கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அண்ணாவியார் சின்னையா ஞானசேகரம்

Page 1
f
உள்வூ, {{အံ၊
தீ லாமுனைக்
சீலர் மட்ட
暱
ཊི//
po
哲学
இணு ஏறாவூர் பற்று ெ உற்பத்தி விற்பனவு
:படி பிரrtரிffir, ##3, ரிங்
 
 
 
 
 
 

ஞானசேகரம்
றப்பு மலர்
- リ . リ @ಿಸ್ಡ''ನ್ತಿ! :)
懿 சிெயற்புழ்டுத் குழு
i tij க்லைக் கமகம்
கலைக கழகம
முனை
க்கள்ப்பு
0.2003
தங்கு பனம்பொருள் |க் கூட்டுறவுச் சங்கம்
பீட்டி, மீே.சி.ரி.வி. 2222

Page 2

གས༽
மட்டக்களப்பு மணிர்முனை
வடக்கு ды. 60 птағпт Лт பேரவையினர் நடாத்தும் முத் தமிழ் விழாவில்
கெள வர வரிக் கடப் படுமி கலைஞர்களுளர் ஒருவரான சலாமுனையைச் சேர்ந்த வட மோடிக் அண்ணாவியார் சின்னையா ஞானசேகரம் அவர்களைப் பற்றிய சிறப்புக் கட்டுரை.
المسمـا
சி.ஜெயசங்கர், விரிவுரையாளர், நுண்கலைத்துறை, கிழக்குப்பல்கலைக்கழகம்.
Dட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசாரப் பேரவை uபிளால் இவ் வாணி டு நடாத் தப்படும் கலைஞர்களுள் ஒருவராக சீலாமுனையைச் சேர்ந்த வடமோடிக் கூத்து அண்ணாவியார் திரு. சின் னையா ஞானசேகரம் (யோகன்) அவர்கள் இடம் பெறுவது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய அம்சமாக உள்ளது.
இன்றைய பூகோளமயமாக்க பண்பாட்டு ஆக்கிரமிப்புச் சூழலில் கூத்துக் கலை ஆபத்துக்களை எதிர்
கூத்து |
0.
கொள்ளும் நிலையில், பூகோளமய மாக்கத்திற்கு எதிரான பண்பாட்டுப் பேணுகைச் செயற்பாட்டிற்கு இக் கூத்துக் கலையினைப் பயன்படுத்தும், பூகோளமயமாக்கத்திற்கு மாற்றாக எமது சுயசார்புமிக்க வாழ்வியலைப் பேணுவதற்குரிய அரங்கச் செயல் பாடுகளில் பிரதானமான விடயமாக கூத்துக்களை மீளுருவாக்கும் எமது செயற்பாடுகளுக்கு தோளோடுதோள்
நிற்கும் திரு. சி. ஞானசேகரம்
அவர்கள் வடமோடி அண்ணாவிக்குரிய
அனைத்து தகுதிப்பாடுகளையும் உடையவராக இருக்கின்றார்.
வடமோடிக் கூத்து மரபுகளில் ஆழ்ந்த அறிவும் , அனுபவமும் உடைய இவர் வெளித்தோற்றத்தில் அண்ணாவியார் என்ற எந்தவொரு தோற்றப்பாட்டையும் காட்டாத ஓர் அமைதியான மனிதனாகவே காட்சிதருவார். மத்தளத்தைக் கட்டிக் கூத்தைப் பழக்கும் போதே இவரது முழு ஆற்றலும் வெளிவருவதைக் காண முடியும் அதாவது அண்ணாவியார் சி. ஞானசேகரத்தின் முழு ஆற்றல்களும். அவருடைய இயங்கு நிலையில் தான் வெளிப்படும். இது இவருடைய விசேட குணவியல்பு.
வடமோடிக் கூத்திற்கான மத் தளவாசிப்பு, ஆடல், பாடல் என்பவற்றில் மிகுந்த ஆற்றல்மிக்க இவரது மத்தள அடி எப்போதும் கூத்துப்பாடலை முன்னிலைப்படுத்தி இசைந்து போவதாக இருக்கும், ஆட்டத்தின் போது ஆட்டவேகத் திற்கேற்ப உரம் கொள்ளும் ,

Page 3
படையெப் புக் கட்டங்களிலி அம் மத் தள அடி உக் கரம் கொள்ளும், நளினமான பாடல்களின் போது மத்தளமும் நளினமாகப் போகும், இவரது மத்தள அடி சொற் கட்டுக் களைப் பேசிக ’கொண்டிருக்கும். இவ்விதம் திறன் வாயப் நீ த அணி னா விமார்கள் மட்டக்களப்பில் இருக்கின்றார்கள் - இவர்களுள் ஒருவராக குறிப்பாக வடமோடியில் திறன்வாய்ந்தவராக அண்ணாவியார் சி. ஞானசேகரம் விளங்கி வருகின்றார். என்பது குறிப்பிடத்தக்கது.
மட்டக் களப் பிலே ஒர் அண்ணாவியாருக்குரிய தகுதிகளுள் முதன்மையானதாக வலியுறுத்தப்படும் “பெண் கூத்து ஆடியவராக இருத்தல் எனும் விடயத்தில் மிகுந்த தகுதி கொண்டவராக இவர் இருக்கின்றார். இவர் ஆடிய கூத்துக் களிலி பெருமளவானவை பெண் கூத்துக் களாகவே இருந்துள்ளன. இவருடைய “பெண் கூத்தாட்டங்கள் மூலமாக வடமோடி பெண் கூத்தாட்டங்க ளுக்கான ஆடல், பாடல், நடிப்பு முறைமைகளைத் தெளிவாக விளங்கிக்கொள்ள, கற்றுக்கொள்ள முடியும் இந்தளவிற்குச் சிறந்த பெண் கூத்துக்கலைஞராக இவர் இருந்து வருகிறார்.
இவ் விதம் வட மோடி மத் தள அடி, கூத தாட்டங்கள் பாடல்கள் என்பவற்றில் மிகுந்த வல்லமை கொண்டவராக இருப்பதும், எப்போதும் மற்றவர்களுக்கு
O2
இவற்றைப் பயிற்று விப் பவராக இருப்பதும் இவருடைய ஆளுமை யினை வெளிப் படுத் துவதாக இருக்கின்றது.
கூத்துப் பற்றிய உரையா டல்கள் என்று வரும்போது கூத்தின் அறிவுமுறை சார்ந்து ஒரு தகவல் களஞ்சியமாக இவர் இல் லாத போதிலும், கூத்தின் விடயம் சார்ந்தும், வடிவம் சார்ந்தும் முன்னெடுக்கப்படும் உரையாடல்களில் மிகவும் புத்தி சாலித் தனமான கருத்துக்களை வெளிப்படுத்துபவராக இருக்கின்றார். இது இவரை கூத்தின் தோற்றம் வரலாறு என்பவற்றில் அவ்வளவு அக்கறை காட்டாது கூத்தின் நடைமுறை சார்ந்து தொடர்ந்து இயங்கிவரும் செயல்முறையின்பால் அதரிக கவனம் செலுத்தும் கலைஞராக அடையாளம் காட்டி நிற்கின்றது.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கூத்து மீளுருவாக்க ஆய்வுச் செயற்பாட்டில் இவருடன் நெருக்கமாக வேலை செய்து வந்ததன் ஊடாக, கூத்தில் காணப்படும் காலத்திற்குப் பொருத்தமற்ற பெறுமானங்களின் உருவாக்கங்கள் பற்றிய விவாதங் களில் அதாவது சாதி, பால், ரீதியாக உள்ள பொருத்தமற்ற விடயங்கள் சார்ந்து, விவாதிக்கும் போது புதிய விடயங்களை ஆர்வத் துடன் விவாதித்து விளங்கிக் கொள்ப வராகவும், விளக்கம் ஏற்படாதவை யினைக் குறித்து மீள மீளக் கேள்விகளை எழுப்பு வதினூடாக ஆர்வத்துடன் விளங்கிக் கொள்பவ

