கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உயிர்ப்பு (தமிழாலயம்) 2002.02

Page 1


Page 2
மறைகின்ற சூரியன் இரத்தம் சிந்துவதனால்த்தான் மறுநாளும்
எழுகின்றது.
"வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்"
 
 

மூச்சு 2
&ށ
பெப்ரவரி 2002
உள்ளே . (SP
9
9
9
கலை இலக்கிய சமூக அரசியல் இதழ்
தமிழ்வாதம் சில தவறுகள் சில
தவி(ர்)ப்புக்கள்
நவம்பர் 17அதிகாலை
பகிடிவதை பெண் என்று இன்று இனியொரு விதி இளைய விவாதிகளே
அர்த்தம் ஆத்ம அரு த்தி பூவுக்குள் ஓர் நெருடல் நினைவுக்குறிப்பு
" கலைஞானி "
செவ்விக்களம்
பூரீதஷந்தி நிரேகா
விதர்சினி
க.நிறஞ்சன்
சு.உமாசுதன்
சோ.சேயோன்
க.சயேந்திரன்
மீண்டுமொரு தடவை சமாதான ஒளிக்கீற்றுக் கள் இலங்கைத் தீவினை தீண்ட ஆரம்பித்திருக் கின்றன. கட்டடங்களை மட்டுமல்ல பெறுமதி மிக்க உயிர்களையும், பொருளாதாரத்தினையும் சிதைத்தெறிந்து இக்குட்டித்தீவினை கு.: *சுவ ராக்கிக் கொணர்டிருந்த கொடிய யுத்தம முை னைய அரசின் முடிவோடு தற்காலிகமாக முடி வுக்கு வந்திருக்கின்றது. ஆட்சி மாறிய கையோடு அரசியல் அரங்கில் காட்சிகளும் மாறத் தொடங்கி யிருக்கின்றன. மோதல் தவிர்ப்பு, யுத்த நிறுத்தம், பாதை திறப்பு, தடைநீக்கமென சமாதானத் திருவிழா கோலாகலமாக களைகட்டுகிறது. ஆட்சி மாற்றங்களின் போது நிகழும் வழமையான நிகழ்வுகள் இவை யெனினும் சகலருடைய மனங் களிலும் இம்முறை சற்றே அதிகமான நம்பிக்கை களையும் எதிர்பார்ப்பினையும் அரசின் ஆரம்ப கால நடவடிக்கைகள் ஏற்படுத்தியிருக்கின்றன என்பது மறுக்க முடியாதது.
இத்தனைக்கும் மத்தியில் இத் தீவினர் சாபக்கேடாய், இம்முறையும் சமாதான வெறுப் பார்வலர்கள் தத்தமது பரிவாரங்களோடு கள மிறங்கி தெருக்களில் தமது கடைகளை விரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
கண்கெட்ட பின்னர் கூட சூரிய நமஸ்காரம் செய்ய முன்னைய அரசு முன்வராததற்கு இக் கடைவிரிப்புக்களும் ஒரு காரணம். இந்நிலையில் புதிய பாராளுமன்றத்தை ஆக்கிரமித்துள்ள புதிய அரசு சமூகத்தின் எதிர்பார்ப்புக்களை செவ்வனே நிறைவேற்றுமா ? நிறைவேற்ற வேண்டுமென்பதே
சகலரதும் எதிர்பார்ப்பு 1 இன்னுமொரு காலாண்டின் பின்னர் மீண்டும் இணைந்து கொள்வோம் !
: . .. ه » . . بی ۔., ー ‘ب!;ہ 1 1 1 (مv : {نو L '!! ۔ ابو: , , , , XX //
y - سمع من འ.”༼༡/2 پاسخ حسسس حجحیح
مییاC .۹۹ نه به همه
*٣له ، ۷ ، برملنه نه

Page 3
தரணியெங்கும் தமிழ் முழக்கம் தலை நிமிர்ந்த போதும் தமிழர்களின் தலைகளுக்குள்
தலை தூக்கும் வாதம்
தலை நகரத் தமிழன் தீவின் தலை நகரத் தமிழன் மலை நாட்டுத் தமிழன் - ஒரு பிரதேசத்தமிழன் பிறதேசத் தமிழன்
என பட்டியல் நீளும்
தன் தாய் உதரத்தவர்களுடன் பாசம் கொள்வார் - தமிழ்த் தாய் உதிரத்தவருடன் துவேஷம் கொள்வார்
தன் தாய் வயிற்றில் பிறந்தால் சகோதரன் - தமிழ்த் தாய் வயிற்றில் பிறந்தவர் அந்நியரோ ?
நீர் கோர்க்கும் மேக நதி வேர் பார்த்துத்தான் பொழிகிறதோ ? பார் போற்றும் தமிழ்நதி வேர் தேடித்தான் நுழைகிறதோ ?
( כ שהוז, 6 --> ר
 
 
 

என் இதயவானில் ஒய்யாரமாக ஒரு பெண்ணிலவு கண்டபடி வந்து காலநிலை மாற்றம் தருகிறாள் என் எணர்ணப்பட்டங்கள் வானில் நிலவு தேடும் நெருங்கும் போதெல்லாம் காலக்காற்று வந்து கரை சேர்க்கும் வெண்முகில் கூட்டத்துள் வெணர்நிலா மறையும் வானம் கருமை சூழும் - இதயம் இலையுதிரும் காற்று வந்து முகில் கலைக்கும் கற்பனை முகில்கள் மழைதூவும் வானம் வசந்தகாலம் கொண்டாடும் ஒரே நாளில் வானில் பல பருவகால மாற்றங்கள் தட்டுத் தடுமாறும் என் இதயவானிலே காதல் கவியெடுத்து நிலவு தேடியபோது நிலவு தொடும் தூரத்தில் இல்லை பட்டம் பெறவும் தயாராகி விட்டேன்
எண்ணப்பட்டம் விடுவது மட்டும் தொடர்கிறது.
எழுதுங்கள் 4)
உங்கள் சமுதாய சிந்தனையின் வெளிப்பாடாக உயிர்ப்பு இதழ் உங்கள் அனைவரிடமும் இருந்து ஆக்கங்களை எதிர்பார்க்கிறது. ஆக்கங்கள் உலகளாவிய சமூக, இன விடுதலையின் தேவையினை உணர்த்துவதாய், சமுதாய மேம்பாட்டினை முன்
னெடுத்துச் செல்வதாய், இளைய சமுதாயத்தை வழிநடத்திச் செல்வதாய்
இருத்தல் வரவேற்கப்படுகிறது.

Page 4
శ్, utft
"ஆப்பிரிக்கத்துக்காப்பிரி நாட்டிலும் தென்முனையடுத்த தீவுகள் பலவினும் பூமிப்பந்தின் கீழ்ப்புறத்துள்ள பற்பல தீவினும் பரவி யிவ்வெளிய தமிழ்ச் சாதி, தடியுடையுண்டும் காலுடையுண்டும் கயிற்றடியுண்டும்" என,
இன்றைய தமிழனின் நிலைப்பாட்டினை, நடைமுறை நிதர் ச6% த்தை, சொந்த இனத்தின் சோகமிகு சிந்தனைகளை. தமிழர்தம் அவலநிலைகளின் சாயல்களை ஆச்சரியகரமாக அனாயாசமாகத் தீர்க்க தரிசனம் கொண்டு சித்தரிக்கின்றான் பாரதி. தீர்க்கதரிசனத்தின் சில
இடங்களில் மெய்சிலிர்க்கின்றது! கண்கள் சடுதியாகக் கலங்குகின்றன!
இவ்வாறு பாரதியினை ஒரு தீர்க்கதரிசியாக, சிறுமை கண்டு சீறிய பாவலனாக மிதிக்கப்படும் மனித நேயங்களை அஞ்சாது கடிந்தவனாக போற்றுகின்ற நோக்குகின்ற நாம் பாரதி பாடல்களில் மறைந்துள்ள, இழைந்துள்ள முரண்பாடுகளையும் சற்றே நோக்குவோம். பாரதியின் கவிதை வரிகளை ஆழமான ஆய்விற்கு உட்படுத்திய போது பளிச்சிட்ட, துலங்கிட்ட எண் அறிவிற்கெட்டிய சில விடயங் கள் சில தவறுகளாகவும் தவிர்ப்புக்களாகவும் முன்வைக்கப் படு கின்றன.
நிமிர்ந்த நன்னடையுடனும் நேர்கொண்ட பார்வையுடனும் புதுமைப் பெண்களைப் படைத்தவன் பாரதி பண்டைய தமிழ்ப் பாரம்பரியங்களில் புரையோடிப் போயிருந்த பெண்ணடிமைத்
தனங்களை களைய முற்பட்ட பாரதி சில விடயங்களைக் கவனிக்
உயிர்ப்பு” S)
 
 
 
 

கத்தவறியிருப்பதை பாரதிபாடல்களை ஆழமாக நோக்கும் எவரும் புரிந்து கொள்ளலாம். பெண்ணுக்கு காலங்காலமாக விதிக்கப் பட்டிருந்த கட்டுப்பாடுகளையும் இடப்பட்டிருந்த வேலிகளையும் தகர்த்தெறிந்து கற்புநிலையினை இரு கட்சிக்கும் பொதுவில் வைக்கத்துணிந்த பாரதி, பெண்ணுக்கு இடப்பட்டிருந்த வேலிகளைக் களைந்தெறிந்தானாயினும். கண்களிரண்டிருந்தும் காணுந்திறமை யற்ற பெண்களின் கூட்டத்தினை விழிப்படையச் செய்தானாயினும் வேலிகளைக் களைந்தெறிந்தவன் புதுவேலிகளை அமைத்தானா என்பது விசனத்திற்குரிய வினா 1 பழமையான, இறுக்கமான, கட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிந்தவன், புதிய கட்டுப்பாடுகளையும் விதித்திருக்க வேண்டும்.
பாரதியின் பாடல்களால் விழித்துக்கொண்ட பெண்மை, வீறுகொண்டு புறப்பட்டு, கூர்ப்படைந்து, பரிணாமம் பெற்று கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமையினால் விகாரப்பட்டு நிற் கின்றது! ஆக பெண்விடுதலை பேசியவன் பெண்விடுதலைக்கான எல்லைகளை அமைக்கவில்லை. இன்றைய பெண்களின் தான் தோன்றித்தனமான வளர்ச்சிகளுக்கு இதுவே காரணமாகவும் கூட இருக்கலாம். கட்டுப்பாடற்ற இத்தகைய பெண்விடுதலை வாதம் பெண்களை நீண்டகாலத்திற்கு பெண்களாகப் பேணவில்லை
என்பதையும் அவதானிக்க முடிகிறது.
இன்னும் சாதிப்பிரிவினையைக் கடிந்தவன், காக்கை குருவியெங்கள் ஜாதியென்றவன், சில இடங்களில் தனக்குள்ளேயே விவாதம் நடத்தி முரண்படுகின்றான். விடுதலைப் பாடலிலே
“விடுதலை! விடுதலை 1 விடுதலை !
பறையருக்கும் இங்குதீய புலையருக்கும் விடுதலை ! பரவ ரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை! என்கின்றான். கூர்ந்து அவதானிக்கின்ற பொழுது பாரதி தனக்குள்ளேயே சாதியப்பிரிவுகளில் நம்பிக்கை காட்டியிருப்பது தெளிவாகிறது. விடுதலை கோரியவன்
சகல மக்களுக்கும் விடுதலை எனக்கூறாமல் சாதியப் பிரிவுகளைக்

Page 5
குறிப்பிட்டுக் கூறியது மறைமுகமாக அவனும் சாதிப்பிரிவினைகளில் ஈடுபாடு காட்டியிருப்பானோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.
மேலும் " ஈனப் பறையர்களேனேனும் அவர் நம்முடன் வாழ்ந்திங்கிருப்பவர் அன்றோ, சீனத்தராய் விடுவாரோ பிற தேசத்தவர் போல் பல தீங்கிழைப்பாரோ" என்னும் கவிதையின் ஆரம்ப அட்சரங்களில் "ஈனபறையர்கள்" எனக் குறிப்பிடப் பட்டிருப்பதும் மறைமுகமாக சாதியப் பிரிவினைகள் பாரதி கவிதைகளில் இருந்திருக்கின்றது என்பதைப் புலப்படுத்துகின்றது. ஒன்றே குலமென்றும் ஒருவனே தேவனென்றும் குறிப்பிட்டுவிட்டு, ஈனப்பறையர்கள் என இழிவாக இனவாதம் பேசுவது திருவாசகம்
படித்துவிட்டு சிவன்கோவிலை இடிப்பதற்கு ஒப்பானது !
இதைவிட, பாப்பாப்பாடல்களிலும் சில தவறுகள் உளவியல் ரீதியான ஆய்வுகளினடிப்படையில் எப்போதும் சிறுவர்களுக்கு தேரடியாக அறிவுரைகளை கூறுவது தவறானதாகும். குழந்தைக்கு, அன்னை நெருப்பினைத் தொடாதே என நேரடியாகக் கூறும் போது நிச்சயமாக குழந்தை நெருப்பினைத் தீண்டிப்பார்க்க முற்படும் என்பது நாமறிந்த விடயம். இது இவ்வாறிருக்க பாரதி “பொய் சொல்லக்கூடாது பாப்பா" என்று நேரடியாகக் கூறும் அறிவுரை எதிரான விளைவுகளைத் தந்தாலும் வியப்படை வதற்கில்லை. م
இனி பாரதியினை விடுத்து உலகம் முழுவதும் விரவிக் கிடக்கும் ஆறு கோடித் தமிழ் மக்களின் சுகங்களோடும். துக்கங்களோடும் தான் பங்கெடுப்பதாகப் பறைசாற்றிக் கொள்ளும்
வைரமுத்துவிடம் நகர்கின்றேன்.
நன்னூலின் காண்டிகையுரையின் சொல்லதிகாரம் நுவல்வோன் களைய வேண்டிய ஐயிருகுற்றங்களையும் எடுத்துரைக்கிறது. குன்றக் கூறுவது, மிகைப்படக் கூறுவது, கூறியது கூறுவது, மாறுகொளக்கூறுவது, வழுஉச்சொற்புணர்த்துவது. மயங்க வைப்பது,
வெற்றனத்தொடுப்பது, மற்றொன்று விரிப்பது, சென்று தேய்ந்திறுவது
( C மூச்சு 2
உயிர்ப்பு
 
 
 
 

