கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அல் அஸுமத் கவிதைகள்

Page 1
With best compliments front
CASIO
Over 100 models of calculators available priced Rs... 175| upwards with guarantee.
Agent : TA PAN TRADING CO.
2". Secord FOO
96, Prince Street,
COLOMBO-11,
Tall: 57 TIB.: 225ʻ15 TA, IPAM CE

31வது வெளியிடு

Page 2
With best compliments from:
BAIRAHA FARMS M. L. M. NALEEM HAJAR & Co. LTD.
| 407, GALLE ROAD.
COLOMBO-3.
Price 2O/-

அல் அஸ9மத்
கவிதைகள்
மலைக்குயில்

Page 3
ALASUMATH KAVITAIKAL
MALAIKIKUY
By Al - Asumath 120, Lanka Matha Mawatha,
Mahabage, Ragama, Sri Lanka.
All rights reserved
First published in August, 1987.
Thirty First Publication of:
THAMIL MANRAM,
Galhin na. Kandy, Sri Lanka.
Distributors:
P.S. Sundaram 8 Sons, 75, Barber Street, Colombo. 13. Phone :28549
Prinited at: Royal Prints
42, Beira Road: Colombo-12.
Cover design: S. Doresamy

சமர்ப்பணம்
எனது சமூகத்துக்காக
எவராவது ஒரு சொட்டுக் கண்ணிர் விட்டிருந்தால் அவருக்கே
இந்நூல் ஆர்ப்பணம்.

Page 4

பதிப்புரை
*ன்றும், இன்றும் இஸ்லாமிய சமூகத்தில் இருக்கின்ற பிறந்த கவிஞர்களின் எண்ணிக்கையை ஒரே கையின் விரல்களில் கணக்கெடுத்துவிடலாம். அப்படியானவர்களில் ஒருவர்தான் அப்துல் அஸிஸ் எனும் இயற்பெயர் கொண்ட அல்அஸ"மத் அவர்கள். கவிதை புனைதல் அவருக்குக் கைவந்த கலை. மரபுக் கவிதை, புதுக்கவிதை ஆகிய இரண் டையுமே நேசிப்பவர். மரபுக் கவிதைக்கான இலக்கண விதிகளைக் கைவிரல்களின் நுனிகளில் வைத்திருக்கும் அதே வேளையில், புதுக் கவிதைக்கும் சிறந்த மதிப்பளித்து, அத் துறையை வளர்ப்பதற்கும் அயராதுழைப்பவர். வலம்புரி கவிதா வட்டத்தின் பலம் பொருந்திய தூண்களில் ஒருவர். பாளம்’ எனும் கவிதைச் சஞ்சிகை ஆசிரியராகப் பணிபுரிந்தவர். தற்பொழுது, பெளர்ணமி எனும் இரு மாதத்திற்கொரு முறையான சஞ்சிகை யொன்றைத் தொடங்கி நடாத்தி வருகிருர்,
இலங்கை இந்திய சஞ்சிகைகள், தினசரிகளின் வார இதழ்கள் ஆகியவற்றில் நூற்றுக்கணக்கான கவிதைகள் எழுதியுள்ளார். 'தினகரன்' பத்திரிகை அல்அஸ"மத் அவர் களின் நெடுங்கவிதைகளைப் பிரசுரித்துள்ளது.
மலையகக் கவிஞர்கள் எழுதிய நூல்களை நாம் முன்பு வெளியிட்டுள்ளோம். ஆனல், அவை மலையக மக்கள் பற்றியன அல்ல. எனவே, முதன் முறையாக மலையக மக்கள் பற்றி மலையகக் கவிஞரான அல் அஸ"மத் எழுதிய இக் கவிதை நூலை வெளியிடுவதில் நாம் மகிழ்ச்சியடை கிருேம். இத்தகையதொரு சிறந்த நூலே வெளியிடும் வாய்ப்பை எமக்குத் தந்த கவிஞருக்கு நன்றி. சஞ்சிகைகள், பத்திரிகைகளில் அவர் எழுதிய சமயம், இக் கவிதைகளுக்குக் கிடைத்த அமோக வரவேற்பு இந்நூலுக்கும் தமிழ் தெரிந்த மக்கள் அனைவர் மத்தியிலும் கிடைக்கும் என உறுதிாாக
நம்புகிருேம்
தமிழ் மன்றம் எஸ். எம். ஹனிப்ா
5-8.87 செயலாளர்

Page 5
வரவேற்பு
நசுக்கப்படும் ஒரு சமூகத்திலிருந்து நாசூக்காக முன் னேறி, அந்தச் சமூகத்துக்காக (நானும் உட்பட)க் கண்ணிரை மட்டுமே கவிதைகளாக்கத் தெரிந்த பிறவி நான்" என் கவிதைகள், சமூக முன்னேற்றத்துக்காக உதவும் என்பதை விடப் பிறருக்கோ பிறகொரு காலகட்டத்துக்கோ மலை யகத்தின் கண்ணுடியாக விளங்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை அதிகம்.
மனித சமுதாயத்தின் ஒவ்வோர் இதயமும் ஒவ்வொரு காவியம் ஆகும். வெளிப்படுத்துபவன் கவிஞணுகிருன் பிறன் சராசரி மனிதனுகிறன். நான் முதல் வகையினன்.
வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு புற-அக உணர்வுகளில் எழுதப்பட்ட கவிதைகள் இங்கே அணி வகுத்து வருகின்றன. அன்றைய கைதட்டல்கள் உண்மைதான் என்ருல் இன்றும் அவற்றை இவை பெறட்டுமே! இல்லையேல், மலை யகத்தின் சராசரி மனிதனுகவே மரிக்கட்டும்.
அன்பு,
அல் அஸ9மத்

நன்றி
வீரகேசரி
தினகரன்
காங்கிரஸ்
குன்றின் குரல் (இலங்கை வானெலி) செய்தி
பூபாளம் வலம்புரி கவிதா வட்டம்
மல்லிகை

Page 6
மன்னிப்புக் கோரி.
53ம் பக்கத்தொடர் 52ம் பக்கத்திற்கு உரியது அல்வா வாக்கி என்ற சீருடன்,
'அரைத்துக் காய்ச்சினேன்
அந்தத் தோஷத்தால் தான்
என்ற தொடருடன் 52ம் பக்கத்திலுள் வற்றைத் தொடரவும்.
54ம் பக்கக் கவிதைக்கான தலைப்பு நண்பன் புலம்புகிறன்
100ம் பக்கத்தின் இறுதிக்கவிதை முழு நூலு குமான 'முடிவுரை ஆகும்.

T
க்
தொழிலாளித் தோழா !
தோட்ட மலையின் தோழா - நீ தோளு யர்த்தி வாடா! நாட்டைக் காக்கும் வீரா - உனது
நாளை எண்ணி வாடா! வீட்டை மாற்றி வந்தாய் - இந்தக் காட்டை மாற்றி நொந்தாய். கேட்டை எண்ண மாட்டாய் - இது
கீழ்மை அல்ல வோடா! போட்ட சட்டம் மீறி - நீயும் போன தில்லை மாறி. ஊட்டம், உயர்ச்சி அற்ருய் - மண்ணில்
உணர்வி ழந்து நின்ருய்! கூட்டு கின்ற துன்பம் - இனிக் குறைக்க வென்று கருதிப் பூட்டப் பட்ட உன்றன் - மூளை புலர வென்று வாடா!
வெள்ளை யவனே உன்னை - நீ
விரும்பி டாத போதும் கொள்ளை யணுய்க் கூட்டி - இங்குக்
கொண்டு வந்த டைத்தான். உள்ள வெள்ளை யோடு - நீயும்
உண்மை தேடி வந்தாய்; கள்ளை உண்ட தொப்ப - வந்து கண்கள் மூடி வாழ்ந்தாய். பிள்ளை குட்டி பெற்ருய் - மலை பெருத்த குடும்பி ஆனய்! பள்ளம், மேடு கொண்டே - உன்றன்
பாதை ஒடும் இன்றும். அல்லல் அதிகங் கொண்டும் - அதன்
அர்த்தங் கண்ட துண்டோ? சொல்லைச் சிறிது கேட்டு - நீயுன்
சோர்வு போக்கி வாடா!

Page 7
நாடு கடந்து சென்ருல் - மிக
நான்குஞ் சேர்வ துண்டாம்; ஒடித் தேடு" கென்ருர் - உடன்
ஒடி யோடி வந்தாய். நீடு புகழின் தமிழன் - அதி
நேச பயணஞ் செய்து கூடு பொருளைக் கொண்டான் - இது
கும்ப கர்ண உண்மை! வீடு மாறி நீயும் - அன்று
வீரத் தோடு வந்தாய்; வீடு மீண்டும் இன்று - சேர
விந்தைக் காலங் கண்டாய்! *பாடு பட்டுச் சிறிதே - கையில்
பணத்தி னேடு வருவான்; கேடு நீங்கும்’ என்றுன் - வீட்டில் காவல் காத்து நிற்பார்!
கையில் என்ன வைத்தாய்? இன்று
கடலும் தாண்டிப் போவாய்! பையில் ஒன்றும் இன்றிச் - சென்று
பார தத்தை அடைந்து * மெய்யில் மடியில் இல்லை - என்று
வெறுங்கை வீசி நின்ருல் ஐயம் இன்றி உன்னை - அவர்
* அழகின் இலங்கா புரியில் செய்து நின்ற தென்னை? - மடி
சேர்த்த தென்ன?’ என்பார். வைய மென்ன சொல்லும்? - நீ
வாழ்ந்த கதைகள் கேட்கும். நைய உன்றன் உள்ளம் - அது நான்குங் கூறிச் சிரிக்கும். கைய கன்ற தோழா - நீ
கண்கள் திறந்து வாடா!
(தாராளமானேர் தாயகம் அகன்ற வேளை
10

p?sh)
நடுநாட்டில் மட்டும் ஏன் நலிவில்லா
இத்தனை மலைக்குவியல்கள்?
நித்திரை உழைப்பின் கும்பகர்ணத்துவமா? நிம்மதியை விற்றுப்பெற்ற புதையற் கோபுரங்களா அவை?
அன்றேல் -
உழைப்பாளிகள்
நிலப்பாயில் குப்புறக்கிடந்து,
செய்மதியாய் மாறிவிட்ட சம்பளத்தை எண்ணித் தேம்பியதால் உண்டான விரக்திக் காற்று விம்மிப் புடைத்து
அழியா வரம் பெற்று நிலைகுத்தி நின்று விட்டனவா?
நாட்டின்
முழுகெலும்புக் கணுக்களில் கூன்கள் விழுந்து விட்டனவா?

Page 8
மலையகத்தின் எரிமலை
ஆத்திரத்தின் உணர்ச்சியெல்லாம் அடித்தளத்தில்
அடக்கித்தான் வைத்துள்ளோம்; அதற்குண்டாய பாத்திரத்தில் அதுவந்து வெடிக்கும் நாளைப்
பார்த்துள்ளோம் விழியிரண்டைப் பாதைவைத்தே. மூத்திருந்து முழுதான கருத்தைச்சொல்ல
முன்னவராய்த் திரண்டுவரும் மூர்க்கத்தோரே! நாத்திருந்தி நல்வார்த்தை நவிலும்நாள்கள்
நானிலத்தில் இனிமேலும் நண்ணிடாவோ?
'அறிவிலிகள்; ஆட்டினது மந்தை; பேய்கள்; அஞ்ஞானம் நிரம்பிவழி ஆத்மக்கூட்டம்; மறைநெறிகள் சிறிதறியாக் கூலிக்கோவை;
மானிடரென் றுருவெடுத்த மாக்கள்; பேச்சிற் கறைசெறியக் குறிகொண்ட கூகை; தோட்டக்
காட்டான்கள்; கழுதையினம்’ என்றிங்கேயே குறைகூறிக் கொக்கரிக்குங் கோலத்தாரின்
குணமெத்தக் கண்டறிந்தோம்; வெடிக்குமோர்நாள்!
வேறு
* மலையகத்தில் அறிஞரிலர்: கவிஞரிலர்; கலைஞர்,
மொழிப்பிரியர், முழுநாட்டார், முன்னேடி என்போர் தொலையகத்தில் இருந்திடலாம்; தொழிலகத்தில் இலரே! தொட்டதற்கும் அவர்வேண்டா, யாமுள்ளோம் என்று கொலையகத்தில் வாழ்ந்துவருங் கொள்கையமை சீலக்
கொடுமைவழி வந்தசில கோபுரத்துப் பேச்சைக் கலையகத்தில் புகுத்திவருங் காருணியக் கோலங்
கண்டுமனம் பரிதவித்துக் கலங்கித்தான் உள்ளோம்!
12

வேறு
வானத்தில் இருந்துவந்த வடிவத்தோரே!
வடிவத்தே நிறைந்துவந்த மானத்தோரே! மானத்துச் சிறந்துவந்த மச்சுள்ளோரே!
மச்சுள்ளோர் என்பதனல் மானங்கெட்ட சாணத்துப் பேச்சுகளைச் சரமாய்க்கோத்துச்
சாடுவதேன் இழிவமர்த்தி மலையோர்மீதே? ஊனத்தே வந்ததுதான் உலகம்; நீவிர்
உருவத்தில் வந்ததுவும் ஊனங்காணும்!
தேயிலைபோற் செல்வங்கள் பலவாய்த்தேடித் தீவினர்க்கே வாழ்வளித்த எம்மையன்று ‘போயலகார்; பொன்னிலங்கை அவர்க்காம் என்று
பொல்லாத மொழிபகர்ந்த பொறுப்பின்கூட்டம்! நாயகனுய் மாறுதற்கு நாயேன்வேண்டும்?
நரகத்து வாடைகளை வீசுந்துன்பம் நோயிலேயேற் பிறிதென்ன? நொந்தோமுள்ளம்!
நொறுக்கிடவே ஆத்திரந்தான் அடித்தளத்தில்!
சாத்திரத்திற் சொல்லுகின்ற சரித்திரங்கள்,
சரித்திரத்தில் வெல்லுகின்ற சாத்திரங்கள் பார்த்திருக்கும் உம்முடனே யாமும்கண்ட
பாருண்மை நிலைத்துவிடும்; பார்ப்பீர்நின்றே. வேர்த்திருக்கும் எம்முள்ளம் வெந்துவந்து
விளையாடும்! வேண்டா! நீர் விடாதுபோனல், ஆத்திரத்தின் உணர்ச்சியெல்லாம் அடித்தளத்தில்
அடக்கித்தான் வைத்துள்ளோம்; வெடிக்குமோர் நாள்
அடைப்பிட்ட கலசத்தே ஊழித்தீயை
அடக்கியது போலத்தான் அமைந்துவிட்டோம்! படைப்பிட்ட இறையவனின் பாசத்தாலும் பதழுது நின்றிருந்தோம்! ஆனலினியும் இடைப்பட்டால், எம்மவரை இழித்துப்பேசி
இருந்துண்ணற் கிடங்கொண்டால், கூறிவிட்டேன், உடைப்பிட்ட அணையின்நீர் மலையின்தீயாய்
உருவெடுக்கும்; உமையழிக்கும்; எமையுஞ்சேர்த்தே!
大
13

Page 9
உண்மைக்கு நச்சு நா
என் அரண்மனை -
aub!
உங்கள் புருக்கூடுகளோ * ஸ்கீம்?! MM
என் பற்றுச்சீட்டு - கூலிக்காரன்! உங்கள் பிரஜாவுரிமையோ
ஸ்டாஃப்!
நாவுக்கரசன் கையிலென்ருல் அதன்பேர் -
உழவாரம்! என் கரம் பட்டதனுல் இதன் பேர் - *சொறண்டி யா?
நாங்கள் - யாரைச் சுரண்டினுேம்?
நாட்டின்
வறுமைப் பாசான்களைத்தானே?
உங்களின் முதுகெலும்பாக இருந்தும்
நான் - . . நாயெலும்பை நக்குவதால் யாருக்குத் தலைக்குனிவு?
大
14.

மலையகப் பெண்மை
கண்ணகி, சீதை என்று
கனிவளர் பெண்மை தன்னை விண்ணுறும் தெய்வம் ஆக்கி
வீரத்துத் தமிழோன் அன்று கண்ணெனக் காத்துப் போற்றிக்
களிப்பினுற் கவியும் செய்தான். புண்ணெனச் சீழே புரைந்து
போனதே அந்தப் பெண்மை!
காலையிற் கொதித்து வீட்டுக்
கடமையும் கணவன் பிள்ளை
வேலையும் மலைபோற் செய்து
வேதமாய் மலைமேல் தாவி
நாளெலாம் கருகி ஆய்ந்து
நண்பகல் மட்டும் ஓய்ந்து
மாலையில் வீட்டை நாடி
மனைவளம்! மர்ம யாகம்!
ஆலையில் இவளே கருப்பம்!
அல்லலாம் அனலிற் காய்ந்து மூளியாய் முப்பத் தைந்தாய்
மூச்சறும் இவளே பெண்மை! கேலியா? கெடுதிக் காவா?
கேட்பவர் தன்னை மாய்ப்பர்! நூலுருப் பெண்மை இவளாம்!
நூதனம் ஆண்மை நாறும்!
பெண்மையைக் கருவி ஆக்கிப்
பிழிந்துதான் பெருமை கொண்டோம்!
உண்மையை ஒளித்து வைத்தோம்! உருப்படாப் பழமை பேசிக்
T 5

Page 10
கண்முளுல் அதனை வாட்டுங்
* கருணையை எண்ணிப் பார்த்தால்
பெண்மையாற் பிறந்து வாழும் பேடியே ஆணின் கூட்டம்!
இல்லையென் றுரைப்பாய் ஆகின்
எடுத்திடு சபதம் இன்றே! வல்லநீ தனித்து ழைத்தே
வளத்தினைப் பெருக்கிக் காட்டே! அல்லலைப் பிறர்தந் தாலும்
அதனையும் எதிர்த்து நிற்பாய்! இல்லையேற் பெண்மை காக்கும்
"இளந்தொழில் ஈட்டித் தாராய்!
★
16

பிரஜாவுரிமைத்தூது
காற்றே, காற்றே! கூற்றுவன் வந்தால் தோற்றிடுங் காற்றே! தோற்றிடும் முன்னர் தோலெனப் போன தோட்டத் தானென் வாலென வந்து வதங்கிய மனைக்குத் தூதொன்று போகத் துணைவா காற்றே! யாதென்று கேளாய்! ஆண்டுமுப் பதுவாய்ப் பிரஜா வுரிமைப் பிசாசத ஞலே அரசினர் தொழிலோ அதுபோன் ருென்ருே கிடைக்கா ததனுற் கீழாய்ப் போனேன். அடைக்கோ ழியைப்போல் அற்புத மாகவே அங்கும் இங்கும் அனர்த்தியும் படுத்தும் பங்குச் சோற்றில் பலநாள் கழித்தேன். சிறிய வயதிலே சிற்சிறு நோய்கள் பெரியவாய் மாறிய பீடையி னலே உடலை வருத்தி உழைப்ப தொழிக்கக் கடலை தின்று கற்றேன் வளர்ந்தால் நல்ல தொழிலினை நத்தலாம் என்றே. செல்ல நினைவுகள் சீரழிந் தனவே! உரிமை இல்லா உரிமையி னுலே நரியைப் போலும் நடித்திட லானேன். பெற்ருர் செய்யாப் பெரும்பிழை அதனுற் பொற்ற லியினைப் போட்டேன் இவட்கு. காலங் கரையக் காளையர் மூவரும் ஒலம் வைத்தற் கொருத்தியும் பிறந்தனர். இலக்கியத் துள்ளம் இருந்தத ஞலே சிலச்சில கோத்துச் சிறுகதை, கவிதை, கட்டுரை எனப்பல கறைகளைச் செய்தேன். பெட்டிஷன் எழுதியும் பிழைத்தேன் சிலநாள் தொழிலா விரிகளின் துணைவனென் றிருந்து வழிபல பேசி வாங்கியும் உண்டேன். சூப்பர் வைஸர், சுண்டல் பிஸ்னஸ், ஷாப்பில் சேல்ஸ்மன், சம்திங் தரகென
7

