கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சைவ தூஷண பரிகாரம்

Page 1
DF at 626)
யாழ்ப்பாணத்
鷗i匹。翌Jl@亞 駐
(G) eyf Lj
ஆறு மு ே வித்தியா நுபால 25 தங்கசாலேத ெ

Li fidis J. Ĥ.
து கல்லூர்
TAJNË 59 alfa, Sif
莒国
币m Gu 50 f
ன அச்சகம் தரு சென்ன
விலை ரூ. 2.5

Page 2

கணபதி அக்ண. திருச்சிற் றம்பலம்.
சைவதுTஷண பரிகாரம்
பூநீலபூரீ ஆறுமுக நாவலரவர்கள்
சிதம்பா சைவப்பிசகாச வித்தியாசாலைத் தருமபரிபாலகர்
ச. பொன்னுஸ்வாமி அவர்களால் Qg air ar: வித்தியாதுபாலன அச்சகத்தில்
அச்சிடப்பட்டது

Page 3
8 - ம் பதிப்பு. அன்முகி, ஆவணி.
செப்டம்பர், 1955.
( உரிமையுடை யது.)
வித்தியாதுபாலன அச்சகம், நெ. 300, தங்கசா?லத் தெரு, சென்னை-1.

می சிவமயம்.
கடவுள் வணக்கம்
சீர்பூத்த கருவிநூ லுணர்ச்சி தேங்கச்
சிவம்பூத்த நிகமாக மங்க ளோங்கப் பார்பூத்த புறச்சமய விருள்க ணfங்கப்
பரம்பூத்த சைவகிலை பாரோர் தாங்கப் பேர்பூத்த சிவானந்தத் தினிது தூங்கப்
பிறைபூத்த சடைமவுலிப் பிரானுர் தந்த வார்பூத்த வறிவிச்சை தொழிலென் ருேது
மதம்பூத்த விநாயகன்ருள் வணங்கி வாழ்வாம்.
உபோற்காதம்
அநாதி பகவானுகிய பரமசிவன் அருளிச்செய்த வேதாக ங்களால் உணர்த்தப்படும் சைவசமயமே சற்சமயமாம். இச் ற்சமயம் வழங்கும் நமது ஆரியகண்டத்திலே மிலேச்சர்க ாகிய பாதிரிகள் புகுந்து, இச்சைவத்தை விளக்கும் சிவ ாத்திரங்களைச் சிறிதும் அறியாமையினுலும், தாங்கள் மன்னே தழுவிக்கொண்ட துர்ச்சமயமாகிய கிறிஸ்து தத்தின் மேல்வைத்த அரபிமானத்தினலும், அப்புன் தத்தைப் பிரசாரித்தலே தங்களுக்கு எளிதிற் பொருள் ரும்வழியாய் இருத்தலாலும், இச்சைவத்தை வாய்மொழி ாலும் குருட்டுவழிமுதலிய பல புத்தகங்களாலும் அகியாய ாகவே தூஷிக்கின்றர்கள்.

Page 4
2
நமது சிவசாத்திரங்களைச் சிறிதும் அறியாதவர்களும், அப்பாதிரிகளது பொய்ந்நூலாகிய விவிலியநூலை முற்றும் வாசியாதவர்களும், தருக்கநூலிலே அற்பமேனும் பயிலாத வர்களுமாகிய சில சனங்கள் அத்தூஷணங்கள் ஒக்குமென்று மதிமயங்கி, கிறிஸ்துசமயப் படுகுழியில் வீழ்ந்து கெடுகின் முர்கள்.
யாம் அதனைக் கண்டிரங்கி, சைவத்தின்மேல் அப் பாதகர்களால் ஏற்றப்படும் தூஷணங்களாலே ஒருவரும் கெடாது சைவத்தின்வழியே கின்று உய்யும்பொருட்டு, அத் தூஷணங்கள் எல்லாவற்றையும் நியாயமாகவே களைந்து மெய்யறிவுச்சுடர் கொளுத்துகின்ற இந்தச் சைவதூஷண பரிகாரம் என்னும் பிரபந்தத்தை, பாமகாருணிகராகிய பாம சிவனது திவ்வியப்பிரசாதத்தினுலேயே செய்தோம்.
திருச்சிற்றம்பலம்.
வேதாநா யகனே போற்றி விண்ணவர் தலைவர் போற்றி மாதொரு பாகா போற்றி மறுசம யங்கண் மாளப் பேதகஞ் செய்வாய் போற்றி பிஞ்ஞகா போற்றி யான்செய் பாதக மனைத்துந் தீர்க்கும் பராபரா போற்றி போற்றி.
திருச்சிற்றம்பலம்.

பூரீ வேதாகமோக்த சித்தாந்த சைவப் பிரகாச சமா சீய
விக்கியா பனம்
அகிலலோகபூஷணமாய், அவித் தியா சோஷணமாய், அநாசாாபேஷணமாய், அநந்தசுகபோஷணமாய், அசே ஷாரிகுலபீஷணமாய், ஆதிசச்சுருதி கோஷணந்தாங்கி அதுலசம்ஸ்கிருதபாஷணமோங்கி விளங்காகின்ற புண் ணியபூமியாகிய பரதகண்டத்திலே, வடக்கின்கண்ணே கிருவேங்கடமும், தெற்கின்கண்ணே குமரியும், எல்லை யாகவுடைய திராவிடம் என்னுந் தமிழ்நாட்டின்கண் அணும், அத்தமிழ்நாட்டாரே பெரும்பான்மையுங் குடி யேறப்பெற்ற ஈழதேசத்தின்கண்ணும் வசிக்கும்
சைவசமயிகளே !
அநாதிமலமுத்தராய், சர்வவியாபகராய், கித்தியாாய், கித்தியாநந்தராய், சுவதந்திராாய், சர்வஞ்ஞாாய், சர்வானுக் கிராககராய், சர்வகர்த்தாவாய், அசலாாய், சின்மாத்திர மூர்த்தியாய், அதுலராய், அதிகுக்குமாாய், அதிமகானுய், சாந்தராய், சர்வதோமுகராய், கிருபாதிகராய், தசவபரப் பிரகாசராய், அ *ಜ್ಜೈ "எம்மாந் சேவிக்கப்படும் பரமபதி.
அப்பரசிவனுணவர், அ5ா திசித்தமூலமல பெத்த பசுக்க சாாகிய ஆன்மாக்கண்மேல் வைத்த பெருங்கருணையினலே,
பஞ்சசத்திரூப பஞ்சமந்திரததுமாளுகிய சதாசிவனுய், பிரதமமகாசிருஷ்டியாாம்பத்திலே, முதனூலாகிய சுருதியை

Page 5
2 விக்கியாபனம்
அருளிச்செய்தார். சுருதியாவது: பரமாப்தரால் உபதேசிக் கப்பட்ட பாரமார்த்திக வாக்கியமாய், ஆன்மாக்களுக்குப் புத்தி முத்தி சாதநோபாயஞாநத்தைப் போதிக்குஞ் சாஸ்திர * Druid. அந்தச்சுருதி, சாமானிய விசேஷபேதத்தால், வேதம் ஆகமம் என இரண்டு விபாகமாய் இருக்கும்.
அவற்றுள், வேதமானது. இருக்கு யசு சாமம் அதர்வம் என நான்காம். இவை அற்பச்சுருதிவாக்கியம், பிரபலச் சுருதிவாக்கியம் என இருபகுதிப்படும். அவற்றுள், அற்பச் சுருதிவாக்கியம் கர்மானுட்டானக் கிரமங்களைச் சொல்லும். பிரபலச் சுருதிவாக்கியம் அத்தியான்மகஞானத்தைச் சொல் லும். இது முப்பத்திரண்டு உபநிஷத்தாய் இருக்கும். இவ் வேதங்களுக்கு வழிநூல் சைவம் முதலிய புராணங்களும் ஸ்மிருதிகளுமாம். சார்புநூல் கற்பகுத்திரம் முதலிய அங்கங்களாம்.
ஆகமமானது காமிகம் யோகஜம் சிந்தியம் காரணம் அசிதம் தீப்தம் குக்குமம் சகச்சிரம் அஞ்சுமான் சுப்பிர பேதம் விசயம் நிச்சுவாசம் சுவாயம்புவம் ஆக்கினேயம் வீரம் ரெளாவம் மகுடம் விமலம் சந்திரஞாநம் முகவிம்பம் புரோற் கிதம் லளிதம் சித்தம் சந்தானம் சர்வோக்தம் பாரமேசுரம் கிரணம் வாதுளம் என இருபத்தெட்டாம். இவ்வாகமங்கள் மாந்திரமெனவும், தந்திரமெனவும், சித்தாந்தமெனவும் பெயர் பெறும் இவை சதாசிவஞல் அருந்தேசுரருக்கும், அருந்தே சுரரால் பூரீகண்டருக்கும், பூரீகண்டாால் தேவர்களுக்கும், தேவர்களால் முனிவருக்கும், முனிவர்களால் மனுடருக்கும், மனுடாால் மனுடருக்கும், உபதேசிக்கப்படும். இங்ான முபதேசிக்கப்படுங்கால் உளவாகிய சம்பந்தம் ஆறும், முறையே பரசம்பந்தம் மகாசம்பந்தம் அந்தாாளசம்பந்தம்
திவ்வியசம்பந்தம் திவ்வியாதிவ்வியசம்பந்தம் 9ے[திவ்விய

விக்கியாபனம்
சம்பந்தம் எனப்பெயர்பெறும். இவ்வாகமங்கள் தனிக் தனியே, ஞானபாதம் யோகபாதம் கிரியாபாதம் சரியா பாதம் என நான்குபாதங்களை யுடையனவாயிருக்கும். அவற்றுள், ஞானபாதம் பதி பசு பாசம் என்னுங் திரிபதார்த் தங்களின் ஸ்வரூபத்தையும், யோகபாதம் பிராணுயாமம் முதலிய அங்கங்களோடு கூடிய சிவயோகத்தையும், கிரியா பாதம் மந்திரங்களின் உத்தாரம் சந்தியாவந்தனம் பூசை செபம் ஒமம் என்பனவற்றையும் சமய விசேஷ கிர்வான ஆசாரியாபிஷேகங்களையும், சரியாபாதம் சமயாசாரங்களையும், உபதேசிக்கும். இவ்வாகமங்களுக்கு வழிநூல் நாாசிங்கம் முதல் விசுவான்மகம் ஈருகிய உபாகமங்கள் இருநூற்றேழாம். சார்புநூல் இரத்தினத்திரயம் மோக்ஷகாரிகை பாமோக்ஷ கிராசகாரிகை முதலிய பிரகாணங்களாம். இச்சாத்திரங்க ளெல்லாம் மூலபாஷையாகிய சம்ஸ்கிருதத்தில் உளவாம்.
நமது தமிழ்நாட்டினருக்கு உபயோகமாகும்பொருட்டு, திருஞானசம்பந்தமூர்த்திநாயனர் முதலிய சமயகுரவார்கள் நால்வராலும் வேதங்களின் அர்த்தத்தைப் பெரும்பாலும் அநுசரித்து அருளிச்செய்யப்பட்ட தேவாரம் திருவாசகம் என்னுந் திராவிடவேதங்களும், மெய்கண்டதேவர் முதலிய சிவானுபூதிமான்களால் ஆகமங்களின் அர்த்தத்தையனு சரித்து அருளிச்செய்யப்பட்ட சிவஞானபோதம் சிவஞான சித்தியார் முதலிய திராவிடசித்தாந்தங்களும், உளவாம்.
இந்நூல்கள் எல்லாவற்றலும் உணர்த்தப்படும் சைவமே சற்சமய லக்ஷணங்களெல்லாங் குறைவற அமைந்த சத்திய சமய மென்று சுருதி யுத்தி அனுபூதிகளாலே கிச்சயித்து, ஆதிகாலங் தொடங்கிப் பாதகண்டத்திலுள்ள தமது முன் ஞேர்களாகிய சகல மகான்களும் அதனையே அங்கீகரித்துக் கொண்டுவந்தனர். அவ்வாறே நாமனைவரும் அந்தச்

