கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திருக்கோணேஸ்வரம்

Page 1
懿 蔷 ■ ଝୁ
鬣 E:
輩
R
3. 腳 -
R
 
 
 
 
 
 

繼
邸T貂円
|
排
| ဗွို
枋
|树

Page 2

முன் னுரை
ஈழ காட்டில் கிழக்கு மாகாணத்தில் தேசாந்திரரேகை 81 °25° யும் அட்ச ரேகை 85° யும் சந்திக்கும் இடத்தில் திருக்கோணமலை யமைந்திருக்கின்றது. மிகப் பழமையான காலத்தில் கோணேசர் மலையிருந்த திருக்கோணேசர் ஆலயம் மிகவும் புனிதமும் புகழும் வாய்ந்ததாகும். முற் காலத்தில் திருக்கோணேசர் ஆலயத்தின் பெருமையினுல் திருக்கோன மலை உலகப் புகழ் பெற்று விளங்கியது. அந்நியர் ஆட்சிக் காலத்திலும் இன்றும் திருக்கோணமலைத் துறைமுகம் உலகத் தின் மூன்ருவது பெரிய இயற்கைத் துறைமுகமாக உலகப் புகழுடன் விளங்குகின்றது. திருக்கோணமலை நகரின் சுற்றுப் புறங்களில் உள்ள கிராமங்கள் மிகவும் இயற்கை வளமுடைய தாகக் காணப்படுகின்றன.
கி. பி. 1950, ஜூலை மாதம் : சைவப் பெருமக்களின் பெரு முயற்சியினுல் திருக்கோணேசர் ஆலயத்தின் புதிய வரலாற்றுக்கு வித்திட்டனர். பின்னர் பழைய திருக்கோணேசர் ஆலயத்தைச் சேர்ந்த திருவுருவங்கள் நகராண்மைக் கழகத் தினரால் கிணறு வெட்டும்போது கண்டெடுக்கப்பட்டன. அதன் பின்னர் புதிய ஆலயம் சிறிது சிறிதாக வளரத் தொடங்கியது.
திருக்கோணேசர் ஆலயத்தின் வரலாற்றை எம்மால் முடிந்த அளவிற்கு சரித்திர ஆதாரங்களுடன் எழுதியுள்ளோம். இலங்கையின் ஏனைய பகுதிகளில் இலங்கை அரசினர் புதை பொருள் ஆராய்ச்சிப் பகுதியினர் சிறந்த ஆராய்ச்சிகள் செய்துள்ளனர். அது போல திருக்கோணமலையிலும் சிறந்த முறையில் ஆராய்ச்சிகள் செய்வதற்கு அரசினரும் பொது மக்களும் சிறந்த வகையில் ஆர்வம் காட்டுவார்களெனில் புதை பொருள் சம்பந்தமான எவ்வளவோ விட யங் கள் வெளிவரும்.

Page 3
ii
திருக்கோணேசர் ஆலயம் அமைந்திருக்கும் "பிறட்றிக்" கோட்டையைப் புனித நகராக்குதற்குச் சைவப் பெருமக்கள் முயலவேண்டும்.
இக் கோவிலுக்குரிய பாவநாசச் சுனை இன்று எல்லோ ரும் நீராடும் வகையில் வசதியாக அமையவில்லை. இச்சுனை இன்று கிணருக இருக்கின்றது. வருங்காலத்தில் இதனை முன்னிருந்த நிலைக்குக் கொண்டுவருதல் சைவமக்களின் கடமையாகும்.
அ. அளகைக்கோன் அவர்கள் வேண்டிய நூல்களையும், உகந்த குறிப்புக்களையும் தந்துதவினுர். இவர் திருக்கோண மலை வே. அகிலேசபிள்ளை அவர்களின் மகனுவார். கொழும்பு நூதனசாலை நூலகப் பொறுப்பாளர் லின் டீ பொன் சேகா அவர்களும் துணைப் பொறுப்பாளர் சிறில் பெர்ணுண்டோ அவர்களும் வேண்டிய உதவிகளை கல்கினர். முகப்புப் படம் தந்துதவிய நாகராசா கணபதிப்பிள்ளை அவர்களுக்கும், திருக் கோணமலை நீதிமன்றத்தில் பணியாற்றும் கே. சிவபாலசிங்கம் அவர்களுக்கும், தொண்டர் இ. சண்முகராசா அவர்களுக்கும் எமது நன்றி உரியதாகுக.
அணிந்துரை கல்கிய சுன்னுகம் ஸ்கந்தவரோதயக் கல் லூரி முதல்வர் வி. சுப்பிரமணியம் B. A. B. Sc., அவர்களுக்கும் தம்பலகமம் கோணங்ாயகர் கோயில் தர்ம கர்த்தா சபைத் தலைவர் பண்டிதர் ஐ. சரவணமுத்து அவர்களுக்கும், திருக் கோணமலைக் கோணேசர் வித்தியாலயத் தலைமையாசிரியர் சைவப்புலவர், பண்டிதர் இ. வடிவேலு அவர்களுக்கும் எமது உள்ளங்கலந்த நன்றி உரியதாகுக.
பொதுப்பணிகளிலெல்லாம் ஆர்வமுடன் ஈடுபடும் இளைப் பாறிய ஆசிரியர் பொ. கந்தையா அவர்கள் இந்நூலினை வெளியிட்டுள்ளார். அவர்களுக்கு உளங்கனிந்த நன்றி.

iii
இந்நூல் வெளிவருதற்குப் பேருதவி நல்கிய மகாலிங்க சிவம் அவர்களின் மகன் புலவர் ம. பார்வதிகாதசிவம் அவர் களுக்கும் எமது நன்றி உரியதாகுக.
இந்நூல் எழுதும்போது படியெடுத்துதவிய திருவாளர் கள், கு. மயில்வாகனம், க. கோபாலசிங்கம், த. சிவபாதம் ஆகிய இம்மூவருக்கும் எமது நன்றி.
இந்நூலினை மிகவும் குறுகிய காலத்தில் அச்சியற்றி உதவிய யாழ்ப்பாணம் பூரீ லங்கா அச்சகத்தினருக்கு கெஞ்சங்கலந்த நன்றி உரியதாகுக.
இந்நூல் பற்றி வாசகர்களதும், அறிஞர்களதும் கருத்துக் களைப் பெரிதும் வரவேற்கின்றேம்.
339, பெருந்தெரு, வை. சோமாஸ்கந்தர். திருக்கோணமலை. அ. பூநீஸ்கந்தராசா.
3-4-1963.

Page 4
v
சுன்னுகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அதிபர்
வி. சுப்பிரமணியம் அவர்கள் B. A., B. Sc., Post-Graduate Trained
அளித்த அணிந்துரை
இலங்கை பலவகை வளமும் வனப்பும் மிகுந்த நாடு. இங்காட்டின் தொன்மையையும் தெய்வத் தன்மையையும் விளக்கும் இருகண்களாகத் திருக்கோணமலையும், திருக் கேதீஸ்வரமும் விளங்குகின்றன. இவ்விரண்டினுள் திருக் கோணமலை தொன்று தொட்டு திருக்கோணேஸ்வரம் என்று அழைக்கப்படுகின்றது. இதன் வரலாறு சரித்திர காலத்திற் கும் முற்பட்டது. இத்திருத்தலம் தேவாரப்பாடல் பெற்ற பெருமையமுடையது. இங்கிருந்த திருக்கோவில் பிற்காலத் தில் அங்கியரால் அழிக்கப்பட்டுச் சிதைவற்றது. அறிஞர்கள் இதன் பழமையும் சிறப்பும் பற்றி ஆராய்ந்து கட்டுரை கள் எழுதி வருகின்றனர்.
அழிவுற்ற திருக்கோயில் புதுப்பிக்கப்பெற்றுக் கும்பாபி ஷேகமும் நிகழவிருக்கும் இவ்வேளையில் “கோணமாமலை” யைப்பற்றிய வரலாறுகளும், சிறப்புக்களும் நூல்வடிவில் வெளிவருவது பெரும்பயன் தரும் அருஞ்செயலாகும். கர்ண பரம்பரையிலும், கல்வெட்டிலும், புராணங்களிலும், சரித்தி ரத்திலும், தேவாரத் திருவமுதங்களிலும் பிறவழிகளிலும் கிடைத்த கதைகளையும் செய்திகளையும் துணையாகக்கொண்டு 'திருக்கோணேஸ்வரம்” என்னும் திருப்பெயருடன் இத்திருத் தல மான்மியம் வெளிவருகின்றது. இது கல்லதொரு திருத் தொண்டு. திருக்கோணேஸ்வரத்தின் சிறப்பினைத் தமிழ் பேசும் கல்லுலகம் நன்கறியும் வண்ணம் தக்க முறையில் இக்

நூலினை வெளியிடும் ஆசிரியர், புலவர் திரு. வை. சோமா ஸ்கந்தர் அவர்களையும், திரு. அ. பூரீஸ்கந்தராசா B, A. (Eons.) Dip-in-Ed. 9 alias%Tuyun (both ury T LITLn6. ருக்க முடியுமா மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் விளங்க நூலினை அமைத்ததுடன் கோணமா நகரின் அமைப்பையும் சமூகச்சிறப்பையும் அந்நகரில் வாழ்ந்த சேந்தமிழ்ப் புலவர் களின் சீரிய இயல்பினையும் இந்நூல் எடுத்துக் கூறுகின்
D3).
இந்நூலினை இயற்றிய ஆசிரியர்களுக்கு என்மனமு வந்த நன்றி. அபிமானிகள் இந்நூலினையேற்றுப் போற்றிப் படித்துப் பயன்பெறுவார்களாக. கோவிலைப் புதுக்கிக் கும் பாபிஷேகஞ் செய்து மலர் வெளியிட்டு மாபெருக் தொண் டியற்றும் அன்பர்கள் அனைவர்க்கும் மீண்டும் நன்றியும். வணக்கமும் உரியன. வாழ்க திருத்தொண்டு வாழ்க தமிழ் மொழி! வாழிய ஈழமணித் திருநாடு!
ஸ்கந்தவரோதயக் கல்லூரி, வி. சுப்பிரமணியம்,
சுன்னுகம், முதல்வர்
14-3-63.

Page 5
vi
திருக்கோணமலை கோணேசுவர வித்தியாலயத்தின் தலைமையாசிரியர் சைவப்புலவர், பண்டிதர் இ. வடிவேல் அவர்கள் அளித்த
அணிந்துரை
*திருக்கோணேஸ்வரம்” என்னும் ஆராய்ச்சி நூலைப் பார்வையிடும் வாய்ப்புக் கிடைத்தது. புலவர் வை. சோமா ஸ்கந்தர் அவர்களும், திரு. அ. பூரீஸ்கந்தராசா B.A. (Hons.) Dip-in-Ed. அவர்களும் இந்நூலின் ஆசிரியர்களாயிருப்ப தைக் கண்ணுற்றேன். நூலின் உள்ளே நுழைந்து பார்க்கும் போது இவ்விரு ஆசிரியர்களும் திருக்கோணேஸ்வரத்தின் வரலாறுகளை ஆராய்ந்து அனைவருக்கும் அறியத் தருவதற்காக அரும்பாடுபட்டிருக்கின்றர்கள், என்பதை மறுக்கமுடியாது. தாம் எடுத்துக்கொண்ட ஆராய்ச்சியில் இயன்றமட்டும் முயன்று, கோணேஸ்வரத்தின் பழமையையும் பெருமையை யும் நிறுவிக்காட்டும் திறமையால், அரும்பணி ஒன்றைச் செய்திருக்கின்றர்கள்.
பல்வேறு நூல்களையும், கல்வெட்டுக்களையும், சாசனங் களையும் ஆராய்ந்து, கோணேஸ்வரத்தின் வரலாறுகளை அறிய ஆர்வங்கொள்ளும் மக்களுக்குச் சிரமங்தோன்ருதவகையில் *திருக்கோணேஸ்வரம்', என்னும்நூலில் எல்லா விபரங்களை யும் திரட்டி ஒழுங்குபடுத்தி, ஒரேநூலில், ஒரேபார்வையில் அனைத்தையும் அறியச்செய்து மேலும் ஆராய்ச்சியில் கம் மையும் ஈடுபடும்படி இவ்விரு ஆசிரியர்களும் இந்நூலை அமைத்திருப்பது நமக்குக் கிடைத்த ஒருபேரும் பேறென்றே அகருதுகின்றேன்.

vii
திருக்கோணமாமலையின் பெயர்க்காரணமும், திருக்கோ ணேஸ்வரத்தின் ஆதிகாலமும், போத்துக்கீசர் கால நிகழ்ச் சிகளும், கன்னியாய் வெங்கீருற்றைப் பற்றிய விளக்கமும், சமூகவளர்ச்சிபற்றிய விளக்கங்களும், திருக்கோணமலை வர லாற்றுமூலங்கள் என்ற பகுதியும் இந்நூலின் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இவற்றை இன்றைய மக்களும் இனிவரும் சந்ததியும் அவசியமறியவேண்டுமென்பது என் கருத்து. திருக்கோணேஸ்வரத்தின் வரலாற்றைப்பற்றி மாறு பட்ட அபிப்பிராயங்கள் இருந்தபோதிலும் அவற்றையெல் லாம் அப்படியே தந்து, தமது கருத்தையும் இற்தியில் தெளிவுபடுத்தும் ஆசிரியர்களின் சீரிய பண்பை மிகமிகப் போற்றுகின்றேன்.
திருக்கோணேஸ்வரத்தில் கும்பாபிஷேகம் நடைபெறு கின்ற இச்சந்தர்ப்பத்தில் இந்நூல் வெளிவருவதும் மிகப் பொருத்தமானதே. இப்பெரும் பணியை நிறைவேற்றும் இந் நூலின் ஆசிரியர்களிருவரும் கோணேஸ்வரப்பெருமானுடைய திருவருளைப் பெறுவார்களாக, திருக்கோணேஸ்வரம் ஒரு சிறந்த கருவூலம். இதனை அனைவரும் தத்தம் இல்லங் களில் வைத்துப் பாதுகாப்பீர்களாக.
“curi6uugi" 15, வித்தியாலயம் ஒழுங்கை,
திருகோணமலை, இ. வடிவேல்.
7-3-63.

Page 6
viii
தம்பலகமம் கோணநாயகர் கோயில்
தர்ம கர்த்தா சபைத் தலைவர் பண்டிதர் ஐ. சரவணமுத்து அவர்கள் அளித்த மதிப்புரை
திருகோணமலையின் சரித்திரம் மிகவுக் தொன்மை வாய்க் தது. இதன் உற்பத்தி வரலாறு வடமொழிப் புராணங்களி லும் சைவப் புராணங்களிலும் மிகவுஞ் சிறப்பாகக் கூறப் பட்டிருப்பினும், சரித்திர மாணவன் முறையே ஆராய்ச்சி செய்யின் சுவைதரும் பேருண்மைகளும் தமிழருக்குப் பெருமை தரும் சரித்திர சம்பந்தமான நிகழ்ச்சிகளும் பல்கிப் பெருகி யிருப்பதை அறிவான்.
சரித்திர காலத்திற்கு முன்னும் மிகச் சிறப்புடையதாய் விளங்கியது என்பதை ஆராய்ச்சித் துறையில் வல்லுனர் துருவித் துருவிக் கண்ட கால, இயற்கை, நிகழ்ச்சிகளையும் நில நூல் வல்லுனரின் முடிபுகளையும் கொண்டு நிச்சயிக்கலாம்.
(Scott Eliott) இஸ்கொட் எலியட் என்னும் நில நூல் வல் லுனர் கூறும் ஒன்பதினுயிரம் ஆண்டுகட்கு முன்னிகழ்ந்த ஐந்தாவது கடற் பெருக்கிற்கு முன்னரே சூரன்போர் நடக் திருக்கவேண்டும். இலங்கைக்குத் தெற்கே ஆயிரம் யோசனைக் கப்பால் சூரனுடைய நகர் வீரமகேந்திரம் இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. சூரன் தம்பி சிங்கன் இலங்கை யின் கிழக்குப் பகுதியையும் அதனைச் சேர்ந்த பாகத்தையும் ஆண்டான். கடல் கொண்ட இலங்கையுடன் தற்போதுள்ள இலங்கைப் பகுதியும் அவன் ஆட்சியின் கீழ் இருந்தன. சூர
பத்மன் ஓர் சிவபக்தன். திருகோணமலை ஓர் சிறந்த சிவ தலம். திருக்கோணமலையிலுள்ள திருக்கோணேஸ்வரத்தை அந்த மாபெருஞ் சிவபக்தன் வழிபட்டான் என்று கூறின் குற்றமாகாது.

歌、
k
கக்ஸ்லி (Huxley) என்னும் பேராசிரியரும், கெய்க்கல் (Haiekel) என்னும் ஜெர்மனியப் புலவரும், முதன் முத லாகக் குமரி முனைக்குத் தெற்காகவுள்ள பூமியின் நடுக் கோட் டுக்கு இரண்டு பக்கமும் பரந்து கிடந்த நிலப் பகுதிகள் தான், முதன் முதல் பூமியில் மனிதன் வாழ ஏற்ற நிலையை உலகத்தில் அடைந்த தென்றும், அங்கேதான் மனிதன் தோன்றி எங்கும் பரந்து நாகரீகத்தை வளர்த்தான் என்று கூறும் கூற்றுக்கும் இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் உள்ள கற்பாறைகள்தான் உலகத்தில் மிக மிகத் தொன்மை யான காலத்தனவென்று நிலநூல் வல்லுனர் கூற்றையும் திருக்கோணமலையின் தொன்மையையும் பொருத்தி உண்மை காண்க. சூரனுடைய ஆட்சியினுல் ஏற்பட்ட கலக்கம் ஒழியவே கந்தசுவாமியாருடன் போருக்கு வந்த சேனை வீரருட் பலர் இங்கு தங்கிக் கதிர்காமம், திருக்கேதீச்சரம், திருக் கோணுசலம், மாங்தை முதலிய இடங்களில் குடியேறினர். அதற்குச் சான்றக இந்த இடங்களை அடுத்துள்ள காடுகளில் காணப்படும் குளங்கள், அழிபாடுகள் ,கற்கள், சிலைகள், கட்ட டங்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்தால் உண்மையைக் காணலாம்.
வங்காளக் குடா நிலப்பரப்பாயிருந்த காலத்து, வட கிழக்கிலிருந்து வந்த மங்கோலியருக்கும் தென் கிழக்கிலிருந்த தமிழருக்கும் கலப்புண்டானதால், பிறந்த ஒரு இனம் நாகரீ கமும் கலைப்பண்பும் அழகும் நிறமும் வாய்ந்ததாயிருந்தது. அந்த வகுப்ப்ார் மாங்தை என்னும் இடத்தைத் தலைநகரா கக் கொண்டு ஆண்டு வந்தனர். அவர்களே காகர்கள் என் பர் சரித்திர ஆராய்ச்சியாளர். நாகர் குலத்துப் பெண்கள் மிகவும் அழகு வாய்ந்தவர்கள் என்பதைச் சூரனது மனைவி பதுமகோமளையையும் இராவணன் மனைவி மண்டோதரியை யும் குபேரன் மனைவி சித்திரரேகையையும் எடுத்துப் பார்க் கின் விளங்கும். ஏறக்குறைய 8000 ஆண்டுகட்கு முன் கிகழ்ந்த இராமாயண நிகழ்ச்சிக்கும் திருகோணமலைக்கும்

Page 7
Χ
இராவணன் வெட்டு என்ற இடம் தொடர்பை உண்டாக்கி வைத்திருக்கின்றது. அத்துடன் கன்னியாய் என்னும் வெங். நீரூற்றின் கர்ண பரம்பரைக் கதையும் தொடர்பை வலுப் படுத்துகின்றன. "எடுத்தவன் தருக்கை. " என்ற திருக்கோணமலைத் தேவாரம் இதை நினைவூட்டுகின்றது. சிவ பக்தன் சூரபத்மன், சிவபக்தன் இராவணன், சிவபக்தன் அருச்சுனன் இவர்களுடைய தொடர்பை சூரபத்மன் காலத் திலிருந்து இராமாயண காலம், பாரத காலம் முடியுடைய வேந்தர் காலம், மகாவம்சகாலம், பல்லவர்காலம், போத்துக் கேயர், ஒல்லாக்தர், ஆங்கிலேயர் கால நிகழ்ச்சிகளுடன் நெருங் கிய தொடர்பு கொண்டதாக இருந்து விளங்கும் திருக் கோணுசலம் பழம் பெரும் பெருமை வாய்ந்த ஓர் சிறந்த சிவதலம் என்பதை மறுக்க முடியாது.
அத்தலத்திற்கு காலா காலத்தில் திருப்பணி செய்தும், குளங்கள் கட்டியும், மானியம் கொடுத்தும், கல்வெட்டு, செப் பேடுகள் வரைந்தும், நிர்வாகத் திட்டம் வகுத்தும் கொடுத்த புண்ணிய புருஷர்களில் முன்னிற்பவர் குளக்கோட்டன் என் னும் சோழ வம்சத்தைச் சேர்ந்த ஓர் சிவபக்தன். அவன் செய்த பசு நல்வினேயுடன் சிவாகல்வினையும் இன்னும் கின்று நிலவுவதைக் காணலாம். அதன் வரலாற்றுச் சுருக்கமே இந்த நூலாகும். இத்தலத்தின் பெருமையும் சிறப்பும் இந்தத் திருக்கோணமலைப் பட்டணத்தை யடுத்த பற்றுக்கள், கட்டுக் குளப்பற்று, கொட்டியாபுரப்பற்று, தம்பலகாமப் பற்றுக் களின் பூர்வ சரித்திரங்களை ஆதாரமாக வைத்து ஆராய்ந்து பார்க்கின் ஓர் பெரிய சரித்திர நூலுக்கே வேண்டிய விஷ யங்கள் நிறைந்திருப்பதைக் காணலாம். இந்நூலின் ஆசிரி யர்கள் கையாண்ட தலையங்கங்களும் அவற்றின் தொகுப்பு முறையும் சிறப்பாக அமைந்துள்ளன. இந்தத் தலத்திற்கு, ஆராய்ச்சிச் சரித்திர நூல் இல்லாத குறையை இவர்கள் நிறைவேற்றியிருப்பதால் அவர்களுக்குத் தமிழுலகம் - ஏன் சரித்

xi
திர ஆராய்ச்சி உலகமும் நன்றி கூறவேண்டிய கடமை. ஒன்றுண்டு. அதைப் பெற்று அடுத்த பதிப்பில் மேலும் ஆராய்ச்சி செய்து விரிவாக்கிப் பூர்த்தி செய்யவேண்டுமென் பது எனது மனமார்ந்த ஆசையும், அவர்களின் விருப்பமு. மாகும். அத்திருத் தொண்டினைச் செய்ய இறைவன் இவர் களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அருளும்படி வேண்டுகின்ருேம்.
22-3-63 ஐ. சரவணமுத்து.

Page 8
பொருளடக்கம்
பொருள்
1.
2.
திருக்கோணமலையின் பெயர்க் காரணம்.
புராண வரலாறுகள்
கி. மு. 2000 ஆண்டுகளுக்கு முன்னர்.
திருக்கோணேஸ்வரம்: ஆதிகாலம் போர்த்துக்கீசர் காலம் பிரித்தானியர் காலம்
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டுகள் திருக்கோணேசர் சாசனம்
திருக்கோணமலைக் கோவில்கள்
. கன்னியா வெந்நீரூற்று
. சமூக வளர்ச்சி
திருக்கோணமலைத் தமிழ்ப் புலவர்கள்
13. திருக்கோணமலை வரலாற்று மூலங்கள்
பக்கம்
12
19
27
34
37
44
49
60
65
78
86

திருக்கோணமலையின் பெயர்க் காரணம்
திருக்கோணமலைக்குப் பெயர்கள் பல உள்ளன. ஊர்க ளின் பெயர்கள் காலப்போக்கில் மாறிவருவது இயற்கையே. கோகண்ணம், திரிகோணமலை, திருக்குன்றமலை, திருக்கோ னைமலை, திருக்கோணுதமலை, திருக்கொணுமலே, கோணமலை, கோனுமலை, மச்சேந்திர பர்வதம், மச்சேஸ்வரம், தெக்கண கைலாசம், தென் கைலாசம், திருமலை என்பன இவ்வூரின் பல பெயர்களாகும். இப்பெயர்களைப்பற்றி ஈண்டு ஆராய்வோம்.
வங்க நாட்டில் (BENGAL இலாத்த தேசத்தை சிங்க பாகு ஆட்சி செய்தான். அவனுடைய இரு பிள்ளைகளுள் விசயனே மூத்த மகனுவான். விசயனும் அவனுடைய தோழர் களும் நாட்டுக்கு விளைத்த தீச்செயல்கள் காரணமாக மரக் கலத்திலேற்றி நாடு கடத்தப்பட்டார்கள். விசயனும் அவனு டைய தோழர்களும் தம்பபண்ணையை (புத்தளம்) அடைந்தார் கள். கி. மு. ஐந்தாம் நூற்றண்டில் விசயன் ஈழநாட்டை ஆட்சி செய்தானென்று மகாவம்சம் கூறுகின்றது. விசயன் ஈழநாட்டை முப்பத்தெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். விசயனுக்கு சந்ததியில்லாத காரணத்தால் இலாத்த தேசத்தை ஆண்ட சுமித்தனுக்குத் தூதனுப்பினுன் சுமித்தன் விசயனது உடன் பிறப்பாவான். சுமித்தன் தனது இளைய மகன் பாண்டுவசு தேவனை ஈழநாட்டுக்கு அனுப்பினுன்
பாண்டுவசுதேவன் தனது உறவினர் உடன்சுற்றம் உட் பட முப்பத்திருவருடன் கோகண்ணம் என்ற துறைமுகத்தில் இறங்கியதாக மகாவம்சம் கூறுகின்றது மகாவம்சத்தின் படி கோகண்ணம் என்ற துறைமுகம் மகாகந்தர என்னும் ஆறு கடலுடன் கலக்கும் இடத்தில் அமைந்திருந்தது "மகாகக்தர என்பது சிங்களமொழியில் பெரிய பலையென்று பொருள்படு கின்றது. ஈழ நாட்டிலுள்ள ஆறுகளில் மிகவும் உயரத்தில் உதிக்கும் ஆறு மகாவலிகங்கையாகும். இலங்கைப் பல்கலைக்

Page 9
2 திருக்கோணேஸ்வரம்
கழகத்தின் புதைபொருள் ஆராய்ச்சித் துறைத்தலைவர் கலா நிதி எஸ். பறண வித்தான மகாகந்தர என அழைக்கப்பட்ட ஆறு இன்றுள்ள மகாவலிகங்கையாகும்." என்று கூறுகின் றர். மகாவலிகங்கை திருக்கோணமலைக் குடாக்கடலில் கலக் கின்றது. ஆகவே கோகண்ணம் என்று மகாவம்சத்தில் கூறுக் துறைமுகம் இன்றுள்ள திருகோணமலைத் துறைமுகமா குமென்பது கலாநிதி எஸ். பறணவித்தானுவின் கருத்தாகும். கொணு (Gona) என்னும் சிங்களச் சொல்லும் கண என்னும் சிங்களச் சொல்லும் காலப் போக்கில் சேர்ந்து கோகண்ணம் என்று திரிந்தது என்பது சிலர் கருத்து. கொணு என்பது மாடு என்றும்; கணு என்பது காது என்றும் சிங் கள மொழியிற் பொருள்படுகின்றது. சிவன் காளையை ஊர்தி யாக உடையவன். ஆகவே நீண்ட காதுடைய காளை என்ற பொருள் அடிப்படையில் "கோண,' "கண்ண" என்ற சொற்கள் இரண்டும் காலப்போக்கில் திரிபடைந்து கோகண் ணமாக உருவாகியதென்றும் கருதப்படுகின்றது.
இலங்கையின் வரலாற்று இதழில் i. e. பெரரா என்ப வர் திருகோணமலை என்ற பெயரின் தோற்றத்தைப் பின் வருமாறு விளக்குகின்றர்.
1. The name Trincomalee consists of three different words; "Tiru Malai in Tamil meaning holy and hill respectively, and kona is non other than Tamil rendering of the sinhalese Gona.'
- Vol. 1, No. 2, 1952.
"திருகோணமலை என்பது மூன்று சொற்கள்ாலாகியது. திரு மலை என்ற சொற்கள் தெய்வீகத்தையும், குன்றையும் கரு தும். கோணு என்பது கொண (Gona) என்ற சிங்களச் சொல்லின் ஒலிப்பெயர்ப்பு ஆகும்." பாண்டுவசுதேவனின் வருகைக்கு முன்பே காளையூர்தியனன சிவன் இவ்விடத்திற் கோயில் கொண்டார் என்பதைக் கூர்ந்துணரலாம்.

திருக்கோணேஸ்வரம் 3.
இந்துசாதனத்தில், இழைப்பாறிய கல்வியதிகாரி எஸ். ஜே. குணசேகரம் M. A. திருக்கோணமலையின் பெயர் சிங்கள மொழியுடன் தொடர்புடையது என்பதை மறுக்குமுகமாக இம்தியாவில் வழங்கும் கோகர்ணம் என்னும் தலத்தை ஆதா UIாகக் காட்டுகின்றர். தமிழில் கோன் என்பது அரசன் Hசன், என்று பொருள்படும். ஆகவே திருக்கோணமலையென் பது "தெய்வீகத்தன்மை வாய்ந்த மலை' என்பது அவர்கள் கருத் தாகும். ( S கோகர்ணம் என்று துளுவநாட்டில் ஒரு சிவன் கோவிலிருக்கின்றது. கோகர்ணேசுவரம் என்பது திருவாவடு துறையிலுள்ள ஒரு சிவன் கோயில்)
ஆனந்த விகடன் தமிழ் அகராதியில் இவ்வூரின் ப்ெயர் திரிகோணமலை என்றும், 2 திருக்குன்றமலை என்றும், திருக்கோணமலை என்றும், 4 கோணமலை என்றும், " கோணு மலை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருக்கோணமலை என் பதற்கு ஈழங்ாட்டிலுள்ள ஒரு சிவஸ்தலம் என்று விளக்கம் கூறப்பட்டுள்ளது.
தெசஷ்ண கைலாசம் என்று ஸ்காந்த புராணமும், தென் கைலாயம் என்று தமிழ்ப் புராணங்களும் கூறுகின்றன. கைலா சத்திலிருந்து வாயுபகவானுற் பெயர்த்தெறியப்பட்ட மூன்று சிகரங்கள் வீழ்ந்த இடங்களும் தென் கைலாயம் என்று கூறப் படுகின்றன. V
t கி. பி. ஏழாம் நூற்றண்டில் வாழ்ந்த் திருஞான சம் பந்தர் திருக்கோணமலைப் பதிகத்தில் ஒவ்வொரு பாடல் தோறும் "கோணமாமலை அமர்ந்தாரே" என்று குறிப்பிட்டுள் ாளார். ஆகவே திருஞான சம்பந்தர் காலத்தில் இவ்வூரின் பெயர் கோணமாமலையென்றே அல்லது திரு என்று அடை
ஆனந்தவிகடன் அகராதி பக். 10க்8
பக்: 1492.2 பக். 1499, 8 பக். 1499, 4 பக். 1056,பக்.1057 † Saiva Literature Page 33. Qa/air&traum pr6Oor6ör

Page 10
4. திருக்கோணேஸ்வரம்
கொடுத்துத் திருக்கோணமாமலை என்றே வழங்கப்பட்டிருத் தல் வேண்டும்.
ft கி. பி. பன்னிரண்டாம் நூற்றண்டில் சேக்கிழார் பெரு மான் இயற்றிய பெரியபுராணத்தில்,
'ஆழிபுடை தழ்ந்தொலிக்கும் ஈழந்தன்னில்
மன்னுதிருக் கோணமலை” என்றும்,
'திருக் கோணமல் மகிழ்ந்த செங்கண் மழவிடையார்" என்றுங் கூறியுள்ளார். சேக்கிழார் காலத்தில் இவ்வூர் திருக் கோணமலையென்றே அழைக்கப்பட்டு வந்திருக்கின்றது.
கி. பி. பதினுலாம் நூற்றண்டில் வாழ்ந்த உமாபதிசிவாச் சாரியார் சிவநாமக் கலி வெண்பாவில் t திருக்கோணமாமலை யென்று கூறியுள்ளார்.
கி. பி. பதினைந்தாம் நூற்றண்டில் வாழ்ந்த அருணகிரி காதர் tt திருக்கொணுமலையென்று இவ்வூரினைக் கூறியுள்ளார். கி. பி. பதினெட்டாம் நூற்றண்டில் வெளிவந்த மச்ச புராணத்தில் மச்சேந்திர பர்வதம் என்றும், மச்சேஸ்வரம் என்றும் இவ்வூருக்குப் பெயர் கூறப்பட்டுள்ளது.
8 கி. பி. 1940 ஆண்டு வெளிவந்த திருக்கோணமலை வர லாறு என்னும் நூலில் இவ்வூரின் இயற்கையான பெயர்
tt p t
t மன்னுதிருக் கோணமா மலையின் மாதுமைசேர்
பென்னே கோணேசப் புராதன --சிவநாமக் கலிவெண்பா ft கிலைக்கு நான்மறை தவத்தான பூசுரர் திருக்கொணுமல் தலத்தாரு கோபுரம் - திருப்புகழ், s The History of Trincomalee by Leut a Colonil G. P.
Thomas R. A. - Page 1.

