கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வன்னியாச்சி

Page 1


Page 2

வன்னியாச்சி
(சிறுகதைகள்)
தாமரைச்செல்வி
மீரா பதிப்பகம் 60 ஆவது வெளியீடு 191/23, ஹைலெவல் வீதி, கொழும்பு - 06. தொ.பே. 2513336, 0773125329
(i)

Page 3
நூல்
62 17602915 ஆசிரியர்
முகவரி
முதற்பதிப்பு
பதிப்பு
அச்சிட்டோர்
விலை
வன்னியாச்சி
சிறுகதை
தாமரைச்செல்வி
75, குமரபுரம், பரந்தன்
டிசம்பர் 2005.
மீரா பதிப்பகம், 191/23, ஹைலெவல் வீதி, கொழும்பு - 06. தொ.பே. 2513336, 0773125329
ஈகுவாலிட்டிகிராபிக்ஸ் (பிரைவெட்) லிமிட்டெட் 315, ஜம்பட்டா வீதி, கொழும்பு - 13
தொ.பே. 2389848.
ரூபா 175/-
(ii)

மதிப்புரை
ரிழத்துப் புனைகதைஞர்களில் ஐந்தாம் தலைமுறை எழுத்தாளர் களுள் தாமரைச்செல்வியின் பங்கும் பணியும் மிக முக்கியமானது. சுமைகள்' தாகம்' 'வீதியெல்லாம் தோரணங்கள்' 'பச்சை வயல் கனவு' போன்ற கனதிமிக்க நாவல்கள் மூலம் தனக்கென ஓர் அடையாளத்தை இனங்காட்டியிருக்கும் இவர் 'மழைக்கால இரவு', 'அழுவதற்கு நேரமில்லை' போன்ற சிறுகதைத் தொகுதிகளை ஏலவே அறுவடை செய்து சிறுகதைத்துறையிலும் அதிர்வை ஏற்படுத்தியவர். இதுவே ஐந்தாம் தலைமுறை எழுத்தாளர்களைப் பட்டியல் இடுகையில் தாமரைச்செல்வியின் பெயரொடு பெருவிரல் மடியக்காரணமாகின்றது.
தேசிய சாகித்ய மற்றும் வடக்குகிழக்கு மாகாண இலக்கிய விருதுகள் உட்பட பல விருதுகளையும்; தன் படைப்பிலக்கியங்களுக்காக சர்வதேச ரீதியிலும் அகில இலங்கை ரீதியிலும் முதற் பரிசுகளையும் தட்டிக்கொண்ட தாமரைச்செல்வி வடக்குகிழக்கு மாகாண ஆளுநர் விருதினையும் பெற்றிருக்கின்றார்.
மெய்யனுபவங்களையும், பிறர்வாயிலாகக் கேட்டறிந்தவற்றையும் கலாரீதியாகக் கூறி வாசகளிடையே அவற்றினைத் தொற்றவைப்பதோடு தமிழ்ப் புனைகதை இலக்கியத்தில் முகிழ்விடும் நவீன செல்நெறிகள் பற்றிய பிரக்ஞைக்கு உட்பட்டு எழுதுவதுமே தாமரைச்செல்வியின் வெற்றிக்கான காரணிகள் எனக் கொள்ளலாம்.
போர்க்காலச் சூழல், போரின் அவலச் சாவுகள், அழிவுகள், பதற்றம் நிறைந்த மனங்கள் ஆகியவற்றை தனது படைப்புக்களில்
(iii)

Page 4
யதார்த்தமாகச் சித்திரிப்பதில் தாமரைச்செல்வி தனக்கென ஓர் முத்திரை பதித்தவர். சக்தியற்ற பெண்களின் மெளன உணர்வுகளுக்கு வடிவங்கொடுப்பதில் வல்லமையானவர்.
'வன்னியாச்சி' எனும் தாமரைச்செல்வியின் இச் சிறுகதைத் தொகுதியும் இவரது திறனுக்கு சாட்சி சொல்வதாகவே அமைந்தி ருக்கிறது.
ஆனையிறவுத் தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்த கால கட்டங்களே இத்தொகுதியிலுள்ள அநேகமான கதைகளின் பின்புலமான அமைகின்றன. கணிப்புக்குரிய ஒரு தொகுதியாக அமையத்தக்க தகைமையைக் கொண்ட இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ள கதைகளுள் குறைந்தது மூன்றிற்கு மேற்பட்ட கதைகளாவது நிறைவான வாசகானுபவத்தைத் தரவல்லன.
இத்தகு சிறப்புமிக்க இந்நூலினை தனது அறுபதாவது அறுவடை யாக வெளிக்கொணர்வதில் 'மீரா' பெருமைகொள்கின்றது. 1996 வைகாசியில் இரத்தினவேலோனின் புதிய பயணம்' எனும் தொகுதியொடு நூல் வெளியீட்டு முன்னோடி எஸ். பாலச்சந்திரன் அவர்களின் ஆசியுடன் ஆரம்பிக்கப்பட்ட மீரா பதிப்பகம்' பத்தாண்டு நிறைவினை அண்மிக்கும் இத்தருணத்தில் பதிப்பக வளர்ச்சிக்கு தூண்களாக அமைந்த எழுத் தாளர்களுக்கு தனதினிய நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வடைகின்றது.
புனைகதை இலக்கியம், அறிவியல், விமர்சனம், ஆய்வு, சினமா எனப் பல்வேறுபட்ட துறைகளிலும் நூல்களை வெளியிட்டு வரும் மீரா பதிப்பகம் மேலும் தனது தேடலையும், துறைகளையும் அகலப்படுத்திக் கொள்ள எதிர்காலத்தில் தன்னைத் தானே தயார்ப்படுத்திக் கொள்ளும். அதற்கு எழுத்தாளர்களினதும் வாசகர்களினதும் ஒத்துழைப்பினை மேலும் நாடிநிற்கின்றது.
மீரா பதிப்பகம். பதிப்பாசியர். 191/23 ஹைலெவல் வீதி, கொழும்பு-06. 05.12.2005.
(iv)

7ன்னுரை
6ழுத ஆரம்பித்து முப்பது வருடங்களுக்கும் மேலாகிறது. 1973ல் ஆரம்பித்த எழுத்துப்பணி இன்று வரை தொடர்கிறது. இராணுவ நடவடிக்கைகளினால் எரியுண்டும் அழிந்தும் அநேகமான ஆக்கங்கள். இல்லாது போய் விட்ட நிலையில் இருக்கின்றவற்றையும் சிரமப்பட்டு தேடி எடுத்தவைகளையும் நூல் வடிவில் ஆவணப்படுத்தி வைக்க வேண்டும் என்ற சிந்தனை எழுந்தது. இதுவரை எட்டு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. "வன்னியாச்சி" ஒன்பதாவது நூல். இச்சிறுகதைத் தொகுதியில் மொத்தம் பத்துக் கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஏற்கனவே வந்த இரண்டு சிறுகதைத் தொகுதிகளிலும் இருபத்தியேழு சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. இருநூறு வரையிலான சிறுகதை கள் எழுதியிருந்தும் மொத்தம் முப்பத்தியேழு சிறுகதைகளையே நூல் வடிவில் ஆவணப் படுத்த முடிந்தது. இப்போது எனது ஆரம்பகால சிறுகதைகளை பல சிரமங்களுக்கு மத்தியில் சேகரித்துக் கொண்டி ருக்கிறேன்.
ஈழத்து இலக்கியப்பரப்பில் இப்போது நிறைய நூல்கள் நவீன வசதிகளைப் பயன்படுத்தி அழகியமுறையில் வெளி வந்து கொண்டி ருக்கின்றன. தனது எழுத்துக்கள் மக்களிடம் போய்ச் சேரவேண்டும் என்பதுதான் ஒரு படைப்பாளியின் நோக்கமாக இருக்கிறது. பல சிரமங்களை எதிர் கொண்ட பொருளாதார சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வெளிவரும் இந்த எழுத்துக்கள் மக்களால் காசு கொடுத்து வாங்கி வாசிக்கப்பட வேண்டும். இப்படியானதொரு ஆரோக்கியமான
(v)

Page 5
சூழல் ஏற்பட்டால்தான் நிறையநூல்கள் வெளிவர வாய்ப்பு ஏற்படும். இத்தொகுதியில் இடம் பெற்ற பத்து கதைகளும் எமது மண்ணின் மனிதர்களைப்பற்றியும் அவர்களின் வாழ்வு பற்றியும் பேசுகின்றன. அவரவர் வாழ்வுக்கு அவரவரே பொறுப்பு என்பதை உணர்ந்தவர் களாய் தமது வாழ்வோடு போராடியவர்கள். இவர்கள் எந்தத் துன்பம் வந்தாலும் தளர்ந்து வீழ்ந்து படாமல் நிமிர நினைத்தவர்கள். இந்த நினைப்புத்தான் இவர்களை இயங்க வைத்தது. வாழவைத்தது. இக்கதைகளை பிரசுரித்த பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கு எனது நன்றி.
தமது 60ஆவது வெளியீடாக இந்நூலினை வெளிக்கொணரும் கொழும்பு, மீரா பதிப்பகத்தாருக்கும் எனது நன்றி.
- தாமரைச்செல்வி 75, குமரபுரம் பரந்தன் 01.1.2005
(vi)

உள்ளே.
1. பார்வை வீரகேசரி
2. சுவர் மல்லிகை
3. விழிப்பு பரிஸ் ஈழமுரசு
4. காணிக்கை வெளிச்சம்
அம்மா கனவுக்கு வெளியேயான உலகு
.ே வன்னியாச்சி புதுவசந்தம்
7. முகமற்றவர்கள் வெளிச்சம்
8 இன்னொரு பக்கம் சுடர்
9. சில நிமிட மெளனம் நாற்று
10. தூரத்து மேகங்கள் தினக்குரல்
(νii)

Page 6
தாமரைச்செல்வியின் நூல்கள்
சுமைகள் நாவல்
விண்ணில் அல்ல விடிவெள்ளி நாவல் (யாழ் இலக்கிய பேரவையின் பாராட்டு பரிசு)
தாகம் நாவல் (சுதந்திர இலக்கிய அமைப்பின் சிறந்த நாவல் விருது யாழ் இலக்கிய பேரவையின் பாராட்டுப் பரிசு)
வேள்வித்தீ குறுநாவல் (முரசொலி பத்திரிகையின் முதற் பரிசு)
ஒரு மழைக்கால இரவு சிறுகதைகள் (வடக்கு கிழக்கு மாகாணசபையின் விருது)
அழுவதற்கு நேரமில்லை சிறுகதைகள்
வீதியெல்லாம் தோரணங்கள் நாவல்
(கொழும்பு மீரா பதிப்பக வெளியீடு- 40) (வடக்கு கிழக்கு மாகாணசபையின் விருது)
பச்சை வயல் கனவு நாவல் (அரச சாகித்ய விருது)
வன்னியாச்சி சிறுகதைகள்
(கொழும்பு மீரா பதிப்பக வெளியீடு - 60)
(viii)
1977
1992
1993
1994
1998
2002
2003
2004
2005

Unfoa/
னெக்கும் என் மனைவி வேதாவுக்குமிடையே நான்கு நாட்களாக
பேச்சு வார்த்தை இல்லை.
வழக்கமாய் ஏதும் சண்டை எங்களுக்குள் ஏற்பட்டால் ஒரு நாள்
பொறுத்து அவளே வந்து என்னுடன் சமாதானமாகிவிடுவாள். இந்தத் தடவை அப்படி எதுவும் நிகழவில்லை. நானாகப்போய்க் கதைக்கவும் விம்பு இடம் தரவில்லை. பார்ப்போம் எத்தனை நாளைக்கு இவள் இப்படி முகத்தை நீட்டி வைத்திருக்கப்போகிறாள் என்று.
இந்த நான்கு நாட்களாக பத்து வயது மகளை வைத்துத்தான் உரையாடல் நடக்கிறது.
"சிந்து அப்பாவை சாப்பிட வரச்சொல்லு."
"அப்பாட்ட சர்க்கரையும் உளுந்தும் வாங்கிவரச் சொல்லு."
"தெய்வேந்திரம் மாமா வந்து தேடினவர் எண்டு சொல்லு." இப்படி சிந்துதான் எங்களுக்குள் தூது சொல்லிக் கொண்டி ருக்கிறாள்.
சிலநேரம் வேதாவின் கோபத்தை நினைக்க சிரிப்பாகவும் இருக்கும். ஒன்றுமில்லாத விஷயங்களுக்கெல்லாம் தூக்கிப்பிடித்து
கோபித்து உடனும் சமாதானமாகி விடுவது அவளின் இயல்பு.
வேதா ஒரு சாதாரண அழகி கூட இல்லை.

Page 7
a/aafunaff
சாவகச்சேரியிலிருந்து அவளைக் கல்யாணம் செய்து கிளி நொச்சிக்கு கூட்டி வந்து பன்னிரண்டு வருஷமாகிறது.
பெண் பார்க்கப்போன அன்று என் மனதில் மிகுந்த குழப்பம் இருந்தது உண்மைதான். கொஞ்சம் அழகாய் மனைவி இருக்கக் கூடாதா என்று தவித்த மனதை கஷடப்பட்டு அடக்கிக் கொண்டேன். பெண் பார்த்து விட்டு வேண்டாம் என்றால் அவளின் மனம் வேதனைப்படும் என்பதற்காகத்தான் என் மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டு அவளைக் கல்யாணம் செய்து கொண்டேன்.
கிளிநொச்சி நகரில் கடை நடத்துவதால் ஏழாம் வாய்க்காலில் வயல் நடுவே சொந்த வீடு கட்டிக் கொண்டு இருக்கிறேன். நல்ல பெரிய வீடு, வேதா வீடு வாசல் முற்றம் கூட்டி பளிச்சென்று வைத்திருப் பாள். மாய்ந்து மாய்ந்து நல்ல ருசியாக சமைப்பாள். மறந்துவிடாமல் ஒவ்வொரு நேரமும் சாப்பாடு நல்லாயிருக்கு என்று சொல்லிவிட வேண்டும். அவளுக்கு உலகில் அதுதான் பெரிய சந்தோஷம்.
பாத்திரம் தேய்ப்பதிலும் சமைப்பதிலும் மட்டுமே ஒரு பெண் ணால் சந்தோஷப்பட்டு விடமுடியுமா..? இவைகளை விட உலகத்தில் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன என்று நான் சொல்ல முயன்றும் அதில் பிரயோசனம் தான் கிடைக்கவில்லை.
நான் ஒரு எழுத்தாளனாய் இருப்பதிலும் ஒரு இலக்கிய விமர்சகனாய் இருப்பதிலும் அவளுக்கு எவ்வித பெருமையும் சந்தோஷமும் இல்லை என்பதுதான் எனது முதல் தோல்வி ஒரு பத்து நிமிடங்களுக்கு மேல் எங்களுக்குள் பேச்சு வார்த்தைகள் இயல்பாக தொடரமுடியாதது ஒரு சோகமான நிலைமைதான். அவளால் உடுப்பைப் பற்றியும் சாப்பாட்டைப் பற்றியும் பிள்ளையைப் பற்றியுமே கதைக்க முடியும், அதற்கு மிஞ்சிய விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ள அவளால் முடியாது. வீடு மட்டுமே அவளுடைய உலகம். தட்டத்தனிய பத்துக் கொத்து அரிசி இடித்து வறுத்துவிட்டு "நாரி பிடிச்சுப் போட்டுது" என்று புலம்பிக் கொண்டிருப்பாள். அந்தப் புலம்பலைக் கேட்காமல் நான் ஏதும் எழுதிக் கொண்டிருந்தால் அவ்வளவுதான். "மனிசர்

தாமரைச்சென்வி
வருத்தத்தைக் கூட சொல்ல ஏலாது. என்ரை கவலையைக்கேட்க ஆள் இல்லை. எல்லாருக்கும் அவரவர் வேலை" என்று முணுமுணுப்பாள்.
"நீ ஏனப்பா இடிச்சனி மனிசி ஆரையும் பிடிச்சு இடிப்பிக்காதயன்' என்று சொன்னால்,
"பத்துக் கொத்துக்கும் அறுபது ரூபா கேட்குங்கள்" என்பாள். அப்படிச் சொல்லி விட்டு அடுத்த வாரம் சிந்துவுக்கு ஒரு சட்டை அறுபது ரூபா கொடுத்து தைப்பித்து விட்டு தைத்தது சரியில்லை சிந்து வுக்கு போட வடிவில்லாமல் இருக்கு என்று அலுமாரியின் அடித்தட்டில் வைத்து விடுவாள். இவளை பல சமயங்களில் என்னால் புரிந்து கொள்ள முடிவதில்லை. இந்த பரந்த உலகின் செயற்பாடுகளுக்கு இவளைப் பரிச்சயப்படுத்தவது எப்படி என்றும் தெரியவில்லை. புத்தங்கள் ஏதும் வாசி என்றால் சின்னப்பிள்ளைகளின் புத்தங்கள் மட்டுமே வாசிப்பாள். முப்பத்திநாலு வயதிலும் அம்புலிமாமா வாசிக்கிறவளை என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. பத்திரிகைகளில் எனது கதைகள் வரும் போது அக்கம் பக்கத்துப் பெண்கள்" உங்கட அவற்ர கதை வந்திருக்கு வேதாக்கா." என்று சொன்னால் "என்னவோ எழுதிறார். பேப்பர் காரங்களும் போடுறாங்கள்" என்று மிகவும் சாதாரண ஒரு விஷயமாக, அரிசி விலை பதினெட்டு ரூபாய் என்பது போல சொல்லுவாள். எங்கள் வீடு ஏழாம் வாய்க்கால் பகுதியில் கண்டி வீதியிலிருந்து மூன்று மைல் உட்புறத்தில் இருப்பதனால் கடந்து வந்த பிரச்சினைகள் எதுவும் ாேங்களைத் தாக்க வில்லை. நகர்ப்புறத்து சத்தம், சந்தடி, பதட்டம் எதுவுமற்ற அமைதியான சூழல், என் அக்காவும் தம்பியும் தங்கள் குடும்பங்களோடு பரந்தனில் இருந்தபோதும் நான் வயல் நடுவே வீடு கட்டிக்கொண்டு இருப்பதையே பெரிதும் விரும்பினேன். கிளிநொச்சி ரந்தன் பகுதிகளில் எண்பத்தாறிலிருந்து பல தடவை பிரச்சனைகள், தாக்குதல்கள், ஷெல் அடிகள் என்றெல்லாம் ஏற்பட்டபோது பலர் எங்கள் வீட்டில் ஓடிவந்து நின்று விட்டுப்போவார்களே தவிர நாங்கள் எதற்கும் அசைந்ததில்லை. வயல் வெளியைப் பார்த்தபடி ஜன்னல் ஓரத்தில் மேசையில் அமர்ந்து எழுதும் போது ஏற்படுகின்ற சந்தோஷத்துக்கு இணையாக நான் வேறொன்றும் உணர்ந்ததில்லை.
3.

Page 8
avarafovirafa
இலக்கியதாகம் என்னிடம் நிறைய உண்டு. யாழ்ப்பாணத்தில் நடக்கும் எந்த இலக்கியக்கூட்டத்துக்கும் போய்விடுவேன். ஆனையிறவு பாதை அடைபட்ட பிறகும் பூநகரி, சங்குப்பிட்டிப் பாதையாலும் அதன் பிறகு ஊரியான், கொம்படிப்பாதையாலும் என்ன கஷ்டப்பட்டும் போய் விடுவேன். அதுவும் கம்பன்விழா என்றால் தவறவிடுவதில்லை. என் இலக்கிய நண்பர்களுடன் ஐந்தாறு நாள் நின்று விட்டு வருவேன். இந்த வருஷம் மட்டும் போகவில்லை. கிளாலிப்பாதையால் போவதற்குப் பயந்து நான் போகவில்லை. முன்பு நான் சிரமப்பட்டு போய் வந்த போதும் வீட்டில் ஒரே சண்டைதான். "கண்டறியாத கூட்டத்துக்கு போயிட்டீங்கள். இங்க நான் மீன், மரக்கறி வாங்க ஆள் இல்லாமல் பட்டபாடு, சதாசிவ மாமாவைக் கொண்டுதான் வாங்குவிச்சது. சிந்துவுக்கு ரெண்டு நாளாய் தடிமன் தலையிடி, தைக்க குடுத்த உடுப்புக்களையும் எடுத்து வர ஆளில்லை." அவளின் வார்த்தைகளைக் கேட்டதும் என் சந்தோஷம் அப்படியே அடங்கிவிடும்.
என் உற்சாகத்தை பகிர்ந்து கொள்ள தெய்வேந்திரன் வீட்டுக்குத் தான் போவேன். தெய்வேந்திரனும் அவன் மனைவி நிர்மலாவும் திருநகரில் இருக்கிறார்கள். சைக்கிளில் போனால் பத்து நிமிட தூரம்தான். என் கடைக்குப் பக்கத்துக்கடை அவனுடையது.
தெய்வேந்திரன் என்னிலும் விட நாலைந்து வயது இளமை யானாலும் இலக்கியமும் எழுத்தும் எங்களை நண்பர்களாக்கியிருந்தது. நிர்மலா என்னை மிகவும் ஆச்சரியத்துக்குள்ளாக்கும் ஒரு பெண். உத்தியோகம் என்று பார்க்காவிட்டாலும் அந்த வேலை இந்த வேலை என்று சதா அலைந்து கொண்டேயிருப்பாள். நுனி நாக்கில் இலக்கியமும் உலகவிஷயங்களும் தளும்பிக்கொண்டிருக்கும். ஒரே சமயத்தில் அவளால் சமையலைப் பற்றியும் வியட்நாமியப் போராட்டத்தைப் பற்றியும் பேச முடியும். எந்தச் சிறுகதை, நாவலையும் அக்கு வேறு ஆணிவேறாக விமர்சிக்கமுடியும். மேடை ஏறி அழகாக பேசும் ஆற்றலும் உள்ளவள். அவளைப் பார்க்கும் போதெல்லாம் வேதாவின் குறை எனக்கு இன்னும் அதிகமாகத் தெரியும். நிர்மலா மிகவும் அழகான பெண். தூக்கிப்போட்ட கொண்டையும் சேலையுமாக சைக்கிளில் போய்

தாமரைச் சைன்வி
எந்த அலுவலையும் தனியே செய்யும் ஆற்றல் உள்ளவள். அவளின் கெட்டித்தனத்தில். வல்லமையில் ஒரு சிறு பகுதியாவது ஏன் வேதா விடம் இருக்கவில்லை? மனதின் அடியில் இந்த ஒப்பிடும் எண்ணம் இருந்ததனால் தான் நாலு நாட்களுக்கு முன்பு என்னையறியாமல் நான அப்படி அவளிடம் பேசிவிட்டிருக்கிறேன்.
நாலு நாட்களுக்கு முன்பு நான் எழுதி பாதியில் விட்டிருந்த கதைப்பிரதியின் ஒரு பேப்பர் மேசையிலிருந்து பறந்து போய் கதவு வாசலில் கிடந்திருக்கிறது. வேதா அந்தப் பேப்பரை கவனிக்காது எடுத்துப்போய் அடுப்பிலிருந்து பாத்திரம் பிடித்து இறக்கியிருக்கிறாள். ஐந்து நிமிடத்தில் குளித்துவிட்டு வந்து பேப்பர் தேடிய நான் குசினி மேடையில் பாதி கரியுடன் கிடந்த பேப்பரைக் கண்டதும் மூக்கு நுனியில் ஏறிய கோபத்துடன் என்னையறியாமல் பேசத் தொடங்கி விட்டேன்.
"உனக்கு மூளைக்கை என்னதான் கிடக்கோ தெரியாது. கதைப் பேப்பரைப் பிடிச்சு சட்டி இறக்கினியே. எங்கயோ ஒரு மொக்கு எனக் கெண்டு வந்து சேர்ந்தாய்."
பேப்பரை எடுத்து விரிக்க கரி கையோடு ஒட்டி வர எனக்கு கண் மண் தெரியாத கோபம் வந்து விட்டது. "ஆக சமைக்கவும் தின்ன வும் தான் உனக்குத் தெரியும். பார் அந்த நிர்மலாவை அதுக்கு எத்தனை விஷயம் தெரியும். எவ்வளவு கெட்டிக்காரி. அதைப் பார்த்தாவது நீ பழகக்கூடாதே?"
என் வார்த்தைகளைக் கேட்டு விலுக்கென்று வேதா திரும்பினாள், மூளை இல்லை என்றும் மொக்கு என்றும் பேசும் போது சும்மா நின்றவள் நிர்மலாவை ஒப்பிட்டுப் பேசியதும் பொங்கிவிட்டாள்.
" என்னை ஏதும் பேசினாலும் பரவாயில்லை பேசுங்கோ. ஆனா நிர்மலா மாதிரி நான் இல்லை எண்டு ஒப்பிட்டுப் பேச வேண்டாம். அவளைச் சொல்லி என்னைப் பேசினா பிறகு தெரியும். எனக்கு கதை எழுதினது எண்டு தெரியுமே? பேப்பரை ஒழுங்கா மேசையில வைக்கிற துக்கு காத்தில ஏன் பறக்க விட்டனிங்கள்?" இப்போது யார் யாரை குற்றம் சொல்வது என்று புரியாமல் ஒரு வினாடி விழித்தேன். அவள்

Page 9
வன்னியாசிசி
திருப்பிக் கதைத்தது எனக்கு கோபத்தைத் தர நான் கத்த அவள் திருப்பிக் கதைக்க பத்து நிமிடநேரம் வாக்கு வாதப்பட்டு இருவரும் முகத்தைத் திருப்பிக்கொண்டு அமர்ந்ததிலிருந்து நான்கு நாட்களாக கதைக்காமல் இருக்கிறோம். எவ்வளவு தான் பேசினாலும் ஏதோ தெருவில் போகிறவளைப் பேசுவதாய் பாவனை காட்டி கவனிக்காதது மாதிரி இருப்பவள் நிர்மலாவை ஒப்பிட்டுச் சொன்னதும் எவ்வளவு சூடாய் பேசி விட்டாள்? இன்னொரு பெண்ணைப்பற்றி உயர்வாகச் சொன்னதும் ஆகாமல் போய் விடுகிறதே.
நான் நேரம் பார்த்தேன்
காலை ஆறரை மணி
குசினிக்குள் வேதாவின் நடமாட்டம். வடக்குப் பக்கமாய் தூரத்தில் ஹெலியின் இரைச்சல் கேட்டது. ஷேவ் செய்து குளித்து விட்டு வர் : சிந்து நீட்டிய கோப்பியை வாங்கி குடித்தேன். "சிந்து தெய்வேந்திர .ை மாமா வீட்ட போய் கடைத்திறப்பைக் குடுத்து கடைதிறக்கச் சொல்லிப்போட்டு வாறன். எனக்குப் பரந்தனுக்கு போற அலுவல் கிடக்கு அம்மாட்ட சொல்லி விடு." சைக்கிளை எடுத்துக்கொண்டு தெருவில் இறங்கினேன். ஹெலியின் இரைச்சல் இன்னமும் தேய்வாக கேட்டுக் கொண்டிருந்தது. நான் தெய்வேந்திரன் வீட்டுக்குப் போய் விஷயம் சொல்லி கடைத்திறப்பைக் கொடுக்க நிர்மலாதான் கேட்டாள்.
"காலமை நியூஸ் கேட்டனிங்களே அண்ணை?"
"இல்லையே. ஏன்?"
"பரந்தன் மெயின் ரோட்டிலயும் ஒராங்கட்டை றோட்டுக் கரையிலயும் இருக்கிற சனங்களை எழும்பிப் போய் உட்பக்கமாய் இருக்கச் சொல்லி நியூசில சொன்னது."
எனக்கு 'திக் கென்றது அக்கா தம்பி குடும்பங்கள் நினைவில் வந்து நின்றன.
"ஏனாம்?" பதட்டத்துடன் கேட்டேன்.

தாமரைச் 7சன்வி
"ஏனோ தெரியேலை ஏதும் பிரச்சினை வரலாம். ஆனையிறவில கொஞ்சநாளாய் ஆமியை கொண்டுவந்து குவிக்கிறாங்கள் எண்டுதானே கதை அடிபடுகுது. அந்தப்பக்கமாய் ரெண்டு நாளாய் ஒரே ஹெலிச் சத்தமும் கேட்டுக் கொண்டிருக்குது. பயமாக்கிடக்கு, தங்கச்சியவையும் ஒராங்கட்டையில இருக்குதுகள்," என்று தெய்வேந்திரன் கவலையுடன் சொன்னான். நிர்மலா ஒரு வினாடி முகம் மாறி,
"இனி அவையஞம் இங்கதான் வரப் போகினமாக்கும்" என்றாள் சிறிது எரிச்சலுடன்.
"அதுகள் இங்க வராமல் எங்க போறது? அண்ணை எண்டு எங்களிட்டத்தானே வருங்கள்."
தெய்வேந்திரனின் குரலில் சிறிய கோபம் இருந்தது.
"ஏன் நாங்கள் இங்க இல்லையெண்டால் ரோட்டிலயே நிற்பினம். அதுகளோட பெரிய கரைச்சல், சின்னன்கள் வந்து வீட்டுச் சுவரெல்லாம் கீறிப்போடுங்கள். குரோட்டன்களையெல்லாம் நுள்ளிப் போடுங்கள். அவை ஆளுக்காள் நிண்டு கதைக்க நானே சமையல், எனக்கு உதுகளைப் பார்த்து எடுக்க முதுகு முறிஞ்சு போடும். சும்மா சின்னப் பிரச்சினை எண்டாலும் இங்க ஓடி வந்திடுங்கள்."
தெய்வேந்திரன் கோபத்துடன் நிர்மலாவைப் பார்க்க அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளே போனாள். நிர்மலாவின் செய்கை என் மனதையும் நெருடச் செய்தது. நிர்மலாவிடம் இது வரை நான் காணாத இன்னொரு முகம் இது. நின்று யோசிக்க நேரம் இல்லை. என்னவோ நடக்கத்தான் போகிறது. ஏன் எழும்பச் சொன்னவங்களோ தெரியேலை. மனம் கலவரப்பட்டது.
"நீ நிலமையைப் பார்த்துப் போய் கடையைத் திற நான் கொஞ்சம் பொறுத்து வாறன். அக்காவை தம்பியவை என்ன செய்யுதுகளோ தெரியேலை. அத்தானவையிலயும் சகோதரம், பிள்ளையஸ் எண்டு கன
(LJff.