ராகவும் இருப்பதை அவதானிக்க முடிந்தது.
பலி வேறு அணி னாவரி மார்களும், கூத்துக்கலையில் புலமை பெற்றவர்களும், கூத்துக் கலை
ஞர்களும் கலந்து கொண்ட கூத்து
மீளுருவாக்க ஆய்வுச் செயற்பாடு பல பரிமாணங்களுடன், பலபக்கத் தொடர் பாடல்களாக, விவாதங்களாக நடைபெற்ற வேளைகளில் அண்ணா வியார் சி.ஞானசேகரத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவமுடையதாக விளங்கியிருந்தது.
எமது கூத்து மீளுருவாக் கத்திற்கான பங்குகொள் ஆய்வுச் செயப்பாட்டின் போது குறிப்பாக கூத்துப்பாடல்களை மீள உருவாக்கம் செய்த காலத்தில் கூத்துப்பாடல்கள் யாவும் சமுதாயத்தில் அதிகாரத்திலி ருந்தவர்களுக்குச் சார்பாக அதிகார மட்டங்களிலிருந்த புலவர்களால் கட்டமைக்கப்பட்டு மக்கள் மத்தியில் திணிக் கப்பட்டிருந்தரிருக்கலாம் எண் கின்ற முடிவிற்கு என்னை வரச்செய்தது. அதாவது இன்றைய கல்விமுறை எவ்விதம் காலனித்துவ நவகாலனித்துவ நலன்கள் சார்ந்து எம்மிடம் திணிக்கப்பட்டிருக்கின்றதோ அவ்விதமே கூத்துப்பாடல்கள் அன்று கட்டப்பட்டு மக்களிடம் விடப்பட்டிருக் கின்றது எனலாம்.
இந்த விடயத்தை நாம் கூத்துப்பாடல்களை மீள புத்தாக்கம் செய்த காலத்தில் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிந்தது.
03
அதாவது கூத்துப்பாடல்களில் வரும் பெருமளவு சொற்கள் அதைப்பழக்கும் அண ன T வரி மார் களு க கோ , அதையாடும் கலைஞர்களுக்கோ தெளிவாக புரியாத நிலையிலேயே கூத்துக் களை அவர்கள் ஆடி வந்திருக்கின்றார்கள். பல கூத்துப் பாடல்களின் சொற்கள் ஆழ்ந்த இலக்கணப் புலமையுடன் கட்டப் பட்டமையாக இலகுவில் விளங்க முடியாதவையாக இருக்கின்றன.
இவ் விதம் அன்றைய அதிகார சக்திகளுக்குச் சார்பானதாக, கூத்துக்களை ஆடிவரும் சமுகங் களுக்கு எதிரான கருத்துக்களால் கட்டமைக் கப்பட்டு அச்சமுகங் களாலேயே விளக்கங்கள் இன்றி பேணப்பட்டு வந்த கூத்துப்பாடல்களை மீள கட்டவிழ்த்து கூத்தை ஆடுபவர் களுக்கு நாம் எதனைப் பாடி ஆடுகின்றோம் என்று விளங்கிடும் விதமும், கூத்துக்களை பார்ப்போருக்கு என்ன விடயங்களைப் பாடுகின்றார்கள் என்கின்ற தெளிவு ஏற்படும் விதமாக புத் தாக்கம் செயப் த போது அண்ணாவியார் சி. ஞானசேகரம் அவர்கள் மிகவும் எளிமையாக ஆனால் அதேநேரம் கூத்திற்கேயுரிய பாடல் நுணுக்கங்களைச் சிதைக்காத வகையில் சொற்களை உருவாக் கித்தந்தார். இது இவரது வடமோடி கூத்துப்பாடல்களின் நீண்ட அனுபவ அறிவையும் இவரது மொழி வல்லமையையும் வெளிக் காட்டி நிற்கின்றது.
கூ த து க க  ைல ய ன

Page 4
செம்மைத்தன்மை பற்றிய பிரக ஞையும் அது தொடர்பான அக்க றையும் கூத்துக்களைப் பேணிவரும் சமுகங்களிடையே மிகவும் பலமாக இருப்பதனை நாம் காணக் கூடியதாக இருக்கின்றது. காலங்காலமாக கூத்துக் கள் ஆடப்பட்டு வரும் சமுகங்கள் மத்தியில் கூத்துக் கேயுரிய செம்மைத்தன்மைகளுடன் கூத்துக்களை ஆடும் கலைஞர்கள் புகழ் பெற்றவர்களாகவும், விசேடமாக இத்தகைய கலைஞர்கள் ஏனைய அயல் ஊர்களிலும், அயல் சமுகத் தவர் மத்தியிலும் புகழப்படும். நிலையில் இருப்பதைக் காணமுடி கின்றது. இதேவேளை கூத்திற்கேயுரிய செம்மையற்று ஆடுபவர்கள் பற்றிய விமர்சனங்கள் கூத்தாடும் சமுகங்க ளிடையே நிலவுவதையும் நாம் காண முடிகிறது.
மேற் படி அனுபவங்கள் ஊடாக கூத்தின் செம்  ைமதி தன்மையைப் பேணுதல், அதை வலியுறுத்துதல் என்பது கூத்துக்கள் ஆடப்படும் சமுகங்களிடையே பலமான நிலையில் உள்ளது என்பதை நான் திட்டவட்டமாக கூறுகின்றேன்.
இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாக மட்டக்களப்பு சீலாமுனை யைச் சேர்ந்த வடமோடி கூத்து அண்ணாவியார் சி. ஞானசேகரத்தை யும், அவரது சமுகத்திவரையும் நான் கூறுவேன். நாம் மேற்கொண்ட கூத்து மீளுருவாக்க ஆய்வுச் செயற்பாட்டின் போது அண்ணாவியார் ஞானசேகரம்
அவர்கள் ஒட்டுமொத்தமாக கூத்திற் கேயுரிய செம்  ைமதி தன்மையைக் கொண்டுவர வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறைகாட்டிச் செயற்பட்டார்.
கூத்து மீளுருவாக் கதி தயாரிப்பாகிய சிம்மாசன யுத்தம் எனும் வடமோடிக் கூத்தரில் பங்குபற்றிய முழுக் கூத்தர்களையும் வடமோடிக்கூத்திற்கேயுரிய செம்மைத் தன்மைகளுடன் ஆடிப்பாடவைப்பதில் அண்ணாவியார் ஞானசேகரம் மிகவும் கடுமையாக உழைத்தார். பிரத்தியேக பயிற்சியில் ஈடுபடாத கூத்தர்களை கணி டிப் புடன் பயிற்றுவித்தார். இவர்மட்டுமல்லாது இவரது சமுகத் தைச் சார்ந்த அனைவரும் இதில் அதிக அக்கறை காட்டியதைக் காண முடிந்தது.
சுருங் கக் கூறினாலி கூத்தினை அதற்கேயுரிய செம்மைத் தன்மைகளுடனும், அழகியலுடனும் ஆடிப் பாடி நடிக்க வேண்டும் என்பதிலும், ஒட்டுமொத்த செம்மைத் தன்மையை கூத்துக்களில் கொண்டு வருவதற்கு ஏதுவாக கூத்துக்களை பயிற்றுவிக்க வேண்டும் என்கின்ற அக்கறையும் கொண்ட சமுகங்களைச் சார்ந்த அணி ணாவியார்களுள் ஒருவராக சி. ஞானசேகரம் அவர்கள் உள்ளார்.
முடிவாக அண்ணாவியார் சி.ஞானசேகரத்திடம் நான் காணும் சிறப்பான பண்பு. “சாதி, பால், ரீதியிலோ அல்லது வேறு எந்த வகையிலோ எவரையும் புண்படுத்தும்