Page 6
本 விக்கிபாபனம்
சைவமே சற்சமயமென்று கிச்சயித்து, அங்கீகரிக்கின்முேம்,
அங்ங்ணமாக,
இப்பொழுது, சிலகாலத்துக்குமுன்னே, இங்கிலாந்து அமரிக்கா என்னுங்தேசங்களிலுள்ள துர்ப்பலாாகிய சில மிலேச்சர்கள் ஒருங்குதிரண்டு, அங்காட்டிலுள்ள சனங்க ளிடத்திலேபோய், பாதகண்டவாசிகளுக்குச் சமயக்கிரமம் ஒன்றும் விளங்காதென்றும் தாங்கள் அவர்களைத் திருத்தல் வேண்டுமென்றும், கபடமாகத் தெரிவித்து, இரக்கங்காட்டி, காலந்தோறும் பலபொருளணுப்ப உடன்படுத்தி, தாங்கள் பாதிரிகியோகத்தைப் பெற்றுக்கொண்டு, இந்தப் பரத கண்டத்திலே புகுந்து, எங்கள் சமயத்தின் மகிமைன்ய அறியாமையாலும், தாம்பிடித்த துரபிமானத்தினுலும், எளிதிற் பெரும்பொருள் பெறும்வழி வேறின்மையாலும், இக்கலியுகத்திலே மோசேமுதலிய பலபெரும்பாதக சிரோ மணிகளாலே கற்பிக்கப்பட்டதாய்ப் பா சீவ பந்த லக்ஷணங் களையும் முத்திஸ்வரூபத்தையும், முத்திசாதனேபாயத்தை பிறவற்றையும் சிறிதாயினும் உள்ளபடி விளக்காததாய் இருக்கும் நூதனமாகிய தங்கள் கிறிஸ்து சமயத்தை இங்கே பாப்பும்படி, முயன்று திரிந்தார்கள்.
அந்தப் புன்மதத்தை இங்குள்ளாரொருவரும் அங்கீ கரியாமையை அறிந்து ஒருசூழ்ச்சி செய்துகொண்டு, இக் காலத்திலே சீவனத்துக்குப் பெரும்பாலும் வேண்டும் பாஷையாகிய இங்கிலிஷைப் படிப்பித்தும், ஒவ்வோர்கியோக வியாசத்தாற் பொருள்கொடுத்தும், சற்புத்தியும் சமயப்பத்தி யுமில்லாத சில ஏழைச்சனங்களைத் தங்கள் வசமாக்கினர்கள். அந்தச்சனங்கள், முன்னே தாங்கள் அனுஷ்டித்த சைவ நிலையை விட்டமையாலும், பின்னர்த் தாங்கள் சார்ந்த

விக்கியாபனம் 5
கிறிஸ்துமதத்தைப் பொருள்வாஞ்சைபற்றிப் புறங்கொண்ட தன்றிச் சிறிதும் உட்கொள்ளாமையாலும், உபயசமயப் பிாஷ்டராய், எரிவாய் நாகத்திற்கு ஆளாயினர்கள்.
இன்னும், அப்பாதிரிகள் பணச்செருக்கினுலும், மதி மயக்கத்தினுலும், சற்றுங்கூசாமல், சிவன் கடவுளல்ல ரென்றும், அவர் பிசாசென்றும், வேதாகமங்கள் பொய்நூ லென்றும், சைவசமயம் துர்மார்க்கமென்றும், சைவர்கள் அஞ்ஞானிகளென்றும், அவர்கள் பிசாசின் அடிமைகளென் தும், பெருந்தூஷணங்களைப் பேசிக் திரிந்து, குருட்டுவழி மும்மூர்த்திலசஷணம் துராசாரவிருத்தாந்தம் முதலிய பல தூஷண புக்ககங்களையும் அச்சிற்பதிப்பித்துப் பாப்பி, சைவ நூல்களினுண்மையை உணராத சிலபேதைகளை மயக்கிக் கெடுக்கின்றர்கள்.
சிவனுெருவரே பரமபதியென்றும், சைவமே சற்சமய மென்றும் துணிந்த சைவர்களாகிய நாங்கள், மேற்கூறிய வாறே இந்தப் பாதிரிப்புல்லர்கள் செய்யும் சிவதூஷணம் சிவசாஸ்திர தூஷணம் சிவாசாரிய தூஷணம் முதலிய அதி பாதகங்களைக் கண்டும் அவர்களைக் கண்டியாது மெளனமாக விருத்தலும், அவர்களால் ஆரோபிக்கப்படுங் தூஷணங்களை, சைவ நூலுணர்ச்சி சிறிதுமின்மையால், மெய்யென்று மயங்கி, அவர்களுடைய கிறிஸ்துமகப் படுகுழியிலே சிலர் வீழ்ந்து கெடுதலைக் கண்டும் அத்துரஷனங்களைப் பரிகரித்துச் சைவத் தின் மகிமையையுபதேசித்துக் கிறிஸ்துசமயத்தை நிராகரி பாது வாளாவிருத்தலும், ஆதிபாதகமேயாம்.
சிவதூஷணம் முதலியனசெய்தலும், அவற்றைக் கேட்டுக்கெர்ண்டு வாளாவிருத்தலும், அதிபாதகம் என்பதற் குப் பிரமாணம் வருமாறு:- v .

Page 7
விக்கியாபனம்
சர்வோக்தம் என்னும் சிவாகமத்தின் உபபேதம் ஐந்தனுள் ஒன்ருகிய சிவதருமோத்தரம். (ஆருவது பாவவியல் 7-11) தாரகன் றன்னைச் சாதக் கடங்கடற் றளர்வார் தம்மைப் பாாகன் றனையும் பாரும் படைத்தவன் றனையும் பாங்காற் காாகன் றன்ன வாங்குங் கடவுளைக் கயந்த நெஞ்சர் நாாகர் மீளு நாளும் பிறிதியனவிற்று வாமே.
- ள். பிறவியாகிய பெரிய கடலின்கண் அமிழ்ந்தி வருந்து வோரை (அக்கடலினின்றும்) கடப்பிப்பவராயும் (உலகத்தைக்) காக்கும் விஷ்ணுவையும், பூமியையும் (பிற உலகங்களையும்) படைக் கும் பிாமாவையும், முறைவழுவாமல் சிருட்டிப்பவராயும் சங்கரிப் பவராயும் உள்ளபரமசிவனே இகழ்ந்த மனத்தினையுடையவர்கள் ாேகத்தின்கண்ணே நெடுங்காலம் கிடப்பார்கள். (அவர்கள் அங்கே அநுபவிக்கும் யாதனையையும்) அந்நரகத்தினின்று திரும்புங்காலத் தையும், மேல்வருஞ் சுவர்க்கரு ரகவியலின்கண்ணே சொல்வாம். எ - று,
ஒப்பிலியநாதி முத்த னேதிய வேதமாதிக் கொப்புயர் வுரைப்பார் கிங்தை யுரைப்பவ ருன்னு வாரும் வெப்பெரி கிரயங் தன்னுள் விழ்ந்துவெங் துருகி வீயார் எப்பொழு தேறு வாமென் றிளைத்திளைத் தேங்குவாரே.
இ- ள். தமக்கு நீகரில்லாத அகாதிமலமுத்தாகிய சிவன் அகுளிச்செய்த வேதாகமங்களுக்கு ஒப்பாகவேனும் உயர்வாக வேனும் பிறிதொரு நூலைச் சொல்லுவோரும், (அல்வேதா கமக் களை) கிந்தைசொல்லுவோரும் (கிங்தையை மனசிஞலே) நினைப்ப வரும், வெம்மையையுடைய எரிவாய்நரகத்தின்கண் வீழ்ந்து, {உடம்பெல்லாம்) வெந்து, (ஊனெய்யெல்லாம்) உருகி, (இங்கனம் துயருறவும், அந்த யாதனசரீரத்தினின்றும்) நீங்காராகி, (இங்.ே கத்தினின்றும்) எக்காலங் கரையேறுவோமென்று வாடிவாடி ஏக்கமடைவார்கள். எ - று. . . . . .

விக்கியாபனம்
ஒப்பிலா வநாதி முத்த ைேதிய பனுவ லோர்ந்து தப்பறச் சாற்று மாசான் றன்னையு மிகழ்ந்து சாற்றில் வெப்பெரி நிாயந் தன்னுள் வீழ்ந்துவெங் துருகி வீயார் எப்பொழுதேறு வாமென் றிளைத்திளைத் தேங்குவாரே.
இ - ள். தமக்கு நிகரில்லாத அநாதிமலமுத்தராகிய சிவன் அருளிச்செய்த வேதாகமங்களை அறிந்து சந்தேக விபரீதமறப் போதிக்கு மாசாரியரையும் இகழ்ந்து பேசுவார்களாகில், அவர் களும் வெம்மையையுடைய எரிவாய் நரகத்தின்கண் வீழ்ந்து, (உடம்பெல்லாம்) வெந்து,(ஊனெய்யெல்லாம்) உருகி, (இங்ஙனம் துயருறவும் அந்த யாதனுசரீரத்தினின்றும்) நீங்காராகி, (இக்கர கத்தினின்றும்) எக்காலங் கரையேறுவோமென்று வாடிவாடி எக்கமடைவார்கள். எ - அறு.
அான்றிர வியத்தை யாசா னரும்பொருளதனை யார்க்கும் பாம்பான் பகர்ந்த வாக்கைப் பரித்தபுத் தகத்தைப் பற்றிக் கரந்தவர் முன்னஞ் சொன்ன கரிசர்க ளொரு மூவர்க்கும் வரும்பல முடையர் பாவ மனத்தையு மருவினரே.
இ - ன். சிவத்திரவியத்தையும் அருமையாகிய குருத்திரவி யத்தையும் யாவர்க்கும் மேலாகிய சிவன் அருளிச்செய்த திரு வாக்கை எழுதிய திருமுறையையும் விரும்பிக் களவுசெய்தவர்கள் முற்கூறிய (சிவநிந்தகர் வேதாகமகிந்தகர் குருகிந்தகர் என்னும்) மூவர்களுக்கும்வரும் தீவினைப்பயன்களை உடையவராவர். (அங்கின மன்றி) எல்லாப் பாவத்தையுஞ் செய்தவருமாவர். எ - று. அறைந்த விவர்க ளனைவர்களு மதிபா தகரே யெனவறிக சிறந்த வினையே தீவினையு ளதிபா தகந்தா னெனத்தெளிக கிறைந்த துயரே நெடுநாளே யிதனிற் பலமு மெனகினைக பிரிந்த வதிபா தகபேதங் தனையுமினியாம் பேசுவமே.
இ - ள். (இங்ஙனம்) கூறிப்போந்த சிவநிந்தகர் முதலிய இவர்களெல்லாரும் அதிபாதகர்களென்றறியக் கடவாய்; இவ்வதி பாதகமே சகலபாவங்களுள்ளும் அத்தியந்தகோசபாவமென்று

