கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பன்னீர் வாசம் பரவுகிறது

Page 1
·
==--- |
『디 FL-,
『디 | ( ) |-|- | _ ,
No )__
 


Page 2

LIGjGjfi QITJb ШJOlji ljil
(சிறுகதைகள்)
மருதூர் ஏ. மஜித்
கல்முனை ஸாஹிறக் கல்லூரி
பழைய மாணவர் சங்கம்

Page 3
ஸாஹிரு வெளியீடு: 3 முதற் பதிப்பு: செப்டம்பர் 1979
உரிமை
ஆசிரியருக்கு
Góðav: 5. V-00
அட்டை அமைப்பு: எஸ். ஏ. ஜெலீல்
III, Illyll. I'll|||||||
(SHORT STORIES)
Author: Maruthoor A. Majeed (B. A. Hons.) Publishers: Kalmunai Zahira College O. B. A. Printers: Catholic Press, Batticaloa First Edition: September 1979 Price: Rs. 9-00

பன்னீர் வாசத்தோடெந்தன் கண்ணிர்த் துளிகளையும் கலந்து, மண்ணுலகை விட்டுப்பிரிந்த என் இனிய தந்தைக்கு
இந் நூல் சமர்ப்பணமே!

Page 4

பதிப்புரை
ஒர் இலக்கியப் படைப்பாளியின் ஆக்கங்கள் நூலுருப்
பெறும் பொழுது, அவன் எழுத்துலகில் நிலை கொண்டு விடுகின்றன். இலங்கையில் தேசியப் பத்திரிகைகள், சஞ்சி கைகள், ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்பன இலக்கிய வளர்ச்சிக்கு உதவுகின்றன. பல எழுத்தாளர்களைத் தோற்று விப்பதோடு, அவர்களைப் பிரபல்யம் அடையவும் செய்கின் றன. அவர்களது படைப்புக்கள் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவரும்போதுதான் இலக்கியவுலகில் நிரந்தர இடம் கிடைக்கின்றது.
நண்பர் மருதூர் ஏ. மஜீத் அவர்களும் பத்திரிகை கள், சஞ்சிகைகள், ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்பன வற்றில் ஏற்கனவே வெளிவந்த தமது சிறு கதைகளுள் பதி னென்றைத் தொகுத்து "பன்னீர் வாசம் பரவுகிறது" என் னும் சிறு கதைத் தொகுதியை வெளியிடுகிருர். மஜீத் அவர் கள் நாடறிந்த எழுத்தாளர், கவிஞர். புதுமைக் கருத்துக் களையும், சிந்தனைத் தெளிவையும் கொண்டவர். அக் கருத்துக் களின் வெளிப்பாடே இச் சிறுகதைகள்.
இத் தொகுப்பிலுள்ள சிறு கதைகள், அவரே கூறு மாற் போன்று, வெறுமனே வரட்டுக் கற்பனைகளல்ல. எங்கோ, என்ருே நடந்த சம்பவங்களின் அடிப்படையில் உருவானவையே. இவற்றுட் பல சம்பவங்களை நானே நேரில் அனுபவித்திருக்கிறேன்; கேள்விப்பட்டிருக்கிறேன்.
இன்றைய அவசர யுகத்தில், ஆற அம்ர இருந்து நெடு நாவல்களையோ, நீண்ட கட்டுரைகளையோ படிக்கக் கூடிய அவகாசம் உள்ளோர் மிகச் சிலரே. அதனுற்ருன் சிறு

Page 5
கதைத்துறை பிரபல்யம் அடைந்துள்ளது. அச் சிறுகதை வளர்ச்சியில் தன் பங்கையும் செலுத்த முன் வந்துள்ளது கல்முனை ஸாஹிருக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்.
இன்று மிகப் பலம் வாய்ந்த சக்தியாகத் திகழும் இச் சங்கத்தின் மூன்ருவது வெளியீடு இதுவாகும். கடந்த நான்கு வருடங்களுள் கவிதைத் தொகுதி யொன்றையும், உருவகக் கதைத் தொகுதி யொன்றையும் வெளியிட்டு வெற்றி கண்ட தன் விளைவாய் இச் சிறுகதைத் தொகுதி வெளிவருகின்றது.
ஒரு பழைய மாணவர் சங்கம் இலக்கிய சேவையிலீடு படுவது அபூர்வம். அவ்வபூர்வ காரியத்தை இவர்கள் செய் கின்றனர். சமுதாயத்தோடு ஸாஹிருக் கல்லூரியை இணைக் கும் பணியை, இலக்கிய சேவை, கல்வி உபகார நிதி வழங் கல் என்பன மூலம் செய்து வருகின்றனர். இப்பணி தொடர வேண்டுமென்பதே எனது அவாவுமாகும். இத்துறையில் ஈடு பட்டுள்ள இன்றைய உப-தலைவர்கள் எம். சி. ஆதம்வாவா, கவிஞர் அன்பு முகையதின் செயலாளர் ஏ. எம். ஹ"சைன், பொருளாளர் ஏ. எம். முஸ்தபா என்போர் பாராட்டுக் குரியோர்.
எங்கள் வாசகர்களும், அபிமானிகளும் மருதூர் ஏ. மஜீத் அவர்களின் நூலுக்கு ஆதரவு தருவதன் மூலம் அவ ரது இலக்கியப் பணியும்; ஸாஹிரு பழைய மாணவர் சங் கீத்தின் வெளியீட்டுப் பணியும் மேலும் சிறக்க உதவும்ாறு வேண்டுகிருேம்.
Na S. H. M. G.gifsi) ஸாஹிழுக் கல்லூரி, பதிப்பாசிரியர். கல்முனை. 1979-08-20.

என்னுரை
'சிறுகதை என்ருல் என்ன?’ என்ற விளக்கம் போதாத பருவத்தில் என்னுல் எழுதப்பட்ட கதைகள் இவை கள்.
1978இல், பல்கலைக் கழகத்தில் நாவல், சிறுகதை பற் றிப் படித்துப் பரீட்சை எழுதிவிட்டு,
என் கதைகள் முற்போக்கு, பிரச்சாரம், யதார்த்தம், கற்பனை, சமுதாயத் தாக்கம், கலை, இலக்கியம் என்பவற் றுள் எதனுள் அடங்கும் என்று பார்ப்பதற்காகவும்,
அல்லது சிறுகதை அம்சங்கள் எவையேனுமுண்டா என்று அறிந்துகொள்வதற்காகவும்,
என் கதைகளை மீளாய்வு செய்து பார்த்தேன்.
அப்போது,
"எனது ஆரம்ப காலக் கதைகளில் கதைக்குரிய கதைப் பின்னல் கிடையா. தொடக்கம், முடிவு என்பன வும் இல்லைதான்; இருந்தாலும், அவைகள் மனித மனங் கஃாப் படம் பிடித்துக் காட்டுவதால் அவைகள் கதைக ளாகும்."
என்ற புதுமைப் பித்தனின் கூற்று எனக்கு ஞாபகம் வந்தது. ፮ « ፭•
அத்தோடு

Page 6
சிறுகதை என்ற பெயரில், நெடுங் கதைகளே நான் எழுதவில்லே என்ற மனத்திருப்தியும் எனக்கேற்பட்டது.
என் கதைகள் வெறும் கற்பனைகளல்ல. அதே வேளே யில், அவைகள் உரித்தெடுத்த உண்மைகளுமல்ல. உண்மை யின் அடித்தளத்தில் கட்டப்பட்ட கற்பனேக் கோட்டைகள் என்பேன். உதாரணமாக:
எனது தந்தையாரின் அந்திம காலத்தில், அவர் தனது மரணத்தின் பின் நிகழக் கூடிய ஈமக்கிரிகைகள் பற்றிய 1வொசியத்தை" எனக்குச் சொன்னூர். அந்த உண்மைச் சம்பவத்தை அடியொற்றி எழுந்ததுவே எனது "பன்னீர் வாசம் பரவுகிறது" என்னும் கதை. ஆயினும், கதையின் முழுச் சம்பவங்களும்,எல்லாக் கதாபாத்திரங்களும் யதார்த்த பூர்வமானவைகளல்ல.
இவ்வாறு, உருப் பெற்றவைகளே எனது படைப்புக் கள் எல்லாம் என்பேன்,
அத்தோடு,
எனது கலேப் பிரசனங்கள் வெறுமனே என் மன உல் லாசத்திற்காக ம்ட்டும் நிகழ்ந்தவை என்று என்னுல் கூற முடியாது. அது மனித மனங்களுக்கு எருவாக அர்ப்பணிக் கப்பட்டவையே.
இக் கருத்தினே அழுத்தம் செய்து கொள்வதற்காக, என் கதைகளேப் படித்துப் பார்க்கும்படி, கல்முனே ஸாஹி ருக் கல்லூரி அதிபரும், எனது இனிய நண்பருமான, ஜனுப். எஸ். எச். எம். ஜெமீல் அவர்களிடம் கொடுத்தேன். அவர் படித்துவிட்டு, இவைகளேத் தேர்ந்து தொகுத்து நூலாக வெளியிடலாமே என்ற கருத்தைத் தெரிவித்தார்.
எனக்கு உற்சாகீம் பிறந்தது!

வெளியீட்டாளர்களின் விழுமிய எண்ணத்திற்கு உடன் பட்டு இம் முயற்சியில் கலந்தேன்.
அதன் வைரம் பாய்ந்த எண்னக் கோவையாக "பன் னிர் வாசம் பரவுகிறது . . . . . " என்ற இச் சிறுகதைத் தொகுதி உங்கள் கரங்களில் மலர்ந்து வாசனேயைப் பரப்பிக் கொண்டிருக்கின்றது.
இத் தொகுதி வெளிவருவதற்குப் பக்க பலமாய் இருந்த கல்முனை ஸாஹிருக் கல்லூரி பழைய மானவர் சங் கத்தினருக்கும். அதன் தலேவர் ஜனுப். ஜெமீல் அவர்கட்கும் என் நன்றி உரித்தாகும்.
மேலும்,
எனது எழுத்துலக வாழ்க்கையை வாசகர் மத்தியில் அறிமுகம் செய்ய எத்தனம் கொண்டுள்ள இனிய மனம் படைத்த அல்ஹாஜ். வி. அப்துல் கபூர் அவர்கட்கும்,
இக் கதைத் தொகுதி வெளியீட்டைத் தனது கடமை யாகக் கொண்டு அல்லும் பகலும் அழுத்தகத்திற்கும், அத னுேடு கூடிய அனேத்திடத்திற்கும், அயராது அஃலச்சல் கொண்ட எனது உடன் பிறப்பு. கவிஞர் மருதூர் அலிக் கான் அவர்கட்கும்,
அட்டைப் படத்தை அழகாய் வரைந்தளித்த ஆசிரி யர் ஜனுப். எஸ் ஏ. ஜெலீல் அவர்கட்கும்,
மட்டக்களப்பு கத்தோலிக்க அச்சுதீருக்கும் எனது மனமார்ந்த நின்றிகள்.
다. گاه "" ஏ. மஜீத் சாய்ந்தமருது - چ؟
يتمي =
979-8-2 r. (్యలో

Page 7
16
3.
27
34
事卫
4:
52
57
3.
TO
பன்னீர்த் துளிகள்
அவள் ஏன் அழுதாள்?
டாக்டர் ஒரு பிடி மண்ணே அள்ளிச் செல்கிறர்
தாய்மையின் முன்ஞல்
உண்மை ஊமையாய் நாரெல்லாம் அலேகிறது
நானும் ஒரு மனிதன்
பாலேயில் ஒரு பனித்துளி
குப்பையிலே ஒரு குன்றுமனி
பன்னீர் வாசம் பரவுகிறது
பக்கீர் ஒருவர் பள்ளி கட்டுகிறர்
ஒரு யுகம் முடிந்தது
என் மகள் ஒரு விடிவெள்ளி

அவள் ஏன் அழுதாள்?
பிரிவுத்துயர் பற்றிப் பல நூல்களில் படித்திருக்கின் றேன். பலர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். ஆணுல் இப்போ துதான் அதன் தாக்கத்தை-அழுத்தத்தை என்னுல் உணர முடிகின்றது. தலேயிடியும் காய்ச்சலும் தனக்கும் வந்தால் தான் தெரியும் என்பார்களே, அது எத்தனை உண்மை.
என் மனம் வண்டென அலேச்சல் கொள்கிறது. ஒரே அசதி,
பாடசாலேயிலிருந்து பிரியாவிடை பெற்றுக்கொண்டு ஒருவாறு கொழும்பை வந்தடைந்து புகைவண்டியில் ஏறிக் கொண்டேன். புகைவண்டி தனது மட்டுநகர்ப் பிரபா னத்தை ஆரம்பித்து விட்டது.
அந்தப் பெரிய நெடிய புகைவண்டியில் நான் இருப் பதற்கே இடமில்லாது கஷ்டப் படும்போது ஒரு சிலர் படுப் பதற்கு இடம் பார்க்கின்றனர். மனித மனதில்தான் எத் தனே வகை சூடு மிதிக்கும் மாடுபோலச் சுற்றிச் சுற்றி வருகிறது என் மனம்.
வாழ்க்கையில்தான் எத்தனே எர்ண ஜாலம் போக் கில்தான் எத்தனே புதுப் புது மாற்றங்கள். இந்தச் சிறிய வயதுக்குள் எத்தனே அனுபவங்கள்! நேற்று மாணவனுய் இருந்த நான் இன்று ஆசிரியன். அதற்குள் ஒரு பிரிவுத் துயர். அதிலும் இது ஒரு தினிசு
நேற்றுத் தொழில் நோக்கமாகப் பெற்ருேரைப் பிரிந்த போது ஒருவகைப் பிரிவுத் துயர். இன்று ஆறு மாதங்கள்
-ll

Page 8
ஒன்ருகப் பழகிய அசிரியர்களையும், மாணவர்களேயும் விட் டுப் பிரியும்போது பிரிவுத் துயரில் வேறு ஒரு வகை. துன் பச் சுமை. அதற்குள் வஜிஹா ஒரு மின் கீற்று.
ஒரு வேஃr . . . .
எப்படி முடிவு கட்டுவது? முடிவு கட்டியும் இனி என்ன ନୌfd'w?
Ֆ"Ար நிறங்கள் ஒரு வட்டத்தில் வேகமாய்ச் சுற்றும் போது ஒரே நிறமாகக் காட்சியளிப்பதுபோல வர்ண மயக் கம் என் மனத்தில்,
வீடு போய்ச் சேர்ந்துவிட்டால் இரண்டு நாட்களின் பின் எனக்குத் திருமணம், குடும்பமான பின் செலவு கட்டுப் படியாகாது என்ற உண்மை தெரிந்த அனுபவசாலிகளின் ஆலோசனேயோடுதான் என் சொந்த ஊருக்கு மாற்றம் பெற்றுக் கொண்டேன். எனக்கு மனேவியாகப் போகிறள் ளின் அதிர்ஷ்டம்தான் இவ்வளவு இலகுவாக ஊருக்கு மாற் றம் கிடைத்தது என்று காரணம் வேறு காட்டப்பட்டிருந் தது. ஊரிலிருந்து வந்த கடிதத்தில், பெண் எனது பக் கத்து வீடு. நல்ல அழகி. சுமாராகப் படித்திருக்கிருள். நல்ல ஒழுக்கமுள்ள பெண். இதெல்லாம் எனக்கு நன்கு தெரியும். எனது தாய்க்கும் நல்ல விருப்பம். என்ஃனப் பொறுத்த வரையில் அவள் எனக்குச் சொந்தமாகி விட் டால் . . . . என்ற ஊசலாட்டம் அவ்வளவுதான்.
இன்னும் இரண்டு நாட்கள்தான் இருக்கின்றன. எனது குட்கேஸ் நிறையத் திருமணத்திற்கான சாமான்கள் கீற் பனே உலகில் சஞ்சரிக்கின்றேன்.
மருதோன்றி, ஆராத்தி, குரவை, வெடி, சித்தனம், அத்தர், தாலி, கூறை, தேவையோ தேவையில்ஃபோ, சம்பிரதாயங்கள் ஏராளம், பெண்கள் கூட்டமொன்று சாட்
12

டிற்கு அத்தர், சந்தணம், மருதோன்றி இவற்றில் ஏதா பினும் ஒன்றைக் கையில் ஏந்திக் கொண்டு வெடிச் சத்தம் வாணேப்பிளக்க, குரவை ஒலி காதைச் செவிடாக்க, தெரு வெல்லாம் சுற்றி ஊர்வலம் வந்து மாப்பிள்ளேனய நடுவிலே வைத்து வ&ளத்து இருந்து கொண்டு பண்ணுகின்ற சேட் டைகள், படுத்துகின்ற அவஸ்தைகள், அப்பப்பா . . . . . எங்கள் திருமணத்தில் அவர்களுக்குத்தான் எவ்வளவு இன் பக் கிளுகிளுப்பு.
"வட வட, வட வடேய்,"
வடைக்காரனின் சப்தம் கேட்டுக் கற்பனே உலகிலி ருந்து விடுபட்டுக்கொண்டேன். மகோச் சந்தி. இரண்டு புகைவண்டிகள் சந்திக்கின்றன.
மனத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒரு குறு குறுப்பு. இதற்குக் காரணம் பகல் நடந்த சம்பவமாக இருக்குமோ? பெருமூச்சினூடே சிந்தனேயில் ஆழ்கிறேன்.
எனக்குப் பாடசாஃலயில், ஆசிரியர், மாணவர்கள் பிரியாவிடை வைபவம் நடத்துகிருரர்கள். இது சர்வசாதா ரன சம்பிரதாயம். ஆசிரியர்கள் ஏதேதோ என்ஃனப் பற் றிப் புகழ்ந்து பேசி முடித்தார்கள். நானும் அவர்கள் செய லுக்கு நன்றி கூறிப் பேசினேன். பின்பு மாணவர் மாணவி களோடு கலந்துரையாடல். எனது திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு எல்லோருக்கும் அழைப்பு விடுக்கின்றேன். கலந்துகொள்ளக் கிட்ட வா நடக்கின்றது. சம்பிரதாய அழைப்பு அது. என்னேச் சுற்றி மாணவர் கூட்டம் என் ஃனப் பற்றியும், என் படிப்பித்தலேப்பற்றியும் புகழ்ந்து கூறிக் கொண்டிருக்கிருர்கள். நானும் சிரித்தவாறு அ வ ற் றை க் கேட்டுக்கொண்டிருக்கின்றேன்.
சற்றுநேரத்தின் பின் பிள் &ள கள் ஒவ்வொருவராகக் கலேந்துகொண்டிருக்கிறர்கள். ஆணுல் வஜிஹா மட்டும் தனி மையில் வகுப்பறையில் நின்றுகொண்டிருப்பது என் கவனத்
-13

