கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புலர்வு

Page 1


Page 2

புலர்வு
(கவிதைத் தொகுப்பு)
நிலா தமிழின் தாசன்
எழில் நிலா வெளியீடு

Page 3
புலர்வு
(கவிதைத் தொகுப்பு)
ஆசிரியர் «алтылған. நிலா தமிழின் தாசன்
முதற்பதிப்பு - 1993 நவம்பர்
அச்சகம் -as- ஸ்ரீனா அச்சகம்
25, 2 ம் குறுக்குத்தெரு αυσφύω τοδοτώ
se '65 ...ti li li t-tib - σωρόου"
பதிப்புரிமை - ஆசியருக்கு
வெளியீடு ബ எழில் நிலா
விலை ரூபா SCD/=

பிஞ்சுடல் இரண்டு துண்டாய்ப் பிளந்திட, எதிரி யென்ற நஞ்சரை மாய்த்து வெற்றி நல்கிய மாவீரர்கள் நெஞ்செலாம் நிறைந்த வண்ண நிலவு, நேர் கரும்புலிகள் ! பைஞ்சுடர்ம் பாதங்கட்கே படையலாய்ப் புலர்வை' வைத்தேன்.

Page 4
அணிந்துரை
கவிஞர் ரீலா தமிழின் தாசன் எழுதிய கவிதைகள் அடங்கிய தொகுதியாகப் புலர்வு அமைகின்றது. கவிஞர் 1979 முதல் இன்றுவரை எழுதிய பல கவிதைகள் இத் தொகுதியிலே இடம் பெறுகின்றன.
கவிதைகள் எல்லாமே விடுதலை உணர்வினையும் போராட்ட உணர்வினையும் அடிப்படையாகக் கொண்டன வாகவே அமைகின்றன. இப் ενσυ υδοι αυση συυ βυ (τα (τζι .
வீரர்களுக்கே கவிஞர் படைக்கிறார்:
பிஞ்சுடல் துண்டு துண்டாய்ப் பிளந்திட, எதிரி யென்ற நஞ்சரை மாய்த்து வெற்றி நல்கிய மாவீரர்கள்! நெஞ்செலாம் நிறைந்த வண்ண நிலவு நேர் கரும்புலிகள் ! பைஞ்சுடர்ப் பாதங்கட்கே படையலாய்ப் 'புலர்வை' வைத்தேன்
என்று கவிதைச் சமர்ப்பணம் செய்யப்படுகின்றது.
தமிழ் மக்கள் படும் இன்னல்களை, போரினாலே தமிழ் மக்கள் உயிர்களுக்கும், உடனமகளுக்கும் ஏற்பட்ட அழிவுகளை மாற்றியமைக்க வேண்டுமென்ற தீராத அவாவுடையவராகக் கவிஞர் திகழ்கின்றார். பல பாடல்களிலே இவருடைய இவ்வேக்கம் புலப்படுகின்றது. சித்திரைப் புத்தாண்டு பிறக்கப் போகின்றது அப்போது அச்சித்திரையை விளித்து

V
மங்கையர்கள் கற்பிழந்தார், மணவறைக்குள்
மணமக்கள் "ஷெல்" விழுந்து பிணமாகின்றார்; பொங்கலுக்குக் கதிரநுக்கப் போனமக்கள்
பொசுங்குகின்றார் வயற் காட்டில் புழுக்களாக எங்கெங்கும் வெடியோசை குத்து வெட்டு
இரைந்து வரும் கண்ணிரோ டிரத்த ஆறு வெங் கொடுமைச் சாக்காட்டு நிலையை மாற்றி விடிவளிக்கச் சித்திரையே! ஏது செய்வாய்? இராவறுேவத்தினருடைய கெடுபிடிகள், மக்களுடைய பசி தாயமான நிலைகள் ஆகியன கவிஞருடைய சொற்கள் மூலமாகப் புலப்படுத்தப்படுகின்றன.
கவிஞரின் 'விடியும்" என்ற கவிதை நம்பிக்கையூட்டும் V stava as sy sør páfaðir gogy.
இந்த மண்ணின் விடியயலுக்காகக் கூவுகின்ற சேவல்களின் குரல்வளைகள் அநியாயமாக அறுக்கப்படுகின்றன! ஆனாலும் என்ன?
விடியத்தான் போகிறது! ஏனெனில்! பிஞ்சுக் குஞ்சுகள் மட்டுமல்ல பெட்டைக் கோழிகளும் பெருங்குரலில் கூவ ஆரம்பித்து விட்டன. 1988 ல் இவ்வாறு 'பெட்ட்ைக் கோழிகரின் ' பெருங் கூவலைக் கேட்ட ஆசிரியர் 1993 ல் நேரடியாகப் பெண் கள் என்றே கூறி விடுகின்ற ர், பெண் னென்ன சடப்பெர் ருளா ? என்ர கவிதையிலே
துணிவோடு சுமையனைத்தும் தாங்கிப் பெண்கள் துவளரது நிற்கின்றார் வெற்றி கர்ண்பரர் என்று கூறுவதைக் காண்கிறோம்.

Page 5
|V
இன்றைய நடை முறைகளையெல்லாம் நன்குணர்ந்து கொண்டவராக அவருடைய கவிதைகளுடாகக் கவிஞர் எமக்குத் தென்படுகின்றார். அவருடைய உணர்வுகள் உண் மையானவை என்பதை அவருடைய கவிதைகள் மூலமாக உணரக் கூடியதாயுள்ளது. தமிழீழ மண்ணை அவர் நேசிக் கின்றார் என்பதை,
எந்த மண்ணும் உனக்கு அந்நியம். உன் செ, நீத மண்ணில் வாழல் புண்ணியம் சிந்தனையைச் சீர்மை செய்யடா- உன் தேசம் தன்னில் பாசம் வையடா என்ற கவிதை மூலம் உணருகிறோம் கரும்புலிகள் பற்றிக் கூறும் போது 'நெஞ்சில் உயர் வீரர் தியாகம் நிறைந்த தமிழ் மறவர்கள் என்றும், அடிமை இருள் அகலத்தம்மை அன லில் போட்டு எரிப்பவர்' என்றும்" தினமும் உலகு வியந்து . போற்றும் தியாகச் சுடர்ச் சிகரங்கள்' என்றும் ஈடு பட்டுப் பாடுகின்றார்.
நாற்பத்திாண்டு கவிதைகளைக் கொண்ட புலர்வு கவி ஞர் நிலா தமிழின் தாசன் அவர்களை இன்றைய தமிழ் ஈழக் கவிஞர்கள் வரிசையிலே சேர்த்து நிற்கின்றது. தமிழர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் இழப்புகள் ஆகியவற் றினைப் பார்த்து ஏற்படக் கூடிய ஆத்திரம் இக் கவிஞருக் கும் ஏற்பட்டுள்ளது. இந்த ஆத்திர உணர்வு அவருடைய கவிதைகளுட7க இழையோடுகின்றது. அவருடைய கவிதை கள் தமிழினத்தின் உணர்வுப் புலப் பாடாகி அமைகின்றன. கவிஞர் நிலா தமிழின் தாசன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இக் கவிதைத் தொகுதிக்கு இவ்வணித் து ரையை எழுதுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
பேராசிரியர் அ. சண்முகதாஸ்
தலைவர், தமிழ்த் து2ை9
யாழ்ப்பாணம் Li) ಹಿನ»ಳೆ) ಹಿ ಆಟ್ತಿ &ಟಿ 2 l ... l 0 - 1 9 9 3 ,

முன்னுரையாய் மொழியும் என்னுரை
கவிஞன் உருவாகின்றான்! அவன் உருவாக்கப் படுவ தில்லை ! ஒரு கவிஞனை எங்கக் கலாசாலைப் பட்டறையி னாலும் படை த்தளிக்க முடிவதில்லை. ஒளி வீசும் வைரத் தை மனிதனால் உரு பாக்க முடியாதது போல,
ஆனால் 1 சோத்தி படர்ந்த வைரத்தைப் பட்டை தீட்டி ஒளிரச் செய்ய மனிதனால் முடியும் அதேபோல் இயல் பாய் அமைகின்ற கவியுள்ளத்தினை கல்வியறிவும் அனு
பவங்களம் செழுமைப் படுத்த முடியும்.
விடுதலை வெறியும், சிறுமை கண்டு சினந்தெழும் சிந்தை யும், மானிட நேயமும், இரக்கம் சுரக்கையில் மெழுகாய் உரு கியும் எழுச்சி கொள்ளும் நேரம் எஃகாய் இறுகியும், இலங்கக் கூடிய இதயம் கொண்ட வன் எவனும் கவிஞனாய்ப் பரிண்ண மிக்க காலமும் சூழலும் கைகொடுக்கலாம்,
நான் என்னைக் கவிஞன் என்று மார் தட்டிக் கொள்ள வில் லை, கவிஞனாக முயற்சித்துக் கொண்டிருப்பவன் என்று சொல் லிக் கொள்ளவே விரும்புகிறேன். என்னைச் சிலர் கவிஞ னென்று சொல்லும் போது மறுதலிக்காது மகிழ்வு கொண் டாலும் அதற்கான தகுதி எனக்கு உண்டா? என்று என்னை நானே அடிக்கடி பரிசீலித்துக் கொண்டிருக்கிறேன்.
எனது இாண்டாவது தொகுப்பான இந்தப் புலர்வு நூலில் 1979 முதல் இன்றுரை எழுதிய கவிதைகளில் நாற்பத்திரு கவிதைகளை மட்டும் இணைந்துள்ளேன் . இவை பல்வேறு நிலைகளில் பல்வேறுபட்ட உணர்வுகளின் பிழிவுகளாக மலர்ந்து, பலதரப்பட்ட பத்திரிகை சஞ்சிகைகளினாலும் வெளியானவைகளாகும், (சிலவற்றைத்தவிர)

Page 6
VIII
இவற்றிலுள்ாே "புலர்வு" என்ற தலைப்பிலான கவிதைபிே னை எடுத்துக் கொண்டால் 1983 காலகட்ட த்தில் சிறீலங்கா இன ஒடுக்குமுறை அரசுக்கெதிராக விடுதலைப் புலிகள் கொ டுத்த அதிரடிகள் எதிர்கால விடியலின் அடை டாளங்களாகத் தோன்றி என் உள்ளத்தினை மகிழ்வித்தன, ஆனால் 9伤务 மகிழ்வினை நேரடியாக வெளிப்படுத்த முடியா த அ ?ெ நிலை அப்போதிருந்தது. எமக்கென்று ஒரு தளப் பிரதேச மில்லாத சூழ்நிலையில் இராணுவத்தின் συυσ83) ά σ' ό தங்களைக் கேட்டபடியே! தென்தமிழீழத்தின் நிலா வெளி யூரில் எனது தெருவோர இல்லத்திலிருந்து கவிதை எழு தும் என்னால் எனது உணர்வுப் பொங்கலை எப்படி படை ιανού - άρα αν ό என்று ஏக்கம் கொண்டதுடன் அந்த உணர்வுகளை அடக்க முடியா து அவசிப்பட்ட ് ഞഖuഴ് ஒருவகை உருவகத் சன்மையுடன் இந்தப் புலர்வு, என்று கவிதையினை எழுதி வீரகேசரிக்கு அனுப்பி வைத்தேன் கடுமையான பத்திரிகைத் தணிக்கையின் இறுக்கமான பிடி யைப் புறந்தள்ளி விட்டு, அடுத்த வாரமே அக் கவிதை பிரசுரமர்னபோது அளவிலா மகிழ்ச்சியடைந்தேன். V
கவியார்வம் கொண்ட நண்பன் இ. மாதவராசா στούν பவர் தான் கடையில் சீனி வாங்கிய கடதாசியில் மேற்படி கவிதையினைக் கண்டதுடன் உட்பொருளையும் உணர்ந்த வனாய் அக்கவிதை நறுக்கை இடுப்பில் செருகிய வண் ணம் வீடுதேடி வந்து பராட்டியதுடன், "நீ யாழ்ப்பா ணத்தில் நடக்கும் இயக்க நடவடிக்கைகளை தானே உரு வகப்படுத்தி எழுதியிருக்கிறாய் அறிஞ்சால் துலைச்சுப் போடு வாங்கள் கவனம் என்று ரகசியக் குரலில் எச்சரித் ததையும், கவிதையினைப் பாராட்டிய வேறு 4 συ σοσιέν ό நினைத்துப்பார்க்கின்றேன். υσα σε φιμου ή ά ωή ή ύ σινη) எழுத்தாளரான ஆசிரியர் கே. ஆர். டேவிட் அவர் கள் குறிப் பிடத்தக்க வர் ஆவர்.

