கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ் இலக்கிய வரலாறு

Page 1
주
6uā
.¬ 234. காங்கே
_
யாழ்ப்
 
 

கிய வரலாறு
- བྱི་
тшѣй, М. А. s ரையாளர், 烹 ݂ ݂ கலேக் கழகம், है । ar. *T
ப்பதிவு:
அச்சகம், சன்துறை வீதி, பாணம்.
營
ܔܢܓ̇ܔܼ FÒS

Page 2

. . . J|Nallur Hindu Tamil Girls School
JA FF NA y - -
Noരംnha గbargazade
像
PuP в

Page 3
KK |
 

வி. செல்வநாயகம், M. A. தமிழ் விரிவுரையாளர், இலங்கைப் பல்கலைக் கழகம், பேராதனை.
பூரீ லங்கா அச்சகம் 234, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்,
*。
:

Page 4
முதற் பதிப்பு 1951 இரண்டாம் பதிப்பு: 1956 மூன்றும் பதிப்பு : 1960
t
பதிப்புரிமை ஆசிரியர்க்கே
 
 
 

- f3, Ge.
முதற் பதிப்பின் ί
முன்னுரை
கலாசாலைகளிலும் பல்கலைக் கழகங்களிலும் தமிழைக் கற்கவிரும்பும் மாணவர்கள் முதலில் தமிழிலக்கிய வரலாற்றினை ஓரளவிற்காயினும் அறிந்திருத்தல்வேண்டும். அதனைச் சுருக்க மாக அறிந்திருந்தாற்றன் விரிவான நூல்களை அவர்கள் மனங்கொண்டு படிக்க விரும்புவார்கள். மாணவர்களுக்கு உதவும்பொருட்டே இந்நூலை யான் எழுதத் துணிந்தேன். சுருக்கமான இந்நூலின்கண் தமிழிலக்கிய வரலாற்றிலுள்ள எல்லா விஷயங்களையும் கூறுதல் முடியாது. இலக்கியப் பண்பினை மட்டும் இதன்கண் சுருக்கமாகக் காட்டியுள்ளேன். அதனுேடு தொடர்புடைய மக்கள் வாழ்க்கை நாட்டின் அரசியல், சமயநிலை முதலியவற்றைப்பற்றியும்'ஆங்காங்கு சுருக்கமாகக் குறித்துள்ளேன். புலவர்களுடைய காலம், வாழ்க்கை முதலியவற்றைப்பற்றிக்கூட இந்நூலிற் குறிக்க வில்லை. அவற்றையெல்லாம் குறித்துச் செல்வதாயின் இங் நூல் ஒர் ஆரம்ப நூலாகாதென்றஞ்சி அவற்றைக் குறியாது விட்டேன்.
வாக்கியங்களைச் சந்திகூட்டி எழுதுவதே தமிழ் மரபு; எனினும், மாணவர்கள் இலகுவாகப் பொருளை அறிந்து கொள்ளவேண்டுமென்று எண்ணியே பிரிக்கக்கூடாத இடங் களிலும் சந்திகளைப் பிரித்து எழுதியுள்ளேன். இந்நூலின்கண் இன்னும் பல குறைகளுளவாகலாம். அக்குறைகளைவிட எனது அறியாமை காரணமாக எழுந்த பிழைகளும் பலவுளவாகும் என்பதை நான் கூறவேண்டியதேயில்லை. இந்நூலினைப்

Page 5
- 1ν -
படிக்கும் பெரியோர்கள் அப்பிழைகள் எவையென எனக்கு அறிவித்துதவுவராயின் இரண்டாம் பதிப்பில் அவற்றை நீக்கு
வேன். ر(
இந்நூலினை எழுதுமாறு என்னைப் பலமுறை ஊக்கியும் கையெழுத்துப் பிரதியினைப் பார்வையிட்டுப் பல திருத்தங் களைச் செய்தும் உதவிய பேராசிரியர் டக்டர் க. கணபதிப் பிள்ளை, Ph.D. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைச் செலுத்துகின்றேன். இந்நூல் சிறப்பாக வெளிவரவேண்டு மென்ற நோக்கத்துடன் கையெழுத்துப் பிரதியைப் பலமுறை பார்வையிட்டுப் பல அரிய திருத்தங்களைச்செய்து உள்ளன் போடு உதவிபுரிந்த திரு. சு. பெரியதம்பி, B A. அவர்களுக்கு
நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். தேகசு கமில்லாதிருந்தும் என்மேலுள்ள அன்பினுல் கையெழுத்துப் பிரதியைப் பார்வை
யிட்டு இலக்கணப் பிழைகள் பலவற்றை நீக்கியுதவிய மகா வித்துவான் பிரம்ம ரீ, சி. கணேசையர் அவர்களுக்கும், அதனைப் படித்து அரிய பல திருத்தங்களைச் செய்துதவியவர் களாகிய பண்டிதர் அ. சிற்றம்பலம், B. A. அவர்களுக்கும், திரு. A. S. சுந்தரராச ஐயங்கார், B. A. அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி உரித்தாகுக. தமது நேரத்தைப் பொருட் படுத்தாது பல நாட்களாக என்னுடன் இருந்து இதன் கையெழுத்துப் பிரதியை எழுதியும் அட்டவணை முதலியவற் றைத் தயாரித்தும் அச்சுப்பிழைகளைத் திருத்தியும் பலவாறு உதவிய எனது மாணவன் பண்டிதர் ஆ. சதாசிவம் அவர் களுக்கும் எனது நன்றி உரியது. இவ்வாறு உதவிபுரிந்த அனைவரும் பல்லாண்டு வாழவேண்டுமென்று இறைவனை வழுத்துவதன்றி, நான் அவர்களுக்குச் செய்யும் கைம்மாறு வேறு யாதுளது. இந்நூலினைத் திருத்தமாக அச்சிட்டுதவிய
 

- W -
யாழ்ப்பாணத்து அர்ச், சூசைமாமுனிவர் அச்சியந்திரசாலை அதிகாரிக்கும் நன்றி கூறுகின்றேன்.
வி. செல்வநாயகம்
இலங்கைப் பல்கலைக் கழகம், 20 - 4 - 51.
ujo Sanfa Than్యంuad ve
Eosi Road.
أمدرماeن أهل

Page 6
. . . " ܝ ܦ
A. 'll 露
23 -10-60.
மூன்ரும் பதிப்பின் முன்னுரை
தமிழிலக்கிய வரலாறு பற்றி இக்காலத்தில் வெளிவந்துள்ள ஆராய்ச்சிகளுக்கு இணங்க இந் நூலிலுள்ள முதலாம் இரண்டாம் அதிகாரங்களிலும் இறுதி அதி காரத்திலும் சில மாற்றங்கள் செய்துள்ளேன். இந்நூலினை அச் சிட்டு உதவிய ரீ லங்கா அச்சகத் தாருக்கு எனது நன்றியைத் தெரிவிக்கின்றேன்.
வி. செ.

1.
பொருளடக்கம்
முன்னுரை
நூன்முகம்
சங்ககாலம் V
முச்சங்கங்கள், 1-4. சங்கச் செய்யுளும்
பொருள் மரபும், 4-16. எட்டுத்தொகையும்
பத்துப் பாட்டும், 16-29. சங்கப் புலவரும்
சங்க இலக்கியப் பண்பும், 29-36,
சங்கமருவிய காலம்
அரசியல் நிலை, 37 - 38. பண்பாட்டு நிலை, 38-40. சமய நிலை, 40-42. நூல்கள், 42 - 63. உரைநடை இலக்கியம், 63 - 6). இலக்கியப் பண்பு, 66-70.
பல்லவர் காலம் s so
பல்லவர் காலத்துத் தமிழ் நாடு, 71-72. சமய நிலை, 72.75. கலை"வளமும் இலக்கியப் பண்பும், 75-83. பத்திப் பாடல்கள், 83-102,
பிற நூல்கள், 102-103. உரைநடை நூல்கள், 103-104.
சோழர் காலம் so
அரசியல் நிலை, 105 - 106. சமய நில்ை, 100 - 108. இலக்கியப் பண்பு, 108 - 114, திருமுறைகளும் நாலாயிர திவ்விய பிரபந் தங்களும், 115 - 117. காவியங்கள், 117 - 129. சிற்றிலக்கியங்கள், 129 - 133. இலக்கண நூ ல் கள், 133 - 134, சைவ சித்தாந்த நூல்கள், 134136, உரை நூல்கள், 136137,
(பக்கம்
iii-vi
ix-xii
1 - 36
37 - 70
71 - 04.
105-137

Page 7
5.
6.
7.
நாயக்கர் காலம் the O
அரசியல் நிலை, 138 - 139. சமய நிலை,
139 - 140. இலக்கியப் பண்பு, 140 - 152.
பிரபந்தங்கள், 152 - 154. இலக்கியங்கள், 154 - 161. உரையாசிரியர்கள், 161 - 164, தமிழை வளர்த்த அரசரும் ஆதீனங்களும், 164 - 165.
ஐரோப்பியர் காலம் , o so
அரசியல் நிலை, 166 - 166. சமய நிலை, 166 - 168, இலக்கியப் பண்பு, 168 - 170. உரைநடை இலக்கியம், 170 - 181. செய்யுள் இலக்கியம், 181 - 190. நாடக இலக்கியம்,
90 - 192.
இருபதாம் நூற்ருண்டு e அட்டவணை
is
138-1.65
166ー192
193-245.
246-260
 
 

நான்முகம்
உரையினலேனுஞ் செய்யுளினலேனும் இயற்றப் படும் நூல்களெல்லாம் பொதுவாக இலக்கியத்தின்பாற் படுமெனினும், வாழ்க்கையின்கண் வரும் அநுபவங்களை அழகுறப் புனைந்து கூறும் நூல்களே சிறப்பாக இலக் கியமெனக் கருதத்தக்கன. அத்தகைய இலக்கியங் களைக் காலவரன்முறையை ஒட்டி ஆராயும் நூல்கள் இலக்கிய வரலாற்று நூல்கள் எனப்படும், இலக்கிய நூலாசிரியனெருவனுடைய மனுேபாவம், அநுப்வம், குறிக்கோள், சூழல் முதலியவற்றிற்கு இணங்கவே அவனியற்றும் நூலின் நடை, தன்மை, அமைப்பு முதலியன உருக்கொள்ளுமாதலின், அந்நூலைச் செவ் வனே படித்து இன்புறுதற்கு அவனுடைய வாழ்க்கை, சூழல் முதலியவற்றை நாடியறிதல் அவசியpாகின்றது. அதனுல், இலக்கிய நூலாசிரியர்களது வாழ்க்கை முத லியவற்றைப்பற்றியும் இலக்கிய வரலாற்று நூல் கூறும். அவ்வாறு இலக்கியங்களை ஆர்ாய்வதோடும், இலக்கிய ஆசிரியர்களது வாழ்க்கையைக் கூறுவதோடும் அது நின்றுவிடுவதில்லை. காலத்திற்குக்காலம் மாற்றமுற்றுச் செல்லும் இலக்கியப்போக்கினையும் அதற்குக் காரண மாயிருந்தவற்றையும் இலக்கிய வரலாற்று நூல் ஆங் காங்கு குறித்துச் செல்லும்.
குறித்த ஒரு காலப்பகுதியில் ஒரு மொழியில் எழுந்த இலக்கியம் வேருெரு காலப்பகுதியில் எழுந்த இலக்கியத்தினின்றும் வேறுபட்ட பண்புகள் சிலவற்றைக் கொண்டிருத்தல் இயல்பாகும். அவ்வாறு காலத்திற்குக்

Page 8
'x
காலம் அம்மொழியிலே தோன்றிய இலக்கியங்களின் போக்கில் மாற்றங்கள் நிகழ்வதற்குப் பல காரணங்களுள. ஒரு மொழி வழங்கிவரும் நாட்டின் அரசியலிலோ பண்பாட்டிலோ மாற்றம் ஏற்படின், அவை காரணமாக அம்மொழியின் இலக்கியப் போக்கிலும் மாற்றம் உண்டாதல் இயல்பு. அதேபோல, பிறநாட்டு நாகரிகத் தொடர்பு உண்டாயபோதும், சமயத்துறையில் கிளர்ச்சி தோன்றிய விடத்தும், இலக்கியப்போக்கு மாறுத லடைவதுண்டு. சுருங்கக் கூறின், ஒரு சமுதாயத்தில் வாழும் மக்கள் புதிய கருத்துக்களையும் கொள்கை களையும் தழுவத்தொடங்கிப் பழையனவற்றைக் கைவிடு வதால் அவர்களின் வாழ்க்கைப் போக்கில் மாற்றமுண்டா கின்றது; அது இலக்கியப் போக்கையும் ஓரளவிற்கு மாற்றிவிடுகின்றது. சில சமயம் ஆற்றல்மிக்க இலக்கிய ஆசிரியனும் ஒரு மொழியின் இலக்கியப்போக்கிற் பெரிய மாற்றங்களைப் புகுத்திவிடுகின்ருன், அவன் ஒரு புது வழியிற் செல்ல, அவனுக்குப் பின்னேவரும் ஆசிரியர் பலர் அவ்வழியைத் தாமும் மேற்கொண்டு அவனைப் பின்பற்றிச் செல்வர். இவ்வாறு அவன் பிறருக்கு ஒரு புது வழியைக் காட்டுகின்ற நிலையிலும் தன் காலத்தி லிருந்த இலக்கிய மரபினை முழுதும் மாற்றிவிடவாவது, அம்மரபினின்றும் விலகி நிற்கவாவது முடியாதவ ணுகின்ருன், அதனுல், இலக்கியப் போக்கில் பெரிதான மாற்றம் ஒரே முறையில் திடீரென நிகழ்வதில்லை; மாற்றம் சிறிது சிறிதாகவே நிகழ்கின்றது.
காலத்திற்குக்காலம் இலக்கியப் போக்கில் மாற்றம் ܘ ܐ ܢ ܝ உண்டாவதால், அதற்கேற்ப இலக்கிய ஆராய்ச்சியாளர் இலக்கிய வரலாற்றினைச் சில பல காலப்பிரிவுகளாக வகுத்துக்கொண்டு ஆராய்வர். காலப்பிரிவுகள் ஒவ்வொன்

X1.
றும் தத்தமக்குரிய பண்புகளையுமுடையனவாய் விளங்கு மாதலின் அவற்றை இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் விளக்கிக் காட்டுவதோடு, ஒரு காலப்பிரிவில் எழுந்த இலக்கியப் பேர்க்கிற்கும், அதற்கு முன்னும் பின்னும் எழுந்த இலக்கியங்களின் போக்கிற்கும் உள்ள தொடர் பினையும் ஒற்றுமை வேற்றுமைகளையும் எடுத்துக்காட்டிச் செல்வர். ஒரு நாட்டில் வாழும் மக்களுடைய பண்பாட் டிற்கு இசையவே அங்கு தோன்றும் இலக்கியங்களும் அமைகின்றன. ஆசிரியன் நூலை இயற்றும்பொழுது, தன் காலத்தில் வாழும் மக்கள் பெரும்பாலும் அதனை விரும்பிப் படிக்கவேண்டுமென்ற நோக்கங் கொண்டே இயற்றுகின்றன். அதனல், அவன் இயற்றுவது, அவன் காலத்து மக்கள் விரும்பத்தக்க முறையில் அமைய வேண்டியிருக்கின்றது. ந ைட யு ைட பாவனைகளைப் போலவே காலத்தின் இயல்பிற்கிணங்க நெறிப்பட்டுச் செல்லும் இலக்கியத்தின் பண்பினையும் இலக்கிய வரலாற்று நூல்கள் ஆங்காங்கு விளக்கிச் செல்லு மியல்பின.
FF TuSüd ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்துவரும் தமிழிலக்கியத்தின் வரலாற்றை ஆசிரியர்கள் பல காலப் பிரிவுகளாக வகுத்துக் கூறுவர். அவர் முறைக்கிணிங் கவே இவ்வரலாற்று நூலின்கண்ணும் அது சங்ககாலம், சங்கமருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம், ஐரோப்பியர் காலம், இருபதாம் நூற் ருண்டு என ஏழு காலப்பிரிவுகளாக அமைத்துக்
கூறப்படும். மாணவர்க்கென எழுதும் இச்சிறுநூல் ஆரம்ப நூலாகலின், இதன்கண் விரிவான ஆராய்ச்சி
களுக்கு இடமில்லை. ஒவ்வொரு காலப்பகுதியிலும் நூற்றுக்கணக்கான புலவர்கள் தோன்றிப் பெருந்தொகை

Page 9
X.
யான நூல்களை இயற்றித் தந்துள்ளனர். அவற்றை யெல்லாம் இச்சிறுநூலின்கண் ஆராய்தல் முடியாதாகும். தமிழிலக்கிய வரலாற்றை விரித்துக் கூறும் நூல்கள் சிலவுள; அந்நூல்களை மாணவர் மனங்கொண்டு கற்றற் பொருட்டு ஒரு வழிகாட்டியாகவே இந்நூலை இயற்ற எண்ணினுேம். ஆதலின், இதன்கண் ஒவ்வொரு காலப் பிரிவிலும் வாழ்ந்த புலவர்களுட் சிறப்பாகப் பாராட்ட வேண்டிய புலவர் சிலர் இயற்றிய இலக்கியங்களின் போக்கினையே ஆராய்ந்து கூறுவாம்.
 
 

७." क्यों ताड लाख छ ज ७ या -
4. S . c.e *
| ..., ၈၃,၈,2,ာ်ရှိုနှီ’’ β5 ழ் இலக்கிய வரலாறுஆ,
سسسسسس-: (O :-ص
1. சங்க காலம்
1. முச்சங்கங்கள்
\உலகில் வழங்கும் செம்மொழிகளுள் ஒன்ருக விளங்கும் நம் தமிழ்மொழி பண்டைக்காலந்தொட்டு வளர்ச்சியுற்று வருகின்றது.\ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அது சிறந்த கவிவளமுடையதாய் உயர்நிலை பெற்று விளங்கிற் றெனச் சங்க நூல்களால் அறியக்கிடக்கின்றதேயன்றி, அதன் ஆரம்ப நிலையைப்பற்றியாவது , தமிழிலக்கியத்தின் தோற்றத்தைப்பற்றியாவது நாம் இப்பொழுது யாதும் அறிய முடியாதிருக்கின்றது. தமிழகத்தோ டு யவன தேசத்தினர் வாணிகம் செய்துவந்த பண்டைக் காலத்திலே பிறநாட்டு நல்லறிஞர் சிலர் எழுதிவைத்த குறிப்புக்களாலும், வ்டமொழி நூல்கள் சிலவற்றலும், பிற வரலாற்றுக் குறிப்புக்களாலுமே, தமிழ்மக்கள் பண்டைக்காலத்திற் சிறந்த பண்பாடு உடைய வர்களாய் வாழ்ந்தனர் என்பது தெளிவாக அறியக்கிடக் கின்றது. முன்னுெரு காலத்திலே தமிழ் வழங்கிய "பல நாடுகள் குமரிமுனைக்குத் தெற்கே பல காததுரம் பரந்து கிடந்தன. காலத்திற்குக் காலம் ஏற்பட்ட பல கடல்கோள்கள் காரணமாக அவையாவும் அழிந்துபோயின. வடக்கே வேங் கடத்தையும் தெற்கே குமரிமுனையையும் எல்லையாகக் கொண்டு விளங்கிய நிலப்பரப்பே சங்க காலத்திலிருந்த
கி. பி. முதல் மூன்று நூற்ருண்டுகளைக் கொண்ட காலப் பகுதியைச் சங்ககாலம் என்பர் அக்காலத்திலே சேர

Page 10
இத4 ச க , ஆ ஆ ஆ
092) த எ த வர் க ஆகும். * தமிழ் இலக்கிய வரலாறு
சோழ பாண்டியரென்னும் முடியுடை வேந்தர் மூவரும் பாரி, காரி முதலிய குறுநில மன்னர் பலரும் வேங்கடம், குமரி என்னும் எல்லைகளுக்கு உட்பட்டுக்கிடந்த தமிழ்நாட்டை அறநெறியினின்றும் வழுவாது ஆண்டுவந்தனர். 1 அவர்கள் காலத்திலே தமிழ்நாடு செல்வம் மலிந்து வளம் பெற்றது; கலைகள் ஓங்கின ; * தமிழ் நாட்டின் புகழ் எங்கும் பரவிற்று. அதனையறிந்த பிற நாட்டினர் பலர் தமிழ் நாட்டை நாடி வரலாயினர். பிறநாட்டு வாணிகம் வி ரு த் தி ய ைட ய த் தொடங்கவே தமிழ்நாட்டில் முசிறி, தொண்டி, கொற்கை, புகார் முதலிய துறைமுகப் பட்டினங்கள் வளம் பெற்றோ!ங்கின (இவ்வாறு (சங்ககாலத்திலே தமிழ்நாடு பல துறைகளிலும் சிறந்து உயர்நிலை பெற்றிருந்தமைக்கு, அறநெறி பிறழாது ஆண்டுவந்த மன்னரின் பேருக்கமும், நாடு நல்வாழ்வு அடைதற்கு உயிரையும் உவந்தளித்த மக்கள் தம் வீரவாழ்க் கையும், அறிவுடைய ஆன்றோரைப் போற்றிச் சீரிய வாழ்க்கை வாழ்ந்த தமிழர்தம் - பண்பாடும், இன்னோரன்ன பலவுமே காரணமாயிருந்தன)
1 பண்டைக்காலத்தில் முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச் சங்கம் என முச்சங்கங்கள் வரன் முறையே பாண்டிநாட்டி லிருந்து தமிழை வளர்த்துவந்தன என்பர்.)அவை வீற்றிருந்த 3 இடங்கள் முறையே தென் மதுரை, - கபாடபுரம், மதுரை என்பன. பண்டைக்காலத்திலே பாண்டிநாடு குமரி முனைக்குத் தெற்கே பல காததூரம் பரந்துகிடந்தது என்று கூறப்படுகிறது." அந்நிலப்பரப்பிலே பா ண் டி ய ரு டை ய த லை ந க ர ம ா கி ய தென்மதுரை அமைக்கப்பட்டிருந்தது. முன்னொரு காலத்தில் அந்நிலப்பரப்பில் ஒரு பகுதியும் தென்மதுரையும் கடல் கொள்ளப்படவே, அதற்கு வடக்கிலிருந்த நிலப்பரப்பிலே கபாடபுரம் என்னும் நகரைப் பாண்டியர்' அமைத்து, அங்கிருந்து தமது நாட்டை ஆண்டுவந்தனர். பின்னொரு காலத்தில் அந்நகரிருந்த நிலப்பரப்பையும் கடல்கொள்ள, அவர்கள் குமரி முனைக்கு வடக்கே சென்று, இப்பொழுதுள்ள

)
சங்க கால்ம் , 3.
மதுரையை அமைத்து அதன்கண் இருந்து ஆட்சிபுரிந்து வந்தனர்.
பாண்டியர் தென் மது ைர யிலிருந்து ஆட்சிபுரிந்த் காலத்திலே தமிழை வளர்த்தற்கு அந்நகரில் நிறுவிய தமிழ்ச் சங்கம் முதற்சங்கம் என்றும், அவர்கள் கபாடபுரத்திலிருந்த காலத்தில் நிறுவிய சங்கம் இடைச்சங்கம் என்றும், இப் பொழுதுள்ள மதுரையில் அவர்கள் இருந்த காலத்தில்
நிறுவிய சங்கம் கடைச்சங்கம் என்றும் அழைக்கப்பட்டன.
முதற் சங்கத்திலே அகத்தியர், முரஞ்சியூர் முடிநாகராயர் முதலிய புலவர்களும் இடைச்சங்கத்திலே தொல்காப்பியர், வள்ளுர்க்காப்பியன் முதலிய புலவர்களும் கடைச்சங்கத்திலே கபிலர், பரணர், நக்கீரர் முதலிய புலவர்களுமிருந்து தமிழை
ஆராய்க்தனரென்பர். முதுநாரை, முதுகுருகு முதலிய
நூல்கள் முதற் சங்கத்தாராலும், வெண்டரழி, வியாழமாலே யகவல் முதலியன இடைச்சங்கத்தாராலும் இயற்றப்பட்டன
வென்று இறையனரகப்பொருளுரையிற் குறிக்கப்பட் டுள்ளது.
பண்டைக்காலத்திலே தமிழ்நாட்டிலிருந்து தமிழ்மொழியை வளர்த்துவந்த பேரறிஞர்களுள் அகத்தியர் தலைசிறந்தவ
ரென்றும், அவர் சிவபெருமானிடத்திலே தமிழைக் கேட்டறிக்
தனரென்றும், அவருக்கு இருப்பிடம் பொதியமலையென்றும்
கூறுவர். (이 இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்
என்னும் முத்தமிழையும் கற்றுணர்ந்து அகத்தியம் என்னும் முத்தமிழிலக்கண நூலொன்றை இயற்றினரென்பர். இலக்
கணத்தோடு கூடிய தமிழ் இயற்றமிழ்; அது உரையும்
பாட்டும் என இருவகைப்படும். பாட்டு இசையோடும் தாளத்தோடும் கூடியவிடத்து இசைத்தமிழ் எ ன் ப் படும்.
உரையும் பாட்டும் அபிநயத்தோடு கூடியவிடத்து நாடகத்
தமிழ் எனப்படும். அகத்தியரிடம் தொல்காப்பியர், அதங் கேரட்டாசிரியர், காக்கைபாடினியார் முதலிய மானுக்கர்

Page 11
தமிழ் இலக்கிய வரலாறு
பன்னிருவர் கல்வி கற்றனரென்றும், அவர்கள் அகத்தி யத்திற்கு வழிநூலாகத் தொல்காப்பியம், வாய்ப்பியம், அவிநயம், காக்கைபாடினியம் முதலிய பல நூல்களை இயற்றினரென்றும் கூறுவர். (அவர்கள் ' பன்னிருவரும் ஒருங்குகூடிப் பன்னிரு படலம் என்ற இலக்கணநூலையும் இயற்றின ரென்பர்.* மேற்கூறிய நூல்களுள் தொல்காப்பிய மொழிந்த ஏனைய நூல்கள் இக்காலத்திற் கிடைத்தில. பண்டைக்காலத்து நூல்களுள் தொல்காப்பியம், இறையனா ரகப்பொருள் என்னும் இலக்கண நூல்களும் எட்டுத் தொகை, பத்துப்பாட்டு என்னும் இலக்கிய நூல்களுமே இப்பொழுது நமக்குக் கிடைத்துள்ளன. பழைய தமிழ் நூல்கள் சிலவற்றிற்குப் பிற்காலத்து உரையாசிரியர்கள் எழுதியுள்ள உரைகளுள், அழிந்துபோன (பண்டை நூ ல் க ளி லி ரு ந் து பாக்களும் சூத்திரங்களும் எடுத்தாளப்பட்டுள்ளன.4 அவற்றை நோக்குமிடத்து, அக்காலத்திலே பல இலக்கிய நூல்களும் இலக்கண நூல்களும் வழக்கில் இருந்தன என்பது புலனா கின்றது. அந்நூல்களுள் அழிந்தொழிந்தன போக, எஞ்சியவை யெல்லாம் தேடிப்பெற்றுப் போற்றற்குரியனவே.
2. சங்கச் செய்யுளும் பொருள் மரபும்
> சங்ககாலத்தில் ஐஞ்ஞற்றுக்கு மேற்பட்ட,
புலவர்கள் தமிழ்நாட்டிற் பற்பல இடங்களிலுமிருந்து பல நூல்களையும் தனிச் செய்யுட்களையும் இயற்றினர். அவற்றுட் பல அழிந்து போயின. தனிச் செய்யுட்களுள் அழிந்தன போக எஞ்சிய வற்றின் அருமை பெருமைகளைப் பிற்காலத்திலிருந்த அரசர் களும் புலவர்களும் அறிந்து, ஆங்காங்கு பற்பல இடங்களிற் கிடந்த செய்யுட்களைத் தேடிப் பெற்றுப் பாதுகாத்தன ரென
* தொல்காப்பியர் மு த லி ய பன்னிருவரும் இயற்றினரல்லர் என்பர் இளம்பூரணர் (தொல்காப்பியம், புறத்திணையியல் சூ. 2, உரை).

学岛E $所ébb, 5
எண்ணக்கிடக்கின்றது. பின்ைெரு காலத்தில் வாழ்ந்த புல வர்கள் அவ்வாறு பேணி வைக்கப்பட்ட பாக்களுட் சிறந்தன வற்றைத் தெரிந்து எட்டுத்தொகை, பத்துப்புராட்டு என்னும் நூல்களாகத் தொகுத்தனர்.* அவை மேற்கணக்கு நூல்க ளென்றும் கூறப்படும். கணக்கு என்ற சொல் இலக்கிய நூல்களைக் குறிக்கும்.
தொகைநூல்கள் எட்டாவன: அகநானூறு, புறநானூறு, ாற்றினைநானூறு, குறுந்தொகைாானூறு, ஐ ங் குறு நூ று, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை என்பன. திருமுரு காற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணுற்றுப்படை, பெரும்பாணுற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுகல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடு கடாம் என்னும் நெடும்பாட்டுக்கள் பத்தினைக்கொண்ட நூல் பத்துப்பாட்டு எனப்படும். மேற் கூறியவற்றேடு சிலப்பதி காரம், மணிமேகலை, திருக்குறள் முதலிய பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள், தொல்காப்பியம் என்பனவற்றையும் சங்க காலத்தன என்பர் ஒருசாரார். அவை சங்கமருவியீ காலத்தன என்பர் மற்றெருசாரார். ஆராய்ச்சியாளர் எவ்வாறு கூறினும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய நூல்களிலுள்ள செய்யுட் களுட் பெரும்பாலன சங்ககாலத்தவை என்பதை யாவரும் ஒப்புக்கொள்வர். தொகைநூல்கள் எட்டனுள்ளே புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல் என்னும் இவை மூன்றும் டற்த் தினை கூறுவன; ஏனைய ஐந்தும் அகத்தினை கூறுவன. பத்துப்பாட்டிலுள்ள குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, பட்டினப் பாலை என்பன மூன்றும் அகத்திணைப் பாட்டுக்கள்; ஏனைய ஏழும் புறத்தினைப் பாட்டுக்கள். -
சங்கச் செய்யுளிற் காணப்படும் பொருள்மரபு அக் காலத்து மக்கள் வாழ்க்கையை ஆதாரமாகக்கொண்டு எழுந்
* எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்னும் நூல்கள் தொகுத்தது
பல்லவர் காலத்திலென்பர் ஒருசாரார்.

Page 12
6, தமிழ் இலக்கிய வரலாறு
துள்ளது. சங்கப் புலவர்கள் தம் செய்யுளுக்கு மக்கள் வாழ்க்கையைப் பொருளாக அமைத்தபோது, அதனை அகத் திணை புறத்தினை என் இரண்டாக வகுத்து அமைத்தனர். அகத்தினையென்பது காதலொழுக்கம். அது புணர்தல், பிரிதல் முதலிய பல பிரிவுகளையுடையது. காதலனுக்கும் காதலிக்கு மிடையேயுள்ள காதலொழுக்கத்தைப் புலவன் கூறும்போது, ஒருவர் பெயரைச் சுட்டாது கூறுவதும் சுட்டிக்கூறுவதும் உண்டு. பாக்களுள் ஒருவர் பெயரைச் சுட்டிக்கூருப் பாக்களே அகத்திணைக் குரியவை. சுட்டியொருவர் பெயர்கொள்ளும் காதற்பாக்களையும் போர் முதலிய பிற ஒழுக்கங்களைக் கூறும் பாக்களையும் புறத்தினையுள் அடக்கினர். அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றனுள் இன்பம் அகத்திணையின் பாற்பட, புறத்தினையின் பாற்படும். சங்ககாலப் புறத்தினைச் செய்யுட்களுட் பலவகைப் புறவொழுக்கங்கள் கூறப்பட் டுள்ளனவெனினும், அவற்றுள் போரும் வீரமுமே சிறப்பாக எடுத்துக்கூறப்பட்டுள்ளன. செய்யுள் வழக்கில் மட்டுமன்றி உலகவழக்கிலும் சங்ககால மக்கள் தூய காதலொழுக்கத்தையும், அறத்தினின்றும் வழுவாத வீரவாழ்க்கையையும் சிறப் பாகப் போற்றிவந்தனரென்பது அக்கால நூல்கள் வாயிலாக அறியக்கிடக்கின்றது. காதலும் போரும் சங்க காலச் செய்யுளிற்போல வேறு எக்காலச் செய்யுளிலும் பாராட்டப்பட
உலகவழக்கினை ஆதாரமாகக் கொண்டெழுந்த சங்க காலச் செய்யுள்வழக்கினை ஒருவாறு அறிந்துகொள்வதற்கு அக்கால மக்கள் வாழ்க்கைமுறையினை காம் அறிதல்வேண்டும். மலைப்பிரதேசம், காட்டுப்பிரதேசம், நீர்வளமும் நிலவளமுமுள்ள வயற்பிரதேசம், கடற்கரைப்பிரதேசம், வரண்ட நிலப்பிரதேசம் என ஐந்துவகையான இயற்கைப் பிரிவுகளையுடையது தமிழ் நாடு. அவற்றை முறையே குறிஞ்சிநிலம், முல்லைகிலம், மருத நிலம், நெய்தல்நிலம், பாலைநிலம் என வழங்கினர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் தாவரங்கள்
V
 

சங்க காலம் "
முறையே அவ்வங்கிலங்களிற் சிறப்பாகக் காணப்பட்டமையின் அவ்ற்றின் பெ ய ர | ல் அங்கிலங்களும் பெயர்பெற்றன. பண்டைக்காலத்தில் மக்கட்குழுவினைக் குறித்துகின்ற தினை யென்னும் சொல், நாளடைவில் மக்கள் ஒழுக்கத்தைக் குறிப்பதாயிற்று. அதனுல், குறிஞ்சித்திணை முல்லைத்திணை முதலிய சொற்ருெடர்கள் செய்யுள்வழக்கில் அவ்வந் நிலங் களுக்குரிய சிறப்புடைக் காதலொழுக்கங்களைக் குறிக்கலாயின. அவ்வந் நிலங்களுக்குரிய போரொழுக்கங்கள் மக்கள் போருக் குச் செல்லும்பொழுது சூடிச்சென்ற வெட்சி, வஞ்சி முதலிய பூக்களாற் பெயர்பெறலாயின.
அன் பினைந்திணை
புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல் ஊடலென்னும் ஐந்தும் அன்பினைந்திணை யென்று சிறப்பித்துக் கூறப்பட்ட
தூய காதலொழுக்கங்களாம். இவை உலகவழக்கில் எல்லா நில மக்களிடையேயும் காணப்பட்ட ஒழுக்கங்களெனினும்
குறிஞ்சி முதலிய ஐவகை நிலங்களில் வாழ்ந்த மக்களுள்,
எந்நில மக்களுக்கு எவ்வொழுக்கம் சிறந்து நின்றதோ, அதனை
அங்கிலத்துக்கு உரியதாகக்கொண்டு சங்கப் புலவர்கள் செய்யுட்
செய்தனர். அதனுல், அம்முறைபற்றிக் குறிஞ்சி நிலத்துக்குப்
புணர்தலும், பாலைக்குப் பிரிதலும், முல்லைக்கு இருத்தலும், மருதத்துக்கு ஊடலும், நெய்தலுக்கு இரங்கலும் சிறப்பாக உரிய ஒழுக்கங்களாகச் சங்கச் செய்யுட்களில் அமைந்துள்ளன. மேற்கூறியவாறு ஐவகைக் காதலொழுக்கங்களும் தத்தமக் குரியனவாகக் கூறப்பட்ட நிலங்களில் வாராது, உலகவழக்கு நோக்கிச் சிறுபான்மை மயங்கிவருதலும் உண்டு. அவ்வாறு மயங்கிவருவதாகச் செய்யப்பட்ட செய்யுட்களும் பலவுள.
குறிஞ்சி முதலிய நிலங்களுக்குப் புணர்தல் முதலிய ஒழுக்கங்கள்
உரியனவென்பது முற்காலத்து இலக்கண நூல்களாலும், அவற்றிற்கு எழுந்த உரைகளாலும் அறியக்கிடக்கின்றது.

Page 13
8 தமிழ் இலக்கிய வரலாறு
இனி, மேற்கூறிய "ஐவகை ஒழுக்கங்களும் ஐவகை நிலங்களுக்கும் உரியனவாகக் கொள்ளப்பட்டவாற்றை நோக்கு வோம்: மலையும், மலைசார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்கள் தம் உணவுக்கு வேட்டையாடுதல், தினை விளைத்தல் முதலிய தொழில்களைச் செய்துவந்தனர். தினை விளையுங் காலத்தில் அதனை அங்கிலத்து இளம்பெண்கள் பகற் பொழுதிற் காத்துகிற்க, ஆடவர் வேட்டையாடச் செல்லுதல் வழக்காருயிருந்தது. வேட்டைமேல் மனங்கொண்ட காளையரும், திணைப்புனங் காத்துகின்ற இளங்கன்னியரும், ஒருவரை யொருவர் தினைப்புனத்துக் கருகிலுள்ள சோலையிற் கண்டு காதல் கொள்ளுதற்கும், பின்னர் அக்காதற்பயிரை அவர் வளர்த்தற் கும் ஏற்ற பல வசதிகள் குறிஞ்சிநில மக்கள் வாழ்க்கையிற் காணப்பட்டன. அதனுல், நம் முன்னுேர் போற்றிய காதல் நாடகத்தின் ஆரம்பக் காட்சிக்குப் பொருந்துமிடம் அந்நிலம் என்பதை உணர்ந்து, சங்ககாலப் புலவர்கள் புணர்தல் என்னும் ஒழுக்கத்தைக் குறிஞ்சி நிலத்திற்கு உரியதொரு காதலொழுக்கமாகக் கொண்டனர். அப்புணர்தல் ஒழுக்கம் இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், பகற்குறி, இரவுக்குறி எனப் பலதிறப்படும்.
குறிஞ்சி, முல்லை முதலிய செழிப்புள்ள நிலங்களுக் கிடையே பரந்துகிடந்த வரட்சிபொருந்திய பிரதேசம் பாலை நிலமெனப்பட்டது. செழிப்புள்ள அங்கிலங்களைத் தொடுத்து நின்ற வழிகள் பல அக்காலத்திலே பாலைநிலத்தினூடாகச் சென்றன. அவ்வழிகளாற் போன பிரயாணிகள் கொண்டு சென்ற பொருள்களைப் பாலைநிலத்தில் வாழ்ந்த மக்கள் சூறை யாடினர். அவ்வாறு ஆறலைத்தலையும் சூறையாடுதலையும் தொழிலாகக் கொண்ட பாலைநிலத்து ஆடவன் அத்தொழிலைச் செய்தற்பொருட்டு இடையிடையே தன் காதலியை விட்டுப் பிரிந்து செல்லுதல் வழக்காருயிருந்தது. அதனுல், பிரித
லென்னும் காதலொழுக்கம் பாலைநிலத்துக்கு உரியதோர்
ஒழுக்கமாகக் கொள்ளப்பட்டது. பிரிதலால் வரும் துன்பம்

சிங்க காலம் 9
பாலைச் செய்யுட்களில் நன்கு சித்திரிக்கப்பட்டுள்ளது. இன்பச் சுவையினும் துன்பச்சுவையே மக்களுடைய மனத்தைப் பெரி தும் கவர்கின்றது. துன்பச்சுவையின் சிறப்பு நோக்கிப் போலும் தொகைநூல்களுட் பெரும்பாலான பாலைத்திணைச் செய்யுட்கள் கோக்கப்பட்டுள்ளன. அகநானூற்றுச் செய்யுட் களுள் 200 செய்யுட்கள் பாலைத்திணைச் செய்யுட்கள் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. காதலன் காதலியாகிய இருவருள் ஒருவரையொருவர் விட்டுப்பிரிய முடியாதவிடத்து இருவரும் ஒருங்கு செல்வதாகிய உடன்போக்கு என்னும் ஒழுக்கமும் பாலைநிலத்துக்கு உரியதாகும். அதனுல், உடன்போக்குப் பாலையெனப்பட்டது. th
காடும் காடுசார்ந்த நிலமுமாகிய முல்லைநிலத்தில் வாழ்ந் தோர் ஆயர் எனப்படுவர். அவர் பண்டைக்காலத்திற் பெரும் பாலும் மந்தை மேய்த்தற் றெழிலையே செய்துவந்தனர். தம் நிலத்தினையும் மந்தைகளையும் பகைவரிடத்திலிருந்து காத்தற் பொருட்டுத் தம் நிலத்தின் எல்லைப்புறங்களுக்கு அவர்கள் சென்று பாடிவீடு அமைத்துச் சில நாட்கள் தங்கியிருந்து பகையினை அடக்கி மீளுதல் வழக்காருயிருந்தது. வேனிற் பாசறை, கூதிர்ப்பாசறை எனப் பாசறை இருவகைப்படும். அரசன் முதுவேனிற் காலத்திற் பாசறையமைத்துப் போர் புரிந்து கார்காலத் தொடக்கத்தில் மீண்டு வருதலும், கூதிர் காலத்திற் பாசறையமைத்துப் போர்புரிந்து அக்கால முடிவில் மீண்டுவருதலும் வழக்காருக இருந்தது. அங்ங்னம் அரசனும் படைத்தலைவர் முதலானுேரும் பாசறைக்குச் செல்லும்போது தம் மனைவியரை வீட்டில் விட்டுத் தாம் மீண்டுவரும் காலம் இன்னது எனக் கூறிச்செல்வர். அவ்வாறு பிரிந்த ஆடவர் தாம் மீண்டுவருவதாகக் குறித்த காலம் வருந்துணையும் அவர் மனைவியர் தம்முடைய துன்பத்தை ஆற்றிக்கொண்டு வீட்டில் இருத்தலும், அப்பருவம் வந்தவிடத்தும் அவர் வாராராயின் ஆற்ருமை மீதூரப்பெற்றுத் துன்புறுதலும் பிறவும் முல்லைநில ஒழுக்கங்களாகக் கொள்ளப்பட்டன. தலைவன் பாசறையி

Page 14
fÖ தமிழ் இலக்கிய வரலாறு
லிருந்து தன் கடமைகளைச் செய்தலையும், தலைவி வீட்டிலிருந்து தலைவனை நினைத்துத் துன்புறுதலையும் முல்லைப்பாட்டு, நெடு
நல்வாடை என்பன சிறப்பாக எடுத்துக் கூறுகின்றன.
வயலும் வயல்சார்ந்த நிலமுமாகிய மருதநிலம் பிற நிலங்களிலும் வளம் மிக்குடையது. நீர்வளம் பொருந்திய அங்கிலம் சிறு முயற்சிக்கும் பெரும்பயன் அளித்தது. அதனுல், உழவுத்தொழிலை மேற்கொண்ட அந்நில மக்கள் செல்வச் சிறப்புடையோராய் வாழ்ந்தனர். உணவு தேடுவதிலேயே தம் காலம் முழுவதையும் செலவிடவேண்டிய நிலை மருதநில மக்களுக்குப் பெரும்பாலும் ஏற்படவில்லை. ஆகவே, அவர் தம் ஒய்வுநேரத்தை ஆடல் பாடல் முதலிய இன்பக்கலைகளை விருத்திசெய்தலிலும் அறிவை வளர்த்தலிலும் செலவிட்டனர். மருதநிலத்து ஆடவர் தாம் செய்யவேண்டிய வேலைகளை யெல்லாம் பகற்காலத்திற் செய்துமுடித்து, இராக்காலத்தில் இன்பக்கலை வல்ல பாணரும் பரத்தையரும் வாழுமிடஞ்சென்று, அவர்செய்யும் ஆடல் பாடல் முதலியவற்றில் ஈடுபட்டு இன் புற்று வாழ்தனர். அவ்வாறு மருதநிலத்து ஆடவர் இராப் பொழுதிற் பெரும்பாகத்தைப் பரத்தையர் வீட்டிற் கழிப்பதை விரும்பாத அவர் மனைவியருக்கு அச்செயல் ஊடல் விளைப்ப தாயிற்று. அதனுல், கூடுதலைப் போன்று காதலருக்கு இன்பம் தரும் ஊடுதலை மருதநிலத்துக்குரிய காதலொழுக்கமாகக் கொண்டு சங்கப்புலவர் செய்யுட்செய்தனர். பிற்காலங்களில் மருதநிலத்துத் தலைவர்கள் பரத்தையரைக் காதலித்துப் பரத்தையர் வீட்டிற் சில நாட்கள் தங்கியிருத்தல் முதலியன பரத்தையர் ஒழுக்கம் எனப்பட்டன. * பாணன், பரத்தன் என்பன ஒருபொருட் சொற்கள். பாணன் என்னும் சொல்லுக்குப் பெண்பால் பாடினி, பரத்தன் என்னும் சொல்லுக்குப் பெண்பால் பரத்தை, பிற்காலத்திலே பாடினி, பரத்தன் என்னும் சொற்கள் இரண்டும் வழக்கு ஒழிந்து போகவே பாணன், பரத்தை என்னும் சொற்கள் பெரு வழக்காயிருந்தன. ஆகவே, பரத்தையென்னும் சொல் பாண லுக்கு மனைவி என்னும் பொருளில் வழங்கலாயிற்று.

சங்க காலம் 1.
வெண்மணற் குன்றுகளையும் உப்பங்கழிகளையுமுடைய கடற்கரைப் பிரதேசமாகிய நெய்தல் நிலத்தில் மீன்பிடித்தல், உப்புவிளேத்தல் முதலியவற்றைத் தொழிலாகுவுடைய பரதவர் வாழ்ந்தனர். மீன்பிடித்தற்குப் படகிலேறிக் காலையிற்சென்ற ஆடவர் மாலைக்குமுன் திரும்பிக் கரைக்கு வாராவிடின் அவர் மனைவியரும் பிறரும் அந்திப்பொழுதில் அவரை நினைத்துத் துன்பமுற்று இரங்குவர். அந்நேரத்திற் சூரியன் படுதல், பறவை யினம் தம் சேக்கை நோக்கிக் கூட்டங் கூட்டமாகப் பறத்தல், கடற்கரையிற் புல்மேயும் விலங்கினம் தம் படுக்கையிடம் நோக்கிச் சேறல் முதலிய இயற்கைக் காட்சிகள் இயல்பாகவே மக்களுக்கு ஒரு சோக உணர்ச்சியைத் தூண்டவல்லன. அக் கடற்கரைப் பிரதேசம் ஆடவரும் இளமங்கையரும் பிறரறியாது ஒருவரையொருவர் கண்டு தம்முட் காதல்கொள்ளுதற்கு ஏற்ற புன்னை முதலிய மரங்கள் செறிந்த வெண்மணற் குன்றுகளை யுடையது. அவற்றின்கண் நாள்தோறும் காதலனைக் கண்டு இன்புறுங் காதலி, ஒருநாளைக்காயினும் அவனைக் காணுவிடின் துன்புறுவள். அவ்வாறு சில நாட்களாகப் பகல் முழுவதும் காத்துநின்றும் அவனைக் காணுதவிடத்து அவன் தன்னை விட்டொழிந்தானுே என்னும் கவலை அவள் மனத்தை உறுத்து வதால் அவளுக்கு இரங்கல் உண்டாகின்றது. அதனுல், இரங்கல் என்னும் அகத்தினையொழுக்கம் கெய்தல் நிலத்திற்கு உரியதாகக் கொள்ளப்பட்டது. -
கைக்கிளை - பெருந்திணை -
மேற்கூறிய அன்பினைந்திணையுள் அடங்காத பிற அக வொழுக்கங்கள் கைக்கிளை, பெருந்தினையென இரண்டாக வகுக்கப்பட்டுள்ளன. அவற்றுட் கைக்கிளையென்பது ஒருதலைக் காமம். அது தலைவன் தலைவி ஆகிய இருவருள் ஒருவரிடமே தோன்றி விளங்குங் காதல். அதனை மூன்றக வகுத்துக் கூறுவர். அவற்றுள் முதலாவது, பருவமெய்தாத பேதை யொருத்தியைக் கண்ட ஆடவனுெருவன் அவள்மேற் காதல் கொண்டு அவளைப்பற்றிப் பலவாறெல்லாம் சொல்லியின்புறு

Page 15
12 தமிழ் இலக்கிய வரலாறு
தல், இரண்டாவது, ஒத்த அன்பினராய ஒருவனும் ஒருத்தியும் ஊழ்வசத்தால் ஒருவரையொருவர் எதிர்ப்பட்டுக் கூடும் கூட்டத்திற்குமுன் தலைவனிடம் பெரும்பாலும் நிகழும் காட்சி, ஐயம், தெளிதல், தேறல் என்னும் நான்கு செய்திகளுமாகும். மூன்றவது, கொல்லேறு தழுவுதல் முதலியவை காரணமாக நிகழும் மணமுறைகளாகும். இவ்வாறு நிகழும் கைக்கிளைப் பகுதிகளுட் பருவமெய்தாத பேதையரிடம் நிகழ்வதைச் சிறப் பித்துக் கூறும் செய்யுட்கள் கலித்தொகையிற் கோக்கப்பட் டுள்ளன. இயற்கைப் புணர்ச்சிக்குமுன் நிகழும் காட்சி முத லியவை பிற்காலங்களில் எழுந்த கோவைப் பிரபந்தத்திற் சிறப்பாகப் பாராட்டப்பட்டுள்ளன. கொல்லேறு தழுவுதலாகிய ஏறுகோடற் கைக்கிளை முல்லை நிலத்து மக்களாகிய ஆயர் குலத்துள் வழங்கியதாகத் தெரிகின்றது. அதனைச் சிறப்பித்துக் கூறும் செய்யுட்கள் முல்லைக்கலியுட் கோக்கப்பட்டுள்ளன.
பெருந்திணை யென்பது பொருந்தாக் காமம். ஒருவன் ஒருத்தியிடம் மிக்க காமத்தனுகி, அவளை அடையப்பெருது மடலேறுதல், வரைபாய்தல் முதலியவற்றல் தன்னை மாய்த்துக் கொள்ளுதல் முதலியவற்றைப் பொருளாகக்கொண்டு விளங் கும் செய்யுட்கள் பெருந்திணைப்பாற்படுவன. மடலேறுதலைப் பொருளாகக் கொண்ட செய்யுட்கள் குறுந்தொகையுள்ளும் நெய்தற்கலியுள்ளும் தொகுக்கப்பட்டுள்ளன. அச்செய்யுட்க ளில்ே மடலேற்றத்தின் வரலாறு நன்கு விளக்கப்பட்டிருத்தலைக் காணலாம். இம்மடலேற்றம் முன்னுளில் நெய்தல் நில மக்க ளிடையே வழங்கிவந்த தற்கொலைமுறை வகையென்பது தெரிகின்றது. அதற்குப் பனைமடலாற் செய்யப்பட்ட குதிரை யாகிய மடல்மா' ஒரு கருவியாகக் கொள்ளப்பட்டது. இங்ாவனம் காதல் காரணமாக மடலூரும் முறை ஆடவர்மட்டும் செய்தற்குரியதன்றிப் பெண்கள் செய்யத்தக்கதன்று என்று * குறுந்தொகை 17, 173, 182, 286
நெய்தற்கலி 21, 22, 24.

FÅS Ffrêd y "A" 13
பண்டை நூல்களிற் குறிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மட
லேறியதாகக் கூறுவது பிற்கால வழக்கு. அதைவிட, அடிமை
களாயுள்ளாரையும் ஏவல் செய்வாரையும் தலைமக்களாக வைத்துப் பாடப்பட்ட சில கலித்தொகைப் பாட்டுக்களும் பெருந்திணைப்பாற்படுவன. - புறத்திணை
புணர்தல் முதலிய தூய காதலொழுக்கம் ஐந்தினையும் குறிஞ்சி முதலிய ஐவகை நிலங்களுக்கு உரியனவாக வகுத்த புலவர்கள், மக்களின் போரொழுக்கத்தினையும் வெட்சி, வாகை, வஞ்சி, உழிஞை, தும்பை என ஐந்தாக வகுத்து, முண்றயே குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய ஐவகை நிலங்களுக்குமுரிய புறவொழுக்கங்களாகக் கொண்டனர். ஐவகை நிலங்களின் இயற்கைத் தன்மையினையும், அந் நிலங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைமுன்றையினையும் கன்கு ஆராய்ந்தே இவ்வாறு வகுத்துள்ளனரென்பது தெரிகின்றது. குறிஞ்சிநில மக்கள் பிறநிலத்து மந்தைகளைக் களவிற் கொண்டு போதல் காரணமாக ஏற்படும் பூசல் வெட்சியெனப்படும். அவ்வாறு குறிஞ்சி நிலத்தோர் நிரைகவரச் செல்லும்போது வெட்சிப்பூவைச் சூடிச் செல்வாராக்லின், அப்போர் அப்பூவாற் பெயர்பெற்றது. வஞ்சி முதலிய பிற போர்களும் அன்ன.
பாலே நிலத்தில் வாழ்ந்தோர் மறவர் எனப்படுவர். அவ்ர் போருக்குச் சென்றபோது வாகைப்பூச் சூடிச் சென்றன ராகலின், அவர் நிகழ்த்திய போர் வாகையெனப்பட்டது. அவர் எங்கிலத்திற் சென்று போர்புரிந்தபோதும் வெற்றி பெற்றன்றி மீண்டிலராகலின், அவர் சூடிச்சென்ற வாகைப்பூ வெற்றிக்கு ஓர் அறிகுறியாகக் கருதப்பட்டது; அதனுல், எத்துறையிலும் வெற்றிபெற்று விளங்குதலைப் பிற்காலத்தோர் வாகை சூடுதலென்பர். - - -
முல்லைநிலத்து மக்கள் தம் பகைவரை அடக்குதற்பொருட்டு முல்லைநில எல்லைப்புறங்களுக்குச் சென்று பாடிவீடமைத்துத்

Page 16
4. தமிழ் இலக்கிய வரலாறு
தங்கியிருந்து நிகழ்த்திய போர் வஞ்சியெனப்பட்டது. அங்ானம் அமைத்த பாடிவிடு வேனிற்பாசறை, கூதிர்ப்பாசறை என இருவகைப்படும் வேனிற்பாசறை முதுவேனிற் காலத்தில் அமைக்கப்பட்டது; கூதிர்ப்பாசறை கூதிர்காலத்தில் அமைக்கப் பட்டது. இவ்விருவகைப் பாசறைகளும் முறையே முல்லைப் பாட்டு, நெடுநல்வாடை என்னும் பாட்டுக்களில் விவரிக்கப்பட் டுள்ளன.
மருதநிலத்துப் போர் உழிஞையாகும். பண்டைக்காலத் தரசர்கள் இயற்கையரண் பொருந்திய இடங்களைத் தெரிந்து அவற்றைத் தம் இருப்பிடமாகக்கொண்டு ஆட்சிசெய்தனர். குறிஞ்சி, முல்லை ஆகிய நிலங்களில் அத்தகைய இயற்கை
பரண்கள் உண்டு. மருதநிலத்தில் இயற்கையரண் காண்டல்
அரிதாகலின், அந்நிலத்தில் வாழ்ந்த அரசனும் மக்களும் பகைவரிடத்தினின்று தம்மையும் தம் பொருள்களையும் காத்தற் பொருட்டுச் செயற்கையரணிழைத்து அதன் கண் வாழ்ந்து வந்தனர். அவ்வரனைக் கொள்ளக்கருதிய பகைவர் அதனை முற்றிநிற்க, அது காரணமாக அரணகத்துள்ள படைக்கும், அதன் புறத்திலுள்ள படைக்குமிடையே மூண்ட பூசல் உழிஞை எனப்பட்டது.
s
நெய்தல் நிலத்தில் நடைபெற்ற போரொழுக்கம் தும்பை யெனப்பட்டது. காடும் மலையும் கழனியுமின்றி மணல் பரந்த வெளிநிலமே நெய்தலாதலின் அங்குள்ள அரசனுேடு போர் புரியக் கருதிய பகையரசன் அந்நிலத்திற் களம் குறித்துப் போர் நிகழ்த்துதல் வழக்காறயிருந்தது. தும்பையாவது வேந்த னுெருவன் தன் வலியை உலகோர் புகழ்தலையே பொருளாகக் கருதிப் பகை வேந்தன்மேற் செல்ல, அப்பகை வேந்தனும் அப்புகழையே கருதி அவனை ஒருகளத் தெதிர்த்து அவன் வலியினை அழித்தலாம். இத்தும்பைத்தினை படையாளரது அரிய பெரிய வீரச்செயல்களை விளக்குவதாகும், பலரும்" வீரன் ஒருவனை அணுகிப் போர்செய்ய அஞ்சி, விலகிநின்று

مصر
சங்க காலம்
அம்பால் எய்யவும் வேல்கொண்டு எறியவும், அவன் குற்றுயி ரான நிலையிலும் துளங்காது நின்று போர் செய்தலுண்டு. வாளால் தலை அறுபட்ட நிலையிலும் அவனுடம்பு நிலத்துச் சாயாது வீரச்செயல் காட்டி நின்று ஆடும் சிறப்பினைச் சங்கச் செய்யுட்கள் அழகாகச் சித்திரித்துக் காட்டுகின்றன.
மேற்கூறிய போரொழுக்கங்கள் ஐந்தினையும்விட, வேறு பல புறவொழுக்கங்களையும் பொருளாகக்கொண்டு சங்கப் புலவர் செய்யுட் செய்துள்ளனர். அவற்றுட் பெரும்பாலன காஞ்சித்தினை, பாடாண்டினை என்பவற்றுளடங்கும். அவை யிரண்டும் கைக்கிளை, பெருந்தினையென்னும் அகத்தினைப் பிரிவுகளுக்குப் புறமாகும். யாக்கை, செல்வம், இளமை முதலிய பல நெறியானும் நிலையாத உலகியற்கையை எடுத்துக் கூறுதல் காஞ்சித்தினையின் பாற்படும். இங்ாவனம் நிலையாமைக் குறிப்பு ஏதுவாக நிகழும் காஞ்சி ஆண்பாற் காஞ்சி, பெண்பாற் காஞ்சி என இரண்டாக வகுத்துக் கூறப்படும். போரிலே புண்பட்ட வீரனுெருவன், அப்புண்ணை ஆற்றிக்கொண்டு வாழும் உலக வாழ்க்கையை வேண்டாது, அப்புண்ணைக் கிழித்துக்கொண்டு இறந்துபோதல், போர் நிகழ்ந்த அன் றிரவில் அப்போர்க்களத்தே புண்பட்டுக்கிடந்த வீரனுெருவனை நாய், கரி முதலியன தீண்டாவண்ணம் பிறர் அவனைக் காத்தல், அங்ாவனங் கிடந்த வீரனுெருவனே அவன் மனைவி காவல்செய்து நிற்றல் முதலியன ஆண்பாற் காஞ்சி(wer அடங்கும். அவை யாவும் ஆடவரது வீரத்தைச் சிறப்பித்து
நிற் றலால், ஆண்பாற் காஞ்சியெனப்பட்டன. மனைவி
யொருத்தி தன் கணவன் போர்க்களத்தே மடிந்துகிடக்க, அவனைத் தழுவிக்கொண்டு அழுதல், உடனுயிர் நீத்தல், உடன்
கட்டையேறுதல் முதலியன பெண்பாற் காஞ்சியாகும். காஞ்சித்
தினைச் செய்யுட்கள் யாவும் பண்டைத் தமிழர் வீரப்பண்பை
விளக்கிக் காட்டுகின்றன.
சங்ககாலத்தில் எழுந்த புறத்தினைச் செய்யுட்களுட்
பெரும்பாலானவை பாடாண்டினேயின் பாற்படுவன. பாடாண்

Page 17
18 தமிழ் இலக்கிய வரலாறு
என்பது பாடப்படும் ஆண்மகனது ஒழுகலர்று என்பர். அரசர் முதலானுேரின் போற்றத்தகுந்த குணம், செயல் முதலியவற்றைப் புகழ்ந்துகூறும் செய்யுட்களும், அவர்களுக்கு அறவுரை முதலியன கூறி வாழ்த்தும் செய்யுட்களும் பிறவும் பாடாண்டிணைச் செய்யுட்களாகும். கடவுள் வாழ்த்து, அறு முறை வாழ்த்து, புறநிலை வாழ்த்து முதலியனவும் இதன் பாற்படும்.
3. எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்
எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்னும் நூல்களிலே தொகுக்கப்பட்டுள்ள செய்யுட்கள் யாவும் சங்ககாலச் செய் யுட்கள் என்றே கருதப்படுகின்றன. அவற்றுட் சில, பிற் காலத்தன என்று கூறுவாரும் உளர். அந்நூல்களைத் தொகுத் தோர் புறத்திணை கூறும்பாக்களுள் நானூறுபாக்களைத் தெரிந்து புறநானூறு என்னும் நூலாகவும், நூறு பாக்களைத் தெரிந்து பதிற்றுப்பத்தென்னும் நூலாகவும் தொகுத்துள்ளனர். இங் நூல்களிலுள்ள பாக்களுட் பல அகவற்பாவாயும் சில வஞ்சிப் பாவாயுமுள்ளன. அக்காலத்திலே தமிழ் நாட்டை ஆண்ட அரசர்களின் வீரச்செயல், கொடைச்சிறப்பு, ஆட்சித்திறன் முதலியவற்றையும் சங்ககால மக்களுடைய அறவொழுக்கம், வாழ்க்கைச் சிறப்பு, போர் முறைகள் முதலியவற்றையும், சங்கத்துச் சான்றேரெனப் பாராட்டப்பட்ட அக்காலத்துப் புலவர்களுடைய சிறப்புடைக் குணங்களையும், புறநானூற்றுச் செய்யுட்கள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. அக்காலத் தில் வாழ்ந்த முடியுடை வேந்தர்கள், குறுநில மன்னர்கள், கடையெழு வள்ளல்கள் முதலானுேருடைய சரித்திரங்களே நாம் அறிந்துகொள்ளுதற்கும் இந்நூற் செய்யுட்கள் பயன் படுகின்றன. இந்நூலிலுள்ள செய்யுட்கள் யாவும் கவிச்சுவை நிரம்பியவை; உள்ளதை உள்ளவாறே கூறும் இயல்பினை
* அரசர், முனிவர், பார்ப்பார், பசு, நாடு, மழை ஆகிய ஆறினேயும் י {
வாழ்த்துதல், -

சங்க காலம் .,
17
யுடையவை. கருதிய பொருள் விரைவிற் புலப்படுதற்கு வேண்டிய சொற்களை அமைத்துப் புலவர்கள் செய்யுட் செய்தமையால், அவை யாவும் பொருட்டெளிவுடையனவாக விளங்குகின்றன. அவற்றின்கண் வெற்றுச் சொற் களை க் காண்டல் அரிது. அதனால், அவை சொற் செறிவுடையன
வாகவும் விளங்குகின்றன.
அக்காலத்து அரசர்கள் புலவர்களைப் பெரிதும் மதித்து, அவர்களாற் பாடப்பெறுதல் பெரும் பேறெனக் கருதி வாழ்ந்தனர். அதனால், அப்புலவர்களும் அரசர்களின் வீரச் செயல்களையும் கொடைச்சிறப்பினையும் தக்கவாறு பாராட்டிப் பாடினர். அங்ஙனம் பாராட்டிக் கூறும் செய்யுட்களுள் அவர்களின் வீரப்பண்பை விளக்கிக் கூறுவனவே பெரும் பாலானவை. அவற்றுக்கு ஓர் உதாரணம் ஒளவையார் அதியமானைப் பாடிய ஒரு பாட்டு. அதியமான் நெடுமானஞ்சி என்னும் சிற்றரசனுக்கு ஒரு தவமகன் பிறந்தபோது, அவ் வரசன் போர்க்களத்தில் நின்று போர்க்கோலத்தோடு சென்று தன் மகனைப் பார்த்ததை ஒளவையார் கண்டு பாடியது அப்பாட்டு. அது வருமாறு:
கையது வேலே காலன புனைகழன் மெய்யது வியரே மிடற்றது பசும்புண் வட்கர் போகிய வளரிளம் போந்தை யுச்சிக் கொண்ட வூசி வெண்டோட்டு வெட்சி மாமலர் வேங்கையொடு விரை இச் சுரியிரும் பித்தை பொலியச் சூடி வரிவயம் பொருத வயக்களிறு போல வின்னு மாறாது சினனே யன்னோ வுய்ந்தன ரல்லரிவ னுடற்றி யோரே செறுவர் நோக்கிய கண்டன் சிறுவனை நோக்கியுஞ் சிவப்பா னாவே.
வட்கர் போகிய- பகைவர் தொலைதற்கு ஏ துவாகிய. போந்தை- பனை. சுரியிரும்பித்தை--சுருண்ட கரிய மயிர்.

Page 18
8 தமிழ் இலக்கிய வ்ரலாறு
செறிவும் தெளிவும் ப்ொருந்திய இப்பாட்டிலே அதியமா னுடைய தோற்றப் பொலிவும் வீரப் பண்பும் அழகாகச் சித்திரிக்கப்படுகின்றன. கையது வேல், காலன புனைகழல், மெய்யது வியர், மிடற்றது பசும்புண் என இவ்வாறு சிறுச் சிறு வாக்கியங்களில் அவனுடைய தோற்றப்பொலிவு சித் திரிக்கப்படும் வகை கண்டு இன்புறற்பாலது. அவன் தன் சிறுவனைப் பார்த்தற்பொருட்டுப் போர்க்களத்தினின்று வீடு சென்றன் என்பதை இப்பாட்டு எமக்குத் தெளிவாகக் காட்டு கிறது. புதல்வனைப் பார்த்து மகிழவேண்டிய இடத்தும் அவன் சினம் ஆறவில்லை. அச்சினத்தின் தன்மிை “வரிவயம் பொருத வயக்களிறு போல’ என்னும் உவமையினுல் விளக்கப்படு கிறது. உணர்ச்சியைப் புலப்படுத்தச் சங்கப் புலவர்கள் கையாண்ட உவமைகளுக்கு இது ஒரு தக்க உதாரணமாகும்.
பதிற்றுப்பத்து என்னும் நூல் சேரமன்னர் பதின் மர்மீது பத்துப்பத்துப் பாக்களாகப் பாடப்பட்ட நூறு செய்யுட்களைக் கொண்டுள்ளது. இந்நூலிலுள்ள ஒவ்வொரு பத்தும் தனித் தனியே ஒவ்வொரு புலவராற் பாடப்பெற்று ஒவ்வொரு சேர அரசரைப் பாராட்டுகின்றது. சேர அரசர்களைப்பற்றிய செய்யுட் கள் புறநானூற்றிலும் உளவெனினும், அரசன் ஒருவனைக் குறித்துத் தொடர்ச்சியாகப் பாடப்பட்ட பத்துச் செய்யுட்கள் இந்நூலிலேதான் உண்டு. ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் துறை, வண்ணம், தூக்கு, பாட்டின் பெயர் என்பன குறிக்கப்பட்டுள்ளன. அதை நோக்குமிடத்து இயற்றமிழுக்கு உரிய அகவற்பாவாலும் வஞ்சிப்பாவாலும் ஆகிய செய்யுட்கள் பிற்காலத்தில் இசையுடன் பாடப்பட்டனவெனக் கொள்ளு தற்கு இடமுண்டு. ஒவ்வொரு பத்தின் இறுதியிலும், அவ்வப் பத்தின் பாட்டுடைத் தலைவன் பெயர், செயல், ஆண்டகாலம் என்பனவற்றையும் செய்யுட்களைப் பாடிய புலவன் பெயர், அவன் பெற்ற பரிசில் முதலியவற்றையும் குறிக்கும் பதிகம் உண்டு. அவை ஆசிரியப்பாவாகத் தொடங்கிக் கட்டுரை ` நடைய்ாக முடிகின்றன. அவை சோழப் பெருமன்னர் காலத்தில்
نيا

0.
எழுந்த சாசனங்களிலுள்ள மெய்க்கீர்த்திகளை ஒரளவிற்கு ஒத்திருக்கின்றன. இந்நூலின் முதற் பத்தும் பத்தாம் பத்தும் இக்காலத்திற் கிடைத்தில.
அகத்தினை கூறும் பாக்களுள், நூலொன்றுக்கு நானூறு பாக்களாக ஆயிரத்து இருநூறு பாக்களை நற்றிணை, குறுங் தொகை, அகநானூறு என்னும் நூல்களிலே தொகுத்துள்ளனர். அவை யாவும் அகவற்பாவாயுள்ளன. குறுந்தொகைச் செய்யுட் கள் நாலடியைச் சிற்றெல்லையாகவும், எட்டடியைப் பேரெல்லே யாகவுமுடையன. கற்றிணைச் செய்யுட்கள் ஒன்பதடியைச் சிற் றெல்லையாகவும் பன்னீரடியைப் பேரெல்லையாகவுமுடிையன. அகநானூற்றுச் செய்யுட்கள் பதின்மூன்றடியைச் சிற்றெல்லை யாகவும் முப்பத்தோரடியைப் பேரெல்லையாகவு முடையன. இவை மூன்றனுள்ளும் அகநானூற்றுச் செய்யுட்கள் ஒழுங்கு முறை ஒன்றனைத் தழுவியே கோக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 1, 3, 5, 7, 9, 11. என்னும் எண்பெற்ற செய்யுட்கள்
பாலைத்தினையாகவும், ,
2, 8, 12, 18 . என்னும் எண்பெற்றவை குறிஞ்சித்
திணையாகவும்,
4, 14, 24 . என்னும் எண்பெற்றவை முல்லை
யாகவும், -
6, 16, 26 . என்னும் எண்பெற்றவை மந்த மாகவும்,
10, 20, 30 . என்னும் எண்பெற்றவை நெய்த
ல ள க வும் கோக்கப்பட்டுள்ளன.
ஏனைய நூல்களிரண்டும் யாதாயினும் ஒர் ஒழுங்குமுறைபற்றித் தொகுக்கப்படவில்லை. அதனுல், அவை அகநானூற்றிற்கு
முன்னேயே கோக்கப்பட்டனவாதல் வேண்டும்.
நற்றிணை, குறுந்தொகை என்னும் இருதொகை நூல்க ளுள் முதலிற் கோக்கப்பட்டது நற்றிணை என்பர் சிலர்,

Page 19
\ ,
20 தமிழ் இலக்கிய வரலாறு
குறுந்தொகை என்பர் வேறுசிலர். நற்றினை முதலிற் கோக் கப்பட்டது எனக் கொள்ளுதற்கு அந்நூலுக்கு இடப்பட்டுள்ள பெயரே தக்க சான்றகும். குறுந்தொகை என்னும் சொற் ருெடர், அடியளவாற் குறுகிய செய்யுட்களைக் கொண்டுள்ள தொகை எனப் பொருள்படுமாகலின், இந்நூல் தொகுக்கப் படுதற்கு முன்னரே அடியளவால் நீண்ட செய்யுட்களைக் கொண்டுள்ள ஒரு தொகைநூல் இருந்திருத்தல் வேண்டுமெனக் கொள்ளுதல் பொருத்தமுடைத்தாகும். அந்நூலை கோக்கியே குறுகிய செய்யுட்களையுடைய தொகைக்குக் குறுந்தொகை எனப் பெயரிடப்பட்டிருத்தல் வேண்டும். குறுந்தொகை முதலிற் கோக்கப்பட்டதாயின், அத்தொகைக்குக் குறுகிய என்னும் அடை புணர்த்தப்படவேண்டியதில்லை. இனி, நற்றி?ன என்னும் சொற்ருெடரிலுள்ள 'நல்' என்னும் அடை, அந்நூலிலுள்ள செய்யுட்களின் அடியளவு நோக்காது, அவற்றின் சிறப்பு நோக்கிப் புணர்த்தப்பட்டதாதல் வேண்டும். நற்றிணைக்குமுன் ஒரு தொகைநூல் இருந்திருப்பின் அந்நூலிலுள்ள செய்யுட் களின் அடியளவு கோக்கி இந்நூலிற்குக் குறுகிய, நெடிய என்னும் அடைகளுள் யாதேனும் ஒன்று புணர்த்தப்பட்ட பெயரே இடப்பட்டிருக்கும். அவ்வாறன்றி 'நல்' என்னும் அடை புணர்த்தப்பட்டு நற்றிணை என்றிருப்பதால் இந்நூலே முதலிற் கோக்கப்பட்டதாகும்.
' கற்றிணை, குறுந்தொகை, அகநானூறு ஆகிய தொகை நூல்கள் மூன்றிலுமிருந்து முறையே எடுக்கப்பட்ட மூன்று செய்யுட்கள் வருமாறு:-
T2)
இது வரைவு நீட ஆற்றளாகிய தலைமகளைத் தோழி
ஆற்றுவித்தது.
கக்கீரர் பாடியது தோளே தொடிநெகிழ்ந் தனவே நுதலே பிரிவர் மலரிற் பசப்பூர்ந் தன்றே

சங்க காலம் 21
கண்ணுங் தண்பனி வைகின வன்னுே தெளிந்தன மன்ற தேயரென் னுயிரென ஆழல் வாழி தோழி நிேன் f) தாழ்ந்தொலி கதுப்பின் வீழ்ந்த காலொடு வண்டுபடு புதுமலர் உண்டுறைத் தரீஇய பெருமட மகளிர் முன்கைச் சிறுகோற் பொலந்தொடி போல மின்னிக் கணங்கொ ளின்னிசை முரசி னிரங்கி மன்ன ரெயிலூர் பஃருேல் போலச் சென்மழை தவழுமவர் நன்மலே நாட்டே,
மருதம்
இது உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது.
பரணர் பாடியது )
எவ்வி யிழந்த வறுமையாழ்ப் பாணர் - பூவில் வறுந்தலை போலப் புல்லென் לו
றினேமதி வாழிய நெஞ்சே மனைமரத் தெல்லுறு மெளவ னுறும் பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே.
குறிஞ்சி V இது இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானகத் .. தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.
கபிலர் பாடியது
மன்றுபா டவிந்து மனை மடிந் தன்றே கொன்ருே ரன்ன கொடுமையோ டின்றே
தேயர்-தேயும்பொருட்டு. பசப்பு-பசலை. கதுப்பு - கடந்தல், தோல்-கேடயம், எவ்வி-ஓர்உபகாரி, இனம்தி-வருந்துவாயாக. எல்-ஒளி, மெளவல்-முல்லை. -

Page 20
22 தமிழ் இலக்கிய வரலாறு
யாமங் கொள்வரிற் கனே இக் காமங் கடலினு முரை இக் கரைபொழி யும்மே எவன்கொல் வாழி தோழி மயங்கி இன்ன மாகவு நன்னர் நெஞ்சம் என்னெடும் நின்னெடுஞ் சூழாது கைம்மிக்கு இறும்புபட் டிருளிய விட்டருஞ் சிலம்பிற் குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக் கான நாடன் வரூஉம் யானைக் கயிற்றுப்புறத் தன்ன கன்மிசைச் சிறுநெறி மாரி வானந் தலையி நீர்வார்பு இட்டருங் கண்ண படுகுழி யியவின் இருளிடை மிதிப்புழி நோக்கியவர் தளரடி தாங்கிய சென்ற தின்றே. அகத்திணை ஐந்தனுக்கும் தனித்தனி நூறு செய்யுட்களாக ஐஞ்ஞாறு செய்யுட்களைக் கொண்டது ஐங்குறுநூறு. இதன் கணுள்ள செய்யுட்கள் யாவும் மூன்றடியைச் சிற்றெல்லை யாகவும் ஆற்டியைப் பேரெல்லையாகவு முடையன. ஒவ்வொரு திணைக்குமுரிய நூறு பாக்களும் பப்பத்துப் பாக்கள் கொண்ட பத்துப் பிரிவுகளையுடையன. பத்துச் செய்யுட்களைக்கொண்ட ஒவ்வொரு பிரிவும் பெரும்பாலும் ஒவ்வொரு துறை குறித்து நிற்றலையும், ஒவ்வொரு பெயர் பெற்று விளங்குதலையும் காணலாம். இந்நூலிலுள்ள பத்துக்களுள் மருதத்தினை கூறும் பத்துக்கள் முதலில் அமைக்கப்பட்டுள்ளன. அவை வேட்கைப் பத்து, வேழப் பத்து, கள்வன் பத்து, தோழிக்குரைத்த பத்து முதலியன. வேட்கைப் பத்து என்பது வேட்கையைப்பற்றிக் கூறிய பத்து என விரியும். அதன்கண் தோழி தலைவனுக்குத் தனது வேட்கையையும் தலைவியின் வேட்கையையும் கூறு கின்ருள். வேழப்பத்து என்பது வேழம் என்னும் சொல்லை
மன்று-பொதுவிடம், கனை இ-திரண்டு. இறும்பு-குறுங்காடு. - இயவு வழி. 邺、

சங்க காலம் 23
அமைத்துப் பாடிய பத்துச் செய்யுட்கள் என விரியும். அப் பத்திலுள்ள ஒவ்வொரு செய்யுளிலும் வேழம் என்னும் சொல் அமைந்துள்ளது. தலைவி தலைமகனது கொடுமையைப்பற்றித் தன் தோழிக்கு உரைத்ததனுல் ஒன்று தோழிக்குரைத்த பத்து என்ற பெயரைப் பெற்றுள்ளது. இவ்வாறே இந்நூலிலுள்ள பத்துக்கள் யாவும் கருப்பொருள், கூற்று முதலியன கொண்டு அமைக்கப்பெற்ற பெயர்களையுடையனவாக உள்ளன.
இந்நூலிலே அன்பினைந்திணைகள் மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லையென முறையே அமைக்கப்பட்டுள்ளன. மருதத்திணையில் முதலாவதாக உள்ள வேட்கைப் பத்திற் காணப்படும் பத்துச் செய்யுட்களிலும் 'வாழி யாதன் வாழி யவினி' என்னும் அடி முதலில் வருதலால், அக்காலத்தில் வாழ்ந்த சேர வேந்தனுகிய ஆதனவினியை வாழ்த்தும் நோக்க மாக இந்நூல் தொகுக்கப்பட்டிருத்தல் வேண்டும் எனக் கொள்ளுதல் தகும். இந்நூலிலுள்ள பல செய்யுட்கள் முதல், கரு, உரி என்னும் மூன்றினையும் சுருங்கிய, அடிகளில் நயம்பட அமைத்துக் கூறுகின்றன. தொல்காப்பியத்துக்கு உரைகண்ட இளம்பூரணர் முதலானுேர் பற்பல இடங்களில் இந்நூற் செய்யுட்களை மேற்கோளாகக் காட்டியுள்ளனர். இந் நூலின் சிறப்பிற்கு அதுவே தக்க சான்றகும். புறblனு று, நற்றிணை முதலிய நூல்களிலுள்ள செய்யுட்களுக்கும் இந்
நூலிலுள்ள செய்யுட்களுக்குமிடையே பொருளமைப்பிலும்
மொழி நடையிலும் பிறவற்றிலும் வேறுபாடு காணப்படலால் இந்நூல் கபிலபரணர் காலத்துக்குப் பிற்பட்டது எனச் சிலர் கருதுகின்றனர். ܗ
இந்நூலிலுள்ள பத்துக்களுக்கு உதாரணமாக இளவேனிற் பத்து மேலே தரப்படுகின்றது. அது தலைவன் பிரிந்துழிக் குறித்த இளவேனிற் பருவம் வரக்கண்ட தலைமகள் இரங்கிக் கூறிய பத்துச் செய்யுட்களை உடையது.

Page 21
24.
தமிழ் இலக்கிய வரலாறு
அவரோ வாரார் தான்வந் தன்றே
குயிற்பெடை இன்குர லகவ
அயிர்க்கேழ் நுண்ணற னுடங்கும் பொழுதே.
●
அவரோ வாரார் தான்வந் தன்றே சுரும்புகளித் தாலு மிருஞ்சினைக் கருங்கா னுணவங் கமழும் பொழுதே,
அவரோ வாரார் தான்வந் தன்றே திணிநிலைக் கோங்கம் பயந்த - அணிமிகு கொழுமுகை யுடையும் பொழுதே,
அவரோ வாரார் தான்வந் தன்றே நறும்பூங் குரவம் பயந்த செய்யாப் பாவை கொய்யும் பொழுதே.
அவரோ வாரார் தான்வந் தன்றே புதுப்பூ விதிால் தாஅய்க் கதுப்பற லணியுங் காமர் பொழுதே.
அவரோ வாரார் தான்வந் தன்றே அஞ்சினைப் பாதிரி யலர்ந்தெனச் செங்க ணிருங்குயி லறையும் பொழுதே.
அவரோ வாரார் தான்வந் தன்றே எழிற்றகை யிளமுலை பொலியப் பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே, அவரோ வாரார் தான்வந் தன்றே வலஞ்சுரி மராஅம் வேய்ந்துநம் மணங்கமழ் தண்பொழில் மலரும் பொழுதே,
அவரோ வாரார் தான்வந் தன்றே பொரிகான் மாஞ்சினை புதைய எரிகா லிளந்தளி ரீனும் பொழுதே,
அவரோ வாரார் தான்வந் தன்றே வேம்பி னெண்பூ வுறைப்பத் தேம்படு கிளவியவர் தெளிக்கும் பொழுதே,
2.

சங்க காலம் 25
கலித்தொகை, பரிபாடல் என்னும் தொகை நூல்கள்
பாவாற் பெயர் பெற்றவை. கலி, பரிபாட்டு ஆ கி ய இருவகைப் பாவும் முற்காலத்திலே இசையொடு கூட்டிப் பாடப்பட்டவை. அப்பாவகையிரண்டும் அகத்திணைக்குச் சிறந்தவை என்பது,
நாடக வழக்கினு முலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கங்
கலியே பரிபாட் டாயிரு பாங்கினு
முரிய தாகு மென்மனுர் புலவர்
என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தாற் பெறப்படுகின்றது. நூற்றைம்பது பாக்களைக் கொண்டுள்ள கலித்தொகை, திணைக்கொரு பிரிவாகக் குறிஞ்சி முதலிய ஐந்து திணைக் கும் ஐந்து பிரிவுகளையுடையது. தலைவன், தலைவி, தோழி முதலியோர் ஒருவரோடொருவர் உரையாடும் பான்மையில் இந்நூலிலுள்ள பாக்களுட் பல அமைந்துள்ளன. இவ்வாறு அவை நாடகப்போக்கில் அமைந்திருத்தலும், சொற்சுவை பொருட்சுவை யுடையனவாகத் திகழ் த லும், இசையொடு கூட்டிப் பாடப்படும் பண்பினை யுடையனவா யிருத்தலுமாகிய இச்சிறப்புக்களைக் கொண்டுள்ளனவாகலின், அவை படிப் போர்க்குப் பெரிதும் இன்பந்தர வல்லன. அதனுல், இந்நூலைக் 'கற்றறிந்தார் போற்றுங் கலி' எனப் பெரியோர்கள் பாதரீட் டினர். இந்நூலிலுள்ள ஐந்து பிரிவுகளையும் பாலைபாடிய பெருங்கடுங்கோ முதலான சங்கப்புலவர்கள் ஐவர் பாடினர் என்பர். கலித்தொகைப் பாக்களின் மொழிநடை, போக்கு, பொருளமைதி, அவை குறிக்கும் மரபு, பண்பாட்டு நிலை, அவற்றின்கண் வந்துள்ள வடமொழிக் கதைக் குறிப்புக்கள் முதலியவற்றை நோக்குமிடத்து, இந்நூலிலுள்ள பாக்களுட் பெரும்பாலானவை, சங்க காலத்திற்குப் பின்னே தோன் றியவை எனச் சிலர் கருதுகின்றனர். ஆகவே, பிற்காலத் தில் வாழ்ந்த பெரும் புலவர்களுள் ஒருவராகிய நல்லந்து
4.

