கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதுசு 1980.01-03

Page 1


Page 2
கல்லாரி
سسٹھ میہم
23-1-78 முதல் நாடகம் பற்றிய சகல பயிற்சிகளை யும் இலவசமாக அளித்து வருகிறது. பயிற்சி பெற்றுப் பலன் கண்டவர் பலர். இரண்டாவது பயிற்சி வகுப்புக்கள் ஞாயிற்றுக்கிழ மைகளில் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெற்று வருகிறது.
நடிப்பு, நெறியாள்கை, பிரதி ஆக்கம், மேடை நிர் வாகம், ஒப்பனை, ஒரி அமைப்பு, உடை அமைப்பு, நாடக வரலாறு ஆகிய பல துறைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
1979ல் நாடக ரசிகர் அவை ஒன்றினை அமைத்து உறுப்பினருக்கு தரமான ஆறு நாடகங்கள் நடித் துக் காண்பிக்கப்பட்டன. இரண்டாவது ரசிகர் அவை இப்பொழுது அமைக் படுகிறது. நாடகப் பயிற்சி பெறவோ, ரசிகர் அவையில் உறுப்பினராகவோ விரும்புவோர் தொடர்புகொள் ள வேண்டிய முகவரி: t
Go Fu u Gorrer riř, நாடக, அரங்கக் கல்லூரி,
*தாயகம்’ திருநெல்வேலி வடக்கு,
யாழ்ப்பாணம். *
 
 
 

“புதுசு'கள்
A நிர்வாக ஆசிரியர்:
நா. சபேசன்
* அ, !ரியர் குழு
ாவலே விஜயேந்திரன் பல சூரியன் dial sylik - sy. Jai
* புதுசுவில்:
துலங்கும் ஆக்கங்களுக்கு
DLŮ Gf Gg பொறுப்பு. * முதலாவது ஆக்கம்:
தை-மாசி-பங்குனி 1980 ல் விலை - ரூபா 1ー?5 * அட்டை w ślub: அ. குலேந்திரன்
* அச்சுப்பதிப்பு:
ஜெயாப்பிறின்டிங் வேக்ஸ்,
அளவெட்டி
* தொடர்புக்கு:
நா. சபேசன்
'adash”
turrent Art துரையப்பா பிள்ளைவீதி, அம்பன, தெல்லிப்பழை,
இலங்கை
முன்வைப்புக்கள்.
நாங்கள் யார்?
* ஈழத்து இலக்கியம் ஆரோக் கியமான சூழ்நிலையில் இருக்கிறது என்ற ஒரு சிறிய வட்டத்தினது போலிமாயையினை நிரந்தரமாக நிதர்சனமாக்க எண்ணி நாங்சள் இப்பணிக்குள் காள்களை இறக்கி யிருக்கிருேம். -
* ஈழத்து இலக்கியத்தின் தர
மான பர்ப்புக்களை அதிகரிக்கவும்: அதிகரிக்கும் எண்ணத்தில் (ԼՔ Ամ லும் ஏனையோருக்கு தோள் கொ டுக்கவும் முன்நிற்கிருேம்.
* பொருளாதார நி ஆலயில் நட்டமடைந்து நாம் "புதுசு? வை வெளிக் கொணர்கிருேம். எனும் நினைப்பு "புதுசு"விற்கு பணங்கொடுப்போர் ம ன தி ல், கொள்ளவேண்டும் எ ன் ப து எம்து விருப்பம்,
* நாம் நீண்டகால அனுபவம் கொண்டவர்கள் அல்லர். இப் போதுதான் எங்களுக்கு கல்லூரி வாழ்வின் உச்சக்கட்டம்.
* எத்தனை இதழ்கள் தரப்போ கிருேம்-என்ன தரத்தில் தந்தி ருக்கிருேம் என்பதே வரலாற்றில் எங்களுடைய இடத்தைத் தீர்மா ணிக்கும் என்பதில்எ ங் க ளுக்கு உறுதியான நம்பிக்கை,

Page 3
பசுந்துளிர் ட அ. செ.மு.
ஈழநாடு வாரமலரில் வாராந்த சுவை அம் சம் எழுதி வாசக நேயர்களை மகிழ்வித்து வந்த அ. செ. மு. பத்தாண்டுகளுக்கு முன் "பசுந்துளிர்’
என்று மகுடமிட்டு ஒரு
வாரம் எழுதியதையே
இங்கு நம் முதல் இதழில் நாம் முதன்மைச் சங்கு முழங்கி ஏத்தும் அரிதானதொரு சிறு கதையாக நன்றியுணர்வுடனே இங்கு தருகிறேம்.
நோயுற்றிருப்பதால்
இன்றைக்கெல்லாம் சில
காலமாக அவர் பேணுவுக்கு ஓய்வு.
66
கிக் கதை சொல்லு."
காக்கா
தினமும் மதிய போசனத் தின்போது ஒரு பிடி சோற்றுக் காக வந்துகூடும் காக்கை விருத் தாளிகளில் ஒன்றைப் பார்த்துத் தான் ஒரு தினம் கேட்டேன்.
காக்கை வாய்திறக்கவில்லை.
**காக்கா கரு ங் கண் மணி நாவற்பழம் தின்னி எனக்கொரு க ைத சொல்லமாட்டாயா? பாட்டி பாட்டன்மார் புத்திசா லிக் காக்கை என்று உன் னை ப் புகழ்ந்தும் ஏமாளிக் கா க் ைக என்று இகழ்ந்தும் நல்ல தல்ல உபகதைகள் எவ்வளவோ சொல்
வார்களே. அப்படியெல்லாம்
8pGö.
- புது சு க ள் -
கதாபாத்திர ம் எ கி யிருக்கு ம் உனக்கு ஒரு கதை சொல்ல த்
தெரியாதா??? காக்கையார் எழுந்
தோடிப் போய்விடாதபடி இத மாகத் தடவிக் கொடுப்பதுபோல் நான் கையில் வைத்துத் தி ன் று கொண்டிருந்த முறுக்கிலே ஒரு துண்டு உடைத்துப் போட்டு விட்டுக் கேட்டேன். அது புத்தி யுள்ள காக்கையாக இருக்கவேண் டும். அதனல் என் புக்ழ்ச்சியிலே ல யி த் துப் போய் விடாமல் எனக்குக் கதை சொல்லுமுன் பாக தன் வருங்கால ஜீவனும் சத்
கொள்ளும் கருத்துடனே என் னைப் பார்த்து 'ஒரு நல்ல கதை சொல்லுகிறேன். அந்தக் கதை யை நீ என்ன செய்வாய்' என்று கேட்டது.

ăsa
‘'நீ சொல்லப்போகிற கதை யை உ ட னே பத்திரிகைக்கு எழுதி அனுப்பிவிடுவேன்" என் றேன்.
'பத்திரிகைக்காரர்கள் அதை என்ன செய்வார்கள் " " காக்கை uust rf (35"LT iii .
கையெழுத்து காக் காய் என்னவோ கி ள றி யது மாதிரி இல்லாமல் சுத்தமாகத் தெளிவாய் இருந்தால் பத்திரிகை ஆசிரியர் அதனை வா சித் துப் பார்ப்பார்."
** & Fair
*அதன் பின் ??? அப்படி யும் இப்படியுமாகத் தலையைத் திருப்பிக்கொண்டே கா க் கை யார் வினவினர்.
'அதன்பின் கதை அவர் மனதுக்குப் பிடித்திருந்தால் பத் திரிகையிலே பிரசுரம்செய்வார்?"
"அதனுல்?" - கர்க்கையா ரின் ஒவ்வொரு கேள்வி யும் வெடுக்கு வெடுக்கென்று என்னை மோதின. நான் பொறும்ையிழக் காமலே பதிலளித்தேன்.
'பத்திரிகையிலே கதை பிர சுரமாஞல் அப்பொழுது பலபேர் பறந்தடித்துக் கொண்டு அதனை வாசித்துப் பார்ப்பார்கள்."
“யார் யாரெல்லாம் வாசிப்
Lurrfissir?”
'எவவளவோ பேர் வாசிப் பார்கள். அதோ அந்த வாசிகசா
கள் முழுப்பேரும் நான் முந்தி நீ முந் தி என்று பேர்ட்டி போட் டுக் கொண்டு வாசிப்பார்கள்.
3. -
நாங்கள் பள்ளிக்கூட மானக்கர்க ளாயிருந்த நாளில் ஊரிலே ஒவ் வொரு வீட்டிலும் பிடி அரிசி சேர்த்து அந்தஅரிசி விற்ற காசுக் குப் பேப்பர் வாங்கிப்போட்டு வளர்த்த படிப்பக இயக்க ம் அது’.
* எதற்காகப் பறந்தடிக்க வேணும்? அச்சடிக்கிற தாள் சர்க் கரை மாதிரி இனிக்குமா?"
“சே சே இலக்கிய ரசிகர்க ளேப் பற்றி அப்படியெல்லாம் உன்னைப் போல நினைக்காதே. பத்திரிகையிலே அச்சாகி வந்தி ருக்கும் கதைதான் அவர்களுக்கு சர்க்கரை மாதிரி இனி க்கும். கதை சொல்லப்படும் தமிழோ கற்கண்டாகத் தித்திக்கம், கட தாசியை வீசிவிடுவார்கள். உனக் குச் சில சமயம் கூடுகட்ட உதவு வது அந்தக் கடதாசி தான்."
"ஆணுல் நான் சொல்லப் போவது சோகக்கதை’. காக்கை யாரின் குரல் கம்மியது
“அதனுலென்ன, அதையும் கூட நா இனிக்க இனிக்க நன்ரு கச் சுவைத்தே படிப்பார்கள்" என்றேன்.
'அதிசயம்ான படிப்பு மணி தர்களே விந்தையான படைப்பு என் இனத்தவருக்குள்ளே நேற்று ஒரு சாவு, பரிதாபமான சாவு. கண்ணுக்கு : முன்னலே து டி துடித்துப் பதைத்து மா ன் ட கொடுமை ?? காக்கையாரின் கண்களில் நீர் துளிர்த்தது.
'ஒகோ, அதுதானே பார்த் தேன் நேற்று மத்தியானம் இந்

Page 4
தப் பக்கத்திலேயே உங்களில் யாரையும் காணுேம்ே என்ன சங் கதி ஏது சம்பவித்ததோ எங்கே யாவது வெடிகுண்டோ எறி குண்டோ அல்லது பட்டாஸ் தானும் வெடித்துச் சத்தம் என் காதில் விழவில்லையே என்றெல் லாம் பல பல எண்ணினேன்.”
'என்ன ச ம் ப வித் தா லும் இந்த உலகிலிருந்து நாம் அறவே ஒழிந்துபோய்விட மாட் டோம். ஏன் யப்பான் காரன் கூடத்தான் இரண்டு தடவை வெடிகுண்டு போட்டுப் பார்த்
தானே. உனக்கும் நினைவிருக் குமே அது?
*பின்னே, மறந்துபோய் விடுமா என்ன? ஆனல் அதை
யெல்லாம் எதற்காக ஞாபகப் படுத் தி க் கொண் டு வீணுக மனத்தை அலட்டிக்கொள்கிறீர். காக்கையாரே? அந்தக் கோரத் தை நானும் என் கண்களால் பார்தேனே இப்பொழுது நினைத் தாலும் நெஞ்சம் துணுக்குறும். அப்பப்பா என்ன பயங்கரம் அது! தலைமேல் கை வைத்துக்கொண்டு வீட்டு மூலைக்குஒடி பெட்டி அடுக் குகளுள்ளேயும் படுக்கைக் கட் டில்களின் கீழும் பதுங்கியவர்க ளும், கடவுளைத் து தி த் து க் கொண்டு பாதுகாப்புக் குழிக் குள்ளே ஒடி ஒளித்தவர்களும் - ஊரெங்கும் ஒரே கூக்குரலாகிப் போச்சே உன் இன சனத்தாரோ வெடிகுண்டுச் சத்தம் - கேட்ட மாத்திரத்தே அங்கங்கு இருந்த படி - பறந்தபடி பொ த் துப்
4.
பொத் தென்று செத்து விழுந்
தார்கள். என்ன அக்கிரயம்! என்
numme
நெஞ்சுத்துடிப்பு நிற்பதற்கு எத் தனை நாள் ஆயிற்று காக்கை այfrGg | ”
"அதுதான் அந்த அக்கிரமக் காரருக்கெல்லாம் அன்றைக்கே சனியன் பிடிச்சது மாதிரி அவர் கள் உயர்த்திய போர்க்கொடி யின் கதை முடிந்ததே.'
* யுத்தத்திலே ஒரு வேளை ஜெயித் திருந்தால் ஆயிரப் பத் தாயிரம் க 1 க்கைகளைக் கொன்ற வீ ரர் க ள் என்று யப்பானிய விமானிகள் பரணி விருது பிரதர் பம் பெற்றிருப்பார்கள் காக்கை யாரே உன முகத்தைப் பார்த் தால் என் கையிலிருந்து அப்பத் தைப் பறித்துக்கொண்டு தலை யிலே குட்டி முகத்திலே பிருண்டி நாள் தோறும் அப்படிபழகி பரிச்ச யமான அதே பழைய காக்கையா கத்தான்தோன்றுகிறீர். என் சிறு வயதில் முகத்தில் பதிந்துவிட்ட தழும்பு இதோ இன்னமும் இருக் கிறது. அது உன் கண்களுக்குத் தெரிகிறதா? காக் ைக க் குல ம் சிரஞ்சீவியாக உயிர் வாழ்வதைப் போல எத்தித் திருடும் உங்கள் பழக்கமும் என்றைக்கும் நிலை பெற்றிருக்கிறது போலும். என் னவானலும் மனிதருக்கும் உங்க ளுக்கும் உள்ள உறவு இப் படி அழியா உறவாக வாழ் நாள் முழுக்கவும் நீடிக்கிறதே! பொழுது விடிகிறபோதே காக் ைக யார் குரல் கேட்டுத்தானே கண் விழிக் கிருேம். தோட்டத்திலும், வய லிலும், தெருவிலும், சந்தையி லும், கல்யாணத்திலும், சாவி லும் வாசலில், முற்றத்தில், வீட்

