கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிங்களச் சிறுகதைகள்

Page 1
தொகுத்தவர் : 'செ

மNDoகப்பந்|U
ஆனால் தைல்
ங்கை ஆழியான்' !

Page 2
此出

اوله 8

Page 3

இந்த.

Page 4

சிங்களச் சிறுகதைகள்
(இருபத்தைந்து சிறுகதைகள்)
தொகுப்பு: செங்கை ஆழியான்
I - - வ.
- |
அவர் கட்சி -
மNooகப்பந்தல்
201-1/1, ஸ்ரீகதிரேசன் வீதி,
கொழும்பு - 13. தொலைபேசி: 2320721
- - - - - - - -

Page 5
இது ஒரு மல்லிகைப் பந்தல் வெளியீடு
இருள்)
பத்ருகா (இன்மை) முதற் பதிப்பு : ஜனவரி - 2004
விலை: 150/= தொகு)
ப(925) பக்கங்கள் : 142 + viii
அட்டை வடிவமைப்பு : எஸ். திவாகரன் கணினி அச்சமைப்பு : எஸ். லிகோரின் றோசி
( ISBN: 955-8250-27-9)
அச்சிட்டோர்: யு. கே. பிரின்டர்ஸ், 98 A, விவேகானந்த மேடு,
கொழும்பு - 13. தொலைபேசி: 2344046, 074-614153

கிபி ஆப ரக் கட்சி 3 பட பாட்டு போ.
க ரா ப முன்னுரை வெ . பாம்பு
( படுகோன் - சாமிநாதன் விமல்
222 - (0 1 - 2: -
நவீன சிங்கள இலக்கிய அம்சங்களுக்குள் மிகவும் வளர்ச்சியடைந்த இலக்கியத்துறையாகவும், மிகவும் பரந்துள்ள இலக்கிய அம்சமாகவும் சிறுகதை இலக்கியத்தைக் காணக்கூடியதாக உள்ளது. அதன் தோற்றம், முக்கிய திருப்பு முனைகள் ஆகியவற்றினைப் பற்றி மிகவும் சுருக்கமான விளக்கமொன்றை முன் வைத்தல் இக்கட்டுரையின் நோக்கமாகும்.
காலனித்துவ ஆட்சியின் கீழ் இலங்கைச் சமுதாயத்தில் ஏற்பட்ட சில மாற்றங்களின் விளைவாகவே நவீன கலை இலக்கிய அம்சங்களில் தமிழ் சமூகத்திற்குப் போலவே சிங்களச் சமூகத்திற்கும் அறிமுகமாகின. சில கலை இலக்கிய அம்சங்களில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்ட அதே சமயம் சில கலை இலக்கிய அம்சங்கள் புதிதாக தோன்றின. சிறுகதை இலக்கியமும் சிங்கள இலக்கியத்தில் அவ்வாறு தோன்றிய இலக்கிய அம்சமாகவே பெரும்பாலும் கருதப்படுகின்றது. சிங்களச் சிறுகதை இலக்கியத்தினதும், சிங்கள நாவல் இலக்கியத்தினதும் தோற்றம் பற்றிய இலக்கிய ஆய்வாளர்களின் கருத்துக்களைப் பிரதானமாக மூன்று வகைகளாகக் காணலம். அதாவது:
1. நவீன சிங்கள நாவல் மற்றும் சிறுகதை இலக்கியங்கள் மேற்குத் (Western) தேச இலக்கியங்களில் இருந்து கடனாகப் பெற்று இங்கு வளர்க்கப் பட்டவையாகும். அவற்றிற்கும் புராதன சிங்கள கதை இலக்கியத்திற்கும் இடையில் எந்தவொரு தொடர்பும் கிடையாது.
2. நவீன சிங்கள சிறுகதை இலக்கியமும் நாவல் இலக்கியமும் மேற்குத் தேசத்திலிருந்து கடனாகப் பெற்றுக் கொண்டு இங்கு வளர்க்கப்பட்டவையாகும். ஆயினும் புராதன சிங்களக் கலை இலக்கியத்திற்கும் சிறுகதை நாவல் இலக்கியங்களுக்கும் இடையில் தொடர்புகள் உள்ளன.
3. நவீன நாவல் மற்றும் சிறுகதை இலக்கியங்கள் என்பன மேற்கு தேசத்திலிருந்து கடனாகப் பெற்றுக் கொண்டவை அல்ல. அவை சிங்கள சிறுகதை இலக்கியத்திலே பரிணாமம் பெற்றவை ஆகும்.

Page 6
புராதன சிங்கள கதை இலக்கியத்திற்கும், சிறுகதை இலக்கியத்திற்கும் இடையில் சிற்சில நிகரான அம்சங்கள் காணக்கூடியதாக இருந்தாலும் ஏனைய கீழ்தேச நாடுகளில் போலவே இலங்கையிலும் சிங்கள இலக்கியத்திலும் சிறுகதை இலக்கியத்தின் தோற்றம் மேற்குத் தேச இலக்கியங்களின் செல் வாக்குகள் காரணமாகவே நிகழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தொடக்கக் கால சிங்கள சிறுகதைகள் - அதாவது சிங்கள் சிறுகதை இலக்கியத்தின் முற்காலத்தைச் சார்ந்த கதைகள் சிறுகதை' (Short Story) எனப்படும் கலை அம்சத்திற்குரிய கலை இலக்கிய பண்புகளை மிகவும் அரிதாகவே உள்ளடக்கியவை. எனவே இக்கதைகள் குறுகிய கதைகள் என்ற கருத்துள்ள 'லகு கதா' என்ற பெயரில் சிங்கள இலக்கிய விமர்சகர்கள் அறி முகப்படுவதுண்டு. கிறிஸ்தவ சமயத்தையும், பௌத்த சமயத்தையும் பரப்பும் நோக்கத்துடன் செயற்பட்ட பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இக்கதைகள் பிரசுரமாகின. இக்கதைகளில் வரும் நிகழ்வுகளும் சமூகமும் அக்காலீன சமூகத் துடன் தொடர்புடையவை. ஆயினும் கதை கூறும் முறை என்பது புராதன சிங்கள கதை இலக்கியத்தைச் சார்ந்த பண்புகளைக் கொண்டதாகவே இருந்தன. முற்கால சிங்கள பத்திரிகைகளில் பிரசுரமாகிய 'பஞ்ச தந்திர' அராபிய இரவுகள் (Arabian Night) மற்றும் மேற்குத் தேசங்களைச் சார்ந்த மொழி பெயர்ப்புக் கதைகள், 'சிங்கள, பெளத்த' போன்ற பத்திரிகைகளில் பிரசுரமாகிய பௌத்தயா இலக்கியத்தைச் சார்ந்த கதைகள், 'ஞானார்த்த தீபய' போன்ற கிறிஸ்தவ இலக்கியத்தைச் சார்ந்த பத்திரிக்கைகளில் பிரசுரமாகிய கிறிஸ்தவ இலக்கியக் கதை சார்ந்த கதைகள் ஆகியவை முற்காலச் சிங்கள சிறுகதைகளுக்கு
அடித்தளமாகின.
LL - - -
இவ்வாறு தோற்றம் பெற்ற சிங்களச் சிறுகதை இலக்கியத்தின் கலைப் பண்புகளை ஓரளவுக்காவது உள்ளடக்கிய முதற் கதையாகக் கருதப்படுவது 'சிங்கள் ஜாதிய' எனப்படும் பத்திரிகையில் 1909ல் பிரசுரமாகிய 'டேசியின் துரதிஸ்டமான நாள் சுமணாவின் அதிர்ஸ்டமான நாளாகியது' என்ற கருத்துள்ள கதையாகும். சிங்கள நாவல் இலக்கியத்திலும் முக்கிய எழுத்தாளரான பியதாச சிறிசேன இக்கதையின் ஆசிரியர் ஆவார்.
சிங்களச் சிறுகதை வரலாற்றில் முதற் கட்டத்தைச் சார்ந்த எழுத்தாளர் களாகப் பியதாச சிறிசேன, டபில்யூ.ஏ. சில்வா, ஹேமபால முனிதாச, டி.ஜி. டபில்யூ.தி. சில்வா, மார்டின்.சில்வா, ஆகிய எழுத்தாளர்கள் காணப்படுகின்றனர். சிங்கள தேசியவாத கருத்தினை மையமாக்கிக் கொண்டு தன் சிறுகதைகளை எழுதிய பியதாச சிறிசேனவின் கதைகள் பத்திரிகைகள், வார சஞ்சிகைகளில் பிரசுரமாகின. ஆயினும் அக்கதைகள் தொகுதிகளாக வெளிவரவில்லை. அக்கால சமூகத்தில் நிலவிய 'தீய' பண்புகளை நளினத் தன்மையைக் கொண்ட பாத்திரங்கள் மூலமாக விமர்சித்த சிறுகதை எழுத்தாளர்களாக டி.ஜி. டபில்யூ.தி. சில்வா, ஹேம்பால முனிதாசவும் முற்காலச் சிங்கள சிறுகதை இலக்கியத்தில் காணப்படுகின்றனர். நளினத்தை மையமாக்கிக் கொண்டுள்ள சிறுகதைகளில்

முன்னோடியான டி.ஜி. டபில்யூ.தி. சில்வாவின் கதைகள் பத்திரிகைகளில், சஞ்சிகைகளில் 'பத்பாடகம்', 'கசாத பெம்ம', 'புதும் தொஸ்தர' ஆகிய தொகுப்புக்களில் வெளிவந்துள்ளன.
1928-ல் வெளிவந்துள்ள ஹேம்பால முனிதாசவின் 'மனாலிய' என்ற சிறுகதைத் தொகுதியும் ஆரம்ப காலச் சிங்கள சிறுகதைகளுக்குள் முக்கியமான தொன்றாகும். அவருடைய வஹல் வெந்தேசிய' எனப்படும் சிறுகதைத் தொகுதி 1946-ல் வெளிவந்துள்ளது. சமூகத்தில் நிலவிய 'தீய' பண்புகளை, சக்திகளை நளினத் தன்மையுடன் விமர்சிக்கும் அவருடைய சிறுகதைகள் சிறுகதை இலக்கியம் தொடர்பான ஆர்வத்தை சிங்கள வாசகர்களுக்கு ஏற்படுத்தலில் முக்கிய பங்களிப்பு அளித்தது. சிங்கள சிறுகதை இலக்கியத்தில் ஆரம்ப கட்டத்தைச் சார்ந்த எழுத்தாளர்களுள் மிகவும் முக்கியமான இருவர் டபில்யூ.ஏ. சில்வா, மார்டின் விக்கிரமசிங்காவும் ஆவார்.
டபில்யூ.ஏ. சில்வா என்பவர் சிங்களச் சிறுகதை இலக்கியத்தில் மாத்திரமல்ல சிங்கள் நாவல் இலக்கியத்திலும் முக்கியமான பங்களிப்பைச் செய்தவர். 'தெய்யன்கே ரடே (1967)', 'கதா ரத்னாகரய (1930)', 'லேன்சுவ (1947)' ஆகிய சிறுகதைத் தொகுதிகள் அவருடைய முக்கியமான கதைகளைக் கொண்டுள்ளன. எதார்த்தவாதிப் பாணியும், கற்பனைவாதப் பாணியும் கலந்த அவருடைய எழுத்து முறை மிகவும் கவர்ச்சிகரமானதொன்றாக இருந்தது. சிறுகதை இலக்கியத்தைச் சார்ந்த வாசகர்கள் கூட்டமொன்று உருவாக்குவதில் டபில்யூ.ஏ. சில்வாவின் கதைகள் பெரும் பங்களிப்பளித்தன.
மார்ட்டின் சில்வா என்பவர் சிங்களச் சிறுகதை இலக்கியத்திலும் சிங்களச் இலக்கியத்திலும் மாத்திரமல்ல சிங்கள் இலக்கியத் திறனாய்வுத் துறையிலும் பெரும் மாற்றங்களுக்குக் காரணமாகியவர் ஆவார். 1924ல் வெளிவந்த 'கெஹெனியக்' என்ற சிறுகதைத் தொகுதி அவருடைய முதற் சிறுகதைத் தொகுதியாகும். அவருடய சிறுகதைகளில் வரும் பாத்திரங்கள் கூடுதலாகவே இலங்கையில் தெற்குப் பிரதேச கிராமப்புற மக்கள் ஆவார். சிங்கள சிறுகதை இலக்கியத்தின் முதற் காலகட்டத்தைச் சார்ந்த கதைகளுக்குள் சிறுகதை இலக்கியத்திற்குரிய கலைப் பண்புகளைக் கூடுதலாகவே உள்ளடக்கும் சிறுகதைகள் மார்டின் விக்கிரமசிங்காவின் கதைகள் சார்ந்தவையாகும். அவருடய “சரிதாதர்ச கதா(1927)', 'பவுகாரயாட கல் கெசீம(1939)', 'மார யுத்தய(1943)', “அபூரு முகுண்(1944)', 'வஹல்லு(1951)' ஆகிய தொகுதிகளில் உள்ளடங் கியுள்ளன. மேற்குத்தேச சிறுகதை எழுத்தாளர்களின் செல்வாக்குகளை மார்டின் விக்கிரமசிங்காவின் சிறுகதைகளில் மிகவும் தெளிவாகக் காணமுடியும். ரஷ்ய இலக்கியத்தில் வரும் சிறந்த சிறுகதை எழுத்தாளரான அன்ரன் செகொவ் (Anton Chekhov) என்ற எழுத்தாளரின் கதைகளின் செல்வாக்குகளை பரவலாகவே மார்டின் விக்கிரமசிங்காவின் கதைகளில் காணக்கூடியதாகவே உள்ளன. மேலும், பிரான்ஸ் இலக்கியத்தில் முக்கியமானதொருவரான Guy de maupasantன் சிறுகதைகளில் செல்வாக்குகளும் மார்டின் விக்கிரம

Page 7
சிங்காவின் சிறுகதைகளுக்கு கிடைத்துள்ளன. மேற்கு தேச இலக்கியத்தில் வளர்ச்சியடைந்த நிலைமையில் இருந்த சிறுகதை இலக்கியத்தை மிகவும் அர்த்தமுள்ளதாக மார்டின் விக்கிரமசிங்காவின் பங்களிப்புச் சிங்கள் சிறுகதை இலக்கிய வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகின்றது. ஒரு கலை இலக்கிய வடிவம் என்ற ரீதியில் சிறுகதை இலக்கியத்திற்குரிய பண்புகளை அறிமுகப்படுத்த அவருடைய 'வஹல்லு' (1951) என்ற சிறுகதைத் தொகுதியில் உள்ளடக்கிய விரிவான கட்டுரையே வழிவகுத்தது. 4
சிங்கள சிறுகதை இலக்கிய வரலாற்றில் இரண்டாம் கட்டத்தைச் சார்ந்த எழுத்தாளர்களுக்குள் ஜீ.பி.சேனாநாயக்கா முன்னோடியானவர் ஆவார். சிங்கள கவிதை இலக்கியத்திற்கு Free verse கவிதை வடிவத்தை அறிமுகப்படுத்துபவர் என்ற ரீதியிலும் முக்கியத்துவம் பெறுகின்றவரான ஜீ.பி.சேனாநாயக்காவின் சிறுகதைகள் 'துப்பதுன் நெதிலோகய' (1945), 'பலி கெனீம' (1946) என்ற இரு தொகுதிகளில் உள்ளடங்கியுள்ளன. சிங்களச் சிறுகதையின் கலைத்தன்மை மேம்படுத்தியவர் என்ற ரீதியில் ஜீ.பி.சேனாநாயக்காவின் பங்களிப்பு முக்கி யத்துவம் பெறுகின்றது. நகரப்புற நடுத்தர வர்க்கத்தின் சமூக, உளரீதியான பிரச்சினைகள் பெரும்பாலும் அவருடைய சிறுகதைகளில் கருப்பொருளாகி யுள்ளன. இக்கருப்பொருள்களை இலக்கிய ரீதியாக அவர் முன்வைத்த முறையில் அவருடைய சிறுகதைகளின் முக்கியத்துவத்தைக் காணமுடியும். மன உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்தில் குறியீடுகளை, சூழல் வர்ணங்களை உபயோகித்துக் கொண்டுள்ளமை இவருடைய கதைகளில் சிறப்பம்சமாக இலக்கிய விமர்சகர்கள் கருதுகிறார்கள்..
சிங்களச் சிறுகதை இலக்கியத்தின் வளர்ச்சிக்காக ஜீ.பி.சேனாநாயக்காவின் பங்களிப்புகளுக்கு அடுத்ததாக சிங்களச் சிறுகதை இலக்கியத்தை மேலும் மேம்படுத்துபவர் என்ற வகையில் குணதாச அமரசேகரவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. 1953ல் வெளிவந்த 'ரது ரோச மல' அவருடைய முதற் சிறுகதைத் தொகுதியாகும். தன் முதற் சிறுகதைத் தொகுதி மூலமாகச் சிங்களச் சிறுகதை இலக்கியத்தில் முக்கிய திருப்புமுனையொன்றை ஏற்படுத்தியவர் என்று குணதாச அமரசேகரவை அறிமுகப்படுத்துவதுண்டு. இக்கதைத் தொகுதியில் உள்ளடங்கிய ' சோமா' என்ற கதை 1950ம் ஆண்டில் வெளிவந்த சிறந்த உலகச் சிறுகதைகள் 49ல் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. அவருடைய 'ஜீவன சவத' என்ற சிறுகதை இலக்கியங்களின் செல்வாக்குகளைப் பெற்றாலும் தேசியத் தன்மை கூடுதலாகவே உள்ளடங்கும் பண்பை அவருடைய சிறுகதைகளில் முக்கிய பண்பாக இலக்கிய விமர்சகர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். கிராமப்புற நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையும், அவ்வர்க்கத்தின் பிரச்சினைகளும் இவருடைய சிறுகதைகளில் கருப் பொருளாக பெரும்பாலும். காணக்கூடியதாக உள்ளன.
சிங்கள சிறுகதை இலக்கிய வரலாற்றில் இரண்டாம் கட்டத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும் எழுத்தாளர்களுக்குள் கே, ஜயதிலக, மடவல எஸ். ரத்னாயக

ஆகிய இரு எழுத்தாளர்களும் முக்கியமானவர்கள் ஆவர். இவர்களுடைய கதைகளில் பெரும்பான்மையானவை கிராமப்புற நடுத்தர வர்க்கத்தையே மையமாக்கிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கே. ஜயதிலகாவின் 'வஜிர பப்பத', 'கடு சக மல', 'புனருத்திய', அதீரணய', புதுஹினாவ', 'தெமல மல்', 'மல் மென் கடுபுல்' ஆகிய சிறுகதைத் தொகுதிகளும் இதற்குச் சான்று.
சிங்கள நாவல், சிறுகதை, கவிதை, நாடகம் ஆகிய எல்லாத் துறைகளிலும் சோசலிச எதார்த்தவாதத்தின் தாக்கம் 1970ம் தசாப்தத்தில் மிகவும் வலிமையாகக் கிடைத்தது. இதன் காரணமாகவே இத்துறைகளிற் சிற்சில மாற்றங்கள் நிகழ்ந்தன. 1970--1977 காலப்பகுதியில் இலங்கை அரசாங்கமாக செயற்பட்ட கூட்டுக்கட்சி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளாக இடது சாரி கட்சிகளும் அங்கம் வகித்தன. இதன் விளைவாக சோசலிச எதார்த்தவாதம் என்ற கலை இலக்கிய கோட்பாடு அரசு அனுசரணையுடன் எழுச்சி பெற்றது. சிங்களச் சிறுகதை இலக்கியத்திலும் அதிக எண்ணிக்கையான சிறுகதைகள் இக் கோட்பாட்டிற்கு அமைய வெளிவந்தன. ஆயினும் அதில் கூடுதலான கதைகள் ஒரு கருத்து சொல்லும் நோக்கத்துடன் எழுதிய, கலை இலக்கிய பண்புகளை மிகவும் குறைவாகவே உள்ளடக்கியவை ஆகும். எனினும் இப்புதிய போக்கினை உருவாக்கிய கிறுகதைகளுள் சில கதைகள் சிங்கள சிறுகதை இலக்கியத்தின் தரத்தை மேம்படுத்த உதவியன. ஏ.வி.சுரவீர, சயிமன் நவகத்தேகம, குணசேன விதான போன்ற எழுத்தாளர்களுடைய சிலச் சிறுகதைகள் இவ்வாறு சோசலிச வாதத்தை முதன்மையாக்கிக் கொண்டு எழுதியுள்ள சிறுகதைகளுள் உள்ளடங்கியன. சிங்கள இலக்கிய வாசகர்களுக்கு ரஷ்ய சிறுகதைகளின் மொழி பெயர்ப்புகள் கூடுதலாகவே இக்கால கட்டத்தில் அறிமுகமாகியன. 'பேதி தியட பொறதிய', பவதிமிர' ஆகிய சிறுகதைத் தொகுதிகள் மூலமாக சிங்கள சிறுகதைத் துறையில் தன் ஆக்கத் திறமையை வெளிக்காட்டிய ஏ.வி. சுரவீராவின் சிறுகதைகளைச் சிங்கள சிறுகதை இலக்கியத்தின் மிகவும் வளர்ச்சியடைந்த கதைகளுக்கு உதாரணங்களாக எடுத்துக் காட்ட முடியும். ஏ.வி.சுரவீர சிங்கள இலக்கிய திறனாய்வுத் துறையிலும் குறிப்பபிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர் ஆவார். பெரும்பாலும் கிராமப்புற பின்தங்கியப் பிரதேசங்கள் - குறிப்பாக 'வன்னிய' எனப்படும் சிங்கள பிரதேசங்களில் வாழும் மக்களுடைய வாழ்க்கையை தன் கதைகளின் கருப்பொருளாக்கிக் கொண்டுள்ள சய்மன் நவகத்தேகமவின் சிறுகதைகளை அக்கதைகளின் மூலமாகவே முன் வைக்கும் வாழ்க்கை தத்துவத்தைக் காரணமாகவே குறிப்பிடத்தக்க சிறப்புக் கதைகளாக சிங்களச் சிறுகதை இலக்கியத்தில் காணப்படுகின்றன. சோசலிச எதார்த்த வாதத்தைக் கோட்பாடாக்கிக் கொண்ட எழுத்தாளர்களுக்குள் மிகவும் பிரபல்யமானவரான குணசேன விதானவின் கதைகளின் கருப்பொருளை பாட்டாளி வர்க்கத்தின் வாழ்க்கை, இனங்களுக்கிடையிலான உறவுகள் என்பன தோற்று விக்கின்றன.
1977ற்குப் பின் இலங்கை சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாக கலை இலக்கியத் துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், புதிய போக்குகள் ஆகியவை

Page 8
சிங்கள் சிறுகதை இலக்கியத்திலும் பிரதிபலிக்கின்றன. தேசிய அளவிலான பத்திரிகைகள், வார சஞ்சிகைகள் ஆகியவற்றின் வளர்ச்சியே சிங்கள சிறுகதை இலக்கியத்தை விரிவாக்கியது. வார சஞ்சிகைகளிலும், பத்திரிகைகளிலும் கட்டாய அம்சமாகச் சிறுகதை இடம் பெற்றுக் கொண்டது. எண்ணிக்கை அளவில் சிறுகதை இலக்கியத்தின் வளர்ச்சிக்காகவும், புது எழுத்தாளர்களை உருவாக்கியதிலும் இந்தப் பத்திரிகைகளும், வார சஞ்சிகைகளும் முக்கிய பங்களிபக்பு செய்தன. இவ்வாறு தேசிய அளவிலான பத்திரிகைகள், வார சஞ்சிகைகளை அதிகரித்த அதே சமயம் சிங்கள சமூகத்தில் 'மாற்று' (Alternative) பத்திரிகைகளினதும், சஞ்சிகைகளினதும் வளர்ச்சி இக்கால கட்டத்தில் ஆரம்பமாகியது. பல்வேறு கருத்தியல்புகளை (ldeologies) மையமாகிக் கொண்டு செயற்பட்ட இந்த ஊடகங்கள் வழியாக உலக சிறுகதை இலக்கியத்தில் பல சிறுகதைகள் மொழி பெயர்க்கப்பட்டு பிரசுரமாகின. அதே நேரம் பல்வேறு சிறுகதை போக்குகளும் அறிமுகமாகின. சிங்களச் சிறுகதை இலக்கியத்தின் தரத்தை மேம்படுத்த இந்தக் கதைகளே உதவின.
தற்போது சிங்களச் சிறுகதைத் துறை சார்ந்த எழுத்தாளர்கள் பலர் இந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள் மூலமாக அறிமுகமாகியவர் ஆவர். பல்வேறு இலக்கியப் போக்குகளைக் கொண்டுள்ளவர்களான இச் சிறுகதை ஆசிரியர்களின் கதைகள் பல்வேறு வடிவங்களைக் கொண்டவை ஆகும். ஜயதிலக கம்மல்ல வீர, எரிக் இளயப்பாராச்சி, நிசங்க விஜேமான்ன, சோமரத்ன பாலசூரிய, டெனிசன் பெரேரா ஆகியோர் கூடுதலாகவே எதார்த்வாத இலக்கியக் கோட்பாட்டைப் பின்பற்றிச் சிறந்த சிறுகதைகள் எழுதியுள்ளனர்.
அஜித் திலகசேனாவின் சிறுகதைகள் அவர் பயன்படுத்தும் மொழி, மொழி நடை, இலக்கணமுறை ஆகிய காரணங்களாலும், கருப்பொருள்களிலும் சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளவை ஆகும். கே.கே.சமன் குமார, அசோக ஹந்தகம், மஞ்சுள வெடிவர்த்தன, தினிது சிறிவர்த்தன, ஹென்றி வர்ணக்குல சூரிய, திலினா வீரசிங்க, சுநேத்திரா ராஜகருணாயக்க ஆகியோர் தம் சிறுகதைகளின் போது கட்டமைக்கப்பட்டுள்ள அதிகார நிறுவனங்களான அரசு. மதம், ஒழுக்கம், அறநெறி ஆகியவற்றைக் கேள்விக்குள்ளாக்குவதில் - கேள்விக்குள் வாங்கியதில் - கவனம் செலுத்துகின்றனர் (இப்பெயர்கள் சில உதாரணங்கள் மாத்திரமே ஆகும்). தற்போதைய சிங்கள சிறுகதை இலக்கியம் பற்றிப் பேசும் போது மொழி பெயர்ப்புகளாகச் சிங்கள வாசகர்களுக்கு வந்து சேரும் சிறுகதைகளைப் பற்றிக் குறிப்பிடுவது மிகவும் அவசியமாகும். ஆங்கில, பிரான்ஸ், ரஷ்ய, ஹிந்தி, பெங்காளி, தமிழ் ஆகிய மொழிகளில் வெளிவரும் பல சிறுகதைகள் அந்த மொழிகள் வழியாகவும், ஆங்கில மொழி வழியாகவும் சிங்கள மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இச்சிறுகதைகள் சிங்கள் சிறுகதை இலக்கியத்தின் தரத்தை மேம்படுத்த செல்வாக்குகளை அளிக்கின்றன.

மார்ட்டின் வீக்கிரமசிங்கா
மதுக் கிண்ணம்
TET' : |
தமிழாக்கம்: தம்பிஐயா தேவதாஸ்
*'அஜந்தா மண்டபத்திற்கு நான் இனிமேல் வரமாட்டேன்" என்று கூறினாள் மனைவி, கணவனின் இரு கண்களும் அவளின் கண்களை நோக்காமல்
அழகான முகத்தை மட்டும் நோக்கின.
''ஏன்? போன ரெண்டு கிழமையில் வரமுடியாது என்று அடம் பிடிச்சாய். கடைசியா நான் செய்த பிடிவாதத்தால்தான் வந்தாய்."
''நான் போனகிழமை வந்தது என்ர விருப்பத்ததுக்கு இல்ல. நீங்க செய்த கரைச்சலாலதான்."
'நான் அஜந்தாவுக்குப் போகப் பழகியதே உன்னாலதான்; நீ ஏன் திடீர் என்று மாறிவிட்டாய்?"
ராணி பதில் சொல்லவில்லை.
சிறிமன்னுக்கு அஜந்தா மண்டபத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் நினைவில் வந்தன. தனக்கு ஒரு கிளாஸ் விஸ்கியும் ராணிக்கு ஒரு கிளாஸ் வைனும் தந்து உபசரித்த அந்தப் பணக்கார வாலிபனின் அழகான முகம் சிறிமன்னன் உள்ளத்தில் தெரிகிறது. தன்னுடைய மனைவி கடந்த இரண்டு வாரங்களாக அஜந்தாவுக்கு வராமல் வீட்டில் அடைந்து கிடக்க முயற்சிப்பதற்குக் காரணம் என்ன? அவன் தன் மனைவியின் திடீர் மாற்றத்தையும் அந்த வாலிபனையும் ஒன்றாக இணைத்துப் பார்க்க முயன்றான்.
இதுநாள் வரையும் ராணி மிகுந்த சந்தோஷத்துடனேயே அஜந்தா மண்டபத்திற்குச் சென்று வந்தாள். தான் முதன் முறையாக அங்கு சென்றது அவளைச் சந்தோஷப்படுத்துவதற்காகத்தான் என்பதைச் சிறிமன் நினைத்துப் பார்க்கின்றான். ஆரம்ப நாட்களில் அவளை அணைத்துக் கொண்டு
1 | மல்லிகைப் பந்தல்

Page 9
நடனமாடுவதில் பெற்ற சுகம் அவளைத் திருமணம் செய்வதற்கு முன் அவளுடன் பழகும் பொழுதும் பெற்ற சுகத்திற்கு ஒப்பானதாகும். அவன் அன்றிலிருந்து 'பால்' நடனம் ஆடுவதை மிகுந்த விருப்பத்துடன் கற்றுக் கொண்டான். அவன் வாரத்தில் ஒருமுறை அல்லது இருமுறை தனது மனைவியுடன் தாளத்திற்கு ஏற்ப கால் அசைப்பது மட்டுமல்ல, கலையொன்றைக் கற்பவன் போலவே
ஆடக் கற்றுக் கொண்டான்.
ஆறுமாதம் கடப்பதற்கு முன்னமே சிறிமன் ஜெயசேனாவும் ராணியும் அஜந்தா மண்டபத்தில் 'பால்' நடனமாடுவதில் சிறந்த சோடிகளில் ஒரு சோடியாகத் திகழ்ந்தார்கள். 'பால்' நடனமாடும் பொழுது எப்பொழுதும் அவளின் கணவனே துணையாக ஆடுவான். ராணி அந்நிய ஆடவன் எவனுடனும் ஆட மாட்டாள். சிறிமன்னும் அந்நிய பெண்களுடன் ஆடமாட்டாள்.
அரசாங்க அலுவலகம் ஒன்றில் எழுதுவினைஞனான சிறிமன் தனது அழகியை அணைத்துக் கொண்டு ஆடுவது போன்ற அற்புத சுகத்தை வேறு எதிலுமே பெற்றானில்லை.
நாள்தோறும் அலுவலகத்திற்குச் சென்று மாலை வீடு திரும்பும் அவன், வாரத்திற்கு ஒருமுறை களைப்பைத் தீர்த்துக் கொள்வான். தனி ஆளாக இருந்த பொழுது சினிமாப் பார்த்தும் நண்பர்களுடன் காட் விளையாடியும் பொழுதைப் போக்குவான். இப்பொழுது அவன் தன் மனைவியுடன் அஜந்தா மண்டபத்திற்குச் சென்று நடனமாடியும், மது ஒரு கிண்ணமோ இரு கிண்ணமோ பருகியுமே பொழுது போக்குவான். அவன் வீட்டில் இருக்கும் பொழுது இருந்திட்டு ஒருமுறையே மது பாவிப்பான். இருப்பினும் இதற்குமுன் மதுக்கடைக்கோ அல்லது ஹோட்டல்களுக்கோ போய் மது பருகி இருக்கமாட்டான். அவைகளில் அவனுக்கு ஆசையில்லாமல் போனது மதுக் கடைகளுக்குப் போய் குடித்துச் செலவளிக்கத் தக்க சம்பளத்தைப் பெறாதவன் என்பதனாலேயே.
பணக்கார நண்பர்களின் உபசரணைகளுக்குப் பிரதியுபகாரம் செய்யுமளவிற்கு தாராள மனப்பான்மை இல்லாததினாலேயே அவன் அஜந்தா மண்டபத்தில் மது குடிக்கப் பழகினான். நண்பர்கள் வழங்கும் எல்லா உபசரணைகளையுமே ஏற்பது தகாது என்பதை சிறிமன் அறிவான். ஆனாலும் அவன் தன் நண்பர்கள் செய்யும் உபசரணைகளை ஏற்றே வந்தான், திரும்பவும் அதைப் போன்ற பிரதி உபசரணைகள் செய்வதால், தானும் அவர்களுக்குச் சமமானவன் போல் பொய் வேடம் போடுகிறான் என்று அவர்கள் எண்ணக்கூடுமே என்ற உணர்வு அவனுடைய உள்ளத்தில் உதித்ததினாலேயே.
*அஜந்தாவுக்குப் போனால் அதிக பணம் செலவழிகிறது என்பதாலா வர மறுக்கிறாய்? அல்லது உபாலிக்கு ஏதுமே செய்யாமல் அவனிடமிருந்து எந்நாளும் வேண்டிக் குடிப்பது உனக்குப் பிடிக்கவில்லையா?”
அதுவும் ஒரு காரணம்தான்... ஆனால் நான் அங்கு போக
சிங்களச் சிறுகதைகள் 2

விருப்பமில்லாதது அதனால் மட்டுமல்ல."
''ஒருநாளைக்கு இரவுச் சாப்பாட்டுக்கு உபாலியை இங்கு கூப்பிடுவோமா?”
''வேணாம்." அவள் உரத்த குரலில் சத்தமிட்டாள்.
தன்னுடைய மனைவி அஜந்தா மண்டபத்திற்குப் போக மறுப்பது ஏன் என்ற கேள்வியே மற்றைய நினைவுகளை விட அவனுடைய உள்ளத்தில் எழுந்து நின்றது.
தன்னுடன் மிகுந்த மகிழ்ச்சியுடன் பழகிய அந்தப் பணக்கார இளைஞன் ஓர் இரவில் இரண்டு கிளாஸ் விஸ்க்கியும் ஒரு கிளாஸ் வைனும் வாங்கி வைத்தான். இளைஞன் வைத்த ஒரு கிளாஸ் வைனை ராணியின் கைக்கு அருகாமையில் வைத்துவிட்டு மெதுவாகச் சிரித்தான். அடுத்த இரண்டு கிளாஸ் விஸ்க்கியில் ஒன்றை சிறிமன்னுக்குக் கொடுத்து விட்டு அடுத்ததைத் தன்னிடம் வைத்துக் கொண்டான்.
ராணி வைன் கிளாசைத் தூரத்தில் நகர்த்தி வைத்தாள்.
'என்ன, வைன் குடிக்கவில்லையா?''
அவனுக்குப் பதில் ஏதும் சொல்லாத ராணி தன் கணவனின் முகத்தை நோக்கினாள். !
ஆண்களும் பெண்களும் சோடி சோடியாக ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு நடனம் ஆடுகின்றார்கள். உள்ளங்களைத் தாலாட்டிக் கொண்டு இசை வெள்ளம் பரவிக் கொண்டிருந்தது. உண்டு குடித்துக் கொண்டிருக்கின்ற ஆண்களும் பெண்களும் இடைக்கிடை சிரிப்பது ராணி வைன் கிளாசை நகர்த்தி வைத்ததைக் கண்டாதினாலா? உள்ளத்தில் எழுந்த வெட்கத்தினாலும் கோபத்தினாலும் ராணி சிறிது முரண்டு பிடித்தாள்.
*குடி" என்றவாறே சிறிமன் சிரித்தான்.
'வேணாம்.''
'ஒருநாளும் வைன் குடித்ததில்லை?" அந்த இளைஞன் வினவினான்.
''ஏன் இல்லை" என்றவாறு சிறிமன் மீண்டும் சிரித்தான். வைனைவிடக் காரமானவைகளைக் கூட.." தன் மனைவி முறைத்துப் பார்ப்பதைக் கண்ட சிறிமன் அடுத்த வார்த்தைகளைப் பேசவில்லை. ராணி சில வேளைகளில் இரவில் தன்னுடைய அறையில் பிரண்டி ஒரு கரண்டியளவு குடித்தது தன்னுடைய கணவனைச் சந்தோஷப் படுத்துவதற்காகவே.
3 | மல்லிகைப் பந்தல்

Page 10
சிறிமன் மீண்டும் இவ்வாறு கூறினான்.
''கல்யாண வீடுகளில் ராணி வைன் எண்டாக் குடித்திருக்கிறாள்; ஆனா மற்றவைகளை வாயில்கூட வைத்தறியாள்... நான் சும்மா பகிடிக்குச் சொன்னனான்.." கோபம் குறைந்த ராணி கடைவாயில் சிரிப்பை வரவழைத்தாள். இளைஞனின் உள்ளம் மீண்டும் பூரித்தது.
''அப்படி என்றால் இந்தக் கிளாஸ் வைனையும் குடியுங்க."
'குடி” என்று சொல்லியவாறே சிறிமன் தனது மனைவியைப் பார்த்தான்.
''குடி... பரவாயில்லை.” அவன் மீண்டும் ஆதரவுடன் கேட்டான்.
ராணி வைன் திரவத்தில் தன் இரண்டு உதடுகளையும் நனைத்துக் கொண்டாள். அடுத்து ஒரு மிடறு வைனைக் குடித்தாள். அவள் வைன் திரவத்திற் தன் இரு இதழ்களையும் நனைத்துக் கொண்டது விருப்பத்தினாலல்ல. வைன் நிறைந்த அந்தக் கிளாசை உடனடியாகவே திருப்பிக் கொடுத்தால் தன்னுடைய கணவன் துக்கப்படுவானே என்று அவள் எண்ணினாள். அந்தப் பணக்கார இளைஞன் தன்னை நகர வாழ்க்கையே தெரியாத நாட்டுப்புறத்தவள் என்று எண்ணக்கூடுமே என்ற எண்ணமும் அவள் உள்ளத்தில் எழுந்தது. அவள் வெறுமையாகும் மட்டும் வைனைச் சிறிது சிறிதாக பருகினாள்.
சிறிமன் இவைகளைப் பலவிதத்திலும் நினைத்துப் பார்த்தான். பணக்கார இளைஞனின் மென்மையான இதழ்கள், நாடி, கூர்மையான கண்கள், உள்ளத்தைக் கவரும் பார்வை இவையெல்லாம் சிறிமன்னின் உள்ளத்தில் தெரிகின்றன. அவன் தன்னுடன் ஆவலுடன் பழகியதும் உபசரணைகள் செய்ததும் ஏதோ உட்கருத்து வைத்துக் கொண்டா? இந்த எண்ணங்களால் அவன் உள்ளம் சிக்கலடைந்தது. இந்த சிக்கல்களின் பின்னணியில் இருப்பது சந்தேகம், பொறாமை ஆகிய இரண்டுமே என்று உடனேயே அவனுக்குத் தெரிகின்றது.
ராணி கடந்த இரண்டு வாரங்களாக அஜந்தா மண்டபத்திற்கு வராமல் வீட்டிலேயே அடைந்து கிடக்க முயற்சி செய்தாள். அந்த இரண்டு கிழமையும் அவளை அங்கு அழைத்துச் சென்றது கால்மணிநேரம் அவளிடம் தர்க்கம் செய்த பின்பே, இரண்டாவது வாரத்தில் அந்த இளைஞனை அஜந்தா மண்டபத்தில் காணவில்லை. அவன் அன்றைய தினம் அங்கு வராதது ஏன்? வேறு இடத்தில் ராணியை இரகசியமாகச் சந்திக்கவா? அஜந்தாவில் ராணி அவனுடன் உரையாடியது மற்றைய நாட்களைவிட மிகுந்த சந்தோஷத்துடன். சிறிமனின் எண்ணங்கள் சந்தேகம், பொறாமை ஆகிய குதிரைகளின் மேலேறிய பழக்கமற்ற குதிரைக்காரன் போலாகின. இது நாள்வரையும் அஜந்தா மண்டபத்தில் ராணி சொன்னவை செய்தவைகள் எல்லாம் புதுத் தோற்றத்துடன் தோன்றின. அவர்களுடைய. சினேகிதம் வைனைக் குடிப்பதற்கு முன் ஏற்பட்டதொன்றாகும். ஆனாலும் அவள் தன்னுடைய மனைவியாவதற்கு முன்
சிங்களச் சிறுகதைகள் 4

உண்டான சினேகிதமாக இருக்கமுடியாதா?
'போன சனிக்கிழமை உபாலி அஜந்தா மண்டபத்திற்கு வரவில்லை; சில நேரம் இண்டைக்கும் வரமாட்டானாக்கும்.
தன்னுடைய கணவன் சொன்ன இந்த வசனத்தைக் கேட்ட ராணியின் உள்ளத்தில் முதலில் கோபமே உண்டாகியது. இரண்டாவதாகப் பயமும் கவலையும் உண்டாகியது. அந்த உணர்ச்சிகளால் பீடிக்கப்பட்ட அவளின் கண்களில் கண்ணீர் பெருகியது.
தன்னுடைய மனைவி அழுவதைக் கண்டதுமே சிறிமனின் உள்ளம் உருகியது. தனது நண்பன் கொடுத்த வைனை ராணியைக் குடிக்கச் செய்தது தன்னைத் தவிர வேறு யாருமல்ல. அவனிடம் அவளை மிக நெருங்க விட்டது தானேதான் என்பதைச் சிறிமன் நினைத்துக் கொள்கின்றான்.
''ஏன் ராணி அழுகின்றாய்?"
சிறிமன் தன் மனைவியின் இரண்டு தோள்களையும் பிடித்து நிமிர்த்தினான்.
''நான் அஜந்தாவுக்கு வர மாட்டேன் என்றது உபாலியால்தான்... அவனைச் சந்திக்கும் இடத்துக்குப் போக எனக்கு விருப்பமில்லை...”
''அவனுடன் கோபமா?"
இந்தக் கேள்வியைக் கேட்ட தனது கணவனின் முகத்தை நோக்கினாள் ராணி. அவன் யோசித்து உணர்ந்து கொள்ளும் சக்தியற்ற மூடன் அல்ல என்பதை ராணி அறிவாள். அவன் அந்தக் கேள்வியைக் கேட்டது ராணியின் உள்ளத்தை நோக வைப்பதற்காகவா? அல்லது அது கேலி வாக்கியமா? அந்த இளைஞன் இன்னும் சிறிது காலம் பழகினால் தன்னுடைய உள்ளம் அவனை நோக்கி இழுக்கப்படும் என்பதை ராணி அறிவாள். அழகு, அறிவு, பணம் அத்தனையுமுள்ள அவனுக்கு, அவனை நெருங்கிப் பழகும் பெண்ணொருத்தி அவனைக் காதலிக்கிறாள் என்பதை அனுமானித்துத் தெரிந்து கொள்ள முடியாத சிறுபிள்ளையா சிறிமன்? அவன் அப்படிப்பட்டவனல்ல. அவன் அந்தக் கேள்வியைக் கேட்டது கேலிக்காகவே...
'இல்லை' என்று பதில் சொன்னாள் ராணி.
அப்படி என்றால்..."
'அவன் ஒரு நாள் என் கையை முத்தமிட்டான்... அவன் வாங்கித்தந்த வைனைக் குடிக்கிறேன்... அவன் உங்களுக்கும் வாங்கித் தந்திருக்கிறான். அதனாலதான் அவனை நான் ஏசவில்லை.
5 மல்லிகைப் பந்தல்

Page 11
''அவன் வாங்கித் தந்தது..”, INITHI - - - - -
சிறிலனின் கைக்குள் அகப்பட்ட ராணியின் கை இரும்புக் குறட்டுக்குள் அகப்பட்டது போல் நெரிந்தது.
''நான் அவனை எப்படி பேச முடியும்?... அதுக்கு அடுத்த கிழமை எனது முகத்திலும் கொஞ்சப் பார்த்தான்...''
''அவன் உன்ர முகத்தைக் கொஞ்சப் பார்த்தானா?...'' சிறிமனின் கை வேகமாக நடுங்குவதை ராணி அறிகின்றாள்.
''எங்க, எப்ப? ஏன் எனக்குச் சொல்லவில்லை?"
''போன ரெண்டு கிழமையுமே நான் அதை உங்களுக்குச் சொல்ல நினைத்தேன். தப்பான வழியிலே போய் வீட்டில் அடைஞ்சு கிடக்கப் பார்க்கிறாள் என்று நீங்க சந்தேகப்பட்டீங்க. அதனாலதான் அந்த ரெண்டு கிழமையும் உங்களோடை அங்கு வந்தேன்..."
சிறிமான் தனது சேட்டைக் கழற்றித் தூர வீசினான். அடுத்துப் பாதணிகளை கழற்றி வீசினான்.
'அஜந்தா மண்டபத்துக்கு இனிமேல் போகாதே' அவன் மிகுந்த கோபத்துடன் சத்தமிட்டான்.
மலர் : 49
மே 1972
சிங்களச் சிறுகதைகள் 6

ஜீ.ரீ.சேனாநாயக்கா 2
நோயாளி இளைஞன்
தமிழாக்கம் : தம்பிஐயா தேவதாஸ்
நான் முன்பு ஆண்கள் வாடகைக்கு இருக்கும் அறைகள் உள்ள கட்டட மொன்றில் தங்கியிருந்தேன். அங்கு வாழ்ந்தவர்கள் எல்லோருமே இளைஞர்கள். அவர்களிற் பலர் கொழும்பிலுள்ள காரியாலயங்களில் வேலை பார்க்கும் எழுதுவினைஞர்களாவார்கள். பல்கலைக் கழகத்திலும், வைத்தியக் கல்லூரியிலும் சட்டக்கல்லூரியிலும் படிக்கின்ற பல மாணவர்களும் அங்கு தங்கியிருந்தார்கள். நான் சிறுவயதிலிருந்தே அதிகமான நண்பர்களை வைத்திருக்க விரும்பாதவன். ஓய்வு நேரங்களில் பிறருடன் ஒன்று கூடி பகிடி விளையாட்டுக்களில் ஈடுபட்டுச் சிரித்துப் பொழுதுபோக்கும் பழக்கம் எப்பொழுதுமே என்னிடமிருந்ததில்லை. நான் அவைகளை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. மற்றவர்களும் என்னைப் போலவே இருந்து விட்டால் இந்த உலகம் பகிடி விளையாட்டுப் பேச்சுக்களிலிருந்து விலகித் துக்கம் சூழ்ந்த நிலமாகிவிடும் என்பது உண்மையே. இத்தகைய குணத்தால் நீண்ட காலம்வரை அங்கு வாழ்ந்த அனேகருக்கும் எனக்கும் இடையில் அறிமுகமே ஏற்படாதிருந்தது.
கட்டடத்தில் வாழ்ந்த என்னைப் போன்ற சிலரைத் தவிர ஏனையோரிடம் ஒரே விதத்தில் நட்புக் கொண்ட இளைஞனொருவன் அங்கு இருந்தான். மெல்லியவனாகவும் உயர்ந்த தோற்றமுடையவனுமான அவன் உள்ளத்தைக் கவரும் தன்மையுள்ளவன். மெல்லிதாக நீண்ட நாசியும் அழகான விழிகளையும் உடைய அவன் முகத்தில் எந்நேரமும் புன்னகை தவழும். அடுத்தவர்களின் நட்பை பெறுவதில் வீரனாகிய அவனைப் போன்ற வேறு ஒருவனையும் நான் இதற்கு முன் பார்த்ததேயில்லை: அவனுடைய அழகும் பெண்னொருத்தியின் குரலைப் போன்ற மென்மையான குரலில் ஒவ்வொரு சொல்லும் உள்ளத்தைக் கவரும் கதைகளுமே அவன் அடுத்தவர்களை அவ்வாறு கவருவதற்குக் காரணங்களாகும் என்று எண்ணுகிறேன். உருவ அழகையும் அவன் சொல்லும் கதைகளையும் போலவே அவனது நல்ல பண்புள்ள குணங்களும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தன்மையின என்று கூற முடியும்.
மல்லிகைப் பந்தல்

Page 12
அவன் அடுத்தவர்களின் அறைக்குட் சென்று பேச்சுக்கள் பேசிச் சிரிக்கும் சத்தம் மாலை வேளையில் எப்பொழுதுமே கேட்கும். அவனது சிரிப்பொலி கன்னியொருத்தி மகிழ்ச்சியில் எழுப்பும் இனிமையான சிரிப்பைப் போன்றதாகும். அந்தச் சிரிப்பொலியைக் கேட்கும் பொழுது எனக்குப் பெண்னொருத்தியின் கைகளில் அணியப்பட்ட காப்புகள் ஒன்றுடனொன்று முட்டுப்படும் பொழுது எழுகின்ற சத்தம் நினைவில் வரும்.
மாலை வேளையில் ராசசிங்காவுடன் உலாவப் போவதற்கு ஆசை இல்லாத எவருமே அங்கு இல்லை. அவனுடைய பெயர் 'ராசசிங்கா' என்று முன்பே கூற மறந்து விட்டேன். ராசசிங்காவுடன் உண்டு குடித்துக் களிப்படைவதற்கு எல்லோருமே விரும்பினர்கள். கட்டடத்தில் வாழ்ந்த எல்லோருமே தாங்கள் சந்தோஷத்தைப் பெற்றுக் கொள்ளும் ஊற்று அவன் என்றே எண்ணினார்கள்.
ராசசிங்கா அந்தக் கூட்டத்தினின்று பிரிந்து போவதற்கு ஆயத்தமாகையில் எல்லோருமே துக்கத்தில் ஆழ்ந்தார்கள். அங்கிருந்த இளைஞர்கள் அவன் போவதை எண்ணிக் கண்ணீர் சொரிந்து நின்றார்கள்.
'ராசசிங்கா, நீ போய்விட்டால் இந்த இடம் உண்மையாகவே பாழடைந்து விடும். இன்னும் கொஞ்ச நாட்கள் இருக்க மாட்டாயா?' இவ்வாறு பலர் அவனிடம் கேட்டார்கள்.
ராசசிங்கா காரியாலயம் ஒன்றில் எழுதுவினைஞனாகக் கடமையாற்று கின்றான். கொழும்பில் வேலை செய்தாலும் அவன் தூரவுள்ள ஊரொன்றின் பணக்காரக் குடும்பமென்றைச் சேர்ந்தவன். அவன் வேலை செய்வது பணம் சம்பாதிக்க மட்டுமல்ல; ஊரில் சும்மா இருப்பதைவிட ஏதாவது வேலை செய்தால் அழகாக இருக்கும் என்பதினாலேயே, படிப்பதற்காகச் சிறு வயது முதல் கொழும்பிலிருந்து நகர வாழ்க்கையைப் பழகிக் கொண்ட அவன், தனது ஊரின் அமைதியான வாழ்க்கையை விரும்பவில்லை.
அவன் கொழும்பு வாழ்க்கையை விரும்பியது, கொழும்பில் வேலை பார்ப்பதற்கு மற்றொரு காரணமாகும்.
அவன் கட்டடத்தை விட்டுப் பிரிந்துபோவது வேலையை விட்டு விட்டு ஊரில் வந்து வாழ வேண்டுமென்ற தனது தாயின் கட்டளைக்கிணங்கவே. அவனுடைய தந்தை இறந்ததால் அவன் ஊரிலேயே பொருட்களைப் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவனுக்கு வேலையை விட்டுவிட்டுப் போக விருப்பமில்லா விட்டாலும், வேலையை விடவேண்டிய நிர்ப்பந்தமே ஏற்பட்டு விட்டது. )
ராசசிங்கா கட்டடத்தினின்று நீங்கிச் சென்றது நான் அங்கு வந்து சேர்ந்த இரண்டு மாதங்களுக்குப் பின்பாகும். நான் மற்றவர்களுடன் உடனேயே நட்பை ஏற்படுத்திக் கொள்ளுபவன் அல்லாததனாலும், என்னுடைய ஓய்வு நேரங்களில்
சிங்களச் சிறுகதைகள் 8

அதிக பகுதி புத்தகங்கள் வாசிப்பதனால் கழிந்து போவதனாலும் எனக்கு ராசசிங்காவுடன் நட்பு ஏற்படவில்லை.
ராசசிங்கா சென்று சிறிது காலம்வரை அவனைப் பற்றியே எல்லோரும் பேசிக் கொண்டார்கள். அவன் காசநோயாற் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையிற் தங்கியிருக்கிறான் என்ற செய்தி சில மாதங்களின் பின் தெரிய வந்தது. இதைக் கேட்ட அனுடைய நண்பர்கள் துக்கமடைவார்கள் என்பதை நான் உங்களுக்குக் கூறவேண்டிய தேவையேயில்லை.
ஒருநாள் மாலை அந்தக் கட்டடத்திற்கு ராசசிங்கா மீண்டும் வந்தான். அவன் இங்கிருந்து சென்று ஐந்து மாதங்களின் பின்பே மீண்டும் வந்திருந்தான். வைத்தியர் ஒருவரைப் பார்க்க மீண்டும் கொழும்பிற்கு வந்த அவன் தன்னுடைய நண்பர்களையும் பார்த்து விட்டுச் செல்ல எண்ணினான். அவனது உடம்பு மெலிந்து பலவீனமானவனாகக் காணப்பட்டான். முன்பு உள்ளத்தைக் கவரும் தன்மையுடனிருந்த அவனது மேனி இப்பொழுது எலும்புக்கூடு என்றே கூற முடியும். அவனது அழகிய வதனம் காய்ந்து போய்க் கன்னங்ளில் எலும்பு தெரிந்தன. முன்பு அழகுடன் பிரகாசித்த இரு விழிகளும் இருட்குழியினுள் அமிழ்ந்து மறைந்திருந்தன. அவன் நடக்கக்கூட மிகக் கஷ்டப்பட்டான்.
முன்பு அவனை விரும்பிய நண்பர்கள் இப்பொழுது அவனுக்கு அருகில் போகக்கூட விரும்பினார்களில்லை. ராசசிங்காவுக்கு இதை ஒரே முறையில் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை நான் அறிந்து கொண்டேன். அவன் அறையினுள் வந்த போது ஓர் இளைஞன் பயணமொன்று போவது போன்று ஆடையை அணிந்து கொண்டு உடனேயே வெளியேறினான், இன்னுமோர் இளைஞன் தூரத்தில் நின்றவாறே கைக்குட்டையால் வாயையும் மூக்கையும் பொத்தியவாறு உரையாடினான். அவனுடன் பகிடிப் பேச்சுக்கள் பேசிச் சிரித்து மகிழ்வதற்கு இப்பொழுது ஒருவருமே இல்லை.
வந்த அவன் அரை மணித்தியாலத்தின் பின் மீண்டும் திரும்பிப் போவதை நான் கண்டேன்.
அவன் வரும்பொழுது இல்லாத துக்கவுணர்ச்சி இப்பொழுது அவனது முகத்திற் தெரிகின்றது. அவனது இருகண்களிலும் முன்பு இல்லாத ஒருவிதப் பார்வை இப்பொழுது இருந்தது. மரணப்பயத்தால் பயந்தவர் பார்க்கும் பார்வை அது. மெதுவாகக் கால்களை ஊன்றியவாறு, பயத்தாலும் துன்பத்தாலும் பீடிக்கப்பட்ட ஒருவனைப் போன்று போகும் அவனைப் பார்த்த எனக்கு மிகுந்த மனவேதனை உண்டாகியது.
பிறருடன் எந்நேரமும் பகிடிச் சொல்பேசி மகிழ்ச்சியடையாத ஒருவனாக நான் இருந்த போதிலும், ராசசிங்கா போவதைக் கண்ட என் உள்ளத்தில் உண்மையாகவே அதிக துக்கம் உண்டாகியது. மனவேதனையால் என் கண்களில் கண்ணீர் பெருகும் போலிருந்தது. எனது அறையின் கதவுக்கருகில்
9
| மல்லிகைப் பந்தல்

Page 13
அதிர்ச்சியடைந்தவன் போல் நினைவற்று நின்றிருந்தேன். அவன் என்னைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தான்.
நான் இதற்கு முன்பு ராசசிங்காவுடன் இரண்டு மூன்று சொற்களுக்கு மேல் கதைத்திருக்கவில்லை. ஆனால் இப்பொழுது அவனை எனது அறைக்கு அழைத்து அவனுடன் பகிடிப் பேச்சுக்கள் பேசி இன்புற வேண்டுமென்று எண்ணினேன். நான் எண்ணியது மகிழ்ச்சிச் செய்கைகளினால் அவனை
ஆறுதலடையச் செய்யும் கருத்துடனேயே.
அவனை அழைப்பதற்குச் சுற்றுமுற்றும் பார்த்தேன். அவனை அங்கே காண முடியவில்லை. முற்றத்திற்கு இறங்கிப் பார்த்துவிட்டுத் தெருப்பக்கமாக ஓடிச் சென்றேன். தெருவின் இருமருங்கிலும் பார்த்தேன். தூரத்திற் சென்று கொண்டிருக்கும் அவனது உயர்ந்த உருவம் எனக்குத் தெரிந்தது. அவன் அதிதூரத்திற் சென்று மறையும்வரை நான் நின்ற இடத்தை விட்டு அசையாமலே பார்த்தவாறு நின்றிருந்தேன்.
அவன் சென்று மறைந்தபின் நான் மீண்டும் திரும்பி வந்து புத்தகங்களினாலும் கடதாசிகளினாலும் நிறைந்திருக்கின்ற எனது மேசைக்கருகில் அமர்ந்தேன். இரண்டு கண்களையும் மூடியவாறு தலையை மேசைக்குப் பாரமாக வைத்துக் குனிந்தவாறிருந்தேன்.
அந்நேரத்தில் என் உள்ளத்தில் பெரியதோர் பயம் உண்டாகியது. அந்தப்பயம் மரணம் தன்னை நோக்கிவரும் ஒருவனின் உள்ளத்தில் உண்டாகும் பயத்திற்கொப்பானது என்றே எண்ணுகின்றேன். தூரத்தில் மெதுவாக நடந்து செல்வது ராசசிங்காவல்ல, மரணமே என்று அந்த நேரத்திலேயே உணர்ந்து கொள்கிறேன்.
மலர் : 50 ஜூன் 1972
சிங்களச் சிறுகதைகள் 10

குணசேன வீதான
இடம்
பாலம்
தமிழாக்கம்: - இன் 2009L சிவா சுப்பிரமணியம்
இன்று றுஹுணு குமாரி புகையிரதத்தில் காலிக்கு வரும் தம்பியவை ஏழேகால் பஸ்ஸில்தான் ஊருக்கு வரமுடியும்.
''ஏன், ஒருவரையும் காலிக்கு அனுப்பவில்லையா? வீட்டிற்குள் வரும்போதே அப்பா அம்மாவைக் கேட்கிறார். தம்பியவையை வரவேற்பதற்காக நான்தான் காலிக்குச் செல்ல வேண்டும். ஆனால் அம்மாவோ தங்கச்சியோ என்னைப் போகும்படி சொல்லவில்லை.
'காலிக்குப் போகவேண்டுமென்ற எண்ணம் எனக்குத் தோன்றவில்லை. நான் பஸ் வரும் நேரம் பார்த்துச் சந்திக்குப் போகலாமென்று நினைத்துக் கொண்டிருந்தேன்' எனினும் அப்பா ஒன்றுமே பேசவில்லை. என்மீது மனஸ்தாபம் ஏற்படும் போதெல்லாம் எதுவுமே பேசாமலிருப்பது அப்பாவின் வழக்கம். கைத்தடியை ஒரு ஓரத்தில் சார்த்தி வைத்துவிட்டு அவர் சாய்மனைக் கதிரையில் சாய்ந்து கொள்கிறார். மாலையில் கடையிலிருந்து வரும் அப்பா கொஞ்ச நேரம் சாய்ந்து படுத்து ஓய்வெடுப்பதற்காகவே இந்தச் சாய்மனைக் கதிரை வைக்கப்பட்டிருக்கிறது. ஐந்நூறு யார் தூரத்திலுள்ள சந்தியிலிருந்து வீட்டிற்கு நடந்து வருவதற்கிடையில் அவருக்குக் களைப்பு ஏற்பட்டு விடும். இன்று அப்பாவிற்குக் களைப்பு அதிகமாக ஏற்படுவதையிட்டு நான் ஆச்சரியப்படவில்லை.
அப்பாவின் தடித்த குரல் வீட்டிலிருந்து முற்றத்திற்கு வெளியேறி அங்கிருந்து அயலெல்லாம் பரந்து வியாபிக்கும் தன்மையுடையது. களைப்பும் கேபமும் ஏற்படும் போதெல்லாம் அவரால் மெதுவாகக் கதைக்க முடியாது.
குசினியிலிருந்து கூடத்திற்கு வந்த அம்மா குப்பி விளக்கை மேலே தூக்கிப் பிடித்து மணிக்கூட்டைப் பார்த்தாள்.
'ஆறு ஐம்பது.
| மல்லிகைப் பந்தல்

Page 14
'அப்படியானால் அண்ணா ஏழு பத்துக்குச் சந்திக்குப் போங்கோ.”
'ஏன், தகப்பன் மகன் இரண்டுபேரும் போனால் என்ன?"
எனக்குத் தெரியாது; நான் போகவில்லை. விருப்பமானவை ஆரெண்டாலும் போங்கோ.” வீட்டிற்கு வருவதாக எழுதிய கடிதம் கிடைத்த நாள் அப்பா ஆத்திரத்தோடு பேசிய விதம்! கடிதத்தைக் கிழித்தெறிந்த அவர் அன்று மத்தியானம்வரையும் தம்பிக்குச் சாபமிட்டுக் கொண்டே இருந்தார். பல வருடங்களுக்குப் பின் தனக்குக் கடிதம் எழுதியதிலிருந்து தம்பியின் அகங்காரம்தான் தெரிகின்றதெனக் கருதிய அப்பா அன்று கோபத்தால் கொதித்தார்.
'தெரியுதே அவன்ரை பெருமையை, உவன் என்ரை வீட்டுக்கு வந்தால் தவண்டு கொண்டுதான் திரும்பிப்போக வேண்டிவரும்."
அப்பாவோடு எதிர்த்துக் கதைக்கவோ அல்லது அவருக்குச் சார்பாகப் பேசவோ ஒருவரும் முன்வரலில்லை தம்பியை அப்பா குறை கூறியதைக் கேட்ட தங்கச்சி அழுதாள்.
'அவனுக்கு யாரோ சாபம் போட்டுத்தான் இப்படி நடந்திட்டுது. இனி, இப்ப வீட்டுக்கு வர ஆசைப்படுறவனை வரவிடத்தானே வேண்டும்'
கடைசியாக, வீட்டுக்கு வரும்படி தம்பிக்கு அறிவிப்பதற்கு அப்பா இணங்கினார்.
பல வருடங்கள் கழிந்த பின்னும் கூட, தம்பி மட்டும் தனியாக வீட்டுக்கு வருவதால் ஏற்படப்போகும் ஆபத்தை நான் அறிவேன். மனைவி மக்களையும் கூட்டிக் கொண்டு வரும்படி எழுதுவதற்கு அம்மாவோ தங்கைச்சியோ ஏன் தயாராகவில்லை. அவர்கள் இப்போதும் குடும்பத்தைப் பிரிந்து அவனுக்கு இன்னொரு திருமணம் செய்து வைப்பதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தம்பியினால் வாழ்க்கையிலேயே வெறுப்புக் கொண்டிருக்கும் அப்பா அதற்குச் சம்மதிக்கவில்லை. அம்மாவும் தங்கச்சியும் எதிர்பார்ப்பதை மாற்றும் எண்ணத்தோடு தான் வேறொரு யோசனையைக் கூறுகின்றேன்.
'அவன் தன்னுடைய எண்ணத்திற்கென்றாலாவது கல்யாணம் செய்து கொண்டான் என்பது இப்போ முழு ஊருக்கும் தெரியும். தம்பிக்கு இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள். எப்படியென்றாலும் நாங்கள் இப்போ அவர்கள் எல்லோரையும் எங்கள் குடும்பத்தினாராக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
'நீ இதிலை வாயைத் திறக்க வேண்டாம் விஜேதாஸ.' அம்மா இரண்டு அடிகளில் நாங்கள் நின்ற இடத்திற்கு வந்தாள்.
சிங்களச் சிறுகதைகள் 12