திருக்கோணேஸ்வரம் 5
திருக்கோணுதமலேயென்றும், திரிக்கோணமலையென்றும், திருக் கோணமலையென்றும் பழைய வழக்கில் உள்ளதென்றும் அவர் கூறியுள்ளார். அண்மைக் காலத்தில் உருவாகிய பெய ரைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றர்.
TRINCONA TREQUI MALE TRINKENMALL TRINCOEN MALE TRINKILI - MALE TRINOO MALLE
இன்று இவ்வூரின் பெயர் (TRINCOMALEE) றிங்கோமலி என்று வழங்கப்பட்டு வருகின்றது.
திருக்கோணமலை நீதி மன்றத்திலுள்ள பழைய சுவடிக ளில் திருக்கொணுதமலையென்றும், திருக்கோணுதமலையென் றும் இவ்வூரின் பெயர் காணப்படுகின்றது.
1956-ம் ஆண்டு திருக்கோணமலையில் நடந்த தமிழரசுக் கட்சி மாநாட்டை செய்தித்தாள்கள் *திருமலை மாநாடு" என்று எழுதி வந்ததால் திருக்கோணமலைக்குத் திருமலை என்ற பெய ரும் வழக்கில் வரலாயிற்று.
திருக்கோணுதமலை என்பதே இவ்வூரின் இயற்கையான பெயரெனக் கொள்ளலாம். திருக்கோணுத மலையென்பது எக்காலத்தும் செல்வம் குறையாத மலையென்ற பொருளைத் தரும். திருக்குன்ற மலையென்றலும் அப்பொருளையே தரு கின்றது. கி. பி. பன்னிரண்டாம் நூற்றண்டு முதல் திருக் கோணமலையென்ற பெயரே இவ்வூருக்கு நிலைபெற்றுள்ளது.

Page 11
6 திருக்கோணேஸ்வரம்
புராண வரலாறுகள்
சிவபெருமான் திருக்கைலாய மலையில் உமாதேவியாரு டன் காளை ஊர்தியணுக வீற்றிருந்தார். தேவர்கள் வணங்கி நின்றனர். பிரமாவிற்குப் படைத்தல் தொழிலையும், திருமாலுக் குக் காத்தல் தொழிலையும், உருத்திரனுக்கு அழித்தல் தொழிலை யும், ஆதிசேடனுக்குப் பூமியைத் தாங்குக் தொழிலையும் தங் தோமென இறைவன் திருவாய் மலர்ந்தருளினுன். இதனைச் செவியுற்ற காற்றின் செல்வன் ‘என்னிலும் ஆதிசேடன் வலிமையுடையானே?" என வினவினுன். ஆதிசேடன் கோபத் துடன் "என் உணவாகிய உனக்கு என்ன ஆற்றல் உண்டு?" என்றன். உன்னைப் போல நான் கருடனுக்கு அஞ்சிேன் என்ருன் காற்றின் செல்வன். இருவருக்கும் போர் மூண்டது. தேவர்களின் ஆணைப்படி ஆதிசேடன் திருக்கைலாய மலையை இறுகப் பற்றின்ை. காலின் முதல்வன் தன் பேராற்றலினை வெளிப்படுத்தினுன். அண்டமும், வையகமும் நடுக்குற்றன. தேவர்கள் அஞ்சி நடுங்கினர். இறைவன் திருவடியைத் தொழுது வேண்டினர்.
இறைவன் திருமொழிப்படி தென் கைலாயத்தில் வட கைலாயத்து அழகெல்லாம் பொலிய கைபுனைந்துற்றக் கவின் பெறு ஓவியம்போல கைலாய பீடத்தை அமைத்தான்.
குமரிக் கண்டம் மிகவும் சிறப்புடையது. தென் திசை யிலுள்ளவர்களைக் காப்பாற்ற நான் உள்ளங் கொண்டேன் என இறைவன் ஆதிசேடனுக்குக் கூறினர். ஆதிசேடன் தனது ஆயிரம் தலையில் மூன்றினைச் சாய்த்து இறைவன் திருமொழி யைச் செவிக்கொண்டான். அப்போது வாயுதேவன் திருக் கோண சிகரத்தையும் வேறு இரண்டு சிகரங்களையும் பறித் தெடுத்தான். இறைவன் கட்டளைப்படி திருக்கோ?ன சிகரத்தை, ஈழத்தின் கீழ்த்திசையில் கடற்கரையில் வைத்தான். ஒரு சிகரத்தைத் தொண்டை நாட்டிலும், மற்றையதைச் சோழ காட்டிலும் வைத்தான்.

திருக்கோணேஸ்வரம்
கோயில் அமைப்பு
திருக்கோனை பீடத்திலே ஒன்பது வீதிகள் அமைந்திருக் கின்றன. முதலாவது நவரெத்தின. வீதியில் பரமானந்தம் என் னும் ஆலயம் உண்டு. இரண்டாவதாகிய மரகத வீதியில் புத்தியென்னும் சக்தியோடு கூட மகேஸ்வரன் கோயில் கொண்டுள்ளான். சூரியகாந்த வீதியில் பதினுெரு உருத்திரர் கள் வசிப்பார்கள். சந்திரகாந்தப் பிரகாரத்தில் சிவசொரூப முள்ள ஐம்பத்தொரு சக்திகளும் வசிக்கின்றன. மாணிகக வீதியில் நடராசப் பெருமானும் ஏழுகோடி மகிாமறைகளும் உண்டு. படிகரெத்தின வீதியில் விநாயகர், சுப்பிரமணியர், வைரவர் முதலானவர்கள் உள்ளார்கள். நீலரெத்தின வீதியில் அளவற்ற பிரமரும் திருமால்களும் உருத்திரர்களும் வாழ்வார் கள். சுவர்ண வீதியில் அமரர் சித்தர் முதலான பதினெண் கனத்தவர்களும் வாழ்வார்கள். இரசத வீதியில் பிரணவமய மான வெள்ளை யானைகளும், கால்வேத உருவமாக அநேக குதிரைகளும் பூதகணங்களும் வசிக்கும்.
திருக்கோனை மலையிலே ஏழு குகைகள் உண்டு. வடக் குக் குகையில் அகத்தியர், புலத்தியர் முதலாய முனிவர்கள் வாழ்கின்றர்கள். வட மேற்குக் குகையில் நாகலோகஞ் செல்ல வழியுண்டு. வட கிழக்குக் குகையில் மோட்சவீடு இருக்கின் றது. மேற்குக் குகையிலிருந்து மகாவலி கங்கை பெருக்கெடுக் கின்றது. தென்மேற்குக் குகையில் வெள்ளியில்ை அமைந்த கோவில் உண்டு. மேற்குக் குகையில் இரத்தின தீர்த்தமும், கிழக்குக் குகையில் மவுத்திக தீர்த்தமும் உண்டு ረ
மச்சேந்திர மலை
சிவனிடத்தில் வரங்கள் பெற்ற இரணியன் தேவர்களுக்கு இடுக்கண் விளைத்து வந்தான். தம்மைப் பாதுகாக்க மந்திர சக்தியுள்ள சங்கணத்தைக் கையில் அணிந்திருந்தனர். இரணி யன் அக் கங்கணங்களை அறுத்துக் கடலிலிட்டுத தன் குரு வாகிய சுக்கிராச்சாரியாரைக் கொண்டு மந்திர சக்தியை ஒழிப்

Page 12
8 திருக்கோணேஸ்வரம்
பித்தான் அப்போது தேவர்கள் திருகோணமலைக்கு வந்து கோண நாயகரிடம் முறையிட்டனர்.
கோணாநாயகர் கட்டளைப்படி திருமால் மீன் உருக் கொண்டு கங்கணங்களே மீட்டுத் தேவர்களிட்ங் கொடுத்தார். திருக்கோணமலைக்கு முன்பாகத் தலையையும் திரிகூட பர்ஷ தத்துக்கு நேராக வலையும் வைத்துத் தாம் எடுத்துக் கொண்ட மச்சக் கூட்டை விட்டு வெளியே வந்தார். அம் மச்சக் கூடானது பெரிய மலையாக வளர்ந்து திருகோணமலையுடன் ஒன்று சேர்ந்திருக்கின்றது. அங்காள் தொடக்கம் அப மலைக்கு மச்சேந்திர பாவதமெனவும் பதின்மூன்று-கருத்து.மச்சேச்சரி
மெனவும் பெயர்கள் உருவாயின.
திருக்கரைசைப் புராணங் கூறும் செய்தி
உமாதேவியார் இமவானுக்குப் பிள்ளையாகப் பிறந்து திருக்கைலாயத்திலிருந்து யோகநிலையிலிருக்குஞ் சிவபிரான நோக்கித் தவஞ்செய்து கொண்டிருந்தார். இந்திரன் முதலாய தேவர்கள் அனைவருஞ் சிவபிரானிடம் வந்து சூரபதுமன் செய் யுங் துன்பங்களை முறையீடு செய்தனர். "இமய பருவதத் திலிருந்து என்னை நோக்கித் தவஞ் செய்யும் பார்வதியைத் திருமணஞ் செய்து உங்களுக்கு இடுக்கண் செய்கின்ற சூர் பதுமன் முதலிய அசுரர்களையெல்லாம் அழிக்கும் பொருட்டு ஒரு மகனைத் தருவோம்' என்று சிவபெருமான் தேவர்கட்குத் திருவாய் மலர்ந்தருளினர். பின்னர் சிவபெருமான் இடப தேவரைப் பார்த்து நாம் திருமணத்தின் பொருட்டு இமய பரு வதத்திற்கு எழுந்தருள வேண்டியிருப்பதால் பிரமா, விட்டுனு. இந்திரன் முதலிய தேவர்களுக்கும் இரிசிக் கூட்டங்களுக்குக் தெரிவித்து வருக எனக் கூறியருளினர். தேவர்கள் முனி வர்கள் அனைவருங் திருக்கைலாசத்தில் வந்து கூடிர்ைகள். அப்போது வடதிசை தாழ்ந்து; தென் திசை உயர்ந்தது. தேவர் கள் அச்சங் கொண்டனர். இறைவனிடங் தங்களைக் காப்பாற் றும்படி முறையிட்டனர். இறைவன் விட்டுணுவை நோக்கி. கமது திருமணக் கோலங்காணும் பொருட்டு ஏழு கடல்களை

திருக்கோணேஸ்வரம் 9
யும் உள்ளங்கையில் அடக்கிய அகத்திய முனிவர் இவ்விடம் வந்ததால் வடதிசை தாழ்ந்து தென் திசை உயர்ந்தது. ஆகை. யால் அம்முனிவனை இவ்விடம் வரவழைக்க என்று கூறினர். விட்டுணு அகத்தியரை அழைத்து வந்தார். நீ இவ்விடம் வந்த தால் வடதிசை தாழ்ந்தது. அதனுல் உன் இருப்பிடமாகிய பொதிக மலைக்குச் செல்க. தெக்கண கைலாயத்திற் கண்மை யிலுள்ள கரைசையம் பதியிலும் மறைசைப் பதியிலும் கமது திருமணக் கோலக்காட்சி காணப் பெறுவாயென்று இறைவன் திருவாய் மலர்ந்தருளினுர். அகத்தியர் மிகவும் மகிழ்ச்சியுடன் அவ்விடம் விட்டு நீங்கினுர். அதன் பின்னர் அகத்தியர் ஈழ நாட்டையடைந்து தெக்கண கைலாயத்திற் கண்மையில் உள்ள திருக்கரைசையம்பதியை அடைந்து விசுவகர்மாவையழைத்து ஆலயம் சமைப்பித்து இறைவனை எழுந்தருளச் செய்து வழி பாடு செய்தார். சிவலிங்கத்திலிருந்து உமாதேவியாரோடு திரு மணக்கோல வடிவங் கொண்டு அகத்தியருக்குக் காட்சி கொடுத்தார்.
திவ்வியமா மணிச்சருவ தீர்த்தமுடை யவரென்றே அவ்விறைக்குத் திருநாம மருளிச்செய் தத்தலத்திற் றவ்விலபே ரருட்போக சக்தியையுந் தாபித்துக் கவ்வையறு நவதீர்த்தக் கணபதியுந் தாபித்தான்.
- திருக்கரைசைப் புராணம், தாபனச் சருக்கம்-17*
இராவணனும் திருக்கோணேசுவரமும்
இராவணன் பதினுயிரம் ஆண்டுகள் தவஞ்செய்து ஒப்பற்ற வரங்களைப் பெற்றன். தமையனுன குபேரனிடத்தில் இலங்கை யின் அரசுரிமையைக் கைக்கொண்டு பாவபுண்ணியங்களைச் சிறிதும் நோக்காது, தேவர்களைத் துன்புறுத்திக் கொடுங் கோன்மை புரிந்தான். ஒரு நாள் அவன் அன்னை கைகேசி கெற்குற்றிக் கொண்டு நிற்பதைக் கண்டான். அன்னையே நான் மூவுலகுக்கும் அரசன். நீ எக்காரணத்தினுலே உன் உடலை வருத்துகின்றப்? என்றன். மகனே! நான் சிவலிங்கப் பெருமான் மீது கொண்டிருக்கும் அன்பு மிகுதியினுல் அவரு.

Page 13
0 திருக்கோணேஸ்வரம்
டைய திருவுருவத்தை மாவினுலே நாளொன்றுக்கு ஆயிரஞ் செய்து மகாவலிகங்கைக் கரையில் வைத்து வழிபட்டுப் பின் னர் அந்தச் சிவலிங்கங்களை மகாவலிகங்கையிலிடுவது வழக் கம்; நாளைக்கு மாவில்லை, ஆகவே இன்று நெற்குற்றுகின்றேன்; எனத் தாய் உரைத்தாள். நீ சிவலிங்கப் பெருமானைப் பூசிப் பதற்கு அவரைப் போல மாவினுல் ஏன் உருவஞ் செய்ய வேண்டும்? இதோ கான் திருக்கைலாய மலைக்குச் சென்று சிவபிரானிடத்தில் ஒரிலிங்கம் பெற்று வருகின்றேனென்று கூறித் தனது இரதத்தில் ஏறிக் கயிலயங் கிரியை அடைக் தான். சிவபெருமானை நோக்கி உள்ளங் குழைந்து உருகி வழிபாடு செய்தான். அப்பொழுது சிவபெருமான் ஒரு முதிய அந்தணர் வடிவம் எடுத்து தசக்கிரீவனுக்கு அவன் விரும்பிய சிவலிங்கத்தைக் கொடுத்து மறைந்தருளினுர். வரும்வழியில் தேவர்களின் சூழ்ச்சியினுலும், வாயுபகவானின் செயலாலும் இராவணனுக்குச் சலவாதையுண்டாகியது. அப்பொழுது அக் தணர் வடிவில் வந்த வினுயகரிடம் இலிங்கத்தைக் கொடுத்துச் சென்றன். வினுயகர் பூமியில் சிவலிங்கத்தை வைத்துவிட்டு மறைந்தார். அவ்விடத்தில் பெரிய ஆலயமும்; அதனுள்ளே தான் கொண்டு வந்த சிவலிங்கமும் இருக்கக் கண்டான். இராவணன் மீண்டு சிவலிங்கம் பெற்றுத் திரும்பும் பொழுது சலவாதை உண்டாகியது. அந்தணச் சிறுவன் வேடத்தில் தோன்றிய வினுயகரிடம் கொடுத்துச் சென்றன். மும்முறை அழைத்தும் இராவணன் வராத காரணத்தால் சிறுவன் சிவ லிங்கத்தைப் பூமியில் வைத்தான். அது நிலைபெற்றது. இரா வணனுல் சிவலிங்கத்தை எடுக்க முடியவில்லை. மீண்டும் திருக் கைலாயத்துக்குப் போகும் வழியில் விட்டுணுமூர்த்தி ஒரு வயோதிக அந்தண வடிவிற் தோன்றி தெட்சண கைலாசத் தின் பெருமையையும் அங்கு சிவலிங்கம் பெறலாம் என்றுங் கூறினர். இராவணன் தெட்சண கயிலாயம் எனப்படும் திருக் கோணமலைக்கு வந்து இறைவனை வழிபட்டு நினறன். இறை வன் காட்சியளிக்காததால் கோபங்கொண்டு மலையின் கீழ் இறங்கி மலையைக் கட்டிப்பிடித்து அசைத்தான். மலை சிறிதும்

திருக்கோணேஸ்வரம் 11
அசையவில்லை. வெளியே வந்து, மலையின் தெற்குப் பகுதி யில் வாளில்ை ஓங்கி வெட்டினுன் மலையின் ஒரு சிறு துண்டு உடைந்து மேற்குப் பக்கம் போய் விழுந்தது. வாளும் இரு துண்டாயது. அதன்பின் மலையின் கீழாக இறங்கி மலையைத் தூக்கினன். மலையசைந்தது. அன்னமென்னடை அம்மையும் தேவர் முதலானுேரும் துணுக்குற்றனர். பின்பு கோணாகாய கர் தம் பெருவிரலால் மலையை ஊன்றினர். மலை தசக்கிரீ வனை நசுக்கியது. அவன் கடலினுள் அமிழ்ந்தினன். இரா வணன் இறந்தான் என்று எண்ணி அவன் தேரையுங் கட லில் அமிழ்த்தித் தேவர்கள் ஆனந்தக் கூத்தாடினுர்கள். சில காலஞ் சென்றபின் இராவணன கடலுள் இருந்து வெளியே வந்து கோணநாயகரிடம் தன் குற்றம் பொறுக்கும்படி வழி பட்டு நின்றன். கோபுரவாயிலில் நின்று தன் தலையொன்றை யும் தசை நார்களையும், கையையும், விரல்களையும் கொண்டு வீணையம்ைத்து "சாம வேதத்தை" இன்னிசையோடு பாடி இறைவனை மகிழ்வித்தான். இறைவன் மகிழ்ந்து ஒரு வாளும், தேருங் கொடுத்து ஓர் இலிங்கமும் ஈந்து விடை கொடுத்தார். இராவணன் பின்னும் பன்முறை துதித்து அவ்விடம் விட்டு நீங்கினுன்: '
-: இராவணன் அந்தணர் வடிவங்கொண்ட விட்டுணு மூர்த் தியைச் சந்தித்து இலங்காவின் தலைநகரில் ஏதேனும் விசேட நிகழ்ச்சிகள் உண்டோவெனக் கேட்டான். அவர் இராவண னின் அன்னை இறந்துவிட்டாளெனக் கூறினர். இச் செய்தி கேட்டு இராவணன் துன்புற்றன். இச் சிவலிங்கத்தை என் செய்வேனெனக் கூறி துன்புற்று நின்றன். சிவலிங்கத்தை அந்தணரிடங் கொடுத்தான். அந்தணர் அதனை திருக்கோணு சலத்தில் வைத்துப் 'பூமியில் பிறப்பதும் இறப்பதும் இயற்கை" என்று கூறி இராவணனைத் தேற்றினர். இலங்கை யின் பெருமையும் இதன் கண்ணுள்ள கழனிமலை, திருக் கோவில், சிவனுெளிபாதம், கதிரைமலை, கீரிமலை, உகந்தமலை, திருக்கேதீச்சரம், கரைசையம்பதி, வெருகலம்பதி ஆகியவற் றில் புனிதத் தன்மையையும் பெருமையையும் உடையது. இவற்றுளெல்லாம் தெக்கணகைலாசமே சிறந்தது. இத்தலத் துக்குரிய மரம், "சுவேத கூவிளம்' என்றும், தீர்த்தம் "பாபநாச தீர்த்தம்' என்றுங் கூறினர்.

Page 14
2. திருக்கோணேஸ்வரம்
கி. மு. 2000 ஆண்டுக்கு முன்னர்.
"ஈஸ்வர சிருஷ்டியென்றும் பிரம சிருஷ்டியென்றும் சிருஷ்டி இரண்டு வகையாக அமைகின்றது. இறைவன் முதன் முதல் சிருஷ்டித்தது ஈஸ்வர சிருஷ்டியாகும். பிரமன் ஈஸ் வர சிருஷ்டியைக் கண்டு அவனது ஆணைப்படி சிருஷ்டித்தல் பிரம சிருஷ்டியாகும். இவ் விருவகை சிருஷ்டியுள் முதலா வதான ஈஸ்வர சிருஷ்டியில் சிவகணத் தலைவராவர் பூரீ ரேணுக தாருகர்கள். இவர்களில் பூரீ ரேணுக நாதர் என்ப வர் பரமசிவத்தினது ஆணைப்படி வீரசைவ தர்ம பிரதிஷ்டார்த் தமாய், கொல்லீ பாக்கத்தில் வீற்றிருக்கும் சோமேசலிங்கத், தில் உற்பவித்து திக்விஜயஞ் செய்யும்காலையில் முதன்முதல் பொதிகையையடைந்து, அகத்தியருக்கு சித்தாந்த சிகாம ணியை உபதேசித்தார். அதன் பின்னர், இலங்கையை அடைந்து சிறந்த சிவ பக்தனுகிய இராவணனின் இளையதோன்றலாகிய விபீடணனின் விருப்பத்தின்படி ஒரே முகூர்த்தத்தில் மூன்று கோடி லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்தார், " என்று சித். தாந்த சிகாமணி கூறுகிறது. a
சிவகோடி யடையமுனஞ் செம்மறசக் கிரீவனன லவகோடி யகற்றியற் றறுகோடி பாலமும்
தவகோடி விடணுற் றறுமுக் கோடியுமாக நவகோடி சிவாலயங் கண்ணியதிலங் காநகரம்
இராமாயண காலம் கி. மு. 6000 ஆண்டுகள் என்று. ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றர்கள். எனவே இற்றைக்கு 8000 ஆண்டுகளுக்கு முற்பட்டது இராமாயண காலமாகும். இற்றைக்கு 8000 ஆண்டுகளுக்கு முன்னரே ஈழநாட்டில் சைவம் (சிவவணக்கம்) நிலைபெற்றிருந்ததென்பது இதனுல் மெய்யாகின்றது. சைவம் நிலைபெற்றிருந்த காரணத்தால் தமிழும் ஈழத்தில் நிலைபெற்றிருக்கும்.
உலகப்பழைமையான மொழிகளில் தமிழ் மொழியும் எண்ணப்படுகின்றது. உலகத்திலுள்ள எல்லா மொழிகளுக்

திருக்கோணேஸ்வரம் 8
கும் மூத்தமொழி தமிழ் மொழியென்ற ஆராய்ச்சி வலுவ டைந்து வருகின்றது. இந்தியாவிலிருந்து ஈழம் ஏறத்தாழ முப்பது மைலே கடலாற் பிரிக்கப்பட்டிருக்கின்றது. இராம. இலக்குமணரும் அவர்களது படைகளும் கற்களைக் கொண்டு பாலம் அமைத்து ஈழம் வந்ததாக இராமாயணச் செய்தியால் அறியலாம். அதனுல் இராமாயண காலத்தில் பாரதமும் ஈழ காடும் சில கல் தூரமே கடலால் பிரிக்கப்பட்டிருந்ததென் பதை உய்த்துணரலாம். இக் காரணங்களால் சைவமும் (சிவவணக்கமும்) தமிழும் ஈழநாட்டில் கி. மு. 6000 ஆண்டு களுக்கு முன்னரே நிலவியிருந்திருக்கின்றது என்று ஒருவாறு கூறலாம். இராமர் திருக்கோணேசுவரத்தில் வழிபாடு செய் தார் என்று செவிவழிச் செய்தி கூறுகின்றது.
திருமூலர் கி. மு. 6000 ஆண்டு முதல் கி. மு. 100 ஆண்டுவரை, 5900 ஆண்டுகள் வாழ்ந்தார் என்றும் நீண்ட காலம் உயிர்வாழும் உபாயத்தை அறிந்திருந்தவர் திருமூலர் என்றும், அவர் நூலிலேயே அகச்சான்றுகள் உண்டென்றும், கழகப் புலவர் சித்தாந்த பண்டிதர் திரு. ப. இராமநாதபிள்ளை (திருமந்திரம். பக். 80 - ஜூன் 1957) கூறுகிறர். திருமூ லர் காலம் கி. பி. 600 க்கு முற்பட்டதென்று டாக்டர் மா. இராசமாணிக்கம்பிள்ளை (பல்லவர் வரலாறு பக். 308) கூறுகிறர். திரு. நீ. சி. கந்தையாபிள்ளை கி. பி. ஐந்தாம் நூற் ருண்டு (தமிழ்ப் புலவர் அகராதி பக். 224) என்று கூறு கிருர்,
வளியிஇன வாங்கி வயத்தி லடக்கில் பளிங் கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம் தெளியக் குருவின் திருவருள் பெற்றல் வளியினும் வேட்டு வளியனுமாமே 55
ைே கிறனுடை நேரிழை யாளொடும் சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு ஞாலமறிய கரைதிரை மாறிடும் cu traogy Loreaui Lu Tar 55ÁS UT &oa GBU 78

Page 15
14 திருக்கோணேஸ்வரம்
எங்கே இருக்கினும் பூரி இடத்திலே அங்கே யதுசெய்ய ஆக்கைக் கழிவில்லை அங்கே பிடித்தது விட்டனவுஞ் செல்லச் சங்கே குறித்த தலைவனுமாமே. - 552,
அண்டஞ் சுருங்கில் அதற்கோ ரழிவில்லை பிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும் உண்டி சுருங்கில் உபாயம் பலவுள கண்டங்கறுத்த கபாலியு மாமே - 715
நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில் வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை ஒட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை தேட்டமும் இல்லை சிவனவ குமே 584
ஈராறு கால்கொண்டு எழுந்த புரவியைப் பேராமற் கட்டிப் பெருதுண வல்லிரேல் நீராயிரமும் நிலமாயிரத் தாண்டும் பேராது காயம் பிரான்நந்தி ஆணையே 702
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும் காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக் கடற்றை யுதைக்கும் குறியது வாமே - 558,
மூல நாடி மூக்கட் டஸ்க்குச்சியுள் நாலு வாசல் நடுவுள் இருப்பிர்காண் மேலை வாயில் வெளியுறக் கண்டபின் கலன் வார்த்தை கணுவிலும் இல்லையே - 602.
உடம்பா ரழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன் உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே - 704.
திருமந்திரத்தில் காணும் இவ்வகச் சான்றுகளால் திரு மூலர் பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார் என்பது உய்த்

திருக்கோணேஸ்வரம் 15.
துணரக் கூடியதாய் அமைகின்றது. யோகத்தின் உயர்வை இன்று அறிவியலாரும் ஒப்புக்கொள்கின்றர்கள்.
திருமூலர் ஈழநாட்டிைச் 'சிவபூமி" யென்று குறிப்பிட் டுள்ளார். அகத்துக் காண்ப்படும் இடைகலை பிங்கலை இரண் டும் புறத்து முறையே பொன்மலையாகவும், இலங்கையாக வும் கொள்ளப்படும். நடு நாடியாக சுழுனை, தில்லைவனம் எனப்படும். நடு நாடியே எல்லாவற்றையும் நடத்துகின்றது. அதுபோல் புறத்துத் தில்லைவனம் பொன்மலை முதல் இலங் கையிருகக் கொள்ளப்படும்.
இடைபிங் கலையிம் வானே டிலங்கை
நடுநின்ற மேரு நடுவாஞ் சுழுணை
கடவுந் தில்ல்ைவனங் கைகண்ட முலம்
படர்வொன்றி யென்னும் பரமாம் பரமன்றே 8 270 ۔--
திருமூலர், மூலன் என்னும் பெயருடைய மாடுகள் மேய்ப்பானின் உடலிற் புகுந்தாரென்றும், அதன் பின்னரே திருமூலர் என்ற பெயர் அமைந்ததென்பதை அவர் வரலாற் றல் அறிகின்றேம். ஒரு ஆண்டுக்கு ஒரு பாட்டாக 3000 ஆண்டுகளுக்கும் 3000 பாடல்கள் பாடினரென்பது திருமங். திரம் நூல் வளர்த்த வரலாருகும். எனவே இப்பாடல் ஏறத்தாழ கி. மு. 300 ஆண்டுகளுக்கு முன்னர் பாடிய பாடலாக அமை யலாம். இற்றைக்கு ஏறத்தாழ 2300 ஆண்டுகளுக்கு முன் னரும் ஈழநாட்டில் சிவவணக்கம் (சைவம்) சிறப்புற்றிருந்த தென்பதைத் திருமூலர் திருமந்திரத்தால் உணரலாம்.
மேரு நடு நாடி மிக்கிடை பிங்கலை கூரு மிவ் வானின் இலங்கைக் குறியுறுஞ் சாருந் திலைவனத் தண்மா மலயத் தூ டேறுஞ் சுழுனை இவை சிவபூமியே. - திருமந்திரம் 2701. அண்டத்துள் நடு ரேகையும் (Equator) பிண்டத்துள் சுடு முனையும்; அண்டத்துள் இதன் வட அயன வரைகளும் பிண்டத்துள் இடைகலை, பிங்கலை. நாடிகளுமாகும். இலங்கை.

Page 16
6 திருக்கோணேஸ்வரம்
யில் மேருவின் குறியைப் பார்க்கலாம். பூமத்திய ரேகையும் பூமியின் அட்சரேகையும் கூடுமிடம்; அதுதான் இலங்கை, தில்லைவனம் மலையம் இவை பூமியின் நடுகாடி (axis) யில் இருக்கின்றன என்பதைத் திருமந்திரம் குறிக்கின்றது.
திருமூலர் இலங்கையை சிவபூமியென்றும் இலங்கையில் மேருவின் குறியைக் காணலாம் என்றும் கூறியிருக்கின்றர். புராண வரலாற்றின்படி காற்றின் செல்வன் தூக்கி எறியப் பட்ட மூன்று மலைச்சிகரங்களில் ஒன்றே திருக்கோணமலை யிலுள்ள கோணேசர் மலையாகும். கோணேசர் ஆலயம் உல கிலேயுள்ள வழிபாட்டுத் தலங்களுள் மிகவும் பழமையான தொன் றென்பதும்; திருக்கோணமலை நாகரிகமும் மொகஞ்ச தாரோ நாகரிகமும் ஏறக்குறைய ஒரே காலத்தனவென்றும் ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.
இற்றைக்கு සිද්o ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கவி ராஜர் என் பார் தாமியற்றிய கோணேசர் கல்வெட்டென வழங் கும் கோணேசர் சாசனத்தில் குளக் கோட்டன் காலம் கலி யுகம் பிறந்து 512 ஆண்டுகள் சென்றபின்னர் என்று கூறு கின்றர். ஆகவே குளக்கோட்டன் காலம் கி. மு. 2588 என்று கொள்ளலாம்.
உபநிடதம் வேதங்களின் முடிவுப் பகுதிகளாக அமைக் துள்ளன. உபநிஷத் என்ருல் கருத்துடன் பக்கத்தேயிருந்து கேட்பது என்று பொருள்படுகின்றது. பழங்காலத்தில் மாண
fதிருந்து கலி பிறந்தஞ் ஒாற் ருெருபதுட
னிரண்டாண்டு சென்ற பின்னர் புரிந்திடப மாதமதி லீரைந்தாங் தேதி திங்கள் புணர்ந்த நாளிற் நெரிந்த புக ழாலயமாஞ் சினகரமுங் கோபுரமும் தேரூர் வீதி பரிந்து ரத்ன மணிமதிலும் பாவ5ா சகச் சுனையும் பகுத்தான் மேலோன்.

திருக்கோணேஸ்வரம் 7
வர் ரிஷிகளை அடைந்து அவர்களது பாதத்திலிருந்து கற்ற னர். அவர்கள் கூறியி உண்மைகளே உபநிடதமாகும். 108 உபநிடதங்கள் உள்ளதென்று முத்திகா என்னும் உபநிடதம்
கூறுகின்றது.
பிரமா, ஆன்மா என்னும் விடயங்களைப்பற்றியே உப நிடதங்கள் கூறுகின்றன. உபநிடதம் போதிக்கும் உண்மை யைச் சுருக்கமாகப் பரப்பிரமம் என்ற சொல்லால் சுட்டலாம். உபநிடத காலம் கி. மு. 800-600 வரையென்று இந்தியா ஒரு பண்பாட்டு வரலாற்றுச் சுருக்கம் என்ற நூலில் எச். இ. உரோலின்சன் கூறுகின்றர். பிருகதாரண்ய உபநிடதமும், சாந்தோக்ய உபநிடதமும், மிகவும் காலத்தால் முற்பட்டவையா கும். இலங்கை பூரீ விராடபுருடனது இடைகாடி ஸ்தானமாகு மென்று சாந்தோக்ய உபநிடதம் கூறுகின்றது.
கி. மு. ஐந்தாம் நூற்றண்டில் விஜயன் வருவதற்கு முன் னர் ஈழ நாட்டில் சைவம் செழிப்புற்றிருந்ததென்பதனை வண. வல்பொல இராகுல என்பவர் எழுதிய இலங்கையில் பெளத்த வரலாறு (பக்கம் 44) என்னும் நூலால் அறியலாம். விஜயனின் வருகைக்கு முன்னரும் பின்னரும் ஈழநாட்டில் சைவம் சிறப் புற்றிருந்த தென்றும் வண. வல்பொல இராகுல கூறியுள் ளார். இந்நகர் (திருக்கோணமலை) ஈழநாட்டில் தமிழர்கள் ஆதி யில் குடியேறிய முதன்மையான இடங்களில் ஒன்றகும். (The town was one of the first tamil settlements in Ceylon - Encyclopaedia Britanica Vol. 22 Page 477) GT6ăip 6 săT சைக்லோ பீடியா பிரிட்டானிக்காவில் 22-ம் தொகுதியில் காணப் படுகின்றது. பெளத்தம் ஈழநாட்டுக்குப் பரவ முன்னரும் பர விய பின்னரும் சைவ சமயம் சிறப்புற்று விளங்கியது என்ற்து வரலாற்று உண்மையாகும். ஆகவே விஜயன் வருவதற்கு முன்னரும் விஜயன் காலமாகிய கி. மு. ஐந்தாம் நூற்றண் டிலும் திருக்கோணமலையில் திருக்கோணேசர் ஆலயம் ஈடு. இணையற்று விளங்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை.
2 - -

Page 17
18 திருக்கோணேஸ் வரம்
யாழ்ப்பாண வைபவமாலை என்னும் நூலில் மயில்வாக னப் புலவர், “குடிகளை வசப்படுத்திக்கொள்ளும் நோக்கத்தி ல்ை விஜயராசன் சமய வழிபாட்டைக் குறித்துச் சனங்களுக்கு இஷ்டங் கொடுத்திருக்துக் தன் சமயாசார வொழுக்கத்தைத் தவறமற் காத்துக்கொண்டான். அரசாட்சியை ஆரம்பிக்க முன்னமே விஜயராசன் தன் அரசாட்சிக்குப் பாதுகாப்பீர்க நாலு திக்கிலும் நாலு சிவாலயங்களே எழுப்பிக்கொண்டான். சீழ்த்திசைக்குத் தம்பலகாமத்துக் கோணேசர் கோவிலை நிறுவி" (பிரதிபேதம்-புதுப்பித்து) என்று கூறினர்.
இவர் கீழ்த்திசைக்குத் தம்பலகாமம் கோணேசர் கோயிலை நிறுவியதாகக் கூறுவது பொருத்தமாகத் தோன்றவில்லை. சீர்த்தி பூரீ இராஜசிங்கன் காலத்தில் தம்பலகாமம் கோணே சர் கோவில் கி. பி. பதினெட்டாம் நூற்றண்டில் நிறுவப்பட் டதற்கு வேறு சான்றுகளுள. இலங்கையின் கிழக்குப் பகுதி யில் பல ஆயிரம் ஆண்டுகளாகத் திருக்கோணமலையில் கோணேசர் ஆலயம் இருந்ததென்பதற்கு ஆதாரங்கள் முன் னர் காட்டப்பட்டிருக்கின்றது. ஆகவே விஜயனுல் திருப்பணி செய்யப்பட்ட ஆலயம் திருக்கோணமலைத் திருக்கோணேஸ் வரமாகும் விஜயன் சிவ வணக்கத்தைத் தழுவியவன் என்பதை மகாவம்சத்தால் உணரலாம்.
கி. மு. 180-ம் ஆண்டில் வாழ்ந்த ஈழத்துப் பூதக் தேவனுர் என்பார் அகாகானூறு 307-ம் பாட்டில் “கடவுள் போகிய கருந்தாட்கந்து' என சிவலிங்க வழிபாட்டைக் குறித் துள்ளார். இவர் காலம் பரணர் காலமாகும். ஈழத்துப் பூதக் தேவனுர் சிவலிங்க வழிபாட்டைப்பற்றிக் கூறியதும் ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும்.
இதுவரை ஆராய்ந்த செய்திகளால் திருக்கோணேசர் ஆலயத்தின் பழமையை அறிகின்றேம். கி. மு. 6000. ஆண் டுகளுக்கு முன்னரே திருக்கோணேசர் ஆலயம் சிறப்புற்றி ருந்ததென்பதனை ஒருவாறு உணரலாம். இவற்றல் திருக். கோணமலைப் பகுதியில் மிகப்பழங் காலந்தொட்டு சைவம் நிலைபெற்று வந்ததென்பதையும் இப்பகுதியில் நாகரிகமடைந்த மக்கள் தொகுதியினர் வாழ்ந்தார்கள் என்பதும் உய்த்துண ரக் கூடியதாயிருக்கின்றது.