Page 8
விக்கியாபனம்
உணரக்கடவாய்; இவ்வதிபாதகத்தினுல் வருந்துயரமும் பெருங் துயாமென்றும் அதை அனுபவிக்குங்காலமும் நெடுங்காலம் என் றும் சிந்திக்கக்கடவாய்; இதன்சுடருகிய அதிபாதகபேதத்தையும் இனியாம் சொல்வாம். எ- று.
. வேதம், மந்திரம்-மொழிபெயர்ப்பு. *சனங்களிடத்து (அந்தரியாமியாய் நிற்கும்) பாணுகிய
அந்த உருத்திரனைப் புத்தியினுல் உள்ளே பற்றுபவர்கள் சசியத்தை நாவினலே கிரகிப்பவர்கள்.”
இ~ள். பரன்-எல்லாரினும் உயர்ந்தவன். உருத்திரன்ஆணவமாகிய நோயை ஒட்டுபவன். சசியம் - தானியம். அதற்கு இங்கே தானியவிகாரமாகிய அன்னம் எனப்பொருள்கொள்ளப் படும். குதர்க்கதோஷிகளாய் அவ்வுருத்திரனை உள்ளேபற்ருரத வர்கள் மலத்தையே நாவினல் கிரகிப்பவர்கள் என்பது அப்பிரஸ் து தப் பிரசம்ஸாலங்காரத்தாற் பெறப்படும். இதற்கு உபவிருங் 45600T tudo anj AgnytronTogoj:——
பராசரஸ்மிருதி-மொழிபெயர்ப்பு.
நீற்றகை யுருத்திர நாய கன்றனைப் பெற்றிடு புந்தியாற் பெரித கத்திடைப் பற்றிடுவோர்கிதம் பரிந்து நாவினுற் குற்றமி லமுதினைக் கொள்ளு வார்களால்,
உற்றிடு முமைபுணருருத்திான்றனைப்
பெற்றிடு புந்தியாற் பெரித கத்திடைப்
பற்றிடாத் தீயர்கள் பரிந்து நாவினுற்
குற்றமா மலத்தினைக் கொள்வ ருண்மையே.
இங்கே முதற் செய்யுளால் மந்திரத்தின் வாச்சியார்த்தம் காட்டப்பட்டது. இரண்டாஞ்செய்யுளாலோ கம்மியார்த்தம்; இது இங்கே மறுதலைப்படுதலால், கிந்திக்கப்படும் சீவனம் எனப்பொருள்படும்.

விக்கியாபனம் 9
திருவாசகம் (அச்சப்பத்து-2) வெருவாேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினு மஞ் இருவரான் மாறு காணு வெம்பிரான் றம்பி ராணும் (சேன் திருவுரு வன்றி மற்றேர் தேவரெத் தேவ ரென்ன
அருவரா தவரைக் கண்டா லம்மநா மஞ்சு மாறே.
கந்தபுராணம் (உமைவருபடலம்-55)
முண்டக மிசையிஞன் முகுந்த குடியே பண்டுனர் வரியகோர் பானை யாதியாக் கொண்டில ரெள்ளிய கொடுமை யோர்க்கெலாக் தண்டம்வந் திருமென மறைகள் சாற்றுமால்.
கூர்மபுராணம் (பிராயச்சித்தமுரைத்தவத்தியாயம்-31)
திங்களங் கண்ணி வேய்ந்த செல்வனை யிகழ்ந்த பாவ மிங்கிது தன்னிற் றீரா தெண்ணறும் விரதமாற்றிப் பொங்கழ னப்பண் வைகி யருந்தவம் புரிந்திட் டாலு மங்கவ னருளி லன்றிக் தீர்ந்திட லரிய தாமால்.
சித்தாந்தசிகாமணி (பத்தஸ்தலம்-27-28) கண்டன குயின் முக்கட் கடவுளை கிந்திப் போனத் தண்டனை புரிந்து கொல்க வரிகெனிற் சமிக்க % நின்று (திக் மண்டனில் வலிய னன்றேல் வான்செவித் துணைகள்பொத் கொண்டவ ணகன்று செல்க குலைகுலைந் தமல பக்தன்.
எயுமா சார கிங்தை யாண்டுள கவ்விடத்திற் போயுற லொழிக வென்றும் புகல்சிவ கிங்தை செய்வோன் மீயக முழுது நிற்க சிவகிங்தை யவர்க்கு நூாருண் டாயினும் பரிகா ரஞ்செய் தகற்றிடற் களிது மாதோ.
* சமித்தல்-தடுத்தல்.

Page 9
10 விக்கியாபனம்
இன்னும், தக்கன் சிவதூஷணம் செய்தபொழுது, அச்சத்தினுலும் பொருளாசையாலும் அதனைக் கேட்டுக் கொண்டு மெளனமாக இருந்த தேவர்கள் முனிவர்கள் முத லாயினுேர், வீரபத்திராாலே தண்டிக்கப்பட்டு, பின்னர்ச் சூான் முதலிய அசுரர்களாலே நூற்றெட்டுகம் வருத்த மடைந்தனர் என்னும் சரித்திரம் கந்தபுராணத்திலே விஸ் தரிக்கப்பட்டமை தெளிக.
2. பரசமயங்களை நிராகரியாமையும், சைவத்தை ஸ்தாபியாமையும் பாதகம் என்பதற்குப் பிரமாணம் வருமாறு:-
சிவதருமோத்தரம், பத்தாவது சிவஞான யோகவியல்
நிறுத்திடவல் லானமல னுரனெறியை யென்றும் மறுத்திடவல் லானவல மார்க்கமய லுற்றே நிறுத்திலன்ம அறுத்தில னெனிற்கரிச னேசம் அறுத்தவனே மாகைகளி சல்லவற மாமே.
இ - ள். என்றும் அவலமார்க்கம் மறுத்திட வல்லான்-எக்கா லத்தும் குற்றம்பொருந்திய புறச்சமயங்களை நிராகரித்தற்கு வல்ல வனும்-அமலன் நூல் நெறியை நிறுத்திடவல்லான்-அநாதிமல முத்தராகிய சிவன் அருளிச்செய்த வேதாகமங்களால் உணர்த்தப் படும் சைவசமயத்தைத் தாபிக்கவல்லவனுமாயிருப்பவன்.--(அப் புறச்சமயிகள் சைவத்தைத் துரஷித்து, தங்கள் மதத்தைச் சாதிக்க வந்தவிடத்தும்)-மயல் உற்று - (அவர்களுக்கு அஞ்சுதலினலே னும், அவர்கள் மேற்கொண்ட நண்பினலேனும், அவர்களைப் பிரீதிப்படுத்திப் பொருள்பெற விரும்புதலினலேனும்) மயக்கம் பொருந்தி,-மறுத்திலன் நிறுத்திலன் எனில்-அவர்களுடைய சமயத்தை நிராகரியாதவனும் தனது சைவத்தைத் தாபியாதவனு மாய் இருப்பானகில், - கரிசன் - அதிபாதகனவன், - நேசம் அறுத்து அவனை மாகை கரிசு அல்ல அறமாமே - (அந்த அதிபாதக

விக்கியாபனம் 11.
னிடத்துவைத்த) நேசத்தை ஒழித்து, அவனைச் சீயென்று வெறுத்தல் குற்றமன்று; அதுவே பரமமாகிய தருமம். எ - று.
பூரீமத். அப்பதீகூரிதர் அருளிச்செய்த சிவதத்துவவிவேகவிருத்தியில் உத்தரிக்கப்பட்ட சுலோகத்தின் மொழிபெயர்ப்பு
கிகாறுநற் சிவதரும சிவஞா னத்தை
நிறுத்திடுவோ னிலுமுயர்ந்தோ னிலத்தி னில்லை
பகர்பரம சிவயோகி யவனே யாகும்
பரிவினிறுத் திடுமாற்றல் படைத்து முய்தி
யகலுமய லானிறுத்தா தொழிந்தோன் யோகி
யாயினுமீ சுரப்பிரிய னல்ல னன்னுன்
புகருறுதீ நாகினிடை வீழ்ந்து புன்கண்
.பொருந்திடுவ ன்ெனமறைகள் புகலு மன்றே ܀
இப்படியே சிவசாத்திரங்கள் செப்புகையால், சிவதூஷ ணம் முதலிய பாவங்களைச் செய்யும் அஞ்ஞானிகளாகிய பாதிரிகளைக் கண்டித்தலும், அவர்களுடைய புன்மதமாகிய கிறிஸ்துசமயத்தைப் பலபெருகியாயங்களினலே கிராகரித்த லும், சற்சமயமாகிய நமது சைவத்தை அதிப்பிரபலப் பிராமணங்களினுலே வியவஸ்தாபித்தலும், மிக அவசியமாகச் செய்யவேண்டிய உயர்வொப்பில்லாத சிவபுண்ணியங்களாம்.
இதற்கு, நீங்கள் இதுவரையினும் கூறியது சத்தியம் ஆயினும், நம்மை ஆளும் இங்கிலிஷார் கிறிஸ்து சமயானு சாரிகள் ஆகையால், நாம் தங்கள் சமயத்தைக் கண்டிக்கவும் நமது சமயத்தை ஸ்தாபிக்கவும் புகுங்கால், எம்மேற்குரோ தங் கொள்வார்களன்ருே? அதற்கு நாம் யாது செய்வோம்? என்பீர்களாகில்; சுவதந்திராாகிய சிவன் நாம் செய்த வினை கள் எல்லாவற்றையும் ஒருங்குணர்ந்து, அவ்வினைகளுள்

Page 10
2 விக்கியாபனம்
இன்னகாலத்திலே இன்னவினையை அனுபவிக்கப்பண்ணு வோம் என்று நியமித்து, ஊட்டுமாறன்றி, இவ்விடத்துப் பரதந்திராாகிய பிறர் ஒருவரால் நமக்கு ஒர்தீது வந்தடை யாது; அது “இன்னவினை யின்னதலத் தின்னபொழு தின்ன
தஞ, வின்னடி யாய்ப்பொருந்து மென்றறிந்தே-பன்னவினே, யன்னகலித் தன்னபொழு கன்னதணு லன்னபடி, பின்னமறக் கூட்டும் பிரான்” என்பதனுல் அறிக. நம்மை ஆளும் ஆற்ற அலுள்ள நாயகராகிய அரசர்களால் எமக்கு ஒர்தீது உருதா எனில், அச்சிவன் சர்வலோகைக நாயகராதலால், அவரை பன்றி இவர் ஒரு தீதுசெய்தல் கூடாது; அது, “அரசனுஞ் செய்வ தீசனருள்வழி” என்பதனுலறிக. அங்ஙனம் சர்வ லோகைகநாயகராயினும், அவரறியாமல் இவர்தீது செய்தல் கூடாதாவெனில் அச்சிவன் அநாதிசித்த சருவஞ்ஞர் ஆக லால், அவர் அறியாமல் இவர் தீதுசெய்தல் கூடாது. அவர் அறியாமல் இவர்செய்தல் கூடாதாயினும், இவர் தீதுசெய்யு மிடத்து அவர்வந்து தடுப்பாரா? எனில்; அவர் பரிபூரணர் ஆதலால், அவரைவிட்டு இவர் இருத்தற்கும் செய்தற்கும் இடமேயில்லை. ஆதலால், பரமேசுரணுகிய சிவனே தீவினைக்கு ஈடாக ஒருதீது தருவார் எனில், அதனை யாவர் நீக்கிக் கொள்வார்! ஒருவருமில்லை. ஆகையால் நம்மினும் நமக்கு இனியராகிய சிவன் ஒருவரே நமக்குத்துணை. அது “ஈசனே காப்பி னல்லால் யாரையும் பிறராற் றம்மா, லாசறப் போற்ற லாகா ததுதுண் வாகும்,” என்பதனுல் அறிக. இங்னெம் இருத்தலாலும், அச்சிவனே பரமகதிராகாணமும் சைவ ஸ்தாபனமும் ஆகிய சிவபுண்ணியக்கை 'விதித்தவராதலா அலும், அப்புண்ணியஞ் செய்பவர்களுக்கு யாதோரிடரையும் வருவியாது போருள்புரிவரென்பது கிச்சயம்.