Page 10
ബിu്7
நான் சைக்கிளை வேகமாய் மிதித்தேன். தலைக்கு மேலால் பொம்பர் சீறிப்பாய்ந்து கொண்டு ஆனையிறவுப் பக்கமாய் போனது. தூரத்தில் குண்டு வெடிக்கும் சத்தம் மெல்லிய அதிர்வுடன் கேட்டது.
கடவுளே. மனம் பதட்டப்பட்டது.
நான் வீட்டுக்கு வந்த போது வீட்டில் ஒரே ஆரவாரமாக இருந்தது. அத்தான், அக்கா, பிள்ளைகள், தம்பி, மனைவி, பிள்ளைகள், அத்தானின் சகோதரங்கள், பிள்ளைகள் என்று கூட்டம். எல்லோர் முகங்களிலும் பயமும், பதட்டமும். நான் வீட்டின் உள்ளே வந்து வேதா வைத் தேடினேன். பின்பக்கம் பெரிய பானையில் பாற்கஞ்சி கொதித்துக் கொண்டிருந்தது. வியர்வை வழிந்த முகத்தை சேலைத் தலைப்பால் ஒற்றிக் கொண்டே பின்னல் பையுடன் வேதா என்னிடம் ஓடி வந்தாள்.
"எல்லாருக்கும் காலமைக்கு பாற்கஞ்சி காய்ச்சிறன். மத்தி யானத்துக்கு ஏதும் வேணும். நீங்கள் உதில சேவயர் கடைச் சந்தியில ஒடிப்போய் ரெண்டு கிலோ மீனும், பைத்தங்காயும் வாங்கி வாங்கோ." அவள் மறுபடி பரபரவென்று குசினிக்கு ஒடிப்போனவள் நின்று திரும்பி;
"பொம்பர் பறக்குது. கவனமாய் பார்த்துப் போங்கோப்பா," என்று
சொல்லி விட்டுப்போனாள்.
இது இவளிடம் இயல்பாய் அமைந்திருக்கும் முகம். என் பார்வையிலிருந்து இது எப்படி தப்பியது.?
நான் லேசான மனத்துடன் சைக்கிளை எடுத்துக் கொண்
53 ġl புறப்பட்டேன்.
வீரகேசரி - 01.08.1993

შ742/7
5ண்ணுக்கெட்டிய தூரம் வரை பார்வையைச் செலுத்திய மனோன்மணிக்கு நெஞ்சுக்குள் 'திக் கென்றது. என்னமாய் இருந்த பிரதேசம், இப்போது ஆள் அரவமின்றி வெறிச்சோடிக் கிடந்தது. பளிச்சென்று பசுமையாய்க் கிடந்த நிலம். எல்லாம் காய்ந்து பற்றைகளும் முட்செடிகளுமாய் காடு பிடித்துக் கிடந்தது.
தொண்ணுறு யூன் சண்டைக்குப் பிறகு இங்கு இருக்க
முடியாமல் வீடு வாசலை விட்டுப்போன பிறகு இன்றுதான் அவள் இங்கு வந்திருக்கிறாள். இந்த மூன்றரை வருஷங்களாக எத்தனையோ இடங்களில் இருந்தாகிவிட்டது. திருவையாறு தோட்டப்பக்கத்தில் ஒரு பெருஷம் கனகபுரத்தில் ஆறு மாதம். குஞ்சுப் பரந்தனில் ஒரு வருஷம் என்று அலைந்து திரிந்து கடைசியாக ஐந்தாம் வாய்க்கால் ஒவசியர் சந்தியில் இப்போது ஒரு வருஷமாக இருக்கிறார்கள்.
இப்படி அலைந்து களைத்த பிறகுதான் சொந்த இடத்துக்கு மீண்டும் வந்து குடியிருக்கும் யோசனை வந்திருக்கிறது. கணேசன் தான் இந்த யோசனையை சமீப நாட்களாய் வலியுறுத்தி வந்தான்.
"நானும் சின்னத்துரை அண்ணையும் திரும்ப ஒரு கொட்டில் போட்டுக் கொண்டு ஊரில இருக்க போயிட்டம். நீங்களும் வாங் கோவன்," கணேசன் திரும்ப திரும்ப சொன்ன போது கோபாலனுக்கும் ஊரில போய் இருந்தால் என்ன என்று தோன்றியது.

Page 11
aaraivarafat?
"நாங்கள் எத்தினை நாளைக்கு ஆற்றயேன் வீடுகளில இருக்கிறது. எங்கட ஊருக்குப் போய் திரும்ப ஒரு வீடு கட்டிக்கொண்டு இருப்பம், கணேசனும் சின்னத்துரை அண்ணையும் போய் இருக்கினம் தானே? நாங்களும் போனால் எங்களைப் பாாத்து மற்ற ஆட்களும் வருவினம் தானே. என்ன சொல்லுறாய் மணி?" கோபாலன் கேட்டபோது அவளுக் குப் பயமாகத்தான் இருந்தது.
"அய்யோ அந்த இடம் ஆனையிறவுக்கு கிட்டவல்லே இருக்குது. முந்தி இருந்தம் சரி இனி இருக்க ஏலுமே? இருக்க ஏலாமல் தானே எழும்பி ஓடி வந்தனாங்கள்."
" ஆமி வெளிக்கிட்டு வாற நிலை இனி இருக்காது மணி"
"ஆமி வராட்டிலும் காம்புக்குள்ளயிருந்து ஷெல் அடிப்பாங்கள். பொம்பரில சுத்திக் குண்டு போடுவாங்கள். என்னெண்டு பிள்ளையளை யும் வைச்சுக் கொண்டு இருக்கிறது?"
"எங்கதான் ஷெல் அடிக்காமலோ குண்டு போடாமலோ விடுறாங்கள். நாங்கள் திருவையாறில ஒடிப்போய் இருந்தம். ஆனையிற விலயிருந்து எவ்வளவு தூரம். அங்கயும் குண்டு போட்டவங்கள் தானே?" என்று கணேசன் எவ்வளவோ சொன்னபிறகும் அவள் அரை மனதுடன் தான் சம்மதித்தாள்.
"முதல்ல எங்கட ஊர்ப்பக்கம் போய் நிலமையை பார்த்து வருவம், வா" அவனது பேச்சைக் கேட்டு அவனுடன் மனோன்மணியும் ஊருக்கு வந்திருந்தாள்.
அவள் நினைத்தது போலவே அந்தச் சுற்றுப்புறம் வரண்டு காய்ந்து போய் இருந்தது. அவர்களது வீடு இருந்த இடம் தெரிய வில்லை. ஆனையிறவு முகாமிலிருந்து இராணுவம் தொண்ணுாறில் இந்தப்பக்கம் நகர்ந்து வந்த போதே அவர்கள் வெளியேறி விட்டி ருந்தார்கள். இந்தச் சூழலில் மூன்று குழந்தைகளையும் வைத்துக் கொண்டு எப்படி வாழ்வது? எத்தனையோ வருஷங்களாக வாழ்ந்த பிரதேசம், அந்த இடம் கிடந்த கோலமும், மனதை மிரளச் செய்த அமைதியும் மறுபடி யோசிக்க வைத்தது.
10

partoaraf 67arsza?
"என்னப்பா இந்த இடத்தில என்னெண்டு வந்து இருக்கிறது?" பயத்துடன் கேட்டாள்.
"அங்கால சின்னத்துரை அண்ணையவை இருக்கினம்தானே?" கொஞ்சத் தூரத்தில் தெரிந்த குடிசையைக் காட்டினான்.
"இந்தப்பக்கம் பாலத்துக் கரையில கணேசனும் கொட்டில் போட்டு இருக்கிறான். கூப்பிட்டால் கேட்கிற தூரம் தானே. நாங்கள் இப்ப எங்கட காணியைத் திருத்துவம் மணி மண் சுவர் வைச்சு ஒரு சின்ன வீடு கட்டிக்கொண்டு வந்து இருப்பம். கிணறு இருக்கு வீட்டுப்புட்டியில தோட்டம் செய்யலாம்." சுற்றுப்புறத்தை கவலையுடன் பார்த்துக் கொண்டே அரை மனதுடன் தலையாட்டினாள்.
அடுத்து வந்த நாட்களில் குழந்தைகளைப் பக்கத்து வீட்டு ஆச்சி யுடன் விட்டுவிட்டு இருவருமாய் தங்கள் காணிக்கு வந்து பற்றைகளை வெட்டி துப்பரவு செய்தார்கள். சின்னத்துரையும் கோபாலனும் அவர்களோடு கூடவே நின்று உதவி செய்தார்கள். மண்ணைக் குழைத்து கல் அரியும் வேலை ஒரு புறம் நடந்தது. சொந்தக்காணியில் ஒரு குடிசை அமைத்து இருக்க வேண்டியது அவசியம் என்பதால் இதுவரை தன்னிடம் இருந்த ஒரே ஒரு நகையான ஒன்றரைப்பவுண் சங்கிலியை மனோன்மணி விற்பதற்காக கணேசனிடம் கொடுத்து விட்டாள்.
சங்கிலியை விற்பதற்கு தயங்கியவனிடம்;
"எங்கட வீடு எண்டு இருந்தால் தானப்பா நாங்கள் நிம்மதியாக இருக்கலாம். இருக்க வீடில்லாமல் உந்தச் சங்கிலியை கழுத்தில போடுறதில என்ன இருக்கு?" என்று ஆறுதல் கூறினாள்.
"ஏதோ உழைச்சுப்பட்டு முன்னேறி ஒரு நல்ல காலம் வந்தால் பிறகு சங்கிலி செய்யலாம் தானே" என்று சமாதானம் சொல்லி சங்கிலியை விற்றதில் வீட்டு வேலையை விரைவாகச் செய்ய முடிந்தது, வீடு போடும் வேலைகளில் உதவுவதற்காக அவளும் ஒவ்வொரு நாளும் கணேசனு டன் போய் வருவாள். சுவர் எழுப்பப்பட்டு மேற்கூரையும் போட்டாகி
11

Page 12
ബ്രിu്?
விட்டது. நிலத்துக்கு மண் அடித்து இறுக்கப்பட்டது. வீட்டு க்கு கிழக்குப் பக்கம் உள்ள மேட்டுப்பகுதி தோட்டம் செய்வதற்காக கொத்தப்பட்டுக் கொண்டிருந்தது. சின்னத்துரையின் காணிக்குள் பயிற்றங்கொடியும், தக்காளியும், கீரையும் செழிப்பாய் நிற்பதைப் பார்க்கும் போது தோட்டம் செய்வதில் நம்பிக்கை ஏற்பட்டது.
"எந்தக் காய்கறியும் விற்கிறதெண்டால் பரந்தன் பக்கம்தான் கொண்டு போகவேனும். கிட்டடியில அவ்வளவு சனம் இல்லை. முந்தி ஆக மோசம். இப்ப ஓரளவு திரும்ப வந்து இருக்கத் தொடங்கி யிட்டுதுகள்."
"ஒமண்ணை மண்ணை எத்தினை நாளைக்குத்தான் தன்ர வீடு வாசல் காணிவிட்டு அலையிறது சொல்லுங்கோ. ஒடி ஒடி களைச்சுப் போயிட்டம்."
"அதுதானேடாப்பா, ஆனாலும் ஏதோ திரும்ப வந்து இருக்கிறம். அவங்கள் அடிக்கிற ஷெல்லுக்குத்தான் பயம், எந்த நேரம் அடிப்பாங் கள் எண்டும் தெரியாது. எங்க வந்து விழும் எண்டும் தெரியாது." கணேசனுக்கும் கவலையினால் மனம் கனத்தது. சின்னத்துரை அண்ணை வயது போன மனைவியுடன் இருப்பவர் வளர்ந்த பிள்ளை களும் கூட கோபாலன் தனி ஆள். இது தான் குழந்தைகளுடன் வந்து குடியிருப்பது நல்லதுதானா என்று மனம் குழம்பியது.
மனோன்மணி இன்னமும் பயப்படக்கூடும் என்பதை உத் தேசித்து அவன் தன் மனக்குழப்பத்தை அவளிடம் காட்டிக் கொள்ள வில்லை. மனதில் பயம் இருந்தாலும் திரும்பவும் ஊருக்கு வருவது தவிர வேறு வழி ஏதும் இருப்பதாயும் அவனுக்குத் தெரியவில்லை. இன்னும் நான்கு நாட்களில் பால் காய்ச்சிக் கொண்டு வீட்டுக்குப் போக இருப்பதால் கணேசன் மிகுதி வீட்டு வேலைகளைக் கவனிக்க காலையிலேயே போய் விட்டிருந்தான். குழந்தைக்கு மெல்லிய காய்ச்சல் இருந்ததால் மனோன்மணி குழந்தைகளுடன் நின்று விட்டாள். இந்த வீட்டு வேலைகள் தொடங்கியதிலிருந்து மனம் ஒரேயடியாக யோசனை யில் ஆழ்ந்து விட்டிருந்தது.
12

தாமரைச் சைன்வி
குழப்பமும் பயமும் கலவையாய் மனதுக்குள் நிறைந்து போயிருந்தது. திரும்பவும் ஊருக்குள் போய் இருப்பதில் ஏற்படக்கூடிய கஷடங்கள் வரிசையாய் நினைவுக்கு வந்தன. குழந்தைகளுக்கு காய்ச்சல் என்றால் கூட பரந்தன் வரை வரவேண்டும். மூத்தவனை அடுத்த வருஷம் பாடசாலையில் சேர்க்கவேண்டும். அதற்கும் பரந்தன் பாடசாலைக்குத்தான் வரவேண்டும். யோசிக்கும் போது தலைக்குள் பாரம் ஏறியது போல் இருந்தது. ஆனாலும் ஒரு வகையில் சொந்தவீட்டில் இருக்கிறோம் என்ற நிம்மதி இருக்கும். எல்லா வசதியும் ஒரு சேரக் கிடைத்து விடாது. கிடைக்கின்ற வசதிகளோடு சமாளிக்க வேண்டியதுதான்.
பத்து மணி இருக்கும். பங்குனி மாத வெய்யில் சுள்ளென்று எரித்தது. காற்றில் புழுதியும் வெம்மையும் பரவியிருந்தது. திடீரென்று அடுத்தடுத்து இரண்டு ஷெல் வந்து விழுந்து வெடிக்கும் சத்தம் தூரத்தில் கேட்டது. மனோன்மணி முற்றத்தில் வந்து நின்று வடக்குப் பக்கமாய்ப் பார்த்தாள்.
தூரத்தில் ஹெலி ஒன்று இரைச்சலுடன் சுற்றுவது வானில் தெரிந்தது. இவ்வளவு தூரத்தில் இருக்கும் போதே பயமாக இருக்கிறது. எப்படித்தான் போய் வீட்டில் இருக்கப்போகிறோமோ என்று கவலை யுடன் நினைத்துக் கொண்டாள். திரும்ப வந்து அழுகின்ற குழந்தையை ஏணையில் போட்டு மெல்ல ஆட்டி நித்திரையாக்கினாள். குழந்தை நித்திரையானதும் அடுப்பை மூட்டி உலையை ஏற்றி வைத்தாள். அப்போது வெளியே கோபாலனின் குரல் கேட்டது.
"மணி அக்கா. மணி அக்கா."
மனோன்மணி வெளியே வந்தாள். கோபாலனின் முகத்தில் பதட்டம் இருந்தது.
"என்ன கோபால்."
"அக்கா. பயப்படாதேங்கோ. ஆனையிறவு காம்பிலயிருந்து அவங்கள் அடிச்ச ஷெல் வந்து உங்கட காணிக்குள்ள வீட்டுக்கு மேல விழுந்திட்டுது"
13

Page 13
ഖണ്ണിu്?
"என்ர கடவுளே. அப்ப அவர்.
"வீடு அப்பிடியே இடிஞ்சு போயிட்டுது. கணேசண்ணைக்குக் கையில சின்னக்காயம். சின்னத்துரை அண்ணை ஆஸ்பத்திரிக்கு ஏத்திக் கொண்டு போறார், வாங்கோ அக்கா போவம்."
"உண்மையைச் சொல்லு கோபால். காயம் கடுமையே. அழுதபடியே கேட்டாள். மனம் பதைபதைத்தது.
"சின்னக்காயம்தான் அக்கா பயப்பிடாதேங்கோ."
"அய்யோ. என்ன கஷ்டகாலம் நெஞ்செல்லாம் பதறுதடா. அவள் அழுது கொண்டே ஓடிப்போய் பக்கத்து வீட்டு ஆச்சியை கூட்டி வந்து பிள்ளைகளைப் பார்க்கச் சொல்லி விட்டு கோபாலனோடு சைக்கிளில் ஏறினாள்.
கண்களில் முட்டிக்கொண்டு கண்ணீர் வழிந்தது. கடவுளே கடவுளே என்று வழியெல்லாம் கும்பிட்டுக் கொண்டே போனாள். அதற்குப் பிறகு நடந்தவை எல்லாம் ஒரு அவசர வேகத்தில் நடந்த சம்பவங்களாக அவளுக்குத் தோன்றியது. கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் ரத்தம் தோய்ந்த கைக்கட்டுடன் அரை மயக்கத்தில் கிடந்த கணேசனை அம்புலன்ஸில் ஏற்றி கிளாலிப்பாதையால் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனபோது மனோன்மணியும் கைக் குழந்தையுடன் கூடவே போனாள். சத்திர சிகிச்சை மூலம் ஷெல் துண்டுகள் துளைத்த இடது கையை தோளுடன் துண்டித்து கட்டுப்போட்டார்கள். மறுநாள் மயக்கம் தெளித்து கணேசன் எழுந்து அமர்ந்த வினாடியில் மனோன்மணி தாங்கிக் கொள்ள முடியாமல் அழத் தொடங்கினாள்.
"அழாதை மணி" கணேசன் மெலிந்த குரலில் சொன்னான். அவளால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. தன் வேத னையை பொறுத்துக்கொண்டு கலங்கிப் போயிருந்த கண்களால் அவளைப் பார்த்தான் கோபாலன்.
14

தாமரைச்ாசன்வி
"வீடு இடிஞ்சு போயிட்டுது. என்ர கை போயிட்டுது எண்டு நினைச்சு அழுறாய் மணி, ஆனா நான் உயிரோடதானே இருக்கிறன். அது எவ்வளவு பெரிய விஷயம்."
மனோன்மணி டக்கென்று நிமிர்ந்தாள். நெஞ்சின் ஆழம் வரை அந்த வார்த்தைகள் போய் விழுந்தன. அவனது வலது கையை ஆதரவோடு பிடித்துக்கொண்டு நீர் நிறைந்த கண்களுடன் கனிவோடு, அவனைப் பார்த்தாள்.
மல்லிகை - மார்ச் 1994
5

Page 14
622g2/
ஜேர்மனி
98.86
அன்பின் குணாவுக்கு !
உன் அன்பான கடிதம் கிடைத்தது. நான் ஜேர்மனி வந்து ஒரு
வருடமாகிய பிறகு இப்போதுதான் ஒரு வேலை கிடைத்திருக்கிறது. என்னதான் இங்கு வசதிகள் அதிகம் என்றாலும் சொந்த ஊரில் இருக்கும் நிம்மதியும் சந்தோஷமும் இங்கே வருவதில்லை. புன்னாலைக் கட்டு வனின் செம்மண் என்னை ஈர்த்துக் கொண்டுதான் இருக்கிறது.
அந்தப் பனைவெளி வெட்டையையும் மதகுப் பாலத்தையும் கிளித்தட்டு மறிக்கும் மேற்குக் கரைப்புட்டியையும் பிள்ளையார் கோயிலையும் என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. அந்த சந்தோஷமான நாட்களை நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கிறேன். பெடியள் ஆமியை முகாமுக்குள்ள அடக்கி சுற்றி வளைத்திருப்பதாக எழுதியிருந்தாய். மதி இந்தச் சண்டையில் இறந்து போனது பற்றிக் கவலையாக இருக்கிறது. சுதர்சனும் தேவாவும் பெடியளுடன் போய் விட்டதாக எழுதியிருந்தாய். இளங்கோ லண்டன் வந்திருப்பதாய் ஜெயம் போனில் சொன்னான். எங்கள் நண்பர்கள் எல்லோரும் இப்படி திக்குத்திக்காய் போய் விட்டார்கள். மறுபடி எப்போது எல்லோரையும் பார்க்க முடியுமோ? மதியின் குடும்பத்தவரை நானும் விசாரித்ததாய் சொல்லு. உன் அண்ணா ஞானமும் தம்பி விஜயனும் சுகமாய் இருக்கிறார்களா? கெளசி இந்த வருடம் ஓ.எல். எடுப்பாள் என்று
16

தாமரைச் சைன்வி
நினைக்கிறேன். இப்போது தோட்டம் எதுவும் செய்வதில்லையா? வேறு விசேடமில்லை. உவ்விடத்து புதினங்களை அடிக்கடி எழுது.
அன்புடன் உன் நந்தகுமார்.
米米米 தெருவைப் பார்த்த நீள விறாந்தை கதிரைகளில் எதிர் எதிராக அப்பாவும் தரகரும் அமர்ந்திருந்தார்கள் அப்பாவின் கதிரைக்குப் பின்னால் அம்மா நின்று தரகரிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
"அண்ணை தம்பியைப் பற்றி எல்லா விபரமும் சொல்லிப் போட் டன். என்ர சொல்லு தட்டமாட்டான். அவனுக்கு நல்ல இடத்தில பொம்பிளை பார்க்கவேணும். வெளிநாட்டுக்கு தம்பி கூட்டிப்போற பிள்ளை நல்ல வடிவாயும் இருக்கவேணும்."
"உரும்பிராயில ஒரு இடம் இருக்கு. கதைச்சு வைச்சிருக்கிறன். அதைப் பாப்பமே? நீங்கள் என்ன எதிர்பார்க்கிறியள் சொல்லுங்கோ"
"நாங்கள் இந்தப் பிரச்சனையளால சரியாய் கஷ்டப்பட்டு ஊர் விட்டு ஊர் வந்திருக்கிறம். பெடியனுக்கு சீதனம் வாங்கிறபோது வீடும் வேணும்."
"ஏன் பிள்ளை வீடு, வெளிநாட்டில உள்ளதுகள் இங்க இருக்க வரப்போகுதுகளே?"
"அதுகள் வருகுதுகளோ இல்லையோ சொத்து எண்டு வேணும் தானே?"
அதுவரை பேசாமல் இருந்த அப்பா இப்போது வாய் திறந்து மெதுவாய் சொன்னார்.
"ஏனப்பா ஆட்கள் இல்லாமல் வீடு வாங்கி."
"நீங்கள் சும்மா இருங்கோ. உங்களுக்கு ஒண்டும் தெரியாது வீடு கட்டாயமாய் தரவேணும்."
17

Page 15
வன்னியாச்சி
"சரி வேற." தரகர் அம்மாவைப் பார்த்துக் கேட்டார்
"நகை நட்டு வடிவாய் தரவேணும். வெளிநாட்டில நடக்கிற கலியாணங்களில பொம்பிளையஸ் எல்லாம் நகை நட்டு நிறையப் போட்டிருப்பினம். வீடியோ கசற்றில பார்க்கிறனாங்கள் தானே? காசு
கனக்க தராட்டியும் பரவாயில்லை நகையள் நிறையப் போடவேணும்.'
"சரி அவையிட்ட சொல்லுறன்."
"அவையிட்ட வடிவாய் சொல்லிப்போடுங்கோ. இப்ப அட்டியலை விட நெக்லஸ்தான் பஷன், நாலு பவுணுக்கு குறையாமல் நெக்லஸ் செய்யவேணும். நாலைஞ்சு சோடி, காப்பு, தோடு, சிமிக்கி, கைக்செயின், மோதிரம் எல்லாம் ஒரு முப்பது பவுணுக்கு குறையாமல் இருக்க வேணும்."
"அதெல்லாம் வடிவாய் அவை செய்து போடுவினம், வேற என்ன"
"தம்பி இங்க வந்து கலியாணம் செய்து கூட்டிப்போவான்"
"தம்பி தன்னோட ஜேர்மனிக்கு பொம்பிளையை கூட்டிப் போகலாமோ எண்டு அவை கேட்கச் சொன்னவை. அவை கொஞ்சம் விஷயம் தெரிஞ்ச ஆட்கள் அதுதான்."
"அதுதான் சொல்லுறனே தம்பி கூட்டிப் போவான் எண்டு பொம்பிளை போற செலவு எல்லாம் எங்கட பொறுப்பு. ஆனா கலியாண வீட்ட வடிவாய் செய்திட வேணும்."
"அதெல்லாம் அவை செய்வினம், நாலு பெடியளுக்கு ஒரு தங்கச்சி, அவை நல்ல வசதியான ஆட்கள் அதைப் பற்றிப் பிரச்சனை இல்லை"
"தம்பியும் எண்பத்தைஞ்சில ஜேர்மணிக்கு போயிட்டான். நல்ல வேலை செய்யிறான். அவைக்கும் இப்பிடி ஒரு இடம் லேசில கிடைக்காது." அம்மாவின் குரலில் கர்வமும் மிடுக்கும் கலந்து ஒலித்தது.
18

தாமரைச் எசன்வி
"அதெண்டா சரிதான்." தரகரும் ஒத்துக்கொண்டு சொன்னார். அம்மாவின் முகம் மலர்ச்சியானது. தரகர் விடைபெற்றுக் கொண்டு எழுந்ததும் அம்மா அப்பாவுக்கு கண் ஜாடை காட்டினாள். அப்பா உள்ளே எழுந்து போய் நூறு ரூபாய் கொண்டு வந்து தரகரிடம் கொடுத்தார்.
"புதிசாய் அரசாங்கம் மாறியிருக்கு பாதை திறக்கப் போறன் எண்டு சொல்லுறா சீமாட்டி"
"ஓம் அண்ணை பாதை திறந்திட்டால் எவ்வளவு நல்லது. தம்பியும் வாற நேரம்."
"தம்பி எந்த மட்டில வரும்"
"வாற மாதம் வாறான். எல்லாம் பேசி சரி எண்டால் தம்பி வந்த உடன் கலியாணத்துக்கு நாளை வச்சிடலாம்."
"ஒமோம் அப்ப சரி வரட்டே?" தரகர் முற்றம் கடந்து தெருவுக்கு போவதை அப்பா அமைதியாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஜேர்மனி 1. 2. 88
米水求
அன்பின் குணாவுக்கு !
உன் நீண்ட கடிதம் கிடைத்தது. அதை வாசித்ததனால் ஏற்பட்ட மனப்பாரம் இரண்டு நாளாகியும் இன்னும் தீரவில்லை. என்ன நினைத்தோம், ஆனால் என்ன வெல்லாம் நடந்து விட்டது. எம்மை காப்பாற்ற வந்தவர்கள் என்றுதான் நினைத்தோமே தவிர இப்படி எங்களை காலில் போட்டு மிதிப்பார்கள் என்று கற்பனையும் செய்து Iர்க்கவில்லை. ஞானம் அண்ணையை இந்திய ஆமி பிடித்துக்கொண்டு போய் விட்டார்கள் என்று எழுதியிருந்தாய். இப்போது விட்டு விட்டார் காா? உவ்விடம் எவ்வளவு கொடுமையள், அழிவுகள் நடந்து கொண்டி ருக்கு அதை நினைக்க மனம் தாங்க ஏலாமல் இருக்கு. எங்கள் ஊர்
19

Page 16
வன்னியாச்சி
இப்படி அழிந்து போனதை கற்பனை செய்தும் பார்க்க முடியா திருக்கிறது. இலங்கை ஆமி மாறி இந்தியா ஆமி எண்டு எல்லாராலும் எங்களுக்கு அழிவுதான்.
வெறிச்சிட்டுப் போன மைதானத்தையும் எங்கள் கூட்டம் இருக் காத மதகுப் பாலத்தையும் புழுதி பறக்க சைக்கிள் ஓடும் செம்மண் தெருக்களின் அமைதியையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியாமல் இருக்கின்றது. சுதர்சனும் தேவாவும் இப்போது எங்கே இருக்கிறார்கள். அவர்களைச் சந்திக்க முடிந்தால் அவர்களுக்காக நான் கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லு. இங்கே என் அறை நண்பர்களுடன் உவ்விடத்து விஷயங்களையே கதைத்துக் கொண்டி ருக்கிறேன். இங்கே உடனுக்குடன் எல்லாச் செய்திகளும் வருகிறது. கேட்கும் போது மனம் வெகுவாய் கலங்கிப் போகிறது. எங்கள் வீட்டார் இப்போது மானிப்பாய்க்குப் போய் பெரியப்பா வீட்டில் இருக்கிறார்களாம். நீ எழுதியது போல் கொக்குவில் விலாசத்துக்கு இக்கடிதத்தை அனுப்புகிறேன். விஜயனும் கெளசியும் எந்த ஸ்கூலில் படிக்கிறார்கள்? உனக்கும் விரைவில் ஏதாவது வேலை கிடைக்கும் குணா கவலைப் படாதே.
அன்புடன் உன் நந்தகுமார்.
冰米来源
அன்று வெள்ளிக்கிழமை
அம்மாவும் அப்பாவும் பெரியக்கா அத்தானும் உரும்பிராய்க்கு பெண் பார்க்க போனார்கள். நல்ல வசதியான வீடு, ஹோலுக்குள் மெத்தென்ற குஷன் கதிரைகளில் அமர்ந்து கொண்டார்கள். பெண்ணின் தாய் தந்தையும் எதிரே அமர்ந்து கொண்டார்கள். பெண் வந்து அவர்களுக்கு தேநீர் கொடுத்து விட்டு பக்கத்து இருக்கையில் அமர்ந்தாள். பெண்ணைப் பார்த்ததும் பெரியக்காவுக்கு திக் கென்றது. தம்பியின் அழகுக்கு இந்தப் பெண் சிறிதும் பொருத்தமாய் இருக்க மாட்டாள் என்றே தோன்றியது. அந்தப் பெண்ணின் கண்களிலும் உதட்டு
ምኡ£እ

தாமரைச்சென்வி
விளிம்பிலும் ஒரு அலட்சியம் நிரந்தரமாய் இருப்பதை அவள் உணர்ந்து கொண்டாள். இந்த அம்மா இதை ஏன் கவனிக்காமல் போனாள் என்று கவலையாக இருந்தது. ஓரக் கண்ணால் அம்மாவைக் கவனித்தாள் அம்மாவின் பார்வை வீட்டின் உட்புறங்களிலும் அங்கிருந்த பொருட் களிலும் பதிந்திருந்தது. மின்சாரம் இல்லாத இந்த நேரத்தில் கூட முன்னைய வசதிக்கு கொஞ்சமும் குறையாத மாதிரியான தோற்றத்தில் இருந்தது. சுவரில் மட்டும் இரண்டு இடத்தில் நீளமான வெடிப்பு இருந்தது.
"பக்கத்து காணிக்க ரெண்டு தரம் பொம்பர் குண்டு போட்டது. அந்த அதிர்ச்சியில வீடு வெடிச்சுப் போட்டுது. சீமெந்து தடையால இங்க கிடைக்குதில்லை. கிடைச்சா பூசி சரிப்படுத்திப் போடலாம்" அம்மாவின் பார்வையை உணர்ந்து அவர்களாகவே சொன்னார்கள்.
"இந்த வீடுதான் பிள்ளைக்கு சீதனமாய் தரப்போறம்." அம்மாவின் கண்கள் ஆர்வத்துடன் மலர்ந்தது. அம்மாவின் மலர்ச்சி பெரியக்காவின் மனதை நெருடியது. இந்த வீடு வசதியைப் பார்த்த உடனும் அம்மா பொம்பிளை வடிவு குறைவு என்பதைக் கூட பொருட்படுத்த வில்லை.
"காசு விஷயம், எவ்வளவு எதிர்பார்க்கிறீங்கள்" பெரியக்காவும் அத்தானும் மெளனமாய் இருக்க அப்பா அம்மா வைப் பார்க்க அம்மா தொண்டையை செருமிக் கொண்டு சொன்னாள். "பொம்பிளையை ஜேர்மனிக்கு கூட்டிப்போற செலவு எங்கட பொறுப்பு ஒரு நாலு லட்சம் இனாமாய் தந்தால் போதும்."
அம்மா இப்படி திடமாய் கேட்டதும் பெரியக்காவுக்கு பயம் வந்து விட்டது. அவள் அத்தானைப் பார்க்க அவர் தனக்கு இதில் சம்பந்த மில்லாதது போல எங்கெயோ பார்த்துக் கொண்டிருந்தார்.
"சரி தாறம்"
21.