Χ
*புலர்வு" கவிதையின் பாணியிலமைந்த மற்றொரு கவி தை "கோழிக்குஞ்சுகள்" ஆகும். இது அந்தக் காலகட்டத் தில் இடம்பெற்ற சிறைச்சாலைப் படுகொலை, சுற்றிவளைப்பு கைது, பூசாச் சிறைக் கொடுமை, போன்ற அவலங்களை நேரடியாக வெளிப்படுத்த முடியாத நிலையில் மேற்படி முறையினைக் கையாண்டு வெளிப்படுத்தினேன், இப்படியாக வேறு சில கவிதைகளை யும் நான் அப்போது எழுதியதை படுத்து, பலதரப்பட்டவர்களிடமிருந்தும், இதே உத்தியில் எழு தப்பட்ட கவிதைகள் வெளிவரத் தொடங்கியபோது நான் எனக்குள் பூரிப்படைந்தேன். இதை எனது இலக்கிய வெற்றிகளில் ஒன்றாகவும் கருதினேன்.
அடுத்து, இத்தொகுப்பிலுள்ள "சொர்க்கத்திலுள்ள அப்பாவுக்கு" என்ற கவிதை என் சொந்த வாழ்க் ஜூ கபி லேற்பட்ட மனக்காயத்திலிருந்து வடிந்த குருதியாகும். கவி தையினை வாசிக்கும்போது விபரம் புரியும், இப்படியே சகல கவிதைகளையும் பற்றி விபரிப்பது முடியாத விடயம் மட்ே மல்லாது முறை பானதும் அல்ல. எனவே, வாசகர்களாகிய நீங்கள் படித்து, சுவைத்து, அளந்து, நிறுத்து நீதியான விமர்சனங்களைத் தெரிவியுங்கள் அவை என்னை நெறிப் படுத்தட்டும்.
உங்கள் நேசிப்பு நிறைவானால்! எனது அடுத்த தொ குப்பும் விரைவிலேயே உங்கள் வாசிப்புக்கு வந்து சேரும் என்று உறுதி கூறுகின்றேன் இறுதியாக இந்த நூலை இலாப நோக்கம் கருதாது ஒரு கவிஞன் கவிஞனுக்குச் செய்யும் கலா பூர்வக் கட0ையாக ஏற்று மன நிறைவுடன் தமது அச்சகத்தில் அழகுற அச்சிட்டுத் தந்ததுடன், அன் புடன் வாழ்த்துப் பாவினையும் வழங்கிக் கெளரவித்த | ωού 3) σΦιν வல்லுனரான கவிஞர் நாவண்ணன் அண்ணா

Page 7
"אי a'a
அவர்கட்கும். சுறுசுறுப்பாக அச்சு வேலைகளைச் செய்து உதவிய அவரது “ஸ்ரீனா, அச்சக ஊழியர்களான, சகோ தர சகோதரிகளுக்கும், தமது சொந்தக் கடமைகளுக்கே நேரம் போதாது பம்பரமாய்ச் சுழலும் நிலையிலும் கேட்ட போது முக மலர் வுடன் சம்மதித்தபடி அணிந்துரை எழுதிக் தந்த பேராசிரியர் அ. சண்முகதாஸ் ஐயா அவர்கட்கும். இக் கவிதைகளை தட்டச்சு செய்து உதவிய சகோதரிக ளுக்கும், பொருள் வரவை எதிர் பாராது அட்டைப் படம் வாைந்தளித்த பிரபல ஓவியக் கலைஞரான திரு. ர9ணி அண்ணா அவர்கட்கும் மரத்தில் ஒற்றுரு (புளக்) அமைத்துக் கொடுத்த, திரு ஆனந்தன் அவர்கட்கும். பல்வேறு பட்ட கஷ் டங்கள், தெ குக் டி நெருப்புககளின் மத்தியிலும், எனது கவிதைகளைக் கண் போல் காப்பாற்றி வைத்து, அவற்றி னைப் பொறுமையுடன் பிரதி பண்ணி அனுப்பி வைத்த என் அன்புக்குரிய என்னவளுக்கும், அவ்வப் போது இக் கவிதைகளை வெளியிட்டு தவிய அனைத்து நாளிதழ் சஞ்சி கைகளுக்கும், வாசகர்களாகிய உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிப் பூக்களைக் காணிக்கை ஆக்குகின்றேன்.
வணக்கம் முகவரி iš P551 Tisí o வள்ளிமனை 9 ** மீசாலை தெற்கு நிலா தமிழின் 33 ல்
盛7-丑{}-、
 

() நிலா தமிழின் தாசன்
புலர்வு
கட்டினிலே கிடக்கும் நாய் பற்களாலே
கயிற்றினையே! கடித்தறுத்தல் காணும் போதும்
முட்டி நுகம் தனையெருது முறிக்கும் போதும் மூக்கணாங் கயிறறந்து தெறிக்கும் போதும்
நிச்சயமாய் நெஞ்சுக்குள் மகிழ்ச்சி கொள்வேன்
நினைவுகளில் ஒளிதெரியும் நிமிர்ந்து செல்வேன்
வளைத்தடைத்த குளத்திற்குள் தேக்கி வைத்த
வாகாண நீரலைகள் அணையை மோதிக்
துளைத்து வெளியேற வழி தேடும் போதும்
துரத்தி வரும் பருந்தினையே! சேவற் கோழி
நிலத்திடையே வைத்தெதிர்த்துச் சாடும் போதும் நிச்சயமாய் நெஞ்சுக்குள் மகிழ்ச்சி கொள்வேன்
தனையிறுக்கி அடைத்து வைத்த "ரயரைக்' காற்று தகர்த்து வெளியேறுதலைக் காணும் போதும்
மனை முகட்டில் பல்லியினைக் குளவி பூச்சி
மாறியதன் முதுகினிலே கொட்டும் போதும்
நினைவுகளில் ஒளிதெரியும் நிமிர்ந்து செல்வேன்
நிச்சயமாய் நெஞ்சுக்குள் மகிழ்ச்சி கொள்வேன்
| Γ' ενου ή ω/
-

Page 8
நிலா தமிழின் தாசன் ()
எதிர்க்காதோர் வாழ்க்கையெல்லாம் எருமை வாழ்வு
எந்நாளும் அடிமையெனும் சிறுமை வாழ்வு
உதைப்போரை உதைப்பதுவே உரிமை வாழ்வு
உண்மையிதை உணர்ந்த பின்னர் இல்லைத் தாழ்வு
புதுப்பாதை புதிய யுகம் பூக்கும் வண்ணம்
புறப்பட்டோம் இனியென்ன புலர்வு தானே!
驚
υδάει - οι σφασή συσσωωή 8-1-1984
Z [ ] ψ6υή 02/

நிலா தமிழின் தாசன்
தீயென எழுவாய்
படை பலங் கொண்டு பசியுடன் வாழும்
பலமிழந்தோரை வாட்டி! அடிமைகளாக்கி அதம் புரிவோரை!
அகிலத்திலிருந்தே ஒட்டி! விடிவொன்று காண விரைந்தெழு தோழா
வீணருக்கில்லை வெற்றி!
சத்திய நெஞ்சுகள் சரிந்தன வென்று
சரித்திரம் செப்பிய தில்லை! நித்திய அடிமை நிலையினில் வாழ்வோர்
நிம்மதி காண்பது மில்லை! புத்தியின் வழியில் புயலென எழுந்த
புரட்சிகள் தோற்றது மில்லை!
இறப்பெனும் ஒன்று! இருபது தடவை இங்கெமை அணைப்பதுமுண்டோ? அறத்தினைக் காக்க அறப் போராடும்
அரிகள் அழிவது முண்டோ? சிறப்பெனும் சுதந்திர சுகத்தினைக் காணச்
சாவது சோகத்தை தருமோ?
புலர்வு

Page 9
நிலா தமிழின் தாசன் ()
நெஞ்சினை நிமிர்த்தி நீதியின் வழியில்
நீ தடை பயிலு தோழா
அஞ்சி அஞ்சியே அடங்கி வாழ்வதில்!
அழிவது மேலெண் உணர்வாய்!
வஞ்ச மனத்துடை வல்ல அரக்கரை
வாட்டும் தீயெண எழுவாய்
பதிப்பு:
εν διαμ εί δυό ώ δο) 3 | ω/τό 1986
ένου ή οι/ { .

() நிலா தமிழின் தாசன்
鬱
Got T PŘI SEG Gü) !
வருகின்ற தைப்பொங்கல்! வண்டமிழர் பெrங்கல் வளம் தந்த வெய்யோனை வாழ்த்துகின்ற பொங்கல்
உருவாக்கி உலகுதனை உய்விக்கும் தோழன் உத்தமன்னாம் உழவனவன் உளம் நிறைந்த பொங்கல்
தீந்தமிழர் தொன்று தொட்டு தொடருகின்ற பொங்கல் தொல்லுலகில்! தமிழ் மணத்தைப் பரப்புகின்ற பொங்கல் வான் கதிரோன் வருணனினால் வயல் நிறைந்து பொங்க வள்ளலுளம் கொண்ட அரும் உழவன் தரும் பொங்கல்
முக்கனியும் சர்க்கரையும் சேர்ந்த நல்ல பொங்கல் மூடர் துயர் விறகாக்கி கரியாக்கும் பொங்கல்
முத்தமிழின் விடுதலைக்கு முழக்கமிடும் பொங்கல் மறத்தமிழன் மார்பெங்கும் மகிழ்வூட்டும் பொங்கல்
பச்சரிசி யோடுபசுப் பால் சேரும் பொங்கல் பழந்தமிழின் தனிச்சுவையை பகன்றுரைக்கும் பொங்கல் இச்சையுடன் இன் தமிழர் தனித்தமிழின் ஈழம் இன்று பெறுவோமென்றே! சபதமிடும் பொங்கல்.
பதிப்பு - "சுடர் தை' 1979
Πη αγαυή οι) - 5 - ܐ -- ܒ -- -- ܒ

Page 10
நிலா தமிழின் தாசன் ()
புதிய விடியலின் அதிர்வு
எதிரி முகாமினுள் இடிகள் முழங்கின! எங்கள் வீரரின் ஆற்றல் விளங்கின இதய பூமி ஒன்று வெற்றியில்
எங்கள் கண்ணிலே ஒளிதுலங்கின! புதிய விடியலின் அதிர்வு சண்டதுர்ப் புலையர் இதயமோ நடுநடுங்கின! விதியை முழுமையாய் மாற்ற எழுந்த நம் வேங்கை மறவரின் வேகம் புரிந்தது!
கனவு போலொரு காட்சி நடந்தது
கயவர் படை முகாம் கதை முடிந்தது! "இனிய முப்பது நிமிடப் பொழுதினுள்' இமயசாதனை புலிகள் படைத்தனர் சினந்து" சிங்களத் தலை" கொதித்தது!
செய்வ தறிந்திடா (து) திகைத்து நின்றது! புனித வேள்வியின் அனலிலாடிடும்
புலிகள் சாதனை உலகு மெச்சிடும்!
எங்கள் தாயக "இதய பூமியில்’
எதிரியின் படை, சிதைவு பண்ணவோ?
சங்கரித்தவர் தம்மை ஒட்டிடத்
தாவி மாமறப் புலிகள் பாய்ந்தன!
ό
ναυή οι Ο
 

() நிலா தமிழின் தாசன்
தங்கமாமணித் தமிழ் ஈழமண்
தளை நொருங்கியே தலை நிமிர்ந்திடும்!
மங்கலத் திரு நாளின் மலர்வினை
மண்கிண்டி மலையடி எதிரொலித்திடும்!
உறுதி பொங்கிடும் உளத்தில் உணர்வொடு!
உலகை பொங்கிட வெற்றி நாளினை குறைகளின்றியே கொண்டாடு வோம்! குதித்து வீறுடன் நின்று ஆடுவோம்' மறந்திடாது உள் மனத்தில் இருத்தி நம்
மாவீரரை வாழ்த்தி வணங்கியே இறுதி வெற்றியை எண்ணி அவர் வழி!
ஏகி வெல்லுவோம் ஈழமக்களே!
للأخ ال(S
濠,湾
23
Sa
�3
2ችS
1 1 63a Lif L. :- 2 1 , 08. 1993
பதிப் பு:- 25.08.1993 ஈழநாதம்
இதயபூமி வெற்றி நாள் சிறப்பு மலர்.
Γ ενου ή Ω/

Page 11
நிலா தமிழின் தாசன் )
@ -
போர் எண்னமா ?
இன்னும் வாங்குவீர் !
கடற் கரும்புலி கிளா லிக் கடலினில்
கயவர் படகினைக் கிழித்தெறித்தது! உடற் சிதறலின் ஒவ்வோர் அணுவிலும் உயிர்த் துடிப்புடன் புலி சிரித் ஈ து! இடர் விளைத்து நம் இனிய மக்களை எரித்தழித்தவர் உடல் வெடித்தது! சடசடத்திடும் வெடி மழையினுள்
தமிழ் மறப்படை தடை உடைத்தது!
கொடிய எதிரியின் கொலை வெறிப்படை கொன்றொழித்தது எத்தனை உயிர்? வடிந்தோடிய தமிழ்க் குருதியால்
சிவப்படைந்ததே கிளாலி ஏரிநீர் 1 துடிப்புடைய நம் வரிப்புலிப்படை
துயர் அறுத்திடச் சினந்தெழுந்தனர்! நொடிப் பொழுதினுள் புதுச்சரித்திரம்
கடற் பரப்பினில் தாம் படைத்தனர் !
ψ6υ ή Ω/ I
 

() நிலா தமிழின் தாசன்
மண்கிண்டியின் நோ(வு) அடங்குமுன்
மற்றுமோர் அடி கினாலி ஏரியில்! விண் அதிர்ந்திட போர்ப்படகுகள்
விரிந்து சிதறியே தீக்குளித்தன - அட! எதிரிகாள்! புண் போதுமா? போய் ஒதுங்குவீர்!
போர் எண்ணமா? இன்னும் வாங்குவீர்! கண்மணிகளே! கரும்புலிகளே -
கனிவுடன் உமைத் தொழுகின்றோம்!
படைப் பு: 26-08-1998
(கிளா லியில் மேற் கொள்ளப்பட்ட கிரும்புலித் தாக்குதல் நினைவாக)
Ο νουήo, ] ?