'... நீ சொல்லுறது, அந்தத் தமிழச்சியையும் கூட்டிவந்து தம்பியின் கெட்டித்தனத்தை ஊரெல்லாம் காட்டி...
'அவருக்கு ஏதாவது வெட்கமிருந்தால் உந்த லைன்களெல்லாம் போய்த்திரிகின்றாரா?' அம்மாவிற்குப் பக்கப்பாட்டுப் பாடுகிறாள் தங்கச்சி.
'அம்மாவும் மகளும் ஒரு சூதுமறியாத அவனை மட்டும் கூப்பிட்டுக் குடும்பத்தைக் குலைப்பதைத்தான் விரும்புகின்றீர்கள். பத்தினி றாலாவோடு என்ன கதைத்ததென்று எனக்கு நல்ல ஞாபகம்.
* என்ன... அப்பா சாய்மனைக் கதிரையிலிருந்து எழுந்து அம்மாவுக்கருகில் செல்கிறார்.
'இந்த வீட்டுப்பக்கம் வந்தால் பத்தினியானுக்குக் காலாலைதான் அடிப்பன். ஆருக்குச் செய்வினை செய்யிறதுக்கு அவனைக் கூப்பிட்டனீங்கள்?
மீண்டும் சாய்மனைக் கதிரையில் போய்ப் படுத்துக் கொண்ட அப்பா தொடர்ந்து பேசினார். கோபமும் களைப்பும் மிகுதியானபடியால் ஒவ்வொரு வார்த்தையும் உரத்து வெளியிடப்பட்டன.
'விஜேதாஸ!'
அப்பா என்னைக் கூப்பிடுகிறார்.
'தம்பிக்குக் கடிதம் எழுத வேணும். பெண்சாதியையும் பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வரச்சொல்லி. நான் சின்னப்பிள்ளைகளைப் பார்க்க விரும்புகிறேனென்று எழுது. கேட்டுதா?” |
வீடுமுழுவதும் மெளனம் அரசோச்சுகின்றது. அப்பாவின் கட்டளைகளைத் தாமதிக்கமாலே றிறைவேற்றுபவனாகிய நான் கடிதத்தை எழுதிக் கொண்டு தபாலில் சேர்ப்பதற்காக சந்திக்குப் போகிறேன்.
மூன்று வருடங்களுக்கு முந்திய கடந்தகால நிகழ்ச்சிகள் என் நினைவில் நிழலாடுகின்றன. என் அரசியல் நடவடிக்கைகளுக்கு வீட்டிலிருந்து கிளம்பிய எதிர்ப்பு - மனோமணிய எஸ்டேட்டில் தமிழ் தொழிலாளரின் கூட்டத்தில் நான் பேசிய தினம் அம்மாவும் அப்பாவும் என்னை ஏசிய ஏச்சு - வீட்டில் மட்டுமல்லாமல் ஊரிலேயே நான் முட்டாளாகக் கருதப்பட்ட விதம் - எல்லாம் என் நினைவில் தோன்றுகின்றன.
பத்தேகம கத்தோலிக்கப் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த என்னுடைய படிப்பு அரசியலில் ஈடுபட்ட காரணத்தால்தான் இடையில் குழம்பியது என்பது அவரது கருத்து. என்னை ஒரு வழக்கறிஞராகவோ அல்லது டாக்ராகவோஆக்க வேண்டுமென எண்ணிக் கொண்டிருந்த அப்பா தன் எண்ணம்
13 | மல்லிகைப் பந்தல்

Page 15
நிறைவேறாததால் என் மீது வெறுப்புக் கொண்டார். வீட்டிலுள்ள அனைவரின் எண்ணங்களையும் நிறைவேற்றாமல் செய்த நான் மனோமணிய எஸ்டேட்டில் உள்ள தமிழ் தொழிலாளர்களின் தோழனானேன். என்னுடைய கொள்கைகளை நிராகரித்த தம்பியும் தங்கைச்சியும் தொடர்ந்து கல்வி கற்றபின் ஆசிரியத் தொழிலை மேற்கொண்டனர்.
வவுனியாவில் சிங்கள ஆசிரியை ஒருத்தி தமிழ் வகுப்புவாதிகளால் கொலை, செய்யப்பட்டாள் என்ற வதந்தியைக் கேட்ட சிலர் மனோமணிய எஸ்டேட்டில் உள்ள தமிழ்த் தொழிலாளரைத் தாக்கினர். வதுரம்ப சந்தியில் வியாபாரம் செய்து வந்த சின்னையாவின் புகையிலைக் கடைக்குத் தீயிட்டனர். இவையெல்லாவற்றிற்கும் பின்னால் தம்பியே தலைமை தாங்கினான்.
'சரத்தைப் போன்ற படித்தவர்கள் இப்படிச் செய்யலாமா? படிப்புக்கே அவமானம்.' நான் தம்பியை எச்சரிக்கை செய்தேன்.
அண்ணாவின் சோஷலிசம் இந்த நாட்டுக்கு ஏற்றதல்ல. சிங்களவராகிய எங்களுக்கு உந்தச் சிறிய நாடு மட்டும்தான் இருக்கிறது. தமிழர்களுக்கு இந்தியாவைப் போல் பெரிய நாடு இருக்கிறது. எங்களுக்கு இந்த நாட்டை விட்டுவிட்டு அவர்கள் போகவேண்டும்.
சிங்கள் கிராமவாசிகளுக்கு மத்தியில் வகுப்பு வாதத்தைப் பரப்புவதற்காக வகுப்பு வாதத்தினால் பாவிக்கப்படும் ஆயுதம் இந்தத் தாக்கமே. சிங்களவருக்கு இலங்கையில் மாத்திரமே இடம் இருக்கிறது என்பதைக் கேட்டதும் படிப்பறிவற்ற கிராமவாசி பாம்பைப்போலச் சீறியெழுகிறான்.
'முட்டாளே, எந்தநாட்டிலாவது ஒரே இனம் இல்லை. இந்தியாவிலும் அப்படித்தான். தென்னிந்தியாவில் மாத்திரம் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். இந்து, முஸ்லிம் ஆகிய வேறு வேறு இனத்தவர்கள் நூற்றுக்கணக்காக வாழ்கிறார்கள். நாட்டை வளம்படுத்த வேண்டுமானால் இன ஒற்றுமை அவசியம். இது இனவெறி எண்ணத்தை மண்டைக்குள் வைத்திருக்கும் முட்டாள்களுக்குப் புரியாது. பரிசுத்த சிங்கள நாடாக மாற்றுவதற்கு - முஸ்லிம் மக்களை என்ன செய்வது? முட்டாள்... முட்டாள்...'
என்னுடைய பதிலால் கோபமடையும் தம்பி பலமுறைகளில் என்னோடு சண்டைக்கு வருவான். நான் மனோமணிய எஸ்டேட்டில் லைன்களுக்கெல்லாம் போய்வருவதால் தமிழர்களைக் காப்பாற்றுவதற்கு முயற்சிக்கின்றேனென்று அவன் என்னைக் குற்றஞ்சாட்டுவான். ஆனால் அவற்றிற்கெல்லாம் நான் கோபப்படுவதில்லை.
“மீனாட்சியின் மகளைப் பார்க்கப் போவதாக இருக்க வேண்டும்' என்று என்மீது கணை தொடுத்தபடி தங்கச்சி அறைக்குள் வருவாள்.
சிங்களச் சிறுகதைகள் 14

'சரி பார்ப்போம். இனிமேல் லைன்களுக்குப் போவதைக் கண்டால் என்னுடைய ஆட்களிடம் சொல்லி அடித்து வீசச் செய்வேன்.'
'என்னடா நீ சொன்னாய்... நான் கொலைக்காரனைப் போல் கோபத்தோடு தம்பிக்கு முன்னால் பாய்கிறேன். அவனுடைய கன்னத்தில் பலமுறை அடிக்கிறேன். அம்மாவும் தங்கச்சியும் எங்களுக்கிடையில் புகுந்து என்னைப் பிடித்துக் கொள்கிறார்கள். அப்பா தம்பியை வெளியே இழுத்துச் செல்கிறார்.
'நீ இஞ்சை சண்டை கிளப்பாமல் எந்தத் திக்குக்கெண்டாலும் துலைஞ்சு போ. தமிழங்கடை எதையோ பிடிச்சுக் கொண்டு எங்கடை குடும்பத்தை நாசமாக்கப் பாக்கிறாய்.'
அம்மா ஏசியதைக் கேட்டதும் என் கோபம் அதிகரிக்கின்றது. அறைக்குள் வந்து அழுக்கேறிய என் இரண்டு சேட்டுகளையும் சாரத்தையும் ஒரு கடதாசியில் பார்சலாகச் சுற்றிக் கொள்கிறேன். வீட்டிலிருந்து புறப்பட்ட நான் தோட்டத் தொழிலாளர் சங்கக் காரியாலயத்தில் தங்குகிறேன். இப்போது என்னால் மற்ற நாட்களிலும் பார்க்கச் சுலபமாகத் தொழிற்சங்க வேலைகளைச் செய்ய முடியும். தொழிலாளருக்கு நீதியான முறையில் சம்பளம் கொடுக்காத தோட்டம் முதலாளிமாருக்கு எதிராகவும் எங்கள் சங்கம் பயமின்றிப் போராடுகின்றது.
சந்திக்கு வரும் தமிழ்த் தொழிலாளர்களைக் காத்து நின்று தாக்கும் தம்பியும் அவனைச் சேர்ந்தவர்களும் அவர்களுடைய பொருட்களைப் பறித்து அருவியில் எறிவார்கள். இவற்றைப் பற்றியெல்லாம் கேள்விப்படும் போது சகோதர பாசம் மறைந்து அவனை என் எதிரியாகக் கருதுவேன். இதன்பின் தம்பி மேல் படிப்புக்காக போராதனைப் பல்கலைக் கழகத்திற்குச் சென்றதும் ஊரில் கலவரங்கள் ஓரளவிற்குக் குறைந்தன. எனினும் அங்கே அவனுக்குத் தீவிர சிங்களவாதியான ராஜரத்னவின் தொடர்பு ஏற்பட்டது. தம்பி ராஜரத்னாவின் தளபதியாகித் தீவு முழுவதும் சிங்கள வகுப்புவாதத் தீயைப் பரப்பத் தொடங்கினான்.
தமிழ் மொழிக்கு நியாயமான அந்தஸ்து வழங்குவதைக் கூட எதிர்த்த தம்பி சிங்கள வகுப்புவாதிகளின் அபிப்பிராயங்களுக்கு வக்காலத்து வாங்கிப் பத்திரிகைகளுக்கு எழுதினான். அவன் மிகவும் குறுகிய காலத்தில் ஒரு வகுப்புவாதத் தலைவனானான். இதனால் பெருமைப்பட்ட அப்பா தம்பி கேட்ட சந்தர்ப்பங்களிலெல்லாம் உடனேயே பணம் அனுப்பினார். அம்மாவும் தங்கச்சியும் தம்பியின் புகழால் தாங்கள் பெருமையடைவதாக நினைத்தார்கள்.
தம்பி தன்னுடைய விடுமுறை நாட்களை ராஜரத்னாவின் வகுப்புவாத இயக்கத்தின் வேலைகளுக்காகச் செலவழித்தான். பட்டம் பெற்றபின் அவன் அடையப் போகும் கெளரவத்தைப் பற்றி அப்பா சொல்லிய கதைகளெல்லாம் எங்கள் காரியாலயம் வரை பரவின. பல்கலைக் கழகத்திலே கடைசி வருடத்தில்
15 | மல்லிகைப் பந்தல் |

Page 16
தம்பி நடந்து கொண்ட விதத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட அம்மாவும் தங்கச்சியும் ஆடம்பரமெல்லாம் அடங்கி வேதனைப்பட்டனர்.
தம்பியைப் பற்றிய மன வேதனையால் அப்பாவிற்குக் கடுமையான சுகவீனம் ஏற்பட்டது. அப்பாவிற்குக் கடுமை என்ற செய்தி கேட்டவுடனேயே நான் வீட்டுக்குச் சென்று அவரைக் காலி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றேன். அப்பா சுகமாகி வந்தபின் அவரைக் கவனமாகப் பார்ப்பதற்காக நான் மீண்டும் வீட்டில் தங்கினேன். அம்மாவும் அப்பாவும் என்மீது ஒருபோதும் இல்லாத அளவுக்கு அன்பு காட்டினார்கள்.
'என்ன விசர்த்தனம் செய்தாலும் பெரியவன் எனக்குக் கஷ்டத்தைத் தரவில்லை' என்று அப்பா அடிக்கடி சொல்லுவார்.
'நீ சாமஞ்சாமமாகக் கண்ட நிண்ட இடங்களெல்லாம் திரியிறதை விட்டுட்டு இஞ்சை இரு. சந்திக்க வாறவை இஞ்சை வரலாம் தானே.'
காரியாலயத்திலுள்ள தோழர்களும் என்னுடைய தீர்மானத்திற்கு இணங்கினார்கள். சில நாட்களின் பின் என்னுடைய அறையைத் தொழிற் சங்கக் காரியாலயமாக ஆக்குவதற்குக் கூட வீட்டிலிருந்து இணக்கம் கிடைத்தது.
எனக்கு இந்த வசதிகளெல்லாம் கிடைத்தது தம்பியிடம் ஏற்பட்ட மாற்றத்தினால்தான். இப்போது என்னைப் பார்க்கவரும் சிங்களவர்களுடன் மட்டுமல்லாமல் தமிழர்களுடனும் அம்மா சந்தோஷமாகக் கதைக்கிறாள். வாரமுடிவில் வீட்டிற்கு வரும் தங்கச்சி இன்னும் என்னோடு சந்தோஷமாகக் கதைக்காவிட்டாலும் இப்போது எங்கள் வேலைகளுக்குத் தடையாயிருப்பதில்லை.
என்னுடைய போராட்டத்தில் வெற்றியடைந்த நான் தம்பிக்காகவும் போராடத் தொடங்குகிறேன். இன்று தம்பியை எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினை யதார்த்த ரீதியாக அவனுக்குக் கிடைத்த தண்டனையெனக் கருதுகிறேன். அவனுக்கும் எனக்குமிடையிலான போராட்டத்தில் நான் வெற்றியடைந்து விட்டேன். இப்போது அவனால் வகுப்புவாதம் பேச முடியுமா? அவன் அன்று வகுப்புவாதத் தீயினால் முழு ஊரையுமே நாசப் படுத்தியது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. மனோமணிய லைன்களில் உள்ள தமிழர்கள் கடைக்கு வருவதற்கான குறுக்குப் பாதையாகிய பாலத்தை உடைத்த அவனும் நண்பர்களும் அடுத்த பாதையால் வரும் தமிழர்களை மறைந்திருந்து தாக்கினார்கள். உடைக்கப்பட்ட பாலத்தின் இரும்புக் கம்பிகள் அழிக்க முடியாத நினைவின் சின்னமாக இப்போதும் தெரிகின்றன. நேரம் ஏழு பத்து. இன்னும் ஐந்து நிமிஷத்தில் காலியிலிருந்துவரும் அத்துமலே பஸ் சந்திக்கு வந்து சேரும். பஸ் கீம்பி மலையில் ஏறும்போது கேட்கும் உறுமும் சத்தம் இப்போது அருகில் கேட்கின்றது.
தம்பி பார்வதி சுந்தரலிங்கம் என்னும் தமிழ் மங்கையுடன் காதல்
சிங்களச் சிறுகதைகள் 16

கொண்டிருக்கும் செய்தியை பேராதனையில் உள்ள என்னுடைய ஒரு நண்பன் மூலமே அறிந்தேன். யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியிலிருந்து பல்கலைக் கழகத்திற்கு வந்த பார்வதி விஞ்ஞானப் பிரிவில் பட்டதாரி மாணவி. பட்டம் பெற்றபின்தான் பார்வதியை மணந்து கொள்ளவிருப்பதாக எனக்குத் தம்பி கடிதமெழுதியிருந்தான்.
'அண்ணா, நான் பார்வதியை மணந்து கொள்ளப்போகிறேன். அவவின் பெற்றாரும் இதை எதிர் பார்க்கிறார்கள். நாங்கள் இருவரும் உலகில் தனித்துப் போனாலும்கூட நாங்கள் எடுத்த தீர்மானத்தை மாற்ற முடியாது. பார்வதியின் தாய் தகப்பனைப் போலவே எங்களுடைய அப்பா அம்மாவும் எங்களைச் சபிப்பார்கள். எனினும் அண்ணாவின் மேல் கொண்டிருக்கும் நம்பிக்கையால் எனக்கு ஓரளவு நிம்மதி. அண்ணா, உங்களுடைய அதிசயமான சக்தியைப் பாவித்து அப்பாவும் அம்மாவும் என்மேல் இரக்கம் கொள்ளக் கூடிய நிலைமையை ஏற்படுத்துங்கள். நான் கடந்த காலத்தில் உங்களையும் எதிர்த்துக் கொண்டு செய்த முட்டாள் தனமான செயல்களின் நிர்வாணத் தோற்றம் இப்போதுதான் எனக்குத் தெரிகிறது.
தம்பி அனுப்பிய கடிதத்தில் எழுதப்பட்ட எத்தனையோ விஷயங்களை என்னால் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. மனோமணிய எஸ்டேட் தமிழ்த் தொழிலாளரின் பாலத்தை உடைத்தெறிந்த கொடுமையை எண்ணித் தம்பி வேதனைப்படுவதை என்னால் உணாந்து கொள்ள முடிகிறது.
தம்பி தமிழ்ப் பெண்ணைத் திருமணம் செய்த செய்தியை அறிந்தவுடன் அப்பா மறுபடியும் சுகவீனமுற்றார். இருதய நோய் நாளுக்கு பலமுறை ஏற்பட்டது. தங்கச்சி ஊர்ப் பாடசாலையிலிருந்து தூரத்தில் உள்ள ஒரு பாடசாலைக்கு மாற்றம் பெற்றுச் சென்றபோது அவளோடு சேர்ந்து பல அநாமதேய கடிதங்களும் ஊரிலிருந்து சென்றன.
. புதிதாக வந்த ஜயவதி என்ற ஆசிரியை தமிழ் பரம்பரையைச் சேர்ந்த பெண். அவருடைய தம்பி யாழ்ப்பாணத்தில் ஒரு வள்ளியம்மையை மணந்து கொண்டிருக்கிறார். ஜயவதி ஆசிரியையும் யாழ்ப்பாணத்தில் வசிப்பதற்காகச் செல்லப் போவதாக பேசப்படுகின்றது.
தம்பியின் திருமணத்தினால் தான் அபகீர்த்திக்குள்ளாக்கப் பட்டிருப்பதாக எண்ணிய தங்கச்சி நாளுக்கு நாள் உடல் மெலியத் தொடங்கினாள். அவளைத் திருமணம் செய்ய வந்த மாப்பிள்ளை திரும்பவும் வராமல் போவதற்குக் காரணம் தம்பியைப் பற்றிய அநாமதேயக் கடிதங்களேயென்று அம்மாவும் தங்கச்சியும் கருதினர்.
எனினும் இரண்டு மூன்று வருடங்களுக்குள் எங்கள் குடும்பத்தினரை ஓரளவாவது முற்போக்கானவர்களாக்குவதில் நான் கணிசமான அளவுக்கு
17 மல்லிகைப் பந்தல்

Page 17
வெற்றியடைந்தேன். இந்த மாற்றத்தோடு அப்பா அடிக்கடி சுகவீனமுறுவதும் குறைந்தது.
அப்பாவும் அம்மாவும் மகனையும் மருமகளையும் பேரன் பேத்தியையும் பார்ப்பதற்கு ஆசையோடு இருக்கிறார்கள். பார்வதியின் தோற்றத்தைப் பற்றித் தங்கச்சி மனதில் எண்ணிப் பார்த்துக் கொள்ளுவதாக இருக்க வேண்டும். இரு இனங்களின் சங்கமத்தில் உற்பத்தியான இரு குழந்தைகளும் எதிர்காலப் பரம்பரையின் வீரர்களாக எனக்குத் தோன்றுகின்றன.
'சரி, இனிப் போ...' பழையகாட் சாரமும் கட்டி நீட்டுக் கை பனியனும் போட்டுக் கொண்டு அப்பா மீண்டும் சாய்மனைக் கதிரையில் படுத்தார். அவர் சுருட்டுப் புகையோடு சேர்த்துக் கடந்த காலத்தையும் ஊதித் தள்ளிவிட முயற்சிப்பதை என்னால் புரிந்து கொள்ளமுடியும்.
L) பஸ் சந்தியில் நிறுத்தப்படும்போதே நான் அங்கு ஓடிச் செல்கிறேன். அதிலிருந்து இறங்கிய இரண்டு சின்னக் குழந்தைகள் துள்ளிப் பாய்ந்தபடி சுற்றும் முற்றும் பார்க்கிறார்கள். தலைமயிரைப் போலக் கறுப்பு நிறமுடைய அழகான பெண்ணொருத்தி பஸ்ஸிலிருந்து இறங்கி இரு குழந்தைகளையும் அருகில் அழைத்துக் கொண்டாள். அவள் பார்வதியாக இருக்க வேண்டும். பார்சலும் சூட்கேசும் கொண்டு தம்பி இறங்குவதைக் கண்ட நான் உடனே அவனுடைய சுமையில் கொஞ்சத்தை வாங்கிக் கொள்கிறேன்.
தம்பியின் முகத்தில் கண்ணீரும் சிரிப்பும் சேர்ந்து தோன்ற, அன்பினால் என் இதயம் நிரம்பியது. இவன் என்னுடைய ஒரே தம்பி! என்னுடைய தோளில் கையைப் போட்டபடி அவன் பார்வதிக்குச் சொன்னான்: 'பார், இது என் அண்ணா.
'அண்ணாவைப் பற்றி நாங்கள் பல விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்.'
'ராஜா, கமலி இங்கே உங்களுடைய பெரியப்பா' என்று சொல்லிக் கொண்டு பெரிய பிள்ளையை என்னிடம் தருகிறான். நான் குழந்தைகள் இருவரையும் முத்தமிட்டுக் கொண்டு பார்வதிக்கும் தம்பிக்கும் என் அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணா அப்பாவும் அம்மாவும் என்னை ஏசுவார்களோவென்று பயமாயிருக்கு.
'ஏன் ஏசுவான்? அப்பாவும் அம்மாவும் இப்போ முன்னையப் போல இல்லை.'
அண்ணாவின் கெட்டித்தனம்தான். தம்பி மிகவும் பெருமையோடு சொல்கிறான்.
சிங்களச் சிறுகதைகள் 18

தம்பியும் பார்வதியும் அப்பாவிடமும் அம்மாவிடமும் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்போது என் கண்கள் கண்ணீரால் நிறைந்தன. ஒருமுறை சிங்களத்திலும் அடுத்தமுறை தமிழிலுமாக மாறி மாறிப் பேசியபடி இந்த அபூர்வ நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு நின்ற குழந்தைகளைத் தூக்கி மடியில் இருத்திய அப்பா அவர்களை மாறி மாறி முத்தமிட்டார். அழுவதிலும் முத்தங்கள் கொடுப்பதிலும் நேரம் சென்றது.
மருமகளையும் பேரப்பிள்ளைகளையும் ஊரவர்க்கும் அறிமுகப்படுத்த வேண்டுமென அப்பா நினைத்தார். நான் அந்த எண்ணத்தை ஏற்றுக் கொண்டேன். இதற்காக நடத்தப்பட்ட வைபவத்துக்கு கொட்டாவ சித்தப்பாவும் மஹலபிட்டிய மாமியும் வராததற்குக் காரணம் தம்பி தமிழ்ப் பெண்ணை விவாகம் செய்ததே.
கடந்த சில நாட்களாக அப்பாவும் அம்மாவும் தங்கச்சியும் தம்பியோடு உறவினரின் வீடுகளுக்குப் போய்விட்ட படியால் வீட்டில் நான் மட்டும் தனித்திருந்தேன். நாளைக்கு மாலை தம்பியவை மட்டக்களப்பிற்குப் புறப்படுகின்றனர்.
அடுத்த தவணை காலிக்கு மாறி வரும்படி அப்பா தம்பியவையிடம் சொன்னார். தம்பி காலிக்கு வந்தபின் தங்கச்சியின் காரியத்தை முடித்துவிட வேண்டுமென்று பார்வதி அம்மாவிடம் சொல்வது எனக்குக் கேட்டது.
குழந்தைகள் இருவரும் அதிகமாகச் சேர்ந்து பழகுவது என்னோடுதான். நான் பலதடவைகள் அவர்களை லைன்களுக்கு அழைத்துப் போவேன். அவர்கள் என்னுடைய தம்பியின் பிள்ளைகள் என்பதைக் கேட்டதும் தமிழ்த் தொழலாளர்கள் மிகவும் சந்தோஷப்படுவார்கள்.
என்னோடு குளிப்பதற்கு வரும் ராஜாவும் கமலியும் சிறிய பற்றைகளுக் கருகிலுள்ள மணற் பரப்பில் விளையாடுவார்கள். மண்ணைக் குவித்து நடுவில் பூக்களை நாட்டி மகிழ்வார்கள். அம்மாவினதும் அப்பாவினதும் முகங்களை அப்படியே உரித்து வைத்திருக்கும் குழந்தைகளை முத்தமிட்டுச் செல்லும் காற்று முழுக் கிராமமுமே ரசித்துக்கொண்டிருப்பது போல இருக்கும். பாலம் இருந்த இடத்தில் படர்ந்து வளர்ந்திருக்கும் செடி கொடிகளிலே இருக்கின்ற சிட்டுக்குருவிகளின் 'கீச் கீச்' சத்தம் அந்தக் குழந்தைகளிடம் ஏதோ முறைப்பாடு செய்வதுபோல எனக்கு தோன்றும்.
மலர் : 39 /09:ட - ஆக ஆகஸ்ட் 1971
19 மல்லிகைப் பந்தல்

Page 18
கே.ஜயதிலகரன்கோனா பப்பு
ன் ப ட பட அவிப்பு !
தமிழாக்கம் : பதா என பார்ட் இ சிவா சுப்பிரமணியம்
ஜயவீர... சுரண்டல்... தொழிற் சங்கம்... ஸ்ட்ரைக்... ஸ்ட்ரைக்... கோரிக்கைகள்... அடக்கு முறை... உரிமை... கோரிக்கைகள்... அநியாயம்... ஜயவீர...
தொழிற் சாலையின் மூலை முடுக்கெல்லாம் இவையே ஒலித்தன. வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல. ஒவ்வொரு வார்த்தையிலுமிருந்து உருவாகும் உணர்ச்சிகள் ஏராளம். முழுத் தொழிற்சாலையுமே இந்த உணர்ச்சிக் குவியலினால் நிரம்பி வழிந்தது. பிராணவாயு நிறைந்த ஒரு அறையில் தீக்குச்சியைத் தட்டியதும் நெருப்புப் பற்றி எரிவதைப் போல ஏதாவது ஓரிடத்தில் நடைபெறும் ஆத்திரமூட்டும் செயலினால் முழுத் தொழிற்சாலையுமே கோபாக்கினியால் பற்றியெரியக் கூடிய நிலைமை.
: இன்று காலை பத்து மணிக்கு டைரக்டர்களின் கூட்டம் நடப்பதற் கிருக்கின்றது. காலையில் ஊழியர்கள் வருவதற்கு முன்பே வந்து டைரக்டர்களின் அறைக்குள் புகுந்து அடைக்கலமடையும் அளவுக்குச் சில டைரக்டர்கள் பயந்திருக்கிறார்கள். பின்னர் வந்த சிலர் ஆயுதமேந்தியபடி இருபுறமும் அணிவகுத்து நிற்கும் எதிரிப் படையினருக்கு நடுவே நடந்து செல்பவர்களைப் போலவே, தங்கள் அறையை நோக்கிச் சென்றார்கள். டைரக்டர்கள் சபையின் தலைவர் மாத்திரம் சரியாகப் பத்துமணிக்கு ஐந்து நிமிடமிருக்க நிமிர்ந்து வந்து சேர்ந்தார். வெளித் தோற்றத்தில் நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் இருந்த போதிலும் உள்ளே அவை சிதறிச் சின்னாபின்னப்பட்டிருக்கும் நிலை தெளிவாகத் தெரிகின்றது. எதிர்காலம் அவருக்குத் தெளிவாகப் புரிக்கின்றது.
வீரசூரிய தலைவருக்கான ஆசனத்திலமர்ந்து மற்றைய டைரக்டர்களின் முகங்களைப் பார்த்த போதும் ஒருவரும் வாய் திறந்து பேசவில்லை. எவ்வளவுதான் மனமுடைந்திருந்தாலும் அவர்கள் இந்த வீரபுருஷனின் சக்தியில் அபரிமிதமான நம்பிக்கை வைத்திருந்தார்கள். அவர் ஒருபோதும் தோல்வியடைய
சிங்களச் சிறுகதைகள் 20

முடியாதவர் என்பது அவர்களது நம்பிக்கை. எதிர்ச் சாரியிலிருப்பவன் வெற்றியடையும் சாத்தியக் கூறுகள் ஏராளமாக இருந்தாலும், இறுதியில் ஏதாவது மகுடி வித்தையினாலாவது வீரசூரியாவே வெற்றியடைவாரென்று, அவர்கள் எதிர்பார்த்தார்கள். அவர்கள் பயந்தது வீரசூரியாவின் தோல்வியையிட்டல்ல; தங்களுக்குத் தனிப்பட்ட முறையில் ஏதாவது கஷ்டங்கள் ஏற்பட்டுவிடுமோ என்றுதான்.
'இப்போது ஸ்ட்ரைக் நிலைமை எப்படி?' தான் பேசாமல் விட்டால் மற்றவர்கள் பேச மாட்டார்கள் என்பதை உணர்ந்த வீரசூரிய கேட்டார்.
“சேர், இவங்கள் சும்மா கத்தினாப்போலை என்ன? போன முறையைப் போல இந்த முறையும் ஸ்ட்ரைக் தோல்வியடைந்து சங்கமே அழிந்து போகும்
வீரசூரிய எதுவுமே பேசவில்லை. தான் கொண்டிருக்கும் மேல் ரீதியான கருத்தெனக் கருதப்படுவதற்கு மேலாக அவர்களில் ஒருவரும் ஒன்றுமே சொல்ல மாட்டார்களென்பது வீரசூரியாவுக்குத் தெரியும். வீரசூரிய சொல்வதையெல்லாம் ஏற்றுக் கொள்வதன் மூலம் நல்ல பெயர் எடுக்க முயற்சிப்பவர்களே அவர்கள். வேறு நாட்களிலென்றால் இப்படியாக ஒருவர் சொன்னதும் வீரசூரிய சந்தோஷப் பட்டிருப்பார். ஆனால், இன்று அவருக்குக் கோபம்தான் உண்டாகியது. மற்றைய டைரக்டர்கள் தன்னைப் பலிகொடுக்க முயற்சிக்கிறார்கள் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.
'சும்மா சாட்டுக்குக் கதைக்க வேண்டாம்' அவர் கர்ச்சித்தார். தொழிலா ளரின் கோரிக்கைகளைக் கொடுக்காமல் இந்தக் கதைகள் ஒன்றினாலும் எதுவும் நடக்கப் போவதில்லை'
'இல்லை சேர், நான் அன்றிருந்த நிலைமையை பார்த்துத்தான் கதைக்கிறேன். அன்று இதோ வெற்றி என்ற நிலைமையில்தானே இருந்தது. தொழிலாளரின் கோரிக்கைகள் கிடைத்து விடும். தொழிற் சங்கம் பலமானதாகப் போகின்றது என்றுதானே எல்லோரும் நினைத்தார்கள். இன்று அவர்கள் எல்லோராலும் பேசப்படும் செத்த ஜயவீர அன்று இருந்தது உயிருடன் தானே?'
அதைத்தான் நானும் சொல்கிறேன். ஜயவீர உயிருடனிருந்தால், இது தோல்வியடைய முடியும். ஆனால், இன்று ஸ்ட்ரைக்கை நடத்துவது ஜயவீரவல்ல! ஜயவீரனின் ஆவி. ஜயவீர உயிருடனிருந்தால் அவன் ஒரு சாதாரண மனிதன். அவனுடைய குறைபாடுகள் இருக்கின்றன. அதே போல உயிரோடு இருக்கும் மனிதன் மேல் மற்றவர்களுக்குப் பொறாமை ஏற்படும். ஆவியைப் பொறுத்த அளவில் அப்படியல்ல. அதனால்தான் ஆவி வெற்றியடைகின்றது."
"பு ( படம் மீண்டும் மற்றவர்கள் மெளனமாயினர். ஓரிரு நிமிடங்களுக்குப் பின்
21 மல்லிகைப் பந்தல்

Page 19
வீரசூரியாவே பேசினார்.
'இப்போது முடிந்த அளவுக்குக் குறைந்த பட்சக் கோரிக்கைகளைக் கொடுத்துச் சரியான சந்தர்ப்பம் வரும் வரையும் போராட்டத்தைத் தற்காலிகமாகத் தடுத்து வைப்பதுதான் எங்களால் செய்யக் கூடியது.'L)
இதன்பின் தொழிற் சங்கத் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டார்கள். அவர்களுக்கிடையில் பலவிதப்பட்ட வாதப் பிரதிவாதங்கள் நடை பெற்றன. அது சில சந்தர்ப்பங்களில் மிகவும் சூடேறிய தர்க்கமாக இருந்தது. மற்ற எந்தக் கோரிக்கைகளைத் தந்தாலும் இந்தச் சந்தர்ப்பத்தில் சம்பள உயர்வு மாத்திரம் தரமுடியாது என்று வீரசூரிய திடமாகச் சொன்னார். சிறிசேன உட்பட எல்லாத் தொழிற் சங்கத் தலைவர்களும் கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் திடமாக நின்ற கோரிக்கையும் அதுவேயாகும். இறுதியாக இயலாத பட்சத்தில் அவர்கள் கேட்ட தொகையில் அரைவாசியைச் சம்பள உயர்வாகக் கொடுக்க வீரசூரிய இணங்கினார்.
இதுவும் தொழிற் சங்கத்திற்குக் கிடைத்த பெரிய வெற்றியாகும். தொழிற் சங்கம் ஒன்று உருவாகுவதற்கே முடியாத சூழ்நிலை நிலவிய ஓரிடத்தில் இவ்வாறான சம்பள உயர்வைப் பெறுவதென்றால் அது எத்தகைய வெற்றியாக இருக்க வேண்டும். தொழிற்சாலை முழுவதுமே இந்த வெற்றியினால் ஆரவாரப்பட்டது. 'ஜே' எங்கள் போராட்டத்தில் நாங்கள் வென்றோம். தொடர்ந்தும் போராடுவோம்' மாவீரன் ஜயவீர, 'மாவீரன் சிறிசேன' போன்ற சுலோகங்கள் எங்கும் ஒலித்துக் கொண்டேயிருந்தது. சிலர் இசையில் மகிழ்ந்தனர். சிலர் சங்கீத வாத்தியங்களை மீட்டி மகிழ்ந்தனர். வேறு சிலர் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இன்னும் சிலர் உண்டு குடித்துக் களித்தனர்.
எல்லோரிலும் பார்க்கக் கூடிய அளவு மகிழ்ச்சியடைந்தது சிறிசேனாவே. அது அவனுடைய வெற்றிபோல இருந்தது. மற்றவர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தை அவன் தன்னுடையதாகக் கருதினான். எனினும் அவன் எந்தக் களியாட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. அவன் தன்னுடைய மகிழ்ச்சியை மனதிற்குள்ளேயே அடக்கிக் கொண்டு அங்குமிங்கும் நடப்பவற்றைத் திரும்பித் திரும்பிப் பார்ப்பதில் பெருந் திருப்தியடைந்தான். தங்கள் வெற்றியை ஆடிப்பாடிக் களிப்பவர்கள் அவனை வலுவாகத் தங்களோடு சேர்த்துக் கொள்ள முயன்ற போதெல்லாம் புன்சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு அந்த இடத்திலிருந்து விலகிக் கொண்டான்.
மாலையானதும் கூடியிருந்தவர்கள் ஒருவர் இருவராகப் பிரிந்து சென்றுவிட அந்தப் பிரதேசமே வெறிச்சோடிக் கிடந்தது. தொழிற்சாலைக்கருகில் இருக்கும் சிறிய வீடுகளின் வரிசையில் கடைசியாக உள்ளதே சிறிசேனாவின் வீடாகும். அதிக நேரம் செல்லும் வரை பலர் அங்கு கூடித் தங்களுக்குக் கிடைத்த வெற்றியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். இறுதியில் அவர்களெல்லாம் தங்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றார்கள்.
சிங்களச் சிறுகதைகள் 22

பகலெல்லாம் இருந்த ஆரவாரமும் உத்வேகமும் இப்போது இல்லை. வெண்ணிலவு மின்னி மினுங்கும் தன் தண்ணொளியைப் பூமியின் மேல் வாரிக் கொட்டிக் கொண்டிருக்கின்றது. இடையிடையே ஆகாயத்தில் தவழ்ந்து செல்லும் கருமுகில்களால் மறைக்கப்படும் வெண்ணிலவு. அவை விலகியதும் முன்னிலும் பார்க்கப் பிரகாசமாக ஒளி வெள்ளத்தைக் கொடுக்கின்றது. முகில், பூமியில் ஊர்ந்து செல்லும் பிரமாண்டமான பிராணியைப் போன்ற தோற்றத்தை உருவாக்கிப் பின் மறைகிறது.
இரவு உணவு முடிந்தபின் சிறிசேன முற்றத்திற்கு வந்து வானத்தைப் பார்த்தான். பகலில் நடந்த நிகழ்ச்சிகள் அவனடைய இதயத்திலிருந்து நீங்க முடியாதவை. எனினும், அவற்றையெல்லாம் மீறிக் கொண்ட அவற்றிலும் பார்க்க முக்கியத்துவம் வாய்ந்த கடந்த கால நிகழ்ச்சிகள் தன் நினைவில் வந்து கொண்டிருப்பதை அவன் உணர்கிறான். பகலில் பெற்ற வெற்றிகள் பிரிக்க முடியாதபடி அந்தக் கடந்தகால நிகழ்ச்சிகளோடு பிணைபட்டிருப்பது
அவனுக்குத் தெரிகின்றது.
அன்றும் இதுபோலவே நிலவொளி வீசும் இரவு. வானம் அங்குமிங்கும் தெரிந்த வெண் திட்டுக்களோடு ஒரே நீலமயமாக இருந்தது. இரவின் சுகத்தை அமைதியாக அனுபவித்தபடி மரங்களின் இருண்ட நிழல் நிலத்தில் வியாபித்திருந்தது. எங்கும் பொங்கிப் பொலியும் செளந்தர்ய லாவண்யத்தால் சிறிசேன பிரதான வீதிக்கு இழுக்கப்படுகின்றான். அவன் தொழிற்சாலை இருக்கும் திசையில் நடக்கிறான். தொழிற்சாலையோ ஒரேடியாக வெண்ணிலாவின் தண்ணொளியால் குளிப்பாட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் கேட், மதில், சுவர், கூரைகளிலிருந்தெல்லாம் ஒருவிதமான பிரகாசம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவன் ஈயம் பூசப்பட்ட கேட்டுக்கு முன்னால் நின்று, அதை மெதுவாகத் தொட்டுப் பார்க்கிறான். உலோகத்தில் படிந்திருந்த ஈரத்தன்மை அவனைப் புல்லரிக்கச் செய்கிறது.
7 இது கொழும்பை அடுத்துள்ள பிரதேசமான போதிலும் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் பிற்போக்கான ஒரு பிரதேசத்தைப் போலவே இருந்தது. அந்தத் தோற்றம் இப்போதும் கூட முற்றாக மறைந்து விடாதபோதிலும் துரித கெதியில் எல்லா விதத்திலும் பட்டினமாக மாறிக்கொண்டிருப்பது பகலில் பார்க்கும் போது தெரியும். அதிகமான சனக் கூட்டம் - கடைவீதிகள் - வாகனப் போக்குவரத்து - சத்தம்.
தொழிற்சாலைக்கு முன்பக்கமாகக் கொஞ்சம் தொலைவில் சிறிய வெற்றுக் காணித்துண்டு ஒன்று இருக்கிறது. இப்போது வெறும் நிலமாக இருந்த போதிலும் முன்பு அதில் ஒரு சிறிய வீடு இருந்தது. அந்த வீட்டில் ஒருவர் மட்டுமே நிரந்தரமாகக் குடியிருந்தார். எனினும் அது அக்காலத்தில் பலருக்குத் தற்காலிகத் தங்குமிடமாகவிருந்தது. அங்கு நிரந்திரமாகக் குடியிருந்தவன் ஜயவீர.
23 மல்லிகைப் பந்தல்

Page 20
தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டதும் முதலில் வேலைக்குச் சேர்ந்தவர்களில் ஜயவீரவும் சிறிசேனாவும் இருவர். பல விஷயங்களில் ஜயவீரவே சிறிசேனாவின் குருவாகும். ஜயவீர இறந்த பின் அவனுடைய வீடு அழிந்து காணியும் புல்லும் பூண்டும் முளைத்துத் தரிசு நிலமாகிவிட்டது. ஜயவீர இல்லாமல் தன்னுடைய வாழ்க்கையும் அப்படியாகிவிட்டது போன்ற எண்ணம் சிறிசேனவிற்கு ஏற்படுகின்றது.
பாதையிலிருந்து பாழ்நிலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் சிறிசேனாவிற்கு ஜயவீர அங்கிருந்து தன்னோடு கதைப்பது போன்ற ஒரு பிரமை ஏற்படுகின்றது. சிறிசேனாவிற்கு அது மாயை - பொய்யென்று தெரியும். தெரிந்தும்கூட
அத்திசையில் நடக்காமலிருக்க அவனால் முடியவில்லை.
சிறிசேனா மெதுவாக அத்திசையில் நடக்கிறான். அங்கே யாருமில்லை. அங்கு செல்ல முடியாத அளவுக்கு முட்புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. அவன் அவற்றை இருபுறமும் ஒதுக்கி வழியமைத்தபடி அடிமேலடி வைத்து நடக்கிறான். ஜயவீரனின் பிரேத அடக்கம் அவனுடைய சிறு குடிசைக்கு முன்னாலேயே நடந்தது. அன்று அங்கு வந்திருந்த பத்துப்பன்னிரண்டு பேரோடு சேர்ந்து பிரேத அடக்கம் செய்த காட்சி அவன் மனத்திரையில் நிழலாடியது. ஜயவீர உயிருடன் இருந்த காலத்தில் அவனுக்கு நூற்றுக்கணக்கான நண்பர்கள் இருந்த போதிலும், பலருக்கு அவன் உதவிகள் செய்திருந்த போதிலும் பத்துப் பன்னிரண்டு பேர் மட்டுமே அவனுடைய பிரேத அடக்கத்திற்கு வந்திருந்தார்கள். அவர்களில் மூவரோடு சேர்ந்து மாம்பலகையினால் செய்த சவப் பெட்டியைக் குழியில் இறக்கியதும் அவன்தான். முதலில் மண்ணை அள்ளிப் போட்டுச் சோகக் குரலெழுப்பியது அவனேதான்.
அன்று குழியில் புதிதாக மண்ணைப் போட்டு நிரப்பியும்கூட இன்று அது திரும்பவும் குழியாகவே இருக்கின்றது. அதை மூடி, கொடிகளும் சிறு பூண்டுகளும் வளர்ந்திருக்கின்றன. சிறிசேன வீதியை நோக்கித் திரும்புகிறான்.
ஜயவீராவிற்கு ஏற்பட்ட எவ்வளவு துர்ப்பாக்கியமான - அகால மரணம்! அவனிடமிருந்து பல வழிகளிலும் உதவிகள் பெற்ற ஒரு மனிதன் இறுதியில் எதிரிகளின் கைக்கூலியாகி அவனைக் கொன்றானா?
உணவு இடைவேளைக்குப் பின் ஜயவீர தன்னுடைய இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். தொழிற்சாலையின் பிரதான வாசல் காவலாளியான சைமன் தன்னருகில் செல்வதை அவன் கண்டான். சைமன் முகம் வைரம் பாய்ந்ததும், கடுமையானதுமான போதிலும் அன்று அழுது வடித்தது போலிருப்பதாக ஜயவீரவுக்குத் தெரிந்தது.
'என்ன சைமன்?' அவன் கேட்டான். சைமன் நின்றான். பேசவேண்டும் என்ற அவசியம் இருந்தும் அவனால் பேசமுடியவில்லை. இதனால் ஜயவீர
சிங்களச் சிறுகதைகள் 24

அதிகமாகக் குழப்பமடைந்தான்.
'என்ன நீ எங்கே போனாய்?'
'பெரியவரின் அறைக்கு.' சைமனின் குரலில் உயிரே இருக்கவில்லை.
'எதுக்கு?
மீண்டும் சைமன் மெளனமானான்.
'உன்னை ஏசினாரா?'
'ஏசினால் தேகத்திலை நோகுமா?... குற்றம் விதித்தார். இந்த இந்த... மாதத்தில் மூன்றாவது முறையாக.'
'என்ன பிழைக்காக?'
*கடவுளுக்குத்தான் தெரியும். பெரியவர் காரிலிருந்து இறங்கக் கதவைத் திறக்கறப்போ முன்பக்கமாகக் குனியவில்லையாம். ஆனால், நான்
குனிஞ்சனான்.
'வெக்கங்கெட்ட வேலை செய்து போட்டுச் சொல்லாதை. இப்ப குற்றம் போட்டதை மட்டும் சொல்லு - நீ குனியாததுக்குக் குற்றம் போட்டது எண்டு... அது கொஞ்சம் கெளரவமாயிருக்கும்.'
சைமன் சென்றதன் பின் ஜயவீர சிந்திக்கத் தொடங்கினான். நிர்வாகத்தின் அடக்கு முறை பற்றிய முறைப்பாடுகளைத் தினமும் அவன் கேட்பதுண்டு.
'வழியில் பஸ் தாமதமானபடியால் ஐந்து நிமிஷம் பிந்தி வந்துவிட்டேன். என்னுடைய அரைநாள் சம்பளத்தை வெட்டிப் போட்டார்கள்.'
'கால் மணித்தியாலம் பிந்தி வந்ததற்காக இரண்டு நாள் சம்பளத்தை வெட்டிப் போட்டார்கள்.'
'மெஷின் வேலை செய்யும் போது உடைந்த கம்பியின் விலை என்னுடைய சம்பளத்திலிருந்து கழித்துப் போட்டார்கள்.'
*கண்ணாடி கழுவவில்லையென்று குற்றம் போட்டுவிட்டர்கள்.
*இருந்தாப்போலை ஜேமிசை நிப்பாட்டிப் போட்டார்கள்... பாவம்... ஐஞ்சு பிள்ளைகளும், பெண்சாதியும்.'
'அடுத்த கிழமையிலிருந்து வேலை இல்லை என்று பியசேனவுக்குச் சொன்னார்களாம்.
25
மல்லிகைப் பந்தல்

Page 21
அவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. எதுவுமே தெளிவற்ற நிலை. தெளிவற்ற சிந்தனைகளால் நிறைந்திருந்த இதயத்தில் கீழிருந்து வெளிக்கிளம்பும் தீப்பொறியைப் போல 'தொழிற் சங்கம் என்ற எண்ணம் தோன்றியது. தோன்றியவுடன் மறைந்தது. எனினும், திரும்பவும் தோன்றியது. கீழிருந்து கிளம்பி ஜூவாலையாக எரிவதற்குத் துடிக்கும் நெருப்புப் பொறியைப் போல
அந்த எண்ணம் திரும்பத் திரும்பத் தோன்றிக் கொண்டேயிருந்தது.
தொழிற்சங்கம் பற்றிய எண்ணம் மற்றைய தொழ்லாளர் மத்தியிலும் விரைவாகப் பரவத் தொடங்கியது. ஜயவீராவே அதைப் பரப்பினான். அவன் அடிக்கடி விசிறி அந்த ஜுவாலை அணைந்து விடாமல் பார்த்து வந்தான். முடிவற்ற கொடுமைகளுக்குட்பட்டுத் தவித்த சில தொழிலாளருக்குத் தொழிற் சங்கம் அமைக்க வேண்டும் என்ற எண்ணமே ஓரளவுக்கு நிம்மதியளிப்பதாக இருந்தது. எனினும், இந்த எண்ணத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான வழி ஒருவருக்கும் தோன்றவில்லை. நிர்வாகத்தின் பயமுறுத்தல்களுக்குப் பணிந்து விடாமல் வெளிப்படையாகக் கிளம்புவதற்குத் தைரியமுள்ள பத்துப் பன்னிரண்டு பேரையாவது தேர்ந்தெடுப்பது கஷ்டமாக இருந்தது. ஜயவீர நம்பிக்கையான ஒரு சிலரைச் சேர்த்து இரகசியமாக சில கூட்டங்களை நடத்தியிருந்த போதிலும் அவையெல்லாம் 'சங்கம்' என்ற தன்மையைப் பெறவில்லை.
தொழிற்சாலையின் நிர்வாகியாக வீரசூரியா ஒவ்வொரு வருடமும் விடுமுறையில் நுவரேலியாவுக்குப் போவது வழக்கம். ஆழ்ந்த சிந்தனைக்குப் பின் தொழிற்சங்கம் ஆரம்பிப்பதற்கு இதுதான் சிறந்த காலம் என ஜயவீர தீர்மானித்தான். வீரசூரிய இல்லாத போதிலும் தொழிற்சாலை முழுவதிலும் அவனுடைய பிரதிபிம்பம் இருந்து கொண்டே இருக்கும். எனினும், வீரசூரியாவின் உயிருள்ள உண்மையான உருவத்தைப் போல அவனுடைய பிரதிபிம்பம் அவ்வளவு பயங்கரமானதல்ல. வீரசூரிய ஸ்துலமாக அங்கே இல்லாத காலத்தில் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பற்றி இலகுவில் ஒரு தீர்மானத்தை எடுக்க முடியும்.
வீரசூரிய நுவரேலியாவிற்குச் சென்ற இரண்டாவது நாள் ஜயவீர சிறிசேனாவோடு கலந்தாலோசித்து, தொழிற்சங்கத்தின் ஆரம்பக் கூட்டம் தன்னுடைய இடத்தில் நடைபெறுமென ஒரு சிறிய விளம்பரத்தைத் தொழிற்சாலை முழுவதும் விநியோகித்தான். உதவி நிர்வாகி, அவ்விளம்பரம் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பதற்கிடையில் அது பல தொழிலாளரின் கையை அடைந்து விட்டது. மற்றவர்களின் கைகளுக்கு அவ்விளம்பரம் போய்ச் சேர்வதைத் தடுப்பதற்கு அவர் எடுத்த நடவடிக்கைகள் பூரணமாக வெற்றியளிக்கவில்லை. உடனேயே அவர் நுவரேலியாவில் இருந்த வீரசூரியாவுக்கு டெலிபோன் மூலம் நிலைமையை விளக்கிக் கூறினார். வீரசூரிய அவரைக் கடிந்து கொண்டதோடு திரும்பி வருவதற்கு நினைக்கவில்லை. திரும்பி
சிங்களச் சிறுகதைகள் 26

வருவதால் தன் கெளரவம் பாதிக்கப்படுமென்றும் தொழிற் சங்கத்திற்குத் தான் பயந்து விட்டது போன்ற எண்ணம் ஏற்படக் கூடுமென்றும் அவர் கருதினார். தொழிற் சங்கத்தின் தலைவராக ஜயவீரவும் காரியதரிசியாகச் சிறிசேனவும் தெரிவு செய்யப்பட்டார்கள். சைமன் நிர்வாகசபைக்குத் தெரிவு செய்யப்பட்டான். வீரசூரியாவுக்கு முன் பயந்து நடுங்கி வாலை ஒடுக்கிக் கொண்டு இருப்பவர்கள்கூட அன்று சிங்கங்கள் போலக் கர்ச்சித்தார்கள். சங்க உத்தியோகத்தர்கள் உடனடியாகத் தங்கள் சங்கத்தைக் கொழும்பிலுள்ள ஒரு தொழிற் சங்க சம்மேளனத்தின் கிளையாகப் பதிவு செய்து கொண்டார்கள்.
வீரசூரிய நுவரேலியாவிலிருந்து திரும்பி வந்ததும் முதலில் செய்த வேலை டைரக்டர்களையும் எல்லா நிர்வாக ஊழியர்களையும் கூப்பிட்டு ஏசியதே. 'நான் இல்லாத வேளையில் நீங்கள் வேலை செய்யும் லட்சணம். இவங்களுக்கு எதிராக ஒரு சொல்லாவது சொல்வதற்கு ஒருவராலும் ஏலாமல் போய் விட்டது' எல்லோரும் மௌனமாக நின்றார்களேயொழிய ஒருவரும் பேசவில்லை. பயந்தாங் கொள்ளிகளுக்கு முன் சிங்கநாதம் செய்த வீரசூரிய பெரிய உத்தியோகத்தர்களுக்கு முன் கர்ச்சனை செய்ய முடியுமானால், தொழிலாளருக்கு முன் ஏன் அது முடியாது என்று எண்ணினார்.
'எல்லாத் தொழிலாளரிடமும் நான் பேச வேண்டும். நாளைக்குக் காலை எல்லோரையும் கன்டீனுக்கு வரும்படி செய்ய வேண்டும்' என்று அவர் உதவி நிர்வாகிக்கு உத்தரவிட்டார்,
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடனேயே, சங்கத்தின் உத்தியோகத்தர்கள் தொழிற்படத் தொடங்கினார்கள், நிர்வாகியின் பேச்சைக் கேட்பதற்குத் தொழிலாளர்கள் போகக் கூடாது என்று அவர்கள் தங்கள் சங்க அங்கத்த வர்களைக் கேட்டுக் கொண்டார்கள். போக வேண்டாம். இதெல்லாம் நாங்கள் கஷ்டத்தோடு கட்டியெழுப்பிய சங்கத்தைச் சீர்குலைப்பதற்கு நிர்வாகிகள் செய்யும் சூழ்ச்சி. இதுக்குப் போனால் உங்களுடைய கழுத்துக்கே நீங்கள் சுருக்குப் போடுவதாக முடியும்' என்று அவர்கள் சொன்னார்கள்.
12 கூட்டம் கூட்டப்பட்டிருந்த நாள் தொழிற்சாலை முழுவதும் ஒரே குழப்பமாக இருந்தது. நிர்வாகிகள் தொழிலாளரைக் கூட்டத்திற்கு வரும்படி செய்வதற்கு மிகவும் முயற்சித்தார்கள். சங்க உத்தியோகத்தர்கள் தொழிலாளரை அதில் கலந்து கொள்ளாமல் தடுப்பதற்கு முயற்சித்தார்கள். அன்று காலை ஒருவரும் ஒருவேலையும் செய்யவில்லை. மத்தியஸ்தர்கள் அங்குமிங்கும் வளைந்து கொடுத்ததோடு, இருபக்கத்திற்கும் கண்ணை மூடிக்கொண்டிருந்தார்கள்.
எவ்வளவுதான் முயன்றிருந்த போதிலும் வீரசூரியாவின் பேச்சைக் கேட்பதற்காகப் பத்துப் பதினைந்து பேருக்கு மேல் அழைத்துவர முடியவில்லை. அவர்களிடம் வீரசூரிய பேசிய முறை யாரும் எதிர்பார்க்காத்தாகவிருந்தது. அது வீரசூரியகூட எதிர்பார்க்காததாகவிருந்தது. அவர் டைரக்டர்களுக்கும்
27 மல்லிகைப் பந்தல்

Page 22
நிர்வாக உத்தியோகத்தர்களுக்கும் முன்னால் செய்தது போல் கர்ச்சனை செய்யவே நினைத்திருந்தார். எனினும் வந்திருந்த தொழிலாளரின் எண்ணிக்கையைப் பார்த்ததும் அவருடைய எண்ணம் மாறிவிட்டது. அவர் சேர்த்து வைத்திருந்த வார்த்தைக் குவியல்கள் மறைந்து அவரையறியாமலே புதிய வார்த்தைகள் வந்து சேர்ந்தன.
'அன்பர்களே, இந்தத் தொழிற்சாலையில் தொழிற்சங்கம் அமைப்பதற்கு நான் எதிர் என்று சிலர் நினைப்பதாகத் தெரிகிறது. அது முழுப்பொய் என்று நான் முதலிலேயே சொல்லி வைக்க வேண்டும். (கைதட்டல்) தொழிற்சங்கம் அமைப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துதல் ஜனநாயகத்தின் அடிப்படையான உரிமையாகும். நாங்கள் ஜனநாயக வாதிகள். ஜனநாயகத்தைப் போல மிகவும் சிறந்த அரசியல் அமைப்பு இன்றும் உலகத்தில் ஏற்படவில்லை. நாங்கள் அந்த ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்குக் கடமைப் பட்டிருக்கிறோம். ( கைதட்டல்) -
* என்னுடைய ஸ்தாபனத்தில் ஒரு தொழிற்சங்கம் அமைப்பதை நான் ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால், எதைச் செய்தாலும் அதற்கு ஒரு வழிமுறை இருக்க வேண்டும். இப்போது சங்கத்தை அமைத்திருப்பவர்கள் பிழையான முறையிலேயே அதைச் செய்திருக்கிறார்கள். அதைத்தான் நான் எதிர்க்கிறேன். இப்போது செய்த தவறை மறந்து சரியான முறையில் ஒரு தொழிற் சங்கத்தை அமைத்து அதன் மூலம் உங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்.'
மிகவும் அமைதியாகவே வீரசூரிய பேசினார். ஆழமாக யோசித்துப் பேசினார். அவருடைய முகம் மற்ற நாட்களைப் போல் கோபத்தால் சிவந்திருக்கவில்லை. அவருக்குக் கோபம் வரும்போது மொட்டைத் தலையில் எஞ்சியிருக்கும் ஒருசில தலைமயிர்கள் ஒரு சிலவேளைகளில் மாத்திரம் முகத்தில் விழுந்தன. அப்போதெல்லாம் கையை மெதுவாகத் தூக்கி அவற்றை விலக்கிக் கொண்டார்.
'எனவே நாங்கள் இப்போதே உத்தியோகத்தர்களைத் தெரிவு செய்து ஒரு சங்கத்தை அமைப்போமா?' - அவர் இரு கண்களாலும் வந்திருந்தவர்களை நோக்கியபடி கேட்டார். 'ஒரு சங்கம் இருப்பதனால் எனக்கு எவ்வளவு வசதியாக இருக்கும். உங்களுக்கும் எவ்வளவு நன்மையாக இருக்கும். எல்லோரும் சம்மதம் தெரிவித் தார்கள். அதன் பின் அவருக்குச் சாதகமான தொழிலாளரிலிருந்து உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.
எதிர்பாராத விதமாகப் புதிய தொழிற்சங்கமொன்று தோன்றியது. பழைய தொழிற் சங்கத்திற்கு ஒரு பயமுறுத்தலாக இருந்தது. அவர்கள் உடனடியாகப் பாதுகாத்துக் கொள்ளுதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது. இதை எப்படிச் செய்ய முடியும்? ஜயவீர நிர்வாகச் சபையைக் கூட்டிச் சங்கத்தைப் பாதுகாப்பதற்காக வேலை நிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டுமெனக்
சிங்களச் சிறுகதைகள் 28

கூறினான். எவ்வளவுதான், பயங்கரமான நிலைமை இருந்தபோதும் வேலை நிறுத்தம் என்ற சொல் சிலரின் மனத்தில் பயத்தை ஏற்படுத்தியது. அதனால்
ஏற்பட்ட எதிர்ப்புகளையிட்டு விவாதம் நடை பெற்றது.
'ஆரம்பிக்கப்படவிருக்கும் இந்தப் போராட்டம் வாழ்வுக்கும், சாவுக்குமிடையிலான போராட்டமாக இருக்கலாம். எங்களுடைய முன்னேற்றத்திற்கும் அழிவுக்குமிடையிலான போராட்டமாக இருக்கலாம். இதில் ஒன்று வெற்றியடையும் போது, இன்னொன்று தோல்வியடைகின்றது என்பதை நாங்கள் மனதில் கொள்ள வேண்டும். ஆனால் நாங்கள் வாழ்வதாயிருந்தால் அடிமைகளாக வாழக்கூடாது. எங்களுடைய சரீர உழைப்பைப் பயன்படுத்தி ஏதாவதொன்றைச் செய்கின்றோமென்றால், அதற்காக எங்களுடைய சுயகெளரவத்தைப் பாதுகாத்துக் கொண்டு நியாயமான சம்பளத்தைப் பெறுபவர்களாகத்தான் வேலை செய்கிறோம். அப்படியில்லையென்றால் மரணம் மிகவும் மேலானது. இதை நன்றாக விளங்கிக் கொண்டு தீர்க்கமான முடிவுடன்தான் நாம் போராட்டத்தில் இறங்க வேண்டும்' ஜயவீர இறுதியாக அவர்களுக்குச் சொன்னான். எல்லோரும் தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தார்கள்.
வேலை நிறுத்த நாளன்று தொழிற்சாலை ஒரு உலைக்களமாக விளங்கியது. ஜயவீர, சிறிசேன உட்பட தொழிற்சங்கவாதிகள் வேலைக்குச் செல்பவர்களைத் தடுப்பதில் ஈடுபட்டிருந்தார்கள். நிர்வாகத்திற்குச் சார்பான சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாக இல்லாவிட்டாலும், நிர்வாகத்தின் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் வேலை செய்தார்கள். சிலருக்கிடையில் சூடான பேச்சுவார்த்தைகளும் ஏற்பட்டன. சிலருக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டுப் பொலிஸ் அழைக்கப்பட்டது.
வேலை நிறுத்தக்காரர்கள் ஊக்கமாக இருந்த முதல் சில நிமிடங்களுக்கு வேலை நிறுத்தம் எதிர்பார்த்ததிலும் பார்க்க வெற்றியாக இருந்தது. ஜயவீர, சிறிசேன, சைமன் ஆகியோர் வேலைநிறுத்தக்காரர்கள் திரும்பிச் செல்லாமல் பார்ப்பதில் கவனமாக இருந்தனர். நேரம் செல்லச் செல்ல அவர்களுக்கும் அப்படித் தடுத்து வைத்திருப்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. பொலிஸ் வந்து 'சமாதானத்தை நிலை நாட்டிய பின் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தவர்களின் மனம் சலனமடையத் தொடங்கியது. சிலர் மனைவி மக்கள், சகோதரங்கள், பெற்றார், எதிர்கால முன்னேற்றம் ஆகியவற்றைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். பேசத் தொடங்கினர். இதற்கிடையில் ஒரு தொழிலாளி பொலிஸ் காவலுடன் வேலைநிறுத்தத்தின் கட்டுப்பாடுகளை மீறி வேலைக்குத் திரும்பினான். வெளியில் நின்றவர்கள் உரத்த சத்தத்தில் அவனை அவதூறு செய்தார்கள். அதைக் கவனியாமல் அவன் தொழிற்சாலைக்குள் சென்றான். அவன் தொழிற்சாலைக்குள் சென்ற சில நேரத்தில் அவனை வெளியிலிருந்து கேலி செய்தவர்களிலும் ஏசியவர்களிலும் பலர் அவனைத் தொடர்ந்து வேலைக்குத் திரும்பினர். வெளியில் நின்றவர்கள் அவர்களைக்
29 ! மல்லிகைப் பந்தல்