Page 22
26 தமிழ் இலக்கிய வரலாறு
வனுர் தம்முடைய காலத்திற்குமுன் எழுந்த கலிப்பாக்களுள் 150 பாக்களைத் தெரிந்து ஒரு நூலாகக் கோத்தார் என்பர். கலிப்பா பல வகைப்படும். அவற்றுட் சில கலித் தொகையில் வந்துள்ளன. இந்நூலிலுள்ள கலிப்பா வகைகளுள் தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் நான்கு உறுப்புக்களையுடைய ஒத்தாழிசைக் கலியே பெரும்பான்மை யாக உள்ளது. தரவு என்பது முதலிலே தரப்படுவது. தாழிசையென்பது இடைநிலைப் பாட்டு. அது தரவின் பின் ஒரு பொருள்மேல் மூன்று அடுக்கிவரும். ஆங்கு என்னும் தனிச்சொல் தாழிசைக்குப்பின் மூன்றம் உறுப்பாக வரும். சுரிதகம் என்பது தாழிசைப் பொருளினை முடிபு காட்டி ஈற்றில் நிற்கும். இவ்வாறு நான்கு உறுப்புக்களையுங் கொண்ட கலிப்பாவுக்கு ஓர் உதாரணம் வருமாறு:
துணைபுணர்ந் தெழுதருந் தூகிற வலம்புரி இணைதிரள் மருப்பாக எறிவழி பாகன அயில் திணி நெடுங்கத வமைத்தடைத் தணிகொண்ட எயிலிடு களிறேபோ லிடுமணல் நெடுங்கோட்டைப் பயில்திரை நடுநன்னட் பாய்ந்துறுஉங் துறைவகேள்.
கடிமலர்ப் புன்னேக்கீழ்க் காரிகை தோற்ருளேத் தொடிநெகிழ்ந்த தோளaாாத் துறப்பாயால் மற்றுநின் குடிமைக்கட் பெரியதோர் குற்றமாய்க் கிடவாதோ, , ஆய்மலர்ப் புன்னைக்கீழ் அணிநலந் தோற்ருளை நோய்மலி நிலையளாத் துறப்பாயால் மற்றுநின் வாய்மைக்கட் பெரியதோர் வஞ்சமாய்க் கிடவாதோ, திகழ்மலர்ப் புன்னைக்கீழ்த் திருநலந் தோற்ருளே இகழ்மலர்க் கண்ணளாத் துறப்பாயால் மற்றுநின் புகழ்மைக்கட் பெரியதோர் புகராகிக் கிடவாதோ,
எனவாங்கு, சொல்லக் கேட்டனே யாயின் வல்லே அணிகிளர் நெடுவரை யலைக்குகின் அகலத்து மணிகிளர் ஆரங் தாரொடு துயல்வா உயங்கின ளுயிர்க்குமென் தோழிக்கு இயங்கொலி நெடுந்திண்டேர் கடவுமதி விரைந்தே,
藏

சங்க காலம்
27
இது வரையாது வந்தொழுகும் தலைவனைத் தோழி நெருங்கி வரைவுகடாயது.
பரிபாடல் - என்ற தொகை நூல் பரிபாட்டு என்னும் பாவாலாகிய பாட்டுக்கள் இருபத்துநான்கினைக் கொண்டுள்ளது. இது முன்னொரு காலத்தில் எழுபது பாட்டுக்களை யுடையதாக இருந்தது. இப்பாட்டுக்களுள் திருமாலுக்கு உரியவை. ஏழு; முருகக் கடவுளுக்கு உரியவை எட்டு; வையைக்கு உரியவை ஒன்பது. தொல்காப்பியர் காலத்திலே பரிபாட்டு அகத்திணைக்கு உரியதாக விளங்கிற்று. பிற் காலத்தில் அப்பாவகை, தெய்வ வாழ்த்து முதலிய புறப் பொருள் பற்றியும் வந்தது என்பதற்கு இந்நூலிலுள்ள பாட்டுக்களே சான்றாக விளங்குகின்றன. அவை புறப் பொருள் தழுவி வந்தபோதும், அவற்றின்கண் ஆங்காங்கு அகத்திணைப் பொருள் விரவியிருத்தலைக் காணலாம்.
நெடும் பாட்டுக்கள் பத்தினைக் கொண்ட நூல் பத்துப் பாட்டு எனப்படும். அப்பாட்டுக்கள் பல அகவற்பாவா யுள்ளன; சில அகவலோடு வஞ்சி கலந்த பாட்டுக்கள். பத்துப்பாட்டிலுள்ள பாக்கள் யாவும் நூறு அடிக்கு மேற் பட்டவை.செய்யுள் வடிவிலுள்ள யாவும் பொதுவாகப் பாட்டு என்ற பெயரைப் பெறக்கூடியனவாயினும், பத்துப் பாட்டிலுள்ளவற்றையே சிறப்பாகப் பாட்டெனப் பாராட்டி யுள்ளனர். அவை யாவும் கூறுதற்கு எடுத்துக்கொண்ட பொருளை வேண்டிய அளவிற்குத் திறம்படக் கூறுகின்றன; அதனால், அவை பாட்டு எனப் பெயர் பெற்றனபோலும். அவற்றுள் முல்லைப் பாட்டு, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை என்பன மூன்றும் அகத்திணையின் பாற்படுவன. புறத் திணைக்குரிய ஏனைய பாட்டுக்களுள் ஐந்து ஆற்றுப்படைச் செய்யுட்கள்.
அவையாவன -திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடு

Page 23
28 தமிழ் இலக்கிய வால்ாறு
கடாம் அல்லது கூத்தராற்றுப்படை என்பன. ஆற்றுப்படை என்பது வழிப் படுத்தல் என்னும் பொருளையுடையது. கூத்தர், பாணர் முதலியோர் ஒரு வள்ளலிடஞ் சென்று பெருஞ் செல்வத்தைப் பெற்று மீண்டு வரும் வழியில் வறுமைப்பிணியால் வாடிய இரவலரைக் காணின், தாம் பெற்ற பெருஞ்செல்வத்தை எதிர்வந்த இரவலர்க்கு எடுத்துக் கூறி, அவ்வள்ளலிடம் அவர்களும் சென்று பொருளைப் பெறுமாறு தாம் சென்ற வழியைக் கூறி, அவ்வழியாற் போகச்செய்தல் ஆற்றுப்படை எனப்படும். வீடுபேறு கருதி நின்றரை முருகனிடத்தில் ஆற்றுப்படுத்தியதாகக் கூறப்படும் திருமுருகாற்றுப்படை இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் போன்று ஏனைய பாட்டுக்களுக்கு முதலில் வைக்கப்பட்டுள்ளது. பொருளமைப்பிலும் மொழி நடையிலும் திருமுருகாற்றுப் படைக்கும் ஏனைய ஆற்றுப்படைகளுக்குமிடையே வேற்றுமை இருத்தலால், அதனைச் சங்கப்புலவர் நக்கீரர் பாடவில்லை என்றும் அது பிற்காலத்தது என்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். நக்கீரர் பாடிய நெடுகல் வாடை, இருத்த லாகிய அகத்தினை ஒழுக்கம் கூறுகின்றதெனினும், புலவர் தாம் வாழ்ந்த காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியனைத் தலைவனுகவும் பாண்டிமாதேவியைத் தலைவியாகவும் வைத்துப் பாடியுள்ளார் என்பதை அறிந்துகொள்வதற்கான குறிப்புக்கள் அப்பாட்டிற் காணப்படலால், அது புறத்திணைப் பாட்டு என்றே கொள்ளப்படுகின்றது. சுட்டியொருவர் பெயர் கொள்ளாக் காதலொழுக்கமே அகத்தினைக்கு உரியது. ஏனைக் காதலொழுக்கம் புறத்திணைக்கு உரியதாகலின் புறநானூற் றிலே காதலொழுக்கம் கூறும் செய்யுட்கள் சில தொகுக்கப் பட்டுள்ளன. பத்துப்பாட்டுக்களுள்ளும் அடியளவால் மிக நீண்டது மதுரைக்காஞ்சியாகும். காஞ்சித்திணை என்பது வீடுபேறு நிமித்தமாகப் பல்வேறு நிலையாமையைச் சான்றேர் கூறும் குறிப்பினது. அப்பாட்டு தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு வீடுபேறு

சங்க காலம் 29.
நிமித்தமாகப் பல்வேறு நிலையாமையைச் செவியறிவுறுத்தற்கு மாங்குடிமருதனுர் பாடியது. 4. சங்கப் புலவரும் சங்க இலக்கியப் பண்பும்
அறிவொழுக்கங்களிற் சிறந்த சங்ககாலப் புலவர்களைச் சான்றேரென்றலும், அவர் பாடிய செய்யுளைச் சான்றேர் செய்யுளென்றலும் தமிழ்வழக்கு. "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற உளப்பாங்குள்ள அப்புலவர்கள் மன்னர்க் குரிய பெருமதிப்பை மக்கள்பாற் பெற்றனர். மக்களிடத்திற் பேரன்பும், அரசரை அறநெறியிற் செலுத்தும் அருமுயற் சியும், அஞ்சாகெஞ்சத்தோடு எவ்விடத்தும் உண்மையை எடுத்துக்கூறும் மனத்திண்மையும் உடையவர். வாழ்த்து மொழியும் பாராட்டும் உரியவர்க்கன்றிப் பிறர்க்கு வழங்காத் தீரமும் உறுதியுமுடைய பெருந்தகையாளர். இதனுலன்றே அவர்களின் அன்பைப்பெறுதல் பெரும் பேறெனக் கொண்டு அக்காலத்து அரசர்களும் வேண்டுவன புரிந்து அவர்களைச் சிறப்பித்தனர். புலவர் பாடும் புகழினும் பெரிதாக வேறெ தனையும் மதியாத அரசர் அப்புலவர்களின் உணர்ச்சியைத் தூண்டக்கூடிய முறையில் வாழ்ந்து அவர்களாற் பாமாலை சூட்டப்பெற்றனர். வறுமையிற் கிடந்து வருந்தியபோதும், அப்புலவர்கள் புகழுக்குரிய வொருவனையன்றிப் பிறரைப் JITLIT 35, அவன் கொடுப்பது கூழாயினும் அதனை உவந்தேற்று வறுமையைப்போக்கி வாழ்ந்தனர். துன்பம் வந்துற்ற போதினும் துளங்குதலறியாத உள்ளம் படைத்த அப்புலவர்கள்
பூசனைபுரிந்து தம்மைப் போற்றிய மன்னருக்கு உயிரையும்
உவந்தளித்தனர். அரசனின் சீற்றத்துக்கு இரையாகி அழிந்து கிடந்த இடங்களைக் கண்டு அவர்கள் இரங்கினர். நாட்டின் நலன்கருதிப் பகையரசர்களைச் சந்து செய்து, தமிழ் நாட்டிலே ஒற்றுமையை நிலவச்செய்து, தமிழர்தம் பண்பாட்டினை வளர்த்ததோடு பிறர்புகழ்பாடியும் தம்புகழ் நாட்டிய சங்க
காலப் புலவர்களின் வாழ்க்கை உள்ளுந்தோறும் உவகை
யளிக்குங் தன்மையது. தமக்கு நெல்லிக்கணியீந்த அதிகமான்

Page 24
30 தமிழ் இலக்கிய வரலாறு
உயிர்நீத்தபோது ஒளவையார் நெஞ்சுருகிப் பாடியதும், Limin இறந்தபின் உயிர்வாழ விரும்பாது கபிலர் வடக்கிருந்ததும், குமணன் நாடிழந்து காட்டில் வதியுநாளில் பெருந்தலைச்
சாத்தனர் சென்றிரப்ப, அவன் தன் தலை கொய்தற்கு வாளைக்
கொடுத்ததும், கோ ப் பெருஞ் சோழன் உயிர் துற க் க அத்துயரைப் பொறுக்கமுடியாத பிசிராங்தையார் தம்முயிர் துறந்ததுமாகிய நிகழ்ச்சிகள் பல அக்காலத்துப் புலவர் களுக்கும் அரசர்களுக்குமிடையே யிருந்த அன்பின் பெருக்கை எடுத்துக்காட்டுகின்றன. கபிலர், பரணர் முதலிய சங்ககாலப் புலவர்கள் தாரகை நடுவண் தண்மதி போன்று விளங்கித் தமிழ்ப் புலவர்கள் வாழ்க்கைக்குத் தனிப்பெருமை கொடுத்த வரலாறு புறநானூறு முதலிய தொகை நூல்களிற் காணப்படு கின்றது. அவற்ருலன்றி வேறு எவ்வகையாலும் அவர்தம் பண்பட்ட வாழ்க்கையைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியாது. t)
ஐஞ்ஞாற்றுக்கு மேற்பட்ட புலவர்கள் சங்க காலத்தி லிருந்து செய்யுட் செய்திருக்கின்றர்களென்பது அக்கால நூல்கள் வாயிலாக அறியக்கிடக்கின்றது. குறுகிய அக்காலப் பகுதியுட் பெருந்தொகையினராகப் புலவர்கள் தோன்றியது போல வேறெக்காலப் பகுதியிலும் தமிழ்நாட்டிற் ருேன்றவில்லை. ஒரு காலப்பரப்பில் அவ்வாறு பெருந்தொகையினராய்ப் புல்வர்கள் தோன்றுதற்கான காரணங்களை நோக்குவாம்.
புலவனுடைய உள்ளமானது குழந்தையினுடைய உள்ளத்தை ஒருவாறு ஒத்திருக்கின்றது. இயற்கைக் காட்சிக ளைக்கண்டு குதூகலங்கொள்ளுதல், சொல்லையும் அது குறிக்கும் பொருள், உணர்ச்சி முதலியவற்றையும் அவதா னித்தல், கற்பனையுலகிற் சஞ்சரித்தல் ஆதியன குழந்தை யிடத்திலும் புலவனிடத்திலும் காணப்படும் சிறப்பியல்புகள். குழந்தைப்பருவம் ஒருவனைவிட்டு நீங்கவே அப்பருவத்திற்குரிய
சில சிறப்பியல்புகளும் அவனே விட்டுப் பெரும்பாலும்
அகன்றுவிடுகின்றன. அவ்வாறு அது நீங்கினும், கற்பனை
 

சங்க காலம் 3.
யுலகிற் சஞ்சரித்தல் முதலிய சிறப்பியல்புகள் அவனே விட்டு நீங்காது வளர்ந்து வருமாயின் அவன் சிறந்த புலவனுவான்
என்பதிற் சந்தேகமில்லை, குழந்தைப் பருவத்திலுள்ள ஒரு
சமுதாயத்திலும் குழந்தைக்குரிய மேற்கூறிய சிறப்பியல்புகள் காணப்படும். அதனுல், ஒரு சமுதாயம் குழந்தைப் பருவத்தி லிருக்கும்போது அதன்கணுள்ள மக்களுட் பலர் தம் உணர்ச்சியைப் புலப்படுத்தும் பாக்களைப் பாடக்கூடிய ஆற்றலுடையோராயிருத்தலும், சமுதாயம் வளர்ச்சியுறத்
தொடங்க, அத்தகைய புலமையுடையோர் குறைந்துபோதலும்
இலக்கிய வரலாற்று நூல்கள் கூறும் உண்மையாம். இதனுலேயே ஒருமொழியிற் செய்யுளிலக்கியம் முதலிற்ருேன்ற, அதனைத்தொடர்ந்து உரைநடை இலக்கியம் தோன்றுகின்றது. தமிழ் மக்களின் பண்பாட்டு வளர்ச்சியை நோக்கும்போது சங்க காலத்துச் சமுதாயம் கற்பனையுலகிற் சஞ்சரித்தல் முதலிய சிறப்புடைப் பண்புகளையுடையதாய் விளங்கின மையால் அச்சமுதாயத்தின்கண் பல சிறந்த புலவர்கள் தோன்றியதில் வியப்பொன்றுமில்லை.
அகத்தும் புறத்தும் முரண்பாடில்லாத சங்க கால மக்களின் வாழ்க்கை முறையும் அக்காலப் பாவளத்திற்குச் சாதகமாயிருந்தது. ஒரு புலவனிட்த்திற் காணப்படும் சிறப்பி யல்புகளுள், தெளிந்த உள்ளமும் ஒன்று; விருப்பு வெறுப்புக் களாலேற்படும் இன்பத்துன்பங்கள் ஒருவன் மனத்தைத் தாக்கிக்கொண்டிருக்குமாயின், எத்துணை நூலறிவிருந்தபோ திலும் அவனுள்ளத்தில் உண்மையறிவும் உயர்ந்த கவிதையும் உதிக்கமாட்டா. நிம்மதியில்லா மனத்துக்கு நிறைவுத்தன்மை எங்கிருந்து வருதல் கூடும்? அத்தகைய உள்ளத்திற் சிறந்த கவிதை உருப்பெறமாட்டாது. மனவமைதியைத் தரவல்ல வாழ்க்கை முறையும் உளப்பாங்கும் ஒருவனிடத்தில் அமையாவிடின் அவன் உண்மைப் புலமைக்கு உரியனுகான்.
சங்ககாலப் புலவர் உள்ளத்தில் தெளிவும் நிறைவுத்தன்மையும்
குடிகொண்டிருந்தமைக்கு அவர்தம் செய்யுட்களே சான்றகும்.

Page 25
82 தமிழ் இலக்கிய வரலாறு
சங்ககாலச் செய்யுட்களின் சொற்பொருட் போக்கிற்கும் பிற்காலச் செய்யுட்களின் போக்கிற்கும் பலவகையில் வேற் றுமை உண்டு. சங்ககாலத்திலிருந்த புலநெறிவழக்கு, பொருள் மரபு முதலியவற்றுட் சில பிற்காலத்தில் வழக்கொழிந்து போயின. அங்ங்ணம் பழைய முறைகள் கைவிடப்பட, சில புதிய முறைகள் பிற்காலத்திற் ருேன்றலாயின. மக்களின் நடையுடை பாவனைகள் காலத்திற்குக் காலம் வேறு படுவது போலவே செய்யுள் வழக்கு முதலிய ன வும் வேறுபடுதல் இயல்பாகும். ஒருகாலத்திலிருந்த வழக்கு வேறெருகாலத்தில் ஏன் கைவிடப்படுகிறது என்பதையும், புதியதொரு வழக்குத் தோன்றுதற்கான காரணங்கள் எவை என்பதையும் நாம் அறிந்தாலன்றி, தமிழிலக்கிய வரலாற்றைச் செவ்வனே அறிந்துகொள்ளல் இயலாது. சங்ககாலம் ஏறக் குறைய 300 ஆண்டுகளைக் கொண்ட ஒரு காலப்பகுதி என்பதை மேலே குறித்தோம். அக்காலப் பகுதியிலேயே செய்யுள் மரபு சிறிது சிறிதாக மாற்றமுற்றுச் சென்றி ருப்பதை நள்ம் அக்காலச் செய்யுட்களிற் காணலாம். அக்காலப் பகுதியில் மக்கள்வாழ்க்கை மிக விரைவாக முன்னேறிற்றென நூல்களால் அறியக்கிடக்கின்றது. வாழ்க்கையில் உண்டான மாற்றங்களுக்கு இணங்கச் செய்யுள் மரபும் மாற்றமடைந்துளது. அம்மரபில் ஏற்பட்ட மாற்றங்களையெல்லாம் இச்சிறுநூலின்கண் குறித்தல் இயலாது; எனினும், அவற்றில் ஒன்றை மட்டும் ஈண்டுக் குறித்து அப்பாற் செல்வாம்.
ஐவகை நிலங்களுட் பாலைநிலம் வரண்ட பிரதேச மாதலாலும், அக்கிலத்தில் வாழ்ந்த மக்களுக்கு வேண்டிய உணவுப்பொருள்களை அங்கிலத்திலிருத்து பெறமுடியாமை யாலும், அந்நிலத்தில் வாழ்ந்த மக்கள் குறிஞ்சி முதலிய ஏனை நிலங்களிற் சென்று வாழ நேர்ந்தது. அங்ஙனம் வாழ்ந்த காலத்தில் ஐவகை நிலங்களுக்கும் உரியனவாக வழக்கிலிருந்த ஐவகை யொழுக்கங்களும் பாலை ஒழிந்த நால்வகை நிலங்களுக்கும் உரியனவாகக் கொள்ளப்பட்டன,

சங்க காலம் 33
ஆகவே, பிரிதல் உடன்போக்கு என்னும் பாலையொழுக் கங்கள் குறிஞ்சி முதலிய ஏனை நிலங்களுக்கு உரியனவாயின. பாலை நிலத்தில் மக்கள் வாழ்ந்த காலத்திற் பிரிவு பொருள்வயிற் பிரிவாக இருந்தது. அது பிற்காலத்தில் ஒதற்பிரிவு, தூதிற்
பிரிவு, பகைவயிற்பிரிவு என மக்கள் வாழ்க்கைக்கு இணங்கப்
பலவகைப்படலாயிற்று. இனி, சங்ககாலத் தொடக்கத்தில் அன்பினைந்தினையாகிய ஐவகை க் காதலொழுக்கங்களே வழக்கிலிருந்தன. அக்கால முடிவிற் கைக்கிளை, பெருந்திணை யாகிய இரண்டு ஒழுக்கங்கள் சேர்ந்து அகத்தினை ஒழுக்கங்கள் ஏழாயினமைக்கு மக்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களே காரணமாகும்.
சங்கச் செய்யுட்களிற் காணப்படும் தனிப்பண்புகள் சிலவுள. இன்ன பொருளை இன்னவாறு அமைத்தல் வேண்டும் என்னும் மரபு பிறழாமல் அக்காலப் புலவர்கள் செய்யுட்களை இயற்றினர். மக்களுடைய ஒழுக்கங்களும் மனுேபாவங்களுக் தான் செய்யுளுக்குப் பொருளாக அமைதல் வேண்டும் என்பது அக்கால மரபாகும். காதல், வீரம் முதலிய பண்புகளைச் சங்கப்புலவர்கள் சித்திரித்துக் காட்டும் வகை வியக்கத்தக்கது. அவர்கள் இயற்கையின் பல்வகைக் கோலங் களையும் சித்திரித்துக் காட்டுகின்றனரெனினும், இயற்கை வருணனை சங்கச் செய்யுளில் முதலிடம்பெறவில்லை; மக்க ளுடைய ஒழுக்கந்தான் முதலிடம்பெற்று விளங்குகின்றது. அதனைக் கூறுமிடத்து, அதற்கிணங்க இயற்கைக் காட்சிகள் சித்திரிக்கப்படுகின்றன. இயற்கையோடு நெருங்கிய தொடர் புடையது அக்கால மக்களின் வாழ்க்கை. பூக்களாலும் தழை கொடிகளாலும் தம்மை அலங்கரித்துக்கொள்வதில் அவர்
பெருவிருப்புடையர் அக்கால அரசருட் சிலர் மயிலுக்குப்
போர்வையும் முல்லைக்குத் தேரும் ஈந்த செய்திகள் இயற்கைக்
காட்சிகளில் அக்கால மக்களுக்கிருந்த ஈடுபாட்டினை நன்கு
எடுத்துக் காட்டுகின்றன; எனினும், இயற்கையை மட்டுமே
சித்திரித்துக்காட்டும் செய்யுட்கள் எழுதற்கு அக்கால மரபு
இடம் அளிக்கவில்லை. அகத்திணை ஒழுக்கங்களைக் கூறும்
5

Page 26
34. தமிழ் இலக்கிய வரலாறு
செய்யுட்களில் ஆங்காங்கு இயற்கைக் காட்சிகளும் நிகழ்ச்சி களும் சிறப்பாக வருணிக்கப்பட்டிருத்தலைக் காணலாம். அவற்றின்கண் ஐந்திணை வகையாகிய முதல் கரு உரிப் பொருள்கள் விசேடமாக அமைந்திருக்கின்ற்ன. இவற்றுள் உரிப்பொருளே அகத்தினைச் செய்யுளுக்கு உயிராக உள்ளது. இதனை அடுத்து மா, மரம், புள் முதலிய கருப்பொருள்கள் சிறந்தனவாகக் கருதப்பட்டன. கரு, உரியாகிய இருவகைப் பொருள்களோடு நிலம், பொழுது ஆகிய முதற் பொருளும் ஒரு செய்யுளில் அமையுமாயின், அச்செய்யுள் விளக்க முற்றுத் திகழுமெனக் கொள்ளப்பட்டது. அவ்வாறு முதற் பொருளும் கருப்பொருளும் சிறப்பாக அமைந்துள்ள செய்யுட் களிலே இயற்கை வருணனைகளைக் காணலாம். புறத்திணைச் செய்யுட்களிலும் இயற்கை வருணனைகள் உளவெனினும், அச்செய்யுட்களில் முதலிடம் பெறுவன மக்களுடைய புறவொழுக்கமாகிய போர் முதலியனவே.
சங்கப் புலவர்களுக்கு இயற்கையின் கண் இருந்த ஈடுபாட்டினை அவர்கள் புனைந்துகூறிய உவமைகளாலும் பிறவற்றலும் அறிந்துகொள்ளலாம். வேறுபட்ட இரு பொருள் களுக்கிடையேயுள்ள ஒப்புமையைக் கண்டு அதனை உள்ளுக் தோறும் உவகையளிக்கும் வகையில் எடுத்துக்காட்டும் ஆற்றல், உள்ளத்தெளிவும் நுண்ணுணர்வுமுடைய புலவரிடத்தன்றிப் பிறரிடத்திற் காணப்படமாட்டாது. உவமைகளைக் கையாளும் வகையிலிருந்து ஒரு புலவனுடைய கற்பனுசக்தியையும் பிற ஆற்றல்களையும் ஒருவாறு அறிந்துகொள்ளலாம். சங்கப் புலவர்கள் இயற்கைக் காட்சிகளையும் நிகழ்ச்சிகளையும் எந்த அளவிற்குக் கூர்ந்து அவதானித்தார்கள் என்பதை அவர்கள் அமைத்த உவமைகள் வாயிலாக நாம் அறியலாம். வேறுபட்ட பொருள்கள் ஒன்றற்கொன்று உவமையாக வருதலைக் காணும் போது எமக்கு ஒரு வியப்புணர்ச்சி தோன்றுகிறது. அவை புலவனுடைய உள்ளக்கருத்தையும் உணர்ச்சியையும் வெளிப் படுத்தும் வகையினை நோக்கும்போது சங்கப் புலவனுடைய
 
 

சங்க காலம் 35
ஆற்றலைக் கண்டு இன்புறமுடிகின்றது. சங்கச் செய்யுட்களிற் சாதாரண உவமைகள் மட்டுமன்றி, உள்ளுறை உவமங்களும் காணப்படுகின்றன. சாதாரண உவமைகள் வருமிடத்து, உவமையும் பொருளும் வெளிப்பட்டுநிற்றலைக் காணலாம். உள்ளுறையுவமம் வருமிடத்து உவமை வெளிப்பட்டுகிற்கப் பொருள் தொக்கு வரும். வெளிப்படையாகக் கூறவிரும்பாத ஒன்றைக் குறிப்பாகப் புலப்படுத்தற்பொருட்டு உள்ளுறை யுவமம் கையாளப்படுகிறது. தோழி முதலியோர் கூற்றக
வரும் செய்யுட்களில் உள்ளுறையுவமம் பெரும்பாலும்
வருதலுண்டு. தோழி தலைவனுடைய ஒழுகலாற்றினை வெளிப் படையாகக் கடிந்து கூற விரும்பாத இடத்து, அவனுடைய நாட்டிற் காணப்படும் இயற்கைக் காட்சிகளைப் புனைந்து கூறும் வாயிலாகத் தன்கருத்தை வெளிப்படுத்துதல் உண்டு. இத்தகைய உள்ளுறையுவமங்களும் குறிப்பாகப் பொருளை யுணர்த்தும் இறைச்சி முதலியனவும் சங்கப் புலவர்களாற் சிறப்பாகக் கையாளப்பட்டன.
சங்ககால அகத்திணைச் செய்யுள் வழக்கினைப் புலனெறி வழக்கு என்றும் கூறுதலுண்டு. அது நாடக வழக்கினையும் உலகியல் வழக்கினையும் ஆதாரமாகக் கொண்டு எழுந்தது என்று தொல்காப்பியர் கூறுகின்றனர். அகத்தினைப்
பொருளைக் கூறும்பொழுது அதற்கு வேண்டிய காலம்,
இடம், சூழல் முதலியவற்றை வகுத்துக்கொண்டு அதனே ஒரு செய்யுளிற் கூறுதலே வழக்காருகும். அங்ங்னம் கூறும்பொழுதும் புலவன் தன் கூற்றகக் கூறுதல் மரபன்று. தலைவன், தலைவி, தோழி முதலானுேருள் ஒருவர் கூற ஒருவர் கேட்பதாகக் கூறுதலே மரபாகும். புறத்திணைப் பொருளைக் கூறும்பொழுது, புலவன் தன் கூற்றகக் கூறுதலுண்டு. இனி,ஒரு பொருளை ஒரு செய்யுளில் அமைத்துக் கூறுதலே சங்ககாலத்திற் பெருவழக்காக இருந்தது. தொடர்ச்சியாக வரும் பல செய்யுட்களில் ஒரு பொருளைக்
கூறுதல் பிற்கால வழக்காகும்.

Page 27
36 தமிழ் இலக்கிய வரலாறு
இனி, சங்கச் செய்யுளின் தனிச்சிறப்பிற்குக் காரணமாக இருந்தவற்றுள் அக்கால மொழிநிலையும் ஒன்றகும், ஆரியம் முதலிய பிறமொழிகளிலுள்ள சொற்களுட் பொரும்பாலன பல எழுத்துக்களாலானவை. தமிழ் மொழியிலுள்ள சொற்களோ சில எழுத்துக்களாலானவை. அவற்றுள்ளும் சங்ககாலத்தில் வழங்கிய தமிழ்ச்சொற்கள் மூன்று நான்கு எழுத்துக்களை இகவாதன. சொற்கள் பல ஒன்றேடொன்று தொடர்ந்து செல்லும்பொழுது உருபு முதலியன விரியாது தொக்குகிற்பதே சங்ககாலத்திற் பெருவழக்காயிருந்தது. இவ்வாறு சில எழுத்துக்களாலான சொற்கள் ஒன்றே டொன்று தொடர்ந்து வரும்பொழுது உருபுகள் விரியாது வரின் சொற்செறிவு ஏற்படுகின்றது. உதாரணமாக,
செறுத்த செய்யுட் செய்செந் நாவின் வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்", இமிழ்குரன் முரச மூன்றுட னளுங் தமிழ்கெழு கூடற் றண்கோல் வேந்து', என்னும் இவ்வடிகளில் வேற்றுமை யுருபுகளும் பிறவும் தொக்குவருதல் காண்க. பிற்காலப் பகுதிகளிற் புலவர்கள்
பல சொற்றெடர்களால் விரித்துரைத்த பொருளையெல்லாம்
அக்காலப் புலவர்கள் தொகைகளை அமைத்தும், அடைகள் புணர்த்தியும், பெயர்ச் சொற்களுக்கு விகுதிகூட்டி வினையாக் கிய்ம், இன்னுேரன்ன பல முறைகளாற் சுருங்கிய மொழியில் விரிந்த பொருளை அமைத்துச் செய்யுட் செய்தனர். சொற் சுருக்கமும் பொருட்செறிவுமுடைய சொற்றெடர்களும், வினைத்
தொகை முதலிய தொகைகளும் பிறவும் சங்ககால வழக்கில்
மிகுதியாகப் பயின்றுவந்தமையாலே, சங்கத்தமிழ் சுருங்கிய சொல்லால் விரிந்த பொருளை விளக்கும் திறமுடையதாகி விளங்கிற்று. அக்காலச் செய்யுட்கள் பிற்காலப் பகுதிகளில் எழுந்த செய்யுட்களிலும் சிறந்தனவாகக் காணப்படுதற்கு
அக்கால மொழி நிலையினையும் ஒரு காரணமாகக் கூறலாம். ே
 

II. சங்கமருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டோடு முடிந்ததாகக் கூறிய சங்ககாலத்திற்கும் கி. பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரம்பித்த பல்லவராட்சிக் காலத்திற்கும் இடைப்பட்ட காலப் பகுதி சங்கமருவிய காலமெனப்படும். அது ஏறக்குறைய
முந்நூறு ஆண்டுகளைக் கொண்டது. 1. அரசியல் நிலை
சங்ககாலத்தில் வளர்ச்சியுற்றுவந்த தமிழ்நாட்டு அரசியல் முறை சங்கமருவிய கால ஆரம்பத்தில் மிகச் சிறந்த நிலையில் விளங்கிற்று. பல வழிகளாலும் அது வளர்ச்சியுற்றிருந்ததனால் அரசியற் கருமங்களெல்லாவற்றையும் அரசர்கள் தாமாகவே செய்துமுடிக்க இயலாதிருந்தது. அதனால், அமைச்சர், தூது வர், தண்டத்தலைவர் முதலிய பலருதவியைப் பெற்றுத் தம் அரசியலை நடத்தினர். அக்காலப் பகுதியில் ஆரிய நாகரிகமும் கலைப்பண்பும் தமிழ் நாட்டிற் பரவியிருந்தமையால் வடமொழியி லுள்ள அறநூல் பொருணூல்களுக் கிணங்க அவர் ஒழுகத் தொடங்கினர். அந்நூல்களிற் கூறப்படும் யாகம் முதலிய வற்றை அவர் செய்ய விரும்பியமையால் அந்தணரின் உத வியை நாடினர். அந்தணரும் அவருக்குப் புரோகிதராயும், பின் அமைச்சராயும், தூதுவராயுமிருந்து அரசியற்கருமங்கள் நடத்தினர். அங்ஙனம் அவர் ஆரியரின் வழிப்பட்டு நின்றமை யால், நாளடைவில் அவரும் வடமொழி நூல்களிற் கூறப் படும் நால்வகை வருணங்களுட் சத்திரிய வருணத்தவராகத் தம்மைப் பாவித்து, - அவ்வருணத்தினருக்கு உரியன வெனக் கூறப்படும் ஒழுக்கங்களைத் தழுவத்தொடங்கினர். அதுவுமன்றி, சத்திரியருக்குள்ள சந்திரவமிசம், சூரியவமிசம் முதலிய வமிசத் தொடர்பு தமக்குண்டென்று கொண்டனர். அதனால், தம்மை மக்களுள் உயர்ந்தவராகக் கருதும் மனப்பாங்கும் அவருக்கு உண்டாயிற்று. ஆகவே, அவருக்கும் குடிகளுக்கு மிடையே

Page 28
38 தமிழ் இலக்கிய வரலாறு
யுள்ள நெருங்கிய தொடர்பு நாளடைவிற் குன்றத் தொடங் கிற்று. அரசனைத் தம் உயிரென மதித்து வாழ்ந்த சங்ககால மக்களுக்கும் மன்னருக்குமிடையே இருந்த அன்புத்தொடர்பு சங்கமருவியகால ஆரம்பத்திலிருந்து சிறிது சிறிதாக க் குறையத் தொடங்கிற்று.
அக்காலத்தில் உயர்நிலை பெற்றிருந்த அரசியல் முறை வலிகுன்றுதற்கு மக்களுக்கும் அரசருக்குமிடையே நெருங்கிய தொடர்பில்லாதிருந்தமையும் ஒரு காரணமெனலாம். இவ்வாறு தமிழரசரின் வலிமை குன்றிய காலத்திற் களப்பிரர் என்னும் ஒரு மக்கட்குழுவினர் தமிழ்நாட்டைக் கைப்பற்றி ஆளத் தொடங்கினர். அவர் யாவர், அவராட்சி எத்தகையது, அத னுல் நாடடைந்த பயன் யாது என்றெல்லாம் நாம் திட்ட மாகக் கூறமுடியாத நிலையிலிருப்பதால், தமிழ்நாட்டின் வர லாற்றில் அவராட்சிக்காலம் ஒர் இருள்பரந்த காலப்பகுதி யாகவே காட்சியளிக்கின்றது. ஏறக்குறைய ஒரு நூற்றண் டளவிலே தமிழ்நாட்டையாண்ட களப்பிரரின் வலிமை நாளடை விற் குன்றத் தொடங்கியது. பின்னர் கி. பி. ஆரும் நூற் றண்டின் பிற்பகுதியிற் சோழநாட்டைப் பல்லவரும், பாண்டி நாட்டைப் பாண்டியரும் கைப்பற்றி ஆளத்தொடங்கினர்.
2. பண்பாட்டு நிலை
சங்ககாலத்திலே குறிஞ்சி முதலிய நிலங்களில் வாழ்ந்த மக்கள் தத்தமக்குரிய நிலங்களின் தன்மைக்கிணங்க இயற்கை யோடு கூடிச் சிறப்புடன் வாழ்ந்துவந்த வகையினை முந்திய அதிகாரத்திற் கூறினுேம். தத்தம் நிலங்களின் தன்மைக் கிணங்கவே அவர்களின் வாழ்க்கையும் அமைந்திருந்தது. ஒவ் வொரு நிலத்திலும் வாழ்ந்த மக்கள் தத்தம் நிலத்திற்கும் தொழிலிற்கும் ஏற்புடையனவாயிருந்த பழக்க வழக்கங்களைப் போற்றி ஒழுகிவந்தமையால், பண்பாட்டு வளர்ச்சி ஒவ்வொரு நிலத்து மக்களிடையேயுங் காணப்பட்டது. வாழ்க்கைமுறை முதலியவற்றில் வேறுவேறு நிலங்களிலிருந்த மக்கட் குழு

சங்கமருவிய காலம் 39
வினரிடையே வேறுபாடு இருந்தபோதிலும், அவர்களுக் கிடையே உயர்வு தாழ்வு பாராட்டப்பட வில்லையென்றும், எல் லோரும் ஒரு குடும்பத்திலுள்ளவர்களைப் போலவே தம்மை மதித்து வாழ்ந்துவந்தனரென்றும், அக்காலத்து இலக்கியங் களினின்றும் அறியலாம். இவ்வாறு சமத்துவமுடையோராய்த் தமிழ்மக்கள் வாழ்ந்ததனுல், சங்ககாலத்து மக்களின் பண் பாட்டுநிலை யாவராலும் பாராட்டத்தகுந்த தனிப்பெருமை வாய்ந்ததாய் விளங்கிற்றெனலாம்.
அத்தகைய நிலையிலிருந்த தமிழ் மக்களின் பண்பாடு சங்க மருவியகாலம் ஆரம்பித்தபின் மாறுபட்டதற்குப் பல, கார ணங்களுள. ஆரியர் பெருந் தொகையினராய்த் தமிழ்நாட்டிற்கு வந்து தங்கியிருந்து, தம் அறிவு ஆற்றல் ஒழுக்கங்களால் மக்களைத் தம் வசப்படுத்தித் தம் பண்பாட்டினை அவர்களி டையே பரவச்செய்தமையை அக்காரணங்களுள் ஒன்ருகக் கூறலாம். சங்ககாலத்தில் ஆரியர் தமிழ்நாட்டிற்கு வந்து தங்கி யிருந்தபோதிலும், அவர்களுக்கும் தமிழ் மக்களுத்குமிடையே நெருங்கிய தொடர்பிருக்காமையால், ஆரியரின் பண்பாடு தமிழ்மக்களின் பண்பாட்டோடு பெரிதும் கலக்கவில்லை யென்றே கூறுதல் வேண்டும். தமிழ்நாட்டின் செல்வப் பெ ருக்கை யறிந்து, ஆரியர் பெருந்தொகையினராய் வந்து தமிழ்மக்க ளோடு கூடிவாழ்ந்ததின் பயனுக, பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நால்வகை வருணப் பாகுபாடு மக்களிடையே புகுந்தது. ஏற்றத்தாழ்வில்லாத வகையில் மக்கள் ஒருவரோடொருவர் கூடி வாழ்தற்கு உதவியாயிருந்த தமிழ்ப் பண்பாட்டு முறையினை, மக்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு உண்டு என்பதை அடிப்படையாகக் கொண்டு ஆரியரிடத்தி லெழுந்த நால்வகை வருணப் பாகுபாட்டோடு கூடிய அவர் தம் பண் பாடு தாக்கியதால், சங்கமருவிய காலத்து மக்களின் பண் பாட்டிற் பெரியதோர் மாறுதலேற்பட்டது. தமிழ்மக்கள் ஆரியர் போற்றிய மணவினைக் கரணங்களையும் ஒழுக்க ஆசாரங்களை யும் தழுவத்தொடங்கினர். அதனுல், இயற்கையோடு மக்கள்

Page 29
40
தமிழ் இலக்கிய வரலாறு
வாழ்க்கை தொடர்புற்றிருந்த சங்ககாலத்தில் எழுந்த தமி ழிலக்கியத்திலும் வேறுபட்ட பண்பினையுடையதாய்ச் சங்க மருவிய காலத்து இலக்கியம் செல்லத் தொடங்கிற்று. இலக்கி யம் வாழ்க்கையை ஆதாரமாகக்கொண்டு எழுவதாகலின், சங்க மருவிய காலத்து இலக்கியமும் அக்கால மக்கள் வாழ்க்கைக்கு இணங்க உருப்பெறுவதாயிற்று. அதனால், வடமொழி நூற் கருத்துக்களும் கதைகளும் பிறவும் தமிழிலக்கியங்களில் இடம் பெறத் தொடங்கின. அவற்றைத் தொல்காப்பியம், கலித் தொகை, சிலப்பதிகாரம் முதலிய நூல்களிற் கண்டு தெளியலாம்.
உT த
ஆரியர் வகுத்த யாகங்கள் முதலியவற்றைச் செய்வதில் அரசர் பெருவிருப்பும் ஊக்கமும் உடையராய் வாழ்ந்தமை யைப் புலவர் பலர் பாராட்டியிருக்கின்றனர். அதிலிருந்து அக்கால மக்களுக்கும் யாகங்கள், கிரியைகள் முதலியவற்றி லிருந்த பெருமதிப்பை அறியலாம். தமிழ்நாட்டின் பண்பாட்டு நிலை இவ்வாறிருக்க, வேதநெறியை ஆதாரமாகக் கொண் டெழுந்த சமயங்களை அழிக்கமுயன்ற சமண முனிவர்களும் பௌத்த சந்நியாசிகளும் தமிழ்நாட்டில் வந்து தங்கியிருந்து தம் கொள்கைகளைப் பரப்பத் தொடங்கினர். அவர்கள் அற வுரைகளை நிகழ்த்தியும், அவற்றினுண்மைகளைச் சாதனையாற் காட்டியும் மக்களைத் தம் வசப்படுத்த முயன்றனர். அற வொழுக்கங்களை ஆதாரமாகக்கொண்ட அவர் மார்க்கம் மக்க ளிடையே பாவத்தொடங்கியதால் மக்கள் வாழ்க்கையில் அற வொழுக்கங்கள் சிறப்பிடம் பெற்று விளங்கின. அதனால், அக் காலப் பகுதியிலெழுந்த இலக்கியங்களுட் பெரும்பாலன அற நூல்களாகவும் அறவழியைப் போற்றுவனவாகவும் உள்ள ன
3. சமய நிலை
ச ங் க கா ல த் து மக்கள் சிவன், திருமால், முருகன், கொற்றவையாகிய தெய்வங்களை வழிபட்டுவந்தனர். வேத நெறிவல்ல அந்தணர் தமிழ்நாட்டிற்கு வந்ததன் பயனாக இந்திரன், ஐயனார், சுப்பிரமணியர் முதலிய ஆரியக் கடவுளர்க்

சங்கமருவிய காலம்
குத் தமிழ்நாட்டிலே கோவில்கள் எழுந்தன. தமிழ்மக்கள் தாம் தொன்றுதொட்டு வணங்கிவந்த முருகன் முதலிய தெய்வங்க ளோடு சுப்பிரமணியர் முதலிய தெய்வங்களையும் சேர்த்துச் சங்கமருவிய காலத்தில் வணங்கத்தொடங்கினர். அக்காலப் பகுதியிற் சோழநாட்டை யாண்ட அரசருட் கோச்செங்கணான் என்னும் சோழ அரசன், சிவனுக்கும் திருமாலுக்கும் நாடெங் கும் பல கோவில்களைக் கட்டுவித்தான். அக்காலத்திலே சைவம் வைணவமாகிய சமயங்கள் சிறப்பாக வளர்ச்சியுற்று வந்தன வென்பது காரைக்காலம்மையார், முதலாழ்வார்கள் முதலியோர் பாடியுள்ள திருப்பாடல்களால் அறியக்கிடக்கின்றது. பாசு பதம், காபாலிகம், காளாமுகம் என்ற பிரிவுகளும் சைவசம் யத்திலே தோன்றலாயின. அக்காலத்தில் விளங்கிய வைணவ சமயத்தில் இவைபோன்ற பிரிவுகள் தோன்றவில்லையென்றே
கூறலாம்.
சமண முனிவரும் பௌத்த சந்நியாசிகளும் பெருந்தொகை . யினராய்த் தமிழ்நாட்டிற்கு வந்து தம் சமயக் கொள்கைகளைப் பரப்புதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்துவந்தனர். அவர் தமிழ்நாட்டிற் பற்பல இடங்களில் ஆங்காங்கு பள்ளிகளையும் விகாரைகளையுங் கட்டினர். வாழ்க்கையிற் சமண முனிவர்கள் அனுசரிக்கவேண்டிய ஒழுக்க நெறிகளை வகுத்தற்பொருட்டும் சமண - சமயத்தைத் தமிழ்நாட்டில் வளர்த்தற்பொருட்டும் கி. பி. 470-ல் வச்சிரநந்தி என்னும் சமணமுனிவர் 'திராவிட் 'சங்கம்' எனப் பெயரிய சங்கமொன்றை மதுரையில் அமைத்தன ரென அறியக்கிடக்கின்றது. அக்காலந்தொட்டுச் சமண சமயம் தமிழ்நாட்டிற் சிறப்பாக வளரத்தொடங்கியது. சமணரைப் போலவே பெளத்தரும் தம் சமயக் கொள்கைகளை மக்க ளிடையே பரப்பிவந்தனர். பௌத்த சமயப் பிரசாரத்திற்குக் காவிரிப்பூம் பட்டினமே தமிழ்நாட்டில் முக்கிய இடமாக இருந்தது என்பது சோழநாட்டில் அக்காலத்திலிருந்த புத்த தத்தர் என்னும் பெரியார் பாளி மொழியி லியற்றியுள்ள நூல் களாலும், சாத்தனாரியற்றிய மணிமேகலையாலும் அறியக்கிடக்

Page 30
47
தமிழ் இலக்கிய வரலாறு
கின்றது. கா வி ரி ப் பூம் பட்டினத்தைக் கடல்கொண்டபின் பௌத்த சந்நியாசிகள் காஞ்சியைத் தமக்கு இடமாகக்கொண்டு தம் சமயத்தைத் தமிழ்நாட்டிலே பரப்பிவந்தனர்.
சங்கமருவிய கால முற்பகுதியிலும் களப்பிரர் ஆண்ட காலத்திலும் தமிழ்நாட்டில் விளங்கிய பல்வேறு சமயங்களுக்கு மிடையே பகை மூளவில்லையென்றே கூறலாம். களப்பிர ராட்சிக்குப்பின்பே சமயப்பகை தோன்றிற் றெனலாம். 4. நூல்கள்
சங்கமருவிய காலத்தில் எழுந்த நூல்கள் எவையென 'நாம் திட்டமாகக் கூறமுடியாதிருக்கின்றது. ஒரு நூலின் மொழிநடை, யாப்பமைதி, அந்நூல் குறிக்கும் பண்பாட்டு நிலை, மக்கள் வாழ்க்கைநிலை, பழக்க வழக்கங்கள் முதலிய வற்றை ஆதாரமாகக்கொண்டு அந்நூல் எழுந்த காலத்தை நிச்சயிக்கலாம். அங்ஙனம் நிச்சயிப்பதாயின் தொல்காப்பியம் திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை மு த லி ய ன வும் காரைக்காலம்மையாரும் முதலாழ்வார்கள் மூவரும் பாடியருளிய பத்திப் பாடல்களும் கலித்தொகை, பரிபாடல் என்னும் தொகை நூல்களிலுள்ள பாட்டுக்களுட் பலவும் அக்காலப் பகுதிக்குரி யவை யெனக் கொள்ளுதற்குச் சான்றுகள் பலவுள. பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் திருக்குறள் மட்டுமன்றி, வேறு சில நூல்களும் அக்காலப்பகுதிக்கு உரியவை என்றே கூறலாம். மேற்கூறிய நூல்களுள் தொல்காப்பியம் ஏனைய நூல்களுக் கெல்லாம் காலத்தால் முந்தியதாகும். அதற்குப்பின் முறையே திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் நூல்கள் எழுந்தன என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். ''அந்நிலை மருங்கின் அறமுதலாகிய மும்முதற் பொருள்'' என வருந் தொல்காப்பியச் சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே திரு வள்ளுவர் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என முப்பாலாகத் திருக்குறளை அமைத்தாரென்பது தெரிகின்றது - 3 தொல்காப்பியச் சூத்திரங்களிலுள்ள பல சொற்றொடர்கள்

சங்கமருவிய காலம் 43
திருக்குறளில் இடம்பெற்றுள்ளன. தொல்காப்பிய விதிக்கு மாறன மொழிவழக்குகள் சில திருக்குறளிற் காணப்படுகின் றன. ஆகவே, திருக்குறள் தொல்காப்பியத்துக்குக் காலத் தாற் பிந்தியதாகும். சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரு காவியங்களும் திருக்குறளுக்குக் காலத்தாற் பிந்தியவை என்பதற்கு அந்நூல்களிற் சான்றுகள் உள.
நமக்குக் கிடைத்துள்ள தமிழிலக்கண நூல்களுள்ளே காலத்தால் முந்தியது தொல்காப்பியமாகும். இது தமிழ்மொழி யின் இலக்கண அமைதியினையும் பண்டைத் தமிழர் பண் பாட்டினையும் பழந்தமிழிலக்கிய மரபினையும் திறம்பட எடுத்துக் காட்டும் ஓர் அரிய நூலாகும். இந்நூலிற் கூறப்பட்டுள்ள அரும்பொருள்களை உள்ளவாறு அறிந்துகொள்ளுதற்கு இந் நூல் எழுந்த காலத்தை ஆராய்ந்தறிதல் இன்றியமையாத தாகும். இது கி. மு. இரண்டாம் நூற்றண்டிற்குமுன் எழுந்தது என்று ரா. இராகவையங்கார் அவர்கள் கொண்டனர். தொல் காப்பியம் எழுந்த காலம் கி.பி. நான்காம் அல்லது ஐந்தாம் நூற் ருண்டு என்று வையாபுரிப்பிள்ளையவர்கள் பல ஆதாரங்கள் காட்டி நிறுவினர். வித்துவான் க. வெள்ளைவாரணன் அவர் கள் பலவாறு ஆராய்ந்து தொல்காப்பியத்தின் காலம் கி.மு. 5320 என்று கூறியுள்ளனர். இங்ஙனம் பலரும் பலவாறு கூறலால் தொல்காப்பியத்தின் காலம் எது என்பதை நிச்சயிக்க முடியாதிருக்கின்றது. இந்நூலின் மொழிகடை, இந்நூல் கூறும் பண்பாடு, பொருள் மரபு, செய்யுள் மரபு முதலியன இன்னும் தெளிவாக ஆராயப்படவில்லை என்றே கூறலாம். நூல் வல் லார் அவற்றைச் செவ்வனே ஆராய்ந்தபின்னன்றி இந்நூல் எழுந்த காலத்தைத் திட்டமாக அறியமுடியாது. ஆரியர் போற் றிய நால்வகை வருணப் பாகுபாடு தமிழ் மக்களிடையேயும் புகுந்திருந்தமையைத் தொல்காப்பியச் சூத்திரங்கள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. ஆரியருடைய மணவினைக் கரணங்கள்
1. தமிழ் வரலாறு. 2. தமிழ்ச்சுடர் மணிகள், 3, தமிழ் இலக் கிய வரலாறு-தொல்காப்பியம்.

Page 31
44 தமிழ் இலக்கிய வரலாறு
முதலியவற்றைத் தமிழ் மக்களும் அனுசரித்து கடந்தனர் என்பதும் இந்நூலால் அறியக்கிடக்கின்றது. இந்நூலின் மொழி நடையினை நோக்கும்போது, அது நற்றினை முதலியவற்றி லுள்ள சங்க காலச் செய்யுட்களிற் காணப்படும் மொழிநடை யிலும் காலத்தாற் பிந்தியது என்பது தெரிகின்றது. சங்க கால வழக்கிலிருந்த சில சொற்கள் தொல்காப்பியர் காலத்தில் வழக்கொழிந்தன என்பது இந்நூலிலுள்ள உரிச்சொல்லியல் முதலியவற்றிலிருந்து அறியலாம். இந்நூல் குறிக்கும் பண் பாடு சங்க காலப் பண்பாட்டிலும் வேறுபட்டதொன்று என்
பது இந்நூலைப் படிப்பார்க்கு நன்கு புலனுகும். தொல்காப்பியம்
கூறும் கைக்கிளை, பெருந்தினையாகிய ஒழுக்கங்கள் கற்றினை, குறுந்தொகை, அகநானூறு ஆகிய தொகைநூல்களில் இடம் பெறவில்லையென்பதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. இவை போன்ற பல காரணங்களால் இந்நூல் சங்ககாலத்தின் முடிவில் எழுந்திருத்தல்கூடும் என ஒருவாறு துணியலாம்.
தொல்காப்பியம் என்னும் நூற்பெயர் தொல்காப்பியன் என்னும் நூலாசிரியன் பெயரிலிருந்து எழுந்தது. தொல்
காப்பியர் உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்னும் இரு வகை வழக்குகளையும் அடிப்படையாகக்கொண்டு எழுத்து, சொல், பொருள் என்னும் மூவகை இலக்கணங்களையும் ஆராய்ந்து, அவற்றை முறையே எழுத்ததிகாரம், சொல்லதி காரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாக வகுத்துக் கூறியுள்ளார். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுள் இயற்றமிழுக்குரிய இலக்கணத்தை மட்டுமே தொல்காப்பியர் தம் நூலிற் குறித்துள்ளனர்.
உலகம் போற்றும் உத்தம நூலாகிய திருக்குறள் தமி ழிலக்கியங்களுள் தலைமைபெற்று நிற்பதொன்றகும். இது அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பிரிவுகளையுடையது. அறத்துப்பால் முப்பத்தெட்டு அதிகாரங் களையும், பொருட்பால் எழுபது அதிகாரங்களையும், காமத்துப்

பால் இருபத்தைந்து அதிகாரங்களையும் கொண்டுள்ளன. இந் நால் சங்ககாலத்திற்கு உரியது எனச் சிலர் கருதுகின்றனர். உயிர்களிடத்தெல்லாம் அன்புகாட்டி மக்கள் ஒழுகுதற்கான அறநெறியை யெடுத்துக்கூறும் இந்நூல் எழுந்த காலத்தி லிருந்த பண்பாட்டிற்கும் மீன், இறைச்சி, கள் ஆகியவற்றை மக்கள் விரும்பியுண்டு இன்பக்களியாட்டிலீடுபட்ட சங்க காலப் பண்பாட்டிற்குமிடையே எத்துணை வேறுபாடு உண்டென் பதைப் பண்டைநூல்களைப் படித்தறிந்துகொள்ளலாம். சமண நூற் கருத்துக்கள் தமிழ்நாட்டில் மலிந்திருந்த காலத்திலே திருக்குறள் இயற்றப்பட்டதாதல் வேண்டுமெனக் கொள்ளு தற்குப் பல சான்றுகள் இந்நூலிற் காணப்படுகின்றன. சங்க காலத்தில் வழங்கிய தமிழினும் சிறிது பிந்திய காலத்துத் தமிழிலேயே திருக்குறள் இயற்றப்பட்டுள்ளது. சங்கச் செய் யுட்களில் உயர்திணையில் வாராத 'கள்' விகுதியும், எல்லாம் என்னும் சொல்லும் திருக்குறளில் உயர் திண்யில் வந்துள்ளன. சங்கச் செய்யுளில் வாராத "ஆநின்று' என்னும் இடைநிலை 'மாட்டு முதலிய உருபுகள், கால்' முதலிய விகுதிகள், விடு முதலிய துணைவினைகள், கில் முதலிய இடைச்சொற்
கள், உருவகங்கள், வடசொற்கள், இன்னுேரன்ன பலவும் திருக்குறளில் வந்துள்ளன. திருக்குறள் குறிக்கும் அரசியலை நோக்கும்பொழுதும் இந்நூலெழுந்த காலத்துத் தமிழ்நாட்டிர சியல் முறை மிக உயர்ந்த நிலையில் இருந்திருத்தல் வேண்டு மெனக் கருதலாம். அதனுல், தமிழ்நாட்டரசியலும் பண்பாடும் மிகச்சிறந்து விளங்கிய சங்க மருவிய கால ஆரம்பத்தில் இந் நூல் எழுந்திருத்தல் வேண்டுமெனக் கொள்ளக்கிடக்கின்றது
பண்டைக்காலங் தொடக்கமாகத் தமிழ்நாட்டின் பண் பாட்டை உருப்படுத்தி வளர்த்துவந்த பேரிலக்கியங்களுக் கெல்லாம் வழிகாட்டியாக அமைந்தது திருக்குறள் எனலாம். இந்நூலைப்போலத் தமிழ் மக்களது உள்ளத்தைக் கவர்ந்து கொண்ட தமிழ்நூல் வேறு யாதுமில்லை. இந்நூற் பாக்களையும் கருத்துக்களையும் எடுத்தாளாத தமிழ்ப் புலவர் இல்லை. சிலப்
சங்கம்ருவிய காலம் 45

Page 32
46
தமிழ் இலக்கிய வரலாறு
பதிகாரம், சிந்தாமணி முதலிய பேரிலக்கியங்கள் வள்ளுவர் வாக்கைப் போற்றிப் புகழ்ந்து பாராட்டியுள்ளன. இந்நூலா சிரியரைப் பொய்யில் புலவன் என்றும் தெய்வப் புலவன் என் றும் இந்நூலைப் பொய்யாமொழியென்றும் தெய்வநூலென்றும் பலவாறாக நம் முன்னோர் பாராட்டியுள்ளனர். அறவழி நின் றொழுகும் ஒரு சமுதாயத்தைத் தமிழ் நாட்டில் உருவாக்க வேண்டும் என்னும் குறிக்கோளைக் கொண்டு எழுந்த இந்நூல், எல்லாச் சாதியினர்க்கும் எல்லாச் சமயத்தினர்க்கும் உரிய உலகப் பொதுநூலாக நின்று மக்களுடைய நல்வாழ்விற்குப் பேருதவி புரிந்துவருகின்றது. இந்நூல் 'வையத்துள் வாழ் வாங்கு வாழும்' வகையினை வகுத்துக் காட்டுதலாற் பிற மொழியாளரும் இதனைத் தத்தம் மொழிகளில் மொழிபெயர்த் துப் போற்றுகின்றனர்.
வாழ்க்கைக்கு உறுதுணையாக உள்ள ஒழுக்கநெறிகளைக் கூறும் நூல்கள் பல உளவெனினும், திருக்குறளைப் போலச் சொற்சுருக்கமும் பொருட்செறிவும் உள்ள குறட்பாக்களிலே கற்றோரும் கல்லாதோரும் மனங்கொண்டு கற்கக்கூடிய முறை யில் அறிவுரைகளைக் கவிச்சுவையுடன் கலந்து கூறும் நூல் வேறில்லை. திருக்குறளைப் படிப்போர் மன திலெல்லாம் இது. ஒரு சிறந்த நீதிநூல் என்ற எண்ணம் நிலவுகின்றதன் றி. நடையழகில் ஒப்புயர்வற்ற இந்நூல் ஒரு கவிதைக் களஞ்சி யம் என்ற எண்ணம் உண்டாவதில்லை. உண்மையில் இந் நூலிலுள்ள ஒவ்வொரு குறட்பாவும் ஒவ்வொரு சொல்லோவிய மாகக் காட்சியளிப்பதை நாம் காணலாம். குறளுருக் கொண்ட திருமால் மூவுலகையும் ஈரடியால் அளந்ததுபோல், வள் ளுவ ரும் மக்கள் மனதில் எண்ணுவன யாவற்றையும் அளந் தறிந்து, அவற்றையெல்லாம் வண்ணமும் வனப்பும் உவமை முதலிய அணிச்சிறப்பும் உணர்ச்சிப் பெருக்கும் உள்ள ஈரடி வெண்பாவால் வெளிப்படுத்தியுள்ளனர். வள்ளுவருடைய உணர்ச்சியனுபவங்களையும் கற்பனைச் சிறப்பினையும் கவிச் சுவை நிரம்பிய காமத்துப்பாலில் மட்டுமன்றி, அறத்துப்பால்

சங்கமருவிய காலம் 47
பொருட்பாலாகிய ஏனைப் பால்களிலும் காணலாம். திருவள் ளுவமாலை இந்நூலுக்கு ஒரு முகவுரைபோல நின்று இதன் கணுள்ள சிறப்புக்கள் பலவற்றைச் சுருக்குமாக எடுத்துக் காட்டுகின்றது. 'அது திருக்குறளைப் படித்து அனுபவித்த பெரும்புலவர்கள் தம் கருத்தை வெளிப்படுத்திப் பாடிய வெண்பாக்களைக் கொண்ட ஒரு தொகைநூலாகும். அதிலுள்ள பாக்களுள் ஒன்று வருமாறு:- .
ஒதற் கெளிதா யுணர்தற் கரிதாகி வேதப் பொருளாய் மிகவிளங்கித்-தீதற்ருே ருள்ளுதோ றுள்ளுதோ றுள்ள முருக்குமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு. பெருங்காப்பியங்கள் ஐந்தனுட் காலத்தால் முந்திய சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சங்கமருவிய காலப்பகுதிக் குரிய செம்மைசான்ற இலக்கியங்களாகும். ஏனேக் 3, T'Guri கள் வடநாட்டுக் கதைகளைக்கூற, இவையிரண்டுமே தமிழ் நாட்டுக் கதைகளைப் பொருளாகக்கொண்டு தமிழருடைய பண்பாட்டை விளக்கிச் செல்லும் சிறப்பினையுட்ையன. திருக் குறளிலுள்ள பாக்களும் சொற்ருெடர்களும் இந்நூல்களிற் பயின்று வரலால், இவை திருக்குறள் இயற்றப்பட்டுப் பல ஆண்டுகள் கழிந்தபின் எழுந்தனங்ாதல் வேண்டும். சிலப்பதி காரத்தை இயற்றிய புலவர் சேரகுலத்து இளவரசனும், சேரன் செங்குட்டுவனின் தம்பியுமாகிய இளங்கோவடிகள். அவர் சங்க காலத்தவர் என்றும், தம் காலத்தில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்ச்சி ஒன்றையே தம் காவியத்திற்குப் பொருளாக அமைத் தார் என்றும் கருதப்பட்டு வந்துள்ளது. சிலப்பதிகாரம் சங்க காலத்து நூலன்று என்பதற்கு அகப்புறச் சான்றுகள் பலவுள. இந்நூலின் மொழிநடைக்கும் சங்கச் செய்யுட்களின் மொழி நடைக்குமிடையே வேறுபாடு உண்டு. முன்னிலைப் பன்மை யாகிய நீர், தன்மை யொருமையாகிய நான்', 'இந்த' என் னும் சுட்டுச்சொல், எதிர்காலத்துத் தன்மை யொருமையில் வரும் 'அன்' விகுதி-உதாரணம்: போக்குவன், உறுவன்

Page 33
48 தமிழ் இலக்கிய வரலாறு
உயர்திணைப் பன்மையில் வரும் 'கள்' விகுதி முதலிய சங்க காலத்து மொழிவழக்கிற் காணப்படாதவை பல, சிலப்பதி காரத்துள் வந்துள்ளன. இந்நூலிற் குறிக்கப்பட்டுள்ள வாழ்க்கை முறை, பண்பாடு, சமய வழிபாடுகள் முதலியனவற்றைச் சங்கச் செய்யுட்களிற் காண்டல் முடியாது.
சிலப்பதிகாரக் கதை இளங்கோவடிகள் காலத்தில் நடை பெற்ற உண்மை நிகழ்ச்சிதான் என்று நூலைப்படிப்போர் எவரும் நம்பக்கூடிய முறையிலே கதை புனையப்பட்டிருத்தல் அடிகளுடைய புலமைத் திறனுக்கு ஒரு சான்ருகின்றது. அது உண்மையில் அக்காலத்தில் நிகழ்ந்ததொன்றன்று. சங்க காலத் தில் வழங்கிவந்த ஒரு கதையை எடுத்து, அதனைக் காவிய உருவத்தில் அடிகள் அழகுற அமைத்துக் காட்டுகின்றர் என்றே கூறுதல் வேண்டும். துன்பம் மீதூரப்பட்ட பெண் ணுெருத்தி தன் முலையொன்றை அறுத்தெறிந்த வரலாறு நற்றினைச் செய்யுளொன்றிற் குறிக்கப்பட்டுள்ளது. அதைக் குறிக்கும் செய்யுட் பகுதி வருமாறு:-
எரிம்ருள் வேங்கைக் கடவுள் காக்கும் குருகார் கழனியின் இதணத் தாங்கண் ஏதி லாளன் கவலை கவற்ற ஒருமுலை யறுத்த திருமா வுண்ணி'.
சிறந்த ஆடவர்க்குரிய இலக்கணங்கள் யாவும் பொருந்தப் பெற்ற கோவலனேத் தலைவனுகவும், கற்புக்கரசியாக விளங் கிய கண்ணகியைத் தலைவியாகவுங் கொண்டு செய்யப்பட்ட சிலப்பதிகாரம் என்னும் காவியத்தின் போக்கு ஒரு சோக நாடகத்தின் போக்கை ஒத்திருக்கிறது. இயல், இசை, நாட கம் என்னும் முத்தமிழும் விரவிவரப் பெற்றமையால் அது முத்தமிழ்க் காவியமென்றுங் கூறப்படும். ஆடல், பாடல் முதலிய கலைகளையெல்லாங் கற்றுத் தேர்ந்த கோவலனுக்குக் காதற் கிழத்தியாய் வாழ்ந்த மாதவியின் மகள் மணிமேகலை துறவுபூண்ட வரலாற்றைக் கூறும் காவியம் மணிமேகலை யெனப்படும். கோவலன் கண்ணகியென்னும் இருவர் வர
 
 

சங்கமருவிய காலம் 49
லாற்றைக் கூறும் வாயிலாக, அரசியல் பிழைத்த அரசருக்கு அறக்கடவுளே கூற்றுவனுவதையும், புகழமைந்த கற்புடை மங்கையர் உயர்ந்தோரால் ஏத்தப்படுவதையும், ஒருவன் செய்த வினை தப்பாது தன் பயனை ஊட்டும் என்பதையும் உலகத் தோருக்கு எடுத்துக்காட்டுதற்பொருட்டு எழுந்தது சிலப்பதி காரம் என்று இந்நூற்பதிகம் கூறுகின்றது. இக்காவியம் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டமென மூன்று காண்டங்களாக வகுக்கப்பட்டுள்ளது. முதலிரு காண் டங்களிலே புலவர் தாம் எடுத்துக்கொண்ட கதையைக் கூறி முடித்து, வஞ்சிக்காண்டத்தில் சேரமன்னன் கண்ணகிக்குக் கோவிலெடுத்த வரலாற்றைக் கூறுகின்றர். நூலின் போக்கினை யும் கதைப் புணர்ப்பினையும் நோக்குமிடத்து, முதலிரு காண் டங்களே ஒரு தனிக்காவியமாய் அமையுந்தன்மையுடையன வென்பது புலனுகும். இளங்கோவடிகள் காலத்துப் பண்பாடு, அரசியல்முறை முதலியவற்றைப்பற்றியும் இயலிசை நாடக மாகிய முத்தமிழின் நிலையைப்பற்றியும் நாம் அறிந்துகொள்ளு தற்கு ஒரு சிறந்த கருவியாக விளங்கும் இந்நூல் கலைச் சிறப்பும் கவிதைப்பண்பும் நிரம்பப்பெற்ற ஒரு பேரிலக்கிய மாகும். இந்நூற்கதை மக்களுடைய நெஞ்சைப் பிணித்ததனுலே முற்காலத்திலிருந்தே அது நாடகவுருவத்தில் மக்களை மகிழ்
வித்து வந்திருக்கிறது. இலங்கையிற் பற்பல இடங்களிலும்
மக்கள் பத்தினித் தெய்வத்திற்குக் கோயிலெடுத்து வழிவரீடு நிகழ்த்திவந்திருப்பதே இக்கதையில் மக்களுக்கு இருந்த ஈடு பாட்டிற்கு ஒரு சான்ருகும்.
சேரர் குடியிற் பிறந்து இளம் பிராயத்திலேயே துறவறம் பூண்ட இளங்கோவடிகளுடைய நெஞ்சம் தமிழருடைய பண் பாட்டிலும் கலைவளத்திலும் ஊறிக்கிடந்தது என்பதை இந் நூல் தெளிவாகக் காட்டுகின்றது. எல்லாச் சமயங்களையும் ஒன்றுபோலப் பாராட்டியிருப்பதே அவருடைய பரந்த உள் ளத்திற்கு ஒர் அறிகுறியாகும். இந்நூலிற் சித்திரிக்கப்பட்

Page 34
தமிழ் இலக்கிய வரலாறு
டுள்ள காட்சிகள் முதலியவற்றை நாம் படிக்கும்போது அவை நம் கண்முன் தோன்றுவன போலுள்ளன. பல்வகைச் சுவை களும் பாங்குற அமைந்த இப்பேரிலக்கியம் 'நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்' என்று பாராட்டப்பட்டிருப்பது மிகப் பொருத்தமுடைத்தாகும்.
சிலப்பதிகாரத்திற் கூறப்பட்டுள்ள கதையின் தொடர்ச்சி யாக, மதுரைக் கூலவாணிகன் சாத்தனர் தாம் இயற்றிய மணிமேகலையென்னும் காவியத்தில், கோவலன் இறந்தபின் மாதவியும் அவள் மகள் மணிமேகலையும், பெளத்த சங்கத் தைச் சார்ந்து வாழ்ந்த கதையையும், மணிமேகலை துற வொழுக்கம் பூண்டு அறவண அடிகள் பாற் றரும உபதேசம் பெற்று ஈற்றிலே 'பவத்திறம் அறுக’ என அவள் நோற்ற கதையையும் எடுத்துக் கூறுகின்றனர். இந்நூ லா சிரி ய் ர் பெளத்தசமய சித்தாந்தத்தையும் பெளத்தசாதகக் கதைகளையும் நன்கு கற்றறிந்த பெரியாரென்பதையும், பெளத்தசமயக் கொள்கைகளையும் துறவொழுக்கத்தின் பெருமையையும் தமிழ் மக்களுக்கு எடுத்துக்காட்டி, அச்சமயத்தை நாட்டிற் பரவச் செய்யும் நோக்கங்கொண்டு இந்நூலை இயற்றினுர் என்பதை யும் இந்நூல் தெளிவாகக் காட்டுகின்றது. வீட்டுநெறிக்கு ஏதுவாகவுள்ள துறவொழுக்கத்தைப் LJITJ TL (GÜ) LD600fG|D கலைக்கும், அறம் பொருள் இன்பங்களைச் சிறப்பித்துக் கூறும் சிலப்பதிகாரத்திற்கு மிடையே நெருங்கிய கதைத்தொடர்பு இருப்பதால், அவையிரண்டும் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பொருளையும் கூறும் ஒரு நூலின் இருபாகங்கள் போலக் காட்சியளிக்கின்றன. இங்ஙனம் இந்நூல்களுக் கிடையே கதைத்தொடர்பு காணப்படலாலும் இளங்கோவடிகள் வஞ்சிக்காண்டத்திலே சாத்தனூர் என்ற புலவர் ஒருவரைக் குறிப்பிடுவதாலும் பிறவற்ருலும் இந்நூல்கள் இரண்டும் ஒரே காலத்தில் இயற்றப்பட்டவை என்பர் சிலர் உண்மையிற் சிலப்பதிகாரந் தோன்றிப் பல ஆண்டுகள் சென்றபின் இந் நூல் தோன்றியிருத்தல் வேண்டும் எனக் கொள்ளுதற்குச்
 
 

சங்கமருவிய காலம் 51.
ச்ான்றுகள் பலவுள. தமிழிலக்கியமரபு, மொழிமரபு, செய்யுள் மரபு முதலியவற்றின் வளர்ச்சிக் கிரமத்தை நோக்குமிடத்தும், இந்நூல்கள் குறிக்கும் பண்பாடு, சமயநிலை , முதலியவற்றை நோக்குமிடத்தும் சிலப்பதிகாரம் எழுந்த காலத்தில் இந்நூல் எழவில்லையென்பது புலனுகும்.
காலத்தின் போக்கிற்கு இணங்க இலக்கியம் அமைகிறது என்பதற்கு மணிமேகலையை ஒர் உதாரணமாகக் கூறலாம். இந்நூல் எழுந்த காலம் பல்வேறு சமயவாதிகள் தத்தம் சமயமே மெய்ச்சமயம் என்பதை நிலைநாட்டப் பிரசாரம் செய்த காலமாகும். ஆகவே, இக்காலப்பகுதியில் வாழ்ந்த புலவர்கள் சமயக் கருத்துக்கள் பொதிந்த கதைகள் கூறும் இலக்கியங் களை யாத்தனர். வளையாபதி, குண்டலகேசி முதலிய காவி யங்களும் தமிழ்நாட்டிலே சமயக்கொள்கைகளைப் பரப்பும் நோக்கமாக எழுந்தவை. மணிமேகலையாசிரியர் பெளத்தசம யக் கருத்துக்களை விளக்குதற்கு மாதவிமகள் மணிமேகலை யின் கதையை ஆதாரமாகக் கொண்டனர். இபளத்தசமய நெறியிலே துறவொழுக்கமும் சமுதாயத்தொண்டும் முக்கிய இடம்பெறுதலால் அவையிரண்டையும் சிறப்பாக எடுத்துக் காட்டுதற்பொருட்டு நூலை இயற்றினர்; அதனுல், இந்நூலுக்குத் துறவு உயிர்ாாடியாக அமைகின்றது. சங்கச் செய்யுளுக்குக் காதல் பொருளாக அமைந்ததை நாம் முந்திய அதிகா ரத்திற் கண்டோம். அக்காலப்பகுதி நீங்க, துறவொழுக்கத்தை மக்கள் போற்றும் காலப்பகுதி வருதலால், இலக்கியத்திற் காதல் பெற்றிருந்த இடத்தைத் துறவு பெறுகின்றது. உதய குமரன் என்னும் இளவரசன் மணிமேகலையிடத்திற் காதல் கொண்டு அவள் அன்பைப்பெற அரும்பாடுபடுகிருன் மணி மேகலைக்கும் அவனிடத்திற் காதல் உண்டாகின்றதெனினும் அவளுடைய உள்ளமானது துறவொழுக்கத்தை நாடிநிற்கின் றது. அதனுல், அவனிடத்திலே தனக்குண்டான காதலை வெளிப்படுத்த விரும்பாது, அதைக்கரந்து ஒழுகுகின்ருள். அவள்மேல் அவன்வைத்த காதலை மறக்கச்செய்யும் நோக்க

Page 35
52.
தமிழ் இலக்கிய வரலாறு
மாக அவள் பல சந்தர்ப்பங்களிலும் யாக்கை நிலையாமை முதலியவற்றை அவனுக்கு எடுத்துக்கூறுகின்றாள். இவ்வா றெல்லாம் அவள், முயன்றபோதும் அவர்கள் ஒருவரில் ஒருவர் கொண்ட காதல் தணியவில்லை. ஆகவே, உதயகுமரன்பால் அவள் வைத்தகாதல் அவளை ஒருபுறம் இழுக்கத் துற வொழுக்கம் பூண்பதில் அவளுக்குண்டான வேணவா மற்றொரு புறம் இழுக்க, இவையிரண்டிற்குமிடையே கிடந்து ஊசலாடு கின்றது அவளுள்ளம். இதனைச் சாத்தனார் சித்திரித்துக்காட்டும் வகை அவர் - ஒரு பெரும்புலவன் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைகின்றது. மணிமேகலை காயசண்டிகை வடிவெய்தக் காயசண்டிகையின் க ண வ னா கி ய காஞ்சன னென்னும் விச்சாதரன் வந்து, அவள் காயசண்டிகையா மெனக் கருதி, அவள் பின்னிலைவிடா உதயகுமரனை வாளால் வெட்டிக் கொன்றபோது, அவள் ஆற்றொணாத் துன்பமுற்றுக் கூறிய வார்த்தைகள் மிக்க சோகரசம் பொருந்தியனவாக உள்ளன. அவை வருமாறு:
"உவ்வன மருங்கி னின்பா லுள்ளந்
தவிர்விலே னாதலிற் றலைமக டோன்றி மணிப்பல் லவத்திடை யென்னையாங் குய்த்துப் பிணிப்பறு மாதவன் பீடிகை காட்டி யென்பிறப் புணர்ந்த வென்முற் றோன்றி யுன் பிறப் பெல்லா மொழிவின் றுரைத்தலிற் பிறந்தோ ரிறத்தலு மிறந்தோர் பிறத்தலும்
அறந்தரு சால்பு மறந்தரு துன்பமும் யானினக் குரைத்து நின் னிடர்வினை யொழிக்கக் காயசண் டிகைவடி வானேன் காதல வைவாள் விஞ்சையன் மயக்குறு வெகுளியின் வெவ்வினை யுருப்ப விளிந்தனை யோவென
விழுமக் கிளவியின் வெய்துயிர்த்துப் புலம்பி...'' உதயகுமரன் இறந்தபின் அவளுடைய உள்ளமானது துறவுமார்க்கத்தில் விரைந்து செல்கின்றது. ஆகவே, அவள் அறவண அடிகள் பாற் சென்று தரும் உபதேசம் பெற்று,

சங்கமருவிய காலம் 53
ஈற்றிலே பவத்திறம் அறுதற்பொருட்டு நோற்கின்ருள். காலத் தின் போக்கிற்கு இணங்கக் காதல் தோற்றுப்போகத் துறவு வெற்றிபெறுதலே நாம் இக்காவியத்திற் சிறப்பாதக் காணலாம்.
இனி, சங்க்மருவிய காலத்தனவாகக் கொள்ளப்படும் கீழ்க்கணக்கு நூல்களை நோக்குவோம். அறம், பொருள், இன் பம் என்னுமிவற்றுள் ஒன்றுபற்றியும் பலபற்றியும் வெண்பா யாப்பினுற் பலர் செய்த நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ளன, கீழ்க்கணக்கின் இலக்கணத்தை மேல்வரும் பன்னிருபாட்டியற் சூத்திரம் குறிக்கின்றது. அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி அறம்பொரு வின்பம் அடுக்கி யவ்வத் திறம்பட வுரைப்பது கீழ்க்கணக் காகும். அடிநிமிர்பில்லாச் செய்யுள் என்பது வெண்பாவாகும். அடி நிமிர்ந்து வரும் அகவல், கலி முதலியவற்ருல் இயன்ற பத்துப் பாட்டும் எட்டுத்தொகையும் மேற்கணக்கு நூல்களென வழங் கப்பட்டன. கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டென்பது,
நாலடி நான்மணி நானுற்ப தைந்தி&ணமுப் பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம் இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி யென்பவும் கைந்நிலையு மாங்கீழ்க் கணக்கு
என்னும் வெண்பாவால் அறியக்கிடக்கின்றது. அவையாவன,
1. நாலடியார் 10. திணைமாலை நூற்றைம்பது 2. நான்மணிக்கடிகை 11. திருக்குறள் 3. இன்னு நாற்பது 12. திரிகடுகம் 4. இனியவை நாற்பது 13. ஆசாரக்கோவை 5. கார் நாற்பது 14. பழமொழி நானூறு 6. களவழி நாற்பது 15. சிறுபஞ்சமூலம் 7. ஐந்திணை ஐம்பது 16. முதுமொழிக்காஞ்சி 8. ஐந்திணை எழுபது 17. ஏலாதி
9.
திணைமொழி ஐம்பது 18, கைந்நிலை GTGóTLIGOT.

Page 36
'54 தமிழ் இலக்கிய வரலாறு
மேற்கூறிய பதினெட்டு நூல்களுள் அறம், பொருள், இன்பமாகிய முப்பொருளையும் கூறும் நூல்கள் திருக்குறள், காலடியார் என்பன இரண்டுமே. இவையிரண்டும் பண்டைக் காலந் தொடக்கம் இன்றுவரையும் புலவர்களாற் போற்றப் பட்டு வந்தமைக்குத் தமிழிலக்கிய நூல்கள் சான்றக விளங்கு கின்றன. 'ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி' என்னும் பழமொழியும் இந்நூல்களின் பெரு மையை வலியுறுத்துகின்றது. இவற்றுள் திருக்குறள் சங்க மருவிய காலத்து ஆரம்பத்தில் இயற்றப்பட்டதாதல் வேண்டும். அதுபற்றி மேலே குறித்துள்ளோம். காலடியார் என்னும் நூல் கால டி நானூறு என்றும் கூறப்படும். சமண முனிவர்கள் பலர் இயற்றிய வெண்பாக்களுள் 400 வெண் பாக்களைப் பதுமனுர் என்பவர் தெரிந்து, அவற்றை இந்நூலில் 40 அதிகாரங்களாக வகுத்து அமைத்தனர் என்று கூறப் படுகிறது. இந்நூலிலே கி. பி. 8ஆம் நூற்றண்டின் தொடக் கத்தில் வாழ்ந்த பெருமுத்தரையர் என்பாரைக் குறிக்கும் இரு செய்யுட்கள் காணப்படலால், இது பல்லவர் காலத்துக்கு உரியது என்பர் சிலர் நூல் தொகுக்கப்பட்ட காலம் பல்லவர் ஆட்சிக்காலமாகலாம். அங்ஙனமாயின், அக்காலத்துச் செய் யுட்கள் சில இந்நூலில் இடம்பெற்றிருத்தல் கூடும். அதனுல், இந்நூலிலுள்ள எல்லாச் செய்யுட்களும் பல்லவர் காலத்தவை யெனக் கொள்ளுதல் பொருந்தாது. இந்நூலிலுள்ள செய்யுட்கள் மக்களுக்கு உறுதிபயக்கும் உண்மைகளை எடுத்துக் கூறுகின்றனவெனினும், உலக இன் பங்களை இழித்துக்கூறித் துறவறத்தின் பெருமையைப் பல்லாற்ருனும் போற்றுகின்றன; நீதி ஒழுக்கங்களை வற்புறுத்திக் கூறுகின்றன. இந்நூலிலுள்ள உவமைகள் சங்க காலத்து உவமைகளைப்போலச் சிறப்புடை யனவாகவும் பொருளைத் தெளிவாகப் புலப்படுத்துதற்கு ஏற்ற கருவிகளாகவும் அமைந்துள்ளன. இந்நூலிலுள்ள செய்யுட்கள் குறட்பாக்களைப்போலவே ஒன் ைற க் கூறும்பொழுது,

சங்கமருவிய காலம் 55
அது படிப்போர் உள்ளத்திலே நன்கு பதியுமாறு சுருங்கிய சொற்களிலே தெளிவாகக் கூறுகின்றன. அதனுல்,
"பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில் என இந்நூலையும் திருக்குறளையும் ஒளவையார் பாராட்டி யுள்ளனர்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஐந்திணை ஐம்பது, ஐந்தினை எழுபது, திணை மொழி ஐம்பது, திணைமாலை நூற் றைம்பது, கார் நாற்பது, கைந்நிலை என்னும் ஆறும் அகத் திணை நூல்கள். களவழி நாற்பது போர்க்களம் ஒன்றைச் சித்திரித்துக் காட்டுகின்றது. எஞ்சிய யாவும் அறவொழுக்கங் களைச் சிறப்பித்துக் கூறுகின்றன. இங்ாவனம் அறவொழுக்கங் களைப் பொருளாகக்கொண்டுள்ள நூல்கள் சிறந்த இலக்கிய" வரிசையில் வைத்துப் பாராட்டப்படுவது தமிழ்மொழிக்குள்ள ஒரு தனிச்சிறப்பாகும். ஆங்கிலம் முதலிய பிற மொழிகளில் அறநூல்கள் இலக்கிய நூல்களாகக் கொள்ளப்புடுவதில்லை.
கீழ்க்கணக்கு நூல்களுள் ஐந்திணை ஐம்பது முதலாக வுள்ள அகத்தினை கூறும் நூல்கள் வெண்பா யாப்பில் ஐவகைக் காதலொழுக்கங்களைக் கூறுகின்றனவெனினும், இந் நூல்களிலுள்ள செய்யுட்களுக்கும் நற்றிணை முதலிய தொகை நூல்களிலுள்ள செய்யுட்களுக்கும் வேறுபாடு உண்டு. நற் றிணை, குறுந்தொகை, அகநானூறு என்னும் நூல்களிலுள்ள செய்யுட்கள் அகவற்பாவாலானவை; ஒவ்வொரு செய்யுளும் ஒவ்வொரு தினைப்பொருளைக் கூறுகின்றது. ஐந்திணை ஐம்பதி லுள்ள செய்யுட்கள், புணர்தல் முதலிய ஐந்து திணைப் பொருளையும் திணையொன்றுக்குப் பத்துச் செய்யுளாக ஐம் பது செய்யுட்களிலும் தொடர்பாகக் கூறுகின்றன. அவ்வாறே ஐந்தினையெழுபது முதலிய நூல்களிலும் அகத்திணைப்பொருள் தொடர்பாகக் கூறப்பட்டுள்ளது. சங்கமருவிய காலப்பகுதி யில் வெண்பா யாப்பு தலைமைபெற்று விளங்கியதால், அக்

Page 37
56 தமிழ் இலக்கிய வரலாறு
காலப் புலவர்கள் அகத்தினைப் பொருளை வெண்பாவில் அமைத்துப் பாடினர். புணர்தல், பிரிதல் முதலிய ஒழுக்கங் களை ஒன்றன்பின் ஒன்ருக வைத்துப் புலவர்கள் கீழ்க்கணக்கு நூல்களிலே கூறியமுறை பிற்காலங்களில் எழுந்த கோவைப் பிரபந்தத்திற்கு ஒரு வழிகாட்டியாக இருந்தது எனக் கருதக் கிடக்கின்றது.
இந்நூல்கள் அன்பினைந்திணை ஒழுக்கங்களைச் சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் தன்மையும், எழிலும் இனிமையு முற அவற்றை எடுத்தியம்புஞ் சிறப்பும் கண்டு இன்புறற் பாலன. இந்நூல்களுட் பல்லாற்ருனும் சிறப்புற்று விளங்கு வது திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலாகும். இதன் கண் புலவர் அகத்திணைப் பொருளைத் துறவோரும் போற்றும் வண்ணம் பாடியிருத்தலைக் காணலாம். அதனுல் இந்நூற் பாயிரத்தின்கண்,
முனிந்தார் முனிவொழியச் செய்யுட்கண் முத்துக் கனிந்தார்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்நூலிலுள்ள பல செய்யுட்கள் உரையாசிரியர்களால் எடுத்தாளப்பட்டுள்ளன. இதன்கனுள்ள செய்யுட்களுக்கு ஒர் உதாரணம் வருமாறு:
தான்ருயாக் கோங்கந் தளர்ந்து முலைகொடுப்ப ܢܸܐܹܝܼ.
வீன் ருய்நீ பாவை யிருங்குரவே-ஈன்ருண் மொழிகாட்டா யாயினு முள்ளெயிற்ருள் சென்ற வழிகாட்டா (பீதென்று வந்து.
சுரத்திடைத் தலைவியைத் தேடிச்சென்ற செவிலித்தாய் குர
வொடு புலம்பியதாகக் கூறும் துறையில் இச்செய்யுள் அமைந் துள்ளது.
முனிவு-வெறுப்பு. கனிந்தார்.கனிவுடன் கூறினுர், கோங்கு-கோங்கமரம். குரவு-குராமரம். பாவை குராவின் காய்,
 

சங்கமருவிய காலம் 57
கார்நாற்பது என்னும் நூல் கார் காலத்தினையும் முல்லை யொழுக்கமாகிய இருத்தலையும் நாற்பது வெண்பாக்களிற் கூறுகின்றது. ஒவ்வொரு செய்யுளிலும் கார் வந்தமை கூறப் படுதலின் இந்நூல் கார்நாற்பது எனப்பட்டது. கைந்நிலை என்னும் நூல் திணையொன்றிற்குப் பன்னிரண்டு செய்யுட் களாக ஐந்து திணைக்கும் அறுபது செய்யுட்களையுடையது. பொய்கையார் பாடிய களவழி நாற்பது என்னும் நூல், சோழன் ஒருவன் தன் பகைவரை அட்ட போர்க்களமொன்றை நாற்பது வெண்பாக்களில் அழகாகச் சித்திரித்துக் காட்டுகின் றது. போர் முடிந்தபின் அப்போர்க்களத்தைப் புலவர் நேரிற் கண்டு இந்நூலைப் பாடினுர் என்பது இதனைப் படிக்கும் பொழுது தெரிகிறது. அக்களத்தின் காட்சி எவ்வாறிருந்தது என்பதை ஒவ்வொரு செய்யுளிலும் ஒவ்வொரு உவமையை அமைத்துக் கூறும்வகை கண்டு இன்புறற்பாலது. அவ்வுவ மைகள் சங்கப்புலவர்கள் கையாண்ட உவமைகளைப் பெரிதும் ஒத்திருக்கின்றன. அவற்றிற்கு ஓர் எடுத்துக்காட்டு வருமாறு:
ஒஒ உவம ணுறழ்வின்றி யொத்ததே
காவிரி நாடன் கழுமலங் கொண்டநாள் மாவுதைப்ப மாற்ருர் குடையெலாங் கீழ்மேலா ஆவுதை காளாம்பி போன்ற புனனுடன் மேவாரை யட்ட களத்து.
நான்மணிக்கடிகை, இன்னு நாற்பது, இனியவை நாற் பது, முதுமொழிக்காஞ்சி, ஆசாரக்கோவை, ஏலாதி, சிறு பஞ்சமூலம், திரிகடுகம் ஆகிய நூல்கள் மக்களுடைய நல் வாழ்வுக்கு உதவக்கூடிய ஒழுக்கநெறிகளையும் ஆசாரங்களையும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. அக்காலத்துச் சமு தாயத்தை நல்வழிப்படுத்தவேண்டிய தேவை இருந்ததனுற் போலும் புலவர்கள் இந்நூல்களை இயற்றினர். அறவழிகளைத்
கழுமலம்-ஒர் ஊர். மாற்ருர்-பகைவர். அட்ட-கொன்ற,
களம்போர்க்களம்,

Page 38
58 தமிழ் இலக்கிய வரலாறு
தமிழ் மக்களுக்கு அறிவுறுத்தும் நோக்கமாகச் சமணமுனிவர்கள் தமிழ்நாட்டிற் சிறப்பாகப் பிரசாரஞ்செய்த காலம் சங்க மருவிய காலமரகலின், இந்நூல்களுட் பெரும்பாலன அக் காலப் பகுதியில் எழுந்தனவெனக் கொள்ளுதல் பிழையாகாது. இந்நூல்கள் கூறும் பொருளை நோக்குமிடத்து, ஒழுக்க நிலையிலே தாழ்ந்திருந்த ஒரு சமுதாயத்தை உயர்த்தும் நோக்க மாகவே இவை எழுந்தனவெனக் கொள்ளக்கிடக்கின்றது. சங்கமருவிய காலத்தின் முதற்பகுதி அரசியல் நிலையிலும் பண்பாட்டு நிலையிலும் பிறவற்றிலும் மிக்க சிறப்புடன் விளங் கியமையால், அக்காலப் பகுதியில் இவை எழுந்தனவெனக் கொள்ளுதல் பொருந்தாது. களப்பிரர் ஆட்சிக்காலத்திலே தமிழ்நாட்டுச் சமுதாயங்லை தாழ்ந்திருந்ததாதலின், அந்நிலை யில் இவை எழுந்திருத்தல் கூடுமெனக் கொள்ளுதல் பொருந்துவதாகும்.
பழமொழி நானூறு என்னும் நூல் 400 வெண்பாக்களை யுடையது. இந்நூலிலுள்ள ஒவ்வொரு வெண்பாவும் ஒவ் வொரு பழமொழியைக்கொண்டு விளங்குகின்றது. சில அறி வுரைகளை ஒவ்வொரு வெண்பாவிலும் எடுத்துக்கூறும் புலவர், அவற்றை விளக்குதற்கு ஒவ்வொரு பழமொழியைக்
கையாண்டிருக்கின்றனர். இந்நூலிலே புலவர் தம் காலத்தில் வழங்கிய பழமொழிகளைக் கருவியாகக்கொண்டு, தம்முடைய கருத்துக்களையும் அனுபவங்களையும் புலப்படுத்தியிருக்கும் வகையினை நோக்கும்போது, அவர் ஒரு பெரும்புலவர் என் பது தெரிகிறது. நாலடி நானுறு என்னும் நூலிலுள்ள செய்யுட்கள் சிலவற்றிலும் பழமொழிகள் பயன்படுத்தப்பட் டிருக்கின்றன. ஒரு நாட்டு மக்களின் பண்பாடு, மன இயல்பு, பழக்கவழக்கங்கள் முதலியவற்றை அறிந்துகொள்ளுதற்கு அந் நாட்டில் வழங்கும் பழமொழிகள் பெரிதும் பயன்படுகின்றன. ஆகவே, இந்நூலிலுள்ள பழமொழிகளின் உதவிகொண்டு இந்நூலெழுந்த காலத்துத் தமிழ் நாட்டின் பண்பாட்டு நிலையினை

சங்கமருவிய காலம் 59
ஒருவாறு மட்டிடலாம். இந்நூலிலுள்ள செய்யுட்களுக்கு ஒர் உதாரணம் வருமாறு:
பொல்லாத சொல்லி மறைந்தொழுகும் பேதைதன் சொல்லாலே தன்?னத் துயர்ப்படுக்கும்-நல்லாய் மணலுள் முழுகி மறைந்து கிடக்கும் நுணலுந்தன் வாயாற் கெடும். கலித்தொகை, பரிபாடல் ஆகிய இரு நூல்களுட் கோக்கப் பட்டுள்ள செய்யுட்கள் பலவற்றின் மொழிநடை முதலியவற்றை கோக்குமிடத்து, அவை சங்கமருவிய காலப்பகுதியில் எழுந் தவை என்றே கருதவேண்டியிருக்கின்றது. வடநூற் கருத்துக் கள், ஆரியர் போற்றிய அறநெறிகள் முதலியவற்றைத் தமிழ் மக்கள் பெரிதும் போற்றித்தழுவிய காலம் சங்கமருவிய காலம் என்பதை நாம் மேலே குறித்துள்ளோம். வடமொழிச் சொற் கள், சொற்றெடர்கள், வடமொழி நூல்களிற் காணப்படும் கதைக்குறிப்புக்கள், அறநெறிகள் முதலியன் கலித்தொகைச்
செய்யுட்களிலும் பரிபாடற் செய்யுட்களிலும் காணப்படும்
அளவிற்குப் புறநானூற்றுச் செய்யுட்களிலோ 'நற்றினைச் செய்யுட்களிலோ காண்பது அரிது. கைக்கிளை, பெருந்திணை யாகிய ஒழுக்கங்களைக் கூறும் செய்யுட்கள் கலித்தொகையில்
மட்டுந்தான் வந்துள்ளன. நற்றிணை, குறுந்தொகை, அக
நானூறு ஆகிய தொகைநூல்களுள் அன்பினைந்திணைச் செய்
யுட்களே கோக்கப்பட்டுள்ளன. கலித்தொகைச் செய்யுட்கr
லுள்ள உருவகங்களைச் சங்கச் செய்யுட்களிற் காண்பது அரிது. மொழிகடையிற் கலித்தொகை பரிபாடலை ஒத்திருத்தலைக் காணலாம். இவற்றையெல்லாம் நோக்கும்பொழுது அந்நூல் களிலுள்ள செய்யுட்களுட் பெரும்பாலானவை சங்கமருவிய காலத்துக்கு உரியவையென்றே துணியவேண்டியிருக்கிறது. கலித்தொகையிலே சங்ககாலத்துக்குரிய செய்யுட்களும் கோக் கப்பட்டுள்ளன என்பதை அவற்றின் மொழிநடை, யாப்பு,
பொருள்மரபு முதலியவற்றைக்கொண்டு அறியலாம்.