விடயங்களை மரபு எனும் பெயரில் பேணிக் கொள்வதில் கண் மூடித் தனமாக இருக்கும் தன்மைகள் அற்றவராக இருப்பதாகும். அதாவது தெளிந்த விளக்கங்களுடன் பொருத்தமான மாற்றங்களுக்குத் தயாராக இருக்கின்ற சிறந்த
கலைஞனாக அவர் வாழ் நீ து கொண்டிருக்கின்றார்.”
வாழததுரை
ஈழத்தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களுன் ஒன்றாகவும், மக்களை ஆக்கத்திறனற்ற, செயற்பாடற்ற வெறும் பார்வையா ளர்களாக, சுயசார்பற்ற நுகர்வுச் சமூகங்களாக உருவாக்கி வரும் பூகோளமயப் பண்பாட்டிற்கு மாற்றாக மக்களை ஆக்கத்திறனும், செய்ற் பாடும் கொண்ட சுயசார்புமிக்க சமுகங்களாக இயங்கவைப் பதற் கான முக்கிய ஊடகங்களில் ஒன்றாகவும் விளங்கும் கூத்துக் கலையினை முன்னெடுத்து வரும் கூத்தர் சமூகங்களின் அன்னாவியா ர்களுள் ஒருவராகவும் விசேடமாக கூத்து மீளுருவாக்கத்திற்கான எமது பங்கு கொள்ள ஆய்வுச் செயற்பாட்டில் முக்கிய நபராக பங்குகொண்டு செயற் பட் டு வருபவ வருமான அன்னாவியார் சி. ஞானசேகரம் அவர்கட்கு எமது வாழ்த்துக்கள்
மூன்றாவது கண் உள்ளுர் அறிவுச் செயற்பாட்டுக் குழு
கலை ஞானம் கொண்ட ஞானசேகரனே!
கலை மகள் தான் ஈன்றெடுத்த (9டும் பெடும் கலை மகனே காலங்கள் தான் கடந்து காத்திருந்த வேளையிலும் நீ கண்ட கனவெல்லாம் நினைவாகும் காலம் இதுவோ
கடலிடுக்கும் அலையிடுக்கும் ஓயாது இசை இடுக்கும் - உன் இனிய குரல் வளத்தால் பாடலிசை தான் பிறக்கும் தேன் இடுக்கும் சுவை இடுக்கும் மறவாத நினைவிடுக்கும்.
மத்தளத்தை நீ அடுத்து வாசிக்கத் தொடங்கி விட்டால் தாளங்கள் எத்தனையோ அத்தனையும் அதில் பிறக்கும்.
தாளமது கேட்டிடவே மெய் மறந்த பலர் கூடி கூத்துப் பாடல் பல பாடிடுவார் கழிப்புடனே இருந்திடுவார் இத்தனைக்கும் வித்தான கலை மகனே உன் மகத்தான பணி தொடர சீாடுனை கலைக்கழகம் வாழியவே வாழிய வாழியவே
த. கிருபாகரன். உதவி அண்ணாவி சீலாமுனைக் கலைக் கழகம்
05

Page 5
வடமோடிக் கூத்தின் அணினாவியர் திரு. சிண்ணையா ஞானசேகரம்
Dட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாச்சாரப் பேரவையினரால் இவ் வாண் டு நடாத்தப்படும். முத்தமிழ் விழாவில் கெளரவிக்கப்படும் அண்ணாவியார் திரு. சின்னையா ஞானசேகரம் அவர்கள் கெளரவிக்கப்படுவதையிட்டு சீலாமுனைக்கிராமத்திற்கும் எமது சமூகத்திற்கும் வெளியூர்களில் வாழும் எமது சமூகத்தைச் சேர்ந்தோருக்கும் ஒரு பொன்னான நாள் என்றே நான் குறிப்பிடுவேன். ஏனெனில் இதுவரை எமது சமூகத்தில் கலைஞர் கெளரவம் என பிரதேசமட்டத்தில் முதல்முதலாக அண்ணாவியார் என்ற பதத்துடன் கெளரவிக்கப்படுவர் இவர் ஒருவர் மட்டுமேயாகும். இதனால் சீலாமுனை என்ற முழுக்கிராமமுமே பெருமை அடைகிறது.
அதுமட்டுமல்லாது கூத்துக் கலையில் சிறப்புக்களைப் பெற்ற பெருமையும் இக் கிராமத்திற்கு உண்டு. இக் கிராமத் தில் பல கூத்துக்கள் பழக்கப்பட்டு அரங் கேற்றங்கள் நடைபெற்றன. இதன் மூலமாக பலகூத்துக்கலைஞர்கள், பல ஒப் பனைக் காரர்கள், பல அண்ணாவிமார், கூத்துக் களில் கூத் தர்கள் அணிந்து ஆடும் உடைகளைத் தாயாரிக் கும் கலைஞர்கள் பல பாடலாசிரியர்கள், கூத்துக்களரிகளை திட்டமிட்டு நன்கு
06
அமைத்து அதை அலங்காரம் செய்யும் கலைஞர்கள் போன்றோரை உருவாக்கிய பெருமையும்; தேசிய மட்டத்தில் கூத்துக்கலை சம்பந்தமாக பலராலும் அறிந்து கொள்ளக் கூடியவராகத் தற்போது திகழ்ந்துக் கொணி டிருக்கும் கழக் குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவர் போராசியர் திரு. சின்னையா மெளனகுரு அவர்களின் கூத்துக் கலை பற்றிய ஆரம்ப அறிவை கற்றுக் கொடுத்த பெருமையும் இச்சீலாமுனைக்கிராமத்திற்கே உண்டு என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இதன் காரணமாக இச்சீலாமுனைக் கிராமத்தில் வாழும் எமது சமூக மக்களும் வெளியூரைச் சேர்ந்த எமது சமூக மக்களும் பெருமை அடைகின்றனர்.
இச் சீலா முனைக் கிராம த் திற்கு இன் னொரு பாரிய பெருமையும் உண்டு! அவை சர்வதேச மகாநாடுகள் நடப்பதென்றால் தலைநகரான கொழும்பிலோ அல்லது வெளிநாடுகளிலோதான் இதுவரை நடைபெற்று வந்தது. கூத்தாய்வுகள் பற்றிய சர்வதேச மகாநாட்டை நடாத் திக் காட்டிய பெருமை இச் சீலாமுனை மக்களான எமது சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கே உரித்தானதாகும். அன்றைய பகல் முழுவதுமே சீலாமுனைக் கலைக் கழக கூத்துக் கலைஞர்களும் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலை த்துறை விரிவுரையாளர் திரு. சி. ஜெயசங்கர் அவர்களும் இணைந்து மேற்கொண்ட பங்குகொள் ஆய்வுச்