Page 17
வன்னியாசிசி
அவர்கள் சட்டென்று ஒத்துக் கொண்டது இவர்களுக்கு மிகவும் ஆச்சரியத்தைத் தந்தது. இன்னும் கொஞ்சம் கூடக்கேட்டிருந்தால் கூட அவர்கள் ஒத்துக்கொண்டிருக்கக் கூடும். அம்மா தான் அவசரப்பட்டு நாலு லட்சம் கேட்டு விட்ட மடத்தனத்தை நினைத்து மனதுக்குள் நொந்து கொண்டாள்.
"எங்கட தம்பி ஒரு கெட்ட பழக்கம் இல்லாதவன் வெளிநாட்டில
இருந்தாலும் குடிவகை ஒண்டும் இல்லை. அவனுக்கு நீங்கள் நாலு லட்சமில்லை எத்தினை லட்சம் எண்டாலும் தரலாம். அது உங்கட விருப்பம். நீங்கள் குடுக்கிற தெல்லாம் உங்கட பிள்ளைக்குத் தானே" அம்மா பேசும் சாதுரியத்தை அப்பா உள்ளூர வியந்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்.
"உங்களுக்கு எல்லாம் சரி எண்டால் தம்பி வந்த உடனும் நாள் வைக்கலாம். என்ன."
அம்மாவின் வார்த்தைக்கு அவர்கள் சந்தோஷமாகத் தலை யாட்டினார்கள்.
ஜேர்மனி 1.O. 12. 90
米冰米
அன்பின் குணாவுக்கு !
உனது கடிதம் எனக்கு மிகவும் அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. இவ்வளவு தூரம் நீ மனம் உடைந்து போய் விடுவாய் என்று நான் நினைக்கவே இல்லை. ஞானம் அண்ணையை பூசாவிலிருந்து இன்னமும் விடவில்லை என்ற கவலையே ஆறாமல் இருக்கும் போது தம்பி விஜயன் விமானக்குண்டு வீச்சுக்கு பலியான விஷயம் வாசித்து தாங்க முடியாத கவலையாக இருக்கிறது. இப்போது மானிப்பாயில் எங்கள் வீட்டார் இருக்கும் இடத்துக்கு பக்கத்து தெருவில் வீடு எடுத்து இருப்பதாக எழுதியிருந்தாய். அடிமேல் அடியாக உங்கள் குடும்பத்துக்கு

தாமரைச்சென்வி
இத்தனை இழப்பு வரும் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை. குணா! உன் மனதைத் தேற்றிக்கொள். மறுபடி இப்படி ஒரு போர் தொடங்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை, வெளிநாடு வர உனக்கு விருப்பமிருந்தால் நான் உதவி செய்கிறேன். என்றாலும் அதையும் நீ கேட்கமாட்டாய். உனக்கு என்ன உதவி வேண்டுமானலும் செய்கிறேன். இத்தனை கொடுமைகளை அனுபவிக்க நாங்கள் என்ன தவறு செய்தோம் என்றே எனக்குப் புரியவில்லை. உன் அம்மா அப்பாவுக்கும் கெளசிக்கும் நீ தான் ஆறுதல் சொல்லவேணும். உடன் பதில் போடு. எங்கள் நண்பர்கள் பற்றியும் எழுது.
அன்புடன்
உன் நந்தகுமார். 米米米
அம்மாவை எதிர்த்து வீட்டில் யாரும் கதைக்க முடியாது கதைத்து வெல்லமுடியாது. எல்லோரும் தமது அபிப்பிராயத்தைச் சொன்னாலும் கடைசித்தீர்மானம் அம்மாவுடையதாகத்தான் இருக்கும்.
" கொஞ்சம் பெரிய இடமாய் இருக்குது. எங்களுக்கு ஒத்து வருமா" என்று அம்மா முணு முணுத்த போது "நெடுகஷம் நாங்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க ஏலுமே? தம்பி எங்களுக்காக கஷ்டப் பட்டு உழைக்குது. வசதியான இடத்தில செய்து குடுத்தால்தானே அவனும் நல்லாய் இருப்பான், நாங்களும் நல்லாய் இருக்கலாம்." என்று அம்மா சொல்லி விட்டாள். அதற்கு பிறகு அப்பா எதுவும் பேசவில்லை. பெரியக்காவும் தனது கருத்தை லேசாக சொல்லிப் பாாத்தாள்.
"அந்தப்பிள்ளையைப் பார்க்க கொஞ்சம் வாய்க்காரப் பிள்ளை போலக் கிடக்கு. அண்டைக்கு என்ன அலட்சியமாய் இருந்தது. தம்பி பாவம் வாய் இல்லாதது. இது அவனை ஆட்டிப்படைக்கப் போகுது."
"வசதியாய் இருந்தால் கொஞ்சம் அப்பிடி இப்படித்தான் இருக்கும். அதுகள் என்ன இங்க இருக்கப்போகுதுகளே? வெளிநாட்டிலதானே

Page 18
வன்னியாச்சி
இருக்கப் போகுதுகள். அதுக்கு இந்தப்பிள்ளை இப்பிடித்தான் வல்லமையாய் ஸ்ரைலாய் இருக்கவேணும். தவிரவும் அந்தப்பிள்ளை ஐசிங் கிளாஸ் போகுதாம். நல்லா தைக்குமாம். ஹெயாஸ்ரைல், குக்கறி கிளாசுக்கும் போறதாம் இதெல்லாம் தெரிஞ்ச பிள்ளைதான் வெளி நாட்டில சமாளிக்கும்" அம்மா ஒரேயடியாய் சொல்லி விட்டாள். பெரியக்காவுக்கு அந்தப் பெண் தன்னுடன் இயல்பாக கதைக்க வில்லையே என்று மனதுக்குள் நெருடிக் கொண்டிருந்தது. தம்பி தனக்கு செய்யும் உதவிகளை இந்தப் பெண் வந்த நிறுத்திவிடக் கூடாதே என்றும் கவலையாய் இருந்தது.
"தம்பிக்கு ஒரு கடிதம் எழுதி விடு பிள்ளை. இங்கை எல்லாம் பார்த்து ஒழுங்கு செய்து வைச்சிருக்கு எண்டும் வந்தவுடன் நாளை வைக்கலாம் எண்டும் எழுதி விடு."
"பொம்பிளையின்ர படம் வாங்கி அனுப்பியிருக்கலாம்.
"அதெல்லாம் வேண்டாம். வாறமாதம் வாறான் தானே? வந்து பார்க்கட்டும்" பெரியக்கா கடிதம் எழுத அமர்ந்தாள்.
冰米米
ஜேர்மனி 18.08.92
அன்பின் குணாவுக்கு !
இந்தக் கடிதம் எழுதும்போது என் மனம் படும்பாட்டை என்னால் வார்த்தைகளில் வடிக்க முடியாது. இக்கடிதம் எழுதுகின்ற இந்த நேரம் நீ எந்த பாசறையில் இருக்கிறாயோ. அல்லது எந்த எல்லையில் கண் விழித்து நிற்கிறாயோ? எவ்வளவு தூரம் மனம் நொந்து போயிருந்தால் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பாய் என்று புரிந்து கொள்ள முடிகிறது. உன் அப்பா அம்மா சகோதரங்களை நீ எவ்வளவு தூரம் நேசித்தாய் என்று எனக்குத் தெரியும், அதை விட அதிகமாய் எங்கட மண்ணையும் நேசித்திருக்கிறாய் என்பது இப்போது புரிகிறது. என்னுடைய இந்தக் கடிதம் உன் பார்வைக்கு கிடைக்குமோ தெரியவில்லை ஆனால் உன்
24

W தாமரைச் சைன்வி
கைகளுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். என் இனிய குணா! நான் இங்கு பணம் தேடுவதும் வசதியாய் இருப்பதுவும் அர்த்தமில்லாத செய்கையாக உணர்கிறேன். எனக்குச் சொந்தமில்லாத ஒரு மண்ணில் வாழ்கின்ற ஒரு அகதி வாழ்க்கைதான் என்னுடையது. இதில் சந்தோஷப்படவோ பெருமைப்படவோ இயலாது. பணம் தேடுவது என்ற ஒன்றில்தான் எங்கள் ஏக்கங்களையும் வேதனைகளை யும் பொறுத்துக்கொண்டு வாழ்கிறோம். எல்லாவற்றையும் அறுத்துக் கொண்டு ஓடி வரவேண்டும் போல் இருக்கிறது. ஆனால் என்னால் முடியவில்லை என்பதை வெட்கத்தோடு ஒப்புக்கொள்கிறேன். ஆனா லும் இரண்டு வருடத்தின் பின் இலங்கைக்கு கட்டாயம் வருவேன். அப்பொழுது நீ எங்கே இருந்தாலும் உன்னை நிச்சயம் சந்திப்பேன். அப்படி ஒரு சந்திப்பு நிகழவேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டிருக்கின்றேன்.
அன்புடன்
உன் நந்தகுமார்.
米米米
1994 ஆண்டு ஐப்பசி மாத நடுப்பகுதியில் நந்தகுமார் யாழ்ப்பாணம் வந்தான். கொழும்பிலிருந்து ஒரு நாள் முழுவதும் பயணம் செய்து கிளிநொச்சியை அடைந்து கிளாலிக் கடலில் இரவு முழுக்க படகில் பயணித்து மானிப்பாயில் உள்ள தங்கள் வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது காலை பத்து மணியாகியிருந்தது. அப்பா அம்மா அக்காமார் அத்தான்மார் குழந்தைகள் ஆரவாரமாய் அவனைச் சூழ்ந்து வரவேற்றாலும் அவன் அவ்வளவு தூரம் உற்சாகமாக இருக்கவில்லை. அன்று மாலை அவனது திருமணம் நிச்சயம் செய்த விஷயம் பற்றி அம்மா சந்தோஷமாய்ச் சொன்னாள். அவன் மெளனமாய் கேட்டுக் கொண்டிருந்தான். "நான் வந்த பிறகு அவைக்கு முடிவு சொல்லி யிருக்கலாமே. அதுக்குள்ள ஏன் முடிவு சொன்னனிங்கள்" சுள்ளென்று சொன்னான். அவனின் வார்த்தைகளில் அம்மா அடிபட்டவளாய் திகைத்துப்போய் அவனைப் பார்த்தாள். அவன் முகத்தில் இனம் புரியாத வேதனையும் கவலையும் இருந்தது எழுந்து உள்ளே போய் சேர்ட் போட்டுக்கொண்டு வந்தான்.
25

Page 19
avaraforary
"இப்ப எங்கே?" அம்மா கேட்டாள்.
"குணா வீட்ட போயிட்டு வாறன்."
"அங்க இப்ப என்னத்துக்கு குணாவும் இப்ப இல்லை."
ம். தெரியும்."
அவன் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. அவன் அன்று வந்த போது ஊரின் தொடக்கத்தில் இருந்த மதில் சுவரில் குணாவின் படத்துடன் பெரிய போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததைப் பார்த்தான். ஆறாம் மாத நினைவஞ்சலி அவன் கண்களில் நீர் படர்ந்தது.
"இப்ப எங்க போறாய்? எங்களுக்கு ஒரு முடிவைச் சொல்லு" அம்மா பொறுமையில்லாமல் கத்தினாள். அவன் நின்று திரும்பினான்.
"என்ன முடிவு?"
"நீ கலியாணம் செய்யவேணும். ஓம் எண்டு சொல்லு."
"ஓம் செய்யிறன். அதுக்குத்தானே நான் வந்தனான்."
"அப்ப ?" அம்மா சந்தோஷமாய் பாாத்தாள்.
"கட்டாயம் கலியாணம் செய்து கொண்டுதான் போவேன் அம்மா கவலைப்படாதேங்கோ."
ஒரு மாதத்தின் பின் ஒரு மாலை நேரத்தில் கிளாலிக்கரையில் படகுகளில் ஆட்கள் கொழும்பு போவதற்காய் வரிசையாய் ஏறினார்கள்.
நந்தகுமார் கெளசியின் கையைப்பிடித்து கவனமாய் படகில் ஏற்றி தன் அருகே அமர வைத்தான். கடற்காற்றுக்குப் பறந்த தலைமயிரை ஒதுக்கிக் கொண்டிருந்த அவளை பரிவோடும் காதலோடும் பார்த்தான்.
மேற்குக் கரையில் விழுந்த சூரியனின் ஒளி கெளசியின் முகத்தில் மஞ்சளாய் விழுந்தது.
பரீஸ் ஈழமுரசு. 22-28 பெப்ரவரி 1995
26

കൃസ്ത്രങ്ക്
மேற்குப்பக்க அடிவானத்துக்கு சூரியன் போய்விட்டது. புளிய மரத்தின் அடியில் மரக்குற்றியில் அமர்ந்து சுற்றுப்புறத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் சிவரூபன்.
தோட்டவேலை இன்னமும் முடியவில்லை. கோபாலன் கத்தரிக்கு பாத்தி கட்டிக் கொண்டிருக்க மனோன்மணி செழித்து வளர்ந்திருந்த கீரைப்பாத்திக்குள் தப்பி நின்ற புற்களைப் பிடுங்கிக் கொண்டிருந்தாள். அவர்களின் ஐந்து வயது மகன் தேவன் வரம்பு மீது சிறிய தடிகளை வைத்து தன்பாட்டில் விளையாடிக் கொண்டிருந்தான்.
மங்கி வந்த வெய்யிலில் தோட்டம் பச்சை பசேல் என்றிருந்தது. ஒரு பக்கம் கத்தரி, வெண்டி, பாகற்கொடிகள். மறுபக்கம் கீரை, வெங்காயம், மிளகாய்க்கன்றுகள். எல்லாம் இவர்கள் உழைப்பால் செழித்து வளர்ந்தவை.
தங்கள் தோட்ட்வேலைகளை தாங்களே செய்வார்கள். வெய்யில் மழை பாராமல் அவர்கள் வேலை செய்வதும் தாய் தகப்பனுக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் பிள்ளை இருந்து விளையாடுவதும் சிவ ரூபனுக்கும் ரேவதிக்கும் ஆச்சரியமான விஷயங்கள்.
"இந்த மனோன்மணி எவ்வளவு தோட்டவேலையளை ஆம் பிளைக்கு சமமாய் நிண்டு செய்யது." ரேவதிக்கு வியப்பாய் இருந்தது.
"ஓயாமல் வேலை செய்து பழக்கமாய்ப் போச்சு"
27

Page 20
afarafunafs
முந்தாநாள் கோபாலனிடம் மண்வெட்டி வாங்கி சிறிது மண்ணை கொத்துவதற்குள் நாரி பிடித்துக் கொண்டு விட்டது. இவர்கள் அலுக்காமல் சலிக்காமல் எப்படித்தான் வேலை செய்திறார்களோ?
சூரியக்கதிர் நடவடிக்கையில் யாழ்ப்பாணத்திலிருந்து இடம் பெயர்ந்து வன்னிக்கு வந்ததில் இந்த இரண்டு மாதமாய் சிவரூபனும் மனைவி ரேவதியும் மகன் சுதனும் இவர்கள் வீட்டில்தான் தங்கி யிருக்கிறார்கள். மண்வீடு என்றாலும் ஒரு அறையும் கொடுத்து பக்கத்தில் சமைப்பதற்கு ஒரு கொட்டிலும் போட்டுக் கொடுத்திருந்தான் கோபாலன்.
முற்றத்தில் வேலியோரம் வரிசையாக நாலைந்து இளம் செவ் விளணி மரங்கள். வீட்டின் இரு பக்கமும் மா, பலா மரங்கள். நல்ல குளிர்மையான முற்றம் தெருவின் அந்தப்பக்கமாய் சலசலத்து ஒடும் சிறிய வாய்க்கால். முற்றத்தில் முதலாய் நிற்கும் செவ்விளணி மரத்தில் குலை குலையாய் காய்கள், பெரிய குலையில் சிவப்புத்துண்டு கட்டப் பட்டிருந்தது. எத்தனையோ பேர் செவ்விளணி கேட்டு வந்தும் கோபா லன் கொடுப்பதில்லை.
"இப்ப இளனி நல்ல விலைதானே. இளனியும் தட்டுப்பாடு குடுக்கலாமே?"
என்று சிவரூபன் கேட்டதற்கு;
"இல்லையணி ணை அது முதல் முதல் போட்ட குலை. கோயிலுக்கு நேர்ந்து இருக்கு. அதால ஒருத்தருக்கும் குடுக்க ஏலாது.
என்று கோபாலன் சொல்லியிருந்தான்.
"இதுகள் இன்னமும் எந்தக்காலத்தில இருக்குதுகள் எண்டு விளங்கேலை" தனியே இருக்கும் போது ரேவதி சொன்னதற்கு;
"ஒருதரின்ர நம்பிக்கையை நாங்கள் குறைவாய் கதைக்கக்கூடாது. அதுகளுக்கு நேர்த்தி வைக்கிறது பெரிய விஷயம்" என்று சிவரூபன் சொல்லவும் ரேவதி அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. முதல் குலை
28

தாமரைச் சைன்வி என்பதற்கு அடையாளமாய் கட்டப்பட்ட அந்த சிவப்புத் துண்டு பார்வையில் படும் போது கொஞ்சம் சிரிப்பாகவும் இருக்கும் அவளுக்கு,
என்ன மாதிரியான சனங்கள்.
கோபாலனும் மனோன்மணியும் இருள் விலக முதல் எழுந்து தோட்டத்துக்கு போவார்கள். காலையில் மரக்கறிவகைகளை சைக்கிளில் கட்டிக்கொண்டு போய் கிளிநொச்சி சந்தையில் கொடுத்து விட்டு வருவான்.
தேவன் தாய் தகப்பனின் எந்த வேலைக்கும் இடைஞ்சல் செய்வதில்லை, அழுகை இல்லை. பிடிவாதம் இல்லை. சிணுங்கல் இல்லை. எந்நேரமும் மண் மீதுதான் விளையாட்டு.
ரேவதி சுதனை தேவனுடன் விளையாடவே விடுவதில்லை. "நீ அங்க தோட்டப்பக்கம் போகக்கூடாது. இங்க அம்மா வோடயே இருக்கவேணும்" என்று சொல்லி தன்னுடனேயே வைத்தி ருப்பாள்.
எப்போதும் சுதன் பளிச்சென்று இருப்பான். அங்கு போய் மண் மீது விளையாடி சட்டைகளில் அழுக்குப் பிடிக்க விட்டுவிடுவான் என்ற பயம்.
இந்த இடம் கூட அவளுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.
"என்னப்பா. இந்த மண்வீட்டுக்க என்னெண்டு இருக்கிறது."
என்ற முணுமுணுப்பு.
"வலிகாமத்திலயிருந்து சனம் வன்னிக்கு வந்து குவியுதுகள். இங்க ஒரு வீடு எடுக்க எவ்வளவு கஷ்டம். இருக்க இடம் இல்லாமல் எத்தினை சனம் ரோட்டில அலையுதுகள், எங்களுக்குத் தண்ணி, ரொய்லற் வசதியோட இந்த மண்வீடு கிடைச்சது எவ்வளவு பெரிசு. இதுகளும் நல்லசனம்"
"என்னத்த நல்லசனம் "அலுத்துக்கொண்டாள்.
29

Page 21
ബ്രിണ്ഡ്
"ஏனப்பா.
"இல்லை. இதுகளுக்கு கத்திரி, மிளகாய், வெங்காயம் தவிர ஒரு நாசமும் தெரியாது. இதுகளோட என்ன விஷயத்தைப் பற்றி கதைக்கலாம் சொல்லுங்கோ."
"நீ யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தனி உத்தியோககாரன்ர பெண்சாதி, நடப்பு நாகரீகமாய் இருந்தனி எல்லாம் சரி, அதுக்காக இதுகளை இளக்காரமாய்க் கதைக்கிறதே? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சூழல்."
"எண்டாலும் எனக்கு இங்க இருக்க விருப்பமில்லை. இடமில்லா மல் இந்த கனகாம்பிகைக்குளத்தில கொண்டு வந்து இருக்க விட்டிட்டீங் கள். கிளிநொச்சி ரவுண் பக்கமாய் எங்கயாவது ஒருவீடு எடுத்திருக்க லாம். இது ரவுணுக்குப் போற தெண்டால் கூட நாலு கட்டைபோக வேணும்."
"பொம்பிளையஞக்கு ஒரு காலமும் போதும் எண்ட மனம் வாறேலை, எல்லாத்திலயும் ஒவ்வொரு குறைதான். கிளிநொச்சி ரவுணுக்க இருக்கிறதும் பயம்தானே. ஆனையிறவு காம்பிலயிருந்து மெயின் ரோட் நீளத்துக்குத்தானே ஷெல் அடிக்கிறாங்கள். அண்டைக்கும் அடிச்ச ஷெல்பட்டு கனிஸ்ரா ஸ்கூலுக்குப் பக்கத்தில் நாலு பேர் செத்தவை யல்லே, பிறகு ரவுணுக்க இருக்க ஆசைப்படுறாய்."
"மனிசருக்கு எங்க போனாலும் நிம்மதி இல்லை."
"இது எல்லாருக்கும் ஒத்ததுதானே. அஞ்சு லட்சம் சனத்துக்கு மேல இப்படி இடம் பெயர்ந்து வந்ததுகள்தானே. நாங்கள் மட்டுமே..?"
"நீங்கள் என்னவும் சொல்லுங்கோ. இது எங்கட வீடு மாதிரி வருமே?"
"வராதுதான். அதுக்கு என்ன செய்யிறது. இருக்கிற இடத்தை எங்கட வீடாய் ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான். அந்த மனநிலையை நாங்கள் வளர்த்துக் கொள்ளவேணும்."
30

தாமரைச் சைன்வி
"கடவுளே. வீட்டையும் வீட்டில எத்தினை பொருளுகளையும் விட்டிட்டு வந்து இப்படி மண்வீட்டுக்க கிடக்க வேண்டியிருக்கு. எத்தினை சில்வர் சாமான். எத்தினை கிறாஸ் பெட்டியள். எத்தினை உடுப்புகள்,"
அவளுக்கு வீட்டை நினைத்த உடனும் கண் கலங்கிவிடும். அவனுக்கும் ஒன்றும் சொல்ல முடியாமல் போய்விடும். பொழுது நன்றாகச் சாய்ந்து விட்டது. கோபாலனும் மனோன்மணியும் வேலைகளை முடித்துக் கொண்டு வந்தார்கள்.
சிவரூபன் எழுந்து வீட்டுக்குள் வந்த போது ரேவதி சுதனை மடியில் படுக்க வைத்துக் கொண்டிருந்தாள்.
"சுதன் சோர்ந்து போய் இருக்கிறான். காய்ச்சல் குணம் போல இருக்கு" என்றாள் ரேவதி.
"பத்து வயதுப் பெடியனை விளையாடவும் விடாமல் அமத்தி வைச்சுக் கொண்டிருந்தால் அது சோர்ந்து போய் இருக்கும்தானே. சுதன் எழும்பி இங்க வாங்கோ பார்ப்பம்."
"கட்டிலில படுத்து பழகின பிள்ளை. இங்க மண்திண்ணையில படுக்கிறதுதானே. குளிர் பிடிச்சுதோ தெரியேலை. பக்கத்தில இரணை மடுக்குளமல்லே? அதுதான் எந்தநேரமும் குளிர்காத்து அடிச்சபடி பிள்ளைக்கு ஒத்து வரேலை."
சிவரூபன் சுதனைத் தொட்டுப் பார்க்க கொஞ்சம் கணகண வென்றுதான் இருந்தது.
"பொழுதுபட்ட நேரம் இப்ப என்ன செய்யிறது? ஒரு பனடோல் குடுத்துப் பாப்பம்."
"எங்களிட்ட இருந்தது முடிஞ்சிட்டுது. இவையிட்ட இருக்கோ தெரியெலை கேட்டுப்பாப்பம்."
அப்போது சேலைத் தலைப்பால் முகம் துடைத்துக் கொண்டு அங்கு வந்த மனோன்மணியிடம் ரேவதி கேட்டாள்.
31

Page 22
வன்னியாச்சி
"பனடோல் இருக்குதா."
"அதைக்கூட தடை செய்து போட்டாங்களே. சரியான தட்டுப் பாடு. எங்களிட்ட இல்லை ஏன் தம்பிக்கு காய்ச்சலே."
"ஓம் மெல்லிசாய் சுடுகுது."
"தூதுவளமிலை போட்டு மல்லித் தண்ணி அவிச்சுத்தாறன் குடுங்கோ, காய்ச்சல் போயிடும்."
"அய்யோ. நான் அப்பிடி ஒரு நாளும் குடுக்கிறேலை. பனடோல் குடுத்துத் தான் பழக்கம். இப்ப என்ன செய்வம்."
ரேவதி சுதனின் தலையைத் தடவிக் கொண்டிருப்பதை சிவரூபன் கவலையோடு பார்த்தான்.
மெலிதாய் இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. மனோன்மணி லாம்பைக் கொளுத்திக்கொண்டு வந்து வைத்தாள்.
"இப்ப டொக்டரிட்ட கொண்டு போகலாமே?"
ரேவதி பயத்தோடும் கவலையோடும் கேட்டாள்.
"இங்க பக்கத்தில டொக்டர் இல்லை. அதுக்கும் ரவுணுக்குத்தான். போகவேணும். இப்ப போக ஏலாது."
சுதனைத் தொட்டுப் பார்த்த கோபாலன்; "அவ்வளவு சுடேலை, பயப்பிடாதேங்கோ. நாளைக்கு காலமை டொக்டரிட்ட காட்டலாம்" என்றான்.
"சின்னப்பிள்ளையஞக்கு பார்க்கிற ஸ்பெஷலிஸ்ட் ஆரும் இங்க இருக்கினமே" என்று கேட்டாள் ரேவதி.
"இங்க அப்பிடி ஒருவரும் இல்லை. எல்லாரும் ஆர். எம். பி மார்தான். கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்குப் போனாலும் சரியான சனம், நாள் முழுக்க கியூவில நிற்கவேணும். பிறைவேற்றாய்த்தான். காட்ட
32

தாமரைச் சைன்வி
வேணும்." சொல்லி விட்டு கோபாலன் பின் பக்கம் மாடுகள் பிடித்துக் கட்டப்போக மனோன்மணி தங்கள் குசினிக்குள் நுழைந்தாள்.
"பக்கக்கில டொக்டர் இல்லை என்ன ஊரப்பா இது."
ததல ஒரு ğbl
"எல்லா இடத்திலயும் எல்லாவசதியும் கிடைக்குமே. நீ இன்னும் பாழ்ப்பாணக் கனவில் இருக்கிறாய் இருக்கிற இடத்துக்குத் தக்கபடி சமாளிக்கத்தானே வேணும். இங்கயும் சனங்கள் சீவிக்குதுகள் தானே."
፵፪
.இதுகள் மருந்தே குடுக்காமல் பிள்ளை வளர்க்குதுகள் .........ډو؟ மண்ணுக்கயும் தூசிக்கயும் பிள்ளை விளையாடுது. தோட்ட வேலை யளைச் செய்து போட்டு வாய்க்காலில குளிச்சிட்டு வருகுதுகள். முதலில கறக்கிற பாலும் முதலில போடுற குலையும் கோயிலுக்கு எண்ட நம்பிக்கை வேற. ஒரு விதமான சனங்கள் இதுகள், உழைப்பையும் சாப்பாட்டையும் தவிர இதுகளுக்கு வேற என்ன தெரியும்."
ரேவதி இப்படிச் சொன்னது சிவரூபனுக்கு பிடிக்கவில்லை. ஏதாவது சொல்ல வேண்டும் போல இருந்தாலும் வார்த்தைகளை வளர்க்க விரும்பாததால் பேசாமல் இருந்தான்.
இரவு சுதனுக்கு மெலிதாய் காய்ச்சல் இருந்தது. வாடிப் போயிருந்த பிள்ளையின் முகத்தைப் பார்க்க கவலையாய் இருந்தது.
"இது மலேரியாவாய்த்தான் இருக்கும். கிளிநொச்சிப் பக்கம் மலேரியா வாறதெண்டு கதைக்கிறவைதானே."
"என்ன விசர்க்கதை கதைக்கிறாய். யாழ்ப்பாணத்தில சனத்துக்கு மலேரியா வாறேலையே?"
"எண்டாலும் இங்க பெரிய நுளம்பு. இங்க உள்ள சனம் எப்பிடித்தான். சீவிக்குதுகளோ..?"
இரவு முழுவதும் ரேவதி முணு முணுத்துக் கொண்டே இருந்
தாள.
மறுநாள் காலையில் மோர்ட்டார் சைக்கிளில் ரேவதியையும் சுதனையும் ஏற்றிக் கொண்டு கிளிநொச்சிக்குப் போனான்.
33

Page 23
ബിഗ്
அவர்கள் போன பின்னர் கோபாலன் தோட்டவேலை செய்ய மனோன்மணி நனையப்போட்டிருந்த ஒலைகளை புளியமரத்தின் கீழிருந்து பின்னினாள். அவசரமாய் சமைத்தாள். சுதனுக்காக இடியப்பம் அவித்து சொதியும் வைத்தாள். வாய்க்கால் தண்ணிரில் ஒரு மணி நேரமாய் குளித்துக் கொண்டிருந்த தேவனை கூப்பிட்டு சாப்பாடு கொடுத்தாள். மருந்து எடுக்கப் போனவர்களை இன்னமும் காண வில்லையே என்ற கவலையோடு தெரு நீளம் பார்த்தாள்.
வெய்யில் சுள்ளென்று கொளுத்திக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் இரைச்சலுடன் மோர்ட்டார் சைக்கிள் வாசலில் வந்து நின்றது. சோர்ந்து போயிருந்த சுதனை கைத்தாங்கலில் இறக்கி ரேவதி உள்ளே கூட்டி வர சிவரூபன் மறுபடி புறப்பட ஆயத்தமானான்.
"சாப்பிடவும் இல்லை. திரும்ப எங்க அண்ணை போறீங்கள்?" கோபாலன் கேட்டான்.
"டொக்டர் சுதனுக்கு நிறைய செவ்விளணி குடுக்கச் சொன்னவர். வரேக்க ரவுணிலை செவ்விளணி கிடைக்கேலை, அதுதான் திருவை யாறுப் பக்கம் பாப்பம் எண்டு போறன்.
கோபாலன் ஒரு வினாடி பொறுத்து:
"நீங்கள் ஓரிடமும் அலைய வேண்டாம் அண்ணை. இந்த முத்தத்து இளனிக்குலையை வெட்டித்தாறன்." என்றான்.
"அது நேர்த்திக்கு." சிவரூபன் தயக்கத்தோடு வார்த்தைகளை இழுத்தான்.
"பரவாயில்லை அண்ணை. மனோன்மணி அந்தக் கத்தியைத் தா."
மனோன்மணி கொடுத்த கத்தியை வாங்கிக் கொண்டு அந்தக் குலையை எட்டி சரக்கென்று வெட்டினான் கோபாலன்.
ரேவதி சட்டென்று கோபாலனைத் திரும்பிப் பார்த்தாள். வெட்டப் பட்ட அந்த செவ்விளணிக் குலையின் மேற்பிடியில் சிவப்புத்துண்டு தொங்கிக்கொண்டிருந்தது.
Geu63 alb - 605 1996
34