Page 9
தில் படுகிறது. மாணவிகளோடு சேர்ந்து அவன் என்:ளச் சந்திக்க வரவில்லே.
வஜீஹா கெட்டிக்காரி. அத்தோடு துடுக்கானவளும், அழகானவளும். துடுக்கு அவள் அழகிற்கு ஆபரணமாக இருந்தது. எனது வகுப்பு "மொனிட்டரும்" அவள்தான். அதனுல் அவள்மேல் எனக்கு அலாதிப் பிரியம்.
கிட்டப்போகிறேன். அவள் கண்கள் கலங்கியிருப்பது நன்ருகத் தெரிகிறது. தாவணியால் கண்களேத் துடைத்துக் கொண்டு. ஒருமாதிரி முகத்தைச் சுண்டிவிட்டவாறே பாட சாலையை விட்டு வெளியேறிவிட்டாள். ஒன்றும் பேசவில்&ல.
என் உள்ளம் சுமைதாங்கியாகிவிட்டது.
"ஏன் அழுதாள்?"
பழைய சுவடுகளேப் பார்த்துப் போகிறேன்.
அன்று ஒரு நாள் எனக்குக் கடுமையான காய்ச்சல், அந்த ஊரில் உள்ள வெதமாத்தையா ஒருவரின் கஷாயத்தைக் குடித்துவிட்டுக் கட்டிலில் படுத்துக்கிடக்கிறேன். என் அறை யின் ஜன்னல் அருகே மாணவிகள் பட்டாளமொன்று. அவர் களின் உள்ளப்பாங்கிற்கு ஏற்பச் சுகம் விசாரித்துக்கொண் டிருக்கிருர்கள். அவர்களில் ஒருத்தியாக வஜிஹாவும் அமைதி யாக நிற்கிருள்.
அடுத்தநாள் நேற்று வராத வேறு ஒரு கூட்டம். எல்லோரும் எட்டாம் வகுப்பில் படிப்பவர்கள். அவர்கள்
மத்தியிலும் வஜிஹா.
வஜிஹா என்னேப் பார்த்துப் பேசுகிருள். "பாவம் சேர் நல்லா மெலிஞ்சி போச்சி. சேர்ர ஊட்டிலயா இருந்தா உம்மா, வாப்பா எல்லோரும் எவ்வளவு கவனிப்பாங்க. மருந்து கொடுப்பாங்க, இஞ்ச பாரன் இருக்கின?" நான்
-14

துன்பத்தினூடே அவளைப் பார்க்கின்றேன். அவள் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே போய்விட்டாள்.
இன்னுமொரு நாள்.
பொழுது போக்கிற்காகப் பாடசாலைத் தோட்டத்தில் கதிரை ஒன்றில் அமர்ந்து நாவலொன்றைப் புரட்டிக்கொண் டிருக்கின்றேன். வஜீஹா தூரத்தில் வருவது நன்ருகத் தெரி கிறது. கிட்ட வந்ததும் "வஜிஹா, எங்கே கடைக்கோ' என்று கேள்வி ஒன்றைக் தொடுக்கிறேன்,
"ஓம் சேர், சேர்ர ஊர் எங்கயன். சேர் நல்ல பசிந்து வெள்ள வெளேர்ண்டு' என்று சொல்லிச் சிரித் துக்கொண்டே ஓடிவிட்டாள்.
அன்று சிரித்துக்கொண்டு ஓடியவள், இன்று ஏன் அழுதுகொண்டு போகிருள்?
என்னே விரும்பி விட்டாளா ? எல்லோரும்தானே என்னே விரும்பியதாகக் கூறிஞர்கள். ஆனல் எல்லோரும் அழவில்லையே. ஏன் இவள் மட்டும் அழுதாள்?
"குரும்ப, குரும்ப, குரும்பைப்"
குரும்பைக்காரப் பையனின் சத்தம் கேட்டுத் திரும் பவும் பழைய நினைவுக்குவருகிறேன்.
அது கல்லோயாச் சந்தி. ஒரு புகைவண்டி இரண் டாகப் பிரிகிறது. ஒன்று மட்டுநகர் நோக்கி நகர்கிறது: மற்றது திருகோணமலைக்கு.
இன்று பிறை பன்னிரெண்டு, பிறை பதிஞன்கில் எனக்குத் திருமணம்.
தினகரன் - ஜூன் 1975,
-15

Page 10
டாக்டர் ஒரு பிடி மண்ணே அள்ளிச் செல்கிறர் !
அந்தப் பென்னம் பெரிய ஆகாய விமானம், பருந் தாகிப் பறந்து, சிட்டுக்குருவியாகிச் சிறுத்து, மின்மினிப் பூச்சியாய் மினுங்கி, மேகத்துள் மறைந்தும் கனநேரமாகி விட்டதை என் நண்பன் பளில் எனது தோளேத் தொட்டு உலுக்கிய பின்தான் என்னுல் உணர முடிந்தது.
அபூபக்கரின் இந்தப் பிரிவு, இரண்டு வருடத்திற் குள்ளான ஒரு தற்காலிகப் பிரிவு என்பது எனக்கு நன்கு தெரிந்திருந்தும், என் நெஞ்சில் அது சுமையாகி அழுத்திக் கொண்டிருப்பதை நான் உணருகின்றேன்.
எனது உடன் பிறந்த தம்பி ஒருவர் நிரந்தரமாக எங்களேயும் இந்த உலகத்தையும் விட்டுப் பிரிந்தபோதுகூட நான் இந்த அளவு அசதியடையவில்லே.
வி மான நிலேயத்தை விட்டு வெளியேறிக்கொண் டிருந்தபோது நண்பர்களும் இனத்தவர்களும் "சுட்டெரிக் கும் வெயில், சுட்டெரிக்கும் வெயில்' என்று கூறியவாறு வேகமாக நடந்துகொண்டிருக்கிறார்கள். என்னுல் அன்றைய வெயிலேக்கூட உணர முடியாத அளவுக்கு உணர்ச்சியற்று நடந்துகொண்டிருக்கிறேன்.
- 15
|

'அபூபக்கர்" என்ற அந்த ஆத்மாவைச் சுற்றி என் தினேவுகள் வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன.
ー2ー
கம்பனின் அயோத்தியா காண்டத்தின் மந்தரை சூழ்ச்சிப்படலத்தில் "இரண்டு கன்றினுக்கிரங்கும் ஒராவென விருந்தார்" என்னும் பாடல் எங்களூர் மக்களின் மன நிலயை எனக்கு ஞாபகப்படுத்தியது.
மக்கள், கூட்டம் கூட்டமாக அபூபக்கரின் வீட்டிற்கு வந்து திரும்பிக்கொண்டிருந்தனர். அபூபக்கரோடு படித்த வர்களும், உத்தியோகம் பார்த்தவர்களும், வெளியூர் நண்பர் களும், அரசியல்வாதிகளும்கூட எங்களூரை முற்றுசையிட்ட வண்ணமிருந்தனர். அபூபக்கரால் எங்களூர் பெருமைப் பட்டுக்கொண்டிருந்தது.
எண்ண மலர்களேச் சுற்றி வட்டமிட்டுத் திரியும் வண்டுகள்போல எங்களூர்ச் சிறுவர்கள் அங்கு வந்து நின்ற கார்களேச் சுற்றி வட்டமிட்டவண்ணம் இருந்தனர்.
நாளேய ல்ண்டன் பயணத்திற்குரிய எல்லா ஏற்பாடு களும் பூர்த்தியாகிக்கொண்டிருக்கின்றன. நான் வருபவர்களே வரவேற்கும் உபசாரக் குழுவிற்குத் தலேவன். ஆதம் போடி, யாரின் வயல்காரர்கள் என் குழு அங்கத்தவர்கள். அதிகம் படிக்காத அந்த உழைப்பாளிகளோடு வேலே செய்வது எனக்கு என்னவோ இன்பமாக இருக்கிறது. அவர்களின் உரையாடல்களிடையே நெளியும் ஹாஸ்யம் எனக்குப் பிரிவுத் துயரை மறந்து வேஃ செய்யப் பேருதவியாக இருக்கிறது.
"ஏன் மாஸ்டர் நீங்க படிச்சவங்க, நாங்க படியாத வங்க. எங்களுக்கு எங்களுடைய வயல் வேலேயைத் தவிர வேருென்றும் தெரியாது. அதனுல் நாங்க கதைக்கிற கதையில ஏதும் குத்தம் குறையிருந்தா மன்னிச்சுக்கொள்ளணும்'
-17

Page 11
"இப்ப வந்து மாஸ்டர், அபூபக்கர் துரை மருந்து கொடுத்தா தீராத வியாதியும் தீந்துதானே போகுது. அப்ப, படிச்ச மட்டதான அப்படி மருந்து கொடுக்கார். படிக்காட்டி எப்படி நோய்க்கு மருந்து தெரியும். அப்படி இருக்கும்போது அரசாங்கம் ஏன் இன்னும் படிச்சிட்டு வா எண்டு சொல்விச் சீமைக்கு அனுப்புது",
"அது வந்து, இந்தக் காலத்தில மனித உற்பத்தி பெருகப்பெருக, புதுப் புது வியாதிகளும் பெருகிக்கொண்டே இருக்கின்றன. அதனுல் புதுப்புது வியாதிகளுக்குப் புதுப்புது மருந்து கண்டுபிடிக்க வேண்டாமா? அதற்காக ஆராய்ந்து படிக்கத்தான் அரசாங்கம் அவங்கட செலவில அனுப்பி வ்ைக்கிருங்க, கல்விக்குக் கரையேது. ஒருவாறு சமாளித்துக் கொண்ட மனத்திருப்தி எனக்கு.
"அப்படியா சங்க தி. அதுதானே பார்த்தேன். படிச்சதப் பிழையாப் படிச்சிட்டாரோ என்று நினைத்தேன். மன்னிச்சுக்கொள்ளணும் மாஸ்டர். எல்லா டாக்டர் மாரிலே யும் கைராசிக்காரர். இந்த சின்ன ஊர்ஸ் பிறந்தாலும் எவ்வளவு பெரிய டாக்டர் ஆகிவிட்டார். மனம்போல வாழ்வு. ஏழைகள் எண்டா உசிர உட்டிடுவார். அவர் விரும்பி இருந்தா கொழுத்த சீதனத்தோட பெரிய குடும் பத்தில் கல்யாணம் கட்டிக்கிட்டு பட்டனத்தில் பங்களாவும் காருமாக வாழ்ந்திருக்கலாம். அதையெல்லாம் அவர் விரும் பல்ல. பிறந்த ஊரிலேயே இருக்கணும் என்றதற்காக நம்மிட ஊரிலேயே சாதாரணக் குடும்பத்தில் பொண் எடுத்துக் GLT. அந்தப் புள்ளட தலேயிலேயும் நல்ல புள்ளிதான் போட்டிருக்குப் போலிருக்கு. இல்லாட்டி அந்தப் புள்ளைக்குச் சீன்மக்குப் போறதுக்கும் கிடைக்குமா? நமக்கு இன்னு இருக்கிற கொழும்புக்கு ஒரு தரம் றெலியில போகக் கிடைக்கிதில்லை. அவரவர்ர தலே நசீபு போலத்தான் எல்லாம் நடக்கும். எப்படியோ நல்லாயிருக்கட்டும். மேலும் படிச் சிட்டு வந்தா நம்மிட ஊருக்குத்தானே நல்லது. நம்மிட
-1.8-

புள்ள கூச்சமில்லாமப் போய் வருத்தத்தச் சொல்வி மருந் தெடுக்கலாம். ஆதம்போடியாரும் நல்ல மணிசர், மத்தப் போடிமாரப்போல மாப்பொன்னிலயும் காப்பொன் எடுக்க மாட்டார். அதனுந்ைதான் ஆண்டவன் அவருக்கு இந்த மாதிரி ஒரு மகனக் கொடுத்திருக்கான். கதச்சிக் கதச்சி சும்மா இருக்கிறன் எண்டு நினேச்சுக்காதங்கோ. தேயிலேயும் கலந்தாச்சி. அந்தா யாரோ ரெண்டு லோங்ஸ்கார ஆக்கள் வாராங்க, தேயிலேயைக் கொண்டு போங்க மாஸ்டரி".
சிரித்தவாறு நான் தேநீரை எடுத்துச் செல்கிறேன்.
- 3 -
மணி மாலே ஐந்தாகிவிட்டது. கொழும்புக்குப் புறப் படுவதற்குரிய நேரமும் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இதே போன்று இனம் தெரியாத ஒரு துன்ப உணர்வு என் மனத்தையும் நெருங்கிக்கொண்டிருக்கிறது.
ITL'"
என்ர டாக்டர்?"
"'என்ன கிண்டலா பண்ருய் வழமைபோல அபூ என்றழையன்'
"எப்படி அழைத்தால்தான் என்ன? உணர்வுகள் ஒன்ருகிவிட்டபொழுது வார்த்தைகளின் பிரயோசனமும் குறைவூதான்",
"உன் தத்துவம் கேட்டுக்கொண்டிருக்க எனக்கு இப் போது நேரமில்ல. இன்சா அல்லாஹ், இறைவன் நாடினுல் போயிட்டுவந்து கதைத்துக்கொள்வோம். இப்ப நீ எனக்கு ஒரு உதவி செய்யணும்".
-19

Page 12
"உங்களுக்குச் செய்யாத உதவியா, சொல்லுங்க இப்பவே செய்கிறேன்".
"அது ஒன்றும் அவ்வளவு பிரமாதமான உதவியல்ல, சின்ன உதவிதான்"
" சிறிசோ பெரிசோ, சொல்லுங்களன் செய்திடுறன். உயிர் வேண்டுமா? இந்தாங்க கொண்டு போங்க".
"ஐயையோ, அதெல்லாம் ஒண்டும் வேணும். பிறகு உண்ட மனேவி என்னுேட சண்டைக்கு வரப்போருங்க"
"அப்போ, என்ன செய்யனும் சொல்லுங்க. செய் திட்டா எனக்கும் மன ஆறுதலாக இருக்கும். ஊருக்கே உதவி செய்யிற உங்களுக்கு, கேவலம் நாங்க ஒரு சின்ன உதவி செய்யக்கூடாதா? சொல்லுங்க, இப்போதே செய் திடுறன்".
"அது வந்து. அது வந்து . வெட்கமா இருக்கப்பா"
என்ன டாக்டர் நீங்க சின்னப்பிள்ள மாதிரி. விஷயத்தச் சொன்னுல்ல புரியும்"
"அது. வந்து. இந்தா இந்தப் பையில எமது முற்றத்து மண் கொஞ்சம் அள்ளிக்கொண்டு வந்து எனது நீலச் சூட்கேசில வைத்துவிடு. இத நானே செய்யலாம். ஆணு. என்னேச் சுற்றி எந்த நேரமும் ஆட்களாயிருக்கு. மண்ணே அள்ளும்போது மண் எதற்கு என்று கேட்பார்கள். இதற்கெல்லாம் விளக்கம் சொல்லிக்கொண்டிருக்க இப்போது உள்ள குழ்நிலையில் எனக்கு நேரமுமில்லை. நேரம் இருந் தாலும் நான் சொல்லும் விளக்கத்தை அவங்க புரிஞ்சு கொள்வாங்களோ என்பது கூடச் சந்தேகம்தான். புரியாத வங்க என்னேப்போய்ப் பைத்தியக்காரன் என்பாங்க. எதற்கு இந்த வம்பெல்லாம்? அதனுலத்தான் உங்கிட்டச் சொன் னேன். நீ என்னைப் புரிந்துகொண்டவன் என்பதினுல்"
-20

"அது சரி. நான் உங்களேப் புரிந்துகொண்டவன் தான். ஆணு, இந்த மண் எதற்கு என்று எனக்குப் புரியல்விய, இங்கிலாந்தில மண் ஆராய்ச்சி பண்னவா?"
"இல்லப்பா, அது வந்து. அது வந்து. என் மனேவி இப்போது கர்ப்பவதி. எங்க குழந்தை இங்கினாந்தில்தான் பிறந்து விஃளயாடப்போகுது. ஆணு என் குழந்தை வந்தாரை வாழவைத்து, விருந்தோம்பி மனிதனே மனிதனுக மதித்து மகிழ்கின்ற இந்த ஈழத்து மண்ணிலேயே பிறக்கணும் வின் யாடணும் என்பதுதான் என் ஆசை. ஆணு அதற்குக் கொடுத்துவைக்கல்ல. அதை ஒருவாறு சமாளிக்கத்தான் இந்த மண்னேக் கொண்டுபோறன். எங்க நாட்டி ைஒரு சிலர் "என் மகன் லண்டனில் பிறந்தவன்" என்று பெருமை யோடு சொல்லிக்கொள்வதை நான் கேட்டிருக்கின்றேன். வேத&னப்பட்டிருக்கின்றேன். வெள்ஃாக்காரன் எங்க ளே அடிமைகள் என்று நினேக்கிறன். ஆணு இவன் போய் அவன் நாட்டில பிறக்கிறதைக்கூட பெருமை என்று நினேக்கிருன் , பணத்திற்காகத் தன் தாய் நாட்டின் பற்று, பாசம் எல்லா வற்றையும் இழந்து, அங்கு டோய் அடிமை மனப்பான்மை யோடு வாழ்வதையே விரும்புகிருன். இந்த மனப்பாங்கு என் பரம்பரைக்கே ஏற்பட்டுவிடக்கூடாது என்று நான் விரும்புகிறேன். அதனுள்தான் என் குழந்தை இந்த நாட்டில பிறக்கக் கொடுத்துளைக்காட்டாலும் "இந்த நாட்டு மண் ணிைல பிறந்து வினேயாடியவன்' என்று பெருமையோடு சொல்லிக்கொள்ளட்டும் என்பதனுலத்தான் இந்த ஏற்பாடு. இதற்கு உதவிசெய், நேரமாகுது, போ."
"அபூ. அபூ. டாக்டர். டாக்டர்.'
"என்ன மாஸ்டர் ஒளநீங்க, டாக்டர் போய்க் கன நேரமாச்சே, இப்ப நாம் காரின ஊருக்குப் போய்க்கிட்
-21

Page 13
டிருக்கிருேம். பெத்தவங்களே மலைபோல உசும்பாம சும்மா இருக்கிருங்க, நீங்க என்னடா என்டா ஒளறி அவங்களையும் கலங்க வச்சிடுவீங்க போலிருக்கு. சும்மா இருங்க. இன்னும் இரண்டு வருஷத்தில திரும்பி வந்திருவாரு'. •
கார் வேகமாக ஒடிக்கொண்டிருக்கிறது. பாதை ஒரத்து மரங்கள் என்னைவிட்டுப் பின்னேக்கி ஒடிக்கொண் டிருக்கின்றன. சுய நினைவு வரப்பெற்று ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டேன். அது புகைந்துகொண்டிருக் கிறது.
தினகரன் - 1977 ஏப்ரல்
-22