நின்று பயனின்மை என்பவை ஐயிரு குற்றங்களாகும்.
இவ்வடிப்படையில் வைரமுத்துவினை நோக்குகின்ற பொழுது தனது பாடல் வரிகளில் பல விடங்களில் மிகைபடக்கூறுகின்றான். "அழகு" என்னும் அடைமொழிப்பதத்தை ஆண்பாலா ? பெண்பாலா? என்றொரு வினாத்தொடுத்து இறுதியில் பெண்பால் என்கின்றான். கற்பனைக்காக, அழகுக்காக எதுகை மோனைக்காக மிகைபடக் கூறி வழுஉச்சொற்புணர்த்தி வாசகர்களை மயங்க வைக்கின்றான். பிழையான ஒரு கருத்தினை, மக்கள் மத்தியில் காவிச்செல்லுகின்ற இக் கவிஞனை என்னவென்று நோவது ?
அத்தோடு கவிதைக்கு பொய்யழகு என்கின்றான் கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரை எண்கின்றான். இவ்வா றெல்லாம் கூறுகின்ற ஒரு கற்பனைக்கவிஞனை எவ்வாறு இலக்
கியத்தரமுடையவன் என ஏற்றுக்கொள்ளுவது !
எதுகை மோனைக்காக பாட்டின் பொருளைத் திரித்துச் சொல்பவன் கலைமகளின் முகத்தினை கரித்துண்டால் மூடுகின்ற ான்” எனக்கொண்டு நோக்கின், வைரமுத்து சரஸ்வதியின் முகத்திலே கரிபூசினான் எனத்தானே பொருள் கிடைக்கிறது ! இது தவ றில்லையா ? இது பிழையென்று ஆகாதா ?
மேலும், வைரமுத்து பல விடயங்களில் கூறியது கூறு கின்றான். முன்பின் முரண்பட மாறுகொளக்கூறுகின்றான் தாம் கொண்ட காதல் மொழிவதற்கு தமிழ்நாட்டுப் பெண்கள் துணிவதில்லை எனக்கூறிய அதே கவிஞன் தான். தான் அறிந்ததும் தெரிந்ததும் , தெளிந்ததும் காதல் ஒன்றுதான் என ஒரு பெண் ணைக் கூறச்செய்து முரண்படுகின்றான்.
தமிழ்சினிமாவின் வியாபாரத் தேவைகள், ஒரு நல்ல கவிஞனையும், அவனின் கவித்திறனையும் எவ்வளவு தூரம் கொச்சைப்படுத்தும் என்பதற்கும் சோரம் போகச் செய்யும்
என்பதற்கும் வைரமுத்துவின் பாடல்வரிகள் சிறந்த உதாரணம் !
GO Coutrind)
C _மூச்சு -2

Page 6
இன்று நவம்பர் 23 இருள் சூழந்த அதிகாலை; காற்று வீசுவதாகத் தெரியவில்லை, ஆனால் நான் உணர்கிறேன். ஜன்னல் வழியாகப் பார்வையைச் செலுத்துகையில் வெள்ளவத்தையின் உயர்ந்த தொடர் மாடிகளில் ஆங்காங்குள்ள அறைகளில் வெளிச்சத்தைக் காணக்கூடியதாகவே இருந்தது. பரீட்சைக்காலம், மாணவர்கள் படிக்கக்கூடும்.
நிச்சயம் எழுதியாக வேண்டும் ஆனால் மனதில் பூதா காரமாகக் குற்ற உணர்ச்சி அவனது சொந்த வாழ்க்கையல்லவா இது ? எழுதினால் . எழுதினால் .
அது கிடக்கட்டும் ஆனால் அவாகள் மாறவேண்டும் மாறியே ஆகவேண்டும். ஒருவேளை மாறலாம். எனவே நிச்சயம் எழுதியாக வேண்டும். அவனிடம் அமைதியாக, பல்வியமாக அனுமதி கேட்டேன் பற்கள் தெரிய அவனது வழமையான புன்னகை நன்றி நண்பா நன்றி !
என் நண்பன் அனுமதி தந்துவிட்டான் அவனது வாழ்க்கையை இனி உங்கள் ஒவ்வொருவரோடும் பகிர்ந்து கொள்ளப் போகின்றேன்.
அவன் எனக்குப் பின்பு தான் அங்கு வேலைக்கு வந்தானாயினும் என்னைவிட சில வருடங்கள் வயதில் மூத்தவன். உடல்வாகு சரியாக என்னைப்போலவே இருந்தாலும் என்னை விடவும் கொஞ்சம் உயரம் குறைவாக இருந்தாலும் பார்ப்பவர்கள் இருவரையும் ஒரே வயதினர் என்றே சொல்வர்.
அவனுடனான முதல் சந்திப்பு எனக்கு நினைவில் இல்லை ஆனால் தொழில் நிமித்தமாக அவன் வேலை செய்யும் பகுதிக்கு அடிக்கடி செல்ல வேண்டி இருந்தது. அவனை ஆரம்பத்தில் நான்
உயிர்ப்பு
 
 

பன்மையிலேயே அழைத்துவந்தேன் ஆங்காங்கு ஆங்கிலச் சொற் களால் வெட்டி ஒட்டப்பட்ட எண் சிங்களத்தை முழுமையாக்கி விட்டு
அவன் தன் பற்கள் தெரிய புன்னகைப்பான்.
அவன் புன்னகை தவிர அவனோடு எண்னை அதிகளவில் ஒன்றிணைய வைத்தது எம்மினத்தின் உணர்வுகளுக்கு அவன் மதிப் பளித்ததும் அறவே சிங்களம் தெரியாத நணி பர்களுடன் கூட அவன் சகோதரத்துவம் பாராட்டியதும் தான் என்றால் அது நிதர்சனமான
உணர்மை !
அந்த நாள் எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. இவர் : கு சுமார் 8 மாதங்களிற்கு முன்பிருக்கும் தமிழில் வெளிவந்த ஒரு :ாதல் பாடலைப் பற்றி சம்பாஷனை ஆரம்பித்துப் பின் காதலுக்குத் தாவியது அவன் காதலைப் பற்றி நிறைய அறிந்து வைத்திருந்தான். காதலைப் பற்றி நிறையக் கூறினான் "காதலைப் பற்றி ஒரு பெண் உன்னிடம் என்ன கூறுகின்றாள் என்பதிலிருந்து அவள் உன்னைக் காதிலிக் கின்றாளா ? இல்லையா என்பது தெரிந்துவிடும்" தன் வேலையைக்
கவனித்தபடி கூறினான்.
" நீ காதலிக்கின்றாயா. ? " முன்பிருந்த பண்மை ஒருமையாகி இப்போது பல நாட்களாகிவிட்டன எனது கேள்விக்கு அதே புன்னகை!
"ஏ ஓஹோ ..! அப்படியானால் அவள் .?"
"அவளும் தான்! ஆனால் அவள் இப்போது உயர்தரப் பரீட்சை க்குக் படிக்கின்றான்"
"2001ம் ஆண்டு பிரிவா ?”
"ம் ! அவளது அப்பா, அம்மா எப்போது என்னை அடித்து நொருக்கலாம் எனக் காத்திருக்கின்றனர்" சொல்லிவிட்டுச் சிரித்தான் நானும் சிரித்தேன் பிறிதொரு சந்தர்ப்பத்தில் "எப்படிக் காதலிக்க ஆரம்பித்தாய் ? " என்று கேட்டேன்.
" உணர்மையில் எனக்கு அப்படி ஒரு எண்ணமே இருக்கவில்லை. மொரட்டுவையில் ஒரு திருமணவீட்டிற்கு பாண்ட் வாசிக்க நானும், நண்பர்களும், மைத்துனர் மாரும் சென்றிருந்தோம். அவளும் அங்கே
(<_ಆ೯೫-2_>

Page 7
வந்திருந்தாள் நள்ை பர்கள் தான் முதன் முதலில் அவள் எண்னையே எப்போதும் பார்த்தப்படி இருக்கின்றாள் என எனக்கு அடையாளப்
1 . : ). 2x . zx - - - - படுத்தினர். பின்பு அன்று, நான் அவளைப் பார்க்கத் தொடங்கினேன். அவள் எமது வாசிப்புக்கள் முடிவுற்ற போது ஒரு தடவை புன்னரைத் நாள் நண்பர்கள் என்னைப் பாராட்டினர், ஆரவாரித்தனர். அன்று ஆரம்பித்தது தான் இன்று எண் ஒவ்வொரு வெற்றிக்குக் காரணமும் அவள்
தான் ! அவளது காதல் தரும் உந்துதல் என்னை வெல்ல வைக்கிறது"
"ம் . நணர்பர்கள் தான் அடித்தளமிட்டார்கள் ?”
"ம்!! நண்பர்களின் உதவியை நாண் மறக்கவே மாட்டேன்! அவளது வீட்டு முகவரி, தொலைபேசி இலக்கம், வகுப்புக்குச் செல்லும் இடங்கள் எல்லாமே நண்பர்களே தேடித் தந்தார்கள். எனக்காக அவளோடு சென்று கதைத்தனர். உயர்தரம் முதல் வருடத்தில் என் :டம் காதலைத் தெரிவித்தாள் அப்போது நான் வேலை செய்ய ஆரம்பிக்கவில்லை. காதல் சொன்ன முதல் தினம் இருவரும் மொற
1. நி:விலிருந்து கொட்டாஞ்சேனை தேவாலயத்திற்குச் சென்றோம்"
அப்படியானால் அ. அவருக்குப் 17 வயது .2 கேட்டேன்.
"அதுவே அதிகம் இப்போதெல்லாம் மிக இளவயதில் ஆரம் பித்து விடுகின்றனரே ?"
நான் அவ்விடத்திலிருந்து மெதுவாக நகர்ந்தேன்.
இன்னொரு நாள் என்னை அழைத்து அவளின் புகைப்படத்தைக்
காட்டினான்.
அவள் உண்மையில் நல்ல அழகி ! அவர்களது காதலைப் பொறுத்தவரையில் நணர்பன் தான் அதிஷ்டசாலி புன்னகையோடு ஒரு சிவப்பு நிறக் காரின் மீது சிரித்தபடி நின்றிருந்தாள்.
" நீ அதிர்ஸ்டசாலி " அவனைப்பார்த்துப் புன்னகைத்தேன்
" ஆகஸ்ட் மாதம் ஆரம்பித்து விட்டது. அவளுக்குப் பரீட்சை முடிய இன்னும் சில தினங்களே உள்ளன" உற்சாகத்தோடு கூறினான்.
"ஜமாய்"
(<_ಆಆಆ -2 C
 

ஒரு மாதத்தின் பின் ஒரு நாள் அவனை மீண்டும் நிறுவனத்தில்
சந்தித்தேன். நானாகச் சென்று கதைத்தேன்!
" என்ன அவவிற்குப் பரீட்சை முடிந்தால் எம்மோடு கதைக்க
tu) fı bu ço fiir g;C 367 fT ?"
"அப்பிடியில்லை மச்சான்"
" அவனில் ஏதோ ஒரு மாற்றம் தெரிந்தது நிறைய யோசிப் 1ள் போன்று களையிழந்து இருந்தான் ! மீண்டும் துருவிக்கேட்டேன்
சொல்லத் தொடங்கினான்.
" அவளிடம் சென்று கதைத்தேன் அவளின் பெற்)ே: .'); } தெரியாமல் கதைக்க மிகச் சிரமப்பட்டேன். ஆனால் கதைத்தேன் அவள் என்னோடு தனி வாழ்க்கை பொருந்தாது என்கின்றாள்."
என்ன சொல்கின்றாய் ? ஆ. அப்படியென்றால்
“தனது "அதஹஸ்” வேறு என்றும் எனது "அதஹஸ்" வேறு என்றும் கூறுகின்றான்"
"அதஹஸ்" என்ற அந்தச் சிங்களச் சொல்லுக்கு என்னால் சரியான அர்த்தத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை! எனவே கேட்டேன்.
"அதஹஸ் என்றால் என்ன ?
"அதாவது நாம் வாழ்க்கையை இனி எதிர்நோக்கிய பார்க்கின்ற
முறை எமது எண்ணங்கள் இனி என்ன செய்ய . அவ்வளவும் தான்!"
எனக்குள் கொஞ்சம் கோபமிருந்தது. அது என் பேச்சில் வெளிப்படவே செய்தது
"இவர்கள் இப்படித்தான்! கணக்கெடுக்காதே! நீ என்ன நினைக்
கிறாய் ?”
"இல்லை மச்சான்! அவள் சொல்வதில் உணர்மை நிறைய உள்ளது. அவள் தந்தையின் கனவின்படி அவள் வைத்தியராக விரும்புகின்றாள். அதற்குரிய திறமை அவளிடம் உள்ளது. என்னைப்பார் இங்கு பாடல்களோடு போராடிக் கொண்டிருக்கின்றேன்! அவள்
(உயிர்ப்பு ) )
( C மூச்சு 2 )

Page 8
சொல்வது சரி நான் ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் ஒரு பிரச்சனை"
என்ன பிரச்சனை ? "
" உன்னிடமும், எண் அக்காவிடமும் இதைச் சொன்னதுபோல் வேறு நபர்களிடம் இதைச் சொல்ல முடியவில்லை குறிப்பாக நண்பர்கள் , மைத்துனர்கள் கேலி செய்வர் இவ்வளவு தூரம் சென்ற
பிறகு இப்படிக் கோட்டை விட்டுவிட்டாயே என்பார்கள் "
"ஐயோ அவர்களை எல்லாம் ஒரு பொருட்டாய் எடுக்காதே !
நீதான் அவளை விரும்பாமல் விட்டதாய்ச் சொல்லிக் கொள் !"
48
அதை எவரும் நம்பமாட்டார்கள் ! சரி பார்ப்போம் கொஞ்ச நாட்கள் நண்பர்களோடு சேராமல் ஒளித்துத் திரிய வேணி டியது
தான்!
அன்று இரவு வேலையில் அவனைப் பற்றியும், அவன் கTதலைப்பற்றியும் நிறைய யோசித்தேன் ! அந்தப் பெண்ணில் பிழை உள்ளது தான் ! ஆனால் அவள் என்ன செய்வாள் அறியாத வயதில் ஒத்துக்கொண்டு விட்டு அறிவு வர பெற்றோரின் விருப்பப்படி கல்வியின் பால் நகர்ந்துள்ளாள் ! அது அவளது வாழ்க்கை ! விருப் பமில்லை என்பதை அறிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு ! அதைப்போன்று விருப்பத்தையும் யாராலும் தடுக்க முடியாது தானே ? தாய் மண்ணை உயிருக்குயிராக விரும்புகின்றோம். தாய் மணி எம்மை விரும்புகின்றதா இல்லையா ? யாருக்குத் தெரியும் ? ஒருவேளை அது விரும்பாவிடினும் கூட எங்கள் தாய் மணி என்று
நாம் அதை விரும்பியபடிதான் இருக்கின்றோம்.
நாட்கள் ஒடத்தொடங்கின சுமார் 2 மாதங்கள் கடந்திருக்கும் அவனைப்பற்றி நிறுவனத்தில் ஒரு பரவலான கதை உலாவத் தொடங்கியது அவனுக்கு மூளைக்காய்ச்சலாம்! நான் நம்பவேயில்லை. அவனைச் சந்தித்து கேட்கும் திராணியும் எனக்கில்லை அவனையும் அடிக்கடி காண முடியவில்லை.
பரீட்சை காரணமாக நான் சில நாட்கள் ஒய்வெடுக்க வேண்டியிருந்தது, அன்று இரவு நேரம் ! நாம் இருவரும் மட்டுமே வேறு யாருமில்லை!
( Cepše 2 - G2) Celoti D )