Page 12
நிலா தமிழின் தாசன்
பந்தாடத் துணிந்தெழுவோம்
வானில் இடிமுழக்கம்! வரும் போகும் வழமையிது-எம் வயிற்றில் பசிமுழக்கம்! வாழ்வெல்லாம் தொடர்வதுமேன்? கூனல் வளைக்கோல்கள்! குடியாட்சி நடத்துவதால் கொடுமை வளர்கிறதெம்! குடலும் உலர்கிறது.
நாளும் தளராது! நாம் தொடர்ந்து உழைக்கின்றோம். நாலில் ஒரு பங்கும் நமக்கின்றிக் களைக்கின்றோம். கூழும் குடல் நிறையக் குடித்திடவும் வழியில்லை குடைநிழலில் வாழ்வோர்க்கோ, குளிகையுண்டும் பசியில்லை
மானத்தோடுழைத்து மரத்தடியில் பள்ளி கொண்டு வானக் கூரையின் கீழ் நாம்" வடிவாய்'உறங்குகையில் வானத்திற் பறந்து வையத் தெழிலளந் தோர் தானாய்ப் பஞ்சணையில் தவிக்கின்றார் தூக்கமின்றி.
ஒடி நாமுழைத்து உலர்ந்து சருகானோம். 'கோடி' குவிப்பவர்தம் குலம் வளர்க்கும் எருவானோம் மாடியறை வாழ்வோரி மதுக் கோப்பைக் கிரையானோம் மதுவென்று குடிப்பதெல்லாம் உழைப்பவரெம் ரத்தமன்றோ?
10 புலர்வு

() நிலா தமிழின் தாசன்
இந்தக் கொடுமையெல்லாம் இனியும் நடந்திட நாம் மந்தைக் கூட்டங்களோ! மரங்கடைந்த பொம்மைகளோ சிந்தைத் தெளிவுடனே சீறிப் புயலாகி பந்தாடத் துணிந்தெழுவோம்! பாழும் நிலையழிப் போம்
X2 2S 7.
S
(அகில இலங்கை ரீதியில் களம் கலை இலக்கிய வட்டம் நடாத்திய சட்டத்தரணி ந.சின்னையர் நினைவுக் கவிதைப் போட்டியில் 1வது பரிசு பெற்ற கவிதை) -
பதிப்பு. களம் (3.1984)
ܝ .ܝܓ.- q/ au i Gy רח

Page 13
நிலா தமிழின் தாசன் () ,
காந்தி அழுகின்றார்
尊
உண்ணா விரதத்தால் உயர்வான அறப்போரால்
உரிமையினை வென்றெடுத்த உத்தமராம் காந்தி மகான் கண்ணீர் வடிகின்றார்! கதறியழுகின்றார்
* காந்தி யெனும் தன் நாமம் கறைபட்டுப் போனதெண்ணி மண்ணாளும் ஆசையினை மமதையினை மனத்துள்ளே
வளர்த்து நித மிங்கு வாழ்கின்ற "பேரை யெண்ணி விண்ணேறிப் போயங்கு வீற்றிருக்கும் குணசீலன்
விம்மிப் பொருமி நெஞ்சு வெடித்திடவே அழுகின்றார்.
சாந்தி சமாதானம் சமைத்துத் தருவோ மென்றே
தரணிக் குரைத்தவர்கள் சதிபுரியும் காட்சி கண்டு ஏந்தி முழு நோன்பை இருந்த அன்னையர்க்கு
இரங்கும் நிலை மறந்து இழித்துப் பழித்த தெண் ணி
| 2
ενου ή 62, I

() நிலா தமிழின் தாசன்
காந்தி மதித்து வந்த கண்போன்ற தாய்க்குலத்தை
காலால் மிதித்திற்கு கசக்கி முகர்தல் கண்டு வேந்து, அறப்புரட்சி விளங்க வைத்து மகான்
விண்ணில் இருந்து செந்நீர் کيவிழியால் பெய்கின்றார்.
பதிப்பு- தொண்டன் 1988 ஆணி.
( , δυή ω) 3

Page 14
நிலா தமிழின் தாசன் ()
羲 uബ
பரம்பரையின்
Lp T60T to 36 Tiju Tui
கணவன் இ
தரணியிலே தமிழ்மரபு தனி லுதித்த
தன்மானத் தாய்க்குலமே! தயவாய்க் கேளும் மரணமது மானிடர்க்கும் மண்ணில் வாழும்
மற்றறெல்லா உயிர்களுக்கும் வருதல் திண்ணம் வரலாறு கண்ட தமிழ் மீண்டும் வாழ
வழிசமைத்து வரலாற்றைப் படைத்தாலென்ன?
ஆடவரின் அனுபவிப்பு பொருளாய் மட்டும்
அரிவையரே அகிலத்தில் வாழலாமோ?
நாடாளும் நரிக்கூட்டம் நம் பண்பாட்டை
நசுக்குவதைக் கண்டும் நீ நடக்கலாமோ?
வாடாத மலர்மேனி வனிதாய் நீயும்
வாட்டும் தீச்சுடராக வளர்ந்தாலென்ன ?
மூவேந்தர் காலத்தில் வாழ்ந்த எங்கள்
முத்தமிழர் பெண்களுக்கு மட்டும் தானா
'சா " "வேந்திச் சரித்திரங்கள் படைப்பதற்கு
சளைக்காத தன் மான உணர்வு உண்டு?
பாவேந்தர் புகழ்ந்துன்னைப் பாட்டுப்பாட
படைஆொண்டு பரம்பரையின் மானம் காபபாய்
f) μου ή ο ί

நிலா தமிழின் தாசன்
வளைகுலுங்கும் கைகளிலே வனிதாய் நீயும்
வாள் துலங்க நடை பயின்றால் வான் பணியும்
அளையாத மலர்மேனி அரியின் வீரம்
அடையாதோ! அமர்க்களத்தில் அடையும் திண்ணம்
விளையாத பெருவீரம் விளையும் அங்கே
வீணர்தம் உயிர் எமனின் வீட்டுக்கேளும்
செஞ்சாந்துப் பொட்டுக்குப் பதிலாய் நீயும்
செருக்களத்தில் பகைவர்தம் குருதி பூண் பசய்
அஞ்சனத நெஞ்சோடு அழகுப் பெண்ணே
அடியெடுத்தால் நிச்சயம் நீ அகிலம் ஆள்வாய்
பஞ்சாகப் பறந்தோடும் பகைவர் கூட்டம்
பாரினிலே தமிழோங்கிப் பரந்து வாழும்
பதிப்பு:- "சுடர்' (மாசி பங்குனி 1983)
ζ, συή 02/. 15 נח

Page 15
நிலா தமிழின் தாசன் ()
பெண்ணென்ன GLü பொருளா?
鬱
திலவென்றும் ஒளியென்றும் நித்திலத்தை
நிகர்த்தது பார் பெண் களது சிரிப்பு என்றும் ! உலவுகின்ற ஒவியங்கள் சிற்பமென்றும்
உடலழகைப் பூவென்றும், உதிக்கும் காலைப்
புலரியென்றும் புனைந்து பல கவிதை பாடி
பூமிதனில் பெண்ணினத்தை அடிமை ஆக்கி
பலவாறாய் வதை செய்து சிறையுள் பூட்டி
பரிகசிக்கும் ஆணினத்தின் தாயும் பெண்ணே!
தங்க வடத் தாலியெனக் கழுத்தில் மாட்டித்
தாய்க்குலத்தை அடிமை கொள்ளும் கயிறுமாக்கி குங்குமத்தால் நெற்றியிலோர் கோலம் போட்டு
குலமகளாம் என்றும் ஒரு மகுடம் சூட்டி பங்குண்டு இருவருக்கும் வாழ்வில் என்றே
பசப்பு மொழி கூறிப்பின் அதனை மாற்றி தங்களது அனுபவிப்புப் பண்ட மாக்கி
தவிக்க வைக்கும் ஆணினத்தின் தாயும் பெண்ணே.
| 6 | ε, 6υή ό)/ I

நிலா தமிழின் தாசன்
துணையிழந்தால் பெண்ணுக்கே விதவைப்படடம துயருலகில் ஆண்களுக்கோ வேறோர் சட்டம்? இணைகின்ற தம்பதியர்க்(கு) இடையில் பெண்ணை
ஏன் தாழ்வாய் எண்ணுகிறார் ஆண்கள் கூட்டம்? கனைவேறு வில்வேறாய் இருந்தால் மண்ணில்
கைகூடும் பலனென்ன காலந் தோறும் இணைத்தொழுகும் பெண்ணினத்தைச் சமமாய்
எண்ணில் இவ்வுலகில் ஏதுகுறை வந்து கூடும்?
உலகத்திற் சரிபாதிக் குரியோர் பெண்கன்
உண்மையிதை மறுப்போர்க்கு குருடோ கண்கள்? நிலவென்று வர்ணித்த பெண்கள் அந்த
நிலவினையே தொட்டு வரும் ஆற்றல் கொண்டார் விலையில்லாக் கற்பென்றார் உண்மை, அந்த
விலையில்லாக் கற்புதனைப் பறிப்போர் யாவர்? சிலையென்று வரினித்தால் கல்லோ பெண்கள்?
சித்திரமாம்! சடப்வொருளாய் ஏன் கொள்கின்றீர்
ஒன்றிரண்டா பெண் களது வாழ்வில் துன்பம்!
உலகத்தில் என்று வரும் பெண்மைக்(கு) இன்பம்! அன்றில் என இணைய வந்த ஆண்கள் மட்டும்
அக்கிரமம் பண்ணவில்லை! ஈழ மண்ணில் கொன்று குவிக்இன்றார்கள் வெறியர் கூட்டம் கொடியவதை செய்கின்றார் விதவை ஆக்கித் தின்று விடத்துடிக்கின்றார் வன்மை ஆளர் தீண்டிஉடற் பசிக்கு இரை ஆக்குகின்றர்ர் 1
yayi a, - /

Page 16
நிலா தழி மின் தாசன் )
கணவனொடு விள்ளையினை உடன்பிறப்பை
காதலனை பெற்றவரைச் சுற்றத்தாரை பிணமாக்கிப் பெண்ணினத்தை துயரமென்ற
பெரு நெருப்பில் போட்டு மகிழ்ந்(து) ஆடுகின்றார் உணவு முதல் அனைத்தினிற்கும் தடைகள் போட்டு
உருக்குலைக்கத் துடிக்கின்றார் தமிழீழத்தில் துணிவோடு சுமையனைத்தும் தாங்கிப் பெண்கள்
துவழாது நிற்கின்றார் வெற்றி காண்டார்
3፣ጀፆ Sኣጛ፪፻ዶ
బ్తో • ప్తి 熙。德
படைப்பு : 31-01-1993
8 ] εμου ή οι) ( )
 