தாய்மையின் முன்னுல்
- 1 -
“1ெழ்க்கை என்பது போராட்டம். சாவு என்பது அதில் ஒய்வு' என்று எங்கோ படித்த ஞாபகம். இது மனிதனுக்கு மட்டுமா, அல்லது உலகில் வாழ் நீரின, பறப்பன, ஊர்வன எல்லாவற்றிற்குமா? என்று முடிவு காணத் துடிக்கிறது அவள் உள்ளம்.
உள்ளத்தில் பெரிய பாரச்சுமை; இறைக்கிவைக்க இடமில்லாது தவிக்கிருள் அவள். பார்த்த இடமெல்லாம் பெரும் பயங்கரமாகத் தெரிகிறது அவளுக்கு. எங்கு போவது, என்ன செய்வது என்பதைப் பற்றியே ஒரு திட்டமான முடிவில்லை அவளிடம். கடற்கொந்தளிப்பாகிவிட்டது அவள் உள்ளம். முடிவுகாணும் முனைப்பினல் அவள் நடக்கிருள்.
சித்திரைமாத வெயிலானபடியால் பாதையின் தார் எல்லாம் அவள் பாதங்களில் ஒட்டிக்கொள்கிறது. அதுகூட அவளுக்குத் தெரியவில்லை. நூல் அறுந்துபோன பட்டம் காற்றில் அள்ளுண்டு செல்வதுபோல அவள் எங்கோ இழுபட்டுக்கொண்டிருக்கிருள். வேர்த்துக் கொட்டுகிறது அவளுக்கு,
அரசமரமொன்றின் சலசலப்பு, அவளைச் சுயநினை வுக்குக் கொண்டுவந்ததோ என்னவோ தெரியாது. அவள் அதன் நிழலில் ஒதுங்கிக்கொள்கிருள்.
முக்காட்டை எடுத்து முகத்தையும் கழுத்தையும் துடைத்தவாறு நிமிர்ந்து பார்த்த அவளுக்கு எதிரிலே உள்ள
-23--

Page 14
கல்முனை மக்கள் வங்கியும், பஸ்தரிப்பு நிலையமும், கடைத் தெருவும் காட்சி தருகின்றன. அவளையே அவளால் நம்ப முடியவில்லை. வெள்ளம்போல் சனம் திரண்டு வருவதாக அவளுக்குள் ஒர் உணர்வு. கை கால்களெல்லாம் படபட வென்று நடுங்குகின்றன அவளுக்கு.
காரிலே கல்முனை ஆஸ் பத்திரிக்கு இரண்டொரு தடவை வந்து போனபோது கல்முனைப் பட்டணத்தின் காட்சி அவளுக்கு இன்பமளித்திருக்கிறது. ஆனல் இன்று அது பயங்கரமாகத் தெரிவதை அவளால் உணரமுடிகிறது.
அடுத்த வீட்டிற்கும் போய் அறியாத அவள் நான் கைந்து மைலை நடந்து முடித்துக் கல்முனையை அடைந்து விட்டதை நினைக்கும்போது அவளுக்கு உயிரே போய்விடும் போல் இருக்கிறது. நினைத்து நெடுமூச்சொன்றை விடுகிருள்.
'கணவனேடு ஏற்பட்ட சிறு சச்சரவிற்காக, பாவம், குழந்தையையும் தனியே விட்டு விட் டு மடச்சி மாதிரி எங்கோ வந்து நிற்கிருயே, பச்சிளம் குழந்தை, பாவம், என்ன செய்யும்? பசி வந்தால் பால் கொடுக்க யார் இருக் கிருர்கள்? வீட்டை விட்டே வெளியே போய்ப் பழக்க மில்லாத நீ, தனியே வீட்டை விட்டுக் கிளம்பி இருக்கிறயே, தெரிந்தவர்கள் கண்டால் உன்னைப்பற்றி என்ன நினைப் பார்கள்? உன் சமூகம் உன்னை என்ன சொல்லும்? உன் னுடைய கணவனுடைய கெளரவம் என்ன ஆகும்? நடந் ததையெல்லாம் மறந்துவிட்டு உன் குழந்தைக்காக வீட் டுக்குப்போ': யாரோ எதிரே நின்று பேசுவது போன்ற மனப்பிராந்தி அவளுக்கு, கண்களிலே முட்டி நின்ற நீரைத் துடைத்துக்கொள்கிருள்.
- 2 -
நடந்து முடிந்த சம்பவங்களை இரை மீட்கிறது அவ ளது மனம். "அவர் என்னை என்ன சொல்லி அடித்தாலும்
-24

பொறுத்திருப்பேன். ஆனல். நினைக்கவே என் இதயம் வெடித்துவிடும் போலிருக்கிறது. அப்படி நான் ஆத்திரப் படும்படியாக என்ன செய்தேன்? பதிவிரதை நான் - பக்கத்து வீட்டுக்காரர் அத்தனை பேருமே அப்படித்தான் என்னைப் பார்த்துக் கூறுவார்கள். இதை அவரே அடிக்கடி கூறிப் பெருமைப்பட்டுக் கொள்வார். இன்று மட்டும் ஏன் அவருக்கு இவ்வளவு ஆத்திரம்; அடித்ததை என்னுல் பொறுத்துக் கொள்ள முடியும். அடிக்கிற கைதான் அணைக்கும். ஆனல். அந்த வார்த்தை!"
சம்மட்டி கொண்டு தலையில் யாரோ தாக்குவது போன்று இருக்கிறது அவளுக்கு. இருந்தும் புதிய நிகழ்ச்சித் தொடரில் பழைய நினைவுகளும் படக்காட்சிபோல் ஒடிக் கொண்டிருக்கின்றன, அவளது மனத்திரையில்.
'அன்று, ஏழு மாதக் கர்ப்பிணி நான். அப்பிள் பழம் சாப்பிடுவதற்கு ஆசை ஏற்பட்டுவிட்டது. அவர், கல்முனை, மட்டக்களப்பு, அம்பாரை என்று தேடாத இடமே இல்லை. கடைசியில் கொழும்பிற்கே போய் வாங்கி வந்தார். அப்படி அன்பாக இருந்த அவரா இன்று இப்படி ஏசினர். அதுவும் இந்த வார்த்தையைச் சொல்லி".
வாய்விட்டு அழவேண்டும்போல் இருக்கிறது அவளுக்கு. ஆனல் அவள் அதைச் செய்யவில்லை. கண்ணிர் மட்டும் அருது ஒழுகிக்கொண்டிருக்கிறது. தராசுத்தட்டுக்கள்போல் அவள் மனம் ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு பக்கத் தட்டில் அவன் அன்பும், மறுபக்கத் தட்டில் அவன் கூறிய வார்த்தையும் நிறுவைப் பொருளாய் ஆன நிலை.
அன்று ஒரு நாள் எனக்குப் பிரசவ வேதனை. அதுவும் (pதல் பிரசவம் என்ருல் கேட்கவும் வேண்டுமா? வீட்டில் திாளான பெண்கள் கூட்டம்; அவர்களையெல்லாம் பொருட் படுத்தாத நிலையில் அவர் என் பக்கத்திலே குந்தியிருக்க விரும்பினர். யாரும் அவரை அப்படிக் குந்தியிருக்க விட வில்லை. போய்விட்டார். எனக்கே வெட்கமாகவும் துக்க மாகவும் இருந்தது. பெண்களென்ருல் இயற்கையாகவே
س-25--

Page 15
கூச்சப்படும் அவர் அன்று அங்கும் இங்கும் அலேந்து திரிந் ததை என்னுல் மானசீகமாகப் புரிந்துகொள்ள முடிந்தது. அவரா இன்று. . .
அப்படியொன்றும் தப்பாக நடந்துகொள்ளவில்லேயே நான். அப்படி இருந்தும் ஏன் இப்படிப் பேசினுர்? போகும் பொழுது பேசாமல் இருந்துவிட்டு, போய்வந்தபின் ஏன் இப்படிப் பேசினர்? தேவைக்காகத்தானே போனேன். அது வும் அவர் தாயோடுதானே போனேன். அடித்திருந்தால் நான் பொறுத்துக்கொள்வேன். ஆளுல் அவுர் சொல்வி ஏசிய வார்த்தைகள், "வேசை' என்று ஒரு தடவையா இரண்டு தடவையா, எத்தனே தடவைகள். இனி அவர் முகத்தை எப்படிப் பார்ப்பேன்? கண்கண்ட தெய்வமே பழி சுமத்தியபின் உயிர் வாழ்வதா? அவருடைய குழந்தையை வளர்க்கும் பொறுப்பு இனி அவருடையதே. எது எப்படிப் போனுலும் எனக்குக் கவலேயே இல்லே. தற்கொலே ஒன்றே அருமருந்து.
- 3 -
ஆவவிருட்சத்தின் கீழே ஞானம் பெற்ற மகரிஷியின் மனத்திருப்தி அவளுக்கு. கண்கஃள மூடிக்கொள்கிருள்.
'5L-m庁"" சத்தம் கேட்டுக் கண்களேத் திறக்கிருள். அங்கே நாய் ஒன்று காரினுல் மோதுண்டு துடிதுடித்து இறக்கிறது. அதன் குடல் சிதறிக் கிடக்கும் காட்சி அவளுக்கு அருவருப்பையும் பயத்தையும் ஏற்படுத்துகின்றது. அவ்விடத்தை விட்டு நகர நினேக்கிருள்.
அதற்குள் பின்னுல் ஓடிவந்த நாய்க்குட்டிகள் மூன்று பால்மடிமீது வாய் வைத்துப் பசி தீர்க்க முயலுகின்றன. ஏதோ ஒரு கதையைப் படிப்பதுபோன்று இருக்கிறது அவளுக்கு, தாய்ம்ை தலதூக்குகிறது. தற்கொலே முயற்சி தவிடுபொடியாகிறது. அம்பென வீடு நோக்கி விரைகிருள்.
தினகரன் -1975 டிசம்பர்
-26

18382
உண்மை ஊமையாய் ஊரெல்லாம் அலைகிறது
மிழை தூறிக்கொண்டிருந்தது. இருந்தும் வானத்தில் அழகு நிலா. தாஜ்மஹால் தியேட்டரில் படம் பார்த்து விட்டு, விளக்கில்லாத எனது சைக்கிளில் வீடு நோக்கி விரைந்துகொண்டிருந்தேன்.
என் எண்ணத்தில் பசி, பயம், மழை என்ற முக்கூட்டுத் தாக்கம். என் கால்கள் சைக்கிளே வேகமாகச் சுழற்றுகின்றன.
* தடார்"
மின்வெட்டி மறைந்த நிலே. நல்லகாலம் பாரதூர மாய் ஒன்றும் நடந்துவிடவில்லே. எழுந்து சைக்கிளேத் தூக் கியவாறு விழுந்து கிடப்பவன் யார் என்று பார்க்கின்றேன். அவன் வேறு யாருமல்ல. எனது ஆப்த நண்பனே. இப் போது அல்ல இற்றைக்குச் சுமார் பத்து வருடங்களுக்கு முன் இரண்டு வருடங்களாக அவன் பைத்தியகாரன்
"என்னடா கரீம். இப்படித்தானு ருேட்டில போறது, சைக்கிள் எண்டபடியால ஒரு மாதிரி, தலேயோடு வந்தது தலேப்பாவோடு போச்சி. கார், லொறி ஏதும் வந்திருந்தா? என்ன நடந்திருக்கும். பைத்தியகாரன் மாதிரி, எழுந்திரு."
எனக்கு நான் பாதுகாப்புத் தேடிக் கொள்கிறேன், நல்லகாலம் பக்கத்தில் யாருமில்லே.
---

Page 16
"பைத்தியகாரன் மாதிரி என்ன, பைத்தியகாரன் தான். லேட் இல்லாம சைக்கிள்ள வந்து ஆள்ள விட்டது மில்லாம பழி வேற என் மேலயா? படிச்சவங்களே இப் படித்தான்.""
கரீமின் கதையில் நியாயத்தையும், நிதானத்தையும் உணருகிறேன். இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவனிட மிருந்து நான் கேட்கின்ற முதலாவது நிதானப் பேச்சு இது தான். அடியோடு பைத்தியம் பறந்து விட்டதோ?
எனக்குள் நான் யோசிக்கின்றேன். சிந்தனே நீள்கி றது. மயக்க நிலை மனத்தில்,
பாவம் கரீம் படிக்கும்போது எவ்வளவு கெட்டிக் காரன். அத்தோடு நல்லவனும் கூட. தாய்க்கு ஒரே மகன். வறுமையிலும் செல்லமாய், செல்வமாய் வளர்க்கப்பட்ட வன். தொடர்ந்து படிக்க முடியாத சூழ் நிலையில் தொழி லாளியாகிவிட்டான். ஆணுல், இன்று பைத்தியகார நிலேக்கு ஆளாகியது பரிதாபத்திற்குரியதே. சமூகத்தில் கெட்டவர் கள் எத்தனையோ பேர் இருக்க, நல்லவன் ஒருவனுக்கா இப் படி வரவேண்டும்?
என்னே அறியாமலே என் கண்களில் நீர்த்தேக்கம்.
முழங்கால்வரை சுருட்டிவிடப்பட்ட கறுப்புக் கால் சட்டை, பல நிறத்தில் அண்டை போட்ட மேல் சட்டை சாணி அப்பியது போன்ற தலைமயிர் கையில் ஒரு சுருட்டு: நினைத்த இடத்தில் படுக்கை கிடைத்த இடத்தில் சாப் பாடு; இதுதான் இப்போதைய அவனது நிலே,
அனுதாபத்தோடு அவனே ஏற இறங்கப் பார்க்கின் றேன். இதைக் கவனித்த அவன் பழையபடி ஆரம்பித்து விட்டான்.
-28

"நான்தான் கோடு, நான்தான் நீதிபதி, நான்தான் குற்றவாளி. நான்தான் சாட்சி. எனக்குத்தான் எல்லாம் தெரியும். நானே எனக்கு எஜமான். ஆண்களே அழிவுக்குக் காரணம், தோணிதாண்டு இரண்டு வருஷமாகுது; மீனும் மண்ணுங்கட்டியும்".
வார்த்தைக்கு வார்த்தை பொருள் தேடப் போனுல் நானும் பைத்தியகாரணுக வேண்டியதுதான். உள்ளுணர்வின் ஒரு பதில் இது.
'சரி, சரி, உழறியது போதும். வா போவம். இந்த நேரத்தில் இஞ்சால எங்க போப்பிருப். கைல இருக்கிற சுருட்ட எறி. பொலிஸ்காரன் கண்டா என்னேயும் சேர்த்துப் புடுச்சுக்கிட்டுப் போயிருவான். கஞ்சாச் சுறுட்டுக்குக் குறை வில்லே." என்றவாறு சைக்கிளேத் தள்ளிக் கொண்டு நடக் கிறேன். அவனும் என்வழி தொடர்கிருன்.
எவ்வளவு நன்ருயிருந்த குடும்பம். அழகான-அடக்க மான மனேவி. இரண்டு பிள்ளைகள். தானும் தன் தொழி லும் என்று எாழ்ந்தவன். எப்படிப்போயிருக்கிருன், பாவம், பிள்ளேகளேக் காப்பாற்றுவதற்காகக் கூலிக்குக் குத் தி க் கொண்டு அரிசிப் பெட்டியோடு தெருத் தெருவாக அலகி ருளே கரீமின் மனைவி. அது தான் ஆகப்பெரிய பரிதாபம். விாசிற்படி தாண்டாது வாழ்ந்தவள். எல்லாம் அவன் செயல்
கரீமின் தாய் சொல்வது போன்று சூனியமாக இருக்க முடியாது. சூனியமாவது, மண்ணுங்கட்டியாவது. இதெல் லாம் வெறும் பயமுறுத்தல்கள். வைத்தியம் தெரியாதவர் களின் வாய் வீச்சுக்கள். பகுத்தறிவுக் கட்சிக்காரன் நான்; அதனுல் ஏற்க மறுக்கிறது என் மனசு.
அப்படியாயின், கரீமுக்கு நடந்தது என்ன? கஞ்சாச் சுருட்டு காரணமாக இருக்குமோ? இருந்தாலும் இருக்கும்.
-29

Page 17
எனக்குள் நானே முடிவெடுத்துக்கொண்டேன். இருந்தா லும் இது வலுவான முடிவில்லை. சந்தேகம் தலே தூக்கு கிறது.
திரும்பிப் பார்க்கிறேன். கரீம் தொடர்ந்து கொண் டிருக்கின்ருன். ஆணுல் புலம்பல் இல்லை.
சந்தேகம் வலுவடைகிறது. ஆய்வூக்கம் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.
"இந்தாம்பா கரீம் நான் சொல்றன் எண்டு கோபிச் சிக்காத, உனக்குப் பயித்தியமுமில்ல கியித்தியமுமில்ல. நிசான் மண்டல அடிச்சிரிக்கி, கஞ்சாக் குடிக்கிறத உட் டுப்போடு. எல்லாம் சரியாப்போகும். உன் மனைவி, மக்கள், தாய் - இவர்களே எல்லாம் நினைச்சுப் பார். உன்னுல இவர் களெல்லாம் எவ்வளவு துன்பத்தை அனுபவிக்கிருங்க. கொஞ்சங்கூட யோசிக்காம, இந்த மாதிரி கோலம் பண் னித் திரியிறிய. எவ்வளவு அழகான ஆம்புள நீ. இப்ப எவ்வளவு கேவலமாய் இரிக்கிருய். பழையபடி ஒழுங்காத் தொழிலச் செஞ்சி குடும்பத்த நடத்து. நான் சொல்றது கேக்குதா? இதற்குப்பிறகு எங்க போப்பிருய்? சாப்பிட்டுட்டு எங்கட வீட்ட படுத்துக் கிடந்து நாளேக்கு வீட்ட போ."
அழைப்பை ஏற்ற கரீம் சாப்பிடுவதற்குச் சம்மதித் துக் கொண்டான்.
அமைதியாக அவன் சாப்பிடுகிருன். அவனே நான் கடைக் கண்ணுல் பார்க்கிறேன். அவன் கிண்களில் முட்டி நின்ற நீரைக் கையால் வழித்தெறிகிருன் கைகொடுக் து உதவ என் மனம் விழைகிறது.
"இந்தா கரீம், ஏன் கண்கலங்குகிருய், கப்பலா கவிழ்ந்துவிட்டது. போட்டுட்டுச் சாப்பிடு. எந்தக் கஷ்டத் திலயும் கலங்கக் கூடாது. வாழ்க்கை வாழ்வதற்குத்தான்."
-30

என்று கூறி முடிப்பதற்குள் அவன் வாய்விட்டே அழுது விட்டான். எனக்குத் தர்மசங்கடமாகிவிட்டது. அவனத் தேற்றியவாறே கதையைத் தொடருகிறேன்.
"உள் மனத்தில் உள்ளதை மறைக்காமல் என்னிடம் சொல்லு, நண்பன் என்ற வகையில் உனக்கு உதவி செய்ய வேண்டிய கடமைப்பாடு எனக்கு நிறைய இருக்கிறது. ஏன் பபப்படுகிருப். இது நல்ல சந்தர்ப்பம். சொல்லவேண்டிய தையெல்லாம் சொல்விமுடித்துவிடு," என்று நான் அவ&ன உற்சாகப்படுத்தினேன். அவனும் சுண்களேத் துடைத்தவாறு கதைக்க ஆரம்பித்தான்.
"நான் என்ருே தற்கொலே செய்திருக்கவேண்டிய வன். ஆணுல் நான் அப்படிச் செய்யவில்லை. அப்படிச் செய்ய என் மனம் இடம் தரவில்லை. இதற்குக் காரணம் என் மனே வியும், இரண்டு பிள்ளைகளும், வயதுபோன எனது தாயும் தான். அதே வேளை என்னுல் நிதானமான மனிதனுகவும் வாழமுடியாமல் போய்விட்டது. இதில் இருந்து மீட்சி பெறும் நோக்கத்தோடுதான் பைத்தியகாரனுசு அகலகிறேன். இதைத் தவிர வேறு வழியே இல்லை. நீ நி3ணப்பதுபோன்று கஞ்சாக் குடித்ததினுல் நான் பைத்தியகாரன் ஆகவில்&ல. பைத்தியசாரஞன பின்புதான் கஞ்சாவையே தொட்டேன். இப்போதெல்லாம் அது ஒன்றுதான் எனக்கு ஆறுதல் அளிக் கிறது - மனவேதனையை மறக்கச் செய்கிறது. அதையும் விட்டுவிட்டால் உண்மைப் பைத்தியகாரணுகவே ད་ནི་ விடு
Estir. " "
"என்னப்பா நீ சொல்றது எனக்கு ஒண்டுமே புரி வில்ஃயே. புதிர் போடாமல் விளக்கமாகத்திான் சொல் லேன். மனேவி மக்களுக்காகத்தான் வாழ்கிறேன் என்கிடும். அதேவேஃா அவர்களே ஏறிட்டும் பார்க்இஜியில்லே. yircr
உனக்கு நடந்தது?" ඵ් الخاه
(ཙམ་ KITA -31 - ካ`(»
S.

