எந்த மூலையிலும் காத்து நிற்கும் என்பதில் எள்ளளவும் தனக்குச் சந்தேகமில்லை என்று கூறினார். இச்சமயத்தில் அவர் குறிப்பிட்ட இன்னொரு விடயம் 1982ஆம் ஆண்டுக்கு முன்னால் இந்த ஈஸ்டாம் நகரம் மத நம்பிக்கையற்ற திராவிடர் கழகத்தின் கழ்ே இருந்ததாகவும் முருகன் கோவில் கட்டப்பட்டபோது, பல எதிர்ப்புக்கள் உருவாகின என்றும் இப்பொழுது அவர்கள் எல்லாம் எங்கே என்று கேட்கும் அளவுக்கு ஒதுங்கிப்போயுள்ளார்கள்
(3

ன்று குறிப்பிட்டார். இப்பொழுது இரண்டு ஆலயங்களிற்கும்' வருடாவருடம் பத்தாயிரம் போர் தள் உற்சவத்திற்குக் கூடுகின்றார்கள் என்றால ந்து மதம் எப்படி அழிய முடியும் என்று என்னிடமே ருப்பிக் கேட்டார்.
தற்கு மறுமொழி கூற எனக்கு வார்த்தைகள் ரவில்லை என்றே கூறவேண்டும். என்னுடைய டுத்த கேள்வியாக கோயிலில் நடக்கின்ற சிறப்புத் iனங்கள் பற்றி கேட்டேன். அதற்கு பதிலளிக்கையில் கோயிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் லெமூர்த்திகளாகிய மகாலட்சுமி நாராயணனுக்கு 1பிஷேகம் நடைபெற்று சிறப்புப் பூசை டைபெறுகின்றது. மற்ற நாட்களில் பக்தர்கள் கட்கும் இடத்தில் பஞ்ச லோகத்திற்கு மட்டுடெ அபிஷேகம் செய்யப்படும் என்று கூறினார். சவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு துர்க்கா சகஸ்ரநாமம் சால்லி வழிபாடு நடைபெறுகின்றது. மாதத்தில் பளர்ணமியை அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை த்தியநாராயணர் பூசை செய்து திருமால் மகாலட்சுமி மேதராக கோவில் உள்வீதி வலம் வருகின்றார். தைவிட கிருஷ்ண ஜெயந்தி நவராத்திரி விழாக்கள்
பான்றவற்றுடன் ஏனைய இறைமூர்த்திகளின் ஜெயந்தி விழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றது. வைகுந்த காதசி இரவு நித்திரை விழிப்புடன் சொர்க்கவாசல் றப்புடன் சிறப்பாக நடைபெறுகின்றது . அடுத்த கள்வியாக ஆலயக்குருக்கள்மார் மக்களுக்கும் }றைவனுக்கும் இடையே ஒரு தொடர்பை ற்படுத்துபவர்கள் என்றும்,அவர்களின் தேர்வை என்ன மறையில் செய்கிறீர்கள் என்றும் கேட்டேன். அப்போது ரு ஆலயத்தின் ஈர்ப்புச் சக்தி அந்த குருக்கள் மார் சய்யும் பூசை அபிஷேகங்களிலும் மந்திர ட்சாடனங்களிலும் கூட்டப்பவதாக குறிப்பிட்டார். ங்களுக்கு இப்பொழுது வந்துள்ள இரு குருக்களும்

Page 6
இத்தகைய சிறப்புக்களை உடையவர் என்றும் இதனால் ஆலயத்திற்கு வரும் அன்பர்களின் எண்ணிக்கை கூடியுள்ளதாகவும் குறிப்பிட்டார். தனது ஆலயத்திற்குக் குருக்களை இந்தியாவில் இருந்து தெரிந்து எடுப்பதாகக் கூறி அப்படி இப்போ எடுக்கப்பட்டவர்களின் பெயர் எஸ் சம்பத்குமார் பட்டாச்சாரியார் என்றும் ஆத்மஆச்சாரிய விழரீநிவாசன் பட்டாச்சாரியார் என்றும் கூறினார். இவ்வாறு தெரிந்தெடுக்கப்படுபவர்கள் அவர்கள் சரியாக தமது பணியைச் செய்யாதவிடத்து அவர்களைத் திருப்பி அனுப்பிவிடுவதாகவும் கூறினார். தொடாந்து ஆலயத்தின் சமயப்பணி தவிர்ந்த ஏனைய பொதுப் பணிகளைப் பற்றிக் கேட்டேன் கலைப்பணியைப் பொறுத்தவரை மிகக் குறைந்த அளவே ஆலயம் ஈடுபட்டு வருகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் இடவசதி என்று கூறினார். இதைத்தவிர இப்பொழுது ஞாயிற்றுக்கிழமைகளில் மிகக்குறைந்த கட்டணத்தில் திரு அழகராஜா அவர்களே முன்னின்று கொலசிற்ரோல் பரிசோதனை இரத்தப்பரிசோதனை போன்றவற்றை செய்து வருகின்றார்கள். எல்லோரும் செய்வதையே செய்யாமல் ஏதாவது பொதுச்சேவையிலும் ஈடுபட வேண்டும் என்ற நோக்குடனே இதைச்செய்வதாக குறிப்பிட்டார். சைவமுன்னேற்றச் சங்கம் இது போன்ற சேவைகளில் ஈடுபட வேண்டும் என்று குறிப்பிட்டார். முக்கியமாக குடும்ப பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்குவது மரணச்சடங்கில் கலந்துகொள்வது இத்தகைய துன்பங்கள் உள்ளவர்க்கு ஆறுதல் கூறுவது போன்ற செயல்கள் இந்து மதம் மக்களோடு கலப்பதற்கு துணை புரியும் என்று குறிப்பீட்டார். சைவ முன்னேற்றச் சங்கத் தற்கு தனது வாழ்த்துக்களையும் மனமார வழங்கினார். பேட்டிக்காக சென்ற எனக்கு எடுத்த காலை முன்வைத்தால் எந்தத் துன்பத்திலும் பின் வைக்கக்கூடாது . இறைவன் அருளால் எதையும் சாதிக்கலாம் என்று வெளிப்படையாகக் குறிப்பிடும் ஒரு மாமனிதரைக் கண்டுவிட்ட திருப்தியில் அவரிடம் இருந்து விடைபெற்றேன்.
கடவுள் எங்கும் நிறைந்திருக்கின்றார். அப்படியும் அவனை நம்மால் ஏன் பார்க்க முடிவதில்லை? பாசியும் நாணலும் மிகுந்திருக்கும் குளத்தின் கரையில் நின்று கொண்டால் அக்குளத்தில் ஜலம்
இல்லை என்று தான் உனக்குத் தோன்றும். ஜலத்தைக் காண வேண்டுமானால் குளத்தின் மேற்பரப்பில் இருந்து பாசியை அகற்ற வேண்டும். மாயை என்ற திரையால் மூடப்பட்ட கணிகளை உடைய கடவுளைக் காண வேண்டுமானால் உனது கண்களில் இருந்தும் மாயை ஆகிய திரையை கிழித்துவிடும். மேகம் சூரியனை மறைப்பது போல மாயை கடவுளை மறைக்கின்றது மாயை அகன்றுவிட்டால் கடவுள் கண்ணுக்குத் தெரிவர்.நீர்ப்பானையின் அடியில் வெகு சிறிய ஒட்டை இருந்தாலும் அதன் வழியாக ஜலம் ஒழுகிவிடும். அதுபோல சாதகன் ஒருவனது மனத்தில் உலகப்பற் வெகு அற்பமாக இருந்தாலும் கூட அவனது பிரயத்தனங்கள் எல்லாம் வீணாகிவிடும்.
-g இராமகிருஷ்ண பரஹம்சர்
 

சைவ ஒழுக்கங்கள்
1. திருநீறு அணிதல். அதை அணியும்போது சிவபிரானை
நினைத்தலும் திருவைந்தெழுத்தை உச்சரித்தலும் அவசியமானவை.
2. திருவைந்தெழுத்தை ஆறுதலாகவும் அமைதியாகவும் அன்போடு ஒவ்வொருநாளும் ஓதுதல் வேண்டும்.
3. தேவாரம் அல்லது திருவாசகம் ஒவ்வொருநாளும் ஒதுதல். திருவாசகப் புத்தகம் ஒன்று விட்டில் வைத்திருத்தல் வேண்டும்.
4. சிவபெருமான், உமாதேவியார், விநாயகர், வைரவர், வீரபத்திரர், சுப்பிரமணியர் ஆகிய மூர்த்திகளுள் ஒன்றிலே விஷேட பற்று வைத்துநாள்தோறும் தோத்திரம்
சொல்லி வணங்குதல்.
5.நாள்தோறும் அல்லது வாரந்தோறும் கோயிலுக்குப் போதல்
6.சைவ சமய முறைப்படி எப்போதும் நடக்க
மாட்டாதவர்கள் வாரத்திற்கொருமுறையேனும் தவறாது நடத்தல் வேண்டும்.மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி விரதம் சைவர் யாவரும் அனுட்டிக்கத் தக்கது.
7. சிவனடியாரது திருநாட்களைக் கொண்டாடி அவர்களுடைய திருச்சரித்திரங்களை சொல்லி அல்லது
கேட்டு அவர்களை வழிபடல்.
8.நாம் ஒருவரைக் காணும்போது அவர் சிவபிரானது திருவடிகளைச் சேருதற்கு யாத்திரை செய்பவர் என்ற எண்ணமே வரவேண்டும்.
திருமந்திர விளக்கம்
ஒரெழுத்தாலே உலகெங்கும் தானாகி ஈரெழுத்தாலே இசைந்தெங்கும் இருவராய் மூவெழுத்தாலே முளைத்தோங்கும் சோதியை
மாவெழுத்தாலே மயக்கமே புற்றதே
பொருள்
எல்லாத் தோற்றங்களுக்கும் வடிவங்களுக்கும் காரணகர்த்தாவாயுள்ள கருவில் மிதித்த கமலப்பாதமே இறைவனின் திருவடி இத் திருவடி அகார எழுத்தாய் நின்று ஐந்தெழுத்துச் சக்கரமாய்விந்து, ஆத்ம
சொரூபமாய் நிற்கின்றது என்பதைத்
திருமந்திரம் விளக்குகின்றது.
நன்றி - அருள் நெறிக்கலசம்

Page 7
ஐந்து திருக்கரம் உடைய மூர்த்தி என்றால் அது ஆனைமுகப் பெருமான் ஒருவரையே குறிக்கும். ஐந்தாவதான அவர் திருக்கரத்தை வியன்கரம் என்பர் ஆன்றோர். வியப்பை விளைவிக்கும் துதிக்கையாகிய திருக்கரம் விநாயகருக்கு மட்டுமே உரிய சிறப்புத்திருக்கரம் ஆகும்.
ஐந்து கரத்தனை. புந்தியுள் வைத் தபடி போற்றுகின்றேனே என்று திருமூலரும் பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம் எxஅருணகிரிநாதரும் Lingph
போற்றினரே தவிர அதற்கும் மேலே எதற்காக ஐந்து கர மூர்த்தியாக ஆனைமுகத் தண்ணல் எழுந்தருளித் திருவருள் பாலிக்கின்றான் என்று விளக்கியதில்லை.
நக்கீரதேவ நாயனார் ஆறுமுகப்பெருமான் பன்னிரு கரத்தனாகத் திகழவேண்டிய அவசியம் என்னவென்று சிந்தித்திருக்கின்றார். அச்சிந்தனையின் தெளிவே விண்செலல் மரபின் ஐயற்கேந்தியது ஒரு கை என்பது முதலாக ஒரு கை வாணர மகளிர்க்கு வதுவை சூட்ட ஆங்கப் பன்னிரு கையும் பாற்பட்ட இயற்றி என்பது வரையிலான திருமுருகாற்றுப்படை அடிகளாக அமைந்திருக்கின்றது. தணிகைப்புராணம் பாடத்தொடங்குகின்ற கச்சியப்ப
 
 

முனிவர் முதலில் தல விநாயகராகிய ஆபத்சகாயனை அகந்தழிஇக் களிக்கின்றார். ஆனை முகத்தோடு அவரின் ஐந்து திருக்கரங்களையும் தரிசித்த முனிவரவர். ஆறுமுகனின் திருக்கரங்கள் பற்றிச் சிந்தித்த நக்கீகரர் நெறிநின்று ஆறுமுகனின் திருக்கரங்கள் பற்றிச் சிந்திக்கின்றார். விநாயகரது திருக்கரங்களில் ஒன்று பண்ணியம் ஏந்தும் திருக்கரம். மோதகம் ஏந்தும் அந்தத் திருககரம் அவருக்கு மட்டுமே பயன்படுகின்றது. மற்றொரு திருக்கரத்திலோ பாலொளி வீசும் ஒற்றைத் திருக்கொம்பு விளங்குகின்றது. கயமுகனைச் சங்கரித்து தேவருக்கு அபயமளித்த அந்தத் திருக்கரம் தேவருக்கு இருக்கண் வரும் போதெல்லாம் உதவ வெனச் சித்தமாய் இருக்கின்றது. வியன் கரமான துதிக்கையிலோ இரத்தினம் அழுத்தி தங்கத்தாலான அரதனக் கலசம் திகழ்கின்றது. அன்னையும் அத்தனுமாகிய பார்வதி பரமேஸ்வரருக்குப் பாதபுசை செய்யவே அக்கலசம் அங்கு இருக்கின்றது இனி எஞ்சி இருப்பவை இரண்டு திருக்கரங்களே! ஒன்றில் பாசம், மற்றையதில் அங்குசம் எனப் பாசாங்குச தாரியாக விளங்குகிறாரே ஏன்?
சற்றே திகைத்த கச்சியப்ப முனிவர் அதற்கான காரணத்தையும் கண்டு பிடித்துவிடுகின்றார். நமது உள்ளமாகிய காட்டிலே ஒரு யானை உலவுகிறது மதம் பிடித்த கொடிய யானை அது போதாததிற்கு அதன் விழிகள் இரண்டும் வெறும் குழிகளே தவிர அவற்றில் ஒளி இல்லை. ஆம் ஆணவம் என்ற யானை தான் அது. மதம் பிடித்த கொடிய யானை ஒளி அற்ற விழியும் உடையதானால் எத்தகைய தீமைகளை விளைவிக்கும் என்பதைக் கூறவும் வேண்டுமா? எனவே கண்ணில் ஆனவ வெங்கரியைப் பிணிக்க வேண்டும். அடக்க வேண்டும். அதற்குப் பாசம் அங்குசமாகிய இவை இரண்டும் வேண்டும். எனவே தான் ஆபத்சகாயனாகிய விநாயகப் பெருமான் எஞ்சிய தமது இரண்டு திருக்கரங்களிலும் பாசத்தையும் அங்குசத்தையும் ஏற்தியிருக்கின்றான்.
பண்ணிய மேந்துங் கரந்தனக் காக்கி பாநிலா மருப்பமர் திருக்கை விண்ணவர்க் காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்க் காக்கி கண்ணிலா னவவெங் கரிபிணிக் கடக்கி கரிசினேற் திருகையு மாக்கும் அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத் சகாயனை அகந்தழிஇக் களிப்பாம்.
தமக்காக ஒரு திருக்கரம், தேவருக்காக மற்றொரு திருக்கரம், அன்னைக்கும் அத்தனுக்குமாகப் பிறிதொரு திருக்கரம் என இத்துணை பேருக்கும் தனித்தனி ஒவ்வொரு திருக்கரம் மட்டுமேயென நியோகித்துவிட்டு நம்பொருட்டு குற்றமே குனமாக அமைந்த நம்பொருட்டு கரிசினேமாகிய நம் பொருட்டு எஞ்சிய இரண்டு திருக்கரங்களையும் நியோகிக்கும் விநாயகப் பெருமானின் கருனைத் திறத்தைப் புலப்படுத்தும் கச்சியப்ப முனிவரர் கணபதி என்ற கருணை வாரிதியில் நாமெல்லாம் முழுகித் திளைக்கு நாள் எந்நாளோ என ஏங்கி விம்மிதம் உறும்படி செய்துவிடுகின்றார். கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடங்கி கரிசினேற் கிருகையும் ஆக்கும் அண்ணலை தணிகை வரைவளர் ஆபத்சகாயனை அகந்தழி இக் களிப்பாம்.
நன்றி - சைவ நற் சிந்தனை, இலங்கை வானொலி)

Page 8
ଜୋ) 3Dன்னிந்திய திருமண்டலம் சேரசோழ பாண்டிய
வேந்தள்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. அங்கே ஆட்சிமுறை சிறப்பாக நடைபெற்றது. சைவமும் தமிழும் இருகண்களாகப் போற்றப்பெற்றன. சமூகத்தை வழிநடாத்தி வளம்படுத்தும் அரிய பங்களிப்பை அறிஞர்கள் செய்தனர். அவர்களுள் ஒருவர் பெண் புலவர் ஒளவைப்பிராட்டியார். தனிமதவளர்ச்சியே சமூகவளர்ச்சிக்கு முதற்படி என்ற உயர்ந்த தத்துவம் உணரப்பட்டது. திரை கடலோடியும் திரவியம் தேடு என்று ஒளவையார் மொழிந்தார். மூதாட்டியின் அறிவுரையை தமிழர்கள் ஏற்றார்கள்.
༄།
தமிழர்கள் பொருள் ஈட்டப் புறப்பட்டார்கள் . கடல் கடந்தார்கள். வாணிபம் செய்தார்கள். ஈட்டிய செல்வத்தை தம்மை ஈன்ற மண்ணுக்குக் கொணர்ந்து, அதன் சிறப்புக்கு பெருமை சேர்த்தார்கள் - சேர்க்கின்றார்கள். அவர்களில் சிலர் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக வேற்று நாடுகளில் தங்கி வாணிபம் செய்யவும் துணிந்தார்கள். அதுவகையினதானவர்களின் வழிவந்தவர்கள் வாழும் நாடுகளில் சீசேல்சு தீவுகளும் ஒன்றாகும்.
6
 
 

தருவோடு தரும் திருநாடு
இந்து சமுத்திரத்தின் தென்மேற்கு கரைக்கு அண்மித்து உள்ள அழகிய சின்னஞ்சிறிய தீவுகளின் கூட்டமே சீசேல்சு நாடு ஆகும். இயற்கை அழகு நிறைந்த இனிமையான தீவுகள் . சிவபெருமான் கையிலுள்ள திருவோடு தரும் கொக்கோடீமர் மரம் வளருகின்ற நாடு. அங்கே வேறுபட்ட மொழி பேசுவோர் மாறுபட்ட மத நம்பிக்கைகளை கொண்டவர்கள் யாபேரும் சகோதர நேசத்துடன் வாழ்கின்றார்கள். இருநூறு ஆண்டுகட்கு முன்பாக அங்கே முதன் முதலாக குடியேறியவர்களுள் முதன்மையானவர் சோழநாட்டவர் வைத்தியலிங்கம் என்பது வாய்வழியாகச் சொல்லப்பட்டு வரும் வரலாற்றுச் செய்தியாகும். அதன் வழியாகவோ என்னவோ சோழநாட்டவர் சீசேல்சு தீவுகளில் இன்றும் குறிப்பிடக்கூடிய அளவில் பெருவாரியாக வாழ்கின்றார்கள். கால ஓட்டத்தில் ஏற்பட்டுவரும் அரசியல் மாற்றங்களையும் மீறி தீவுகளிலே தமிழர்களுடைய எண்ணிக்கை அதிகரித்தே வந்திருக்கின்றது. தீவுகளிலே பல ஆண்டுகளாக சைவசமயத்தவர்கள் வாழ்ந்துவரினும் அவர்கள் தம்முடைய சமய மொழி கலாச்சார அடையாளங்களை உறுதி செய்துகொள்ள முனையவில்லை. மாறாக பொருளாதாரத்தால் தம்மை நிலைநிறுத்திக் கொள்வதிலேயே முழுமையாக முனைந்தார்கள். வெற்றியும் கண்டார்கள். இன்றைய நிலையில் சீசேல்சு தலைநகள் விக்டோரியாவில் தனித்தமிழ் பேசி பாவனைப்பொருட்களை கொள்வனவு செய்துகொள்ள முடியும் என்னும் அளவுக்கு நகரிலே தமிழர்களின் வியாபார நிறுவனங்கள் வியாபித்திருக்கின்றன.
தமிழர்களின் வாழ்வுமுறை
சீசேல்சு தமிழர்கட்கு தம்முடைய அடையாளங்களை உறுதிசெய்து கொள்ளாத நிலைப்பாடுகள் துயரத்தை அளித்தன. மொழித்துறையில் வளர்ச்சி பெற வாய்ப்பில்லை. சமயத்தை அனுட்டிக்கவோ ஆலய வழிபாடு செய்யவோ - முடியாத நிலை. கலாச்சார நிகழ்வுகளைக் கண்டு ஆனந்திக்கும் வாய்ப்பில்லை. சிவனடி சார்ந்தார்க்கு உரிய சமய சடங்குகளை ச்ெயய இயலவில்லை. தம்முடைய மொழி மத கலாச்சார தாகத்தை நிறைவு செய்ய தமிழர்கள் தாய்திருநாடாம் தமிழ் நாட்டையே நம்பியிருந்தனர். பாலைவனத்து ஒட்டகம் போன்ற வாழ்க்கையே அவர்களுடையது. வருடாந்திரமாக தமிழ்நாடு செல்வார்கள். உறவினர்களை நண்பர்களை சந்திப்பார்கள். இனிய தமிழில் அளவளாவுவார்கள்.
சி.சிற்சபேசன்
ஆலயங்கள் பல சென்று வழிபடுவார்கள்.