Page 23
கேலி செய்து ஆத்திரத்தோடு ஏசினர்.
அடுத்தநாள் வேலைக்குத் திரும்பியவர்களில் பலர், வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட போதிலும் அதிகமானர்கள் வேலைக்குத் திரும்பினர். ஆனால் ஒருவரும் புதிதாக வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை. சில தினங்களாக ஓரிருவர் வேலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதிலும் ஒரு சந்தர்ப்பத்தில் வேலைக்குத் திரும்புபவர்கள் இல்லாமலிருந்தது. அப்போதுகூட வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டவர்களின் தொகை கணிசமான அளவுக்குக் கூடுதலாகவே இருந்தது. எனவே, தொழிற்சாலையினுள்ளே வேலைகள் சரிவர நடக்க முடியவில்லை. வேலைநிறுத்தக்காரர்கள் நிர்வாகத்தினரைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். ஆனால், நிர்வாகிகள் அதற்கு இணங்கவில்லை. பேச்சு வார்த்தைக்கு முன் வேலைக்குத் திரும்ப வேண்டும் என அவர்கள் கூறினர். பேச்சு வார்த்தைககள் ஆரம்பிப்பதற்கு முன் வேலைக்குத் திரும்புவது தோல்விக்கு அறிகுறியாக இருக்குமெனத் தொழிற்சங்கத்தினர் கருதினர். இதனால் வெற்றி யார் பக்கம் என்று சொல்ல முடியாமல் இருந்தது. நிர்வாகிகளின் வருமானம் குறைவு. வேலைநிறுத்தக்காரருக்கு வருமானம் அறவேயில்லை. அவர்கள் பொதுமக்களின் அனுதாபத்தினாலேயே வாழ்க்கையை நடாத்தினார்கள். இந்த நிலையிலும் வேலை நிறுத்தக்காரர்களே இறுதியில் வெற்றியடைவார்கள் என்று எல்லோரும் நம்பினார்கள்.
இதற்கிடையில் வீரசூரிய சாதகமான தொழிற்சங்கத்திடம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பவர்களின் கோரிக்கைகள் சம்பந்தமாகப் பேச்சு வார்த்தை நடத்துவதற்குப் பிரதிநிதிகள் அனுப்பும்படி கேட்டார். இதை யாருமே எதிர் பார்க்கவில்லை. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் சங்கம் உடனடியாகவே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பது, தாங்களென்றும், எனவே தங்கள் சங்கத்திலிருந்துதான் பிரதிநிதிகள் அழைக்கப்பட வேண்டுமென்றும் சுட்டிக் காட்டியது. வீரசூரிய இப்படியான கோரிக்கைகளுக்கு அசைந்து கொடுப்பவரல்ல. அவர் தன்னுடைய எண்ணத்தையே நடைமுறையாக்கினார்.
"வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பவர்களின் கோரிக்கைகளில் பலவற்றைக் கொடுப்பதற்குத் தாம் இணங்குவதாகப் பேச்சுவார்த்தைக்கு வந்திருப்பவர்களிடம் வீரசூரிய கூறினார். வேலைநிறுத்தம் செய்த நாட்களுக்கான சம்பளத்தை வெட்டுவதன்றி வேறெவ்விதமான தண்டனையும் வேலை நிறுத்தக்காரருக்கு அளிக்கப்படமாட்டாது. இந்த உறுதி வேலைநிறுத்தக்காரருக்கும் அறிவிக்கப்பட்டது. அது அவர்களுக்கிடையில் ஒரு குழப்பமான நிலையை உருவாக்கியது. அதை ஏற்றுக்கொண்ட பலர் அடுத்த நாளே வேலைக்குத் திரும்பினர். இன்னும் பலர் தொடர்ந்து போராடுவதால் பலனில்லையெனக் கருதினர். சைமன் அவர்களுக்குத் தலைமை தாங்கினான். ஜயவீர உட்பட ஒருசிலர் மாத்திரம் அந்தக் கருத்துக்கு எதிரான வாதத்தை எடுத்துக் கூறினர்.
'வீரசூரிய இப்படியான உறுதி தருவதாக இருந்தால் எங்களுக்குத்தான்
சிங்களச் சிறுகதைகள் 30

தரவேண்டும். நாங்கள்தான் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்தோம். இந்தக் கோரிக்கைகளைக் கொடுப்பதன் நோக்கம் எங்கள் சங்கத்தைச் சீர்குலைப்பதுதான். அவர்களுக்குக் கொடுத்த உறுதியின் பேரில் நாங்கள் வேலைக்குச் செல்வதானால் எங்கள் சங்கம் பலவீனமடைந்துவிடும்' - ஜயவீர சொன்னான்.
'சங்கமா, நாங்களா பெரிது?' சைமன் கேட்டான். 'எங்களுக்கு வேலையில்லாமல் போனாலும் சங்கத்தைப் பாதுகாப்பதுதான் உங்கள் நோக்கம்.
அப்படியில்லையா?'
814 'இல்லை, தோழர். இப்படிக் குற்றஞ்சாட்டுவது தவறு. நான் சொல்ல வந்தது என்னவென்றால் எதிர்காலத்தில் எங்கள் சங்கம் அழிந்து போனபின் வீரசூரிய தான்கொடுத்த கோரிக்கைகளை மறுக்கக்கூடும். அப்போது இந்த அடிவருடிகளின் சங்கம் சும்மா பார்த்துக்கொண்டுதான் இருக்கும். அதனால்தான் நாங்கள் சங் கத்தைக் காப்பாற்ற வேண் டும். எங்கள் சங்கம் தோல்வியடையுமானால் நிர்வாகத்தின் அடக்குமுறைகள் மேலும் அதிகரிப்பதற்கு இடமிருக்கின்றது.
வேலைநிறுத்தத்தை நிறுத்துவதற்கு ஆதரவாகவும், எதிராகவும் இருந்தவர்களுக்கிடையிலான மோதல் வார்த்தைகளுக்குள் மட்டும் எட்டுப்படவில்லை. கை, கால், கல் போன்றவைகளும் தாராளமாகப் பாவிக்கப்பட்டன. எப்படியாயினும் நிலைமை எந்த நிமிடத்திலும் வெடித்து. வியாபிக்கும் நிலையில் இருந்தது.
ஜயவீர அன்று வீட்டுக்குத் திரும்பும்போது நடு இரவு கழிந்து விட்டது. அதுவரை அவன் தொழிலாளரைச் சந்தித்து வேலைக்குச் செல்லாமல் தடுப்பதற்கு முயற்சி செய்தான். வேலைக்குத் திரும்புவதற்குத் தீர்மானித்தவர்களில் பலர் அவன் சொன்னவற்றைக் கேட்டுத் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டனர். சிலர் அவனை நேரடியாகச் சந்திப்பதைத் தடுத்தனர். சிலர் தாங்கள் வேலைக்குச் செல்லப் போவதாக அவனுடைய முகத்திற்கு நேரேயே சொன்னார்கள். எந்தவிதத்திலும் வேலைநிறுத்தம் முறிவதற்கான அறிகுறிகளே தென்பட்டன. அவனுக்கு ஒருவிதமான பயங்கரமானது போன்ற உணர்வு தோன்றியது. அந்த உணர்வு தோன்றும் போதெல்லாம் தைரியத்தை வரவழைப்பதற்கு முயற்சித்தான்.
ஜயவீர முன் அறையின் கதவைத் திறக்கும்போது அவனுடைய இதயத்தில் ஒருவிதமான துடிப்பு ஏற்பட்டது. பல வருடங்களாக இந்த அறையில் படுத்து உறங்கியிருந்த போதிலும் அவனுக்கு ஒருபோதும் இப்படியான தவிப்பான உணர்வு ஏற்படவில்லை. மேசையில் நெருப்புப் பெட்டி இருந்தது. அவன்
அதை எடுப்பதற்காக மேசையில் கையை வைத்தான்.
31 | மல்லிகைப் பந்தல் :

Page 24
அவனால் நெருப்புப் பெட்டியை எடுக்க முடியவில்லை. பின்னாலிருந்து, காலடியோசை கேட்டது. அவன் திரும்பிப் பார்ப்பதற்குள் கத்தியொன்று பிடரியைத் துளைத்துச் சென்றது. அவன் சத்தம் போடுவதற்கு முயற்சித்தும் முடியவில்லை. அந்தக் கத்தி மீண்டும் ஐந்து முறை அவனுடைய முதுகிலும் வயிற்றிலும் குத்தியது.
'நாளைக்கே ஆட்களை அழைத்து வந்து, ஜயவீரவிற்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும்' என்ற எண்ணத்தோடு சிறிசேன திரும்பி நடந்தான். தொழிலாளர் உற்சாகத்தோடு வேலை செய்வது, அவர்கள் ஜயவீரவின் குணநலன்களைப் பற்றிப் பேசுவது, அவனுக்கு நினைவுச் சின்னம் எழுப்புவது போன்ற காட்சிகளையெல்லாம் அன்று இரவு அவன் கனவில் கண்டான்.
'எல்லா மரணங்களும் மரணங்களல்ல; எல்லா தோல்விகளும் தோல்விகளல்ல. நீதியான ஒரு போராட்டத்தில் மரணத்தில் வாழ்வும் தோல்வியில் வெற்றியும் சேர்ந்திருக்கின்றன' என்று நினைவுச் சின்னத்திற்குள்ளிருந்து ஜயவீர சொல்லுவது போலிருக்கிறது..
மல்லிகை 41 பேரு ஒக்டோபர் 1971
சிங்களச் சிறுகதைகள் 32

குணதாச அமரசேகர
பாபர்0
- மர்மமா)
சோமா
தமிழாக்கம்: தி ட எம்.ஏ.நுஃமான்
எனக்கு நீண்டகாலமாகப் பியதாசாவைத் தெரியும். சிறுவயதில் நாங்கள் ஒரு பாடசாலையில் படித்தோம். எனினும் அவன் என்னைவிட மேல் வகுப்பில் படித்ததாக எனக்கு ஞாபகம். அப்போது நாங்கள் வசித்த வீட்டுக்கு அண்மையில் இருந்த தனது மாமியின் வீட்டில் பியதாசா தங்கி இருந்தான். எங்கள் வீட்டுக்கு எதிரில் இருந்த விசாலமான புளியமரம் எனக்கு நினைவிருக்கிறது. பின்னேரங்களில் என் வயதை ஒத்த சிறுவர்களுடன் அம்மரத்தடியில் இருந்து விளையாடும் போது பியதாசாவும் அங்கு வருவான்.
பியதாசா விவாகம் முடித்த செய்தியை நான்கு வருடங்களுக்கு முன்பு நான் கேள்விப்பட்டேன், ஒருநாள் கொழும்பில் ஒரு துணிக்கடையில் பியதாசாவையும் அவனது மனைவியையும் நான் சந்தித்தேன். சிறுவயதில் அவனது முகத்தில் இருந்த சோர்வு அப்போதும் காணப்பட்டது. அவன் ஒரு தகப்பனாவதற்குப் பொருத்தமற்றவன் என்று அவனது முகத்தைப் பார்க்கும் ஒருவனுக்குத் தோன்றும் என நான் நினைத்தேன். அவனது மனைவி மெல்லிய உடல்வாகு உடையவள். அவள் ஓர் அழகி என்று அவளைக் கண்ட உடனே எனக்குத் தோன்றியது. பியதாசா அவளுக்கு என்னை அறிமுகப்படுத்திய போது, அவள் நிலத்தில் விழிகளைக் கவிழ்த்தியவாறு' கை நீட்டியதில் இருந்து அவள் மிகவும் கூச்சப்படும் சுபாவம் உடையவள் என்று நான் நினைத்தேன்.
அதன்பிறகு, இப்போது அவர்களின் வீட்டுக்கு அண்மையில் குடிவந்த பிறகுதான் நான் மீண்டும் பியதாசாவைச் சந்தித்தேன். நான் பியதாசாவின் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் தங்கி இருந்தேன். தாழ்வாக வளர்ந்து பரவி இருந்த செம்பருத்தி வேலி ஒன்றே எங்கள் இரு வளவுகளையும் பிரித்திருந்தது. அங்கு வந்த சில நாட்களில் நான் பியதாசாவின் வீட்டில் மாலை வேளைகளைக்
33 மல்லிகைப் பந்தல்

Page 25
கழிப்பதை வழமையாக்கிக் கொண்டேன். பியதாசா நல்ல குண இயல்புகள் உடையவனாக இருந்த போதிலும் விளையாட்டுக்களிலோ, விகடங்களிலோ அதிக பிரியம் உடையவன் அல்ல. அவனைப் போன்றவர்கள் வாழ்க்கையைப் பற்றி என்ன கருதுகிறார்கள் என்பது எனக்கு இன்னும் சந்தேகமாகவே உள்ளது. பியதாசா கந்தோரில் இருந்து வந்ததும் மாலைப் பொழுது முழுவதையும் பத்திரிகை படிப்பதிலேயே கழிப்பான். எவ்வளவு அழகிய அந்திப் பொழுதாக இருந்தபோதிலும் ஒருபோதும் அவன் முற்றத்தை விட்டு வெளியே உலாவச் சென்றதாக எனக்கு நினைவு இல்லை. பல ரம்மியமான மாலைப் பொழுதுகளில் நான் அவனை வெளியே உலாவச் செல்ல வருமாறு அழைத்திருக்கிறேன். எனினும் அவன் ஒருநாளும் எனது அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. சோபனமானது, சோபனமற்றது, அழகியது, அவலட்சணமானது ஆகிய சொற்களின் உண்மையான பொருள் அவனுக்கு ஒருபோதும் விளங்கியிராது என்றே எனக்குத் தோன்றுகின்றது. அவனைப் போன்றவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அத்தகைய சொற்களின் பிரத்தியட்சமான அர்த்தம் அல்ல; வெறும் அகராதிப் பொருள் மட்டுமே என்று எனக்குத் தோன்றுகின்றது.
அவர்களுடன் பழகத் தொடங்கிய சில நாட்களிலேயே எனக்கு ஒரு விசயம் தெளிவாக விளங்கியது. சோமாவிடம் ஏற்பட்டிருந்த மாற்றமே அது. (அவளது பெயரை நான் அங்கு சென்ற சில தினங்களில் பியதாசாவிடம் இருந்து தெரிந்து கொண்டேன்). நான் முதன்முதல் சந்தித்த தினத்தில் அவள் மிகுந்த கூச்சப்பட்டவளாக நடந்து கொண்டதையும் இப்போது எவ்வித கூச்சமும் இன்றிப் பழகுவதையும் ஒப்பிட்ட போது எனது மனதில் வியப்பும் சந்தேகமும் ஏற்பட்டன.
பியதாசாவைப் போல் அன்றி அவள் தனது நண்பர்களுடன் வெளியில் உலாவச் செல்வதன் மூலம் மாலைப் பொழுதுகளைக் கழித்தாள். இரவு வெகுநேரம் சென்ற பின்னர்தான் அவள் வீட்டுக்குத் திரும்புகின்றாள் என்பதை நான் சில தினங்களில் அறிந்து கொண்டேன். பின்நேரங்களில் அறையின் ஜன்னலருகே அமர்ந்து ஏதேனும் புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருக்கும் பல சந்தர்ப்பங்களில், சோமா தனது நண்பர்களுடன் சிரித்துக் கதைத்தவாறு தனது வீட்டை நோக்கி நெருங்கிப் போய்க்கொண்டிருப்பதை நான் கண்டிருக்கிறேன். என்னைக் காண நேர்ந்தால் சிரித்த முகத்துடன் அவள் வணக்கம் தெரிவித்த பல சந்தர்ப்பங்கள் எனக்கு நினைவிருக்கின்றன.
பியதாசாவுடன் பழகத் தொடங்கி சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் தான் பாடசாலையை விட்டு விலகிய பிறகு தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள் பற்றி அவன் என்னிடம் கூறினான். பாடசாலையை விட்டு விலகிய உடனேயே தனக்குக் கொழும்பில் ஒருவேலை கிடைத்ததையும், தான் திருமண வாழ்வில் அதிக விருப்பம் காட்டாத போதிலும் பெற்றோர்களின் தொந்தரவினால் சோமாவை மணம் செய்ததையும் பற்றி அவன் என்னிடம் சொன்னான். சோமா, மலைநாட்டு உயர்குடியில், செல்வந்த குடும்பத்தில்
சிங்களச் சிறுகதைகள் 34

மிகுந்த நல் இயல்புகளுடன் வளர்ந்த ஒருத்தி என்பதையும் அவன் என்னிடம் சொன்னான். அவர்கள் விவாகம் செய்த முதல் வருடத்தில் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்ததாகவும் மூன்று வருடங்களின் பின் திடீரென்று அவன் இறந்து போனதாகவும் பியதாசா என்னிடம் சொன்னான்.
'பியதாசா எதற்காக அரசாங்க உத்தியோகத்தில் சேர்ந்தான்' என்று அவனுடைய கதையைக் கேட்டதன் பிறகு எனக்குத் தோன்றியது. அவனிடம் இருக்கும் செல்வமும் சொத்துக்களும் என்னிடம் இருந்தால் நான் ஒருபோதும் இன்னும் ஒருனுக்குக் கீழ் இருந்து வேலை பார்க்கப் போய் இருக்கமாட்டேன். அவனது மனதில் வாழ்க்கையின் பிற கவர்ச்சிகள் எதுவும் இல்லாததனாலேயே அவன் அரசாங்க உத்தியோகம் பார்க்கின்றான் என்று இப்போது எனக்குத் தோன்றுகின்றது.
பியதாசாவுடன் பழகத் தொடங்கி சுமார் எட்டு மாதங்கள் கடந்தன. மரங்கள் பூத்துக் குலுங்கும் வசந்த காலமும் வந்தது. அந்திப் பொழுதுகள் முன்னரைவிட அழகாக விளங்கின. எங்கள் வளவுகளுள் நின்ற அசோக மரங்கள் பூக்களால் போர்த்துக் கொள்ளத் தொடங்கின. எனது அறையின் ஜன்னலருகே இருந்த அசோக மரத்தின் இரண்டொரு வெண்மலர்க் கொத்துக்கள் எனக்குத் தெரியாமலேயே ஜன்னல் கதவுகளின் ஊடாக அறைக்குள் விழுந்து கிடந்ததை நான் கண்டேன். பின்நேரங்களில் பியதாசாவின் வீட்டுக்குச் சென்று அவனுடன் உரையாடுவதிலும் பார்க்க சோமாவுடன் உலாவச் செல்வதை விரும்பினேன். அவளும் மாலை வேளைகள் என்னுடன் கழிப்பதை விரும்பினாள் என்றே எனக்குத் தோன்றுகின்றது.
இவ்வாறு அவளுடன் உலாவத் தொடங்கிய சில தினங்களிலேயே அவள் மனதை மிகவும் கவரக் கூடியவள் என்று எனக்குத் தோன்றியது. அவளை ஓர் அழகி என்றே நான் கருதினேன். எனினும் அவளது ஒவ்வொரு அங்கங்களையும் தனித் தனியாக நோக்கினால் உங்களுக்கு அவளது அழகு விளங்காது என்றே நான் நினைக்கின்றேன். அவளது விழிகள் அளவுக்கு அதிகமாக அகன்றிருந்தன. எனினும் என்னைக் கவரக் கூடிய ஒரு தோற்றம் அவற்றில் இருந்தது. அவளது விழிகளைப் பார்க்கும் யாரும் அடுத்தகணம் அவள் கண்ணீர் சிந்துவாள் என்று நினைப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஓர் அழகிய பெண்ணின் விழிகளில் கண்ணீர் சுரந்திருக்கும் போது அவளது முகம் மிகவும் மனம் கவரத்தக்க தோற்றத்தைப் பெறுகின்றது என்று நான் நினைக்கின்றேன். அவளது மூக்கு மெல்லியதாகவும் உயர்ந்தும் அமைந்திருக்க வில்லை. அவளது இதழ்கள் கொவ்வைக் கனியின் நிறத்தைப் பெற்றிருக்க வில்லை. எனினும் அழகிய மெல்லிய விரல்களை உடைய அவளது மென்மை யான கரங்கள் ஒரு கவிஞனின் கற்பனை உலகில் உருவாகியவை என்று எனக்குப் பலமுறை தோன்றியது. அவளுக்கு மெல்லிய உடல். சிறு குழந்தையைப் போன்ற அவளது பேச்சு கேட்க மிகவும் அழகாக இருக்கும்.
35 மல்லிகைப் பந்தல்

Page 26
அவளுடன் கதைத்துக் கொண்டிருக்கும்போது பெரும்பாலும் நேரம் போவதே தெரிவதில்லை. எனக்குத் தெரிந்த பிற பெண்களைப் போல் அவள் வெற்றுப் பேச்சுக்கள் பேசவில்லை; ஒரு தத்துவவாதியினாலும் தர்க்கம் செய்யக்கூடிய வாழ்க்கையின் பல உண்மைகளைப் பற்றியே அவள் பேசினாள். அவளுடன் உரையாடிய பல சந்தர்ப்பங்களில் அவள் ஓர் அறிவாளி என்ற ஓர் உணர்வு என்னுள் ஏற்பட்டது.
ஒருநாள் இவ்வாறு கதைத்துக் கொண்டிருக்கும் போது, 'நீங்கள் எப்போதாவது ஒரு பெண்ணைக் காதலித்திருக்கிறீர்களா?” என்று அவள் என்னிடம் கேட்டது எனக்கு ஞாபகம் இருக்கின்றது. அவளது கேள்வி என் மனதில் பரபரப்பை ஏற்படுத்தியது. அது அவள் போன்ற ஒரு இளம் யுவதி கேட்கக் கூடிய கேள்வி இல்லை என்று எனக்குத் தோன்றியது. 'இல்லை' என்று சிறிது கூச்சத்துடனேயே நான் மறுமொழி சொன்னேன். நான் அவளிடம் சொன்னது உண்மைதான். எப்போதாவது நான் ஒரு இளம் பெண்ணைக் காதலித்ததாக எனக்கு நினைவு இல்லை. எனது பன்னிரெண்டாவது வயதில் எனது வகுப்பில் படித்த ஒரு சிறுமியின் மீது நான் பற்றுதல் கொண்டிருந்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. எனினும் அது வளர்ந்த ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்படுகின்ற காதல் அல்ல என்று இப்போது எனக்கு விளங்குகின்றது.
வசந்த காலமாதலால் பியதாசாவின் வீட்டுத் தோட்டத்தில் நின்ற ரோசாச் செடிகளில் பூக்கள் மலரத் தொடங்கின. சோமா காலை வேளையில் ரோசாப் பூக்களைப் பறித்துக் கொண்டு நிற்பது அலுவலகத்துக்குப் போகும்வரை ஜன்னலருகே வேலையாக நிற்கும் எனக்குத் தெரியும். ஒவ்வொரு நாட்காலையிலும் ரோசாப்பூக்களைப் பறித்த பிறகு அவற்றில் மூன்று நான்கை அவள் எனக்கு அனுப்புவாள். அவள் பூக்கொய்து முடிக்கும் வேளையில் நான் எனது அறையின் ஜன்னலருகே நின்றிருந்தால் அவள் தனது கையாலேயே
அவற்றைக் கொண்டு வந்து தருவாள்.
ஒருநாள் மாலை ஏழுமணி போல் நான் எனது அறையில் புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். வழக்கத்தை விட அலுவலகத்தில் இருந்து பிந்தி வந்ததனால் அன்று எனக்கு வெளியே உலாவச் செல்ல மனம் வரவில்லை. புத்தகத்தை வாசிக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் யாரோ எனது அறைக் கதவில் தட்டும் சத்தம் கேட்டது. நான் கதவைத் திறந்து பார்த்தேன், சோமா அங்கு நின்றாள்.
நிமல், இன்றைக்கு உலாவப் போகவில்லையா? ஒருத்தரும் இல்லா ததினால் நிமலைக் கூப்பிடலாம் என்று நினைத்தேன்' என்று கதவைத் திறந்த உடன் அவள் சொன்னாள்.
'போவதில்லை என்றுதான் இருந்தேன். நீங்கள் அழைப்பதாக இருந்தால் வருகிறேன்' என்று நான் அறைக் கதவை மூடியவாறு சொன்னேன்.
சிங்களச் சிறுகதைகள் 36

சிறிது தூரம் நாங்கள் ஒன்றும் பேசாது நடந்தோம். எங்கள் வளவுக்கு நான்கு ஐந்து வளவுகள் தள்ளி சிறிய பூங்கா போன்று அமைந்த ஒரு மைதானம் இருந்தது. ஒரு சோலை என்று சொல்லக் கூடியதாக நிழல்தரும் சில மரங்கள் மட்டுமே அங்கு இருந்தன. அது நிலவுள்ள இரவு. மங்கிய நிலவொளி மரங்களின் மேல் விழுந்திருந்தது. நான் அதைப் பார்த்தவாறு நடந்தேன். மெல்லிய குளிர்காற்று மரங்களின் ஊடாக வீசியது. சோமா தனது விரல் நுனிகளால் எனது கையைப் பிடித்துக் கொண்டாள். அவள் பிடியில் இருந்து எனது கையை விடுவிக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். எனினும் அவ்வாறு செய்ய என்னால் முடியவில்லை. அவளது மெல்லிய விரல்களின் ஸ்பரிசத்தினால் கிடைக்கும் ஏதோ ஓர் இனிய உணர்வு எனது அடிமனதில் இருந்ததை நான் உணர்ந்தேன். அவள் எதுவும் பேசாது நடந்தாள். மங்கிய நிலவொளி அவளது முகத்திலும் வெண்ணிறமான அவளது சேலையிலும் விழுந்திருந்தது. அவளது முகம் நிலவொளியில் சற்றுப் பிரகாசத்தோடு விளங்கியது. அவளது மென்மையான கூந்தல் காற்றுக்கு ஆடும்போது அதில் நிலவொளி படுவதால் அழகாக மினுங்கியது. சிறிது தூரம் சென்றதும் அவள், 'நிமல், நாங்கள் திரும்புவோம்' என்றாள். நான் ஒன்றும் கூறாது தலையை அசைத்தேன். அவள் திரும்பினாள். நிலவொளிக்கு முதுகு காட்டி நாங்கள் நடந்தோம். எமது இருண்ட நிழல்கள் எங்களுக்கு முன்னால் விழுந்திருந்தன. அப்போது எனது மூளை முற்றிலும் வெறுமையாக இருந்ததுபோல் எனக்கு விளங்கியது. அவளது சேலை மடிப்புகள் ஒன்றுடன் ஒன்று உரசுகின்ற சரசரப்புச் சத்தம் மட்டுமே எனக்குக் கேட்டது. அவள் மூச்சுவிடும் ஒலியை நான் உணர்ந்தேன். இடைக்கிடை காற்றின் குளிர்ச்சியையும் நான் உணர்ந்தேன். சோமா மேலும் மேலும் எனக்கு நெருக்கமாக வந்தாள். அவளது மெல்லிய உடல் எனது உடலில் உரசுமோ என்று நான் பயந்தேன்.
அவளது வீட்டை நெருங்கியதும் அசோக மலர்களின் மணத்தை நான் நுகர்ந்தேன்.
'நிமல், வீட்டுக்குள் வாங்க' என்று அவள் தனது வீட்டை நோக்கி நடந்தவாறு சொன்னாள். அவளது அழைப்பு எனக்குப் பொருத்தமற்றதாகத் தோன்றியது. நான் அவ்வாறு நினைப்பதற்குக் காரணம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. அவளிடம் இருந்து தப்பி ஓட வேண்டும் என்று அப்போது எனக்குத் தோன்றியது. எனினும் அவ்வாறு செய்வதற்கு என்னிடம் சக்தி இல்லை. அவள் விறாந்தையில் ஏறினாள். நானும் அவளுக்குப் பின்னாலேயே வந்தேன். வீட்டுக்கு முன்னால் நின்ற சேமாலிகா மரத்தின் கிளைகளுக்கூடாக வருகின்ற நிலவொளி விறாந்தையிலும் எங்கள் மீதும் விழுந்தது. விறாந்தையில் ஒருவரும் இருக்கவில்லை. பியதாசாவின் அறைக்கதவு மூடியிருந்தது. அவள் எதுவும் பேசாது கற்சிலை போன்று நின்றாள். நிலவொளி இருந்ததினால் எனக்கு அவள் முகம் தெரிந்தது. அவளது முகத்தோற்றம் என்னைப் பயமுறுத்தியது. நான் எதுவும் பேசாது ஒருபக்கத்தில் கிடந்த கதிரையில்
37 | மல்லிகைப் பந்தல்

Page 27
உட்கார்ந்தேன். தொடர்ந்தும் எனக்கு அவளது விழிகளைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. அவள் மெதுவாக நான் இருந்த ஆசனத்துக்குப் பக்கத்தில் வந்தாள். அவள் நான் இருந்த கதிரையின் கைச்சட்டத்தில் அமர்வது எனக்குக் கனவுபோல் தோன்றியது. இதயத்தில் தோன்றிய இனம் தெரியாத உணர்ச்சி அலைகளால் எனது கண்களும் கால்களும் சக்தியற்றுச் சோர்ந்து போனதுபோல் நான் உணர்ந்தேன். அவளது குளிர்ந்த சுவாசம் என்மீது படிந்தது. நான் அவளை மிகுந்த தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பார்த்தேன். அவளது முகம் சிவந்துபோய் இருந்தது. அவளது விழிகளில் புதுமையான ஒரு பார்வை காணப் பட்டது. அவளது இதழ்கள் நிம்மதியற்றவைபோல் துடித்துக் கொண்டிருந்தன. எனது இதயத்தில் ஏதோ ஒரு பாரம் நிறைந்து தாங்கமுடியாமல் கனப்பது போல் உணர்ந்தேன். நான் ஆசனத்தில் இருந்து எழுந்து அவளிடம் இருந்து தப்பியோட நினைத்தேன். எனினும் அவ்வாறு செய்யுமுன்னர் அவளது கரங்கள் எனது கழுத்தை வளைத்துக் கொண்டன. அவள் தனது முகத்தை நோக்கி நெருக்கமாகக் கொண்டு வந்தாள். அவளது மென்மையான கூந்தல் கூச்சமூட்டியவாறு எனது நெற்றியில் விழுந்துகிடப்பதை நான் உணர்ந்தேன்.
எனது கண்களில் கண்ணீர் துளிர்த்தது. இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. இரு கண்களும் கண்ணீரால் நிறைந்தன. நான் கைகளால்
முகத்தை மூடிக்கொண்டு அழுதேன்.
நான் இவ்வாறு நடந்து கொண்டதற்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியாது. என்னைத் தவிர வேறுயாரும் அவ்வாறு நடந்து கொள்ளுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. நான் அவ்வாறு அழுதது மிகுந்த பிரீதி கலந்த சோகத்தினாலா? அல்லது ஒரு பெண் என்னுடன் அவ்வாறு நடந்து கொண்ட முதலாவது சந்தர்ப்பம் என்பதனாலா? என்று எனக்குத் தெரியவில்லை.
அவள் மெதுவாக என்னிடம் இருந்து விலகிச் சென்றாள். அவள் ஒரு வார்த்தையும் பேசாது மண்டபத்துள் இருந்து விறாந்தைக்கு வரும் கதவுக்குப் பக்கத்தில் சிந்தனையில் ஆழ்ந்து நிற்பதை நான் கண்டேன். அவளது தலை கதவில் சாய்ந்து இருந்தது. அவளது நாடியை உள்ளங்கை தாங்கி இருந்தது. அவள் அவ்வாறு சிறிது நேரம் நின்றுவிட்டுக் கதவை மூடிக் கொண்டு அவளது அறைக்குள் போவது எனக்குத் தெரிந்தது..
நான் விறாந்தையில் இருந்து வெளியில் இறங்கினேன். ஒருகணமும் அங்கு தாமதிக்காது வீட்டுக்குச் சென்றேன்.
அன்று நித்திரைக்குப் போகும் போது எனது இதயம் மிகுந்த சஞ்சலமுற்றிருந்தது. அவள் நடந்து கொண்ட விதம் எனக்கு வியப்பாக இருந்தது. நான் நடந்து கொண்ட விதம் அதைவிடவும் எனக்கு வியப்பூட்டியது. அதை நினைத்ததும் எனது முகம் கூச்சத்தினால் சிவந்து போவதுபோல் அந்த
சிங்களச் சிறுகதைகள் 38

இருட்டிலும் எனக்குத் தெரிந்தது. எனினும் எனது இதயத்தின் எங்கோ ஒரு மூலையில் ஒரு திருப்தி ஏற்பட்டதாக என்னால் சொல்ல முடியாது. அவளது மெல்லிய கைகளினதும் இதழ்களினதும் ஸ்பரிச சுகத்தை அதற்குமுன் ஒருபோதும் நான் அனுபவிக்கவில்லை என்பது தெளிவு. அவளது மென்மையான முகம் என் எதிரில் இருப்பது போல் எனக்குத் தோன்றியது. அவளது விழிகளில் என்னால் அளந்தறிய முடியாத அந்தப் புதுமையான பார்வை அழியாது அப்படியே இருந்தது. அவளது விழிகளைக் கண்டதும் என் மனதில் ஒரு பெரும் சந்தேகம் தோன்றியது. 'அவள் தன் பிறநண்பர்களுடனும் இவ்வாறுதான் பழகுகின்றாளா?' இந்த வினா என் மனதில் அப்போது எழுந்தது. அதற்கு விடை கண்டுபிடிக்க என்னால் முடியவில்லை.
மறுநாள் எங்கள் வீட்டு வேலைக்காரக் கிழவி எனது அறையின் ஜன்னலருகே நின்று கூச்சல் போடுவதைக் கேட்டு நான் கண் விழித்தேன். அதற்குமுன் ஒருபோதும் அவள் என்னை இவ்வாறு எழுப்பியதாக எனக்கு நினைவு இல்ல.ை
'மாத்தையா, மாத்தையா பக்கத்து வீட்டு நோனா இரவு செத்துப் போனா.'
அவள் சொன்னதைக் கேட்டதும் எனக்கு எதுவும் செய்து கொள்ள முடியவில்லை. நான் உடனே கட்டிலில் இருந்து எழுந்தேன்.
'யார்?' நான் பொறுமையற்றுக் கேட்டேன்.
அடுத்த வீட்டு நோனா.' ய ட ப ட
'எந்நேரம் செத்தது?'
'அதைச் சொல்லத் தெரியல்ல. இன்றைக்குக் காலத்தால் மாத்தையா எழும்பிப் பார்க்கும் போது செத்துக்போய்க் கிடந்தாவாம். அவள் கண்களை
விரித்துக் கொண்டு சொன்னாள்.
நான் அவளிடம் அதிகம் விசாரிக்கவில்லை. எனக்கு அவ்வாறு கேட்பதற்குச் சக்தியில்லை. எனது இதயத்தில் சோகமும் அதேபோல் பீதியும் ஏற்பட்டது. நாங்கள் நடந்து கொண்டவிதம் பியதாசாவுக்குத் தெரியவந்து அதனால் ஏற்பட்ட சச்ச்ரவின் பிரதிபலனாக அவள் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று எனக்குத் தோன்றியது.
அதனாலேயே நான் பியதாசாவைச் சந்திக்கச் செல்லப் பயந்தேன். எனினும் அதற்குச் சிறிது நேரத்துக்குப் பிறகு பியதாசா என்னைச் சந்திக்க வந்தான்.
அவனைக் கண்டதும் மனதில் மிகுந்த பீதி உண்டாகியது. எனது முகம் சிவந்து கண்கள் சோர்ந்து போவதை அவன் கண்டுகொள்ளக்கூடும் என்று
39 மல்லிகைப் பந்தல்

Page 28
எனக்குத் தோன்றியது. நான் தைரியத்தை உண்டாக்கிக் கொண்டு அவனுடன் கதைத்தேன். பு.
தான் காலையில் எழுந்து சோமாவின் அறைக்குப் போன போது அவள் இறந்து கிடந்ததைக் கண்டதாக அவன் சொன்னான். அவளுடைய மரணத்துக்குக் காரணம் என்ன என்று அவனுக்குத் தெரியவில்லை!
வழக்கத்தை விட அவள் அன்று நேரம் கழித்து நித்திரைக்குச் சென்றதையும், ஏதோ ஒரு கடிதம் எழுதி அதை அப்போதே தபாலில் போடுமாறு வேலைக்காரப் பையனிடம் கொடுத்து அனுப்பியதையும் தான் வேலைக்காரப் பையனிடம் கேட்டறிந்ததாக பியதாசா என்னிடம் சொன்னான்.
சோமாவின் மரணத்துக்கு அடுத்தநாள் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதை அவள்தான் அனுப்பி இருந்தாள்.
அதில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.
'தனியாக உங்கள்மீது கொண்ட அனுதாபத்தினால்தான் நான் இதை எழுதுகிறேன் என்பதை முதலில் சொல்ல வேண்டும். நான் தற்கொலை செய்து கொண்டதைக் கேள்விப்பட்ட உடனே அதற்குக் காரணம் நீங்கள்தான் என்று நீங்கள் நினைப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீங்கள் அவ்வாறு கருத வேண்டியதில்லை. இன்னும் நான் உலகில் சீவிப்பதால் எவ்வித பயனும் இல்லை என்று நினைத்ததால்தான் நான் தற்கொலை செய்து கொண்டேன். எனது வாழ்க்கை பற்றித் தெரிந்திருந்தால் எனது தீர்மானத்தை நீங்களும் சந்தேகமின்றி அங்கீகரிப்பீர்கள் என்றே நினைக்கின்றேன்.
நான் வசதி நிறைந்த ஒரு குடும்பத்தில் நல்ல குண இயல்புகளுடன் வளர்க்கப்பட்டவள் என்பதை நீங்கள் தெரிந்திருப்பீர்கள் என்றே நினைக்கின்றேன். நான் பியதாசாவை மணஞ் செய்து இன்னும் ஐந்து வருடங்கள்கூட ஆகவில்லை. அவர் எவ்வளவு சிறந்த பண்புள்ள ஒருவர் என்பதை உங்களுக்குச் சொல்லவேண்டியது எனது கடமை என்று நான் நினைக்கின்றேன். பியதாசாவைப் போன்று பொறுமை உள்ள, கருணையுள்ள ஒரு கணவனைப் பெறுவது சிரமமானது என்றே எண்ணுகின்றேன். எனினும் எப்போதாகிலும் அவர் என்னைக் காதலித்தார் என்று நான் நம்பவில்லை. ஒரு பெண் தனது கணவனிடம் இருந்து எதிர்பார்க்கும் காதல் எத்தகையது என்று அவர் போன்றவர்களுக்குத் தெரியும் என்பது எனக்குச் சந்தேகமே. அவர் நடந்து கொள்ளும் முறையில் இருந்து அது உங்களுக்கும் விளங்கி இருக்கும். அப்படி இருந்தபோதிலும் நான் அவருடன் மிகுந்த ஒற்றுமையுடனும் திருப்தியுடனும் வாழ்ந்தேன். எனினும் இவ்விடத்தில் நான் விசயத்தைக் குறிப்பிட வேண்டும். இறந்த காலத்தைப் பற்றி மறைக்காமல் பச்சையாக நோக்கும் போது நான் திருப்தியுடன் வாழ்ந்தாகச் சொல்ல முடியாது. அந்தத் திருப்தியீனத்தை நான் ஒருபோதும் வெளிப்படையாக
சிங்களச் சிறுகதைகள் 40

அறியவில்லை. எனினும் அது என் அடிமனதில் இருந்தது என்று இப்போது என்னால் சொல்ல முடியும். திருமணத்தின் மூலம் நான் எதிர்பார்த்த எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை. நாங்கள் விவாகம் செய்து ஒரு வருடத்துக்குப் பிறகு எங்களுக்கு ஒரு மகன் பிறந்தான். நான் அவனிடம் அதிகமாக அன்பு செலுத்தினேன். எனது அடிமனதில் இருந்த திருப்தியீனம் பற்றிய உணர்ச்சி அதன்மூலம் மறைந்து போனதுபோல் நான் உணர்ந்தேன். அதுமட்டுமல்ல, எனது வாழ்க்கையின் மூலாதாரமும் அவன்தான் என்று எனக்குத் தோன்றியது. இதுவரை அர்த்தமற்றதாக விளங்கிய எனது வாழ்க்கை அவன் மூலம் ஏதோ ஓர் அர்த்தம் பெற்றுவிட்டதாக எனக்குத் தோன்றியது. எனினும் மூன்றாவது வயதில் அவன் இறந்து போனான். அது எனக்குத் தாங்கமுடியாத வேதனையாக இருந்தது. பியதாசாவுக்கும் அது அவ்வாறு இருந்ததா என்று எனக்குத் தெரியாது. அழுத கண்ணீருடன் நான் பல மாதங்களைக் கழித்தேன். அவனது மறைவுடன் எனது வாழ்க்கைக்கு இருந்த ஒரே அர்த்தமும் அழிந்து விட்டதுபோல் நான் உணர்ந்தேன். ஒருபுறமும் போகமாட்டாது பிடித்துக் கட்டப்பட்டு துணையற்று நிற்கும் ஓர் உயிர்போல் என்மனமும் முறைதவறி அங்கும் இங்கும் ஓடத் தொடங்கியது. அவன் பிறப்பதற்கு முன்பிருந்த திருப்தியீனம் பற்றிய உணர்ச்சி மேலும் வளர்ந்தது. அதுமட்டும் அல்ல. பெரும் துன்பத்தினால் விழுந்த அடியின் காரணமாகவோ என்னவோ சமூகபயம் போன்ற உணர்ச்சிகளுக்கு எனது மனம் வளைந்து கொடுக்காது இருப்பதையும் உணர்ந்தேன். 'திருமணம்', 'வாழ்க்கை', 'பதிபக்தி' ஆகியவற்றின் புனிதத் தன்மைபற்றிய உணர்ச்சி என்னுள் இருந்து மறைந்து போயிற்று. .
நான் கெட்ட நடத்தைகளில் ஈடுபடத் தொடங்கினேன். இப்போது இதை எழுதுகின்ற என்னால், வெட்கத்தையும் அதன் காரணமாக உண்டாகின்ற சோகமும் இல்லாமல் நான் வாழ்ந்த வாழ்க்கைபற்றி நினைத்துப் பார்க்க முடியவில்லை. எனது நண்பர்களுடன் முறைகேடான வழிகளில் இந்திரிய சுகம் அனுபவிக்கத் தொடங்கினேன். இத்தகைய வாழ்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதுதான் நீங்களும் எதிர்ப்பட்டீர்கள்.
எனது வாழ்க்கையில் ஏற்பட்ட எந்த ஒரு மாற்றத்தைப் பற்றியும் பியதாசா அறிந்து உணர்ந்து இருந்தார் என்று நான் நினைக்கவில்லை. நான் நல்ல பண்புள்ள மனைவியாகவும் கெட்ட நடத்தையுள்ள பெண்ணாகவும் நடந்து கொண்ட போது அவ்விரண்டிலும் அவர் எவ்வித வேறுபாட்டையும் காணவில்லை. அவருக்கு இந்த வேறுபாடு தெரிந்திருந்தால் எனக்கு இவ்வாறு தற்கொலை செய்து கொள்ளவேண்டி ஏற்பட்டிராது என்றே நினைக்கின்றேன். உங்களுடன் நான் சிநேகமானதும் முதலில் நான் குறிப்பிட்ட நோக்கத்தின் பொருட்டே. எனினும் நீங்கள் நடந்து கொண்ட முறையில் இருந்து எனது மனதில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. நீங்கள் நடந்து கொண்ட முறையில் இருந்து நான் எவ்வளவு பாவி என்று எனக்கு இப்போதுதான் விளங்குகின்றது. இதுவரை எனது கண்கள் குருடாகி இருந்ததுபோல் நான் உணர்கின்றேன்.
41 மல்லிகைப் பந்தல்

Page 29
இவை எல்லாவற்றையும் பியதாசாவிடம் விபரித்து மீண்டும் புதுவாழ்க்கை தொடங்க வேண்டும் என்று எனக்கு ஒருமுறை தோன்றிற்று. எனினும் இவை எதுபற்றியும் விளங்கிக் கொள்ளாத அவர்போன்ற ஒருவரிடம் இருந்து நான் குற்றமற்றவள் என்று இதயபூர்வமாக இப்போது சொல்ல அவர் ஆயத்தம் என்றால் நான் கெட்ட நடத்தை உள்ளவளாக நடந்து கொண்ட காலத்திலும் அதற்குரிய முறையில் என்னை அவர் கவனித்து இருக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். இப்போது என்மீது கருணை காட்ட அவருக்கு முடியும் என்றால் அப்போதுகூட என்மீது கோபப்பட்டிருக்கவும் இடம் இருந்தது. அவருடைய இதயம் அப்போது சலனப்படாது இருந்திருந்தால் அது இப்போது சலனமடையும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆகையினால் எனக்கு நிம்மதி தரக்கூடியது மரணம் ஒன்றே. என் மனதுக்குத் தோன்றுகின்ற ஒரே ஒரு நிம்மதியான வாழ்வு அதுவே.
நீங்கள் குற்றமற்றவர் என்பது இப்போது உங்களுக்கு விளங்கும் என்று நான் நினைக்கின்றேன். உங்களால் புரிந்து கொள்ள முடிந்தால் நானும்
குற்றம் அற்றவள் என்று கூறுங்கள்.)
தட்டு மல்லிகை 38 இ ப த் ஜூலை 1971
கோபம் ஜே.
பிப 8 பாதம்
சிங்களச் சிறுகதைகள் 42

ரத்ன பீ. எக்கநாயக்க
- இம் ரத்தம்
தமிழாக்கம் : 4 இப்னு அஸ்மத்
- ஐயப்பபு |
ஐயப்பனே! சுவாமியே! உனது கருணையெல்லாம் சிங்களவருக்கு மட்டும்தானா? நீ ஒரு கடவுள் என்பது உண்மையெனில் ஏனிந்த இன - குல - மொழி வேறுபாடுகள்? இவையெல்லாம் எதற்காக? உனது கருணை மனிதத்தன்மைக்குக் கிட்டாதா? என்னைப் பார்த்து தமிழச்சி என்கிறார்கள். எனது முகத்தில் அப்படி ஏதேனும் எழுதப்பட்டிருக்கிறதா? எனது ரத்தமும் சிங்கள மக்களின் ரத்தத்தைப் போன்றே இருக்கிறது. நானும் ஒரு மனிதப்பிறவி. ஏன் கடவுளே எனது மனிதத்தன்மையைப் பார்த்தாவது உனது நெஞ்சம் இளகிடாதா? - தாரா படுக்கையில் அங்கும் இங்கும் புரண்டவாறு தன் இயலாமையை மெளனமாகவே புலம்பிக் கொண்டிருந்தாள்.
விழித்திரைகளில் வழிந்தோடும் நீர்: புண்பட்டுப் போன நெஞ்சம்.
என்னால் சிங்களத்தில் பேச முடியாது. எனக்குத் தெரிந்த மொழி தமிழ் மட்டுமே. நான் பிறந்து வளர்ந்த சூழலில் புளக்கத்தில் இருந்தது தமிழ் மொழி மட்டுமே. இதற்கு நான் என்ன பண்ணுவது? நான் சிங்களத்தை வெறுப்பவள் அல்ல. நான் சிங்கள விரோதியும் அல்ல. இதற்காக நான் ஒரு குற்றவாளியா? கடவுளே...
|இரண்டு வாரங்களுக்கு முன்புதான் தாரா இந்த வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக வந்து சேர்ந்தாள். தாரா பிறந்து வளர்ந்தது கொடிகாமத்தில். மூன்று குழந்தைகளுக்குத் தாயான அவளது கணவன் கொடிகாமத்திலே விவசாயம் பண்ணிவருகிறான்.
வயிற்று வலிக்குச் சிகிச்சை பெறுவதற்காக தாரா முதல் முதலில் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு வசதிகள் குறைவு என்ற காரணத்தினால் வவுனியா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டாள். தாராவைக் குணப்படுத்த வேண்டுமானால் சத்திர சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் கூறினர். வைத்தியர்களின் ஆலோசனையின் பேரில் யுத்த களங்களையும் பல வீதித் தடைகளையும் கடந்து இந்த வைத்தியசாலைக்கு அவள் வந்து சேர்ந்தாள்.
சிங்கள மொழியில் கூறும் எதுவும் தாராவுக்குப் புரியாது. தாரா தமிழில்
| 43 மல்லிகைப் பந்தல்

Page 30
கூறும் எதுவும் இந்த வைத்தியசாலையில் உள்ளவர்களுக்குப் புரியாது. மொழிகள் புரியாத காரணத்தினால் தாராவின் நோய் குணப்படுத்த மிகுந்த சிரமங்கள் ஏற்பட்டன. என்றாலும் அவள் யாழ்ப்பாண வைத்தியசாலையில் இருந்துகொண்டு வந்த வைத்திய அறிக்கையை வைத்து இங்குள்ள வைத்தியர்கள் அவளது நோயை அறிந்து கொண்டனர்.
'தாராவின் வயிற்றில் ஒரு கட்டி வளர்ந்து வருகின்றது. இதனை சத்திர சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும்' என்பது மட்டுமே தாராவுக்குத் தெரியும்.
ஏனைய நோயாளிகளைப் பார்வையிட அவர்களது உறவினர்களோ அன்றி நண்பர்களோ வந்து போகும் சமயங்களில் தாரா தன்னிரு கண்களையும் இறுகப் பொத்தியவாறு கட்டிலில் அப்படியே சுருண்டு படுத்துக் கொள்வாள். அவர்கள் அனைவரும் வார்டை விட்டு அகன்ற பின்னர்தான் அவள் மீண்டும் தன் கண்களைத் திறப்பாள்.
இந்த வைத்தியசாலையில் தாராவுக்கு இருக்கும் ஒரேயொரு சொந்தம் வஜிரா. தாரா இருக்கும் வார்டில் பணிபுரியும் புதிதாக வந்த தாதி. வஜிரா திருகோணமலையைச் சேர்ந்தவள். வஜிரா ஒரு சிங்கள யுவதி என்றபோதிலும்
அவளுக்கு நன்றாகத் தமிழ் பேச வரும்.
ஒவ்வொரு நோயாளியும் தங்களைப் பார்த்துப் போக வரும் சொந்த பந்தங்கள், நண்பர்களுக்காகக் காத்துக்கிடக்கும் போது, தாரா இந்த வஜிராவை எதிர்பார்த்துக் காத்துக் கிடப்பாள். தினமும் காலை வேளையில் கடமைக்கு வரும் வஜிரா சில மணித்தியாலங்கள் வேலை செய்துவிட்டுப் போய் விடுவாள். வஜிரா தனது கடமைகளில் ஈடுபட்டிருக்கும் சமயங்களில் அவள் போகும் வரும் திசைகளையே தாரா உற்று நோக்கிக் கொண்டிருப்பாள்.
வாழ்க்கையிலும், தாதி சேவையிலும் இளையவளான வஜிரா எப்பொழுதும் சிரித்த முகத்துடனும் கருணை மிக்க மனத்துடனும் காணப்பட்டாள். அவளிடம் மனிதாபிமானம் நிறையவே இருந்தது. தினமும் தனது கடமைகளை முடித்துக் கொண்டு புறப்படும் முன்பாக அவள் தாராவிடம் வந்து சில நிமிடங்களைக் கழிக்கத் தவறுவதில்லை.
'டொக்டர் என்ன கூறுகிறார்?' தினமும் தன்னிடம் வரும் வஜிராவிடம் தாரா மிகுந்த குதூகலத்துடன் விசாரிக்கத் தவறுவதில்லை.
'குறிப்பாக எதுவும் இல்லை தாரா அக்கா! என்றாலும் சத்திர சிகிச்சைக்கு ரத்தம் தேவைப்படுகிறது. ரத்தம் கொடுப்பதற்கு யாரேனும் வரும்வரைதான் சுணக்கம். தாரா அக்கா வீட்டுக்குச் சொல்லி அனுப்பவில்லையா?'
'எப்படி சொல்லி அனுப்புவது நோனா? அங்கிருப்பவர்களுக்கு இங்கே வர முடியாது. இங்கிருப்பவர்கள் அங்கு செல்வதில்லை. கடிதமேதும் அனுப்பவும் முடியாத நிலை. தபால் வேலை செய்வதும் கிடையாது. இந்த நிலையில் நான் எப்படி வீட்டுக்குத் தெரிவிப்பது?'...
சிங்களச் சிறுகதைகள் 44

- இங்கிருப்பவர்கள் சிங்கள மக்கள். சிங்களவர்கள் கெட்டவர்கள் அல்ல. அவர்கள்தான் எமக்கு எப்போதும் உதவி வந்தவர்கள். தமிழ் மக்களுக்குக் கைகொடுத்தும் உள்ளனர். நாடு பூராவும் பரந்து சென்று வாழும் தமிழ் மக்களின் சுகதுக்கங்களை அறிந்து அண்டை அயலில் வசிப்பதற்கு வழி சமைத்துக் கொடுத்தவர்களும் சிங்களவர்களே. ஆனால் இன்று? அன்றைய நிலை மாறிவிட்டது. 'தமிழ்' என்ற மூன்று எழுத்து அவர்களுக்கு நஞ்சாக
மாறி விட்டது.
நான் இந்த இடத்தில் இருந்துகொண்டு வாய் திறக்கமாட்டேன். வாய் திறந்தால் 'தமிழச்சி' என இகழ்வார்கள். தாரா மிக மெதுவாக வஜிராவிடம்
கூறினாள்.
'இப்போது என்ன பண்ணுவது தாரா அக்கா? எப்படி ரத்தம் கொடுக்க யாரையேனும் அழைத்து வருவது? இதனால்தான் ஒப்பரேஷனும் தாமதமாகிறது. ரத்தம் கொடுக்க இன்று யாராவது இருந்தால் இன்றே ஒப்பரேஷன் பண்ண முடியும். இப்படியே நாட்களைக் கடத்துவது உடம்புக்கும் நல்லதல்ல. நாளுக்கு நாள் கட்டி முற்றிக் கொண்டே வரும்.'
'அதுதான் நோனா. என்னால் வாய் திறந்து சிங்களத்தில் ரத்தம் வேண்டும் என்று கேட்க முடியுமானால் நான் வந்து போகும் ஒவ்வொருவரிடமும் கேட்பேன். என்ன செய்வது. தமிழில் கேட்டால் சிங்களவர்களுக்குப் புரியாது. புரிந்தாலும் கணக்கெடுக்க மாட்டார்கள். மாங்குளம் பெரியகுளம் பகுதிகளில் இந்நாட்களில் ரத்த ஆறு ஓடுகிறதாம். எவ்வளவு ரத்தம் இந்த பூமிக்குள் செல்கிறது?'
தமிழ் ரத்தமும் சிங்கள ரத்தமும் ஒரே ரத்தம்தான். எந்தவொரு வேறுபாடும் கிடையாது. பூமியில் விழுந்தவுடன் பூமி அதை உறிஞ்சிக் கொள்கிறது. யுத்தகள் நிலை அப்படி. இங்கே வைத்தியசாலை நிலை இப்படி. ரத்தம் தேவையான எனக்கு ரத்தமின்றி காலங்கடத்தப்படுகின்றது. ரத்தம் தேவையான மனிதர்களுக்கு ரத்தம் கிடையாது. ரத்தம் தேவையே இல்லாத பூமிக்கு வாரிவழங்கப்படுகிறது.
' 'இதையெல்லாம் கூறி இப்போது பயனில்லை தாரா அக்கா. ரத்தம் கொஞ்சம் தேடிக்கொள்வதற்கான வழியினைப் பார்ப்போம். நான் சொல்லவா?' வஜிரா சில நொடிகள் யோசித்தாள். 'நான் உங்களுக்கு ரத்தம் தருகிறேன்”
“நோனா... நீங்கள் எனக்கு ரத்தம் தருகிறீர்களா? ஏன் நோனா? நீங்கள் என்ன சொந்தமா? பந்தமா? இல்லை... எனது இனமா? ஏன் அப்படிச் சொன்னீர்கள்?” தாராவின் விழிகள் பிரகாசமடைந்து காணப்பட்டன.
'தாராக்கா ரத்தத்துக்கு ஏனு இன, புல வேறுபாடு? கிடையாது! ரத்தம் எல்லோருக்கும் பொதுவானது. அதன் நிறம் ஒன்றே. குணமும் ஒன்றே. எனது ரத்தம் தாரா அக்காவின் உடம்பினுள் சென்றதும் தமிழ் சிங்கள ரத்தம் கலந்து தமிழுமற்ற சிங்களமுமற்ற ஒரு பெண் உருவாவாள்." 20ம்
'நோனா... உங்களுக்குக் கடவுள் வழிகாட்டுவார். உங்களுக்கு ஒன்றுமே
45
| மல்லிகைப் பந்தல்

Page 31
பிழைக்காது. கடவுள் துணை நிற்பார்." தாராவின் முகம் தாமரைபோல் மலர்ந்து காணப்பட்டது.
என்ன செய்வது, தாராவும் ஒரு பெண். இன்னொரு ஜீவன். உயிர்களைக் காப்பதுதானே எமது சேவை? தாராவுக்கு உதவ இப்போது யாரும் இல்லை. அவளது கணவனுக்கு அறிவிக்க வழியுமில்லை. அறிவித்தால் வரமுடியாத நிலை. பாதை நெடுகிலும் அமைக்கப்பட்டுள்ள வீதித் தடைகளில் காரணம் கூறி சம்மதம் பெற்று வந்து சேர்கையில் தாராவின் உயிர் அவள் வசம் இருக்காது.
யுத்தத்தினால் மட்டும் தானா மனித உயிர்கள் அழிகின்றன. இந்த யத்தத்தின் மூலம் எழுந்துள்ள பற்பல காரணங்களால் நிதமும் எத்தனையோ உயிர்கள் அழிகின்றனவே. தாராவின் வயிற்றிலுள்ள கட்டி இப்போது நன்றாக முற்றியுள்ளது. ரத்தம் கொடுக்க ஒருவரில்லாத காரணத்தால் ஒப்பரேஷன் பண்ணுவதற்குக் குறித்த நாளும் கழிந்து இன்றுடன் மூன்று நாட்களாகி விட்டன. இன்னும் ஓரிரு நாட்களில் ரத்தம் கொடுக்க முடியாவிட்டால் அவளது நிலை பரிதாபத்திற்குரியது. என்ன நடக்குமோ? நினைக்கவே பயமாகவுள்ளது. கடவுள்தான் அவளுக்குத் துணை செய்ய வேண்டும். வஜிரா தாராவுக்காகப் பரிதாபப்பட்டாள். என்றாலும் இந்த விடயம் பற்றி அவள் வேறு யாருடனும் கதைக்கவில்லை. எல்லாவற்றையும் மனதுக்குள்ளேயே புதைத்து வைத்துக் கொண்டாள்.
வஜிரா அன்று அந்தவார்டுக்குப் பொறுப்பான வைத்தியரைக் காணச் சென்றாள்.
''டொக்டர்... இந்தப் பன்னிரெண்டாம் கட்டிலிலுள்ள நோயாளிக்கு ரத்தம் கொடுக்க யாரும் இல்லாததால் அவளது ஒப்பரேஷன் இன்னும் நடந்தபாடில்லை. இப்போது அவருக்கு வருத்தம் அதிகரித்துள்ளது..."
*'இனி நம்மால் என்ன பண்ணமுடியும் வஜிரா? ரத்த வங்கியில் சிறிதளவு ரத்தமே இருக்கிறது. இந்த ரத்தத்தினை எக்காரணம் கொண்டும் எடுக்கக் கூடாது என்பது கட்டளை. யுத்த களத்திலிருந்து கொண்டுவரும் காயமடைந்த வீரர்களுக்கு இந்த ரத்தம் ஒதுக்கப்பட்டுள்ளது.)
என்றாலும் டொக்டர் இந்த நோயாளிக்கு எவருமே இல்லை. வீட்டிலிருந்து எவரையுமே அழைத்துவர முடியாத நிலை. அண்டையில் ஒருவருமே இல்லை. அவளது ஊர் கொடிகாமம். கணவர் இருந்தும் வரமுடியாது. அவருக்குத் தெரிவிக்கவும் முடியாது. இந்த நோயாளிக்கு ரத்தம் கொடுக்க வழியே இல்லையா டொக்டர்?"
வஜிராவுக்குத் தெரியும் தானே? ஏதாவது வழி இருந்தால் நாம் கொடுக்காமலா இருப்போம்? நாம் ரத்தமின்றித் தவிக்கின்ற இந்த நோயாளியை மட்டும்தானே காண்கின்றோம். ரத்தம் இல்லாத காரணத்தினால் தினந்தோறும் சிங்கள இளைஞர்கள் எத்தனைபேர் மரணமாகின்றனர்?"
சிங்களச் சிறுகதைகள் 46

*' என்றாலும் டொக்டர் இந்த நோயாளி நம் கண்முன்னே இருக்கின்றார். இன்றோ நாளையோ ஒப்பரேஷன் பண்ணாவிட்டால் இந்த நோயாளி இறக்கக் கூடும். அதனால் டொக்டர்... நான் அந்த நோயாளிக்கு ரத்தம் கொடுக்கிறேன்..."
''நீ ரத்தம் கொடுக்கப் போகிறாயா? உனக்கென்ன பைத்தியமா வஜிரா?" அந்த வார்டுக்குப் பொறுப்பான தாதி வஜிராவிடம் வினாவினாள். 'உனக்குத் தெரியுமா... நீ இன்னும் பயிற்சி பெறும் தாதி. நீ நினைத்தபடி நடக்க முடியாது. அதுவும் பெற்ற தாயுக்கோ அல்லது தந்தைக்கோ ரத்தம் கொடுப்பதாக இருந்தால் பரவாயில்லை. இவள் எங்கேயோ இருந்து வந்த தமிழச்சி. ரத்தம் கொடுக்கக் கூடாது புரிகிறதா? எங்களது இளைஞர்களைக் கொன்று குவித்துவிட்டு முழு நாட்டையுமே பறித்துக் கொள்ளப் பார்ப்பவர்கள் அவர்கள். அவர்களுக்கு ஏன் நாம் ரத்தம் கொடுக்க வேணும்?” அந்தத் தாதி பேசிக் கொண்டே போனாள்.
* எது என்ன இருந்தாலும் வஜிரா எமது வாழ்க்கை நோயாளிகளுடன் கழிகிறது. இந்த மாதிரி ரத்தம் தேவைப்படுவது இந்த நோயாளிக்கு மட்டுமல்ல. இன்று இந்த நோயாளிக்கு ரத்தம் தேவைப்படுவதால் கொடுக்கலாம். நாளை இதைவிடப் பயங்கரமான ஒரு நோயாளிக்கு ரத்தம் தேவைப்படும். நீ அந்த நோயாளிக்கும் ரத்தம் கொடுப்பாயா? வைத்தியசாலையில் பணி புரிபவர்களுக்கெல்லாம் அவ்வாறு செய்ய முடியாது. நோாளிக்குப் பணிபுரிய நாம் தேகாரோக்கியத்துடன் இருக்க வேண்டும். உது நோக்கம் மிகவும் உயர்வானதுதான். என்றாலும் தகுதியற்ற நிலையிலேயே நாம் இருந்து வருகிறோம். ஆக உனது அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிடு" - வைத்தியரும் வஜிராவுக்கு உபதேசம் புரிந்தார்.
அதுவரை மேசையின் மீது மிகவேகமாகச் சுழன்று கொண்டிருந்த மின்விசிறியை வைத்தியர் நிறுத்தினார். வஜிரா மிக வேகமாக முன்னேறி வந்த பாதை அத்துடன் முடிவு பெறுவதாக இருந்தது. மீண்டும் முன்செல்ல
அவளுக்குப் பாதையில்லை. அவள் திரும்பித் தாராவிடம் சென்றாள்.
“இங்கிருக்கும் இந்த நோாளிக்கு அத்தியாவசியமாக 0 நெகடிவ் ரத்தம் தேவைப்படுகிறது. இவர் ஒரு தமிழ் பெண்மணி என்று சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் ஒரு மட்டையில் எழுதி தாரா படுத்திருந்த கட்டிலின் ஓரமாக இருந்த இரும்புக் கம்பியில் கொளுவி வைத்துவிட்டுத் திரும்பினாள்.
மத்தியான வேளை. நோயாளிகளைப் பார்வையிடுவதற்காகப் பலரும் வந்து போய்க் கொண்டிருந்தனர். வஜிரா ஒரு ஓரமாக நின்று தாரா படுத்திருந்த திக்கையே நோக்கிக் கொண்டிருந்தாள். அவள் எழுதி வைத்த மட்டை வாசகத்திற்கு ஏதும் பலன் கிடைக்குமா என்ற நப்பாசை அவளுள் மேலோங்கி இருந்தது.
ஓரிரு தமிழர்களும் பத்துப் பதினைந்து சிங்களவர்களும் தாரா படுத்திருந்த கட்டிலைத் தாண்டிச் சென்றனர். வாட்டில் அங்கும் இங்கும் யாரையோ தேடிக் கொண்டிருந்த ஓர் இளைஞனும் யுவதியும் தாராவின் கட்டிலை நெருங்கி
47 மல்லிகைப் பந்தல்