Page 11
பூமித் தொழில்களின் புத்தே ஜண்டாய் நாமம் ஆயிரம் நன்ருய் இட்டேன். ஒன்றுமே வழியாய் உறவே இல்லை. நன்ருய்த் தனித்த நாட்டுப் பள்ளியில் வாத்தியார் வேலை வாவெனச் சொன்னது. கூத்தாய் ஆடியும் குறைந்த வரவே! போதுமா மனைக்கு? போதாக் காலமே. சாதமா உண்பேன்? சந்தியே சிரிக்குமே! நல்ல காலமாய் நமது மாமனர் பிள்ளைகள், மனைவியைப் பரிந்து பார்க்கிருர், இருந்தும் பொருந்தும் எத்தனை நாளிது? வருத்தம் ஒழித்தேன்; வராதா காலமும்? அடியேன் மாதம் ஒருமுறை போயென் பிடியெனும் மனைவியைப் பிள்ளைகள் தம்மைப் பார்த்து வருவேன் பத்தைக் கொடுத்து!.. வேர்த்து வடிந்த வேலையன் எனக்கோர் அருமைச் சேதி அண்டி வந்தது: * ‘உரிமை கோரும் ஒவ்வொரு வருமே சிறிமா - சாஸ்திரி சிலாக்கியத் தாலே பெருமை உறலாம்; பிறந்த பூமியில் தொடரலாம்; அன்றேல் தொலையலாம் பாரதம்!" பிடரி நிமிரப் பிறந்த பூமியில் வாழத் தானியான் வரைந்து தொலைத்தேன்! ஆழத் தறிவால் அரசினர் வேலை ஒன்றைப் பெறலாம், உயரலாம் என்று வென்றிக் குரலில் விடைத்துத் திரிந்தேன். . . .
அந்தோ காற்றே! ஆகாயக் காற்றே! வெந்தேன் உள்ளம்; வெறித்தேன்; வெடித்தேன்! பிள்ளைகள் அனைத்துப் பெரியன நினைத்தே அல்லலில் வாடும் அகமுடை யாளைக் காற்றே, நீபோய்க் காற்ருய்க் கண்டு சாற்றுக இதனை, சங்கடம் எனக்கோ: * எட்டாம் ஷரத்தின் இழிந்த பிரிவால் தட்டப் பட்டது தங்கள் உரிமை” என்ருெரு கடதாசி எனக்காய் − இன்றுதான் வந்ததென் றியம்புக, காற்றே!
大 |பலருடைய உரிமைகள், சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத் எட்டாம் ஷரத்தின் ஒர் உபபிரிவால் தட்டப்பட்டபோ
18

ன்ெ,
எங்கபோற?
அடப்போடாப் பேப்பயலே! அக்குறும்பு செய்யாதடா! படப்போற பாட்டயெண்ணிப் புக்குவமா நடந்துக்கடா! அடுத்தவூட்டு அம்மாசி ஆறுமாசஞ் செறயிலயே படுத்துப்புட்டு வந்தானே, பாத்துக்கூட அறிவில்லியா? யாருயாரோ சேந்துகிட்டு ஆ ஊன்னு கத்திக்கிட்டு ஊரூராக் கூட்டம் போட்றன் ஒயாம சுத்திக்கிட்டு! கூறுகெட்ட மடப்பயலே கூடிக்கிட்டு நீயுமாடர் சோறுகீறு திங்காம சோம்பேறி ஆகப்போறே? படிச்சவங்க ரொம்பப்பேரு பளபளன்னு ருேட்டுழுேட்டா படிச்சவுங்க சங்கமுன்னு பயாஸ்கோப்பு காட்டுழுங்க! படிக்காத நீயுமாடா, பாவியென் பயமவனே, பொடிகூட இல்லாத போக்கிரிங்க ளோடசேர்ந்து ரவுனடிச்சிச் சாகப்போறே? ராவுராவா штођитбит அவுங்கவுங்க பெரியவுங்க ஆகணும்னு, “எளசுங்களே! நாமள்ளாஞ் சேந்தாத்தான் நாயமெல்லாங் கெடைக்கு முன்னு சோமபாணம் போட்டுக்கிட்டுச்
19

Page 12
சூதுவாது பேசுமுய்ங்க! என்னுன்ன அவுங்கள்ளாம் எளசுங்கள மனந்திருப்பிப் பின்னல வச்சிகிட்டா பாக்கிறவன் பயந்துகிட்டு ராசாங்கப் பெரியவேல ரகசியமாக் குடுப்பானும்! கூடாம சொயநலத்தக் கொள்கையின்னு சொல்ருங்க! உத்தியோகம் பெருசாபார்த்து ஒண்ணுமட்டுங் கெடச்சிச்சின்ன பத்துயோகம் பண்ணுனலும் பாத்துக்கொஞ்சம் சிரிக்கமாட்டான் ! பேப்பரெல்லாம் படிக்கிறீயே, பெப்பெப்பேன்னு பேசுறியே, கோப்புறேட்டிச் சிகிரெட்டக் கொள்ளிவச்சி எரிக்கிறீயே; இதக்கொஞ்சம் எண்ணிப்பாக்க ஏண்டாப்பா மூளை இல்ல?. . . கதக்கணக்கா நெனைக்காத; காரணமாத் தாஞ்சொல்றேன்! உருப்படியா ஏதாச்சும் ஒழைக்கிறத வுட்டுப்புட்டு 'நெருப்பெட்டிய தூக்காத! நாலுபக்கம் நல்லாஎண்ணி நல்லபேச்சாப் பேசப்பாரு! நல்லதையே செய்யப்பாரு! இல்லாட்டி ஊட்டுக்குள்ள இருந்துப்புடு!... எங்கபோற?
大
20

ஆயுட்காலக்கைதி
பட்ட துயரங்கள் பார்பிளக்கும் - பட்டுமென்ன? எட்டாக் கிளைத்தேன் எனக்கிலையே - எட்டுமெனில் கெட்ட கனவாகுங் கீழ்வாழ்வு - கெட்டாலோ விட்டுப் பெருவாழ்வு வாழ்ந்திருப்பேன் - விட்டதில்லை; பட்ட மரமெனவே பாடுகிறேன் - பட்டவெனை வெட்டி விறகாக்க வெட்டியிலன் - வெட்டிப்பொய்ப் பட்டம், பதவியெனப் பாவமெனும்! - பட்டவற்றின் நட்டக் கணக்கறியும் நாடு!
தம்மொழியோ வேறென்ருே தம்பிடிக்கும் - தம்மிலிலா அம்மணியர் பல்லோர் அயல்நாட்டில் - அம்மணித்துச் செம்மணிகள் வீசிச் செடிலடைவர் - "செம்புமணி இம்மண்ணில் உண்டோ "வென் றிட்டுரைப்பர் -
இம்மண்ணில் மும்மொழியும் வாய்ந்தமுழு மூடனியான் - மும்மொழியின் செம்மை அறிந்தென்ன சீரிலையே - செம்மாந்த வெம்மைப் பொருமையென விள்ளாதீர் ட் விம்மிமனம் உண்மையிதோ தந்தேன் உமக்கு!
வெட்கம் தலைகுனியும்; வேறுலகே - வெட்கமுறும்; சொர்க்கம் நமதுமண்ணே! சோம்பரின்றிச் - சொர்க்கமிதில் கக்கூஸ் முதலாகக் காலாட்டும் - கைக்குவந்த "எக்ஸகட்டிவ் வேலைவரை ஏற்றிழிந்தேன் - எக்காலும் திக்கெல்லாம் தேடித் தொழில்மறந்தேன் - திக்கிமுக்கிப் பக்கத் துணையின்றிப் பாட்டிழந்தேன் - பக்கமெலாம் நிற்குஞ் செலவினத்தால் நான்மயங்கி - நிற்கின்றேன் வக்கில்லாப் பேயாய் வளர்ந்து
நீண்ட குடும்பத்தை நிர்வகிக்க - நீண்டலறிப் பூண்ட விரதத்தின் பூண்டழியும் - பூண்டழிந்தால்
"கூண்டோடு கைலாசம் கூலிதரும் - கூண்டெடுத்துத்
தூண்டிற் புழுவாய்த் தொலைவதுவா? - தூண்டுமனம்
21

Page 13
"மாண்டு மடிக* வென மாய்கிறதே - மாண்படைய வேண்டும் நிலநீச்சு வீடுபிற - வேண்டுமெனில் தாண்டிக் கடல்போகத் தான்வேண்டும் - தாண்டிவிடின் ஆண்டோர் இரண்டுக்குள் ஆள்!
சொற்போர் தொடுத்துள்ளேன் சொப்பனமாப் -
சொற்கென் மற்போரோ, வீண் சாவோ; மர்மந்தான்! - மத்தியகீழ் அற்புதமாம் எண்ணெய்நாட் டாவலது! - அற்பமெனக் கற்பனைகள் மிக்கெடுத்தேன்; கானலிவை - கற்புடைய நற்கதியும் இல்லை; நலமுமிலை - நற்புதுமை முற்பாட்டன் என்பானேர் முட்டாளே! - முற்றுமினிப் பொற்காலம் பூக்கும் பொழுதிலையே! - பொற்றிறப்பா நற்கடவுச் சீட்டோர் நகைப்பு!
大
22

637
பிரசவம்
இளவரசுப் பூவைக்கு இடுப்பு வலியாம்! மலர்கள் -
மெதுவாகவே அசைகின்றனவாம் -
காற்றும் தென்றலானதால்.
கதிரியக்க உலகம்தரும் விஞ்ஞானச் செய்தியிது!
உழைத்துழைத்து வயிறுவளர்த்த குறிஞ்சிப் பூவாள் - தன் குழந்தையைத் தனக்கே பிச்சையாக்கிக் கொள்ள மருத்துவக்கை ஏந்தினுல்
நிகழும் தர்மவிழா இதுதான்:-
*தோட்டத்துப் பூவுக்கும் தோலுறவா?
அவளை - ட்ராக்டரில் ஏற்றிப்போ!'
大
இளவரசி டயானவின் முதற் பிரசவ வேதனையில்)
23

Page 14
தம்பி, மலையாண்டீ!
தம்பீ, மலயாண்டி! தவரு நெனைக்காதே! ரொம்ப நாளாநான் யோசிச்சுத் தாஞ்சொல்றேன்! ஒங்க குடும்பத்ல ஒருத்தன்தான் நானும்னு தங்க மனசோட, தம்பி, இதக்கேளு: சம்பளத்த எடுத்தொடன சாராயங் குடிக்கப்போற. அம்பதுக்கும் நூறுக்கும் அழகழகா ஷேட்டுவாங்கிப் பொம்பளைங்க பாக்கணும்னு போட்டுக்கிட்டுத் திரிஞ்சிவாற. நம்பள்க்கிது லாபமின்னு நல்லா கொஞ்சம் யோசிச்சியா? ‘என்னடாப்பா, கணக்கப்பிள்ளை என்னென்னமோ
ஒளர்ருனே' என்னு: எண்ணும எண்ணிப்பாரு; எம்பேச்சு அப்பபுரியும்! சிகிரெட்ணு என்னன்னு சீந்தாத காலத்தில சிகிரெட்டு யாவாரிங்க சிலுசிலுன்னு, கமகமன்னு செஞ்சிவந்து எல்லாருக்கும் சும்மாவே குடுத்தாம்பா ! அஞ்சாறு பொகச்சப்புறம் அதுக்கே அடுமையாகி இன்னைக்கு சிகிரெட்டு இல்லேன்ன ஐயோங்கிருேம்! அன்னைக்கே இப்டித்தாம்பா அரசாண்ட வெள்ளக்காரன் தோட்டத்து ஆளுங்களத் தோப்புக்கரணம் போடவைக்க ஊட்டமான சரக்குன்னு ஒவ்வொரு தோட்டத்லயும் சாராயம், கள்ளுன்னு சந்தியெல்லாம் தவறணயா பாருபாரா , கட்டிவச்சிப் பழக்கத்த உண்டாக்கினன்! அதக்குடிச்சி நம்பஜனம் அறிவழிஞ்சி, அடுமயாகிப் பதபதச்சி ஒழச்சகாசப் பழாக்கிப் பாழாகி, மறுபடியும் மறுபடியும் மலையேறிப் பாடுபட்டு ஒருவழியுங் காணும ஓடாவே தேஞ்சாங்க. நம்பள அழிக்கவந்த நாசகார போதைக்குச் சம்பளமே பத்தாதே!. . . தம்பீ, வெளங்குதாப்பா?... ஒங்க குடும்பத்தில உள்ளதே நாலுபேரு. எங்க குடும்பத்தில இருக்கிறதும் நாலுபேரு. நீங்க நாலுபேரும் நெதம்வேல செய்யிறீங்க தூங்கவொரு கட்டிலிருக்கா? துப்பட்டி ஒண்ணிருக்கா? இருவதாம் தேதிக்குள்ள எங்கெங்கயோ கடன்வேற!
24

இருநூறு வச்சாலும் எண்ணுாறு சம்பளம். தங்கச்சி ஒருத்தியும் தலைதூக்கி நிக்கிருளே! தங்கத்தில ஏதாச்சும் தப்பித்தவறி உண்டாப்பா? எனக்குஞ் சம்பளம் எண்ணுாறு ரூபாதான்.
மணிக்கூடு, பண்டபாத்ரம், மரியாதயா நாலுசாமான் எங்கவீட்ல இருக்குப்பா, ஏன்ஒனக்கு முடியாது? திங்கவுமா, டீஷேட்டோட திரியவுமா கெடந்தோம்னு யாருப்பா நம்பளையும் ஆளுங்கன்னு மதிப்பாங்க? பாருப்பா கொஞ்சம் பட்டணத்து ஜனங்களையும். அறுநூருே எண்ணுரருேதான் அவுங்களுக்குஞ் சம்பாத்தியம் சிறுநீரு கழிக்கக்கூட சில்லறதான் வேணுமங்க! வெறகு, தண்ணி, வீடு, வேலைக்குப் போகவர - செறகு மொளச்சாப்ல செலவுக அவுங்களுக்கு. இருந்தும் அவுங்கள்ளாம் எவ்வளவு நல்லாருக்கா? இருந்தா அந்தப்புத்தி இந்தக்கஷ்டம் நமக்கேம்பா?. சாராயம் வேணுங்கல்ல; டீஷேர்ட்டும் வேணுங்கல்ல; ஆராய்ஞ்சி பாக்கச்சொல்றேன்; அப்பத்தான் புரியும்பா! வாழயடி வாழயாவே வாழாம கெட்டுட்டோம். நாளைக்காச்சும் வாழனும்னு நாமஎண்ணக் கூடாதா? வேலைவிட்டு வந்தம்னு வேறவேலை இல்லியாப்பா? நாலஞ்சி பேருசேந்து நல்ல கார்யம் செய்யேலாதா? லயம்லயமா போயிநின்னு, ராவுராவாக் குடிச்சிகிட்டு, பயாஸ்கோப்பு பாத்துகிட்டுப் பாழாகிப் போனம்ன எப்பத்தான் முன்னேறி எந்தப்பக்கம் நடக்கப்போருேம்? துப்பரவா இருக்கணும்னு தூசியில திரியலாமா? நாலுகாசு இருந்தாத்தான் நம்பளயும் மதிப்பாங்க. நாலுபேரப் பாத்துங்கூட நாமள்ளாம் திருந்தலேன்ன தாலுகாலு ஜீவன்களும் நாமளும் ஒண்ணுதாம்பா! காலம்போற போக்கப்பாத்துக் கவனமாப் பொழச்சாத்தான் தோட்டத்து ஜனங்களுக்குத் தொல்லபோயி நல்லதாகும். 'போய்ட்டுவா, மலயாண்டி! புத்திகடன் குடுக்காத!
大
25

Page 15
கணக்குப்பிள்ளை புலம்புகறர்
ஜெனறல் கேப்பீ” யென்ற செல்லத்துப் பேரோடிங்கு ஜென்மமிதை எடுத்துவிட்டேன், ஜெகமே!
என்னைத் திணறல் கேப்பீயென்று திக்கெட்டுங் கேட்கும்படி
திருவாய் மலர்ந்தருளித் திட்டு!
* வட்டார்யூ டூயிங்?" என்று வந்துகடுப் பார் "பீ. டி';
வருவார் அவர்போக எஸ்.டி. பின்னர் 'வட்டார்யூ சேயிங்?" என்று வளைந்த சிவப்பெழுத்தில்
வணக்கம் கேட்டிடுவார் ‘புக்’கில்.
*கோர்ஸ்லீஃப்ஸ் வெரிமச், அண்டு ஸ்டால்க்லீஃப்ஸ்
ஃபுள்வை?’ என்ற குறிப்புடனே ராக்கெட்டை அனுப்பும் 'டீ.எம்.' 'ஸார்கள்பல போட்டென்ன சம்திங் வழி
செய்தென்ன; "டஸ்ட்'டாய் ஊதிடுவார் என்னை!
*டோட்டல்மிஸ் டேக்" என்றும் "தோட்டமுமேன்
லொஸ்" என்றும் தொகையாகக் கேட்டெழுதும் சீஃப்" பும் சீராய்ச் சாட்டையடித் தெண்டங்கள் தவழுது மாதமெலாம்
ஜமாய்த்திடுவார் நானென்ன செய்ய?
* கணக்குப்பிள்ளை நீதானே கா ணென்று தொழிலாளர் கத்தியொடு முன்வந்தென் கழுத்தைத் தேட,
எனக்குப்பிள்ளை யாகினவர், என்மனைவி, சுற்றத்தார்
"ஏனிந்த வேலை, சீ" என்பர்!
26

கடுகடுக்கும் பீடி, எஸ்டீஸ், கட்டியனுப்பும் டீஎம்ஸ், ஆஃபீஸ்
கிடுகிடுக்கும் ஸிஸிஸ் மற்றும் லேபரர்ஸ்
குடுகுடுக்கும் கணக்கனெனைக் குத்தியுயிர் கொல்வர்! நீ
குருடனும் எனப்பார்த்துக் குரை!
முன்பிறப்பிற் செய்தவினை மூண்டுவந்தே என்னையொரு
முழுமுட்டாள் கேப்பீயாய் முடித்த துவோ?
மண்பிறப்பில் இனியோர் நாள் மலையுத்தி யோகஸ்தனுப்
மாருமல் நான்வாழ வாழ்த்து!
★
பீ. டி. 二二 பெரியதுரை எஸ்.டி. - சிறியதுரை டி.எம். - டீமேக்கர் ஸ்ரீ, ஸ்ரீ. - பெரிய கிளார்க்,

Page 16
கலல்றை நிலவு
அமைதி நிலவே!
உனக்கு மரணதண்டனையை விதித்தது யார்? எந்த நியாயத்துக்காக நீ போராடப்போய் எந்தச் சர்வாதிகாரி, எத்தனை வாக்குகளால் உன்னைக் கொன்ருன்?
அல்லது நீயே தற்கொலை செய்து கொண்டாயா?. . .
கோடிக்கணக்கான மெழுகுவர்த்திகளே வான இடுகாட்டில் உன் கல்லறைக்கப்பாலும் நட்டு வைத்து இரவிரவாக உனக்காக
மெளனஞ்சலி செலுத்துவது யார்?
கல்லறை கட்டும்
நீ - உயிர்த்தெழும் வித்தையை யாரிடம் கற்றுக்கொண்டாய்?
இறந்துபோன கவிஞனிடமிருந்தா?
யாருடைய நன்மையை வேண்டி
நீ
மாதத்தில் ஒருநாள் பூவுலகை நோக்கிக் கறுப்புக்கொடி காட்டுகிருய்? எங்களுடைய
28

ஊதிய உயர்வுக்காக நாளாந்தம் நாங்கள் கறுப்பு வாழ்க்கை பிடிக்கிருேமே, அதை ஆதரித்தா?
கீற்றுக் கீற்ருய்க் குமுறி மாதத்தில் ஒருநாள் மாத்திரம் மனக்கடல்களைப் பொங்கவைத்துச் செல்கிருயே, எங்கள் பிரதிநிதிகள் வாக்குறுதிப் பணிக்கட்டிகளைச் சுமந்து வரும்போதா?
உன் வீண் பிரயத்தனத்துக்காக அவ்விரவில்
மெழுகுவர்த்திகள் வெளுப்படைந்து விடுகின்றனவே!
எங்களைப் பிரதிபலிப்பதற்காகவா
நீயும் ஒரு புதிராகத் திரிகிருய்?
எம்மைப் பொறுத்தவரையில் tổ கறுப்புக்கொடி காட்டும்நாளும் மனக்கடல்களைப் பொங்க விடும் நாளும் ஒன்றுதான்; ஒன்றேதான்!
29