டினுள்ளே கூட தினமும் பார்த் துப் பழகிய முகம்; கேட்டுப்பழ கிய குரல். அவ்வித நெருங்கிய நீடித்த பழக்க தோஷத்தினல் தான் போலும் மனிதன பின மாகி விழுந்தபோது அவனைச்சுற் றிக் கூடி அவன் உடலைத் தொட் டுத் தழுவி அவனுக்கு கடைசி அஞ்சலி செலுத்துகிறீர்கள். சுடு சு rடு வரை பின்தொடர்ந்து வந்து பினத்தையும்கூட நெ ஞ் சா ர உகப்பீர்கள்!
வாய்க்குள்ளே ஒரு குறுஞ்
சிரிப்பு அரும்பக் காக்கையார் என்னைக் கூர்மையாக அவதானித் தவராய் 'ஒரு தடவை தான் நரியாரிடம் ஏமார்ந்தோம். அந் தக் கதை உலகப் பிரசித்தியாகி நாம் எல்லாம் ஏமாந்த காக்கை கள் என்று பரிகாசத்துக்கிடமாகி விட்டோம். இனிமேல் அப்படி நடக்காது. உ ன் ைம ைய ச்
சொல்லு நான் சொல்லப்போ
கும் கதையை நீ பேப்பருக்கு எழுதிக் கொடுத்தால் அதற்கு உனக்கு எவ்வளவு சன்மானம்
தருவார்கள்?' என்று கேட்டார்.
* ஏ தோ கொடுப்பார்கள் உசிதம்போல். கடைசி பதினைந்து ரூபாய் என்று வைத்துக்கொள் ளேன்' என்றேன்.
'சரி அப்படியானல் அந்தப் பனைத்தில் எங்களுக்கு எவ்வளவு செலவிடப் போகிழுய்? காக்கை யார் சட்டென்று இப்படிக் கேட் டுமடக்கியதில் நான் திகைப்ப டைந்தவஞய் 'சரி அதற்கென்ன ஒரு நாளேக்கு உங்களுக்கெல்லாம் கல்யாண விருந்தாக ஒரு விருந்து
போடுகிறேன். அது தவிர தின மும் ஒரு பிடி சோறு மதியவேளை அன்னதானம் வழக்கம் போல் நடக்கும். சம்மதந்தானே காக் கையாரே?' என்றேன்.
காக்கையார் தலையசைத்து சம்மதம் தெரிவித்தவராய் அதன் பின் கதையைக் கூற லு ற் ரு ர். அது ஒரு சின்னக் க ைத த ர் ன் என்ரு லும் நல்ல கதை. துயர மான கதை. அதனை இந்நாளில் வெளிவரும் சிறுகதை வடிவமைப் பில் ஜோடித்து உருப்படுத்திச் சொல்லலாம். சொன்னல். அது பின்வருமாறு அமையும்.
★ Ar
யப்பான்காரனின் போர் விமானங்கள் நூறு ஆயிரமாகச் சேர்ந்து வந்து செவி கிழி ய வெடிகுண்டுகளை வீசிக் காக்கை குருவிகளைக் கதிகலக்கி ஆயிரமா யிரம் உயிரைப் பலி வா ங் கி ய தைப்போல விஞ்ஞான யுகத் தின் ஒரு பொல்லாக் கொடு ைம எ ன் று சொல்லவேண் டும். ஊரெங்கும் மின்சாரவசதி அளிப்பதற்கென்று தொடங்கப் பட்ட கிராம அபிவிருத்தித் திட் டம் இலட்சிய சித்தி கண்டு அக் கிராமம் இப்பொழுது எங்கும் இருளை ஒட்டி, ஒளியினைப் பரப்பி நிற்கிறது. நெடுந்தூர விநியோ கத்திற்கென்று மின் சக்தியைத் திரட்டிச் சேமித்து ைவ க் கும்
மின்வாங்கியொன்று அந்தக்கிரா
மத்தில் தெருவோரமாக ஓரிடத் தில் அ ைமக்கப்பட்டிருந்தது. அதைச் சுற்றிலும் கம்பி வேலி போட்டு அபாய அறிவித்தலும்

Page 5
பிரசித்தம் செய்யப்பட்டிருந்தது. அந்த அபாய காந்தக் கூடானது மின்சர்ர இயக்க தொழில் நுட்ப வல்லுனர்களின் தேர்வு ப் படி ஒரு வீட்டுத் தெரு வாசலோடு சேர்த்தாற்போல அதற்குப் பக் கத்தே இடம் பெற்றுவிட்டது. அந்த வீட்டில் பள்ளிப் பிராயத் தினராக மூன்று சிறுவர்கள் தின மும் காலையிலே அப்பம், பிட்டு, தோசை என்று ஏதாவது ஆகா ரம் உண்ணும்போதெ ல் லா ம் அவர்கள் முன்னே வீட்டுவாசல் முற்றத்தில் கூடும் காக்கை கோழி களுக்கும் கி ஸ் O அ ள் வி ப் போட்டு அவைகள் பறந்தடிப் பதை வே டி க் கை பார்த்துக் கொண்டே சாப்பிடுவார்கள். தித்திப்புப் பட் சணங்கள் சாப் பிட்டபோதும் இது நடை பெ றும். வீட் டு வாச லி ல் நின்று பார்த்தால் தெரியும் அவ்வூர் கோயிலின் கோபுரத்தில் வசிக் கும் கோவில் புரு க் களும் சில தினங்கள் அவ்வீட்டு வாசலுக் குப் பறந்து வரும். புருக்களைப் பார்த்து விட்டால் சிறு வர் களுக்கு க ைர க ட ந் த மகிழ்ச்சியும் கொண்டாட்டமு மாகிவிடும். வீட்டுக்குள்ளே ஒடிச் சென்று தானியங்களை அள்ளிக் கொணர்ந்து போட்டி போடும் காக்கையையும், கோழியையும் அப்பாற் துரத்திவிட்டு புருக்க ளுக்குப் போடுவார்கள். அவை மிரண்டு வெகுண்டு நின்று தானி யம் பொறுக்குவதை ஆசையாக வேடிக்கை பார்ப்பார்கள். ஒரு நாள் காலை சிறுவர்கள் பள்ளிக்குச் செல்ல ஆயத்தமானுர்கள். லிழக்
6 -
கம்ாகக் காக்கைக்கும் கோழிக் கும் கிள்ளி அள்ளிப்போட்டு கீழே பாதி ம்ேலே பாதியாக பரக்கப் பரக்க அவர்கள் உணவருந்திக் கொண்டிருந்தபோது அவர்கள் தாய் குரல் வைத்துக் கூப்பிட்டுக் கொண்டே உள் வாசல்படியில் வந்து நின்று 'அடா பயல்களா, இன்றைக்குப் பள்ளிக்கூடம் மூடி யாச்சாம். சபாரத்தின வாத்தி யார் செத்துப்பேனராம் அடுத் தவீட்டு ஆறுமுகம், சி வ க் கொ ழுந்து ஒருவருமே போகவில்லை. நீங்களும் போ க வே ண்டாமி, என முள்.
பள்ளிக்கூடம் இல்லை என்று சொல்லக்கேட்ட மாத் திரததே அச்சிறுவர்களில் ஒரு ப ய லு க்கு அப்பொழுது உண்டான மனம கிழ்ச்சியில் தட்டில் வைத் துச் சாப்பிட்டுக் கொண்டிருந்த தோ சையில் பெரிதாக ஒரு பாதி பிய்த்து காக்கைகளுக்கு வீசிவிட் டான். கா க் ைக க ள் ஒன்ருே? டொன்று போட்டியிட்டுப் பறந் தடித்தன. சிறுவர்கள் அ ைதப் பார்த்துக் கூச்சல் போட்டு ஆர வாரம் செய்தபோது, அட்டமிச் சந்திரன் வடிவினதான பாதித் தோசை பல சிறு துண்டுகளாகி காக்கைகளின் வாய் இடுக்கினுள் சிக்கிக்கொண்டன. இரண்டுகாக் கைகள் விர்ரென்று மேலே தாவி காந்தக்கூட்டில் பொரு த் தி ய உச்சக்கம்பத்தில் அதற்குக் குறுக் கே ஒடிய கம் பி க ள் ஒன்றில் அ ம ர் ந் த ன. வாயில் கெளவி வைத்திருந்த ஆகாரத்தை கால் நகங்களின் இடுக்கில் வசதியாக வைத்துப் பிடித்துக்கொண்டே

இரண்டு காக் கை களும் த%ல குனிந்து அதில் ஒவ்வொருகொத் துக் கொத்தின. அந்தமாத்திரத் தே இரண்டு காக்கைகளும் படா ரெனச் சுருண்டு கீழே வீழ்ந்து காக்கைவலிகண்டு து டி ப் ப து போல் கால்கள் மடங்கி கண்கள் சொருகி இறக்கைகள் பட பட வென்று அடித் துக் கொள்ள தரை யில் அாண்டு துடித் தன. இரண் டும் நேரே கம் பி க்கூட்டுக்குள் ளாக வீழ்ந்து கிடந்த தி ன ல் அங்கு ஒடிவந்த சிறு வர் க ள் உள்ளே நுழையமாட்டாமல் கம் பிக்காப்பிட்ட வே லி யுடனே நின்று பரிதாபமாகப் u Trř5strř கள். அவர்களின் தலைக்குமேல் பல காகங்கள் வட்டம் சுற்றிப் பறந்து பறந்து கத்தி அழுதன.
சிறுவர்களில் ஒருவன், நீ கானேடா காக்கைக்குத்தோசை போட்டாய்! நீ போட்டதோசை யை வாயிலே கொத்திக்கொண்டு போய் கம்பியிலே உட்கார்ந்த கால் தானே அதுக்கு காந்தமடிச் சுது" என்று மற்ற வன் மேல் குற்றும் சும த் தினன். அதற்கு மற்றவன் 'போடா பேயா நான் மட்டும்தான போட்டேன் எல் nrrQöbsrraör GS Lj r - Grrib'' என்று தன்மேல் சுமத்தப்பட்ட பழிபாவத்தை எ ல் லோருக்கும் பகிர்ந்தளித்தான்.
அவர்களில் மற்ருெரு சிறு வன் கம்பிவேலியை ம ரு விஞற் போல நிலத்தில் குந்திவிட்டான். ஆட்டுக்குத்தீனியாகக் கொண்டு வந்து போட்டிருந்த பூவரசு க் குழைக்கட்டில் கைநீட்டி ஒருதடி
யை உருவி இழுத்து இலைகளைப் பிடுங்கிப்போட்டு விட்டுத்தடியை கம்பிகளினூடாக உள்ளே நீட்டி கைக்கு எட்டிய தூரத்தில் வீழ்ந் துகிடந்த ஒரு காக்கையைத் தடி யினல் தொட்டு நோண்டினன். மற்றக்காக்கை கை க்கும் தடிக் கும் எட்டாத்தூரமாக வீழ்ந்து கிடந்தது அத்துடன், மின் தாங் கியின் அபாய சிவப்பு எழுத்த! அறிவித்தல் ஒவ்வொரு நிமிட மும் அவர்களை எ ச் ச ரி க் கை செய்து கொண்டிருந்தது. "பா வம், முட்டாள் காக்கைகள் பள் ளிக்கூடம்போய் ஓர் எ முத் தா வது படித்திருந்தால் இந்த சிவப் பெழுத்து அறிவித்தலை வாசித் துப்பார்த்தாவது உயிர் தப்பியி " ருக்கலாமே!’ என்று ஒருசிறுவன் கூறி அனு தாப ப்பட்டபோது இன்னுெருவன் "இ ன் றைக்குத் தான் பள்ளிக்கூடம் இல்லையே -ா" என்று அதற்கு வி ைட பகர்த்தான். "சத்தம் போடா தீங்களடா அம்மா காதிலே எங் கள் பேச்சுக்கேட்டால் குரல் வைப்பா ? என்று அ வர் க ளில் வயதுக்கிளைய க ை டக்குட்டித் தம்பியைக் கடிந்து அவன் காதில் நிமிண்டி விட்டுக் கம்பிக்கூட்டுக் குள்ளே தடியை விட்டு காக்கை யைத் தொட்டு அதன் இறக்கை மேல் தடியால் தடவிக்கொண்டி ருந்த மூத்தவன், அசைவற்றுக்கி டந்த காக்கை அ ை சந்துஅதன் சுருண்டுபோன கால்நகங்கள் பச் சைத்தடியைப் பற்றிக்கொள்ள தடியின் மேல் அது எழுந்து நிற்க அதைக்கண்டு அதி ச ய படைந் தான். சோர்ந்து தியங்கி தடி

Page 6
யின்மேல் ஏறி உட்கார்ந்திருந்த காக்கையை மெல்ல வெளியே கொணர்ந்ததும் ஒரு சிறு வன் ஓடிப் போய் தண் ணி ர் கொ ணர்ந்து அதன்மேல் தெளிக்க,
காந்தமடிச்சு வீழ்ந்த காக்கையார்
எழுந்து மெல்லத் தத்தித் தத்தி நடக்கலாஞர்.
பச்சைத் கடி மந்திரக்கோலா கவும் மூத்தவன் பெரியதொரு மத்திரவாதியாகவும் மற்றிரு சிறு வர்களின் பார்வையில் உயர்ந்து நின்றனர்.
سست 8
ளுக்கு எட்டாத் தூரம்ாக வீழ்ந்து கிடந்ததனல் அதனை அணுக முடியாதிருந்தது. அதனல் அது அப்படியே கிடந்து செத் து போய்விட்டது.
காக்கையார் கூறிய சோகக் கதை இதுதான். காக்கையார் கதை யைக் கூறி மு டி த் த போ து
'ஆனல் இது முழுக்கவும் சோகக் கதை எ ன் று சொல்வதற்கில்
லையே. செத்துப் பிழைத்த சந் தோஷமும் கலந்திருக்கிறதே!’ என்றேன்.
செண்பக இதயங்கள் எரிகையில்
பா. செயப்பிரகாசம்
அர்த்த ஜாம நட்சத்திரத்தூசியாய் அர்த்தங்கள் விதைக்கும் - வார்த்தை அம்மன் கொண்டாடிகள் - அவர்
கைவிரல் தொட்ட
ஞான உடுக்கையில்
கால கீதங்கள் - உதிரும்
கால கீதங்கள்.
சேரி மனசுகள் சிந்திய கண்ணிரில் சிற்றின்ப வானவில்கள் - செல்வரின் சீதள யாத்திரைகள் - இன்று எழுத்துக் கிளிகளின் செண்பக இதயம் எரிதழல் நகலாகி - நாளை இன்ப சரித்திரங்கள்.
நன்றி:
வானம்பாடி - 10
யார் தோசை போட்டதினல் காக்கைக்கு காந்தமடிச்சு பழிபா வத்துக்குள்ளானுர்கள் எ ன் ற பொல்லாப்பு பாதி விட்டு நீங்கி யதாக மூன்று சிறுவர்களுக்கும் மனத்துக்குள்ளாக ஒரு "புளு
listi ''.
ம்ற்றக் காக்கையை சிறுவர் கள் காப்பாற்ற முடியவில்லை. அது கம்பிவே விக்குள்ளே அவர்க
காக்கையார் இதற்கும்ேலும் என் பேச்சுக்கு காது கொ டு க் க விருப்பமற்றவராகி "அ தோ குயில் கூவுகிறதைக் கேட்டாயா? சனியன் மறுபடியும் என் கூட் டுப்பக்கம் வந்து சுற்றத்தொடங் விட்டது. இப்பொழுதே போய் குட்டிக்கலைக்க வேணும். எங்கே இன்னும் கொஞ்சம் மு று க் கு க் கொடேன். நான்போகவேண்டும என்றது.

ஒரு துண் டு முறு க் ைக உடைத்து அதன் முன் வீசியதும் பாய்ந்து அதனைக் கொத்திக்கவ்வி காடுத்துக்கொண்டு பறந்தோடிப் போயிற்று. எழுந்து தெருவாயி லுக்கு நடந்தேன். ۔
உருபஸ் தெரு வோரமாக ஆங்கிற்று. கி ரா மத்துச்சாலே 1 ட சில மாதங்கள் முன்னதா கத் தான் நடைபெறத் தொடங் கிய புதியபோக்குவரத்த சேவை. அடுத்த, மற்ற கிராமங்களுக்கும் பட்டணத்துக்கும் நினைத்தவுட னே போகவும் போய் போனகா ரியம் முடித்துக் கொ ன்டு உட னே திரும்பவும் ஊர்மக்களுக்கு இந்தசேவை பலவிதத்தில் சவுகரி யமாய் இருந்தது.
பாதை ஒரமாக மரங்களின் நிழலில் அதற்குரிய த ரிப் புலா யத்திற்கு ஒதுங்கி ஒரு நிமிடம் தரித்து நின்று ஆட்களை இறக்கி ஏற்றி ஆச ன ங் களை நிரப்பிக் கொண்டு அதற்குமேல் தன் நாலு கால் பாய்ச்சலைத் தொடர மூர்க் கம் கொண்டு மீண் டும் மூச்செ டுத்தது. அதன் மேல் தட்டின் கூரை மரங்களின் கிளைகளை tՈ(5 வும். தெருவேலிக்கு அப்பால் எவ ரோ ஒருவரின் காணிக்குள் நின்ற மாவும், பலாவும் பஸ்ஸின் திரு மேனியை அவ்விதம் பசுமையாக தெ பட்டுத் தீண்டும்படி சிலகிளை களை தெருப்பக்கமாக நீட்டி நின் ይወቇ!•
பஸ் நகர்ந்து இ லை களையும் குழைகளையும் தடவிக்கொண்டு மெல்ல உருண்டபோது மாமரத் தில் கிப்ளக்குக் கிளை தாவி காயும்
9
நிமிடம்கால் கொள்ள,
கணியும் சுவைத்துஒடிவிளையாடிய
றுக்கோடு வழுவி பஸ்ஸின்மேல் தட்டுயன்னலூடாக உள்ளே நழுவி வீழ்ந்தது. அணிற்பிள்ளை யின் இந்த அவலம் பிரயாணிசள் கொலு அமர்ந்திருக்கும் பே ர வைக்கண் அவர்தம் உளப்பாங் கில் ஒரு நெகிழ்ச்சியையும் கிளு கிளுப்பையும் ஏற்படுத்தி அதுவே ஓர் அக்களிப்பும் உண ர் ச் சி க்
கொந்தளிப்புமாக அலை யடித்து மெல்ல அடங்கிற்று. அ ண நிற் பிள்ளை அங்கிருந்து தப்பி ஓட வழியும், தருணமும் பார் த் து
அங்குமிங்குமாய் ஒடித்திரிந்தது.
பேரூர்தி இடம் பெயர்ந்து பெரிதாக ஊர்ந்து அடுத்த தரிப் அலயம் சேர்ந்து ஆங்கொரு
DI LDDடில் கட்டணம்செலுத்தாமே தம் இலவச பயணத்தை முடித்தார் போல் அணிற்பிள்ளையார் வெளி யேபாய்ந்து மற்ருெரு மரத் துக்குத் தாவினுர்-தப்பி ஓடினர்,
எதிர் வீட்டு வாச லி லே பொல் லூன்றி நின்ற கிழவனர் பஸ்விட்டிறங்கி வந்த சிறுவர்தம் முகம் நோக்கி "எங்கு போய் வரு
கிறீர்கள் பிள்ளைகள்? என அன்
urtas 65968ir6jauntorri.
நீண்டகாலக் கொ மும் பு வாசத்தின் பின் பள்ளிநாள் சோ டைவிடுமுறை கழிக்க கிராமம் திரும்பியிருக்கும் சிறு வர் க ள் அவர்கள்.
* கீரிமலைக்குப் போனுேம் தாத்தா, நீராடிவிட்டு தொழிற்.