Page 32
அந்த வாசகத்தைப் படித்தனர்.
எந்தவித சந்தேகமும் இல்லை. அவர்கள் தமிழர்கள் தான். வஜிரா ஓடோடிச் சென்று அவர்களிடம் தமிழில் பேசினாள்.
*'ஆமாம்! உதவி செய்யத்தான் வேண்டும். அவரும் எங்களது ஆள்தான். என்றாலும் 0 கெநகடிவ் ரத்தம் எங்களிடம் இல்லையே...' என்று கூறியவாறு அவர்கள் திரும்பிவிட்டனர். தாராவின் விழிகளிலிருந்து நீர் பெருக்கெடுத்து ஓடுவதை வஜிரா அவதானித்தாள். .
*ஏன்? என்ன பிரச்சினை?” அந்த வழியாக வந்த ஓர் இளம் ஜோடி வஜிராவிடம் சிங்களத்தில் கேட்டது. வஜிரா தாராவின் நிலைபற்றி சிங்களத்தில் அவர்களிடம் கூறினாள்.
*'சரி, நாங்கள் ரத்தம் கொடுக்கிறோம். எனது மனைவியின் ரத்தம் 0 நெகடிவ். குமாரி... இந்த நோயாளிக்கு ரத்தம் கொடுக்க உனக்குச் சம்மதம் தானே?” அந்த இளைஞன் தன் மனைவியைப் பார்த்துக் கேட்டான். வஜிராவின் மனம் சந்தோஷத்தால் நிரம்பலாயிற்று.
தாராவின் நிலை இன்று வேறென்றும் இல்லாதவாறு இன்று மிகவும் மோசமாக இருந்தது. அவளது முகத்தில் வேதனையின் ரேகைகள். கட்டிலில் அங்குமிங்குமாகப் புரண்டபடி கிடந்தாள்.
நோயாளிக்கு மிகவும் வருத்தம் போலும். கூடிய விரைவில் ரத்தம் எடுக்கச் சொல்லுங்கள். நாங்கள் தயார்." என்று குமாரி கூறினாள். வஜிரா ஓடோடிச் சென்று வார்ட்டுக்குப் பொறுப்பான வைத்தியரிடம் விடயத்தைக் கூறினாள். சகல காரியங்களும் சிறப்பான முறையில் நடந்தேறின. ஒருபக்கத்தில் குமாரியிடமிருந்து ரத்தம் எடுக்கப்பட்டது. மறுபக்கம் தாராவுக்கு சத்திரசிகிச்சை செய்யப்பட்டது.
தாராவின் உயிரைக் காப்பாற்றும் பாரதூரமான கடமையினை ஏற்றிருந்த வைத்தியருக்கு உடல்களினதும் ரத்தத்தினதும் வாடையில் எதுவித வித்தியாசமும் தெரியவில்லை. அவர் சத்திர சிகிச்சையை ஒழுங்குமுறைப்படி செய்து கொண்டிருந்தார்.
என்றாலும் அவரால் தாராவின் உயிரைக் காப்பாற்ற முடியாமற் போயிற்று. எப்போதோ செய்ய வேண்டியிருந்த சத்திர சிகிச்சை காலதாமதமானதால் அது அந்தப் பெண்ணின் உயிரையே குடித்து விட்டது. சத்திர சிகிச்சை அறையிலிருந்து வெளியேறிய செய்தி மிகவும் துன்பகரமானதாக இருந்தது. வஜிராவைப் பெரிதும் தாக்கியதுடன் குமாரிக்கும் அது ஓர் விபத்தாகப் பட்டது.
ஜனவரி 1998
சிங்களச் சிறுகதைகள் 48

நிஹால் ரஞ்சித் ஜயதிலக
இரத்த உறவு
தமிழாக்கம்: செந்தீரன்
கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்த நான் எதிரே இருந்த மாமாவின் மாடிவீட்டை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கு போர்டிகோவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாமாவின் புத்தம் புதுக் காரை வேலைக்காரப் பையன் குணபால கழுவித் துடைத்துக் கொண்டிருந்தான். வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்த மாமா பளபளக்கும் காரைப் பார்த்து தன்னையறியாமலே சிரித்துக் கொண்டார். தொடர்ந்தும் அப்பக்கம் பார்வையைச் செலுத்த விரும்பாத நான் உள்ளே போய் சாக்குக் கட்டிலில் சாய்ந்து கொண்டேன். குசினியிலிருந்து வெளிப்பட்ட அம்மாவின் இருமல் ஒலி என் செவிப்பறையில் வந்து மோதியது.
மாமா புதுக்கார் வாங்கி வந்த நாள் என்னெஞ்சில் இன்றும் நிழலாடுகின்றது. அன்று எனது அம்மா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
''தம்பி கார் வாங்கியிருப்பது எங்களுக்கும் பெருமைதானே..! விதானையார் தவிர வேறு யாரிட்ட இந்த ஊரில் கார் இருக்கு..? இந்தச் செய்தியறிந்தால் விதானையார் தூக்குப் போட்டுத்தான் செத்துப் போவார்."
இவ்வாறாக அக்கம் பக்கத்துச் சனங்களிடம் பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தாள். ஆனால் உடன் பிறந்த சகோதரன் என்ற முறையில் அம்மாவிடம் வெளிப்பட்ட பாச உணர்வு மாமாவிடம் கிஞ்சித்தும் இருக்கவில்லை. அக்காவுக்கும், எனக்கும் மாமாவிடம் ஒரு வித வெறுப்புணர்ச்சியே மேலோங்கியிருந்தது. 'மில்கஹவத்த வழக்கின் பின் அப்பாவும் மாமாவின் சுயரூபத்தைத் தெரிந்து வைத்திருந்தார்!
''உனக்கு தம்பியின் மேலிருக்கிற அன்பு உனது தம்பியிடம் இருந்தால்தானே... நீதான் தம்பி தம்பி என்று சாகப் போறாய்... இல்லாவிட்டால் கால்முறிந்து இத்தனை நாள் நீ மூலையில் முடங்கியிருக்கிறாயே... உன்னை
49 மல்லிகைப் பந்தல்

Page 33
ஒரு நாளாவது அவன் பார்க்க வந்தானா...?
அப்பா மாமா மீது தனக்கிருந்த ஆத்திரத்தைக் கொட்டிக் கொண்டார். அம்மா இதற்கு பதில் ஏதும் பேசவில்லை. தன்னோடு உடன்பிறந்தவனிடம் தனக்கு எவ்விதக் குரோதமுமில்லை என்பதை அவளது முகம் காட்டியது.)
கிணற்றடியில் வழுக்கி வீழ்ந்து, முறிந்த அம்மாவின் வலது கால் இன்னும் குணமாகவில்லை. 'கொடிகமுவ' நாட்டு வைத்தியரிடம் வைத்தியம் செய்த முதலிரு வாரங்களிலும் அவளால் கட்டிலை விட்டு இறங்கக்கூட முடியவில்லை. சிறசேனாவின் மாட்டு வண்டியில் வைத்தே அவளை நாட்டு வைத்தியரிடம் எடுத்துச் சென்றோம். மலைவீட்டு வில்பர்ட் நானா மாமாவின் காரை நினைவூட்டிய போது அப்பா அதை வன்மையாக எதிர்த்தார்.
'அவன்ட கார் எங்களுக்கு வேண்டாம். சிறிசேனாவின் மாட்டு வண்டியில கூட்டிப் போகலாம்" என்றார்.
அம்மாவிற்கு நேர்ந்துள்ள கதிபற்றி மாமா ஓடிவந்து பார்ப்பார் என நினைத்தேன். ஆனால் அப்படி நடக்கவில்லை. அவர் ஒரு கல் நெஞ்சம் படைத்த 'மிருகம்' என்பதை அன்றே புரிந்து கொண்டேன்.
அன்று அம்மாவைச் சுமந்து சென்ற மாட்டுவண்டி கம்சபா' வீதியைக் கடந்து முன்னோக்கி ஓடியது. மருந்து எடுத்துக் கொண்டு மீளத் திரும்பும்போது வாசலண்டை நின்ற மாமாவும் மாமியும் எங்களைக் கண்டு உள்ளே மறைந்து கொண்டதை நான் அவதானித்தேன். அம்மாவின் காலுடைந்த செய்தியறிந்து ஊரே திரண்டு வந்த போது மாமாவும், மாமியும் எங்கள் வீட்டுப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.
மாமாவின் திருமணத்தை ஏற்பாடு செய்ய எனது அம்மா அடைந்த சிரமங்கள்... மாமாவுக்கேற்ற ஜோடிதான் மாமியும் என்பதை அன்றே தெரிந்து கொண்டேன்.
'மில்கஹவத்த காணிப் பிரச்சினையே மாமாவுக்கும் எங்களுக்கு மிடையிலான உறவை முறிக்கக் காரணமாயிருந்தது. காணியின் ஒரு பகுதி எனது அம்மாவுக்கும் சொந்தமாயிருந்தது. ஆனால் மாமா முழுக் காணியும் தனக்கே சொந்தம் என வாதிட்டார். வழக்கு விசாரணையில் அம்மாவுக்குரிய பங்கு கிடைத்தபோது மாமா எங்களுடனான தொடர்பை அறுத்துக் கொண்டார். ஆனால் அம்மாவோ தொடர்ந்தும் குடும்ப உறவை வளர்த்துக் கொள்ளத்தான் முயற்சித்தார்.
அப்பாவிச் சனங்களை ஏமாற்றி, சொத்துச் சேர்ப்பதே மாமாவின் நிரந்தரத் தொழிலாயிருந்தது. அவரிடம் மருந்துக்குக்கூட இரக்க சுபாவம் இருக்கவில்லை.
சிங்களச் சிறுகதைகள் 50

மற்றைய நாட்களைவிட நேரத்துடன் வயலிலிருந்து வந்த அப்பா மண்வெட்டியை மூலையில் வைத்த பின் கஹட்ட' குடிக்கக் குசினிப் பக்கம் செல்வது தெரிந்தது.
* 'மகன்'...!
இரயாட
அம்மாவின் குரல் கேட்டு கயிற்றுக் கட்டிலிலிருந்து எழுந்த நான் வீட்டுள்ளறையினுள் சென்றேன். பல வாரங்களாகப் பழகிப்போன மருந்தெண்ணெயின் வானனை மூக்கைத் துளைத்தது.
“என்னம்மா..?”
கட்
* இன்று பின்னேரம் போய் வைத்தியரைச் சந்திக்கிறது நல்லது. கால் திரும்பவும் வீங்கியிருக்கு. பொறுக்க முடியாத வேதனையாயிருக்கு." அம்மா முனகிக்கொண்டே சொன்னாள். அப்போது அக்கா ஒருவித பட்டைக் களிம்பைக் கையிலெடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.
'எப்படிப் போறது... சிறிசேனாவின் வண்டில் மாட்டைத்தானே முந்தநாள் யாரோ களவெடுத்துக்கொண்டு போட்டாங்கள்..! வேறு யாரிட்டை இங்க மாட்டுவண்டியிருக்கு...'' எனச் சொன்னேன்.
எப்படியாவது சந்தி வரைக்கும் போய்க்கொண்டால் போதும். அங்கிருந்து நாலுமணி பஸ்ஸில் ஏறி வைத்தியரிடம் போகலாம்."
அக்கா இப்படிச் சொல்லும் போது அப்பாவும் அறைக்குள் வந்தார்.
தம்பிக்குச் சொல்லி அனுப்பினால் கார் அனுப்புவாரே..!" அப்பாவின் பேச்சில் ஏளனம் தொனித்தது.
சொன்னால் அனுப்புவான்தான். என்றாலும் என்னத்துக்கு. எனக்கு சந்தி வரைக்கும் நடந்து செல்லலாம்." அம்மாவும் விட்டுக் கொடுக்காமல் கட்டிலில் சாய்ந்து கொண்டு எங்களைப் பார்த்துச் சொன்னாள்.
எனக்கு மாமா மீது அப்போதெழுந்த ஆத்திரத்தை அம்மாவின் மனம் வருந்துமே என்பதால் அடக்கிக் கொண்டேன்.
நானும், அக்காவும் கைத்தாங்கலாக அம்மாவை அணைத்துக் கொண்டு சந்திவரை நடத்திச் சென்றோம். அவள் பெருமூச்சோடு ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தாள். சில வேளை அவள் ஒருபக்கம் சாய்ந்து விழப் பார்த்தாள்.
ஒருவாறாக கொஞ்சத் தூரம் நடந்து சென்று அம்மா, 'ஐயோ! எனக்கு இதுக்குமேல நடக்கேலாது' எனச் சொல்லியவாறே பாதையோரமிருந்த நிழல் மரத்தடியில் குந்திக் கொண்டாள்.
51 மல்லிகைப் பந்தல்

Page 34
''தம்பி இப்ப என்ன செய்கிறது...?” அக்காதான் கேட்டாள்.
பார்வைக்கெட்டியவரை ஒருவரையும் காணோம். பாதை வெறிச்சோடிக் கிடந்தது. சிலமணிநேரம் நிசப்தத்துடன் கழிந்தது.
திடீரென்று கார்ச் சத்தம் ஒன்று எங்கள் காதைத் துளைத்தது. எனக்கோ இனம் புரியாததோர் மகிழ்ச்சி. கார் எம்மை நெருங்கும்போது அதை மிகவும் கூர்ந்து நோக்கினேன். அது மாமாவின் மோரிஸ் மைனர் கார். என்னுடலெங்கும் புதியதோர் உணர்வு பொங்கிப் பிரவகித்தது. பல நினைவுகள் நெஞ்சில் ஊற்றெடுத்தன.
'எங்களைக் கண்டால் மாமா காரை நிறுத்துவார். கோபத்தை மறந்து அம்மாவைக் காரில் ஏற்றி வைத்தியரிடம் கூட்டிச் செல்வார். இவ்வாறாக எனது மனம் அலை மோதியது.
ܝܼܿ ،
'அம்மா அன்ன மாமாட கார் வருது...!''
கார் எங்களை நெருங்கிக் கொண்டிருந்தது. நான் ஆவலோடு கையை நீட்டி மறித்தேன். மாமா எங்கள் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்காமல் காரை வேகமாகச் செலுத்திச் சென்றார். முன் ஆசனத்தில் மாமாவுக்குப் பக்கத்தில் மாமி இருந்தாள். கார் கிளப்பிச் சென்ற தூசித் துகள்கள் எங்கள் கண்களில் வந்து ஒட்டிக் கொண்டன. கார் தொலைவில் போய் மறையும்வரை பார்த்துக் கொண்டிருந்த நான் அம்மாவின் முகத்தை வேதனையோடு நோக்கினேன். அவளின் கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் வடிந்து கொண்டிருந்தன. துக்கம் தொண்டையை அடைத்தது. அக்கா எவ்விதப் பேச்சுமின்றி மெளனமாகத் தரையை பார்த்துக் கொண்டிருந்தாள்...!
ஆகஸ்ட் 1975
சிங்களச் சிறுகதைகள் 52

எட்வீர் ஆரியதாளம்
மென் பச்சை நிற
சாரி
தமிழாக்கம்: எம்.எல்.எம். மன்சூர்
ஹரல்ட் இதற்கு முன்னர் எப்பொழுதும் அந்தக் கோட்டை அணிந்ததில்லை. அதன் மென்மை அவனது உள்ளத்தைக் கவர்ந்தது. அறுபத்தி மூன்று ரூபா செலவழிந்தாலும் அது நல்ல முறையில் தைக்கப்பட்டிருப்பதாக அவன் உணர்ந்தான். அதை இன்னும் குறைந்த விலையில் தைத்துக் கொண்டிருக்க முடியும். அறுபத்து மூன்று ரூபா செலவழிப்பதும் அவ்வளவு இலகுவான காரியமல்ல. இதுபோன்ற கோட் ஒன்று நோயெலுக்கும் இருப்பதாக ஞாபகம். நோயெலின் தோள்கள் குறுகியவை. எந்த நல்ல கோட்டையும் நோயல் அணிந்தால் அவலட்சணம்தான்.
கண்ணாடியில் ஹரல்டின் முகம் தெரிந்தது. அவன் கண்ணாடியை நோக்கி இன்னும் நெருங்கினான. மேலுதட்டிலிருக்கும் மெல்லிய மயிரை கத்தரிக்கோலால் வெட்டிச் சமமாக வைத்துக் கொண்டான். மயிரில் நரைத்தவை இருக்கின்றனவா என அவன் கவனமாகப் பார்த்தான். ஜலதோசத்தினால்தான் அக்காலத்தில் மயிர் நரைப்பதாக அவன் எண்ணினான். நிழல் கண்ணாடியில் விழுந்தால்
முகத்தைத் தெளிவாகப் பார்க்க அவனால் முடியாதிருந்தது.
கண்ணாடியை முன்பிருந்த இடத்திலேயே வைக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு நேரமில்லை. ஞாயிற்றுக்கிழமை காரியாலத்துக்குப் போய்வந்து ஓரிரு மணித்தியாலங்களாவது செலவழித்து அறையை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். இந்த ஞாயிற்றுக்கிழமையும் வேலை செய்ய நேர்ந்ததுதான் தவறு. அடுத்த வாரத்திலென்றால் ஞாயிற்றுக்கிழமை வேலைகளைப் பொறுப்பேற்கக் கூடாது.
இருபத்தெட்டு வருட வாழ்க்கை ஓட்டத்தின் அடையாளங்கள் ஹரல்டைச் சூழ்ந்திருந்தன. பாடசாலையில் கூட்டமாக நின்று எடுத்த சில படங்கள் சுவரில் மாட்டப்பட்டிருந்தன. தலைமையாசிரியர் விலகிச் சென்ற போது எடுத்த
மல்லிகைப் பந்தல்

Page 35
பிரியாவிடைக் கூட்டப் போட்டோவில், நிலத்தில் உட்கார்ந்து வணக்கம்' என்று எழுதப்பட்டிருந்த பலகையின் ஒரு மூலையைப் பிடித்துக் கொண்டிருந்தது
ஹரல்டாகும்.
இப்பொழுது அந்தப் படத்தைப் பார்க்கும்போது அவனுக்குச் சிரிப்பு வருகிறது. அன்று கூட்டத்துக்குப் போக இருந்த அவசரத்தில் எண்ணெய் தேய்த்துக் கொண்டபோது உடைகளிலெல்லாம் எண்ணெய் சிந்தியதை இன்னும் அவன் மறந்து விடவில்லை. தனது முகத்திலிருந்த சிரிப்பு முட்டாள்தனமானது என இப்பொழுது அவன் எண்ணுகிறான். 'எல்லோரும் இப்போது கொஞ்சம் சிரியுங்கள் என்று படப்பிடிப்பாளர் கூறியபோது எல்லோரும் சிரித்ததனால் அவனும் சிரித்தான். சிரிக்காமலிருந்திருந்தால் படம் இதைவிட அழகாக இருந்திருக்கும் என்று ஹரல்டிடம் அக்கா சொன்னாள். ஹரல்ட் சிரிக்கும் போது அவனது முகத்தில் ஒரு முட்டாள்தன்மை படர்வதனாலேயே அவள் அப்படிச் சொன்னாள்.
நேரம் என்ன?''
பக்கத்து அறையிலிருந்து கேட்பது கேட்டது.
'பத்து இருபத்தி நாலு."
கடிகாரத்தைப் பார்க்காமலேயே அவன் சொன்னான். ஒரு நிமிடத்துக்கு முன்னரேயே அவன் நேரத்தைப் பார்த்திருந்தான். ஹரல்ட் தனது போட்டோக்களில் மிக விரும்பியது நோயெல். ஹர்பட், விக்டர் ஆகியோருடன் சேர்ந்து எடுத்த போட்டோவைத்தான். பாடசாலைக்குச் சென்ற தினமொன்றிலேயே அவர்கள் அப்போட்டோவை எடுக்கச் சென்றார்கள். நோயெல் பள்ளிக்கூடத்துக்குச் செல்லாமல் ஊர் சுற்றுவதை எல்லோரும் அறிந்திருந்தாலும் ஹரல்ட் நன்றாகப் படிக்கும் பிள்ளையென்றே எல்லோரும் நம்பினார்கள். ஆனால் அன்றென்றால் அவன் பள்ளிக்கூடத்துக்குச் செல்லாமல் நோயெலுடன் போட்டோ எடுக்கச் சென்றான்.
அன்றுதான், முதன்முதல் சிகரெட் குடித்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது. இப்பொழுதென்றால் அவன் சிகரெட்டின் கணக்கிலேயே புகைக்கிறான்.
ப யாராவது தன்னை நல்லவன் என்று குறிப்பிடுவது அவனுக்குப் பிடிப்பதில்லை. அப்படி ஒரு நல்ல மனிதனாவது ஒரு கிராமபோன் இசைத்தட்டு ஆவது போல என்றே அவன் எண்ணினான். இக்கருத்தை அம்மாவிடம் சொன்னபோது அவள் ஆச்சரியப்பட்டது இன்றுபோல நினைவிருக்கிறது.
இந்த கிராமபோன் இசைத்தட்டுக்கதையை விவியனிடம் சொல்ல வேண்டும். இதுவரை அவளிடம் இந்தக் கதையைக் கூறவில்லையென்றே படுகிறது. ஹரல்ட் அவளைச் சிரிப்பூட்டுவதற்காக அடிக்கடி பல விஷயங்களைக் கூறுவான். விவியன் சிரிப்பதைப் பார்க்கத் தனக்கிருந்த ஆவலால், கூறுவதற்கு ஏதாவது
சிங்களச் சிறுகதைகள் 54

இல்லாதவிடத்து ஏதாவதொன்றைக் கற்பனை பண்ணிக் கூறுவான்.
அவள் சிரிப்பது கண்ணாடிக் கிண்ணமொன்றில் வெள்ளிக்காசுகளைப் போட்டுக் குலுக்குவது போலிருப்பதாக அவன் எண்ணினான்.
''நாங்கள் எத்தனை மணிக்குப் போகவேண்டும்?'' மீண்டும் பக்கத்து அறையிலிருந்து கேட்பது கேட்டது.)
'பதினொன்றே காலுக்கு.” அவன் பதிலளித்தான்.
தனது படத்துக்கருகில் தொங்கவிடப்பட்டிருந்த விவியனின் படத்தை அவன் பார்த்தான். தான் விரும்பும் இளம் பச்சை நிற சாரியையே அன்று அவள் அணிந்திருந்தது இப்போது அவனுக்கு நினைவு வருகிறது. அந்தச் சாரியை தினமும் அணியச் சொன்னபோது விவியன் கண்ணாடிக் கிண்ணத்தில் வெள்ளிக் காசுகளைக் குலுக்கியது அவனுக்கு நினைவிருக்கிறது.
ஒரே சாரியைத் தொடர்ந்து அணியமுடியுமா?'' என்று கூறிக்கொண்டே விவியன் தோளில் சாரி முனையை வைத்துச் சரி செய்து கொண்டதையும் அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்த போது புகைப்படக்காரர் இலேசாகச் சிரித்து தொண்டையைக் கனைத்துக் கொண்டதையும் அந்தப் படம் அவனுக்கு நினைவூட்டியது. ).
அது நடைபெற்று இப்பொழுது மூன்று வருடங்களாகி விட்டன. என்றாலும் தன்னால் எப்போதுமே அதை மறக்க முடியாது போலிருக்கிறது.
ஹரல்ட் சிகரெட் ஒன்றை எடுத்து டக்' என்ற ஒசையுடன் பெட்டியை மூடி பலதடவைகள் சிகரெட்டை அதில் தட்டினான். சிகரெட்டை உதட்டில் வைத்துக் கொண்டு பெட்டியை ஒவ்வொரு பக்கமாகத் திரும்பிப் பார்த்தான். ''எனது
அன்பிற்குரிய ஹரல்டுக்கு' என்ற வார்த்தைகள் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருந்தன.
அவன் சாக்கிலிருந்த வெள்ளை நிறக் கைக்குட்டை ஒன்றை எடுத்து பெட்டியை மினுக்கினான். சிகரெட் பெட்டியையும், கைக்குட்டையையும் சாக்குக்குள் திணித்துக் கொண்மட ஹரல்ட் சிகரெட்டை வாயில் வைத்துக் கொண்டு புகை வளையமொன்றை வெளியில் விட்டவாறே மீண்டும் கண்ணாடிக் கருகில் வந்தான்.
சிகரெட் காரத்தால் பற்களெல்லாம் கெட்டன. காலையில் பல் துலக்கும் போது கத்தி முனையால் குடைந்தால் பற்கள் வெண்மையாகலாம்.
* தேனீர் குடிக்கிறீர்களா?”
55 | மல்லிகைப் பந்தல்

Page 36
பக்கத்து அறையிலிருந்து மீண்டும் பேச்சொலி.
*'நல்லது." * நல்லது.'' --
ஹரல்ட் தனிமையிலிருக்கும் வேளைகளிலெல்லாம் இறந்த காலங் களிலேயே வாழ்ந்தான். தெளிவான நீரில் சூரிய ஒளி விழும்போது நீரிலுள்ள பொருட்கள் பலவிதமாகத் தெரிவதுபோல, நிகழ் காலத்தின் சூரிய ஒளி அவனது இறந்த கால உள்ளம் என்ற நீரிலிருக்கும் உணர்ச்சிகளுக்கு வெளிச்சம் பாய்ச்சியது.
விவியன் உருவம்தான் அங்கு வியாபித்துத் தெரிகிறது. விவியன் தலையை ஆட்டி தனது பின்னலைச் சரிசெய்து கொள்ளும் முறை, விவியன் சிரிக்கும் விதம், விவியன் ஆச்சரியப்பட்டுக் கண்களை விரிக்கும் விதம்.... விவியன் ... விவியன்...
மிகப்பழைய இறந்த காலங்களையும் அவன் மறந்துவிடவில்லை. ஆனால் இப்பொழுது அவனது உள்ளத்தில் விவியனைப் பற்றிய எண்ணங்கள்தான் அதிகமிருக்கின்றன. அதற்கு முன் பதான இறந்த காலம் அவ்வப் பொருட்களுக்கூடாகவே நினைவுக்கு வருகின்றது என்ற எண்ணம் அவனுக்கு.
விக்டர் விவியனைக் காதலித்தானா என்பதுபற்றி எப்போதும் ஹரல்டின் நெஞ்சில் ஒரு சந்தேகம் உருவாவதுண்டு. விக்டர் அன்று விருந்தொன்றுக்குச் சென்று திரும்பிவந்து கண்ணாடியைப் பார்த்துச் சிரித்தது ஏன் என்று இன்னும் ஹரல்டுக்குத் தெரியாது. எனினும் அதைப்பற்றித்தான் இப்பொழுது கவலைப்படத் தேவையில்லை என அவன் எண்ணினான்.
* 'ஹரல்ட்! மேசை மேலிருந்த சேக்ஷ்பியரின் கதைப் புத்தகம் என்னிட மிருக்கிறது."
மீண்டும் பக்கத்தறையிலிருந்து பேச்சுக்குரல்.
''நான் அதை வாசித்து முடிக்கவில்லை."
'ஹரல்ட் எப்போதாவது புத்தகமொன்றை முடியும் வரை வாசிப்ப தில்லையோ. எனக்கொன்றால் அதை நாளைக்கு வாசித்து முடித்து விடலாம்.''
ஹரல்டுக்கு இப்பொழுது புத்தகங்கள் வாசிப்பதில் அவ்வளவு ஈடுபாடில்லை. முன்பு எட்கா வொலஸ்ஸின் புத்தகமொன்றைப் பற்றிக் கேள்விப்பட்டால் எங்கு தேடியாவது அதை வாங்கி அவன் வாசிப்பான். எட்கா வொலஸ்ஸின் துப்பறியும் நாவல்களில் அவன் வாசிக்காதது எதுவுமில்லை. லெஸ்ஸி சாட்டர் எழுதும் நாவல்களில் வரும் செய்திகள், தன் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் போல் அவனுக்கு நினைவிருக்கின்றன. ஹரல்டின் குணாதிசயங்களில் சில
சிங்களச் சிறுகதைகள் 56

அப்புத்தகத்தில் வரும் துப்பறிபவரான 'ஞானியின் குணாதிசயங்களால் உரு வாக்கப்பட்டவையாகும்.
ஹரல்ட் சிகரெட் பெட்டியை எடுக்கும் விதம், சிகரெட்டைப் பற்றவைக்கும் விதம், புகைப்பிடிக்கும் விதம் எல்லாமே அந்த ஞானியிடமிருந்து படித்தவை.
புத்தகங்கள் மனிதர்களில் செலுத்தும் செல்வாக்குப் புதுமையானது என அவன் கருதினான். புதுத் துப்பறியும் நாவல்கள் சிலவற்றை வாங்க வேண்டுமென அவன் எண்ணத் தொடங்கினான். எட்கா வொலஸ்ஸின் எல்லாப் புத்தகங்களையும் ஒன்றாகத் தொகுக்க வேண்டும். அவையெல்லாம் இப்பொழுது போட்ட போட்ட இடங்களில் இருக்கின்றன.
புத்தகங்களைப் பற்றி நினைத்த போது அவனது கண்கள் புத்தக அலு மாரியை நோக்கிச் சென்றன. அவன் மிக விரும்பிய சில புத்தகங்களே அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சுவரில் மாட்டப்பட்டிருந்த படங்களைப் போல் அந்தப் புத்தகங்களும் அவனுக்கு வாழ்ககையின் ஒவ்வொரு கட்டத்தை நினைவூட்டின.
எட்கா வொலஸ்ஸின் புத்தகமொன்றை முதன்முதல் வாசித்தபோது அவன் விவியனைக் காதலிக்கத் தொடங்கியிருந்தான். அந்தப் புத்தகத்தைக் கையிலெடுக்கும் ஒவ்வொரு வேளையிலும் அவனுக்கு அந்தக்காலம் நினைவுக்கு வருகிறது. அதில் வரும் சம்பவங்கள் எவ்வாறானவையாக இருந்த போதும், அவன் வாசிக்கும் போது நினைவுக்கு வருவது விவியனைக் காதலிக்கத் தொடங்கியிருந்த நாட்களில் அவனது நெஞ்சில் நிறைந்திருந்த இன்பம் கலந்த வேதனைதான். இப்பொழுதும் அடிக்கடி அவன் அப்புத்தகத்தை வாசிப்பதற்கு எடுப்பான். புத்தகத்தை வாசிப்பதைவிட அந்த வேதனையை நினைவூட்டிக் கொள்வதில் அவனுக்கொரு தனி மகிழ்ச்சி. அவன் புத்தகத்தின் சில பக்கங்களை வாசித்துவிட்டுக் கண்களை மூடிக்கொள்வான். அப்பொழுது முன் கூறிய சம்பவம் அவனது உள்ளத்தில் நிழலாடும். அப்போது அவனது உள்ளத்திலிருக்கும் வேதனையை வார்த்தைகளால் வெளியிட முயல்வான். ஆனால் அது அவனால் முடிவதில்லை.
லெஸ்லி சார்டர்ஸ் என்றால் அக்கருத்தை நன்றாக எழுதுவார். அவன் கழுத்தை அங்குமிங்கும் திருப்பி டையைச் சரி செய்துகொண்டான். கோட்டின் இரு கைகளுக்குள்ளும் கையைச் செருகி சேட்டின் கைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டு தலைமயிரை இருகைகளாலும் கவனமாகத் தடவினான்.
தேனீர் ஆறிப்போய் விட்டது" என்ற வார்த்தைகளுடன் கண்ணாடிக் கிண்ணத்துக்குள் வெள்ளிக் காசுகளை குலுக்கும் ஓசை அவனுக்குக் கேட்டது.
அவன் கண்ணாடியிலிருந்து தூர விலகி சிரித்த முகத்துடன் அப்பக்கத்தைப் பார்த்தான். இன்றைக்கும் அவள் அந்த இளம் பச்சை நிற சாரியை அணிவாள்
| 57 மல்லிகைப் பந்தல்

Page 37
என ஹரல்ட் எதிர் பார்க்கவில்லை. ஆனால் அவள் அதே சாரியையே அணிந்திருந்தாள். அவள் தேனீர்த்தட்டை மேசை மீது வைத்துவிட்டு கையால் சாரியைச் சரி செய்து கொண்டாள். மெல்லிய விரல்களில் தவழும் அந்த சாரியை ஆழ்ந்த வேதனையுடன் அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.
எட்கா வொலஸ்ஸைப் பற்றிய நினைப்பு வந்தது. லேசாக சிரித்துக் கொண்டான்.
மீண்டும் கண்ணாடிக் கிண்ணத்தில் வெள்ளிக்காசுகள் குலுங்கின. 'ஹரல்ட் இந்தச் சாரியை விரும்புவதனால்தான் இதை இன்று அணிந்து கொண்டேன்."
ஹரல்ட் தன் உள்ளத்து உணர்ச்சிகளொன்றையும் அவளிடம் கூறவில்லை. அவற்றைக் கூறுவதன் மூலம் தான் செய்வது தவறு என அவன் எண்ணினான்.
எனினும் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு நெஞ்சமெங்கும் வியாபித்திருக்கும் கருத்தைக் கூறத்தான் வேண்டும். அவள் இந்த சாரியை அணிந்து கொண்டிருக்கும் போது தன்னால் எதுவும் சொல்லாமலிருக்க முடியாது என அவன் எண்ணினான்.
'கிராமபோன் இசைத்தட்டு கதையை நான் விவியனிடம் சொன்னேனா?
அந்தக் கதையாவது தன் உணர்ச்சிகளை ஓரளவு பிரதிபலிக்கும் என அவன் நினைத்தான்.
'இல்லை' என்றவாறு கண்ணாடிக் கிண்ணத்தில் காசுகள் குலுக்கப்பட்டன.
மலர் : 48 ஏப்ரல் 1972
சிங்களச் சிறுகதைகள் 58

நிமல் சரத்சந்திரா
கதையின் முடிவு
தமிழாக்கம்: 41 பா எஸ்.எம்.ஜே. பைஸ்தீன்
இக்கதையை உங்களுக்குக் கூறவேண்டுமென்பது நான் நினைத்து எவ்வளவு காலமிருக்கும் தெரியுமா? இக்கதையைக் கூறத் தொடங்கிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதைத் தொடங்கிய இடத்திலேயே நிறுத்திவிட நேர்ந்ததேன் என்பதை என்னால் அப்போதெல்லாம் கூறமுடியாமற் போயிருந்தாலும், இன்று என்னால் இயலும்.
ஒருவன் தனது பவவீனத்தை ஒப்புக் கொள்வதற்கு, எந்த அளவு ஆத்மசக்தி இருக்கவேண்டுமென்று எனக்குச் சிலவேளைகளிற் தோன்றும். அவ்வாறு அவன் ஒன்றில் தனது கையறு நிலையினாலோ, அன்றி ஆத்ம சக்தியினாலோதான்
அதை ஒப்புக்கொள்ளத் துணிவான்.
எனக்கு இப்போது இக்கதையைக் கூற முடிந்திருப்பது, இது ஒரு பாவநிவேதனம் என்பதாலோ, நான் கையறு நிலைக்கும் வீழ்ந்திருப்பதாலோ அல்ல. இக்கதைக்கு ஒரு தொடக்கமும், முடிவும் தற்போது ஏற்பட்டிருப் பதனால்தான்.
இவ்வுலகில் நடப்பவற்றுட் பெரும்பாலானவை நாம் நினைப்பதற்கு மாறாகவே அமைகின்றன. எல்லாரும் நினைப்பது போல எல்லாம் நடந்து விடுமாயின், இவ்வுலகம் எவ்வளவு சிறந்ததாக இருக்கும்? ஆனால் அப்படி நடப்பதில்லை என்பது நம் யாவருக்கும் நன்றாக விளங்குகிறது.
அரேஸ்டிக்கட் ஒன்றை வாங்கும் அனைவரும், அதனாற் பரிசு தமக்கே கிடைக்குமென்றுதான் எதிர்பார்க்கின்றார்கள். அதன் முடிவு பத்திரிகையில் வெளியான பின்புதான் தமக்குப் பரிசு கிடைக்கவில்லை என்பது தெரியவருகின்றது. அப்போது வருந்திப் பயனுண்டா என்ன? உலகில் வெற்றி பெற்ற மனிதர் மிகச் சிலரே. அதிகம் பேர் தோல்வி அடைந்தவர்களாவர்.
59
| மல்லிகைப் பந்தல்

Page 38
ஒரு சிறு வெற்றியைக் கண்ட மாத்திரத்தில் வெற்றிப் பெருமிதங் கொள்வது எத்தனை மடமையாகும் என எனக்கு இப்போதுதான் படுகிறது. நான் ஆரம்பத்தில் அவ்வாறு கருதவில்லை. வெற்றியைப் பெற்று. வெற்றியை அனுபவிக்கும் நேரத்தில்தான் நான் உண்மையில் தோல்வியுற்றிருக்கிறேனென்பதை உணர்ந்து கொண்டேன். வெற்றியையீட்டப் போராட வேண்டுமென்று கூறப்படுவதை நான் கேட்டிருக்கிறேன். நான் அத்தகைய போராட்டமெதையும் நிகழ்த்தவில்லை. போராடுவதற்குரிய ஆயுதங்களும் என்னிடங் கிடையா. போராட்டமெதுவுமின்றியே நான் வெற்றி கண்டேன். போராட்டமொன்றைச் செய்துதான் ஆகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருந்தால், அதில் நான் எவ்வாறு வெற்றி கொண்டிருக்க
முடியுமோ என்று எனக்கு இப்போது தோன்றுகிறது.
முகத்துவாரக் கடற்கரைப் பரப்பிலே வெளியே இழுத்துப் போடப்பட்டிருந்த ஓடமொன்றின்மேல் ஒருநாள் நாங்கள் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தோம். மேலே இருந்த நீல வானிலே நட்சத்திரமொன்றுதானும் இல்லை. காட்சிக்கெட்டிய தூரம் வரை எவரும் இருக்கவில்லை என்பதும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவ்வேளையில், அந்தி சாய்ந்துகொண்டிருந்தது. கடல் வானுடன் மோதிச் செந்நிறமாக மாறியது. கடலிற் பரவிய அலைகள் ஒன்றன்பின் ஒன்றாக ஓங்கி வளர்ந்து கரையில் மெதுவாக மோதி, மீண்டும் பின்வாங்கி. கரையை நோக்கி ஒடிவந்து மறபடியும் மோதிச் சிதறின.
நாமிருவரும் ஓடத்தின் மேலிருக்கும்போது, அலைகள் கடற்கரையை எத்தனை தடவைகள் முத்தமிட்டிருக்கும்? வானிற் பறந்து திரியும் பறவைகள் மரங்களின் இலைகளுக்கிடையே ஒடுங்கிக் கொள்ளும்வரை - இருள் எம்மைப் போர்த்திக் கொள்ளுமட்டும் நாம் பேசிக்கொண்ட பேச்சுக்களுக்கு எவ்வித முடிவும் இல்லை. நாம் பேசிக் கொண்டதில் ஒரு வசனமாவது எனக்குச் சரியாக ஞாபகமில்லை.
''நீ ஒரு ரோஜா மலரைப் போலத் தோன்றுகிறாய்" அவளணிந்திருந்த ரோஜா நிற ஆடையை நோக்கியவாறு நான் கூறினேன்.
''நிஜமாகவா?” அவள் என் பக்கந்திரும்பி, எனது கண்களிரண்டையும் வெகுநேரமாகப் பார்த்தபடி இருந்தாள். அவளது கண்கள் எவ்வளவோ சொற்களை வெளியே சிந்துகின்றாற் போலத் தோன்றின. வாயினால் கூறமுடியாத விஷயங்களைக் கண்களிரண்டாலும் எவ்வளவு நன்றாக வெளிப்படுத்த முடிகிறது!
அவளது இரு விழிகளுங் கசிந்திருந்தன. அவற்றிற் கண்ணீர் நிறைந்திருக்க வேண்டும். எனினும் அது துக்கத்திரையால் ஏற்பட்டதல்ல என்றுமட்டும் என்னாற்
கூறவியலும்.
'இப்போது இரவு வந்து விட்டதே' என்றேன் நான்.
சிங்களச் சிறுகதைகள் 60

'அதற்கென்ன பரவாயில்லை. இன்னும் சிறிதுநேரம் இருப்போம். அவள் எனது கைகளைத் தன்னிரு கரங்களாலும் அழுத்தியவாறு பதிலிறுத்தாள்.
நீ என்னருகே, இருந்தால் எவ்வளவு நேரமானாலும் இருக்க என்னால் (முடியும்' என்று நான் கூறினேன்.
)ருளா) (போர்த்தப்பட்ட கடற்கரை எவ்வளவு நிஷ்களங்கமானது? கரையினின்றும் தொலையில் நிறுத்தப்பட்டிருந்த, கப்பல்களில் விளக்குகள் பிரகாசமாக ஒளிர்ந்தன. ஒவ்வொரு கப்பலும் ஒரு சிறு நகரத்தைப் போலக் காட்சியளித்தது.
துறைமுகத்துக்குள் கப்பல்கள் நுழைந்து (கொணராடிருந்தன. கப்பல் பிரயானா வேகத்தினால் நீரைக் கிழித்துக் கொண்டு செல்லும் போது, இருமருங்கிலும் நீர் அலைபோல் (மேலெழுந்து பாய்வது. அசைந்து செல்லும் கடற்திரளிலே எமக்குத் (தெரிந்தது. .
.அவளது முகத்துடன் உரசு1111டியாக, எனது முகத்தைச் சமீபித்தேன். நட்சத்திரங்கள் இரண்டு, பிரகாசத்துடன் வானில் மின்னின...
நாமிருவரும் ஒடத்திலிருந்து இறங்கிக் கடலோரமாக, இருந்த கருங்கல் 'ஒனறினமேல் உட்கார்ந்தோம்.
44,காசமும் கடலும் அளாவும், தொடுவானில் ஒரே வரிசையில் கோடிட்டாற் (போலத், தீபங்களின் நிரை யொன்று காட்சி தந்தது. அது மாலை வேளையில் f,ன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற மீனவர்களது ஒடங்களிலுள்ள விளக்குகளாக 12).ருக்கலாம் 4.1 லோரமாகவிருந்த தென்னை மரங்களிற் பிஞ்சுகள் காற்றுக்கு 2) திர்ந்து கொண்டிருந்தன. கடலின் ஒசை நேரத்துக்கு (நேரம் அதிகரித்தது. கரையில் சிதறும் அலைகளிலிருந்து தெறித்த நீர்த்திவலைகளால் எம்மைச் சுற்றிலும் ஈரமாக்கி விட்டது. நாம் அணிந்திருந்த ஆடைகள்கூட நனைந்து (போயின.
"சரியான இருட்டு' என்று நான் கூறினேன்.
திடீரென்று எனக்கு நாங்கள் முன்பு அமர்ந்திருந்த ஓடத்தைக் கடலுக்குள் இழுத்து செல்ல வேண்டுமென்ற உத்வேகம் பிறந்தது. தனியனாக வெறும்) ஒடத்தைக் கடலின் நடுவே இழுத்துச் செல்லுமளவு சக்தி என்னிரு கரங்களுக்கும் ஏற்பட்டிருந்தது.
கரையை நோக்கி வீசும் அலைகளை எதிர்த்து, ஒடத்தைக் கடலின் நடு ஆழத்திற்கே, தள்ளிச் செல்லலாம். தனித் துடுப்பொன்றைக் கொண்டே ஒடத்தைச் (செலுத்தலாம். அவள் என்னருகே இருந்ததால் புதிய சக்தியொன்று பிறந்துள்ளதாக எனது இருகைகளுக்குப் புரிந்தது.
உ4 61 மல்லிகைப் பந்தல்

Page 39
விவாகமான ஒருவன், குழந்தைகள் இரண்டுக்குத் தந்தையானவன். இருண்ட இரவொன்றில், வேறொரு பெண்ணுடன் சரசம் புரிந்து கொண்டிருப்பது எவ்வளவு தவறானது என்று என் இதயம் என்னைக் கேட்கலானது இது எனது மனைவிக்குத் தெரியாமலிருக்கலாம். அவளுக்குத் தெரியாது என்ற காரணத்திற்காக இத்தவற்றைத் தவறில்லையென்று சாதித்துவிட முடியுமா என்ன?
இருள் எந்த அளவுக்கு மனிதரைப் பாதுகாக்க வல்லது? இருள் மனிதரது தவறு, மோசடி, களவுகளை எந்த அளவுக்கு மூடிமறைத்து விடமுடியும்? தெருவோரத்திலுள்ள விலைமாதருக்கு இருள் எந்தளவு சாந்தியை அளிக்கிறது?
"நீங்கள் இல்லாமல் என்னால் வாழமுடியாது. நீங்கள் உங்களது மனைவியிடமிருந்து விவாகரத்துக் கோரி, என்னை விவாகம் செய்ய இயலாதா? வேண்டுமென்றால் உங்களது பிள்ளைகள் இருவரையும் உடன் அழைத்து வாருங்கள். நான் அவர்களை வளர்த்து ஆளாக்குகிறேன்.'
நான் மெளனஞ் சாதித்தேன். மெளனம் சாதிப்பதைவிட என்னால் வேறொன்றும் செய்யத் தோன்றவில்லை.
பிள்ளைகளோடு வீட்டிலிருந்து, பிள்ளைகளது நலனைப்பேணிக் கொண்டிராமல், கடற்கரையில் தன்னந்தனியாக இருளின் மத்தியில் வேறொரு பெண்ணுடன் சரசிப்பது மாபாதகச் செயல் என்று எனது இதயம் என்னை ஏசியது. நான் செய்துகொண்டிருப்பது பெரும்பாதகம் என்பது எனக்கு நன்கு விளங்கியது.
நான் அமர்ந்திருந்த கல்லின் மேலிருந்து இறங்கி வீட்டை நோக்கி நிற்காமல் ஓடவேண்டுமென்ற ஆவேசம் கிளர்ந்தது. எவருடையதோ பலமான ஆதிக்கம் என்னைப் பிணித்திருந்ததை உணர்ந்தேன். அவளது கேசம் எனது கழுத்தைச் சுற்றிவளைத்திருந்தது. அவளது வெப்பமான சுவாசம் எனது உடலைத் தகிக்குமளவிற்கு அவளது முகம் எனது உடம்பை அண்மியிருந்தது. திருப்தியுற்றவளைப் போல அவள் தனது முகத்தை மென்மேலும் எனது உடலில் அழுத்தினாள். மணமான ஒருவன்பால் அவள் வைத்திருந்த விசுவாசத்தை என்னாற் புரிந்து கொள்ள இயலவில்லை. அவள் என்னிடம் தான் எதிர்பார்க்கும் அன்பு, பாதுகாப்பு யாவும் கிடைக்குமென எதிர்பார்க்கிறாள் போலும். ஆனால் அவ்வாறு நம்புகின்ற அவள் தான், பிறருக்குச் சொந்தமான பொருள் ஒன்றைப் பறித்துக் கொள்ள முயற்சிக்கின்றாளென்பதையும் நான் உணர்ந்தேன். நான் விவாகமானவன் என்பதை அவளுக்கு எத்தனை தடவை விளக்கிக் கூறியிருப்பேன்? ஆனால் அவள் தனது முயற்சியிற் பின்வாங்க அது. ஒரு காரணமாக அமையவில்லையே.
சிங்களச் சிறுகதைகள் 62

ஒரு பெண்னின் அதிருப்திகரமான சுபாவத்தை நான் அவளிடமிருந்து அறிந்து கொண்டேன். அவளால் தனது உள்ளத்தை வேறொருவருடன் பிணைத்துக் கொள்ள முடியாதா? என்னிடம் அவள் காட்டும் தூய அன்புக்கும், நம்பிக்கைக்கும் உரிய காரணத்தைத் தெரிந்து கொள்ள நான் எடுத்த பிரயத்தனங்கள் யாவும் வீணாகவே முடிந்தன.
நான் இன்று எனது தேவைக்காக மட்டும் கடற்கரைக்கு வரவில்லை. கடற்கரைக்கு வந்து செல்லுமாறு அவள்தான் என்னிடம் எத்தனை நாட்கள் வற்புறுத்தியிருப்பாள்? அப்போதெல்லாம் ஏதேதோ சாக்குக் காட்டி நான் அவளிடமிருந்து விலகிக் கொண்டது எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. ஆனால் இன்று நான் அவளது கோரிக்கைக்குச் செவிசாய்த்து விட்டதை உணர்கிறேன். திடீரென இத்தகைய பலவீனத்துக்கு ஆப்பட்ட காரணம் எனக்குப்
புரியவில்லை.
'இம்மட்டிலாவது நான் வந்துவிடுவேன் என்று ரத்னா எதிர்பார்த்துக் கொண்டிருப்பாள். இரவும் வந்துவிட்டது. நான் போகவேண்டும்' என்றேன்.
'ரத்னாவை விவாகரத்துச் செய்யுங்கள். நீங்கள் இல்லாமல் என்னால் எப்படியுமே வாழ முடியாது' என அவள் பதில் தந்தாள்.
எனது கழுத்தைச் சுற்றியுள்ள அவளது கேசத்தைக் கொண்டே, அவளுடைய கழுத்தைத் திருகிக் கடலினுள் தள்ளிவிடுமளவுக்கு என்னுள் ஆத்திரம் மூண்டது. அவ்வாறு செய்தால் அவளது தொந்தரவிலிருந்து விடுதலை கிடைத்துவிடுமென்று நம்பினேன்.
அடிமுடிவு இன்றிக் கடலிலிருந்து எழும் ஓசையைக் கேட்பது எனக்குப் பெரும் சிரமமாக இருந்தது. தொலைதூரத்தில் கடலில் ஒளிரும் விளக்குகளின் ஒளி. நான் செய்யும் பாவத்தின் பரப்பை மென்மேலும் விசாலித்துத் தெளிவாக்குவது போற் தோன்றியது.
நான் சிந்தித்துப் பார்த்தேன். நான் செய்யும் பாவத்தைக் குறித்து இதயம் பழி கூறியது. கடற்கரையில் மோதிச் சிதறும் செல்லும் அலைகளினோசை எனக்குச் சாபமிடுவதைப் போலக் கேட்டது. தென்னை மர இலைகளினூடே தழுவி வருங் காற்றின் புலம்பல் என்னைத் திட்டுவது போலிருந்தது.
'நான் இந்த இடத்துக்கு எனது தேவைக்காக அன்றி உனக்காகவே வந்தேன். இதற்கு மேலும் என்னால் காலம் தாழ்த்த முடியாது. நான் ஒரு துரோகியாக மாற விரும்பவில்லை. இவ்வளவு காலமாக நான் பண்ணிய பாவத்தின் பொருட்டு நான் சாபத்துக்குத்தான் ஆளாக வேண்டும் என்று எனக்கு நானே கூறிக்கொள்ள வேண்டுமென்று தோன்றுகின்றது' என்றேன்.
அவள் அமைதியாக என்னை நோக்கிக் கொண்டிருந்தது நட்சத்திர ஒளியில்
63 மல்லிகைப் பந்தல்

Page 40
ஓரளவு தெரிந்தது. மீன்பிடி வள்ளத்து விளக்குகளை எடுத்துக் கொண்டு மூவர் கடற்கரையைச் சமீபித்துவிட்டமையை நான் கண்டேன்.
மனிதன் தவறிழைப்பது புதுமையன்று ஆனால் தொடர்ந்து அத்தவறைச் செய்து கொண்டிருப்பது பெரும் பாதகமாகும். இப் பாதகத்தில் ஆழ்ந்து விடாமல் எஞ்சிய காலத்திலாவது என்னால் வாழ முடியாதா என என்னை நானே கேட்டுக் கொண்டேன்.
கரையை நோக்கிப் பாய்ந்துவரும் அலைகள் இன்னும் எத்தனை முறை) கரையைத் தழுவிக் கொள்ளுமோ? கரையிலுள்ள மரங்களிலிருந்து பிஞ்சுகள் இன்னும் எத்தனை காலத்துக்கு உதிருமோ? எனினும் கரையில் நடக்கும் போராட்டம் அடுத்து வீசவிருக்கும் அலையினால் மறைந்துபோவது உறுதி.
இருள் போர்த்த கடற்கரையினின்றும் புறப்பட்டு, நாம் வந்த உலகில் நிறைந்துள்ள சனத்திரளை நாடி நகரலானோம். அவள் எனது கைகளைப் பற்றிக் கொண்டு, ஒன்றுமே பேசாமல் நடக்கலானாள். அவளது தோட்டத்தின் நுழைவாயிலருகே வந்ததும் எனது கைகளைத் தன்னிரு கைகளாலும் அழுத்திக் கொண்டாள். அது தான் நாங்கள் முகத்துவாரத்துக்குச் சென்ற) கடைசிப்பயணம்.
குற்றஞ்செய்வது மனிதவியல்பு என்பதுண்மையே, எனினும் என்றும் குற்றத்தில் ஆழ்ந்து கொண்டிருக்கும் பலவீனத்திலிருந்து என்றாவது ஒருநாள் விடுபட்டுத்தானேயாக வேண்டும்.
முகத்துவாரக் கரையில் நாம் அமர்ந்திருந்த கருங்கல் இப்போது கொஞ்சங் கொஞ்சமாக கடலுக்குப் பலியாகிக் கொண்டிருந்தது. இன்னுஞ் சொற்ப காலத்தில் அது முற்றாகக் கடலினுள் மூழ்கிவிடும். முகத்துவாரக் கரையில் அன்று நடந்த எமது அன்புப் போராட்டம் இப்போது மறைந்துவிட்டது. அவளும் நானும் அன்று எந்தவொரு முடிவுமின்றிப் பேசிய பேச்சுக்களையெல்லாம் அறிந்துள்ள யாராவது உளரென்றால், அது தற்போது கரையிற் பின்னுக்கு இழுத்துப் போடப்பட்டு, இற்றுப் போய்க் கொண்டிருக்கும் ஒடம் மட்டும்தான்.
மலர் : 28 செப்டம்பர் 1970
சிங்களச் சிறுகதைகள் 54

குதாளம் போனதே இனப் பார்
நிராதரவாளர்
தமிழாக்கம்: 'நீள்கரை நம்பி'
*தனபால்! விநோதப்பயணம் போகிறீரா? இல்லையா?'
'ஸேர்! போக வேண்டும்.
'அப்படியானால், அந்த நான்கு ரூபாவை இன்று தர வேண்டாம், நாளைக் காலையில் தானே போவது?
'ஸேர்! நான் நாளைக்குக் காலையிலேயே நான்கு ரூபாயை தவறாமற் கொண்டு வருகிறேன்.
'நல்லது. தனபாலாக்கு ஒரு அவகாசம் தருகிறேன். மற்றப் பிள்ளைகள் கட்டணஞ்செலுத்தி விட்டனர் என்று ஆசிரியர் சொன்னார். விநோத யாத்திரைக்கான பணம் செலுத்த வேண்டிய காலக்கெடுவை ஆசிரியர் எனக்கு மட்டும் தள்ளி வைத்தாரென்ற பூரிப்பில் இன்பம் கிளுகிளுத்தது.
பாடசாலை விட்டதும் வீடு நோக்கி விரைந்தேன். விடியுமுன், எப்படியாவது நான்கு ரூபாய் தேடித்தரும்படி அம்மாவை வேண்டினேன்.
'என் மகனே! நீ ஒரு கிழமையாகச் சொல்லி வருகிறாயே தேடித் தர முடியுமென்றால் நான் சும்மா இருப்பேனா? அம்மா என் சிரசை வருடியவாறு கூறினாள்.
'பாடசாலைக்கு மற்றப் பிள்ளைகள் போகிறார்களே! நான் போவ தில்லையா?” என்ற பின் என் கண்கள் குளமாகிவிட்டன. கண்ணீர் ஏணிப்படிகளாக வடிகின்றன. அம்மாவின் விழிகளிலிருந்தும் கண்ணீர்த்துளிகள் மெல்லக் கொட்டத் துவங்கி விட்டன. அவள் கிழிந்த முந்தானையினால் துடைத்துக் கொள்கிறாள். இது என் சலிப்பை அதிகரிக்கச் செய்துவிட்டது.
"மகனே! உலகில் வறுமையை விடப் பெரிதாக நினைக்க எதுதான் உள்ளது? வட்டிக்கடையில் வைத்துப் பணம் பெற உன் இடுப்பிலிருக்கும் வெள்ளிச் சரடையாவது தந்துவிடு!" அம்மா என் இடுப்புச் சரடை அவிழ்த்துக் கொண்டு வெளிக்கிட்டாள்.
6 5
| மல்லிகைப் பந்தல்

Page 41
உல்லாசப் பிரயாணத்திற்காகப் பணம் கிடைக்கப் போகிறதே என்ற ஓர் ஆனந்தம் என்னுள் கெம்பியெழுந்தது. கொண்டு செல்ல உடைகள்...? என் மனம் சளைக்கவில்லை. பழைய காற்சட்டைகளையும் கமீசுகளையும் கிணற்றடிக்குக் கொண்டு சென்று துவைத்துக் காயப் போட்டுள்ளேன். வெய்யில் மறையும் முன் உடைகள் முற்றாகக் காயவேயில்லை. கசுகசுப்புத் தன்மை இருந்தது. அவைகளைக் கொண்டுபோய்த் தலையணைக்குக் கீழ் வைத்தேன். முற்றத்தில் அம்மா வரும்வரை காத்திருந்தேன். அம்மா இரவு ஏழுமணிக்குப் பெருமூச்சோடு வீட்டையடைந்தாள்.
"அம்மா! காரியம் சாத்தியப்பட்டது தானே! இல்லையா?'
'ஊர் முச்சூடும் நாயாட்டம் அலைக்கழிந்தேன். மூன்று ரூபாய்தான் வட்டிக் கடையில் கிடைத்தது.'
என் பூரிப்பின் துரித வேகம் மந்தகதி அடைந்தது. 'ஏன்? அம்மாவிடம் ஒரு ரூபாய் பெறலாந்தானே!'
'அருமை மகனே! ஆமைக்கு எங்கே சிறகுகள்?' என்ற பின் முன் படிக் கட்டில் அமர்ந்து, குப்பி விளக்கின் வெளிச்சத்தில் வெற்றிலைப்பையை அவிழ்த்து அதில் அமைதியாக உறங்கும் பணத்தைக் கொட்டுகிறாள்.
'இருபத்தி மூன்று சதம்.'
'என் முயற்சி இனி பலிதமாகாது. குறை எவ்வளவு?'
'எழுபத்தியேழு சதம்.' *அப்பா வந்ததும் கேளு.'
'அம்மா! என்னால் முடியாது. அன்று கேட்டேன் இல்லையென்றுதானே விரித்தார்.'
'பரவாயில்லை. இன்றும் கேளு. சில்லறைக் காசுதானே, குறைவு.
அம்மாவின் வேண்டுகோளை ஏற்று அப்பா வரும்வரை காத்திருக்கிறேன். சுனையிருளைக் கிழித்துக் கொண்டு 'சாராய வாடை' என்னை எதிர்த்து வந்தது. ஆமாம்... அப்பா மூக்கு முட்டக் குடித்து விட்டுத்தான் வீட்டுக்கு வந்தார். தள்ளாடி வந்தவர் மெளனகமாகப் படுக்கையில் சாய்ந்தார். என்னுள் ஒரே பயப்பிராந்தி. எனினும் படுக்கை அருகில் நகர்ந்தேன்.
"அப்...பா!'
பதில் வரவேயில்லை. மக்கா)
சிங்களச் சிறுகதைகள் 56

“அப்பா!'
'ஏன்?'
எனக்கு எழுபத்தேழு சதம் தருவீங்களா?'
'சனியனே! என்னிடம் இல்லாததை எப்பிடித் தருவேன்?' என் மூஞ்சியில் சீறிப் பாய்ந்தார். நான் அம்மா அருகில் சென்று கண்களைத் துடைத்துக் கொள்கிறேன்.
அவளை, சுமக்க முடியாத சோகம் கவிந்துள்ளதை உணர்கிறேன்.
'அம்மா! வேலிஸ் மாமா வீட்டுக்குச் சென்றாவது எவ்வளவாகினும் கேளுங்களேன்.'
'என்னால் அது முடியாது. உனக்கு இயலுமாயின் அங்கு சென்று கேளு' என்ற பின்னும், அம்மா தென்னங்கீற்றுக்கள் சிலதைப் பற்றவைத்துக் கொண்டு முன்னிறங்கினாள். வேலிஸ் மாமா எவருடனோ கதைத்துக் கொண்டிருந்தார். நாங்கள் படிகளில் ஏறினோம்.
"ஏன்? நீங்கள் இவ்விருட்டில் இப்பக்கம்?
* சும்மா வந்தேன்.'' அம்மா சொன்னாள்.
'அப்படியா?”
தொடர்ந்து அவர், அம்மனிதர்களுடன் பேச்சுக் கச்சேரியை ஆரம்பித்தார்.
என் கண்கள் வீட்டை மேயத் தொடங்கின. சற்று நேரத்துக்குள் அம்மா மாமாவை அழைத்ததும் அவர் இப்படிச் சொன்னார்:
'நானும் அப்பக்கம் வர எண்ணி இருந்தேன். அதற்குள் நீங்களே இங்கு வந்துவிட்டீகள். மிக்க நல்லது. நாளை மறுநாள் என் கட்டிட வேலைக்காக மண் தேவைப்படுகிறது. தோண்டி எடுக்கும் மண்ணைச் சுமந்து வர வாருங்கள்."
'வருகிறேன்' என்று அம்மா ஈனசுரத்தில் சொன்னாள்.
மீண்டும் அம்மனிதர்களுடன் பேச ஆரம்பித்தார்.
அம்மா, மாமியின் காதருகில் வாயைக் கொண்டுபோய் குசுகுசுப்பாய் எழுபத்தேழு சதம் கேட்டாள். மாமி இதுபற்றி மாமாவிடம் பிரஸ்தாபித்தாள்.
'பணம் எதற்காகவென மாமா அம்மாவிடம் கேட்டார். பள்ளிப் பிள்ளைகள் சிறிய சுற்றுலாவொன்று போகிறார்களாம். அதில் என் மகனும் போகிறான்' மாமா அம்மாவை எச்சரிக்க ஆரம்பித்தார். 'உங்களுக்குக் கொஞ்சங்கூட மூளையில்லையா? இந்தச் சிறிசுகள் சொல்வதற்கெல்லாம் நீங்கள் கூத்தாடப்
61
| மல்லிகைப் பந்தல்