Page 17
மலைப் பள்ளி எழுச்சி
நேற்றல நூற்றைம்ப தாண்டுகள் முனமே
நோயற நீயிங்கு நோற்றிட வந்தாய், கூற்றுள கொடுமையின் நாட்டிலும் வாழும் குருடென நீவந்து நோய்பிறி தேற்ருய், சாற்றுவ தெல்லாம் கவிதை என்றிடல்
சரியல; நீசிறி தெண்ணுவ தாற்ருய். மாற்றுள வாழ்க்கைநீ மீட்டிடல் வேண்டும்;
மலைமக னே, பள்ளி எழுந்திடு வாயே!
பாரெது கூறினும் ஆய்ந்திடல் அற்ருய்;
யாவுமே நலமெனத் தலைசாய்ந் தகல்வாய்; சீரிதைப் பெருமனம் என்றுநம் மூத்தோர்
செப்பினர்; அவர்வழி செல்கிருய்; ஆனல் பாரிதில் தீதாம் பழிகொளும் மகனே!
பயப்பேய் என்றெமைப் பிறர்பொருள் செய்தனர்! போரிடத் துடித்தெழு ‘பெருமனம் வீழ்த்தி! பொன்மக னே, பள்ளி எழுந்திடு வாயே!
படித்திடப் பலவாய்ப் புலர்கலை உளவே;
படித்திடல் வீணெனப் பகர்தலும் அறிவோ? அடித்தளம் இலாவில் வாணவப் பேச்சை
அடித்துநீ வீட்டி ஆவன செய்வாய்! வெடித்தெழல் வேண்டுமே வேதனை களைய!
வெற்புறு தோழா! வெற்றிகள் சூடவோ இடித்திடல் வேண்டுமே ஈனச் செயல்கள்!
இளமக னே, பள்ளி எழுந்திடு வாயே!
அரசியல் இலாவோர் அந்நியர் நாமெனும்
அடுமொழி வேண்டா; அஃதுணர்த் திடுவோம்!
சிரசினில் நாட்டிதன் செம்பொருள் செய்யும்
செயலுள தென்றும் ஜெகமுணர்ந் திடட்டும்!
30

தரிசினிற் காய்ந்தே தாயகஞ் செய்த
தகைமையும் சாற்றித் தடந்தோள் புடைக்க
முரசிடல் வேண்டுமெம் மெய்யன் பினனே! முழுமக னே, பள்ளி எழுந்திடு வாயே!
கண்ணிலும் நெஞ்சிலும் கரிவளர் இருளைக்
கதறிடச் செய்தது காலமாம் இரவி. எண்ணிலும் இயலாக் காலமாய்த் துயின்ருய்
எழுந்திட வேண்டுமின் செயல்பல சேரவே, இண்ணெனக் கதிர்ச்சுடர் எவரது முன்னும்
எழுகெனக் கூவுதல் எழுவந் தறிவாய், எண்ணினைந் தோ வெண் ணெய்நினைந் தோதான் எழுகெழு கெழுக நீ; எழுந்திடு வாயே!
நாளது முதலாய் எழுகெனக் கூறி
நாட்டுள பாவலர் நலிந்திடல் шпттті .
கோளது நிலவில் கொடிநடுங் காலம்;
குறியறத் துயில்வதோ கொல்! முதற் பாவம்!
தோளவை நிமிர்த்தித் துணிவுறல் விடுத்துத்
துயிலுவ தேனே? துணையிலா மகனே!
ஆளவும் மீளவும் வாழவும் வேண்டும்!
அருமக னே, பள்ளி எழுந்திடு வாயே!
பற்பல வழிகளிற் பணந்தனைத் திரட்டும்
படைமுத லாளியர் பரிவுடன் நின்னை நற்பலன் பெற்றிட நாடிடல் வேண்டும்; நாளிர வவரிடம் நீசெலல் துன்பம். அற்புதம் இதனை நீ அழிவறப் பெற்றுளாய்,
அஃதுணர்ந் தாலுளம் அஞ்சுதல் விடுப்பாய், சொற்பல வீசுவ தேனடா, மேலா?
சோர்வற நீபள்ளி எழுந்திடு வாயே!
3.

Page 18
உழைப்பிலா துலகினை உணர்ந்திடு 6. urru urr? உழைப்பினில் நீயந் நிலைம்றந் தாயா? அழைப்பிலா துற்றிவண் ஆற்றுதல் விட்டே
அழகறத் துயில்வதன் ஆத்திரம் என்னே? உழைத்திடல், உண்டுடுத் துறங்குதல் என்பவே
உயர்மினி தன்பிழைப் பென்றெண லாமோ? பழிப்பிணி மாந்தரென் றயல்சொலக் கேட்டும்
பதைத்திலை யோ, பள்ளி எழுந்திடு வாயே!
பிரட்டினிற் காலையிற் பிந்திட மாட்டாய்;
பிடியுண வின்றியும் உழைத்திடல் கோடாய்! முரட்டிடர் தோன்றிய தெழுகவேர் அறவே! முந்திட வா! இனும் முகங்குப் புறவோ? குறட்டையும் கூதலும் கொன்ருெழி, ஒழியோ!
கோமக னே, கதிர் கொன்றதஷ் விருளை! உருட்டுதல் வேண்டா! உடனெழு கெழுகவே!
உயர்மக னே, பள்ளி எழுந்திடு வாயே!
மேட்டினில் எங்குமே மெய்ப்பசும் பயிர்கள்;
மேதினி எங்குமே மேலெழு மனைகள்; நாட்டினில் எங்குமே நற்பணப் புழக்கம்;
நாவுளர் எவருமே நல்லுண வுண்பர். காட்டுதல் இவைவிண் கனவல, மகனே!
காணடா உரிமைகள் உனக்கிலை; மகிழ்வோ? வாட்டிடும் துயர்ப்பனி போக்குதல் வேண்டி
வாழ்ந்திட வா; பள்ளி எழுந்திடு வாயே!
32

கண்காணிப் பிரசங்கம் !
என்னுப்பா ஏழுமல! எந்தப்பக்கம் போறதுக்கு? சொன்னுக்கா கோவிக்காத சொடலக் கங்காணிநான் புண்ணுக்குத் திங்கலைடா! புதுச்சோறு திங்கிறவன்! கர்நாக்குக் காரன்’னு கதைவேற அளக்காத! உண்ணு மலைஒனக்கு ஒசந்த பொண்டாட்டி! அண்ணு மலைஒனக்கு அப்பன்டா! செஞ்சுவச்சா தட்டாம செஞ்சுக்கடா! தம்பி, ஒனக்குநல்லம். பட்டணத்துக் காரிகளைப் பாக்காத உட்டுப்புடு!. மச்சினன் கடுதாசி மாசாமாசம் போடுருன? உச்சிமலை மாமாவும் ஒழுங்காப் பேசுருரா?. நேத்து மொதன்னக்கு நெஞ்சுத் தடுமன், பாரு! ஊத்து மாதிரித்தான் ஊத்திக்கிட்டே மூக்கிருக்கு!... ஈந்தியா போறதுன்னு எழுதிப் போட்டேன்’ டா; சேந்திச்சோ என்னழவோ, சேதியும் தெரியலடா!.. கையோட நாளைக்குக் கருமாதிக்கு வந்துப்புடு! மைபாக்க நேத்துக்கூட வருவேன் னு பாத்திருந்தேன். இன்னிக்குப் பேப்பர்ல என்னமோ ஒருசேதி. அன்னிக்கு வந்ததம்பி அருமயா வாசிச்சிச்சி! *தோட்டத்து ஆளுங்களே! தொழிலாளித் தோழங்களே! மாட்டுக்கு மேலகேடா மானமத்துப் போனிங்களே! கூடாது! ஏந்திரிங்க கூடிவாங்க! சேந்திடுங்க! வாடாம வாந்திடலாம்! வாங்க*ன்னு யாரோருத்தன் பாட்டெழுதி இருக்காணும்! பாத்துநல்லாச் சொன்னிச்சிடா ஒட்டுவாங்க வந்தப்பவும் ஒகோன்னு யாருயாரோ தோட்டத்து ஜனங்கள்ளாம் துப்புக்கெட்ட
நெலசொன்னுக. பாட்டப் பாத்ததம்பி, பலபேரு றைட்டருங்க இப்பிடியே மிச்சமிச்சம் எழுதுறதாச் சொன்னிச்சிப்பா! இப்பிடியே எழுத்தாளங்க எங்கபேரச் சொல்லிக்கிட்டு ஓயாம எழுதிக்கிட்டே உத்தியோகம் பண்ருங்களாம்!
வTயாறத் தம்பிசொல்லி வாயூறிப் போச்சிப்பா?
33

Page 19
நல்லஒரு பாட்டுத்தான்! நாமகெட்டுப் போனேமின்னும் செல்லாத காசாயிட்டோம், சேந்துநல்லா
இருப்போமின்னும் அப்பிடித்தான் எழுதீருக்காம்! ... அதுஒண்ணும்
புரியல்லப்பா ! கொப்பிரெண்டு வேணுமுன்னு குப்புசாமிப் பயகேட்டான். சல்லிஇல்ல கொப்பிவாங்க! சண்ட புடிச்சிகிட்டு பள்ளிக்கொடம் போகல்ல! 'படிச்சுக் கிழிச்சுப்புட்ட! சரிடா பொறுடாப்பா! சட்டப்படிப்பா? அப்பிடீன்னேன். நரிடாப்பா அந்தப்பய; நாட்டுப்பக்கம் வேலசெய்ருன்! வேலசெஞ்சா நல்லதுதான்! வேறஎன்ன கிழிக்கப்போருன் ? நாலெழுத்துப் படிச்சாப்ல நல்லகாலம் வரப்போகுதா?. . மூத்தபய என்னடா ன்னு மூணுமாசம் ரவுணடிச்சான். போத்தகூட இல்லாம பொழுதோட வந்துநின்னன். ஆத்தாகிட்ட பத்துரூபா அடிச்சிகிட்டுப் போயிட்டாண்டா ! தாத்தாவாகிப் போயிட்டேன்டா, தறுதலப் பயலுகளப் பெத்துகிட்டுப் பட்றபாடு பெரட்டுகளம் தோத்துப்போகும்! சொத்துகித்து இருந்திச்சீன்னு தொரமாரா சீவிக்கலாம். . . பாலகிட்ணன் கங்காணி, ... பந்தம் புடிச்சிகிட்டே. . . பேழக்கூடத் தெரியாது, பெரியதொர ஆயிட்டாண்டா ! ஏழுமல, கோவிக்காத என்னென்னமோ சொல்றேன்னு! ஆளுகள்ளாம் போயிட்டாங்க; அப்பிடியே நாட்டுப்பக்கம் நானும்போய் ரெண்டுபோத்த நல்லதண்ணி போட்டுக்கிட வேணுமுடா! போயிட்டுவா! வெள்ளெனவே வந்துடுறேன்!
女
34

சுப்பவைஸர் புலம்புகிறர்
சுப்பர் வைஸ்ரென்று சுகமாகச் சொல்கின்ருர்கள்! சொற்ப வயதென்ருலுஞ் சொல்லொணுத் துயரம் காலை ஐந்து மணிக்கெழும்பி அடுப்பினில் புகைந்துமாவை மொந்தைக் கணக்குநீரால் மசித்து வாட்டிப்பாதி வெந்து வந்தபோதே விடிந்து வந்ததென்று நொந்து விழுங்கீட்பின்னர் நொடியினிற் பிரட்டுக்கோடிக் கணக்குப் பிள்ளைபாடும் கணக்குப் பாடங்கேட்டுச் சுணக்கம் இன்றிப் பெண்கள் சூழும் முன்னலோடி மலைக்குச் சென்றுயர்ந்த மரங்கள் சிரிக்கத்தாண்டி இலைக்கோர் இழுவைக்குற்றம் இசைக்கும் துரைக்குவீழ்ந்து கும்பி டவருக்கொன்றுங் குரைக்கும் நாய்க்கிரண்டும் நம்பிடு மனதாற்போட்டும் நான்கைந்து தண்டங்கட்டித் தொண்டையில் நீருமோயத் தொலைவிலே முயல்களோடப் பண்டைநாள் மறைந்தசொற்கள் பலவுமே பாடிப் பின்னர் காற்றென வீட்டைநாடிக் கல்லொடு பாதிவெந்த சோற்றுனைக் குதப்பிமீண்டும் "சோலை"க்குச் சென்றுலாவிக் கரட்டிலைக் கட்டும்யெற்றுக் கண்ணிரும் கணக்குப்பிள்ளை மருட்டலும் சேர்த்துப்பெற்று, மிஞ்சிடும்
பொழுதிற்செக்ருேல் பத்தியாய் முடித்துப்பின்னர் பாழுடைக் குடிலைநாடிக் கத்திரிக் காயாய்ப்போட்டுக் கழுதையாய் ஏதோதின்று பத்தெனும் மணியின்தொங்கல் படுத்திரா முழுதும்நொந்து மற்றைநாள் லீவானுலும் மாறுகொள் வேலையேற்று வற்றுடல் கொளவேவாழ்ந்து வாடியே பெற்றேர்கூட "இற்றுடல் கொண்டாய்; நீயோ எம்மகன்?" என்றேவினவ *வெட்டுவோம், கொல்வோமென்று வெருட்டிடும்
தொழிலாளர்தம் திட்டுறும் புகழின்மாலை திகைப்புடன் ஏற்றும் - ஆஹா! ஆளையே மாற்றிக்காட்டும் ஆபத்தாம் சுப்பர்வைஸர் வேலையே வேண்டாமையா! வெட்கமும் வெடவெடப்பும்! சுப்பர் வைஸரென்று சுகமாகச் சொல்கின்ருரே! சொற்ப வயதென்ருலும் சொல்லொணுத் துயரமையா!
大
さ;5

Page 20
தேயிலையின் சத்திய சோதனை
என் "சத்தியசோதனை'யின் திறனய்வுத் திலகங்களே! ஜனநாயக எடிட்டிங் எட்டப்பர்களால் அச்சேருமல் "தணிக்கை செய்யப்பட்ட சில சத்தியங்களையும் - பிற்சேர்க்கை செய்துகொள்ளுங்கள்.
பெண்களே என்னை நேசிப்பதாக நினைத்து - *லெஸ்பியன் என்ற நீல முத்திரையை எனக்குக் குத்திவிடாதீர்கள்! நான் அமுதசுரபியாகும்போது - ஆண்களும் என்னை மேய்கிருர்கள்!
நான் ஒரு வார மலர்க் கன்னி. அப்போதெல்லாம் பிஞ்சுகளும் கிழங்குகளும் பாலியல் பேதமின்றி என்
இணையற்ற வாசகர்கள் ஆகிருர்கள்.
என் வாசகர்களின் நுனிக்கரங்கள்
என் தளிர்க்கம்பிகளை மீட்டுகையில் எழும் நாதந்தான் - உலகச் சந்தையில் பவுண் - டாலர்களாக
நாதமாரி பொழிகிறது!
36

என் வாசகர்களின் கண்ணிர் மழையும் பெருமூச்சுக் காற்றும் வயிற்றின் பாலை வெம்மையும் நெஞ்சப் பணியும் உழைப்பு வண்டலும் விடா முயற்சிக் குன்றுகளும் வாழ்க்கை அகழிகளுமே - என் விற்பனையின் அரசியல் இரகசியங்கள். அவர்களின் தியாகத்தைக் கண்டுதான் என் மடல் பூமி ஆறுகளாய் அழுகிறது. ஆண்சூரியனும் பெண்சந்திரனும் இளந் தாரகைகளுமாய் இவ்வாசகர்களே - என் சத்தியசோதனையை மீண்டும் மீண்டும் மீட்டுகிருர்கள். நாட்டிலேயே அதிஉயரத்தில் அவர்கள் பர்ணசாலை கொண்டிருப்பதால் - சொர்க்க புரி மிக அருகில்தான் இருக்கிறது. அவர்களைப்பற்றி யாருமே அதனுல்தான் கவலைப்படுவதில்லை.
நானும் ஒருவகையில் சுயநலமிதான்.
சுடலைஞானம் சில காலங்களில் சுய உணர்வாகும்போது மந்த சஞ்சிகையாகி மாதம் இருமுறை மலர்வேன்.
37

Page 21
சூரியக் கணவனின் சுடுசொற்களாலும் மழை நாத்தனரின் திடீர்ப் பகைமையாலும் நான் வாடிஒடுங்குவதுவே அதன் வரலாறு.
பாவம்!
வாசகர்களின் பஞ்ச பூதங்களையும்
பட்டினி போட்டுவிடுகிறேன். இராவணனின் நெஞ்சத்துள்ளே போய் ‘இன்னும் இருக்கிறதா சீதையின் நினைவு?’ என்று இராமபாணம் துப்பறிந்ததுவாம்! நான்
மாதமிரு மலராகும்போது என் வாசகர்களின் விரலம்புகள் என் அந்தராத்மாவுக்குள் புகுந்து வயிற்றுப் பாட்டுகளைத் தேடும். வயிற்றுப்பாட்டு * வங்கி வரிகளைத் தேடும் இந்தக் கெடுபிடிகளால் மறுபடியும் நான் வார மஞ்சரி ஆவதுவும் உண்டு; வற்றிக் கிழியுண்டு
பலவாரங்கள் மருத்துவம் தேடுவதுவும் உண்டு! ஐந்தாண்டுத் திட்ட நேர்ச்சைக்காகக் கவ்வாத்து மொட்டைத் தவத்தை ஓராண்டு புரிவேன் - ஒவ்வோர் அத்தியாயமாக. அவ்வத்தியாயம் வெளிவரும் வரையில்
வாசகர்கள்
38

பக்தி சிரத்தையாய் வாழ்வார்கள். தவமுடிவில் வரம்பெற்றுப் புதிய அமுதசுரபியாய்ப் பூரித்து ஒழுகுவேன். அப்போது கூட என் வாசகர்கள் என்னை ஏந்தி ஏந்திப் பிறருக்கு வாசித்துத் தானம் பண்ணியே பழம் பெருமை பேசிப்பேசிப் பதுக்காது போகிருர்களே!
ஏத்தனை மொட்டைகளையும் எத்தனை அமுதசுரபிகளையும் இவர்களுக்காக ஏந்தினேன்! இவர்களுக்காக நான் சாகாவரம் பெற்றும் இவர்கள் செத்தே மடிகிருர்களே! இதுதான் என் வேதனை!
என் வாசக பக்தர்கள் பரம்பரை வள்ளல்கள். வள்ளல்களை நான் வாழவைப்பது எவ்வாறு?
39

Page 22
மலைக்கன்னி
பாரதத்தாய் பெற்றெடுத்த பாவி எனதன்னை! சீரழிவுக் காளான சீதையவள்! - பாராண்ட வெள்ளைத் துரையான் விரித்த வலைவீழ்ந்தாள்; உள்ளம் பறிகொடுத் தோடிவந்தாள் - அள்ளியணைத்(து) ஆசைக் குமுறலுடன் ஆய்ந்து வளர்ந்துவிட்ட பாசப் பிணைப்பீந்த பற்றறுத்தாள் - மோசப் புதர்மலிந்த நாட்டின் புலன்மயங்குங் கேட்டின் அதர்மத்து வாழ்வை அறியாள் - முதலில் இராமன்தான் தான் பெற்ற இன்பக் கணவனென்று இராப்பகலாய் எண்ணியிறு மாந்தாள்! - தராசோ ஒருபுறமாய்ச் சாய்ந்தே உபத்திரவஞ் செய்தும் மறுபுறத்தைக் காணுது வாழ்ந்தாள்! - சிறுதவறும் காதலனை நாடாது காத்தாள் எனதன்னை; மாதவமே பூண்டாள் மகிழ்மனத்தே! - பாதகங்கள் அஞ்சாமற் செய்தான் அயலான் துரைத்தந்தை தஞ்சமொன் றில்லாவென் தாய்மணிக்கு. - கொஞ்சமோ அன்னை வடித்தகண்ணிர்! ஆறம் மகாவலியென் அன்னையவள் கண்ணிர்தான், யானறிவேன்! - பின்னும் கணவன் மனங்கோணுக் கற்பரசி அன்புக் குணவதியாய் இன்பங் கொடுத்தாள். - நிணமும் தசையுமே வேண்டித் தகித்திருந்த தந்தை விசைப்புலனுல் என்ன விதைத்துத் - திசைதுறந்து ஒடியே போயினனே!. ஒலமிட்டென் அன்னவளம் வாடி வரைநின்று வான்பார்த்தாள். - நாடிப்போய் நத்தற் குறவில்லை; நல்வழிக்கும் மார்க்கமில்லை; பித்தே பிடித்ததம்மா பேதைக்கு! - செத்துச் சிவலோகஞ் சேரச் சினைத்திருந்த என்றன் கவலையாற் கூடாது காத்தாள். - அவலமொன்ருய் ஆர்ப்பாட்டம் இன்றி அவனி பரிகசிக்கும் வார்ப்பாய்ப் பிறந்தேன் வரைநாட்டில். - சீர்த்தாய் சிறியேன் பிறப்பெடுக்கச் செத்தாள் சிறிதும்
40