Page 39
60
தமிழ் இலக்கிய வரலாறு
மேலே கூறிய நூல்களை விட, பத்துப்பாட்டிலுள்ள திரு முருகாற்றுப்படையும் சங்கமருவிய காலத்துக்குரியது என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அது குறிஞ்சி நிலத்துத் தெய்வமாகிய முருகனையும் வடமொழிப் புராணங்களிற் போற் றப்படும் சுப்பிரமணியக் கடவுளையும் ஒருவராகக்கொண்டு தமிழ் மக்கள் வழிபட்ட காலத்தில் எழுந்ததாதல் வேண்டும். அங்ஙனங் கொள்ளின் நெடுநல்வாடையைப் பாடிய சங்கத்துச் சான்றோராகிய நக்கீரரும் திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீர ரும் ஒருவரல்லர் என்பது பெறப்படும். தொல்காப்பியத்துக் குப்பின் எழுந்த இறையனாரகப்பொருளுக்கு உரை கண்ட நக்கீரரும் திருக்கண்ணப்பதேவர் திருமறம் முதலிய பதினொராந் திருமுறையிலுள்ள பிரபந்தங்களைப் பாடியருளிய நக்கீரதேவநாயனாரும் சங்கமருவிய காலத்துக்கு உரியவர்கள் என்று கூறுவாருமுளர்.
பல்லவர் காலத்திற் பெருக்கெடுத்துச் சென்ற பத்தி மார்க்கம் அறவொழுக்கங்களைச் சிறப்பாகப் பாராட்டிய சங்க மருவிய காலத்தின் பிற்பகுதியில் ஊற்றெடுக்கத் தொடங்கிற் றெனலாம். அக்காலப்பகுதியில் வாழ்ந்த பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மு த ல ாழ் வார் க ளு ம் காரைக்காலம்மையார் முதலிய சைவப் பெரியார்களும் சிறந்த பத்திவைராக்கிய முடையோராய், இறைவன் திருவுருவைக் கண்டனுபவித்தல், அவன் புகழ் பாடுதல் என்பவற்றைத் தம் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு தம் காலத்தைக் கழித்தனர். உலகவாழ்விற் பிறிதொன்றனையும் விரும்பாது இறைவன் திருமேனியழகில் லயப்பட்டுநிற்ற லொன்றனையே அவாவின ரென்பதை அவர் பாடிய திருவந்தாதிகள் வாயி லாக அறியக்கிடக்கின்றது. காரைக்காலம்மையார் பாடியருளிய பிரபந்தங்கள் அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் என்பன. அவையாவும் 140 செய்யுட்களை உடையனவெனி னும், அவை பல்லவர் காலத்துச் சமய இலக்கியங்களை ஒரு

சங்கமருவிய காலம்
61
லக்தியட்லபான்று 9 ஓர் அ
புதுவழியிற் செல்லவைத்த அத்துணைப் பெருமை வாய்ந்தவை. அம்மையார் அருளிச்செய்த பிரபந்தங்களும் முதலாழ்வார்கள் அருளிச்செய்த திருவந்தாதிகளும் பல்லவர் காலத்துப் பத்திப் பாடல்கள் தோன்றுதற்கு ஓர் அறிகுறியாக அவற்றுக்குமுன் விடிவெள்ளிபோன்று உதயமானவையெனினும், பல்லவர்கால இலக்கியப்போக்கிற்கு வழிகாட்டிவைத்த பெருமை அம்மை யார் அருளிச்செய்த பிரபந்தங்களுக்கே உண்டு. அதனால், அம்மையார் தமிழ்நாட்டுப் பெரும்புலவர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க சிறப்புவாய்ந்தவர் எனக் கூறுதல் பொருத்த முடைத்தாகும்.
நான்கு சிறிய பிரபந்தங்களை இயற்றிய ஒருவரைப் பெரும் புலவர் வரிசையில் வைத்து எண்ணுவது எவ்வாறு பொருக் தும் என்று ஒருவர் வினாவலாம். ஒரு புலவனின் பெருமையை அல்லது சிறுமையை அவன் பாடிய பாடற்றொகையை மட் டும் கொண்டு அளவிடுதல் பொருந்தாது. அது அவன் பாடியவற்றின் சிறப்பில் அல்லது சிறப்பின்மையிற்றான் பெரும் பாலும் தங்கியிருக்கிறது. அம்மையார் இயற்றியவை நான்கு சிறிய பிரபந்தங்களெனினும், அவை பல்லவர் காலத்தில் வாழ்ந்த நாயன்மார்களுக்கும் ஆழ்வார்களுக்கும் பொருள் மரபிலும் யாப்பமைதியிலும் வழிக்ாட்டி நின்றதனால், அவரை ஒரு பெரும்புலவர் என்றே கொள்ளவேண்டி யிருக்கிறது. காலத்தின் போக்கிற்கு இணங்க அம்மையார் தம்முடைய பத்தியனுபவங்களை வெண்பாயாப்பைக் கைக்கொண்டு அற் புதத் திருவந்தாதியிற் புலப்படுத்தினர். "ஏனெனில், வெண்பா யாப்பு ஒன்றுமே சங்கமருவிய காலத்திற் பெருவழக்காயிருந் தது. வினாவுக்கு இறுக்கும் விடையிற் காணப்படவேண்டிய சொற்சுருக்கம், கருதிய பொருளன்றிப் பிறிது பொருள் புண ராமை முதலிய பண்புகளும் வெண்டளை பிழையாமை செப்ப லோசை குன்றாமை முதலிய கட்டுப்பாடுகளும் உடையதாக விளங்கும் வெண்பாயாப்பு உணர்ச்சிபேதங்களையும் தெய் வானுபவங்களையும் வெளிப்படுத்துதற்கு ஏற்ற கருவியாகாது.

Page 40
62. தமிழ் இலக்கிய வரலாறு
இதனை அம்மையார் நன்கு அறிந்து கட்டளைக்கலித்துறையைத் திருவிரட்டைமணிமாலையிலும் விருத்தப்பாவைத் திருவாலங் காட்டு மூத்ததிருப்பதிகங்களிலும் கையாண்டுள்ளனர். இவ் வாறு அம்மையார் காட்டிய வழியைப் பல்ல்வர் காலத்துப் புலவர்கள் பின்பற்றி விருத்தம் முதலிய பாவினங்களைக் கையாண்டு தம்முடைய பத்திப்பெருக்கை வெளிப்படுத்தினர். இதனுலேதான் தமிழிலக்கிய வரலாற்றில் அம்மையார் ஒரு புதிய இலக்கிய மரபினை ஆரம்பித்துவைத்தனர் எனக் கொள்ளப்படுகின்றது.
முதலாழ்வார்கள் மூவரும் காரைக்காலம்மையாரும் பாடி யருளிய திருவந்தாதிகள் சிறந்த பத்தியனுபவங்களைப் புலப் படுத்துவதோடு உயர்ந்த கவிதைகளிற் காணப்படும் தெளிவு, உணர்ச்சிப்பெருக்கு, பொருட்செறிவு, ஒசைகயம் முதலிய சிறப்பியல்புகளை உடையனவாக விளங்குதலால், அவற்றிற்குத் தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு தனிப்பெருமை எக்காலத் திலுமுண்டு. பொய்கையாழ்வார் LITLGB:
பழுதே பலபகலும் போயினவென் றஞ்சி அழுதேன் அரவணைமேற் கண்டு - தொழுதேன் கடலோதம் காலலைப்பக் கண்வளரும் செங்கண் மு அடலோத வண்ண ர டி. பூதித்தாழ்வார் பாட்டு:
மாலே நெடியோனே கண்ணனே விண்ணவர்க்கு மேலா வியன் துளாய்க் கண்ணியனே-மேலால் விளவின்காய் கன்றினுல் வீழ்த்தவனே என்தன் அளவன்ருல் யானுடைய அன்பு. பேயாழ்வார் பாட்டு:
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன்-செருக்கிளரும் பொன்னழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன் என்னுழி வண்ணன் பால் இன்று,

சங்கமருவிய காலம் 63
ÖsT60).Já,öTQlb60)|DUITs LITL(B:
அன்றுந் திருவுருவங் காணுதே ஆட்பட்டேன் இன்றுந் திருவுருவங் காண்கிலேன்-என்றுந்தான் எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன் எவ்வுருவோ நின்னுருவ மேது. 5. உரைநடை இலக்கியம்
சங்ககாலப் பகுதியிலும் சங்கமருவிய காலப் பகுதியிலு மெழுந்த செய்யுளிலக்கியங்களைப் பற்றி மட்டுமே இதுகாறுங் கூறி, உரைநடை யிலக்கியங்களைப்பற்றி யாதும் குறிப்பிடா ைம ய ர ல், அக்காலப் பகுதிகளில் உரைநடையிலக்கியங்கள் தமிழில் எழவில்லையென்பது கருத்தன்று.
பாட்டிடை வைத்த குறிப்பினுணும் பாவின் றெழுந்த கிளவியானும் பொருண் மரபில்லாப் பொய்மொழியானும் பொருளொடு புணர்ந்த நகைமொழியானுமென் றுாைவகை நடையே நான்கென மொழிப, எனத் தொல்காப்பியர் கூறுவதை நோக்குமிட்த்து அவர் காலத்திற்கு முன்னேயும் தமிழ் உரைநடையில் நால்வகை யிலக்கியங்கள் இருந்தனவென்று கருதக்கிடக்கின்றது. அவை யாவும் அழிந்துபோயின. தொல்காப்பியர் காலத்துக்குப் பின்னும் அத்தகைய உரைநடை யிலக்கியங்கள் எழுந்திருத்தல் வேண்டும். அவையாவும் எமக்குக் கிடைத்தில. அதனுல், பண்டைக்காலத்து உரை நூல்களைப்பற்றி நாம் யாதும் கூறமுடியாதிருக்கின்றது.
எம் மொழியிலாயினும் இலக்கியம் தோன்றும்பொழுது அது முதலிற் செய்யுள் வடிவத்திலேயே தோன்றுகின்றது. பாட் டைத் தொடர்ந்து உரைநடை வெளிவருகின்றது. எனவே, தமிழ்மொழியிலும் முதலிலே தோன்றியது பாட்டு என்றும் அதனைத் தொடர்ந்து உரைநடை தோன்றிற்றென்றும் கொள் ளுதல் பொருத்தமுடைத்தாகும். அங் வன ம் Ꭷ-Ꮫ0)ᏘfᏏᏛ0)Ꮮ--

Page 41
தமிழ் இலக்கிய வரலாறு
தோன்றும்பொழுது, அது அக்காலத்து வழக்கிலுள்ள செய் யுளையொத்த ஒரு நடையிலேதான் தோன்றுகிறது. எனவே, உரைநடை தோன்றுகின்ற காலத்துச் செய்யுள் நடைக்கும் அவ்வுரை நடைக்கும் உள்ள பேதம் பெரிதன்று. காலஞ் செல்லச் செல்ல அவற்றிற்கிடையேயுள்ள வேறுபாடு கூடிக் கொண்டு போகிறது. கால க தி யில் அவ்வுரைகடைக்கும் அதற்கு ஆதாரமாயிருந்த செய்யுள் நடைக்கும் ஒரு தொடர் பும் இருந்திருக்கவில்லை என்று ஒருவர் கொள்ளக்கூடிய நிலைக்கு உரைநடை மாற்றம் அடைந்துவிடுகின்றது. தமிழில் உரைநடை எப்பொழுது ஆரம்பித்தது, அது எவ்வாறு வளர்ந்து வந்தது எ ன் று நாம் திட்டமாகக் கூறமுடியாதிருப்பினும், சிலப்பதிகாரத்திற் காணப்படும் உரைநடைப் பகுதிகள் பாட் டினை ஒத்த ஒசைச் சிறப்பினவாகக் காணப்படலால், தமிழில் உரைநடை சிலப்பதிகார காலத்தையொட்டி ஆரம்பித்தது எனக் கொள்ளுதல் பிழையாகாது. சிலப்பதிகாரம் பாட்டும் உரை யும் கலந்துவந்த காவியமாகலின், அது உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று அழைக்கப்படுகின்றது. அங் நூலிலுள்ள கானல்வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை என்னும் பகுதிகளில் வந்துள்ள உரைப்பாகங்களைப் பார்க் கும்போது, அவை தமிழுரைநடையின் ஆரம்ப நிலையினை ஞாபகப்படுத்தி நிற்கின்றன. மேல்வரும் உரைப்பகுதி ஆய்ச் சியர் குரவையின் தொடக்கத்திலுள்ளது:
கய லெழுதிய இமய நெற்றியின் அய லெழுதிய புலியும் வில்லும் நாவலந் தண்பொழின் மன்னர் ஏவல் கேட்பப் பாரா சாண்ட மாலை வெண்குடைப் பாண்டியன் கோயிலிற் காலை முரசங் கனேகுரல் இயம்புமாகலின் நெய்ம் முறை நமக்கின்ரு மென்று ஐயை தன் மகளைக் கூஉய்க் கடை கயிறு மத்துங் கொண் டிடை முதுமகள் வந்து தோன்றுமன்,
 

சங்கமருவிய காலம் 65
செய்யுளிலுள்ள ஒசை நுட்பங்களை அறிந்துகொள்ள Uplạ. யாதவர்கள் இவ்வுரைப்பகுதியைப் பாட்டென்றே கருதிக் கொள்வார்கள். செய்யுட்களுக்குச் சிறப்பாக உரிய எதுகைத் தொடை முதலியன இவ்வுரைப்பகுதியிலும் வந்துள்ளன. சிலப்பதிகார காலத்தில் எழுந்த அகவற்பாட்டுக்கள் சில வற்றின்கண் அடியெதுகைத் தொடைகள் இடையீடின்றி வந்திருத்தலைக் காணலாம். அதேபோல, இவ்வுரைப்பகுதியி லும் கயல்-அயல், நாவல்-ஏவல், மாலை-காலை, நெய்ம்முறைஐயைதன், கடைகயிறு-இடை முதுமகள் என அடியெதுகைத் தொடைகள் இடையீடின்றி வந்துள்ளன. சிலப்பதிகாரத்தி லுள்ள அகவற்பாக்களுக்கும் இவ்வுரைப் பகுதிக்கும் தொடை யளவில் ஒப்புமை இருத்தல் கண்கூடு. இங்ங்னம் இவ்வுரைப் பகுதிக்கும் அந்நூலில் வரும் செய்யுட் பகுதிகளுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருத்தலால், சிலப்பதிகார காலத்தில் அல்லது அதற்குச் சிறிது முன்பு தமிழில் உரைநடை தோன்றியிருத்தல் கூடும் எனக் கொள்ளுதற்கு இடமுண்டா கிறது. சிலப்பதிகாரத்திலுள்ள வேறு உரைப்பகுதிகள் சில வற்றிலே வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய ஏனைப் பாக்களுக்குரிய ஓசைச் சிறப்புக்கள் வங் தி ரு த் த லை க் காணலாம். இத்தகைய உரைப்பகுதிகள் சிலப்பதிகாரத்தில் * உரைப்பாட்டு மடை' எனக் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றை * உரைப்பாட்டு' என்று கூறுவதிலிருந்து அவற்றின்கண் உரையின் பண்பும் பாட்டின் பண்பும் அடங்கியிருக்கின்றன என்பது தெரிகிறது. தமிழில் உரைநடை ஆரம்பித்தபொழுது, அது இவ்வாறு பாட்டைப்போன்ற நடையினையுடையதாய்
ஆரம்பித்தது என்று ஒருவாறு கூறலாம்.
பாட்டிடை வைத்த குறிப்பினும்' எனத் தொடங்கும் தொல்காப்பியச் சூத்திரத்தை நோக்கும்பொழுது, அந்நூல் எழுந்த காலத்திலே தமிழில் நால்வகை உரைநடை இலக்கி யங்கள் இருந்தன என்பது பெறப்படுகின்றது. " பாட்டிடை
9

Page 42
66 தமிழ் இலக்கிய வரலாறு
人 வைத்த குறிப்பு' என்பதையும்
தொன்மை தானே
உரையொடு புணர்ந்த பழைமை மேற்றே என்னும் சூத்திரத்தையும் நாம் ஒருங்கு சேர்த்துப் பார்க்கும் பொழுது, பாட்டும் இடையிடையே உரைநடைப் பகுதிகளும் கலந்துவந்த நூல்கள் பல அக்காலத்தில் இருந்திருத்தல் வேண்டும் என நாம் கொள்ளக்கிடக்கின்றது. பிற மொழி களிலுள்ள ஆரம்ப உரைநடை நூல்களும் பாட்டும் உரையுங் கலந்த நூல்களாகவே காணப்படுகின்றன. வடமொழியில் இத்தகைய நடையினைச் சம்புகடை என்பர். தமிழில் இத்தகைய நடையில் எழுந்த நூல்களுக்குப் பெருந்தேவனுர் பாரதம்,
தகடுர் யாத்திரை முதலியவற்றை உதாரணமாகக்காட்டுவர்.
அங்ஙனம் உரையும் பாட்டுமாக வருகின்ற முறையைத்
தொடர்ந்து தனியே உரை நடையில் இலக்கியம் தோன்றுத
லுண்டு. இத்தகைய வளர்ச்சி முறையினைத் தமிழில் மட்டுமன்றி
ஏனை மொழிகளிலும் காணலாம்.
6. இலக்கியப் பண்பு
சூழ்நிலைக்கிணங்க இலக்கியம் அமைகிறது என்பதற்குச்
சங்கமருவிய காலத்தில் எழுந்த இலக்கியம் ஒரு தக்க
எடுத்துக்காட்டாகும். சங்கமருவிய காலத்துச் சூழ்நிலை சங்க காலத்துச் சூழ்நிலையிலிருந்து வேறுபட்டிருந்தமையால், சங்க இலக்கியத்திலிருந்து வேறுபட்ட இலக்கியம் சங்கமருவிய காலத்தில் எழலாயிற்று. களப்பிரராகிய பிற நாட்டினர் தமிழ்நாட்டைக் கைப்பற்றி ஆளக்கூடிய அத்துணை இழிந்த நிலையிலே தமிழ்நாடு அக்காலத்தில் இருந்திருக்கிறது. அக் காலப்பகுதி தமிழ்நாட்டின் சரித்திரத்தில் ஓர் இருளடைந்த காலப்பகுதியெனக் கருதப்படுகிறது. அங்ங்னம் ஒரு நாடு வலியிழந்திருக்குங் காலத்தில் அந்நாட்டு மக்களின் பண்பாடு ஒழுக்க நெறி முதலியன குன்றிப்போதல் இயல்பாகும் சமண முனிவர்களும் பெளத்த சங்கியாசிகளும் தத்தம் சமயக் கொள்கைகளைப் பரப்பி, நாட்டு மக்களைத் தம்வழி
 

சங்கமருவிய காலம் (6.
ஒழுகச் செய்வதற்கு அக்காலநிலை ஏற்றதொன்றக இருந்தது.
அதனுல், அச்சமயங்கள் போற்றிய அறநெறிகளும் பிறவும் நூல்கள் வாயிலாகவும் மக்களிடையே பரப்பப்பட்டன. அக்
காலத்தில் வடநூற் கருத்துக்கள், அறநெறிகள், ஒழுக்க
ஆசாரங்கள் முதலியனவும் தமிழ்நாட்டிற் பரவலாயின. அதனுல், வடநாட்டினர் போற்றிய பண்பாடு முதலியவற்றைத் தமிழ் மக்களும் போற்றத் தொடங்கினர். அதன் விழைவாக அறநூல்களும் சமயப்பிரசார நூல்களும் தமிழில் எழத் தொடங்கின. இங்ங்ணம் ஒரு புதிய சூழ்நிலை ஏற்பட இலக்கிய வரலாற்றிலும் ஒரு புது மரபு தோன்றலாயிற்று.
சங்கமருவிய காலப்பகுதியைப் பொதுவாக ஓர் அறநூற் காலம் என்று கூறலாம். அக்காலத்தில் எழுந்த நூல்களுட் பெரும்பாலானவை அறங்களைப் போற்றுவனவாக உள்ளன். அவை யாவற்றுள்ளும் தலைசிறந்து விளங்குவது திருக் குறளாகும். நீதிகளையும் அறவொழுக்கங்களையும் எடுத்துக் கூறு தற்கு வெண் பா அகவற்பாவிலும் , சிறந்தது. அதனுல், சங்கமருவிய காலத்துப் புலவர்கள் அறநூல்களை வெண்பாவில் இயற்றினர். அக்காலத்தில் வெண்பா பெரு வழக்காயிருந்தமையால், அகத்தினைப் பொருள் முதலிய வற்றைக் கூறுதற்கும் புலவர்கள் அதனைப் பயன்படுத்தினர். அகவல், வெண்பா, வஞ்சி, கலிப்பா என்னும் கால் வகைப் பாவினுள், அகவற்பாவுக்குரிய அகவலோசையும் வெண்பாவுக்குரிய செப்பலோசையும் மூலவோசைகள் என்று சொல்லப்படுவன. அவை பண்டைக்காலத்து உலக வழக்கிற் காணப்பட்டவை. அவற்றிலிருந்து முறையே வஞ்சியும் கலியும் பிறந்தன என்பர் தொல்காப்பியர். அவை நான்கினு மிருந்தே தாழிசை, துறை, விருத்தம் என்னும் பாவினங்கள் தோன்றலாயின. அகவலும் அதனேடு தொடர்புடைய வஞ்சியும் சங்ககாலப் பகுதியிற் சிறப்பாக வழங்கப்பட்டமை போலவே, வெண்பாவும் அதைேடு தொடர்புடைய கலியும் சங்கமருவிய காலப்பகுதியிற் சிறப்பாகக் கையாளப்பட்டன.

Page 43
68 தமிழ் இலக்கிய வரலாறு
பலவாறகச் சொல்லிப் புலம்புதல், அழைத்தல் முதலிய வற்றைப் புலப்படுத்துதற்குச் சங்ககாலப் புலவர்கள் அகவ. லோசையையுட்ைய அகவற்பாவை எவ்வாறு பொருத்த முடைய தொன்ருகக் கருதினரோ அவ்வாறே சொல்லுதல், விடையிறுத்தல், ஏவுதல் முதலியவற்றிற்குச் செப்பலோசையை யுடைய வெண்பாவைப் பொருத்தமுடைய தொன்றகச் சங்க மருவிய காலத்துப் புலவர்கள் கருதினர். காதலையும் வீரத்தையும் சிறப்பாகப் பாராட்டிச் செய்யுள் செய்த சங்க காலப் புலவர்கள் அகவற்பாவைப் பெரிதும் கையாண்டனர். அறநெறிகளையும் ஒழுக்க ஆசாரங்களையும் சிறப்பாகப் பாராட்டிய சங்கமருவியகாலப் புலவர்கள் வெண்பாவைப் பெரிதும் கையாண்டனர். வெண்மை தூய்மையைக் குறிப்ப தனுல் தூய்மை பொருந்திய பா வெண்பா எனப்பட்டது. குறிப்பாகவும் வெளிப்படையாகவும் பல பொருளையுணர்த்தாது, கருதிய பொருளொன்றை மட்டுமே வெளிப்படையாக உணர்த்துதல் வெண்பாவிற்குரிய தூய்மையாகும். வினுவிற்கு விடையிறுக்கும்பொழுது, அவ்விடை வினுவிய பொருளை யன்றி வேறெதனையும் உணர்த்தாது, தெளிவும் சொற்சுருக்க மும் உடையதாய் அமைதல் சிறப்பாகும். விடையிறுத்தற் ருெழிலைச் செய்யும் செப்பலோசையையுடைய வெண்பாவும் தெளிவு, சொற்சுருக்கம், வேறு பொருளை யுணர்த்தாது கருதியபொருளை மாத்திரமே உணர்த்தல் முதலிய இலக் கணங்களையுடையதாய் அமைதல் இன்றியமையாதது. அத் தகைய வெண்பா அறநெறி முதலியவற்றை யெடுத்துக் கூறுதற்கு ஏனைய பாவகைகளிலும் சிறந்ததொன்று. அதனுலேயே அறநெறியைக் கூறும் நூல்களுட் பெரும் பாலன வெண்பா யாப்பில் அமைந்துள்ளன. அறவொழுக் கங்களை மக்கள் போற்றிய சங்கமருவிய காலப்பகுதியில் வெண்பா சிறப்பாகப் பாராட்டப்பட்டமையும், அது அந்த ணர்ப்பாவென்று அழைக்கப்பட்டமையும் ஈண்டுக் குறிப் பிடத்தக்கவை. காதல், வீரம் முதலியவற்றைப் பாடுதற்குச்

சங்கமருவிய காலம் 69
சங்ககாலப் புலவர்கள் சிறப்பாக அகவற்பாவைக் கையாண்
டிருக்கச், சங்கமருவியகாலப் புலவர்கள் ஆப்டாவினைவிட்டு
அவற்றை வெண்பாவிற் பாடியமை, அக்காலத்தில் வெண் பாவிற்கிருந்த பெருமதிப்பைக் காட்டுகின்றது. அதற்குக்
கார்நாற்பது, களவழிகாற்பது, ஐந்திணையைம்பது முதலிய
நூல்கள் தக்க உதாரணங்களாகும். சங்கமருவியகாலப் பிற் பகுதியில் வாழ்ந்த முதலாழ்வார்களும் காரைக்காலம்மையார் முதலிய சைவப் பெரியார்களும் தம் உணர்ச்சியனுபவங்களை வெண்பாவிற் புலப்படுத்தியிருப்பதும் அக்காலத்தில் வெண் பாவிற்கிருந்த பெருமதிப்பைக் காட்டுகின்றது. ,
சங்க காலத்தில் வழங்கிய அகத்திணை புறத்திணைப்
பொருள் மரபுபற்றிச் சுருக்கமாக முந்திய அதிகாரத்திற்குறித் துள்ளோம். அப்பொருள் மரபே சங்கமருவிய காலப் பகுதியிலும்
வழங்கலாயிற்று. சங்கப் புலவர்கள் துறைப்பொருள் ஒன்றை
ஒரு செய்யுளில் அமைத்துப் பாடினர். அத்தகைய தனிச் செய்யுட்களே சங்கத் தொகை நூல்களிலுள்ளன. துறைகள் ஒன்றன்பின் ஒன்றகத் தொடர்ந்துவரச் செய்யுளியற்றும் மரபு சங்கமருவிய காலத்திற் பெருவழக்காக இருந்திருக் கிறது. அங்ஙனம் வரும் செய்யுட்களைக் கார்நாற்பது முதலிய கீழ்க்கணக்கு நூல்களிற் காணலாம். அந்நூல்களை நோக்கும் பொழுது, பிற்காலத்திலே தோன்றிய கோவை முதலிய 凸苏 பந்தங்களுக்கு அவை வழிகாட்டியாக விளங்கினவென ஒருவாறு கொள்ளலாம். புலவன் தான் கூற எடுத்துக் கொண்ட பொருளைப் பல செய்யுட்களில் அமைத்துப் பாடும்
வழக்கு சங்கமாவிய காலம் தொடக்கமாகவே வந்திருக்கிறது. ழககு ே (5 த தருககிறது
பத்திப்பாடல் மரபு இக்காலப் பிரிவில் ஆரம்பித்த போதும், அது விருத்தியடைந்த வகையினைப் பல்லவர் காலத்து இலக்கியங்களிற் சிறப்பாகக் காணலாம். பத்தி யனுபவங்களைப் புலப்படுத்துதற்கு ஏற்ற கவிமரபு சங்கமருவிய காலப்பகுதியிலேயே தோன்றலாயிற்று. அக்காலத்திற்குமுன்

Page 44
70 தமிழ் இலக்கிய வரலாறு
கடவுளரை வாழ்த்துதற்கும் பரவுதற்கும் உரிய மரபு இருந்
திருக்கிறது என்பதற்குத் தொல்காப்பியத்திற் சான்றுகளுள.
பத்தியனுபவம் அம்மரபுக்குள் அடங்காமையால், அதனைப் புலப்படுத்துதற்கு அகத்தினை புறத்திணைப் பொருள் மரபு
களையும் பயன்படுத்தவேண்டியிருந்தது. அத்தகைய ஒரு
புதிய கவிமரபு காரைக்காலம்மையார் காலத்திலே தோன்றிற்று. அங்ங்னம் அது தோன்றி வளர்ந்தவாற்றை அடுத்துவரும்
அதிகாரத்திற் கூறுவோம்.
以
勋》
 

111 பல்லவர் காலம்
கி. பி. ஆரும் நூற்றண்டின் பிற்பகுதியோடு முடிந்த தாகக் கூறிய சங்கமருவிய காலப்பகுதிக்கும், கி. பி. ஒன்பதாம் நூற்றண்டின் பிற்பகுதியில் ஆரம்பித்த சோழ ர்ாட்சிக்காலப் பகுதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதி பல்லவர் காலம் எனப்படும். அது ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகளைக் கொண்டது. 1. பல்லவர் காலத்துத் தமிழ்நாடு
சங்கமருவியகாலப் பிற்பகுதியிலே தமிழ் நாட்டை ஆண்டு கொண்டிருந்த களப்பிரரின் ஆட்சி கி. பி. ஆறும் நூற்றண்டில் வலிகுன்ற, அவர்க்குக் கீழ்ப்பட்டிருந்த பாண்டியர் அவருடன் போர்செய்து பாண்டிநாட்டைக் கைப்பற்றினர். அந்நூற் றண்டிற் பல்லவர் தமிழ்நாட்டிற் புகுந்தமை விசேடமாக இங்கு குறிப்பிடத்தக்கது. பல்லவரென் பார் தமிழ்நாட்டிற்கு வடக்கே சாதவாகன வமிசத்தினர் சிறப்புடன் விளங்கிய காலத்தில் அவர் தம் ஆட்சிக்குட்பட்டிருந்த சில மாகாணங் களுக்குத் தலைவராயிருந்துவந்த ஒரு வகுப்பினர். சாதவாகனப் பேரரசு நிலைதளரவே, பல்லவர் தாம் தலைமைவகித்த மாகாணங் களுக்குத் தாமே அரசராகிப் பிற நாடுகளையும் தம் ஆட்சிக் குட்படுத்தினர். தமிழ்நாட்டின் வடபாகத்தையும் தமதாக்கக் கருதியிருந்த பல்லவர், களப்பிரரின் ஆட்சி வலிகுன்றியிருப் பதை அறிந்து, அவருடன் போர்செய்து முதலிலே தொண்டை மண்டலத்தையும் பின் சோழ மண்டலத்தையும் கைப்பற் றினர். களப்பிரரை வென்ற பாண்டியன் கடுங்கோனின் காலந்தொடக்கம் முந்நூறு ஆண்டுகளுக்குமேற் பாண்டிநாடு பாண்டிய மன்னரால் ஆளப்பட்டுவந்தது. தமிழ்நாட்டின் மேற்குப்பகுதியைச் சேரமன்னர் ஆண்டுவந்தனர். பல்லவ அரசன் சிம்ம விஷ்ணுவின் மகன் மகேந்திரவர்மனும் “நின்றசீர் நெடுமாறன்’ எனச் சுந்தரமூர்த்திசுவாமிகளாற் பாராட்டப் பட்ட பாண்டியன் அரிகேசரி மாறவர்மனும் (கி. பி. 670-710)

Page 45
2 தமிழ் இலக்கிய வரலாறு
தமிழ்நாட்டை ஆட்சிபுரிந்த காலந்தொடக்கம் பாண்டியர்க்கும் பல்லவர்க்குமிடையே பகை மூண்டுவந்தது. திருப்புறம்பியம் என்னுமிடத்தில் நடைபெற்ற போரிலே பாண்டியரைப் பல்லவர் வெற்றிபெற்ற காலம் வரையும் (கி. பி. 880) இப்பகை நீடித்திருந்தது. மகேந்திரவர்மன் காலந்தொடக்கமாகத் தெற் கிலிருந்த பாண்டியரோடு மட்டுமன்றி வடக்கிலிருந்த கீழைச் சாளுக்கிய வமிசத்து அரசர்களோடும் பல்லவ அரசர்கள் பகைமைபூண்டு போர்புரிந்துவந்தனர். அதன் பயனுகப் பல்லவரின் ஆட்சி கி. பி. ஒன்பதாம் நூற்றண்டின் ஆரம் பத்தில் வலிகுன்றத்தொடங்கி, பல்லவருக்கும் பாண்டியருக்கும் திருப்புறம்பியத்தில் நடைபெற்ற போருக்குப்பின் முடி வடைந்தது. பல்லவர் வலிகுன்ற அவர்க்கீழ்ச் சிற்றரசரா யிருந்த சோழமன்னர் பல்லவரையும் பாண்டியரையும் போரில் வென்று தமிழ்நாடு முழுதும் ஆதிக்கம் செலுத்திய வரலாறு பின்னர்க் கூறப்படும். களப்பிரரை வென்ற பல்லவராட்சி சிம்ம விஷ்ணு (கி. பி. 575 - 615) காலந் தொடக்கம் பல்லவ அரசன் நிருபதுங்கவர்மன் (கி. பி. 850-882) காலம் வரை ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகளுக்குத் தமிழ் நாட்டில் நிலைபெற்றிருந்தது. அக்காலப் பகுதியே தமிழிலக்கிய வரலாற்றிற் பல்லவர் காலமென வழங்கும். 2 சமயநிலை
சமய சம்பந்தமான தோத்திரப் பாடல்களே பல்லவ ராட்சிக் காலத்துத் தமிழிலக்கிய வரலாற்றில் விசேடமாகக் 'குறிப்பிடத்தக்கவை. ஆகவே, அக்காலத்து இலக்கியப்போக் கினை அறிந்து கொள்ளுதற்கு அக்காலத்துச் சமய நிலையினைப் பற்றி ஓரளவாயினும் நாம் அறிதல்வேண்டும். சங்கமருவிய காலப் பகுதியின் ஆரம்பத்தில் ஒன்றேடொன்று பகைமை பாராட்டாது வளர்ந்துவந்த சைவம், வைணவம், சமணம், சாக்கியமாகிய நால்வகைச் சமயங்களுட் சமணசமயமே அக்காலப்பகுதியின் முடிவில் உயர்நிலை பெற்றிருந்தது. சோழன் கோச்செங்கணுன் சிவனுக்கும் திருமாலுக்கும்
 
 

பல்லவர் காலம் 73
ப்ல கோவில்களை நாடெங்கும் கட்டி ஆதரித்த சைவம் வைணவமாகிய வைதிக சமயங்களும் கன்னிலையிலிருந்தன வென்பதை முதலாழ்வார்களும் காரைக்காலம்மையார், நக்கீர தேவ நாயனுர் முதலியோரும் அருளிச்செய்த திருப்பாடல்களிலி ருந்து ஒருவாறு அறியலாம். எவ்வகையானும் சைவத்தையும் வைணவத்தையும் அழித்துத் தம் சமயத்தை நாடெங்கும் பப்பும் கருத்துடையராயிருந்த சமணமுனிவர்கள் அதற்கு வேண்டிய வழிகளைக் கையாளத் தொடங்கினர். கல்வியறிவி லும் தவவொழுக்கத்திலும் சிறந்து விளங்கிய சமணர்கள் பள்ளிக்கூடங்களை அமைத்து மக்களுக்குக் கல்வி கற்பித்தும் அறங்களைப் போ தி த் தும் சமணசமயப் பிரசாரத்திற்கு வேண்டிய நூல்களை யெழுதியும் பிற தொண்டுகளில் ஈடு பட்டும் மதமாற்றஞ் செய்யப் பலவாறு முயன்றதனுல், மக்களுட் பலர் வைதிகசமயங்களைக் கைவிட்டுச் சமண சமயத்தைத் தழுவலாயினர். காட்டுத்தீப்போல நாடெங்கும் பரவத்தொடங்கிய சமணசமயம் ஈற்றில் அரசர்கள் மனத்தை யும் கவர்ந்தது. கி. பி. ஏழாம் நூற்றண்டின் தொடக்கத்திலே தமிழ்நாட்டில் அரசு செய்த பல்லவ அரசன் மகேந்திரவர்மனும் பாண்டிய அரசன் நின்றசீர்நெடுமாறனும் சமணசமயத்தைத் தழுவினர். அரசனெவ்வழி குடிகளுமவ்வழி' என்ற முது மொழிக்கிணங்க, வைதிக மார்க்கங்களைக் கைவிட்டு மக்கள் திரள் திரளாகச் சமணத்தைத் தழுவத்தொடங்கினர். அதனை வளர்த்தற்குவேண்டிய பலவுதவிகளையும் அரசர்கள் செய்து வந்தனர். சிவனுக்கும் திருமாலுக்கும் அக்காலத்திற் கட்டப்& பட்டிருந்த கோவில்கள் யாவும் செங்கல்லாலானவை. அவற் றைப் போற்றுவாரில்லாமையினுல் அவை விரைவில் அழியத் தொடங்கின. அவற்றுட் சில சமணப் பள்ளிகளாகவும் மாற்றப்பட்டனவென்பர்.
கோச்செங்கணுன் காலந்தொடக்கம் சைவம் வைணவ மாகிய இரு சமயங்களும் மக்களாற் பட்சபாத'மின்றி ஒப்ப நோக்கிப் பாராட்டப்பட்டுவந்தன. அக்காலத்திலிருந்த கோவில்
10

Page 46
தமிழ் இலக்கிய வரலாறு
கள் சிலவற்றுட் சிவனுக்கும் திருமாலுக்கும் ஒரே உருவச் சிலையினையமைத்து இரு கடவுளரையும் ஒரு வ ர் போ லப் பாவித்து வணங்கினர் என்று கருதக்கிடக்கின்றது. அவ்வாறு இருசமயங்களும் ஒன்றுபட்டு நின்றிராவிடின், பரவிக் கொண்டு சென்ற சமணசமயத்தை எ தி ர் க்க க் கூடிய ஆற்றல் வைதிக சமயங்களுக்கு வந்திருக்கமாட்டாது. சமண சமயத்தைத் தழுவிய தமிழ்நாட்டு அரசர்களுள் மகேந்திர வர்மனைத் திருநாவுக்கரசரும், நின்றசீர்நெடுமாறனைத் திருஞான சம்பந்தசுவாமிகளும் சைவர்களாக்கிய காலந்தொடக்கமாகச் சைவமும் வைணவமும் தமிழ்நாட்டிலே தழைக்கலுற்றன. சமண சமயத்தை எதிர்த்துப் போராடவேண்டியிருந்த காலத் தில் ஒற்றுமைப்பட்டு நின்ற சைவமும் வைணவமும், சமணம் வலியிழந்து நின்ற காலத்தில் ஒன்றையொன்று பகைக்கத் தொடங்கின. அச்சமயங்களுள் ஒன்றையொன்று அழித்து விடக்கூடிய அத்துணைப் பெரும்பகையாக அப்பகை மூளா திருந்தபோதிலும் பல்லவராட்சிக் காலத்திலும் அதற்குப் பின்னும் அது ஓரளவிற்குத் தமிழ்நாட்டில் நிலவிற்றென்றே அறியக்கிடக்கின்றது. வைதிக சமயங்களிரண்டும் வளர்ந் தோங்குதற்கு அவற்றிற்கிடையிலிருந்த பகைமையும் ஒரு வகையில் உதவிபுரிந்ததென்றே கூறல்வேண்டும்.
、} அச்சமயங்கள் தழைக்கவே, சமணம் பெளத்தமாகிய சமயங்களுக்கு நாட்டிலிருந்த ஆதரவு குன்றத்தொடங்கிற்று; அதற்குச் சமண பெளத்த சந்நியாசிகளிடத்திற் காணப்பட்ட * சில குறைகளும் காரணமெனலாம். வைதிக சமயங்கள் தழைக்கத் தொடங்கியதுமட்டுமன்றி, சமண முனிவர்களின் போலிவேடம், ஒழுக்கக்கேடு முதலியனவும், அரசர்கள் மதம் மாறியதும் பிறவும் சமண சமயத்தின் தளர்ச்சிக்குக் காரண மென்பதைச் சமணர்கள் பலரும் உணர்ந்தனர். அதனுல், தம்மிடத்திற் காணப்பட்ட குறைகளை நீக்குவதாலும், மக்க ளுக்குக் கல்வி கற்பித்தல் முதலிய தொண்டுகளைச் செய்வ
*காரைக்காலம்மையார், முதலாழ்வார் பிரபந்தங்களை நோக்குக,
 
 

பல்லவர் காலம் 75 தாலும் மக்களின் அன்பைப்பெறலாம் என்பதை உணர்ந்து, அவற்றைச் செய்து மக்களைத் தம்வசப்படுத்த முயன்றனர். இவ்வாறு தமிழ்நாட்டிற் கல்வியை விருத்திசெய்யும் பணியில், பெளத்தரைவிடச் சமணரே பெரிதும் ஈடுபட்டு உழைத்தன, ரென்பது அவரியற்றிய நூல்களால் அறியக்கிடக்கின்றது. அவர் தமிழ் நூல்களுக்கு உரையெழுதியும் இலக்கியம், இலக்கணம், நிகண்டு முதலிய பல நூல்களை யியற்றியும் தமிழ்மொழியை வளர்த்துவந்தனர்.
3. கலைவளமும் இலக்கியப் பண்பும்
தமிழ்நாடு கலைவளம்பெற்று விளங்கியகாலம் பல்லவ ராட்சிக் காலமாகும். சிற்பம், ஓவியம், இசை, நடனம் முதலிய நுண்கலைகள் அவர் காலத்தில் உயர்நிலை பெற்றி ருந்தனவென்பது அவர் குடைந்தெடுத்த கோவில்களிலிருந்தும் அக்காலத்துச் சிலாசாசனங்களிலிருந்தும் அறியக்கிடக்கின் றது. பல்லவர் காலத்துப் பெருங்கோவில்களில் நடனமண் டபம், தருக்கமண்டபம் முதலிய பல மண்டபங்கள் அமைக் கப்பட்டிருந்தன; அதனுல், அக்கோவில்கள் சமயக்கல்வி, சாத்திரக்கல்வி, இசை, நடனம் முதலியவற்றை வளர்த்தற் குரிய இடங்களாகவும் விளங்கினவென்று ஆராய்ச்சியாளர் கூறுவர். எல்லாச் சமயத்தோரும் தத்தம் மதங்களை வளர்த்தற் பொருட்டு நாடெங்கும் பல மடங்களைக் கட்டினர். அவை: துறவிகளுக்குத் தங்குமிடமாகவும், திக்கற்றவர்க்குப் புகலிட மாகவும், மாணவர்கள் உண்டியும் உறையுளும் பெற்றுக் கலைபயிலிடமாகவும் விளங்கின. இவ்வாறு சமயத்தை வளர்த் தற்கெனக் கட்டப்பட்ட மடங்களும் பிறவும் மக்களின் அறிவு வளர்ச்சிக்கும் கலைவிருத்திக்கும் பெரிதும் பயன் பட்டன. திருஞானசம்பந்தசுவாமிகள் முதலிய சைவப்பெரி யார்கள் சிவனடியார்களுடன் ஊர்கள்தோறும் சென்று தங்கியிருந்து சமயத்தொண்டு செய்வதற்கு அக்காலத்தி லிருந்த சைவமடங்கள் பெரிதும் பயன்பட்டன. வைதிக சமயங்களை வளர்த்தற்பொருட்டு மறையவர் பலருக்கு

Page 47
ጝ6 தமிழ் இலக்கிய வரலாறு
மானியமாக நிலங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. அவர்கள் ஆகமம் முதலியவற்றைப் படித்தற்கு வடமொழிப் பாடசாலை கள் பல அக்காலத்தில் நிறுவப்பட்டன. சிவன், திருமால் முதலிய கடவுளர்க்குக் கோவில்கள் பலவெடுத்தும் அவற் றிற்கும் வேதியர்க்கும் பல நிலங்களை மானியமாகக் கொடுத்தும், மடங்களையாதரித்தும் வைதிக சமயங்களை வளர்த்ததோடு, பல்லவ அரசர்கள் இசைக்கலை, சிற்பக்கலை முதலிய இன்பக் கலைகளை யாதரித்தும்வந்தனர். பல்லவர் காலத்திலெழுந்த
இலக்கியங்கள், கோவில்கள், கல்வெட்டுக்கள் முதலியவற்றி
\ئر
லிருந்து அக்காலத்தில் கலைவளத்திலும் பிறவற்றிலும் நாட்டைந்திருந்த சிறப்பினை ஒருவாறு அறியலாம்.
அறநூல்களெழுந்த சங்கமருவிய காலப்பகுதியிலே தமிழிலக்கியப் போக்கில் வடமொழியின் சாயல் படியத் தொடங்கிய வகையினை காம் முந்திய அதிகாரத்திற் கூறினுேம், சிறிதுசிறிதாகத் தமிழிலக்கியம் வடமொழி
யிலக்கியப் போக்கைத் தழுவுதலைப் பல்லவர் காலத்தி
லெழுந்த இலக்கியங்களிலே தெளிவாகக் காணலாம். அக் காலத்திலே தமிழ்நாட்டை ஆட்சிபுரிந்த மகேந்திரவர்மன் முதலான பல்லவ அரசர்கள் வடமொழியினையும் வடமொழிப் புலவர்களையும் பெரிதும் போற்றிவந்தனர். வடமொழிக்குத்
தழிழ்காட்டிற் பெருமதிப்பு ஏற்பட்டிருந்த அக்காலத்தில்
வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் வடநூற் கருத்துக்களையும், அதி லுள்ள இதிகாச புராணக் கதைகளையும் அமைத்துச் செய்யுட் செய்யத்தொடங்கினர். சைவமும் வைணவமும் வேதாகமங் களைப் பிரமாணமாகக் கொள்வனவாதலின், வேதாகமப் பயிற்சி நாட்டிற் பரவுவதும் மக்கள் வேதாகமங்களையும் பிற வடமொழி நூல்களையும் போற்றுவதுமியல்பே. இவ்வாறு பல்லாற்றணும் வடமொழி தமிழ்நாட்டிற் போற்றப்படவே, அம்மொழிச் சொற்கள், கருத்துக்கள், இலக்கணங்கள்,
யாப்பமைதிகள் தமிழ்மொழியில் இடம்பெறலாயின; அன்றியும்,
வடமொழியிலக்கியப் போக்கினையும் தமிழ்மொழி தழுவத்

பல்லவர் காலம் 77
தொடங்கிற்று. தமிழுக்கே சிறப்பாகவுரியதும் சங்கமருவிய காலப்பகுதியிற் பெருவழக்காயிருந்ததுமாகிய வெண்பா யாப்பினைப் பல்லவர் காலத்துப் புலவர்கள் பெரிதும் கைக்கொள்ளாது, தமிழ்மொழிக்கும் வடமொழிக்கும் பொதுவா யுள்ள விருத்தப்பாவினையும் வேறு சில செய்யுள் வகையினை யும் போற்றத்தொடங்கினர். வினவுக்கு இறுக்கும் விடையைப் போன்று சொற் சுருக்கமும் பொருட்செறிவுமுள்ள வெண்பா யாப்பு ஒழுக்கநெறிகளை எடுத்துக்கூறுதற்குச் சிறந்ததெனி
னும், இறைவனிடத்தில் அடியார் கொண்டுள்ள பத்திப்
பெருக்கைப் புலப்படுத்துதற்கு விருத்தம் முதலிய பிற யாப்புக் களைப்போல அது அத்துணைச் சிறந்ததன்றெனக் கிருதிப் போலும் விருத்தம் முதலிய பாவினங்களைப் பல்லவர் காலத் திலிருந்த அடியார்கள் பெரிதும் விரும்பினர். சங்கமருவிய காலத்தின் பிற்பகுதியில் வாழ்ந்த முதலாழ்வார்களும் காரைக் காலம்மையாரும் இணையற்ற பத்திப் பாடல்களாகிய திருவக் தாதிகளை வெண்பாயாப்பிற் பாடியுள்ளனரன்றேவெனின், அவர்களைப்போல் உணர்ச்சிப் பெருக்கை வெண்பா வாயிலாக வெளிப்படுத்துதல் எல்லார்க்கும் எளிதன்று. அவ்வாறு வெண்பாவில் அற்புதத் திருவந்தாதி பாடிய அம்மை யாரும் தமது திருவிரட்டைமணிமாலையிற் கட்டளைக் கலித்துறையைக் கையாண்டதோடு திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்களை விருத்தப்பாவிலே பாடியருளினூர். அவருக்குப்பின் வங் த புலவர்கள் அப்பாவகைகளைப் பெரிதும் கையாளத் தொடங்கினர். தமிழ்நாட்டில் வடமொழிக் கல்வி விருத்திபெற்ற பல்லவராட்சிக் காலத்தில் விருத்தப் பாவை மட்டுமன்றி வேறுபல வடமொழி யாப்புக்களையும் தமிழ்ப்புலவர்கள் கையாளத் தொடங்கினர். அவ்வாறு தமிழின் கண் வந்த செய்யுள் வகைகளின் இலக்கணத்தைக் கூறும் யாப்பிலக்கண நூல்கள் பல பல்லவர் காலத்தில் எழுந்தன. புதிய இச்செய்யுள் வகைகளைத் தமிழ்ப்புலவர்கள் கையாண்ட

Page 48
78
தமிழ் இலக்கிய வரலாறு
போதினும், அவர்கள் வெண்பாவை முற்றாகத் தள்ளிவிட வில்லை. அக்காலத்திலெழுந்த சாசனங்களும் பாரத வெண்பா முதலிய இதிகாசங்களுமே இதற்குச் சான்றாகும்.
பல்லவர் காலத்திற் பெருவழக்காயிருந்தது பதிகமென்றே கூறல்வேண்டும். நாயன்மார்களும் ஆழ்வார்களும் தம் உணர்ச்சியனுபவங்களைப் பெரும்பாலும் பதிகங்கள் வாயிலாகப் புலப்படுத்தியுள்ளனர். பதிகமென்பது பத்துப் பாக்களைக் கொண்டுள்ளது. பதினொரு பாக்களைக் கொண்டுள்ள பதி கங்களுமுள். அவ்வாசிரியர்கள் பதிகவமைப்பை வேண்டிய வாறு செப்பஞ்செய்து தம் உள்ளக்கருத்துக்களையும் உணர்ச்சி களையும் தெளிவாகப் புலப்படுத்துதற்குரிய கருவியாக ஆக்கிக் கொண்டனர். அப்பதிகம் அப்பர் சுவாமிகள் காலந் தொடக்கம் சிறிதுசிறிதாக வளர்ச்சிபெற்றுவந்து, மாணிக்கவாசக சுவாமிகள் காலத்தில் உச்சநிலை அடைந்துள்ளது என்பதை அவர்கள் பாடியருளிய திருப்பதிகங்களைப் படித்தறியலாம். சங்ககாலத் திலும் சங்கமருவிய காலத்திலும் வாழ்ந்த சான்றோர்கள் தாம் பெற்ற தெய்வானுபவங்களை வெளிப்படுத்துவதற்குப் பெருந்தேவபாணி, சிறுதேவபாணி, பரிபாட்டு முதலிய செய்யுள் வகைகளைக் கையாண்டனர். நாயன்மார்களும் ஆழ்வார்களும் அச்செய்யுள்வகைகளைக் கைவிட்டு, வளமுள்ள பதிகவடிவத் திலே தம்முடைய பத்தியனுபவங்களை வெளிப்படுத்த முன் வந்தமை, தமிழிலுள்ள செய்யுளிலக்கிய வளர்ச்சியிற் குறிப் பிடத்தக்கதொன்றாகும். அடியார்கள் தாம் புலப்படுத்துவதற்கு எடுத்துக்கொண்ட பொருளையும் அதனோடு தொடர்புடைய உணர்ச்சி முதலியவற்றையும் வகுத்து, அவற்றை வளர்ச்சிக் கிரமத்தில் அமைத்துக் காட்டுதற் தப் பதிக முறை பெரிதும் பொருத்தமுடையதொன்றாகக் கருதினர். ஒரு பதிகத்திலுள்ள செய்யுட்கள் யாவும் ஒரே ஓசையுடையனவாகலின், முதலி லுள்ள செய்யுளைப் படிக்கும்போது உண்டாகும் ஓசையின்பம் , அதே ஓசையில் அமைந்த ஏனைச் செய்யுட்களை ஒன்றன் பின் ஒன் றா க ப் படிக்கும்போது, ப டிப் ப டி ய ா க வ ளர்ந் து

பல்லவர் காலம் 9
செல்வதை நாம் காணலாம். இங்ாவனம் முதலாவது செய்யுளில் ஆரம்பிக்கும் உணர்ச்சியின்பம் சிறிதுசிறிதாக வளர்ந்து ஏழாவது அல்லது எட்டாவது செய்யுளில் உச்சநிலையடைந்து, அதன்பின் அது குறையத்தொடங்கிப் பத்தாவது செய்யுளில் முடிவடைகின்றது. இதேபோன்ற செய்யுளமைப்பு ஆங்கிலம் முதலிய பிற மொழிகளிலும் காணப்படுகின்றது.
அகவல், வெண்பா முதலிய பாவகைகள் பல்லவர் காலத்துப் புலவர்களாற் கையாளப்பட்டபோதும், அக்காலப் பகுதியிற் பெருவழக்காயிருந்தவை தாழிசை, துறை, விருத்தம் என்னும் பாவினங்கள் என்றே கூறுதல்வேண்டும். இப் பாவினங்கள் ஒவ்வொன்றும் பலதிறப்பட்ட ஒசைவிகற்பங் களை உடையன. அவற்றுள்ளே, அடியார்கள் தாம் புலப் படுத்தக் கருதிய பொருளுக்கும் உணர்ச்சிக்கும் ஏற்ற ஒசைகளைத் தெரிந்து பதிகங்களிற் பயன்படுத்தியிருத்தலை நாம் காணலாம். இங்ாவனம் அவர்கள் கையாண்ட ஒசைகளுட் பெரும்பாலானவை தமிழுக்குப் புதியனவாகும். நாயன்மார் களும் ஆழ்வார்களும் பல்வகை உணர்ச்சிபேதங்களைப் புலப்படுத்தவேண்டியிருந்ததனுல், பல்வேறு வகைப்பட்ட ஒசைமுறைகளைக் கையாளவேண்டியதாயிற்று. அவர்கள் கையாண்ட ஒசைவகைகளையே சோழப்பெருமன்னர் காலத் திலும் அதற்குப் பின்னும் வாழ்ந்த பெரும்புலவர்கள் கையாண்டு ஒப்பற்ற காவியங்களை இயற்றித் தந்துள்ளனர். காவியங்கள் அகவற்பாவில் அல்லது வெண்பாவில் அமைதல் வேண்டும் என்னும் மரபு பல்லவர் காலத்தோடு நீங்கப்பெற, அவற்றை விருத்தப்பாவில் இயற்றுதற்கு வழிகாட்டி வைத்த வர்கள் நாயன்மார்களும் ஆழ்வார்களும் எனலாம். அவை சிந்தாமணி முதலாகத் தோன்றிவளர்ந்த வரலாற்றை அடுத்து வரும் அதிகாரத்திற் கூறுவோம். 。
தமிழிலுள்ள தொண்ணுற்றறுவகைப் பிரபந்தங்களுள் வாயுறைவாழ்த்து, செவியறிவுறு உ, இயன்மொழிவாழ்த்து முதலிய பிரபந்தவகைகள் தொல்காப்பியர் காலத்திற்கு

Page 49
86
தமிழ் இலக்கிய வரலாறு
முன்னரே வழக்கில் இருந்திருக்கின்றன. அவையாவும் ஒரு பொருளை ஒரு செய்யுளில் அமைத்துக்கூறுவன. ஒரு பொருளைப் பல செய்யுட்களில் அமைத்துக்கூடறும் பதிகம் முதலிய ஏனைப் பிரபந்தவகைகள் காரைக்காலம்மையார் காலந் தொடக்கமாகத் தமிழில் எழுந்தவை. இங்ஙனம் தொடர்நிலைச் செய்யுளாக வரும் பிரபந்தவகைகளுள் உரு வத்திற் சிறியனவற்றுள் ஒன்று பதிகமாகும். இரட்டைமணி மாலை, மும்மணிக்கோவை முதலிய ஏனைப் பிரபந்தவகை கள் பத்துக்குமேற்பட்ட செய்யுட்களாலானவை. அவற்றுள் உலா, கோவை, கலம்பகம் முதலியன பல்லவர் காலத்தில் ஆரம்பித்துப் பிற்காலங்களில் வளர்ச்சியுற்று வந்துள்ளன. மடல், எழுகூற்றிருக்கை, மறம் முதலிய பிரபந்தவகைகள் பல்லவர் காலத்தில் ஆரம்பித்துள்ளனவெனினும், அ ைவ
அக்காலத்தின் பின் அருகியே வந்துள்ளன.
இறைவழிபாட்டிற்குச் சிறப்பாக உரிய தோத்திரப் பாமாலைகள் இக்காலப் பகுதியிற் பதிகம் முதலிய பிரபந்த முறையில் வெளிவந்ததனால், ஒரு புதிய இலக்கிய மரபு தமிழ்மொழியில் ஆரம்பித்துள தெனினும், சங்க காலத்திலும் சங்கமருவிய காலத்திலும் பெருவழக்காக இருந்த பழைய அகத்திணை மரபை நாயன்மார்களும் ஆழ்வார்களும் கைவிட வில்லை. அம்மரபு காலத்தின் போக்கிற்கிணங்க ஒரு புது முறையிலே பத்திப்பாடல்களில் இடம் பெறுகின்றது. தலைவன் தலைவியருக்கிடையேயுள்ள அன்பை வெளிப்படுத்துவதற் கென வகுக்கப்பட்ட அகப்பொருட்டுறைகள் யாவும் இறைவன் மாட்டு அடியார்கள் கொண்ட அன்பினை வெளிப்படுத்து வதற்கு ஏற்ற கருவியாக அமைகின்றன. அகத்திணைச் செய்யுட்களில் வந்துள்ள உலகியற்காதல் தோத்திரப்பாடல் களிலே தெய்வீகக் காதலாக உருவெடுக்கின்றது. இங்ஙனம் பழைய செய்யுள் மரபு ஒரு புதுமுறையிற் கையாளப்படுத லால், தமிழிலக்கியம் பல்லவர் காலப்பகுதியில் வளம் பெற்று வளரத்தொடங்கிற்று. அகத்திணைப் பொருளில் அமைந்த

பல்லவர் காலம்
81)
பத்திப்பாடல்கள் பெரும்பாலும் தலைவி கூற்றாகவும் தோழி! கூற்றாகவும் செவிலி கூற்றாகவும் வந்துள்ளன. தலைவனிடத் திலே தலைவி கொண்ட காதல் இறைவனிடத்தில் அடியார். கொண்ட அன்பாக மாறுகின்றது. தெய்வானுபவங்களை உலகியல் வாழ்க்கையனுபவங்களில் அமைத்துக்கூறும் வழக்கு இக்காலப் பகுதியிலேயே ஆரம்பமாகின்றது. உலகியற் காதலாகிய அன்பினைந்திணைதான் கவிதைக்குப் பொருளாக அமைதல்வேண்டும் என்பது தமிழ் மரபாகும். அம்மரபு பிறழாமல் இக்காலப் பகுதியில் எழுந்த இலக்கிய நூல்களும் சிலவுள. அவற்றுக்குத் திருச்சிற்றம்பலக்கோவையாரை ஓர். உதாரணமாகக் கூறலாம். அந்நூலில் தலைவன் தலைவியர், மாட்டு நிகழும் உலகியற் காதலே கூறப்படுகின்றதெனினும், இறையன்பும் அதனோடு அழகுற இணைக்கப்பட்டுள்ளது. பாண்டிக்கோவை, முத்தொள்ளாயிரம் என்னும் நூல்களில் உலகியற் காதலே கூறப்படுகின்றதெனினும், அக்காலத்தில் வாழ்ந்த அரசர்களின் வீரச்செயல் முதலியனவற்றைப் பாராட்டிக் கூறுதற்பொருட்டு அகத்திணைப்பொருள் கருவி யாகக் கொள்ளப்பட்டிருத்தலைக் காணலாம்.
பல்லவர் காலத்துப் பெரியார்கள் தம்முடைய காலத் திற்குமுன் வழக்கிலிருந்த செய்யுள் மரபு முதலியவற்றைத் தம்முடைய உணர்ச்சி பேதங்களை வெளிப்படுத்துதற்குத் தழுவிக்கொண்டது போலவே, தம்முடைய பத்தி நிலையைப் புலப்படுத்துதற்கு வடமொழிப் புராண, இதிகாசங்களிலுள்ள கதைகளையும் கருத்துக்களையும் துணையாகக் கொண்டுள்ளனர். சைவநாயன்மார்கள் சிவபெருமானுடைய திருக்கோலக் காட்சியினையும் அருட்டிறங்களையும் சித்திரித்துக் காட்டுவதை நோக்கும்பொழுது, வடமொழி நூல்களிலுள்ள கருத்துக்களை எத்துணைச் சிறப்பாகத் தம் முடைய பதிகங்களில் எடுத்தாண் டிருக்கின்றனர் என்பது புலப்படும். அவர்களைப்போலவே வைணவ ஆழ்வார்களும் பாதவதம், இராமாயணம், மகாபாரதம் முதலிய வடமொழி நூல்களிலுள்ள கதைகளை நன்கு பயன்
11

Page 50
82 தமிழ் இலக்கிய வரலாறு
படுத்தியுள்ளனர். கோசலை தாலாட்டுதசரதன் புலம்பல்,தேவகி புலம்பல், கண்ணனுடைய பாலலிலைகள் முதலிய நிகழ்ச்சிகளை
அடிப்படையாகக்கொண்டு ஆழ்வார்கள் தம்முடைய பத்தி
நிலையை ஒரு புது முறையில் வெளிப்படுத்தியுள்ளன்ர்
இங்ஙனம் பல்லவர் காலத்து இலக்கியம் ஒரு புதுவழியிற் சென்றமையை வடமொழித் தொடர்பினுலே தமிழிலக்கியம் அடைந்த சிறப்புக்களுள் ஒன்ருகக் கூறலாம்.
தமிழ் நாட்டில் ஆங்காங்கு பாமர மக்களிடையே வழங்கி வந்த சில நாட்டுப்பாடல் வகைகளைத் தழுவிப் பல பதிகங்கள் பல்லவர் காலப்பகுதியிற் பாடப்பட்டுள்ளன. தேவாரத்திருப் பதிகங்கள் முதலியனவற்றுட் பெரும்பாலானவை நாட்டு மக்கள் இறைவனை வழிபடும்போது ஒதுதற்கென இயற்றப் பட்டனவாகலின், அம்மக்களிடையே வழங்கிவந்த பாடல் முறையில் அத்திருப்பதிகங்கள் அமைதல் பயனுடைத்தென் பதை உணர்ந்தே, நாயன்மார்களும் ஆழ்வார்களும் நாட்டுப் LITTLGö முறையில் அவற்றைப் பாடினர்கள் என்று கருதக் கிடக்கின்றது. திருவாசகத்திலுள்ள திருவம்மானை, திருச்சாழல், திருப்பொன்னுரசல் முதலிய பதிகங்களும், பெரியாழ்வார்
பாடியருளிய கண்ணன் குழல்வாரக் காக்கையை அழைத்தல் முதலிய பதிகங்களும் இதற்கு உதாரணங்களாகும். நாட்டுப்
பூாடல்களிலுள்ள ஓசை முறைகளைத் தழுவி அக்காலத்துப்
புலவர்கள் பதிகங்களைப் பாடினுர்கள் என்பதற்குச் சான்ருதச் சுந்தரமூர்த்திசுவாமிகளுடைய திருப்பதிகங்களுட் சில கானப்
படுகின்றன. இங்ாவனம் பல்லாற்ருனும் வளமுடையனவாகப் பல்லவர் காலத்துப் பத்திப்பாடல்கள் அமைந்திருத்தலால் அவை தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு தனிச்சிறப்புடன் விளங்குகின்றன.
" o o a பல்லவர் ஆட்சிக்காலம் வைதிக சமயங்கள் புத்துயிர்
பெற்று வளர்ந்த காலமாதலின், இறைவனேக் குறித்துப்
பாடப்பட்ட பிரபந்தங்களே பெருக்தொகையாக வெளிவந்தன. சமணம் பெளத்தமாகிய சமயங்கள் வீறுபெற்று வளர்தற்
في أسرع
 

பல்லவர் காலம் 83
கான வசதிகள் அக்காலத்தில் அருகிப்போனமையால் அறங் கூறும் நூல்கள் பல இயற்றப்பட்டில. அக்காலத்தில் ஆட்சி புரிந்த பல்லவ அரசர்களுட் பலர் வடமொழிப் புலவர்களை ஆதரித்தனரன்றித் தமிழ்ப் புலவர்களை ஆதரிக்கவில்லை. தமிழ் மொழியும் புறக்கணிக்கப்பட்டது. பிறகாட்டு மன்னர் ஆதிக்கம் செலுத்தக்கூடிய நிலையில் ஒரு நாடு இருக்குமாயின் அந் காட்டின் சமுதாயம், பொருளாதாரம், பண்பாடு, இலக்கியம் முதலியவற்றிலே தீவிரமான வளர்ச்சி ஏற்படமாட்டாது. அதனுலேதான், பல்லவர் ஆட்சிக்காலத்தில் உலகியலும் உலகியல் கூறும் இலக்கியமும் சிறப்படையவில்லை. மன்னர் களுடைய வீரச்சிறப்பு, கொடைச்சிறப்பு முதலியவற்றைக் கூறும் செய்யுட்கள் அக்காலத்திற் பெருந்தொகையாக எழவில்லை. அது அக்காலத்தின் போக்கினைக் காட்டுகின்றது. 4. பத்திப்பாடல்கள்
சைவம் வைணவமாகிய வைதிக சமயங்கள் புத்துயிர் பெற்றுத் தழைத்த பல்லவராட்சிக்காலம் தமிழிலக்கிய வரலாற் றில் ஒரு சிறந்த காலப்பகுதியெனக் கருதப்படுகின்றது. பத்திச்சுவை மலிந்த தோத்திரப்பாடல்கள் அக்காலப்பகுதி யிலே தோன்றியதுபோல வேறெக்காலத்திலும் தோன்ற வில்லையென்றே கொள்ளவேண்டும். அக்காலத்தில் சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் தோன்றியிராவிடின் சைவத்தையும் வைணவத்தையும் சமண பெளத்த மதங்கள் நிலைதளரச் செய்திருக்குமெனக் கூறுதல் பிழையாகாது. நாயன்மார், ஆழ்வார் என்னும் சொற்களுக்கு (!pങ്ങpAu தலைவர், இறைவனுடைய குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுபவர் என்பன பொருளாகும். பல்லவர் காலத்தில் வாழ்ந்த சிவனடி யார்களுள் தலைசிறந்தோராகக் கருதப்படுவோர் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், சேரமான்பெருமாள், மாணிக்கவாசகர், திருமூலர் முதலியோராவர். பன்னிரு ஆழ் வார்களுள் முதலாழ்வார் மூவருமொழிந்த திருமழிசையாழ் வார், பெரியாழ்வார், கோதையார், தொண்டரடிப்பொடியாழ்

Page 51
84 தமிழ் இலக்கிய வரலாறு
வார், குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார், திருப்பானுழ் வார், கம்மாழ்வார், மதுரகவியாழ்வார் ஆகிய ஒன்பதின்மரும் பல்லவர் காலத்தோராவர். நாயன்மார்கள் பாடிய பத்திப்பாடல் களைச் சோழப் பெருமன்னர் காலத்திலிருந்த நம்பியாண்டார் நம்பி தேடிப்பெற்று அவற்றைத் திருமுறையாக வகுத்தமைத் தது போலவே, அக்காலத்திலிருந்த நாதமுனிகளும் ஆழ்வார் கள் பாடிய பிரபந்தங்களைத் தேடிப்பெற்று நாலாயிர திவ்விய
பிரபந்தம் எனத் தொகுத்துள்ளனர். தம் உள்ளத்தை இறை
வனுக்குக் கோயிலாக அமைத்துக்கொண்ட நாயன்மார்களும் ஆழ்வார்களும் இறைவன் திருவருளை எண்ணியெண்ணி நெஞ்சுருகிப் பாடிய பாக்களின் பெருமை அளவிடற்கரியது. தெளிவு, கனிவு, பத்திச்சுவை, ஒசைப்பெருக்கு முதலிய பல சிறப்பியல்புகளை யுடையன அத்திருப்பாடல்கள். சமண பெளத்த முனிவர்கள் கொண்டாடிய புறவேடங்களால் ஒருவன் பெறும்பயன் யாதுமில்லை யென்பதையும், ஒருவன் இறைவனே நாள்தோறும் நினைந்து கைந்து உள்ளம் கசிந்துருகிலைன்றி அவனருளைப் பெறமுடியாது என்பதையும், தம் வாழ்க்கையால் மக்களுக்கு எடுத்துக் காட்டி அவர்களை நல்வழிப்படுத்திய பெரியார்களின் கள்ளமற்ற உள்ளத்தை அவர்கள் பாடிய
திருப்பாசுரங்கள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. சங்க
மருவிய காலப்பகுதியில் எழுந்த பத்திப் பிரவாகமொன்றே பல்லவராட்சிக் காலத்தில் சைவம் வைணவம் என்னும் இரு நதிகளாக ஒடித் தமிழிலக்கியத்தைத் தழைக்கச் செய்த தெனலாம். -
கி. பி. ஏழாம் நூற்றண்டின் ஆரம்பத்தில் சமணசமயம் பல்லவ அரசன் மகேந்திரவர்மனேயும் பாண்டிய அரசன் நின்றசீர்நெடுமாறனையும் தன்வசமாக்கித் தமிழ் நா ட் டி ல் ஆதிக்கஞ் செலுத்தத் தொடங்கிற்று. அந்நாளில் 'சைவ நெறிதான் பெற்ற புண்ணியக்கண் இரண்டெனத் திருநாவுக் கரசரும் திருஞானசம்பந்தரும் அவதரித்து, அம்மன்ன்ரிரு வரையும் சைவராக்கிச் சமணத்தின் விறடக்கிச் சைவத்தை

பல்லவர் காலம் 85.
வளர்த்தனர். சைவசமயத்திற் பிறந்த திருநாவுக்கரசர் இறை வனேயடைய மனங்கொண்டவராகி இளமையிலேயே சைவ சமயத்தைவிட்டுச் சமணனுகித் துறவொழுக்கத்தை மேற் கொண்டு வாழ்ந்தனர். பல ஆண்டுகள் சென்றும் விடாய் கொண்ட அவர் மனத்திற்கு அச்சமயம் ஆறுதலளித்திலது. ஆகவே, சமணசமயத்தை விட்டு மீண்டும் அவர் சைவத்தைத் தழுவினர். அதைக்கண்ட சமணத் துறவிகள் அவருக்குப் பல இன்னல்களை இழைத்தனர். அவற்றிற்கெல்லாம் ஆளாகி யும், கலங்காத நெஞ்சினராய்ச் சைவசமயத்தை இறுகத் தழுவிக்கொண்டு, சிவபெருமானுக்குப் பாமாலை அணிந்தும் உழவாரப் படைகொண்டு வாணுளெல்லாம் ஆலயத்திருப் பணி செய்தும் சைவத்தை வளர்த்தனர். இவ்வாறு வயோதி பராய்த் திருநாவுக்கரசர் திருத்தொண்டு செய்துவருங் காலத் தில், சீகாழி என்னும் திருப்பதியில் திருஞானசம்பந்தர் அவதரித்துப் பாலனுய் விளையாடும் பருவ்த்திலேயே பண் கனிந்த பாடல்கள் பலபாடி இறைவனே ஏத்தலாயினர். தமிழ்நாட்டில் ஆங்காங்கு கட்டப்பட்டிருந்த சிவாலயங்களைத் தரிசிக்கச் செல்கையில், ஒருநாள் திருநாவுக்கரசரைச் சந்தித்து அவரை அப்பரே' என்று அழைத்ததல்ை, அவருக்கு அன்று தொட்டு அப்பர் என்னும் பெயர் வழங்கலாயிற்று. அவர்க ளிருவரும் சைவ சமயத்துக்கு அளவிடற்கரிய தொண்டுகள் செய்துள்ளனர். n
சங்கமருவிய காலப்பகுதியிலே தமிழ்நாட்டிற் சிறப்புடன் விளங்கிய சிவாலயங்கள் பல, சமணர் ஆதிக்கம் செலுத்திய கி. பி. ஏழாம் நூற்றண்டின் தொடக்கத்தில், ஆதரிப்பா ரின்றி அழியும் நிலையினே எய்தின. தம் சமயத்தைப் பரப்பு தற்குச் சமணர் செய்துவந்த சமயப் பிரசாரத்தின் பயனுகச் சைவசமயிகள் தம் சமயவொழுக்கங்களைக் கைவிட்டமையே சிவாலயங்கள் பல சீர்குன்றுதற்கெல்லாம் காரணமாயிருந்தது. அவற்றுட்சில சமணப் பள்ளிகளாகவும் மாற்றப்பட்டன (CAG) GÖTjfi ஆராய்ச்சியாளர். இவ்வாறு போற்றுவாரின்றிப்

Page 52
86 தமிழ் இலக்கிய வரலாறு
பொன்றும் நிலையிலிருந்த சிவாலயங்களே மீண்டும் நன்னில்ை யில் வைப்பதற்கு அப்பரும் திருஞானசம்பந்தரும் அக்காலத்
தில் அரியதொண்டுகள் பலவற்றைச் செய்தனர்; அவற்றுள்,
மக்களாற் கைவிடப்பட்ட ஆலய வழிபாட்டுமுறைக்குப் புத்து
யிரளித்தமையும் ஒன்றகும். ஆலயத்துக்குச் சென்று மக்கள்
இறைவனை வழிபடும்பொழுது, அவர்கள் எல்லோரும் ஒருங்கு கூடி ஆடிக்கொண்டும் ളുതുഖ& [' பாடிக்கொண்டும் ஆல யத்தைச் சுற்றிவருதல், அவன் புகழ் பாடுதல், துதித்தல் ஆதியனவும் அக்காலத்தில் கோவில் வழிபாட்டு முறையா
யிருந்தன. அம்முறையினை மக்கள் போற்றமையே கோவில்கள்
நிலைகுன்றுதற்குக் காரணமென்பதை அறிந்து அங்காயன்மா ரிருவரும் ஊர்கள் தோறும் சென்று ஆங்காங்குள்ள சிவால யங்களைத் தரிசிக்கலாயினர். அவற்றுள் வீற்றிருக்கும் சிவபிரானின் அருட்டிறத்தையெல்லாம் நினைந்து நெஞ்சுருகித் தேவாரத் திருப்பதிகங்களைப் பாடிக்கொண்டு அடியார் புடைசூழக் கோவில்களைச் சுற்றி வலம்வந்தனர். அதனைக் கண்ட மக்களுக்கு ஆலயவழிபாட்டில் ஆர்வமுண்டாயிற்று;
அவரும் சிவனடியாருடன் கூடித் தேவாரங்களைப் பாடிக் கொண்டு கோவில்களை வலம்வந்தனர். அத்தேவாரங்கள் அவரின் அகவிருளை யகற்றும் விளக்காயின. இவ்வாறு
அவர் புத்துணர்ச்சிபெற்றுக் கோவில் வழிபாட்டில் ஊக்கங் கொள்ளவே, அழியும் நிலையடைந்த சிவாலயங்கள் அழியா நிலை பெற்றதோடு பிற்காலத்திற் கலைக்களஞ்சியங்களாகவும் திகழ்ந்தன. அப்பர்சுவாமிகள் கோவில்கள்தோறும் சென்று உழவாரத் திருப்பணியை இடைவிடாது செய்துவந்தமையால் அவற்றை நன்னிலையில் வைத்து மக்கள் ஆதரித்தற்பொருட்டு அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாய் விளங்கினரென்பது அறி யக்கிடக்கின்றது.
இவ்வாறு தொண்டுகள் பலவற்றைச் செய்து காலத்தைக்
கழித்த அப்பர் சுவாமிகளின் மனவுறுதியையும் பத்தி வைராக்
கியத்தையும்,
 
 
 
 

பல்லவர் காலம் 87
வானந் துளங்கிலென் மண் கம்ப மாகிலென் மால்வரையும் தானங் துளங்கித் தலைதடு
மாறிலென் தண்கடலும் மீனம் படிலென் விரிசுடர்
விழிலென் வேலை நஞ்சுண் டூன மொன்றில்லா ஒருவனுக் காட்பட்ட உத்தமர்க்கே"
என்றும்,
"நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம் என்றும் பாடுவதிலிருந்து ஒருவாறு அறிந்துகொள்ளலாம். பன்னெடுங்காலம் துறவுபூண்டு பழுத்த அநுபவம் வாய்க்கப் பெற்ற அப்பர்சுவாமிகளின் திருப்பாடல்களில் ஐம்புல ஆசையால் விளையும் துன்பம், உலகநிலையாமை, வாழ்க்கை நிலையாமை என்பவை பற்றிய குறிப்புக்கள் ஆங்காங்கு காணப்படுதல் இயல்பாகும். அதனுல், உலகவாழ்விற் கிடந்து அல்லற்படும் ஒருவனுக்கு அவர் பாடிய பாக்கள் யாவும் ஆறுதலளிக்கும் பண்புடையனவாய் விளங்குகின்ற்ன. ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்வதுபோன்று தங்குதடை யின்றி இறைவன் திருநாமங்களை ஒன்றன்பின் ஒன்றப் அடுக் கிச் செல்லும் அவர் திருத்தாண்டகத்தையொத்த கவிதைப் பெருக்கைத் தமிழிலக்கியத்தில் வேறெங்குங் காண்டலரிது. அத்தகைய சிறந்த பாக்களைப் பாடியதால் அவர் திருநாவுக்கரசர் என்றும் வாகீசர் என்றும் அழைக் கப்பட்டனர். அவர் பாடியருளிய தேவாரத் திருப்பதிகங்கள் 4ஆம், 5ஆம், 6ஆம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள் ளன. அவற்றின்கண் சுவாமிகளுடைய முதிர்ந்த அநுபவத் தையும் பத்திச்சிறப்பையும் காணலாம். அவர் சிவனை மறந்து சமணனுகி வீணே காலத்தைக் கழித்ததை நினைந்து உள்ளம் கரைந்துருகிப் பாடியவை யாவும் சோகரசம் மிக்க பாடல்கள். சிவபிரானுடைய உருவத்திருமேனியை அகக்கண்ணுற் கண்டு அநுபவித்து அதன் அழகைச் சித்திரித்துக் கூறும் பாடல்கள் யாவும் கவிச்சுவை நிரம்பியுள்ளவை. -

Page 53
88 தமிழ் இலக்கிய வரலாறு
திருஞானசம்பந்தசுவாமிகள் பாடியருளிய தேவாரத் திருப்பதிகங்கள் 1ஆம், 2ஆம், 3ஆம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. பாலணுய் விளையாடித்திரியும் பருவத்தி லேயே ஞானம் முதிரப்பெற்று இறைவனைப்பாடிய ஆளுடைய பிள்ளையாராகிய திருஞானசம்பந்தசுவாமிகள் அப்பர்சுவாமி களைப் போன்று வாழ்க்கைத் துன்பங்களை அநுபவித்தவரல்லர். புலன்வழிச் செல்வதாலுண்டாகும் துன்பங்களை ஒரு குழந்தை அறியமாட்டாது; ஆதலின், உலகவாழ்க்கை
இழித்திடத்தக்கதொன்றக அவருக்குத் தோன்றவில்லை.
- * நாளாய போகமே நஞ்சணியும் கண்டனுக்கே
ஆளாய அன்பு செய்வோம்'
என்று தம் நெஞ்சுக்கு அறிவுறுத்தி, ஆலயக்தோறும் சென்று அரனை வழிபட்டனர். இயற்கையழகிலும் இறைவனருளிலும் ஒரேவகையான ஈடுபாடு அவருக்கிருந்தது; அதனுல், அவ ருக்குண்டான ஒரு குதூகல உணர்ச்சி அவர் பாடியுள்ள தேவாரப் பதிகங்களில் எங்கும் செறிந்துகிடக்கின்றது. இயற்கையின் தோற்றமும் இறைவனின் உருவமும் அவருக்கு ஒன்றுபோலக் காட்சியளித்தன. இன்பமேலிட்டால் துள்ளிக் குதித்தாடிய ஆளுடைய் பிள்ளையாருடைய பாடல்களிலுள்ள ஓசையும் ஒத்திசையும் துள்ளிக் குதித்துச் செல்கின்றன. அவர்கள் பாடிய பதிகங்களுட் சில வேதசாரமாய் அமைந்தன வென்றும் வேதத்தின் ஒசைச்சிறப்பினை யுடையனவென்றும் கூறுவர். இயற்கை வருணனைகள் கவிச்சுவையுடன் கலந்து வருதலை அவர் பாடல்களில் எங்கும் காணலாம்.
புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட்
டைம்மேலுந்தி அலமந்த போதாக அஞ்சேலென் றருள் செய்வான்
- அமருங் கோயில் வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர
மழையென் றஞ்சிச் சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குங் திருவை யாறே, என்னும் பாடல் அதற்கு ஒர் உதாரணமாகும்.
 
 

N
பல்லவர் காலம் 89
சேரநாட்டரசராகிய சேரமான் பெருமாள் நாயனருக்கு நண்பரான சுந்தரமூர்த்திசுவாமிகள் திருவாரூரிலே (îJ (TLDGODT குலத்திற் பிறந்து, நரசிங்கமுனையரையன் மனையில் வளர்ந்து, பரவையாரையும் சங்கிலியாரையும் மணந்து, சுந்தரவேடங் கள்' பூண்டு சிறப்பாக வாழ்ந்த ஒரு யோகியாவர். அவர் காலம் கி. பி. ஒன்பதாம் நூற்றண்டின் முற்பகுதியாகும். அவரது அற்புதமான வாழ்க்கையினை அவர் பாடிய தேவா ரங்களிலிருந்து ஒருவாறு அறிந்துகொள்ளலாம். கடையுடை பாவனையிலும் கொடைச்சிறப்பிலும் ஒரு அரசனைப்போல
அவர் வாழ்ந்ததைப் பொதுவாக நோக்குமிடத்து, உலக
இன் பங்களிற்றிளைத்த ஒருவரைப்போல் அவர் காணப்பட்ட போதும், அவர் பாடியருளிய தேவாரங்கள் பலவற்றை உற்றுநோக்கின், அவர் முற்றத்துறந்த முனிவரென்றும்
சித்தத்தைச் சிவன் பால் வைத்துச் சிவனடியார்களைச் சிவனுகக்
கண்டு போற்றிய அருளாளர் என்றும் ? நாம் தெளிவாக அறிந்துகொள்ளலாம். சிவனடியாரின் பெரும்ையை மக்க ளுக்கு எடுத்துக்காட்டிச் சைவத்தை வளர்ப்பதற்குச் சிவ பத்தியோடு அடியார் பத்தியினையும் இணைத்து ஒரு புதுவழி காட்டிய செந்தமிழ்த் திறம்வல்ல சுந்தரமூர்த்திசுவாமிகள், தம் வாழ்நாள் முழுவதிலும் தம்மைச் சிவபெருமானுக்குத் தோழராகப் பாவித்து, அவரை என்றும் மறவாது வாழ்ந்து வந்தனர். அவருடைய சுவைமிக்க வாழ்க்கையநுபவங்கரை யும் வாழ்க்கை வரலாற்றினையும் அவர் பாடியருளிய திருப் பாடல்கள் நன்கு புலப்படுத்துகின்றன. 7ஆம் திருமுறை
யாகத் தொகுக்கப்பட்டுள்ள அவர் திருப்பதிகங்கள் ஏறத்
தாழ ஆயிரம் பாடல்களையுடையன. அப்பர்சுவாமிகள் திருஞானசம்பந்தசுவாமிகள் ஆகிய இருவருடைய திருப் பாடல்களையும் அவர் நன்கு கற்றிருந்தார் எ ன் ப த ற் கு
ஆதாரங்கள் பல அவர் தேவாரங்களிற் காணப்படுகின்றன.
அவர் காலத்திலும் அதற்கு முன்னும் தமிழ்நாட்டில் வாழ்ந்த சிவனடியார்களைப்பற்றி அவர் ஆங்காங்கு குறித்துச் செல்வ
திலிருந்து அவருக்கு அவர்களிடத்திலிருந்த ஈடுபாட்டினை - 12 -

Page 54
90 தமிழ் இலக்கிய வரலாறு
நாம் அறியலாம். செந்தமிழ் நடையும் கவிச்சுவையும் பொருந் தப்பெற்ற அவர் திருப்பாடல்களில் இயற்கையின் அழகும் இறைவனின் அருளும் ஒருங்கு சித்திரிக்கப்பட்டுள்ளன. இறைவனை மறவாத மனத்தராய் வாழ்ந்த சு வா மிக ள் இறைவனை முன்னிலைப்படுத்தி விளையாட்டாகப் புகழ்ந்து பாடுவதில் ஒரு தனிச்சிறப்புண்டு. இதற்கு உதாரணம் வருமாறு : சிலைத்துநோக்கும்வெள் ளேறு செந்தழல் வாயபாம்பது மூசெனும் பலிக்குநீர்வரும் போது நுங்கையிற் பாம்புவேண்டா பிரானிரே மலைத்தசந்தொடு வேங்கைகோங்கமும் மன்னுகாரகில் சண்பகம் அலைக்கும் பைம்புனல் சூழ்பைஞ்ஞலியி லாரணிய விடங்கரே. தூயவர்கண்ணும் வாயும்மேனியுந் துன்னவாடை சுடலையில் பேயோடாடலைத் தவிரும் நீரொரு பித்தரோவெம் பிரானிரே பாயுமீர்க்கிடங் கார்கமலமும் பைந்தண்மாதவி புன்னையும் ஆயபைம்பொழில் சூழ்பைஞ்ஞலியி லாரணிய விடங்கரே. செந்தமிழ்த்திறம் வல்லிரோ செங்க ணரவமுன்கையி லாடவே வந்துநிற்குமி தென்கொலோபலி மாற்றமாட்டோ மிடகிலோம் பைந்தண்மாமல ருந்து சோலைகள் கந்தம் 5ாறுபைஞ்ஞீலியீர் அந்திவானமும் மேனியோசொலு மாரணிய விடங்கரே.
மாணிக்கவாசகசுவாமிகள் கி. பி. ஒன்பதாம் நூற்றண் டின் பிற்பகுதியில் இரண்டாம் வரகுணபாண்டியன் காலத்தில் வாழ்ந்தவரென்பர். அவர் வாதவூரிற் பிறந்தமையால், திரு வாதவூரர் என்றும் அழைக்கப்பட்டனர். இளமையிலேயே சிவாகமங்கள் முதலிய சமயநூல்களையும் இலக்கண இலக்கி யங்களையும் கற்றுத்தேர்ந்து, சிலகாலம் பாண்டியனுக்கு அமைச்சராயிருந்து அரசியல்வினைகளைச் செய்துவந்தனர். சிவபெருமான் குருவடிவாய்வந்து அவரை ஆட்கொண்டபின், இறைவனன்பைப் பெறுதலொன்றனையே தமது வாழ்க்கையின்
நோக்கமாகக்கொண்டு, திருவுத்தரகோசமங்கை, திருக்கழுக்
குன்றம், சிதம்பரம் ஆகிய தலங்களைத் தரிசித்துக் கல்லுங் கரையும்படி பாடிய பாட்டுக்களே திருவாசகம் எனப்படும்.
 