Page 7
சாலையையும் சுற்றிப் பார்த்துக் கொண்டு வருகிருேம்.
முதியவருடனே கலந்துரை யாடி மகிழும் இளங்கதிர் செல் வர். அவர்தம் குதலை ம்ெ ரா ழி கேட்டு இன்புறும் தாத்தா.
பஸ்ஸில் நடந்ததை முதிய வரிடம் கூறி துதித்த பிள்ளைகள் நீரூற்ருடி வந்த புத்துணர்ச்சியு டனே கிழவனர் கூட அங்கு நின்றே அதன்மேலும் சிலவேளை கலந்து ம்கிழ்ந்து குலவுவர்.
இங்கெல்லாம் முன்புநின்ற நிழல் மரங்களைக் கானே ம்ே தாத்தா. எ ன் ன வோ நாற்ற மடித்து மூ க் ைகப் பிடுங்கிறதே சுற்று முற்றும் தேடும் நோக்கின ராய் மூக்கைப்பிடித்து நிற்கு ம் சிருரிடம்.
நூ ற் று க் கணக்கான நிழல் ம்ரங்களை வெட்டிச் சாய்த்து விட் டார்கள் நிழல்மரங்கள் நின்ற இடத்திலேதான் ஒளிதரும் மின் தந்தி ம் ரங்களை பார்க்கிறீர்கள், பிள்ளைகள்.
எல்லா, நாளும் எல்லா மரங் களிலும் போய் குந்தும். வழக்க ம்ாகப் பறவையார் இந்த நச்சு மரத்துக்கும் தா வி யிருக்கிருரர். அதனுல் காந்தம் பாய்ந்து செத் துப்போய்க் கிடக்கிறர். அதோ!" என்று காண்பித்த போது, சிறு வர் ஓடிப்போய் சேத்துக்கிடந்த பறவையைக் கையில் தூக்கிப் பார்த்துவிட்டு "மாங்குயில் புள் ளிக் குயில் தாத்தா. இதன் நாற் றம் தான் இங்கெல்லாம் வீசி நம் மூக்கைப் பிடுங்கியது. எங்கேயா
10
வது தூரத்தே கொண்டுபோய் வீசிவிடுவோம்" என்பர். அப்ப டியே செய்யுங்கள்.
'நிழல் மரங்களிலே கிளைக்கு கிளை தாவி இராப் பகலாகக் கூவி கானம்பாடி மாந்தர்தம் செவியா ரத் தேன்வார்த்த இனிய பறவை யல்லவா தாத்தா, அதன் உடல் இப்படி நாற்றமடிக்கக் சிட்டாது. கொண்டு போய் குழிதோண்டிப் புதைத்து விடுவோம்"
"ஒமோம், அப்படியும் செய் யலாம், செய்யவேண்டியதுதான் செய்யுங்கள்".
காக்கைகள் கூட்டம் சுடி மாங்குயிலைக் குட்டிக் கலைத்திருக் கும். அதனல் தான் குயில் பிள்ளை தெறிகெட்டு ஓ டி ப்போய் மின் காந்தக் கம்பத்தில்மோதி காந்த மடிச்சு அ ப் ப டி சு ரு ண் டு விழுந்து மாண்டிருக்க வேணும் பெரியவர் து ய ர க்குரலில் அனு தாப உரை வழங் க வும், ஏ ன் தாத்தா குயிற்பிள்ளையைக் காக் கைகள் வி ர ட்டுகின்றன.? என வினவினர்.
"எப்பவுமே அப்படித்தான் குயிற்பிள்ளைகளைக் கா க் கைகள் கண்ணில் கண்டாலே குட்டித்து ரத்தும். காக்கையும் சே வலும் நமக்குப் பொழுதுவிடிய தினமும் சங்கு முழங்குவன என்ருல் குயிற் பிள்ளையோ கோ டை வெயிலை வசத்த நிலாவாக்கி தீங்கு ர ல் கான அமுது வழங்கி நம் ைம மகிழ்விக்கும். இவ்விதமாகவெல்
லாம் மனிதர்கூட அவர் தம்

விாழ்வுக்குச் சுவை ஊட்டும் இப் பறவைகள் தமக்குள் ஏன் பொல் aut Li u 606 u T U rr L. GGuar . ''' அது நாம் அறியக்கூடுவதில்லை.
தாத்தா அதன் மேலும் சொல்வார்:- வி ர், திரை வை கா சி மாத நிறை , லா, சோ லைமரங்களில் கூடித் துயிலும் காக்கைக்கும் குயி லுக்கும் வசந்த ருதுவின் இன்னு னர்வை வ ஞ் சிப்பதில்லை, ஏக சமத்துவமாகவே வாரிவழங்கும். அப்போதெல்லாம் அ வை ஒன் றையொன்று கண் கா ஞ மலே ஒரேமரத்தின் கிளைகளில் அங்கங் கு துஞ்சும் நிலை யி ல் ஒ ரோர் சமயம் கதிர்மதியம் கண்குத்த அது ஆற்ருமல் கூடிக்குரலெழுப் பி ஒயும். இராமுழுதாக இன்னி த மாரியாக "வர்ஷம் பொழியும் இப்பறவைகளின் கானம் மாந் தர் குலத்தினை இன்பக்கிளுகிளுப் பில் ஆழ்த்தும் சஞ்சீவி மாருதத் துக்கு ஒப்பானதென்றே சொல்ல வேண்டும்.
எங்களூர்த் தெருவிலே இன் றைக்கெல்லாம் பஸ் ஒ டு கிறது. பிள்ளைகள் தெரு வி லே சோலை பரப்பிய நிழல் மரங்களின் கிளை களை அதற்காகவும்தான் வெட் டிச் சாய்த்தார்கள். இதகுலெல் லாம் தெருவிலே கோடை - இவ் வாண்டு நீண்டகோடை.’
صصحسچینج>ے ححesس~
அணுவசியமான தி யாகங் களைத் தவிர்க்க நாம் இயன்றத னைத்தையும் செய்ய வேண்டும்.
- மாஒ (1944) -
1.
,醬謚懿鬆艦懿懿謚懿器鬆臨謚議翻
கறுப்பு முகங்கள்
தொலைவில் மெல்லியதாய்க்கீறியதைப் பருக,
நோக்கிவிரைய
கீறல்
விலகிநகரும்
இருட்டுள் ஆழ்ந்ததவிப்பில் கீறலில் நனைந்து சுவைக்க, களைபடிந்த பிம்பத்து விழிகள் திறந்தபடி பார்த்திருக்கும் அருகினில் ஒட்டைப் போர்வையுள் ஒளிந்த முகங்கள் சுருங்கிக் கருமை படர, தொலைவின், திருப்பத்தில் கீறல் அருக நெருங்கி வருதலை உணர,
ஒட்டையுள்ளே
கறுப்பு முகங்கள்
தலையை நீட்டி எட்டிப் பார்க்கும் .
- பாலசூரியன்
輕露露醫顯翼翼露露羅羅劉露露露劉

Page 8
கவிதைகள் நெடும்பயணம்
இளவாலை, விஜயேந்திரன்
தொடுவானம் தொலைவின் தொடரவில் தொடவென்றே ஒருசோடி தடங்கள்
தொடர்கின்ற அந்தச் சிறுபாதை மீது சிலதடங்கள் பதிந்திருக்கும்.
யுகராகம் பாடுகிற ஒருகோடி மானுடத்தின் துளித் தெய்வ மொன்று நடந்த தடங்கள் தாம் .
நிழல்வீழும் சில போதும் நிறைகின்ற இருள் நாளும் துல்லியமாய்த் தடங்கள் - கண்களிலே வந்துவிழும்.
அகன்ற இருதடங்கள் அலேந்த பாதையிலே தொடர்ந்து சிறுதடங்கள் சோடி எனப் பதியும் .
தோடர்ந்தும் விழிதுழாவிக் கண்ட தடங்களோ ஒரு மொட்டின் காம்பென்று நலிந்திருக்கும்.
மூவிரண்டு தடங்கள் முன்நகரும் கால இழைவில் - அகன்ற இருதடங்கள் - அகன்ற துயரம் வரும் . . இருசோடி மீந்திருக்கும்.
மிகமெதுவாய் மண்மீது பதிந்த தடமொன்று - தொடர்ந்த்ங்கே அழுந்த ஊன்றிவரும் அகன்ற தடங்கள் வரும்.
ஒருபோதில் விலகும். விலகும் தடங்களினை விழியின் நீர் நனைக்கும் . .
தொடர்ந்தப் பாகையிலே துணிந்து இருதடங்கள் பதிந்து வரும்.
தொடுவானம் தொலைவினிலே விழிபூத்துக் காத்திருக்கும்.
O O
'குறிப்பிட்ட ஒரு கணத்தில் இருப்பதும், அக்கணத்தில் சாத் தியமானதாக இருக்கும் போ ராட்ட வடிவங்களுக்கும் மார்க் சிசமானது தன்னை மட்டுப்படுத் திக்கொள்ளாது. ஏனெனில் அது தரப்பட்டுள்ள சமூக நிலைமாறும் பொழுது புதிய போராட்ட வடி வங்கள் அ த ரீ வது ஒரு குறிப் பிட்ட காலப்பகுதியின் போராட் டத்தில் பங்கு கொள் ஞ பவர் களுக்குத் தெரியாத போராட்ட வடிவங்கள் தோன்ற முடியும் என்று ஏற்கின்றது. (லெனினின்
நூல் திரட்டு, -2-பக்கம் 213)

நாளைய நாளும் - நேற்றைய நேற்றும் -
முன்னே - முகிழ்க்கின்ற பனிப் போர்வையிலும் தோளின் சால்வை தூக்குதலை இன்னும் நாங்கள் பேணவில்லை.
*அவர்கள் தாமே மனிதரென் ருர் ‘நாமும் நாமும்’ என்ருர்த்தோம். சுவர்கள் - சுற்றி எழுந் திருந்தன. தகர்த் தெறிந்தோம்.
சுவர்கள் தகர்க்கப் படும் போதில் கற்களெம் மீதில் விழுந்தன தாம். ஓய்வுக்குள் தலைபுதைக்க மறுத்துவிட்டு தொடர்ந் தார்த்தோம்; தகர்த்தோம்.
எமக் கென நிலவுபால் வீசும் எத்தனை பொழுதுகள் செத்திருக்கும். நினைக்க வியர்க்கும் - எனினும் முனைப்பு முடிவிடத்தில் சுவர்கள் வீழ்ந்தன.
வெற்றி எனச் சிறு நினைப்பில் ஊறினுேம். கால்கள் - அத்திபாரக் கல்லில் தடுக்குது. தோள்கள் மலையெனத் தொடுத்து வைத்திருக்கிருேம். நாளைய நிகழ்விற்காய்!

Page 9
சஞ்சயன் பக்கங்கள்
சஞ்சயன் பக்கங்கள்
அவள் அப்படித்தான் என் ருெரு படம் சில வாரங்களுக்கு முன் ஒரு 28" அங்குல ரெலிவிச னில் வெகுசனங்களோடு வெகு சனமாக இருந்து பார்க்க (மடிந் தது. களைப் பொறுத்தவரை அந்தப்ப டம் கொஞ்சம் அதிக பட்சம் தான். இருந்தபோதிலும் கமல ஹாசனையும், ரஜனிகாந்தையும் பூரீப்பிரியாவையும் நம்பிமட்டுமே ஏராளமானவர்கள் வந்திருந்தார் கள். பல இடங்களிலும் அந்தப் படம் எல்லோரையும் ஏதாவது ஒரு reaction தர வைத்தது.
இன்றைய எ ம் து சமூக அமைப்பால் பெண்களின் நிலை யை இனங்காட்டுவதும், விமர் சிப்பதும் என்ற தரத்தை கொஞ் சம் தொட்டிருப்பது படத்தின் சிறப்பம்சம். ஆண்களிடமிருந்து ஏமாற்றத்தையும், வெறுப்பையும் Sex இற்கான எதிர்பார்ப்புகளை யும் மட்டுமே பெற்றுக்கொண்ட மஞ்சு, பெண் களைப்பற்றி ஒரு விவரணத் திரைப்படம் தயாரிக் கிற Intellectual அருண் ஆகிய இரு வ ரு ம் த ரா ன் படத்தின் மையம். பெண்களுக்கு இந்தச் சமூக அமைப்பில் கிடைக்கும் ஒரு இரண்டாம் பட்சமான நிலையை ஒரு வகை அ டி ைம த் தனத்தை அறிவு பூர்வமாகத் தாங் கிக்
சாதாரணமான ரசிக ர்
ச ஞ் சயன் பக்கங்க ள்
கொள்ள இயலாத பாத்திரமாகச் சித்தரிக்கப்பட்டுள்ள மஞ்சு எ ல் லா ஆண்களை யுமே வெறுக்கும் ஒரு இ ய ல் பு கொண்டவளாகக் காட்டப்படுவது அந்தப் பாத்தி Uá 96ăr Maturity á(5 l’i (où Luft ருந்தாததுபோல் தோன்றுகிறது. படத்தின் முடிவிலும் கூட திரும ணமாகி வரும் அருணின் மனைவி யிடம் வுமன்ஸ் லி ப ரே ஷ ன் பற்றி என்ன நினைக்கிறீங்க என்று கேட்க, மிகவும் கி ரா மத்துத் தன்மைகொண்ட அந்தப்பெண் இவள் என்ன கேட்கிருள் என்ற மாதிரி அருணை வினவ அருண் கேள்வியை விளங்கப்படுத்திய பின் அதுபற்றி எனக்கு ஒன்று மே தெரியாது எ ன் கி ரு ள். நீ கொடுத்து ைவ ச் ச வள் என்ற தொனிப்பட மஞ்சு பதில் கூறு வது இதுவரை காலமும் பெண் கள் தொடர்பாக அவள் வைத் திருந்த க ரு த் துக் களிலிருந்து அவள் பின்வாங்கு வதாகவும், யதார்த்தத்தில் பெண்களுடைய உரிமை, சமூகத்தில் அவர்களுக் குக் கிடைக்கவேண்டிய சரியான நிலை போ ன் ற வற்றில் அவள் நம்பிக்கை இழந்ததாகக் காட்டு வதாகவும் உள்ளது. இந்த இடத்
தில் தி. ஜானகிராமனின் மரப் பசு நாவலையும் நினைவு கொள்
வது பொருந்தும் அந்த நாவலில் வரும் அம்மிணி என்ற பாத்தி