" மச்சான் இவ்வளவு நாட்களாக எப்படியோ ஒழித்துத் திரிந்து விட்டேன். வரும் திங்கள் பாண்ட் குழு கூட்டம் உள்ளது. நணர்பர்களை யெல்லாம் சந்திக்கப் போகின்றேன். என்ன செய்வதென்று தெரிய வில்லை 1 தலையெல்லாம் வலிக்கிறது தலையிலும் எனக்கு எதோ வருத்தம் ..!"
மிகுந்த கவலையுடன் கூறினான்! எனக்கு இப்போது புரிந்துவிட்டது இவனது முழுப் பிரச்சனையும் இவனது காதல் தோல்வி பற்றிய நண்பர்களின் பழிப்பு வார்த்தைகள் பற்றியது தான்! மிகுதியெல்லாம் இவன் கற்பனை அவன்மீது மிக்க அனுதாபப்பட்டேன் ! நிறைய அவனோடு பேச வேண்டும் என்று ஆசைப்பட்டேன் ஆனால் ஏனோ
என்னால் ஒரிரு வார்த்தைகள் தான் கூறமுடிந்தது.
“நண்பர்கள் எது சொன்னாலும் காதில் வாங்கிக் கொள்ளாதே! மற்றவனை ஒன்றில் சிக்கவைத்து வேடிக்கை பார்ப்பது தான் இவர்களது பொழுதுபோக்கு. இவர்கள் எல்லாம் உண்மையான நணர்பர்களில்லை! அவர்களுக்கும், அவளுக்கும் வாழ்ந்து காட்ட வேணடும். உன்னால் முடியும் ! கூட்டத்திற்குப் பயப்படாமல் போ !”
அவள் தலையாட்டினான் இது நடந்தது திங்கட்கிழமை.
அவர்கள் மாறவேண்டும் மாறியே ஆக
ஒருவேளை மாறலாம். எனவே நிச்சயம் எழுதியாக வேண்டும்
நவம்பர் 17 வெள்ளிக்கிழமை சக ஊழியரோடு அலுவலக வாகனத்தில் அலுவலகத்திலிருந்து வந்துகொணர்டிருந்தேன். கதை எல்லா இடமும் சென்று அவனைப் பற்றி வந்தது நிறுவனத்தின் அப்பகுதியில் எனக்குமிகப் பிடித்தவன் அவன் தான் என்றேன்! அவரும் ஆமோதித்தார்.
“நன்றாக எல்லாரோடும் பழகுவான்! இனி எப்போது எடுக்கப் போகின்றார்களோ தெரியாது!"
என்னை யாரோ ஓங்கி அடித்தனர் 1 திடுக்கிட்டேன்!
" என்ன கூறுகின்றீர்கள் அ. அவனுக்கு எ. என்ன ? "
( C மூச்சு 2 ) G13) C உயிர்ப்பு ) )

Page 9
"அதைத்தானே அப்போதிருந்து கூறுகின்றேன். இன்று அதிகாலை வெள்ளவத்தை புகையிரத தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை
செய்தான் என்பது எனக்குத் தெரியும்!
"அ. அவனோ ?
"ம் . பாவம் முளைக்காய்ச்சல் வலி தாங்க முடியாது
தன்னைத்தானே மாய்த்துவிட்டானி " அவர் இரங்கினார்.
மூளைக்காய்ச்சல் கிருமிகளல்ல. வேறு விஷக்கிருமிகளால் தான் அவன் தற்கொலை செய்தான் என்பது எனக்குத் தெரியும் ! ஆனால்
நான் அதை வெளியில் கூறி வாதிடவில்லை.
அவனது இறுதி ஊர்வலத்தில் அவனது தாய் அந்தப் பெண்ணை திட்டு திட்டென்று திட்டி கதறினாள் முளைக்காய்ச்சலைத் திட்ட வில்லை இனி அப்பெண்ணின் நிலை.? அவனது காதல்கதைக்கு
அடித்தளமிட்டவர்கள் அவர்கள் அங்கே இருந்தனர்.
அவனை எம்மால் இப்போது பார்க்கவே முடியாது அவனது
வார்த்தைகள் என் காதில் கேட்டன!
"அவனை எனக்குக் காட்டியவர்களே நண்பர்கள் தான் !"
"நண்பர்கள் எவ்வளவோ உதவி செய்துள்ளனர்"
“எனக்குக் காதல் தோல்வி என்று தெரிந்தால் நண்பர்கள்
பழிப்பார்கள்
நான் எனக்குள் அழுதேன். மனம் அவனுக்காகக் குமுறியது வீடு வந்து கொண்டிருந்தேன். தனியார் வகுப்பு நிறுவனங்கள் உள்ள வீதி அது! ஒரு பெண் நிறுவனத்தில் நுழைகின்றாள் அதற்காகக் காத்திருந்தது போல மாணவர் கும்பல் யாரோ ஒரு மாணவனின் பெயரைச் சொல்லிக் கத்துகிறது! ஏதோ அந்த மாணவனுக்கு உதவுகின்றோம் என்ற நினைப்பு. அந்த மாணவனுக்கும் சரி அந்தப் பெண்ணுக்கும் சரி எவ்வளவு பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றனர்.
இதை வாசித்த நீங்கள் ஆணாயிருந்தாலும் சரி, பெண்ணாயிருந் தாலும் சரி மேற்சொன்ன அந்த அவர்களில் நீங்களும் ஒருவர்

என்றால் வேண்டாம். பிறரது விடயங்கள் எமக்கு வேண்டாம். தயவு செய்து விட்டுவிடுங்க. இனியாவது மாறுங்கள் 6Ꭲ 6Ᏹi n) ;
வெள்ளவத்தை புகையிரத தண்டவாளத்தில் உயிர்நீத்த எண் தள்ை பன்
சார்பாக வேண்டுகின்றேன்!
எனக்கு ஆத்மா சாந்தியில் எல்லாம் நம்பிக்கை இல்லாவிடினும் நவம்பர் 17 உயிர்நீத்த எண் நண்பன் நுவான் டீ அல்மேதாவிற்கு அது உண்டு! அவனது ஆத்மா சாந்திக்காகப் பிரார்த்தியுங்கள். பிறரது காதல் வாழ்வை உருவாக்கும் நெறிப்படுத்தும், அழிக்கும் இயக்குனர்சள்
நீங்கள் மாறாதீர்கள் .!
வேண்டுகின்றேன் என்று கதையை நிறைவு செய்தேன். வேலையில் மனம் செல்லவில்லை விடியக் கொஞ்ச நேரமே இருந்தது. துரக்கம் கண்ணைச் சூழற்ற மயக்கம் போன்ற ஒரு அரைத் துரக்க நிலை! சுவரருகே அ. அவன்! திடுக்கிட்டேன். விழித்தேன். குளிரிலும் வியர்க்க ஆரம்பித்தது. இங்கெல்லாம் அவனோடு அளவளாவியுள்ளேன். ஏதோ ஒரு பயம்! ஆனால் சில கணம் தான்! மீண்டும் அரைத் துரக்கம் அவன் அருகில் வந்து அமர்கிறான். அதே பழைய புன்னதை! மனநிம்மதியோடு கணிவிழித்தேன்! எதிரே கதையைப் பார்த்தேன்!
மனம் முழுவதும் அமைதி !
SSS LLSSLL LSL S LSSL LS LSS LSS LS S LSL SSSS L S LSS SSS S LLSL S LSS LSSSS YLSS S SSSS இவ்விதழில் இடம்பெற்ற செவ்விக்கலாம் பகுதி யில் ஆர். சிவகுருநாதன் அவர்கள் குறிப்பிட்ட தினபதி பத்திரிகையாளர் அருளானந்தன் ஐயா அவர்களை கடும் சிரமத்தின் மத்தியில் கொழும்பு நகரில் சந்தித்தோம். இலங்கையில் பத்திரிகையாளர் களின் எதிர்காலம், உத்தரவாத மற்ற நிலையில் இருக்கிறது. நீங்கள் என்ன கருதுகின்றீர்கள் என வினவிய போது. இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதிலுமுள்ள பத்திரிகையாளர்களின் நிலை இதுதான் என்றவர், நம்முடைய அடுத்த கேள்விகளுக்கு பதிலளிக்காது மெளனமானார். இப்பகைப்படம் நீண்ட நேர வற் பறுத்தலின் பின்பும் அவர் அனுமதியளிக்காத காரணத்தினால் அவரது அனுமதி இன்றியே எடுக்கப்பட்டது.
(உயிர்ப்பு ) )

Page 10
அரிதாரம் பூசாது அட்டகாசம் செய்யாது தலைகுனிந்து வகுப்பு வந்து அடக்கம் என்று பெயரெடுத்து
பொருளாதாரம் காப்பது போல் சிக்கனமாய் புன்னகைத்து கல் நெஞ்சை கசிய வைத்து எளிமையின் அழகி, இவளென்று புலம்பவைத்து
காதல் கடிதம் ஏற்காது நேராக மறுக்காது மழுப்பியே காலந்தள்ளி விண்ணப்பங்கள் சேரும் வரை
தேர்வினை ஒத்தி வைத்து
இறுதிவரை காத்திருந்து வீட்டில், திருமண பேச்சுவர தெரிவுகளில் சிறந்ததை லாவகமாக தேர்ந்தெடுத்தும் தெரிவுகள் தரமில்லையெனில்
காதலெல்லாம் பொய்யென்று அற்புதமாய் கபடமாடி அப்பா சேர்த்த சொத்தையெல்லாம் சீதனமாய் அள்ளிக்கொண்டு
பொருளாதாரத்தின் உச்சத்தை அறிவின் ஆழத்தை புரிந்துணர்வின் விகாரத்தை இரசனையின் சூனியத்தை
மணம்முடிக்க சம்மதிக்கும்
இவர்கள் தம்மை, பெணிகள் என்பர்!
"விதி விலக்குகளுக்கு என் சிரந்தாழ்ந்த வணக்கங்கள் "
 
 
 

தே.:ேகேந்திரன்
"சிறுமை கண்டு பொங்கும் சிந்தை தான் இளமையின் கம்பீரமான அடையாளம் ”
யதார்த்தத்தைத் தொலைத்துவிட்டு கற்பனையின் கரங்களில் எதிர்காலத்தை ஒப்புவித்துவிட்ட இன்றைய இளைஞர்களுக்காக இளைஞர்களில் ஒருவனாக சில சிந்தனைகளுடன் .
நாளையின் நம்பிக்கைகள் நாம்தானென்று, நம்மில் நம்பிக்கை வைத்துக் காத்திருக்கும் நம்மவர்களின் முகத்தில் கரியைப் பூசிவிட்டு நாளையைப் பற்றி நாமே நம்பிக்கையின்றி அலைந்து கொண்டிருக் கின்றோம். எதிர்காலத்தை ஒளியேற்ற சிகரெட் நெருப்பையும், வாழ்க்கைச் சக்கரத்தை ஒட்டிச் செல்வதற்கு சில்லறைச் சிற்றின் பங்களையும் துணையாக கொண்டு இருண்ட உலகத்துக்குள் படிப்படியாக நம்மை
அறியாமலேயே காலூன்றிக் கொண்டிருக்கின்றோம்.
இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரேயே “வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டிருக்கும் இளைஞர் சமுதாயத்துக்கு யார் நல்ல புத்தி சொல்வது ?" என்று வருத்தத்தோடு வினவிச் சென்ற கிரேக்க
தத்துவமேதை பிளேட்டோவுக்கு இன்று வரை ஒருவருமே பதிலளிக்க முன்வராதது மிகுந்த வேதனையைச் தருகிறது !
எங்கே போகிறோம் என்று தெரியாமல் அலைகளின் முதுகில் சவாரி செய்யும் குமிழிகள் போல் குறிக்கோள் இல்லாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறது இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை. குடும்ப அங்கத்தினருடனான உறவு சரியில்லை. சமுதாய உறவுகளில் அவர்
( C மூச் a -2

Page 11
களுக்கு சுகமில்லை. எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கல்வி அவர்களுக்கு கசப்டாக இருக்கிறது. நாளைய தலைவர்களை இன்றைய தலைமுறை சுரண்டிக் கொணி டிருக்கிறது.
ஆட்டுவித்தால் ஆடும் பொம்மைகளாய், சாவி கொடுத்தால் சுற்றும் சக்கரங்களாய், அந்திகளைக் கண்டு அஞ்சுபவர்களாய், எதிர்காலத்தைப் பற்றி எதுவித சிந்தனையும் அற்றவர்களாய் மாறிக் கொண்டிருக்கிறது இந்த இளைஞர் சமுதாயம் ! வாழ்க்கையை ரசிக்க வேண்டிய ஒவ்வொருவரது முகத்திலும் ஒரு வித அதீத சோகம் அப்பிக் கிடக்கிறது. இவற்றையெல்லாம் மறப்பதற்கு கற்பனை வடிகால் களை நாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் .
இளைஞர்களே ! என்று உங்களுக்கு விமோசனம் ? யாரிடமிருந்து உங்களுக்கு விமோசனம் ?
யார் பெற்றுத் தருவார்கள் உங்களுக்கு விமோசனம் ?
எம் தோள்களில் இருக்கும் தினவும் கணிகளில் இருக்கும் கனவும் ஒரு பிரபஞசத்தையே உருவாக்க வல்லவை. ஆனால் முறையான வழிகாட்டலும், சரியான சிந்தனையும் இன்றி அவையெல்லாம் விரய மாகிக் கொண்டிருக்கின்றன.
போதும் !
இதுவரை எமக்கெதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், எம்மைப் பற்றி வந்த விமர்சனங்கள் எல்லாவற்றையும் மறந்து மீண்டும் புதிதாகப் பிறப்போம். இனியாவது உலக சமுதாயத்தில் ஒரு சிறந்த மாற்றத்தை உருவாக்குவதில் உறுதி கொள்வோம்.
புதியவர்களாய் புதுமைகள் படைப்பவர்களாய் பரிணமிக்க வேண்டுமெனில், எமது சிந்தனைகளையும் செயல்களையும் ஒரு குறிக் கோளுடன் மேற்கொள்ள வேண்டும். அதன் துணையுடன் எமது இலட்சியத்தை அடைவதே நோக்கமாக இருக்க வேண்டும். ஏனெனில் இலட்சியமற்ற வாழ்க்கை இலக்கு இல்லாமல் எய்யப்பட்ட அம்பைப்
போல் பயனற்றதாகிவிடும். ஆகவே இலட்சியமொன்றை உருவாக்கி
 