நிலா தமிழின் தாசன்
நிலவுகள் தேயலாமோ?
அண இ
சீதனக் கொடுமையாலே
செழு ஒன முகங்கள் ଈପ୍ସ୍] ୮ ! ;-) );
வேதனைத் தீயில் நாளும்
வெதும்பியே வாழும் கன்னி
மாதரின் துயரம் தன்னை
மாண்டிடச் செய்தல் வேண்டும்.
மீட்டிடா வீணை போலும்
மினுக்கியே எண்ணையூற்றி
ஏற்றிடா விளக்குப் போலும்
ஏந்திழை மார்கள் ஏங்கி
நாட்டிலே வாடலாமேன?
நாமிதை ஏற்கலாமோ?
நிலவெ னும் அழகுப் பெண்கள்
நிலத்தினில் தேயலாமோ பழவிதழ் பசுமைக் கன்னம்
பால்முகம் காயலாமோ? சிலையவள் தங்கக் கட்டி
தேனம் பிறஏன் வேண்டும்?
9.
φωή ον

Page 17
நிலா தமிழின் தாசன் ()
ஆண்மையை காசுக்காக
ஐயகோ! விற்கலாமோ?
மேன்மை சேர் பெண்கள் தம்மின் மீன்விழி கலங்கலாமோ?
ஆண்மையின் இலக்கணங் கொள்
அழித்திடு சீதனப் பேய்
l iswa L. 'il :- 1. 5 - 05- 1 98 3
11511 - νό μυ ε» ου και ώ, ινή ιζε η 3, αφού υβ’, 1983
20 in புலர்வு 0
 

() நிலா தமிழின் தாசன்
கரும்புலிகள்!
கொஞ்சி அன்னை வளர்த்த உடலிற்
குண்டு சுமந்து சென்றவர் பிஞ்சுமேனி சிதறி அழிதல்
பெரிய பேறு என்றவர் நஞ்சை ஒத்த அரக்கர் வாழ்வை
நசுக்கத்தம்மை இழப்பவர் நெஞ்சில் உயர் வீரம் தியாகம் நிறைந்த தமிழ் மறவர்கள்
வெடிகுண்டு வண்டி ஏறி
வீணர் முகாம் தகர்ப்பவர் கொடியர் தம்மை அப்பலோடு
குமுறும் கடலில் உடைப்பவர் விடியல் வெற்றி தம்மை மட்டும்
விருப்பமாக வரித்தவர் <9ịLg_ớữ}LD இருள் அகலத்தம்மை
அனலில் போட்டு எரிப்பவர்
Π εγoυή 02/ 2 רח |

Page 18
நிலா தழியின் தாசன் ()
உலவுகின்ற எரிமலையாய்
உறுதியோடு செல்பவரி வலிமை கொண்ட கொடிய எதிரி
வாழ்வை முடித்து வெல்பவர் நிலவு போலும் முகத்தில் சிரிப்பு
நிலைக்கச் சாவை ஏற்பவர் உலகிற்தமிழ் ஈழ மண்ணின்
உயர்ந்த மானம் காப்பவர்
மனதில் நிறைந்த திடத்தால் இமய
மலையை விடவும் உயர்ந்தவர் முனிவர் யோகி எவர்க்கும் இல்லா முற்றும் துறந்த உனத்தவர் கனவு போல முடிந்து அமர காவியமாப் நிலைப்பவர் தினமும் உலகு வியந்து போற்றும் தியாகச் சுடர்ச் சிகரங்கள்
L5ಕ) tL!:- ತಿ 0.06.1993
22 - ψ6υή ω, !
i.
 

frem
நிலா தமிழின் தாசன்
急 -
தற்கொடையின் எல்லை!
பாரதத்தின் முகத் திரையைக் கிழித்தெறிந்தாய்! பாசிசத்தின் நிஜ வடிவம் தெளிய வைத்தாய் சீரழியும் தமிழீழமக்கள் வாழ்வை நீயும் !
திசை கிருப்பும் மாலுமியாய்ப் பணிபுரிந்தாய் ஊரெழுவில் ஒளிப்பிழம்பாய்ப் பிறந்து வந்தாய்" ஒப்பற்ற தலைவனணி இணைந்து நின்றாய்! தீரமுடன் நெஞ்சுறுதி கொண்டே நீயும்- பசித்
தீயினையே நின்றுலன்ெ மனதை வென்றாய்!
வேரோடு கருவறுத்து மாய்க்க வந்த இந்தி
வெறியர்களைத் தலை கவிழ்ந்து வெட்க வைத்தாப் போராடும் தளவேங்கை அகிம்சை என்ற புனிதப்
போருலகில் புதியதொரு வ்ரலாறானாய்! தேரோடும் நல்லைநகர் வீதி தன்னில் எங்கள்
திலீபன் நீ கற்பூரம் போலெரிந்தாய்! நீர் கூட அருந்தாது செய்த யாகம்- இந்த
நிலமுள்ள வரை மக்கள் நெஞ்சில் வாழும்!
ινου ή 62, 23

Page 19
நிலா தழி மின் தாசன் ()
கோட்டையொடு கொக்காவில் மாங்குளத்தில்- புலிக்
கொடி பறக்கும் காட்சியினைக் கண்டிருப்பாய் வேட்கையுடன் நீ மொழிந்தவாறு நாளை- தோழருடன்
விண்ணிருந்து தமிழீழம் மலர்தல் காண்பாய் பூட்டிவைக்க முடியாது புயலைக் கூண்டில்- மக்கள் புரட்சியெனும் நெருப்பினையும் அணைக்கொணாது பாட்டினிலே உனை எழுத வார்த்தை இல்லை-எங்கள்
பார்த்திபனே!
பதிப்பு:
நீயேதற் கொடையின் எல்லை!
灘
19. 09. 1993
22.09.1993 ஈழநாதம்
24
ζ, συγf 6)/ !

() நிலா தமிழின் தாசன்
உலகினை வெல்வதெனும்
சபதமுடன் கற்றிடுவீர்
சிங்களத்து இனவாதத்
தீயினிலே எரிகின்ற எங்களது பூமியிலே
இருக்கின்ற மாணவரே ! உங்களது கைகளில் தான்
உன்னதப்பூந் தமிழீழம்! மங்களமாய் மலரு மென்ற
வாய்மையினை உணர்ந்திடுவீர்
வருங்காலச் சந்ததியை
வண்ணமுடன் உருவாக்கும்! பெரும் பணியைச் செய்கின்ற
ஆசிரியப் பெருந்தகையீர் அரும்புகளை அறிவு என்னும்
அரிய மணம் வீசுகின்ற நறும் பூக்கள் ஆக்கிடுவீர்!
நாடெல்லாம் மணம்பெறட்டும்!
25

Page 20
நிலா தழி மின் தாசன் ()
அறிவியலை ஊட்டி அவர்
ஆளுமையை வளர்த்திடுவீர்! நறுங் கவிதை கலைகளிலே!
நயமாகத் தோய்த் தெடுப்பீர் உறுதியினை அவருளத்தில்
ஊன்றிப் பதித்திடுவீர்! அவர்களது ஆற்றலினால்
அன்னை நிலம் வளம்பெறட்டும்
அச்சத்தில் மண்மறந்து
அயல் நாடுகளுக்(கு) ஒடி அவர்களிடும் எச்சத்தில் வாழுகின்ற
இழிநிலையை மறந்திங்கே! அச்சத்தின் வேரறத்து
அன்னை தமிழ்ஈழத்தில்! இச்சை கொண்டு வாழுகின்ற
இங்கிதத்தை உணர்த்திடுவீர்!
குண்டுருட்டி விளையாடி
குளங்களிலே நீராடி கண்டிருந்த இன்பமெல்லாம்
கனவாகிப் போயொழிய - விமானமிடும் குண்டுகளை ஏந்தி நிற்கும்
கொடுமையுள்ள பூமி என கண்டஞ்சும் நிலை விடுத்துக்
கனிவு நிலை தோற்றுவிப்போம்
εμου ή ο), Γ

நிலா தமிழின் தாசன்
என்ன இல்லை இம்மண்ணில்?
எந்த வளம் இங்கு இல்லை? தென்னை யொடு பனை வளங்கள்
செழிக்கின்ற வயல் நிலங்கள் என்ன நிலை வந்தாலும்
எழுந்தாடும் கடல் வணங்கள்! அன்னை தமிழ் ஈழத்தை
அலங்கரித்து நிற்குதன்றோ?
விஞ்ஞான அறிவு எனும்
வெளிச்சத்தில் குளித் தெழுந்தால் பஞ்சாகிப் பலதுயர்கள்
பறந்தடித்து ஓடாதோ ? கெஞ்சி நிதம் வாழுகின்ற
கீழ் நிலைமை மாறியிங்கே அஞ்சாது வாழுகின்ற
அரிய நிலை தோன்றாதோ?
கல்வியினால் அன்றோ!
காசினியில் நாடெல்லாம் நல்லபடி முன்னேறி
நவயுகத்தை அமைக்கிறது? சொல்லுங்கள் கல்வியிலே - எம்மைத்
தோற்கடிக்க எவருள்ளார்? வெல்வதென இவ்வுலகை
சபத முடன் கற்றிடுவீர்!

Page 21
நிலா தழி மின் தாசன் 0
அமெரிக்க றொக்கெற்று
அம்புலியைத் தொட்டதுபோல் தமிழர்களின் அறிவியலும்
தடம் பதிக்க வேண்டாமோ? அமைகின்ற தமிழீழ
அரிய சுடர்ப் பூமியிலே! எமக்கான எந்திரங்கள்
இயற்றி வைக்க வேண்டாமோ? தரணியிலே தமிழீழம்
தலை நிமிர்ந்து ஜப்பான் போல்! அருமையுடன் வாழ்ந்திடவே
ஆர்வமுடன் கற்றுழைப்போம்! திருமலியும் எங்களருந்
தேசத்தை நேசித்து விருப்போடு தேசமதன்
விடியலுக்குக் கை கொடுப்போம்! தமிழீழத் தாயின் அருந்
தனயர்கள் நாங்களென அமிழ்தான மாணவரும்
ஆசிரியப் பெரியோரும் இமையோடு விழியாக
இணைந்திங்கு நலம்விளைத் து தமிழீழம் தழைத் தோங்க- அறிவுத்
தண்ணிரை வார்த்திடுவீர்!
灘灘 灘 படைப்பு:-13-07-1993. (மேற்குறித்த நாளில் வி. பு, மாணவர் அமைப்பின் நடு வர் பணியகத்தில் இடம் பெற்ற கலையரங்கில் பாடியது)
28 D / συήo, I
 

நிலா தமிழின் தாசன்
@
தேசத்தன்னில்
LT g to 60) 5 Jul LPT
தாயகத்தை மறந்து ஒடுவாய்- உலகத்
தெருக்களெல்லாம் அலைந்து வாடுவாய்! நாய்களைப் போல் வாழலாகுமா? - உயிர்
வாழ்வதென்ன நீண்ட காலமா?
எந்த மண்ணும் உனக்கு அன்னியம் - உன் சொந்த மண்ணில் வாழல் புண்ணியம்
சிந்தனையைச் சீர்மை செய்யடர! - உன்
தேசம் தன்னில் பாசம் வையடா!
காட்டு மரம் கூடக் கனிதரும் - பெரும்
கருணையுடன் ஆற நிழல் தரும்!
நீட்டி உன்னை வளர்த்த தாயக. - நன்
நிலத்துக்குன்னால் என்ன சுகம் வரும்?
கருகிவிழும் அரும்புகள் ப7ராய்! - அவர் காலடி மண் ஒளிர்வதைப் பாராய்!
அருகில் வரும் விடுதலைக் காலம் - தமிழ்
ஈழத்தினை வாழ்த்திடும் ஞாலம்!
படைப்பு:-22-08-1993,
ψευή οι - 29

Page 22
நிலா தழி மின் தாசன் ()
பாரதி எங்கள் விழி
في ديسينسيبه
இன்பத் தமிழின் இனிய கவி வானில்
இருளகற்ற எழுந்த சுடர்
அன்பிற்றோய்ந்த அழகு தமிழ்க் கவிதை
அள்ளியெறிந்த கவிக் கடல் 1
பாரதத்தில் நல்ல பாரதம் செலுத்திப் பாதை புதிதமைத்த ஒளி
1ாா கிரும் வண்ணம் பாவிசைத்த தமிழ்ப் Lrt T6 stisch 6oß
வீரசுதந்திரத்தை வேண்டும் துணிவளிக்கும் வீறு கவி பொழிந்த முகில் தீர உணர்ந்தகவி தீரத்துயரனைத்தும் தீரமுடனெழுத்த புயல்
சாதியில்லையெனச் சாற்றும் கவி சமைத்து சாகாவரம் பெற்ற கவி மோதியுடைத் தெறிந்து மூடத்தனம் போக்க மூர்க்கமுடனெழுந்த அரி. போற்றும் வையம் இவனை புவியுள்ள மட்டும் பூட்டி வைக்கும் உளச் சிறையில் ஏற்றும் அறிவுலகம் - ஏற்கும் முழு உலகும் இலங்கும் இவன் கவி மறையை !
SY SNYK SYKE
淡リ 浅製 逢。
SS S
பதிப்பு 'பூ' 1985
32
εν συή σι, ,