Page 18
சிறிய இடைவெளிக்குப்பிறகு மீண்டும் கதையைத் தொடருகிருன் கரிம். நான் அவனது வாயையே பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.
"எனக்கு நடந்தது உனக்கு நடந்திருந்தால் நீ எப் பவோ தற்கொக் செய்திருப்பாய். உண்மைக்கு அழிவில்லே என்பார்கள். ஆல்ை அந்த உண்பையே என் வாழ்க்கையை அழித்து விட்டது. அந்த யதார்த்தத்தின் விளைவுதான் இந்தக் கோலம்' என்று அவ&னயே அவன் ஒரு முறை ஏற இறங்சுப் பார்த்துவிட்டுத் தொடருகிருண்.
"இன்னும் எனக்குப் பசுமையாக நினேவிருக்கிறது. இற்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன், அன்று நோன் Hப் பெருநாள். கடைக்குச் சென்று வீட்டிற்குத் தேவை ான சாமான்களே வாங்கிக்கொண்டு வீடு நோக்கி வந்து கொண்டிருக்கிறேன். வழியெல்லாம் ஒரே ஜனக் கூட்டம். காரணம் அறியப் புகுந்தபோது காடையன் கமாலே, ஆதீம் கீத்தியால் குத்திக் கொன்றுவிட்டான் என்ற செய்தியும், இத்தியதற்குக் காரணம் ஆதத்தின் மனைவியைக் கமால் TGJI பங்கப்படுத்த எத்தனித்ததாம் என்ற செய்தியும் கிடைத் சீன. அவ்விடத்தில் சுணங்காமலே வீட்டிற்கு வந்து, எனது மனைவிக்கும் இச் செய்தியைச் சொல்லி னைத்தேன். அப் போது அவள் சொன்ன யதார்த்தம் எங்கள் குடும்ப வாழ் வையே சீர்குலைக்குமென்று அவள் எதிர்பார்க்கவே இல்ஃப். பாவம், அவன் கள்ளம் கபடம் தெரியாதவள்', என்று கூறிய வாறு கரீம் பெருமூச்சு விட்டுக்கொண்டே மேலும் தொட ருகிருன்.
'கொலே செய்யப்பட்ட கமால் என்னேயும் ஒருநாள் நீங்கள் இல்லாத சமயம் பார்த்து மான பங்கப் படுத்தினுன். அவனேக் கொல்லத்தான் வேண்டும்." என்று அவள் எவ் வளவு இலகுவாகச் சொன்னுள். கள்ளமில்லாத அவள் உள் ளம் வாழப் பொருத்தமற்றது என்று எப்படி என்னுல்
-32

சொல்லமுடியும்? ஏழாயிரம் எரிமலைகள் ஒன்ருக வெடித் தது போன்று இருந்தது எனக்கு. அதன் பிறகு அவள் முகத்தையே நான் பார்க்கவில்லை. தொழில் செய்வதற்குக் கூட. உடலும், உள்ளமும் ஒத்துழைக்க மறுத்துவிட்டன. அன்றிலிருந்து என் கண்கள் தூக்கத்தை மறந்துவிட்டன. கடைசியாகக் கண்ட முடிவுதான் இது"
"இதுவரை என் மனேவி, மக்கள், என் தாய், ஊரில் உள்ளவர்கள் அனேவருமே என்னேப் பைத்தியகாரன் என்றே நி&னத்துக்கொண்டிருக்கிருரர்கள். என்ன செய்ய என் உள்ளம் அவ்வளவுதான்".
அவன் எழுந்து வாசலை நோக்கி நடந்து போகிருன்.
பக்கத்தில் நின்ற என் மனேவியைப் பார்க்கிறேன்.
அவள் வழிந்து வரும் கண்ணிர்த் துளிகளேத் தன் மூன்றுனே யால் துடைத்துக்கொண்டிருக்கிருள்.
--- பன் - தினகரன் 1யூெப்ரவரி
-33

Page 19
நானும் ஒரு மனிதன்
9. 4.
ன்று ஞாயிற்றுக்கிழமை. அத்துடன் பூரணை நாளு ம்ானபடியாற் கல்முனைக் கடற்கரை வழமையை விடக் கல கலப்பாக இருந்தது.
ஒரு சிலர் தங்கள் ம்னைவி மக்களோடு காரில் இருந்த வாறே கடற் காற்றை அனுபவித்துக் கொண்டிருக்க, வேறு பலர் வெள்ளை மணலிலே நீட்டி நிமிர்ந்து படுத்திருந்தனர்.
அவ்விடத்திலேயே மீன் பிடித்து வாழ்கின்ற மீனவர் கள் வலையைத் திருத்திக் கொண்டிருந்தனர். பள்ளிக்கூட மாணவிகள் சிலர் கடலலையிற் கல்லெறிந்து களித்தனர். கடலை விற்கும் சிறுவர் அங்குமிங்கும்ாகத் திரிந்தனர்.
வரும் வழியில் சங்கர் நடந்துகொண்ட விதத்தை நினைக்கும்போது அவன் கன்னத்தில் அறைய வேண்டும் போல் இருந்தது எனக்கு. குடிப்பதற்கும் ஓர் அளவு வேண் டாமா? கோபத்தோடு சங்கரை நான் பார்க்கின்றேன். சங்கர் சிகரெட்டைப் புகைத்துக் கொண்டு என்னைப் பார்க்கிருன்.
கள்ளம் கபடமற்ற அவ னு  ைட ய சிரிப்பு என் கோபத்தை ஒருவாறு தணிக்கிறது. அதனுல் அவன்மீது எனக்கு அனுதாபம் ஏற்படுகிறது. என் உள்ளம் "இவன் நல்லவன்' என்று சொல்கிறது.
இரண்டு வருடங்களுக்கு முன் தொழில் நோக்கமாகச் சங்கர் இங்கு வந்து சேர்ந்தான். அவனும் ஒரு கலைஞன்
س-34

என்ற முறையில் அவனேடு எனக்கு உறவேற்பட்டது. கர் நாடக சங்கீதத்தை முறையாகப் படித்தவன் என்பது மட் டுமல்ல, குரலும் மிக இனிமையானது. அவன் பாடினல் கவலையை மறந்தே கேட்டுக்கொண்டிருக்கலாம். ஆனல் கண், தலை தெரியாது அவன் மது அருந்துவது எனக்குக் கட்டோடு பிடிக்கவில்லை.
அன்று ஒரு தாள் . . இதே இடத்தில் இருவரும் உரையாடிக்கொண்டிருந்தபோது சங்கருக்குக் கடன் கொடுத்த ஒருவன், கடனைக் கேட்டுப் பேசிய வார்த்தைகள் அங்கிருந் தவர்களை அவ்விடத்தில் கூடும்படி செய்துவிட்டன.
வேறு ஒருநாள் சங்கர் குடித்துவிட்டு, நிதானம் தவறி, வீதியிலே விழுந்து கிடக்கவும், நான் அவனைத் தூக்கி நிறுத் தவும், இதனைப் பார்த்துக்கொண்டு நின்ற பொது மக்களில் ஒருவன், 'படித்தவர்களே இவ்வாறு நிதானம் தவறிக் குடித் துவிட்டு ருேட்டிலே புரண்டால், படியாதவர்கள் என்ன செய்வார்கள்' என்று என்னையும் குடிகாரஞக நினைத்துப் பேசியதும் என் நினைவலைகளில் முனைப்பெடுத்து நிற்கின்றது.
முதலும் கடைசியுமாக இன்று அவனிடம் குடிப் பழக் கத்தை விட்டுவிடுமாறு கேட்டு வைப்போம் என்ற எண் ணத்துடன் பக்கத்தே படுத்திருந்த சங்கரை அன்போடு பார்க்கின்றேன். அவனும் முறுவலித்தவாறு என்னைப் பார்க் கின்ருன் .
'ஏய் சங்கர் உனக்கு ஒரு நாளைக்குக் குடிப்பதற்கு எவ்வளவு வேண்டும்???
** எவ்வளவு என்று நீ குறிப்பிடுவது பணத்தையா? அல்லது பானத்தையா? அது இருக்க . . ஏன் இந்த நேரத்தில் இந்தக் கேள்வி???
"சும்மா சொல்லு, எவ்வளவு பணம் வேண்டும்?"
-35

Page 20
"சுமார் ஐந்து ரூபாய் இருந்தால் ஒருவாறு சமாளிக் கலாம். எவ்வளவு இருந்தாலும் குடிக்கலாம்.'
*"சாப்பாட்டுக்கும், மற்றச் செலவுகளுக்குமாகச் சுமார் எவ்வளவு தேவை???
'சாப்பாட்டுக்கும், மற்றச் செலவுகளுக்குமாகச் சுமார் பத்து ரூபா இருந்தால் போதும்.'
* 'அறை வாடகை, தேநீர், சிகரட், குடிச் செலவு, மற்றும் சில்லறைச் செலவு எல்லாமாகச் சேர்த்து சுமார் இருபது ரூபா வேண்டுமென்று சொல்லு?"
"ஒமோம் . .
"நானூறு ரூபாதானே சம்பளம் எடுக்கிருய்? மற்ற தெல்லாம் கடனு?"
"என்ன் கிண்டலா பண்ணுகிருய்?"
'இல்ல, உன் நிலைமையை யோசிக்கும்போது எனக்கு வருத்தமாய் இருக்கு. ஊருக்குக்கூட நீ காசனுப்புகிறயோ தெரியாது. உனது மனைவி மக்களின் கதியென்ன? தயவு செய்து இந்தக் குடிப்பழக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக்கொண்டுவா. மிச்சமில்லாவிட்டாலும் கடன் இல் லாது கண்ணியமாக வாழலாம். மனம் விட்டுச் சொல்லு கிறேன். உன்னேடு கூடித் திரிவதினுல் என்னையும் ஒரு மாதி ரியாகப் பார்க்கிருர்கள். இது என் சொந்த ஊர். தயவு செய்து பலதையும் யோசித்துப் பார். மனிதனல் முடியாத காரியம் என்ன இருக்கிறது?"
"என்னேடு கூடித்திரிவது உம்முடைய கெளரவத் திற்குப் பங்கம் ஏற்படுத்துமானல் உமது நட்பைத் துண் டித்துக் கொள்கிறேன். அதைத் தவிர என்னல் ஒன்றும்ே செய்யமுடியாது.”*
-36
 

"பாத்தியா! திடீரெனக் கோபிக்கின்ருய். இந்தக் காலத்தில நல்லது கூடச் சொல்ல முடியாது. குடிப் பழக் கத்தை விடச் சொன்னேன். இதற்குப்போய் கோபப்படுகி ருயே. சிந்தித்துப் பார்த்தால் உன்னைப் பற்றியே நீ பரி தாபப்பட்டுக் கொள்வாய்.” என்று கூறி முடித்துவிட்டுச் சங்கரின் விடையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
அவன் பேசவே இல்லை . .
அவன் சிகரெட் புகை மட்டுமே நீண்டு விரிந்து செல் கிறது. அத்தோடு சேர்த்து அவன் ஏக்கப் பெருமூச்சும் இணைந்து செல்கிறது. அவன் அமைதியாக என்னைப் பார்க் கின்றன்.
* "என்ன சங்கர்! நான் சொன்னவை உனக்கு நல்ல தாகத் தென்படுகிறதா? ஏன் பேசாமல் இருக்கிருய்' என் றதும் அவன் பேச ஆரம்பித்தான்.
"மிஸ்டர் முகைதீன் குடி போதையில் உள்ள நன்மை தீமைகளைப் பற்றி உன்னைவிட நான் நன்கு தெரிந்தவன். இது உனக்குக் கசப்பான உண்மையாக இருந்தாலும், நீ ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். ஏனெனில் குடிக்கு வெளியே இருந்துகொண்டு கற்பனை அல்லது சூழ்நிலை தந்த அனுபவத்தைக் கொண்டு மாத்திரம் மேலெழுந்த வாரியாகவே உனது கருத்துக்கள் இருக்கும்."
'ஆனல், நான் அப்படிப்பட்ட நிலையில் இல்லாமல் அதன் உள்ளேயே கிடப்பவன். அதன் நேரடித் தாக்க அனு பவமும், அதனுல் ஏற்பட்ட அறிவும் எனக்குண்டு. எனவே தான், அதன் நன்மை தீமைகளைப் பற்றி உன்னைவிட நான் நன்கு அறிந்தவன். இது உனக்குக் கசப்பான உண்மையாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்."
"சரி, ஏற்றுக் கொள்கின்றேன். ஆனல் சிறு சந்தே கம், அதற்கு விடை சொல்லு' t
-37

Page 21
'சரி கேள் . .
'குடிப்பதினுல் நன்மை அதிகமா? தீமை அதிகம்ா?’ 'தொண்ணுாற்று ஒன்பது வீதம் தீம்ையே."
"அப்படியிருந்தும் அந்தத் தீமையை ஏன் திரும் பத் திரும்பச் செய்கிருய்?"
"இந்தக் கேள்விக்கு ஒரு வார்த்தையில் விடை சொல்லி விடலாமே. ஆளுல் அது உனக்குப் புரியாது.”*
"அப்படியென்ன அவ்வளவு பெரிய தத்துவமா அது? சொல்லு, புரிகிறதா இல்லையா என்று பார்ப்போம். நானும் தத்துவம் படித்திருக்கிறேன்.""
'நானும் ஒரு மனிதன்.""
"என்ன உளறுகிருய், கூடக்குறையப் போட்டுவிட் டாய் போலிருக்கிறது!"
** என் அன்புக்குப் பாத்திரமான முகைதீன் அவர் களே! அப்படியொன்றும் நான் உளறவில்லை. என்னுடைய வாழ்க்கை என்னும் புத்தகத்தில் இரண்டொரு பக்கங்களை மட்டுந்தான் நீ படித்திருக்கின்ருய். அதைக்கொண்டு அப் புத்தகம் நல்லதென்ருே கெட்டதென்ருே உன்னுல் தீர்மா னிக்க முடியுமா? முன்னும், பின்னும், இன்னும் எத்த னையோ பக்கங்கள் உள்ளன. பின்னுள்ள பக்கங்களை நானும் இன்னும் வாசிக்கவில்லை. கற்பனையிற்தான் பார்க்கின்றேன். ஆனல் முன்னுள்ள பக்கங்களை வேண்டுமானுல் உனக்குச் சொல்லுகின்றேன். கவனமாகக் கேள்' என்று கூறியவாறு சங்கர் எழுந்து உட்கார்ந்து கொண்டான். கூடவே நானும் எழுந்து உட்கார்ந்து கொண்டேன்.
-38 -

கடற் காற்று உடலைச் சிலிர்க்க வைக்கிறது, சங்கர் கதையைச் சொல்லுகிருன்.
"எனக்கு இப்போது வயது இருபத்தியைந்து, இரு பது வயதில் திருமணம் செய்தேன். நான் மா ன வ ஞ க இருந்த காலத்தில் எனது குரல் மிக இனிமையாக இருந் தது. அதனுல் எனது இசை இடம்பெருத பாடசாலை வைப வமே இல்லை எனலாம். ஆனல் சங்கீதத்தைப் பாடசாலைப் பருவத்தில் படித்து முடிக்கக் கிடைக்கவில்லை."
"திரும்ணமாகி மூன்று மாதங்களின் பின் இந்தியா வுக்குச் சென்று சங்கீதம் படிக்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது. எனது உள் மனதில் எங்கோ ஒரு மூலையில் நிறை வேருது கிடந்த ஆசை தலை தூக்கிற்று. மனைவி என் ஆசைக் குத் தடைபோடவில்லை."
"எல்லோருடைய ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொண்டு இந்தியாவுக்குப் புறப்பட்டுவிட்டேன். அங்கு என் னையும் அறியாமல் ஒன்றரை வருடங்கள் உருண்டோடி விட் டன. என்னையும் அறியாமல் . . என்னையும் அறியா LD6) . . . . . . என்னையும் அறியாமல் . .
"என் ைசங்கர் கீறுபட்ட இசைத்தட்டைப்போல் என்னையும் அறியாமல் . . என்னையும் அறியாமல் . . என்று கூறிக்கொண்டிருக்கின்ருய்' என்று சொல்லி அவன் கையை அசைத்தேன். அவன் திடுக்கிட்டு எழுந்து என்னைப் பரபரப்போடு பார்த்தான். அவன் உள்ளத்திலே ஏதோ ஒன்று அழுத்திக் கொண்டிருக்கின்றது என்பதை நான் உணர்ந்தேன்.
'கதையை ஏன் இடையில் நிறுத்திக்கொண்டாய். தொடர்ந்து சொல்?", என்றேன். அவன் தொடர்ந்தான்.
'அன்று எனக்கு வந்த கடிதங்களைப் புரட்டிக் கொண் டிருக்கும்போது எனது தாயாரின் கையெழுத்துத் தென்
-39