செயற்பாட் டின் மூலம் மீள உருவாக்கம் செய்யப்பட்ட ‘சிம்மாசன புத்தம் என்ற கூத்தின் செயற்பாடுகள் பற்றிய தொடர் கலந்துரையாடல்கள் ஒரே நேரத்திலும் ஒரேதளத்திலும் வெளிநாடுகளிலிருந்து வந்து இம் மகாநாட் டில் கலந்து கொண்டவர்களாலும், சீலாமுனைக் கூ தி து க க  ைல ஞர் க ளா லு மி , கழக கு ப பல கலை க கழக நுண்கலைத்துறை விரிவுரையாளர்
திரு. சி.ஜெயசங்கர் அவர்களாலும்,
மற்றும் பல விரிவுரையாளர்களாலும், கழக் குப் பல கலைக் கழக நுண் கலைத் துறையைச் சேர்ந்த மாணவர்களாலும், மற்றும் யாழ்ப்பான மாவட்டம், வவுனியா மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், திருகோண மலை மாவட்டம், மன்னார் மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம், கொழும்பு மாவட்டம் போன்ற இடங்களிலிருந்து வருகை தந்திருந்த கூத்துக்கலை ஞர்களாலும், கூத்து ஆர்வலர்களாலும் காலை 10.00 மணிக்கு ஆரம்பிக் கப்பட்ட கலந்துரையாடல்கள் பிற்பகல் 2.30 மணிவரை தொடர்ந்து நடை பெற்றன. இவர்கள் எல்லோரையும் இணைத்த பெருமையை சீலாமுனை க்கிராமம் பெற்றது. அன்றையதினம் இரவே இச்சிம்மாசன யுத்தம் என்ற கூத்தும் அரங்கேற்றப்பட்டது.
இச்சிம்மாசன யுத்தம் என்ற கூத்தின் வெற்றியின் காரணமாகவே திரு. சின் னையா ஞானசேகரம் என்னும் இவ் அணி னா வியார் பிரபலமாகி பிரதேசமட்டத்தில் கெளரவம் கொடுக்கும் அளவிற்கு
07
உயர்ந்து விட்டார் என்பதை இங்கு நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் 1956ம் ஆண்டு ஐப்பசி மாதம் 10ம் திகதி சீலாமுனையில் திரு. சின்னையா என்பவருக்கும் அழகு என்பவருக்கும் மகனாகப் பிறந்த இவர் ஆரம்பக கல்வியை கோட்டைமுனை கனிஷர வித்தியாலயத்தில் பயின்றவர். இவர் அவ்வித்தியாலயத்தில் அப்போதைய ஐந்தாம் வகுப் பில் படித்துக் கொண்டிருந்த போதே கூத்துக்களைப் பழக் கி மத்தளம் வாசிக் கும் அண்ணாவியாராக முதல்முதலில் செயற்பட ஆரம்பித்தார்.
அதற்கு முதலாகவே எமது சீலாமுனைக்கிராமத்தில் எம் முன்னோ ர்களால் ஆடப்பட்ட கூத்துக்களைப் பார்த்தும் அதில் உள்ள தாளவகை கள், ஆட்டக் கோலங்கள், பாடல் களின் மெட்டுக்கள் அதற்கேற்றாற
‘போல் மத்தளம் வாசிப்பது எப்படி
என்ற பயிற்சிகளையும் தன்னுடைய தனி முயற்சியினால் அக் கால அணி ணா வரி மார்களிட மரிரு நீ து கற்றுக்கொண்டவராவார். இப்பயிற் சிகளே பின் நாட்களில் இவர் அணி னாவியாராக வருவதற்கு உதவியது எனல்லாம்.
இவருடைய தந்தையும் ஒரு சிறந்த கூத்துக் கலைஞராக விளங்கியவர். இவருடைய தந்தை பெண் பாத்திரங்களை ஏற்று கூத்தை ஆடுவதில் சிறந்து விளங்கியதோடு மட்டுமல்லாது பெண் பாத்திரங்களுக் கேற்ற தாளவகைகள் அத்தனையும்