திருக்கோணேஸ்வரம் 19
திருக்கோணேஸ்வரம் ஆதி காலம்
கவிராசர் இயற்றிய கோணேசர் கல்வெட்டின்படி கோண காதர் கோயிற் றிருப்பணிக்கு வேண்டிய பொருட்களைக் கஜ பாகு மன்னன் என்பவன் சேமித்து வைத்தானென அறிகின் ருேம். இவ்வரசன் அனுராத புரியிலிருந்து கி. பி. 114 தொ டக்கம் 136 வரையும் ஆட்சி புரிந்தான். இவனை முதலாம் கஜபாகு என இலங்கை வரலாற்று ஆசிரியர்கள் அழைப் பார்கள்.
சேரன் செங்குட்டுவன் வஞ்சியில் பத்தினித் தெய்வமா கிய கண்ணகிக்குக் கோவிலெடுத்து விழா வெடுத்த காலத் தில் அவ்விழாவிற்குக் கடல் சூழ் இலங்கைக் கயவாகுவும் சென்றிருந்தானென்று இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதி காரத்தால் அறிகின்றேம். சேரன் செங்குட்டுவன் காலத்தில் வாழ்ந்தவன் கடல் சூழ் இலங்கைக் கயவாகு என்பதும் அவனே முதலாம் கயவாகு என்பதும் சரித்திரச் செய்தியா 0ازیع
கவிராசா உரைகடையில் எழுதிய கல்வெட்டுப் பகுதி யில் “திரு மருவு கயவாகு மகாராசனும் தனது படை மனு ஷரும் மகாவலிகங்கை அருகாக வெகு விசாலமான வெளியுங் திருத்தி அதற்கடுத்த அணைகளுங் கட்டுவித்து 1950 அவுண நெல் விதைப்புத் தரையும் திட்டம் பண்ணினர். பத்துக்கொன்று அடையும் எடுப்பித்து அதற்காகத் தென்னை 120d. புன்னை 12,000, இலுப்ப்ை12,000, கமுகு 12,000, ஏரண்டம் 12,000, பசுவினம்12,000, மேதியினம் 12,000 மும் பலபுஷ்பச் சோலை களும் செய்வித்து.' என்று கூறப்பட்டுள்ளது.
திருக்கோணேசராலயக் கருவூலக் கணக்கில் மூன்ருவ தாகப் பெயர் பதியப் பெற்றவன் கயவாகு மன்னனென்று கல்வெட்டுக் கூறுகின்றது. மேலும் சோழநாட்டிலிருந்து இரா

Page 18
20 திருக்கோணேஸ்வரம்
யர் வரிப்பத்தார், தானத்தார், கொல்லன், குயவன், நாவி தன், ஏகாலி, வள்ளுவன் இவர்களை வரவழைப்பித்துக் குடி நிலம், விழைபுலம் முதலான சர்வ காரியங்களும் கொடுத்து கோணேசர் கோவில் தொண்டுக்கு அமர்த்தினுன்.
கயவாகு மன்னன் கோணேசர் ஆலயத்தை இடி க்க வந்தானென்றும், இரண்டுகண்களையும் இழந்தானென்றும், பின்னர் கோணேசர் அருளால் கண்ணுெளி பெற்றனென் றும் கல்வெட்டால் அறிகின்ருேம். கோணேசர் கோவிலைக் கயவாகு அழிக்கவந்தான் என்பதால் கி. பி. இரண்டாம் நூற்றண்டிற்கு முன்னரே கோவில் கட்டப்பட்டிருத்தல் வேண் டும். நாள் வழிபாட்டிற்குக் குளக்கோட்டன் காலத்தில் இரண் டவுனமும், கயவாகு காலத்தில் மூன்றவுணமும் விதிக்கப்பட் டிருந்தமையால் அக்காலத்திலிருந்த கோவில் மிகப் பெரிதாக இருக்கவேண்டும் என்பதும், நாள் வழிபாடும் மிகவும் சிறப்பாக நடைபெற்றிருத்தல் வேண்டுமென்பதும் அறியக்கிடக்கின்றது.
மகாசேனன் என்னும் சிங்கள அரசன் அநுராதபுரியைத் தலைநகராகக் கொண்டு இலங்கையின் ஒரு பகுதியாகிய இரா சரட்டை என்னும் நாட்டை ஆட்சி செய்தான். இம்மன்னன் மணிகீர விகாரையையும் வேறு மூன்று விகாரையையும் கட்டி ன்ை. சைவசமயக் கடவுளர்களின் கோவில்களை இடித்தான். (The king built also the Manihira Vihara and founded three Viharas destroying temples of the (Brahmanical) gods (Mahavamsa) (26)JGöT gigj55) திருக்கோணமலையிலிருந்த கோணேசர் ஆலயங்களேயாம். இச்செய்தி தக்கண கைலாசம், கோணேசர் கல்வெட்டுப் போன்ற நூல்களில் கூறப்படவில்லை.
மகாவம்சத்தின்படி திருக்கோணேசர் ஆலயத்தை மகா சேனன் இடித்தான் என்பதை ஏற்றுக் கொள்வதாயின், பிற் காலத்தில் அக்கோயிலை யாராவது திருப்பணி செய்திருக்க வேண்டும். கோவிலை மீண்டும் யார் திருப்பணி செய்தார்க

திருக்கோணேஸ்வரம் 91.
ளென்பது தெரியவில்லை கி. பி. இரண்டாம் நூற்றண்டு முதல் சில நூற்றண்டுகள் தமிழக வரலாறு இருண்ட கால வரலாற்றுப் பகுதியாக இருக்கின்ற தென்று தமிழக வரலாற்ருசிரியர்கள் குறிப்பிட்டிருக்கின்றர்கள். இதனை நோக்குமிடத்து திருக்கோ ணேசர் ஆலய வரலாற்றுப் பகுதியிலும் ஓர் இருண்ட காலம் வந்திருக்கின்ற தென்பதை ஒப்புக்கொள்ள வேண்டியிருக் கின்றது.
கி. பி. ஏழாம் நூற்றண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் கோணமலையமர்ந்த பெருமான்மீது ஒரு பதிகம் பாடியுள்ளார். இப்பதிகத்தில் ஏழாவது பாடல் மறைந்து விட்டது. திருஞா னசம்பந்தர் தேவாரத்தில் குரைகடல் ஒதம் நித்திலங் கொழிக் குங் கோணமாமலை யமர்ந்தாரென்றும்; குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றும் கோணமாமலை யமர்ந்தாரென்றும்; வன்திரைகள் கரையிடைச் சேர்க்கும் கோணமாமலை யமர்ந்தா ரென்றும்; கோயிலுஞ் சுனையுங் கடலுடன் சூழ்ந்த கோண மாமலை யமர்ந்தாரென்றும்; விரிந்துயர் மெளவல் மா த வி புன்னை வேங்கைவண் செருந்தி செண்பகத்தின் குருக்தொடு முல்லை கொடிவிடும் பொழில் சூழ் கோன்மாமலையமர்ந்தா ரென்றும்;துன்றுமொண் பெளவம் மவ்வலுஞ் சூழ்ந்து தாழ்ந்துறு திரை பல மோதிக் குன்று மொண் கானல் வாசம் வந்துல வுங் கோணமாமலை யமர்ந்தாரென்றும் கூறியுள்ளார்.
இச் செய்திகளை ஆராய்வதால் திருக்கோணமலை ஓர் வர்த்தக நகரமாக இருந்ததென்பதும், இந்நகரில் குடிசனங், கள் நெருக்சிமாக வாழ்ந்தார்களென்பதும், கோவில் மலையில் கடற்கரையை அடுத்திருந்த தென்பதும், கோவிலை அடுத்துப் பெரிய பூஞ்சோலை இருந்த தென்பதும், மலையும், கடலும், சோலையும் சூழ்ந்த பகுதி யென்பதும் புலனுகின்றது. கி. பி. ஏழாம் நூற்றண்டில் திருக்கோணேசர் ஆலயமும், திருக் கோணமலை நகரும் சிறப்போடு விளங்கியதென்பதில் ஐய மில்லை.

Page 19
22 திருக்கோணேஸ்வரம்
இன்றும் பிறட்றிக் கோட்டையுள் பழைய கோவிலின் அழிபாட்டுச்சின்னங்களைக்காணலாம். 1944-ம் ஆண்டு இரண்டு பல்லவ சிற்பங்கள் கோட்டையுள் மண்ணில் புதைந்திருந்து எடுக்கப்பட்டன. ஒன்று விஷ்ணு மற்றையது இலக்குமி சிலை யாகும். இதல்ை கோணேசர் ஆலயத்தோடு பல்லவர்களது தொடர்பும் இருந்ததென்பதனை பல்லவ சிற்ப முறையில் அமைந்த தூண்கள் உணர்த்துகின்றன. இரண்டு தூண் கள் குகைவாயிலிலும். மற்றையது மலையின் உச்சியிலும் காணப்படுகின்றது. இவற்றினை ஆராயுமிடத்து பல்லவர் ஆட்சி கி. பி. காலாம் நூற்றண்டு முதல் ஒன்பதாம் நூற் ருண்டுவரை சிறப்புற்று, கடல் கடந்த காடுகளுக்கும் பரவி யிருந்த காலத்தில் பல்லவ மன்னர்கள் திருக்கோணேசர் ஆலயத்திலும் திருப்பணி செய்தார்க ளென்பது அறியக்கிடக் கின்றது.
முதல் இராச இராச சோழன் ஆட்சிக் காலத்தில் சோழப் பேரரசு சிறப்பு நிலையடைந்தது. முதல் இராச இராச சோழ னுடைய கி. பி. 1010-ம் ஆண்டுக் கல்வெட்டில் "எண்திசை புகழ்தர ஈழமண்டலமும்” என்றும். முதல் இராசேந்திர சோழ னுடைய கி. பி. 1035-1036-ம் ஆண்டுக் கல்வெட்டில் “பொருகடல் ஈழத்து அரசர் தம் முடியும்”என்றும் ஈழநாடு பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. முதல் இராசராச சோழனும், முதல் இராசேந்திர சோழனும் தமிழகத்திலும் ஈழத்திலும் சிவாலயங்கள் எடுத்தார்கள். இன்றும் கோட்டை யுள் சோழர் சிற்ப முறையில் அமைந்த தூண்கள் காணப்படு கின்றன. சோழர் காலத்துத் திருவுருவங்கள் இன்று கோணே சர் ஆலயத்தில் இருக்கின்றன. ஆகவே முதல் இராசஇராச சோழன் காலத்திலும், முதல் இராசேந்திரன் காலத்திலும் கோணேசர் ஆலயத்தில் திருப்பணிகள் நடைபெற்றிருக்கும்"
"சடையவர்மன் வீரபாண்டியன், சடையவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில் வாழ்ந்தவனுவான்.இவன் கி. பி. 1253 முதல் 1268 வரையில் சோழநாடு, நடுநாடு, தொண்டை

கிருக்கோணேஸ்வரம் 23
காடுகளில் அரசப்பிரதிநிதியாக இருந்து- அரசாணடவன். கொங்கீழங் கொண்டு கொடுவடுகு கோடழித்து என்று தொடங் கும் மெய்க் கீர்த்தியில் இம்மன்னன் கொங்குநாடு ஈழநாடு." வெற்றி கொண்ட செய்திகள் காணப்படுகின்றன. திருமகள் வளரும் என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியில் இவன் ஈழநாட் டில் போர் புரிந்து அங்காட்டரசருள் ஒருவனக் கொன்று மற்றெருவனுக்கு முடிதட்டியதும் திருக்கோணமலை, திரிகூட கிரி என்பவற்றில் கயற்கொடி பொறித்ததும் காணப்படுகின் றன, என்றுஅண்ணுமலைப் பல்கலைக் கழகத் தமிழாராய்ச்சித் துறை விரிவுரையாளராயிருந்த T. W. சதாசிவபண்டாரத்தார் பாண்டியர் வரலாற்றில் (பக்137-139) கூறியுள்ளார்.
தமிழ் நாட்டிலும் ஆந்திர, மலையாள, கன்னட தேசங் களிலும் வெற்றிமேல் வெற்றியடைந்து கி. பி. 1251-1262 வரை சக்ராதிபத்தியம் செலுத்திப் புது அரசியல்களை காட்டி யவன் ஜடாவர்மன் சுந்தரபாண்டியனுவான். இவனுடன் சக அரசனுக இருந்தவன் புவனேக வீரபாண்டியன். இவனுக்கு இப்பெயர் வந்த காரணம், இக்காலத்துச் சிங்கள அரசனு யிருந்த முதலாம் புவனேக பாகுவை வெற்றி கொண்டதற்கு அறிகுறியாக பூரீசங்கபோதி புவனேகபாகு வென்னும் பட் டத்தையும் வகித்துக் கொண்டதேயாம். இதன் உண்  ைம வீரபாண்டியன் மெய்க்கீர்த்தி கூறும் குடுமியாமலைச் சாசனத் 56)(A. R. 356 OF 1906)
"... . . . . . . . . . முழங்கு களி றேறிப் பார் முழுதPய ஊர்வலஞ் செய்வித் தந்தையாண்ட தென்கட லீழ மைந்தன் பெயரே மரபென நினைப்பிட் டரசிட மகிழ்ந்து அவனுTரளிச்சு வியையச் செல்கென விடை கொடுத்தருளி"
என்ற தொடராலும், மகாவம்சத்தில் முதலாம் புவனேகபாகு என்ற அரசனைக்குறித்துச் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்க

Page 20
24 திருக்கோணேஸ்வரம்
ளோடு மேற்படி தொடரை ஒப்பு நோக்குதலாலும் சிதம்பர மேலேக்கோபுர வாசற் சாசனத்தில் 'புவனேக வீர!..கொற் கைக் காவல!" என்று வீரபாண்டியன் விளக்கப் படுதலாலும, புவனேக வீரன் சாந்தியென ஒரு விழாத் தமிழ்நாட்டில் சில இடங்களில் நடந்ததாகச் சில சாசனங்கள் கூறுதலாலும் யூகித்தறியக் கிடக்கின்றது. இவ்வீரபாண்டியனும் முந்திய அரசர்கள் போலக் கோணேசர் கோயிலுக்குரிய நிலங்களை இறை கடமை இல்லாதன வாக்கினன் என்பது மேற்படி குடுமியாமலைச் சாசனத்தில்
". . . . . . . . . . . . . . . திருக்கோண அலைவரப்
பாடன் கழித்து வழங்கியருளி' என்ற தொடராலும், அம்மலையில் தனது கயல் இலச்சினை யைப் பொறித்தான் என்பது,
*காணுமன்னவர் கண்டு கண்டொடுங்க
கோணுமலையினும் தரிகடட கிரியினும் உருகெழு கொடிமிசை இருகயலெழுதி”
என்ற தொடராலும் தெரியக் கிடக்கின்றன என்று கதிரை மலைப்பள்ளு என்னும் நூலில் (பக் 108 - 110) திரு. வி. குமாரசாமி B. A. கூறுகின்றர்.
சடையவர்மன் வீரபாண்டியன் இலங்கைக்கு எதிராகப் போர்செய்து இலங்கையில் அரசாண்ட அரசர்கள் இருவரில், ஒருவரை அழிதது அம்மன்னனின் படையையும், தேரையும் செல்வங்களையும் கைப்பற்றிக் கோணமலையில் இரு கயற் கொடியைப் பொறித்தானென்றும் டாக்டர். ஜி. சி. மென்டிஸ் இலங்கையின் பூர்வீக வரலாற்றில் (பக் 94) கூறுகின்றர். ஆகவே சடையவர்மன் வீரபாண்டியனும் திருக்கோணேசர் ஆலயத்தைத் திருப்பணி செய்து கோவிலுக்கு நிலமும் இறையிலி செய்திருக்கின்றன் என்பது தெளிவாகின்றது.

திருக்கோணேஸ்வரம் 、25。
அருணகிரிநாதர் கி. பி. பதினைந்தாம் நூற்றண்டில் வாழ்க். தவர். இவர் சிறந்த முருக அடியார். பதினுயிரம் திருப்புகழ் பாடியிருக்கின்றர். இன்றெமக்குச் சில நூறு பாடல்களே கிடைத்துள்ளன. அருணகிரிநாதர் 'விலைக்கு மேனியி லணிக். கோவை மேகலை’ என்று தொடங்கும் திருப்புகழில், "திருக் கொணுமலை தலத்தாரு கோபுர. " என்று திருக்கோணே சர் ஆலயத்தைக் கூறுகின்றர்.
யாழ்ப்பாணத்தையாண்ட ஆரியச் சக்கரவர்த்திகளில் ஒரு. வரான ஜெயவீரசிங்கை ஆரியனுன ஐந்தாம் செகராசசேகரன் இலங்கை முழுவதையும் தன்னடி பணியச் செய்தான். ஏழு வன்னிக் குறிச்சிப் பகுதிகளும் கோட்ட்ையரசனும் அவனுக் குத் திறைகொடுத்து ஆண்டனர். இவன் சிறந்த கல்விமானுக வும் விளங்கினன். இவன் காலத்தில் செகராசசேகரம் என்ற வைத்திய நூல் தெக்கண கைலாசபுராணம், செகராசசேகரம் என்ற சோதிட நூல் முதலியன அக்கால வித்துவான் களால் இயற்றப்பட்டன. இவன் கோணநாயகரைத் தரிசித்துப் பெருந் திரவியங்களைக் கொடுத்து கோவிலுக்கு நூல்வர்ங்கி ஒப்புவித்தற்காக திரியாய் ஊரை கோவிலுக்கு நிவந்தமாக் கின்ை. திரு. சி. எஸ். நவரெத்தினம் இவன் காலம் கி. பி. 1380-1410 எனக் குறிப்பிட்டுள்ளார். இப்படியே யாழ்ப் பாண அரசனை ஆறம் பரராசசேகரனும் கோணேசர் கோவி லைத் தரிசித்துப் பொன் வழங்கினுனெனத் திருக்கோணுசல. புராணம் கூறுகின்றது. திருக்கோணுசல புராணம் பின்வரு, மாறு கூறுகின்றது.
"அன்ன நாளிடையாழிகு ழகன்புவி முழுதுக்
தன்ன தாகவே தனிக்குடை நீழலிற் ருங்கும் மன்ன ம்ைபர ராசசேகர னெனும் வள்ளல் பொன்னு லாந்திரி கோணமால் வரைதனிற் பொருந்தி”

Page 21
26. திருக்கோணேஸ்வரம்
"சிந்தையன் பினுேடரனுமை த&னத் தரிசித்தாங்
கந்தமின்னிதி பூண் மணி நிபந்தங்கள் அமைத்து முந்துசீர் விழாத் தேர்த்திரு காண்முறை போற்றிச் சொந்த மாநகர் சார்ந்தனன் தொல்குலத் தரசன்'
யாழ்ப்பாணத்தை அரசாண்ட குணவீரசிங்கை ஆரியன் என்ற ஐந்தாம் பரராசசேகரன் (கி. பி. 1410-1440) இரா மேஸ்வரத்தில் உள்ள கற்பக்கிரக விமானத்தைக் கட்டினு னென அதன் அடியிற் காணப்படும் கல்வெட்டினுல் அறிய லாம். யாழ்ப்பாணத்து அரசர்கள் இராமேஸ்வரம் ஆலயத் தின் அறநிலையப் பாதுகாவலராக இருந்திருக்கின்றர்கள். இத் திருப்பணிக்கு வேண்டிய கருங்கற்கள் திருகோணமலையில் சிற்பவேலை செய்யப்பட்டு பொருந்துமளவிற்கு சரிபார்த்து எண்ணிடப் பட்டுக் கடல் மார்க்கமாக அனுப்பப்பட்டது.
திருக்கோணேசர் ஆலயம் கி. பி. முதலாம் நூற்ருண்டு தொடக்கம் கி. பி. பதினைந்தாம் நூற்றண்டுவரை பல மன்னர் களாலும் திருப்பணி செய்யப்பட்டு நிவந்தங்களும் அளிக்கப் பட்ட தென்பதை அறிகின்றேம். திருக்கோணேசர் ஆலயம் புகழ்பெற்ற ஆலயமாக விளங்கியதென்பது உண்மையாகும்.

திருக்கோணேஸ்வரம் 27
போத்துக்கீசர் காலம்
இந்தியாவிற் பல பேரரசுகள் பல நூற்றண்டுகளாகத் தம் ஆணையைச் செலுத்தின. மெளரியப் பேரரசு, சோழப் பேரரசு, பாண்டியப் பேரரசு மு த லா ன  ைவக ள் இந்தி யாவில் ஒன்றன்பின்னுென்றக உன்னத நிலையில் இருந்தன. தமது ஆணையைக் கடல் கடந்த ஏனைய காடுகளிலும் செலுத்தினர். சோழர்கள் இலங்கையையும், கிழக்கிந்திய தீவுகளையும் மண்டலங்களாக வகுத்து ஆட்சிபுரிந்தனர். கி. பி. பதினைந்தாம் பதினுறம் நூற்றண்டில் தென்னிக்திய அரசு களிலொன்றகிய விசய நகர ஆட்சி இந்தியாவில் பேரரசாக விளங்கியது. இக்காலத்தில் பிறகாட்டவர்கள் இந்தியாவிலுள்ள பட்டு, நவமணிகள், வாசனைத் திரவியங்கள். முதலான வைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த போதிலும் கடல் மார்க்கமாகப் பாதையை அறிந்திராத காரணத்தால் அவர் களால் இந்தியாவை அடைய முடியவில்லை. பல ஐரோப்பிய காடுகள் இத்தகைய பாதையைக் கண்டுபிடிப்பதில் முயற்சி செய்து கொண்டிருந்தன. இக்காலத்தில் இந்திய வாணிபம் அராபியர் வசத்தில் இருந்தது. போர்த்துக்கீசமாலுமியான வாஸ்கொடகாமா கி. பி. 1498-ம் ஆண்டு, “மே' மாதம் 28-க் திகதி இந்தியாவிலுள்ள கள்ளிக்கோட்டையை அடைக் தான்.
அக்காலத்தில் ஐரோப்பாவில் போர்த்துக்கலும், ஸ்பானி யாவும் தமது ஆணையையும் செல்வாக்கையும் வளர்ப்பதிற் போட்டியிட்டுக்கொண்டிருந்தன. அவர்கள் இருவருடைய சம்மதத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அவ்வொப் பக்தத்தின்படி மேற்றிசை நாடுகளில் புதிதாகக் கண்டுபிடிக் கப்பட்ட நாடுகளின் உரிமை ஸ்பானியாவிடமும் கீழ்த் திசையுரிமை போர்த்துக்கீசரிடமும் ஒப்பண்டக்கப்பட்டன.
கீழ்த்திசைக்கு வந்தமைக்கு மூன்று முக்கிய காரணங்க ளிருந்தன. முதலாவதாகத் தமது வாணிபத்தை வளர்க்க

Page 22
28 திருக்கோணேஸ்வரம்
விரும்பினர். கீழைத் தேய நாடுகளிலுள்ள செல்வத்தை ஐரோப்பாவில் விற்று போர்த்துக்கலின் செல்வாக்கை ஐரோப் பாவில் ஓங்கச் செய்தனர். இரண்டாவதாக ஐரோப்பாவில் தம்மாணையை நிறுவுவதற்கு கீழைத்தேயத்தில் ஒரு சாம்ராச் சியத்தை அமைக்க வேண்டுமென்பதை உணர்ந்தனர்.
“உங்கள்மேல் எழுந்தருளப் போகின்ற இஸ் பிரீத் து சாங்துவின் வல்லமை நீங்கள் அடைந்து, ஜெருசலேமிலும், ஜூதேயா முழுவதிலும், சுமேரியாவிலும், பூமியின் கடைசி மட்டும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள். (சுப்-2-3. லூக் 24-48) என்ற விவிலிய கோட்பாட்டுக் கமையத் தமது கத் தோலிக்க சமயத்தைப் பரப்ப ஆரம்பித்தனர். கி. பி. 1505 டொன் லோறன் கோடீ அல்மேடா இலங்கையை அடைக் தான். படிப்படியாக போர்த்துக்கல் தனது செல்வாக்கை இலங்கையில் வளர்த்தது. கி. பி. 1597 ல் கோட்டையையும், கி. பி. 1618-ல் யாழ்ப்பாணத்தையுங் கைப்பற்றினர். f கி. பி. பதினரும் நூற்றண்டில் திருக்கோணமலைப்பகுதி சிலகாலம் கண்டியரசனுக்குக் கீழும், சிலகாலம் யாழ்ப்பாண அரசனுக்குக் கீழும், இருந்ததென்பது அறியக்கிடக்கின்றது. அகன்ற துறைமுகத்தில் ஒரு பெரிய கற்பாறை தரையி லிருந்து கடலை நோக்கி நிற்கின்றது. இலங்கை அரசர்கள் மலையின் மீது மூன்று கோவிலை (பகோடா) அமைத்தனர். அவைகளில் இரண்டு அம்மலையின் சமுத்திரக்கரையில் இரு. ஓரங்களிலுமுள்ளன. மூன்றவது மலையின் உச்சமான நடுப் பகுதியில் அமைந்துள்ளது. மூன்று கோவில்களிலும் இக் கோவிலே மிகவும் முக்கியம்ானதும், இந்தியாவில் மிகுந்த பக்தி சிரத்தையுடன் வணங்கப்படுவதும் பெருந்திரளான மிலேச்சர்களால் வணங்கப்படுவதுமான ஆலயமாம். கடலிற். பிரயாணஞ் செய்யும் மிலேச்ச மாலுமிகள் அம்மலை கண்ணிற். பட்டவுடன் தொழுவார்கள். தவருன வழிபாட்டு நிலையில் உள்ள சமயப் பித்தர்கள் கடலுக்கு மேலாகத் தோன்றும் கடைசிக் கோவிலிலிருந்து (பகோடா தெய்வங்களுக்குத்

திருக்கோணேஸ்வரம் 29
தங்களை அர்ப்பணிக்கும் நோக்கத்துடன் குதிப்பார்கள். உடல் துண்டுதுண்டாகச் சிதறி மலையடிவாரத்தில் விழுவதால் சுவர்க் கத்தை அடைகின்றர்கள். கொன்ஸ்டன் தினுே டீசா இக் கோவில்களை இடித்து அக்கற்களைக் கொண்டு கோட்டை -யைக் கட்டின்ை. 4.
("Over that large harbour there juts out from the land into the sea a rock on which the kings of Ceylon erected three Pagodes, two at the extremities of the hill over - hanging the sea, and one in the middle and the highest point, which was the principal one, and one of the most venerated in india, being worshipped by the idolatrous navigators who descry it from the sea, and much frequented by a concourse of pagans from the whole of India, so fanatical in their false devotion, that from the last Pagode, which stands on the rock over the sea they throw themselves down in sacrifice to their, idols reaching the bottom in pieces being persuaded that by that leap into Hell they are lifted up to Paradise. Constantine de Sa de Noronha dismantled these Pagodes making use of their stones to build a fortress to close, that harbour to . the Chingla.") (Page 66 of Book I of "Conquest of Ceylon' by FernaoDe Queyroz.)
கோவில் இடிக்கப்பட்ட காலத்தில் அங்கே காணப்பட்ட கல்வெட்டு பின்வருமாறு, மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. “இவ்விலங்கையின் சக்கர வர்த்தியாக மனுராசா இவ்வால யத்தை "வீதியாமேல் மண்டா" என்னுங் தெய்வத்துக்கு கி. மு. 1300 ஆண்டுகளுக்குச் சரியான வருடத்தில்) கட்டு

Page 23
30 திருக்கோணேஸ்வரம்
வித்தான். பறங்கியென்றழைக்கப்படும் சாதியார் வந்து இதை இடிப்பர். பின் இதனைக் கட்டி எழுப்புதற்கு அரசன் உளணு, கான்.
(Manua Raja, Emperor of this Lancave, erected this Pagode to the God Vidia - Malmanda, in the ea . . . . . . . . - (according to the computation it comes to 1300 Years before the coming of christ) There will be a nation called Francos who will demolish it and there will be no king in this Island to re-build it anew.)
இவ்வாறு “கொங்குவஸ்ற் ஒவ் சிலோன்’ (Conquest of Ceylon) என்னும் நூலிற் கூறப்பட்டுள்ளது.
இதில் மனுராசா என்று குறிப்பிடப்பட்டவன் குளக் கோட்டனின் தந்தையாகிய வரராமதேவன் என்றழைக்கப்பட்ட மனுநீதிகண்ட சோழனுக இருக்கலாம். மனுராசா என்ற அரசன் இலங்கையையாட்சி செய்ததாக வரலாற்றல் அறிய முடிய வில்லை. “வீதியாமேல்மண்டா' என்ற சொற்றெடருக்கு திரு. வ. குமாரசுவாமி B. A. என்பவர் மேற்றளி என்பது வரராம தேவன் கட்டிய "தமனிய ஆலயமும் மண்டா என் பது கோணேசர் கல்வெட்டில் கூறப்பட்டுள்ள இரத்தின. மாமணி மண்டபமுமாக இருக்கலாம்' என்றுங் கூறுகின் ருர். ஆகவே வீதியையும் மேற்றளியையும் மண்டபத்தையும் இது குறிக்கும். வரராம தேவனே இவைகளை அமைத்தா னென்று கூறலாம்.
கொன்ஸ்டன்டைன் தீசாவின் மகன் ஜோருெட்றிகே டிசா கி. பி. 1679-ம் ஆண்டில் வெளியிட்ட ஒரு நூலில் பின்வருமாறு கூறியுள்ளார். "மலையின் உச்சிக்குச் செல்லும் செங்குத்தான வழி தொடங்குமிடத்தில் ஒரு பகோடாவும் (ஒரு கோவிலும்) மற்றையது செங்குத்தான பாதையின் மத்தி யிலும், மிகவும் சிறப்பு வாய்ந்த மற்றையது (பகோடா!