Page 22
படவே அதை முதலில் எடுத்துப் பிரித்துப் பார்த்தேன். அதில் உள்ள சில வசனங்கள் என்னை ஈர்த்தன.”*
"அரை மணித்தியாலம் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பின்பு ஒருவாறு மனதைத் திடப்படுத்திக் கொண்டு, திரும் பவும் அவ் வசனங்களைப் படித்தேன். ஆணுல் அந்த வசனங் களை என்னுல் ஜீரணிக்க முடியாமல் போய்விட்டது. இன் னும் அவ் வசனங்கள் என் நினைவில் நிற்கின்றன.'
"உனது மனைவியின் தவழுன நடத்தையால் இப் போது அவள் கர்ப்பவதி. இதுதான் அந்த வசனம். இதை வாசித்த பின் என் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்ப தைக் கவிஞனுன நீ கற்பனை பண்ணிப்பார்." என்று கூறி விட்டுப் பெருமூச்சொன்றை விட்டான் சங்கர்.
அப் பெருமூச்சு காற்ருேடு கலக்க முடியாமல் முட்டி மோதிச் செல்வது போலிருந்தது.
நான் தொடரும்படி அனுதாபத்தோடு பார்த்தேன். அவனும் தொடர்ந்தான். 'அதன் பின்னர் என்னல் எப்படிச் சங்கீதம் பயில முடியும்? அன்றே வீட்டுக்குப் புறப்பட்டு விட்டேன். வீடு வந்து சேரும் வரை என் மனச்சாட்சியும் நானும் பட்ட பாடு . . கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தேன். என் மனச் சாட்சியே என்னை வென்று விட்டது.'
“என் மனச்சாட்சி என்னைப் பார்த்துக் கேட்டது. நீ இந்தியாவில் இருந்தபோது கற்பு நெறி தவழுது இருந் தாயா? இல்லையே; அப்ப்டியிருக்கும்போது, எப்படி மற்ற வர்களிடம் கற்பை எதிர்பார்ப்பாய்?"
"இந்தக் கேள்விகளுக்கு என்னுல் பதில் சொல்ல முடிய வில்லை. அதனல் எனது மனச்சாட்சியே வெற்றி பெற்றது. அவளை மன்னிக்குமாறும் ஆலோசனை கூறியது. நடந்ததை
- 40

மறந்து நடக்கவேண்டியதைக் கவனிப்பதற்கான மன நிலை யோடு வீடு வந்து சேர்ந்தேன்."
"வீடு வந்து சேர்ந்ததும் அவளை எதுவிதமான கேள் வியும் கேட்காது, எதுவிதமான அசம்பாவிதத்துக்கும் இடம் வைக்காது நடந்துகொண்டேன். ஆணுல் . .
**ஆனல் என்ன? மறைக்காமல் சொல்லு. இனி மறைப்பதற்கு என்ன இருக்கிறது?"
*"நானும் ஒரு மனிதன்தானே மன்னித்து விட்டதாக நினைத்தாலும் என்னல் அச் சம்பவத்தை மறப்பது மிகவும் கஸ்டம்ாக இருந்தது. இப்போதும் அப்படித்தான் இருக்கி றது. உள் மனத்தில் கிடந்து உருளுகின்றது. இதற்கு மருந்து தேடித்தான் குடிக்கப்பழகினேன். நினைவு வரும் போதெல்லாம் குடித்துக்கொண்டிருக்கின்றேன். நானும் ஒரு மனிதன்தானே?"
'சங்கர்! நீ மன்னித்தது இருக்கிறதே; அது சாதா ரண மனிதனுல் செய்யக்கூடிய காரியமல்ல. தெய்வத் தன்மை உள்ள மனிதர்கள் செய்யும் காரியம்; ஆனல் குடி அதனை அழித்துவிட்டது' என்றேன்.
அதற்கு அவன் "முகைதீன், இனி நான் குடிகார னல்ல. இது சத்தியம்' என்ருன்.
என்னையறியாம்லே எனக்கு உற்சாகம் பிறக்கிறது. அவனைக் கட்டியணைத்துக் கொண்டே "தெய்வம் மனித னின் சாயலில்' என்றேன்.
'மனிதன் தெய்வத்தின் சாயலில்' என்ருன் அவன்.
"கலைஞனே' என்றேன் நான். 'கவிஞனே' என்ருன் அவன். இருவரும் வீட்டை நோக்கி நடந்து செல்கிருேம்.
சிந்தாமணி - டிசம்பர் 1977.
-41

Page 23
பாலையில் ஒரு பணித்துளி
சொருசொருத்த ம்ணலோடு கூடிய அந்த ஒழுங்கை காசிம் காக்காவின் குடிசையோடு முடிவடைகிறது.
காற்பாதி வளவு, அதைச் சுற்றி இற்று இறந்துபோன வேலி, அதன் உள்ளே ஒரு மண் குடிசை, நிரந்தர நோயாளி யான மனைவி, ஆறு குமர்கள். இவ்வளவுதான் காசிம் காக் காவின் சொத்துக்கள்.
வெள்ளை-காவி-காக்கி-கருமை இவ்வாறு நிறப் பரி ளுமம் பெற்ற தொப்பி, சால்வை, சாறன் இவைகளோடு கையிலே ஒரு தடி, தோணியின் கொல்லாப்போல் வளைந் திருக்கும் கால்கள் இத்தியாதி காரணிகள் கண்ணிற்கு எட் டாத தூரத்தே வரும்பொழுதே காசிம் காக்காவை இனங் காட்டிவிடும்.
யாரும் அவருக்கு இல்லையென்று சொல்லாது ஐந்தோ, பத்தோ, சதக்கணக்கில் கையில் வைத்து அனுப்புவது எங் கள் ஊரில் சகஜமாகிவிட்டது. காரணம் சமூகம் என்ற பல் கலைக் கழகத்தில் "நல்லவர்” என்ற பட்டம் பெற்ற பட்ட தாரி, அவர். அத்தோடு இன்றைய அவருடைய குடும்ப நிலையும் ஒரு காரணம்.
அவருடைய மூத்த மகளுக்கு வயது முப்பத்தைந்திருக் கும். இது எங்களூரின் சம்பிரதாயப்படி பேரப்பிள்ளை இருக்க
-42

வேண்டிய வயது. பாவம் இப்போதும் 'கும்ரி' என்ற பட் டியலில்தான் பெயர் இடம் பெற்றுள்ளது.
கடைசி ம்களுக்கு வயது பதினறு. பாரதியின் பாடல் ஞாபகம் வரும். இரண்டிற்கும் இடையில் நான்கு.
ஐந்து பெண் பெற்ருல் அரசனும் ஆண்டியாவான். பழமொழி.
ஆண்டியே ஆறு பெற்ருல் அரசனவாகு.?
புது மொழியா? யாரிடம் போய்க் கேட்பது?
எனக்கு எண்ண அலைகள் ஓங்கிாரமாக எழக் கார ணம் இல்லைதான். நான் யாரோ, காசிம் காக்கா யாரோ?
தினமும் கண்டு பழகிவிட்ட பழக்கத் தோஷம், அத ணுல் இழுபட்டுக்கொண்டிருக்கின்றேன்.
இனிக் காசிம்காக்காவை எங்கே காண்பது? எப் போது காண்பது? ஆண்டாண்டு தோறும் அழுது புரண்
- mr 53)jtb . . . . . . . . .
காரணம் தேடி என்ன செய்ய .
அழுகுரல்கள் காதை முட்ட அடையவேண்டிய இடத்தை அடைந்துவிட்டதை உணர்கிறேன்.
உரலின் மேல் வைக்கப்பட்டுள்ள பலகையில் கிடத்தப் பட்டுள்ள காசிம் காக்காவின் காயத்தைப் பார்க்கின்றேன். கடைசிப் பார்வை என்ற உணர்வு. அதனுல் ஏற்படும் உள் ளத்தின் நெகிழ்வு. ܀-
உச்சியில் இருந்து உள்ளங்கால்வரை நோக்குகின்றேன்.
-43

Page 24
வாதத்தால் வளைந்திருந்த அவரது கால்கள் செம்மை யாக நீண்டு கிடக்கின்றன.
கால் வளைவிற்குக் காரணம் வாதமாக இருக்கமுடி யாது; பாரமே.
பாரம் குறைந்து விட்டது. அதனல் வளைவு நிமிர்ந்து விட்டது.
அந்தப் பாரம் வேறு யாருக்காயினும் வாதத்தை ஏற்படுத்தும் தத்துவம் கருக் கொள்கின்றது.
வாதம் - விவாதம் என் உடன் பிறப்பு.
ஆனல் நேரங் காலம் சரியில்லை. தத்துவத்தை மாத் திரையிட்டுக் கருவிலேயே அழித்து விட்டேன்.
காசிம்காக்காவுக்கு இது தெரியாது. படியாதவர், பழைய மனிதர் . . பாவம். வாதம் மட்டுந்தான் அவருக் குத் தெரியும்.
வாசலில் விரிக்கப்பட்டுள்ள தோ ட் டு ப் பாயில் எல்லோரையும்போல் நானும் போய் அமர்ந்து கொள் கின்றேன்.
வெற்றிலை வட்டா, பீடி, சிகரெட் எல்லாம் இருக் கின்றன. இவ்வளவு வறும்ைக்குள்ளும் சம்பிரதாயத்திற்குக் குறைவில்லை.
மெளனத்தின் ஆட்சி, அதனுல் யாரும் கதைக்கவில்லை.
நான் கதைஞன். எனக்குச் சும்மா இருக்க முடியுமா..?
"என்ன முஅத்தினர் . நேற்று மெளத்தான மை
யத்து . நேரமும் அடிச்சுக்கிட்டுப் போவுது . எல்லோரும் சும்மா, சும்மா இருந்தா மையத்த அடக்கிறதில்லையா..??"
-44

மையத்த அடக்க இன்னும் ஒருத்தரும் முன்னுக்கு வரல்லியே . அத்தோட நம்முட ஆதம்போடியார் மை யத்த அடக்க உடமாட்டேன் என்று பிரச்சினையை வேறு கிளப்பி இருக்கார் . அதனுல்தான் பேசாமல் இருக்கிறுேம்.
'அதென்ன ஆதம்போடியார் பிரச்சினை . "
"இப்ப ஒரு வருஷத்துக்கு முன் காசிம்காக்காட பெண்சாதிக்குக் கடுமையான வருத்தம் வந்து, சாகப் புளைக்க கிடந்தவ. கடைசியில ம்ட்டக்களப்பு ஆஸ்பத்திரி வரையும் போய்த்தான் ஒருமாதிரி ஆளப் புளைக்க வச்சது; அதனுல கொஞ்சக் கடன் வந்திட்டுதுபோல. அதைத் தீர்க்கிறதிற் காக ஆதம்போடியாரிடம் இந்தக் காற்பாதி வளவையும் ஈடாக வச்சிட்டு நானுரறு ரூபாய்க் காசு எடுத்ததாம். அந் தக் காசையும் அதற்குரிய நயத்தையும் ஆர்தாற; அதற் குரிய ஆள் முன்வந்தால்தான் நான் மையத்த அடக்க உடு வன், என்று சொல்லிப் போட்டுப் போகிருர் போடியார், உள்ளே போடியார்ர பெண்சாதி இருக்கிருப்போல, பெண் களுக்குள்ளேயும் ஏதோ சச்சரவு. நம்மளால என்ன செய்ய முடியும்? குமர்களுடைய பாடுதான் பெருங் கஷ்டம். பிச்சை எடுத்துக் கொடுக்கிறதற்கும் ஒரு ஆண் சீவன் கிடை யாது .'"
முஅத்தினர் அனுதாபப் பட்டுக்கொண்டார். அதைத் தவிர அவரால் என்னதான் செய்ய முடியும்?
நான் காதைக் குடிசையின் பக்கம் திருப்பிச் சச்ச ரவை ஒலிப்பதிவு செய்கின்றேன்.
'மெளத்தான மையத்த அடக்க உடாமத் தடுக்கிற
திற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. மார்க்கத்திலயும் இடம் கிண்டயாது, சட்டத்திலயும் இடம் கிடையாது."
**கத்தாதடி வேசை . நீ யாரடி இதைக் கேட்க, பள்ளி வாசல்ல மட்டை அடி பட்டதை மறந்து மார்க்கம்
-45

Page 25
பேச வந்திட்டா, பத்திணிப் பொண் ஆட்டம். காசை வச்ை சுப்போட்டுப் பேசிடீ.""
"அது இருக்க, காசிம்காக்காவுக்கு இவள் யாரு, மகளா? மச்சியா? மதினியா .. ? அடுத்த ஊட்டில இருந்தாப்போல உரிமை வந்திடுமா . உரிமைக்காறங்க எல்லாம் சும்மா இரிக்க . இவ பேச வந்திட்டா பெரிய ஆள்மாதிரி"
**நீ போடியார் பொண்டாட்டி எண்டாப்போல நான் பயந்து போவன் எண்டு நினைச்சுக்காத, எண்ட அடுத்த ஊடு அல்லயல்ல ஒரு ம்ையத்து விழுந்தா அதில எனக்கும் பங் குண்டு. உன்னப்போலப் பணத்திற்காகப் பிணத்தைத் தின்ன மாட்டன். நான் மட்டை அடிபட்ட விசயம் ஊருக்கெல் லாம் தெரியும். நீ சொல்லிக்காட்டத் தேவையில்ல. வாழ்க் கையில ஒரு தரம் தவறினேன். அதற்கு மார்க்கப்படி தண் டனையும் பெற்றுக்கொண்டன். நான் எப்படித் தவறினன் என்பதையெல்லாம் என்னப் படச்ச ஆண்டவன் அறிவான். அதைப்பற்றிக் கதைக்கவோ, கேட்கவோ மத்தவங்களுக்குத் தேவையில்ல. உண்ட காசுக்காக நான் மையத்த வச்சிருக் கப்போறதும் இல்ல."
**ஏ. மீரான். இஞ்ச கொஞ்சம் வந்திட்டுபோ."
அந்தப் பெண்ணின் அழைப்பை ஏற்றுத் தம்பி முறை யான மீரான் போகிருன்,
'இந்தா, இந்த மாலையைக் கொண்டு போய் நகைக் கடையில் விற்றுவிட்டு வரும் வழியில் மையத்த 'கபன்' செய்யிற சாமான் எல்லாம் வாங்கிக்கொண்டு மிச்சத்தைக் கொண்டுவா . அவள் காசையும், நயத்தையும் அவள் முகத் தில வீசணும். நயம் என்ற பெயரில் வட்டி எடுக்கும் கூட் டத்தைச் சேர்ந்தவள் அவள். கடைசியில இந்த ஏழைக் குமர்களுக்கு இருக்க இடமே இல்லாமல் ஆக்கிப் போடு வாள். அவசரமாய்ப் போய் ஓடிவா . **
-46

மீரான் போகிருன்.
தனது கீழுத்தில் கிடந்த ம்ாலையைக் கழட்டிக் கொடுத்த அதே கையால் நெருப்புச் சட்டியுள் சாம்பிரா ணியை அள்ளிப் போடுகிருள்.
நெருப்பு சாம்பிராணியை எரித்து மணத்தைப் பரப் புகிறது. அம் மணம் இருப்பவர்களின் மனத்தை ரம்மியப் படுத்துகிறது.
பிறைப் பூக்கள் - ஜூன் 1979.
-47

Page 26
குப்பையிலே ஒரு குன் றுமணி
ਛੁਗੁ॥ சிணுத்த மழை. மாலை ம்ணி ஐந்திருக்கும். கல்முனை பஸ் நிலையத்திற்குப் பக்கத்திலேயுள்ள வாடகைக் கார்கள் நிற்கும் இடத்தில் பத்துப் பன்னிரெண்டு வாடகைக் கார்கள் நிற்கின்றன.
இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ் ஒன்று 'மழை வெய்யில் எல்லாம் எனக்கு ஒன்றுதான்' என்று கூறுவது போல் நிலையத்தை விட்டு வெளியேறுகின்றது.
தனிப்பட்டோர் வாகனம் ஒன்று அம்பாரைக்குச் செல்லும் ஆட்களைச் சேர்க்க அடித்தொண்டையால் கத்திக் கொண்டு அலைகிறது.
பிரயாணிகள் தங்குமிடம் ஒழுங்கில்லாததால் மழைக் காக "பஸ் வருமட்டும் பாதை ஒரங்களில் ஒதுங்கியவர் களுடன் நானும் சேர்ந்து கொள்கிறேன்.
பாதையிலே மழையைப் பொருட்படுத்தாத ஒரு கூட்டம். அவர்களுக்கு முன்னுல் ஒரு தள்ளு வண்டி. அதற் குள் ஒரு மனித உருவம் கூனிக் குறுகிக் கிடக்கிறது. அந்த உருவம் அசைவதும் அவதிப்படுவதும் என் கண்களுக்கு நன்றகத் தெரிகிறது. ஆச்சரியத்தோடு அதை நோக்கு கிறேன். அந்த உருவம் உயிருக்காகப் போராடிக்கொண்டு செல்கிறது என்பதில் சந்தேகமேயில்லை.
--48ے

வண்டியைப் பின் தொடர்கிறவர்கள் எல்லோரும் உழைத்து உருக்குலைந்தவர்கள். "சக்கிலியர்கள்" என்று பிறரால் வர்ணிக்கப்படுபவர்கள். அவர்கள் எல்லோரது உள்ளங்களிலும் சஞ்சலம் நிழலாடுவது அவர்களின் முகங் களில் ஆப்படியே பிரதிபலிக்கிறது.
நகரமே அவர்களின் தள்ளுவண்டி ஊர்வலத்தை வேடிக்கை பார்க்கிறது. என்னைத் தாண்டும்போது நானும் 14ாச்க்கிறேன்; இல்லை, கூர்ந்து நோக்குகிறேன்.
அங்கே.
வண்டியின் உள்ளே சுருண்டு கிடப்பவன்-சாவோடு போராடிக்கொண்டிருப்பவன், எனக்கு நன்கு தெரிந்த கறுப் பையா. கல்முனை வாழ் மக்கள் அனைவருக்கும்ே தெரிந்த அதே கறுப்பையா. "சக்கிலியன்' என்ற பட்டத்தை எடுத்துவிட்டு வேறு ஏதாயினும் பட்டத்தைக் கொடுத் திருந்தால் எந்த உத்தியோகத்திற்கும் பொருத்தமான பேர்சனலிட்டி பொருந்திய அதே கறுப்பையா. அவன் எந்த வண்டிக்குள் வாளிகளை வைத்துத் தள்ளித் திரிந்தானே அதே வண்டிக்குள் இப்போது கூனிக் குறுகிக் கிடக்கிருன்.
அவன் முக்கிமுனகுவது என் காதுகளில் நன்முகக் கேட்கிறது. அதோடு சேர்த்து பக்கத்தில் இரு இளைஞர்கள் பேசுவதும் கேட்கிறது. தெரிந்தவன் என்பதனுலும், நடந் தது என்ன என்பதை அறியும் ஆவலினலும் அவர்கள் பேச்சை நான் செவிமடுக்கின்றேன்.
'பாவம், கடைசி வருத்தம் கறுப்பையாவுக்கு அதனல் தான் அந்த வண்டியிலே வைத்துத் தள்ளிக்கொண்டு ஆசுபத்திரிக்குப் போகிருர்கள். பார்க்கப் பரிதாபமாக இருக் கிறது இல்லையா?*
"நாம் பரிதாபப்பட்டு என்ன செய்யமுடியும்? அது சரி, இரண்டு மூன்று ரூபாய்க் காசைக் கொடுத்து ஒரு
- 49