அறியாளாய் என்றன் அழகை - இறைவன் அதுபோழ்தே என்னை அழித்திட் டிருந்தால் புதுவாழ்வு பெற்றுப் பொலிவுற்(று) - இதுபோழ்தீண்(டு) ஈரெட்டுச் செல்வம் எளிதாக வேயடைந்து பேருற் றிருப்பேனே பேய்ச்சிதான்! - மாருக மாற்ருந்தாய்க் கையில் மலைக் கன்னி என்வாழ்வைப் போற்றும் இறைவன் பொறுப்பளித்தான்! - கூற்றுவனும் ஒரவஞ்சத் தானேதான்! ஒரிமையில் என்னுவி வாரிக் கவர்ந்து வரித்தான? . கா உமிழாக் குறையாக ஊருலகம் தூற்றத் கமியேளைச் சீரழிந்தாள் தண்டிக் (து) ! - இமைபோலும் தம்மக்கள் காத்தவந்தத் தாய்மாற்ருள் கன்னியெனை
அம்மிக்கல் லாக அரைத்தெடுத்தாள்! - விம்மல், விசும்பல், பொறுமை, விழிநீர், அவலம் விசும்பிற் கலந்ததொரு வாழ்வு 1 - பசும்பால் குடித்தே அவர் வாழக் கூழ்நீர் அருத்தி முடிக்குமுனென் வேலை முதுகில்! - படித்திடற்கோ சர்வகலா சாலைகளின் சாகசங்கள் மிக்குள்ளார். பர்வதத்துக் கன்னிநான் பார்த்தறியேன்! - கர்வமுடன் மாற்ருந்தாய் என்றன் மனமொடிய என்தாயைத் துாற்றி, ‘அவள்பரத்தை, துர! “ வென்பாள்! - ஈற்றடியாய் " அப்பனில்லா நீயோர் அடிமை!’ எனவுரைத்துக் கொப்புளிக்க வேலை கொடுத்தகல்வாள்! - குப்பைப் பருத்திக் கிழிசலுடை பட்டே அவர்க்காம்; துருத்தும் நகைகளவர் துய்ப்பர். - கருத்தெனக்கோ பொய்த்தங்கச் சங்கிலியும் பூவும்! . . . . திருப்திக்கோ வைத்தவழி காணேன்! வரமிலையே! - இத்தலத்தில் பின் பிறந்த கன்னியரோ பெண்மையதன் பேற்றுடனே கண்ணிறைந்த வாழ்வு கழிக்கின்ருர் - கன்னிநான் முப்பத்து நான்காண்டாய் மூக்கறுந்து கன்னிமையின்
4 I

Page 23
வெப்பத் தழிகின்றேன் வெற்பகத்தில், கப்பத்தாய் ஆசை பலசுறி ஆர்வப் படுத்தியென மோசம் புரிகின்ருள் முக்காலும்! - நேசக் கரம் நீட்டிக் காளையரும் காதலிப்பர் - ஆனல் வரங்காட்டார் வாழ வரித்து! - தரங்கெட்டேன்!. . . . . ஆபத்தைக் கண்டும் அறியாதார் போலிருந்து பாவத்தைக் கட்டுகிருர் பாட்டியம்மை - சாபத்தால் பேருக் கமையவிந்தப் பெண்ணும் மலைக்கன்னி யாருக்காய் இம்மலையில் ஆட்பட்டேன்? - பாரோரே! கல்வி, பொருள், சொந்தம், கைச்சி தனமின்றி அல்லற் படுமிள் வளுதைக்கு - நல்ல
தராதரப்பண் புண்டு; தனிநாற் குணமும் தராதலத்தின் ஆறறிவும் சாரும்! - நிராதரவு பின்னிப் பினந்தேற்குப் பேருதவி செய்தாலென் கன்னிமையும் நீங்கும் கனிந்து,
★
4盛

புனர்வாழ்வு
(பாரதத்திலிருந்து வந்த கடிதம்)
மாவலி கங்கை எம் கண்களில் தொடங்குவதாக
நீ அடிக்கடி பாடுவாய்,
நான் கூட நினைத்திருந்தேன் - எனது சோகாந்த இதிகாசத்தின் கடைசி அங்கம்தான் என் பிரியாவிடை என்று. இங்கு வந்தபிறகுதான் தெரிகிறது அந்தக் கடைசி அங்கப் முதற் காண்டத்தின்
முடிவு மட்டுமே என்று. பாவங்களைப் புனிதப்படுத்தியே காய்ந்துபோன ப: ரகத்தின் ஆறுகள், என்னைக் கண்டதும் துள்ளிப் பெருகி ஒடுகின்றன ! . இரண்டாவது காண்டம் - இங்கே தொடங்கியதடா !
மகாத்மா காத்தது - புண்ணியங்கள் அடைக்கப்பட்ட ஒரு பாறைக் கலசத்தையே, பாரதி உரித்ததுவும் அந்தப் பாருங்கல்லைத்தான்! அதையேதான் நானும் கரைதட்டி இருக்கிறேன்.

Page 24
ஆடம்பரத்தின் அடியைத்தேடி மனிதாபிமானமண்ணைக் கிண்டும் கறுப்புப் பன்றிகள் - விஷ்ணுவின் அவதாரங்கள் என்று பூஜிக்கப்பட வேண்டியவையா? நீ சொல்!
பூமிழன் போர்வையால் ஆடம்பரத்தின் உச்சியைத்தேடும் அமைதியை நாடு கடத்திய சுயநலப் பருத்தி அன்னங்கள் - பிரஹ்மா ஆவதுண்டா?
நீயே சொல்!
நன்மைகள் இங்கே அஞ்ஞாதவாசம் புரிகின்றன. போலிகளுக்கு ஆடைகளாக பாற அஞ்சி. இந்தப் பாறையில் மொய்த்துக் கொண்டிருப்பனவோ ஒவ்வொருவர் வாயினின்றும் உருக்கிப் பீய்ச்சப்படும் . "கொடை - சகோதரத்துவஉயர் குண - மனிதாபிமானதமிழ்த்துவ" லாவாக்களே! இந்தப்பாறைகின்னஸ் புத்தக நாடகமேடை!
★ ★
'பசிக்கிறதே என்ற என் பதத்தையே மீட்டுவதால் நாறும் பெருந்தீனிக்காரன் கூட முக்காலமும் உணர்ந்த
44

முனிவன் வேஷம் போடுகின்றன்.
இந்தச் சகோதர காதகத்தில்உடன் பிரப்புக்களுக்கும் இரத்தத்தின் இரத்தங்களுக்கும் சைவஞன நான் இரையாகிப் போகின்றேன்! அங்கிருந்து சுமந்துவந்த என் உழைப்பு மணிகள்இங்குள்ள முனிவர்களின் உண்டியல்களுக்கே தீர்ந்துவிட்டன. வரம் எப்போது கிட்டுமோ!.
பசி மூடையைச் சுமப்பதற்காக நான்
ஒரே ஒரு நிமிஷமேனும் பிராணுயாமம் செய்தால் அடுத்தவன். எனக்குரிய காற்றையே தின்று ஏப்பம் விட்டு விடுகிரு?ன் 1 . .
அந்தத் தீவிலிருந்தபோது சிற்றன்னையின் சொத்துரிமை பற்றி எந்தச் சட்டத்தரணிையுமே எனக்குச் சொல்லித்தர வில்லையே! . . . தாய் நாட்டுக்கான என் நம்பிக்கைப் பேரவா வே என்னைப் பலியாடாக்கியதடா! எழுபத்தேழை வெறுத்தநான் இங்கே எல்லா நாளையுமே வெறுக்கிறேன்!. . . .
4历

Page 25
நீயும் மலைநாட்டுச் சட்டியில் இருந்து பாரத நெருப்புக்கள் Lirru (pä0Turt(35!
பாரதியும் காந்தியும் புத்தரும் இங்கே
பிறந்தது மட்டுமல்ல; இறந்ததுவும் தான்.
பாருங்கல்லில் நாரை உரித்து உரித்தே தங்களுக்குரிய தண்டனைகளைத் தாங்களே நிறைவேற்றிக் கொண்ட அமானுஷ்யங்கள்!
அலைய்ப் பிறந்த பண்டாரங்கள்தாம் இங்கே பாதைக்குப் பாதை பல்லிளித்துத் திரிகிருர்கள். தெருவுக்குப் பத்தாய் பக்தி ஆலயங்கள் வானத்தை அளக்கின்றன. பாவ நாகங்களின் முடிவற்ற ஊர்வலம்தான் இந்தப் பண்டார அலைச்சல்களோ? மனேவைத்திய மனைகள்தாம் இந்த பக்தி ஆலயங்களோ?
இலஞ்சக் கப்பங்களைத் தாங்கமுடியாமல் உண்டியல்களே உடையும்போது நான் எம்மாத்திரம்?
G

B
உன் மலையகத்தின் சந்தாச் சமுதாயங்களை நம்புவாய்; என்னை நம்ப மாட்டாயே! இப்போதாவது
என்னை நம்பித்தான் ஆகவேண்டும்.
நான்பதம் பார்க்கப்பட்ட சோறு
உன் விற்றன்னைச் சிலோன நம்புவதைவிட இவ்விஷயத்தில்
என்னை நம்படா!
இங்கே- VM 'வந்தார்க்கு வாழ்வு என்ற கினவை "வந்தாரால் வாள்வு' என்று நனவாக்கிக் கொள்! வெள்ளித் திரையின் விக்கிரகங்கள் வாழ்வுத் திரையிலோ அழகான பிக்காஸோ ஒவியங்கள்!
அவலை நினைத்தவாறே
உரலை உடைக்காதே!
அடுத்த பிறப்பில்எனக்கு நம்பிக்கை இல்லை.
அப்படி ஒன்றிருந்தால்
47

Page 26
உன் வீட்டுத் தொட்டிலில் நானே உனதோர் குழந்தையாக மிக விரைவில் - புனர்ஜென்மம் எடுக்குமுன்னர்என் சிதையில் உன் உடன்கட்டை
அவசியமற்றது.
இருமுறை வாசித்துக்கொள்!
உன் பாரத நுழைவின்போதே என்னைச் சுட்டிக்காட்டி'உள்ளே இருப்பவள் பூலான்தேவி அல்லள்; இவனேதான்!” என்று நீயே சத்தியம் செய்து வெகுமதி பெறும் மனது உனக்கும் ஏற்படலாம்! இது பாரத வாசனை!
மகாத்மாக்கள் இறந்த பூமியில் இந்தச் சிற்றத்மாவும் ஒரு பிறப்புக்காகப் போராட முடியுமா?
(இந்தக் கடிதம் எழுதியவர், ஆருவது மாதத்தில் இறந்து விட்டார். அவரின் ஆத்மா சாந்தி பெறப் பிராத்'டுக் கிறேன்.)
4ኦ

பிச்சைக்காரன் புலம்புகிறன்
"பத்துப்பேர் உண்பதனைப்
பதினெருவர் உண்பதனல்
பத்துப்பேர் பட்டினியாற்
பரிதாபப் படுவர்" எனப்
புத்தியிலா மானிடனும் புகலானே; ஏனையா
கத்துகிறீர் இப்படிநீர்?
கத்தாதீர், யோசிக்கின்றேன்
பாதையிலே பரதேசிப்
பண்டாரக் கோலத்தில் வாதையிலே நானிருந்தேன்;
வந்தவணிர் கண்டுருகி "வாதம்பீ! என்வீட்டில்
வந்திருந்து வாழ்" என்று குதில்லா மணத்தேனைச்
சூட்சுமமாய்க் கொண்டுவந்தீர்.
சிலநாள்கள் என்னுறவு
சிறிதாகிக் காட்டியதால் பலநாள்கள் ஏனையா
பண்பின்றிப் பேசுகிறீர்?
கலமேந்திப் பிச்சையினைக்
கேட்டுத்தான் நான்வாழ்ந்தேன். இலனென்று சொல்லவில்லை;
இகழ்ச்சிகளும் கொள்ளவில்லை.
49

Page 27
இப்போது நீரென்னை
இழிவான மகனென்று துப்புவதால் நானினிமேல்
துண்டுமுழம் இடைஇறுக்கி அப்பாவை அம்மாவை
அண்டிநின்று யாசித்தால் தப்பாகப் பேசாரோ?
தருவாரோ செம்புமணி?
பிச்சையெடுப் பவனேயான்; டிசகெதுவும் அதிலில்லை. மிச்சத்தைத் தின்றுவந்த
மிதமான வாழ்க்கைதனை அச்சமின்றி யான்தொடர
அமைத்துத்தான் தாருமையா! பிச்சைக்கே போய்விடுவேன்! பிறகேனுன் லழிக்கேயான் வருகின்றேன்? - இனிமேலும்
வாயில்லாப் பேயனென்றென் எரிகின்ற நெஞ்சத்தில்
எண்ணெய்வகை சொரியாதீர்! சிறுகுடிலை யான்விடுத்துச்
செல்லுவதால் இக்குடிலே திரியில்லா விளக்காகும்!
தீபத்துக் கென்ன செய்வீர்?
.—ത്ത
50

இழுவை மர்மம்
ரபர்த் தோட்டமொன்றில்தான் அன்னை பிரசவித்தாள் என்னை. . . . வாழ்க்கை வாயினுள் சூயிங்கம் ஆக நான். இழுபடுவதன் காரணம் இப்போதுதான் புரிகிறது!
பளிங்கு கோலி வாங்கப் பைசா இல்லா கெய்ஷாவாக ரபர் விதைகளையே தோட்டத்து நெற்றிகளில் உருட்டி விளையாடினேன். இன்ருேவறுமை வண்டுகளால் உருளத் துளைக்கப்படுகிறேன் இதனுல்தானே?
அந்த விதைகள் பிளந்துவந்த வயிற்று ஒடுகளால் விசிறி பூட்டி பெருவிரல்-ஆள்காட்டி விரல்களுக்கிடையில்
இறுக்கி ஊதி உவகை அடைந்தேன். இதனுல்தான் இன்று மேல் - கீழ் விரல்களுக்கிடையில் நானே ஒரு விசிறியாகி ஊதப்படுகிறேன?
மண் பாலைக் கிண்டி மாலைகளில் அலைந்தேன்.
5I

Page 28
இன்று
சிரட்டை ஏந்தி ஒருவாய் அஸிட்தேட நிர்ப்பந்திக்கப் படுகிறேன?
ஆழவேர் ஊன்றியும் ரபர் மரம் ஒருநாள் அடுப்பையே நாடும்பிறருக்காய் எரிவதற்காக,
★
52

இதனுல்தான் இன்று இந்த மண்ணே எனக்குப் பாலையாகி விட்டதுவா?
அடிவெட்டு தூர்ந்து போனல் மேல்வெட்டும் கங்கு வெட்டுமாக மேற்புறமே பார்த்து நின்றேனேஅடித்தளம் இற்றுப்போக மேலுலகை மட்டுமே நான் இன்று நம்பிநிற்பது இதனுல்தானுே?
வெட்டுவாய்ப்பால் இறுகி ஒட்டுப்பாலாய் ஒடிநீண்டு மீதிப்பால் வெளிப்படாமல் மிதித்துக் காக்கும். நானேஒட்டி உலர்ந்துபோய் மீதிநாள் வாழும் பாதுகாவல் இல்லாது பரிதவிக்கின்றேன்!.
நகரத்து கெய்ஷாவாக நான் மாறியும் அதே நாடி-நரம்புகள்! சிரட்டை ஏந்திச் சேகரித்த பாலை ‘அளிட் கலவையால் அல்வாவாக்கி
53

Page 29
அலையெறியும் கடல்மூழ்கி அரியவொளி முத்தெழுத்து, மலையுறையும் மண்ணுழ்ந்து மாணிக்கக் கல்லெடுத்து, நிலவுறையும் வானகத்தின் நில்லாவான் வில்லணைய பலசிறப்புப் பேரணிகள் பகட்டாகப் போடவில்லை. நினைவுக் கடல்மூழ்கி நெஞ்சகத்து முத்துருவி எனையும் பிடித்தடக்கும் எம்மீழத் தாய்மடியில் காணிக்கைக் கல்லெடுத்துக் கவிபாடிக் கடல் கடப்போய்! தேனீக்கள் மொய்த்துலவும் தேன்பானம் தந்தனையே! பானத்தின் சுவைமனதிற் பாங்காய் இனிக்கையிலே கானத் தவமியற்றிக் கடுந்தேனீ கொட்டுவதேன்? கொட்டும் வலியென்றன் குழந்தை மனத்திடையே வெட்டும் பிளவுகளின் வேதனையை ஈவதுமேன்? எங்கோ ஒருமுறை தான் ஏறெடுத்தேன் உன் முகத்தை. அங்கேயே நம்பார்வை ஆதியுடன் அந்தமடா! உன்றன் படைப்புகளை ஊன்றிப் படித்துமனம் கன்றிச் சிவந்தெழுந்த காலத்தை மீட்கின்றேன். மலையகத்துன் பச்செறிவில் மலைபோலும் நீ நிமிர்த்து கலையுலகும் சுற்றிவந்தாய்; கடல்கடந்தின் றகல்கின்ருய். நின்போற் படைபலரும் நிலையறுந்து நீர் வார்த்தும் பொன்னச்சைப் பொறித்துவிட்டுப் போய்ச்சேர்ந்த புயற்காட்சி இன்னுந்தாம் இம்மனத்தில் ஏக்கமெனச் சுழலுகையில், பன்னீரின் செல்வனேயோ! பாரதத்தை முதுகமைத்தாய்த் ஏக்கக் கதறலுடன் இதயத்தின் பித்தடர்ந்த யாக்கைக் கவிதைதனை அனுப்பியுளாய் அன்பரர்க்கு! படைப்புகளின் பூங்காட்டில் பல்வேறு மரம்நாட்டி விடைத்துத் திரிவதென வீறு தமிழ் எண்ணுகையில்
54

உள்ள மரந்தானும் ஒவ்வொன்ருய் மண்பெயர்ந்தால் உள்ளந்தான் என்னபடும்? ஒ, துயரம்! உணர்விழந்தேன். சோகக் கடல்நடுவில் சோகைதத் தளிக்கின்றேன். ஆகக் குடல்தெறிப்ப அன்பிறுக்கால் ஆடுமுளம். . . . பீழை தருவதிந்தப் பிரிவுத் துயர்! பாடும் ஏழை நமக்கெல்லாம் எம்மண்ணும் சம்மதமே! குளிர்மண்ணில் வெடவெடப்பு; குடல்காயும் பசி, தாகம்; தளிராய்ந்தே மெய்காய்ந்த தத்துவங்கள்; சாதனைகள். . சுடுமண்ணிற் சிலவேளை சுகமாக நீவாழ முடிந்திடலாம்; அதனுலே முன்னேறிச் செல்: வாழ்க! நேசங்கள், தோஷங்கள், நிறைவுபடா மோசங்கள், வாசங்கள் மிகமலிந்த வசந்தங்கள் மலர்மலிந்த தேசங்கள், துயரங்கள், தெவிட்டாத கோஷங்கள் நீசங்கள் யாவையுமே நீயேந்திச் செல்வதுபோல் நிகழ்ச்சிகளும் கொண்டிருக்கும்; நிகழவந்த மனங்களிலும் புகழ்ச்சிகளும் இகழ்ச்சிகளும் போகாதே நின்றிருக்கும். தாயின் முலைப்பாலெம் தலைமீது கடைசிவரை ஒயாது நிற்பதுபோல் உன்றனது சிந்தனைகள் இறந்த காலமதாய் இருந்தாலும் என்றென்றும் மறந்த காலமதாய் மாருவே; அதுபோதும்! வலக்காலை முன்வைத்து வாழ்த்துக்கள் பின்தொடரச் சளைக்காது புத்துலகச் சத்திரத்தை நீநோக்கி ஈங்கினைந்த எண்ணங்கள் இனிதே துணைக்குவர வீங்குவலம் புரியோசை வீறிடவே புறப்படுவாய்! ஆங்கிருந்து நீவீசும் அத்தனை மூச்சுகட்கும் ஈங்கிருந்து பதிலுண்டாம்; எம்மெலார்க்கும் பங்குண்டாம்.
(தோழர் வீ. பன்னீர்செல்வம் பாரதம் செல்லுமுன் , 1973ல் *செய்தி ஏட்டில் எழுதியிருந்த பிரியாவிடைக் கவிதைக்குத் துணைக்கவிதை.)
55