 

பல்லவர் காலம்
91
உணர்ச்சிமிக்க சொற்றொடர்கள் நிரம்பியுள்ள திருவாசகப் பாக்கள்யாவும் மாணிக்கம் போன்றவையாகலின் அவர் மாணிக்கவாசகர் என்று அழைக்கப்பட்டனர். திருப்பெருந் துறையிற் காட்சிகொடுத்து ஆட்கொண்ட இறைவனைப் பின்பு காணப்பெறாமையால், தாயை நினைந்தழும் பிள்ளையைப் போல அவர் மனங்கலங்கிப் பாடிய பாக்கள் யாவும் படிப் போர் நெஞ்சை உருக்குவன. அவர் பெற்ற சிவாநுபவங்க ளைப் புலப்படுத்தி நிற்கும் திருவாசகத் திருப்பதிகங்களனைத்தும் தமிழ்ப்பாக்களுள் மிக உயர்ந்த நிலையில் வைத்து எண்ணத் தக்கவை. தாம் இறைவன்பாற்பெற்ற பேரின்பக்காதலைத், தலைவன் தலைவி என்னும் இருவருக்கு மிடையேயுள்ள உலகியற்காதலோடு இணைத்துக் காட்டுவதில் ஒப்புயர்வற்று விளங்கும் திருச்சிற்றம்பலக் கோவையார் என்னும் நூல் அவர் இயற்றிய சிறந்த அகப்பொருளிலக்கியமாகும். இவை யிரண்டும் 8ஆம் திருமுறை என வழங்கப்படும். தமிழிலுள்ள உணர்ச்சிப் பெருக்குடைய பாட்டுக்களுள் முதலில் வைத்து எண்ணத்தகுந்தவை மாணிக்கவாசக்சுவாமிகள் நெஞ்சுருகிப் பாடிய திருவாசகப்பாட்டுக்கள். அவை கல்லையொத்த மனத் தையும் கனியச்செய்யும் பெற்றிவாய்ந்தவை. அம்மணி வாசகங்களுள் ஒன்று வருமாறு :-
சிந்தனை நின் தனக்காக்கி நாயி னேன்தன்
கண்ணிணை நின் திருப்பாதப் போதுக் காக்கி வந்தனையும் அம்மலர்க்கே யாக்கி வாக்குன்
மணிவார்த்தைக் காக்கியைம் புலன்களார வந்தனை ஆட் கொண்டுள்ளே புகுந்த விச்சை
மாலமுதப் பெருங்கடலே மலையே யுன்னைத் தந்தனை செந் தாமரைக்கா டனைய மேனித்
தனிச்சுட்டரே யிரண்டுமிலித் தனியனேற்கே.
முக்காலமுமுணர்ந்த முனிவராகிய திருமூலநாயனார் சித்தர் கணத்துட் சிறந்தவராகப் பாராட்டப்படுபவர். அவர் பாடிய திருமந்திரம் இறைவனையடையும் வழிகளை அநுபவவாயி

Page 55
92 தமிழ் இலக்கிய வரலாறு
லாக எடுத்துக்கூறும் ஒரு சிறந்த நூலாகும். யோகமார்க் கத்தைத் தழுவிநின்று முத்திநிலைபெற்ற சித்தர் கூட்டம் தமிழ்நாட்டில் நெடுங்காலமாக இருந்துவந்துள்ளது என்பர் ஆராய்ச்சியாளர். பதினெட்டாம் நூற்றண்டில் வாழ்ந்துவந்த
தாயுமான சுவாமிகள் வேதாந்த சித்தாந்த சமரச கன்னிலை
பெற்ற வித்தகச் சித்தர் கணத்தைத் தம் பாடல்களிற் சிறப்பாகப் பாராட்டியுள்ளனர். அவருக்குக் குருவாய்வந்த மெளன குருமூர்த்தியும் திருமூலர் மரபில் உதித்தவரென்றே
அறியக்கிடக்கின்றது. திருமூலர் காலத்துக்குபின் தமிழ் நாட்டில் வாழ்ந்த பாம்பாட்டிச் சித்தர், அகப்பேய்ச் சித்தர், குதம்பைச் சித்தர் முதலிய சித்தர்கள் தாம்கண்ட உண்மை
களையும் பெற்ற அநுபவங்களையும் ஒசைச் சிறப்புடைய பாட்டுக்களில் அமைத்துப் பாடியுள்ளனர். அவற் ைற ப்
பதினெண் சித்தர் பாடல் என்ற நூலிற் காணலாம். சித்தர்களிற் பலர் வைத்திய சாஸ்திர அறிவுடையோராயிருக் தமையின் அவர்கள் பல வைத்திய நூல்களையும் எழுதி
யுள்ளனர்.
வைணவ ஆழ்வார்களுட் பொய்கையாழ்வார், பூதத்தாழ் வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் ஏனைய ஆழ்வார்களுக்கு முன் தோன்றினமையின் அவர்கள் முதலாழ்வார்கள் எனப் பு-டனா, அகததும் புறததும திருமாலேக்கண்டு களித்த முதலாழ்வார்களுக்கு இயற்கையும் இறைவன் வடிவமாகவே
காட்சியளித்தது. நினைவிலும் கனவிலும் திருமாலெண்ண
முடையோராய் வாழ்ந்த முதலாழ்வார்கள் காரைக்காலம்மை யாரைப்போலத் திடமான பத்தி வைராக்கிய முடையவர்கள். அவர்கள் தி ரு மா லி ட த் தி ற் கொண்டிருந்த அளவற்ற அன்பினை என்றன் அளவன்றல் யானுடைய அன்பு ' என்றும், ஒண்தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு' என்றும், காண்காண் எனவிரும்பும் கண்கள்' என்றும் கூறும் அவர் பாக்கள் தெளிவாகப் புலப்படுத்து கின்றன. அவர்கள் தெளிந்த உள்ளமுடையவர்கள் ; அதனுல்,
 

பல்லவர் காலம் 93
அவர்கள் பாடிய திருவந்தாதிகளும் களங்கமற்ற அவர்கள்
உள்ளத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன. நாலாயிர திவ்விய பிரபந்தப் பாக்களுள் அவற்றை வேதத்துக்கு ஒப்பிட்டுக்
ಶಹಾ.. ೧|೧|f.
பிணக்கின்றி ஒற்றுமையாய் வளர்ந்துவந்த சைவம் வைணவமாகிய இரு சமயங்களுக்குமிடையே கி. பி. ஏழாம் நூற்றண்டு தொடக்கம் சிறிது சிறிதாகப் பகைமை முளைக்க லாயிற்று. அதனை நாம் மகேந்திரவர்மன் காலத்திலிருந்த திருமழிசையாழ்வார் பாடிய நான்முகன் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம் ஆகிய இரு பிரபந்தங்களிலிருந்தும், அப்பர்சுவாமிகள் திருஞானசம்பந்தசுவாமிகளாகிய இருவர் பாடிய தேவாரங்களிலிருந்தும் ஒரு வ ர று அறியலாம்.
'காக்கொண்டு மானிடம்பாடாத திருமழிசையாழ்வரர் திருமாலி
டத்தில் அளவுகடந்த பத்தியுடையவராய்த், திருக்குடந்தை, திருவெஃகா, திருவரங்கம் முதலிய இடங்களுக்குச் சென்று திருமாலின் புகழைப் பத்திவைராக்கியத்துடன் பாடித்திரிந்த தல்ை, அவர் ' பத்திசாரர்' என்றும் அழைக்கப்பட்டனர். ' என்றும் மறந்தறியேன் என்நெஞ்சத்தே வைத்து
நின்றும் இருந்தும் நெடுமால்ை.'
என்று பாடுவதிலிருந்து அவரது சலியாத உள்ளத்தின்
திண்மையை நாம் உணரலாம்.
திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் பெரிய பெருமா ளிடத்தில் ஆரா அன்புகொண்டு, அவருக்குப் பூமாலைசாத்து தல் முதலிய கைங்கரியங்களைச் செய்து, தம் வாழ்நாளைக் கழித்த தொண்டரடிப் பொடியாழ்வார் LITIQUI LJ Irbg5rÉl 56T திருமாலை, திருப்பள்ளியெழுச்சி என்பன. திருமாலின் அருளைப்பெற்று அவர் நாமங்களேயே சொல்லிச்சொல்லி உலப்பிலா ஆனந்தங் கொள்பவர் இப்பெரியார். பிராமண குலத்துதித்த இவர், திருமாலடியார் நீசரேயாயினும் அவரைப் பெரியோராக மதித்துப் போற்றினராகலின் தொண்டரடிப்

Page 56
94 தமிழ் இலக்கிய வரலாறு
பொடியென்று அழைக்கப்பட்டனர். அவருடைய பத்தியனு பவங்களையெல்லாம் திருமாலை என்ற பிரபந்தம் சிறப்பாக எ டு த் து க் காட் டு கி ன் ற து. பொருளாழமும் தெளிவு முடைய அப்பிரபந்தம் பத்திரசமும் கவிச்சுவையும் நிறைந்த தொன்று. மாயவலையிற் கட்டுண்டுகிடந்த ஆழ்வாரைத் திருமாலை யென்னும் பிரபந்தத்திற் பெருமாள் துயிலெழுப் பினரென்றும் திருப்பள்ளியெழுச்சியிலே தொண்டரடிப்பொடி யாழ்வார் பெருமாளைத் துயிலெழுப்பினுரென்றும் பெரியோர் கள் கூறுவர். திருமாலையென்பது 45 செய்யுட்கள் கொண்ட ஒரு சிறு பிரபந்தமெனினும் அது ஆழ்வாருடைய மனுே பாவத்தையும் வாழ்க்கையறுபவங்களையும் மிக உருக்கமாக எடுத்துக்கூறும் ஒரு பாமாலையாகும். அவர் உலக வாழ்க்கையில் ஈடுபட்டுக் காமக்குரோதங்களுக்கு ஆளாகிப் படாதபாடெல்லாம் பட்டுப், பின் இறைவனுலே தடுத்தாட் கொள்ளப்பட்டவராகலின், உலகவாழ்க்கையிற் கிடந்து அல்ல லுறும் மக்கள் உய்யும்பொருட்டு அவர் உபதேசம் செய்தலை யும் இப்பிரபந்தத்திற் காணலாம். திருமாலையிலுள்ள செய் யுட்களுள் இரண்டு வருமாறு : பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே. குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கிக் கடல் நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமாகண்டு உடலெனக் குருகு மாலோ என்செய்கேன் உலகத் தீரே.
'அமலன் ஆதிபிரான் .' என்று தொடங்கும் பதிகத் தைப் பா டி யருளிய திருப்பாணுழ்வார் பாணர்வகுப்பைச் சேர்ந்த இசைச்செல்வர். திருவரங்கத்திலே திருக்கண் வளர்ந் தருளும் திரு மா லின் திருவுருவத்தைக் கண்ணுரக்கண்டு
அநுபவிக்க ஆசைகொண்ட இப்பெரியார், இழிகுலத்தவராத

பல்லவர் காலம் 95
லின் அங்கே அடியிடவுங் துணியாது உள்ளம் உருகிகின்ற சமயத்தில், உலோகசாரங்க மகாமுனிவர் இவரைத் தூக்கிச் சென்றனரென்றும், அவ்வாறு தூக்கிச் செல்கையில் 'அமலன் ஆதிபிரான்.' என்ற பதிகத்தைப் பாடினரென்றும் கூறுவர். திருமாலின் அழகை ப் பாதாதிகேசமாகக் கண்டு அநுப வித்ததை அப்பதிகத்திற் சுவைததும்ப எடுத்துக் கூறி யுள்ளனர். அவர் பாடியது ஒரு பதிகமாயிருந்தபோதும் அது மிக்க சிறப்புவாய்ந்தது என்பதைப்,
'பாண்பெருமாள் அருள்செய்த பாடல்பத்தும் பழமறையின் பொருளென்று பரவுமின்கள்' என்று பிற்காலத்தோர் கூறிய பாராட்டுரையால் அறியலாம்.
திருமங்கையாழ்வார் கள்வர்குடியிற் பிறந்து திருமங்கை யென்னும் நாட்டையாண்ட சிற்றரசராவர். அவரும் சுந்தர மூர்த்திசுவாமிகள் தொண்டரடிப்பொடியாழ்வார் முதலிய அருட்செல்வர்களைப் போலவே, பத்தர்களுக்குச் செய்யும் கைங்கரியத்தைப் பெரிதாக மதித்த பெரியாராவர். ஆலயத் திருப்பணியிலேயே தமது பொருளையெல்லாம் செலவிட்டன ரென்பது அவருடைய பாக்களிலிருந்து அறியக்கிடக்கின்றது. இமயந்தொடக்கம் குமரிமுனைவரையுமுள்ள திருமால் கோவில் கள் பல வற்றைக் கண்டுதரிசித்துப் பாடிய பதிகங்களே அவர் பாடிய பெரியதிருமொழியாகும். அதனைவிட, திரு வெழுகூற்றிருக்கை, திருக்குறுந் தாண்ட கம், திரு நெடுந்தாண்டகம், சிறிய திருமடல், பெரிய திருமடல் என்னும் பிரபந்தங்களையும் பாடியுள்ளார். அவருடைய பதி கங்கள் யாவும் தங்குதடையின்றிச் செல்லும் ஒத்திசையும் ஒசைப் பெருக்குமுடையவை. கடல்மடை திறந்தாற்போல எவ்வகைப்பட்ட யா ப் பி லும் திறம்படப்பாடும் ஆற்றல் மிக்குடையராகலின் அவரை 'நாலுகவிப்பெருமாள்' என்றும் 'அருள்மாரி' என்றும் கூறுவர். திருமாலின் அருளை அவர் பெறுதற்கு முன்னும் பின்னும் உள்ள வாழ்க்கையறுபவங் களையெல்லாம் எடுத்துக்காட்டும் உணர்ச்சிமிக்க அவர் பிரபங்

Page 57
96 தமிழ் இலக்கிய வரலாறு
தங்கள் ஆறும் வேதாங்கங்களின் உட்பொருளைக் கூறுவன
என்பர். அவர் பாடியருளிய திருமடல்கள் உலகியற்காதலைக் கூறுவன போலக் காணப்படினும் அவை ஆழ்வாருடைய பத்தியநுபவத்தைப் புலப்படுத்துவன. தம்மை நாயகியாகவும் இறைவனை நாயகனுகவும் நினைத்துத், தாம் இறைவனைக் காணப்பெறது படும் துன்பத்தைப் பல வாரு க எடுத்துக் கூறுகின்றனர். தலைவி கூற்றக அமைந்த இப்பிரபந்தங்களுட் சிறியதிருமடலின் இறுதியிலுள்ள அடிகளுட் சில வருமாறு:
வாராய் மடநெஞ்சே வந்து - மணிவண்ணன் தீரார் திருத்துளாய் மாலை நமக்கருளித் தாரான் தருமென் றிரண்டத்தில் ஒன்றதனை ஆரானும் ஒன்னுதார் கேளாமே சொன்னக்கால் ஆராயு மேலும் பணிகேட்டு அதன்றெனினும் போரா தொழியாதே போந்திடுமீ யென்றேற்குக் காரார் கடல்வண்ணன் பின்போன நெஞ்சமும் வாராதே என்னை மறந்ததுதான் - வல்வினையேன் ஊராருகப்பதே யாயினேன் - மற்றெனக்கிங்கு ஆராய்வா ரில்லை அழல் வாய் மெழுகுபோல் நீராய் உருகும் என்னுவி - நெடுங்கண்கள் ஊரா ருறங்கிலும் தானுறங்கா உத்தமன்தன்
$) பேரா யினவே பிதற்றுவன்.AA%Ana,
......البته لامپola.J2ام 16 ... به اasa O. lله. சீராரும் மாலிருஞ் சோலை திருமோகூர் பாரோர் புகழும் வதரி வடமதுரை ஊராய வெல்லாம் ஒழியாமே நானவனே ஒரானே கொம்பொசித்து ஓரானே கோள் விடுத்த சிரானேச் செங்க ணெடியானைத் தேன் துழாய்த் தாரானைத் தாமரைபோற் கண்ணுனை-எண்ணருஞ்சீர்ப் பேரா யிரமும் பிதற்றிப்-பெருந்தெருவே ஊரா ரிகNலும் ஊரா தொழியேன் நான் வாரார் பூம்பெண்ணை மடல்,
 
 

பல்லவர் காலம் 97.
விஷ்ணுசித்தர், பட்டர் பிரான் என்ற திருநாமங்களை யுடைய பெரியாழ்வார் பூரீ வில்லிபுத்தூரில் அவதரித்துப் பாண்டிநாட்டில் வைணவ சமயத்தை வளர்த்துவந்த ஒரு பெரியாராவர். மனமொழி மெய்களால் திருமாலே வழிபடுவ தையே தமது வாழ்க்கையின் நோக்கமாகக்கொண்டு, அவர் ஒரு நந்தவனம் அமைத்து, நாடொறும் பூமாலை புனைந்தும் பாமாலைசூட்டியும் திருமாலை வழிபட்டனர். திருமாலிடத்திற். பிறிதொன்றினையும் வேண்டாது தான் அன்புசெலுத்துதல் ஒன்றினை மட்டுமே வேண்டிநின்றனர். திருமாலவதாரங்களுள் அவர் கிருஷ்ணுவதாரத்திலே சிறப்பாக ஈடுபட்டிருந்தனர், அதனுல், கண்ணன் பாலணுயிருந்த காலத்தில் யசோதைப் பிராட்டியாரும் கோபிகளும் அவனுடைய லீலைகளாற் பெற்ற இன்பத்தைத் தாமும் அனுபவித்ததாகப் பாவித்துப் பாடிய பதிகங்களைக் கொண்டுள்ள பிரபந்தம் பெரியாழ்வார் திருமொழியென்று வழங்கும். தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல் முதலிய பல பருவங்களாகக் கண்ணனுடைய் பிள்ளைப் பருவத்தை வகுத்து, அவனுடைய மங்கள குணங்களைப் பாராட்டும் அப்பிரபந்தம், பிற்காலத்திலெழுந்த பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தங்களுக்கெல்லாம் ஒரு வழிகாட்டியாய் நின்றது. இவர் பாடிய மற்ருெரு பிரபந்தம் திருப்பல்லாண்டு எனப்படும். உலக வழக்கத்திலே தாய்மார் தம் பிள்ளைகள் செய்யும் பால லீலைகளைக் கண்டு அனுப வித்த ைவ யெ ல் லா ம் பெரியாழ்வாருடைய மனத்தில் உருப்பெற்றுப் பாட்டாக வெளிவந்தன என்பதற்குச் சான்றக அவர் பாடியருளிய திருப்பாசுரங்கள் அனைத்தும் விளங்குகின்றன. அவற்றுட் சில வருமாறு: எண்ணெய்க் குடத்தை யுருட்டி இளம்பிள்ளே கிள்ளியெழுப்பிக் கண்ணேப் புரட்டி விழித்துக் கழகண்டு செய்யும் பிரானே உண்ணக்கனிகள் தருவன் ஒலிகட லோதரீர் போல வண்ணம் அழகிய நம்பி மஞ்சன மாடநீ வாராய்,
13

Page 58
98 தமிழ் இலக்கிய வரலாறு : - ( )
கறந்தநற் பாலும் தயிரும் கடைந்துறி மேல்வைத்த வெண்ணெய் بحیرہبر பிறந்தது வேமுத லாகப் பெற்றறி யேனெம் பிரானே சிறந்தநற் ருயலர் தூற்றும் என்பதனுற் பிறர் முன்னே மறந்தும் உரையாட மாட்டேன் மஞ்சன மாடநீ வாராய். பூணித் தொழுவினிற் புக்குப் புழுதி யளைந்த பொன்மேனி காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர் நாணெத் தனையு மிலா தாய் நப்பின்னை காணிற் சிரிக்கும் மாணிக் கமேஎன் மணியே மஞ்சன மாடநீ வாராய்.
பெரியாழ்வாருக்கு மகளாய் அவதரித்த கோதையார் பாடிய பிரபந்தங்கள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்டன. நாச்சியார், ஆண்டாள் என்ற திருநாமங்களும் அவருக்கு உண்டு. சிறு பிராயந்தொடங்கி அவர் திருமாலிடத்தில் மிக்க அன்புடையவராய்த் தமது தந்தையார் செய்துவந்த பூமாலைகட்டுதல் முதலிய திருத்தொண்டுகளையே தாமும் செய்துவந்தனர். கண்ணனிடத்தில் அவர் கொண்ட காதல் முதிர முதிர, அவரையே தமது நாயகராகக் கொள்ள ஆசை கொண்டு, தம்மை அவர் விரும்புதற்குரிய மேனியழகு தமக்கு உண்டோ என்று அறிதற்பொருட்டுக், கண்ணனுக்கெனத் தமது தந்தையார் கட்டிவைத்த பூமாலைகளைத் தாமேயணிந்து பார்த்து இன்புற்றனர். அவ்வாறு அம்மையார் சூடிய பூமாலைகளே கண்ணனுக்குச் சாத்தப்பட்டன. அதனுல், அவர் சூடிக்கொடுத்த நாச்சியார்' என்றும் அழைக்கப்பட்டனர். கண்ணன் வாழ்ந்த காலத்திற் கோபிகளுள் தாமும் ஒருவரா கப் பிறந்து கண்ணன் பேரழகை நேரிற்கண்டு அநுபவிக்கும் பாக்கியத்தைப் பெறவில்லையே என்ற கவலை அவரை வருத்தியதால், வில்லிபுத்தூரைக் கோகுலமாகவும் தம்மைக் கோபிகளுள் ஒருவராகவும் பாவித்துப் பாடிய அவருடைய திருமொழி கற்பனையுலகிற் கண்ணனையடைதற்கு அவர் பட்ட பாடெல்லாங் திரண்டு உருப்பெற்றதுபோலக் காணப் படுகின்றது. அவ்வம்மையார் பாடிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற பிரபந்தங்கள் கரைபுரண்டோடும் காதல் வெள்ளத்திற் பற்றுக்கோடின்றித் தவிக்கும் அவர் அநுபவங்

பல்லவர் காலம் 99
கள் பொதிந்துள்ளமையின், தமிழிலக்கியத்தில் அவை சிறப் பிடம் பெற்று விளங்குவனவாயின. இறைவனிடத்தில் அடியார் கொண்டுள்ள அன்பை நாயகி பாவத்தில் அமைத்துப்பாடிய பெரியார் பலருளர்; எனினும், பெண்ணுகப் பிறந்து தம்மை இறைவனுக்கு நாயகியாகப் பாவித்துத் தமிழிற்பாடிய புலவர் ஆண்டாளன்றி வேறு யாருமிலர். அவ்வாறு அவர் பாடிய பாக்களுள் ஒன்று வருமாறு:
தந்தையும் தாயும் உற்ருரும் நிற்கத்
தனிவழி போயினு ளென்னும் சொல்லு வந்தபின் னைப்பழி காப்பரிது -
மாயவன் வந்துருக் காட்டுகின்ருன் ? கொந்தள மாக்கிப் பரக்கழித்துக்
குறும்புசெய் வானேர் மகனைப் பெற்ற நந்தகோ பாலன் கடைத்தலைக்கே
நள்ளிருட்கண் என்னை உய்த்திடுமின்,
அவர்பாடிய திருப்பாவையும் மாணிக்கவாசக சுவாமிகள் பாடிய
திருவெம்பாவையும் பண்டைக்காலந்தொட்டுத் தமிழ்நாட்டுப் பெண்கள் அனுட்டித்துவந்த மார்கழிகோன்பினை ஆதாரமாகக்
கொண்டு எழுந்த சுவைமிக்க பாடல்களாகும்.
வீரராய் உலகாண்ட சேரருள் இறைவனுக்கு அடித் தொண்டுபூண்டு, அடியார்களுக்கு ஆவன புரிந்து, வைதிக மார்க்கங்களை விளங்கச்செய்த அரசர் இருவர். அவர்களுள் திருமாலை வழிபட்ட குலசேகரப் பெருமாள் ஒருவர்; சைவ நெறியைத் தழைக்கச்செய்த சேரமான்பெருமாள் நாயனுர் மற்றவர். இருவரும் கி. பி. ஒன்பதாம் நூற்றண்டின் ஆரம் பத்திற்கு முன்பின்னக இருந்து ஆட்சிபுரிந்தனரென்பர். சேரமான்பெருமாள் நாயனுர் சிவபெருமான்பேரிற் பாடிய பிரபந்தங்கள் பொன்வண்ணத்தந்தாதி, திருக்கைலாய ஞானவுலா முதலியன. குலசேகரப் பெருமாள் திருமால் பேரிற் பாடிய பிரபந்தம் பெருமாள் திருமொழி எனப்படும். திருமால் திருப்பதிகளுள் திருவேங்கடமும் திருவரங்கமும்

Page 59
100 தமிழ் இலக்கிய வரலாறு
அவருடைய உள்ளத்தை வசீகரித்ததுபோலவே திருமாலவ தாரங்களுள் இராமாவதாரம் சிறப்பாக அவருடைய மனத் தைப் பிணித்தது. திருவேங்கடத்தைப் பாடும்பொழுது அங் குள்ள பொருள்களுள் யாதேனுமொன்றகத் தான் பிறக் காததை நினைந்து சோக உணர்ச்சி ததும்பும்படி பாடியுள்ளனர். தசரதன் புலம்பல்' என்ற பதிகத்தைப் பாடும்பொழுது தம் மைத் தசரதராகவே பாவித்துக் கானுளச் சென்ற இராமனே எண்ணியெண்ணிக் கண்ணிர் வடித்தனரென்றே அவர் பாக் களிலிருந்து தெரிகின்றது. அப்பதிகத்தினையும் "தேவகி புலம்பல்' என்ற பதிகத்தினையும் நாம் படிக்கும்பொழுது, வாற்சல்லியத்தால் ஏற்படும் இன்ப துன்பங்களை அவர் நன்றக அநுபவித்தே அவற்றைப் பாடியுள்ளார் என்பது தெரிகின் றது. தசரதன் புலம்பலில் ஒரு செய்யுள் வருமாறு:
வாபோகு வாஇன்னம் வந்தொருகால் கண்டுபோ மலராள் கூந்தல் வுேய்போலும் எழிற்ருேளி தன்பொருட்டாய்
விடையோன்றன் வில்லைச் செற்ருய் மாபோகு நெடுங்கானம் வல்வினையேன் மனமுருக்கும் மகனே இன்று நீபோக என்னெஞ்சம் இருபிளவாய்ப்
போகாதே நிற்கு மாறே.
திருக் குரு கூரிலே வேளாள குலத்தில் அவதரித்த நம்மாழ்வார் நான்கு வேதங்களின் உட்பொருளைத் தமிழிலே தந்து, மக்களுக்கு உய்யும் வழிகாட்டிய தமிழ்ப் பெரியாராவர். அவருக்கு "மாறன்' 'சடகோபன்' என்ற பிற பெயர்களும் உண்டு. சிறப்பு நோக்கி அவரை அவயவியாகவும் பிற ஆழ்வார்களை அவயவங்களாகவும் கூறுவர். "அணுவுக்கணு வாய் அப்பாலுக் கப்பாலாய்' எங்கும் வியாபித்து நிற்கும் பரம்பொருளைப் பத்தி ஞானமார்க்கங்களில் நின்று கண்டு அநுபவித்த நம் மா ழ் வார் பாடியருளிய திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி

பல்லவர் காலம் 101.
என்னும் நான்கு பிரபந்தங்களும் தமிழ்க் கவிதைப் பரப்புள் உயர்ந்த வரிசையில் வைத்து எண்ணப்படுபவை. பேரின்ப வெள்ளத்துட் கிடந்து திளைத்த அப் பெரியாரின் பொன் மொழிகள் திசைவிளக்காய் நின்று இறைவனை கண்ணும் வழியை உலகத்துக்கு எடுத்துக்காட்டுகின்றன. கம்மாழ்வாரைக் குருவும் தெய்வமுமாகக்கொண்டு 'கண்ணிநுண் சிறுத்தாம்பு' என்னும் பதிகத்தைப் பாடிய மதுரகவியாழ்வார், காலத்தாற் பிற ஆழ்வார்களுக்குப் பிந்தியவரென்பர். நம்மாழ்வாருக்குப்பின் திருக்குருகூரில் அவர் நெடுங்காலம் வாழ்ந்து கம்மாழ்வாரையே போற்றிப் புகழ்ந்துகொண்டு தமது காலத்தைக் கழித்தனர். நம்மாழ்வார் ஏனை ஆழ்வார்களைக்காட்டிலும் திருமாலுக்கு உகந்தவராதலின் 'கம்மாழ்வார்' என்று அழைக்கப்பட்டனர் என்பர். அவர் பிற ஆழ்வார்களைப்போல இவ்வுலககடையைப் பற்றமற் பிறந்தது முதல் திவ்விய ஞானத்துடன் பொலிந்து அதனினின்றும் வழுவாதிருந்தமையால் ஆழ்வார்களுக்குள்ளே தலைவராக மதிக்கப்பட்டனர். அவர் பாடியருளிய நான்கு பிரபந்தங்களும் நான்கு வேதங்களுக்கு ஒப்பவன. அவற் றுள்ளே திருவாய்மொழி என்னும் பிரபந்தம், தமிழிலுள்ள மிகச்சிறந்த செய்யுளிலக் கி யங் களுள் ஒன்றக வைத்து எண்ணப்படும் சிறப்பு வாய்ந்தது. 100 பதிகங்களைக்கொண்டு விளங்கும் இப்பிரபந்தத்தில் அவர் தாம் பெற்ற தெய்வாறு பவங்களையெல்லாம் முறைப்படுத்திப் படிப்படியாக அந்தாதித் தொடையிற் கூறிச்செல்கின்றனர். இறைவன் பால் அவருக் கிருந்த அன்பை அகத்துறையில் அமைத்துப்பாடிய செய்யுள் ஒன்று வருமாறு:
கங்குலும் பகலும் கண்துயில் அறியாள்
கண்ணநீர் கைகளால் இறைக்கும் சங்குசக் கரங்கள் என்று கை கூப்பும்
தாமரைக் கண்ணென்றே தளரும் எங்கனே தரிக்கேன் உன்னை விட் டென்னும்
இருகிலம் கைதுழா விருக்கும் செங்கயல் பாய்மீர் திருவரங் கத்தாய்
இவள்திறத் தென்செய்கின் ருயே,

Page 60
| 102 தமிழ் இலக்கிய வரலாறு
ஆழ்வார்கள் பன்னிருவரும் அருளிச்செய்த இருபத்துநான்கு பிரபந்தங்களும் அடங்கிய நூல் ‘நாலாயிரதிவ்விய பிரபந்தம்' எனப்படும். - 5. பிற நூல்கள்
பல்லவர் காலத்திலே தோன்றிய பத்திப்பாடல்களை யொத்த பாவகைகள் அத்துனைப் பெருந்தொகையாக வேறு எக்காலப் பகுதியிலும் தமிழிலே தோன்றவில்லை யென்றே கூறலாம். அக்காலத்தில் தமிழிலே தோன்றி விருத்தியடைந்த செய்யுள்வகைகளும் பலவாகும். வேண்டிய ஆதரவளித்து வடமொழியைப் பல்லவ அரசர்கள் சிறப்பாகப் போற்றிவந்த தினுல் வடசொற்களும் சொற்றெடர்களும் முந்தியகாலப் பிரிவுகளிலே தமிழோடு கலந்ததிலும் அதிகமாகப் பல்லவர் காலத்திற் கலந்தன. அதனுேடு வடமொழி யாப்பு முறைகளை யும் தமிழ்மொழி தழுவத்தொடங்கிற்று. அதனுல், வடமொழி யாப்பமைதிகளையும் பிற இலக்கணங்களையும் விளக்குதற்குத் தமிழிற் சங்கயாப்பு, பாட்டியல்நூல் முதலிய யாப்பிலக் கண நூல்களும் பிற இலக்கண நூல்களும் பல்லவர் காலத்தில் எழுந்தன; அவையெல்லாம் இக்காலத்திற் கிடைத்தில.
சைவமும் வைணவமும் புத்துயிர் பெற்றதனுல் பெளத்த சமண சமயங்களின் வளர்ச்சி பெரிதும் தடைப்பட்டபோதும், அவை முற்றக அழிந்துவிடவில்லை. அவ்விரு சமயத்தவர்க ளும் பள்ளிக்கூடங்களையமைத்து மானுக்கருக்குக் கல்வி கற்பித்தும், சிறந்த நூல்களை எழுதியும், ஒழுக்கநெறி வழுவாது வாழ்ந்தும் தமது சமய த்தை வளர்த்துவந்தனர். சமணமுனிவர்கள் எழுதிய இலக்கண நூல்கள், நிகண்டுகள், காவியங்கள், அறநூல்கள் முதலிய ன தமிழிலக்கியத்தை அணிசெய்து நிற்கின்றன. கொங்குவேளிர் என்னும் சமணப் பெரியார் எழுதிய உதயணன் கதை பல்லவர் காலத்தில் எழுந்த காவியங்களுட் சிறந்ததொன்றகக் கொள்ளப்படுகின் றது. அக்காலத்தில் வாழ்ந்த பெளத்தரும் சமணரும் பாடிய
 

. , لا يراه في பல்லவர் காலம் 103
தனிப்பாடல்களும் சிலவற்றைச் சோழர்காலத்தில் எழுந்த
யாப்பருங்கல விருத்தியுரை முதலியவற்றுட் காணலாம்.
பல்லவ அரசர்கள் வடமொழிப் பற்றுடையோரெனினும் அவர்களுள் இரண்டாம் நந்திவர்மன் மூன்ரும் நந்திவர்மன் முதலியோர் தமிழறிவும் தமிழ் மொழிப்பற்றும் உடையோராய் வாழ்ந்துவந்தனரென்றும் அக்காலத்துச் சாசனங்கள் வாயி லாக அறியலாம். நந்திக் கலம்பகம் என்னும் பிரபந்தமும் பெருந்தேவர்ை எழுதிய பாரதவெண்பா வென்னும் இ காசமும் மூன்ரும் நந்திவர்மன் காலத்தவை.
6. உரைநடை நூல்கள்
முந்திய காலப்பகுதியைப் போலவே பல்லவர் காலமும் உரைநடை இலக்கியம் விருத்திபெருத காலமாகும். இறையனு ரகப்பொருளுக்கு எழுதிய உரையைவிட வேறு உரைநூல் கள் பல்லவர் காலத்தில் எழுந்தனவாகத் தெரியவில்லை. அதனுல், அக்காலத்து உரைநடையின் வளர்ச்சியை அவ்வுரை நூல்கொண்டும் அக்காலத்திலே தோன்றிய சா சனங்கள் கொண்டுமே ஒரு வாறு நிச்சயிக்கலாம். சிலப்பதிகாரத்திற் காணப்படும் உரைநடையிலும் இறையனுரகப்பொருளுரையின் நடை வளர்ச்சியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது; எனினும், மோனை எதுகைகளை அதிகமாகக் கொண்டுள்ள அவ்வுரை நடை சிறந்த ஒத்திசையுடையதாய் விளங்குகின்றது. அவ் வுரைகடைக்கு மேல்வரும் வாக்கியம் தக்க உதாரணமாகும்:
' என்னை பிரியுமாறெனின், ஒருவரொருவரின் முன்னங் தழை விழைதக்கன தொடுத்துமென்றும், கண்ணி தண்ணறு நாற்றத்தன செய்து மென்றும், போது மேதக்கன கொய்து மென்றும், குயிலொடு மாறு கூவுதுமென்றும், அருவியாடி அஞ்சுனே குடைதுமென்றும், வாசமலர்க்கொடியில் ஊசலாடுது மென்றும், பரந்து அப்பாலுள்ளார் இப்பாலுள்ளார் கொல்லோ வென்றும், இப்பாலுள்ளார் அப்பாலுள்ளார் கொல்லோ வென்றும் இவ்வகை நினைத்துப் பிரிபவென்பது.'

Page 61
104 தமிழ் இலக்கிய வரலாறு
சமணம் முதலிய வடநாட்டுச் சமயங்கள் தமிழ்நாட்டிற் பரவியதன் பயனுக வடமொழியும் தமிழ்மொழியும் கலந்த ஒரு புதிய உரைநடையும் பல்லவர் காலத்திலே தோன்றிற்று. அது மணிப்பிரவாள நடை யெனப்படும். பூரீ புராணம், கயசிந்தாமணி முதலிய சமணசமயத் தொடர்பான நூல்கள் பல்லவர்காலத்தில் மணிப்பிரவாள நடையில் எழுந்த நூல் களாகும். அக்காலந்தொடங்கி அங்கடை பல நூற்றண்டுக ளாகத் தமிழ் நாட்டில் வளர்ந்துவந்தது. மேல்வரும் அதி காரங்களில் அதன் வளர்ச்சியைக் கூறுவாம்.
 
 

1V. சோழர் காலம்
சோழமன்னர் தனியாட்சி செய்யத் தோடங்கிய கால மாகிய கி. பி. ஒன்பதாம் நூற்றண்டின் பிற்பகுதி முதற் பதினுன்காம் நூற்றண்டுவரையும் உள்ள காலப்பகுதி, தமிழிலக்கிய வரலாற்றிலே சோழர்காலப்பகுதி யெனப்படும். அது ஏறக்குறைய நாநூறு ஆண்டுகளைக்கொண்டது. 1. அரசியல் நிலை
தமிழ்நாட்டு அரசியல் வளர்ச்சியை நோக்குமிடத்து, அது சோழப் பெருமன்னர் ஆட்சிக்காலத்தில் மிக உன்னத நிலையி லிருந்ததென்றே கூறலாம். பல்லவராட்சிக்காலம் முடிவடைந்த ஒன்பதாம் நூற்றண்டின் இறுதி தொடக்கம் பதின்மூன்ரும் நூற்றண்டின் இறுதிவரையும் (ஏறக்குறைய முந்நூறு ஆண்டு களுக்குச்) சோழராட்சி நிலவிற்று. பல்லவர் வடக்கிலிருந்த கீழைச் சாளுக்கியரோடும் தெற்கிலிருந்த பாண்டியரோடும் நெடுங்காலமாகப் போர் புரிந்துவந்ததனுல் அவராட்சி ஒன்ப தாம் நூற்றண்டில் வலிகுன்றியிருந்தது. அதனையறிந்து, பல காலமாக அவருக்குத் திறைகொடுத்துச் சிற்றரசராயிருந்து ஆண்டுவந்த சோழ அரசர் தனிய்ாட்சி செய்ய முற்பட்டனர். விசயாலயன் என்னும் சோழ அரசன் முதன்முதலாகப் பல் லவரிடமிருந்து தஞ்சாவூரைக் கைப்பற்றி, அதனைத் தனது தலைநகராகக்கொண்டு தனியாட்சி செய்ய ஆரம்பித்தான். அவனுக்குப் பின் அவன் மகன் முதலாம் ஆதித்தன் பல்லவ ராட்சிக்குட்பட்டிருந்த நாடுகளையெல்லாம் கைப்பற்றி ஆண் டான். இவ்வாறு சோழவமிசத்தினரின் ஆட்சி வளர்ந்துவந்தது. ஆதித்தன் மகன் பராந்தகச் சோழன் பாண்டியரோடு போர் செய்து பாண்டிநாட்டையும் தனது ஆட்சிக்குட்படுத்தினுன் அவனுக்குப் பின் ஆண்ட அரசர்களுள் இராசராசச் சோழ
னுடைய காலத்திற் சோழராட்சி உயர்நிலை எய்திற்று. கடற்
படை தரைப்படைகளைப் பெருக்கி அவற்றின் உதவிகொண்டு
14

Page 62
106 தமிழ் இலக்கிய வரலாறு
தமிழ்நாட்டின் வடக்கிலும் மேற்கிலுமுள்ள பலநாட்டரசர்க ளோடு போர்புரிந்து அவர்களை வென்று அங்காடுகளையும் தன் ஆட்சிக்குட்படுத்தினன். பின் ஈழமண்டலத்தையும் கிழக்கிந்திய தீவுகள் பலவற்றையும் தனதாக்கினன். அவன் மகன் இரா சேந்திரச் சோழனுடைய ஆதிக்கம் கங்கைநாடு தொடக்கம் யாவா சுமாத்திராத் தீவுகள்வரையும் சென்றிருந்தது. அவன் *கங்கைகொண்டசோழன்' என்றும் அழைக்கப்பட்டான். தமிழர சர்களின் ஆட்சிமுறை உச்சநிலையடைந்தது அவன் காலத்தி லெனலாம். அவன் காலத்திற்குப் பின் சோழநாட்டைச் சிறப் பாக ஆண்ட சோழ அரசர்களுட் பாராட்டத் தகுந்தோர் முதலாங் குலோத்துங்க சோழனும் இரண்டாங் குலோத்துங்க சோழனுமாவர். இரண்டாங் குலோத்துங்கனுடைய காலத்திற் குப் பின் சோழராட்சி வலிகுன்றிப், பதின்மூன்றம் நூற் றண்டின் பிற்பகுதியில் மூன்றம் இராசராசச் சோழனதாட்சிக் காலத்தோடு முடிவடைந்தது. சோழராட்சி நிலைதளர, அவருக் குத் திறைகொடுத்து ஆண்டுவந்த பாண்டியர் தலையெடுத்தனர். அவர்களுள் ஆற் ற ல் மிக் க சுந்தரபாண்டியன் ஆட்சி செய்த காலத்திலிருந்து பாண்டியர் தனியாட்சி செய்யலா யினர். அக்காலம் முதல் அவராட்சி சிறப்பாக நடைபெற் றது. அவராட்சியும் பதினன்காம் நூற்றண்டிலே தளர்ச்சி யுறத் தொடங்கிற்று.
2. சமய நிலை
தமிழிலக்கியங்களுட் பெரும்பாலன சமயச் சார்புடையன வென்பது அவ்விலக்கிய வரலாற்றை நோக்குமிடத்துப் புல ணுகும். மக்கள் தம் வாழ்க்கையிற் சமயவொழுக்கத்தைச் சிறப்பாகப் பாராட்டிவந்தமை, அங்ங்ணம் சமயச் சார்புடைய இலக்கியங்கள் பெருவரவினவாகத் தமிழில் எழுந்தமைக்கு ஒரு காரணமாகலாம். ஆகவே, பல்வேறு சமயங்களையும் தமிழ் மக்கள் போற்றி வந்தவாற்றை அறிந்துகொள்ளுதல் தமிழிலக்கிய வரலாற்றைப் படித்தற்குப் பெரிதும் பயன்படு மென்பது சொல்லாமலே அமையும். வைதிக சமயங்கள்

சோழர் காலம் 107
பல்லவராட்சிக் காலத்திற் புத்துயிர் பெற்றுத் தழைத்தமை யும் அதனுல் தமிழிலக்கியம் சிறப்படைந்தமையும் முந்திய அதிகாரத்திற் கூறப்பட்டுள்ளன. இனி, சோழராட்சிக் காலத் தில் தமிழ்நாட்டுச் சமயங்கள் ஒன்றேடொன்று பகைமை பாராட்டாது தத்தம் வழிகளில் வளர்ச்சிபெற்று வந்ததையும் அதனுல் தமிழிலக்கியம் சிறப்படைந்து வளர்ந்ததையும் நோக்குவாம்.
பல்லவர் காலத்தில் தம்முள் முரண்பட்டு நின்ற சமயங் கள் சோழர் காலத்திற் பகைமையின்றி வளர்ந்துவந்தன வென்றே அறியக்கிடக்கின்றது. நாட்டு கலத்தையே பெரி தாக மதித்து ஆட்சிபுரிந்த சோழப் பெருமன்னர் எல்லாச் சமயங்களையும் ஒப்ப மதித்து ஆதரித்துவந்தமையால், அக் காலப்பகுதியிற் சமயப்பகை மூளாதிருந்தது. அரசரும் அரச குடும்பத்தினரும் எல்லாச் சமயங்களுக்கும் வேண்டிய உதவி கள் பலவற்றையும் செய்துவந்தனரெனினும், அ வ ர்கள் சைவராயிருந்தமையின் சைவத்தையே சிறப்பாக வளர்த்து வந்தனர். பழைய சைவக்கோவில்களைப் புதுப்பித்தும், நாயன் மாரின் பாராட்டைப் பெற்ற பல இடங்களிற் கருங்கற் கோவில்களைப் புதியனவாய்க் கட்டியும், அவற்றில் நித்திய பூசை முதலியன நடைபெறுதற்கு வேண்டிய பொருள்களை உதவியும் பலவாறு சைவத்தைப் போற்றிவந்தமையால், அக்காலத்திற் சைவம் சிறப்பாக வளர்ந்துவந்தது.ஆழ்வார்களும் நாயன்மார்களும் பல்லவர் காலத்தில் ஏற்றிவைத்த பத்தி விளக்கைச் சோழர் காலத்தில் வாழ்ந்த அடியார்களும் பிறரும் சுடர்விட்டெரியச் செய்தனர் எனக் கூறுதல் மிகை யாகாது. சைவ வைணவ ஆலயங்களில் நடைபெறவேண்டிய கருமங்கள் குறைவின்றி நடைபெறுதற்பொருட்டு மக்கள் பலர் மானியமாக நிலங்கள் பலவற்றை விட்டதுமன்றி, வேறு பல பொருள்களைக் கொடுத்தும் அவற்றை ஆதரித்துவந்தனர். ஆலயங்களிலே தேவாரங்களையும் திவ்விய பிரபந்தங்களையும் ஒதுதற்கு வேண்டிய வசதிகளை மக்க ள் செய்துவந்ததி

Page 63
108
தமிழ் இலக்கிய வரலாறு
லிருந்து பல்லவர் காலத்தில் எழுந்த பத்திப்பாடல்களுக்குச் சோழர் காலத்திலிருந்த பெருமதிப்பு ஒருவாறு புலனாகும். வைதிக சமயங்களை வளர்க்கும் நோக்கமாகத் தேவாரங்களை நம்பியாண்டார் நம்பியும் திவ்விய பிரபந்தங்களை நாதமுனிகளும் அக்காலத்திலே தேடிப் பெற்றுத் தொகுத்திராவிடின், அவற் றுட் பல எமக்குக் கிடைத்திரா. அதனால், அவர்கள் வைதிக சமயங்களுக்கு மட்டுமன்றித் தமிழ்மொழிக்கும் சிறந்த தொண் டாற்றின ரென் றே கூறலாம். மெய்கண்டதேவரும் இராமானுச ரும் சுத்தாத்துவிதம் விசிட்டாத்துவிதம் ஆகிய தத்துவக் கொள்கைகளைத் தமிழ்நாட்டிற் பரப்பியதும் சோழர் காலத்தி லேயே என்பதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.
பல்லவர் காலத்தில் வைதிக சமயங்களால் அலைப்புண்டு நலிவெய்தியிருந்த சமணம் பெளத்தமாகிய இரு சமயங்களும் சோழர் காலத்திலே தத்தம் வழிகளில் வளர்தற்கேற்ற வசதி கள் பலவற்றையும் பெற்றுத் தழைக்கலுற்றன. அச்சமயத் தோர் சிறந்த இலக்கியங்களையும் இலக்கண நூல்களையும் இயற்றித் தமிழை வளர்த்துவந்தனர். 3. இலக்கியப் பண்பு
தமிழிலக்கியம் பல்லவர் காலத்திலும் பார்க்கச் சோழர் காலத்திற் சிறப்பாக வளர்ந்துவந்துளது. பிறநாட்டிலிருந்து வந்து தமிழ்நாட்டை அடிப்படுத்தி ஆண்ட பல்லவர் தமிழ் நாட்டிலே தம் ஆட்சியை நிலைப்படுத்த முயன்றனரன்றி, நாட்டின் நன்மைகருதி உழைத்தன ரெனக் கூறுதல் பொருந் தாது. பகையரசர்களோடு போராடுவதிலேயே அவருக்க மெல்லாம் சென்றதனால் அவராட்சி தமிழ்நாட்டிற்குப் பெரும் பயன் அளித்திலது. அதனால், சமுதாயமும் வளர்ச்சியடைந் திலது. அத்தகைய நிலையிற் சமுதாயத்தின் சிறப்பைக் கூறும் இலக்கியங்களும் அரசனைப் பாராட்டும் செய் யுட் க ளு ம் தோன்றுதல் அரிதாகும். சோழப் பெருமன்னரின் ஆட்சிமுறை பல்லவர் ஆட்சிமுறையிற் பெரிதும் வேறுபட்டதொன்றாகும்.

சோழர் காலம் 109
காட்டு நலன்கருதி அவர் ஆண்டதன் பயனுக, பகை பிணி வறுமை யென்பன நாட்டைவிட்டகல, அது செல்வம் மலிந்து வளஞ்சிறந்தது. கல்வியறிவையும் கலைகள் பலவற்றையும் வளர்த்தலில் மக்களுக்கு ஊக்கம் பிறந்தது. அக்காலத்திலே தழிழர்தம் பண்பாடு உச்சநிலை எய்திற்றென்றும், சமுதாயம் உயிர்த்துடிப்புடையதாய் விளங்கிற்றென்றுங் கூறலாம். உள் ளத் தெளிவும் உணர்ச்சிப் பெருக்கும் பொருந்தப்பெற்ற பல பு ல வ ர் களை அச்சமுதாயம் தோற்றுவித்தது. அவர் அச்சமுதாயத்தினையும் அதன் சிறப்புக்குக் காரணமாயிருந்த மாட்சிமிக்க மன்னரின் ஆட்சித்திறனையும் பாராட்டிப் பல நூல்களை இயற்றினர். சங்ககாலப் புலவர்கள் தம் காலத்தி லிருந்த அரசரின் வீரச்செயல் கொடைச்சிறப்பு முதலிய வற்றையும், மக்களின் மாண்புடைப் பண்புகளையும் தம் செய்யுட்களிற் சித்திரித்துக் காட்டியதுபோல, சோழர் காலத்தி லிருந்த புலவர்கள் சோழரின் சீரிய குணங்களையும் அவ ராட்சியால் உயர்நிலையடைந்த சமுதாயத்தின் சிறப்பினையும் தம் நூல்களிற் பாராட்டியிருப்பதை நோக்கின், அவ்விரு காலப் பி ரி வு களி லு மெ ழுந் த இலக்கியப்போக்கிலுள்ள ஒப்புமையை ஒருவாறு உணரலாம்.
சோழப்பெருமன்னர் காலப்ப்குதியில் எழுந்த இலக்கியங் களுட் பெரும்பாலானவை உலகியலைச் சிறப்பித்துக் கூறு வன. அத்தகைய இலக்கியங்கள் தோன்றுதற்கு இக்காலத் திற் சமுதாய வாழ்க்கை சிறந்து விளங்கினமையே காரண மாகும். ஒரு புலவனுடைய கற்பனையைத் தூண்டுவனவற்றுள் அவனுடைய சூழ்நிலை முக்கியமான தொன்றகும். உலக வாழ்க்கை இழித்திடப்படுதற்கு உரியதொன்றன்று என்ற எண்ணம் மக்களுடைய மனத்தில் நிலைபெறுதற்கான சூழ் நிலை இக்காலப்பகுதியில் நிலவலாயிற்று. அதனுல், உலகியற் சிறப்புக்களைப் பாராட்டும் நோக்கத்துடன் இக்காலப் புலவர் கள் இலக்கியங்களை இயற்றினர். பல்லவர் ஆட்சிக்காலத்தில் உலகியல் சிறப்புருமையால் அதனைப் புனைந்துகூறும் இலக்

Page 64
110 தமிழ் இலக்கிய வரலாறு
கியங்கள் பல அக்காலத்திலே தோன்றவில்லை என்றே கூற லாம். அக்காலப்பகுதியில் வாழ்ந்த சமண பெளத்த சந்நியாசி கள் செய்துவந்த சமயப்பிரசாரமும் உலக வாழ்க்கையால் மனிதன் அடையும் பெறுபேறுகளுக்கும் சுகத்திற்கும் முரண்பா டாகக் காணப்பட்டது. இத்தகைய பல காரணங்களாற் பல்ல வர் ஆட்சிக்காலத்தில் உலகியல் பாராட்டப்படவில்லை, உல கியிலில் ஈடுபட்டவர்போலக் காணப்பட்ட சுந்தரமூர்த்திசுவாமி களும் வாழ்வாவது மாயம் இது மண்ணுவது திண்ணம்' என்று கூறியிருப்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. சோழப் பெருமன்னர் காலத்தில் நாடு கன்னிலை பெற்றிருந்தமையாற் சமுதாயவாழ்க்கை சிறப்புற்று வி ள ங் கி ற் று. ஆகவே, உலகியலைச் சிறப்பித்துக் கூறும் இலக்கியங்களும் தோன்ற லாயின. உலகியல் விருத்தி சமய வளர்ச்சிக்குத் தடையான தொன்றன்று என்பதைச் சோழப்பெருமன்னர் காலத்துத் தமிழ்நாட்டு வரலாறு தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. மக்கள் உலக காரியங்களில் ஈடுபட்டபோதும் இறைவழிபாட் டைக் கைவிடவில்லை. நாட்டின் நலன்கருதி ஆட்சிபுரிந்த மன்னர்கள் சமயவளர்ச்சிக்கு வேண்டிய பணிகள் பலவற் றைச் செய்துவந்தனர். மன்னர் காட்டிய வழியில் மக்கள் சென்றமையால் உலகியலும் இறைவழிபாடும் ஒன்றற்கொன்று முரண்படாத வகையில் தமிழ்நாட்டிலே தழைக்கலாயின. அக் க்ாலத்தில் எழுந்த பேரிலக்கியங்களில் அவையிரண்டும் ஒருங்கு சிறப்பிக்கப்படுதலை நாம் காணலாம்.
சோழப் பெருமன்னர் காலத்தைக் காவிய உற்பத்திக் காலமெனக் கூறலாம். ஒரு தலைவனுடைய வாழ்க்கை வர லாற்றை எடுத்துக் கூறுமுகத்தால் மக்களுடைய கல்வாழ் விற்கு இன்றியமையாத அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பொருளையும் கூறும் இலக்கியம் காவியம் அல் லது காப்பியம் எனப்படும். அது பெருங்காப்பியம் சிறு காப்பியம் என இருவகைப்படும். அவையிரண்டும் தன்னிக ரில்லாத் தலைவனுடைய வாழ்க்கை முழுவதையும் புனைந்து

சோழர் காலம் ||
111
கூறுவன; எனினும், அவையிரண்டனுள் அறம் முதலிய நான்கினையும் கூறுவதைப் பெருங்காப்பியம் என்றும், அந் நான்கனுள் ஒன்றேனும் பலவேனும் குறைவுபடுதலுடையதைச் சிறுகாப்பியம் என்றும் கூறுவர். சிந்தாமணி, கம்பராமாய ணம் முதலியன பெருங்காப்பியங்கள்; சூளாமணி, நீலகேசி முதலியன சிறுகாப்பியங்கள். வடமொழி இலக்கியமரபைத் தழுவித் தமிழில் எழுந்த இலக்கியவகைகளுட் சிறந்ததொன் றாகக் கருதப்படும் இக்காப்பியம் சோழப்பெருமன்னர் காலப் பகுதியிலே தமிழில் ஆரம்பித்துளதாகும். இக்காலத்திலெழுந்த தண்டியலங்காரம் முதலிய இலக்கண நூல்கள் இக்காப்பிய இலக்கணத்தைத் தெளிவாகக் கூறுகின்றன. தன்னிகரில்லாத் தலைவனுடைய வாழ்க்கைச் சிறப்பைப் புனைந்துகூறும் இக் காப்பியங்கள் பல்லவர் காலப்பகுதியிற் றோன்றாமைக்கும் சோழப்பெருமன்னர் காலப்பகுதியிலே தோன்றினமைக்கும் அவ்வக் காலங்களிலே தமிழ்நாடு இருந்த நிலைதான் ஓரளவிற் குக் காரணம் எனலாம். பல்லவர் காலத்து அரசர்களுடைய வாழ்க்கை மக்களுடைய வாழ்க்கைக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கவில்லை. ஆனால், சோழப்பெருமன்னர் காலத்திலோ வெனின் மன்னர் வாழ்ந்தவகை மக்களுடைய மனத்தைப் பிணித்ததுமட்டுமன்றிப், பெரும் புலவர்களுடைய கற்பனையை யும் தூண்டவல்லதாகக் காணப்பட்டது. இங்ஙனம் மன்ன ருடைய வாழ்க்கை சிறப்புற்று விளங்கின்மைதான் தமிழிற் காவிய உற்பத்திக்கு ஒரு முக்கிய காரணமாகும். சிந்தாமணி, கம்பராமாயணம் முதலிய பெருங்காப்பியங்களிலே வடநாட்டு மன்னர்களுடைய வாழ்க்கைச் சிறப்பு, ஆட்சித்திறன் முதலி யன புனைந்துகூறப்படுவனவாகக் காணப்படினும், உண்மை யிலே சோழப் பெருமன்னருடைய வாழ்க்கைச் சிறப்பு முத லியனவும் அந்நாட்டு மக்களுடைய சீரிய குணங்களும் வளம், பொருந்திய 'அந்நாட்டின் இயற்கையழகும் பிறவும் கூறப்பட் டிருப்பதை நாம் காணலாம். உதாரணமாக, களனி நாட்டின் 'இயற்கை வளத்தைக் கூறப்போந்த கம்பன், அதற்குச் சோழ
ச

Page 65
112 தமிழ் இலக்கிய வரலாறு
நாட்டை உவமையாக அமைத்துக் காவிரி நாடன்ன களனி நாடு' என்று கூறியிருப்பதை நோக்கும்பொழுது அவனுக்குச் சோழநாட்டின் இயற்கையழகில் எத்துணை ஈடுபாடு இருந்தது என்பது புலகிைன்றது. சுருங்கக்கூறின், சோழப்பெருமன் னர் காலத்தில் எழுந்த இலக்கிய நூல்கள் சோழநாட்டின் இயற்கைவளம், மக்கள் வாழ்க்கைச்சிறப்பு, சோழப் பெரு மன்னர்களின் ஆட்சித்திறன் முதலியவற்றைப் புனைந்துகூறும் நோக்கமாக எழுந்தனவெனக் கூறலாம்.
- சோழர் காலத்தில் அரசரும் மக்களும் வைதிக சமயங் களை வளர்த்தற்குப் பல முயற்சிகளைச் செய்துவந்தனர். கருங்கற் கோவில்கள் பலவற்றைக் கட்டி ஆலயத் திருப் பணிகள் பல செய்ததுமன்றி, வேதாகமக் கல்வியை நாட்டில் விருத்திசெய்தற்பொருட்டு நிலங்களை மானியமாகப் பிராமண ருக்கு அளித்தும், வடமொழிக் கல்விநிலையங்களை நிறுவியும் அவர் வைதிக சமயங்களை ஆதரித்தனர். இவ்வாறு வடமொழிக் கல்வி பல்லவர் காலத்திலும் பார்க்கச் சிறப்பாக அக்காலத் திற் போற்றப்பட்டதன் பயனுக, வடமொழி நூல்களிலுள்ள கதைகளையும் கருத்துக்களையும் ஆதாரமாகக்கொண்டு சோழர் காலப் புலவர்கள் பல காவியங்களையும் புராணங்களையும் பிரபந்தங்களையும் இயற்றின்ர். முதன்முதலாகத் தமிழ்ப்புலவர் வடமொழிக்காவிய முறையினைத் தழுவித் தமிழிற் காவியங்க ளியற்றியது அக்காலத்திலேயேயாகும். வடசொற்களும் வட மொழி இலக்கண அமைதிகளும் தமிழில் அதிகமாகப் புகுந்த அக்காலத்தில், அவற்றை அமைக்கும் முறையைக் கூறும் இலக்கண நூல்களும் தமிழிலெழுந்தன. மேற்கூறிய நூல்களை விட, தத்துவசாஸ்திர நூல்கள் அக்காலத்திலே தோன்றிய தற்கும் வடமொழிக் கல்வி விருத்தியே காரணழெனலாம். பல்லவர் காலத்திற் பத்திப்பாடல்களைப் பெற்று வளர்ந்த வைதிக சமயங்கள் தாட்டிய உண்மை நெறிகளைத் தத்துவ சாஸ்திரத்தின் உதவிகொண்டு நிறுவவேண்டியிருந்தமையால், மெய்கண்டதேவர் இராமானுசர் முதலிய பெரியார்கள் அக்காலத்

சோழர் காலம் 113
திலே தத்துவ நூல்களை இயற்றினர். அக்காலக் தொடக் கம் தமிழ் நாட்டிலே தத்துவ நூலாராய்ச்சி விருத்தியடையச் சாஸ்திர சம்பந்தமான பல நூல்கள் தமிழில் எழலாயின.
சோழர்காலத்திலிருந்த பெரியோர்கள் இவ்வாறு புதிய துறைகளிலே தம் ஊக்கத்தைச் செலுத்தித் தமிழிலக்கியத்தை வளர்த்ததோடமையாது தம் முன்னேர் இயற்றிய நூல்களைப் பொன்னேபோற் போற்றிப் படித்தனுபவித்தும்வந்தனர். அவர் கள் தொல்காப்பியம் முதலிய பழைய இலக்கண நூல்களை யும், எட்டுத்தொகை முதலிய இலக்கியங்களையும், ஐயந்திரி பறக் கற்றுவந்தனரென்பதை அக்காலத்தில் எழுந்த உரைநூல் களால் அறியலாம். பல்லவர் காலத்தில் எழுந்த பத்திப் பாடல்களை நாதமுனிகளும் நம்பியாண்டார்நம்பியும் தேடிப் பெற்று உலகுக்கு உதவினர். பல்லவர் காலத்திலும் அதற்கு முன்னும் வாழ்ந்த நாயன்மார்களின் ഖj('pഞ്ചു அறிதற்
பொருட்டு, நம்பியாண்டார்நம்பி சேக்கிழார் முதலிய சைவப் பெரியார்கள் சிறந்த ஆராய்ச்சிகளை நிகழ்த்திெைரன்பதை
அவர்கள் இயற்றிய நூல்களாலறியலாம்.
அகவல், வெண்பா, வஞ்சி, கலி என்னும் நால்வகைப் பாவிற்கும் இனமாயுள்ள தாழிசை, துறை, விருத்தம் என் னும் மூவகைப் பாவினங்கள் பல்லவர்காலத்திற் பெருவழக்கா
யிருந்தன. அவை அக்காலத்திற் பண்ணுேடு பாடுதற்குரியன " வாக விளங்கின. அவற்றின் ஒசைச்சிறப்பில் ஈடுபட்ட சோழர் காலப் புலவர்கள் அவற்றைக் கையாண்டு காவியங்களையும் பிரபந்தங்களையும் இயற்றினர். நீண்ட கதைகளைப் பாடுதற்கு
இளங்கோவடிகள் முதலிய முற்காலப் புலவர்கள் கையாண்ட
அகவற்பாவிற் காவியங்களே இயற்றும் வழக்கம் பல்லவர்
காலத்திற்குப்பின் அருகிவிட்டதென்றே கூறல் வேண்டும். சோழர்காலத்திற் பலவகையான யாப்புக்களைப் புலவர்கள் கையாண்டனரென்பதை அக்காலச் சாசனங்களாலும் இலக்கண நூல்களாலும் உரைகளாலும் அறியலாம்.
15

Page 66
114 தமிழ் இலக்கிய வரலாறு
சோழப் பெருமன்னர் காலத்திலே தமிழிலக்கியம் ஒரு புது வழியிற் சென்றது என்பதற்கு அக்காலப் புலவர்கள் பாவின வகைகளைக் கையாண்டு பேரிலக்கியங்களை இயற்றினமையை ஓர் எடுத்துக்காட்டாகக் கூறலாம். இசையொடு பாடுதற் குரிய இப்பாவினங்கள் ப ல் ல வ ர் காலத்துப் பத்திப் பாடல்களிற் சிறப்பாகக் கையாளப்பட்டதைப்பற்றி நாம் முந்திய அதிகாரத்திற் கண்டோம். இயற்றமிழிலக்கியங்களை யாத்தற்கும் இவை பயன்படும் என்பதைக்கண்டு, இவற்றைக் காவியங்களிற் கையாளத்தொடங்கிய சோழப் பெருமன்னர் காலத்துப் புலவர்களுள் முதலில் வைத்து எண்ணத் தகுந்தவர் தி ரு த் த க் க தே வர் என்னும் சமணமுனிவராவர். அவர் இயற்றிய சீவகசிந்தாமணி என்னும் காவியத்தை நாம் படிப்போமாயின், அவர் பல்லவர் காலத்துப் பத்திப்பாடல் களிற் காணப்படும் பாவினவகைகளுட் சிலவற்றைத் தெரிந்து, அவற்றைத் தம் காவியத்தில் எவ்வாறு கையாண்டார் என் பதை அறிந்துகொள்ளலாம். அவர் இவ்வாறு செய்ததனுலே தமிழிலக்கிய மரபிலே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி, இயற் றமிழிலக்கியத்தை ஒரு புதுவழியிற் போகச்செய்தனர் எனலாம். இது ஒன்றே திருத்தக்கதேவர் ஒரு பெரும்புலவர் என்பதைக் காட்டுதற்குப் போதுமானது, இயற்றமிழிலக்கியங்கள் கால் வகைப் பாவினுள் யாதேனும் ஒன்றைக்கொண்டு இயற்றப் டடுதலே பண்டை மரபாக இருந்துவந்தது. அதனுலேதான் சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை ஆகிய நூல்கள் அகவற்பாவிலும் பாரத வெண்பா வெண்பாயாப்பிலும் இயற்றப் பட்டன. வெண்பாவிலிருந்து தோன்றிய கட்டளைக்கலித்துறை என்னும் யாப்புவகை பாண்டிக்கோவை, திருக்கோவையார் ஆகிய நூல்களிற் பல்லவர் காலத்திற் பயன்படுத்தப்பட்டது. சோழப் பெருமன்னர் கால ஆரம்பம் முதலாகக் காவியங் களும் பிறவும் பாவினங்களில் இயற்றப்பட்டன. இங்ாவனம் இசைத்தமிழுக்குரிய செய்யுள் வகைகளை இயற்றமிழுக்குப் பயன்படுத்தியமை இக்காலப்பகுதிக்கு உரிய தனிச்சிறப்பாகும்.
 

சோழர் காலம்
115
திருமுறைகளும் நாலாயிர திவ்விய பிரபந்தங் - களும்
பல்லவராட்சிக் காலத்தில் நாயன்மார்களும் ஆழ்வார் களும் அவதரித்துச் சிறந்த பத்திப் பாடல்களைப் பாடியருளி, வைதிக சமயங்களுக்குப் புத்துயிரளித்த வரலாற்றை முந்திய அதிகாரத்திற் கூறினோம். நாயன்மார் செய்துவந்த தொண் டின் சிறப்பை முதலாம் ஆ தி த் தன் காலம் முதலாகச் சோழப் பெருமன்னரும் மக்களும் உணர்ந்து, அவர்களின் உருவச் சிலைகளைக் கோவில்களில் வைத்து வணங்கிவந்தன ரென்பது அக்காலச் சாசனங்களால் அறியக்கிடக்கின்றது, இவ் வாறு போற்றப்பட்ட நாயன்மார்கள் அருளிச்செய்த தோத் திரப்பாடல்களுட் சில ஆங்காங்கு மக் க ளால் ஓதப்பட்டு வந்தனவன்றி, அவற்றையெல்லாம் ஒருங்குபெற்று ஓதக் கூடியவகையில் அவை அக்காலத்திலே தொகுக்கப்படவில்லை. அந்நிலையில் நம்பியாண்டார் நம்பி அவதரித்து நாயன்மார் பாடிய தேவாரத் திருப்பதிகங்களைத் தேடிப் பெற்று, ஏழு திருமுறைகளாக வ கு த் து ச் சைவ உலகுக்கு அளித்தனர். அ வ ரு க் கு அ க ப் படாத திருஞானசம்பந்தசுவாமிகளின் திருப்பதிகமொன்றைப் பழைய சாசன மொன்றிலிருந்து இக் கால் ஆராய்ச்சியாளர் பெற்றிருக்கின்றனராகலின், அக்கா லத்திலே நம்பியாண்டார் நம்பிக்கு அகப்படாமற் பல திருப் பதிகங்கள் நாட்டில் இருந்திருக்கவேண்டு மென்றே கொள்ளக் கிடக்கின்றது.
சைவத் திருமுறைகள் பன்னிரண்டாக வகுக்கப்பட்டுள் ளன. அவற்றுள் சம்பந்தசுவாமிகள் பாடிய திருப்பதிகங்கள் முதல் மூன்று திருமுறைகளாகவும், அப்பர்சுவாமிகள் பாடிய திருப்பதிகங்கள் நான்காம், ஐந்தாம், ஆறாம் திருமுறை களாகவும், சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தேவாரங்கள் ஏழாந் திருமுறையாகவும் வகுக்கப்பட்டுள்ளன. 'மாணி க் க வா ச க சுவாமிகள் பாடிய திருவாசகமும் திருச்சிற்றம்பலக்கோவை யாரும் எட்டாந் திருமுறையாகவும், திருமாளிகைத்தேவர்
தி

Page 67
116 தமிழ் இலக்கிய வரலாறு
முதலிய ஒன்பதின்மர் பாடிய திருவிசைப்பாக்களும் திருப்பல்லாண்டும் ஒன்பதாம் திருமுறையாகவும், திருமங் திரம் பத்தாக் திருமுறையாகவும், காரைக்காலம்மையார் சேரமான் பெருமாள் நாயனுர் முதலியோர் பாடிய பிரபந்தங் கள் பதினுேராந் திருமுறையாகவும், பெரியபுராணம் பன் னிரண்டார் திருமுறையாகவும் வகுக்கப்பட்டுள்ளன. அவற் றுள் முதலேழு திருமுறைகளுமே நம்பியாண்டார்கம்பியால் தொகுக்கப்பட்டன என்பர். இவ்வாறு அவர் தேவாரத்திருப் பதிகங்களைத் தேடித் தொகுத்திராவிடின், அவற்றுட் பல அழிந்திருக்குமென் பதில் ஐயமில்லை. அதுவுமன்றி, பல்லவர் காலப் பகுதியிலும் அதற்கு முன்னும் வாழ்ந்த சிவனடியார் களின் வரலாற்றை அறிதற்கும் அவர் பலவாறு முயன்றன ரென்பதை அவர் பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியைக் கொண்டு அறியலாம். இவ்வாறு அவர் சைவத்துக்கும் தமி ழுக்கும் செய்த தொண்டு பெரிதும் பாராட்டற்குரியது. முத ഗ്ലേ ಶ್ಲಿ' அவர் வகுத்ததுபோல, ஏனைய திருமுறைகளைப் பிற்காலத்தோர் வகுத்து அவற்றுடன் கூட்டிப் பன்னிரு திருமுறைகளாக அமைத்தனரென்பர்.
வீரநாராயணபுரத்தில் அவதரித்த நாதமுனிகள் அங் குள்ள திருமால் கோவிலுக்குத் தொண்டு செய்துவரும் நாளில், நம்மாழ்வார் அவதரித்த திருக்குருகூரிலிருந்து அக் கோயிலைத் தரிசிக்கச்சென்ற அடியாா சிலர் திருப்பதிக மொன்றைப்பாட நாதமுனிகள் அது திருவாய்மொழியென் ணும் நூலிலுள்ளது என்பதை அறிந்து அந்நூலைப்பெற ஆசை கொண்டனர். உடனே அவர் திருக்குருகூருக்குச் சென்று திருவாய்மொழியை மட்டுமன்றி, நம்மாழ்வார் பாடிய ஏனைய பிரபந்தங்களையும் பிற ஆழ்வார்கள் பாடிய பிரபந்தங்களை யும் தேடிப்பெற்று, அவற்றையெல்லாம் நாலாயிர திவ்விய பிரபந்தமாகத் தொகுத்தனர். அது வுமன்றி, அங்ங் னம் தொகுத்த பாக்களுக்கெல்லாம் இசையமைத்தும் உதவினர். இவ்வாறு அவர் வைணவத்துக்கும் தமிழுக்கும் செய்ததொண்டு

சோழர் காலம் 17
பாராட்டற்குரியது. அவர் கி. பி. ஒன்பதாம் நூற்றண்டின் இறுதிக்காலத்திலும் கி. பி. பத்தாம் நூற்றண்டின் முற்பகுதி யிலும் இருந்தனரென்பர். Ο 5. காவியங்கள்
இராசாாசச் சோழன் முதலிய புவிச்சக்கரவர்த்திகள் ஆட்சிபுரிந்த சோழர்காலமே புகழ்படைத்த கம்பன் முதலிய கவிச்சக்கரவர்த்திகள் வாழ்ந்து ஒப்பற்ற தமிழ்க் காவியங் களை இயற்றித் தமிழ் மொழியின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டிய காலமாகும். தமிழிலுள்ள காவியங்களுள் ஐந்தினைப் பெருங்காப்பியம் என்றும் ஐந்தினைச் சிறுகாப்பியம் என்றும் கூறுவர். இவற்றுட் சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி எ ன் பன பெருங்காப்பியங்கள். சூளாமணி, யசோதரகாவியம், உதயண குமாரகாவியம், நீலகேசி, நலககுமாரகாவியம் என்பன சிறுகாப்பியங்கள். இவற்றுட் பெரும்பாலன சம ணர்களாலும் ஏனைய பெளத்தர்களாலும் இயற்றிப்பட்டவை.* இவற்றுள் மணிமேகலையும் சிலப்பதிகாரமுமே தமிழ்நாட்டுக் கதைகளைக் கூறும் காவியங்கள், பிறகாட்டுக் கதைகளைக் கூறும் ஏனைய காவியங்கள் எட்டும் சோழர் காலத்தில் எழுந்தவை என்பர். அவை வடநூல் மரபினைத் தழுவித் தமிழில் அணியிலக்கணம் வகுத்த தண்டியாசிரியர் முதலியோர் குறித்த காப்பிய இலக்கணங்களுக்கு அ ைம ய இயற்றப்பட்டவை. கடவுள் வாழ்த்து முதலியவற்றை முதலிலுடையதாய், ஒப்பற்ற குணங்களையுடைய ஒருவனைத் தலைவகைக்கொண்டு, அவனு டைய நாடு, நகர், பிறப்பு, வளர்ப்பு, அவனுடைய செயற் கரிய செயல்கள் முதலியவற்றை அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருளும் பயப்பக் கூறுவது பெருங் காப்பியம் என்றும், அறம் முதலிய நான்கனுள் ஒன்றேனும்
* சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகளைச் சைவரென்
பர் ஒரு சாரார். t

Page 68
18 தமிழ் இலக்கிய வரலாறு
குறைபாடுடையது சிறுகாப்பியம் என்றும் கூறுவர். தண்டி யாசிரியர் காலத்திற்குமுன் எழுந்த சிலப்பதிகாரம் மணிமேகலை யென்னும் நூல்கள் அவர் கூறிய பெருங்காப்பிய இலக்கணங்கள் யாவும் அமையப் பெருமையால், அவை பெருங்காப்பியங்களல்லவெனச் சிலர் கூறுவது பொருந்தாது. அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருளும் பயப் பத் தமிழ்நாட்டுக் கதையொன்றினைத் தழு வித், தமிழ்மரபு பிறழாது பல சிறப்புக்களும் ஒருங்கே பொருந்த இயற்றப் பட்டுள்ள சிலப்பதிகாரம், தண்டியாசிரியர் கூறும் பெருங் காப்பிய இலக்கணங்கள் யாவும் அமையப்பெற்ற காவியங் களிலும் சிறந்து விளங்குவதனுல் அதனையும் பெருங்காப்பி யத்தோடு ஒப்பக் கொள்ளுதல் எவ்வகையானும் பொருந்தும். மணிமேகலையும் அத்தகையதே. மேற்கூறிய காப்பியங்களை விட வேறுபல சிறந்த காப்பியங்கள் சோழர் காலத்தில் இயற்றப்பட்டுள்ளன். அவற்றுள் தமிழ் மொழிக்குப் புகழினை ஈட்டிக்கொடுத்த பெரியபுராணமும் கம்பராமாயணமும் கந்த புராணமும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.
வடமொழி மரபினைத் தழுவித் தமிழிலெழுந்த காப்பியங்களுட் பெருங்காப்பிய இலக்கணங்கள் யாவும் சிறப்பாக அமையப் பெற்ற நூல் சிங் தாமணி. அது பெருங்காப்பியங்களுள் முதலில்வைத்து எண்ணப்படுவது. சீவகன் கதையைக் கூறும் இந்நூல் திருத்தக்கதேவர் என்னும் சமண முனிவராற் பத்தாம் நூற்றண்டில் இயற்றப்பட்டது. இன்பத்தை மிகுத்துக் கூறும் இந்நூலின்கணுள்ள பதின் மூன்று இலம்பகங்களிலும் மணங்களே கூறப்படலால் இது மண நூல் என்றும் பெயர் பெறும் காப்பிய அமைப்பில் வடமொழி மரபைத் தழுவி இயற்றப்பட்டதெனினும், கருத்தமைதியிலும் உவமை உருவகச் சிறப்பிலும் பிறவற்றிலும் இது தமிழ்மரபு பிறழாது கற்பனைத் திறனுடையதாய் விளங்குகின்றது. புதுமுறையில் எழுந்த இக்காப்பியம் சோழர் காலத் துப் புலவர்களுக்கும் அரசர் களுக்கும் ஒரு விருந்தாய் விளங்கிற் று. ஆழ்வார்களும்
 
 
 
 
 

சோழர் காலம் 19
நாயன்மார்களும் தம் பத்திப் பாடல்களிற் கை யான் ட விருத்தம் முதலிய பாவினங்களையும் பிற யாப்புக்களையும் ஆராய்ந்து இயற்றமிழ் நூலிற்கு ஏற்றவற்றைத் தெரிந்து, தம் நூலிற் பயன்படுத்தித் தமிழிலக்கிய வளர்ச்சிக்கு ஒரு புது வழியை ஆசிரியர் வகுத்துக் காட்டினமையால், அவருக்குப் பின் வாழ்ந்த கம்பர், சேக்கிழார், கச்சியப்பர் முதலிய பெரும் புலவர்களும் அவரைப் பின்பற்றி விருத்தம் முதலிய யாப்புக் களிலே தம் காப்பியங்களை இயற்றினர்.
தமிழிலுள்ள பேரிலக்கியங்களுள் ஒன்றகச் சீவகசிந்தாமணி யென்னும் கா வி ய ம் மதிக்கப்பட்டுவந்துள்ளது. சோழப் பெருமன்னர் காலத்திலும் அதற்குப் பின்னும் தமிழிலெழுந்த காவியங்களுக்கும் புராணங்களுக்கு ம் பொருள்மரபிலும் செய்யுள்மரபிலும் ஒரு வழிகாட்டியாக நின்ற இந் நூ ல், பண்டைத் தமிழிலக்கியங்களிற் காணப்படும் கவிச்சிறப்புகள் பல பொதியப்பெற்றதொன்ருகக் காணப்படுகின்றது. சங்க நூல்களிற் காணப்படும் அகத்திணைப் பொருளமைதிகளும் உவமை யுருவகங்களும் பிறவும் காலத்திற்கு ஏற்ற வகையில் இந்நூலில் அமைக்கப்பட்டுள்ளன. தன்னிகரில்லாத் தலைவ ணுகிய சீவகனுடைய பிறப்பு, வீரச்செயல், அரசியற்றிறன் முதலியவற்றை விவரித்துக்கூறுதலால், இது உலகியல் கூறும் நூல்போலக் காணப்படினும், உண்மை யில் இது சமணசமயக் கருத்துக்களையும் அச்சமயம் போதிக்கும் நெறி களையும் எடுத்துக்கூறும் நோக்கத்துடன் இயற்றப்பட்டது . என்பதை நாம் இந்நூலைப் படித்து அறிந்து கொள்ளலாம். இந்நூலிலுள்ள முத்தியிலம்பகத்தில் அச்சமயம் போதிக்கும் தத்துவங்களும் பிறவும் சிறப்பாக வரையப்பட்டுள்ளன. ஏனைய இலம்பகங்களிலும் அவை ஆங்காங்கு குறிக்கப்பட் டிருக்கும் வகையினே நோக்குமிடத்து, இந்நூலாசிரியர் தம் சமயக் கொள்கைகளே வெளிப்படுத்துவதற்கே இதனே இயற் றிஞர் என்பது தெளிவாகும். இவ்வாசிரியர் காலத்திற்குமுன் வாழ்ந்த சமண முனிவர்கள் மக்களுக்கு உலகியலில்

Page 69
தமிழ் இலக்கிய வரலாறு
வெறுப்பை உண்டாக்கக்கூடியவகையில் நூல்களை இயற்றியும் பிரசாரங்களைச் செய்தும் வந்தமை அச்சமயம் குன்றியதற்கு ஒரு காரணமாகும். ஆகவே, உல கியலைச் சிறப்பித்துக் கூறும் நூல் ஒன்றினை இயற்றி, அதனைத் துணைக்கொண்டு தம் சமயக் கொள்கைகளை மக்களிடையே பரப்புதல்கூடும் என்று எண்ணி இந்நூலினை ஆசிரியர் இயற்றினர் எனக் கொள்ளுதல் பிழையாகாது. இந்நூலைப் பின்பற்றி இக்காலப் பகுதியிற் சமணகாவியங்கள் மட்டுமன்றி, கம்பராமாயணம் முதலிய ஏனைச்சமய காவியங்களும் தோன்றலாயின. அவை யாவும் இலக்கியச்சுவை நிரம் பிய நூல்களாதலின், சமய பேதங்களைப் பாராட்டாது மக்கள் அந்நூல்களையெல்லாம் விரும்பிப் படித்தனர். ஆகவே, இத்தகைய நூல்கள் தமிழிலே தோன்றுதற்கு வழிகாட்டியவர் சிந்தாமணியாசிரியரெனலாம்.
காமச்சுவையை மிகுத்துக் கூறும் இலக்கியங்களுட்
சிந்தாமணி ஒன்ருகும். காதலே கவிதைக்குப் பொருளாக
அமைதல்வேண்டும் என்பது பண்டைத் தமிழ்மரபாகலின்,
அதனைத் தழுவித் திருத்தக்கதேவர் தம்நூலில் அச்சுவை யினைச் சிறப்பாக அமைத்துள்ளனர். சீவகன் பெண்கள் LNG) மணந்த கதைகளைப் பல இலம்பகங்கள் கூறுகின்றன. அந் நூல் ஆரம்பத்திலுள்ள நாமகளிலம்பகம் அவன் கல்விபயின் றதைக் கூறுகின்றது. அச்செய்தியை உருவக வாய்பாட்டால் "ஞான மென்னுங் குமரியைப் புணர்க்கலுற்ருர், என்று மேல் வரும் செய்யுளிற் கூறியிருப்பது கண்டு இன்புறற்பாலது. முழவெனத் திரண்ட திண்டோண் மூரிவெஞ் சிலையினனு மழலெனக் கனலும் வாட்க ணல்வளைத் தோழினுளு
மழலையாழ் மருட்டுங் தீஞ்சொன் மதலையை மயிலஞ் சாயற்
குழைமுக ஞான மென்னுங் குமரியைப் புணர்க்கலுற்றர்.
இவ்வாறே முத்தியிலம்பகத்திலும் சீவகன் முத்திநிலையினை அடைந்தான் என்பதைக் கூறப்போந்த புலவர்,

ஆ கோழர் காலும் , 2.
கேவல மடங்தை யென்னுங் கேழ்கிளர் நெடிய வாட்கட் பூவலர் முல்லைக் கண்ணிப் பொன்னுெரு பாகமாகக் காவலன் ஞ்ஞெர் கூருக் கண்ணிமை யாது, புல்லி மூவுல குச்சி யின்பக் கடலினுண் மூழ்கினனே எனக் கேவலஞானத்தை ஒரு * பெண் ணுக உருவகித்துக் கூறியுள்ளனர். இவ்வாறு எத்தகையபொருளைக் கூறும் போதும் காமச்சுவையினை அதனுடன் இணைத்துக்கூறும் இயல்பினை நாம் இந்நூலிலேதான் சிறப்பாகக் காணலாம், இப்புலவர், நாட்டின் லேன் கருதி ஆட்சிபுரிந்த சோழ அரசர் காலத்தில் வாழ்ந்தவராதலின் கல்வி, வீரம், ஆட்சித்திறன் முதலிய பல சிறப்புக்கள் புெர்ருந்தப்பெற்ற ஓர் அரசனுடைய வாழ்க்கையைக் கூறும் வாயிலாக க் கற்றவர் விரும்பும் கவிச்சுவையனைத்தையும் பெய்து, இறைவனே அடையும் வழி யினை இந்நூலில் எடுத்துக்காட்டுகின்றனர். இத்தகையு சிறந்த நூலினைச் சோழப் பெருமன்னர்களும் அக்காலத்துப் புலவர் களும் படித்துப் பாராட்டியதில் வியப்பொன்றுமில்லை. இந் நூல் பல வழிகளிலும் ஒரு புதிய மரபினைத் தொடக்கி வைத்ததனுல்,அம்மரபு அக்காலம் தொடக்கமாக வளரலாயிற்று.
பெருங்காப்பியங்கள் ஐந்தனுள் வளையாபதி, குண்டல கேசியாகிய இருநூல்களும், சிறு காப்பியங்களுள் நாகசூமார காவியமும் இக்காலத்திற் கிடைத்தில. வளையாபதிச் செய்யும், கள் சிலவும் குண்டலகேசிச் செய்யுட்கள், சிலவும் புறத் திரட்டு, நீலகேசியுரை முதலியவற்றின்கண் வந்துள்ளன. சிறுகாப்பியங்களுள்ளே சூளாமணி ஏனையவற்றிலும் கவிச் சுவை மிக்கதொன்ருகும். அது சுரமை என்னும் நாட்டிலே போதன் மாநகரத்தில்வாழ்ந்த பயாபதியென்னும் அரசனுக்கு மகனுக அவதரித்த திவிட்டன் என்பானுடைய கதையைக் கூறுகின்றது. பாயிரம் நீங்கலாகப் பன்னிரண்டு சருக்கங்களை யுடைய இந்நூல், நாட்டுச்சருக்கத்தில் ஆரம்பித்து முத்திச் சருக்கத்தில் முடிவடைகின்றது. இந்நூலாசிரியராகிய தோலா மொழித்தேவர் சிந்தாமணி ஆசிரியருக்குக் காலத்தாற்
16

Page 70
29 தமிழ் இலக்கிய வரலாறு
பிற்பட்டவராதலின், சிந்த்ாமணியின் போக்கைத் தழுவிச் சூளாமணியை இயற்றினுர் எனக் கொள்வதற்குப் பல சான்றுகள் இந்நூலிற் காணப்படுகின்றன. சிந்தாமணிச் செ ய் யு ட் களி லுள் ள சொற்றெடர்கள், உவமை யுருவ கங்கள், கருத்துக்கள் முதலியன சூளாமணிச் செய்யுட் களில் வந்துள்ளன. இந்நூல் பல வகைகளிற் சிந்தாமணி யைப் பின்பற்றி எழுந்து ள் ள தெனினும், சில வகையில் இந்நூல் சிந்தாமணியிலும் சிறப்புடையது எனலாம். நாடு நகரங்களைப் புனைந்து கூறும் தனித்தனிப் பகுதிகள் சிந்தாமணி யில் இல்லை. அந்நூல் ஆரம்பத்திலுள்ள நாமகளிலம்பகத்தி லேயே சீவகனுக்கு உரிய நாடு நகரங்கள் சிறப்பிக்கப்பட் டுள்ளன. சூளாமணியிலே சுரமை என்னும் நாட்டை வருணித் துக் கூறும் சருக்கம் முதலிலும் போதனமாநகரத்தைப் புனைந்துகூறும் சருக்கம் அதனைத் தொடர்ந்தும் வருகின்றன. சூளாமணிக்குக் காலத்தாற் பிந்திய கம்பராமாயணம் கந்த புராணம் ஆகிய காவியங்களிலே நாடுநகரங்களைத் தனித்தனி கூறும் பகுதிகள் வருதலால், அவ்விரு நூலாசிரியர்களும் தோலாமொழித்தேவர் காட்டிய வழியைப் பின்பற்றி நாடு நகரங்களைக் கூறும் பகுதிகளைத் தம் நூல்களில் அமைத்த னர் எனக் கொள்ளுதல் பிழையாகாது. கவிச்சுவை நிரம்பிய செய்யுட்கள் பல செறிந்துகிடக்கும் இந்நூல் சிந்தாமணியிலும் உயர்வுடையது எனக்கருதும் தமிழறிஞர் பலருளர், ஆசிரிய ருடைய கற்பனையாற்றலையும் சொற்களை ஆளுந் திறனையும் நோக்கின் அவருக்குத் தோலாமொழித்தேவர் என்ற பெயர் மிகப் பொருத்தமுடையது என்பது புலனுகும். இந்நூலிற் காணப்படும் இயற்கை வருணனைக்கு மேல்வரும் செய்யுட் கள் உதாரணமாகும். சேடி நாட்டின் தலைநகரமான இரத நூபுரத்திலிருந்து அரசாண்ட சேடிமன்னன் மனுேவனம் என்ற பூஞ்சோலைக்குச் சென்றபோது, ഴ്ച If g|ഖ്f வரவேற்ற வகையிலே இச்செய்யுட்கள் கூறுகின்றன:
 

சோழர் காலம் 128
கோமான்சென் றணதலுமே கொங்கணிந்த மலர்தூவித் தேமாகின் றெதிர்கொள்ளச் சிறுகுயில்போற் றிசைத்தனவே வாமான்றேர் மன்னவற்கு மங்கலஞ்சொல் டிகளிரைப்போல் தூமாண்ட விளங்கொடிதந் தளிர்க்கையாற் றெழுதனவே. கொடியாடு நெடுநகரக் கோமான்றன் குணம்பரவி அடிபாடு மவர்களென அணிவண்டு முரன்றனவே வடிவாய வேலாற்கு மலர்ச்சின்னஞ் சொரிவனபோற் கொடுவாய கிளிகோதிக் குளிர்நறும்போ துகுத்தனவே.
ஆற்றல் மிக்க தமிழ்மொழியின் பெருமையை இராமா யணம் என்னுங் காவியத்தின் வாயிலாக எடுத்துக்காட்டிய கம்பர், உலகிலே தோன்றிய உத்தம கவிகளுள் ஒருவராக மதிக்கப்படுகின்றனர். கல்வியறிவிலும் புலமைத்திறனிலும் இணையற்றவராகலின் கல்வியிற் பெரியன் கம்பன்' என்ற முதுமொழியும் தமிழ்நாட்டில் நிலவுவதாயிற்று. அவர் வாழ்ந்த காலத்தைப்பற்றியும் அவருடைய வாழ்க்கையைப்பற்றியும் பல ரும் பலவாறு கூறுவர். அவர் காலம் ஒன்பதாம் நூற்ருண் டென்பர் சிலர். பன்னிரண்டாம் நூற்றண்டிற் சோழநாட்டிை ஆட்சிபுரிந்த ஒரு சோழனின் விருதுப்பெயராகிய "தியாக விநோதன்' என்பதை அவர் தமது காவியத்திற் குறித்துள் ளனராதலின், அவர் வாழ்ந்த கால்ம் பன்னிரண்டாம் நூற் றண்டென்பர் வேறுசிலர்.
தமிழர்தம் பண்பாடு உன்னதங்லை பெற்றிருந்த சோழர் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த கம்பர் இயற்றிய காவியம், ஒரு மொழியைப் பேசும் மக்களின் பண்பாடு உயர்நிலை எய்துங் காலத்தில் அம்மொழியில் உயர்ந்த இலக்கியங்கள் தோன்று மென வரலாற்று நூல்கள் கூறுவதற்கு ஓர் எடுத்துக்காட் டாக விளங்குகின்றது. வடமொழி நூல்களைத் தமிழ்மக்கள் பெரிதும் விரும்பிப் படித்த சோழராட்சிக் காலத்திலே தமிழர் தம் உள்ளத்திற் பல நூற்றண்டுகளாக அழுந்திக்கிடந்த வட நாட்டு இராமன்கதை தென்னுட்டு மக்களின் பண்பாட்டிற்கு இணங்கத் தமிழில் உருப்பெறுதல் எவ்வகையிலும் பொருத்த