Page 6
அறிந்த மனிதர் இவருடைய தந்தை தொடர்ந்து பல கூத்துக் களில் பெண்பாத்திரம் ஏற்று திறம்பட நடித்து ஆடியதால் அக்கிராமக்களின் பேச்சு வழக்கின் பிரகாரம் பொம்பிளைச் சின்னையா என்று அழைக்கப்படும் அளவிற்கு கூத்துக்கலையில் மிகச் சிறந்து விளங்கியவர். திரு. சி. ஞான சேகரம் அவர்களுடைய தந்தையின் தந்தையும் ஒரு சிறந்த கூத்துக்கலைஞராக விளங்கியவராம்.
திரு. சி. ஞானசேகரம் அவர்களின் சிறிய தந்தையான திரு. பொ.சுப்பிரமணியம் அவர்களும் ஒரு சிறந்த கூத்துக்கலைஞராவார் இவர் சிம்மாசன யுத்தம் என்ற கூத்தில் திருதராட்டினண் பாத்திம் ஏற்று நடித்தவர். திரு. சி. ஞானசேகரம் அவர்களின் சகோதரர்கள் கூட பல கூத்துக் களை ஆடி சிறந்த கூத்துக்கலைஞர்களென்று பெயர் பெற்றவர்கள் திரு. சி. ஞானசேகரம் அவர்களின் இளைய சகோதரரான திரு.சி. விஜேந்திரன் என்பவர் சிம்மாசன யுத்தம் என்ற கூத்தில் துரியோதனன் என்ற பாத்திரம் ஏற்று நடித்து பெயர் பெற்றவர். எனவே இவர்களுடைய குடும்பமே மொத்தத தில் சிறந்த கூத்துக்கலைக் குடும்ப மாக கிராமத்தில் வாழும் சமூகமக்க ளால் மதிக்கப்படுபவர்கள்.
திரு. சி. ஞானசேகரம் அவர்கள் பத்துவயதிலேயே கோட்டை முனை கனிஷ்ர வித்தியாலயத்தில் 1966ல் அப்பாடசாலை ஆசிரியரின் வழிநடத்தலின் கீழ் குருக்கேத்திரன்
08
போர் என்ற கூத்திற்கு அண்ணாவி யாராக செயற்பட ஆரம்பித்தார். அக் காலத் திலேயே திரு. L. மத்தயசிங்கம் ஆசிரியர் அவர்களிட மிருந்தும் கூத்துக்கலைப்பற்றிய பயிற்சிகளை பெற்றுக்கொண்டவர். பின் இவர் தட்சாயினி கல்யாணம் என்ற கூத்தில் முழுமையான அண்ணாவி யாராகவும், பத்மாவதி நாடகம், இராவனேசன் , இராமநாடகம் , பிரமராட்சதயுத்தம், தர்மபுத்திரநாடகம், போன்ற கூத்துக் களில் உதவி அண்ணாவியராகச் செயற்பட்டு மிகத் திறமை வாய்ந்த கூத்துக் கலைஞர் களை கிராமத்தில் உருவாக்கிய பெருமை பெற்றவர்.
1996ம் ஆண்டு திரு. செ. சின்னராசா என்பவரின் தலமையின் கரீழ் இராவணேசன் எண் னும் நாடகத்தை படச்சட்ட மேடையில் மேடை ஏற்றியபோது அந்நாடகத்திற்கு மத்தளம் வாசிப்பதற்காக முழுமை யாகச் செயற்பட்டவர். அப்போதே இதைக் கூத் தென்று எவ்வாறு சொல்வதென்று என்னிடம் கேள்வி எழும்பியவர். அதுமட்டுமல்லாது இனிமேல் இப்படியான செயற்பாடு களுக்கு நான் மத்தளம் வாசிக்கச் செல்லமாட்டேனென்று உறுதியாகச் சொல்லிக் கொண்டவர்.
இவர் கூத்துக்கலை பற்றிய தகவல்களை எழுத்துருவில் சேகரி த்து வைக்காதபோதும் கூத்துகளை மரபிற்கு ஏற்றபடியே வட்டக்களரி களில் ஆடவேண்டுமென்ற நிலைப்பாடு உடையவராகக் காணப்படுகிறார்

என்பதை மேற்கூறப்பட்ட அவர்கேள் வியினுடாகவே விளங்கிக் கொள்ள முடிகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண் பாத்திரம் ஏற்றுதிறம் படக் கூத்தை ஆடும் கூத்துக்கலைஞர்கள் தான் அண்ணாவியாராக வரமுடியும் என்ற மரபிற்கேற்ப பத்மாவதி என்ற கூத்தில் சீதையாகவும், பிரமராட்சத யுத்தம் என்ற கூத்தில் வினோத வல்லியாகவும், கோமதவல்லியாகவும், தர்மபுத்திர நாடகம் என்ற கூத்தில் திரோபதியாகவும் அருச்சுனன் பாசு பதம் என்ற கூத்தில் ஏலகன்னியாகவும் பெண் பாத்திரங்கள் ஏற்றுத் திறம்பட நடித்துக் காட்டியவர்.
இவர் கூத்தில் சேர்ந்து பெண் பாத்திரம் ஏற்று நடித்துக் கொண்டிரு க்கும் அதே நேரத்தில் அண்ணாவியா ராகவும் செயற்படுபவர். ஒரே நேரத்தில் இரு செயற்பாடுகளில் ஈடுபடும் வல்லமை கொண்டவர் இடுப்பில் மத்தளத்தைக் கட்டிக் கொண்டு தாளம் பிசகாது, கூத்துப் பழகும் கூத் தர்களுக்கு கால் களைத் தாளத்திற்கேற்ற வகையில் எப்படி வைக்கவேண்டுமென்றும் ஆட்டங்களை எப்படி ஆடவேண்டுமென்றும் அதே
நேரத்தில் மெட்டுக்களுக்கேற்ற
வகையில் கூத்தின் பாடல்களையும், அகவல்களையும் , கொச் சகங் களையும், கழிநெடில் களையும் , பரணிகளையும், தேவாரங்களையும், எப்படி ஏற்ற இறக்கம் வைத்து பாட வேண்டும் என்பதை சிறந்த முறையில் சொல்லிக் கொடுப்பார். தன்னிடம் கூத்துப்பயிற்சி பெறும் கூத்தர்கள் சிறந்தமுறையில் கூத்துக்களை ஆடி
09
நல்ல பெயர் பெற்ற கூத்துக்கலை ஞர்களாக வரவேண்டும் என்பதில் உறுதியாகச் செயற்படுவார்.
இதே போல சண்டைக்காட் சிகளில் என்ன என்ன இடங்களில் பாய்ந்து ஆடவேண்டுமென்றும் அதற் கேற்றாற் போல் தானும் பாய்ந்து ஆடிக்காட்டி குந்தடி, நாலடி போன்ற தாளவகைகளைச் சொல் லிக் கொடுத்து இடுப் பிலி கட்டிய மத்தாளத்துடன் திறமையாக ஆடிக் காட்டும் வல்லமை கொண்டவராகவும் விளங்கினார். இத்தனை வருடங்க ளாக இலை மறைகாயாக, இத்தனை திறமைகளைக் கொண்ட இவ் அண்ணாவியாராகிய திரு. சி. ஞானசேகரம் அவர்களின் கூத்துக கலைத் திறமைகளை இனம் கண்டு மதித்து பிரதேச மட்டத்தில் கெளரவம் வழங்கு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாச்சார பேரவையினருக்கு நாம் நன்றி செலுத்த கடப்பாடு உடையவர்களாக இருக்கிறோம்.
அடுத்தாக இவ் அண்ணா வியாரின் செயற்பாட்டில் உருவான அருச்சுனன் பெற்ற பாசுபதம் என்ற கூத்து பழக்கப்பட்டு பூரீ மகா நரசிங்க வயிரவ சுவாமி ஆலயத்தில் 2002ம் ஆண்டில் அரங்கேற்றம் செய்யப் பட்டது இக் கூத்தில் திரு. சி. ஞானசேகரம் அவர்கள் முதன்மை பெற்ற அண்ணாவியாராகச் செயற் பட்டதை இங்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன். இக்கூத்து ஏறாவூர் பூரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்திலும்