விக்கியாபனம் 13
இன்னும், இங்கிலிஷரசினர் கிறிஸ்தவர்களாயினும், தாம் ஆளுந் தேசங்களெங்கும் உள்ளார்க்கு, தம்மாலும் தமது பரிவாரத்தாலும், பகைவ்ராலும், திருடராலும், உயிர் களாலும், வாற்பாலனவாகிய ஐந்து பயத்தையும் நீக்கி, எல்லாச்சமயிகட்கும் ஒப்பமுடிந்த சாமானிய கருமத்தைப் பரிபாலனம் பண்ணுபவர்களன்றி, சுவசமயர்பிமானம்பற்றிப் பகடிபாதிகளாய், மற்றைய சமயங்களிலுள்ள விசேஷ தருமங் களுக்கு, பூருவகாலத்திருந்த சமணர் பெளத்தர் மகமதீயர் முதலியவர்கள்போல, சிறிதாயினும் இடையூறு செய்பவர்க ளல்லர். துரபிமானமும் பொருளாசையும் விபரீதசிந்தனமும் அநீதியுமே கிறைந்த பாதிரிகள் மானிப்பாய் முதலிய இடன் களிலுள்ள நமது தேவாலயங்களுக்கு இடையூறுசெய்யும்படி பலதரம் முயன்றமையை அறிந்து, கல்வியினும் அதன் பயணுகிய அறிவினும் அதன்பயணுகிய ரீதியினும் சிறந்து விளங்கும நமது இங்கிலிஷரசினர், அவ்விடையூறுவராமல் நீக்கிக்காத்துக்கொண்டு, நீங்கள் இன்னும் இவ்வாறு பிறசமயி களுக்கு இடையூறுசெய்ய முயல்வீர்களெனில், நாம் உங்களை இந்நாட்டினின்றும் ஒட்டிவிடுவோமென்று அப்பாதிரி களுக்குத் திக்காரதண்டம் செய்தமையே அதற்குச் சான்ரும்.
இனி, இவ்வரசர்களால் நீர்க்குமிழிபோல நிலையில்லாத தாகிய இந்தச் சரீரத்துக்கு ஒர்தீதுவருமெனினும் வருக; நிலையுள்ளதாகிய ஆன்மலாபத்தின்பொருட்டு, பிராணக் தியாகம் பண்ணியும், சைவஸ்தாபனம்பண்ணுதலே அக்தியா வசியகம். நாம் காத்தல்வேண்டுமென அவாவும் இச் சரீரத்தை நாம்பெற்றது முத்திபெறும் பொருட்டன்றே? சிவதூஷணம் முதலிய அதிபாதகங்களைப் பரிகளித்தத் பொருட்டுச் சரீரத்தை விடுத்தவர் முத்திபெறுதல் சத்திய
2.

Page 11
14 t விக்கியா பனம்
மென்பது சிவசாத்திரங்களாலே சாதிக்கப்பட்டதன்முே? அங்ஙனமாதலின், நாம் சிவதூஷணம் முதலியவற்றைப் பரிகரிக்குங்கால் ஒரோவழி வாற்பாலதாகிய சரீரகாசத்தை ஏற்றுக்கோடலினுலே முத்திபெறுவேமென்பது சாத்திய மாமே, ஆமெனில், முத்தியாகிய சாத்தியம் சித்தித்தவழி இச்சரீரமாகிய சாதனம் இருந்தென் ஒழிந்தென்
ஆதலால், நாங்கள் கித்தியானந்தமாகிய முத்தியையே பெற்ல்வேண்டுமெனத் துணிந்து, பரதந்திராாகிய இவர்க ளுக்கு அஞ்சி இதத்தைச் செய்யினும், இவர்களாற் சிறிதுங் காக்கப்படாது,
*வினைப்போக மேயுறுங் தேகங்கண் டாய்வினை தாஞெழிந்தாற்
றினைப்போ தளவு நில்லாது”
எனச் சான்ருேர் கூறியவாறே விழுவதாகிய இச்சரீரத்தின் மேல் ஆசையினலே இவர்களுக்கு அஞ்சாமல், சுவதந்திர பதியாகிய பரசிவனுக்கே அஞ்சி, அவரை அனுசந்தானம் பண்ணி, அவருடைய திருவருளையே முன்னிட்டுக்கொண்டு, சிவதூஷணம் முதலியன செய்யும் பாதிரிகளைக் கண்டித்து, அவர்களுடைய புன்மதமாகிய கிறிஸ்துமதத்தை நிராகரித்து விட்டு, சற்சமயமாகிய சைவத்தை ஸ்தாபிக்கும்படி முயலக் கடவோம்.
நாங்கள் முயலும் இச்சிவபுண்ணியம் அவசிய கர்த் தவ்வியமாகிய உலோகோபகாரமாதலானும், செய்தல் செய் வித்தல் உடன்படல் என்னும் மூன்றும் ஒக்குமாதலானும், நீங்கள் யாவரும் இப்புண்ணியம் சபலமாகும்பொருட்டு, உபகாரகர்களாய் இருத்தல்வேண்டும். நீங்கள் உபகரிக்கு மாறு கூறுதும்:

விக்கிபாப்னம் 15
நீங்கள் எல்லோரும், தினங்தோறும், சந்தியாவந்தனம் சிவபூசை சிவதரிசனம் முதலியனசெய்யும் பொழு தெல்லாம், வேண்டுவார் வேண்டியதே. ஈயும் பாம காருண்ணிய சாகரமாகிய பாசிவனை, அழலிடைப்பட்ட மெழுகுபோல மனங்கசிந்துருக, உரோமஞ்சிலிர்வ்ப, கண்ணீர்சொரிய, அன்பினேடு சிந்தித்துத் துதித்து வணங்கி, கிறிஸ்துமதத்தை கிராகரித்துச் சைவஸ்தா பனம் பண்ணுதலாகிய இச்சிவபுண்ணியம் கிர்விக்கின மாய் கிறைவேறும்பொருட்டு அருள்செய்யுமென்று, பிரார்த்தித்தல்வேண்டும். இச்சிவபுண்ணியஞ் செய்தற்குச் செல்வப்பொருளும் இன்றியமையாக் கருவியாய் இருக்தலால், நீங்கள் எல்லாரும் சிறிதாயினும் உலோபமின்றி, உங்களுங்களா லியலும் பொருளுதவி காலந்தோறும் செய்தல் வேண்டும். அப்பொருள்கொண்டு நாங்கள் அச்சிற்பதிப்பிக்கும் புத்தகங்களை, நீங்களெல்லாரும் வாங்கி, சித்தசமா தானத்துடனே பலமுறை வாசித்துணர்தல்வேண்டும்.
ங்ேகள் வாசித்தவற்றைப் பிறருந் தெள்ளிதின் அறியும் படி உணர்த்தி, நமது சமயிகள் கிறிஸ்துசமயப் படு குழியில் விழாதொழியும்படி, சாவதானமாகக் காத்துக் கொள்ளல்வேண்டும். -
பாதிரிகளாயினும் அவர்களைச்சேவிக்கும் பரிசனங்களா யினும் சைவதூஷனஞ்செய்து கிறிஸ்துமதத்தைச் சாதிக்கவந்தால் அவர்களைப் பிரீதிப்படுத்தல் வேண்டு மென்லுங் கருத்துச் சிறிதுமின்றி, எதிர்ந்துகின்று,

Page 12
16
விக்கியாபனம்
சைவத்தின்மேல் அவர்கள் ஏற்றுந்தூஷணங்களைப்
பரிகரித்து, அவர்களுடைய மதத்தைக் கண்டித்து,
அவர்கள் வாயை அடக்கிவிடல் வேண்டும்.
சீங்களெல்லாரும் உங்களுங்கள் பிள்ளைகளை, பரசமயிக ளோடு பரிசயம்பண்ணவிடாமல், தகுந்தபருவத்திலே சிவதீசைடிபெறுவித்து, அவரவர் பக்குவத்துக்கு ஏற்ப, சைவ நூல்களை, தகுந்த ஆசிரியரைக்கொண்டு, ஐயங் திரிபறக் கற்பித்துச் சைவாசாரங்களை அநுஷ்டிப் பித்தல் வேண்டும்.
நிகண்டு இலக்கணம் தருக்கம் முதலிய கருவிநூல்களி லும் திருவள்ளுவர்குறள் முதலிய நீதிநூல்களிலும் வல்லவர்களாய், பாவங்களை வெறுத்துப் புண்ணியங் களையே செய்பவர்களாய், சிவதீகூைடி பெற்றவர்களாய்,
தேவாரம் திருவாசகம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு
பெரியபுராணம் என்னும் அருட்பாவைந்தையும் அத்தி யயனம் பண்ணினவர்களாய், நான்கு பாதத்தையும்
பிரதிபாதிக்கும் ஒரு தந்திரத்தையாயினும் முற்றக்
கற்றவர்களாய், திராவிடசித்தாந்தம் பதினன்கையும்
உணர்ந்தவர்களாய், குருலிங்கசங்கமபத்தி விசிஷ்டர்க
ளாய் இருக்கும் புருஷர்களைத்தெரிந்து, சைவப்பிரசார
சிக்கு
கர்களாக கியோகித்து, ஊர்கோறும் தேவாலயம் மடம் முதலிய பரிசுக்கஸ்தானங்களிலே சர்வஜனுேபகாரமாக வாரந்தோறும் சைவப்பிரசாாம் செய்வித்தல்வேண்டும். இவ்வெழுவகையாலும் கீங்கள் எல்லாரும் இங்கன்முயற் ம் உபகர்ாகர்களாய் இருப்பீர்களாகில், நமது தமிழ்
ாேடெங்கும்.புறச்சமியமாகிய இருள்கெடச் சைவசமயமாகிய பேர்ொளி தழைத்தினிதோங்கும்; ஓங்கில், அனேகர் பிறந்