திருக்கோணேஸ்வரம் 3挚
உச்சியிலும் இருந்தது. மூட நம்பிக்கையுள்ள பெருங் தொகை யான யாத்திரீகர்களால் "வணங்கப்பட்டமை அதன் கட்டிட அமைப்பிலும் சிற்பக்கலை நுட்பத்திலும் பார்க்கப் புகழை Frill Lg u UġJ.
(On the first rise to the summit of the rock was a pagode, another at mid - ascent and the most famous of them all on the highest eminence which was. looked upon and worshipped with great superstition by crowds of wondering, pilgrims and for this reason. was more celebrated than for the building itself and the beauties of its architecture - "Repellion de Ceylon' by Joao Rodriguez de sa menezes written in 1679)
போர்த்துக்கீசர் உடைக்குமுன்னர் இருந்த திருக்கோணே சர் ஆலயம் நுட்பமான சிற்பக்கலை அமைதிகள் பொலிக்து விளங்கியது. கோவில் இன்று தென் தமிழகத்திலிருக்கும் விசாலமான கோவில்களைப்போல் பெரிதாக அமைந்திருக் தது. புறச்சமயத்தவர்களும், மேல்காட்டவர்களும் கோவிலின் அழகினைப் பாராட்டினரென்றல், அக்கோவில் எத்தகைய சிறப்பு வாய்ந்திருக்குமென்பதை நாம் ஊகித்துக் கொள் ளலாம்.
பெருந்திரளான யாத்திரீகர்களும், ஊரவர்களும் வழிபட் டுள்ளார்களென்பதையும்’ நாம் இவைகளால் உணரலாம்.
இவ்விரண்டு வரலாற்றுக் குறிப்புக்களையும் ஆராயுமிடத்து, கோவிலிருந்த இடங்களைப் பற்றிச் சிறிது கருத்து வேற்று மைகள் காணப்படுகின்றன. மூன்று கோவில்கள் இருந்த னவென்று குவேறேஸ் பாதிரியாரும், ருெட்றிகே டிசாவும் கூறுகின்றனர், மூன்று கோவில்களுள் புனிதமும் புகழு முடைய கோவில் மலையின் உச்சியில் இருந்ததென்பதற்கு இருவர் "கூற்றுக்களும் ஆதாரமாக அமைகின்றன. மலையின் இரு எல்லைகளிலும் கடற்கரையை அடுத்து இரண்டு கோவில்

Page 24
32 திருக்கோணேஸ்வரம்
கள் இருந்ததென்பது குவேறேஸ் பாதிரியாரின் கருத்தாகும். ஒருகோவில் மலையேற்றத்தின் தொடக்கத்திலும் மற்றையது மலையேற்றத்தின் கடுப்பகுதியிலும் இருந்ததென்பது றெட்றிகே டிசாவின் கருத்தாகும்.
ருெட்றிக்கே டிசாவின் கருத்துப்படி இப்பொழுது கோவில் அமைந்திருக்குமிடத்தில் அக்காலத்தில் இருந்ததாக அவர் குறிப்பால் அறிய இயலாதிருக்கின்றது. குவேறேஸ் பாதிரியாரின் கருத்துப்படி இப்பொழுது கோவில் இருக்கு மிடத்தில் ஓர் கோவில் இருந்ததென்பது தெளிவாகின்றது.
கோணேசர் கோவிலை உடைத்த போர்த்துக்கீசத் தளபதி யான கொன்ஸ்தந்தைன் டீசா தனது அரசனுக்கு அனுப் பிய கடிதமொன்றில் பின்வருமாறு கூறியுள்ளார்.
“கோவில் இருக்கும் நிலம் ஆயிரத்திருநூறு யார் நீளமும் மிக அகன்ற பாகத்தில், எண்பது அடி அகலமும் முப்பது அடி ஒடுக்கமுடையது. இங்கேயே கோட்டை உண்டு. "
இக் கடிதத்தை திரு. வ. குமாரசாமி B, A, எழுதிய "கதிரைமலைப் பள்ளு ஆராய்ச்சி' என்னும் நூலிற் காணலாம்.
இக்கோவிலை இடித்தவர் டொன் கொன்ஸ் தந்தைன் சா. டீ கொறன்ஹா என்பவராகும். இவன் கி. பி 618 முதல் கி. பி. 1620 வரையிலும் இலங்கையில் தளபதியாயிருந்து போர்த் துக்கீசரின் நிர்வாகத்தைச் சீர்திருத்தி அமைத்தான். ஒரு சூழ்ச்சி காரணமாகப் பதவியினின்றும் நீக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டான். இலங்கையின் நிலை சீர்குலைந்ததைக்கண்ட போர்த்துக்கீசர் கி. பி. 1623-ம் ஆண்டு இலங்கையின் தளபதி யாக நியமிக்கப்பட்டு 1630 வரையில் தொடர்ந்து பதவியிலி ருந்தான். டிசாவினுடைய மகன் ஜோருெட்றிகேஸ் டிசா டீ, மெனேசஸ் என்பவர் பின்வருமாறு கூறியுள்ளார். கண்டியைக் கைப்பற்றுவதற்கு திருகோணமலையில் கோட்டை அமைக்க வேண்டும்; ஆகவே போர்த்துக்கல்லின் கிழக்கிந்தியத் தீவுக

திருக்கோணேஸ்வரம் 33
ஆளுக்குத் தலைநகரான கோவையின் தளபதி திருக்கோணமலை யில் உள்ள கோணேசர் கோவிலை இடிக்குமாறு கட்ட2ள யிட்டான, 1624-ம் ஆண்டு கோ வில் செல்வமெல்லாம் கொள்ளையிடப்பட்டன. கோவிலுந் தகர்க்கப்பட்டது. அக் கோவிற்கற்கள் கோட்டை கட்டுவதற்குப் பயன்பட்டன. கோவில அழிக்கப்பட்டன. தம்பலகாமத்தில் கோணேசர் ஆல யம் உருவாகியது. கோட்டையில் அமைந்த கற்களின பெருங் தொகையைப்பற்றி எண்ணிப் பார்க்கும்போது அன்றிருந்த திருக்கோணேசர் ஆலயம் எவ்வளவு பெரிதாக அமைந்திருக் கும் என்பதைக் க்ற்பனைக்கண்ணுல் காணலாம்.

Page 25
34 திருக்கோணேஸ்வரம்
பிரித்தானியர் காலம்
போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் காலத்தில் ஏனைய மதங்கள் சட்டவிரோதமாக் கப்பட்டதுமன்றிக் கிறித்தவ கோவிலுக்குப் போகாதவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். கோட்டையுள் கிறித்தவ கோயில்கள் நிறுவப்பட்டன, சைவக் கோவில்கள் அழிக்கப்பட்டன. பிரித்தானிய காலத்தில் மத சுதந்திரம் வழங்கப்பட்டது. எனவே கி. பி. 1624-ம் ஆண்டு தொடக்கம் சுமார் 175 ஆண்டுகள் கோணேசர் கோவில் வழிபாட்டுச். சரித்திரத்தில் ஒர் இருண்ட காலமாக இருந்தன. கி. பி. 1795-ல் பிரித்தானியர் திருக்கோணமலையைக் கைப்பற்றி, 1796-ம் ஆண்டு தொடக்கம் இலங்கையை ஆண்டுவந்தனர்.
கி. பி. 1803ம் ஆண்டில் கடமையாற்றிய அலக்சான் டர் எ ன் பார் கோ னே ச ர் மலையில் வழிபாடு கடை பெற்ற முறைகளை விபரமாக விளக்குகின்றர். எனவே பிரித். தானியர் ஆட்சியேற்றதும் "மதச்சுதந்திரம்" அளித்துவிட் டனர் என்பது தெளிவு. அக்காலத்தில் ர் அர்ச்சகரும் வழி பாடு செய்வோரும் கோணேசர் மலைக்குச் செல்வதற்குக் கோட்டையின் மேற்குத் திசையிலிருக்கும் சிறிய கோட்டை வாயிலை உபயோகித்தனர்.
அக்காலத்தில் கோணேசர் மலையில் பூசை செய்த, 1 அர்ச்சகரும் வழிபடுவோரும் வழிபாடு செய்வதற்கு விசேட காலங்களில் அனுமதி பெற்றே சென்றனர் என்பதைப் பழைய அனுமதிக் கடிதங்களால் அறியலாம். விசேட காலங் களில் அர்ச்சகரும் வழிபடுவோரும் மாட்டு வண்டியிற் பொருட் களை ஏற்றிக்கொண்டு மேளவாத்தியத்துடன் செல்வார்கள். வெள்ளிக்கிழமைகளில் சாதாரணமாக மாலையில் அர்ச்சகரும் வழிபடுவோரும் வழிபாட்டுக்குச் செல்வார்கள். ஏனைய காலங் களில் வழிபாட்டுக்கு உத்தரவு பெற்றே செல்வார்கள்.
f இந்நூல் ஆசிரியர்களுள் ஒருவராகிய வை. சோம்ாஸ்கந்தரின்
முன்னேர்.

திருக்கோணேஸ்வரம் 35
கி. பி. 1851-ம் ஆண்டளவில் கணபதிக் குருக்களும் பின்னர் t மயில்வாகனக் குருக்களும் 1875-ம் ஆண்டளவில் t கதிர்காமக் குருக்க்ளும், அவர்காலத்துக்குப் பின்னர் கண்ணமுத்துக் குருக்களும், அதன் பின்னர் f வைத் தீஸ்வரக குருக்களும் கோணேச்ர் கோவில் அர்ச்சகர்களாக இருந்திருக்கின்றர்கள்.
1878-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ம் திகதிக் கடிதத் தின்படி கொழும்பிலுள்ள 'கலோனியல் செக்ரிட்டரி" அலுவ லகத்திலிருந்து சுவற்றன்ஹாம் என்பவரின் கையொப்ப மிட்டு அர்ச்சகருக்கு வந்த கடிதத்தால் கோணேசர் மலையில் கொட்டகை ஒன்றும் இல்லாத வெறும் இடமாகவே இருந்த தென்பது தெளிவாகின்றது.
1903-ம் ஆண்டு கோணேசர் மலையைப் பார்வையிட்ட இலங்கைக் கைந்நூலின் (The book of Ceylon) ஆசிரியர் எச். டபிள்யூ. கேவ் என்பவர் தமது நூலில் "பிரமாண்ட மான கோயிலிருந்த இடம் இன்று வெற்றிடமாக இருக்கின்றது”
"There is now left only the bare site of the magnificent temple" (Page 630)
என்று கூறியுள்ளார். வெள்ளிதோறும் மாலையில் கோணே சர் மலையிற் பூசை நடைபெற்று வந்தது.
பத்தொன்பதாம் நூற்றண்டின் இறுதிக்காலத்தில் திங்க்ட் கிழமைப் பூசையும் ஏற்பட்டது. அதன் பின்னர் திங்களும் வெள்ளியும் பூச்ை நடைபெற்று வந்தன. ஏறத்தாழ 1885-ம் ஆண்டுக்குப் பின்னர் சுப்பையாக்குருக்களும் ஐயாத்துரைக் குருக்கள் என்னும் ஜெகநாதக்குருக்களும் திங்கட்கிழமை தோறும் பூசை செய்தனர்.
f இந்நூலாசிரியர்களுள் ஒருவராகிய வை. சோமாஸ்கந்தரின்
முன்னுேர், m

Page 26
36 திருக்கோணேஸ்வரம்
1903ம் ஆண்டு இலங்கைக் கைந்நூலாசிரியர் திரு. எச். டபிள்யூ. கேவ். அவர்கள் மாலை நேரத்தில் கோணேசர் மலையில் வழிபாடு கடந்ததை அழகாகக் குறிப்பிடுகின்றர். "மலையிற் கட்டிடம் எதுவும் இருக்கவில்லை. மாலை நேரத்தில் ஆண்களும், பெண்களும் பால், பழம், தேங்காய், மலர் முதலியன கொண்டு செல்வர். அர்ச்சகர் தீபத்தைக் கையி லேந்தி உயர்த்தி மும்முறை வலமாகச் சுற்றுவார். மக்கள் கைகளைத் தலைக்கு மேல் உயர்த்தி (இறைவனுக்குத்) தங்கள் வழிபாட்டைச் செலுத்துவார்கள்." இவ்வாறு தமது நூலில் கூறியுள்ளார்கள்.
இரண்டாவது உலகயுத்த காலத்தில் வழிபாட்டுக்குச் செல்லும் மக்கள் கோட்டை வாயிலில் வந்து கூடுவர். அர்ச் சகர் வந்த பின்னரே எல்லோரையும் எண்ணிக் கணக்கெடுத் துக் கோட்டை வாயிலூடே செல்ல விடுவர். கோணேசர் மலைக்குச் செல்லும் வழியிலும், வழிபாடு முடிந்து வரும் போதும் இடையே நிறுத்தி எண்ணிக் கணக்கெடுப்பர். முன் னும் பின்னும் காவற்படையினர் புடை சூழவே வழிபாட்டுக் குச் சென்று வரவேண்டும். -
இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இன்றிருப் பது போல் திருத்தமான வழி அமைக்கப்படவில்லை. இன்று திருத்தப்பட்டு செம்மையாக வீதி அமைக்கப்பட்டுள்ளது. -தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திரம், சித்திரை வருடப் பிறப்பு, ஆனி உத்திரம், கார்த்திகை விளக்கீடு, மார்கழித் திருவாதிரை முதலிய நாட்கள் சிறப்பு வழிபாட்டு நாட்களாகும்.
ஆங்கிலேயர் காலத்தில் சமய சுதந்திரம் இருந்தது. சமய உரிமைகள் மறுக்கப்படவில்லை. கோணேசர் மலைக்கு மக்கள் வெள்ளியும், திங்களும், மற்றும் சிறப்பு வழிபாட்டுக் காலங்களிலும் சென்று கோணமலையான வழிபாடு செய் தனா.

திருக்கோணேஸ்வரம் 37
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டுகள்
கல்வெட்டுகள், செப்புப்பட்டையங்கள், செப்பேடுகள், முதலாயின பழங்கால வரலாறுகளை ஆராய்வதற்குப் பெரிதும் உதவுகின்றன. அவற்றின் எழுத்தமைப்பு முதலியவைகளை ஆராய்வதன் மூலம் கல்வெட்டு எழுந்த காலத்தையும் ஒரு வாறு தீர்க்கல்ாம். தமிழ் மன்னர்களது ஆட்சிக்காலத்தில் கல்வெட்டு, செம்புப்பட்டையங்கள், செப்பேடுகள், வாயிலாக, தங்களது வெற்றிச் செய்திகள், சமயப் பணிகள், பொதுப் பணிகள், முதலாய செய்திகளைக் குறித்து வந்திருக்கின்றர் கள். அவைகள் இன் றெமக்கு நம்முன்னேரது வரலாறுகளை அறிவதற்கு மூலமாக விளங்குகின்றன. திருகோணமலைத் திருக்கோணேசர் ஆலயம் பற்றிய கல்வெட்டுகள் இரண்டு கிடைத்துள்ளன, ஒன்று தமிழிலும், மற்றையது வட மொழி யிலும் அமைந்துள்ளன. அவைகளைப்பற்றி ஈண்டு ஆராய்வோம்.
ன னே குள ö5(TL— (UD L— Gé5 ரு ப பனி யை ன னே ப ற ங் கி கக வே ம னன ன பொ ன ை னை ய ய ற ற தேவை த
60)
5GT
இவ்வாறு இதனைத் திருத்தியமைக்கலாம்
(மு) ன்னேகுள(க்) ()ே காட(ன்) மூட்டு(க்) (தி) ருப்பணியை(ப்) (பி) ன்னே பறங்கி (பி)

Page 27
38 திருக்கோணேஸ்வரம்
(ரி) க்கவே மன்ன(வ) (பி) ன்பொண்ணு(த) (த) னையியற்ற(வழி) (த்) தேவை த் (து) (எண்ணு) (ரேபின்) (னரசர்) கள்
கல்வெட்டுக் கூ றும்செய்தி முற்காலத்தில் குளக்கோட்டன் என்னும் மன்னன் கட்டிய (திருக்கோணேசர்) ஆலயத்தைப் பிற்காலத்தில் பறங்கியர் இடிப்பார்கள் என்பதும் அதன் பின்னே இக்கோயிலைக் கட்டுவதற்குப் பின்வரும் வேந்தர்கள் எண்ணமாட்டார்கள் என்பதும் இக்கல்வெட்டுக் கூறும் செய்தியாகும்.
வெண்பா அமைப்பு
முன்னே குளக்கோட்டன் மூட்டுங் திருப்பணியைப் பின்னே பறங்கி பிரிக்கவே-மன்னவயின் பொண்ணுத தனையியற்ற வழித்தே வைத்து எண்ணுர் வருவேக் தர்கள். பாரம்பரியமாக இவ்வாறும் கூறப்படுகிறது
முன்னை குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப் பின்னே பறங்கி பிடிக்கவே-மன்னுகேள் பூனைக்கண் செங்கண் புகைக்கண்ணன் போனபின் மானே வடுகாய் விடும்.
கல்வெட்டு இருக்குமிடம்
திருக்கோணமலையில் பிறட்றிக் கோட்டை வாயிலின் இடது புறத்தூணில் மேலே குறித்துள்ள கல்வெட்டு பொறித்த கல் இரும்பாணியால் பிணைக்கப்பட்டுள்ளது. இன்று கோட்டை வாயிலில் கல்வெட்டினை நாம் எந்த நிலையில் காண்கின்றேமோ

திருக்கோணேஸ்வரம் 39
அந்தப் பகுதியினை முதலியார் இராசநாயகம் அவர்கள் திருத்திப் பாடலுருவம் க்ொடுத்தார். இக் கல்வெட் டி ல் காணப்படும் எழுத்து அமைப்பினை ஆராய்ந்த சென்னை அரசாங்கக் கல்வ்ெட்டு ஆராய்ச்சியாளர் எச். கிருஷ்ண சாஸ்த் திரி பின்வருமாறு கூறுகின்றர். t"எழுத்தமைப்பைக்கொண்டு ஆராயுமிடத்து இப்பதிவு கி. பி. பதினுறம் நூற்றண்டைச் சேர்ந்ததெனலாம். 'இக் கல்வெட்டில் காணப்படும் எழுத்த மைப்பை தமிழ்க்கலைக் களஞ்சியத்தில் காணப்படும் எழுத்த *மைப்பு வரலாற்றுப் படங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது கி. பி. பதினுலாம் பதினை ந் தாம் நூற்றண்டைச் சேர்த்த எழுத்தமைப்பென எண்ணுதற்கு இடமிருக்கின்றது.
தென்னிந்திய கோயிற் சாசனங்களுள் ஒன்றகிய குடுமி யாமலேச் சாசனத்தை (ஏ. ஆர். 356 ஒப் 1906) ஆராயுமிடத்து திருக்கோணமலையில் பாண்டியர்களின் இரு சின்னமாகிய இரு கயல்களை சடையவர் ம ன் சுந்தரபாண்டியன் கி பி. பதின் மூன்றம் நூற்றண்டில் பொறித்தான் என்பது அறியக் கிடக்கின்றது.
சடையவர்மன் சுந்தர பாண்டியன் ஆணைப்படியோ அல் லது அவன் காலத்திலோ இக் கல்வெட்டு பொறிககப்பட வில்லே யென்பது கால வேற்றுமையால் தோன்றுகிறது.
இக் கல்வெட்டு பிற்கால நிகழ்ச்சிகளை முன்னரே கூறும் தீர்க்க தரிசனப் பாடலாக ஒரு சாரர் கருதுகின்றனர்.
இலங்கையில் கி. பி. பத்த்ொன்பதாம் நூற்றண்டில் சிவில் சேவை அதிகாரியாகக் கடமை யாற்றிய எச். டபிள்யூ. கொட்றிங்டன், எதிர்வரும் கிகழ்ச்சிகளைப் புத்திநுட்பமாக
“Thus the prophesy was merely an intelligent forecasting of events' Journal of the Royal Asiatic Society (Ceylon vol. xxx) - An article entitled, " the Inscription at Fort Frederick, Trincomalee' By H. W. Codrington.

Page 28
40. திருக்கோணேஸ்வரம்
உரைக்கப்பட்ட பின்னிகழ்வுரைப்புச் செய்தியாகும் எனக், கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுவதாவது " பாண்டிய மன்னர்களது இணைக்கயற் சின்னம் பதினுறம் நூற்றண்டுக்கு முற்பட்ட தெனலாம். ஏனெனில் அதற்குமுன் பாண்டியர் ஆட்சி வீழ்ச்சி யடைந்துவிட்டது. ஆகவே பதின் மூன்றம் நூற்ருண்டில் அவைகள் பொறிக்கப் பட்டிருத்தல் வேண்டும்.
இந்து சமயக் கோட்பாட்டின்படி தீர்க்கதரிசிகள் வாழ்ந் துள்ளார்கள் என்று கூறுவது மிகையாகாது ஆகவே "எதிர் வரும் கிகழ்ச்சிகளைப் புத்தி நுட்பமாக ஊகிக்கப்பட்ட பின்னி கழ்வுரைப்பு' எனறு எச். டபிள்யூ. கொட்றிங்டன் கூறியது முற்றிலும் பொருத்த முடையதாகத் தோன்ற வில்லை.
இக் கல்வெட்டில் "பறங்கி" என்ற சொல் கையாளப் பட்டுள்ளது, வரலாற்று அடிப்படையில் பறங்கியர் என்பார் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதை ஆராய்வோம்.
கி. மு. ஐந்தாம் நூற்றண்டு தொடக்கம் கி. பி. ஐந்தாம் நூற்றண்டுவரை புனித உரோம சாம்ராச்சியம் மிகவும் உன் னத நிலையில் இருந்தது. அக்காலத்தில் "பிறங்க்' என்ற இனத்தவர் மங்கோலியப் பகுதியிலிருந்து ஐரோப்பாவுள் நுழைந்தனர். அவர்கள் சமயத்திலும் பண்பாட்டிலும் மொழி யிலும் அக்கால ஐரோப்பியர்களிலும் வேறுபட்டவர்களாக இருந்தனர். அவர்களின் படையெடுப்பினுல் புனித உரோம அரசு வீழ்ச்சியடைந்தது. பெல்சியத்தில் குளோவிஸ் என்ற பிறங்க் வம்சத்தினர் (கி. பி. 481 முதல் கி. பி. 51) ஓர் புதிய அரசு நிறுவினர். இது வளர்ந்து பிற்காலத்தில் பேரர சாக மாறியது. சாளமேன் என்ற பிருங்க் அரசன் கி. பி. எட்டாம் நூற்றண்டில் ஐரோப்பா முழுவதற்கும் பேரரசனுக விளங்கினுன். அக்காலத்தில் பிறங்க் மக்கள் ஐரோப்பா முழுவதும் பரவினர். பிற்காலத்தில் மேற்கு ஐரோப்பிடி பிராங்க் மக்கள் ஜெர்மன் மொழியையும் பிரயோகித்தனர்.

திருக்கோணேஸ்வரம் 4觅
இக் கல்வெட்டிலுள்ள பறங்கியென்ற சொல் "பிராங்க்” என்ற சொல்லின் தமிழ் ஒலிபெயர்ப்பாகும் எனக் கருதலாம். முன்னர் காட்டப்பட்டுள்ள கல்வெட்டு செவிவழியாக வேறெரு வகையிலும் கூறப்படுகிறது. அதனையும் ஆராய்வோம்.
முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப்
பின்னே பறங்கி பிரிக்கவே-பின்னுளில் பூனைக்கண் செங்கண் புகைக்கண்ண குண்டபின் தானே வடுக்காய் விடும். " இப்பாடலிலும், இதற்குமுன்னுள்ள பாடலிலும் பின்மூன்று அடிகளிலேயே பாடபேதம் காணப்படுகின்றன. இப்பாடலுக்கு, முன்னர் 'கூறப்பட்டுள்ள வெண்பா கூறும் செய்தி பின் வருமாறு: 'முற்காலத்தில் குளக்கோட்டன் என்னும் மன்னன். இவ்வாலயத்தை (திருக்கோணேசராலயம்) திருப்பணி செய்தா னென்றும் பிற்காலத்தில் பறங்கியர் இடிப்பாரென்றும் பூனைக் கண்ணன் செங்கண்ணன் புகைக்கண்ணன் இந்நாட்டைவிட்டு, போனபின்னர் வடுகர் ஆட்சிசெய்வர்" .
இறுதியாகத் தந்த வெண்பா "குளக்கோட்டன் திருப்பணி செய்த ஆலயத்தைப் பறங்கியர் பிரிப்பாரென்றும், பிற்காலத். தில் பூனைக்கண்ணனும், செங்கண்ணனும் புகைக்கண்ணனும் இந்நாட்டை ஆண்டபின்னர் இங்காட்டை வடுகர் ஆழ்வார்” என்று கூறுகின்றது.
பூனைக்கண்ணன், செங்க ண் ண ன், புகைக்கண்ணன் வடுகர், என்பது முறையே ஒல்லார்ந்தரையும், பிரஞ்சுக்கார ரையும், பிரித்தானியரையும், இந்தியாவிலிருந்து வந்து இன்று இலங்கையில் வாழும் (சிங்களர், தமிழர்) மக்களைக் குறிப்ப, தாக விளக்கம் செவிவழிச் செய்தியாகக் கூறப்பட்டு வருகின்றது.
கல்லில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுச் செய்திகளையே. ாாம் ஆராய் வடிப்படையில் ஏற்றுக்கொள்ளலாம். திருத்தி

Page 29
- 42. திருக்கோணேஸ்வரம்
அமைக்கப்பட்ட பாடல்களைச் சிந்தனைக்கு எடுத்துக் கொள்ள லாமே அன்றி அவை கூறும் செய்திகள் உறுதியானவை யென்று ஏற்றுக்கொள்ள இயலாதிருக்கின்றது. ஐரோப்பிய ருக்குப் பொதுவாயமைந்த பறங்கி யென்ற பொதுவினத்தைச் சுட்டும் வண்ணம் கூறப்பட்டுள்ளது. முதன் முதலாக இலங் கையையும் இந்தியாவையும் கைப்பற்றிய ஐரோப்பியர் போத் துக்கீசராக இருந்தமையால் பரம்பரை பரம்பரையாகப் பறங்கி யென அழைக்கப்பட்டிருக்கலாம். பறங்கியருக்குப் (போத்துக் கீசர்) பின்வந்த ஏனைய ஐரோப்பியரைச் சாதியினுல் அல்லது ஊர்ப் பெயரினுல் அழையாது கண்ணின் வண்ணத்தைக் கொண்டுஅழைத்தது எக்காரணத்தாலோ?
கல்லிற் காணப்பட்ட பாடலின் பின்னர் வந்த வ்ேந்த ரது ஆட்சிக்காலத்தில் ஆலயத்திருப்பணி நடைபெறவில்லை. ஈழநாடு சுதந்திரமடைந்த பின்னரே ஆலயத் திருப் பணி -தொடங்கியதென்பது குறிப்பிடத்தக்கது. ஈழநாடு ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பத்தெட்டாம் ஆண் டு பெப்ரவரிமாதம் காலாம் நாள் பிரித்தானியப் பேரரசினின்றும் சுதந்திரமடைங் தது. ஆகவே கல்வெட்டின் தீர்க்கதரிசனம் உண்மையாகி விட்டது.
எண்ணுர் வருவேந்தர் கள்'
" சகவருடம் 1145 (சம்பு புஷ்ப)ம் ஆண்டு சூரியன் மேட இராசியில் நிற்க அத்த நட்சத்திரம் கூடிய நாளில், இலக் கினம் உதயமாகும்போது, கோடகங்கன் என்னும் மன்னன் (மறைந்தபகுதி) இலங்கைக்கு கோகர்ணுவில் ஏதோ செய்வ தற்கு வந்தான்."
இக்கல்வெட்டு இருக்குமிடம்.
இக்கல்வெட்டு பொறிக்கப்பட்ட கதவுத்துண்டு 1044-ம் ஆண்டு பிறிட்றிக்கோட்டையிலுள்ள குகைவாயிலில் கண்டெடுக் கப்பட்டு இன்று திருக்கோணமலைக் கச்சேரியில் இருக்கின்றது.

திருக்கோணேஸ்வரம் 43
1946-ம் ஆண்டு கலாநிதி எஸ். பறனவித்தான இக்கல் வெட்டினை ஆராய்ந்து பின்வருமாறு கூறியுள்ளார். "கி. பி. 1123 ஏப்ரல் மாதம் 14-ம் தேதி வெள்ளிக்கிழமை மேட இலக்கினம் அதிகாலை யில் பொருந்தியிருந்தது. இக் கல்வெட்டில் கூறிய கோடகங்கன் எ ன் னு ம் அரசனை யாரென இந்திய, இலங்கை வரலாறுகளால் அறியக் கூட வில்லை. இவன் கலிங்கநாட்டில் கிழக்குக் கங்கவம்சத்தில் தோன்றியவனுக இருக்கவேண்டும். கல்வெட்டில் குறிக்கப் பட்ட கோகர்ணு இன்றுள்ள திருக்கோணமலையாக இருக் கலாம். இதனை ம க ரா வம் ச த் தால் (அத்தியாயம் 37) அறியலாம். அவ்வம்சத்தினரின் குலதெய்வம் கோகர்ணுவின் ஈஸ்வரனுகும். கலிங்காாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து குடியேறியவர்கள் ஈஸ்வரன் வழிபாட்டையும் கொண்டு வந் திருத்தல்வேண்டும்.
கி. பி. 12-ம் நூற்றண்டில் கோடகங்கன் என்னும் மன் னன் இலங்கையில் ஆட்சி புரிந்துள்ளான் என்று இலங் கைச் சரித்திரத்தில் கலாநிதி மெண்டிஸ் கூறுகிறர். டாக்டர் மெண்டிஸ் கூறிய கோடகங்கனும் கல்வெட்டுக் கூறும் கோடகங்கனும் ஒருவனவென்பது அறியக்கூடவில்லை.

Page 30
4. திருக்கோணேஸ்வரம்
திருக்கோணேசர் சாசனம்
கவிராசர் பாட்டாலும், உரையாலும் இயற்றிய கோணே சர் கல்வெட்டென வழங்கும் கோணேசர் சாசனத்தால் திருக் கோணேசர் ஆலயத்தில் நிகழ்ந்த வழிபாட்டு முறைகளையும், கோவிற் தொழும்புகள் எவ்வாறு நடைபெற்றனவென்பதை யும், கோயிற் தொழும்பு செய்வாரையும் அவர்களுக்குரிய கடமைகளையும், அக்காலச் சமூக அமைப்பினையும் உணரலாம்.
கவிராசர் கி. பி. பதினைந்தாம் நூற்றண்டில் வாழ்ந்தா ரென்பது ஒரு சாரார் கருத்தாகும். இந்நூல் எழுந்தகாலத்து நிகழ்ச்சிகளைப் பிரதிபலிப்பதுபோல் சில செய்திகள் காணப்ப டுகின்றன. இருப்பினும் பழைமையான சமூகம், பொருளாதா ரம், வழிபாடு, கோவில் நிர் வா கம் முதலிய நிகழ்ச்சிகளை ஆராய்வதற்குப் பெரிதும் உதவுகின்றது. தானத்தார்:
குளக்கோட்டன் திருக்கோணேசர் ஆலயத்தில் தொழும்பு செய்வதற்கு மருங்கூரில் இருந்து முப்பது குடிகளைக் கொண் டுவந்து திருக்கோணமலை நகரில் குடியேற்றினுன். (திருவா டான தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில், இராமாகாத புரத்திலிருந்து 32 மைலில் இருக்கின்றது. அறந்தாங்கி புகை வண்டி கிலையத்திலிருந்து 30 மைல் தொலைவில் இருக்கின்றது. மருங்கூர் பாண்டியாாட்டில் திருவாடானை தாலுக்காவில் இருக் கின்றது. மருங்கூரின் பக்கத்துக் கிராமம் ஊனுாராகும். மருங் கூர் பட்டினத்துச் சேந்தன் குமரனுர் இவ்வூரைச் சேர்ந்தவ ராக இருக்கலாம். இவர் ஒரு சங்கப் புலவர்.) இம்முப்பது குடியினரும் தானத்தார் எனப்படுவர். இவர்களுக்கு மூவகை யான கடமைகள் வகுக்கப்பட்டுள்ளன. இறைவன் முன்னர் ஆலாத்தி, கடன்மாடல், பன்றிகுற்றல், அதிகபட்டு அரசற். கீதல் இவைகள் தானத்தார் கோயிலுக்குச் செய்யவேண்டிய கடமைகளாகும். இம்முப்பது குடியினருள் ஏழு குடியினருக் குக் குளக்கோட்டன் இராயப்பட்டம் ஈந்தான்.

திருக்கோணேஸ்வரம் 45
பிற்காலத்தில் வந்த கயவாகு மன்னன் மேலும் இவர் களுக்குப் பல கடமைகளை வகைப்படுத்தியுள்ளான். முதன் மைமாருள் நன்மை, தீமை வந்தால் அவர்கள் செய்யவேண் டிய கடமைகளும் பலவாக அமைந்துள்ளன. அவைகளைக் கோணேசர் கல்வெட்டில் விரிவாகக் காணலாம்.
வரிப்பத்தார்:
குளக்கோட்டு மன்னன் இறைவன் தொழும்புக்கு ஆட் கள் போதாதென நினைத்து காரைவாய்ந்த வளநாடு சென்று வரிபிடித்தான் மூவேழு குடிவாழ்வோரைக் கொண்டுவந்து குடி யேற்றினுன். காரைவளங்ாடு என்பது காரைக்கால் அல்லது காரைக்குடி இவற்றில் ஏதாவது ஒர் ஊராக இருக்கலாமென எண்ணலாம், அல்லது வேறு ஊராகவும் இருக்கலாம். பட் டாடை கொய்தல், கட்டல், புட்பபத்திரங்கள் எடுத்தல் தூர்த்தல், விளக்கேற்றல், தளிசை, தட்டுமுட்டு இவைகளை விளக்குதல், தீர்த்தம் எடுத்தல், கெல்லுக்குத்தல், சாணி மெழுகல், எரிதுரும்பு ஈதல், க ட ன ப் பெண்ணுக்கு முட்டு வகை கொட்டல், பாடல், நரபெலியாள் தனக்குக் கரும்பாவா டையிடல், சுண்ணங் கொடியேற்றல், இறக்கல், கட்டல், சுமத் தல், சந்தனம் அரைத்துக்கொடுத்தல், ஆலயப் பணிகளெல் லாம் விளக்கமுடனும் துப்புரவாகவும், விரைவாகவும், செய்தல் முதலியன இவர்கள் செய்யவேண்டிய தொழும்புகளாகும். நீர் பாயும் பள்ளவெளி கிலம் இவர்களுக்கு நிவந்தமாகக் கொடுக்கப்பட்டது.
தனியுண்ணுப் பூபாலன்:
குளக்கோட்டு மன்னன் மதுரைக்குச் சென்று மதிக்கு லத்துதித்த தனியுண்ணுப் பூபாலன அழைத்து வந்து திருக் கோணமலை நகரில் குடியேற்றினுன். தானத்தார், வரிப்பத் தார் இவர்களுக்கு நடுநின்று நீதியையும் ஒழுங்கையும் நிலை காட்டி நகரை அரசுசெய்வது தனியுண்ணுப் பூபாலன் க. மையாகும.