ആ 15
சஞ்சயன் பக்கங்கள்
ாம் சில தன் ைம க ளி ல் மஞ்சு (வாடு உறவாகிறது. நாவலிலும் (pடிவில் வித்தியாசமான ஒரு பெண் என்கிற நிலை யிலிருந்து Vynu 6ir இறங்கி விடுகி /bான் மிக வும் இந்த ச் சமூக அலிப்பில் பெண் களு க்குரிய நீசியையே அனுசரித்துப் போ ஷ் போல.
எனவே பொதுவாக பிரக்
ஞையுள்ள தமிழ்க் கலைப்பரப் பில் வித்தியாசமான, முற்போக் கான சிந்தனையுணர்வுள்ள பெண் கள் தவிர்க்க இ ய ல |ா த வாறு மீண்டும் சமரசங் கொண்டு போ ற து போலவே சித்திரிக்கப் பட் (டுள்ளார்கள். (ராஜம் கிருஷ்ண னின் "வீடு" வித் தி யாசமான (கொரு முயற்சி எனினும் அந்நா ல்ை எவ்வளவு தூரம் இலக்கிய ம 1 கி யி ரு க் கி றது என்பது 1argsrðar.)
எனவே இச்சமரசம். மொத் தமான ஒரு சமூகமாற்றம் ஏற் படும் வரையில் இடையில் உள்ள இவ்வாருன முற்போக்கான சிந் தனையுடைய பெண்களின் விதி என்ருே அல்லது தனித்தனியாக இப்பெண்களுக்கு இப்படித்தான் முடிவு என்று சொல்வதன் மூலம் பெரும்பாலான சிந்தனுபூர்வமா கவும் விடுதலையுணர்வற்று பெண் கள் மத்தியில் இத்தகைய ஓரிரு பெண்களின் வெளிப்பர்டு சமூ கத்திற்கு ஒரு கா ட் சி ப்பொரு ளாக மட்டுமே இருக்கும் என்று செல்வதுபோல் தெ ரி கி றது.
இது உண்மைதான் எனில் இத் தகைய சம்ரசங்களும் ஒ ர ளவு நியாயப்படுதல் தவிர்க்க இயலா தது. கவிதைகள் போல அமைந் துள்ளன. எனினும் சில இடங் களில் Documentary யின் சாயல்
யாளர் ருத்ரய்யா பட த் தி ன் Lao Frame Usaifiii) 3567 2NT 2d - py
னும், வ ச ன ங் களை ப் பற்றிச் சொல்லித்தான் தீர வேண்டும். இந்தப்படத்தின் வெற்றி என்று சொல்ல நினைத்தால் மு த லில் முழுவதும் வசனங்களுக்குத்தான் பல இடங்களில் கவிதையாகிறது. சில இடங்களில் ஊசியாகிறது. வண்ண நிலவனுடைய வசனம்
என்று செர் ன்னுர்கள் மிகவும்
மகிழ்ச்சியாக இருந்தது. ★ у
மார்ச் மாத மல்லிகை இத ழின் தூண்டில் பகுதியில் ஒரு கேள்வி இருந்தது. க ர வெட்டி சி. மகேந்திரன் என்பவர் கேட் டதாக அவசியம் எ ல் லோரும் அந்தக் கேள்வியையும் அதற் கான ஜீவாவின் பதிலையும் படி யுங்கள் தூய அழகி யல் பற்றி வாய்ச்சவடால் அடிப்பவரென் றும் "வால்ரியூப்" புகழ் அறிஞர் என்றும் ஒருவரைக் கறிப்பிட்டு அவருடைய புத்தகத்தினைப் பற் றிக் கேள்வி கேட்டிருந்தார்.
கேள்வி ம ைற மு க ம .ா க அ. யேசுராசாவைப் பற்றியே இருந்தது. ஜீவா வும் பதிலின் ஆரம்பத்தில் கேள்வியில் யாரைக்

Page 10
சஞ்சயன் பக்கங்கள்
16
ரைக் குறிப்பிட்டிருந்தது என்று அரியாதவராய் யோசித்து (?) பின் னர் உணர்ந்து கொண்டவராய் (ஓ) பதிலளித்திருந்தார். கேள் வியில் சம்பந்தப்பட்ட புத்தகம் அ. யேசுராசாவின் "தொலைவும் இருப்பும்" ஏனைய கதை களும் அட்டை அம்ைப்பு. செள முன் னுரை -சண்முகம் சிவலிங்கம்.
மனதில் எரிச்சலை ஏற்படுத் தும் கோழி குப்பையைக் கிளறி யதுபோல அழகு என்று ஜீவா
"சென’ அந்தப் புத்தகத்தின் அட்
டையில் வரைந்திருக்கும் நவீன ஒவியத்தைப் பற்றிச் சொல்லும் போது நவீன ஒவியங்களுடனுண ஜீவாவின் பரிச்சயமின்மைதான் வெளிப்படுகிறது. அந்தத் தொ குதியிலிருக்கும் சிறு கதைகளுக்கு சண்முகம் சிவலிங்கம் முன்னுரை யில் எழு தி யிருக்கும் வி மரி சனத்தைவிட இனிமேலும் அறிவு பூர்வமான விமரிசனங்கள் வரும் எ ன் ற நம்பிக்கை எ ன க் குச் கிடையாது. ஒரே குப்பை, ஒரே கஞ்சல், விரக்தி, வெறு ப் வு எரிச்சல், பொறுமை, நபுஞ்ச கத்தனம் இத்தனையும் நிர விய ஒரு படைப்பு என்று ஜீவா அதி லுள்ள கதைகளைச் சொல்லும் போது,
அன்புள்ள ஜீவா,
அந்தச் சிறுகதைத் தொகு திக்கு சாகித்திய மண்டலப்பரிசு
கொடுக்கும்போது நீங்களும் ஒரு * கெளரவ சாகித்திய மண்டல
உறுப்பினரல்லவா? அப்படியா னல் ஒரே குப்பை ஒரே கஞ்சல் ஆன ஒரு சிறுகதைத் தொகு திக்கு எவ்வாறு நீங்கள் பரிசு கொடுக்கச் சம் ம தித் தீர்கள். ஜனவரி 76 ம ல் லி கை யி ல் ஏ. ஜே. கனகரத்தின அக்கதைத் தொகுதியை மல்லிகையில் விமர் சித் திருந்தும், மல்லிகையில் விமர் சனத்திற்குத தகுதியில்லை என்று நிராகரிக்கப் பட்டது. எ ன் று நீங்கள் சொல்வது எந்தவகையில் சேர்த்தி? இது ஒரு பெ ரிய முரண்பாடில்லையா ஜீவா என்று கேட்க வேண்டும் போ லி ரு க் கிறது.
யேசுராசாவின் கதைசொல் லும் தன்மையைப்பற்றி சண்மு கம் சிவலிங்கத்துக்கு மட்டுமல்ல எந்த ஒரு நல்ல இலக்கிய கார னுக்கும் இரண்டாவது கருத்து இருக்க முடியாது. "தொலைவும் இருப்பும்" தொகுதியில் உ ஸ் ள கதைகள் ஏறக்குறைய அனைத் திலும் நறுக்குத் தெ நித் தாற் போல வெட்டான அ ழ கான ஒரு நடை உள்ளது. உள்ளடக் கத்தைப் பிரச்சனையாக எடுக்கா மல் சுஜாதாவின் ந ைட ையப் பற்றி மிகவும் சி லா கிக் கிறீர் களே. (அதே இதழ் துர ண் டில்) தொலைவும் இருப்பும் கதைகளைப் பற்றி At least உங்களுக்கு அப் படியேனும் பார் க் க முடியாது போய்விட்டதா? அஸ்வகோஷ் வண்ணநிலவன், பூ ம் னி எ ன் றெல்லாம் நீங்கள் நல்ல இலக்கி யத்தைப்பற் ச்ெ சக ரி ப் பி டும்

- 17
சஞ்சயன் பக்கங்கள்
போது எழு வ தெல்லாம் இப் போது எங்களுக்கு வெறும்போ லியாகத் தெரிய ஆரம்பிக்கிறது. இறுதியாக இப் படி ஒரு கே. உங்களுடைய வாசகர் மிருந்து வந்திருக்கும் என் . எனக்கு ஒரு நம்பிக்கையி இருக்கிறது. கேள்வியிலும் பிலும் ஒரு செயற்கைத்தனம் தெரிவதுதான் இந்த நம்பிக்கை யின்மைக்குக் கார ண ம் வேறு ஒன்றுமல்ல.
" ( ، وفي
3
இலக்கியம் எ ன் ரு ல் நாங் கள் ப ைட ப் பதுதான் என்று சொல்லிக்கொண்டு வெளிவருகிற சஞ்சிகைகள் நடுவே அடக்கமாக மணிமணியான கவிதைகளையும் தரமான சிறுகதைகளையும் நல்ல
விமர்சனங்களையும் வெளியிட்டு வருகிறது. “சிரித் தி ரன்’ மாத இதழ் நகைச்சுவையின் இ லக்கி யத் தரத்திற்குப் பி ர தி ய ட் ச மான உதாரணம் எம்மிடையே யும் உள்ளது என்பது ஆறுதல் தரும் ஒரு விஷயமாகும், சமகால நிகழ்வுகள் உடனடியாக கேலியு டன் கிண்டலுடன் சிரித்திரனில் வெளிப்படும் அழகு ரசிக்கத்தக் கது. இவ்வளவிற்கும் ஆணி வே ரான ஒருவர் சி. சிவஞானசுந்த ரம் என்கிற "சுந்தர்" ச ந் தர்ப் பம் கிடைத்தால் ஒருமுறை நீங் கள் சந்தித்துப் பாருங்கள். மணி தர்களின் இன்னெருவகை யான
பரிமாணம் உங்களுக்குத் தெரி யக்கூடும்.
கவனிக்குக:
சஞ்சயனின் இரண்டாவது பக்கத்தில் ள்ம்ம்ை மீறிச் சில சொற்கள் விடுபட்டுப்போய் விட்டன. இப்பக்கத் தின் இரண்டாவது Colum இன் நான்காவது வரியில்
'கவிதைகள் வோல் அமைந்துள்ளன"
எ ன் ப தை
திரைப்படத்தில் பல இடங்களில் காட்சிகள் கவி தைகள் போல் அமைந்துள்ளன. என்று திருத் தி க்
கொண்டு மீளவாசிக்கவும்.
நிகழ்ந்துவிட்ட தவறுக்கு கிருர்கள்.
'புதுசுகள்" வ ரு ந் து

Page 11
- 18 -
பறந்து போகும் சிறகு
காற்றின் நரம்புகளில் மின் விசிறிகள் சுழலும் ., மெலிதாய்ப் பட படக்கும் காகிதங்கள்,
உரத்ததென Lecturer g6ör (5T (3.a) IT60) 3சிலவேளை நிலம் உராயும் செருப்புக்கள். (தொடர்ந்தபடி. எப்போதெனினும் இருமல் -)
மற்றபடி அமைதி தழுவி வரும் Le C ture ro om. முன் வரிசைக் கதிரைகளில் முகங்கள் நிரம்பி - எனப் பின்னுக் கனுப்பி விடும் போதுகளில் - எப்போதும் இப்படித்தான்:- மெதுவாய் இறகு கட்டி மிதந்தபடி வெளியேறும் என் மனது - எனினும், சமயங்களில் மீண்டும் திரும்பி வரும் மணி பார்த்துப் போக என -
கவியரச
தூரத்தில் ரயிலோசை துவங்கி விட - இங்கிருந்து Le vall Cros sing மணி ஒலிக்காய்க் காத்திருக்கும் பின்னர் - கட கடத்து ரயில் கடக்கப் பெட்டிகளை எண்ணுதற்காய்ப்

مس 19 مسته
பெரும்பாலும் தோல்வியுறும்; முன் கதிரைக் குழிவுள் முஅதுகு சரிந்தபடி உட்கார்ந் தெழுதும் ஒரு பெண்ணின்,
பிடரிக்குள். கறுப்பாய்ச் சுருள் கொண்டு நெளிந்திருக்கும் பூனை மயிர்க் கற்றைகளை நிமிண்டி விட விரல் நுனிக்குப் பசி கொடுக்கும்; இடையிடையே விழி நிமிர்த்தி Black Board g6) மேய்ந்தாலும் ,
நாளைக்குமுன் வரிசைக் கதிரைகளில் போய் அமரும் எண்ண உதித்தெழவும் மீண்டும் வெளிப்பறக்கும்;
Degre e Qypiq-b5 36ð7
உடலோ - தனித்தபடி Interview (8. u Tuiu iš SC5b i'u போய்த்திரும்பிப் போய்த் திரும்ப - எப்போதும் போல ஈர்ப்பு விசை எதுவுமற்று வெளியில் திரியும் *இது - தூவி இறகாக என்
மனது.
05-01-1979

Page 12
*பெண்கள் வெறும்ே இன் பம் தரும் சடப்பொருட்கள்" என்ற கருத்தே நீட்சே எனும் மெய்யியலாளனின் பெண்க ள் பற்றிய கருத்தின் அடிப்படை போல் தெரிகிறது. இக்கருத்தைக் கேட்கும்போது பல பெண்க ளுக்கு - ஏன், சில ஆண்களுக்குக் கூட- ஆத்திரம் வரலாம். ஆனல்
சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள் வர். காரணம், அவர்களது சுய நலம் பெண் வெறும்ே சடப்பொ ருளாக இல்லாது ஒரு அறிவு ஜீவி யாக- சிந்திப்பவளம் க - தன் தகுதி அறிந்தவளாக மாறிவிட்ட ஈ ல் தங்களிலும் மேம்பட்டு விடு வாள், தர்ம் தவறி ைழ க் கும் போது தட்டிக் கேட்பாள் என்று அவர்களுக்குள்ள பயம். லேயே காலம் காலமாக பெண் களை அடிமைகளாக்கி, அவர்களை முன்னேற விடாவண்ணம் சமூக அமைப்புகளையும், அவற்றி ன் விதிமுறைகளையும் உருவாக்கி வந்
திருக்கிருர்கள். இதற்கு அவர்க
ளது உடல் பலமும், பொருளா தார பலமும் உதவி புரிந்து வந்தி ருக்கின்றன.
இத்தகைய சமூக அமைப்பு முறை அண்மையில் தோன்றிய
தல்ல. கீழைத்தேயத்தில் ம்ட்டும் காணப் பட்ட தொன்றுமல்ல. பழைய காலத்திலிருந்து ஆண் வெளிவேலைகளைச் செய்ய, பெண் வீட்டு வேலைகளைச் செய்வதென் பது ஒருவித தொழிற் பிரிப்பாக, அதாவது ஒவ்வொருவரும் செய்ய வேண்டி இருந்த வேலைகளை எளி தாக்கு முகமாக கொண்டு வரப் பட்ட ஒரு வழக்கமாகவே இருந் தது. பின்பு இத் தொழில்களில் சிறப்புத்தேர்ச்சிபெற்ற அவர்கள் தொடர்ந்தும் அத் தொழில்க ளையே செய்து வந்தனர். ஆனல் காலப்போக்கில் இந்நிலைமை சிறி துசிறிதாக மாறத் தொடங்கிய தால் தொழில்பிரிப்புச் செய்யப் பட்டிருந்த முறையும் மாறவேண் டிய நிலை ஏற்பட்டது.
ஆதிகாலங்களில், அதாவது நாகரிகம் அல்லாத அல்லது அவ் வளவு வளராத காலகட்டங்க ளில் இத் தொழிற்பிரிப்பு முறை யில் அதிகம் பிரச்னைகள் எழ வில்லை. ஆனல் நாகரிகம் வளர வளர, அறிவு விருத்தியடையத் தொடங்க, இவ் வளர்ச்சியில் - இவ்விருத்தியில் பங்கேற்பது யார் என்ற பிரச்னை எழுந்தது அப் போது வெளியில் சென்று உழைத்து அதனுல் கூடிய தன்
பெண்கள் வெறுமே இன்பம் தரும் சடப்பொருட்கள் மட்டுமா?
செல்வி மைத்ரேயி சபாரட்ணம் பேராதனைப் பல்கலைக் கழகம்.