Page 7
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத் திலும் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
இதன் பின்னர் சீலாமுனைக் கலைக்கழகக் கூத்துக் கலைஞர் களும், கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை விரிவுரையாளர் திரு. சி. ஜெயசங்கர் அவர்களும் இணைந்து மேற்கொண்ட கூத்து மீளுருவாகத்திற்கான பங்கு கொள் ஆய்வுச் செயற்பாட்டின் மூலம் உருவாக்கப்பட்ட சிம்மாசன யுத்தம் என்ற கூத்தின் பிரதம அண்ணா வியாராக செயற்பட்வர். இக்கூத்து 29.06.2003ல் நடைபெற்ற சதங்கை அணிவிழாவிலும் 26.07.2003ல் அரங்கேற்று விழாவிலும் தொடர்ந்து ஐந்து மணித்தியாலங்கள் வரை இடுப்பில் கட்டிய மத்தளத்துடன் நின்று கொண்டே ஆட்டத்தாளங் களுக்கேற்ப பிற்பாடல்கள் பாடிக் கொண்டே சளைக்காது மத்தளம் வாசித்த திறமை நான் அறிந்தமட்டில் இவர் ஒருவராகத் தான் இருக்க முடியும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே வடமோடிக் கூத்தில் அண்ணாவியாராக இருப்பத ற்கு சகல தகமைவாய்ந்தவரென்று எமது கூத்துக்களை ஆடும் சமூகத் தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தகுதி யைப் பெறுகிறார்.
எனவே இவரின் திறமைக ளுக்கு எப்போதோ கிடைக்க வேண்டிய இக் கெளரவம் இப்போதா வது கிடைக்கப் பெற்றதையிட்டு நானும் எனது சமூகமும் பெருமகிழ்ச்சி அடைவதோடு மட்டுமல்லாது இவர்
இன்னும் பல கூத்துக்களைப் பழக்கி பல கலைஞர்களை சமூகத்துக்குள் உருவாக்கி தேசியமட்டத்திலும் வடமோடிக் கூத்தின் அண்ணாவி யாராக கெளரவிக்கப்படுவதற்காக உயரவேண்டும் என்று எனது இதைய பூர்வமான வாழ்த்துக்களை தெரிவி த்துக் கொள்கின்றேன்.
கட்டுரையாக்கம்
செ.சிவநாயகம்
ஏட்டு அண்ணாவியார்
இல, 7/பு ஜேம்ஸ் வீதி, மட்டக்களப்பு.
முத்தமிழ் விழாவில் கெளரவம் பெறும் அண்ணாவியார்
சி. ஞானசேகரத்திற்கு எமது வாழ்த்துக்கள்
ഖGഖtf
பூனி மகா நரசிங்கவைரவ சுவாமி ஆலய பரிபாலன சபையினர் சார்பில் தலைவர் க. சக்திதாஸ்
சீலாமுனை யங்ஸ்டார் விளையாட்டுக் கழகம் சார்பில் செயலாளர் சீ. நவநேசராசா

“ஐ’ இரண்டு வயதினிலே அழகாக கோலமிட்டு “ஐ’ இரண்டு விரல்களால் நாத இசை எழுப்பீனிரோ! நிரோ!
நாதத்தின் வித்துவான் .
கலைமகளின் நாவிலே நந்தி கேசவனின் புதல்வனோ. படைத்த இசையெல்லாம் ”தளாங்கு தித் தகதக ததிங்கிணதோ en su Cun asissur
nġibbit' (6th ...................
மத்தளத்தின் இரு பக்க ஈர்ப்பெல்லாம் - உன் “ஐ’ விரல்களில் சங்கமம் காலத்தின் கரு மணியாய் இன்று நீரோ?
இசைக்குத் தலைவனானிர்
2. t .. uhur TG sa Luúymas உங்கள் மத்தள இசை மறக்க வைத்ததோ! இமைகளை மூட thணம் கொண்ட பூவினை வண்டுகள் நாடுவது போல் - உன் மத்தள இசைக்கு
நாடியவரே . நாமெல்லாம்.
a se
நல்வழி காட்டுகின்ற கலை கழகத்திலே. உள்லொலி ஏற்றும் நாத தலைவனானின் ஜெயித்தது மனம் அல்ல உங்கள்
g
இரண்டு விரல்களின் சப்தங்கள்.
சுழலுகின்ற பூமியில் நாட்களும், மாதங்களும், வருடங்களுமே இணையற்ற இசைக்கு ஒளிருகின்ற ஞாயிறும் திங்களும் நீரோ .
விண்ணும் மண்ணும் gb6n6ouuut".08uñ - 2 LGøi மத்தளத்தின் கீதம் கேட்டு சபைக்கோர் அரசனாக தரணியிலே நீர் மாசிலா வாழ்வு காண வடித்த கவிதை இதோ!.
செல்வி. காயத்திரி கிருபாகரன்,
656) - 3 மகாஜனக் கல்லூரி மட்டக்களப்பு

Page 8
“நமது முன்னேர்ரை நன்றியுடன் நினைவு கூர்கின்றோம் .”
பDட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாநகர சபை எல்லைக்குள் இருக்கும் சீலாமுனை, சின்ன உப்போடை, மாமங்கம், கோட்டை முனை, நாவற் குடா ஆகிய ஊர்களிலும் மற்றும் ஏறாவூர், முறக்கொட்டான்சேனை, மாங்காடு, ஆகிய இடங்களிலும் இன்றுவரை வாழ்ந்துவரும் நம்பிகுலத்தைச் சேர்ந்தவர்களாகிய நாம், நீண்ட வடமோடிக் கூத்துப்பாரம்பரியத்தைக் கொண்ட மட்டக்களப்பின் சமுகங்
கஞள் ஒன்றாக விளங் களி வருகின்றோம்.
மேற்படி பல்வேறு இடங்க
ளிலும் பரந்து வாழும் நமது சமுகத்தினர் ஆண்டுதோறும் ஒன்று கூடும் இடமாக எமது குல தெய்வத்தின் ஆலயமான மட்டக் களப்பு புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள பூரீமகாநரசிங்க வயிரவர் கோயில் உள்ளது. ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக எமது சமுகத்தவர் பேணி வளர்த்து வந்த வடமோடிக் கூத்துக்களில் பல இவ்வாலயச் சடங்கு நாட்களில் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன.
இத்தகைய பாரம் பரிய தீதினைக் கொண்ட நாம் இதுவரை காலமும், மட்டக்களப்பின் வடமோடிக் கூத்துக்களை அழியாது பாதுகாத்துப் பேணி வருகின்ற சமுகத்தவர்களுள் ஒருவர் என் கின்ற வகையில்
பெருமைப்பட்டிருந்தோம். ஆனால் இன்று இதற்கும் மேலாக தமிழக் கூத்து மீளுருவாக்க ஆயப் வு
வரலாற்றில் முதன் முறையாக இடம் பெற்றுள்ள “கூத்தை ஆடுகின்ற மக்களே காலமாற்றங்களுக்கேற்ப கூத்தினை மீளுருவாக்கம் செய்தல்” என்கின்ற நிலைத்து நிற்கக் கூடிய ஆய்வுச் செயற்பாட்டை மேற்கொண்ட முன்னோடிக் கூத்துக்கலைஞர்கள் என்கின்ற வகையில் பெருமை கொள்கின்றோம்.
அதாவது கிழக் குப் பல் கலைக்கழக நுண் கலைத் துறை விரிவுரையாளரும் கூத்து மீளுருவாக் கத்திற்கான பங்குகொள் ஆய்வுச் செயற்பாட்டாளருமாகிய திரு. சி. ஜெயசங்கருடன் இணைந்து கடந்த ஒரு வருட காலமாகச் செயற்பட்டு சிம்மாசனயுத்தம்’ எனும் வடமோடிக் கூத்து தயாரிப்பினுTடாக கூத்து மீளுருவாக்கத்தினை மேற்கொண்டி ருக்கின்றோம்.
இந்த மீளுருவாக்கச் செயற் பாட்டினைப் பற்றி, கிழக்குப்பல்கலை க்கழக நுண்கலைத்துறை நடாத்திய *சர்வதேச சமுதாய அரங்க மாநாடு மட்டக்களப்பு 2003’ இன் ஒருநாள் முழு நிகழ்வுகள் யாவும் எமது ஊரில் நடைபெற்ற வேளை இதில் கலந்து கொண்ட உலகின் பல நாடுகளிலும் அரங்கச் செயற்பாடுகளில் ஈடுபடும் கலைஞர்களும் , அறிஞர்களும் , மற்றும் இலங்கையின் Լ} 6Ն) பாகங்களிலிருந்து வந்து கலந்து கொண்ட அரங்கச் செயற்பாட்டா