Page 9
தம் முன்னோர் க் குச் செய்ய வேண் டிய சிரார்த்தங்களைச் செய்வார்கள். ஊறுகாய் வத்தல் என உணவுப்பண்டங்களையும் ஆனந்தவிகடன், குமுதம் என தமிழ்ச்சஞ்சிகைகளையும் எம் ஜி ஆர் சிவாஜி திரைப்பட மற்றும் பக்திப்பாடல்களையும் ஒலிநாடாவில் வாங்கிக்கொள்வார்கள். சீசேல்சு திரும் புவார் கள். தம் மை வாணிபத் தலில்
திணித்துவிடுவார்கள். மனச்சோர்வு காணும்போது
தாய்நாட்டு நினைவுகளை மீட்டி உற்சாகம் பெறுவார்கள். சிறுபான் மையினருள் பெரும்பான்மையாக வாழ்ந்த தமிழர்களுடைய கலாச்சார தேவைகளை ஒரளவேனும் அங்கீகாரம் செய்ய அந்நாட்டு அரசும் முனையவில்லை. தமிழர்களும் தம்முடைய வாழ்வு முறைகளை அரசு அங்கீகாரம் பெறவேண்டும் என்ற முனைப்புடன் அமைத்துக்கொள்ளவில்லை. சீசேல்சு தீவுகளில் நிலவிய மாறுபட்ட அரசியல் சூழ்நிலைகள் தமிழர்கட்கு புதியவை. அதுவே அவர்களின் ஆர்வமின்மைக்கு காரணமாக அமைந்திருக்கலாம்.
இப்படியாக அமைந்து வந்த சீசேல்சு வரலாற்றிலே
1980களிலே புதிய சகாப்தம் உருவாகியது. இந்தக்காலப்பகுதிகளிலே தென்னிந்தியா , ஈழம் , மலேசியா, சிங்கப்பூர், நாடுகளிலிருந்து சைவத்தமிழ் சமூகத்தவர் தொழில் நிமித்தமாக சீசேல்சு தீவுகளிலே குடியேறினார்கள். இவர்கள் தொழில்முறையில்
ஆசிரியர்களாகவும் பொறியியல் மருத்துவ வல்லுனர்களாகவும் கணக்காய்வாளர்களாகவும் பணிபுரிவோர் . தீவுகளிலே களம் கொண்டுள்ள நிலைப்பாடுகளைக் கண்டனர். மனம் நொந்தனர். இவ்வாறான மனத்துயரத்துடன் சீசேல்சு சைவத்தமிழ் இளைஞர்கள் சிலரும் உள்ளனர் என்பதை தெரிந்து கொண்டார்கள். ஒத்த கருத்துள்ளவர்கள் ஒன்று சேர்ந்தார்கள். கூடிப்பேசினார்கள். உணர்வுகள்
c
 
 

பாங்கியெழுந்தது. உற்சாகம் கரைபுரண்டது. அனுபவமும் முதுமையும் கொண்டோர் அணை ட்டினார்கள். சிந்தனையை செயலாக்கிட வண்டுமென நெறிப்படுத்தினார்கள். ண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் $ண்ணிய ராகப்பெறின் ன்கின்றது தமிழ் மறை முனைப்புடன் செயற்பட்டு சேல்சு இந்துகோவில் சங்கம் அமைத்தார்கள். ரார்த்தனைக் கூடம் நிறுவினார்கள். கலாச்சார விழாக்கள் பல கண்டார்கள். சீசேல்சு இந்து ஆலயம் அமைய வேண்டும் என்பதில் கருத்து ரிமாறல்கள் ஆரம்பமாகின. வாதப்பிரதிவாதங்கள் இடம் பெற்றன. அவர்களுடைய எண் ணம் ரிணாமவளர்ச்சி கண்டது. இந்து ஆலயம் அமைப்பதென முடிவாக்கப்பட்டது. திட்டங்கள்
யணத்தை தொடங்கினார்கள். கூட்டாகச் }சயற்பட்டாள்கள். பணம் திரட்டினார்கள். ஆதரவு பருகியது. ஆலயம் நிலம் பெற்றது. பிரமோதுரத ஆண்டு சித்திரைத் திங்கள் இருபத்திமூன்றாம் ாள்(06.05.1990) ஆலயத்துக்கு அத்திவாரக்கல் ாட்டப்பெற்ற திருநாளாகும். முழுமுனைப்போடு 3ர்மாணப் பணிகள் ஆரம்பமாகின. பொருள் வசதி 1டைத்தோர் பொருள் ஈந்தனர். மற்றையோர் கடல் உழைப்பை ஆலயத்துக்கு அர்ப்பணித்தனர். தமிழ்நாட்டு சிற்ப வல்லுனரும் சிற்பிகளும் சம்மையுடன் செயற்பட்டு சீரிய ஆலய நிர்மான பணியை சிறப்புடன் செய்தார்கள். அழகிய ஆலயம் உருவாகியது. இருநூறு ஆண்டுகால பாரம்பரியம் விக்க சீசேல்சு சைவப்பெருமக்கள் வாழ்வில் நிருவள்ளுவராண் டு சித் திரை தங்கள் இருபத்திநான்காம் நாள் (06.05.1992) ଢୁit பொன்நாளாகும். ஆம் அன்று தான் சீசேல்சின் முதலாவது சைவ ஆலயமான அருள்மிகு நவசக்தி பிநாயகர் நூதன ஆலய குடமுழுக்கு விழா சிறப்புடன் நடந்தேறியது. சிவாச் சாரியர்கள் சைவ ஆகமமுறைப்படி கிரிகைகளை நிறைவேற்றினார்கள். நாதசுர இசைவெள்ளம் அருவியெனப் பெருகியது. ாவ்வளவு பெரிய கடல் ? எவ்வளவு பெரிய வானம்? இவற்றிடையே எவ்வளவு சிறிய மனம் நம்முடையது அந்த மனத்தை பெற்ற நாம் இந்தப் பிறவியைப் பெற்ற நாம், குறுகிப்பணிந்து அவன் அருளைப் பெறக் கற்றிலோமே என அருணகிரிநாதர் அங்கலாய்ப்பர். ஆனால் அன்றைய தினம் சீசேல்சு வந்து கண்ணுற்றிருந்தால் ஆச்சரியப்பட்டு போயிருப்பார். அன்று அங்கு வாழுகின்ற சைவப்பெருமக்கள் திரளாக குழுமியிருந்தார்கள். அவர்கள் உடைகளின் வண்ணங்கள் தான் வேறுபட்டிருந்தன. அவர்கள் உள்ளங்கள் யாவும் தெய்வ சிந்தனையால் ஒன்றுபட்டிருந்தன. ஒன்றுபட்டால் சாதிக்க இயலாதது எதுவுமேயில்லை ான்ற தத்துவத்துக்கு சீசேல்சு சைவப்பெருமக்கள் Fாட்சி சொன்னதோடு சீசேல்சு தீவின் வரலாற்றில் மைல்கல்லாகவும் திகழும் என்பதில் ஐயமில்லை.

Page 10
ീമമ്മ Hemmú Leif
அருள்மொழி அரசு திரு
-Clഖ நிறைந்த ஆன்றோர்கள்
அமைத்து அன்புடன் வழிபாடு புரிந்தார்கள். பண்டைக்காலத்து மன்னர்கள் தமது அரண்மனையிலும் பெரிதாகத் திருக்கோயில்களைப் புதுக்கிப் பாரதநாட்டிற்கு அழியாத புகழை நிலைநாட்டினார்கள்.
மலையே இல்லாத சோழவள நாட்டில் உள்ள தஞ்சையில் ராஜராஜசோழன் 6, TITeOI6IIII65 U கோபுரத்தையும் திருமதில்களையும் மண்டபங்களையும் என்றென்றும் அழியாத நிலையில் சிலையினால் புதுக்கினான். இன்று தஞ்சையில் ராஜராஜ சோழன் அரண்மனையிலிருந்த அடிச்சுவடு கூடத்
சரித்திரங்கள் காக்கும் ஆலயங்க கல்லாலும், செம்பாலும் திருவுரு காரணம் ய
தெரியவில்லை. அவன் புதுக்கிய ஆலயம் அழியாப் புகழுடன் விளங்குகின்றது. அதேபோல் மதுரையில் பாண்டிய மன்னர்கள் வாழ்ந்த அரண்மனையோ அரண்மனையின் தூண்களோ காணப்படவில்லை. பாண்டிய மன்னர்கள் கட்டிய மீனாட்சி அம்மையின் கோயில் ஒன்றே நிலைத்து நிற்கின்றது. சுந்தரமாற பாண்டியன் திருவானைக்கா என்னும் திருக்கோயில் நான்காவது சுற்றுப் பிரகாரத்தில் தெற்கு மதில்புதுக்கினான். சுந்தர மாற பாண்டியன் வாழ்ந்த வீடோ அணிந்த அணிகலன்களோ இன்றும் காணப்பெறவில்லை. அம்மன்னவன் புதுக்கிய அம்மதில் இன்றும் நின்று காட்சி தருகின்றது. இன்று பாரதநாட்டில் அழியாத செல்வங்களாக - புகழின் கருவூலங்களாக - சமயச் சின்னங்களாக - நமது ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. இனிப் பொன்னும் வெள்ளியும் ஏராளமாக இருந்த பண்டைக்காலத்து மன்னர்கள் லக்ஷாதி லக்ஷம் நாணயங்களைச் செலவழித்து ஐந்து பிரகாரங்கள், ஏழு பிரகாரங்கள் , ஆயிரங்கால் மண்டபம், கோபுரம் முதலியனவைகளை அமைத்துப் பலப் பல ஆலயங்களைப் புதுக்கினார்கள். இவ் வண்ணம் புதுக்கிய மன்னர்கள் மூலஸ்தானத்தில் திருவுருவம் கல்லினாலும் , எழுந்தருளும் உற்சவமூர்த்தி
 
 
 

爱
2%.2% It is auth
HA
UTITÉñjallis EEUU
முருக கிருபானந்தவாரியார்
செம்பினாலும் அமைத்தார்கள் . எத்தனையோ බට් ජැත්‍ය (h செலவழித்துக் கோயில் புதுக்கிய மன்னர் கள் தங்கத் தாலும் வெள்ளியினாலும் உருவங்களை அமைத்திருக்கலாமில்லையா? அவர்களிடம் தனமும் மனமுமிருந்தும் தங்கத்தாலும், வெள்ளியினாலும் தருவு ருவங்களை அமைக்காமல் கல்லாலும் செம்பாலும் அமைத்த காரணம் யாது? கூர்த்த மதியுடையார் இதனை ஆய்ந்து உண்மை காணும் கடமையுடையவராவர். இறைவன் ஒளி உருவாக விளங்குகின்றனன். சோதியே சுடரே குழொளி விளக்கே ,
களை கட்டிய மன்னர்கள், நவங்களை அமைத்ததின் ாது?
ஒளிவளர் விளக்கே. மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் தீபமங்கள சோத நமோ நம பரமமாய் நன்ற சோதப் பழம்பு என்ற திருவாக்குகளினால் அறிக உலகில் காணப்படும் பொருள்களில் கல்லில் நெருப்பு அதிகமாக தங்கியிருப்பது கண்கூடு. ஒரு கல்லை மற்றொரு கல்லால் தட்டினால் நெருப்பு உடனே வெளிப்படுகின்றது . சிவ வேள்வி வளர்த்து அச்சிவவேள்வியில் எழும் சிவ ஒளியை நிறைகுடமாகிய கும்பத்தில் சேமித்து அக்கும்ப நீரால் நெருப்பு நிறைந்துள்ள கல்விக்கிரகத்தை அபிசேகம் புரிந்து பெரியோர்கள் கல்விக்கிரமாகிய கடவுளை நிறுவினார்கள். எனவே சோதி மயமான ஒளியின் ஆற்றல் அக்கற்சிலையில் அமைந்திருக்கின்றது. இனி திருவீதியில் எழுந்தருளிவரும் உற்சவ மூர்த்தி செம்பினால் அமைந்துள்ளது அதன் காரணம் கூறுதும், ஊருக்கு வெளியே அமைந்துள்ள மின் ஆற்றலை ஊருக்குள்ளே பாச்சும் கம்பி செம்பினால் அமைந்திருப்பதை காண்க செப்புக்கம்பிக்கு பாச்சும் ஆற்றல் உள்ளது. ஆகவே மூலஸ்தானத்தில் சேமித்துள்ள தெய்வ மின்சார ஆற்றலை ஆன்மாக்களின் உயர்வு கருதி திருவீதியில் பாய்ச்சுகின்ற உங்ற்சவ மூர்த்தியை செம்பினால் அமைத்த நமது முன்னோர்களின் மதி நலத்தை உன்னும் பொழுது

Page 11
உள்ளம் உருகுகின்றது. இன்று கண்கூடாக விளங்கும் இந்தச் சாதனங்களைக கண்டுபிடிப்பதற்கு முன்னரேயே பல ஆண்டுகளுக்கு முன் தாமிரவிக்கிரகத்தைச் செய்து அதன் மூலம் ஆன்மாக்களுக்கு நமது முன்னோர்கள் நன்மை புரிந்தார்கள். மேலும் இறைவன் எங்கும் நிறைந்திருக்கின்றான். ஆதலால் இறைவனை ஆலயத்தில் சென்று தான் வணங்க வேண்டுமா? இருந்த இடத்தில் இருந்தே வணங்கினால் போதாதா? என்று கூறுவாரும் உளர். இறைவன் எங்கும் நிறைந்திருப்பினும் ஆலயத்திலுள்ள திருவுருவத்தில் விளங்கித் தோன்றுகின்றனன். பசுவிளன் உடம்பு முழுவதும் பால் நிறைந்திருக்கின்றது. பாலைப் பெற முயல்கின்ற ஒருவன் அதன் கொம்பையோகாதுகளையோ வாலையோ வருடினால் பால் கிடைக்குமா? எனவே பால் பெற விரும்புவோன் பசுவின் மடியை வருடிப் பால் பெறுவது போல் இறைவன் அருளைப் பெறவிரும்புவோன் ஆலயத்தில் சென்று இறைவன் திரு முன் நின்று வழிபட்டுத் திருவருளைப் பெறுதல் வேண்டும். இனி கம்பிகளில் மறைந்திருக்கும் மின்சார ஆற்றல் மின்சார விளக்கின் மூலம் வெளிப்படுவது போல் எங்கும் மறைந்து நிறைந்திருக்கின்ற இறைவன் திருவருளைப் திருக்கோயில்களின் திருவுருவங்கள் மூலம் பெறுவது எளிய முறை என உணர்க. எனவே நமது முன்னோர்கள் கல்லையும் செம்பையும் கடவுள் எனக் கருதி மூட நம்பிக்கையினால் வழிபட்டார்கள் என கருதுவது பேதமையாகும். கல்லிலும் செம்பிலும் அமைந்துள்ள அருள் ஆற்றலையே அவர்கள் கடவுள் என்று கருதி வழிபட்டார்கள். நம்மையும் வழிபடுமாறும் வழிகாட்டினார்கள். கடவுளின் திருவருளைப் பெற்று கடவுளுடன் உறவாடிய நால்வர்களும் ஆள்வார் ஆதிகளும் தலங்கள் தோறும் நடந்து சென்று கோயில் வழிபாடு செய்தார்கள் என்றால் அதன் பெருமை அளவிடற்கரியதொன்றோ? ஆலயங்கள் தோறும் சென்று வழிபடுவோர் உள்ளத்தை ஆண்டவன் தனக்கு ஆலயமாகக் கொண்டு எழுந்தருளுகின்றான். திருவருள் பெற்ற அனுபூதிச் செல்வர்களும் நியதியாக ஆலயம் சென்று வழிபட்டார்கள் என்று உணர்க பாண்டிய நாட்டின் முதலமைச்சராக திகழ்ந்த மணிவாசகப் பெருந்தகையார் புத்தேளிர் கோமான் நின் திருக்கோயில் தூகேன். மெழுகேன்,கூத்தாடேன் என்று கூறுகின்றார். மனிதனைப் புனிதனாகச் செய்வது ஆலயம். தெய்வ அருளாற்றல் அங்கே நிலவிக் கொண்டு இருக்கின்றது. அங்கு சென்று வழிபடுவோரது வினைகளாகிய பஞ்சுப் பொதிகள் திருவருளாகிய அனற்பொறியால் வெந்து சாம்பராகின்றன. இகபர நலன்கள் எளிதில் எய்துகின்றன. மார்க்கண்டேயராதி மாதவரும் சீலமுடன் ஆலய வழிபாடு செய்தனர்.
- :శపపే. تحدة مع طعة نينتنغوينيث فهي تتمتعتبرونك عميق عتيقة. تتعقائق.
(8.
L. I.

முருகண் அவதாரம்
லம் , நீர், தீ, காற்று, ஆகாயம், என்ற பஞ்ச தங்களினுடைய சேர்க்கைதான் உலகத்தில் ருக்கின்ற சகல பொருள்களாகவும் உலகிலுள்ள ல்லா உயிர்களாகவும் உருவெடுத்துள்ளன.இந்தப் ஞசபூதங்களின் சேர்க்கையால் ஆனதே இவ்வுலகம் ன்பதை விளக்குவதுதான் பிரபஞ்சம் என்கின்ற ார்த்தை பிர என்ற அடைமொழிக்கு அருளாலே ரிவடைதல் என்று பொருள். பஞ்சம் என்றால் ஐந்து தங்கள். அது இறைவனருளாலே விரிவ டகின்றபோது பிரபஞ்சம் என்ற சொல்வந்தது. ம்முடைய வீட்டில் வடித்து இறைவனுக்கு முன்னால் லையில் போட்டால் சாதம் என்று பெயர். இறைவன் ன் வைத்தால் பிரசாதம் என்று பெயர். ஆகவே ஆச பூதங்கள் இறைவனருளாலே விரிவடைந்து ரபஞ்சம் தோன்றியது. ருகப் பெருமான் எதற்கு அவதரித்தார்? உலகம் ய்வதற்காகவா? அப்படியானால் உலகம் எதனால் தான்றியது?
ஞ்சபூதங்களின் சேர்க்கையினால், ான்காயிரம் ஆண்டு காலத்திற்கு முந்திய தமிழ் |லக்கண நூலான தொல்காப்பியத்தில், லம் , நீர், தீ வளி, வான் ஐந்தும் கலந்த மயக்கம் ான் உலகம் என்கிறார் தொல்காப்பியர். |வ்வைந்தையும் நம்மாலே கலக்க முடியும் ஆனால் யக்க முடியாது. இந்த பஞ்ச பூதங்களைக் கலந்து யக்கி உலகத்தை இறைவன் தோற்றுவிக்கிறான். பூகவே உலகம் பஞ்சபூதச் சேர்க்கையினால் ஆனதால் |ந்த உலகத்தை உய்விக்க வருகின்ற இறைவனும் ஞ்சபூதச் சேர்க்கையோடு வரவேண்டும் என்ற த்துவத்தை விளக்குவதற்குத்தான் சிவபெருமான் நற்றியில் தோன்றிய தீப்பொறி ஆகாயம் என்ற தத்திலே நின்று வாயு என்ற பூதத்தால் ஏந்தப்பட்டு க்னி என்ற பூதத்தால் சுமக்கப்பட்டு கங்கை என்ற தத்தால் ஏந்தப்பட்டுசரவணன் என்கின்ற மண்ணிலே ந்து முருகப்பெருமான் தோன்றினான் என்று கதை சால்கிறது. பூகவே இப்படி சிவனுடைய நெற்றிக்கண்களிலிருந்து தான்றிய தீப்பொறிகள் இவற்றை எல்லாம் கடந்து பாய் முருகன் பிறப்பானா என்று கதை >யப்படிக்கும்போது நமக்குச் சந்தேகம் வரும். அந்தக் கதைக்குள்ளே அமைந்திருக்கும் தத்துவமோ ஞ்சபூதங்களினால் ஆன உலகத்தைக் காக்க ருகின்ற இறைவனும் பஞ்சபூதச் சேர்க்கையோடு ருகிறான் என்பதுதான்.
-புலவர் கீரன்.