னம்பிக்கையும், பரந்த அறிவும்,
பலமும் பெற்றிருந்த ஆண்வர்க்,
கம் தன் னி யக் க ம ன க வே (automatic) ggai) LuiG-5 figs
முன்னணியில் திகழ்ந்தது. ஆனல்
அதே வேளை, தொழிற்பிரிப்பின் காரணமாக வீட்டுத் துறையைப் பொறுப்பேற்று, அவ்வளவு கால மும் உள் முடங்கிக் கிடந்ததால் சுயநம்பிக் கையும், பொது அறி வும், அனுபவ ஞானமும் குறைந் திருந்த பெண் வர்க்கம் வெளியுல கம் விரிந்து பரந்து செல்வதை உணராது கிணற்றுத் தவளைக ளாக வாழத் தலைப்பட்டது. இதற்கு விதி விலக்காக ஒரு ஒளவையோ அல்லது ஒரு மேரிக்
கியூரியோ இருந்தாலும் பெரும்
பான்மையான பெண்கள் இனப் பெருக்கத்தைத் தவிர வேறெந்த ஆக்கபூர்வமான செயலிலும் ஈடு படவில்லை. அவர்களை இந்நிலையி லிருந்து மீட்பதற்கு அப்போது முன்னேறியிருந்த ஆண் வர்க்கம் தனது சுயலாபம் கருதி எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.
ஆனல் காலம் செ ல் ல ச் செல்ல ஆண்கள் தொழிற் பிரிப் பில் தமக்களிக்கப்பட்ட வேலை யை, அதாவது "உழைத்து வீட் டைக் காத்தல்" என்ற பணியைச் செய்யாது வழுவத் தொடங்கிய போது - கூட்டுக் குடும்ப முறை (joint family system) all géi) லாதொழிந்த போது 4 பெண் வீட்டை விட்டு வெளி வந்து உழைத்துக் குடும்பத்தைக் காக்க வே ண் டி ய நிலைக்காளாஞள்.
21
இவ்வாறு அவளது வெளியுலகத்
தொடர்பு வளிர்ச்சியடைந்த போது - அ தி ல் ஏற்பட்டிருந்த மாற்றம், முன்னேற்றம் போன்ற வற்றை அவள் அறியத் தொடங் கிய போது - சமூக நா க ரி க வளர்ச்சி மேலும் ஏற்படுவதற்கு தானும் ஏதாவது பங்களிப்பைச் செய்யவேண்டும் என்ற ஆசை, உந்துதல் அவளுக்கு ஏற்பட்டது.
சமூக மாறுதல்கள் ஏற்படத் தொடங்கியதால் கல்வியறிவு வெளியுலகு பற்றி ய அறிவு கிடைக்கப்பெற்று அறிவு பூர்வ மாக சிந்திக்கத் தொடங்கிய பெண்கள். சமுதாய வளர்ச்சிப் படிமுறையில் தாம் எவ்வளவோ பின்னிற்பதைக் கண்டனர். இவ் இடைவெளியை திரப்ப அவர்கள் முயன்றபோது, இதுவரை கால மும் அதாவது சமூக ம்ாறுதல்க ளுக்கு முன்பிருந்த சமூக விதி முறைகள் அவர்களைத் தடுத்த போது அவர்கள் செய்வதறியாது திகைத்தனர். சிலர் இதை எதிர்த் துப் போராடவும் துணிந்தனர்.
ஆனல் இப்புரட்சி ம ன ப் போக்கு எல்லாப் பெண்களிட மும் ஏற்படவில்லை. காலம் கால மாக அடிமைப்பட்டு, முதுகெ
லும்பற்றவர்களாக வாழ்ந்து
பழகி விட்டதனுல், இது தா ன் நியதி - இதுதான் இயற்கை என் றெண்ணி, தாம் அடிமைப் பட்டி ருக்கிருேம் சமுதாய வீ தி யில் நடத்தும் பிரயாணத்தில் எவ்வ ளவோ பின்நிற்கிருேம் என்றபிரக்ஞையே இன்றி பெரும்பா

Page 13
22 سسسسس
லான பெண்கள் வாழ்கிருரர்கள். பெண்களை அடக்குவதை நோக்க மாகக் கொண்ட ஆண்களோடு தனிப்பட்ட முறையில் தம் ைம நன்கு இணைத்துள்ள பெண்கள் காதல், நிலையான வாழ்க்கை என் பவற்றுக்காக ஆண்களின் தேவை
யில் தம்மை மாற்றி வாழக் கூடு தலாக முயற்சி செய்கிருர்கள். அவ்வாறன்றி ஏதாவ்து துணிச்ச லாக காரியமாற்றும் பெண்களை ஏனையோர் குறைகூறுகின்றனர். இத்தகைய பெண்களும் பெண் கள் முன்னேற்றத்தை விரும்பாத ஆண்களுமாகச் சேர்த்து பழைய விதிகளிலிருந்து விடுதலை பெறத் துடிக்கும் பெண்களின் வேகத்தை அடக்கி அவர்களைப் போராட விடாது தடுக்கிருர்கள்.
இப் பண்பு பெரும்பாலும் முதலாளித்துவ நாடு களி லும் வளர்ச்சியடையாத, வள ர் ந் து கொண்டிருக்கு ம் நா டு களி லுமே காண ப் படுகிறது. சோஷலிஸ் நாடுகளில் சமூகத் தில் பெண்களின் பங்க ளிப் பு ஆண்களுக்கு எவ்விதத் தி லும் குறைந்ததாக இல்லை. **மாதர், பூரண விடுதலையை வெ ன் று பெருத வரையிலும் தொழிலாள வர்க்கம் பூரண வி டு த லை யை அடைய முடியாது." எ ன் று
அடிக்கும் ஒருவனை சாகும் வரை சவுக்கால் அ டி. த் த ர ல் கூட மார்க்ஸ் ரசித்திருப்பார்" என்று கார்ல் மாக்ஸின் நினைவுக் குறிப் பில் வில்கெலம் லீப்ளெக்ட்டும்
கூறியதிலிருந்து இதை நாம் அறி யலாம். இதிலிருந்து பெண் விடு தலை, சமத்துவம் என்பன ‘பொ ருளாதார அமைப்பு ரீ தி யா ன மாற்றத்தோடு தொடர்புடை யதா என்ற கேள்வியும் எழு கின்றது.
நீட்சே போன்றேரின் கருத் தைப் பெண்கள் ஏற்றுக்கொள் ளுவது பெண் வர்க்கத்தையே அவமானப்படுத்துவதற்குச் சம ணுகும். எந்த ஒரு உண்மையானதன்மான்மும், சுய கெளரவமும்
உள்ள - பெண்ணும் இதை ஒப்
உயிரும், உணர்ச்சியும், அறிவு முள்ள ஒரு ஜீவியைப் பார்த்து, வெறுமே இருப்பதற்கு இடமும் நிறையும் மட்டுமே கொண்டுள்ள ஜீவனில்லாத ஒரு சடப்பொருள் என்று கூறினல் எந்தம்ானமுள்ள ஒரு ஜீவியும் பொறுத்துக்கொள்ள
மாட்டாள்.
• • • • • • -- (96@ {gے
- அவளைப் Lu a ffjög,
*சரி, நீ வெறும் இன்பம் தரும் சடப்பொருள் அல்ல என் ருல், நீ ஆக்க பூர்வமாக எதை
யாவது சாதித்திருக்கிருயா? அல்
லது ஒரு அறிவுஜீவியாக வாழ்ந் திருக்கிருயா? துணிச் சலு டன் முன் சென்று எதையாவது தலை மைகாங்கி நடத்தும் தைரியம், ஆற்றலைப் பெற்றுள்ளாயா?” என்றுகேட்டால் பெரும்பாலான பெண்களின் பதில் மெளனம் தான்.

ஏன் இந்திரா காந்தி இல் லையா?, திருமதி தாட்ச்சர் இல் லையா?" என்று சிலர் கேட்கலாம் இன்னும் சிலர் கேட்கலாம்.
எல்லா ஆண்களும் ஏதோ பெரிசா சாதிக்கிருர்களா? இல் லேயே யாரோ சிலர் சா த னை செய்ய, பெயரை மட்டும் பொது
செல்கிா?ர்களே” என்று.
உண்மைதான்! ஆன ல், ஆண்கள் செய்திருக்கும் சாதனை களுக்கு அல்லது புதிய கண்டு பிடிப்புகளுக்குச் சமனக பெண் கள் செய்திருக்கிருர்களா, ஆகக் குறைந்தது கால்வாசியாவது..? இதற்கு "இல்லை" என்றுதான் வருத்தத்துடன் பதில் கூறவேண் டியுள்ளது. அறிவியல் விஞ்ஞா னத்துறையாகட்டும், பொதுஜ னத் தொடர்பு, கலைத்துறையா கட்டும், கடினம்ான உ ட லு
தனை பெண்கள் இவற்றில்சாதனை புரிந்திருக்கின்றனர்? ஆண் க ளோடு ஒப்பிடும்போது விர ல் விட்டு எண்ணிவிடலாம்.
உதாரணத்துக்கு எடுப்பின், ஒரு விவாதம் அல்லது கலந்துரை பாடல் நடைபெறும் போது அதைப் வார்க்க வந்திருக்கும் பெண்கள் எவ்வளவு? அதில்
எழுந்து சபையோர் கருத்தோ அல்லது ஏதேனும் சந்தேகங்கள், கேள்விகள், விமர்சனங்களே rா செய்யும் பெண்கள் எவ்வளவு? ஆண்களோடு ஒப்பிடுகையில் ஒரு மிகச் சிறு வீதம். நான் அவதா னித் தவரையில் மாணவ மட்டங் களில் (பெண்கள் பா ட சா லை தவிர்ந்த பாடசாலைகள், பல்க லைக்கழகங்களில்) பெண்கள் இப் படியான பொது நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவது குறைவாகவே காணப்படுகிறது.
உதாரணத்துக்கு பே ராத னைப் பல்கலைக்கழக தமிழ்ச் சங் கம் இவவாண்டு நடத்திய பேச் சுப்போட்டியைக் கூறலாம். ஒரு பெண்கூட எழுந்து பேச முன்வ ராததால் பெண்களுக்கான பரிசு வீணே விடப்பட்டது. இதற்கு அங்குள்ள மாணவிகள் பேசுந்தி றன் அற்றவர்கள் என் ப த ல் ல கருத்து. துணிச்சல் இல்லை என் பதே பொருத்தம்ான காரண மாகும்.
இவ்வாறு பெண்கள் ஒன் றுக்கும் துணிச்சலில்லாது பதுங் கிக் கிடப்பதற்குப் பல காரணங் களைக் கூறலாம். எமது சமூக அமைப்பில் பெண்களுக்கு வழங்
கப்பட்ட இடம் அல்லது விதிக்
ssssssssssassassissimam
மனைவி ஒரு வீணையல்ல நினைத்தபொழுது மீட்டிவிட்டு வேண்டாதபொழுது தள்ளி வைப்பதற்கு.
- ரஷ்யப் பழமொழி sias

Page 14
கப்பட்டுள்ள கட்டுப்பா டு கள் அல்லது பெண்பற்றி சமூக ம் கொண்டிருக்கம் கருத்துகள் என் பன பெண்ணின் ஆளுமை விருத் தியைத் தடுக்கும் கற்களாகின் றன. ஒரு பெண் தன் வா ழ் வு முழுமையும் தந்தை, கணவன், மகன் என்போருக்க அ ட ங் கி வாழவேண்டும் என வற்புறுத் தப்படுகி? ஸ். சமூக விதிகள், வழி முறைகள் என்பன எல்லாவற்றி லும் பெண்களுக் கொன்ருகவும், ஆண்களுக்கு வேருென்ருகவும் இரட்டைத் தன் ைம ய த ரீ க க் காணப்படுகின்றன. உதாரண மாக பலாத்காரம், கற்பழிப்பு நடந்தால் குற்றம் சாட்டப்படு வது அல்லது அ வ ம் ரி யா தை அடைவது பெண்களே. சமூகத் திலிருந்து ஒதுக்கி வைக்கப்படு வது கூட வி பசாரத்தில் ஈடு பட்டபெண்ணையே ஒழிய, ஆன அல்ல.
பெண்ணுக வாழ்தல் என் பது வாழ்க்கை முழுதும் பயத் தோடு ஒரு வகைச் சிக்கலோடு (Complex) வாழ்தலாகும். அவள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும், செய்யும் ஒ வ் வெ எரு செயலும் ப ய த் தோ டு பல தடவை யோசித்தே செய்யப்பட வே ண் டியிருக்கிறது. இப் படி நடந்தால் பழிச்சொல்லுக்கு அவ தூறுக்கு ஆளாக நேருமோ என யோசித்து த யங் கி யே செய்ய வேண்டியிருக்கிறது. அவள் எவ் வளவு பெரிய பதவி வகித் தா லென்ன! இருண்டபின் வீட்டுக்கு வெளியே இருக்க அல்லது தனி
24
யாக்ப் பயணம் செய்ய அல்லது
அறிவுரீதியாகவேனும் அந்நியன் ஒருவனுடன் கதைக்க அ ல் லது தேவை, தொழில், நட்பு நிமித் தம் வேற்று மனிதனுடன் பேச வோ, போகவோ கூட பயப்பட வேண்டிய ஒரு நிலையில் பெண் வாழுகிருள். அவள் தன் மனதில் எழும சிந்தனைகளை - போராட் டங்களைபுரிந்து பகிர்ந்துகொள்ள
அதை எண்ணி மகிழக்கூட அஞ்
சுகிருள். இதனுல் வாழ்க்கையே பெருஞ்சுமையாய் மெளனமாய்ச் சோகமாய் மாறிவிடுகிறது.
எமது சமூகத்தில் "பெண் ணின் வாழ்க்கையின் ஒரே கடமை யும் குறிக்கோளும் விவாகம்ா தலே' என்ற கருத்து சிறுவயதிலி ருந்தே ஊட்டப்டிடுகிறது. பெயர் கெட்டால் விவாகம்ாகாது போ குமோ, அதிகம் படித்தால் கூடி யசீதனம் கொடுத்து அ தி க ம் படித்த மாப்பிள்ளை தேடவேண் டிவருமோ என்ற அற்ப ப யங் களே அவள் துணிந்து காரியமாற் ருததற்குக் காரணமோ என ஐயுற வேண்டியுள்ளது. எவ்வ
ளவு அதிகம் படித்த, கூடிய தகு
தியுள்ள பெண் ணு யி னு ம் வேறெந்த த கு தி யு மில் லாது "ஆண்" என்ற ஒரே ஒரு தகுதி மட்டுமுள்ளவனைத் தி ரு ம் ணம் செய்வதற்கு சீதனம் கொடுக்க வேண்டியுள்ளது.
ஒரு விதவை அல்லது கை விடப்பட்ட பெண் அ ல் ல து விவாகரத்து செய்த பெண்ணுக் கும் இதே நிலை களி லு ள் ள

