கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இஸ்லாமியத் தென்றல்

Page 1


Page 2
இந்தியாவுக்கும் ஈழத்துக்கும் முஸ் விம்கள் வந்து குடியேறிய வரலாற் றையும், அவர்கள் தமிழும், தமிழ்க் ஒஃகளும் வளம் பெறப் புரிந்த ருேம் பணியையும் சிறப்பாக * ஆராய்ந்துரைப்பது இந்நூல்.
 

ص

Page 3
w
-
 
 
 
 
 
 
 
 
 
 

ܕܐܢ
இஸ்லாமியத் தென்றல்
استنزف ܝ\
است. "ெஎம். எம். உவைஸ் (எம். ஏ. இலங்கை)
தமிழ்த்துறைத் தலைவர் வித்தியோதய பல்கலைக்கழகம், இலங்கை,
ø, Hjässiv slå
tē
மணிக்குரல் பதிப் பக்ம் பதுளை - இலங்கை

Page 4
முதல் பதிப்பு: டிசம்பர் 1961 உரிமை ஆசிரியருக்கே
விலை ரூபா 2-50
மொடர்ன் பிரிண்டர்ஸ், பதுளை, இலங்கை.
 
 

எண்
1. 2. 3. 4. 5. 6 7
10. 11. 12. 13. 14. 15.
Sf) இதனுள்ளே பொருள்
இந்தியாவில் முஸ்லிம் மக்கள் ஈழநாட்டு முஸ்லிம்கள் வாணிபமும் பொருளாதாரமும் கலையும் கலாசாரமும் கல்வியும் இலக்கியமும் முஸ்லிம்களும் தமிழ்மொழியும் காப்பியங்கள் :
சீருப்புராணம்
புதுகுஷ்ஷாம்
திருமணிமாலை
குதுபுநாயகம்
இராசநாயகம்
நாகூர்ப்புராணம் ஏனைய பிரபந்தங்கள் :
ஆற்றுப்படை
அந்தாதி
மக்காத்திரிபந்தா
நாகையந்தாதி
பிள்ளைத்தமிழ் நூல்கள்
அம்மானை
கலம்பகம் சிற்றிலக்கியங்கள்
ஏசல்
r്
திருப்புகழ்
கீர்த்தனங்கள்
சிந்து
கும்மி
தாலாட்டு
ஆனந்தக்களிப்பு முஸ்லிம் பிரபந்தங்கள்
SD -60).J1560) Llசமயதத்துவமும் ஒழுக்கநெறியும் முஸ்லிம் ஞானிகள் அறபுத் தமிழ் முடிவுரை

Page 5
பதிப்புரை
ஈழத்து இஸ்லாமியரிடையே இலக்கிய விழிப் புணர்ச்சி பெருமளவுக்கு ஏற்பட்டுள்ள காலமிது. இக்கால கட்டத்திலே "இஸ்லாமியத் தென்றல் பிறந்து தவழ்வது மிக, மிகப் பொருத்தம் என்பதை எவரும் மறுக்க முடியாது.
இஸ்லாமியர் எங்கெங்கு குடியேறினும், அங் கங்கு வாழும் மக்களுடன் அன்பில் ஒன்றாகி, அவர் மொழியையே தம் மொழியாக்கித் தமது பண்பிலே மாறாது, சேர்ந்தவருடைய மொழியும், நாடும் சிறப் புறப் பணிபுரியும் பான்மையுடையவர்கள். 'புவியெ லாம் எங்கள் தாயகமாகும்' என்ற பரந்த எண்ணத் திலூறும் அரும்பண்புக்கேற்ப அவர்கள், இந்தியா விலும், ஈழத்திலும் குடியேறி இந் நாடுகளின் மொழியும், பண்பும், கலாச்சாரமும் சீர் பெறச் செய்த பணிகளைப் பற்றி ஆராய்ந்துரைக்கும் நோக்கு டன் எழுந்ததே 'இஸ்லாமியத் தென்றல்' என்ற இந்நூலாகும்.
'முஸ்லிம்கள் தமிழுக்குச் செய்த தொண்டு' (MUSLIM coNTRIBUTION TO TAMIL LITERATURE) என்ற ஆங்கில ஆராய்ச்சி நூலை முதல் நூலாக எழுதியும், இஸ்லாமிய இலக்கியம் பற்றி ஆழ்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியும் பண்பட்ட எழுத்தாளர்,

அறிஞர் ஜனுப். எம். எம். உவைஸ்- எம். ஏ. (இலங்கை)-அவர்களே இந்த அரிய நூலையும் எழுதி
யுதவியுள்ளார்கள். அவர்களது இலக்கியப் பணி
ஈழத்திலும், தமிழகத்திலும் எழிலான எடுத்துக் காட்டாக விளங்குவதாகும்.
இஸ்லாமியத் தென்றலை மணிக்குரல் பதிப்பகத் தின் இரண்டாவது வெளியீடாக வெளியிட அனு மதிதந்த ஆசிரியர் அவர்களுக்கு எமது இதயங் கனிந்த நன்றியைத் தெரிவிக்கின்முேம். அவர்கள் எழுதிய ஏனைய இலக்கிய ஆராய்ச்சி நூல்களையும் தொடர்ந்து வெளியிட இருக்கிருேம் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிருேம்.
ஏற்றமிகு இஸ்லாமியத் தென்றலைப் பெருமை யோடு வெளியிடுகிருேம். குறைந்த அளவிலானலும் உயர்ந்த பணியைச் செய்யவேண்டும் என்ற எமது விருப்புத் தொடர்ந்து வெற்றி பெற ஆதரவளிக்கும் அறிவுலகம் இஸ்லாமியத் தென்றலையும் இனிதாய் ஏற்று ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கிருேம்.
இந் நூலைக் குறுகிய காலத்தில் அழகுற உருவாக் கித் தந்த பதுளை மொடர்ன் அச்சகத்தாருக்கும், படி யெழுதி உதவிய ஜனுப். எம். ஜே. எம். நளtர் அவர்களுக்கும் எமது நன்றி உரியதாகும்.
மணிக்குரல் பதிப்பகத்தார்.

Page 6
" ... - - - கர், சே, 1 ' -
- தேர்தல் - 4
- 1 கி)
.
இந் நூலாசிரியரின் முதல் நூல்:
MUSLIM CONTRIBUTION TO TAMIL LITERATURE முஸ்லிங்கள் தமிழ் மொழிக்காற் றிய தொண்டினைச் சிறப்பாகவும், விரிவாகவும் எடுத்துரைக்கும்
ஒரே , ஆங்கில ஆராய்ச்சி நூல். த
கல்ஹின்னைத் தமிழ் மன்றம்
வெளியிட்டது. ட கக் க
தி
(15 -
' : தடை

என்னுரை
இனத்தால் சோனகரென்றும், மதத்தால் முஸ்லிம் மக்கள் என்றும் அழைக்கப்படும் நாம் ஈழ நன்னாட்டின் பழங்குடி மக்களுள் ஒரு பிரிவினராவோம். நாம் பல நூற்றாண்டு காலமாக ''செரந்திப்'' என்னும் இலங்கையில் வாழ்ந்து வருகிறோம். 'ஸெய்லான்' என்றும் அறபியில் வழங்கும் இவ்வீழத் திருநாட்டின் முன்னேற்றத்துக்காக நாம் ஈட்டிய சாதனைகள் யாவை? ஸ்ரீ லங்காவின் சுபீட்சத்துக் கான எமது தொண்டின் அளவு யாது ? யாம் எமது வீடுகளில் பேசும் மொழியைப் பொறுத்தவரையில் அதன் வளர்ச்சிக்கு என்ன தொண்டு புரிந்துள்ளோம்? முஸ்லிம் மக்களின் தமிழ்த் தொண்டு ஏனைய சாகியத்தவரின் தமிழ்த் தொண்டினை விட எது விதத்தி லும் குறைவானதா? எமது கலை, பண்பாடு முதலியவற்றைப் பேணிப்பாதுகாப்பதில் இங்கு வாழும் நாம் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றுள்ளோம்? என்ற இன்னோரன்ன வினாக்களுக்குரிய விடைகளை நாம் இன்னும் முற்றாக அறியாதவர்களாகவே இருக்கிறோம்.
இத்தகைய வினாக்களுக்கு இயன்றவரையில் திருத்திகரமான விடைகளை ஓரளவுக்காவது காண்பதைக் குறிக்கோளாகக்கொண் டே ''இஸ்லாமியத் தென்றல்' எழுந்தது எனின் அது மிகையா காது இஸ்லாமியத் தென்றலுக்குப் பொருளாய் அமைந்த கருத்துக் களை அடிப்படையாக வைத்து இலங்கை வானொலியின் தேசிய ஒலி பரப்பின் தமிழ்ப்பகுதியிலும், கல்விப்பகுதியிலும், முஸ்லிம் நிகழ்ச்சி யிலும் பல தடவைகளில் பல பேச்சுக்கள் ஒலிபரப்பப்பட்டன. பல சந்தர்ப்பங்களில் இதே பாணியில் பல கட்டுரைகளைத் தினகரனில் வெளியிட்டுள்ளேன். இவற்றை ஒன்று படுத்தி நூல் வடிவில் வெளியிட வேண்டும் என்று நண்பர்கள் பலர் வேண்டிக்கொண்ட னர். அக் கோரிக்கையை நிறைவேற்றும் முகமாக எழுந்ததே இவ் இஸ்லாமியத் தென்றல். இச்சிறு நூலில் குறைகள் இருக்கலாம் குற்றங்களைந்து குணங்கொள்ளல் கற்றறிந்தோரின் கடன் அல் லவா?
இஸ்லாமியத் தென்றலை வெளியிடும் முயற்சியில் எமக்கு ஊக் கம் அளித்த அனைவருக்கும், சிறப்பாக மணிக்குரல் பதிப்பகத்தா ருக்கும் என் உளங்கனிந்த நன்றி.
''மர்கஸி' ஹேனமுல்லை,
ம. முகம்மது உவைஸ் பாணந்துறை. 1961 டிசம்பர் 1

Page 7
அட்டைப் படம்
முஸ்லிம்கள் முதன் முதல் இலங்கையில்
குடியேறிய இடங்களுள் ஒன்றெனக்
கருத்தப்படும் வேர் விலைக் குடா வின் தோற்றம்.

இஸ்லாமியத் தென்றல்
இந்தியாவில் முஸ்லிம் மக்கள் எமக்கு எல்லாம் ஊர்; எல்லாரும் சுற்றத்தார் என்ற கருத்துக்களை அமைத்து கணியன் பூங்குன்றன் என்ற'சங்க காலப் புலவர் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று பாடிப்போந்தார். ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரேயே தமிழ் மக்கள் இத்தகைய உய உளப்பாங்கு ரிய உளப்பாங்கு உடையராய்த் திகழ்ந் தார்கள். இத்தகைய விழுமிய கருத்தினைக் கொண்டு, தமிழ் மக்கள் வாழ்ந்தனர் என்பதற்குத் தமிழ் இலக்கிய நூல்களே சான்று பகருகின்றன. பல்வேறு இனத்தவரும் பல்வேறு சமயத்தவரும் தமிழ் மொழி யைப் பேணிப் போற்றி வளர்த்து வந்தனர். வளர்த்து வருகின்றனர். வேறுபட்ட பல சமயங்களின் போதனைக ளைக் கொண்டு தமிழ் இலக்கியம் மிளிர்கின்றது. பல்வேறு சமயப் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு எழுந் துள்ள தீந் தமிழ் நூல்கள் மிகப் பல. பொது மொழி இங்ங்னம் ஒன்றேடொன்று வேறுபட்ட பல சமயங்களின் கொள்கைகளைத் தம் மிடத்தே கொண்ட மொழிகள் மிகமிகச் சிலவே. உலகில் உள்ள பல வேறு சமயத்தவராலும் போற்றப்படும் ஒரு சில மொழிகளுள் பைந்தமிழும் ஒன்று. சைவம், வைண வம், பெளத்தம், சமணம், கிறிஸ்தவம், இஸ்லாம் முத லிய பல வேதங்களை அறியக் கூடிய மொழியாக இனிய தமிழ் மொழி விளங்குகின்றது. இஸ்லாமிய அடிப்படைக் கருத்துக்களை முக்கியமாகத் தழுவி எழுந்த நூல்களைப் பற்றி அறிவதே எமது நோக்கம்.

Page 8
12
இஸ்லாமியத் தென்றல்
சா
தமிழ் மொழியில் இஸ்லாமிய நூல்கள் தோன்று வதற்கு முஸ்லிம்களின் தமிழ்நாட்டு வருகையேகாரணம்.
எனவே முஸ்லிம்கள் எவ்வாறு தமிழ் முஸ்லிம்கள் நாட்டுக்கு வந்தார்கள் என்பதை நாம் வருகை முதலில் அறிய வேண்டும். அவர்களுக்
குத் தமிழ் ஆர்வம் எங்ஙனம் உண்டா யது என்பதையும் நாம் அறிதல் இன்றிமையாதது.
ஒரு நாட்டுக்கு சுபீட்சமும் அமைதியும் மிக மிக முக் கியம். நாட்டில் குடி மக்களின் பொது நலனுக்காக அர சாட்சி நடைபெறல் வேண்டும். பழங் காலத்தில் அவ்
வாறு நடைபெற்றமையினாலேயே மக் அரசியல்
கள் அரசியல் துறையில் முன்னேற்ற
மடைந்தனர். ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கை முறையும், கலா சாரமும் அந்த நாட்டின் அர சியல் முன்னேற்றத்திலே ஓரளவுக்குத் தங்கி இருந்தன. ஏன்? இன்றும் அப்படித்தான். இனி, இலக்கியம் என் றால் என்ன? மக்கள் வாழ்க்கையைப் பிரதி பலிக்கும் பளிங்
குக் கண்ணாடியே இலக்கியம். ஆதலினால் இலக்கியம் - ஒரு நாட்டின் அரசியல் நிலையைப் பொ
றுத்தே அந்த நாட்டு இலக்கியங்கள் தோன்றும் என்று கூறுவது பொருத்தமுடைத்து என லாம். எனவே முஸ்லிம்கள் தமிழ் நாட்டுக்கு வந்த வர . லாற்றை ஒருவாறு அறிய முயல்வோம்.
தமிழ் நாட்டுக்கு முஸ்லிம்களின் வருகை வட இந்தியாவிலிருந்து படையெடுத்து வந்த முஸ் லிம்களே தென் இந்தியாவில் குடியேறிய முதல் முஸ்லிம் கள் என்று கூற முடியாது. வட இந்தியாவுக்கு வரமுன்ன மேயே முஸ்லிம்கள் தென் இந்தியாவுக்கு வந்துவிட்டனர்.
இஸ்லாம் உலகில் பரவுவதற்கு முன் பி குடியேற்றம் ருந்தே அறாபியருக்கும் இந்து சமுத்திரக்
- கரையோரங்களில் வாழ்ந்த மக்களுக்கு மிடையே வியாபாரத் தொடர்பு இருந்து வந்தது என்ப தற்குப் பல சான்றுகள் உள்ளன. 'இந்தியாவின் மேற்குக்

இந்தியாவில் முஸ்லிம் மக்கள்
13
கரையில் வாழ்ந்த மக்களுக்கும் அராபியருக்குமிடையே முகம்மது நபி (சல்) அவர்கள் இஸ்லாத்தை உலகில் பரப்புவதற்கு முன்பிருந்தே பெருமளவில் வர்த்தகத் தொடர்பு இருந்தது' என்று எஸ். சிறிகந்தயா என்ற வரலாற்று ஆசிரியர் கூறியுள்ளார். இன்னொரு வரலாற்று நூலாசிரியரான எஸ். கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் அவர் கள் 'முகம்மது நபியின் வருகையினாலும் அவர்களுக்குப்
பின் வந்த அவர்களது பிரதிநிதிகளின் வரலாற்று முயற்சியினாலும் ஒரே முறையில் அத்தி ஆசிரியர் லாந்திக் சமுத்திரத்துக்கும் பசுவிக் சமுத்
திரத் துக்கு மிடை யே இஸ்லாம் தொடர்பை உண்டுபடுத்தியது' என்றும் ஆனால் இந்து சமுத்திரப் பிராந்தியங்களிலே அவர்களின் ஆதிக்கம் பெரி தும் நிலை பெற்றது,' என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் இந்து சமுத்திரத்திலே தான் முஸ்லிம்களின் பேரரசு நிலவியது என்றும் இந்து சமுத்தி ரம் ஒரு மாபெரும் அறபுக் கடலாய் மாறியது என்றும்
கூறுகின்றார்.
இஸ்லாம் உலகில் பரவிய பின்னர் இந்தியாவின் கடற்கரைப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் அறாபியர் குடியேறினர். வர்த்தகமே அவர்களின் முக்கிய குறிக்
கோள். இந்தத் துறையில் உள் நாட்டில் வர்த்தகம் ஆட்சி செய்த இந்து அரசர்கள் முஸ்லிம்
களுக்கு சகல சலுகைகளையும் அளித்த னர். 13ம் நூற்றாண்டின் இறுதியில் முத்துப் பள்ளி, காயல் என்ற இடங்கள் தென் இந்தியாவில் முஸ்லிம் வர்த்தக நடு நிலையங்களாக விளங்கின.
பாரசீக வளைகுடாவிலே 'கிஸ்' என்ற ஒரு தீவு இருக் கின்றது. அதனை ஜெமாலுத்தீன் என்ற பெயரையுடைய குறு நில மன்னர் ஆட்சி செய்து வந்தார். அவரை 'முல் குல் இஸ்லாம்' என்று வழங்கினர். அவர் காயலிலே ஒரு . வியாபார நிலையத்தை நிறுவி தக்றுத்தீன் அப்துல் றகு மான் என்பவரைத் தனது பிரதிநிதியாக நியமித்தார். இங்ஙனம் காயல் நகர் முஸ்லிம்களுடன் நெருங்கிய

Page 9
14 இஸ்லாமியத் தென்றல்
தொடர்பு கொண்டிருந்தது என்பதை பல வரலாற்று ஆசிரியர்கள் உறுதிப்படுத்துவர். வஸ்ஸாப் என்ற வர லாற்று ஆசிரியர் பித்தன், மாலிபித்தன், காயல் காபில் என்ற துறைமுகப் பட்டினங்கள் புகழ் பெற்று விளங்கின என்றும் அவற் றிற்குத் தக்றுதீன் அப்துல் ரஹ்மான் என்பவர் தலைவராக இருந்தார் என்றும் கூறியுள்ளார். பட்டினம், மேலைப் பட்டினம், காயல் அல்லது காயற்பட்டினம் ஆகியவற் றையே அவர் அவ்வாறு குறிப்பிட்டிருத்தல் வேண்டும். மார்க்கோ போலோ என்ற பிரபல தேச சஞ்சாரி காயற் பட்டினத்தைப் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். **காயல் தலை சிறந்த துறைமுகப்பட்டினம். கிழக்கிலிருந் தும் மேற்கிலிருந்தும் வணிகர்கள் அங்கு வந்தனர். இந்தி யாவின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் வியாபாரத்தின் பொருட்டு அங்கு வந்தனர். மார்க்கோபோலோ இலங் கைக்கு வந்து விட்டு இந்தியாவில் இறங்கிய இடத்தை ம'அபார் என்று குறிப்பிட்டுள்ளார். மலபார் சேர மண்டலக் கடற்கரைப் பகுதியை முஸ்லிம்கள் பொதுவாக ம‘அபார் என்றே அழைத்தனர். இந்தியக் குடா நாட்டின் கடற் கரைப் பட்டினங்களில் முஸ்லிம்கள் குடியேறினர். அரு பியரின் வழித் தோன்றல்களான அம் முஸ்லிம்கள் அந் நாட்டு மக்களுடன் நெருங்கிப் பழகத் தலைப்பட்டனர். முஸ்லிம்களின் தொகை நாளடைவில் பெருகிக் கொண் டே சென்றது.
வட இந்திய முஸ்லிம்களின் தொடர்பு
வட இந்திய முஸ்லிம்கள் தென் இந்தியாவில் தம் கவனத்தைச் செலுத்தாமல் இருக்கவில்லை. வட இந்திய முஸ்லிம்களின் தென் இந்தியப் படையெடுப்பு எதிர்பா ராத விதமாகவே நடைபெற்றது. பிறுஸ் கில்ஜி ஜமாலுத்

இந்தியாவில் முஸ்லிம் மக்கள் 15
தீன் என்பவர் டெல்லி சுல்தானக ஆட்சி நடத்தி வந் தார். அந்த சுல்தானின் மகளை அவருடைய சொந்த மருமகனன அலாவுத்தீன் என்பவர் டெல்லி மணஞ் செய்தார். அலாவுத்தீனுே பேரா சுல்தான் சை பிடித்தவராகக் காணப்பட்டார். நாள் செல்லச்செல்ல அலாவுத்தீனுக்கும் அரச சுற்றத்தாருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட் டது. தனது பேராசையைப் பூர்த்தி செய்து கொள்ள அலாவுத்தீன் திட்டங்களை வகுத்தார். அவர் இங்ங்ணம் அரசைக் கைப்பற்றத் திட்டம் வகுத்துக் கொண்டிருக் கையில் தென் இந்தியா செல்வங் கொழிக்கும் நாடு எனக்கேள்விப்பட்டார். தெற்கே படையெடுத்துச் செல்ல ஆயத்தமானர். போதிய அளவு செல்வத்தைச் சேர்ப் பதே அலாவுத்தீனின் பிரதான குறிக்கோளாக இருந்தது. அந்தச் செல்வத்தைப் பயன்படுத்தித் தனது மாமனரான சுல்தானைச் சிம்மாசனத்திலிருந்து நீக்கி அரசைக் கைப் பற்ற எண்ணினர். இறுதியில் அவரது திட்டங்கள் நிறை வேற்றப்பட்டன. அலாவுத்தீன் டெல்லி சுல்தானகப் பிரகடனஞ் செய்யப்பட்டார். பிறகு முழு இந்தியாவை யும் தனது அரசின் கீழ் கொண்டுவரல் மாலிக் கபூர் வேண்டும் என்று திட்டங்களை வகுக்கலா ஞர். தனது திட்டத்தை நிறைவேற்றத் தனது படைகளின் பிரதம சேனதிபதியாகத் தனது புகழ் பெற்ற அடிமையான மாலிக் கபூர் என்பவரை நியமித் தார். கி. பி. 1310ம் ஆண்டளவில் தென் இந்திய அர சுகள் பலவற்றைக் கைப்பற்றுவதில் மாலிக் கபூர் வெற்றி ஈட்டினுர்,
தென்னிந்தியாவில் அரசியல் குழப்பங்கள்
அப்பொழுது பாண்டிநாட்டில் உள்நாட்டுக் குழப்பங் கள் நடந்துகொண்டிருந்தன. சுந்தர பாண்டியன், வீர பாண்டியன் என்னும் இரு சகோதரர்கட்கிடையே போர் மூண்டிருந்தது. இவர்களின் தந்தையான குலசேகர பாண் டியனின் குறுகிய நோக்கமே இந்தப் போருக்கு முக்கிய

Page 10
16 - இஸ்லாமியத் தென்றல்
காரணமாக இருந்தது. சுந்தர பாண்டியன் முடிக்குரிய இளவரசன், மூத்த புதல்வன். வீர பாண்டியன் இளம் புதல்வன்; குலசேகர பாண்டியனின் மிக்க அன்புக்குரிய இராணியின் புதல்வன். எனவே சுந்தர பாண்டியனுக்குச் செல்ல வேண்டிய அரசுரிமையைக் குலசேகர பாண்டியன் தனது இளைய குமாரனன வீரபாண்டியனிடம் ஒப்படைத் தான். இத்தகைய பாரபட்சம் காட்டுதலை சுந்தர பாண் - டியனல் சகிக்க முடியவில்லை. சுந்தர பாண்டி நாடு பாண்டியன் போரை ஆரம்பித்தான். குலசேகர பாண்டியனின் மரணத்தின் பின்னரும் போர் தொடர்ந்து நடைபெற்றது. தொடக் கத்தில் வீர பாண்டியனுக்கு வெற்றி கிடைத்தது.இதன் பயணுகச் சுந்தர பாண்டியனுக்குப் பாண்டி நாட்டை விட்டுச் செல்ல நேர்ந்தது. சுந்தர பாண்டியன் வட இந் தியாவிலிருந்து தென் இந்தியாவுக்குப் போர் தொடுத்து வந்த முஸ்லிம் சேனதிபதி மாலிக் கபூரிடம் சென்றன். முஸ்லிம் சேனதிபதியின் உதவியைக் முஸ்லிம் தலையீடு கோரினன். மாலிக் கபூரும் உதவி செய்ய இணங்கினன். இரு சகோதரர் கட்கு மிடையே எழுந்துள்ள சச்சரவில் எந்தப் பக்கம் சேர வேண்டும் என்பதில் அவர் அவ்வளவு அக்கரை செலுத்தவில்லை. தனது குறிக்கோள்களை ஈட்டிக்கொள் ளும் பொருட்டு நிலைமையைப் பயன் படுத்த வேண்டும் என்பதிலே பெரிதும் ஆர்வம் கொண் பழங்குடி டார். அங்ங்னமே கடமையாற்றத் தலைப் முஸ்லிம்கள் பட்டார். அப்பொழுது கந்தூர் என்ற இடத்திலே இந்து மன்னனின் குடிக ளாக முஸ்லிம்கள் வாழ்வதைக் கண்டார். சில சந்தர்ப் பங்களில் வட இந்தியாவிலிருந்து படை எடுத்து வந்த முஸ்லிம்களுக்கு எதிராக இந்து மன்னருடன் சேர்ந்து முஸ்லிம்களும் போர் புரிந்தனர் என்று வரலாற்று ஆசி ரியர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர்.

இந்தியாவில் முஸ்லிம் மக்கள் 17
மதுரையில் முஸ்லிம்களின் ஆட்சி
பராக்கிரம பாண்டியன் பாண்டி நாட்டை ஆண்டு வந்த பொழுது கி. பி. 1324ம் ஆண்டில் பாண்டி நாட் டில் இன்னெரு முஸ்லிம் படை எடுப்பு நடைபெற்றது. இந்தப் படை எடுப்பின் காரணமாகப் பராக்கிரம பாண் டியன் பிடிபட்டான். டெல்லிக்குச் சிறைக் கைதியாக அனுப்பப்பட்டான். இந்தப் படை எடுப்பின் பயனுகப் பாண்டி நாடு டெல்லி சுல்தானின் மாகாணமாக மாறி யது. ஆனல் கி. பி. 1335ம் ஆண்டான பொழுது முஸ் லிம்கள் மதுரையில் தனி அரசை நிறு முஸ்லிம் வினர். மதுரையில் முஸ்லிம் அரசை தனியரசு நிறுவுவதற்கு மூல காரணமாயிருந்தவர் ஜலாலுத்தீன் அஸன்ஷா என்பவர். இவர் வட ஆபிரிக்காவைச் சேர்ந்தபிரபல முஸ்லிம் தேச சஞ்சாரியான இப்னு பதூத்தாவின் மாமனுராவர், பாண்டிநாட்டில் தங்கி இருந்த பொழுது இப்னு பதூத்தா இவரின் மகளைத் திருமணம் செய்தார். ஜலாலுத்தீன் அஸன் ஷா டெல்லி சுல்தானுடன் இருந்த எல்லாத் தொடர்புகளையும் அகற்றி விட்டுத் தமிழ் நாடு முழு வதும் தமது ஆதிக்கத்தைப் பிரகடனப் படுத்தினர். ஆனல் 'இங்ங்ணம் நிலை நிறுத்தப் பட்ட முஸ்லிம் ஆட்சி தமிழ் நாட்டின் முஸ்லிம் ஆட்சி கி. பி. 1378ம் ஆண்டுடன் முடிவடைந்திருக்க லாம்' என்று எஸ். கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் ‘தென் இந்தியாவும் முஸ்லிம் படைஎடுப்பாளரும்’ என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இஃதிவ்வாருயின், மதுரை சுல்தானின் ஆட்சி நாற்பத்தி மூன்று ஆண்டுகள் நடை பெற்றிருக்கலாம் என்பது புலனுகின்றது. ஏறக்குறைய அரை நூற்றண்டு காலம் முஸ்லிம் ஆட்சி தமிழ் நாட் டில் நிலவிய போதும் அவர்களின் ஆட்சி, குழப்பங்கள் சூழ்ந்ததும் அமைதி அற்றதுமாக இருந்தது. மதுரை சுல் தானிய ஆட்சியின் வீழ்ச்சிக்கு, இரண்டாவது கம்பன்
என்ற விசய நகர இளவரசரே அடிகோலினர்.

Page 11
18 இஸ்லாமியத் தென்றல்
விசயநகரப் பேரரசு ஓங்குவதற்குச் சாதனங்களாய் இருந்தனவற்றுள் தென்னிந்தியாவில் முஸ்லிம் ஆட்சி நிலவியதும் ஒன்று, இரண்டரை நூற்ருண்டுகளாகத் தமிழ் நாட்டில் முஸ்லிம் ஆட்சி வளர்ந்தோங்காமல் - தடுத்த பொறுப்பு விசய நகர மன்னர் விசய நகர களையே சாரும். விசய நகர மன்னர் மன்னன் காலத்திலே முஸ்லிம் ஆட்சிக்கு முற்றுப் , புள்ளி வைக்கப்பட்ட போதிலும், அப் பொழுது தமிழ் நாட்டிலே மதுரையிலும், கன்னனுரரி லும் இரண்டு முஸ்லிம் பாளையங்கள் இருந்தன.
தஞ்சாவூரில் முஸ்லிம்களின் ஆட்சி கி. பி. 1646ம் ஆண்டுடன் விசய நகரப் பேரரசும் தென்னுட்டிலே ஒரு முடிவை எய்தியது. விசய நகர மன்னன் ஆட்சி முடிவடைந்த பத்தாண்டுகளில் மறு Y. படியும் முஸ்லிம்களின் ஆட்சி தமிழ் முஸ்லிம் பேரரசு நாட்டிலே தலை தூக்கியது. கிங்ஜி அர சையும் தஞ்சாவூரையும் முஸ்லிம்கள் தமது ஆட்சிக்குட்படுத்தினர். மதுரை மன்னர்கள் முஸ்லிம் பேரரசுக்குத் திறை செலுத்தினர்.
நாயக்கர் ஆட்சி இதைத் தொடர்ந்து நாயக்கரின் ஆட்சி தமிழ் நாட் டிலே நிலவியது. மதுரையை ஆண்ட நாயக்க மன்ன ருள் வீரப்ப நாயக்கர் குறிப்பிடத்தக்கவர். அவர் பார ། பட்சமின்றி செங்கோலோச்சி செவ் நன்கொடை வனே நீதி செலுத்தி வந்தார். "கூன் பாண்டியனல் முஸ்லிம்களுக்கு நன் கொடையாக அளிக்கப்பட்ட ஒரு நிலப் பரப்பு சம்பந்த மாக எழுந்த கருத்து வேற்றுமையைப் பற்றி நீண்ட ஒரு விசாரனை நடத்தித் பழைய நன்கொடையை வீரப்ப நாயகர் உறுதிப்படுத்தினர்' என்று கி. பி. 1750ல் செதுக்கப்பட்ட கோரிப்பாளையம் கல்வெட்டு குறிப்பிடு
கின்றது.

இந்தியாவில் முஸ்லிம் மக்கள் 19
திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தென்னிந்தி யாவில் வாழ்ந்த முஸ்லிம்கட்கும் இந்துக்களுக்கும் இடையே வேற்றுமைகள் அவ்வளவாக இருக்கவில்லை. அதற்குப் பின்னர் சொற்ப காலமே ஆட்சி பீடத்தி லமர்ந்த முத்து வீரப்ப நாயக்கன் முஸ் மானியங்கள் லிம்களுடன் சதா சச்சரவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அவனுக்குப் பின் னர் அரசு கட்டில் ஏறியவர்களுள் ஒருவரான திருமலை சேதுபதி என்பவர் முஸ்லிம்களுக்கு மானியங்களை வழங் கினர். அவருடைய கடைசிக் கல்வெட்டு கிழவன்சேதுபதி ஹனுமந்த குடியில் உள்ளது. அந்தக் கல்வெட்டில் முஸ்லிம்களுக்கு வழங்கப் பட்ட மானியங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர், அரசனில்லாமல் சில காலம் கழிந்தது. கிழவன் சேதுபதி அரசனுகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விஜய ரகுநாதத் தேவர் என்பது அவரின் இயற் பெயர். அவர் முஸ்லிம்களை நன்முக நடத்தினர். அவரின் காலத்திலே தான் தமிழ் நாட்டிலே வாழ்ந்த தலை சிறந்த கொடை யாளியான வள்ளல் சீதக்காதி புகழ் பெற்றிருந்தார்.
நாயக்க இராணிகளுள் இராணி மங்கம்மாள் குறிப் பிடத்தக்கவராவர். அருள் பாளையம் இளவரசனுடன் நடந்த போரில் தமக்கு உதவி அளிக்கும் மஸ்ஜித் படி இராணி மங்கம்மாள் தாவுது கானுக்கு நிருபம் வரைந்து நாடிய வற் றைப் பெற்றர். ஒரு முஸ்லிம் மஸ்ஜித் கட்டுவதற்காகத் திருச்சிருப்பள்ளிக்கருகாமையில் சில கிராமங்களை மானியமாக இராணி மங்கம்மாள் வளங்கினர்.
நாயக்க அரச பரம்பரையில் கடைசியாக அரசு கட் டிலேறியவர் இராணி மீனுஷி அம்மாள். இந்த இராணி யும் முஸ்லிம் உதவியைக் கோரி முஸ்லிம் முஸ்லிம் ஆட்சி களிட்ம் விண்ணப்பித்தார். மீனவி
அம்மாளின் அரசாட்சியின் போது மதுரை மறுபடியும் முஸ்லிம் ஆட்சிக்குட்பட்டது.

Page 12
20 ܬ ܘܼ இஸ்லாமியத் தென்றல்
1736ம் ஆண்டில் ஆர்கொட் நவாப் தனது மகன் ஸத்தார் அலியையும், மருமகன் சந்தா சாகிபையும் , மதுரை அரசையும் தஞ்சாவூர் அரசையும் அடிபணிய வைக்குமாறு அனுப்பின்மையினலேயே முஸ்லிம் ஆட்சி மீண்டும் மதுரையில் நிலைத்தது.
பிரித்தானியர் வருகை
இதற்கிடையில் பிரித்தானியர் இந்தியாவுக்கு வந்து விட்டனர். யூசுப்கான் என்று அழைக்கப்பட்ட முகம்மது யூசுப் என்பவர் பிரித்தானியரின் சேனை யூசுப் கான் யில் பணி புரிந்தார். பின்னர் பிரித்தா னியருக்கெதிராகப் போரிட்டார். பிரித் தானியருக்கெதிராக நடத்தப்பட்ட அவரின் புரட்சி கி. பி. 1764ல் அவர் தூக்கிலிடப்பட்டதுடன் முடிவுற் றது. பிறகு திப்பு சுல்தான் என்பவர் அங்கு தோன்றி ஞர். பிரித்தானிய ஆட்சிக்கெதிராக திப்பு சுல்தான் திப்பு சுல்தான் பிரெஞ்சுக்களுடன் சேர்ந்து போராடினர். 1800ல் நடை பெற்ற போரில் திப்பு சுல்தான் உயிர் நீத்தார். இவ் வாறு வெற்றியீட்டிய பிரித்தானியர் தமது ஆட்சியைத் தென்னிந்தியாவில் ஸ்திரப்படுத்தினர். முழு இந்தியா வையும் தமது ஆட்சியில் கொண்டு வருவதில் வெற்றி ஈட்டினர். இதன் பயனக இந்திய உப கண்டத்தில் முத லில் அமைதி நிலவியது.