விக்கியாபனம் 1.
திறந்துழலும் பசுக்களாகிய பிறரைப்பொருளென மதியாது, பரமபதியாகிய சிவனது மகிமையை உணர்ந்து, அவரே பரம் பொருளெனத் துணிந்து, அவரையே மெய்யன்பினேடு விதிப்படி வழிபட்டு, கித்தியானந்த முத்தியை அடைவர்கள். இங்ங்னம் அநேகர் முத்திபெற்றுய்தற்கு ஏதுவாய் இருத்த லால், இச்சிவபுண்ணியமே எல்லாப்புண்ணியங்களித்துஞ் சிறந்தது. நமக்கெல்லாம் இறக்கும்பொழுது துணையாய் உடன்வருவது இச்சிவபுண்ணியமே ஆதலாலும், நமதுதேகம் இக்கணம் இருக்கும் இக்கணம் நீங்கும் என அறிதல் கூடா மையானும், நாம் அனைவரும் சிறிதும் தாழ்க்காமல், நமக்கு எக்காலத்தும் உற்ற உறவாகிய சிவனது திருவருளையே முன்னிட்டுக்கொண்டு, இவ்வருமருந்தன்ன பெரும்புண்ணி யத்தை விரைவிலே முயன்று நடத்தக்கடவோம்.
சிவதருமோத்தரம், எட்டாவது சனனமரணவியல் பாம்பழல் வாயினுற் பற்ற மண்டுகங் தேம்பிடுங் துயருறுஞ் சீவன் றேயுநாள் ஒம்பிட வல்லரோ வுற்ற மற்றையார் போம்பொழு தருந்துணை புரிந்த புண்ணியம்.
பட்டணத்துப்பிள்ளையார்பாடல் அத்தமும் வாழ்வு மகத்துமட் டேவிழி யம்பொழுக மெத்திய மாதரும் வீதிமட் டேவிம்மி விம்மியிரு கைத்தலை மேல்வைத் தழுமைக் கருஞ்சுடு காடுமட்டே பற்றித் தொடரு மிருவினைப் புண்ணிய பாவமுமே.
f5f6Օլգաnit புன்னுனிமே னிர்போ னிலையாமை யென்றெண்ணி பின்னினியே செய்க வறவினை-யின்னினியே கின்ற னிருந்தான் கிடந்தான்றன் கேளலறச் சென்மு னெனப்படுதலால்,

Page 13
18 விக்கியாபனம்
கின்றன கின்றன கில்லா வெனவுணர்ந் தொன்றின வொன்றின வல்லே-செயிற்செய்க சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன் வந்தது வந்தது கூற்று,
திருநாவுக்கரசு நாயனர் தேவாரம்
திருவங்கமாலே, பண் சாதாசி. உற்கு பாருளரோ உயிர் கொண்டு போம்பொழுது குற்ற லத்துறை கூத்தால் லால்கமக் குற்ற ராருளரோ!
யாழ்ப்பா ண ம் , s
பிரமாதிசஞ ኣ· இங்ஙனம்
தைப்பூசம்.
(1854) சைவப்பிரகாசசமாசீயர்.

15.
16. 17。
18.
19.
29,
2.
22.
சூசீபத்திரம்
பதிப் பிரகரணம் புண்ணியஸ்தலப் பிரகாணம் ஆலயப் பிரகாணம் இலிங்கப் பிாகரணம் அபிஷேகப் பிரகாணம் நைவேத்தியப் பிரகாணம் துரபதிபப் பிரகாணம் தீபப் பிரகாணம் வாத்தியப் பிரகாணம் புண்ணியகாலப் பிரகாணம் சிவாசாரியப் பிரகாணம்
சரீரசுத்திப் பிரகாணம்
ஆசௌசப் பிரகாணம் கிபந்தத்திரவியப் பிரகாணம்
விவேசனம் சிவசின்னப் பிரகாணம் தியானதிப் பிரகாணம் நமஸ்காரப் பிரகாணம் சிவபுராணப் பிரகாணம் புண்ணியதீர்த்தப் பிரகணம் சுவர்ணதானப் பிரகாணம் அன்னதானப் பிரகாணம் தவப் பிரகாணம்
விவேசனம்
குசனம்
பக்கம்.
10 11 16
1. 19 21 22 24 25
27
29
3.
33
39
4. 42
44
45 47 49
52 58
93

Page 14
பட்டணத்துப்பிள்ளையார் பாடல்
இப்பிறப்பை நம்பி யிருப்பையோ நெஞ்சமே வைப்பிருக்க வாயின் மனையிருக்கச்-சொப்பனம்போல் விக்கிப்பற் கிட்டக்கண் மெத்தப்பஞ் சிட்டப்பைக் கக்கிச்செத் துக்கொட்டக் கண்டு. (1)
Gtoலு மிருக்க விரும்பினையே வெள்விடையோன் சில மறிந்திலையே சிந்தையே-கால்கைக்குக் கொட்டையிட்டு மெத்தையிட்டுக் குத்திமொத்தப்பட்டவு
கட்டையிட்டுச் சுட்டுவிடக் கண்டு. (டற் (2)
ஒன்பதுவாய்க் கோற்பைக் கொருநாளைப் போலவே யன்புவைத்து நெஞ்சே யலைந்தாயே-வன்கழுக்க டத்தித்தத் திச்சட்டை தட்டிக்கட் டிப்புட்டுக் கத்திக்குத் தித்தின்னக் கண்டு. (8) இன்னம் பிறக்க விசைவையோ நெஞ்சமே மன்னரிவரென்றிருந்து வாழ்ந்தவரை-முன்ன மெரிந்தகட்டை மீதி லிணைக்கோ வணத்தை யுறிந்துருட்டிப் போட்டது கண்டு. (4)
விட்டுவிடப் போகுதுயிர் விட்டவுட னேயுடலேச் சுட்டுவிடப் போகின்ருர் சுற்றத்தார்-பட்டதுபட் டெங்நேரமுஞ்சிவனை யேத்துங்கள் போற்றுங்கள் சொன்னே னதுவே சுகம். (5)
காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே பாலுண் கடைவாய் படுமுன்னே-மேல்விழுங்கே யுற்ற ரழுமுன்னே யூரார் சுடுமுன்னே குற்ருலத் தானையே கூறு. (6)
ஒழியாப் பிறவி யெடுத்தேங்கி யேங்கி யுழன்றநெஞ்சே யழியாப் பதவிக் கவுடதங் கேட்டி யநாதியன மழுமான் காத்தனை மால்விடை யானை மனத்திலுன்னி விழியாற் புனல்சிந்தி விம்மியழுநன்மை வேண்டுமென்றே (1)

6
கணபதி துணை.
சைவதுரஷணபரிகாரம்
1. பதிப் பிரகரணம்
ugsGu! !
பெருங்கருணையினலே, படைத்தல் காக்கல் அழித்தல் மறைத்தல் அருளல் என்னும் பஞ்சகிருத்தியங்களையும் தம் பிரயோசனங் குறியாது ஆன்மாக்களது பிரயோசனங் குறித்துச் செய்தருளும் பதி ஒருவரே என்றும், அவர் முற்றறிவு வரம்பிலின்பம் இயற்கையுணர்வு தன்வயம் குறைவிலாற்றல் வரம்பிலாற்றல் என்னும் ஆறுகுணங்களும் நிறைந்த சிவனே என்றும், நாங்கள் மெய்நூல்களெனத் துணிந்த வேதாகமங்கள் உணர்த்துகின்றன. அதுபற்றி அச்சிவனையே நாங்கள் வழிபடுகின்ருேம். ஆதலால், நாங்கள் சைவர்கள் எனப்படுவோம். நீ இக்கருத்தைச் சிறிதாயினும் ஆராய்ந்து அறியாது, எங்களைப் பலரைத் தெய்வம் என்று வணங்கும் அஞ்ஞானிகள் என்று இகழ்கின்ருய். யெகோவா பரிசுத்தாவி கிறிஸ்து என்னும் பலரைத் தெய்வமென்று வணங்கும் அஞ்ஞானி நீயே.
சிவனையேயன்றி விஷ்ணுமுதலிய பிறரையும் நீங்கள் வணங்கக் காண்கின்றேனே என்பாயாகில்; சத்தியம் ·虎 சொல்லியது; ஆயினும், நாங்கள் அவர்களைப் பரம்பொரு ளாகிய பதிகளெனக்கொண்டு வணங்குவதில்லை; பதியாகிய அச்சிவனுடைய அடியார்களெனக்கொண்டு வணங்குகின்

Page 15
2 சைவதூஷணபரிகாரம்
முேம், கடவுளையேயன்றி அவருடைய அடியார்களை வணங்கு வது தகுதியன்றே என்பாயாகில் சிவனனவர் தம்முடைய அடியார்களை வழிபடுபவர்கள் தம்மையே வழிபடுபவர்க ளென்றும், தாம் அவ்வடியார்களை அதிட்டித்துகின்று அவ் வழிபாட்டை ஏற்று அதுசெய்தவர்களுக்கு அனுக்கிரகம் செய்வாரென்றும், கம்முடைய அடியார்களை நிந்திப்பவர்கள் தம்மையே நிந்திப்பவர்கள் என்றும், காம் அங்கிந்தையின் பொருட்டு அவர்களுக்குத் தண்டஞ் செய்வாரென்றும், வேதாகமங்களிலே திருவாய்மலர்ந்தருளியிருக்கின்றமையால், அவ்வணக்கங் தகுதியேயாம்.
உன் சமயநூலாகிய விவிலிய நூலிலும், ஆதி. 18. அதி. 2. வசனத்தில் ஆபிரகாம் தேவதூதர்கள் மூவரைப் பூமிக்கு நேராய்த் தாழ்ந்து வணங்கினன் என்றும்; யோசு. 5. அதி. 14. வசனத்தில், யோசுவா யெகோவாவின் சேனைக் கதிபதியைத் தரையிலே முகங் குப்புரவிழுந்து நமஸ்காரம் பண்ணினுன் என்றும், மத். 25. அதி. 40, வசனத்தில் உன் தேவனுகிய கிறிஸ்து தமதன்பருக்குச் செய்தவைகள் எல்லாம் தமக்கே செய்தவைகள் என்று சொன்னர் என்றும், சொல்லப்பட்டிருக்கின்றது. அதுகண்டும், நாங்கள் சிவனடி யார்களை வணங்குதலை மீ இகழ்வது மடமையன்றுே?
சிவனுக்கு உருவமுண்டென்று உங்கள் வேதாகமங்கள் சொல்கின்றனவே, உருவமுடையவர் கடவுளாவது எங்ஙனம்? என்பாயாகில்; ஒகோ! அவருடைய உருவம், கன்னைப் பந்தித்த மூலமலகாரணத்தினலே தான் முன்செய்த கன்மானுசாரமாகத் தோல் எலும்புமுதலிய சத்ததாதுக்களா லாகிய சரீாங்கொண்டு ஒருமாதாவின் யோனிவாய்ப்பட்டுப் பிறந்து பெருந்துயரம் அனுபவித்து இறந்த மனிதனுகிய