ஆணுக்கும் கி ைடக் கும் சமூக அந்தஸ்த்தில் தான் எ வ் வள வு வேறுபாடு ஆணைவிட உயர்சம் பளம் பெறும் பெண்ணுயிருந்தா லும், வேலை த்தலத்தால் வீடு திரும்பியதும் தொடர்ந்து வீட் டுவேலைகளைச் செய்ய அ வ ள் தானே நிர்ப்பந்திக்கப்படுகிருள். ஏன் சிறுபராயத்தில் கூட ஆண் பிள்ளைகள் சும்மா இருந்து விளை யாட பெண்பிள்ளைகளோ தாய்க் குதவியாக வீ ட் டு வேலைகளிலீடு படுமாறு வளர்க்கப் படுகிருரர்கள். ஆண்பிள்ளைகளின் கல்வி, ஆளு மை விருத்தி இவைகட்கு எடுக் கப்படுமளவு சி ரத் ைத பெண்
பிள்ளைகள் விஷயத்தில் காட்டப்
படுவதில்லை.
சமவேலை செய்தாலும் சில துறைகளில் பெண்களின் ஊதி யம் ஆண்களிலும் குறைவாயே காணப்படுகிறது. உ த ர ர ணம் பெருந்தோட்டத்துறை, ஏழ்மை, போஷாக்கின்மை, பழைமை பே ணல், மூடக்சொள்கைகளை நம்பு தல் போன்ற குறைகள் பெண் கள் மீதே சுமத்தப்படுகின்றன.
இவ்வாறு நீண்ட காலமாக பெண் அடக்கு முறைக்க ஆளாகி நசுக்கப்பட்டு, சுரண்டப் பட்டு வருவதை தடுக்க என்ன செய்ய லாம் என்ற கேள்வி எழுகிறது. அதற்கு முதலாவதாக எல்லாப் பெண்கள் மத்தியிலும் அவர்க ளது நிலை பற்றிய ஒரு விழிப்பு ணர்ச்சியை ஏற்படுத்தவேண்டும் , பழைய மாயைக் கொள்கையில் மூழ்கிக் கிடக்கும் பெண்களைத் தட்டி எழுப்பி சமூகத்தில் அவர்
25
maureg
களது அந்தஸ்து என்ன என்பதை விளக்கி, காலத்துக் கொவ்வாத செல்லரித்துப் போய்க்கொண்டி ருக்கும் இந்த சமுதாயக் கருத்து களை - அடிமை வி லங்கு களை உடைத்தெறிய வேண்டிய ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் அவர்கள் நிற்கிருர்கள் என்பதை உணர்த்தி அவர்களைப் போரா டத் தூண்டவேண்டும்.
தனித்தனியாகப் போராடுவ தில் ஒருவிதமான பிரயோசனமு மில்லை. அப்போது கிடைக்கும் கசப்பான அனுவவங்கள் போரஎட் டம் என்ற சொல்லையே வெறுக் கச் செய்து விடும். எ ல் லா ரு ம் சேர்ந்து ஒற்றுமையாகப் போரா டும் போது அது இலகுவாக இருக் கும். இதில் பெண்கள் அவ்வளவு சிரத்தைகாட்டாது பின் நிற்பதற் குக் காரணம், இதை அ வர் க ள் தனிப்பட்ட பிரச்சனை எ னக் குறைத்துக் கவனித்ததே ஆகும். இது உண்மையில் சமூக பொரு ளாதார, அரசியல் முக்கியத்து வம் வாய்ந்த ஒரு பொதுப் பிரச் னையாகும். ஒரு நாட்டு வளர்ச்சிக் குப் பெண் அளிக்கும் பங்கு கணிச
மானது.
அரசாங்கம் சட்டங்க ளி ல் பெண்களுக்கு அளிக்கப்பட்டிருக் கும் சமத்துவம் கூட வெறும் ஏட் டளவிலேயே உள்ளது. கிடைத்த சில உரிமைகளும்கூட மத்தியதர, உயர்மத்தியதர வர்க்கத்துக்கே பயன்படுகின்றன. இவ் வி தம் கிடைத்த சில உரிமைகள் பெண் கள் பற்றிய தாக்கத்தைப் பின் போடுகின்றன.
இதை இவ்வாறு டாது, விழித்தெழுந்த பெண்க ளாவது துரங்கும் பெண்களை கட் டியெழுப்பும் மகத்தான பணியி லிறங்கவேண்டும். O

Page 15
இரத்த புஷ்பங்கள்
ஒரு விமர்சனம்
எம். ஏ. நுஃமான்
புதுவை இரத்தினதுரையின் மூன் ருவது கவிதை நூலாக "இரத்த புஷ்பங்கள் வெளிவந்துள்ளது. ஒரு தோழனின் காதல் கடிதம், வானம் சிவக்கிறது ஆகியவை முன்னர் வெளிவந்த அவரது கவிதை நூல்கள். விருப்பான சொற்களில் கோஷம் எழுப்புவதே இவரது கவித்துவப் பாணி. இத்தகைய கோஷ நடையை ஒட்டிய கவிதைகளே இரத்த புஷ்பங்களிலும் காணப்படுகின்றன. இவ ற்றுட் பல இடதுசாரி அரசியல் சார்பான கோஷங்களாகும். இவரது அதி தீவிர இடதுசாரிக் கோஷங்கள் இவருக்கு முற்போக்குக் கவிஞர் என்ற புகழைப் பெற்றுக் கொடுத்தன. இப்பொழுது இவர் புரட்சிக் கவிஞர் என்றும் அழைக்கப்படுகின்ருர்,
இரத்த புஷ்பங்கள் தொகுதியில் 26 கவிதைகள் இடம்பெற் றுள்ளன. இவற்றுள் ஆறுகவிதைகள் இவரது கவிதைக் கொள்கை பற்றிய பிரகடனங்கள். 'சுந்தரிகள் காலிடுக்கு, நிக்கர் சுழற்றுகிற நிமிடசுகம், அடுத்த வீட்டுச் சந்திரா, அவளின் மார்புச்சதை வெளித் தெரியும்போது சிந்திடும் அழகு, சுதியான கன்னியரின் பவளச் செவ்வாய் சுந்தரப் பூங்கன்னங்கள், கதலிக்கால்கள், கச்சுமுலை, முலையழகு, மினி பெல்பொட்டம், குன்று, குளிர்நிலவு, குமரிமுலை' போன்றவற்றைப் பாடுவது அல்ல இவரது கவிதைப்பணி.
என் கவிதை ஏழைளை எழுப்பிவிட மட்டும். எழுப்பியபின் புரட்சியதுக் கேவிவிடமட்டும். மென்னுடலம் வாடி உரைக்கின்ற வரிக்கும்ட்டும் மேதினியிற் பொதுவுடமை மிளிர்வதற்குமட்டும்.
என்பது இவரது கவிதைக்கொள்கை. "மினிபாடி பெல்பொட் டம் பர்டிப்பாடி மினைக்கெட்டு வருவோர்கள் பெண்கள் கொஞ்சம் குனிகின்ற போதவரின் குரும்பை பாடிக் குதிப்போடு திரிபவர்கள்" யாரும் இன்று ஈழத்துக் கவிதை உலகில் இல்லாதபோதிலும் கவி ஞர் அத்தகைய கவிஞர்களை கற்பனையில் தனது எதிரிகளாக முன் னிறுத்தியே தனது கவிதைப் பிரகடனத்தை செய்கின் ருர், ஆணுல் இதே தொகுப்பிலே தான்,

- 27 -
*விளக்கணைய இருள் பரவ வேண்டும் - நான் விரித்த கவி நின்றுவிட வேண்டும் கல கலத்து அவள் சிரிக்க வேண்டும் - என் கையணைப்பில் துடி துடிக்க வேண்டும் போதுமென அவள் துடிக்கவேண்டும் - நான் பூம்களைப் போட்டுலுப்ப வேண்டும் கோதையவள் மெய்மறக்க வேண்டும் . நான் கோலமவள் மேனியிட வேண்டும் கையிணைந்து கால்பினைய வேண்டும் - என் காதுடனே அவள் கதைக்க வேண்டும் மெய் மழ தும் நீர் துளிக்க வேண்டும் - அவள் மேனியிலே பாட்டெழுத வேண்டும்" என்ற கவிஞரது பாடலும் இடம்பெற்றுள்ளது. "என் கவிதை பண்டிதர்க்கும் - பாவலர்க்கும் அல்ல - பெண் நினைவால் வாடுகின்ற காளையர்க்குமல்ல" என்ற கவிஞரின் கொள்கைப் பிரக டனத்துக்கும் மேற்காட்டிய கவிதைக்கும் எவ்வித உறவுமில்லை. கவிதை பற்றிய தனது பிரகடனங்களுக்கு ஒத்ததாகத்தான் தனது கவிதை அமைய வேண்டும் என்ற கொள்கை கவிஞருக்கு இல்லைப் போலும். பெண்களைப் பற்றி பாடக்கூடாது என்று சொல்வதி லேயே கவிஞருக்கு ஒரு சுவை இருப்பதை நம்மால் உணர முடிகி றது. கன்னி மார்புக்காய், மார்புச்சதை, குமரிமுலை, கச்சுமுலை போன்ற தொடர்கள் இவரது கவிதைகளில் பயின்று வருவதனை உதாரணமாகக் காட்டலாம்.
இவரது கொள்கைப் பிரகடனங்களுக்கு ஏற்ற சில "புரட்சிக் கவிதைகளும் இத் தொகுப்பில் உள்ளன.
பெற்றதாய் எதிராய் வந்து புரட்சியின் போது ஏதும் குற்றங்கள் செய்தா லெங்கள் குண்டுகள் அவளின் நெஞ்சைப் புற்றுகள் ஆக்கும் ஆம்ாம் புரட்சியின் போது நாங்கள் சுற்றமும் துணையும் பாரோம் குடுகாண் புலிகள் ஆவோம்"
- போன்ற அதி தீ விர புரட்சிக் கோஷங்களும் 'அம்மியில் மிளகாய் வைத்து அரைப்பதைப்போன்று பூஷ்வா வம்பரை அரைக்கவேண்டும், வா உடன் படையிற் சேரு, போன்ற புரட்சி அழைப்புக்களும் - சிங்கள, தமிழ், முஸ்லிம் பாட்

Page 16
டாளி வர்க்கம் ஒன்று சேர்ந்து புரட்சியை நடத்தியே தீரும் என்று
வலியுறுத்தும் கருத்துக்களும் இவற்றுள் அடங்கும்.
மாத்தறையில் பொடி மெனிக்கா துவக்கெடுப்பாள் மாதகலில் கந்தையர் பொல்லெடுப்பான் நாத்தாண்டியாவினிலே காசீம் லெவ்வை நாருரிக்கும் கத்தியினைக் கரமெடுப்பான் வாடா தகார்ள் மாக்ஸ்சின் தத்துவங்கள் வழிகாட்டும், அந்தவழி நடந்து சென்று ஒடான பாட்டாளி வர்க்க மிங்கம் உயர்ச்சி பெறும்கட்டாயம் இருந்து பாரும்" என்று
ஒருபாடலில் கவிஞர் கூறுகின்றர். ஆனல் வாடாத கார்ள் மாக்ஸ் ஸின் தத்துவங்கள இவருக்கு வழிகாட்டவில்ல' எ ன் று தெரிகின் றது. மார்க்சியத் தத்துவத் தெளிவில்லாம்ல் வெறும் தீவிர இடது சாரி அரசியல் பற்றிய கருத்துக்களையுமே இவரது தொகுப்பில் காணமுடிகின்றது. மார்க்சியத் தத்துவத்தில் நல்ல தெளிவிருந்திருந்தால் 77 ஆகஸ்ட் கலவரம் இவரைச்சிதற அடித்திருக்காது. கலவரத்தின் பா தி ப்பி ல்ை தீவிர இடதுசாரிக் கோஷம் எழுப்பிய இக்கவிஞர் தீவிர இன வாதக் கோஷ் மெழுப்பும் கவிஞராக மாறியுள்ளார். “ாழுந்து வா நெருப்புத்தாயே” “வாசலில் நெருப்பு மூளும்' ஆகிய இ வ. ர து தொகுப்பிலே உள்ள கடைசி இரு கவிதைகளும் இதையே புலப் படுத்துகின்றன. சிங்கள இனவாதத்திற்குப் பதில் அதற்கு சமதை யான தமிழ் இனவாதமல்ல என்பது இந்தப் புரட்சிக் கவிஞருக்குத் தெரியவில்லை. இவர் ஒரு மார்க்சிய வா தி யாக இருந்திருந்தால் "வாசலில் நெருப்பு மூளும்" போன்ற ஒரு மிருகத்தனமான கவி தையை இவரால் எழுதியிருக்க முடியாது. முழுச் சிங்கள இன த் துக்கும் எதிராக இதில் இவர் சாபமிடுகின்ருர், சிங்களக் கிணறுகள் யாவும் சீக்கிரம் ஊற்றடைக்க வேண்டும், மணநாளிலும் மரணமே நிகழவேண்டும்., ஆக்கும் சோற்றில் அழுக்கள் நெளிய வேண்டும், சிங்களப் பெண்கள் எல்லாம் மலடாகவேண்டும், முற்றிய வயல்கள் எல்லர்ம் பற்றி எரியவேண்டும், வற்ருத கங்கையும் வற்றிப் புழுதி யாக்கவேண்டும், பஞ்சம் வந்து அவர்கள் சாக வேண்டும் என்று இவர் சாபமிடுகின்றர்.
சிங்கள இனத்தைச் சேர்ந்த இனவெறியர்கள் தமிழர்கள் என்ற காரணத்தினுல் அவர்களைக் கொடுமைக்குள்ளாக்கியது எவ் வளவுமிருகத்தனமானதோ-அவ்வளவு மிருகத்தனமானது சிங்களவர் என்ற காரணத்தினுல் அவர்கள் எல்லோருக்கும் சாபம் இடுவதும்

al- 29 -
பெண் - ஒரு கண்ணுேட்டம்
நான் கிட்டத்தட்ட ஐரோப்பா கண்டம் முழுவதும் சுற்றி வந்திருக்கிறேன். நம் நாட்டில் உள்ளது போன்ற இரங் கத்தக்க நிலை, பெண்களுக்கு வேறெங்குமில்லை. பொருளா தாரம் மற்றும் தொழில் துறைகளில் பின்தங்கியுள்ள ஆபிரிக் காவில் கூட. பெண்களுக்கு நம்நாட்டுப் பெண்களை விட தன்னம்பிக்கை அதிகம் உள்ளது. நூற்றுக்கணக்கான ஆண் டுகளாக நம் பெண்கள் மனத்தளவிலேயே அடிமைப்பட்டுப் போய் விட்டனர். ஆதலால் இயல்பாகவே அவர்களுக்கு ஒரு தயக்க மும் சங்கோஜமும் ஏற்பட்டு விட்டது. இது அடிமைத் தனத்தை விட மோசமானது புற பந்தங்களை. விலங்குக ளைத் தகர்த்தெறிவதே கடினம். இந்நிலையில் மனத்தளவில் ஏற்பட்டுள்ள தளைகளையும், அவற்றின் வலுவான பிணைப் 女 பையும் பற்றி அனுமானிப்பது கூட கடினமல்லவா?
பூரீமதி அம்ருதாப்ரீதம்
பஞ்சாபி நன்றி; மங்கை - டிசம்பர், 1979
女
ஒரு சா ரா ரின் இ ன வெறி யி ன ல் அறிவு பிறழ்ந்த இன வெறியின் வெளிப்பாடே இதுவும். வற்ா?த கங்கை வற்றிப் புழுதி யானுல் அதனல் பயன் பெறும் தமிழ்ப் பிரதேசத்திற்கும் தண் ணிெர் கிடைக்காது போகும் என்பதையும் கவிஞர் தனது வெறியில் மறந்துபோனர் போலும். கண்ணகி தனது முலை திருகி மதுரையை எரித்தபோது பசு, பத்தினிப் பெண்டிர், சிறுவர், முதியோர் தவிர்ந்த தீய்த்திறந்தார் பக்கமே செல்க என்று அக்கினிக்கு ஆணையிட்டாள். தீயவர்களை மட்டும் அழிப்பதுதான் பண்டைத் தமிழரின் போர் நாகரிகமாக இருந்தது என்றும் நாம் படிக்கின் ருேம் அந் நாகரிகத் தின் வாரிசான இக் கவிஞர் ஒரு சாராரின் தாக்குதலுக்காக முழுச் சமூகத்தையும் பழிப்பதந்த நாகரிகத்தின் பாற் பட்டதோ தெரியவி ஸ்லே. தமிழ்த்தாயின்பேரால் சிங்களமிருகம்பெற்ற சிறுக்கரை விழுங்கு மாறு வங்கக் கடலைப் பணிக்கின்ருர். எரித்துப் பொசுக்கும்ாறு தீக்கு ஆ%ணயிடுகிறர் பெற்ற தாயும் பற்றிய மனைவியும் கற்புடையவர் களானுல் இது நடக்கவேண்டுமென்று ஒரு விபரீத பரீட்சையை முன்வைக்கிறர். கவிஞரது வர்க்க உணர்வு, மனிதாபிமானம், மார்க் சியத் சித்தாந்தம் எல்லாம் இங்கு செயலற்றுப் போயின. ஆகஸ்ட் கலவரம் தேசிய இனப் பிரச்சனை பற்றியும், இனங்களின் விடுதலை பற்றியும் தீவிரமான சிந்தனை ப் போக்குகளைத் தோற்றுவித்தது போல், புரட்சிகர முற்போக்குக் கவிஞர் என்று கருதப்பட்டவரை தீவிர இனவெறிக் கவிஞராக மாற்றியது போனற விபத்துக்களையும் தோற்றுவித்துத்தான் உள்ளது. ()