Page 71
24 தமிழ் இலக்கிய வரலாறு
முடையதாகும். இராமினிடத்திலே தீர்த் அன்புகொண்ட் கம்பர் உள்ளத்தில் அக்கதை ஆரிய்"நாகரிகத்துக்குரிய அமிசங்கள் ப்லவும் நீங்கப்பெற்றுச் சோழர்காலத்துத் தமிழ் நீர்ட்டிற்குரிய ஒரு "க்தையாகவே பரிணமித்தது.”அவர் "கற்பனைச் 'சிறகு கொண்டு பிற கவிகளுக்கு எட்டாதக் உலகிற்சென்று சஞ் சரித்துப் பெற்ற அனுபவங்கள் அனைத்தையும் அக்காவியம் தன்னகத்தேகொண்டு விளங்குகின்றது. காவிய அமைப்பிலும் யாப்பு அணி மரபுகளிலும் அவ்ருக்குச் சிந்தாமணி ஒரு வழி காட்டியாயிருந்தபோதிலும், நூற்புணர்ப்பு முதலிய பண்பு களிற் கம்பர் செய்த காவியம் சிந்தாமணியை மட்டுமன்றித் தமிழிலே தோன்றிய காவியங்களனைத்தையும் வென்றுவிட்ட தென்றே கூறல்வேண்டும்.
8. தமிழ்மொழி ஆற்றல் மிக்குடையதாக விளங்கியகாலம் கம்பனுடைய காலமாகும். குறித்த பொருளை நேரிதின் உணர்த் தும் நேர்மை, பொருள், உணர்ச்சி முதலியவற்றைக் கல்வி யறிவில்லாதோர்க்கும் தெள்ளிதிற்புலப்படச்செய்யும் வன்மை முதலியன அக்கால மொழிநடையிற் காணப்பட்ட சிலப்ண்பு கள். இத்தகைய மொழியினைப் பெரும்புலவன் ஒருவன் தன் னுடைய் 8 எண்ணங்களையும் உண்ர்ச்சியையும் ஃபுலப்படுத்து தற்குக்கருவியாகக் கொள்ளும்போது, இணேயற்ற கவிதை உருவாதல் இயல்பாகும். மக்களுடைய பேச்சிற் பயின்று வரும் சொல், நடை, ஓசை முதலியவற்றைப் பயன்படுத்திச் சீரியமுறையிலே தன் கருத்தைப் புலப்படுத்திய செய்யுட்கள் அவனுடைய காவியத்திற் பல இடங்களிலும் வந்துள்ளன. மேல்வரும் செய்யுள் இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந் துள்ளது:இராமனுடைய அம்புபட்டு வீழ்ந்துகிடக்கும் வாலி
அவனே இப்பாட்டில் இகழ்ந்து கூறுகின்றன்.
வீரீம்அன்று, விதி அன்று, மெய்ம்மையின், "வாம் த்ன்று, நின் மண்ணினுக் கென்னுடல் பாரம் அன்று, பகை அன்று, பண்ப்ொழிந்து ஈரம் இன்றி.இது என்செய்த வாறுமீ. :
 
 
 
 
 
 

சோழர் காலம் 125.
உத்தம கவிகளிடத்திற் காணப்படும் சொல்வளம், ஓசை வளம், மனித இயல்பினை உள்ளவாறு கண்டறியும் பேராற் றல், மனுேபாவனை முதலிய பண்புகள் யாவும் கம்பனிடத் திற் காணப்படுகின்றன. உணர்ச்சி வேகத்தைப் புலப்படுத் தும் சந்தர்ப்பங்களிலெல்லாம் சொற்கள் யாதொரு தடையு மின்றி ஒன்றன்பின் ஒன்றம் அவன் கருத்தைத் தெள்ளிதிற்
புலப்படுத்திச் செல்லுமாற்றை அவன் காவியத்தில் எங்குங்
காணலாம். வெற்று மொழிகளையோ உயிர்த்துடிப்பற்ற தொற்களையோ அவனுடைய செய்யுட்களிற் காண் டல் அரிது. தொண்ணுாற்றறு வகை வண்ணங்களைக் கம்பன் கையாண்டான் என்று கற்றேர் கூறுகின்றனர். சந்தர்ப்பத் திற்கும் கருத்திற்கும் கதாபாத்திரங்களின் மனுேநிலைக்கும் செயலுக்கும் ஏற்றவாறு ஒசை செல்வதை இந்நூலிலுள்ள ஒவ்வொரு படலத்திலும் காணலாம். உதாரணமாகத் தாடகை கோபக்கனலோடு சென்று இராமனை எதிர்க்கும் நிலையினை மேல்வரும் செய்யுளின் ஓசை தெளிவாகப் புலப்படுத்து கின்றது:
இறைக்கடை துடித்தபுரு வத்தளெயி றென்னும் பிறைக்கடை பிறக்கிட மடித்தபில வாயள் மறைக்கடை யாக்கிவட வைக் கன லிரண்டாய் நிறைக்கடல் முளைத்தென நெருப்பெழ விழித்தாள்.
கம்பனுடைய மனுேபாவனையை அவன் அமைத்துள்ள உவமையுருவகங்களிலும், சிருட்டித்த கதாபாத்திரங்களிலும் அவற்றிடையே நிகழும் உரையாடல்களிலும் வருணனைகளி லும் கண்டறியலாம். கதாபாத்திரங்களின் குணச்சிறப்புகளை முன்பின் முரணுதபடி அமைத்துச் செல்லும் வகையிற் கம்ப னுக்கு நிகரான புலவன் இல்லையென்றே கூறலாம். கதையை வளர்த்துச் செல்லும்போது, வேகமாகச் செல்லவேண்டிய இடங்களில் வேகமாயும் மெல்லச் செல்லவேண்டிய இடங்க ளில் ஆறுதலாயும் நாட்கமுறையிற் கதைப்புணர்ப்புக்களை இடையிடையே ஏற்படுத்திச் செல்லும் வகையினைப் பிற

Page 72
126 தமிழ் இலக்கிய வரலாறு
காவியங்களிற் காண்டல் அரிது. சுருங்கக்கூறின் கம்பன் இயற்றிய காவியம் தமிழ்ப்பண்பாட்டில் உருவான ஒரு கலைக் கோபுரமாகும்.
'பத்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ' என்று பிற்காலத்துப் புலவரொருவர் பாராட்டிய சேக்கிழார் சுவாமிகள் சோழர்காலத்திற் காவியஞ்செய்த கவியரசர்களுள் ஒருவராவர். அவரியற்றிய பெரியபுராணம் என்னுங் காவியம் சுந்தரமூர்த்திசுவாமிகள் பா டி யருளிய திருத்தொண்டத் தொகையினையும், நம்பியாண்டார்நம்பி பாடிய திருத்தொண் டர் திருவந்தாதியினையும் அடிப்படையாகக்கொண்டு, தென் நாட்டிலே சைவநெறி தழைக்கவந்த நாயன்மார் அறுபத்து மூவரின் வாழ்க்கைச் சிறப்பினை ஆராய்ந்து கூறும் ஒரு திவ்விய நூலாகும். அது பல நாயன்மார்களின் சரித்திரத் தைத் தனித்தனி கூறும் நூலேயாயினும், சுந்தரமூர்த்திசுவாமி களைத் தலைவராகக்கொண்டு அவரது அற்புத வாழ்க்கையைப் பெருங்காப்பிடி இலக்கணத்துக்கிணங்கத் திறம்படப் புணர்த் திக் கூறும் ஓர் அருங்காப்பியமாகத் திகழ்கின்றது. தெய்வ மணங் கமழும் பாமாலைச்செறிவாகக் காட்சியளிக்கும் அக் காவியம், சைவசமயத்தோர்க்கு ஒரு கலங் கரை விளக்கம் போன்றுள்ளது. தேவாரத்திருப்பதிகங்களில் அவருடைய உள் ஏரம் தோய்ந்திருந்ததனுல் அவற்றிற் காணப்படும் சந்தங்கள் பலவற்றைத் தமது காவியத்திற் சிறப்பாக அமைத்துப் பாடி யுள்ளனர். தெளிவும் இனிமையும் வாய்ந்த சிறுச்சிறு வாக் கியங்களின் தொகுதியாக விளங்கும் அவருடைய பாக்கள், கல்வியறிவில்லாதோரும் படித்து இன்புறக்கூடிய வகையில் ஆற்றெழுக்காக அமைந்துள்ளன.
சோழப்பெருமன்னர் காலத்தில் எழுந்த காவியங்களுக்கு ஒரு வழிகாட்டியாக நின்ற சீவகசிந்தாமணி பதின்மூன்று இலம்பகங்களை உடையதுபோல இந்நூலும் திருமலைச்சருக்கம் முதலாக வெள்ளானைச்சருக்கம் ஈருகப் பதின்மூன்று சருக் கங்களையுடையது. இது வடகாட்டுத் தலைவர்களின் கதை
 
 

சோழர் காலம் 12
க்ளைக் கூறும் சோழப்பெருமன்னர் காலத்துக் காவியங்கள் போலாது, தமிழ்நாட்டுச் சிவனடியார்களின் உண்மை வர லாறுகளைப் புனைந்துகூறும் ஓர் அரிய சரித்திர நூலாகும். தமிழ்நாட்டு வரலாற்றுக் குறிப்புக்கள் பல இந்நூலின்கண் வந்துள்ளன. பல்லவர் காலத்துச் சமயநிலை, சமுதாயநிலை முதலியவற்றை அறிந்துகொள்ளுதற்குச் சிறந்த கருவி நூலாக வும் விளங்குகின்றது. நாயன்மார்களுடைய வரலாற்றை உள்ள வாறு அறிந்து கூறுதற்பொருட்டுச் சேக்கிழார்சுவாமிகள் பற்பல இடங்களுக்கும் பாடல்பெற்ற தலங்களுக்கும் சென்று நாயன்மார்களைப்பற்றிய செய்திகளை அறிந்தும் தேவாரத் திருமுறைகளை ஆராய்ந்தும் தாம் பெற்ற உண்மைகளைத் தம்முடைய காவியத்திற் பயன்படுத்தியுள்ளனர். நாயன்மார் கள் வெவ்வேறு இடங்களிலும் வெவ்வேறு மரபிலும் உதித்த வர்களாதலின் அவர்களுக்கு உரிய சூழ்நிலை, வாழ்ந்த நாடு, செய்துவந்த தொழில் முதலியவற்றை நன்கு ஆராய்ந்தே அவர்களுடைய வரலாற்றைக் குறித்துள்ளனர். இங்ாவனம் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைக் குறித்தபோதும், அவர் புனைந்துள்ள கதைகள் யாவும் இலக்கியச் சுவை நிரம்பியனவாக உள்ளன. தமிழ்நாட்டிற் பற்பல இடங்களிலு முள்ள நாடுகள், ஊர்கள், சேகிகள், அங்கங்கே வாழும் மக்களுடைய தொழில்மரபு, பழக்கவழக்கங்கள் முதலியவற் றைக் கூறும் செய்யுட்களை ஒருங்கு சேர்த்துப் படிக்கும்’ போது தமிழ்நாட்டின் சிறப்பையும் தமிழர்தம் பண்பாட்டினை யும் நாம் அகக்கண்ணுற் கண்டு இன்புறமுடிகின்றது. தமிழ் நாட்டின் முற்கால நிலையை அறிய முயல்வார்க்கு ஒரு கரு வூலமாக விளங்கும் இந்நூல் தமிழ்ச்சுவை வேண்டுவார்க்குப் பேரிலக்கியமாகவும் பெருங்காவியமாகவும் விளங்குகின்றது. இயற்கைக் காட்சிகளையும் நாடு, சேரி முதலியவற்றையும் அவர் வருணித்திருக்கும் செய்யுட்பகுதிகள் சொல்லோவிய 1 DI TJ5 ஆங்காங்கு விளங்குகின்றன. கல்வியறிவு இல்லாதோரும் கற்றுப் பயன்பெறுதற்பொருட்டுச் சேக்கிழார்சுவாமிகள் இந்

Page 73
128
தமிழ் இலக்கிய வரலாறு
நூலை இயற்றினராதலின், 'இந்நூற் செய்யுட்கள் எளிமையும் இனிமையும் உடையனவாக விளங்குகின்றன. எடுத்துக் கொண்ட பொருளை விரித்துச் செல்லாது சுருங்கிய சொற் களிற் கனிவுள்ள ஓசையில் அமைத்துக்கூறும் பண்பை இந் நூலாசிரியரிடத்தே பெரிதும் காணலாம். தேவாரத்திருப்பதி கங்களில் அவருக்கு இருந்த பயிற்சியை ஓசைவளமுள்ள அவர் செய்யுட்கள் தெளிவாகக் காட்டுகின்றன. இந்நூற் செய்யுட்களின் சிறப்புக்கள் யாவற்றுள்ளும் கனிவும் புத்திச் சுவையும் படிப்போர் உள்ளத்தைப் பெரிதும் கவரவல்லன. சாதாரண மக்கள் பேசும் மொழிநடையை ஒத்த ஒரு எளிய நடைதான் இந்நூல் முழுவதிலும் கையாளப்பட்டுள்ளது. மேல் வரும் செய்யுட்கள் எளிமைக்கும் இனிமைக்கும் தக்க உதா ரணங்களாகும். திருக்காளத்தி நாதரைக் கண்ணப்பநாயனார் காவல்புரிந்து நின்றமையைக் கூறுகின்றன இச்செய்யுட்கள்:
அவ்வழி யந்தி "மாலை யணைதலு மிரவு சேரும் வெவ்விலங் குளவென் றஞ்சி மெய்ம்மையின் வேறு கொள்ளாச் செவ்விய அன்பு தாங்கித் திருக்கையிற் சிலையுந் தாங்கி மைவரை யென்ன வையர் மருங்குநின் றகலா நின்றார்.
சார் வருந் தவங்கள் செய்து முனிவரு மமரர் தாமுங் கார்வரை யடவி சேர்ந்துங் காணுதற் கரியார் தம்மை யார்வமுன் பெருக வாரா வன்பினிற் கண்டு கொண்டே நேர்பெற நோக்கி நின்றார் நீளிரு ணீங்க நின்றார்.
கச்சியப்பசிவாசாரியர் இயற்றிய கந்தபுராணம் சோழர் காலப் பகுதியில் எழுந்த பெருங்காப்பியங்களுள் - ஒன்று என்பர் இலக்கியவரலாற்று நூலாசிரியர்.. அது வடமொழியி லுள்ள ஸ்கந்தபுராணத்தின் ஒரு பகுதியாகிய சங்காசங்கிதை யிற் காணப்படும் சுப்பிரமணியக்கடவுளின் கதையை எடுத் துக் கூறுகின்றது. வெள்ளப்பெருக்கெடுத்துச் செல்லும் ஓர் ஆற்றின் வேகத்தையொத்து ஓசைச்சிறப்புடன் தங்குதடை யின்றிப் பாக்கள் செல்வது இக்காவியத்தின் சிறப்புக்களுள் ஒன்றாகும், ஆசிரியர் தாம் எடுத்துக்கொண்ட கதையை

சோழர் காலம்
129
வளர்த்துச் செல்லும் போதே, பாக்களில் ஆங்காங்கு சித்தாந்த சைவக் கருத்துக்களையும் அமைத்துக் காட்டுந்திறன் வியக்கத் தக்கது. முருகக்கடவுளிடத்துப் பத்தியுடையார்க்கு முருக! பத்தியை மேன்மேலும் வளரச்செய்யும் இச்சிறந்த காவியம் யாழ்ப்பாணத்துச் சைவர்கள் விரும்பியோதும் நூல்களுட் சிறந்ததொன்றாகும். 'நவிறொறும் நவிறொறும் நூனயம் பயப் பது; பயிறெறும் பயிறொறும் அறுமுகக்கடவு டிருவடிப் பத்தி ஞானம் விளைப்பது' என்ற பாராட்டை இக்காவியம் பெற் றுள்ளது. 6. சிற்றிலக்கியங்கள்
மேலே குறித்த காவியங்களை இயற்றிய புலவர்களைவிட, பல சிற்றிலக்கியங்களை இயற்றிய பெரும்புலவர்களும் அக் காலப்பகுதியில் வாழ்ந்தனர். அவர்களுட் சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புக ழேந் தி ப் பு ல வர், நம்பியாண்டார்நம்பி, பட்டினத்துப்பிள்ளையார், கருவூர்த்தேவர் முதலியோர் சிறந்தவ ராகக் குறிப்பிடத்தக்கவர்கள். அக்காலத்தில் வாழ்ந்த புலவர் களுட் கவிச்சக்கரவர்த்திகள் என்று பாராட்டப்பெற்றவர்கள் கம்பன், சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர் ஆகிய மூவர். அவர்களுள் முதலாம் குலோத்துங்கசோழன் (கி. பி. 1078-- 1118) காலத்தில் நிகழ்ந்த கலிங்கப்போரைக் கலிங்கத்துப் பரணி என்னும் பிரபந்தத்திற் சயங்கொண்டார் பாடியுள்ள' னர். இதுவே பரணிப் பிரபந்தங்கள் யாவற்றுள்ளும் சிறந்த தாகலின் இதன் ஆசிரியர் 'பரணிக்கோர் சயங்கொண்டான் என்று பாராட்டப்பட்டுள்ளனர். பரணிப்பிரபந்த வகையுள் முதன்முதலாகத் தோன்றியது இக்கலிங்கத்துப் பரணியாகும்.
சயங்கொண்டார் தம் காலத்து அரசனாகிய குலோத்துங்க சோழன் தன் படைத்தலைவனான கருணாகரத் தொண்டைமா
•னைக்கொண்டு பெரும் போர்செய்து கலிங்கநாட்டை அழித்த செய்தியை இப்பரணியில் அழகுற அமைத்துப் பாடியுள்ள னர். பரணிப் பிரபந்தமாவது, ஒரு பெரும் போர்க்களத்தைப்
17

Page 74
130 தமிழ் இலக்கிய வரலாறு
பெற்ற பேய்கள் பரணி நாளிற் கூழ் அட்டு, உண்டு மகிழ்ந்து அப்போர்க்களத் தலைவனை வாழ்த்தி முடிப்பதாகப் பாடப் படுவதொன்ருகும். கொற்றவையைத் தன் தெய்வமாகப் பெற்ற பரணியென்னும் நாண்மீனுல் இப்பிரபந்தவகை பெயர் பெற் றது என்றும் கூறுவர். பரணிநாளிற் கூளிகள் கூழ் சமைத் துக் கொற்றவையாகிய காளிக்குப் படைப்பது மரபாகும். காவியத்தில் மக்கள் கதாபாத்திரங்களாக அமைதல்போலக் காளியும் அதற்கு ஏவல்செய்யும் கூளிப்பேய்களும் பாத்திரங் களாக இப்பரணியில் அமைகின்றன. அவற்றின் உரையாடல் வாயிலாகக் குலோத்துங்க சோழனுடைய போர்வென்றி முதலி யன புனைந்து கூறப்படுகின்றன. காவியங்களிலே தலைவ னுடைய நாட்டுவளம், நகரவளம் முதலியன வருணிக்கப் படுதல்போல இப்பரணியிற் கொற்றவைக்கு உரிய காடு, கோயில் முதலியனவும் அத்தெய்வத்திற்கு ஏவல் செய்யும் பேய்களும் வருணிக்கப்பட்டுள்ளன. இந்நூலாசிரியருடைய வருணனைகளிலே ஒரு தனிச்சிறப்பு உண்டு. அவர் பேய் களை வருணித்துள்ள தாழிசைகளில் நகைச்சுவையும் வியப் புச்சுவையும் கலந்துவருதல் கண்டு இன்புறற்பாலது. பல் வகை அணிகளும் ஒன்பான் சுவையும் பொருந்தப்பெற்ற இச்சிறு பிரபந்தம் பரணிப்பிரபந்தங்களுள்ளே தலைமைபெற்று விளங்குவது மட்டுமன்றித், தமிழிலுள்ள செய்யுளிலக்கியங்க ளுள்ளே சிறந்ததொன்ருகவும் விளங்குகின்றது. இதன் பெரு மையை உணர்ந்தே ஒட்டக்கூத்தர் இதனைத் தென்தமிழ்த் தெய்வப்பரணி" எனக் கூறிப்பாராட்டினர். தாம் கருதிய பொருளைப் புலப்படுத்துதற்கேற்ற ஒசை, சந்தம், உவமை முதலியவற்றை அமைத்துப் பாடுவதிற் சயங்கொண்டார் வல்லு நர் என்பதற்குப் பேய்களின் இயல்பு கூறும் மேல்வரும் தாழிசைகள் தக்க உதாரணங்களாகும்:
பெருநெ டும்பசி பெய்கல மாவன
பிற்றை நாளின்முன் னுளின் மெலிவன
கருநெ டும்பனங் காடுமு ழுமையுங்
காலுங் கையுமு டையன போல்வன.
 
 
 
 

சோழர் கால்ம் 31.
வன்பி லத்தொடு வாதுசெய் வாயின வாயி னுல்நிறை யாதவ யிற்றின முன்பி ருக்கின்மு கத்தினு மேற்செல
மும்மு ழம்படும் அம்முழங் 'காளின. வற்ற லாகஉ லர்ந்தமு துகுகள்
மரக்க லத்தின்ம றிபுற மொப்பன ஒற்றை வான்தொளைப் புற்றெனப் பாம்புடன் உடும்பு முட்புக் குறங்கிடும் உந்திய, தமிழரசர் செய்த போரைப் பொருளாகவுடைய நூல்கள் பல இருந்தன; அவற்றுள் இந்நூலும் கோச்செங்கனுன் காலத்தில் வாழ்ந்த பொய்கையார் பாடிய களவழியுமே எமக்குக் கிடைத்துள்ளன.
விக்கிரம சோழன், இரண்டாங் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராசராச சோழன் ஆகிய pali காலத்திலும் வாழ்ந்த ஒட்டக்கூத்தர், அம்மூவர்மேலும் உலாப் பிரபந்தங் கள் பாடியதோடு குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ், தக்கயாகப்பரணி என்ற பிரபந்தங்களைப் பாடினர். வீர பத்திரக் கடவுள் தக்கனைக்கொன்று அவன் செய்த யாகத்தை அழித்த கதையைக் கூறுவது தக்கயாகப்பரணி.
நளவெண்பாவைப் பாடிய புகழேந்திப்புலவரை இரண் டாங் குலோத்துங்கசோழன் காலத்தவர் என்பர். அறவுரை? களையும் ஒழுக்க நெறிகளையும் கூறுதற்கேற்ற ஒசைச் சிறப் பினையுடைய வெண்பாயாப்பிற் சுவைகள் பல கொண்ட கதைகளை விரித்துக் கூறுதல் எல்லார்க்கும் எளிதன்று. அத் தகைய வெண்பாயாப்பில் ஒசைச்சிறப்பும் கற்பனைச்சிறப்பும் பொருந்துமாறு நளன் கதையை இணையற்ற வகையில் அவர் பாடினர். அதனுல், அவர் "வெண்பாவிற் புகழேந்தி' என் றும், கேட்டாலும் இன்பம் கிடைக்குங் கண்டீர் கொண்ட கீர்த்தியொடு பாட்டாலுயர்ந்த புகழேந்தி' என்றும் பாராட்டப் பட்டனர். நளவெண்பா 424 நேரிசை வெண்பாக்களைத் தன் னகத்தே கொண்ட ஒரு சிறு நூலாயிருந்தபோதும் அது

Page 75
132 தமிழ் இலக்கிய வரலாறு
காப்பிய இலக்கணங்கள் பல நன்கமையப்பெற்றுக் கற்போர் உள்ளத்தைக் கவர்ந்துகொள்ளும் இயல்பினதாக விளங்கு கின்றது. வெண்பாயாப்பு வரையறைப்பட்ட இலக்கணத்தை உடையதொன்று. அத்தகைய யாப்பிலும் ஒசை விகற்பங்களை அமைத்து அவற்றின் உதவிகொண்டு உணர்ச்சிபேதங்களை வெளிப்படுத்தல்கூடும் என்பதைத் தம் நூலில் எடுத்துக் காட்டிப் புலவருலகிற் புகழிட்டிய பெருமை அவருக்கு உரியது. உணர்ச்சிமிக்க பாடல்கள் பல அவர் [bITGÓ6) 2) LGT. காதல் மனையாளைக் காரிருளிலே தனியேவிட்டுச் சென்ற நளன், தான் போகும் வழியிற் கடலையும் நண்டுகளையும் கண்டு உள்ளம் உருகி உரைத்ததாகப் பாடிய வெண்பாக் கள வருமாறு:
காதலியைக் காரிருளிற் கானகத்தே கைவிட்ட பாதகஜனப் பார்க்கப் படாதென்ருே-நாதம் அளிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவ வோடி ஒளிக்கின்ற தென்னே உரை. போவாய் வருவாய் புரண்டு விழுந்திரங்கி நாவாய் குழற நடுங்குறுவாய்-தீவாய் அரவகற்று மென்போல ஆர்கலியே மாதை இாவகற்றி வந்தாய்கொல் இன்று.
உலகப்பற்றைத் துறந்த பெரியார்களுட் பட்டினத்துப் பிள்ளையைப்போல் ஆருந் துறப்பது அரிதரிது' என்று பாராட் டப்பட்ட பட்டினத்துப்பிள்ளையார் பாடிய பத்தியனுபவங்கள் நிறைந்த பிரபந்தங்கள் பதினுெராந்திருமுறையுள்ளே தொகுக் கப்பட்டுள்ளன.* திருவிசைப்பாப் பாடிய ஒன்பது நாயன் மார்களுட் பலர் இக்காலத்தவராவர். பத்திச்சுவைமிக்க அவர் பாடல்கள் யாவும் ஒன்பதாந்திருமுறையாகத் தொகுக்கப்பட் டுள்ளன.
* பத்திரகிரியார் காலத்திருந்த பட்டினத்தடிகள் பட்டினத்துப்
பிள்ளையாரின் வேருவர். ܟ

சோழர் காலம் 133
அக்காலப் பிரிவிலிருந்த சோழப் பெருமன்னரின் வீரச் செயல் முதலியவற்றைக் குறித்துப்பாடிய மெய்க்கீர்த்திகளிற் காணப்படும் செய்யுட்கள் இக்கால இலக்கியவளத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. யாப்பு அணிகலன்களைக் கொண்டுள்ள அச்சிறப்புடைச் செய்யுட்களைக் கல்விகேள்வி களிற் சிறந்த புலவர்களே பாடியிருத்தல் வேண்டும். 7. இலக்கண நூல்கள்
சோழராட்சிக் காலத்தில் வடமொழிக் கல்வி தமிழ்நாட் டில் ஓங்கியதன் பயனுக, வடநூற் கருத்துக்கள், யாப்பு அணிவகைகள் முதலியன தமிழின்கட் புகுந்தன. தற்பவ, தற்சம உருவங்களோடு பல வடசொற்களும் தமிழிலக்கியங் களில் வந்துள்ளன. தமிழ்மொழி மரபிலும் காலத்திற்கு ஏற்ற வாறு சிற்சில மாற்றங்கள் ஏற்படலாயின. பேச்சு வழக்கோடு அம்மாற்றங்கள் நின்றுவிடாமல் எழுத்துவிழக்கிலும் இடம் பெறத் தொடங்கிவிட்டனவாகலின், அவற்றையெல்லாம் தழு விக்கொள்ளுதற் பொருட்டுப் புதிய இலக்கண நூல்களை இக் காலத்துப் புலவர்கள் இயற்றவேண்டியது அவசியமாயிற்று. அதனுல், இலக்கண நூல்கள் பல இக்காலப்பகுதியில் எழுந் தன. அவற்றுள், அமிதசாகரர் இயற்றிய யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, புத்தமித்திரர் இயற்றிய வீர சோழியம், குணவீரபண்டிதர் இயற்றிய நேமிநாதம், பவ ணந்தி முனிவர் இயற்றிய நன்னூல், நாற்கவிராசகம்பி இயற்றிய நம்பியகப்பொருள், தண்டியாசிரியர் இயற்றிய தண்டியலங்காரம் முதலியன சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவை. பல்லவர் காலத்திலும் சோழர் காலத்திலும் தமிழ் நாட்டில் வடமொழிக்கு இருந்த பெருமதிப்பின் விளைவாகத், தமிழ் மொழியில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
என்ற ஐவகை இலக்கணங்களிலும் உண்டான மாற்றங்களை
இந்நூல்கள் சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றன. இவ்விலக்கண நூல்களுட் பெரும்பாலனவற்றைச் சமண பெளத்தமதப் பெரி

Page 76
134 தமிழ் இலக்கிய வரலாறு
யார்கள் இயற்றினர். தமிழிலே தோன்றிய நிகண்டுகளுட் பலவற்றையும் அவர்களே இயற்றினர். 8. சைவ சித்தாந்த நூல்கள்
உலகத்திலுள்ள சமயங்கள் பலவும் தோன்றி வளர்ந்து வந்த வரலாற்றை நோக்குமிடத்து ஓர் உண்மை எமக்குப் புலனுகின்றது. அதாவது, சமய வாழ்க்கையில் ஒரு மனித னுக்குத் தெய்வ நம்பிக்கை முதலிற் பிறக்கின்றது; அதைத் தொடர்ந்து சமயம் போதிக்கும் உண்மைகளை ஆராய்ந்து அறிதற்குவேண்டிய விசாரணை யில் அவனுக்கு ஊக்கம் உண்டாகிறது. அதேபோல, ஒரு சமுதாயத்திற் சமயவாழ்க்கை ஆரம்பிக்கும்பொழுது அது நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு தொடங்குகின்றது. அதன் பின் புத்திசாதுரியத்தி ணுற் சமய உண்மைகளை அறிதற்குவேண்டிய ஆராய்ச்சி அச் சமுதாயத்தின்கண் பிறக்கின்றது. எனவே, தெய்வபத்தியோடு கூடிய தோத்திரப்பாடல்கள் முதலில் உருவெடுக்கின்றன; அவற்றைத் தொடர்ந்து விசாரணையின் பயனுகச் சாத்திரங் கள் தோன்றுகின்றன. சைவசமய வரலாறும் இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. காரைக்காலம்மையார் காலத்திற் பத்திமார்க்கமாய் விளங்கிய சைவம், பல்லவர் காலத்திற் கருமயோக ஞான மார்க்கங்களையும் உடைய தொன்ருக விளங்கிற்றென்று தேவாரம், திருவாசகம், திரு மந்திரம் என்பவற்றல் அறியலாம். அக்காலங்களில் எழுந்த சைவ நூல்களுள்ளே திருமந்திரம் ஒழிந்த ஏனைய நூல்கள் யாவும் தோத்திரவுருவமானவை யென்பதை முந்திய அதி காரங்களிற் கூறினுேம், அந்நூல்களுள் ஆங்காங்கு கூறப் பட்டுள்ள சைவசமயக் கருத்துக்கள் யாவும் சோழர்காலத்தில் எழுந்த சைவசித்தாந்த நூல்களில் ஆராயப்படுகின்றன.
பதி பசு பாசங்களாகிய முப்பொருள்களின் உண்மை களையும் அவற்றின் இலக்கணங்களையும் வீடுபேற்றிற்கு உரிய நெறியினையும் அந்நெறி நின்றர் பெறும் பயனையும் சைவ

சோழர் காலம் 135
" சித்தாந்த சாஸ்திரம் பதினுன்கும் எடுத்துக்கூறுகின்றன.
அவையாவன திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞானபோதம், சிவஞானசித்தியார், இருபா இரு பஃது, உண்மைவிளக்கம், சிவப்பிரகாசம், திருவருட் பயன், வினுவெண்பா, போற்றிப்பஃருெடை, கொடிக் கவி, நெஞ்சுவிடுதுது, உண்மைநெறிவிளக்கம், சங் கற்ப நிராகரணம் என்பன. அவற்றுள், திருவுந்தியார் என்னும் நூல் பன்னிரண்டாம் நூற்ருண்டிலே திருவியலூர் உய்யவந்ததேவ நாயனுரால் இயற்றப்பட்டது. அவருடைய மானுக்கருக்கு மாணுக்கராய் விளங்கிய திருக்கடவூர் உய்ய வந்ததேவநாயனுர் திருவுந்தியாரிலுள்ள பொருளை விளக்கும் நோக்கத்தோடு திருக்களிற்றுப்படியார் என்னும் நூலை இயற் றினர். அவற்றின் பின் பதின்மூன்றம் நூற்ருண்டில் மெய் கண்டதேவரால் இயற்றப்பட்ட சிவஞானபோதமே சைவசித் தாந்த முதனூல் எனப்படும். அது பன்னிரு சூத்திரங்களைக் கொண்ட ஒரு சிறு நூலாயுள்ளபோதும் சைவசித்தாந்தக் கருத்துக்கள் யாவற்றையும் தன்னுள்ளே கொண்டு விளங்கு கின்றது. மெய்கண்டதேவருக்கு மானுக்கராய் விளங்கிய அருணந்திசிவாசாரியர் சிவஞானபோதத்தின் உட்பொருளை விளக்கிக்காட்டுங் கருத்துடன் சிவருான சித்தியார் என்ற வழி நூலையும் இருபாவிருபஃது என்ற நூலையும் இயற்றினர். சிவஞானசித்தியார் என்னும் நூல் பரபக்கம், சுபக்கம் என் னும் இரு பிரிவுகளையுடையது. அவற்றுட், பரபக்கம் புறச் சமயங்களைக் கண்டிப்பது; சுபக்கம் சிவஞானபோதம் கூறும் சித்தாந்தத்தை விரித்துக்கூறுவது. மெய்கண்டதேவர் மானுக்க ருள் இன்னுெருவரான மன வாசகங்கடந்தார் எழுதிய நூல் உண்மைவிளக்கம் எனப்படும். மேற்கூறிய ஆசிரியர்களுக்குப் பின் பதினுன்காம் நூற்றண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த உமாபதி சிவாசாரியர் இயற்றிய சிவப்பிரகாசம் என்னும்
நூல் சிவஞானபோதத்தின் வழிவந்த புடைநூலாகக் கருதப் படும். அவர் அதனையன்றித் திருவருட்பயன், விணுவெண்பா,
போற்றிப்பஃருெடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மை

Page 77
136 தமிழ் இலக்கிய வரலாறு
நெறிவிளக்கம், சங்கற்பநிராகரணம் என்னும் நூல்களையும்
அருளிச்செய்தனர்.
9. உரைநூல்கள்
பல சிறந்த காவியங்களையும் பிரபந்தங்களையும் தத்துவ
நூல்களையும் இலக்கண நூல்களையும் தமிழ்மொழி பெற்று
விளங்கியகாலம் சோழப்பெருமன்னர் காலம் என்பது மேற் கூறியவற்றிலிருந்து விளங்கும். தொல்காப்பியர் காலத்தி லிருந்த தமிழ்மொழி சோழர்காலத்திற் சிற்சில வேறுபாடுகளை யுடையதாய் விளங்கியமையால், அவற்றைத் தழுவிப் புது இலக்கண நூல்கள் இயற்றல் சோழர்காலத்தில் அவசிய மாயிற்று. அவற்றுள் யாப்பருங்கலம், வீரசோழியம் என்பன வற்றிற்கு இக்காலத்திலேயே சிறந்த உரைகளும் வகுக்கப் பட்டன. தொல்காப்பியர் இயற்றிய இலக்கண நூலையும் இக்காலத்திற் பல ஆசிரியர்கள் ஆராய்ந்து உரைகள் எழுதினர். முதன்முதல் அதற்கு உரை எழுதிய இளம்பூரணர் இக்காலத் தவராவர். தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உரைவகுத்த சேவைரையரும், பொருளதிகாரத்திற்கு உரைவகுத்த பேரா சிரியரும் இக்காலத்தவரென்பர். பேராசிரியர் பொருளதிகாரத் திற்கு மட்டுமன்றித் திருக்கோவையாருக்கும் ஒர் அரிய உரை எழுதியுள்ளனர். மெய்கண்டதேவர் தாம் எழுதிய சிவஞான ~போதத்திற்கு ஒரு பொழிப்புரையும் எழுதியுள்ளனர். பல்லவர் காலத்து உரைநடை மோனேயெதுகைகளை அதிகமாகக் கொண்டு பாட்டின் சாயலுடையதாயிருந்ததென்று முந்திய அதிகாரத்திற் கூறினுேம். சோழர்காலத்து உரைநடையின் சிறப்பை இளம்பூரணர், சேணுவரையர், பேராசிரியர் முதலி
யோர் எழுதிய உரைகளிலிருந்து அறியலாம். சிறந்த உரை
* உண்மைநெறிவிளக்கம் என்ற நூலைச் சீகாளித் தத்துவநாதர்
இயற்றினரென்பர் சிலர்.
திருக்கோவையாருக்கு உரையெழுதிய பேராசிரியர் தொல் காப்பியத்திற்கு உரையெழுதிய பேராசிரியரின் வேருவர் என்பர் சிலர்,
 

சோழர் காலம் 37
நடைக்கு இன்றியமையாது வேண்டப்படும் பொருட்டெளிவு, தர்க்கரீதியாகக் கருத்து அமையுந்தன்மை, மலைவின்மை முதலிய பல சிறந்த பண்புகளோடு பொருளுக்கேற்ற ஒத்திசை பொருந்தியதாக அக்காலத்து உரைநடை விளங் கிற் று. செய்யுள் நடையில் மட்டுமன்றி உரைநடையிலும் அக்காலப் பகுதி சிறந்து விளங்கிற்றெனலாம்.
18

Page 78
V. நாயக்கர் காலம்
பதினுலாம் நூற்றண்டோடு முடிந்ததாகக்கூறிய சோழர் காலத்திற்கும் பதினெட்டாம் நூற்றண்டில் ஆரம்பித்த ஐரோப் பியர் காலத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதி நாயக்கர் கால மாகும். அது ஏறக்குறைய நானூறு ஆண்டுகளைக்கொண்டது. 1. அரசியல் நிலை
ஆற்றல்மிக்க மன்னர் ஆட்சிபுரியுங் காலத்தில் கன்னிலையிலிருக்கும் ஒரு தேசம் ஆற்றலில்லா மன்னராட்சியில் நிலைகுன்றுதல் இயல்பாகும். முதலாம் இராசராச சோழன் , இராசேந்திர சோழன் முதலிய பேராற்றல்வாய்ந்த மன்னர்கள் அரசாண்ட காலத்தில் ஒப்புயர்வற்று விளங்கிய தமிழ் நாடு, மூன்றம் இராசராச சோழன் (கி. பி. 1250) முதலிய அத்துணை வலிமையில்லாச் சோழமன்னர் ஆட்சிக்காலத்திற் பெருமையிழந்து நிலைகுலையத் தொடங்கிற்று. சோழமன்னர் வலிகுன்றப் பாண்டியராதிக்கம் தமிழ்நாட்டிலே தலையெடுத்தது. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திலும் (கி. பி. 1270) அவனுக்குப்பின் ஆண்ட குலசேகர பாண்டி யன் காலத்திலும் பாண்டிய்ராட்சி உயர்நிலை பெற்றிருந்தது. அவராட்சிக்குப் பின் உரனில்லாப் பாண்டியர் காலத்தில் நிலைகுலைந்த தமிழ்நாடு பதினுலாம் நூற்றண்டில் (கி. பி. 1827) முகம்மதியரின் ஆட்சிக்குட்பட்டது. தொன்றுதொட்டுத் தமிழ் நாட்டை ஆண்டுவந்த தமிழரசரின் ஆதிக்கம் பதினுலாம் நூற்றண்டில் முடிவடையவே, தமிழ்நாடு பிறவரசருக்கு அடிமைப்படுவதாயிற்று.
அந்நூற்றண்டிலே தமிழ்நாடு மட்டுமன்றி இந்தியாவின் தென்பாகத்தில் தனியாட்சி செய்துவந்த நாடுகள் பலவும் வலிகுன்றியிருந்தன. வடக்கேயுள்ள நாடுகளை ஆண்ட முகம் - மதியர் ஆற்றலுடையோராயிருந்தமையால் அவர் ஆதிக்கம் தென்னுடுகளிலும் பரவத்தொடங்கிற்று. தம் சமயத்தைத்
 
 

。rsーの。 მნიხივიზმიძის "
15 ITAL Jeĥ 375 ii gsmf6bb 139
தெற்கிலுள்ள நாடுகளிலும் பரவச்செய்வதைத் தம் நோக்கங் களுள் ஒன்றகக்கொண்டு, அவர் அக்காடுகளுக்குப் படை யெடுத்துச் சென்றனர். பண்டுதொட்டுத் தீம் நாடுகளிலே தழைத்துவந்த இந்துசமயம் முகம்மதியரின் படையெடுப்புக் களால் அழிந்துபடுமென்று அஞ்சித் தென்னுட்டரசர் பலரும் ஒருங்குசேர்ந்து முகம்மதியரின் படையெடுப்பை எதிர்க்க முயன்றனர். அந்நாளில் விசயநகரத்தில் ஆட்சிபுரிந்துகொண் டிருந்த இந்துசமய மன்னர் இஸ்லாமியசமயம் தென்னடுகளிற் பரவவொட்டாது தடுத்து இந்துசமயத்தை வளர்க்க முற்பட்டனர். அம் முயற்சி யில் ஈடுபட்ட விசயநகர மன்னருக்குத் தென்னடுகள் பலவும் உதவியளித்தன. அதனல், விசயநகர மன்னரின் ஆதிக்கம் தமிழ்நாட்டிலும் பிற தென்னுடுகளிலும் பரவிற்று. அக்காலந்தொடக்கம் முந்நூறு ஆண்டுகளுக்குமேல் அவர்கள் தாமேயும் தம் பிரதிநிதிகள் மூலமாகவும் தமிழ் நாட்டை ஆண்டுவந்தனர். விசயநகரத்திலிருந்து ஆட்சிபுரிந்த பேரரசரின் ஆதிக்கம் சிலகாலஞ்செல்லக் குறையலாயிற்று. அம்மன்னரின் பிரதிநிதிகளாக மதுரையிலும் தஞ்சாவூரிலு மிருந்து தமிழ்நாட்டை ஆண்டுவந்த நாயக்க மன்னர் நாளடை விலே தனியாட்சி செய்யத் தொடங்கினர். அவர்கள் ஆட்சி யும் பதினெட்டாம் நூற்றண்டின் முற் பகுதியோ டு முடிவடைந்தது. ஆகவே, விசயநகர மன்னரும் நாயக்க மன்ன , ரும் தமிழ்நாட்டை ஆண்ட காலப்பகுதி தமிழிலக்கிய வரலாற் றில் நாயக்கர்காலம் என வழங்கும். 2. JLDu 1 526)
தொன்றுதொட்டுத் தமிழ்நாட்டில் நிலவிவந்த சைவம் வைணவம் ஆகிய இந்துசமயங்கள் முகம்மதியரால் அழிவடை யாது தப்பியதற்கு நாயக்க மன்னரின் பெருமுயற்சியும் பேருக்கமுமே காரணமெனக் கூறல் மிகையாகாது. அவர்கள் முகம்மதியரின் புடையெடுப்பைத் தடுத்ததோடு சைவ வைணவ சமயங்களுக்கிட்ையே உண்டான உட்பகைகளை நீக்கி, அச்சம பங்களைப் பாதுகாத்துவந்தனர். அம்மன்னர்களைப்போலவே

Page 79
140 தமிழ் இலக்கிய வரலாறு
தமிழ் மக்களும் தங்கள் சமயங்களை வளர்ப்பதில் ஊக்க முடையோராய் உழைத்துவந்தனர். இக்காலத்தில் ஆட்சிபுரிந்த
நாயக்கமன்னர் வைணவ சமயத்தவராய் இருந்தபோதும்,
சைவம் முதலிய பிறசமயங்களையும் ஆதரித்தனர்.
பாசுபதம், வீரசைவம், சித்தாந்தசைவம், 6. Lé52506)G)| ணவம், தென் கலைவைணவம் ஆகிய மதங்களும் கேவலாத்து விதம்,விசிட்டாத்துவிதம் முதலிய தத்துவசாஸ்திரக் கொள்கைக
ளும் அக்காலத்தில் நாடெங்கும் பரவின. இந்துசமயத்தை வளர்க்
கும் நோக்கமாகத் தமிழ்நாட்டிலே தோன்றிய மடங்களும் ஆதி னங்களும் மன்னரின் உதவியையும் மக்களின் ஆதரவையும் பெற்றுச் சிறப்பாகச் சமயத்தொண்டு புரிந்துவந்ததனுல், இந்து
சமயம் தமிழ்நாட்டில் உயர்நிலைபெற்று விளங்கிற்று. அச்சமயப்
பிரிவுகளுக்கிடையே வாதப்போர்கள் நிகழ்ந்தனவெனி
னும் அவை அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கவில்லை யென்பது அறியக்கிடக்கின்றது. கோயில் வழிபாடு, கிரியானுட்டானம்
முதலியன மக்கள் சமயவாழ்க்கையிற் சிறந்துவிளங்கின என்பது அக்காலத்து நூல்களிலிருந்து தெரிகின்றது. கிறிஸ்தவம் இஸ்லாமியமென்னும் சமயங்களும் அக்காலத்திலே தமிழ்நாட் டிற் கால்வைத்தன.
3. இலக்கியப் பண்பு
இனி, நாயக்கர் காலப்பகுதியில் எழுந்த தமிழிலக்கியப் போக்கினை ஆராய்வாம். காலத்தின் போக்கிற்கிணங்க அக் காலத்தில் எழுந்த தமிழ் இலக்கியங்கள் சமயச்சார்பு, தத்துவச்சார்பு, பழமைபோற்றும் பண்பு முதலிய சிறப்பி யல்புகள் பலவற்றைக் கொண்டு விளங்குகின்றன.
கோயிற்றிருப்பணி செய்வதிற் சிறந்து விளங்கிய
பல்லவரும் சோழரும் முற்காலத்திற் கட்டிய கோவில்கள் பல
இன்றும் நம்முன்னுேரின் நாகரிகச் சின்னமாக விளங்குகின்றன. முற்காலத்திலிருந்த அடியார்கள் உள்ளம்பூரித்துப் பாராட்டிய
 
 

நாயக்கர் காலம் 141.
அக்கோவில்களே நாயக்கர்கால மக்கள் ஆர்வத்தோடு போற்றி வந்தனர். இவ்வாறு தமிழ்நாட்டிலும் தமிழர் தம் உள்ளத்திலும் விளங்கிய கோவில்களை அழித்தற்பொருட்டு அக்காலத்திற் படையெடுத்துச் சென்ற முகம்மதியர் பால் மக்களுக்கு வெறுப் பும் பகைமையும் ஒருங்கு தோன்றியதில் வியப்பொன்று மில்லே, தம் சமயத்தையும் கோவில்களையும் எவ்வகையானும்
பாதுகாக்க வேண்டும் என்ற உள்ளக்கிளர்ச்சி மக்களுக்கு உண்டாக, அவர்கள் ஒருங்குதிரண்டு முகம்மதியரை எதிர்த்துப் போராடித் தம் காட்டைக் காப்பாற்றினர். அக்கோவில்கள் தமிழர் நாகரிகத்தையும் பண்பாட்டையும் உலகத்துக்கு அறிவுறுத்தும் வகையிலே சிறந்த எடுத்துக்காட்டாய் நின்று தமிழ் நாட்டை இன்றும் அணிசெய்கின்றன. இங்ஙனம் மக்களாற் பெரிதும் போற்றப்பட்டுவந்த கோவில்கள் புலவர்களின்
உணர்ச்சியைத் தூண்டியதல்ை அவற்றைப் பொருளாகக்
கொண்ட பல பிரபந்தங்களையும் காப்பிய நலங்கனிந்த புரானங்களையும் அவர்கள் ജൂu]ിങ്ങ| i്. മൃ|ഞഖ கோவில்களின்
வரலாற்றினையும் அவற்றின் பெருமையையும் ஆங்காங்கு எழுந்தருளியிருக்கும் இறைவனின் அருட்டிறனேயும் அற்புதச் செயல்களையும் பாராட்டுவனவாயும் விளங்குகின்றன.
தமிழ்நாட்டிலே தத்துவசாஸ்திர நூல்கள் பல சோழர் காலத்தில் எழுந்த வரலாற்றை முந்திய அதிகாரத்திற் கூறினுேம் அக்காலம் தொடக்கமாகத் தத்துவக் கொள்கைகள் நாடெங்கும் பரவிவந்தமைக்கு நாயக்கர் காலத்தில் எழுந்த இலக்கியங்களே சான்ருக விளங்குகின்றன. தர்க்கமுறையாகத் தத்துவசாஸ்திரக் கருத்துக்களை நேரிலெடுத்துக் கூறுவனவும், அக்கருத்துக்களைக் கதைகளில் அமைத்து விளக்குவனவும் என இருவகையான இலக்கியங்கள் தத்துவசாஸ்திர சம்பந்த மாக அக்காலத்தில் இயற்றப்பட்டுள்ளன. அவற்றுட் பிற் கூறியவை சிறந்த இலக்கியச் சுவையுள்ளனவாகக் காணப் படுகின்றன.

Page 80
42 தமிழ் இலக்கிய வரலாறு
பழைய இலக்கிய இலக்கண நூல்களுக்கு அக்காலத்தி லியற்றிய உரைகளையும் மெய்யடியார் புகழைப்பாடிய அக்காலப் பிரபந்தங்களையும் நோக்குமிடத்து, அக்காலப் புலவர் கள் பழமையைப் போற்றும் பண்புடையோராய் வாழ்ந்தன ரென்பது அறியக்கிடக்கின்றது. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு திருக்குறள், சிலப்பதிகாரம், சிந்தாமணி முதலிய இலக்கியங் களுக்கும் தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களுக்கும் உரைவகுத்த ஆசிரியர்கள் பலர் அக்காலப்பகுதியில் வாழ்ந்தனர். அக்காலப்பகுதியில் வாழ்ந்த மக்கள் பழைய நூல்களை எவ்வாறு போற்றிப் படித்தார்கள் என்பதை நாம் இவ்வுரை நூல்களைக்கொண்டு அறியலாம். அக்காலப் புலவர்கள் புதுமை யிற் சிறப்பு ஒன்றினையும் காணுமையால் இவ்வாறு பழமை
யைப் போற்றினர் எனக் கொள்ளலாம். பல்லவர் காலத்தில்
வாழ்ந்த மெய்யடியார்களுடைய வாழ்க்கைச் சம்பவங்களிலும் பாடற் சிறப்பிலும் அவர்களுக்கு ஈடுபாடு பெரிதும் இருந்ததனுல், அவற்றைப் பொருளாக அமைத்துப் பல பிரபந்தங் களைப் பாடியுள்ளனர். அங்ங்னம் பாடுதல் அக்காலப்பகுதியிற் பெருவழக்காயிருந்தது. மெய்யடியார்களுடைய வாழ்க்கையிற் காணப்பட்ட சிறப்புக்களைக் கற்பனைசெய்து கூறும்பொழுது கவிச்சுவை தோன்றக்கூடிய வகையிற் கூறினர். அவ்வாறு கூறுவதில் உள்ள புதுமையும் வியப்புச்சுவையும் அக்காலத் திற்குமுன் எழுந்த கவிதைகளிற் காண்பது அரிது. ஒரு செய்யுளிற் பொருளை அமைக்கும்போது, பிறர் சிந்தித்துப் பொருளறியுமாறு அமைத்தல் அக்காலத்து மரபாகும். அவர்க ளுடைய செய்யுட்கள் செம்பாகமாயிருத்தல் அரிது. அவற்றைப் படிப்போர் தம்முடைய கல்வியறிவு, புத்திசாதுரியம், கற்பனு சக்தி முதலியவற்றின் உதவிகொண்டு ஆழ்ந்து சிந்தித்து அறியக்கூடியதாகப் பொருள் அமைந்திருத்தலே அக்காலப் பகுதியிலெழுந்த செய்யுட்களுக்கு உரிய சிறப்புக்களுள் ஒன்ருகும். இத்தகைய வித்துவச் சிறப்புடைய செய்யுட்களுக்கு ஓர் உதாரணம் வருமாறு:
 

நாயக்கர் காலம் 143
பேதை
பருவச் சிறுபேதை பல்கலையு நட்பு மருவப் படாத மடமா-னுருவ மிகத்தா ரணியில் விளங்கு மிளேஞ ரகத்தா ம ைரவிரவா வன்னம்-பகைப்போர் பெறுதேர் விடுமுன் பிறந்தணிய நாள்வேள் சிறுதேர் விடுங்குழவித் தென்றன்-மறமே மடியாத தக்கன் மகம்போலக் கடட்டி முடியாத கடந்தன் முடியாள்-படியொடுக்குங் காலை விளையு மளவுங் கரைபுரளா வேலை யனைய விழியினுண்-ஞாலத்துத் தீராப் பயமென்று நாணென்றுஞ் செங்கனிவாய்ச் சோ ராப் பசுங்குதலைச் சொல்லினு-டேரூர்ந்த சேயுமொரு செங்காட்டிற் சேயுங் கராவுண்ட
o • Ꮹo - சேயுமெனப் போய்மீளுஞ் சிற்றெயிற்ருள்-சேயுமுடன் கூடுந் துணையு மமணைக் குலச்சிறையா ராடும் பகையடக்கு மாறென்னக்-கூடி
பிளேயோரைக் கண்ணுமடு மென்பளவுந் தாமு முளேயா தடங்கு முலையாள் .
மேலேயுள்ள கண்ணிகள் பதினேழாம் நூற்ருண்டில் வாழ்ந்த அந்தகக்கவி வீரராகவ முதலியார் இயற்றிய திருவாரூரு லாவில் உள்ளவை. திருவாரூர்த்தியாகேசரைப் பாராட்டும் நோக் கமாக எழுந்த இப்பிரபந்தத்திற் பேதைப்பருவத்தாள் ஒருத்தியை வருணித்துக் கூறுவதாக அமைந்த இக்கண்ணிகளில் நாயன் மார் வரலாற்றிற் காணப்பட்ட சம்பவங்களும் புராணக் கதைகளும் சுவைமிக்க வகையில் அமைக்கப்பட்டிருத்தல் கண்டு இன்புறற்பாலது. பெரியபுராணம் கந்தபுராணம் முதலிய பேரிலக்கியங்கள் கூறுவனவற்றை அறியாதார் இக்கண்ணி கள் கூறும் பொருளை அறிந்து சுவைத்தல் முடியாது.

Page 81
144 தமிழ் இலக்கிய வரலாறு
இவற்றின்கண் வந்துள்ள உவமை யுருவகங்கள் புராணக்
கதைகளை ஆதாரமாகக்கொண்டு எழுந்தவை என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. 'கூட்டிமுடியாத' என்னும் சொற்றெடரி லுள்ள சிலேடை நயம் சுவைத்து இன்புறற்குரியது. மேலே யுள்ள கண்ணிகளை நோக்கின் நாயக்கர்காலப் புலவர்களுடைய கற்பனை எவ்வழியிற் சென்றது என்பதையும் கண்டுகொள்ள லாம். இத்தகைய கற்பனைகள் இதற்கு முந்திய காலப்பகுதி களிற் பெருவழக்காக இருக்கவில்லை. ஆகவே, அக்காலத்துப் புலவர்களுடைய அனுபவம் பழைய இலக்கியங்களிலேதான் ஊற்றெடுத்தது எனலாம். இங்ாவனம் சுவையுள்ள சம்பவங் களைப் பழைய இலக்கிய நூல்களிலிருந்து பெற்றுக் கவிதைக் குப் பொருளாக அமைத்ததோடு இலக்கண நூல்களிற் காணப்பட்ட விதிகளைக் கவிதை புனைதற்குப் பயன்படுத்தினர் என்பதற்கு மேல்வரும் செய்யுள் ஒர் உதாரணமாகும்:
இல்லமென் கிளவி அந்நாட்டிருப்பவர் இசைக்குங் காலை மெல்லருங் கேள்வி மேலோர் விதித்திடும் இலக்க ணத்துட் சொல்லிரும் பெயரே ஏனைத் தொழிற்குறிப் பிரண்டினுள்ளும் நல்லதோர் பெயரே யன்றி நவின்றிட நாடிடாரே.
இச்செய்யுள் சேதுபுராணத்தில் உள்ள தொன்று. இதன் கண் முதலிலுள்ள 'இல்லம்' என்னும் சொல்லுக்கு வீடு', 'எம்மிடம் பொருள் இல்லை' என்பன பொருள். அவற்றுள் வீடு'
என்னும் பொருளிலேதான் சேதுநாட்டிலுள்ள மக்கள் வழங்கு வார்கள் என இச்செய்யுள் கூறுகின்றது. அம்மக்கள் வறுமை
யற்றவர்களாதலின் அதனை வினைச்சொல்லாக வழங்குதலை அறியார், அதாவது "நாம் பொருளில்லாதவர்கள்' என்று
சொல்லுதலை அறியார் என்று இச்செய்யுள் கூறுகின்றது.
ஆகவே இலக்கண இலக்கிய அறிவு உள்ளவர்கள் படித்து
இன்புறக்கூடிய வகையில் அமைதலே அக்காலச் செய்யுளின்
முக்கிய பண்பாகும்,
சங்ககாலந்தொட்டு வடசொற்களும் வடநூற் கருத்துக் களும் தமிழிலக்கியத்திற் பயின்றுவந்தமையை முந்திய அதி
 
 
 

நாயக்கர் காலம் 145
கர்ரங்களால் அறிந்துள்ளோம். நாயக்கர் காலத்தில் அவை பெருவரவினவாய்த் தமிழ்நூல்களுள்ளே புகுந்தமைக்குப் பல காரணங்களுள.டு) மன்னர் போற்றும் மொழியினை மக்களும் போற்றுதல் இயல்பாதலின், விசயநகர மன்னரும் நாயக்க மன்னரும் போற்றிவந்த வடமொழியினைத் தமிழ் மக்களும் போற்றினர்.இதத்துவநூற் கொள்கைகள் தமிழ்நாட்டிற் பெரிதும் பரவிய நாயக்கர் காலத்திலே தத்துவசாஸ்திரக் கருத்துக்களை விளக்கும் வடநூல்களை மக்கள் விரும்பிக் கற்றமையும் அதன் பயனுக அக்கருத்துக்கள், அவற்றைக் குறிக்கும் சொற்கள், சொற்றெடர்கள் முதலியனவும் தமிழ் இலக்கியத்தில் மிகுதி யாகப் பயின்று வந்தமையும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கன வட மொழிப் புலமைமிக்க தென்னுட்டறிஞர் பலர் தத்தம் சமயக் கருத்துக்களையும் தத்துவக் கொள்கைகளையும் மக்களிடையே பரப்பும் நோக்கமாகச் செய்துவந்த பிரசாரமும் இயற்றிய நூல்களும் தமிழ் நாட்டில் வடமொழிக்குப் பெருமதிப்பை உண்டாக்கினவென்றே கூறலாம். நாலாயிர திவ்விய பிரபந் தத்திற்கு மணிப்பிரவாள நடையிற் சிறந்த உரை வகுக்கப் பட்டதும், அந்நடையில் வைணவ சமயசம்பந்தமான குரு பரம்பரைப்பிரபாவம் முதலிய நூல்கள் எழுதப்பட்டதும், நாயக்கர் காலப்பகுதியில் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. மேற்கூறிய நூல்களை எழுதிய ஆசிரியர்கள் வடநூல்களி லுள்ள தத்துவக் கருத்துக்களையும் பிறவற்றையும் அந்நூல்களிற் கூறவேண்டியிருந்ததனுற்போலும் வட சொற்ருெடர் களைக் கலந்து மணிப்பிரவாள நடையில் அவற்றை எழுதினர். வடமொழிப்பயிற்சி மிக்கிருந்த அக்காலத்தில் அம்மொழியி லுள்ள இதிகாச புராணங்களை மக்கள் படித்துப் பெரிதும் போற்றிவந்ததனுல், அக்காலத்தில் வாழ்ந்த பெரும் புலவர்கள் பாரதம் முதலிய இதிகாசங்களையும் அரிச்சந்திரபுராணம் முதலிய புராணங்களையும் இயற்றினர். அக்காலப் புலவர்கள் வடமொழிச் சந்தங்களையும் பிறவற்றையும் தமிழில் அமைத்தற் பொருட்டு எந்த அளவிற்கு வடமொழிச் சொற்களைப் பெய்து
19

Page 82
146 தமிழ் இலக்கிய வரலாறு
கவி பாடினர் என்பதை மேல்வரும் செய்யுளைக்கொண்டு அறியலாம்:
- வால வ்ருத்த குமார னெனச்சில
வடிவு கொண்டுகின் ருயென்று வம்பிலே ஞால நின்னே வியக்கு நயக்குமென்
நடனங் கண்டும் வியவாமை யென்சொல்கேன் பால லோசன பாநுவி லோசன
பற்ப லோசன பக்த சகாயமா கால காலத்ரி சூல கபாலவே
கம்ப சரம்ப கடம்ப வனேசனே.
அக்காலப்பகுதியிற் பெருந்தொகையாகப் பிரபந்தங்களும் புரா னங்களும் தனிப்பாடல்களும் இயற்றப்பட்டபோதும், அதனை ஒரு கவிவளமுள்ள காலமாகக் கொள்ளுதல் பொருங் தாது. உள்ளத்தில் எழும் உண்மையான உணர்ச்சிபேதங் களேயோ அனுபவங்களையோ வெளிப்படுத்தும் கவிதைகள் பெருந்தொகையாக அக்காலப்பகுதியில் எழவில்லையென்றே கூறலாம். சங்கச் செய்யுளிலும் பல்லவர் காலத்துப் பத்திப் பாடல்களிலும் காணப்படும்முஎளிமைஉேணர்ச்சிப்பெருக்கு, இபொருள் ஆழம்டுஒழுகிசை முதலிய சிறப்பியல்புகள் அக் காலச் செய்யுட்களில் மிக அருகியே காணப்படுகின்றன. கவிதையிடத்தில் இயல்பாக அமையவேண்டிய இச்சிறப்புக்கள் குறைவாகவும், சந்தச் சிறப்பு, சொல்லலங்காரம் முதலிய செயற்கையழகுகள் அதிகமாகவும் உள்ள செய்யுட்கள்தான் பெருந்தொகையாக வெளிவந்தன. செம்பாகமாகப் பிரித்து எளிதிற் பொருள் காணக்கூடிய செய்யுட்களுக்கு அக்காலத் திற் பெருமதிப்பு இருக்கவில்லை என்றே கூறலாம். இயற்கைக்
வம்பிலே-வீணுக, என் நடனம்-பிறந்து பிறந்து பலமுறை பாலணு கவும் பின் குமரனுகவும் பின் கிழவனுகவும் ஆகும் என் ஆடல், பாலலோசன bெற்றிக் கண்ணேயுடையவரே. பாநுவிலோசன. சூரியனுகிய கண்ணேயுடையவரே, பற்பலோசன-தாமரைபோன்ற 5ರೌT&ಂಶTL6ಠಾLLIQ/Gು' -

ET LJği;#5 i för Gidh 147
காட்சிகளை வருணிக்கும் செய்யுட்களிலும் புலவனுடைய வித்துவச் சிறப்புக் காணப்படுமன்றி, இயற்கையழகு காணப்பட மாட்டாது. அவற்றின்கண் அவனுடைய கல்வியறிவையும் புத்திசாதுரியத்தையும் கண்டு வியக்கலாமேயன்றி அவன் கண்ட காட்சியழகை நாமும் கண்டு இன்புற முடியாது. மீட்ைசியம்மை பிள்ளைத்தமிழிலுள்ள மேல்வரும் செய்யுள் மதுரையிலுள்ள பழனங்களை வருணித்துக் கூறுகின்றது. அதன்கண் புலவனுடைய கற்பனை எல்லை கடந்து செல்வதாற், பழனங்களுக்கு இயல்பாக உள்ள காட்சியழகை நாம் கற்பனை செய்து காணமுடியாதிருக்கின்றது:
ஒடும் படலை முகிற்படலம்
உவர்நீத் துவரி மேய்ந்துகரு ஊறுங் கமஞ்சூல் வயிறுடைய
உகைத்துக் கடவுட் கற்பகப்பூங் காடுந் தரங்கக் கங்கைநெடுங்
கழியு ந்ேதி யமுதிறைக்கும் கலைவெண் மதியின் முயறடவிக்
கதிர்மீன் கற்றை திரைத்துதறி மூடுங் ககன வெளிக்கடட
முகடு கிறந்து புறங்கோத்த முந்நீ ருழக்கிச் சினவாளை
மூரிச் சுறவி ைேடும்விளை --ജ്ഞ.
யாடும் பழனத் தமிழ்மதுரைக் கரசே தாலோ தாலேலோ அருள் சூற் கொண்ட வங்கயற்கண்
அமுதே தாலோ தாலேலோ. சோழப்பெருமன்னரின் ஆட்சித்திறனும் வீரச்செயலும் கொடைச்சிறப்பு முதலியனவும் சோழர்காலப் புலவருள்ளத் தைப் பெரிதும் கவர்ந்ததல்ை, அவர்களியற்றிய இலக்கியங் களுட் பல அம்மன்னரைப் பாராட்டும் முறையில் அமைக்
படலைமுகிற்படலம் - தொகுதியாகிய மேகப்பரப்பு திரைத்து - சுருட்டி, ககனவெளி-வான வெளி,

Page 83
148 தமிழ் இலக்கிய வரலாறு
திருத்தலை முந்திய அதிகாரத்தால் அறிந்துள்ளோம். விசய நகர மன்னரும் நாயக்கமன்னரும் பிறகாட்டினராயிருந்தது மாத்திர மன் றி, அவராட்சிமுறையும் புலவருணர்ச்சியைத் தூண்டக்கூடிய அத்துணைச் சிறப்புடையதாய்க் காணப்படாத தால், அவர் குணவிசேடங்களைப் பொருளாகக் கொண்ட இலக்கியங்கள் அக்காலப்பகுதியில் எழவில்லை. மக்கள் போற்றிய சமயங்களும் தத்துவசாஸ்திரக் கொள்கைகளுமே புலவருணர்ச்சியைப் பெரிதும் தூண்டின. அதனல், அவர்கள் சமயச்சார்பும் தத்துவச்சார்புமுடைய பிரபந்தங்கள் பலவற்றை இயற்றினர். முந்தியகாலப் புலவர்கள் அரசரைப் பாடுதற்குக் கையாண்ட பிரபந்தவகைகளை நாயக்கர்காலப் புலவர்கள் தம் கருத்திற்கிணங்க அமைத்ததனுல், அக்காலத்திற் பிரபந்த இலக்கியம் பெரிதும் விருத்தியடைந்துள்ளது. கலிங்கப்போரைப் பாடுதற்குச் சயங்கொண்டார் கையாண்ட பரணிப் பிரபந்தத் தைத் தத்துவராயர் என்னும் புலவர் தத்து வ ச T ஸ் திர க் கொள்கைகளை விளக்குதற்பொருட்டுப் பிரயோகித்தமைக்கு அ வரியற் றிய மோகவதைப்பரணி, அஞ்ளுைவதைப் பரணி முதலியன தக்க உதாரணங்களாகும். இவ்வாறு முந்திய காலப்பிரிவுகளில் வாழ்ந்த புலவர்கள் கையாண்ட பிரபந்தவகைகளையேயன்றி, வேறுசில புதிய பிரபந்தவகை களையும் அவர்கள் இயற்றியுள்ளனர்.
சோழர்கால இலக்கியங்களையும் நாயக்கர்கால இலக்கியங் களையும் ஒப்புநோக்குவோமாயின், நாயக்கர்கால இலக்கியங்
கள் சிற்சில பண்புகளிற் குறைவுடையனவாயும் சிலவற்றிற்
சிறப்புடையனவாயும் காணப்படுகின்றன. சோழர் பிறநாடுகளை அடிமைப்படுத்தி ஏகசக்கராதிபத்தியம் செலுத்திய காலத்தில், மக்கள் வாழ்க்கையிற் காணப்பட்ட சில சிறப்புடைப் பண்புகள், ! நாயக்கர் காலத்திலே தமிழ்நாடு பிறருக்கு அடிமைப்பட்டு வலி யிழந்து துயில்கொண்டமையினலேயே காணப் படா தொழிந்தன. அதனுல், சிறந்த உணர்ச்சியனுபவங்கள், கருத் துக்கள், கற்பனைகள் முதலியவற்றைத் தம்முட்கொண்டு
 

15 Tu-155 ri 5 radh 149
விளங்கும் நூல்கள் பல அக்காலத்தில் எழவில்லை. சோழர் காலப் புலவர்களுடைய வாயிற்றேன்றிய வாழ்த்துக்கவியும் நாயக்கர்காலப் புலவர்கள் வாயிற்றேன்றிய் வசைக்கவியும் அவ்வக்காலப் பண்பாட்டிற்கு அறிகுறியாக விளங்குகின்றன. சோழர்காலப் புலவர்கள் ஆழ்ந்த கருத்துக்களையும் சிறந்த உணர்ச்சியனுபவங்களையும் எளிதிற் கண்டுணரக்கூடிய வகை யில் அமைத்துப் பாக்கள் பாடியிருப்ப, நாயக்கர்காலப் புலவர் கள் கல்வியறிவுள்ளோர் மட்டுமே ஆராய்ந்து தேடிக்காணக் கூடிய வகையிற் பொருளை அமைத்துப் பாக்களைப் பாடி UL||3TT GYT GÖTT.
வசைபாடக் காளமேகம்' என்று பாராட்டப்பட்ட காள மேகப்புலவர் மட்டுமன்றி, இரட்டையர் அந்தகக்கவி வீரராகவ முதலியார் முதலிய ஏனைப் புலவர்களும் சிறந்த வசைக்கவி களைப் பாடியுள்ளனர். நாம் படித்து இன் புறக்கூடிய அச் சுவையுள்ள பாடல்களுள் ஒன்று வருமாறு; பாண்டியன் அவையில் இரட்டைப் புலவர்களுக்குப் பரிசு க்ொடுத்தபோது அதைத் தடுத்த ஒருவனைக் குரங்கென அவர்கள் இப்பாட்டில் இகழ்ந்துரைத்தனர்:
புராதன மான தமிழ்ப்புல வீரிந்தப் புன்குரங்கு மராமரம் விட்டிங்கு வந்ததென் னேவகை கேட்டிலேயோ தராதலம் வென்ற தமிழ்மா றனையுந்தன் றம்பியையும் இராகவ னென்று மிலக்குவ னென்று மிருந்ததுவே.
e இவ்வாறு நாயக்கர்கால இலக்கியம் சிற்சில குறைபாடுகளை யுடையதாய்க் காணப்பட்டபோதும் அது வேறுசில வழிகளிற் சில சிறப்புக்களையுடையதாய் வி ள ங் கி ற் று. அக்காலச் செய்யுட்களுட் பெரும்பாலன கற்பனை, சொல்லலங்காரம், ஒசைச் சிறப்பு முதலியனவற்றைக்கொண்டு விளங்குகின்றன. யமகம், திரிபு, மடக்கு, சித்திரகவி முதலிய சொற்சிறப்புள்ள செய்யுட்களையும் அவர்கள் பெருந்தொகையாகப் பாடியுள்ள னர். அவைமட்டுமன்றிச், சொல்லடுக்கு, சந்தம், சிலேடை முதலியவற்றைக் கொண்டுள்ள செய்யுட்களையும் பெருந்

Page 84
150
தமிழ் இலக்கிய வரலாறு
தொகையாக அவர்கள் பாடியுள்ளனர். வசைக்கவி, சிலேடைக் கவி, விகடகவி முதலியவற்றை நினைத்தமாத்திரத்திற் பாடக் கூடிய புலவர்கள் பலர் அக்காலப்பிரிவில் வாழ்ந்தனர். பல வகைப்பட்ட சந்தச்சிறப்புக்களை அமைத்துப்பாடும் வன்மையை நாம் அருணகிரிநாதர் திருப்புகழிற் காணலாம். வசைக்கவி பாடுவதிற் காளமேகப்புலவர் ஒப்பற்றவர் என்பதற்கு அவர் பாடிய தனிச்செய்யுட்கள் சான்றாக விளங்குகின்றன. கற்பனைச் சிறப்பு நிரம்பப்பெற்ற பாக்களைச் சிவப்பிரகாச சுவாமிகள் பாடியுள்ள பிரபுலிங்கலீலை முதலிய நூல்களிற் கண்டு சுவைக்க லாம். மேல்வரும் செய்யுட்கள் அந்நூலிலும் திருவெங்கைக் கோவையிலும் உள்ளவை. அவற்றின்கண் உள்ள கற்பனைகள் அக்காலச் செய்யுட்களிலுள்ள கற்பனையலங்காரங்களுக்கு எடுத்துக்காட்டாக அமைவன :
தன்னை நிந்தைசெய் வெண்ணகை மேற்பழி சார மன்னி யங்கது நிகரற வாழ்மனை வாய்தன் முன்னி றந்திடு வேனென ஞான் றுகொள் முறைமை என்ன வெண்மணி மூக்கணி யொருத்திநின் றிட்டாள்.
சுவடுகண்டிரங்கல் புலியோ டரவு தொழுங்கூத் துடையவர் பூவையர்கைப் பலியோ டுயிர்கவர் வெங்கைபு ரேசர் பனிவரைமேல் மலியோ தியினிசை வண்டுபண் பாடுறும் வஞ்சியடி கலியோ முனஞ்செலும் வெள்ளடியோடு கலந்ததுவே.
வட மொழி பெரிதும் பயின்றகாலம் அதுவாகலின், வட மொழிச் சந்தங்கள் பலவற்றை ஆசுகவி, யமகம் முதலிய வற்றில் அமைத்து அவர்கள் சிறப்பாகப் பாடியுள்ளனர். ஞான்றுகொள்ளுதல் - கழுத்திற் கருக்கிட்டுச் சாதல். தலைவியடி சிற்றடி; வஞ்சியடிக்கு (குறளடி, சிந்தடி) ஒப்பாகும். தலை வனடி வெள்ளடிக்கு (அளவடி) ஒப்பாகும். கலியோடு வெண்பா கலந்து . வரும். தலைவனடியும் தலைவியடியும் கலந்திருத்தற்கு இவை உவமையாகக் கூறப்பட்டுள்ளன.

நாயக்கர் காலம் 151.
காளமேகப்புலவர், இரட்டைப்புலவர் முதலியோர் தாம் பாடிய
பன்னூற்றுக்கணக்கான செய்யுட்களிற், பல பொருள் பயக்கும் சிலேடைகளை அமைத்துப் பாடியிருப்பதை நோக்குமிடத்து, ாயக்கர்கால மக்களுக்குச் சிலேடைப் பாக்களைச் சுவைப்பதிற் பெருவிருப்பு இருந்திருத்தல் வேண்டுமென்பது அறிதல்கூடும். அக்காலத்திலே தோன்றிய செய்யுட்களின் போக்கைப் பின் வரும் பாக்களை கோக்கியறியலாம்,
காளமேகப்புலவர் பாடியது
தூதஞ்சு நாளிகையி லாறுBா ழிகைதனிற்
சொற்சந்த மாலைசொல்லத்
துகளிலா வந்தாதி யேழு5ா ழிகைதனிற்
ருெகைபட விரித்துரைக்கப்
பாதஞ்செய் மடல்கோவை பத்துநா ழிகைதனிற்
பரணியொரு நாள்முழுவதும்
பாரகா வியமெலா மோரிரு தினத்திலே
பகரக் கொடிக்கட்டினேன்
சீதஞ்செ யுந்திங்கண் மரபினு னிடுபுகழ்
செய்யதிரு மலை ராயன்முன் சிறுமா றென்றுமிகு தாறுமா றுகள் செய்
திருட்டுக் கவிப்புலவரைக் காதங் கறுத்துச் சவுக்கிட் டடித்துக்
கதுப்பிற் புடைத்து வெற்றிக் கல்லணையி னெடுகொடிய கடிவாளமிட்டேறு
கவிகாள மேகநானே.
காளமேகப்புலவர் இறந்தபோது
இரட்டையர் பாடியது
ஆசு கவியா லகில வுலகெங்கும் வீசு புகழ்க்காள மேகமே-பூசுரா விண்கொண்ட செந்தழலாய் வேகுதே பையையோ மண்டின்ற பாண மென்ற வாய், - -

Page 85
159 தமிழ் இலக்கிய வரலாறு
நாய்க்கர்காலத்தின் முற்பகுதியிலெழுந்த பிரபந்தங்களும் புராணங்களும் பல சிறப்புக்களைப் பொருந்தி விளங்கியமை
யின், அவை மக்கள் மனத்தைப் பெரிதுங் கவர்ந்தன;
அவற்றைப் பின்பற்றி அத்துணைச் சிறப்பில்லா இலக்கியங்கள்
பெரும்பாலன அக்காலப் பிற்பகுதியில் எழுந்தமையின் அவை மக்கள் மனத்தைப் பெரிதும் கவர்ந்திலவென்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. . 4. பிரபந்தங்கள்
நாயக்கர்காலப் புலவர்களியற்றிய பிரபந்தங்கள் சமயச் சார்பும் தத்துவச்சார்பும் உடையனவாய் விளங்குதலை முன்னே கூறினுேம், தமிழ்மொழியிலுள்ள தொண்ணுற்றறுவகைப் பிரபந்தங்களுள் நாயக்கர்காலப் புலவர்களாற் பெரிதும் கையாளப்பட்டவை பரணி, உலா, கலம்பகம், பிள்ளைத்தமிழ், நான்மணிமாலை, மும்மணிக்கோவை, தூது முதலியன. அவற் றுட்சில வருமாறு: பரணி: மோகவதைப் பரணி, பாசவதைப் பரணி,
அஞ்ஞைவதைப் பரணி. உலா திருவாரூரு லா, திருக்காளத்திநாதருலா, ஏகம்பநாதருலா, மதுரைச்சொக்கநாதருலா, கலம்பகம்: மதுரைக் கலம்பகம், காசிக் கலம்பகம்,
தில்லைக்கலம்பகம், கச்சிக்கலம்பகம். பிள்ளைத்தமிழ்: மீனுட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்
குமாரசுவாமி பிள்ளைத்தமிழ். நான்மணிமாலை; நால்வர் நான்மணிமாலை, திருவாரூர்
நான்மணிமாலை. மும்மணிக்கோவை: பண்டார மும் மணிக்கோவை,
சிதம்பர மும்மணிக்கோவை,
தூது சிவஞானபாலையசுவாமிகள் நெஞ்சுவிடுதூது,

|Bircuisii is teth 153
பரணி: போர்முகத்தில் ஆயிரம் யானைகளை வென்ற வீரன்மேற் கடவுள் வாழ்த்து, கடைதிறப்பு முதலிய உறுப் புக்களை அமைத்து அவனுடைய பலவகைச் சிறப்புக்களையும் புறப்பொருளமைதி தோன்றக் கலித்தாழிசையாற் பாடப்படுவது பரணியெனப்படும். அது காளியையும் யமனையும் தன் தெய்வமாகப் பெற்ற பரணியென்னும் நாண்மீனுல் வந்த பெய ரெனக் கூறுவர்.
DG)T. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் ஆகிய ஏழுபருவ மகளிரும் தன்னைக்கண்டு காதல் கொள்ளும் வண்ணம் தலைவன் வீதியிற் பவனிபோந்தானென்று கலிவெண்பாவாற் பாடப்படுவது உலா,
கலம்பகம்: பலவகை மலர்களும் கலந்த மாலையைக் கலம்பகம் என்பர். அதனைப்போன்று அகப்புறத் துறைகளிற் பலவும் பலவகை யாப்புக்களும் விரவிவர அந்தாதித் தொடையால் இயற்றப்படுவது கலம்பகம் என்னும்
பிரபந்தம்.
T
முதலிய பத்துப் பருவங்களமைத்துப் பாடுவது பிள்ளைத்தமிழாகும். அது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும்.
நான்மணிமாலை வெவ்வேறு வகையான நான்கு மணிகளைத் தொடுத்தமைத்த மாலைபோல வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தழ் ஆசிரியப்பா என் பனவற்ருல் அந்தாதியாக நாற்பது செய்யுட்கள் பாடுவது நான்மணிமாலை,
பிள்ஜளத்தமிழ்: கடவுளரையேனும் ஆசிரியரையேனும் உப ܒ
காரிகளை யேனும் குழந்தையாகவைத்துக் காப்பு

Page 86
”تح ----------
154 தமிழ் இலக்கிய வரல்ாறு
மும்மணிக்கோவை: மூன்று வேறு மணிகளாலாய மாலையைப்
போல ஆசிரியப்பா, வெண்பா, கலித்துறை என் பனவற்றல் அந்தாதியாக முப்பது செய்யுட்கள் பாடுவது மும்மணிக்கோவை,
தூது; தலைவன் தலைவியர்களுள் ஒருவர் மற்றெருவர்பால் தமது கா தலைப் புலப்படுத்தித் தம்முடைய கருத் திற்கு உடம்பட்டமைக்கு அறிகுறியாக மாலையை வாங்கி வருமாறு அன்னம், வண்டு, கிளி முதலிய வற்றைத் தூது விடுவதாக க் கலிவெண்பாவால் இயற்றப்படுவது தூது,
5. இலக்கியங்கள்
நாயக்கர்காலப் பகுதியிற் பெருந்தொகையான நூல்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் மிகச் சிறப்புடையன வென்று கருதப்படும் சில இலக்கியங்களை இயற்றித்தந்த புலவர்களைப் பற்றி ஈண்டுக் குறிப்பிடுவாம். இக்காலப்பகுதியில் வாழ்ந்த அருண்கிரிநாதர், வில்லிபுத்துராழ்வார், இரட்டையர், காள மேகப்புலவர் முதலியோர் சிறந்த புலவர் வரிசையில் வைத்து எண்ணப்படுபவர்கள். அவர்களுள் அருணகிரிநாதரும் வில்லி புத்துராழ்வாரும் சமகாலத்தவர் என்பர் சிலர். அருணகிரி நாதருக்குக் காலத்தால் முங் திய வர் வில்லிபுத்தூராழ்வார்
என்பர் வேறுசிலர். இருவரும் தம் பாக்களில் வடமொழிச் சொற்களையும் சந்தங்களையும் அழகுற அமைத்துப் பாடியுள்
ளனர். அருணகிரிநாதர் பாடிய கந்தரலங்காரம், கந்த ரனுபூதி, திருப்புகழ் முதலிய நூல்கள் அவருடைய பத்தி யனுபவங்களைச் சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றன. சந்தநலக் கனிவும் ஒசைச்சிறப்பும் அமையப்பெற்ற திருப்புகழ்ப் பாக் கள் யாவும் முருகப்பிரான்மீது அவருக் கிருந்த அன்பினை எடுத்துக்காட்டுகின்றன. படிப்போர் பலருக்கும் உறுதிபயக் கும் பண்புவாய்ந்த பாக்களை அவர் பாடியதால், வாக்கிற்கு அருணகிரி என்றும் 'கரு 0ே க்கு அருணகிரி என்றும்
தி

நாயக்கர் கரிலம் 155
பாராட்டப்பட்டுள்ளனர். தாயுமான அடிகளும் அவரை 'ஐயா, அருணகிரி அப்பா உனைப்போல மெய்யாக ஓர் சொல் விளம்பினர் யார்' என்று பாராட்டுவதிலிருந்து அவருடைய பாடற் சிறப்பினே நன்கு உணரலாம். அவர் பாடியருளிய திருப்புகழ்ப் பாக்களுக்கு ஒர் உதாரணம் வருமாறு:-
தனதானத் தனதான தனதானத் தனதான
இறவா மற் பிறவாமல் எனையாள் சற் குருவாகிப் பிறவாகித் திரமான
பெருவாழ்வைத் தருவாயே குறமாதைப் புணர்வோனே குகனேசொற் குமரேசா கறையானைக் G2t Guit Gaor
கதிர்காமப் பெருமாளே.
இக்காலப்பகுதியில் எழுந்த இலக்கியங்களுட் சிறந்த தொன்றகக் கருதப்படுவது வில்லிபுத்தூராழ்வார் இயற்றிய பாரதமாகும். 4339 விருத்தப்பாக்களைக் கொண்டு விளங்கும் இந்நூல் ஆதிபருவம் முதலாகச் செளப்திகபருவம் ஈருகப் பத்துப் பருவங்களை உடையது. வடமொழியிலுள்ள வியாசரது மாபாரதத்திலுள்ள பதினெட்டுப் பருவங்களுள் முதற் பத்துப் பருவங்களிலுள்ள கதையையே இவ்வாசிரியர் தம் நூலுக்குப் பொருளாக எடுத்துக்கொண்டு அதைச் சந்தம் நிறைந்த விருத்தப்பாக்களில் அமைத்து இந்நூலை இயற்றியுள்ளனர். இவர் சிறங் த திருமாலடியார் என்பது இந்நூற் சருக்கம் தோறும் தொடக்கத்திலே திரு மாலுக்குக் கூறியிருக்கும் வணக்கத்தாலும் தற்சிறப்புப்பாயிரத்திற் கூறியிருப்பனவற் றலும் பெறப்படும். இவர் திருமாலடியாராக இருந்தபோதும் சிவபிரானைப்பற்றிக் கூறுமிடங்களில் அவரை ப் பாராட்டிக்
கூறும் வகையை நோக்கின், இவ்வாசிரியர் ஒரு பரந்த
உள்ளமுடையவர் என்பது புலப்படும். இந்நூல் இக்காலத்து இலக்கியப்போக்கிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

Page 87
56 தமிழ் இலக்கிய வரலாறு
வடமொழிப் புலமையும் தமிழ்மொழிப் புலமையும் ஒருங்கு வாய்க்கப்பெற்ற பெரியோர்களுட் சிலர் ஓசை நயங்கருதி இரு மொழிச் சொற்களையும் சொற்றெடர்களையும் கலந்து செய்யு ளியற்றும் முறைக்கு வழிகாட்டியவர் வில்லிபுத்தூராழ்வார் என்றே கூறுதல்வேண்டும். வடமொழிச் சந்தங்களை அமைக் கும்போது வட மொழிச் சொற்றெடர்களைக் கையாளுதல் இயல்பாகலின், பெருந்தொகையாக அவற்றை இக்காலத்துப் புலவர்கள் பிரயோகித்தனர். சந்தவிருத்தங்கள் பல்லவர்
காலத்திலேயே வழக்கிலிருந்தனவெனினும் வடமொழிச் சொற்
ருெடர்கள் அதிக மாக ப் பயின்றுவரும் சந்தவிருத்தங்கள் வில்லிபுத்தூராழ்வார் காலத் தி லிருந்தே தமிழிற் பெருங் தொகையாக இயற்றப்பட்டன. இவ்வாசிரியர் காட்டிய வழி யைப் பின்பற்றிப் பிற்காலத்தில் வாழ்ந்த தாயுமான சுவாமி கள் முதலியோர் சிறந்த பாடல்களை இயற்றினர். வில்லி பாரதத்துக் கன்ன பருவத்திலுள்ள செய்யுட்களுள் இரண்டு வருமாறு:-
போற்றிய கன்னன் கண்டுகண் களிப்பப் புணரிமொண்
(டெழுந்தகார் முகிலை மாற்றிய வடிவும் பஞ்சவா யுதமும் வயங்குகைத் தலங்களு (மாகிக்
一° கூற்றுழற் கராவின் வாயினின் றழைத்த குஞ்சர ராசன்முன்
(அன்று தோற்றிய படியே தோற்றினன் முடிவுங் தோற்றமு மிலா தடைந் (துளவோன், அமரரா னவரு மமரயோ னிகளு மமரருக் கதிப்னு னவனுங் கமலநான் முகனு முனிவருங் கண்டு கனகநாண் மலர்கொடு
- (பணிந்தார் சமரமா முனையிற் றனஞ்சயன் கணையாற் சாய்ந்துயிர் வீடவுஞ்
1Ꭹ; (செங்க
ணமலநா ரணனைக் காணவும் பெற்றே னென்றுதன் னகமிக (மகிழ்ந்தான்.