Page 12
υτή υβόΦ υβι
காரி சிகாருத்த கலைக்சிகாட்டு
சேரண் அழைத்த வாய்மை
கலசம் இரண்டாம் மலரில் (பக்கம்-7) ஒளவையின் தோள் பைக்குள் என்ன இருக்கின்றது என்பதைக் கேட்ட சோழனின் சந்தேகத்தைத் தீர்த்து வைத்த இனிய பாடலினைப் பார்த்தோம். இன்று ஒளவையின் அப்பறியைக் களவு கொண்ட மன்னனது செய்கையையும் மற்றும் மூன்று நிகழ்சிகளைக் குறிப்பிடும் ஒரு சுவையான பாடலையும் படித்து மகிழ்வோம்.
பறம்பு மலையை எல்லையாகக் கொண்டு சிறு பகுதியை அரசாண்ட குறுநில மன்னனாகிய் பாரி மிகச் சிறந்த கொடை வள்ளல். கடை ஏழு வள்ளல்களில் தலைமையானவன் எனப் புகழ் பெற்றவன். தமிழ் மொழி மீமு அதீத பற்றுடையவன். புலவர்களைப் பாராட்டிப் பரிசுகள் கொடுத்து மகிழ்பவன். பாரியின் அவைக்களப் புலவராக கபிலர்
இருந்து சிறப்பித்தார்.
ளவையின் பாடல்களை இரசிப்பதிலும் ஒளவைக்கு பரிசு கொடுத்து மகிழ்வதிலும் பாரி இன்பத்தைக் கண்டான். ஒளவைப் பிராட்டி ஓரிடத்தில் தங்கியிருப்பது என்பது மிக அரிதான செய்கை. ஒளவை பரிசில் பெற்றுத் திரும்பும் போது அவளைத் மீண்டும் தன்னிடம் வரவழைப்பதற்காகவும் அவளின் தமிழ்பாட்டினைக் கேட்டு மகிழும் பொருட்டும் பாரி ஒளவையைத் தன்னுடைய காவலாளர்களைக் கொண்டு வழிப்பறிச் செய்விப்பது வழக்கம். ஒளவையும் மீண்டும் மீண்டும் பாரியிடம் போய் பாடிப் பரிசில் பெற்றுக்
1 (
 
 

கொள்வார். பாரியின் குறும்பினையும் தெரிந்து கொண்டார்.
பாரி பறித்த பறி - ஒளவையின் மனதை உருக்கிவிட்டது.
ஊர்கள் தோறும் சுற்றி மக்களுடனும்
மன்னர்களுடனும் பழகும் ஒளவை பழையனுாரை அடைந்தார். இவ்வூாைக் காரி என்னும் மற்றுமொரு வள்ளல் ஆண்டு வந்தான். ஒளவை அாண்மனைக்குப் போன சமயம் காரி அங்கிருக்கவில்லை. மன்னன் எங்கே எனக் கேட்ட ஒளவைக்குக் காரி தொழிலாளர்களுடன் வயலில் வேலை செய்வதாக தெரிவிக்கப்பட்டது. மன்னன் தொழிலாளரோடு இணைந்து வயலில் களை பிடுங்கிக் கொண்டிருந்தான்.
ஒளவை மன்னனைக் காண வயற் புறத்துக்குச் சென்றார். ஒளவையைக் கண்ட மன்னன் மகிழ்ந்து பாட்டி வாருங்கள் என அழைத்து பாட்டி நீங்களும் களை கொட்ட உதவி புரியுங்கள் என்று சொல்லி ፵፭6Ö)6II கொட்டும் கருவியை ஒளவையிடம் கொடுத்தான் காரி. இதனால் ஒளவை காரியுடன் தங்கி நிற்க வேண்டியதாயிற்று. காளியும் தொழிலாளர்களும் பல பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தனர்.
பழையனுார் காரி கொடுத்த களைக் கொட்டு - ஒளவையின் நினைவில் நின்றது.
சேர நாட்டை ஆண்ட மன்னர்களுள் சேரமான் என்பவன் புகழ் பெற்றவன். இவனைப் பெருஞ்சேரல் இரும்பொறை என்றும் அழைப்போம். வஞ்சி நகரத்தைத் தலைநகரமாகக் கொண்டு அரசாண்ட இவனைப் புலவர்கள் வஞ்சமில்லா வஞ்சியன் என்றும் போற்றுவார்கள். (இங்கு குறிப்பிடப்படும் காரியும், சேரமானுமே அதிகமான் நெடுமான் அஞ்சியுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றவர்கள். அதிகமான் நெடுமான் அஞ்சியுடனும் ஒளவை மிக நெருங்கிய நட்புப் பூண்டிருந்தார்.)
சேரமானைக் T600 ஒளவையார் அவனது அரண்மனைக்குப் போனார். அந்நேரம் மன்னன் அத்தாணி மண்டபத்தில் மந்திரிகளுடன் மிக முக்கிய ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தான். தமிழ் மூதாட்டியைக் கண்டதும் உடனே எழுந்து நின்று அகமகிழ்வுடன் வாராய் என்று அழைத்தான். இவ்வாறு தன்னைப் பல பிரமுகர்கள் முன்னிலையில், முக்கியமான காரியத்தின் மத்தியிலும் அன்புடன்

Page 13
அழைத்ததை ஆகா என்ன அற்புதமான வரவேற்பு என எண்ணி ஒளவை மகிழ்ந்தாள். சேரமான் வாராய் 66 அழைத்த வாய்மையை - ஒளவையார் மறக்கவில்லை. தன் நெஞ்சில் பதித்துக் கொண்டார்.
"" *ಿ
侧败爱、
圈 محصب
፵ኣክፍ...ኳ. ፊ`
م:*:ዘኽቦwluWVሄ\ሯ A
2
பாரி மன்னன் பெருங் கொடையாளியாக புகழுடன் வாழ்ந்து வருவதை சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இம்மூவரும் பாரி மீது பகை கொண்டு படை எடுத்து அவனைக் கொன்றனர். பாரிக்கு அங்கவை, சங்கவை என இரண்டு பெண் மக்கள் இருந்தனர். பளியின் மரணத்தின் பின் இவ்விருவரையும் பாரியின் அவைக்களப் புலவராக இருந்த கபிலர் திருக்கோவலுார் என்கின்ற ஊரிற்கு அழைத்துச் சென்று அங்கு ஓர் அந்தணர் வீட்டில் பாதுகாப்பாக வாழ ஏற்பாடுகள் செய்தார்.
பாரி மன்னன் இறந்த நிகழ்ச்சி ஒளவைக்குத் தெரியாது. அவர் தனது வழக்கப்படி ஊரூராகச் சுற்றிக் கொண்டு வரும் வழியில் பாரியின் பெண் பிள்ளைகள் வாழ்ந்து வரும் ஊராகிய திருக்கோவலுார் வழியாகப் போக நேர்ந்தது. ஒளவை திருக்கோவலுார் வந்து சேர்ந்த போது மாலை வேளை, இருள் சூழ்ந்து கொண்டது. மழை பெய்து கொண்டிருந்தது. ஒளவை மழையில் நன்றாக நனைந்து குளிரால் துன்பப்பட்டு வருந்திவிட்டார். மேற்கொண்டு நடக்க முடியாமல், ஒளவை நடுங்கியபடி எங்காவது தங்கிச் செல்லலாம்
 
 
 
 
 
 

என்ற எண்ணத்தில் அருகில் இருந்த ஒரு வீட்டிற்குச் சென்றார்.
அந்த வீட்டிலிருந்த அங்கவை, சங்கவை இருவரும் கிழவியின் களைப்புற்ற நிலைமையைக் கண்டு வருந்தினார்கள். உடனே ஒளவையை
அழைத்துச் சென்று ஈரத்தைத் துவட்டி அவர்கள் வைத்திருந்த நீல நிறச் சிற்றாடை ஒன்றினை ஒளவைக்குக் கொடுத்து ஒளவையின் துன்பம் நீங்கும் வகையில் அவளது ஈரத் துணிகளை உலரப் போட்டனர்.
కోళి تحصیلیبرے -
குளிரால் நடுங்கி வருந்தி வந்த ஒளவையாருக்கு இவ்வுபசரிப்பு மிக்க இதமாக இருந்தது. அவ்வேளையில் இந்த நீலச் சிற்றாடைக்கு நிகருண்டோ என ஒளவை எண்ணினார்.
தமிழ் மூதாட்டியின் மனதில் பழைய எண்ணங்கள் வந்து அலை மோதின. பாரி பறித்த பறி, பழையனுார் காரி கொடுத்த களைக்கொட்டு, சேரமான் வாராய் என அழைத்த வாய்மை இத்துடன் தனக்குக் கிடைத்த நீலச்சிற்றாடை இவைகள் இனிய எளிய பாட்டாக வெளிவந்தது.
பாரி பறித்த பறியும் பழையனுர்க் காரி கொடுத்த களைக்கொட்டும் - சேரமான் வாராயென வழைத்த வாய்மையு மிம்முன்றும் நீலச் சிற்றாடைக்கு நேர்.
பெரும் மன்னர்கள் தந்த பரிசுப் பொருட்களும் சமயம் அறிந்து கைகொடுத்து உதவிய சிற்றாடையும் நிகர் என நயம்பட உரைக்கும் ஒளவையின் புலமைக்கும்
நிகருண்டோ!

Page 14
sl26šai usto
“உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன் நிலவுலாவிய நீள்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்தாடுவான் மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்”
ஓம் சிவாய நம
எல்லாம் வல்ல பசுபதியான சிவபெருமானே படைத்தல், காத்தல், அழித்தல், முத்தொழில் களையும் செய்கிறார். படைக்கும்பொழுது பிரம்ம னாகவும், காக்கும் பொழுது விஷ்ணுவாகவும் அழிக்கும் பொழுது ருத்திரனாகவும் உயிர்களான பசுக்களை பதியான சிவபெருமான் ஆட்டுவிக் கிறார். சிவபெருமானின் அம்சமான ழரீமந்நாராயணனே துவாபர யுகத்தில் துஷ்டர்களை அழித்து சாதுக்களைக் காக்கவும், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டவும் ழரீகிருஷ்ணனாக அவதரித்தார். தர்மபூமியான குருஷேத்திரத்தில்
பகைவர்களை பொடியாக்கிடுவேன் என்று சபதம் பூண்டிருந்த அர்ஜூனன் தனது நண்பனும் குருவும் தேரோட்டியுமாக இருந்த ழரீகிருஷ்ணபரமாத்மாவை தனது தேரை இரண்டு சேனைகளுக்கும் நடுவே சென்று நிறுத்துமாறு கட்டளையிட்டான். பகவானும் தேரை இரண்டு சேனைகளுக்கு நடுவில் சென்று நிறுத்தினான். சண்டையிட ஆவலுடன் இருந்த அர்ஜூனனின் மனமானது, எதிரணியில் பீஷ்மரையும் த்ரோணரையும் தனது பந்துக்களையும் பார்த்த வுடன் பாச மயக்கத்தால் கலங்கியது. தனது சத்ரீய தர்மமான போரை விட்டுவிட்டு பிச்சையாவது எடுத்து பிழைத்துகொள்வதாக ழரீகிருஷ்ணனிடம் கூறினான். இப்படிப்பட்ட கலக்கமுற்ற் நிலையில் இருந்த அர்ஜூனனின் மனதை தெளிவுறச் செய்து தனது தர்மத்தின்படி நடப்பதற்காக பரமாத்மாவான ழரீகிருஷ்ணரால் உபதேசித்தே “பகவத்கீதை' "கடவுளின் பாட்டு”
ஆகும். பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கூறிய அறிவுரைகளை எழுநூறு ஸ்லோகங்களாகவும், பதினெட்டு அத்தியாயங்களாகவும் வ்யாஸ் முனிவர் நமக்கு பகவத்கீதையாக அருளினார். எல்லாம் வல்ல அந்த பரம்பொருளை அடைய வேதங்களில் மூன்று மார்க்கங்கள் சொல்லப்பட்டிருக்கின்றது. அதேபோல் பகவத்கீதையின் பதினெட்டு
1
 
 
 

த்தியாயங்களையும் மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம். வை முறையே
கள்ம மார்க்கத்தை வலியுறுத்தி முதல் ஆறு ாகங்கள்(1-6) உபாசனை அல்லது பக்தி மார்க்கத்தை வலியுறுத்தி எடுத்த ஆறு பாகங்கள்.(7-12) ஞான மார்க்கத்தை வலியுறுத்தி கடைசி ஆறு
2 , འཛཛུབ་ که --F_ WZ
→%? '/';
ாகங்கள்(13-18)
வதங்களின் முடிவான கருத்தை பிரதிபலிப்பவையே பநிடதங்களாகும். இந்த உபநிடதங்களின் கருத்தும் நத்வமஸி " "நீயே அதுவாகிறாய் ” என்னும் ாக்கியமே. "நீயே அதுவாகிறாய்" நீ ஆனஜவாத்மா சத்தை விட்டொழிக்கும் பொழுது அதுவான மாத்மாவாக ஆகிறாய் என்பதே. இந்த வாக்கியம். மக்கு சொல்லும் உயர்ந்த பொருளாகும். தத்வமஸி ன்னும் இந்த வாக்கியத்தை கீதையில் பதினெட்டு த்தியாயங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றது. வை முறையே
2

Page 15
"த்வம்” “நீ” என்பதைப் பற்றி விளக்க முதல் ஆறு UITabriasi. (1-6) “தத்” அது அந்த பரமாத்மாவைப் பற்றி விளக்க அடுத்த ஆறு அத்தியாயங்கள்(7-12) "அஸி" ஆகிறாய் என்றும் பதத்தை விளக்க கடைசி ஆறு அத்தியாயங்கள் (15-18) இப்படி அனைத்து வேதங்களிலும் உபநிடதங்களிலும் காணப்படும் பொருளை சாரமாக எடுத்து சொல்வதே பகவத்கீதை என்பதை பின்வரும் ஸ்லோகம் மூலம் அறியலாம்.
"சர்வோடuநிசதோ” காவப் தோக்தா கோபால
நன்தன பார்த்தோ வத்ஸ் கதிர் போக்தாதுக்தம் கீதாம்ருதம்
மவிர்த்
அனைத்து உபநிடதங்களும் ஒரு பசுவாக இருக்குமானால் அந்த பசுவினிடமிருந்து அர்ஜூன் என்னும் கன்றுக்குட்டியை காரணம் காட்டி கீதையென்னும் பாலை கறப்பவனே கண்ணண் என்னும் பால்க்காரன் ஆவான். இந்த பால் என்னும் கீதாம்ருதத்தை பருகுபவர்களே புத்திசாலி ஆவார்கள் கீதையின் ஞானம் இல்லாத பொழுது மற்ற புத்தகங்களை படித்து என்ன பயன் அல்லது கீதையின் ஞானம் இருக்கும்பொழுது மற்ற வேதாந்தங்களை படிப்பதற்கு அவசியமில்லை என்னும் பொருளை பின்வரும் ஸ்லோகம் விளக்குகிறது.
கீதா சகீதா கர்தவ்யா கிமன்யை சாஸ்த்ர
விளப்தரை யா ஸ்வயம் பத்மநாபஸ்ய முகபத்மாத் வினிஸ்ருதா
இப்படிப்பட்ட கீதையின் விசேஷ அம்சம் என்னவென்று பார்த்தோமானால் பரமசிவனின் ஐந்து முகத்திலிருந்து நான்குவேதங்களும் அனைத்து ஆகமங்களும் தோன்றினது போல இந்த கதையும் ழரீமந்நாராயணனாலேயே நமக்கு உபதேசிக் கப்பட்டது. ஆதலால் நாமும் பகவத்கீதையை (கடவுளின்பாட்டை) பாடி எல்லாம் வல்ல அந்த பரம்பொருளுடன் இரண்டறக் கலப்போமாக.
வாழ்க இந்துமதம்
வளர்க தமிழ்
9s
புண்ய பலன் 1. துளசி வனம் வைத்து வளர்த்தால் பாவம் அகலும் 2. மரங்களை வளர்ப்பது இகபர சுகம் தரும். 3. சுமங்கலி பூசை ஸெளமாங்கல்யத்தைத் தரும். 4. குளம் கிணறு வெட்டுவது தாய்க்குப் புத்திரன் பட்ட
கடன் தீரும் 5. ஆலயத்தைப் பெருக்கி கோலமிடல் சுவர்க்கத்தைத்
தரும்.
 

இளைய தலைமுறையினருக்கு சுவாமி விவேகானந்தரின் அருளுரைகள்.
எப்போதும் இல்லை என்றோ,'என்னால் முடியாது என்றோ சொல்லாதே. நம்முடைய முயற்சிக்கு எப்போதும் இயற்கையின் துணை உண்டு. இதை இயல்பாக நீ பெறும்வரை உன் நெஞ்சில் உரம் குறைய வேண்டியதில்லை.
உபநிடதங்கள் நம்முடைய மனவலிமையைப் பற்றித்தான் சொல்லுகின்றன. அதனால் தான் நான் எப்போதும் உபநிடதங்களிலிருந்தே மேற்கோள்காட்டிப் பேசுகின்றேன். வேதம் வேதாந்தம் எல்லாமே நாம் வலிமை பெறும் வழியைத்தான் கற்றுக்கொடுக்கின்றன எப்போதுமே திரும்பிப் பாராதீர்கள். உங்கள் பார்வை முன்னோக்கியே இருக்கட்டும். எந்தசமயத்திலும் பயந்து ஓடாதீர்கள். திரும்பி எதிர்த்து நில்லுங்கள் உங்களைத் துரத்திவரும் சக்திகள் ஓடிவிடும்.
நன்மையை நாடிச்செல்லும் பாதை எப்போதும் உலகத்தில் கரடுமுரடானதாகவும் செங்குத்தாகவும் தான் இருக்கும். அதில் செல்வது எளிதல்ல. அதில் செல்லும் பலர் சறுக்கி விழுவது அதிசயமே இல்லை ஒருசிலர் வெற்றி பெறுவது தான் ஆச்சரியம்.நல்ல பண்பாளராக உங்களை அமைத்துக் கொள்ளுங்கள் அதற்காக நூறு தடவை தடுக்கி விழுந்தாலும் பரவாயில்லை.
நமது உடம்புக்குள் சக்தி வாய்ந்த எஃகுச் சுருள் ஒன்று அடங்கி இருக்கின்றது. ஆன்மீக ਪ அந்தச் சுருளை விரியச் செய்து சக்தியை ଗ மனிதனாகின்றான். அப்படிப்பட்ட மனிதனால் சமுதாயமே முன்னேறுகின்றது.
எனறுடைய நமீபிக்கை நவீனமான எதிர்காலத்துக்குரிய இளையதலைமுறையினரிடம் தான் இருக்கிறது. அவர்கள் தமது இன்னுயிரைக் கொடுத்தாவது நாட்டைக் காப்பாற்றுவார்கள். பிறந்த
வளிப்படுத்துகிறது. அப்போது அவன் சக்தி வாய்ந்த
பான்னாட்டின் வளர்ச்சியே தமது முன்னேற்றமாக னைப்பார்கள்.
ஆறு மண்டபங்கள் மூலாதாரம்- கர்ப்பக்கிரகம் சுவாதிட்டானம்-அர்த்த மண்டபம் மணியூரகம்- மகாமண்டபம் அனாகதம் ஸ்நான மண்டபம் விசுத்தி அலங்கார மண்டபம்
13

Page 16
ஒதுவோம் திருவாசகம்!
-தவத்திரு குன்றக்குடி அடிகளார்
இந்த உலகில் எதுவும் வளரும். எவரும் வளர்வர். வளர்வன எல்லாம் மாறும் . இதுவே உலகத்து இயற்கை, ஆன்மா வளர வேண்டும். ஆம் ஆன்மா வளர்வதற்கும் மாற்றங்கள் பெற்று நிறைநலம் பெறுவதற்குமே எடுத்தது பிறப்பு. நிலம் உழுதால் நிலத்தின் கெட்டித்தன்மை நெகிழ்ந்து கொடுக்கும் . விதைகளை வாங்கிச் செடியாக்கி மரமாக்கி வளர்த்துக் கொடுக்கும் உழுத நிலமே பயன்படும். இரும்பை உருக்க வேண்டும்.இரும்பை உருக்கிக் காய்ச்சினால் தான் வலிமை பெறும். சுமை தாங்கும்.
மாற்றுக் குறையாத தங்கமேயானாலும் உருக்கினால் தான் அணிகள் செய்யலாம். பயன் கருதினால் வளர்ச்சி வேண்டும். வளர்ச்சிக்குரிய செயற்பாடுகளுற்றால் தான் வளர்ச்சி ஏற்படும். மனிதப்படைப்பின் குறிக்கோள் என்ன? அன்புற்றமர்ந்து வாழ்தலே வையகத்து இயற்கை இன்று மனித இனம் எங்குசென்று கொண்டிருக்கின்றது.? இன்றைய மனித இனத்திற்குக் குறிக்கோள் இருக்கின்றதா? இன்றைய மனிதன் சாதனைகளையே குறிக் கோள்கள் இலட்சியங்கள் என்று சொல்கின்றான். இன்றைய மனிதனிடம் மனிதம் இல்லை. கடினசித்தம் குடி கொண்டுவிட்டது. இந்த மனித குலத்திற்கு முதலில் அழக்கற்றுக் கொடுக்கவேண்டும்.
ஐயா ஐயா இது என்ன புதிய முயற்சி இன்று மக்கள் அதிகமாக அழுகிறார்கள். விலைவாசி ஏற்றம் குடும்பப் பொறுப்பு,மகள் திருமணம் எல்லாமே இன்று அழுகைக்குரிய நிகழ்வுகளாகிவிட்டன. இந்த அழுகை போதாதா? இன்னும் என்ன அழுகை? எதற்கு அழுகை? என்று நினைக்கலாம்.' இப்பொழுது மனிதனின் தேவைகள் எளிதாகக் கிடைக்கும் தேவை ஒரு நல்ல அரசு. அதற்கு மேலும் நன்றென ஒன்றுண்டு அதுவும் கிடைக்கும். இன்பத்துள் இன்பமும் கிடைக்கும். மனிதனின் நெஞ்சக்கனகல்லை நெகிழ்ந்து உருக்கச் செய்ய வேண்டும். உருகும் மனிதனிடத்தில் உணர்வு சிறக்கும். ஞானம் முகிழ்க்கும். மனிதன் கடவுளை நினைந்து நினைந்து உருகி அழுதானானால் உருப்பட்டு விடுவான். மனிதன் கடவுளை நினைந்து அழக்கற்றுக் கொள்ளவில்லை என்று இடித்துக் கூறுகிறது