Page 17
பாலசூரியன்
ச்ேளகம் கொக்கரிக்கும் ஒரு கோடையில்
Վ மாய இருளில் ஆந்தை உருட்டும் விழியை பார்க்கச் சகியாது
கண்ணைக் கசக்குகிறேன்
நீயுந்தான், கண்ணைக் கசக்குவதுபோல் ஒரு பரிவுக் கீறல் என்னைப் பிளந்தது
நிமிர்கிறேன், முன்னைய கோடையில், நீ தந்துவிட்டுப் போன பதிவில் ஏதோ கவ்விக் கிடப்பதை
என்னுள் உணர்கிறேன்.
தொண்டையில் சுருக்கிடும் அழுங்கு உலகின் ‘துயரம் தோய்ந்த சுமைகள் நிறைப்தவன், தொடராதே" என நான், பொய்யனுகி அழுத்தியதை நிராகரித்து, மேலும் என்சுவட்டுள் சுமையானtய்,

சோளகம் கொக்கரிக்கும்
நீண்டபனே வெளிமருங்கில் நடந்தபடி - வெடிபறந்த சிரிப்பொ சிலவேளை கடிந்த உன் சிணுசிணுப்பை ஊடறுத்து, முறுகியபடி ஒரு பனங்காய் விழ வெருண்டு, அணிற்பிள்ளை தாவும் அப்போதும், நாம் தலையைப் பொத்தியபடி சிரித்திருப்போம்.
15)sir 860 uu (3ssr 50-uflóð சோளகம் விசிறி இறைத்து அறையுள் படர்ந்த புழுதியை தட்டிக் கொடுத்தபடி தூரத்து பனையில்
வெருண்டு தாவித்
தோற்று விழும் அணிலாரைப் பார்த்து, நெகிழ்கிறேன்.
வாடை பெயர்ந்து முகிழ்த்த வசந்தத்தில், நாம் சொரிந்து சருகாகி
எம்முள்,
மாயை துளிர்த்து கேள்விக் குறியின் கருவானுேம்.

Page 18
நூல் நிலையத்திலிருந்து வெளிக்கிடும் போது யார் கண்டார்கள் மழை பெய்யுமென்று. சிறிது நேரம் பார் த் த த ன் பின்னர்தான் வெளிக்கிட்டேன். ம்ேலே சிறிது நீலம் தந்த துணிவு ட ன் நூல் நிலையத்தின் வெளியில் வந்தேன். அந்தப் பிரமாண்டமான வெள்ளை மாளிகையின் உச்சி த டு த்த மேகங்கள். 1 மழை கொட்டுமோ, கொட்டாதோ, தெரியாது. கொட்டலாமோ வேண்டாமோ எனத் தம்முள் குமைகின்றன. அழுக்கம்ோ அல்லது என் நடை வேகமோ, கழுத்தின் பின்னலிருந்து வேர்வை சட்டைக்குள் வழிகிறது.
இடையில் அவன் மகேந்திரன்,
"என்ன. ரியூட்டறிக் கோ...?"
a "ஒமோம். போனமுறையும் சீ, ரூ, எஸ் தானே. உனக் கென்ன மாதிரி?...”*
*கம்ம்ாரிசு. நான் இப்ப படிப்பையே விட்டிட்டன். ஒரு கடையிலை நிக்கிறன் . என்னவோ.. P
அவன் பேசாமலிருந்து விட்டுத் திடீரெனக் கேட்டான் "உன்ரை 'அது' என்னம்ாதிரி?..." 'all-t-t-...... உனக்குச் சொல்ல மறந்திட்டன்.
மேற்கோள் பேலி மேற்கோள் போலி மேற்கோள் போலி
மேற்கோள் போலி

- 33 -
அது இப்பவும் என்னுேடைதான் படிக்குது. ஏதோ ரிசல்ட்..
சொன்னவள் ... ம் . . திறீ எல்லாம் . . இப்பவும் சும்மா நடக் குது நீதான் இல்லை."
**ஏதோ என்ரை விதி .. * மகேந்திரனுக்கு முகம் கொஞ்
சம் கறுத்தது. அப்ப வெல்லாம் எனக்கு உத வியாக இருந்தவன் மகேந்திரன் தானே.
女 y அவளைத் திரும்ப சந்திச்சது எப்ப?... அண்டைக்கு யாழ்ப் பாணத்திலை.
ஏப்பிரல் ரெஸ்ற் முடிஞ்சாப் பிறகு எப்ப அவளைச்சந்திப் பன் ...? கனவுகள் . . நினைவுகள் . எல்லாம் அவள் ரிசல்ற்றும் வந்திட்டுது. ரெஸ்ரிலை கோட்டை விட்டதும், இவளாலையோ?. இவளைச் சந்திச்ச பாடில்லை. என்ரை மனசுக்குள்ளை ஏதோ அரிச் சுக் கொண்டு.
உன்னை நான் காணவே மாட்டேன? அட்ரசைக் கேட்கவும் வீட்டிலை பத்தினித் தன்மை பறந்து விடும் எண்டு நினைச்சு ..
நீ அங்கை என்ன செய்யிருய்? என்னை யோசிச்சு. அல்லது எவனிட்டையோ (எந்தக் க ம ல ஹா சனிட்டையோ) மனசைக் குடுத்து" . .
நான் இங்கே அறைக்குள் இருந்து, பழைய நேரிட்சுகளை புரட் டேக்கை அப்ப சின்னத்தம்பி வாத்தி நோட்ஸ் சொல்ல உன்னைப் பார்த்துக் கொண்டு வரிதப்பின எழுத்துக்கள் . வழிதப்பிய எழுத்துக்கள். எங்கோ செல்லும் கிறுக்கல்கள்.
நீ உங்கு படிக்கிருயா? உன்ரை ரிசல்ற் என்ன? கம்பசுக்கு என் ரர் பண்ணுவியா?
உன்னுேடை திரியுங்களே அதுகள் எப்படி? அதுகளால் நான் எவ்வளவு கரைச்சல் பட்டனுன்..
அண்டைக் கொருநாள் ரவுனிலை ஒருத்தி. உன்ரை அந்த நீலச் சட்டை - வெள்ளைப் பூப்போட்ட அந்தச்சட்டை போட்டுக்கொண்டு (உன்ரை ஒவ்வொரு சட்டையும் நான் வர்ணிப்பேன் அவ்வளவுக்கு நான் உன்னிலை) போகேக்கை நீ எண்டு நினைச்சு வலு சந்தோச மாய் அவளை அண்மிக்க அவள் வேறை ஆரோ எண்டு தெரிஞ்ச உடனே வந்த ஆத்திரம் . அவளைத் திட்டத்தான் என்னுலை முடிஞ்சுது. இதெல்லாம் உனக்குத் தெரியுமா?

Page 19
- 34 -
ஏதோ தேவைக்காக அண்டைக்கு ரவுனிற்குப் போனேன். பஸ் ரரிண்டிலை அவள் - அவளேதான் வந்து கொண்டிருந்தாள். சிவப்பில் சிரித்தாள். எனக்குள் அதிர்ச்சி, ஆச்சரியம், வியப்பு, ஆனந்தம். விபரிக்க முடி யாத ஏ தோ ஒன்று - நெஞ்சில் அடைப்பது போல... V
அடிவயிற்றின் ஒரு பகுதியிலிருந்து கனமான பொருள் மெல்ல உருண்டு வாயின் நுனிவரை வந்துவிட்ட கேவல்.
* உங்களுக்கு என்ன ரிசல்ற்?." அந்த அந்தகாரச் சூழலில் எதை யாவது கேட்டு வைக்க வேண்டும்ென்று கேட்டுவைத்தேன்.
'திரும்பவும் ரியூட்டறிக்குப் போகவேனும. 9 p. சொல்லிவிட்டுச் சிரித்தாள்.
女 எல்லா இலக்கியத்துக்கும், கலைக்கும் ஊற் றுக் கண் எது? தத்துவார்த்த வடிவங்கள் என்ற வகையில் இலக்கிய, கலைச் சிருஷ்டிகள் மனித மூளையில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத் தின் பிரதிபலிப்பின் விளைவுகளாகும். புரட்சி கர எழுத்தாளர்களினதும் கலைஞர்களினதும் மூளைகளில் மக்களது வாழ்வின் பிரதிபலிப்பின் விளைவுகளாகும்.
- யெஞன் கருத்தரங்கில் மாஓசே-துங் wo 女
இவளுக்கு என்னைக் கண்டதில் பரமதிருப்தியோ? 'நானும் உதே நிலைதான்’ அவள் தன்னுடைய ரிசல்ற்றைச் சொன்னுள். நான் என்ரை ரிசல்ற்றைச் சொன்னன்.
அவளைக் கண் ட தி ல் இந்த உ ல ைக யே வெற்றி கண்டது
போல. அவளை இப்படியே இழுத்துக் கொண்டு . நகரத்தின் எங்காவது ஒரு மூலையில் சன சஞ்சாரமற்ற இடத்தில் .. வானத் து தட்சத்திரங்களை எண்ணலாமா..?
'நான் முதலர்ந் திகதி தெரடக்கம் பழைய ரியூட்டறிக்கே போகப்போறன் . அங்கை யெண்டால் கரைச்சல் இல்லை."

- 35 അ
"நானும் எங்கை எண்டர்லும் போக வ்ேணு ம்ென்டு தான் யோசிக்கிறன்."
** அப்படி யெண்டால் அந்த ரியூட்டறிக்கே வாருங்களேன். அவள் கேட்டாள்.
மீண்டும் இணைவதற்கு நல்ல சந்தர்ப்பம்.
*வேறை என்ன.. உங்களைக் கண்டது எனக்கு நல்ல சந் தோசம் . .
அவள் புன்னகைத்தாள்.
எனக்கு அங்கை எந்த நேரமும் உங்கன் ரை நினைப்புத் தான் எண்டு சொல்லுவோமோ?
'உங்கன் ரை மற்ற (t) பிறன்ட்ஸ் எல்லாம் என்ன மாதிரி? ரிசல்ற்றுக்கள்...?? ܂ ܟ ؟
"மாலாவைத் தவிர மிச்ச எல்லாருக்கும் அவ்வளவு ரிசல்ற்’ சரியில்லை. 勇乡
ஏதோ சொல்லிக் கொண்டு போனள். அன்று வீட்டில் இரு ளில் எதையோ தேடினேன். வெளிச்சம்ே வெறுத்தது. இருள் எனக்கு மிக செளகரியமாக.. அன்றைக் கென்று இருள் இன்பம் நிறைந்ததாக.
女 ★ t
ரியூட்டறிக்குள் அவள் நின்றள். பல பழைய முகங்களும் சில புதிய முகங்களும். என்னைக் கண்டவுடன் டிரெக்டரின் விஷமச் சிரிப்பு, நீ பாஸ்பண்ணவில்லையா?" என்பது போல.
ரியூட்டறி பழைய மாதிரியே. வாங்குகள். மேசைகள். கூரைப் பலகைகளில் சிவகுமார், மனேகரன் பெயர்கள் ஆங்கிலத் தில் இன்னும் பழைய மாதிரியே சிரித்துக்கொண்டிருந்தன. அந்தக் கடதாசிப் பூமரத்தின் பூக்கள் இன்னும் வாடவில்லைத்தான். பச்சை இலையே தெரியாமல் ஒரே சிவப்பாக.. எனது கண்கள் நிலைக்குத் திப் பார்க்கின்ற அந்தப் பாம்புபோல் வளைந்த கொப்புக்கள். இன்னும் அசையவில்லை. அரண்டு அணில்கள். சிதறும் பூக்கள். மிக நெருக்கமாக . . tib... . ...
எல்லாமே பழசு... நாங்களும் தான். அவளது பார்வை. பழசாக இருந்தாலும் மிக இனிமையாக.
மனச்சாட்சி குத்துகிறது.
* தம்பி. இந்த முறையாவது. நாங்கள் உனக்காக எவ்வ
ளவும் சில வழிக்கத் தயார். நீதான் படிக்கவேணும். நீ நல்லா வாழ்ந்தால் தான் எங்களுக்கும் மதிப்பு."

Page 20
- 36 =
அம்மா சொல்றது எனக்குப் புரியுது...படிக்கவேணும். இந்த முறையாவது படிச்சுப் பாஸ்பண்ணவேணும் - என்னுள் வைராக்கி யம், அடுத்த நாள் ரியூட்டறியிலே அவளைக் கண்டவுடன. நீ ஒரு ஏழரைச் சனியன் ம்ாதிரி.
நான் இப்பவெல்லாம் மு ன் னு க் குத்தான் இருக்கிறது. முன் னுக்கு இருந்தால் படிக்கலாம். வாத்திம்ார் சொல்றதும் சுலபமாக விளங்கும். முந் தி யெண்டால் பின்னுக்கு இருந்துகொண்டு. வாத்திமார் சோக்கால் கீறுகிறது. எ முதுகிறது . எல்லாம் வெள்ளைப் புள்ளிகளாய் . வெள்ளை க் கோடுகளாய் ... நர்த்தனம்ாடும்.
வெள்ளைப் புள்ளிகள் . கறுப்புத்திரள் . நீலம். பச்சை. சிவப்பு, ஊதா சட்டைகள் . எனக்கு மிக அருகில் இருப் பதுபோல . கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருப்பதுபோல. அவைகள் யாவும் எனக்குள் இருக்கின்றதா, அல்லது நான் அதற்குள் இருக்கின்றேகு?
கனவுகளே எனது காலமாய்க் கழியும். கழுத்தை வளைத்துப் பிடித்த பாம்புகள் - -குரல் வளையை நெரிக்கும் கயிறு யாருக்கு யார் பாம்பு - யார் கயிறு? சுப்பர் படிப்பிக்கேக்கை தான் எனது கனவுகள் அனேகமாய்க் கல்யும். அந்தப் பாடம் அவள் எடுக்கிறேல்லை.
அவர் மேற்கோள் போலிக்குத் தந்த உதாரணம் 'A என்பவ்ன் B இற்குக் கூறினன்' 'நேற்று C என்பவன் கடவுளுடன் கதைத்தான்" அப்பொழுது B கேட்டான் "அதை நீ பாத்தியா?* A, "இல்லை நான் பார்க்கவில்லை. ஆனல் கடவுளு டன் கதைத்தவர்கள் பொய் கூறமாட்டார்கள்."
YA 女 YA எல்லாவற்றையும் நம்பி நர்ன் இருப்பதாக என்னை நம்பி ஒன்றும் இல்லாததாக.
என்னை எல்லாரும் வெறுக்கிருர்களோ? அவள் என்னை வெறுத் தது போல் பார்வை - அதனுல் எல்லாரும் என்னை வெறுத்து விட் டார்களோ என்ற நினேப்பு.
நான் ஏன் சித்திரவதைப் படுகின்றேன்.? என்ன குற்றம் செய் தேன்.?