ഫ്രീ0്
தரையில் அமர்ந்து கைகளைக் கூப்பி கண்கள் மூடிப் பிரார்த்தனை செய்கின்ற இந்த நிமிடங்களில் மனம் என்னமாய்க் கரைந்து போகிறது. எத்தனையோ வருடங்களாக பட்டு வந்த கவலைகள் கூட மறந்து போகிறது. இந்த வினாடி ஆண்டவனின் காலடியே சரணம் என்ற நினைவில் தற்காலிகமாய் ஒரு ஆறுதல் நாடி நரம்பெல்லாம் ஊடுருவி நிற்கிறது.
அறுபத்தைந்து வருசங்களாய் வாழ்ந்த இந்த வாழ்க்கைக்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? இதைத்தீர்மானிப்பது எது. அர்த்தம் எதுவுமே இல்லாமல் வாழ்வில் அனுபவித்த துன்பங்களை மறக்க வேண்டுமெனில் இந்த உயிர் போக வேண்டும். அது எப்போது? கடவுளே. எப்போது அழைத்துக் கொள்வாய்.? மூடிய கண்களி லிருந்து பொல பொலவென்று கண்ணிர் வழிந்தது.
மனம் நிலை கொள்ளாமல் பரிதவித்தது.
இயலாமை அதிக துக்கத்தைத் தந்தது.
மெலிந்த உடம்பு வரிவரியாய் பதிந்து போயிருந்த முகத்தின் சுருக்கங்கள் முகத்திலும் கண்களிலும் தேங்கி நின்ற துயரத்தின் சாயல்கள் இன்னும் பத்து வயதை அதிகமாய் காட்டிய தோற்றம், அம்மா மெதுவாய் கண்களைத் திறந்து பார்த்தாள்.
கிடுகுகளினால் வேயப்பட்ட அந்த நீளமான மண்டபத்தில் ஆண் களும் பெண்களுமாய் எண்பத்திரண்டு முதியவர்கள் அமர்ந்தி
35

Page 24
avarafoviraff
ருந்தார்கள். வாழ்வின் எல்லை வரை வந்து நிற்பவர்கள். சுருங்கிப்போன முகங்களும் வரண்டு போன மனங்களுமாக.
எல்லோர் மனமும் உலைக்களமாய் கொதிக்கின்ற நேரம் இது. அநேகமாய் எல்லோருமே இப்போது உள்ளுக்குள் அழுது கொண்டு தான் இருப்பார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு சோகம் இருக்கிறது. பெற்ற பிள்ளைகள் கவனிக்காமல் கை கழுவி விட்டு விட்டார்களே என்று தினம் தினம் வெந்து கொண்டிருப்பவர்கள். முன் வரிசையில் இடதுபக்க மூலையில் கண்மூடி அமர்ந்திருக்கும் அந்த உயரமான கிழவருக்கு மனநினை கூட லேசாய்த் தழும்பிவிட்டது. ஏழு பிள்ளைகளைப் பெற்றும் அனாதையாய்ப் போன அதிர்ச்சியிலிருந்து அவரால் மீள முடியவில்லை. நான்கு பிள்ளைகள் வெளிநாடுகளில் இருந்தும் திரும்பியும் பார்ப்பதில்லை என்ற அதிர்ச்சி.
இங்குள்ள ஒவ்வொருவரும் பாரிய துன்பத்தை தமக்குள் சுமந்து கொண்டு ஒருவரை ஒருவர் விசாரித்துக் கொள்வார்கள். அப்படித்தான் அம்மா இங்கு வந்த புதிதில் அவளையும் விசாரித்தார்கள்.
"நீங்கள் எந்த ஊர் அம்மா."
"அச்சுவேலி."
"இங்க இடம் பெயர்ந்து வந்தனிங்களோ."
"ஓம் அச்சுவேலியிலயிருந்து கோப்பாயில வந்து இருந்து பிறகு தொண்ணுாற்றி ஐஞ்சு இடப்பெயர்வோட இங்க வன்னிக்கு வந்தனான்."
"உங்களுக்கு மனிசன் இல்லையே அம்மா? பிள்ளையஞம் இல்லையே.? "
இந்தக்கேள்விகள் மனதைச் சுள்ளென்று தாக்கும். இந்த விசாரிப் புக்களில் வஞ்சகம், சூது இருக்காது. மிகுதிக் காலம் வரை ஒரே இடத்தில் வாழப்போகும் காரணத்தால் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் ஆர்வம். ஒரு வாஞ்சை தென்படும். அவ்வளவுதான். தோழமையோடு ஒலிக்கும் அந்தக் குரல்கள் பல தடவை மனதைத் தழும்ப வைத்துவிடும்.
36

தாமரைச் சென்வி
நாவுக்குள் பூட்டுப்போட்டு அடைத்தாற்போல ஒரு இறுக்கம் வந்து விடும். மெளனமாய் இருப்பாள்.
"ஏனம்மா உங்களுக்கு மனிசன் இல்லையோ? பிள்ளையஞம் இல்லையோ?"
"இல்லை" என்று தலை அசைக்கும் போது தாங்கமுடியாத துயரம் வந்து தொண்டைக்குள் அடைக்கும்.
ஒன்று பொய், ஒன்று உண்மை. ஏன் அப்படிச் சொல்லத் தோன்றியது.?
அன்றைக்கு இரவு நித்திரையே வராது. இங்கிருக்கும் மற்ற பெண்கள் "நாலு பிள்ளை பெத் தன் கஷடப்பட்டு வளர்த்தன் நடுத்தெருவில விட்டிட்டு போயிட்டாங்களே." என்று சொல்லி அழும் போது அனுதாபம் ஏற்படும். ஆழ் மனதுக்குள் அழுத்தமாய் ஒரு வலி உருவாகும். இதே பெண்கள் "பாழ்படுவான் கட்டையில போவான் என்னை நிம்மதியாய் இருக்க விட்டானே. எத்தினை ஆய்க்கினைப் பட்டன்" என்று பொருமும் போது தனது துயரம் புதுப்பிக்கப்பட்டது
போல உணர்வாள்.
அம்மாவால் இப்படியெல்லாம் வாய்விட்டு திட்டமுடியாது. ஆனா லும் மனம் எல்லாம் ரணமாய் கீறல் கீறலாய் ஆகிப்போவது என்னமோ உண்மைதான்.
அறியாத வயதில் நினைவு தெரியத் தொடங்கிய நாட்களிலிருந்தே மனம் வதைபடத் தொடங்கி விட்டது. குடித்து விட்டு அப்பு வந்து அம்மாவுக்கு அடிப்பதையும் உதைப்பதையும் பார்த்துப் பார்த்து 6ளர்ந்தவள் அவள். இருபது வயதில் ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டுப் பானாள். அவன் அப்புவை விட மோசமாய் இருந்தான். அவளின் சந்தோஷங்கள் எல்லாவற்றையும் மிதித்துத் துவைத்து துவம்சம் பண்ணி விட்டான். இந்த மெலிந்த தேகம் எத்தனை அடி உதைகளைத் தாங்கியிருக்கிறது. அவனுக்குள் ஏதோ ஒரு மிருகம் தான் குடிகொண்டி

Page 25
a/aafavirafa
ருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவனால் அப்படி இருந்திருக்க முடியாது.
பத்து வருடத்துக்கு முன்பு அவனுக்கு மரணம் நேர்த்த போது அழவே தோன்றவில்லை, அழுகை வரவில்லை. அப்பாடா என்ற ஆறுதல்தான் மனம் எல்லாம் நிரம்பியிருந்தது. இந்த நினைவு எவ்வளவு குரூரமானது. ஆனாலும் அம்மாவால் அப்படித் தான் நிம்மதியடைய முடிந்தது. ஒருவரின் மரணம் இன்னொருவருக்கு நிம்மதி தரும் என்றால் அவன் ஏன் அந்த வாழ்க்கையை வாழ்ந்தான்.? யாருக்குமே நல்லவனாய் இருக்க முடியாமல் ஏன் போனான்.?
அவனைப் பாடையில் வைத்து சுடலைக்குத் தூக்கிக் கொண்டு போனபோது மெல்லிய சந்தோஷம் கூட அலை அலையாய் பர வியதே. ரகசியமாய் அந்தச் சந்தோஷத்தை அனுபவித்துக் கொண்டே கடவுளுக்கு நன்றியும் சொல்லத் தோன்றியதே.
பொட்டையும் பூவையும் துறந்தது பெரிய விஷயமாய் படவில்லை. முப்பத்தைஞ்சு வருஷமாய் போட்டு வதைத்தானே என்ற ஆத்திரம். அது இன்று வரை அடங்கவில்லை. வாயில் வைத்த சோற்றை விழுங்கவிடாமல் என்ன பாடு படுத்தியிருப்பான். அய்யோ என்று பரிதவித்து அழுதபோதெல்லாம் என்ன திமிராய் பார்த்துக் கொண்டி ருப்பான்.
வீடே நரகமாய்த்தானே இருந்தது. நொந்து அழுவதே வாழ்வு என தலையில் எழுதி வைக்கப்பட்டிருந்தது. ஒரே மகனைப் பெற்றாள். அந்தப்பிள்ளைக்காக அத்தனை துன்பங்களையும் தாங்கிக் கொண்டாள். தகப்பனின் பொறுப்பில்லாத்தனம் கொடூரத்தனம் எதுவும் மகன் மீது படிந்து விடக் கூடாது என்று கவனமாய் வளர்த்தாள். நெஞ்சு வருத்தக் காரனாகவும், வல்லமையற்ற அப்பாவியாகவும்தான் அவன் வளர்ந்து வந்தான். பத்து மாதம் சுமந்து பெற்று பிறகும் கண்ணுக்குள் வைத்து பொத்திப்பொத்தி வளர்த்த பிள்ளை.
திடுமென கண்கள் பொங்கி வழிந்தது.
38

தாமரைச்சிசன்வி
சேலைத்தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டாள். இந்தப் பிரார்த்தனை நேரம் எவரும் அழலாம். யாரும் காரணம் கேட்க மாட்டார்கள்.
இந்த முதியோர் இல்லத்து வாழ்வு அமைதியானது.
நேரம் தவறாத செயற்பாடுகளுடன் இயல்பாக இருந்தது.
அதிகாலையில் பக்கத்தில் உள்ள ஐயனார் கோவிலிலிருந்து
கேட்கும் மணியோசை மனதுக்கு இதம் தருவது. பின்னேரப் பூசைக்கு காலார நடந்து போய் கும்பிட்டு வரலாம். நேரத்துக்கு நேரம் உணவு
எங்கெங்கோ பிறந்து வாழ்ந்து விட்டு இந்த நிலையத்தில் இப்போது ஒன்றாக வாழும் வாழ்வு. அதில் ஏற்படுகின்ற நேசம். தமது பழைய வாழ்வை அசைபோட கிடைத்திருக்கிற அவகாசம். நோய் வந்தால் தமக்குள்ளேயே ஒருவரை ஒருவர் பராமரித்துக் கொள்ளும் வாஞ்சை.
இது ஒரு புதிய உலகம். ஒடிக்களைத்த பின் நிழல் பரப்பி நிற்கும் ஆலமரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு மூச்சு வாங்கும் ஆறுதல், தேவை ஏற்படும் போதெல்லாம் பெற்ற பிள்ளை போல் வந்து எல்லோரையும் அன்போடு விசாரித்து சிகிச்சை செய்யும் மருத்துவர்.
எல்லாவற்றிற்கும் மேலாக இதன் நிர்வாகத்தை ஏற்று நடத்தி அவர்கள் அனைவரையும் அன்போடு அரவணைக்கும் கருணை உள்ளம் கொண்ட அந்தப் பெரியவர். பெரியவரிடம் தங்கள் கவலை களைச் சொல்லி ஆறுதல் தேடும் இந்த முதியவர்கள்.
வாழ்க்கை இத்தனை பேரின் மனங்களையும் கோரமாக குதறிப் போட்டிருக்கிறது. அமைதியடைய முடியாமல் வாய் விட்டு கதறி அழுபவர்கள் தான் அதிகம்.
பெற்ற பிள்ளைகளினால் கைவிடப்பட்ட நிலமை எத்தனை மனப் பாதிப்பை தருகிறது என்பது இங்குதான் முழுமையாகத் தெரிகிறது. அந்த 1ழுக்கைத் தலை கிழவர் எத்தனை நாள் வாய்விட்டு கதறி அழுதிருப் பார். "நானும் மனிசியுமாய் பத்துப்பிள்ளையளைப் பெத்து வளர்த்தம்.
39

Page 26
வன்னியாச்சி
ஆளாக்கி விட்டம். அந்தப் பத்துப் பிள்ளையஞம் சேர்ந்து எங்கள் ரெண்டு பேரையும் பார்க்க ஏலாமல் விட்டிட்டுதுகள்."
இது சில இடங்களில் நடக்கிற கதைதான். ஆனால் இதற்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. அம்மாவைப் பொறுத்த வரையில் அந்த இன்னொரு பக்கம் தான் வேதனை தருவது.
இங்குள்ளவர்களில் சிலர் பிள்ளைகள் கைவிட்ட நிலையில் அப்பாடா என்று ஒரு நிம்மதியுடன் இருக்கவும் செய்கிறார்கள். இந்த இருபகுதியினருடனும் அம்மாவால் சேர்ந்து கொள்ள முடியாது.
முப்பத்தைந்து வயதுப்பிள்ளையை இன்னமும் குழந்தை
யாகவே நினைத்துப் பேதலிக்கிறது மனம் பிரார்த்தனை முடிந்ததும் எல்லோரும் எழுந்து கொண்டார்கள். அம்மா எழுந்து வெளியே நடந்தாள். மிகவும் சோர்வாக இருந்தது.
"அம்மா ! நல்லவேளை உங்களுக்கு பிள்ளை இல்லை."
சொன்ன அந்தப் பெண்ணை அம்மா வெறுமையாய் பார்த்தாள்
"நான் ரெண்டு பெத்தும் இல்லாதது மாதிரி, ரெண்டு ஆம்பிளைப் பிள்ளையஞம் மனிசிமாரின்ர சொல்லைக் கேட்டு என்னைப் பாரம் எண்டு தூக்கி எறிஞ்சிட்டாங்கள். இந்த நிழலும் இல்லாட்டி நாயாய் அலைஞ்சிருப்பன்."
கண்கள் சுருங்கிப் பார்வை குறைந்த அந்த எண்பது வயது முதிய பெண் அழுது கொண்டே போனாள்.
அம்மா மெளனமாய் நடந்தாள். கால்களில் நடுக்கம். இடுப் பிலிருந்து கால்வரை வலிக்கிறது. கொஞ்ச நாட்களாகவே இப்படித்தான். கண்பார்வையும் மங்கி வருகிறது. இங்கு வந்து கண் பரிசோதித்து போனவர்கள் அடுத்த மாதமளவில் கண்ணாடி கொண்டு வந்து தரக் கூடும்.
அம்மா முற்றம் கடந்து சமையலறைப் பக்கமாய் நடந்தாள். முற்ற மெல்லாம் நிழல் பரப்பி நிற்கின்ற மரங்கள். தென்னைகள் ஐந்து
40

தாமரைச் சைன்வி
வருடங்களுக்கு முன் காடாக இருந்த நிலம், நிர்வாகத்தினரது உழைப் பினால் சோலையாக மலர்ந்திருக்கிறது.
அன்று அந்த இல்லத்திற்கு தமது குழந்தையின் பிறந்த நாளைக் கொண்டாட ஒரு குடும்பம் வரப்போகிறது. மதியம் இவர்களது சாப்பாடு எல்லாம் அவர்கள் பொறுப்பு நாலைந்து கறிகள், வடை, பாயாசம், வாழைப்பழம் எல்லாம் இருக்கும். தாங்களும் இவர்களுடன் அமர்ந்து சாப்பிடுவார்கள்.
இப்போதெல்லாம் நிறையப்பேர் இப்படித் தங்கள் குழந்தைகளின் பிறந்த நாளைக் கொண்டாடவும் தாய் தந்தை அன்புக்குரியவர்களின் சிரார்த்த தினங்களை இவர்களுக்கு சாப்பாடு தந்து நினைவு கூரவும் இங்கு வருகிறார்கள்.
அப்படி வருபவர்களைப் பார்க்க மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாக வும் சந்தோஷமாகவும் இருக்கும். கை பிடித்து அன்போடு விசாரித்து அவர்கள் கதைக்கும் போது சிலர் நெகிழ்ந்து அழுது விடுவதுமுண்டு. வாழ்வின் கடைசி நாட்களில் நின்று கொண்டு அன்புக்கும் தோழமைக் கும் ஏங்குகின்ற மனங்கள்.
இப்படியான அனைத்து சந்தர்ப்பங்களிலும் அம்மா அமைதியாக இருந்து பார்த்துக் கொண்டிருப்பாள்.
அன்றைய மதியச் சமையலுக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தன. மற்றவர்களுடன் சேர்ந்து அம்மாவும் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து கொடுத்தாள்.
பதினொரு மணிக்கு நான்கு வயதுக் குழந்தையுடன் பெற்றோர் உறவினருமாக ஐந்து பேர் மோர்ட்டார் சைக்கிள்களில் வந்து இறங்கினார் கள். குழந்தை துரு துரு வென்று குண்டுக் கண்களுடனும் சிரித்த முகத்துடனும் வசீகரமாக இருந்தது.
குழந்தை எல்லோருக்கும் வணக்கம் சொல்லியது. "என்ர பேர் கயல்விழி. உங்கட பேர் என்ன?" என்று ஒவ்வொருவரையும் விசாரித்தது.
41

Page 27
வன்னியாச்சி
எல்லோருக்கும் இனிப்புக் கொடுத்தது. பாட்டுப் பாடிக் காட்டியது. பயம் இன்றி எல்லோருடனும் அணைந்து கொண்டது. இறுக்கம் தளர்ந்து சூழ்நிலை இனிமையாய் மாறியது.
அம்மாவுக்கு பிள்ளையின் நினைவு வந்தது.
இப்போது என்ன செய்து கொண்டிருப்பான்?
காட்டில் விறகு வெட்டிக் கட்டிக் கொண்டு தெருத் தெருவாய் விற்றுத் திரிவானோ..?
அல்லது ஆஸ்பத்திரியில் கிளினிக் வரிசையில் போய் நிற்பானோ..? மனைவிக்கும் நான்கு பிள்ளைகளுக்கும் சாப்பிட்டுக்கு என்ன வழி செய்வான்? பத்து வருஷங்களாய் மகனோடு இருந்து அவன் பட்ட கஷ்டத்தை பார்த்துப் பார்த்து கலங்கியிருக்கிறாள். இடப்பெயர்வினாலும் நோய் நொடியிலும் அவர்கள் பட்ட பாடு.
அச்சுவேலியிலிருந்து ஒவ்வொரு இடமாய் அலைந்து வன்னி வரை உயிருக்குப் பயந்து ஓடி வந்த அவலம் சாகும் வரை மறக்க இயலாது.
நெஞ்சு வருத்தம் காரணமாய் கிளினிக்குக்குப் போய் வருதலே அவனுக்கு வாழ்வாயிற்று கூலி வேலைக்குக் கூட போக இயலவில்லை. விறகுவெட்டிக் கட்டி ஒருநாள் விற்றால் ஐந்து நாட்கள் படுக்கையில் கிடப்பான்.
பொருளாதாரத் தடையின் காரணமாக எழுந்த அத்தனை துன்பங் களையும் அந்த குடும்பமும் அனுபவித்தது. வீடு வாசல் சொத்து இழந்து வன்னியின் காட்டுக்கரையில் ஒரு குடிசையில் வயிற்றுக் கொதிப்போடு அவர்கள் வாழ்க்கை இருந்தது. அவர்கள் குடித்த ஒரு நேரக் கஞ்சியில் அம்மாவுக்கும் ஒரு வாய் கிடைத்தது. சொந்த வீட்டில் இருந்தபோது இப்படி பட்டினி கிடக்க நேர்ந்ததில்லை.
இந்த ஆக்கிரமிப்புப் போரின் முகம் எத்தனை குரூரமானது நொந்த மனங்களையே கூறு கூறாய் கிழித்துப் போட்டது. வாழவும் விடாமல்
42

தாமரைச் சென்வி
சாகவும் விடாமல் புரட்டியடித்தது. ஓடிக்களைத்து ஒரு இடத்தில் நிம்மதியாய் இருக்கவும் விடாமல் அலைக்கழித்தது. அம்மா மனம் நொந்து போனாள். வாழ்நாளில் எந்தக் காலத்திலும் சந்தோஷத்தை அனுபவிக்காமலேயே அறுபத்தி ஐந்து வயது வரை வாழ்ந்தாகி விட்டது. மனம் விட்டுச் சிரித்த நினைவே அம்மாவுக்கு இல்லாமல் போயிற்று.
"அம்மா. உங்களுக்கும் ஒருதரும் இல்லையோ..?"
அந்தக் குழந்தையின் தாய் கைபிடித்து பரிவோடு கேட்க அம்மா நிமிர்ந்து பார்த்தாள். "இல்லை" என்று தலையசைக்கும் போது துக்கம் பொங்கி வெடித்தது.
அம்மாவைப் பார்த்துக் கொள்ள வழியற்று, அவளாவது மூன்று வேளையும் சாப்பிட்டுக் கொண்டிருக்கட்டும் என்று நினைத்து இங்கே கொண்டு வந்து விட்டுப் போன தன் பிள்ளையை யாரும் அம்மாவை
கவனிக்காமல் கைவிட்டு விட்டான்' என்று சொல்லி விடக் கூடாது.
அன்றைய மதிய உணவு வடை பாயாசத்தோடு விசேடமாக இருந்தது. எடுத்து வாயில் வைக்க அம்மாவுக்கு அழுகை வந்தது.
அங்க என்ர குஞ்சுகள் என்ன சாப்பிட்டுதுகளோ.2
- கனவுக்கு வெளியேயான உலகு - 2002
43

Page 28
ബസ്ത്രി
என்ர எண்பத்திரெண்டு வயது வரைக்கும் இப்பிடியான வெடிச் சத்தத்தை நான் கேட்டதே இல்லை.
என்ர அம்மாளாச்சி. சதிரம் எல்லாம் பதறுது.
நெஞ்சு படக்கு படக்கெண்டு இடிக்குது. கிழவி எண்டாப் போல பயப்பிடாமல் இருக்க ஏலுமே..?
இந்தச் சத்தங்கள் கொஞ்ச நாளாய் கூடுதலாய் கேக்குது. காடெல் லாம் அதிருது. மரத்தில இருக்கிற இலையள் கூட நடுங்குது. இப்ப இருக்கிற மாதிரி பயமும் பதட்டமும் முந்தி ஒருக்காலும் இருக்கேலை.
இப்ப என்ன நேரம் எண்டும் தெரியேல்லை, வீட்டு விறாந்தைக் கரையில பாயை விரிச்சு அதில காலை நீட்டிக்கொண்டு இருக்கிறன் றோட்டால ஒரு மோர்ட்டார் சைக்கிள் படபடவெண்ட சத்தத்தோட போகுது. மற்றபடி ஒரு ஈ, காக்காய் றோட்டில இல்லை.
மாங்குளத்திலயிருந்து துணுக்காய்க்குப் போற றோட்டுக்கரையில தான் எங்கட ஊர் இருக்கு நல்ல உயரமான மரங்கள் காடாய் சூழ்ந் திருக்கிற இடம். ஊருக்கு நடுவில றோட்டுக் கரையோட எங்கட அம்மாளாச்சியின்ர கோயில்.
அம்மாளாச்சியின்ர வாசலைப் பார்த்தபடி எங்கட வீடு. அங்க கொழுத்திற விளக்கு எங்கட வீட்டில நிண்டு பார்க்கத் தெரியும். விடியக் காத்தால முழுகியிட்டு அவவின்ர கோயிலுக்குப் போய் கும்பிட்டிட்டு
44

தாமரைச் சைன்வி
வந்துதான் நான் தேத்தண்ணி குடிக்கிறது. இந்த வன்னிவிளாங்குளத்தில தலைமுறை தலைமுறையாய் நாங்கள் இருக்கிறம். இந்தக் கோயிலும் இருக்குது.
என்ர சின்ன வயதுக் காலமெல்லாம் இந்தக் கோயில் வாசல்ல தான் விளையாட்டோட போயிருக்கு. கோயில்ல வைகாசி விசாகத்தில பொங்கல் நடக்கும், பொங்கல் எண்டால் நீர்வேலியிலயிருந்து வாழைக் குலையும் சாவகச்சேரி, கொடிகாமத்திலயிருந்து தேங்காய், இளனி, வாழைக்காய், பிலாப்பழமும் பண்ட வண்டில்களில மேளதாளத்தோட வரும். விடிய விடிய அன்னதானம் நடக்கும். எத்தினை திசையளில யிருந்து சனம் வரும், கோயிலுக்கெண்டே ஒவ்வொரு இடத்தில யிருந்தும் விசேசமாய் பஸ் விடுவினம். என்ர அப்பு வைத்தியம் செய்யிற ஆள். கட்டுக்குடுமியும் காதில தோடும் தோளில சால்வையுமாய் இருப்பார். காட்டுக்குள்ள போய் மூலிகை எடுத்து எண்ணெய் காய்ச்சி ஆக்களுக்கு குடுக்கிறவர். அதால சனங்கள் திருவிழா காலத்தில எங்கட வீட்டயும் வந்து குவிஞ்சிடுங்கள். அத்தினை பேருக்கும் சாப்பாடு போடுவம். பின்பக்கம் கிடாரத்தில அவியல் நடக்க தலைவாசலில தொடர்ந்து பந்தி நடக்கும், கோயிலில சாப்பிட்டாலும் கூட ஒரு நேரம் எங்கட வீட்டயும் சாப்பிட்டிட்டுத்தான் சனம் போகுங்கள்.
அறுவது வருசத்துக்கு முந்தி என்ர மனிசனும் வைத்தியம் செய்ய வந்துதான் அப்புக்கு பழக்கமானவர். பிறகு ஒவ்வொரு வருசமும் விசாகப் பொங்கலுக்கு வருவார். அவற்ர குணம் நடை பார்த்து அப்பு எனக்கு கலியாணம் கட்டி வைச்சவர். சும்மா சொல்லக் கூடாது அருமையான மனிசன். சரசாலையிலயிருந்து வன்னிக்கு வந்து என்னைக் கலியாணம் கட்ட அவருக்கு பலன் இருந்திருக்கு. இங்க எங்கட வீட்டிலயே வாழ்க்கை தொடங்கிச்சுது. இந்த காட்டு வாழ்க்கைக்கு அவரும் கொஞ்சம் கொஞ்சமாய் பழக்கமாயிட்டார். அடர்ந்த காட்டுக் குள்ள சுத்தித் திரிஞ்சம். எத்தினை சந்தோசம் அது.
என்ர அப்பு எனக்கு வைச்ச பேர் வன்னிநாச்சியார். அது மாறி இப்ப நான் எல்லாருக்கும் வன்னியாச்சி எண்டு ஆகிப்போனன். இந்த
45

Page 29
airafunds
ஊருக்கயே வயசு கூடினவள் நான்தான். என்னில எல்லாருக்கும் நல்ல மதிப்பும் மரியாதையும். எங்கட அமைதியான வாழ்க்கையெல்லாம் இப்ப கொஞ்சக்காலமாய் கலகலத்துப்போச்சு. ரோட்டுப்பிடிக்கிறது எண்டு ஆமிக்காரங்கள் வாறாங்களாம். ஒரே சண்டையும் சத்தமுமாய் கிடக்கு
நேற்று அம்மாளாச்சியின்ர கோயில் வாசல்ல நிற்கேக்க பொம்மர் வந்திட்டுது. "அய்யோ ஒடுப்பட்டு விழுந்து கிடந்திட்டுதுகள். பார்த்துக் கொண்டிருக்கேக்கயே நெருப்புப் பொறி மாதிரி ஏதோ விழுந்துது. காது செவிடாகிப்போனது மாதிரி சத்தம்.
ዘ ዞ
அய்யோ" எண்டு சனமெல்லாம் பதைபதைச்சு
கொஞ்சத்தூரத்தில இருந்த குளக்கட்டில குண்டு போட்டிட்டாங் கள் எண்டு பிறகுதான் தெரிஞ்சுது. அதில மாடு மேய்ச்சுக்கொண்டு நிண்ட கோவிந்தியின்ர சின்னப்பெடியன் உடம்பு சிதறிச் செத்துப்போச்சு. நேற்றுத் தொடக்கம் அதுகளின்ர வீட்டில அழுகுரல் கேக்குது.
"அம்மாளாச்சி. ஏன் இப்பிடியெல்லாம் நடக்குது?" "எங்களுக்கு ஏன் இந்தக் கலக்கமும் நெஞ்சிடியும்.?" வயது போன நேரத்தில எத்தினை ஆய்க்கினையள். இரவு வந்தாலே பயமும் பதட்டமுமாய்க் கிடக்கு. இப்பிடியே ஒவ்வொரு ராவிலும் பாயில இருந்து யோசிச்சுக் கொண்டிருக்க வேண்டிக்கிடக்கு, "ஏனணை ஆச்சி எழும்பி இருக்கிறாய், தண்ணி ஏதும் வேணு மே?" விறாந்தையின்ர மற்றப்பக்கத்தில படுத்திருந்த வன்னியசிங்கம் அவன் என்ர கடைசி மகன் கேட்டான்.
"எனக்கொண்டும் வேண்டாம் மோனை. நீ படு" எண்டு சொல்லிப் போட்டு தலைமாட்டில இருக்கிற கண்ணாடிப்பையை எடுத்துப்பார்த்தன். பொயிலைக் காம்போட ஒருதாள் தட்டுப்பட்டுது. தடவிப் பார்க்க மொறு மொறுவெண்டு இருக்கிற நூறு ரூபாத்தாள்.
இண்டைக்குப் பின்னேரம் பெரியவன் வந்தவன். எப்பவாவது பனங்காமத்திலயிருந்து இந்தப்பக்கம் அலுவலாய் வந்தால் என்னட்ட
46