() நிலா தமிழின் தாசன்
S S பாசறைக்குள் ஏசு பாலன்:
மார்கழியின் மழைமுகிலைக் கிழித்து வீசி வல்லரசின் விமானங்கள் வானிற் சீறும்! போர் வெறியால் குண்டுகளை மழையாய்ப் பெய்து
பூதமென உயிர்குடித்து நாசம் பண்ணும்! தார் நாராய் உடலங்கள் பிய்ந்து நாறி
நரக மென எங்கணுமே கோலம் காட்டும் சீர் கெட்ட வையத்தின் இருளை போக்கச் சிரித்தபடி பொற்பாலன் பிறந்துள்ளாரே!
'ஏரோதின்" வழிவந்தோர் ஏராளந்தான்!
'ஏ-கே" யை அவர் நித்தம் கரத்திலேந்தி வேரோடு அமைதியினை வெட்டி வீழ்த்தி வீர மெனப் பேரங்கள்' பேசி நின்று சீரோடு வாழ்ந் தோரைச் சிறைக்குள்ளாக்கிச் சிதறுகின்ற குருதியிலே தாகங் கொண்டு! ஆராயும் திறனின்றி அழிவோர் தம்மை
அணைத்தருள வென்று சுதன் பிறந்துள்ளாரே!
εν συγή 6η/ 33
רח

Page 23
நிலா தழி மின் தாசன் ()
நல்லோரின் தலையில் முள் முடியைச்சூட்டி
34.
நாள் தோறும் அவரை மிக வதைத்து வாட்டி! பொல்லாரின் தலையில் பொன் முடியை மாட்டி
'பூ' வாளும் வேந்தரென வணங்கி வாழ்த்தி! இல்லாமை என்கின்ற தீயில் வெந்து
இறப் போரைக் கிஞ்சிற்றும் எண்ணிடாமல் பொல்லாத கறை நெஞ்சோ டுறைவோர் தம்மைப்
புதுப்பிக்கப் புரட்சிமகன் பிறந்துள்ளாரே
ஏசு பிரான் பிறந்தவிடம் தன்னைக்காட்ட
இந்நாளில் “விண் மீன்கள் வழிகாட்டாது! ஆசையுடன் அவர் பாதம் துதிக்க வென்று
அலைவோரே என் பேச்சைக் கேட்டுச் செல்வீர்! சூசை மரி இடந்தேடி அலைந்த வேளை
'சுற்றி வளைத்(து) ஊருக்குப் புதிது என்றே! பாஷைஅறி யாத படை வீரர் கூட்டிப்
"பாசறைக்குள்" பாலகனைப் பிறப்பித்துள்ளார்!
S*2 S2 30 C
KN
பதிப்பு :- தொண் டன் 1989-90 கிறிஸ்துமஸ், புத்தாண்டுச் சிறப்பிதழ்
புலர் வு (
 
 

நிலா தமிழின் தாசன்
●
கோழிக் குஞ்சுகள்
என்றும் நெஞ்சில் வஞ்சமில7 இனியகோழிக் குஞ்சு நாம்!
தொன்று தொட்டுத் தொல்லுலகில்
தோன்றி வாழும் உயிர்கள் நாம்!
பஞ்சு மென்மை மேனியோடு
பாச நெஞ்சு கொண்டநாம்!
வஞ்சப் பூனை கழுகு, கீரி
வருத்த அஞ்சி வாழ்கின்றோம்!
எங்கள் கூட்டைக் கழுகுக் கூட்டம்
எந்த நாளும் சுற்றுது
பொங்கும் இரத்த வெறியில் பூனை
புகுந்து எம்மைத் தூக்குது!
கண்ணைக் கொத்தி நெஞ்சைக் குத்தி
கழுகு பசியைத் தீர்க்குது!
மண்ணில் எம்மைப் பினங்களாக்கி
மகிழ்ந்து கூத்து ஆடுது!

Page 24
நிலா தழி மின் தாசன்
தூங்கும் போது துயரம் தந்து
துட்டக்கீரி துரத்துது
வாங்கிவிட்ட மூச்சைக் கூட மறந்து சாகப் பண்ணுது
ஈன்ற அன்னை இற கொடிந்து
இதயம் நொந்து கிடக்கிறாள்
தோன்றும் வாழ்வில் விடிவு என்று துயரைத் தாங்கி நிற்கிறோம்.
பதிப்பு: விரகேசரி வாரமலர் 29-4-1984
படைப்பு:-19:4-84
36
ένου ή 6))

() நிலா தமிழின் தாசன்
கனிவு!
ܗܝܝܘܚܝܝܐ-ܝܚ---ܗܘܝܗ
உழைப் பெனும் தியாகத் தீயில்
உருகிடும் உண்மைத் தோழர்! உதிர்த்திடும் வியர்வை என்னும் உதிரமாம் உயிரின் சாறு தழைத்துமே எழுந்தபோது
தர்மமே கணித்த தங்கே ! தரணியிற் தியாகத் தீயும்
கனிந்திடக் கணிகளாகும்
தியாகியைத் தீயிற்ய்போட்டு
திட்டமாய் எரிக்கும் போதும்! தியாகியின் கனிந்த நெஞ்சம்
கணித்தரு வாய் முனைக்கும் ! நியாயமாம் அவனின் ஆன்மா
நிச்சயம் கனியும் போது நிலத்தவர் பசியின் தீதுை
தணித்திடும் கனிகளாகும்!

Page 25
நிலா தழி மின் தாசன் 0
சத்திய வேள்வித் தீயில்
ஜனித்தது தியாக மென்னும்! சத்துள கனிகள் நல்கும்
தத்துவக் கனிவு நீதி வித்தது, கனிவுகொண்டு
முற்றிய தியாகமாகும் இத்தரை வாழவேண்டின்
இத்துணை கனிவு வேண்டும்
L i syn i ii i I :- 1 3 a 0.3- 1 983 .
பதிப்பு: சிரித்திரன், ஏப்ரல் 1983
"α ωΡων 67ώτην βόφου υιθευπ607 ά 3ό σώ υ η βυπιφ யில் முதலாம் பரிசு பெற்ற கவிதை.
38 εν ου ή ο), I
 

() நிலா தமிழின் தாசன்
மெழுகுவர்த்தி!
உலகத்து அரங்கினிலே உயர்வானதாய் தான் உ கித் திட்ட மண் ஓங்க உழைத்து நாளும்!
பலத்துடனே வாழ நல்ல பணிகள் செய்வோன் பாரினிலே இவனுமொரு மெழுகுவர்த்தி!
ஏர்பிடித்து வயலுழுது ஏற்றங் காணும்
எழிலான நல்லுழவன் மெழுகுவர்த் தி!
பார்மக்கள் பசி கொல்லும் பசுமைத்தோழன்
பண்புடையோன் தியாகத்தில் மெழுகுவர்த்தி!
முதுகொடிய மூட்டையினைச் சுமக்கும் போதும் முழுநாளும் வறுமையிலே நொந்த போதும் பொதுச் சொத்தைத் தான் திருடி உண்ணா நிற்கும் பொன்மனச் செம்மல் எலாம் மெழுகுவர்த்தி!
கொண்டவனின் குணமறிந்து வாழும் நல்ல
குணமுள்ள மனைவியொரு மெழுகுவர்த்தி!
தண்டமிழைத் தாயெ ன்றே பாடும் நல்ல
தன்மானக் கவிஞனொரு மெழுகுவர்த்தி!
Πη γωή ον in 39

Page 26
நிலா தழி மின் தாசன் ()
தனக்கென்று வாழாது தரணி தன்னில்
தரத்தோடு வாழுபவர் மெழுகுவத்தி
சினங் கொன்று செம்மையுடன் சேர்ந்துவாழும் சிறப்புடையோர் எல்லோரும் மெழுகுவத்தி
ᎥᎥᎦᏔᎸLü Li :- 02-05- 1985
பதிப்பு:-சிந்தாமணி 30-06-85
40 ενου ή βιν Γ

( நிலா தமிழின் தாசன்
? —
ஒ.வை யகமே!
-
107 சறுத்து ரட்சிக்க வந்த தூய
மனு மகனாம் யேசுவுக்கு சிலுவை தந்தாய் நாசவழி சென்றோரைத் திருத்த வந்த
நாயகராம் நபியின் மேல் கல்லெறிந்தாய் அரசு தட்டி கிரேக்கத்தை எழுப்புவென்று துடிதுடித்த ஞானிக்கு விடமணித்தாய் நேசித்தே பாரதம் மீட்ட காந்தி"
நெஞ்சுக்குத் துப்பாக்கிக் குண்டை ஈந்தாய்
வெள்ளையரிற் குறைவல்ல கறுப்பரென்றே விளங்க வைத்த தூய கென்னடிகனோடு "கிள்ளிவிடக் கீரையல்ல" நாங்களென்று
கிளர்ந்தெழுந்த"கிங் மாட்டின் லூதர் தம் மின் பிள்ளை நிகர் உள்ளமதை ரவைகளாலே" s பிளந்தெறிந்து குருதியினைக் கொட்ட வைத்த" ப் கள்ளமிலாக் கனிவு மனத்தோரையெல்லாம்
காசினியே வதைக்கின்றாய் ஒய்த்திடாயோ?
ί ινδυή ώ/ -

Page 27
நிலா தமிழின் தாசின் L
பண்டைநான் தொட்டுலகே பயங்கொளாது
பாதகமே இன்றும் நீ புரிகின்றாயே குண்டுகளைப் படைப்பதிலே போட்டி போட்டு
குவலயத்தைக் கொலைக் கிடங்காய் மாற்றுகின்றாய் இண்டுகளாய்ப் பூவினிலே தேனை மாந்தி
வாழ்ந்தாலும் இன்பமடா! வானரம் போல் கண்டதையும் உண்டொழுகல் மாபேறென்பேன்
கைகளிலே கொலைக்கருவி அவை கொள்ளாவே
உண்மைதான் உயர்வென்று ஒதுகின்றாய்
உண்மைக்காய் உழைப்போரை வீழ்த்துகின்றாய் வண்ணமிகு சுதந்திரத்தை மனிதர் தம்மை
வாழ்விக்கும் உரிமையினை வாழ்த்தும் நீயோ திண்ணமுடன் அதைக் காக்கத் திரளுவோரைச்
சினங்கொண்டே சிரங்கொய்து மகிழ்கின்றாயே! பண்பாட்டுப் பாருலகே நீ தழைக்கப்
பதி கொண்டு அன்புவழி சென்றிடாயோ?
பதிப்பு: 'வாலிபம்" 1989 ஜான்
42 εν συσα), Γ

Γ) ή ουσα β ωςό 3σαείς
தெருவில் நிறுத்தாதீர் !
உழைத்துழைத்து வளம் படைத்து மலையகத்தை
உயர்வான வரும்படியின் சிகரமாக்கி தழைத்தோங்கி நாடுயரப் படிகளானோம்
சந்த தியாய்த் துயர்படிந்த கடிதமானோம் இளைத்திட்டோம் சிறுதாரரய் இயலாதென்னும்
இழி நிலைக்கும் ஆளானோம் இருளில் வீழ்ந்தோம் பிழைத்திந்தப் பூவுலகில் நாமும் வாழ!
பிரியமுடன் உதவத்தான் மனிதரில்லை.
துண்டாடுகின்றார்கள் தோட்டந்தன்னை
துன்பத்தை முதுகினிலே சுமையாய் ஏற்றி திண்டாட விடுகின்றார் தெருவில் எம்மை
"தேசத்தின் முதுகெலும்பை" முறிக்கின்றாரே! கொண்டாடுகின்றார்கள் குமுறும் எங்கள்
குளிர் நெஞ்சின் குமுறலொலி கேட்டிடாமல் சண்டானத்தனமென்று சாற்றி வைத்தும்
சற்றுமதை உணராமல் "ஆடுகின்றார்"
ι, ουσα), 4

Page 28
நிலா தமிழின் தாசன் ()
தேயிலையை இறப்பரினை கொக்கோ கோப்பி
திருத்தமுடன் கறுவாயை கராம்பு ஏலம் ஆய பல சரக்குகளை விளைய வைத்தோம்
ஆற்றலுடன் குறைபாட்டைக் களையவைத்தோம் தேயமதின் வேருக்கு உரமாய் ஆனோம்
சிறப்பொன்றும் காணாது தேய்ந்தே நின்றோம். நேயமுடன் சிந்திப்பீர்! தெருவில் எம்மை
நிறுத்துகின்ற நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வீர்
பதிப்பு சிந்தாமணி 5:3-1989
44 (. y Guiay
 