Page 30
அந்தப் பழைமை!
எங்களைப் பிரசவித்த எங்கள் குடில் மாளிகையைச் சடைக்கொக்கோ மரங்கள் சல்லடையாய் மறைத்துநிற்கும். எங்களதும் எங்களைப் போன்ற வால்களதும் பால்ய காலத்துக் கொக்கோகங்களையும் கூட அந்தத் தோப்பு மறைக்க மறுத்ததில்லை!
எங்களின் வறுமை ஆசைகளுக்கும் சில்லறைப் பட்டினிகளுக்கும் அந்தக் கொக்கோக்கனிகள் பல வேளைகளில் நகர மங்கூஸ்களாக எமது பிச்சை வயிறுகளுக்குள் வழுக்கிச் சென்றதுண்டு.
சூரிய காய்ச்சலால் வழுக்கைச் சளி நீங்கிய காய்ந்த விதைகளும் கூடத் தேங்காய்க் கீற்றுக்களுடனும் சிலவேளைகளில் திப்பிலிக் கருப்பட்டிகளுடனும்கண்டோஸையும் எட்னுவையுப் கையேந்தச் செய்ததுண்டு.
56

அந்தக் கிராமத்து மங்கூஸ்களையும் கிட்டங்கிச் சாக்கலேட்டுகளையும்
(முதலாளிக்குத் தெரியாமல்) சாப்பிட்டால் சோகை வரும் என்று தோட்டத்தில் தண்டோரா போடுவார்கள். ஆனல் சோகைகளான எங்களைக்கண்டு முதலாளித்துவச் சோ கைகள் பயந்தோடிய துண்டு!
அணிற்கொட்டைச் சதங்களுக்கா மரத்துச்கு மரமாக மாலைகளில் நாங்கள் அலைந்ததால் அந்தத் தோப்பில் எங்களை அறியா அணில்களும் இல; எங்களை அறியாமல் பழுத்த மரங்களும் இல.
கனிகளை உடைத்து பாலர்களை உருவியபின் எறிந்த ஒட்டுப் பிரதேசங்களின் அழுகிய உடல்கள் தயாரித்த நுளம்பூசிகள்ஆயிரம் தடவைகள் எங்கள் உடல்களில்
 ݂ ܬ
57

Page 31
அக்கியூபங்சரால் நித்திரைக் குருதியை உறிஞ்சியதால் நாங்கள் கும்பமகர்ணர்களாக மாறவே இல்லை!
எங்கள் பெற்றேருக்கு வியர்வையைச் சம்பளமாக்கிவிட்டு
விதைத்தீன் மூடைகளை
லாறி வயிறுகள் உண்டு ஏப்பமிட்டு நகர்வதால்
எங்களின்
வறுமைக் கக்கூஸ்களே
நிரம்பி வழியும்
ஒவ்வொரு பத்தாம்நாளும் வியர்வைகளைத் துடைப்பதற்காக ஒருமுழம் துணியை முதலாளி எறிவார். அந்தத் துணியை விரித்துப் பிச்சை எடுத்தே எங்கள் பெற்றேர் எம்மைத் தரிசித்தார்கள், எனினும்
எங்கள் பெற்ருர் எங்களின் ஞானக்கண் காவியத்தை இயற்றி அரங்கேற்ற இந்தக் கொக்கோத் தோப்புத்தான்
大 大 大
58

கொடை வள்ளலாக இருந்தது! எங்கள் நாவுக்கு நரம்பைத் தத்ததுவும் இந்தந் தோப்புத்தான்! எத்தனைக் கனிகளின் இனிய நரம்புகளை எங்கள் நாவுகள் உண்டு பண்பட்டிருக்கின்றன!
Y.
59

Page 32
இன்றெல்லாம்குடும்பச் சகோதரர்கள் நாங்கள் கடுகுமணிக் குபேரர்களாக நகரக் குகைகளில் நடிப்பதற்கும் இந்தக் கொக்கோத் தோப்புத்தானே காய்த்துக் கணியீந்து கலைகளைச் சொல்லித் தந்தது! எங்கள் தந்தையாரின் உழைப்பை மெச்சிய தோப்பு அவரைத் தன் மண் வயிற்றுக்குள்ளே சுவீகாரம் எடுத்துக்கொண்டது.
எங்கள் தாயாரை நாங்கள் எங்களின் நகரக் குகைக்கே வரும்படி இரந்து நிற்கிருேம். ஆனல் அவரோஅந்தத் தோப்பிலேயே எங்கள் தந்தையாரை அடுத்தே துயில்வதற்காகத் தவமிருக்கிருர்! எங்கள் பழைமையை எங்கள் தாயார் பக்குவப் படுத்துகிருர்! இதனுல் நாங்கள் விடுதலை கிடைக்கும்போதெல்லாம் எங்கள் வளர்ந்த நாள்களை அந்தத் தோப்பிலேயே கொண்டாடி வருகிருேம்!
60

கொக்கோ மங்கூஸ்களையும் நாங்கள் மறந்திடவில்லை! அர்த்தராத்திரியில் நாங்கள் குடை பிடிப்பதில்லை! நகர இருள்தான் எங்கள் பிறந்தகம் என்று பால்ய வால்களிடமே சாதிக்கப் புளுகுவதில்லை!
எங்கள் தாயார் மரணமீன் வரும்வரையில் கொக்காக அந்தக் கொக்கோக் குளத்தில் ஒற்றைத்தவம் செய்சிருர், அந்தப் பழமையால்
நாங்கள்
இவ்விரு குளங்களை எங்கள் முகங்களில் கட்டிக்கொண்டிருக்கிருேம்.
★
6.

Page 33
போறினுக்குப் போறனும்!
(கங்காணி காட்டப்பன் குடித்துவிட்டு வந்து:-)
காட்: அடியேய் சின்னச்சீ! அழகப்பன் எங்கேடீ?
சின்னச்சி: குடிச்சா மூலயில குந்திக்கிட்டு கெடங்களேன்”பா! எந்தநாளும் போராட்டம் இதுவாவே போயிறி
éGg
காட் மொந்து மொந்துன்னு மொத்துனே ன் ஞ
எப்படீங்கிறேன்? எங்கடி அழகப்பன் எரு ம யாட்டம் சுத்தப் ாேபனன்?
சின்: கங்காணி ,மொதல்ல கழட்டுங்க மழக்கோட்ட!
எங்கதான் போயிடுவான் எங்க அழகப்பன்? ஒங்க மகன்தானே? ஒளரும ஒக்காருங்க! இண்டரு வூயுக்கு இன்னக்கி வா டான்னு அண்டைக் குக் கடிதா சி அனுப்புணுங்க நெனப்பில்ல? அதுக்குத்தான் புள்ள ஆறு மணிக்கெல்லாம் புதுசூட்டு அடிச்சிகிட்டு பொழுதோட போயிருக்கான்! பொறினுக்கோ எங்கேயோ போறே ன்னு சொன்னனே? சரீன்னு நீங்கதானே சல்லியெல்லாங் குடுத்தீங்க? மூட்றீ வாயேன்னேன்! முட்டாப் பயராஸ்கோல்! தேட்ற வேலயெல்லாம் தெசகெட்டுப் போகுதேடி! பெரசா வுரிமைன்னு பதிஞ்சதுவும் போதுண்டி: அரசாங்க வேலைன்னு அறுநூறு வாட்டிபோனுன்! பணங்கட்டிப் பாத்தமேடீ, பாச்சா பலிச்சிச்சா? மெனக் கெட்டு எத்தினி நா மே டிவிசன் வேலசெஞ்சோம்?
62
காட்:

எதுக்குமே ஆச்சாடி? எம்புட்டுப் படிக்கவச்சேன்! கொதிக்குது, கொதிக் குது டீ ! கோன ப் புத்திக்காரன்! இந்தத் தோ ட்ட த் ல யே இருக்குது வேலைங்கிறேன்!
(சாக்குக்காரன் கந்தன் வருகிருன். அவனுடன் தொடர்
கிருர்)
கந்தன்:
காட்
கந்தன்:
போடணுங்கிறேன்?
கந்தா வாடாப்பா! கதய நீ கேட்டியா டா? சுப்போஸியர், கணக்குப்புள்ள, சுப்புரண்டன் வேலையெல்லாம் எப்பவுமே இருக்கேடா! ஏண்டா அழகப்பன் போரீனுக்குப் போறேன்னுட்டுப் போராட்டம்
ஆரிதுக்கு என்னசொல்லி ஆகிறது என்னுப்பா? அரசாங்க வேலைன்ன ஆகாது நம்பளால! சரி உடுங்க! பிசிநகம் சரிவராது தம்பிக்கு! தோட்டத்ல வேலைன்ன தொர பாரு குடுக்க Lift LT67.
கேட்டாக்கா கேட் கிரு ய்ங்க , கேப் பீயா ஆயிட்டான்ன சொந்தக்காரன், தாய்தகப்பன் தோட்டத்ல
இருக்கையில
எந்தக்காலம் ,ו חש "'- L} u J ח என்ன வேலை
பாப்பான்?னு!
யார்ருப்பா இவன் ஒருத்தன் 1 . . அதுசெட்டுது! இங்கவாணும்! -
வேறெங்கயுந் தேடிப்பாத்தா வேலைஒண்ணு கெடைக்காதா?
தோட்டங்கள்ல வேலசெஞ்சா தோலு கூட மிஞ்சாதுன்னு ۔۔۔۔۔۔۔ பாட்டாத்தான் பாடிச் சே , பங்கா ரு
அழகப்பனும்!
63

Page 34
காட்
கந்தன்:
வேற எதனுச்சும் வெளியில செஞ்சாத்தான் வாற காலத்துக்கு வழியாச்சி! இல்லாட்டி
ஈந்தியாவ்ல இருந்து எலங்கைக்கு வந்துப்புட்டு
காந்தியாட்டம் சூடுபட்டு கதி யில் லா ம போகணுமாம்! ܗܝ
(கோபத்துடன்)
என்னுடா என்னென்னமோ எ க்குப்பிக் கா உட்றேங்கிறேன்! என்னுடா ஒன க் கெல் லாம் என்னுடா ஆகிப்போச்சு?
ஆர்க்காட்டுக்கு, எழுதூன்னு அன்னை க் கே அடிச்சமுதேன்! கூறுகெட்ட இந்த ப் ப ய கொழும்பேதான் வேணுமுன்னுன்!
எழுதிப்புட்டுக் கடசில இப்பளங்க போகப்
போருன்?
போறதுன்னு எழுதியிருந்தா பே ா ய ல் லோ இருப்போண்டா! போறினுக்குப் போ றே ன் னு போகத்தான்
மாட்டானேடா!. . .
(அழுகிருர் கங்காணியார். கந்தன் சிள்ளுச்சியிடம்
உரத்தகுரலில்:) a
க ங் கா னி அ ப் பா வுக் கு க் கரு வா டு
கொண்டாங்கம்மா! ۔۔۔۔ வெங்காயம் இரு ந் தாலும்  ைவ யு ங் க கொண்டாந்து...! (கங்காணியாரிடம் தாழ்ந்த குரலில் :) அழகப்பன் மேலஒரு அப்பழுக்கு சொல்லாதீங்க! பழகிப் பழகித்தான் பயபுள்ள திருந்தீருக்கு!...
64

காட்:
எலங்கயில இனிமேல எப்புடித்தான் ஒழச்சாலும்
பலன் காண ஏலாது பகவானே செத்துப் பொய்ட்டான்!
கோருமேந்து வேலைன்னலும் கோப்பித்தோட்ட வேலைன்ஞலும்
ஆருமே எலங்கயில அஞ்சிசதம் சேக்கேலாது! இப்படி நெலயிலதான் இங்க முடியாதுன்னு அப்ருேடு போறேன்னு அழகப்பன் ஆடியோடுது! பாசுபோட்டும் எடுத்தாச்சி! பணமும் கட்டியாச்சி! ஆசீர்வாதம் குடுத்துஇனி அனுப்புறது ஐயாவேல! பாறேனுக்குப் போயிட்டு பாருகீப்பரா இருந்துட்டு வாறேன்னு சொல்லிக்கிது! வருசம்ரெண்டு; லச்சம்ரெண்டு! ག་ கடல்கடந்து வந்தே தா ன் கல்யா ன மும் செய்யுறதாம்! "
சொடலைக்கும் போவாண்டா, சொறணகெட்ட
ஊருசுத்தி! ஒபதேசமா நீயும்பண்றே? ஒ டு க் கீறு வே ன் ஒன்வாலயும்! அப ச் சா ர ம் செய்ற்துன்ன அ ப் பன யும் கொல்லுவீங்க!
மு ன்னு க்கு நிக் கா த டா ! முண்ட மே , போயிதொல!. . . கண்ணுக்குக் கண்ணுட்டம் கரு த் தோ ட வளத்தேண்டா! இன்னைக்கி இந்தப்பய அப்ருேடு போருளும்! பொன்னையா கேட்ட ப் போ போ றி னு போறேன்னன்! ஒவசியரு கேட்டப்போ ஒவசீசு போறேன்னன்
65

Page 35
மேவிட்டு அய்யாகிட்ட மிடுவீசு போறேன்னுன்! பாறேனுக்குப் போறேன்னு பாதிப்பேர்க்குச் சொல்லியிருக்கான்! ஊருபேரு தெரியாத ஒலகத்துக்குப் போறதுன்ன என்னுடா அர்த்தமுங்கிறேன்? எங்கடாப்பா போப்கபோருன்?
சொன்னக்கா கேக்கோணும் சொல்றேன் நான் நீகேளு!
அன்னைக்கி ஆர்க்காட்ல ஆறுவயசு நடக்கயில, இன்னைக்கிப் போலருக்கு, எங்கருந்தோ வெள்ளக் காரன் கோப்பிமரத் தூருக்குள்ள கொத்துக் கொத்தா மாசின்னன்! கூப்பி வச் சுக் கும் பிட்டுக் குடும்ப மா கரசேந்தோம் ! அறுவதுக்கும் மேலயே ஆயுசும் போயிறிச்சி; கருவாட்டுத் துண்டக்கூடக் கா ண ல் லி யே தூருக்குள்ள! கடலக் கடந்தம்னு கஸ்டமெல்லாம் போயிருது! வெடலப் பயல்களுக்கு வெலங்காத ஒலகமிது! போராட்டம்! . . . வே ல ய த் த பொறு க் கி ப் பயமவனும் - போறினுக்குப் போருளும்; போ னு த் தா ன் பொழப்பானம்! நாய்மாதிரி நாங்கள்லாம் நாடோடி ஆகிப் போய்ட்டோம். ஆயிமவனும் யோசிக்கணும் அது த ர ன் அவ
க்கும்னு! பாறினே பாறேனே போனலுங் கதியிதுதான்! ஆராரோ சாவுருன்னு அடுக்கடுக்கா சேதிவருது! சீலரெண்டு, சீப்புரெண்டு, செருப்புரெண்டு, செட்டுரெண்டு, மாலரெண்டு கொண்டாற மலயளவு முக்கணுமா?
66

அழர்
5ாட்
"கடல்கடந்து போன்னனே, கண்டதுண்டமா வெட்டணும்டா ! கொடல் நடுக்கம் புடிக்குதுடா! கொலகாரப் பண்டிஜாதி! பாட்டன் போன வழியிலயே ப யம வ னு ம் போறதுன்னு w ஆட்டங்கீட்டம் போட்டான்ன, அப்பறம்நான்
மனுசனில்ல! (கங்காணியாரின் வெறி தணிகிறது. மகன் அழகப்பன் வருசிறன்) அஞ்சுநாள்ல போறதுக்கு ஆயத்தமா வான்னங் கப்பா! பஞ்சப்படி எல்லாஞ்சேத்துப் பத் தாயிரம் சம்பளமாம்!
(காட்டப்பன் நிதானமடைகிருர். பெருமை முகத்தில் படர்கிறது. பெருமையுடன் செருமி விட்டுக் கந்தனிடம்:) பாத்தியாடா, கந்தப்பா! பத்தாயிரம் சம்பள மாம்! சோத்துமாட்டுச் சோம்பேறிங்க சொன் ஞக்கா நம்புவாங்களா? ஏம்புள்ள ஏம்புள்ளதான்! எவனவுடக் கொறஞ் சவண்டா? ஆம்புள்ள பொறப்பெடுத்தா அச்சாரஞ் சம்பாத் தியம்! ん。 தோட்டத்ல பத்துவருசம் சுப் புர ண் டன் வேலன்ஞலும் ஊட்டம் இருக்குமாடா? உருப்புட்டு வருமாடா? சின்னச்சீ!... சோத்தப்போடு! செமத்தியா பசி இருக்கும்! கண்ணேறும் பட்டிருக்கும் கையோட திட்டிசுத்து!
大
67

Page 36
அங்கலாய்ப்புப் புன்னகை
(பாரதத்திலிருந்து வந்த இன்னெரு கடி த ம் இ துஉழைப்பாளி ஒருவனின் மகிழ்ச்சியுடன்!)
சாயத்தோழா !
மாந்தீவு மலைநாட்டின்
ஆயுட்காலஉழைப்புக் கலாசாலையிலிருந்து மரணப் பரீட்சையை
எழுது முன்னரே என் வாடி தீப்பிடித்துக் கொண்டதால் பிரதம அகதியாகப் பாட்டி நாட்டை அடைந்தேன்.
நான் வரும்போதும் எரிந்து கொண்டிருந்ததே, தீயணைப்புப் படையினர் நீரை ஊற்றினர்களா, நெய்யை ஊற்றினர்களா?
இவர்களோபிரதம அதிதியாகவே என்னை அழைத்துப்போய் நீலகிரி மேடையில் நிகழ்த்துகிருர்கள் விழாக்களை! திட்டத்திலிருந்த அதிதியை மேடையிறக்கம் செய்து விட்டு அவருக்குரிய மாலையை
68

என் தோள்களில் சூடுவதால் அவருடைய நாவில் சூடு பறக்கிறது!
அவர் வயிற்றில் அடித்துவிட்டு ஏன்தான் என் வயிற்றைத் தடவுகிருர்களோ!. உழைப்புக் கலாசாலைக்கு என் உதிரத்தையே பீஸாகக் கட்டினேன் அன்று. இங்கேஇன்றுஎனக்கே எக்கச்சக்கமாக பீஸ் தருகிறர்கள்! காந்தீய பணத்தில்
ஒருநாளின் பொற்கிழி முப்பது ரூபாக்கள்! விழும் மாலைகள் கூட கனமாகவே இருக்கின்றன! உனக்கே பொருமையாக இருக்குமே?
என் உழைப்பு
இங்கே
திறனய்வு செய்யப்படுகிறது! கலாசாலையில் அன்றெல்லாம்
என் அருமையை நானே உண்ரவில்லையே, இன்றைய என்னைப்போல!
69