ளர்களும் நேரடியாகப் பார்த்தும், கேட்டும் , கலந்துரையாடியும் , அவதானித்தும் அறிந்து கொண்ட
துடன். எமது கூத்து மீளுருவாக்கத்
தினை மனமாரப் பாராட்டியதுடன், இன்றைய காலத்தில் கட்டாயம் செய்யப்பட வேண்டிய செயற்பாடு என்பதையும் விளங்கி ஏற்றுக் கொண்டனர். இதனூடாக சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றதாக எமது
கூத்து மீளுருவாக்கம் அமைந்தி
-النطروا
இந்த வகையில் தமிழ்க்
கூதி து மீளுருவாக்க ஆயப் வு
வரலாற்றில் காலத்தின் தேவை கருதிய உலகத்தரத்திலான ஒரு முக்கிய திருப்பு முனையான ஆய்வுச் செயற்பாட்டில் ஆய்வாளர் திரு. சி. ஜெயசங்கருடன் இணைந்து பங்கு கொனன் வர்கள் என்ற வகையில் நாம்
பெரு மரிதமும் , DE LÊ É guó கொள்கின்றோம்.
இவ் விதம் பெருமை
கொள்ளும் நாம் இந்தக் கட்டத்தில் எமது முன்னோர்களை மிகுந்த நன்றியுடன் நினைத்து பார்க்கின்றோம். எமது முன்னோரின் சத்தியமான, நேர்மையான வாழ்க் கையுடன் இணைந்த கூத்துக்கலை பேணுகை யின் பலாபலன்கள் இன்றைய கால கட்டத்தில் காலனித் துவ நவ காலனித்துவ கருத்துக் களுள், சிந்தனை முறைமைகளுள் அமிழ்ந்து எம்கலையினை எம்மையறியாமலே கலைப்பேணுகை எனும் பல்வேறு எமது செயற்பாடுகளுடாகவே அழித்து விடும் ஆபத்திலிருந்து தடுத்து, காலத்தின் முக்கிய கட்டத்தில்
காலனித்துவ, நவகாலனி த்துவ சி நீ தனை முறைகளிலிருந்து விடுதலை பெற்று பொருத்தமான திசையில், தெளிவான விளக்கங்க ளுடன் செயற்பட்டு எம்கலைகளை உயிருடன் பேணுவதற்கான வழிவகை களைப் புரிந்துள்ளன என்று நாம் கருதுகின்றோம். சுருங்கச் சொன்னால் எமது மூதாதையரின் உண்மையான கூத்து வாழ்வின் சத்தியமான உழைப்பின் உன்னதங்கள் எங்களை வரலாற்றின் முக்கிய கட்டத்தில் நல்வழி காட்டிப் பாதுகாத்துள்ளன 616,516).Th.
எனவே இன்றைய சூழலில் எமது முன்னோர்கள் பற்றியும், அவர்கள் ஆடிய கூத்துக்கள் பற்றியும் தகவல்களைத் திரட்டி இதில்
பதிவாக்க வேண்டும் எனும் நோக்கில் எமது கலைக் கழக உறுப்பினர் திரு வ. யாதவன்
அவர்கள் எமது சமுகத்தவர் பலரிடம் கேட்டுத் திரட்டிய தகவல்களை இங்கே தொகுத்து எழுதியுள்ளார். இதில் ஏதாவது விடயங்கள் அறியப்படாது விடப்பட்டிருப்பின் அதையறிந்தோர் பெருமனதுடன் எமக்கு தெரியப்படுத்துவதினூடாக இனிவரும் நூல்களில் அவற்றைச் சேர்த்துக் கொள்வோம் என்பதை தெரிவிக்கின்றோம்.
நன்றி
து. கெளரீஸ்வரன்
சீலாமுனைக் கலைக்கழகம் மட்டக்களப்பு.

Page 9
அணர்ணாவிமார்
கோட்டமுனை :-
அ. வ. இளையதம்பி, வே. கந்தையா, சி. சிதம்பரப்பிள்ளை.
ஏறாவூர்:-
6)). LDTifleost peof, எஸ். சின்னத்துரை, எஸ். தம்பிராசா,
உப்போடை
எஸ். செல்லையா, எஸ். செல்லன்.
நாவற்குடா:-
எஸ். முதலித்தம்பி, எஸ். பவுல்தேவசகாயம்.
சிலாமுனை:-
எஸ். தம்பிராசா, எஸ். கிருஷ்ணபிள்ளை, எஸ். தங்கவேல்.
கடத்தக்களைப் மாடிய புலவர்கள்
வே. அ. கந்தையா (கோட்டமுனை) எஸ். சின்னத்துரை (ஏறாவூர்) எஸ். சின்னத்தம்பி (ஏறாவூர்) எஸ். கிருஷ்ணப்பிள்ளை (ஊறணி)
கூடத்துக்கலைஞர்கள்
இராவணனி,சகாதேவனி - வீமாக்குட்டி (இராம நாடகம், தருமபுத்திரன்)
வீமனி செல்லப்பிள்ளை (தருமபுத்திர நாடகம்)
துரியோதனன் செல்லப்பிள்ளை (தருமபுத்திர நாடகம்).
வேடன் செல்லையா (வனவாசம் நாடகம்)
திரெளபதை செல்லப்பிள்ளை (வனவாசம் நாடகம்)
யமன், மிருகாங்கதனர் பொணர்னையா (வனவாசம், கமலாவதி)
பேரண்டச்சிவாவா கணபதிப்பிள்ளை (வனவாசம்)
அருச்சுனன் கந்தையா (வனவாசம்)
சயிந்தவன் சபாவதி (வனவாசம்)
இராமர் சினி (இராம நாடகம்)
இலக்குமணன் சின்னத்துரை (இராம நாடகம்).
கமலாவதி தம்பிப்பிள்ளை குமாரன் செல்லையா
(கமலாவதி நாடகம்)