நிலா தமிழின் தாசன்
கலப்படக்காரன்
அரிசியிலே கற்களினைக் கலந்துவிற்றாய்- நல்ல
அரும்பாலில் நீர் கலந்து காசுபெற்றாய்!
உருசையுள்ள சர்க்கரையில் மணலைத் தூசை - நீ
ஒன்றாகக் கலந்த பின்னர் கடையில் வைத்தாய்
மிளகாயில் செங்கட்டித் துரனைச் சேர்த்து
மிடுக்காகப் பைக்கட்டில் அடைத்து விற்றாய்!
இனகாத நெஞ்சோடு கச்சான் கோதில் - நீ
எண்ணெயினை வடித்தெடுத்து "எள் நெய்யென்றாய்!
கனிகளுடன் காய்வகையைக் கலந்தாய் - நல்ல
கற்கண்டைக் கண்டதுடன் இலத்து விற்றாய் இனிப்பான பண்டமெனச் செய்து வைத்தாய் அதில்
இனிப்புக்குப் பதிலாக எதையோ சேர்த்தாய்!
புணியினிலே பிழிந்தெடுத்த சக்கை சேர்த்தாய்!-ஒன்றும்
புரியாத மக்களுக்குப் புளிதானென்றாய்!
எழிலான மஞ்சளினை அரைத்த தூளில் - நீ
இணக்கமெனக் கோதுமைபின் மாவைச் சேர்த்தாய்
ι, ου ή ό)/ 45

Page 29
நிலா தமிழின் தாசன் ()
சிறுகுழந்தை பால்மாவில் சுண்ணாம்புத் தூள்- நீ சேர்த்தேதான் குடலவிந்து சாகவைத்தாய்!
வறுத்திடித்த கோப்பியிலே கரியின் தூனை-நீ வாகாகத் தான் சேர்த்து வாழ்வழித்தாய்!
எல்லாமே கலந்து பணம் பொருளைச் சேர்த்தாய் நீ இறந்த பின்னர் கொண்டு செல்ல எதனை சேர்த்தாய்
பொல்லாத நெஞ்சுடையோய் புழுத்து நாறி- உன்
பூவுடல் மண்ணுடனே கலக்கும் பாராய்
ال8 ملخ 灘 灘
AAS
படைப்பு:18.5.85
பதிப்பு:29.9.85 சிந்தாமணி.
46 ενου ή οι/ )

இ மண
அன்னை
என்னை இந்த மண்ணின் மீது இலங்க வைத்தவன் அன்னை- இலங்க வைத்தவள் கண்ணே என்று, கனியே என்று
ாத்து வந்தவள்,
அன்னை காத்து வந்தவள்! என்னைக் காத்து வந்தவள்!
பத்துமாதம் சுமந்து கருவில் பாதுகாத்தவள் அன்னை பாதுகாத்தவ ள் முத்தமீந்து முறுவலிந்து சிே* மலர்ந்தவள். அன்பு மழை பொழிந்தவள் அன்னை- துயர் கனைத்தவன்!
குருதி தன்னைப் பாலதாக்கி குடிக்கத் தந்தவள்! அன்னை குடிக்கத் தந்தவள் அன்பை- வடித்துத் தந்தவள்
என்றும், உருகும் மெழுகுவர்த்தி போலே ஒளியைத் தந்தவன் அன்னை- ஒளியைத் தந்தவள் -
y Gorf Gy 47

Page 30
நிலா தமிழின் தாசன் ( )
கண்ணே கண்ணே என்று கொஞ்சிக்
கடவுளானவள்
கண்முன் கடவுளானவன்.
உண்மையன் பின் வடிவமாகி
உயிரிற் கலத்தவள்
என்றன் உயிரிற் கலந்தவள்.
படைப்பு: 04:12-84
பதிப்பு: தினகரன் 14-12-84
48
εν δυή σην 1

நிலா தமிழின் தாசன்
சங்கீதம் பாடிவருவாளாம்!
கொட்டுமழை தான் கொட்டிக் குட்டைகுளம் தான் நிரம்பும்
குளிர்காலம் வந்தாலே போதும் அவள்
கிட்டவந்து நிக் திரையில் கிணுகினெனக் காதுக்குள்
கிளி மொழிகள் பேச வருவாளாம்!
சட்டென்று தட்டிவிட்டுச் சனியனே என்றாலும்
சளைக்காமல் ஓடிவரு வாளாம் - அவள்
பட்சமுடன் நம்முடலைப் பங்கெனவே தானெண்ணிப்
பட்டென்று முத்தமிடுவாளாம்!
கட்டிலறையானாலும் கடைத்தெருவே யானாலும்
கண்டவிட மெல்லாமே காதல் - நாம் தொட்டிலிலே கிடந்தாலும் துவண்டகிழமானாலும்
சொந்தமெனக் கொஞ்சிவிடு" வாளாம்!
"இச்சையுடன் தானு றிஞ்சு வாளாம்- இந்த "கட்டழகி தன்னையொரு கால்நடையும் விரும்பாத
காரணத்தை என்ன வென்பேனாம்?
{ } / αυγήών 47

Page 31
நிலா தமிழின் தாசன் ()
வெட்கமற்ற இவ்வழகி வேட்கையுடன் எமையணுகி
வேதனைக் குட்படுத்து வாளாம் - தினம் நட்ட நிசி வேளையிலும் நம்முடைய தூக்கமதை
நாசமெனப் பண்ணி விடுவாளாம்! சட்டையணியாத இவன் சங்கீதம் பாடித்தான்
சல்லாபம் வண்ண வருவானாம் - மிக மட்டமிவன் உறவாலே ? மலேரியா? வந்துடலை
வாட்டுமையா வஞ்சியிவள் நுளம்பு
படைப்பு: 18.01.1984
பதிப்பு;-05-02-1984 விரகேசரி வார ஒலர்
50 ανουή ον

நிலா தமிழின் தாசன்
see சித்திரையே ஏதுசெய்வாய்?
பூத்துவரும் சித்திரையே! எமது வாழ்வில்!
புலர் வேதும் கொண்டு வரும் நோக்க முண்டா? காத்திருந்து! காத்திருந்து விடிவு தன்னைக் காணாது கடுமிருளில் வாடுகின்றோம் நேத்திாத்தைப் பறிகொடுத்தோன் நிலையில் நாமும்
நிகரில்லாச் சுதந்திரத்தை இழந்து நாளும் நீச்சலிடுகின்றோமே! குருதி நீரில்!
நீ யெம்மை மீட்க வெது கொண்டு வாராய்?
வீடிழந்து பொருளிழந்து வீதி நின்று'
வேதனையில் வேகின்றோம்! விதியே யென்று! கூடிழந்த குயிலானோம்! கொடிய காக்கை
கொத்தியெமை விரட்டிடவே சிதறியோடி! நாடிழந்து உலகத்து தெருக்கள் மீது!
நாதியற்று அலைகின்றோம் அகதியாகி ஒடிழந்த ஆமையினம் உயிர் வாழTது
உலகத்தில் நாடிழந்தோம்! நாமுமஃதே

Page 32
நிலா தமிழின் தாசன் )
மங்கையர்கள் கற்பிழந்தார்! மணவறைக்குள்
மணமக்கள் "ஷெல்" விழுந்து பிணமாகின்றார் பொங்கலுக்கு கதிரனுக்கப் போன மக்கள்!
பொசுங்குகின்றார் வயற்காட்டில் புழுக்களாக ! எங்கெங்கும் வெடியோசை குத்து வெட்டு
இரைந்து வரும் கண்ணிரோ டிரத்த ஆறு! வெங்கொடுமைச் சாக்காட்டு நிலையை மாற்றி
விடிவளிக்கச் சித்திரையே! ஏது செய்வாய்?
灘 灘 ጎ(ኗ
பதிப்பு:1986, தொ ன்டன்’ சித்திரை உலர்
ένου ή 62, ( )
 

( ) நிலா தமிழின் தாசன்
(liš
மேதினி நிமிரும் மேதினம்!
வையகத்தின் திக்கெட்டும் வாழுகின்ற
மானிடத்தின் உயிர்நாடி, உழைக்கும் மக்கள் உய்யவென ஒன்றாகிக் கைகள் கோர்த்து
உரிச மக்காய் குரலெழுப்பும் புனித நந்நாள் செய் கொழிலே தெய்வமெனப் போற்றும் மக்கள் செந்நீரில் குளிர்த்ததினால் சிவந்த பொன்நாள் மெய்யான யுகவிடியல் தோற்று விக்க
மேதினத்தில் உறுதியுடன் நிமிர்வேனம் ஒன்றாய்
குனிந்துடலம் தனைப் பிழிந்து உழைத்தும் இந்தக்
குவலயத்தில் உழைப்பவர்க்கு நீதியில்லை நனைந்த விழி! நலிந்தவுடல் கிழிந்த ஆடை
நகர நிலை! வாழ்விலொரு விடிவே இல்லை! நினைத்துருகிக் கிடந்துழலும் உழைக்கும் வர்க்கம் நிலமதிரத் துணிந்தொன்றாய் எழுந்து வீட்டால் சினந்த விழிச் சிவப்படங்கு முன்னர் மண்ணில்
சிறப்பான செம்மலர்ச்சி சிரிக்கக் காண்போம்!
{ } / y / -- 53

Page 33
நிலா தமிழின் தாசன் ()
வீரமொடு தற்கொடையைக் கலந்து நித்தம்
வேள்வி செய்யும் தமிழீழப் புனித மண்ணில் வேர்விடுத்த துயரங்கள் அனைத்தும் முற்றாய்
வீழ்த்தியிங்கு மகிழ்வலைகள் துள்ள வைக்கப் போர் தொடுக்க மே நாளில் உறுதி பூண்போம்
பூபாளம் பாடிவரும் விடியல் காண்போம்சீர் பொலிய மேதினியை நிமிரச் செய்யும்
செப்பரிய மேதினத்தில் ஒன்று சேர்வோம்,
படைப்பு :- 28-04-93
54 ) ενου ή οι/ I
 

() நிலா தமிழின் தாசன்
இன்பப் பொங்கல்
போரடங்கி அமைதி வர வாழும் மக்கள்
பூமுகத்தில் மகிழ்வலைகள் பொங்கிப்பாய ஊரடங்கிக் கிடவாமல் உயிர்ப்புக்கொண்டு
சீரடங்கும் புதுவாழ்வு சிரித்துப் பொங்கச்
செம்பரிதி வானடியில் உதிக்கும் காலை போரடித்த நெல்லரிசி பாலில் போட்டுப்
பொங்குகின்ற இதுவல்லோ இன்பப் பொங்கல்!
பஞ்சமறப் பசிதொலையப் பாரில் எங்கும்
பசுமை வளம் ஆர்ப்பரிக்க நிறைவு பொங்க அஞ்சுகின்ற நிலைமாறி அடிமைத்துன்பம்
அகன்று விட விடுதலையால் வாழ்வு பொங்கி கொஞ்ச வரும் குழந்தை மனம் போலே தூய்மை கொலு விருக்கும் மனித மனம் மலிந்து பொங்க செஞ்சுடரைத் தோத்தரித்து உழவ மக்கள்
செய்கின்ற இதுவல்லோ இன்பப் பொங்கல்!
| - μουήση 5

Page 34
நிலா தமிழின் தாசன் ()
பச்சரிசி பால் பயறு கரும்பு வெல்லம்
பழம் சேர்த்துப் புதுப்பானை அடுப்பிலேற்றி! கச்சிதமாய் வயல் விளைய வைத்த வெய்யோன்
கருணைக்காய் உழவர் செய்நன்றிப் பொங்கல்! தைத்திருநாள் தமிழர்க்குத் தலைநாள் என்னும் தத்துவமும் தன்னகத்தே கொண்ட பொங்கல் இத்தரையில் புதுவாழ்வின் வருகை கூறும்
இவ்வரிய பொங்கலல்லோ! இன்பப் பொங்கல்!
Smዴሪ 蚤 23.
படைப்பு :- 24-12-1992
பதிப்பு:-10-01-1993 வீரகேசரி
54 ενου ή 6η, 1
 
 