Page 42
போகின்றீர்களா? இந்தப் பயணம் போகாவிட்டால் என்ன? எழுத வாசிக்கத் தெரியாமாலா போகும்? என்னிடம் பணமில்லை. இருந்தாலும், பிள்ளையைக் கூடாத வழியில் அனுப்ப நான் தரப்போவதில்லை."
'அப்படியானால் சென்று வருகிறேன்' என்றவாறு புகை கிளம்பிக் கொண்டிருக்கும் தென்னங்கீற்றுக்களைப் பிடித்துக் கொண்டு அம்மா வெளிக்கிட்டாள்.
“இதோபார்! நாளை மறுநாள் தவறாமல் வந்து கொஞ்சம் உதவு. மாமா அம்மாவுக்குச் சொன்னார்.
கண்ணீரைச் சுமந்து கொண்டு மீண்டும் வீட்டை அடைந்தோம். அமைதியாக எரியும் தென்னங் கீற்றின் வெளிச்சத்தில் எங்கள் நிழல்கள் தெரிகின்றன. அதில் எங்கள் வறுமைப் பேய் அசைகின்றதோ? என்ற ஒரு பிரமை. வீட்டுக்கு வந்ததும் உறங்கினோம்.
அடுத்தநாள் - பயணம்.
'மகனே பணமில்லை என்றாள். நான் கீழே விழுந்து புரண்டு புரண்டு அழுதேன். கிழிந்த சட்டையின் பொத்தல்களும் பெருத்துவிட்டன! என் அழுகையின் வேதனைக் கனப்பைத் தாங்கவியலாத அம்மா குசினிப் பக்கமாகச் சென்று முகத்தை முந்தானைக்குள் புதைத்துக் கொண்டு விம்மி விம்மி அழுதாள். எங்கள் வீட்டுக் குட்டி நாயும் குரைக்கத் தொடங்கிவிட்டது. வீடு ஏகப் பிரளயம்.
எம் வீட்டருகேயுள்ள அங்கோ ஆச்சி, ஏன் தனபால் அழுகிறாய் என்றாள். காரணத்தைச் சொன்னேன். 'கொஞ்சம் பொறு என்றவாறு வெற்றிலைப் பையைக் கவிழ்த்தாள். ஐம்பது சத, இருபத்தி ஐந்து சத, பத்து சத நாணயங்கள்.
அவற்றை என்னிடம் தந்தாள்.
"நாளை கோவிலுக்குச் செல்லத்தான் இந்தக் காசை வைச்சிருந்தேன். பரவாயில்லை."
களிசான். சட்டைகள் மடித்து வைத்திருந்த இடத்திற்கு விரைந்தேன். ஈரம் இன்னும் வற்றவில்லை. எனினும் அவற்றை அணிந்து கொண்டு பாடசாலையை நோக்கி விரைந்தேன். அப்போது பாடசாலைத் தோட்டத்திலிருந்து பெரிய பஸ் வண்டி புறப்பட்டுச் செல்வதைக் கண்டுவிட்டேன்.
'நானும் வருகிறேன்! நானும் வருகிறேன்! ஐயோ! நானும் வருகிறேன் என்றவாறு ஓடினேன். என் கூக்குரல் அவர்கள் காதில் விழுந்தால்தானே? நான் வண்டி மறையும் வரை கண்கள் கலங்கப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
மலர் : 58 - ( I பெப்ரவரி 1973
சிங்களச் சிறுகதைகள் 58

திருமதி. T.B. சுபசிங்க
றாலஹாமி
தமிழாக்கம் : சிவா சுப்பிரமணியம்
பழமை வாய்ந்த அந்த வளவின் திறந்தவெளி விறாந்தையில் கம்பீரமாக வந்து நின்றார் றாலஹாமி'. கோட்டுப் பையில் கையைவிட்டு ஒரு தங்கக் கடிகாரத்தை எடுத்து நேரம் பார்த்தபடியே தாழ்வாரத்தில் ஒரு தூணோடு சாய்ந்து நின்ற) கறுத்த கட்டையான உருவத்தைப் பார்த்து பலன்டா, புறப்பாட. நேரம் சரிதானே :»ன்று கேட்டார். தன்னுடைய பெயரைக் கேட்ட மாத்திரத்தே அந்த உருவம் தலையிலிருந்த லேஞ்சியைக் கழற்றியபடி வந்து ஹாலஹாமியின் (முன் பணிவுடன் நின்றது.
'ஆம் ஐயா, 11லிவாக, inன் வாங்க வேண்டுமானால் இப்போதே புறப்பட்டாக வேண்டும்.
றாலஹாமி மெதுவாகக் குனிந்து தன் கைத்தடியை ஒரு கதிரை மேல் வைத்துவிட்டுக் கோட்டுப் பையிலிருந்து ஒரு கட்டுப்பணத்தை எடுத்து lெண்ணத் தொடங்கினார்.
'நாளைக்கு வரும் விருந்தினர்கள் எல்லோருக்கும் உணவளிப்ப I(தென்றால் குறைந்தது இருநாறு ருபாவிற்காவது மீன் வாங்க வேண்டும்' என்று சொன்னபடி நடந்து கொண்டே காசைப் பத்திரமாகக் கோட்டுப் பையிற்குள் திணித்துக் கொண்டார். றாலஹாமி பின் ஆசனத்தில் அமரும்வரை வாய் பொத்திக் காத்திருந்த பண்டா சாரதிக்கருகில் அமர்ந்து கொண்டான். அவனது சிந்தனா சக்கரம் வழமையான வழியில் சுழன்றது. இருநூறு ரூபாவிற்கு மீன் வாங்கும்போது தன் வித்தை நுணுக்கத்தை திறமையாகக் கடைப்பிடித்தால் இல்லையென்றாலும் இருபது ரூபாவாவது டிப்' அடிக்கலாம் என்று அவன் இதயம் குதூகலித்தது.
'ஐயா துவ பகுதியில் உள்ள மீனவர்கள் மிகவும் கெட்டவர்கள். புத்தி சாலிகளாக இல்லாதவர்களை என்ன நடந்தது என்று உணருவதன் முன்பே
ஏமாற்றிவிடுவார்கள்.
69 மல்லிகைப் பந்தல்

Page 43
'எனக்கு அந்தப் பிசாசுகளைத் தெரியும். அவர்களுக்கருகில்கூட நான்' போகமாட்டேன்.'
'நீங்கள் போகமாட்டீர்கள் ஐயா. ஆனால் நன்றாக உடுத்த ஒருவரைக் கண்டவுடன் விலை இரண்டு மடங்காவதோடு அவர்களது பேச்சுக்களும் சகிக்க முடியாதவையாகிவிடும். அன்று பொடிமாத்தயாவின் மனைவி றன்மெனிக்கா அவர்களோடு பேரம் பேசியதன் பயனாகச் சிவந்த முகத்தோடு போனதைப் பார்த்தேன்.'
'அவளுக்குத் தேவை. அவர்களோடு அளவுக்கு மிஞ்சிப் பழகுவானேன்?' பண்டா றாலஹாமியை பார்ப்பதற்கு இலகுவாகத் தன் முதுகைக் காரின் கதவோடு உரசியபடி உட்கார்ந்து கொண்டான்.
'என்னோடு அவர்கள் அந்தத் தந்திரங்களைக் கையாள மாட்டார்கள். எனக்கு எல்லோரையும் தெரியும். வள்ளங்களின் சொந்தக்காரன் வருவ தற்கிடையில் பிடித்தவற்றையெல்லாம் விற்பதற்குத்தான் இவர்கள் விரும்புவார்கள். மாதா கோவிலுக்குக் கொடுக்க வேண்டிய தொகைகூட அதனால் குறையும்.'
'கடவுளைக்கூட ஏமாற்றுகிறார்கள்.'
'பெருநாட்களில் பார்ப்பது போல் அவர்கள் தெய்வ நம்பிக்கையுடை யவர்களான போதும் இப்படியான விஷயங்களில் எதையும் பொருட் படுத்துவதில்லை.'
வீதிக்கு குறுக்கே பாய்ந்த ஒரு தெரு நாயிற்கு உயிர்ப்பிச்சை அளிப்பதற்காக கார் ஒருமுறை நின்று சென்றது. கொஞ்ச நேர அமைதிக்குப்பின் ஏதோ திடீர் யோசனை தோன்றியவன் போல பண்டா ஒரு புன்முறுவலுடன் திரும்பி றாலஹாமியைப் பார்த்தான்.
*சில நாட்களுக்கு முன் 'தூவ' கரையில் நடந்த ஒரு சம்பவத்தை ஐயாவிற்கு சொல்கிறேன்.
'சொல்லு. றாலஹாமி உற்சாகமூட்டினார்.
பண்டா தொண்டையைக் கனைத்துக் கொண்டான். 'மீனவர்களின் செய்கைகளில் சந்தேகங் கொண்ட வள்ளச் சொந்தக்காரர் ஒருநாள் வள்ளங்கள் வரும்போது தன் ஆட்களைக் கரைக்கு அனுப்பியிருந்தார். அதனால் மூண்ட சண்டையில் வந்தவர்கள் மீனவர்களிடம் அடிவாங்கிக் கொண்டு ஓடிவிட்டார்கள். ஆனால் அதன்பின் அடித்தவர்களில் ஒருவரைக்கூட அக்கரையில் காணவில்லை.'
'முதலாளியை ஏமாற்ற முயன்றதற்குத் தாராளமாக வேண்டும்.'
சிங்களச் சிறுகதைகள் 70

றாலஹாமி கோட்டுப் பையிலிருந்து சுருட்டு எடுப்பதைப் பார்த்த பண்டா காரை மெதுவாக ஓட்டும்படி சாரதியை எச்சரித்தான். றாலஹாமி சுருட்டைப் பற்றவைத்துக் கொண்டதும் கார் கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தைக் கூட்டிய போது பண்டா பேசத் தொடங்கினான்.
'எனக்கு இவர்களை நேரடியாகத் தெரியும். யாருக்குக் கஷ்டம் என்றும், யாருக்குப் பணம் தேவை என்றும் எனக்குத் தெரியும். போன கிழமை சுதுமாத்தயாவின் 'தான'விற்கு மிகவும் மலிவாக மீன் வாங்கினேன். அந்தோனி என்பவன் இரண்டு வருடமாகக் கல்யாணம் செய்வதற்கு முயற்சிக்கிறான்; ஆனால் பணம்தான் அவனிடமில்லை. அன்று அவனுக்கு அதிக மீன்கள் பிடிபட்டன. சாதாரணமாக அவனிடம் விலை கேட்டேன். வாங்குவதற்கு ஆர்வமிருப்பதாக அவர்களுக்குக் காட்டிக் கொள்ளக்கூடாது.' பண்டா எச்சரித்தான்.
'அவர்களுக்கு ஏற்ற ஆள்தான் நீ என்று றாலஹாமி சொன்னார் சுருட்டுப் புகையை ஊதியவண்ணம்.
'அவன் நாற்பது ரூபா சொன்னான். நான் பதினைஞ்சு ரூபாவிற்குக் கேட்டேன். அவன் என்னை முறைத்துப் பார்த்ததும் நான் அவனுக்கு முன்னாலேயே காசை மடித்து வைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினேன். உடனே அவன் என்னைக் கூப்பிட்டு இருபது ரூபா தாரும் என்று சொன்னான். நான் பதினைந்து ரூபாவில் ஒருசதமும் கூடக் கொடுக்கவில்லை. உண்மையில் அந்த மீன் நாற்பது ரூபா பெறும். அதற்காகச் சுதுமாத்தயா எனக்கு நல்ல வெகுமதி கொடுத்தார்.'
'அவன் இன்றும் இருப்பானா?'
'நிச்சயமாக இருப்பான் ஐயா. கல்யாணத்திற்குக் காசு சேர்க்க வேண்டு மென்பதால் புயல் வந்தால்கூட அவன் தங்கமாட்டான். மற்றவர்கள் அவ்வளவு லேசானவர்களல்ல.' பண்டா தொடர்ந்தான். 'விசேஷமாகக் கிழட்டுச் செபஸ்தியான் ஒரு விடாப்பிடியன். அவன் ஒரு குட்டித் தலைவன். மற்றவர்களைப் போலவே கொட்டகையில் வாழும் பரம ஏழையென்றாலும் விலையை குறைத்துக் கொடுக்கமாட்டான்.'
கார் மெதுவாகச் சென்று கடலை நோக்கித் திரும்பியது. குளிர்ந்த 'ஜில்' என்ற கடற்காற்று ஓடும் காரின் திறந்த ஜன்னலுக்கூடாகப் புகுந்து அந்த மூவருக்கும் இதமளிக்க... பண்டா குறிப்பிட்ட ஒரு இடத்தில் கார் நின்றது. அந்தச் சுற்றாடலிலேயே யாராவது இருக்கும் அறிகுறிகள் தென்படவில்லை. றாலஹாமி இறங்குவதற்காகச் சாரதி கார்க் கதவைத் திறந்து விட்டான்.
ரம்மியம் கொளிக்கும் சூழ்நிலை. அமைதியான கடலைக் காலைக் கதிரவனின் துடுக்குமிக்க கதிர்கள் தொட்டுத் தொட்டுச் சீண்டிவிடும் அழகு
மல்லிகைப் பந்தல்
7]

Page 44
இதயத்தைப் பறித்தது. துரத்தில் தெரிந்த, மரங்களுக்கு பj,தியில் செய்பவரின் குடில்கள் 1பங்.,லகத், (தெரிந்தன.
இயற்கையின் எழிற்கோ லத்தை ரசித்துப் பக்கப்பட்ட 11த, தன் கண்களின் (மேற்புருவத்தில் தன் வலது4ை,யை வைத்தபடி விரிந்து பரந்த கலையே (வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த, 11 லாரி மெதுவாகத் திரும்பி பாண்டII) நவம், (கேட்டார், 'எங்பே, உ ன்னுடைய ஆட்கள்? »ன்று.
பண்! 1வின் பா(க்கப்பட்ட மக்கள் துயரத்,ரே, வளர்க்குருவியின் பரிமாணத்தில் (தோன்றிய வள்ளங்களை அடையாளங் கண்டு விட்டன.
'அதோ வள்ளங்கள் வருகின்றன. எப்போதும் நேரத்தோடு வருவது நல்லதுதானே! இங்கே கொஞ்ச நேரம் நிற்க, (முடியாவிட்டால் சந்தையில்
இரண்டு, 1 பகு, வி)), (கு, மீன் IIங், லா11ம்).
றாலறாமி (மெளனமானார்.
அவர்கள் கதைத்துக் கொண்டிருக்கும் போதே, ஒரு கூட்டம் (பெண்கள் அந்தப் பக்கமாக, வந்தார்கள். சிலர் குழந்தைகளோடும் கூட அவர்கள் எல்லோரும் ஆழ்கடலில் (ரென்றிருக்கும் மீனவர்களின் குடும்பத்தினர். அன்றைய பிடிப்பைக் கொண்டு செல்வதற்காகக் » படையோடு வந்திருக்கிறார்கள். ஒரு துண்டுத் துணியால் குறுக்குக் கட்(டு, கட்டி ) 1 லின் மேல் பாகத்தை, மூடி மறைத்திருக்கும் சட்டையின் கீழுமுனைகளை 1 மார்பகங்களின் அடி மையத்தில் 'சொடுக்கி (முடிந்திருக்கும் பாரம்பரிய உடை, கழுத்தைச் சுற்றி வளைந்திருக்கும் அழுக்குக் கயிற்றிலே தொங்கும் குருசு', க வின் பேரிரைச்சலை மேவி ஒலிக்கும் துடித்த குரல், எல்லாவற்றிற்கும் மேலாகப் பஞ்சடைந்த, காமன்களும்) 1மரத்துப் போன (முகமும் அவர்களது வாழ்க்கைப் பாதையிலே 1மலிந்து கிடக்கும் *கரடுமுரடு, கருக்குக் கட்டிங் கூறின.
இந்தப் பெண்களிடம் வந்தவித பொறுமையான( 1மும்) இல்லை. பாலையபில்) தங்கள் தலைவர்களை வழியனுப்பி வைப்பதும், மீண்டும் அடுத்த நாளோ அதற்கடுத்த நாளோ ,அதிகாலையில் அவர்களை வரவேற்பதும் இவர்களது அன்றாட வாழ்வில் சர்வ சாதாரணம். எனவே வள்ளங்கள் கரையை ,அறுக அணுக றாலவஹாமி பொறுமையில்லாது தவித்தது போல இப்பெண்கள் தவிக்கவில்லை).
வள்ளங்கள் கரை பேறின. பெண்கள் தங்கள் சேலைகளை முழங்கால் வரை தூக்கி வரிந்து கட்டிக் கொண்டு) வள்ளங்களுக்கருகில் போய் நின்றார்கள். வள்ளங்களையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்ற) றாலஹாமி மெதுவாக, நடந்து முன்னேறினார்.)
பண்டா அருகில் வந்து, நீங்கள் இப்படியே நில்லுங்கள் ஐயா. நான் எல்லாவற்றையும் பார்க்கிறேன்" என்று கூறிவிட்டு) வள்ளங்களை நோக்கிக்
சிங்களச் சிறுகதைகள் 72

கம்பீரமாக நடந்தான்.
ஒரு வள்ளத்திலிருந்து தாடிக்காரச் செபஸ்தியான் வெறும் வலையைக் கரைக்கு எறிந்தான். அதைத் தொடர்ந்து மற்ற வள்ளங்களிலிருந்தும் வெறும் வலைகள் கரைக்கு எறியப்பட்டன. யாரும் எதுவும் பேசவில்லை. எல்லோருடைய இதயங்களுள்ளும் மிகப்பெரிய போராட்டம் நடந்து கொண்டிருந்தது. எங்கும் ஒரே நிசப்தம். )
“என்னுடைய நேரத்தில் இரண்டு மணித்தியாலங்கள் வீணாப் போச்சு என்ற றாலஹாமியின் கடுமையான குரல் அமைதியைக் கிழித்துக் கொண்டு கிளம்பியது. யாரையும் பொருட்படுத்தாமல் திடீரெனச் சென்று காரில் ஏறிக் கொண்டு கதவைப் படார்' எனச் சாத்தினார். பண்டாவும் குனிந்த தலையுடன்
ஏறிக்கொண்டான்.
தாடிக்காரச் செபஸ்தியான் வெறுப்போடு நகரும் காரின் திசையிலே காறி உமிழ்ந்தான்.
இதழ் : 6 மார்ச் 1967
73 மல்லிகைப் பந்தல்

Page 45
வீ.எம். ஐ
rா
அந்த வயலின்காரன்)
தமிழாக்கம்: பெரி. சண்முகநாதன்
இந்த நாலு வயலின் தந்திகளும் ஒரு காகிதப் பொட்டலத்தினுள் இருக்கக் கண்டேன். புழுதியடைந்து போயிருந்த அந்தப் பழைய பொட்டலம் மேசை மீதிருந்த புத்தகங்களினிடையே கிடந்தது. தற்செயலாக எனது கண்ணில் பட்ட அது பழையதொரு கதை என் நினைவில் பசுமையாக மீட்டு விட்டது.
எனது கைக்கு அந்தப் பொட்டலம் வந்து பல வருடங்களாகி விட்டன. நான் மாறிமாறிச் செல்லும் ஒவ்வொரு விடுதி வீடுகளுக்கும் எப்படியோ என்னையறியாமலேயே அது என்னுடன் வந்து கொண்டிருந்திருக்க வேண்டும். அடிக்கடி இடம் மாறிச் சென்றலையும் யாசகர்களைப் போலவே வாடகைக்குக் குடியிருப்போர்களுக்கும் இந்த அடிக்கடி இடம்மாறி அலையும் பழக்கம் உண்டு. உண்மையில் யாசகனுக்கும் வாடகைக்குக் குடியிருப்பவனுக்கும் நிரம்ப ஒற்றுமை உண்டு. மூட்டை முடிச்சுகளுடன் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்கு அசைந்து திரியும் யாசகர்களைப் போலவே வாடகைக்குக் குடியிருப்போரும் தங்களது பொருட்களுடன் இடம் மாறி மாறித் திரிகின்றனர்.
நான் எத்தனை தடவைகள் மாறி மாறிப் பல வாடகை வீடுகளில் இருந்துள்ளேன் என்பது எனக்குத் தெரியும். எனது படுக்கை, மேசை, கதிரை ஆகியவற்றைக் கட்டிக் கொண்டு டாக்ஸியொன்றைப் பிடித்துக் கொண்டு புதியதொரு வீட்டுக்குப் போய் அதைச் சொந்தமாக்கிக் கொண்ட சம்பவங்களெல்லாம் எனது நினைவில் நிற்கின்றன. இப்போதும் இன்னொரு வீட்டுக்கு மாறுவதற்காக இந்த அறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்த போதே இந்தக் காகிதப் பொட்டலம் கண்ணில் பட்டது. நான் அதைப் பிரித்து அதில் நாலு தந்திகளையும், சில ஆணிகளையும் கண்ட போது ஒருகணம் அவை என்னவென்றுகூடத் தெரியாமல் நின்று விட்டேன்.
நான் வயலின் வைத்திருந்த காலம் ஒன்று இருந்தது. அது என்னுடைய நண்பரொருவருடைய வயலின். அப்போதெல்லாம் அடிக்கடி நான் வயலின் வாசிப்பது வழக்கம். ஆனால் அதைச் சரியான முறையில் வாசிக்கப் பழகுவதற்கு
சிங்களச் சிறுகதைகள் 74

எனக்கு நேரமே கிடைக்கவில்லை. அதனால் சில காலத்தின் பின் வயலின் படலத்துக்கு முற்றுப் புள்ளி வைத்து நண்பரிடமே அதைத் திருப்பிக் கொடுத்து விட்டேன். ஆனால் இந்தப் பொட்டலத்திலுள்ள தந்திகளும் ஆணிகளும் அந்த வயலின் சம்பந்தப்பட்டவையல்ல.....
இந்தப் பொட்டலத்தைப் பற்றி ஒரு கதை உண்டு. அந்தக் கதையில் அதிகம் உண்மையிருக்கிறது. இல்லாவிட்டால் இந்தப் பொட்டலத்தை இன்னும் இங்கே எனது மேசையில் காண முடியாது. ஆனால் அந்தக் கதையினுள் வேறு சிறிய பொடிகளும் சேர்ந்து விட்டதனால் அது முற்றாக உண்மையான கதையென்று யாரும் துணிந்து ஒப்புக் கொள்ளச் சங்கடப்பட வேண்டிய நிலை... ஆனால், நீங்கள் விரும்பியபடி இதைப்பற்றி அபிப்பிராயங் கொள்ளலாம்.
அந்த வார முடிவில் நான் வீட்டுக்குப் போகவில்லை. எனது சக வாடகைக்காரர் சுமனாவுடன் நான் கண் ஆஸ்பத்திரிச் சந்திக்குப் போனேன். உண்மையில் புதியதொரு வீடு தேடும் எண்ணத்திலேயே புறப்பட்டிருந்தோம். வழக்கமாக பரபரப்புடன் உயிராக மிளிரும் அந்தச் சந்தி அன்று வார விடுமுறையாதலால் சிறிது அமைதியான நிலையில் காணப்பட்டது. வழக்கம். போல ஒருவருடன் ஒருவர் 'சேட்டை'கள் செய்து கொண்டிருக்கும் மனிதர்களையும் நடைபாதையில் காணமுடியவில்லை. அந்த நடைபாதை வளைவில் அதையொட்டியிருந்த சுவர் இரண்டாய் வளைகின்ற மூலைச் சுவருடன் சாய்ந்திருந்தபடியே ஒரு கிழவன் வயலின் ஒன்றை மெதுவாக மீட்டிக் கொண்டிருந்தான்.
அந்த வயலின் நிரம்பப் பழையது. அவனும் நிரம்பக் கிழடு தட்டிப் போயிருந்தான். அவன் இந்த இடத்துக்குப் புதியவனாயிருக்க வேண்டும்; இல்லாவிட்டால் அவனை முன்பே தான் காண நேர்ந்திருக்குமே! நானும் சுமனாவும் அந்தக் கிழவனைக் கடந்து போய்க் கொண்டிருந்தோம். எங்கள் காதுகளுக்கு நிரம்பவும் பரிச்சயமான ஒரு பாடலின் மெட்டை அவன் மீட்டிக் கொண்டிருந்தான். இந்த இதமான மெட்டைக் கேட்டதும் அவனடியில் நின்று விட்டோம். அவனுக்கு முன்னால் ஓர் அழுக்கடைந்த துணி விரிந்து கிடந்தது. அதில் மூன்று ஐந்துசதக் குத்திகள் கிடந்தன. அவ்வழியால் போவோர்களிற் பலர் அவனைக் கவனிப்பதாய்க்கூட எனக்குத் தோன்றவில்லை. அவன் சுவருடன் ஒடுங்கிப் போய் உட்கார்ந்திருந்தான்.!
அவனது மேலுடம்பில் ஒரு பிய்ந்து போன கோட்டைத் தவிர வேறொன்று மிருக்கவில்லை. நான் அவனது விலா எலும்புகளை எண்ணக்கூடிய அளவுக்கு அவன் மெலிந்து போயிருந்தான். தலையில் நாலைந்து மயிர்களே இருந்தன. அவனது மெலிந்த தோற்றம் சற்றுப் பயமுறுத்தக் கூடியதாயிருந்தது. நன்றாகத் தாழ்ந்து போயிருந்த அவனது கண்களில் ஒருவித வெறுமையே தேங்கிக் கிடந்தது. சிறிது நேரம் அந்தக் கண்களை உற்றுப் பார்த்த நான் அவைகளில் ஒருவித அலட்சியக் கீற்று மின்னுவதாகக் கண்டு கொண்டதாயும் நினைத்துக்
7 5
| மல்லிகைப் பந்தல்

Page 46
கொண்டேன். அவ்வழியால் நடந்து போகும் ஆயிரக் கணக்கானவர்களில் பத்துப் போராவது அக் கிழவன் வயலின் வாசித்துக் கொண்டிருப்பதைக் கவனித்திருப்பார்கள் என்று எனக்குப் படவில்லை. வெளியுலகம் என்று ஒன்றிருப்பதை மறந்து விட்டவன் போல அடுத்தடுத்துப் பல பாடல்களின் மெட்டை மீட்டிக் கொண்டிருந்தான். அந்த வயலின் மிகப் பழையதாயும் பழுதடைந்துமிருந்ததனால் அதனிலிருந்து வெளிப்படும் மெட்டுக்களைக் கண்டு பிடிப்பது சற்றுச் சிரமமான காரியமாகவிருந்தது.
10 ஆணிகள் இருக்க வேண்டிய இடங்களிலெல்லாம் சிறுசிறு நூல்களினால் ஆன பொருத்துக்கள் காணப்பட்டன. நல்ல நாதத்தை ஏற்படுத்த முடியாதவாறு தந்திகளெல்லாம் இறுக்கமாயில்லாது இளகிப்போயிருந்தன. ஆனால் அவன் எவ்வித சலிப்புமில்லாமல் அதை மீட்டியபடியே இருந்தான். தந்திகள் மேல் அவனது நடுங்கும் விரல்கள் நளினமாக நெளியும் லாவகத்தை நான் ஆச்சரியத்துடன் கவனித்தேன். அவனுடைய விரல்கள் எத்தனை வருடங்களாக அந்தத் தந்திகளை வருடிக்கொண்டிருக்கின்றனவோ என்று நினைத்து நினைத்து ஆச்சரியப்பட்டேன். அந்த வயலின் மாத்திரம் நல்ல நிலையிலிருக்குமானால், அவன் மீட்டுவதைக் கேட்பது நிச்சயம் இன்னும் சுகமானதாயிருக்கும்!
அவன் ஆரோக்கியமான உடலுடன், பெருமளவு உணர்வுடன் நன்றாக வயலினை வாசித்த ஒரு செழுமையான காலம் நிச்சயமாக முன்பு இருந் திருக் கும். சிலவேளைகளில் பொது மேடையொன்றில் நூற்றுக்கணக்கானோரின் பாராட்டுதல்களுக்கிடையே அவன் வயலின் வாசித்த காலமும் இருக்குமோ? அவனது சங்கீதத்தை இன்னும் வேண்டிக் கூக்குரல்களும் வேண்டுதல்களும் நிச்சயம் எழும்பியிருக்கும்!
ஒரு இளம் ஜோடியொன்று எங்களைத் தாண்டிச் சென்றது. அப்படிச் சென்றபோது பெண் ஏதோ ஒன்றை தனது கணவனின் காதினுள் குசுகுசுத்தாள். பின்பு இருவரும் சிரித்தபடியே சென்றனர். நாங்கள் குனிந்தபடியே கிழவனைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பற்றிதான் அவர்கள் குசுகுசுத்தும் சிரித்துமிருக்க வேண்டும். நான் எனது பையினுள் கையை விட்டுத் துழாவி, அகப்பட்ட ஒரு நாணயக் குத்தியை எடுத்துக் கிழவனடியில் போட்டேன். புதிதாகச் சில தந்திகளையும், ஆணிகளையும் வாங்கிக் கொடுத்து அந்தப் பழைய வயலினைத் திருத்துவதில் அக்கிழவனுக்கு உதவி செய்வதென்று தீர்மானித்துக் கொண்டேன்.
சம்பள நாளுக்கு இன்னும் ஒரு வாரகாலமிருந்தது. சம்பள நாளும் வந்தது. அன்று சங்கீதப் பொருட்கள் விற்பனையாகும் கடையொன்றுக்குப் போய்ச் சில தந்திகளையும், ஆணிகளையும் வாங்கிக் கொண்டேன். அன்று மாலை வேலை முடிந்ததும் கண் ஆஸ்பத்திரிச் சந்திக்குப் போனேன். அந்த வயலின்காரக் கிழவனைச் சந்தித்துவிட வேண்டுமென்ற எனக்கிருந்த ஆவலையும் பதட்டத்தையும் கண்டு எனக்கே திகைப்பாயிருந்தது. புதிதாகத் தந்திகளை அந்தப் பழைய வயலினில் பொருத்தியபின் அந்த வயலினிலிருந்து சுரக்கக்
சிங்களச் சிறுகதைகள் 76

கூடிய இனியநாத வெள்ளத்தில் மிதக்க வேண்டுமென்று எனக்கு ஒரு வெறி மிகுந்த ஆர்வம் ஏற்பட்டிருந்தது. அடுத்த சம்பளத்தில் ஒரு 'போ'வையும் வாங்கிக் கிழவனிடம் கொடுத்து விட்டால், பின்பு அவனது வயலின் ஓரளவுக்குப் புதியதாகி விடும் என்று எண்ணிக்கொண்டே, கண் ஆஸ்பத்திரிச் சந்தியை நெருங்கினேன்.
ஆனால் கிழவனை அங்கு காணமுடியவில்லை. நான் சுற்றிலும் கூர்ந்து பார்த்தேன். அவனது உருவம் கண்ணிலே படவில்லை. பக்கத்திலிருந்த இளநீர் வியாபாரியிடம் கிழவனைப் பற்றிக் கேட்டேன். கடந்த இரண்டு நாட்களாய்க் கிழவனைத் தான் அங்கு பார்க்கவில்லையென்றும், அவன் எங்கு போனானென்று தனக்குத் தெரியாதென்றும் இளநீர் வியாபாரி கூறினான். மற்றைய நடைபாதை வியாபாரிகளிடமும் விசாரித்துப் பார்த்தேன். அவர்களும் தங்களுக்குத் தெரியாதென்று சொன்னார்கள். நான் கிழவனுக்குச் சொந்தக்காரனா என்ற மாதிரி என்னைப் பற்றி அறிவதில் சிலர் முனைந்தார்கள்.
இப்போது எத்தனையோ வருடங்கள் கடந்து விட்டன. புழுதியடைந்த இந்தக் காகிதப் பொட்டலம் இப்போதும் என் கையில் இருக்கிறது. இனிமேல் அது எனக்குத் தேவையில்லை. என்னிடம் வயலினுமில்லை. அந்த வயலின்காரக் கிழவன் இதுவரைக் காலமும் என் கண்களில் படவேயில்லை. வயலின் வைத்திருக்கும் வேறு யாருக்காவது நான் இந்தப் பொட்டலத்தைக் கொடுத்து உதவலாம். ஆனால் அதற்கு என் மனம் ஏனோ இடந்தருவதாயில்லை. யாராவது வயலின் வாசிப்பதைக் கேட்கவோ, அல்லது வயலின் வாத்தியத்தை அனுபவிக்கவோ எனக்கு இஷ்டமில்லை. அதனால்தானோ என்னவோ இந்தப் பொட்டலம் புழுதியடைந்த நிலையில் இன்னும் எனது புத்தகங்களிடையே இடம் பெற்றிருக்கிறது.
இதழ் : 11 108 திவ 15.09.1967
77 மல்லிகைப் பந்தல்

Page 47
பொரி. ஜி. பொத்தேன்”
துண்டுப் பென்சில்
தமிழாக்கம்: செந்தீரன்
வகுப்பிலுள்ள எல்லா மாணவர்களும் கணக்குப் பாடத்தினைச் செய்து முடிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
'யார் முதலில் செய்து முடித்தது?
'நான் செய்து முடித்துவிட்டேன் ரீச்சர்!'
'அப்படியானால் இங்கே கொண்டுவாரும்!'
கதிரையைப் பின்னால் தள்ளிக் கொண்டெழுந்த நிஹால் கணக்குக் கொப்பியை எடுத்துக் கொண்டு மேசைக்கருகில் ஓடி வந்தான்.
'எல்லாக் கணக்குகளையும் செய்து முடித்துவிட்டேன் ரீச்சர்!
சற்றுநேரம் கொப்பியை உற்று நோக்கிய நான்...
'இதனை வாசிக்க முடியுமா...? எனக்கொன்றும் விளங்கவில்லையே... கோழிக்கால்கள் மாதிரிக் கோடுகள் மாத்திரந்தான் தென்படுகின்றன... நீர் இன்றும் புதுப்பென்சில் கொண்டு வரவில்லையா...'
நிஹால் மெளனமாக நின்றான்.
'எங்கே எடு பார்ப்போம் பென்சிலை!...
அவன் கைக்குள் பொத்தியிருந்த ஓர் அங்குலமேனும் நீளமில்லாத பென்சில் துண்டை என் முன் நீட்டினான்.
'நான் நேற்றும் உனக்குச் சொன்னேனல்லவா புதிய பென்சிலொன்று கொண்டு வரும்படி... இப் பென்சில் துண்டைத்தான் எந்நாளும் எடுத்து வருகிறாய். இதைக் கொண்டெழுதினால் எழுத்துக்கள் தெரிவதும் இல்லை... வாசிக்கவும் முடியாது... கணக்குகளை சரியாகவும், கெதியாகவும் செய்து முடித்துத்தான் என்ன பயன்...?'
சிங்களச் சிறுகதைகள் 78

வகுப்பிலுள்ள ஏனைய மாணவர்கள் தங்களது வேலைகளையும் மறந்து என்னையும் நிஹாலையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
'ஏன் பேசா மடந்தையாயிருக்கிறாய். நான் எத்தனை நாள் தான் சொல்வது. பென்சில் இன்றிப் பாடசாலைக்கு வரவேண்டாம் என்று நேற்றுக் கூட உன்னை எச்சரித்தேனல்லவா...?'
'புதிய பென்சிலை கொண்டு வரமுடியவில்லையே டீச்சர்...'' அவன் ஈனஸ்வரக் குரலில் பேசினான்.
'எங்கே எடு பென்சில் துண்டை...!'
நான் அவனது கையிலிருந்த பென்சில் துண்டைப் பறித்து சுவருக்கப்பால் எறிந்தேன்.
என் கோபம் எல்லை மீறியது.
'போ வெளியே...!'
நிஹால் வகுப்பிலிருந்து வெளியேறி சுவருக்கருகே போய் நின்றான்.
'சுவரில் சரியாதே...! சற்றுத் தூர விலகிநில்...!'
அவன் பயந்து நடுங்கிக் கொண்டே பாடசாலை முன்றலில் - வெய்யிலில் - போய் நின்றுகொண்டான்.
'கணக்குகளைச் செய்து முடித்தவர்கள் இங்கே கொண்டுவரவும். மற்ற மாணவர்களைப் பார்த்துக் கூறினேன்.
மாணவர்கள் ஓடிவந்து என் மேசையைச் சூழ்ந்து நின்று கணக்குக் கொப்பிகளைக் காட்டிய வண்ணமிருந்தனர்.
நேரமோ நகர்ந்து கொண்டிருந்தது...
'தடார்...!'
மாணவர்களைத் தள்ளிக் கொண்டு கதிரையை விட்டெழுந்த நான் சுற்றுமுற்றும் பார்த்தேன்.
'நிஹால் விழுந்துவிட்டான் டீச்சர்...!' மாணவர்களனைவரினதும் குரல்கள் ஏககாலத்தில் ஒலித்தன.
ஒரு சில மாணவர்கள் ஓடிப்போய் அவனைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள்.
'அவனைக் கொண்டுபோய் ஓய்வறையில் கிடத்துங்கள்..!' என மாணவர்களைப் பணித்துவிட்டு அவர்களைப் பின்தொடர்ந்தேன்.
79 மல்லிகைப் பந்தல்

Page 48
'வகுப்பில் மிகவும் கெட்டிக்கார மாணவனல்லவா நிஹால்!... ஏன் அவனைத் தண்டித்தாய்...?' எனக் கேட்டுக் கொண்டே வந்தாள் என் சக ஆசிரியை ஒருத்தி.
19 'இருந்தும் என்ன...! எந்நாளும் ஓர் அங்குலமேனும் நீளமில்லாத பென்சில் துண்டைத்தான் எடுத்து வருகிறான். அதைக் கொண்டெழுதினால் தெளிவுமில்லை... வாசிக்கவும் முடியாது... சொன்னால் கேட்பதுமில்லை... எனவே நான் அவனை வெய்யிலில் நிறுத்தி வைத்தேன்' என்று நடந்தவற்றை விளக்கினேன்.
'அப்படியானால் அவன் வெய்யிலின் தாக்கத்தால் சுய உணர்விழந்து வீழ்திருப்பான்...!' என்று கூறியவண்ணம் நிஹாலிடம் நெருங்கிச் சென்றாள் அவள்.
'நிஹால் உனக்கு என்ன நடந்தது...?' என்று அன்பொழுகக் கேட்டாள்.
'தலை சுற்றிக் கொண்டு வந்தது ரீச்சர்...'
'காலையில் என்ன சாப்பிட்டாய்...?
'எதுவும் சாப்பிடவில்லை ரீச்சர்...!' இப்படி அவன் கூறியதும் அவள் என் முகத்தைப் பார்த்தாள். நான் எதுவும் பேசத் தோன்றாது நிஹாலின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
'ஏன் காலையில் சாப்பிட எதுவும் சமைத்திருக்கவில்லையா...?'
'சமைப்பதற்கு வீட்டில் எதுவும் இருக்கவில்லை ரீச்சர்...!'
“அப்படியானால் கடையில் ஏதும் வாங்கியிருக்கலாமே...!
'கடையில் வாங்கவும் அம்மாவிடம் பணமில்லையே ரீச்சர்!'
"மற்ற நாட்களிலும் பாடசாலைக்கு வரும்போது சாப்பிடுவதில்லையா...?'
*சில நாட்களில் அம்மா ஏதும் தேடிக் கொண்டு வந்து தருவா... எதுவுமே கிடைக்காத நாட்களுமுண்டு...!'
*உன் அப்பா என்ன செய்கிறார்...?!'
*அப்பா இல்லை...!'
'அம்மா..?'
'வீட்டிலிருந்த வண்ணம் ஓலை, பாய் பின்னுவா...!'
*அக்கா... அண்ணன்மார் யாரும்...?'' |
சிங்களச் சிறுகதைகள் 80

'இல்லை.'
'காலையில் எதுவுமே சாப்பிடாமல் வெறும் வயிற்றோடு வெய்யிலில் நின்றதால்தான் நிஹால் சுய உணர்விழந்து மயங்கி வீழ்ந்திருக்கிறான்...' என்று பெருமூச்சுடன் என்பக்கம் திரும்பிக் கூறினாள் என் சக ஆசிரியை.
என் நெஞ்சம் வேதனையில் கசிந்தது.
'நாளை நான் வரும்போது நிஹாலுக்குப் புதுப்பென்சிலும் கொப்பியும் கொண்டு வந்து தருகிறேன்!...' என்று நான் வாஞ்சையுடன் கூறினேன்.
'நாளையிலிருந்து... நான்... பாடசாலைக்கு... வரமாட்டேன், ரீச்சர்...!' அவன் மிகவும் சோர்ந்த குரலில் சொன்னான்.
'ஏன்...!'
* என்னை நாளையிலிருந்து... பங்களாவொன்றுக்கு... வேலைக்கு அனுப்பப் போவதாக அம்மா சொன்னா...!' அவன் அழாக்குறையாகக் கூறினான்.
என்னையறியாமலே என் கண்கள் கலங்கின. எதுவுமே பேசத் தோன்றாது பொங்கி வந்த கண்ணீரைக் கைக்குட்டையால் மூடித் தடுத்துக் கொண்டேன். - - - - - - - ஆகஸ்ட் 1976
ஆகஸ்ட் 1976
பயோ இன்பா ப
மல்லிகைப் பந்தல்

Page 49
R.G. வீஜயவர்த்தன
குருவிக் கூடு
தமிழாக்கம்: சிவா சுப்பிரமணியம்
அண்மையில் எங்கள் வீட்டில் வந்து குடியேறிய புதிய 'தம்பதிகள்' என்னைப் பொறுத்தளவில் வெற்று மனத்திற்குத் தீனி போட வேதனை கலந்த எண்ணங்களை வலிந்துதேடும் நிலையை இல்லாமற் செய்துவிட்டன. ஓய்வு நேரங்களில் கலை இலக்கியம் பற்றிச் சில நேரங்களிலும் என் ஆற்றாமையைப் பற்றி மற்றைய நேரங்களிலும் சிந்தனை செய்தபடியே சாய்மனைக் கதிரையில் படுத்திருப்பதையே வழக்கமாக்கிக் கொண்ட எனக்கு, இப்புதிய திருப்பம் மகிழ்ச்சிகரமானதே. அவர்களுடைய வருகைக்குப் பின் என் சிந்தனை முழுவதும் அவர்களுடைய வளர்ச்சியைப் பற்றியதாகவே இருந்தது. என்னுடைய மனைவியோ அவர்களது வருகை எங்களை எதிர் நோக்கி வரவிருக்கும் மகிழ்ச்சிகரமான காலத்திற்கு அறிகுறி என்ற நம்பிக்கைச் செடி நட்டு நீரூற்றத் தொடங்கினாள்.
அவர்களுடைய வாழ்க்கையில் எந்த விதமான கவலையுமில்லை. சுதந்திரமாகச் சிறகடித்துத் திரியும் சின்னஞ்சிறு சிட்டுக்குருவிகள். அவை வாழ்க்கை நடத்தும் விதமே ஒரு தனித்துவம் வாய்ந்தது. அந்த ஆனந்த வாழ்க்கை ஏன்தான் மனிதருக்குக் கிடைப்பதில்லையோ!
விடிந்ததும் கதவைத் திறப்பேன். திறந்ததும் அங்குமிங்குமாக ஒன்றையொன்று துரத்தி மகிழும். அச்சிட்டுக் குருவிச் சோடிதான் என் கண்ணில் படும். அவற்றின் காதல் வாழ்க்கையைப் பார்க்கும்போதெல்லாம் என் மனதில் என்னையுமறியாமல் இனந்தெரியாத ஒரு இன்பமும் அதைத் தொடர்ந்து பெருமையுணர்ச்சியும் தோன்றும்.
நானும் ரூபாவும், சகல சம்பத்தும் பெற்று வாழ்க, என்ற வாழ்த்துக்களோடு தம்பதிகளாகி இப்போது பத்தாவது வருடம். இந்தப் பத்து வருடங்களிலும் முதல் இரண்டு வருடங்களைத் தவிர மிகுதிக் காலத்தை வேதனைகளுக்கு மத்தியில்தான் கழித்திருக்கிறோம். திருமணமாகி இரண்டு வருடங்களின் பின் ஒரு குழந்தை பிறக்க வேண்டுமென்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் தாயாகும் அறிகுறிகள் மட்டும் ரூபாவிடம் தோன்றவில்லை. இந்த ஏமாற்றம் எங்கள் வாழ்க்கையை அதிகமாகப் பாதித்தது. எங்கள் தாம்பத்திய வாழ்க்கை முறிந்துவிடாமல் இருந்ததையிட்டு உண்மையாகவே நான் இன்று ஆச்சரியப்படுகிறேன்.
சிங்களச் சிறுகதைகள் 82

சிட்டுக்குருவிகள் இரண்டும் எங்கிருந்தோ பறந்துவந்து கூட்டுக்கருகில் இருந்தன. என் சிந்தனைக்கு மீண்டும் அவற்றின்பால் திரும்பியது. பெண்குருவி . ஆண்குருவியிலும் பார்க்கச் சிறியது. அழகான சிறகுகளோடு முதுகிலுள்ள மண்ணிற வரைகளும் சேர்ந்து அதை இன்னும் அழகுபடுத்தின. ஆண் குருவியின் முதுகிலுள்ள வரைகள் இன்னும் அழகானவை. அவற்றின் முதுகில் எத்தனை வரைகள் இருக்கின்றன என்பதை அறியும் ஆவலில் மெள்ள மெள்ள அவற்றை நோக்கி நடந்தேன். ஒரு யார் தூரம் சென்றிருப்பேன். ஆண்குருவி என்னைக் கண்டு கொண்டதால் குசினியை நோக்கிப் பறந்தது.
ரூபாவுக்குத் தாய்மைப் பேறு கிடைக்காமை எங்கள் இருவரதும் துர்பாக்கியம் என்றே நினைக்கிறேன். எங்கள் இருவருக்கும் 'ஜனன சக்தி' இல்லையென்றும் நாங்கள் மலட்டுத் தன்மை கொண்டவர்கள் என்றும் எங்களைப் பரீட்சித்த வைத்திய அதிகாரிகள் சொன்னார்கள். எனினும் ஏதோ ஒருவித நம்பிக்கை இருந்தபடியால் வைத்திய அதிகாரிகளைக் கலந்தாலோசித்து எங்கள் 'வரட்சியை மாற்றுவதற்கு வழி தேடத் தொடங்கினோம். ஆனால் என் நம்பிக்கை வரண்டுவிட்டதால் வைத்தியரிடம் போவதை நிறுத்திக் கொண்டதோடு ரூபாவையும் போக வேண்டாமென்று தடுத்தேன். என்றாலும், அவள் அடிக்கடி ஒரு பெண் வைத்திய அதிகாரியைக் கலந்தாலோசித்திருக்கிறாள் என்பது மிக அண்மையில்தான் எனக்குத் தெரிந்தது. அவளுக்கு அவ்வளவு ஏக்கம்!
சென்ற வாரம் அக் குருவிகளின் கூட்டுக்கு அருகில் ரூபா கட்டித் தொங்கவிட்ட நெல்முட்டி காற்றுக்கு லேசாக ஆடுகின்றது. அதற்குள் நெல்மணிகள் இருப்பதைத் தெரியாமல் அக்குருவிகள் பறந்து சென்று இரை தேடுகின்றனவே!
| ரூபாவிலும் பார்க்க அவளது அம்மாவிற்குத் தான் பெருங்கவலை. தன்னுடைய கொடி பூக்காமல் காய்க்காமல் கருகிப்போவதை எந்தத் தாய்தான் விரும்புவாள்? ரூபா தாய்மையடையாமல் இருப்பதற்கு ஏதோ பிசாசின் துர்ப்பார்வைபட்டதே காரணம் என்பது அவளுடைய எண்ணம். பிரசித்தி பெற்ற மந்திரவாதிகளை அழைத்து வந்து ரூபாவிற்குள் சாந்தி செய்யத் தொடங்கினாள். மந்திரங்களிலும் பிசாசுகளிலும் கொஞ்சமும் நம்பிக்கை இல்லாத நான் அவற்றை எதிர்த்தேன். அதனால் எனக்குத் தெரியாமல் சாந்தி செய்யப் போவதையிட்டு ரூபாவின் அம்மாவுடன் நான் சண்டை செய்ய வேண்டியும் ஏற்பட்டது.
நான் சிட்டுக் குருவிகளின் கூட்டைப் பார்க்கிறேன். ஆண் குருவி மட்டும் கண்ணுக்குத் தென்படுகின்றது. பெண் குருவியின் சத்தம் கூடக் கேட்கவில்லை. *வந்த புதிதில் கூடு கட்டுவதற்கு அவை எடுத்துக் கொண்ட சிரத்தைகள் என்மனத்திரையில் தோன்றுகின்றன. அவை இரண்டும் சின்னஞ்சிறு தென்னந்தும்புகள், காய்ந்த கோரைகள் போன்றவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து வந்து, பின்னர் அவற்றை மாறி மாறி அடுக்கிச்சூடாக்கின. அவர்கள் கூடுகட்டியது காலங்காலமாகப் பரிணாமம் என்ற பெயரில் இருந்துவரும் சுய இனவிருத்தி' எனும் சுபாவத்தினாலல்லவா? சகல சீவ ராசிகளின் சரித்திரம் நீண்டு கொண்டிருப்பதற்குக் காரணம் சந்ததி விருத்தியல்லவா?
83 | மல்லிகைப் பந்தல்

Page 50
'வானர்' யுகத்திற்கும் அப்பாலுள்ள இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் சங்கிலி ஆண் பெண் சேர்க்கையால் உருவான 'அடுத்த' பரம்பரைதானே! உலகம் நாளுக்கு நாள் எதிர்காலச் சந்ததியினரின் கையில் ஒப்படைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சட்டத்தின் மூலம் கட்டாயப்படுத்த முடியாவிட்டாலும், எதிர்காலத்திற்காக நாம் செய்ய வேண்டிய கடமைகளில் எதிர்காலப் பரம்பரையை உருவாக்குதலும் ஒன்றுதானே!
என்னோடு கல்லூரியில் ஒன்றாகப் படித்த சோமதாஸ் இன்று மூன்று குழந்தைகளுக்குத் தந்தை. பாடசாலை ஆசிரியையான திலகா நான்கு குழந்தைகளுக்குத் தாய். வங்கியில் வேலை செய்யும் ஜயசேகரா அண்மையில் சந்தித்தபோது தன் மனைவி கர்ப்பத்தடை மாத்திரைகள் பாவிப்பதாகச் சொன்னது அவர்களுக்குப் போதுமான பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதைத் தானே காட்டுகிறது. நானும் ரூபாவும் மட்டும்... எங்களுடைய 'தாம்பத்ய வாழ்வில் எந்த விதமான குறையும் காண முடியாது. ரூபாவிற்குக் குழந்தை பெறும் பாக்கியம் கிடைக்காமலிருப்பதற்கான 'ஸ்திரமான' எந்தக் காரணமும் எனக்குத் தெரியவில்லை. ஒரு குழந்தையையும் பெற்றெடுக்காத பெண்ணை 'மலடி' எனப் பட்டஞ்சூட்டி சமுதாயம் ஒதுக்கி வைத்துவிடுவதால், உண்மையாக அவள் ஒரு துர்பாக்கியசாலியே. அப்படியான ஒரு பெண்ணை மணஞ்செய்து கொண்ட நான் எல்லோரிலும் பார்க்கத் துர்ப்பாக்கியசாலி.
'அப்பாடி, சரியா... ஆ... ன... ருசி. இன்றைக்குப் புத்தகத்தின் படி சரியாகப் போட்டிருக்கிறாய்.' அவள் ஓரக்கண்ணால் கள்ளப் பார்வை பார்த்தபடி கதிரையில் அமர்கிறாள்.
'இப்ப இரண்டு மூண்டு மாசமாக... அப்படித்தானே?' அவளது குரலில் ஒரு புதிய பெருமை தொனிக்கிறது.
'அப்படியில்லை ரூபா, முன்பும் ருசிதான். ஆனால் இப்போது அதிக ருசி.'
இப்போதெல்லாம் ரூபா பெரும் போரொன்றில் வெற்றி கொண்ட) மாமன்னனைப் போன்ற பெருமையுடனேயே காலத்தைக் கழிக்கிறாள். நீண்ட காலமாகக் காணாத ஒரு பொலிவு அவளது முகத்தில் தெரிகிறது. திருமணமான புதிதில் கூட இவ்வளவு மகிழ்ச்சியை அவளிடம் நான் காணவில்லை. அவளுடைய அம்மா அடிக்கடி இங்கு வந்து மற்றைய நாட்களிலும் பார்க்கப் பலமாகச் சிரித்துப் பேசுகின்றாள். ரூபாவின் தங்கை 'ரமணி முன்பு இல்லாத விதமாகத் தமக்கையுடன் கேலிபேசிச் சிரித்து விளையாடத் தொடங்கியிருக்கிறாள். ஒரு வாரம் பண்டாரவளையில் தங்கிவிட்டு வருவதற்காக ரூபாவின் அம்மாவையும் தங்கையையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
'ஏன் சிட்டுக் குருவிகளின் கூட்டையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?'
'ஒன்றுமில்லை ரூபா.'
சிங்களச் சிறுகதைகள் 84
8

'ஒன்றுமில்லாமலில்லை... என்ன யோசிக்கிறீங்கள் பத்துவருஷங்கள் யோசிச்சது போதாதா...?'
ரூபாவிற்கு இப்போது தலை தெரியாத பெருமை.
'இல்லாமல் முடியுமா... ஏன்? உங்களுக்கும் பெருமைதானே!... இன்னும் ஐந்து அல்லது ஆறு மாதங்களில் நீங்களும் ஒரு தகப்பன்தானே.' நான் எழுந்து சென்று அவளிருந்த கதிரையின் கைப்பிடியில் இருந்தேன். அவள் மெதுவாக எனக்கு மேல் சாய்ந்து... எவ்வளவு நேரம் அப்படி இருந்தோமோ தெரியாது.
ரூபாவின் அம்மாவும் ரமணியும் வந்ததும் மூவரும் வீட்டிற்குள் சென்று பலத்த சத்தத்தில் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். நான் முற்றத்தில் கதிரையைப் போட்டுக் கொண்டு பத்திரிகையைப் புரட்டத் தொடங்கினேன்.
இன்னும் ஐந்து அல்லது ஆறு மாதங்களில் எங்கள் வீட்டில் ஒரு சின்னஞ்சிறு குழந்தையின் குரல் ஒலிக்கப் போகின்றது. நீண்ட காலமாக என் மனதில் இருந்த ஆசை நிறைவேறும் நாள் அணுகி என் சின்னஞ்சிறு குழந்தையைத் தாலாட்டும் காட்சி என் மனத்திரையில் நிழற் படங் காட்டுகின்றது.
திடீரெனச் சிட்டுக் குருவிகள் பெருங் குரலெடுத்துக் கத்தத் தொடங்கின. நான் ஓடிச் சென்று கூட்டைப் பார்த்தேன். கூரை மரத்திலிருந்து ஒரு சாரைப் பாம்பு சிட்டுக்குருவிகளின் கூட்டை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தது. அதைக் கண்டதும் என்னையறியாமல் ஓடிச் சென்று ஒரு நீண்ட தடியுடன் திரும்பி
வந்தேன்.
நான் வந்தபோது சாரைப் பாம்பு புடலங்காய் போலத் தொங்கிக் கொண்டு குருவிக் கூட்டுக்கு மிகவும் அண்மையில் நெருங்கிவிட்டது. ஒரு நிமிடம் பிந்தினாலும் அத்தனை முட்டைகளையும் குடித்து ஏப்பம் விட்டிருக்கும். குருவிகளையும் முட்டையையும் காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணத்தில் பாம்பின் தேகத்தில் படும்படி தடியால் வேகமாக அடித்தேன். பயமும் கோபமும் கலந்த ஒலியுடன் பாம்பும் குருவிக் கூடும் ஒன்றாகச் சீமெந்து நிலத்தில் வீழ்ந்தன.
சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளிருந்த ரூபாவும் ரமணியும் மாமியும் ஓடிவந்தார்கள். நான் என்னுடைய கையிலிருந்த தடியை ரமணியின் கையில் கொடுத்துவிட்டு உள்ளே சென்றேன். ரூபாவின் முகத்தைப் பார்ப்பதற்குக் கூட எனக்குத் தைரியமில்லை. |
நீண்டநேர நிசப்பதத்திற்குப் பின் ரமணியின் குரல் மட்டும் கேட்டது:
'அக்கா... எல்லா முட்டையும் உடைஞ்சு போச்சு..!
இதழ் : 12 கன்டெ 11 - 10 - 1967
11 - 10 - 1967
85
| மல்லிகைப் பந்தல்

Page 51
ஜோர்ஜ் எப்டீபன் பெரேரா
கிராமத்துப் பையன் பள்ளிக்கூடம் போகிறான்!
தமிழாக்கம்:
யாதவன்
தூக்கம் மிகுந்த கண்களைத் துடைத்து விட்டவாறு வண்டிக்காரனின் தோளுக்கு மேலால் வெளியே நோக்கினேன். எங்கள் வண்டி நகருக்குள் வந்து விட்டது. பொழுது விடிந்து கொண்டிருந்தது. ஆனால், பார்க்குமிடம் எல்லாம் புகை போன்ற மூடுபனி சூழ்ந்திருந்தது. வானம் கீழிறங்கி விட்டாற் போலவும் காலை வேளை ஒளியிழந்து மங்கலாகவும் தென்பட்டது.
எங்கள் வண்டி அந்தத் தெருவில் கலகலவென ஒலியெழுப்பியவாறு உயர்ந்த கட்டடங்களைத் தாண்டிச் சென்றது. காகங்கள் சிதறியவாறு பல திசைகளிலும் பறந்தன.
நான் என் தந்தையையும் அண்ணனையும் நோக்கினேன். அவர்கள் என்னைப் பார்த்தவாறு அரைத் தூக்கத்தில் இருந்தனர். நான் கொஞ்ச நேரம் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்குப் போரடித்தது. வண்டிக்குள் நிலவிய அமைதியை என்னால் தாங்க முடியவில்லை.
' 'நாங்கள் பட்டணத்திற்கு வந்து விட்டோம்.” வண்டியின் கலகல ஓசையையும் மீறிக் கத்தினேன்.
''ஓ... பியா... பட்டணம்!” தூங்கி விழித்தவாறு கூறினார் என் தந்தை. அவர் தன் தலையைத் தூக்கி வண்டியின் பின்புறம் நோக்கினார். கலைந்திருந்த தலையை ஒழுங்கு படுத்த முனைந்தார். கை விரல்களால் தலைமயிரைக் கோதி பின்புறம் முடிந்து விட்டார்.
வண்டி இன்னமும் கலகலத்துக் கொண்டிருந்தது. பட்டணத்துக்கு முதல் தடவையாக வருகிறேன். ஆனாலும் அது எனக்குத் தயக்கத்தைத் தரவில்லை. நான் ஏற்கனவே நினைந்திருந்தது போல, பட்டணம் உல்லாசபுரியாக, வண்ண வண்ணமாக இருக்கவில்லை. ஆனாலும் தெருவில் தென்படும் ஒவ்வொன்றும் ஆச்சரியத்தை அளித்தது. நாங்கள் வழியைத் தவறவிட்டது போலவும் எங்கள்
சிங்களச் சிறுகதைகள் 86

கிராமத்துக்கே திரும்பிப் போக முடியாதது போலவும் எனக்குப் பிரமை ஏற்பட்டது.
**இப்போ நாங்கள் பட்டணத்திற்கு வந்துவிட்டோமே அப்பச்சி! நாங்கள் இறங்குவோமே. எங்கே போகிறோம் அப்பச்சி!” நான் கத்தினேன்.
*மடையா இது மாதிரிக் கத்தாதே. யாராவது கேட்டால் விந்தனைப் பகுதியில் இருந்து இப்போதுதான் பட்டணம் பார்க்க வந்திருக்கிறார்கள் என்று நினைப்பார்கள்.” இன்னமும் வைக்கோல் கட்டில் தலையை வைத்துப் படுத்திருந்த அண்ணன் கோபத்தோடு சொன்னான். அவன் நித்திரையைக் குழப்பி விட்டேன் என்று அவனுக்கு என்மீது கோபம். எங்கள் வண்டிக்காரன் ரோமில் அண்ணன் உற்சாகமிழந்திருந்த எனது முகத்தைப் பரிதாபத்தோடு நோக்கினான்.
''கவலைப் படாதே பியா! நாங்கள் முதலில் காலாவுக்குப் போகிறோம். அங்குதான் மாடுகளை அவிழ்த்து விடவேண்டும்.'' எனக்குச் சமாதானம் சொல்கிறாற் போல விளக்கினான்.
இரவு முழுவதும் நல்ல நித்திரை இல்லாதபடியால் உடம்பெல்லாம் சூடாக இருந்தது. வைக்கோலைப் பரப்பி அதன் மீது படுத்திருக்கும் பொழுது சுகமாக இருந்தது. வண்டியின் குலுக்கல் என்னை பாதிக்கவில்லை. ஆனால் அது
அடிக்கடி என்னைத் தூக்கத்திலிருந்து எழுப்பியது.
நான் அடுத்த மாதத்திலிருந்து ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் படிக்கப் போகிறேன். நான் ஐந்தாம் வகுப்பில் திறமையான சித்தி அடைந்தமையால் எனக்கு ஸ்கொலர்ஷிப்' கிடைத்துள்ளது. இன்னும் சில நாட்களில் ஷேர்டும். கால்சட்டையும், சப்பாத்தும் அணிந்து கொண்டு ஓர் ஆங்கிலப் பள்ளிக்கூட மாணவனாகப் போகப் போவதற்காக, எனக்கு உடுப்புகள் வாங்க பட்டணத்திற்கு
வந்துள்ளோம்.
எனது நித்திரையின் போது இவைதான் என் நெஞ்சில் நிறைந்து கனவுகளாகி எனக்கு மகிழ்ச்சியை அளித்துக் கொண்டிருந்தன.
ரோமில் அண்ணன் காலாவில் வண்டியை நிறுத்தினான். அந்த இடம் சாணம் நிறைந்து அசுத்தமாகக் காணப்பட்டது. ரோமில் அண்ணன் ஒரு மூலையில் மாடுகளை அவிழ்த்து விட்டான். வண்டிக்குள்ளிருந்து வைக்கோலை எடுத்து மாடுகளுக்குப் போட்டான்.
ரோமில் அண்ணன் மாடுகளுக்குத் தீனி போட்டுக் கொண்டிருந்த சமயம் நான் அந்த இடத்தைச் சுற்றிலும் அவதானிப்பதில் ஈடுபட்டிருந்தேன். கிராமத்தில் பச்சையாகத் தெரிந்த கண்களுக்கு, இங்கு கட்டடங்களும் தூசி படிந்த தெருக்களுமே தெரிந்தன.
ஒரு புயல் அடிக்கத் தொடங்குவது போலத் தெருக்களில் வண்டிகளின் சத்தம் படிப்படியாக எழ ஆரம்பித்தது.
87 | மல்லிகைப் பந்தல்