தாமரைச்சைன்வி
வருவான். "எப்பிடியணை இருக்கிறாய்?" எண்டு கேட்டிட்டு அம்பதோ நூறோ தந்திட்டுப் போவான். இண்டைக்கும் காலமை வந்து நூறு ரூபா தந்திட்டு போனவன். இந்த நூறுரூபா இப்போதைக்கு எவ்வளவு பெரிய காசு. இப்ப வீட்டில சரியான கஷ்டம், வயல் செய்தும் லாபம் வாறேலை. அநியாயப்பட்ட ஆமிக்காரங்கள் பசளை மருந்தொண்டையும் இங்கால வர விடுறாங்களில்லையாம். வயல் என்னெண்டு விளையும்? வயல் செய்து களைச்சுப்போய் இப்ப கொஞ்சக் காலமாய் வன்னியசிங்கம், வைத்தி லிங்கத்தின்ர மிசின் ஒடுற வேலைக்குத்தான் போறவன். அதில கொண்டு வாற காசிலதான் குடும்பம் நடக்குது. ஏதோ காய்ச்சிற கஞ்சியில எனக்கும் ஒரு வாய் தருகுதுகள். இப்ப வைத்திலிங்கத்தின்ர மிசினும் பிழைப்பட்டு நிற்கிறதால உழைப்பும் இல்லை. என்ன செய்யிறது? ஊரொத்த கஸ்டம்தான். நாளைக்கு இந்த நூறு ரூபாவையும் வன்னிய சிங்கத்திட்ட குடுக்க வேணும். ஏதும் புளியை, உப்பை, மரக்கறியளை வாங்கிப் போடுவான். நேற்றிலயிருந்தே வீட்டில அது இல்ல, இது இல்ல எண்டு பவளம் சொல்லத் தொடங்கியிட்டுது. அவள் பாவியும் சமாளி சமாளி எண்டால் என்னெண்டுதான் சமாளிக்கிறது?
அப்பு இருக்கேக்க என்னைச் சீமாட்டி மாதிரி வைச்சிருந்தவர். நாச்சியார் நாச்சியார் எண்டு எத்தினை அருமையாய் வளர்த்தவர். வீட்டில ஒரு குறை இல்லை. மூட்டை மூட்டையாய் நெல்லு இருக்கும். அப்பு விட்ட வந்து வைத்தியம் பார்த்திட்டு சனம் தேனும் நெய்யும் Iரக்கறியு மெண்டு கொண்டு வந்து தருங்கள். இந்த வன்னிக்காடு தவிர எனக்கு வேற ஊர் தெரியாது. இங்க வந்து போற சனம் தவிர வேற முகம் தெரியாது. என்ர உலகமே இந்த வன்னிவிளாங் குளத்துக் ஆள்ளயே அடங்கிப் போயிட்டுது. ஆனாலும் நான் ராசாத்தி மாதிரி இருந்தனான்.
என்ர அப்புவோட இருக்கிறபோது இருந்த அதே செல்வாக்கு 4.1ண்ர மனிசன்ர காலத்திலயும் இருந்தது. அதிர்ந்து கதைக்க மாட்டுது. அப்பிடி ஒரு அப்பிராணி மனிசன். நல்ல உழைப்பாளி ஒருபக்கம் வயல் விதைப்பு மற்றப் பக்கம் வேற தொழிலும்.
47

Page 30
வன்னியாச்சி
நல்ல வடக்கன் மாடுகள் பூட்டின வண்டிலில காட்டுக்க போய் விறகு வெட்டி ஏத்தி மாங்குளத்தில இருக்கிற மரக்காலைக்கு கொண்டு போய் குடுக்கிறவர். யாழ்ப்பாணம், பருத்துறை, நெல்லியடியிலயிருந் தெல்லாம் மரம் ஏத்திப்போக ஆட்கள் வருவினம். ஊருக்குள்ள ஆரும் ஏதாவது ஏத்தி இறக்க வேணும் எண்டால் எங்கட வண்டிலைத் தான் பிடிப்பினம்.
அப்ப எல்லாம் வயலும் பஞ்சமில்லாமல் விளைஞ்சுது. அது மனசு நிரம்பின வாழ்க்கையல்லோ? என்ர மனிசன் உழைக்கிற காசை என்னட்ட தந்திடும். அதில மிச்சம் பிடிச்சு எத்தினை நகை நட்டு செய்து வைச்சிருந் தனான்.
இப்ப. இப்ப எல்லாம் வித்தாச்சுது. காதில இருக்கிற எட்டுக் கல்லுத்தோடு மட்டும்தான் மிஞ்சிக்கிடக்கு. மனிசன் போன கையோட என்ர வாழ்வான வாழ்வும் போயிட்டுது. பத்து வருசத்துக்கு மேலாயிட் டுது. இதுக்குள்ள என்ன பாடெல்லாம் பட்டிட்டன்.
வண்டிலில மனிசன் விறகு ஏத்திக்கொண்டு போன நேரம் காட்டுக் கரையில வைச்சு இந்தியன் ஆமி சுட்டுப்போட்டுது. என்ன ஏதெண்டு ஒரு கேள்வியில்லை. வயது போன மனிசன் எண்டும் பார்க்கேலை. கட்டையில போவாங்கள் ஒரு நிமிசத்தில சரிச்சுப் போட்டாங்கள்.
என்ர அம்மாளே. அண்டைக்கு அலறியடிச்சுக் கொண்டு ஓடிப்போய் விழுந்து குளறினது நேற்றுப்போல கிடக்கு அந்தச் சீமானையும் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையையும் நினைச்சு நினைச்சு இண்டை வரைக்கும் அழுது கொண்டிருக்கிறன்.
அப்ப பெரியவன் தன்னோட பனங்காமத்துக்கு வந்து இருக்கச் சொல்லிக் கேட்டவன். கற்சிலைமடுவில கலியாணம் முடிச்சிருக்கிற என்ர பெட்டையும் தன்னோட வரச்சொல்லிக் கேட்டவள். நான் ஒரு தரோடயும் போகேலை. இது நான் பிறந்து வளர்ந்த வீடு, சின்ன வீடுதான். ஒலையால மேஞ்ச வீடு, எந்தக் கோடையிலயும் குளுகுளு வெண்டு இருக்கிற வீடு.
48

தாமரைச்சிசன்வி
இந்த வீடு வாசல். என்ர கால் அளைஞ்சு விளையாடின இந்த முத்தம். என்ர அம்மாளாச்சி. இதெல்லாத்தையும் விட்டிட்டு என்னால எங்கயும் போக ஏலாது. இந்த இடத்தில இருந்து சாகவேனும் எண்டதுதான் என்ர ஆசை. அதால வீடு வாசலை வன்னியசிங்கத்துக்கு குடுத்திட்டு அவனோட இங்கயே இருந்திட்டன். இப்ப இந்த ஆசையில யும் மண் விழப்போகுது போலத்தான் கிடக்கு.
ஆமி கனகராயன்குளம் தாண்டி வாறான். மாங்குளம் வரப் போறான் எண்டு சனங்கள் கதைக்குதுகள். அதுக்குத் தக்கதாய் தெற்குப் பக்கம் நெடுகவம் சத்தங்களும் கேக்குது. ஒவ்வொரு சத்தத்துக்கும் நெஞ்சு நடுங்குது. என்ன நடக்கப் போகுதோ எண்ட பயத்தில தின்னக் குடிக்கக் கூட மனம் வருகுதில்லை.
"காந்தன்! என்ன நேரமடாப்பா?" பக்கத்தில படுத்திருக்கிற பேரனைத் தட்டிக் கேட்டன்.
"பத்து மணி வரும் ஆச்சி. நீ இன்னும் படுக்கேலையே. அது தூரத்தில் தான் சத்தம் கேக்குது. பயப்பிடாமல் கிடவணை."
அவன் தலையைத் தூக்கிச் சொல்லிப்போட்டு திரும்பிக் கிடந் திட்டான்.
"மெய்யே மோனை? ஆமிக்காரங்கள் முப்பது மைலுக்கு அடிக் கிற செல்லும் வைச்சிருக்கிறாங்களாம். அடிச்சுப் போடுறாங்களோ தெரியேலை."
"உதெல்லாம் உனக்கு ஆரணை சொன்னது?"
"ஏன் எனக்கென்ன காது செவிடே? உங்க கதைக்கிறது எனக்கும் கேக்கும் தானே."
"நீ அரைகுறையாய் கேட்டுப்போட்டு இருந்து யோசிச்சுக் கொண்டிருக்கிறியே? படுத்து நித்திரையை கொள்ளணை."
49

Page 31
ബ്ബിഗ്
நித்திரையும் வருகுதில்லையே, மனிசர் நிம்மதியாய் நித்திரை கொண்டு எவ்வளவு காலம். காத்தும் வீசுதில்லை. ஒரே புழுக்கமாய்க் கிடக்கு.
றோட்டால லொறி ஒண்டு இரைச்சலோட போகுது. இந்தக் காட்டுக் கிராமத்தில பரம்பரை பரம்பரையாய் இருக்கிற சனங்களை விட எழுவத்தேழிலயும் எண்பத்தி மூண்டிலயும் நாட்டில நடந்த இனக்கலவரத்தோட ஒரு நாப்பது குடும்பம் வந்து குடியேறி இருந்தது கள். குளக்கட்டில வாற தண்ணியில கமம் தோட்டம் எண்டு செய்து சீவிச்சுதுகள், பிறகு பசளை மருந்து வராமல் விட்ட பிறகு விவசாயமும் செய்யமுடியாமல் போயிட்டுது. விவசாயம் இல்லாததால் மற்ற சனத்துக்கும் வேலை தொழில் இல்லாமல் போயிட்டுது.
இப்ப பாதை பிடிக்கிற சண்டை தொடங்கின பிறகு எல்லாப் பக்கத்தாலயம் சனம் இடம் பெயர்ந்து வந்து வன்னிவிளாங்குளத்தில இருக்குதுகள். எப்பிடித்தான் இந்த சனங்களின்ர சீவியம் போகுதோ தெரியேல்ல. நிலையாய் இருக்கிற எங்கட பாடே பெரும்பாடாய் இருக்கேக்க இதுகள் பசி பட்டினியோடதான் இருக்க வேண்டி கிடக்கு
பசி இருக்கிற நேரங்களில பழைய நினைவு வரும். நெல்லு நிரம்பிப்போய்க்கிடந்த கொம்பறை இப்ப வெறுமாய் இருக்கிறதை பார்க்க வயிறு எரியும். பரம்பரைப் பெருமை பேசி என்ன இப்ப மிஞ்சிக் கிடக்கு? பசிதானே. சிலநேரம் அழுகை அழுகையாய் வரும். அம்மாளாச்சி யிட்ட சொல்லி அழுதிட்டு வருவன்.
கோவிந்தியின்ர வீட்ட அழுகிற சத்தம் இங்க வரை கேக்குது. பாவங்கள் இடம் பேர்ந்து வந்து இருந்த சனங்கள். இந்தப் பெடியன் மாடு மேய்ச்சுக் கொண்டு வாற காசிலதான் ஒரு நேரச் சாப்பாடு சாப்பிட்டுதுகள். இனி என்ன செய்யப் போகுதுகளோ..?
இவ்வளவு அவலத்தையும் எங்கட அம்மாளாச்சி என்னெண்டு பார்த்துக் கொண்டிருக்கிறாளோ எண்டு எனக்கெண்டால் விளங்கேலை. முதுகுச் சீலையை உதறி விரிச்சிட்டு சரிஞ்சு படுத்திட்டன். எத்தினைமணி வருமோ தெரியேல்லை. நான் நித்திரை கொண்டிருக்க மாட்டான்.
50

தாமரைச் சைன்வி
இருந்தாப் போல டொமார் டொமார் எண்டு செல் அடிக்கிற சத்தம் கேக்குது. அய்யோ. பக்கத்திலதான் எங்கயோ விழுந்திட்டுது. பதறித் துடிச்சுக் கொண்டு எழும்பியிட்டன். வன்னிய சிங்கத்தின்ர கடைசிப் பெடியன் வீரிட்டுக் கத்த பவளம் தூக்கிக் கொண்டு வெளியில ஓடி வந்தாள். எல்லாரும் ஓடிவந்து முத்தத்தில நிற்கினம்.
"ஆச்சி. ஆச்சி. எழும்பி வெளியில ஓடி வாணை. செல் அடிக் கிறாங்கள். காந்தன் பயத்தோட என்னைக் கூப்பிட்டான். எனக்கு கை கால் எல்லாம் நடுங்குது."
"ஏன் மோனை இங்க அடிக்கிறாங்கள்?" கேக்க ஏலாமல் வாய் தடுக்குது. சொல்லு வெளியில வராதாம் அடுத்த சத்தம் இன்னும் கிட்ட.
"ஆச்சி. ஓடி வாணை. எங்களோட வந்து முத்தத்தில நில்லு, பயப்பிடாதயணை."
அய்யோ. இடி இடிக்கிற மாதிரி அடிக்கிறாங்கள், என்னெண்டு பயப்பிடாமல் இருக்கிறது. எங்கட தலையில வந்து விழுந்தால் என்ன செய்யிறது?
றோட்டில சனத்தின்ர போக்குவரத்து தெரியுது. அவ்வளவு நேரமும் அமைதியாய் இருந்த றோட்டில சனம் பாய்ஞ்சு கொண்டு போகுது.
"வன்னியசிங்கம். நிற்கிறியேடாப்பா..?" றோட்டில மாப்பாணன்ர குரல் கேக்குது. "ஒமண்ணை நிற்கிறம். எங்க வந்து செல் விழுகுது?" "கிட்டக்கிட்டத்தான் வந்து விழுகுது. ஆச்சியையும் பிள்ளையளை பும் கூட்டிக்கொண்டு வா, கொஞ்சத் தூரத்தில போய் நிற்பம். சத்தமும் விடாமல் கேக்குது. ஆமிக்காரங்கள் முன்னேறி வாறாங்களோ தெரியேலை."
51

Page 32
alaafavirafa
மாப்பாணன்ர குரல்ல அவசரமும் பதட்டமும் தெரியுது.
அய்யோ. ஆமி வாறானோ. என்ர அம்மாளே.
அடுத்த சத்தம் கேக்க நாங்கள் குளறிக் கொண்டு றோட்டுக்கு வந்திட்டம். இருட்டுக்க தட்டுத் தடவிக்கொண்டு அம்மாளாச்சியின்ர கோயிலுக்க போய் கொஞ்சநேரம் நிண்டம்.
"ஆரப்பா அங்க கோயிலுக்க நிற்கிறது. விசர்ச்சனங்கள் கொஞ்சம் தூரத்துக்கு போங்கோவன்."
ஆரோ கத்திச் சொல்லிப் போட்டுப் போறான்.
கிட்டடியில செல் விழுந்து வெடிச்சதாக்கும். வெடிமருந்து தலை சுத்திற அளவுக்கு மணக்குது. றோட்டில குளறி அழுகிற சத்தம் கேக்குது. வைத்திலிங்கத்தின்ர கடைசிப் பெட்டைக்கு செல் பட்டிட்டுதாம். ரத்தம் வழிய வண்டிலில தூக்கிப் போட்டுக் கொண்டு மல்லாவி ஆஸ்பத்திரிக்கு போகினமாம்.
அந்தப் பெட்டைக்கு கலியாணம் முற்றாக்கியல்லே இருந்தது என்ன அநியாயமடாப்பா..?
இதுக்குள்ள இருந்தாப்போல றோட்டால மாடுகளும் மூசிக் கொண்டு ஓடுது. குளக்கட்டுப் பக்கம் செல் விழுந்திருக்கவேணும். பட்டி பிரிச்சு மாடுகளும் பயந்து போய் மனிசரோட ஓடுது.
"நீங்கள் முன்னால நடவுங்கோ நாங்கள் வீட்ட பூட்டிக் கொண்டு வாறம்."
வன்னியசிங்கமும் பவளமும் திரும்பி வீட்டுப்பக்கம் போக காந்தன் என்னையும் தாரணிப் பெட்டையையும் பிடிச்சுக் கொள்ள சனத்தோட நடந்தம். அம்மாளாச்சியின்ர கோயிலை விட்டுப்போக கால் தயங்குது என்ர ஆச்சியை விட்டுப்போறதோ எண்டு மனம் கலங்குது.
"ஆச்சி கவனமாய் நடவணை. இருட்டுக்க தடக்குப்பட்டுப் போவாய்."
52

தாமரைச்எசன்வி
காந்தன் என்ர கையை இறுக்கிப் பிடிச்சுக் கொண்டு வாறான்.
இருட்டுக்க கண்ணும் தெரியேலை, ஒரு மண்ணும் தெரியேலை, றோட்டில எங்க பள்ளம் புட்டி இருக்கெண்டும் தெரியேலை கோதாரி விழ சீலையும் தடக்குது.
ஏன் இப்பிடி நடுச்சாமத்தில செல்லை அடிக்கிறாங்களாக்கும். பயக் கெடுதியில எல்லாருக்கும் நித்திரையும் முறிஞ்சு போச்சு. இருட்டுக்க ஒருதரையும் அடையாளம் தெரியேலை. ஆனா அன்னத்தின்ர குரலும் செல்லாச்சியின்ர குரலும் கேக்குது. மில்கார வீரசிங்கம் பெரிய குரலில கதைக்கிறதும் கேக்குது.
நாலாங்கட்டை சந்தியோட வீரசிங்கம் ஆட்கள் பாண்டியன்குளம் பக்கம் திரும்பி நடந்துதுகள். நாங்கள் வடகாடு வரைக்கும் போவம் எண்டு நேர நடந்தம்.
முன்னால போன சைக்கிள் கண்ணுக்குத் தெரியேலை மோதுப் பட்டு விழுந்து போனன். பாழ் பட. கண்ணும் தெரியேல்லை. உந்தச் சைக்கிளை ஒரு பக்கமாய் கொண்டு போனால் என்ன.? காந்தன் என்ர கையைப் பிடிச்சுத் தூக்கிவிட்டான். காலில நோகுது. கல்லு இடிச்சுப் போட்டுது. அய்யோ எண்டு அழவேணும் போல கிடக்கு அம்மா அம்மா எண்டு பயத்தில அழுத தாரணிப் பெட்டையை காந்தன் சமாதானப்படுத்தி கூட்டி வாறான்.
கால் உழைய றோட்டுக் கரையில இருந்திட்டம். மனப்பதை பதைப்பில என்னையு மறியாமல் கண்ணிலயிருந்து தண்ணி வழியுது. பின்னால ஆரோ லாம்பு பிடிச்சுக்கொண்டு வருகுதுகள்.
"இஞ்ச ஆரப்பா அது, லாம்பை நூர் வெளிச்சம் பார்த்திட்டு இங்க செல்லை அடிக்கப் போறாங்கள்." எண்டு ஆரோ கத்த அதுகள் லாம்பை நூர்த்துப்போட்டு இருட்டுக்க நடந்து வருகுதுகள்.
கொஞ்சநேரத்தில வன்னியசிங்கமும் பவளமும் வந்து எங்களைப் பிடிச்சிட்டினம். ரெண்டு பசளைப்பையளில சாமான்களைக் கட்டிக் கொண்டு வந்திருக்கினம்.
53

Page 33
ovarafunafa
திரும்பவும் நடக்கத் தொடங்கினம். மெல்லிசாய் விடியத் தொடங்க வடகாடு வரை வந்திட்டம். இனி நடக்க ஏலாது எண்டு சந்தியிலயே இருந்திட்டம். மூண்டு கட்டைக்கு மேல நடந்து வந்தாச்சு இனி அவ்வளவு பயப்பிடத்தேவையில்லை எண்டு வன்னியசிங்கம் சொல்லுறான். எண்டாலும் கை கால் எல்லாம் பதறிக் கொண்டுதான் இருக்குது. பிள்ளையளின்ர முகங்களில் பசியும் களைப்பும்.
சந்தியில இருந்த தேத்தண்ணிக் கடையில தேத்தண்ணி வாங்கி குடிச்சம். நேரம் போகப் போக சத்தங்களும் கூடிக்கொண்டு போச்சு. ஒவ்வொரு சத்தமும் நெஞ்சில விழுமாப்போல கிடக்கு.
திடீரெண்டு பொம்மர் சத்தமும் கேக்குது. ஐயோ கிபிர் வந்திட்டுது எண்டு கொஞ்சநேரம் சந்தியில நிண்ட சனம் பதறிக் கொண்டிருந்துதுகள். அய்யோ. அம்மாளாச்சி இப்ப எங்க ஓடித்தப்பிறது.? சந்தியிலயல்லே இருக்கிறம்.
கொஞ்சத்தூரத்தில சுத்திப்போட்டு அது போட்டுது. அதுக்குப் பிறகுதான் கொஞ்சம் மூச்சு வந்துது. பத்து மணிக்கு ஒட்டறுத்த குளம் வந்திட்டம். வெய்யில் சுள்ளெண்டு எறிக்குது. ஒரு மரத்துக்குக் கீழ இருந்திட்டம். ஒரு காலமும் இப்பிடி நாங்கள் வெளிக்கிட்டு ஓடி வரேலை. எங்க போறது. என்ன செய்யிறது. எண்டு ஒண்டுமாய் விளங்கேலை. பனங்காமத்துக்கு பெரியவன் வீட்ட போகலாம்தான். ஏதோ வன்னிய சிங்கத்துக்கு தெரியும்தானே?
நடந்த களைப்பு அடி வயித்திலயிருந்து மூச்சு வாங்குது. சின்னட் பெடியன் பவளத்தின்ர இடுப்பில இருந்து அழுதுகொண்டேயிருந்தான் மத்தியானம் ஒரு மணிக்கு மேல சத்தமெல்லாம் நிண்டிட்டுது ரெண்டு மணிக்கு மேல வயிறு புகைய பசி பசி எண்டு பேரப்பிள்ளையஸ் அழத்தொடங்கியிட்டுதுகள்.
பசிதான். காதை அடைக்குதுதான். ஆனா நான் கிழவி அழ ஏலுமே..? வயிறு காந்த காந்த பேசாமல் இருக்கிறன். வன்னியசிங்கம் கவலையோட நிற்க எனக்கு விளங்கியிட்டுது. அவனிட்ட காசு இல்லை.
54

தாமரைச்சென்வி
இருந்த காசுக்கு காலமை எல்லாருக்கும் தேத்தண்ணி வாங்கித் தந்திட்டான். இப்ப ஆளுக்கொரு பணிசு வாங்கிற தெண்டாலும் காசு வேணுமே. கடை வாசலில இருந்த றம்முக்குள்ள இருக்கிற தண்ணியைத் தான் கொண்டு வந்து திருப்பித் திருப்பி தந்தான். சுத்தி நிண்ட சனங்களுக்குள்ள போய் நாலைஞ்சு பேரிட்ட, "காசு ஏதும் இருக்கோ?" எண்டு கேட்டுப்பார்த்தான். கிடைக்கேலை போல இருக்கு நாடியை தேய்ச்சுக்கொண்டு கவலையாய் நிண்டான். பசி பசி எண்டு பிள்ளையஸ்
அழ "ஒரு பணிசு வேண்டக் கூட காசில்லையே." எண்டு பவளம் கவலைப்பட்டுச் சொல்லத்தான் எனக்குப் பகீரிட்டுது. என்ர பொயிலைப்
பையுக்க கிடக்கிற காசு இப்பதான் நினைவுக்கு வந்துது.
"அம்மாளாச்சி. என்ர காசு." எண்டு நான் குளறின சத்தத்தில எல்லாரும் என்னைத் திரும்பிப் பார்க்கினம்.
நூறுரூபா எவ்வளவு பெரிய காசு, இப்ப எங்கட பசியை தீர்த்திருக் குமே? தடுதாளியில விட்டிட்டு வந்திட்டனே.
எனக்கு அதுக்குப் பிறகு இருப்புக் கொள்ளேலை. நாலு மணி யாச்சு, ஊர்ப்பக்கம் என்ன நிலைமையோ எண்டு பார்க்க வெளிக்கிட்ட ஆட்களோட நானும் வாறன் எண்டு சொல்ல;
"உனக்கென்ன விசரே. பேசாமல் இரு." எண்டு என்னை அதட்டிப் போட்டுதுகள்.
"அப்ப என்ர காசு." "நான் போய் எடுத்துக்கொண்டு வாறன். நீங்கள் எல்லாரும் இங்கயே இருங்கோ" எண்டு சொல்லிப்போட்டு வன்னியசிங்கம் வெளிக்கிட்டான்.
"கிடந்த பாய் கூட சுத்தேலையடாப்பா. தலைமாட்டில பொயிலைப் பையுக்க இருக்கு. வடிவாய்ப்பார்."
அப்பதான் மாப்பாணன் ஓடி வந்தான்.
55

Page 34
avapaioarafa
"நான் ஊருக்குப் போய்ப் பார்த்திட்டு இப்பதான் வாறன். உன்ர வீடு செல்பட்டு அப்பிடியே எரிஞ்சு சாம்பலாய்ப் போய்க்கிடக்கு."
வன்னியசிங்கமும் பவளமும் அய்யோ எங்கட வீடு எண்டு குளறி அழ நான் ஏங்கிப்போய் நிண்டிட்டன். எனக்கு காதை அடைச்சுக் கொண்டு வந்திட்டுது.
என்ர நூறுரூபாக் காசு. அய்யோ. அதுவும் வீட்டோட
எரிஞ்சிருக்கும், நூறுரூபாக்கும் இப்ப பத்துறாத்தல் பாண் வாங்கலாமே? ரெண்டு நாளைக்கு எங்கட பசியை தீர்த்திருக்குமே.
என்ர அம்மாளாச்சி. என்ர காசு.
-"புதுவசந்தம்” தேசிய கலை இலக்கியப் பேரவையின்
வெள்ளிவிழாச் சிறப்பிதழ் -1999
56

முகழுற்றவர்கள்
இன்றைக்கு ஏதோ ஒன்று நடக்கப் போகிறது. அப்படித்தான் அவனின் மன உணர்வு உள்ளுக்கிருந்து சொல்லியது. அது நல்லதா கெட்டதா என்று தெரியவில்லை. எதையும் ஊகிக்க முடியவில்லை. அதை விடப் பெரும் பிரச்சினைகள் வெளியே இருக்கின்றன. மனதை ஆராய நேரமில்லை. இப்போதுள்ள சூழ்நிலையில் என்ன தொழிலைச் செய்வது என்று மிகவும் தீவிரமாக அவன் யோசித்துக் கொண்டிருந்தான். இன்னும் சில நாட்கள் கடந்தால் இதே யோசனையில் விசர் கூடப்பிடித்து விடக் கூடும். இந்த சிந்தனை அவனுக்கு பெரும் கவலையைத் தந்தது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் ஒரே தொழில்தான், நினைவு தெரிந்த நாட்களிலிருந்து அவன் வயலோடுதான் வாழ்ந்து வந்திருக் கிறான். கிராமத்தின் மேற்குப்புறமாக ஊர் எல்லையில் விரிந்திருக்கும் அந்த வயல் தாண்டி அவன் சிந்தனைகள் எங்கேயும் போனதில்லை. அவனைப் பற்றி அந்த ஊருக்கே ஒரு அபிப்பிராயம் இருந்தது.
"அந்தப் பெடியன் ஒரு அப்பிராணி மிதிச்ச புல்லு சாகாது." "அவன் சத்தம் போட்டுக் கதைச்சதை நாங்கள் கேட்டதே இல்லை. தானும் தன்ர பாடுமாய் இருப்பான். கோபம் எண்டதே அறியாத
'ள்ளை."
இந்தக் கூற்றுக்கள் எல்லாம் அம்மாவின் வாயால் வீட்டில் வைத்து மறு ஒலிபரப்பு செய்யப்படும். வீட்டில் உள்ள எல்லோருமே அவனு
57

Page 35
aafugafa
டைய இந்த அப்பாவிக் குணத்தை நினைத்து நிறையப் பெருமைப் பட்டார்கள். அப்பா, அம்மா, தங்கைகள் என்ற வட்டத்துடனேயே அவனுடைய உலகம் அடங்கிப்போயிருந்தது.
சின்ன வயதிலிருந்தே அவனுக்கு சிநேகிதர்கள் என்று யாருமே இருந்ததில்லை. யாருடனும் அதிகம் நெருக்கமாய் பழகியதில்லை. கிராமத்தின் எல்லையில் உள்ள மைதானத்தில் அவன் வயதை ஒத்தவர்கள் கால் பந்து விளையாடிக் கொண்டிருக்கையில் அவன் அந்த மாலை நேரத்தில் வயலில் நின்று கொண்டிருப்பான். நீண்டு பரந்து விரிந்து கிடந்த அந்த வயலில் அடிவானத்தில் மறையத் தொடங்கியிருக்கும் சிவப்பு சூரியனை பார்த்துக் கொண்டிருப்பான். அப்பா வயல் வேலைகளை முடித்துக் கொண்டு ஓடுகின்ற வாய்க்கால் நீரில் கைகால்களை கழுவிக் கொண்டு வரும் வரையில் அவன் வரம்புகளில் நடந்து கொண்டிருப்பான். அந்த வயலின் ஒவ்வொரு மண்ணிலும் அவன் காலடிகள் பதிந்திருக்கிறது. விதைப்புக் காலங்களில் ஆட்கள் நெல்லை விதைக்கும் போது சின்னச் சின்ன வேலைகள் செய்து கொடுப்பான், அவர்கள் மிக இயல்பாக நெல் விசிறுவதை வியப்போடு பார்த்து நிற்பான், அந்த நெல்மணிகள் முளைத்துப் பயிராகும் போது ஏற்படும் பரவசம் தனியானது.
வயல் மீது ஏற்பட்ட ஈடுபாடு அதிகமானதால் படிப்புக்கூட தூரமாய் விலகிப் போனது. வயலில் களை பிடுங்கும் காலங்களில் அவன் பாடசாலைக்கு போவதே இல்லை. ஊரில் உள்ள ஆண்களும் பெண் களுமாக களை எடுக்க வருவார்கள். அவர்கள் வேலை செய்யும் போது கவனித்துக் கொள்ள அவனை வயலில் விட்டு அப்பா வேறு வேலை பார்க்கப் போய் விடுவார். அப்பாவுக்கு நிறைய வேலைகள் வெளியே இருக்கும். நகரத்துக்குப் போய் பூச்சி மருந்து, உரவகைகள் வாங்கி வர வேண்டும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்க சந்தைக்கோ கடைக்கோ போக வேண்டியிருக்கும். அதனால் களை பிடுங்குபவர்கள் கதைத்து பொழுதைக் கழிக்காமல் ஒழுங்காக வேலை செய்கிறார்களா என்று அவன்தான் கவனித்துக் கொள்ளவேண்டும்.
58