நாயக்கர் காலம் 57
இரட்டையர் எனப்படுவோர் இரு புலவர்கள். அவர்களுள் ஒருவர் முடவர்; மற்றவர் குருடர் என்றும், போகுமிடமெல்லாம் முடவரைக் குருடர் காவிச்சென்றனர் என்றும் ஒரு பாட்டைப் பாடும்போது ஒருவர் அதனைத் தொடங்க மற்றவர் முடித் தனர் என்றும் சிலர் கூறுவர். இக்கூற்று ஆதார மற்ற வெறும் கற்பனையாகும். பெரும் புலவர்கள் இருவர் நட் புரிமை பூண்டு இணைபிரியாது வாழ்ந்தும் பாடியும் வந்தமை யால் அவர்கள் இரட்டைப் புலவர் என்று அழைக்கப்பட்ட னர் எனக்கொள்ளுதலே பொருத்தமுடைத்து. அவர்களுடைய புகழ் ஞாயிற்றின் ஒளிபோலத் தமிழ்நாடெங்கும் பரவியிருந்த மையாற்போலும் அவர்கள் முதுசூரியர் என்றும் இளஞ்சூரியர் என்றும் அழைக்கப்பட்டனர். அவர்கள் பல தனிப்பாடல் களையும் திரு ஆமாத்தூர்க் கலம்பகம், கச்சிக் கலம் பகம், தில்லைக் கலம்பகம், ஏகாம்பரநாதர் உலா என் னும் பிரபந்தங்களையும் பாடியுள்ளனர். கலம்பகம் பாடுவதில் அவர்கள் சிறந்தவர்களாதலின், கலம்பகத்திற் கிரட்டையர் கள்' என்ற பாராட்டைப் பெற்றுள்ளனர். திருவாமாத்தூர்க் கலம்பகச் செய்யுட்களுள் ஒன்று வருமாறு:-
வருக்கைத் தடம்பொழின் மாமாதை யையர்க்கு மாசொன்றில்லா முருக்கொத்த மேனி யழகிய நாதர்க்கு மூச்சரவத் திருக்கைக் கமல வரனுர்க் கரிதிருத் தேவிய ன்றேல் அரிக்குப் பொருளுரை யீர்கெடு வீர்நும் மறிவின்மையே.
பதினைந்தாம் நூற்றண்டில் வாழ்ந்த பெரும் புலவர்களுள் ஒருவராகக்கொள்ளப்படும் காளமேகப்புலவர் நினைத்தமாத் திரத்திற் சிலேடை நயம்மிக்க அங்கதச் செய்யுட்கள் பாடு வதிற் சிறந்த ஆற்றலுடைய ஒருவர். அவருடைய இயற் பெயர் வரதன் என்றும் கருமேகம் மழைபொழிதல்போல ஆசுகவிகள் பாடுவதில் அவர் பேராற்றலுடையோராக இருந் தமைபற்றிக் காளமேகம் என்ற சிறப்புப்பெயர் பெற்றர் என்றும் தெரிகின்றது. வசைபாடுவதில் ஒப்பற்றவராக விளங்கினராதலின் வசைபாடக் காளமேகம்' என்று சிறப்

Page 88
158
தமிழ் இலக்கிய வரலாறு
பிக்கப்பட்டனர். அவர் பாடிய வசைப் பாடல்களையும் சிலே டைப் பாடல்களையும் தனிச்செய்யுட்சிந்தாமணி முதலிய நூல்களிற் காணலாம். அவர் பாடிய பிரபந்தங்களுள் ஒன்று திருவானைக்கா உலா என்பது. அவர் பாடிய தனிப் பாடல்களுட் சில வருமாறு:- ஓரிடைச்சி கொடுத்த நீர்மோரை வியந்து பாடியது
காரென்று பேர்படைத்தாய் ககனத்து றும்போது நீரென்று பேர்படைத்தாய் நெடுந்தரையில் வந்ததற்பின் வாரொன்று மென்முலையா ராய்ச்சியர்கை வந்ததற்பின் மோரென்று பேர்படைத்தாய் முப்பெரும் பெற்றாயே.
திருப்பனந்தாள் பட்டன் மீது பாடியது விண்ணீரும் வற்றிப் புவிநீரும் வற்றி வெதும் பியழக் கண்ணீரும் வற்றிப் புலவோர் தவிக்கின்ற காலத்திலே உண்ணீருண் ணீரென் றுபசாரஞ் சொல்லி யுபகரித்துத் தண்ணீருஞ் சோறுந் தருவான் றிருப்பனந் தாட்பட்டனே.
சிவனைப் பாடியது வில்லா லடிக்கச் செருப்பா லுதைக்க வெகுண்டொருவன் கல்லா லெறியப் பிரம்பா லடிக்கவிக் காசினியில் அல்லார் பொழிற்றில்லை யம்பல வாணர்க்கொ ரன்னை பிதா இல்லாத தாழ்வல்ல வோவிங்ங னே யெளி தான துவே.
பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுட் பரஞ்சோதி முனிவர், அதிவீரராம பாண்டியன், திருக்குருகைப் பெருமாள்கவிராயர், நிரம்பவழகியதேசிகர் - என்னும் நால் வரும் சிறந்தவராகக் குறிப்பிடத்தக்கவர். சோழர்காலத் திற் பெரும்பற்றப்புலியூர்நம்பி இ யற் றி ய திருவிளையாடற் புராணத்தைப் பின்பற்றிப் பரஞ்சோதி முனிவரும் திருவிளை யாடற்புராணமொன்றை இயற் றி னர். அது சோமசுந்தரக் கடவுள் மதுரையிற் செய்தருளிய அறுபத்துநான்கு திருவிளை யாடல்களை எடுத்துக் கூறுகின்றது. தென்பாண்டிநாட்டை

நாயக்கர் காலம்
169
ஆண்ட அதிவீரராமபாண்டியன் இயற்றிய நூல்கள் நைடதம், காசிகாண்டம், கூர்மபுராணம் முதலியன. நம்மாழ்வார் அவதரித்த திருக்குருகையிற் பிறந்த திருக்குருகைப்பெருமாள் கவிராயர், மாறன் என்ற திருநாமத்தையுடைய நம்மாழ்வாரில் மிக்க பத்தியுடையவர். அதனால், அவர் ந ம் ம ா ழ் வா ரைப் பாராட்டிப் பல பாக்களைப் பாடியதுமன்றி, நம்பெருமாள் மும்மணிக்கோவை, குருகாமான்மியம் முதலிய இலக் கி ய ங் க ளை யும், மாறனகப்பொருள், மாறனலங்காரம் என்னும் இ ல க் க ண நூல் க ளை யும் இயற்றினர். சேது புராணம், திருப்பரங்கிரிப் புராணம் முதலியவற்றை இயற்றிய நிரம்பவழகியதேசிகர் சிவஞானசித்தியார், திருவருட் பயன் என்ற சித்தாந்த சாத்திர நூல்களுக்குச் சிறந்த உரை யும் எழுதியுள்ளனர்.
- பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுட் குமரகுருபர சுவாமிகள், சிவப்பிரகாச சுவாமிகள், பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், படிக்காசுப்புலவர் முதலியோர் சிறந்த வர்களாகக் குறிப்பிடத்தக்கவர்கள். குமரகுருபரர் தமிழறி வும் தவவொழுக்கமும் கவிதாசக்தியும் ஒருங்கு வாய்க்கப் பெற்றவர். தமிழ்ப் பாமாலைகொண்டு இறைவனைப் போற்றிய அப்பெரியார் இன்னிசை பொருந்திய பாக்களை எவ்வகை யாப்பிலும் அமைக்கும் ஆற்றல் வாய்ந்தவர். இந்துஸ்தானி முதலிய வடநாட்டு மொழிகளிலும் வல்லு நராகலின், அம் மொழிச் சொற்களையும் தம் நூ ல் க ளி ல் எடுத்தாண்டனர். அவர் பாடிய பிரபந்தங்கள் காசிக் கலம்பகம், மீனாட்சி யம்மை பிள்ளைத்தமிழ், நீதிநெறி விளக்கம் முதலியன. கற்பனைக்களஞ்சியம் என் று பாராட்டப்படும் சிவப்பிரகாச சு வா மி க ள் ஒரு வீ ர ைச வர். தம் சமயக்கொள்கைகளைப் பிரபுலிங்கலீலை முதலிய பிரபந்தங்கள் வாயிலாக வெளி யிட் டு ள் ள னர். அவர் பாடிய ஏனைய பி ர பந் தங் க ள் சோணசைல மாலை, நி ரோட்ட ஆதி யமக அந்தாதி, நால்வர் நான்மணிமாலை முதலியன. அவர் கற்பனைச் சிறப்புடைய Lாக்கள் பாடுவதிற் சிறந்தவர். 'திவ்விய கவி'

Page 89
160
தமிழ் இலக்கிய வரலாறு என்று பாராட்டப்பட்ட பிள்ளைப் பெருமாளையங்கார் இயற்றிய பிர பந்தங்கள் அட்டபிரபந்தம் எனப்படும். அவை திருவரங்கக் கலம்பகம், திருவரங்கத்தந்தாதி முதலியன. சிலேடை, யமகம், திரிபு முதலியவற்றையுடைய சுவை நிரம்பிய பாக் களைப்பாடுவதில் ஆற்றல் வாய்ந்தவர் என்பதற்கு அவர் பாடிய பிரபந்தங்களே சான்றாக விளங்குகின்றன. சந்தப்பாக்கள் பாடு வதில் இணையற்று விளங்கியவர் படிக்காசுப்புலவர். அவர் பாடிய பிரபந்தங்கள் தொண்டைமண்டல சதகம், புள்ளிருக் கும் வேளூர்க் கலம்பகம் முதலியன. பல தனிப்பாடல்களை யும் அவர் பாடியுள்ளனர். சீதக்காதிவள்ளல் இறந்ததைக் கேட்டு அவ்வள்ளலின் கொடைச்சிறப்பை வியந்து அவர் பாடிய பாக்கள் நெஞ்சை உருக்குந்தகையன. அவற்றுள் ஒன்று வருமாறு:- மறந்தா கிலுமரைக் காசுங் கொடாமட மாந்தர் மண்மேல் இறந்தாவ தென்ன விருந்தாவ தென்ன விறந்து விண்போய்ச் சிறந்தாளுங் காயற் றுரைசீதக் காதி திரும்பி வந்து பிறந்தா லொழியப் புலவோர் தமக்குப் பிழைப்பில் லையே. திருமலை நாயக்கர் இவரைச் சிறைவைத்திருந்தபோது
பாடியது
நாட்டிற் சிறந்த திருமலையா துங்க நாகரிகா காட்டில் வனத்திற் றிரிந்துழ லாமற் கலைத்தமிழ்தேர் பாட்டிற் சிறந்த படிக்காச னென்னுமொர் பைங்கிளியைக் கூட்டி லடைத்துவைத் தாயிரை தாவென்று கூப்பிடுதே. இவருடைய பாடற் சிறப்பை அனுபவித்த புலவர் ஒருவர்,
பட்டாருந் தென்களந்தைப் படிக்காசன்
உரைத்ததமிழ் வரைந்த ஏட்டைப் பட்டாலே சூழ்ந்தாலும் மூவுலகும்
பரிமளிக்கும் பரிந்தவ் வேட்டைத் தொட்டாலுங் கைமணக்குஞ் சொன்னாலும்
வாய்மணக்குந் துய்ய சேற்றில் நட்டாலுந் தமிழ்ப்பயிராய் விளைந்திடுமே
பாட்டிலுறு நளினந் தானே,

நாயக்கர் க்ர்லம் 16
என்று அதனை மனமாரப் புகழ்ந்துள்ளனர்.
6. உரையாசிரியர்கள்
தமிழிலக்கண இலக்கியங்களுக்குச் சிறந்த உரைவகுத்த ஆசிரியர்களுள் நச்சினுர்க்கினியர், அடியார் க்கு நல்லார், பரிமேலழகர் முதலியோர் பதினுரும் நூற்றண்டிற்குமுன் வாழ்ந்தவர்கள் என்பர். தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களுக்கும் எட்டுத்தொகை முதலிய இலக்கியங்களுக்கும் அக்காலப்பகுதியில் உரைகள் வகுத்ததை நோக்குமிடத்துத் தமிழிலக்கண இலக்கியங்களை மக்கள் ஆர்வத்தோடு கற்று வந்தனரென்பது தெரியவருகின்றது. பதினேழாம் நூற்றண் டில் மதுரையிலிருந்து கத்தோலிக்க சமயத்தொண்டு செய்து வந்த தத்துவபோதக சுவாமிகள்* உரோமாபுரிக்கு எழுதிய கடிதங்களில், அவர்காலத்தில் மதுரை முதலிய இடங்களில் ஆசிரியர் பலர் இருந்து மாணவர்க்குத் தமிழிலக்கண இலக்கி யங்களைக் கற்பித்துவந்தமையைக் குறிப்பிட்டிருப்பதால், அக் காலத்து மக்கள் பழைய இலக்கண இலக்கியங்களைப் பெரிதும் விரும்பிக் கற்றுவந்தனரென்பது தெரிகின்றது. அந்நூல்களை ஆசிரியருதவியின்றியும் மாணவர் கற்றற்
பொருட்டு உரைகள் வகுக்கப்பட்டனபோலும்.
அடியார்க்குநல்லார் முற் காலத் தி லெழுந்த முத்தமிழ் இலக்கண இலக்கியங்களை கன்கு கற்றுத் தேர்ந்து முத்தமிழ்க்
காவியமாகிய சிலப்பதிகாரத்திற்குச் சிறந்த உரை வகுத்
துள்ளனர். அந்நூல் எழுந்த காலத்து இலக்கியமரபு, பண்
பாடு முதலியவற்றை அவருரை தெளிவாகப் பிரதிவிம்பித்துக்
காட்டுகின்றது. சுவைமிக்க அக்காவியத்தின் நயங்களையெல் லாம் ஒத்திசைபொருந்திய உரைநடையில் அமைத்துக் காட்
டியிருப்பதிலிருந்து, அவர் சிறந்த உரைநடைவல்லார் என்
பதும் கவிதையைச் சுவைக்கும் ஆற்றல் பெரிதுமுடையவர் என்பதும் புலப்படும். இயலிசை நாடகத் தமிழ்நூல்கள் பல
* Robert de Nobile
21

Page 90
E162 தமிழ் இலக்கிய வரலாறு
அவர்காலத்தில் இருந்தனவென்பதை அவ ரையால் அறிய
தி: இருந்த @ @
லாம். தமிழுரையாசிரியர்களுள் இலக்கண இலக்கிய அறிவில் நச்சினுர்க்கினியர் தலைசிறந்தவரென்பதை 'உச்சிமேற் புலவர்
கொள் நச்சினுர்க்கினியர்' என்று பாராட்டப்படுவதிலிருந்து
அறியலாம். தம்முடைய கொள்கைகளை நிறுவுவதற்குவேண்டிய ஆதாரங்களையெல்லாம் பிறர் மனங்கொள்ளுமாறு தர்க்க முறையாக அமைத்துக் காட்டுவதில் அவர் தலைசிறந்தவர் என்பது தொல்காப்பியம் முதலியவற்றிற்கு அவரெழுதிய உரையிலிருந்து அறியலாம். அவர் உரைவகுத்த நூல்களைப் பின்வரும் வெண்பாவால் அறிக:-
'பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட் டுங்கலியும் ஆரக் குறுந்தொகையு ளேஞ்ஞான்கும்-சாரத் திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும் விருத்திருச்சி ஞர்க்கினிய மே,' திருக்குறளுக்கு உரைவகுத்தோர் பலர். அவர்களுட் பரி என் பார் வகுத்த உரை சிறந்ததென்றும், அதனினும் சிறந்த உரையைப் பரிமேலழகர் வகுத்ததனுல் அவரைப் பரிமேலழகர் எனவும் பரிமேலழகியார் எனவும் பாராட்டினரென்றும் அறி யக்கிடப்பதிலிருந்து திறன்படைத்த உரையாளர் அவர் என் பது பெறப்படும். செறிவு, திண்மை முதலிய பண்புகளோடு கூடிய குறளுக்கு அத்தகைய சிறப்பியல்புகள் பொருந்திய செவ்விய இன்பமான மொழிநடையினுல் உரைவகுத்தமை பெரிதும் பாராட்டற்குரியது. தமிழிலக்கியங்களுக்கு வகுத்த உரைகளுள் அது மிகச் சிறப்பு வாய்ந்தது என்பதை,
'பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ பாரிலுள்ள
நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ - நூலிற் பரித்தவுரை யெல்லாம் பரிமே லழகன் தெரித்தவுரை யாமோ தெளி,' என்னும் வெண்பாவால் அறியலாம்.
பல்லவர் காலத்தில் வாழ்ந்த ஆழ்வார்வுள் பாடியருளிய திவ்விய பிரபந்தங்களைச் சோழர் காலத்திலிருந்த நாதமுனிகள்
 

(5|TLlš5|ý Sf6)Ľb 168
தொகுத்துதவியதை முந்திய அதிகாரத்திற் கண்டோம்.
நாதமுனிகள் காலத்திற்குப்பின் நம்மாழ்வார் அருளிச்செய்த
திருவாய்மொழிக்கு மணிப்பிரவாள நடையிலே சிறந்த உரைகள் வகுக்கப்பட்டன. அவை ஆருயிரப்படி, ஒன்பதினு யிரப்படி, பன்னிராயிரப்படி, இருபத்துநாலாயிரப்படி, முப்பத் தாயிரப்படி எனப்படுவன. இவ் ைவ ந் து உரைகளுள் முப்பத்தாருயிரப்படியே மிக விரிந்ததும் சிறந்ததுமாகும். II " என்பது அளவு என்னும் பொருளை உடையது. ஒற்றுநீக்கி, உயிரும் உயிர்மெய்யுமாகிய முப்பத்திரண்டு எழுத்துக்களை உடையது ஒரு படி அல்லது கிரந்தம் எனப்படும். முத்தும் பவளமும் கோத்தாற்போல வட சொற்களும் தமிழ்ச் சொற்களும் விரவிவரும் நடையே மணிப்பிரவாள நடை எனப்படும். மேற்கூறிய ஐந்து உரை களையும் முறையே ஆளவந்தார், நஞ்சீயர், அழகிய மணவாள ஜியர், பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப்பிள்ளை, ஆகியோர் வகுத்துதவினர். வரதராசர் எனப்பட்ட கம்பிள்ளை என்னும் பெரியார் காலட்சேபத்தில் அருளிச்செய்த வியாக்கி யானங்களை வடக்குத் திருவிதிப்பிள்ளை முப்பத்தாளுயிரப்படியில் எழுதிமுடித்தார் என்று கூறுவர். இது ஈடு' என்றும் வழங்கப்படும். இப்பேருரை மணிப்பிரவாள நடையில் இருந்த போதும் தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு தனிப்பெருமை வாய்ந்து விளங்குகின்றது. ஒரு பாட்டை எவ்வாறு சுவைத்தல் வேண்டும் என்பதையும் புலவன் கருதிய பொருளைக் கண்டறிவது எப்படி என்பதையும் தெளிவாக வகுத்துக்காட்டு கின்ற பெருநெறியென்றே இதனைக் கூறலாம். திருவாய் மொழிக்கு எழுதப்பட்ட உரைபோலவே ஆழ்வார்கள் அருளிச் செய்த ஏனைய பிரபந்தங்களுக்கும் சிறந்த உரைகள் மணிப் பிரவாள நடையில் வகுக்கப்பட்டுள்ளன.
சைவசித்தாந்த நூல்களை மக்கள் விரும்பிப் படித்தற் பொருட்டு அவற்றுட் சிலவற்றிற்கு அக்காலப்பகுதியில் உரைகள் வகுக்கப்பட்டுள்ளன வென்பதும் ஈண்டுக் குறிப்

Page 91
164
தமிழ் இலக்கிய வரலாறு
பிடத்தக்கது. இவ்வாறு பல ஆசிரியர்களும் உரைகளை யெழுத முன்வந்ததனாலே தமிழுரைநடை வளரத்தொடங்கிற்று. முந் திய காலப்பகுதிகளிற் செய் யு ட் ெபாரு ளை யும் சூத்திரப் பொருளையும் விளக்க உதவிய உரைநடை நாயக்கர்காலத் திலே தனி உரை நூல்களையும் எழுதப் பயன்படுத்தப்பட்டது. அதற்கு வழிகாட்டியவர் தத்துவபோதகசுவாமிகள் என்றே கூறலாம். அவருடைய காலந்தொடக்கம் தமிழில் உரைநடை யும் உரைநடை இலக்கியங்களும் வளரத்தொடங்கின. 7. தமிழை வளர்த்த அரசரும் ஆதீனங்களும்
முற்காலங்களில் ஆட் சி பு ரிந்த தமிழரசர்கள் தமிழை ஆதரித்ததுபோல அத்துணைச் சிறப்பாக விசயநகர மன்னரும் நாயக்க மன்னரும் அதனை ஆதரிக்கவில்லை. அக்காலத்திலே தென்பாண்டி நாட்டிலிருந்து ஆட் சி பு ரிந் த அதிவீரராம் பாண்டியன், இராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதிமன்னர்கள், யாழ்ப்பாணத்தை ஆண்ட பரராசசேகரன் முதலிய தமிழரசர் கள் புலவர்களை ஆதரித்துவந்தனர். இவ்வாறு அக்காலத்தில் ஆண்ட சிற்றரசரும் பிறரும் தமிழ்ப்புலவர்களுக்கு வேண்டியன் புரிந்து அவர்களை ஆதரித்ததுமட்டுமன்றித் தாமும் சிறந்த இலக்கியங்களை இயற்றித் தமிழை வளர்த்துவந்தனர். அவர் களுள் நைடதம் இ ய ற் றி ய அதிவீரராம பாண்டியனும், இரகுவமிசம் என்னும் நூலை இயற்றிய யாழ்ப்பாணத்து அரசகேசரியும் சிறந்தவர்களாகக் குறிப்பிடத்தக்கவர்கள்.
நாயக்கர்காலத்திலே தமிழ்நாட்டில் விளங்கிய பல்வேறு சமயக்கருத்துக்களையும் தத்துவக்கொள்கைகளையும் பரப்புதற் பொருட்டுத் தோன்றிய மடங்களும் ஆதீனங்களும் பல. அவற்றுள், தருமபுரவாதீனம், திருவாவடுதுறையாதீனம் என் பவை சித்தாந்தசைவத்தை வளர்த்தற்கு அருமுயற்சிகள் பல வற்றை அக்காலந்தொடக்கமாகச் செய் து வ ரு கின் ற ன. அம்மடங்களில் அதிபதிகளா யிருந்தோரும் பிறரும் பல அரிய தத்துவசாத்திர நூல்களையும் சமயநூல்களையும் உரைகளையும் இயற்றியுள்ளனர். அவர்களுள், தருமபுரவாதீனத்தைச் சார்ந்த

நாயக்கர் காலம் 165
குமரகுருபர சுவாமிகளும், திருவாவடுதுறையாதீனத்தைச் சார்ந்த அம்பலவாணதேசிகர், ஈ சான தேசிக ர், சிவஞான
முனிவர் என்போரும் சிறந்தவர்களாகக் குறிப்பிடத்தக்கவர்கள். அம்மடங்களைச் சார்ந் தோர் நூல்களை யெழுதியும் மானவர்களுக்கு உண்டியும் உறையுளும் உதவிக் கல்வி கற்பித்தும் சமய உபதேசஞ்செய்தும் தமிழ்வளர்ச்சிக்குச் செய்துவரும் தொண்டு போற்றத்தக்கதே. ' "

Page 92
..سه ,s.است sیر۔ سره سم. س-- ИТ. ஐரோப்பியர் ᏧᎸᏏlᎢ ᎧᎧ Di)
காயக்கர் கலத்தின் பின் உள்ள பதினெட்டாம் பத்தொன் பதாம் நூற்றண்டுகளைக்கொண்ட காலப்பகுதி தமிழிலக்கிய வரலாற்றில் ஐரோப்பியர் காலம் எனப்படும். 1. அரசியல் நிலை
பதினெட்டாம் நூற்றண்டிலே தமிழ் காட்டில் நாயக்க ராட்சி நிலைகுலைய, முகம்மதியர் பலமுறை படையெடுத்து வந்து ஈற்றில் நாட்டினைக் கைப்பற்றி ஆண்டுவந்தனர். அவர் இஸ்லாமிய மதத்தினராதலாலும், நாட்டிலே சிறந்த அரசியலை அவர் நிறுவமுடியாதிருந்ததனுலும், பற் பல இடங்களிற் சண்டைகளும் குழப்பங்களும் இ ைடயி டையே நிகழ்ந்து கொண்டிருந்தன. அதனுல், அவர் தம் ஆட்சியை நிலைப் படுத்த முடியாதிருந்தது. அங்காளில் வியாபாரஞ் செய்தற் பொருட்டு இந்தியாவில் வந்து தங்கியிருந்த பிராஞ்சியருக் கும் ஆங்கிலேயருக்குமிடையே பொருமையும் போட்டியும் இருந்து வந்ததனுல், அவர்கள் ஒருவரையொருவர் எதிர்க்கச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தனர். முகம் மதிய ரா ட்சி குழப்பங்களுக்கு ஏதுவாயிருந்ததைக் கண்ட அவர்கள் உள் நாட்டு அரசியல்விஷயங்களிலுந் தலையிடத் தொடங்கினர். நாளடைவில் முகம்மதியராட்சி வலி குன் ற, ஆங்கிலேயர் பதினெட்டாம் நூற்றண்டின் இறுதியிலே தமிழ்நாட்டைக் கைப்பற்றி ஆளத் தொடங்கினர். பிராஞ்சியரும் புதுச்சேரி, காரைக்கால் என்னு மிடங்களைக் கைப்பற்றினர். இவ்வாறு ஐரோப்பியராட்சிக்குட்பட்ட தமிழ்நாட்டில் அமைதி நிலவி வந்ததனுல் நாடு பலவழிகளிலும் முன்னேறியது. ஆங்கிலேய ராட்சி 1947-ல் நீங்கவே பல நூற்றண்டுகளாக அடிமைத் தளையில் அகப்பட்டுக்கிடந்த தமிழ்நாடு சுதந்திரம்பெற்றது.
2. சமய நிலை
நாயக்கர் காலப்பகுதியிற் சைவம் வைணவமாகிய இந்து
 
 

ஐரோப்பியர் காலம் 167
சமயப் பிரிவுகள் வளர்ந்துவந்தமையையும், தத்துவசாஸ்திரக் கொள்கைகள் நாட்டிற் பரவிவந்தமையையும் முந்திய அதி காரத்திற் கூறினுேம், நாயக்கமன்னரின் ஆட்சிக்காலத்திலே தமிழ்நாட்டிற் பரவத்தொடங்கிய கிறிஸ்தவ சமயம் முகம் மதியரின் ஆட்சிக்காலத்திற் சில இன்னல்களே அனுபவித்த போதும் தளர்ச்சியுற்றிலது, பின் ஆங்கிலேயராட்சி நாட்டில் நிலவிய காலத்தில் அது சிறப்பாக வளர்ந்துவந்தது. நாட்டை பாண்ட ஆங்கிலேயர் கிறிஸ்தவர்களாயிருந்து தம் சமயத் திற்கு அனுதாபம் காட்டியமை அதன் வளர்ச்சிக்குச் சாதக மாயிருந்தது. தம் சமயத்திற்கென்றே வாழ்க்கையை அர்ப் பணஞ்செய்த ஐரோப்பியப் பாதிரிமாரும் கத்தோலிக்க குரு மாரும் அக்காலத்திலே தமிழ்நாட்டிற்கு வந்து தங்கியிருந்து தம் சமயத்தை வளர்த்தற்கு இடைவிடாது உழைத்துவந்தனர். மக்களின் அ ன் ைபப் பெறுதற்கு வழி அவர் மொழியைக் கற்று அவர்களோடு கலந்து வாழ்தல் என்பதை நன்கறிந்த இவர் தமிழ்மக்களோடு கலந்து வாழ்ந்து தமிழ்மொழியைக் கற்று அம்மொழி வாயிலாகச் சமயக்கொள்கைகளை நாட்டிற் பரப்பினர். எத்தகைய இன்னல்கள் வந்துற்றபோதும் அவற் றிற்குச் சிறிதளவேனுஞ் சலியாது தம் காரியத்திற் கண்ணுங் கருத்துமாயிருந்து இவர் உழைத்து வந்தமையாற் கிறிஸ்தவ சமயம் அக்காலத்திலே தமிழ்நாட்டில் வளரலாயிற்று. கிறிஸ் தவக் குருமார் தம் சமய த் திற்குச் செய்துவந்த தொண்டு தமிழிலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிற்றென்றே கருதக்கிடக்கின்றது. நாயக்கர் காலத்திலே தமிழ்நாட்டிற் கால்வைத்த இஸ்லாமிய சமயம் முகம்மதியராட்சிக் காலத் திற் பற்பல இடங்களிலும் பரவிற்று, மேலும் பரவுதற்கேற்ற வசதிகள் அவராட்சிக்குப்பின் இல்லாமையால் அது வளர்ச்சி யுருதிருந்தபோதிலும், அம் மதத்தைத் தழுவிய மக்கள் அதனைச் சிறப்பாகப் போற்றிவந்தனர்.
மேற்கூறிய பிறநாட்டுச் சமயங்கள் தழிழ்நாட்டிற்கு வந்து மக்களுட் பலரைத் தம் வசப்படுத்தியபோதும் இந்துசமயம்

Page 93
168 தமிழ் இலக்கிய வரலாறு
தளர்ச்சியுறவில்லையென்றே கூறலாம். தத்தம் சமயங்களை வளர்த்தற்பொருட்டு கிறிஸ்தவரும் இந்துக்களும் கடந்த இரு நூறு ஆண்டுகளாக நிகழ்த்திவந்த சமயவாதங்கள் இந்துசமய வளர்ச்சிக்கு ஒரு தூண்டுகோலாயிருந்தனவென்றே கூறல் வேண்டும். அவ் வாதங்கள் தமிழிலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின என்றே கூறலாம். 3. இலக்கியப் பண்பு
சமயப் பிரசாரஞ் செய்தற்பொருட்டு ஐரோப்பியர் தமிழ் நாட்டிற்கு வந்த காலம்முதல் தமிழிலக்கியப் போக்கில் உண்டான மாற்றங்களையும் இக்காலத் தமிழிலக்கியத்திற் காணப்படும் சிறப்பியல்புகள் சிலவற்றையும் ஆராய்வாம்.
நாயக்கர்காலப் பிற்பகுதியிலே தமிழிலக்கியம் மந்தகதி யுடனும் ஐரோப்பியர்காலத்தில் விரைவாயும் சென்றதற்குப் பல காரணங்களுள. மரணத்தின் பின் மக்கள் அடையுங் கதியை நோக்கியெழுந்த நாயக்கர்கால இலக்கியங்கள் சமயச் சார்பும் தத்துவச்சார்பும் உள்ளனவேயன்றி, வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்பில்லாதவை யென்றே கூறல் வேண்டும். இவ்வாறு உயிர்த்துடிப்பில்லாத நிலையை அடைதற்கு அவை வடமொழி இலக்கியத்தை வேண்டாத அளவிற்குப் பின்பற்றி யதும் ஒரு காரணமாகும். இதிகாசம், புராணம், தர்க்கம், தத்துவசாஸ்திரம் முதலிய பல துறைகளிலும் சிறந்துவிளங் கும் வடமொழியிலக்கியத்தைத் தழுவி, முந்திய காலப் பிரிவு களில் வாழ்ந்த ஆற்றல்மிக்க புலவர்கள் அரிய நூல்கள் பலவற்றைத் தமிழில் இயற்றித்தந்தனர். அவர்கள் வீறுடன் கையாண்ட செய்யுள்வகைகளை நாயக்கர்காலப் பிற்பகுதியில் வாழ்ந்த புலவர்கள் தாமும் உபயோகித்து, அவர் சென்ற வழியிற் சென்று பல புராணங்களையும் பிரபந்தங்களையும் இயற்றினர். இந்நூல்கள் சுவையும் உயிர்த்துடிப்பும் அற்ற வையாயிருந்தமையால் மக்களின் மனத்தைப் பெரிதுங் கவர்ந்தில. நாயக்கர் காலப் பிற்பகுதியில் வாழ்ந்த புலவர் களுட் சிலர் மக்கள் மனத்தைக் கவரக்கூடியனவாயும் வாழ்க்

ஐரோப்பியர் காலம் 169
கைத் தொடர்புடையனவாயுமுள்ள விஷயங்களைப் பொருளாகக் \கொண்டு நாடகப் பண்புவாய்ந்த குறவஞ்சி, t ள்ளு Fஎன்னும் புதிய பிரபந்தங்களை இயற்றத் தொடங்கினர். அவற்றின்கண் சிந்து முதலிய புதிய செய்யுள்வகைகளைக் கையாண்டு பேச்சுவழக்கிலுள்ள சொற்களையும் உபயோகித் தனர். இவ்வாறு புதிய வழிகளில் இலக்கியம் செல்லப்புகுந் தமை, நாயக்கர்காலப் பிற்பகுதியிலெழுந்த ஏனைய இலக்கி யங்கள் மக்கள் மனத்தைக் கவராமைக்கு அறிகுறியாகும். இலக்கியம் சாதாரண கல்வியறிவுடைய மக்களும் படித்து இன்புறக்கூடியதாயும் காலத்தின் போக்கிற்குப் பொருந்துவ தாயும் மக்கள் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடைய தாயும் இல்லா விடின், அது உயிர்த்துடிப்புள்ளதென்றும் வளர்ச்சிக்குரியதென்றும் கூறல்முடியாது. ஐரோப்பிய நாக ரிகத்தொடர்பு உண்டாதற்குச் சிறிது முந்தியகாலப்பகுதியிலே தோன்றிய தமிழிலக்கியங்கள் பல பாராட்டத்தக்கனவல்ல. யாப்பு அணி இலக்கணங்களைக் கூறும் நூல்களையும் நிகண்டு களையும் படித்து, அவற்றிற்கிணங்கச் செய்யுட்களை இயற்று வது எளிது; உணர்ச்சிவேகமும் கற்பனைத்திறனும் பொருங் திய பாக்களை இயற்றுதல் எல்லார்க்கும் எளிதன்று.
பதினுறம் நூற்றண்டிற்குமுன் ஐரோப்பிய நாடுகளிற் கிரேக்க உரோம இலக்கியங்களைத் தழுவி எழுந்த இலக்கியங் கள் கல்வியறிவுடையோர் மட்டுமே படித்தறியக்கூடியனவா யிருந்தன. அந்நூற்றண்டில் அந்நாடுகளிலே கலைகள் புத்துயிர் பெற்றதன் பயனுக, வாழ்க்கைத் தொடர்புடைய இலக் கியங்களை ஆசிரியர்கள் அக்காலத்தில் வழக்கிலிருந்த மொழி களிலேயே இயற்ற ஆரம்பித்தனர். அக்காலந்தொடக்கம் அவ்விலக்கியங்கள் காலத்தின் போக்கிற்கிணங்க விரைவில் வளர்ந்துசெல்லத் தொடங்கின. ஐரோப்பியர் சமயப்பிரசாரஞ் செய்தற்பொருட்டுத் தமிழ்நாட்டிற்கு வந்து நூல்கள் பல வற்றை எழுதிய காலமுதலாகத் தமிழிலக்கியம் ஒரு புதுவழி யிற் செல்லத்தொடங்கிற்று, மக்கள் வாழ்க்கையை உயிராகக்
22

Page 94
(170 தமிழ் இலக்கிய வரலாறு
கொண்ட இலக்கியவளம் படைத்த ஆங்கில மொழியைப் பத்தொன்பதாம் நூற்றண்டிலே தமிழ்மக்கள் கற்கத்தொடங் கினர். அம்மொழிவாயிலாகப் பிற ஐரோப்பிய மொழிகளிலுள்ள 7 இலக்கியங்களையுங் கற்றறிந்த தமிழ்வாணர் ஐரோப்பிய இலக்கியங்களின் போக்கைத் தழுவி நூல்களை இயற்றத் தொடங்கினர். நாயக்கர் காலப்பிரிவில் வடமொழி யிலக்கி யத்தைப் பின்பற்றிச் சென்ற தமிழிலக்கியம் இக்காலத்தில் மேலைத்தேய இலக்கியமென்னும் புதுவெள்ளத்தைப் பெற்று விரைந்துசெல்லத் தொடங்கிற்று.
ஆங்கில நாகரிகத் தொடர்பினுல் தமிழ்மக்களின் வாழ்க்கை முறையிற் பல மாற்றங்களுண்டாயின. சமுதாயத்திலே சமத் துவம் சுயாதீனம் முதலிய பண்புகள் சிறப்பிடம் பெறலா யின. அதனுல், மக்களிடையே நிலவிய சாதிபேதங்கள் அருகத் தொடங்கின. இவ்வாறு பலவழிகளிலும் மக்கள் வாழ்க்கை மாற்றமுற, இலக்கியமும் அதன் போக்கிற்கிணங்க வளர்ந்து சென்றது. அதுமட்டுமன்றி, அந் நாகரிகத் தொடர்பினுல் விஞ்ஞானசாஸ்திர நூல்கள், அகராதிகள், ஒப்பிலக்கண நூல்கள், ஆராய்ச்சி நூல்கள் முதலியனவும் தோன்றின. அவற்றை விட, பத்திரிகைகளும் தோன்றி மக்களின் அறிவு வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின. இக்காலப் பிரிவில் இருந்த இலக்கிய ஆசிரியர்களுட் பலர் புதிய துறைகளிலே பல நூல் களை இயற்றியுள்ளனரெனினும், சிலர் ப ழைய இலக்கியப் போக்கினைத் தழுவிப் புராணங்களையும் பிரபந்தங்களையும் இயற்றியுள்ளனர். இனி, இக்காலப்பிரிவில் எழுந்த செய்யு ளிலக்கியத்திலும் சிறப்பாக நாடக இலக்கியமும், அதனினும் சிறப்பாக உரைநடையிலக்கியமும் வளர்ந்து வந்த வரலாற்றை நோக்குவாம்.
4. உரைநடையிலக்கியம்
செய்யுள் நடையைப்போலவே உரைநடையும் உணர்ச்சி யோடுகூடிய அனுபவங்களே வெளிப்படுத்துதற்குச் சிறந்த கருவியென்பதை நம்முன்னுேம் அறிந்திருந்தனர் என்பதை
 

ஐரோப்பியர் காலம் 71.
யும் அதனைப் பிரயோகித்துப் பல இலக்கியங்களை இயற்றினர்
ஏன்பதையும் தொல்காப்பியத்திலிருந்து அறியலாம். தொல் காப்பியர் காலந்தொடக்கம் பதினேழாம் நூற்றண்டுவரையு முள்ள காலப்பகுதியில் உரைநடையிலக்கியங்கள் காணப் படாமையால், அக்காலப் பகுதிக்குரிய தமிழிலக்கிய ரெலாறு செய்யுளிலக்கிய வரலாறகவே இருக்கின்றது. அக்காலத்தில் உரைநடையிலக்கியங்கள் தோன்றவில்லையெனினும், உரை
நடை சிறப்பாக வளர்ச்சிபெற்று வந்ததென்று அக்காலத்தில்
இலக்கண இலக்கிய நூல்களுக்கு எழுதிய உரைகளைக் கொண்டு கூறலாம். அவையாவும் கல்வியறிவுடையோர்
படித்து இன்புறுதற்கேற்ற உயரிய நடையிலே தர்க்கமுறையில்
எழுதப்பட்டவை. சேவைரையர், பரிமேலழகர் முதலியோர் கையாண்ட உரைநடையை நோக்கும்போது சிறந்த செய்யுள் நட்ையினை மட்டுமன்றிப் பாராட்டத்தகுந்த உரைநடையினை யும் தோற்றுவிக்கக்கூடிய ஆற்றலையுடையது தமிழ்மொழி யென்பது தெரிகின்றது. பதினேழாம் நூற்றண்டிற்கு முன் உரைநடையிலக்கியங்கள் தோன்றமைக்கும் அங்ங்னம் தோன் றியிருந்தனவாயின், அவை அழிந்துபோனமைக்கும் சில காரணங்கள் கூறலாம்டுஅச்சியந்திரமில்லாத அக்காலத்தில் மக்கள் நூல்களே ஏடுகளில் எழுதியே படிக்கவேண்டியிருந்தது. நூல்களின் பிரதிகளைப் பெருக்குதற்கு வசதிக்குறைவுகள் அக்காலத்திலிருந்தமையாற், பல நூல்களையும் மனனஞ்செய்து
வைத்திருக்கவேண்டிய அவசியமும் ஏற்பட்டது. ஆகவே,
சொற்சுருக்கமும் பொருட்செறிவுமுள்ள செய்யுள் நடையைக் கையாளவேண்டியிருந்ததனுலே, புலவர்கள் தம் உணர்ச்சி யனுபவங்களைச் செய்யுள்கடையிலேயே அமைத்தனர். அச்சியக் திரம் வந்த காலத்தில் உரைநடையிலக்கியங்கள் பல்கத் தொடங்கின. அதனுல், பதினெட்டாம் நூற்றண்டு தொடக் கம் உரைநடையிலக்கியம் வளர்ச்சிபெற்றது.
ஐரோப்பியர்கால ஆரம்பத்திலே பல உரைநடைநூல்களே

Page 95
 

Page 96
。?
174. தமிழ் இலக்கிய வரலாறு
வரம்பு கடவாது தர்க்கமுறைப்படி கூறுதல் இன்றியமையாத
தாகின்றது. உணர்ச்சி சம்பந்தமான அனுபவத்தைப் புல ப்
படுத்தவேண்டிய இடத்துப் பேச்சுவழக்கிலுள்ள சொற்களைப்
பிரயோகியாமல் விடல்முடியாது. தான் எழுதுவதைச் சாதாரண கல்வியறிவுடைய மக்களும் படித்து இன்புறவேண்டும் என்ற நோக்கமுடைய எழுத்தாளன் பொருத்தமான நடையில் எழுதாவிடின் அவன் நோக்கம் நிறைவேறமாட்டாது. அதனல், வீரமாமுனிவரும் அக் காலத்து வழக்கிலிருந்த சொற்கள்
பலவற்றைக் கையாண்டு உரைநடையிலக்கியங்களை எழுதி
யுள்ளனர்.
இவ்வாறு தமிழுரைநடை பதினெட்டாம் நூற்றண்டில் விருத்தியடைந்ததற்குக் காரணமாயிருந்தவற்றுட் குறிப்பிடத் தக்கவை இரண்டு: ஒன்று அச்சியந்திரம்; மற்றது சமயப் பிரசாரம், பாதிரிமாரும் கத்தோலிக்க குருமாரும் தத் தம் சமயக்கொள்கைகளை ಶ್ದಿ" பரப்பும் நோக்கமாகவே
உரைநூல்களையும் ருபங்க யும் எழுதி வெளியிட்டினர்.
அவற்றின் பிரதிகளை ஏராளமாகப்பெற்று மக்களுக்குக்
கொடுத்தற்பொருட்டுத் தரங்கம்பாடி, அம்பலக்காடு முதலிய இடங்களில் அச்சியந்திரசாலைகளை அமைத்தனர். நூல்கள், நிருபங்கள், கண்டனங்கள் என்பவற்றை ஒன்றன்பின் ஒன் ருக வெளியிட்ட கத்தோலிக்கருக்கும் லூதர் சபையாருக்கு மிடையே மூண்ட பகைமை காரணமாக எழுத்துவாதங்கள் நிகழ்ந்தன. வீரமாமுனிவர் எழுதிய வேதவிளக்கத்திற்கு மறுப் பாக லூதர் சபையார் எழுதிய திருச்சபைப்பேதகம் என்ற கண்டன நூல் வெளிவந்தது. அந் நூலிற்கு மறுப்பாகப் பேதகம் மறுத்தல், லுத்தர் இனத்தியல்பு என்ற நூல் கள் இரண்டினை வீரமாமுனிவர் வெளியிட்டனர். கிறிஸ்தவ மதப்பிரசாரங்கள் இந்துசமயத்தை ஓரளவிற்குத் தாக்கினமை யால் அவற்றிற்கு மாறக ஏசுமத நிராகரணம் முதலிய
கண்டன நூல்களைச் சைவர்கள் வெளியிட்டனர். இத்தகைய
மத கண்டன வெளியீடுகள் தமிழுரைநடை விருத்திக்குப்
 

ஐரோப்பியர் கால்ம் , 175
பெரிதும் பயன்பட்டன. காலத்திற்கேற்றவகையில் உரை கடையும் வளர்ந்து செல்வதாயிற்று.
அந்நூற்றண்டிலே தமிழுரை நடை 'ஒரு புதுவழியில் வளரத்தொடங்கியபோதும் முற்காலத்து உரையாசிரியர்கள் கையாண்ட உயரிய நடையைப் பின்பற்றிப் பல உரை நூல்களே எழுதிய உரைநூலாசிரியர்கள் சிலரும் அக்காலத் தில் இருந்தனர். அவர்களுட் சிவஞானமுனிவர் சிறப்பினராகக் குறிப்பிடத்தக்கவர் தருக்கம், சமயசாத்திரம், இலக்கியம், இலக்கணம் முதலிய பல துறைகளிலும் அந்நூற்றண்டில்/ ஒப்பாரும் மிக்காருமில்லாது விளங்கிய பெரியார் அவர் காஞ்சிப் புராணம் முதலிய பல செய்யுளிலக்கியங்களை இயற்றியதோடு இலக்கண விளக்கச் சூருவளி, சித்தாந்த மரபுகண்டனகண்டனம் முதலிய கண்டன நூல்களையும் தொல்காப்பியச் சூத்திரவிருத்தி முதலிய ஆராய்ச்சி நூல்களையும் திராவிட மாபாடியம் என்னும் சிவஞான போதப் பேருரையையும் இயற்றியுள்ளனர். தாம் எடுத்துக் கொண்ட பொருளைப் படிப் போர் மனத்திற் பதியுமாறு தர்க்கமுறையாக அமைத்துக்காட்டும் ஆற்றலும், பிறர் எளி தில் அறிந்துகொள்ள முடியா த விஷயமாயினும் அதனைத் தெளிவாக விளக்குந் திறனும், சிவஞான முனிவருக்கு உண் டென்பதை அவருரைநடையை நோக்கியறியலாம். பொருட் செறிவுடைய அவர் வாக்கியங்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்ற வாறு கம்பீரமாகச் செல்லும் பண்பினையுடையன/ அவர் இயற்றிய உரைநடைக்கு ஓர் எடுத்துக்காட்டு வருமாறு: '
' இனிக் குடத்தையும் ೨.ಶಶಿಶT வணையுங் குயவனையும் ஓரிடத்து ஒருங்கு கண்டான் அல்லுழிக் குடத்தைக்கண்டு, இதுவும் வனதற்கு ஒரு கருத்தாவையுடைத்தென அநுமித்
1 -- ܓ
துணர்வதுபோல, இவ்வுலகம் படைத்தற்கு ஒரு கருத்தாவுண் x
டென வழியளவையான் உணர்தற்கு முன் ஒருலகத்தையும் அத8ணப் படைப்பானெருகடவுளேயும் 'ஒருங்கு கண்டதின்மை யின் அவிநாபாவமறிதல் கூடாமையான், அநுமான மே

Page 97
76 தமிழ் இலக்கிய வரலாறு
ஈண்டைக்கேலாதென்ருய் ! ஈண்டு விணுவுதும், அட்டிலிற் புகையும்
தீயும் ஒருங்குடன் கண்டான் மற்றோட்டிலிற் புகை கண்டவழித் து தீயுண்டெனத் அணிதல் கூடும். மலைமேற் புகை கண்டவழி, 7
ஆண்டுத் தீயுண்டென அட்டிலிற் புகையை எடுத்துக்காட்டித் துணிதல் கூடாதாகல் வேண்டும்; என்னே? சிறிதாகிய அட்டிற் புகைக்குப் பெரிதாகிய மலையிற் புகை வேறுபாடுடைமையின் ஆண்டுத் துணிபு நிகழ்ந்தவாறு என்னை யென்பது. ஆண்டுத் துணிபு நிகழாதென்பையாயின், நீ அநுமானங் கொண்டவனல்லை. வேறுபாடுடைத்தாயினும் புகையென்னுஞ் சாதிசாமானியம்பற்றித் துணிந்தேன் என்பையாயின், ஈண்டு அஃது ஒக்கும். செயப் படுபொருளையுஞ் செயலையுஞ் செய்வோனையும் ஒருங்குடன் கண்டவன் அல்லுழிச்செயப்படு பொருளைக் கண்டவழிச் சாதி சாமானியம் பற்றி இதுவுஞ் செய்வோனையுடைத்தென்று அநு மானத்தாற் றுணிதல் பொருந்துமென்ருெழிக’
தமிழில் உரைநடை இலக்கியம் பதினெட்டாம் நூற்றண் டின் முற்பகுதியில் ஆரம்பித்தபோதும், அது விரைவாக வளரத்தொடங்கிய காலம் பத்தொன்பதாம் நூற்றண்டு என்றே கூறலாம். தமிழ்நாட்டில் ஆங்கிலக்கல்வி விருத்தியே அதற்குக் காரணமாகும். ஆங்கிலங் கற்ற ஆசிரியர் பலர் ஆங்கில உரைநடை இலக்கியங்களைத் தழுவித் தமிழில் உரைநடை யிலக்கியங்களை இயற்ற முற்பட்டனர். அதனுல் நாவல்கள், கட்டுரைகள், கதைகள், ஆராய்ச்சி நூல்கள் இன்னுேரன்ன பல உரைநடை நூல்கள் தமிழிலெழுந்தன. தாண்டவராய முதலியார், ஆறுமுகநாவலர், வேதநாயகம்பிள்ளை, வீரசாமிச் செட்டியார், ராஜமையர், சரவணப்பிள்ளை, சூரியநாராயண சாஸ்திரியார் ஆகியோர் பத்தொன்பதாம் நூற்ருண்டு 2d 60) நடையாசிரியர்களுட் சிறப்பினராகக் குறிப்பிடத்தக்கோர், அக்
காலத்தில் உரைநடை நூல்கள் பெருகவேண்டுமென்ற கருத்
துடையோர் பலர் மக்களை வசீகரிக்கத் தகுந்த இராமாயணக் கதை, பாரதக் கதை, அரிச்சந்திரன் கதை, நளன்

ஐரோப்பியர் காலம் 17ግ
கதை முதலியவற்றையெழுதி வெளியிட்டனர். தாண்டவராய முதலியார் பஞ்சதந்திரக் கதைகளையும் வீரசாமிச் செட்டி யார் விநோதரசமஞ்சரி என்ற நூலையும் எழுதினர்.
ஆங்கிலத்திலுள்ள அற்புதசம்பவக் கதை'களைத் தழுவித்
தமிழில் எழுந்த கதைநூல்களுள் வேதநாயகம்பிள்ளை எழுதிய
பிரதாபமுதலியார் சரித்திரம், சுகுணசுந்தரி என்பனவும் சூரியநாராயண சாஸ்திரியார் எழுதிய மதிவாணன் என்பதும் விசேடமாக ஈண்டுக் குறிப்பிடத்தக்கவை. ராஜமையர் எழுதிய கமலாம்பாள் சரித்திரமும், திரிகோணமலைச் சரவணப் பிள்ளை எழுதிய மோகனுங்கி என்பதும் ஆங்கிலத்திலுள்ள உலகியற் கதைகளாகிய நாவல்களைத் தழுவித் தமிழிலெழுதப் பட்ட நூல்களாகும்.
பதினெட்டாம் நூற்றண்டில் வாழ்ந்த உரைநடையாசிரி யர்களுட் சிவஞான சுவாமிகள் ஒப்புயர்வற்று விளங்கியது போலவே, பத்தொன்பதாம் நூற்றண்டில் ஆறுமுககாவலர் சிறப்புற்று விளங்கினர். தமிழிலக்கியம் வளர்ந்து வந்த வர லாற்றை நோக்கும்போது நாவலர் வாழ்ந்த காலம் தமிழுரை
நடை விருத்திக்கு உரிய காலம் என்பது தெரியவருகின்றது.
நாவலர் காலம் பொதுமக்களுக்குச் சமய உணர்ச்சியைத்
தருக்க நியாய வழிகளால் ஏற்படுத்த வேண்டுங் காலமாக
இருந்தது; ஏனெனில், கிறிஸ்து சமயப் பிரசாரகர்கள்
பெரும்பாலும் அம்மக்களையே மதமாற்றஞ் செய்யத் தொடங் கினர். ஆகவே, அம்மக்களுக்குச் சைவசமய உண்மைகளை எடுத்துக் காட்டுதலும், சமய ஆர்வத்தை உண்டாக்குதலும் அக்காலத்திலே பெரிதும் வேண்டுவனவாயிருந்தமையால், அவர்களுக்கென எழுதப்படும் நூல்களிலும் பிறவற்றிலும் அவர்களுக்கு எளிதில் புலப்படக்கூடிய ஒரு நடையை வகுத் துக்கொள்ளுதல் இன்றியமையாததாயிற்று. அதனுல், 'சிவஞானமுனிவரைப்போல் அரிய செந்தமிழ் நடையைக் கையா 'ளக் கூடிய ஆற்றல் நாவலருக்கு இருந்ததாயினும் அவர் அதைவிட்டு, பொதுமக்களுக்குரிய இலகுவான உரைநடை
23

Page 98
178 தமிழ் இலக்கிய வரலாறு
வகையொன்றைக் கடைப்பிடித்து அதைக் கையாள முற்பட்
டனர். அதனுல், உரைநடை வரலாற்றில் ஒரு முக்கிய இடம் அவருக்கு அளிக்கப்படுகிறது. அவர் எந்த எந்த வகை யிலே தமிழ் உரைநடையைப் பொதுமக்கள் இலகுவாக விளங்குதற்கு உரியதாக ஆக்கலாம் என்று ஆராய்ந்து செய்த பிரயத்தனங்கள் யாவற்றையும் அவர் எழுதிய நூல் களிலும் கண்டனங்களிலும் பிறவற்றிலும் காணலாம். அவர் எழுதிய உரைநடை நூல்களுட் குறிப்பிடத்தக்கவை பெரிய புராண வசனம், திருவிளையாடற்புராண வசனம்,
கோயிற்புராண உரை முதலியன. அவர் இயற்றிய கண்
டன நூல்கள் சுப்பிர போதம், வச்சிர தண்டம் முதலி யன. இவைதவிர, சைவசமயத்தின் சிறப்புக்களை மக்களுக்கு எடுத்துக்காட்டும் நோக்கமாக அவர் அச்சிட்டு வெளியிட்ட பிரசுரங்களும் பலவுள. அவற்றுக்கு யாழ்ப்பாணச் சமய நிலை, கல்லூர்க் கந்தசுவாமி கோயிலைப்பற்றி எழுதிய கட்
டுரை முதலியவற்றை உதாரணமாகக் கூறலாம். மேலே
குறித்தனவற்றில் அவர் கையாண்ட உரைநடையினை மூன் ருக அல்லது நான்காக வகுத்து ஆராயலாம். இவ்வாறு பல நடைவகைகளை அவர் கையாண்டபோதும் அவை எல்லா வற்றிலும் பொதுமக்களுக்குப் புலப்படக்கூடிய வகையில் உரைநடை அமையவேண்டும் என்னும் குறிக்கோள் நெகி ழாதமைந்திருக்கின்றது என்பது தெளிவாகப் புலப்படுகின் றது. உரையாசிரியர்கள் கையாண்ட பழைய உரைநடை
யிலே இலக்கணத்தோடு கூடிய கடின சந்திவிகாரங்கள் மிக
அமைந்திருத்தலைக் காணலாம். அவை பொதுமக்கள் அறிந்து
கொள்ள முடியாதவை என்னும் காரணத்தால் அவற்றை நீக்குவதோடு, இலக்கண வழு இல்லாத வகையிலே தமிழ் வாக்கியங்களை எழுதுதற்கு அவர் கைக்கொண்ட வழிவகை
களை அவருரையிற் காணலாகும். அவற்றுள் ஆங்கில மொழிக்குரிய குறியீட்டு முறைகளை விசேடமாகப் பயன்படுத் தியமை ஒன்ருகும். பெயரெச்ச வினையெச்சங்களை அடுக்கி
'' "'^ر
 
 

ஐரோப்பியர் காலம் 179
வாக்கியங்களே மிக நீட்டி எழுதுதல் நாவலர் காலத்தில் வழக்காருக இருந்தது. அத்தகைய உரைநடை வழங்கிய காலத்திலே சிறு சிறு வாக்கியங்களை அமைத்து எழுதும் முறையை நாவலர் காட்டிவைத்தது பாராட்டற்குரியதொன் ருகும். இவ்வாறு காலத்துக்கு ஏற்ற கடையொன்றை அவர் வகுத்துக்காட்டியதனுல் அவர் வசனநடை கைவந்த வல்லா ளர்' என்று பாராட்டப்பட்டனர். அவர் கையாண்ட உரை நடையின் சிறப்பிற்கு ஒர் உதாரணம் வருமாறு:-
'மதுரைத்திருநகரத்தில், வைசியர் குலத்திலே தனபதி
எனப் பெயர்கொண்ட ஒருவன் இருந்தான். அவன் மனைவி பெயர் சுசீலை. அவ்விருவரும் நெடுங்காலம் புத்திரபாக்கியம் இல்லாமையால் வருத்தமுறும் பொழுது, தனபதி தன் மரும
கனேயே தனக்குப் புத்திரனுகக் கொண்டு, மனையாள் கைக்
கொடுக்க, அவள் தொழுது வாங்கி, அன்போடு வளர்த்தாள். தனபதி தன் தங்கை வருந்திப்பெற்ற பிள்ளையைத் தனக்குத் தந்த நன்றியைப் பாராட்டாது, தன் மனைவிமேல் வைத்த ஆசை மயக்கத்தினுலே, அத்தங்கையோடு நித்தமும் தீராச் சண்டையிட்டுக்கொண்டு வந்தான். ஒருநாள் இளையாள் கோபித்து: "உனக்குப் பெருமிதம் ஏன்! நீ பிள்ளைப்பேறற்ற பாவி. நீ என்னருமைப் பிள்ளையினுலன்றே இருமைப்பயனை யும் அடைவாய்' என்ருள். தனபதி அதுகேட்டு மிகநாணி: மேலைக்காயினும் பிள்ளைப்பேற்றைத் தரவல்ல தவத்தைச் செய்யவேண்டும்' என்று துணிந்து, தன்செல்வமெல்லாவற் றையும் மருமகனுக்கே யாக்கிவிட்டு, மனையாளோடு தவஞ் செய்யப் போயினுன்.
பின்பு, தனபதி வரவு தாழ்த்தமையால், அவன் மருமக னுக்குக் கொடுத்த வீடு விளைநிலம் அடிமை ஆபரணம் திரவியம் பசுக்கண் முதலிய செல்வங்களெல்லாவற்றையும் தாயத்தார்கள் வல்வழக்குப் பேசிக் கவர்ந்துகொண்டார்கள். அதனுலே தனபதியுடைய தங்கை, தன்புதல்வனேடு தளர் வடைந்து: சார்பில்லாதவர்களெல்லாருக்கும் ஒரு களைகண்

Page 99
180
தமிழ் இலக்கிய வரலாறு
ணாயுள்ளவர் - சோமசுந்தரக்கடவுளே ; ஆதலால் அவரே எமக்குப் புகலிடம்' என்று துணிந்துகொண்டு, திருக் கோயிலையடைந்து, சோமசுந்தரக்கடவுளை வணங்கி: 'எல்லா ருக்குந் தந்தையும், தாயுமாகிய சுவாமீ! நீரே அடியேங்க ளுக்குத் தந்தையும் தாயும். அடியேனுடைய தமையன், தனக்குப் புதல்வன் இல்லாமையால், அடியேனுடைய இந்தப் புதல்வனையே தனக்குப் புதல்வனாகக்கொண்டு, தன் செல்வ மெல்லாவற்றையும் இவனுக்கே கொடுத்துவிட்டு, அன்றே போயினான். பின்பு தாயத்தார்கள் அவைகளெல்லாவற்றையும் வலியினாற் கவர்ந்துகொண்டார்கள். நான் ஒருத்தி; ஒருத் திக்கு இவ்வொரு மகனேயுள்ள வன். இவனும் அறிவிலாச் சிறுவன். அடியேங்களுக்கு வேறு துணையில்லை. அருட் பெருங்கடலே! எங்கும் நிறைந்திருக்கின்ற நீர் இவையெல்லாம் அறிவீரோ' என்று விண்ணப்பஞ் செய்து, பூமியில் விழுந்து. சிவபெருமானது திருவருளினாலே சிறிது நித்திரையடைந்தாள்.'
ஆறுமுகநாவலர் காலத்தவரான சபாபதி நாவலர் தமது திராவிடப்பிரகாசிகை என்ற நூலில் உரையாசிரியர்கள து உரைநடைப் போக்கைத் தழுவி வாக்கியங்களை அமைத் துள்ளனர். திராவிடப் பிரகாசிகையில் எடுத்தாளப்படும் விஷ யங்கள் கற்றோரே படித்தின்புறுதற்குரியன. தமிழில் இலக்கி யம், இலக்கணம், சாத்திரம் முதலியன சம்பந்தமாக நிலவிய பிழையான கொள்கைகள் பலவற்றைக் கண்டிக்க எழுந்த நூலாதலின், அது பழைய உரைநடையைத் தழுவி எழுதப் பட்டதெனலாம். சேனாவரையரையும் சிவஞான முனி வரையும் போலவே தர்க்கமுறையாக வசனங்கள் எழுதுவதிற் கை தேர்ந்தவரென்பதை இவர் உரைநடையை நோக்கியறியலாம். சூரியநாராயண சாஸ்திரியார் முதலிய தமிழ்ப் பெரியார் சிலர் சபாபதிநாவலரைப் போலவே பழைய உரைநடையைத் தழுவி நூல்களை எழுத ஆரம்பித்தபோதும், அத்தகைய உரைநடை யால் வரும்பயன் பெரிதாகாதென உணர்ந்து, நாளடைவில்

ஐரோப்பியர் காலம் 181
இலகுவான சொற்களைப் பிரயோகித்து ஒரு புதிய நடையினை எழுத முற்பட்டனர். அதனுல், அவர்களும் சிறந்த உரைநடை யாசிரியர்கள் என்று பாராட்டப்படுகின்றனர். காவலருடைய காலத்திலும் அதற்குப் பின்னும் இருந்த உரைநடையாளர் களுட் சிலர் வழக்கொழிந்த சொற்களைப் பெய்து பழைய உரைநடையைப் பின்பற்றி உணர்ச்சியும் உயிருமில்லாத வாக்கியங்களை ஒன்றன்பின் ஒன்ருகக் கோத்துவைத்ததனல் அவர்களின் உரைநடை நூல்கள் போற்றுவாரின்றிக் கிடக் கின்றன. - ' பத்தொன்பதாம் நூற்றண்டிலே தமிழுரைநடை வளர்ச் சிக்கு மேற்கூறிய உரைநூல்களேயன்றிப் பத்திரிகைகளும் உதவிபுரிந்தன. இப்பத்திரிகைகளின் உற்பத்திக்கு மதப்பிர சாரமே காரணமென்று கூறலாம். மக்களுக்குக் கல்வியறி வூட்டி, அதுவாயிலாகச் சமயக் கருத்துக்களைப் பரப்ப எண் ணிய கிறிஸ்தவ சமயப் பிரசாரகர்கள் அந்நூற்றண்டில் மாதாந்தப் பத்திரிகைகளை வெளியிடத் தொடங்கினர். அவற் றுட் குறிப்பிடத்தக்கவை தமிழ்ப் பத்திரிகை, சுவிசேஷரிைன் பிரபல விளக்கம், நற்போதகம், சிறுபிள்ளை நேச தோழன், பாலிய நேசன், தேசோபகாரி என்பன. அவற்றைக்கண்ட இந்துக்கள் தம் சமயத்தைத் திருந்திய முறையில் வளர்த்தற்பொருட்டு விவேகவிளக்கம், இந்து சாதனம் முதலிய பத்திரிகைகளை வெளியிட்டனர். மக்களுக் குக் கல்வியறிவூட்டும் நோக்கமாகவே சமயச்சார்பில்லாத அமிர்தவசனி முதலிய பத்திரிகைகளும் வெளிவந்தன.
5. செய்யுள் இலக்கியம்
இக்காலப் பகுதியிலெழுந்த செய்யுளிலக்கியங்களுட் சம பச்சார்பில்லாதன மிகச்சிலவென்றே கூறலாம். தத்தம் மதங் ' களை மக்கள் போற்றி வளர்த்தற்கு வேண்டிய ஊக்கமொன் றைத்தவிர, புலவர்களின் உணர்ச்சியைத் தூண்டவல்ல வேறு சிறப்புடைப் பண்புகள் சமூகவாழ்க்கையிற் காணப்படாமையே

Page 100
182 தமிழ் இலக்கிய வரலாறு
அதற்குக் காரணமாகும். அவ்வாறு அவை காணப்படாமைக்கு " நாடாட்சி பிறர் கைப்பட்டிருந்தமையை ஒரு காரணமாகக் . கூறலாம். கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய சமயங்கள் தமிழ்' நாட்டிற்குப் புதியனவாய் வந்தமையால், அச்சமயங்களைச் சார்ந்தோர் விழிப்பாயிருந்து அவற்றைப் பேணி வளர்க்க - வேண்டியிருந்தது. அவற்றின் வளர்ச்சி இந்துசமயத்தின் வளர்ச்சிக்குத் தடைசெய்யுமென்பதை உணர்ந்த இந்துக்கள் தம் சமயத்தைப் பேணும் நோக்கத்துடன் சமயச்சார்பான இலக்கியங்களையே எழுதினர். அதனுல், இக்காலப்பிரிவில் வாழ்ந்த புலவர்கள் சமய உண்மைகளை விளக்கும் புராணங் கள் பிரபந்தங்கள் என்பனவற்றை இயற்றினர். முந்திய காலப் பகுதிகளிலிருந்து சமயத்தொண்டு புரிந்த பெரியார்களையும் அந்நூல்களில் ஆங்காங்கு பாராட்டினர். இவர்கள் இயற்றிய இலக்கியங்களை நோக்கும்போது, காயக்கர்காலத்துப் புலவர் கள் போற்றிய இலக்கியமரபினையே பெரும்பாலும் போற்றின ரென்பது தெரிகின்றது. அதுமட்டுமன்றி, அவர் கையாண்ட யாப்பு வகைகளையே தாமும் கையாண்டு சிந்து, கண்ணி, வண்ணம் முதலிய இசைப்பா வகைகளையும் விருத்திசெய்த னர். முற்காலத்தில் அருகிக் காணப்பட்ட குறவஞ்சி நாடகம், காதல், பள்ளு முதலிய பிரபந்தவகைகள் இக்காலப்பிரிவிற் சிறப்பாகப் போற்றப்பட்டனவெனலாம். அவை தோன்றி வளர்ந்த வரலாற்றை ஆராயப்புகுவார்க்கு இக்காலப்பகுதியில் எழுந்த செய்யுளிலக்கியம் பெரும் பயனளிக்குமென்றே யாம் கூறல்வேண்டும்.
இந்து சமயத்தைச் சார்ந்த இக்காலப் புலவர்களுள் தாயுமானசுவாமிகள், இராமலிங்க அடிகள், சிவஞானமுனிவர், கச்சியப்பமுனிவர், மீனுட்சி சுந்தரம்பிள்ளை, திரிகூடராசப்ப கவிராயர், அருணுசல கவிராயர், கோபாலகிருஷ்ண பாரதி யார், அண்ணுமலை ரெட்டியார் என்பவர்கள் சிறந்தவர்களாகக் குறிப்பிடத்தக்கவர்கள். தாம் பெற்ற பத்திஞான அனுபவங் களை உணர்ச்சிமிக்க பாக்களில் அமைத்து உதவிய தாயுமான

ஐரோப்பியர் காலம் 183
சுவாமிகளும் இராமலிங்க அடிகளும் உயர்ந்த வரிசையில் வைத்து மதிக்கப்படும் புலவர்கள். நாயன்மார்களுக்கும் ஆழ் 'வார்களுக்கும் பின் அனுபவவாயிலாகப் பெற்ற சமய உண்மை களைத் தோத்திர உருவத்தில் அருளிய பெரியார்களுள் சிறந்தவர்கள் என்றே இவர்களைக் கூறலாம்.
வேதாந்த சித்தாந்த சமரச நிலையைப் போதித்த தாயுமான சுவாமிகள் உள்ளம் உருகிப் பாடிய பாக்கள் யாவும் கவிச் சுவையும் உணர்ச்சிப் பெருக்கும் உடையவை. அவருடைய கவித்திறனை மேல்வரும் செய்யுட்கள் சிறப்பாகப் புலப்படுத்து
கேரேதா னிரவுபகல் கோடா வண்ணம்
நித்தம்வர வுங்களையிங் நிலைக்கே வைத்தார் ஆரேயங் கவர்பெருமை யென்னே' என்பேன்; 'அடிக்கின்ற காற்றே! நீ யாராலே தான் பேராதே சுழல்கின்ருய்?' என்பேன்; ‘வந்து
பெய்கின்ற முகில்காள்! எம்பெருமா னும்போல் தாராள மாக்கருணை பொழியச் செய்யுஞ்
சாதகமென் னே? கருதிச்சாற்றும்" என்பேன்.
*கருதரிய விண்ணே! நீயெங்கு மாகிக்
கலந்தனையே; உன்முடிவின் காட்சி யாக வருபொருளெப் படியிருக்கும்? சொல்லாய்' என்பேன்; *மண்ணே உன் முடிவிலெது வயங்கு மாங்கே துரியவறி வுடைச்சேட னிற்றி னுண்மை
சொல்லானே? சொல்' என்பேன்; "சுருதியே மீ ஒருவரைப்போ லனைவருக்கு முண்மை யாமுன்
னுரையன்ருே? உன்முடிவை யுரை! நீ என்பேன்.
"உரையிறந்து, பெருமைபெற்றுத், கிரைக்கை நீட்டி யொலிக்கின்ற கடலே! இவ்வுலகஞ் சூழக்
கரையுமின்றி யுன்னேவைத்தா ரியாரே?’ என்பேன்; 'கானகத்திற் பைங்கிளிகாள் கமல மேவும்

Page 101
184 தமிழ் இலக்கிய வால்ாறு
வரிசிறைவண் டினங்காளோ திமங்கா டூது
மார்க்கமன்ருே? நீங்களிது வரையிலேயும் பெரியபரி பூரணமாம் பொருளைக் கண்டு
பேசியதுண் டோ? ஒருகாற் பேசும் என்பேன்.
தர்க்கம், தத்துவசாஸ்திரம், இலக்கண, இலக்கியம் என்பவற்றில் மட்டுமன்றி, கற்பனைத்திறன், கவிதாசக்தி என்பவற்றிலும் சிவஞானமுனிவர் சிறந்தவரென்பதற்கு அவ ரியற்றிய அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், காஞ்சிப் புராணம் முதலிய செய்யுளிலக்கியங்களே சான்றகும். கல்வி யறிவும் புலமையும் மிக்க அவர் மானுக்கர் பன்னிருவரும் பல நூல்களை இயற்றியுள்ளனர். அவர்களுட் கச்சியப்ப முனிவர் திருத்தணிகைப் புராணம் திருவானைக்காப் புராணம் முதலிய புராணங்களையும் கச்சியானந்தருத்ரேசர் வண்டுவிடுதூது முதலிய பல பிரபந்தங்களையும் இயற்றினர். பத்தொன்பதாம் நூற்றண்டுப் புலவர்களுட் சிறந்தவராகப் பாராட்டப்படுபவர் மீனுட்சிசுந்தரம்பிள்ளையென்றே கூறலாம்.
அவர் பதினுறு தலபுராணமும், பத்துப் பிள்ளைத்தமிழ்ப் பிர
பந்தமும், பதினுெரு அந்தாதியும், மாலை லீலை கோவை முதலிய பிற நூல்களும் பாடினரென்பது அறியக்கிடக்கின்றது. குசேலோபாக்கியானம் என்ற நூலையும் அவர் பாடின ரென்பர். மகாம்கோபாத்தியாயர் டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர், மாயூரம் வேதநாயகம்பிள்ளை முதலியோர் அவர் மானுக்கராவர். கல்வியறிவில்லா மக்களும் படித்துச் சுவைக் கக்கூடியதாக இசையுடன் கூடிய பாக்களைக்கொண்டு நாடக உருவத்திலெழுந்த நூல்கள் பல. அவற்றுள் திரிகூடராசப்ப கவிராயர் இயற்றிய திருக்குற்ருலக்குறவஞ்சி, அருணுசல கவிராயர் இயற்றிய இராம நாடகம், கோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றிய நந்தனுர் சரித்திரக் கீர்த்தனை என் பனவும் முக்கூடற்பள்ளு என்ற பிரபந்தமும் சிறந்தவை யெனக் கூறலாம். " ו a ,
 

ஐரோப்பியர் காலம் 185
இனி, கிறிஸ்தவ சமயப் புலவர்கள் இயற்றிய செய்யு
விலக்கியங்களை நோக்குவாம். அவர்களுள் வீரமாமுனிவர், வேதநாயகம்பிள்ளை, கிருஷ்ண பிள்ளை ஆகிய மூவரும்
தமிழிலக்கிய வரலாற்று நூல்களில் சிறப்பினராகப் பாராட்டப் படுகின்றனர். வீரமாமுனிவர் உரைநடை நூல்கள் பலவற்றை இயற்றியதுமட்டுமன்றி, பல செய்யுளிலக்கியங்களையும் இயற்றி னர். அவற்றுட் சிறந்து விளங்குவது தேம்பாவணி யென்னும் காவியம். வாடாத மாலையாகிய அக்காவியம் யேசுநாதரின் தந்தை சூசையப்பரைத் தலைவராகக் கொண்டுள்ளது. அதன் கண் யேசுநாதர் பிறப்பு, வரலாறு, அவர் நிறுவிய சமயத்தின் பெருமை, கத்தோலிக்க மதக் கருத்துக்கள் இன்னுேரன்ன பலவும் கூறப்பட்டுள்ளன. சிந்தாமணி கம்பராமாயணம் முதலிய பெருங்காப்பியங்களைத் தழுவித் தமிழ் மரபு பிறழாது இயற்றப்பட்ட அக்காவியத்தின்கண் தாந்தே தாசோ முதலிய மேனுட்டுப் பெரும் புலவர்களின் கருத்துக்களும், முன் தமிழிலில்லாத புது அணிகள் சிலவும் வந்துள்ளன. அதன் சிறப்பைப் புலவரொருவர் 'தேம்பாவணியினைத் தொடி னும் தமிழ் மணங்கமழுமென் கரமே என்று பாராட்டியுள்ளனர்.
வீரமாமுனிவர் இயறறிய ஏனைய செய்யுளிலக்கியங்கள்,
திருக்காவலூர்க் கலம்பகம், கித்தேரியம்மாள் அம் மாஐன, அடைக்கலநாயகி வெண்பா, அன்னையழுங் கல் அந்தாதி என்பன. மேல்வரும் செய்யுட்கள் தேம்பாவணி uിസ്ത്വങ്ങtഞഖ : --
கடவுள் வாழ்த்து
'கார்த்திரள் மறையாக் கடலினுண் மூழ்காக்"
கடையிலா தொளிர்பரஞ் சுடரே 。即
நீர்த்திரள் சுருட்டி மாறலை யின்றி
நிலைபெறுஞ் செல்வநற் கடலே
போர்த்திரள் பொருதக் கதுவிடா வரணே
பூவனந் தாங்கிய பொறையே S S S S S S S S
குர்த்திரள் பயக்கு நோய்த்திரள் துடைத்துத்
துகடுடைத் துயிர்தரு மமுதே
24

Page 102
186
தமிழ் இலக்கிய வரலாறு தேறுந் தயையின் முனிவோய் நீ
சினத்திற் கருள்செய் கனிவோய் நீ கூறுங் கலையற் றுணர்வோய் நீ
உறுந் தொனியற் றுரைப்போய் நீ மாறும் பொருள்யா விலுநின் றே
மாறா நிலைகொள் மரபோய் நீ யீறுந் தவிர்ந்துன் புகழ்க் கடலாழ்ந்
தெனக்கே கரைகாட் டருளாயோ. ஒளிநாக் கொடுவான் சுடர் புகழ
-- வெளிநாக் கொடுபன் மணிபுகழக் களிநாக் கொடுபற் புள்புகழக்
கமழ்நாக் கொடுகா மலர்புகழத் தெளிகாக் கொடு நீர்ப் புனல் புகழத்
தினமே புகழப் படுவோய்நீ அளிநாக் கொடுநா னுனைப்புகழ்
வழியா மூகை யுணர்த்தாயோ.'' பிரதாப முதலியார் சரித்திரம் முதலிய உரைநடையிலக் கியங்களை இயற்றிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்பார் சர்வசமய சமரசக்கீர்த்தனை, நீதிநூல், பெண்புத்தி மாலை முதலிய செய்யுள் நூல்களையும் தனிப்பாடல்கள் பல் வற்றையும் பாடியுள்ளனர். அவர் கத்தோலிக்க மதத்தினரா யிருந்தபோதும் சமரச மனப்பான்மை யுடையவரென்று அவர் பாக்களால் அறியலாம். வைணவராகப் பிறந்து முப்பது ஆண்டுகளுக்குப்பின் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவிய கிருஷ்ண பிள்ளை என்பார் இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மநோகரம் என்னும் இரு செய்யுளிலக்கியங்களை இயற்றி யுள்ளனர். அவற்றுள் இரட்சணிய யாத்திரிகம் - ஆங்கில மொழியில் ஜோன் பன்யன்" ஆசிரியர் எழுதிய 'பில்கிறிம்ஸ் புறோகிறஸ்' என்னும் நூலைத் தழுவி விருத்தப்பாவால்
* John Bunyan 1 Pilgrim's Progress

ஐரோப்பியர் கால்ம் 187
பாடப்பட்ட ஒரு காவியமாகும். யேசுநாதர்மீது அவர் பாடிய பத்திப் பாடல்கள் இரட்சணிய மகோகரம் என்னும் நூலின்
கண் உள்ளன. அவற்றுட்பல நாலாயிர திவ்விய பிரபந்தத்தி
லுள்ள பாக்களின் போக்கைத் தழுவியுள்ளன.
இனி, இஸ்லாமியசமயத்தால் தமிழிலக்கியம் அடைந்த சிறப்பினை நோக்குவாம். இஸ்லாமிய சமயத்தோர் பிறமத கண்டனம் செய்ததாகவோ, பிறரைத் தம்வசப்படுத்தச் சமயப் பிரசாரஞ் செய்ததாகவோ அவர்கள் இயற்றிய நூல்களி லிருந்து நாம் அறியக்கூடியதாயில்லை. அவரனவரும் தம் சமயத்தைச் சீரியமுறையில் பேணவேண்டு மென்ற ஒரே கோக்கத்தை யுடையோராய் வாழ்ந்துவந்தனர். பதினேழாம் நூற்றண்டில் வாழ்ந்த உமறுப்புலவர் இயற்றிய சீருப் புராணம் என்ற காவியமே இஸ்லாமிய இலக்கியங்களுள் முதன்மைவாய்ந்தது. சீவிய சரித்திரம், வரலாறு என்னும் பொருள்களையுடைய சீரத் என்னும் அரபிச்சொல் திரிந்து சீறுவாயிற்று என்பர். நபிகள் திலகத்தின் வரலாற்றைக் கூறும் அந்நூல் காப்பியாகலங்கனிந்து விளங்குவதொன்றகும். கங்கை நாடு கம்பர் காவியத்தில் காவிரிநாடானதுபோல, அராபியப் பாலைவனம் சீறப்புராணத்தில் கெல்விளையும் தண் புனல் நாடாகத் திகழ்கின்றது. அழகிய உவமையுருவகங்களும் கற் பனைச் சிறப்புக்களும் அக்காவியத்தின்கண் மலிந்துகிடக் கின்றன. புலவரின் கற்பனைத்திறனுக்கு எடுத்துக்காட்டாக ஒரு செய்யுளைத் தருவாம்: -
தருங்கொண்ட நயினர்கீர்த்தி
ஜெகமெலாம் பரந்துமிஞ்சி நெருங்கியே விசும்பிலண்ட
முகடுற நிறைந்தவே போல் இருங்கண வெள்ளைமேக
மிரைப்பசுங் கடல்வீழ்ந் துண்டோர் கருங்கட லெழுந்த தென்னக்
ககனிடைச் செறிந்து மீண்ட,

Page 103
188 தமிழ் இலக்கிய வரலாறு
முதுமொழிமாலே யென்ற Lളി: ) ഞഖ நிரம்பிய ,יו
பிரபந்தமொன்றையும் அவர் பாடியுள்ளார். முகம்மதுநபியின்
பாதாரவிந்தத்தைக் காண்பதற்கு அவருக்கிருந்த ஆசையை
அது நன்கு புலப்படுத்துகின்றது. முகையதின் புராணம் இயற்றிய வண்ணக் களஞ்சியப் புலவர், மிதிறு சாநா என்ற நூலைப் பாடிய மதாறுசாகிபு புலவர், இபுனி ஆண்டான் படைப்போர் என்னும் நூலியற்றிய அலியார் புலவர் முதலியோர் பதினெட்டாம் நூற்றண்டில் வாழ்ந்த புலவர்கள். சீருவண்ண்ம், நாகை யந்தாதி, புலவராற்றுப்படை முதலிய பிரபந்தங்களைப் பாடிய பல புலவர்கள் பத்தொன் பதாம் நூற்றண்டில் வாழ்ந்தனர். இஸ்லாமியப் புலவர் களுள் குணங்குடி மஸ்தான் சாகிப்புப் பெரியார் சிறந்தவ ராகப் பாராட்டத்தக்கவர். பிற மதத்தினரும் போற்றும்
அவர் திருப்பாடல்களிலிருந்து அவர் ஒரு சிறந்த ஞானி
யென்பதை அறியலாம். அவர் பாடல்கள் யாவும் தாயுமான சுவாமிகளின் பாடல்களைப் பெரிதும் ஒத்திருக்கின்றன.
கழிநெடிலடி ஆசிரியவிருத்தப் பாவால் தாயுமான சுவாமிகள்
தம் மெளன குருவைப் பாராட்டியதுபோல, மஸ்தான் சாகிப் புப் பெரியாரும் குணங்குடியில் வாழ்ந்த தம் குருவாகிய முகையித்தீனைப் பலவாறு பாராட்டியுள்ளனர்.
பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றண்டுகளில் பல புலவர்களும் ஆராய்ச்சியாளரும் யாழ்ப்பாணத்திலிருந்து
தமிழை வளர்த்துவந்தனர். அவர்களுள் சின்னத்தம்பிப் புலவர்,
கனகசபைப் புலவர், சேனுதிராய முதலியார், மயில்வாகனப் புலவர், உடுப்பிட்டி சிவசம்புப் புலவர் முதலியோர் பல சிறந்த பிரபந்தங்களையும் தனிச் செய்யுட்களையும் பாடியுள்ளனர். இவர்களுள் உடுப்பிட்டி சிவசம்புப் புலவரே ஈழநாட்டுப் புலவர்களுள் பெருந்தொகையான பிரபந்தங்களைப் பாடியவர்.
இவர் ஏறக்குறைய அறுபது பிரபந்தங்கள்வரை பாடியுள்ள னர். இவர் பாடிய தனிச்செய்யுட்களும் பல. இவர் பிரபந்
தங்களுட் சிலவே சமயச்சார்புபற்றியன ஏனையவை தமிழ்
*ܗܝ

ஐரோப்பியர் காலம் 89
நாட்டிற் பற்பல இடங்களிலுமுள்ள தமிழ்ப் புலவர்கள்மீது பாடப்பட்டவை. சுவைமிக்க இவர் பாடல்கள் படிப்போர்க்குப் பெரிதும் இன்பந்தரவல்லன. ஆறுமுககாவலர் சிவபதமடைந்த போது இவர் பாடிய பாக்களுள் பின்வரும் செய்யுளொன்றே இவரது புலமைக்கு எடுத்துக்காட்டாயமையும்:
ஆரூர னில்லைப் புகலியர்கோ
னில்லை யப்ப னில்லைச் சீரூரு மாணிக்க வாசக
னில்லைத் திசை யளந்த பேரூரு மாறுமுக நாவல
னில்?லப்பின் ஒரிங்கியார் நீரூரும் வேணியன் மார்க்கத்தைப்
போதிக்கும் நீர்மையரே.
மறைசை அந்தாதி, கரவைவேலன் கோவை, பருளை விநாயகர் பள்ளு முதலிய பிரபந்தங்களின் ஆசிரிய ராகிய சின்னத்தம்பிப் புலவர் இயற்கையாகவே கவிபாடும் ஆற்றல் வாய்ந்தவர். இளமையிலேயே கவிபாடும் வன்மை இவருக்கு இருந்ததென்பதற்கு இவர் பாடிய தனிச்செய்யுட் களே சான்றகும். இலக்கண இலக்கிய அறிவு, சிறந்த உரை நடை எழுதும் ஆற்றல், பேச்சுவன்மை, புராணங்களுக்கு உரைகூறுந்திறன் ஆகிய இவற்றில் சிறந்துவிளங்கிய ஆறுமுக நாவலர், சபாபதிநாவலர், அம்பலவானகாவலர், பொன்னம் பலபிள்ளை, சுன்னுகம் குமாரசுவாமிப்புலவர், கதிரவேற்பிள்ளை முதலியோர் இக்காலத் தமிழிலக்கிய வரலாற்றில் சிறப்பிடம் பெற்று விளங்குபவர். இவர்களுட் சிலரைப்பற்றி மேலே குறித்தாம். வட்டுக்கோட்டை செமினெரியில் ஆங்கிலமும் அருந்தமிழும் ஒருங்கு கற்று ஆராய்ச்சிகள் பலவற்றைச் செய்து தமிழை வளர்த்த பெரியார்களுள் சி. வை. தாமோதரம் பிள்ளை, கருேல் விசுவநாதபிள்ளை, வைமன் கதிரைவேற் பிள்ளை முதலியோர் சிறப்பினராகக் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கில மொழியிலுள்ள தர்க்கம், கணிதம் முதலிய சாத்திரங்

Page 104
190
தமிழ் இலக்கிய வரலாறு
களையும் பிறவற்றையும் ஆராய்ந்து, நூல்கள் சிலவற்றைத் தமிழில் இயற்றித்தந்த பெருமை இவர்களுக்கே உரியது. 6. நாடக இலக்கியம்
பண்டைக்காலத்தில் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ் இலக்கியங்களும் வளர்ந்துவந்தன வென்பது நூல் களாலும் உரைகளாலும் அறியக்கிடக்கின்றது. அக்காலத்தில் கதைதழுவிய கூத்துக்கள் முதலியனவற்றை மக்கள் பெரிதும் போற்றி வந்தனரென்பது சிலப்பதிகாரத்தை நோக்குமிடத்துப் புலனாகும். இந்நூற்குப் பேருரை வகுத்த அடியார்க்குநல்லார் "நாடகத் தமிழ் நூலாகிய பரதம் அகத்தியம் முதலாவுள்ள தொன்னூல்களும் இறந்தன'' என்று கூறியுள் ளார். நாடகத் தமிழின் இலக்கணத்தைக் கூறும் இசைநுணுக்கம், இந்திர காளியம், பஞ்சமரபு, பரதசேனாபதீயம், மதிவாணர் நாடகத்தமிழ்நூல் முதலிய நூல்களை அவர் அந்நூற்கு உரைகாண்பதற்குத் துணையாகக் கொண்டிருக்கின்றார். அவை யாவும் இக்காலத்திற் கிடைத்தில. இதனால், பண்டைக் காலத்தில் சிறப்புற்று விளங்கிய நாடகத் தமிழிலக்கியத்தை நாளடைவில் மக்கள் கைவிட்டுவந்தனர் என்றே கூறலாம். ஆடல் பாடல்கள் மக்களின் மனத்தைக் காமவழிப்படுத்தும் என்ற கொள்கையைப் போற்றிய சமணரும் சாக்கியரும் தமிழ்நாட்டில் செய்துவந்த சமயப் பிரசாரத்தினாற்போலும் இடைக்காலத்திலிருந்த தமிழ்மக்கள் நாடகத்தமிழைக் கை விட்டனர். இசையும் நாடகமும் காமத்தை விளைக்குமெனக் கூறினர் நச்சினார்க்கினியரும். சோழப்பெருமன்னர் ஆட்சிக் காலத்தில் இராசராசேஸ்வர நாடகம் முதலியவற்றை மக்கள் கோவில்களில் நடித்துவந்தனர் என்று சாசனங்கள் குறிக்கின்றன. அந்நாடகங்களும் இக்காலத்திற் கிடைத்தில.
நாயக்கமன்னர் காலத்தில் எழுந்த இராம நாடகம், குற்றாலக் குறவஞ்சி, முக்கூடற்பள்ளு முதலிய நூல் களையும் பதினெட்டாம் நூற்றாண்டில் எழுந்த நந்தனார் சரித்திரக் கீர்த்தனை முதலிய நூல்களையும் நோக்குமிடத்து,

ஐரோப்பியர் காலம்
191
நாயக்கமன்னர் காலம் தொடக்கம் மக்களால் நாடகத்தமிழ் போற்றப்பட்டுவந்துள்ளது எனக் கூறலாம். அவைமட்டுமன்றி, அரிச்சந்திர நாடகம், கிருஷ்ணன் தூது நாடகம், மார்க்கண்டேயர் நாடகம், சிறுத்தொண்டர் நாடகம், அல்லி நாடகம், பவளக்கொடி நாடகம், கோவல நாடகம், காத்தவராயன் நாடகம், இராவணசம்மார நாடகம், ஆதி நாடகம், கண்டி நாடகம், பூதத்தம்பி நாடகம் முதலிய பல நாடகங்கள் தமிழில் எழுந்தன. அவை தமிழ்முறைதழுவி நடிக்கப்பட்டுவருகின்றன.
ஆங்கிலக் கல்வி நாட்டிற் பயிலத்தொடங்கியதன் பின், ஆசிரியர் பலர் ஆங்கிலநாடக இலக்கியமுறையினைத் தழுவித் தமிழில் நாடகங்களை இயற்றப் புகுந்தனர். அவர்களுள் பேராசிரியர் சுந்தரம்பிள்ளையும் சூரியநாராயண சாஸ்திரியாரும் சிறந்தவர்களாகக் குறிப்பிடத்தக்கவர்கள். சுந்தரம் பிள் ளை எழுதிய மனோன்மணீயம் என்னும் நாடகம் அகவற்பாவாற் பாடப்பட்டு ஐந்து அங்கங்களைக்கொண்டு விளங்குகின்றது. அது நாடகவுருவத்தில் அமைந்திருந்தபோதும் காவியத்தின் போக்கைத் தழுவியுள்ளது. அரங்கமேடையில் நடிப்பதற்காக அது இயற்றப்படவில்லை யென்பதை அந்நூலின் முகவுரை யில் ஆசிரியர் தாமே குறித்துள்ளனர். தெவிட்டாத இன்பம் பயக்கும் தீந்தமிழ்ச் செய்யுட்கள் பலவற்றைக் கொண்டுள்ளது இந்நாடகவிலக்கியம், ஆசிரியர் தமிழ்த் தெய்வ வணக்கம் கூறுமிடத்துப் பாடிய செய்யுளொன்றை உதாரணமாகத் தருவாம்:-
பல்லுயிரும் பலவுலகும்
படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருண்முன்
னிருந்தபடி யிருப்பதுபோம் கன்னடமும் களிதெலுங்குங்'
கவின்மலையா ளமுந்துளுவும்
'க்குந் தீந்துமிடம் குறித்தும் த

Page 105
92 தமிழ் இலக்கிய வரலாறு
உன்னுதரத் துதித்தெழுந்தே
யொன்று பல வாயிடினும்
ஆரியம்போ லுலகவழக்
கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து
செயன்மறந்து வாழ்த்துதுமே,
கலாவதி, ரூபாவதி, மானவிஜயம் என்னும் நாடகங்களைச் சூரியநாராயண சாஸ்திரியார் இயற்றியுள்ளனர். இவற்றுள் மான விஜயம் அகவற்பாவாலமைந்துள்ளது; எனி னும், சிறுபான்மை வெண்பாவும் விருத்தப்பாவும் விரவி வந்துள்ளன. இவர்கள் காட்டிய வழியைப் பின்பற்றி இருபு தாம் நூற்றண்டில் பல நாடகங்கள் இயற்றப்பட்டுள்ளன.
nummum
( λ. " T R ( ) CN, )
C)
 