அதை அடைவதே நோக்கமாக செயற்பட்டால் ஏனையவை அனைத்தும்
நம்மை அறியாமலே அதற்கு வலிமை சேர்த்து நம்மைச் சேரும்.
வாழ்க்கையில் பரிணமிக்க வேண்டுமென்றால் கல்வியில் நன்கு
பிரகாசிக்க வேண்டும். ஆனால் நமது நரம்பில் நார் உரிக்கும் கல்வித்திட்டத்தில் கடுகளவிலேனும் இஷ்டமில்லாவிட்டாலும் அதில்
ஜெயிக்க வேண்டுமென்பதுதான் கசப்பான உணர்மை. தேர்வு எண்பது
எவ்வளவு நிறையப் படித்திருக்கின்றோம் என்பதல்ல, எவ்வளவு
விரைவில் பதிவு செய்கின்றோம் என்பதுதான்! ஒரேயொரு புள்ளி
வேறுபாடு சமுதாயத்தில் ஒருவனுக்குள்ள அந்தஸ்தையே 10ாற்றி அமைத்து விடுகிறது. இதுதான் யதார்த்தம் இதற்காக அரசையும்
கல்வித்திட்டத்தையும் குறைகூறுவதை விடுத்து நாமாக மாறிக் கொள்வோம். இல்லையென்றால் போட்டி நிறைந்த இவ் உலகிலே எமது முகவரியை தொலைத்துவிட்டு மீண்டும் அதனைத் தேடுவதிலேயே
வாழ்க்கையை அஸ்தமித்துக் கொள்வோம்.
சிறுமை கண்டு பொங்கும் சிந்தைதான் இளமையின் கம்பீரமான அடையாளம். ஆனால் இன்றோ பழகிப் போன சிறுமைகளைக் கண்டு விலகிப்போகும் மனோபாவம்தான் அதிகமாக வளர்ந்திருக்கிறது.
புலிகள் பதுங்கலாம் ஆனால் ஒதுங்கக்கூடாது.
சின்னச்சின்ன அநீதிகள், அசிங்கமான அத்துமீறல்கள், கண்ணைக் கசக்கும் காட்சிகள் என்பன கணிகளைச் சுற்றி நடக்கும் போது அதை எப்போதும் தட்டிக் கேடபவர்களாய் நாம் இருக்க வேணடும்.
இதைத்தான்
"பாதகம் செய்பவரைக் கணிடால் பயம் கொள்ளலாகாது;
மோதி மிதித்துவிடு அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு" என்று பார தியும் சொன்னான். அதைவிடுத்து அற்ப விஷயங்களுக்காக மட்டும்
கும்பல் சேர்த்து அன்றாடம் அடிதடியில் ஈடுபடும் கலாசாரத்தை இன்றுடன் களைந்தெறிய வேண்டும்.
C உயிர்ப்பு D )
( C eypë e -2 D G19D

Page 12
இறுதியாக இளைஞர்களே!
எம்மை நம்பியிருப்பவர்களை நாம் என்றும் கைதுக்கிவிட வேண்டும். அதற்கு நாம் நம்மில் தன்னம்பிக்கை வைத்து செயற்பட வேண்டும். இலக்கை நோக்கிப் பயணிக்கையில் நாம் வெல்ல வேண்டியவர்களையும் நம்மை வெல்லக் காத்திருப்பவர்களையும் பற்றி எப்பொழுதும் விழிப்புடனேயே இருக்க வேண்டும். அன்றேல் மீண்டும் இந்த உலகம் எமக்கெதிராக விரல் நீட்டிக் குற்றம் சுமத்தும்.
ஒவ்வொரு இரவின் பின்னும் விடியல் தன்னை புதுப்பித்துக் கொள்கிறது. இது அன்றாட செயல்தான் ஆனால் இயற்கை என்றுமே சளைத்ததில்லை. சளைப்பதுமில்லை ! அதேபோல் நாமும் தன்னம் பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் சளைக்காது உழைத்து எமது இலட்சியத்தை அடைந்து வாழ்வை வெற்றி கொள்வோமாக ! இனியும் எவரும் எம்மீது குற்றம் சுமத்தாது இருப்பது எம் கைகளிலேயே உள்ளது. நாளைய தலைமுறை வளமான சூழலில் நலமான நட்சத்திர
ங்களாக உருவாக இன்றிலிருந்தே பாடுபாடுவோம்.
LLLLLLLLLLLLLLLLkkk கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் தமிழாலயம் வழங்கும் கலைச்சாரல்
மார்ச் 17, 2002
b LLLLLLLLLLLLLAS
உயிர்ப்பு
 

· · % xrY.M. , * s·: : -r t'a ; ato ; /^, re. r žíž čer č.213 si o žšíšž foj836:3.:
சொற்களம் சுவைக்களம், சொல்லாடற்களம் சுவையூறுதளம் என்பர். தமிழ் மரபிலே விவதாக்கலையானது, பாரம்பரியமாக , வழி வழியாக காவப்பட்டு, காக்கப்பட்டு வந்திருக்கின்றது. நம் முன்னோர் கருத்தினைக் கருத்தினால் வெட்டிப்பேசினார்கள்.அனல்வாதம், புனல்வாதம் என்றெல்லாம் புராணங்கள் விவாதக்கலையின் தனித்து வத்தினை, உணர்த்துகின்றன. நெற்றிக்கணிணைத் திறக்கினும் குற்றம் குற்றமே எனக்குறிப்பிடும் நக்கீரர்களின் வழிவந்தவர்கள் நாங்கள் ! எனவே இவ்விவாதக்கலை தொடர்ந்தும் செவ்வனே பேணப்படல் வேணர்டும்.
"வேட்ப மொழிக" என்கிறது. தொல்காப்பியம். தெளிவான கருத்துக்களை நேர்த்தியாக விவாதிட வேண்டும் என்கின்றது. எனவே இத்துணை சிறப்பு வாய்ந்த விவாதக்கலையினை வளர்ந்துவரும் இளம் விவாதிகளுக்கு குறிப்பாக பாடசாலை மட்ட விவாதிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்னும் நல்லெண்ணத்துடன் தமிழாலயம் உயிர்ப்பு இதழின்
மூலம் விவாதிகளுக்காக இத்தொடரினைப் பிரசுரிக்கிறது.
வாசிப்புக்கலாசாரத்திற்கும் விவாதத்திற்கும் எப்போதும் நேரான தொடர்பிருக்கின்றது. சிறந்த விவாதி நிச்சயமாக சிறந்த வாசகனாகவும் இருத்தல் வேண்டும். அறிவுதரக்கூடிய நடைமுறை யுடன் இணைந்து செல்கின்ற சிற்நத நூல்களை வாசித்தல் வேண்டும். அளவையியல் நூல்களையும் நியாய நூல்களையும் கற்க ஆேண்டும் அப்போது தான் தர்க்கம் ஆழமாய், காத்திரமாய் அமையும் இலக் கியங்களில் தொடர்ந்து ஆழமான பயிற்சியிருத்தல் வேண்டும். "
பட்டிமணர்டபம் பாங்பறிந்து ஏறுமின்” என்னும் மணிமேகலைப்
பாடலையும் மனதிற்கொள்ளல் வேண்டும். பயிற்சியில்லாமல் வாதிடுவது "அரங்கின்றி வாதிடுவதற்கு ஒப்பானது" என்கிறது வள்ளுவம் !
(வளரும்)

Page 13
t
With Best Compliments From :
Rexel Trading Company (Private) Ltd.
Agents & Transporters Industrial Switchgears &
Power distribution products
Sales:
Tel. : 0 – 440392 116A Messenger Street Є O39
b 12 437582 Colombo - 473186 - 8
Fax - + 941436381
email : rexel GD Sri.lanka. net
TLLLLLLLLLLLL

------------------------
கருத்தினை கவியாக்கி
இந்த ஒளிப்படத்திற்கு உங்கள் உணர்வுகளால் உயிர்ப்பூட்டி எங்களுக்கு அனுப்பவும் பத்து வரிக் கவிதைகளையே
உயிர்ப்பு வரவேற்கிறது.
முகவரி கருத்தினை கவியாக்கி
உயிர்ப்பு இல.31, காசல் ஒழுங்கை,
கொழும்பு - 04.
ل---------------------------------------ـــــــــــــــــــ--ا

Page 14
தீண்டலால் ...!
அராஜகத்தின் நகர்வுகள் அரங்கேறும் மணிர்ணில் புதைந்த விதைகளின் புலர் விற்காய் ...! அலைகளின் ஆர்ப்பரிப்பும் ஆதவனின் அரவணைப்பும் சங்கமித்து சஞ்சரிக்க .f உரிமைகளின் எழுச்சியாய் ஊற்றெடுக்கும் அருவியாய் வான் திரை கிழித்து விடிகிறது விடியல் .f பெண்ணிவளின் எண் விரல் தீண்டலால்..!
-ஸ்ரு தி
விடியுமோ ???
இடிவிழுந்ததாய் - பெரும் வெடி பிளந்ததாய் - நிலம் வடிவிழந்ததோ - எங்கள் வாழ்வழிந்ததோ ?
முடிவிழந்ததாய் - சுய அடி தொலைந்ததாய் - இனி திரை கிழித்துத் தான் - எம் விடிவெழும்புமோ ?
ஷாரகன்
செய்ய வ
முகில்களின் திரை விலக்கி வெய்யோன் தன் கதிர் பரப்ப மறுவுலகம் விடிவு கொள்ள
கடலலைகள் இசை பாட
பெண் உள்ளம் வீறு கொண்டு அராஜகத்தின் திரை கிழித்து பாலைக்கு நீரூற்ற - அதில் படகோட்டக் காத்திருப்போ ?
திக்கெல்லாம் பரவிட்ட திக்கற்ற தமிழனின் நிலையறியாத் தடுமாற்றம் தனிப் படகின் சுட்டலோ ?
 
 

| ஒளிப்படத்திற்கான | உங்கள் உள்ளத்து |
8
ல்லமோ ?
பட்ட மரம் பாலூற பாலை நிலம் செழிப்புறவே தத்தளிக்கும் படகு அது- தன் தரையைத் தட்டிடுமோ ?
துவிச்சக்கர வணிடியதில் துணையின்றிப் போறவனே வனாந்தரமாச்சு நம்மணினென்று
வருந்தி நீ அழலாமோ ?
மறுவுலகம் போவேனும்
மாற்றானை வென்று நாம்
தமிழ்ப்பாலை அள்ளி வந்து - நம் தாய் மணினில் ஊற்றோமோ ?
தர்ஷினி விஸ்வலிங்கம்
திரை
வெள்ளைத் திரை மறைக்கும், திரை பொங்கும் உள்ளக்கடலை அலையும் அமைதியும் உள்ள க்கடலை
மெல்லப் பிரித்தேனும் பாசமாய் கிள்ளிக் கிழித்தேனும் கோபமாய் சொல்லத் துடிக்கும் உணர்வுகள், சுலபமாய் திரை விலக்கும்
மூழ்குவோம் எனத்தெரிந்தும் அடிமனப் பள்ளத்தில் செல்லமாய் சுழலும் சக்கரக் கனவுகள்
வெள்ளமாய் நீர்வரும் வளம் வரும் என்றெண்ணி வள்ளமாய் ஓரத்தில் கரைதேடும் நம்பிக்கை !
கிருஷி
உங்கள் கருத்துக்கள்
எங்களை வளப்படுத்தும்
Durių

Page 15
மேகமங்கை பூமிநங்கைக்காய்
வெடித்த நிலம்பார்த்து துடித்த மேகமங்கை கிழித்துவிட்டாள் தன்னுடலை இன்னும் விழிக்கவில்லை மானிடர்கள் மனிதம் அற்ற மனிதர் - இவர்
மனங்களில் ஈரம் இல்லை, எருதில் மழை பெய்தது போல் ஈருருளி கொண்டொருவன். நீர் கண்டு விளையாட நிற்கின்றான் இன்னொருவன் மனம்நொந்து மங்கையவள் வடித்த கணிணிரது - ஈரமற்ற மனிதர்க்கன்றி தன் இன நங்கைக்காய் .
ဆော်မှိ fkm 。 ஜீவனா திருநாவுக்கரக
தாகம் !
தன்மானம் குன்றாத் தமிழனின் தாகம் தணித்திடும், இயற்கையின் முயற்சியோ ? பொங்குதமிழ் எழுச்சியோ ? உலகத் தமிழ்ப்புரட்சியோ ? இது போதுமோ ? தமிழ்த் தாகம் தீர்த்திடுமோ ? சூரிய உதயத்தின் உற்சாக உணர்வு ! பொங்கிக்கிளம்புகிற கங்கையின் சீற்றம் ! சடுதியான மாற்றங்கள் ! இவை பருவகால மாற்றமோ ? அல்லது தமிழ்நங்கை பருவமேந்திய தோற்றமோ ?
ப்ரியன்
நினைவுகளால் வருடப்படும் வதைபடலம் தொடர்ந்தால் .
ரசித்தவையோ ரத்தினமாய் நினைவில் தவழ ருசித்தவையும் கசத்த நனவில் - நினைவுகள் வருடும் வதைபடலம் தொடர்ந்ததால் வனிதையிவள் விரல்கள் வீறுகொண்டு கிழித்தெறிந்தது - திரையை மட்டுமல்லவே ! கீறலாய் காய்ந்திருந்த காயத்தையுமல்லவா கீறிக்கிளறிவிட்டன அவள் விரல்கள் . ரனவதைகளால் சிதைபட்டவை புதையாது ராட்சத உருவெடுத்து கணி முன் ரத்தம் சிந்தி நிற்க ரட்சிக்க இயலவில்லை இயற்கையிடம் எதையுமே . ஆதவன் அந்திவானில் அஸ்தமிப்பதும் ஏனோ ? ஆவேசம் கொண்ட அலைகடல் பொங்குவதும் ஏனோ ? அர்த்தம் தருவேன் சிதையா இதயம் என்னிடம் இருந்தால் .
பிரியசகி