ஈழ நாட்டு முஸ்லிம்கள்.
இன்று ஈழத்தில் பல இனத்தவர்கள் வாழ்கின்றனர். பல மதத்தவர்கள் வசிக்கின்றனர்; பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் சீவிக்கின்றனர். ஈழ நாட்டு மக்கள் என்ற முறையில் அனைவரும் ஈழ நாட்டுப் பழங்குடி மக்களே யாவர். வேடர்களைத் தவிர்த்து ஏனையோர்கள் ஈழத்தில் வளர்ந்து குடியேறினவர்கள் என்பது வரலாற்றாசிரியர் களின் முடிவாகும். அனைவரும் பழங்குடி மக்கள் எனி னும் ஒரு சாரார் முதன் முதலிலே வந்திருக்கலாம். அதை அடுத்து வேறொரு சாரார் வந்திருக்கலாம். இன் னொரு சாரார் பிற் காலத்தில் வந்திருக்கலாம். மற்றொரு சாரார் பின்னர் வந்து குடியேறியிருக்கலாம். இவ்வாறு பல நூற்றாண்டுக் காலப் போக்கில் ஈழப் பழங்குடி மக்கள்
இங்கு குடியேறியிருக்கலாம். இன்று ஈழ பழங்குடி நாட்டில் வாழும் மக்களுள் மிகப் பெரும்
பான்மையானோர் சிங்கள மக்களாவர். சிறுபான்மையினருள் பெருந் தொகையினர் தமிழ் மக்க ளாவர். இரண்டாவது சிறுபான்மைச் சமூகத்தினராக முஸ்லிம்கள் கருதப்பட்டு வருகின்றனர். ஈழ நாட்டு முஸ் லிம் மக்கள் எவ்வெத் துறையில் எவ்வெம் முறைகளில் ஈழ நாட்டின் வளர்ச்சிக்குத் தொண்டு புரிந்துள்ளனர் என்பதை ஆராயப்புகுமுன் அவர்களின் ஈழ நாட்டு வருகையைப் பற்றி அறிதல் வேண்டும். வரலாற்று ஏடு களைப் புரட்டிப் பார்த்தல் வேண்டும்.

Page 13
22 இஸ்லாமியத் தென்றல்
ஈழத்தில் வாழும் முஸ்லிம்மக்களை இலங்கைச் சோன கர், இந்தியச் சோனகர், மலாயர் என்று முப்பெரும் ரிவினராகப் பிரிக்கலாம். ஆங்கிலத் முஸ்லிம்கள் தில் மூர் (MooR) என்றும், சிங்கள, பாளி மொழிகளில் முறையே யவன, யோன் என்றும் இலங்கைச் சோனகர் அழைக்கப்பட்டு வருகின்றனர். இலங்கைச் சோனகர் "மரக்கல மினிசு’ என்றும், இந்தியச் சோனகர் "ஹம்பங் "மரக்கல மினிசு காரயா" என்றும் சிங்கள மக்கள் அழைப் பதை நாம் சர்வ சாதாரணமாகக் கேட்கிருேம். "மரக்கல மினிசு’ என்று கூறும்பொழுது கப்பலோட்டிகள் என்றே அவர்கள் கருதப்பட்டனர். அவர்கள் மரக்கலங்களிலே வந்தமையினல் அவ்வாறு அழைக்கப்பட்டிருக்கலாம். இந்தியச் சோனகரை "ஹம் பங்காரயா" என்று சிங்களத்தில் கூறும் பொழுதும் சம் மாங்காரர் என்று தமிழில் கூறும் "ஹம்பங்காரயா" பொழுதும் அவர்கள் வியாபாரிகள் என் பது புலனுகின்றது. “ஹம்பங்’ என்று ஒருவகைப் படகு மலாயா முதலிய பிரதேசங்களில் உண்டு. அத்தகைய “ஹம்பங்’ என்ற படகுகளில் வந்த மையினலேயே அவர்கள் அவ்வாறு அழைக்கப்பட்டிருக்க லாம். ஹம்பங் என்பது படகு என்ற பொருளில் சிங்கள இலக்கிய நூல்களில் வருவதைக் காணலாம். இதனையே தமிழில் சம்மாங்காரர் என்று வழங்கியிருக்கலாம். "மரக்கல மினிசு" என்ற சொற்ருெடரில் உள்ள மரக்கல” என்பது 'மர்கர்' என்ற சொல்லிலிரு “ւDif thir' ந்து மருவி வந்திருக்கலாமென்று சிலர் கூறுவர். அவர் தம் கருத்துக் கிணங்க சோனகரை மலபார் மக்கள்-மர்கர்-என்று அழைத்தன ராம். தென்னிந்தியாவுடன் வாணிபத்தில் ஈடுபட்ட அற்பு வியாபாரிகளின் தலைவரை மர்கபி (MARKAB1) என்று வழங்கினர். மர்கப் என்ருல் கப்பல் என்பது பொருள். மர்கபி என்றதிலிருந்து மர்கர் என்பது மருவி இருக்கலாம்.

ஈழ நாட்டு முஸ்லிம்கள் 23
16ம் நூற்ருண்டில் மர்க என்ற சொல் அடைச் சொல்லாகப் பெயர்களுடன் சேர்க்கப்பட்டது. இதுவே மர்கார் என்றும் மரிக்கார் என்றும் யவனர் காலப்போக்கில் மாறியது. சங்க கால இலக்கியங்களில் யவனர் என்று வரும் இடங்களில் நச்சினர்க்கினியர் அதற்குச் சோனகர் என்றே கருத்து எழுதியுள்ளார்.
சோனகர் வருகை ஈழத்துச் சோனகரின் மூதாதையர் அறபியர் என் பதே பல்லோரினதும் துணிபு. கலீபா அப்துல் மாலிக் பின் மெர்வான் அப்பொழுது அறேபியாவின் ஆட்சிபீடத்தில் அமர்ந்திருந்தார். அவர் கொடுங்கோன்மைக்கு இருப்பிட மாகத் திகழ்ந்தார். எட்டாம் நூற்றண்டின் ஆரம்பத் தில் ஆட்சி புரிந்த அவர் ஹாவும் கிளையைச் சேர்ந்த அற பியருள் ஒரு பகுதியினரை அறபு நாட்டி நாடு கடத்தல் லிருந்து நாடு கடத்தினர். அவர்கள் யூபி ரட்டீஸ் நதியைக் கடந்து தென் முகமா கச் சென்று இந்தியக் குடா நாட்டின் தென் பகுதியில் உள்ள கொங்கன் பிரதேசத்திலும் இலங்கையிலும் மலாக்காவிலும் குடியேறினர். இலங்கைக்கு வந்த கூ ட் டத் தி ன ர், எட்டுப் பிரிவுகளாகப் பிரிந்து இலங்கையின் வட கிழக்கு, வட க் கு மே ற் கு க் கரையோரங்களில் குடியேறினர். அவர்கள் திருகோண மலை, யாழ்ப்பாணம், மாந்தோட்டம், மன்னர், குதி ரைமலை, புத்தளம், கொழும்பு, பார்ப எட்டுப் பிரிவு ரீன், காலி முதலிய இடங்களில் குடியே - னர். இலங்கையின் வட மேற்குப் பகு தியான மாந்தோட்ட மன்னர் பகுதிகளில் குடியேறிய மையினல் முத்துக் குளிப்பு முதலிய தொழில்கள் முஸ் லிம்களின் பொறுப்பிலேயே இருந்தன. பிளினி * கிறித்தவ ஆண்டு தொடங்குவதற்கு முன்னரே அறபிகள் இலங்கையில் வந்து குடியேறினர்' என்று பிளினி என்பவர் கூறியுள்ளதாக டெனன்ட் (TENANT) என்பவர் தனது 'சிலோன்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

Page 14
24 இஸ்லாமியத் தென்றல்
கொழும்பிலே முஸ்லிம் இடுகாடு ஒன்று இருந்தது. அங்கு கூபி முறையில் அமைந்த எழுத்துக்களில் ஒரு கல் வெட்டு இருந்தது. அக் கல்வெட்டில் ஒரு மனிதனின் தனிப் பெரும் பண்புகள் குறிப்பிடப் கல் வெட்டு பட்டுள்ளன. அவர் அங்கு எட்டாம்
நூற்ருண்டில் வந்த தா க க் குறிப் பிடப்பட்டுள்ளது. 1787ம் ஆண்டளவில் அதை எடுத்து டச்சு அதிகாரி தனது வீட்டின் வாயிலில் அமைத்தார். அக் கல்வெட்டு கி. பி. 848ல் இறந்த ஒர் அறபியை நினைவு கூரு முகமாக அமைக்கப்பட்டது என்று முடிவு செய்துள்ளனர். அவர் காலிது இப்னு அபூபக்கயா என் பவர். இலங்கையில் குடியேறிய முஸ்லிம்களின் மதப் பற்று குன்றியிருந்த பொழுது மதப் பக்தாதுக் கலீபா பற்றை மக்களிடம் ஏற்படுத்து வதற் காக பக்தாது கலீபாவினல் இங்கு அனுப்பப் பட்டார். பெரிப்லஸின் ஆசிரியர் கி. பி. முத லாம் நூற்றண்டில் இலங்கையில் அருபியர் வாழ்ந்ததா கக் குறிப்பிட்டுள்ளார். “சின்பாட்’ என்ற கதை இலங் கையின் கரைகளைப் பற்றி அருபியர் அறிந்திருந்தனர், என்பதை புலப்படுத்துகிறது. இலங்கையில் சின்பாடைச் சந்தித்தவர்கள் மலபார் மக்கள் என் சின்ட்பாட் றும், அவர்களில் ஒருவர் அறபு மொழி யில் பாண்டித்தியம் பெற்றிருந்தார் என்றும் அக்கதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அம் மலபாரியர் நீர்பாய்ச்சி நெற்சாகுபடி செய்தனர் என் டறும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கி. பி. 12ம் நூற்ருண்டில் எத்றிலி என்பவர் தமது பூமிசாஸ்திரத்தில் அபூஸைத் கூறிய வற்றை உறுதிப்படுத்தியுள்ளார். அன்று இலங்கையில் எல்லாச் சமயங்களும் ஒரே முறையில் கவனிக் எத்றிஸ் கப்பட்டு வந்தன. அப்போது வாழ்ந்த ஒரு மன்னனின் ஆலோசகர்களாக நான்கு பெளத்தரும், நான்கு முஸ்லிம்களும், நான்கு கிறித்தவர்களும், நான்கு யூதர்களும் இருந்தனர் என்று எடுத்துக் காட்டி அதனை விளக்குகிருர்,

ஈழ நாட்டு முஸ்லிம்கள் 25
இலங்கையைப் பற்றி முதன் முதலில் கூறிய அருபி
யர் கி. பி. 838ம் ஆண்டில் பிறந்த தாபநி (TABAR)
என்ற பூமிசாத்திர வல்லுநராவர்.
தாயறி அவரது வருணனைகள் பாவா ஆதமலை
என்று முஸ்லிம்களிடையே வழங்கும் சிவனெளிபாத மலையுடன் நின்றுவிடுகின்றன.
அருபியருக்கு இலங்கையோடிருந்த தொடர்பு
12ம நூற்றண்டில் அருபியர் வணிகத்துறையில் உச்ச நிலையை அடைந்திருந்தனர். இலங்கை அரசனின் நன்மதிப்பைப் பெற்றனர்ர். அவர்களுக்கு அமைச்சர் சபையில் அங்கம் அளிக்கப்பட்டது.தங்க வணிகம் ளது பிணக்குகளைத் தீர்த்துக் கொள் வதற்கு மன்னனின் அனுமதியுடன் முஸ் லிம் அறிஞர்களையும், வணிகர்களையும், கப்பலோட்டி களையும் கொண்ட நீதிமன்றங்களை முஸ்லிம்கள் நியமித் துக் கொண்டனர். ஒன்பதாம் நூற்ருண்டிலிருந்து அறபு ஆசிரியர்கள் தாம் எழுதிய நூல்களில் இலங்கை-பகுதா இலங்கையைப் பற்றிக் குறிப்பிடலாயி துத் தொடர்பு னர். இக் காலத்தில் பக்தாத் கலீபா இலங்கை மன்னனுக்குப் பரிசில்கள் அனுப்பியதாகக் கூறப்படுகின்றது. எனவே இலங்கைச் சோனகரின் மூதாதையர் 8ம் நூற்ருண்டில் இலங்கை யில் வாழ்ந்த அருபியர் என்று கூறத்துணிவர்.
இலங்கையில் அருபியர் குடியேற்றம்
இவ்வாறு இலங்கைச் சோனகரின் மூதாதையரான அருபியர் குடும்பங்களாகவும், தனிப்பட்டவர்களாகவும் வந்து பர்பரீன், காலி என்ற இடங்களில் குடியேறினர். பர்பரீன், என்பது இப்போதைய வேர்விலையாகும். பர் பரீன் என்பற்கும் வேர்விலைக்கும் உள்ள தொடர்பை நாம் அறிதல் வேண்டும்.

Page 15
26 இஸ்லாமியத் தென்றல்
ஆபிரிக்காவின் தென் மேற்கு மூலையில் செங்கடற் கரைக்குச் சமீபமாக சோமாலிலாந்து என்ருெரு நாடு உள்ளது. பிரித்தானியரின் ஆட்சியிலுள்ள அந்நாட்டின் தலைநகர் பர்பரீனுகும். சோமாலிலாந்தின் தலைநகரான பர்பரீனுக்கும் வேர்விலையின் பெயரான பர்பரீனுக்கும் தொடர்பு இருத்தல் வேண்டும். சோமாலிலாந்தில் வாழும் மக்கள் அருபியராவர். எனவே இத்துறையில் மேலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டே போனல் இலங்கைச் சோனகரின் மூதாதையர்களைப்பற்றிய மேலும் விபரங்களை அறிய ஏதுவாயிருக்கும். முகம்மது நபி (சல்) அவர்கள் இஸ்லாத்தைப் போதிக்க ஆரம் பித்த காலத்தில் ஆரம்ப முஸ்லிம்களுக்கு முஸ்லிமல் லாதார் சொல்லொணுத்துயர் விளைவித்தார்கள். எனவே முஸ்லிம்கள் பாதுகாப்புத் தேடி முதலில் அபிஸினியா வுக்கும், பின்னர் மதீனுவுக்கும் செல்ல அனுமதிக்கப் பட்டனர். அபிஸினியாவுக்குச் சென்றவர்கள் செங் கடலைக் கடந்தே செல்ல வேண்டி ஏற்பட்டது. அவ் வாறு சென்றவர்களுள் ஒரு சிலர் வியா முஹாஜிரீன் பார நோக்கமாகக் கிழக்கு முகமாகச் சென்ற கப்பல்களில் சென்றிருக்கலாம். அத்தகையோர் இலங்கைக்கு வந்திருக்கலாம். எனவே முகம்மது நபி (சல்) அவர்களின் காலத்திலே இலங்கை க்கு அருபியர் வந்தனர் என்பதும் உறுதியாகின்றது. ஐரோப்பாவில் கி.பி. 7ம் நூற்ருண்டில் நிகழ்ந்த ஒரு சம்பவம் தொன்று தொட்டே அருபியர் இலங் கையைப்பற்றி அறிந்திருந்தனர் என்பதை உறுதிப்படு த்துகின்றது. அப்பொழுது ஐரோப்பாவில் இருந்த ஓர் அருபியரின் முன்னிலையில் ஒரு மாணிக் அறபியும் கக் கல் வைக்கப்பட்டது. அதனை உற்றுக் மாணிக்கமும் கவனித்த அந்த அறபி " அந்தச் சிவப் புக் கல் (RuBy) இலங்கையைச் சேர்ந்த தன்று’ என்று கூறினர். ஒரு மாணிக்கக்கல்லைப் பார்த்து விட்டு அது இலங்கையைச் சேர்ந்ததன்று என்று கூறும்

வாணிபமும் பொருளாதாரமும் 27
அளவுக்கு அருபியர் இலங்கையைப் பற்றி அறிந்திருந் தார்கள் என்பது புலணுகின்றது. முகம்மது நபி (சல்) அவர்களின் காலத்தில் ஒர் அறபு யாத்திரிகர் தென்னிந் தியாவினுாடாக ஆதமலையைத் தரிசிக்க வந்தார் என்று கூறப்படுகின்றது.
இந்தியாவின் கரைகளில் அருபியர் குடியேற்றம்
ஆதி கால அருபியரின் செல்வாக்கு இந்தியக் கடற் கரைப்பிரதேசங்களுள் கேரளத்திலேதான் பெரிதும் காட் சியளித்தது. கி. பி. 636ம் ஆண்டளவில் அறபுக் கப்பல் கள் இந்தியாவின் கடல்களில் சஞ்சரிக்கத் தலைப்பட்டன என்பர். 8ம் நூற்ருண்டில் வாழ்ந்த சேரமான் பெருமா ளின் காலந் தொடங்கி இஸ்லாம் மலபார் பிரதேசத் தில் முக்கிய ஓர் இடத்தைப் பெறலாயது என்று திரு. எம். டி. ராகவன் குறிப்பிட்டுள்ளார். இப் பாரம்பரியக் கதைக்கும் இலங்கைச் சோனகருக்கும் நெருங்கிய தொ டர்பு இல்லாமலில்லை. சந்திரன் இரண்டாகப் பிளந்து பின்பு ஒன்றுபட சேரமான் கனவு கண்டாராம். அப்பொ ழுது ஆதமலையில் உள்ள புனித பாதச் சின்னத்தைத் தரிசித்துவிட்டு, இலங்கையிலிருந்து முஸ்லிம் பிரயாணி கள் கோஷ்டி ஒன்று திரும்பி வந்து சேரமான் கொண்டிருந்ததாம், அந்தக் கோஷ்டி பெருமாள் யின் தலைவரான செய்கு செக்கேஉத்தீன் என்பவர் அந்தக் கனவின் பொருளைக் கூறக் கேட்ட பெருமாள் இஸ்லாத்தைத் தழுவினராம். அம்மட்டுடன் அவர் நின்று விடாது அவருக்குப் பின் ஆட்சிபீடத்திலமர்ந்த கோழிக் கூட்டு சமோரினை அருபி யருடன் சிநேகமாக வாழ வேண்டுமென்றும், அவர்கள் குடியேறுவதற்கும் அவர்களின் வியாபாரத்துக்கும் எல்லா வசதிகளும் சலுகைகளும் கொடுக்க வேண்டுமென் றும் சேரமான் பெருமாள் கேட்டுக்கொண்டாராம்.

Page 16
28 இஸ்லாமியத் தென்றல்
ஈராக் வியாபாரி கண்ட ஆதமலை
பக்தாதின் வாணிபம் உச்ச நிலையை அடைந் திருந்த ஒன்பதாம் நூற்றண்டில் சுலைமான் என்ற வியாபாரி ஈராக்கிலுள்ள பஸ்ராவுக்கும் சுலைமான் சீனுவிலுள்ள கன்டனுக்கும் இடையில் தேச சஞ்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். சுலைமானின்கூற்றுக்களை அபூஸயீத் ஹசன் என்ற வேருெரு பூமிசாத்திர வல்லுநர் உறுதிப்படுத்தியுள்ளார். மேற்கே லட்சத்தீவுகளுக்கும் மாலைத்தீவுகளுக்கும், குமரிமுனை, ஆதமின் பாலம் இலங்கைக்கும் இடையிலுள்ள முத்துக் குப் புகழ் பெற்ற பகுதியை சுலைமான் வருணிக்கிருர், அவருடைய கவனத்தைச் செரந்தீபில் முதன் முதலில் ஈர்ந்தது அல்றுஹ"னில் உள்ள ஆதமலையின் புனித பாதச் சின்னமாகும் என்று குறிப்பிட்டுள்ளார். சிங்க ளத்தில் றுஹ"சன் ” என்பதையே சுலைமான் " அல்று ஹசன் ” என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பழங்குடி மக்கள் "தப்ருே பானியன் ' என்ற தமது நூலில் ஹியு நெவில் என்பவர் பின்வருமாறு கூறுகின்ருர். மரக்க லயாஸ் " (சோனகர்) என்ற முஸ்லிம் குடியேற்றக்கார ரை விஜயபாகு என்ற பேராற்றல் மிக்க இலங்கை மன்னன் பேரரதரவுடன் கவனித்து வந்தான். அவனது தந்தையின் சோகை மனைவியின் மகன் அவனுவான் என்று " ஜனவடமிசம் ' என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. எம்.டி.ராகவனும் இதனைப்பற்றி குறிப்பிடுகின்ருர். ஐந்தாம் விஜயபாகுவின் மந்திரியாக அமைச்சர் மீராலெப்பை கடமையாற்றினர். மகா மீராலெப்பை வமிசத்தில் விஜயபாகு பேராற்றல்மிக்க மன்னனென்றும் அவரது இராஜதானி ஜம்புதரோனி என்று வழங்கப்பட்ட தம்பதெனியாவில் இருந்ததென்றும் கூறப்படுகின்றது. ஜனவழிசத்தில்

ஈழ நாட்டு முஸ்லிம்கள் 29
விஜயபாகுவின் தாய் ஒரு சோனகப் பெண் என்று கூறப்பட்டுள்ளதாயும் எம்.டி. ராக்வன் எடுத்துக்காட்டி யுள்ளார். விஜயபாகுவின் மந்திரியான மீரா லெப்பையே தென்னிந்தியாவிலிருந்து எட்டுத் தலைசிறந்த ஆடை நெய்வோரைக் கொண்டு வந்தவராவர். "சலாகம்' அவர்களுக்கு இப்பொழுது சிலாபம் குலத்தவர் என்று வழங்கும் சலாவக்க மாவட்டத் ல் கிராமங்கள் மானியமாக வழங் கப்பட்டன. இதுவே இலங்கையிலுள்ள சலாகம குலத் தவரின் வளர்ச்சியின் முதற்படி என்று கூறப்படு கின்றது. எனவே டாக்டர் டப்ளியு. பாலேந்திரா கூறு வது போல் முஸ்லிம்கள் இந்நாட்டின் பழங்குடி மக் களே யாவர். கடந்த 2000 ஆண்டுகளாகச் சோனகர் இங்கு இருந்தமையினுல் வேடரையோ அல்லது ஏனைய ஈழப்பழங்குடி மக்களையோ போன்று அவர்களும் பழங் குடி மக்கள் என்பது விளங்கும்.
இன்றைய ஈழத்து முஸ்லிம்களின் மூதாதையரான அருபியர் இந்நாட்டுக்கு வருவதற்கு வியாபாரமே மிக முக்கிய காரணமாகும். அருபியர் தலைசிறந்த வணிகர் களாகத் திகழ்ந்தார்கள். இலங்கையின் வாசனைத் திரவியங்கள் முதலியவற்றை மேற்கு
90 நாடுகட்குக் கொண்டு செல்வதும் வணிகர் இலங்கைக்குத் தேவையான பொருட் களைப் பிறநாடுகளிலிருந்து கொண்டுவரு வதும் பொருள் வருவாய் தருவதாக இருந்தன. எனவே இத்துறையில் அவர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். அப்பொழுது இலங்கையை ஆட்சி செய்து வந்தவர் களும் இத்துறையில் அறபியருக்கு ஊக்கமளித்ததோடு இடையூறுகளின்றி வாணிபம் செய்யவும் ஆதரவு அளித் தனர். திரைகடலோடித் திரவியம் தேடுவதில் அருபி யர் தலை சிறந்து விளங்கினர். கப்பலோட்டும் கலையை மேல் நாடுகட்குக் கொண்டு சென்றவர்களும் அருபி யரே. அவர்களே மேல் நாட்டவருக்கு அக்கலையைப்

Page 17
30 இஸ்லாமியத் தென்றல்
போதித்தவர்களாவர். எனவே கப்பலோட்டும் கலை நிபுணர்களாக விளங்கிய அருபியர் இலங்கைக்கு வந் துள்ளனர் என்பது வியட்டிபுக்குரியதன்று.
恶 弥 A முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இடங்கள் இனிமுேஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இடப் பெயர்களைப் பற்றிச் சிறிது அறிய முயல்வோம். மேற்கு ஆபிரிக்காவைச் சேர்ந்த முஸ்லிம் தேச சஞ்சாரியான இப்னு பதூத்தா தமது நூலில் இலங் கையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இப்னுபதுரத்தா ‘நாம் காலி நகருக்குச் சென்று அங் கிருந்து 18 மைல் தூரத்திலுள்ள தீனவர் (DoNDRA) என்ற பட்டினத்திற்குச் சென்று அங்கிருந்து குளம்பூவுக்குச் சென்ருேம்.’’இங்கு ‘குள ம்பூ என்ற பட்டினம் குறிப்பிடப்பட்டுள்ளது. இப் பட்டினத்தில் 500 அபிஸினியர்களுடன் கடல் தலை வனும் வளிருமான 'ஜலஸ்தி’ என்பவர் ஆட்சி செய்து வந்தார் என்றும் இப்னு பதூத்தா ஜலஸ்தி கூறியுள்ளார். ‘பூக்குளம்' என்பதே காலப் போக்கில் குளம்பூ என்று மருவி கொழும்பு என்று ஆயது எனலாம். கொழும்பு என்று அழைக்கப்படும் இப்போதைய பட்டணத்துக்கும் குளத் துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை நாம் ஈண்டு நோக்கற்பாலது. பூக்கள் மலிந்த பூக்குளம் ( குளமாய் அன்று இந்தப்பட்டணம் காட்சியளித்திருக்கலாம். எனவேதான் இப்பட்டணம் முதலில் பூக்குளம் என்றும், காலப் போக்கில் மரா என்பது ராம என்று மாறியது போல் பூக்குளம் என்பது குளம்பூ வாகி கொழும்ப்ாக மாறி யிருக்கலாம் என்று கூறலாமல்லவா?
முல்லை என்பது தமிழ் மரபுக்கியைய, காடும் காடு சார்ந்த இடமுமாகும். முல்லை என்பது கிராமப் பெயராக அமைந்துள்ள ஹேனமுல்லை, பள்ளிமுல்லை,
 

ஈழ நாட்டு முஸ்லிம்கள்
31
முல்லை
சரிக்காமுல்லை என்பன இதற்கு எடுத் துக்காட்டாகும். ஆனால் முல்லை என்று
வழங்கும் இத்தகைய கிராமங்களின் நடுப்பகுதி ஊர்மனை என்று வழங்கப்படுகின்றது. ஊர் மனையிலேதான் மக்கள் முதலில் வாழ்ந்திருக்கலாம். ஊர்மனை காடால் சூழப்பட்ட மக்கள் வாழும் இட
மாதலினாலே அவ்வாறு கருதப்பட்டிருக் ஊர்மனை
கலாம். முஸ்லிம் பள்ளிவாசல் (மஸ்ஜித்)
இருந்த கிராமம் பள்ளிமுல்லை என்று வழங்கலாயிற்று. சேகு அலி மரிக்கார் முதல்வராக வாழ்ந்த கிராமம் சேகு அலி மரிக்கார்முல்ல என்று முதலில் வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால் பொச்சாப்புக் காரணமாக அது இப்பொழுது சரிக்காமுல்லை என்று வழங்குகின்றது.
வேர்விலை வேர்விலை என்பது அறபியில் பர்பலி என்று அழைக் கப்படுகின்றது. ஏற்கனவே நாம் அது பர்பரின் என்று
வழங்கியதாகக் குறிப்பிட்டோம். இன் பர்பலி றும் இலங்கையில் முஸ்லிம்கள் எழுதும்
அறபுக்கிரந்தங்களில் வேர்விலை, பர்பலி என்றே குறிப்பிடப்படுகின்றது. பர்பலி முதலில் பர்பர் - என்று இருந்திருக்கலாம். 'பர்' என்ற அறபுச் சொல் லுக்கு நாடு என்பது பொருள். மலை நாட்டை மலபார் என்றும் கறுப்பு மக்கள் வாழ்ந்த நாட்டை ஸன்ஸிபார் என்றும் அறபியர் வழங்கியது ஈண்டு குறிப்பிடத்தக் கது. இலங்கையை நோக்கி வந்த அராபியர் இந்து சமுத் திரத்தில் அலைந்த பிறகு நிலப்பரப்பு அவர்களுக்குத் தென் பட்டிருக்கலாம். உடனே 'பர், பர், '-' நிலம், நிலம்' - என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்திருக்கலாம். இதன் பிரகாரம் வேர்விலை என்ற பகுதியில் இறங்கியதும் அதற்கு 'பர்பர்' என்று பெயரிட்டிருக்கலாம். அந்த பர்பர் என்பதே பர்பரீன் என்றும், பின்னர் பர்பலி என் றும், சிங்களத்தில் பேருவல என்றும் தமிழில் வேர்விலை என்றும் மருவி இருக்கலாம்.

Page 18
வாணிபமும் பொருளாதாரமும்
இன்று ஈழத்திலே வாழும் முதுகுடி முஸ்லிம் மக்க ளின் மூதாதையர் அறேபியாவிலிருந்து வந்தவர்கள் என்று முன்னர் குறிப்பிட்டோம். அவர்கள் இங்கு வரு வதற்கு வாணிபமே முக்கிய காரணமாய் இருந்தது. திரை கடலோடியும் திரவியம் தேடு என்பதற்கு எடுத்துக்காட் டாகக் கடமை புரிந்து வந்தனர் அவர்கள். இலங்கைச் சோனகரின் சமூக வாழ்க்கையின் ஆரம்பம் மிகப் பழமை யானது. அப்பொழுது உலகின் பூமி அருபியரின் சாத்திர வல்லுநர்களும் கப்பலோட்டும் வாணிபம் கலையில் ஆற்றல் மிக்கவர்களும் அறபு முஸ்லிம்களாகவே இருந்தனர். இந்தத் துறையில் ஐரோப்பாவுக்கு வழி காட்டியவர்களாகவும் இருந்தவர்கள் அறபு முஸ்லிம்களேயாவர். அறபு முஸ் லிம்களைப் பின்பற்றியே ஐரோப்பியர் வணிகத்தின் பொருட்டு கீழைத் தேசங்க்ட்கு வந்தனர். மன்னர் குடாவின் பகுதிகளிலே பண்டைய அருபியரின் நினைவுச் சின்னங்களைக் கண்டு பிடித்தனர். இந்தச் சான்றுகள் பண்டைய முஸ்லிம்கள் எவ்வளவு துரிதமாக வியாபா ரத்தில் ஈடுபட்டனர் என்பதைக் காட்டுகின்றன. அவர் கள் வடக்குப் பிரதேசங்களில் கவனம் செலுத்துவதற் குக் காரணமாயிருந்தது அந்தப் பகுதிகளில் கிடைக்கக் கூடியதாக இருந்த முத்துக்களேயாகும்.

வாணிபமும் பொருளாதாரமும் 33
வியாபார நடவடிக்கைகள் துரிதமடைந்தன. அவற் றின் பயணுகச் சமூக, கலாசாரத் துறைகளில் முன்னேற் றங்கள் ஏற்பட்டன. உலகெலாம் இஸ்லாம் பரவுவதற்கு உதவியாய் அமைந்தன. இலங்கையிலும் இஸ்லாம் வேரூன்றியது. இவ்வாறு இலங்கையில் இஸ்லாம் தோன்றிய இஸ்லாம் வேரூன்றி சிறு செடியாக வளர்ந்து பெரு மரமாகி இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் கிளை கிளையாகப் பரப்பி வருகின்றது.
சீனம் சென்றேனும் ஞானந்தேடு என்று முகம்மது நபி (சல்) அவர்கள் திருவாய் மலர்ந்தருளினர்கள். அருபியர் அந்தக் காலத்திலே தேசசஞ் கல்வி சாரத்தில் அக்கறை செலுத்தினர் என் பதற்கு இது ஒரு தகுந்த எடுத்துக் காட்டல்லவா?
இலங்கையின் மேற்குக் கரையோரப் பகுதிகளில் குறிப்பாக 12ம் 13ம் நூற்ருண்டுகளுக்குரிய எகிப்து மன்னர்களின் நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டமை இலங்கைச் சோனகரின் மூதாதையர் எகிப்து நாணயம் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர் என் பதற்கு சான்றுபகருகின்றது. எட்டாம் நூற்ருண்டிலிருந்து 15ம் நூற்ருண்டு வரை பாரசீகரும், அறபியரும் இலங்கையின் செல்வம் கொழிக்கும் வணி கத்தைத் தம்மிடமே வைத்துக் கொண்டனர். இவ்வாறு செல்வம் கிடைப்பதை அறிந்த மேல் நாட்டவர் குறிப் பாகப் போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும், பிரித்தானி யரும் கிழக்கில் அக்கறை காட்டத் தலைப்பட்டனர்.
பண்டைக் காலத்தில் கண்டியோடு நேரடியான தொடர்புள்ள துறைமுகப் பட்டினம் புத்தளம் புத்தளமாகும். எனவே இலங்கைச் சோனகர் அதனைத் தமது கேந்திர ஸ்தா னமாக அமைத்துக் கொண்டனர். அவர்களின் எதிரிகள் அவர்களை அந்த இடத்திலிருந்து அகற்ற மேற் கொண்ட எல்லா முயற்சிகளும் பலனற்றவையாயின.

Page 19
34 இஸ்லாமியத் தென்றல்
எனவே பழங்காலத்திய இலங்கையின் வியாபாரிகள் அறபியரின் வழித் தோன்றல்களேயாவர். இலங்கைச் சோனகரின் பண்டைய வியாபாரத்தைப் பற்றி அறிய விரும்பின் இப்னு பதூத்தா என்ற மொரோக்கோ தேச சஞ்சாரியின் நூலை வாசித்தல் வேண்டும். அவர் தமது நூலில் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்பு வெளிநாட்டு வர்த்தகர்களின் துறைமுகமாக விளங் கியது என்றும் வியாபாரிகள் முஸ்லிம்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அறு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மரிக் நொல்லி என்ற தூய பிரான்ஸிஸ் என்பவரால் நிறுவப்பட்ட மடத்தைச் சார்ந்த துறவி சிறியாவிலிருந்து சீனம் வரை கால்நடையாகச் சென்றர். பின்னர் கப்பல் மார்க் கமாக வெகுமதிகளையும் பரிசுகளையும் மரிக் நொல்லி பெற்றுக்கொண்டு திரும்பி வந்தார். அவர், குறிப்பிட்ட ஒரு நாளன்று-தாம் வேர்விலையில் இறங்கியதாகக் குறிப்பிடுகின்றர். அவர் அவ்வாரு இறங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதனலேயே கப்பலை நிறுத்தி கரைக்குச் சென்ருர், அப்பொழுது வேர்விலையில் ஆட்சி புரிந்தவர் கருணைமிக் குடையவராயும் பணிவமைதி உடையவராயும் இருந் தார். அவ்வரசனின் உயர்குடி மக்கள் அரசனைக் காணச் செல்லும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பரிசு கொண்டு செல்ல வேண்டுமென்று கூறினர். அவரை அரசன் காண விரும்பிய ஒவ்வொரு முறையும் அவர் ஒவ்வொரு பரிசில் கொண்டு சென்ருர். இதன் பயனுக இரண்டு மாதங்கள் முடிவடைந்த பொழுது, அவரிடம் ஒன்றும் எஞ்சி இருக்கவில்லை.
போர்த்துக்கேயர் இலங்கைக்கு வருமுன்னமேயே பே ஒபப் (BA’oBAB) மரம் மன்னரில் இருந்தது. பேஒபப்

வாணிபமும் பொருளாதாரமும் 35
என்பது ஆபிரிக்காவிலே உள்ள ஒரு பே'ஒபப் வகை மரம். அது தடித்த தண்டையுடை யது. அம் மரத்தை அருபியர் தான் இலங்கைக்கு கொண்டு வந்திருத்தல் வேண்டும். இந்த மரத்தை இன்றும் மன்னுரிலே காணலாம். கர்னல் யூல் (cRL vuடE) என்பவர் தமது "ஹொப்ஸன் ஜொப்ஸன்’ என்ற நூலில் கொழும்பை விவரிக்கும் பொழுது அது அபிஸினியர் குடியேறியபகுதியென்று குறிப்பிடுகின்றர். கர்னல் யூல் என்பவர் தமக்குக் கிடைக்கக் கூடிய எல்லா அறிக்கைகளையும் சேகரித்து, முதலில் சோனகரின் நடு கொழும்பு சோனகரின் நடு நிலையமாக நிலையம் விளங்கியது என்று நிரூபிக்கிருர், இல ங்கைச் சோனகரின் மூதாதையர் முன் னர் தெற்கு ஸ்பெய்னுக்குச் சென்றிருந்தனர். அங்கே அவர்கள் மாபெரும் கட்டடங்களைக் கண்டனர். சோன கர் கட்டடக் கலை வாசஸ்தலங்களை ஒன்று சேர்த்தல் முதலியவற்றைக் கற்றிருந்தனர். அவர்கள் எங்கு சென் றனரோ அங்கெல்லாம் இவற்றையும் கொண்டு சென் றனர்.இனி "மரக்கலகே’ என்ற பெயரை எடுத்துக்கொள் வோம். மரத்திலான பெரிய கப்பல் ஒன்றில் வரும் ஒரு வரின் வீடு "மரக்கல கே’ அல்லது "மரக்கல வீடு” என்று அழைக்கப்படும். மரக்கல கே மரக்கல கே என்ற சொல் சம்பந்தமான ஒரு நிகழ்ச் சியை முன்னை நாள் உதவிப் புதைபொ ருள் ஆணையாளர் காலஞ் சென்ற எஸ். சண்முக நாதன் குறிப்பிடுகிருர், அவர் ஒரு நாள் அம்பலாங்கொடைக்கு சென்றிருந்தார். முகமூடி அணிந்து நடனமாடும் முறை யைப் பற்றி அவர் அறிய சென்றிருந்தார். நடனமாடிய வர்களின் பெயர்களை எழுதிக்கொள்ளும் பொழுது ஒர் இளைஞன் தனது பெயர் எம். கே. எடி என்று கூறினர். எம். கே. என்று எதனைக் குறிப்பிடுகின்றது என்று அவர் அந்த இளைஞனக் கேட்டார். அதற்கு அவன் மரக் கலயகே என்று பதிலுறுத்தான்.