Page 31
46 திருக்கோணேஸ்வரம்
பாசுபதர்:
குளக்கோட்டன் பாசுபதர்களைக் கோயிலுக்குப் பூசகர் களாக நியமித்தான். பாசுபதர் என்போர் பாசுபத சமயத்தோ ராவர். பாசுபதர் மயேச்சுரர் என்றும் அழைக்கப்படுவர். திரு நீறு அணிதலும் சிவலிங்க வழிபாடும் இவர்களுக்கு ஏற்புடை யன. சிவகணங்களிடத்தில் பற்றுடையவர்கள். நகுலேச பாசு பதமே வீரசைவம் என்ற கருத்தும் உண்டு.
இருபாகமுதன்மை:
கயவாகு மன்னன் வருவதையறிந்த பாசுபதர்கள் கட லில் வீழ்ந்திறந்தனர். அதன்பின்னர் சைவாாயக முதன்மை, வேதாநாயக முதன்மை என்ற இருபாக முதன்மையினர் கோயில் அர்ச்சகர்களாயினர். அரசியல் அமைப்பு:
கோணேசர் கோயிலுக்குத் தொழும்பு செய்வோரும் க்வரி கொடுப்போரும் வாழும் எல்லைகள் கல்வெட்டில் கூறப்பட் டுள்ளன. வடக்குத்திசை எல்லை கரம்பகம், மேற்குத்திசை எல்லை முனிச்சுரம், தெற்குத்திசை எல்லை சங்கமக்கண்டி கிழக்குத்திசை எல்லை வங்காளம். கரம்பகம் ஏறக்குறையூ 175 மைலிலும், முனிச்சுரம் ஏறக்குறைய 100 மைலிலும், சங்த மக்கண்டி ஏறக்குறைய 150 மைலிலும், இருக்கின்றது. மிகுந்த ஆதாயத்தில் பத்துக்கொன்று கோயிலுக்களிக்கும் வழக்த மும் அமைந்திருந்தது. கோயில் வருவாயைப் பத்துப்பங் காக்கி எட்டுப்பங்கு இருப்பாகவும், இரண்டுபங்கு அர்ச்சகர்க் கெனவும் வகுக்கப்பட்டன.
திருக்கோணமலைப் பகுதியை வன்னிமை அரசாட்சி செய்தான். அவருக்குக் கீழ் 32 தலைமைக்காரர்கள் இருக் தனர். அரசுக்குச் சிறப்பு அங்கமாக விளங்கும் படையைப் பற்றிய செய்தியெதுவும் கல் வெட் டி ல் கூறப்படவில்லை, அக்காலத்தில் வன்னிமை நாட்டிலுள்ள வழக்கம், பாரம் பரியம் முதலியவற்றை அனுசரித்தே ஆட்சி செலுத்தினுன்.

திருக்கோணேஸ்வரம் 47ም
ஆண்களுக்கும் ஒழுக்கம் சிறப்பாக வற்புறுத்தப்பட்டது. பின்வரும் அடிகளால் புலனுகின்றது.
L0LL LL LLL LLLL0LL 0L LLLLL L LLLLL LL LLLLLS LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL LLLLLLL
ஐயமற உன்தாரந் தாரமாகு
மயலகத்தோர் தாரமெல்லா கின்ருயாகும்’ குற்றம் செய்தவர்களுக்கேற்ற தண்டனைகள் பலவும் கூறப் பட்டுள்ளன. உயிருக்குயிர் வாங்குதல், மண் கடகம் தலையில் ஏற்றி அடித்தல் முதலியன குற்றங்களின் தன்மைகளுக் கேற்ற தண்டனைகளாம்.
மைய*னய கண்ட் திருக் Gär
மகா பூசை திருப்பணியும் வழங்க்ச் செய்யே” என்ற கல்வெட்டு அடிகளால் அக்காலத்தில் சமயத்துக்கும் அரசியலுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு புலனுகின்றது. அரசனே ஆலயத்தில் அறக்காவலனுகவும் விளங்கினுன் .
கோயில்தொழும்பு செய்பவர்களுக்கெல்லாம் நிலம் கொடுக்கப்பட்டது. அவ்வருவாயைக் கொண்டே அவர்கள் வாழ்ந்தனர். இரண்டு வகையாகக் கணக்குகள் வகுக்கப்பட் டன. கருவூலக் கணக்குள் நாள்வருவாயும் செலவும் அடங் கும். பெரிய வழமைப்பத்ததி அரசர்களும், ஊரவர்களும் கோவிலுக்குதவிய நிதிபற்றிய கணக்குகளைக் கொண்டதாக அமைந்திருந்தது.
கோயிலும் வழிபாடும்:
கோயில் மிகவும் பெரிதாக அமைந்திருந்தது. கோயி லின் புறத்தே மலி நீர் வாவியும் திருக்குளமும் அமைந்தி ருந்தன. பவமறுக்கும் பாவநாசச் சுனையும் கோயில் வீதி யில் அமைந்திருந்தது. தேரோடும் வீதியும் இருந்தது. கோயில் வருவாய்க்காக இரண்டாயிரத்தெழுநூறவணம் விதைப்புத். தரை திட்டம் செய்யப்பட்டிருந்தது.

Page 32
திருக்கோணேஸ்வரம் 48ه
இரண்டவணம் செம்பூச்சம்மா காழும் கறியமுது செய் யப்படும். கோயிலில் நாளும மும்முறை வழிபாடு நிகழும். ஆடல் பாடலெல்லாம் கோயிலில் நடைபெற்றன. அதற்கென கடனப் பெண்களும் பாடகர்களும் இருந்தார்கள். வாயிலுக் குத் தென்கிழக்குத் திசையில் ஏழு லண்ணெய்க் கிணறுகள இருந்தன. எண்ணெய்க் கிணறுகளைச் சுற்றிச் சுவர் கட்டப் பட்டுக் கதவும் இடப்பட்டிருந்தது. எண்ணெய்க்கிணறுகளுக்கு துலாக்களும் போடப்பட்டிருந்தன. கோயிலில் 11,000 விளக் குகள் அமைக்கப்பட்டிருந்தன.
கட்டுக்குளத்தார் இறைவன் தொழும்பு செய்தார்கள். இந்துவெளி (நிலாவெளி)யில் வாழ்வோர் இறைவன் முனனர் காப்பணிதல், முன்னீடு விழா கடத்தல், சுத்தமாக ஆறவ ணம், கெல்லு கோயிலுக்குக் கொடுத்தல் முதலிய கடமை களைச் செய்தார்கள். ஆயத்தீர்வை கட்டும் வழக்கமும் இருக் தது. கொட்டியாபுரத்திலிருந்து வெற்றி?ல, பாக்கு, கருங்கத லிக் கனி, அரைத்தசந்தனம், பால், தயிர், நெய், முதலியன வந்தன. கெவுரி முனையிலிருந்து ஏரண்டம், (ஆமணக்கு) இருப்பை, புன்னை, முதலிய வித்துக்களிலிருந்து எடுக்கப் பட்ட நெய் மீகாமனுல் கொண்டுவரப்பட்டு எண்ணெய்க் கிணறுகளில் ஊற்றப்பட்டன.
இதுவரை ஆராய்ந்து கண்ட செய்திகளால் அக்காலத் தில் திருக்கோணேசர் ஆலயம் மிகவும் பெரிய கோயிலாக இருந்ததென்பதையும், சிறப்பாக நாள் வழிபாடும் விழாக்களும் கடைபெற்றதென்பதையும் உணரலாம். கோயிலுக்குத் தொ ழும்பு செய்யக் குடிமக்கள் இருந்தார்கள். கோயில திருச் \செயல்களெல்லாம் ஒழுங்காக நடைபெற்றன.

திருக்கோணேஸ்வரம் 49
திருக்கோணமலைக் கோயில்கள்
கோணமாமலை அமர்ந்த பெருமானேத் திருஞானசம்பந்தர் “கோயிலுஞ் சுனையுங் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே" என்று குறிப்பிட்டுள்ளார். கோயிலும் பாபநா சச் சுனையும் கடலும் சூழ அக்காலத்தில் கோணேசர்கோயில் இணையற்று விளங்கியது. திருக்கோணமலை. ககரிலே பார்த்த இடங்களிலெல்லாம், திருமபிய தெருக்களிலெல்லாம் திருக்கோ யில்கள் காணப்படுகின்றன. திருக்கோணேசர் ஆலயத்தை யும் அதன் புறத்தேயுள்ள (நகரிலுள்ள)கோயில்களையும் ஈண்டு
ஆராய்வோம்.
இன்றுள்ள திருக்கோணேசர் ஆலயம் உயரமான மலைப் பகுதியின் ஓர் எல்லையில் அமைந்திருக்கின்றது. பலமைல் தொலைவிலிருந்து பார்க்கும்போதே இன்று அமைந்திருக்கின்ற கோயில் கண்ணுக்குப் புலப்படும். பல ஆயிரம் ஆண்டுகள் நிலைபெற்றிருந்த கோவிலை போர்த்துக்கீசர் காலத்தில் நாம் இழந்தோம். மூன்று கோயில்கள் இருந்த இடமாகக் கரு தப்பட்ட இடத்தில் இன்றுள்ள புதிய கோயில் அமைக்கப்பட் டிருக்கின்றது. ஈழாநாட்டுச் சிற்பியர்களின் திறமைகளை இன்று புதிதாகக் கட்டப்பட்ட கோயில் எடுத்துக் காட்டுகின்றது.
சைவ சமயக் கோயிலின் கட்டிட சரித்திரங்களை ஆரா யும்போது அவ்வக்கால நிலைக்கேற்பவே கிடைக்கின்ற பொருட் களைக் கொண்டே கோயில் அமைத்து வந்திருக்கின்றர்க ளென்பது புலப்படுகின்றது. கோயிற் கட்டிட அமைப்பிலும் காலப்போக்கில் பற்பல மாற்றங்கள் ஏற்பட்டு வந்திருக்கின் றன. ኣ
தொல்காப்பியர் காலத்தில் முருகன், திருமால், கொற் றவை (காளி) முதலிய கோயில்கள் இருந்திருக்கின்றன. தொகை நூல்களால் சிவபெருமான், முருகன், திருமால், பல ராமன் முதலிய தெய்வங்களுக்குக் கோயில்கள் இருந்ததை

Page 33
50 திருக்கோணேஸ்வரம்
அறியலாம். 'ஆலமர் செல்வனுக்கு' (சிவன்) நீல நாகம் கல்கிய கலிங்கத்தை ஆய்வேள் தந்ததாகப் புறப்பாட்டுக் கூறுகின்றது. கி. பி. இரண் டாம் நூற்றண்டில எழுந்த பெருங்காப்பியங்களான, 'சிலப்பதிகாரத்திலும்" "மணிமேகலை யிலும்' பல கோயில்களைப்பற்றிக் கூறப்பட்டுள்ளன. சிலப்பதி காரத்தில்
*பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்’
அறுமுகச் செவ்வேலு அணிதிகழ் கோயிலும் வால்வளை மேனி வர்லியோன் கோயிலும் நீலமேனி நெடியோன் கோயிலும் மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்" .
என்று கூறப்பட்டுள்ளது. புறநானூறு கூறும் சிவன், முரு கன், பலராமன், திருமால் முதலாய தெய்வங்களின் கோயில் கள் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டமையால் கி. பி. இரண்டாம் நூற்றண்டிலிருந்த கோயில்களை உணரலாம். பல்லவர் காலத் துக்கு முன்னர் மண்ணுல் அமைந்த கோயில்களே இருந்தன. பல்லவர் காலத்திலேதான் கோயிற் கட்டிடக்கலையில் புதிய திருப்பம் ஏற்பட்டது. தொடக்கத்தில் பாறைகளைக் குடைந்து கோயில்களை அமைத்தார்கள். அதன் பின்பு கற்களைச் செதுக் கிப் படிமானஞ் செய்து கோயில்களைக் கட்டினர்கள். இதனைப் பின்பற்றியே பிற்காலத்தில் சோழர்கள் பெரும் பெருங் கோயில்களை எழுப்பினுர்கள். முதலாம் இராசராசசோழன்
பெருங்கோவில்களை எழுப்புவித்தான். அதனலேயே கோபுரம் 'இராசகோபுரம்" என்று கூறப்படுகின்றது.
திருக்கோணேசர் ஆலயம் பல்லாயிரம் ஆண்டுகள் பழை, மையானது. ஆலயமும் பற்பலவகையிலும் கால முத்திரை களை ஏற்றுவந்திருக்கின்றது. பழைய கோணேசர் ஆலயம் சுட்ட செங்கல், மண், சுண்ணும்பு, மரம் முதலியன கொண்டு ஆக்கப்பட்டிருக்கலாம். பல்லவர் சிற்ப முறை யமைந்த தூண்களை இன்றுங் கோட்டையுட் காணலாம். குகை வாயிலிற் காணப்படும் இரண்டு தூண்கள் பதினறு

கிருக்கோணேஸ்வரம் 5
பட்டை கொண்டவையாகவும் (தூண்கள் சுவர்ஒரத்தில் பொருத் தப்பட்டிருக்கின்றன) தூண்பகுதிகள் சதுரங்கள் அமையப் பெற்றனவாயும் அச் சதுரத்தில் தாமரைப்பூப் பொறிக்கப் பட்டுள்ளனவாகவுங் காணப்படுகின்றன. குகையின் (போர்த் துக்கீசர் அமைத்த கோட்டையிலிருக்கும் குகை) அண்மை யில் இருக்கும் படிக்கட்டால் கோட்டையின் மேலேறி வலது பக்கமாகத் திரும்பிக் கோட்டைச் சுவர்மீது சிறிது தூரஞ் சென்றதும் இடதுபுறச் சுவரில் பதிக்கப்பட்டுள்ள கோயிற் கற்கள் இரண்டில் பூக்கள் செதுக்கப்பட்டிருப்பதனைக் காண லாம் பழைய கோயிலின் கற்கள் கோட்டைச் சுவர்களிற். பெரும்பாலான இடங்களிற் காணப்படுகின்றன. சோழர்காலச் சிற்பமுறையில் அமைந்த தூண்களும் காணப்படுகின்றன.
மலையின் அடிவாரத்தைப் படகிற் சென்று பார்ப்போ மானுல் அங்கு பழைய கோயிலின் அழிபாட்டுச் சின்னங் களைக் காணலாம். உடைந்த தூண்கள், கடவுட் படிமங்கள் அமர்த்தியிருந்த பீடங்கள், உடைந்தன வாகவும், முழு உரு வத்திலும், கடலால் அரிக்கப்பட்டிருக்கின்றன. 1961-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆழ்கடலிற் படம் பிடிக்கச் சென்ற திரு. மைக்வில்சன் ஆழ்கடலின் அடியிலிருந்து தூண் பகுதி யொன்றை எடுத்தார். இத்தூண் வட்டவடிவமாகவும் இடை யில் விளிம்புடையதாகவும் அமைந்திருக்கின்றது.
சோழர் காலத்திலும் பாண்டியர் காலத்திலும், கற்கள் செதுக்கப்பட்டுப் படிமானஞ் செய்யப்பட்டுக் கோயில்கள் அமைக்கப்பட்டன. போர்த்துக்கீசரும், ஒல்லாந்தரும், கண் ணுக்குத் தோற்றிய கோயில்களையெல்லாம் இடித்துத் தரை மட்டமாக்கினர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஈழநாட்டில் எழுந்த கோயில்களின் கட்டிட அமைப்பு கால அடிப்படை யில் மாற்றமடைந்திருக்கின்றன. திருக்கோணமலையில் உள்ள கோயில்கள், (சிமெந்து இலங்கையில் உபயோகிக்கப் படுவ தற்கு முன்னர்) சுண்ணும்பாலும், செங்கற்களாலும் கட்டப் பட்டிருக்கின்றன. இன்று கட்டப்பட்டுள்ள கோணேசர் ஆல

Page 34
53 திருக்கோணேஸ்வரம்
யம் கால மாறு த லுக்க  ைம ய சீமெந்தும், மண்ணுங் கலந்து செய்யப்பட்ட கற்கள் இரும்பு முதலியவற்றல் கட் டப்பட்டிருக்கின்றது. திரு. சீவரெத்தினம் அவர்களும், சைவப் பெருமக்களும், இக் கோவிலைப் பெருந்தொகையான பொருட் செலவில் கட்டிமுடித்திருக்கின்றர்கள். பழைய காலத்தில் சிற்பங்களுக்கும், ஓவியங்களுக்கும் வண்ணந்தீட்ட இயற்கைப் பொருட்களேப் பயன்படுத்தியிருக்கின்றர்கள். இன்று வண் ணங் தீட்டுவதற்கு அறிவியல் தந்த செயற்கைப் பொருட்க ளைப் பயன்படுத்துகின்றர்கள்.
திருக்கோணேசர் ஆலயத்தில் சிவன், சக்தி, முருகன், வினுயகர், வயிரவர், சூரியர் சந்திரர், சண்டேசுவரர் முதலாய கோயில்கள் அமைந்துள்ளன. திருக்கோணமலையில் 1950-ம் ஆண்டு ஆடிமாதங் கண்டெடுக்கப்பட்ட திருவுருவங்களின் விபரம் பின்வருமாறு:-
நிறை 966ے சிவன் (சோமாஸ்காகத
சுகாசன மூர்த்தம்) 1', 8" X 10" 70 இருத்தல் பார்வதி(சோமாஸ்கந்த
சுகாசன மூர்த்தம்) Ꮧ* , Ꮞ" >< 8" 30 சிவன் (சந்திரசேகர மூர்த்தம்) 1, 8 " X 7" 25 பார்வதி (திரிபங்க வடிவம்) 1', 8" X 1' 65
கணேசர் 1", 8" x 10" 30 , திரிகுலம் I'。7” × I” 8 , விளக்குமுடி (அன்னம்) 1", 5" x 1", 2" 7 மொத்த நிறை 235 છે(B.
திருக்கோணமலையிற் கண்டெடுக்கப்பட்ட சிவன் திரு வுருவம் ஒப்புயர்வற்றது. சுகாசனத்தில் அமைந்த சிவன் திருவுருவம் ஈழநாட்டுச் சிற்பியர்கள் அமைத்திருக்கக்

திருக்கோணேஸ்வரம் 53 。
கூடும். சந்திரசேகரர் காலத்தால் முற்பட்டதாகும். இது அவ் வளவு திருத்தமாக அமையவில்ல்ை. பிள்ளையார் திருவுருவமும் இணையற்றதாக விளங்குகின்றது. 1944-ம் ஆண்டு ஏற்றத்தின் முடிவில் இடது புறத்தில் நீர்த்தேக்கம் அமைக்குங்காலை கண்டெடுக்கப்பட்ட விஷ்ணுவும், இலக்குமியும், பல்லவ சிற்ப மாகும். 1952-ம் ஆண்டு திருவுருவங்கள் ஈழநாடு முழுவ தும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு; அதன்பின்னர் கோணேசர் மலையில் வழிபாட்டுக்காக அபிடேகம் செய்யப் பட்டு திருவிருக்கை செய்யப்பட்டது.
மனையாவெளியிலுள்ள கோயில்கள்
மனையாவெளியில் குளத்துக்கு முன்னிலையில் ஒரு பிள்ளை யார் கோயில் அமைந்திருக்கின்றது. இக்கோயிலில் வல்லபை சக்தி கோயிலும் அமைந்திருக்கின்றது. வல்லபை சக்தியின் முன் அக்கினிக் குண்டங்கள் இருக்கின்றன. வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் இவ்வக்கினிக் குண்டங்களில் வேப் பங்கட்டைகள் போட்டு எரிக்கப்படுகின்றன. மனையாவெளியில் வேறெரு பிள்ளையார் கோயிலும், ஒரு முருகன் கோயிலும், இருக்கின்றன. வில்லூன்றிக் கந்தசாமி கோயில்
திருவேரகம் என்னும் ஊரில் வாழ்ந்த சிவசுப்பிரமணிய சர்மா என்பவர் வழிபடுவதற்குக் குமரநாத சிற்பி மூலமாக முருகன் திருவுருவை வள்ளி, தெய்வானையரோடு திருவாசி யும் அமைந்ததாக அமைத்துக் கொண்டிருக்கும் போது சிவ சுப்பிரமணியசர்மா இறைவனடி சேர்ந்தார். அவர் உறவினர் திருவுருவை அழித்துவிடும்படி சிற்பிக்குக் கூறினர். சிற்பி அவ்வாறு செய்ய விரும்பவில்லை. பின்னர் திருவருள் உணர்த்த பரங்கிப் பேட்டையிலிருந்து ஈழநாடு செல்லுங் கப்லொன்றில் பெட்டியில் வைத்து அனுப்பினர். அக்கப்பல் திருக்கோண மலைக் கடலில் வந்து நகராது நின்றது . திருவருளுணர்த்த திருவுருவைக் கடலிலிட்டனர். கப்பலும் நகர்ந்தது. அத்திரு

Page 35
54 திருக்கோணேஸ்வரம்
வருவமே இன்று கோயிலின் கருவறையுள் திருவிருக்கை செய்யப்பட்டிருக்கின்றது. சிலகாலம் முடமாண்டானில் சிறு கோவிலாயிருந்தது. அதன்பின்னரே இன்றிருக்கும் கோயில் கட்டப்பட்டதாகும். “கந்தஷஷ்டி' விரதம் இக்கோயிலில் மிக வுஞ் சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது.
வெள்ளைவில்வம் கோணேசர் கோயில்
இக்கோவில் திருக்கோணேசர் ஆலயத்தோடு தொடர் புடையது. இக்கோயிலின் பின்புறத்தில் வெள்ளைநிற வில்வ மரம் நின்ற காரணத்தால் வெள்ளை வில்வம் கோணேசர் கோயிலெனப் பெயர் பெற்றது. கோயிலின் புறத்தே பழைய திருவுருவங்கள் சில காணப்படுகின்றன. கோவில் நிலத்தின் முன்னர் ஒருகுளம் இருந்தது. சென்ற இருபது, முப்பது ஆண்டுகளுக்குமுன் தூர்க்கப்பட்டது. முத்துக்குமாரசாமி கோயில்
இக் கோயில் திருஞானசம்பந்தர் வீதி முடிவடையும் இடத்தில் இருக்கின்றது. சடையர் என்பவர் இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர், முத்துக்குமாரு பரதேசியார் வைத்து வழிபட்ட குமாரலிங்கத்தை வைத்துச் சிறு கோவிலாகக் கட்டி னர். பின்னர் செல்லப்பிள்ளை என்பவர் கோவிலைப் பழுது பார்த்துக் கும் பாபிஷேகம் செய்வித்தார். பின்னர் சண்முகம் (பாராளுமன்ற உறுப்பினர் திரு. க. இ. இராசவரோதயம் அவர்களின் பூட்டன்) அவர்கள் இக் கோவிலைப் பெரிதாகக் கட்டி 1889-ம் ஆண்டு ஆணித்திங்கள் பத்தாம் நாள் கும்பா பிஷேகம் செய்வித்தார். பின்னர் கோவில் பழுதுபார்க்கப்பட்டு 1932-ம் ஆண்டு மீண்டுங் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. புதுருேட்டுக் கற்பகவினுயகர் கோவில்
இற்றைக்கு 123 ஆண்டுகளுக்கு முன்னர் நாகன் என் பவர் இக்கோவிலைக் கட்டிச் சிறப்பாகக் கும்பாபிஷேகம் செய்வித்தார். அதன்பின்னர் இக்கோவில் காலத்துக்குக் காலம் திருத்தங்கள் செய்யப்பட்டு வந்துள்ளது.

திருக்கோணேஸ்வரம் 55
விஸ்வநாதர் (சிவன்) கோவில்
காசியிலிருந்து ஒரு பரதேசியால் கொண்டுவரப்பட்ட சிவலிங்கத்தை வைத்து முதலி சோமலிங்கம அவர்கள் ஒரு கோயிலை ஆரும் வட்டாரத்தில் மத்திய வீதியில் கட்டினர். பல ஆண்டுகளின் பின்னர் கதிர்காம முதலி என்பவர் அக் கோவிலை விட்டுச் சுவாமியை எடுத்துவந்து இன்றிருக்குங் கோவிலைத் திருஞான சம்பந்தர் வீதியிற் கட்டிக் கும்பாபி ஷேகம் செய்வித்தார். 1830-ம் ஆண்டு இராசகோன் முதலி யாரும், வயிரவப் பெருமாள் என்பவரும் கோவிலைப் பழுது பார்த்து கும்பாபிஷேகம் செய்வித்தார்கள். இக்கோவில் இது வரை நான்கு முறை கும்பாபிஷேகம் செய்யப்பட்டடிருக்கின் றது. இக்கோவிலில் கேதார கெளரி கோன்பு சிறப்பாக கடை பெறுகின்றது. மாரியம்மன் கோவில்:
இக்கோவில் ஒன்பதாம் வட்டாரத்தில் திருஞானசம் பக்தர் வீதியில் அமைந்திருக்கின்றது. இற்றைக்கு ஏறக் குறைய நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோவிலை மாரிமுத்து மணியம் என்பவர் கட்டுவித்தார். பல ஆண்டு களுக்குப் பின்னர் மூத்ததம்பி மணியம் இக்கோவிலைப் பழுது பார்த்தார். அதன் பின்னர் திரு. பெ. வ. செல்லையா மணியம் அவர்களும் கோவிலிற் பல திருத்தங்களைச் செய்தார். சித் திரைத் திங்கள் இக்கோயிலின் திருவிழாக் காலமாகும். தேர்த்திருவிழாவின்போது ஒரு பனை உயரத்தில் அடியார் ஒருவர் துலாக்காவடி (அந்தரக்காவடி) ஆடுவார். அக் காட்சியைக் காண ஆயிரக்கணக்கான மக்க ள் குழுமி யிருப்பர். நவராத்திரியும் 'கேதாரகெளரி" கோன்பும் இக் கோயிலிற் சிறப்பாக நடைபெறும்.
வீரகத்திப் பிள்ளையார் கோயில்
இக்கோயில் ஒன்பதாம் வட்டாரத்தில் மாரியம்மன் கோயிலின் அண்மையில் அமைந்திருக்கின்றது. பெரியராச

Page 36
56 திருக்கோணேஸ்வரம்
கோன் முதலியார் என்பார் முதலில் ஒரு சிறு கோவிலாகக் கட்டிர்ை. 1801-ம் ஆண்டு வீரபத்திர இராசகோன் அவர்கள் இன்றுள்ள கோவிலைக் கட்டினர்கள். இக்கோவில் நான்கு. முறை கும்பாபிஷேகம் செய்யப்பட்டிருக்கின்றது.
பெரிய தொடுவாய்ப் பிள்ளையார் கோயில் :
இக்கோயில் உப்புவெளியில் அமைந்திருக்கின்றது." இற். றைக்கு ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் உயர் திரு. நல்லதம்பி ஐயர் என்பார் ஒருசிறு கோயிலாகக் கட்டினுர். அவர்மகன் உயர்திரு. எரமபு ஐயர் கோவிலிற் சில திருத்தங்களைச் செய்தார். பின்னர் அவர் மகன் உயர்திரு. விஸ்வலிங்கக் குருக்கள் அவர்கள் ஊரவர்கள் துணை கொண்டு கோவிலைப் பெரிதாக்கிக் கட்டினுர். சின்னத்தொடுவாய்ப் பிள்ளையார் கோயில்:
இக்கோயில் புகையிரத நிலையத்தின் அண்மையில் அமைந்திருக்கின்றது. இக்கோயிலைக் கதிரவேலு முதலியார் என் பார் கட்டினுர். இக்கோயிலின் அண்மையில் சைவ ஆதீனம் ஒன்று இருந்ததாகக் கூறப்படுகின்றது.
சனீஸ்வரன் கோயில் :
இக்கோயில் ஒன்பதாம் வட்டாரத்தில் வீரகத்திப் பிள்ளை யார் கோவிலின் அண்மையில் அமைந்திருக்கின்றது. இக் கோயிலை இற்றைக்கு ஏறக் குறைய 93 ஆண்டுகளுக்கு, முன்னர் உயர்திரு பஞ்சநாதக் குருக்கள் என்பவரால் கட் டப்பட்டுக் கும்பாபிஷேகமும் செய்யப்பட்ட்து. இக்கோயிலின் பின்னர் தான்றி மரம் ஒன்று நிற்கின்றது. கிருஷ்ணன் கோயில்:
இக் கோயிலும் வீரகத்திப் பிள்ளையார் கோயிலின் அண்
மையிலேயே இருக்கின்றது. இக்கோயிலை மாரிமுத்து நாயக் கரும், திருவிளங்க நகரத்தாரும், ஆரிய நாட்டாருஞ் சேர்ந்து

திருக்கோணேஸ்வரம் 57
கட்டிஞர்கள். பின்னர் கோவிலிற் பல திருத்த வேலைகள் செய்யப்பட்டன.
சமாதுப் பிள்ளையார் கோயில் :
இக் கோயில் வீரகத்திப் பிள்ளையார் கோயிலிலிருந்து சிறிது தூரத்தில் பெருந்தெருவில் அமைந்திருக்கின்றது. இக் கோயில் இற்றைக்கு ஏறக்குறைய 123 ஆண்டுக்கு முற்பட் டதாக இருக்கும். சுப்பு உடையார் என்பவர் இக்கோவிலைக் கட்டிக் கும் பாபிஷேகம் செய்வித்தார். அதன்பின்னர் வேலுப் பிள்ளை என்பவர் 1928-ம் ஆண்டில் கோவிலிற் சில திருத் தங்களைச் செய்து கும்பாபிஷேகம் செய்வித்தார். அவர் காலத்துக்குப் பின்னர், திரு. த. இராமலிங்கம் அவர்கள் அயலவர்களின் உதவியோடு திருத்தங்கள் செய்து 1950-ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்வித்தார்.
எடடாம் வட்டாரத்தில் (Div. No 10) முருகன் கோயில், மன்மதன் கொட்டில், கண்ணகை அம்மன் கோயில், பிள்ளையார் கோயில், கம்பனிப்பிள்ளையார் கோயில் முதலாய பல கோயில்களிருக்கின்றன. முருகன் கோயில் வரலாறு. இற்றைக்கு ஏறக்குறைய 112 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இன்றிருக்கும் புதிய கோயில் 1956-ம் ஆண்டு கட்டப்பட் டுக் கும்பாபிஷேகம் செய்யப்பட்டதாகும். கண்ணகையம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் கடை பெறும் வழிபாட்டுக்கு நூற்றுக்கணக்கானவர்கள் வந்து கூடுவார்கள்
சீர் காளியம்மன் கோயில் :
இக்கோயில் எட்டாம் வட்டாரத்தில் (Div. No.10) இருக் கிறது. அக்கரைப்பேட்டையில் (தென்னிந்தியாவில்) வாழ்ந்த காட்டார் குடும்பத்தார் கொலராவின் கொடுமைக்குப் பயந்து கட்டுமரத்தின் மூலம் இலங்கைக்கு வரும் பொழுது ஓர் உரு, வம் அவர்களுடன் வருவதைக் கண்டனர். அக்கரைப் பேட் டையில் தாங்கள் வணங்கிய சீதாள அம்மன் எனக் கண்டு

Page 37
58. திருக்கோணேஸ்வரம்
தாங்கள் இலங்கைக்குச் செல்வதாகவும் அங்கு தூசு துப்பர வாக இருக்க இடமில்லை என்றும் கூறினர்கள். அவ்வுருவம் “உங்களுக்கு இங்கும் அங்கும் துணையாக இருப்பேன் கெடுதி ஒன்றும் செய்யமாட்டேன் ஆணுல் நித்திய விளக்கு ஒன்று எனக்கு வைத்து வழிபடுங்கள்' என்று கூறி அவர் களுடன் வந்து சேர்ந்தது. 10-ம் நம்பரில் 'பெரிய வீடு” என்று வழங்கிவரும் வீட்டில் ஒரு பகுதியில் ஓர் சூலமும் படமும் வைத்து நித்திய விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தனர். இதுவே சீர்காளி அம்மன் கோயிலின் தோற்ற வரலாருகும். திருக்கடலூர் (படுக்கை) என்னும் இடத்தில் பத்திரகாளி கோயிலொன்று இருக்கிறது. மத்திய வீதியில் இரண்டு வயிரவர் கோயில்கள் இருக்கின்றன.
முற்றவெளிப் பத்திரகாளி கோயில் :
இக் கோயில் குளக்கோட்டன் காலத்து எல்லைக் காளி கோவிலில் ஒன்றகக் கூறப்பட்டு வருகின்றது. முதலில் ஆழ்வார் உடையார் என்பார் சிறு கோயிலாகக் கட்டினுர், அதன் பின்னர் சோதிகாத உடையார் என்பார் இப்போ திருக்கும் கோயிலைக் கட்டிக் கும்பாபிஷேகம் செய்வித்தார். இக்கோவிலில் கவராத்திரியும், கேதாரகெளரி கோன்பும் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
ஆலடிப் பிள்ளையார் கோயில் :
இக் கோயில் காளி கோயிலுக்குப் பக்கத்தே இருக்கின் றது. ஆலமரத்தின் கீழ் பிள்ளையார் கோயில் கொண்டுள்ளார். ஆலமரத்தின் கீழ் இருப்பதாலேயே இக் கோயில் ஆலடிப் பிள்ளையார் கோயிலெனப் பெயர் பெற்றதென்பர்.
இதுவரை கூறியவற்றைவிட இன்னும் எத்தனையோ சிறு கோயில்கள் திருக்கோணமலை நகரிலே உள்ளன. திருக் கோணமலையில் நவராத்திரியின்போது ‘கும்பம்? என்னும் விழாக் கொண்டாடப் படுகின்றது. 'சக்தி வழிபாடு” கடை

திருக்கோணேஸ்வரம் 59
பெறுமிடங்களிலிருந்தெல்லாம் விஜயதசமியன்று கும்பங்கள் புறப்பட்டு ஊரை வலம் வரும். கும்பம் எடுப்பவர்களிற் சிலர் தெய்வம் வந்து ஆடுவார்கள். கும்பங்கள் மேள வாத்தியங்களுடன் ஊர்வலம் வருங்காட்சி மிகவும் சிறப் புடையதாகும்.
திருக்கோணமலையில் கோயில்கள் நிறைய இருக்கின்றன சமயத்துறையில் பணியாற்றும் சங்கங்களும் இருக்கின்றன. அன்று ஞானசம்பந்தர்;
“கோயிலுஞ் சுனையுங் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை"
-என்று பாடியது இன்றும் பொருத்தமாகவே இருக்கின்றது.