திருவாசகம் அழுதால் இறைவன் அருளைப் பெறலாம் இது திண்ணம். திருவருள் முதல் எண். முதல் எண்ணை வெற்றிகரமாகப் போட்டுவிட்டால் மற்ற எண்கள் தாமே வரும். மனித வாழ்வுக்கு உணவு தேவை. மருந்தும் தேவை. உணவாகவும் மருந்தாகவும் ஒரு சேரப் பயன்படுவது தேன். தேன் உணவு தேன் மருந்து ஏழைகளுக்கு தேன் மருந்து வளமுடையோருக்கு உணவுதேன் தேனீக்களால் சேகரிக்கப் பெறுவது. தேனீக்கள் சுறுசுறுப்பானவை. கட்டுப்பாடுடையவை. ஒழுங்குகள் உடையவை. ஒரே தொழில் செய்பவை. தேனீக்கள் பலகாத தூரம் சென்றாலும், தேன் உள்ள மலர்களை நோக்கியே செல்லும். தேனைச் சேகரிக்கும். எப்படி வாழ வேண்டும் என்பதற்கு தேனி ஓர் உதாரணம். மாணிக்கவாசகராகிய தேனி இறைவன் திருவடி மலர்களில் மட்டும் உட்கார்ந்து எடுத்த தேன் திருவாசகம். திருவாசகம் என்ற தேன் ஒரே பூவின் தேன். வேறு எந்த மலர்களிலும் மாணிக்கவாசகராகிய தேனி உட்கார்ந்ததில்லை. பரமசிவமே கொற்றாளாகிய மண்சுமந்து பெற்ற பரிசு. பண்சுமந்த பாடலாகிய திருவாசகம் சிவபெருமானால் படி எடுக்கப்பெற்ற நூல் இது.
எத்தனை எத்தனை பிறப்புக்கள் பிறந்தாயிற்று எய்ப்பும் களைப்பும் வந்தாயிற்று கடினமான பிறப்புக்கள் சூழ்ந்து வந்த தளைகள் எண்ணற்றவை. இவை எல்லாம் கழல வேண்டுமா? திருவாசகத் தேனமுதப் பாடல்களை ஒதுக பிறப்பு என்ன? வாழ்க்கை என்ன? நன்மை, தீமை என்ற சுழற்சி வட்டம் ஓயாது வருகிறது. இந்தச் சுழற்சியில் சிக்கி ஆன்மா அனுபவிக்கும் அல்லல்கள் ஆயிரம் ஆயிரம் இந்த அல்லல்கள் தீர ஒரே வழி திருவாசகம் ஒதுதல். அல்லல் நீங்கி ஆனந்தம் அடையத் திருவாசகம் பாடுக திருவாசகம் ஒதுக
வாழ்க்கையாகிய நெடிய பயணத்துக்குத் துணை வேண்டுமா? தனிமைத் துன்பம் அழியத் துணை வேண்டுமா? இறைவனே கடையூழித் தனிமையிலிருந்து மீள திருவாசகத்தைப் பாடி எடுத்துக்கொண்டுளான். நமது தனிமைக்கும் தனித் துணை மருந்து திருவாசகந்தான். நமது நெடிய பயணத்துக்குரிய தனித்துணை திருவாசகம் மாணிக்கவாசகர் பரமசிவத்தின் திருவடிகளாகிய மேகத்தில் ஞானத்தை வந்து பெய்த ஞானமழை திருவாசகம் திருவாசகத்தை இராமலிங்க அடிகள் கூறியவாறு நான் கலந்து பாட முயற்சி செய்வோம்
திருவாசகம் ஓர் ஆன்மாவின் பரிணாம வளர்ச்சியை உணர்த்துக்கின்றது. நம் மூதாதையரின் உதட்டில் உலாவந்து உலாவிய பாடல்கள் திருவாசகம். அதனால் தான் போலும் அன்றைய தமிழகத்தில் ஞானம் இருந்தது. இன்றும் நமது உதடுகளில் திருவாசகம் உலாவரட்டும். திருவாசகச் சிந்தனைகளின் வழி ஆன்மாக்கள் வளரட்டும். அலைவு உலைவுப்

Page 17
போராட்டங்களிலிருந்து விடுதலை பெறட்டும். ஆன்ம சுதந்தரம் பெற முதலில் சிந்திக்க வேண்டும். ஆன்ம சுதந்தரமே இறை இன்பத்திற்கு முதல்படி
சிவப்பிரகாசசுவாமிகள் கூறிய வேளாண்மையைச் செய்க) மாணிக்கவாசகராகிய மாமழை பொழிந்தது. திருவாசகத் தேனமுது கிடைத்தது. ஒதுபவர் மனக்குளத்தில் திருவாசகம் நிரம்பட்டும். அவர்தம் வாய்வழிப் போந்து கேட்பவர் செவிவயலில் பரவட்டும். அன்பாகிய வித்திலிருந்து சிவம் முளை விடட்டும்.
கருணை மலரடரும் கருணையால் இந்த உலகம் கிறங் கட்டும். மட்கலம் நல்லதேயானாலும் தீண்டாமையாயிற்று. தண்டாமை இல்லாத பொற்கலமாய திருவாசகம் ஒதுவோம்.
நாளும் திருவாசகம் ஒதுவோம். நாள்தோறும் திருவாசகத்தை நினைந்து ஞானமழையில் நனைந்து நனைந்து உணர்வில் சிறந்து அழுவோம். இறைவனை நினைத்து அழுவதற்குரிய ஞானப்பாடல்கள் திருவாசகம். அழுகின்ற கண்களில் தான் கடவுள் தன்மை பூரணமாக பரிணமிக்கின்றது. ஏன்? பக்திமைக்குரிய மொழி, பிரிவு துன்பத்தைத் தருவது.
குருந்த மரத்தடியில் திருப்பெருந்துறை ஈசனைக் கண்டு அநுபவித்த மாணிக்கவாசகருக்கு ஈசனின் பிரிவுத் துன்பத்தில் பிறந்த தமிழ் திருவாசகம். அதனால் நெஞ்சை உருக்குகிறது. ஆதலாலும் உருக்கும் தன்மை மிகக்குடையதாக விளங்குகின்றது. மாணிக்கவாசகள் திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் ஈசனைக் கண்டார். கண்ணால் யானும் கண்டேன் காண்க என்று மாணிக்கவாசகள் அருளிச் செய்கிறார். அது மட்டுமல்ல கடவுட்காட்சியின் இயல்பையும் விளக்கிக் கூறும் பாடல்களைப் படித்துணரில் மாணிக்கவாசகள் கடவுட்காட்சியில்
15
 

திளைத்தவர் என்பது உறுதி
வண்ணந்தான் சேயதன்று வெளிதே யன்று ) அனேகன் ஏகன் அணுஅணுவிலி இறந்தாய் என்று
அங் (கு) எண்ணந்தான் தடுமாறி இமையோர் கூட்டம் எய்துமாறு ) அறியாத எந்தாய் உன்றன் வண்ணந்தா னது காட்டி வடிவு காட்டி மலர்க்கழலிக ளைவகாட்டி வழியற் றேனைத் திண்ணந்தான் பிறவாமற் காத்தாட் கொண்டாய் எம்பெருமான் என் சொல்லச் சிந்தக் கேனே
திருச்சதகம் -25
என்னும் திருவாசகத்தால் இதனை அறியலாம். மனிதக் காட்சிக்கும் கடவுட் காட்சிக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? மனிதக் காட்சியில் நெடுந்தொலைவில் உருவமும் அண்மைக்தூரத்தில் உறுப்பும் மிக மிக அண்மையில் வண்ணமும் (நிறமும்) காட்சிப் புலனாகும். கடவுட் காட்சியில் தொலைவில் வண்ணமும் அண்மையில் உருவமும் மிகமிக அண்மையில் உறுப்பும் திருவுருவடியும் காட்சிப்புலனாகும். இந்த மரபு இந்தப் பாடலில் விளங்கப்பெற்றுள்ளது. அதனால் இறைவனை அண்மித்து ஒன்றித்து அநுபவித்த அடியார்கள் திருவடிகளையே போற்றுகின்றார்கள். இங்ங்ணம் குருந்த மரத்தடியில் காட்சி தந்த இறைவன் இரு என்று சொல்லி மறைந்து போன நிலையில் அந்தப் பிரிவு மாணிக்கவாசகரை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியது.
தினையின் பாகமும் பிரிவது சுடாது என்பது மாணிக்கவாசகரின் விருப்பம். பிரிவுத் துன்பம் தாளாமல் மாணிக்க வாசகள் அழுதுஅழுது பாடிய பாடல்கள் திருவாசகம். திருவாசகப் பாடல்களுக்கு உருக்கம் அமைந்ததற்கு இதுவே முதற் காரணம். அடுத்து மாணிக்கவாசகள் இறைவனை முன்னிலைப் படுத்தியே பாடுவார். மாணிக்கவாசகர் தமது ஏழைமையை எளிமையை நினைந்து நினைந்து இறைவனிடத்தில் உருகி வேண்டுதல் காரணமாகவும் உருக்க நிலை அமைந்துள்ளது. திருவாசகம் அருளிய மாணிக்க வாசகள் அறிவால் சிவனேயாவார் என்று போற்றப்படுபவர். திருவாசகம் முழுதும் ஞானம் திருவாசகப் பூசை சிவபூசைக்கு நிகரானது. என்று ஒரு வழக்குண்டு. திருவாசகம் அருளிய மாணிக்கவாசகள் நான் என்பதைக்கெட்டுப் போகச் செய்தவர்."சுடும் அன்பினில் கும்பிடல்” என்பது போல இறைவன் திருவடியைப் போற்றி வணங்குவதைத் தவிர வேறு எதுவும் வேண்டாதவர். வேண்டேண்புகழ் வேண்டேன் செல்வம் வேண்டேன் மண்ணும் விண்ணும் வேண்டேன் பிறப் பிறப்புச்சிவம் வேண்டார்தமை நாளும் திண்டேன் சென்று சேர்ந்தேன் மன்னு தருப்பெருந்துறை இறைதாள் பூண்டேன்புறம் போகேன் இனிப்

Page 18
புறம் போகலொட் டேனே!
(உயிருண்ணிப் பத்து-7)
என்று பாடியுள்ளார். மனிதன் விரும்புவது புகழ் ஆசைப்படுவதும் புகழ் ஆனால் புகழ் விருப்பம் கூட மனிதனைக் கெடுத்து வீழ்த்தி விடும் என்பதே அறநெறி முடிவு. அதனால் வேண்டேன் புகழ் என்றார். மேலும் நின்னடியான் என்று வசப்பட்டேன் என்றும், சகம் பேய் என்று சிரித்திட என்றும் நாடவர் பழித்துரை பூணதுவாகக் கொண்டும் என்று திருவாசகத்தில் அருளியுள்ள பிறபகுதிகள் நினைவிற்குரியன. புகழுக்கு அடுத்து மனிதனை ஆட்டிப்படைத்துத் துன்புறுத்துவது செல்வம். ஆதலால் வேண்டேன் செல்வம் என்று அருளிச் செய்துள்ளார். மண்ணக இன்பமும் சரி, விண்ணக இன்பமும் சரி வேண்டாம், இது மாணிக்கவாசகரின் தூய பற்றற்ற வாழ்க்கைக்கு அளவு கோல். திருப்பெருந்துறை இறைவனுடைய திருவடித் தாமரைகளைச் சென்னிக்கு அணியாகச் சூட்டிக் கொண்டார். இனி,திருப்பெருந்துறை இறைவனுக்கு ஆட்பட்டிருப்பதே கடன் புறம் போகேன் இனிப்புறம் போகல் ஒட்டேனே' என்ற உறுதிப்பாடுடைய வரி பலகாலும் படிக்கத் தக்க வரி. துறவின் முதிர்ச்சியும் அன்பு நிறைந்த ஆர்வமும் பண் சுமந்த தமிழும் ஒன்று சேர்ந்து உருக்கத்தை தந்தன. இதனை திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்ற பழமொழி உணர்த்துகின்றது. திருவாசகத்திற்குரிய பிறிதொரு சிறப்பு எண்ணற்ற உவமைகள் உருவகங்கள் உடையதும் ஆகும். கருத்துக்களை விளக்குவதில் உவமைக்கு ஈடு ஏது? மாணிக்கவாசகள் தம் அனுபவத்தை எண்ணித் தம் உடல் முழுவதும் கண்களாக அமைந்து அழவேண்டும் என்று ஆசைப்படுகின்றார். தந்ததுண் தன்னைக் கொண்டதென் தன்னைச் சங்கரா ஆர்கொலோ சதுரர் அந்தமொன்று இல்லாஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்றதொன்று எண்பால் சந்தையே கோயில் கொண்டஎம் பெருமான் திருப்பெருந்துறையுறை சிவனே எந்தையே ஈசா உடலிடம் கொண்டாய் யானிதற் கிலன் ஓர் கைம் மாறே என்று பாடுவார்.
தமிழால் ஞானம் அடைய முடியும். ஞாலத்தில் உயர்ந்த சிவாநுபவத்தைத் தமிழில் பேச முடியும். பாட முடியும். எழுத முடியும். என்று செய்து காட்டிய மாணிக்கவாசகள் சதுரர் சிவபெருமானிடம் அந்த மொன்றில்லா ஆனந்தம் பெற்ற மாணிக்கவாசகர் சதுரர் என்றெல்லாம் எண்ண இடமுண்டு. ஆயினும் கோடானுகோடி ஆன்மாக்களை ஆட்கொண்டருள மீண்டும் மீண்டும் மண் சுமக்க வேண்டிய அவசியம் இல்லாமல் எளிதில் அந்த ஆன்மாக்களை ஆட்கொள்ளத் திருவாசகத்தினைப் பெற்ற சிவபெருமானே சதுரர். நாமும் திருவாசகம் ஓதி சதுரப்பாட்டுடன் வாழ முயல்வோம்!
நன்றி-ஞானபூமி
16

༄༽ ஆயிரம் பேரைக் கொன்றவன்
அரைவைத்தியன் !
காலப்போக்கில் சொற்கள்தான் எப்படியெல்லாம் திரிந்து அச் செய்தியின் அடிப்படைக் கருத்தையே மாற்றி விடுகிறது? உடல் ஆரோக்கியத்திற்காக ஆதியிலிருந்து நம் நாட்டவர் காய், கனி, இலை, வேர், மட்டை என்று இயற்கை அன்னையின் ஆதரவையே நம்பி வாழ்ந்தனர். அதற்காக மருத்துவத்தில் ஈடுபட்டிருந்தவர்கள்
காடுமேடுகளில் திரிந்து பலவாயிரம் விதமான வேர்களை கல்லி எடுத்து வந்தனர். தீவிரமான ஆராய்ச்சி செய்து அன்றாடம் உணவு உட்கொள்ளும் முறையைப் பாகுபடுத்திக் கொடுத்தனர். இதனால் உணவையே மருந்தாகவும் கருதினார்கள்.உடல் நிலையைப் பாதிக்கும் எந்த உணவையும் எவரும் உண்பதில்லை. இன்று டயடீன்ஸ் என்று கூறப்படும் உணவு பராமரிப்பு மருத்துவ நிபுணர்களைப்போல் அன்றே மருத்துவர்கள் பணியாற்றி வந்தனர். ஆயிரம் வேர்கள் கல்லி எடுத்தவன் அரை வைத்தியன் என்ற பழமொழி காலப் போக்கில் திரிந்து இன்று ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்றாகி விட்டது.
வேதங்கள் கூறும் ஆகார பொன்மொழிகள் 1. பசித்ாதல்தான் புசிக்க வேண்டும். 2. உண்பதைக் குறைத்து மெல்லுவதை அதிகப்படுத்து. 3. வாரம் ஒருமுறையாகிலும் உண்ணாவிரதம் மேற்கொண்டால் உடலிலுள்ள விஷம் அகன்று, துர்நீர் வெளியேறி குடல்கள் ஓய்வு பெற்று ஆரோக்கியம் பெருகும். 4. சமைக்கப்படாத ஆனால் விரைவில் ஜீரணிக்கக்கூடிய
உணவை உட்கொள்ளப் பழகு. 5. கோபத்துடன் உண்ணாதே. 8. போதுமானதையே உண்டு பழகு. இருக்கிறதே என்றும்அடுத்த வேளைக்கும் சேர்த்து சாப்பிடுவோமே" என்றும் அசுரத்தனமாய் உண்ணுதல் தகாது. 7. வாய் துர்நாற்றம் பழுதடைந்த வயிற்றின் அறிகுறி. 8. வேளை தவறாமல் நீராவியில் வேகும் உணவை அளவோடு
உண்ணுதலே நலம். 9. இரண்டு வேளையே ஒரு நாளைக்கு போதுமான உணவு لر ஆனால் அந்த வேளை தவறுதலும் ஆகாது ܢܠ

Page 19
பிரம்மோற்சவம் கண்ட
கொம்பனித்தெரு c முரீசிவசுப்பிரமணியர் |
தேவஸ்தானம். s
-துண்ணையூர் ராம் தேவலோகேஸ்வரசர்மா(கப்பித்தாவத்தை பூனி பாலசெல்வ விநாயகர் கோவில், கொம்பனித்தெரு அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி (
கோவில்)
மனிதனுக்கும் இறைவனுக்கும் ஏதோ ஒரு வகையில் ( தொடர்பு இருந்துகொண்டுதாணிருக்கும். இது ( இயற்கையின் நியதி. கடவுளே இல்லைஎன்று கூறும் மனிதர்களை கூட அவன் உயிர் பிரிவதற்கு முன்பு அந்த இறைவன் இருக்கின்றான் என்று வணங்க வைத்து விடுவான் அந்த ஆண்டவன். இறைவனிடம் பக்தர்கள் எப்படியெல்லாம் அன்புவைத்து வழிபடுகின்றார்கள் என்பதற்கு அண்மையில் கொம்பனித்தெரு சிவசுப்பிரமணியசுவாமி கோவிலில் நடந்த பிரம்மோற்சவமும், ரதோற்சவமும் ஓர் எடுத்துக் காட்டாகும். மிக அண்மையில் கொழும்பு மாநகரமே
வியக்கும் வண்ணம் குமரனுக்கு நடந்த குடமுழுக்கு
7
 
 

விழாவை யாரும் மறந்திடமுடியாது. அதையும் விட ஒரு மடங்கு மேலாக, உற்சவ விழாக்கள் நடைபெற்றன. பக்தகோடிகள் புடைசூழ அந்தணர்கள் வேத ஒலி வானைப் பிளக்க மங்கள வாத்தியங்கள் காணமழை பொழிய அரோகரா சத்தம் நாற்றிசையும் முழங்க புதிதாக ஸ் தாபிக்கப் பெற்ற கொடிஸ்தம்பத்தில் துவஜாரோகனம் (கொடியேற்றம்) மிக சிறப்பாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பாம்புதிருவிழா மாம்பழத் திருவிழா, சப்பரத்திருவிழா, வேட்டைத்திருவிழா தேர்த்திருவிழா, தீர்த்தோற்சவம், பூங்காவனம் என்பன மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அந்தத் தேர்த்திருவிழாவைத் தான் சொல்ல வேண்டும். காரணம் என்னவென்றால் அன்றுதான் யாழ்ப்பாணத்தின் தலைசிறந்த தேவஸ்தானமாகிய நல்லூர்க்கந்தன் தேர்த்திருவிழா எத்தனையோ பக்தர்கள் நல்லூர்க்கந்தனின் தேர்த் தருவிழாவைக் காணமுடியாதவராய் கொழும்பில் இருந்தார்கள். அத்தனை பக்த கோடிகளும் இங்கு அந்த விழாவினைக் கண்டு களித்தனர். அன்று கொழும்பு கொம்பனித்தெரு வீதி, நல்லூர் முருகனின் வீதியாக தான் காட்சி கொடுத்தது. எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகள் ஆனந்தக் கண்ணிர் சொரிய பக்தர்கள் கூட்டம் அரோகரா இசை முழங்க ஏறுமயில் ஏறி ஈசனுடன் ஞானமொழி பேசி , கூறும் அடியார்கள் வினை தீர்த்து, குன்றுருபவேல்வாங்கி, மாறுபடு சூரனை வதைத்து, வள்ளியை மனம் புணர்ந்து அந்த ஆறுமுகமுடைய ஷண்முகள் இச்சா,கிரியா,சக்தி சமேதராய் தேரினிலே இருந்த காட்சி அனைவரையுமே மெய்மறக்கச் செய்தது. குளத்து தண்ணிரோ, ஆற்றுத்தண்ணிரோ சாக்கடைத் தண்ணிரோ கடைசியில் போய்ச் சேர்வது சமுத்திரத்தில் தான். அதைப்போலவே எந்த இன மக்களாக இருந்தாலும் இறுதியில் போய் சேருவது ஒரு இறைவனைத்தான் என்ற தத்துவத்தை நிரூபிப்பது போல அனைத்தின மக்களும் வீதியில் கும்பம் வைத்து முருகனை வரவேற்று அர்ச்சனை பண்ணும்போது, நாம் கண்கலங்கி ஆனந்தக்கண்ணிர் சொரிகின்றோம். இப்படியொரு சிறப்பான உற்சவ விழாவினை கொழும்பு மாநகரினிலே நடாத்தி எல்லோரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய நிர்வாக சபையினருக்கும் அதற்கு ஒத்தாசைகள் புரிந்த அனைத்து அரசாங்க ஊழியருக்கும் நன்றி சொல்வது கொழும்பில் வாழும் ஒவ்வொரு இந்துப் பிரஜையின் கடமையாகும். இந்த ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகமும் உற்சவமும் மிகவும் சிறப்பாக நடக்க உறுதுணையாக இருந்த ஆலய பிரதகுரு சிவழf எஸ் எஸ் சந்திரசேகரகுருக்கள் உற்சவசிவாச்சாரியார் சிவறு சாமி விஸ்வநாத க்குருக்கள் இருவரையும் பாராட்டாமல் இருக்க முடியாது. இன்னும் அந்த முருகன் விழாக்கள் சிறப்புப் பெறவேண்டி நம்பிக்கை கொண்டோரை தயவுடன் காத்து