தாமரைச் சைன்வி
தெருவின் மறுபக்க வாய்க்கால் கரையில் நிற்கும் பொன்னுத் துரை அப்புவின் மாமரத்திலிருந்து பிடுங்கி வந்த மாங்காய்களை காற்சட்டைப் பைக்குள் நிரப்பி வைத்துக்கொண்டு வரம்பில் அமர்ந்து ஒவ்வொன்றாக கடித்தபடி வேலை செய்பவர்களை கவனிப்பான். அவர்கள் கொண்டு வந்த வானொலிப் பெட்டி வரம்பில் இருந்து பாடிக் கொண்டிருக்கும். வரம்புக்கு அந்தப்பக்க வயலில் ஆண்களும் இந்தப் பக்க வயலில் பெண்களுமாக நின்று வேலை செய்வார்கள். பாட்டுக்கும் மேலாக அவர்கள் கதைப்பதும் சிரிப்பதுமாக வேலை நடக்கும். ஊர்க் கதைகள் எல்லாம் அவர்கள் வாயில் அடிபட்டுக் கொண்டிருக்கும் புல்லுக்கட்டுக்கள் வரம்பின் மீது வரிசையாய் விழும். மாலையில் அப்பா வந்து அந்த புற்கட்டுக்களின் வேர்ப்பகுதியை காலால் அழுத்தி வைத்துக்கொண்டு அரிவாளால் சர் சர்ரென்று அறுத்து பசளைப் பையில் அடைத்துக் கொள்வார். சைக்கிளின் பின் கரியரில் ஏற்றிக் கட்டிக் கொண்டு வீடு போவார்கள்.
செங்காரிப் பசுவும் அம்பாலிக் குட்டியும் இந்தப் புல்லுக் கட்டு களுக்காக வீட்டில் ஆசையோடு பார்த்துக் கொண்டிருக்குங்கள். அதனால் வரம்பில் அவர்கள் போடும் புல்லுக்கட்டுக்களைக் கூட அவன் கவனமாய் பார்த்துக் கொள்வான்.
"நாங்கள் கதைக் கிறமோ சிரிக்கிறமோ அல்லது வேலை செய்யிறமோ எண்டு பெடியன் பள்ளிக் கூடத்துக்கும் போகாமல் நிண்டு பார்த்துக் கொண்டிருக்குது. கதைக்காமல் வேலையைப் பாருங் கோவனப்பா" என்று செல்லம்மா கிழவி சொல்லுவாள். அவள் குரலில் இருக்கும் கேலி அவன் மனதுக்குள் சுருக்கென்று பாயும். அவன் உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு பேசாமல் இருப்பான்.
செல்லம்மா கிழவியை இனி எங்கட காணிக்க புல்லுப்பிடுங்க வரவிடக் கூடாது என்று அப்பாட்ட சொல்லி நிற்பாட்டவேணும் என்று மனதுக்குள் கறுவிக் கொள்வான். இதே செல்லம்மாக்கிழவிதான் பின் நாளிலும் "இது அப்பிராணிப் பேய்ப் பெடியன்" என்றும் சொல்லி வந்திருக்கிறாள். இந்த பேய்ப்பெடியன்' என்ற வார்த்தை அவன் மனதை
59

Page 36
avafaunafs
மிகவும் பாதித்தது. ஆனாலும் கிழவி மீது கோபித்துக் கொள்ள முடிய
வில்லை.
ஏனோ சின்ன வயதிலிருந்து அவன் இந்த விதமாகத்தான் வளர்ந்து வந்திருக்கிறான். அப்பாவின் மறைவு வயலோடுள்ள அவனது பரிச்ச யத்தை இன்னும் அதிகமாக்கியது.
ஒருமுறை கிராமத்தின் நுழைவாயிற் சந்தியில் வைத்து இராணு வத்தினரால் ஆறுபேர் சுடப்பட்டு இறந்து போனார்கள். கிராமத்தில் முதன் முதலில் கேட்ட வெடிச்சத்தங்கள் அவை. அன்றைய நாளில் சுடப்பட்டு இறந்தவர்களில் அப்பாவும் ஒருவரானார். சரிந்து விழுந்தி ருந்த அப்பாவின் அருகே சைக்கிளும் பின்னால் கட்டிய யூரியா உரப்பையும் ரத்தத்தில் தோய்ந்திருந்த காட்சி இப்போதும் நினைவில் இருக்கிறது. அன்றைக்கு பதினாலு வயதில் படிப்பை அப்படியே விட்டு விட்டு வயலோடு தன் முழுநேரத்தையும் இணைத்துக் கொண்டான். பயிர்களின் ஒவ்வொரு வளர்ச்சியும் அவனது கவனிப்பில் இருந்தது. தண்ணீர் வயலுக்கு விடும் நாட்களில் இரவு பகலாக வயலோடு நின்று விடுவான். வரம்பில் நடக்கும் போது குறுக்காக வழுக்கிக் கொண்டு தண்ணிருக்குள் விழும் பாம்புக்கும் பயமில்லாது போயிற்று.
வயலுக்கு மேற்குப் புறமாக மரியக்கண்டுக் கிழவனின் குடிசை தண்ணீர் பாய்ச்ச வயலில் நிற்கும் இரவுகளில் அலுப்பே தெரியாது. மரியக்கண்டுக் கிழவன் நாட்டுக் கூத்துப்பாட்டுக்களை சத்தம் போட்டுப் பாடுவதை விடிய விடியக் கேட்கலாம்.
மண்வெட்டி பிடித்ததில் தோளில் உரம் ஏறியது. ஒவ்வொரு இலைநுனியும் அவன் பார்வையை தவிர்த்து வளர முடியாது போயிற்று. இலை மடிந்து புழு இருந்தால் மடிச்சுக்கட்டிக்கு மொனோ கொட்டபஸ் அல்லது தமறோன் அடிக்க வேணும். பங்கஸ் தாக்கத்துக்கு பாஷா போடவேணும். கதிர் வருகின்ற பருவத்தில் சந்து குத்தி நோய்க்கு புறுடான் போடவேணும். யூரியா போடும் காலம் ரீ.ரீ. எம் போடும் காலம் எல்லாம் அத்துப்படியாயிற்று. அரிவுவெட்டு, சூட்டடி காலங்கள் ஆனந்த மயமானவை. சூடடித்து நெல் மூட்டை மூட்டையாய் வீட்டில்
60

தாமரைச் சைன்வி
வந்து இறங்கும். யாழ்ப்பாணம், சுன்னாகம், நெல்லியடியிலிருந்து லொறிகள் வரிசையாய் ஊருக்குள் வரும். நெல்லு புறோக்கர் வீரசிங்கண்ணை ஒவ்வொரு வீட்டுக்கும் கூட்டி வந்து நெல்லுகளை ஏற்றிக் கொடுப்பார். கையில் காசு வரும். அன்றுதான் வீட்டில் புதுவருஷப்பிறப்பு, தீபாவளி எல்லாம் கொண்டாடப்படும். சித்திராவும், தேவியும் புது உடுப்புக்கள் எடுத்துக் கொள்வதும் அப்போதுதான்.
பங்குனி, சித்திரை முடிய வைகாசியில் சிறுபோக விதைப்பு ஆரம்பமாகும். குத்தகைக்கு சற்றுத்தள்ளி காணி எடுத்து விதைப்பான். இந்த வேலைகளில் தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்டதால் வெளியுலகில் ஏற்பட்ட மாற்றங்கள் அவன் மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
மிகவும் அதிகாலை நேரம் அவன் கிராமம் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு இளைஞர்கள் வகை தொகையின்றி கைது செய்யப் பட்ட நேரம் அவன் தண்ணிர் பாய்ச்சுவதற்காக வயலில் நின்றிருந்தான்.
எட்டு மணிக்கு வயலுக்கு வந்த சண்முகண்ணை,
"ஊர்ப்பக்கம் போயிடாத தம்பி ஆமிக்காரங்கள் ஊருக்குள்ள நிற்கிறாங்கள். மத்தியானத்துக்குப் பிறகுதான் பார்த்துப் போ." என்றார். நல்ல வேளை தப்பித்தோம் என்று நினைத்ததில் மற்றவர்களின் நிலமை மனதில் உறைக்கவில்லை.
இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாய் காலம் தன் மாற்றத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தது. மிக அருகாமையில் இருந்த இராணுவ முகாம் அவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாய் மாறியது. இராணுவ நகர்வுக்கும், எறிகணை வீச்சுக்கும் அடிக்கடி ஆளாக நேர்ந்தது. ஒரு 1ாலை நேரம் ஊர் எல்லை மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுள் தேவராசாவையும், இளங்கோவையும் பிடித்து இழுத்துக் கொண்டு போனார்கள். மறுநாள் மதகுக்கரையில் அவர்களின் இறந்த உடல்களைக் கண்ட ஊர் அல்லோல கல்லோலப்பட்டது. காலையில் களை பிடுங்க வயலுக்கு ஆட்கள் வரவில்லை. அவன்
61

Page 37
வன்னியாச்சி
வயலில் நிற்பதைக் கண்ட மரியக்கண்டுக்கிழவன் ஊரில ரெண்டு செத்த வீடு நடக்குது. உனக்கு வேலை செய்ய சனம் வாறம் எண்டதுகளே" என்றபோது அந்தக் குரலில் இருந்த எரிச்சல் அவனை மெலிதாய் சுட்டது.
கடந்து போகும் நாட்கள் அவ்வளவு மகிழ்ச்சியானதாக அமைய வில்லை. கிராமத்தில் அவலக்குரல்கள் காற்றில் கலந்து கரைந்தன. திகிலும் பதட்டமுமாய் இரவுகள் கனத்துப் போயின. செல்லம்மாக் கிழவியின் பேரனும் சண்முகண்ணையின் மகனும் இப்போதெல்லாம் வீட்டுக்கு வருவதில்லையாம், இயல்பான வாழ்வில் தழும்பல்களும் தடுமாற்றல்களும் தொடங்கிவிட்டன. பார்க்கும் தூரத்தில் வானத்தி லிருந்து குத்தி இறங்கும் குண்டு விமானங்களின் ஓசைகள் அடி வயிற்றைக் கலக்கின.
சில சுற்றிவளைப்பு நேரங்களில் அவனும் அகப்பட நேர்ந்தது. அன்றைய ஒருநாள் மிகவும் துக்ககரமான மறக்க முடியாத தினமாகியது. மத்தியானச் சமையலுக்கு சந்தையிலிருந்து மீனும் கீரையும் பயிற்றங் காயும் வாங்கப்போனபோது சந்தியெல்லாம் இராணுவம் நிறைந்திருந்தது. வாங்கிக்கொண்டு அவசரமாய் வீட்டுக்கு வந்த அரைமணி நேரத்தில் கிராமத்துக்குள் இராணுவம் வந்தது. அவனது வீட்டுக்குள் வந்த ஏழுபேரும் மிகவும் கோபத்தில் இருந்தார்கள். என்ன ஏதென்று எதுவும் கேட்காமல் அவனை அறைந்தார்கள். அவன் தடுமாறி நிலத்தில் விழ காலால் உதைத்தார்கள். அம்மாவை சுவரோடு நிறுத்தி தோளில் பிடித்து உலுப்பினார்கள். சித்திராவை நாலுபேர் வளைத்து நின்று கழுத்தில் கை வைத்து உறுமினார்கள். கன்னத்தில் மாறி மாறி அடித்தார்கள். சித்திரா திமிறிக்கொண்டு அம்மாவிடம் ஓடி வர முனைந்த போது தோள் பக்க சட்டையைப்பிடித்து இழுத்ததில் சட்டை கைப்பக்கம் கிழிந்து தொங்கி .للسلا
"அய்யோ" என்று கைகளால் தோளைப்பிடித்துக் கொண்டு அம்மாவிடம் சித்திரா ஓடிப்போனாள்.
"எல்லாம் சந்திக்குப் போ. அங்க போய் நில்லு."
62

தாமரைச்சென்வி
என்று ஒவ்வொருவரையும் தள்ளினார்கள். விக்கித்தப்போய் நின்ற சித்திராவின் கண்களில் நீர் நிறைந்தது.
"எல்லாம் நட. எல்லாம் நட." அதட்டினார்கள்
சித்திரா சட்டென்று கயிற்றுக் கொடியில் இருந்த துவாயை எடுத்து இரு தோளிலும் சுற்றிப்போர்த்திக் கொண்டு முன்னால் நடந்தாள். அவளின் முகம் சிவந்து போயிருந்தது. அம்மாவும் தேவியும் சித்திராவுடன் நடக்க அவன் தடுமாறிக் கொண்டே பின் தொடர்ந்தான்.
முழங்கால்களில் வலித்தது. சித்திராவின் கண்ணிர் மனதை கலவரப் பட வைத்தது.
கிராமமே சந்தியில் - வெறும் தெருவில் அமர்ந்திருந்தது. "பாவியள் அடிச்சுத் தள்ளிக்கொண்டு வந்திட்டாங்கள்"
பாக்கியம் மாமி புலம்பிக் கொண்டிருந்தாள். தங்களுக்கு மட்டு மில்லை எல்லோருக்கும்தான் இந்த அவமானம் என்பது புரிந்தது. தலைகுனிந்து அமர்ந்திருந்த சித்திராவின் தோளை அம்மா ஆதரவாக பிடித்துக் கொண்டிருந்தாள்.
"சித்திராவுக்கு ரெண்டு நாளாய் சரியான காய்ச்சல்" என்று அம்மா பாக்கியம் மாமிக்கு சொல்லும் குரல் மெலிதாய் கேட்டது. தோளைச் சுற்றி துவாயைப் போர்த்தியிருந்ததற்கு பொருத்தமான காரணமாக இது அமையும் என அம்மாவுக்கு தோன்றியிருக்கலாம். அம்மாவினதும் சித்திராவினதும் பரிதவித்த முகங்களைப் பார்க்க அவனுக்கு கவலையாக இருந்தது.
வாகன இரைச்சலும் சப்பாத்து ஒலிகளும் அவர்களின் உறுமிய குரல்களும் இவர்களைச் சுற்றி வலம் வந்தன. எல்லோர் முகங்களிலும் திகிலும் பதட்டமும் அப்பிக்கிடந்தன. அவன் வயதை ஒத்த இளைஞர் களை சப்பாத்துக்காலால் உதைத்தார்கள். பக்கத்தில் இருந்த யோகனுக்கு வாயோரம் ரத்தம் வழிந்தது.
63

Page 38
வன்னியாச்சி
"இவர்கள் ஆர் எங்களை உதைய?"
ஆத்திரத்துடன் யோகன் முணுமுணுப்பதைக் கேட்க மனதுக்குள் கலவரம் எழுந்தது.
"என்னடா முறைக்கிறாய்?"
சப்பாத்துக் கால் மறுபடி உதைய யோகன் சத்தம் போட்டு அலறினான். பகல் முழுவதும் வெய்யிலுக்குள் இருத்தி வைத்து விட்டு மாலையில் வீட்டுக்கு போகச் சொன்னார்கள். இரவு விளக்கு வெளிச் சத்தில் சித்திராவின் சிவந்த முகத்தில் வரி வரியாய் விரல்களின் தடங்கள் பதிந்திருப்பதைப் பார்த்தான். மனம் பாரமாய்க் கனத்தது. இரவு யாரும் சாப்பிடவில்லை. சித்திராவின் விம்மல் வெகுநேரம் கேட்டுக் கொண்டி ருந்தது. அவன் புரண்டு புரண்டு படுத்தான்.
"ஏதோ இந்த மட்டில விட்டிட்டு போயிட்டாங்கள் தானே. இன்னும் ஏன் அழவேணும்?"
அவனின் வார்த்தைக்கு யாரும் பதில் தரவில்லை. அமைதி கலைந்து கிராமம் விடிகாலையில் விழித்துக் கொண்ட போது நாலுபேரைக் காணவில்லை என்றார்கள். அவனுக்கு ஏனோ யோகனின் நினைவு வந்தது.
நகரும் நாட்கள் இன்னும் இறுக்கமாய் மாறின. பொருளாதாரத் தடையால் பூச்சிநாசினிகள், உரவகைகள் எதுவும் இவர்களிடத்துக்கு வரவில்லை. வயல் செய்வது சிரமமாயிற்று. வயல் விளைந்து தரவில்லை. கொத்துக் கொத்தாய் நெல் மணிகள் விளைந்து நின்ற காலம் போய் ஈர்க்குச்சியாய் நிற்கும் நெல்மணிகளைப் பார்த்த போது வயிறு எரிந்தது. மண்ணில் சம்பாதித்த செல்வமெல்லாம் மறுபடி மண்ணுக்குள்ளேயே கரைந்து மறைந்தது.
எறிகணை வீச்சுக்கள் அதிகமாகும் போது இடம்பெயர்ந்து அயற்கிராமங்களில் போய் தற்காலிகமாய் தஞ்சமடைய வேண்டிய தாயிற்று. அப்படி ஒரு தடவை சற்றுத் தூரத்தில் இருந்து விட்டு சத்தங் கள் அடங்கியதும் திரும்பி வந்த போது குண்டு வீச்சினால் வீடு இடிந்து
64

தாமரைச் சென்வி
போய் கற் குவியலாய் கிடந்தது. வாய் விட்டு அலறத் தோன்றியது. வீடு இழந்த பின்பும் அந்த இடத்தை விட்டுப்போக மனம் வரவில்லை. முன்பக்கம் திண்ணை வைத்து ஒரு குடிசை அமைத்துக் கொண்டான். ராணுவத்தின் நகர்வு ஆரம்பிக்கும் போது தூரத்துக்கு போவதும் சத்தங்கள் அடங்கிய பின் மறுபடி கிராமத்துக்கு வருவதுமாக அமைதி யில்லாமல் நாட்கள் நகர்ந்தன.
ஒரு தடவை பாரிய ராணுவ நடவடிக்கை காரணமாக நிரந்தரமான இடப்பெயர்வு ஏற்பட்டு விட்டது. கிராமத்தை விட்டு வெகு தூரம் வந்தாகிவிட்டது. குடிசை என்றாலும் இருந்த வீடும் வாசலும் தென்னை மரங்களும், மாமரங்களும் பரந்த நெல்வயல் காணிகளும் நினைவில் வந்து ஏக்கத்தை நிரப்பின. தூரத்து முழக்கமும் வானத்து இரைச்சலும் இன்னமும் பயமுறுத்தின. பதட்டமும் பயமும் மனதில் நிரந்தரமாய் ஒட்டிக்கொண்டன. வீடு பார்த்து வர என்று கிராமத்துக்கு போன கணபதி மாமாவும் குலசிங்கண்ணையும் இன்று வரை திரும்பவில்லை. கஷ்டம் தாளாமல் தங்கள் காணியில் தேங்காய் பிடுங்கி வரப் போன கணேசனும் மரியக்கண்டுக்கிழவனும் கூட திரும்பவில்லை.
"போறபோக்கைப் பார்த்தால் இனி பொம்பிளையஸ் மட்டும்தான் ஊரில திரும்பிப் போய் இருக்கவேண்டி வரப்போகுது" என்று பாக்கியம் மாமி அம்மாவிடம் சொல்லி அழுதாள்.
தெருவுக்கு அந்தப் பக்கமாய் இடம்பெயர்ந்து போயிருந்த செல்லம்மாக் கிழவி எறிகணை வீச்சில் செத்துப்போனதாய் பாக்கியம் மாமி மூலம் அறிந்த போது அய்யோ பாவம் என்று இரக்கமாய் இருந்தது. கிராமம் இப்போது எப்படி சிதைந்து போயிருக்கும் என்ற நினைவு மனதில் அடிக்கடி தீயின் வெம்மையாய் தகித்துக் கொண்டிருந்தது.
இப்போதும் பொழுது படும் நேரத்தில் வயலுக்கு மேலால் வரிசை யாய் வெண்ணிறக் கொக்குகள் பறக்குமா..?
வயலில் பற்றைகள் பரவி வரம்பெல்லாம் புல்லுகளால் மூடி யிருக்குமா..? செங்காரிப்பசுவும் அம்பாலிக்குட்டியும் எங்கே போயிருக் கக்கூடும்? மறுபடி ஊர் திரும்புதல் எப்போது சாத்தியமாகும்.?
65

Page 39
ബിu്
இடம் பெயர்ந்து ஓடி வந்த இத்தனை நாட்களிலும் அம்மாவின் நகைகள் சித்திராவின் நகைகள் எல்லாம் விற்பனைக்குப் போயிற்று. அவன் எந்தத் தொழிலையும் ஒழுங்காகச் செய்யமுடியாமல் தடுமாறி நின்றான். போன வருடம் கரும்புத்தோட்டம் பின் பக்கம் ஒரு ஏக்கர் காணி எடுத்து நெல் விதைத்தான், பெரிதாய் லாபம் வரவில்லை சாப்பாட்டுக்கு மட்டும் நெல் இருந்தது. ஆனாலும் ஏதாவது ஒரு தொழில் செய்தே தீர வேண்டும் என்ற தேவை கழுத்தைப் பிடித்து நெரித்தது.
இன்றைக் கென்னவோ மனது அதிகமாக குழம்பிக் கொண்டி ருந்தது. மிகவும் தூரத்தில் வெடி ஓசைகளின் அதிர்வுகள். மழை பெய்து நனைந்த தரை ஈரத்துக்கு அந்த அதிர்வு கொஞ்சம் கூடுதலாகவே கேட்டது. அவன் கைகளால் முகத்தைத் தேய்த்துக் கொண்டே எழுந்து முற்றத்தில் இறங்கினான்.
இன்றைக்கு ஏதோ ஒன்று நடக்கத்தான் போகிறது. அவன் அம்மாவைத் தேடிப் பார்த்தபோது சித்திரா தட்டில் அவனது சாப்பாட்டை போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள்.
இப்போதெல்லாம் சித்திராவின் முகத்தில் கலகலப்பே இல்லை. சந்தோஷத்தை துடைத்து விட்டாற் போன்ற வெறுமை. இவளுக்கு ஒரு கல்யாணம் செய்து விடவேண்டும் என்று எவ்வளவோ முயன்றான், ஒவ்வொன்றும் ஏதோ ஒரு காரணத்தால் தட்டிப் போயிற்று. கடைசியாய் ஓரிடம் சரி வந்த போது காசுப்பிரச்சனை கொஞ்சம் பயமுறுத்தியது. முன்பு நெல்லுக் கொடுத்து அறிமுகமான சிவப்பிரகாசத்தாரிடம் காசு கேட்க ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு போயிருந்தான். அவர் கொடுத்த ஐம்பதாயிரத்தையும் கொண்டு வரும்போது இராணுவச் சோதனைச் சாவடியில் அவனைத் தாமதிக்க வைத்து அந்த பணத்தை எடுத்துக் கொண்டார்கள். அவன் மிரண்டு போய் பார்வையால் கெஞ்சினான். நெஞ்சு பதறியது கடவுளே. சித்திராவின் எதிர்காலம் எதிர்த்து ஒரு வார்த்தை கேட்க முடியவில்லை. அவர்கள் முன்புறமாக தோள் பிடித்து தள்ளி விட அவன் பேசாமல் நடக்க வேண்டியதாயிற்று காசு இல்லாமல் கல்யாணம் நின்று விட அவன் மிகவும் நொந்து போனான்.
66

தாமரைச் சைன்வி
அவளின் முகவெறுமை என்றோ நடந்த அவமானத்தை நினைத்து என்பதை அவனால் உணர முடிந்தது.
இளவயதுக் காயம் அது.
அவன் கை கழுவிவிட்டு குனிந்த தலையுடன் திண்ணையில் அமர்ந்து சாப்பிட்டான், சாப்பிட்டு விட்டு கழுவிய தட்டை திண்ணையில் வைத்துவிட்டு சேட்டைப்போட்டுக் கொண்டு சைக்கிளை எடுத்தான். அம்மாவிடம் சொல்லிக் கொண்டு வெளியே வந்தான்.
சேறும் சகதியுமாய் தெரு நீண்டிருந்தது. தெருக்களில் சனம் கூட்டம் கூட்டமாய் நின்றது. நடந்தது, சைக்கிள்களில் விரைந்தது. எப்போதோ எழுதிவைக்கப்பட்ட நியதி மாதிரி இயல்பான செயற்பாடுகள்
என் தலையில் என்ன எழுதியிருக்கிறதோ..?
ஏன்தான் மனம் இப்படி நிலை கொள்ளாமல் அலை பாய் கிறதோ.
தன் மனதில் ஏதோ குறை இருப்பதாகவே அவனுக்குத் தோன்றியது. திடுமென ஊர் எல்லையில் இருக்கும் வயல் நினைவுக்கு வந்தது. இப்போதெல்லாம் அடிக்கடி அந்த நினைவுதான் வருகிறது. அவன் வாழ்க்கையின் எத்தனை மணி நேரங்களை அந்த வயல் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். இப்போதே இந்த நிமிடமே அந்த வயலின் வரம்புகளிடையே ஓட வேண்டும் போலிருந்தது.
சித்திராவின் சந்தோஷமிழந்த முகம் மனதுக்குள் நெருடியது. என்றோ ஒருநாள் ஒரு கறுத்த முகத்து ஆமிக்காரன் அவள் தோள் சட்டையை இழுத்துக் கிழித்ததும் அவள் அவமானத்தில் கண்ணிர் தழும்ப நின்றதும் மனதின் ஆழத்திலிருந்து திமிறிக் கொண்டு மேலே எழுந்தது. அவனாலேயே அந்த நிமிட அவலத்தை மறக்கமுடியா திருக்கும் போது அவளுக்கு எப்படி இருக்கும்? நெஞ்சுப் பரப்பகளி லெல்லாம் மிகவும் ஆழமான துக்கம் பரவுவதை உணர்ந்தான்.
67

Page 40
வன்னியாச்சி
அவன் பிரதான வீதி தாண்டி பாலத்தில் ஏறினான். அருகே ஓடிய வாய்க்காலில் அந்த மழை நேரத்திலும் முழுகிக் கொண்டிருக்கும் சிறுவர்கள். குளிர்காற்று சிலீரென்று அறைந்தாற் போல் வீசியது. கை விரல்கள் குளிர்ந்து நடுங்கியது.
கால்கள் ஒரே சீராக சைக்கிளை மிதித்தன. பாலத்தைக் கடந்து இறங்கியபோது எதிரே வந்த பெரிய டிரக் வண்டி அவனைக் கடந்து போனது. அதில் பயணித்த போராளிகளில் பின் பக்கமாய் இரும்புக் கம்பி வளைவைப்பிடித்துக் கொண்டு நின்றவனின் முகம் பளிச் சென்று கண்களில் பதிந்தது. முன்பு அவர்கள் வயலில் வேலை செய்ய வந்த பாலன் அண்ணை, தேவகி அக்காவின் மகன் சீலன், அவனை விட பத்து வயதாவது சிறியவனாய் இருப்பான். இன்றைக்கு அவனைக் கண்டதும் மனதுக்குள் ஏதோ ஒரு வித உணர்வு தொற்றிக் கொண்டது. தொண்டை அடைக்க சிறது நேரம் நின்று பார்த்து விட்டு மேலே சைக்கிளை மிதித்தான்.
எங்கே போவது.? யாரைப் போய்ப் பார்ப்பது.? தெரிய வில்லை! இப்படியே எங்காவது ஒடிக் கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது. தெற்குப் பக்கமாக மெல்லிய அதிர்வுகள், வன்னியின் வடக்கிலும் தெற்கிலும் போரின் சத்தங்கள் பயமுறுத்திக் கொண்டி ருந்தன. இந்த சத்தங்களுக்கிடையேதான் அவர்களுடைய வாழ்க்கை யும் இயல்பானதாய் ஆகிவிட்டது.
எதிரே குளக்கட்டு நீண்டு கிடக்க குளிர்காற்று காதில் வந்து சிலீரென அறைந்தது. குளக்கட்டுக்கரையில் சிறிய பிள்ளையார் கோவில் தனிமையாய் இருந்தது. கம்பிக் கதவுக்குள்ளிருந்து மெலிந்த சுடர் ஒளிர்ந்தது. அந்தச் சரிவில் அவன் ஏறிய போதுதான் அந்த இரைச்சலை உணர்ந்தான். திகைத்துப்போய் நிமிர்ந்து பார்த்த போது எதுவும் தெரியவில்லை. இரைச்சல் மட்டும் திடுமென்று அதிகமாய்க் கேட்டது.
பதட்டத்துடன் சைக்கிளைத் திருப்பி சரிவில் இறங்க முற்ப்பட்ட அந்த வினாடி அது நிகழ்ந்தது. ஒரு வினாடி என்ன நடந்தது என்றே அவனுக்குத் தெரியவில்லை, ரத்தத்தையும் சுண்டியிழுக்கும் வேதனை
68

தாமரைச் சைன்வி
யையும் உணர்ந்த போது மயக்கம் வந்தது. ஏதோ நடந்து விட்டது என்பது புரிந்தது. சிரமப்பட்டு கண் திறந்தபோது பதட்டத்துடன் அந்நிய முகங்கள் தான் அருகே தெரிந்தன. தன்னை யாரென்று சொல்லவும் முடியவில்லை. நடுத் தெருவில் நாயாய் கிடக்கும் அவலம் நெஞ்சின் ஆழம் வரை போய்த்தாக்கிய அந்த வினாடியில் அவன் மூச்சு தடுமாறித் தடுமாறி நின்று ஓய்ந்தது.
அள்ளுப்பட்டு ஆஸ்பத்திரியில் கிடந்து பொன்னுத்துரை அப்புவினால் அடையாளம் காணப்பட்டு மறுநாள் அவன் அம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
அம்மாவும் சித்திராவும் தேவியும் அழுத குரல் காற்றைப் பிளந்து வானை முட்டியது.
"பாவம் இது ஒரு அப்பிராணிப்பெடியன். தானும் தன்ர பாடுமாய் இருக்கும். இவனுக்கு இந்த மாதிரி ஒரு சாவு வந்திட்டுதே."
செத்த வீட்டில் வெற்றிலை வாயுடன் யாரோ சொன்னார்கள்.
"அப்பிராணியாய் இருந்தபடியாலதானே இப்பிடி ஒரு அவலச் சாவு இவனுக்கு வந்தது" என்று இன்னொருவர் அதற்கு வியாக்கியானம் சொல்லிக் கொண்டிருந்தார்.
வெளிச்சம் : தை - 2000
69

Page 41
இன்னொருபக்கம்
வழமை போலவே இன்றைக்கும் இரத்த அழுத்த சிகிச்சை நிலையத்தில் சனக்கூட்டம் அலைமோதியது. மேலே கூரையால் வேய்ந்த நீளமான கொட்டகை அரைச்சுவர் வைக்கப்பட்டு மேலே இடைவெளி விட்டு மரச்சட்டங்கள் அடிக்கப்பட்டிருந்தன. நோயாளர் அமர்வதற்கு வரிசையாய் வாங்குகள். அக்கராயன் ஆஸ்பத்திரிக்கு எதிரே தெருவின் மறுபுறம் இந்தச் சிகிச்சை நிலையம் அமைந்திருந்தது.
காலை ஆறு மணிக்கே இலக்கத் துண்டு எடுக்க ஆட்கள் வந்து விடுவார்கள். இன்றைக்கு அவள் வருவதற்கு தாமதமாகி விட்டது. விடியற்காலையில் எழுந்து சோறும் ஒரு கறியும் சமைத்து வைத்து விட்டு குழந்தைகளை பக்கத்து வீட்டம்மாவைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு ஆனைவிழுந்தான் குளத்திலிருந்து நடந்து வந்து சேர பத்து மணியாகி விட்டது. அந்த நேரத்துக்கே வெய்யில் சுள்ளென்று எரிக்கத் தொடங்கிவிட்டது. வேர்த்து விறுவிறுக்க வந்தவளுக்கு குவிந்து நின்ற சனத்தைப் பார்த்ததும் திக் கென்றது.
இரத்த அழுத்தம் என்பது பயமுறுத்தும் வார்த்தை. அதுவும் இப்போது நாலைந்து நாளாக தலைச்சுற்றல், சோர்வு இருக்கிறது. இரண்டு வருடமாக தொடர்ந்து அல்டோமற் குளிசை போட்டு வருகிறாள். இன்றைக்கு குளிசைகளை மாற்றித் தரக்கூடும் அல்லது அளவைக் கூட்டக் கூடும். இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படி தொடராய் குளிசைகள் போடவேண்டியிருக்குமோ, தெரியவில்லை. ஆஸ்பத்திரியில் குளிசைகள் இல்லாமற் போனால் வெளியே காசு கொடுத்து வாங்க
70