Page 38
60 திருக்கோணேஸ்வரம்
கன்னியா வெந்நீரூற்று
கன்னியா நீரூற்றைப் பற்றிப் புராணங்கள் கூறும் திவ்விய வரலாற்றின்படி மகாவிஷ்ணுமூர்த்தியே அவற்றை உற்பத்தியாக்கினர். கோணங்ாயகரிடங் தான் பெற்ற இலிங் கத்தைக் கையிலேந்திக் கொண்டு இராவணன் செல்லும் போது விஷ்ணுமூர்த்தியொரு அந்தண வடிவம் எடுத்துத் தசக் கிரீவனைச் சந்தித்து அவன் தாயாகிய கைகேயி உயிர்நீத்த செய்தியைத் தெரிவித்தார். இலங்கைக் காவலன் அதைக் கேட்டதும் துக்கக் கடலிலாழ்ந்தான். முனிவர் அவனைத் தேற் றியபின் தனய்ன் தாய்க்குச் செய்யவேண்டிய கன்மாதிக் கிரியைகளைச் செய்யுமாறு நினைவுறுத்திர்ை. இப் புண்ணிய தலத்தில் கன்மாதிக் கிரியைகளைச் செய்தால் அவர் மோகூடி வீட்டை அடைவது திண்ணம் என்று கூறினுர்.
அவ்வந்தனரே அதைச் செய்து முடிக்கவேண்டும் என்று இராவணன் வேண்ட அதற்குச் சம்மதித்த அந்தணர், அவனை அழைத்துக்கொண்டு திருக்கோணமலைக்கு மேற்கிலுள்ள கன் னியா என்னும் தலத்திற்குச் சென்று அவ்விடத்தில் தமது கையிலிருந்த தண்டினுல் ஏழிடத்தில் ஊன்றினுர். அந்தண வடிவங்கொண்ட மகாவிஷ்ணு ஊன்றிய ஏழிடங்களில் நீரூற் றுத் தோன்றின என்று புராணங்கள் கூறுகின்றன. இறந்த வர்களுக்கு அவ்விடத்தில் அந்தியேட்டி செய்யப்படின் அவ் வான்மாக்கள் முத்தியடையுமென நம்பப்படுகின்றது. இராவ ணன் தனது தாயாருக்குரிய கன்மாதிக் கிரியைகளெல்லாவற். றையும் முறையே செய்தபின் அவ்விடம் விட்டேகினுன்.
சேரன் செங்குட்டுவன் வடக்கே சென்று கனக, விச யரை வெற்றிகொண்டு தென் தமிழ்ப்பாவை செய்த வ க், கொழுந்தாம் கண்ணகிக்குச் சிலையெடுக்க இமயத்திலிருந்து கல் கொண்டுவந்து கோவில் அமைத்து விழாவெடுத்த காலை கடல்தழ் இலங்கைக் கயவாகுவும் விழாவுக்குச் சென்றிருக் தான். ஈழநாட்டில் கண்ணகி வழிபாட்டைக் கயவாகு மன்

திருக்கோணேஸ்வரம் 6.
பனன் பரப்பினன். ஈழநாட்டில் கண்ணகி வழிபாடே ஒரு இயக்கமாயிற்று.
கண்ணகி கோவில் திருக்கோணமலையில் கன்னியாவில் அமைந்திருக்கலாம். "கண்ணகி என்ற சொல்லே காலப் போக்கில் திரிந்து கன்னியாவாயிற்று" என்று டாக்டர் மு. வரதராசன் கூறுகின்றர். ஈழநாட்டில் கண்ணகி வழிபாடே காலப்போக்கில் மாரியம்மன் வழிபாடாகவும் திரெளபதையம் மன் வழிபாடாகவும் மாறியதென்பது சிலர் கருத்தாகும். இக் கருத்து சிந்தனையைத் தூண்டும் செய்தியாக அமைகின்றது.
கன்னியா கீரூற்றின் ஆதி வரலாற்றை அறிவது அரிதி னும் அரிது. இலங்கை அரசாங்கத்தின் தாதுப் பொருட்டுறைப் பொறுப்பாளர் திரு. சி. எச். எல். சிறிமான் இந்நீரூற்றுக்களை 1954-ம் ஆண்டில் ஆராய்ந்து; பின்வருமாறு கூறியுள் ளார். "நிலத்தின் கீழுள்ள நீர்மட்டம் தரையின் மேற்பரப் பைச் சந்திக்கும் இடத்தில் இயற்கையாக நீரூற்று ஏற்படும். நீர் ஒரே நிலையில் நிற்பதில்லை. மழை வீழ்ச்சியின் பின் நீர் மட்டம் உயர நீரூற்று அதிகரிக்கும். வரண்டகாலத்தில் மழை வீழ்ச்சி குறைய நீர்மட்டம் தாழ நீரூற்றுக் குறையும்.'
சுவரால் அடைக்கப்பட்ட எல்லேயுள் பூமியினூடே செல் லும் நீரோட்டத்தின் படுக்கை இருப்பதாக அவர் கருதுகின் ருர். ஆயினும் அதன் எல்லைக்கு வெளியிலும் நீருற்று இருக் கின்றது. மாரிகாலத்தில், தரைமட்டத்தின் கீழுள்ள நீர் உயர் வதினுல் அப்பகுதியெங்குஞ் சிறுநீரூற்றுக்கள் தோன்றும். கன்னியா நீரூற்றைக் கிணறுகள் என்பது பொருத்தமில்லை. நிலத்தைத் தோண்டுவதினுல் ஏற்படும் நீரூற்றே கிணறு எனப் படும். கன்னியாவில் உள்ள நீரூற்றுக்களைச் சுற்றிச் சுவர் கட்டப்படாவிட்டால் அங்குள்ள நீரூற்று மறைந்திருக்கக் கூடும். அக் கிணற்றுக் கட்டுகளுக்கு மேலாக நீர் மேவிப் பாய்வதில்லை. ஆயினும் நீரை அள்ள அள்ள ஊறிக்கொண் டேயிருக்கின்றது. எனவே நீரூற்றுக்கு உற்பத்திக் காரணமாக

Page 39
62 திருக்கோணேஸ்வரம்
இருக்கும் ஆறு சிறியதாகவே இருக்கவேண்டும். இது வெங். நீராக இருப்பதற்குக் காரணம் அவராற் கூறப்படவில்லை.
ஜோன் டேவி என்பவர் தாம் கி. பி. 1821-ம் ஆண்டில் வெளியிட்ட "இலங்கையின் உட்பகுதியின் விபரம்" என்னும் நூலில் அக்காலத்தில் கன்னியா நீரூற்று இருந்த நிலைமையை வருணித்துள்ளார். 1817 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ம் திகதி காலை ஏழு மணிக்கு ஏழு கிணறுகளில் உள்ள வெங் நீரின் வெப்பம் பின்வருமாறு:
101, 1015, 107, 88.5°, 86°, 105 - 75° 91 எனவே மிகவும் கூடிய வெப்பம் 107°, மிகக் குறைந்த வெப்பம் 885°. அன்று காலை 10 மணிக்கு வெப்பத்தை அளவையிட்டபொழுது அவை முறையே பின்வருமாறு இருந் தது. மூன்றவது கிணறு 107° யிலிருந்து 103° ஆகவும், ஆறவது கிணறு 10575° யிலிருந்து 102° ஆகவும் இருக் ததாகக் கூறியுள்ளார். அன்று 7 மணிக்குப் பவனத்தின் வெப்பம் 77° ஆக இருந்தது. 10 மணிக்கு 80° ஆக இருந் தது. எனவே பவனத்தின் வெப்பம் அதிகரிக்க வெங்கீரின் வெப்பம் குறைந்து கொண்டே சென்றது. அதனுடைய மருத் துவப் பயனைப் பற்றியும் கூறியுள்ளார். "The water is used Chiefly for rheumatism and Cutaneous diseases." அங்கீர் வாத சரும நோய்களுக்கு உபயோகிக்கப்படும். இதற் குக் காரணம் அந் நீரிலுள்ள இர சா ய ன ப் பொருட்களே. கன்னியா ஊற்றிலிருந்து எடுக்கப்பட்ட நீர் கண்டியிற் பரி சோதிக்கப்பட்ட பொழுது அதில் சொற்ப உப்பு கார்பனிக்க மிலவாயுவும், நைட்ரஜினும் காணப்பட்டன.
வெந்நீரின் சூட்டிற்கு அவர் கொடுக்கும் காரணம் சிக் gßöbb UITGAog. “The probability is that all the wells are supplied with water from the same source. The Circumstances of their temperature being different at first view, appears to be in opposition to this,

திருக்கோணேஸ்வரம் 63.
idea but it may be easily reconciled by taking into account the quantity of water discharged, which is greatest in the hotsprings, excepting in one instance in which the air disengaged, in the operation of raising the temperature, may be considered as a substitute for the water.'
"ஒரே ஊற்றிலிருந்து எல்லாக் கிணறுகளுக்கும் நீர் ஊறுகின்றது. நீரூற்றுக்களின் வெப்பநிலை ஏற்றத்தாழவாக, இருப்பதால் முன்கூறிய கருத்து மாறுபாடாகத் தோன்றுகின் றது. வெப்பமான நீரூற்றிலிருந்து சு ர க் கும் தண்ணிரின் அளவு ஏனைய ஊற்றுக்களிலிருந்து வரும் நீரைவிட அதிக மாக இருக்கின்றது. ஒரு கிணற்றில் அதிகமாகக் குமிழி வரு கின்ற காரணத்தால் இதற்கு விதி விலக்காக அமைகின்றது.
இக் கருத்து எவ்வளவிற்குப் பொருத்தமானதென்பது ஆராய்ச்சிக்குரியது. இன்றைய நிலையில் விஞ்ஞானம் கார ணம கூற முடியாது தவிக்கின்றது.
1817-ம் ஆண்டில் சுற்றுமதில் செங்கல்லாற் கட்டப் பட்டு ஆறடி உயரமுடையதாக இருந்தது. கிணறுகளைச் சுற் றிச் சுவர் கட்டப்பட்டிருக்கவில்லை. ஒவ்வொரு கிணற்றைச் சுற்றியும் கருங்கல் குவிக்கப்பட்டிருந்தன. கால்வரைக்கொண்ட ஒரு புனருத்தாரணசபை 1923-ம்ஆண்டில் சுற்றுமதிலை உயர்த் தியும், கிணறுகளைக் கட்டியும் முடித்தனர். அந்தியேட்டிக் கிரியைகளைச் செய்பவர்கள் பண்டார வண்ணுன் மடத்திலும் பஞ்ச நாதக் குருக்கள் மடத்திலும் தமது கடமையைச் செய்தனர்.
இத்தலம் இஸ்லாமியருக்கும் ஒரு புண்ணிய தலமாக விளங்குகின்றது. அங்கு "தக்கியா' என அழைக்கப்படும் ஒரு இஸ்லாமிய பள்ளிவாசல் இருக்கின்றது. மேலும் மலை யின் உச்சியில் "நாற்பதடி ஆண்டவர்" எனவழைக்கப்படும் ஒரு சமாதியுண்டு. அதில் 40 அடி நீளமுள்ள ஒரு அரேபிய

Page 40
84 திருக்கோணேஸ்வரம்
நாணி புதைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. இதன் சரித் திரம் நான்கு நூற்றண்டிற்கு மேற்பட்டதென கர்ணபரம் பரையாக நம்பப்படுகின்றது. இஸ்லாமியர்கள் கந்தூரிகளுக்
கும் ஏனைய கொண்டாட்டங்களுக்கும் அங்கு செல்வார்கள்.
கன்னியாவிற்குச் செல்பவர்கள் பிள்ளையாருக்கு வணக் கம் செலுத்தி வந்தனர். ஆங்கு பொங்கிப் படைத்தும் கற் பூரங் கொழுத்தியும் அடியார்கள் வழிபட்டனர். இற்றைக்கு 75 ஆண்டுகளுக்கு முன் அங்கு சென்றவர்கள் வட்ட வடிவ மான ஒரு கல்லையே பிள்ளையார் சின்னமாக உபயோகித்து வந்தனர். இந்நூற்றண்டின் ஆரம்பத்தில் அங்கு ஒரு கோயில் அமைக்கப்பட்டது. ஆயினும் அக்கோவிலில் நாளாந்த ஆரா தனைகள் தவருது கடந்ததாகத் தோன்றவில்லை. அங்கு செல் பவர்கள் விநாயகர் சங்கிதியின் முன்பு வழிபாட்டைச் செய்து செல்வது வழக்கம்.
அது கெடுங்காலமாகத் திருக்கோணமலை மாரியம்மன் கோவில் ஆதனமாக இருந்ததென்று கருதுகின்றனர். இதை மறுத்துக் கூறுபவர்களும் உண்டு. இன்று அது உப்புவெ ளிக் கிராமச் சங்கத்தினுல் மேற்பார்வை செய்யப்பட்டு வரு கின்றது. அவர்கள் ஒரு மடத்தை அமைத்து அங்கு நீராடச் செல்பவர்களுக்கு வேண்டிய வசதிகளையும் உண்டாக்கி யுள்ளனர்.

திருக்கோணேஸ்வரம் 65
சமூக வளர்ச்சி
திருக்கோணமலை, இந்துக்களுக்கு எத்தகைய முக்கியத் துவம் வாய்ந்தது என்பதற்கு கிறித்துவ மதபீடமே ஆதார மளிக்கின்றது. பதினுறம் நூற்றண்டில் இந்தியாவின் கரை யோரப்பகுதியில் வாழ்ந்த மக்களிற் பெருந்தொகையானவர் கள் கத்தோலிக்க மதத்திற்கு ஈர்க்கப்பட்டனர். இதற்குக் காரணகர்த்தாவாக இருந்தவர் பரிசுத்த பிரான்சிஸ் சவேரியார் என்பவர். அவர் திருக்கோணமலைக்கு வந்து, நேரடியாக இங்குள்ள நிலையைப் பார்வையிட்டபின் "கீழைத்தேய மிலேச் சர்களின் உரோமாபுரி" எனத் திருக்கோணமலையைப்பற்றி 6ÁLJÁîjbl61 GITT fi. (“The Rome of the heathens of the East'-History of the Catholic Church in CeylonVol. I by Father Gnanapragasam) SJT (Subsis) Jin, சிதம்பரம், காஞ்சிபுரம், திருப்பதி, திருமலை, ஜகனுத், விசுவ ணுத் ஆகிய திவ்விய தலங்களிலும் மேலாக யாத்திரீகர் களுக்கு முக்கிய இடமாக இருந்தது என வண. பிதா. ஞானப்பிரகாசர் கூறியுள்ளார். பண்டைக் காலத்திலே இந்தி "யர்களாலும் தரிசிக்கப்பட்ட தலம் என்பதைக் குறிக்குமுக மாக இதைக் கூறியிருக்கலாம். இப்பரந்த உலகின் பகுதிக ளெங்கும் வாழுங் கத்தோலிக்க மதத்தினருக்குத் தலைமைப் பீடம் உரோமாபுரியாக இருப்பதுபோல் இந்துக்களுக்கு இக் ககர் இருந்ததென்பது பெறப்படும்.
பதினுரும் நூற்ருண்டில் திருக்கோணமலையில் ஆட்சி புரிந்த வன்னிய அரசன் இறந்ததும், அவனது எட்டுவய தான மகன் அரசனனுன். அச்சிறுவனைக் கொலைசெய்வதற் குச் சதித்திட்டங்கள் உருவாகியதை அறிந்த அவனது உற
5

Page 41
66 திருக்கோணேஸ்வரம்
வினர்களும் ஆதரவாளர்களும் அவனே இந்தியாவுக்குக் கொண்டுசென்று போர்த்துக்கீசப் பாதிரியாரான "என்றிக் கேஸ்" என்பவரிடம் ஒப்படைத்தனர். அவன் "டொன் அல் போன்சோ" என "ஞானஸ்நானம்” கொடுக்கப்பட்டுக் கிறித் தவனுன்ை. திருக்கோணமலையிலும், யாழ்ப்பாணத்திலும் அவ ஜனப் பட்டஞ்சூட்டுவதற்குப் பல பிரயத்தனங்கள் செய்த பொழுதிலும், அவையொன்றும் பயனளிக்கவில்லை. இவனது தந்தை ஆட்சிபுரிந்த பகுதி இரண்டாக்கப்பட்டு, ஒரு பகு தியை இவனது சிறிய தந்தையும், மற்றப் பகுதியில் இவ னது உறவினனை செகராசசேகரன் என்ற யாழ்ப்பாணத்து அரசனும் ஆணை செலுத்தினர். செகராசசேகரன் கி. பி. 1551-ம் ஆண்டில் இச்சிறுவனின் அரசைக் கைப்பற்றினு னென அறியக்கிடக்கின்றது. இச்சிறுவனின் தந்தை யாழ்ப் பானத்துக் கனகசூரிய சிங்கை ஆரியச் சக்கரவர்த்தியின் பாட்டனென அறியக்கிடக்கின்றது. செகராசசேகரன் என்பவ னும், கனகசூரியனின் பாட்டனுவான். எனவே திருக்கோணமலை வன்னியர்களுக்கும் யாழ்ப்பாண அரசர்களுக்கும் கெருங்கிய தொடர்பு இருந்ததென்பது தெளிவு. டொன் அல்போன்சோ கோவையில் போர்த்துக்கீசப் படையிற் சேவைசெய்து மங்க ளூர் யுத்தத்தில் இறந்தான்.
ஒல்லாந்தர் காலத்தில் சீர்திருத்தப்பட்ட கிறீஸ்தவமதம் கட் டாயப்படுத்தப்பட்டமையாற் பலர் அம்மதத்தைத் தழுவினர். ஆயினும் அம்மதம் அவர்கள் காலத்தில் வேரூன்றியதாகத்தெரிய வில்லை. புரட்டஸ்தாந்து மதத்தின் பிரிவுகளில் இதுவும் ஒன்று. ஒல்லாந்தர் இலங்கையினின்றும் 1795-ம் ஆண்டு வெளியேற்றப்பட்டனர். சுமார் 39 ஆண்டுகளின்பின் 1834-ம்

திருக்கோணேஸ்வரம் 67
ஆண்டில் ஆங்கிலேயரால் எடுக்கப்பட்ட குடிசன மதிப்பில் திருகோணமலை மாவட்டத்திற்குரியது பின்வருமாறு:-
புரட்டஸ்தாந்து மதத்தினர் - 67
கத்தோலிக்க - 1,414
இஸ்லாமிய 3,245
பெளத்த 250
LÉGGoðd á G6ir (Heathens)
14, 182 (சிவவணக்க்முடையவர்கள்)
மொத்தம் - 19,158
ஆகவே ஒல்லாந்தரால் சட்டவிரோதமாக்கப்பட்ட காலத்திலும் கத்தோலிக்க மதம் வளர்ந்திருக்கின்றதென்பது திண்ணம்.
பல நூற்றண்டுகளாக இஸ்லாமியர்கள் இலங்கையின் வடபகுதியிலும் தென்பகுதியிலும் வாழ்ந்துவந்தனர். போர்த் துக்கீச மன்னனின் கட்டளைப்படி அவர்கள் 1828-ம் ஆண் டில் போர்த்துக்கீசரின் கீழிருந்த இலங்கையின் கரையோரப் பகுதியினின்றும் வெளியேற்றப்பட்டனர். அவர்களில் 4,000 மக்கள் கண்டியரசனுன சேனரதன் என்பவனிடஞ் சென்ற னர். அவர்களை மட்டக்களப்பு மாவட்டத்திற் குடியேற்றினன். அவர்கள் அங்கிருந்து கீழ்மாகாணம் எங்கும் பரவினர்.
இங்கு குறிக்கப்பட்ட பெளத்தமதத்தினர் நிரந்தரமானவர்க ளல்ல. ஏனைய இடங்களிலிருந்து கடற்தொழிலுக்காக வந்த பொழுது கணக்கிடப்பட்டிருக்க வேண்டும். பல சமயங்களின் வளர்ச்சியையும் சற்று கோக்குவோம்.

Page 42
திருக்கோணேஸ்வரம்
68
叙78888996388 #8Zg#Lgz| - || 3gI'61|| q $$IIGIÐ %ggg |z9ęzg|%ỹq |g9ggil%gg |76391|%89 || 86171|%ỹl.«storil pogoso %9.91 || Z8071|%ɛ |788 |%8 1886 |%ỹ | 830I |%). I sogz | poļģĝisne) %0.gg 'zg167,9%ỹ8 | 98801|%38 | 1616 |%16 | 1901 |%11 |gyz's | ymgilosopg |-%! |ŽIŤ'I |ự gọgol soțo 00/ or ro1pg|IIsg) a
%6.6 | 9;zg || %6 | 8613 || %0.1 | 0163 ||%II |3.98%
· 点晚混战日 %8. || 19ĢquĢag-Tinh
8ዷ6III6I[06]I 681፻881

திருக்கோணேஸ்வரம் 69
பண்டைக் காலத்தில் நிலமானிய முறையே மக்கள் வாழ்க்கையின் அடிப்படையாக இருந்தது. அக்காலத்தில் பணப்புழக்கம் இருக்கவில்லை. பொதுவாகத் தமக்குத் தேவை யான பொருள்களைத் தத்தம் கிராமங்களிலேயே உற்பத்தி செய்தனர். தம்மிடம் மேலதிகமாக இருக்கும் பொருட்களைப் பிறருடைய பொருட்களுடன் பண்டமாற்றஞ் செய்து தமது பலவித தேவைகளைப் பூர்த்திசெய்தனர். அரசர், பிரதானி கள், தேவாலயங்கள் ஆகியவற்றுக்குச் சேவைசெய்பவர்க ளுக்கு கிலங்கள் கொடுக்கப்பட்டன. அவர்கள் மேற்குறிப் பிட்டவைக்குச் சேவைசெய்தல் வேண்டும். ஏனைய நாட்களிற் தமது வாரங்லத்திற் செய்கைசெய்து வாழ்ந்தனர். பண்ணையாட் கள் தமது கடமைகளினின்றுக் தவறின் அவர்கள் தமது நிலத் தைப் பறிகொடுப்பர். இம்முறையை இராசகாரிய சேவை முறை யென்றும் அழைப்பர். குளக்கோட்டன் கஜபாகு போன்றவர் களைப்பற்றிக் கூறப்பட்டிருக்குஞ் செய்தி இதற்குச் சான்று பகரும். கல்வெட்டென்னும் நூலிற் பின்வருமாறு கூறப்பட் டுள்ளது.
'இப்படியே செய்திடுவி ரிதுதவறி
லெளியவரை யிறைஞ்சி நிற்பீர்
மெய்ப்புடனிவ் வெல்லையுளோர் செய்தொழும்பு
தவறிலிடர் மூழ்கி வீழ்வார்”
பண்டைக் காலத்தில் திருக்கோணமலை ஒரு சிறந்த துறைமுகமாக இருந்தது. கி. மு. 5-ம் நூற்றண்டில் பாண்டு வசுதேவன் இத்துறைமுகத்தில் இறங்கியதாகக் கருத இட முண்டு. பி. ஜே. பெரேரா இக்கருத்தை எடுத்து விளம்பு கின்றர். திரியாயிலுள்ள வடமொழிக் கல்வெட்டின்படி அம் மலையிலுள்ள பெளத்த விகாரைகள், இரண்டு வணிகர் சங்கங் களினுல் அமைக்கப்பட்டன. 'திறபுசாகா", "வன்னிகா” என்ற இரு வணிக சங்கங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை வட இந்தியத் தொடர்புடையனவாக இருக்க வேண்

Page 43
70 திருக்கோணேஸ்வரம்
டும். "இக்கல்வெட்டு ஏழாம் நூற்றண்டிற்குரியது' என்பது டாக்டர் பரணவித்தானுவின் கருத்து.
திரியாய் திருக்கோணமலையிலிருந்து முப்பது மைல் தூரத்தில் உள்ளது. ஆகவே இப்பெரிய துறைமுகம் உப யோகிக்கப்பட்டிருக்க வேண்டும். கி. பி. ஏழாம் நூற்றண் டில் வர்ழ்ந்த திருஞானசம்பந்தரும் இதற்கு ஆதாரம் கல்கி யுள்ளார்.
*கரைகெழு சந்துக் காரகிற் பிளவும்
அளப்பரும் கனமணி வான்றிக் குரைகடல் ஒதம் நித்திலக் கொழிக்குக் கோணமா மலையமர்ந் தாரே"
சந்தனமும், அகிலும், இரத்தினங்களும், முத்து முத லான பொருட்களெல்லாம் இத்துறைமுகத்திற் பெற்றுக் கொள்ளலாம் என்பது வெளிப்படையாம்.
பிற்காலத்தில் வாழ்ந்த கண்டியரசர்கள் இத்துறைமுக மூலமாகவே வெளிநாட்டுத் தொடர்புகளை நிறுவினர். பல நூற்றண்டுகளுக்கு முன் வர்த்தகங் காரணமாக முக்கியத்து வம் பெற்றிருந்த இத்துறைமுகம் போர்த்துக்கீசர் வந்த நாட் தொடக்கம் ஒரு 'கடற்படைத் தளமாக’க் கருதப்பட்டது. இலங்கையை ஆங்கிலேயர் கைப்பற்ற விரும்பியமைக்கும் முக்கிய காரணம் இதுவேயாம். இந்தியாவைத் தம் வசத்தில் வைத்திருக்க விரும்பிய ஆங்கிலேயர் திருக்கோணமலையை யுங் கைப்பற்ற விரும்பினர். வங்காள விரிகுடாக் கடலில் இது கேந்திரமாக அமைந்தது. மேலும் ஆங்கிலேயரின் கடற் படைக்குப் பாதுகாப்பளிக்கக்கூடிய துறைமுகம் பம்பாய் தொடக்கம் வங்காளம் வரையில் இருக்கவிலலை. ஆகவே திருக்கோணமலைத் துறைமுகம் யுத்த கேந்திரமாகக் கருதப் பட்டதற்குப் போதிய காரணங்களிருந்தன.

திருக்கோணேஸ்வரம் 7.
1858-ம் ஆண்டிற் பிரசுரிக்கப்பட்ட 'இலங்கை" என் லும் நூலில் எமேசன் ரெனென்ற் என்பவர் இதன் முக்கி யத்துவத்தை விளக்கியுள்ளார்.
'On comparing this magnificent bay with the open and unsheltered roadstead of Colombo and the dangerous and incommodious harbour of Galle it excited an emotion of surprise and regret that any other than Trincomalee should have been selected as the seat of Government ahd the Commercial Capital of Ceylon. But the adoption of Colombo by the Portuquese and its retention by the Dutch were not matters of deliberation or choice'.
'இப்பெரிய துறையைப், பாதுகாப்பற்ற திறந்த வெளி யுடைய கொழும்புத் துறைமுகத்துடனும் வசதிகளற்ற, ஆபத் தான காலித் துறைமுகத்துடனும் ஒப்பு நோக்குமிடத்துத் திருக்கோணமலை அரசாங்கத்தின் இருப்பிடமாகவும் வர்த்தகத் துறைமுகமாகவும் தேர்ந்தெடுக்கப்படாதது வியப்பையுந் துன் பத்தையுமே உண்டுபண்ணுகின்றது. போர்த்துக்கீசரும், ஒல்லாந்தரும் கொழும்பை ஏற்றபொழுதிலும் அது அவர்களினல் தேர்ந்தெடுக்கப்படவில்லை".
கொழும்பு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஒரேயொரு கார ணந்தான் இருக்கமுடியும். கறுவா அதிகமாக விளைந்த பகுதி களான, கழுத்துறை, கொழும்பு, குருகாக்கல் பகுதிகள் அதன் அண்மையில் இருந்ததேயாம்.
திருக்கோணமலைத் துறைமுகத்துடன் தொடர்புடைய சில முக்கிய சம்பவங்கள் பின்வருமாறு:-
கி. பி. 1624 : போர்த்துக்கீசர் கோட்டையை நிறுவுதல்
கி. பி. 1639 : ஒல்லாந்தர் கோட்டையைக் கைப்பற்றல். அப் பொழுது கோட்டை மூன்று கொத்தளங்க ளாக அமைக்கப்பட்டிருந்தது.

Page 44
72
கி.
1640 :
1658:
... 1672 :
. 782 :
1782 :
1783:
1795 :
1800 :
1801:
திருக்கோணேஸ்வரம்
1. செயின்ற் ஜகோ (தற்பொழுது சீ பேக்}
- ஆறு பீரங்கிகளுடன்.
2. சென்ற் குறுசு / அம்ஸ்ரடாம்) - ஆறு
பீரங்கிகளுடன்.
3. இப்பொழுது "நிக்கொல்சன் லொட்ஜ்" இருக்குமிடம். ஒல்லாந்தர் கடற்படை வெஸ்ரவேல்டின் தலைமையிலிருந்தது.
கோட்டையிடிக்கப்பட்டது. ஒல்லாந்தர் கோட்டையை நிறுவி அதற்குப் 'பகோடா மலை" எனப் பெயரிட்டனர். பிரான்சுக்காரர்  ைக ப் பற்ற முயற்சித்துத் தோல்வி காணுதல். ஜனவரி மாதம் ஆங்கிலேயராற் கைப்பற் றப்படல். ஓகஸ்ற் மாதம் மீண்டும் பிரான்சுக்காரர் திருக்கோணமலையை ஆங்கிலேயரிட மிருந்து கைப்பற்றுதல். ஐரோப்பாவிற்செய்யப்பட்ட பாரிசு ஒப்பந்தத் தின்படி ஆங்கிலேயருக்குப் பிரான்சுக்காரர் திருக்கோணமலையைக் கொடுத்தனர். ஆங்கிலே
யர் அதை ஒல்லாந்தருக்குக் கொடுத்தனர்.
ஆங்கிலேயர் ஒல்லாந்தரிடமிருந்து கைப்பற்று தல்.
வெலிங்ரன் கோமகன் கோட்டையிற் தங்குதல்.
ஏமியன்ஸ் ஒப்பந்தத்தின்படி கோட்டை ஆங்கிலேயர் வசமாகியது.

திருக்கோணேஸ்வரம் 73
கி. பி. 1802 : கோட்டையிற் பெரியம்மை பரவியது.
கி. பி. 1803 : முதல் 1814 வரை யோக் கோமகனுன பிரடெரிக் இலங்கையின் தளபதியாகக் கடமையாற்றினர். இவர் திருக்கோணமலையைத் தனது முக்கிய தலைத்தளமாகக் கொண்டதனுல் கோட்டை அப் பெயரைப் பெற்றது.
கி. பி. 1815 : கேணல் பகெற் என்பவர் ஒரு சிறு கடற்.
படைத் தளத்தை (Dockyard) அமைத்தார்.
கி. பி 1905 : கடற்படைத் தளபதியான பிஷர் என்பவரின் ஆணைப்படி படையினர் திருக்கோணமலையை விட்டு நீங்கினர்.
கி. பி. 1923 : கடற்படைத் தளம் சீர்திருத்தியமைக்கப்படல். கி. பி. 1942 : ஜப்பானியரால் ஆகாயத் தாக்குதல் செய்யப்
]L60.
கி. பி. 1957 : இலங்கையரசாங்கம் தளத்தைப் பிரித்தானிய
ரிடமிருந்து எற்றல்.
இலங்கையில் இராக்கதர்களும் வாழ்ந்தன ரென்பதற்கு, இராமாயணஞ் சான்று பகரும். இராக்கதர்களென்று உட லமைப்பைக்கொண்டு பகுக்கப்பட்ட ஒரு சாதியினர் இருக்க வில்லை என்பது ஒரு சாராரின் கருத்து. அவர்களின் குண நலத்தை கோக்கியே இராக்கதரென அவர்களுக்கு நாமஞ், சூட்டியிருக்க வேண்டும். நாகரும் இயக்கரும் இலங்கையில் வாழ்ந்தனரென்பதற்கு முதலியார் இராசநாயகம் போதிய சான்றளித்துள்ளார். ஆயினும் அவர்கள் ஒரு சாதியினர் எனக் கூறமுடியாது. நாகர்கள் சிவலிங்கத்தையும், பாம்பை யும் வணங்கி வந்தமையால் அப்பெயரைப் பெற்றிருக்கலாம். இயக்கர் என்பவர்களை "பேய்க்கணங்கள்" என்று மகாவம்: சம் கருதுகின்றது. இவர்கள் அத்தகைய வழிபாட்டை உடைய) வர்களாக இருந்திருக்கலாம்.