Page 20
தும்பிக்கையான் தம்பியாய் தூயவரை துவட்டி எம் நெஞ்சமதில் நீங்கா இடம்தனை கொண்ட கொம்பனி தெரு முருகா நின்திருவடி சரணமய்யா எனக்கூறி எல்லாம்வல்ல கலியுக வரதனின் திருபாதகமலங்களை U6xfäg aféOOI60)L(36JITLnIT35.
சிவராத்திரி விரதத்தின் தனிச்சிறப்பு
சிவராத்திரி சிவபெருமானுக்குரியது. மற்ற இரவுகளைப் போல் அல்லாமல் சிவராத்திரி புண்ணியநாளாகக் கருதப்படுகின்றது.நமது மனம் சந்திரனைப் பொறுத்து இயங்குகிறது என்பது நாம் அறிந்த தத்துவம் சந்திரன் தேய்பிளையில் ஒவ்வொரு நாளும் ஓரளவு வடிவத்தில் குறைந்து வருகின்றது. சிவராத்திரி அன்று அது பதினைந்து அம்சங்களில் ஓர் அம்சம் மட்டுமே உள்ளதாக மிஞ்சி நிற்கிறது. ஆன்மீக சாதனைக்குப் பிறகு மனதில் அதன் வியாகூலங்கள் பாவும் இந்த அளவுக்கு குறைந்து விடுவதை அந்த அளவு காட்டுகிறது. அதையும் வெல்லுவதற்குரிய புண்ணிய நாளாகச் சிவராத்திரி கருதப்படுகிறது. அன்று பட்டினி கிடந்து உலக இச்சைகளை மறப்பதும் கண் விழித்திருந்து பலவீனங்களை வெல்லுவதும் மிகப்பொருத்தமாகும். அன்று முழுவதும் பஜனை மூலம் கடவுளை வேண்டுவதும் மிகச் சிறந்ததாகும். சிவரா ஆகிய எழுத்துக்கள் 5,4,2, என்ற எண்களைக் குறிக்கின்றன. திரி என்ற எழுத்துக்கள் 3 என்ற எண்ணைக் குறிக்கின்றன. இதில் 5,42 என்ற எண்களின் மொத்தம் பதினொரு ருத்ரங்களை உணர்த்துகிறது. ஐந்து உணரக்கூடிய புலன்களும் ஒரு மனமும் சேர்ந்து பதினொர் அம்சங்களாக அமைகின்றன. இவை உலகத்தின் பந்த பாசங்களில் இழுத்துச் செல்லப்படுவதைக் கட்டுப்படுத்துவதே ருத்ரனின் அருளாகும். அதனால் ஆத்மா தூய்மை அடைந்து நல்வழிப்படுகின்றது. இந்தப் பதினொரு கதிர்கள் ஆத்மாவிலிருந்து புத்தியை ஒளியேற்றுகின்றன. ஒளியேற்றிய புத்தி மனத்தை விழிப்படையச் செய்கிறது. விழிப்படைந்த மனம் புலன்களை ஆளுகிறது. புலன்கள் அடங்கி வழிபடும்போது வாழ்க்கை ஞானப் பாதையில் செல்லுகிறது. இதை நாம் உணரும் புண்ணிய ராத்திரியே சிவராத்திரி ஆகும்.
சிவராத்திரி அன்று நாம் செய்யும் ஜபதபங்கள் மனதில் விதைக்கும் நல்ல எண்ணங்கள் ஆகியவை நம்மை வாழ்நாள் முழுவதும் வழிப்படுத்தும். அந்த ஒரு ராத்திரியில் நாம் தேடும் நல்லவழி மற்ற நாட்களையும் ராத்திரியையும் சிவராத்திரியாகவே மனதில் விளங்கும்

இருபது இன்றியமையாத போதனைகள்
1. காலை நான்கு மணிக்கு விழித்தெழு. ஜெபமும்
தியானமும் செய். 2. ஜெபம்தியானம்,செய்வதற்கு சித்த ஆசனம்
அல்லது பத்மாசனத்தில் உட்கார். 3. சாத்வீகமான உணவைப் புசி, வயிற்றை
வரம்பின்றி நிரப்பாதே. 4. சாதுக்கள் துறவிகள் ஏழைகள் நோயாளிகள்
கஷ்டப்படுபவர்களுக்கு சேவை செய். 5. உன் வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை
தர்மம் செய். 6. வீரியத்தைக் காப்பாற்று. தனியாகப் படுத்துறங்கு 7. மதுபானம் புகைபிடித்தல் ஆகியவைகளை
விட்டுவிடு. 8. ஏகாதசி அன்று உபவாசம் இருஅல்லது
பால் பழம் மட்டும் உட் கொள். 9. தினந்தோறும் இரண்டு மணி நேரம்
மெளனத்தைக் கடைப்பிடி.
உணவருந்தும்போது பேசாதே. 10. எவ்விதத்திலும் உண்மையே பேசு.
குறைவாகவும் இனிமையாகவும் பேசு. 11. உன்னுடைய தேவைகளைக் குறைத்துக்
கொள். 12. மற்றவர் உணர்ச்சிகளை எப்போதும்
புண்படுத்தாதே. 13. நீ செய்திருக்கும் தவறுகளைப்பற்றி சிந்தனை
ଘs[i]. 14. வேலையாட்களை எதிர்பார்த்திருக்காதேஉன்
வேலையை நீயே செய். 15. காலை விழித்தெழுந்த உடனும் இரவு
உறங்கும் முன்பும் ஆண்டவனை நினை 16. உயர்ந்த நோக்கம், எளிய வாழ்க்கை என்ற
சித்தாந்தத்தை கடைப்பிடி. 17.தியானம் செய்வதற்கு ஒரு அறையை தனியாக
வைத்திரு. 18. ஒரு ஜெபமாலையை கழுத்தில் அணிந்திரு. 19. எல்லோரிடத்திலும் அன்பாக இரு. 20. தினந்தோறும் பகவத்கீதை ஒரு அத்தியாயம்
Lig.

Page 21
நாயகியராய் மாறி
Paramiño
எம்பெருமான் சிவனது புகழ்பரப்பும் திருநெறித்தழிழ் திருமுறையாகும். இது பன்னிரு திருமுறைகளாக வகுக்கப்பட்டு பாரிலுள்ளோர் பயனுறும் வண்ணம் இருந்து வருகின்றது. இவ்வரிய பொக்கிசமான திருமுறைகளுள் சங்ககால இலக்கியம் பாங்கு கொண்ட பாக்களும் பல உண்டு. சமீபத்தில் திருமுறைகளில் அகக்கோட்பாடு என்ற ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய புத்தகத்தைப் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அதன் உந்துதலால் உருவான ஆக்கமே இதுவாகும். இறைவனைக் குறித்துப் பாடப்பட்ட பாக்களில் குறிப்பிட்ட சில பாடல்களை வகைப்படுத்தினால் அவை
தொல்காப்பியரால் வரையறுக்கப்பட்ட
காமப்பகுதி கடவுளும் வரையார் ஏனோர் பாங்கினும் எண்மனார் புலவா
என்ற சூத்திரத்துள் அடங்குவதைக் காணலாம். இதனை அடிப்படையாகக் கொண்டு திருமுறைகளைக் கவனிக்கும் போது நாயன்மார்கள் ஆண்டவனை நாயனாகவும் தம்மை அவன் காதலைப் பெற ஏங்கும் நாயகியராகவும் கற்பனை செய்து பாக்கள் தந்துள்ளதைக் காணலாம். இதற்கு உதாரணமாக மாணிக்கவாசகப் பெருமானின்
பாடலொன்றைக் கவனிக்கலாம்.
ஈசற்கு யாண் வைத்த அன்பின் அகன்று
அவன் வாங்கிய எண் பாசத்தின் காரொண்று அவன் தில்லையின் ஒளி
போன்று அவன்தோள் பூசத் திருநீறு என வெளுத்து அங்குஅவன்
பூங்குழல்யாம் பேசத் திருவார்த்தையிற் பெரு நீளம்பெருங்
கண்களே
இங்கு தேவியினுடைய கண்களிலே இறைவனைக் காண்கிறார் மாணிக்கவாசகர். அதாவது ஈசனிடம் வைத்த அன்புபோல் அகன்று, அவனால் வாங்கப் பெற்ற பாசம் போலக் கறுத்து அவனது தில்லையம்பலம் போல் ஒளிபெற்று அவன் தோள்களில் திருநீறுபோல் வெளுத்து அவனுடைய திருவடிகளைப் பற்றிப் பேசும் திருவார்த்தைபோல நீண்டு விளங்கும் தலைவியின் கண்கள் என்கிறார். எவ்வளவு அற்புதமான கற்பனை? சங்ககாலத் தமிழ் இலக்கியங்களில் உண்டு. அங்கு தலைவன் தலைவி தோழி என்ற நிலையில் சாதாரணமாக உண்டு. ஆனால் ஆண்டவனைப் பாடுகின்ற திருமுறைகளில் திருநெறிய பார்வைகளில் அங்க அவய வர்ணணைகளினூடாக ஆண்டவனைப் பார்க்கின்ற காதற்
 

சுவை கொஞ்சும் பாடல்கள் எவ்வளவு ரம்மியமாக இருக்கின்றன. இவற்றை ஆழ்ந்து பார்க்கும் போது ஒவ்வொரு நபயன்மாரும் காதல் உணர்வினை நன்கு பயன்படுத்தியதாகவே தெரியவருகின்றது. திருநாவுக்கரசு நாயனார் அவர்கள் பதிகமொன்றில்
முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள் மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள் பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள் அன்னையையும் அத்தனையையும் அன்றே நீத்தான் அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத் தன்னை மறந்தாள் தன்னாமங் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தானே
இதிலே பாருங்கள் நாவுக்கரசரது நிலையை நாமத்தைக் கேட்கிறாள். வண்ணம் கேட்கிறாள் ஆரூர் கேட்கிறாள். இவை எல்லாம் கேட்ட மறுகணமே தன்னை மறந்து தன் நாமத்தையும் துறக்கிறாள். எத்தகைய அன்பு? இந்த இவள் யார்? அவள் என்கின்ற பெண் பாலுக்குள் ஒளிந்து நின்று தன் அன்புப் பிரவாகத்தை ஆண்டவனுக்குக் காட்டுகிற திருநாவுக்கரசர் தான் அந்த அவள். அவர் அவளாகி அவனை வேண்டுகின்ற இறைஞ்சுகின்ற அற்புதமான பாடலைத் தான் மேலே காண்கிறீர்கள்.இதைப்போன்று இன்றுமொரு பாடலைப் பாருங்கள்.இதிலே செறிந்துள்ள கற்பனை வளத்தை சங்ககாலப் பாடல்களிலே கூடக் காணமுடியாது.
கருங்கழி காதற்பைங் கானலில் தில்லையெங்
கண்டர் விண்டார் ஒருங்கழி காதர மூவெயில் செற்ற வொற்றைச்
சிலை சூழ்ந்து அருங்கழி காதம் அகலுமென்றுாழ் என்றுஅலைந்து
கண்ணிர் வருங்கழி காதல் வசனங்கள் கூப்பும் மலர்க்
கைகளே
திருநீலகண்டம் உடைய சிவபெருமான் முப்புரம் எரித்திட எடுத்த மலைதனை ஞாயிறு சென்று அணைந்தது கண்டு தாமரையானது தேனாகிய கண்ணிரைச் சிந்தி ஞாயிறு விரைவில் மீண்டும் உதிக்கவேண்டும். என்பதற்காக தன் கைகளைக் குவித்து வணங்குவது போலக காட்சி தருவதால் தலைவிமாட்டு அத்தாமரை அன்பு பாராட்டுவதாக அமைந்துள்ளது. என்பது பொருளாகும். சிவனுடைய கோபாக்கிளியை ஞாயிறாக்கி அந்த ஞாயிறு சிவனை அடைந்ததால் கவலைகொண்டு கண்ணிள் சிந்தி இயற்கையில் ஞாயிறு மறைந்ததும் கூம்புகின்ற தாமரையின் இயல்பை ஞாயிறே திரும்பவும் வாராயோ என்று கைகூப்பிக் கூப்பிடுவது போல் அமைந்த கற்பனைக்கு ஈடு இணை உண்டோ? (இன்னும் வரும்.)
ASTIgE
19

Page 22
பல தெய்வங்களேன்?! பற்பல
மதுங்களேன்?!
-ஞாலக்கோ
இந்து மதம் ஒன்று தான் உருவ வழிபாடு செய்யும் மதம். இந்துக்கடவுளர் அனைத்தும் மனிதனை ஒத்த தோற்றங்களை உடையவர். காரணம் என்ன? ஒவ்வொரு ஜீவராசியும் தன்போல் ஒத்ததை விரும்புவதும், பிறவற்றை ஒதுக்குவதும் இயற்கையே. அது போல மனிதன் தான் விரும்ப வேண்டியதை, வணங்க வேண்டியதை தன் போலவே அமைத்ததில் வியப்பில்லை. இதையே இராமகிருஷ்ண பரகம்சரும் ஓர் இடத்திலே சொல்லியிருக்கின்றார். எல்லா மதங்களும் கடவுள் ஒன்று என்றும், எல்லோருக்கும் கடவுள் பொது என்றும் சொல்லியிருக்கும் போது, பல கடவுள் ஏன் என்கின்ற வினா நம்மிடையே எழுகின்றது. கட்டுரையின் தலைப்பில் உள்ள இந்தக் கேள்விக்கு விடை கிடைக்கும் என்று எண்ணுவோர் மேலே படிக்க வேண்டாம்.படித்து ஏமார்ந்து போக வேண்டாம். எவ்வித விடையும் காணும் நோக்கோடு இந்தக் கட்டுரை எழுதப்படவில்லை. சிறுவயதில் இருந்து அடியேன் மனதில் எழுந்த கேள்விகள் பலவற்றை கருத்துக்களை ,அறிஞர்களாகிய உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டுமென்பதே அடியேனது நோக்கம். அவ்வப்போது கேட்ட சொற்பொழிவுகளிலிருந்து எடுத்த பிழிவுகளையும் வாசித்த கட்டுரைகளிலிருந்து தெரிந்த உரைகளையும் ஆங்காங்கே புகுத்தி அடியேனது சிந்தனையை சிதறவிட்டிருக்கின்றேன். ஆக இது ஒரு முடிவான ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை அன்று. அனைவரது சிந்தனைகளையும் அறிய விரும்பும் ஒரு ஆரம்பம். துறவி ஒருவர் 6 (5 வீட் டிலே பேசிக்கொண்டிருக்கின்றார். இல்லக்கிழவி இரவு உணவு தயாரிப்பதில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது, அங்கு வந்தோர் சமய சம்பந்தமான பேச்சுகளில் விவாதங்களில், ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அப்போது ஒரு எட்டு வயதுக்குழந்தை துறவியைப் பார்த்துக் கேட்கின்றது. பிள்ளையாரோ மிகப்பெரியவர். அவரின் வாகனம் எலி என்கிறார்கள். ஆனை போன்ற பெரிய பிள்ளையார் மிகச்சிறிய எலிமேல் ஏறி இருந்தால் எலி நசுங்கிப்போகாதா? துறவி முறுவலிக்கின்றார்.பின்னர் விடை பகர்கின்றார். எலி பிள்ளையாரின் வாகனமென்று நாம் தான் ஆக்கினோம். பிள்ளையார் எலி மீது எப்போதும் ஏறி அமர்வதில்லை. எலி மூலைமுடுக்கெல்லாம் போகும். அப்படி போகும்போது பிள்ளையாரும் எலியைப் பிடித்துக்கொண்டு மூலை முடுக்கெல்லாம் போய்விடுவார். என்று முடிக்கின்றார். பதில் கேட்ட குழந்தை சாந்தமடைகின்றது. எலி நசுங்கிவிடாதே என்ற ஆறுதல் அந்தக் குழந்தைக்கு,

அடியேன் தொடர்ந்து சிந்திக்கின்றேன். அவ்வளவு தானா விஷயம்.? இல்லை அறிவு எல்லா இடமும் செல்லும் அறிவை முன்வைத்தால் நாமும் எங்கும் செல்லலாம் என்ற தத்துவம் அல்லவா அது? நுண் அறிவு நம்மை எல்லோர்க்கும் முன்வைக்கும். நாம் அறிவை முன்வைத்தால் சிறப்பின் பாலால் தாயுமனந்திரியும் என்றும் மூத்தோன் வருக என்னாது அறிவுடையோனோடு ஆறரசுஞ் செல்லும் என்றும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கட்படுமே என்றும் வரும் வரும் புறநானூத்து அடிகள் இதையல்லவா வலியுறுத்துகின்றன. அறிவை முன்வைப்பதும் அறிவே உருவான விநாயகரை முதல் வணங்குவதும் முறையானதென்பதால் ஆதிமனிதன் இப்படிக் கொண்டிருக்கலாம் என நினை த்துக்கொண்டேன்.
கடவுளர் பலர் ஏன்? புலவர் ஒருவரின் பாடல் அடிகள் தான் மனதில் பதிலாக வருகின்றன. LGOLIC) தெய்வமாகிப் பற்பல மதங்களாகிப் பக்குவப்படியே தோன்றும் பரமனார் பெருமை போற்றி பக்குவப்படி என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் போவதற்கு நமக்கு வாகனம் தேவைப்படுகின்றது. வாகனம் ஒன்று தேவையெனும் போது ஏன் பலபல வர்ணங்களில் பலப்பல தோற்றங்களில் தெருவில் கார்கள் ஒடுகின்றன. பொருள்களை அதிகம் ஏற்றுவோருக்கு அதற்கேற்ப வண்டி தேவை. வசதி வேண்டுவோர்க்கு சொகுசான வண்டி தேவை. பணவசதி அற்றோருக்கு சிக்கனமாக இருக்க கூடிய வண்டி தேவை . ஆக அவரவரின் தேவைக்கு ஏற்பட வண்டி அமைவதுபோல அவரவரின் பக்திக்கும் ஆத்ம திருப்திக்கும் ஏற்பட கடவுளர் நாமங்களும் வடிவங்களும் அமைந்ததில் வியப்பில்லையே! சிவன் என்றும் விஷ்ணு என்றும் முருகன் என்றும்,அம்பிகை என்றும், நாமங்கள் வந்ததில் அதிசயம் இல்லை.
அறிஞர் ஒருவரின் விளக்கத்தையும் இங்கே நாம் பார்க்கலாம். மின்சாரம் இருக்கிறது. அது அருவமான பொருள். அதை நாம் பார்க்க முடியாது. உணர முடியும். ஆனால் அது செப்புக்கம்பியிலே இருப்பதால் நமக்கு எவ்வித பலனும் இல்லை. மின்குமிழில் அது ஒளி கொடுக்கின்றது. வானொலியில் ஒலி கொடுக்கின்றது. அடுப்பில் சுடுகிறது. ஆக மின்சக்தியின் வெளிப்பாட்டிற்கு அந்தந்தத் தேவைகளுக்கேற்ப கருவிகள் தேவைப்படுகின்றன. மின்குமிழிலே சமைப்பதோ அடுப்பிலே ஒளி பெறுவதோ முடியாத காரியம் அதுபோல பலவிதமான சக்திகளாக ஒரு சக்த வெளிப்படுகின்றது. என்ற சமயத்தத்துவத்தை நாம் அறிந்துகொள்ள இந்த விஞ்ஞானம் உதவுகின்றது. இன்னொரு காரணமும் சொல்லலாம். அறஞர் பலர் அனைத்தையும் இறைத்தன்மையோடு தான் பார்த்தார்கள். காக்கைச் కోp56f86ు நந்தலாலா உன் கரிய நிறம் தோன்றுதையே என்று பாரதியும் பொருப்பிடையான்,
20