மிருகாங்கதன்,நரகாசூரன்,வீமன், இராவணன்,
செல்லத்துரை (கமலாவதி, நரகாசூரன், தருமபுத்திரன், இராமஇராவன யுத்தம்).
பத்மாவதி,சீதைசத்தியபாமா, சினர்கனையா (பத்மாவதி, இராம இராவண யுத்தம், நரகாசூரன் வதை).
கோமுனி, லட்சுமணன்,தருமர், தங்கையா (Lகையை வெல்லல், இராமஇராவன யுத்தம், நரகாசூரன் வதை)
குமாரனி குமரையா (uகையை வெல்லல்).
அரசனி முத்துக்குமார் (பகையை வெல்லல்).
து தனி தம்பித்துரை (பகையை வெல்லல்).
கமலாவதி இராமர் வைரமுத்து (இராய இராவண யுத்தம், கமலாவதி)
கனகசுந்திரம் சிதம்பரப்பிள்ளை (கனகசுந்தரன் நாடகம்).
கிருஷ்ணனி, குமாரனி, தங்கராசா (நரகாசூரன், கமலாவதி)
நாரதர் வேலுப்பிளர்ளை (நரகாசூரன்)
வலாயன் சின்னத்தம்பி (விராட பருவம் நாடகம்)
வேடுவிச்சி பொன்னுத்துரை (தருமபுத்திர நாடகம்)
இராவணனி தேவதாஸ்
(இராம நாடகம்).
வினாயகமூர்த் தரி
சகுனி சிவகுரு (தருமபுத்திர நாடகம்).
இந்திராணி நடராஜா
(நரகாசூரன் வதை).
ருக்மணி பாக்கியராஜா (நரகாசூரன் வதை).
எம்முன்னோரால் ஆடப்பட்ட கூத்துக்கள்.
01. வாளவீமன் நாடகம் 02. யுத்தகாண்டம் 03. பரிமளகாசன் நாடகம் 04. தருமபுத்திரன் நாடகம் (1928) 05. வனவாசம் (1933) 06. இராம நாடகம் (1933). 07. கமலாவதி நாடகம் (1943) 08. பரிமளகாசன் (1952) 09. பத்மாவதி (1954) 10. விராட பருவம் (1955) 11. கமலாவதி (1955) 12. குருக்கேத்திரன் (1958) 13. பகையை வெல்லல் (1959)
14. கனகசுந்தரன் (1960)

Page 10
15. பப்பிரவாகன் (1961) 16. பகையை வெல்லல் (1962) 17. இராம இராவண யுத்தம் (1965) 18. இராம நாடகம் (1969 19. லங்கேஸ்வரன் (1972) 20. தருமபுத்திரன் (1975) 21. தருமபுத்திரன் (1990) 22. அசிலோமாசூரன் கதை 23. பிரமராட்சதன் யுத்தம் (1989)
இக்கூத்துகள் ஆடப்பட்ட ஆண்டுகளில் தவறு இருப்பின் விடயமறிந்தோர் சுட்டிக்காட்டினால் அவற்றை நாம்
திருத்திக் கொள்வோம்.
வ. யாதவன். சீலாமுனைக் கலைக்கழகம்
முத்தமிழ் விழாவில் கெளரவம் பெறும் அண்ணாவியார் சி. ஞானசேகரத்திற்கு எமது வாழ்த்துக்கள்
αυτώόώνώ αυτί
டக்சிதா சித்த ஆயுர்வேத வைத்திய நிலையம் - சீலாமுனை வைத்தியர் - முலிகை வேந்தன் இரா. கலைவாணன்
சின்னைய்யா ஞானசேகரம் பற்றிய வாழ்த்துக் கவிதை
ஞானத்தின் பிறப்பிடமே ஞான சேகரா! வண்டு அறியும்
பூவினது வாசனை நீர் அறிந்தாய்
எங்களது ஆற்றலை Garfissil of it uti
சீலாமுனை கலைகழகத்திலே
பாத்திரம் தந்தாய்
வடமோடிக் கூத்திலே நிகழ்ந்தது
சிம்மாசன யுத்தம் வெற்றிபெற்றோம்
இந்த ஊரிலே ஊர் வாழ்த்தியதும்
உன்னையே சேகரா! நான் வாழ்த்துவதும்
உன்னையே தேவா ! நீர் வாழ்க 1 வடமோடிக் கூத்து வளர்க! சீலாமுனை கலை
கழகம் வளர்க
செ. ஜோன்சன் 12 கலை, இந்துக் கல்லூரி


Page 11
வாழ்த்து மடல்
மட்டக்களப்பு மண்முனை வடக்கு கலாச்சாரப்பேரவையால் நடாத்தப்படும். முத்தமிழ் விழாவில் திரு. சிண்னையா ஞானசேகரம் அவர்களை கெளரவிப்பதையிட்டு சீலாமுனைக் கூத்துக்கலைக்கழகம் பெருமகிழ்ச்சி அடைகிறது. திரு. சி. ஞானசேகரம் அவர்கள் சீலாமுனை கூத்துக் கலைகழகத் துடனர் இணைந்து அண்ணாவியாராகக் செயற்பட்டு சிம்மாசனயுத்தம் என்ற கூத்து மூலம் பல புதிய இளந்தல முறைக் கூடத்தக்கலைஞர்களை உருவாக்கியதை நன்றியோடு நினைவு கூரும் இதே வேளை எதிர் காலங்களிலும் இண்ணம் பல கடத்துக்களைப் பழக்கி மேலும் பல கூத்துக் கலைஞர்களை உருவாக் குவதோடு மட்டுமல்லாத தேசிய மட்டத்திலும் கெளரவிக்கப் படுவதற்காக உயர்வடைய வேணர் டுமென இக் கடத்தக் கலைக்கழகம் மனம் பூர்வமாக வாழ்த்துகிறது.
சீலா முனைக் கலைக்கழகம்
முகத்துவார வீதி,
மட்டக்களப்பு.

வாழ்த்துப்பா
சின்னையாவும் ஆகும்
சேர்ந்திருவர் பின்புடனே சேகரித்த சோரயே
கலை ரூானத்தின் வழிநின்றே உயர்ந்த
காரணமே ஞானசேகரமே 3 NEILLI GOETH YÉNI ஏன் நாளும்
மட்டக்களப்பு மண் முனை
வடக்கு பிரதேச கலாச் சாரப் பேரவையினரால் நடாத்தப்படும் முத்தமிழ் விழாவில் அண்ணாவியார் திரு. சி. ஞானசேகரம் அவர்களை கெ எார வரிக் கப் படுவதே தயரிட் டு பெரும Bழ் சி கொள் வதோடு மென்மேலும் இக் கூத்துக்கலை tւք Ճւ՝ Lii Hol 13 || I || || F'? LI LI J வேண்டுமென்று என இதயபூர்வமான வாழ்த்துக்களை சமர்ப்பிக்கின்றேன்.
த.ஜெகநாதசர்மா கீரிமடு பூரீ சித்திவினாயகர் ஆலயம் (பிரதமகுருக்கள்) முகத்துவார வீதி, மட்டக்காப்பு
O. O.