Page 52
ரோமில் அண்ணன் வேலை முடிந்ததும் நாங்கள் நால்வரும் அமைதியாகத் தெருவில் நடக்க ஆரம்பித்தோம். எங்கு போகிறோம் என்று கேட்க எனக்கு ஆசைதான். ஆனால் அண்ணனின் கோபத்துக்குப் பயந்து மௌனமாக இருந்து விட்டேன்.
இ''கடைகளெல்லாம் எட்டரை மணிக்குத்தான் திறக்கும்.” கடைசியாக என் தந்தை அமைதியைக் குலைத்தார். அது என்னைப் பேசத் தூண்டியது.
''அதுவரைக்கும் என்ன செய்யப் போகிறோம் அப்பச்சி” என்று கேட்டேன்.
*'ஏன் நாங்கள் தேநீர் குடிப்போமே" என்றான் ரோமில் அண்ணன். இரவு முழுவதும் பாடியதால் அவனுடைய குரல் கரகரத்துப் போயிருந்தது.
''தேநீர் குடித்து விட்டுக் கொஞ்சத் தூரம் நடப்போமா?" சந்தர்ப்பத்தை விடாமல் நான் கேட்டேன். )
*'ஆனால் நடுத்தெருவில் போகாதே. இன்னும் கொஞ்ச நேரத்தில் கார்களும், பஸ்களும், லொறிகளும் நூற்றுக்கணக்கில் ஓடத் தொடங்கிவிடும்." என் தந்தை எச்சரித்தார்.
என் விருப்பத்தை அவர் ஏற்றுக்கொண்டார் என்பது தெரிந்து விட்டது. என் அண்ணன் அமைதியாக இருந்தான். எங்கள் பேச்சில் அவனுக்கு ஆர்வமிருக்கவில்லை. அவனுடைய நினைவு வேறெங்கோ இருப்பது போலத் தெரிந்தது. தான் வாங்கிய நிலத்துக்குக் கம்பிவேலி அடிப்பது எப்படி என்பது பற்றி அவன் நினைத்துக் கொண்டிருப்பான். அவனது அமைதி என்னை ஊக்கப்படுத்தியது.
*'தெருவில் நடப்பது எப்படி என்று தெரியும் அப்பச்சி! எங்கள் வாத்தியார் தெருவில் நடப்பது எப்படி என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்'' என்றேன்.
தெருவோரம் இருந்த பைப்படியில் முகத்தையும் கை கால்களையும் கழுவிய பின்னர் பஸ் ஸ்டாண்டுக்கு எதிரில் இருந்த ஹொட்டலை நோக்கி நடந்தோம்.
( உணவருந்திக் கொண்டிருக்கையில் ஹொட்டலின் கண்ணாடிச் சுவர்களுக் கூடாக பள்ளி மாணவர்கள் - வெள்ளை ஷேர்ட், நீலக் காற்சட்டை, சப்பாத்து அணிந்து பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்து கொண்டிருப்பது தெரிந்தது. வெயிலின் ஒளியில் சப்பாத்துக்கள் மினுங்கின. அவர்களை அவதானித்த நான், இன்னும் சிலநாட்களில் நானும் இப்படித்தான் இருப்பேன் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.
காலை உணவை முடித்துக் கொண்டு வெளியே வந்தோம். சில நிமிடங்கள் நடந்தோம். பின்னர் எனது அண்ணனும் ரோமில் அண்ணனும் கம்பி வேலிக்குத்
சிங்களச் சிறுகதைகள் 88

தேவையான முள்ளுக் கம்பியை வாங்கிக் கொண்டு வண்டியில் போவதென்றும் நானும் எனது தந்தையும் எங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு பஸ்ஸில் போவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. அண்ணனுடன் வண்டியில் போவதில்லை என்பது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. எங்களுக்குத் தேவையான துணிகளை வாங்கிக் கொண்டு நானும் என் தந்தையும் கெதியில் போய்விடுவோம்.
என் அண்ணனும், ரோமில் அண்ணனும் இரும்புக் கடையை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். நானும் என் தந்தையும் துணிக்கடைகள் நிறைந்த பஜாருக்குள் நடக்க ஆரம்பித்தோம். அங்கு என் தந்தைக்குச் சில இஸ்லாமிய வியாபாரிகளைத் தெரியும்.
நாங்கள் இருவரும் ஒரு பெரிய துணிக் கடைக்குள் நுழைந்தோம். நான் தயங்கி நிற்கையில் இரும்புப் பெட்டிக்கு அருகில் இருந்த ஒரு பருத்த மனிதரை நோக்கி என் தந்தை சென்றார். அந்த மனிதருடைய மேசையில், அழகாக பைண்டு செய்யப்பட்ட தடித்த புத்தகங்கள் இருந்தன. எங்கள் கிராமத்துக் கோவிலில் இருக்கும் 'ஹாமுத்துருவின் அலுமாரிக்குள் இருந்த புத்தகங்களை விட இவை பெரிதாக இருந்தன. அதைவிட முதலாளியின் மேசையில் இன்னுமொரு பொருளும் இருந்தது. அதுதான் டெலிபோன் என்று பின்னால் தெரிந்து கொண்டேன்.
10 நான் அவர் அருகில் செல்லத் தயங்கியவாறு நிற்கையில் என் தந்தை பேசத் தொடங்கி விட்டார்..
''நாங்கள் கொஞ்சம் உடுப்புகள் வாங்க வந்திருக்கிறோம், முதலாளி!" என்றார் என் தந்தை.
''யாருக்குப் பெரியவரே?" அந்த முதலாளி ஆர்வத்தோடும் சினேக பூர்வமாகவும் கேட்டார்.
*'என்னுடைய மகனுக்குத்தான். இங்கே நிற்கிறான். அவனுக்கு 'ஸ்கொலர்ஷிப்' கிடைத்திருக்கிறது. அடுத்த மாதத்தில் இருந்து அவன் இங்கீஸ் பள்ளிக்கூடத்திற்குப் போகப் போகிறான்" என் தந்தை சற்றுப் பெருமையுடன்
கூறினார்.
'அடே அப்பா! நல்லது பையா! ரொம்ப நல்லது இளந்தாரி!” முதலாளி எழுந்து வந்து என் தோளில் தட்டிக் கொடுத்தார்.
'அடே ஆப்தீன்! வாடா இங்கே! இந்த பெரியவருக்குத் தேவையான தெல்லாவற்றையும் எடுத்துக் கொடு. அவர் எனது பழைய கூட்டாளி" என்று முதலாளி ஒருவனிடம் சொன்னார்.
நாங்கள் அவனைப் பின் தொடர்ந்து சென்றோம். வரிசையாக இருந்த அலுமாரிகளுக்கு முன்னால் மேசைக்கருகில் நின்றோம்.
8
9
| மல்லிகைப் பந்தல்

Page 53
துணிகளைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது. அவன் சிபார்சு செய்தவற்றை வாங்கினோம். கடைசியில் அவனுடைய ஆலோசனையைத் தொடர்ந்து 'ரெடிமேட்' உடுப்புகளும் வாங்க நினைத்தோம். அந்த விற்பனை யாளன் என்னை ஒரு சின்ன அறைக்குள் அனுப்பினான். அங்கு மூன்று பெரிய கண்ணாடிகள் இருந்தன. கால்சட்டையையும் சேர்டையும் போட்டுப் பார்த்தேன். நான் காலையில் பார்த்த மாணவர்களைப் போலத் தோன்ற வில்லை. என் தலைமயிரையும் வெட்ட வேண்டும் என்று நினைத்தேன். மீண்டும் சாரத்தை உடுக்காது இப்படியே கிராமத்துக்குப் போவதென்று நினைத்துக் கொண்டேன்.
நான் அறையை விட்டு வெளியே வந்த போது எனக்கு ஒரு சப்பாத்து வாங்கிக் கொடுக்குமாறு முதலாளி என் தந்தையிடம் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு சோடியைப் போட்டுப் பார்த்துத் திருப்தி அடைந்தேன். ஆனால் திரும்பி வீட்டுக்குப் போகும் பொழுது அதை அணிந்து கொள்ள விரும்பவில்லை. அது என் நடையைக் குழப்பிவிடும் என்று பயந்தேன். ஆனாலும் அதைக் கழற்ற வில்லை.
என் தந்தை கணக்குப் பார்த்துப் பணத்தைக் கொடுக்கும் வரை முதலாளியின் மேசைக்கருகில் அமர்ந்திருந்தேன். ஒரு பையன் மூன்று கோப்பை களில் தேநீரும் ஒரு தட்டில் இனிப்புப் பலகாரங்களும் கொண்டு வந்தான். நான் சில பலகாரங்களைச் சாப்பிட்டுத் தேநீரையும் அருந்தினேன். முதலாளி என் தந்தைக்கு வெளிநாட்டுச் சுருட்டொன்றைக் கொடுத்தார். இனிமேலும் பட்டணத்துக்கு வரும்பொழுதெல்லாம் தனது கடைக்கு வரும்படி முதலாளி என் தந்தையிடம் கூறினார். அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு இந்தப் பெரிய முதலாளியுடன் என் தந்தை எப்படிச் சிநேகிதமானார் என்று அதிசயமாக இருந்தது.
''முதலாளி நாங்கள் போய் வருகிறோம்.” எழுந்தவாறு விடை பெற்றார் என் தந்தை.
* 'சரி சரி போய் வாருங்கள் பெரியவரே!” என்று கூறிய முதலாளி, "இளந்தாரி! பெரிய பள்ளிக்கூடத்துக்குப் போய் படித்துப் பெரிய மனிதனாக
வர வேண்டும்” என்று தோளில் தட்டிக் கொடுத்தார்.
நான் வீட்டுக்குக் கெதியில் போக விரும்பினேன். தந்தை சாப்பிட்டு விட்டுப் போவோம் என்று கூறியபோது, நான் மறுத்துவிட்டேன். பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தோம்.
நாங்கள் ஊருக்குள் வரும்போது பள்ளிக்கூடம் விடும் நேரமாக இருந்தது. என் தந்தை வெற்றிலை வாங்குவதற்காக கடையருகில் சில நிமிடங்கள் நின்றார். அவர் வரும்வரை மெதுவாக நடந்து சென்றேன். நான் பள்ளிக்கூடத்தை அணுகிய போது கடைசிமணி அடிக்கும் சப்தம் கேட்டது. சிறிய சுவரின்
சிங்களச் சிறுகதைகள் 90

மேலாகப் பிள்ளைகள் வரிசையாக நிற்பது தெரிந்தது. பிரார்த்தனையைக் கூறிக்கொண்டிருந்தார்கள். தெருவோரம் இருந்த வகுப்பறையில் நின்ற மாணவர்கள் சிலர், தெருவில் மெதுவாக நடந்து கொண்டிருந்த என்னைப் பார்த்து விட்டார்கள். அனைவருடய முகங்களும் என்னையே நோக்கின.
''ஏய்.. ஏய்... யக்கோ... பாரடா பியா... கழுசான் போட்டிருக்கிறான்." யாரே ஒருவன் கத்தினான்.
* இரண்டு கால்களிலும் கழுசான் போட்டிருக்கிறான்" என்று ரன்னா சிரித்தபடி கூறுவது கேட்டது.
''ஏய் அடோ பியா! கழுசான்காரப் பியா.” பண்டா கேலியாகக் கத்தினான். தொடர்ந்து காவா பாடினான்.
'பியா பியா பின்கிடியா கொப்பி கொடன வன் கிடியா!'
காவா என்றைக்குமே என்னுடன் நல்ல உறவு வைத்துக் கொண்டது இல்லை. அதனால் பெரிய குரலில், மற்றப் பையன்களுக்குக் கேட்கும் வகையில் பாடினான். தலைமை வாத்தியாரின் குரல் கேட்டது.
*எக்...கா...ய் தெக்...கா...ய் து...னா...ய்'
பின்னர் எல்லா மாணவர்களும் ஒரே குரலில் பலமாகக் கூறினார்கள்.
பள்ளிக்கூடம் விட்டாயிற்று. அடுத்தகணம் பெருங்கூச்சல் உண்டாயிற்று. *கேட் வழியே பிள்ளைகள் எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு வெளியே வந்தார்கள். புத்தகங்களையும் சிலேட்டுகளையும் இறுகப் பற்றியவாறு ஒருவரை ஒருவர் தள்ளியபடி நெருக்கி அடித்துக் கொண்டு வந்தார்கள். கல்லால் அடிபட்ட தேனீக்கூட்டம் போல பல திசைகளிலும் பறந்தார்கள்.
திடீரென்று எனக்குப் பின்னால் சில மாணவர்கள் வருவதை உணர்ந்தேன். ஒவ்வொருவரும் பட்டப் பெயர்களைக் கூவியபடி வந்தார்கள். மிக மோசமாக என்னைப்பற்றி கூறிக்கொண்டு வந்தார்கள்.
எனது கால்சட்டையை இறுகப் பிடித்தபடி எவ்வளவு வேகமாக ஓடமுடியுமோ, அவ்வளவு வேகமாக ஓடினேன்.
மல்லிகை : 34
மார்ச் 1971
91 மல்லிகைப் பந்தல்

Page 54
எதிரிவீர சரத்சந்திர
கடகம் விசித்திரமான ஊர்
தமிழாக்கம்: எஸ்.எம்.ஜே. பைஸ்தீன்
அவ்வூர் ஒரு விசித்திரமான ஊர். ஒரு காலத்தில் அவ்வூருக்கு எதிரிலேயே வசித்தேன். பாதைக்கு மறுபுறம் அமைந்திருந்தது அவ்வூர். அதன் பெயர் சனப் பிரதித்தமற்றுக் காணப்பட்டமையால் அதை ஒரு புராதன ஊராகக் கருத இடமுண்டு. எனினும் தற்போது அங்கு ஆதிக்குடிகளது குடும்பங்களில் ஐந்தாறேனும் எஞ்சியிருக்குமோவென்பது சந்தேகமே; தற்காலத்தில் அதை ஒரு ஊர் என்பதைவிட குடியேற்றம் என்று கூறுவதே பொருந்தும். பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் மக்கள் குடியேறி அதைத் தமது வாசபூமியாக்கிக் கொண்டிருந்தனர். மேற் சொன்ன ஊர் மலைநாட்டிலே அமைந்தவொன் றேயாயினும் அங்கு சப்பிரகமுவப் பிரதேசத்தார் மட்டுமன்றி தாழ்ந்த பிரதேசத்தாரும் குடியேறியிருந்தமையை அவர்களது பெயர் ஊர் விலாசங் களிலிருந்து யூகிக்கலாம்.
ஊரில் எல்லாமாக இருபத்தைந்து முப்பது குடும்பங்கள் இருக்கலாம். எனினும் இத்தொகையைச் சரியோ பிழையோ என்பதற்கில்லை. இருபத்தைந்து முப்பது குடும்பமென்பது எனது யூகமே. வழமையாக ஊருக்குப் போய்வரும் மக்கள் கூட்டத்தைப் பார்த்தால் அங்கு வாழ்ந்த குடும்பங்களின் தொகை அதற்கும் கூடுதலாகவே தோன்றும்.
அவ்வூரில் சனத்தொகை அதிகந்தான் என்று கருதுவதற்குரிய சந்தர்ப் பங்களும் எழுவதுண்டு. அங்கு நடமாடும் சிறுபிள்ளைகளது கூட்டத்தைக் காணும் போதெல்லாம் நான் அவ்வாறு எண்ணிக் கொள்ள நேரும். ஏதாவது
விசேஷங்கள் நிகழும்போது ஈக்களைப் போலக் குஞ்சு குருமான்கள் நாலா பக்கங்களிலிருந்தும் நிறைந்து விடும். ஓரளவு நினைவு தெரிந்த வயதிலிருந்து ஏழு, எட்டு, ஒன்பது, பத்து வரையிலான பிள்ளைகள், ஒன்பது பத்து வயதான பெண்பிள்ளைகள் கைக்குழந்தைகளைத் தூக்கி வருவர். அவ்வாறான சந்தர்ப் பங்களில் கூடும் பிள்ளைகளது கூட்டம் குறைந்தபட்சம் நூறாகுதல் இருக்கலாம்.
ஊரில் விசேஷங்கள் இன்னவையென்பதை இவ்விடத்தில் விவரித்துக்
சிங்களச் சிறுகதைகள் 92

கூறுதல் தகும். ஊரில் ஒரு குறிப்பிடத்தக்களவு கோஷ்டியினர் புனித யாத்திரை மேற் கொள்வது அப்படியான ஒரு விசேஷமே. யாத்திரீகர்களை வழியனுப்பு முகமாக அனைவரும் தெருவிற் கூடுவர். யாத்திரை பிற்பகல் மூன்று மணிக்கு ஆரம்பமாகுமெனில் பதினொரு பன்னிரண்டு மணி முதற்கொண்டே ஊரார் கூடி பஸ் வந்து சேரும் வரை காத்திருப்பர். பெரியவர்கள், இளைஞர், குமரியர், சிறுபிள்ளைகள், கைக்குழந்தைகளை அக்கூட்டத்தாரிடையே காணலாம். பஸ் வரும்வரை மூன்று நான்கு மணித்தியாலங்களை அங்குமிங்கும் அலைந்து வீண்பொழுது கடத்துதல் அவர்களுக்குக் கஷ்டமாகத் தோன்றுதல் இயல்பே. எனவே, இளைஞர் பலர் பெரியவர்களைக் குழப்பியபடி ஓலமிடுவர், ஊளையிடுவர். குமரிகளைக் கேலி செய்வர். தத்தமது திறமைகளைக் குமரியருக்குக் காட்ட முயல்வர். சிறுபிள்ளைகள் விளையாடும்போது காயப்பட்டு அழுது புலம்புவர். அப்போது பெற்றோர் அவர்களைக் கம்பெடுத்து அடிப்பர். அதனால் பிள்ளைகள் இன்னும் உரத்துக் கதறுவர். அக்குரல் அனைத்தையும் மீறிய பெரியவர் ஒருவரது குரல் அவர்களை அதட்டும். பஸ் வந்த பின்பே இவ்வமர்க்களம் அடங்கும். ஆனால் அப்போது அது வேறுவிதத்தில் ஆரம் பிக்கும். பிள்ளைகளது கூட்டம் பஸ்ஸிக்குள் நுழைய முயலும். சிலர் உள்ளே போய் ஆசனங்களில் அமர்ந்து கொள்வர். சிலர் ஆசனங்களின் மேல் நின்று குதிப்பர். சிலர் வாசலை மறைத்து நிற்பர். யாத்திரிகரோ பஸ்ஸிற்குள் ஏற முடியாமல் தடுமாறுவர். இளைஞர்கள் விரைந்து வந்து பிள்ளைகளை வெளி யேற்றுவர். பிள்கைள் மீண்டும் கதறத் தொடங்குவர். அதற்கிடையில் தத்தமது பொதிகளைத் தேடிக்கொள்ள முடியாமல் யாத்திரீகர்கள் குரலெழுப்புவர். முடிவில் எப்படியோ பிள்ளைகளைத் துரத்திவிட்டு யாத்திரீகர்கள் ஆசனங்களில் அமர்ந்த பின் பஸ் புறப்படும் நேரத்திலேயே மாபெரும் குழப்பநிலை உருவாகும். இளைஞரும், பிள்ளைகளும் பஸ்ஸைச் சுற்றிலும் வசதிப்பட்ட இடங்களில் எல்லாம் - புட்போட்டிலும், மட்காட்டிலும், பபரிலும், எஞ்சினிலும் தொங்கி பஸ்ஸை மேற்கொண்டு செல்லவிடாமல் தடுப்பர். அவர்கள் எழுப்பும் ஓசையை அடக்குவது போலச் சாரதி ஊதுகுழலைச் சப்திப்பார். சில வேளைகளில் மின்குழலையும், சில வேளைகளில் காற்றுக் குழலையும் ஒலியெழுப்புவார். சுற்றியிருப்போரைக் கீழே விழுத்தாட்டாதபடிக்கு மெல்லச் சிறிது சிறிதாக முன்னேறும் பஸ், குழலோசையுடன் கலந்த கியரின் ஒலியுடன் முடிவில் முழு வேகத்துடன் பயணத்தைத் தொடங்கும். அப்போது எஞ்சியிருப்போர், வாகனம் குமுறும்படியாக பெரும் ஊளையிட்டு யாத்திரீகரை வழியனுப்புவர்.
இத்தகைய விசேஷங்கள் சில சமயங்களில் அடுத்தடுத்து வந்தாலும் வருடம் முழுதும் தொடர்ச்சியாக இடம்பெறுவதில்லை. எனினும் ஊரில் அடிக்கடி நிகழும் ஒரு இயல்பான நிகழ்ச்சியையும் குறிப்பிடத்தான் வேண்டும். இரு தினங்களுக்கொருதரமாதல் இவ்வாறு நிகழ்வதுண்டு. இருந்தாற் போல் பெரும் கூக்குரல் தோன்றும். பெண்கள் அடித் தொண்டையால் கீச்சிடுவர். சிறுபிள்ளைகள் அலறுவர். அவற்றுக்கு மத்தியில் ஆண்குரலொன்று உடலை உறைய வைக்கும் விதத்திற் பயங்கரமாக ஒலிக்கும். அக்குரல்களை அடக்கும் வகையில்
93 | மல்லிகைப் பந்தல்

Page 55
நாய்கள் குரைக்கும். இவையனைத்தும் உச்சம் பெற்ற ஒரு சந்தர்ப்பத்தின் போது, ஒருநாள், பெண்ணொருத்தி இரத்தம் சொட்டச் சொட்ட ஊர்நடுவே ஓடிவந்து எனது வீட்டுக்குள் நுழைந்தாள்.
''ஐயோ தொரே, என்னைக் கொண்டு போங்கோ பொலீசுக்கு'' என்று அவள் நடுநடுங்கியபடி கூறினாள். அவளது ஒரு கையிலும், தாடையிலும், நெஞ்சிலும் காயங்கள் பல காணப்பட்டன. அவை கத்திக் குத்தாலேற் பட்டிருக்கலாம். என்ன செய்யலாமெனச் சிறிது யோசித்துக் கொண்டிருக்கும் போதே, இன்னும் நாலைந்துபேர் அவ்வூரிலிருந்து வந்தனர்.
''இங்கால வா, இங்கால வா, நீ போலீசு வழியே போகத் தேவையில்ல இப்போ. அதெல்லாம் அப்புறம் நாங்க பார்த்துக்குவோம், நீ வூட்டுக்குப் போயிக் காயங்களைக் கழுவு முதலில்” என அவர்களிலொருத்தர் சொன்னார். அவர்களிடையே ஆண்களும், பெண்களும் காணப்பட்டனர். அவளது காயங்களிற் சில கடுமையானவையாக எனக்குத் தோன்றின. ஊரிற் கலவரம் திடீரென ஏற்பட்டிருக்கலாம். 'நான் இவளை டொக்டர்கிட்டே அழைத்துப் போறேன். இக்காயங்களை இப்படிச் சும்மா விடக்கூடாது. மருந்து போடவேணும்' என அவர்களிடம் நான் தெரிவித்தேன்.
நான் இவ்வாறு கூறும்போதே அப்பெண் மயங்கிச் சாய்ந்து விட்டாள். இருவரது ஒத்தாசையுடன் அவளைக் காரிலேற்றி பக்கத்திலிருந்த அறிமுகமான டொக்டர் ஒருவரிடம் இட்டுச் சென்று மருந்து போடுவித்த பின் ஊரில் கொண்டு போய்விட்டேன்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் எழும் கூக்குரல் சகிக்க முடியாதளவுக்கு உக்கிரமடையும் போது பொலீசுக்கு டெலிபோன் செய்யத் தோன்றும். அவ்வாறு செய்யலாமா கூடாதா எனத் தயங்கிக் கொண்டிருப்பதற்கிடையில் திடீரெனக் கலவரம் அடங்கிவிடும். அதையடுத்து பெரும் அமைதியான சூழ்நிலை நிலவும். வெகுநேரம் கடந்த பின அவ்வமைதியைக் குலைத்துக் கொண்டு மேளவோசை கேட்கும். அல்லது சிறந்த கைவண்ணம் மிக்க கலைஞன் என்று கருதக் கூடிய ஒருவனது டோலக் ஒலி காற்றில் மிதந்துவரும். ஊரார் அனைவரும் ஏற்படுத்திய கலவரம், சண்டை சச்சரவு, வாதப்பிரதிவாதம் என்பனவற்றை மறந்து இசையின் தாளக்கட்டில் மயங்கி ஒன்று சேர்ந்து பாடி ஆடத் தொடங்குவர்.
உற்சவ காலங்களில் மாதம் பூராவும் தமிழரான தோட்டத் தொழிலாளரது காமன் கூத்துக் கோஷ்டியினர் வீடுதோறும் சென்று மேளங்கொட்டி ஆடுவர். நடுச்சாமம் வரை ஒருமுகமான தாளக்கட்டுடன் இயைந்த அவர்களது தப்பு ஓசையும், காற்சலங்கை ஒலியும் மலைகளுக்கிடையே எதிரொலித்து சிலவேளைகளில் ஒருபுறமாயும், சிலவேளைகளில் மற்றொரு புறமாயும் சிலவேளைகளில் தொலைவிலிருந்தும் ஒலிப்பது போலவும் வானவீதியிலே சுழன்று திரியும் காமன் கூத்துக் கோஷ்டியினர் எனது வீட்டுப் பின்புற முற்றத்தில் வந்து ஆடுவதாக எண்ணித் திடுக்கிட்டு விழிப்பேன். எனினும் தொலைவிலிருந்து
சிங்களச் சிறுகதைகள் 94

வரும் சத்தம், வீட்டுக்குப் பின்னுள்ள மலைச்சாரலில் எதிரொலிப்பதாலேயே வீட்டுக்குச் சமீபமாக ஒலிப்பதுபோற் தோன்றுவதை சிறிது நேரம் கழிந்த பின்பே உணர்வேன். காமன் கூத்துக் கோஷ்டியினர் இரவில் எவ்வளவு நேரம் வரை ஆடுவார்களோ அவ்வளவு நேரமாகு மட்டும் சிறுவர் கூட்டமொன்று ஆட்டக்காரரைச் சூழ்ந்து பின் தொடரும். உற்சவ காலம் முடிந்ததும் சிறுவர்கள் தமக்குள்ளேயே காமன் கூத்துக் கோஷ்டி ஒன்றை அமைத்துக் கொள்வர். தமிழ் ஆட்டக்காரரது ஆடல் பாடல் தாளம் முதலியவற்றை அனுசரித்துத் தமிழ்ப் பாடல்களுக்குச் சமமான இசைக்கேற்ப சிங்களத்தில் விகடகவிகளைச் சமைப்பர். தமிழ்த் தாளமுறைக்கு அமைய மேளத்தைக் கொட்டிக் கொண்டும், அவ்வாட்டத்துக்கு ஏற்ற உடைகளை அணிந்தும் காமன் கூத்துக்காரரைப் பின்பற்றி இரவுதோறும் வீடுவீடாகச் சென்று ஆடிக்காட்டிச் சன்மானங்களைப் பெறுவர்.
ஊரில் சண்டை சச்சரவுகள் எவ்வளவுதானிருந்த போதிலும் ஊர் மக்களிடையே ஆளுக்காள் மோதுவதைத் தவிர வேறு எதுவுமே கிடையாது என்பதில் எவ்வித உண்மையும் கிடையாது கவனித்தற்பாலதாகும். அவர்களில் யாருக்காவது கஸ்டநிலையேற்படுமிடத்து அனைவரும் ஒன்று சேர்ந்துவிடுந் தன்மை போற்றத்தகு பண்பொன்றாகும். நோய் நொடியோ திடீர் விபத்துக்களோ ஏற்பட்டவிடத்து அனைவரும் பாய்ந்தோடிச் சென்று வாடகைக் காரொன்றை அழைப்பித்து நோயாளியை ஆஸ்பத்திரிக்கு இட்டுச் செல்வர். மரணச் சகாய நிதிக் குழுவொன்றை ஏற்படுத்தியிருந்த அவர்கள் யாராகிலும் இறந்து விட்டால் சவப்பெட்டியை வாங்குதல், குழி தோண்டுதல், தப்பு அடிப்போரை அழைத்தல் போன்ற யாவற்றுக்கும் செலவழித்து அக்காரியத்தைக் குறைவின்றி நடத்தி முடிப்பார். அத்தகைய காரியங்களில் ஏதாவது குறைகள் உண்டாவது அதிக அனுசரணையினாலேயே அன்றி கவனப் பிசகினாலாகவிராது. இளைஞனொருவன் நஞ்சருந்தி இறந்து விட்டான். அவனது பெற்றோர் ஏழைகள். மரணச் சகாயநிதிக் குழுவினர் மரணச் சடங்குக்கான செலவுகளைப் பொறுப்பேற்றனர். இளைஞன் இறந்த மறுநாளே அடக்கிவிடத் தீர்மானித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவ்வாறு நிச்சயிக்கப்பட்ட தினம் செவ்வாய்க் கிழமை என்பது
ஞாபகம்வரவே ஏற்பாடுளை மாற்றி அதற்கு மறுநாளாகப் பின்போடப்பட்டது. எனினும் நஞ்சருந்திச் செத்தவனது சடலத்தை மூன்று நாட்கள் வரை வைத்திருக்க முடியாதே என்பது அங்கத்தவர் ஒருவருக்கு நினைவு வந்தது. இரண்டாம் நாளன்றுதான் உடனே மரணச் சகாயநிதிக் குழுக் கூட்டமொன்றைக் கூடிய குழுவினர், மரணித்த இளைஞனது உடலை எம்பாம் ( பதப்படுத்தல்) செய்வதற்குரிய செலவு குறைவான வழியொன்றை ஆராய்ந்தனர். கூட்டத்திற் பற் பலரும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டமையால், அன்றைய தினம் எவ்வித உடன்பாட்டுக்கும் வரமுடியவில்லை. மூன்றாம் நாள் சடலத்தை எம்பாம் செய்யும்போது அதிற் பெரும்பகுதி பழுதுபட்டிருந்தது. எம்பாம் செய்தல் அன்று முற்பகல் முற்றுப் பெற்ற போது அன்று போயா தினமாதலின் மரணச்சடங்கை மேற்கொள்வது உசிதமற்றதென்பது நினைவிற்
95 மல்லிகைப் பந்தல்

Page 56
பட்டது. நான்காம் நாள் சவ அடக்கத்துக்காகச் சடலத்தைக் கொண்டு சென்ற போது வீசிய துர்நாற்றம் ஊர்வலத்திற் கலந்து கொண்டோருக்கும், நண்பர் உறவினர்களுக்கும் சகிக்க முடியாதளவு பெருத்பாடாகப் போய்விட்டது.
இவ்வூருடன் தொடர்புடையாக நடைபெற்ற சம்பவமொன்றை விவரித்தற் கவசியமான பகைப்புலமொன்றைச் சித்திரித்துக் காட்டும் பொருட்டே மேற் சொன்ன விவரங்களைக் குறிப்பிட நேரிட்டது. ஒருநாள் பகல் மூன்று மணி யளவில், ஊரிலுள்ள பெண்கள் பலர் பெருங்குரலில் கூச்சலிடும் சத்தம் எனக்குக் கேட்டது. பெண்களது கூக்குரல்களுக்கு நடுவே உயிருக்கு ஊசலாடும் மாடு ஒன்று ஓலமிடுவது போன்ற பயங்கரமான அவல ஒலி விட்டுவிட்டு ஒலித்தது. சொற்ப வேளையில் ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் ஊர்வலம் செல்கின்றாப் போல பாதையிற் கூடினர். அச் சனக்கூட்டத்தின் மத்தியில், கூந்தலை விரித்து, மார்பில் அடித்தபடி, காண்போர் பரிதவிக்கும் தோற்றத்திலான பெண்கள் இரண்டு மூன்றுபேர் காணப்பட்டனர். அவர்களிடையே வாட்டசாட்டமாக நெடிதுயர்ந்து பருத்த மனிதனொருத்தனும் நின்றான். அவர்கள் பைத்தியக்காரர்களைப் போலவே நடந்து கொண்டனர். அங்குமிங்கும் ஓடித்திரிந்த அவர்கள், ஆகாயத்தை நோக்கிக் கைகளிரண்டையும் உயர்த்தி முறையிட்டனர். சனநெரிசலுக்கு ஊடே ஓடிப்போய் வரும் போகும் வாகனங்களின் எதிரே குதிக்க முயன்றனர். கீழே விழுந்து புரண்டனர். அவர்களில் வயது முதிர்ந்த பெண்ணொருத்தியின் தலையிலிருந்து இரத்தம் கொட்டியது. பத்து முதல் மூன்று வரையிலான வயதுடைய பிள்ளைகள் நால்வர் அவர்களது உடல்களில் தொங்கியபடி கதறினர்.
நான் யாருக்காவது விபத்தோ நோயோ ஏற்பட்டிருந்தால் காரில் ஆஸ்பத்திரிக்கு இட்டுச் செல்ல ஆயத்தமாக ஜன்னல் வழியே பார்த்திருக்கும் போது, கமலா முற்றத்திலிறங்கி யார் யாரையோ அழைத்து விசாரிக்கலானாள்.
'ஐயோ, பிள்ளையொண்டு செத்திட்டுது, ரெண்டு வயசிருக்கும்' எனும் தகவலை விசாரித்தறிந்து உள்ளே வந்த அவள் விசனித்த குரலுடன் என்னிடம் தெரிவித்தாள்.
'பிள்ளையொண்டு செத்திட்டதா? அப்ப ஏன் பாதையில் கூடி கதறவேணும்?'
'ஆஸ்பத்திரியில்தான் செத்திருக்குது.'
எனினும் எனக்கு விவரம் சரியாகப் புரியவில்லை.
*பிள்ளை செத்திட்டதாக ஆஸ்பத்திரியிலிருந்து டெலிக்ராம் வந்திருக்குது' என அவள் தொடர்ந்தாள். )
சிறு பிள்ளையொன்று மரணிப்பது எனக்கு எப்போதும் பெரும் பாவமாகவே தோன்றும். வயது முதிர்ச்சியுற்ற காலத்தில் எவராவது இறந்தாலும் பாதக மில்லை. எனினும் சிறுபிள்ளையொன்று இருக்கிற விவரமாதல் யமனுக்குத்
சிங்களச் சிறுகதைகள் 96

தெரியாது எனலாம். அழைக்கப்பட்டால் ஒழிய யமன் சிறுபிள்ளையின் அருகே வரமாட்டான். அறியாச் சிறுவர் பெரும்பாலும் பெற்றோரது கவனயீனத்தாலேயே மரிக்கின்றனர். மழலை ஆயுள் வாழ்வின் பொறுப்பிற் சுமத்தப்பட்டுள்ளது. இயற்கைச் சக்திகள் யாவும் மழலையின் ஆயுளைப் பாதுகாக்கவே முயற்சிக் கின்றன. சிறுமதலை உக்கிரமான போராட்டத்தின் பின்பே இறுதி மூச்சை விடுகிறது. அதுவும் முடியாத பட்சத்தில்தான் அப்போராட்டத்தில் வெற்றிபெற மதலை பெரியோரிடம் அற்பளவு உதவியையே வேண்டிநிற்கிறது. ஊராருடன் மேலும் கலந்துரையாடியபின் விவரமறிந்த, கமலா கூறிய ஒருசில விஷயங்களால் எனக்கு துக்கம் மேலிட்டது. அந்த மனுஷனுக்கு அந்த இளைய மகளிலே சரியான பிரியமாம். வந்த நேரம் முதல் பிள்ளையைத் தூக்கியபடியே இருப்பானாம். ஊட்டுவது, உறங்க வைப்பது எல்லாத்தையும் செய்யிறது அவன்தானாம். பிள்ளையும் அப்பா வருமட்டும் ராத்திரியிலே தூங்குறதில்லையாம். இதைக் கேட்ட எனக்கு கவனயீனத்தாலெனப் பெற்றோரைக் குறைகூறுவது எப்படி எனத் தோன்றியது. அவ்வாறாயின், அறியாமையாக இருக்கலாம். எவ்வளவுதான் அக்கறையுடனிருந்த போதும் ஊராருக்கு நோய் நொடிகளின் அறிகுறிகளை இனங் கண்டுகொள்ளத் தெரியாது. அறியாக் குழந்தை அழுவதன் மூலமோ வேறு வகையாலோ தனது வருத்தத்தைத் தெரிவிக்க முயன்றிருக்கலாம். எனினும் பெற்றோருக்குக் குழந்தையின் பாஷை புரிந்திருக்க மாட்டாது. பிள்ளையின் மரணத்தினது துன்பகரமான உண்மைகள் இவ்வாறு வெளிப்படலாயின.
'அடடா! நோய் ஏற்பட்ட போது எங்களுக்குச் சொல்லியிருந்தால்? கடோசி நேரத்திலதான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிக்கவேணும். அப்படிப்பட்ட நேரத்தில் கொண்டு போனா அந்த மனுஷர்கள்தான் என்ன செய்வார்கள்?
'நேற்றிரவு பதினொரு மணி மட்டில்தான் கொண்டு போயிருக்குதுகள்.
'ஆ... அதுதான் நான் சொல்ல வந்ததுவும். கடைசி வேளை நெருங்கு மட்டும் காத்திருப்பவர்கள், நாட்டு வைத்தியத்தைப் பண்ணிப் பண்ணி..
பிள்ளையின் மரணத்தைத் தவிர்த்திருக்கலாம் என்பதை எண்ண எண்ண எனக்குத் துக்கம் மேலிட்டது.
'இப்போது அதைப் பேசிப் பிரயோசனமில்லை' என்றாள் கமலா. 'சடலத்தைக் கொண்டு வந்தபின் செலவுக்குக் காசு பணம் ஏதாச்சும் கொடுப்பதே எம்மாலாகக்
கூடியது.
'இந்த மனுஷர்கள் பாதையில் கூடி பார்த்திருப்பது என்னத்தையாம்?' பொறுக்கவியலாத மாத்திரத்திலேயே நான் வினாவினேன்.
'சடலத்தைக் கொணருவது மட்டும் காத்திருக்குதுகள். யாரோ ஆசுபத்திரிக்கும் போயிருக்காங்களாம். சிறிது நேரத்தாற் சந்தடி அடங்கிற்று. கூடியிருந்தோர் கலையத் தொடங்கினர். வேறு அலுவல்களின் காரணமாக
97 | மல்லிகைப் பந்தல்

Page 57
அச்சம்பவம் எனது நினைவிலிருந்தும் மூழ்கிவிட்டது. எனினும் மறுநாள் இடம்பெறப் போகும் மரணச் சடங்கின் நடைபெறக்கூடிய காட்சிகளை நினைத்துப் பார்க்கும் போது நான் நடுக்குறலானேன். எப்படித்தான் அவற்றைப் பார்த்துச் சகித்துக் கொள்வதோ? சடலத்தைப் புதைக்கும் போது பிள்ளையின் தந்தை என்ன செய்வாரோ? பிள்ளை இறந்த சேதியைக் கேட்ட மாத்திரத்தே அவரால் தாங்கிக் கொள்ள முடிந்திராவிட்டால், சதாகாலமும் பிள்ளையைக் காண முடியாதபடிக்கு பெட்டியிலிட்டு மூடிக்கொண்டு போகும்போது அவர் நிலை என்னவாகுமோ? அவர் நஞ்சருந்தியோ மார்பிற் கத்தியாற் குத்திக் கொண்டோ
அவ்விடத்திலேயே உயிரை மாய்த்துக் கொள்ள மாட்டாரோ?
தாயின் துயரம், தந்தையின் துயரத்தைப் போலப் பெரிதாகப் பிறருக்கு வெளித் தோன்றாத போதும் எத்துணை பரிதாபகரமான நிலை அவளுடையது. எஞ்சியிருக்கும் பிள்ளைகளைப் பார்த்துத் தனது துயரத்தை ஓரளவு சலித்துக் கொண்டிருக்கக் கூடும். எனினும் எவ்வளவு காலத்துக்குத்தான் பொறுத்திருப்பாள்? தந்தையோ அழுது புரள்வதால் தனது துயரத்தைக் குறைத்துக் கொள்வார். அவள் எந்தநேரத்தில் உடல் சோர்ந்து சாய்வாளோ என்பது யாருக்குத் தெரியும்?
'அந்த வீட்டுக்கு நாமும் போவோமா? போய்க் கதைத்துப் பார்த்து காசு கொஞ்சம் குடுத்து வரலாம். வேறு என்னத்தைச் செய்யிறது?' நான் மறுநாட் காலையில் கமலாவிடம் யோசனை தெரிவித்தேன்.
'அப்படிப்பட்ட காட்சி ஒன்றைப் போய்ப் பார்த்து நிற்பது பெரிய கஷ்டமாக இருக்கும். அந்தப் பிள்ளைய நான் தூக்கியும் இருக்கிறன். மிகவும் சூட்டிகையான பிள்ளை... சவத்தை வீட்டிலிருந்து கொண்டு செல்லும்போது போலாம்' என்று மிகுந்த துயரத்துடன் கமலா கூறினாள்.
சாவீடு பாதைக்கு மறுபுறம் இருந்தமையால் அங்கு இரண்டு தடவை சென்று வருவதால் அதிகநேரம் வீணாகுமே என்று எனது வசதியைக் கருதி அவளது யோசனைக்கு உடன்பட்டேன்.
எனினும் எனக்கு அன்றிருந்த பல்வேறு அலுவல்களின் மத்தியில் பிள்ளையின் சங்கதி சம்பூரணமாகவே மறந்து விட்டது. அன்றிரவு ஏழெட்டு மணியளவில் மேளவோசையைக் கேட்டபின்பே அந்த ஊரைப் பற்றியாதல் ஞாபகம் வந்தது. அவ்வளவு சீக்கிரமாகவா பிள்ளையின் அகால மரணத்தை ஊரார் மறந்து விட்டனர்? என எண்ணி ஆச்சரியப்பட்டேன். அத்துடனே சாவீட்டுக்குப் போவது பற்றி நினைவூட்டாததையிட்டுக் கமலாவை அதட்டினேன்.
'சாவீட்டுக்குப் போறதுக்கு சிறிதாச்சும் நினைவூட்டாது போனாயே. இன்று எனக்கு எவ்வளவு அலுவல்கள் இருந்தது? எனக்கு அதெல்லாத்தையும் ஞாபகத்தில் வச்சிருக்க ஏலுமா? இப்படிப்பட்ட விஷயங்களை நீ பாத்துக்க வேணாமா?
சிங்களச் சிறுகதைகள் 98

கமலா சிரிக்கத் தொடங்கினாள். பிள்ளையின் மரணத்தையிட்டு அவ்வளவு தூரம் சோகவயப்பட்டிருந்தவள் இப்போது சிறிதாகிலும் அதைப் பொருட்படுத்தாமல் இருப்பது எப்படி என வியப்பு மேலிடலானேன். நான் அவளை அதட்டிப் பேசலானேன்.
'உனக்கு எதிலும் பாரதூரம் விளங்குவதில்லை. மனுஷர்களது கஷ்ட நஷ்டங்களில் சிறிதாச்சிலும் கலந்துக்காமல் எம்மால் இந்த ஊரில் இருக்க ஏலுமா?'
'இல்ல; அதுவல்ல விஷயம், அந்திபட சவ ஊர்வலம் நடைபெறயில்ல. நான் அதுபத்தி விசாரிச்சறிஞ்சேன். அவளது சிரிப்பு இன்னும் விலகினபாடில்லை.
'அப்படியெண்டா அந்த சகாயநிதிக்காரங்கள் கூடியிருப்பாங்கள். சவம் அழுகு மட்டும் வைச்சுக் கொண்டு கிடக்குங்கள். நான் ஆத்திரத்துடன் சொன்னேன்.
'இல்ல. அதே இருக்குது பிள்ளை. வீட்டுக்குக் கொண்டு வந்தாச்சு: சாக இல்லை'
'சாக இல்லையா? அப்படியெண்டால் எல்லாரும் கூடிப் புலம்பினாங்களே?'
'டெலிகிராமில் பிள்ளைக்கு கடுமையான வருத்தமெண்டு கண்டிருக்குது. வலிப்போ ஏதோ ஏற்பட்டிருக்குது. பிள்ள செத்துத்தான் போயிட்டதாக அதுகள் கலவரப்பட்டிருக்குது. அப்படி இல்லையெண்டா அறிவிக்க மாட்டாங்களெண்டு.'
குழந்தை சாகவில்லை என்ற விஷயம் எனது மனத்தின் குழப்பத்தைத் தெளிவுபடுத்தவே நான் நிம்மதிப் பெருமூச்சொன்றை விடுத்தேன். அதனுடன், ஆரம்பத்தில் ஒலித்த மேளவோசை உரத்து பெரும் தாளக்கட்டுடன் மேலெழலானது, சிறிது நேரத்தில் அத்தாளத்துக்கமையப் பாட்டிசைத்த ஆண்குரல்கள் பல கேட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக எனது கவனத்தை ஈர்த்தது திடீரென ஒலித்த பட்டாசு வெடிச்சத்தமே. -
மேளவோசையையும், பாடலோசையையும், வெடியோசையையும் மீறிக் கொண்டு நாய்ப் பட்டாளமொன்று பல்வேறு ஸ்வரங்களில் குரைக்கத் தொடங்கிய போது எம்மிருவருக்கும் ஒருமிக்க குபு குபுவெனச் சிரிப்பு வந்தது.
28 இதழ் : 46
மார்ச் 1972
99
மல்லிகைப் பந்தல்

Page 58
திலக் சந்திரசேகர
'அட்சரக்கூடு”
தமிழாக்கம்: கனகசபை துரைராஜா
தம்பி நித்திரையில் திடுக்கிட்டு விழித்துக் கொண்டு அழுதான், 'அட்சரக்கூடு ஒன்றைக் கட்டினால் சுகம் ஆகும்' என அம்மா அடிக்கடி கூறினாள். சிறிது காலமாக அம்மா யோசனையுடன் காணப்பட்டது இது எண்ணத்தால் போலும். ஒருநாள் என்னையும் கூட்டிக் கொண்டு தம்பியையும் தூக்கிக் கொண்டு அம்மா நகைக்கடைக்குப் போனாள். அன்று அக்கா கழுத்தில் சங்கிலி போட்டிருக்கவில்லை. அதைக் கடதாசியில் மடித்துத்தான் எடுத்துக் கொண்டு போனோம். நகைக்கடையில் சங்கிலியைக் கொடுத்து அட்சரக்கூடு ஒன்றை வாங்கினோம். அது மிகவும் அழகானது. அட்சரக்கூட்டைக் கோர்த்து எடுக்க அம்மா அரைசாண் கொடியும் பார்த்தாள். விலை அதிகம் என்று வாங்கவில்லை.
வீட்டுக்கு வந்து அம்மா அட்சரக்கூட்டை ஊசியால் தம்பியின் சட்டையில் குத்தி விட்டாள். தம்பிக்கு இப்போது ஐந்து மாதம்தான் ஆகிறது. அவனுக்கு இருக்கக்கூட இயலாது. அட்சரக்கூட்டைக் குத்திய நேரத்திலிருந்து அவன் அடிக்கடி அதனைக் கைாயல் இழுத்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அதில் அவ்வளவு ஆசை! தங்கம் விலை என்று கேள்விபட்டுத்தான் இருப்பான். மேலும் அதைக் கட்டிக் கொண்டால் தூக்கம் கெடாது எனவும் அறிந்திருக்க வேண்டும். ஒன்று மட்டும் உண்மை. அட்சரக்கூடு கிடைத்த பிறகு தம்பி சிறிது கர்வம் கொண்டவனாகக் காணப்பட்டான். என்னுடன் சிரிப்பதையும் சிறிது குறைத்துக் கொண்டதாக எனக்குப் பட்டது. எனக்கும் சிறுவயதில் அட்சரக்கூடு இருந்ததாம். நான் வளர்ந்தபின் அது எனக்கு எதுவித பிரயோசனமும் இல்லை என்று அதை விற்றுத் தனக்குத் தோடு வாங்கியதாக அம்மா சொன்னாள்.
அட்சரக்கூட்டுடன் தம்பியைத் தூக்கிக் கொண்டு முற்றம் எங்கும் ஓடி விளையாடி, மாலையில் கழுவி இரவாகியதும் படுக்க வைத்தோம். அன்று தம்பி திடுக்கிட்டு எழும்பவில்லை; ஒரு தடவையாவது அழவில்லை. அம்மா வுக்குத் தாங்கொணா மகிழ்ச்சி.
சிங்களச் சிறுகதைகள் 100

அம்மா என்னிடம் கேட்டாள். )
1 பெரிய தம்பி இரவு தம்பி திடுக்கிட்டு எழும்பி அழுதானா? பார்த்தாயா? சின்னவனுக்கு எப்பவோ அட்சரக்கூடு வாங்கியிருக்க வேணும்" என்று அம்மா
வருத்தப்பட்டாள்.
தம்பியின் அட்சரக்கூட்டை ஆச்சி வீட்டுக்குக் கொண்டுபோய் காட்ட வேண்டுமென அம்மா பறந்தாள். நான் பள்ளிக்குப் போய் வந்தவுடன் தம்பியையும் என்னையும் கூட்டிக்கொண்டு போவதாக அம்மா சொன்னாள்.
அன்று பின்னேரம் நாங்கள் ஆச்சி வீட்டுக்குப் போனோம். ஆச்சி, மாமி, மச்சாள்மார் இருவரும், பெரிய மாமாவும் இருக்கிறார்கள். பெரிய மாமா வீட்டில் இருப்பது அரிது. தோட்டத்துக்குப் போய்விடுவார். அன்றும் வீட்டில் இல்லை.
தம்பியைக் கண்டதும் 'வாடா என் சின்னக்குஞ்சு' என்று ஆச்சி அவனைத் தூக்கிக் கொண்டாள். தம்பியின் சட்டையில் அட்சரக்கூடு மினுங்கிக் கொண்டு தொங்கியது. முன்பெல்லாம் நான் ஆச்சி வீட்டுக்குப் போனால் 'வா வா குட்டித்தம்பி' என்று ஆச்சி என்னை அணைத்துக் கொள்வாள். இப்போது என்னிலும் பார்க்கச் சிறிய குட்டித் தம்பி இருப்பதால் நான் ஒதுங்கியே இருக்க வேண்டியிருக்கிறது. அந்தக் குட்டித்தம்பி எனது சொந்தத் தம்பிதானே? ஆனபடியால் என்னுடைய இடத்தை அவன் பிடித்துக் கொண்டாலும் பரவா யில்லை. ஆச்சி தம்பியைக் கொஞ்சுவதைப் பார்க்க எனக்கும் ஆசைதான். எனக்கு நினைவு இல்லாவிட்டாலும் நானும் சிறுவயதில் அட்சரக்கூடு கட்டிக் கொண்டு போனபோது இதே மாதிரி ஆச்சி என்னையும் கொஞ்சியிருப்பாள் தானே? ஆச்சி இன்னமும் தம்பியின் அட்சரக்கூட்டைக் காணக்கூடவில்லை. மாமிதான் முதலில் கண்டாள்.
'சரியான விலையாயிருக்கும் இல்லையா மச்சாள்?' என மாமி அம்மாவிடம் கேட்டாள்.
விலைதான், சின்னத்தம்பி நித்திரையில் திடுக்கிட்டு எழும்பி அழுதான். இரவில நித்திரை கொள்வதே இல்லை. நேற்று அட்சரக்கூடு கட்டியபிறகு நல்லாய் நித்திரை கொண்டான். ஒருக்காலாவது திடுக்கிட்டு எழும்பவில்லை' என அம்மா பதில் சொன்னாள்.
மாமி வீட்டில் எல்லோருக்கும் அட்சரக்கூடு இருக்கிறது. இருந்தாலும் பெரிய மாமா, மாமி, மச்சாள்மார் யாரும் அட்சரக்கூடு கட்டிக் கொள்வதில்லை. பெரிய மாமாவுக்குப் புகையிலை விற்ற காசு வந்தால் பெரிய கொண்டாட்டம் தான். மாமிக்குச் சேலை, மச்சாள்மாருக்குச் சட்டைத் துணி, வெளிநாட்டுப் பழவகை, சொக்லட் மாத்திரம் அல்லாமல், தங்க நகைகளும் வாங்குவார்கள். சாப்பாட்டுச் சாமான்கள் நிறையக் கிடைக்கும்போது எங்களுக்கும் சிறிது அனுப்பும்படி பெரிய மாமா சொல்வாராம். அப்பொழுதெல்லாம் பெரிய மச்சாள்
101 மல்லிகைப் பந்தல்

Page 59
திட்டுவாளாம். ஐயாவுக்குக் கொடுக்கிற எண்ணந்தான் எந்த நேரமும் என்று. மாமிக்கும் அவ்வளவு விருப்பம் இல்லைதான். எதையாவது பெரியமாமா எங்களுக்கு அனுப்பச் சொன்னால் கூடியவரை சுணக்கிப் பார்ப்பார்கள். அப்படியும் முடியாவிட்டால்தான் மாமி அம்மாவுக்கு அனுப்பி வைப்பாள். இருந்தாலும் அதற்கான பணத்தை அம்மாவிடமிருந்து அறவிட்டு விடுவாள். பெரியமாமாவுக்கு இது தெரியாது என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவருக்கு உண்மையில் தெரியுமோ தெரியாது.
தம்பி பிறந்த நாட்களில் நடந்ததைக் கேளுங்களேன். வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்த அழகான குளிக்கும் பேசின் ஒன்றைப் பெரிய மாமா தம்பிக்கு குளிக்கவாக்க என்று வாங்கினாராம். அதை வாங்கியதைப் பற்றி அம்மாவுக்குச் சொல்லுமாறு பெரிய மாமா மாமிக்குச் சொல்லியிருக்கிறார். அதை மாமி மறந்து விட்டது. தம்பிக்குக் குளிக்கவாக்க எங்கள் ஐயா விலை குறைந்த பேசின் ஒன்றை வாங்கி விட்டார்.
அதன் பிறகு மாமி 'மச்சாள் பேசின் வாங்கிவிட்டபடியால் வேறு பேசின் எதற்கு? நான் இதைக் கடைக்குத் திருப்பிக் கொடுத்து, அதற்குப் பதிலாக சின்னத் தம்பிக்கு அழகான உடுப்பு வாங்கி வருகிறேன்' என்று சொல்லிவிட்டுப் போனாள்.
அது அவ்வளவுதான். மாமியும் பெரிய மச்சாளும் கடைக்குப் போய் பேசினைக் கொடுத்துத் தொகையான சாமான்கள் வாங்கிக் கொண்டு போனார்கள். சின்னத் தம்பிக்குத் தொப்பியும், சட்டைத் தைக்கத் துணியும் அனுப்பியிருந்தார்கள்.
தம்பியின் அட்சரக்கூட்டை மாமி நன்றாகத் தடவிப் பார்த்துவிட்டுச் சொன்னாள்:
'இது நல்ல பவுண். சிறுகுழந்தைகளுக்குக் கட்டி வீணடிக்கக் கூடாது. யாராவது ஆசைப்பட்டுப் பிடுங்கிக் கொண்டால்?' இரு மச்சாள்மாரும் அட்சரக்கூட்டைப் பரிசோதித்தார்கள்.
அதன் பிறகு நாங்கள் நீண்ட நேரம் விளையாடினோம். தம்பியை மேலே வீசி வீசிச் சின்ன மச்சாள் விளையாடிக் கொண்டிருந்தாள். தம்பியை ஒரு கைமாறி மறுகைக்கு மாற்றி மாற்றிக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் அவனை தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சினார்கள், தம்பியும் வாய்கொள்ளாமல் சிரித்தபடியிருந்தான்.
'ஐயா வீட்டுக்கு வருமுன் நாங்கள் போகவேணும்' என அம்மா நினை வூட்டினாள். நாங்கள் வீட்டுக்குப் போய்ப் பார்த்தபோது தம்பியின் அட்சரக்கூடு இல்லை. அப்போது ஐயாவும் வந்தார். நாங்கள் எல்லோரும் மீண்டும் ஆச்சி வீட்டுக்குப் போனோம். போய் எங்கும் தேடினோம்.
சிங்களச் சிறுகதைகள் 102

அட்சரக்கூடு இல்லை.
*அட்சரக்கூடு சிறியது. இலைகூட மறைத்து விடும். கண்டுபிடிப்பது கஷ்டம்' என்று மாமி சொன்னாள். அது தங்கள் வீட்டில் விழுந்திருக்க முடியாது என்றும் நாங்கள் வீடுபோகும் வழியில் எங்கோ விழுந்திருக்க வேண்டும், அல்லது எங்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்று ஆச்சி அபிப்பிராயப் பட்டாள். அட்சரக்கூட்டைத் தேடக்கூட மச்சாள்மார் உதவவில்லை. அவர்கள் பள்ளியில் கொடுத்த வீட்டுக் கணக்குச் செய்கிறார்கள் என்று மாமி சொன்னாள்.
மாமாவின் கண்ணில் கண்ணீர் வருவதைக் கண்டேன். சின்னத்தம்பியும் அம்மாவின் இடுப்பில் இருந்து கொண்டு அட்சரக்கூட்டைத் தேடினான். அட்சரக்கூட்டைக் குத்தியிருந்த ஊசி இன்னமும் தம்பியின் சட்டையில் திறந்து இருந்தது.
சத்தம் கேட்டுப் பக்கத்து வீட்டுப் பெரியம்மாவும், பெரியம்மா வீட்டுத் தம்பியும் ஓடி வந்தார்கள். 'அட்சரக்கூடு அங்கே விழுந்திருக்க முடியாது' என பெரியம்மாவும் சொன்னாள். தம்பி சிறிது தேடிப்பார்த்தான்.
பெரிய மச்சாளின் தோடு காணாமல் போன அன்றுகூட இவ்வளவு தேடவில்லை என்று மாமி பெரியம்மாவிற்குக் கூறினாளாம். அப்போது பெரியம்மா சொன்னாளாம் தன்னுடைய 'மோதிரம்' காணாமல் போனபொழுது சிறிது தேடிவிட்டு விட்டுவிட்டதாக. இப்படி அட்சரக்கூட்டைத் தேடுவது பற்றி இருவரும்
ஆச்சரியப்பட்டார்களாம்.
மாமி குடும்பத்துக்குப் பெருமளவில் தோட்டம் இருப்பதால் அவர்களுக்குத் 'தோடு' வாங்குவதுகூட ஒரு சிறிய விஷயம் என அம்மா எனக்குச் சொன்னாள். பெரியம்மாவின் போக்குவரத்து பென்ஸ் காரில், அவர்களுக்கு மோதிரத்தை வேண்டாம் என்று வீசிவிடவும் முடியும். எங்கள் ஐயா வாய் வலிக்கப் பாடசாலையில் படிப்பித்து விட்டு மாதக்கடைசியில் வீட்டுக்குக் கொண்டுவரும் சம்பளம் சாப்பாட்டுக்கே போதாதாம். ஆனபடியால், காணாமல் போன அட்சரக்கூட்டைக் கண்டுபிடிக்க முடிந்த அளவு தேட வேண்டுமாம்.
பெரியம்மாவின் சின்ன பேபி பாவித்த அட்சரக்கூட்டைத் தம்பி பாவித்து விட்டுத் திரும்பத் தருவதானால் அம்மாவுக்குத் தருவதாகப் பெரியம்மா சொன்னாள். ஆனால், மடையர்களைப் போல் அட்சரக்கூட்டைச் சட்டையில் குத்தக்கூடாது. நித்திரையில் திடுக்கிட்டு எழும்புவதுதானே பிரச்சினை? அப்படியானால் அட்சரக்கூட்டை இரவில் கட்டிலில் தொங்கவிட்டால் போதும்தானே? அப்படிச் செய்வதானால் மாத்திரமே அட்சரக்கூட்டைத் தருவாளாம்.
அம்மா 'வேண்டாம்' என்று விட்டாள். அதே நேரம் பெரியமாமாவும் வந்தார். அட்சரக்கூடு தொலைந்தது பற்றிக் கேள்விப்பட்டதும் தம்பிக்குத் தனது அட்சரக்கூட்டைத் தருவதாகச் சொன்னார். அதைக் கேட்டதும்
103 மல்லிகைப் பந்தல்

Page 60
அம்மாவிற்குச் சிரிப்பு வந்தது.
பதான் தரும் அட்சரக்கூட்டை எங்கே தொங்க விடுவது, எங்கே தொங்க விடக்கூடாது என்று பெரியமாமா சொல்லவில்லை. அதைத் திரும்பித் தரவேண்டும் என்றும் கேட்கவில்லை. நாங்கள் வீட்டுக்குப் புறப்பட ஆயத்தமாகும் போது பெரியமாமா அட்சரக்கூட்டைக் கொடுத்தாயிற்றா? என மாமியைக் கேட்டார். அந்த 'அட்சரக்கூட்டை வைத்த இடத்தில் காணவில்லை' என மாமி பதில் சொன்னாள். அப்போது பெரியமாமா கேட்டார், என்னுடைய அட்சரக்கூடுதானே காணாமல் போய் இருக்கிறது? உங்கள் எல்லோருக்கும் ஒவ்வொரு அட்சரக்கூடு இருக்கு அல்லவா? அதில் ஒன்றைக் கொடுங்களேன்.
அதற்கு மாமி பதில் சொல்லவில்லை. பின்னர் அம்மாவுக்குச் சொன்னாளாம், எங்கள் ஐயா முற்கோபி; அட்சரக்கூட்டைத் தந்துவிட்டு பேச்சும் வாங்க வேண்டிவரும் என்று. அட்சரக்கூட்டைத் தேடிக் கண்டுபிடித்து அனுப்பி
வைப்பதாகப் பெரியமாமா கூறினார். நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம்.
அட்சரக்கூடு தொலைந்ததில் ஐயாவுக்கும் அம்மாவிற்கும் தாங்க முடியாத துக்கம். இன்னொரு அட்சரக்கூட்டை வாங்குவதற்கு விற்கக்கூடிய நகைகள் வீட்டில் எதுவும் இல்லை என அம்மா கவலைப்பட்டாள். பெரியமாமாவின் அட்சரக்கூடு கிடைத்தால் நல்லது என ஐயா சொன்னார். ஆனாலும் அது பற்றி மேற்கொண்டு எதனையும் கூறவில்லை.
அம்மா என்றால் வேறு ஏது சிந்தனையும் இல்லாமல் அட்சரக்கூட்டைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தாள். அம்மா அவ்வளவு கரைச்சல்பட்டு வாங்கிய அட்சரக்கூட்டைத் தேடுவதற்கும் ஒருவரும் முன்வரவில்லையாம். அது மிகவும் பெறுமதி வாய்ந்தது. பிள்ளையிலும் பார்க்கப் பெறுமதி கூடியதுபோல் பேசிய மாமிகூட அது காணாமல் போனதும், அது மிகவும் சிறியது, தேடினாலும் கண்ணில் படாத அளவு உள்ளது எனக்கூறி, தேடுவதற்கு உதவியாக மச்சாள் மாரையாவது அனுப்பவில்லையே என அம்மா அழுதாள்.
நான் அம்மாவிற்கு கூறினேன்: 'நான் பரீட்சையில் சித்தியடைந்து உத்தி யோகத்துக்குப் போனவுடன் முதலாவது எடுக்கும் சம்பளத்தில், சின்னத்தம்பிக்கு அட்சரக்கூடும், அம்மாவிற்குச் சங்கிலியும் வாங்கித் தருவதாக. அம்மா சிரித்து விட்டாள். நான் உத்தியோகம் பார்க்கும் பொழுது சின்னத்தம்பியும் பெரியவனாகி விடுவான். அப்போது அவனுக்கு அட்சரக்கூடு தேவையில்லை. அதைப்பற்றிப் பறவாயில்லை. அம்மாவிற்கு வாங்கித் தருவதாகச் சொன்ன சங்கிலியை வாங்கித் தந்தால் போதும். கிழவியாகி விட்டதற்குப் பிறகாவது சங்கிலியைப் போடுவோம். ஒவ்வொரு மாதமும் சம்பளம் எடுத்ததும் அம்மாவிற்குத் தங்கநகை வாங்கிக் கொடுக்க விருப்பம் இல்லையா? எனவும் அம்மா கேட்டாள். நான் விருப்பம் என்றேன்.
ஐயா இந்தக் கதையைக் கேட்டுக்கொண்டு இருந்துவிட்டு என்னிடம்
சிங்களச் சிறுகதைகள் 104