Page 23
நெருப்பிடையான் காற்றினுள்ளான் என்று நாவுக்கரசரும் பிறரும் இயற்கையில் இறைவனைக் கண்டனர். செல்வத்தை இலக்குமியாகவும் கல்வியை சரசுவதியாகவும் வீரத்தைக் துர்க்கையாகவும் கண்டுகொண்டான். மனிதன் என்று கருதத் தோன்றியது.
முருகனுக்கே இரண்டு பெண்டாட்டி என்று எள்ளிநகையாடித் தமது பலவீனங்களுக்கு சாக்குச் சொல்லும் ஒரு இனம் நம்மிடை உண்டு முருகன் இரண்டு மனம் செய்தகொண்டாரா? கடவுள் திருமணம் செய்வது உண்டா? சிந்திக்க வேண்டும். கந்தபுராணத்தின்படி தெய்வயானை அம்மை தவம் செய்து முருகனை அடைந்தார் என்றும் வள்ளியம்மை முருகன் தினைப்புதத்திலே வேட்டார் என்றும் தெரிகிறது. சைவசமயத்தில் இறைவனை நாயகனாகவும் ஆன்மாவை நாயகியாகவும் பார்க்கும் வழமை உண்டு. மணிவாசகரின் திருவெம்பாவையும் ஆண்டாளின் திருப்பாவையும் இதற்கு உதாரணங்கள் ஆன்மா பல தவம் செய்து பக்குவப்பட்டு இறைவனை அடைவது ஒருவகை இறைவனைத் தெரியாது ஆன்மாவை இறைவன் ஆட்கொள்வது ஒரு வகை. இந்தத் தத்துவத்தையே முருகனின் இருமணங்களும் தெரிவிக்கின்றன. இன்னொரு வகையில் சமத்துவக் கருத்தையும் பார்க்கலாம். தெய்வயானை அம்மையோ அரசன் மகள்.வள்ளி வேடுவரிடை வளர்ந்தவள். ஆக இருவரையும் தமது மனைவியாக ஏற்பதன் மூலம் முருகன்" வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும். கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவர்க்கும் உண்பது நாழி உடுப்பவை இரண்டே, பிறவும் எல்லாம் ஒரொக்குமே” என்ற கருத்தை வெளியிடுவதாகவும் கொள்ளலாமே. மதங்கள் பல இருப்பதும் கடவுளர் பலர் இருப்பது (3UITao (86J -916J J 6jft மனப் பக் குவப் படி ஏற்பட்டவை,என்றே கொள்ளத் தோன்றுகிறது. ஆனால் இப்போது சில அறிஞர்கள் பலமத வழிபாட்டை அறிமுகப்படுத்திக் கொண்டு வருகிறார்கள். இது சரியா என்று கேள்வி எழுகிறது. சமயங்களை கடவுளை அடையும் மார்க்கம் என்றே சொல்கிறோம்.ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு பாதையைக் கூறி நிற்கின்றன. இலண்டனிலே ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் போக 5 அல்லது 6 வழிகள் இருக்கலாம். இவற்றில் ஒன்றை மட்டும் சரியாகத் தேர்ந்தெடுத்து விடுவோமானால் நேரத்துக் குப் (3UITu & சேர்ந்து விடலாம்.எல்லாவழிகளிலும் போகவேண்டுமானால் இலண் டனையே சுற்றிக் கொண் டிருக்க வேண்டியதுதான். ஒரு வழி தெரிந்தெடுப்பதனால் மற்றயவை தவறானவை என்பது அர்த்தமல்ல. அதுபோல எமக்கு ஏதோ ஒரு மதத்திலே நம்பிக்கை வளர வேண்டும்.பல மதங்களிலே நம்பிக்கை வைத்தால் குழப்பம்தான் ஏற்படும்.இதனால் மற்றைய மதங்களை அவமதிப்பதென்றும் ஆகாது.அதோடு மற்றைய மதத்தினை வழிபடுவது போன்று பாவனை செய்வதும் நன்றல்ல.பல மதக் கோயில்களும்
21
G

தவையென்று தோன்றவில்லை அந்தந்த மதத்தவருக்கு அந்தந்தக் கோயில்கள் இருக்கும் போது பலமதக் கோயில்கள் தேவைதானா ன்ற கேள்வி எழும் பல மதங் களையும் ருமைப்படுத்துவதானால் மனித அளவில் தொடர்பு ற்படவேண்டுமே தவிர கடவுள் நிலைக்கு உயர வண்டிய அவசியமில்லை. இது அடியேனது தாழ்மையான கருத்து.சிந்திக்க வேண்டுகிறேன்.
இலண்டன் முரீ முருகனுக்கு
GlGIGI GrifÈHIGIÈFish

Page 24
arr re-rrrrrrrrrr
முருகப்பெருமானுக்குரிய
محے .ந் கள் ܓܰ
முருகப்பெருமானுக்குரிய விரதங்கள் மூன்று அவை வெள்ளிக்கிழமை, கார்த்திகை சஷ்டி ஆகியன.
வெள்ளிக்கிழமை விரதம்
ஐப்பசி மாதம் முதல் சுக் கதிரவாரத்தில் வெள்ளிக்கிழமையில் தொடங்கி முறைப்படி விரதம் அனுஷ்டித்து பின்னர் வெள்ளிக்கிழமைதோறும் விரதம் இருக்க வேண்டும்.
கார்த்திகை விரதம்
கார்த்திகை விரதத்தின் சிறப்பைச் சிவபெருமான்(ஆறு கார்த்திகை பெண்களுக்கு அருளினார். கார்த்திகைட் பெண்கள் குமரக்கடவுளை வளர்த்த காரணத்தால் நன்றிக்குரிய அவர்களுடைய நாளான கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவர். கல்வி,செல்வம்,ஆயுள், தர்மபத்தினி நன்மக்கள் நிலபுலம் யாவும் பெற்று வாழ்வார்கள் என்று சிவபெருமான் அருள் புரிந்தார்.
கார்த்திகை மாதம் பரணி நட்சத்திர நாளில் விரதம் தொடங்கி வழிபாடு செய்து அடுத்த நாள் கார்த்திகையில் முறைப்படி வழிபட்டு விரதமிருந்து அடுத்த நாள் ரோகினியில் (நட்சத்திரநாளில்) நீராடி நித்திய வழிபாடு செய்து அடியார்களோடு கூடி உண்ண வேண்டும். பின்னர் மாதந்தோறும் கார்த்திகையில் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும்.
சஷ்டிவிரதம்
ஐப்பசி மாத வளர்பிறையில் கந்தசஷ்டி விரதப் அனுஷ்டிக்கப்படுகின்றது. அசுரன் சூரபத்மனையும் அவனைச் சார்ந்தோரையும் வதம் செய்து முருகப்பெருமானை வாழ்த்தி விரதமிருந்து வழிபடுப் நாளாக கந்தசஷ்டி அமைகின்றது.
முருகனின் பிறப்பு
சிவனின் விரதங்கள் பலவற்றைப் பெற்றதால் ஆணவமும் அகங்காரமும் தேகதிமிரும் கொண்( அசுரர்கள் சூரபத்மனின் தலைமையில் தேவர்க6ை சிறையிலடைத்து துன்புறுத்தி வந்த காலம் தேவர்கள் இக்கொடுமைகளை பார்வதியுடன் வீற்றிருந்த சிவனிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட சிவன் நெற்றிக்கண்களின் வழியாக குடும் பிரகாசமு.

அதிர்ஷமாக உலகை தடுமாறச் செய்தார். தேவர்கள் பயந்து சிவனின் சீற்றத்தை தணிவிக்குமாறு பிரார்த்திக்கவே சிவனும் அக்னி பகவானையும் வாயுபகவானையும் துணைக்கழைத்தார். அவர்களது ஆதரவால் வெப்பமும் தீப்பொறிகளின் சீற்றமும் தணிந்து கங்கையின் உதவியால் சரவண ப்பொய்கையில் ஆறு அழகிய குழந்தைகளாக சரவணன் ஆகிய முருகன் அவதரித்தார்.
இவர்களைப் பாதுகாத்து வளர்க்க உதவியாக விஷ்ணு கார்த்திகைப் பெண்களாக ஆறுபேரை ஏற்பாடு செய்தார். பின் தாய் சக்தியால் இந்த ஆறு குழந்தைகளும் இணைந்து ஆறுமுகமும் பன்னிருகரமுமான அழகு முருகன் ஆனார். வளர்த்த நன்றிக்காக கார்த்திகைப் பெண்கள் அறுவரையும் நட்சத்திரங்களாக்கி கார்த்திகை தினத்தில் வழிபடும் முருகனடியார்க்கு நன்மைகள் கிடைக்க சிவன் வரம் அருளினார். அத்தோடு முருகனுக்கு காரணப்பெயராக கார்த்திகேயா எனவும் வழங்கச் செய்தார். சக்தி ஆறு பிள்ளைகளையும் இணைத்தல் ஸ்கந்தம் என பொருள்பட பின்னர் இதுவே மருவி கந்தன் ஆனது.
தகப்பன் சுவாமி
பிரம்மாவை பிரணவ மந்திரத்திற்கு பொருள்கூறக் கேட்டு சிறையிலடைக்கவும் பின்னர் சிவன் சுப்பிரமணியரிடம் சிஷ்யனாக பிரணவத்தின் பொருளை கேட்டின்புற்றதும் இதன் காரணத்தால் தகப்பனுக்கே சிறுவயதில் உபதேசித்த சுவாமியாக ஞானத்திற்குக் காரணமாக முருகன் விளங்கினார். இதனால் தகப்பன் சுவாமி என்றும் போற்றப்பட்டார். சுவாமிமலைகும்பகோணம் புனித தலமானது.
காவடி ஏன்?
குறுமுனியான அகத்திய முனிவருக்கு ஒருமுறை கைலாய மலையில் இரு குறுமலைகள் கிடைத்தன. அதனைத் தெற்கே எடுத்துச் சென்று சிவனும் சக்தியும் என பிரதிஸ்மை செய்து பக்தர்கள் வழிபடவேண்டும் என்ற எண்ணத்தில் அவற்றை புர்ச்சவனத்தில் விட்டு பொதியமலை வந்தார். பொதிய மலயிைலே அசுரக்குலத்திலே சுப்பிரமணியரின் வதத்தில் தப்பிப்பிழைத்த இடும்பன் என்பவன் அகத்தியரை வணங்கி தன்னை சீடனாக ஏற்று தெய்வீக ஞானத்தை பெற உதவுமாறு வேண்டினான். அகத்தியரும் அகமகிழ்ந்து அவனை ஏற்று புர்ச்வனத்தில் தான் விட்டுவந்த சிறு மண்மேடுகளை பொதிய மலைக்கு எடுத்து வருமாறு பணித்தார். இடும்பன் அவ்வாறே சென்றான். அவை இரண்டையும் ஒன்றாகத் தூக்க ஓர் உபாயம் தோன்றவே தனது மந்திர ஜபத்தால் பிரம்மாவை வேண்டினான். பிரம்மாவின் அருளால் ஒரு பெரிய தடியும் வாசுகி, அனந்தன், தக்ஷன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் மற்றும் கற்கோடகன் ஆகிய எட்டு பாம்புகளும் கிடைத்தன.தடியின் இருமுனைக்கும்
22

Page 25
அம்மேடுகளை பாம்புகளை கயிறாக்கிக் கட்டினான். தடி நடுவில் தனது தோள்களைக் கொடுத்து சமன் செய்து தூக்கிச் சென்றான்.
பழனி என்ற இடம் வந்ததும் இடும்பன் மிகவும் களைப்படைந்து விடவே பாரத்தை இறக்கி வைத்து சற்றே இளைப்பாறினான். களைப்புத் தீர்ந்து எழுந்து மீண்டும் தூக்க முயன்றவனுக்கு ஆச்சரியம். இரு மேடுகளும்அசையவில்லை. திரும்பி முயற்சித்த போது ஒரு குன்றின் மீது சுப்பிரமணியர் கையில் தடியும் இடுப்பில் துணியுமாக புன்புறுவலுடன் காட்சி தரவே இடும்பன் பரவசமானான். உடனே விரைந்து வணங்கனான் இடும்பனின் மனைவியும் சுப்பிரமணியரிடம் தனது கணவரை மன்னித்து விடுமாறு வேண்டினாள். அன்றிலிருந்து இடும்பனை தனது துவாரபாலகராக்கினார்.பக்தர்களும் காவு - தடியில் தம் வாழ்க்கைச் சுமைகளை காவிச் சென்று முருகனுக்கு வேண்டுதல் செலுத்தும் வழக்கம் காவடியாக உருவெடுத்தது. எடுத்த காவடியில் இடையில் இறக்கி வையாது பிறப்பில் வரும் கஷ்டங்களை முருகளின் அருள் கொண்டு சமாளிக்க திடம் பூண இக்காவடி சந்தோஷத்தை பக்தியை வழங்கும் சின்னமாகியது. காவடித் திருவிழா முடிந்த அடுத்த நாள் இடும்பன் பூசை கோவில்களில் முருக பக்தனான காவடிக்கு வழிகாட்டிய முருகனது துவார பாலகனுக்கு சிறப்பாக நடத்தி தம் சுமைகளை இறக்கி வைத்து வழிபடுவர் பக்தர் கூட்டம்.
சக்தி வேல் வைத்தீஸ்வரன் கோவில் இன்றும் தாய் சக்தியிடம் சூரபத்மன் வதத்திற்கு உதவிய வேல் பெற்ற இடமாக விளங்குகின்றது.இந்த வேல் ஆயுதத்தை பெற்றதால் வேலாயுதன் என்றும் பெயர் வழங்குகின்றது.
சூரசம்காரம்
திருச்செந்தூரிலே சூரபத்மனை வதம் செய்து சூரபத்மனின் வேண்டுகோளின்படி அவனை சேவலாகவும் மயிலாகவும் தமது கொடியில் சேர்த்ததால் சேவற் கொடியோன் என்றும் விளங்குகின்றது.
தெய்வானை
திருப்பரம்குன்றம் மதுரைக்கருகே முருகன் போருக்குப் பின் தெய்வானையை அழகு மணம் புரிந்த காட்சி நிகழ்ந்த இடமாகப் பேணப்பட்டு வருகின்றது.
வள்ளி
வள்ளியை மணம் கொள்ள முருகனுக்கு உதவியாக விநாயகள் யானை வடிவில் வந்த இடம் கம்பன்

கொல்லை ஆகும். யானையைக் கண்டு பயந்த வள்ளி முருகன் வசப்பட்டாள். பின்பு திருத்தணியிலே சென்னைக்கருகே தான் முருகன் வள்ளியை மணம் புரிந்த இடமாக வழிபடுகின்றார்கள்.
பக்தர்கள்
பலர் வாழ்விலும் முருகனின் அற்புதங்கள் அதிகம் கட்டுரை நீண்டுவிடக்கூடும் என்பதால் நினைவு கூர்வதற்காக சிலபக்தர்களின் பட்டியலை மட்டும் தருகின்றோம்.
முகுந்த சக்கரவர்த்தி
வசிட்ட முனிவரிடம் வெள்ளிக்கிழமை விரதம் கந்தசஷ்டி விரதம் ஆகியவற்றின் சிறப்பை கேட்டறிந்தார் சக்கரவர்த்தி அவ்விரதங்களை முறைப்படி அனுஷ்டித்தமையால் முகுந்தற் சக்கரவர்த்தி எல்லா நலன்களும் பெற்று சிறப்புடையவரானார்.
நாரதர்
இவர் சப்தரிசிகளிலும் மேன்மையுற விரும்பி அதற்கான விரதத்தை அருளுமாறு விநாயகக் கடவுளை வேண்டிக்கொண்டார். அவர் அருளியவாறு பன்னிரண்டு ஆண்டுகள் கார்த்திகை விதரமிருந்து மேன்மை அடைந்தார்.
முருகன் அருள் பெற்ற மகான்கள்.
அகத்தியர்,அருணகிரிநாதர், ராமலிங்க சுவாமிகள் ஒளவையா கச்சியப்ப சிவாச்சாரியார், குணசீலர், கவிராஜப்பிள்ளை,நக்கீரர் சிகண்டி முனிவர்,சிதம்பரம் சுவாமிகள்,நல்லியக் கோடான், தண்டபாணி சுவாமிகள்,பாம்பன் சுவாமிகள், முருகம்மையார், பொய்யாமொழிப்புலவர், ஞானவரோதயர்பகழ்கடத்தள், மார்க்கசகாயத்தேவர், முருகதாஸ் சுவாமிகள், என்னும் தண்டபாணி சுவாமிகள் ஆகியோர்,
தேவர்கள் விரதமிருந்து முருகன் கிருபையால் அசுரர்களின் துன்பம் நீங்கி அருள் பெற்றதை நினைவு கூர்வதோடு , கந்தசஷ்டி விரதமானது பக்தர்கள் தங்களது மன இருளை நீங்கி ஞானத்தைப் பெறவும் மோட்சத்திற்கும் முருகனை வழிபடும் விரதமாகியது. முருகனது பிறப்பு முதல் அவனது திருச்செயல்களை கலியுகத்திலும் மறக்காது அக்கலியுகக் கடவுளுக்கு அடியாராகி முக்தி அடைவோமாக
ரவி E-ग्राट

Page 26
/ー -N
நடனக்கலை அன்றும் இன்றும்.
திருமதி. அன்னபூரணி
சத்தியமூர்த்தி ク ܢܠܠ
நம் சம்பிரதாய கலைகளிலே இன்று முதன்மை அடையக் கூடியது என்று சொன்னால் அது பரதக்கலையே. ஒரே சமயத்தில் மனதிற்கும் கண்களுக்கும், காதுகளுக்கும் மகிழ்ச்ச கொடுக்கக்கூடியது பரதக்கலைதான் என்பதில் வியப்பில்லை. இக்கலை மிகவும் பழமையான்து அழகியற் சிறப்பும் , ஆன்மீகச் சிறப்பும் கொண்டது. மனிதனின் பல்வேறு உணர்வுகளையும் சமய தத்துவக் கருத்துக்களையும் நன்கு புலப்படுத்தவல்ல கலையாகும். அது மட்டுமல்ல ஜாதி மதகுல வேறுபாடுகளைக் கடந்து எல்லோரும் கண்டு
சந்தோஷப்படத் தக்க கலையாகும்.
இந்தியக்கலைகளிலே வளமும் சிறப்பும் வாய்ந்த நடனக்கலையின் சிறப்புக்களையும் பயன்களையும்
 

பற்றி பலர் குறிப்பிட்டுள்ளனர். பரதர் நாட்டிய வேதத்தை ஐந்தாவது வேதமென பாராட்டியதோடு மட்டுமல்லாமல் சாஸ்திரங்கள் சிற்பங்களைக்கூட இதிலே காட்டலாம் என்று சொன்னார். கலைச்சுவையுள்ள மக்கள் அனைவருக்கும் இன்பம் தரக் கூடியது நாட்டியமே என்றால் அது மிகையாகாது. இத்தனை சிறப்பு வாய்ந்த நாட்டியக்கலை இற்றைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல் பொருளாதார பண்பாட்டுச் சீர்குலைவுகளாலே மங்கத் தொடங்கின. தமிழகத்தில் சதிர் சின்னமேளம் தேவடியாள் ஆட்டம் என அழைக்கப்பட்டுவந்தன. சமுதாயத்திலே நல்ல குடும்பத்தைச் சேர்ந்த எவரும் பழகுவதற்கு தயங்கினார்கள். பெரியோர்களும் எதிர்த்தனர். ஐந்தாவது குரவர் என்று அழைக்கப்பட்ட யாழ்ப்பாணம் நல்லை நகள் ஆறுமுகநாவலர் கண்டித்து எழுதியும் எதிர்த்தமையும் மிகவும் கவலைக்குரிய விடயமாகும். பிரித்தானியரின் ஆதிக்கத்தினால் இந்தியாவிலே சுதேச கலைகள் புறக்கணிக்கப்பட்டன.இந்தியப்பெண்கள் இக்கலையை கற்கக்கூடாதென்று இங்கிலாந்தில் இருந்து வந்திருந்த ஆங்கில பெண்மணி ஒருவர் கடுமையாகப் பிரசாரம் செய்தார். இந்நாட்களிலே சுவாமி விசேகானந்தர் இந்துசமயத்தின் பெருமை, இந்தியப்பண்பாடு பற்றி எடுத்துரைத் தார். அதுமட்டுமல்லாமல் கலாயோகி ஆனந்த க்குமாரசுவாமி அவர்கள் கலைச்சிறப்பினை ஆங்கிலேயருக்கு எடுத்துக்காட்டினார். இந்திய சாஸ்திரிய நடனத்தின் சிறப்பியல்பை அறிஞர்களும் கலைஞர்களும் அறியச் செய்தார். நாளடைவில் இப்பரதக்கலை சற்று முன்னேற்றமும் மாற்றமும் அடையத்தொடங்கியது.ரஷ்யாவில் இருந்து அன்னபவ்வலோ எனும் கலைஞர் இந்தியா வந்திருந்தார். இவர் மேனாட்டுக்குழு நடனங்களில் ஈடுபாடு கொண்டவர் இவரின் வருகையால் புதியதோர் உற்சாகமும் விழிப்புணர்ச்சியும் கலையுணர்வும் இந்திய மக்களிடையே ஏற்பட்டது. நாட்டிய விற்பன்னர்களாய் இருந்த உதய சங்கள் ராம் கோபால் ரும்மணி தேவி அம்மையார் போன்றோரும் அன்னபஷ்வலோவின் தொட ர்புகளினால் ஊக்கம் பெற்றார்கள். மீண்டும் இந்துக்களின் புனிதக் கலையாம் பரதக் கலையை தூய்மையாக்கி முன்னுக்கு கொண்டுவர விரும்பியவர்களில் இ.கிருஸ்ணய்யரும் குறிப்பிடத்தக்கவர் ஆவர். மனத்துணிவு கொண்டு தாமே பெண்வேடம் கொண்டு இக்கலையின் சிறப்பினை பலருக்கு அறிமுகப்படுத்தினார். சினிமா,நாடக அரங்கு அரசியல்மேடைகளிலும் ஆடினார். பரதக்கலையின் சிறப்பினை அழகினை தூய்மையினை படித்தவர்கள் பலர் உணர்ந்தனர். பத்திரிகைகளிலே நடனத்தின் சிறப்புப் பற்றி கருத்துக்கள் விவாதங்கள் வெளிவந்தன. இழிவான கீழ்த்தரமான நிலையில் இருந்த நாட்டியம் என எண்ணிய மக்கள் இதன் தன்மையையும் சிறப்பினையும் உணர்ந்து கொள்ளத் தொடங்கினார்கள்.