Page 37
என் உடலில் டாலர்கள் விளைகின்றனவாம்! என் வியர்வையில் பவுண்கள் உருள்கின்றனவாம்! நீ இதை நம்புகிருயா? அவர்கள்தாம் விமர்சிக்கிருரர்கள்!
போகும் போக்கைப்பார்த்தால் இன்னுமின்னும் பிரதம அகதிகளை எதிர்பார்க்கிருர்கள் போலும்! வராது பேனுேல் என்ன செய்வார்கள்? இங்குள்ள மாணவர்களை பயிற்சிக்காக உன்னிடம் அனுப்புவார்களோ? மீண்டும் ஒரு கடல்தாண்டு படலம் ஆரம்பிக்கப் போகிறதோ?
மலைஉழைப்புக் கலாசாலையில் ஊதியம் இல்லையே என்று நீ வருந்திப் பயனில்லை. கலாசாலைக்கு நீதானே காசு கொடுக்க வேண்டும்? நானும் செய்தது அதுதான்! கலாசாலை தொழிலகமாய் மாறும்வரை இதுதான் உன்கதி.
70

அன்றேல்பரீட்சையை எழுதிவிட்டு இங்கே வந்துவிடு!
என்ருலும்இங்கும் ஒரு பிரச்சினை! காலப்போக்கில் நீலகிரியும் ஓர் அஸ்ஸாம் ஆகலாம்!
女
71

Page 38
மலைக்குயில்
உருவக நெடுங்கவிதை மூலம் ' பாரதியாரின் குயிற்பாட்டு

ஆவிப்பெண்
‘வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ?. யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறிரோ?. யாதானுஞ் சற்றே. . . அடடா! குயிற்பாட்டை என்னென் றழகா யெழுதிவைத்தான் பாரதியும்! கன்னல் மொழிசுட்டிக் காதற் கருபுகட்டி நீலக் குயிலொன்றும் நின்ற மனமூன்றும் வாளை யெடுத்தெறியும் வீரக் கவியொன்றும் மாய நிழற்கூட்டி மாடுங் குரங்கென்றும் ஆயுந் தமிழினத்தி னுயிர மாயிரத்து தேயர் குழுப்பலவும் நின்ற குயிற்பாட்டில் தோய வுளமெல்லாந் தூரத்து வார்ப்புலகில் யானிருந்த வேளை யழுகைக் குரலொன்று வானிருந்து வந்து வழிந்ததிரு காதுகளுள். ஒசை யெழுந்தபக்க முற்றெடுத்தேன் கூர்விழிகள். நாசித் துவாரங்கள் நன்கு புடைத்தெழும்ப மூச்சுவிடு தற்கும் முழுமுயற்சி செய்துநின்றேன்! காட்சிப் பயங்கரத்தைக் காட்டிடற்கோர் வார்த்தை தமிழிற் கிடையாதே! தஞ்ச மொழியிற் சமர்ப்பிக்கின் றேன் : வெண் சலவை; வயதோ அமையாது, நூருே வதற்கதிகந் தானே! இமையாது நோக்கி யிருந்தேன்; நெருங்கிவந்தாள்; வெள்ளை மயிர்க்கடையும் வீழ்ந்த திரைத்தோலும்; சொள்ளைக் கவலைகளாற் கோர்ந்தவுரு, வண்ணமது யாதென்று கூறற் கறிவில்லை யென்னிடத்தே; காதிற் கழுத்திலெலாங் கானலெனக் கைம்பெண்மை; உட்குழிந்த கண்ணிரண்டு மோட்டைக் குளங்களெனச் சொற்கனிந்த வாயோ சுழிந்து கிழமெனவே
73

Page 39
அந்தரத்தில் மேவி யருகடைந்தாள்.
** வாய் பிளந்து,
"சுந்தரனே! பாரதியின் சோகக் குயிற்பாட்டில் உன்னை யிழந்தனையா? உன்போற் பலருந்தான் உண்மை நிலைமறந்தார்! ஊற்றுக் கவியென்னும் மாகவியி னிப்பாடல் மாற்றுயர்ந்த கற்பனையென்றுாகித் தினுமே யொருகோடி பேசுகின்ருர்! கற்பனையாய்ப் பாரதியோ காட்டவிலை; இவ்வுலகிற் பொற்பழிந்துங் கற்புடைத்த பற்பலரா யென்
போன்று சொப்பனமாய் வாழ்வின் றுயர்சகிக்கும் பெண்டிர்தம் நிர்க்கதியைத் தானப்பா நீட்டிக் கவிபடைத்தான்! பூதமெகன்ரு யென்னைப்போற் பூவி லலைகின்றேர் நாதந்தா னிப்பாடல்! நாசமுற்றுப் போவதற்கும் எல்லை யிருக்குமெனி வென்னைப்போல் யாருமென்றும் தொல்லைப் படமாட்டார்; தோல்வி யுறமாட்டார்! நெட்டைக் குரங்கனுக்கும் நீள்கொம்பு மாடனுக்கும் விட்டுக் கொடுத்துவிட்டு வீணு யழிந் தலையார்! என்றனுருக் கண்டெனக்கா யெள்ளளவு மஞ்சற்க! கன்றிக் கறுத்தவந்தக் கால வினையால் இகழாதே!' என்றெடுத்தவ் வேழைசொன் னுலும் அகலாதென் னச்ச மடிமனதிற் முளமிட, "யாரம்மா நீ, சொல்' கென் றன்பாய் வினவலு
ற்றேன். "பேரைப் பகர்ந்தாற் பெரும்பாவ மாமப்பா ! பேரூரே யற்ற பெரும்பிறவி யென்றெடுப்பாய்! ஆராரோ வென்ற னவலப் பெயர்கேட்டுச் * சீ, நீயா!' வென்று சினந்தகன்று போயினரே ஏனப்பா மேலு மெனக்கிவ் வவலங்கள்? ஆனலும் நீயென் னவலக் கதைகேட்பாய்
74

மேனுட் குயிற்பாட்டு மேவியபோ லென்கதையைக் காவியமாய்ச் செய்யுங் கருத்தெடுப்பாய் அப்போது பாவியென்றன் பேரைப் பகர்கின்றேன் என்றுரைத் தாள் ஆகட்டு’ மென்றேன். அவளுடனே தன் கதையைத் தீ சொட்டச் சொன்னுள் சிறுத்து.
75

Page 40
ஆவிப்பெண்ணின் பிறப்பு
'நான் பிறந்த நாடோ நலம்பிறந்த நன்னடு. மானத்து வீரர் மலையிற் கொடிநட்டுத்
தூரந் தொலைவெல்லாந் தோணிபல வோட்டிப்போய் ஊர்கள் பலவாண்ட வோங்கு தமிழ்நாடு. சாத்திரங்கள், சங்கச் சரித்திரங்கள், சூத்திரங்கள் மூத்தெடுத்தே யாண்ட முதன்மைப் 'பெருநாடு. இந்தப் பெருமை யிறங்கிப் படுகுழியிற் சந்தி சிரிக்கச் சதியாட்டங் கண்டபினர் ஒல்லாந்தன், போர்த்துக்க லோராயன் வந்தடுத்துப் பொல்லாத வெள்ளைப் பெருங்கூத்த ஞண்ட கருகியதோர் காலக் கறுமையிலே தானே சிறுமைச் சனிப்பிறப்பாய் ஜென்மடுெத் தேனுண்டு! **செல்வங் குகைகுகையாய்ச் சீமைக்குச் சென்றதனுல் நல்வயிறு காய்ந்து நலிவுற்று மேதினியிற் பொல்லா வறுமைப் புயலுக்குட் சிக்குண்டோம்; எல்லா வழியாலு மின்னற் பலதுய்த்தோம். வீட்டுச் சுதந்திரமும் வீரத் தமிழ்நாவுங் காட்டுந் திறனுக்கோர் கண்டவழி யன்றில்லை! பாரதியு மன்று பிறவாத பிற்காலம்! வீரரெலாங் கோழைகளாய் வீட்டுட் டுயின்றிருந்து ஊரறியப் பிச்சை யுயிர்வாழுங் காலமது! சீரற்ற வந்தச் சிறப்படிமைக் காலந்தில் ஏழைக்கின் னேரேழை யேங்குங் குடும்பத்தில் வாழ்ப் பிறந்துவிட்டேன் வாழாப் பெரும்பேய்ச்சி! "பிள்ளைகலோர் பத்துப் பெறுதற் பெருமையெனும் உள்ளம் படைத்திருந்த வுத்தமரென் பெற்ருர்க்குத் தாளாத் தலைவலியாய்த் தப்புத் தலைமகளாய் ஆளாகி வந்த வருமையைத்தா னென்னென்பேன்!
76

**ஆணுன பேர்க்கே யரைச்சதத்துத் தேவைக்கும் வீணுன தொல்லை விளைகின்ற காலேமன்றே! தந்தை யெமைவளர்க்கத் தந்த வுடலுழைப்பை எந்தப் பிறவியிலும் யாரும் பெருதிருக்க! "கூலி மிகக் கேளார்! கொடுத்துதவே போதுமென்பார்! மாலையினில் வீட்டில் மனைக்குப் பொருள்போதாப் போதேதா னுள்ளம் பொருமி யழுதோய்வார்! *ஏதே தெமக்கேன்றே னிந்தத் துய*ரென்பார்! **ஆட்சிக் கொடுமைதனை யார்தாஞ் செவிமடுப்பார்? மீட்சிக்கோர் பாதை மிகவருகி லேயிருந்தும் இந்து மதம்விட் டினியோர் மதம்போகி "இந்தியனே யார் "னென் றியம்பும் விருப்பில்லார்! மாறிப் புகுந்துமவர் மாண்பு மொழிகொண்டும் ஊறித் திளைத்திருந்தா லோர்வாழ்வு வாழ்ந்திருப்போம்! தந்தையுமோ ரிந்தியனே; தாழாத் தமிழ்நெஞ்சன்! வந்தனையுந் துன்பங்கள் வாழ்த்திப் பொறுத்ததன்றிச் சென்றடிமைக் காளாகிச் சீரழிந்து போகாதார், இன்றெல்லா மாவியளா யேங்கித் திரிந்தாலுங் குன்ருெத்த வென்றந்தைக் கொள்கைப் பெருமையென என்றென்று மின்பத் திருங்கடலில் நீந்துவிக்கும்! 'ஒன்பா னிரத்தினங்க ளொப்பில்லாப் பொன்னென்று மண்மேல் மனிதர்க்கு மாருத ஆசைதரும் ஆபரண வர்க்கமெலாம் யாமேயெய் பெற்றேர்க்கு! கோபுரமாய் நின்ற குலத்தினிலே பத்துப்பேர். **பாந்தமுட குண்டு பதின்மூன்றைத் தாண்டியபின் பூந்தளிரின் மேனியுடன் பூப்பெய்தி யானின்றேன். *வையக் கனவுறுத்தும் வாழ்வின் வசந்தத்தில் வெய்யக் குடற்பதறும் வேதனையின் சொப்பனங்கள்! வள்ளங் கரைசேர்க்க வையகத்துப் பொன்றேடும் உள்ளத்துப் பெற்ருர், உலகப் பழிச்சொல்லுக்
77

Page 41
பஞ்சப் மடுகுழிபிற் பற்றுக்கோ டின்றி வயிறு வளர்ப்பதற்கே வக்கில்லா நாங்கள் உயிரை விடமான மோம்புஞ் செயலதுவுங் கூடிவந்து சேர்ந்தனற் கோவில் நிலைதளர்ந்தோம். **ஆடவர்பல் லோரென் னருகணையத் திட்டமிட்டார்! தாரணியில் யான்பிறக்கத் தசய்மாமா னென்னவரென் றுாரறியப் பெற்ருேர் ருரைத்திருந்தார்! அந்நினைப்பில், பால்யத் திருமணத்துப் பச்சை வனப்புகளில் சூலுற்று யானுஞ் சுயவரத்தந் நாள்பார்த்துக் காத்திருந்த லோதோர் கலிச் செய்தி வந்ததப்பா! 'காந்திரமாய் வாழ்ந்த கணவனெனுந் தாய்மாமன் போராட்டப் போரொன்றிற் பிண்பட் டிறந்து
விட்டான்! தேரேக்ட்டங் காணத் திருநா ளெதிர்பார்த்த மாடக் குயிலென்றன் மார்புருவித் தைத்தம்பு!. . . . . பாடக் குரலும் பறக்கச் சிறகுபுலை!. பொட்டே நகையாகிப் பூரித் திருந்தவென்றன் பொட்டிறங்கி மொட்டையது பூவாய்த் தலைக்கேறச் சூரியனைக் காணற்குஞ் சொந்த மறுந்துவிட்ற் கோரியென மூலை யொன்றி லுட் கார்ந்து நீர்
சொரிந்தே! பால்யத் திருமணத்துப் பாலியலின் வீம்பினிலும் நால்வகைத்த ஆராவின் நாக்குத் திமிரினிலும் பெற்ருர் வடிக்கும் பெருநீர் மழையினிலும் இற்றுப் பொடிந்தேன்; இனித்தீயே நட்பென்று சந்தர்ப்பம் நோக்கிச் சகித்திருந்த வேளையிலே வந்தா ரொருவர் வளைதது!
78

பெருங்காணி வரவு
ஆவிப்பெண் கூறு மருமைக் கதைகேட்டுத் தாவிப் பறந்ததச்சம் தாங்காத் துயர்க்கதையை மிக்க பரிவுடனே மேலுஞ் செவியுற்றேன்:- 'அக்கணத்து வந்தா ரரும்பேர் பெருங்காணி. நாளிலரைப் பங்கிலென நாடிப் புறம்நின்று 'காளித்தாய் மேலான கல்யாணஞ் செய்தால் அரசியென வீற்றிருப்பாய்! ஆளடிமை வாய்ந்த பெருங்காணி யென்வீட்டுப் பேரரசி யாய்வாழ்வாய்! என்றெல்லாங் கூறி, யெடுத்தெறிந்து பாயுமென்றன் சண்டித் தனங்கண்டு சாய்ந்தோடி மீண்டும் வலம் வந்து துன்பம் வருத்துமந்தப் பாவி தலைகண்ட போதே தறிகெட்டுப் பின்புறத்தே ஒடி யொளிந்துநின்றேன்!
'ஒடிப்போ யென்றந்தை 'கோடி வணக்கமிட்டுக் கொள்ளைப் பணக்காரச் சீமைத் துரையடியின் சீழ்துடைக்குங் கீழானைச் 'சாமியரே! எந்தஞ் சகதிக் குடிலுக்கு வந்ததுமேன்? என்னை வரும் படியாய் ச் சொல்லி விட்டாற் ܫ பிந்துவனே?' என்று பெரிதாய் வரவேற்ருர், 'உங்கள் துயரங்க ளொவ்வொன்ரு யென்செவியில் மங்களமா பேசும்? மனதும் பொறுத்திடுமா? எத்தனை நாள் பார்ப்பேன்? இனியும் பொறுத்திருந்தால் சித்தங் கலங்கிச் சிவலோகம் போய்விடுவேன்! உங்கள் மகளை யுளமாற யான் மணந்து தங்கள் குடும்பத்தைத் தாங்குதற்குத் தானிருந்தேன். ஆயினு முன் நீங்க ளருமை மகளுக்குத் தாய்மாமன் றன்னைத் தரம்பேசி விட்டதனுற்
79

Page 42
பேசா திருந்தேன்; பெரும்பாவி காலனவன் நாசமுற்றுப் போகட்டும்! நம்மைக் கதறவிட்டான்! என்ன செயற்கியலும்? ஏழை நமக்கேதான் இன்ன லடுக்கிவரும்!. . . " என்ருர் பெருங்காணி! 'ஆடு நனைகிறதாம்; ஒநா யழுகிறதாம்! சூடு பறந்திடுமோர் சொல்லைச் சுவைப்பதற்கே ஆசைப் படும் நா வடக்கச் சிரமமுற்றேன். . . 'ஒசைக் குரல்நீட்டி போ வேன்றேன் பெற்றேர் அழவக் குரல் கேட்டென் ஞத்திரத்தை மென்றேன். "தொழுத கரத்தவராய்த் தோன்றிப் பெருங்காணி கண்ணிர் கரையநின்றர். காட்சி யதுசண்டு கண்ணி எதற்கோதான் கட்டுகிரு ரென்றென்னுள் எண்ண மரும்பியது. . . . இன்னு மெதையெதையோ பின்னிப் பிதற்றியவர் புத்தம் புதுக்காசுத் தங்கத்தை யள்ளியென்றன் றந்தையவர் கையிட்டார். "எங்கட்குப் பொன்வேண்டா? வென்றுமறுத் தார் தந்தை. V 'பைத்தியமும் வேண்டா; பரதேசிக் கோலமுந்தான்! வைத்திவற்றை வாழ்வை வளமாச்கிக் கொள்ளுங்கள்! ஆண்டவன யீவதையே யன்பாற் றருகின்றேன்! மீண்டும் வருகின்றேன்; மேலு முதவுகின்றேன்! என்றபெருங் காணி யெழுந்து வெளிச்சென்ருர்! 'அன்றென் னருமைமிகு மத்தனுட னம்மையுமாய் வந்த பெருங்காணி வள்ளற் றனம்மெச்சி இந்தவுல கத்தை யெனிதில் மறந்தனரே! "அற்பப் பெருங்காணி யண்டை யாளனின் சொற்ப மகிழ்ச்சியையுஞ் சொல்லாற் சுருட்டிவிட்டு மிக்க நயமாக வெள்ளையனின் காற்பிடித்துப் பக்கத்தி லெங்கோ பதிவான தீவொன்றின் சேனைப் பயிருடனே சேவகமுந் தான் செய்தே
80

ஊனப் பிழைப்பொன்றி லூறித் திளைப்பவனும்!. 'மூன்ரும்நாள் மாலைவர மூர்க்கப் பெருங்காணி தோன்றியுடன் மிக்க துடிப்பு முரிமையுமாய், *வாருங்கள் முன்னுல்! வளமான வாழ்க்கைக்குத் தாருங்க ளுங்கள் தரமாகு மொத்துழைப்பை நானும் முடிந்தவரை நன்ருயா லோசித்தேன். வீணு யவள்வாழ்வு வெம்பிடவும் வேண்டுவதோ? இத்துயரை யானே ரிருநொடியுந் தாங்குகிலேன்! சத்தியமா யுங்கள் ஜகவாழ்வே யென்வாழ்வு! பொன்னும் பொருளுமெனப் பொங்குகிற காலமிது மன்னரென நாயும் வளங்கொழிக்கும் வாய்ப்பிதுவே! தங்களரும் புத்திரியைத் தத்தத்திற் பெற்றிடற்குக் கங்கணமே கொண்டேன்; கவலை யறு "கென்ருன். "ஈரற் குலைகளறுந் திவ்வுலகந் தான்மறந்து வேரற்றுப் போனுேம்; வியர்த்துக் குளமானுேம்! 'ஐயா, பெருந்தகையீர்! ஆகாத்தீ வார்த்தைகளேன்! பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போனதிவள் வாழ்க்கை! நமது பரம்பரையில், நல்ல தமிழ்நாட்டில் அமையா வழக்கத்தை யார்செய்தற் கூடுமையா? கொண்டா னிறந்தவுடன் கொண்டா ளவனுடனே வெந்தே யிறப்பதுதான் வேதத் தருமமையா! வேகாமற் போன வெகுபாவந் தானையா சாகாம லின் றெம்மைச் சங்காரஞ் செய்கிறது! போது மிதுவார்த்தை! போய்விடுவீ"றென்றெனது சூதறியாப் பெற்றேர் சொலவும் பெருங்காணி, **ஆத்திரமும் வேண்டா மவசரமும் வேண்டாமே! சாத்திரங்கள் பேசின் ஜகவாழ்வுக் காகிடுமோ? சின்னஞ் சிறுவயதிற் செய்த திருமணமே பென்னம் பெருந்தவறு! பெண்ணின் றிருமணத்தால் ஊசித் துளையளவு முண்டோ தவருென்று?
81