Page 27
காரிலே கொண்டுபோய்ச் சேர்த்திருக்கலாம்ே ஆஸ்பத்திரிக்கு. ஏன் இப்படி அநியாயப்படுத்துகிருர்கள்? குடித்து வெறித்துச் செலவு செய்ய மட்டும் தெரியும் இவர்களுக்கு'.
**விஷயம் தெரியாமல் கதைக்காதே. காசு இல்லாமல் இவர்கள் இப்படித் தள்ளித் திரியவில்லை. கார்க்காரனுகள் வரமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். காலை தொடக்கம் ஒவ்வொரு கார்க்காரணுகக் கேட்டுப்பார்த்தார்கள். அசிங்க மான சக்கிலியனைத் தங்கள் காருக்குள் ஏற்றினுல், மற்ற வர்கள் தங்களை ஹயருக்குக் கூப்பிடமாட்டார்கள் என்ற சாட்டைச் சொல்லி எல்லோரும் மறுத்துவிட்டார்கள்." 1
இளைஞர்களின் உரையாடல் என் உள்ளத்திலே சும்ை யாகிறது. அனுதாபத்தோடு கறுப்பையாவைத் தள்ளிக் கொண்டு போகிற திசையை நோக்குகிறேன். கறுப்பையா வைப் பற்றிய நினைவுகள் என்னுள்ளே நிழலாடுகின்றன.
நான் கந்தோருக்குச் செல்லாது வீட்டிலே நின்ருல் கறுப்பையாவை வாளியும் கையுமாகச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிட்டும். அப்போதெல்லாம் அவனுேடு கதைக்க ஆசைப் படுவேன். காரணம் கறுப்பையா தமிழைப் பேசுவதே ஒரு தனி அழகு. அதனுல் நானே கறுப்பையாவைப் பேச்சுக் கிழுப்பேன்.
"என்ன கறுப்பையர், உன்னை இரண்டு மூன்று நாளாய் இந்தப் பக்கமே காணல்ல, ஏதும் முக்கியமான (362)(ur?””
"ஏன் சார் அப்படிச் சொல்றிய உங்களைத்தான் காண்றது ருெம்ப ஆர்வமாய் இருக்கு. கறுப்பையா ஏதா யினும் அஞ்சு பத் துண் ணு கேட்டுத் தொலைச்சிடப் போருன்னு காலங் காத்தால எழும்பிக்கிட்டு ஆபீசுக்குப் போயிடிறிய, நான் வாறநேரம் நீங்க வீட்டிலே இல்லீங்களே, அதனுலதான் காணமுடியல்ல. அது அப்புடியிருக்க நான்
-50

வராட்டாத்தான் நீங்க வீட்டிலே குடியிருக்க முடியாதே. அதனுல, காய்ச்சலோ கறுப்போ, வந்துதானுங்க ஆகணும். நீங்க நாலு நாளைக்கு ஆபீசுக்குப் போகாம வீவு எடுத் தாலும் ஒண்ணும் ஆகாது. லீவு முடிஞ்சுபோய் வேலையைக் கவனிச்சுப்புடலாம். ஆன நாங்க ரெண்டு நாளைக்கு லீவு எடுத்தா அப்புறம் கேட்கனுமா? அதனல் தினசரி வந்து தானுங்க ஆகணும். வேறு ஒரு இடத்திலே வேலைக்குக் கூப்பிட்டிருக்காங்க, சம்பளம் கொஞ்சம் கூடத் தருவாங்க போலிருக்கு. ஆன கல்முனையை விட்டுட்டுப்போக மன மில்லாமயிருக்கு. பத்துப் பன்னிரெண்டு வருசம் இங்கேயே வாளி தூக்கிப் பழக்கப்பட்டுப் போச்சி; அதனுல மனுசன் பெரிசா, சம்பளம் பெரிசா என்று யோசிச்சிப்புட்டு இங்கே தான் சாகும்வரை கிடப்போமென்று தீர்மானிச்சுப்புட்ட இறுங்க. இன்னும் பத்துப் பன்னிரெண்டு வீடு இருக்கு, முடிச்சுப்புடனும். நம்ம கடம அது. போயிட்டுவாறன்
rrj , ” ”
கடமையைப் பற்றியும், மனிதத் தன்ம்ையைப் பற்றி யும் பேசிய கறுப்பையா இப்போது.
என் கண்கள் கலங்குகின்றன. கண் கலங்கித்தான் என்ன செய்ய முடியும்? எனக்குள் நானே குமைகின்றேன்.
இதே நகரத்தைச் சுத்தப்படுத்த எத்தனை பேருடைய கழிவுகளைச் சுமந்திருக்கின்ருன் கறுப்பையா. ஒரு நாளா, இரண்டு நாளா எத்தனை வருடங்கள்; ஆனல். அவனுடைய உடல் உயிருக்காகப் போராட்டம் நடத்தியபோது அவனை ஆஸ்பத்திரிக்குச் சுமந்துசெல்ல ஒரு வாடகைக்கார் கிடைக்க வில்லை. பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு வழியே தென் படவில்லை எனக்கு.
மலர் - ஜூலை 1970
-51 -

Page 28
பன்னீர் வாசம்
பரவுகிறது
சிலிப்போடி இறந்து விட்டார் என்ற செய்தி அந்த ஊரெங்கும் காட்டுத் தீ போலப் பரவி நிற்கிறது.
சாம்பிராணி எரியும்போது அதன் புகை மணத்தைப் பரப்பிச் செல்வது போன்று அலிப்போடியின் இறப்புச் செய் தியோடு அவருடைய புகழும், ஏழ்ம்ை நிலையும் பரவி நிற் கின்றன. 'பாவம் குமர்குட்டிக்காரர். பள்ளிவாசலோடு எதிர்த்து இருந்ததையெல்லாம் தொலைச்சுப் போட்டார். யார் எப்படிப் போனலென்ன என்று சும்மா இருந்திருந்தா காணியாக்கும் மிஞ்சியிருக்கும். குமர்கள் வாழாட்டியும் தண்ணிய வெந்நிய குடிக்க அது உதவியிருக்கும். வழக்கில எல்லாத்தையும் தொலச்சுப்போட்டார். அந்தக் குமர்களுக்கு ஆண்டவன்தான் இருக்கான். மாஸ்டரும் வெளியூர்ல, அவ ரும் புள்ள குட்டிக்காரர். கரீம் மட்டும் என்ன செய்வான்? அவனும் வாப்பாவைப்போல அநீதியைக் கண்டா சும்மா இருக்க மாட்டான். அதிலயும் ஏழைகளெண்டா உசிர உட் டிடுவான்." என்று ஊரெங்கும் ஒரே பேச்சு. அலிப் போடி யின் வளவு நிரம்பித் தெருவிலும் ஜனக்கூட்டம் நிரம்பி வழிகிறது.
இந்த ஜனக் கூட்டத்தில் இப்ருலெவ்வை மரைக்கா யரும் ஒருவராகத் தென்னை மரத்தில் சாய்ந்தவராக நின்று கொண்டிருக்கிருர். அலிப் போடியின் இறப்புச் செய்தி கேட்டு ஊரே திரண்டு வருவதைக் கண்ட இப்ருலெவ்வை மரைக்
ص-52--

காயருக்குத் தன்னையறியாமலே காழ்ப்பு எண்ணம் தலை தூக்குகிறது. "தனது மனைவி இறந்தபோது இவ்வளவு சனம் வரவில்லையே? என்னிடம் எவ்வளவு காணி பூமி இருக்கிறது, காசி இருக்கிறது, பள்ளில மரைக்காயர் நான் , அப்படி இருந்தும் மையத்துக்குக் கொஞ்சப்பேர்தானே வந்தார்கள்; ஒண்டுக்கும் வழியில்லாத அலிப் போடிக்கு இவ் வள வு சனமா?’ என்று அவருக்குள் அவரே குமைகின்ருர், சனத் தையெல்லாம் அடித்துக் கலைக்க வேண்டும்போல் தோணு கிறது அவருக்கு. இருந்தும் வெளியில் காட்டிக்கொள்ள விரும்பாத அவர் "என்ன தம்பி கரீம், காக்கா வந்துதானே மையத்த அடக்க வேணும், அவர் வராம் மையத்த அடக் கிறதும் சரில்லதான். தந்தி அடிச்சாச்சிதானே' என்று ஒரு கேள்வியைக் கேட்கிருர்,
"ஒமோம்", இது கரீமின் பதில்,
"அப்ப நாளைக்குக் காலையிலதான் அடக்க வரும்; நாம ஏன் சும்மா நிற்பான்; நாம கலைவம்; தம்பி மையத்து மண மெடுத்திடும்; நெருப்பில நல்லா சாம்பிராணிய அள்ளிப் போட்டுக்க அப்ப நான் வாறன்" என்று கூறிய வாறு போகின்றர். சனங்களும் ஒன்றும் இரண்டுமாகக் கலைந்து கொண்டிருக்கிருர்கள். இப்ருலெவ்வை மரைக்காயருக்குத் தானே சனங்களைக் கலைத்து விட்டதாக ஒரு மனப் பிராந்தி.
سے 2 س
அடுத்த நாட் காலை மு ஸ் த பா மாஸ்டரும் வந்து சேர்ந்துவிட்டார். முஅத்தினும், லெப்பையும் மையத்தைக் குளிப்பாட்டிக் கபன் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிருர்கள். முஅத்தின் முஸ்தபா மாஸ்டரைப் பார்த்து, 'தம்பி கபுறு வெட்டுறதுக்கு ஆளனுப்புங்க. எங்க அடக்கப் போறிங்க? பள்ளில அடக்கிறண்டா பள்ளில கணக் கப்புள்ள இருப்பார். அவர்ட்ட காசைக் குடுத்து துண்ட வாங்கிட்டு அவ்விடத்திலேயே கபுறையும் வெட்டி முடிச்சி
-53

Page 29
டலாம்; இனிச் சொணங்கப்படாது!" என்றதும் முஸ்தபா மாஸ்டர் "கொஞ்சம் இருங்க, இந்தா வந்திட்டன்" என்ற வாறு உள்ளே போகிருர்.
'தம்பி கரீம், இஞ்ச வா, எங்க அடக்குவம்? பள்ளில தான் அடக்கவேணும்; அப்பத்தான் நமக்கும் கெளரவம்" என்று இலேசாகத் தம்பியை உசாவுகிருர்,
அதற்கு கரீம் "பள்ளில அடக்க நமக்குக்கிட்ட முந் நூறு ரூபா இருக்கா? இப்பவும் மையத்துக்கான சாமான் அவ்வளவும் கடனுக்கு வாங்கி வந்திரிக்கன். வாப்பாட வருத் தத்தில செலவழிச்ச கடன் வேறு ஆயிரம் ரூபா இருக்கும், ஊடு கட்டிக் கொறயில கிடக்கு, இதற்குள்ள பள்ளில அடக் கிறத்துக்குக் காசேது? அந்த யோசனையெல்லாம் போட்டுட்டு கடற்கரையில அடக்குவம்."
"என்ன தம்பி, மடயன் மாதிரிக் கதைக்காய், வாப் பாவும் பரம்பரைப் போடி, நானும் ஒரு மாஸ்டர், சனம் என்னத்தச் சொல்லும்; ஆளுக்கரவாசா எடுத்துப் பள்ளில அடக்குவம்.”*
"என்ன காக்கா?படிச்சிருந்தும் புத்தியில்லாமக் கதைக் கிறீங்க. நான் நிரந்தரமான தொழில் இல்லாம இந்தக் குமர் களையும் வைச்சிக்கொண்டு படுகிற கஷ்டம் தெரியாம ஆளுக்கு அரைவாசி எடுப்பம் என்டு சொல்றீங்க."
"சரி சரி சத்தம் போடாத, பள்ளிக் காச நான் கொடுக் கிறன். பள்ளிலதான் அடக்குவம்'
""நான் பள்ளில அடக்க விரும்பல்ல. வாப்பாவ கடற் கரையிலதான் அடக்க வேண்டும்.""
"என்ன ம்ாஸ்டர் கபுறுவெட்ட ஆள் அனுப்பிட்டீங் களா?" இது லெப்பையின் குரல்.
-54

"கொஞ்சம் பொறுத்துக்குங்க, இந்தா வந்திட்டன்."
'டேய் தம்பி சொல்லிறத்தக் கேள்; நம்மிட கடன் நம்மளோட, வாப்பாவ பள்ளில அடக்காட்டி எனக்கும் கெளரவம் இல்ல. வாப்பாவுக்கும் கெளரவம் இல்ல. என் னப் படிப்பிச்சதுக்கும் நான் ஏதாயினும் நன்றிக்கடன் செலுத்த வேண்டாமா? இதில தலையிடாத, பள்ளிலதான் அடக்குவம்.""
"உங்களப் படிப்பிச்சதுக்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டுமென்ரு இந்தக் குமருகளுக்கு ஏதாயினும் வழி செய் யுங்க; வீடு கட்டிக் கொறயில கிடக்கு அதைக் கட்டி முடிங்க: கடன் இருக்கு அதைத் தீர்த்துவிடுங்க; இதையெல்லாம் உட்டுப் போட்டுப் போலிக் கெளரவத்திற்கு அடிமையாகா தீங்க; கடற்கரையில - பொது மையவாடியில அடக்கிறதால வாப்பாட கெளரவம் ஒன்றும் குறைஞ்சுபோகாது; அவர் உலகத்தில வாழ்ந்த காலத்தில கெளரவமாகவும், கண்ணிய மாகவும் நடந்திருக்கிருர் என்பதற்கு இங்கு கூடியிருக்கிற சனங்களே அத்தாட்சி அவர் பணத்திற்கு அடிமையாகாது மக்களோடு மக்களாக வாழ்ந்தவர்; போட்டுட்டு வேலை யைப் பாருங்கி."
"இவனிட்ட ஒண்டும் கதைக்கேலாது, எதுக்கும் உம் மாக்கிட்டக் கேப்பம். உம்மா சொல்வதைச் செய்வம், "உம்மா வாப்பாவ பள்ளிலதானே அடக்கவேண்டும்???
**இல்ல மகன், கடற்கரையிலதான் அடக்குவம், அவ ருடைய ஆசையும் அதுதான். ஏழைகளோட ஏழையாய் என்னைக் கடற்கரை ம்ையவாடியிலேயே அடக்கிப் போடுங்க என்பதுதான் அவருடைய ஹாஜத்தாக இருந்தது. அப்ப டியே செய்துவிட்டா அவருடைய ஹாஜத்தும் நிறைவேறி யதாகப் போகும். சொணங்காம் வேலவெட்டியளச் செய் யுங்க" என்று கூறியவாறு, தாய் முன்தானையால் கண்ணி
-55

Page 30
ரைத் துடைப்பதைப் பார்த்து முஸ்தபா மாஸ்டர் கண் கலங்கிக் கதறியே விட்டார்.
- 3 -
அலிப் போடியாரின் ஜனசா ஊரை ஊடறுத்துக் கொண்டு கடற்கரை மையவாடியை நோக்கிப் போகிறது. பன்னீர் வாசம் வீதியெல்லாம் பரவி நிற்கின்றது. கதவிடுக் கால் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த இப்ருலெப்பை மரைக் காயரையும் போய் அப் பன்னீர் வாசம் அடைந்து விட் டதோ என்னவோ அதைப் பொறுக்க மாட்டாதவர்போலக் கதவை இறுக மூடிக்கொண்டார்.
மல்லிகை - 1977.
-56

பக்கீர் ஒருவர் பள்ளி கட்டுகிறர்
கத்தான்குடியில் முஸ்தகீம் ஹாஜியார் நல்ல மனி தர் என்ற பெயர் எடுத்தவர். மார்க்க பக்தியும் நல்ல மன மும் கொண்டவர். 'ஹாஜியார்' என்ற பெயருக்கு இழுக் கேற்படாதவாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற எண் ணம் கொண்டவர் பொதுநல சேவையாளன். தமிழையோ, ஆங்கிலத்தையோ அதிகம் கற்றிராவிட்டாலும், குர்ஆன், ஹதீஸ் என்பவற்றை நன்கு கற்றவர். தனது ஊரின் ஒவ் வொரு குறிச்சியிலும் ஒவ்வொரு அழகான பள்ளி இருக்க வேண்டும் என்பது முஸ்தகீம் ஹாஜியாரின் நீண்ட நாள் ஆசை. இதற்கு முன்னேடியாகத் தனது குறிச்சியில் உள்ள பழைய குத்பாப் பள்ளியை, புதிய அழகான பள்ளிவாய லாக மாற்றி அ  ைமக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கச் செயலிலும் இறங்கினர்.
நாட்கள் மாதங்களாக வளர்ந்தபோது பள்ளிவாய லும் அழகுருப் பெற்று வளர்ந்து முடிந்தது. நாளை வெள் ளிக்கிழமை. குத்பாவோடு புதிய பள்ளிவாயல் திறப்பு விழா. அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் எல்லாம் கிட்டத்தட்ட இன்று இரவோடு முடிந்துவிடும். பள்ளிவாயலை மெளலான மெளலவி அல்ஹாபீஸ் அப்துற்றகுமான் அவர்கள் திறந்து வைக்கப் போகிருர்,
பள்ளிவாயல் சிரமதான முறையில் இளைஞர்களால் தண்ணீரால் கழுவப்பட்டுக் கொண்டிருக்கிறது. மாலைச் சூரி
-57