 

இருபதாம் நூற்ருண்டு
இதுகாறும் இருபதாம் நூற்றண்டிற்கு முன்னுள்ள தமி ழிலக்கிய வரலாற்றினை ஆறு காலப்பிரிவுகளாக வகுத்து ஆறு அதிகாரங்களிற் சுருக்கமாகக் கூறினுேம். இனி, இந்நூற் ருண்டுத் தமிழிலக்கியத்தின் போக்கினை நோக்குவாம்.
தமிழிலக்கியம் பல வழிகளிலும் புத்துயிர்பெற்று வளர்ச்சி யுறும் காலமாக இந்நூற்றண்டைக் கொள்ளலாம். 19-ம் நூற்றண்டுத் தமிழிலக்கியம் வரட்சிபொருந்தியதாகக் காணப் பட, இக்காலத்து இலக்கியம் வளமுள்ளதாக இருத்தற்குப் பல காரணங்கள் கூறலாம். தமிழ் நாட்டில் மட்டுமன்றி, இந்திய நாடுகள் அனைத்திலும் மக்களுடைய வாழ்க்கைப் பண்பாடும் மொழி முதலியனவும் முன்னேறுதற்கான சில அறிகுறிகள் இந்நூற்றண்டின் ஆரம்பத்திலேயே தோன்றலாயின. இத் தகைய விழிப்புணர்ச்சிக்கு ஆங்கிலக் கல்வி விருத்தியும் ஐரோப்பிய நாகரிகத் தொடர்பும் முக்கிய காரணங்களாகும். தமிழின் தொன்மையையும் பண்டைக்காலத் தமிழிலக்கியத்தின் சிறப்பையும் உணர்ந்த தமிழறிஞர்கள் சிலர் பழைய இலக்கண இலக்கிய நூல்களை அச்சிட்டு வெளிப்படுத்தியதன் பயனுகத் தமிழ் மக்கள் தம்மொழியின் பண்டைக்கால இலக்கிய வளத் தினையும் அக்காலத் தமிழ் நாட்டின் சீரியநிலை முதலியன வற்றையும் கண்டு, தம்மொழியை மேன் மேலும் வளரச் செய்யும் முயற்சியில் ஈடுபடலாயினர். தமிழ் இலக்கியத்தின் பண்டை நிலையினைப் பாராட்டுதல் மட்டும் தமிழைப் போற் றுவதாகாது என்பதை உணர்ந்த ஆசிரியர்கள் பலர் பிறகாட்டு மக்கள் தங்கள் இலக்கியத்தை வளம்படுத்துதல்போலத் தாமும் தமிழை வளம்படுத்துதல் வேண்டும் எனக்கொண்டு பல வழி
களிலும் உழைக்கலாயினர். அதனுல், தமிழிலக்கியம் இந்
நூற்றண்டில் விரைவாக வளரத் தொடங்கிற்று. ஆங்கிலக்
கல்வி காரணமாகத் தமிழ் மக்களுடைய'உள்ளம் விரிவடையத்
தொடங்கவே, புதிய கருத்துக்களும் கொள்கைகளும் அவர்
25

Page 106
194 தமிழ் இலக்கிய வரலாறு
களுடைய உணர்ச்சியைத் தூண்டத்தொடங்கின; அதன்
பயனுகப் புதுமையும் ஜீவகளையும் பொருந்திய இலக்கிய மரபு இந்நூற்றண்டில் ஆரம்பமாயிற்று. இந்நூற்றண்டு நாம் வாழும்
காலப்பகுதியாதலின், அதன் கண் வெளிவந்துள்ள இலக்கியத் தின் தராதரத்தை உள்ளவாறு மட்டிட முடியாதாயினும், இக் காலத்து இலக்கியங்களை ஏனைக் காலப்பகுதிகளில் எழுந்த இலக்கியங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, இதன் சிறப்பை ஓரளவிற்கு அறிந்துகொள்ள முடிகிறது. தமிழிலக் கியமும் தமிழ் மொழியும் புத்துயிர்பெற்று வளர்ந்துவரும் இந்நூற்றண்டிலே எழுந்த நூல்கள் பல நம்மொழியின் ஆற் p2;Duqui) அதன் வேகத்தையும் தெளிவாக எடுத்துக் காட்டு கின்றன. 19-ம் நூற்றண்டில் எழுந்த இலக்கியங்களுட் பெரும்பாலானவை அக்கால மக்கள் வாழ்க்கையோடு நெருங் கிய தொடர்பில்லாதவை. பழைய நூல்களையும் அவற்றின் கண் கையாளப்பட்ட மொழிநடை, யாப்பமைதி முதலிய வற்றையும் தழுவி வாழ்க்கைத் தொடர்பும் அனுபவச் சிறப்பும் இல்லாத வகையில் இயற்றப்பட்டமையால் அவை போற்றுவா ரின்றிக் கிடக்கின்றன. அந்நூற்றண்டின் முடிவில் வாழ்ந்த சுந்தரம்பிள்ளை, வேதாநாயகம்பிள்ளை, ராஜமையர் ஆகிய மூவ ரும் இயற்றிய நூல்கள் அந்நூற்றண்டிற்கு உரியவையெனி னும், உண்மையில் அவை இந்நூற்றண்டிலே தமிழிலக்கியம் எவ்வழியிற் செல்லப்போகின்றது என்பதை ஒரளவிற்கு எடுத்துக் காட்டுவனவாக விளங்குகின்றன. ஆகவே, தற்கால இலக்கியம் அம் மூவர் காலத்திலேயே ஆரம்பித்துளது என G) TLD.
எந்த நாட்டிலும் எந்த மொழியிலும் இலக்கியம் காலத்
தின் போக்கிற்கு இணங்க அமைகின்றது. ஆகவே, தமிழ்
ாடு பல துறைகளிலும் விரைவாக முன்னேறிச் செல்லும் இக்காலத்தின் போக்கிற்கும் மக்களின் வாழ்க்கைமுறைக்கும் இணங்கவே இக்கால இலக்கியம் செல்கின்றது. இக்கால மக்களின் வாழ்க்கைமுறை முதலியன 19-ம் நூற்றண்டிலிருந்த
 
 

இருபதாம் நூற்றாண்டு
195
மக்களின் வாழ்க்கைமுறை முதலியனவற்றிலிருந்து பெரிதும் வேறுபட்டுள்ளன. 20-ம் நூற்றாண்டில் நடைபெற்ற இரு உலகப் போர்களையும், விஞ்ஞான வளர்ச்சி, • கல்வி விருத்தி முதலியவற்றையும் அதற்குக் காரணங்களாகக் கூறலாம். பொருளாதார நிலையில் மக்களுக்கிடையேயுள்ள ஏற்றத் தாழ்வுகள், சாதி வித்தியாசங்கள் முதலியன வரவர அருகிக் கொண்டு போவதையும் முந்திய காலப்பகுதியிலும் சிறப்பாக இக்காலப்பகுதியில் அரசியல் விஷயங்களிலும் பிறவற்றிலும் பொது மக்கள் கூடுதலான செல்வாக்கைப் பெற்றுவருவதை யும், பொதுவுடமைக் கொள்கைகளும் பிறவும் மக்களின் வாழ்க்கைமுறையில் மாற்றங்கள் சிலவற்றை உண்டாக்கி வருவதையும் இன்று நாம் காணலாம். இவ்வாறு மக்களுடைய கொள்கைகளும் வாழ்க்கைமுறையும் மாற்றமுற்றுச் செல்வதற் கிணங்க இக்காலத் தமிழிலக்கியத்தின் போக்கும் வேறுபட்டுச்
செல்கின்றது.
இந்நூற்றாண்டு பொதுமக்களுக்கு உரிய காலமாகும். எனைக் காலங்களில் அரசர்களும் பிரபுக்களும் பெற்றிருந்த செல்வாக்கை இந்நூற்றாண்டிற் பொதுசனம் பெற்றிருப்பத னால், இலக்கியம் அவர்களின் வாழ்க்கை, குறிக்கோள், இன்ப துன்பங்கள், அவர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக நிற்கும் சாதிக்கொடுமை, சமுதாயக் கட்டுப்பாடு முதலியன வற்றைப் பொருளாகக்கொண்டு பொதுசன முன்னேற்றத்திற் கான வழிகளைச் சித்திரிப்பதாக அமைந்துள்ளது. அதனால், இப்புதுவழியிற் செல்ல ஆரம்பித்த தமிழிலக்கியம் பழைய இலக்கிய மரபு முதலியவற்றிலிருந்து விடுதலை பெறவேண்டிய தாயிற்று. அந்த விடுதலையை இக்கால இலக்கியத்திற்கு அளித்தவர் பாரதியெனலாம்.. அவர் பாடிய "பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி'' உண்மையிலே தமிழ்த்தாயின் விடுதலை குறித்துப் பாடியதாகக் கொள்ளலாம். , தமிழிலக்கியம் பழைய மொழிநடை மூதலியவற்றிலிருந்து விடுதலை பெற்றதனாலே தான் அது இக்காலத்தில் உயிர்த்துடிப்பு உள்ளதாக விளங்கு

Page 107
196
தமிழ் இலக்கிய வரலாறு
கின்றது. 19-ம் நூற்றாண்டிற்குமுன் வாழ்ந்த உரையாசிரியர் களும் புலவர்களும் கையாண்ட மொழிநடைதான் இலக்கண வரம்பு இகவாத உயரிய நடையென்றும், அதுவே இலக்கியத் திற்கு உரிய நடையென்றும் கருதிய எழுத்தாளர்கள் இக் காலத்திலும் வாழ்ந்துவருகின்றனர். பழைய முறை தழுவி எழுதப்பட்ட நூல்கள் பல இந்நூற்றாண்டிலும் எழுந்துள்ளன. தத்துவக் கருத்துக்களை உணர்ச்சிக் கலப்பில்லாத வகையிலே தர்க்கமுறையாகக் கூறுதற்குச் சிவஞான முனிவர் முதலியோ ராற் கையாளப்பட்ட உரைநடை சிறந்ததொன்றாயினும், அது இக்காலப் பொதுசனத்துக்கு உரிய இலக்கியத்தைச் சிருட் டித்தற்குப் பொருத்தமற்றது என்பதைக் கண்டு அதைக் கைவிட்டு, இக்காலத்திற்கு ஏற்ற நடையொன்றைத் தெரிந்து, அதைச் சிறப்புடன் கையாண்டுகாட்டிய பெருமை பாரதிக்கே உரியது. பொதுமக்களுடைய இன்பதுன்பங்களை வெளிப் படுத்துதற்கு அவர்கள் வாயில் வழங்கும் உணர்ச்சிக் கலப் புடைய சொற்கள்தான் ஏற்றவை என்பதையும் வழக்கொழிந்த சொற்களும் சொற்றொடர்களும் பயனற்றவை என்பதையும் பாரதி' கண்டு, காலத்திற்கு ஏற்ற மொழிநடையைப் பயன் படுத்தியதனால் அவருக்குப் பின்வந்த பாரதிதாசன், புதுமைப் பித்தன் முதலிய ஆசிரியர்கள் ஆற்றல் பொருந்திய அந் நடையினைக் கையாண்டு இலக்கியப் பண்புவாய்ந்த கற்பனைச் சித்திரங்கள் பலவற்றை ஆக்கித் தந்துள்ளனர். காலத்திற்கு ஏற்ற யாப்பு முறைகளைத் தழுவிப் பொதுமக்களுடைய நெஞ்சைப் பிணிக்கவல்ல பாடல்களைப் பாரதி பாடியமை அவர் ஒரு பெரும்புலவன் என்பதற்குப் போதிய சான்றாகும். அவருக்குப் பின் வந்த புலவர்கள் எல்லோரும் அவர் காட்டிய வழியைப் பின்பற் றியதால், தமிழ்ச்செய்யுள் வரலாற்றில் அவர் ஒரு புதிய காலப்பகுதியைத் தொடக்கி வைத்தார் எனக் கூறுதல் பிழையாகாது.
நம் முன்னோர் கையாண்ட தாழிசை, துறை, விருத்தம் முதலிய யாப்புவகைகளைத் திறமையுடன் கையாளக்கூடிய

இருபதாம் நூற்றாண்டு
197
அறிவும் ஆற்றலும் பாரதிக்கு இருந்தபோதும் அவற்றை விட்டுப் பொதுசனத்தின் உள்ளத்தைக் கவரக்கூடிய சிந்து, தெம்பாங்கு முதலிய புதிய யாப்புவகைகளைக் கையாண்டனர். அதுவொன்றே பாரதி தமிழ்நாட்டிற் றோன்றிய பெரும் புலவர் வரிசையில் வைத்து எண்ணப்படுதற்குரிய தகுதி வாய்ந்தவர் என்பதற்குப் போதிய சான்றாகும். பேரிலக்கி யங்களை இயற்றியுதவியவர்கள் மட் டு ந் த ா ன் பெரும் புலவர்கள் எனக் கொள்ளுதல் பொருந்தாது. ஒரு சில செய்யுட்களையோ சிற்றிலக்கியங்களை யோ இயற்றிய ஒரு புலவன் தன் சாதனையால் இலக்கிய வரலாற்றில் ஒரு திருப் பத்தை ஏற்படுத்த வல்லனாயின், அவனும் ஒரு பெரும் புலவன் என்றே கொள்ளப்படுவான். காரைக்காலம்மையார் 140 செய்யுட்களை மட்டுமே அருளிச்செய்தபோதும் துறை, விருத்தம் என்னும் பாவினங்களை முதன்முதலாகக் கையாண்டு பத்திப்பாடல்களைப் பாடி ஒரு புது வழியைக் காட்டிவைத்த தனால், அவர் பெரும்புலவர் வரிசையில் வைத்து எண் ணப்படுகின்றனர். அதேபோல, பாரதியும் இந்நூற்றாண்டில் சிந்து முதலிய யாப்பு வகைகளைப் பயன்படுத்திப் பல கற்பனைச் சித்திரங்களை உருவாக்கித் தந்தமையால், அவர் காலம் தொடக்கமாகத் தமிழில் ஒரு புதிய மரபு தழைக்க லாயிற்று.
பாரதி கையாண்ட சிந்து முதலிய யாப்பு வகைகள் தமிழுக்குப் புதியனவல்ல. அவை 15-ம் நூற்றாண்டின் பின் எழுந்த பள்ளு, மாலை, குறவஞ்சி நாடகம், சித்தர் பாடல் முதலிய சிற்றிலக்கியங்களிலும் நாட்டுப் பாடல்களிலும் பெரு வழக்காயுள்ளன. சோழப்பெருமன்னர்காலத்திற் சிறப்பாக வழங்கிய தாழிசை, துறை, விருத்தம் என்னும் பாவினங்கள் அக்காலத்தின் பின் பல புலவர்களாற் கையாளப்பட்டபோதும், அவை பொதுமக்கள் உள்ளத்தைக் கவரக்கூடிய ஆற்றல்

Page 108
198 தமிழ் இலக்கிய வரலாறு
இல்லாதனவாயின. ஆகவே, நாயக்கர் காலம் தொடக்கமாக இக்காலம் வரையும் விருத்தம் முதலியவற்றிற் பாடப்பட்ட தல புராணங்களும் பிறவும் மக்களாற் பெரிதும் போற்றப் படவில்லை. அதனுல் மக்கள் விரும்பும் சிந்து முதலிய யாப்பு வகைகளில் இலக்கியங்கள் தோன்றலாயின. கம்பன் இயற்றிய காப்பியம் இருக்கவும் இராமநாடகக் கீர்த்தனை எழுந்ததற்கும் சீறப்புராணத்தைத் தழுவிச் சீறப்புராணக் கீர்த்தனை எழுந்ததற்கும் அதுவே காரணமாகும். மக்கள் உள்ளத்தைப் பிணிக்க க் கூடிய வகையில் இலக்கியம் அமையாவிடின், அவர் பாராட்டை அது பெற முடியாது என்பதைச் சிறந்த புலவர்கள் அறிந்திருந்தமையால், காலத் துக்கு ஏற்றவாறு புதிய யாப்பு வகைகளில் அவர்கள் இலக் கியங்களை இயற்றினர். பாரதி அதனை நன்கு அறிந்திருந் ததனுல், சிந்து முதலிய யாப்பு வகைகளைப் பயன்படுத் திப் பொதுமக்களின் உணர்ச்சியைத் தூண்டவல்ல பாட்டுக் களைப் பாடினர்.
பாரதி கையாண்ட புதிய யாப்பு வகைகளுள் சிந்து என்பது முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது. ஒரெதுகை பெற்ற இரண்டு அடிகள் தனிச்சொல் பெற்று அளவு ஒத்து வரு தலும் ஒவ்வாது வருதலும் சிந்து என்னும் யாப்பிற்கு உரிய இலக்கணமாகும். இரண்டேயன்றி நான்கடிகள் ஒரெதுகையாய் வருதலும் உண்டு அடிகள் அளவு ஒத்து வருவது சமனிலைச் சிந்து எனவும் அளவு ஒவ்வாது வருவது வியனிலைச் சிந்து எனவும் பெயர் பெறும் சமனிலைச் சிந்திலே குறளடி இரண்டு வரின் இருசீரிரட்டை என்றும், சிந்தடி இரண்டு வரின் முச்சீரிரட்டை என்றும், அளவடி இரண்டு வரின் காற்சீரிரட்டை என்றும் கூறப்படும். அளவடியின் மேற்பட்டி அடிகளான் வருவனவும் உள. இருசீரடியானும் முச்சீரடியானும் வந்தனவற்றிற்கு உதாரணம் வருமாறு:
 

இருபதாம் நூற்றண்டு 199
(1) சின்னஞ் சிறு கிளியே-கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே என்னேக் கலிதீர்த்தே- புவியில் ஏற்றம் புரியவந்தாய்.
(2) ஓடி விளையாடு பாப்பா-ே
ஒப்ந்திருக்க லாகாது பாப்பா கூடி விளையாடு பாப்பா-ஒரு
குழந்தையை வையாதே பாப்பா,
வியனிலைச் சிந்துகளுள் இருமுச்சீர் இரட்டைக்கும் இரு நாற்சீர் இரட்டைக்கும் உதாரணம் வருமாறு:
(1) ஒமெனப் பெரியோர்கள்-என்றும்
ஒதுவ தாய்வின மோதுவதாய் தீமைகள் மாய்ப்பதுவாய்-துயர்
தீர்ப்பது வாய்நலம் வாய்ப்பது வாய் (2) பிள்ளைப் பிராயத்திலே-அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட் டேனங்கு பள்ளிப் படிப்பினிலே-மதி
பற்றிட வில்லை யெனினுந் தனிப்பட வெள்ளே மலரணைமேல்-அவள்
வீணையுங் கையும் விரிந்த முகமலர் விள்ளும் பொருளமுதும்-கண்டென்
வெள்ளை மனது பறிகொடுத் தேனம்மா,
மேலே குறிக்கப்பட்டன வேயன்றிக் காவடிச் சிந்து,
கொண்டிச் சிந்து, ஆனந்தக் களிப்பு, தெம்பாங்கு முதலியன
வெல்லாம் பிற்காலத்தில் எழுந்த சிந்து வகைகளேயாம். அவற்றின் போக்கினைப் பாரதி நன்கு ஆராய்ந்து பயன்
படுத்தியிருத்தலை அவர் பாடல்களிற் காணலாம். அவரைப்
பின்பற்றிக் கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை, பாரதிதாசன், கம்பதாசன் முதலானுேர் இப்புதிய யாப்புவகைகளைக் கையாண்டு படி பாடல்களைப் பாடியிருத்தலை அவர்கள் பாடல்
களே நோக்கி அறியலாம்.

Page 109
200 தமிழ் இலக்கிய வரலாறு
ઈી60 நூற்றண்டுகளாகப் பொதுசனங்களையும் பெண்களை யும் அடிமைப்படுத்தி வைத்திருந்த சமூகத்தளைகளை அறுத் தெறியத் தருணம்பார்த்திருக்கும் ஒரு சமுதாயத்தின் மனுே நிலைதான் பாரதியின் கவிதைகளிலும் உரைச் சித்திரங்களிலும் பிரதிபலிக்கின்றது. ஆகவே, அவர் பிரயோகித்த சொற்றெ டர்கள், கையாண்ட செய்யுள்கடை, கவிதைக்குப் பொருளாக எடுத்துக்கொண்ட விஷயங்கள் முதலியவற்றை நோக்கின் தமிழிலக்கியத்திற்கு அவர் புத்துயிர் அளித்தமை புலனுகும். 'சிட்டுக் குருவி' முதலாக 'ஊழிக் கூத்து' ஈருக அவர் இயற்றிய பாக்கள் யாவும் காலத்தின் போக்கிற்கிணங்க மக் கள் எல்லோரும் படித்து அனுபவிக்கக்கூடிய மொழிநடை யில் அமைந்துள்ளன. எழுத்தறியாத ஏழையொருவனுக்கும் உணர்ச்சியின்பம் அளிக்க வல்ல உயிர்த்துடிப்புள்ள பாக் களை அவர் பாடியதன் பின், இலக்கண இலக்கியங்களைக் கற் றறிந்தோரே பொருளறிதற்கு உரியது தமிழ்ப்பாட்டு என் னும் கருத்து நீங்கலுற்றது. மக்கள் உள்ளத்திற் சுதந்திர உணர்ச்சியைச் சுடர்விட்டு எரியச்செய்த தேசீயப் பாடல் கள் அவருக்குப் பெரும்புகழ் ஈட்டிக் கொடுத்தபோதும், அவருடைய உண்மையான கவித்திறனையும் கற்பணுசக்தியை யும் ' கண்ணன்பாட்டு', ' பாஞ்சாலி சபதம்', ' குயிற் பாட்டு' என்பவற்றிற் காணலாம். பொருட்டெளிவும் உணர்ச்சி வேகமும் பொருந்தியுள்ள அவர் பாடல்களுட், பத்திரசங் கனிந்த கண்ணன் பாட்டுக்கள் பெரியாழ்வார் பாடிய திருப்பாடல்களை எமக்கு நினைவூட்டுகின்றன. பொரு ளுக்கேற்ற ஒசையைக் கையாளுந் திறனை 'ஊழிக்கூத்து' முதலிய பாடல்கள் நன்கு புலப்படுத்துகின்றன. பாரதியின் சொல்லிலும், பொருளிலும், அவர் அமைத்த ஒசையிலும் நாம் புதுமையைக் காண்கின்றேம். பழைய பாட்டுக்கள் அரசர்களையும் அவதார புருஷர்களையும் கடவுளரையும் பாராட்ட, பாரதியின் பாட்டுக்கள் பொதுசனத்தையும் சன சமுதாயத்தையும் பாராட்டுகின்றன. பெண்ணிடத்திற் காணப்
 

இருபதாம் நூற்ருண்டு 201.
படும் கற்பொழுக்கம், பொறுமை, அன்பு முதலிய சீரிய குணங்களைக் காவியங்களிற் புனைந்து கூறிய தமிழ்ப்புலவர் களுட் பெண்ணுக்குப் பெருமை அளித்துப் பெண்ணிடத்து விளங்கும் சக்தியைத் தெய்வமாகப் போற்றிய தமிழ்ப் புல வன் பாரதி ஒருவர்தான் எனக்கூறுதல் மிகையாகாது.
பழகுதமிழிற் கவிதை தந்த பாரதியைப் பின்பற்றிப் பல கவிதைகளையும் செய்யுளிலக்கியங்களையும் இயற்றித் தமிழ் மொழியை அலங்கரித்த இக்காலப் புலவர்கள் பலர். அவர் களுட் பாரதிதாசன், தேசிகவிநாயகம்பிள்ளை, நாமக்கல் இராம லிங்கம்பிள்ளை, சுத்தானந்தபாரதியார், ச. து. சு. யோகிகள் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்களைவிட, முந்திய காலப் புலவர்கள் காட்டிய வழியையும் பின்பற்றிச் சிறந்த பாடல்களைப் பாடிய புலவர்களுள் யாழ்ப்பாணத்து நவாலியூர்ச் சோமசுந்தரப் புலவர், வெ. ப. சுப்பிரமணிய முதலியார், ரா. இராகவையங்கார், சோமசுந்தர பாரதியார் முதலியோர் சிறந்தவர்கள்.
பாரதி புதுவையிலே மறைவாக வாழ்ந்துவந்த காலத்தில் அவருடன் கவிஞர் பாரதிதாசன் தொடர்பு பூண்டு அவரிடத் திலே பெருமதிப்பு உடையவராக வாழ்ந்துவந்தனர் என்பது தெரிகிறது. அவர் இயற்பெயர் கனக~சுப்புரத்தினம். பாரதி யிடம் கொண்டுள்ள அன்பு காரணமாக, அவர் பாரதிதாசன் என்னும் புனைபெயரைப் பூண்டனர். குழந்தைப் பருவத்தி லேயே அவர் கவிபாடும் வன்மையுடையவராக விளங்கினர். அவர் ஒரு நாள்,
எங்கெங்குக் காணிலும் சக்தியடா-தம்பி ஏழுகடல் அவள் வண்ணமடா
எனத் தொடங்கும் பராசக்தியின் புகழ்பாடும் கன்னிக் கவிதை யொன்றைப் பாடிப் பாரதியிடம் சமர்ப்பித்தபோது, பாரதி அவரைப் பார்த்து, எழுக புலவன்' என்று ஆசீர்வதித்தார். அங்ஙனம் அவர் கவிதா சக்தியைப் பாரதி கண்டு பாராட்டி
96

Page 110
202 தமிழ் இலக்கிய வரலாறு
அவரை ஒரு கவியாகத் தமிழுலகத்திற்கு அறிமுகப்படுத்திய நாள் முதலாக, வீரம் செறிந்த பாடல்கள் பலவற்றைப் பாடித் தந்துள்ளனர். மனிதன் வாழ்வாங்கு வாழுதற்கு வேண்டிய பல கருத்துக்கள் அவர் பாடல்களில் இடம்பெற்றுள்ளன. சமுதாயத்திற் காணப்படும் பயனற்ற வழக்கங்கள், சாதி சமயப் பூசல்கள், பெண்ணடிமை முதலியன காட்டை விட்டு அகல்வதோடு சமதர்மக் கொள்கை நாட்டில் நிலவ வேண்டும் என்பது அவர் வேனவா. இத்தகைய புரட்சிக்
கொள்கைகள் அவர் பாடலில் மலிந்துகிடப்பதால் அவர் புரட்
சிக் கவிஞர் என்றும் கூறப்படுவர். புரட்சிக் கொள்கைகளை வெளிப்படையாக வற்புறுத்திக் கூறும் அவர் பாடல்களுக்கு ஓர் உதாரணம் வருமாறு:-
ஒடப்ப ராயிருக்கும் ஏழை யப்பர்
உதையப்ப ராகிவிட்டால் ஒர்நொடிக்குள் ஒடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்ப ராகிடுவார் உணரப் பாநீ.
அவருடைய பாட்டுக்கள் யாவும் ஏழை மக்களுக்கும் எளிதிற் புலப்படக்கூடிய நடையில் அமைந்துள்ளன. தமிழ் மொழியிலும் தமிழினத்திலும் மிக்க ஆர்வமுடையவராதலின் தமிழனைப்பற்றிப் பாடும்போதெல்லாம் தன்னையே மறந்து பாடும் இயல்புடையவர். தமிழ் மக்களுக்குத் தம் நாட்டிலும் மொழியிலும் இனத்திலும் ஆர்வம் உண்டாகச் செய்த இக் காலப் புலவர்களுள் முதலிடம் வகிப்பவர் பாரதிதாசன் எனக் கூறுதல் மிகையாகாது. தாழ்ந்த தமிழகம் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்னும் வேணவா அவர் உள்ளத்திற் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்தது என்பதை அவர் பாடிய கவிதை கள் நன்கு புலப்படுத்துகின்றன. அவர் பாடல்களிற் காணப் படும் கற்பனைச் சித்திரங்களையும் உவமையுருவக அமைப்புக்களை யும் இக்காலத்தில் வாழும் ஏனைப் புலவர்களிடத்திற் காண்டல் அரிது. அவர் இயற்றிய நூல்கள் புரட்சிக் கவி, அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, கடல்

இருபதாம் நூற்ருண்டு 203
மேற் குமிழிகள் முதலியன. வடமொழியிலுள்ள பில்கணியத் தைத் தழுவி அவர் இயற்றிய புரட்சிக்கவி என்னும் காவியம் ஒரு சிறந்த நூலாகக் கருதப்படுகிறது. தமிழ்மொழியில் அவ ருக்கு எத்தகைய ஆர்வம் இருந்தது என்பதை அந்நூலிலுள்ள மேல்வருஞ் செய்யுள் நன்கு எடுத்துக்காட்டுகின்றது :-
தமிழறிந்த தால்வேந்தன் எனை அழைத்தான்
தமிழ்க்கவி யென்றெனை யவளும் காதலித்தாள் அமுதென்று சொல்லுமிந்தத் தமிழ் என்னுவி
அழிவதற்குக் காரணமா யிருந்த தென்று சமுதாயம் நினைத்திடுமோ ஐயகோ என்
தாய்மொழிக்குப் பழிவந்தால் சகிப்ப துண்டோ உமையொன்று வேண்டுகின்றேன் மாசில் லாத
உயர்தமிழை உயிரென்று போற்று மின்கள். வீரத்தமிழன்' என்ற பாட்டில் அவர் இராவணன் புகழைப் பாராட்டுவதிலிருந்து அவருக்குத் தமிழினத்திலிருந்த ஆர்வம் எத்தகையது என்பது தெரிகிறது. அப்பாட்டில் ஒரு செய்யுட் பகுதி வருமாறு:- தென்றிசையைப் பார்க்கின்றேன் என்சொல்கேன் என்றன் சிந்தையெலாம் தோள்களெலாம் பூரிக்கு தடடா அன்றந்த லங்கையினே ஆண்டமறத் தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன் குன்றெடுக்கும் பெருந்தோழான் கொடைகொடுக்கும் கையான்.
பாரதி காட்டிய வழியிற் சென்று பழகுதமிழிற் பாக்கள் இயற்றிய புலவர்களுட் கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை ஒருவராவர். அவருக்குப் பாரதியின் பாடல்களில் இருந்த ஈடுபாட்டிற்கு ஒர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது மேல் வரும் செய்யுட்பகுதி
சுதந்திரப் பாட்டில் - உள்ளம் துடிதுடிக்குதடா பதமெழும்புதடா - கையும் படபடக்குதடா தொண்டு செய்யுமடிமை - என்னும் சுடுசர மோடி மண்டையைத் தாக்குதடா - நெஞ்சம் மடியப்பாயுதடா பாவின் நயமெல்லாம் - யானும் பகாவல்லேனே ஆவின் பாற்சுவையை - நாழி அளந்து காட்டிடுமோ.

Page 111
204
தமிழ் இலக்கிய வரலாறு
அவர் இயற்றிய சிறு கவிதைகள் மலரும் மாலையும் என்ற நூல்வடிவமாக வெளிவந்துள்ளன. ஒரு நீண்ட நூல் வடிவ மாக உள்ளது அவர் இயற்றிய நாஞ்சில்நாட்டு மருமக்கள் வழி மான்மியம் என்பது. அது அந்நாட்டு மக்களின் சமு தாயப் பழக்கவழக்கங்களிலுள்ள குறைகள் சிலவற்றை இழித் துக் கூறும் நோக்கமாக எழுந்த ஓர் அங்கதச் • செய்யு ளாகும். அவர் இயற்றிய கவிதைகள் அனைத்திலும் எளிமை யும் இனிமையும் இருப்பதைக் காணலாம். ''கருணைக்கடல்"', ''பாரசீகக் கவியமுதம்'' என்னும் கவிதைகளில் அவருடைய உள்ளத் தெளிவையும் கவித்திறனையும் காணமுடிகின்றது. குழந்தைகள் முதலாக முதியோர்கள் ஈறாக மக்கள் அனைவரும் படித்து அனுபவிக்கக்கூடிய மொழிநடையிலும் ஓசை முறை யிலும் அவர் கவிதைகள் அமைந்திருத்தல் அவற்றுக்கு உரிய ஒரு தனிச்சிறப்பாகும். ஆங்கிலம் முதலிய பிற மொழிகளி லுள்ள அழகும் இனிமையும் வாய்ந்த சிறு கவிதைகளைப் படித்து அனுபவித்து, அவற்றைத் தமிழிலே தந்த புலவர் களுட் கவிமணியும் சுத்தானந்த பாரதியாரும் குறிப்பிடத் தக்கவர்கள். ஆறு, மலை, கடல், மாலைக்காலம், மலர், புலி முதலிய இயற்கைப் பொருள்களையும் இயற்கைக் காட்சிகளை யும் பொருளாகக்கொண்ட சிறிய பாடல்வகைகள் ஆங்கில மொழியிற் பலவுள. அத்தகைய பொருள்களைத் தனித்தனி கூறும் செய்யுட்கள் முற்காலத்திலே தமிழ் மொழியில் இயற் றப்படவில்லை. அவற்றையெல்லாம் முற்காலத் தமிழ்ப்புலவர் கள் காவியம் முதலிய தொடர்நிலைச் செய்யுட்களில் மிக அழகாகப் புனைந்து கூறியுள்ளனர். அவற்றைத் தனிக்கவிதை களிற் கூறும் மரபு பாரதிகாலம் தொடக்கமாகவே தமிழில் நிலவிவருகின்றது; எனினும், அவற்றை ஆங்கிலப் புலவர்கள் கையாண்ட முறைகளைத் தழுவிக் கவிதை புனைந்தவர்களுட் போற்றத்தகுந்தவர் கவிமணி என்றே கூறலாம்.
கவிமணியைப்பற்றி வையாபுரிப்பிள்ளையவர்கள் ஓரிடத் திற் குறிப்பிடும்பொழுது, "கவிமணியிடத்திலே அமைதி,

இருபதாம் நூற்றாண்டு
205
பொறுமை, அடக்கம், இனிய மனப்பண்பு, இரக்கம், உபகார சிந்தை, முறைமையிலே பிரியம், நினைவாற்றல் முதலியவற் றைக் காணலாம். நீண்டகாலமாகப் பெண்கள் கலாசாலையில் ஆசிரியராயிருந்தமையால் இக்குணங்கள் சிறந்து விளங்கு வதற்கும் இடமிருந்தது. ஆவேசம், பரபரப்பு முதலியன சிறி தளவும் கிடையாது'' என்று கூறுகின்றனர். அவர் கூற்று ஏற்றுக்கொள்ளத் தக்கதே. பாரதி, பாரதிதாசன் முதலியோ ரிடத்திற் காணப்படும் வேகம், கோபம், விறுவிறுப்பு, ஆவே சம் முதலிய குணங்களைக் கவிமணியிடம் காணமுடியாது. கவிமணி புத்தபிரானின் சரித்திரப் பகுதிகளிற் சிலவற்றை நெஞ்சுருகிப் பாடியிருக்கின்றனர். அவற்றைப் படிக்கும் பொழுது, கவிஞர் எந்த அளவிற்குப் புத்தபிரான து அருட் பாங்கிலும் வாழ்க்கையிலும் ஈடுபட்டிருந்தனர் என்பதைக் காண லாம், ஆசிய ஜோதியில் 'புத்தரும் ஏழைச்சிறுவனும்' என்னும் பகுதியில் புத்தன் ஏழைச் சிறுவனுக்குப் பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டலாகாது என்று கூறிய போதனை வருமாறு :-
இடர் வரும்போதும் - உள்ளம்
இரங்கிடும் போதும் உடன் பிறந்தவர்போல் - மாந்தர்
உறவு கொள்வரப்பா. ஓடும் உதிரத்தில் - வடிந்து
ஒழுகும் கண்ணீரில். தேடிப் பார்த்தாலும் - சாதி
தெரிவ துண்டோ அப்பா. எவர் உடம்பினிலும் - சிவப்பே
இரத்த நிறமப்பா எவர் விழிநீர்க்கும் - உவர்ப்பே
இயற்கைக் குண மப்பா. நெற்றியில் நீறும் - மார்பில்
நீண்ட பூணூ லும் பெற்றிவ் வுலகுதனில் - எவரும்
பிறந்த துண்டோ அப்பா.

Page 112
206 தமிழ் இலக்கிய வரலாறு
பிறப்பினுல் எவர்க்கும் - உலகில் பெருமை வாராதப்பா சிறப்பு வேண்டுமெனில் - நல்ல
* செய்கை வேண்டுமப்பா
நன்மை செய்பவரே - உலகம்
நாடும் மேற்குலத்தார்
தின்மை செய்பவரே - அண்டித்
தீண்ட ஒண்ணுதார்.
கவிஞர் கம்பதாசன் பாரதி வழிவந்த புலவர்களுள் மிகச் சிறந்த புலவன் என்று பாராட்டப்படுகின்றனர். அவரது இயற்பெயர் திரு. ராஜப்பா, கம்பனிடத்திலே அவருக்கு மிக்க ஈடுபாடு இருந்தமையால் அவர் கம்பதாசன் என்ற புனை பெயரால் அழைக்கப்படுகின்றனர். அவரது கவிதைகள் அரு ணுேதயம், கனவு, முதல்முத்தம் என்னும் தொகுப்புக்க ளாக வெளிவந்துள்ளன. முதல்முத்தம் என்னும் தொகுப் பின் முகவுரையிலே பாரதிதாசன் அவரை,
'உண்மையில் கம்பதாசன் எண்ணம் நன்று. நான் இந்த முதல்முத்தத்தில் நல்ல கற்பனையை, புதுமையை வரவேற்கும் தன்மையை, அதைப்போற்றும் ஆற்றலைக் காணுகின்றேன்' என்று பாராட்டியிருக்கின்றனர். 'புத்தர் புனர் ஜன்மம்' கம்பதாசன் பாடிய பாட்டுக்களுள் சிறந்ததொன்று. அதைப் பற்றி வ. ரா. எழுதுமிடத்தில் பின்வருமாறு குறித்துள்ளனர் :- 'காளிதாசன் (அசல்), காளிதாசன் (பாரதியார்), பாரதி தாசன் (சுப்புரத்தினம்), கம்பதாசன் (ராஜப்பா) - இவர் கள் நம்நாட்டு முதல்தர கவிஞர்கள். இவர்கள் பிறவிக் கவிஞர்கள், பயிற்சிக் கவிஞர்கள் அல்ல. இவர்கள் எல் லோருக்கும் சுதந்திரம்தான் மூச்சுக்காற்று. கட்டுண்டு, கைகட்டி வாழப்பெறதவர்கள். இருந்தாலும் இவர்கள் தாசர்களாக தங்கள் பெயரளவில் விளங்குவதுதான் ஆச்சரியமாயிருக்கிறது. 'புத்தன் புனர் ஜன்மம்' என்பது
 

இருபதாம் நூற்றாண்டு
207
கம்பதாசன் கவிதையில் வரைந்திருக்கும் அற்புதச் சித் திரமாகும். தமது கவிதா-தர்க்க சாஸ்திரத் திறமையினால், மறுபிறப்பில் நம்பிக்கையில்லாத ஸ்ரீ புத்தனைக்கூட, புனர்ஜன்மம் எடுக்கும்படியாக, கம்பதாசன் செய்திருப் பது விசித்திரமான வேலைப்பாடாகும். காந்தி, அன்பின் திரு அவதாரமான தால், அவர் புத்தன் என்று சாதாரண மாக நம்மில் சொல்லிக்கொள்ளுவதைக் கம்பதாசன் நாணயமான முறையில், முழுதும் பயன்படுத்திக்கொண்டு, இந்த அருமையான விருத்தங்களை நமக்கு உவந்து
அளித்திருக்கிறார்''. கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை கம்பதாசனுடைய கவிதை யின் சிறப்பைக் கூறுமிடத்து,
'காதலின் கூத்தையெல்லாம் ---உன்றன் /
கவியில் கண்டேனையா' என்று பாராட்டுகின்றனர். கவியமைக்கும் ஆற்றல் அவரிடத் தில் இயல்பாகவே அமைந்துள்ளது. புதியவகையிலே உவமை யுருவகங்களை அவர் எடுத்தாண்டிருப்பது அவர் கற்பனை யாற்றலுக்கு ஓர் அறிகுறியாகின்றது. ஏழை மக்களின் உழைப்பைப் பாடும்போதும் அவர்கள் அனுபவிக்கும் கஷ் டங்களைக் கூறும்போதும் அவருடைய உள்ளக் கொதிப் பெல்லாம் பாடலாக வெளிப்படுவதைக் காணமுடிகிறது. கற் பனைத் திறனுடைய அவர் பாடல்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு வருமாறு : -
முள்ளுடைச் சிறு செடியின் - கனவாய்
மூண்டு சிரித்த மலர் கள்ளென் னும் பொக்கிஷத்தால் - விம்மியே
கர்வம் அடைந்த மலர். பனித்துளி மணிசூடித் - தென்றலின்
பாட்டினைக் கேட்ட மலர் கனிந்துள . விண்ணதன் கீழ் - மெளனமாம்
கல்வியைக் கற்ற மலர்.

Page 113
208 தமிழ் இலக்கிய வரலாறு
அந்திச் சிவப்பினையும் - வான்மீன் அழகின் விழிப்பினையும் சிந்தையிற் கொண்ட மலர் - மணமே
செய்து கிளைத்த மலர்.
வீழ்ந்து கிடக்குதையே உச்சி
வெய்யிற் சுடலையிலே வாழ்வின் விருப்பங்களை - மண்ணிலே
வரைந்துளதே வண்டே.
பாரதி காட்டிய வழியைப் பின்பற்றிப் பொதுமக்களின் உள்ளத்தைக் கிளறி, அவர்களுக்கு உணர்ச்சியூட்டக்கூடிய சக்திவாய்ந்த பாட்டுக்களைப் பாடிய கவிஞர்களுள் நாமக்கல் இராமலிங்கம்பிள்ளை ஒருவராவர். சுதந்திரப் போராட்டக் காலத்தில் அவர் பாடிய கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்ற பாடலே அவரை மக்களுக்கு அறிமுகம் செய்துவைத்தது எனலாம். அவர் இயற்றிய நூல்கள் தமிழன் இதயம், அவளும் அவனும், பிரார்த்தனை, சங்கொலி, கவிதாஞ்சலி முதலியன. பாரதியின் தேசீயப் பாடல்கள் மக்களிடையே ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியதுபோலவே நாமக்கல் கவிஞருடைய உணர்ச்சிமிக்க தேசீயப் பாடல்களும் மக்களை விடுதலை இயக்கத்திலே பெரிதும் ஊக்கின. அவ ருடைய பாடல்களுள் பெரும்பாலானவை தேசீயப் பாடல் களே. இந்தியாவின் விடுதலைப் போரில் பங்குபெற்றுத் தீவிர மாக உழைத்துவந்த ஒருவராதலின் அவர் தம்முடைய புல மைத் திறனைத் தேசத் தொண்டுக்குப் பயன்படுத்தினர். அவர் காந்தீயத்திலே நம்பிக்கையுடையவராதலின், அந்தத் தத்து வத்தின் பெருமையை மக்களுக்கு எடுத்துக்காட்டும் நோக்க மாகப் பல பாட்டுக்களைப் பாடியிருக்கின்றனர். காந்தியிடத் திலே அவருக்கு எத்தகைய அன்பும், ஆர்வமும் இருந்தது எனபதற்கு அவர் பாடிய மேல்வரும் செய்யுள் ஒர் எடுத்துக் * : طارق الأساسا الة

இருபதாம் நூற்ருண்டு 209
கவிபாடிப் பெரும்ை செய்யக் கம்பனில்லை
கற்பனைக் கிங்கில்லை யந்தக் காளிதாசன் செவிநாடும் கீர்த்தனைக்குத் தியாக ரில்லைத் தேசிய பாரதியின் திறமும் இல்லை புவிசூடும் அறிவினுக்கோர் புதுமை தந்து
புண்ணியமும் கண்ணியமும் புகழும் சேர்ந்த உவமானம் வேறெவரும் உரைக்க வொண்ணு
உத்தமனுர் காந்தியாரை உவந்து பேச. காந்தியடிகள் கைக்கொண்ட அகிம்சா தர்மத்தில் மக்களுக்கு இருந்த நம்பிக்கை தளர்ச்சியுறும் நேரத்தில், அத்தளர்ச்சியை நீக்கி மக்களுக்கு உறுதிப்பாட்டைக் கொடுத்தன அவர் பாடல்கள். கவிஞர் தமிழினத்தில் அளவுகடந்த ஆர்வமுடைய வர். தமிழினத்தின் பெருமையை வீரமொழியில் அழகாகச் சித்திரித்திருக்கின்றனர். தமிழ் நாட்டில் கல்லதொரு சமுதா யம் உருவாக வேண்டும் என்பது அவரது வேணவா. தாம் காண விழைந்த நாட்டின் சிறப்பைப் பல பாட்டுக்களில் வரையறுத்துக் காட்டியிருக்கின்றனர். அவர் பாடிய விரும்பிய நாடு' என்னும் பாட்டிலுள்ள செய்யுட்களுட் சில வருமாறு :-
மன்னவன் என்ற மனிதரில்லை - அங்கே -
மந்திரி தந்திரி யாருமில்லை சின்னவர் என்று எவருமில்லை - பட்டம் தேடித் திரிந்திடும் மக்களில்லை, வேலையில் லாதவர் யாருமில்லை - முற்றும்
வினருக் கங்கேயோர் வேலையில்லை கடலியில் லாதவர் யாருமில்லை - சும்மா கும்பிட்டுத் தின்கிற கூட்டமில்லை. கோயில் குளங்களும் வேணதுண்டு - ஆனல்
கும்பிடப் போவதில் சண்டையில்லை வாயில் ஜபதபம் வஞ்சனை நெஞ்சத்தில்
வைத்துப் பிழைத்திடத் தேவையில்லை. 27

Page 114
210
தமிழ் இலக்கிய வரலாறு
நாட்டுக்குப் பகைவர் யாருமில்லை - பிறர்
நாட்டின் மேல் ஆசையில் லாததனால் சூட்டுக்குச் சூடும் கொடுத்திடுவார் - பகை
துஷ்டர் வந்தாலும் துரத்திடுவார். சுவாமி சுத்தானந்த பாரதியார் இயற்கைக் காட்சிகளையும் இயற்கைப் பொருள்களையும் பிறவற்றையும் பொருளாக அமைத்துப் பல கவிதைகள் பாடியிருக்கின்றனர். இறைவன் பெயரில் அவர் பாடிய கீதங்களும் பலவுள. விரைவாகப் பல செய்யுட்களைத் தொடர்ந்து இயற்றும் ஆற்றல் அவருக்குப் பெரிதும் உண்டு என்பதற்கு அவர் இயற்றிய பாரத சக்தி மகா காவியம் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. பாரதி யைப் பின்பற்றிக் காலத்திற்கு ஏற்ற புதிய யாப்பு வகைகளில் அவர் பாடிய கவிதைகளுக்கு ஓர் எடுத்துக்காட்டு வருமாறு:- யசோதரையும் சித்தார்த்தனும்
சித்தார்த்தன் வாடி யுதிர்ந்த மலரைக் கண்டும்
வாழ்வை நம்பவோ - கண்ணே கோடி யுயிரைச் சாவு நாளும் கொண்டு போகுதே.
யசோதரை உதிர்ந்த பூக்கள் உரம தாகும்
உதிக்கும் புதுமலர் - கண்ணா - முதிர்ந்த கனிகள் வீழ்ந்து விதைகள்
முளைப்ப தியற்கையே.
சித்தார்த்தன் எழுந்த பரிதி ஏறி வானில்
இரத்த வெள்ளமாய் - அங்கே விழுந்து கங்குல் விரவக் கண்டும்
விழியை நம்பவோ - கண்ணே விதியை நம்பவோ,

இருபதாம் நூற்றாண்டு
211
யசோதரை இரவும் பகலும் சுழலும் பூவின்
இயற்கை யாவதே - கண்ணா வரவும் போக்கும் வரவும் உயிர்க்கு
வளமை யாவதே - வாழ்வின் வழக்க மாவதே.
சித்தார்த்தன் வந்து செல்லும் மின்னல் போன்ற
வாழ்வை நம்பிடேன் - கண்ணே இந்து போலத் தேயும் உலகின்
இன்பம் வேண்டிலேன் - அதன் இன்பம் வேண்டிலேன்.
யசோதரை இன்பமென்றால் இன்ப மாகும்
இனிய வாழ்க்கையே - சதா துன்ப மென்றால் துன்ப மாகும்
தொல்லு லகமே கொஞ்சும் கிளிகள் குதிக்கும் மயில்கள்
கூவும் குயிலினம் கஞ்ச மலரில் ஒதுங்கும் அன்னம்
களிப்பதைக் காணீர் - ஆற்றின் கானத்தைக் கேளீர்.
சித்தார்த்தன் பாட்ட டங்கிப் புட்க ளெல்லாம்
படுத்து றங்கிடும் - ஆற்றின் ஓட்டம் வாழ்வின் ஓட்டந் தன்னை
ஓங்கிப் பாடுதே - உள்ளம் உண்மை தேடுதே.

Page 115
ബ
212 தமிழ் இலக்கிய வரலாறு
யசோதரை
தென்ற லும்நி லாவும் இந்தத்
தேன்பொ ழிலிலே - கண்ணு மன்றல் புரிந்து மகிழு மியற்கை
வளமை காணுமே.
சித்தார்த்தன் காற்றின் ஒட்டம் ஆற்றின் ஒட்டம்
கலந்தென் காதிலே - கண்ணே நேற்றி ருந்த தில்லை யின்று நிசமி தென்னுமே.
யசோதரை
அக்கக் காவென் றேகி வரிகள்
அழைப்பதைக் கேளிர்.
சித்தார்த்தன் துக்கம் வந்தென் உள்ளந் தன்னைத்
துளைப்பதைக் காணுய் - உண்மை அழைப்பதைக் கேளாய். பாரதிக்குப் பின் வந்த கவிஞர்களுள் அற்புதமான பாடல்கள் சிலவற்றைப் பாடிப் புகழ் ஈட்டிய ஒருவர் பூரீ ச. து. சுப்பிரமணிய யோகியார். அவர் இளம் வயதிலேயே கவிபாடும் திறனுடையவராக விளங்கினர். பாரதியைப்போலவே அண்ட சராசரங்கள் அனைத்திலும் பராசக்தியின் அருள் விளையாட்டைக் காணுகின்ற தன்மை பொருந்திய அருளாளர் அவர் என்பது அவர் பாட்டுக்களைப் படிக்கும்பொழுது தெரி கிறது. அவர் தினந்தோறும் காளிபூசை செய்வதோடு, எக் காரியத்தைச் செய்யத் தொடங்கும்பொழுதும் "வெல்க காளி' என்று சொல்லித் தொடங்குவது வழக்கமாகும். தமிழ்க்குமரி என்னும் பாடல் தொகுப்பின் மூலம் தமிழுலகத்துக்கு நன்கு
அறிமுகமாகியுள்ள அக்கவிஞரின் கவிதைகள் பல இன்னும்

ta
இருபதாம் நூற்ருண்டு 213
அச்சிடப்படவில்லை. கம்பனுடைய காவியத்தில் அவருக்கு
மிக்க ஈடுபாடு உண்டு. 'அடியேனுக்குக் கம்பனே கவிதைத்
தெய்வம்; என் உள்ளத்தையும் உயிரையும் ஒருங்கே உருக் கும் காவியத்தலைவன்' என்று ஓரிடத்தில் அவர் குறிப்பிடு கின்றனர். கம்பனுடைய செய்யுட்களிற் காணப்படும் சிறந்த ஓசையமைப்புக்கள் சிலவற்றை அவர் தமது கவிதைகள் பல வற்றில் பயன்படுத்தியிருத்தலைக் காணலாம். தனிக் கவிதைகளை விட மேரி மக்தலேனு, அகல்யா என்னும் இரு நூல்கள் இயற்றியுள்ளனர். வால்மீகியும் கம்பனும் அகலிகையின் கதை யினைத் தம்முடைய காவியங்களிற் கூறியுள்ளனர். வால்மீகி கூறிய அக்கதையினின்று கம்பன் கூறிய அக்கதை சிற்சில இடங்களில் மாறுபட்டுள்ளது. பூரீ யோகியார் கூறிய கதை அவ்விரண்டு கதைகளினின்றும் குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டுள்ளது. சமுதாய வாழ்க்கையில் சம உரிமை இல்லா திருத்தலைக் கண்டு பாரதி உள்ளம் குமுறிப் பாடிய புதுமைப் பெண், பாஞ்சாலி சபதம் முதலிய பாடல்களைப் பின்பற்றிப் பெண்களுக்கு உயர்நிலை அளிக்கவேண்டுமென்ற எண்ணத் துடன் புதிய முறையில் இந்நூலை இயற்றியிருக்கின்றனர் என்றே கொள்ளலாம். தீய ஒழுக்கத்தினளான மேரி யேசு நாதரிடம் அடைக்கலம் புகுந்து திருந்திய வாழ்வைப் பெற்ற கதையினை அழகுற அமைத்துப் பாடிய நூலே மேரி மக்த லேணு என்பது. இந்நூலிலும் பெண்ணின் பெருமையே சித் திரிக்கப்படுகின்றது. அவர் பாரசீகக் கவிஞன் உமர் கயாம் பாடல்களைத் தழுவிப் பல பாட்டுக்கள் பாடியிருக்கின்றனர். அவர் பாடிய சக்திப் பாடல்களில் வேதாந்தக் கருத்துக்கள் செறிந்திருத்தலைக் காணலாம். சராசரங்கள் அனைத்திலும் பராசக்தியே விளங்கக் கானும் காட்சியைப் புலப்படுத்தும் அவர் பாட்டு ஒன்று வருமாறு:-

Page 116
214 தமிழ் இலக்கிய வரலாறு
திக்குகள் எட்டும்
1.
திக்குகள் எட்டும் சிதறித் திடுக்கிடக் கெக்கலி கொட்டிடுவாள்
பொக்கென ஒர்கணத்தே அண்டம் யாவையும்
பொட்டென வெட்டிடுவாள் கக்கும் குருதிக் கடலினில் ஊழியின் காற்றில் குதித்திடுவாள் நக்க பிரானுக்கு நாயகி பாவம் நடுங்க நகைத்திடுவாள்.
2
அண்டங்கள் யாவும் குலுங்கிடக் கிண்கிணி
ஆட்டங்கள் காட்டிடுவாள்
கொண்டல் நடுவில் குளிர்ந்த மதிவைத்த
கோலம் விளக்கிடுவாள் கண்டு மகிழ்ந்தவர்க் கின்ப வெறியில் கவிதை பொழிந்திடுவாள்
பெண்டு பிள்ளைகுட்டி யாவரும் வாழ்ந்திடப்
போருள் செய்திடுவாள்.
3
சட்டச் சடசடக் கொட்டும் இடிக்குரல் சத்தத்தில் வீற்றிருப்பாள்
வெட்டி அடித்திடும் மின்னல் வெறியில்ை
மெட்டி மினுக்கிடுவாள் துட்டர் பயப்படச் சிட்டர் களித்திடத் தோத்திரம் பாடிடுவோம் பட்டின் மெதுவும் பதத்தினில் வீழ்ந்து பரவசம் எய்திடுவோம்.
பாரதி காட்டிய வழியிற் சென்று பாட்டுக்களை இயற்றி
நூல்வடிவிலும் பத்திரிகைகள் வாயிலாகவும்
சஞ்சிகைகள்
வாயிலாகவும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் கவிஞர்கள்

இருபதாம் நூற்ருண்டு 25
, இக்காலத்திற் பலருளர். அவர்கள் எல்லோரைப்பற்றியும் இச் சிறு நூலின்கண் கூற முடியாதாகலின் அவர்களைப்பற்றி யாதும் கூருது விடுகின்றேம். இக்காலத்தில் வெளிவரும் கவிதைகளுட் காலவெள்ளத்துட்பட்டு அழிந்துபோகாது இலக் கியப் பண்பு வாய்ந்தனவாய்த் தமிழ்மொழியை அலங்கரிக்கத் தகுந்தவை எவையென நாம் இப்பொழுது துணிந்துகூற முடியாது. அவற்றுள் யாழ்ப்பாணத்தில் பிரசுரிக்கப்படும் சிவ தொண்டனில் வெளிவந்துகொண்டிருக்கும் நற்சிந்தனைப் பாட் டுக்கள், மக்களுக்கு நல்வழி காட்டும் பண்புடையனவாயும் உண்மையான அனுபவஞானத்தைப் புலப்படுத்துவனவாயும் தொன்றுதொட்டுத் தமிழிலக்கிய வரலாற்றிற் சிறப்பிடம் பெற்றுவரும் சித்தர் பாடல் வகையினைச் சார்ந்தனவாயும் விளங்குகின்றன. அவற்றின் கண் உண்மை உண்டு, ஒளி உண்டு, கவிதைப் பண்பு உண்டு. அவை காலத்துக்கு உரிய மொழி நடையிலும் ஒசையிலும் அமைந்துள்ளன. அவற்றுட் சில கவிதைகள் நற்சிந்தனை என்னும் நூல்வடிவில் வெளி வந்துள்ளன. ,
இந்நூற்றண்டிலே இலங்கையில் வாழ்ந்த தமிழ்ப் புலவர் களுள் நவாலியூர்ச் சோமசுந்தரப் புலவர் சிறப்பாகக் குறிப் பிடத்தக்க ஒருவர். அவர் தம்முடைய இளம்பிராயங் தொடக் கம் 50 ஆண்டுகளுக்குமேல் பல பிரபந்தங்களையும் தனிச் செய்யுட்களையும் பாடியுள்ளனர். அவர் நாமகளையும் தம் முடைய குலதெய்வமாகிய முருகப்பிரானையும் பல பாட்டுக் களில் நெஞ்சாரப் பாடித் துதித்திருக்கின்றனர். அவர் பாடிய நூல்களுள்ளே தந்தையார் பதிற்றுப்பத்து மிக உருக்க மாகப் பாடப்பட்டதொன்றகும். அவர்களுடைய பாட்டுக்கள் யாவும் பழைய தமிழ் மரபு பிறழாது செந்தமிழ்ச் சொற்களால் கற்பனைச் சிறப்பும் ஒசைச் சிறப்பும் ஒருங்கு உடையன வாக ஆக்கப்பட்டவை. அவர் இயற்றிய நூல்கள் நாமகள்
புகழ்மாலை, தந்தையார் பதிற்றுப்பத்து, நல்லையந்
தாதி முதலியன.

Page 117
26 தமிழ் இலக்கிய வரலாறு
இந்நூற்றண்டிலே பல செய்யுளிலக்கியங்களும் கவிதை களும் தோன்றியுள்ளனவேனும், பெருந்தொகையாக உரை நடையிலக்கியங்கள் வெளிவந்திருத்தலை நோக்கின், உரை நடை வளர்ச்சிக்கும் உரைநடை இலக்கிய வளர்ச்சிக்கும் உரிய காலப்பகுதியென்றே இந்நூற்றண்டைக் கூறலாம். ஆங்கிலக் கல்வி விருத்தியினுலும் ஐரோப்பிய நாகரிகத் தொடர்பினுலும் தமிழ் நாடு அடைந்துள்ள சிறப்புக்களுள் தமிழில் உரைநடையும் உரைநடை இலக்கியமும் விருத்தி யடைந்து வருதலை ஒன்ருகக் கொள்ளலாம். பத்தொன்பதாம் நூற்றண்டு முடிவடைய முன்னரே தமிழ்மொழியில் ஆர்வங் கொண்ட அறிஞர் பலர் தமிழ் இலக்கிய சம்பந்தமாகவும் தமிழ் நாட்டுச் சரித்திர சம்பந்தமாகவும் ஆராய்ச்சிகளைச் செய்து அரிய கட்டுரைகள் பலவற்றை எழுதியதோடு ஏட்டு வடிவத்திலிருந்த பல தமிழிலக்கண இலக்கிய நூல்களை அச் சிட்டு உதவினர். அங்ங்னம் தமிழுக்கு அருந்தொண்டாற்றிய அறிஞர்களுள் சாமிநாதையரவர்களும் வையாபுரிப்பிள்ளையவர் களும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள். சங்கநூல்களுட் பெரும்பாலானவற்றையும் பிறநூல்களையும் அச்சேற்றி ஐயரவர் கள் வெளியிட்டிராவிடின் அவற்றுட் பல அழிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. சங்கநூல்களைப் பலர் படித்து, அவற்றி லுள்ள பல அரிய சிறப்புக்களை உட்பொருளாகக் கொண்டு பல நூல்களை இயற்றித் தமிழிலக்கியத்தை வளம்படுத்துதற்கு முக்கிய ஏதுவாக இருந்தது ஐயரவர்கள் செய்துவந்த அரிய முயற்சியேயாகும். இலக்கிய வரலாற்றிற் காலவரையறை சம்பந்தமாகவும் இலக்கிய வளர்ச்சி சம்பந்தமாகவும் வையா புரிப்பிள்ளையவர்கள் ஆராய்ச்சிகள் பலவற்றைச் செய்து மக்களிடையே ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது போற் றத்தக்க தொண்டாகும். இலக்கியத் திறனுய்வு சம்பந்தமாக டி. கே. சி. அவர்கள் செய்துவந்த தொண்டும் போற்றத்தக்க தொன்றகும். பழைய் செய்யுட்களுள்ளும் புதிய கவிதைக ளுள்ளும் கல்லனவற்றைத் தெரிந்து அவற்றிற் காணப்படும்

இருபதாம் நூற்ருண்டு 217
- > இலக்கிய நலன்களை எடுத்துக்காட்டி மக்களை அத்துறையில்
ஊக்கியதனுல் இப்பொழுது பாட்டின் திறனுயும் கலை தமிழ்
நாட்டில் வளர்ச்சிபெற்று வருகின்றது. இங்ாவன்ம் அறிஞர்கள்
ஆராய்ச்சிகள் பலவற்றைச் செய்து எழுதிய நூல்களும் கட் டுரைகளும் இக்கால உரைநடை வளர்ச்சிக்கும் உரைநடை இலக்கிய வளர்ச்சிக்கும் பெரிதும் உதவின என்றே கொள்ள G)Tüb.
இந்நூற்றண்டிலே தமிழுரைநடை விரைவாக முன்னேறிச் செல்வதற்குப் பல காரணங்கள் உள. ஒரு மக்கட் குழு வினர் பேசும் மொழியும் அம்மொழியில் எழும் இலக்கியமும் வளர்ந்து செல்லுதல் பெரும்பாலும் அவர்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்திலேயே தங்கியிருக்கின்றது. தமிழ் மக்களுடைய வாழ்க்கை இந்நூற்றண்டில் விரைவாக மாறிக்கொண்டு செல் வதைப்போல முற்காலங்களில் அது அத்துணை விரைவாக மாற்றமுற்றுச் செல்லவில்லை. தமிழ் மக்களுடைய வாழ்க்கை பல துறைகளிலும் முன்னேறிச் செல்வதால் அதற்கிசையத் தமிழுரைநடையும் வளர்ச்சிபெற்று வருகின்றது. இது பொது மக்களுக்கு உரிய காலமாதலின் அம்மக்களுக்குப் புலப்படக் கூடிய வகையில் எண்ணக் கருத்துக்களை வெளியிடவேண்டி யிருந்ததனுலும் தமிழுரைகடை ஒரு புது வழியில் விருத்தி யடையலாயிற்று. ஒரு மொழியில் புதிய கலைகள் உருவாகும் போது புதிய கருத்துக்கள் அம்மொழியிற் புகுதலுண்டு. ஆகவே, அவற்றை வெளியிடுதற்கு ஏற்ற வாயிலாக மொழி நடை விருத்தியடைதல் இயல்பாகும். ஆங்கிலக் கல்வி, விஞ் ஞானக் கலை வளர்ச்சி, பொதுமக்களின் விழிப்புணர்ச்சி முத லிய பல காரணங்கள் தமிழுரைநடை வளர்ச்சிக்குச் சாதகமா யிருந்தன. பல்வகைப்பட்ட பொருள்களையெல்லாம் எடுத்துக்
கூறுதற்கு ஏற்ற கருவியாக அது கையாளப்பட்டு வரலால், அது ஆற்றல் வாய்ந்ததொன்ருக இக்காலத்தில் விளங்குகின் றது. அதனுலேதான் இக்காலப்பகுதி உரைநடைக்குரிய காலப் பகுதி எனக் கருதப்படுகின்றது. பழைய சாதிக்கட்டுப்பாடு,
28

Page 118
218 தமிழ் இலக்கிய வரல்ாறு
சமயக் கட்டுப்பாடு, பொருளாதார இன்னல்கள் முதலியவற்றி
லிருந்து விடுதலைபெறுதற்கு வேண்டிய விழிப்புணர்ச்சியோடு
ஒரு புதிய சமுதாயம் உருவாகிக்கொண்டு வரும் இக்காலத்
தில், மக்கட் குழுவினரிடத்தே உலக வாழ்க்கை முக்கிய இடம்பெறுகின்றது. அவ்வாழ்க்கையினை உயர்த்துதற்கு உத வும் மொழிநடைதான் அச்சமுதாயத்தின் கண் உயிருட்ன் வாழ முடியும். ஆகவே, பழைய உரைநடை சிறிது சிறிதாகக் கைவிடப்படும் நிலை இந்நூற்றண்டின் முற்பகுதியிலேயே ஆரம்பித்துவிட்டது. இங்ங்னம் பழைய நடையினைக் கைவிட்டு, காலத்தின் போக்கிற்கு உரிய புதிய உரைநடைகளை அமைப்பதில் ஈடுபட்ட ஆசிரியர்களுள் பாரதி, வ. வே. சு. ஐயர், சாமிநாதையர், கலியாணசுந்தரமுதலியார், மறைமலை யடிகள், புதுமைப்பித்தன் முதலியோர் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர்கள். பத்தொன்பதாம் நூற்ருண்டின் இறுதியில் வாழ்ந்த வேதநாயகம்பிள்ளை, ராஜமையர் ஆகியோர் கையாண்ட உரை நடையும் இப்புதுவழியிற் செல்லும் பண்பு வாய்ந்தனவாக உள்ளன. நாவலர் முதலானுேர் தமிழுரைகடையை ஆற்றல்
வாய்ந்ததாகச் செய்தனரெனினும் வேதாநாயகம்பிள்ளை தம்
முடைய காவல்களில் தமிழுரைகடையைக் கையாண்டதுபோல அக்காலத்தில் வாழ்ந்த பிற ஆசிரியர்கள் கையாளவில்லை. அவர் கூற எடுத்துக்கொண்ட விஷயங்களைப்பற்றி எத்துணைத் தெளிவாகக் கூறியிருக்கின்றனர் என்பதை அந்நூல்களைப் படித்தறியலாம். கவிதையிற் புலப்படுத்த வேண்டிய உணர்ச்சி பேதங்களை உரைநடையிலும் வெளிப்படுத்தல் கூடும் என்பதை முதன்முதலாகக் காட்டிவைத்தவர் ராஜமையர் எனக்கூறுதல் பொருத்தமாகும். இங்ஙனம் 19-ம் நூற்ருண் டின் தொடக்கத்தில் தமிழுரைநடையிலே சில புதிய பண்பு கள் காணப்பட்டபோதும், பாரதியின் உரைநடையிலேதான் நாம் இக்காலத்துக்கு ஏற்ற நடைக்கு உரிய சிறப்பியல்புகள் சிலவற்றைக் காண்கின் ருேம். வழக்கிலுள்ள சொற்களும்
இலக்கண அமைதிகளும் பொருந்தப்பெற்ற ஒரு நடையைத்
 

இருபதாம் நூற்றண்டு 219
தான் பொதுசன வாழ்க்கை முக்கிய இடம்பெற்றுள்ள ஒரு சமுதாயம் ஏற்றுக்கொள்ளும் என்பதைப் பாரதி நன்கு அறிக் திருந்தார். ஆகவே, உயிருள்ள செய்யுள்நடை ஒன்றினை அவர் ஆரம்பித்து வைத்ததுபோலவே, அத்தகைய ஒரு உரை நடையினையும் தொடக்கிவைத்தனர்; எனினும், அவர் இயற் றிய கவிதைகள் அவருக்குப் புகழை ஈட்டிக் கொடுத்தது போல அத்துணைச் சிறப்பாக உரைநடை புகழைக் கொடுக்க வில்லை. கவிதையிற் காணப்படும் சிறப்பியல்புகள் சிலவற்றை அவர் உரைநடையும் பெற்றுள்ளது. தர்க்க முறையாகவும் தெளிவாகவும் ஒன்றைக் கட்டுரைத்தற்கு அவ்வுரைகடை ஏற்ற கருவியாக அமையமாட்டாது என்பதனுற் போலும் அது போற்றப்படவில்லை; எனினும், வழக்கிலுள்ள பதங்களைச் சிறிய வாக்கியங்களில் அமைத்து எழுதும்முறை பாரதிகாலம் தொடக்கமாக விருத்தியடைந்துவருகிறது.
பொதுசனம் ஏற்கக்கூடிய ஒரு மொழிநடைதான் இக் காலத்திற்கு உரியது என்பதை அறியாத எழுத்தாளர் பலர் தாம்தாம் விரும்பிய நடையினைக் கையாண்டு உரைநடை நூல்களை இயற்றியுள்ளனர். சிலர் வடமொழி கலவாத தனித் தமிழ் நடையொன்றை வளர்க்க முயன்றனர். வேறுசிலர் வடமொழிச் சொற்களை வேண்டாத அளவிற்குப் புகுத்தி மணிப்பிரவாள நடையையொத்த ஒரு புதிய கடையில் எழுத முற்பட்டனர். இன்னுஞ் சிலர் வழக்கொழிந்த சொற்களைப் பிரயோகித்துப் பழைய உரையாசிரியர்கள் கையாண்ட உரை நடையைத் தழுவத்தொடங்கினர். செய்யுளிற் காணப்படும் எதுகைமோனை முதலிய ஓசைப்பண்புகளை உடைய உரை நடையினைச் சிலர் எழுதினர். இவ்வாறெல்லாம் எழுத ஆரம் பித்தவர்களின் முயற்சி பெரும்பயன் அளித்திலது என்றே கூறலாம். வடசொற் கலவாத தனித்தமிழ் நடையொன்றினைத் தொடக்கிவைத்த பெருமை மறைமலையடிகளுக்கே உரியது அந்நடை தூய செந்தமிழின் ஆற்றலைப் புலப்படுத்துவதாக அமைந்தபோதும், அது காலத்தின் போக்கிற்கு இணங்கிய

Page 119
220 தமிழ் இலக்கிய வரலாறு
நடையன்ருகலின், அது சிறிது சிறிதாகக் கைவிடப்படுகின் , றது; எனினும், இந்நூற்றண்டில் வாழ்ந்த உரைநடை ஆசிரி யர்களுள் அடிகளும் ஒருவராக மதிக்கப்படுவார் என்பதில் ஐயமில்லை. சைவத்திற்கும் தமிழிற்கும் அருந்தொண்டு ஆற் றிய அடிகள் அந்நடையில் இயற்றிய நூல்கள் பல. அவற் றுட் சிறந்த உரைநடை இலக்கியங்களாக மதிக்கப்படுவன குமுதவல்லி, கோகிலாம்பாள் கடிதங்கள், சிந்தனைக் கட்டுரைகள் என்பன. முல்லைப்பாட்டு ஆராய்ச்சி, பட்டினப்பாலை ஆராய்ச்சி, மாணிக்கவாசகர் காலமும் வரலாறும், தமிழர் நாகரிகம் முதலிய நூல்கள் அடிகளது ஆராய்ச்சித்திறனையும் தமிழறிவையும் நன்கு புலப்படுத்துவன.
பேச்சுவழக்கை ஒட்டியே எழுத்துவழக்கும் இருத்தல் வேண்டும் என்னும் உண்மையை உணர்ந்த எழுத்தாளர் பலர் இக்காலத்தின் போக்கிற்கு இனங்க, வேகமும் உயிர்ப் பண்பும் பொருந்தப்பெற்ற இலகுவான உரைநடையொன்றைக் கையாளத் தொடங்கினர். அவர்களுட் சாமிநாதையரும் கலி யாணசுந்தர முதலியாரும் சிறந்தவர்கள். பாமரமக்களும் படித் துப் பொருளறிந்து இன்புறக்கூடிய ஒரு தெளிந்த நடையில் அவர்கள் தம் வாழ்க்கை அனுபவங்களையும் கருத்துக்களையும் வெளியிட்டுள்ளனர். தமிழ்த்தாயின் அருந்தவப் புதல்வர்களுள் ஒருவராகிய ஐயரவர்கள் தம் வாழ்க்கை முழுவதையும் தமிழ் மொழிக்கு அர்ப்பணம் செய்து, ஏட்டுவடிவிற் கிடந்த பல நூல்களைத் திருந்திய முறையில் அச்சிட்டு உலகிற்கு அளித்த பேருதவிக்குத் தமிழ்மக்கள் என்றும் கடமைப்பட்டுள்ளனர். அவர்கள் ஏட்டுவடிவத்திற் கிடந்த நூல்களை ஆராய்வதிலும் அச்சிடுவதிலும் ஊக்கம் செலுத்திவந்தமையால், நாம் அவரை ஓர் ஆராய்ச்சியாளரெனக் கருதுகின்றேமன்றிச், சிறந்த உரைநடையாசிரியராக மதிப்பதில்லை. அவர் முதுமைப் பரு வத்தை அடைவதற்கு முன்னும் பின்னும் எழுதியுள்ள உரை நடைப் பகுதிகளை ஒப்பிட்டு நோக்குவோமாயின் இந்நூற் றண்டில் உரைநடை வளர்ந்தவாற்றையே கண்டுகொள்ளலாம்.

இருபதாம் நூற்ருண்டு 221
- இந்நூற்றண்டின் முற்பகுதியில் அவர் எழுதிய உரைப்பகுதிகள், அவர் அச்சிட்ட நூல்களுக்கு முகவுரைகளாகவும் கதைச்
சுருக்கங்களாகவும் உள்ளன. பிற்காலங்களில் எழுதிய நான் கண்டதும் கேட்டதும், புதியதும் பழையதும், நல் லுரைக் கோவை, நினைவு மஞ்சரி என்பன தம்முடைய வாழ்க்கை அனுபவங்களைச் சித்திரிப்பனவாக உள்ளன. தம் முடைய வாழ்க்கையின் முற்பகுதியில் உரையாசிரியர்கள் கையாண்ட பழைய உரைநடையைத் தழுவிப் பண்டிதரானுேர் படித்தறியக்கூடிய நடையில் எழுதியுள்ளனர். அந்நடையாற் பயனில்லை என்பதை உணர்ந்து, காலத்தின் போக்கிற்கு இணங்கப் பாமரமக்களும் படித்து இன் புறக்கூடிய ஒர் இலகு வான நடையினைக் கையாண்டு, தம் முதுமைப்பருவத்தில் நினைவு மஞ்சரி முதலிய நூல்களை எழுதினர். பேச்சுவழக்கி லுள்ள சொற்களை இனிமையும் எளிமையும் உள்ள வாக்கி யங்களில் அமைத்து ஒரு தெளிவான நடையினை அந்நூல் களிற் கையாண்டிருக்கின்றனர். இப்புதிய நடையின் ஆற் றலை அவர் நன்கு அறிந்தே பழைய நடையினைக் கைவிட்ட னர் என நாம் கொள்ளவேண்டியிருக்கின்றது. காலத்தின் போக்கு அவருடைய நடையை முற்றக மாற்றிவிட்டது. தேசீய இயக்கம் தமிழ் நாட்டிலே தோன்றிய காரணத்தால் சன சமூகத்திற்கு அரசியல் அறிவைப் புகட்டும் நோக்கமாகப் பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியவர்களுட் சிறந்துவிளங்கு பவர் கலியாணசுந்தர முதலியார் கேட்போர் உணர்ச்சி ததும்பும்படி நாட்டுமக்கள் நலம் குறித்து அவர் பேசிய பேச்சுக்களில் அவருடைய மொழியாற்றல் நன்கு புலப்படு கின்றது. அரசியற்றுறைகளிலே தமிழ்மொழி வளமுடையதாக வளர்ந்துவருதற்குப் பேருதவி புரிந்தவர் கலியாணசுந்தர முதலியார் எனலாம். தெளிவும் இனிமையும் உள்ள ஒரு நடையில் மக்களுடைய உள்ளத்தைப் பிணிக்கக்கூடிய
வகையிற் பல கட்டுரைகளையும் நூல்கள்ையும் எழுதியுள்ளனர்.
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின்

Page 120
222 தமிழ் இலக்கிய வரலாறு
பெருமை அல்லது வாழ்க்கைத்துணை, முருகன் அல் லது அழகு முதலியன அவருக்குப் புகழை ஈட்டிக்கொடுத்த
அவர் நூல்களுட் சில.
தமிழிலுள்ள சிறுகதை எழுத்தாளர்களுள்ளே தன்னிக
ரில்லாத் தலைவனுக விளங்கிய புதுமைப்பித்தன் கையாண்ட
உரைநடை தமிழ்மொழியில் முன் காணப்படாத ஒரு புதிய கடையாகும். சாதாரண சொற்களைக்கொண்டு தம்முடைய விசித்திரமான மனுேபாவங்களையும் புதிய கருத்துக்களையும்
இலகுவாகவும், படிப்போர் மனத்திலே தெளிவாகப் பதியக்
கூடியதாகவும் கூறிவிடுகின்றனர். அவருடைய எண்ணக் கருத்துக்களுக்கு ஏற்பத் தமிழ்மொழி நெளிந்து வளைந்து கொடுப்பதைப் பார்க்கும்போது, தமிழ்மொழிக்கு உள்ள ஆற் றல் எத்தகையது என்பதை நாம் காணமுடிகிறது. இப் பொழுது அதன் சக்தியைப் பயன்படுத்துவதற்குப் புதுமைப்
பித்தன் போன்ற இலக்கிய கர்த்தாக்கள் இல்லாமையால்,
நாம் அதன் சிறப்பைக்கண்டு இன்புற முடியாதிருக்கின்றது. அவர் கையாண்ட உரைநடைக்கு மேல்வரும் உரைப்பகுதி ஓர் எடுத்துக்காட்டாகும்:-
'கவிதை கவிதை என்று சொல்லுகிருர்களே அதைப்பற்றி எழுதவேண்டும் என்று எனக்கு வெகுநாளாக ஆசை. இன்றைக் குத்தான் முடிந்தது.
பே ைஎங்கேயடா? அடே ராசா, நீ எடுத்தாயா? குரங்கு களா ஒன்றை மேசைமேல் வைக்கவிடாதீர்கள். அது பேனு வாகவா இருக்கிறது? இருந்தாலும், இந்தக் குழந்தைகள் இருக் கிறதே, சனியன்கள். மழலையாம், குழலாம், யாழாம்! அதை விட ஒரு ஒட்டைக் கிராமபோனை வைத்துக்கொண்டு காதைத் துளைத்துக்கொள்ளலாம்.
குழந்தைகளால் என்ன பிரயோஜனம்? சுத்தத் தமிழ்பேசத் தெரியுமா? அவைகளுக்குத்தான் என்ன ஒரு கூட்டத்திலே பழகத் தெரியுமா? இன்னும் அழாமல் இருக்கத்தெரியும்ா?
து ?
 