நிலா தமிழின் தாசன்
வாழ்வு விடியும்
அன்பு தன்னை வளர்ப்பதாலே அமைதி எங்கும் குழும் துன்பமில்லா நிலையில் வையம் ஆனந்தமாய் வாழும் ஆசை தன்னைச் சுருக்கிக் கொண்டால் அல்லல்
தானே சுருங்கும் ஈசனருளாலே உய்யும் நிலைமை வந்து நெருங்கும்
இன்பமென்ற ஒன்றைத்தானே இதயமெல்லாம்விரும்பும் ஏற்றத்தாழ்வு இல்லா நேச வாழ்வில் அது அரும்பும் ஈட்டு கின்ற செல்வம் மாந்தர் இறப்பினோடு முடியும் நாட்டி வைத்த அறத்தின் நிழல் மறுமையிலும் படியும் உலகில் உண்மை நீதி நேர்மை கொண்டு வாழல் வாச்சி கலகம் பண்ணி உலகை ஏய்க்கும் கயவர் கட்கிே" தாழ்வு
*ஞ்சலாடும் மனத்தர் வாழ்வு உறுதியற்று அழியும் சாய்ந்திடாத கொள்கை கொண்டோர் சரித்திரமோ மிளிரும் என்றும் வாழ்வில் அஞ்சிடாத இதயபலம் வேண்டும் நன்கு பேணி வளர்த்துக் கொண்டால் வாழ்வில் வெற்றி தோன்றும்
ενου ή οι/ 57 רח

Page 35
நிலா தமிழின் தாசன் ()
9டு தூக்கி ஒய்ந்திடாது என்றும் பயிலல் ஞானம் கூடுமறிவு குறைந்துவிட்டால் இழிவு மிக ஈனம்
ஐக்கியத்தைப் பேணிவாழல் மாந்தர் தமது கடமை சுக்குநூறாய் அதைஉடைத்தால் சுகங்களேது? மடமை
ஒன்றை யொன்று விழுங்கி விட்டால் எஞ்சுவது பூச்சியம் என்றுமவை இணைந்து நின்றால் நலத்தைக்காணும் இராச்சியம்
ஒடும் குருதிசிவப்பு உடலில் ஒழுகும் வியர்வை உப்பு நாடி ஒன்று கூடிவிட்டால் நமக்கு எவர் ஒப்பு?
ஒளவியங்கள் பேசுவதால் ஆக்கமில்லை அழிவே செவ்வையாக ஒளவை சொன்னாள் சேர்ந்தொழுகின் - விடிவே!
பதிப்பு: தொண்டன் 17-08-87
58 ) ζ/ δυή αν f
 

() தி லா தமிழின் தாசன்
சமாதானம் செழிக்கவேண்டும்
எல்லோர்க்கும் எவ்விடத்தும் எந்த நாளும் இனிமை தரும் சமாதானம் நிலவவேண்டும் சொல்லாலும் செயலாலும் சுருதி கூட்டி சுகம் நல்கும் சமாதானம் வளர்தல் வேண்டும்!
சமாதானம் எனும் குளிர்ந்த மழையினாலே 'சமர்’ என்னும் கொடுந்தீயை அணைக்க வேண்டும் இமாலயம்போல் இன்பமது உயால் வேண்டும்! ஏற்றத்தாழ் வெனும் பேயை ஒட்டல் வேண்டும் யுத்தத்தால் அழிவின்றி ஆக்கமில்லை! யுகமெங்கும் சமாதானப் புரட்சி வேண்டும்! சித்தத்தில் சமத்துவத்தை வளர்த்தல் வேண்டும் ! செகமெங்கும் சிரிப்பினொலி கேட்க வேண்டும் !
உழைப்போரின் வாழ்க்கை நிலை உயரவேண்டும்! a Gn GU95 Guurr நெஞ்சமெல்லாம் மலர வேண்டும்! குழப்ப நிலை முற்றாக மாற வேண்டும்! குவலயந்தில் அமைதியொளி பரவவேண்டும்! தினந்தோறும் சமாதானம் செழிக்க வேண்டும்! தீராத பகைக் கொடுமை அழியவேண்டும்! மனந்தன் னில் யான் கொண்ட ஆசை இஃதே ! மனிதர்களே உணர்ந்திடுங்கள் உயர்வு காண்போம்.

Page 36
நிலா தமிழின் தாசன் ()
O
சொர்க்கத்திலுள்ள அப்பாவுக்கு
അത്ത്
அப்பு!
உன்ர உதிரத்தில இருந்துதான் உருவாகியவன் நான்! நீ! தன்மானத்தடாகம் அந்தத் தண்ணீரால்தான்! என்னைக் குளிப்பாட்டி வளர்த்தாய் சன்மானங்களுக்கும்! - - அற்ப சலுகைகளுக்கும் தன்மானத்தை விற்காத "வல்லியம்" நீ, அயலில் உள்ளவர்களுக்கு ஏழையாய் இருந்தாலும்! அருவருப்பாக அமையாது அன்போடுதான் வாழ்ந்தாய்! வயலில் களை பிடுங்கிக் காட்டி வாழ்வுக்கு வழி காட்டினாய்! முயல் முள்ளம் பன்றி! காட்டெருமை ஏன்? மூர்க்கமுள்ள யானைகள் கூட! எங்கள் வயல் எல்லைக்குள் அடி வைக்க விடாது துடித்து விரட்டி!
b0 εν συά ων Γη
 

நிலா தமிழின் தாசன்
AASSSASMMMTqTAMAq qTSqqMA MA AqATTTTTT SSLSSSMMSTqTTqTSTqTq gSEC MMSiMSMMAS MTS
அஞ்சு வயதிலேயே எனக்கு அனைத்தும் விளங்க வைத்தாய் செயல்தான் சிந்தனையின் முற்றுப்புள்ளி எனச் செப்புவாய்! ஏன் செய்தே காட்டினாய்! கள்ளுக் குடிச்ச வாயாலே நீ கம்பராமாயணத்தைப் பொழிய- நான் அள்ளிப் பருகிய அந்த ஐயிரண்டு வயதை என்னால் மீளப் பெற முடியுமா? அப்பு எல்லாவற்றையும் விட அம்மாவோட அம்பது வருசம் அன்போடு வாழ்ந்து காட்டியிருக்கிறாய் அண்ணனில் நம்பிக்கையிழந்த நீ என்னிடம் தான் அம்மாவை ஒப்புவித்துக் கண்மூடினாய்! கண்மூடிய தந்தைக்கு ஒரு பிடி மண் போடவும் நான் கொடுத்து வைக்கவில்லை தன்னந் தனியனாய் என்னைத் தோளில் சுமந்து கொஞ்சிய உன்னை நால்வரில் ஒருவனாய்க் கூட ஒரு முறை சுமக்க முடியாது போன பாவிநான் காரணம் 1 உறுமலுடன் வந்து நின்ற வாகனம் அதிலிருந்து குதித்த சப்பாத்துக் கால்கள்! ஐயோ! ஏனப்பு என்னைத் தன் மான மூட்டி
வளர்த் தாய்?
t 16Ꮌ0 Ꮏ riᎥ l :- 20-0 l - l Ꮽ85
116ι - 1 0-02- 1985 ού ο Gα σή ωση (ρου ή
ινου ή οι/ - 6

Page 37
நிலா தமிழின் தாசன் )
ό2
ஒரு மனிதாபிமானச் சந்திப்பு
€9 چتے حیصیت
மனிதாபிமானம் மரணித்துப் போய்விட்ட இந்த
மண்ணில்
இரண்டு இளநெஞ்சங்கள் சந்தித்தன அந்த இளகிங் நெஞ்சத்து நிலப்பரப்புக்களில் மரணித்துப் போனதாகிய மனிதாபிமானப் புஷ்பங்கள் மரணிக்காமலே ஜனனித்துக் கிடந்தன "கூடு" கட்டத் தெரியாத இனத்திற் பிறந்த
குற்றத்திற்கான "பூஷாக்" கூண்டில் "காகங்களாலேயே" கூடு கட்டப் பயிற்றுவிக்கப் பட்ட இந்தக் குயில் வீடு நோக்கி விடுவிக்கப்பட்ட பேrது வேள்விக்குச் செல்லும் வெள்ளாடு போல விழித்தபடி அந்த ரயில் பெட்டிக்குள் குந்தியிருந்தது. நம் நாட்டுப் பயணக் கதைகள் யாவும் மரணக் கதைகளானவைதாமே ? யாழ்தேவியென்ன, உத்தரதேவி, ஹிஜிரா கூட எத்தனை எத்தனைமுறை இரத்தா பிஷேகங்களை ஏற்றுக் கொண்டன.
ι, συ σο, η

நிலா தமிழின் தாசன்
எதிராசனத்திலிருந்து பருந்தென்று நினைத்த அந்தப் பறவையின் விருந்தான பேச்சில் விளக்கிற்று இது ஒரு வெள்ளைப் புறா என்று மனிதாபிமானப் பூக்களிலிருந்து வடிந்த அனுதாபத் தேனால் என்னை அபிஷேகம் செய்தது அந்தக் குளிர்ப் பிரதேசத்துக் குளிர் முகம் என்னைப் பார்த்து நீங்கள் கூடு கட்டினாற் கூட உங்கள் வீட்டில் 'ஒடியல்கூல்" குடிப்பதில் நான் சந்தோஷப் படுவேன் என்று சப்தித்தது "மரகோவில் வைத்துக் கைகுலுக்கும் போது பனித்த விழிகள் கொண்ட அப்பறவையுடன் ஒட்டி வாழலாம் என எண்ணமிட்டேன் அரக்க மனம் கொண்ட அண்டங்காக்கைகளின் குருதி தோய்ந்த இராட்சத அலகுகள் கண்முன்னே தோன்றி
என்னை அச்சுறுத்த எனது சிந்தனைப் பறவை திக்கு முக்காடியது.
பதிப்பு: புதிய உலகம் 1987 தை/மாசி
ενου ή 6ην 63

Page 38
நிலா தமிழின் தாசன் 0
.--—
ό4
தம்பி! என் தங்க மகனே
கடைசியாய்ப் பிறந்து முதல்வனாய்ப் போன முத்தடா நீ! காதலிலிருந்து வீரத்தை வளர்த்துக் கொள்ளாது வீரத்திலேயே காதலை வளர்த்துக் கொண்ட வித்தகன் நீ!
அறிவென்னும் இரும்புப் பொடிகளை அலசி உறிஞ்சிய காந்தம் நீ! செயலுக்கும் சிந்தனைக்கும் ஒட்டுப்போட்டு உறுதியை வளர்த்து உவகை கொண்டவன் நீ!
என் வயிக்றுக் குகையிலிருந்து புறப்பட்ட "வல்லியம்’ நீ கயிற்றுக் கட்டுகளை அறுத்தெறிந்து கை வீசி நடக்க வைப்பதென்னும் முயற்சியில்
புயல் வேகத்தோடு போனாயே ஆமாம் நீ போன பாதையில் குறுக் கிட்ட
புழுதிகளையும் சருகுகளையும் பறக்க வைத்துப் புனிதப்படுத்தியிருப்பதைக் காண்கிறேன்.
ενου ή 6), ί

நிலா தமிழின் தாசன்
நீ திரும்பி வர மாட்டாயெனச் சில தேரைகளும் தேவாங்குகளும் "திருவாய்" மலர்ந்திருக்கின்றன அப்போதெல்லாம் நீ கிடந்த குகை புகையில்லாது நெருப்பாகக் கணல்கின்றதை நான் மட்டுமே அறிவேன். ' ';', ஆனால் நீ என்னைத் தேடி வராவிட்டாலும் நான் உன்னைத் தேடி வரமுடியாதா. என்ன? நீ போன பாதையில் நானும் போக முடியுமென்பதை
இகோ உணர்ந்துகொண்டேன்! நிச்சயம் உன்னைச் சந்திப்பேன்! நீ போன பாதை திரும்பக் கூடாத பாதைதான் திரும்பக் கூடியவர்கள் -
விரும்பக் கூடாத பாதைதான் அது
'ባ ... " ('
* వౌ
ତଷ୍ଟ sy
{
S
谢
படைப்பு:- 7-7-1985 புரட்டாதி, ஐப்பசி 19s
* புதிய Φουά (ό
ο Π φανά η ' , , , - 65