கேட்டார், சம்பளம் எடுத்ததும் தனக்கு என்ன வாங்கித் தருவேன் என்று.
ஐயாவின் நகை ஏதாவது தொலைந்ததா? என நான் கேட்டேன். இதைக் கேட்டதும் ஐயா, அம்மா இருவரும் நீண்ட நேரம் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
'காணாமல் போவதற்கு நகை மாத்திரம் அல்ல எந்தப் பொருளும் என்னிடம் இல்லை, தம்பி' என்று ஐயா கூறினார்.
அடுத்த நாள் அம்மாவிற்கு மாமியிடம் இருந்து ஒரு செய்தி வந்தது. பெரியம்மா வீட்டுத்தம்பிதான் செய்தி கொண்டு வந்தான். 'அட்சரக்கூடு ஆச்சி வீட்டில்தான் காணாமல் போனதுபோல், நாங்கள் ஊரைக்கூட்டித் தேடுதல் போட்டது பற்றி பெரியமாமாவிற்கு கடுங்கோபமாம். ஆனபடியால் சில நாட்களுக்கு அந்தப் பக்கம் வரவேண்டாமாம், அட்சரக்கூட்டைப் பற்றிய கதையே எடுக்க வேண்டாமாம்.'
சில வாரங்கள் கழிந்தன. நாங்கள் ஆச்சி வீட்டுக்குப் போகவில்லை. பெரியம்மாவின் வீடும் ஆச்சி வீட்டுக்கு அருகாமையில் இருந்ததால் அங்கும் போகவில்லை. அவர்கள் யாரும் எங்கள் வீட்டுக்கு வரவுமில்லை. பெரியமாமா தருவதாகச் சொன்ன அட்சரக்கூட்டின் கதையும் அத்துடன் முடிந்தது.
புதிய அட்சரக்கூடு விலைக்கு வாங்குவதோ கடனாக வாங்குவதோ முடியாத காரியம் என்று தம்பி புரிந்து கொண்டானோ தெரியாது. தம்பி அதன் பின்னர் நித்திரையில் திடுக்கிட்டு எழும்பவில்லை. நன்றாக நித்திரை கொள்கிறான். இப்பொழுது கனவில் கத்துபவள் அம்மா. தம்பியையும் நித்திரையால் எழுப்பும் அளவுக்கு அம்மா கனவில் உளறுகிறாள். ஐயா அம்மாவை எழுப்ப அம்மா விழித்துக் கொண்டு, கனவில் அட்சரக்கூட்டைக் கண்டதாகக் கூறினாள். வெவ் வேறு விதமான முகமூடிகளை அணிந்த கள்வர் கூட்டம் வந்து அட்சரக்கூட்டைப் பறித்துக்கொண்டு போவதாகக் கனவிற் கண்டாளாம்.
இதழ் : 219
1989
105 மல்லிகைப் பந்தல்

Page 61
ஆரியவங்க. சந்திரபீரீ
ஒரே இரத்தம்
- தமுமுக தமிழாக்கம்:
5 அநீள்கரை நம்பி
'கடவுளே காத்திடு! ஊரில் ஒளியேற்றிவிடு!'
தினந்தோறும் கேட்கும் இக்கவிதை அடிகள் இன்றும் லயன் பக்கமாகக் கேட்கிறது. மூக்கு முட்டக் குடித்திருப்பான். சனியன் குடித்த நாளைக்கு இப்படித்தான் தொல்லை. அமைதியாகப் புஸ்தகங்கள் படிக்க முடியவில்லை. அருகில் வேறு விடுதியொன்றையாவது பார்த்துக் கொள்ள வேண்டும். இப்போது அந்தப் பைத்தியம் ஆடி ஆடி அறைக்கு வரும். கள் நாற்றம் பொறுக்க முடியாது போகும்.'
''ஐயா... ஐயா... ஊஹும்"
நான் அமைதியாக இருந்தேன்.
''ஐயா... தூக்கமா... தெரியவில்லை... மன்னியுங்கள்... ஸாருக்குத் தொல்லை தருவதற்காக..." மாமா நான் இருக்கும் இடத்திற்கு மெல்ல நெருங்கி, கையிலிருந்த வெற்றுக் கள்முட்டியை கட்டிலின் கீழ் தள்ளினான்.
* 'லேசான இருட்டு இப்பதான் விழுகுது. அதற்கு முன் நித்திரை...யா? ஏன் சுகமில்லையா ஸார்?''
மாமா கட்டில் கால்மாட்டில் அமர்ந்தான். குடலைப் புரட்டும் நாற்றம் அறையில் சஞ்சரிக்கத் துவங்கியது. நான் எழுந்து சாளரக் கதவுகளைத் திறந்துவிட்டேன்.
* 'ஒரே வியர்வை... மாமா...''
“உண்மைதானா!.. ஐயாவுக்கு வியர்வை போடுவது... உறங்கும்போது...? எங்களுக்கு... வியர்வை... போடுவது... வேலை செய்யும்போது...''
சிங்களச் சிறுகதைகள் 106

''மாமா... எப்படிப் புதிய சமாச்சாரங்கள்?” நான் மாமாவின் பேச்சை வேறுபக்கமாகத் திசை திருப்பினேன்.
''ஷாஹ்... இன்னமும்... சரியாக... இறுகவில்லை... நான்... நாளை வரும்போது... ஸாருக்கு... ஒருபோத்தல் நல்ல கள... கொண்டுவந்து... தருகிறேன்."
தினமும் அவன் இப்படியே உளறுவான். கொஞ்சமாவது கள் கொண்டு வரமாட்டான்.
எதற்கு மாமா? நான் அவ்வளவாகக் குடியை விரும்புவதில்லை.”
''உண்மைதான்... ஸார் கூடாத பழக்கம். அளவாகக் குடித்தால் ஒளஷதம் போல்தான் இருக்கும்' என்றவாறு கொவ்வைப்பழம் போல் சிவந்த விழிகளின் பார்வையை அரை இமை திறந்து என்மீது படர விட்டான்.
அவற்றைப் பக்கமாக வைப்போம் ஸார். நாங்கள் ஒரிஜினல் சிங்களவர்கள்; துட்டகைமுனு மன்னர் மட்டும் இல்லாதிருப்பாரானால் எங்களுக்கு என்ன ஆகும்? நாங்கள் 'கட்டை மேல்'தான். (கொட உட)
'இன்றைக்கும் துவங்கி விட்டீரா? இது என்ன அழிச்சாட்டியம். தமிழ் மனிதர்களை இந்த மனுஷனின் கண்ணில் காட்ட முடியாது? சிலவேளை கிராம மக்களும் சொல்வது உண்மைதான். மாமாவின் இளைஞர் காலத்தில் ஒரு குமரி தமிழ்ப் பையனுடன் ஓடிவிட்ட கதை.
ஸார் இன்று துஷ்டகைமுனு மன்னன் சமாதியிலிருந்து எழுந்து வாரும் சுதுபண்டா தமிழர்களின் சிரங்களைக் கொய்வோம்' என்று அழைப்பாரானால் நந்திமித்திரர் போல முன்னே நிற்பவர் இவர்தான்.
* 'நந்திமித்திரர் என்ன விஜயபாகு போல'' என்று நான் சொன்னேன்.
'ஆஹா.. ஆஹா... உண்மையாகவா..?"
மாமா கட்டில் கீழ் கிடந்த வெற்றுக் கள்முட்டியைக் கையில் எடுத்து எழுந்தான்.
என்னுள் பிரமோதயப்படும் ஒரு புதிய அமைதியின் இசை எழுந்தது. * 'நான்... போய்வருகிறேன்... ஸார்.”
'முறுவசாதி மனுஷன் இவன். தோட்டத் தமிழர்கள் எத்தனை பேருக்கு அநியாயம் செய்து விட்டான்? சரியாக உணவு கொடுக்காது செக்கு மாடுகளாகக் கணித்து வேலை வாங்குகிறான். அப்பாவிகளைக் கசக்கி சாறு பிழிகிறான்'
மறுதினம் பாடசாலை கலைந்ததும் என் விடுதிக்கு வந்தேன்.
107 மல்லிகைப் பந்தல்

Page 62
E''ஸார்! சுதுபண்டாவின் இடுப்பு முறிந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளார்" இப்படி வந்து சொன்னாள் விடுதியில் பணி புரியும் பெண்.
நான் அன்று மாலையிலே மாமாவைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குச் சென்றேன். அவன் நிலை கவலைக்கிடமாகக் காணப்பட்டது. படுக்கையைச் சுற்றி மறைப்புகள் போடப்பட்டிருந்தன. அருகில் வைத்தியர் தாதிகள் நின்றனர்.
''மிஸ் எப்படி நோயாளியின் நிலை?”
8 ம்
''கொஞ்சம் கடுமைதான். நோயாளிக்கு இரத்தம் ஏற்ற வேண்டும். இரத்த வங்கியில் இவர் இன இரத்தம் முடிந்து விட்டது.'' 'Tா!
தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் மாமாவின் தம்பியுடன் வேறு தொழிலாளர்களும் நோயாளியைப் பார்க்க ஆஸ்பத்திரிக்கு வந்தனர். 014
அதிர்ஷ்டவசமாக அவர்களுள் ஒருவனின் இரத்தம் மாமாவுக்கு ஒத்து வந்தது.
ஆமாம்... தேயிலைத் தோட்டத்து முத்துசாமியின் இரத்தம் மாமாவை வாழ வைக்கிறது.
இதன் பிற்பாடு என்றுமே மாமா தமிழ் மக்களுக்குப் புரியும் அநியாயங்களை அடியோடு நிறுத்தி விட்டார்.
- இதழ் : 80 பகலவாடை ( டிசம்பர் 1974
- ப அ (இபப்பா)
அப்துல் க இ பா ம ற ,
சிங்களச் சிறுகதைகள் 108

வீ. பீசோம பெரேரா இல் 12
எட்டாத கனி
11:5)
தமிழாக்கம்: - 8:11 தமிழாக்கம்: (இTாயட் பலப்பள்ஏ. பியதாச
இல் சில நாட்களாகப் பெய்த மழை அன்று நின்றது. காலைக் கதிரவன்
பூமியை முத்தமிடத் தொடர்ந்தான். ஈரம் காயத் தொடங்கியது.
'இன்று நல்ல நாள்' இனிமையாக அவன் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.
வேலு தன் ஆயுதப் பெட்டியைக் கையில் எடுத்தான். மறுமுறையும் தெய்வ ரூபத்தையே ஏறிட்டுப் பார்த்தபடி பெட்டியைத் தோளுக்கு மேல் வைத்துக் கொண்டு தெருவில் இறங்கினான். அங்கும் இங்கும் பார்வையைச் செலுத்தாமல் தலையைப் பூமியை நோக்கித் தொங்கவிட்டபடி அவன் மெல்ல மெல்லப் பிரதான தெருவுக்கு வந்து கொண்டிருந்தான். தலையை நிமிர்த்திக் கொண்டு வாசற்படி வரை வர வேலுவுக்குப் பழக்கமில்லாவிட்டாலும் அபசகுனங்களைக் காண விருப்பமில்லாதவனாய் அப்படிச் செய்தான். தலையைத் தொங்க விட்டுக்கொண்டு போவதால் குறைந்தபட்சம் கல்லிற் கால் தடுக்காமலாவது போக முடியுமென்ற நம்பிக்கை அவனுக்கு வந்தது.
வேலு கடைத் தெருவுக்கு வரலானான்.
இன்னமும் அங்கு குதூகலங்கள் ஓயவில்லை. பள்ளிக்கூடம் போகும் பிள்ளைகளும், வேலைக்குப் போகும் மனிதர்களும், பற்பல காரியங்களுக்காகப் போகும் ஆட்களினாலும் நடைபாதை எங்கும் ஜனங்களால் நிரம்பி இருந்தது. ஆனாலும் அவன் தினந்தோறும் உட்கார்ந்திருக்கும் வாகை மரத்தடியில் மட்டும் இன்னமும் இடம் காலியாகவே இருந்தது.
பக்கவாட்டில் ஏதோ ஒரு வேறுபாடு இருப்பதை அக்கம் பக்கம் பார்த்த வேலு உணர்ந்தான். வேறு நாட்களிற் கிடையாத ஒருவித வெளிச்சம் நாலாபுறமும் படர்ந்திருந்தது. ஆனால் அது எப்படி, எந்த முறையில் வந்தது என்று வேலுவால் ஒரேடியாக நிச்சயித்துக் கொள்ள முடியவில்லை. அவன் அதற்குக் காரணம் அறியும் நோக்கத்துடன் அக்கம் பக்கம் பார்த்தான்.
109 மல்லிகைப் பந்தல்

Page 63
மார்ட்டின் ஐயாவின் துவணகிரி ஹோட்டல் அங்கு இல்லாததை அப்போதுான் அவனால் காண முடிந்தது. சைமன் ஐயாவின் பேப்பர் பலகையும், பேபி நோனாவின் மரக்கறிப் பெட்டியும் சாய்பு நானாவின் இரும்புச் சாமான் கடையும் கண்ணுக்கெட்டிய தூரத்திலாவது காணக் கிடைக்கவில்லை. சோமதாசா ரேஸ் துண்டுகள் சேர்த்துக் கொள்ளுவதற்காகச் செய்திருந்த சிறிய குடிசையும் அங்கிருந்து அகற்றப்பட்டிருந்தது.
பிளாட் பாரங்களிலுள்ள கடைகள் எல்லாவற்றையும் நகரசபையார் அகற்றுவார்கள் என்ற செய்தி உண்மையாகி விட்டமை அவனது நினைவுக்கு வந்தது. ஆனாலும் இதற்கு முன்பும் பிளாட்பாரக் கடைகளையும் குடிசைகளையும் எத்தனை தடவைகள் உடைத்து உடைத்துப் போட்டார்கள்! ஆனால் அந்த எல்லாத் தடவைகளிலும் காளானைப் போல் அவை மீண்டும் தோன்றுவதை அவனால் காண முடிந்தது. அது அவனின் மகிழ்ச்சிக்குக் காரணமானது. அவனும் தன்னுடையதென்று உடைத்து நொறுக்கிப் போவதற்குத் தக்க குடிசையொன்று இல்லாததால் சந்தோஷமடைய முடியும். விசாலமாக வளர்ந்த வாகை மரநிழல் அவனுக்கும் அவனின் ஆயுதம் தாங்கிய பெட்டிக்கும் போதுமானதாகியது. வாகை மரத்திலிருக்கும் காகங்களினால் வரும் தொல்லைகளைத் தவிர அவனுக்கென்று நேர்ந்த வேறு எந்தவித இன்னல் களுமில்லை.
காலம் கடந்து போவது வேலுவுக்குத் தெரியவில்லை. இந்நேரம் வரை அவனின் துணையை நாடி யாராவது வரவுமில்லை. சோம்பேறித்தனம் அவன் உடலை வளைத்துக் கொண்டது. அதை விரும்பாத அவனுக்கு, அவசரமாகச் செய்து முடிக்காத ஒரு செருப்பு ஜோடி நினைவிற்கு வந்தது. அவன் செருப்பு ஜோடியை வெளியே எடுத்தான். அவன் முகமெங்கும் சந்தோஷக் குறிகள் படர்ந்தன. இதழ்கள் இரு புறமாய் விரிந்து எழுப்பிய புன்னகை அவன் மனதிற் சிக்கிய இனிமையான இரகசியத்தை வெளியே சொல்வதைப் போலாகியது.
தங்கம்மாவுக்குப் புதியதோர் செருப்பு ஜோடி நிச்சயமாகச் செய்து கொடுப்பதென்று அவன் இரண்டு கிழமைகளுக்கு முன் கூறி இருந்தான். ஆனாலும் தன்னுடைய முதலாம் பரிசை மிகவும் அழகாகச் செய்யும் திட்டத்தினால் அதை இன்னும் செய்து முடிக்கவில்லை. தங்கம்மாவும் அப்படியொன்றும் விசேடமாக எதையும் எண்ணவில்லை. அவள், அவனைவிட நாலு வருடங்கள் முதிர்ந்த, ஒரு பிள்ளையின் தாயுமாகியதால் வாழ்க்கையின் பாரத்தைப் பற்றி அறிந்த நற்குணங்கள் படைத்த தாயானாள். சரிவர உண்ண, உடுக்க இல்லாததால் தன் உடம்பு மெலிய ஆரம்பித்திருந்தாலும் முன்னிருந்த அழகே உருவான உடற்கட்டு இப்போ இல்லாததால் அவள் சிறிதளவுகூட கவலைப்பட்டுக் கொள்ளவில்லை.
ஆனாலும் அவள் வேலுவின் மேல் விருப்பமாக இருந்தாள். வேலுவின் வாட்டசாட்டமான உடற்கட்டும், காரியத்தில் கண்ணாயிருக்கும் நோக்கமும் அவனைப் பற்றிய விசுவாசத்தை வளர்க்கக் காரணமானது. அதைவிட வேலு சிங்களச் சிறுகதைகள் 110

தன் பிள்ளையிடம் காட்டும் அன்பும் ஆதரவும் அவளின் இணைப்புக்குச் சம்மதமானது.
கடந்த மழை நாட்களில் இங்கே வராததால் வேலுவிற்குத் தங்கம்மாவைச் சந்திக்கச் சந்தர்ப்பம் கிடைக்காமற் போய் விட்டது. தொடர்ந்து பெய்த மழையாலும், சின்னவனுக்கு ஒரு பிஸ்கட்டை வாங்குவதற்காவது கையில் ஒரு செம்புக் காசும் கிடைக்காததால் அவன் தங்கம்மாவின் வீட்டுக்குப் போகவில்லை. பண்பாட்டையே எண்ணி இருந்ததால் தங்கம்மா ஒரு நாளாவது அவன் இல்லத்திற்குப் போகாவிட்டாலும் அவனைச் சந்திப்பதற்கு அந்த வாகை மரத்தடிக்கு வருவதற்கு பழக்கப்பட்டிருந்தாள்.
சிலசமயம் இன்று அவள் தன்னைத் தேடி வரக்கூடுமென்று நினைவு அவனுக்கு வரவும் கொஞ்சம் மகிழ்ந்தது. முடிந்தவரை தன் சுவாதீனத்தை அடக்கிக் கொள்வதில் அவனுக்கு ஆசை ஏற்படும். அவளை இதற்குப் பிறகாவது சில்வா துரையின் பங்களாத் தோட்டத்திற்கு வேலைக்குப் போக வேண்டாமென்று சொல்வதற்காக அவன் இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டான். தான் சம்பாதிக்கும் பணம் போதுமென்று அவளுக்கு புரியும்படி உணர்த்திச் சொல்ல வேண்டியதாயிற்று.
ஆனால் தங்கம்மா அது போன்றவைகளுக்குச் சீக்கிரத்தில் மசிந்துபோக முடியாதவளாயிருந்தாள். வேலு எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் அவனால் நாளுக்கு மூன்று நாலு ரூபாதான் சம்பாதித்துக் கொள்ள முடிந்தது. அதுவும் நிரந்தரமாகக் கிடைக்கக் கூடியதுமல்ல.
'இந்தச் செருப்புக்கு ஒரு ஆணி அடித்துத் தருகிறீங்களா?'
ஒரு பெண்ணின் குரலால் வேலுவின் மனோராஜ்யம் இடிந்து விழுந்தது. அவன் நிமிர்ந்து தன்முன் செருப்பைக் கழற்றி நீட்டிய பெண்ணைப் பார்த்தான். அவள் ஒரு அழகான பெண். அவனுக்கு தங்கம்மாவைப் பற்றிய நினைவு வந்தது. ஆயினும் இந்நேரம் அதைப்பற்றி நினைக்கக்கூடிய நேரம் அல்ல. அவன் சீக்கிரமாய் செருப்புக்கு ஆணியொன்றை அடிக்க முற்பட்டான்.
*டேய்.. !'
இன்னும் யாரோ கூப்பிடலானார். அவன் மறுமுறையும் தலை தூக்கிப் பார்க்கும் போது முகத்தையே பார்க்கக் கூடிய பொலிஷ் பண்ணியிருந்த கறுப்பு சப்பாத்தும், முழங்கால் வரை நீண்ட நீல நிற மேஸ் ஜோடியும், ஒவ்வொன்றாக அவன் விழிகளுக்குட்பட்டன.
எழுந்திரடா..! எழந்திரு, எழுந்திரு. பிளாட்பார வியாபாரம் செய்யக் கூடாதென்று தெரியாதா.....!
'ஐயோ ராலாமி..!” ..
111
மல்லிகைப் பந்தல்

Page 64
''என்னைக் கும்பிடத் தேவையில்லையடா! எழுந்திரு! இது சட்டம். இனிமேல் யாராவது இவ்விடத்தில் வியாபாரம் செய்ய முடியாது....! ம்... எழுந்திரு!”
தான் செய்யத் தொடங்கிய வேலையையும் சரியாகச் செய்து முடியாமல் வேறு செருப்பை அந்தப் பெண்ணிடம் கொடுத்தான். பெண்ணின் முகத்திலோ சந்தோஷம். சலிப்புகளை காணமுடியவில்லை. அவள் செருப்பை காலிலணிந்து அதைப் பூமியில் இழுத்தபடியே போகலானாள். வேலு சீக்கிரமாய் தன் ஆயுதங்களைப் பெட்டியில் அடுக்கி, எழுந்து பெட்டியைத் தோளுக்குத் தூக்கினான்.
அவன் பெட்டியை எடுத்துக் கொண்டு அந்த இடத்திலிருந்து போகும்வரை பார்த்திருந்த பொலிஸ்காரரோ மனத்தில் தனது வீரத்தை அடக்கிக் கொண்டு வேறுபக்கமாய் நடந்தார்.
வேலு வேண்டா வெறுப்பாக முன்னுக்கு நடந்தான். திடீரென நடந்த இச்சம்பவத்தினால் மனவருத்தமடைந்த பிளாட்பாரமாய் நடந்த மக்கள் வேலு போகும் வழிமேல் விழி வைத்துப் பரிதாபமாகப் பார்க்கலானார்கள்.
மெல்ல மெல்ல யோசனை தாங்கிய சிந்தனையுடன் நடந்த வேலு, தன் எதிர்காலம் பற்றிப் பயப்படலானான். சில நிமிடங்களுக்கு முன்னர் மனத்திற்கு ஆறுதலாக இருந்த இனிமையான நினைவுகள் கலைந்து, நிச்சயித்துக் கொள்ள முடியாத அபாயமான நிலை அவன் மனக்கண் முன் தோன்றலாயிற்று. ஆயினும் நடந்தவைகளை நினைத்துப் பின்வாங்கக் கூடிய நேரம் இதுவல்லவென்று அவனுக்குத் தெரிந்தது. தனக்குள் இருக்கும் சிரம சக்தியின் மேல் விசுவாசத்தை வைக்கும் வரை வீதியிலிருந்து தன்னை விரட்டியது போல் தன்னைத் தோற்கடிக்கும் சக்தி வேறு யாரிடமும் கிடையாது என்ற எண்ணம் விளங்கவும் அவனின் ஒளிமயமான எதிர்காலம் மறுபடியும் தன்னைத் தேடிவரும் என்ற விசுவாசம் அவனுக்குண்டானதும் அவனிதழ்களில் மறுபடியும் புன்னகை எழும்பியது.
சிங்களச் சிறுகதைகள் 12

ஹேமா சயேனகே
காதலின் துயரம்
தமிழாக்கம்:
யாதவன்
லண்டனுக்கு அவள் எப்போது வந்தாள் என்பதை இப்போது என்னால் நினைவு படுத்த முடியாது. ஆனால் நோட்டிங் ஹில்லில் உள்ள அந்த வீட்டுக்கு அவள் வந்த தினம் மட்டும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அது ஒரு நவம்பர் மாதத்து ஏழாம் நாள்; சனிக் கிழமை. நோட்டிங் ஹில் டியூப் ஸ்டேஷனைப் பார்த்தவாறு, ஒரே மாதிரி அமைந்திருந்த அந்த நீள்வரிசை வீடுகளில், நான் இருந்ததைப் போலவே நாலாவது மாடியில் ஒரு வீட்டில் அறை எடுத்திருந்தாள். அவளுடைய அறை, வீதிக்கு அப்பால் என்னுடைய அறைக்கு நேர் எதிரே இருந்தது.
அந்த ஞாயிற்றுக் கிழமை, அவள் அங்கு வந்த மறுநாள் நான் வெகு நேரங்கழித்தே எழுந்திருந்தேன். வாரம் முழுவதையும் கடுமையான உழைப்பில் ஈடுபடும் லண்டன் வாசிகள் ஞாயிற்றுக் கிழமைகளில் நேரங் கழித்தே எழுந்திருப்பார்கள். எனது பழக்கப்பட்ட கண்கள் அவளது அறையை நோக்கின. அந்த வாரக் கடைசிவரை, அந்த அறையில் என் நண்பன் ஒருவன் தங்கியிருந்தான். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நான் எழுந்திருந்ததும் அவனது அறையை நோக்கும் பொழுது அவன் குஷியோடு காணப்படுவான்.
அன்று காலையில் சோம்பல் மிகுந்த எனது கண்ணின் பார்வை, அந்த ஜன்னலின் சூரிய வெளிச்சத்தை மறைப்பதற்காகப் போடப்பட்டிருந்த பூவேலைப்பாடு கொண்ட திரைச்சீலையில் படிந்து திகைப்புற்று நின்று விட்டது. இனந்தெரியாத காரணங்களால் எனது இதயம் துள்ளியது. அந்த மெல்லிய திரைச் சீலையினூடாக ஓர் உருவம் நடமாடுவதைக் கண்டேன். நிச்சயமாக அது ஒரு பெண்ணாகத்தான் இருக்க வேண்டும். அதுவும் அவள் ஓர் ஐரோப்பியப் பெண்ணாக இருக்க முடியாது. |
மறுநாள் எனது அழகான விருந்தாளி தலைவாரிக் கொண்டிருந்ததை திறந்திருந்த ஜன்னல் வழியே பார்த்தேன். அந்தக் கருநீல அலைபோன்ற கூந்தலைப் பார்த்ததும், லண்டனுக்கு வந்த பின்னர் இயற்கை அழகுள்ள கூந்தலையுடைய தலை ஒன்றை முதன் முதலாக அப்போதுதான் பார்ப்பதாகத்
113 மல்லிகைப் பந்தல்

Page 65
தோன்றியது. அவள் சேலை உடுத்தியிருந்தாள். இலங்கையை அல்லது இந்தியாவைச் சேர்ந்தவளாக இருக்க வேண்டும். லண்டனில் இந்தியர்களிடமிருந்து இலங்கையரைப் பிரித்தறிவது என்பது சுலபமல்ல. அநேகமாக அவர்களிடம் எந்த வேறுபாடும் கிடையாது.
அவள் யாரென்பதை எப்படி அறியலாம்? அந்தக் கட்டிடத்தில் தங்கியிருக்கும் பண்டித ரத்ன மூலமாக அறியலாமா? சிறிது யோசித்துப் பார்த்தேன். அவன் அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எனக்கு முதல் அவளுடன் சிநேகிதமாகி விட்டால்...... ஒரு பெண்ணைப் பற்றி - அவளது பெயரோ அல்லது ஊரோ தெரியாதபோது - அவளைப் பற்றி நினைக்கும் அளவுக்கு எனக்கு நேர்ந்து விட்டது.
அன்று காலையில் அவள் வெளியே புறப்பட்டாள். காஷ்மீர் சேலை உடுத்தியிருந்த அவள் மெல்லிய பச்சை நிறத்தினாலான மழைக் கோட்டுடனும் நாகரீகம் மிகுந்த அந்த நகரில் பழக்கப்பட்டவள் போலவும் காணப்பட்டாள். அவளது நடையில் ஒரு கம்பீரம் இருந்தது. கூந்தலை உயரத் தூக்கிக் கட்டியிருந்தாள். அவளது முகம் ரம்மியம் மிக்க வண்ணத்தில் பிரகாசித்தது. உதடுகளுக்கு இலேசாக சாயம் பூசியிருந்தாள். அவளிடம் எழில் கொஞ்சிக்
குலாவியது.
அவளது பெயர் யமுனா. அவளுடைய குடும்பப் பெயரை நான் சொல்ல விரும்பவில்லை. எண்ணிக்கையற்ற முகங்களிடையே யமுனாவின் முகம் மட்டும் என்னை ஏன் வாட்டியது? நான் பல ஐரோப்பிய மங்கையரைச் சந்தித்திருக்கிறேன். அவர்களுடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன். ஆனால் யமுனாவைப் பற்றிய நினைவுகள் மட்டும் ஏன் நிமிடத்துக்கு நிமிடம் என்னிடம் பலம் பெறுகின்றன?
நான் முதன் முதல் லண்டனுக்கு வந்த அந்த நாட்களை நினைத்துப் பார்த்தேன். அந்த ஆரம்ப நாட்களில் நான் அடைந்த வேதனையை வீட்டில் இருந்த பொழுது நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. அந்த வேதனையைச் சொல்லி உணர முடியாது. அதை அனுபவித்தே உணரமுடியும், பாச மிகுந்தவர்களைப் பிரிந்து, கடல் கடந்து பல்லாயிரக் கணக்கான மைல்களுக் கப்பால் இருந்து அனுபவித்த வேதனையை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இலங்கையிலிருந்து மாறுபட்ட நகரத்தில், ஒருவன் தன்னையும் அதற்கேற்றாற் போல் மாற்றுவது என்பது மிகவும் கஷ்டம்தான், ஒரு இலங்கையனது முகத்தை எப்போதாவது காணுவோமா என்றிருந்தது. அப்படி ஒரு முகத்தைக் கண்டபோது என் நெஞ்சத்து வேதனை குறையும் - சிறிது நேரத்துக்குத்தான்.
யமுனாவும் இப்படி அவஸ்தைப்படுவாள் என்றே எண்ணினேன். ஆனால் அவளிடத்தில், ஒரு புதிய நாட்டிற்கு வந்தால் எழக்கூடிய எந்தவித உணர்வையும் காணமுடியவில்லை என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அக்கம் பக்கத்தைப் பற்றிக் கவலைப்படாத அலட்சிய மனோபாவத்துடனும் ஒருவித உறுதியுடனும், ஆங்கில மாதருக்கு இணையாக அவளும் நடமாடினாள்.
சிங்களச் சிறுகதைகள் 114

எந்தவித அறிமுகமும் இன்றி அவளுடன் பேசமுடியாது என்பதை அறிவேன். எப்படி அவளுடன் அறிமுகம் ஏற்படுத்திக் கொள்ளலாம் என்ற நினைவே என் தலைக்குள் நிறைந்து கிடந்தது.
அடுத்த சனிக்கிழமை - அவள் அங்கு வந்து ஒரு வாரமாகி விட்டது. அவள் தனது அறையை ஒழுங்குபடுத்துவதை அவதானித்தேன். பூச்சாடியில் மலர்களை அடுக்கிக்கொண்டிருந்தாள். ஏதாவது விருந்து கொடுக்கப் போகிறாளோ? நண்பர்கள் யாராவது வந்திருக்கிறார்களா? எட்டரை மணிபோல் இரண்டு நபர்கள் அவளது அறைக்குள் நுழைவதைப் பார்த்தேன்.
எனக்கு மனதுக்கு கஷ்டமாக இருந்தது. துயர் என்னைச் சூழ்ந்தது. படிப்பில் நாட்டம் செலுத்தாமல் நேரத்தை வீணாக்கிறேனோ என்று தோன்றியது. எனது புத்தகங்களை விரித்தேன். ஆனால் ஒவ்வொரு பக்கத்திலும் அந்த அழகு முகம்தான் என் கண்களுக்குத் தெரிந்தது. மீண்டும் அவளது அறையை நோக்கினேன். அவளது விருந்தாளிகளைக் கண்டதும் எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் எனக்கு அறிமுகமான மாணவர்கள். கோட்டை அணிந்தவாறு அறையை விட்டு வெளியே வந்தேன்.
நான் அறைக்குத் திரும்பி வரும்பொழுது அந்த இரு நண்பர்களையும் சந்தித்தேன். அவர்கள் யமுனாவைப் பற்றிக் கூறினார்கள். அந்த நண்பர்களில் ஒருவருடைய சகோதரியின் சிநேகிதி யமுனா. அந்தச் சகோதரியின் வேண்டுகோளின் பேரில் யமுனாவைப் பார்க்க சென்றிருக்கிறார்கள். அதற்கு மேலே அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை.
அவர்கள் சென்றதும் டெலிபோன் பூத்தை நோக்கிச் சென்றேன். என் நெஞ்சில் ஒரு பொய் உருவாயிற்று. டெலிபோனில் அவளே பேசினாள். அவளது அறைக்கு வந்த இளைஞர்களில் ஒருவரைக் குறிப்பிட்டு அவருடன் பேசப் போவதாகக் கூறினேன். அவர்கள் இருவரும் சற்று முன்னர்தான் சென்றதாக அவள் வருத்தத்துடன் பதில் அளித்தாள். 'பரவாயில்லை' என்று கூறிய நான், என்னை அவளுக்கு அறிமுகப்படுத்திவிட்டு அவளுடன் பேசக் கிடைத்த சந்தர்ப்பத்திற்காக எனது மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். அவள் என்னைத் தன் இருப்பிடத்துக்கு அழைப்பாள் என்று எண்ணி ஏமாந்தேன்.
அடுத்த ஞாயிற்றுக் கிழமை அவளைச் சென்று பார்ப்போமே? பகல் சாப்பாட்டிற்குப் பின்னர் அவள் ஆப்பிள் ஒன்றைச் சுவைத்துக் கொண்டிருந்தாள். இன்னும் ஒரு வாரத்திற்கு என்னால் காத்திருக்க முடியாது. எனது கோட்டை மாட்டிக் கொண்டு எதிர் சாரியை நோக்கி நடந்தேன். அழைப்பு மணியை அடித்தேன். கதவு திறந்தது.
'ஓ... நீங்கள் நம்பர் 104-ல் இருப்பவர்கள் அல்லவா? வாருங்கள். அவள் வரவேற்றாள்.
மல்லிகைப் பந்தல்

Page 66
எவ்வளவு இனிமையானவள். எத்தனை இனிமையான வரவேற்பு. நெடுநாள் பழகியவனுடன் பேசுவது போல் என்னுடன் பேசினாள். மேற்கத்தியப் பெண்களைப் போன்று எவ்வித பெருமையும் இல்லாமல் வெகு சரளமாக, கனிவுடன் பேசினாள்.
இடையே அவள் சிரித்தபடி கூறினாள், 'நீங்கள் ஓர் ஐரோப்பியனைப் போல் தோற்றமளித்தாலும் உங்கள் இதயம் உங்களை ஓர் சிங்களவனாகவே காட்டுகிறது.”
எத்தனை பெரும் உண்மை அது. அதற்குப் பதில் அளிக்கவில்லை; அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர என் கண்கள் சொல்லும் கதையை அவள் உணர்ந்திருக்க வேண்டும். அவள் கண்கள் கலங்கின. தன்னை ஒரு சகோதரி போல் நினைக்கும்படி வேண்டினாள்.
அவளிடமிருந்து இப்படி ஒரு பேச்சை எதிர்பார்க்கவில்லை. அவளது உதடுகளில் மெல்லிய முறுவல் ஒன்று மலர்ந்தது.
மாரிகாலம் முழுவதும் வெண்பனியினூடாக அவளது அறையையே பார்த்துக் கொண்டிருந்தேன். டிசம்பர் கடைசியில் படுக்கையில் விழுந்தேன். ஆய்வுகூடத்திற்குப் போகமுடியவில்லை. என்னை வந்து பார்ப்பார் யாருமில்லை. யமுனாவுடன் நட்புக் கொண்ட பின்னர் நண்பர்கள் அனைவரிடமிருந்தும் விலகி விட்டேன்.
ஒருநாள் மாடிப்படிகளில் காலடி ஓசை கேட்டது. யமுனாதான் வந்தாள். அன்று முதல் தினமும் வந்து எனக்கு சிஷ்ருவுை செய்தாள். மார்க்கெட்டுக்குச் சென்று வந்தாள். எனது உணவை அவளே தயாரித்துக் கொடுத்தாள். எனது அறையை ஒழுங்குபடுத்தினாள். நான் தூங்கிய பின்னர்தான் அங்கிருந்து செல்வாள்.
ஏப்ரல் மாதம் அழகிய வசந்தத்தை அழைத்து வந்தது. ஒவ்வொருவரிடமும் புதிய நம்பிக்கை. ஒவ்வொன்றிலும் புத்தெழில் கொஞ்சியது. லண்டன் நகரம் மகிழ்ச்சியால் துள்ளியது.
பார்க்கில் பூமரங்களுக்கு மத்தியில் நடந்த காதல் லீலைகளை, முத்தங்களைப் போல் முன்னெப்போதும் கண்டதில்லை.
நாங்கள் குளத்தில் வாத்துக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். எனது கை அவளது கையை இறுகப் பற்றியிருந்தது. அவள் மறு கையால் வாத்துக்களுக்குத் தீனி போட்டாள்.
புதுவாழ்வு ஒன்று கிடைத்தாற் போன்ற உணர்வு. அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டே நான் செப்டம்பர் மாதம் வீடு திரும்பும் செய்தியைக்
கூறினேன்.
'பிறகு' என்றாள் யமுனா.
சிங்களச் சிறுகதைகள் 116

'நீ என்னுடன் வரப்போவதில்லையா?' கெஞ்சும் குரலில் கேட்டேன். 'நான் எப்படி வரமுடியும்? எனக்கு இன்னும் சோதனை முடியவில்லையே!
'நீ ஏன் சோதனையில் சித்தியடைய வேண்டும். இங்கு இருப்பது சோதனையில் சித்தியடைவதற்காக மட்டும்தானா? சொல்லு. பெரிய கொம்பாய்ப் பார்த்துப் பிடிக்கப் போகிறாயா?'
அவள் என்னைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தாள். அந்த அழகான கண்களை என் விரல்களினால் தோண்டி எடுத்துவிட வேண்டும்போல் இருந்தது.
'நீங்கள் உங்கள் தலைநரைத்துப் போகும் வரை இங்கிலாந்தில் தங்கி யிருந்தாலும் ஒரு இலங்கையனுடைய மனப்பான்மையிலிருந்து விலக மாட்டீர்கள்.... நான் நினைக்கிறேன். நீங்கள் இவ்வளவு கடுமையாகப் படிப்பது, அதிக பணத்துடன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய நினைக்கும் ஆசையில் தானே' என்றாள் அமைதியாக.
*அப்படித்தான். நான் சிரித்தேன்.
'ஓ!' அவள் என்னை ஓரக் கண்ணால் நோக்கினாள். ''என்னிடம் பணமில்லை. தெரிந்து கொள்ளுங்கள்."
'ஆனால் அதைவிடப் பெறுமதியானவள் நீ என்பது எனக்குத் தெரியும்.' அவளைப் பார்த்தபடி கூறியவன், மீண்டும், 'யமுனா' என்றேன். மேலே பேசமுடியாதவாறு என் நாக்கு ஒட்டிக் கொண்டது. எப்படியும் கெஞ்சியாவது அவளை அழைத்துக் கொண்டு போவது, பின்னர் இருவரும் லண்டனுக்கு வரலாம் என்று நினைத்தேன்.
'யமுனா! எப்படியும் நீ என்னுடன் வரவேண்டும்' என்றேன்.
அவளது பார்வை என்னை ஊடுருவியது. அவள் கூறினாள்: 'சேனா! எந்த ஒரு பொருளின் மீதும் மிக ஆழமாக அன்பு செலுத்தாதீர்கள். பின்னால் அதை இழக்க நேரிடும்.'
அவள் கூறியது அன்று மாலையிலேயே உண்மையாகி விட்டது. நான் அடைந்ததைப் போல் ஏமாற்றம் வேறு யாருக்கும் வந்துவிடக் கூடாது என்று இன்றும் நான் வேண்டிக்கொள்கிறேன்.
நான் வைத்தியத்துறையில் மேற்படிப்பை முடிப்பதற்காக தம்மையும் தமது சுகங்களையும் அர்ப்பணித்துக் கொண்ட என் தந்தை காலமாகி விட்டார். அவளுடைய இடத்திற்குச் சென்று கதறினேன். அவள் அமைதியாக என்னைத் தேற்றினாள்.
மறுநாள் காலையில் கட்டுநாயகா விமான நிலையத்தை வந்தடைந்தேன். மறுகணம், என் தந்தை எனக்காகக் கட்டிய அந்த வீட்டின் நடு ஹோலில் என்
117 மல்லிகைப் பந்தல்

Page 67
தந்தையின் தலைமாட்டில் சுடர் விட்டுக்கொண்டிருந்த விளக்கைப் பார்த்தபடி நின்றிருந்தேன். யமுனாவின் குரல் என் காதுகளில் ஒலிப்பதுபோல் இருந்தது.
'எந்த ஒரு பொருள்மீதும் மிக ஆழமாக அன்பு செலுத்தாதீர்கள்.
மே மாதம் நான் லண்டனுக்குத் திரும்பினேன். என் படிப்புத் தாமதமாகி விட்டது. நெஞ்சில், தந்தையைப் பிரிந்த வேதனை, யமுனாவைப் பற்றிய நினைவுகள் நிறைந்து கிடந்தன. எனது அறைக்கு வந்ததும் எதிர் அறை காலியாகிக் கிடப்பதைக் கண்டேன். யன்னல்கள் மூடிக்கிடந்தன. வீட்டில் இருந்த நாட்களில் ஒவ்வொரு நிமிஷமும் எனது இதயம் அவளது நினைவுகளால் நிறைந்து கிடந்தது என்பதை அவள் எப்படி அறிவாள்?
அந்த மாபெரும் நகரமெங்கும் அவளைத் தேடினேன். அவளது. நண்பர்களிடம் அவளைப் பற்றி விசாரித்தேன். கிடைத்தது ஏமாற்றம்தான்.
அவளைப் பற்றிய ஒருசிறு செய்திகூடக் கிடைக்கவில்லை.
'ஏதோ நடந்திருக்க வேண்டும்' என்னை நானே தேற்றிக் கொண்டேன். எப்பொழுதும் அவளது நிழல் எனக்குப் பின்னால் வருவது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது.
பின்னர் லண்டனில் அதிக காலம் தங்கியிருக்கவில்லை. பரீட்சை முடிந்த ஒரு வாரத்திற்குள் இலங்கை திரும்பி விட்டேன்.)
இலங்கை வந்த சில நாட்களில் யமுனாவிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.
அன்புள்ள சேனா!
நீங்கள் லண்டனில் இருந்த நாட்களில் நான் உங்கள் அறைக்குக் கீழே ஓர் அறையில் தங்கி இருந்தேன். நீங்கள் சுகமாகவும் படிப்பில் கவனமாகவும் இருந்ததை அவதானித்தேன். எந்தவித இடையூறுமின்றி இருந்தபடியால்தான் உங்களால் அக்கறையுடன் படிக்க முடிந்தது.
சில நேரங்களில் நான் முன்னர் இருந்த அறையை நீங்கள் கலங்கிய கண்களுடன் நோக்குவதைப் பார்த்திருக்கிறேன். அன்று காலையில் நீங்கள் புறப்படும் பொழுது எனது பழைய அறையைக் கண்ணீர் மல்கும் கண்களுடன் பார்த்துக் கொண்டு நிற்பதைக் கண்டு நான் எனது அறைக்குள் அமைதியாக இருக்க மட்டுமே முடிந்தது. நான் எனது ஆசைகளை அவித்துக் கொண்டேன். இனிமேல் எவற்றின் மீதும் அதிகமாக அன்பு செலுத்தப் போவதில்லை. ஏனெனில் அப்படி அன்பு வைத்த பொருட்களையெல்லாம் இழந்து விடுகிறேன்.
மல்லிகை : 31 டிசம்பர் 1970
சிங்களச் சிறுகதைகள் 18

சோமசிநி பல்லேவெல
ஒரு யுத்தத்தின் பின்
தமிழாக்கம்: இப்னு அஸ்மத்
இருள் படர்ந்து பிரதான வீதியின் மேலும் விழுந்திருந்தது. அந்த இருளினுள்ளே மின்கம்பங்கள் தானும் தம் கறுத்த சோகங்களை பூமிக்குத் தெரிவித்தவாறே தலை நிமிர்ந்து நின்றிருந்தன.
விஹாரைக்கருகிலே சில காகங்களைச் சுமந்தபடி நின்றிருந்த போதி மரம், துன்பத்தைத் தூவியபடி நின்றிருந்தது. காகங்களின் ஒலிகளை விட்டால், இங்கு வேறு எவ்வித ஒலியுமே கேட்கக் கூடியதாக இல்லை.
இருண்ட உலகத்தினை நிசப்தம் விழுங்கிக் கொண்டிருந்தது. நீண்ட காலமாகப் பயணித்துக் கொண்டிருந்த சூரியனும், சந்திரனும் ஒன்று கூடியே இந்த உலகினை விட்டும் ஓடிப் போயிருக்கின்றன. ஆங்காங்கே வானவீதியில் பிளந்து தெறித்துள்ள நகரத் திரள்கள் தம் பொறுமையற்ற சினத்தினை காற்றுடன் பகிர்ந்து கொண்டிருந்தது.
இதுவரை நிலவிய நிசப்தம் ஒரு நொடியில் கரைந்தது. இது வரையிலும் குடிகொண்டிருந்த மடமையானது பூமியை அதிரும்படிக்குத் தூக்கிவாரிப் போட்டது. தன் கோபத்தின் உச்சத்தால் வீடுகளின் கதவுகள் தடார் தடாரென மூடிக் கொண்டிருந்தன. எந்தவொரு முகம்தானும் ஜன்னல்களினூடாகவேனும் எட்டிப் பார்ப்பதை நிறுத்திக் கொண்டிருந்தன. ஆயிரமாயிரமான சிறு சிறு பாதைகள் எல்லாம் ஒன்றுகூடி அந்தப் பிரதான வீதியைக் கிழித்துப் போடுவதைப் போலான நிகழ்வுகள் நிகழ்ந்தன.
யுத்தம் செய்கின்ற சப்தங்கள் எழ ஆரம்பித்தன. வெடிக்கும் சத்தங்கள் வானைப் பிளந்தன. மரணங்களைச் சந்திக்கும் மனிதர்களின் அந்திம ஓலங்களும் அபாயகரமானதாகவே எழுந்து கொண்டிருந்தன. மீண்டும் இவை அனைத்தும் ஒரு கணத்தில் நின்றுவிட்டன. கனத்த மெளனம் தன் பணியை மீண்டும் செய்யலாயிற்று.
அந்தகாரத்தின் மத்தியில் யாரோ ஒரு உருவம் ஓடிவருவது தெரிகிறது. தன்னந் தனியாக அந்தச் சிகிச்சை விடுதியில் நின்றிருந்த பெண் பயத்தின்
119
| மல்லிகைப் பந்தல்

Page 68
உச்சத்தில் நடு நடுங்கிக் கொண்டிருந்தாள். ஓடிவருகின்ற அந்த உருவத்தையே அவள் விழிகள் தீண்டின.
யுத்தம் நிகழ்ந்த பின்னர் எப்படியோ உயிர்தப்பி ஓடோடி வந்த அவளுக்கு இந்தச் சிகிச்சை நிலையம்தான் உதவிற்று. இந்த அந்தகார வேளையில் அவள் எந்த இடத்தை, எப்படித் தேடிப் போவான்?
ஓடோடி வந்த அந்த உருவம் சிகிச்சை விடுதியின் கதவில் மோதி, பின் முற்றத்தில் விழுந்து உருளும் சப்தம் அவளுக்குத் தெளிவாகக் கேட்டது. பின்னர் 'ஐயோ... தண்ணீ தண்ணீ ' எனக் கேட்கும் குரல் முற்றத்தில் இருந்து எழுந்தது. .
இது ஒரு ஆணின் குரல் என்பதை அவளால் உணர்வதற்கு நீண்ட நேரம் எடுக்கவில்லை. அவனது அந்த முனகல்' அவனின் இறுதி வேண்டுதலாக இருத்தல் வேண்டும் என்பது அவளுக்குப் புரிந்தது.
அவளின் சஞ்சலமான மனசை இன்னும் புண்படுத்தியது அவனது முனகல். உடனடியாக அவள் செயலில் இறங்கினாள். இருட்டுத்தான், என்றாலும் பழக்கதோஷம் காரணமாக நீர்ப்பாத்திரத்தினைத் தூக்கிக் கொண்டு அவனருகே ஓடினாள். கதவைத் திறப்பதில் அவளது கரங்கள் எப்போதையும் விட ஒருவித அவசரத்தைக் காட்டின. இது இரவு என்பதையும், அவள் எதுவித பந்தோபஸ்தும் இல்லாதவள் என்பதையும் அவள் மனது நினைக்கவே மறந்திருந்தது.
துப்பாக்கியினைக் கண்டதும் அவள் ஒருகணம் பின்வாங்கினாள். இருப்பினும் கீழே விழுந்து கிடக்கும் அவனது கரங்களில் சிதறுப்பட்டிருக்கும் மாமிசத் திரட்சியும், வழியும் குருதியும் அவளை அனுதாபம் சுமக்கச் செய்தது. அவன் தன் கையினால் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்த துப்பாக்கியினைப் பிடுங்கி ஒரு புறமாக வைத்தாள். அவனின் தலையை உயர்த்தியபடி நீரைப் பருக்கினாள். பின்னர் மிகவும் சங்கடப்பட்டவாறே அவனைத் தாங்கிக் கொண்டு அவள் விடுதிக்குள் நுழையும் பொழுது, அவனது தலையிலிருந்தும், உடம்பிலிருந்தும் சூடான ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
'ஐயோ... என்னைச் சாகவிடாதே' என்ற அவனது குரல் அவள் இதயத்தைத் தாக்கியது.
'பயப்படாதீர்கள். அப்படி அந்த இடத்தில் இருங்கள். நான் உங்களைச் சுகப்படுத்துகிறேன்' என்றவாறு அவள் சுறுசுறுப்பாக இயங்கினாள். 'பெண்டேஜ் மருந்து, சுடுநீர் என எல்லாம் தயாராகின.
( அவனது சீருடைகளைக் கழற்றி, அவனைக் கட்டிலுக்குக் கொண்டு செல்ல அவள் முயற்சித்தாள். அதனிடையே அவனது உஷ்ண ரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்த ரணங்கள், அவளது மிருதுவான கைகள்பட்டே சுகப் பட்டுக் கொள்ள ஆரம்பித்தன.
சிங்களச் சிறுகதைகள் 120

நீண்ட நித்திரைக்குப் பின், ஒரு நோயாளி சொர்க்க வாயிலினைக் காணுவதைப் போல இருந்தது, கண்விழித்த அவனுக்கு. முழு இரவும் விழித்திருந்து அவனருகிலேயே இருந்த அவள், சந்தோஷத்தினாலும், நிம்மதியினாலும் பூரித்துப் போனாள். அவளது களைப்பு, தூக்க மயக்கம் யாவும் ஒரு நொடியில் அகன்றோடியது.
அவன், எதையோ சொல்வதற்காக பலமுறை முயன்று கொண்டிருந்தான். இருந்தும் முழுவதையும் தெரிவித்துக் கொள்ள அவனுக்கு இன்னும் கால அவகாசம் தேவைப்பட்டது.
'உங்களுக்கு நன்றி.” அவன் மிகவும் தெளிந்த குரலில் பேசினான்.
'ரொம்பச் சந்தோஷம் எனக்கு. உங்களுக்குச் சற்று சுகமடைந்துள்ளது. நீங்கள் இனி ஒரு வைத்தியசாலையை நோக்கிப் போகலாம். இதோ உங்கள் துப்பாக்கி' என்றவாறே துப்பாக்கியினை அவனுக்கு முன்பாக அவள் நீட்டினாள்.
வெட்கத்தாலும், கோபத்தாலும் உதடுகளைக் கடித்துக் கொண்டான் அவன். எல்லா நிகழ்வுகளும் மீண்டும் மீண்டும் அவனுள் விழித்துக் கொண்டிருந்தன. அவனது விழிகள் வெடித்தது போல் கண்ணீர்.
'அந்தத் துப்பாக்கியை வீசி விடுங்கள். அவன் வேதனையுடன் கத்தினான்.
'மனிதர்களைக் கொல்லும் தொழில் எனக்குத் தேவையில்லை. எனக்குத் தேவை கருணை, அனுதாபம், அன்பு. இதெல்லாம் நீங்கள் எனக்குக் கொடுத்த பெரிய பாடம். எனக்குத் தேவையில்லை மனிதர்களைக் கொல்லும் தொழில்.
"தயவு செய்து சொல்லுங்கள் எனக்கு, நீங்கள் யார் என்று'
'யூகிக்க முடியவில்லையா...? நான் ஒரு ராணுவ வீரன்.'
'அப்படியாயின் நானொரு தாதி. நேற்றிரவு நீங்கள் எல்லோரும் எங்களை முற்றுகையிட்டீர்கள். இங்கு நான் மரண பயத்துடன் ஒளிந்திருந்தேன். சொல்லுங்கள் எனக்கு.. சொல்லுங்கள் எனக்கு. உங்கள் கைகளில் ரத்தம் தோய்ந்தில்லையா? சாதுவான மனிதர்களின் ரத்தம்!'
என்னை மன்னித்து விடுங்கள் சகோதரி! 'மன்னிப்பு' என்பது உங்கள் அகராதியிலேயே இல்லை! ஆமாம், எனினும் இதன் பிறகு... இதன் பிறகு... நான்... நான்... ஒரு மனிதனானேன். இந்த ரத்தம் தோய்ந்த கரங்களை வெட்டி வீசி, உண்மையான மனிதனானேன்.'
நொண்டிக் கொண்டே அவன் பிரதான வீதியில் இறங்கி நடக்கத் தொடங்கினான். அவனது முகத்தில் வேறு ஒருபோதும் இல்லாத சந்தோஷமும், அதிர்ஷ்டமும், பிரகாஷமும் நிரம்பியிருந்தது.
ஆகஸ்ட் 1986
121 மல்லிகைப் பந்தல்

Page 69
விமல் எஸ். சமரசுந்தரா
பயனற்ற' மரம்
ல் - தமிழாக்கம்:
தமிழாக்கம்:
யாதவன்
அம்மா இந்தத் தோடை மரத்தைப் பற்றி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். இது ஒரு பிரயோசனமில்லாத மரம். இன்றை வரைக்கும் ஒரு காயாவது காய்த்ததில்லை.)
எனக்கு நிவுை தெரிந்த நாள் முதலாய் அது இந்த முற்றத்தில்தான் நிற் கிறது. அம்மாவும்தான் எத்தனை அக்கறையுடன் அதைக் கவனித்து வருகின்றாள். கொத்திக் கிளறி உரமிட்டு நீரூற்றி அவள் எவ்வளவோ பாடுபட்ட போதிலும் அது அவளுக்கு எதையுமே திருப்பிக் கொடுத்ததில்லை. நாளடைவில் அம்மா மனம் சலித்துப் போனாள். இன்றுகூட அவள் பேச்சில் சலிப்புத் தெரிகிறது.
''இந்த மரத்தைப் பார்... ஒரு பயனுமில்லாத மரம். எவ்வளவு பாடுபட்டு இதைக் கவனிக்கிறேன். ஒரு காயாவது கொடுத்ததா? என்ன சாதி மரமோ?" அந்த மரத்தைப் பார்த்தவாறே அம்மா என் சிறிய தகப்பனாரிடம் சொன்னாள்.
அதிகம் உயர்ந்து வளராது நாலாபக்கமும் சடைத்து நின்றது அந்த மரம். குறைந்தது மாதத்தில் இரண்டு தடவையாவது அம்மா நல்ல உரம் போடுவதனாலேயே அதற்கு இத்தனை மதாளிப்பு. இருந்தும் என்ன? நாங்கள் இதை உதவாக்ரை மரம் என்றே குறிப்பிடுவோம். இந்த மரத்தை அடியோடு வெட்டிவிட நான் பல தடவை முயன்றிருக்கிறேன். அப்போதெல்லாம் அம்மா என்னைத் தடுத்து விட்டாள்.
* இங்கே பார்! இதை வெட்டிப் போடாதே. உன் சின்னக்கா பிறந்த அன்று உன் தந்தை இதைக் கொண்டு வந்து எவ்வளவு ஆசையோடு நட்டார் தெரியுமா? அதை விட்டுவிடு. அப்படியே நிற்கட்டும்" என்று சொன்னவள் தொடர்ந்து சின்னக்கா பிறந்ததையும் என் தந்தை இதை நட்டதையும் கதை கதையாகச் சொன்னாள்.
சில சமயங்களில், இந்த மரத்தின் மீது கொண்ட பற்றுதலைப் போலவே சின்னக்கா மீதும் அம்மா எல்லையற்ற அன்பு கொண்டிருந்தாள் என்பதையும்
சிங்களச் சிறுகதைகள் 122

நினைத்துப் பார்ப்பேன். என்ன செய்வது என் சின்னக்காவும் ஒன்றுக்கும் உதவாதவளாகவே இருந்தாள் இந்த பயனற்ற மரத்தைப் போல.
என் சிறிய தகப்பனார் ஈசிச்சேரில் சாய்ந்தவாறு ஒரு கடிதத்தை வாசிக்க முயன்று கொண்டிருந்தார். நன்றாக வாசிக்கத் தெரிந்த அவரால் இப்போதெல்லாம் எழுத்துக்களைப் பார்ப்பதற்கு முடிவதில்லை. பார்வை குன்றி வருகிறது. அவர் என்னை அழைத்த உடனே அந்தக் கடிதத்தை வாசிப்பதற்கு என் உதவி தேவைப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டேன். கையில் இருந்த புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு அவரருகில் சென்றேன்.
''சேனகா!'' என்று அழைத்தபடியே என் கையில் அந்தக் கடிதத்தைக் கொடுத்தார். அது அன்றைய தபாலில்தான் வந்திருந்தது. அந்த எழுத்துக்களைப் பார்த்த உடனேயே அதில் நல்ல செய்தி எதுவுமே இருக்காது என்பது விளங்கி விட்டது. ஏனெனில் என் சின்னக்காதான் அதை எழுதியிருந்தாள்.
நான் சற்று உரக்கவே வாசித்தேன். (1)
'நான் பல நாட்களாக யோசித்த பிறகே இதை எழுதுகிறேன். சில மாதங்களுக்கு முன்னரே இதை நான் எழுதியிருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யவில்லை. உங்களைக் கவலையில் ஆழ்த்தக் கூடாது என்பதற் காகவே இதை எழுதாது பின்போட்டுக் கொண்டு வந்தேன்.
''நான் நிம்மதியையும் சந்தோஷத்தையும் இழந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகி விட்டது. சேனாவுக்கும் எனக்கும் எவ்வித பேச்சுவார்த்தையும் இன்றியே வாழ்க்கை ஒடுகிறது. வேறு எந்தப் பெண்ணாவது அவருடன் ஒத்துவாழ முடியும் என்று நான் நினைக்கவில்லை. என்னால் முடிந்த அளவுக்கு சேனாவை நேசிக்கிறேன். அப்படியிருந்தும் அவர் என்னை வெறுக்கிறார். அவர் வெறுக்கும் படியாக நான் என்ன பிழை செய்தேன்? இப்படியே தொடர்ந்து வாழுவதற்கு நான் விரும்பவில்லை. அதனாலேயே இதை உங்களுக்கு எழுதுகிறேன்."
சின்னக்கா சேனாவுடன் வாழச் சென்று எட்டு மாதங்களுக்கு மேலிருக்கும். அவள் இத்தனை விரைவில் இப்படி ஒரு கடிதம் எழுதுவது குறித்து நான் அதிசயப்படவில்லை. அவள் ஒரு மாதிரியானவள். அகங்காரமும், இரக்கமில்லாத் தன்மையும் கொண்டவள்; இதயமற்றவள். அவளுடன் வாழ்க்கை நடத்துவது கூட எத்தனை கஷ்டமானது என்பதை எண்ணிப் பார்க்க முடியாத காரியம்.
மண்ணிலிருந்து பிரிந்து நிற்கும் வானைப் போல எங்கள் அமைதியான குடும்பத்தினின்றும் சின்னக்கா வேறுபட்டே இருந்தாள். அவள் படிப்பதற்கோ அன்றி வேலைக்குப் போவதற்கோ என்றைக்குமே விரும்பியவள் அல்ல. அவள் வீட்டில் மற்றவர்களுடன் சண்டையின்றி வாழ்ந்த ஒரு நாளையேனும் என்னால் நினைவு படுத்த முடியாது. ஒரு நாளைக்கு பெரியக்காவுடன் சண்டை பிடிப்பாள். மறுநாள் அந்தச் சண்டை சின்னவர்கள் பக்கம் திரும்பும். யாருமே இல்லை யென்றால் அம்மாதான் இருக்கிறாளே; அவளுடன் சண்டைக்கு நிற்பாள். என்
123 மல்லிகைப் பந்தல்

Page 70
தலையில் இருக்கும் காயம் அவள் எனக்குத் தட்டால் வீசிய நாளையே நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது.
சேனாவுடன் அவள் ஒருபோதும் சந்தோஷமாக இருக்கமாட்டாள் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். சேனா ஒழுக்கமுள்ள மற்றவர்களுக்குக் கரைச்சலில்லாத ஓர் அப்பாவி மனிதன். பெருமை என்பதே துளியும் கிடையாது. சேனாவுக்கும் சின்னக்காவுக்கும் கொஞ்சம் கூடப் பொருத்தமே இல்லை. என் பெரியக்காமேல் காதல் கொண்டதனால்தான் சேனா எங்கள் வீட்டிற்கு வர நேர்ந்தது. ஆனால் சின்னக்கா தன் தந்திரத்தால் அவனைக் கிளப்பிக் கொண்டு போய் விட்டாள். இதுவரைக்கும் அவனைக் கல்யாணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வருகிறாள். அவளுடைய நடத்தையால் என் சிறிய தகப்பனார் கோபமடைந்திருந்தாலும் அவள் விஷயத்தில் எந்த நடவடிக்கை எடுத்தாலும் அது பயன் அளிக்காது என்பதனால் அவர் பொறுமையைக் கடைப்பிடிக்க நேர்ந்தது.
இப்போது அவர் கடிதத்தை மிகவும் கவனமாக அவதானித்திருக்கிறார் என்பது தெரிந்தது. அவர் ஒன்றுமே பேசவில்லை. நெடுநேரமாக அமைதி நிலவியது.
"'நான் போனதடவை மத்துகமத்திற்குப் போயிருந்த போது அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்பது விளங்கிவிட்டது.” அந்த அமைதியைக் குலைத்தவாறு அம்மா சொன்னாள்.
''நாங்கள் இதில் தலையிடுவதற்கு ஒன்றுமே இல்லை. நல்லது கெட்டது பார்க்கும் வரைக்கும் அவள் காத்திருக்கவில்லையே. தான் விரும்பியபடி நடந்து கொண்டாள். இனியும் அப்படியே விட்டு விடுவோம். எங்கே சந்தோஷமாக இருக்க முடியும் என்று நினைக்கிறாளோ அங்கேயே அவள் இருக்கட்டும்" என் சிறிய தகப்பனார் கோபம் கலந்த குரலில் கூறினார்.
* 'அவள் இங்கே எப்படி நடந்து கொண்டாலும் அவனோடாவது சந்தோஷமாக இருப்பாள் என்று நினைத்தேன்.” சொல்லும்போதே அம்மாவின் விழிகள் கண்ணீரால் நிரம்பி விட்டன.
மீண்டும் அங்கு அமைதி சூழ்ந்து கொண்டது. ஆனாலும் இந்த விஷயத்தில், பேசித் தீர்த்து ஒரு முடிவுக்கு வரவேண்டியிருந்ததனால் அவர்கள் மீண்டும் பேசத் தொடங்கினார்கள்.
“'எது எப்படியிருந்தாலும் ஒருமுறை அவளைப் பார்த்துவிட்டு வருவதுதான் நல்லது.” அம்மா முடிவாகக் கூறினாள்.
அவளைப் போய்ப் பார்ப்பதற்கு எனக்குக் கொஞ்சங்கூட விருப்பமில்லை. அம்மா போவதையும் நான் விரும்பவில்லை. அம்மா போனால் சின்னக்காவை எப்படியும் தன்னுடன் கூட்டிக்கொண்டு வந்து விடுவாள். பின்னர், அவள் இந்த
சிங்களச் சிறுகதைகள் 124