Page 31
யன் பள்ளிவாயலின் மேற்புறத்தைக் தங்க முலாம் பூசிக் கொண்டிருக்கின்றன். முற்றத்தில் கலைப்பதற்காகக் கொண்டு வந்து குவிக்கப்பட்டுள்ள கடற்கரைக் குருத்து மணலில் ஒருச்சாய்ந்து படுத்தவாறு பள்ளிவாயலை இம்ைகொட் டாது பார்த்துக் கொண்டிருக்கிருர் முஸ்தகீம் ஹாஜியார். ஆனல் அவரது எண்ணப் பறவை எங்கெல்லாமோ பறந்து திரிந்தது.
பள்ளிவாயலைப் புதுப்பிப்பதற்காக ஊருக்குள் காசு சேர்க்கச் சென்றபோது ஏற்பட்ட இன்பதுன்ப அனுபவங் கள் அவர் உள்ளத்தில் அலைமோதிக் கொண்டிருந்தன. சில பேரி அள்ளிக் கொடுத்தார்கள். பலபேர் பகடி செய்தார்கள். வேறு சிலரிடம் கல்லில் நார் உரிக்க வேண்டியிருந்தது. கட்சி, கருத்து வேறுபாடு, இவைகள் ஒருபுறம். இவைகள் எல்லாவற்றிலும் முனைப்பாக நின்றது, அந்தப் படித்த இளை ஞன் கூறிய கருத்து. உள்ளமெங்கும் உணர்வோடு வேரோடி நின்ற அந்த இளைஞனின் கருத்தை ஒரு தரம் இரைமீட் டிப் பார்க்கின்ருர் ஹாஜியார்.
" ஏன் ஹாஜியார், இருக்கிற பள்ளி போதாதா? அதைப் புதுப்பிக்கவும் பெருப்பிக்கவும் ஏன் இவ்வளவு கஷ் டப்படுகிறீங்க? இதுவரை இருபதினுயிரம் ரூபாய் சேர்ந்து விட்டதாகவும் கூறிப் பெருமைப்பட்டுக் கொள்கிறீங்க. இந் தப் பணத்தை மூலதனமாக இட்டு கூட்டுறவு முறையில் ஒரு தொழிற்சாலையை நிறுவினு, படித்துவிட்டு வேலையற் றிருக்கும் என்போன்ற இளைஞருக்கு எவ்வளவு உதவியாக இருக்கும். கொஞ்சம் எங்களையும் யோசிங்க ஹாஜியார்."
"பார்த்தீங்களா ஹாஜியார்? எப்படிக் கத. இன்னும் கொஞ்சக் காலம் போன பள்ளிகளையெல்லாம் தொழிற்சாலை ஆக்கச் சொல்லுவானுகள். இந்தக் காலத்துப் பொடியமா ரோட கதச்சித் தப்பேலாது. ஏன் நேரத்த வீணுக்கிறீங்க. வாங்க போவம், இன்னும் எத்தனையோ ஊடு போக வேண் டியிருக்கு."
م-58--

"கூடவந்தவர் ஆத்திரப்பட்டுக் கொண்டார். ஆளுல் எனக்கோ அது ஆழமாகச் சிந்திக்க வேண்டிய விடயமாகப் பட்டது. தொழிற்சாலைகளும், தொழில் வாய்ப்பும் இருந் தால், நிச்சயமாகப் பள்ளிவாயல்களைத் தொழிற்சாலையாக் கும்படி கேட்கமாட்டார்கள். எனவே எனது அடுத்த முயற்சி தொழிற்சாலைகளே."
"ஹாஜியார் ஹாஜியார்!! உங்களத் தேடி யாரோ வந்திருக்கிருங்க. கொஞ்சம் வீட்ட வந்திட்டுப் போகட்
Llth. ''
தனது வீட்டு வேலைக்காரனின் குரல் கேட்டு உணர்வு பெற்ற ஹாஜியார் வீடு நோக்கி நடக்கிறர்.
- 2 -
"அஸ்ஸலாமு அலைக்கும் மெளலான."
'வ-அலைக்கு முஸ்ஸலாம், ஹாஜியார்."
'என்ன நர்ளையத் திறப்பு விழாவிற்கு இன்றே வந்து விட்டீர்கள் போல் இருக்கு. ருெம்பச் சந்தோசம் மெளலான, ருெம்பச் சந்தோசம்.'
'திறப்பு விழா சம்பந்தமாக உங்களோடு ஒரு முக் கிய விடயம் கதைக்க வேண்டியுள்ளது. அதனுல்தான்
உடனே புறப்பட்டு வந்துவிட்டேன்.""
'நீங்க சொல்லி அனுப்பியிருந்தால் நானே அங்கு வந்திருப்பேனே."
*"யார் எங்கு வந்தால்தான் என்ன? விடயம் நல்ல மாதிரியா முடிஞ்சால் சரி; வந்து, நேற்று இரவு, நான் தஹஜ்ஜத் தொழுது விட்டுப் படுக்கும்போது இரண்டு மணி
-59

Page 32
யிருக்கும். அப்போது என் கனவிலே ஒரு பெரியார் தோன்றி, "நாளே குத்பாப் பள்ளியின் திறப்பு விழாவிற்கு முன், மல் வத்தை குடியேற்றப் பகுதியில், பக்கீர் ஒருவர் பள்ளி கட்டி யிருக்கிருர், அங்கு சென்று அதனைத் திறந்து அதற்கு வேண் டிய உதவிகளேச் செய்துவிட்டு இத&னத் திறவுங்கள். இத் தப் பள்ளி பலரின் உழைப்பினுல் வந்தது. அதுவோ, தனிப் பட்ட ஒருவரின் புனித உழைப்பினுல் எழுந்தது. எனவே அதை முதலில் கவனியுங்கள்" எனக் கூறி மறைந்துவிட் டார். எனக்கு இக் கனவில் ஏதோ உண்மை பொதிந்திருக் கிறதாசுப் படுகிறது. எனவே நாம் இப்படிச் செய்வோம். இப்பவே புறப்பட்டுச் சென்று இரவு அப் பள்ளியிலே தங்கி சுபஹாத் தொழுகையோடு அப் பள்ளி வாயலத் திறந்து மக்கள் புாவஃனக்காக்கிவிட்டு, ஜும்ஆத் தொழுகைக்கும் திறப்பு விழாவுக்குமாக இங்கு வந்து சேர்ந்துவிடலாம். பின் அதனே இங்கும் அறிவித்து அப் பள்ளிவாயிலேக் கவனிப்பதற் கான ஏற்பாடுகளேயும் செய்து கொடுப்போம். சரிதானே!"
"பெரியவங்க நீங்க சொல்லும் பொழுது நான் சொல்ல என்ன இருக்கிறது. சரி, வெளிக்கிடுங்க போவோம்."
முஸ்தம்ே ஹாஜியாரும், மெளலானுவும் காத்தான் குடியில் இருந்து புறப்பட்டு, கல்முனேயைத் தாண்டி மல் வித்தையை அடைந்தபோது சுமார் இரவு ஒன்பது மணி யிருக்கும்.
அங்கே .
களி மண்ணுல் சுவர்கள் எழுப்பிக் கிடுகினுல் கூரை வேயப்பட்ட ஒரு சிறு பள்ளியுள்ளே "அரிக்கன்" லாம்பின் உதவியோடு ஒரு முதியவர் உள்ளே இருந்து குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தார். சலாம் கூறியவாறு உள்ளே நூல்ாந்த இரு வரையும் அவர் வரவேற்று அமரச் செய்தார். மூவரும் குர லம் விசாரித்தவாறு ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து
-)-
 

கொண்டனர். பள்ளியுள் இருந்த அந்த முதியவர். தனது வரலாற்ருேடு பள்ளி கட்டிய வரலாற்றையும் கூறினுர்,
"எனது சொந்தவூர் சாய்ந்தமருது. எனது பெயர் சாதலிசா, அவிசாப் பக்கீர் என்றுதான் என்னே எல்லோரும் அழைப்பார்கள். இங்கு வந்து குடியேறுவதற்கு முன் நான் றபான் தட்டிப் பிழைத்து வந்தேன். இப்போது விவசாயம் செய்கிறேன். இங்குள்ள மக்கள் தொழுவதற்கு ஒரு பள்ளி இல்லாத குறையைப் பலரிடம் சொன்னேன். யாரும் அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லே. நானே ஊர் ஊராகச் சென்று பணம் திரட்ட முயற்சித்தேன். பார் என்னே நம்பிப் பனம் தரப் போகிருர்கள். இது எனது புதுவகையான வயிற் றுப் பிழைப்பு எனப் பலபேர் கதைத்துக்கொண்டார்கள். கடைசியில் இந்த முயற்சிகளேயெல்லாம் கைவிட்டுவிட்டு என க்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம், காட்டிற்குச் சென்று, கம்புகளே வெட்டி வந்து, நானல் புல் வரிச்சைப் பிடித்து களி மண் எடுத்து என் கால்களால் அவற்றைத் துவைத்து, அவைகளேச் சுவர்களாக்கி, நாளடைவில் இளேத்த கிடுகுகளேக் கூரையிலே வேய்ந்து, ஆறு மாதங்கள் கஷ்டப் பட்டு ஒரு சிறு பள்ளியைக் கட்டிமுடித்த மனநிறைவோடு இன்று குர்ஆன் ஓதிக்கொண்டிருக்கின்றேன். நாளே சுபஹாத் தொழுகையோடு பள்ளியைப் பொது மக்கள் கைக்கு ஒப்புக் கொடுக்கப் போகின்றேன். இறைவனும் எனது இந்தப் புனித வேஃயை ஒப்புக்கொண்டுவிட்டான் போலும், அதனுல்த்தான் மார்க்க அறிஞரும் மெளலானுவுமாகிய உங்களேயும் இங்கு சுபஹாத் தொழுகை நடத்தி வைப்பதற் காக அனுப்பியுள்ளான். எல்லாப் புகழும் அவனுக்கே. யா (அல்லாஹ், நீயே பெரியவன், நீயே சகலதும் அறிந் தவன்" என்று மனநிறைவோடு கூறிமுடித்தார்.
இதைக் கேட்ட மெளலானு அவர்களோ "இறைவா, நாளே இரண்டு பள்ளிகளேத் திறந்து வைக்கும் வாய்ப்பை
-61

Page 33
எனக்களித்து என்னைப் பெரும்ைப் படுத்தியமைக்கு உனக்கு நான் என்ன கைமாறு செய்வேன். எல்லாப் புகழும் உனக்கே" என இறும்பூதெய்தினர்.
ஹாஜியாரோ கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணிர் சொரிய, “இறைவா! நான் உனக்காக ஒரு பள்ளியைத் திருத்தி யமைக்கப் புறப்பட்டேன். நீயோ எனக்கு அந்த இளைஞனை யும், சொந்த உழைப்பால் பள்ளி கட்டிய பக்கீரையும் சந் திக்க வைத்து என்னைப் புடம் போட்டு விட்டாய். என் சொத்துக்கள் அனைத்தும் என் சமூகத்திற்கே’’ என்று உரத் துக் கத்தியே விட்டார்.
'ஹரிக்கன்" லாம்பு திடீரெனக் கூடுதலான ஒளியை உமிழ்ந்தது. ஒளியில் மூவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டனர்.
நாளைய விடிவோடு இரண்டு பள்ளிகளின் திறப்பு விழா.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் நிகழ்ச்சி - 1976
-62

ஒரு யுகம் முடிந்தது
“ஹனூன் ஹனுரன்!!”*
* Jill "o isenr?” o
"ஒமோம் இப்ப ரேடியோ சிலோனுக்குப் போகணும். கையில காசு இல்ல. காசு இருந்தா ஒரு ரூபாய் கொடுங்க. வந்து தாறன். இண்டைக்கு றெகோடிங் இருக்கு. உண்மை யிலேயே, கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் கெளரவிக் கின்ற ஒரு இடம் ரேடியோ சிலோன்தான். இல்லாட்டி இந்த வாத்திச் சம்பளத்தோட கொழும்பில வாழ முடி யுமோ? றெகோடிங் முடிய கையில காசு".
"அது சரி, இப்ப கையில காசா வைச்சிருக்கன். காசு இருந்தா பகல் சோருக்காம இருந்திருப்பேஞ? உள்ளதும் முப்பது சதம் இருக்கு."
*"அதுபோதும். அதக் கொடுங்க. பஸ்ஸில போய்ச் சேர்ந்துவிட்டா பிறகு காசோடத் திரும்பிடலாம்."
**றெகோடிங் எத்தன மணிக்கு???
'நாலு மணிக்கு முடிய எப்படியும் ஐந்து ഞ്ഞി யாகும்.”*
'அரிசி கொஞ்சங் கிடக்கு, அப்ப நான் சோத்த ஆக்கி வைக்கன். நீங்க வரும்பொழுது, மரக்கறி, மீனக்கீன
-63

Page 34
வாங்கிட்டு வாங்க. பகலும் சோறு தின்னத புள்ளயஸ் என்னப்போட்டு நெருப்பெடுக்குதுகள். சரிதானே."
**மற்றது, கறி வாங்கிற கையோட இதுகளையும் வாங்கி வாங்க; சில்லறைச் சாமான் எல்லாம் இத் துண்டில எழுதி இருக்கன். நீங்க சரியான மறதிக்காரர், பத்திரமாக சட்டப்பையில வைச்சுக்கங்க, நீங்களும் மறந்திராம ஒரு சேட் வாங்கிக்கங்க. பீத்தச் சட்டயப் போட்டுத் திரியுறிங்க, எனக்கும் வெக்கமாகக் கிடக்கு. கொழும்பு வாழ்க்கையாம் வாழ்க்க, பகலைக்குத் திண்டா ராவைக்கில்ல, ராவைக்குத் திண்டா பகலைக்கில்ல. வெளியில கத, எழுத்தாளர், ம்ாஸ் டர், கலைஞர், முற்போக்குவாதி என்னமோ எல்லாத்துக் கும் ஆண்டவன்தான் இருக்கான். ஊரில எண்டா கடன் வாங்கயாயிலும் ஆளிருக்கும். இஞ்ச ஆர் இருக்கா, ஆள் இருந்தாலும் கேட்டுப் பார்க்க பாசையா தெரியும், வளைச் சிச் சிங்களவங்க, நல்ல மணிசர்கள்தான் கதைக்க, கடன் கேட்க, எனக்குப் பாசை தெரியணுமே. நாம் சோருக்காட் டியும் ஊர்ல எண்டா, புள்ளேயஸ் எங்க உம்மாட்ட அல் லது உங்க உம்மாட்ட போய்த் திண்டுட்டு வருங்கள், இஞ்ச ஆர் இருக்காங்க. சரி சரி போயிட்டு வாங்க, சொன்ன தெல்லாம் மறந்திராதீங்க, காசு கிடைச்சா உங்களுக்குக் கண்கட தெரியிறல்ல கதையோட கதையா மறந்திட்டன், வரக்கொள்ள மறந்திராம ஒரு ஊசியும் நூல் பந்தும் வாங் கிட்டு வாங்க, பீத்தல் எல்லாம் கிடக்கு தைக்கணும்."
'வாப்பா வரக்கொள்ள எனக்கு ஸ்கூலுக்குக் கொண் டுபோக ஒரு சூட்கேஸ் வாங்கிட்டு வாங்க, இஞ்ச எல்லாப் பிள்ளைகளும் குட்கேஸ்தான் கொண்டு வருவுதுகள். பன் பேக்கப் புள்ளயளெல்லாம் கேலி பண்ணுது."
"வாப்பா, தங்கச்சிக்கு குட்கேஸ் வாங்கிக் கொடுத்தா, எனக்கு ஒரு கலர்ப் பெட்டி வாங்கித் தரணும், டீச்சர் ஒரே அடிக்கிரு."
-64

'சரி சரி உடுங்க, வாப்பா போகட்டும். நேரமாகுது.??
'சரிம்மா, வாப்பாக்கிட்டக் காசு இருந்தா நீங்க கேட்கவா வேண்டும்? கேட்காமலேயே வாங்கித்தர மாட் டேன? நம்க்கும் காலம் வரும்மா, பயப்படாதீங்க. நம்மள விடவும் துயரமான நிலையில எத்தனையோ குடும்பங்கள் இந்தக் கொழும்பில வாழ்ந்து கொண்டுதான் இருக்குதுகள், அது களப் பார்த்து நாம திருப்திப்பட்டுக்கணும்."
நாடகப் பிரதியைக் கையிலே எடுத்துக் கொண்டு, மனைவி மக்களிடம் விடை பெற்றவாறு பஸ்தரிப்பை நோக்கி நடக்கிறேன். நீரிலே விழுந்த கல், வட்டம் வட்டமாக அலை களை எழுப்புவது போன்று குடும்பம் என்ற கல் உள்ளம் என்ற நீரிலே விழுந்து வட்டம் வட்டமாக எண்ண அலை களை எழுப்பிக்கொண்டிருக்கின்றது, அவ் வட்டத்தின் மத் தியில் நான் நடந்து கொண்டிருக்கின்றேன்.
"நான் பேசிய வறுமைத் தத்துவம், பாவம், என் பிஞ்சுகளுக்கு விளங்கவா போகிறது? எனக்கு ஆறுதலுக்காக நான் பேசிக் கொள்கிறேன்.
என் மனைவி மிகவும் நல்லவள். இவ்வளவு வறுமைக் குள்ளும் மிகவும் கச்சிதமாகக் குடும்பம் நடத்தி எனக்கு உதவு கிருள். ஒரு தையல் மெசின் வாங்க வேண்டுமென்ற அவ ளின் ஆசை எப்போதுதான் நிறைவேறுமோ? உண்மையி லேயே, எனக்கும் வாங்கிக்கொடுக்க வேண்டும் என்ற ஆசை இல்லாம்லில்லை. மொத்தமாகக் காசுக்கு எங்கே போவேன்? ஊசி நூல் வாங்கச் சொன்னது அதைக் குத்திக் காட்டத் தானே என்னவோ? என் மனைவியை மக்கென்று சொல்ல முடியாது. குடும்பம் நடத்தக் கூடிய அறிவிருக்கு. அது போதும். அவளுக்கும் போடச் சட்டை இல்லை. பாவம் அவளுக்கும் ஒரு ஜக்கெட் துணி வாங்க வேண்டும். எழுத மையும் இல்ல, பேப்பரும் மையும் கட்டாயம் வாங்கிக் கொள்ள வேண்டும். பிறகு காசு இல்லாத நேரம் அந்திரப்
-65

Page 35
பட்டுத் திரியவேண்டும். கற்பனை வரும்பொழுது நேரம் காலம் பார்க்காது எழுதி வைச்சுக்கொள்ள வேண்டும். இல் லையேல் மறந்துவிடும்.
பஸ்ஸின் இரைச்சல் என் எண்ணங்களைக் கலைக்கின்றது.
- 2 -
"வாங்க மாஸ்டர், உங்களைத்தான் காத்துக் கொண்டி ருக்கேன்.""
"நானும் பிரதியோடு ரெடியாகத்தான் வாறன்."
"அது இல்ல மாஸ்டர், இன்றைக்கிருந்த உங்களு டைய நாடக ரெகோடிங் கென்சல், அடுத்த கிழமைக்குத் தான் வைத்திருக்கு.'
பூகம்பம், மின்னல், இடி எல்லாம் ஒரே நேரத்திலா. ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சுவரில் கொழுவப்பட் டுள்ள மணிக்கூட்டுக் கம்பிகள் இரண்டும் கிர்ரென்று சுற்றிக் கொண்டிருக்கின்றன. ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமே என் கண்களுக்குக் கடகட என்று ஆடுகின்றது.
"என்ன மாஸ்டர்" "; தயாரிப்பாளர் எனது தோள் களைப் பிடித்து ஆட்டிய பின்புதான் எனக்குச் சுய உணர்வு வருகிறது.
'ஒன்றுமில்ல்ை, ஒன்றுமில்லை? காய்ந்துபோன உதடு கள் ஒன்ருேடு ஒன்று ஒட்ட மறுத்து நிற்கின்றன.
'ஏனெண்டா மாஸ்டர், உங்கட நாடகம் ஒலி பரப்ப வேண்டிய திகதியில, மிஃருஜ் தின விசேட நிகழ்ச்சி ஒலி பரப்ப வேண்டியிருக்காம், கட்டுப்பாட்டாளர் சொன்னர், அதனுலதான் உங்களுடைய நாடகத்தை அடுத்த கிழமைக்கு
-66