பதிப் பிாகாணம் 3
உன்னுடைய கிறிஸ்துவின் உருவைப்போலும் என்று நினைக் தாயா? எங்கள் சிவன் அப்படிப்பிறந்த கதையுங் கேளேம்; பேருலகில் வாழ்ந்துண்டிறந்த கதையுங் கேட்டிலேம். அவருடைய உருவம் ஆன்மாக்களின் கிமித்தம் பஞ்சகிருத்தி பங்கள் செய்யும்பொருட்டும், தம்மை வழிபடும் அடியார்க ளுடைய தியானதிகளுக்கு எளிதாம்பொருட்டும், வேகாக மங்களைத் தோற்றுவித்தற்பொருட்டும், தமது அருட் சக்தியாலாக்கப்பட்ட சரீரமேயாம். அப்படியாமாயில், கடவுட்டன்மைக்குக் குறைவு என்னே அறிவு சிறிதும் இல்லாதவனே! சொல்லு, சிவனுக்கு அங்கப் பிரத்தியங்க சாங்க உபாங்கங்களெல்லாம் சிவசத்திரூபமாமென்பது பூரீ வாதுளாகமத்தில் விஸ்தரிக்கப்பட்டது.
உங்கள் சிவன் பார்வதிதேவி என்பவளை விவாகஞ் செய்து அவளோடு உகந்து புணர்ந்தார் என்றும் அவளைப் பிரிந்தார் என்றும் உங்கள் சிவபுராணங்களிலே சொல்லப் படுகின்றதே, ஆன்மாக்களைப் போலக் காமியாய் இருப்ப வரைப் பரம்பொருள் என்பகெப்படி? அவர் உங்களை இாட்சிப்பதெப்படி? என்பாயாகில்; ஆண் பெண் அலி என்னும் மூன்றுமல்லாத அநாதிமலமுத்த பதியாகிய சிவத் தையே, சர்வான்மாக்களையுந் தோற்றுவித்தலால், ஆண்பாற் படுத்துப் பிதாவெனவும், சூரியனுக்குக் கிரணம்போல அச் சிவத்துக்கு அபின்னமாயுள்ள சக்தியையே நிமித்தகாரண மாகிய அச்சிவம் அக்தொழில் இயற்றுதற்குத் து%ணக் காரணமாயிருத்தலால், பெண்பாற்படுத்து மாதாவெனவும், அச்சிவம் அச்சக்தியோடுகூடி உத்தியோகித்துச் சங்கற் பித்தலையே, அவ்வான்மாக்களது தோற்றத்துக்குக் காரணத் தொழிலாகையால், உகந்து புணர்தல் எனவும், அச்சங்கற்பம் இல்லாமையையே, பிரிதல் எனவும் சொல்லியகென்றறிக.

Page 16
4 f சைவதூஷணபரிகாரம்
இந்த ரகசியம் சமாதிகொடுக்கும் சாக்ஷாத்காரவான்களுக்கு வெளிப்படும். இவ்வுண்மையை அறியாமலும், சிவபுராணங் களிற்றுனே பலவிடங்களிலே சிவன் ஆணவம் மாயை கர்மம் என்னும் மும்மலங்களையும் அநாதியே யில்லாதவரென்றும் ஞானந்தானுருவாகியநாயகர் என்றும் சொல்லப்பட்டிருக்க லால் அவர் பார்வதியைப் புணர்ந்தார் பிரிந்தார் 673ởrt var முதலியவற்றிற்கு வேறுபொருள் இருத்தல் கூடும். ாம். அதனை ஆராயாமல் இகழ்தல் தகுதியன்று என்று சிந்தியாம லும் எங்கள் கடவுளை வாயில்வந்தபடியே தூவிக்,துக் கொண்டுதிரியும் அதிபாதகனுகிய நீ, உன் விவிலியநூலிலே சலோமோன் எழுதிய உன்னதகேத்திலே, கிறிஸ்துவாகிய புருஷன் ஒருபெண்ணேக்கண்டு மயங்கினன் என்றும், அவளுடன்கூடி மகிழ்ந்தான் என்றும், அவளுடைய அழகைப் புகழ்ந்தானென்றும், அவளைப் பிரிந்தானென்றும், அதனுல் அவள் துயருற்றுத் தேடித் திரிந்தாளென்றும், சொல்வதை கிந்தியாது அங்கீகரிப்பது என்னே!
இன்னும் முதனூல்களாகிய வேதாகமங்களிலே கூறப் பட்ட விஷயங்களுட் பல சிவபுராணங்களிலே குறிப்பாகப் பொருள்கொள்ளக் கிடக்கும். அது பூரீமங் மாணிக்கவாசக சுவாமிகள் முதலிய சிவானுபூதிமான்கள் இயற்றிய பல சாத்திரங்களாலும் குருசம்பிரதாயத்தாலும் கெள்ளிகிற். நுணியப்பட்டது. மலபரிபாகம் உடையவர்களாய், சைவா சாரியர்களை அடைந்து வழிபட்டுக் கேட்கில்; அவர்கள் சிவ புராணங்களுக்கு முதல்நூல்களோடு விரோதமறப் பொருள் உணர்த்துவார்கள். அவைகளை எனக்கு விளங்கச் சொல்லல் வேண்டும் என்பாயாகில்; சிவதூஷணம் கோமாமிசபக்ஷணம் முதலிய பெரும்பாதகங்களே செய்யும் உனக்கும் உன்போலி களுக்கும் அவைகளைச்சொல்ல, எங்களுக்குச் சிவனுடைய

புண்ணியஸ்தலப் பிாகாணம் 5
அனுமதியில்லை. நீ இவ்வுண்மையை அறியாது, சிவபுராணங் களிலே குறிப்புப் பொருளாக்க் கொள்ளற்பாலனவற்றைச் செம்பொருளாகக்கொண்டு, அதுவே மெய்ப்பொருள் என்று துணிந்து, சற்சமயலக்கணங்களெல்லாங் குறைவற அமைந்த சத்தியசமயமாகிய எங்கள் சைவத்தின்மேலே குற்றங்கள் ஏற்றப் புகுந்தமை மண்குதிரையை நம்பி ஆற்றின் வழிக் கொள்ளப் புகுந்தமைபோலும். -
2. புண்ணியஸ்தலப் பிரகரணம்
தன் கொடிகட்டப்பட்ட தேசமெங்கும் தன் ஆஃண செல்லும்படி அரசியற்றும் இராசாவானவன் குறைவேண்டி னேரும் முறை வேண்டினேரும் தன்னை எளிதில் வந்து காணும்படி அத்தாணியில் வீற்றிருத்தல்போல, சர்வ லோகாதிநாயகராகிய சிவன் தம்மாலே பயன்பெற விரும்பிய சர்வான்மாக்களும் கம்மை வந்து வழிபட்டு உய்யும்படி சிதம்பரம் முதலிய தலங்களிலே விசேஷமாக எழுந்தருளி யிருப்பார். ஆகலால், அவைகள் புண்ணியஸ்தலங்களெனப் படும். இராசாவானவன், தன்னுணை தன் தேசமெங்கும் செல்லினும் சர்வ வியாபகத்துவமும் சர்வஞ்ஞத்துவமும் இல்லாதவனுகையால் சமஸ்தரும் தன்னை எளிதிற்காணும் வடி அக்தாணியில் வீற்றிருத்தல் வெண்டும், என்ப்து ஒக்கும் : கடவுள் அவனைப்போலன்றிச் சர்வவியாபகத்துவ் மூம் சர்வஞ்ஞத்துவமும் உடையவராகையால், அவள்ை எவ்விடத்தினும் எவர்களும் வழிபட்டு அ துக்கிரகம் பற்றுக் கொள்ளலாமே என்பாயாகில்; அது மெய்ம்மையே! ஆயினும், தேவர்கள் இருடிகள் முதலிய பெரியோர்கள் ஒவ்வோரிடங் களிலே கடவுளை அன்போடு பூசித்து, அவர் சத்திகாரியச்

Page 17
6 - சைவதுரஷணபரிகாாம்
சரீரங்கொண்டு தங்களுக்குப் பிரசன்னரானபோது, அவரை வணங்கித் துதித்து, தாங்கள் தாங்கள் விரும்பிய வரங்களைப் பெற்றபின்பு, அவரை நோக்கி, கிருபாசமுத்திரமாகிய சுவாமீ" தேவரீர் சர்வவியாபியாயினும், அடியேங்கள் தேவரீரைப் பூசித்த இந்த ஸ்தானத்திலே சதாகாலமும் விசேஷமாக எழுந்தருளியிருந்து, இவ்விடத்தில் வந்து தேவரீரை வழிபடும் சர்வான்மாக்களுக்கும் விசேஷபத்தி ஜனிப்பித்து, அவர்கள் செய்யும் தானங்கள் தவங்கள் ஒன்று அநந்தமாய் விருக்கியடையவும், அவர்கள் முன் செய்த பாவங்கள் குறையவும், அவர்களுக்கு அநுக்கிரகம் செய் தருளும் என்று பிரார்த்திக்க; வ்ேண்டுவார் வேண்டியதே யிவாராகிய அக்கடவுளானவர், ஆன்மாவானது சரீரமுழுதும் வியாபித்திருப்பினும் சாக்கிர முதலிய அவஸ்தைகளிலே விசேஷமாக நிற்பதுபோல, தாம் அங்கிங்கெனுகபடி எங்கும் வியாபித்திருப்பினும், அப்புண்ணிய ஸ்தலங்களிலே விசேஷ மாக எழுந்தருளி யிருப்பாராயினர் என்று சிவசாத்திரங்கள் செப்புகின்றன. ܐ
(1) 1. இரா. 19. 8. இலீசா தேவமலையாகிய ஒரேப் பைச் சேர்ந்தான். யாத், 3. 1. 5. மோசே ஒரேப் என்னுக் தேவமலையைச் சேர்ந்தான். யெகோவா நீ இந்த ஸ்தானத் திற்குச் சமீபித்துவராதே; நீ கிற்குமிடம் பரிசுத்தமுள்ள பூமி. உன் பாதாட்சையைக் காலினின்று கழற்றிவிடு என்ருர், ைெடி, 19, 2. 12. சீனுய் வனத்திற்போய் அந்த வனத்திலிறங்கினர்கள். இஸ்ரவேலர் அங்கே மலைக்கெதிரா கப் பாளையமிறங்கியபின்பு, மோசே தேவசந்நிதியிலேறிஞன். ரீ சனங்களை நோக்கி, நீங்கள் மலையில்ேருதபடிக்கும், அதினடிவாரத்தைத் தொடாதபடிக்கும் எச்சரிக்கையா பிருங்கள் என்றுசொல்வி, அதின் சுற்றிலும் ஒரு எல்லையைக்