Page 45
74 திருக்கோணேஸ்வரம்
இலங்கைத் துறைமுகத்தில் பாண்டுவசுதேவன் கி. மு. 5-ம் நூற்றண்டில் வந்து இறங்கியதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் மகாவலிகங்கையின் உண்மையான பெயர் "மகாவழி கங்கை" என அபிப்பிராயங் கொள்பவர்களும் உளர். இதன் பொருள் பெரிய வழி என்பதேயாம். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்தவர்கள் ஆற்றங்கரையோரமாகவே உள் காட்டிற்குச் சென்றிருக்க வேண்டும். இந்திய நாகரிகத்தின் அடிப்படையில் விவசாயமே இருந்தது. ஆகவே அங்கிருந்து இங்கு வந்தவர்களிற் பெரும்பாலானுேர் விவசாயிகளாகவே இருந்திருக்க வேண்டும். ஆகவே அவர்கள் மகாவலிகங்கைக் கரையோரங்களிற் குடியேறிப் பின்பு பரவியிருப்பார்கள் என் பது பெறப்படும். ஒரு நாட்டிற் குடியேறும்பொழுது பெருங் திரளான மக்கள் ஒன்றுசேர்ந்து வந்து ஒரேமுறையிற் குடி யேறியிருப்பார்களென்பது பொருத்தமாகத் தோன்றவில்லை. காலத்துக்குக் காலம் சிறிது சிறிதாகவே குடியேறி இருக்க வேண்டும்.
குளக்கோட்டன் காலத்தில் ஏற்பட்ட குடியேற்றமும் இவைகளுள் ஒன்றகவே இருந்திருக்க வேண்டும். இன்னு மொன்று கஜபாகு காலத்தில் ஏற்பட்டதென அறியக்கிடக் கின்றது. இச்செய்திகளை விபரமாகக் கோணேசர் கல்வெட் டிற் காணலாம்.
திருக்கோணமலை நகரிலிருந்து ஆறுமைல் தொலைவில் செம்பியனுறு என்னும் பெயருடைய கிராமம் உண்டு. செம் பியன் என்பது சோழரைக் குறிக்கின்றது. மணிமேகலையில்
"தூங்கெயிலெறிந்த தொடித் தோட் செம்பியன்'
(விழாவறை காதை -4-ம் வரி
எனச் சோழமன்னன் சிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது. பத்தாம், பதினேராம் நூற்றண்டுகளில் இலங்கை

திருக்கோணேஸ்வரம் 75
யில் சோழராட்சி நிலவியது. ஆகவே சோழ மன்னர்கள் திருக்கோணமலையில் குடிகளைக் குடியேற்றியிருக்கலாம்.
தென்னமரவடி என்னுங் கிராமமொன்று திருக்கோண மலை ககரிலிருந்து சுமார் இருபத்தைந்து மைல் தொலைவில் இருக்கின்றது. இதன் ஆதிப்பெயர் "தென்னவன் மரபு அடி' என்றும் இதன் திரிபே 'தென்னமரவடி' என்றும் சிலர் கருதுகின்றனர். "தென்னவன்' என்பது பாண்டிய னைச் சுட்டும் ஒரு சிறப்புப் பெயர். சிலப்பதிகாரத்தில்,
"தென்னம் பொருப்பின் தலைவ வாழி
செழிய வாழி தென்னவ வாழி'
(வழக்குரை காதை-அடி 31-33)
*தென்னவன்” என்னுஞ் சொல் பாண்டியனைக் குறிக்கின் றது. இன்னும் வேறுபல சான்றுகளும் உண்டு. ஆகவே மேற்குறிப்பிட்ட கிராமத்தில் பாண்டி காட்டவர்கள் குடியேறி யிருக்கலாம். இலங்கையிற் பல பாண்டிய மன்னர்கள் அரசு செலுத்தியுள்ளனர். ஆகவே இவ்வபிப்பிராயம் ஏற்கத்தக்கது.
இக் குடியேற்றங்களையும் பண்டைக்கால காகரிகத்தை யும் விளக்குமுகமாக, இன்றும் அழிந்த நிலையிற் தோன்றும் விசாலமான குளங்களும், கழனிகளும் இருக்கின்றன. பதி னேழாம் நூற்றண்டுக்கு முன் இஸ்லாமியர்கள் இம்மாவட் டத்திற் குடியேறியதாகத் தோன்றவில்லை. பறங்கியர்கள் ஆங் கிலேயர் காலத்திலேயே குடியேறியிருக்க வேண்டும். போர்த் துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், இவர்களின் வருகையின் பின்னரே இப்புது இனம் தோன்றியது.
முதன் முதலாகக் குடிசன மதிப்பு 1834-ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியில் எடுக்கப்பட்டது. திருக்கோணமலை மாவட்டத்திற்குரிய தொகைப் பட்டியல் 1834-ம் ஆண்டி லிருந்து 1931-ம் ஆண்டுவரை எட்டுத்தடவை எடுக்கப்பட்ட விபரம் பின்வருமாறு:-

Page 46
76 திருக்கோணேஸ்வரம்
அதிகரிப்புத் அதிகரிப்பின் தொகை தொகை வீதம்
d. L. 1834 | 19 , 182
,, 1871 19, 449 267 - 1.4% ,, 1881 22, 197 2748 14 1% ,, 1891 25, 745 3548 16 : 0% , 1901 28, 44. . . 2696 10 5% , 1911 29, 755 1314 4 6%, ,, 192 34 , 112 4357 14 6%
,, 1931 37, 492 3380 9 6% ,, 1953 83, 917 46425 | 129 0%
திருக்கோணமலையின் சமூக முன்னேற்றத்தை காம் கண் டுள்ளோம். இலங்கையின் எனைய பகுதிகளுடன் ஒப்பு நோக்கு மிடத்து சமூக பொருளாதாரத் துறையிற் பின்தங்கி கின்ற தென்பதை விளம்பத் தேவ்ையில்லை. உலகின் மூன்றவது பெரிய இயற்கைத் துறைமுகமாக இருந்தும் இங்ககர் மங்கிக் கிடந்தது வியப்புக்குரியதே. இருபதாம் நூற்றண்டில் இதன் கேந்திரத் தன்மையையுணர்ந்த ஆங்கிலேயரும் இதனை வர்த் தகத் துறைமுகமாக உபயோகிக்கவில்லை. ஆதியில் வர்த்தகத் துறைமுகமாக இருந்து, பின்பு கடற்தளமாக விளங்கி, இன்று

திருக்கோணேஸ்வரம் 77
மீண்டும் வர்த்தகத் துறைமுகமாக முக்கியத்துவம் பெறுகின் றது. ஆகவே இத்துறைமுகம் தன் சரித்திரத்தில் மூன்ருவது கட்டத்தில் நிற்கின்றது. இக்காலத்தில் கடற்படையின் முக் கியத்துவம் குறைகின்றது. எனவே வர்த்தகத் துறையிலேயே இதன் எதிர்காலம் இருக்கின்றது.

Page 47
78 திருக்கோணேஸ்வரம்
திருக்கோணமலைத் தமிழ்ப் புலவர்கள்
ஈழத்துப் பூதங்தேவனுர் காலம் முதற்கொண்டு இன்று வரை செந்தமிழ்மொழி வாழ ஈழநாடு அயராது பணியாற்றி வந்திருக்கின்றது. ஈழம் ஆற்றிய அருந்தமிழ்ப் பணியிலே திருக்கோணமலைப் புலவர்கள் பலரும் என்றும் போற்றுதற். குரிய இடத்தைப் பெற்றுள்ளார்கள். இராமாயணம் முதலிய இதிகாசநூல்கள் கூறுகின்ற கருத்துக்கள் முழுவதும் ஏற்க. முடியாதாயினும், அவை ஈழநாடு பற்றிய செய்திகளை அறி வதற்குப் பெரிதும் உதவுகின்றன. வடமொழி இலக்கியத்துட் சிறந்து விளங்கும் வான்மீகி செய்த இராமாயணம், ஸ்காந்த புராணம் போன்ற பேரேடுகளிலும், திருமந்திரம், சிறுபாணுற். றுப்படை, பட்டினப்பாலை, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலாய தமிழ்க் கருவூலங்களிலும் ஈழநாட்டின் செய்திகள் கூறப்பட்டுள்ளன. ஈழநாடும் தமிழகமும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஒத்த பண்பாட்டிலும், கலைத்துறையிலும் நெருங்கிய தொடர்பு பூண்டுள்ளன.
வீனைக் கொடியோனுன இராவணன் தமிழ்மகன் என்ப தற்குப் போதிய சான்றுகள் இல்லையாயினும், அம்மன்னன் சிவகெறி போற்றிய பெருமகன் என்பதற்குப் போதியசான்று கள் உள்ளன. தமிழ் அகத்திய முனியை இசைப்போட்டியில் வீணைக்கொடியோன் வெற்றிபெற்றன். இச்செய்தி இராவணன் தமிழனுகவே இருக்கவேண்டும் என்ற எண்ணத்தினைத் தூண் டுகின்றது. இயக்கர் ,நாகர் என்போர் ஈழத்தில் பழங்குடி மக்களே. ஈழநாட்டிற்கு விசயன் வருவதற்கு முன்னர் இங். நாட்டில் நாகரிகமுற்று வாழ்ந்த நாகர் மரபில் வந்த தமிழ்ப் பெரும் புலவர் முரஞ்சியூர் முடி நாகராயர் என்பார் கம் காட்டுப் புலவரொருவரோ என்ற ஐயம் ஏற்படுகின்றது. "முத் தூர் அகத்தியன்? என்ற புலவர் பற்றிச் சங்கச் செய்திகள் பலவுள. சில கல்தொலைவில் உள்ள“மூதூர்' என்னும் பெய ருள்ள கிராமம் இன்றும் முத்தூர் என்று சிங்கள மொழியில்

திருக்கோணேஸ்வரம் 79
அழைக்கப்படுவதும், அங்கு காலத்தால் முற்பட்ட "அகத்தியர் ஸ்தாபனம்,” என்றிருப்பதும் சிந்தனையைத் தூண்டும் செய்தி யாகும்.
நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு ஆகிய பழந்தமிழ் நூல்களில் பல பாடல்கள் பாடிய ஈழத்துப் பூதந்தேவனுர் நம் காட்டவர் என்பது பெருமைதரும் செய்தியாகும். இவர் காலம் கடைச்சங்க காலமாகிய கி. மு. 180 ஆகுமென்று ஆராய்ச்சி வல்லுனர்கள் ஆய்ந்துரைத்துள்ளார்கள், ஒழுங்கு பட்டபழைய வரலாற்று நூல்கள் நம்மிடத்தில் இல்லாதபோ தும் வரலாற்றினைத் தெளிவு படுத்தக் கூடிய செய்திகள் பலவற்றை நம புலவர்களது நூல்கள் ஒரளவேனும் தருகின் றவென்பதில் ஐயப்பாடில்லை.
திருக்கோணமலை பற்றிய செய்திகளை நாம் பெறவேண் டுமானுல் திருக்கோணமலையில் வாழ்ந்த புலவர்கள் இயற்றிய நூல்களை நாம் படிக்கவேண்டும். அத்தகைய நூல்களை நாம் பெறவேண்டுமானுல் போர்ச்சுக்கல் சென்று லிஸ்பன் நகரி லிருக்கும் அஜுடா போன்ற நூல்நிலையங்களில் ஆராய்ச்சி நிகழ்த்த வேண்டும்.
இன்று நமக்குக் கிடைத்துள்ள சான்றுபகரும் நூல்க்ள் காலத்தால் பிந்தியவை. 17-ம் நூற்றண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவை. அவை இன்று எமக்குக் கிடைத்திருப்பமைபற். றிப் பெருமைப்படவேண்டும். தெக்கணகைலாச புராணமுங் கோணுசல புராணமுங், கோணேசர் கல்வெட்டு முதலியனவும் எமக்குக் கிடைத்துள்ளன.
திருக்கோணமலையிலே பல புலவர்கள் தோன்றித் தமி ழைப் பேணிவளர்த்து வந்திருக்கின்றர்கள். வித்துவான் சு தம்பையாபிள்ளை, சட்டம்பி தம்பையர், சரவணமுத்துக்குருக் கள். கதிரித்தம்பிப்புலவர் முதலானேர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் சென்ற நூற்றண்டில் வாழ்ந்த சிறந்த புலவர்க

Page 48
80 திருக்கோணேஸ்வரம்
ளாவார்கள். பெயர் புகழ் விரும்பாத பெருந்தகைகள் இவர் கள். அதன் காரணமாக இப்புலவர்களது பெயரும் பணி யும் வெளியுலகுக்குத் தெரியாமற் போயிற்று. சட்டம்பி தம் பையர் என்பார் “குமாராநாயகர் அலங்காரம்" என்னும் காவி யத்தினை இயற்றி உள்ளார். இப்பெருமகனுரது கவிநயம்,புலமை அனைத்தையும் குமாரநாயகர் அலங்காரத்திற் காணலாம். இப் புலவரது மானுக்கனுகிய கதிரித்தம்பிப் புலவரை யாழ்ப்பா ாைத்து நல்லறிவாளர்கள் நன்கு மதித்துள்ளார்கள். யாழ்ப் பாணத்துப் பேரறிவாளர் இவரைப்புலவரெனப் போற்றிய ழைத்தார்களென்றல், இவரது ஆசிரியராகிய சட்டம்பி தம் பையரது புலமைதான் என்னே!
"திருக்கோணமலை வழிநடைச்சிந்து" என்ற ஒரு நூல் காணப்படுகின்றது. இந் நூல் யாரால் எக்காலத்து எழுதப்பட் டதென்ற செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை.
திருக்கோணமலை தமிழ்மொழிக்காற்றிய தொண்டினை நாம் எண்ணும்போது திருக்கோணமலைக் கனகசுந்தரம் பிள்:ளயை மறக்க இயலாது. இச்சான்றேரின் தந்தையார் பெயர் தம்பி முத்துப்பிள்ளை என்பதாகும். பிளளையவர்கள் 1863 ம் ஆண்டு ஆவணித்திங்கள் 24-ம் நாள் திருகோணமலையிற் பிறந்தார். வாழும் பிள்ளையை விளையாட்டிலே தெரியும் என்னும் முது மொழிக்கமைய இவர் சிறு பிராயத்திலேயே கல்வியில் ஊக் கமுடையவராய் விளங்கினர். பிற்காலத்திலே இவர் பெயரோ 9ம் புகழோடும் விளங்குவாரென இவரது ஆசிரியர்கள் எண் ணினர். இவரது கல்வி வளர்ச்சி பதினேழு வயதுவரை திருக் கோணமலையிலே நடைபெற்றது. பிள்ளை அவர்களுக்கு தமிழ் இலக்கண இலக்கியங்களையும், ஆங்கிலத்தினையும் ஊட்டி கன் மகனுய் ஆக்கிய ஆசிரியர் பெருமக்கள் கதிரவேற்பிள்ளையும் கணேசபண்டிதருமாவார்கள். இவ்வாசிரியர்கள் இருவருமே கனகசுந்தரம் பிள்ளையவர்களின் அறிவுச் சுடரினைத் தூண்டி

திருக்கோணேஸ்வரம் 8.
விடுவதற்குப் பெருங்காரணர்களாக இருந்தார்கள். பண்பால் உயர்ந்து கற்று வல்லசான்றேராகிய தமிழகத்து நல்லறிவா ளர்கள் இத்தகைய பண்பாளரை, சான்றேரை மகனுகப்பெற்ற இவர் தந்தை எக்கோற்றரோ என எண்ணும் வகையில் இவ ரது வாழ்க்கை சிறப்பாகத் திகழ்ந்தது.
கம் மதிப்பிற்குரிய திருக்கோணமலைப் பிள்ளையவர்கள் பதினேழாவது வயதில் கல்வியில் உயர்வு பெறுவதற்காக சென்மைாநகரை அடைந்தார். சென்னை மாநகரில் செல்வாா யகர் மத்திய பாடசாலையில் கல்வி பயின்று தேறினுர். அதன் பின்னர் பல சான்றேர்களை எல்லாம் தமிழுலகுக்களித்த பச் சையப்பன் கல்லூரியில்சேர்ந்து எப். ஏ. வகுப்பில் படித்துத் தேறினர். பின்னர் பிரசிடன்சிக் கல்லூரியில் சேர்ந்து தத்து வம் தமிழ் முதலிய பாடங்களைப் பயின்று சிறப்பாக பி. ஏ. பட்டம் பெற்றுப் பரிசுகளும் பெற்றர்.
தமிழ் நாட்டிலேயே அரசாங்க ஊழியராகப் பல ஆண்டு கள் கடமையாற்றினுர். அதன்பின்னர் பச்சையப்பன் கல்லூ ரியிலேயே தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினுர், நான் காண்டுகள் சென்னைப்பல்கலைக் கழகத்துத் தலைவராகவும் பணிபுரிந்தார். மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வாளர்களுள் ஒ வராகவும் கிறிஸ்தவக் கல்லூரியினதும் பச்சையப்பன் கல்லூர் ரியினதும் தலைமைப் புலவராகவும் விளங்கினர். அரசியலர் ரால் ஆக்கப்பட்ட மிகப் பெரிய தமிழ் அகராதிக்கும் உத விப் பதிப்பாசிரியராகக் கடமையாற்றினர்.
தெல்லிப்பளையில் கிராமக்கோட்டு நீதிபதியாக விளங்கிய சிதம்பர்நாதமுதலியாரது செல்வ மகளைத் தன்வாழ்க்கைத்துணிை வியாகப் பெற்றர். இவருக்கு இராசராசன், இராசசேகரன் இராசேசுவரன், இராசமார்த்தாண்டன் என கான்கு ஆண் மக்கள் உள்ளார்கள். இளமைக்காலத்திலேயே தம் துணைவி பாரை இழந்தார். தம் மக்களைக் கண்ணின் மணிகளெனழ் போற்றி கல்லோராக்கினர்.
பிள்?ளயவர்களது இளையவர் சரவணமுத்துப்பிள்ளை என் பவர் தமிழ்மொழியிலே நாவல் எழுதிய ஆரம்ப ஆசிரியர்களுள்

Page 49
82 திருக்கோணேஸ்வரம்
ஒருவராவர். "மோகனுங்கி", என்பதே அவரெழுதிய நாவலா கும். கனகசுந்தரம்பிள்ளையவர்கள் கம்பராமாயணத்தில் ஒரு பகுதியாகிய பாலகாண்டத்துக்கு அரும்பதவுரை ஒன்று எழு தியுள்ளார். குமாரசாமிப் புலவரோடு சேர்ந்து நம்பியகப் பொரு ளுக்கு ஓர் அரிய உரைஎழுதி வெளியிட்டுள்ளார். 1922ம் ஆண்டு ஆணித்திங்களிலே இயற்கையெய்தினர். இவரது மறைவு தமிழ் உலகுக்குப் பேரிழப்பாகும். தமிழகத்துச் சான்றேர்களும் ஈழநாட்டுப் பெருமக்களும் இவரது மறைவு குறித்துப் பெரி தும் வருந்தினர்.
அகிலேசபிள்ளை. வே
அகிலேசபிளை அவர்கள் சிறந்த மூதறிவாளர். அவர் இருபத்தியொருநூல்கள் எழுதித் தமிழ்த்தாயின் திருவடியைச் சிறப்பித்துள்ளார். அகிலேசபிள்ளை அவர்கள் 1853ம் ஆண்டு மாசித்திங்களில் பிறந்தார். அவரது தந்தையார் பெயர் வேலுப் பிள்ளை என்பதாகும். பிள்ளையவர்கள் கற்றறிந்து உயர்ந்த சான்றேராகித் திருக்கோணமலைக்குப் பெரும் புகழைத் தேடித். தந்துள்ளார்.
குமாரவேலுப்பிள்ளை என்னும் கல்லாசிரியரிடம் முறை யாகப் பழந்தமிழ் நூல்களையெல்லாம் கற்றுத் தேறினுர், கல் வியில் கொண்டுள்ள பேருக்கத்தைக் கண்ட இவரது சிறிய தந்தையார் தையல்பாகம்பிள்ளை அவர்கள் பிள்ளையவர்களுக்கு இலக்கிய இலக்கணங்களையும் காலக்கணிதநூல்களையும் ஆங் கிலத்தையும் கற்பித்தார். அதனுல் பிள்ளையவர்கட்குச் சிறந்த புலமை உண்டாயிற்று. அதன் பின்னர் ஆசிரியப்பயிற்சியில் கற்றுத்தேறிப் பதினுெரு ஆண்டுகள் அரசினர் கல்லூரியில் முதல்வராகக் கடமையாற்றினர். ஆசிரியப்பணியை விட்டு. நீங்கியபின்னர் சைவமும், தமிழும் தழைத்தினிதோங்கப் பணி புரிந்தார்.
தமிழ் நூல்களை ஆராய்ந்து இயற்றி வெளியிடுகின்ற கற். பணியும் செய்திருக்கின்றர்கள். திருக்கரைசைப்புராணம், கண் டியிலிருந்து அரசாண்ட நரேந்திரசிங்கராசன் வசந்தன்சிக் து

திருக்கோணேஸ்வரம் 83
வெருகலம்பதி சித்திரவேலாயுதசாமி காதல் முதலிய நூல்களை இவர் அச்சிட்டுவெளியிட்டிருக்கின்றர். பிள்ளையவர்கள் எழுதி வெளியிட்ட நூல்களின் பெயர்களிலிருந்து அவரது சமயப் பற் றுப் புலனுகிறது. இப்பெருந்தகையாரது புலமைக்கு எடுத்துக் காட்டாக இரு பாடல்களைத் தருகின்றேம்.
"பாசியை ஒத்த குழலார் முகத்திற் பளபளக்கும்
நாசியைப் பார்த்துக் களிப்படைந்தாயந்த நாட்டம்விட்டு வாசியை ஏற்றி கன்னசியைப் பார்த்து மகிழ்ந்திருந்தால் தேசிகன் வந்தருள் செய்வா னிது கிண்ணந்தேர் நெஞ்சமே
-நெஞ்சறிமாலை "திருவார் கரிய குழலழகுக் தேங்குங் கருணைவிழியழகும்
செவ்வா யுறுபுன் சிரிப்பழகும் திகழும் கான்குபுயத்தழகும் மருவார் மலர்வெண் டாளமணி மாலையொளிருந் தனத்தழகும் வன்ன இடையிற் பட்டழகும் வயங்குங்கமலப் பதத்தழகும் இருமா கிலத்தில் அனுதினமென் இதயத்திருத்தித்துகிப்பதல்லால் இன்னும் உனைவிட்டொருதெய்வம் இருக்கும் எனயான்நினைத் தறியேன் அருமா மறைசொல் கோணமலை அதனில் விசுவநாகரிடத்
தமருங் குயிலே விசாலாட்சி அம்மேஎ8ண நீ ஆழ்வாயே"
-விசாலாட்சிவிருத்தம்
சைவத்தையும், தமிழையும் தமது வாழ்வுக்காலத்தில் போற்றிய சான்றேர் வே. அகிலேசபிள்ளையவர்கள் தமது ஐம்பத்தியே ழாவது வயதில் இவ்வுலக வாழ்வைநீத்தார். வாழ்க அன்ன ரது தமிழ்த்தொண்டு. v பண்டிதராசர்
பண்டிதராசர் வடமொழியும், தென்மொழியும் கைதேர்ந்த வித்தகர். கவிபாடுவதில் வல்லவர். தக்கிண கைலாசபுராணம் (செய்யுள் நூல்) இவர் இயற்றியதாகும். சிறப்புப் பாயிரப் பாடலினுல் இவர் செகராசசேகரன் என்னும் மன்னன் காலத் தில் வாழ்ந்தவரென்பது தெரிகின்றது.

Page 50
84 திருக்கோணேஸ்வரம்
கவிராசர்:
இவர் திருக்கோணேசர் ஆலயம் பற்றிய செய்திகளைக் கூறும் கோணேசர் கல்வெட்டென வழங்கும் கோணேசர் சாசனத்தைப் பாட்டாலும் உரையாலும் இயற்றியுள்ளார். பண்டிதராசரும் இவரும் ஒரே காலத்தவர்கள். இச்செய்தி சிறப்புப்பாயிரக் கவியினுல் அறியக்கிடக்கின்றது. இவர் இயற்றிய கோணேசர் கல்வெட்டிலிருந்து ஒரு செய்யுள் ஈண்டுக் காட்டுதும்.
"திருந்துகலி பிறந்தைஞ்னூற் ருெருபதுட
னிரண்டாண்டு சென்ற பின்னர்
புரிந்திடப் மாதமதி லீரைந்தாங்
தேதிதிக்கள் புணர்ந்த நாளிற்
றெரிந்தபுக ழாலயமாஞ் சினகாமுங்
கோபுரமும் தேரூர் வீதி
பரிந்து ரத்ன மணிமதிலும் பாவநா
சச்சு&னயும் பகுத்தான் மேலோன்".
ஆறுமுகம்
இவர் இற்றைக்கு 157 ஆண்டுகளுக்கு முன்னர் திருக் கோணமலையில் வாழ்ந்தவர். இவர் திருக்கோணமலை அந்தாதி என்னும் நூலை இயற்றியுள்ளார். இவரின் தந்தையார் பெயர் சுப்பிரமணியதாசன் என்பதை, விசாலாட்சியம்மன் கலிவெண் பாவால் அறியலாம். கலிவெண்பாவில் தன்னைத் 'துதிக்கும் தமிழ்க்கவிஞன் சுப்பிரமணியதாசன்” என்று குறிப்பிட்டுள் ளார். இவரின் வழிவந்தவர்கள் இன்றும் திருக்கோணமலை யில் வாழ்கின்றர்கள். இவரின் சிறந்த புலமையினையும், கவி பாடுவதிலுள்ள ஆற்றலையும் பின்வரும் திருக்கோணமலை அந்தாதிப் பாடலால் உணரலாம்.
"செய்யஜன மத்தமதி வேணிய8ன கிரிமழுமான் கையனை மத்தகம்காண் அம்பகனேக் கருதரிய மெய்யஜன மத்தமிலானே எவரும் விளம்பருவன் மையனை மத்தகயிலாயனே தொழும் வந்துவந்தே"

திருக்கோணேஸ்வரம் 35
சிவஞான சித்தியாருக்கு உரையொன்று எழுதியுள்ளார். அவ் வுரை ஏட்டுப்பிரதியாக அ. அளகைக்கோன் அவர்களிடம் உள்ளது. பூர்ணுனந்தேஸ்வரக் குருக்கள். இ. கு.
இவர் 1896ம் ஆண்டு மார்கழித் திங்கள் 24ம் நாள் பிறந்தார். தந்தையார் பெயர் இராமலிங்கக் குருக்கள். அன்னையார் பெயர் அன்னபூரணி அம்மா. யாழ்ப்பாணம் வண்ணுர்பண்ணை காவலர் வித்தியாசாலையில் பயின்று பண்டிதர் தேர்வில் சித்தியெய்தினர். சுன்னுகம், அ. குமார் சாமிப்புலவரிடமும், நீர்வேலி சங். சிவப்பிரகாசபண்டிதரிடமும் தமிழ் பயின்றர். வடலியடைப்பு அருணுசல சாஸ்திரிகளிடம் தமிழ் பயின்றர். பின்னர் தமிழகத்தில் திருச்செந்தூரில் வேத சாஸ்திர பாடசாலையிலும் பயின்றர். அகோரசிவாச்சாரியார் பத்ததியிலுள்ள அக்கினிகாரியத்தைத் தமிழில் மொழிபெயர்த்து அதற்கோர் சிறப்புரையும் எழுதியுள்ளார். அரனும் ஐந்தொழி லும் முதலான சிறந்த சமய சம்பந்தமான கட்டுரைகள் எழுதி யுள்ளனர். காரைக்குடிக்கு அண்மையிலுள்ள திருக்கோவலூரில் 1956ம் ஆண்டு நடைபெற்ற அர்ச்சகர் மாகாட்டுக்குத் தலைமை தாங்கினர். திருக்கோணமலையிலுள்ள வில்லூன்றிக் கந்தசாமி கோவிலில் அர்ச்சகராக உள்ளார். சொற்பொழிவு வாயிலர் கவும், கல்வி கற்பித்தல் வாயிலாகவும் சமயப்பணியாற்றி வருகின்றர். வாழ்க அன்ஞர் சமயப்பணி. மாசிலாமணி முத்துக்குமாருபிள்ளை.
இவர் இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்க் தவர். சிறந்த புலமையாளர். திருக்கோணுசல புராணம் இவர் இயற்றியதே யென்று அ. அளகைக்கோன் அவர்கள் கூறுகின்றர்.
திருக்கோணமலை தமிழுலகுக்குத் தந்த சான்றேர்களது வாழ்க்கையினையும், அவர்கள் இயற்றிய நூல்களையும் உணர்ந்து போற்றுவதே நாம் அவர்களது தமிழ்ப்பணியினை எண்ணிச் செய்யும் கைம்மாருகும்.

Page 51
86 திருக்கோணேஸ்வரம்
திருக்கோணமலை வரலாற்று மூலங்கள்
திருக்கோணமலைக்கு மிகப்பழமையான சரித்திரப் புக ழுண்டு. அவற்றினை இன்று நாம் வரலாற்று ஒழுங்கில் அறி வதற்குப் பெரிதும் வாய்ப்பில்லா திருக்கின்றது. புராணம், உபநிடதம், கல்வெட்டுகள், பழைய திருக்கோணேசர் ஆல யத்தின் சிதைந்த சின்னங்கள், இன்று எமக்குக்கிடைக்கும் வரலாற்று நூல்கள் முதலியவற்றில் செய்திகளை ஆங்காங்கே காணலாம். திருக்கோணமலை வரலாறு எழுதுவதற்கு அவை கள் மூலங்களாக அமைகின்றன. அவைகளைப்பற்றி ஆராய் வோம்.
மகாவம்சம்.
கி. பி. 6-ம் நூற்றண்டில் மகாநாம என்ற புத்ததுறவி யினுல் எழுதப்பட்ட இலக்கியப் படைப்புக்களில் ஒன்றன புராணங்களைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளது. மகாயன புத்த சமயப்பிரசாரத்தைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளதென்பது தெளிவு. சரித்திரம் அறியாத காலந்தொட்டு மகாசேனன் (கி. பி. 362) என்னும் , அரசனின் ஆட்சி முடியும் வரை உள்ளகாலத்தை அடக்கியுள்ளது. எழுத்திற் பொறிக்கப் படும்வரை கர்ணபரம்பரையாகவே இருந்தது. இதை ஒரு சரித்திர நூலாகக் கொள்ளமுடியாது. ஆயினும் சரித்திரத்தை அமைப்பதற்கு ஒரு சிறந்த கருவிநூல் என்பதை மறுக்க முடியாது. இலங்கை வரலாற்றுக் கருவிநூல்களுள் முதலிடம் பெறுவது இந்நூலே. திருஞானசம்பந்தர்.
திருஞானசம்பந்தர் கி. பி. 609-642 வரையுள்ள காலப் பகுதியில் 16 ஆண்டுகள் வாழ்ந்து சைவ சமயத்தை நிலை நாட்டுவதற்குப் பணியாற்றினர் என்பதாக சுப்பிரமணியம் பிள்ளை அவர்கள் தனது “இலக்கிய வரலாறு" என்னும் நூலிற் கூறியுள்ளார். ஈழநாட்டில் தெட்சணகைலாசம் என வழங்கப்படும் திருக்கோணமாமலையில் கோயில் கொண்டரு

திருக்கோணேஸ்வரம் 87
ளிய இறைவன்மேல் ஒரு பதிகம் பாடியுள்ளார். இவர் பாட லில் காணப்படும் செய்திகளால் திருக்கோணமலை செல்வங் கொழிக்கும் ஒரு வர்த்தகத் துறைமுகமாக இருந்ததெனவும், குடியினர் நெருக்கமாக வாழ்ந்தார்கள் என்பதும் அறியக்கிடக் கின்றது.
அருணகிரிநாதர்.
அருணகிரிகாதர் பதினைந்தாம் நூற்றண்டில் வாழ்ந்தவர். இவர் ஒரு முருக அடியாராக விளங்கிப் பதினுயிரம் திருப்புகழ் பாடியுள்ளார். அவர் பாடிய ஒரு திருப்புகழில் திருக்கோ ணேஸ்வரர் ஆலயத்தைப் பற்றிய செய்திகள் காணப்படு கின்றன. “நிலைக்கு நான்மறை தவத்தான பூசுரர் திருக் கோணுமலை தலத்தாறு கோபுரம் . " என்றும், குறிப் பிட்டிருக்கின்றர். ஆகவே அவர் காலத்தில் ஆறு கோபுரங் கள் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் இருந்ததாக எண்ண
is).
இலங்கையின் உலகாயுத ஆன்மீக ஆட்சி-வண. பிதா త్యా குவேருே. ‘இலங்கை வரலாறறின் கருவி நூல்களை திப் பி டி ன் மகாவம்சத்திற்கு இரண்டாவதாக இடம்பெறுவது இந் நூலேயாம்' என வண. பிதா, எஸ். ஜி. பெரேரா என்பவர் கூறியுள்ளார். 1635-ம் ஆண்டு, டிசெம் பர் மாதம் 8-ம் திகதி தனது 18-ம் வயதில் ஒரு மதகுரு வாக இலங்கையை அடைந்தார். போத்துக்கீசர் இலங்கைக்கு வந்தகாலம் தொடக்கம் அவர்களின வீழ்ச்சிவரையும் உள்ள வரலாற்றை விரிவாகவும் ஆய்வுடனும் இந்நூல் கூறு கின்றது. சுமார் 1200 பக்கங்களையுடைய இந்நூல் ஆறு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 1871-ம் ஆண்டில் குவெய்ருே இந்நூலை எழுதத்தொடங்கியிருக்கலாம் என்று வண. பிதா. பெரேரா கருதுகின்றர். பதினைந்து ஆண்டுக ளின் அயரா உழைப்பின் பின்பு 1686-ம் ஆணடில் தமது பணியை முடித்தார். இது போத்துக்கல் மொழியில் எழுதப் பட்டிருந்தது.இலங்கைச் சரித்திரத்தில் ஈடுபாடுடையவர்க ளின் வேண்டுகோளுக்கிணங்கி வண. பிதா, பேரேரா இந்நூலை 1926-ம் ஆண்டில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்

Page 52
88 திருக்கோணேஸ்வரம்
இலங்கையின் சோகக் கதை-கப்டின் ஜோ றிபேரு.
ஒரு சிறு தேசமாகிய போத்துக்கல் பிரமாண்டமான வொரு சாம்ராச்சியத்தை நிறுவ எத்தனித்தது. அம்முயற்சி யில் ஓரளவு வெற்றியும் கண்டது. தாய்காட்டைப் பாதுகாக் கவும், தனது கீழைத்தேய சாம்ராச்சியத்தைப் பாதுகாக்கவும் போதிய படைபலமும் மக்கட்தொகையும் அவர்களிடம் இருக், கவில்லை. ஆகவே சிறுவர்களைப் படையிற் சேர்த்து சாம்ராச் சிய சேவைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களுள் ஒருவரா கிய ஜோ என்னும் சிறுவன் 1640-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தனது 14-ம் வயதில் இலங்கையை அடைந்து, மறு ஆண்டில் நானூறு போர் வீரர்கள் உள்ள படையில் சேர்ந்தான். 1658-ம் ஆண்டில் இலங்கை ஒல்லாந்தராற் கைப் பற்றப்படும் வரையில் சேவைசெய்து பிற்காலத்தில் "காப்டின்' என்ற உயர்ந்த பதவியை வகித்தான். இலங்கையை இழந்த பின் இந்தியாவில் பத்தொன்பது வருடங்களாக சேவை' செய்தான். போத்துக்கல்லுக்குத் திரும்பியபின் 1685-ம் ஆண்டில் இந்நூலை எழுதி வெளியிட்டான். இது போத்துக் கல மொழியில் இருந்ததினுல் பலரும் கற்கமுடியாதிருந்தது. போல்பீரிஸ்துரை இதை ஆங்கில த தில் மொழிபெயர்த்து உதவியுள்ளார். 1640-ம் ஆண்டு தொடக்கம் 1685-ம் ஆண்டு வரை உள்ள காலத்தைப்பற்றிய சரித்திரத்தை சுமார் 276 பக்கங்களில் கூறுகின்றது. ஆங்காங்கே திருக்கோணமலை யைப்பற்றிய சம்பவங்களை எடுத்துரைக்கின்றது.
கோணேசர் கல்வெட்டு.
இது கவிராசரால் ஆக்கப்பட்டது. கோவிலின் சரித்தி ரத்தை உரைநடையிலும் கவிதையிலும் ஆக்கியுள்ளார். பு, பொ. வைத்தியலிங்க தேசிகரால் வெளியிடப்பட்ட பிரதியில் ஐம் பத்தெட்டுப் பாடல்கள் உள்ளன. திருக்கோணமலைத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவராக விளங்கிய அகிலேசபிள்ளையவர்கள் மகன் அ. அளகைக்கோன் பிரசுரித்த பிரதியில் அறுபது விருத் தங்கள் காணப்படுகின்றன. இதுபற்றிச் சரியான முடிவுகளைக் காண்பதற்கு பழைய ஏட்டுச் சுவடி யுள் ள வர் க ள் முன் வரவேண்டும்.