நடுநிசி தாண்டிய நிசப்தத்தின் அமைதி துல்லியமாய்க் குலைந்தது போலிருந்தது.
"சரக் சரக். சரக் சரக்." 'மரக்கிளைகளிலா அல்லது மணல் மூடைகளின் முன்னேயோ?" சரியாய் தீர்மானிக்க முடியவில்லை. காற்பெருவிரலில் ஊன்றி கைகளில் தாங்கியிருந்ததை 'சடாரெனத் தூக்கி தோள்களில் பொருத்தி கணிகளை இருட்டுக்குள் வீசினான்.
"சரக். சரக்." தூரத்தே மரங்கள் அசைவது தெரிந்தது. குரங்குகளாக இருக்கக்கூடும் . ஒருவேளை பாம்புகளாயும் இருக்கலாம்' சின்னதாய் ஒரு நடுக்கம் உடலோடு ஒட்டிக் கொள்வதை உணர்ந்து கொள்ள முடிந்தது. நேற்றும் கூட இது பற்றி அவன் பேசியிருந்தான்.
"அண்ணை. எனக்குச் சின்னனில இருந்தே பாம்பெண்டா சரியான பயமணர்னை."
அவரிடமிருந்து மிகப்பெரிதான சிரிப்பொன்று வெளிவந்தது. "பரவாயில்லை. உனக்கு பாம்புக்குத்தான் பயம். இங்கை பேய், பிசாசுகளுக்குப் பயப்பிடுறவங்களுக்கும் இருக்கிறாங்கள்." கொஞ்சம் பொறு. வாறன்." எழுந்து சென்றவர் அதை எடுத்து வந்து கொடுக்க கைகளில் வாங்கிக் கொண்டான். "மினுமினுத்தது"
"இந்தா இதை வைச்சுக் கொள். தேவைப்படேக்கை மட்டும் தலையிலிருந்து கிட்டத்தட்ட ஒரு சாணி கீழே ஒரே போடாப்போடு. முடிஞ்சிடும்."
"கொல்லச் சொல்லுறியளோ ? " அவசரமாய் இடைமறித்துக் கேட்டான். மாறனை நோக்கினான். அவன் விழிகள் லேசாய் மூடி யிருப்பது தெரிந்தது.
பொடியன் நித்திரை கொள்ளுறான் போல கிடக்கு"
( C மூச்சு -மூச்சு -2 >

Page 16
மாறன் இவனோடு இணைந்து கிட்டத்தட்ட ஒரு வாரம்தான் ஆகியிருக்கும். ஒன்றிரண்டு வயது இளையவனாயிருப்பான் போலிருக்கும். "அணர்ணை எண்ரை நேரம் வந்த உடன் சொல்லுங்கோ." என்று உட்காருபவனை சில சமயங்களில் தூக்கத்திலிருந்து எழுப்பிவிட வேண்டியிருக்கும்.
சென்ற வாரம் வரை இவனோடு இணைந்திருந்த நிலவன் இப்போது இல்லை. சூரியன் இரத்தம் சிந்திக்கொணி டிந்த ஒரு பொழுதில் உருமறைப்புப் பணிகளில் மும்முரமாய் ஈடுபட்டிருந்தவனின் காதினை பக்கவாட்டாய்த் துளைத்து நெற்றியை சிதறச் செய்த சில அல்மினியச் சிதறல்கள் அவனைக் குப்புற வீழ்த்தி நிலத்தை முத்தமிடச் செய்திருந்தன.
இறுதி வரை ஓரிரண்டு மணி துகள்கள் அவன் உதட்டோரம் பிரியமறுத்து உட்கார்ந்திருந்தமை ஞாபகத்தில் வந்து போனது.
"சின்னணில எனக்கு மணி சாப்பிர்றதெண்டாச் சரியான விருப்பம் ஒவ்வொரு நாளும் அம்மாட்டை அடி வாங்கிறது அதுக்குத்தான்.” எப்போதாவது நிலவன் வீட்டைப் பற்றிப் பேசினால் கணிடிப்பாய் சொல்வான். “ இப்பவும் நீ மண்ணால தானே பல்லுத் தீட்டிறனி." அவனைச் சீண்டுவதில் அலாதிப்பிரியம் இவனுக்கு .
"அவசரத்துக்கு என்ன செய்யிறது ? அதுக்காக உன்னை மா திரிப்பல்லுத் தீட்டாமல் இருக்க முடியுமே ?”
"நான் பல்லுத் தீட்டேல்லை எண்டு நீ எப்ப பார்த்தனி.? " சற்றுச் சூடாய் வார்த்தைகள் இவனிடமிருந்து வெளிப்படும்.
“எதுக்குப் பாக்க வேணும் P. உன்னோட கதைக்கேக்கையே விளங்குதே.” நிலவன் சிரிப்பினூடே சொல்வான்.
"சரி. அப்ப கதைக்காதை." என இவன் எழுந்து போக அவர்களது பேச்சு வார்த்தைகள் இரண்டு மூன்று மணி நேரத்திற்கு முறித்துக் கொள்ளப்படும்.
மீண்டும் எப்போது இணைந்தார்கள் எப்படி இணைந்தார்கள் என்று யாருக்கும் தெரியாத அளவிற்கு கைகோர்த்து திரிவார்கள்.
"உங்கடை பிரச்சனைக்கை இனி தலையிடவே மாட்டம்" அவனுக்காதரவாயும் இவனுக்காதரவாயும் குரல் கொடுத்தவர்கள் இறுதியில் இப்படித்தான் சொல்வார்கள்.
 

மாறன் எழுந்து கொள்வது தெரிந்தது. கணிகளை அழுத்தித் துடைத்து விட்டுக்கொணர்டவன் தன் கைக்கடிகார விளக்கை அழுத்தினான். வெளிர் பச்சை நிறம் அங்கிருந்து ஒளிர்ந்தது.
"மாறன்"
“fo...” "இங்கை பரவாயில்லை. ஆனா வெளியான இடங்களில் இப்பிடி நேரம் பாக்காதயென்ன. உன்னையோ உண்ரை கையையோ சிதறடிக்கிறதுக்கு இந்த வெளிச்சம் போதும்." மெதுவாகச் சொன்னான். "சரியண்ணை.” என்றவன் அருகே மணல் மூடையில் சரித்து வைக்கப்பட்டிருந்ததை கையினில் ஏந்தியவாறே எழுந்தான்.
"நீங்க இருங்கோ அண்ணை. நான் பாக்கிறன்." "ம். வேண்டாம் இண்டைக்கு முழுக்க நானே பாக்கிறேன். நீ இரு." கைகளை அசைத்து அவனை இருக்கச் சொன்னான்.
“இல்லையணிணை.ரெண்டு மணியாச்சு. இனி என்ரை நேரம்
. நீங்க இருங்கோ."
"இல்லையடாப்பா. நான் நாளைக்கு வீட்டுக்குப் போறன்.
ரெண்டு நாளைக்கு அங்கைதான் நிப்பன். நீ இணிடைக்கு இரு.நானே.” தொடர்ந்தவனை "அம்மாட்டைப் போறியளோ" என்ற கேள்வியோடு இடைமறித்தான் மாறன். அவன் விழிகளில் சின்னதாய் ஒரு சோகம் மின்னியதாய்த் தெரிந்தது.
"வேண்டாமண்ணை. பிறகு பழக்கத்தில வந்திடும். நீங்க இருங்கோ. இல்லையெணர்டால் நில்லுங்கோ."
தூரத்தே யானைகள் பிளிறும் சத்தம் மெலிதாய்க் கேட்டது. “ எடே தம்பி. பிள்ளை. நான் சொன்னன். இண்டைக்கு காலமை இருந்தே காகம் கத்தினது. ஆரோ வரப்போகினம் எண்டு. பாத்தியே."
"ஒமம்மா. நானும் போன கிழமை யோசிச்சனான். ஒரு வருசமாச்சு. தம்பியை இங்காலைப்பக்கம் காணேல்லையெண்டு .
வந்திட்டான்."
péਲ 2

Page 17
அம்மாவிற்கும் அக்காவிற்கும் சந்தோசம் தாங்க முடியவில்லை. சொல்லு ராசா. எத்தனை நாள் நிப்பாய்? என்னென்ன வேணும். சில்லுக்கழி செய்து தரட்டே?” அம்மா ஆசையாய்க் கேட்டாள். சந்தோசமாயிருந்தது. அம்மாவை அணைத்துக் கொண்டான். "ஒமம்மா.. எல்லாம் செய்யுங்கோ. ஒரு பிடி பிடிக்கிறன்" அம்மாவோடு வந்து அடுக்களைக்குள் அமர்ந்து கொண்டான்.
காட்டின் மெல்லிய தடிகளை வெட்டி வரிசையாய்க் கட்டி களிமணி பூசப்பட்டு சிதிலமடைந்த கிடுகுகளை வெறும் குப்பைகளாய் மேலே தாங்கியிருந்த அடுக்களை அடுத்த பெருமழைக்கு தன் ஆயுளை முடித்துக் கொள்ள தயாராயிருந்தது. அணிணாந்து பார்த்துக்
கொணர்டான்.
"பிள்ளை. லோஜினி அக்காட்டைப் போய் பாதி தேங்காய் வாங்கியா. நாளைக்குத் தாறனெணிடு சொல்லி." அக்கா வாங்கி வந்து இவனருகில் உட்கார்ந்து துருவத் தொடங்கினாள்.
அக்கா என்ன மாதிரி உன்ர படிப்பெல்லாம்.போன முறை வரே க்க தொடர்ந்து படிக்கப் போறன் எண்டு சொன்னாய். எப்பிடிப் போகுது?” அக்கா நிமிர்ந்து நோக்கினாள்.
"ஒமடா. நான் விரும்பினது கிடைச்சிருக்கு. எணர்டாலும் இஞ்சை அது செய்ய முடியாதடா. ஊருக்குத்தான் போகவேணும். என்ன செய்யிறதெண்டே விளங்கேல்லை."
"இதிலையென்ன..? ஊருக்குப் போங்கோவன்." இயல்பாய் அமைதியாய்ச் சொன்னவன் "ஓம் ராசா. அப்பிடித்தான் யோசிச்சிருக் கிறம்." என்று அம்மா சொல்லவும் தொண்டைக் குழிக்குள் ஏதோ அடைத்தது போல உணர்ந்தான்.
“வேறை என்னப்பணி செய்யிறது.? உன் ரை அப்பா போனாப்பிறம் உன்னை நம்பியிருந்தன். அதுவும் நடக்கேல்லை. இனி இவள் ஒரு நிலைமைக்கு வந்தாத்தான் உண்டு. உண்ரை மாமாவும் கடிதம் போட்டிருந்தவர். பிரச்சனையில்லையாம். அவற்றை மகன் ராகுல னும் படிக்கத் துார இடம் தானி போறவனாம். பிரச்சனையில்லையாம். என்னதான் இருந்தாலும் உன்னை விட்டிட்டு என்னணிடு போறதெண்டு.” அம்மா தொடர்ந்து பேச முடியாமல் நாத்தழுதழுத்தது. அழத்தொடங்கினாள்.
( C மூச்சு -2 )
 

“ஏணிப்ப அழுகிறியள். உதில பக்கத்தில தானே போகப் போறியள். வர வேணுமெணி டால் உடன வந்திட்டுப் போறன்." உதட்டில் சிரிப்பை வரவழைத்துச் சொன்னபோதும் ஆழ்மனதில் ஏதோ அழுத்தியது.
அம்மா கணிணிரைத் துடைத்துக் கொண்டு ஆர்வமாய்க் கேட்டாள்
"அப்ப அங்கை வருவியே." "ம். வரலாம். வராமலும் போகலாம்." அவன் முகம் இறுகியது. "ஆனா ஒண்டு நான் வாறனோ இல்லையோ நாங்கள் கட்டாயம் வருவோம்."
அம்மாவுக்குப் புரியவில்லை போலிருந்தது. மதியச் சாப்பாடு முடித்துவிட்டு முற்றத்தில் நின்ற இளந் தென்னையின் கீழ் பாய் போட்டமர்ந்து கொண்டான். எதிர் வீடு வெறிச் சோடிக்கிடப்பது தெரிந்தது. காலையிலிருந்தே அம்மாவைக் கேட்க வேணர்டுமென்றிருந்தான். சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எதிர்வீட்டைச் சுற்றி நின்றிருந்த கச்சானும் , கீரையும் இன்னும் பலவும் இல்லாதொழிந்து அவ்விடத்தை புற்காடு ஆக்கிரமித்திருந்தது. தெரிந்த முகங்கள் கூட காலையிலிருந்து தென்படவில்லை.
"உந்த இடத்தில நல்ல காத்து வரும். பொறு தலையணை எடுத்தாறன்” அம்மா தலையணையைக் கொடுத்து விட்டு அருகில் அமர்ந்து கொணர்டாள்.
"அம்மா. உந்த முன் வீட்டுக்காரர் எங்கை போட்டினம். காலமை இருந்தே காணம்." நிமிர்ந்து படுத்துக் கொண்டே கேட்டான். "அவையோ. இப்ப ஒரு ஐஞ்சாறு மாசத்துக்கு முன்னம் தான் அவை கொழும்புக்கு போனவை."
"அப்பிடியே.உங்கை என்ரை வகுப்பில படிச்ச ஒருத்தி இருந்தவளெல்லே." வெகு யதார்த்தமாயும் வெகு இயல்பாயும் இருக்கவேண்டுமென்பதற்காய் அதிக சிரத்தை எடுத்து அந்தக் கேள்வியைக் கேட்டான்.
"ஒ. சர்மிலி எணர்டு சொல்லி. அவளின் ரை கலியான அலுவலாத்தான் போயிருக்கினம். லண்டனில் ஆரோ மாப்பிள்ளையைப்
பேசியிரிக்கினமாம்." மெல்லிய இதயச் சுவரோரம் கூரிய ஊசியொன்று
( C மூச்சு 2) G310 O e ufirinių D )