Page 20
36 இஸ்லாமியத் தென்றல்
படகு மூலம் போகும் ஒவ்வொருவரும் அப் பெயரா லேயே அழைக்கப்படுகின்றனர். இத்தகைய சொற்கள் இவ்வாறு சிங்கள மொழியுடன் கலந்துள்ளதை நாம் கவனித்தல் வேண்டும்.
கிராமம் கிராமமாகத் திரிந்து மனித இன வரலா ற்றை அறிவதில் டாக்டர் பாலேந்திரா ஈடுபட்டிருந் தார். அவர் ஒரு சமயம் மிரிஸ்ஸ என்ற இடத்துக்குச் சென்றிருந்தார். அந்தக் கிராமத்தின் பொருளாதார பொருளாதார அமைப்பை ஆராய் அமைப்பு வதில் ஈடுபட்டார். அந்தக் கிராமத்தின் - 20 அல்லது 25 ஆண்டுகட்கு முந்திய பொருளாதார அமைப்பை அறிவது உசிதம் எனக் கண் டார். அந்தக் கிராமத்தின் பொருளாதார அமைப்பு மரத்தினுலான கப்பலில் வந்த சோனகன - அந்தக் கிராம மக்கள் அழைப்பதுபோல் "மரக்கலயா' வைச் சுற்றிப் பின்னப்பட்டிருப்பதைக் கண்டார்.
அந்தச் சோனகன் அந்தக் கிராமத்தின் தந்தை யாயிருந்தான். அவன் வியாபாரப் பொருட்களை அந்தக் கிராமத்துக்குக் கொண்டு வந்தான். அவன் நேர்மையா கவே நடந்து கொண்டான். அவன் நேர்மையில் தவறி னல் மக்கள் அவனிடம் வரமாட்டார்களல்லவா? அவன் எல்லா விஷயங்களிலும் நடுநிலைமை வகித் நேர்மை தான். பயனடையக் கூடிய இடத்தில் பயன்படுத்த அவன் தவறவுமில்லை. நியாய மற்ற முறையில் பயன் பெற முயல்பவன், டச்சுக் காரர் கூறுவதுபோல், கடற் கொள்ளைக்காரணுவான். இவ்வாறு நியாய மற்ற முறையில் செமிடிக் இன மக் களோ, அருபியரோ பயன்பெற முயல்வதில்லை.
*பொருட்களை வாங்குவதற்கு நான் இவ்வளவு பணந்தான் தருவேன்' என்றே எப்பொழுதும் கூறு வான். எனவே ‘முழுக்கிராமத்தின் நேர்மை முறை சோனகனின்'பொருளாதாரத்திலே சுற்றிப் பின்னப்பட் டிருக்கின்றது' என்று டாக்டர் டப்ளியு. பாலேந்திரா குறிப்பிட்டுள்ளார்.

வாணிபமும் பொருளாதாரமும் 37
வேடர்கள் வாழும் பெலிகல்ல (BEடIGAட்டA) என்ற கிராமத்தின் வியாபாரம் அங்கு உள்ள சில முக்கிய சோனகக் குடும்பங்களிடையே பரம் முதலாளி பரை பரம்பரையாக இருந்து வருகின் றது. இதனலேயே சிங்களவர் சோன கரை மரியாதையாக அழைக்கும் பொழுது முதலாளிசெல்வந்தன்- முதலை ஆள்பவன்- என்ற பொருளில் அழைக்கின்றனர்.
இலங்கை முஸ்லிம்களின் பொருளாதார வளர்ச்சி யின் காரணமாகப் பல அருபுச் தொற்கள் தமிழ் மூல மாக சிங்களத்தில் புகுந்துள்ளன. உதாரணமாக தண் டல் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். தண்டல் என்ற சொல்லுக்கு படகுத் தலைவன் தண்டல் என்பது பொருளாக அகராதியில் கொடுக்கப்பட்டுள்ளது. பல துறைகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவருக்கு தண்டல் என்று வழங்குவதுண்டு. சில வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம் மக்களில் செல்வாக்குடையவர்கள் தண்டல் என்ற பட் டத்தைத் தமது பெயருக்கு முன்னர் சூட்டிக்கொண்ட னர். ஒரு குறிப்பிட்ட உத்தியோகத்தரைச் சிங்களத்தில் இந்தப் பெயர் கொண்டு வழங்குவது உண்டு. பல படகு கள் உள்ள முஸ்லிம் எப்பொழுதும் தண்டல் என்றே தன்னைக் கருதி வந்தான். பின்னர் ஒரு பிரதேசத்தில் வாழ்ந்த முக்கியமான மனிதர் இந்தப் பெயரால் அழைக் கப்பட்டார். சென்னைப் பல்கலைக் கழகத்தாரால் வெளி யிடப்பட்ட தமிழ் அகராதியில் தமிழில் வழங்கும் தண் டல் என்ற சொல் தெலுங்கில் தண்டெலு என்றும் மலை யாளத்தில் தந்தல் என்றும் உறுதுவில் தண்டேல் என் றும் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனல் உறு துவில் உள்ள தண்டேல் என்பது அறபு மொழியிலிருந்தே வந்திருக்க வேண்டும்.

Page 21
38
இஸ்லாமியத் தென்றல்
எனவே இலங்கையின் பலவேறு பகுதிகளிலும் பொருளாதாரத் துறையில் மிக முக்கிய பங்கு வகித்த சோனக வியாபாரி தண்டல் என்று அழைக்கப்பட்டதில் வியப்பில்லை. இப்பொழுது அந்தப் பெயர் வழக்கற்றுப் போனதற்கு அவ் வியாபாரி தனது முன்னைய இடத்தை இழந்ததே காரணமாயிருக்கலாம். இப்பொழுது மீன் பிடிக்கச் செல்லும் பல படகுகளின் சொந்தக் காரன் தன்னைத் தண்டல் என்று வழங்குவதை இன்னும் காண லாம். பெரும் பாலும் தலைவர் என்ற பொருளிலே அந் தச் சொல் வழங்கப்படுகின்றது.
ஈழத்துச் சோனகர் ஈழத்தின் பொருளாதார அபி விருத்திக்கு ஆற்றிய தொண்டினைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது நாம் கவனத்தில் வைக்க வேண்டிய முக்கிய விஷயம் ஒன்று உண்டு. அது போக்குவரத்தோடு சம்பந் தப்பட்டது. பாதைகளும், வாகனங்களும், புகையிரதப் பாதைகளும், புகை வண்டிகளும், இலங்கையில் காட்சி யளிக்கு முன் இங்கு வந்த சோனகர் ஒரு போக்குவரத்து முறையை இந்த நாட்டில் புகுத்தினர். இந்த முறை
' ' 'தவளம்'' என்று வழங்கப்படுகின்றது. தவளம் இந்தத் "தவளம்' முறைக்கு இலங்கை,
சோனகருக்குப் பெரிதும் கடமைப் பட் டுள்ளது. ஒன்றோடொன்று தொடர்பில்லாத கிராமங் களைத் தொடர்பு படுத்தவும், அத்தகைய கிராமங்களுக் குப் பண்டங்களைக் கொண்டு செல்லவும் இந்தத் தவளப் போக்கு வரத்து முறை பெரிதும் பயன்பட்டது. மாடு களின் மேல் வைத்துக் கட்டப்பட்ட பொதி சுமைகளைக் கிராமம் கிராமமாக எடுத்துச் செல்ல இந்த முறை பெரி தும் பயன்பட்டது. இத்தகைய மாடுகள் தவளம் மாடு கள் என்று அழைக்கப்பட்டன. உள்நாட்டு மக்களுக்குத் தேவைப்பட்ட உப்பு, சாரம், உடை, செம்புப் பாத்தி ரங்கள், உணவுப் பொருள்கள் முதலிய வற்றைக் கொண்டு செல்வதற்குத் தவளம் முறை பெரிதும் பயன் பட்டது. இதைப் பற்றிச் சிந்திக்கும் பொழுது சோனகர் இந்த நாட்டின் அபிவிருத்திக்குப் பெரும் பணி புரிந் துள்ளனர் என்றும், போக்கு வரத்துச் சாதனங்கள்

வாணிபமும் பொருளாதாரமும் 39
வாழ்க்கைக்கு மிக இன்றியமையாதனவாக இருந்த காலத்தில் போக்கு வரத்துச் சாதனங்கள் அனைத்தும் சோனகரின் கையிலேயே தங்கி இருந்தன என்றும் திரு. எம். டி. ராகவன் கூறியுள்ளார்.
இவ்வாறு நெடுந்தூரம் பிரயாணத்துக்குத் தவளம் முறையை எவ்வாறு உபயோகிக்கலாம் எனறு இலங்கை மக்களுக்குக் காட்டிக் கொடுத்தவர்கள் சோனகர்களே யாவர். எனவே இஸ்லாமிய கலாச்சாரம் சோனகரின் தவளம் முறையை ஏற்படுத்திப் போக்கு தொண்டு வரத்துச் சாதனம் ஒன்றை அமைத்தது. டச்சுக்காரர், பின்னர் புகுத்திய மாட்டு வண்டிக்குச் சோனகரின் தவளம் முறை முன்னேடியாக இருந்தது என்றும், டச்சுக்காரர் சோனகரின் முறையை அடிப்படையாக வைத்தே தம் முறையைப் புகுத்தினர் என்றும் டாக்டர் பாலேந்திரா குறிப்பிட்டுள்ளார்.
இனி, இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தவளம் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். 'தவ்லத்’ என்ற ஓர் அறபுச் சொல் உண்டு செல்வம் என்பது அதன் பொருள். செல்வத்தைக் குறிக்கோளாகக் கொண்டு செய்யப்படும் முயற்சியைத் தவளம் என்று அழைத்திருக்கலாம். தவ ளம் பெரும்பாலும் வியாபார நோக்கத்துடனேயே உப யோகப் படுத்தப்பட்டது. பொருள், ஈட்டும் முகமாகவே பயன்படுத்தப் பட்டது. செல்வம் தேடும் குறிக்கோளு டன் ஆரம்பிக்கப்பட்ட சேவையை அக் ஆராய்ச்சி கால முஸ்லிம்கள் செல்வம் என்று பொருள்படும் அறபுச் சொல்லால்தவ்லத் என்ற சொல்லிலிருந்து மருவி வந்த தவ்லம் என்ற சொல்லால்-அழைத்திருக்கலாம். தவளம் என்ற சொல் லுடன் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்தக் கூடிய இன் னேர் அறபுச் சொல் உண்டு. அது தவ்லாப் என்பது. அதன் பொருள் சக்கரம் அல்லது இயங்குவது என்பதே எனினும் தவளம் என்ற இந்தச் சொல் தவ்லத் என்ற சொல்லிலிருந்தே வந்திருக்கலாம் என்று ஊகிக்க இட முண்டு.

Page 22
40 இஸ்லாமியத் தென்றல்
இலங்கை முஸ்லிம்களுக்கும், இலங்கையின் வணி கத்துக்கும் உள்ள தொடர்பைக்குறிப்பிடும் பொழுது மாணிக்கக்கல் வியாபாரத்தைக் குறிப்பிடாமல் இருக் கமுடியாது. மாணிக்கக்கல் வியாபாரம் இப்பொழுது பெருமளவில் பொருள் வருவாயைக் மாணிக்க கொடுக்கக்கூடியதாக இருக்கின்றது. வியாபாரம் மாணிக்கக்கல் வியாபாரம் சோனகரின் கையிலே பெரும் பாலும் தங்கியுள்ளது. மாணிக்கக் கல் வியாபாரத்தின் நடு நிலையம் இரத்தின புரியாகும். அவர்கள் இலங்கைக்கு எவ்வளவு பொருள் வருவாயைத் தேடிக்கொடுத்திருக்கிருர்கள் தெரியுமா? கலுகங்கையின் ஆற்றங்கரை ஓரத்திலே புதைந்து இடக்கும் மாணிக்கங்களைத் தேடிச்சென்று தோண்டி எடுத்து வியாபாரம் செய்கின்றனர். அதன் வருவாய் அதிகரித்துக் கொண்டே போகின்றது. 1890ம் ஆண்டில் மாணிக்கக்கல் வியாபாரத்தின் மூலம் ஒரிலட்சம் ரூபாய் வருவாய் இலங்கைக்குக் கிடைத்தது. 1958ம் ஆண்டில் 2,85,846 கிருத் மாணிக்கக்கற்கள் ஏற்று மதி செய்யப்பட்டு 15, 35,952 ரூபா வருவாய் கிடைத் துள்ளது என்று சுங்க இலாக்காவின் அறிக்கை குறிப் பிடுகின்றது. ‘கிருத்’ என்பது அறபுச்சொல். தமிழில் மாற்று என்று வழங்குகிறது. ஆங்கிலத் "கிருத்’ தில் CARAT என்று வழக்கில் உள்ளது. இயற்கையை ஆராய்ந்து, இயற்கையின் செல்வங்களை ஆற்றுப் படுக்கையிலிருந்து தேடி எடுத்து, மெருகிட்டு, பிற நாடுகளுக்கு எடுத்துச் சென்று,இந்த நாட்டுச் செல்வத்தை இந்த நாட்டுக் வியக்கத்தக்க குக் கொண்டு வரும் ஆற்றல் மிக் கலாசாரம் கோரை ஒரு கலாசாரம் உற்பத்தி செய்யுமாயின் அது உண்மையிலேயே வியக்கத்தக்க கலாசாரம் என்பது டாக்டர் பாலேந்திரா வின் அபிப்பிராயமாகும்.

கலையும் கலாசாரமும்
அறபு நாட்டின் வளம்
திரு. எஸ். எவ். டி. சில்வா அவர்கள் நாகரிகம் என்பதைப் பற்றி எழுதும் பொழுது பின்வருமாறு குறிப் பிடுகின்ருர்-ஒரு முஸ்லிம் அல்லாதவன் என்ற முறையில் இஸ்லாத்தின் தாயகம் அறேபியா என்றும், அறேபியா ஒரு பாலைவனம் என்றும் என்னிடம் கூறப்பட்டது. அறேபியா ஒரு பாலைவனம் என்று பலர் எண்ணலாம். ஆனல் அறேபியா ஒரு பாலைவனம் அன்று. சாகுபடி செய்யக்கூடிய பெரும் நிலப்பரப்பு அங்குண்டு. பல்லாயி ரக் கணக்கான பசும் புற்றரைகள் அறேபியாவில் இருக் கின்றன. இன்றைய பாலைவனம் பல்லாண்டுகட்கு முன் னர் பாலைவனமாய் இருந்திருக்க முடி நாகரிகம் யாது. தற்போதைய அமெரிக்கப் பொறி ஞர் தம் கூற்றுப்படி அங்கு பாரிய எண் ணெய் வளம் உள்ளது. முகம்மது நபிக்கு முன்னர் இப் பிராந்தியத்தில் தரத்தில் குறைந்த மக்கள் வாழ்ந்தனர். அண்ணலின் போதனைகளைப் பின்பற்றிய பின்னர் அவர் கள் உண்மையிலேயே சகோதரர்கள் என்று தம்மைக் கருதலாயினர். அவர்கள் இசையில் அபார பற்றும் கதை சொல்வதில் பேரார்வமும் உடையோராய்த் திகழ்ந்தார் கள். அவர்களைத் திரு நபி அவர்கள் சீர்திருத்தினர்கள். விசித்திரமான சகோதரத்துவ உணர்ச்சியை அவர்களி டையே நிலைபெறச் செய்தார்கள்.

Page 23
42
இஸ்லாமியத் தென்றல்
இஸ்லாமியரின் சின்னங்கள் திரு. எஸ். எவ். டி. சில்வா அவர்கள் கூறியுள்ளது போல் திரு நபி (சல்) அவர்கள் முஸ்லிம்களிடையே நிலை பெறச் செய்த அந்த விசித்திரமான உணர்ச்சியே.
அவர்களின் வாழ்க்கையின் எல்லாத் மலர்வுத் துறைகளிலும் பிரதிபலித்துக்கொண்டி
ருக்கின்றது. இஸ்லாம் தோன்றியதும் அறேபியா மலர்ச்சி அடைந்தது. ஐபீரியன் குடா நாட்டிலிருந்து இந்தோனேஷியா வரை செங்கற்களி னாலும் கருங்கற்களினாலும் ஆன அழியாச் சின்னங்கள் சாட்சி பகர்ந்து கொண்டிருக்கின்றன. இன்றும் ஸ்பெய்னில் உள்ள குர்துபா (coRDOVA) மூரின் சொர்க் மாகக் காட்சி அளிக்கின்றது. தென் ஸ்பெய்னின் செவில் நகரத்தில் உள்ள சிவப்பு மாளிகை என்று பொருள் படும் அல்ஹம்ராவும் இந்தியாவின் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலும் இஸ்லாமிய சிற்ப முறைக்குத் தலை சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன.
ஈழநாட்டுச் சிற்ப முறைக்கும், அரசன் என்று வழங்கும் இஸ் லா மிய சிற்ப முறைக்கும் உள்ள தொடர்பை அறிய முயல்வோம். கட்டடங்கள் பல இலங்கையில் நிறுவப்பட்டுள்ளன. முஸ்லிம்களைப்
பொறுத்தவரையில் இஸ்லாமிய சிற்ப சிற்பம் " முறை எவ்வாறு அமைந்திருக்கின்றது
என்பதை அறிவதற்கு அவர்களின் மஸ்ஜித்களான பள்ளிவாசல்களைப் பற்றி நாம் அறிதல் வேண்டும். நூற்றுக்கு நூறு இஸ்லாமிய முறையில் அமைந்துள்ள ஒரு முஸ்லிம் பள்ளிவாசலையோ வேறோர் இடத்தையோ சிறப்பாகக் குறிப்பிடுவது எளிதன்று. சிற்ப முறைக்கு ' இஸ்லாமிய'' என்று பெயரிடுவதே

கலையும் கலாசாரமும் 43
SqSqSqqqSqSSLLSLLASLLASLS ASASLSqSqSqSqSqSqSqSqSqSSqqSSqSAqAS ܢܥܫܝܟܝܬܐ
தவருண வழக்காகும். இஸ்லாமிய சிற்ப முறையின் தனிப்பண்பு அழகிய கையெழுத்துக்களே எனலாம். வளைமாடங்களும் சிறு கோபுரங்களும் இல்லாமல் இல்லை. எனினும் இத் த கைய அழகிய கையெழுத்துக்களை அவ்வளவாக இலங்கையிலுள்ள பள்ளிவாசல்களில் காணமுடியாது. குபிக் முறையில் அமைத்த சில கல் வெட்டுக்களைக் கல்லறைகளின் நடுக் கல்லில் காணலாம். எனினும் உண்மையிலே இலங்கையில் காணக்கூடியவை மூல முன்மாதிரியான சிற்ப முறை அல்ல; முஸ்லிம்க ளின் உணர்ச்சிப் பிரவாகத்தைப் பிரதிபலிப்பனவும் அல்ல. அதற்கு மாருக அவை வெறும் படிவம் வரை வோரின் பிரதிபண்ணுதலாகவே காட்சியளிக்கின்றன. ஏகதெய்வ வழிபாட்டுக்குரிய ஓர் இடத்தை அமைக்க முன் வந்த செல்வந்த முஸ்லிம்களின் பெருந்தன்மை யிலும் பணத்திலுமே அவர்களின் கைவரிசை தங்கி இருந்தது.
போர்த்துக்கீசரினதும் டச்சுக்காரரினதும் ஆக்கிர மிப்புக்களின் விளைவாக இலங்கை முஸ்லிம்கள் குறிப் பாக இலங்கைச் சோனகர்கள் பெரிதும் பாதிக்கப்பட் டனர். கடற்கரைப் பிரதேசங்களிலும் உள்ளூர்களிலும் இருந்த முஸ்லிம் மஸ்ஜித்கள் பல அழிக்கப் போர்த்துக்கேயரினலும் டச்சுக்காரரி பட்டவை ஞலும் அழிக்கப்பட்டன; எரிக்கப்பட் டன. அவை இருந்த இடங்களில் அடையாளங்களைக் கூட இப்பொழுது காண்பதரிது. ஆரம்பகாலச் சோனகரின் கட்டடக்கலையை எடுத்துக் காட்டக் கூடிய அந்தப் பழம் மஸ்ஜித்களின் படங் களைக் கூட இப்பொழுது காண்டல் அரிது. எனினும் அத்தகைய ஒன்றைப் பற்றிய சில விவரங்களை நாம் அறியக் கூடிய நிலைமையில் இருக்கின்ருேம். இலங்கை யிலே அமைக்கப்பட்ட மிகப்பழமையான மஸ்ஜித்களுள் ஒன்று போர்த்துக்கேயரினல் அழிக்கப்பட்டது. ۔

Page 24
44 இஸ்லாமியத் தென்றல்
அம் மஸ்ஜித் நல்லூரில் இருந்தது அங்கே அறேபியர் குடி யேறியிருந்தனர். அந்த மஸ்ஜிதைப் பற்றிய வருணனை களைப் படித்த ஒருவர் அந்த மஸ்ஜிதின் சிற்ப முறை நூற்றுக்கு நூறு அறபுச் சிற்ப முறையி நல்லூர் லேயே இருந்தது என்றும் அது ஒரு பெரிய மஸ்ஜிதாக இருந்ததோடு ஒரே முறையில் 1,000 பேர் ஒன்ருக இருந்து தொழக் கூடிய இடவசதி அந்த மஸ்ஜிதில் இருந்தது என்றும் கூறியுள் ளார். 1,000 பேர் ஒன்ருக இருந்து தொழக்கூடிய மஸ் ஜித் ஒன்றை நிர்மாணிப்பதற்கு அதிலும் பன்மடங்கு மக்கள் அங்கே வாழ்ந்திருக்கலாம். போர்த்துக்கேயரினல் அழிக்கப்பட்ட இன்னெரு மஸ்ஜித் கொழும்புத் துறை முகத்துக்குச் சமீபத்தில் இருந்தது, எனக்குறிப்பிடப் பட்டுள்ளது. முஸ்லிம்களின் ஈழ நாட்டு வருகையைப் பற்றிக் குறிப்பிட்டபொழுது பழங் காலத்தில் ஈழத்து முஸ்லிம்கள் மதப்பற்று குன்றியிருந்த இபுனு பக்காயா பொழுது பக்தாதிலிருந்து ஹாரூன் அல் றசீதின் ஆட்சியின் போது இப்னு பக் காயா என்பவர் இங்கு மதப்பற்று ஏற்படுத்த அனுப்பிய தாகக் குறிப்பிட்டோம். அவர் நிறுவிய மஸ்ஜித்தான் கொழும்புத் துறைமுகத்துக்கண்மையில் நிறுவப்பட்டி ருந்தது. இந்த மஸ்ஜிதைக் கட்டி முடிக்கப் பல ஆண்டுகள் சென்றனவாம். இந்த மஸ்ஜித் பல வகையில் பயன்பட் டது. இங்கு மத்றஸா என்ற கல்வி நிலை மத்றஸா யம் அமைந்திருந்தது. அது தொழுகைக் குரிய இடமாகவும் இருந்தது. சமயதத் துவ போதனை நிலையமாகவும் விளங்கியது. இஸ்லாம் இங்கு போதிக்கப்பட்டது. அறபு அறிஞருக்குத் திருக்குர் ஆனை மனப்பாடஞ் செய்வதில் பயிற்சி அளிக்கப்பட்டது. விரிவான முறையில் ஏக தெய்வக் கொள்கை பற்றிப் போதனை நடைபெற்றது. இந்தக் கல்வி நிலையத்தில் பயிற்றப்பட்டு வெளியேறியவர்கள் 'பட்டதாரிகள்' போல் கருதப்பட்டனர். அவர்களே முஸ்லிம் விவாகப் பதிவுக்காரராகவும் கதீபுகளாகவும் நியமனம்பெற்றனர்.

கலையும் கலாசாரமும் 45
பின்னர் பிரித்தானியரின் காலத்தில் இந்தக் கல்வி நிலையத்தில் பயிற்சி பெற்றவர்களின் வழித்தோன்றல் கள் இலங்கை முஸ்லிம்களின் விவாகங்கள் சம்பந்த மான சட்டங்களைத் தொகுப்பதில் பிரித்தானிய தேசாதி பதிகளுக்கு உதவி புரிந்தனர். அந்தச் சட்டங்களையே இன்றும் முஸ்லிம்கள் பின்பற்றி வருகின்றனர். இத் தகைய ஒரு மஸ்ஜித் காலியிலும் இருந்தது. அந்த மஸ்ஜிதை டச்சுக்காரர் அழித்தனர்.
சிற்பமுறையும் மஸ்ஜித்களும் இனி இலங்கையிலுள்ள மஸ்ஜித்களை எடுத்துக் கொள்வோம். அம் மஸ்ஜித்களுக்கும் இஸ்லாமிய சிற்ப முறைக்கும் எவ்வகையில் தொடர்பு இருக்கின்றது என் பதைப் பார்ப்போம். அவை இஸ்லாமிய சிற்பமுறைக் கேற்ப அமைந்திருப்பின், எந்த நாட்டு இஸ்லாமிய சிற்ப முறையைப் பெரிதும் ஒத்திருக்கிறது என்பதை
யும் அறிய முயல்வோம்.
கெச்சிமலை
வேர்விலையில் கெச்சிமலை மஸ்ஜித் உள்ளது. அங்கு செய்கு அஷ்றப் வலியுல்லாவின் கல்லறையைக் காண லாம். இது தனக்கே இயைந்த முறை முத்துப்பள்ளி யில் அமைக்கப்பட்ட தனிப்பெரும் சின்னமாகும். உரிய முறை நிற மெருகு ஊட்டப்பட்டால் இது இலங்கையின் முத்துப்பள்ளியா கத் திகழ்வது திண்ணம். கி.பி. 1474 ம் ஆண்டு அலெக் சான்டிரியாவில் அமைக்கப்பட்ட செர்காஸ்ஸியன் LDL b 63)1ji ( circassi AN MAMLUks ) g)60T ġ56o 35ġi GSF fi i55 சுல்தான் அல்-எஷ்ரப் கய்த்தானியின் மஸ்ஜிதைக் கெச்சி மலை மஸ்ஜித் பெரிதும ஒத்திருக்கின்றது. ஆனல் அலெக்சான்டிரியாவில் உள்ளது போல் கேந்திர கணித உருவ அலங்காரங்களும் அழகான முறையில் அலங்கரிக் கப்பட்ட மாடங்களும் சிறு கோபுரங்களும் வேர்விலை

Page 25
46 இஸ்லாமியத் தென்றல்
எனினும், ஸ்ரஸன் சிற்ப முறையைப் ஸரஸன் பிரதிபலிக்கும் வேர்விலையில் உள்ள இந்த மஸ்ஜித் இந்தத் துறையில் தனிச் சிறப்புப் பொருந்தியது. மஸ்ஜிதின் சில பகுதிகள் இஸ் லாமிய முறையையோ, சோனக முறையையோ தழுவ வில்லை. தென்னிந்திய செல்வாக்கு ஒரளவுக்குத் தென் படுகின்றது. மூன்று பக்கங்களில் கடலாலும் ஒரு பக்கத் தில் தரையாலும் சூழப்பட்டது இந்த மஸ்ஜித், தரைப் பக்கத்துக்கு எதிரே யுள்ள பக்கவாயிலும், கதவுகளும் தென்னிந்திய முறையை எடுத்துக்காட்டுகின்றன.
கறுவாக்காடு
கறுவாக்காட்டில் கண் ஆஸ்பத்திரிச்சந்தியில் உள்ள மஸ்ஜித் தெவொட்டகஹ மஸ்ஜித் என்று வழங்கப்படு கின்றது. அங்கு செய்கு உஸ்மான் வலியுல்லாஹ்வின் கல்லறை உள்ளது. இந்த மஸ்ஜிதைக் காலஞ் சென்ற சி.பி. நெய்னு மரிக்கார் தனது சொந்தச் செலவில் 19ம் நூற்றண்டின் இறுதிப்பகுதியில் கட்டிமுடித்தார். இரு மாடிகள் உள்ள மஸ்ஜிதின் கிழக்குப்பகுதி டில்லி யிலுள்ள மொகலாய வாயில் அமைந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளது. எனினும் உண்மைப் பிரதி யன்று. ஸரஸன் முறையிலுள்ள சிற்ப முறைகள் பல இங்கு புகுத்தப்பட்டுள்ளன. சிறு கோபுரங்கள் கி.பி. 1363ல் சிரியாவில் அமைக்கப்பட்ட சுல்தான் ஹஸனின் மஸ்ஜிதைப் பெரிதும் பிரதிபலிக்கின்றன. கல்லறை உள்ள அறையும் குத்துவிளக்குள்ள தொழுமிடமும் எகிப்திலுள்ள முகம்மதலி பள்ளி வாசலின் அழகிய வளைமாடங்களின் திறமை வாய்ந்த பிரதிகளாகக் காட்சியளிக்கின்றன. சோனக சிற்ப முறைக்கே சிறப் பியல்பான அலங்காரங்கள் அங்கு உள்ளன. அருபிய சிற்ப முறைக்கு எடுத்துக்காட்டாகப் பல அம்சங்கள்
D66. TGT.
 

கலையும் கலாசாரமும்
இரத்தினபுரி -1) இரத்தினபுரியிலுள்ள மஸ்ஜித் 'ஜன்னத், மஸ்ஜித் என்று அழைக்கப்படுகின்றது. இலங்கையிலுள்ள வனப்பு மிக்க மஸ்ஜிதுகளுள் இதுவும் ஒன்றாகும். கெய்ரோவில் கி. பி. 1904ல் நிறுவப்பட்ட காலாவூனின் கல்லறைக் கூடத்தினதும் மஸ்ஜிதினதும் சில அம்சங்களை இரத்தின புரி ஜன்னத் மஸ்ஜிதில் காணலாம்.
புத்தளம் புத்தளம் மஸ்ஜித் இலங்கையில் அமைக்கப்பட்ட வேறொரு சிற்பச் சிகரமாகும். இந்த மஸ்ஜித் அபுல் அப்பாஸ் அல்மோர்ஸியின் எகிப்து மஸ்ஜிதை நினைவு படுத்துகிறது. எனினும் வேறுபாடுகள் இல்லாமலில்லை. வெளிப் புறத்துக்கு அழகைக் கொடுக்கும் கேத்திர கணித உருவ மாதிரியில் அமைந்த வெளிப் புற அலங்காரங்களை புத்தளம் மஸ்ஜிதில் காண்பதரிது. சிறு கோபுரங்கள் நன்கு அமையவில்லையெனினும் இலங்கையைப் பொறுத் தவரையில் சிறந்து விளங்குகின்றது.
கொழும்பு கொழும்பு மருதானை ஜும்மா மஸ்ஜிதின் முகப்புத் தோற்றம் அறபு முறையிலோ, சோனக முறையிலோ
அமையவில்லை.. மேல் வளைவுகள் அழகு மருதானை. மிக்கன. ஒரு வேளை கி. பி. 1504ல் கெய்
ரோவில் அமைக்கப்பட்ட அல் சுல்தா னுல் கூரியின் மஸ்ஜிதை ஒத்திருக்கின்றது எனலாம். முன்னையது பின்னையதைப் போன்று நுண்கலையில் அமை யவில்லை.