தாமரைச் சைல்வி
வேண்டியும் வந்து விடும். பிரச்சனைகளும் கவலைகளும் இருக்கும் வரை இந்த பிரஷரும் இருக்கப் போகிறது. இந்த வருத்தம் ஏன் வந்து சேர்ந்தது என்று கவலையாக இருந்தது. இடை இடையே நெஞ்சுக்குள் நோகும் போது குழந்தைகளை விட்டு விட்டு செத்துப்போய் விடு வேனோ என்ற பயம் எத்தனை நாட்கள் தோன்றியிருக்கிறது. அதனால் தான் எத்தனை கஷ்டம் இருந்தாலும் கிளினிக்குக்குத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறாள். அவள் உள்ளே நுழையும் போதே உள்ளே ஆட்கள் நிறைந்து விட்டார்கள்.
தந்தை இல்லாத நிலையில் தனக்கேதும் நடந்து விட்டால் குழந்தைகள் அனாதைகளாகி விடுவர் என்ற பயம் நெஞ்சுப்பரப்பில் எந்நேரமும் உறைந்து போயிருந்தது. மூன்று வருஷத்துக்கு முன்னர் கிளிநொச்சியில் தங்கள் வீடு பார்த்து வர என்று போன கணவன் பிறகு திரும்பவில்லை." வீட்டையும் பார்த்திட்டு தேங்காயும் புடுங்கிக் கொண்டு வாறன். நீ யோசிக்காத நான் கவனமாய் பார்த்துத்தான் போவன்." என்று சொல்லிக் கொண்டு ஒரு விடிகாலையில் பசளைப்பையுடன் போனவன் தான். புருவ மத்தியில் விழுந்த முடிச்சுடன் யோசனையும் கவலையும் படிந்த அந்த முகமே கடைசியாய் மனதில் நிலைத்துப்போனது. அழுது அழுது கரைந்து கொண்டிருக்கும் அவளுக்கு இந்த வருத்தமும் வந்து சேர்ந்து கொண்டது.
அவள் உள்ளே நுழையும் போதே ஆட்கள் நிறைந்து விட்டார்கள் அவள் ஆட்களை விலக்கிக் கொண்டு முன்புறம் சென்றாள். ஒரு பக்க மேசையில் வேணி மிஸ்ஸி அமர்ந்திருந்தாள், தொடர்ந்து வருவதனால் எற்பட்ட அறிமுகத்தினால் "என்னம்மா இன்றைக்கு வரப்பிந்திவிட்டது?" என்று கேட்பாள் என்று எதிர்பார்த்தாள். ஆனால் எதுவுமே கேட்காமல் இலக்கத்துண்டை எடுத்து அவளிடம் கொடுத்தாள். வேணி மிஸ்ஸிக்கு முகம் எப்போதுமே மலர்ச்சியாக இருக்கும். எவ்வளவு கூட்டம் வந்தா லும் சமாளித்து இதமாகக் கதைத்து ஒழுங்கு படுத்தி அமரவைப்பாள், ஆனால் இன்றைக்கு என்னவோ முகத்தில் மலர்ச்சியை காண முடியவில்லை.
71

Page 42
ബീബ്
பின் வரிசையில் வந்து அமர்ந்து கொண்ட அவள் சுற்று முற்றும் பாாத்தாள், அநேகமானவர்கள் தொடர்ச்சியாய் கிளினிக்குக்கு வருவதால் அறிமுகமானவர்களாக இருந்தார்கள்.
அலுப்பு சோர்வு கவலை சூழ்ந்த முகங்கள், வருத்தங்களையும் தாண்டி வாழ்வின் சுமைகள் நெஞ்சை நெரித்துக் கொண்டிருப்பதால் சந்தோஷமே துடைக்கப்பட்டு வெறுமையாய் போன முகங்கள். தனது முகமும் இந்த விதமாய்த்தான் இருக்கும் என்று அவளுக்குத் தெரியும் இடுப்பில் சொருகியிருந்த சேலைத் தலைப்பை எடுத்து முகத்தை அழுத்தமாய் துடைத்துக் கொண்டாள்.
அந்த நீள கொட்டகைக்குள் வைத்தியருக்கு ஒரு புறமாக மேசை போடப்பட்டு முன்புறமாக நீல நிற துணியில் திரை தொங்கிக் கொண்டி ருந்தது.
இன்னும் வைத்தியர் வரவில்லை. மறுபக்க மேசையில்தான் வேணி மிஸ்ஸி அமர்ந்து வருகிறவர்களுக்கு இலக்கத்துண்டு கொடுத் தும் ஆட்களை வரிசையாய் அமரவைத்துக் கொண்டும் பெரிய கொப்பி யில் ஏதோ எழுதிக் கொண்டும் இருந்தாள். வேணி மிஸ்ஸியுடன் நிற்கும் மற்ற தாதி குழந்தை பெற்றுக் கொண்டதால் வரவில்லை என்று பக்கத்தில் இருந்த பெண் சொல்லிக் கொண்டிருந்தாள். இருவர் நின்றாலே சமாளிப்பது கஷ்டம், வேணி மிஸ்ஸி இன்றைக்கு எப்படித்தான் தனியே சமாளிக்கப் போகின்றாவோ தெரியவில்லை.
பதினொரு மணியான போது கொட்டகைக்குள் போட்ட வாங்கு, கள் நிரம்பி வெளியேயும் ஆட்கள் நின்றார்கள். வெளியே வெய்யில் கொழுத்திக் கொண்டிருந்தது. எப்போது வைத்தியர் வந்து, எப்போது காட்டி மருந்து எடுத்து, எப்போது வீடு போய்ச் சேர்வது என்ற தவிப்பு எல்லோர் முகங்களிலும்.
"இன்னும் டொக்டரை காணேலை மிஸ்ஸி, எப்ப வருவார்?" பொறுமை இழந்து வேணி மிஸ்ஸியிடம் கேட்டார்கள்.
72

தாமரைச் சைன்வி
"கெதியில வந்திடுவார். மிதி வெடியில கால் அகப்பட்ட ஆளை கிளிநொச்சியிலயிருந்து கொண்டு வந்திருக்கினம். டொக்டர்மார் அதைப் பார்த்துக் கொண்டிருக்கினம். ரெண்டு மூண்டு டொக்டர்மார்தானே எல்லாத்தையும் கவனிக்க வேணும். அங்க ஓ.பி. டி யிலயும் ஆட்கள் குவிஞ்சு போயிருக்கினம். டொக்டர் வார்ட்டும் பார்க்கவேணும். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கோ வந்திடுவார்."
வேணி மிஸ்ஸியும் ஏதோ ஒரு அவசரத்தில் இருப்பதாகத்தான் தோன்றியது. அடிக்கடி நேரத்தைப் பார்ப்பதும் வாசலைப் பார்ப்பதும் ஏதோ எழுதுவதுமாக இருந்தாள்.
தெருவில் புழுதி பரப்பிக் கொண்டு வாகனங்கள் ஓடின. செம்மண் தூசி காற்றில் மிதந்து வந்து மூக்கை நெருடியது. வெய்யிலின் வெம்மை யில் முகமெல்லாம் எரிந்தது.
"எப்பிடியும் டொக்டர் வந்திடுவார். அவரும்தான் என்ன செய் பிறது. மூச்சு விட நேரமில்லாமல் அதையும் இதையும் பார்க்க வேண்டிக் கிடக்கு." தெருவின் எதிர்ப்பக்கம் ஆஸ்பத்திரியை பார்த்துக் கொண்டே ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
அவளுக்கு தொடர்ந்து அமர்ந்திருக்க முடியாமல் நாரி பிடித்துக் கொண்டது. எழுந்து உலவ முடியாமல் சனம் நிறைந்து நின்றது. பலவிதமான குரல்கள் இங்கு வருவதன் மூலம் அறிமுகமாகிக் கொண்டவர்கள். தங்கள் கவலைகளை பகிர்ந்து கொள்ளும் குரல்கள். ஒவ்வொருவருக்கும் எத்தனையோ விதமான பிரச்சினைகள். என் சோகம் பெரிதா உன் சோகம் பெரிதா என்று தீர்மானித்துக் கொள்ள இயலாத நிலைமையில்தான் பலபேர் இருக்கிறார்கள்.
"பன்னிரண்டரைக்கு டொக்டர் வாறார்" என்று ஆட்கள் பரபரத்துக் கொண்டே வாங்கிலில் நெருக்கிக் கொண்டு அமர்ந்தார்கள். அவள் பின் பக்கம் திரும்பி வாசலைப் பார்த்தாள், அவசரமாய் உள்ளே வந்த வைத்தியர் ஆட்களைக் கடந்து தன்னுடைய கதிரையில் போய் அமர்ந்தார். விலகிய திரையின் வழியே அவர் கைக்குட்டையால்
73

Page 43
a/aafwaafa
வேர்த்துப் போயிருந்த முகத்தைத் துடைப்பது தெரிந்தது. வேணி மிஸ் ஸியைப் பார்த்து ஆட்கள் வரலாம் என்பது போல தலையசைத்தார்.
"கொஞ்சம் வரிசையில அப்பிடியே இருங்கோ, ஏன் ஐயா இடை யில எழும்பிறீங்கள். இருங்கோ. எல்லாரையும் டொக்டர் ஐயா பார்ப்பார். வரிசையில வாங்கோ."
வேணி மிஸ்ஸி முன் நின்று ஒவ்வொருவரையும் அழைத்துப் போக கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
வீட்டில் விட்டு வந்த குழந்தைகளின் நினைவு வந்தது. சாப்பிட் டார்களோ இல்லையோ. குளப்படி செய்யாமல் இருக்கிறார்களோ என்னமோ. இந்த அனாதரவான நிலையை நினைத்தால் உடனும் கண்களில் மழுக் கென்று நீர் நிறைந்து விடும். நொந்த மனதுக்கு இன்னொரு நொந்த மனம் ஆறுதல் என்பது போல பக்கத்து வீட்டம்மாவின் உதவி கிடைப்பதால்தான் கொஞ்சமேனும் நிம்மதியாய் அவளால் இருக்க முடிகிறது. அவள் வீட்டுக்கு போய்ச் சேர்வதற்குள் சின்னது கத்தி களைத்துவிடும். இன்றைக்கு மருந்து எடுத்துக் கொண்டு போக நன்றாக நேரம் போகப் போகிறது.
வைத்தியரும் என்ன செய்வது.? எத்தனை அலுவல்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது? இங்கு வைத்தியர்களுக்கோ தாதிமார் களுக்கோ சாப்பிடக் கூட நேரம் கிடைப்பதில்லை. அக்கராயன் வைத் தியசாலை நோயாளிகளால் திணறிக் கொண்டிருந்தது. பல சமயங்களில் நோயாளர் வரிசை முற்றம் தாண்டி தெரு வரை வந்து விடும், பல பேருக்கு வைத்தியசாலைக்கு வருவதெனில் அது ஒரு முழு நாள் வேலையாய் ஆகிவிடுகிறது.
வரிசை மெதுவாய் நகர்ந்து கொண்டிருந்தது. வயிற்றில் பசி எழுந்து அடங்கி விட்டிருந்தது. வரும் அவசரத்தில் காலையில் கூட எதுவுமே சாப்பிடவில்லை.
தொண்டை வரண்டு போக தண்ணீராவது குடிக்க வேண்டும் போலிருந்தது. இவ்வளவு நேரமும் இருந்தாகி விட்டது. இன்னும் கொஞ்சநேரம் தானே.?
74

தாமரைச்சென்வி
நான்கு மணிக்கு மேலாகி விட்டது. அவள் அறிந்த வரை வேணி மிஸ்ஸி கூட அங்கே இங்கே என்று அசையவில்லை. இந்த பசியும் தாகமும் அவளுக்கும் இருக்கும்தானே? மிஸ்ஸியின் முகத்தைப் பார்க்கும் போது ஏதோ யோசனையிலும் கவலையிலும் இருப்பதாகத் தான் தோன்றியது. வழமைக்கு மாறாக ஒரு பரபரப்பும் தவிப்பும்
அவளின் முகத்தில் தென்பட்டது.
பாவம் என்னென்ன பிரச்சனைகளோ..?
தனிய நின்று பணி செய்ததில் ஏற்பட்ட களைப்பு முகத்தில் தெரிந்தது.
வரிசை நகர்ந்து அவளின் முறை வந்த போது எழுந்து உள்ளே
சென்ற போது நாலரை மணியாகி விட்டது.
"இதில இருங்கோம்மா."
ரத்த அழுத்தம் சோதித்து நிலமைகளை ஆதரவாய்க் கேட்டு வைத்தியர் குளிசையை அளவு கூட்டி எழுதிக் கொடுத்தார்.
"யோசிக்கக் கூடாது அம்மா. உப்பு கொழுப்பு குறைச்சு சாப்பிட வேணும். சாப்பாட்டில கவனம் இருக்க வேணும்." அவரின் இதமான குரல் மனதைத் தொட்டு உலுப்ப, யோசிக்காமல் எப்படி இருக்கிறது.?” என்ற வார்த்தை தொண்டை வரை வந்து சிக்கிக் கொண்டது.
"கவலைப்படக் கூடாது அம்மா. குளிசையளை ஒழுங்கா போடுங்கோ, பிரச்சனை வராது."
அவள் மெளனமாய் தலையசைத்து விட்டு எழுந்து திரைச் சீலையை விலக்கி வெளியே வந்தாள். திடீரென்று ஒரு சோர்வு உடலை தள்ளாட வைத்தது. வேணி மிஸ்ஸி சட்டென்று தாங்கிப்பிடித்து," கவனம்
அம்மா" என்று வாங்கிலில் இருக்க வைத்தாள்.
"பிள்ளையஸ் தனிய வீட்டில, உதவி இல்லாதனான்.
குரல் தழும்ப சொன்னாள்.
75

Page 44
வன்னியாச்சி
"இங்க உதவி இல்லாத ஆட்கள் தான் நிறைய இருக்கினம் அம்மா, கவலைப்பட்டு என்ன செய்யிறது. வருத்தம்தான் வரும்."
"பக்கத்து வீட்டம்மாவை பார்த்துக் கொள்ளச் சொல்லியிட்டு வந்தனான்."
கண்ணிர் வழிந்த முகத்தை சேலைத்தலைப்பால் துடைத்துக் கொண்டாள்.
வேணி மிஸ்ஸி ஆட்களை வைத்தியரிடம் அனுப்புவதற்காக போக அவள் எழுந்து வெளியே வந்தாள்.
இப்போது வெய்யிலின் வெம்மை சற்றுத் தணிந்திருந்தது. தெரு கடந்து வைத்தியசாலைக்கு உள்ளே மருந்து எடுக்கும் இடத்துக்கு வந்தாள். வரிசையில் நின்று மருந்து எடுத்து வர ஐந்து மணிக்கு மேலாகி விட்டது.
அப்பாடா இனி வீட்ட போகலாம் என்று நினைத்த போதுதான் பக்கத்து வீட்டு உமா தன் குழந்தையை காய்ச்சல் என்று வார்ட்டில் வைத்திருப்பது ஞாபகத்திற்கு வந்தது. இவ்வளவு நேரம் நின்றாகி விட்டது. பார்வையாளர் நேரம், எட்டிப்பார்த்து விட்டே போகலாம் என்ற நினைவில் உள்ளே விறாந்தையால் நடந்து போனாள். மருந்து வாசனை முகத்தில் அடிக்க நோயாளர்களின் முனகல் கடந்து குழந்தைகள் வார்ட்டுக்குள் நுழைந்தாள்.
உமா நிற்பதைப் பார்த்து விட்டு கட்டிலை நெருங்கின்ாள். உமாவின் மகன் சிறிது தெளிந்த முகத்துடன் படுத்திருந்தான். உமா தன் கையில் நாலு வயதுக் குழந்தையை தூக்கி வைத்து சமாதானப் படுத்திக் கொண்டிருந்தாள். அழுததில் குழந்தையின் கண்களும் முகமும் சிவந்து போயிருந்தது.
அம்மா. அம்மா. என்ற முனகல். "அழக்கூடாது அப்பன். அம்மா இப்ப வந்திடுவா."
"ஆற்ற குழந்தை இது?"
76

தாமரைச் சைன்வி
"பக்கத்து கட்டிலில இருக்கிற குழந்தை. மூளை மலேரியா எண்டு வார்ட்டில இருக்கிற பிள்ளை, இண்டைக்கு காய்ச்சல் விட்டிட்டுது. ஆனா அம்மா அம்மா எண்டு ஒரே சிணுங்கிக் கொண்டிருக்கு. பாவம் இனி தாய் வந்திடுவா இண்டு முழுக்க நான்தான் பார்த்துக் கொள்ளுறன். பக்கத்தில நிற்கிறனான். இது கூட செய்யேலாதே."
அப்போது அந்தப் பக்கமாய் வந்த வார்ட் தாதி குழந்தையின் கன்னத்தில் தட்டி,
"வினுக்குட்டிக்கு அம்மா இன்னும் வரேலையே, இனி வந்திடுவா என்ன.?"
என்று சொல்லி விட்டுப் போக, "ஏன் குழந்தையின்ர தாய் எங்க." என்று கேட்டாள்.
அவள் கேட்டுக் கொண்டிருக்கையிலேயே அவசரம் அவசரமாய் ஒடி வந்த வேணி மிஸ்ஸி குழந்தையை உமாவிடமிருந்து வாங்கிக் கொண்டாள்.
"சரியாய் அழுதிட்டானா..? அங்க சரியான சனம். கிளினிக் முடியநேரம் போயிட்டுது. மாறிவிடவும் ஆள் இல்லை. லீவு எடுக்கிறதும் சரியில்லை. விட்டிட்டும் வர ஏலாது அதுதான்."
கண்கலங்க குழந்தையை தோளில் சாய்த்துக் கொண்டு; "அழாதையப்பன், அம்மா வந்திட்டனல்லே." என்று முதுகைத் தடவிக் கொடுத்தாள்.
தாயின் கழுத்தைக் கட்டிக் கொண்டு விசும்பும் குழந்தையை அவள் திகைப்போடும் கவலையோடும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
(அக்கராயன் வைத்தியசாலை சிறப்புமலர் - சுடர் - 2002)
77

Page 45
சிலநிமிட7மனனம்
ணெக்கம் அம்மா"
இரண்டு இளம் பெண்கள் முற்றத்தில் நின்று கைகுவித்தார்கள்.
"வணக்கம் உள்ள வாங்கோ. இதில இருங்கோ. படி ஏறி வந்தவர்களை விறாந்தையில் கதிரை போட்டு அமர வைத்தாள்.
அவர்களின் பார்வை சுற்றுப்புறத்தை ஆராய்ந்து பின் அவளின் முகத்தில் பதிந்து கொண்டது.
இவர்கள் எதற்காக வந்தார்கள் என்ற கேள்வி அவளின் மனதில் எழுந்தது.
"என்ன விஷயம் பிள்ளையஸ். சொல்லுங்கோ." "நாங்கள் பெண்கள் நிறுவனம் சார்பாய் வந்திருக்கிறம். குடும்பத் தலைவன்மாரை இழந்தாலும் சுயமாய் உழைச்சு வாழுற பெண்களின் வாழ்க்கை பற்றி ஒரு ஆய்வு செய்யிறம். அதுதான் உங்களிட்டயும் ஒரு பேட்டி எடுக்க வந்தனாங்கள்."
மெலிதாய் சிரித்துக் கொண்டே "கேளுங்கோ சொல்லுறன்"என்றாள் அவர்களில் ஒரு பெண் பேனைவையும் பேப்பரையும் தயார் செய்து, எழுத ஆயத்தமாகி அவளின் முகத்தைப் பார்த்தாள். தோய்த் தோய்த்து நைந்து போன சேலையில் அப்பாவித்தனமும் ஏழ்மையு| பிரதிபலிக்கும் முகத்தோடு அவள் அவர்களைப் பார்த்துக் கொண்ட ருந்தாள்.
78

தாமரைச்சைன்வி
"உங்கட பேர்.?"
"பானுமதி."
"வயது.?"
"நாற்பத்தி நாலு."
"எத்தனை பிள்ளையஸ்?"
"ரெண்டு."
"அவைக்கு வயது."
"பதினெட்டும், பதினாறும்."
"அவர் இறந்து எவ்வளவு காலம் அம்மா?"
"நாலு வருஷம்."
"அவரோட உங்கட வாழ்க்கை எப்பிடி இருந்தது?"
சட்டென்று அமைதியானாள். கண்களில் தயக்கம் மின்னலாய் எட்டிப் பார்த்தது.
"நாங்கள் உங்களைப் பற்றி எல்லாம் விசாரிச்சுக் கொண்டுதான்
வந்தனாங்கள். அதனால நீங்கள் தயங்கத் தேவையில்லை. மனம் விட்டு உண்மையைச் சொல்லுங்கோம்மா."
"சரியாய் கஷ்டப்பட்டனான்தான். குடிப்பார். குடிச்சிட்டு வந்து அடியும் உதையுந்தான், நாங்கள் இடம் பெயர்ந்து போய் மல்லாவியில சொந்த பந்தம் பக்கத்தில இருக்காமல் தனிச்சுப் போய் இருந்தனாங்கள், எனக்காக கதைக்க எங்கட பக்கத்தில ஆட்களும் இருக்கேலை. அந்த வாழ்க்கை கவலைதான். அதை ஏன் இப்ப?"
"இல்லை அம்மா எங்களுக்கு எல்லா விபரங்களும் தேவை. சமூகத்தில பெண்களுக்கு எத்தினை விதத்தால துன்பங்கள் வருகுது (ாண்டு வெளிப்படுத்த வேணும். இப்பதான் மனிசன் இல்லையே. நீங்கள்
7o

Page 46
ബീങ്ങിa0ffി
மனம் விட்டு சொல்லுங்கோ. பயப்பிடாதேங்கோ, உங்கட பேர் வெளி யிலை வராது. கருத்து மட்டும்தான் வெளிவரும்." கண்களை ஒரு தடவை மூடித் திறந்தாள். சிறு துளி நீர் விழியோரங்களில் திரண்டு நின்றது. நெஞ்சுக்குள் ஏதோ அழுத்துவது போல் இருந்தது.
"அந்தப் பழசு எல்லாம் ஏன் பிள்ளையஸ்? பொம்பிளையாய் பிறந்தால் எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு சிறுமைப்பட வேண்டி யிருக்கு. நான் எல்லாச் சிறுமையும் பட்டிட்டன்."
"எங்கட சமூகத்தில எத்தினையோ பொம்பிளையஸ் இப்பிடிக் கஷ்டத்துக்குள்ளதான் வாழுகினம். அதை எதிர் கொள்ளுறதுதான் முக்கியம் அம்மா." s
"கலியாணம் எண்டது எத்தினையோ பொம்பிளையஞக்கு சந்தோஷமானதாய் அமைஞ்சிருக்க எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆனது எண்டு நான் எத்தினையோ நாள் அழுதிருக்கிறன். கலியாணம் செய்த நாளிலயிருந்தே பிரச்சனைதான். உத்தியோகமோ, உறுதியான வேலை ஏதுமோ எதுவும் மனிசனுக்கு இல்லை. போற வேலையளிலயும் ஒழுங்காய் நிற்கிறேலை. புடவைக் கடையில ஆறுமாதம், பார்ட்ஸ் கடையில ஆறு மாதம் எண்டு நிற்கிறது. எல்லா இடத்திலயும் சண்டைதான். பொறுப்பு இல்லை. கடைசியா சாப்பாட்டுக் கடையில கூட நிண்டவர், கூலி வேலைக்கும் அப்ப அப்ப போவார். இரண்டு நாள் வேலை செய்தால் நாலு நாள் வீட்டில இருப்பார். வீட்டில எவ்வளவு கஷ்டம். ஆனா அது இல்லை, இது இல்லை. எண்டு சொல்லக் கூடாது. சொன்னா கோபம் வந்திடும். கோபத்தில என்ன செய்யிறது எண்டு தெரியாமல் என்ர தலைமயிரை கையில சுத்திக் கொண்டு சுவரோட முகத்தை மோதுவார். எத்தினை அடி உதையைத் தாங்கியிருப்பன். குடிச்சா கண்மண் தெரியாது. உழைக்கிறதையும் ஒழுங்கா கொண்டு வந்து தாறேலை. இத்தனையையும் என்ன செய்யிறது என்ர தலைவிதி எண்டு பொறுத்துக் கொண்டிருந்தன். என்ர பக்கத்து உதவி இல்லை. ரெண்டு பிள்ளையளை வளர்க்க வேணுமே? எல்லாம் பொறுத்துக் கொண்டு அந்தாளோட இருந்ததுதான். ஆனா."
80

தாமரைச் சைன்வி
குரல் தழும்பியது. தலைகுனிந்து சிறிது நேரம் அமர்ந்திருந்தாள். நினைக்கவே கூடாது என்று தீர்மானித்தவை எல்லாம் கூப்பிடாமலே ஓடி வந்து நெஞ்சுக்குள் நிரம்பிக் கொண்டன. ஆழமான வலியைத் தந்தன.
"இத்தனையையும் பொறுத்திருந்தது எல்லாம் சாதாரணம் எண்டது போல இன்னொரு பேரிடி தலையில விழுந்தது. வியாபாரம் செய்ய எண்டு அடிக்கடி வவுனியா போறவர். கொஞ்ச நாளாய் வரேலை. பிறகுதான் அறிஞ்சன். அங்கயும் ஒரு பொம்பிளை இருக்குது எண்டு. வாழ்க்கையே வெறுத்துப் போச்சு. செத்துப் போகலாம் போல இருந்துது. ரெண்டு பிள்ளையளையும் விட்டிட்டுப் போக ஏலுமே. அதையும் பொறுத்துக் கொண்டன். எனக்கு படிப்பு இல்லை. எனக்கெண்டு ஒருவேலை தேடிக் கொள்ள முடியேலை, என்ர பிள்ளை பன்ரெண்டு வயதில தோட்டத்தில கூலி வேலைக்கு போனான். நான் பக்கத்து வீடுகளில அரிசி இடிக்கிற வேலைக்குப் போனன், எங்கட உழைப்பில மனிசன் குடிச்சுக் கொண்டு சுகமாய் இருந்தார். இங்க வந்து நிற்கிற நேரமெல்லாம் சண்டைதான். ஆரை நான் நோக ஏலும். எல்லாம் என்ர விதி எண்டு நினைச்சு பிள்ளையஞக்காக இருந்தன்."
தொடர்ச்சியாக பேசியதில் மூச்சு வாங்கியது. சேலைத்தலைப்பால் முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டாள். அந்தப் பெண்கள் அவளை அனுதாபத்தோடு பார்த்தார்கள்.
"பிறகு எப்பிடி அவர் செத்தவர்?"
"அண்ள க்கு ஒரு வெள்ளிக்கிழமை, மத்தியானம் நல்ல வெறியில கிணத்தில தலைளி அள்ளினபோது கால் தடுக்கி கிணத்துக்க விழுந் திட்டார். நான் குளறி அழ பக்கத்து சனங்கள் ஓடி வந்து தூக்கினவை
அதுக்குள்ள சீவன் போயிட்டுது."
"அதுக்குப் பிறகு.
"அதுக்குப் பிறகு என்ன. கண்ணைக்கட்டி காட்டில விட்டது போல இருந்தது. என்ன செய்யிறது எண்டு தெரியாமல் நாள் கணக்கில
81

Page 47
ഖജിuസ്ക്
அழுது கொண்டிருந்தன், படிப்பில்லாத எனக்கு சமையல் வேலை கை குடுத்துது ஒரு நிறுவனத்தில முதல்ல ஒரு சமையல்காரியாய்த்தான் சேர்ந்தன். ஆனா ஒரு வருசத்தில சமையல் நிர்வாகத்தை பொறுப் பெடுத்து செய்தன், அடுப்பு நெருப்புத்தான் ஆனா நாலு காசு வருமானம் வந்துது உழைச்சு வாழலாம் எண்ட நம்பிக்கை வந்துது. குடும்பச் சுமையை நானே தாங்கிக் கொண்டன். கூலி வேலைக்கு விடாமல் பிள்ளையளை ஸ்கூலுக்கு விட்டு படிக்க வைச்சன். சமைக்க போற நேரம் தவிர வீட்டில இருந்து மிக்சர், பருத்துறை வடை செய்து கடையஞக்கு குடுக்கிறன். ஆட்களை வைச்சு பெரிய அளவில இதை செய்யலாம் எண் டு யோசிக்கிறன். அநேகமாய் வாற மாதம் தொடங்கியிடலாம். எனக்கு நம்பிக்கை இருக்கு கஷ்டப்பட்டு உழைச்சா பலன் கிடைக்கும், மனிசனைச் சார்ந்துதான் இருக்கவேணும் எண்டு முந்தி எவ்வளவு விசர்த்தனமாய் இருந்திட்டன். இப்ப நினைக்க வெக்கமாய் இருக்கு எவ்வளவு காலத்தை வீணாக்கியிட்டன்."
"இப்ப உங்கட உழைப்பின்ர வருமானம் போதுமானதாய் இருக்கா அம்மா?"
"போதும் எண்டதை மனம்தானே தீர்மானிக்கிறது. ஆசை இல்லை ஆடம்பரம் இல்லை. தேவைக்கு மட்டும் வந்தால் போதும், சாப்பிடவும் உடுக்கவும் பிள்ளையஸ் படிக்கவும் என்ர உழைப்பு கை குடுக்குது. இதை விட வேற என்ன வேணும்?"
"அம்மா உங்களை நினைக்க சந்தோஷமாய் இருக்கு. நல்ல தெளிவோட கதைக்கிறீங்கள்."
"வாழ்க்கையில எவ்வளவோ அடிபட்டு நொந்து போய் மீண்டிருக்கிறன். அந்த அனுபவங்கள் தந்த திடம்தான் இது."
"சரி அம்மா எல்லாம் சொல்லியிட்டீங்கள் தானே? வேற ஏதாவது
சொல்ல இருக்கா?"
இல்லை' என்று தலையசைத்தாள்.
82