புண்ணியஸ்தலப் பிரகரணம்
குறித்துவிடு. மலையைத் தொடுகிறவனெவனும் நிச்சயமாகக் கொலைசெய்யப்படுவான். சங். 9, 11 சீயோனிலே வாசமா யிருக்கி ,מ யெகோவாவைக் கீர்த்தனம் பண்ணுங்கள். ைெடி 99, 9. நம்முடைய தேவனுகிய யெகோவாவைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்; அவருடைய பரிசுத்த மலையில் நமஸ்காரம் பண்ணுங்கள். 1. சாமு. 20. 6. நான் எங்கே என்று உமது பிதாக்கேட்டால், தாவீது தன்னுர ராகிய பேத்லகேமிலே தன்வமிசத்தார் யாவரும் வருஷாந்தர பலியிடுகிறபடியால் அங்கே போகும்படி என்னிடத்தில் வருந்திக்கேட்டானென்று சொல்லும், ைெடி 10. 3. 5. தேவனுக்கு ஆராதனை செய்யும்படி பெத்தேலுக்குப்போகிற மூன்றுமனிதர் உன்னைக்கண்டு சந்திப்பார்கள், அப்பால் பெலிஸ்தியரின் பாளையமிருக்கிற தேவமலைக்குப்போவாய், 2. பேதுரு. 1. 18. அவருடனே நாங்கள் பரிசுத்தமலையி லிருந்தபொழுது, வானத்திற்பிறந்த அந்தச்சத்தத்தைக் கேட்டோம். 1. இரா. 11. 13. நான் தெரிந்துகொண்ட யெரூஷலேமின் கிமிக்கமும், 1. நாளா. 23. 25. இஸ்ா வேலரின் தேவனுகிய யெகோவா சதாகாலமும் யெரூஷலே மில் வாசம்பண்ணி தமது சனங்களுக்கு ஆறுதலைக்கொடுத் தார். எஸ்ரு, 1, 2, 3. பரமண்டலத்திலுள்ள தேவனகிங் யேகோவா, பூமண்டலத்திலுள்ள சகல இராச்சியங்களையும் எனக்குத் தந்துவிட்டார்; யூதாதேசத்திலுள்ள பெரூஷலே மிலே கமக்கு ஒரு ஆலயத்தைக்கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறர்; அவருடைய எல்லாச் சனங்களிலும் ாவன் உங்களுக்குள் இருக்கிருனே. அவன் தேவனுகிய யெகோவா அவரூேடிருப்பாராக; அவன் யூதாதேசத்தி லுள்ள யெரூஷலேமுக்குப்போய், அவருக்கு ஒரு ஆலயத் கைக்கட்டுவாஞக, யெரூஷலேமிலிருக்கிற இஸ்ரவேலரின்

Page 18
சைவதூஷணபரிகாரம்
W
தேவனகிய யெகோவாவே தேவன். யோவா. 4. 20. எங்கள் பிதாக்கள் இந்த மலையில் ஆராதனை செய்தார்கள் நீங்களோ தொழுதுகொள்ளவேண்டிய ஸ்தானம் யெருஷலேமில் உண்டென்று சொல்லுகிறீர்கள் என்ருள். மத். 4. 5. பிசா சானவன் அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய் அவரைத் தேவாலயத்தின்மேல் உபரிகையில் நிறுத்தி. மத். 5、 35. யெரூஷலேமைக்கொண்டு சத்தியம்பண்: லாகாது; அது மகாராசாவின் நகரம்.
(2) சலோமோன் யெகோவாவை நோக்கிச்செய்த விண் ணப்பம், 2. நாளா, 6, 17-21 இஸ்ரவேலின் தேவனகிய யெகோவாவே உமது தாசனுகிய தாவீதுக்கு நீர் சொல்லிய வாக்கு மெய்ப்படும்படி அருள்செய்யும். தேவன் நிச்சய மாய்ப் பூமண்டலத்திலே மனிதருடன் வாசம்பண்ணுவாரா? வானமும் வானங்களுக்குமேலுள்ள வானமும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டினவிடு உம்மைக்கொள்வது எப்படி என் தேவனகிய யெகோவாவே, உமது அடியான்செய்யும் பிரார்த்தனையின் மேலும் விண்ணப்பத்தின் மேலும் சிங்கை வைத்தருளும்; உமது அடியான் உமது சமுகத்தில் இடும் ஒலத்தையும் அவன் பிரார்த்தனையையுங் கேட்டருளும். எனது நாமம் அதில் நிறுத்தப்படும் என்று நீர்குறித்த இந்த (ஸ்தானத்துக்கு நேரே, உமது அடியான் செய்யும் பிரார்த்தனே யைக் கேட்கும்படி இரவும்பகலும் இந்த வீட்டின்மேல் நீர் கண்திறந்திருப்பீராக. உமது அடியானும் உமது சனமாகிய இஸ்ரவேலரும் இந்த ஸ்தானத்துக்கு நேராய்ச்செய்யும் விண் ணைப்பங்களைக் கேட்பீராக. ைெடி, 32. 33. மேலும் புறத் தேசத்தார், உமது மகாநாமத்தையும், உமது வலிமையான காத்தையும், ஓங்கிய உமது புயத்தையுங் குறித்துக் கேட் டிருப்பார்களே, ஆதலால் உமது சனங்களாகிய இஸ்

புண்ணியஸ் தலப் பிரகாணம் 9
娜
வேலரிலே சேராத அவர்கள், உமது நாமத்தினிமித்தம் அனா தேசக்திலிருந்து வந்து, இந்த ஆலயத்துக்கு நேராக பிரார்த் தன பண்ணினுல்; நீர் உமது வாசஸ்தலமாகிய வானத்தி னின்றுங் கேட்டு, உமது சனங்களாகிய இஸ்ரவேலரைப் போலவே, பூமண்டலத்திலுள்ள சகல சனங்களும் உமது நாமத்தை அறிந்து உமக்குப் பயப்படும்படிக்கும் நான் கட்டின இந்த ஆலயத்துக்கு உமது நாமம் இடப்பட்டதென்று அறி யும்படிக்கும், அந்தப் புறத்தேசத்தார் உம்மைநோக்கிப் பிரார்த்திப்பதெல்லாவற்றையும் அவர்களுக்குச் செய் தருளும்.
(3) யெகோவா சலோமோனுக்குச் செய்த வாக்குத்தக் கம். 2. நாளா. 7. 12-16. யெகோவா இரவிலே சலோமோ னுக்குத் தரிசனமாகி, அவனை நோக்கி, நான் உன்பிரார்த்தன் கேட்டேன், எனக்குப் பலியிடும் வீடாக இந்த ஸ்கா னத்தைத் தெரிந்துகொண்டேன். மழைபெய்யாமல் நான் வானத்தை அடைத்தாலும், தேசத்தை அழிக்கும்படி வெட்டுக்கிளிகள் வரக்கட்டளையிட்டாலும், நான் என் சனங் களுக்குள்ளே கொள்ளைநோயை அனுப்பினுலும், என்னுமம் கரிக்கப்பெற்ற என் சனங்கள் தங்களைத் தாழ்த்திப் பிரார்த் கனே செய்து, என் முகத்தைத்தேடித் தங்கள் துன்னெறிகளி னின்று திரும்புவார்களாகில், நான் வானத்தினின்றுகேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து அவர்கள் ேதசத்தை ஆற்று
யைக்
வேன். இந்த ஸ்தானத்திற் செய்யப்படும் பிரார்த்தனைக்குக் கண் திறந்து செவிசாய்ப்பேன். என் நாமம் தாகாலமும் இந்த ஆயைத்திலே தங்கும்படி, நான் இதைத் தெரிந்து கொண்டு பரிசுத்தப்படு த்தினேன். என் கண்ணும் என் மன
மூம் சதாகாலமும் இதிலேதளித்திருக்கும்.

Page 19
10 சைவதூஷணபரிகாசம்
இவ்வசனங்களினுலே உன் கடவுளுக்கும் சேஷ ஸ்தலங்கள் உண்டென்பது துணியப்படுகின்றது. அது கண்டும், நாங்கள் சிவனுக்கு விசேஷஸ்தலங்கள் உண்டென்று லே துணிந்து, அவைகளுக்கு யாத்
திரை செய்தலை ரீ இகழ்வது அறியாமையன்றுே?
னங்கள் சாத்திரங்களா
3. ஆலயப் பிரகரணம்
புண்ணியஸ்தலங்களிலே அறிவுள்ளவர்களும் அறிவில் லாதவர்களும் ஆகிய சகலருங் கூடிக் கடவுளை அன்போடு வழிபட்டு உய்யும்பொருட்டு விதிப்படி ஆலயங்களைக் கட்டிப் பிரதிட்டை பண்ணுதல் புண்ணியமென்று சைவாகமங்கள் சொல்லுகின்றன.
யாத், 35-ம் அதிகாரங் தொடங்கி 40-ம் அதிகாரம் வரைக்கும் மோசே என்பவன் உன்தேவனுடைய ஆஞ்ஞைப் படி அவனுக்கு ஒரு ஆவாசத்தை உண்டாக்கிப் பிரதிட்டை பண்ணினுன் என்று சொல்லப்படுகின்றது. 2. நாளா 6. 7-9. இஸ்ரவேலின் தேவனுகிய யெகோவாவுக்கு ஒரு ஆலயங் கட்ட என் பிதாவாகிய தாவீது அபிப்பிராயச் கோண்டிருந்தார். யெகோவா என் பிதாவை நோக்கி, என் பேரால் ஒரு ஆலயங்கட்ட நீ அபிப்பிராயங்கொண்டாய், ே கோண்ட அபிப்பிராயம் நல்லது; ஆணுலும் நீ அந்த ஆலயத் தைக் கட்டமாட்டாய். உன்னுதாத்திற்முேன்றும் புத்திரனே ன்ன்பேரால் ஒருஆலயங்கட்டுவான் என்று சொல்லியிருந்தார். 1. இராசா 6-ம், 8-ம் அதிகாரங்களில் சலோமோன் யெருஷ லேமிலே உன்தேவனுக்கு ஒரு ஆலயத்தைக் கட்டிப் பிர திட்டை செய்தானென்றும், எஸ்ரு. 6-ம் அதிகாரத்திலே

இலிங்கப் பிரதானம் 1.
யெரூஷலேமிலே உன்தேவனுடைய ஆஞ்ஞைப்படி ஆலயம் திரும்பவும் கட்டிப் பிரதிட்டை செய்யப்பட்டதென்றும் சொல்லப்பட்டிருக்கின்றது.
இவ்வாறே உன் கடவுளுக்கும் ஆலயங்கட்டிப் பிர திட்டை செய்தல் புண்ணியமென்றும், அதனைப் பலர் செய்தார்களென்றும், உன் சமயநூல் பேசுகின்றது அஃதுணர்ந்தும், நாங்கள் எங்கள் கடவுளுக்கு ஆலயங்கட்டிப் பிரதிட்டை செய்தல் புண்ணியமென்று எங்கள் சாத்திரங்க ளாலே தெளிந்து, அவ்வாறுசெய்தலும் அங்கேகூடி அவரை வழிபடுதலும் விருதாவென்று மீ புலம்புவது என்னை
4. இலிங்கப் பிரகரணம்
வியத்தலிங்கம் அவ்வியக்கலிங்கம் வியத்தாவியத்தி லிங்கம்* என்னும் மூவகை இலிங்கங்களை, வரிவடிவெழுத்ை历 ஒலிவடிவெழுத்திற்கு அறிகுறியாகக் கொள்ளுதல்போலக் கடவுளுக்கு அறிகுறியாகவும், அதிட்டேயமாகவும்கொண்டு, அவரை அவற்றினிடத்தே விதிப்படி ஆவாகனம் பண்ணிப் பூசித்து வழிபடில், வாலானது பசுவினுடம்பெங்கும் வியாபித் திருப்பிலும், கன்றைக் கண்டபொழுது முலைவழியாகவே ஒழுகுகல்போல, அவர் தாம் சமஸ்தப்பிரபஞ்சத்தும் நிறைங் திருப்பினும் அவ்விலிங்கத் துவாரத்தால் அருள்செய்வார் என்று சிவரிகமங்கள் செப்புகின்றன,
* வியத்தலிங்கம்-எல்லா அவயவங்களும் வெளிப்பட்டிருக் கும் சந்திரசேகரர் முதலிய இருபத்தைந்து விக்கிரகங்கள். அவ் வியத்தலிங்கம்-அவைகள் வெளிப்படாததாய்ப் பீடமும் சிவி லிங்கமுமாய் இருப்பது. வியத்தாவியத்தலிங்கம்-முகமுங் தோள் களுமாத்திரக் வெளிப்பட்டிருக்கும் சிவலிங்கம்.