Page 26
48
இஸ்லாமியத் தென்றல்
கொழும்பிலுள்ள இன்னொரு குறிப்பிடத்தக்க மஸ் ஜித் காதிரிய்யா மஸ்ஜித் ஆகும். இது இஸ்லாமிய சிற்ப முறைக்கே எடுத்துக் காட்டாக விளங்குகின்றது. இது சாதாரணமான அமைப்பில் பல வர்ணங்களுடன் திட்ட
மிடப்பட்ட முறையில் அமைந்துள்ளது. காதிரிய்யா கவர்ச்சிமிக்க வளை மாடத்தில் முடியும்
கோபுர வடிவில் அமைந்த தொழுமிடம் மூரிஷ் - சோகை-சிற்ப முறையை விளக்குவதாக அமைந் துள்ளது. அதன் வளை மாடங்கள் கி.பி. 972ல் கெய் ரோவில் நிர்மாணிக்கப்பட்ட அல் அஸ்ஹர் பள்ளம் வாசலைப் பெரிதும் ஒத்திருக்கின்றன. அதன் வாயில் களும் வாயில் வழிகளும் ஸ்பெயினில் அல்லது எகிப்தி லுள்ள மாபெரும் கட்டடங்களில் உள்ளனவற்றைப் பெரிதும் ஒத்திருக்கின்றன. அதன் மேல் வளைவுகள் இமாம் ஷாபியின் மஸ்ஜிதில் உள்ளவற்றைப் போன்று உள்ளன.
அறபு சிற்ப முறையைப் போன்று வேலைப்பாடுகள் உள்ள வேறொரு மஸ்ஜித் ஷாதுலிய்யா மஸ்ஜிதாகும். இந்த மஸ்ஜிதின் குறிப்பிடத்தக்க அம்சம் தொழுமிடத்
துக்குச் செல்லும் படிக்கட்டுகளேயாம். ஷாதுலிய்யா பல வர்ண அமைப்பு ஸரஸனிய சிற்ப
முறையைக் காட்டுகின்றது. அறேபியா விலுள்ள எந்த ஒரு மஸ்ஜிதையும் போன்று இதன் அடித்தளம் அமைந்துள்ளது. நாற் கோண வடிவிலுள்ள தொழுமிடம் ஸ்பானிய சிற்ப முறையைப் பெரிதும் ஒத்திருக்கிறது.
கல் மண்டபம் கண்டி-தெல்தெனிய வீதியிலே 18ம் நூற்றாண் டிலே நிருவப்பட்ட புத்த ஆலயம் ஒன்றுள்ளது. கற்க
ளினாலே அமைக்கப்பட்டு ''கல் மண்ட 'கல்மடுவ' பம்'' என்ற பொருள்பட சிங்களத்தில்
'கல்மடுவ' என்று அழைக்கப்படுகின் றது. அங்கு யன்னல்களில் மூன்று பிறைக் கோடுகளும்

கலையும் கலாசாரமும்
உள்ளன. அவை முற்றிலும் அறபு முறையிலேயே அமைந் துள்ளன. அதிலுள்ள சிற்ப முறையிலிருந்தும் கட்டு வேலையிலிருந்தும் அது சோனகர்களாலேயே கட்டப்பட் டது என்று தெளிவாகப் புலனாகின்றது. ஏனெனில் அக் காலத்தில் கண்டி இராஜதானியில் 'அதிலும் விசேடமா கத் தும்பறைப் பகுதியில் சோனகர் பெருமளவில் வாழ்ந் ததாக டாக்டர் அன்டிரியநெல் கூறியிருக்கிறார். கல் மடுவ என்ற கல் மண்டபத்தைப் பற்றி ஆராய்ச்சிகள் நடத்தப்பெற்றன. இங்கு இடம் பெற்றுள்ள மூன்று பிறைக்கோட்டுக் கதவுகளைப் பற்றியும் இன்னும் பல விஷயங்களையும் அறியக்கூடியதாக இருக்கும்.)
நெசவுத் தொழில் - நெசவுத் தொழிலிலும் முஸ்லிம்களின் செல்வாக்கு தென்படுகிறதென்பர். நெசவுத் துணிகளில் இடம் பெற் றுள்ள தலைமைக் கருத்தினை, அவற்றைச் சேகரிப்பவர்கள் எவரும் எளிதில் புரிந்து கொள்ளவில்லை. பிற் காலத்தில் அவை பாரசீகக் குடா நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்து அங்கிருந்து இங்கு வந்ததாகக் கூறப்படுகின்றது.
ஒப்பனை வேலைப்பாடுகள்
பரோடாவில் பாகன் என ஓர் இடமுண்டு. அங்கு ஒரு தனிப்பட்ட இனத்தைச் சேர்ந்த சுருள்களுடைய ஒப்பனை வேலைப்பாடுகள் (SCROLL WORK) நிறைந்திருந்தன. அது பின்வருமாறு இருக்கும். ஒரு சிற்றாற்றிலே பெருங் கூழாங் கற்கள் இருப்பதைப் பார்த்தால் ஒரு திசைக்குச் செல்லும் ஆற்று நீர் திரும்பிவருவதாகத் தோற்றும். தீக்கொழுந்தும் அப்படியே மேலே செல்வது போலவும் மறுபடி கீழே வருவது போலவும் தோற்றமளிக்கும். இது அறபு முறைக்கே உரிய அலங்கார ரூபமாகும்.

Page 27
50 இஸ்லாமியத் தென்றல்
இதனை இந்தியாவிலே பொதுவாகக் காணலாம். 'திரிங் கித்தல' என்ற சிங்கள அலங்கார ரூபமும் பரோடா வில் பாகனில் உள்ள சுருள்களை உடைய ஒப்பனை - வேலைப்பாட்டைப் பெரிதும் ஒத்திருக் திரிங்கித்தல கிறது. திரிங்கித்தல என்ற சிங்கள அலங்கார ரூபத்தில் இந்திய மொகலா யக் கலை அம்சங்கள் பல இருக்கக் காணலாம். முற்றிலும் அறபு முறையைத் தழுவி அமைக்கப்பட்டது. பெளத்த கலையிலும் அறபு முறைக்கமைந்த அலங்கார ரூபங்களைக் ᏯᏐ5ᎱᎢᎶᏡᏡᎢᎶu: [Ꭲ LᏝ) ,
முன்பொரு சமயம் ஹொகொட் (HocART) என்ற முன்னை நாள் புதைபொருளாராய்ச்சிக் கமிஷனர் மன் ஞரிலே ஒரு மேட்டை 18 அடிக்குத் மட் பாண்டங்கள் தோண்டிய பொழுது பளபளப்பான - மட்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட் டன. அவை முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவை என்று முடிவு செய்யப்பட்டது.
கிராமிய நடனங்கள்
இலங்கைச் சோனகருக்கே சொந்தமான கிராமிய நடனங்கள் உள்ளன. கழியாட்டம் அல்லது கழிக்கம் பாட்டம் என்பது அவற்றுள் ஒன்று. கழிக்கம்பாட்டம் இது கோலாட்டம் போன்றதே எனினும் ,* பெரும்பாலும் ஆண்களே ஈடுபடுவர். ஆறு ஏழு பேர் சேர்ந்து கழி அடிக்க ஒருவர் தாளம் வாசிப்பார். அவரே பாட்டையும் பாடுவார். கழி அடிக் கிறவர்கள் கழி ஆட்டத்தில் ஈடுபடுகிறவர்கள் பல்லவி யைச் சேர்ந்து பாடுவர். இது முஸ்லிம்களின் உற்சவ காலங்களிலும், பொழுது போக்குக்காகவும் மக்களால் விரும்பப்படும் ஒருவகை ஆட்டமாகும். கழி என்பது கோல் என்ற பொருளுடையது என்பதும் ஈண்டுகுறிப் பிடத்தக்கது.
 
 

கலையும் கலாசாரமும் - 5
முஸ்லிம்களின் வாழ்க்கைப் பண்பு முஸ்லிம்கள் உலகின் எந்தெந்தப் பாகங்களுக்குச் சென்ருர்களோ அந்தந்தப் பாகங்களிலெல்லாம் இஸ் லாத்தில் கூறப்பட்ட வாழ்க்கை முறையைப் பின்பற்றி னர். வாழ்க்கையின் எல்லா அம்சங்களும் இன்ன இன்ன முறையில் அமைய வேண்டும் என்பதை இஸ்லாம் விவர மாக வகுக்கிறது. எனினும் சிற் சில சந்தர்ப்பங்களில் இஸ் - லாமிய கோட்பாடுகட்கு முரணுகாத சூழல் முறையில் அவரவர் குடியேறிய நாட் டுப் பழக்க வழக்கங்களையும் மேற்கொண் டுள்ளனர். இக் கொள்கைக்கியைய இலங்கை முஸ்லிம் கிளின் வாழ்க்கை முறை சூழலுக்கேற்ப மாறி உள்ளது. இலங்கை வாழ் முஸ்லிம்களின் வாழ்க்கை முறையுடன் தமிழ் நாட்டுப் பழக்க வழக்கங்கள் கலந்துள்ளமையை நாம் இன்றும் காண்கின்ருேம். அவற்றுள் சில சமய அனுட்டானங்கள் போல் பொது மக்களால் அனுஷ்டிக் கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழர் பழக்க வழக்கங்கள் முஸ்லிம் திருமணங்களில் பல தமிழ் ஆசாரங்களைக் காணலாம். முகம்மது நபி அவர்கள் போதித்த இஸ்லாம் மதம் 'மஹர்' என்ற பணம் செலுத்து மஹர் கையை முக்கியமானது எனக் கூறுகின் றது. அதாவது ஒரு மணமகன் தான் விவாகஞ் செய்யும் மணமகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொ கைப் பணத்தை மஹர்ப் பணமாக-மணமகட் பணமாகசெலுத்தல் வேண்டும். இவ்வாறுமஹர்ப் சீதனம் பணம் செலுத்துவது மணமகன் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. எனினும் இப்பொழுது சீதனப் பழக்கம் மலிந்து இருக்கிறது. இது முஸ்லிம்களைத் தொற்றிய தமிழ் நாட்டுப் பழக்கம் என் பதே அறிஞரின் துணிபு.

Page 28
52 இஸ்லாமியத் தென்றல்
ஆலாத்தி எடுத்தல்,தாலி கட்டுதல், மணமகனின் கூறை யைப் பெற்று மணமகள் அணிதல் என்பன முஸ்லிம்களி டையே வழங்கும் தமிழ் நாட்டுப் பழக் தமிழ் மரபு கங்களாகும். இலங்கையின் சில பகுதிக ளில் கூறை என்பது காறை என்றும் மருவி வழங்கப்படுகின்றது. பாற்சோறு அருந்துதல் முத லியனவும் தமிழரிடமிருந்து பெற்றுக் கொண்ட பழக்கங் களாகும். ʻ v
முஸ்லிம் விழாக்களிலே முதன்மையான இடத்தைப் பெறும் குத்து விளக்கையும் ஈண்டு குறிப்பிடல் வேண்டும். பிரதானமாக முஸ்லிம் வீடுகளில் நடை. குத்துவிளக்கு பெறும் கந்தூரி அன்னதான வைபவங்க ளிலே குத்து விளக்கு முதலிடத்தைப் பெறுகின்றது. தலைப் பந்தியிலே குத்து விளக்கு எரிக்கப் படுகின்றது. மின்சார அலங்கார வெளிச்சம் உடைய வீடுகளில் கூட குத்து விளக்கு முதலிடம் பெறுவதை நாம் இன்றும் காண்கின்ருேம். இதுவும் தமிழ் நாட்டுப் பழக்கமேயாகும்.
முஸ்லிம்களைப் ಕ್ವಿಲಿ: பொது விஷயங்களில் இலங் கையில் வழங்கும் பொதுச் சட்டமும், சட்டங்கள் முஸ்லிம்களின் விவாக ரத்து, விவாகம், , சொத்துப் பங்கீடு முதலிய வற்றைச் சம் பந்தப்பட்ட வரையில் முஹம்மதியச் சட்டமும் இன்று இலங்கையில் வழங்குகின்றன.
- , - s ܝ ܢ .
 

கல்வியும் இலக்கியமும்
மொழிவழித் தொடர்பு
சமூக வாழ்க்கையில் மொழி ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. சிறு சமூகங்களாகவும், பெருஞ் சமூகங்களா கவும் உள்ள மக்களை மொழி ஒன்று படுத்துகின்றது. உயிருள்ளவை ஒன்று, இன்னென்றுடன் வைத்துக் கொள் ளும் தொடர்பு முறையே விரிந்த கருத்தில் மொழி எனப் படும். நாகரிகமற்ற பிற்போக்கான மக்களுக்குக் கூட மொழி உண்டு. ஒவ்வோர் இனத்துக்கும் ஒவ்வோர் கூட் டத்துக்கும் ஒவ்வொரு மொழி உண்டு. அத்தகைய மொழிகள் பல்லாயிரக் கணக்கான மொழி ஆண்டு வரலாற்றை உடையன. மாக்ஸ் முல்லர் என்பவர் தமது மொழி இயல் நூலில் உலகில் உள்ள மொழிகளின் எண்ணிக்கையைத் துணிந்து கூற முடியாதெனினும் அவை தொளாயிரத் துக்கு அதிகமானவை என்று கூறி உள்ளார். தமிழ் மொ ழியையும் சிங்கள மொழியையும் அவற்றுள் இரண்டெ னக் கூறலாம். இலங்கையில் வழங்கும் இவ்விரண்டு மொழிகளையுமே ஈழத்து மக்களில் மிகப் பெரும் பான் மையானுேர் வழங்குகின்றனர். ஓர் இனத்தின் மொழி அவ்வினத்தின் தனிப் பெரும் செல்வமாகும். அலெக் ஸாண்டர் ஹெர்குலானே என்பவர் மொழியும் சமயமும் இரண்டு வெண்கலச் சங்கிலித் தொடர்கள் என்றும் அவை போக்கில் முன்னைய சந்ததியைப் பின்னைய சந்ததி யுடன் தொடர்பு படுத்திக் கடமை புரிகின்றன என்றும் கூறியுள்ளார்.

Page 29
54 இஸ்லாமியத் தென்றல்
இலங்கையைத் தாய் நாடாகக் கொண்டுள்ள சமூ கத்தினர் சிங்களவரும், தமிழரும், சோனகருமாவர். சிங்களவர் சிங்கள மொழியையும் தமி தமிழ் ழர் தமிழ் மொழியையும் தாய் மொழி யாக உடையவர்கள். இலங்கையில் வா ழும் சோனகரும் தமிழ் மொழியையே உபயோகிக்கின் றனர். இலங்கையை மொழிவாரியாக மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்க லாம். நூற்றுக்கு எழுபத்தைந்து வீதம் சிங்களவர் வாழ்ந்துவரும் பகுதியில் மேல் மாகாணமும், தென் மாகாணமும், வட மேல் மாகாண மும், வட மத்திய மாகாணமும், சப்ர மொழிப் பிரிவு கமுவ மாகாணமும் அடங்கும். மத்திய மாகாணத்தையும் ஊவா மாகாணத்தை யும் கொண்ட பகுதியில் வாழும் மக்களுள் நூற்றுக்கு ஐம்பதிலிருந்து அறுபது வீதமானேர் சிங்கள மொழியை வழங்குகின்றனர். வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களுள் நூற்றுக்கு எழுபத்தைந்து வீதமானேர் தமிழ் மொழியையே தாய் மொழியாகக் கொண்டுள்ளனர். இனி இம் மூன்று பகுதிகளிலும் முஸ்லிம்கள் எவ்வாறு பரவி உள்ளனர் என்பதை அறிய முயல்வோம்.
பரந்து வாழும் ஈழத்து முஸ்லிம்கள்
1953ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் கணக்கீட் டின்படி இலங்கையில் 468, 146 இலங்கைச் சோனகரும் 28, 736 மலாயரும் வாழ்ந்தனர். மொத்தம் 5, 41, 800 லங்கை முஸ்லிம்கள் வாழ்ந்தனர். இப் புள்ளி விவரம் புள்ளி மதிப்பீட்டை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் பொழுது நூற்றுக்கு எழுபத்தைந்து வீதமானேர் தமிழ்மொழியைப் பேசும் யாழ்ப்பாணம், மன்னர், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் இலங்கைச் சோனகருள் நூற்றுக்கு 32.8 வீதமானேர் வாழ்கின்றனர்.
 

கல்வியும் இலக்கியமும் 55
நூற்றுக்கு எழுபத்தைந்து வீதமானேர் சிங்கள மொழி யையே பேசும் சிங்களப் பகுதிகளில் இலங்கைச் சோனக ருள் நூற்றுக்கு 48.5 வீதமானேர் வாழ்கின்றனர். நூற்றுக்கு 50 முதல் 60 வரை சிங்களம் பேசும் மக்கள் வாழும் மத்திய, ஊவா மாகாணங்களில் இலங்கைச் சோனகருள் நூற்றுக்கு 18, 7 வீதமானேர் வசிக்கின்ற னர். எனவே சிங்கள மொழி பெரும்பான்மையாக வழங்கப்படும் பகுதிகளில் இலங்கைச் சோனகருள் பெரும் பான்மையினர் அதாவது நூற்றுக்கு 67. 2 வீதமானேர் வாழ்கின்றனர். சுருங்கக் கூறின் இலங்கைச் சோனகருள் மூன்றிலொரு பங்கினர் தமிழ் மொழி பெரும்பான்மை யாக வழங்கும் பிரதேசங்களிலும் மூன்றிலிரண்டு பங்கி னர் சிங்களப் பகுதிகளிலும் வாழ்கின்றனர். மலாயருள் நூற்றுக்கு 6 வீதமானேர் தமிழ் மொழி வழங்கும் பிர தேசங்களிலும் ஏனையோர் சிங்கள மொழி பெரு வழக்கி லுள்ள பகுதிகளிலும் வசிக்கின்றனர். இலங்கைச் சோன கருள் பெரும்பான்மையினர் சிங்களம் பெரும்பான்மை யாக வழங்கும் பிரதேசங்களில் வாழ்ந்த போதிலும் அவர்கள் தமிழ் மொழியையே தத்தம் வீட்டு மொழியாக வழங்கி வருகின்றனர்.
அறயும் தமிழும்
ஈழத்து முஸ்லிம்களின் மூதாதையர் அருபியர் என்று முன்னர் குறிப்பிட்டோம். இஃது இவ்வாறெனின் அவர் களின் தாய் மொழி அறபு மொழியாக இருந்திருக்க வேண்டும் அல்லவா? ஆனல் அறபு மொழியை அறபு வீட்டு மொழியாக உபயோகிக்கும் இலங்கை முஸ்லிம்களின் வீடுகளைக் காண்ப து அரிதிலும் அரிதாகும். மேலே கூறியது போல் முஸ்லிம் களுள் பெரும் பகுதியினர் சிங்களப் பகுதிகளில் வாழ் கின்றனர் எனினும் சிங்களத்தை வீட்டு மொழியாகவோ

Page 30
56
இஸ்லாமியத் தென்றல்
தாய்மொழியாகவோ கொண்ட முஸ்லிம்கள் இலங்கை யில் இல்லை என்றே கூறிவிடலாம். இலங்கைச் சோன கரின் சமயமொழி அறபாகும். அறபுக்கு அடுத்தபடி யாகத் தமிழ் கருதப்படுகின்றது. வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் ஜூம்மாத் தொழுகையுடன் சம்பந்தப் பட்ட குத்துபாப் பிரசங்கம் அறபியிலும் தமிழிலுமே நடைபெறுகின்றது அத்தகைய பிரசங்கம் சிங்களத்தில் நடைபெறும் என்பதை இப்பொழுது நினைக்கவும் முடி யாது. அம்மட்டன்று , முஸ்லிம் மஸ்ஜித்களில் அற்பு. தமிழ் அல்லாத மொழிகளை உபயோகிப்பது பாவம் உண்டாக்கும் காரியமாகும் என்று கருதுபவர்கள் முஸ் லிம் சமூகத்தினரிடையே இன்றும் இருக்கின்றார்கள்.
முஸ்லிம்களின் வாழ்க்கையிலே அறபு மொழிக்கு முதலிடம் அளிக்கப்படுகின்றது. முஸ்லிம்களின் அடுத்த
- மொழி தமிழ் எனக் கருதப்படுகின்றது. வீட்டு மொழி தமிழ் மொழியிலே இஸ்லாமிய அடிப்
படையில் எழுந்த பல நூல்களைக்காண லாம். தமிழ் மொழி வளர்ச்சியில், தமிழ்ப்பாவளப் பெருக்கில் முஸ்லிம் மக்கள் பெருந் தொண்டு புரிந்
துள்ளனர். தென்னிந்தியாவில் வாழும் தமிழ்த்தொண்டு முஸ்லிம் புலவர்களுடன் தமிழ்த்
தொண்டு நின்றுவிட வில்லை. தமிழ்ப் பாவலர்கள், புரவலர்கள், அறிஞர்கள் பலர் ஈழத்தில் வாழ்ந்துள்ளனர். தமிழுக்குத் தனிப்பெருந் தொண்டு புரிந்துள்ளனர். கவிதைகள் புனைந்துள்ளனர். வசன நூல்கள் இயற்றியுள்ளனர். மார்க்கக் கிரந்தங்களை எழுதியுள்ளனர். இசையோடு சம்பந்தப்பட்ட பல பாடல்களை , யாத்துள்ளனர். கல்வித்துறையில் பணி புரிந்துள்ளனர். புலவர்களுக்குப் பொருள் உதவி புரிந்து வள்ளல்கள் என்று மதிக்கப்பட்டுள்ளனர்.

கல்வியும் இலக்கியமும்
57
கல்வித்துறையில் முஸ்லிம்கள்
போர்த்துக்கீசர் ஒல்லாந்தரின் இலங்கை வருகை யினால் முஸ்லிம்களின் முன்னேற்றம் எல்லாத் துறை
- களிலும் தடைப்பட்டது. முஸ்லிம்கள் மதமாற்றம் மதமாற்றத்தை விரும்பாத காரணத்
தினால் கல்வித்துறையில் பிற் போக் கடைந்தனர். ஆங்கிலேயர் இலங்கைக்கு வந்தபின்னரும் ஆங்கிலக் கல்வியைப் புறக்கணித்து வந்தனர். முஸ் லிம்களின் வாழ்க்கையில் சமூகத்துறையிலும் கல்வித் துறையிலும் மாற்றம் ஏற்படக் காரணகர்த்தாவாக இருந்தவர் அறபி பாஷா எனக்கூறலாம். எகிப்திய
- புரட்சித்தலைவரான அற பி பா ஷா அறபி பாஷா ஆங்கிலேயரினால் இலங்கைக்கு நாடு
- கடத்தப்பட்டார். இலங்கை முஸ்லிம் கள் அறபிபாஷாவுக்கு அமோக வரவேற்பளித்தனர். அவ ரின் முன்மாதிரியைப் பின்பற்றத் தலைப்பட்டனர். ஆங்கி லக்கல்வியில் அக்கறைகாட்ட முற்பட்டனர். எனினும் அப்பொழுதும் பழமையையே விரும்பிய ஒரு சிலர் ஆங்கிலக்கல்வி இஸ்லாத்துக்கு முரணானது என்று கூறி முஸ்லிம்களின் முன்னேற்றத்தைத் தடைப்படுத்துவதில் ஈடுபட்டனர். ஓரளவுக்கு வெற்றியும் பெற்றனர். அதன் விளைவாக முஸ்லிம்களின் கல்வி அபிவிருத்தி தடைப்பட்டது. ஆனால் இன்றோ நிலைமை மாறிவிட்டது. முஸ்லிம்கள் கல்வியில் ஊக்கம் காட்டுகின்றனர். பெண், களும் கல்வியே கருந்தனம் என்று கல்வியைத் தேடு வதில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈழத்து முஸ்லிம்களின் தமிழ்த் தொண்டு இனி ஈழத்து முஸ்லிம்களின் தமிழ்த் தொண்டினை ஆராய்வோம். முஸ்லிம்கள் முதன் முதல் குடியேறிய இடங்களுள் வேர் விலையும் ஒன்று என்று முன்னர் குறிப் பிட்டோம். வேர்விலை கடற்கரை ஓரமாக உள்ளது கெச்சிமலை என்ற இடம்.

Page 31
58 இஸ்லாமியத் தென்றல்
கெச்சிமலையைச் சுற்றிவர மூன்று பக்கங்களில் நீருள் ளது. ஈழத்தில் குடியேறிய முஸ்லிம் மக்களின் முதற் பிரிவினருள் ஒரு கூட்டத்தின் வழித்தோன்றல்களுள் ஒருவராக செய்கு அஷ்றப் வலியுல்லா கருதப்படுகிருர், அவரைப் புகழ்ந்து பாடப்பட்ட தமிழ்ப் பாடல்கள் உள்ளன. அவற்றுள் இரண்டு பாடல்களை வேர்விலைக்கு அணித்தாயுள்ள மக்கூனில் வாழ்ந்த அப்துல் ஹமீது மரைக்கார் என்பவர் இயற்றியுள்ளார். தோத்திர புஞ்சம் அப்துல் ஹமீது மரைக்காரின் அத்த கைய பாடல்கள் தோத்திர புஞ்சத் தில் இடம் பெற்றுள்ளன. தோத்திர புஞ்சத்தில் முதலில் முணுஜாத்துப் பாடல் உள்ளது. ஆண்டவனி டம் இரங்குதலையே முனஜாத்துப் பாடல் என்பர். அந்த முனஜாத்துப் பாடல் செய்கு அஷ்ரப் வலியுல்லா அவர்கள் பேரில் பாடப்பட்டது. அந்த முனஜாத்தில் உள்ள காப்பு வெண்பாவே அவ்வாறு குறிப்பிடுகின் றது. அவ்வெண்பா பின் வருமாறு:
கீர்பூத்த வாரிதிசூழ் மீனிலத்தி லாரிலங்கைச் சீர்பூத்த கெச்சிமலைத் தீபகற்பத்- தேர்பூத்த சத்தார்சைகஷ்றபுபாற் சார்புமுணு ஜாத்துரைக்கக் கத்தாவாங் காருணியே காப்பு. முனஜாத்துப்பாடல்களுக்குரிய இலக்கணங்கள் அனைத் தும் இப்பாடலில் அமையப்பெற்றிருக் சரந்தீப் கின்றன. ஒரு பாட்டை எடுத்துக் காள்வோம். அங்கு இலங்கை 'சரண் தீவு' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சரந்தீப் என்ற சொற்ருெடர் சரணடைந்த தீவு என்று பொருள் தொனிக்க ஆளப்பட்டுள்ளமை ஈண்டு நோக்கற்பாலது. ஆதிபிதா ஆதம் நபியின் பொற்பாதம் இலங்கையில் பட்டது என்றும் அப்பேற்றினைக் கருதியோ என் ன்வோ செய்கு அஷ்றப் ஒலியுல்லாவும் இலங்கை வந்து வாழ்ந்தார் என்று கருத இடமிருக்கிறது, என் றும் அப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
。

கல்வியும் இலக்கியமும் 59
அந்தப்பாடல் பின்வருமாறு:
போதரங்தந்தை ஆதம் பொற்பதஞ் சரந்தீவின் சீர்ப் பூதர மீதினுற்ற பொருட்டதினலோ நீரிம் மாதரமிலங்கி லங்கை வந்துற வாழ்கின்றீர் நல் ஆதரம் பெருகும் ஷைகு அஷ்றப் வலியுல் லாவே முஸ்லிம்களின் திருத்தலங்களுள் கெச்சிமலையும் ஒன்று. இது முஸ்லிம் மக்கள் புனித யாத்திரை செய் யும் தலமாகும். திருத்தலம் என்பதினல் கெச்சிமலை பாடல் பெற்ற திருத்தலம் என்று கூறும் போது பக்தி ததும்பும் தேவாரப்பாடல்களே நினைவுக்கு வருகின்றன. ஆம், கெச்சிமலையைப் பற்றியும் தேவாரப் பாக்கள் பாடப்பட்டுள்ளன. பெருந் தொகை கெச்சிமலைத் யான திருப்பாக்கள் இல்லாத போதி தேவாரம் லும் ஒன்பது இனிய செய்யுட்களைக் - கொண்ட கெச்சிமலைத் தேவாரம் என்று ஒரு பாடற்ருெகுதி உண்டு. கெச்சிமலைத் தேவாரம் தோத்திர புஞ்சம் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. இந்தத் தேவாரப்பாடற்ருெகுதிக்குக் காப்புச் செய்யுள் ஒன்று உள்ளது. அந்தக் காப்புச் செய்யுள் நேரிசை வெண்பாவாகப் பாடப்பட்டுள்ளது. இவ்வெண்பாவில் இலங்கை ஸைலான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பூவார்ஸை லானகரிற் பூத்தகெச்சி மாமலையில் தேவார்ஷை கஷ்றபெனுஞ் சீர்வலிமேல்-மாவார்தே வாரமதாம் பாபாட வாண்டவனே சித்தியுப காரமதாய் நின்றருளென் கண். இந்தக் கெச்சிமலைத் தேவாரப் பதிகத்தில் கெச்சி மலையில் சமாதியுற்றிருக்கும் செய்கு அஷ்றப் வலியுல்லா புகழ்ந்து பாடப்பட்டுள்ளார். அங்ங்ணம் பாடப்பட்ட முதற் செய்யுள் பின்வருமாறு:
ஆரா ரம்புலியே சயிகஷ்ற பெனும் வலியே வாரா ஓங்கடல் சூழ் கெச்சிமாமலை மின்சுடரே சீரா ரன்பருளே புவிதேட வொண்ணுப் பொருளே நாரா நுண்சரனே சொலி நாளும் பணிவேனே.

Page 32
60 இஸ்லாமியத் தென்றல்
இதேபாணியில் மற்ற செய்யுட்களும் அமைந்துள்ளன. கெச்சிமலைத் தேவாரத்தின் கடைசிச் செய்யுள் முத்தி ரைக் கவியாக அமைந்துள்ளது. அது வருமாறு: தேவா நங்குருவே யுயர் தீனவரைந்தருவே மாவா ராரங் கொள்வீர் கெச்சிமாமலை மின்சுடரே பூவார் காவரணே செயும்பூரணப் பூஞ்சரணே நாவா ரப்துல்ஹமீத் சொலி நாளும் பணிவேனே வேர்விலைக்குப் புகழ் தேடிக் கொடுத்த இன்னெரு ஞானி செய்கு முஸ்தபா ஒலியுல்லா என்பவர். அவர் பல அரிய சாதனைகளை நிலை நாட்டியுள்ளார். தூய இஸ்லாமிய முறையிலிருந்து ஓர் அணுவளவாவது பிறழாது வாழ்ந்த செய்கு முஸ்தபா குழந்தை ஒலியுல்லா அவர்களின் வாழ்க்கை பல மரிக்கார் புலவர்கட்குப் பாடுவதற்குப் பொரு - ளாய் அமைந்துள்ளது. அப்பெரியார் சர்வ சாதாரணமாகக் குழந்தை மரிக்கார் என்று வழங்கப்பட்டார். அப்பெரியாரைப் பற்றிப் பாடியவர் களுள் அகமது லெப்பை மரிக்கார் உபாத்தியாயரும் ஒருவராவர். இப்புலவரும் வேர்விலையைச் சேர்ந்தவர். இலங்கையில் தோன்றிய சிறந்த இஸ்லாமிய கவிஞர் களுள் ஒருவர். நினைத்தவுடன் பாடும் ஆற்றல் வாய்ந்த வர். மக்கள் கூட்டங்களில் தமது கவித்தேனை வாரி இறைக்கும் சக்திபடைத்தவர். ".
கவிஞர் அஹமது உபாத்தியாயர் செய்கு முஸ்தபா ஒலியுல்லாவைப்பற்றிப் பல பாடல்களைப் பாடியுள்ளார். ஆதம் என்பவரின் புதல்வரான செய்கு முஸ்தபா ஒலியுல்லா இலங்கையில் பிறந்த தலை கும்மி சிறந்த ஞானிகளுள் ஒரு வ ரா வார். அப்பெரியாரைப் புகழ்ந்து பாடப்பட்ட கும்மிப் பாடலும் உள்ளது. அப்பெரியார் மதபோதக ராகவும் ஞானியாகவும் மட்டும் இராது தலைசிறந்த நூலாசிரியராகவும் விளங்கினர்.
 
 

கல்வியும் இலக்கியமும் 61
„A A-ov-/-ev
இஸ்லாமிய அடிப்படையில் தமிழ் நூல் கள் இயற்றிய ஈழத்து முஸ்லிம் புலவர்களுள் தலை சிறந்து விளங்கியவர்கள் யாழ்ம்பாணத்திலும் வாழ்ந்தனர். அவர்களுள் யாழ்ப்பாணத்து சு. அசன லெப்பையும் ஒருவராவார். அவர் சுல்தான், முகியித்தீனின் புதல்வரா வார். தமிழ், அறபு, ஆங்கில மொழிகளில் பாண்டித் தியம் பெற்றவர். அசன லெப்பை புகழ்ப்பாவணி அவர்கள் பாடிய பாடல்கள் அனைத் தும் புகழ்ப்பாவணி என்ற பெயரு டன் ஒன்று சேர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. திருப்புகழ், அந்தாதி, முணுஜாத்து ஆசிரிய விருத்தம் முதலியவை அந்தப் புகழ்ப்பாவணியில் இடம் பெற்று உள்ளன. திருப்புகழ் முகம்மது நபி அவர்களைப் புகழ்ந்து பாடப்பட்டது. இதனைநூலாசிரியர் நவரத்தினத் திருப் புகழ் என அழைக்கிருர், ஏனைய திருப்புகழ் நூல்களைப் போன்று நவரத்தினத் திருப்புகழிலும் நூலாசிரியர் தமது சந்தப்பாவன்மை, சொல்லாட்சி பொருட் செறிவு முதலிய வற்றை அமைத்துப் பாடியுள்ளார்.
தென்னிந்தியாவில் வாழ்ந்த வேருெரு புலவர் இலங்கையின் புனிதத்தலங்களைப் பற்றிப் பாடியுள்ளார். கண்டிமஸ்ஜித் ஒன்றில் ஒரு முஸ்லிம் ஞானியின் கல் லறை இருப்பதனுல் கண்டி மா நகரம் திருந்தலமாகக் கருதப்பட்டுள்ளது. எனவே திருப்புத்தூரைச் சேர்ந்த அப்துல் காதிறுப்புலவர் ஷிகாபுதீன் வலியுல்லாவைப் பாட்டுடைத் தலைவராகப் பாடியுள்ளார். அவரின் கல் லறையே கண்டி மஸ்ஜித்தில் உள்ளது. இதனைஅமைத்தே அப்துல் காதிறுப் புலவர் கண்டிப் பதிற்றுப்பத்தந்தாதி ஒன்றைப் பாடியுள்ளார். இதே பொருளில் வேருெரு புலவரால் கலம்பக உறுப்புகள் அமைய கண்டிக் கலம்பகம் என்ற ஒரு நூலும்பாடப்பட்டுள்ளது.
இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளை விளக் குமுகமாக வினவிடை முறையில் ஒரு நூல் அமைந் துள்ளது. அந்த நூலின் பெயர் சன்மார்க்க இலகு போதனு வினவிடை என்பதாகும். யாழ்ப்பாணத்

Page 33
62 இஸ்லாமியத் தென்றல்
தைச் சேர்ந்த செய்யிது முகம்மது பலூல் என்ற புலவரின் மாணவரான மீரான் முகியித்தீன் என்பவ ரால் சன்மார்க்க இலகு போதன வின விஞவிடை விடை இயற்றப்பட்டது. இந்த நூல் பெரும்பாலும் ஆறுமுகநாவலர் எழுதிய வினவிடையை முன்மாதிரியாகக் கொண்டு எழுதப் பட்டது என்று கூறலாம்.
ஆசாரக்கோவை என்ருெரு நூல் கீழக்கரையைச் சேர்ந்த அ. க. அப்துல் மஜீது என்பவரால் இஸ்லாமிய அடிப்படையில் எழுதப்பட்டது. ஆசாரக் கோவையை
இயற்றுவதற்குக் கற்பிட்டியைச் சேர்ந்த
கற்பிட்டி முகம்மது மரைக்காயர் எ ன் பவ ர் பொருளுதவி புரிந்துள்ளார். இதன லேயே இஸ்லாமிய அடிப்படையில் எழுந்த ஆசாரக் கோவையின் ஒவ்வொரு செய்யுளின் இறுதியிலும் முகம்மது தம்பி மரைக்காயர் தமக்கு உதவி செய்த மையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் அந்த நூலின் ஆசிரியர். ܬܠ
நாட்டுப் பாடல்களும் முஸ்லிம்களிடையே வழங்
குகின்றன. முஸ்லிம் பெண்கள் கூட நாட்டுப் பாட லில் கைதேர்ந்தவர்கள் என்று புகழ் பெற்றவர்களா வர். ஒரு நாள் ஒரு முஸ்லிம் விதவைப் பெண் தனக்கு வரவேண்டிய பணத்தைப் பெறுவதற்கு அரசாங்க அலுவகத்துக்குச் சென்ருர். தனக்குப் பணம் கிடைக் கும் வரை காத்துக்கொண்டிருந்தார். வெகு நேரம் சென்றது. பணம் கொடுக்கும் முதலியாரோ இந்தப் பெண்ணைக் கவனிக்காது இருந்து விட்டார். இவளுக்கு வந்தது கோபம். முதலியாரும் வழுக்கைத் தலையுடைய வர். பாட ஆரம்பித்தாள் அந்தப் பெண்.
மொட்டைத்தலையழகா முதலி வேலை பார்க்கும் ஐயா
இட்டமுடன் என் காசை எடுத்துத்தாரும் ஐயாவே காசைப் பெற்று வீடு சென்ருள். இவ்வாறு முஸ்லிம் ஆண் பெண் இருபாலாரும் பாடிய நாட்டுப்பாடல்கள் மிகப்பல.
 