Page 39
நிலா தமிழின் தாசன் 0
ஒர் அகதியின் பாடல்
Jayategy udrefa Jalub பயின்று வந்தார்கள் எம் பாலகர்கள்! இன்றோ! குடும்பத்தோடு நாம் துயின்று கொண்டே ! வாழ்வின் துயரப் பாடங்களைப் பயின்று கொண்டிருக்கும் அகதிமுகாம் இது! மூப்படைந்த கிழங்கள் முடங்கிக் கிடப்பதனால்! பூப்படைந்த கன்னியர்க்கு இங்கு போய்ப்பதுங்க மூலையில்லை! பிரசவங்கள் ஒரு பக்கம்! Logo ar av divas ir uodpušas uh ! நோயுற்ற தாயின் முனகலையே தாலாட்டாய்! நம்பி கண்வளரும் சிசுக்கள்! 'விராதாப விளக்குகளை" அணைக்க முடியாமல் விடியவிடிய எரிய விட்டபடி விழி எரியும் இளர் தம்பதிகள், 'ரேசன்' அரிசி பெறுவதற்கு ரோசத்தை அடகு வைக்கும் அவல நிலை படி அரிசி அளக்கையிலேயே! பிடி அரிசி பிடுங்கும் "கூட்டுறவுப் பேய்கன்" தவித்த முயலடித்தல் என்பதற்குத் தகுந்த
விளக்கம் இது!
O
y R if gy

() நிலா தமிழின் தாசன்
யாரும் வழங்கும் நிதிகளில் கிண்ணி கிள்ளி அள்ளுவதுடன் ! பேரும் புகழும் பெறும் கிராமத் தலைவர்களின் ! அக்கிரமங்கள் அரக்கினியாய் எமை வாட்டும்! பஞ்சத்தால் வாடிய எம் பருவப் பெண்களின் Glosoft uurt a usual
நஞ்சுத்தனமாய் மேயநிற்கும் சில நரதாகங்கள்
மாடுகளாய்!
தேடல் கடத்தல் மனிதவேட்டைகள்! கொஞ்சமா? இத்தனை இடுக்கண்களுக்கு மத்தியிலும்! நம்பிக்கை தளராத தாம்! இருளுக்குப் பின்னுள்ள விடியறுக்காகக் காத்திருக்கின்றோம்,
袋
赛
*
பதிப்பு: 'தொண்டன்' ஆனி 1987
- புலர்வு 67

Page 40
நிலா தமிழின் தரிசன் ()
尊 - -
6nu Tulîsi) GLAT’ LI Lo GioT
", கண்ாை 飘
அகிம்சை வாதிகள் போர்வையை அகற்றினர். ஆயுத வாதிகள் தாமெனச் சாற்றினர். இரட்சகர் தாமென இயம்பிய கூட்டமோ இராட்சதர் தாமெனும் உண்மையை உணர்த்தினர் அமைதியின் ஒப்பந்தம்
அசலின் தீப்பந்தம்!
விடுதலைப் பாதையில்
வெட்டிய படுகுழி
தமது மண் காத்திட்
எமது வாய் இட்ட மண் சீதையைக் கவர்ந்திடா 'இராவணர் 11 தம்மையே வாதைகள் பண்ணிட வந்ததேன் வானரம்? எமக்குள்ளே " விபீசணர் எத்தனை? எத்தனை? எதைச்சொல்ல எதைவிட அப்பனே! அப்பனே! வைத்தியன் சாடையில் நோய் நொடிப் பீடைகள் வசத்தங்கள் உலாவர வழி தோறும் பாடைகள் பொய்மைக்கு முடி சூட்டல் பொலிவான மலர் வாசம் மெய்மைக்குச் 'சிறை வாசம்'
மேதினில் துயர் மேகம்
தியாக வேள்வியில் இந்திர ஜித்துக்கள்
48
ψωή ο Γ

நிலா தமிழின் தாசன்
தேடியே தலை கொய்யும் ஆதிக்கப் பித்துக்கள் மாடு மிதித்துத் துடிப்பவன் மார்பினில் மாமத யானையின் பாதச்சுவடுகள் ! "பாசம்' என்ற முகவுரை தீட்டியோர் *பாசிசம்" என்ற முடிவுரையைக் காட்டினர் அகிம்சா மூர்த்திக்கு ஆயுத பூஜைகள்! அருமைத் தமிழரின் குருதியால் அபிஷேகம்! தழுவல் நடிப்பினில்
குரல்வளை நெரிப்புகள் தீயணைப்புப் படைகளே
தீயிடும் இழிநிலை!
விடியலைத் தேடியோர் விழிகளில் வேல் துணை ! உலகத்தில் இன்றைய
உச்சச் சதியிதே
பதிப்பு:- கோணத்தென்றல் 1988 / 1989 மாசி இதழ்.
( ) , αυή σιν 口 69

Page 41
நிலா தமிழின் தாசன் 0
தங்க நிகர்
தமிழீழ மாணவனே!
எண்ண்ை வற்றிய குப்பி விணக்கொளியில் கண்ணை விழித்துக் கற்கின்றாய்! சொந்த மண்ணை நேசித்தே நீ துணிந்துன் காவில் நிற்கின்றாய்! அறிவைக் கெடுத்து எமது இனத்தின் ஆணி வேரை அறுத்திடவே வெறியர் போட்ட திட்டம் அனைத்தும் வீழ்த்தி மிதித்து நிமிர்கின்றாய்! அறிவியலோடு தொழில் நுட்பங்கள் ஆழ்ந்து கற்றே நீயுயர்வாய்! உன்னால் உனது
வீடும் உயரும்! வீடுகள் உயர அதனால் உந்தன் நாடே உயரும் நன்கறிவாய் பள்ளிப் படிப்பால் மட்டும் இங்கோர்
70 ܦ έναν ίσον ( )

நிலா தமிழின் தாசன்
பசுமை பூத்துக் குலுங்காது! அன்னிப் பருவ வேண்டும் பல்துறை அறிவை அதனால் ஒன்றும் குறையாது! மேலும், போராட்டம் தான் உந்தனது கல்விப் பயிரின் புனிதக்கவசம்' என்கின்ற! மின்னும் வரியை உன்னிப்பாய் உணர்ந்தே நீயும் உய்வதற்கு உரிய வழியைத் தேர்த்திடுவாய், ஒளியாய் மண்ணில் உயர்த் தெழுவாய்
AN
列
灘
舖
%}}
KNS
படைப்பு: 19-07-1998

Page 42
நிலா தமிழின் தாசன் ()
தென் தமிழீழத்தில் தீ!
தமிழனென்றால் தயை அற்ற தண்டிப்பு! "சித்தாண்டியில்" அப்பாவி இளைஞர்களின் தலை துண்டிப்பு! துண்டிக்கப்படும் தலைகள் முடிவுரையல்ல!
அவை! தமிழீழத்தின் முன்னுரைகன், "அம்பாறையில்" அதர்மத்தின் கோரங்கள்! அகதி முகாம்களிலும் தமிழர் உயிருக்குப் பேசப்படும் பேரங்கள்! பண்டங்கள் விற்கும் கல்முனைச் சந்தையில் தமிழர் உடற் துண்டங்கள் தொங்கினும் வியப்பில் லை செம்மையுடன் துலங்கிய தும்பன் கேணியே இன்றொரு
72
ενου ή αν
 

நிலா தமிழின் தாசன்
பசுமை கொஞ்சிய "பாலையடிவட்டை” இன்று
வெறும் பாலை வெட்டையாய் . கொக்கொட்டிச் சோலையிலும் கொலைஞர்களின் 'ஆலை
* Lo Gior (Brî *
துயரமே மண்டிய ஊராய் இன்று ஐம்பத் கா றில் (1956) சிங்களப் படையை முதன் முதலாய் சங்கரித்த மறவர்கள் நிறைந்த துறை நீலா வணையிலும் உறைந்துள்ள துயரம். அப்ப்ேபா ! மட்டக்களப்பே மட்டமாய் போனதா? மோகனம் பாடிய வாவி மீன்களும் முகாரியே பாடும் இன்று திருக்கோணமலையின் திசையெட்டும் தீ நறுக்கோடு தமிழ்பேச நடுங்கும் நா வெருகல், கங்கையிலும் தமிழரின் குருதி! ஆனால்! வெற்றியில் உண்டு தமிழர்க்கு உறுதி! 'மூதுார் வயல் பரப்பெல்லாம் முள் ! பசிய நிலமெல்லாம் பாழ்! பார்க்குமிடமெல்லாம் எதிரியின் கால்!
புலர்வு 73

Page 43
  

Page 44
நிலா தமிழின் தாசன் ()
\,
இன்றமிழ் கொண்டு வாழ்த்தியே 600au i'r Guinturiol
நாளை நிச்சயம்
நத்தமிழ்
ஈழக்குழந்தையும் பூமியிற் பிறந்து பொலிவாய்ச் சிரிக்கும் தேதியின் வாசம் திசையெல்லாம் மணத்கும் எதிரிகள் தலையில் இடியென உறைக்கும்! விடியலின் ஒளியில் எம் தேசம் குளிக்கும்
S
442 SAK SO
YaN
g
t
Y
படைப்பு: 96-93
ένα) ή Ω,

") நிலா தமிழின் தாசன்
இந்த மண்ணின் விடியலுக்காக கூவுகின்ற சேவல்களின் குரல்வளைகள் அநியாயமாக அறுக்கப்படுகின்றன! ஆனாலும் சான்ன ! விடியக் தான் போகிறது! ஏனெனின் ! பிஞ்சுக்குஞ்சுகள் மட்டுமல்ல பெட்டைக்கோழிகளும் பெருங்குரலில் கூவ ஆரம்பித்துவிட்டன.
羲羲
பதிப்பு:- "தாகம்'-1988
Ο y až 6y 77 הח

Page 45
βουπ 3ώ φού και τα κό Γ
வடு
னம்மை நசுக்கவென எழுந்து வந்த
இமயத்தினை எதிர்கொண்டது சிற்றுளிதான்! ஆனால் 1
தடவிப்பாருங்கள் இமயத்தின் விலாவை சின்னக்காயம்
என்றாலும்
மாறாத வடு
படைப்பு:1989
78 - - - φωή ον
 

தி லா தமிழின் தாசன்
@" சுப்பர் சொனிக்1
ག་ང་ད་ན་ཞ་ལས་དམན་པ་མ་ - نیست و
மழலைக் குரலில்
gysidrir ' ' ' , , , பிஞ்சு மகன் "எழில்மாறன் குளறிக் கூவினான் ! ; , அப்பா ! சுப்பர் சொனிக் வருகுது
" அப்பா சுப்பர் சொனிக் வருகுது இரைச்சல் இல்லாமல். 。 அண்ணாந்து பார்த்தேன் - !..............; sھ نق) قyfiوی குஞ்சுக் கோழியைக் NA " ", 'N குறிவைத்து
வட்டமிட்டது கொடியபருந்து "வட்டுக்காயன் தன் குறும்பினைச்சொல்லி அட்டகாசமாய்ச் சிரித்து நின்றான்
جھیلS 赛
6) 3 :- 29 04 1993
Ο ναυάη, in 79

Page 46
நிலா தமிழின் தாக்ன் (
பூநகரியுள் புயல் புகுந்தது!
புயலெனப் புலிப் படை புகுந்தது! பூநகரிப்படை முகாம் விழுத்தது! துயர் வினைத்தவர் கதை முடிந்தது! துணிவுடன் புது அலை எழுந்தது!
"தவளை" என்றொரு தணல் துழைந்தது தடி வெறிப்படை அதில் எரித்தது புவிவியந்து நம் நிலை உணர்ந்தது! புவித்தமிழரின் தலை நிமிர்ந்தது கொலை வெறியரின் தலை சரிந்தது கொக்கரித்தவர் குரல் உடைந்தது இலை இனித்துயர் அறுந்திடுமென “ எமதுனத்தினில் திட ம் பிறந்தது!
 ി ஆயிரம் பேய்ப் படை அழித்தது ' ஆணவத்தினர் முதுகு உடைத்தது தாயகத் தினுக் காய்விழுந்தவர் தன் பணியினை நாம் தொடருவோம்!
激 2s s
படைப்பு: 18-11-1993
80 புலர்வு
 
 


Page 47
SZ-JI JÖRÐ OG UJU o un eno (
責責責責責責青實實實實戴
இருப்பஞ் சாற்றில் இவித்தேன் சேர்த்து இருத்துக் கருக்கள் சுரக்கும் ஊற்று நெருப்புப் பிறக்கும் Gλυσού υσαύ (3cφιν உருக்கைக் கூட உருக்கும் சொல்லான்
புலர்வுக் கவிதை புதுத்தெம் பூட்டும் உலர் வைப் போக்கி உணர்வைக் கூட்டும் நிலா தமிழின் தாசன் தமிழில் Ք_6Ն T வருவது நீரும் நெருப்பும்
கிழக்கில் உதித்த ఉcరొత్త శ్రీశ్రీకొడొ గొరీ முழக்கி உறக்கம் 30 && (p0 #d
எளிமைத் தமிழும் எழிலின் தமிழும் 7(3) () &ബിgര് இவன் பேர் εν σφαι
- நரே வண் 5

zo JU (L u U ezer IUU r責袁黃素責實黃責
கவிஞர் நிலா தமிழின் தரிசன்
55755