Page 18
லேசாய்க் கீறிச் சென்றது போலிருந்தது. அமைதியாயிருந்தான். கீற்றுக்கள் ஊடாக உள்நுழைந்த வெயில் தலையைச் சுட்டது.
"தம்பி. உன்னோட போனமுறை வந்தான். அவன் வரே ல்லையே.?" சில நிமிட நேரம் அங்கு நிலவிய அமைதியை அம்மா கலைத் தாள். அவள் நிலவனைத்தான் விசாரிக்கின்றாள் என்பது புரிந்தது.
“இல்லையம்மா..?" "ஏன் ஏதேனும் சண்டையே உங்களுக்குள்ளை..?” அம்மாவை சில கண நேரம் நேராய் நோக்கியவன் விழிகளை வானத்திற்கு வீசி விட்டுச் சொன்னான்.
“அவன் இனி வரமாட்டான் அம்மா." அம்மா புரிந்து கொண்டாள். "ம்ம். இங்கை வந்திருக்கேக்கை எவ்வளவு கலகலப்பாய் இருந்தவன்.ம் எப்பத்தான் இதுக்கெல்லாம் முடிவோ ?"அவளிடமிருந்து ஏக்கம் கலந்த பெருமூச்சொன்று வெளிப்பட்டது.
அம்மாவின் கன்னங்களில் நீர் கோடிட்டிருந்தது. "சரி அம்மா நான் வெளிக்கிடப்போறன். " அவன் மோட்டார் சைக்கிளை உருட்டிக் கொணர்டு வாசல் வரை வர அம்மாவும் அக்காவும் கூடவே வந்தார்கள்.
"இடையில ஒருக்கா முடியுமெண்டால் வந்திட்டு போ." "சரி.." என்ற போதும் இப்போதைக்கு முடியாதென்றே மனது சொல்லிற்று.
"கவனம் தம்பி போறது. றோட்டில இறங்கினா கணிமணர் தெரியாமல் உங்கட வாகனங்கள் தான் ஒடித்திரியுது."
"தடை உங்களுக்குத்தான் இல்லை. வாகனங்களின்ரை வேகத் திற்குப் போடலாம்" அம்மாவை இடைமறித்து அக்கா சொன்னாள். பலமாய்ச்சிரித்துக் கொண்டே ஏறி உட்கார்ந்தவன் கண நேரச் சிந்தனையின் பின் வேகமாய் இறங்கினான்.
"என்ன.?" அம்மா கேள்வியாய்ப் பார்த்தாள். “என்ரை Luff)." "நீ நில். நான் போய் எடுத்தாறன்." அக்கா போய் எடுத்து வந்து கொடுத்தாள்.
"உண்ரை ஞாபகமாய் இதைத்தந்துவிட்டுப் போவன்." அவள்
sugegungo
 

கேட்கவும் "அதெப்பிடி..?" எனக் கேட்டவாறு வாங்கி எதேச்சையாய் புரட்டியவனின் கண்கள் கடைசிக்கு சில பக்கங்கள் முந்திய அவ்விடத்தில் நிலைக்குத்தி நின்றன.
'கிழிந்த கிடுகுகள் நிறைந்த வேலி
முற்றத்தின் மத்தியில்
பெயர் தெரியா
ஒரு ஒற்றைப் பூமரம்
எப்போதாவது
எனைச் சந்தித்து
சில மொழிகள் பேசும்
இரு விழிகள்."
அந்தத்தாளை தனியே பிரித்தெடுத்து இரண்டாய் நான்காய் கிழித்து காற்றில் வீசினான். மெல்லிய இதயச் சுவரோரம் கூரிய ஊசி ஒன்று இலேசாய்க் கீறி சென்றது போலிருந்தது.
"இந்தாக்கா . நீயே வைச்சுக்கொள்."
அம்மாவின் கணிகள் சிவந்து போயிருந்தன. ஆறுமாதங்களாய் அவன் வருவான் என்றிருந்த நம்பிக்கை காலை அக்கா சொன்ன செய்தியிலிருந்து அடியோடு தகர்ந்து போயிருந்தது.
காலை வெகு சீக்கிரமாய் வீடு திரும்பிய அக்கா பதற்றமாய் உள்ளே ஓடி வந்து கட்டிக்கொண்டு அழத்தொடங்கிய போதும் அம்மாவிற்கு சிறிது நேரம் எதுவும் புரியவில்லை.
"என்ன பிள்ளை. வெள்ளன வந்திட்டாய்.ஏன் அழுகிறாய். வழியில ஏதாவது சேட்டை விட்டவங்களே." அவளை அணைத்துக் கொணர்டே கேட்டாள்.
"அம்மா. தம்பியன் இனி வரமாட்டான் அம்மா. அவன் இனி வரமாட்டான்." அக்கா விக்கி விக்கி அழுதாள்.
"என்ன." அதிர்ச்சி மின்னல் அம்மாவை கண நேரத்தில் தாக்கியது. அக்கா எல்லாம் சொன்னாள்.
"நான் பார்த்தேனம்மா. அது தம்பி தான். இழுத்துக்கொண்டு போனவங்கள். அதால போய் வந்த ரெண்டு மூண்டு சனமும் செத்துப்போட்டுதுகள். எல்லாரையும் கொணர்டு போனவங்கள்.
கடைசியாய் அவனைப் பாக்கத்தான் முடியேல்லை. கவலை தீர

Page 19
சத்தமாய் அழக்கூட முடியாமற் போட்டுதே." அக்கா அழுகையை அடக்கிச் கொர்ைடு பேசினாள்.
கணிகள் சிவந்திருக்க அம்மா வாசலில் அமர்ந்திருந்தாள். 'கேற றை திறந்து கொணர்டு மாமா வருவது தெரிந்தது. அவரது படபடப்பும் அவசர மும் விடயம் அவருக்கும் தெரிந்து விட்டது என்பதை உணர்த்தின.
"ஐயோ. ஆண்டவா ஏன் இப்பிடிச் சோதிக்கிறாய்.” தலையில் அடித்துக்கொணர்டு மாமா உட்கார்ந்தார்.
அம்மா அமைதியாய் உட்கார்ந்திருந்தாள். அவள் விழிகளில் இப்போது நீர் வழியாதிருக்க அவை எங்கோ வெறித்து நோக்கியிருந்தன. மாமா தொடர்ந்து அழுதுகொண்டிருந்தார்.
"எனக்குத் தெரியுமன்ைனை. நீங்க அழாதேங்கோ. இனியெல்லாம் நாங்கள் இதுக்கு அழக்கூடாது."
மாமா அம்மாவை நிமிர்ந்து நோக்கினார் "எப்பிடி அழாமல் இருக்க முடியும். போட்டு வாறன் எண்டு சொல்லிப் போட்டு காலமை வெளிக்கிட்டவன் அதுக்குடனை சவமா வந்தா எப்பிடி அழாமல் இருக்க முடியும்."
'அணிணை. என்ன சொல்லுறியள்." எங்கோ வீசியிருந்த பார்வையை சடாரெனத் திருப்பிக் கேட்டாள்
அம்மா
"ராகுலன். காலமை பள்ளிக்கூடம் போனவன்.போன இடத்தில இது நடந்து போட்டுது. ஆஸ்பத்திரியில கொண்டு போய்ப் போட்டிருக்கிற ாங்கள். கைசிதறிப்போய்." மாமா தொடர்ந்தார். அம்மாவின் காதுக்குள் அக்கா சொன்னவை மீண்டும் மீண்டும் கேட்டன. அதால போய் வந்த ரெண்டு மூணர்டு சனமும் செத்துப் போட்டுதுகள்
"ஐயோ. அநியாயமாய் அவனைப் பறிகொடுத்திட்டமே. காலமையும் போகேக்கை இங்கை வந்து எனக்கென்ன மருந்து வேணு ‘மெண்டு கேட்டுக் கொண்டு போனவன். ஐயோ கடவுளே. இந்த அநியாயச் சாவுக்கெல்லாம் எப்ப தான் முடிவோ..?” அம்மா
பெருங்குரலெடுத்து அழத்தொடங்கினாள்.
(சிந்தனையும் கற்பனையும்)
( மூச்சு 2 G4) Celind )

ஆத்ம அருத்தி
* :fr:}; } | ii ) :: ::
சரித்திர நாவல்களினூடு சித்துப் பிரபஞ்சத்தினூடு,
சொல்லொணாத சொப்பனத்தினுாடு செருக்களமும் செம்மீன் கொடியும் செஞ்சிக் கோட்டையும் செருனரின்
கழுவேற்றமும் குதிாைக் குளம்பொலியும் குருதிக்குழம்பிடை
குத்திட்டு நின்ற குறுவாளும் அனு துளைத்து ஆவி
நுழைத்து அஞ்சா நெஞ்சதனில் அழியா அளவிலாற்ற
மறத் தமிழர் நாமென மார் தட்டச் சொன்ன சிறப்பிலக்கண
உரித்தை மித்தையுணர்வு மல்கிய மாத்துவர் மலைவுதலினின்று
மடியாது பேண இச் சொற்பிரபஞ்சத்தில் மா கபிரளயம் தானின்று
நாளை - உணர்மைப் போரில் உயிர் துறந்து வீரமரணமெய்தி நான் வீழ்ந்து கிடப்பினும் தமிழனே! அன்று வந்தென் நுதலின் மீது நாமமிட்டு, வாய்மை வழுவா வாய்க்கரிசியிட்டு
அதரங்களிடை அரவின் பால் வார்த்து செவிதனில் செந்தழிப்பா ஒதி சென்னி மீது செந்தியிட்டு விடை கொடு ! எனதுணர்வுகளை மட்டும்
உடன் கொண்டு செல் காலத்தின் கடை நொடிப் பொழுது வரை 11

Page 20
உறவொன்று கண்டுவிட்டு மென்மையாகத் தீண்டிச்
உவகையுடன் உனை நாடி செல்லும்
சொல்லி வைத்தேன் எண் மனதை இளந்தென்றல் . நீ சேருமிடம் சொல்வா யென்று .! சேருமிடம் சென்று வந்து
கம் என்னை நெகங்கி வந்தாய் நித ib(T) :)) கூறும் மொழி கேட்பதற்காய்
இகமாக வருடிச் சென்றாய் * W W இத T) tQ f) தினம் மலரத் துடிக்கின்றேன்
சுதி இழந்து சுருங்கும் போது
இனம் புரியாக்கலக்கத்தில் ..! சுகமாக ஏந்தி நின்றாய்
புயலாய் மட்டும் நெருங்காதே பூட்டி வைக்கும் பொறுமைகூட இயலாது மலர்வதற்கு جميع உனைக்கண்ைடு பொங்குகிறது
மடல் சோர்ந்து வீழும் வரை ஊட்டிச்சென்றாய் உணர்மைகளை
தென்றலே எனைத் தீண்டாதே.! தட்டிச் சென்றாய் உணர்வுகளை
XV - WM ஏனெனில். விட்டுச் செல்ல மனமின்றி
- பரவசமாய்ப்பார்த்து - தொட்டுச் செல்லும் 'தென்றல்’ நீ .! T ரதது - Lது பார்ப்பதுவும் கேட்பதுவும் மணம வசப பூதது நல வசமிழந்து நிற்பதுவும் உறவின் நினைவில் - மிதம்
எதற்காக ? எனக்கேட்க ! மிடுக்குடன் மிளிர்வது .
பவ்யமாய் பதில் பகர்ந்தாய் "சிவந்திருக்கும் செவ்வந்திப்பூ" "உனக்குள் ஒர் நெருடல்“ என்று .! என்பது இன்னுமா புரியவில்லை
இணையத்தில் லஞ்சம்
வாங்கிய போது கைதுசெய்தார்கள் . கொடுத்த போது விடுதலை செய்தார்கள்
( மூச்சு 2> (36) (உயிர்ப்பு
www.uyirppu.cjb.net
 
 

- நமமவன -
ஏலர் தேரப்பர்கவிலrைt?
ஈழத்தில் தமிழனின் வரலாறு எப்போதிருந்து ஆரம்பமாகியது? என்ற கேள்விக்கு பல நூற்றாண்டு காலங்களுக்கு முன்னரேயே என பதில் சொல்லிவிட்டுப் போவது சுலபம் ஆனால். அதற்கான ஆதார ங்களை தேடுவதில் வெளியிடுவதில் நம்மில் யாருக்கேனும் அக்கறை யிருக்கின்றதா என்று திருப்பிக்கேட்டால், மனவருத்தம் தரக்கூடிய பதில்தான் வந்தடையும்.
ஈழத்தில் தெ மண்மை மிகு தமிழன் வரலாற்றை சிதைத்தெறிந்து மழுங்கடித்து, மறைத்து விட வேண்டும் என்கின்ற ஓர்மத்தோடு செயற்படும் வரலாற்றுத் திரிபாளர்களின் ஆர்வத்தினையும், அவற்றை யெல்லாம் முறியடித்து, உலகிற்கு உண்மையை உணர்த்த வேண்டும்
என்கின்ற நம்மவர்களினது ஆர்வத்தினையும் கருத்திலெடுத்துக் கொண்டால்
முன்னையது தான் முடிவிலியாய் நீளும்.
::عي-.-............
இத்தனைக்குமிடையில் மொழி, இனப்பற்றோடு தம் கலாச்சார விழுமியங்களை கட்டிக்காத்து, வீரமும் சோகமும் துரோகமும் இழையோடிய நம் வரலாற்று வழித்தடம் திசை மாறக்கூடாது என் பதற்காக தம் வாழ்வினை அர்ப்பணித்த யாராவது ஒருவர் நம்மிடையே இருக்கிறாரா? என உரத்துக் கேள்வியெழுப்பினால் இருந்திருக் கின்றேன் என கையுயர்த்துகின்றார் ஒருவர்.
கலைஞானி குரும்பசிட்டி செல்வரத்தினம் 'one man army தனி மனித இராணுவம்) என்கின்ற ஆங்கில பதத்தை ஞாபகப் படுத்துகின்ற அற்புதமனிதன், திரளுவதற்கு வாய்ப்புக் கிடைக்காத அடம்பன் கொடி. ஆனாலும் மிடுக்குடன் மிளிர்ந்தது.
தமிழ்ப் பண்பாடு கூறும் கல்வெட்டுக்கள், பழைய ஓலைச்சுவடிகள்,
(உயிர்ப்பு ) )
でエー