திருக்கோணேஸ்வரம 89.
தகூழினகைலாச புராணம்:
இந்நூல் பண்டிதராசரால் இயற்றப்பட்டது. இவர் பதினைந் தாம் நூற்றண்டில் வாழ்ந்தவர். இதன் முதனூல் வடமொழி மச்சேந்திர புராணமெனக் கருதப்படுகின்றது. கணேசையர் தமது "ஈழகாட்டுப் புலவர் சரித்திரம்' என்னும் நூலில் இவர் பதினேழாம் நூற்றண்டில் வாழ்ந்தவரெனக் கூறியுள் ளார். இது பொருத்தமாகத் தோன்றவில்லை,
யாழ்ப்பாண வைபவமாலை;
இந் நூலின் ஆசிரியர் மயில்வாகனப் புலவராவர். செவி வழிச் செய்தியாக வழங்கி வந்த வரலாற்றையும், கைலாய மாலை, வையாபாடல், பரராசசேகரனுலா, இராசமுறை என்ற நூல்களிற் கூறப்பட்ட செய்திகளையும் ஒன்று சேர்த்து இங் நூலை ஆக்கியுள்ளார். இவர் யாழ்ப்பாணத்தில் பிறந்து வாழ்ந் தவர். இந்நூலின் பல பிரதிகள் முன் வெளியிடப்பட்டுள்ளன. வி. வி. சதாசிவம்பிள்ளை, சி. பாலசுப்பிரமணியசர்மா, குல. சபாநாதன் ஆகியோர் வெளியிட்டுள்ளார்கள். இப்புலவரின் காலத்தைப்பற்றி அபிப்பிராய பேதமுண்டு. ஆயினும் இவர் 18-ம் நூற்ருண்டில் வாழ்ந்தவர் என்பதைப் பலர் ஏற்பது: குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணச் சரித்திரத்தில் ஈடுபாடுள்ள முத லியார் குல. சபாநாதன் பின்வருமாறு கூறியுள்ளனர். “மயில் வாகனப் புலவர்காலம் பதினெட்டாம் நூற்றண்டின் பிற். பகுதி எனக்கொள்வதே சாலப்பொருத்தமுடையது என்பது எமது கருத்து'. இந்நூலில் திருக்கோணமலை பற்றிய செய் தியையும் காணலாம்.
மச்சபுராணம்:
இது கோணேசர் கோவில் பற்றிய புராணக் கதையைக் கூறுகின்றது. இந்நூல் இயற்றப்பட்ட காலமும் ஆக்கியோன் பெயரும் அரங்கேற்றிய காலத்தில் பிறிதொரு புலவரால் பாடிய பாட்டொன்றில் கூறப்பட்டுள்ளது.

Page 53
190 திருக்கோணேஸ்வரம்
"மைப்புயல் வண்ணன் மச்சமா யுரைத்த
மச்சமாம் புராணத்தைத் தமிழா
லிப்புவிக் கெண்ணுரற் றெண்பத்தி ரண்டாண்
டிசைத்திடு மவ்விய வருடத்
தைப்பசி மதியி லொப்பிலாத் தினத்தி
லமுதெனக் கனியென வார்க்குஞ்
செப்பிய விரைசை வடமலே மகிபன்
செல்வமோ டினிதுவா ழியவே'
இங்கே குறிக்க்ப்பட்ட ஆண்டு கொல்லம் ஆண்டு 882. இது கலிசகாப்தம் 4807க்குச் சமமாகும். இது கிறிஸ்துவ சகாப்தம் 1706 க்குச் சமமாகும். ஆகவே 1706-ம் ஆண்டில் வடமலையப்பபிள்ளை என்பவரால் இயற்றப்பட்டுள்ளது. இவர் தென்னிந்தியாவில் ஒரு அரச பரம்பரையைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்டுள்ளது.
திருக்கோணுசலப் புராணம்:
திருக்கோணமலையைப் பற்றிய ஐதிகங்களையும் புராணக் கதைகளையுஞ் சேர்த்துத் தொகுத்துக் கூறுகின்றது. இந்நூலை 1909-ம் ஆண்டில் அச்சு வாகன மேற்றிய சண்முகரத்தின ஐயர் ஆக்கியோன் பெயரைத் தெரியவில்லையென்று குறிப் பிட்டுள்ளார். திருக்கோணமலை முத்துக்குமாரபிள்ளையினுல் எழுதப்பட்டதெனத் திருக்கோணமலை திரு அ. அளகைக் கோன் கூறியுள்ளார். முத்துக்குமாரபிள்ளையின் கையெழுத்து டைய ஓர் ஏட்டுப்பிரதி தம்மிடம் உள்ளதாக அன்னர் கூறியுள் ளார். அன்னுருடைய சான்றை நாம் ஏற்பின் இந்நூல் பத்தொன் பதாம் நூற்றண்டின் முற்பகுதியில் ஆக்கப்பட்டிருக்கவேண்டும். திருக்கரைசைப் புராணம்:
இந்நூலின் முகவுரையில் திரு. அகிலேசபிள்ளையவர்கள் பின்வருமாறுகுறிப்பிட்டுள்ளார். "இந்தப்புராணம், திருக்கோண மலைக்குச் சமீபமாயுள்ள மாவலிகங்கைக் கரையிலே ‘அகத்தி யத்தாபனம்' என்று வழங்கப்படுகின்ற கரைசையம்பதியில் எழுந்தருளியிருக்குஞ் சிவலிங்கப் பெருமானுடைய மகத்து வங்களை விரித்துக்கூறும்" . இப்புராணஞ் செய்தவர் யாவர் என்பது புலப்படவில்லை.

திருக்கோணேஸ்வரம் 9.
இது 170 விருத்தப் பாக்களால் அமைக்கப்பட்டுள்ளது. இந்நூல் சுன்னுகம் அ. குமாரசுவாமிப் புலவருடைய பொழிப் புரையுடன் திருக்கோணமலை அகிலேசபிள்ளையினுற் பரிசோ திக்கப்பட்டுக் கி.பி. 1890-ம் வருடத்திற் பிரசுரிக்கப்பட்டுள்ளது. திருக்கோணுசல வெண்பா:
இந்நூல் ஒரு காப்பும் நூறு பாட்டுக்களையும் கொண்டு வெண்பாவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நூலை ஆக்கியோன் திருக்கோணமலை சு. தம்பையாபிள்ளை யாவார். 1865-ம் ஆண்டில் பாடிமுடிக்கப்பட்டு, 1882-ம் ஆண்டில் பிரசுரிக்கப் பட்டுள்ளது. திருக்கோணமலையின் புராண வரலாற்றைச் சுருக்கமாகக் கூறுகின்றது. ஈழமண்டலச் சதகம்:
இந்நூல் ஈழமண்டலத்திலுள்ள திவ்விய தலங்களின் மகிமையை எடுத்தோதுகின்றது. பரத கண்டத்தைப் புண்ணிய பூமியெனப் பலர் கூறிப்போங்தனர். இத்தீவின் மகிமையைக் கல்வி கேள்விகளில் மேம்பட்ட சிலரே அறிந்துள்ளனர். மிகவும் பூழமைவாய்ந்த திருமந்திரம் எமது நாட்டைச் சிவ பூமியெனக் குறிப்பிட்டுள்ள தென்பதைப் பலர் அறிந்திலர். இக்குறையைத் தீர்க்கும் நூலாக இது அமைந்துள்ளது. இலக்கிய இலக்கண சைவசித்தாந்த சாத்திர சாகரமாக விளங் கிய யாழ்ப்பாணத்து மட்டு விலூர் ம. க. வேற்பிள்ளையே இதனை ஆக்கியுள்ளார். அன்னூரின் புதல்வரும் "இந்து சாதனம்" பத்திரிகையின் ஆசிரியருமாகிய பண்டிதர் திரு ஞானசம்பந்தப்பிள்ளையால் 1923-ம் ஆண்டிற் பிரசுரிக்கப் பட்டுள்ளது. இந்நூல் இருபதாம் நூற்றண்டின் தொடக்கத் தில் * ஆக்கப்பட்டுள்ளது. திருக்கோணமலையைப் பற்றிய கான்கு பாடல்கள் இந்நூலில் உள. V இலங்கை - எச் டபிள்யூ. கேவ்.
இந்நூல் இலங்கையில் இன்பச் செலவு செய்வோர்க் காக கி. பி. 1908-ம் ஆண்டு எழுதப்பட்டது. சுமார் 670 பக்

Page 54
92 திருக்கோணேஸ்வரம்
கங்களைக் கொண்ட இந்நூலில் அக்காலத்தில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்களும் உள. அக்காலத்தில் இலங்கை இருந்த நிலையை புகைப்படமூலமும் விரிவாகக் கூறப்பட்டுள்ள விபரங்கள் மூலமும் அறியலாம். திருக்கோணமலை மாவட்டத் தொடர்புடைய புகைப்படங்கள் பதின்மூன்றும் திருக்கோண மலைப் புவியியற் படம் ஒன்றும் உள்ளன. அந்நூலில் உள்ள 740-ம் இலக்கப் புகைப்படம் சுவாமிமலையையும் சைவமக்கள் மாலைநேரத்தில் வணக்கஞ் செய்வதையும் காட்டுகின்றது. அப்படத்திற்கு எதிர்ப்பக்கத்தில் வணக்கமுறையும் விளக்கப் பட்டுள்ளது. “இலங்கை” - தெனந்து:
இலங்கையில் 19-ம் நூற்றண்டில் உயர்ந்த பதவியில் இருந்த ஆங்கிலேயர்களில் ஒருவர் தெனந்து. இக்காலத்தில் அரசாங்க சேவையில் இருப்பவர்கள் கல்வி நூற் பயிற்சியை ஒரு பொழுது போக்கா ,வே கருதுகின்றனர். அக்காலத்தில் இலங்கையில் கடமைபுரிந்த சீவில் சேவை அதிகாரிகளுட் பலர் தமது ஒய்வு நேரத்தைப் புதிய அறிவை வளர்ப்பதிலும், ஆராய்ச்சிகளிலுமே கழித்தனர். இத்தகைய அறிஞர் வரிசை யில் தெனந்து ஒரு முக்கிய இடத்தைப் பெறுவார். இவரு டைய படைப்புகளில் இரண்டு முக்கியம் வாய்ந்த  ைவ. “இலங்கை' என்ற நூலை 1858-ம் ஆண்டில் பிரசுரித்தார். 19-ம் நூற்றண்டின் முற்பகுதியைப் பற்றிய செய்திகளை மிகவும் விரிவாக இந்நூல் கொடுக்கின்றது. பிறிதொரு நூலை யும் இவர் வெளியிட்டுள்ளார். 'இலங்கையில் கிறித்துவம்" என்ற நூலில் போத்துக்கீசர் காலந் தொடக்கம் இலங்கை யில் கிறித்துவத்தின் வளர்ச்சியை விரிவாக எடுத்துரைத் துள்ளார். தகூழினகைலாச புராணம்-தமிழாக்கம்: (வசனம்)
வடமொழி ஸ்காந்தபுராணத்தில் ஒரு பகுதி தகூழிணகை லாச மான்மியம் என்பது. தகூஜிண கைலாச மான்மியம் திருக்

திருக்கோணேஸ்வரம் 93
கோணமாமலையின் சிறப்பையும், கோணேசநாதரின் கிருபையை யும் எடுத்து விளம்புகின்றது. இது இயற்றப்பட்ட காலம் எதுவென்பது இலக்கிய வரலாற்றசிரியர்களாற் கூறமுடிய வில்லை. தகூழிண கைலாசமான்மியத்தில் உள்ள 2500 கிரந் தங்களும் இருபத்தேழு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள் ளது. வித்துவான் காகலிங்கம்பிள்ளை அவர்கள் இந்நூலை தமி ழில் மொழிபெயர்த்து 1928-ம் ஆண்டு வெளியிட்டுள்ளார். இதுவே தகூSண கைலாச புராணம் எனப்படும். பண்டைக்கால யாழ்ப்பாணம்-முதலியார்
இராசநாயகம்: "பண்டைக்கால யாழ்ப்பாணம்" என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்டிருப்பினும், இலங்கைவாழ் தமிழ் மக்களின் சரித் திரத்தை இந்நூலாசிரியர் ஆராய்ந்து அறிந்து எழுதமுற்பட்டுள் ளார். ஆங்கிலம், தமிழ், சரித்திரம் ஆகிய நூல்களில் நன்கு பயிற்சியுள்ளவர் என்பது அன்னூலைக் கற்றவர்க்கு நன்கு தெளிவாகும். சரித்திரத்துக்கு ஆதாரமாகத் தமிழ் இலக்கியத் தைக் கொள்ள எத்தனித்த அறிஞர்களின் எண்ணிக்கை மிகவும் சிறிது. அச்சிறிய வரிசையின் முன் நிற்பவர் முதலி யார் இராசாாயகம் என்பது மிகையாகாது. 1927-ம் ஆண் டில் பிரசுரிக்கப்பட்ட இந்நூலில் கோணங்ாயகர்கோவில் வர லாறு ஆங்காங்கே எடுத்துக் கூறப்பட்டுள்ளது. கொன்ஸ் தந்தையின் டீசா என்ற தளபதி கோணேசர் ஆலயங்கள் மூன்றையும் இடித்துத் தகர்க்குமுன் அவைகளின் படங்களை வரையும்படி பணித்திருந்தான். அப்படங்களில் ஒன்று போத்துக்கல்லில் உள்ள லிஸ்பன் நகரில் உலகப்பிரசித்தி பெற்ற 'அட்சுடா" வாசிகசாலையில் கண்டெடுக்கப்பட்டது. இது 1889-ம் ஆண்டில் இலங்கையில் பிரசுரிக்கப்பட்டது. இப்பட்டத்தை முதலியார் இராசநாயகம் தனது நூலில் 379-ம் பக்கத்தில் தந்துள்ளார். முதலியாரின் கருத்துக்களை ஏற்க மறுக்கும் இக்காலச் சரித்திராசிரியர்கள், முதன் முதலாகப் பிரசுரிக்கப்பட்ட, இலங்கைவாழ் தமிழ் மக்களின் ஆராய்ச்சி வரலாறு இதுவே என்பதை மறக்கக்கூடாது.

Page 55
9锡 திருக்கோணேஸ்வரம்
கதிரமலைப்பள்ளு;
பல ஏட்டுப்பிரதிகளைக் கொண்டு திரு. வ. குமாரசுவாமி பி. ஏ. அவர்களால் பரிசோ தி க் க ப் பட் டு 1935-ம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளுப்பாட்டு, விவ சாயஞ் செய்யும் கமக்காரர் உழவுத்தொழிலைச் செய்யும் முறையினையும், பள்ளணுக்கும் அவன் மனைவிகளாகிய மூத்த பள்ளிக்கும் இளைய பள்ளிக்கும் இடையிலுள்ள குடும்பச் சச்சரவுகளையும், கூறும் நூலாம். பள்ளர்கள் ஆதிகாலத்தில் வட நாட்டிலிருந்து வந்து தென்காட்டிற் குடியேறியவர்கள் என்பது சில ஆராய்ச்சியாளர் கருத்து. இவர்கள் குறுநில மன்னர்களாகவும், போர்வீரர்களாகவும், இருந்து ஆதிக்கஞ். செலுத்திவந்தனர் என்பது சிலர் கருத்து. பிற்காலத்தில் பண்ணையாட்களாக இருந்து விவசாயத்திற் சிறந்தவர்களாக விளங்கினர்கள். ஆகவே பள்ளுப் பிரபந்தங்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டன. "கதிரமலைப்பள்ளு" 96 பிரபங் தங்களில் ஒன்று.
கதிரமலைப் பள்ளு என்னும் ஆராய்ச்சியில் திருக்கோண மலைச் சரித்திர சம்பந்தமான சில ஆராய்ச்சிக்குறிப்புகள் காணப்படுகின்றன. இவருடைய ஆராய்ச்சி சில உண்மைகளை விளக்குவதுமன்றி சிந்தனையைக் கிளறுங் தன்மையுடையதாயு மிருக்கின்றது. புராணக் கதைகளின் சாரத்தையும் தற்கால வரலாற்றுச் சுருக்கத்தையும் உள்ளங்கை கெல்லிக்கனி' போற் தெள்ளிதாகத் திரு. குமாரசுவாமி அவர்கள் தங். துள்ளார். திருக்கோணமலைத் திருவுருவங்கள் - டாக்டர்
பாலேந்திரா 1950-ம் ஆண்டு ஜூலாய் மாதம் 27-ம் திகதி திருக், கோணமலையில் கோணநாதர் கோவில் கொண்டருளும் சுவாமி மலைக்கு அண்மையில் வடகரை வீதியில் கிணறு தோண்டும் கன்முயற்சியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் சில புதைபொருட்களைக் கண்டனர். முந்நூறு ஆண்டுகட்குப்பின்

திருக்கோணேஸ்வரம் 9.
தென்கைலாசநாதர் அடியவர்கள் வழிபட்டுய்யும் வண்ணம் தோன்றியருளினுர். அக்குழியில் இருந்த மூன்று விக்கிரகங்: களும் பிறிதோரிடத்தில் இரண்டு உருவங்களும் எடுக்கப்பட் டன. இவ்  ைவந்து விக்கிரகங்களின உருவச்சிலைகளையும் கோணேசர் கோவிலின் சுருக்க வரலாற்றையுங் கொண்டு. "திருக்கோணமலை விக்கிரகங்கள்" என்ற நூலை டாக்டர் பாலேந்திரா 1953-ம் ஆண்டில் வெளியிட்டுள்ளார். திருக், கோணேசர் ஆலயத்தின் வரலாற்றைத் தற்கால ஆராய்ச்சி முறையைப் பின்பற்றி எழுதிய முதல்நூல் இதுவேயாம். இத்துறையில் முன்னுேடியாக விளங்கும் பெருமை டாக்டர் பாலேந்திராவையே சாரும்.
இற்றைக்கு ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த முருகக் குருக்கள் கோணலிங்கர் பெயரில் பத்து உஞ்சல் பாட்டுக்கள் பாடியுள்ளார். இவர் தம்பலகாமம் கோணேசர் கோயில் அர்ச்சகரென்று அறியப்படுகின்றது. திரு இராசக்கோன் "வீரகத்திப்பிள்ளையார் ஊ ஞ் சல்” பாவொன்று பாடியுள்ளார். திரு. தி. த. கனகசுந்தரம்பிள்ளை திருக்கோணமலை முத்துக்குமாரசுவாமி வெண்பா பாடியுள்ளார். வில்லூன்றி கந்தசுவாமி பெயரில் கலிவெண்பா வொன்றும் பாடப்பட்டிருக்கிறது. பாடியவர் யாரென்பது தெரியவில்லை. திரு. மா. முத்துக்குமாரபிள்ளை முப்பது பாடல்கள் கொண்ட கோணங்ாயகர் மும்மணிமாலையொன்று பாடியுள்ளார். யாழ்ப் பாணம் ஜெகராசசேகர மன்னனின் சமஸ்தான வித்துவான் வையாபுரிஐயர் வையா பாடல் என்னும் பாடலைப் பாடியுள் ளார். திரு. வே. அகிலேசபிள்ளை வில்லூன்றிக் கந்தசுவாமியார் பெயரில் ஒரு பதிகம், சிவகாமியம்மன் கும்மி, வெருகல் சித்திர வேலாயுதசுவாமி தரிசனப்பத்து, திரிகோணமலைப் பத்திரகாளி ஊஞ்சல் முதலிய பாடல்களைப் பாடியுள்ளார். திரு. பொன்னுச் சாமி சீர்காளியம்மன் ஊஞ்சல் பாட்டுப் பாடியுள்ளார்.
குடுமியாமலேச்சாசனம்:
ヂ சடையவர்மின் வீரபாண்டியன் சிங்கள அரசனுன முத, லாம் புலுனேகுபாகுவை அடக்கித் திருக்கோணமலையில் தன் கயற்கொடியைப் பதின்மூன்றம் நூற்ருண்டிற் பொறித். தான் என்று தென்னிந்தியக் கோயிற் சாசனங்களிலொன் ருன குடுமியாமலைச் சாசனங் கூறுகின்றது. (ஏ. ஆர். இலக்.

Page 56
96 திருக்கோணேஸ்வரம்
356-1906) புவனேகபாகுவை வென்றதால் இவனைப் புவ னேகவீரபாண்டியன் என்றுங் கூறுவர்.
'காணுமன்னவர் கண்டு கண்டொடுங்க கோணுமலையி னுக் திரிகூட கிரியினும் உருகெழு கொடி மிசை இருகய லெழுதி" என்ற தொடர் நோக்கற்பாலது. இவ்வினைக் கயல் மீன்கள் கோட்டை வாயிலின் இருமருங்கிலும் இப்பொழுதும் காணப்படுகின்றன. கோட்டைக் கல்வெட்டு:
"ஆயிரங்கால் ஆலயம்" என்று அழைக்கப்பட்ட கோண காதர் கோவில் தூண் ஒன்றிற் பொறிக்கப்பட்ட கல்வெட் டின் சிறுபகுதியொன்றை "பிரடரிக்" கோட்டை வாயிலில் இன்றுங்காணலாம். சென்னையரசாங்கத்தின் கல்வெட்டு நிபுண ராகக் கடமையாற்றிய திரு. எச். கிருஷ்ணசாத்திரி அவர்கள் இக்கல்வெட்டு பதினரும் நூற்றண்டிற்குரியது எனக் கூறி யுள்ளார். கோயிலில் இருந்தகற்களைப் போத்துக்கீசர் தம்மால நிறுவப்பட்ட பல கட்டிடங்களுக்கு உபயோகித்துள்ளனர் இற்றைக்குச் சுமார் ஐம்பதாண்டுக்ளுக்குமுன் போத்துக்கீசர் கட்டிடங்களில் ஒன்றை ஏலத்தில் வேண்டியுடைத்த திரு. அ. அளகைக்கோன் பல கற்களிற் கல்வெட்டுக்களைக் கண்டதாகச் சான்று பகருகிறர். ஒரு கதவுத் துண்டு:
பிரடரிக் கோட்டையுள் ஒரு கதவுத்துண்டு கண்டுபிடிக்கப் *பட்டுள்ளது. அதில் மூன்றடி சமஸ்கிருத எழுத்துக்கள் உள்ளன. ஏனைய அடிகள் சிதைந்துபோயின. கோடகங்கன் என்ற நாமம் உள்ள ஒரரசன் கி. பி. 1223-ம் ஆண்டில் இலங்கைக்கு வந்ததாக இது கூறுகின்றது. ஏனைய பகுதி அழிந்துள்ளதால் வரலாற்றை அமைப்பதற்கு இது பயனளிப் பதாகத் தோற்றவில்லை. குச்சவெளிக் கல்வெட்டு:
திருக்கோணமலை நகரத்திற்கு வடக்கே 22 மைல் தொலை வில் குச்சவெளியென்ற கிராமம் உள்ளது. அங்குள்ள கற் பாறையொன்றில் 16 ஸ்தூபிகளும், சமஸ்கிருத எழுத்துக் களும் காணப்பட்டுள்ளன. இவை ஐந்தாம் நூற்றண்டிற்கும் ஒன்பதாம் நூற்றண்டிற்கும் உட்பட்ட காலத்திற்குரியன என டாக்டர் பரணவித்தான கூறுகின்றர்.

திருக்கோணேஸ்வரம் 97
வெருகற் கல்வெட்டு:
திருக்கோணமலை மாவட்டத்திலுள்ள வெருகலம்பதி ஆல யத்தை அமைத்த வரலாற்றைக கூறுகின்றது. இது எக்கா லத்துக் குரியதெனக் கூற முடியவில்லை. கங்குவேலிக் கல்வெட்டு:
திருக்கோணமலை மாவட்டத்தில் கொட்டியாரப் பற்றி லுள்ள கங்குவேலியென்னும் கிராமத்தில் தம்பிரானுர் கோண நாதன் கோவிலில் ஒரு கல்வெட்டு உண்டு. அக் கல்வெட் டில் ஒரு வைரவதுலமும் உண்டு. திரியாய்க் கல்வெட்டு:
திருக்கோணமலை நகரிலிருந்து சுமார் 28 மைல் வடக்கே திரியாய் என்ற கிராமம் உண்டு. கடல்மட்டத்திலிருந்து 210 அடி உயரமுள்ள கந்தசுவாமி மலையென அழைக்கப்படும் மலை யொன்றுண்டு. அதன் உச்சியிலும், சரிவிலும் சிதைந்த கட் டிடங்கள் காணப்படுகின்றன. அங்கு காணப்படும், "பிரமி' எழுத்துக்கள், கிறித்துவிற்கு முற்பட்டதென டாக்டர். பரண வித்தான கூறுகின்றர். கி. பி. 7-ம் நூற்றண்டிற்குரிய சமஸ் கிருத மொழியால் "கிரிகந்த சைத்திய' என்பதைப் பற்றிப் புகழ்ந்துரைக்கப்பட்டுள்ளது.
பெரியகுளக் கல்வெட்டு:
திருக்கோணமலை நகரிலிருந்து திரியாய் மார்க்கமாக வடக்கே செல்லும் பாத்ை ஒன்றுண்டு. ஏழாவது மைற் கட்டையிலிருந்து ஒரு கற்பாதை மேற்கு கோக்கிச் செல்கின றது. அக்குளத்திற் கருகாமையில் "நத்தானு' கோவிற்கல் வெட்டு என்றழைக்கப்படும் ஒரு கல்வெட்டு, புதைபொரு ளாராய்ச்சிப் பகுதி யின ரால், கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்விடத்தில் சிதைந்த கட்டிடங்கள் காணப்படுகின் றன. கஜபாகு மன்னன் காலத்தில் கோணேசர் கோவில் அருச்சகர்களுக்கும் இப்பகுதியிலிருந்த புத்த குருமார்களுக்குங் தகராறு இருந்ததாகப் புராணக் கதை கூறுகின்றது. கந்தளாய்க் கல்லாசனம்:
கி. பி 1187 தொடக்கம் 1196 வரை பொலநறுவையி லிருந்து அரசு செலுத்திய கீர்த்தி நிசங்கமல்லன் ஆணைப்

Page 57
98 திருக்கோணேஸ்வரம்
படி ஒருகல் ஆசனம் செதுக்கப்பட்டு அதன் மேற்புறத்தில சிங்கள எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன, இவ்வாசனம் 1921-ம் ஆண்டில் கந்தளாயில் எடுக்கப்பட்டுப் பின் அனு ராதபுரத்திலுள்ள புதைபொருட்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. ஆதிகாலத்திற் கந்தளாய் 'சதுர்வேதபிரமபுரம்' என அழைக் கப்பட்டதென இக்கல்லாசனத்திலிருந்து அறியக்கிடக்கின் றது. 'நான்கு வேதங்களையுங்கற்ற பிராமணர்களின் நகரம்" என்பதே இதன் கருத்தாம். பளமோட்டைக் கல்வெட்டு:
திருக்கோணமலை மாவட்டத்திற் கந்தளாய் என்ற பெய ருடைய ஒர் ஊருண்டு. இவ்வூரில் பளமோட்டை என்ற கிராமத்தில் 1933-ம் ஆண்டில் டாக்டர். பரணவித்தானுவி ல்ை ஓர் அழிந்த சிவாலயம் கண்டுபிடிக்கப்பட்டது. கட்டிட அமைப்பை உற்று கோக்கும் பொழுது அது 11-ம் நூற் றண்டிற்குரியதெனபது தெளிவு. இங்குள்ள கல்வெட்டு மூலம் இக்கோவிலின் பெயர் "விஜய இராசஈஸ்வரம்" எனவும், கந்தளாயின் பெயர்' 'விஜய இராச சதுர்வேத மங்கலம்" எனவும் அறியக்கிடக்கின்றது. கோட்டையிலுள்ள சிற்பச்சான்றுகள்: (அ) மூன்று தூண்கள் காணப்படுகின்றன. இவைகளுள் ஒன்று சுவாமி மலையிலும், மற் றையது கோட்டையி லுள்ள குகை வாசலிலும் உள்ளன. இவைகள் பல்ல வர் காலத்துச் சிற்பச் சிறப்புகள் பொருந்தியனவாகக் காணப்படுகின்றன. கி. பி. கான்காம் நூற் றண் டு தொடக்கம் 9-ம் நூற்றண்டுவரை பல்லவ வம்சத்து மனனர்கள் தென்னிக்தியாவில் ஒரு பரந்த அரசை நிறுவியிருந்தனர். (ஆ) பாவங்ாசக் கிணறு. இது கினருகக் கட்டப்பட்டிருப் பதை இன்று காண்கின்ருேம். கிணறுகள் அமைப்பது புராணகாலத் தமிழரின் மரபாகத் தோன்றவில்லை. ஆகவே புராணங்கள கூறும் 'பாவநாசத் தீர்த்தம்' பிற்காலத் திலேயே கிணருகக் கட்டப்பட்டிருக்கவேண்டும். (இ) கோட்டையின் அமைப்பே சரித்திரத்திற்குச் சான்றக இருக்கின்றது. சுற்றியிருக்கும் அரணும் அதனுள்ளி ருக்கும் குகையும் புதைபொருட் பகுதியினரால் ஆரா

திருக்கோணேஸ்வரம் 99
யப்படவில்லை. திருக்கோணமலையின் சரித்திரத்துக்கு இவ்வாராய்ச்சி இன்றியமையாதது என்பதை சைவப் பெரியோர்கள் உணரவேண்டும்.
ஏனைய சிற்பச்சான்றுகள்:
(அ) (ஆ) (@) (FF)
பிற 1.
2.
3. 4.
5.
6. 7.
அகத்தியர் ஸ்தாபனம் - கங்குவேலியிலுள்ளது. பறையனூரிற் காணப்பட்ட மகா காளியின் சொரூபம். கந்தளாயில் எடுக்கப்பட்ட விஷ்ணுவின் சொரூபம். திருக்கோணமலையில் எடுக்கப்பட்ட ஐந்து மூர்த்திகளின் சொரூபங்கள்.
தமிழ் மொழிமூலங்கள்: திருமூல நாயனுராலியற்றப்பட்ட "திருமந்திரம் சேக்கிழாராலியற்றப்பட்ட "பெரியபுராணம்'. கச்சியப்பசிவாச்சாரியாரால்இயற்றப்பட்ட கந்தப்புராணம். உமாபதி சிவாச்சாரியாரால் இயற்றப்பட்ட 'சிவநாமக் கலிவெண்பா'.
செவ்வந்திப் புராணம்.
வாயு புராணம். ー இலங்காதீபக தீபம். இது யாழ்ப்பாணத்து வ. சின்னத் தம்பிப் புலவரால் கி. பி. 1899-ம் ஆண்டில் தொகுக்கப்
g
.gol-ا۔الا , ' '
8.
திருக்கோணுசலப் பதிகம் - அகிலேசபிள்ளை.
அச்சில் இல்லாத மூலங்கள்:
பெரிய வளமைப் பத்ததி. கோணவரப் புராணம். குளக்கோட்டன் - கம்பசாத்திரம், யாழ்ப்பாணச் சரித்திர விசுவகர்மா காடகம் விசுவபுராணம்,
வடமொழி மூலங்கள்:
l. 2.
சாந்தோகிய உபநிடதம். ஸ்கந்த புராணம்.

Page 58
100 திருக்கோணேஸ்வரம்
ஆங்கில மூலங்கள்:
Codrington • • • • • . . . . A short History of Ceylon. Mendis ......... Early History of Ceylon Thomas . . . . . . . . . History of Trincomalee.
Days of Sambasiva ......... Isaac Thambiah. Memoirs of the Colombo Museum Annual report of Epigraphy, Madras 1912 Ceylon Historical Journal Vol: 1, No. 2 Journal of the Royal Asiatic Society: 1889, 1890 Bulletin of the Madras Government Museum...... F. A. Gravely & Ramachandran, 1932 10. Epigraphya Zeylanica Vol: II, IV 11. Indian Art ... . . . . . . Sir R. Winsted. 12. Times of Ceylon, Chistmas number, 1923. 13. Ceylon Antiquary and Literary Register. 14. Census reports of Ceylon 15. Archaelogical Survey of Ceylon - 1946 16. Memoirs of the Colombo Museum series
A No. 1. Bronzes of Ceylon by Ananda
Coomaraswamy. 17. D. C. 4207 of October 1952, Trinconnalee. 18. History of the Catholic church in Ceylon by
Gnanapragasam
(pg. 1 - 5o DJ :
திருகோணமலையைப் பற்றியும் திருக்கோணேசர் ஆல யத்தைப் பற்றியும், இம் மாவட்டத்திலுள்ள ஏனைய ஆலயங் களைப்பற்றியும் புராணங்கள் கூறும் செய்திகள் வரலாற் றுக்கு எந்த அளவு ஆதாரமாகவுள்ளது என்பது ஆராய்ச் சிக்குரியதாகும். இம்மாவட்டத்தில் இதுவரையில் குறிப்பிடத் தக்க அளவு ஆராய்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லையென் பது உண்மையாகும். பல ஏடுகள் இதுவரையில் அச்சேருது இருக்கின்றன. வருங்காலத்தில் அவைகளை அழியாது காக்க வேண்டுமெனில், அவைகளை அச்சியற்றவேண்டும். தமிழறிஞர் களும், செல்வர்களும் ஒன்றுபட்டு ஆக்கப்பணிபுரிய வேண்டும்.


Page 59


Page 60