முஸ்லிம்களும் தமிழ் மொழியும்
தமிழ் நாட்டில் இராமநாதபுரம், திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் முஸ்லிம்கள் தொகை யாக வாழும் பகுதிகளாகும். இலங்கை முஸ்லிம் யிலும், இவர்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகள் னர். தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் முஸ்லிம்கள் எங்கெங்கு வாழ்கின்ருர் களோ அங்கெல்லாம் அவர்கள் தமிழையே தமது சொந்த மொழியாகப் பேசி வருகின்றனர். இங்ங்ணம் தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே இஸ்லாமிய அடிப்படை யில் எழுந்த பல தமிழ் நூல்கள் வழங்குகின்றன. அவை பக்திசிரத்தையுடன் பயிலப்பட்டு வருகின்றன.
இஸ்லாமிய அடிப்படையில் எழுந்த இலக்கியங்கள்
இஸ்லாமிய அடிப்படையில் எழுந்த தமிழ் நூல்களை, பிரபந்தங்கள், வசன நூல்கள் ஞானியரினதும் சித்தரின தும் பக்தி ததும்பும் பாசுரங்கள், வேத மதாசாரங்க ளைக் கூறும் நூல்கள் என நான்கு பெரும் பகுதிகளாகப் பிரிக்கலாம். பிரபந்தங்களைப் பல இனங் பிரபந்தங்கள் களாகப் பாகுபடுத்தலாம். அவற்றைக் காப்பியங்களாகவும், பண்டை இலக்கி யப் பிரபந்தங்களாகவும், முஸ்லிம் மக்கட்கே உரிய பிர பந்தங்களாகவும் வெவ்வேருகப் பிரிக்கலாம். தமிழ் மொழியிலே வழங்கும் பிரபந்தங்களுள் காப்பியமே தலை சிறந்தது. தொண்ணுாற்ருறு வகைப் பிரபந்தங்களுள் பல இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தில் காணப்படுகின்றன. ஆற்றுப்படை, அந்தாதி, கலம்பகம், கோவை, பிள் ளைத் தமிழ், அம்மானை முறையில் பாடப்பட்ட பல நூல் கள் முஸ்லிம் மக்களிடையே வழங்குகின்றன. இசை யோடு சம்பந்தப்பட்ட, பொது வழக்கில் பெரிதும் உலா வும் பிரபந்தங்களான, மாலை, ஏசல், திருப்புகழ், கீர்த் தனை, சிந்து, கும்மி, தாலாட்டு, ஆனந்தக் களிப்பு முத லியனவும் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற் காணக்கிடக் கின்றன. இவையேயன்றி முஸ்லிம் மக்களுக்கே உரிய சில

Page 34
64 இஸ்லாமியத் தென்றல்
பிரபந்தங்களும் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. 'படைப்போர்' என்ற ஒன்றைத் தவிர ஏனையவை அறபுப் பெயர்களாகவும், பாரசீகப் பெயர் களாகவும் அமைந்துள்ளன. தமிழ்ப் பெயருடன் பயிலப் படும் 'படைப்போர்’ என்ற பிரபந் முஸ்லிம் தத்தை இஸ்லாத்தோடு தொடர்பற்ற பிரபந்தங்கள் தமிழ் இலக்கியப் பரப்பில் காண முடி யாது. முனஜாத்து, கிஸ்ஸா, மஸ் அலா என்பன அறபு மொழியிலிருந்து வந்தன. நாமா என்பது பாரசீக மொழியைச் சார்ந்தது. இவை முஸ்லிம் பொது வழக்கில் பெரிதும் பயிலப்படுகின்றன. அறபுத்தமிழ் நூல்கள் ஏழாம் எட்டாம் நூற்ருண்டுகளில் வாழ்ந்த ஆங் கிலக் கவிஞர் பெரும்பாலும் ஆங்கில மரபுக்கியைய, ஆங்கில முறைப்படி, இலத்தீன் மொழியில் இருந்த சம யக் கருத்துக்களை அமைத்து ஆங்கில நூல்களை இயற்றி னர். இதே போன்ற ஒர் உண்மையை இஸ்லாமிய அடிப் படையில் எழுந்த தமிழ் இலக்கியத்தைப் பொறுத்த வரையிலும் கூறலாம். முஸ்லிம் புலவர்கள் தமிழ் மரபுக் கியையத் தமிழ் முறையைப் பெரிதும் தமிழ் மரபு தழுவி அறபு மொழியில் இருந்த இஸ்லா மிய சமயக் கருத்துக்களை அமைத்துத் தமிழில் நூல்கள் இயற்றியுள்ளனர். இத்துடன் முஸ்லிம் புலவர்கள் நின்று விடவில்லை. சிற் சில சமயங்களில் பல வசதிகளை முன்னிட்டுத் தமிழ் மொழியில் இயற்றப்பட்ட நூல்களை அறபு எழுத்துக்களில் எழுதி உள்ளனர். பொது வாக ஒரு மொழியில் இயற்றப்பட்ட நூல்களை இன் னெரு மொழிக்குரிய எழுத்தில் எழுதுவதற்கு அம்மொ ழிக்குரிய எழுத்துக்கள் இல்லாமலிருத்தல் வேண்டும். தமிழ் மொழிக்கோ , அதற்கே சொந்தமான எழுத்து முறை உண்டு. இஃதிவ்வாறிருக்க அறபு அறிஞர் தமிழ் நூல்களை ஏன் அறபு எழுத்துக்களில் எழுதியிருக்க வேண் டும்? காரணம் இல்லாமலில்லை. இஸ்லாமிய சட்டதிட் டங்கள் பொதிந்த நூல்களை அறபு எழுத்தில் எழுதினல்
 
 

முஸ்லிம்களும் தமிழ் மொழியும் - 65
மட்டுமே அவற்றிற்குரிய கலைச் சொற்களை முஸ்லிம் மக்கள் எளிதில் விளங்கிக்கொள்வர் என அறிஞர் கருதி னர். இஸ்லாமிய கலைச்சொற்களைக் கொண்ட தமிழ் நூல்களை எழுதும் பொழுது, அவற்றை அறபு எழுத்துக் களில் எழுதுவது எளிது எனவும் கண்டனர். முஸ்லிம் கள் அறபு மொழிக்கு ஒரு தனி இடம் கொடுத்தமையால் இஸ்லாமிய அடிப்படையில் எழுந்த நூல்களை அறபு எழுத்தில் எழுதினர். - . . . . . .
முஸ்லிம் புலவர்கள் இந்துக்களின் சூழலில் வாழ்ந்த மையால் தாம் எழுதிய நூல்களில் இஸ்லாமிய கொள் பிறமதக் கைக்கு முரணு இந்து சமயக் கருத்துக் கஃப் புகுத்தினர். அதனல் முஸ்லிம் ஞானியரினதும், சித்தர்களினதும் பக்தி ததும்பும் பாசுரங்களிலே இத்தகைய இந்துமத ஆதிக் கத்தைக் காணலாம். “འུ་ ' ' ';
முஸ்லிம் புலவர் பாடிய ப்ாடல்களுள் பெரும்பாலா னவை தொங்கல்' பாக்கள் என்று அழைக்கப்படுகின் - றன. சில முஸ்லிம் தமிழ் நூல்களில் தொங்கல் பாக்கள் அறுசீர்கழிநெடிலாசி ரிய விருத்தங்கள் என்று விளக்கப்பட்டுள்ளன. ஐந்து சீரின்மிக்க சீரான் வரும் அடி எல்லாம் கழிநெடிலடி எனப் படும். ஆறுசீரால் வரும் அடியை உடைய விருத்தப்பா அறுசீர்கழி நெடிலாசிரிய விருத்தம் எனப்பட்டது.
தொங்கல்
இஸ்லாமிய அடிப்படையில் எழுந்த தமிழ் நூல்களை ஏனைய தமிழ் நூல்களிலிருந்து பிரித்துக்காட்டும் இன் னெரு முக்கிய அம்சம் இஸ்லாமிய தமிழ் நூல்களிலே " . . ஆளப்பட்டுள்ள அறபுச்சொற்களாகும். அறபுச இஸ்லாமிய கருத்துக்களையும் போதனை சொற்கள் மய கருததுககளையும போது
களையும் விளக்க அறபுச் சொற்கள் இன்றி யமையாதனவாகின்றன. பாகத, பாளி, சங்கதச் சொற் கள் எவ்வாறு முறையே சமண, பெளத்த, வைணவ நூல் களிலிருந்து பிரிக்கமுடியாதனவாய் இருக்கின்றனவோ, அதே போன்று இஸ்லாமிய தமிழ் நூல்களிலிருந்து அறபுச் சொற்களைப் பிரிக்க முடியாது.

Page 35
காப்பியங்கள் ހ
சீருப்புராணம்
தமிழ் மொழியிலே வழங்கும் பிரபந்தங்கள் தொண் ணுாற்றறு வகைப்படும். அத்தகைய பல பிரபந்தங்கள் இஸ்லாமிய அடிப்படையில் பாடப்பட்டுள்ளன. அவற் றுள் காப்பியம் தலைசிறந்தது என்று கருதப்படுகின்றது. பொருட்டொடர் நிலைச் செய்யுள், சொற்ருெடர் நிலைச் செய்யுள் எனத் தொடர் நிலைச் செய்
காப்பியம் யுள் இருவகைப்படும். முற் செய்யு ளோடு பிற் செய்யுள் பொருளினல் தொடர்ந்து வரப்பெறும் நூல் தொடர் நிலைச் செய் யுள் எனப்படும். ஒரு சரித்திரத்தைத் தொடர்ச்சி யாகக் கூறும் நூல் இதற்கு உதாரணமாகும். பொருட் டொடர் நிலைச் செய்யுள் பெருங்காப்பியம், காப்பியம் என இருபாற்படும். தண்டியலங்காரத்தில் பெருங்காப் பியத்தின் இலக்கணம் விரிவாகக் கூறப்படுகின்றது.
வாழ்த்துதல், கடவுளை வணங்குதல், உரைக்கும் பொ
ருள் உணர்த்துதல் என்னும் மூன்றினுள் ஒன்று முன்
வர நடப்பதாய், அறம், பொருள்,இன் நாற்பயன் பம், வீடு எனும் நான்கினையும் பயக்கும்
ஒழுக்கலாறு உடையதாய்த் தன்னேடு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனைப் பாட்டுடைத்தலை வணுய் உடைத்தாய், மலை வருணனையும், கடல் வருணனையும், நாட்டு வருணனையும், நகர்வருணனை யும் என்றின் னே ர ன் ன வருணனைகளை உடைத் தாய், நன்மணம் புணர் த ல், புனல் 67oruuT டல், சிறுவரைப் பெறுதல் முதலியவற்றை உடைத்
/

காப்பியங்கள் 67
தாய், சருக்கம் என்ருதல், பரிச்சேதம் என்ருதல், பட லம் என்ருதல், பாகுபட்டு விளங்கி, எட்டுவகைச் சுவை யும் ம்ெய்ப்பாட்டுக்குறிப்பும் உடையதாய் விளங்குவது பெரும் காப்பியமாகும். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கினுள் ஒன்றும் பலவும் குறைந்து வரு வது சிறுகாப்பியம் எனப்படும். சீவக சிந்தாமணியே வடமொழி முறையைப் பின்பற்றி முதன் முதல் தமிழ் மொழியில் எழுதப்பட்ட பெருங்காப்பியமாகும்.
உமறுப்புலவரும் சீருப்புராணமும்
இஸ்லாமிய அடிப்படையில் எழுந்த தமிழ் நூல் களுள் பெருங்காப்பியங்களைக் காண்பது அரிது. இஸ் லாமிய தமிழ்க்காப்பியங்கள் அனைத்தும் சிறுகாப்பியங் களாகவே இருக்கின்றன.அத்தகைய சிறு காப்பியங்களுள் சீருப்புராணமும் ஒன்று. சீருப்புராணம் சிறுகாப் முகம்மது நபி (சல்) அவர்களின் வாழ்க் பியங்கள் கையைச் சித்தரிக்கின்றது. சீருப்புரா ணம் என்ற சொற்ருெடர் "சீறத்’, "புராணம்’, என்ற இரு சொற்களாலாயது. வாழ்க்கை வரலாறு என்ற கருத்தை உடைய "சீறத்’ என்ற சொல்லிலிருந்து "சீரு’ என்ற பதம் உருவாகியது.
கீழக்கரையைச் சேர்ந்த உமறுப்புலவர் சீருப்புரா ணத்தை இயற்றினர். உமறுப்புலவர் வாழ்க்கையைப் பற்றி அதிகமாக ஒன்றும் தெரியாது. எட்டையபுர சமஸ்தான வித்துவான் கடிகைமுத்துப்புலவரிடம் உம றுப் புலவர் கல்வி பயின்ருர், கடிகைமுத்துப்புலவரின் மரணத்துக்குப்பின்னர் உமறுப்புலவரே அந்த சமஸ்தான வித்துவானுகக் கடமையாற்றினர். உம
உமறு றுப்புலவர் சீதக்காதி வள்ளல் காலத்தில் வாழ்ந்தவர் சீதக்காதி வள்ளலின் வேண்டுகோட்படியே செய்கு சதகத் துல்லா என்பவர் அறபு மொழியில் முகம்மது நபி (சல்) அவர்களின் வாழ்க்கை சம்பந்தமான விஷயங்களை உம

Page 36
68
இஸ்லாமியத் தென்றல்
றுப்புலவருக்குக் கூறினார். சீறாப்புராணம் விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜ்றத்துக் காண் டம் என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
விலாத்த்து என்ற அற்புச் சொல் பிறப்பு'' என்பதைக் குறிக்கின்றது. இந்தக்காண்டத்தில் முகம்மது நபி (சல்) அவர்களின் பிறப்பும், இளமைப் பருவமும் விவரிக்கப்படுகின்றன. சீறாப்புராணத்தின் விலாதத்துக் காண்டம் கம்பராமாயணத்தின் பால காண்டத்தைப் பெரிதும் ஒத்திருக்கின்றது. நாட்டு, நகர , ஆற்றுவருணனை கள் கம்பராமாயண பால காண்டத்தைப் பெரிதும் தழுவி
"யுள்ளன. இராமன் பிறந்த அயோத் 'வருணனை தியை வருணிக்க எண்ணிய கம்பர் உண்
மையில் சோழ நாட்டையே தமது இராமாயணத்தில் வருணித்துள்ளார். உமறுப்புலவரும் அறபு நாடு என்று கருதிப் பாண்டிநாட்டையே வருணித் துள்ளார். இரண்டு காப்பியங்களிலும் சிற்சில சமயங் களிலும் ஒரே விதமான இயற்கை வருணனைகள் இடம் பெற்றிருக்கக் காணலாம். உமறுப்புலவர் ஓர் ஆற்றின் ஓட்டத்தை வருணிக்கையில் அதனை ஒரு பரத்தைக்கு ஒப்பிடுகின்றார். அரசனின் புயங்களைத் தழுவி அவனை
1. மகிழ்வித்து அவனிடமிருந்து பொருள் ஆறு.
கள் அனைத்தையும் பெற்றுக் கொண்டு
பரத்தை செல்கின்றாள். இதே போன்று மலையிலே பிறந்து, பல்வளங்களையும் கவர்ந்து ஆறு பாய் ந்து ஓடுகின்றதாம்." இந்தக் கருத்தினையே உமறுப்புலவர் பின்வருமாறு பாடியுள்ளார் :
மலையெனுமரசன் புயங்களைத்தழுவி
- மகிழ்ச்சி செய்தவனுழைச் சிறந்த நிலை தெழு பொன்னு 'முரக செம்மணியும்
நித்தலராசியுங் கவர்ந்து தொலைவிலாப் பண்டமனைத்தையும் வாரிச்
சுருட்டியே யெல்லை விட்டகலும் விலைமகள் போலும் பலபல முகமாய்
வெள்ளருவித் திரள் சாயும் ,
- து.

காப்பியங்கள் 69
இதே உவமையுடன் இதே வர்ணனையைக் கம்பன் பாடிய விதம் இது:
தலையு மாகமுங் தாமுங் தழிஇபதன் நிலைநிலா திறை போலவே மலையிலுள்ள வெலாங் கொண்டு மண்டலால் விலையின் மாதரை யொத்ததல் வெள்ளமே இன்னுெரு பாட்டை எடுத்துக் கொள்வோம் அந்தப் பாடலிலும் உமறுப் புலவர் ஆறு பாயும் பொழுது தன்னுடன் கொண்டு செல்லும் பல்வேறு பொருள்களையும் குறிப்பிடுகின்ருர், வணிகர் அங்கனம் குறிப்பிட்டு விட்டு, அவ்வாறு, நதி கொண்டு செல்லுதலை வணிகர் பொருள் கொண்டு வியாபாரத்தின் பொருட்டுச் செல் லுதலுடன் ஒப்பிடுகின்ருர் .
கிடந்த சந்தனங் காரகில் கிளைமணி கரிக்கூ டுடைந்த முத்தம் வெண்டந்த முச் சுடரொளியோடுங் கடந்த செம்மணிப் பையுடன் கொடுகடலேற நடந்த வாணிகனுெத்தது செழுங்கிளை நதியே கவிச் சக்கரவர்த்தி கம்பரும், தமது இராமாயணத்தில், இதே முறையில் நதியை வர்ணித்திருக்கிருர், ஆறு பொருள்கள் எல்லாம் கொண்டேகுவதை வணிக மாக் களுக்குப் பிள்வருமாறு உவமிக்கிருர் அவர்.
மணியும் பொன்னு மயிற்றலைப் பீலியு மணியு மனவெங் கோடு மகிழும்தன் னிணையு லாரமு மின்ன கொண்டேகலான் வணிக மாக்களை யொத்த தவ்வாரியே சீவக சிந்தாமணியில் அதன் பாட்டைத் தலைவன் சீவகன் அரசு செலுத்திய இராசமாபுரம் ‘பூமிமா னகர் பொன்னுலகொத்ததே’ என்று சுவர்க்கத்துக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. கம்பனும் தமது இராமாயணத் தில் இராமனின் தலைநகரான அயோத் தலைநகர் தியை ‘அங்கன் மாஞாலத் தன்னக ரொக்கும் பொன்னகரமரர் நாட்டி யதே' என்று தேவர்களால் நிறுவப்பட்ட விண்ணுல குக்கு ஒப்பிடுகின்ருர். ஆனல் சீருப் புராணத்தில்

Page 37
70 இஸ்லாமியத் தென்றல்
முகம்மது நபி (சல்) பிறந்த மக்கமா நகரம், எட்டு சுவனலோகங்களும் ஒன்று சேர்ந்தது போன்று காட்சி யளித்தது என்ற பொருள்படப் 'பொன்னுலக மெட்டு மொன்றெனத் திரண்டு வந்திருந்த தொத்திருக்கும்’ என்று உமறுப்புலவர் வருணிக்கிருர்,
சீருப்புராணத்தின் இரண்டாவது காண்டமான, முகம்மது நபி (சல்) அவர்கட்கு நபித்துவம் கிடைத்த வரலாற்றைக் கூறும் காண்டம் நுபுவ்வத்துக் காண்ட மாகும். ‘தீர்க்கதரிசனம்’ எ ன் று காண்டங்கள் பொருள்படும் "நுபுவ்வா’ என்ற அறபுச் சொல் நுபுவ்வத்து' என்று தமிழில் மிருவி வந்துள்ளது. சீருப்புராணத்தின் இறுதிக்காண்டம் ஹிஜ்றத்துக்காண்டம் என்று வழங்கப்படுகின்றது. 'ஹிஜ்ரு’ என்பதும் ஒரு அறபுப் பதம். முகம்மது நபி (சல்) மக்கா வாசிகளின் இன்னல் பொறுக்க முடியாமல் மக்காவிலிருந்து, மதீனவுக்குப் போன நிகழ்ச்சி ஹிஜ்ரி நிகழ்ச்சி என அழைக்கப்படுகின்றது. அந்த நிகழ்ச்சி யிலிருந்து முஸ்லிம் ஆண்டும் ஆரம்பமாகின்றது. முகம் மது நபியின் வாழ்க்கையில் ஹிஜ்ரி நிகழ்ச்சிக்குப் பிறகு நடைபெற்ற சம்பவங்கள் இக்காண்டத்தில் நயம்பெற அமைந்துள்ளன. V
சீருவும் குறளும் - கடைசிக் காண்டமான ஹிஜ்றத்துக் காண்டத்தில் இஸ்லாமிய வரலாற்றிலே நடைபெற்ற இரு பெரும் போர்கள் விரிவாக வருணிக்கப்படுகின்றன. அறபு நாட் டிலே நடந்த போர்களைப்பற்றியே உமறுப்புலவர் பாடி
யிருந்தபோதிலும், அவை தமிழ் மரபுக்கியையவே இயற்
றப்பட்டுள்ளன. தன்னையடுத்த பொருளின் நிறத்தைத் தானே கொண்டு காட்டுகின்ற பளிங்கு போல ஒருவன் நெஞ்சத்தில் மிகுந்த குணத்தை அவன் முகந்தானே கொண்டு காட்டும்; இந்தக் கருத்துக்களைப் பொய்யில் புலவர் திருவள்ளுவர் தமது திருக்குறளில்,
அடுத்தது காட்டும் பளிங்கு போ னெஞ்சங்
கடுத்தது காட்டு முகம். 71:6) என்று பாடிப்போந்தார்.

காப்பியங்கள்
71
உமறுப்புலவரும் உகுதுப் படலத்தில் இந்தக் கருத்துக் களைப் பின்வருமாறு அமைத்துப் பாடியுள்ளார்.
அடுத்தவை காட்டுகின்ற பளிங்கு போலகத்தினூடு தொடுத்திடு நலித லியாவு முகத் தினாற் றோன்றக்கண்டு நடுத்திற நிலைமை பூண்ட நாயகக் குரிசிலன்னோர் விடுத் திடும் வீரம் பூண வொருமொழி விரைவிற் சொல்வார் (113)
தமிழ் இலக்கிய மரபில் ஒரு பெண்ணின் வாழ்க்கை ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு குறிப்பிட்ட வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்
வாறு வகுத்திருப்பதைச் சூடாமணி மகளிர் நிகண்டில் காணலாம். உமறுப்புலவரும் பருவங்கள் இந்த இலக்கிய மரபினைத் தமது சீறாப்
- புராணத்தில் புகுத்தத் தவறவில்லை. முகம்மது நபி (சல்) அவர்களின் புதல்வி பாத்திமா நாயகியின் திருமணக் கோலத்தைக் காண ஏராளமான பெண்கள் வந்திருந்தனராம். அங்கு குழுமியிருந்த பெண் களுள் இந்த ஏழு பருவங்களையும் சேர்ந்தவர்களும் இருந் தனரென்று ஒவ்வொரு பருவத்தாரையும் கவிச்சுவை மிளிர வருணிக்கிறார். இத்தகைய பாடல்கள் பல பாத் திமா திருமணப்படலத்தில் இடம் பெற்றுள்ளன.
ஆனால் சிற்சில சமயங்களில் உமறுப்புலவர் தமிழ் இலக்கிய மரபினை அறபு நாட்டு இயற்கைக்கு ஏற்ற முறையில் திரித்தும் பாடியுள்ளார். அற்புப் பூகோள
அமைப்பைத் தழுவியே - அவ்வாறு திரிபு
மாற்றியுள்ளார் . வள்ளுவர் குலத்தைச்
சேர்ந்தவர்கள், அரச கட்டளைகளை மக்க ளுக்குப் பறை சாற்றி அறிவிப்பது வழக்கம். அவர்கள் யானை மீதேறியே அவ்வாறு பறை சாற்றுவர், 'ஆனை யின் மிசை ..................யணி முரசறைவித்தான்' என்பது கம்பன் கூற்று. அரச கட்டளையை மக்களுக்குக் கூற வள்ளுவர் பயன்படுத்தப்பட்டனர் என்று உமறுப்புல வரும் தமது சீறாப்புராணத்தில் கூறியுள்ளார். அறபு நாட்டு வள்ளுவரும் முரசேந்திச் சென்றனராம்.

Page 38
72 இஸ்லாமியத் தென்றல்
அறபு நாட்டு வள்ளுவர் யானைகள் மீது செல்ல வில்லை யாம் 'பாலைவனக் கப்பலாகிய ஒட்டகைகள் மீது இருந்தே பறை சாற்றினராம். ஒட்டகை வள்ளுவனும் மீதினின் மணமுரசினை யெடுத்துயர்த்தி ஒட்டகையும் என்று பாடுகின்றது. சீருப்புராணம். போர்களிலும் ஒட்டகங்களே முக்கிய பங்கெடுத்தன என்று உமறுப் புலவர் கூறியுள்ளார்.
இஸ்லாத்துக்கு முரணுன கருத்துக்கள்
வேறு சில சமயங்களில் இஸ்லாத்துக்கு முரணுன தமிழ்ப் பழக்க வழக்கங்களையும் சீருப்புராணத்தில் உம றுப் புலவர் புகுத்தியுள்ளார். அத்தகைய ஒரு சந்தர்ப் பத்தைச் சீருப்புராண நாட்டுப் படலத்திலேயே காணக் கூடியதாக இருக்கின்றது. சூரியனைத் கதிரவனத் தொழுது தத்தம் குலத்துக்குரிய தெய் தொழுதல் வத்தை வணங்கி, நிலந்தனை வாழ்த்தி, உழுநர்கள்-கமக்காரர்கள்-நெல் முளைக ளைச் சிதறுவது தமிழ் நாட்டு வழக்கம். இங்ங்ணம் செய் வது 'பொன் மழை பெய்வது" போன்று தோற்றமளித் ததாம். சூரியனைத் தொழுவதையோ அன்றிக் குலதெய்வ வணக்கஞ் செய்வதையோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை. எனினும் உமறுப் புலவர் அறபு நாட்டில் உழுநர்களைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது இஸ்லாத்துக்கு முரணன அத்தனையையும் செய்தனரென்று குறிப்பிடுகின்ருர்,
கலன்பல வணிந்து தொண்டியுண் டெழுந்து கதிரவன் தனக்கையாற் றெழுது குலந்தரு தெய்வ வணக்கமுஞ் செய்து
குழுவுடன் உழுநர்கள் கூண்டு நிலந்தனை வாழ்த்தி வலக்கரங் குலுக்கி கென்முளை சிதறிய தோற்றம் பொலன்பல சிறப்ப விடனற நெருங்கிப்
பொன்மழை பொலிவது போன்றும் (26)

காப்பியங்கள் 73
'கோலங்கள்' வரைவதைப் பற்றியும் உமறுப் புல வர் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் வீடுகளின் முன்றிலில் கோலங்கள் வரைவதை இஸ்லாம் தடை கோலமிடல் செய்கின்றது. எத்தகைய உருவங்களை யும் முஸ்லிம் வீடுகளில் காண்பது அரிது. ஆனல் இந்தத் தடையை உமறுப் புலவர் பொருட்படுத் தினர் போலத் தோன்றவில்லை. அங்ங்ணம் கோலங்கள்' இடும் பழக்கம் அறேபியாவில் இருந்தது என்ற முடிவுக்கு வருகிருர், பாத்திமா திருமணப் படலத்தில் "பொலங் கொணன் னகர்ச் சுவர்தொறுங் கோலங்களிடு மின்' (74)என்றும், "அறங்கிடந்த நன்னகர் மதில் தொறும் அணியணியாய் இறங்கியெங்கணும் வழிந்தெனக் கோலங்களிடுவார்" (80) என்றும் உமறுப் புலவர் பாடியுள்ளார்.
அகப் பொருள்
அகப் பொருட்டுறைகளிற் பாடப்பட்ட பாக்களும், சீருப்புராணத்தில் அடங்கியுள்ளன. முகம்மது நபி (சல்) அவர்களின் அன்பைப் பெறுவதற்காகக் காத்திருந்த கதீ ஜாப் பிராட்டியாரைப் பற்றிக் குறிப்பிடுகையில், உமறுப் புலவர் அகப் பொருட்டுறைகளில் பாடு தூய காதல் கின்ருர், கதீஜாப் பிராட்டியார், முகம் மது நபி (சல்) அவர்களைப் பற்றியே சதா சிந்தித்துக் கொண்டிருந்தார்; தமது நாளாந்த வேலைகளில் ஈடுபடாது துன்ப மெய்திக் கொண்டிருந்
இலங்க முன்றில்க டொறுஞ்செழும் பூம்பந்த ரிடுமின் ாைலங்கொ ளாடைவி மானங்க டோரணநடுமின் விலங்கன் மாடங்கள் வயின்வயின் கொடிவிசித் திடுமின் பொலன்கொணன்னகர்ச் சுவர்தொறுங் கோலங்கள் புனைமின்(74)
2 மறங்கி டந்தசெங் கதிரவன் கதிர்களு மதியின்
பிறங்கி ரீடரு கலைகளுமோரிடம் பிரியா தறங்கி டந்தகன் நகர்மதி டொறுமணியணியா யிறங்கி யெங்கணும் வழிந்தெனக் கோலங்க ளிடுவார் (80)

Page 39
74 இஸ்லாமியத் தென்றல்
qqqS S SLLLLSS S SAAS SEES SLALS ATLSES S SSASS
سی.
பிராட்டியாரின் இத்தகைய நிலையையே உமறுப்புலவர், சீருப்புராணத்தில், கதீஜா கனவு கண்ட படலத்தில் பின்வருமாறு அமைத்துப் பாடியுள்ளார். "
பஞ்சணை பொருந்தா ரிருவிழி துயிலார் :பழத்தொடு பாலமு தருந்தார்,
கொஞ்சுமென் குதலைக் கிளியொடு மொழியார்
கொழுமடற் செவிக்கிசை கொள்ளார்.
கஞ்சமென் மலர்த்தாள் பெயர்ந்திட வுலவார்
கடிமலர் வாசநீ ராடார். " வஞ்சிநுண் ணிடையார் தம்மிடத் துறையார் * . முகம்மது மனத்திடைத் துறைந்தார்.
y. புதுகுஷ்ஷரம்
சீறப்புராணம் முகம்மது நபி (சல்) அவர்களின் மறைவைப் பற்றிக் குறிப்பிடவில்லை. முகம்மது நபி(சல்) அவர்களின் வாழ்க்கை முழுவதையும் குறிப்பிடவுமில்லை.
ஆனல், நபிகளாரின் வாழ்க்கையின் இறுதி காலத்தைப் ப்ற்றி ' புதுகுஷ்ஷாம் ' என்ற நூலிலிருந்து அறிய
铉、
லாம். ‘புதுஹ' 'ஷாம்' என்ற அறபுச் வபாத்து சொற்கள் இரண்டினல், ஆயது 'புது ஹ"ஷ்ஷாம் என்ற சொற்ருெடர்.
*புதுஹ்" என்ருல் பிரவேசம் அல்லது "வெற்றிப் பிர
Gaug lib' என்று பொருள்படும்:ஷாம் என்பது ஸிரியா
நாடு. எனவே முஸ்லிம்கள் "Rரியா நாட்டை வெற்றி
கொண்ட் வரலாற்றைக் கூறுகின்றது புதுகுஷ்ஷாம் என்ற நூல்.சிறு கர்ப்பிய இலக்கணங்கள் அமைந்து
விளங்குகின்றது. இந்த நூல்: காயற்பட்டிணத்தைச்
சேர்ந்த மகா வித்துவான் செய்கு அப்துல் காதிறு நயினர் லெப்பை ஆலிம் புலவரவர்கள் இதை இயற்றியுள்ளார்.
தார்; ஒருவருடனும் பேசாமல் இருந்தார், கேதீஜா
 
 
 
 

காப்பியங்கள் 75
புதுகுஷ்ஷாம் என்ற காப்பியத்தையும் முகம்மதிய் யா, ஸித்தீகிய்யா, பாறுாக்கிய்யா என்று மூன்று காண் டங்களாகப் பிரிக்கலாம். முகம்மதிய்யா, என்ற காண் டத்தில் முகம்மது நபி (சல்) அவர்களின் வாழ்க்கையின் இறுதிப் பகுதி இடம் பெற்றுள்ளது. காண்டங்கள் முகம்மது நபிக்குப் பிறகு இஸ்லாமிய அரசை நடத்திய அபூபக்கர் என்பவ ரைப் பற்றி ஸித்தீகிய்யா என்ற காண்டம் கூறுகின் றது. மூன்ருவது காண்டமாகிய பாறுாக்கிய்யாவில் ஸிரியா நாடு முஸ்லிம் பேரரசின் ஒரு மாகாணமாக மாற்றப்பட்ட வரலாறு கூறப்படுகின்றது.
இனி, புதுகுஷ்ஷாம் என்ற நூலில் உள்ள இரண் டொரு பாடல்களை எடுத்துக் கொள்வோம். ஒர் அரசன் ஊர்வலம் வருகின்றன். அரசனைச் சூழ மந்திரி பிர தானிகள் முதலிய பெரியோர்கள் வருவர். முரசு ஒலிக் கும். அரசன் முடி சூடி இருப்பான். ஓர் அரசன் ஊர் வலம் வரும்போது எவரும் காணும் காட்சி இது. மதீ ணுவில் உள்ள ஓர் அருவியை வருணிக்கவந்த புலவ ருக்கு அரசனின் உலா கண்முன் தோன்றியது. உடனே புனலை - நீரோட்டத்தை - அரசனுக பவனிவரும் உருவகப் படுத்துகிருர், நீரோட்டம் புனல்வேந்து வயல் சூழ்ந்த இடங்கட்கூடாகப் பாய்ந் து செல்லும். நீரோட்டத்தை அடுத் துத்தானே வயல்கள் இருக்கும். வயல்களில் உழவர் வேலை செய்து கொண்டிருப்பதும், சர்வ சாதாரணமா கும். ஆனல் புலவருக்கு இந்தக்காட்சி வேறு விதமா கப் புலனுகிறது. கற்பனைக் கண் கொண்டு புலவர் பார்க்கிருர். இங்ங்ணம் உழவர் வேலை செய்து கொண் டிருப்பதைப் புனல் வேந்து ஊர்வலம் வர, இருமருங்கும் புடைசூழ நடப்பவர்கள் என்று புலவர் வருணிக்கிருரர்.

Page 40
76
இஸ்லாமியத் தென்றல்
அரசன் பவனி வரும்போது முடிசூடியே வருவான்; ஆம், புனல் வேந்துக்கும் முடி உண்டு. நீரோடம் தனது ஓட்டத்திலே மணியையும் பொன்னையும் அடித் துக் கொண்டு செல்கின்றது. எனவே தங்குதல் இல் லாத மணிகள் பதிக்கப்பட்ட பொன்னாலான முடியை அணிந்து செல்கின்றது. மருத நாட்டிலே ஒரு வகைப் பறை - இணை - உண்டு. அது புனல் வேந்தின் முரசு. மணிக் கொடியும் உண்டு; இடையும் உண்டு. இவற் றிற்குதவியாக அந்த நாட்டிலுள்ள மிருகங்களையும் குறிப்பிடுகின்றார் கவிஞர். தாவிச் செல்லும் குதிரை, கன்ன மதம், கை மதம், கோச மதம் என்ற மூவகை மத நீரை உடைய ம த யானைகள் : வனாந்தரத்திலே வளரும் ஒட்டகைகள் முதலியனவும் இதிற் குறிப்பிடப் பட்டுள்ளன. இனிச்செய்யுளைப் பார்ப்போம்."
வாயுவெம் பரியுமும் மதகரியும் |
வல்லூரத் தொட்டையு மாடு மேவலங் கொடியும் பூவனை குடையு
மீறிய இணைமுர சொலிப்ப வோவறு மணிகொள் பொண்முடி கவிப்ப
வுலவர்க ளிரு புறஞ்சூழப் பாவிய வனமை மருதம்வீற் றிருப்பப்
படர்ந்தது பெரும்புனல்வேந்து.
கம்பர் தமது பாலகாண்டத்தில் மருதத்தை அரசனாக உருவகப்படுத்தினார். ஆனால் செய்கப்துல் காதிர் நெனா லெப்பை ஆலிமோ மருதத்தை வீற்றிருக்கச் செய்து படர்ந்த பெரும் புனலை வேந்தாக உருவகப் படுத் தினார்.