இருபதாம் நூற்றண்டு 223
எங்கள் வீட்டு 'ராஜா'வைப்பற்றிச் சொல்லவா? சோற்றுக் குத் தாளம் போட்டாலும், வீட்டுக்கொரு ராஜா'விற்குக் குறை வில்லை. அதில் மட்டும் பாரதி சொன்னதிற்கு ஒருபடி மேலாகவே யிருக்கிருேம். எல்லோரும் இன்னுட்டு மன்னர்களின் தகப்பன் LDIT j!"
புதுமைப்பித்தனைப் போலவே இக்காலப் பேச்சுவழக்கி லுள்ள தமிழைக் கையாண்டு நல்ல உரைநடையிற் சிறுகதை, நாவல் முதலியவற்றை எழுதி, இப்புதிய நடையினை நிலை பெறச்செய்த எழுத்தாளர்கள் பலராவர். அவர்களுள் வ. 所。 - - ༽ རྣམ་གྲྭ། ད་དུང་ 。リ கல்கியாசிரியர் கிருஷ்ணமூர்த்தி, கு. ப. ராஜ முதலியோர் இந்நடையினைச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர். பழைய நடையைத் தழுவிப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதித் தமிழ்த்தொண்டு புரிந்த பெரியார்களுள் அரசன் சண்முகனுரும் ரா. இராகவையங்காரும் விபுலானந்த அடிகளும் பாராட்டத் தக்கவர்கள். இந்நூற்றண்டில் தமிழிலக்கண அறிவில் ஒப் புயர்வற்று விளங்கிய அரசன் சண்முகனுர் பல சிறந்த கட் டுரைகளையும் சண்முகவிருத்தி என்னும் இலக்கண ஆராய்ச்சி நூலினையும் எழுதியுள்ளனர். அவருடைய நுண்ணறிவையும் உரைநடையாற்றலையும் அவற்றிற் கண்டு தெளியலாம். தமிழிலக்கியங்களுட் பொதிந்துகிடக்கும் நுண்ணிய கருத்துக்க ளேச் சுவைபட எடுத்துக்கூறும் வன்மையும் தமிழறிவும் ஆராய்ச்சித் திறனும் ஒருங்கு வாய்க்கப்பெற்றவர் ரா. இராக வையங்காரவர்கள். இவர் பாரி வெண்பா முதலிய செய்யு ளிலக்கியங்களை இயற்றியதைவிட, சேதுநாடும் தமிழும், நல்லிசைப் புலமை மெல்லியலார், தமிழ் வரலாறு முதலிய பல ஆராய்ச்சி நூல்களையும் எழுதியுள்ளனர். சிறந்த உரைநடை வன்மையும் செய்யுளியற்றும் ஆற்றலும் ஒருங்கு வாய்க்கப்பெற்ற விபுலானந்த அடிகள் இயல், இசை, நாடக மாகிய முத்தமிழையும் ஆராய்ந்து பல அரிய கட்டுரைகளை எழுதியுதவியதோடு, மதங்கசூளாமணி, யாழ்நூல் என்ப வற்றை எழுதியுள்ளனர். பல நூற்ருண்டுகளாக மறைந்து

Page 121
224 தமிழ் இலக்கிய வரலாறு
கிடந்த தமிழரின் பண்ட்ை இசைக் கருவிகள், பண்முறை
முதலியவற்றைப் பல நூல்களின் உதவிகொண்டு ஆராய்ந்து தமிழுலகிற்கு வெளிப்படுத்திய பெருமை அடிகளுக்கே உரியது.
இருபதாம் நூற்றண்டில் எழுந்த உரைநடை இலக்கியங்களை நாவல், சிறுகதை, இலக்கிய விமர்சனம் அல்லது நலன் ஆய்தல் என மூன்றக வகுக்கலாம். ஆங்கிலம் முதலிய ஐரோப்பிய மொழிகளிற் பெரிதும் விருத்தியடைந்துள்ள இவ் விலக்கிய வகைகள் ஆங்கிலக் கல்வியைத் தமிழ் மக்கள்
கற்கத் தொடங்கியதன் பயனுகத் தமிழ் மொழியின்கண்
புதிதாக வந்துள்ளவை. சென்ற 400 ஆண்டுகளாக ஐரோப்பா வில் வளர்ச்சியுற்றுவரும் நாவல் இலக்கிய முறையைத் தழு வித் தமிழில் இலக்கியங்களை இயற்றத் தொடங்கிய ஆசிரி யர்களுள்ளே 19-ம் நூற்றண்டில் வாழ்ந்தவர்களுள் மயூரம் வேதநாயகம்பிள்ளை, ராஜமையர், சூரியநாராயண சாஸ்திரியார் ஆகிய மூவரையும் சிறப்பாகக் குறிப்பிடலாம். வேத நாயகம்பிள்ளையவர்கள் இயற்றிய இரு கதைநூல்களுள் ஒன்று பிரதாபமுதலியார் சரித்திரம், மற்றது சுகுணசுந்தரி சரித்திரம் என்பதை முன்னுள்ள அதிகாரத்திற் குறித்துள்ளோம். உண்மை யில் இவற்றை நாவல் இலக்கியமெனக் கூறமுடியாது. ஒரு நூலிலுள்ள கதை, கதாபாத்திரங்கள் என்பன நல்லொழுக்கம், நற்குணம் என்பவற்றைப் புலப்படுத்தும் நோக்கமாக எழு பவை என்றும், நற்குணங்களின் சின்னங்களாகவும் பிறருக்கு வழிகாட்டியாகவும் கதாபாத்திரங்கள் அமைதல் வேண்டும் என்றும், தீய குணங்கள் மக்கள் வெறுக்கக்கூடிய வகையிற் சித்திரிக்கப்படவேண்டும் என்றும் ஆசிரியர் பிரதாபமுதலியார் சரித்திரத்தின் முகவுரையிற் கூறுகின்றனர். இதுவே ஆசிரிய ருடைய கொள்கையாகும். ஆகவே, அதற்கிணங்க அவர் நூலை அமைத்திருக்கின்றனர். அறநெறிகள் பலவும் அறிவுரை கள் பலவும் அவர் நூலிற் கூறப்படுகின்றன. அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான் கினையும் சிறப்பித்துக் கூறும்
காவியங்கள் போல எண்வகைச் சுவைகளும் பிறவும் அமை

இருபதாம் நூற்ருண்டு 225
. பக்கூடிய முறையிலே இந்நூலைக் கொண்டுசெல்கின்றனர். பிரதாபமுதலியார் சரித்திரத்திற் கூறப்படாத அறிவுரை முதலியனவும் உடல்நல முறைகளும் சுகுணசுந்தரி சரித்திரத் தில் ஆங்காங்கு புகுத்தப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான பழமொழிகளும் உவமைகளும் அந்நூலின் நடையினைச் சிறப் பிக்கின்றன. 'பிரதாபமுதலியார் சரித்திரத்திற்கு அளிக்கப் பட்ட நல்வரவேற்பே எனது இவ்விரண்டாவது புனிதத்தை எழுதுவதற்கும் என்னை ஊக்குகின்றது' என்று ஆசிரியர் இந்நூலின் முன்னுரையிற் கூறியிருப்பதை நோக்கும்போது அக்காலத்தில் இத்தகைய அறவழி கூறும் நூல்களுக்குப் பெருமதிப்பு இருந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகின்றது. கதை முக்கியமன்று, அது பழக்கவழக்கங்களின் திருத்தப் பாட்டிற்கு ஒரு கருவியாக அமைந்து சமூகத்தை மேல்நிலைக்குக் கொண்டுவருதல்தான் முக்கியம் என்பது அவருடைய நோக்கமாகும். ஆகவே, இத்தகைய நோக்கங்களை மனத்தில் வைத்துக்கொண்டு பிரதாபமுதலியார் சரித்திரத்திற் கிளைக் கதைகள் பலவற்றை உட்புகுத்திக் கதையை வளர்த்துச் செல்வதனுலும் சுகுணசுந்தரி சரித்திரத்தில் அறவுரைகள் முதலியவற்றையும் வாழ்க்கையிற் சாதாரணமாக நடை முறையிற் காணமுடியாத அற்புத சம்பவங்களையும் இடை யிடையே புகுத்திச் செல்வதனுலும் அந்நூல்கள் நாவலின் பண்பை இழந்து விடுகின்றன; எனினும், பிரதாபமுதலியார் சரித்திரம் ஐரோப்பிய மொழியில் எழுந்த முதல் நாவல் எதற்கும் தரத்திற் குறைந்ததன்று.
வேதநாயகம்பிள்ளைக்குப்பின் வாழ்ந்த ராஜமையர் எழுதிய கமலாம்பாள் சரித்திரந்தான் தமிழில் முதன்முதலாகத் தோன்றிய நாவல் என்று கூறலாம். அந்நூலில் அக்காலத்து வாழ்க்கைமுறை நன்கு சித்திரிக்கப்பட்டுள்ளது. அந்நூலைவிட மனிதன்-அவன் தாழ்வும் ஏற்றமும் என்ற வியாசத்தைத் தமிழிலும், வேதாந்த உல்லாசம் என்னும் நூலை ஆங்கிலத்திலும் எழுதியுள்ளனர். அவர் இருபத்தைந்து
29

Page 122
226 தமிழ் இலக்கிய வரலாறு
வயதிலேயே இறந்துவிட்டனர். அவர் இன்னும் சிறிதுகாலம் இருந்திருப்பின் பல நூல்களை எழுதித் தமிழைச் சிறப்பித்திருப்
பார். வேட்ஸ்வத், ஷெல்லி முதலிய ஆங்கிலப் புலவர்களிடத் தில் அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. அவர்களைப் போலவே ராஜமையரும் சிறந்த கற்பனுசக்தி படைத்தவர் என்பதை அவர் நூல்களிலிருந்து அறியலாம். அவருடைய ஆழ்ந்த சிந்தலை யையும் கற்பனைச் சிறப்பையும் அவருடைய நாவல் இலக்கியம் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது. அது இற்றைக்கு அறுபது ஆண்டுகளுக்குமுன் வெளிவந்தபோதும் அதற்குப்பின் தமிழில் வெளிவந்த நாவல்கள் எல்லாவற்றி லும் அதுவே சிறந்த நாவல் என மதிக்கப்படுகின்றது. பாதிக் கதையிலே வேதாந்தக் கருத்துக்களைப் பொருத்தமான வகையிற் கொணர்ந்து இணைத்துவிடுகின்றனர்; எனினும், அவர் வழக்குமொழியைக் கையாளும் திறமும் குணசித்திரங் களே வளர்த்துச் செல்லுந் திறமும் போற்றததக்கவை. அவருக் குப்பின் சரவணப்பிள்ளை என்ற ஆசிரியர் ஆங்கில நாவ லாசிரியர் சாள்ஸ் கிங்சிலி என்பவர் எழுதிய ஹைபாதியா, என்னும் நூலைத் தழுவி மோகனுங்கி என்னும் நாவலை இயற்றியுள்ளனர். கமலாம்பாள் சரித்திரத்துக்குப்பின் தோன் றிய நாவல்களுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது மாதவையா எழுதிய பத்மாவதி சரித்திரம் என்னும் நூலேயாகும். அதற்குப்பின் நடேச சாஸ்திரியார் எழுதிய தீனதயாளு என்னும் நாவல் சிறந்ததொன்றகும். கமலாகூஜி என்னும் நாவல் முதலாகச் சிவகுமாரன் என்னும் நாவல் ஈருகப் பொன்னுசாமிப்பிள்ளை எழுதிய நாவல்கள் ஆறும் படித்து அனுபவிக்கத்தகுந்த சிறப்புடை நாவல்களாகும். மதிவாணன் என்னும் நாவலிற் பழைய உரையாசிரியர் கையாண்ட உரை நடையைத் தழுவித் தமிழ் நாட்டுக் கதையொன்றைச் சூரியநாராயண சாஸ்திரியார் அழகாகச் சித்திரித்துக் காட்டு கின்றனர்.
ستالي

இருபதாம் நூற்றண்டு 227
ஆங்கிலக் கல்வி பெரிதும் விருத்தியடைந்துள்ள இந் நூற்றண்டிலே ஆங்கிலம் படித்த எழுத்தாளர் பலர் திடுக் கிடும் சம்பவங்களையும் பயங்கரச் சூழ்நிலைகளையும் தம்மகத்தே கொண்டுள்ள ஆங்கில நாவல்கள் பலவற்றைப் படித்து, அவற்றைத் தழுவிப் பொழுதுபோக்கிற்கு உரிய பல கதை நூல்கள்ைத் தமிழிலே தந்திருக்கின்றனர். அராபிக் கதைகளை யொட்டி விநோதமான கதைகள் அமைந்த நூல்கள் பல வற்றையும் எழுதியிருக்கின்றனர். இங்ாவனம் துப்பறியும் நாவல் களையும் பிறவற்றையும் எழுதிய ஆசிரியர்களுள் ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார் முதலி யோர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள். கல்வியறிவிற் குறைந்த பெண்கள் பொழுதுபோக்குதற்கு விரும்பிப் படிக்கக் கூடிய நாவல்களை ரங்கராஜூவும் வை. மு. கோதைநாயகி அம்மாளும் எழுதியுள்ளனர். அம்மையாரவர்கள் பெருந்தொகை யாக நாவல்களை எழுதியிருப்பது பாராட்டத்தக்கதே.
ராஜமையர் காலத்துக்குப்பின் நூற்றுக்கணக்காக நாவல்கள் தமிழில் வெளிவந்தபோதும், அவற்றின் கண் பெரும்பா லும் இலக்கியச் சிறப்பினைக் காண்பது அரிதாகும். அவற் றுட் பெரும்பாலானவற்றின் கண் கதை மட்டுமே பிரதான இடம் பெற்றுள்ளதன்றிக், கதாபாத்திரங்கள் உண்மைத் தத்துவமுடையனவாகச் சிருட்டிக்கப்படவில்லையென்றே கூற லாம். வாழ்க்கைச் சம்பவங்களை உள்ளவாறே எடுத்துக் கூறு கின்ற நாவல்களை வாசகர்கள் விரும்பிப் படிப்பதுண்டு. வாசகர்களுக்குக் கதைப்போக்கிற் கவ்ர்ச்சியை உண்டாக்கக் கூடிய முறையிற் கதைகள் புனையப்பட்டுள்ள நாவல்களையும் மக்கள் விரும்பிப் படிப்பதுண்டு. இத்தகைய நூல்களை மக்கள் விரும்பிப் படிப்பதனுல் அவற்றைச் சிறந்த இலக்கியங் கள் என்று கொள்ளமுடியாது. இலக்கியங்களுக்குக் கலைப் பண்பு இன்றியமையாதது. வாசகர்களை வசீகரிக்கக்கூடிய எத்துணைச் சிறப்புக்கள் ஒரு நூலின் கண் இருந்தபோதும் அதன் கண் கலைப்பண்பு இல்லாவிடின் அது இலக்கியமாகாது

Page 123
228 தமிழ் இலக்கிய வரலாறு
வாழ்க்கையுண்மைகளை ஆதாரமாகக் கொண்டு அவற்றைப்
புலப்படுத்துதற்கு ஏற்ற கதாபாத்திரங்களைச் சிருட்டித்து, வளர்ச்சிக்கிரமத்தில் அமைத்துக் கதைப்புணர்ப்பின் உதவி கொண்டு கதையை வளர்த்துச்செல்லும் நாவல்களே கலைச்
சிறப்புடையனவாகக் கொள்ளப்படுகின்றன. அத்தகைய நாவல்கள் தமிழில் மிகச் சில என்றே கூறலாம். மாத்வையா
எழுதியுள்ள பத்மாவதி சரித்திரம் போன்ற நாவல்களே
சிறந்த இலக்கியங்களாக எண்ணத்தகுந்தவை. இந்நூலில் மாதவையா தமது காலத்தில் நிலவிய கிராமவாழ்க்கை, பட்டின வாழ்க்கை முதலியனவற்றைத் திறம்படச் சித்திரித்துக் காட்டு கின்றனர். பிரசார மனப்பான்மையுடன் அந்நூலை அவர் இயற் றியதால், அதன் கண் வரும் கதாபாத்திரங்கள் சிறப்பாக அமையவில்லை என்றே கூறலாம், மைதிலி, திக்கற்ற இரு குழந்தைகள், பொற்ருெடி முதலியவையும் இத்தகையனவே.
இனி நாவல் என்னும் இலக்கிய வகைக்குத் தமிழிலே உருவமும் உயிரும் கொடுத்து இயற்றிய ஆசிரியர்களுள் கல்கி முதலில் வைத்து எண்ணத்தகுந்தவர். பாமர மக்கள் முதலாகக் கற்றேர் ஈருக உள்ள தமிழ்மக்கள் அனைவரும் தமிழ்ப் பத்திரிகைகளையும் புத்தகங்களையும் விரும்பிப் படித் தற்கு மூலகாரணமாக இருந்தவர் கல்கியவர்கள் என்றே கூறலாம். இக்காலத் தமிழில் எதையும் எழுதமுடியும் என் பதைச் சாதித்துக் காட்டியுள்ளனர். எதை எழுதினும் அதைத் தெளிவாகவும் சுவையுள்ளதாகவும் எழுதும் வன்மை அவருக்கு உண்டு. அவர் கலைப்பண்பு வாய்ந்த பல சிறு கதைகளை எழுதியபோதும் அவரை ஒரு சிறுகதை ஆசிரியர் எனக் கொள்வதைவிட, ஒரு சிறந்த நாவலாசிரியர் எனக் கொள்ளு தலே பொருத்தமுடைத்தாகும். அழகிய தமிழ் கடையிலே அவர் முதலில் எழுதிய நாவல் கள்வனின் காதலி என்பது. அது சிறந்த வருணனைகளையும் உயிர்த்துடிப்புள்ள கதாபாத் திரங்களையும் கொண்டு விளங்குகின்றது. வாழ்க்கையிற் காணப்படும் சிக்கல்கள் சிலவற்றை உட்பொருளாகக்கொண்டு

《། , இருபதாம் நூற்ருண்டு 229
ܒ݂ ܠ
உஇசுவையுள்ள திருப்பங்களை அமைத்துக் கதையி%ன இனிமை புறக் கொண்டுசெல்லும் வகை படித்து இன்புறற்பாலது. அவர் எழுதிய பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் என்னும் காவல்கள் சரித்திர நாவலின் பாற்படுபவை. தமிழகத்தைப்பற்றிய வரலாற் றுச் சம்பளங்கள் சிலவற்றின் உதவிகொண்டு பல்லவர் ஆட் சிக் காலத்திலும் சோழப்பெருமன்னர் ஆட்சிக் காலத்திலும் தமிழ் நாட்டிலிருந்த பண்பாட்டு நிலையினை அகக்கண்ணுற் கண்டு சித்திரித்துக் காட்டும்வகை போற்றற்குரியது. அக் காலத்துத் தமிழ் மக்களின் காதல், வீரம், காட்டுப்பற்று முதலிய உணர்ச்சிபேதங்களை மிகத்தெளிவாக வெளிப்படுத்தி யிருக்கின்றனர். அவருடைய தமிழ்கடை ஒரு தனிப்பண்பு வாய்ந்தது. அந்நடையினைத் 'துள்ளும் தமிழ்நடை' என்று நவீனன் கூறியிருப்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. சேர். வால்டர் ஸ்கொட் என்னும் நாவலாசிரியர் எங்ாவனம் சரித்திர நாவல்களை எழுதி ஆங்கிலத்தைச் சிறப்பித்தனரோ அங்ாவனமே கல்கியும் சரித்திர நாவல்களை எழுதித் தமிழிலக்கியத்தை வளம்படுத்தியுள்ளனர். அவர் காட்டிய வழியைப் பின்பற்றித் தி. கா. சுப்பிரமணியன், சாண்டிலியன், அரு. ராமநாதன் முதலானுேர் தமிழிற் சரித்திர காவல்களை எழுதியுள்ளனர்.
இக்காலத்திலே தமிழ்மொழியில் நூற்றுக்கணக்காக வெளி வந்துள்ள நாவல்களை இச்சிறு நூலின் கண் தனித்தனி எடுத்து ஆராய்தல் முடியாதாகும். அவை கூறும் கதைகொண்டு அவற்றை வகுப்பதாயின், நடுத்தரக் குடும்பங்களின் வாழ்க்கையைச் சித்திரிப்பன, இலட்சியக் கொள்கைகளை ஆதரித்துக் கூறுவன, கிராம மக்களின் வாழ்க்கையையும் அவ் வாழ்க்கையிற் காணப்படும் குறைநிறைகளையும் கூறுவன, காதலைப் புனைந்து கூறுவன என்று இவ்வாறு வகுத்துக் கூறலாம். நாவலின் சிறப்பு அது கூறும் கதையிலே தங்கி யிருக்கின்றது எனக் கொள்ளுதல் பொருந்தாது. எத்தகைய கதை கூறப்படினும் அது கலைப்பண்பு அமையும் வகையிற்

Page 124
230 தமிழ் இலக்கிய வரலாறு
கூறப்படுதல் ஒரு சிற்பி கல்லிலே ஓர் உருவத்தைச்
செதுக்கும்போது அவ்வுருவத்தின் அங்கங்கள் யாவும் எவ்
வாறு அமையவேண்டும் என்று மனத்தில் எண்ணிக் கலைப் பண்பு அழியாத வகையிற் செதுக்கி அவ்வுருவத்தை அழகு பொலிய அமைத்துக் காட்டுகின்றனுே, அவ்வாறே காவ லாசிரியன் நாவலுக்குரிய கலைப்பண்பு ஒளிவிட்டுப் பிரகாசிக் கக்கூடிய முறையில் கதையை நடத்திச்செல்லானுயின், அவ்
விலக்கியம் சீரிய வாழ்வுபெற்று விளங்கமுடியாது. ஆகவே,
இன்றுள்ள காவல்களுள் அழியாது நிலைபெறக்கூடியவை எவையென்று இப்பொழுது துணிந்துகூற முடியாது; எனி னும், சிறப்புள்ள நாவல்களின் பெயரை மட்டுமே ஈண்டுக் குறிப்பாம்
தமிழிலே வெளிவந்துள்ள நாவல்களுட் பெரும்பாலானவை
தமிழ்நாட்டில் வாழும் நடுத்தரக் குடும்பங்களின் வாழ்க்கையை எடுத்துக்கூறுவன. நடுத்தரக் குடும்பங்களிலுள்ள பெண்களே பெரும்பாலும் பொழுதுபோக்கிற்காக நாவல்களைப் படிக்கின் றனராதலின், அக்குடும்பங்களை ப்பற்றிய கதைகளை அவர்கள் விரும்பிப் படிப்பர் என்று எண்ணி அத்தகைய நாவல்களைப் பெருந்தொகையாக நாவலாசிரியர்கள் எழுதினர் என்றே கூறலாம். அத்தகைய நாவல்களுள்ளே ஸ். வி. வி. எழுதிய பொம்மி பி. எம் கண்ணன் எழுதிய பெண் தெய்வம், லட்சுமி எழுதிய பெண்மனம், காஞ்சனேயின் கனவு, தேவன் எழுதிய மிஸ்டர் வேதாந்தம், க, நா. சுப்பிரமணியன் எழுதிய பொய்த்தேவு, மாயாவி எழுதிய
அன்பின் ஒலி, சங்கமம் முதலியன சிறப்பாகக் குறிப்
பிடத்தக்கவை.
இலட்சியங்களையும் அரசியற் கொள்கைகள் முதலிய வற்றையும் சிறப்பித்துக் காட்டும் நோக்கமாகவும் அவற்றைப் பற்றிப் பிரசாரஞ்செய்யும் கோக்கமாகவும் எழுந்த நாவல்க ளுள் வ. ரா. எழுதிய கோதைத்தீவு, சுந்தரி என்பவை முக்கியமானவை, அவரே இத்தகைய காவல்கள் தமிழில்
" لدور قليدي.

இருபதாம் நூற்றாண்டு
231 செழுதுவதற்கு வழிகாட்டினர் என்று கூறலாம். மணிக்கொடி எழுத்தாளர் அவரைத் தங்கள் தலைவர் என்று சொல்லுவ துண்டு. தமிழில் வசனம் பழைய இலக்கண வரம்புக்குள் அமையவேண்டும் என்னும் நியதியில்லை என்பது அவர் கருத் தாகும். இந்நூற்றாண்டுக்கே உரிய புதிய நடையொன்றை அவர் தொடக்கிவைத்தனர் எனலாம். வழக்கிலுள்ள சொற் களை யே பயன்படுத்தி எத்தகைய கருத்துக்களையும் தமிழில் வெளிப்படுத்த முடியும் என்பதைச் செய்துகாட்டியுள்ளனர். கா. சி. வேங்கடரமணி எழுதிய தேசபக்தன் கந்தன், அண்ணாத்துரை எழுதிய பார்வதி பி. ஏ., ராஜவேலு எழுதிய காதல் தூங்குகிறது, விந்தன் எழுதிய பாலும் பாவை யும், ரகுநாதன் எழுதிய பஞ்சும் பசியும் முதலிய நாவல்கள் இலட்சிய நாவல்களுக்கு உதாரணங்களாகும். மு. வரதராசன் அவர்களும் இலட்சிய நாவல்கள் பலவற்றை எழுதியிருக் கின்றனர். அவற்றுள் மலர்விழி, அல்லி, கரித்துண்டு முதலியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. - அகிலன் எழுதிய பெண், இன்ப நினைவு முதலிய நாவல்களும் இந்தவகையைச் சேர்ந்தனவே.
இனி, கிராமங்களில் வாழும் மக்களைக் கதாபாத்திரங்க ளாகக் கொண்டு அவர்களுடைய வாழ்க்கையைச் சித்திரித்துக் காட்டும் நாவல்களும் காதற்சுவையை மையமாகக் கொண்டு எழுந்த நாவல்களும் தமி ழிலே பலவுள. கிராமம் வாழ்க்கையைச் சித்திரிக்கும் நாவல்களுக்குச் சங்கரராம் எழுதிய மண்ணாசையையும் ஆர். சண்முகசுந்தரம் எழுதிய பூவும் பிஞ்சும் என்னும் நாவலையும் 'சு கி' எழுதிய விதிவழியே என்னும் நாவலையும் குறிப்பிடலாம். காதற்சுவையைச் சித்திரிக் கும் நாவல்களுக்கு ஆர் வி எழுதிய நிராசை, யுவதி என் பன வற்றையும் 'துமிலன்' எழுதிய கிராமமோகினி என் பதையும் உதாரணமாகக் கூறலாம்.
பிற மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட நாவல் களும் தமிழிற் பல உள. இந்திய மொழிகளுள் வங்காள

Page 125
232 தமிழ் இலக்கிய வரலாறு மொழியிலிருந்தும் மராட்டி மொழியிலிருந்தும் சில நாவல்கள். மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. வங்காள மொழியில் தாகூர் எழுதிய காவல்களுள் மாயாவிநோதினியை பூரீமதி தஞ்சமும், குமுதினியை ரங்கநாயகியும், பூந்தோட்டம், புயல் என்பனவற்றை நா. குமாரசாமியும் மொழிபெயர்த்துள்ளனர். பக்கிம் சந்திரரின் நாவல்களுள் ஆனந்தமடம், விஷவிருட் சம் என்பன மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மராட்டியில் காண்டேகர் எழுதிய நாவல்கள் சிலவற்றைக் க. பூரீ. பரீ. மொழிபெயர்த்திருக்கின்றனர். அவற்றுள் எரி நட்சத்திரம், இரு துருவங்கள் என்பவை குறிப்பிடத்தக்கவை. இந்திய மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட நாவல்களிலும் அதிக மாக ஐரோப்பிய மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட் டுள்ளன. அவற்றுள் ஆங்கில மொழியிலிருந்து மொழிபெயர்க் கப்பட்டவையே பெரும்பாலானவை. ஏனை ஐரோப்பிய மொழி களுள் பிரஞ்சு மொழியில் விக்டர் கியூகோ எழுதியவற்றுள் இரண்டு நாவல்களைச் சுத்தானந்த பாரதியார் மொழிபெயர்த் துள்ளனர். அவை ஏழைபடும்பாடு, இளிச்சவாயன் என்பன. ரூஷிய மொழியில் லியோ டால்ஸ்டாய் எழுதிய நாவல்களுள் போரும் காதலும் என்பதைத் திரிகூடசுந்தரமும் மறுமலர்ச்சி என்பதை முல்லை முத்தையாவும் விஷப்பணம் என்பதை வி. எஸ். வெங்கடேசனும் மொழிபெயர்த்துள்ளனர். மாக்ஸிம் கார்க்கியின் மூன்று தலைமுறைகள் என்னும் நாவலே ரகுநாதன் மொழிபெயர்த்துள்ளனர். எஸ். எஸ். மாரிசாமி ஜெர்மன் மொழியிலிருந்து மொழிபெயர்த்த நூல் துன்பக்கேணி என்பது. அன்புவழி என்னும் ஸ்வீடிஷ் நாவலைக் க. நா. சுப்பிரமணியன் மொழிபெயர்த்துள்ளனர். மேலே கூறிய மொழிபெயர்ப்பாளர்களேவிட கு. ப. ரா. புது மைப்பித்தன், ரா. ஆறுமுகம், த. நா. சேனுபதி, அ. கி. ஜய ராமன், ரா, விழிநாதன், ஆனந்ததீர்த்தன், ப. ரா. முதலியோரும் பல நாவல்களை மொழிபெயர்த்துள்ளனர்.

இருபதாம் நூற்றண்டு, 鲁$3
பிறமொழிகளிலுள்ள நாவல், சிறுகதை, நாடகம் முதலியன ܢ ܚܝܬ݂ ܪܶܓ݂
தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருதலினுலே தமிழிலக் கியம் விருத்தியடைந்து வருகிறது. பிறநாட்டு நல்லறிஞர் இயற்றிய இலக்கியங்கள் தமிழில் வந்து சேரும்போது பிற காட்டு இலக்கிய மரபுகளும் தமிழில் இடம்பெறுகின்றன. அங்ஙனம் இடம்பெறுதல் இலக்கிய வளமுள்ள பிற மொழிகளைப்போலத் தமிழும் வளம்பெற ஏதுவாகின்றது. ஒரு மொழியில் இலக்கிய மரபு காலத்திற்கு ஏற்ற முறையில் மாற்ற முருவிடின் அம்மொழியில் இலக்கிய வளர்ச்சி. குன்றிவிடும் என்பது வரலாற்று நூலறிஞர் கண்ட உண்ம்ையாகும். பண்டைத் தமிழிலக்கியம் வடமொழி இலக்கியத் தொடர்பால் வளம்பெற்ற வகையினைப் பண்டைத் தமிழிலக்கியங்களைப் படித்தறியலாம். தமிழிலே மொழிபெயர்ப்பாக உள்ள இலக்கியங்களோடு ஏனை இலக்கியங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுதுதான் மொழிபெயர்ப்பு அல்லாத இலக்கியங்களின் தரத்தை மட்டிட முடிகிறது. பிறமொழி இலக்கியங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்பொழுது இரண்டு வகையாக மொழி பெயர்க்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்று, தமிழ்ப் பண்பாட் டிற்கு ஏற்றவாறு மாற்றங்களைப் புகுத்தி மொழிபெயர்த்தல்; மற்றது, மாற்றம் ஒன்றும் செய்யாது உள்ளவாறே மொழி பெயர்த்தல். அங்ங்னம் உள்ளவாறு மொழிபெயர்த்தலினுல்ே பிறமொழி மரபுகள் தமிழில் வந்துசேர இடமுண்டாகின்றது. தமிழிலக்கிய வ்ளர்ச்சிக்கும் அது ஏதுவாகின்றது. இக்காலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நாவல்களுட் பெரும்பாலானவை தமிழ்ப் பண்பாட்டிற்குஇணங்க மொழிபெயர்க்கப்பட்டிருத்தலைக் காணலாம். ருஷியமொழி முதலிய ஐரோப்பிய மொழி களிலுள்ள நாவல்களைத் தமிழில் மொழிபெயர்க்கும்போது, அவற்றை அம்மொழிகளிலிருந்து நேரே மொழிபெயர்க்காது ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப் பதனுல், முதனூலிற் காணப்படும் பல இலக்கிய நயங்கள் தமிழ் மொழிபெயர்ப்பில் இடம்பெருமற் போய்விடுகின்றன. ஐரோப்பிய இலக்கியங்களை மொழிபெயர்த்தவர்களுட் பெரும்
30 -

Page 126
ST
234
தமிழ் இலக்கிய வரலாறு பாலோர் ஆங்கில மொழிபெயர்ப்புக்களை ஆதாரமாகக் கொண்டே மொழிபெயர்த்துள்ளனர். அதனால், மொழி பெயர்ப்பால் தமிழிலக்கியம் பெறக்கூடிய இலக்கிய வளத்தினைப் பூரணமாகப் பெறவில்லையென்றே கூறலாம்.
இனி, தமிழிலே சிறுகதையிலக்கியம் தோன்றி வளர்ந்த வாற்றை நோக்குவாம். ஐரோப்பிய நாகரிகத் தொடர்பினால் தமிழில் வந்த புதிய இலக்கிய வகைகளுள் சிறுகதையும் ஒன்றாகும். ஐரோப்பிய மொழிகளில் நாவலிலக்கியம் தோன்றி வளர்ந்தபின்பே சிறுகதையிலக்கியம் தோன்றலாயிற்று. தமிழிலே பிரதாபமுதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம் முதலிய சில நாவல்கள் முதலிலே தோன் றியபோதும் அவற்றைத் தொடர்ந்து சிறுகதையிலக்கியம் தோன்றி வளர்ந்த பின்பே நாவலிலக்கியம் சிறப்பாக வளர்ந்தது எனலாம். நாகரிகம் விரைவாக வளர்ச்சியுறும் இக்காலத்தில் விரிந்து செல்லும் நாவல்களைப் படிப்பதற்கு வேண்டிய நேரம் மக்களுட் பெரும்பாலோர்க்குக் கிடைத்தல் அரிது; அதனால், சிறு கதையிலக்கியம் பல நாடுகளிலும் விருத்தியுறலாயிற்று. சிறு கதை என்பது ஒரு தனிப்பட்ட இலக்கியவகை. நாவலிலும் பார்க்க அள வில் சிறுகதை சிறிதாக இருத்தலின், நாவலின் சுருக்கந்தான் சிறுகதை என நாம் கொள்ளலாகாது. நாவலின் பண்பு வேறு, சிறுகதையின் பண்பு வேறு. நாவல் பல பாத்திரங்களைக் கொண்டதாகவும், நீண்ட காலப்பகுதியில் நிகழ்ந்த சம்பவங்கள் பலவற்றை விளக்கிக் கூறுவதாகவும், இருக்கும். வாழ்க்கை உண்மைகளைப் புலப்படுத்தும் நோக்கமாக நாவலாசிரியன் ஒரு கதையைக் கற்பனை செய்து, கூறவேண்டியனவற்றை யெல்லாம் விரித்துக்கூறி, வாசகர்கள் அறியவேண்டிய யாவற்றையும் நூலிலே தந்து, கதையை வளர்த்துச் செல்வான். கதை வளர்ச்சிக்கு இன்றியமையாத கதைப்புணர்ப்புக்களும் நாவலில் ஆங்காங்கு அமைதல் உண்டு. ஆகவே, கதாபாத்திரங்கள், கதை, கதைப்புணர்ப்பு ஆகிய மூன்றும் நாவலிலக்கியத்திற்கு இன்றியமையாதன. சிறுகதை

இருபதாம் நூற்றாண்டு
235
அத்தகையது ஒன்றன்று. சிறுகதையாசிரியன் தான் புலப் படுத்தக் கருதியவற்றையெல்லாம் விரித்துக் கூறாது பல இடங்களில் கதைப்போக்கினையும் பாத்திரங்களின் குணச் சிறப்புக்களையும் வாசகர்கள் அனுமானித்து அறியக்கூடிய வகையிற் சொற்சுருக்கம் உடையதாகப் புனைவதே சிறுகதை யாகும். • உருவத்திற் சிறிதாயிருத்தல் மட்டுமன்று அதன் பண்பு. குறிப்பாக உணர்த்தக்கூடியதை வெளிப்படையாகக் கூறுதல் சிறுகதைக்கு ஏற்றதாகாது. கதாபாத்திரங்கள் வள வளவென்று பேசு தற்கோ ஆசிரியன் தன் கொள்கைகளை யெல்லாம் கூறுதற்கோ சிறுகதையில் இடமில்லை. மனித வாழ்க்கையில் ஒரு குறித்த நேரத்தில், குறித்த ஒரு சூழ்நிலையில், குறித்த சிலருடைய மனநிலையை அல்லது ஒரு சம்பவத்தை அல்லது கருத்தை இலக்கியத் தரம் அமையக்கூடிய வகையிலே சித்திரித்துக் காட்டுவதாகச் சிறுகதை அமைகின்றது. சிறுகதை வாமனாவதாரம் போன்ற கலையுருவம் என்று ராஜாஜி கூறியது மிகப் பொருத்தமான து. வாசகர்களின் கவனத்தை இழுக்கக்கூடியதாயும், கதையின் ஆரம்ப நிலை யைச் சொல்லாமற் சொல்லுவதாயும் சிறுகதை அமைகின்றது. இவ்வாறு அதன் பண்புகள் சிலவற்றை எடுத்துக்காட்டலாமே யொழிய, அதற்கு வரைவிலக்கணம் கூறமுடியாது.
ஐரோப்பிய நாகரிகத் தொடர்பினால் தமிழிலே தோன்றிய இலக்கிய வகைகளுள் ஒன்றாக மதிக்கப்படும் இச்சிறுகதை இலக்கியம் வ. வே. சு. ஐயர் காலம் தொடக்கமாகவே வளர்ச்சியுற்று வருகின்றது. இக்கதைகள் தோன்றுதற்கு முன்ன மே பரமார்த்தகுருவின்கதை, பஞ்சதந்திரக்கதை, விக்கிரமாதித்தன்கதை ,மதனகாமராசன்கதை முதலியன தமிழில் இருந்திருக்கின்றன. அவை சுவை நிரம்பியனவாயும் உருவத்திற் சிறியனவாயும் இருந்தபோதும் அவை சிறுகதை இலக்கியமாகா.
யாதாயினும் ஒரு கதையினைச் சிறிய உருவத்தில் அமைத்துவிடின் அது சிறுகதை என்னும் இலக்கிய வகை

Page 127
936 தமிழ் இலக்கிய வரலாறு ) | ஆகிவிடும் எனக் கொள்ளுதல் பிழையாகும். Organism اس کے صدمہ இலக்கிய வகைகள் கதையை ஆதாரமாகக்கொண்டு எழுகின் றனவாதலின், கதையென்பது இலக்கியத்தில் ஒரு தனித் துறையன்று என்பது வெளிப்படை கதை பலவகைப்ப்ட்ட இலக்கியங்களுக்கெல்லாம் பொதுவாக உள்ள ஒரு அமிசம் என்றே கூறலாம். ஆனல், சிறுகதை என்பது ஒரு தனிப் பட்ட இலக்கிய வகையாகும். அது உலகிலே தோன்றி நூறு ஆண்டுகளுக்கு மேலாகின்றது. எட்கார் அலன் போ என்னும் அமெரிக்க இலக்கிய ஆசிரியர் தொடக்கிவைத்த ஒரு தனிப் பட்ட இலக்கியவகை சிறுகதை எனலாம். அவர் காட்டிய வழியைப் பின்பற்றிப் பத்தொன்பதாம் நூற்றண்டில் மோப ஸான் முதலிய பிரெஞ்சு ஆசிரியர்களும் செக்காவ் முதலிய ரூஷிய ஆசிரியர்களும் பிறரும் அதைப் போற்றி வளர்த்து வந்தனர். இந்நூற்றண்டிலே அது இந்திய மொழிகளில் ஒரு புது இலக்கியவகையாக வளர்ந்து வருகிறது. இந்திய ஆசிரியர் களுள் இந்த முயற்சியில் முதன்முதலாக ஈடுபட்டவர் ரவீந் திரநாத் தாகூர் என்றே கூறலாம். அவரைப் பின்பற்றி வ. வே. சு. ஐயரும் பாரதியும் தமிழிலே சிறுகதை இலக்கியத் துக்கு உருவம் அமைத்தனர். தாகூர் எழுதிய கதையொன்றை முன்மாதிரியாகக் கொண்டே வ. வே. சு. ஐயர் 'குளத்தங்கரை அரசமரம்' என்னும் சிறுகதையை எழுதினர். அவர் எழுதிய கதைகள் மங்கையற்கரசியின் காதல் முதலிய கதைகள் என்னும் நூல்வடிவில் வந்துள்ளன. லைலா மஜ்னுன்", எதிரொலியாள்' அழேன் ழக்கே என்னும் கதைகளில் அவர் பிறகாட்டுக் கதாபாத்திரங்களை மிகஅழகாகச் சித்திரித்துள்ளனர். எந்த நாட்டு மக்களின் உணர்ச்சிகளையும் ஆசைகளையும் தமிழ் மொழியிலே திறம்படச் சித்திரிக்க முடியும் என்ப தற்கு ஓர் எடுத்துக்காட்டாக அக்கதைகள் விளங்குகின்றன. அவர் சிருட்டித்த கதாபாத்திரங்கள் உயிருடன் நடமாடுவன. உண்மைக் காதல், தியாகம், வீரம் முதலிய மாண்புடை மக்கட் பண்புகள் அவர் கதைகளில் ஒளியுடன் விளங்கு கின்றன; எனினும், அவர் எழுதிய கதைகளிலே சிறுகதைக்

N
N
ਅ இருபதாம் நூற்ருண்டு 237
ஆெரிய பூரண வடிவம் அமையவில்லை என்றே கூறலாம்.
சிறுகதை எழுதுவதில் ஒரளவுக்கு வெற்றிபெற்றன ரென்பத ல்ை அவரைச் சிறுகதைக்குத் தந்தை என்று சொல்லுவர். பாரதி ஆங்கில மொழியிலும் பிரெஞ்சு மொழியிலும் உள்ள சிறுகதைகளையும் தாகூர் எழுதிய கதைகளையும் முன்மாதிரி யாகக் கொண்டு பல சிறுகதைகள் எழுதியிருக்கின்றனர். சமுதாயச் சீர்திருத்தங்களையே மனத்தில் வைத்துக்கொண்டு அக்கதைகளை எழுதியிருக்கின்றனர் என்பது தெரிகிறது. அவர் கதைகளில் சிறுகதைக்கு வேண்டிய உருவம் சிறப்பாக அமையவில்லையென்றே சொல்லலாம். பாரதிக்குப்பின் குசிகர் குட்டிக் கதைகள்' எனப்படும் கதைகள் சிலவற்றை மாதவையா எழுதினர். அவரும் சமுதாயச் சீர்திருத்தத்தை நோக்கமாகக் கொண்டு எழுதியிருத்தலினுற்போலும் சிறுகதைக்குரிய முக்கிய மான பண்பு அவற்றின் கண் அமையவில்லை. அவருக்குப்பின் சாமிநாதையர், ராஜாஜி, எஸ் வி. வி. முதலானேர் பல கதைகளை எழுதினர். சாமிநாதையர் கதைகளிலே பழைய தலைமுறைச் சரித்திரம் முதலியன பொருளாக அமைந்துள்ளன. ராஜாஜியின் கதைகள் பிரசாரத் தன்மையுடையனவாகவும் அரிய கருத்துக்கள் அடங்கியனவாகவும் விளங்குகின்றன. எஸ். வி. வி. யின் கதைகள் நகைச்சுவை பொருந்தியனவாகவும் பொழுதுபோக்குக்கு உரியனவாகவும் காணப்படுகின்றன. இம்மூவரின் கதைகள் படித்து இன்புறத் தக்கவையாக இருந்த போதும், அவற்றைச் சிறந்த இலக்கியத்தரமுள்ள கதைக ளெனக் கருத முடியாது. ,י
மேற்கூறிய எழுத்தாளர்களுக்குப்பின் சிறுகதை எழுதிய ஆசிரியர்களுள்ளே கல்கி சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர் எனலாம். அவருடைய கதைகளிலேயே முதன்முதலாகச் சிறு கதைக்கு உரிய வடிவம் ஓரளவிற்கு அமையப்பெற்றுள்ளது. அவர் தொடக்கத்தில் நகைச்சுவை பெருந்திய பல கதைகளை எழுதினர். அத்ன்பின் அவர் எழுதிய கதைகளில் நகைச்
சுவை சிறப்பாக அமையவில்லை. பல சிறுகதைகளை அவர்

Page 128
மணிக்கொடியிலே சிறுகதை எழுதி வெளியிட்ட எழுத்தாளர்கள்
238 தமிழ் இலக்கிய வரலாறு
o o P. سمسم ( எழுதியபோதும், அவர் எழுதிய நாவல்கள் அவருக்கும்--"
புகழைக் கொடுத்த அளவு சிறுகதைகள் கொடுக்கவில்லை என்றே கூறலாம். ஆகவே, சிறந்த சிறுகதை ஆசிரியர்களுள் ஒருவராக அவர் மதிக்கப்படுவரோ என்பதை இப்பொழுது துணிந்து கூறமுடியாது. நல்ல இலக்கியத் தரமுள்ள சிறு கதைகள் தமிழிலே தோன்றிய காலம் மணிக்கொடி பிரசுரிக் கப்பட்ட காலம் என்றே கூறலாம். அக்காலத்திலேதான் சிறுகதை தமிழிற் பூரண வடிவம் பெற்று விளங்கலாயிற்று.
மணிக்கொடிக் கோஷ்டியினர் என்றும் மணிக்கொடி ஆசிரியர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அவர்களுள் மெளனி, கு. ப. ரா., புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, ராமையா, ந. சிதம்பரசுப்பிரமணியன், சி. சு. செல்லப்பா, க. நா. சுப்பிர மணியன், எம். வி. வெங்கடராமன், முதலியோர்கள் சிறப் பாகக் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்களுள் மெளனி 'அழியாச் சுடர்', 'பிரபஞ்சகானம்', 'குடைநிழல்' முதலிய சிறுகதைகளை எழுதியுள்ளனர். அவர் எழுதிய கதைகள் சில எனினும் அவை மிகச் சிறந்த உருவமும் இலக்கியத்தரமும் அமையப் பெற்றவை. அவர் எழுதிய கதைகளைப் புதுமைப்பித்தனும் கன்கு பாராட்டியுள்ளனர். அவரைப்பற்றி ஓரிடத்தில் குறிக்கும் போது, 'கற்பனையின் எல்லைக் கோட்டில் நின்று வார்த்தை களுக்குள் அடைபட மறுக்கும் கருத்துக்களையும் மடக்கிக் கொண்டுவரக்கூடியவர் அவர் ஒருவரே' என்று அவர் கூறி யிருத்தல் ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. அவர் எழுதிய கதைகளில் அவருடைய சிந்தனையின் ஆழத்தைத் தெளிவாகக் காணலாம். அக்கதைகளுள் சிலவற்றுக்கேனும் தமிழிலக்கியத்திலே
நிரந்தரமான இடம் உண்டு என்பது பல அறிஞர்களுடைய
கருத்தாகும்.
மணிக்கொடி எழுத்தாளர்களுள் கு. ப. ரா. பல சிறுகதைகளை
எழுதியிருக்கின்றனர். அவற்றுட் சில காணுமலே
காதல் புனர்ஜென்மம் கனகாம்பரம் என்னும்

இருபதாம் நூற்றண்டு 239
ܓܠ` ܢ ܢ؟ ஆொற்ருெகுப்புக்களாக வெளிவந்துள்ளன. நூல் வடிவில் வெளி வராத கதைகள் பலவுள. அவர் சிறுகதைகளைவிட கவிதை, ஓரங்க நாடகம், இலக்கியக் கட்டுரைகள் முதலியனவற்றையும் எழுதியுள்ளனர். அவர் உயிருள்ள பாத்திரங்களைச் சித்திரிப்பதிலே திறமையுடையவர். வாழ்க்கையிலுள்ள சாதாரண விஷயங்களைத் தெரிந்து, வாசகர்களுடைய கற்பனு சக்தியைத் தூண்டக்கூடிய வகையில் அவற்றை அமைத்துக் காட்டுவதில் அவருக்குச் சிறந்த ஆற்றல் இருந்திருக்கின்றது. மோபஸான் என்னும் பிரெஞ்சு ஆசிரியர் எழுதிய சிறுகதை களின் சாயலை அவர் கதைகளிற் காணலாம். எதைக் கூறினும் அதை மென்மைத் தன்மை பொருந்திய வார்த்தைகளிலே மனத்தைப் பிணிக்கக்கூடிய வகையிற் கூறும் இயல்புடையர். ஆண்பெண் 2-pബ முறைகளை அடிப்படையாகக் கொண்டே அவருடைய கதைகளுட் பெரும்பாலானவை உருப்பெற்றுள்ளன. அவற்றுட் கதைகளேனும் தமிழிலக்கியத்தில் நிரந்தரமான இடத்தைப் பெறக்கூடியன.
பாரதிக்குப்பின் தமிழ் நாட்டிலே தோன்றிய இலக்கிய ஆசிரியர்களுள் ஒரு மேதை என்று கருதத்தக்கவர் புதுமைப் பித்தன் என்றே கூறலாம். அவர் எழுதியுள்ள சிறுகதை, கட்டுரை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு அனைத்திலும் அவருடைய சிந்தனைச் சிறப்பைக் காணமுடிகிறதெனினும், அவருடைய கற்பனைத் திறனையும் கருத்து ஆழத்தையும் அவர் எழுதியுள்ள சிறுகதைகளே சிறப்பாக எடுத்துக்காட்டு கின்றன. சிறுகதையுலகிலே அவர் தமக்கென ஒரு புது வழியை வகுத்துக்கொண்டு சமுதாயத்திற் காணப்படும் ஆபா சங்களையும் இருளடைந்த பகுதிகளையும் தீரத்துடன் எடுத்துக் காட்டியிருக்கின்றனர். அவர்எழுதிய எக்கதையைப் படிப்பினும் அதன் கண் அவருடைய வாழ்க்கையனுபவம் படிந்திருத்தலைக் காணலாம். அவர் வாழ்க்கை அல்லல் நிரம்பியதொன்று. அத்தகைய வாழ்க்கைச் சுழலில் அவர் அகப்பட்டிருந்த போதும், அதிலிருந்து விலகிகின்று அதைப் பார்த்துச் சிரிக்க அவர் தெரிந்துகொண்டதற்கு அவருடைய அனுபவ

Page 129
240)
தமிழ் இலக்கிய வரலாறு
முதிர்ச்சியே காரணமாகும். அதனால், சமுதாயத்திற் காணப் படும் பழக்க வழக்கங்கள், மூட நம்பிக்கைகள், ஆசைகள், அல்லல்கள் முதலியவற்றையெல்லாம் பார்த்து எள்ளி நகை பயாடத் தெரிந்துகொண்டனர். அவருடைய கதைகள் ஒவ் வொன்றும் ஒவ்வொரு தத்துவத்தையோ கற்பனைக்கு எட்டாத கருத்தையோ எடுத்துக் காட்டுவனவாக அமைந்துள்ளன. அவர் எழுதிய கதைகளுள் 'கவந்தனும் காமனும்', 'பொன்னகரம்' முதலிய கதைகள் வேதனை நிரம்பிய மக்கள் வாழ்க்கையிற் காணப்படும் அமிசங்கள் சிலவற்றை உள்ளவாறு எடுத்துக் காட்டுகின்றன. 'கபாடபுரம்', 'காஞ்சனை' முதலியவற்றில் அவர் கற்பனையாற்றலைக் காணலாம். 'காலனும் கிழவியும்', “சிற்பியின்நகரம்' முதலியவை தத்துவநோக்கு உடையனவாக் மிளிர்கின்றன. பிறராற் பின்பற்ற முடியாத விசித்திரப் போக்குடைய ஒரு மொழிநடையில் அக்கதைகள் யாவும் அமைந்திருக்கின்றன, இவ்வாறு சித்திரிக்கப்பட்ட அவர் கதை களுட் சிலவேனும் என்றும் நிலைத்துநிற்கக் கூடியவை என்பது அக்கதைகளைக் கற்று அனுபவித்த பல அறிஞர்களின் கருத்தாகும்.
மேலேகூறிய ஆசிரியர்களைவிட பிச்சமூர்த்தி, ராமையா லா. ச. ராமாமிருதம், க. நா. சுப்பிரமணியன், ஜானகிராமன், அழகிரிசாமி, முதலியோர் சிறந்த சிறுகதைகள் சிலவற்றை எழுதியிருக்கின்றனர். பிச்சமூர்த்தியின் கதைகளுட் சில பதினெட்டாம் பெருக்கு முதலிய தொகுதிகளாக வெளிவந் துள்ளன. அவர் கதைகளிலே ஆழ்ந்த தத்துவக் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. ராமையாவின் கதைகள் பெரும்பாலும் இளிவரல் என்னும் மெய்ப்பாடு பொருந்தியனவாக உள்ளவை யெனினும் அவற்றின்கண் அனுதாபமும் உணர்ச்சிவேகமும் சிறப்பாக அமைந்திருத்தலைக் காணலாம். லா. ச. ராமாமிருதம் எழுதிய கதைகள் ஜனனி, இதழ்கள் என்னும் தொகுப்புக்க ளாக வெளிவந்துள்ளன. அவர் கதைகளில் குடும்பந்தான் முக்கிய இடம்பெற்றுள்ளது. அவை உலகின் பரப்பிற் சுருங்

இருபதாம் நூற்றண்டு 241.
கிெயபோதும் ஆழம் உள்ளவை. அவர் கதைகளைப்பற்றி
சி. சு. செல்லப்பா கூறுமிடத்தில், 'நினைவின் அடிவாரத்தில் தோன்றும் ஒரு உணர்வுநிலையைத் தெரிவிப்பதில் முற்படும் ஒரு எழுத்துப்பாங்கை லா, ச. ரா. வின் கதைகளில் காணலாம்' என்றும் 'அவருக்கு உள்ள தனிபலம் புலனுணர்ச்சிகளைச் சித்திரிப்பதுதான். அவர் அளவுக்கு தீவிரத்துடன் செய்யும் இரண்டாவது எழுத்தாளன் இருப்பதாக எனக்குத் தெரிய வில்லை' என்றும் கூறியிருப்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. உணர்ச்சிவேகம் உடையனவாயும் சிந்தனையைத் தூண்டக் கூடியனவாயும் க. கா. சுப்பிரமணியன் எழுதிய கதைகள் அமைந்துள்ளன. அழகிரிசாமியும் ஜானகிராமனும் இலக்கியத் தரமுள்ள கதைகள் சிலவற்றை எழுதியிருக்கின்றனர். அழகிரி சாமி எழுதிய கதைகள் சிரிக்கவில்லை, தவப்பயன் முதலிய தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன. இவர்களைவிட சிறு கதைகளை எழுதிய எழுத்தாளர்கள் இன்னும் பலர் உளர். அக்கதைகளுள் தமிழிலக்கியத்தில் நிரந்தரமான இடத்தைப் பெறக்கூடியவை எவையென இப்பொழுது துணிந்து கூற (Մ)էջեւ III Ֆ].
இலக்கிய விமர்சனம் என்று கூறப்படும் இலக்கிய நலன் ஆய்தல் சிறந்ததொரு கலையாக ஐரோப்பிய நாடுகளிலே பல நூற்ருண்டுகளாக வளர்ந்துவந்துள்ளது. முற்காலத்திலே தமிழ்நாட்டில் வாழ்ந்த உரையாசிரியர்களுட் சிலர் கவிதையிற் காணப்படும் நலன்களை ஆங்காங்கு எடுத்துக் கூறியுள்ளன ரேனும், இருபதாம் நூற்றண்டிற்கு முன் நலனுய்தல் தமிழில் ஒரு கலையாக வளர்க்கப்படவில்லை. தமிழ்நாட்டில் ஆங்கிலக் கல்வி விருத்தியடைந்ததன் பயணுகப், பத்தொன்பதாம் நூற்ருண்டின் முடிவிலும் இருபதாம் நூற்றண்டிலும் வாழ்ந்த சில இலக்கிய ரசிகர்களே தமிழில் இக்கலையினை வளர்க்க முன் வந்துள்ளனர். இவர்களுள் இக்கலையினை ஆரம்பித்து வைத்தவர் வ. வே. சு. ஐயர் என்றே கூறலாம். கோமர், வால்மீகி என்பவர்கள் இயற்றிய காவியங்களோடு கம்பன் இயற்றிய
3.

Page 130
242 தமிழ் இலக்கிய வரலாறு "
காவியத்தை ஒருங்குகூட்டி ஆராய்ந்து எழுதியுள்ள "கம்ப்" محموعہ ராமாயணரசனை' என்ற கட்டுரை இலக்கியகலனைத் தமிழில் எடுத்துரைக்கும் நூல்களுள் முதலில்வைத்து எண்ணத்தகுந்தது. அவருக்குப்பின் இவ்வாராய்ச்சியில் ஈடுபட்டு உழைத்தவர்களுள் டி. கே. சிதம்பரநாத முதலியார் சிறப்பினராகக் குறிப்பிடத் தக்கவர். அவர்தம் இலக்கிய நலனுயுக்திறனை அவர் எழுதிய கட்டுரைகளைக்கொண்டும், இதயஒலி முதலிய நூல்களைக் கொண்டும் அறியலாம். அவர் எழுதிய இதயஒலி அவர் இதயத்தின் ஒலியாகவே காணப்படுகின்றது. அவர் எழுதிய பல கடிதங்கள் இலக்கியநலனைக் கூறுவனவாக அமைக் துள்ளன. இத்துறையிற் பெரிதும் ஈடுபட்டு உழைத்தவர்களுள் ஆசிரியர் முத்துசிவன் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர். அவர் எழுதிய அசோகவனம், மின்னல் கீற்று, அசலும் நகலும், கவிதை முதலிய நூல்களில் ஆங்கில நூல்கள் கூறும் அரிய கருத்துக்களைத் தந்துள்ளனர். கவிதையின் சிறப்பியல்புகளைக் கூறும் தமிழ் நூல்கள் இன்னும் பலவுள. ஆங்கிலப் புலவர்கள் கூறிய கருத்துக்கள் பொதிந்த தமிழ் நூல்களுள் மாணவர் படித்துப் பயனடையக்கூடிய நூல்கள் மு. வரதராசன் எழுதிய இலக்கிய ஆராய்ச்சி, இலக்கியத் திறன், இலக்கிய மரபு, அ. ச. ஞானசம்பந்தன் எழுதிய இலக்கியக்கலை, க. நா. சுப்பிரமணியன் எழுதிய இலக்கியக் கலை, ரகுநாதன் எழுதிய இலக்கிய விமர்சனம் முதலியன. இவையெல்லாம் மேலைத்தேச இலக்கியங்களிலுள்ள சிறப்புக்களை ஆராய்ந்து கூறும் நூல்களிற் காணப்படும் கருத்துக்களைத் தருவன. இக்காலத்திலே தமிழில் எழும் சிறுகதை முதலிய இலக்கியவகைகளை மதிப்பிடுதற்கு ஓரளவிற்கு உதவு வனவன்றிப் பழந்தமிழிலக்கியங்களை ஆராய்தற்கு அவை
பயன்படா என்றே கூறுதல்வேண்டும். மேலைத்தேச இலக்கிய விமர்சனக் கலையைப் பண்டைத்தமிழ் இலக்கியங்களை ஆராய் தற்குப் பயன்படுத்திய விமர்சன ஆசிரியர்களுள் அ. சீநிவாச ராகவன் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர். அவர் எழுதிய காவிய அரங்கில் என்னும் நூல் கம்பனுடைய காவியத்தில்

இருபதாம் நூற்ருண்டு 243
ܠ ̄ ܐ ܠ ܐ
கொணப்படும் சிறப்புக்களை எடுத்துக் கூறுகின்றது. அக் காவியத்திற் காணப்படும் நலனே ஆராய்ந்து கூறிய ஆசிரியர் பலருளர். அவர்களுட் பெரும்பாலோர் தத்தம் மனத்தில் எழுந்த எண்ணங்களையெல்லாம் நூல்வடிவமாகவும் கட்டுரை வடிவமாகவும் தந்துள்ளனர். அவையெல்லாம் தமிழில் விமர் சனக்கலை வளர்ச்சிக்கு உதவமாட்டா. அ. சீநிவாசராகவன் முதன்முதலாக எழுதிய விமர்சன நூல் மேல்காற்று என்பது. அது ஆங்கிலத்தில் ஷெல்லி என்னும் புலவர் இயற்றிய ஒரு பாட்டை விமர்சன முறையில் ஆராய்ந்து கூறுகின்றது.
இருபதாம் நூற்றண்டில் உரைநடையிலக்கியம் வளர்ச்சி யுற்றது போல அத்துணைச் சிறப்பாக நாடக இலக்கியம் வளர்ச்சியுறவில்லை என்றே கூறலாம். 20-ம் நூற்றண்டிற்கு முன் தோன்றிய பள்ளு, குறவஞ்சி முதலிய இலக்கியவகைகளை நாம் கூத்துவகைகளுள் அடக்கலாமேயொழிய, சாகுந்தலம் முதலிய வடமொழி நாடகவகைகளுள்ளே அடக்கமுடியாது. ஆங்கில நாடக நூல்களைக் கற்ற சுந்தரம்பிள்ளை முதலிய ஆசிரியர்கள் செகஸ்பியர் முதலிய ஆங்கில நாடக ஆசிரியர்கள் இயற்றிய நாடகங்களைப் பின்பற்றித் தமிழில் நாடக நூல்களை இயற்றத் தொடங்கிய பின்னரே இக்காலப்பகுதியில் நாடக இலக்கியங்கள் ஓர் அளவிற்கு விருத்தியடையலாயின.
செகஸ்பியர் இயற்றிய நாடகங்களுட் பல 19-ம் நூற் றண்டின் இறுதியிலும் இந்நூற்றண்டின் தொடக்கத்திலும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'மிட்சம்மர் நைட்ஸ் டிரீம்' என்னும் நாடகத்தை நடுவேனிற்களவு எனப் பெய ரிட்டு நாராயணசாமி ஐயரும் ஒதெல்லோ என்னும் நாடகத்தை மாதவையா அவர்களும், ஹாம்லெட் என்பதை வெங்கடராம ஐயரும், கிங்லியர்' என்னும் நாடகத்தை மங்கையர் பகட்டு எனப் பெயரிட்டு ராமசாமி ஐயங்காரும் மொழிபெயர்த்திருக் கின்றனர். சம்பந்த முதலியாரும் செகஸ்பியர் இயற்றிய நாடகங்களுட் பலவற்றை மொழிபெயர்த்துள்ளனர். மில்டன் இயற்றிய கோமஸ்' என்னும் நூலிலுள்ள கதையைத் தாதா

Page 131
244 தமிழ் இலக்கிய வரலாறு
ހާދި أمير சாரியார் நாடக உருவத்தில் அமைத்து, அதற்குக் குணே மாளிகை என்னும் பெயரிட்டு வெளியிட்டுள்ளனர். நாடகங்கள் தமிழில் இல்லாத குறையைத் தீர்த்தற்பொருட்டு ஆசிரி யர்கள் பலர் பலவகையான நாடக நூல்களை இயற்றியுள்ளனர். அவற்றுட் சில மொழிபெயர்ப்புக்களாகவும் தழுவல் நூல்க ளாகவும் உள்ளன. வடமொழியிலிருந்து நாடகங்களை மொழி பெயர்த்தவர்களுட் கதிரேசன் செட்டியார், மறைமலையடிகள், க. சந்தானம் முதலியோர்களை நாம்குறிப்பிடலாம். மண்ணியற் சிறுதேர், சாகுந்தலம், உத்தர ராம சரிதம் என்பன முறையே அவர்கள் மொழிபெயர்த்த நாடகங்கள். ஆங்கில மொழியில் செகஸ்பியர் இயற்றிய நாடகங்களுட் பலவற்றை மொழிபெயர்த்தவர்களுள்ளே பி. சம்பந்த முதலியா ரைச் சிறப்பாகக் குறிப்பிடலாம். இந்நூற்றண்டில் நாடகக்கலையைத் தமிழ்நாட்டில் வளர்ப்பதற்குப் பெரிதும் முயன்றவர்களுள் அவர் முதலில் வைத்து எண்ணத்தகுந்தவர். அவர் நடிகரா யிருந்து நாடகங்களிற் பங்குபற்றியும், நாடகங்களை கடப்பித்தும் புதிய நாடகங்களை இயற்றியும் நாடகத்தைப்பற்றிய ஆராய்ச்சி h6ir 11േഞ്ഞp് செய்தும் நாடகக்கலைக்குப் புத்துயிரளிக்கப் பலவாறு முயன்றனர். அ. சீநிவாசராகவன் எழுதிய நிழல்கள், க நா. சுப்பிரமணியன் எழுதிய பொம்மையா மனைவியா என்பன இப்ஸனுடைய நாடகங்களைத் தழுவி எழுதப்பட்டவை. ஒக்ஸ்கார் உவயில்ட் இயற்றிய நாடகம் ஒன்றன் மொழி பெயர்ப்பே எம். எல். சபரிராசன் எழுதிய சலோம் என்னும் நாடகம், வங்காள மொழியிலிருந்தும் சில நாடகங்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. துவிஜேந்திரலால் ராய் இயற்றிய நாடகங்களின் மொழிபெயர்ப்பே விஜயராகவன் எழுதிய நூர்ஜஹான் முதலியன. சங்கரலிங்கஜயர் எழுதிய கூண்டுக் கிளி முதலிய நாடகங்கள் ஹரீந்திர நாத் சட்டோபாத்யாய இயற்றிய நாடகங்களின் மொழிபெயர்ப்புக்களாகும்.
மேலே குறித்த மொழிபெயர்ப்பு நாடகங்களைவிட, வேறு பல நாடகங்களும் தமிழில் வெளிவந்துள்ளன. அவற்றை

இருபதாம் நூற்றாண்டு
245
டி- இயற்றியவர்களுட் பாரதிதாசன், சுத்தானந்த பாரதியார்
முதலியோர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள். இரணியன், நல்ல தீர்ப்பு, சேர தாண்டவம், படித்த பெண்கள் என் பன பாரதிதாசன் இயற்றியவற்றுட் குறிப்பிடத்தக்கவை. சுத்தானந்த பாரதியார் இயற்றியவற்றுள் வசந்தசுந்தரி, புதுமையும் பழமையும், காலத்தேர் முதலியன குறிப்பிடத் தக்கவை. இவற்றைவிட, ஓரங்க நாடகங்களையும் பலர் எழுதி யுள்ளனர். கி. ரா. எழுதிய தந்தையின் காதல், முல்லைக் கொடி முதலியனவும் நாடோடி இயற்றிய குடும்பரகசியம் முதலியனவும் இவற்றுக்கு உதாரணங்கள். ஆசிரியர் அண்ணாத் துரை இயற்றிய காதல்ஜோதி, செல்லப்பிள்ளை முதலிய நாடகங்களும் மு. கருணாநிதி இயற்றிய நச்சுக்கோப்பை, தாக்குமேடை முதலியனவும் ரஞ்சன் இயற்றிய மாப்பிள்ளை வேட்டை, புதுமைப்பித்தன் இயற்றிய வாக்கும் வக்கும் என்பன வும் பாராட்டப்படும் நாடகங்கள். யாழ்ப்பாணத்து வழக்கு மொழியில் எழுதப்பட்டவற்றுள் க. கணபதிப்பிள்ளை எழுதிய நானாட கம், இரு நாடகங்கள், என்பன குறிப்பிடத் தக்கவை. அவர் எழுதிய சங்கிலி என்னும் நாடகம் யாழ்ப்பாணச் சரித்திரத்தை ஆதாரமாகக் கொண்டுள்ளது. அது யாழ்ப்பாணச் சரித்திரத்தைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் கூறும் ஒரு முன்னுரையைக் கொண்டு விளங்குகின்றது. சோமசுந்தரப் புலவர் சைவசித்தாந்தக் கருத்துக்களை உட் பொருளாகக்கொண்டு உயிரிளங் குமரன் என்னும் நாட கத்தை எழுதியுள்ளனர். பண்டிதர் சோ. இளமுருகனார் அழகிய செந்தமிழ் நடையில் தமயந்தி திருமணம் என்னும் நாட கத்தை இயற்றியுள்ளனர். வானொலி நிலையங்களில் நடித்தற் பொருட்டு இக்காலத்தில் எழுதப்பட்டுள்ள ஓரங்க நாடகங்களும் பிறநாடகங்களும் பலவுள. அவற்றுள் இலக்கியத் தரமுள்ளவை எவையென நாம் இப்பொழுது துணிந்து கூறமுடியாது.

Page 132
அட்டவணை
நூல்வரிசை
تک
அகத்தியம், 3. அகநானூறு, 5, 9, 19, 20, 44
55, 59. அகல்யா, 213. அசலும் நகலும், 242. அசோகவனம், 242. அஞ்ஞை வதைப்பரணி, 148,
152. அட்டபிரபந்தம், 160, அடைக்கலநாயகி வெண்பா, 185. அமிர்தவசனி, 181. அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்,
° 184
அரிச்சந்தி 1 ன் கதை, 178
101
அரிச்சந்திர புராணம், 145,
அரிச் சந்திர நாடகம்,
அருணுே கபம், 206. அல்லி 231 அல்லி நாடகம், 191. அவனும் அவளும், 208. அவிநயம், 4. அழகின் சிரிப்பு, 202 ே அற்புதத் திருவந்தாதி, g
77.
(எண் - பக்க எண்) அன்பின் ஒலி, 230. அன்புவழி, 232.
அன்ஜினய்முங்கல் அந்தாதி, 185.
ஆ ஆசாரக்கோவை, 53, 57, ஆத்தும நிர்ணயம், 172. ஆகிநாடகம், 191. ஆனந்த மடம், 232
இ. இசை நுணுக்கம், இதய ஒலி, 242. இதழ்கள் 240. இந்திர காளியம், 190.
0
இந்துசாதனம், 181. இபுனி ஆண்டான் படைப்
போர், 188.
இரகுவமிசம், 164, இரட்சணிய மனுேகரம், 186,
187. இரட்சணிய யாத்திரிகம், 186. இரணியன், 245. இராசராசேஸ்வர நாடகம், 190. இராமநாடகம், 184, 90. இராமாயணக்கதை, 176.
இராவண சம்கார நாடகம்,
191.

அட்டவணை
இருதுருவங்கள், 232. இரு நாடகங்கள், 245.
இருபா இருபஃது, 135, இலக்கண விளக்கக் குருவளி 75. இலக்கிய ஆராய்ச்சி, 242, இலக்கியக் கலை, 242 இலக்கியத் திறன் , 242, இலக்கிய மரபு, 242. இலக்கிய விமர்சனம், 242. இளிச்சவாயன், 232, இறையனரகப்பொருளுரை, 3, 103. இன்ட వీడియో ఎ, 281. இன்னு நாற்பது, 53, 57, இனியவை நாற்பது, 53, 57,
2உண்மைநெறி விளக்கம், 135, 136. உண்மை விளக்கம், 135. உத்தர ராம சரிதம், 244 உதயண குமார காவியம், 117, உதயணன் கதை, 102. உயிரினங் குமரன், 245.
- 6T. எட்டுத்தொகை, 4, 5, 16, 142. எட்டாந்திருமுறை, 91. எரிகட்சத்திரம், 232
GT. ஏகாம்பர நாதருலா, 1 2, 157. ஏசுமத நிராகரணம், 174. ஏலாதி, 53, 57, ஏழாந்திருமுறை, 89, ஏழைபடும் பாடு, 232.
器 ფშნდუნ றநாறு, 5, 22 ஐந்திணை எழுது 53. , 55. ஐந்திணே ஐம்பது, 53, 55,
69. 6. ஒதெல்லோ, 243, ஒன்பதாந்திருமுறை, 132.
öቿ கச்சிக்கலம்பகம், 152, 157. கச்சியானந்தருத்ரேசர் வண்டு விடு தூது, 184. கடல்மேற் குமிழிகள், 202. கடவுள் நிர்ணயம், 172 கண்டி நாடகம், 191. கண்ணன் பாட்டு 200 கந்தபுராணம், 18 122, 128, 143. கந்தரலங்காரம் 154, கந்தரனுபூதி, 154 கம்பராமாயணம், 111,118
20, 122, 123, 185. கமலாம்பாள் சரித்திரம், 177, 225. d5 LDo) Tars, 226. கயசிந்தாமணி, 104 கரவைவேலன் கோவை, 189, கரித்துண்டு, 231, கலாவதி, 192. கலிங்கத்துப்பரணி, 129. கலித்தொகை, ნ, 25., 42., 59., கவிதாஞ்ச்லி, 208. கவிதை, 242, கள்வனின் காதலி. 228,

Page 133
9ܢ
** g 'N 248
களவழி நாற்பது, 53, 55,
57, 69, 131. கனவு, 206, கனகாம்பரம், 238.
Š ከI
காக்கைபாடினியம், 4. காசிக் கலம்பகம், 152, 159 காசி காண்டம், 159, காஞ்சனேயின் கனவு, 230, காஞ்சிப் புராணம், 175,
184. காணுமலே காதல், 238.
காத்தவராயன் நாடகம், 191.
காதல் தூங்குகிறது, 231. காதல் ஜோதி, 245. கார் நாற்பது, 53, 55, 57, 69. காலத்தேர், 245 காவிய அரங்கில், 242,
胡。 கித்தேரியம்மாள் அம்மானே,
185
கிராம மோகினி, 231 கிருஷ்ணன் தூது நாடகம்,
191, .
குe குசேலோபாக்கியானம், குடும்பரகசியம், 245.
184.
குடும்பவிளக்கு, 202. குண்டலகேசி, 51, 117, 121. குணமாளிகை, 244. குமுதவல்லி, 220. குமுதினி, 232. குயிற்பாட்டு, 200. குருகாமான்மியம், 159
அட்டவணை
குருபரம்பரைப் பிரபாவம், 145. குலோத்துங்க சோழன்
பிள்ளைத் தமிழ், 131. குற்ருலக் குறவஞ்சி, 190. குறிஞ்சிப்பாட்டு, 5, 27. குறுந்தொகை நானூறு, 5, 12
19, 20, 44, 55, 59.
ඒකகூண்டுக்கிளி, 244. கடத்தராற்றுப்படை, 28.
கூர்மபுராண ம், 159.
60) கைந்நில்ை, 53, 67. கோ. கொடிக்கவி, 135, கோ. கோவல நாடகம், 191. கோகிலாம்பாள் கடிதங்கள்,
220. கோதைத் தீவு, 230.
ど汗 சங்கமம், 230. F$ଛି ଗଞ, 245. சங்கொலி, 208. சங்கயாப்பு, 102. சங்கற்பநிராகரணம், 135,
136. சண்முக விருத்தி, 223. சதுரகராதி, 172. சர்வசமய சமரசக் கீர்த்தனே, 186.
சலோம், 244,
फ्र।Iा. சாகுந்தலம், 243, 244,

அட்டவணை 249
சித்தாந்தமரபு கண்டன
கண்டனம், 175, சிதம்பர மும்மணிக்கோவை, 152, சிந்தனைக் கட்டுரைகள், 220, சிந்தாமண், 46, 77, 111, l 7, 118, 120, 122, 124,
142, 185. சிரிக்கவில்லை, 245
சிலப்பதிகாரம், 42, 43,45,47,
50, 64, 65, 103, l 14, 117, 118, 161. சிவகாமியின் சபதம், 229, சிவகுமாரன், 226. சிவஞான சித்தியார், 135, சிவஞான பாலைய சுவாமிகள் நெஞ்சுவிடுதூது, 152. சிவஞானபோதம், 135, 136, சிவதொண்டன், 215. சிவப்பிரகாசம், 135. சிறிய திருமடல், 95, சிறுத்தொண்டர் நாடகம், 191. சிறுபஞ்சமூலம், 53, 57, சிறுபாணுற்றுப்படை, 5, 57,
சிறுபிள்ளை நேச தோழன், 181.
醇。 சீவகசிந்தாமணி, 114, 126, சீருப்புராணம், 187, சீருவண்ணம், 188,
3r சுகுணசுந்தரி, 177, 224, சுந்தரி, 230, சுப்பிரபேதம், 178.
32
சுவர்க்கக்ேகம், 178,
சுவிசேஷபிரபல விளக்கம், 181.
。纥, சூளாமணி, 111, 117, 121,122
செ. - GeF66)ligair&T, 245,
ઉઠr. சேது5ாடும் தமிழும், 223, சேதுபுராணம், 144, 159, சேரதாண்டவம், 245,
சை, சைவ சித்தாந்த சாத்திரம், 135,
(βδπ. . " ... " والت சோணசைல LD17 åb0, 159.
தி, தக்கயாகப் பரணி, 131, தகடூர் யாத்திரை 66, தண்டியலங்காரம் 111, 133 தத்துவக்கண்ணுடி, 172. தங்தையார் பதிற்றுப்பத்து,215, தந்தையின் காதல், 245, தமயந்தி திருமணம், 245, தவப்பயன், 241, தமிழ்க் குமரி, 212. தமிழ்ப் பத்திரிகை, 181. தமிழ் வரலாறு, 223, தமிழர் நாகரிகம், 220. தமிழன் இதயம், 208,
தி. திக்கற்ற இரு குழந்தைகள், 228, £58,00TLDIr&D நூற்றைம்பது, 53,
55, 56.
திணைமொழி ஐம்பது, 53, 55. கிராவிடப் பிரகாசிகை, 180,

Page 134
250 அட்டவணை
திராவிடமாபாடியம், 175, திரிகடுகம், 53, 57, திருக்களிற்றுப் படியார், 135. திருக்கண்ணப்பதேவர் திரு
மறம், 60, திருக்காவலூர்க் கலம்பகம்,
172, 185. திருக்காளத்தி நாதருலா, 152. திருக்குறள், 42, 43, 44, 45, 46, 47, 53, 54, 55, 142, l62. திருக்குற்ருலக் குறவஞ்சி, 184, திருக்குறுந்தாண்டகம், 95. திருக்கைலாயஞானவுலா, 99. திருக்கோவையார், 114, 136. திருச்சந்தவிருத்தம், 93. திருச்சபைப் பேதகம், 174, திருச்சிற்றம்பலக் கோவை
- யார், 91; 115, திருத்தணிகைப் புராணம், 84. திருத்தாண்டகம், 87. திருத்தொண்டத்தொகை, 126, திருத்தொண்டர் திருவந்தாதி, ll 6, 126. திருப்பரங்கிரிப்புராணம், 159, திருப்பல்லாண்டு, 116. திருப்பள்ளியெழுச்சி. 93, 94. திருப்பாவை, 98, 99. திருப்புகழ், 154. திருமந்திரம், 91,16, 134. திருமாலை, 93, 94. , திருமுருகாற்றுப்படை 5, 27,
28., 60.
திருமுறை, 84, 115, 116,
திருவந்தாதிகள், 60, 61,62,77,
திருவரங்கக் கலம்பகம், 160. திருவரங்கத்தந்தாதி, 160. திருவருட்பயன், 135. திருவள்ளுவமாலை, 47, திருவாசகம், 90, 115, 134. திருவாசிரியம், 100. திருவாமாத்தூர்க்கலம்பகம்,
57. திருவாய்மொழி, 100, 101,
l 6, 163. திருவாரூர் நான்மணிமாலை,
152. திருவாரூருலா, 143, 152,
திருவாலங்காட்டுமூத்த திருப்
பதிகங்கள், 60, 62, 77. திருவா8ணக்காப்புராணம், 184. திருவானைக்காவுலா, 158, திருவுந்தியார், 135. திருவிசைப்பா, 116, 132 திருவிளையாடற்புராணம், 158, திருவிளையாடற் புராண
வசனம், 178. திருவிரட்டைமணிமாலை, 60,62,
77. திருவெங்கைக் கோவை, 150, திருவெம்பாவை, 99. திருவெழுகூற்றிருக்கை, 95. தில்லைக்கலம்பகம், 152, 157,
தீ.
தீனதயாளு, 226,
ğö!. துன்பக்கேணி, 232,

அட்டவணை 251
து. தூக்குமேடை, 245.
தே. தேசபக்தன் கந்தன், 231. தேம்பாவணி, 172, 185. தேவாரம், 134. தேவாரத் திருப்பதிகங்கள், 86, 87, 88. தொ. தொண்டைமண்டல சதகம்,
160. தொல்காப்பியம், 4, 23, 42, 43., 44., 65. 113, 136, 142, 161, 62. தொல்காப்பியச் சூத்திர
விருத்தி, 160.
நச்சுக்கோப்பை, 245, நடுவேனிற் களவு, 243. நந்தனர் சரித்திரக் கீர்த்தனே,
184, 190. நந்திக்கலம்பகம், 103, நம்பியகப்பொருள், 133, நம்பெருமாள் மும்மணிக்
கோவை, 159, நல்லதீர்ப்பு, 245. நல்லையந்தாதி, 215, நல்லுரைக்கோவை, 221.
நளவெண்பா. 131,
நளன் கதை, 176.
நற்றிணை நானூறு, 5, 18, 20,
23, 44, 55, 59.
吓JT。
நாககுமார காவியம், 117, 121.
நாகையந்தாதி, 188. நாச்சியார் திருமொழி, 98, நாஞ்சில்நாட்டு மருமக்கள் வழி LDst Görufslutb, 204. நாமகள் புகழ்மாலை, 215. நால்வர் நான்மணிமாலை, l62,
159, நாலடியார், 53, 54, நாலாயிரதிவ்விய பிரபந்தம், 84,
93, 102, 115, 145. நான்கண்டதும் கேட்டதும், 22. நான்மணிக் கடிகை, 53, 57. நான்முகன் திருவந்தாதி, 93, நானுடகம், 245,
向。 நிராசை, 231, நிரோட்டக யமக அந்தாதி, 159, நிழல்கள், 244, நினைவுமஞ்சரி, 221.
南, நீதிநூல், 186. நீதிநெறி விளக்கம், 159, நீலகேசி, 111; 117, 121.
liff. நூர்ஜஹான், 244,
கே. நெஞ்சுவிடுதூது, 135. நெடுநல் வாடை, 5, 10, 14,28,
60, கே. நேமி நாதம், 133.
605.
நைடதம், 159, 164,

Page 135
252
L. பஞ்சமரபு, 190. பஞ்சதந்திரக் கதை, 177, 235. பஞ்சும் பசியும், 231. பட்டினப்பாலை, 5, 27. பட்டினப்பாலை ஆராய்ச்சி, 220. படித்தபெண்கள், 245. பண்டார மும்மணிக் கோவை,
152. பத்துப்பாட்டு 4, 5, 16, 27, 28, 60, 142.
பத்மாவதி சரித்திரம், 226. பதிற்றுப்பத்து, 5, 16, 18. பதினெட்டாம் பெருக்கு, 240. பதினெண்சித்தர் பாடல், 92. பதினெண் கீழ்க்கணக்கு, 53,
55, 56. பதினுெராங் கிருமுறை, 60, 132.
பரதசேனுபதியம், 190. பரமார்த்த குரு கதை, 172,
173,235. பரிபாடல், 5, 25, 27, 42, 59. பவளக்கொடி நாடகம், 191. பழமொழிநானூறு, 53, 58, பருளை விநாயகர் பள்ளு, 189. பன்னிரு படலம், 4.
T.
பாசவதைப் பரணி, 152. பாஞ்சாலி சபதம், 200, 213. பாட்டியல் நூல், 102. பாண்டிக் கோவை, 114. பாண்டியன் பரிசு, 202. பார்த்திபன் கனவு, 229. பார்வதி பி. ஏ.,231,
அட்டவணை
பாரதம், 145, 155, 156, பாரதக் கதை, 176. பாரத சக்தி மகாகாவியம், 210 பாரதவெண்பா, 78, 103, 114. பாலும் பாவையும், 231.
9. பிரதாப முதலியார் சரித்திரம்,
177, 186, 224, 225.
பிரபுலிங்க லீலை 150, 159, பிரார்த்தனே, 208.
니, புதியதும் பழையதும், 221. புதுமையும் பழமையும், 245. புயல், 232. புரட்சிக்கவி 202. புலவராற்றுப்படை, 188. புள்ளிருக்கும் வேளூர்க்
கலம்பகம், 160, புறநானூறு, 5, 16, 23, 30, 59. புனர் ஜென்மம், 238.
பூதத்தம்பி , 191, பூந்தோட்டம், 232. பூவும் பிஞ்சும், 231.
Glu. பெண், 23. பெண்ணின் பெருமை, 222 பெண் தெய்வம், 230, பெண் புத்திமாலை, 186. பெண் மனம், 230, பெரிய திருவந்தாதி, 100. பெரிய திருமொழி, 95. பெரிய திருமடல், 95.
பெரியபுராணம், 116, 126, 143,

அட்டவணை
பெரியபுராண வசனம், 178, பெரியாழ்வார் திருமொழி,
98. பெருங்கதை, 114. பெருந்தேவனுர் பாரதம், பெரும்பாணுற்றுப்படை, 5, 27, பெருமாள் திருமொழி, 99.
பேதகம் மறுத்தல், 174.
பொ. பொம்மி, 230, பொம்மையா மனேவியா, 244, பொய்த்தேவு, 230. பொருநராற்றுப்படை, 5, 27. பொற்ருெடி, 228. பொன்வண்ணத்தந்தாதி, 99. பொன்னியின் செல்வன், 229,
போ, போரும் காதலும், 232. போற்றிப் பஃருெடை, 35.
f). மங்கையற்கரசியின் காதல்,
236. மங்கையர் பகட்டு, 243, மண்ணியற் சிறுதேர், 244, மணிமேகலை, 5, 42, 43,48, 50,
17. மதங்க சூழாமணி, 223, மதனகாம ராசன் கதை, 235, மதிவாணன், 177, 226, மதிவாணனுர் நாடகத்தமிழ்
நூல், 192. மதுரைக்கலம்பகம், 152. மலரும் மாலையும், 204,
253
மலர் விழி, 231, மலைபடுகடாம், 5. மறைசை அந்தாதி, 189. மனித வாழ்க்கையும் காந்தி
யடிகளும், 221. மனிதன் - அவன் தாழ்வும்
ஏற்றமும், 225. மனேன்மணியம், 191.
III's மாணிக்கவாசகர் காலமும்
வரலாறும், 220, மாப்பிள்ளை வேட்டை, 245. மாயாவிநோதினி, 232. மாறன கப்பொருள், 159. மாறனலங்காரம் , 159, மானவிஜயம், 192.
山°, மிதுறு சாநா, 188. மின்னல் கீற்று, 242. மிஸ்டர் வேதாந்தம், 230,
tổ. - மீட்ைசியம்மை பிள்ளைத்தமிழ்,
159.
முக்கூடற்பள்ே 184, 190. முகைதீன் புராணம், 188. முதல் முத்தம், 206. முதுகுருகு, 3. முது நாரை, 3. முதுமொழி மாலே, 188. முதுமொழிக்காஞ்சி, 53. மும்மணிக்கோவை, 154. முருகன் அல்லது அழகு, 222. முல்லைக்கொடி, 245.

Page 136
254 அட்டவணை
முல்லைப்பாட்டு, 5. முல்லைப்பாட்டு ஆராய்ச்சி, 220,
ey). மூன்று தலைமுறைகள், 232,
(8un. மேரி மக்தலேனு, 213, மேல்காற்று, 243,
6)). மைதிலி, 228.
மோ, மோகவதைப்பரணி, 148, 152, மோகனுங்கி, 177, 226,
யசோதர காவியம், 117,
UT.
யாப்பருங்கலம், 133, 136. யாப்பருங்கலக்காரிகை, 133,
யாழ் நூல், 223, யாழ்ப்பாணச் சமய நிலை, 178,
U. யுவதி, 231,
யே.
யேசுநாதர் சரித்திரம், 172.
ლტ• ரூபாவதி, 192.
9 லுத்தர் இனத்தியல்பு, 174,
6). வச்சிர தண்டம், 178. வசந்த சுந்தரி, 245.
வளையாபதி, 51, 117, 121.
GJIT வாக்கும் வக்கும், 245, வாமன் கதை, 172. வாய்ப்பியம், 4.
ഖി, விக்கிரமாதித்தன் கதை, 235. விதிவழியே, 231. வியாழமாலையகவல், 3. வினவெண்பா, 135. வினுேதரசமஞ்சரி. 177. விஷப்பணம், 232. விஷவிருட்சம், 232,
ഖി', வீரசோழியம், 133, 136,
வே. வெண்டாளி, 3.
ଔରu. வேதவிளக்கம், 172. வேதாந்த உல்லாசம், 225. வேதியரொழுக்கம், 172, 173,
பூரீ புராணம், 104,
ஜனனி, 240,
gs). ஹாம்லெட், 243,

அட்டவணை
maus
புலவர் வரிசை
அ. அகத்தியர், 3. அகப்பேய்ச்சித்தர், 92. அகிலன், 231, அடியார்க்குநல்லார், 161, 190. அண்ணுத்துரை, 23 1, 245
அண்ணுமலை ரெட்டியார், 182,
அதங்கோட்டாசிரியர், 3. அதிவீரராம பாண்டியன், 158,
159, 64. அந்தகக்கவி வீரராகவ முதலி
யார், 143, 149, அப்பர்சுவாமிகள், 78,8687,
88, 93, 15. அம்பலவாண தேசிகர், 165. அம்பலவாண நாவலர், 189. அமிதசாகரர், 133,
gy Ltd (554 if, 164. அரசன் சண்முகனுர், 223, அரு. ராமநாதன், 229, அருணந்தி சிவாச்சாரியார்,
135. அருணகிரிநாதர், 50, 154, அருணுசலக் கவிராயர்,
182, 184. அலியார் புலவர், 188,
(எண் - பக்க எண்)
அழகிய மணவாள ஜீயர், 163. அழகிரிசாமி, 240, 241.
ஆர். வி., 231. ஆரணி குப்புசாமி முதலியார்,
227, ஆறுமுகம், ரா, 232. ஆறுமுகநாவலர், 176, 177, 179, 189. ஆளவந்தார், 163, ஆனந்த தீர்த்தன், 232
இ. இரட்டையர், 149, 151
l54, 157. இராகவையங்கார், ரா,
20l., 223, இராமலிங்க அடிகள், 182, இராமானுசர், 108, 112 இளம் பூரணர், 136. இளமுருகனுர், 245,
F. ஈசான தேசிகர், 165
2. உமறுப்புலவர், 187, உமாபதி சிவாச்சாரியார்,
135,

Page 137
256
9. ஒட்டக்கூத்தர், 129, 131.
ஒள. ஒளவையார், 17, 30.
ö。 க. பூநீ. பூரீ, 232, கச்சியப்ப சிவாச்சாரியார், 119, 128. கச்சியப்ப முனிவர், 182, 184. கண்ணன், பி. எம்., 230, கணபதிப்பிள்ளை, 245, கதிரவேற்பிள்ளை, 189. கதிரேசன் செட்டியார், 244, கபிலர், 3, 23, 30. கம்பன், 11, 123, 124, 125, 23. கம்பதாசன், 206, 207. கருணுநிதி, 245. கருவூர்த் தேவர், 129. கலியாணசுந்தர முதலியார்,
2, 18, 220, 22. கனகசபைப் புலவர், 188.
凸5开。 காக்கை பாடினியார், 3. காரைக்காலம்மையார், 41, 42, 60, 62, 69, 73, 77, 80, 92, Ll 6, 134, 197. காளமேகப்புலவர், 149, 150, 151, 154, 157. 虏。 8. TIT., 245. கிருஷ்ணபிள்ளை, 185, 186, கிருஷ்ணமூர்த்தி (கல்கி),
223, 228, 237.
அட்டவணை
(oj, U. Tff, 22', 232, 238. குணவீர பண்டிதர், 133. குதம்பைச்சித்தர், 92. குமரகுருபர சுவாமிகள்,
l59, 165. குமாரசாமி, நா., 232. குமாரசாமிப் புலவர், 189, குலசேகராழ்வார், 84, 99,
கோ. கொங்குவேளிர், 102.
கோ. கோதைநாயகி, 227, கோதையார், 83, 98. கோபாலகிருஷ்ண பாரதியார், 192, 184.
○F。 சங்கரராம், 231. சங்கரலிங்க ஐயர், 244, சண்முக சுந்தரம், 231. ச. து. சு. யோகிகள், 201. 212, 213. சந்தானம், 244. சபாபதி நாவலர், 180, 189, சம்பந்த முதலியார்,
243, 244. சயங்கொண்டார், 129, 130, சரவணப்பிள்ளை,
176, 177, 226.
子T。 சாண்டிலியன், 229 சாத்தனுர், 41, 52. சாமிநாதையர், 184, 216,
218, 220, 237.

அட்டவணை 25?
ઈ. சிதம்பர சுப்பிரமணியன், 238, சிவஞான முனிவர், 165, 175, .196 و184 ,182 ,180 ,77"h சிவப்பிரகாச சுவாமிகள் 150, 159. சிவசம்புப் புலவர், 188. சின்னத்தம்பிப் புலவர், 188,
89. 亭。 சீநிவாசராகவன், 242, 243,
244.
Gr,
சுகி 231, சுத்தானந்த பாரதியார், 201, 210, 232,245. சுந்தரம்பிள்ளை, 191, 194, சுந்தரமூர்த்தி சுவாமிகள், 83, 89, l 15, 126. சுப்பிரமணிய முதலியார், 201. சுப்பிரமணியன், க. நா. 230,
232, 238,240, 242, 244. சுப்பிரமணியன், தி. நா, 229,
莎· சூரியநாராயண சாஸ்திரியார்,
176, 177, 180, 191 224,
226, சே, செல்லப்பா, 238, 241,
(3 5. சேக்கிழார், 113, 119, 126,
27. சேரமான் பெருமாள் நாயனுர்,
83, 89., 99.,
சேணுதிராய முதலியார், 181. சேனுபதி, த. கா., 232,
சோ. சோமசுந்தர பாரதியார், 201, சோமசுந்தரப் புலவர், 201, 215, 245.
9. டி, கே. சி., 216, 242,
ஞா. ஞானசம்பந்தன், 242.
5. தஞ்சம்,232, தண்டியாசிரியர், 117, 118, 133, தத்துவராயர், 148. தத்துவபோதக சுவாமிகள்,
lil 6, 164, 172, 173, li
g5 To தாண்டவராய முதலியார்,
176, 177. தாதாசாரியர், 244. தாமோதரம்பிள்ளை, 189, தாயுமான சுவாமிகள், 92,
155, 156, 182, 183, 188,
கிரிகடடசுந்தரம், 232. - திரிகடடராசப்ப கவிராயர், -
182, 184. திருக்கடவூர் உய்யவந்ததேவ
நாயனூர், 135. திருக்குருகைப் பெருமாள்
கவிராயர், 158,159 திருஞானசம்பந்த சுவாமிகள்,
83, 84, 85, 88, 93,
115.

Page 138
258
திருத்தக்கதேவர்,114,118,120,
திருநாவுக்கரசு சுவாமிகள்,
83, 84, 85, திருப்பாணுழ்வார், 84,94, திருமங்கையாழ்வார், 84, 94. திருமழிசையாழ்வார்.
83, 91, 92. திருமாளிகைத் தேவர், 115. திருமூலர், 83, 91, 92. திருவள்ளுவர், 42, 46. திருவியலூர் உய்யவந்த
தேவநாயனுர், 135.
ğöl. துமிலன், 231.
தே. தேசிகவிநாயகம் பிள்ளை,
20, 203, 207. தேவன், 230.
தொ. தொண்டரடிப்பொடியாழ்வார், y 83, 93, 95. தொல்காப்பியர்,
3, 27, 63, 79, 136.
தோ. தோலாமொழித் தேவர், 121.
நக்கீரர், 3, 28, 60. நக்கீரதேவ நாயனுர், 73. நச்சினுர்க்கினியர், 161, 162, 190. நஞ்சீயர், 163. நடேச சாஸ்திரியார், 226, நம்பியாண்டார் நம்பி, 84,108,
113, 115, 116, 129.
அட்டவணை
நம்மாழ்வார், 84, 100, 101, 116, 159, 163. நல்லந்துவனர், 25.
5. நாடோடி, 245. நாதமுனிகள், 84, 108, 113, 116, 162, 163. நாமக்கல் இராமலிங்கம்பிள்ளை, 20l., 208. நாராயணசாமி ஐயர், 243, நாற்கவிராச நம்பி, 133,
成。 நிரம்பவழகிய தேசிகர்,
158, 159.
ملا L. π. π., 232. பட்டினத்துப்பிள்ளையார்,
129, 132, படிக்காசுப் புலவர், 159, 160. பரணர், 3, 23, 30. பரஞ்சோதி முனிவர், 133.
பரிமேலழகர், 161, 162, 171. பவணந்தி முனிவர், 133.
பாரதி, 195, 196, 197, 198, 200, 201, 203, 204, 205, 206, 208, 212, 213, 214, 218, 236, 237, 239, பாரதிதாசன், 199, 201, 202, 205, 206, 245. பாம்பாட்டிச் சித்தர், 92. பாலை பாடிய
பெருங்கடுங்கோ, 25,
 

அட்டவணை
山仰。 பிச்சமூர்த்தி, 238, 240. பிசிராந்தையார், 30. பிள்ளைப்பெருமாளையங்கார்,
l59, 160. 나• புகழேந்திப் புலவர், 129, 131. புத்தமித்திரர், 133. புதுமைப் பித்தன், 218, 222, 223, 232, 238,239, 245.
. !ط • பூதத்தாழ்வார், 60, 92.
Gu. பெரியாழ்வார்,82, 83,97,200, பெரியவாச்சான்பிள்ளை, 163, பெருந்தேவனுர், 66, பெருந்தலைச்சாத்தனுர், 30.
பெரும்பற்றப்புலியூர்நம்பி. 158.
பேராசிரியர், 136. பேயாழ்வார், 60. 92.
GLum. பொய்கையார், 57, 131. பொய்கையாழ்வார், 60, 92. பொன்னம்பலபிள்ளை, 189, பொன்னுச்சாமிப்பிள்ளை,
226,
LsÒ. ம்துரகவியாழ்வார், 84, 101. மயில்வாகனப் புலவர், 188. மறைமலையடிகள், 219, 244,
மனவாசகங் கடந்தார், 135.
259
Diss மாங்குடி மருதனுர், 29. மாணிக்கவாசக் சுவாமிகள், 78, 90, 91, 99. 115. மாதவையா, 226, 228, 237, 243. மாயாவி, 230, LD IT fáF IT LÓ), 232.
8. மீனுட்சிசுந்தரம்பிள்ளே,
182, 184,
(P. முதலாழ்வார்கள், 41, 42, 60. 69, 73, 77, 83, 92. முத்து சிவன், 242, முரஞ்சியூர் முடிநாகராயர், 3. முல்லை முத்தையா, 232.
மெள, மெளனி, 238,
町。 ரகுநாதன், 231, 242, ! Y ாங்கராஜ ப, 227, ரங்கநாயகி, 232.
TT, ராமசாமி ஐயங்கார், 243, ராமாமிருதம், 240 ராமையா, 238, 240, ராஜவேலு, 231.
" 1I Tgg60) bD(1J if, l76, 177, 194,
218, 224, 225, 227. .237 ,ບໍ່85 و الإJIT gg IT ggل
G).
மஸ்தான் சாகிப்புப் புலவர், 188. லட்சுமி, 280,

Page 139
260 அட்டவணை
6). a. sj T., 206, 223, 230. வ. வே. சு. ஐயர், 218,
235, 236, 241. வடக்குத்திருவிகிப்பிள் ளை, 163.
வடுவூர் துரைசாமி ஐயங்கார்,
227.
வண்ணக்களஞ்சியப் புலவர்,
188.
வரதராசன், 231, 242. வள்ளூர்க்காப்பியன், 3.
Gმ. விசுவநாதபிள்ளை, 189. விந்தன், 231. விபுலானந்த அடிகள், 223. வில்லிபுத்தூராழ்வார்,
154, 155, 156. விஜயராகவன், 244.
Th orruq Oں مcxور اہمe پل
ബ്
வீரமாமுனிவர்,172,173, 174,185.
வீரசாமிச் செட்டியார். 176, 177. வீழிநாதன், 232.
வே. வெங்கடராமன், 238. வெங்கடராம ஐயர், 243,
ઉGu, வேதநாயகம்பிள்ளை, 176, 177,
184, 185, 186, 194,224, 225.
வேங்கடரமணி, 231,
G06) வையாபுரிப்பிள்ளே, 204, 216.
ஸ். ஸ். வி. வி., 230, 237,
용. ஜயராமன், 232
雳T。 ஜானகிராமன், 240,
 
 


Page 140


Page 141