Page 27
கிருஸ்ணய்யர் தனது முயற்சியைக் கைவிடவில்லை. / தொடர்ந்தார். இப்பணியால் மறைந்திருந்த கலைஞர்கள் பலரை வெளியிலே கொண்டு வந்தார். இவர்களிலே மரபுவழிவந்த நாட்டியக்கலைஞர் மரபிலே வந்தவர் அபிநயசரஸ்வதி என அழைக்கப்பட்ட பாலசரஸ்வதி. இவரிடம் இயற்கையாகவே அபிநயம் காணப்பட்டது. கலைஞர்கள் பலர் பரதநாட்டியத்தை அறியத்தக்க வகையிலே இவர் மூலம் பரதத்தின் சிறப்பினை வெளிப்படுத்தினார். காலப்போக்கிலே கண்ணியமுள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் மூவர் நாட்டிய வரலாற்றிலே புதிய அத்தியாயத்தை தொடங்கினர். குமாரி பாரதி மயிலாப்பூர் கெளரி அடையாறு ருக்மணி இவர்கள் மூவரும் தத்தம் குடும்பக்கட்டுப்பாடுகளை மீறி துணிகரமாக நாட்டியத்தினை நன்கு பயின்று புகழ்பெற்றனர். இவர்களைத் தொடர்ந்து பலரும் பரதம் பயிலத்தொடங்கினர். ருக்மணிதேவி அம்மையார் பரதக்கலையினை நன்கு சிறப்புற வளர்த்து சீரடையச்செய்யும் நோக்குடனே அடையாறிலே கலாசேத்திரம் எனும் பெரிய கலைநிறுவனத்தை நிறுவினார். பரதக்கலையின் சிறப்பை உணர்ந்த பலரும் பரதம் கற்கத்தொடங்கினார்கள். மேலும் பரத நாட்டியம் கர்நாடக இசை போன்றவை இப்போது பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்கள் ரீதியிலும் கற்பிக்கப்படுகின்றன.இவ்வகையிலே இக்கலை முக்கியத்துவம் புதுப்பொலிவு சிறப்பு பெறு கின்றன.தமிழகத்தைச் சேர்ந்த பிரபல நர்த்தகியும் நடன ஆசிரியையுமான செல்வி பத்மா சுப்பிரமணியம் இந்திய நடனங்களிலும் சிற்பங்களிலும் கரணங்கள் எனும் பொருள் பற்றி ஆராய்ந்து அண்ணாமலை பலகலைக்கழகத்திற்கு சமர்ப்பித்து கலாநிதி பட்டம் பெற்றவர். இவர் செல்வியாகவே இருந்து மீண்டும் \ மீண்டும் ஆராய்ச்சிகள் புதுமைகள் செய்து வருவது / குறிப்பிடத்தக்க தொன்றாகும்.தமிழகத்திலே ஏற்பட்ட புத்துயிரும் புத்துணர்வும் தொடர்ந்து எம் தாய்நாடான இலங்கையிலும் பரவியது. இக்கலையை கற்பித்து வளர்த்து வருகின்றனர். அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு கலை நிறுவனங்களிலும் ஒரு பாடமாக கற்பிக்கத்தொடங்கிவிட்டார்கள். நாட்டியக்கலை மறுமலர்ச்சியிலே நாட்டியம் மீண்டும் சிறப்படையும் போது அது எல்லோரும் எளிதில் விளங்கக் கூடியதாக மட்டுமன்றி அதன் புனிதத்தன்மையை காப்பதற்காகவும் பழமையில் இருந்து விலகாது புதிய வழிகளில் வளர்ச்சி ஏற்படவும் எம்மவர் முன்வுருதல் வேண்டும்.
வாழ்க தமிழர்கள்
வாழ்க கலைகள்

தங்கை நாதம்
இம் மாதம் 9ம் திகதி சனிக்கிழமை மாலை பார்க்கிங் புறோட்வே தியேட்டரில் லண்டன் பூரீமீனாட்சி பரத நாட்டியப் பள்ளியினரால் ஒழுங்கு செய்யப்பட்ட சதங்கை நாதம் என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறு பிள்ளைகளிலிருந்து பெரிய பிள்ளைகள் வரை நிகழ்ச்சியில் பங்கு பற்றி இருந்தார்கள்.மண்டபம் நிரம்பியிருந்தது. இடைவேளைக்கு முன் சிறு பிள்ளைகளின் கூட்டு நட நிகழ்ச்சிகளும், இடைவேளைக்குப் பின் ருெம்: பெரிய பிள்ளைகளும் பங்குபற்றியிருந்தார்கள் இடைவேளைக்குமுன் ஆச்சரியம் கலந்த வியப்புணர்வும் இடைவேளைக்குப்பின் ரசனை கலந்த கலையுணர்வும் ஏற்பட்டன. நடனங்களினி போது சிறுபிள்ளைகளாகட்டும் பெரிய பிள்ளைகளாகட்டும் தாளம் தப்பாது ஆடியமை பாராட்டுக்குரியதே நாட்டிய நாடகத்தில் சிவபெருமானாக நடித்த பெண்ணின் சிவ தாண்டவம் பார்வையாளர்களை நன்கு கவர்ந்ததுடன் உடனடியாகவே கைதட்டலை வாங்கியமை குறிப்பிடத்தக்கது நிகழ்ச்சிமுடிவுகளின் பின் மேடை அமைப்பாளர்கள் மேடையில் தாம் விரும்பியபடி அசைந்தமை ஏற்றுக் கொள்ளத்தக்கதா இல்லை. இக் குறைபாட்டை இனிவரும் நிகழ்ச்சிகளில் அமைப்பாளர்கள் கவனிக்கவேண்டும். நாட்டிய நாடகங்களுக்கான மேடை அமைப்புகள் மண்டபு நிர்வாகத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டமை கவலைக்குரிய ஒன்று தான் ஆனாலும் அந்தக் குறையினை பிள்ளைகள் தங்கள் ஆட்டத் திறமையினால் போக்கிவிட்டார்கள். மொத்தத்தில் நிகழ்ச்சி நன்றாகவிருந்தது. இதற்கு நாட்டியப் பாடசாலையின் ஆசிரியைக்கு கலசம் சார்பில் எமது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறோம். لر ܢܓܠ 一へ - صميم
தவத்திரு விபுலானந்த அடிகளாரின் 100ற்றாண்டுப் பாமலர் ஆசிரியர் - கவிஞர் ஞானமணியம் வெளியீடு- பண்டைத் தமிழ்க் கிராமிய அரங்கம்
23 பக்கங்களைக் கொண்ட இக் கவிதைத் தொகுப்பு கிடைக்கப் பெற்றோம். அடிகளாரைப்பற்றி பல பார்வைகளில் கவிதைகள் ஆக்கப்பட்டுள்ளன.இலகு தமிழில் இசையோடு பாடத்தக்கவண்ணம் ஆக்கப்பட்டுள்ளன.
சேசெல்சு விநாயகர் பாமாலை ஆசிரியை-சி. சரோஜினிதேவி வெளியீடு- ஆசிரியை விநாயகரைக் குறித்த பாக்கள் அடங்கியுள்ளன.அழகான தமிழில் இலக்கண சுத்தத்தோடு ஆக்கப்பட்டுள்ளன.இதன் விற்பனையால் வரும் பணம் சேசெல்ஸ் விநாயகள் ஆலயத்துக்கே கொடுக்கப்படும்
என குறிப்பிடப்பட்டுள்ளது. N ノ

Page 28
யாழ்-பண்ணாலை சைவப்பெரியார் கா. கதிர்காமத்தம்பி
மறவாச் சிந்தையரான سکتع
மெய்யடியார்கள் பலர் காலத்திற்குக் காலம் இறைவன் மீது அருட் பாசுரங்கள் பலவற்றை பாடி இருக்கின்றனர். இவற்றுள் சம்பந்தரின் தேவாரப் பதிகங்கள் தொடக்கம் சேக்கிழார் பெருமானது பெரிய புராணம் வரை பாடப்பட்ட பாசுரங்கள் பலவற்றின் தொகுப்பே பன்னிரு திருமுறைகளாகும்.
பன்னிரு திருமுறைகள் சைவத்தமிழ் மக்களால் பெரிதும் போற்றப்பட்டு வருகின்றன. தமிழ் வேதமாகக் கொண்டு ஆலயங்களிலும் இல்லங்களிலும் ஒதப்படுபவை - சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய அருட்பாக்கள் ஏழு திருமுறைகளாக வகுக்கப்பட்டிருக்கின்றன.
சம்பந்தரின் பாசுரங்கள் முதல் மூன்று திரு முறைகளாகும். அப்பருடைய பாசுரங்கள் அடுத்த மூன்று திருமுறைகளாகும். சுந்தரர் பாடிய பாடல்கள் ஏழாம் திருமுறையாகும். இம்மூவரும் பாடிய பாடல்கள் தேவாரம் எனப்படும். தேவாரம் என்ற சொல்லிற்குத் (தேவ -ஆரம் ) தெய்வத்திற்குச் சூட்டப்படும் பாமாலை என்றும் (தே-வாரம் ) தெய்வத்தின் மீது அன்புடன் பாடப்படும் இன்னிசைப் பாடலென்றும் பொருள் கூறுவர். தேவாரம் பாடிய மூவரும் தமிழகத்தில் பக்திப்பிரவாகம் பெருக்கெடுத்து ஓடிய பல்லவப் பேரரசர் காலத்தில் வாழ்ந்தவர்கள்.
ஞானசம்பந்தர் இயற்கையிலேயே இறைவனைக் கண்டு மகிழ்ந்தவர். துன்பம் அறியாத குழந்தை உள்ளத்தை அவருடைய பாடல்களில் காணலாம். உலக அனுபவத்தால் எழுந்த ஆழ்ந்த கருத்துக்கள் அப்பரின் தேவாரங்களிலேயே தெரியக் கிடக்கின்றன. அப்பர் திருத்தாண்டகங்கள் மனத்தை உருக்கும் பெற்றிவாய்ந்தவை.
திருத்தாண்டகங்களின் சிறப்பு நோக்கிய சைவச் சான்றோர் அப்பரை,தாண்டக வேந்தர் என்றும் அழைக்கலாயினர். மூவருள்ளும் உலக வாழ்வோடு ஒட்டி வாழ்ந்தவர் சுந்தரர். அவர் இறைவன் தோழமை பெற்று உரிமை பாராட்டியமையை அவர் பாசுரங்கள் பலவற்றில் காணலாம். எட்டாம் திருமுறையில் அடங்குபவை மாணிக்கவாசர் பாடிய திருவாசகமும்
26
 

திருக்கோவையாரும் ஆகும். மாணிக்கவாசகள் சொல்லச் சொல்ல அழகிய பொன்னம்பலவனே
திருவாசகப்பாடலை பிரதி செய்தான் என்று கூறுவர். பாவை பாடிய வாயால் கோவை பாடுக என்று இறைவன் ଓ ରj ୱେd l மாணிக் கவாசகர் திருக்கோவையாரைப் பாடினார். திருச்சிற்றம்ப லவனையே பாட் டுடைத் தலைவனாகக் கொண்டமையால் இதைத் திருச்சிற்றம்பலக் கோவையார் என்றும் வழங்குவர்.
ஒன்பதாம் திருமுறையில் அடங்கியவை திரு விசைப்பா திருப்பதிகங்களும் சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டும் ஆகும். திருவிசைப்பா திருப் பதிகங்கள் சேந்தனார், திருமாளிகைத்தேவர் முதலிய ஒன்பதின்மரால் பாடப்பட்டவை. இறைவனை பல்லாண்டு வாழ்க என வாழ்த்திப்பாடும் பாட்டு திருப்பல்லாண்டு ஆகும். ஒரு பொழுது தில்லை

Page 29
நடராஜப்பெருமானின் மார்கழிமாதத் திருவாதிரைத் திரு விழாவிலே தேர்ச் சில்லுகள் சேற்றிலே அழுந்தியமையினாலே தேரோடாது தடைப்ப ட்டிருந்தது. அப்பொழுது மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள் என்று தொடங்கி 13 பாசுரங்களைக் கொண்ட பதிகத்தைச் சேந்தனார் பாடியதும் தேரசைந்து ஓடி இருப்பைச் சேர்ந்தது என்பது
வரலாறு.
திருமூலரது திருமந்திரம் பத்தாம் திருமுறையாகும். திருமூலர் மூலன் உடம்போடு மூவாயிரம் ஆண்டுகளில் இருந்து ஆண்டுக்கொரு பாடலாக மூவாயிரம் பாக்களைப் பாடியுள்ளார். எங்களுடைய சமயத் தத்துவங்களைக் குறிக்கும் மிகப்பழைய தமிழ் நூல் இதுவேயாகும் இந்நஎலில் செல்வம், கல்விமன ஒருமை, ஒழுக்கம் முதலிய நல்வாழ்வுக்கான சாதனங்கள் நுட்பதிட்பமாக விளக்கப்பட்டிருக்கின்றன. முப்பொருள் மூவகை உயிர்கள் மும்மலம் நல்வகை நெறிகள், திருநீறு, திருவைந்தெழுத்து, திருக்கூத்து ஆதியாம் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் நூல் முழுவதும் விரைவிக்கிடக்கின்றன. அன்பே சிவம் என்பதே திருமந்திரத்தின் சாரம்.
நாற்பது கோத்திர நூல்களின் தொகுதியே பதினோராம் திருமுறையாகும். இதில் முதலாவதாக விளங்குவது திருவாலவாய் இறைவனால் அருளிச் செய்யப்பட்டதாகக் கொள்ளப்படும் திருமுகப் பாசுரம் இப்பாசுரம் பாணபுத்திரனுக்குப் பொருள் உதவும்படி சிவபெருமானால் சேரமான் பெருமான் நாயனாருக்கு அனுப்பப்பட்ட திருமுகம் என்பர். இது தவிர பட்டினத்தடிகள் ,காரைக்காலம்மையார், நக்கீரர், நம்பியாண்டார் நம்பி, என்போர் உட்பட பதினொருவர் பாடிய நூல்கள் இத்திருமுறையில் இடம்பெறுகின்றன. சோழவள நாட்டை ஆண்ட ராஜராஜன் வேண்டுகோளின் படி நம்பியாண்டார் நம்பி, அருட்பாக்கள் பலவற்றையும் சேர்த்து பதினொரு திருமுறைகளாக வகுத்தார். (அரசனும் நம்பியும் சேர்ந்து தேவாரங்களுக்கு இசைவகுக்க விரும்பினர். திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபில் வந்த பெண் ஒருத்தியைக் கொண்டு பதிகங்களுக்கு பண் வகுப்பித்தனர். )
சேக்கிழார் பெருமான் அருளிச்செய்த பெரிய புராணம் பன்னிரண்டாம் திருமுறையாகச் சேர்க்கப்பட்டது. குன்றத்தூரில் அவதரித்த தெய்வச் சேக்கிழார் பெருமான் ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியாகிய இறைவனால் உலகெலாம் என்று அடி எடுத்துக்கொடுக்க அடியார்கள் வரலாறுகள் பற்றி பாடியருளினார். முதலில் பொதுவாக திருத்தொண்டர் சிறப்புப் பற்றியும் அடுத்து தில்லைவாழ் அந்தணர்கள் பற்றியும் திருக்கைலாய உயர்வு பற்றியும் பாடியபின் 63 திருத்தொணடர்கள் வரலாற்றை விரிவாகவும் ஒன்பது தொகை அடியார்கள் பற்றி குறிப்பாகவும் பாடி அருளினார்.
மாலறநேயம் மலிந்தவர் வேடமும் ஆலயந்தானும்
c
LIlS
Є
ତ୍ରିତ ।
27

அறனெனத் தொழும் அடியார்கள் பற்றிய வரலாறு ஆதலின் திருத்தொண்டர் புராணம் என்றும் சொல்லுவர். உலகெலாம் என்பது ஐந்தெழுத்து மந்திரத்தைக் குறிக்கும் பதமாக உள்ளது. இந்த உலகெலாம் என்ற பதத்தைத் தெய்வச் சேக்கிழார் திருஞானசம்பந்தர் புராணத்தினால் உய்ய உலகெலாம் ான நடுப்பகுதியிலும் மன்னுளார் அடியார் வான் புகழ் நின்றதெங்கும் நிலவி உலகெலாம் என் இறுதியிலும் அமைத்து அருளியமை, இறைவன் திருவருளையும் அவன் திருவடி எய்திய அடியார்கள் பெருமையையும் நன்கு உணரலாம்.(பெரிய புராணத்தில் 2ம் திருமுறை 4256 அருட்பாக்களைக் கொண்டுள்ளது)
திருஞானசம்பந்தர் தேவாரம் 458 திருநாவுக்கரசர் தேவாரம் 3O64 சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம் 1Ο926
oாணிக்கவாசகள்திருவாசகம்,திருக்கோவை 1058 9ம் திருமுறை 50 பாடல்கள் Oம் திருமுறை திருமந்திரம் 3069 Iம் திருமுறை 40 தோத்திரங்கள் 1588 2ம் திருமுறை, பெரிய புராணம் 4255
பன்னிரு திருமுறைகளிலும் மொத்தம் 18289 அருட்பாக்கள் உண்டு. சிவாலயங்களிலும் திருமட ங்களிலும் ஞானசம்பந்தர் குருபூசையில் ஆரம்பித்து சுந்தரர் குருபூசையில் நிறைவு பெறக்கூடியதாகப் பன்னிரு திருமுறைகளும் ஒதப்படுவதைக் காண
ADITLo.
ஆலயங்களில் பஞ்சபுராணங்களே அதிகமாக ஒதப்படும். நமக்குப் பெருகிய அன்பின் மிக்க அர்ச்சனை பாட்டேயாகும். என இறைவன் சுந்தர மூர்த்தி நாயனாருக்கு அருளிய திருவாக்கைக் கருத்திற்கொண்டு தமிழ் வேதமாகிய திருமுறைகளை ஒதிப் பேரின்பப் பெரு வாழ்வு வாழ்வோமாக!
திருச்சபையும் கனகசபையும் ஒன்றாக இணைந் தம்பரத்திருத்தலம் தத்துவரீதியானது. பொன்னம்பலத்தி ன்பது தங்கக்கலசங்கள், ஒன்பது சக்திகள் அறுபத் ான்கு கைம்மரங்கள் அறுபத்து நான்கு கலைகளை றிப்பவை. அதில் வேயப்பட்டிருக்கும் 21600 ஒடு னிதன் ஒவ்வொரு நாளும் விடும் சுவாசத்தின் ண்ணிக்கையாம். பங்கே பொருததப்பட்டுள்ள 72000 ஆணிகள் மனிதனுடைய வாச சஞ் சாரத்திற்கு ஆதாரமான நாடிகளின் ண்ணிக்கையாம் னிதனின் இதயம் உடலின் நடவே இல்லாது இடப்புறம் ள்ளியிருக்கிறது. அதுபோலவே சிதம்பர ஆலயத்தின் ர்ப்பக்கிரகம் மத்தியில் இல்லாமல் சற்றுத் தள்ளி மைந்துள்ளது. னகசபையிலுள்ள 18 தூண்களும் 18 புராணங்களையும் வற்றிற்கு செல்லும் 5 வெள்ளிப்படிகள் பஞ்சாட்சரத்தை ணர்த்துகின்றன.