காப்பியங்கள் 77
திருமணிமாலை
புதுகுஷ்ஷாம் ஆசிரியர் எழுதிய இன்னெரு நூல் திருமணிமாலை. இப்ருஹிம் நபி (சல்) என்பவரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுகின்றது இந்த நூல். திருமணிமாலை சிறுகாப்பிய இலக்கணங்கள் அனைத் தையும் கொண்டதாக விளங்குகின்றது. திருமணிமாலை யில் நாட்டுநகர வருணனைகள் இடம் பெற்றுள்ளன. அந்த இயற்கை வருணனைகள் ஊடே வருணனையிற் பல உயரிய அறிவுரைகளை நூலாசிரியர் போதனை புகுத்தியுள்ளார். அத்தகைய அறிவுரை ` களைக் கற்றறிந்த மக்களிடையேயும் சில சமயங்களில் கெட்ட குணங்கள் இருக்கக் காணலாம். அத்தகையோரிடம் அழு க் காறு என்ற தீய குணம் அமைந்து விட்டால் அவர்களின் வாழ்க்கை பாழடைந்து விடுவதுடன் நின்று விடுவதில்லை; பிறருக்குப் பயன் படும் வாழ்க்கை முறையும் மாறுபட்டு விடும். இனி, இந்த உண்மையினைக் கொண்டு இந்த நூலின் பாட் டுடைத்தலைவரின் நாடான ஷாம், அதாவது ஸிரியா வின் இயற்கை அமைப்பினை விளக்க முனைகின்ருர் ஆசிரியர். ஸிரியாவிலே வயல்கள் இருக்கின்றன. அவை நெல்வயல்கள். நெல் வயல்களில் களைகள் முளைத்து இருக்கின்றன. எவ்வாறு பல்வகை அறிவுடையவர் களிடத்து அழுக்காறு என்னும் தீயகுணம் இணைபிரி யாது இருக்கின்றதோ, அதே போன்று நெல் வயல் களிலே நெற்பயிர்களுடன் களை களு ம் சே ர் ந் து முளைத்துக் காட்சியளிக்கின்றன, அறிவுடையோர் தம்மிடத்துள்ள அழுக்காறு என்னும் தீயகுணத்தை அகற்றினுல்தான் மக் க ஞ க் கு ப் பயன் படும் முறையில் வாழ்க்கை நடத்த முடிகின்றது. அதே போன்று நெல் வ ய ல் க ளி லே நெற்பயிர்களுடன், சேர்ந்து வளர்ந்துள்ள களைகளை அகற்றினுல்தான்

Page 41
78 இஸ்லாமியத் தென்றல்
நெற்பயிர்கள் செழித்து வளர்ந்து மக்களுக்கு நல்ல முறையில் பயன் அளிக்கின்றன. எனவே மின்போன்று தோன்றி மறைகின்ற இடையினையுடைய மகளிர், அந்தக் களைகளைப் பிடுங்கி அகற்றுகின்றனர். அவர்கள் அங்ங்ணம் களை பிடுங்கும் தோற்றம் எழில் மிக்க காட் சியாகத் திகழ்ந்தது. மலர்களைத் தாங்கி நிற்கும் பல் வகை மரங்களுக்கும் அவர்களுக்குமிடையில் ஒருவித வேற்றுமையும் இல்லாத முறையில் அந்தக்காட்சி சிறப் புற்று விளங்கியது. இவ்வாறு பல செய்யுட்களிலும் ஆசிரியர் தமது கற்பணுசக்தியைத் திறம்படப் புனை கின்றர்.
பல்வகை யறிவினுரடே படர்தரு மழுக்கா றென்னும் புல்வகை தெளிந்து நீக்கும் பான்மையே போன்றுஞ் சூழ்ந்த நல்வகை வயலிற் பம்பு நனிகளை களையு மின்னுர் வல்வகைப் போத ரத்தி னரும்பொடு மருளா நிற்பார்
என்பது அந்த அழகை அவரமைத்த அழகாகும்.
(hhlL b|Illhl D
குதுபுநாயகம் என்று வழங்கும் முகியித்தீன் புராணம் திருமணிமாலையாசிரியரால் இயற்றப்பட்ட வேருெரு சிறு காப்பியம். இஸ்லாத்துக்குப் புத்துயிர் அளித்த மகான் முகியித்தீன் ஆண்டகையைப் பாட் டுடைத்தலைவராகக் கொண்டது இந்த நூல். முகியித் தீன் ஆண்டகையைத் தலைசிறந்த ஞானியாக முஸ்லிம் மக்கள் கருதுவர். புலவர் தமது கற்பணு சக்தியைப் பயன்படுத்தி முகியித்தீன் ஆண்டகை புத்துயிரளித்த ஏன் உலகில் தோன்றினர்கள் என்பதை ஞானி எழில் பெற விளக்கியுள்ளார். அவர்கள், பொய்யான வழியை அகற்றப் பிறந் தார்கள்; மக்கள் உள்ளங்களிலே குடிகொண்டிருந்த இழிவான கசட்டை ஒழிக்கத் தோன்றினர்கள்;
 

காப்பியங்கள் 79.
புரம் பேசுதல், நிந்தனை செய்தல், வைதல், அழுக் காறு கொள்ளல் முதலிய தீயகுணங்களை வேரோடு பிடுங்கி எறிய ஜனனமானுர்கள். மாசுபடிந்த பாவங் களைக் குழிதோண்டிப் புதைக்க அவனியில் உதித்தார்
கள் என்பது அவர்கூற்று. இந்தக் கருத்துக்களைப்
புலவர் நாயகம் என்று வழங்கப் பெறும் இந்த நூலா சிரியர் பின்வருமாறு கவிதையில் அமைத்துக் காட்டி யுள்ளார்.
பொய்தரு நெறியும் புன்மனக் கசடும்
புறந்தரு மொழியு முண்ணிந்தை வைதரு நிலையு மழுக்கடை வினையு மாசுறை பாவமு நீத்துக் கைதரச் சிறந்த செழுங்கதிர் குலவுங் கதிதரு மணிவிளக் கென்ன மொய்தருங் தவத்திற் றுறைபல விளக்கு முகியித்தீ ஞண்டவர் பிறந்தார்.
*தாய் சொல் தட்டக் கூடாது' என்பது சான் ருேர் கருத்து. காட்டு மார்க்கமாகச் செல்லும் தன் மகனிடம் சில வெண், பொற்காசுகளைக் கொடுத்து "ஒரு போதும் பொய் பேசாதே’ என்று புத்திமதி கூறி, அன்னையார் மகனை வழி அனுப்பி வைக்கிருர். மகனும் நடந்து செல்லும் பொழுது கள்வர் கூட்டத் தினைச் சந்திக்கிருர், கள்வர் தலைவன் வாய்மை *உன்னிடம் என்ன இருக்கிறது?’ என்று அந்த அன்னையாரின் மகனரிடம்-இந்த நூலின் பாட்டுடைத் தலைவரிடம்-அதட்டிக்கேட்கிருன். பாட்டுடைத்தலைவராகிய முகியித்தீன் ஆண்ட கை உண்மையையே கூறுகின்ருர், கள்வர் தலைவன் வியப் படைகின்றன்.

Page 42
80 இஸ்லாமியத் தென்றல்
அவ்வாறு உண்மை சொல்லக் காரணம் என்ன என்று முகியித்தீன் ஆண்டகையிடம் வினவுகிருன். தாய் சொற்படி நடந்ததாகக் கூறுகிருர். உண்மையின் உயர்வைப் பற்றிப் பேருரை நிகழ்த்துகிருர். இந்தப் பேருரையைப் பல செய்யுட்களில் இந்த நூலாசிரியர் விளக்குகின்ருர், ஈண்டு ஒரு செய்யுள் எடுத்துக்
கொள்வோம்.
s
எத்தலத் தாயினு மெவர்கள் பாலினு
மெத்தொழி லிடத்தினு மெவைவந் தெய்தினு
முய்த்திட லுண்மையா லுரைத்தி யென்றருள்
பொய்த்திடாத் தாயார்சொ லுறுதி பூண்டதே.
முகியித்தீன் ஆண்டகையைப் பாட்டுடைத் தலை
வராகக் கொண்டு முகியித்தீன் புராணம் என்ற பெய ருடன் பலகாப்பியங்கள் பல புலவர்களால் இயற்றப் பட்டுள்ளன.
இராச நாயகம்
சுலைமான் நபி (அலை) அவர்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு இராசநாயகம் பாடப்பட்டுள் ளது. காப்பிய இலக்கணங்களுக்கமைய மதுரை மீசல் வண்ணக்களஞ்சியப் புலவரால் இவ்விராச நாயகம் இயற்றப்பட்டுள்ளது. நாற்பத்தாறு பொருளுதவி படலங்களையும், இரண்டாயிரத்திரு நூற்று நாற்பது " பாடல் களையும் கொண்ட இந்நூலை இயற்ற வகுதையம் பதியைச் சேர்ந்த அப்துல் காதிர் என்பவர் நூலாசிரியருக்குப் பொருளுதவி புரிந்துள்ளார் எனப் பல விடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காப்பியங்கள் 81
சொல்லாட்சியும், பொருட் செறிவும், ஒருங்கே அமையப்பெற்று விளங்கும் இந்நூலின் ஒசை நயத்தை நோக்குவோம். ஒரு செய்யுளை ஒசை நயத்துடன் பாடும் பொழுது அச் செய்யுளில் கூறப்பட்ட காட்சி கள் எம் மணக்கண் முன் தோன்று ஒசைநயம் கின்றன. வண்ணக்களஞ்சியப் புலவர் அத்தகைய செய் யு ட் களைத் தமது நூலில் புகுத்தியுள்ளார். அலி (ரலி) அவர்களைப் புகழ வந்த செய்யுளில் அவர்தம் குதிரையான "துல்துல்’ இடம் பெறுகின்றது. வருணனையும் ஒசை நயத்துடன் அமைகிறது.
அலி (ரலி) அவர்கள் துல்துலின் மீது ஏறி வரு கின்றர். நடந்து வரும் சாதாரண நடையினிற் கூட நடனமாடிக் கொண்டுவரும் அழகு அடி தெரி கிறது. 'துல்துல் வரும் பொழுது அலி (ரலி) அவர் கள் வேகமாக வருகின்ருர், பூமி வருந்த அக்குதிரை வருகின்றது. ஊழி முடிவுக்காலத்தில் துல்துல் கடல் வற்றிப் போகிறது. வானத் திலுள்ள நட்சத்திரக்கூட்டங்கள் உதிர் ந்து விடுகின்றன. இவற்றிற் கெல்லாம் ஊழிகாலத் தில் எழுகின்ற பேரொலியே காரணமாகும். அத்த கைய பேரொலி போன்றது அலி (ரலி) அவர்கள் எழுப்பும் ஒலி. முதிர்ந்த மதம் சொரிகின்ற அட்ட திக்கு யானைகளும் அவ்வொலியைக் கேட்டால் அலறிப் பிளிறும். பகைவருடைய மணிமுடிகள் சுக்கு நூரு கும். அத்தகைய புலி போன்ற அலி (ரலி) அவர்கள் இரண்டு பாதங்களையும் நினைப்போம். இக்கருத்துக் களை வண்ணக்களஞ்சியப் புலவர் ஒசை நயம் பெறப் பாடியுள்ளார்.

Page 43
82 இஸ்லாமியத் தென்றல்
நடைநடமிடுதுலு துலின்வரு விசையினி
னரப்புவி சுமைகொ ஞமோர் விடையுடல் குழைதர வலைகடல் சுலரிட
மிகுகண முதிர் தரவே நடையுக முடிவதி ரென முதிர்
திசைமத கரிகளு மலறிடவே யடையலர் முடிபொடி படவிட
றியபுலி யலியிடு பதகினவாம்
இதே ஓசை நயத்துடன் ஏறக்குறைய இதே கருத்துக் களில் அலி (ரலி) அவர்களே உமறுப்புலவரும் சீருப் புராணத்தில் பாடியிருப்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.
நாகூர்ப் புராணம்
குலாம் காதிறு நாவலர் என்ற நாகூர் மகா வித் துவான் நாகூர்ப்புராணம் என்ற பெயருடன் காப்பிய நூல் ஒன்றை இயற்றியுள்ளார். நாகூரிலே கல்லறையை உடைய சாகுல் ஹமீது ஆண்டகையைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு நாகூர்ப் புராணம் பாடப்பட் டுள்ளது. இதனைப்பாடி அச்சிட நாகூர் குறிஞ்சி சிக்கந்தர் ராவுத்தர் என்பவர் பொரு ளுதவி புரிந்துள்ளார். இயற்கை வருண னைகள் மலிந்துள்ள நூல் நாகூர்ப் புராணம் எனலாம். ஒரு செய்யுளில் குறிஞ்சி நில இயற்கைக் காட்சிகள் இடம் பெற்றுள்ள முறையை நோக்குவோம்.
அன்று மழை பெய்துகொண்டிருந்தது. எங்கும் கடும் இருள் சூழ்ந்திருந்தது. ‘நள்ளென்னும் ஓசை மிக்கதாய் அன்றிரவு நடுயாமம் அமைந்திருந்தது. ஆகா யத்தில் முகில்கள் தவழ்ந்தன. அவை மின்னி எல்லா இடங்களையும் இடைக்கிடை பிரகாசமாக்கிக் கொண் டிருந்தன. அப்பொழுது அங்கு மேய்ந்து கொண்டிருந்த

O .........
காப்பியங்கள் . 83
இரண்டு யானைகள் ஒலி எழுப்பின. கவண்கல் இச்சத்தத்தைக் கேட்ட காவல் காக்கும் கானவர்கள் மின் வெளிச்சத்தில் யானை களைக் கண்டனர். உடனே அவர்கள் கவணில் (கல் லெறியும் கருவியில்) வைத்துக் கல் எறிந்தனர் யானை களை ஒட்டுவதற்காக. ஆனல் அந்தக் கவண்கல் தேனி
னம் வ்ைத்த தேன் கூட்டைத் துளைக்குமாறு ஊடுரு
விச் சென்று பலாமரத்திலே காய்ந்து தொங்கிக் கொண் டிருந்த் பெரிய பலாப்பழத்தினுள் தங்கியது. இந்தக் காட்சியைக் குலாம காதிறு நாவலர் தமது நாகூர்ப் புராணத்தில் பின் வருமாறு அமைத்துப் பாடியுள்ளார்:
. மழையிருணள்ளென் யாமம் வான்றவழி மின்னினுேக்கு
யுழைவ்ரு பிடியனேடு முற்றுப்புள் செய்யின் மேயுங் களைகரி யரவத் தோச்சுங் கானவர் கவணிருலிற் :றுளபடப் பலவிற்காய்த்துத் தூங்கிடும் பழம் போய்வைகும். ർ. s (உருமாற்றிய படலம் 10)
றிஞ்சிக் கலியில் உள்ள கருத்துக் ஈண்டு காணலாம் என்பது குறிப்
. கலித்ெதாகையில்
களின் சுருக்கத்தை
ro 3' 4. பிடத்தக்கது.
f:
"..., لى ( .ܙ

Page 44
ஏனைய பிரபந்தங்கள் ஆற்றுப்படை ஒருவன் ஒரு கொடை வள்ளலிடம் சென்று பரிசில் பெற்று வருகின்றன். வழியில் தன்னெதிரே, பரிசில் பெற விரும்பி, வரையாது அளிக்கும் கொடைவள்ள லைத் தேடி அலையும் இரவலனைக் காண்கின்முன். இந்த இரவலனுக்குத் தான் பெற்றுவரும் மிக்க பரிசில் வளத் தைக் கூறுகின்றன். கூறி, அந்த இரவ புரவலன் லனை அக்கொடை வள்ளலிடம் செல்லு இரவலன் மாறு வழிப்படுத்துகின்றன். இங்ங்ணம் வழிப்படுத்துகையில் அந்த இரவலன் வழி தவருது செல்லும் பொருட்டுப் பல இயற்கைக் காட்சிகளை எடுத்துக் கூறுகின்றன் பரிசில் பெற்றவன். இங்ங்ணம் ஆற்றுப் படுத்தப் படுவோர் கூத்தர், பாணர், பொருநர் விறலியர், புலவர் முதலியோர் ஆவர். எனவே ஆற்றுப்படை என்பது ஆற்றுப்படுத்தல் அல் லது வழிப்படுத்தல் என்ற பொருளை உடையது. "
முஸ்லிம் புலவரால் இயற்றப்பட்ட ஆற்றுப்படை இலக்கணங்கள் அமைந்த நூல் ஒன்று உண்டு. இந்த நூலில் மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவரிடத்துச் சென்று சிறப்பு பெயரும் பரிசிலும் தமிழ்ச்சங்கம் பெற்ற புலவர் ஒருவர் அந்தச் சிறப்புப் பெயரும் பரிசிலும் பெருத அவற்றைப் பெறவிரும்பிய இன்னெரு புலவருக்கு அவற்றைப் பெறுமாறு கூறி அந்தப் புலவரை சங்கப் புலவரிடத்து வழிப்படுத்தி இருக்கின்றர். எனவே இந்த நூல் மது ரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவராற்றுப்படை என்ற பெயரைப் பெற்றது.

ஏனைய பிரபந்தங்கள் 85
இந்த நூலை இயற்றியவர் குலாம் காதிறு நாவலர். இவர் பாண்டித்துரைத் தேவரால் மதுரையில் நிறுவப் பட்ட நான்காம் தமிழ்ச் சங்கத்தின் புகழ்பெற்ற புலவ ராய்த் திகழ்ந்தார். இவர் இந்த நான்காம் சங்கத்தின் * நக்கீரர் ' என்று அழைக்கப்பட்டார். நாவலர் குலாம் காதிறு நாவலர் புலவராற்றுப் படையில் சங்க காலக் கவி மரபுகளையே ஆண்டுள்ளார். புதுமையையும் புகுத்தியுள்ளார். இர வலர் செல்ல வேண்டிய முறையைக் குறிப்பிடுகின்றர். சுருக்கமான வழியைப் பின்வருமாறு கூறுகின்ருர்,
உருமுறு மோடுறழொலியின் இருபுறணு மிருப்புருளை நான்குருளக் கான் குழுமும் வா அய்க் கொள்ளிப் பேயுயிர்ப்பி னெலித்து மிழுங் கலித்தூமம் குழல் வாயிற் சுழல் கொள்ள மரவட்டைச் செல வொப்பச் செல் பாண்டில் பல கோத்த நெடுந் தொடரி னிரை நீண்டு கடுங் காலிற் கடு விசையி னெந்திர வூர்தி எந்திர ஊர்தியில் செல்லவேண்டும் என்று குறிப்பிடுகின் ரு?ர். எத்தகைய எந்திர ஊர்தி என்று பார்ப்போம். இடியின் சத்தத்தோடு மாறுபடுகின்ற சத்தத்தை உடைய இரும்பு உருளைகள் நான்கு இரு பக்கத்து உருள வும், காட்டில் கூடின கொள்ளி வாய்ப் புகைவண்டி பேயின் மூச்சையொப்ப ஒலித்து எந்தி ரங் கக்குகின்ற மிக்க புகை குழலின் வாயிற் சுழலவும் மரவட்டையின் நடையினைப் போலச் செல்கின்ற வண்டிகள் பல வற்றைச் சேர்த்த நெடிய தொடரினையுடைய நிரையாய் நீண்டு கடுமையாக வீசு கின்ற காற்றைப் போல ஒடுகின்ற வேகத்தை உடைய எந்திர ஊர்தி என்று இங்கு புகை வண்டியையே குறிப் பிடுகின்ருர். இந்தக் காட்சி புலவராற்றுப்படைக்கே தனிப் பண்பாய் அமைந்துள்ளது.

Page 45
86 இஸ்லாமியத் தென்றல்
அத் தாதி
ஒரு செய்யுளின் கடைசி எழுத்து, கடைசிச் சீர் அல்லது கடைசி அடி முறையே அடுத்த செய்யுளின் முதலெழுத்தாய், முதற்சீராய் அல்லது முதலடியாய் வருவது அந்தாதி முறையில் பாடப்பட்ட பாக்கள் எனப் படும். இஸ்லாமிய அடிப்படையில் எழுந்த நூல்களுள் அந்தாதி இனத்தைச் சார்ந்தவையும் உள. அவற்றுள் திரு மதீனத்தந்தாதி தலை சிறந்தது. இலக்கணக்கடல் இதனை இலக்கணக்கடல் என்ற புகழ்ப் பெயரைப் பெற்ற திருச்சிராப்பள்ளி யைச் சேர்ந்த ஆ.கா. பிச்சை இபுரு ஹிம் புலவர் பாடி யுள்ளார். திருமதீனத்தந்தாதியிலுள்ள எல்லாச் செய் யுட்களிலும் முதல் முற்று மடக்கு என்ற சொல்லணி அமைந்துள்ளது. ஒரு செய்யுளின் முதலடியின் முதற் சொற்ருெடர் நான்கடிகளிலும் வந்து ஒவ்வோர் அடி யிலும் வெவ்வேறு பொருளைக் கொண்டு உள்ளது.
பிச்சை இபுரு ஹிம் புலவர் மதீனவைப்பற்றிக் குறிப் பிடும்பொழுது மதீனவிலுள்ள பூஞ்சோலைகள் ஐம் பொழுதும் இனிய தேனைப் பொழிகின் ஐம்பொழுது , றன என்ற பொருள்பட புரிய வன மலரைம் பொழுதின்றேன் பொழி மதீனம் ' என்று பாடியுள்ளார். இங்கு ஐம்பொழுது என்று கூறியதை அந்த நூலுக்கு உரை எழுதிய குலாம் காதிறு நாவலர் " ஐந்து சிறு பொழுதுகள் ' என்று கூறு வர். சிறுபொழுதுகள் ஐந்தே என்று குலாம் காதிறு நாவலர் கருதினர் போலும். ஆனல் தொல்காப்பியத் தில் சிறுபொழுதுகள் ஆறென்றே குறிப்பிடப்பட்டுள் ளது. எனவே பிச்சை இபுரு ஹிம் புலவர் குறிப்பிட்ட ஐம்பொழுது இவ்விரண்டிலும் நின்று வேறுபட்டதாய் இருக்கலாம். முஸ்லிம் மக்கள் ஒவ்வொரு நாளும் அல்லா(ஹ்)வைத் தொழுவதற்குப் பள்ளிக்குப் போகும் ஐந்து பொழுதுகளையுமே ஈண்டு ஆசிரியர் கூறியுள்ளார் என்று கொள்வது பொருத்தமுடைத்து. இஸ்லாமிய அடிப்படையில் எழுந்த தமிழ் நூல்கள் சிலவற்றில்

ஏனைய பிரபந்தங்கள் 87
qSqSAASAASAASqSqqSSqqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSSqqqqSASqSqqSSS
அறபுச் சொற்கள் ஆளப்பட்டுள்ளன. ஆனல் திருமதி னத்தந்தாதியில் ஆளப்பட்டுள்ள அறபுச் சொற்களின் எண்ணிக்கை பத்துக்குக் குறைவாகவே இருக்கின்றது. * ஹஜ் ' என்ற அறபுச் சொல் * அச்சு ’ என்றே செய் யுளில் புகுத்தப்பட்டுள்ளது. இங்ங்னம் அறபுச் சொற் கள் தானும் தமிழ்ச் சொற்கள் போன்று காட்சியளிக் கின்றன.
மக்கா திரிபந்தாதி
திரிபந்தாதி, அந்தாதி இனங்களில் ஒன்று. அந்தாதி இலக்கணங்கள் யாவும் திரிபந்தாதியில் அமையப்பெற்று இருக்கும். முதல் எழுத்தொழிய இரண்டு முதலான எழுத்துக்கள் ஒவ்வோர் அடியிலும் ஒத்திருக்கையில் பொருள் வேறுபட அமைந்த அந்தாதியைத் திரிபந் தாதி என்பர். திருமக்காத் திருபந்தாதி நாகூர் மகா வித்துவான் குலாம் காதிறு நாவலரால் மடக்கு இயற்றப்பட்டது. இந்த அத்தாதியில் முதல் முற்று மடக்கு என்னும் சொல் லணி வகையைக் காணலாம். இந்த மடக்கு அமைந்த முறையைக் கவனிப்போம். ஒரு செய்யுளை எடுத்துக் கொள்வோம். அந்தச் செய்யுளின் நான்கு அடிகளிலும் கானவரம்பு, போனவரம்பு, ஞானவரம்பு ஆனவரம்பு என்ற சொற்ருெடர்கள் முறையே ஒவ்வோர் அடியின் தொடக்கத்திலும் அமைந்துள்ளன. இந்தச் சொற்ருெ டர்களில் உள்ள முதல் எழுத்துக்களான 'கா', 'போ', ‘ஞா', 'ஆ' என்பன திரிந்து, இரண்டு முதலான ஏனைய எழுத்துக்கள் ஒவ்வோர் அடியிலும் ஒத்துப் பொருள் வேறுபட்டு இருக்கக் காணலாம்.
நாகையந்தாதி முஸ்லிம் திருத்தலங்களுள் நாகூரும் ஒன்று. நாகூர் நாகை என்றும் வழங்கப்படும். நாகூர் தென்னிந்தியா விலே தஞ்சை அரசிறைப் பகுதியில் உள்ளது. நாகூ ரைப்பற்றியும் நாகூர் ஆண்டகையைப் பற்றியும்

Page 46
88 இஸ்லாமியத் தென்றல்
புகழ்ந்து நாகையந்தாதி பாடப்பட்டுள்ளது. செய்கு அப்துல் காதிறு நயினர் ஆலிம் அவர்களே இந்த நூலாசிரியராவர். நாகையந்தாதியில் மடக்கு என்னும் சொல்லணி பல வகைகளில் அமைந்துள்ளது. நான்கடி மடக்கு என்ற சொல்லணிவகை சொல்லணி அமைந்த செய்யுளை ஈண்டு எடுத்துக் கொள்வோம். நான்கடியும் ஒரே வித மாக அமைந்த அந்தச் செய்யுளில் சிவந்த நிறத்தைச் யும், நிதிமகளின் செல்வமிகுதியையும், இளமைப்பரு வத்தினையுமுடைய அரசர்கள். கவிகளின் சீரினிடத்தும், சொல்லினிடத்தும் போந்த குற்றங்களை யொழித்தலே செய்யும் அழகு பிரகாசித்த நாவினது ஒழுக்கத்தை யுடையவர்கள்; சித்திரமும் அடையாளமுமுள்ள முடி யும் குற்றம் தருகின்ற உயிர்களது வலி குறைய நடுவு நிலைமை பூண்ட கையும் உடையவர்கள்; செல்வத்து அழகுடைய சிவந்த கைகள் வயலுஞ் சோலையுஞ் சூழ் ந்த பெரிய தவஞ் செய்த நாகூர் ஆண்டகை நன்மை பூண்ட இரு பாதங்களையும் பரவா நிற்கும் என்ற கருத்துக்கள் அமைந்துள்ளன. சுருங்கக் கூறின் அரசர், புலவர், நடுநிலைமை வகிப்பவர் முதலியோர் நாகூர் ஆண்டகையின் பாதங்களைத் துதிப்பர் என்று கூறப் பட்டுள்ளது. இனிச்செய்யுளைப்படிப்போம்.
செய்வன மாதவ நாகையர் சீர்பதச் சேகரமே செய்வன மாதவ நாகையர் சீர்பதச் சேகரமே செய்வன மாதவ நாகையர் சீர்பதச் சேகரமே செய்வன மாதவ நாகையர் சீர்பதச் சேகரமே
பிள்ளைத்தமிழ் நூல்கள் பிள்ளைத் தமிழ் நூல்களும் தமிழ் நாட்டு முஸ்லிம் புலவரால் இயற்றப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் ஆண்பாற் பிள்ளைத் தமிழ் நூல்களாகவே இருக்கின் றன. அவற்றுள் தலைசிறந்தது நபிநாயகம் பிள்ளைத் தமிழ்
என்னும் நூலே. முகம்மது நபி அவர்களைக் குழந்தை யாகக் கொண்டு பத்துப்பருவங்களில் பாடப்பட்டுள்ளது.

6%OTu Syuristis Gir 89
நபி நாயகம் பிள்ளைத் தமிழ் செய்யிது அனபியா சாகிபு என்பவரால் இயற்றப்பட்டது. முகம்மது நபி அவர்களைப் புகழும் முகமாய் மக்கா பத்துப் நகரின் நீர்வள நிலவளங்கள் நபி பருவங்கள் நாயகம் பிள்ளைத்தமிழில் இன்பம் பயக் கத்தக்கனவாய் மிக அழகாக வருணிக் கப்பட்டுள்ளன.
இஸ்லாமிய அடிப்படையில் எழுந்த பிள்ளைத்தமிழ் நூல்களுள் இன்னென்று முகியித்தீன் ஆண்டவர் பிள் ளைத்தமிழ். இந்தப் பிள்ளைத்தமிழ் நூலில் முகியித்தீன் ஆண்டகை குழந்தையாக வைத்துப் பாடப்பட்டுள்ளார். நவநீத புஞ்சம் என்னும் நூலினை இந்தப் பிள்ளைத் தமிழ் நூல் அடக்கி உள்ளது. முகியித்தீன் ஜெய்லானி ஆண்டகை பிள்ளைத் தமிழ் செய்யிது முகியித்தீன் கவிராயரால் இயற்றப்பட் டது. முகியித்தீன் ஆண்டகை இஸ்லாத்துக்குப் புத்துயி ரளித்த மகான். ஜெய்லானியில் பிறந்தவர். ஜெய்லானி பகுதாதை அடுத்துள்ளது. பகுதாத் இந்நாட்டின் தலை நகர். எனவே ஜெய்லானி இந்தப் பிள்ளைத் தமிழ் நூலிலே நயம்பட வருணிக்கப்பட்டுள்ளது.
குலாம் காதிறு நாவலரின் புதல்வராகிய ஆரிபு நாவலர் என்பவர் நாகூர்ப்பிள்ளைத் தமிழ் என்னும் நூலை இயற்றி உள்ளார். பெண்பாற் பிள்ளைத் தமிழ் இலக்கணங்கள் ஒருங்கே அமைந்த நூல் பெண்பாற் பாத்திமா நாயகி பிள்ளைத் தமிழ் என்ப பிள்ளைத் தமிழ் தாகும். முகம்மது அவர்களின் புதல்வி பாத்திமா நாயகியைக் குழந்தையாகக் கொண்டு இந்த நூல் பாடப்பட்டிருக்கலாம். இவையே யன்றி பீர்முகம்மது புலவர் முகம்மது நபி பேரிலும் ஆ. கா. பிச்சை இபுரு ஹிம் புலவர் நத்தஹர் என்பவர் பேரிலும் பிள்ளைத் தமிழ் நூல்கள் இயற்றியுள்ளனர்.

Page 47
90 இஸ்லாமியத் தென்றல்
அம்மானை
தமிழ் மொழியில் பயிலும் பிரபந்தங்களுள் இன் னென்று அம்மானை. அம்மானையிலுள்ள ஒவ்வொரு செய்யுளின் இறுதியிலும் 'அம்மானை' என்ற சொற்ருெ டரைப் பெரும்பாலும் காணலாம். அம்மானை என்ற விளையாட்டிலிருந்தே இந்த நூல் அம்மானை என்னும் பெயரைப் பெற்து என்பர். இந்த விளையாட்டு பெண்களுக்கே உரியது. அம்மானை என்பது சிலம்புகள் என்னும் இரண்டு காய்களை வைத்துக் பெண்கள் கொண்டு ஒன்றை மேலே செலுத்தி அது விளையாட்டு திரும்பி வருவதற்குள் மற்றென்றை மேலே செலுத்திக் கீழே விழாமல் கை யில் பிடித்துக் கொள்ளும்பெண்களின் விளையாட்டாகும். பெரும்பாலும் அம்மானை பாக்கள் அம்மானை விளையாட் டிலே பாடப்படுவதைக் காணலாம். இஸ்லாமிய அடிப் படையில் எழுந்த இத்தகைய நூல்களுள் ஒன்று நபிய வதார அம்மானை. சீருப்புராணம் பாடிய உமறுப் புலவ ரின் புதல்வர் கவிக்களஞ்சியப் புலவர் இயற்றியது இந்த நபியவதார அம்மானை. பப்பரத்தியார் அம்மானை என்ற ஒரு நாலும் உண்டு. இந்த அம்மானையில் முகம்மது நபி அவர்களின் மருமகனர் அலி என்பாரின் வலிமை புகழப் பட்டுள்ளது. செய்யிது மீருப் புலவர் இந்த அம்மானையை இயற்றியுள்ளார்.
(6) JD கலப்பு, அகம் என்ற இரு சொற்கரைக் கொண்டது கலம்பகம் என்ற சொற்ருெடர். இது அகப்பொருளில் பாடப்பட்ட ஒரு தமிழ்ப் பிரபந்தமாகும். இஸ்லாமிய அடிப்படையில் எழுந்த கலம்பக இலக் அகப்பொருள் கணங்கள் அமைந்த நூல்கள் பல முஸ் லிம்களிடையே வழங்குகின்றன. முகம் மது நபி அவர்கள் பிறந்து வளர்ந்த திருத்தலமாகிய மக்கமா நகரின் பெயரால் முகம்மது நபி அவர்களைப் பாட்டுடைத்தலைவராகக் கொண்ட கலம்பகம், மக்காக்
 

ஏனைய பிரபந்தங்கள் 91
கலம்பகம் என்று வழங்கப்படுகின்றது. இந்த மக்காக் கலம்பகத்தில் இஸ்லாத்துக்கு முரணுன சில அகப் பொருட்டுறைகள் விடப்பட்டிருக்கின்றன. செய்கப்துல் காதிறு நயினர் லெவ்வை ஆலிம் என்பவர் இந்தக் கலம்பகத்தை இயற்றி யுள்ளார். மக்காக் கலம்பகத்தில் இடம்பெற்றுள்ள காப்புச்செய்யுளை ஈண்டு எடுத்துக் கொள்வோம். அந்தச் செய்யுள் ஆண்டவனைத் துதிக் கின்றது. அல்லாஹ்வைக் குறிப்பிடு சொல், உளம், கின்றது. எல்லாம் வல்ல ஆண்டவன் செயல் முற்றுமுணர்ந்தான்; ஒன்று விடாமல் அனைத்தையும் உணர்ந்து அறிந்துள்ள வன் அல்லாஹ், அத்தகைய பேரருளாளன, மிக்க அன்பு டையோனை நாம் தொழ வேண்டும். ஆண்டவனை எங்ங்னம் தொழ வேண்டும்? சொல்லால் தொழ வேண்டும். வாயார வாழ்த்தித் தொழ வேண்டும். உள் ளத்தாலும் தொழ வேண்டும். எப்பொழுதும் ஆண்ட வனை நினைத்துக் கொண்டிருத்தல் வேண்டும். இவை இரண்டுடன் தொழுகை நிறை வேறி விடாது. செயல் களாலும் ஆண்டவனைத் தொழ வேண்டும். இங்ங்ணம் உள்ளத்தால், சொல்லால், செயலால் முற்றும் உணர் ந்த, எல்லாம் வல்ல அல்லாஹ்வைத் தொழ வேண்டும். பிற மொழிப் புலவர்கள் மனம், வாக்கு, காயம் என்று கூறுகின்ற வற்றையே பைந்தமிழ்ச் சொற்களால் விழு மிய பொருளும் ஒழுகிய ஓசையுமுடைத்தாய் மக்காக் கலம்பகத்தில், -
வல்லான் முற்று முணர்ந்தான் தன்னைச் சொல்லா லுளத்தாற் செயலாற் றெழுவாம். என்று கூறப்பட்டுள்ளது. சொற்சுவையும் பொடுட் செறிவும் சிறந்து விளங்குகின்றன இஸ்லாமிய அடிப் படையில் எழுந்த பல கலம்பகங்கள். ஏனைய பதாயிகு கலம்பகம், குவைலீர் கலம் கலம்பகங்கள் பகம் முதலியன அவற்றுள் இரண்டா கும். கண்டிக் கலம்பகம் என்ற ஒன் றும் பாடப்பட்டுள்ளது. - ''

Page 48
தேச த
சி ற் றி ல க் கி யங் க ள்
ஏசல்
பல பிரபந்தங்கள் பொதுமக்களிடையே சர்வ சர்தாரணமாக வழங்குகின்றன. அவற்றுள் ஏசல் என்ப தும் ஒன்று. ஒருவரை ஒருவர் ஏசிக் கூறும் பாட்டு ஏசல் எனப்படும். எட்டிகுடி ஏசல், வள்ளி தெய்வயானை ஏசல் என்னும் ஏசல் பாட்டுக்கள் காதலையே அடிப்படை யாகக் கொண்டுள்ளன. ஆனால் இஸ்லாமிய அடிப்படை யில் எழுந்த ஏசல் பாட்டுக்கள் இஸ்லாமிய கோட்பாடு களைக் கூறுவனவாய் இருக்கின்றன. ஏசல் கண்ணிகள் முஸ்லிம்களிடையேயும் வழங்குகின்றன. இவற்றுள் சில முஸ்லிம் பெரியாரின் வாழ்கையைப் போதிப்பன வாய் அமைந்துள்ளன.
மாலை மாலை என்று பொதுவாகக் குறிப்பிடும் பொழுது பூமாலையையே கருதுவர். இலக்கிய நூல்களுள் மாலை என்றால் அது ஒரு பிரபந்தத்தையே குறிக்கும். இந்த மாலைப் பிரபந்தத்தில் பாக்கள் மாலை போல் கோர்க்கப் பட்டுள்ளன என்பர். இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தில் மாலை இனத்தைச் சேர்ந்த நூல்கள் மிகப் பல இருக்கின் றன. அவற்றுள் தலை சிறந்தது முதுமொழி மாலை என்
னும் நூலே. இம் மாலை முகம்மது நபி முது மொழி.
மாலை"
அவர்களைப் புகழ்ந்து , பாடப்பட்டதா - கும். முது மொழி மாலை சீறாப்புராண ஆசிரியர் உமறுப்புலவரால் பாடப்பட்டது. இவர் அறபு மொழியில் பாண்டித்தியம் பெற்றவர் அல்லர். தமிழ் நாட்டிலே தமிழ்ச் சூல் நிலையிலே வாழ்ந்தவராதலால் தமிழையே ஐயந்திரிபறக் கற்றார். உமறுப் புலவர் சீறாப் புராணம் இயற்றுவதற்கு முன்னரே முது மொழி மாலையைப் பாடியுள்ளனர்.