ஒத்திப் போட்டிருக்கின்ருேம். சரிதானே, அப்ப நான் வாறன் மாஸ்டர்."
தயாரிப்பாளர் போய்விட்டார். அவருக்கென்ன? நான் வீட்டிற்குப் போகவேண்டுமே. பஸ்ஸுக்குக் காசு யாரிடம் வாங்குவேன்? மற்ற வேலவெட்டிகளெல்லாம் எப்படிச் சமா ளிப்பேன்? நடப்பதைதி தவிர வேற வழியே இல்லை.
நடக்கிறேன்.
பாரம் ஏற்றிய வண்டி மலையில் ஏறுகிறதா?
கால்கள் தள்ளாடுகின்றன.
கொள்கை கோத்திரங்களையெல்லாம் ஒரு மூலையில் தூக்கி எறிய நினைக்கின்றேன். மூளை அசுர வேகத்தில் வேலை செய்கிறது.
- 3 -
"என்ன வேர்த்து விறுவிறுத்துப் போய் வாநீங்க; கையிலயும் ஒண்டையும் காணல்ல, காசக் கீசப் பறிகொடுத் திட்டீங்களா???
என்ன பேசாமல் நிற்கிறீங்க???
'உங்களத்தான் என்ன பேசாமல் நிற்கிறீங்க???
'உம் . . உம் . . ஒன்றுமில்ல."
'ஒன்டுமில்லையா, அப்ப ஏன் ஒரு மாதிரியா இருக் கிறீங்க?"
"ஒண்டுமில்ல . . அது வந்து . . அது வந்து . றெகோடிங் கென்சல். அதனுல ஒரு சாமானும் வாங்கல்ல.
-67

Page 36
புள்ளயஸ் படுத்துட்டுதுகளா? உடைஞ்ச மனக் கோட்டைக் குப் பதிலா புதிய நிஜக் கோட்டையைக் கட்ட முடிவெடுத் திட்டன். இன்று இரவே எல்லாவற்றையும் எழுதி முடித் திடுவன். நாளைக் காலயில கையில காசு.
§ 64trafi
என்ன உளறிங்க: d 'இது உளறல் அல்ல, உண்மை, முற்றிலும் உண்மை. காசிம் முதலாளியின் மகனுக்குக் கதை எழுதிக் கொடுக்கப் போறன்."
'அன்ருெரு நாள் காசிம் முதலாளியின் மகன் நம்ம வீட்ட வந்து கதை எழுதிக் கேட்டானல்லவா? அந்தக் கதையைச் சொல்றன். அவன் பெயரிலேயே கதை பிரசுர மாகட்டும். எனக்குப் புகழ் தேவையில்லை. இக் கதைக்குச் சுளையா முன்னுாறு, ஆர் தருவா? இதைத் தவிர வேறு வழியில்லை."
'காசுக்காக இவ்வளவு காலமும் கட்டி வளர்த்த கொள் கைகளையெல்லாம் விட்டெறிவதா? மனச்சாட்சிக்கு விரோ தமான செயல், தயவு செய்து சைத்தானின் எண்ணங்க ளுக்கு இடம் கொடாது வேலையைப் பாருங்க.”* h
"அப்ப பிள்ளையஸ் பசியால சாவதா???
"ஏன் சாகணும் வெறும் சோத்தத் திண்டுட்டுத்தான் படுக்கிருங்க, நாளைக்குக் காலயில பாத்துக்கொள்வம்."
'இப்ப இல்லாத காசு நாளைக்கு எப்படி வரும்?'
""நாளைக்குக் கால யி ல நான் புதையல் எடுக்கப் போறன்."
"புதையலா? என்ன வெந்த புண்ணில வேலா பாச்சிறிங்க."
- 68

'புண்ணுமில்ல,வேலுமில்ல, உண்மையத்தான் சொல் றன். நான் கதிர்காமத்துக்குப் போறதுக்கு நேர்த்தி வைச்சி மூன்று வருஷமா ஒரு உண்டியல்ல காசு சேர்த்து வந்தேன். என் பிள்ளைகள் பசியால வாடும்போது என்ன கதிர்காம் மும் கத்தரிக் காயும். நாளைக்கே அத உடைக்கப் போறன், அதுதான் நான் சொன்ன புதையல்.”*
என் மனைவியை நான் பார்க்கிறேன். அந்தப் பாரி வையில், ஒரு இலட்சியவாதிக்குக் கிடைக்க வேண்டிய பொருத்தமான புதையல் என்ற பொருள் தொனித்ததோ என்னவோ எனக்குத் தெரியாது, அவள் தலையைப் பூமியை நோக்கிச் சாய்த்துக் கொள்கிருள்.
ஒரு யுகம் முடிந்தது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் நிகழ்ச்சி - 1976
-69

Page 37
என் மகள்
ஒரு விடிவெள்ளி
“கதீஜா கதீஜா'
"கூப்பிட்டீங்களா?"
'நேரம் ஐஞ்சு மணியாகுது. இன்னும் பிள்ளயக் காணல்ல. ஆக்களெல்லாம் காத்துக்கிடக்கிருங்க. வாற வழியில் ஜீப்புக்கு ஏதாயினும் பழுதுகிழுது ஏற்பட்டுப் (SunrjG3gsr?''
"அப்படியொன்றும் ஏற்பட்டிருக்காது, ஆண்டவன் காப்பாத்தணும். இண்டைக்கு ஆறு மணியளவில்தான் வருவன் எண்டு புள்ள சொல்லிப்போட்டுத்தான் போச்சுது. வெள்ள நிவாரணம் சம்பந்தமான கூட்டம் இருக்காம். அத்தோட வெள்ளத்தால் அழிஞ்ச பகுதிகளையும் போய்ப் பார்வையிடணுமாம் எண்டு ஏதோ சொல்லிச்சுது'.
"அப்ப ஏன் சனங்கள காக்க வைக்கணும் சொல்லி அனுப்பலாமே அதில வயது போன பொம்புளேயஞம் நிற்குதுகள். எந்தெந்த ஊரிலிருந்து எப்படியெல்லாம் கஷ்டப் பட்டு வந்திச்சிதுகளோ யாருக்குத் தெரியும்? இந்தாம்மா உங்களத்தான் பிள்ளவர ஆறுமணிக்குமேலாகும். இருட்டுப் பட்டா நீங்க போய்க்கொள்றது கஷ்டமாகுமே. ஏதும் முக்கியம்ான விஷயம் எண்டா சொல்லிட்டு போங்க, நாங்க சொல்றம். இல்லாட்டி நாளைக்குக் காலயில வாங்க அல்லது ஒப்பிஸில போய்ச் சந்தியுங்க...??
-70

"முக்கியமான விஷயம் ஒண்டுமில்ல, எண்ட கஷ்டத் தாலதான் நான் வந்தது. எனக்கு எல்லாம் ஐஞ்சு பிள்ளை கள் ரெண்டு கொமரும் இருக்கு, புருஷனும் இல்ல, கன் பொஞ்சாதி, உழைச்சுத்தர ஆம்பிளப் பிள்ளையஞம் இல்ல, எனக்கும் வயது போயிட்டுது, பிச்சச்சம்பளத்துக்கு எழுதிப் போட்டுப் போட்டு அலுத்துப் போச்சி. இப்ப வந்திருக்கிற டி. ஆர். ஒ. அம்மா நல்லவ. ஏழைகளோட நல்ல இரக்கம், ஏழைகள்ற விசயம் எண்டா எடுபிடி எண்டு செய்து கொடுக்கா எண்டு எங்கட ஊரிலயும் எல்லாரும் சொல் ருங்க. அதனுலதான். நானும் வந்தன். ஒருக்கா சொல்லிப் பார்ப்பம் எண்டு. ஏழைகள் கஷ்டம் ஏழைகளுக்குத்தானே தெரியும்'
"ஒமோம் ஏழைகள் கஷ்டம் ஏழைகளுக்குத்தான் தெரியும். அப்ப நீங்க நாளைக்குக் காலயில அல்லது பின் னேரம் ஒரு தரம் வந்து கதைங்கோ. இப்ப காத்துக்கிருந்தா பஸ் ஏறி வீட்ட போறது கஸ்டமாகிப் போகும்; பிள்ள வர நேரமாகும்.”*
"அப்ப நான் வாறன்.""
'ஒமோம் போயிட்டு வாங்க, மத்தவங்களுக்கும் சொல்லுங்க பிள்ள வர நேரம்ாகும் எண்டு.”*
காத்து நின்றவர்கள் கலைந்துவிட்டார்கள். ஆதங் காக்காவின் உள்ளத்திலே ஏதோ இனம்தெரியாத மகிழ்ச்சி. தனது குச்சு வீட்டிற்கும், எம்.பி.யின் வீட்டைப்போல நாலு பேர் மகளைத் தேடி வருவதையும், காத்து இருப்பதையும், அவர்களையெல்லாம் அன்போடு ஆதரித்து மறுமொழி சொல் வதையும் நினைக்க நினைக்க அவருக்கு ஆனந்தமாக இருந் தது. அன்று தனது மகளோடு ஜீப்பிலே கந்தோருக்குச் சென்று திரும்பியதை எப்படி அவரால் உயிருள்ளவரை மறக்க முடியும்.
-س 71--

Page 38
அன்று உதறித் தள்ளியவர்களெல்லாம் இன்று உறவு முறை கொண்டாடுகிறர்கள். நேற்று "ஆதம், ஆதம்" என்று அழைத்த ஊர்ப்போடிகளெல்லாம் இன்று "ஆதங்காக்கா அவங்க" என்று மரியாதைச் சொல் வேறு சேர்த்துக் கூப்பிடு கிருர்கள். இவற்றையெல்லாம் நினைத்து ஆனந்தப்பட்ட ஆதத்தின் மனதில் சமுதாய மாற்றம் தென்பட்டதே தவிர, பொருமையோ, வெறுப்போ, அகங்காரமோ தென்பட வில்லை. ஆனல் பணக்காரர் சிலர் தன்னையும், தன் மகளை யும் விலை கொடுத்து வாங்க முயற்சிப்பதை எண்ணும்போது தான் அவருக்கு மனவேதனையைக் கொடுத்தது.
மகளை எதிர்பார்த்தவாறு மூன்று நாளைக்கு முன் வாங்கிய சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொள்கிறார். அவரை அறியாமலே அவர் மனம் எங்கெல்லாமோ வட்டமிட்டுப் பறக்கிறது. கொஞ்சம் கொஞ்சம்ாக இரவெல்லாம் படிந்து இறுகிய பணி, செங்கதிரோன் வரவால் உருகி ஓடுவதுபோல பழைய நினைவுகளும் சம்பவங்களும் ஒட்டமெடுக்கின்றன.
"இந்தக் களிமண் சுவரை செங்கல் சுவராய் மாற்றிக் கொள்ளலாம் என்று நானும் என்னுடைய படித்த தந்திர மெல்லாம் செய்து பார்த்தன். முடியாமல்தானே போயிற்று. கேட்டுப்போன மாப்பிள்ளைகளெல்லாம் வீட்டைக் கட்டி எடு; கூரைக்கு ஒடு போடு; கைக்கூலி சீதனம் கொண்டு வா என்றெல்லாம் கேட்டாங்க. அண்டைக்கண்ட சாப்பிடு வதே கஷ்டமாயிருந்த எனக்கு கைக்கூலி ஏது? சீதனம் ஏது? பொருமைப் பேய்கள் சில பொம்புளப் பிள்ளயப் படிப்பிச்சி என்ன பயன். அதிலயும் வாசிட்டிப் படிப்பென்ருல் கேட்க வும் வேண்டுமா? பட்டத்தோட வராம புள்ளயோடதான் வரும். நமக்கேன் இந்த வம்பெல்லாம், பொம்புளப் புள்ள யள் கையொப்பம் வைக்கப் படிச்சாப் போதும். அதுக்குச் செலவழிக்கிறதச் சேர்த்து ஊட்டக் கட்டி மூத்த கொம் ருக்கு மாப்பிள்ளையை எடுத்தா ஏதோ கடமை முடிஞ்ச மாதிரி இருக்கும்’ என்று ஆலோசனைகூடக் கூறினர்கள்.
-72

என் பிள்ளைக்கு நான் என்னத்த செலவழிச்சுப் படிப்பிச்சன், பன்ரெண்டாம் வகுப்பு வர ஊட்டுச் சோத்தத் திண்டுக் கிட்டுப் படிச்சிச்சு, வாசிட்டியில படிக்க அரசாங்கம் காசு கொடுத்துச்சி, வாசிட்டிப் படிப்பு முடிஞ்சதும் சோதன எடுத்து டீ, ஆர். ஒ. ஆச்சி. நானும் இடையிடையே சாப்பிட்டு மிச்சம் இருந்தா பத்த இருபத அனுப்புவன். ஊட்டில இருந்தாலும் அதுக்குச் சாப்பாட்டுச் செலவு போகும்தானே. என் புள்ளைக்கெண்டு என்னெத்தச் செல வழிச்சிப்போட்டன். எல்லாம் அரசாங்கச் செலவு. இல் லாட்டி என் புள்ள வாசிட்டிப் படிப்பை கனவிலயும் நினைச்சுப்பார்க்க முடியுமா? புள்ளயும் நல்ல கெட்டிக்காரி. இப்ப என்னடா எண்டா, டீ. ஆர். ஒ. ஆன பிறகு உறவு கொண்டாட வாழுங்க. மூத்த மகள் சுவைதாம்மாவ ஊடு வாசல் இல்லாமலேயே சும்மா எடுத்துக்க மாப்புள்ளமார் போட்டா போட்டி. எல்லாம் சுயநலம்தான். ஆருக்குத் தெரியாத கணக்கு இது. முன்பெல்லாம் கண் எடுத்துப் பாராத காசீம்போடி என் மூத்த ம்களுக்கு மாப்பிள்ளை எடுக்க உதவி செய்யிராராம். ஊட்டயும் அவர் கட்டித் தாராராம். மூத்த மகள்ர கலியாணம் முடிஞ்சா டி. ஆ. ஒ. மகளுக்கு அவர்ர மகன் டாக்குத்தரக் கட்டிவைக்க அவருக்கு விருப்பம் இருக்கு. இந்தக் கலியாணத்தால் எத்தனையோ ஏக்கர் ரேசன் பூமிகளை தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள லாம் என்பது அவரது எண்ணம்.
இதென்னத்தச் சொல்றீங்க. நேத்து காசீம்போடி சந்தையில் என்னக் கண்டு "சும்மா கொண்டுபோய் ஆக் குங்க” எண்டு சொல்லி அறுக்குளா மீன் ஒண்டு வாங்கித் தாருர், சந்தோசம் வாங்கித் திண்ட பழக்கம் எண்ட பரம் பரைக்கே கிடையாது. சின்ன மீனப் போட்டுப்பெரிய மீனப் புடிக்கப் பார்க்கிருர். நான் அம்புடுவணு? எண்ட மகளையும் என்னையும் பற்றி என்ன நினைக்கிறர்? "எண்ட மகள் ஒரு விடிவெள்ளி", என் புள்ளையக் கண்டு எல்லாரும் படிச்சி
-73

Page 39
முன்னுக்கு வரணும். இப்படிப் பார்த்தா என் மகள் வி வெள்ளி இல்லாம வேறென்ன???
"என்னங்க, ஜீப்புச் சத்தம் கேக்குது; புள்ள வந்திட்டு போல இருக்கு, போய்ப் படலத் துறந்து உடுங்க."
மனைவியின் கட்டளையைச் சிரமேற் கொண்டு ஆத காக்கா படலையை நோக்கி ஒடுகிருர்.
வீரகேசரி - ஜூலை 197
இக் கதைகளில் வரும் பெயர்கள்
கற்பனையே.
-74

9.

Page 40
அவரைச் சில ஆண்டுகளின் அவ்வமயம் அவருடைய " என்னும் பேச்சு ஒலிப்பதிவா பயிற்சிக் கலாசாஃவப் பேச்சு றது. இவருடைய திறமைன படுத்தினுேம் என்பதற்கு இல் தம்" ஆகிய வான்ெலி நிசு
கவிஞர் மருதூர் - ஏ. எழுத்தாளன் மட்டுமல்ல; பள் தில் இரண்டு தடவைகள் ஒட்டவீரன் (சம்பியன்) வி தொழிற்சங்கவாதி பாடசா நல்ல நடிகன் நல்ல தேடு. கொண்ட மனேவியும், இரண் செல்வங்கள். இவருடைய
எனலாம்.
.
இல ங்:ை
CATHOLIC PRI
 

இன் றும் எனக்குப் பசுமையாக நினைவிருக் கிறது. 1957ஆம் ஆண்டு இ. ஒ. கூட்டுத்தாபனம் நடாத்தும் சிறுவர் நிகழ்ச் சியில் பங்குபற்றுவதற் காக கல்முஃன ஸாஹிராக் கல்லூரியில் இருந்து வந்த ஒரு மாணவன் சிவ * [LL" Jurio கட்டிங்" "கு கஃனக் காட்டி இவைகள் தன்னுல் எழுதப்பட்வைகள் எனத் தன் శీr யும் தன் எழுத்தையும் அறிமுகம் செய்துகொண் || டார். அவருடைய முதல் ஆக்கம் 15-12-55 ல் னே எரி வந் திரு நீ தி து அன்று "மாஸ்டர்-மஜித்" என்ற பெயரில் சந்தித்த ஒன் வாலிபராகச் சந்தித்தேன். st Lil SILFS. இலக்கியம்" "சு இருந்தது: இப்பேச்சு ஆசிரிய பேட்டியில் முதலிடம் பெற் சரியான முறையில் பயன் வருடைய மருதம்லர். மகரந் ற்ச்சிகள் தக்க சான்று.
மஜீத் அவர் கள் நாடறிந்த Tளி ம்ானவனுய் இருந்த காலத் மட்டக்களப்பு மாவட்டத்தில் ருது பெற்றவர்; திறமையான *அதிபர் நாடகத்துறையில் ம்பஸ்தன். அடக்கமும் அழகும் ாடு குழந்தைகளும் இவருடைய குடும்பமே ஒரு கஃலக்குடும்பம்
ஸ்ஹாஜ் வி. அப்துல் கபூர்
உதவி இயக்குனர் க ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம்
EGG ETT A L'AN.