Page 43
யோசித்து நன்ரு யுருப்படியாய் நாளை எனக்கோர் நலமாகு மின்முடிவைக் கூறின் மணக்கின்ற நாளை மறுகணமே பேசிடலாம்!" என்று மொழிந்துவிட் டேளனமாய்ச் சென்றகன்ருர், "குன்று தலைமீது குன்றிப் பொடிந்தது போல்
பஞ்சத் தரித்திரத்துப் பாழும் நிலையெண்ணி விம்மிக் கரைந்திருந்தேன். . . வீட்டுக்குட் பெற்ருரோ இம்மியள வோயாரா யேங்கித் தவித்திருந்தார். "முன்னுட் பெருங்காணி மூர்த்திப் புகழ்பாடிப் பின்ன விகழ்கின்ற பெற்ருரை யெண்ணிச் சிரிப்பு மழுகையுமாய்ச் சேர்ந்த வுணர்வில் வெறிச்சோடிப் போனேன்; விதியைத்தான் நொந்தேன் 'மறுநாட் பெருங்காணி மாலைபெற வந்தா மறுமணமே செய்தற்காய்!
"மானத்தை யேயுயிராய் எண்ணிவரும் பெற்ருேர், "எங்களுக்கோ ரிஷ்டமில்லை! பெண்ணுக்கு மஃதே! பெரிய மனத்துடனே எங்களைநன் னிம்மதியா யீண்டிருக்க விட்டுவிட்டுத் தங்கள் வழிசென்ருற் ருளாக் களிப்'பென்ருர், 'தானே வருகின்ற தர்மத்துச் சீதேவி போனல் வராளே! பொறுமை மிகவேண்டும்! திட்டங்க ளில்லாத் தெருப்பொறுக்கி யானல்லேன் சட்டங்க ளெல்லாஞ் சரியாய்த் தெரிந்துள்ளேன். கல்யாணஞ் செய்தந்தக் கையோடு யானவளைப் பல்வளமு மிக்க பரிமளத்துத் தீவுக்குக் கூட்டிப்போ யங்குக் குடிவைக்கப் போகின்றேன். வாட்டத்தைப் போக்கி வளமான மாசியுடன்
82

தங்கமெலாஞ் சேர்த்துத் தனிக்காட்டு மன்னவனுய் அங்கம் பொலிவுபெறற் காட்சி நடத்திடுவேன்! ஏழைமையைப் பிய்த்தெறிவீர்; ஏற்ற மடைந்துய்வீர்! தோழராய் நம்வெள்ளைத் தோலார்க்கு மாவீரே! ஏனித் தயக்கமும்? என் றிங்கிதமாய்ப் பேசலுற்றர். "வீணுய்க் கதைவளர்க்க வேண்டாம் பெருங்காணி! நம்மரபு காணு நரியரெனப் பேசுகிறீர்! சம்மதமே இல்லை; சரிதான?** வென்றெனது தந்தை விளம்பியதைத் தாளொணுஅப் பேய்ச்சிரிப்பால் உந்தி யுதறிவிட்டவ் வூர்ப்பெரியார் சொல்லலுற்ருர்: * 'ஐயா, பெரியீரே! ஆபத்திற் கைகொடுக்கும் மெய்யான வென்னை மிதித்தீங் குழக்கிவிட்டு நிம்மதியாய் வாழ நினைத்தால் நடக்காது! உம்மகளை யென்ருே வுரித்தாக்க வெண்ணி அயராது திட்டங்க ளாயிரமா யிட்டும் பெயராது போனுற் பெருங்காணி யென்பெயரோ? யானிவளை யெப்படியு மாலிங் கணஞ்செயவே பேணி மனத்தெடுத்தப் பால்யத் திருமணத்து நாளே பெரியவன யான்முன்னல் வந்திருந்து, 'வாலைக் குமரியளாய் வந்தபினர் தானிவளைக் கொண்டுசெல லாகு’*மெனக் கூறியதேன்? எண்ணிடுக! அன்றே யிவளை யவனணைத்துச் சென்றிருந்தால் என்னுசைக் கெங்கே யிடமப்பா?. பின்னருமே கண்ணு யிவளைநிதங் காத்துவலம் வந்தேனே! கால னவன்கூடக் காலம்வந் துற்றதுவும் வாலிபனைக் கொன்ருன்! வழிநோக்கிக் காத்திருக்கும் என்றனுக்கே யீண்டிவளென் றிங்குவிதி யாத்திருக்கப் பண்டைக் கதைகளினற் பார்க்கும் பலனேது? வெள்ளையனின் நீதி விளங்காத காரணத்தாற் சள்ளென்று பாய்கின்றீர்! சாற்றுகிறேன் கேளும்:
83

Page 44
இடம்பெறுங்கல் யாண மிளவயதி லென்ருல், உடன்கட்டை யேறி யுயிர்துறத்த லென்ருல், ஒருத்திக்கு மீள்வாழ்வை ஒவ்வாது போனல், இருத்துவித்தால் வீட்டு ளெவளையுமே சீமையனின் தண்டனைதா னென்னவென்று தாரணியே நன்கறியும் கண்ட விடந்தனிலே குண்டு தலைக்கேறும்! ஆதாய மில்லாதா யாற்றை யிறைக்கின்றேன்? ஏதாவ தோர்முடிவை யின்றே யெடுத்திடுக! கன்னிக் கெதுவேனுங் கஷ்டங்க ளேற்பட்டாற் சென்னிகளைத் துப்பாக்கி சீண்டாமற் போகாது!’ 'உள்ளம் நடுக்கமுறற் கோல மிடவைத்த வள்ளற் பெருங்காணி வாயோய்ந்து கீழிறங்க அப்பாவு மம்மாவு மாருப் பிறப்புகளும் ஒப்பாரி வைத்தே உருகிக் கரைந்தனரே. **கண்ணி ரொருசொட்டுங் காணுத பேயாகச் செந்நீர் மனஞ்சொட்டச் சிந்தித்தேன்; சிந்தித்தேன். *யான்செத்தாற் பின்னு மவதியேதான் பெற்ருர்க்கு. யான்வாழ்ந்து மன்னர்க் கவதியேதான்! ஆதலினல் ஏதாவ தொன்றுக் கியைவதுவே நன்மதியாம். மூதாதை தந்த முடவச் சடங்கையெலாம் மாற்றிச் சமூகம் மலர்வித்தல் மேற்பணியே! ஆற்றமை பெற்றேர்க் கணிகலனே! அன்னரின் துன்ப மழிக்கத் துணைபோத லென்கடமை! அன்புக்கு முண்டோ வடைக்குந்தா ழிவ்வுலகில்?... 'அன்றிரவு நாங்க ளயர்வாய்ப் புரளுகையில் தென்றற் புயலாகத் திண்ணையெலாங் கண்விழிக்க வேகமெடுத் தோடிவந்த வெண்பரிகள் முற்றத்தே ஏகக் குரலெழுப்ப வெம்மிற் கதவுடைய யாரோ தடதடவென் ருத்திரமாய்த் தட்டலுற்ருர் .
84

'யாரப்பா?' வென்றதந்தை, "யாரா? திறகதவை!" என்றுறுமல் கேட்க வெழுந்துசென்று தாழ்நீத்தார். 'நின்றிருந்தா ரங்கே நிறையப்பே ராங்கிலத்தார்! நீட்டியசுர்த் துப்பாக்கி; நீண்டெரியும் பந்தங்கள்! காட்டி வழிவந்த காதற் பெருங்காணி! 'காட்டுத் திருமணத்தைக் கைக்கொண்டதோர்குற்றம்! வீட்டுக்குட் பெண்ணை விலக்கியதின் னேர்குற்றம்! மொட்டையுடன் மூளியளாய் மூடியதின் னேர் குற்றம்! சட்டத்தா லுஞ்சிரசைத் தட்டுதலே நம்நியாயம்! இத்தனைக்கும் மன்னிப் பிருக்கிறதாம்; உன்மகளைத் தத்தம் புரிந்தீக! தப்பிடுக!' என்ருங்கி லேய னுரைத்தவுடன், "இல்லை! இயலாது! போயிழிந்து வாழ்கில்லேன்! பொன்றிடுவேன்!" என்றுதந்தை ஆவேசம் வந்தலறி யாடிடவும், "நில்லுங்கள்! ஈவேனென் வாழ்வை யிவருக்குப் பத்தினியாய்!" என்று கனல்தெறித்தேன்!
"என்வீட்டார், 'ஐயையோ! கொன்று புதைத்தனையே! குலநாசஞ் செய்தனையே! ஆண்டவனே! என்றென் ற ல மந்தார் ; ஆர்த் தெழுந்தார்! 'தள்ண்டிக் கதவடியைத் தள்ளாடி முன்சென்றேன்.
"ஆங்கிலத்து நாயகரே! ஆசைக் கிளியிவட் குத்
தீங்கற்ற காதலென்மேல்! தீயரிவள் பெற்ருரே!
என்னவளைத் தந்தே யெனைக்காக்க வேண்டு" "மென்று
சொன்னபெருங் காணியவர் ஜோதி முகம்நோக்கி
வந்த பெருஞ்சினத்து வாலொடுக்கிச் சொல்லலுற்றேன்:
85

Page 45
'எந்த நிலத்துக்கு மேற்பாடாய்ச் செல்லுகிறேன்! பந்தங்கள், பாசங்கள், பைந்தமிழச் சிந்தனைகள், சொந்தங்க ளெல்லாந் துறந்தாலு மென்னுட்டின் அன்னை நினைத்திருக்கு மாவலுடன் செல்லுகிறேன்! முன்னைப் பழங்கதைகள் முற்று மறுத்துத் திரைகடல்க ளோடித் திரவியங்கள் தேட வரைமுறைகள் மாற்றி மனமிசைந்து செல்லுகிறேன்! ஆனல் நிபந்தனையொன் ருகும்! மறுதலித்தால், நானெங்கும் போக நகரே னிடம் விட்டு! போகு மிடந்தனிலே பொன்னும் பொருளுமதாய் ஆகித் தலைநிமிர்வுற் றல்லற் படுங்குடும்ப வேதனைகள் தீர்த்து விடுதலையும் பெற்றபின்தான் நாதனிவர் கைபிடிப்பேன்! நல்லதென்று காணின் இது போழ்தே யானு மிறங்கிவருகின்றேன்!”* 'விதிமாறிப் போனதனுல் வேர்த்து விதிர்விதிர்ப்புற் றத்தனுட னம்மையுமே ஆடாச் சிலைகளெனச் சித்தந் தளர்ந்து செயலின்றி நின்றனரே! 'உன்விருப்பம் மீறி யொருபோதும் நான்நடவேன்! என்னேடு வந்தா லினிய பொருள்சேர்த்துத் தேவை நிறைத்துத் திருமணம்பின் செய்திடலாம்! வா, வா, வா!' என்ருர் வசித்த பெருங்காணி! 'நாளைச் சுணக்குவதால் நம்பெற்ருர் தம்மாலென் மூளை சிதறுமெனும் முட்டாள் நினைப்புடனே அப்போதே யானு மவர்தம்பின் சென்றேனே. . . . 'இப்போதோ வேக்கத்தா லெண்ணிமனஞ் சோரும்!.
'ஒருவார்த்தை தானு முரையாதென் பெற்றேர் பெரியனவா யோலப் பிலாக்கணங்கள் பாடிடவும் ஊரா ரொளிவின்றி யொவ்வொன்று பேசிடவும் நேராய் நடந்தேன் நிமிர்ந்து.
女
86

பெருங்காணியின் சதி
'சுற்றத்தார் தூற்றச் சுகந்தேடி யோடிவந்தாய்! பெற்றமன மேங்கப் பெருங்காணி யோடுவந்தாய்! தாய்மாமன் மீது தணியாத காதலென்ருய்!...
நாய்தானும் நாடாத நல்ல பிழைப்' பென்றேன்.
‘அப்படித்தா னென்னையுல காத்திரமாய் வைகிறது!... எப்படித்தா னென்ற னிழிந்த நிலையுரைப்பேன்?...'
"குற்றத் திருமணத்தைக் கூடிப் புரிவித்த உற்ருரும் பெற்ருரு மூராருக் கஞ்சித் தயங்கித்தா னென்றலைமேற் றம்பிழையை யேற்றி மயக்குற்ருர்! மற்றும் வறுமைக் கொடும்பிடியில் மூத்துத் தவிக்குமென்றன் மூடத்துக் கோவிலுக்கு முத்தவளா மென்கடமை முன்னேற்றந் தேடுதலே! கட்டுதற்காய் நின்ற கணவனையே காதலித்தேன். எட்டாக் கணியாகி ஞரே!... யெனினும் பெருங்காணி மீதெப் பெருவிருப்பு மில்லா w நெருங்கா நிலையிற்ருன் நீள்தூரம் நான்வந்தேன்!. வாடியவெங் கோவிலது வாழ்வுற்றுச் சீர்ப்படவும் நீடியதா மென்றுயரை நெஞ்சி னகற்றுதற்கும் நானெடுத்த வொற்றை நடவடிக்கை காயுலகோர் ஏனெடிந்து போவார்?" எனப்பேசிச் சொல்வாள்: 'அயலூரைத் தானு மறியா வெனக்குப் பயமும் படபடப்பும் பல்கிப் பெருகியது! மாட்டுவண்டில் மாறி மலையா நடைநடந்து காட்டுவழி தாண்டிக் கடலைக் கரைநின்று நோக்கியபோ தென்விழிகள் நோயுற்று நீர்சொரிய நீக்கிவந்த தாய்வழியை நீண்டு புறம்பார்த்துக்
87

Page 46
கப்பலிலு மேறிக் கரைநீத்துக் கல்லானேன்!. அப்புறமாய் வந்த வகலாக் கொடுதெருப்போ இச்செயலைச் செய்துவந்த வென்னை பிழித்துரைக்கும். ‘எச்சதியோ? ஏதோ? எளியேன் மடத்தனமோ? சந்தி சிரிப்பதுவோ? சாபம் பெருக்குவதோ? எந்தையுடன் ருயு மினியே தெனவெல்லாம் நெஞ்சு கரியாகி நீருகிப் போம்வரையும் அஞ்சி மிகவஞ்சி யஞ்சி யழுதழுதே ஆறுதலோ தேறுதலோ (வண்மிவராப் பாழுராய் வேறுபட்ட தீவில் வெறுப்போ டிறங்கிநின்றேன். ‘மட்டில் மகிழ்ச்சியுடன் மாயப் பெருங்காணி மொட்டைத் தலையளெனை மோகித்துக் கண்சுழற்றி, ‘என்னவளே! பெண்ணனங்கே! ஏறு மலைக்" "கென்று முன்னறியா முள்வழியில், மூர்க்க மலைச்சரிவில் என்னை யழைத்துப்போ யெங்கோ வனத்திடையே சின்னக் குடிலொன்றிற் சேர்த்தார்! குடிலதுவோ தூசாயுந் துன்பாயுந் தொத்தற் சுவர் சரிந்து கூசுங் கதிர்நுழையுங் கூரையுட ஞடியது! உப்பரிகை தேடி யுயர்வுறவா நான்வந்தேன்? குப்பைக் குடிலதனைக் கூட்டி வளமாக்கப் பாம்பு, குளவியெல்லாம் பாய்ந்துவெளிப் போந்தனவே. "வீம்புப் பெருங்காடோ வீட்டை வளைத்துநிற்கும். நேர மிருண்டுவர நீங்காக் குளிரணையும். வேருேர் மனிதமண வீச்சுக் கிடமில்லை. . . * உச்சிமலை தன்னி லொருவீ டுயர்ந்திருக்க மச்சுத் துரைமகனின் மாளிகையே யஃதென்ருர், ‘தீனிப் பொருளெல்லாஞ் சீக்கிரமே கொண்டுவந்தார். ஏ னி ன் னு ஞ சோ கம்? எடுத்தெறிவா** யென் றுரைத்தார். 88

'வீட்டை நெருங்கியுள வெங்காட்டுத் தூர்களிலே கோட்டை யமைப்பதற்குக் கூடுகிற தங்கமுண்டு! வேலை யினியுணக்கு வேறில்லை; காடழிப்பே பாலும் பழங்களினும் பற்பலவுந் தந்திருப்பேன்! கண்ணே, யிதுமுதலாய்க் கஷ்டந் "தொலையுமென்று முன்னல் நெருங்கிவந்து மூச்சு விடலானர். * ஏற்பட்ட வெஞ்சினத்தை எங்கோ மறைத்துவிட்டு ‘நாட்பட்டுத் தானின்பம் நாடிவர வேண்டுமையா ! கேணிக் குளிர்நீர்க்குங் கேடுண்டோ வெள்ளத்தால்? பாணிக் கிரணமட்டும் பக்கத்தே வேறிடத்து நீரிருக்க வேண்டுமியான் நிற்பேன் தனித்** தென்றேன். ஏறெடுத்து நோக்கியவ ரேக்கத் துடனகன்ருர், "காலை புலருமுனர் காய்ந்து குளிரடுப்பில் வேலை தொடங்குகையில் வந்தார் பெருங்காணி. “மண்வெட்டி, கோடரிகள், மரக்கத்தி பாரையெலாம் முன்கொட்டிச் சொன்னர்; "முதலில் வனமழிப்பாய்!’ "ஆரம்பித் தேன்வேலை; அல்லற் பலபட்டு நேரத்துக் கோருணவோ நீரோ வருந்தாது நச்சுப் பிராணிகளின் நாட்டந் தவிர்த்தந்த அச்சக் குளிரினிலு மாற்ருக் கதிரினிலுங் கொட்டு மழையினிலுங் கோலோச்சுங் காட்டினிலுந் தட்டுத் தடுமாறித் தங்கத்தை நெஞ்சிருத்தி எத்தனையோ நாளா யிளைத்துத் துரும்பாகி V அத்திணிந்த மாவனத்தை யற்பமென யானழித்தேன். உண்ணுதற்கும் மா ன த்  ைத யோம் புத ந் கு ந் தந்தென்னைப் பண்ணைப் பெருங்காணி பற்பலவாய்ச் சுற்றிவந்தார்! "காட்டை யழித்துள்ளேன்; காணேன் பணித்தங்கம். வீட்டுக் கனுப்புதற்கு வேண்டும் பொருளென்றேன்.
89

Page 47
/தூருக்குக் கீழன்ருே தூயமணித் தங்கமுண்டு! வேருக்குக் கீழே வெகுதூரந் தோண்டென்ருர்! /'ஓயாது பின்னருமே ஓங்கிக் குழிபறித்துப் பேயாகத் தேடியுமோர் பேச்சுக்குந் தங்கமின்றி திடாகத் தேய்ந்தேன்; ஒருநாள் மனஞ்சலித்தேன். 'மாடாக யானு  ைழ த் து மா ய் ந் தே** னென
மொரிந்தேன் ‘நம்மதிர்ஷ்ட மவ்வளவே யானு முனக்கெனவே இம்மியுமோர் குற்றமிலா தேங்கித் தவிக்கின்றேன்!
ஆகட்டுங் கண்ணே! அநியாயஞ் சேராது! நீகொத்திச் செய்த நிலத்திற் பயிர்செய்து விற்றுப் பணம்பெற்று வீட்டுக் கனுப்பிடலாம்! Aசற்றும் மனந்தளராச் சமர்த்துமனம் வேண்டுமடி! இன்று முதல் நீ யிவற்றைப் பயிரிடென்று சென்று கொணர்ந்துபல தேர்ந்த விதைதந்தார்.
/*வல்லான் வகுத்தவிதி மாற்ற விதியின்றி
எல்லாப் பொறுப்பு மிறையவன்றன் பாலென்று கொட்டை தமைக்கொண்டு கொத்தி நிலம்வைத்து மொட்டு மலர்ந்து வளர்ந்து பெரிதாக ஆசைக் கனவை யறுத்தீந்தேன்; பாவியவன் மோசக் கருத்தை முழுமூடம் நானறியேன்.
'தங்கங் கிடைத்தவுடன் ருவித்தாய் நாடேகிப் பங்கமிலா வாழ்க்கைப் பரிபா லனஞ்செய்ய லாமெனுமோ ரெண்ணத்து லாகிரியில் நானிருந்தேன். 'காமனென வோர்மாலை கண்காணி வந்துநின்ருர் . கூந்தல் மிக வளர்த்துக் குங்குமமு மிட்டவளாய்ச் சாந்த வதனத்தோ டாங்குத் தனிமரமாய் நின்ற வெனக்கூடி நீங்கிடலா மென்றெண்ணிக்
90

கன்றிச் சிவந்திருந்த கண்பிளவால் முன்விழுங்கிப் போதும் பொழுதுபடப் பொல்லா வெறியோடு மாதென் கரம்பற்ற வைரத் துடணிருந்தும் வேறேர் வழியின்றி வெட்டரிவாள் யானெடுத்துக் கூருத செல்கூறிக் கோவெரித்த கண்ணகியாய், 'வந்தா லழிவாய்நீ! வந்தேபா’’ ரென்றுரைத்தேன்.
'அந்தச் செயற்கண்டாங் கஞ்சிப் பெருங்காணி, "அப்படியா பெண்ணே! அறிவாய்: பெருங்காணி எப்படியு முன்னை இழக்கப் பொறுக்கில்லேன்! என்னசைவொன் றில் லா ம லெங்கேதான் போய் விடுவாய்? என்னவென்று தானென்னை யெண்ணி யிருக்கின்ருய்? தப்பாவென் றிட்டங்கள்! தாய்மாமன் செத்தொழியச் சிப்பாயை யேவிச் சுடவைத்தேன்! பின்னர்தான் சிக்கல்சேர்த் ல்ன்னைச் சிலோ னு க் கு க் கொண்டு வந்தேன்! எக்காள மிட்டாலு மேதும் பலனில்லை! ஏனென்று நோக்கற் கெவரு மில"ரென் முன்! ஈனத் தனத்தி னிடியாய்ச் சிரித்திருந்தான்! "அப்போது தானெ னறியாமை யானுணர்ந்தேன். இப்பாவி செய்யு மிழிதீட்டம் நன்குணர்ந்தேன். அப்பாவு மம்மாவு மன்றழுத கண்ணிரின் வெப்பத்தை நெஞ்சில் வெகுதூரம் நானுணர்ந்தேன்.
"காலங் கடந்தறிவு கண்டும் பயனுண்டோ? மாலையெனக் கண்ணீர் வடித்தும் பலனுண்டோ? சூழ்ச்சியினை யஃதாற்ருன் சூலறுக்க வேண்டுமென்று வீழ்ச்சிமணங் காட்டாது வார்த்தை திடப்படுத்தி, "உன்சூழ்ச்சி நன்கறிந்தே யுன்னே டிறங்கிவந்தேன்! என்னேரின் வாழ்வுக்கா யேகாங்கி யாகிவந்தேன்!
9.