சிற்றிலக்கியங்கள் 93
W
சீதக்காதி உமறுப் புலவரைச் சீருப்புராணம் பாடும் படி கேட்டுக் கொண்டார். ஆளுல்ை உமறுப் புலவர் நபி நாயகத்தின் வாழ்க்கையைப் பற்றித் தனக்கு உள்ள அறிவு சீருப்புராணம் இயற்றப் போதிய தன்று என்ருர், உடனே சீதக்காதி வள்ளல் உமறுப் புலவரை சீதக்காதி செய்கு சதக்கத்துல்லாவிடம் போகும்படி கூறினர். அவரும் அறபு மொழியில் பாண் டித்தியம் பெற்றவராகத் திகழ்ந்தார். உமறுப் புலவரும் சதகத்துல்லா அவர்களிடம் சென்ருர், தனக்கு அறபு மொழியில் உள்ள நபிகள் நாயகத்தின் வாழ்கையைத் தமிழில் மொழியெர்த்துக் கொடுக்கும்படி வேண்டினர். முஸ்லிம் அல்லாத உடையணிந்திருந்த உமறுப் புலவ ருக்கு ஒன்றும் சொல்லச் செய்கு சதக்கத்துல்லா விரும் பவில்லை. எனவே உள்ளம் வருந்திப் பள்ளிக்குப் போ ஞர். அங்கு சென்று நபிகள் நாயகத்தை என்று காண்குவனே ‘ என்ற தொடரை முடிவில் அமைத்து முதுமொழிமாலையைப் பாடினர். இதன் பயனுகச் சீருப் புராணத்தைப் பாட சதக்கத்துல்லா உமறுப் புலவருக்கு உதவி புரிந்தார். எடுத்துக்காட்டாக முதுமொழிமாலை
லுள்ள ஒரு செய்யுளைப் படித்துப்பார்ப்போம்.
பூவினிற் சிறந்த மக்கமா புரத்தில்
புகழொடு பிறந்த நாயகரைக் காவினிற் சிறந்த பதிமதி ஞவிற்
கதியர சியற்றிய வேங்தைப் பாவினிற் சிறந்த பாவகம் புனேந்த
பையலுக் கருடரும் முகிலை நாவினிற் சிறந்த நபிமகு மூதை
நலனுற என்று காண்குவணுே (இ)றசூல்மாலை இன்னென்று. சாமு நெயினர் லெவ்வை இயற்றியது இந்த மாலை. அறபு எழுத்தில் எழுதப்பட்டுள்ள இந்தத் தமிழ் நூல் முஸ்லிம்களின் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடைத்தாய் விளங் குகின்றது. மரணப்படுக்கையில் கிடக்கும் ஒருவர் கூறும் மொழிகளை அறபு மொழியில் ஒலியத்து’ என்று வழங்குவா . -

Page 49
94. இஸ்லாமியத் தென்றல்
இவற்றைக் கொண்டு பாடப்பட்ட நூல் ஒஸியத்து மாலை என்பதாகும். நபி நாயகம் அவர்களுக்குப் பின் வந்த தலைவர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றது இராஜ மணி மாலை. முகியித்தீன் மாலை, அகந்தெளியுமாலை, அதயு மாலை, பொன்னரியாமாலை, முதலிய மாலைகள் ஈண்டு குறிப்பிடத்தக்கன.
திருப்புகழ் இனி இசையோடு பாடக்கூடிய பொது வழக்கில் உள்ள பிரபந்தங்களைக் கவனிப்போம். இந்தத் துறை யில் திருப்புகழை முதன்மையானதாகக் கூறலாம். காசீம் புலவர் யற்றிய திருப்புகழ் சர்வசாதாரண மாகத் திருப்புகழ் என்று வழங்கப்படுகின்றது. இந்தத் திருப்புகழில் முகம்மது நபி(சல்)பாட்டுடைத்தலைவராகப் பாடப்பட்டுள்ளார். ஒசை நயம் சிறந்து விளங்கும் நூலாக இந்தத் திருப்புகழ் திகழ்கின்றது. சந்தத் திருப் புகழ் இஸ்லாமிய அடிப்படையில் எழுந்த இன்னுெரு நூல். சந்தம் என்பது செய்யுள் வண் சந்தம் ணம். இது ஓசை நயமுடையது. இசை யுடன் பாடப்படுவது. ஒவ்வொரு வண்ணமும் வெவ்வேறு பண்ணமைந்தது. பொதுவாக இசைத்தமிழுடன் தொடர்புள்ளபாடல்கள் அனைத் தும் பண்ணமைந்தவைகளாகவே இருக்கும். இந்தச் சந்தத் திருப்புகழ் அப்துல் காதிறுப்புலவரால் இயற் றப்பட்டது. செய்யிது முகியித்தீன் கவிராசர் என் ருெரு திருப்புகழ் இருக்கின்றது. அந்தத் திருப்புகழில் முகியித்தீன் ஆண்டகையைப்புகழ்ந்து பாடப்பட்டுள் ளது. யாழ்ப்பாணத்து அ. அஸன லெப்பை பாடிய நவரத்தினத் திருப்புகழும் ஈண்டு குறிப்பிடத்தக்கது.
கீர்த்தனங்கள்
இசையுடன் பாடக்கூடிய இன்னென்று கீர்த்தனம். பதம் என்றும் அது வழங்கப்படுகின்றது. கோட்டாறு என்ற பகுதியைச் சேர்ந்த அபூபக்கர் புலவர்
கீர்த்தனங்கள் பாடியுள்ளார். .
 

சிற்றிலக்கியங்கள் 95
இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு இராமா யணக் கீர்த்தனைகளும், பெரிய புராணத்தை அடிப்படை யாகக்கொண்டு பெரியபுராணக் கீர்த்தனைகளும் எவ் வாறு எழுந்தனவோ, அவ்வாறே சீருப்புராணத்தை அடிப்படையாகக் கொண்டு சீருக்கீர்த்தனங்கள் எழுந் துள்ளன. பல நூல்களின் இறுதியில் இடம் பெற் றுள்ள சில்லறைக் கீர்த்தனங்களும் உள.
சிந்து
பண்ணமைந்த பாக்களைப் பாடுவதில் முஸ்லிம் மக்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைவர். அவர்களின் அன்ருட வாழ்க்கையில் இந்தப்பாக்கள் முதன்மையான இடத்தைப்பெறுகின்றன. இத்தகைய பாக்கள் மலிந் துள்ள பல நூல்கள் முஸ்லிம் பெருவழக்கில் உண்டு. அவற்றுள் ஒன்று பூவடிச்சிந்து. இதனைக் பூவடிச்சிந்து காளை அசனலிப் புலவர் பாடியுள் ளார். பூவடிச்சிந்தில் உள்ள ஒவ்வொரு பாட்டும் வெவ்வேருண பல மெட்டுக்களில் பாடக் கூடியது. இந்துக்களிடையே வழங்கும் காலடிச் சிந்தி லுள்ள மெட்டுக்களையே முஸ்லிம் பூவடிச் சிந்துப்பாடல் கள் கொண்டுள்ளன. இன்னும் முகம்மது நபி (சல்) அவர்களைப்பாடும் பயஹாம்பர் அவதாரப் பல வண் ணச் சிந்தும், முகியித்தீன் ஆண்டகையைப் போற்றும் ஒலி நாயகரவதாரச் சிந்தும் ஈண்டு குறிப்பிடத்தக்கன. நொண்டி சீனிக்காதிறு முகியித்தீன் என்பவர் பாடிய நவநீதர நாலாங்காரச் சிந்து என்னும் ஒன்று உள்ளது. அது நாடக மெட்டில் பாடப்பட்டுள்ளது. இன்னும் கும்மி, தாலாட்டு, ஆனந்தக் களிப்பு என்ற பெயர் களுடன் இஸ்லாமிய அடிப்படையில் எழுந்த பல
நூல்களும் இருக்கின்றன.

Page 50
96 இஸ்லாமியத் தென்றல்
கும்மி
பண்ணமைந்த பாடல்களுள் கும்மியும் ஒன்று. கை குவித்துக் கொட்டுதலைக் கொம்மை என்பர். கொம்மை என்பது கிராமிய வழக்கு என்பர். கொம்மை என்ற சொல்லிலிருந்தே ‘கும்மி" என்ற சொல் வந்ததாகக் கொள்வர். கும்மியாடலுக்குப் பொருத்தமான முறை யில் பாடப்பட்டபாடல்களையே கும்மிப்பாடல் என்பர். ஞானக்கும்மி, சீவிய சரித்திரக்கும்மி என இஸ்லாமிய அடிப்படையில் எழுந்த பலவகையான கும்மிப்பாடல் கள் தமிழ் மொழியிலே தோன்றியுள்ளன.
தாலாட்டு
"தாலேலோ’ என்று முடியும் ஒருவகைப்பாட்டைத் தாலாட்டு என்பர். குழந்தைகளைத் தொட்டிலிலிட்டு உறங்கச் செய்யத் தாலாட்டுப்பாடல்களைப் பாடுவர் தாய்மார். இத்தகைய தாலாட்டுப்பாடல்கள் பல வற்றை முஸ்லிம் பெரு வழக்கில் இருக்கக் காணலாம். ஐந்து தாலாட்டுப்பாடல்களைக் கொண்ட பஞ்சரத்தினத் தாலாட்டு என்பது அறபு எழுத்தில் எழுதப்பட்ட தாலாட்டாகும். இவைபோன்ற பலபாடல்கள் பொது மக்கள் எளிதில் விளங்கக் கூடிய முறையில் பாடப் பட்டுள்ளன.
ஆனந்தக் களிப்பு
ஒரு புலவனின் மட்டற்ற மகிழ்ச்சியைக் குறிப் பிடுவது ஆனந்தக்களிப்பு எனப்படும். பெரும்பாலும் முஸ்லிம் ஞானிகளின் பாடல்களின் இறுதியில் ஆனந் தக்களிப்பு இடப்பெறுகின்றது. இவ்வகுப்பைச் சேராத மெய்ஞ்ஞான ஆனந்தக்களிப்பு என்றும் ஒன்றுளது. இவையே யன்றி கும்மிப்பாட்டு, ஊஞ்சற்பாட்டு, சலவாத்துப்பாட்டு, எண்ணெய்ச் சிந்து, கப்பற் சிந்து, கப்பற் பாட்டு, தெம்மாங்கு, தோழிப்பெண்பாட்டு முதலியனவும் இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பரப்பில் இடம் பெற்றனவாகும். -

முஸ்லிம் பிரபந்தங்கள் படைப்போர்
இனி முஸ்லிம்களுக்கே சொந்தமான பிரபந்தங்களை எடுத்துக் கொள்வோம். அவற்றை முஸ்லிம் அல்லாதா ரின் தமிழ் இலக்கியப் பரப்பில் காணமுடியாது. முஸ்லிம் களுக்கே சொந்தமான அந்தப் பிரபந்தங்களை முஸ்லிம் புலவர்கள் தமிழ் இலக்கியத்தில் புகுத்தினர். அவற்றுள் படைப்போரும் ஒன்று, படைப்போர்
போர் என்பது தமிழ்ச் சொற்ருெடர். முஸ்லிம் களுக்கே சொந்தமான- முஸ்லிம்மக்களி டையே வழங்கும்-படைப்போர் என்ற பிரபந்தங்கள் போர்களைப் பற்றியே குறிப்பிடுகின்றன. படை, போர் என்பன ஏறக்குறைய ஒரு பொருட் சொற்கள். ஆங்கி லத்தில் வழங்கும் WAR BAடடAD என்ற நூலினத்தின் இலக்
கணங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட படைப்போரில்
அமைந்திருக்கக் காணலாம். முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அல்லாதாருக்குமிடையே நடந்த போர்களைப் பற்றியே இந்த நூல்கள் வருணிக்கின்றன.
{9@鹦可药鸟” இதுவேயன்றி அறபு, பாரசீக மொழிகளிலிருந்து எடுக்கப்பட்ட பிரபந்தங்கள் தமிழிலே எழுந்தன. இவை அறபு, பாரசீகப் பெயர்களாலே வழங்கப்படுகின்றன. பிரபந்தங்கள் பிறமொழிச் சொற்களால் வழங்கப்பட்ட போதிலும் பாக்கள் தமிழ்ப்பாக்களாகவே இருக்கின்றன. அத்தகைய அறபுப் பிரபந்தங்களுள் முனஜாத் என்ப தும் ஒன்று. "முனுஜாத்” என்பது அறபு இலக்கணத்தில் தொழிற் பெயராக இருக்கின்றது. இரகசியமாகச் சொல் லுதல் என்று அந்தச் சொல் பொருள் படும். இச்சொல் வழிபாட்டுப் பிரார்த்தனையையும் குறிக்கின்றது. ஆண்ட வனைக்குறை இரந்து பாடுவதையும் முனஜாத்துஎன்பர். ஆண்டவனையும் அவனது தலைசிறந்த குறை இரங்கல் அடியார்களையும் அருள்புரியுமாறு கேட் டுப்பாடப்பட்ட பாக்களே முனுஜாத்து

Page 51
98 இஸ்லாமியத் தென்றல் -
என்று வழங்கலாயின. முனுஜாத்து மாலிகை, நபிநாயகம் முணுஜாத்து, முகியித்தீன் ஆண்டவர் முனஜாத்து என் பன அத்தகைய நூல்களுள் ஒரு சிலவாகும்.
கிஸ்ஸாக்களும், மஸலாக்களும் *கிஸ்ஸா’ என்பது இன்னுெரு முஸ்லிம் பிரபந்தம். அந்தச் சொல் கதை என்ற பொருளைக் குறிக்கும். பொது வழக்கில் இந்த கிஸ்ஸாக்கள் வேரூன்றி விட்டன. யூசுப் நபி கிஸ்ஸா, சைத்துரன் கிஸ்ஸா என்பன இந்த வகை யுட் குறிப்பிடத்தக்கன. கேள்வி என்று கதை வினு பொருள்படும் * மசலா’ என்ற அறபுச் சொல்லால் இன்னெரு பிரபந்தம் வழங் குகின்றது. மசலா என்ற நூலில் கேள்விகளும், பதில் களுமே இடம் பெற்றுள்ளன. அவை சமயத் தொடர்பு டையனவாய் இருக்கின்றன. நூறு மஸ்லா, ஆயிரம் மஸலா என்பன மஸ்லா நூல்களுட் சிலவாகும்.
5 TLD IT
*நாமே என்பது பாரசீகச் சொல். அது "நாமா" என்று திரிந்து வழங்குகின்றது. இச்சொல் கதை, புத்த கம், வரலாறு என்ற கருத்துக்களையுடையது. முகம்மது நபி அவர்களின் மிஃருஜ் நிகழ்ச்சி மிஃ மிஃருஜ் ருஜ் நாமாவில் இடம் பெற்றுள்ளது. முகம்மது அவர்களின் ஒளிவு படைக்கப் பட்ட விதத்தை நூர் நாமா எடுத்துக் கூறுகின்றது. 'நூர்’ என்ற அறபுச் சொல்லுக்கு வெளிச்சம் என்பது பொருள்.
எனவே முஸ்லிம் புலவர்கள் பல புதுப் பிரபந்தங் களைத் தமிழ் இலக்கியத்தில் புகுத்தியுள்ளனர். அந்தப் பிரபந்தங்களில் ஏராளமான செந்தமிழ்ப் பாக்களை . . . . அமைத்துள்ளனர். அந்தப் பாக்களே பாவளம் மிக நயம் படப்பாடி உள்ளனர். பாமர V " ரும் இஸ்லாத்தை அறியக் கூடிய முறை யில் இஸ்லாம் அந்த நூல்களில் போதிக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் பாவளமும் பெருக்கெடுத்தோடியது.

உரை நடை
தமிழ் நாட்டு முஸ்லிம் மக்களிடையே வழங்கும் தமிழ் உரை நடை நூல்கள் பல உள. அவற்றைப் பல பிரிவுகளாகப் பிரிக்கலாம். முஸ்லிம்களுக்கிடையே ஏற்பட்ட உரையாடல்களால் எழுந்தவை ஒரு சில. இஸ்லாத்தைப் பின்பற்றியவர்கட்கும் ஏனைய மதத் தவர்கட்கும் இடையே உண்டாய வாதங்களின் பயன கத் தோன்றியவை இன்னும் சில. இலக்கியத் துறை யில் வாக்குவாதம் நடைபெற்றதினல் வேறு சில உரை நடைநூல்கள் தோன்றின. சில வசன நூல்கள் அறபு மொழியிலிருந்து நேராகத் தமிழில் வசனநூல் மொழி பெயர்க்கப்பட்டவையாகும். வேறு சில உறுது மொழியிலிருந்து தமிழில் எழுதப்பட்டவை. மற்றுஞ் சில இஸ்லாத்தைப் பற்றி எழுந்த பாரசீக நூல்களைத் தழுவியவை. இன் னுஞ்சில அறபு எழுத்தில் எழுதப்பட்டவை. இந்த வசன நூல்கள் இஸ்லாத்தின் அடிப்படைக்கொள்கைகளை விளக்கும் பொருட்டு எழுந்தன. இந்த நூல்களினல் முஸ்லிம் பொதுமக்கள் அடைந்த பயன் அளப்பில. அறபு மொழிப் பயிற்சி இல்லாதார்க்கு இஸ்லாத்தைப் பற்றி அறிவதற்கு இந்த வசன நூல்கள் பெரிதும் பயன்படுகின்றன. -
விவாத நூல்கள் வட இந்தியாவில் முஸ்லிம்களுக்கிடையே உண்டாய விவாதங்கள் மிகப் பல. அவை போன்று தமிழ் நாட் டிலே நடைபெற வில்லை. தமிழ் நாட்டு முஸ்லிம்களி டையே இஸ்லாத்தின் பல்வேறு குழுவினர்கட்கிடையே இத்தகைய உரையாடல் கள் எழுந்தன. இந்தக் குழுவினர்க்கிடையே இஸ் லாத்தின் தர்க்கம் அடிப்படைக்கொள்கைகளைப் பொறுத் தவரையில் வேற்றுமைகள் தோன்ற வில்லை. சிற்சில இடங்களில் கருத்து வேறுபாடுகள் எழுந்

Page 52
100 இஸ்லாமியத் தென்றல்
தன. இந்தக் கருத்து வேறுபாடுகளை வைத்துக் கொண்டு பற்பல குழுவினரும் தர்க்கத்தில் ஈடுபட்ட னர். இத்தகைய உரையாடல்களினல் பற்பல நூல்கள் வெளியாவதற்குக் காரணமாய் விளங்கினர்.
கண்டன நூல்கள்
தமிழ் நாட்டிலே குடியேறிய முஸ்லிம்கள் தம் மதத்தைப் பரப்பப் பெரிதும் முயன்றனர். இங்ங்ணம் சமயத் தொண்டு புரிவதைத் திருப்பணி என்றுகருதி னர். இந்தத் துறையில் ஈடுபாடுகொண்டிருக்கும் பொழுது பிறமதக் கண்டனத்தில் இறங்கவும் தலைப் பட்டனர். தமது மதக் கொள்கைகளை நிலைநாட்டி அவற்றிற்கு முரணுனவை எனக் கருதிய வற்றைக் கண் டிக்க முற்பட்டனர். இதன் ப யன க பிறமதம் வசன நூல்கள் பல எழுந்தன. அவை பெரும்பாலும் இஸ்லாத்துக்கும் கிறித் தவத்துக்கும் இடையே எழுந்த வாத விவாதங்களிலே தோன்றின. இத்தகைய வசன நூல்களினல் உரை நடை வளம் பெற்றது. இவற்றினுல் உண்டாய பயன் அளப்பில.
இலக்கிய நூல்களைப் பொறுத்தவரையில் கருத்து வேற்றுமைகள் உண்டாவது இயற்கையே. பெரும் பாலும் ஒரே நூலுக்கு உரை எழுதும் உரையாசிரியர் கள் இருவர் சிற் சில இடங்களில் பொருள் கூறும் பொழுது தத்தம் கருத்து வேறுபாடுகளினல் பல வசன நூல்கள் முஸ்லிம்களிடையே மலிந்தன. 2 60) குலாம் காதிறு நாவலர் சீருப்புராணத் தின் நபியவதாரப் படலத்துக்கு உரை எழுதினர்; இது எழுதிப்பத்தாண்டுகளின் பின்னரே அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த உரையை எல் லோரும் விரும்பிப்படித்தனர். அவர்களுள் பறங்கிப்

960)T rs60) L 101
பேட்டையைச் சேர்ந்த காதிறு அசன மரைக்காயர் என்பவரும் ஒருவர். அந்த உரையில் பிழை இருப் பதைக்கண்டு அந்தப் பிழைகளை எடுத்துக்காட்டி, அவற்றைத் திருத்தி சீரு நபியவதாரப்படலம் உரை கடிலகம் என்ற பெயருடன் ஒரு புது உரையை வெளி
யிட்டார். இங்ங்ணம் தர்க்கம் நீண்டு கொண்டே சென்
றது. பல வசன நூல்கள் தோன்றின. முஸ்லிம்மக் கள் இஸ்லாத்துக்கு முரணுன பல பழக்க வழக்கங்களைப் பின்பற்றி வந்தமையால் அவற்றைக் கண்டிக்குமுகமாகப் பல வசன நூல்கள் எழுந்தன.
மொழி பெயர்ப்புகள் முஸ்லிம் மக்கள் சீரிய முறையில் தத்தம் வாழ்க் கையை நடத்துவதற்கு இஸ்லாம் சட்டங்களை இயற்றி உள்ளது. கோட்பாடுகளை அளித்துள்ளது; கட்டளை களைப் பிறப்பித்துள்ளது; ஒழுக்கமுறை சட்டம் களை நிலைநாட்டி உள்ளது. இவற்றைப் பற்றிய நூல்கள் முஸ்லிம் மக்களின் புனித மொழியான அறபியில் பல நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. அறபு ' மொழியில் பாண்டித்தியம் அற்ற தமிழ் நாட்டு முஸ்லிம் மக்கள் அவற்றை எளி தில் அறிந்து கொள்ளும் வண்ணம் தமிழ் நாட்டு முஸ் லிம் அறிஞர் அவற்றைத் தமிழில் எழுதினர். அத்த கைய சட்டநூல்களைத் தமிழில் மொழி பெயர்த்தனர். ஒரு முஸ்லிம் பிறந்தது முதல் இறக்கும் வரை எந் தெந்த முறைகளில் ஒழுக வேண்டும் என்பதை அவை எடுத்துக்காட்டுகின்றன. அரசாட்சி முறை எங்ங்னம் அமைய வேண்டும் என்று இயம்புகின்றன. அரசியல் சட்டங்களும், சமூகச்சட்டங்களும் எவ்வாறு இயற்றப் படல் வேண்டுமென்று குறிப்பிடுகின்றன. மக்களின் அன்ருட அலுவல்களை எவ்வாறு நடத்த வேண்டு மென்று கட்டளை பிறப்பிக்கின்றன. தமிழில் எழுதப்

Page 53
102 இஸ்லாமியத் தென்றல்
பட்ட இத்தகைய வசன நூல்கள் சென்னை மாகாணத் திலும் இலங்கையிலும் வாழும், அறபு மொழியில் பயிற்சி பெற்ற, தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக் - காகவே எழுதப்பட்டன என்று ஒவ் திருக்குர்ஆன் வொரு நூலிலும் குறிப்பிடப்பட்டுள் . . ளது. ஆ. கா. அப்துல் ஹமீது பாகவி திருக்குர்ஆன் முழுவதையும் தமிழில் மொழி பெயர்த் தார். இஸ்லாமியப் பெரியார்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகள் எழுதப்பட்ட வசன நூல்களும் முஸ்லிம் மக்களிடையே வழங்குகின்றன.
கதைகள்
அறபிகள் தமது ஓய்வு நேரங்களைக் கதை சொல் வதில் கழித்தனர். அத்தகைய கதைக்ள் பொழுது போக்கிற்கு மட்டுமல்லாமல் இஸ்லாமிய போதனை களைப் புகட்டும் வாயில்களாகவும்
கிஸ்ஸா அமைந்தன. அந்தக் கதைகளை- அறபுப் பெயராகிய- கிஸ்ஸா’ என்று வழங் கலாயினர். இஸ்லாத்தைப் பாமர மக்கள் எளிதில் அறிந்து கொள்வதற்கு இத்தகைய கிஸ்ஸா என்ற வசன நூல்கள் பெரிதும் பயன் பட்டன.

சமயதத்துவமும் ஒழுக்கநெறியும்
முஸ்லிம் புலவர்களால் எழுதப்பட்ட நூல்களுள் மிகப் பெரும்பாலானவை இஸ்லாமிய அடிப்படையில் தோன்றினவெனினும் இஸ்லாமிய சமய தத்துவத்தை யும் நன்னெறி ஒழுக்க முறைகளையும் மாத்திரமே கூறும் தமிழ் நூல்களும் உள்ளன.
வேதபுராணம்
வேதபுராணம் பெரிய நூஹ் ஒலியுல்லாஹ்வினல் எழுதப்பட்டது. இந்நூலில் இஸ்லாத்தின் ஆழ்ந்த சித் தாந்தக் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. அத்தகைய ஒரு செய்யுள் பின்வருமாறு :
கையுங் காலு மில்லாத வேடன்காணும் வில்லு மம்புமில் லாமலே
தைக்கவொருமான யெய்துவாட்டித்
தலைமே லொடுதட்டி யெடுத்துவைத்தான்
உய்யுமவன்மகட்கெட்டாமையா லுயர மேல்நின்று கெட்டில்லாத
எய்யும் பூமியை யெட்டிவாங்கி
யெட்டித் தாழநின் றெடுத்துக்கொண்டான்
(தெளஹlதுப் படலம்: 4)
இப்பாட்டில் உருவகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள அழகைக் காணலாம்.
மஅரிபத்துமாலை
இஸ்லாமிய சமய தத்துவங்களைக் கூறும் இன்னெரு நூல் மஅரிபத்துமாலை. இதன் ஆசிரியர் தற்கலைப் பீர் முகம்மது சாகிபு அவர்கள். மஅரிபத்துமாலை பொருட் பால், அருட்பால், காமப்பால் என்று மூன்று பிரிவு களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. -
முப்பால்
பொருட்பாலில், கலிமாவில் இருக்கும் அறபு எழுத்துக்களின் தாத்பரியம் விவரிக்கப்பட்டுள்ளது.உடல் நலக்குறைவு காரணமாகத் தொழுகையை நிறைவேற்ற முடியாதவர்கள் எவ்வாறு தொழுகை நடத்த வேண்டும் என்பதை ஆசிரியர் அருட்பாலில் குறிப்பிடுகிருர். மூன் ருவதான காமப்பாலில் சர்வலோகப் படைப்புக்களின் படிமுறைத் தோற்றத்தின் பல்வேறு பருவங்களைப் பற்றிக் கூறப்படுகின்றது. -

Page 54
104 இஸ்லாமியத் தென்றல்
f56motsition 2)
இஸ்லாமிய சமய சித்தாந்தங்களைக் கூறும் ஒரு மாலை இது. இஸ்லாமிய சமய சித்தாந்தங்களின் எல் லாப் பிரிவுகளையும் பற்றி இந்நூல் குறிப்பிடுகின்றது. இந்நூல் இலங்கையில் வாழ்ந்த தலைசிறந்த அறபு அறி ஞர்களுள் ஒருவரான வேர்விலை செய்கு முஸ்தபா ஒலி யுல்லாஹ்வினல் இயற்றப்பட்டது. இந்நூலுக்கு இவ் வாசிரியரின் புதல்வர் சிறந்த ஒர் உரையை எழுதியுள் ளார். மூலமும் உரையும் அறபு எழுத்துக்களிலே எழுதப்பட்டுள்ளன.
சு'அபில் ஈமான்
இந்நூல் அறபு எழுத்துக்களிலும் தமிழ் எழுத் துக்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. ‘ஈமானின் (நம் பிக்கையின்) கிளைகள்' என்பதே சு'அபில் ஈமான் என்ப தன் பொருளாகும். எனவே இந்நூல் ஈமானின் பல் வேறு அம்சங்களை நுண்ணிதாக விவரிக்கின்றது. இந் நூல் மக்காநாட்டைச் சேர்ந்த ஜமாலுத்தீன் புலவரால் எழுதப்பட்டது. இதன் சிறப்பியல்களில் ஒன்று இந் நூலின் அத்தியாயங்கள் "கொம்புகள்’ என்று பிரிக்கப் பட்டிருத்தலேயாகும். இங்ங்ணம் இந்நூலில் எழுபத் தாறு கொம்புகள் இருக்கின்றன. முதற் கொம்பில் கலிமா விவரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஈமானின் ஒவ்வொரு பிரிவும் பல்வேறு கொம்புகளில் விவரிக்கப் பட்டுள்ளது.
லாஇலாஹ இல்லல்லாஹ்
இவ்வறபுச் சொற்றெடரில் பன்னிரண்டு அறபு எழுத்துக்கள் உள்ளன. ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வோர் அறிவைக் குறிப்பிடுகின்றது என்பர். சு'அபில் ஈமானில் இச்சொற்ருெடர் பன்னிரண்டு பறுளுகளை - கட்டாய மாகச் செய்ய வேண்டியவற்றை - கொண்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சு'அபில் ஈமானின் ஆசிரியரின் கூற்றுக்கிணங்க இப்பன்னிரண்டு பறுளுகளும் அகப் பறுளுகள் ஆறும் புறப்பறுளுகள் ஆறுமாகப் பிரிக்கப்
பட்டுள்ளன.