வீட்டை விட்டுப் போன பின்னர் இங்கு நிலவும் சந்தோஷமயமான அமைதி குலைந்து போய்விடும். அவள் இப்போது முன்னரிலும் பார்க்கக் கொடூர மானவளாக இருப்பாள். அவள் மீண்டும் வந்து இந்த வீட்டில் எங்களுடன் இருக்கப் போவதை நான் ஒருபோதும் விரும்பமாட்டேன்.
மறுநாள் அதிகாலையில் எங்கள் வீட்டிற்கு முன்னால் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து சூட்கேஸ் சகிதம் சின்னக்கா இறங்கினாள். தான் நினைத்த படி ஒரு திட்டத்தோடுதான் அவள் சேனாவைப் பிரிந்து வந்திருக்கிறாள் என்பதை எங்களால் அனுமானித்துக் கொள்ள முடிந்தது. தன் புத்திக்கேற்றவாறு நடந்து கொள்ளுபவள் விஷயத்தில் நாங்கள் கூறுவதற்கு ஒன்றுமே இருக்கவில்லை. இதை எல்லோரும் உணர்ந்து கொண்டோம்.
அவள் வந்த மூன்றாம் நாள் அது நடந்து விட்டது. எங்கும் கதை பரவி விட்டது. சேனாவின் தம்பி நந்தனாவுடன் சின்னக்கா ஓடிவிட்டாள் என்ற செய்தி கிராமம் எங்கும் எதிரொலித்தது. வாரக் கணக்கில் எங்களால் கிராமத்தில் தலை காட்ட முடியவில்லை.
அந்த வார முடிவில் நான் வீட்டுக்கு வந்தேன். வந்ததும் அந்தப் பெரிய தோடைமரம் பயன் அற்ற, அந்த உதவாக்கரை மரம் என் பார்வையில் பட்டது. உடனேயே அதை அடியோடு வெட்டி விழுத்தினேன். அதைப் பார்த்து, அதை நட்ட தினத்தில் பிறந்த என் சகோதரியை நான் நினைவு படுத்திக் கொண்டிருக்க வேண்டாம்.
மல்லிகை : 17 ஆகஸ்ட் 1969
125 மல்லிகைப் பந்தல்

Page 71
புத்ததாச கலபத்திகேயன்
இருள்
தமிழாக்கம்: எஸ்.எம்.ஜே. பைஸ்தீன்
சூரியன் தனது ஒளிக்கற்றை மடங்குவதால் மங்கிய வெளிச்சத்தை உமிழ்ந்தவாறு மேலைவானிலே மூழ்கிட ஆயத்தமானது. முழுவுலகையும் ஒளிர வைத்த சூரியனது மறைவினால் இருட் கருந்திரைகள் சூழலை மூடிக் கொண்டன. அழகுற என் இதயத்தில் உன்மத்தமூட்டிய இனிய நினைவுகள் என்னை வருத்தியவாறு சூழலின் இருட்திரைகளிற் திரண்டன.
குறிக்கோள் எதுவுமின்றி அறைக்குள் நுழைந்து, கட்டிலில் சாய்ந்தபடி எவ்வளவு சிந்தித்தாலும், சிக்குண்ட நூற்பந்தொன்றை ஒத்த எனது இதயம் ஓர் இலக்கை நாடிச் செல்ல மறுத்தது. விளக்கினின்று சிதறும் மங்கிய ஒளி அறை முழுவதிலும் சூழ்ந்துள்ள பேய் இருளைக் கலைக்கும் பயனற்ற முயற்சியில் ஈடுபட்டிருந்தது.
இவ்வாறு இன்னும் எத்தனை நாட்கள் பார்த்திருப்பேன்? வீட்டிலடைந்து நான் கழிக்கும் இவ் வரண்ட வாழ்வு முழு ஜீவியத்திலுமே நான் எதிர்கொண்ட துர்ப்பாக்கியகரமிக்க காலப் பகுதி என்று எனக்குத் தோன்றுகிறது. பட்டப் பரீட்சை முடிந்து ஈராண்டுகள். எத்துணை நீண்ட காலமிது?
இதயம் கட்டிய இனிய இலட்சியங்கள் அனைத்துமாகிய பலூன் உருண்டையை நீருள் அமிழ்த்திய குடத்தைப் போலக் கடந்த காலத்தால் மூழ்கடிக்க முயன்றாலும், சமயா சமயம் அவை நினைவில் எழத்தான் செய்கின்றன. அவை நினைவூட்டப் பெறுவதால் கிடைக்கும் தற்காலிகமான இன்பத்தை விடத் துன்பத்துடன் பிணைந்து விட்ட எனது மனவேதனையே மிகைப்பட்டமையால் அக்கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்தேன். அதன் விளைவோ கடந்தகால நினைவின் துளிர்ப்பாகவே அமைந்தது.
நீண்ட காலத்தின் பின் ருவினியிடமிருந்து கடிதமொன்றைக் கண்டு நான் எவ்வளவு ஆனந்தமடைந்தேன் தெரியுமா? எனினும் அக்கடிதத்தை வாசித்தபோது தாங்கொணா வேதனையால் இதயம் தாக்குண்ட விதம் நான் எதிர்பார்த்திருந்த நான் எனது நினைவில் கட்டியெழுப்பியிருந்த அப் பொன்மணிச் சுந்தரலோகம்
சிங்களச் சிறுகதைகள் 126

என் கண்ணெதிரிலேயே அழிவுற்றுச் சரியும்வகை. நான் மீண்டும் ருவினியின் கடிதத்தைப் படித்தேன்.காரிருளிலேனும் ஒளிரலாகும் அழகிய அச்சிறு கையெழுத்துக்கள் நான் மறக்க முயலும் இறந்த காலத்தைத் திரைப்படம் போல என்னெதிரே காட்சிப்படுத்தின.
'உலகில் நீங்களும் நானும் என்றோ சேர்ந்திருந்தோம். எனினும் இப்பிறவியில் நீங்களும் நானும் இணைவதற்குச் செய்த முயற்சி கருவிலேயே மரித்து விட்டமையை நினைக்குமிடத்து நானுறும் வேதனை சொல்லுந்தரமன்று. வீட்டாருக்குச் சுமையான எனக்கு அவர்களது கட்டாயத்தின் பேரில் எதிர்வரும் மாதம் இரண்டாம் நாள் புது உலகொன்றில் புதுவாழ்வொன்று திறந்து வைக்கப் பட்டுள்ளது. அதிலிருந்து விடுபட நான் முயன்றாலும் அதனால் பயனேதும் விளையும் என்று என்னால் நினைக்க இயலவில்லை. வீட்டாரது தீர்மானத்துக்கு மாறாகச் செயலாற்றுமளவுக்கு உறுதியற்ற நீங்களும் நானும் என்ன செய்யலாம்? எதிர்வரும் இரண்டாந் திகதி நீங்கள் என்னைக் காணவருவீர்களென எதிர்பார்க்கிறேன்....'
ருவினியின் சிறு எழுத்துகளின் ஊடே அவள் என்னை நோக்கி வேதனை யோடு சிரிப்பதாக எனக்குத் தோன்றியது. விழிகளிரண்டிலும் துளிர்ந்த கண்ணீர்த் திவலைகள் மெதுவாகச் சிதறித் தெறித்தன. பல்கலைக் கழகத்தில் இருந்த நாட்களில் ருவினியின் எதிரே என்றாகிலும் எனது கண்களிரண்டிலும் நீர் துளர்த்ததில்லை என்பது எனக்கு ஞாபகமிருக்கிறது.
பல சந்தர்ப்பங்களில் என்னால் நேர்ந்த தவறுகளுக்காக அவள் சிறு குழந்தையைப் போல அழுததுண்து. அப்போதெல்லாம் எனது வேதனை இதயத்தினளவிலே வரம்பிட்டு நின்றதேயன்றி ஒரு நாளாவது கண்ணீரால் வெளிப்பட்டதில்லை. அச்சுந்தரப் பல்கலைக் கழக வாழ்விலே அவளும் நானும் எவ்வளவு மகிழ்ச்சியிற் திளைத்திருந்தோம் தெரியுமா?
அவளும் நானும் சேர்ந்து விரிவுரைகளுக்குச் சென்றவிதம் ஒருநாள் தாமதமாக விரிவுரை மண்டபத்துக்குச் சென்ற எம்மிருவரிடமும் விரிவுரையாளர் சுரவீரா 'குருவி ஜோடிபோல இருந்தாப் பாவாயில்லை. சரியான நேரத்துக்கு வரவேண்டும். சிரிச்சாப் பரவாயில்லை. சரியாக எழுதவும் வேணும்' என்று சிரித்த முகத்துடன் கூறும்போதே அவளது கன்னமிரண்டும் நாணத்தால் சிவந்த வகை, அதன்பின் பல்கலைத் தோழரும் தோழியரும் எம்மிருவரையும் குருவி ஜோடி' என்ற சுவையான பட்டப் பெயரிட்டு அழைத்தவிதம், யாவும் எத்துணை
அழகானவை?
தாளத்துக்கு இசைந்தாற் போல் அசைந்து அசைந்து செல்லும் அவளது நடை. அழகான குமிழ் மூக்கு, பிரகாசமான கண்களிரண்டாலும் உன்மந்த மூட்டும் அவ்வன்பான பார்வை. எனது இதயத்துட் புகுந்து உடல் முழுவதிலும் சிலிர்ப்பூட்டும் பண்பு எனது நினைவிற் தோன்றின.
127 மல்லிகைப் பந்தல்

Page 72
அவை அனைத்தும் இரவிற் கண்ட கனவு போலாகிவிட்டன. முதன் முதலாக ருவினி என்னைச் சந்தித்த தினம். விரிவுரை மண்டபத்தினெதிரே ருவினியும் நானும் உரையாடிக் கொண்டிருந்த போது தயாவும் சேனாவும் எம்மிருவரையும் கேலி செய்தபடி சென்ற விதம்.
அந்நாட்களில் குருவி ஜோடியைப் போலச் சுதந்திரமாக மகிழ்வுடன் திரிந்த ருவினிக்கும் எனக்கும் இத்தகு வேதனை மிக்க விடிவொன்றை வருங்காலத்தில் எதிர்கொள்ள நேரும் என்று தோன்றாததேன்? அவளும் நானும் சேர்ந்து வாழ்ந்த பல்கலைக் கழக வாழ்வை நினைத்துப் பார்ப்பதாயின் நாட்கள் பலவும் போதா.
ருவினி எதிர்வரும் இரண்டாம் நாள் எனது வருகையை எதிர்பார்த்திருப்பாள் என்று எனக்குத் தோன்றியது. மணவுடையிற் பொலியும் ருவினி பல்கலைக் கழகத்தில் நான் கண்ட ருவினியைவிட அழகாக எனது கற்பனையிற் காட்சி தந்தாள்.
எனினும் ருவினியின் முன் சென்று, நேருக்கு நேர் நின்று அவளது கண்களை நோக்கி, வாழ்த்துரைக்க முயலுமளவுக்கு எனக்கு உரிமையில்லை எனக் கருதினேன். கடதாசி ஒன்றை எடுத்து பேனையைக் கையிலேந்தியபடி நான் சிந்தித்தேன். நினைவில் எழுந்த அனைத்தையும் சுருக்கமாக அதில் எழுதினேன்.
'ருவினியினது அன்பு பொங்கும் பிரகாசமிக்க கண்களிரண்டையும் காண எனக்குக் கொள்ளை ஆசைதான். என்றாலும் இப்படியான நன்னாளொன்றிலே நான் உன்னைக் காண வந்து உனது அழகான விழிகளிரண்டினையும் கண்ணீரால் நிறைக்க நேருமேயென எண்ணி வருந்துகிறேன். ருவினி இப்போது துக்கப்பட அவசியமேதும் இல்லைத்தானே. புதுவாழ்வை மகிழ்வுடன் எதிர்கொள்ள எனது நல் வாழ்த்துக்கள்!'
கடிதத்தை எழுதி முடித்த பின் கட்டிலில் சாய்ந்த எனக்கு மங்கிய விளக்கொளி மறைந்த பின் நன்றாக நித்திரை வரும் போலிருந்தது.
மல்லிகை : 36 அகப்படுவதோட்ட மே 1971
சிங்களச் சிறுகதைகள் 128

விமலதாஸ சமரசிங்க புனர்
குடை
பொடாவிட
தமிழாக்கம் : திக்குவல்லை ஸப்வான்
பாதையின் இரு பக்கங்களும் அலங்காரப் பூமதில்கள். அவற்றுக்கிடையே எறியப்பட்ட பொருட்கள் குவியலாகப் போடப்பட்டிருந்த இடத்திற்கு அருகே இருபக்கமும் நன்றாக நோட்டமிட்டபடி நான் போய்க் கொண்டிருக்கிறேன். கறுத்த மேகக்கூட்டம் வானத்தில் ஒருமித்து சேர்ந்திருக்கிறது. சூரியவெளிச்சம் சுத்தமாய் இல்லை. குளிர்ச்சியான தன்மை இன்னும் தொடங்காவிட்டாலும் ஆகாயம் மழை வருமாப்போல முட்டிக் கிடக்கிறது. பளிச்சென அணிந்திருந்த மக்கள் விறுவிறுவென அங்கும் இங்கும் விரைகின்றனர். சொகுசு வாகனங்களின் தொடர்ச்சியான ஓட்டம். அவற்றினால் பிரதான பாதை நிரம்பி வழிகிறது. கடைகள் இன்னும் மூடப்படவில்லை. நகரத்தின் பரபரப்புத் தன்மையிலும் மாற்றமில்லை. இரவைத் தொட ஒருமணி நேரமிருக்கிறது. அதற்கிடையில் நான் ஒரு கிலோமீற்றர் தூரம்வரை வந்துவிடுகிறேன். என்றாலும் நான் தேடி வந்த சாமான் இன்னும் அகப்படவே இல்லை.
அது டோக்கியோவில் 'சின்ஜுகு' பக்கமாகச் செல்லும் பிரதான வீதி. நாலா பக்கங்களிலும் வாகனங்களின் இடைவிடாத விரைவு. வானம் மப்பும் மந்தாரமுமாகக் காணப்பட்டதால் நகர வீதிகளின் பரபரப்பு மேலும் அதிகரிக் கின்றது. அவர்களது செயல் முழுநாளும் கொட்டப் போகும் மழைக்குத் தயாராவது போல் தெரிகிறது.
வீதி வழியே மேலும் முன்னேறுகிறேன். நான் தேடுவதெல்லாம் பாவனைக்குப் பிறகு தூக்கியெறியப்பட்ட குடையே! கச்சிதமாகக் கத்தரிக்கப்பட்டு சரிபடுத்தப் பட்டிருந்த பூமதில்களுக்கிடையிலோ, அல்லது அதற்கருகிலோ ஒரு குடையை யாவது இன்னும் காணோம். கவர்ச்சிகரமான கடதாசிப் பெட்டிகள், பிளாஸ்ரிக் பாத்திரங்கள், காகிதாதிகள் குவிந்திருந்த குப்பைகளுக்கிடையே இன்று பார்த்து எவருமே ஒரு குடையாவது போட்டிருக்கவில்லை.
129) மல்லிகைப் பந்தல்

Page 73
.யை
மழை விட்ட கையோடு சில ஜப்பானியர்கள் தாம் பாவித்த குடையை வீசியெறிந்து விட்டுச் செல்வது பற்றி எனக்கு நன்கு தெரியும். சில இடங்களில் அவ்வாறான பல குடைகளை தேர்ந்தெடுக்க முடியும். அவ்வாறு ஜப்பானியரால் தூக்கியெறியப்பட்ட, ஆனாலும் நன்கு பாவிக்கக்கூடிய ஒரு குடையைத் தேடித் தான் வீதி தோறும் அலைந்து கொண்டிருக்கிறேன். அதிக தூரம் செல்லும் முன்பு அவ்வாறானதொன்று என் கைக்குக் கிடைக்குமென்பதில் அதீத நம்பிக்கை.
மழை இன்னும் தொடங்கவில்லை. சிலமணி நேரங்களில் பெய்து விடுவேன்' எனும் கருமேகச் சிதறல். சின்னதாய் மழை பெய்து ஓய்ந்தாற் கூட, இவ்வாறான வீதிகளில் எறியப்பட்ட குடைகளைத் தாராளமாக சேகரிக்க முடியும். ஜப்பானி யர்களுக்கு குடை அவ்வளவு பெறுமதியான பொருள் அல்ல.
சில நாட்களாகவே மாலையானதும் விடாத மழை. அதனால் நகரத்தில் எந்தவொரு இடத்திற்கும் போகமுடியாத நிலை. காலையில் மழை இல்லா விட்டாலும், வேறு அலுவல்கள் இருந்ததால் செல்ல முடியவில்லை. மாலை நேரங்களில் மட்டுந்தான் வெளியில் செல்ல நேரம் கிடைக்கிறது. என்றாலும் அந்நேரமாய்ப் பார்த்து மழை தொடங்குவதால் குடை இல்லாமல் வெளியில் செல்வது ஆபத்து.
இன்னும் இரண்டு மூன்று நாட்கள்தான் டோக்கியோவில் தங்கியிருப்பேன். அதற்குள் தேவையான இடங்களைச் சுற்றிப் பார்க்கச் சென்றேயாக வேண்டும்.
குடையொன்றை பணங்கொடுத்து வாங்குவது வீண் செலவு. அதற்காக ஆயிரம் யென்கள் வரை செலவழிப்பது அப்பட்டமான அநியாயம். இலங்கை யில் அதே விலைக்கு ஐந்து குடைகளையாவது வாங்கித் தள்ளலாம். விலை கொடுத்து வாங்கினாலும் அநாவசியம். சில நாட்கள் பாவித்து விட்டு வீசியெறிந்த ஒன்றைத் தேடுவதுதான் புத்தி சாலித்தனம்.
அவ்வாறான ஒன்றை இலகுவாகவே தேடிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை துளிர்விட, குடை வாங்கும் எண்ணம் அப்படியே அமிழ்ந்து விட்டது.
அந்தத் திட நம்பிக்கையில்தான் தங்கியிருந்த விடுதியிலிருந்து கிளம்பினேன். இப்போதைக்கு மிகத் தொலை தூரம் வந்து விட்டேன். இதுவரையில் ஒரு குடையாவது அகப்பட்டால்தானே? நீலவானம் கருமேகக் கூட்டமாக நிறம் மாறியிருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் மழை பெய்யக் கூடிய அறிகுறி. பாதையில் போவோர், வருவோர் அனைவரது கைகளிலும் குடைகள். அவற்றை ஆவல் ததும்ப பார்க்கிறேன். அதே நேரம் எனது நிலைமையை நினைத்தும் எரிச்சல் பொத்துக் கொண்டு வருகிறது. எனக்குக் குடையொன்று கட்டாயமாகத் தேவை. ஆனால் ஒன்றைக் கூட தேட முடியவில்லையே?
பிரதான பாதையில் தவறினாலும் சிலவேளை ஒழுங்கைகளில் கிடைக்கலாம் என யூகித்த நான், ஒழுங்கைப் பக்கமாகத் திரும்புகிறேன். அதன் இரு பக்கங்
சிங்களச் சிறுகதைகள் 130

களும் கவனமாகப் பார்த்துக் கொண்டே போகிறேன். அவ்வாறான குடையைக் காணவே காணோம்.
'குடையொன்றை வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை' என்ற தீர்மானாத்திற்கு வந்து விடுகிறேன்' ஆயிரம் யென்கள் என்றால் சும்மாவா? இலங்கைப் பணத்தில் எண்ணூறு ரூபா வரையிலான பெருந்தொகை. ஒரு தற்காலிக குடைக்காக அவ்வளவு தொகையை தாரை வார்ப்பது அபாண்டம். சுற்றும் முற்றும் பார்த்த எனது கண்களுக்கு குடை விற்பனை செய்யும் கடை யொன்று தட்டுப்பட உள்ளே நுழைகிறேன். பலதரப்பட்ட குடைகள் ஏராளமாக அடுக்கப்பட்டிருந்தன. அவற்றின் விலைகளை நுணுக்கமாக ஆராய்கிறேன். ஒன்றின் விலை ஆயிரத்து முந்நூறு யென்கள். இன்னொன்று ஆயிரத்து இருநூறு, அடுத்தது ஆயிரம். அதைக் கைக்கு எடுத்து உயரத் தூக்கிப் பார்க்கிறேன். கவர்ச்சியாய், கைக்கு வாகாய் இருக்கிறது. என்றாலும் ஆயிரம் யென்கள்! 'ஒரு குடைக்காக அவ்வளவு தொகையை விரையமாக்குவது மடத்தனம்' குடையை இருந்த இடத்தில் வைத்து விட்டு வெளியே வருகிறேன். மனத்துள் எதிர்ப்பார்புக்கள் சிதறிப்போன உணர்வு. அத்தோடு விரக்தி... தோல்வி... சலிப்பு எல்லாம்! இன்று பார்த்து எவரும் ஒரு குடையையாவது பாதை யோரத்தில் போடாமல் இருக்கிறார்களே... ஏன்?
ஒழுங்கை வழியே நேரே சென்ற நான், அப்புறப்படுத்தப்பட்ட சாமான்கள் மலைபோல் குவிக்கப்பட்டிருந்த இடத்தில் போய் நிற்கிறேன். யாராவது கவனிக்கிறார்களா என்று அடிக்கண்ணால் நோட்டமிடுகிறேன். எவரும் என் மீது கரிசனை காட்டுவதாகத் தெரியவில்லை. சந்தேகம் தீர்ந்ததும் குப்பைக்கு அருகே, பாதையோரமாக நின்று அவற்றின் மீது ஊடுருவுகிறேன். பாதையில் பலரும் என்னைக் கடந்து செல்கிறார்கள். ஆனால் எதிர்பார்த்துச் சென்ற குடை அங்கும் இல்லை. சுற்றி வளையப் பார்த்துவிட்டு மீண்டும் அங்கிருந்து கிளம்புகிறேன்.
எதிர்ப்பட்ட குப்பைகளில் வேண்டியளவு பெறுமதியான பொருட்கள் தாராளமாக இருந்தன. எனக்கு அவற்றால் ஒரு பிரயோசனமுமில்லை. எனக்கு தேவையெல்லாம் ஒரு குடை. அந்த இடங்களில் இது இல்லை. மீண்டும் பிரதான பாதைக்கு வந்த நான் முன்நோக்கிச் செல்கிறேன். பூமதில்கள்... குப்பை மேடுகள் ஒவ்வொன்றையும் நுணுக்கமாகப் பார்த்துக் கொண்டே வருகிறேன். ஓர் இடத்திலாவது குடையைக் காண முடியவில்லை.
பாதையில் போவோர், வருவோர் அனைவரது கைகளிலும் மழையை எதிர்பார்த்து விரிந்த குடைகள். என் கை மாத்திரம் வெறுமை. எனது அவசரத் தேவை ஒரு குடை. அது இல்லாவிட்டால் இரண்டு மூன்று நாட்களுள் நான் போகத் திட்டமிட்ட அனைத்துமே பாழ்.
எதிரே குடைகள் விற்பனை செய்யும் பிரமாண்டமான கடை. வேறு வழி யின்றி அதற்குள் நுழைகிறேன். பல அளவுகளில், பல விதங்களில் குடைகள்
131 மல்லிகைப் பந்தல்

Page 74
தொங்கிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றையும் பரிசீலனை செய்கிறேன். ஒன்று மூவாயிரம் யென்கள்; இன்னொன்று ஆயிரத்து ஐந்நூறு; மற்றது ஆயிரத்து எண்ணூறு, அம்மாடியோவ்! அதில் ஒன்றையேனும் என்னால் சமாளிக்க முடியாது. பல குடைகளைக் கைக்கு எடுத்து பலமுறை சோதித்துப் பார்த்த நான் இருந்த இடத்தில் வைத்துவிட்டு திரும்புகிறேன்.
எதிர்பார்ப்பு முறிந்ததால் ஏற்பட்ட கோபம் துளிர்க்கத் தொடங்குகிறது. இன்னும் சற்று நேரத்தில் குடையொன்றைத் தேடிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வந்த வழியே திரும்ப வேண்டியதுதான்! அப்படியானால் மறுநாள் குடையில்லாமல் அவதிப்பட வேண்டி ஏற்படும். அதனால் எப்பாடு பட்டாவது குடையொன்றைத் தேடிக்கொள்ள வேண்டும்.
காணுமிடமெல்லாம் குடைகள் விற்பனை செய்யும் கடைகள். ஏதும் செய்ய இயலாமல் மற்றுமொரு கடைக்குள் நுழைகிறேன். கழுகுப் பார்வை பார்க்கும் என்னைப் பற்றி அக்கறை கொள்வோர் அங்கு இல்லாததால் சிறிது நிம்மதி. குடைகளின் கவர்ச்சியை, வடிவமைப்பை விட அதில் குறித்துள்ள விலையைத்தான் உன்னிப்பாகக் கவனிக்கிறேன்.)
விலையை பெரிதாக எழுதி காட்சிக்கு வைத்திருந்தார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலை. ஆக விலை குறைந்த குடை ஆயிரம் யென்கள். குடையை எடுத்துப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு இருந்த இடத்திலேயே வைத்து விட்டுத் திரும்புகிறேன். எதிர்பார்ப்பு தூர்ந்து போய் சோர்ந்து திரும்பிய போது கடையின் ஒரு மூலையில் குவிக்கப்பட்டிருந்த குடைகள் கண்களில் படுகின்றன. அசிரத்தையுடன் அங்கே போகிறேன். ஒரு கூடைக்குள் இருந்த குடை தொளாயிரத்து ஐம்பது யென்கள். மற்றக் குடைகளை விட விலை குறைவு. கிண்டிக் கிளறி ஒரு நல்ல குடையைத் தேர்ந்தெடுத்து நாலுபக்கமும் புரட்டிப் பார்க்கிறேன். நீண்ட நேரமாக அப்படியும் இப்படியும் கை மாற்றி மாற்றி வாங்குவதா இல்லையா என நேரத்தைக் கடத்துகிறேன். என்ன பெரிதாகக் குறைத்து விட்டார்கள்? ஐம்பது யென்கள் தானே! சும்மா, இலவசமாக ஒரு குடையைத் தேடிக் கொள்ள வாய்ப்புக்கள் இருக்கும் போது இவ்வளவு பணங் கொடுத்து எதற்கு வாங்க வேண்டும்? குடையை கூடைக்குள் சொருகி விட்டு வெளியே வருகிறேன்.
பிரதான வீதி வழியே நேரே செல்வதற்குப் பதில் வந்த வழியே திரும்புகிறேன். அதுவரைக்கும் நன்றாகவே களைத்துப் போனேன். கால்கள் வேறு வலிக்கின்றன. சூரியனையும் காணோம். மேகங்கள் குவியல் குவியலாக இருந்ததெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கனமழை இருட்டு. இன்னும் சற்று நேரத்தில் மழை படபடவென்று இறங்கக் கூடும் என்பதால் பாதை மேலும் சுறுசுறுப்பாகிறது. போவோர், வருவோர் அனைவர் கையிலும் குடை. அதைப் பார்க்கும்போது எனக்குக் கோபம் பற்றிக் கொண்டு வருகிறது.
சிங்களச் சிறுகதைகள் 132

குடை தேடும் படலத்தைக் கைவிடுகிறேன். கால் வலியையும் பொருட் படுத்தாது அவசர நடையாய் விடுதியை நோக்கிச் செல்கிறேன். அந்தளவுக்கு நான் சோர்ந்து போயிருக்கிறேன்.
விடுதிக்கு வந்ததும் டோக்கியோவில் ஏற்கனவே போகவிருந்த ஓர் இடம் ஞாபகத்தை முட்டுகிறது. 'ச்சே... குடை தேடிய நேரத்தில் ஓரிரண்டு இடத்திற்காவது போயிருக்கலாமே? இன்னும் சில நாட்களுள் எனது அனைத்துப் பயணங்களையும் முடித்தாக வேண்டும். என்றாலும் மாலையில் கொட்டும் மழைக்கு முன்னால் செய்வதறியாது தடுமாறுகிறேன். அதனால் எப்படியாவது ஒரு குடை தேடியாக வேண்டும்.
வெளியே மழை கொட்டுகிறது. இனி, இன்றைய மாலைப்பொழுது முழுவதும் நாசம்தான். நாளை சின்ஜூகு பாதைக்குப் பதிலாக வேறு வழியைத் தேர்ந்தெடுத்துத் தேடுவதுதான் புத்தி. இன்று நான் போன பகுதி அதிகமாக அலுவலகங்கள் உள்ள பகுதி. அதனால்தான் போலும் அப்பகுதிகளில் எவரும் குடைகளை எறிந்து விட்டு செல்வது குறைவு.
மறுநாள் மாலை. மழை தொடங்க முன்பே விடுதியிலிருந்து புறப்பட்டு கின்ஸா பகுதியை நோக்கிச் செல்லத் தொடங்குகிறேன். எனக்கு அப்பகுதியில் வேறு ஓர் அலுவலும் இருந்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! கின்ஸா - சின்ஜுகு போலன்றி குடியிருப்பாளர்கள் நெரிசலாக வாழும் இடம். எனது தேவையையும் நிறைவேற்றிக் கொண்டு, ஒரு குடையையும் தேடிக் கொண்டு
வரமுடியும்.
கின்ஸா செல்ல புகையிரதத்தில் ஏறிய நான், அடுத்த புகையிரதப் பாதைக்கு மாறுவதற்காக புகையிரத நிலையத்தில் இறங்குகிறேன். மேடைக்குக் குறுக்காக நிறுத்தப்பட்டிருந்த ரயிலை நோக்கி சனத்தை விலக்கிக் கொண்டே முன்னால் செல்கிறேன்.
மேடையில் பயணிகள் அமர்வதற்காக அமைக்கப்பட்டிருந்த ஆசன வரிசையின் மூலையில் ஒரு குடை. கடும் ஊதா நிறப் பூக்கள் நிறைந்த புத்தம் புதுக்குடை. கடைசி ஆசனத்தில் சாத்தப்பட்டிருக்கிறது. அடுத்த மூலையில் ஒரு ஜப்பானியன் அமர்ந்திருக்கிறான். மற்ற ஆசனங்கள் எல்லாம் காலி. அவ்விடத்தில் சனநடமாட்டமும் குறைவு. நான் குடை இருக்கும் இடத்தைக் கடந்து சிறிது தூரம் போய், மற்றவர்கள் காணாத வகையில் மீண்டும் திரும்பி மறுபக்கத்திற்கு வருகிறேன். மூலையில் அமர்ந்திருப்பவன் நிச்சயமாக குடையின் உரிமையாளனாக இருக்க முடியாது. ஏனென்றால் குடையை அவன் மற்ற மூலையில் வைத்திருக்க மாட்டான்.
குடை அழகாக சுருட்டப்பட்டு முடிச்சும் இடப் பட்டிருக்கிறது. யாராவது மறந்துபோய் வைத் திருக்கக்கூடும். அப்படிப்பட்ட குடையை எடுப்பதில் என்ன தப்பு? அதைத் தேடி உரிமையாளர் வரவா போகிறார்?
133) மல்லிகைப் பந்தல்

Page 75
நான் குடை இருக்கும் இடத்தைக் கடந்து இன்னும் சிறிது தூரம் முன்னால் செல்கிறேன். அடுத்த புகையிரதம் தூரே இருந்து வருகின்ற சத்தம் கேட்கிறது. அதோடு சேர்ந்து மனிதர்களின் பரபரப்பும் அதிகமாகிறது. புகையிரதம் மேடையில் நிற்கிறது. இறங்கியவர்கள் கதைகளில் மூழ்கியபடியே நகர்கின்றனர். நான் சனங்களோடு சேர்ந்து, குடை இருந்த பக்கம் பார்த்தபடியே சிறிது தூரம் சென்று திரும்பவும் வருகிறேன். மறுமூலையில் அமர்ந்திருந்த மனிதன் நிறுத்திய புகையிரதத்தில் ஏறப் போயிருந்தான். ஓரிருவர் மாத்திரம் இங்கும் மங்கும் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.
| நான் மேலும் இரண்டு மூன்று தடவை குடையிருந்த இடத்தைக் கடந்து மற்றவர்களுக்கு விளங்காத வகையில் பின்னால் செல்கிறேன். சூழ ஒருவரும் இல்லாததை உறுதிப்படுத்திக் கொண்ட நான், ஒரேடியாக குடை இருந்த இடத்தை நெருங்கி சடார் என அதை எடுத்து முன்னால் நடக்கிறேன். யாராவது கவனிக்கிறார்களா என்று மெதுவாக நோட்டமிடுகிறேன். அப்பாடா! எவரும் பார்த்ததாகத் தெரியவில்லை.
நடையைத் துரிதப்படுத்துகிறேன். புகையிரத மேடையைக் கடந்து வெளி யேறும் கதவுப் பக்கமாகப் போகிறேன். மனம் திக்திக்கென அடிக்கத் தொடங்கு கிறது. அமைதியின்றி தவிக்கிறது. இன்னும் வேகமாக நடக்கிறேன். பதற்றம் குறைந்த பாடில்லை.
அதையடுத்து மனசுக்குள் பயமுரசு அடிக்கிறது. குழப்பமான எண்ணங்கள் ஊர்கின்றன. விபரீதமான காட்சிகள் நகர்கின்றன. குடையை அங்கு வைத்து விட்டு உரிமையாளர் எங்காவது போயிருக்கலாம். சிலவேளை மலசல கூடத்திற்குச் சென்றாரோ என்னவோ? அப்படியானால் திரும்பவும் அதே இடத்திற்கு வருவார். மறதியாக வைத்து விட்டுப் போனாலும் தேடிக் கொண்டு வரலாம். அங்கே சிறு நிகழ்வு நடந்தாலும் புகையிரத நிலையப் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் முறையிடுவது வழக்கம். அவர்கள் உஷாராகி விடுவார்கள். கடும் ஊதா நிறப் பூக்களையுடைய குடையை அடையாளம் காண்பது மிக மிக சுலபம்.
புகையிரத மேடையில் போவோர் வருவோரிடையே யாராவது ஒரு நபர் நான் குடையை எடுத்ததை தூர இருந்தே அவதானிக்க வாய்ப்பு உண்டு. நான் கையிலிருந்த குடையை இடது காலோடு சேர்த்து ஒட்டி வைத்தபடி எவரும் அறியாத வகையில் செல்ல முனைகிறேன்.
குடையைப் பற்றி பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு முறைப்பாடு செய்தால் கண்டுபிடிப்பது ஒன்றும் பெரிய காரியமல்ல. ஏனென்றால் நான் இன்னும் புகையிரத நிலையத்திற்குள்தானே நிற்கிறேன். கடும் ஊதா நிறப் பூக்களுடைய குடையை கையில் ஏந்தியபடி இருக்கும் என்னை சட்டென்று அடையாளம் கண்டுகொள்ள முடியும். அப்படி ஏதும் நடந்தால் பெரும் அவமானம்தான்!
சிங்களச் சிறுகதைகள் 134

அதனால் ஏற்படும் தலைக் குனிவை தாள முடியாமல் போய் விடும். அத்தோடு விட்டுவிடுவார்களா? பொலிஸ் பிரிவு... நீதிமன்றம்... என அலைய வேண்டி வரும். விசேடமாக ஜப்பான் புகையிரத தொலைபேசி அசுர வேகம். சில செக்கன்களில் முழுப்பகுதியையும் துளைத்து விடுவார்கள். (2)
இந்தப் புகையிரத நிலையத்தில் இல்லா விட்டாலும், மாறுகின்ற அடுத்த புகையிரதப் பாதையில் என்னை நிச்சயமாக மடக்கிப் பிடிப்பார்கள். நான் குடையை எடுப்பதை யாராவது கண்டிருந்தால் எனது அடையாளம் அவருக்கு மறக்காமல் இருக்கும். நீல நிறக் காற்சட்டை, வெள்ளை ஷோட், கையில் சிவப்பு நிறக் கடதாசிப்பை. என்னை அடையாளம் காண்பதற்கு இதுவே போதும்! சிவப்பு நிற கடதாசிப் பையிலிருந்த சஞ்சிகையை எடுத்து விட்டு அதைக் குப்பைத் தொட்டியில் போடுகிறேன். 'அப்பாடா, கண்டு பிடிப்பதற்கு இருந்த ஒரு அடையாளத்திலிருந்து தப்பி விட்டேன்... இது சரி உடையை மாற்றவது எப்படி? இங்கிருந்து வெளியே பாய்வதுதான் ஒரே வழி” வேறொன்றும் தோன்றவில்லை. புகையிரதத்தில் செல்வதைத் தவிர வேறு வழியில்லை.
புகையிரத நிலைய சுவரில் பிரமாண்டமான ஒரு விளம்பரம். பரவிய பல நிறங்களின் பின்னணியில் விசாலமான பாம்பு போன்ற உருவம். வெளியே பாய்ந்து எதையோ கௌவத் தயார் நிலையில் இருந்தது. அந்தக் கவர்ச்சியான விளம்பரம் கூட எனக்குள் பயத்தையே விதைக்கிறது.
மாறுவதற்கான புகையிரதப் பாதைக்கு வந்து அங்கே மேடையின் பெரிய தூணில் சாய்ந்து கொள்கிறேன். குடையை இடது காலுக்கும், தூணிற் குமிடையே மறைத்துக் கொள்கிறேன். கடந்து போவோர் வருவோர் கைகளில் குடைகள். எனது கையில் குடை இருந்தாலும் பதைத்தபடி, மறைத்தபடி நிற்கின்றேன்.
அடுத்த ரயிலை எதிர்பார்த்தபடி மேடையில் மக்கள் மொய்திருக்கின்றனர். வரவர சந்தடி கூடுகின்றது. எப்படியாவது இங்கிருந்து வெளியேறுவதுதான் புத்தி. பாழாய்ப்போன புகையிரதமும் நினைத்த வேகத்தில் வருவதாகத் தெரியவில்லை. பயத்தினால் நெஞ்சுக்குள் வேர்க்கிறது. மாட்டிக் கொண்டால் ஏற்படும் மானக்கேட்டை போக்க முடியாமல் போய்விடும். முன்னைய புகையிரத மேடை பாதுகாப்பு உத்தியோகத்தருடன் இந்தப் பாதுகாப்பு உத்தியோகத்தர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு குடையைப் பற்றி விசாரிப்பார். அவரும் சகல விபரங்களையும் விலாவாரியாகச் சொல்லி விடுவார். அது போதாதா இந்த ஆசாமிக்கு! சகல விபரங்களையும் ஒலிபெருக்கி மூலம் அறியத் தருவார். குடையை எடுத்த நான் வகையாக மாட்டிக் கொள்வது திண்ணம்.
'கடும் ஊதா நிற பூக்களுடைய குடையைத் திருடிய நபர் நீல நிறக் காற்சட்டை, வெள்ளை ஷேர்ட் அணிந்துள்ளார். கையில் ஒரு சஞ்சிகை' ஒலி பெருக்கியில் போகும் போது எல்லோர் முன்னிலையிலும் அகப்பட்டுக் கொள் வேன். அவமானத்தால் வெந்து சாம்பராகி விடுவேன். எங்கள் நாட்டுப் பத்திரிகைக்
135 மல்லிகைப் பந்தல்

Page 76
காரர்கள் செய்திக்காக லோலோ என்று அலைகிறவர்கள். 'இலங்கை நபர் ஜப்பானில் குடை திருடி மாட்டிக் கொண்டார்' என்று கொட்டை எழுத்துக்களில் பிரசுரித்து விடுவர்கள். அதன் பிறகு இலங்கையில் உள்ளவர்களும் எனது ஈனத்தனத்தை அறிந்து கொள்வார்கள்.
புகையிரத மேடை ஒலிபெருக்கியில் ஓர் அறிவித்தல். ஜப்பான் மொழி என்பதால் ஒன்றுமே எனக்கு விளங்கவில்லை. இதயம் வேகமாய் படபடக்கிறது. சந்தேகமும் திகிலும் பரவ சுற்றிலும் பார்க்கிறேன். எங்கும் அமைதியற்ற சூழல். மக்கள் அங்குமிங்கும் போய்க் கொண்டிருக்கிறார்கள். சுற்றிவர உள்ள அனைவரும் என்னையே பார்த்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு. நான் தூணின் மறுபக்கமாகப் போய் சாய்ந்து கொள்கிறேன். அப்போதுதான் என்னை முழுமையாக மறைத்துக் கொள்ள முடியும். என்றாலும் மனக்குழப்பம் குறைந்த பாடில்லை. சுற்றிலும் பார்க்கிறேன். பயமேகம் பலமடங்கு அதிகரிக்கிறது. முழு உடம்பும் வியர்வையினால் தெப்பமாகி விடுகிறது.
அதே சமயம் அருகிலிருந்த குப்பைத்தொட்டி கண்களைத் தொடுகிறது. தூணிலிருந்து மெதுவாக வந்து தொட்டி இருந்த பக்கமாக விரைகிறேன். குடையை குப்பைத் தொட்டியை நோக்கி எறிகிறேன். அப்பாடா... இப்போதுதான் நிம்மதியாய் மூச்சுவிட முடிகிறது.
அப்போது கூவென்று அலறி அடித்துக் கொண்டு புகையிரதம் மேடையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதன் சத்தம் எனது காதுக்குள் எதிரொலிக்கத் தொடங்குகிறது.
மல்லிகை ஆண்டு மலர்
ஜனவரி - 2004
இடுப்பும் பட்டதும் சிறை
ப : 22 ல்,
சிங்களச் சிறுகதைகள் 136

பிரியந்த சுஜீத் அத்தநாயக்க
பக்கம் - 2
இ-)
மல்லிகைப் பூ மணம்!
தமிழாக்கம்: இப்னு அஸ்மத்
இட “இருபத்தி ஒன்பதாம் திகதி எனக்குக் கல்யாணம். றோயல் ஹோட்டலில் நடைபெறுகிறது, முடிந்தால் வாருங்கள்" எனக் கூறியவாறு பிரேமகுமார தனது திருமண அழைப்பிதழை தாயின் மடியில் போட்டான். ஆழப் புதைந்து போயிருந்த தாயின் விழிகளிலிருந்து தீப்பொறிகள் பறந்தன. என்றாலும் எதுவுமே செய்ய முடியாத நிலையில் கஷ்டப்பட்டவாறு மூச்சுக்களை வெளியே விட்டவாறு அவள் உட்கார்ந்திருந்த கயிற்றுக் கட்டிலின் நுனியில் வந்தமர்ந்தாள்.
தாயின் நெஞ்சுக்குக் குறுக்காக மூச்சலை அங்கும் இங்குமாக ஓடியது. அவளது முகம் முழுவதும் சோகத்தால் மூழ்கிப் போய்க் கிடந்தது. ''மகன் எங்களை வெறுத்து விட்டான் போல..!” மிகுந்த வேதனையுடன் கூறினாள்.
'இது உனக்கு வேண்டும்' எனக் கூறுமாப்போல் பிரேமகுமார தாயைப் பார்த்தான். தோல்வியைத் தழுவிய உணர்வுகளை வெளிப்படுத்துமாப் போல் தாய் அவனின் பார்வையை எதிர் கொண்டாள்.
தகப்பனார் உள் அறையில் இருந்தவாறு வெற்றிலை இடிக்கும் சத்தம் அவளது சிந்தனைகளை அலைக்கழித்தன. மகனின் புதிய நாடகத்தைப் பற்றி அவருக்குக் கூற அவள் எண்ணிய போது உதடுகள் அசையவில்லை.
தாயின் சோகம் கூடிய முகத்தைப் பார்த்த பிரேமகுமார பார்வையைத் திருப்பி முற்றத்திலிருந்த காய்ந்த மல்லிகைக் கொடியின் மீது வீசிப் புன்னகைத் தான். பூக்கயே இல்லாத, இலைகளும் உதிர்ந்த போன முதிர்ந்த அந்த மல்லிகைக் கொடி பிரேமகுமாரவையே பார்த்துக் கொண்டிருந்தது.
மல்லிகைப் பூ மணம் வீசத் தொடங்கியது. ஒரோயொரு மல்லிகைப் பூவேனும் அருகாமையில் இல்லாத போதும் மல்லிகைக் கொடியின் பக்கமிருந்து மல்லிகைப் பூ மணம் வீசத் தொடங்கியது.
பிரேமகுமாரவின் மனம் வேதனையில் ஆழ்ந்தது. பெருமூச்சுக்கள் அவனிடம் இருந்து வெளியேறின.
137 | மல்லிகைப் பந்தல்

Page 77
தாய் குறித்து மெல்லிய வைராக்கியம் இருந்த போதும் தாய்ப் பாசம் கருதி தாய்குச் சாபமிடாமல் அவள் மீது அனுதாபம் செலுத்த முயன்றான்.
'இவனுக்குப் பேயடித்து விட்டதோ தெரியாது...' ஒரே திசையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த மகனைப் பார்த்துத் தாய் நினைத்துக் கொண்டாள். என்றாலும் வாய் திறந்து அவள் எதனையுமே கூறவில்லை.
குடும்பத்துக்குப் பொருத்தமான நல்ல மருமகளைத் தனது மகனுக்கு விவாகஞ் செய்து வைப்பதே தாயின் ஆசையாக இருந்தது. என்றாலும் அந்த ஆசை நிராசையாக மாறும் காலம் நெருங்கி விட்டது.
***
பிரேமகுமாரவின் தலை முழுவதுமாக கனன்று கொண்டிருந்த கடந்த காலத்தின் காதல், தீச்சுவாலையாக பற்றி எரிய ஆரம்பித்தது.
அன்று ஓர் பெளர்ணமி தினமாகும். நாலாபுறமும் நிலவொளி வீழிந்தி ருந்தது. நகரில் பெரஹெரா பார்த்துவிட்டு வீடு திரும்பும் போது குறுகிய வழி என்பதால் லயன்களினூடாக வந்து கொண்டிருந்தபோதுதான் அவன் முதன் முதலில் பார்வதியைக் கண்டான்.
பிரேமகுமாரவால் நினைத்துப் பார்க்க முடியாமற் போயிற்று. தனது நினை வில் நிறுத்தி வைத்திருந்த தேவதை, லயன்களின் மத்தியில் தமிழ் யுவதிகளுடன் - நெற்றியில் பொட்டுடன், இதோ வெள்ளை நிறத்தில் பெளர்ணமியைப் போன்ற பிரகாசத்துடன்.....
“பெஹெர பார்க்கச் சென்றீர்களாக்கும்” பிரேமகுமார பார்வதியைப் பார்த்து மெதுவாக முணுமுணுத்தான்.
''ஆமாம்” அவள் பதிலளித்தாள். அவளைச் சூழவிருந்த வாயாடி யுவதிகள் சிரித்துப் பரிகாசம் செய்தனர்.
மிக விரைவில் வசந்த காலம் ஓடி வந்தது. சுக்கிரன் பிரேமகுமாரவின் நெற்றியில் அவதரித்தான். ஆகையினால் ஏனைய வாயாடிப் பெண்களின் கேலிகள் அதிகரித்த போதும் பார்வதியின் நெஞ்சுக்கு அம்பு எய்த அவன் வெட்கத்தை ஒரு தடையாக எடுத்துக் கொள்ளவில்லை. கித்துள் பூவைச் சுற்றி வண்டுகள் வட்டமிடுவதைப் போன்று காலை முதல் மாலை வரையில் பிரேமகுமாரவின் கடமை பார்வதியின் பின்னால் சுற்றுவதாகவே இருந்து வந்தது. குப்பை மேடு என இதுவரை நினைத்துக் கொண்டிருந்த லயன்கள் இப்போது அவனுக்கு சுவர்க்க பூமியாகத்தான் தெரிந்தது.
''தரையில் கூட சோற்றைப் போட்டுக் கொண்டு சாப்பிட முடியும். அந்த சிங்களச் சிறுகதைகள் 138

அளவுக்கு இந்த மக்கள் லயன்களைச் சுத்தமாக வைத்திருக்கின்றார்கள்...'' என மிகுந்த மகிழ்ச்சியுடன் பிரேமகுமார தனது நண்பர்களிடம் கூறுவான்.
மல்லிகைப் பூவை அவள் தலையில் வைத்துக் கொள்வதற்காக பிரேமகுமார அவளது தலைமயிர்களுக்கு மிகுந்த விருப்புடன் வாசனைப் புகை பிடிப்பதுண்டு. இதற்கான அனுமதியை அவளது வீட்டார் அவனுக்கு வழங்கியிருந்தனர்.
பார்வதியின் தலையில் மல்லிகைப் பூக்களைச் சூடி அதன் அழகைப் பார்க்கும் போதுதான் 'காதல் மல்லிகைப் பூவைப் போல் பரிசுத்தமானது' என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது.
***
கறுப்பு ஜூலை வந்தது. இனவாதத்தால் வெறி கொண்டிருந்த அனைத்துப் பெண்களும் அனைத்து ஆண்களும் பேய் பிடித்துத் திரிந்தனர்.
அப்பாவி மக்களை அவர்கள் உயிருடன் வைத்து வெட்டினார்கள். வீடுகளுக் குத் தீ வைத்தனர். சொத்துக்களை சூறையாடினர். இப்.
இச்சந்தர்ப்பத்தில்தான் பார்வதி வாழ்ந்து வந்த லயன் பகுதியிலும் அசம்பா விதங்கள் இடம்பெற்றன.
முழு நிலா வானேறியிருந்தது. நிலவொளியில் வெறி பிடித்திருந்த ஊர் மக்கள், அண்ணன், தம்பி, அக்கா, தங்கை எனக் கூறிக் கொண்டிருந்த அப்பாவி பார்வதியின் லயனைச் சேர்ந்தவர்களுடன் பாரிய மோதலில் ஈடுபடலாயினர்.
பொலிஸார் அங்கு வந்தபோது நடக்க வேண்டியவை அனைத்தும் நடந்து முடிந்திருந்தன. தீப்பிடித்த லயன்கள் அனைத்தும் பாழடைந்த மாயான பூமியைப் போல் புகை மண்டலத்தால் மூடப்பட்டிருந்தன.
லயன்களில் இருங்தவர்கள் தோட்டப் பக்கமாகத் தப்பியோடியிருந்தனர்.
***
சில காலம் கழிந்த பின்னர் பயங்கர நிலையகன்று, அமைதி தென்றலைப் போன்று மெது மெதுவாக வர ஆரம்பித்தது.
பிரேமகுமாரவின் பாதுகாப்பில் இருந்து வந்து பார்வதியும் அவளது பெற்றோரும் லயன்கள் அமைந்திருந்த பகுதிக்கு வந்து குடிசையொன்றை அமைத்துக் கொண்டனர்.
எனினும் அக்குடிசை மறுநாட் காலையில் தீக்கிரையாகிக் கிடந்தது. பார்வதியின் தாயினதும் தந்தையினதும் சடலங்கள் இனங்காண முடியாதளவுக்கு தீக்கிரையாகிக் கிடந்தன.
139) மல்லிகைப் பந்தல்

Page 78
ஊரிலும், ஊருக்கப்பால் ஏனைய பகுதிகளிலும் நடந்த மிருகத்தனமான செயற்பாடுகளுக்கு தலைமை தாங்கியவன் பிரேமகுமாரவின் மூத்த சகோதரன் என அவன் அறிந்து கொண்டபோது அனைத்துமே நடந்து முடிந்திருந்தன.
பிரேமகுமார ஒரே ஓட்டமாக லயன்கள் அமைந்திருந்த பகுதிக்குச் சென்றான். அவன் கண்களின் முன்பாகவே அவனது தாயார் பார்வதியின்
முதுகைப் பார்த்து வெட்டுக் கத்தியால் தாக்கிக் கொண்டிருந்தாள்.
***
12
மழைக் காலம் வந்தது. பூக்கள் செறிந்து காணப்பட்ட தோட்டங்கள் யாவும் நனைந்திருந்தன. மழைத்துளிகள் வீடுகளின், கூரைகளின் ஓடுகளையும், தகரங்களையும் தாண்டி வந்து பூமியில் விழ, புதுமையானதொரு காலநிலை உருவாகலாயிற்று.
மல்லிகைக் கொடியின் மீது மழைத்துளிகள் விழுவதை பிரேமகுமார பார்த்துக் கொண்டிருந்தான்.
“உனது திருட்டுத்தனமான நடத்தைகள் அனைத்தையும் நான் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தேன். அதனால்தான் நல்ல தருணம் பார்த்து அந்த கேடுகெட்டவளுக்கு வெட்டுக் கத்தியால் தாக்க முடிந்தது.” தாய் முணு முணுத்தாள்.
ஜன்னல் மீது வைத்திருந்த பிரேமகுமாரவின் திருமண அழைப்பிதழ் காற்றுடன் சேர்ந்து அறையை விட்டு வெளியே அடித்துக் கொண்டு வந்தது.
''நீங்கள் செய்தவற்றை பார்வதி பொலிஸாரிடம் கூறியிருந்தால் நடப்பதே வேறு. அப்பாவிப்பெண் அனைத்தும் இழந்த பின்பும் எனக்காக அவள் பேசாமல் இருந்து விட்டாள்" என பிரேமகுமார தனக்குத்தானே கூறிக்கொண்டான்.
தாயாரும் தந்தையும் பிரேமகுமாரவின் திருமணத்துக்குச் செல்வதில்லை என முடிவு செய்திருந்த போதும், திருமண நாளன்று தாமாகவே 'ரோயல்' ஹோட்டலுக்குச் சென்றார்கள்.
“சொல் பேச்சு கேளாத சனியன், திரும்பவும் அதேமாதிரி கேடுகெட்ட ஒருத்தியுடன் சகவாசம் வைத்துக் கொண்டிருக்கிறானோ தெரியாது..." என அவனது தாய், தன் கணவனைப் பார்த்தவாறு வேதனையுடன் முணுமுணுத்தாள்.
"மகன் இப்போது திருந்தியிருப்பான். பன்றி கூட எப்போதுமே சேற்றில்
சிங்களச் சிறுகதைகள் 140

இருக்காதுதானே!” என அவனது தந்தை நம்பிக்கையுடன் கூறினார்.
ரோயல் ஹோட்டலினுள் நுழையும் போதே மீண்டும் அவளது அடிவயிறு புகைய ஆரம்பித்தது. பார்வதியின் தோற்றத்தை ஒத்த, தீயப் பேய் ஒன்று தனது மகனின் கரங்களைப் பற்றிக் கொண்டு நிற்பதைப் போன்றதொரு மாயைத் தோற்றம் அவளின் முன்பாகத் தோன்றித் தோன்றி மறைந்தது.
***
தனது பெற்றோர்கள் வந்திருப்பதை அறிந்து கொண்ட பிரேமகுமார, குழுமியிருந்தவர்களிடையே விடுபட்டு தனது பெற்றோர்களிடம் வந்து அவர்களது 1.பாதங்களைத் தொட்டு வணங்கினான். தாயினதும் தந்தையினதும் முகங்களில்
முத்தமிடும் போது அவனது கண்கள் நனைந்திருந்தன.
மருமகள், கண்களுக்கு எட்டக்கூடியதாக இல்லாததன் காரணமாக பிரேம் குமாரவின் தாய் மிகுந்த எதிர்பார்ப்புடன் அங்குமிங்குமாக தனது பார்வையை ஓடவிட்டாள்.
ஹோட்டல் அறை முழுவதுமாக கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடையே தனது மருமகள் யாராக இருக்கக்கூடுமென இனங்காண அவளால் முடியாமற் போயிற்று.
“மகன் இந்தளவுக்குப் பிரபலமானவனா?” என என்னால் எண்ணிப் பார்க்கவே முடியவில்லை" என அங்கு நின்ற பல்வேறு வகையிலான ஆண் களையும், பெண்களையும் பார்த்தவாறே பிரேமகுமாரவின் தந்தை கூறினார். அப்போது பிரேமகுமார அங்கிருந்த விருந்தினர்களிடையே காணாமற் போயிருந்தான்.
முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருமண வைபவத்துக்கு வருகை தந்திருந்தவர்களது நவீன ரக வாகனங்கள் பிரேமகுமாரவின் தகுதியை அவனது பெற்றோர்களுக்கு உணர்த்தி நின்றன.
''மகன் கெட்டுப் போகவில்லை” மிகுந்த மகிழ்ச்சியுடன் அவனது தந்தை கூறினார்.
பிரேமகுமார, மணமகளின் கரங்களைப் பற்றியபடி குழுமியிருந்தவர் களிடையே மெது மெதுவாக வந்து கொண்டிருந்தான். அவனது தாயும் தந்தை யும் கண்கள் சிமிட்டாமல் மணமகளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
கறுப்படித்து காய்ந்து போன நிறத்தில் விகாரமாகிப் போன முகத்துடன் இருந்த மணமகளைக் கண்டதும் பிரேமகுமாரவின் பெற்றோர்களது எதிர்பார்ப்பு கள் சுக்கு நூறாகிப் போயின.
"மகன், திரும்பவும் ஒரு பேய்க்கே வாழ்க்கைப் பட்டுவிட்டான்” தாய்
141) மல்லிகைப் பந்தல்

Page 79
உணர்ச்சி பொங்கக் கூறினாள்.
தனது மனைவியை அழைத்து வந்து தனது பெற்றோர்களை வணங்கும்படி செய்த பிரேமகுமார, ''இந்த சந்தோஷமான நாளில் ஏன் வேதனையுடன் இருக்கிறாய்?” என தனது தாயைப் பார்த்துக் கேட்டான்.
அவள் எதையுமே கூறாமல் வேறு பக்கமாக தனது முகத்தை திருப்பிக் கொண்டாள். அவனது தந்தை அவனையும் மணமகளையும் சந்தேகக் கண் கொண்டு பார்த்தார்.
''உங்களுக்கு எல்லா வகையிலுமே பொருந்துவாள் என்றுதான் நான் பவித்திராவை திருமணஞ் செய்தேன். ஏன் நீங்கள் கோபமாக இருக்கிறீர்கள்?” பிரேமகுமார தனது பெற்றோர்களை நோக்கிக் கேட்டபோது அவனது மனைவி அங்கிருந்து தனது நண்பர்களை நோக்கிச் சென்றிருந்தாள்.
''எந்த வகையில் பொருந்துவாள்?” கோபத்துடன் கேட்டாள் தாய்.
''குலம், சொத்து, அதிகாரம் என்பன எங்களை விட பத்து பதினைந்து மடங்கு அவர்களிடம் இருக்கிறது” என பதில் கூறிய பிரேமகுமார தனது மனைவியை நோக்கி நகர்ந்தான்.
அவன் கூறிய வார்த்தைகளைக் கேட்ட அவர்கள் அதிர்ச்சியுடன் அவனையே பார்த்தவாறு நின்றிருந்தனர். அவர்களது இதயங்களை எல்லை யில்லா வேதனை வந்து தாக்கியது.
பார்வதியின் முகம் அவள் முன்பாகத் தோன்றியது. அவளைப் போல் வடிவானதொரு தோற்றம் கொண்ட பெண் வேறு இல்லை என சிலநேரம் அவள் எண்ணிக் கொண்டாள். பருமனான, அவலட்சணம் கொண்ட பவித்தி ராவைவிட தனது மகனுக்கு பார்வதியே மிகவும் பொருத்தமானவள் என
அவளுள் நினைத்துக் கொண்டாள்.
பிரேமகுமாரவின் தாயின் வெட்டுக் கத்தி தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த பார்வதியை பொலிஸார் அரசாங்க மருத்துவமனையில் சேர்த்தனர். இதனையறிந்த பிரேமகுமாரவின் தாயும், சகோரனும் மிகுந்த பதட்டத்தை அடைந்தனர். நினைவு திரும்பியவுடன் பார்வதி தங்களைக் காட்டி கொடுத்து விடுவாள் என அவர்கள் பயந்தனர். அவர்கள் இருவரும் கூடி என்ன கதைத்துக் கொள்கிறார்கள் என்பதை பிரேமகுமார அறியவில்லை. அன்றைய தினம் இரவே பார்வதி காணாமற் போயிருந்தாள். தான் வெகு தொலைவில் இருக்கும் தனது உறவினர்கள் வீட்டுக்குச் செல்வதாக அவள் கடிதம் எழுதியிருந்தாள். என்றாலும் அவள் ஒரு பாழடைந்த வீதியில் வைத்து உயிருடன் எரிக்கப்பட்டாள் என்பதை பிரேமகுமாரவின் தாயும் சகோதரனும் மருத்துவமனையில் இருந்த சிலருமே அறிவார்கள்.
சிங்களச் சிறுகதைகள் 142


Page 80


Page 81
பரஸ்பரம் நம்மை நாமே புரிந்து |
இன்று இந்த நாட்டில் வாழும் மூவி தமக்குள் முரண்பட்டு அரசியல் ரீதிய எதிரெதிராக நின்று கொண்டு அறிக் செய்து வருவதைப் பார்க்கும் போது என்னமோ செய்கிறது.
மல்லிகை ஆரம்பித்த காலத்திலி கலாசார ரீதியாக இம் மூவின ம 'பண்பாட்டுக் கூறுகளின் ஆக்கபூர் அமிசங்களை படைப்பினால் ஒன் இனங்களைப் பரஸ்பரம் புரிந்து ( தக்க வகையில் செயற்பட வைப் மல்லிகை தன்னாலான சகல முய 'கட்டம் கட்டமாகச் செய்து வந்து
அதனால்தான் போலும் கணிசமான புத்தி ஜீவிகள் இன்று கூட மல்லி இலக்கிய சேவையைப் புரிந்து 5 ளனர்.
இந்த வகையில் சிங்களச் சகோத முன்னோடிகள் தமிழ்ப் படைப்பா கருத்துக்களை மொழி பெயர்ப்பி உதவவில்லை என்ற ஒரு எதார்த் மையையும் நாம் கவனத்தில் கெ இல்லை. ஒரு தவறுக்கு இன்னெ பரிகாரமாகி விடாது. இதை மனதி தான் இலக்கிய உலகில் நாம் இ வருகிறோம். அதன் பெறுபேறுதா மொழி பெயர்ப்புச் சிறுகதைகளில் பாகும்.

கொள்வோம்.
ன மக்களும் பாக
கை யுத்தம் 5 மனசை
நந்தே க்களினது
வமான றிணைத்து கொள்ளத் பதற்கு பற்சிகளையும் புள்ளது.
ன சிங்களப் கையின் pவத்துள்
கர இலக்கிய ளிகளின் ல் ஆக்கி த உண் Tள்ளாமல் பரு தவறு
ல் கொண்டு பங்கி ன் இந்த * தொகுப்
ISBN )55825027 - 1)
9ll7 9) 95 58 II2 5 () 272