Page 48
ஆண்டுபல வாயிங்கே யாதரவாய் யானுழைத்த நீண்ட வுழைப்பினது நேர்கூலி தா"வென்றேன். "மீண்டு மவன்சிரித்து, "வேடிக்கை வேடிக்கை! " தோண்டிக் குடைவாய் துருவிடுவா யென்றல்லோ ** நாணிந்தப் பட்டியலை நாசூக்காய் வைத்துள்ளேன்! ஏனுன் னுழைப்பெனக்கு? இந்தா, பிடி’யென்று பட்டியலைத் தந்தார் பரிகாசப் புன்சிரிப்பால். 'நட்டக் கணக்கின்மேல் நானின்னும் பாக்கிகண்டேன்! சத்தில்லாப் பாழுணவுஞ் சாக்கென்னுஞ் சீருடையுஞ் செத்தற் கருவாடுஞ் சிராம் பொருள் விழுங்கும்! கம்பளியொன் றென்ருற் கணக்கிலது பத்தாகும்! சம்பளத்துக் கோட்டுற் சரிபாதி வெட்டே "எனக்குத் தலேசுழல வெக்காள மிட்டே "உனக்கினியிங் கேதா னினுலகமடி! தப்பியுயிர் போதல் நினையாதே! போகும் வழியில்லை! சாதல் விரும்பின் ஜயமடைக!. முன்னுளிற் பித்தா யுனேச்சுற்றிப் பேயா யலைந்தவெனைச் செத்தானுக் கொப்பாக்கிச் சீந்தாமல் நீவாழ்ந்தாய்! இப்போதி தென்காலம்! என்றும்நீ செத்தாளே! அப்பாவை யம்மாவை யன்பார்ந்த தாய்நாட்டைப் பார்க்கும் விதியில்லாப்பத்தினியாய்ச் செத்தொழிவாய்! யார் க் குன் னுடல்வேண்டும்? யாண்வேண்டேன்!’ என்றுரைத்து வஞ்சப் பெருமலையாய் வாசல் கடந்தகன்முன். 'த்துத் தஞ்சத்தை நாடற்கும் நெஞ்சில்ல; மிஞ்சிடுநாள் வாழத்தான் வேண்டுமென யான்றுணிந் தேன். முற்றும் நனைந்தபினர் முக்கா டெதற்கென்று பற்றிப் பிடித்தேனேர் பாங்கு!
92

வெள்ளையனின் சதி
"தனியவளாய்த் தீவினின்றுந் தாய்நாடு செல்லற் கெனக்குத் தெரியா திருந்த வழிமுறையும் சூதானைக் கொன்று சுகப்படவு மென்வீட்டுக் காதாயஞ் சற்றே யகப்படுத்த வுந்தான்நான் தீவி லுயிர்த்திருக்கத் தீர்மானம் மேற்கொண்டேன். * சாவிற் பயங்கொண்ட ஜாதிப் பெருங்காணி பிற்றைநாள் வந்து பிரிந்தே கதையளந்தார்! சற்றேனுங் கோபத்துச் சாய லிலாளேபோல் ஆதரவா யுள்ள வமைப்பிற் கதைத்தாலுஞ் சாதகமா யேற்றுச் சமீபம் வராதிருந்தார்! பாம்பறியு மாமின்னேர் பாம்பின்கா லென்பரன்ருே! * ‘சோம்பாது யானுஞ் சுகத்தை வெறுத்தொதுக்கிக் காலை, கடும்பகலுங் காமத்து மாலையிலும் ஆலைக் கரும்பெனவே யல்லல் மிகப்பட்டேன். 'இப்படியாய்ச் சின்ன வியங்கி வரும்போதாண் டொப்பந்தக் காரனெனு மோராள் சிரித்துவந்தான். செக்கச் செவேலென்று சிக்கற் றமிழ்பேசிப் பக்கத்தே வந்தவன்றன் பாராளும் வேந்தனென்றன். மாமலையி னுச்சியிலே மாளிகையு முண்டென்றன். ஆவலுடன் பன்னுள்க ளாசைமிக வென்னேடு பேசிடலா மென்று பெருந்தவமேற் கொண்டன்று நேசத்தால் நைந்து நெருங்கியதாய்ச் சொல்லிநின்முன். **நல்லதொரு வாய்ப்பை நழுவ விடயானுஞ் செல்லமொழி பேசியென்றன் சிந்தையிலுங் காதலென் றேன். இல்லாத வொன்றை இருப்பா யுரைத்தென்றன் அல்லல் மிகமலிந்த வாதிக் கதைபகர்ந்தேன்.
93

Page 49
** என்ருவ தோர் நாள், இனியவரே! நீரிங்கு நின்ரு ளெனைத்தேடி நிச்சயஞ்சேர் வீரென்று நெஞ்செனக்குக் கூறியது; நீரு மதுபுரிந்தீர்! வஞ்சித்தே யென்னை வலைபின்னி யித்தீவில் நாசத்துக் குட்செய்த நாயன் பெருங்காணி மோசத்துக் காட்பட்டென் முன்னல் மடித்தாற்ருன் உங்களது கைப்பிடிப்பே னேய்வேன்!" என மொழிந் வுரைத்தேன்! 'மங்காய், நீ வீணய் மனத்தை யலட்டுகிருய்! தந்திரத்தைத் தந்திரத்தாற் முக்கும் வகையறிவேன்! இந்திரத்தெம் பூமிதனி லெல்லாமே கற்றுள்ளேன். நெஞ்சைத் திடப்படுத்தி நீயென்றும் போலிருப்பாய்! வெஞ்சொற்கள் கூறி வெட்டுவதாற் கண்காணி வேருேர் வழிவகுப்பான்; வேருய்ப் பழியெடுப்பான்! கூருதே யாமிருவர் கொண்டுள்ளோங் காதலென்று மிக்க விரகசிய மேலாம் வழிதெரிந்து தக்கனசெய் வோ'மென்முன் தாரணியாள் மன்னன் "பழிக்குப் பழிவாங்கப் பாலுள் பழமே விழுந்த கதைகண்டு வெள்ளையனின் காதலதை வேகத்தோ டேற்றிவைத்தேன்! வெள்ளைப் பெருமகனை மோக வசப்படுத்தி மோசக்கண் காணியனை வீட்டி விரும்பியபோல் வெள்ளிப் பணஞ்சேர்த்து நாட்டை யடைந்து நலங்காணத் தத்தளித்தேன் **காலங் கரைந்ததுவாம்; கண்டபல னென்றில்லை! மூலப் பெருங்காணி மூர்க்கத்தே யார்ப்பரிப்பார்! வெள்ளையனே வந்து விதந்தென்னைக் காதலிப்பான்; வெள்ளிப் பணமிரண்டை வீசிச் சமாளிப்பான்!. . . **சந்தேக மென்னையொரு சாமத்தே பற்றியதால் அந்தப் பணிநிசியி லஞ்சாப் பிசாசைப்போல் இந்திரனி னில்ல மிருந்த திசைசென்றேன். **சந்திரனின் வீசுகதிர் சாமத் துலவியது. கும்மாளச் சத்தங் கொதித்தனவம் மாளிகையுள்.
94

இம்மியுமோ ரோசை யெழுப்பாதம் மாளிகையின் கண்ணுடிச் சாளரத்தைக் கண்டு விழிபதித்தேன். சுண்ணும்புக் கொப்பரையின் சூட்டிலுளம் வியர்த்தேன்!
**இங்கிலிசுக் காதலனு மென்றன் குலங்கெடுத்த கண்காணிக் காதலனுங் காலின்மேற் காலிட்டுப் புட்டி மதுவும் புலையும் விழவருந்தி வெட்டிப் பொருள்பேசி வீற்றிருந்தா ரென்னுழைப்பில்!
‘சக்கை பிழிந்தென்னைச் சாற்ரு லவர்சுகிக்கும் மேலாஞ் சுகங்கண்டு மிக்க மகிழ்ந்தாலும் வேலா யுளம்பாய்ந்த லெள்ளையனின் குதுறையும் பேச்சுத்தா னென்னைப் பிடித்துலுக்கி வீசியது! **மெச்சத் தகுந்த முறையி லிருபேருந் தோ ட் - ப் பயிர்ச்செய்கை தோற்றுவித்தோம்! அப்பாலும் ஈட்டிப் பெருலாப மின்பத் திணிக்கின்றேம்! சீமை யரசாங்கஞ் சேதியறிந் தெங்களுக்கோ நேமித் திருக்கிறது நேர்மையுறப் பங்குரிமை கண்காணி யாரே! கருமத்திற் கண்ணுகிப் பங்காளி யாகிப் பரிசும் பலபெறநாம் காரணமே நீர்தானே! காட்டை யழித்திடற்கோர் வீரப்பெண் றேடிவந்தீர்! வீணய்ப் பகைமூட்டிப் போக்கிடம்வே றில்லாதப் பெண்ணைச் சிறை செய்தீர்! சிக்கிரமாய்க் காடழித்துச் செல்வப் பயிர்செழிக்கத் தூருக்குட் டங்கமென்றீர்! தூதா யெனையனுப்பிப் பேருக்குக் காதலித்துப் பெண்ணைப் புரியவைத்தீர்! நாமிருக்கும் நாள்வரைக்கும் நாயா யுழைக்கவுமோர் ஏமாந்த பெட்டைச்சி யிங்கிருக்கும் நாள்வரைக்கும் யாதுங் குறைவுண்டோ? ஆகாகா!' என்றனனே!.
‘போதை தலைக்கேறப் பூரித்தார் கண்காணி!
95

Page 50
'ஏமாந்த பெட்டைச்சி!... எல்லா மெனக்கடுக்கும்! பூமித்தே ரோட்டிப் புகழைக் குவித்ததமிழ் வீரக் குலத்துதித்த வேல்விழியா ளேமாளி
‘ஈரஞ் சிறிது மிலாவிவரை நானழித்து வாகைபெறு வேனென்று வாயிறுகச் சூளுரைத்து சோகவுரு வாய்மீண்டேன் சோர்ந்து.
★
96

சதியின் முடிவு
*இருந்துடலிற் கொல்லு மிரும்பிணிகள்; குன்றின் மருந்தே பிணிதீர்க்கும்! மையற்கண் காணி உடனிருந்தே கொல்வான் உயர்மலையில் நானே கிடந்திரந்தும் நோயைக் கெடுக்கும் மருந்திலையே!. என்செய்வே னிண்டென் றிரவி லிருந்தழுதேன். என்செயலொன் றில்லை, இறைநீ துணையென்று கண்ணும் மனமுங் கருத்தும் மிகமயங்கிப் புண்ணுகக் கன்னம் பொழிநீரிற் கண்ணெரிந்து தாய்நாடும் பெற்ருருந் தந்த நினைவலையால் ஓய்வின்றிச் சேர்ந்த வொருகோடி வேதனையாற் போராடி யாடிப் பொழுதுதிக்க யானெழுந்தேன். ‘ஒருருவ மப்போ தொளிந்து மிகவிரைந்து யானிருந்த பக்கத்தை நாடியது! காதலர்தம் தானையதன் மூன்ருமாள் தன்னை யனுப்பியினுங் கேடுபல சூழக் கெடுவைத் துளரென்றே 'ஒடிப்போ! என்ன யொருபோது முன்னல் அழித்த லியலாதே! ஆகுமெனில் வந்து விழுத்திப்பார்! 'என்றல்லறி வெட்டரிவாள் கையெடுத் தேன். **ஆயாய்! எனவேறு மாரோ வொருவனென்று நீயாக வேயெண்ணி நிஷ்டூரம் பேசுகிருய்! என்னை யிதற்குமுன ரெள்ளளவும் நீயறியாய்! அன்னையெனு மிப்பூமி யாட்சிக் குரியவன்நான்! சிங்கமுக னென்பேராம்! சேதிக் கலைகின்றேன்! பங்கம் வராதுனக்குப் பாவாய்! " எனமொழிந்தான். "யானென்றும் பேசாது நட்டசிலை யாய்நிற்கத் தானேமுன் வந்து தனது நிலைசொன்னுன்
97

Page 51
'நாட்டைக் கொடும்வெள்ளை நாயன் பிடித்துள்ளான்! கேட்டை விதைத்தெங்குங் கோ ட்  ைடக ளு ம்
w கொத்தளமும் பூண்டான்; புனிதங்கள் போக வழிசெய்தான்! ஆண்டாரை வந்தா ஞளவுமோர் காலமையோ!..? உன்னை யழைத்துவந்தான் ஓடாக நீதேய்ந்தாய். முன்னுக் கவன்வந்தான் முட்டாளாய் நாமெல்லாங் கண்ணை மறைத்திருந்தாற் காலம் நமக்கேது? மண்ணும் விளைபொருளும் மாண்பும் நமக்கே. பெருங்காணி யென்ற பெருச்சாளி மூலம் சுரங்கங்கள் தோண்டிச் சுகம்வாங்கும் வெள்ளைத் துரையானை யாங்கள் துரத்திடவே வேண்டும்! கரைதாண்டி வந்தாய் கரந்தேயக் காட்டைக் கொளுத்திப் பயிரிட்டுக் கொண்டபல னெங்கே? இளைத்துத் துரும்பாகி யிற்றுப் பொடியுண்டாய்! யோசிக்க மூளைக்கோ ரோய்வில்லாக் காரணத்தால் யாசித்து வாழ்ந்திடற்கா யாகம் நடத்துகிருய்? வெள்ளையனை யாந்துரத்தி வென்ருல் நிலமிதனை அல்ல லறுந்தொழியு மற்புதநாள் கீழ்புலரும்!" *சிங்க முகனுரைத்த செய்திகளும் நேர்மைமிகும் அங்கத் தசைவுகளும் மன்னனை மெய்ப்படுத்த மெல்லக் கிலிநீங்கி வெட்டரிவாள் கீழ்வைத்தேன். வல்லா னவன்றன் வகையறிந்து நீணேரம் பேசிக் களித்திருத்தேன்!. பெண்ணெனக்கு மீற்ருயோர் நேசிக்கு முள்ளம் நெருங்கியது! நின்மலனை நன்றிமிகக் கூறி நமஸ்கரித்தேன்! இவ்வுறவை என்றும் நிலைநிறுத்தற் கேக்கமுடன் வேண்டிநின்றேன். 'திட்டமொன்றைத் தீட்டித் திரும்புவதாய் மற்றைநாள் கட்டழகன் கூறிக் கரைந்தான் பெருங்காட்டில்.
4 அக்கக்கா!' என்ருே ரகன்ற சிரிப்பினலை
திக்கெட்டும் பாயத் திரும்பினனே! வெள்ளைத்
98

துரையும் பெருங்காணித் தோழவனு மாங்கே இரையைத் தொடர்ந்துவந்த வீனப் புலிகள்போல் நின்றனரே! யானே நெடுங்கத்தி பற்றுமுன்னர் சண்டாளக் கண்காணி தாவிப் பிடித்தென்னை ஆடாமற் செய்திட்டான்! அப்பொழுது வெள்னையனுே, *நாடற்ற வேமாளி நாயே! உனக்குமொரு காதலனும் பொன்னுங் களிப்புமா அ வேண்டுவன? பாதகியே! உன்னைப் பலகாத தூரம் அழைத்தோம்! அருகெடுத்தோம்! ஆற்றியவையெல்லாம் உழைத்துப் பிறனுக்கா யூட்டி யவனுடனே சேர்ந்தெம்மை யேய்த்துச் சிறப்பிழக்கச் செய்வதற்கா? நேர்ந்துகொள் உன்னுடைய நேர்ச்சைகளை! போ!'
வென்று பாய்ச்சினனென் மார்பிற் பளபளத்த பேரீட்டி! 'வாய்ச்சொற்க ளின்றி வளமின்றி, வாழ்வின்றி நாடு நகரின்றி, நற்றங்கம் மாசியின்றிக் கூடு முறவின்றிக் கொள்கை, குறியின்றி மண்மேலே சாய்ந்தேன்; மலைக்கன்னி யானழிந்தேன்!
★ 大 大
பின்னல் நடந்த பெருங்கதையை யாவியளாய்க் கண்டேன்; களிதந்த காதலனென் சிங்கமுகன் கொண்ட குறிநின்று கூளத் துரையினையுங் கண்காணிப் பேயனையுங் காணு தொழித்தனனே. மண்ணைத் தனதாக்கி மன்னவனு மாகினனே! ஆவியளா யன்றுமுத லங்காந் தலைந்தலைந்து பாவியளாய்க் காவியமாய்ப் பா. மீ திவர்கின்றேன்! பாரதியார் பாடிவைத்த பாந்தக் குயிற்பாட்டின்
99

Page 52
சாரக் குயில்நானே! சற்றும் பிழையில்லை. ஆகட்டும் பாவலனே! ஆவிமலைக் கன்னியவள் பாகட்டிப் பாரிற் பரப்புதலு முன்செயலாம்!"
大 ★ ★
ஆவியையுங் காணேன்! அதுவரையு மென்செவியில் மேவியவுங் கேளேன்! மெலிதாய்த் தலையசைத்துக் கோலைக் கரம்பிடித்தேன்; கோதை மலைக்கன்னி ஒலைக்குள் வந்தா ளுயர்ந்து.
★ 大 大
கவிதை உலகெங்கும் காணற் கியலா உருவத்து நின்றே உயர்பதவி கொள்கிறது. தானுலகில் வந்து தரணியர்க்குச் சேவைசெயும் ஆசை எழும்போதே ஆளைத் தெரிந்தெடுக்கும். அவ்வாருய் மோகம் அடைந்த பலபொழுதில் எவ்வாருே தேடி எனைத்தேர்ந்து புல்லியது. என்னுட் கருவீழ்ந் தெனில்வளர்ந்து நற்போதில் மண்ணுட் பிறக்க மனங்கொண்ட வேளையில்தான் யானக் கவிதைகளை ஆழ்ந்து பிரசவித்தேன். மானிடனய்ச் சோம்பிய மற்றைப் பொழுதுகளில் யானேர் கவிபெற் றளிக்கத் துணியவிலை. தாமாக வந்தவைதாம் தாள்படிந்து முன்போந்த வாழும் கவிதைகளா? வாடும் கவிதைகளா? யாதென்று நீங்கள் அறைதல் அவசியமே. நன்றி மிகக் கூறி நாடும் விடைபெற்றேன் சந்திக்கக் கொண்டி தயம் -
- அல் அஸ"மத்
100

Have a good 'Time' With **SUPREME (OUARTZoo
Wall clocks
Sole Agents in Sri Lanka
ESWARAN BROTHERS
267, Sea Street, COLOMBO 11.
Tele; 22744, 32599, 547608, 35842 Telex: 21275 - 21866, ESWARAN - CE