சமயதத்துவமும் ஒழுக்கநெறியும் 105
புறபபறுளு உடற்துாய்மை, தொழுகை, கொடை, நோன்பு, புனிதயாத்திரை, புனிதப்போர் என்பன புறப்பறுளா கக் கொள்ளப்பட்டுள்ளன. இதனைக் கூறப்போந்த ஆசிரியர்,
துன்றுசீர் மேனிதுயி தாக்கவும் தொழவும் பசித்தோர்க்கு கைறு செய்யவும் என்று மிறமளான் மாதந்தோறும்
இனிதாய் வருநோன்பு பிடித்திடவும் வென்றி பெற ஹஜ்ஜ" செய்திடவும்
வேறு புகல்கின்ற காபிருடன் பொன்றப் படைவெட்டிப் பொருதிடவும்
போற்று மிவை யாறும் புறப்பறுளே
( முதற் கொம்பு : 4) என்று விவரிக்கின்ருர்,
அகப்பறுளு அல்லாஹ்வைப் பூரணமாக நம்புதலும், பரலோ கத்தின்கண் கருத்துச் செல்லுதலும் எந்த இக்கட்டான நிலையிலும் பொறுமையுடன் இருத்தலும், அல்லாஹ் வின் பாதையில் கருமமாற்ற நாடுவதும், லெளகீக ஆசைகளை வெறுப்பதும், பாவ மன்னிப்பு என்ற தெள பாவை உரைப்பதும் என்ற இவ்வாறையும் அகப்பறுளு என்று குறிப்பிடுகின்ருர்,
யொருவன நன்ாகவே ಶಿಕ್ಸ್: விசுவ தீதிருப்பதும் போதத் தனக்குள்ளே காரியங்கள்
புகழு மவன்பர மென்பதுவும் வீதப் பலமிடை வந்ததுக்கு
விரும்பி சபூர்செய்து கொள்வதும் ஒது மவனேவல் கற்பினைகள்
உண்டாய் நடப்பதுக் குகப்பதுவும் மீறும் துனியாவில் ஆசைதனை
விட்டாங் கொழிவதும் தவ்பாத்தனைக் கூறி முடிப்ப தோடாறுமிவை
குலவு மகப்பறுளாகு மென்ருர்

Page 55
106 இஸ்லாமியத் தென்றல்
திருநெறி நீதம்
இஸ்லாமிய நன்னெறிகளைக் கூறும் இந்நூல் தற் கலைப் பீர் முகம்மது சாகிபால் இயற்றப்பட்டது. முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் சொத்துப் பங்கீடு முதலியன எவ்வாறு மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பன பற்றிய சட்டங்கள் இங்கு கூறப்பட்டுள்ளன. இச்சட்டங்கள் அனைத்தும் குர்ஆனையும் திரு நபி வாக் கையும் ஏனைய பிரதானகொள்கைகளையும் அடிப்படை யாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன என்பது ஈண்டு
குறிப்பிடத்தக்கது.
ஆசாரக்கோவை இஸ்லாமிய ஒழுக்க முறைகளைக் கூறும் இந்நூல் ஒருவேளை பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றன பெருவாயின் முள்ளியாரின் ஆசாரக் கோவையை முன் மாதிரியாகக் கொண்டு எழுதப்பட்டதாக இருக்கலாம். கீழ்க் கரையைச் சேர்ந்த அப்துல் மஜீது என்பவர் இந்நூலை எழுதியுள்ளார். ஆசாரக்கோவையைப் பாடு வதற்கு இலங்கை, கற்பிட்டியைச் சேர்ந்த முகம்மது தம்பி மரைக்காயர் பொருளுதவி புரிந்துள்ளார். இவ் விபரம் ஆசாரக் கோவையில் ஒவ்வொரு செய்யுளின் இறுதியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. நற் போதனைகள் பல ஆசாரக் கோவையில் இடம் பெற்றுள்ளன.
கல்வி கல்வியைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது அப்துல் மஜீத் புலவர்,
புத்தியானது கல்வியி னற்பிதா
பொறுமையே யதற்குத்தம மந்திரி பத்தியானது தானதன் பாக்கியம்
பரவுங் தாழ்மை யதற்குடுமானம் சுத்தியான ானதன் கண்ணியம்
ಶಿಕ್ಗಿ யதற்குத்துணை சத்தியத் 药6u@纽 முகம்மதுத்
தம்பி மாமரைக்காய சகாயனே
என்று கூறுகிருர்,

சமய தத்துவமும் ஒழுக்கநெறியும் 107
இங்கே ஆசிரியர் உருவக முறையைக்கையாண்டு கல்வியை ஒரு மனிதனுக உருவகப்படுத்துகிறார். கல்வி என்ற மனிதன் தகப்பணுகப் புத்தியை வருணிக்கிருர், கல்வி என்ற மனிதனுக்கு ஆலோசனை வழங்கக் கூடிய ஓர் அமைச்சன் வேண்டுமல்லவா? கல்விக்குரிய அமைச் சன் பொறுமையே என்று கூறுகிறார். கல்வி என்ற மனிதன் பெறக்கூடிய பெரும் பாக்கியம் பத்தி உடை மையேயாகும். மனிதனுக்குத் தாழ்மைக்குணம் அவ சியமாகின்றது. தூய்மையாயிருத்தல், கல்வி உடை யாரின் கண்ணியமான பண்பு என்பதை ஈண்டு ஆசிரி யர் சுட்டிக்காட்டியுள்ளார். எவருக்கும் உறுதுணை வேண்டும். அதுபோலவே கல்வி என்ற மனிதனுக்கு உறுதுணை நற்குணமாகும்.
வணிகரின் தன்மை
அப்துல் மஜீதுப் புலவர் இன்னெரு செய்யுளில் நல்ல வணிகரின் சிறந்த பண்புகளைக் குறிப்பிடுகின் ருர், வணிகர் நேர்மையில் தவறுவதில்லை; பணத்தை விட்டுக்கொடுக்கமாட்டார்கள்; ந யங் கிடைக்க வே பொருள்களை வாங்குவர்; விற்பர்; கவனமாகவே செலவு செய்வர்; தொடக்கத்தில் இட்ட முதலை செலவழிக் கவே மாட்டார்கள்; வீணருக்கு ஒரு காசுங்கொடுக்க மாட்டார்கள்.
நாணயம் பிசகார் கணக்கும் விடார்
நயங்கிடைத்திட வாங்குவர் விற்குவர் மாணமுன் முதலுக் கழிவின்றியே
மட்டதாய்ச் செலவானது செய்குவர் வீணருக் கொருகாசுங் கொடார்
விளங்கும் வர்த்தகர்தம் மரபிதுதான் நாணயக் தருசேம முகம்மதுத்
தம்பி மாமரைக்காய சகாயனே

Page 56
முஸ்லிம் ஞானிகள்
ஞானப்பாக்கள் பாடுபவரை - ஏறக்குறைய தமிழ் நாட்டுச் சித்தர் போன்றவரை - இஸ்லாம் சூபியாக்கள் என்று வழங்குகின்றது. சூபி என்ற சொல் அறபுப் பதமான சூப் (suF) என்றதிலிருந்தே பிறந்திருக்கிறது. 'சூப்' என்ருல் 'கம்பளி" என்று பொருள். அந்தக்கால ஞானிகளும் பெரியார்களும் கம்பளியினலான உடை களையே போர்வையாகக் கொண்டிருந்தனராம். இது மொழி நூல் அடிப்படையில் பொருத்தமாகத் தோன்ற வில்லை. எனினும் இதற்குப் பல சான்
சூபி றுகள் உள்ளன. இஸ்லாமிய சூபித் துவ ஆராய்ச்சி என்ற நூலில் சூபி யாக்கள் நபிகள் நாயகத்தின் நேரடியான வழித் தோன்றல்கள் என்றும் நபிகளாரின் உயரிய போதனை களின் உண்மைக் கருத்துக்களை அறிந்தவர்கள் என்றும் ஆர். ஏ. நிகல்ஸன் என்பவர் குறிப்பிட்டுள்ளார். எப். எப். ஆர்பத்நோட் என்பவர் தமது 'அறபு எழுத் தாளர்’ என்ற நூலில் சூபித்துவத்தைப் பொறுத்த வரையில் அதன் கொள்கைகளின் ஆரம்பத்துக்குக் காரணமாயிருந்தவர் முகம்மது நபி (சல்) அவர்களின்
தோழர்களுள் ஒருவரும் கி. பி. 648ல் மாயமாய்
மறைந்தவருமான உவைஸ"சல் கறணி என்பவரே என்று கூற இடமுண்டு எனக் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய சூபியாக்கள் குழாத்தில் சேர்க்கக்கூடிய முஸ்லிம் பெரியோர்கள் தமிழ் நாட்டிலும் வாழ்ந்தார் கள். தமிழ் இலக்கிய வரலாற்றினை நோக்கு மிடத்து சைவநாயன்மார்கள் தமிழுக்கு ஆற்றியபெரும்தொண்டு அந்த வரலாற்றிலே முதன்மையான இடத்தைப்பெறு கின்றது. அவர்கள் தமிழ் மொழிக்குப் புத்துயிரளித் தனர். தமிழ் மொழி வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டனர். அவர்களின் பண்ணமைந்த திருப்பாக்கள் தமிழ்ப்பா வளத்தின் ஒரு பெரும் பகுதியாக அமைந்திருப்பதை நாம் காண்கின்ருேம்.

முஸ்லிம் ஞானிகள் 109
தமிழ் நாட்டில் வாழ்ந்த முஸ்லிம் ஞானிகளை ப்
- சூபியாக்களை - பொறுத்தவரையிலும் இந்தக் கூற்றும்
ஒருவாறு பொருந்தும் எனக்கொள்ள
பாவளம் லாம். முஸ்லிம் மக்களின் தமிழ்ப்பாவ
ளம் பெருகுவதற்கு அவர்களின் சலியா உழைப்பே காரணமாகும்.
தமிழ் நாட்டு முஸ்லிம் ஞானிகள் அவர்களின் பக்தி ததும்பும் ஞானப்பாக்கள் முஸ்லிம் தமிழ் இலக்கியத்திலே ஒரு பெரும் பகுதியாகக் காட்சி யளிக்கின்றன. அவை தனிச் சிறப்புப் பொருந்தியவை. அவற்றை இயற்றிய முஸ்லிம் ஞானிகள் சித்தர் -தமிழ் நாட்டிலே சித்தர்- என வழங் கப்படுவோர் மிகப் பலர். முஸ்லிம் ஞானப்பாக்களுள் பெரும்பகுதியைப் பாடியவர்கள் குணங்குடி மஸ்தான் சாகிபு, காலங்குடி மச்சரேகைச் சித்தன், தற்கலைப் பீர் முகம்மது சாகிபு என்னும் மூவராவா.
மஸ்தான் சாகிபு
அந்த மூவருடைய பாடல்களுள்ளும் மஸ்தான் சாகிபின் பாடல்களே முக்கியத்துவம் வாய்ந்தவையா கக் கவனிக்கப்படுகின்றன. அவரது பாக்களே மஸ்தான் சாகிபு பாடல் என வழங்கப்படுகின்றன. அவரது முழுப் பெயர் சுல்தான் அப்துல் காதிறு லெப்பை ஆலிம் என் பது. மஸ்தான் என்ற சொல் சித்தர் என்ற பொருளிலே வழங்கப்படுகின்றது. அவர் 1813ம் ஆண்டில் உலக ஆசைகளைத் துறந்தார் என்று குறிப்பிடப்படுகின்றது. பல்வேறு சமயங்களைச் சேர்ந்த சித்தர்கள் தத்தமது அனுபவங்களில் உச்ச நிலையை அடைந்தபொழுது ஏறக் குறைய ஒரே பாணியில் பாடுவர். ஒரே விதமான பாக் களையே பாடுவர். ஆனல் பல்வேறு ஞானிகள் சமயத்தைச் சேர்ந்த வெவ்வேறு ஞானி களின் பக்திப்பாடல்களில் அவரவர்களுக்கு

Page 57
1 10 இஸ்லாமியத் தென்றல்
உரிய சிறப்பியல்புகள் இல்லாமல் இல்லை. அவரவர் களின் சமயக் கோட்பாடுகள் அந்தப் பாடல்களிலே இடம் பெறுகின்றன.
மஸ்தான் சாகிபும், தாயுமானவரும் இந்த உண்மையைக் கருத்திற் கொண்டு நோக்கு மிடத்துத் தாயுமான சுவாமிகளின் திருப்பாடலுக்கும் முஸ்லிம் ஞானிகளின் பாடல்களுக்கும் பல ஒற்றுமை கள் இருக்கக் காணலாம். மஸ்தான் சாகிபின் பாடல் களுள் பெரும்பாலானவற்றுள் இஸ்லா ஒப்புமை மிய கோட்பாடுகளும் அறபுச் சொற் களும் இடம் பெற்றுள்ளன. இவற்றைக் கொண்டே மஸ்தான் சாகிபு பாடலைத் தாயுமான சுவாமிகளின் பாடலிலிருந்து வேறுபடுத்தக் கூடியதாக இருக்கின்றது. மஸ்தான் சாகிபு பாடலில் இந்து சமயக் கோட்பாடுகளும் இடம் பெற்றுள்ளன. இங்ங்ணம் இஸ்லா மிய அடிப்படையில் எழுந்த மஸ்தான் சாகிபு பாடல் களுள் இந்து சமயக் கோட்பாடுகள் புகுவதற்கு மஸ்தான் சாகிபு வாழ்ந்த சுற்ருடலே காரணமாக இருக்கஜாம். மஸ்தான் சாகிபு பாடலிலே உள்ள மனேன்மணிக் கண்ணி, நந்தீஸ்வரக்கண்ணி முதலிய பகுதிகளிலே இவ்வாறு இந்து சமயக் கருத்துக்கள் புகுத்தப்பட்டிருப் பதைக் காணலாம். தாயுமான சுவாமிகள் தமது பராபரக்கண்ணியில்:
எண்ணுத வெண்ணமெல்லா மெண்ணியெண்ணி யேழை நெஞ்சம் புண்ணுகச் செய்ததினிப் போதும் பராபரமே
என்று பாடியுள்ளார். மஸ்தான் சாகிபும் அதே கருத் துக்களை அமைத்துத் தமது பாடலில் உள்ள நிராமயக் கண்ணியில்:
எண்ணுத வெண்ண மெல்லா மெண்ணி யிடைந்து மனம் புண்ணுவதற்கோ புகுந்தேநிராமயமே என்று பாடியுள்ளார். இன்னெரு கண்ணியில் மனித உடம்பை நீரிலே உண்டாகும் ஒரு குமிழிக்கு ஒப்பிட்டு மஸ்தான் சாகிபு, நிரர்மயக்கிண்ணியில்:

முஸ்லிம் ஞானிகள் 1 11
நீராற்றிரள் குமிழி நேர்மை தருமிவ்வுடலம்
யாரார்க்குக்கை கொடுத்ததையா நிராமயமே என்று கூறுகிருர், பைங்கிளிக்கண்ணியில் தாயுமான சுவாமிகள்:
நீரிற் குமிழி போன்ற வுடனிற் கையிலே சாசுவதஞ்
சேர்க்க வறியாமற்றிகைப்பேனே பைங்கிளியே
என்று பாடுகின்றர். சிவஞான சித்தியாரில் இந்துமதக்
கிரியை என்று குறிப்பிடப்படும் ஆத்ம சுத்தி, ஸ்தான
சுத்தி, மந்திர சுத்தி, திரவிய சுத்தி, தேவ சுத்தி ஆகிய பஞ்ச சுத்தியைப்பற்றி மஸ்தான் சாகிபு தமது நிராமயக் கண்ணியில்
பஞ்ச சுத்தி செய்து பழவடி யாரென்ன வுன்னை
யஞ்சலி செய்தே யடைந்தே நிராமயமே என்று குறிப்பிட்டுள்ளார். பராபரக்கண்ணியில் இந்தக் கிரியைபற்றித் தாயுமான சுவாமிகள் பின்வருமாறு குறிப்பிடுகின்றர்.
பஞ்ச சுத்தி செய்து நின்னேப் பூசை செய்தால்
* விஞ்சிய ஞானம் விளங்கும் பராபரமே
மச்சரேகைச் சித்தன் காலங்குடி மச்சரேகைச் சித்தன் இன்னெரு தமிழ் நாட்டுச் சூபி. உள்ளங்கையில் ஆண்மகவு உண்டென் பதைக் குறிக்கும் இரேகை வகை மச்சரேகை எனப் படும். அஷ்டமா சித்தி அடைந்தோரைச் சித்தர் என் பர். காலங்குடி என்ற ஊர் திருநெல்வேலி மாவட் டத்தில் உள்ளது. செய்யிது அப்துல் வாரிது ஆலிம் ஐத றுாஸ் என்பது அவரது இயற்பெயர். பெயர் இவர் சுதேச வைத்தியர். ஆங்கில வைத்திய முறையைப் பற்றி நன்கு அறிந்தவர். திருக்குர்ஆனில் கூறப்படும் உண்மைகளைப் படித்தவர். உபநிடதத்தைப் பற்றியும் அறிந்தவர்.இவற் றைத் தமது பாடல்களில் காலங்குடி மச்சரேகைச் சித் தன் அமைத்துள்ளார். இவரது பாடல்கள் காலங்குடி மச்சரேகைச் சித்தன் திருப்பாடல்கள் என்று தொகுக்

Page 58
1 12 இஸ்லாமியத் தென்றல்
கப்பட்டுள்ளன. இந்தத் திருப்பாடல்கள், ஒவ்வொன்றும் நூறு பாடல்க%ளக் கொண்ட பத்து சதகங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு சதகமும் பப்பத்துப் பாக்களைக் கொண்ட பதிகங்களாகவும் சதகம், பதிகம் பிரிக்கப்பட்டுள்ளன. சைவ சித்தாந்த முறைப்படி திருப்பாடல் பதிகங்கள்பெய ரிடப்பட்டுள்ளன. அறபுத்தலையங்கங்களைக் கொண்டு ஹம்துப்பதிகம், அலிபுப்பதிகம் என்றும் பதிகங்கள் வழங்கப்படுகின்றன. திருவருட் கண்ணிகளும் இந்தப் பாடலில் இடம் பெற்றுள்ளன. ஞானிகளின் பக்திப் பாடல்களில் காணப்படும் ஆனந்தக் களிப்பும் இந்த நூலில் அமைந்துள்ளது. நல்லவர்களிடையேயும், பெரி யவர்களிடையேயும் சாதி மத பேதங்களைக் காணமுடி யாது என்று காலங்குடி மச்சரேகைச் சாதி,மத,பேதம் சித்தன் தமது மோட்ச சதகத்திலுள்ள ஹம்துப் பதிகத்தில் 'சாதி மத பேத மோ டோது பல சாத்திரம் சாது சங்கத்தில் இல்லை’ என்று பாடுகிருர், நித்தியபரப் பதிகத்தில் முகம்மது நபி (சல்) அவர்களைப்பற்றியும் அவர்களுக்கு முன் னிருந்த நபிமார்களைப்பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன. அறம், பொருள், இன்பம், வீடு என்பனவற்றிலுள்ள உண்மைகளை அறிஞர்களே அறிவர் என்றும் அறிவிலி கட்கு அவை கள்வர்கட்கு வெளிச்சம் போலாகும் என்றும் கருத்துக்களை அமைத்துச் சதனப் பதிகத்தில்:
அறம் பொருளின்பம் வீடாமரும்
பொருளறிந் தோர்க்குண்மை திறம் பொருளறியார்க் கெல்லா
திருடர்க் கொளி போலாக காலங்குடி மச்சரேகைச் சித்தன் பாடியுள்ளார். 'திரிபுடி’ ད། ནི་ - என்ற சொற்ருெடர் இந்தத் திருப் திரிபுடி பாடல்களிலே பல இடங்களிலே அமைந் துள்ளன. அறிவிற்குரிய ஞாதிரு, ஞான, ஞேயங்கள் திரிபுடி எனப்படுகின்றன. அறிதற்

முஸ்லிம் ஞானிகள் 113
qSSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSSqqSqSLASMSLASSASSASSASSASSLLAASLLLLSAAASS
கருத்தாவாகிய ஆன்மா ஞாதிரு எனப்படும். ஞானம் அறிவு, அறியப்படும் பொருள் ஞேயம் எனப்படும்" * ஞாதா ஞான ஞேய மோது திரிபுடி " என்று காலங் குடி மச்சரேகைச் சித்தன் ஏகபுகழ்ப் பதிகத்தில் பாடு கின்றர்.
பீர்முகம்மது சாகிபு சூபிகள் என்று வழங்கும் இஸ்லாமிய சித்தர்களுள் தற்கலைப் பீர்முகம்மது சாகிபு இன்னெருவர். தான் சிறு மலுக்கர் என்பவரின் புதல்வன் என்றும், கண் தெரி யாத குருடன் என்றும் "சிறு மலுக்கர் மகிழ்ந்த செல்வ னிரு கண்ணற்றவன் என்றும் ஒரு பாடலில் பீர்முகம்மது சாகிபு குறிப்பிடுகின்ருர். இவர் ஞானப் ஞானப்பாடல் பாடல்கள் பலவற்றைப் பாடி பக்தி ததும்பும் பாக்களைக் கொண்ட பல நூல் கலைத் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு அளித்துள்ளார். இவர் பாடிய ஞானமணிமாலையில் இஸ்லாமிய மூல மந்திரமான 'கலிமா வின் முக்கியத்துவத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்ருர். இந்த மூல மந்திரத்தில் பொதிந் துள்ள பல கருத்துக்களை உருவகங்களுடன் பாடியுள் ளார்; ஞானமணிமாலையில் இடம் பெற்றுள்ள:
பெருமைக் குரியானைப் பிறப்பிறப்பொன் றில்லான யருமைப் பெரியானென் ருர்சொன்னுர்- பெருமையுறுங் காணிகவ கோடிதரும் ஹக்காமெஞ்ஞானமறைப் பேணியுள் ளத்தே பிடி. என்ற பாடலைக் காளமேகப் புலவரால் பாடப்பட்ட
ஆலங் குடியானே யாலால முண்டானை ஆலங் குடியானென் ருர்சொன்னுர்-ஆலங் குடியானே யாயிற் குவலயத்தோ ரெல்லாம் மடியாரோ மண்மீதிலே
என்ற தனிப்பாடலுடன் ஒப்பிடமுடியுமல்லவா? பிஸ்
மில்குறம் பீர்முகம்மது சாகிபால் பாடப்பட்ட இன் னெரு நூல். ஞானப்புகழ்ச்சி இந்த ஆசிரியரின் வே ருெரு நூல். அல்லாஹ்வைப் புகழ்ந்து பாடப்பட்டது இந்த நூல். இந்து மதக் கொள்கைகளும் இந்த நூலில்

Page 59
14 இஸ்லாமியத் தென்றல்
இடம் பெற்றுள்ளன. தேவாரத் திருப்பாடல்களைப் படித்த ஒருவருக்கு ஞானப்புகழ்ச்சியில் தேவாரம் உள்ள பாடல்கள் முன்னையவற்றுடன் பெரிதும் ஒத்திருப்பது புல்னகும். தேவாரம் சிவபெருமானப்பற்றிப் புகழும்போது ஞானப் புகழ்ச்சி அல்லாஹ்வைப் புகழ்கின்றது. இரண்டு நூல் களிலும் ஏறக்குறைய ஒரே விதமான கருத்துக்கள் இடம பெற்றுள்ளன. " அகர முதலெழுத்தெல்லாம் ' என்று திருக்குறள் தொடங்குகின்றது. ஞானப்புகழ்ச்சி " அகர முதனின்ற ஹறுபு என்று தொடங்குகின்றது. ஹறுபு என்ற அறபுச் சொல் எழுத்தைக் குறிப்பிடுகின்றது. இன்னெரு சந்தர்ப்பத்தில் ஞானப்புகழ்ச்சியில் அல்லாஹ் இயற்கையிலே இருப்பதாக
கானுமெழு காடு முயர் கானகமு நீயே காசினியும் வானுலகும் கடல்மலையு நீயே என்று பாடுகின்றர். அப்பர் சுவாமிகளும் தமது தேவா ரப் பாடலில்,
கனத்தகத்துக் கடுஞ் சுடராய் நின்ருய் நீயே - கடல்வரை வானுகாய மானுய் நீயே என்று குறிப்பிட்டுள்ளதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. பீர்முகம்மது சாகிபால் எழுதப்பட்ட வேருெரு நூல் ஞானக்குறம். சித்தர் ஞானக் கோர்வையில் பீர்முகம் மது சாகிபின் ஒரு நூல் இடம் பெற்றுள்ளது. ஞான ரத்தினக் குறவஞ்சி என்பது அந்த சிங்கி,சிங்கன் நூல். நாடக இலக்கணங்கள் அமைந் தது அந்த நூல். சிங்கிக்கும் சிங்கனுக் குமிடையே நடைபெறும் ஓர் உரையாடல் போன்று காட்சி அளிக்கின்றது. திருமெய்ஞ்ஞானசர நூல், ஞான முச்சுடர்ப்பதிகங்கள், ஞான நடனம், ஞானப்பூட்டு, ஞானப்பால், திருநெறிநீதம், மஃறிடத்துமாலை முதலி யன பீர்முகம்மது சாகிபுப் புலவரால் பாடப்பட்டன. ஏனைய ஞானிகள் இவர்களேயன்றி சிறிய அளவில் ஞானப்பாடல்களைப் பாடிய சித்தர்களும் வாழ்ந்தனர். அவர்களுள் ஒருவரான

முஸ்லிம் ஞானிகள் 115
அப்துல் கனி சாகிபு திரு மெய்ஞ்ஞானப்புலம்பற்கண் ணிகள் என்ற நூலைப் பாடியுள்ளார். புலம்பற்கண்ணி அதனைப் பாடி உண்மையை அறிய விரும்புகின்றர். இலங்கை வேர்விலை யைச் சேர்ந்த செய்கு முஸ்தபா என்பவரும் பல
ஞானப் பாடல்களைப் பாடியுள்ளார். ஞான வாக்கியம்
என்ற நூலைச் செய்கு அப்துல் காதிறு செய்கு முஸ்தபா வாலை மஸ்தான் என்பவர் இயற்றி * யுள்ளார். செய்கு முகம்மது அப்துல்லா சாகிபு என்பவர் மெஞ்ஞான மனதலங்காரப் புகழ்ச் சியில் அல்லாஹ்வையும், முகம்மது நபியையும் ஏனைய இஸ்லாமியப் பெரியார்களையும் புகழ்ந்து பாடியுள்ளார். மனேன் மணியைப் பற்றிப் பாடியுள்ள பதிகத்தில் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் மற்றுநளினமுறுங் தூய வியாழன் வெள்ளி சனி நாளுங் துலங்கு திங்கள் நேயமுகம்மது வக்கும்பனிரண்டு நேமமுடன் வாயிற்று திக்கும் நிமிடம் வருவாய் மனேன்மணியே என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பாடலைத் திரு ஞானசம்பந்தரின் பின்வரும் தேவாரப் பாடலுடன் ஒப்பிடமுடியுமல்லவா?
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக்க நல்ல வீணை தடவி மாசுறு திங்கள் கங்கை முடிமேலணிந்தே
னுறமே புகுந்த வதனல் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டு முடனே ஆசறு நல்ல நல்ல வவை நல்ல நல்ல
வடியார்க்கு மடியேன். சித்தர் ஞானக்கோவையில் அழுகுணி சித்தர்பாடல் என்று ஒரு பகுதி இருக்கின்றது. அந்தப் பாடலை ஞான ஒப்பாரி என்று இன்னெரு நூலில்வெளி அழுகுணி யிடப்பட்டுள்ளது. அழுகுணிசித்தர் பா டல் யாரால் பாடப்பட்டது என்பது பற்றிச் சித்தர், ஞானக்கோவை என்றும் குறிப்பிட வில்லை. ஞான ஒப்பாரியோ அதன் ஆசிரியர் செய்யது அலி வாலை குருமஸ்தான் என்று குறிப்பிட்டுள்ளது.

Page 60
அற புத் தமிழ்
இஸ்லாமிய அடிப்பட்ையில் எழுந்த தமிழ் நூல் களை அவை எழுதப்பட்டுள்ள் லிபியைப் பொறுத்து இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
659 முதலாம் பிரிவில் தமிழ் எழுத்துக்களில் எழுதப்பட்ட தமிழ் நூல்கள் அடங்கும். இரண்டாம் பிரிவைச்சேர்ந்த தமிழ் நூல்கள் அறபு
எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன. * .نتي =
பிழையான கருத்து சில சந்தர்ப்பங்களில் அறபு எழுத்துகளில் எழுதப் பட்ட நூல்களை அறபுத் தமிழ் மொழியில் எழுதப்பட்ட நூல்கள் எனக் கூறுவர். அறபுத் தமிழ் என்ற ஒரு மொழி இன்மையால் இது பொருந்தாக் கூற்ருகும். தமிழ் இலக்கண வரம்புக்குட்பட்டே அறபு எழுத்துக் களில் எழுதப்பட்ட தமிழ் நூல்களும் அமைந்துள்ளன. ஆதலினல் சில தமிழ் நூல்கள் அறபு இலக்கணவரம்பு எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன என்பதை ஆதாரமாகக் கொண்டு அந் நூல்கள் எழுதப்பட்டுள்ள மொழியை அறபுத் தமிழ் என்று கூறுவது தவருனதாகும்.
தமிழ் நாட்டு முஸ்லிம்கள் தமிழ் நாட்டிலே தமிழ் மொழி பேசும் முஸ்லிம் மக்களிடையே அறபு லிபி பயிலப்பட்டு வருகின்றது. பெரும்பாலும் எல்லா முஸ்லிம்களுக்கும் குர்ஆன் ஒத முடியுமாதலால் தமிழ் நூல்களை அறபு எழுத்தில் எழுதுவதன் மூலம் அவற்றை அறிய அவர்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. ஆதலினல் தமிழ் பேசும் முஸ்
*A.
 

متن
w
அறபுத் தமிழ் 117
லிம்கள் மாத்திரமே இஸ்லாமிய அடிப்படையில் எழுந்த தமிழ் நூல்களை அறபு எழுத்துக்களில் எழுதத்தலைப் பட்டனர்.
பாளி பொதுவாக ஒரு மொழியில் அதற்குரிய லிபி
அல்லது எழுத்துக்கள் இல்லாவிட்டால் அம்மொழி வேருெரு மொழிக்குரிய லிபியில் எழுதப்படுவது
சாதாரண வழக்காருகும். பாளி மொழிக்குரிய லிபி இப்பொழுது வழக்கிலில்லை. எனவே வெவ்வேறு நாடு களில் பாளி எழுத வெவ்வேறு லிபிகள் பயன் படுத்தப்படுகின்றன. இதன் பயனுக இலங்கையில் பாளி மொழி சிங்களத்தில் எழுதப் சிங்களம் படுகின்றது. பர்மாவில் பாளி மொழி பர்மிய லிபியில் எழுதப்படுகின்றது. இவ்வாறு பாளி மொழியை எழுத வட இந்தியாவில் தேவநகரி எழுத்துக்களும் ஐரோப்பிய நாடுகளில் உரோமன் லிபியும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. * 、 துளுவம்
லிபி இல்லாத இன்னுெரு மொழி துளு அல்லது துளுவம். இது திராவிட இனத்தைச் சேர்ந்த மொழி யாகும். பண்பாடடைந்த திராவிட மொ ழி கள் ஆறனுள் ஒன்ருகும். இதன் பயணுக பேசில் திருச் சபையினர் தாம் மங்களூரில் பிரசுரித்த திருச்சபையினர் துளு நூல்களில் கன்னட லிபியையே உபயோகித்தனர் என கால்டுவெல் ஐயர் தமது ஒப்பிலக்கணத்தில் குறிப்பிடுகின்ருர். இப் பொழுது துளு மொழியை எழுதக் கன்னட லிபி உபயோகப் படுகின்றது
தமிழ் தமிழ் மொழியை எழுத அறபு லிபியை உபயோ கிக்க நேர்ந்தமையைப் பாளி மொழியின் நிலையுடனே துளு மொழியின் நிலைமையுடனே ஒப்பிடமுடியாது; ஏனெனில் தமிழ் மொழிக்கு அதற்கென உரிய ஒரு

Page 61
118 இஸ்லாமியத் தென்றல்
தனி எழுத்து வடிவு உண்டு. எனவே தமிழில் எழுந்த
இஸ்லாமிய நூல்களே அறபு எழுத்துகளில் எழுத நேர்ந்தமைக்குரிய காரணங்களை அறிய வேண்டு மல்லவா?
அறபு அறிஞர் அறபிலும் தமிழிலும் வல்ல முஸ்லிம் அறிஞர் இஸ்லாமிய சமயக் கொள்கைகளைச் சிறப்பாக- நுணுக் கமான இஸ்லாமிய சட்டங்க:ை- அறபு லிபியை உப யோகித்துத் தமிழில் எழுதுவது எளி கலைச்சொற்கள் தெனக் கண்டிருக்கலாம். இஸ்லாம் சமய சம்பந்தமான கலைச் சொற்களைத்
தமிழில் எழுதத் தமிழ் அரிச்சுவடியில் இருந்த எழுத்
துக்கள் போதுவதன்று என உணர்ந்திருக்கலாம். அவ் வாறு அறயியில் உள்ள இஸ்லாமிய கலைச் சொற்களைத் தமிழில் உள்ள எழுத்துக்களில் எழுதினல் அச்சொற் களின் மூலக் கருத்துகள் வேறுபட்டிருக்கும். அவற் றைத் தமிழில் மொழி பெயர்ப்பது கடினத்திலும் கடினமாகும். அத்தோடு அவ்வாறு மொழி பெய்ந்த் தாலும் கூட அக்கலைச் சொற்கள் உண்மையானகருத் துக்களை உணர்த்தியிருக்கும் என்று கூற முடியாது.
அறபு மொழி
முஸ்லிம்களின் புனிதமான மொழி அறபு மொழி யாகும். அறபு எழுத்துக்களை வாசிக்க ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்திருத்தல் வேண்டும். எனவே புனித மான மொழியில் எழுதப்பட்ட ஒன்றை முஸ்லிம்கள் புனிதத்தன்மை வாய்ந்ததாகக் கருதுவது இயற்கையே. எனவே தான் முஸ்லிம் தமிழ்ப் புலவர்களும் தாம் இயற்றிய தமிழ் நூல்களைப் புனிதமானவை என்று கருதுவர் என அவர்கள் எண்ணினர் போலும். மேலும் இஸ்லாம் எங்கெங்குப் பரவியதோ அங்கங் கெல்லாம் முஸ்லிம் ஆதிக்கத்தின் சர்வதேச அறிகுறி யாக அறபு மொழியும் அதன் லிபியும் இடம் பெற லாயின.
 
 

- அறபுத் தமிழ் 1 9
w
அறபு லிபி
உலகின் எல்லாப் பாகங்களிலும் அறபு எழுத்துக் கள் பேணப்பட்டு வருவதைக்காணலாம். இன்று பாரசீக மொழி அறபு லிபியை உபயோகிக்கின்றது. சில ஆண்டு களுக்கு முன்னர் துருக்கி மொழியும், அறபு எழுத்துக் களிலே எழுதப்பட்டு வந்தது. மலாய் மொழியின் 1. பழைய லிபியின் இடத்தை இப்பொழுது அறபு லிபி வகிக்கின்றது. பெர் பெர், சோமாலி மொமிகள் அவற்றின் பண்டைய எழுத்து வடிவங்களை இழந்து இப்பொழுது அறபு லிபியையே உபயோகிக்கின்றன. 'உருது மொழி கூட இன்று அறபு எழுத்துக்களிலே எழுதப்பட்டு வருகின்றது. மலையாள சோமாலி மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட முஸ்லிம்களும் தமது மலை யாள நூல்களை அறபு லிபியிலே எழுதுகின்றனர். முஸ்லிம்கள் தெலுங்கில் கூட சில சந்தர்ப்பங்களில் ஆpH லிபியைப் பயின்று வருவதாகக் கூறப்படுகின்றது.
ஸ்பானிய முஸ்லிம்கள் இந்தியக் குடா நாட்டில் அறபு லிபியில் தோன் றிய முஸ்லிம் தமிழ் இலக்கியத்தை சைபீரியக் குடா நாட்டில் தோன்றிய முஸ்லிம் ஸ்பானியரின் இலக் கியத்துடன் ஒருவாறு ஒப்பிடலாம். முஸ்லிம் ஸ்பா னிய இலக்கிய நூல்கள் பலவற்றுள் சொற்கள் ஸ்பா னிய மொழியைச் சேர்ந்தனவாய் இருக்கும் பொழுது பாவினம் பிரஞ்சு மொழியில் உள்ளது உருேமன்சு போன்று இருக்கின்றது. ஆனல் அவை அறபு எழுத்துகளிலே எழுதப்பட்டுள் ளன. கிறனடாவின் வீழ்ச்சிக்குப் பின்னரும் கூட ஸ்பானிய முஸ்லிம்கள் கிறித்தவ வழித்தோன்றல்களாக இருந்த போதிலும் உருேமன்சு மொழியைப் பேசிய போதிலும் அறபு எழுத்துக்களையே நூல்களில் உப யோகித்து வந்தனர்.

Page 62
. . . .
" . 120 - இஸ்லாமியத் தென்றல்
SSSqSSqSqLSSLSLSSLSqSLASLLASSqSqqS
فى هنا جهـة : ” ༡ -༧
(փգ 6ւյ60)Մ
-
எனவே அறபுத்தமிழ் மொழி என்று ஒன்று இல்லை யென்பதும் முஸ்லிம்களின் ஆதிக்கத்தின் சின்னமாகவே தமிழ் நாட்டில் அறபு மொழி உபயோகிக்கப்பட்டது என்பதும் சில பல வசதிகளையும் நன்மைகளையும் முஸ்லிம்கள் பயனடையக் கூடிய வாய்ப்புக்களையும் முன்னிட்டே இவ்வாறு அறபு லிபி தமிழ் நூல்களை எழுதப் பயன் படுத்தப்பட்டதென்பதும் அறபுத் தமிழ் என்று சர்வ சாதாரணமாக வழங்கப்படும் சொற் ருெடர் தமிழ் இலக்கணவரம்புகளுக்கமைய அறபு எழுத்தில் எழுதப்பட்ட தமிழ் மொழியே என்பதும் "' வெள்ளிடைமலை . .
.
+.1 . . . .
 
 
 
 
 
 
 
 
 

இந் நூலாசிரியர் ஈழத்துத் தமிழ் சிங்கள வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளர். இஸ் லாமிய இலக்கியத்தை விரிவாக ஆராய்ந்து முஸ்லிம்கள் தமிழுககாத் றிய தொண்டினை முதன் முதல;
நூலாக வெளியிட்டு விளக்க: பெருமை இவரையே சாகும்.

Page 63
- //
1மணிக்குரல் பதிப்பு இஸ்லாமியத் தென்றல்
. (1, 2,1ல் வஸ், எம்
இ தியாவுச்கம் 6 ன் கைக்கும் - சா, 41. இ வாடயர் - ழ்ெ இல கி! { {t 2ா : பழ்ல் பெற எ
இக்பாம் :
FFE)
- உன் அப்துல் கா
பம்
அமரகவி இல் சப்- தங் குந்த பல்சுவை நிரம்பப் பாட 80கள ன் - பெயர்ப்பு -1,
.

பக வெளியீடுகள்
விலை ரூபா 2-50
- ஏ. (இலங்கை) - - அந்த வரலாற். உடவள் மட - ஆற்றிய தனம் எடுத்துரைக்கும் நூல்
- தி: K 2 vi
பா? ரூபா - 5)
தா லெப்பை
இக் களஞ்சியமாக விளங்கும் 1. தமிழ்க் கதை - மொ.
- (அச் சில்)
3. 2. 2 பைர்
-2 - கார்