- 37 അ
எனக்கென்று நானே ஒரு வரம்பு அமைத்து வேலி - போட்டு. மாடுகளைத் துரத்த வேண்டும்.
உனது சிரிப்பு இதமாக, குளிர்ச்சியாக இருக்கிறது. ஏன் லதா தொடர்ந்து சிரியன்..!
லதா, உனக்காக நான் ஊரிலை பலவேரை மறந்திட்டன். நந்தினி, நிர்மலா ரேணுகா. இவையளையெல்லாம் நான் ஏறெ டுத்தும் பார்ப்பதில்லை. f
நீ..? - திருந்தமாட்டாய். அண்டைக்கு நீ அவனே ைட அந்த மூ லை யிலை கதைச்சுக் கொண்டு நிக்சேக்கை . சிரிப்பு. குப் மாளம்... நெஞ்சில ஆணி அறைந்தது போல. இந்த உலகம்ே என் னைக் கை விட்டு விட்டு ஓடி வி ட் ட து மாதிரி.
தண்டவாளச் சோகங்களோ ...? எனது கால்கள் கட்டப் படுகின்றன. கைகள் பிணைக்கப் படுகின்றன. முகத்தில் பெரிய கறுத்த திரை. அறுத்தெறிவேன் - வெகு விரைவில்!
நாங்கள் நிறையத் தியாகங்கள் செய்கின்ருேம்.
திய ; கங்களே எங்களை கழுவிலேற்றி விட்டால் ...?
பலிபீடம் என்று எனக்குத் தெரிவது உனக்கு பரிசுத்த இட QuD fr?.........
குமரன் மாஸ்டர் விடுகின் ற பகிடிகளுக்கெல்லாம் நீ முந்தி பெரிதாகச் சிரிப்பதுண்டு. எங்களுக்கும் அடக்கமுடியாத சிரிப்புத் தான். ஆல்ை, இப்பொழுது எல்லாம் நீ சிரிப்பதில்லை , ஏன்? 'கற்பு" 4.tந்து விழுந்து விடும் என்கிற பயமா?
மகேந்திரன் இருந்தால் ஒத்தடமாக இருப்பான்.
"பெண்களை நம்பாதை. அவர்கள் தங்கள் உடுப்பு *ள மாற்றுவதுபோலை குணங்களையும் அடிக்கடி மாற்றிக்கொண்டி ருப்பார்கள் . . . " மகேந்திரன் அடிக்கடி சொல்லுவான்.
* ஏ ன் உங்கன் ரை (F) பிரென்ட் வரேல்லே?"

Page 21
a- 38 -
லதா மகேந்திரனேக் கேட்டாள். ‘ஆரைச் சொல்லுறியள் ...??? மகேந்திரன் கேட்டான்.
“வேறை ஆரை..? அவரைத்தான். p. "அவனே ... தெரியேல்லை ஏதன் வேலையாக்கும். . .’
“இப்படி ஒழுங்கா வராட்டி படிக்கமுடியாதெண்டு சொல்லி விடுங்கோ . yy
"அவனைப்பற்றி உங்களுக்கேன இவ்வளவு கவலை..."? *ஏன் இருக்கக் கூடாதே?.’ ெ சா ல் லி விட்டு, சிரித்து விட்டு, ஒடிவிட்டாள். V.
மகேந்திரன் இதை என்னிடம் சொன்ன்தன் பின்னர் எனது வரவு மிக ஒழுங்காக இருந்தது. கனவும் வளர்ந்தது.
மகேந்திரனும் போய் விட்டர்ன். தான் தனியமிகப் பெரும் சோகம்!. 'ம்கேந்திரன் இருந்தால் சில சாதனைகளை மேற்கொள்ளலாம்எங்கன்ரை ஆண்மைகளை நிலைநர்ட்டலாம்.
ஏன், நானே எனக்கு ஒத்தடமாக . . என்னுள் உணர்ச்சிகள் ஆர்த்தெழுகின்றன. முன்னையைப் போல் நீ இல்லை என்கின்ற உண்மை இப்பொழுது தான் எனக்குப் அரிகின்றது. நான் ஒருக்காலும் மாறவில்லை. ஆனல் இனி மாறப் போறன். நான் வளர்ந்திட்டன் . .
பெரிய மழை என்னைத் துரத்திக்கொண்டு வருகிறது. இவ்வ ளவு நாளும் ஒடி ஒடித் தப்பினேன் . இனி நனையப் போறன்.
ரணமாயிருந்த புண் ஆறிக்கொண்டு வருகிறது. ஆஞலூம் தொடர்ந்தும் மருந்தை அப்பிக்கொள்ளப் போகின்றேன் . அதனது கறுத்த வடு நீங்குமட்டும்.
"எக்கனமிக்ஸ் கெர்ப்பியை ஒருக்காத் தாங்கோ. நான் நேற்று வரேல்லை. V,
என்ரை எழுத்து அவளுக்கு விளங்காது 6ாண்டு எனக்குத் தெரி այւն . - ar
‘என்ரை எழுத்து.' நான் இழுக்கின்றேன். எ ன க் கும் கொடுப்பதில் உள்ளூரச் சந்தோ சந்தான்,
"அதெல்லாம் எனக்கு விளங்கும். நீங்கள் தாங்கோவன்."
ao s s v, s e e r e a o 8

gimimo ó y am
'நீங்கள் பயப்பிட வேண்டாம். நான் நாளைக்குக் கொண்டு வந்து தந்திடுவன்.
"அதுக்கில்லை.* நான் கொப்பியை எடுத்துக் கொடுக்கின்
றேன்.
சிறிது நேரம் என்னைப் பார்த்துக்கொண்டு நின்றவள் பின்னர் புன்னகைத்தாள்.
அப்படியெல்லாம் இருந்தவள் இப்ப எப்படியெல்லாம் மாறிப் போய் விட்டாள்.
‘நேற்று ஏன் நீங்கள் வரேல்லை..?? எங்கேயோ போக இருந் தவளை கொக்கி போட்டு இழுக்கின்றேன்.
மிக ஆறுதலாகச் சொன்னுள் -
“எனக்குச் சுகமில்லை. அதுதான் வரேல்லை’ 4நான் இறங்கிக்கொண்டு போறன். "அப்ப உங்களுக்கு நோட்ஸ் கொப்பி வேண்டாமோ..?"
"நான் மாலதியிட்ட்ை வாங்கி எழுதியிட்டன். * முகத்தில் அறைந்ததுபோல. h
*ஏன் நீங்கள் முந்தி மாதிரி என்னுேடை கதைக்கிறேல்லை.?” அர்த்தம்ேயில்லாத மிக நீண்ட மெளனம். அவளது கண் கள் மண்ணைத் துளைக்கின்றன.
சிறிது நேரத்தின் பின்னர் என்னை நிமிர்ந்து பார்த்தாள். எனது கண்களின் சோகத்தைக் கண்டாளர்?
"அப்பிடி யெல்லாம் ஒண்டுமில்லை. எனக்கு நேரஞ்செண்டு போச்சு . . நான் வாறன். y
எனது கண்களின் சோகத்தை அவள் காணேல்லை. எப்பொழுதெனினும் இடைக்கிடை அபூர்வம்ாய் அவள் சிரிப் பாள். அதைத்தவிர அவள் வேருென்றும் செய்வதில்லை.
முந்திய மாதிரி இப்பெல்லாம் அவள் நீலத்திலை சட்டைபோடு றேல்லை. பிறவுண் நிறத்திலேதான் அதிகமான சட்டைகள்.
நான் இப்பவும் நீலத்திலை தான் உடுப்பு. அவன் தேவ தாசிட்டை அதிகமாக இருக்கின்ற உடுப்புகளெல்லாம் பிறவுண் நிறம்!
அம்மா எனக்காகப் பெரிதாக ஆதங்கப்படுரு இப்பெல்லாம் நான் நல்லா மெலிஞ்சு போறதா அம்மா சொல்ரு. என்ரை மெலி
*குக் காரணம் இவளோ?..

Page 22
- 40 -
இவள் தாற சோகங்களோ?.. அல்லர்ட்டி சாப்பாடுகள். காலநிலை. இதெல்லாம் அ6 ளுக்குத் தெரியும்ா?
இப்பெல்லாம் நான் எதைச் செய்தாலும் மிக மூர்க்கமாகஒரு வித உத்வேகத்துடன்தான் செய்வேன்.
எல்லாம் என்னை விட்டுக் கழண்டு விட்டதன் பின்னர் எனக்
கேன் வீணையின் நரம்புகள். வயலினின் தந்திகள். . . புல்லாங் குழலின் துளைகள்.
★ **கொப்பியைத் தாங்கோவன் ..நான் ைவ ச் சி ருக்
கிறன்." பஸ்சுக்குள் அவள் இருக்கிருள் நான் நிற்கிறேன்.
நான் கொப்பிகளைக் கொடுக்கின்றேன். அவள் தனது மடியில் தனது கொப்பிகளின் மேல் எனது கொப்பியை வைத்திருக்கிருள். எனது கொப்பியைப் புரட்டிப் புாட்டிப் பார்க்கிா?ள் முகப் பில் எனது பெயரை வாசிக்கிருள், என்னை நிமிர்ந்து பார்க்கிருள். சிரிக்கிருள். பின்னர் தலை குனிகின்றது. s
எனது பெயரை முதன் முதலில் அவள் அறிந்ததே இப்படித் தான்.
எனது நல்லகாலம் - பக்கத்தில் இருந்த கிழவி எழும்பி இறங் குகிருள்.
நான் அம்ருகின்றேன். அவள் தள்ளி இருக்கின் முள் - அவள் இருந்த இடத்தின் சூடு இன்னும் ஆறவில்லை. நான் இருந்தவுடன் பேச்சை ஆரம்பிக்கின்றேன்.
‘'என்ரை பெயரை அறிஞ்சிட்டியள் தானே. உங்கன்ரை GLJUJ ரைச் சொல்லுங்கோவன் . '
நர்ணம் படகுகிறது. சொல்கிருள் - பஸ் மிக விரைவாக ஒடுகிறது. யார் றைவர்? எட்டிப்பார்க்கி றேன். பேரம்பலம்தான். ச . . .
முகத்தில் அமுக்கும் காற்றினல் சிதைவடைந்த மயிர்க்கற்றைகளை ஒருங்கு திரட்டி காதிற்குள் செருகுகின் முள். கைகள் லாவகமாக இயங்குகின்றது.
“வேறை என்ன..சொல்லுங்கோவன் . . y "என்னத்தைச் சொல்லுறது ...?** கேட்கின் ருள். என்ன கதைப்பதன்றே தெரியவில்லை. . எவ்வளவு கதைக்க இருக்கு ஒன்றும் தொண்டைக்கு வெளி யாலே வருததில்லை.

- 41 -
இவள் அருகிலிருந்தாலே பெரிய நிம்மதி. இணுவில் வந்துவிட்டது. சொல்லிவிட்டு இறங்குகிருள். "இப்படி ஒவ்வொருநாளும் சந்திப்பம். ம். இப்படியான காலம் எல்லாம் போய்விட்டது. இதெல் லாம் இனித் திரும்பி வராது,
அந்த பஸ் ஷ"சக்குள் அவள் நிற்கிருள் எண்டு தெரிஞ்சிருந்தால் நான் ஏறியிருக்கமிாட்டான். என்ன செய்யிறது. ரிக்கற்றும் எடுத் தாச்சு, பேசாமல் நிப்பம்.
ஒரு சீட் இருக்கிறது. போய் இருக்கிறன். யன்னலை அகலத் திறந்து விட்டேன்.
அவள் என்னைப் பார்த்தாள் - முறுவலித்தாள் .பஸ்சும் வெளிக்கிட்டது.
முகம் முளுக்க ஒரே குளிர்ம்ை. பனித்துகள்களை வாரியிறைத் தது போன்று.
நெற்றி மிக வெறுமையாக, தலைமயிர் தாளம் போட்டபடி, மயிர்கள் நெற்றியில் உருண்டன.
காற்று.நீதான் இந்த உலகில் நிஜமானது. அவளைப் பார்க்கினறேன். அவள் என்னைப் பார்த்துக் கொண் டே இருக்கிருள் பழையதை நினைத்தால் போலும். எனது செய் கைகள் அவளுள் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கலாம்
அலட்சியமாக அவளைப் பார்த்தேன். அவள் தொடர்ந்தும் பார்த்துக் கொண்டேயிருக்கிருள் - சிரிக் கின் ருள்.
எனக்கு எல் லாமே வேஷமாக. வெளிவேஷம்ாக. போலியாக. ஒரே பொய்யாசு.
நீ இப்படி எவ்வளவு பேதிை..? அவ%ளப் பார்த்தேன், அவள் இன்னும் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிருள் - சிரிக்கவில்லை. வினுேதமாகப் பார்த்தாள்.
இவன் ஒரு புதிராக இருக்கிருனே’ என யோசித்தாளாக்கும்.
எங்கேயோ ஆகாயத்தில் பறப்பது போல.. நான் எல்லாவற்றையும் வெற்றி கொண்ட பூரிப்பு. நான் நானுக... .

Page 23
- 42 -
இப்பொழுது தான் முயற்சிக்கிறேன். மிக இயல்பாக வெளிப் படுகின்றேன். இணுவில் வந்து விட்டது. அவள் என்னைப் பார்க்கின்ருள். சிரிப்பம்ோ விடுவமோ என யோசிக்கின்ருள் - இறங்குகின்ருள்.
நான் அவளையே உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். அவள் என்ன செய்தாலும் சரி என்பதுபோல்,
முன்னர் போல் நான் வழிந்து கொண்டிருக்கத் தயாராயில்லை சுண்ணுகம் கழிகின்றது. மல்லாகம் வந்துவிட்டது. இராசையாண்ணை வீட்டிலை விட்ட சைக்கிளை எடுத்துக் கொண்டு அளவெட்டிக்குப் போகவேணும்.
இராசையாண்ணை வீட்டுக் கண்ணுடியிலை முகத்தைப் பார்க் கின்றேன்.
மேற்கோள் போலிக்கு. இல்லையில்லை போலி மேற்கோளுக்கு விடை கண்டு விட்ட பூரிப்பு. கடவுளைக் கண்டவர்களும பொய் சொல்லுவார்கள்.
அளவெட்டியிலை நந்தினி ரேணுகா, நிர்மலா ,இவையளெல் லாம் ஒருமாதிரிப் பாப்பினம் போல இருக்கு. ‘இவனெனன விசித் திரமாக இருக்கிருனே."
நான் சைக்கிளை எடுத்தேன். வேகமர்க . வெகு வேகமாகச் சைக்கிளைச் செலுத்தினேன்.
சைக்கிளுக்கும் பிறேக் இல்லைத்தான்.
|}

அன்பளிப்பு
தா. திரு நா வுக் கரசு
(Lut. 2.)
கல்லூரி வீதி, காங்கேசன்துறை,

Page 24
ஒளி,
புகைப் அனை வட பிரதேசத்தின் சி
@ () { /73 Z2
தொடர்புக்கு:-
ருெலெக்ஸ் அளவெட்டி வடக்கு, அளவெட்டி.
發
நீங்கள் மில்க்வைற் தயாரிப்பு R வசதி, வாய்ப்பு, பய இ& வீட்டுத்தோட்டம் வி * பனை வளம் பெருக்கி R பசளை தரும் செடிக & ஊர்கள் தோறும் நீரைத் தேக்குதல், இ8 சனசமூக நிலையங்க இ& பக்தி நெறியில் பயிற்றுதல். R எல்லோரும் எல்லே R வள்ளுவர் நெறியில் & எல்லோரும் யோகா மில்க் வைற் மேலுறைகளை பரிசில்களைப் ெ
மில்க்வைற் சவ
ઝ , 6ીLJ , ઉ. 69.

படங்கள். த்திற்கும்,
]ந்த வளம்மிகு ஸ்தாபனம்,
லக் ஸ். ύν EX
ருெலெக்ஸ் ஸ்ரூடியோ,
iМ\, ク η
களுக்குத் தரும் ஆதரவின் பயன்
பன் கருதி மரங்களை நடுதல்
ருத்தி செய்தல். ப்ெ பயன் பல பெறுதல். ள் மரங்களை உண்டாக்குதல் குளங்களே ஆளமாக்கி மழை
ளில் வாசிக்க வழி செய்தல். பரமனைப் பணிந்து வாழப்
ருக்கும் சேவை செய்தல்வைய்கம் வாழ வழி வகுத்தல்" சனம் பயில வைத்தல், ச் சேகரித்து பெறுமதிவர் ய்ந்த 1ற்றுக்கொள்ளுங்கள்.
க்கரத் தொழிலகம்
7, யாழ்ப்பாணம்.