Page 30
0 ஆத்மா என்பது நம்முடைய உடலில் எங்கே இருக்கிறது அதை நாம் எப்படி உண ருகிறோம்? அது நம்மை எப்படி இயக்குகிறது.?
ஒரு செடிக்குத் தண்ணீர் விடுகிறபோது நாம் தனித்தனியாக இலையூ காய், என்று பிரித்துத் தண்ணீர் விடுவதில்லை. உரம் இடுவதும் இல்லை. வேரில் இடப்படுகின்ற நீரோ உரமோ,வேர் மூலமாகத் தான் செடி முழுவதுக்கும் பரவுகிறது. அவ்வாறு செடி வளருவதற்கான சகலசக்தியையும் அளிக்கிறது. இந்த வேரை நாம் கண்ணால் பார்க்கிறோமா?இல்லையே? சூரியன் உதயமாகித் தனது ஒளிவெள்ளத்தை ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியே பாய்ச்சுவது கிடையாது. ஆனால் ஒவ்வொரு பொருளும் சூரியஒளியின் பயனைப் பெற்றுவிடுகின்றது. இவ்வாறு ஒவ்வொரு செயலையும் உன்னிப்பாகக் கவனிக்கிறபோது மூலத்தை மட்டும் கவனித்தால் விளக்கம் தானே தெளிவாகி விடுகிறது. நமது எல்லா செயல்களுக்கும் மூலமாக ஒன்று இருக்கிறது. அந்த மூலமே முடிவில்லாத இந்த வாழ்க்கைக்கு ஆணிவேராகும். அந்த ஆணிவேரே நமது ஆத்மா . இந்த ஆத்மாவுக்குள் ஒரு சக்தியை உயிர்ப்பித்தாலே எஞ்சியவை தானே உயிர்த்துவிடும். நம்முடைய எல்லா செயல்களும் இலையூகாய் என்றால் அதற்குரிய ஆணிவேரே நமது ஆத்மா. நம்முடைய எல்லா செயல்களுமே ஒளிவெள்ளத்தை அடைகின்ற தனிப்பொருட்கள் என்றால் அந்த சூரியன் அதற்குரிய ஆத்மா. ஆத்மா தெளிவடைந்தால் அறியப்பட்டால் அதனால் அனைத்துப்பொருட்களும் ஆகர்ஷிக்கப்பட்டு அத்தனையும் தெளிவடைந்துவிடும். ஒவ்வொரு செயலுக்கும் தனிச் சிந்தனை என்பதோ தனிச்செயற்பாடு என்பதோ தனித் தீர்வு காணவேண்டிய கட்டாயத்திலிருந்து நாம் மீண்டுவிடலாம்.
பெரியவர் இராமமூர்த்தி மெளனவேள்வி என்ற நூலிலிருந்து
0 நமது ஐம்புலங்களிலிருந்து முக்கியமாக நாக்கை கட்டுப்படுத்த வேண்டும் என்று சொல்வது ஏன்? நாவை அடக்கினால் நாம் ஞானியாகி விடுவோம் என்று சுலபமான வழி ஒன்றை நமக்குக் கற்றுக்கொடுக்கிறார் பதஞ்சலி மகரிஷி. நமது மதத்தில் அதனால் தான் உணவை கைவிட்டு விரதம் இருப்பதையும் வாய்திறந்து பேசாமல் மெளனமாக மிகச்சிறப்பாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். நமது உடம்பில் விளையும் பல்வேறு இச்சைகளையும் ஆசைகளையும் தூண்டுவது நாம் சாப்பிடும் உணவு தான்.
நம்முடைய மன அமைதியைக் குலைப்பது நாம் உண்ணும்
28
 

ருசி மிகுந்த உயர்ந்தரக உணவு வகைகள் தான். கொஞ்ச நாளைக்கு எளிய உணவைச் சாப்பிட்டுப் பாருங்கள். உங்கள் உடலும் உள்ளமும் வழிக்கு வந்துவிடும். உங்கள் நாக்கும் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பட்டுவிடும். அதேபோல அளவோடு பேசக்கற்றுக்கொள்ளுங்கள். பேசுவதை இனிமையாகவும் பிறரைப் புண்படுத்தாமலும் பேசக்கற்றுக்கொள்ளுங்கள். உரக்கப் பேசாமலிருங்கள். உங்களால் கோபப்படவே முடியாது. வம்பு பேசாமல் இருக்கப்பழகுங்கள். எல்லோரிடமும் நீங்கள் நட்புடன் பழக முடியும். உங்களது சக்தியையும் திறமையையும் சுட இது அதிகப்படுத்தும். உங்கள் நாவின் ருசி , நாக்கின் பேச்சு இரண்டையும் கட்டுப்படுத்துவதைப் பொறுத்துத்தான் உங்கள் வாழ்க்கை இருக்கிறது. இதைச் சரியாக செய்தால் பிறபலன்கள் தாமாகவே வந்து சேர்ந்துவிடும்.
பகவான் பூரீ சத்யசாயிபாபா
-) இந்துமதம் கடவுளின் தத்துவத்தை மிக உயர்வாக விளக்கி இருக்கும்போது, பொம்மைகளிலும் சித்திரங்களிலும் ஆண் டவனை வைத்து வணங்குவது சரியாகுமா?
உலகத்தில் எல்லா பொருள்களிலும் எல்லா உயிர்களிலும் கடவுள் இருக்கிறார். ஆராதித்துப் பூசை செய்யும் மூர்த்தி ஒரு சின்னம் மாத்திரம் அல்ல.எங்கும் உள்ள கடவுள் அந்த மூர்த்தியிலும் வீற்றிருக்கிறார். பூஜைக்கு அமைத்துக்கொண்ட விக்கிரகத்தை நமது பெரியோர்கள் அர்ச்சாவதாரம் என்று ஓர் அவதாரமாகவே பாவித்து வந்திருக்கின்றார்கள். ராமன், கிருஷ்ணன் என்பதைப் போல இதுவும் ஒரு நிரந்தர அவதாரம் கம்பத்திலும் மீனிலும் பன்றியிலும் தசரதன் மகனிலும் அவதரித்தது போல இந்த அர்ச்சாவதார மூர்த்தி விக்கிரகங்களிலும் தமது பக்திக்கு இணங்கித் தோன்றுகிறார். அதனால் தான் நாயன்மார்களும் ஆழ்வார்களும் அவற்றில் இறைவனைக் கண்டு மனம் உருகிப் பாடமுடிந்தது. மனத்தை ஒன்றித்தும் தியானித்தும் பாடியும் ஆடியும் மெய்மறக்க முடிந்தது. தெருவில் குழந்தைகள் விளையாட்டாகத் திருவரங்கக் கோயிலையும் பள்ளிகொண்டான் உருவத்தையும் மண்ணில் கோடாக வரைந்திருந்ததைப் பார்த்து உஞ்ச விருத்திக்குத் சென்று கொண்டிருந்த ராமானுஜர் தரையில் விழுந்துதெண்டன் சமர்ப்பித்து சர்வேசுரனைத்தியானித்ததாகச் சொல்லப்படுவதுண்டு. தாம் மரியாதைக்குரியதாகக் கருதி செயற்கைப் பதுமைகளிலும் சித்திரங்களிலும் ஆண்டவனை நினைந்து வழிபட்டால் அது முற்றிலும் சரியே. அதில் அறியாமை ஏதும் இல்லை.
ராஜாஜி ராமகிருஷ்ண உகநிஷதம்என்னும் நூலிலிருந்து

Page 31
மார்க்கண முன்னொரு காலத்தில் மிருகண்டு என்ற முனிவர் இருந்த காலம் பிள்ளை இல்லை.அதனால் இருவரும் சிவபெருமா? வாழும் கெட்ட பிள்ளையோ அல்லது 16 வருடம் வாழும் பதினாறு வயது வாழும் நல்ல பிள்ளை வேண்டும் என்றார்க: அவர்களுக்கு சில காலத்தில் ஒரு அழகான குழந்தை சிறப்பாக இருந்தது. குழந்தைக்கு மாாக்கண்டேயர் என்று கவலை கொண்டனர். மார்க்கண்டேயர் அவர்களை ஏ நடந்ததைச் சொன்னார்கள். மார்க்கண்டேயர் ஒரு சிவலிங்கம் அமைத்து வழிபட்டார். கயிற்றை வீசினான்.மார்க்கண்டேயர் சிவலிங்கத்தைக் கட உதைத்தார்.மார்க்கண்டேயர் அன்று தொடக்கம் என்றும் பத
விதுரன் இரகுநாதன்(வயது 12) நியூமோல்டன்
மாப்பிள்ை கல்யாணம் முடித்து மாப்பிள்ளை தன் மாமியார் வீட்டிர் அழைத்தார். வீட்டில் நிறைய ஆட்கள் இருந்தார்கள். மாப் அவர் ஒரு சிறிய அறைக்குள்ளே போனார். அன்று முழுநாளும் மாப்பிள்ளைக்கு நல்ல சாப்பாடு க இருந்தது. அந்த அறைக்குள் ஒரு சட்டி நிறைய அரிசி இ போட்டார். அரிசியைக் கடிக்கப் போய் பல் எல்லாம் : இருக்கவில்லை. இதனால் மாப்பிள்ளை ஒன்றும் செய்யமுடிய சில நேரம் கழித்து மாமியார் அவ்வறைக்குள் வந்தார். த தனது கணவரை அழைத்தார்.மாமனார் மருமகனின் கன்னத் வைத்தியர் வந்து மாப்பிள்ளையின் வாயைத் திறந்து பார்த்து இதைப்பார்த்து எல்லாரும் சிரித்தார்கள். பின்பு மாமியார் தன் மாப்பிள்ளைக்கு சோறும் நல்ல கறிகளு தீர்ந்தது dif60 (JT bo6O)6) LLJIT நால்வர் தமிழ்க் கலை நிலையம்
முருகேசு யோகலிங்கம் ஞாபகா மேற்படி கட்டுரைகளுக்
0. d பெற்றார்களுக்கொரு அன்பு வேண்டுகே எழுத்துலகில் இளைய நெஞ்சங்கள் பகுதியை உங்கள் பிள்ளைகளு எமது பிள்ளைகள் தமிழில் எழுதவும் தமிழில் சிந்திக்கவும் கை உருவாக்கினோம். உங்கள் பிள்ளைகளின் ஓய்வு நேரத்தை நன்கு 1 மட்டுமல்ல இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்கே அளப்பரிய உதவியாக இணை ஆசிரியர்கள்
 

drLur ார். அவர் மனைவி பெயர் மருதவதி. இருவருக்கும் பல னை வழிபட்டார்கள். சிவபெருமான் தோன்றி நூறு வயது நல்ல பிள்ளையோ வேண்டும் என்று கேட்டார்.அவர்கள் 1.சிவபெருமான் அப்படியே வரம் கொடுத்தார். பிறந்தது. அந்தக் குழந்தை வளர்ந்து எல்லாம் படித்து பெயரிட்டனர்.அவருக்கு பதினைந்து வயது வர பெற்றோர் ன் கவலைப்படுகின்றீர்கள் என்று கேட்டார். அவர்கள்
அவருக்கு பதினாறு வயது வந்ததும் யமன் வந்து பாசக் ட்டிப் பிடித்தார்.உடனே சிவபெருமான் தோன்றி யமனை நினாறு வயதோடு சிவனை வழிபட்டார்.
IIufar Uf
]குப் போனார்.மாமியார் தனது மருமகனை வீட்டிற்குள் பிள்ளைக்கு ஆட்கள் இருந்தது பிடிக்கவில்லை. அதனால்
கிடைக்கவில்லை.அதனால் அவருக்கு மிகவும் பசியாக lருந்தது. மாப்பிள்ளை அந்த அரிசியை எடுத்து வாய்க்குள் உடையாமல் தப்பினார். அரிசியைத் துப்ப ஒரு இடமும் ாமல் இருந்தார். னது மருமகனின் வீங்கிய கன்னத்தைப் பார்த்து பயந்து தைப் பார்த்துவிட்டு வைத்தியரை அழைத்தார்.
வாயினுள் அரிசி இருப்பதை எல்லோருக்கும் காட்டினார்.
நம் சாப்பிடக்கொடுத்தார். மாப்பிள்ளையின் பசி அதன்பின்
ர்த்த பரிசுத் திட்டத்திற்கமைய குப் பரிசளிக்கப்படும்.
TGT க்காகவே உருவாக்கியுள்ளோம். எதிர்காலத் தலைமுறைகளாகிய ாம் அமைக்கவேண்டும் என்ற அவாவினாலேயே இப்பகுதியை பயன் படுத்துங்கள்.அவர்களை ஊக்குவியுங்கள்.இது அவர்களுக்கு
இருக்கும்.
29

Page 32
  

Page 33
1. “தாயே மண் சுமப்பதற்கு நீ கொடுககப் போகும் கூலி என்னவோ?" என்று வினவ, "என்னிடம் பிட்டைத் தவிர வேறு எதுவுமேயில்லை அதனையே கூலியாக ஏற்பாயா?" என்று நெஞ்சுருகக் கேட்டாள். "வேலை செய்வதற்கு முன்னமேயே கூலியைத் தரவேண்டும். அப்படியானால் உனது பணியை நான செய்கிறேன்!” என்றார்
8. கூரி: பீட்ல. அல்லாடிதோர், சந்தே படு வில்லை.
அரசன் வந்தான். நடக் கம்மா திரிந்து கெ allorrugattu afayakarts (p
 

CS YTT TTT TTT TAAS AAAAA JYSS eSeS0 LSH SYS0 AA A AS விழுந்தது. அமைச்சர் மீதும், பானர்டிமாசேயின மீதும் சிறுவர் சிறுமியர் மீதும் - மதுரை மாநகரிலுள்ளோர் &னைவர் மீதும் பா "பனார்' என்று வடுவிழுமளவுக்கு அடி விழுந்தது
S AAAA SS SAA SS S S SYLe SSLLT TTttt S Y ee LLS அடைக்கப்பட்ட மதக் கர்ைடு பானர்டின் யேந்த நிலையில் இருக்கும்போது வாதவூரார் புஷ்பக விமானததி ஏஜி லிவர்ணுலகம் பேவுவதையும் காணர்கிறாள். அசரீரி வாக்கினால், பானாடிய மன்னா' எதையும் தீர விசாரித்து முடிவெடுக் ! காது நீ மாணிக்கவாசகரை சிறையிலிட்டாய் கைவிடாது என்னைவே துதித்து நம்பி வந்த வந்தியையும் துன்புறுத்தினாய் அதற்கான கூலி உனக்குக் கிடைத்தது!" என்றுரைத்தார் கைலை நாதசி
š ടൂ
ہے۔
ۓ
E_ རྗེས་ཁོང་
ミ
ܓܠ
ܠܥ
-
ல்லிறுபுடைக்க உண்டபின்பு, அங் த்துறங்கினார். ஆனால் வேலை மட்டும் நடக்க
காத வேலையைப் பற்றி கேள்விகள் கேட்டாள். ாண்டிருக்கும் கூலியான் வேஷத்திலிருந்த துகில் ஓர் அடி கொடுத்தான்.
31

Page 34
74/இ 2) இ/A7//0/இ /07/0/2
VYASA KALYANASUNDERAM
Mind is the name given to that aspect of the thinking mechanism, which produces thoughts, stores facts and reasons out things. The brain is said to be the seat of the mind. The mind is essentially an abstraction by which we refer to a human's thinking capacity.
Man is different to the other animals because of his developed mind. This mind can think forward and backward, reasonout cogently organiseitselfmentally for heavy work, store on immensity of facts and perform innumerable function, that regular the physical side of a human as well as his emotional and mental side called behaviour.
Children are carefully guided so that they can use their mind properly as they growup. The mind is responsible for the forming of good and bad habits. As a result there is loss of concentration and the habit of letting the mind drift is formed. We see this happen especially in adolescence, when the child starts maturing into an adult. An adolescent is neither a child nor an adult. He is going through a difficult transitional period in his life. This grooming up process in a human takes him from childhood into adulthood, Achilds attention is exclusively centred on the parents. As adolescence nears a human being finds himself drawn more into the larger social units. The childs world of the parents and home dissolves and interest infriends, associates and groups increases. Along with the primary relationships of the family, secondary relationships outside the family are formed. During this period parental guidance is very essential. Because the young would be adult has to face a would whose outlook is not familiar to him. He is drawn into a whirlpool of social interests. Unless there is a steadying influence behind him,anadolescent can gothrough a difficult time during this transitional period in his life.
The habitofletting the mind drift because of the many attractions in the world can happen to any adolescent This causes lack of concentration and an inability to do any purposeful enterprise. Teachers and parents mustdirecta young persons interestsinto constructive purposes. They will help the youth to develop concentration. Drifting can cause loss of interest in students work and getting into unwanted situation
32

that bring a sensation of adventure but is not constructive or purpose ful. This drifting is all adolescents but it should not be allowed to become an entrenched commen in habit. If it is such people who later on cannot hold jobs or continue any enterprise with a sense of determinations group interests with peers, directed by responsible adults can channel a growing up youths' energy purposefully. Social organisations should be developed to claim youth interest . A Society must provide for the growing up persons will become drifters and continue the habit and become a alchocolics gamblers and brawlers. They become a nuisance to their families friends and to society and more so to themselves.
கோயிற்றிருப்பதிகம்
மாறிநின்றென்னை மயக்கிடும்வஞ்சப்
புலனைந்தின் வழியடைத்தமுதே யூறிநின்றென்னு ளெழுபரஞ்சோதி யுள்ளவா காணவந்தருளாய் தேறலின்றெளிவே சிவபெருமானே
திருப்பெருந்துறை யுறைசிவனே யிறிலாப்பதங்க ளிவையாவுங்கடந்த வின்பமே யென்னுடையன்பே,
O Supreme Splendour that rises within me welling forth as ambrosia, Having blocked the ways of the traitor senses that ever delude me. Graciously show Thyself to me as Thou art.
Clearest of the clear, Lord Siva, Dweller in the great holy shrine, O Bliss transcending all states without end, O my Love!

Page 35
SHIPPING - AIR F
UNACCOMPAN PERSONAL EFFECTS,
VEHICLES, MAC
We supply Tax Fre
t
* SRI LANKA * N *AUSTRALIA AND COUNTRIES * CANA
AND OTHER WOR
We collect. We
WE WILL FLY YOU ANY WHE
FLIGHTS AT
GLEN CARR
14 Allied Way, off Wa London W3 TEL: 081-740 837 Fax: 081-74
குமரன்ஸ்
இலங்கையிலும் இந்தியாவிலும் இருந்து
தருவிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புப் பொருட்கள்
இலங்கையின் தமிழ் ஆங்கில வாரப் பத்திரிகைகள் தமிழக வார மாத சஞ்சிகைகள் ஓடியோக்கள் சிடி க்கள் அனைத்தும் மலிவு விலையில்
மனமகிழ்வோடு பெற்றுக் கொள்ள நாட வேண்டிய ਕਹT6)
ك
(56OIGIC
1422-144. Hoe Streef
| Walthamstow London E174 OR Tel: 08-5214955 Ni Fax : 081 - 521 9482
 
 
 
 
 

REIGHT - TRAVEL
IED BAGGAGE HOUSEHOLD GOODS, CHINERIES ETC.
ze Goods for export
O
NDIA - PAKSTAN
OTHER FAR EAST
ADA * USA AFRICA
RLD DESTINATIONS
pack. We insure
RE, ANY TIME ON SCHEDULED
LOW PRICES
rple Way, Acton 0RO 9/081-749 0.595 O 4229
COMTEC SERVICES
WOULD LIKE TO ANNOUNCE
- THEIR * NEW RANGE OF COMPUTERS AND SPECIAL OFFERS ON DOT MATRIX AND LASER PRINTERS * TECHNICAL ADVICE AND COMPUTER REPAIRS If you want an even bigger bargain
CALL US FOR OUR SPECIAL PRICES TEL: 081-551 4292/081 - 470 0510
ང། རྟ་ཐབ་

Page 36
“MVea
Por Special
“MVe zwould welcome the opportu with samples of our a at a time which is a Or if you prefe
арр
teach wedding
planned to record your you have any special requireme
JVS PHO7
1 Gib Carpe
W
W
Kesavan Vijayanathan
O81-5.14 739
சைவ முன்னேற்றச் சங்க பதிப்பகத்தில் அச்சமைப்பு செல்வம் அச்சகத்தினரால் அச்சிடப்பட்டு சைவ முன்
 

(d.inuss traits
Occasions
tity to show you our high quality albums together vorK in the comfort of your own home, 'onvenient for yourselves.
r you can visit us by
pintment.
we cover is specially big day to treasure for ever. If ints fees free to discuss them with us.
<حککہ
TOGRAPHY
bs Couch inders Park Watford D1 5EG
Selva Jeganathan O8 - 42.1 548
ம் வடிவமைப்பும் செய்யப்பட்டு, ஐரோப்பாவில் தரமான ன்னேற்ற சங்கத்தால் 31.10.1993 அன்று வெளியிடப்பட்டது.