Page 21
சிற்பங்கள், பத்திரிகை நறுக்குகள், ஒவியங்கள் என அத்தனையுமே தன் தனிமனித வலுக்கொண்டு பத்திரப்படுத்தி வைத்திருந்தார் கலைஞானி.
ஈழத்தில் தமிழன் வந்தேறு குடியல்ல. அவனுக்கென நீண்டதொரு வரலாறு உண்டு என அடிக்கடி உறுதிப்படுத்தும் அவருக்கு இவ்வாறான தொரு எண்ணம் எப்படி ஏற்பட்டது? சுவை ததும்ப அவரே கூறுகின்றார்.
"1947ம் ஆண்டு மாசி மாதம் 23ந் திகதி பாடசாலை மாணவனாக இருந்த எனக்கு சித்திர ஆசிரியர் திரு.கந்தையா சரியாக படங்கீற வில்லை என்பதற்காக தணடித்தார். அத்தண்டனையின் தழும்புகள் முதுக்குப் புறத்தில் படிந்திருந்தன. அவற்றை பெரிய ஆச்சியோ அல்லது வீட்டிலுள்ளவர்களோ கண்டு விடக்கூடாது என்பதற்காகத் துவாய்த்துண்டு ஒன்றினால் முதுகைப் போர்த்தியபடி கிணற்றடியில் மரங்களின் அடியில் கிணி டிக் கிளறிக்கொணர்டிருந்தேன். அப்போது மூன்று காசுகளும் , ஒரு சங்கும் எண் கண்ணில் பட்டது அதனை எடுத்துப்பத்திரப்படுத்திக் கொண்டேன். பின்னர் அவற்றை நான் படித்த யூனியன் கல்லூரியில் காட்சிக்கு வைத்தேன். அதற்காக எனக்கு இரண்டு வெள்ளிப்பதக்கங்கள் பரிசளித்தார்கள் அன்றுமுதல்
'antiques எனப்படும் தொல்பொருள் மற்றும் அரும் பொருட்களை
சேர்க்கலானேன்.
இத்தகைய அதீத முயற்சி யில் கலைஞானி கண்ட, கடந்த இடர்பாடுகள் ஏராளம். தன் முய ற்சிகளுக்கு யாருமே ஆதரவுக்
கரம் நீட்டி தன்னோடு இணைய
வில்லை என்கின்ற ஆதங்கம்
இவருக்கு இறுதிவரை இருந்தது. | மாமனிதன் கலைஞானி
தமிழின புத்திஜீவிகள் எனப்படு வோர் இவரது சேகரிப்புக்களை அறிவியற் பார்வையற்றது என நிராகரித்தமையானது தமிழினத் தின் துரதிஷ்டம் ஒன்று என்றே குறிப்பிட வேண்டும்.
இருந்த போதும் 1991ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடந்த முத்தமிழ் நிகழ்வின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திருவேலுப்பிள்ளை
(மூச்சு 2 ) (38) (உயிர்ப்பு )
 
 

பிரபாகரன் அவர்களால் 'மாமனிதர்" பட்டம் வழங்கிக் கெளரவிக்கப் பட்டமையானது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு விடயமாகும்.
பெறுமதி உணர்ந்த வெளிநாட்டவர்கள் பலர் அவரது சேகரிப் புக்களை கொள்முதல் செய்ய முன்வந்ததையும் அதற்கு அவர் உடன் படாததையும் பல பேட்டிகளின்போது கலைஞானி குறிப்பிடுகின்றார். "ஈழத்துப் பாடம்பரியம் எமைவிட்டு வெளியே எங்கும் போகக் கூடாது. கொழும்பிலிருந்து கார் வாடகைக்கு அமர்த்தி வந்திருந்த அமெரிக்கத் தம்பதிகள் 50000 ஸ்ரே லிங் பவுணி விலைக்கு எனது சேகரிப்புக்களை விலை பேசினார்கள். ஆனால் நான் மறுத்துவிட்டேன் என பெருமை!! மன் கூறுகின்றார்."
வழமை1ே1 லவே இந்நாட்டின் கொடிய யுத்தம் கலைஞானியின் கடும் உழைப்பின் மீதும் தன் கோரப்பற்களை பதித்துக் சென்றது. 86ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கடும் ஷெல் வீச்சு களுக்கும் விமானச் குண்டு வீச்சுக்களுக்கும் தப்பிய எஞ்சிய அவரது சேகரிப்புக்கள் 1995 இடம்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் இடப்பெயர்வோடு முற்றாக என்று சொல்லக்கூடிய அளவிற்கு அழிந்து போயின. அச்சம்பவத்தை சோகம் ததும்பிய விழிகளோடு கலைஞானி நினைவு கூறுகின்றார்.
“வந்து பார்த்தபோது பணிமனைக்குள் செல்ல முடியவில்லை பின்னர் பல நாட்கள் பலத்த முயற்சிகளின் பின்னர் தான் கை கூடியது. உள்ளே போனால் கணிடவையும் காணாதவையும் தலை யைச் சுற்றச் செய்தன. 2500 ஆண்டு பழைமை வாய்ந்த நாணயம், பவுண், வெள்ளி, நாணயங்கள் உட்பட சகல நாணயங்களும் தொலைந்து விட்டன. ஆறுமுகநாவலரின் சொந்தக் கையெழுத்திலான புத்தகம் சுவாமி ஞானப்பி காசரால் தாவீது அடிகளுக்கு 1926ம் ஆண்டு எழுதிய கடிதம். இப்படிப்பல. எல்லாமே அழிந்துவிட்டன. மரச் சிற்பங்கள் கோடாரியால் பிளக்கப்பட்டிருந்தன."
அதற்குப் பின்பதாகவும் அயராத முயற்சியோடு எஞ்சிய பொக்கிஷங்களை பாதுகாத்து வந்த அந்தத்தனிமரம் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் தன் வாழ்வினை முடித்துக்கொண்டது. நாமெல்லோரும் ஒரு முறை தலை கவிழ்ந்து அவருக்காய் அஞ்சலி செலுத்த வேண்டாம். எங்களுக்காய் வெட்கப்பட்டுக் கொள்வோம்.
(< மூச்சு 2 )

Page 22
சிலப்பதிகாரக் காப்பியத்திலோ
காவியநாயகி அல்லதான் - எனினும் சிலம்புடைக்காவிடினும் கற்பில்
சிறிதும் அவள் குறைந்தவளல்ல !
காலம் செய்த சதியால் கலையரசி
கணிகையர் குலத்தில் பிறந்தாள் விதி செய்த வினையால் கோவலனுக்கு
காமக்கிழத்தியாக்கப்பட்டாள் !
கணிகையர் குலத்தில் பிறந்தாலும்
கற்பிழக்காது காளையொருவனையே கணவனாய்க்கொண்டு வாழ்ந்தவள்
காண்போர் கண்களுக்கு கறைபடிந்தவளானதேன்?
கோவலன் கொல்லப்பட்டதால் கண்ணகி
கொழுத்தி எரித்தாள் மதுரையையே மணாளன் மறைவால் துறவு பூண்டு
மனிதருள் மாணிக்கமானாள் மாதவி !
தண்குலத்தை வெறுத்து தீதகற்றி
ஒருவனுக்கே வாழந்து உயிர்நீத்தாள் பரத்தையர் பலரைப் பாவங்களிலிருந்தும்
விடுபட்டு விடுதலையாக வழிசமைத்தாள் !
மாதவிஎன்பவள் மறுவற்றவளே - இவளை மாசுபடுத்திப் பார்க்காதீர்கள்! விதியால் பிடிக்கப்பட்டு வதைக்கப்பட்டவளை
விரோதியாக்கி சிலம்பினைப் படிக்காதீர்கள் !
ld
TԼուկ
 
 
 
 
 
 

இலங்கை அரசியலில் ஏற் பட்டு வரும் மாற்றங்களை உன் னிப்பாக அவதானித்து வரும் சர்வதேச நாடுகளினது மட்டுமல்ல
இன
மக்கள் அனைவரது மனங்களிலும்
இலங்கையின் அனைத்து
பொதுவான கேள்வி இன்று இதுதான்!
நீக்கப்படுமா ?
நீக்கப்படவேண்டும் என் கிறது.தமிழர் உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் புலிகள் தரப்பு. இவ்வாறான, தம் மீதான தடை நீக்கப்பட வேண்டும் என்கின்ற அவர்களது கோரிக்கை இன்று நேற்று எழுந்ததொன்றல்ல.
சந்திரரிகா குமாரதுங்க தலைமையிலான பொதுஜன
மு ன னைய
பணி டாரநாயக்க
ஐக்கிய முன்னணியின் ஆட்சிக்
காலத்தில் நோர்வே அரசின் அனு சரணையோடு சமாதான முயற்
காலப்
சிகள் ஆரம்பிக்கப்பட்ட
பகுதியிலே இக்கோரிக்கை அவர்
களால் முன்வைக்கப்பட்டது.
நிபந்தனையற்ற பேச்சுக்கு தயார் என அறிவித்து
ஆனால்
விட்டு, புலிகள் நிபந்தனைகளை ஒன்றின் மேல் ஒன்றாக விதிக் கிறார்கள் என அரசு அக்கோரிக் கைகளை மட்டுமல்ல சமாதான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த நோர்வே பிரதிநிதி எரிக்சொல்
ஹெய்மையும் புறந்தள்ளியது.
புலிகள் மேற்கொணர் ட நான்கு மாதகால ஒரு தலைப்பட்ச மோதல் தவிர்ப்பு முடிவுக்கு வர வட பகுதியில் யுத்தம் அக்கினியாய்ச் சுவாலையெடுத்தது. இந்நிலையில் மீண்டும் புதிய அரசின் சமாதான முன்னெடுப்புகளின் போது தம் மீதான தடை நீக்கப்பட வேண்டு மென்பது புலிகளது நிபந்தனை
யா. கோரிக்கையா .p

Page 23
நிச்சயமாய் கோரிக்கை
தான் என்கிறது புலிகள் தரப்பு
ஒரு நாட்டில் தடை செய்யப்பட்ட,
சட்ட ரீதியற்ற அமைப்பாக இருந்து
கொண்டு சமாதானப் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்வது எவ்வாறு தார்மீக நியாயமாகும் எனக் கேட்கின்றார் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் இதனை ஒரு நிபந்தனையாக அல்லாமல் யோசனை யாக அரசுக் குத் தெரிவிப்பதாக அணர்மையில் மல் லாவியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர் மேலும் தெரி
வித்தார்.
இக்கோரிக்கையினை புலி
கள் வலுவாகப் பற்றிப் பிடிப் பதற்கு என்ன காரணம் ? சர்வ தேச அரங் கில் காய்களை நகர்த்தும் அவர்களது அரசியல் மூளைச் செயற்பாடுகளில் இதுவும் ஒன்றா! என்ற கேள்வி எழாமல்
இருப்பதனையும்,
இலங்கையில்
நீக்கப்படுவதன் மூலம்
எதிர்
கொள்வது இலகுவானதாய் விடும்
தடை
சர்வதேச தடைகளை
என அவர்கள் கருதுகிறார்களா என சிந்திக்காமல் இருப்பதனையும்
தடுக்க முடிய வில்லை.
ஆனால் புலிகள் மீதான தடை இலங்கையில் நீக்கப்படுதல் அமெரிக்க வெளியுறவுக் கொள் கையில் எவ்வித மாற்றத்தினையும் ஏற்படுத்தமாட்டாது என அமெ ரிக்கா முந்திக் கொண்டு அறிவித் திருக்கின்றது. அமெரிக்காவில் புலிகள் மீதான தடை தொடர்ந்தும் தொடரும் என்பதனை இக்கருத்து கோடிட்டு உள்நாட்டில் தடைநீக்கப்படுவதில்
காட்டுகின்றதாயினும்
எவ்வித ஆட்சேபனையும் அமெரிக் காவிற்கு இல்லை என்பதனையும்
உட்கொண்டிருக்கிறது.
இனப்பிரச்சனையில் ஒரு காலத்தில் செல்வாக்குச் செலுத்திய இனியும் செல்வாக்குச் செலுத்த வேணர்டுமெனபலரும் எதிர்பார்க் கின்ற இந்தியாவும் புலிகள் மீதான தடை தொடரும் என அறிவித்து விட்டது. பிரிட்டனும் இதே கருத் தினையே தெரிவித்திருக்கின்றது.
ஆக புலிகள் எதிர்பார்ப்பதாக
 
 

கூறப்படும் இவ்விலக்குகள் எட்டப் பட்ட முடியாதவையாகவே இருக்கப் போகிறது. இந்நிலையில் தடை செய்யப் பட்ட அமைப் பொன்றுடன் நடாத்தப்படும் பேச்சுவார்த்தை முடிவுகளில் எட்டப் படும் வரி, யங் களை அமுல்படுத்துவதில் சட்டப் பிர ச் சனைகளை எதிர் கொள்ள வேணர்டியேற்படலாம் என சட்ட வல்லுநர்கள் நியாயான அச்
சத்தை எழுப்பியிருக்கின்றனர்.
தொடர்பிலும் முறிவிலும்
புதிய அரசு இத்தடை விவ காரத்தினை எவ்வாறு கையாளாப் போகின்றது. த.ை எதிர்ப்பாளர் களுக்கு பதில் .ெ 1ால்லி ஆக வேண்டிய நிலையில் , அண்மையில் பாராளுமன்றத்தில் தனது கொள்கை விளக்கப் பிர
பிரதமர்
கடனத்தை வெளியிட்டார். புலிகள் மீதான தடைமூலம் சர்வதேசரீதி யில் கிடைத்து வரும் சமாதானத் திற்கான ஒத்துழைப்பை இழக்க
வேணி டியேற்படலாம் என அப்போது அவர் தெரிவித் திருப்பதன் மூலம் அவர்கள் மீதான தடை இலங்கையில்
நீக்கப்படுவது உறுதியாகிவிட்டது
என பெரும்பான்மைத் தமிழர்களு க்கு பேரரின வா தரிகளுக்கு
நம்பிக்கை ஊட்டுவதாயும் கடும்
எரிச்சலை ஊட்டுவதாயும் , சிங்கள, தமிழ் , ஆங்கிலப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. ஆனாலும் தடைநீக்கம் தொடர்பான தெளி வான பார்வை வீச்சு அப்பிர கடனப் பேச்சில் இல்லை எனத் தெரிவிக்கும் அரசியல் ஆய்வாளர் கள் பேரினவாதிகளைத் திருப்திப் படுத்த நிலையில் பிரதமர் இருப்பதனையும் சுட்டிக்
வேணர் டிய
காட்டியுள்ளனர்.
இந்நிலையில் பேச்சுவார்த் தை தொடர்பிலும் அல்லது முறிவிலும் அடுத்துவரும் காலப் பகுதிகள் இலங்கையின் அரசியல் வரலாற்றுப் பகுதிகளில் தடித்த சாய்ந்த மற்றும் அடிக்கோடிட ப்பட்ட எழுத்துக்களில் குறிக்கப்பட
வேணி டியனவாகவே இருக்கப்
போகின்றன.
( மூச்சு 2

Page 24
ஒழுக்கத்தை ஒம்ப வைக்க ஒழுங்கமைத்த திட்டமாம் கற்கைக்கு அறிவுரை பகர கணிடெடுத்த மார்க்கமாம் வாழ்க்கைக்கு வழிகாட்ட
வடிவமைத்த பாதையாம்
மற்றவர் சொல்லி வந்து மாணி பாய் உள் மனத்தினிலே சத்திய ஜோதியாய் சுடர்விடும்
சாமான்ய சொல்லில்லை ஒழுக்கம்
ஒழுக்கத்தை புகட்டிட இங்கு ஒழுக்கமற்ற செயல்கள் வழி சமைத்துக் கொடுத்திடுமா ? வினை விதைத்தவனின் தினையின் எதிர்பார்ப்பா ?
பதினைந்து வருடம் காத்திருந்து பள்ளிப் படிப்பு முடித்து பல்கலை ஏகியவனின் படிப்பிற்கு பகிடிவதை மிரட்டலே அறிவுரையா ?
வழிகாட்டல்கள் இங்கு வரம்பு மீறியதால் வக்கிரமாயப் பல உயிர்கள்
வாழ்வின் வாயிலிலேயே வீழ்த்தப்பட்டனவே!
 