தாமரைச்சென்வி
"அப்ப நாங்கள் போயிட்டு வாறம்."
அவர்கள் எழுந்து படியிறங்கினார்கள். முற்றம் கடந்து வாசல் நோக்கிப் போனார்கள்.
ஒருவினாடி அவர்கள் போவதைப் பார்த்துக் கொண்டு நின்றாள். "எல்லாம் சொல்லியிட்டீங்கள்தானே வேற ஏதாவது சொல்ல இருக்கா?" என்று அவர்கள் கேட்டது நெஞ்சில் நின்றது. சொல்லவில்லை எல்லாம் சொல்லவில்லை. உதட்டு விளிம்பில் ஒரு சுழிப்பு வினாடியில் தோன்றி மறைந்தது. குடிபோதையில் கிணற்றடியில் நின்று அவளோடு சண்டை போட்டு அவளை காலால் உதைய எத்தனித்த போதே அவன் கிணற்றுக்குள் தடுமாறி விழுந்தான். அவன் தடுமாறி விழ நேர்ந்த அந்தக் கணம் அவள் முயன்றிருந்தால் எட்டி அவன் கையைப் பிடித்து காப்பாற்றியிருக்கலாம். அல்லது கிணற்றுக்குள் விழுந்த உடனாவது சத்தம் போட்டு ஊரைக் கூட்டி அவனை தூக்கச் செய்திருக்கலாம். இதில் எதையும் செய்யாமல் மனம் இறுகிப்போக நின்று கொண்டிருந்த அந்த சில நிமிட நேர அமைதி பற்றி அவளால் எப்போதுமே யாருடனும் பேச முடியாது.
நிமிர்ந்து தெருவைப் பார்த்தாள். புழுதி சூழ பெரும் இரைச் சலுடன் வாகனம் ஒன்று போய்க் கொண்டிருந்தது.
நாற்று - 2

Page 48
துரத்து மேகங்கள்
ിഖങിധേ மழை மெலிதாய் தூறிக்கொண்டிருந்தது. காற்றில் பரவியிருந்த குளிர் நெஞ்சை வந்து அசைத்தது. இனி என்ன. மெல்ல மெல்ல பொழுதும் விடிந்துவிடும்.
புதிதாய் ஒருநாள். அவன் மரக்கப்புடன் சாய்ந்து அமர்ந்தபடி நாடியை பரபரவென்று தேய்த்துக் கொண்டான்.
அதிகாலையிலேயே விழிப்பு வந்து விட்டது. நிம்மதியாய் நித்திரை கொண்டு எத்தனை காலம்.? ஒன்று மாறி ஒன்றாய் வாழ்நாள் முழுவதும் துன்பம் தான். ஆனையிறவுக்கு பக்கமாய் இருந்ததால் ராணுவத்தாக்குதலால் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. தொண்ணுற்றி ஆறில் இடம் பெயர்ந்து ஓடிப் போய் காட்டுக்கிராமமான ஸ்கந்தபுரத்தில் இருந்து பட்ட துன்பத்துக்கும் அளவு கணக்கில்லை. அத்தனை துன்பத்தையும் ஒன்றுமில்லை என்று ஆக்கியது போல இப்போது இந்த இடி தலையில் விழுந்திருக்கிறது.
பக்கத்தில் ரஞ்சியின் பழையசேலையின் மீது சுருண்டு போய் படுத்திருந்த கஜேந்திரனைப் பார்க்கப் பார்க்க துக்கம் வந்து தொண் டையை அடைத்துக் கொண்டது.
84

தாமரைச் சைன்வி
கடவுள் ஏன் இந்தப் பிள்ளைக்கு இந்தவயதில் இப்படியொரு துன்பத்தைக் கொடுத்தான்? ஐந்தே ஐந்து நிமிடத்தில் இவனது உலகமே அழிந்து போய்விட்டதே. பதினொரு வயது பிஞ்சு மனம் எப்படி தேறி எழப் போகிறது. இதே கவலை தான் எந்நேரமும் அவன் மனதை நெருடிக்கொண்டிருந்தது. நித்திரையிலும் கஜேந்திரனிடமிருந்து மெலி தான விம்மல் எழுவதைப் பார்க்க மனசு தாங்கவில்லை. அவனின் கை நீண்டு கஜேந்திரனது தலையை வாஞ்சையோடு தடவிவிட்டது.
அந்த கொடுமையான நிகழ்வு நடந்து இரண்டு மாதமாகிறது. கஜேந்திரனைத் தேற்றி பழைய நிலைக்கு கொண்டு வரும் முயற்சியில் அவனுக்கும் ரஞ்சிக்கும் தோல்விதான் கிடைக்கிறது. இளங்கோ சுதாவோடு கூட விளையாடுவதில்லை. வெறுமையான பார்வையும் சிரிப்பை இழந்த முகமுமாக அவனது கோலமே மாறிவிட்டது.
போன தீபாவளிக்கு முல்லைத்தீவு மணற்குடியிருப்புக்குப் போனபோது என்ன துடிப்பும் விளையாட்டுமாய் இருந்த பிள்ளை..?
இன்றைக்கு அம்மா, அப்பா, அக்கா, தம்பி என்று அத்தனை உறவுகளையும் பொங்கி வந்த கடலுக்குப் பலி கொடுத்து விட்டு
தனித்துப்போய் நிற்கும் பரிதாபம். அவனுக்கு அந்த நாளை நினைத் தாலே நெஞ்சு நடுங்கிப் போகிறது.
ஒரு ஞாயிற்றுக் கிழமை மத்தியானம்.
சந்தையில் மரக்கறிகள் வாங்க பரந்தன் சந்திக்கு போயிருந்தான். சனங்கள் கூட்டமாய் நின்று பரபரப்போடு பேசிக்கொண்டிருந்தார்கள்.
"கிழக்குப் பக்கமாய் கடல் பொங்கி ஊருக்குள்ள வந்து கன சனத்தை அள்ளிக்கொண்டு போட்டுதாம்."
இதென்ன அதிசயம் என்று திகைப்பாக இருந்தது. கடலாவது, ஊரை அழிப்பதாவது?
"தாழையடி மருதங்கேணிப்பக்கம் காயப்பட்ட சனங்களை இங்க கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வருகினமாம்.
85

Page 49
வன்னியாச்சி
அவன் பார்த்துக் கொண்டிருந்த போதே பட்டப்பகலில் முன் விளக்குகளை எரியவிட்டபடி அடுத்தடுத்து நாலைந்து லொறிகள் பிரதான வீதியில் வேகமாக வந்து கிளிநொச்சியை நோக்கி விரைந்தன.
"கிழக்குப்பக்கம் பருத்துறையிலயிருந்து மட்டக்களப்பு அம்பாறை வரை கடல் பொங்கி ஊருக்குள்ள வந்திட்டுதாம். செய்தியில சொல் லுது."
சந்தைக்குள் பசுபதி சொல்வதைக் கேட்டு பதறியடித்துக் கொண்டு வீட்டுக்கு ஓடி வந்தான்.
"ரஞ்சி கேட்டியே? கடல் பொங்கி வந்து ஊரை அள்ளிக் கொண்டு போட்டுதாம். முல்லைத்தீவில தம்பியின்ர குடும்பம் என்ன மாதிரியோ தெரியேலை."
ரஞ்சியும் அவனும் பதட்டத்தோடு தெருவில் வந்து நின்றார்கள். போகிறவர்கள் வருகிறவர்கள் சொல்லுற கதைகளைக் கேட்க தலை விறைத்துக் கொண்டு வந்தது.
"தம்பி முல்லைத்தீவு சந்தையில யாவாரம் செய்யிறவன் என்ன பாடோ தெரியேலை. குழந்தை குஞ்சுகள் என்ன செய்யுங்கள். கடவுளே."
மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்துக் கொண்டேயிருந்தது. மறுநாள் அதிகாலையிலேயே முல்லைத்தீவுக்கு புறப்பட்டுப் போனான். போய் அங்கு பார்த்த அவலத்தை வாழ் நாள் முழுக்க அவனால் மறக்க முடியாது. ரஞ்சியுடன் அணைந்து படுத்திருந்த கஜேந்திரனை ஒரு பெருமூச்சுடன் குனிந்து பார்த்தான்.
எப்பேர்ப்பட்ட அவலம் அது? மணற்குடியிருப்பு முற்றாக அழிந்து போயிருந்தது. பற்றைகளுக் குள்ளும் மண்ணுக்குள்ளும் சிக்கிக் கிடந்தவர்களை போராளிகளும் ஊர் மக்களுமாய் மீட்டு எடுத்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பிக் கொண்டி ருந்த காட்சி ரத்தத்தையே உறைய வைத்தது. ஊருக்குள் வீடு வாசல்
86

தாமரைச் சைன்வி
எதையுமே காணமுடியவில்லை. முல்லைத்தீவு ஆஸ்பத்திரிக்கு போனான். ஓவென்ற கதறலும் அழுகையுமாய் சனங்கள் அலைமோதிக் கொண்டிருந்தார்கள். அங்கு வரிசையாய் உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நீரில் ஊறி உப்பிப் போயிருந்த முகங்களில் தம்பியை. அவன் மனைவியை. பிள்ளைகளை தேடி அவன் பட்ட பதை பதைப்பு அடையாளம் காண இயலாமல் பட்ட பரிதவிப்பு. இதுவாய் இருக்குமோ. அதுவாய் இருக்குமோ. என்ற பதட்டம் ஒரு மாதிரி தம்பியின் மனைவியை அடையாளம் கண்டு கொண்டான்.
"வித்தியானந்தா கல்லூரிக்கு இந்தப் பிரேதங்களை ஏத்திக் கொண்டு போகப் போகினம். நீங்கள் அங்க போங்கோ. நேற்றிலயிருந்து அங்க ஆயிரக்கணக்கான பிரேதங்களை கொண்டு போய் அடையாளம் காண வைச்சிருக்கினம்."
முள்ளியவளைக்கு ஓடினான்.
வித்தியானந்தா கல்லூரி சனங்களால் நிறைந்து போயிருந்தது. கூட்டம் கூட்டமாய் தங்கள் உறவுகளின் உடல்களைப் பார்த்து கதறி அழுகின்றவர்களின் ஒலம் அந்தப் பிரதேசத்தையே ஒரு உலுப்பு உலுப்பியது. நீள மண்டபத்தில் வரிசையாய் கிடத்தி வெள்ளைத் துணியால் போர்த்தியிருந்த உடல்களைப் பார்க்க தாங்கமுடியாத துயரம் பொங்கியது.
சுவரோரம் இருந்து அழுது கொண்டிருந்த கஜேந்திரன் அவ னைக் கண்டதும் "பெரியப்பா" என்று பாய்ந்து வந்தான். அவன் தலையிலும் கையிலும் கட்டுப் போடப்பட்டிருந்தது. கை நீட்டிக் காட்டி கதறி அழுதான். சுவரோரம் தம்பியினதும் இரண்டு பிள்ளைகளினதும் உடல்கள். அய்யோ என்று வாய் விட்டு அலறத் தோன்றியது.
"என்னை விட்டிட்டு செத்துப் போயிட்டினம். அம்மாவைக் காணேலைப் பெரியப்பா."
விக்கி விக்கி அழுதவனை வாரி அணைத்துக் கொண்டான். உழவு யந்தரப் பெட்டிகள் வரிசையாய் வந்து பிரேதங்களை இறக்கிக் கொண்டி
87

Page 50
assafotrofa
ருந்தது. கடவுளே என்ன கொடுமை இது..?
நூற்றுக்கணக்கு என்பது பார்த்துக் கொண்டு நின்ற போதே ஆயிரக் கணக்கென்று மாறியது. அவைகளை அடையாளம் காண முட்டி மோதிக் கொண்டு உறவுகள் அலை பாய்ந்த பரிதாபம் கண்களில் நீரை தழும்பச் செய்தது.
அவைகளுக்குள் தம்பியின் மனைவியை அடையாளம் பிடித்து தம்பி குழந்தைகளுடன் சேர்த்து வைத்துக் கொண்டான்.
முள்ளியவளையிலிருந்து இரண்டு கிலோ மீற்றர் உட்புறமாக அடர்ந்த காட்டுப் பகுதியான கற்பூர புல்லு வெளியில் ஊர்ச்சனமும் போராளிகளுமாக பாரிய குழியை வெட்டினார்கள். அத்தனை உடல் களையும் உறவினரையும் வாகனங்களில் ஏற்றிக் கொண்டு போனார்கள். சுற்றிலும் நின்று பார்த்துக் கதறி அழும் குரல்களுக்கு நடுவே உடல்களை அந்த பாரிய குழிகளில் போட்டார்கள். தம்பியை மனைவியை இரண்டு குழந்தைகளை அதற்குள் போடுவதை நெஞ்சு வெடிக்க பார்த்துக் கொண்டு நின்றான். யாரோ அழுத குரலில் தேவாரம் பாடியபோது மனசு கரைந்து போனது. "தேவலோகத்திலிருக்கும் பிதாவே இவர்களை உமது பாதங்களில் ஏற்றுக் கொள்ளும்!" நீர் நிறைந்து வழிந்தது. ஓவொன்ற கதறல் அந்த பெரு வெளியெங்கும் பரந்து மனதை சில்லிட வைத்தது.
என்ற பிரார்த்தனையில் கண்களில்
மண் அள்ளிக் குழிக்குள் போட்டபோது அழுகைவெடித்துக் கொண்டு கிளம்பியது.
"அம்மா. அம்மா. என்ர அப்பா" என்று குரல் அடைக்க விம்மி அழுத கஜேந்திரனை அணைத்துக்கொண்டு.
"பிள்ளைக்கு பெரியப்பா, பெரியம்மா இருக்கிறம், இளங்கோ அண்ணா, சுதாக்கா இருக்கினம். அவையோட விளையாடலாம் படிக்கலாம் வா அப்பன்" சொன்ன போது விழி உயர்த்தி கலக்கமாய்ப் பார்த்தான்.

தாமரைச் 7ேசன்வி
நெஞ்சைப் பிழியும் அந்தப் பார்வை. துடிக்கும் பிஞ்சு உதடுகள். கலங்கிப் போன முகம்.
கடவுளே. என்ன கொடுமை செய்தாய்.?
"கடல் கறுப்பாய் வந்துது பெரியப்பா, அப்பா விடியவே சந்தைக் குப் போயிட்டார். தண்ணி வருகுது எண்ட உடன அம்மாவோட சந்தைக்கு ஓடினனாங்கள், அப்பாவைக் காணேலை. ஆட்களோட ஆலடிச் சந்தி கடந்து ஆஸ்பத்திரிக்கு ஓடுவம் எண்டு போக வழியில நிறைய தண்ணி வந்திட்டுது. அம்மா அக்காவையும் என்னையும் தம்பியையும் கட்டிப்பிடிச்சுக் கொண்டிருந்தவ. கனக்க தண்ணி வந்து எங்களை இழுத்துக் கொண்டு போச்சுது. பிறகு நான் எழும்பிப் பார்க்க அம்மாவைக் காணேல்லை."
நீர் கன்னத்தில் வழிய துடைத்துக் கொண்டே சொன்னான்.
பக்கத்தில் நின்ற கிழவர், "றால் குளத்து தண்ணி பெருகித்தான் பெரிய அழிவு வந்தது. அதிலதான் கனசனம் அள்ளுப்பட்டுப் போனது" என்றார்.
"போவமே அப்பன்"
"எங்கட வீடு?"
ஊரே அழிஞ்சு போச்சு. வீடு இருந்த அடையாளமே இல்லை என்பதை அந்த குழந்தை மனசுக்கு எப்படி சொல்லிப் புரிய வைப்பது.?
"என்ர புத்தகம் கொப்பி." "நான் வாங்கித் தாறன். பிள்ளை படிக்கலாம்."
"அப்ப சரி,"
வெறுமையான தலையசைப்பு.
ரஞ்சி வந்தவனை பரிவோடு அணைத்துக் கொண்டபோது ஆறுதலாக இருந்தது.
89

Page 51
வன்னியாச்சி
"இரண்டோட மூண்டு பிள்ளையஸ் எண்டு நினைச்சுக் கொள்ளு வம். கூழோ கஞ்சியோ இருக்கிறதைக் குடிக்கலாம்."
ரஞ்சி சொன்னாலும் அவனுக்கு என்னவோ வீட்டு நிலமையை நினைக்க யோசனையாகத்தான் இருந்தது.
இடப்பெயர்வின் பின் திரும்பவும் சொந்த இடம் வந்தும் ஒழுங்காய் உழைப்பு கிடைக்கவில்லை. கூலி வேலைக்கு போவதில் அரை வயிறோ கால் வயிறோதான் நிரம்புகிறது. பாவம் ரஞ்சி எப்படித்தான் சமாளிக்கப் போகிறாளோ..?
அவர்கள் எப்படித்தான் கவனித்துக் கொண்டாலும் கஜேந்திரனின் அந்த வெற்றுப் பார்வை மட்டும் மாறாமலே இருந்தது. ஐந்து நிமிஷம் விளையாடினாலும் திடுமென சோர்வுடன் போய் மரக்கப்புடன் அமர்ந்து விடுவான். தனிமையில் குடிசை மூலையில் அமர்ந்து "அம்மா" என்று அவன் விம்மி அழும் போது நெஞ்சு பதறிப் போகும்.
வெள்ளைத் துணியில் மூடப்பட்டு தாய் தந்தை சகோதரங்கள் வரிசையாய் கிடந்த கோலத்தைப் பார்த்த அதிர்ச்சியிலிருந்து அந்த குழந்தை மனம் மீண்டு எழ எத்தனை காலம் எடுக்குமோ..?
"இப்பிடி வீட்ட இருந்தால் அவன் அழுது கொண்டுதான் இருப்பான். ஸ்கூலில சேர்த்து விடுங்கோ, அங்கை நாலு பிள்ளைய ளோட பழகினால் மனம் தேறி சந்தோஷமாய் இருப்பான். படிப்பிலயும் கெட்டிக்காரனாய் இருந்தவன் தானே?"
"யூனிபோம் இல்லாமல் கலர் உடுப்போட படிக்க விடுவினமோ தெரியேல, பிரின்சிப்பலிட்ட கேட்டுப் பார்க்க வேணும்."
மறுநாளே பாடசாலை அதிபரிடம் போய் கஜேந்திரனின் நிலை பற்றிச் சொன்னான்.
"கொஞ்சநாள் நிற உடுப்போட வந்து படிக்க விடுங்கோ சேர். எப்படியும் யூனிபோம் தச்சுக் குடுத்திடுவன். இப்ப எங்களுக்கும் சரியான கஷ்டம். அதுதான் சேர்."
90

தாமரைச் சைன்வி
அதிபர் கஜேந்திரனையே சிறிது நேரம் பார்த்தார். அவர் பார்வை யில் நெகிழ்ச்சி தெரிந்தது.
"பள்ளிக்கூடத்தால சீருடைக்கு துணி கிடைக்கும் தான். அதுக்கு இன்னும் நாள் இருக்கு. அது வரைக்கும் நிற உடுப்பைப் போட்டு வரட்டும்." என்றவர் கஜேந்திரனிடம் திரும்பி;
"தம்பிக்கு படிக்க விருப்பமோ..?" என்றார். மெல்லிய தலையசைப்பு.
"சரி ஆறாம் வகுப்பில போய் இருக்கட்டும். நான் ரீச்சரிட்ட சொல்லி விடுறன்."
அதிபர் பாடசாலையில் சேர்த்துக் கொண்டது பெரிய நிம்மதியாக இருந்தது. நிற உடுப்புக் கூட தைக்க வசதியில்லை. இளங்கோவின்ர சேட்டுக் காற்சட்டையைத்தான் குடுக்க வேணும். பெரிதாக இருக்கும் தான். கொஞ்ச நாளைக்கு சமாளிக்கலாம்.
கஜேந்திரன் ஒழுங்காக பாடசாலைக்கு போய் வந்தான். ஆனாலும் அந்த வெற்றுப் பார்வையுடன் இரவில் "அம்மா" என்று ஏங்கி அழும் அழுகையும் மாறவில்லை. பாடசாலையிலும் அதே ஒதுங்கி நிற்கும் தன்மை மாறாமல் இருந்ததை கவனித்து ஒருநாள் அதிபரும் கூறினார்.
"படிக்கக்கூடிய பிள்ளை. வகுப்பு ரீச்சராய் இருக்கிற கோமதி ரீச்சர் இவரில நல்ல கவனமெடுத்து பார்த்துக் கொள்ளுறா. படிப்பில ஆர்வம் வந்திட்டால் மனம் கொஞ்சம் கொஞ்சமாய் தேறிவிடும். கவலைப் படாதேங்கோ. தெரியாதே எல்லாரும் சீருடை போட்டிருக்க இவர் மட்டும் நிற உடுப்பு போட்டு வாறதும் இவற்ர மனதுக்கு ஒரு ஒதுக்கத்தை குடுக்கக் கூடும், நாள் போகப் போக சரியாகிவிடும்." அவனுக்கு கேட்க கவலையாக இருந்தது.
பாடசாலை சீருடை எப்போது வருமோ. என்ன பாடுபட்டாலும் சீருடைக்கு துணி வாங்கி கஜேந்திரனுக்கு தைத்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
91.

Page 52
வன்னியாச்சி
ஒரு வாரத்தின் பின் அதிபர் வரச்சொன்னதாய் இளங்கோ வந்து சொன்னான். என்னவோ ஏதோ என்று யோசித்துக் கொண்டே போனான்.
"இந்த ஸ்கூலில படிச்ச பழைய மாணவி. இப்ப கனடாவில இருக் கிறா. சுனாமியால பாதிக்கப்பட்ட ஆராவது ஒரு மாணவனுக்கு உதவி செய்ய விரும்பிறதாய் கடிதம் போட்டிருக்கிறா. கஜேந்திரனைப் பற்றி அவவுக்கு போனில சொன்னனான். உடனும் கொஞ்ச காசு அனுப்பியிருக்கிறா. அதில முதல்ல கஜேந்திரனுக்கு யூனிபோமும்
தைச்சு புத்தகப்பை சப்பாத்து தொப்பி எல்லாம் வாங்குவம்." அவனுக்கு வியப்பும் மகிழ்ச்சியும் ஒரு சேர எழுந்தது.
"Gggff...." "வெளிநாடுகளில வாழ்ந்தாலும் இந்த மண்ணையும் மனிசரையும் நினைச்சுக் கொண்டுதான் கன பேர் வாழுகினம், அவையில இவவும் ஒரு ஆள். கஜேந்திரனின்ர படிப்புக்கு விருப்பத்தோட உதவி செய்யிறா. கஜேந்திரன் இங்க வாங்கோ. பின்னேரம் கிளிநொச்சிக்குப் போய் எல்லாம் வாங்கி வருவமா." மெலிதாய் தலையசைத்தான்.
அன்று மாலை புத்தகப் பைகள் விற்கும் கடைக்குள் நின்றபோது கஜேந்திரனின் முகத்தில் சிறு மலர்ச்சி தென்பட்டது.
இதுவா அதுவா என்று ஒவ்வொன்றையும் பரபரப்போடு பார்த்து ஒன்றைத் தெரிவு செய்து "இதை எடுக்கட்டா சேர்" என்றான்.
"பிள்ளைக்கு எது விருப்பமோ அதை எடுங்கோ." என்று அதிபர் சொல்ல, "இதையே எடுக்கிறன் சேர். இது போலத்தான் எங்கட அப்பாவும் வாங்கித் தந்தவர்" என்றான்.
அந்த வார்த்தைகள் நெஞ்சுக்குள் வலியை ஏற்படுத்த அதிபர் கஜேந்திரனின் தலையைத் தடவி விட்டார்.
சீருடைக்கு துணி வாங்கி தைக்க அளவு கொடுத்து விட்டு சப்பாத்து தொப்பி வாங்கிக் கொண்டார்கள்.
Z

தாமரைச் சைன்வி
ஒரு டசின் கொப்பி, கொம்பாஸ் பெட்டி, பேனை, பென்சில் எல்லாம் வாங்கி புத்தகப்பைக்குள் வைத்து அதிபர் கஜேந்திரனிடம் கொடுத்தார்.
"வெள்ளிக்கிழமை பின்னேரம் உடுப்பு தைச்சு தந்திடுவினம், வந்து வாங்குங்கோ."
"giff Cq.ft."
"கஜேந்திரன் திங்கட்கிழமையிலயிருந்து யூனிபோம் போட்டு சப்பாத்து போட்டு புது புத்தகப்பையோட பள்ளிக்கூடத்துக்கு வரவேணும் என்ன?"
முகத்தில் சிறு மலர்வுடன் தலையசைத்தான்.
ஒரு நிமிடம் பொறுத்துக் கேட்டான்.
"இதெல்லாம் எனக்கு ஆர் வாங்கித் தருகினம் சேர்?"
"இந்து அன்ரி எண்டு, அவ கனடாவில இருக்கிறா. அவதான் இதெல்லாம் வாங்கித் தந்திருக்கிறா. நல்லாய் படிச்சால் பிள்ளைக்கு தொடர்ந்தும் படிக்கிறதுக்கு காசு அனுப்புவா, கொப்பி புத்தகம் எல்லாம் வாங்கித் தருவா. கவனமாய் படிக்கவேணும். என்ன கஜேந்திரன் படிப்பீங்கள்தானே?"
"ஒம் சேர்"
தலையசைக்கும் போது கண்களில் ஒரு ஒளி பளிச்சிட்டது.
வெள்ளிக்கிழமை தையல் கடைக்குப் போய் சீருடையை எடுத்து வந்தான். அதை உடனும் ரஞ்சி தோய்த்து மடித்து ஆயத்தமாய் வைத்தாள். நேற்று இரவே அந்த உடுப்புக்களோடு புத்தகம் கொப்பி வைத்த புத்தகப் பையையும் தொப்பியையும் ஒன்றாக எடுத்து வைத்து விட்டுத்தான் கஜேந்திரன் படுத்தான். அவனின் ஒவ்வொரு செய்கை யிலும் மெலிதாய் ஒரு உற்சாகம் தெரிந்தது.
93

Page 53
வன்னியாச்சி
"நேரம் என்னப்பா." ரஞ்சி தலையை உயர்த்திக் கேட்டாள். "விடியப்போகுது. அஞ்சரை மணி வரும்."
"மழை இருட்டு அதுதான் மூடிக்கிடக்கு, மழை தொடர்ந்தும் வரப்போகுது போல."
"மழைதானே நல்லா வரட்டும், நிலம் குளிரும்தானே." அவன் எழுந்து வெளியே வந்து வானத்தை நிமிர்ந்து பார்த்தான். வடக்கு திசையில் கருமுகில்கள் குவிந்திருந்தன. எங்கேயோ தூரத்தில் மேகம் திரண்டிருந்தாலும் கூட இங்கே வந்தும் அது மழையாய் பெய்யக் கூடும்.
குளிர் காற்று நெஞ்சில் ஊசிகளாய் குத்தியது. அவன் கால் முகம் கழுவி விட்டு வந்து திண்ணையில் அமர்ந்து கொள்ள ரஞ்சி தேனிர் கொடுத்துவிட்டுப் போனாள்.
கஜேந்திரன் பாடசாலைக்கு புறப்பட ஆயத்தமாவது பெரும் ஆரவாரமாய் தெரிந்தது.
ரஞ்சி அவனுக்கு சீருடையை போட்டு விட்டாள். குனிந்து சட்டையைத் தடவிக்கொண்டு "இது எனக்கு அளவாய் இருக்கு பெரியம்மா. இனி இளங்கோ அண்ணையின்ர பெரிய சட்டை எனக்கு வேண்டாம்" என்றான்.
"அதுதானே, பிள்ளைக்கு இந்த புதுச் சேட்டு காற்சட்டை இருக் குத் தானே. தொப்பி போட்டு சப்பாத்து போட்டு புத்தகப்பையையும் தோளில் கொழுவிக்கொண்டான். தன்னையே குனிந்து பார்த்துக் கொண்டான். முகத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் பொங்கி வழிந்தது. கண்ணில் சந்தோஷமும் உதட்டில் சிரிப்புமாய் "போயிட்டு வாறன்" என்று சொல்லி ஒரு துள்ளலுடன் இளங்கோவுடன் நடந்து போனான்.
プ4

தாமரைசிசைன்னி
கடவுளே. எத்தனை நாட்களுக்கு பிறகு இந்தப் பிள்ளையின் முகத்தில் இந்த சிரிப்பும் சந்தோஷமும்,
இதற்குக் காரணம் எங்கேயோ தொலைவில் இருக்கும் முகம் தெரியாத ஒரு பெண்.
அவளின் ஒரு செய்கை,
ரஞ்சி சேலைத் தலைப்பால் கண்களை ஒற்றிக்கொள்ள அவனுக் கும் கண்கள் நிறைந்து தழும்பியது.
கனடா, அது எந்தத் திசையில் இருக்கிறது.?
தெரியவில்லை!
அவனுக்கு அந்த திசை நோக்கி கும்பிடவேணும் போலிருந்தது.
தினக்குரல் - 2005
95

Page 54
நூலாசிரியை பற்றி.
ஈழத்துப் புனைகதைஞர்களில் ஐந்த தாமரைச்செவ்வியின் பங்கும் பணி
gTab', 'a7', Guidimi, (gTJETË கரைதிமிக்க நாயங்கள் மூலம் தனக் காட்டியிருக்ரும் இவர் பாழக்கா: போன்ற சிறுகதைத் தொகுதிகள் சிறுகதைந்துறையிலும் அதிர்ள்:
KITLEFITATTITI5.FTITLI LJLIHI. 醬 பெருவிரல் மடியக் கார தேசிய சாகித்ய மற்றும் வடக்கு-கிழ் உட்பட பல விருதுகள்ளேயும்; தன் ப ரீதியிலும் அகில் இங்கே ரீதியிலும் தாமரைச்செல்வி வடக்கு-கிழக்கு பெற்றிருக்கின்றார்
மெய்யலுபவங்களாயும், பிறயே கலாரீதியாகக் கூறி வாசகரின்டயே தமிழ்ப் புனைகதை இலக்கியத்தில் பற் பிரக்ஞைக்கு உட்பட்டு : வெற்றிக்கான காரணிகள் எனக் கொ
போர்க்காலச் சூழல், போரின் அவ நிறைந்த மனங்கள் ஆகியவற்கிந்த சிந்திரிப்பதில் தாமரைச்செய்வித சக்தியந்த பெண்களின் மொ'ட்
it in Hill.
'பள்ளியான்சி' எனும் தாமரச்செய் இவரது நிறனுக்கு சாட்சி சொல்வதா,
மீரா பதிப்பக வெ
 
 

ாம் தலைமுறை எழுத்தாளர்களுள் பும் மிக முக்கியமானது கனிமகள்" ள்'பச்சை வயல் கன்வு' போன்ற கெள ஓர் அடையாளத்தை இளங் இரவு' 'அழுவதற்கு நேரமில்லை' 1ளரaவே அறுவடை செய்து ஏற்ப்டுத்தியவர். இதுவே ஐந்தாம் புத் தாமன்ரர்ரெiயிர் னமாகின்றது.
}க்கு மாகாண இலக்கிய விருதுகள் : சர்வதேச முதற் பரிசுகளையும் தட்டிக்கொண்ட மாகாண ஆளுநர்விருதிளையும்
ாயியாகக் கேட்டறிந்தவற்றையும் அவற்றித்தொற்ற சிவப்பதோடு முகிழ்விடும் நவீன செங்ந்ேதிகள் ழுதுவதுமே நாம்ாரர்செல்வியின் TFFTITLE
வர் சாவுகள் அழிவுகள் பநற்றம் துே பாடப்புக்க யநார்த்தமாகக் ாக்கென ஓர் முத்திரை பதித்தவர் ாவுகளுக்கு வடிவங்கொடுப்பதில்
புவியின் இச்சிறுகதைத் தொகுதியும்
வே அமைந்திருக்கிறது.
- ஆ. இரத்தினவேலோன்
ErflúfsB - BO
.