 
 

வாய்ச் சொல்லால் சுட்ட வடு வாழ்வீறாக ஆறாதென்பது கலைக்கூட அகராதிகளில் மட்டும்
காணாமல் போனதேனோ ?
நாகரிக வளர்ச்சியில் நகர்ந்து கொஞ்சம் பின் சென்று மனிதனுள் மனிதம் மரணித்து மிருகம் ஜனனிப்பது இதில் !
உன் மனச்சாட்சிக்கு நிஜமாய் ஒரு கணம் சிந்தித்துப்பார் பானையில் இருந்தால்த் தானே
அகப்பையில் வரும்
உள் மனதில் கொணர்ட
உணர்மையான வக்கிரங்களும்
ஒருக்கடிக்கும் எண்ணங்களுமே - ஓங்கி ஒலிக்கின்றன நீவிர் அறியாமலே !
அப்பாவிகளின் கணிணிர்த்துளிகள் தான் இப்பாலைகளை சோலையாக்குமெனின் இங்கு சோலைகளே வேண்டாம் பாலையாகி இம்மண் வரண்டு வெடிக்கட்டும் ! சுதந்திரக் குளிர்காற்று உனை சூடாகத் தழுவும் பரிதாபம் இனியும் வேண்டாம்
தொடர்புகளுக்கு "Ջ_uhiնւլ"
31, காசல் ஒழுங்கை,
மின்னஞ்சல் கொழும்பு-04. இணைய முகவரி uyirppu Ghotmail.com www.uyirppu.cjb. net

Page 25
பத்திரிகை யாளர் ஆர்.சிவகுருநாதன்
மூத்த பத்திரிகையாளரும்தினகரன்பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரும், கொழும்புதமிழ்ச்சங்கத்தின் தற்போதைய தலைவருமான திரு.ஆர்.சிவகுருநாதன் அவர்கள் பத்திரிகை மற்றும் தமிழுலகில் பலராலும் நன்கு அறியப்பட்டவர். பத்திரிகையோடு எனது வாழ்வையே அர்ப்பணித்தவன் என்று கூறிக்கொள்வதில் நான் பெருமையடைகிறேன். எனக்கூறும் இவர் சட்டத்துறையிலும் கணிசமான பங்களிப்பை மேற் கொண்டவர் அண்மையில் உயிர்ப்பு இதழின் செவ்விக்களம் பகுதிக்காக அவரை அவரது இல்லத்தில் சந்தித்தோம். και ξ :
நீங்கள் கடமையாற்றிய தினகரன் உள்ளிட்ட அனைத்து ஏரிக்கரைப்பத்திரிகைகளையும் எடுத்துக்கொண்டால் இலங்கையில் அரசமாற்றம் ஏற்படும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அவைகளின் செய்தி சொல்லும் தொனியில், நோக்கில், சார்புகளில் பெருமளவு மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது எந்த வகையில் பத்திரிகை தர்மமாகும் ?
இந்த ஏரிக்கரைப் பத்திரிகை நிறுவனத்தை நிறுவிய டி.ஆர்.விஜயவர்த்தனா (முன்னாள் மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் தாயின் சகோதரர்) அவர்களின் நோக்கம் உண்மையில் வேறுவிதமாகத்தான் இருந்தது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின்பால் ஈர்க்கப்பட்ட அவர் இலங்கையின் சுதந்திரம் குறித்த தேவையினையும் மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற நோக்கோடுதான் ஏரிக்கரை நிறுவனத்தை ஆரம்பித்தார். அடிப்படையில் டி.ஆர்.விஜயவர்த்தனா கூட ஒர் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளராகவே இருந்தார். இந்நிலையில் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தது. டி.ஆர்.விஜயவர்த்தனா ஒரு ஐ.தே.கட்சி ஆதரவாளராய் இருந்ததாலேயோ என்னவோ ஏரிக் கரையை அரசு பொறுப்பேற்க முன்னரும் கூட அது ஐக்கிய தேசிய கட்சி ஆதரவுப் பத்திரிகையாகவே திகழ்ந்ததை சுட்டிக்காட்ட வேண்டும்.
அப்போதிருந்த எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சியினர் ஆளும் அரசு ஏரிக்கரையினை பொறுப்பேற்றதனை கடுமையாக எதிர்த்தனர். என்எம்.பெரேரா தலைமையிலான கோஷ்டியினர் லேக்ஹவுசை ஏன் பொறுப்பேற்க வேண்டுமென ஒரு புத்தகமே வெளியிட்டனர். ஆனாலும் சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வந்த போது அதுவும் தனது பொறுப்பிலேயே லேக்ஹவுஸை வைத்திருந்தது. உண்மையில் ஆளும் அரசுகளுக்கு இது ஒரு சிறந்த பிரச்சார ஊடகம். இதனைச் சுதந்திரமாக இயங்க
( மூச்சு -2 )
 
 
 
 
 
 

அனுமதிக்க அவர்கள் ஒரு போதும் இடமளிக்க மாட்டார்கள் என்றே நான் கருது கின்றேன். 91 சைப் பலப்படுத்துவதற்கு அரச சொத்தை பயன்படுத்துவதில் தவறில்லை என்றே அவர்கள் நியாயம் கற்பிக்கின்ற ர்கள். செய்திகள் பர்.கச் சார்பாக திணிக்கப்படுகின்றன. அதுவும் சந்திரிக்கா அரசின் பின் மிக மோசமாக இது நடைபெற்றது. ஏரிக்கரை பத்திரிகையின் நம்பகத்தன்மை அற்றுப் போனதற்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்ததற்கும் இதுவே காரணமாயிருக்க வேண்டும்.
இரு பிரதான அரசியல் கட்சிகளும் இலங்கையின் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருந்த வெவ்வேறு காலப்பகுதிகளில் அவை ஒவ்வொன்றினதும் ஊதுகுழலாகச் செயற்பட்ட ஒரே பத்திரிகையில் நீங்கள் பிரதம ஆசிரியராகச் கடமையாற் றியிருக்கிறீர்கள் அந்நிலையை எவ்வாறு எதிர் கொண்டீர்கள் ? மனதளவில் அது சங்கடத்தை ஏற்படுத்த வில்லையா ?
ஆமாம் . இங்,ே த டின் கடமையுணர்ச்சியைப் பற்றி சொல்ல வேண்டியிருக் கிறது. அவர்கள் ( அரசுகள்) ஒவ்வொருவரும் என்னிடம் நம்பி ஒரு பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்கள். நான் அவர்களுக்கு எதிராக எதுவும் செய்யக்கூட 1து. உண்மையில் ஏரிக்கரைப் பத்திரிகைகள் மட்டுமல்ல உதாரணத்திற்கு கம்யூனிசப் பத்திரிகைகளை எடுத்துக் கொண்டால் அக்கட்சிக்கு எதிராக அங்கே எதுவும் எழுத முடியாது. ஏன் உங்கள் உயிர்ப்பினை எடுத்துக் கொள்ளுங்கள் அதனை தமிழாலயம் வெளியிடு கின்றது. தமிழாலயத்திற்கென ஒரு அரசியல் பார்வை இருக்கும் அதனை மீறுவதாக உங்கள் இதழில் எழுத முடியுமா ? முடியாது இன்னமும் உணர்மையைச் சொல்லப் போனால் இந்தப் பத்திரிகைச் சுதந்திரம் என்பதே வெறும் போலிச் சொற்றொடர்.
"பத்திரிகைக்காக எண் வாழ்வையை அர்ப்பணித்தவன்" "பத்திரிகையியல் ஒரு உத்தரவாதமற்ற பாதுகாப்பற்ற தொழில்" "தமிழ்ச் சங்கம் ஒரு முதியோர் இல்லமாகவே தோன்றுகின்றது " "எதற்காக நான் தமிழ்ச் சங்கத்தில் இருந்தேன் என்று கூட சிந்தித்ததுண்டு"
தற்போது கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருக்கின்றீர்கள்
தமிழ்ச்சங்கத்தின் செயற்பாடுகள், திட்டங்கள் குறித்து சொல்வீர்களா ?
தமிழ்சங்கம் 60 வருட காலப்பழமை கொண்டது அதனது ஒரே நோக்கம் தமிழ்வளர்ச்சி ஆனால் முக்கியமான ஒரு பிரச்சனை எங்களிடம் போதிய பணபலம் இல்லை. உண்மையில் இன்றைக்கு சங்கத்தினை ஒரள விற்கேனும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அங்கு நடாத்தப்படுகின்ற
( c pės 25 ( உயிர்ப்பு) )

Page 26
தனியார் கல்வி நிறுவனம்தான் காரணம். என்னுடைய ஆதங்கம் என்னவெனில் தமிழ் மக்களிடையே இவ்வாறான முயற்சிகளுக்கு ஆதர வளிக்க வேண்டும் என்கின்ற ஆர்வம் இல்லை. வசதிகள் இருந்தபோதும் தியாக உணர்வு அவர்களிடம் இல்லை. தவிரவும் தமிழ்ச்சங்கத்தின் செயற்பாடுகளில் இளைஞர்களை காண்பதே அரிதாயிருக்கிறது. அது ஒரு முதியோர் இல்லமாகவே எனக்குத் தோன்றுகிறது. தமிழ்ச்சங்கத்தின் எதிர்காலச் செயற்பாடுகளைப் பொறுத்தவரை நாங்கள் எதிர்நோக்குகின்ற மிகமுக்கியமான பிரச்சனை என்னவென்றால் நடைமுறை யில் உள்ள செயற்குழு ஒரு முடிவெடுத்த பின்னர் அடுத்துவரும் செய ற்குழு அம்முடிவு சரியில்லை. கைவிட்டுவிடலாம் எனச் சொல்லும். நான் சென்றமுறை தலைவராக தெரிவு செய்யப்பட்டு அபிவிருத்தி ஏதாவது செய்யலாம் என முயல்கையில் அடுத்த தலைவர் தெரிவு குறித்து யோசிக்க வேண்டியிருக்கிறது. உண்மையில் எதற்காக நான் இதிலே இருந்தேன் என்றுகூட சில சமயம் நான் சிந்தித்ததுண்டு.
இறுதியாக இலங்கையில் பத்திரிகையாளர் நிலைபற்றி
நிச்சயமாக கூறவேண்டும் . முக்கியமாக சேவைப் பாதுகாப்பு இல்லை, உத்தரவாதம் இல்லை என்பன பெருங்குறைபாடுகளாகும் சில வேளைகளில் இப்பத்திரிகைத் துறையை தேர்ந்தெடுத்தது சரியா பிழையா என்று கூட சிந்தித்ததுண்டு. உண்மையில் பத்திரிகையினை முழுநேரத் தொழிலாக கொள்வது இலங்கையில் மிகவும் சிரமமானது. என்னோடு இணைந்திருந்த ஒருவர் இறுதிக்காலத்தில் மிகவும் சிரமப்பட்டு பின்னர் ஒருவாறு கனடா சென்று அங்கு இறந்து விட்டார். இன்னுமொருவர் தினபதி பத்திரிகை யில் கடமைபுரிந்தவர். இப்பொழுது வெள்ளவத்தை பம்பலப்பிட்டி பகுதி களில் பிச்சை எடுத்துக்கொண்டு திரிகிறார். இலங்கையில் பத்திரிகை யாளர்களின் நிலைபற்றி விளக்க இந்த ஒரு உதாரணமே போதுமென நினைக்கின்றேன். நம்முடைய கேள்விகளுக்கெல்லாம் பொறுமையோடு பதிலளித்த ஆர். சிவகுருநாதன் அவர்கள் ஊடக மற்றும் எழுத்துத்துறையில் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கான பத்திரிகையாளர் பயிற்சிப் பட்டறை யொன்றினை தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்து நடாத்தி வருவதாயும் அதில் கலந்து கொள்ளுமாறும் வேண்டுகோள் ஒன்றினையும் விடுத்தார்.
சந்திப்பு உயிர்ப்புக்குழு
C உயிர்ப்பு
 
 
 

ܥ ܚܙ Hé út á i š ž č.” KAWAYATA ، سُمكه منحهم نعم، من مكسم "شسس
i
வாழ்த்துகின்றோம்
புதிதாய் புயலாய், புலர் வாய் - காலப் பதிவாய், கலையாய் ஒளியாய் - தமிழ்
நதியாய் நனவாய் நெருப்பாய்
உதித்தாய் உணர்வாய் உயிர்ப்பாய்
Dr. G. o buldooe. Dr.1.ஜெபநாமகணேசன்
யாழ்ப்பாணம்
2 222222222s,
22, 22 2222 422^2 2. / メ / .... - - Y

Page 27
5U 5 TITI
E
 

55)g Isaf, CTIGITTT)
L K S LLLLL LL LLLLL L L L L L L LLL S E LLLLLL LLS