Page 20
2 சைவதூஷணபரிகாரம்
பாத். 25-ம் அதிகாரத்திலே யெகோவா மோசேயை நோக்கி, சீத்தீம் மரத்தினலே ஒருபெட்டி செய்து, அதைச் செம்பொற்றகட்டால் மூடி, அதன்மேல் செம்பொன்னினல் ஒரு கிருபாசபம் பண்ணி, அந்தக்கிருபாசயத்தின் இரண்டோ ாத்திற்கும் பொன்னினல் இரண்டு கெரூபிகளென்னும் விக் கிரகங்களையுண்டாக்கி, அந்தப்பெட்டிகளுக்குள்ளே தாம் எழுதிக்கொடுத்த சாட்சிப்பத்திரத்தை வைத்து, சதாகால மும் ஆராதனை பண்ணும்படி விதித்தார் என்று சொல்லப்பட் டிருக்கின்றது. ைெடி 35, 36, 37, 40-ம் அதிகாரங்களில் யெகோவா விதித்தபடி மோசே ஒரு ஆவாசத்தை யுண்டாக்கி, பெட்டியும் கிருபா சயமும் கெரூபிக ளென்னும் விக்கிரகங்களும் செய்து முடித்து, பெட்டிக் குள்ளே சாட்சிப்பத்திரத்தை வைத்து, பிரதிட்டை பண்ணி னனென்றும், அன்று தொடங்கி அந்தப்பெட்டிக்கு ஆராதனை செய்து வந்தார்கள் என்றும் அதற்கு ஆசாரியர்களாக ஆரோ னையும் அவன் சங்கதியாரையும் தலைமுறைதோறும் நியமிக்க விதித்தாரென்றும், அந்த ஆசிரியர்கள் செய்த ஆராதனைக்கு யேகோவா மகிழ்ந்து அநுக்கிரகம்பண்ணி வந்தார் என்றும், சொல்லப்பட்டிருக்கின்றது. யாக். 25. 22, சாட்சிப்பெட்டி பின்மேலிருக்கிற இரண்டு கெரூபிகளின் மத்தியினின்றும், கிருபாசயத்துக்கு மேலாய் நான் உனக்குத் தருசனமாகி, இஸ்ரவேல்சந்ததியாருக்கு நான் கட்டளையிடும் பூாவையும் உன்னிடத்தில் சொல்லுவேன். (என்று யெகோவா சொன் ஞர்.) எண் 7. 89. மோசே தேவனுடனே பேசும்படி சபையின் ஆவாசத்துட் பிரவேசிக்கையில், தன்னுடனே பேசுகிறவருடைய சத்தம் சாட்சிப் பெட்டியினது கிருபா சயத்தின் இரண்டு கெரூபிகளின் மத்தியினின்றும் தோன்றக் கேட்டான். அங்கே அவர் அவனுடனே பேசுவார்.
2.சாமு. 6.2. கெரூபியரின் மத்தியில் வாசமாயிருக்கிற சேணு

இலிங்கப் பிரகாணம் 13
பதியாகிய யெகோவாவின் நாமம் தொழுதுகொள்ளப்படுகிற தேவனின்பெட்டி. சங். 80. 1. கெரூபிகளின் மத்தியில் வசிப்பவரே, பிரகாசியும். ைெடி 99. 1. யெகோவா இராச்சிய பரிபாலனம் பண்ணுகிமுர்; சனங்கள் நடுங்குவார்களாக, அவர் கெரூபிகளின் மத்தியில் வீற்றிருக்கிருர், எண்.16. 46-48. வசனங்களிலே ஒரு நாள் யூதர்களில் வெகுசனங்களுக்குச் சடிதியாகிய ஒரு வாதை சம்பவித்தபொழுது, ஆரோன் சீக்கிரமாக ஒடிப்போய், அந்தப்பெட்டிக்குக் தூபங்காட்டி, ஆராதனைசெய்து வழிபட்டதனுல், அவ்வாகை கீங்கிற்று என்று சொல்லப்பட்டிருக்கின்றது. யோசு. 3. 2-4. அதி பதிகள் பாளையமெங்கும் போய்ச் சனங்களை நோக்கி, உங்கள் தேவனுகிய யெகோவாவினுடன்படிக்கைப் பெட்டியையும், லேவிய ஆசாரியர் அதைச் சுமக்கிறதையுங் கண்டவுடனே நீங்களும் புறப்பட்டு அதற்குப்பின் செல்லுங்கள். உங்க ஒளுக்குமதற்கும் இடையில் இரண்டாயிரமுழமளவுதாாமிருக்க வேண்டும். இதற்கு முன்னே நீங்கள் ஒருபோதும் இந்தவழி யாலே போகவில்லையே; ஆகையால் நடக்கவேண்டிய வழியை பறியும்படிக்கு அதற்குச்சமீபமாய் வாாதிருப்பீர்களாக என்று சொல்லிக் கட்டளையிட்டார்கள். ைெடி 3. 11-11. வசனங்களில் இஸ்ரவேலர் கானுன் தேசத்துக்குப் போம் போது மிகப்பிரவாகிக்கும் யோர்தான்நதியைச் சேர்ந்த வுடனே, ஆசாரியர்கள் சாட்சிப்பெட்டியைக்கொண்டு இறங் கினநில்ை, அங்கதி இரண்டாய்ப்பிரிந்து வழிகொடுத்தது. என்றும், சமஸ்கசனங்களும் யோர்தானக்கடந்துதீருமளவும், ஆசாரியர்கள் அந்தப்பெட்டியைச் சுமந்துகொண்டு, அங்நதி பின் மத்தியிலே நின்ருரர்களென்றும், சொல்லப்பட்டிருக் கின்றது. ைெடி 6. அதி. யெகோவா விதிக்கபடி ஆசாரியர்
கள் சாட்சிப்பெட்டியைச் சுமந்துகொண்டு யெரீகோநகரத்

Page 21
4 சைவதூஷணபரிகாரம்
தைச் சுற்றிவந்ததினுல், அங்ககாத்தின் மதில் இடிந்து கீழே விழுந்தது என்று சொல்லப்பட்டிருக்கின்றது. ைெடி 7. அதி. ஒருநாள் இஸ்ரவேலர் போரிலே சத்துருக்களுக்குக் கோற் றுப் புறங்காட்டியோடினதினுல், யோசுவா முதலியோர் மிக வியாகுலித்து, யெகோவாவின் பெட்டிக்கு முன்பாகச் சாயங் காலம் வரைக்கும் கரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்து, சத்துருக்களை வெல்ல வரம்பெற்றர்கள் என்று சொல்லப்பட் டிருக்கின்றது. 1. சாமு. 5, 6-ம் அதிகாரங்களிலே ஒரு முறை அந்தச்சாட்சிப்பெட்டியை இஸ்ரவேலருடைய சத் துருக்கள் எடுத்துக்கொண்டுபோய்த் தங்கள் தேவாலயத்தில் வைத்தபோது, அங்கேயிருந்த விக்கிரகம் அந்தப்பெட்டிக்கு முன்பாக விழுந்து க%லவேறு கைவேருக வெட்டுண்டு கிடந் தது என்றும், அங்நாடுகளெல்லாம் மூலவியாதியினுல் வாதிக் கப்பட்டன என்றும், அதினலே அவர்கள் அந்தப்பெட்டி யைத் திரும்ப இஸ்ரவேலரிடத்திற்கு அனுப்பிவிட்டார்க ளென்றும் சொல்லப்பட்டிருக்கின்றது. 2. சாமு. 6. அதி காரத்திலே அந்தப் பெட்டியைத் தாவீது முப்பதினுயிரம் பேரோடுபோய், ஒரு புது இரதத்தின்மேலேற்றிக்கொண்டு வரும்பொழுது; மாடுகள் அப்பெட்டியை அசைத்தபடியி ஞலே, அவ்விரதத்தை நடத்திய ஊசா அகியோ என்னுமிரு வருள் ஊசா தன் கையை நீட்டி அதைப்பிடித்தான் என்றும், அதினுல் யெகோவா அவனைக் கோபித்துக் கொன்றுபோட் டார் என்றும், அதுகண்டு தாவீது பயந்து, யெகோவாவி, பெட்டி என்னிடத்தில் வருவது எப்படியென்றிசொல்லி, அதைத் தன்னிடத்திலே கொண்டுவர விரும்பாமல், கித்திய ணுகிய ஒபெக் ஏதோமின்வீட்டிலே கொண்டுபோய் வைக் தான் என்றும், அந்தப்பெட்டி அவன் வீட்டிலே மூன்று மாசம் தங்கிற்றென்றும், அதினிமித்தம் யெகோவா ஒபெத்

இலிங்கப் பிரகாணம் 5
ஏதோமையும் அவன் குடும்பத்தார் அனைவரையும் ஆசீர் வதிக்கார் என்றும், தாவீது அதை அறிந்துபோய் அந்தப் பெட்டியைத் தன் நகரத்திலே கொண்டுவந்து வைத்துப் பலி கொடுத்து ஆராதனை பண்ணினுன் என்றும், சொல்லப்பட் டிருக்கின்றது. 1. இரா. 6. 8. அதிகாரங்களிலே காவிதின் குமாரனுகிய சலோமோன் யெரூஷலேமிலே ஒரு ஆலயங் கட்டி, அதிலே அந்தப்பெட்டியை வைத்துப் பிரதிட்டை பண்ணி, அனேகம் ஆடுமாடுகளைப் பலிகொடுத்து, ஆராத
செய்தான் என்று சொல்லப்பட்டிருக்கின்றது.
இப்படியே உன் சமயநூலிலே, உன் தேவனகிய யெகோவா சாட்சிப்பெட்டியையும் அதற்கு இருபக்கத்திலும் இரண்டு கெரூபிகளையும் வைத்து ஆராதனைபண்ணும்படி விதித்தார் என்றும், அவ்வாறே மோசே முதலானவர்கள் செய்தார்களென்றும், யெகோவா அந்தப்பெட்டியிலே பிரசன்னராகிக் கிருபைசெய்தாரென்றும், அந்தப்பெட்டியை அவமதிசெய்தவர்களைத் தண்டித்தார் என்றும், சொல்லப்பட் டிருக்கின்றது. அதை அறிந்துகொண்டும்,கோதுமை அப்பத் தையும் திராட்சாசத்தையும் உன்தேவனகிய கிறிஸ்துவின் சரீரமும் இரத்தமுமாகவேனும் அவைகளுக்கு அறிகுறியாக வேனும் பாவித்து உட்கொள்ளளல்வேண்டும் என்று புதிய வுடன்படிக்கையில் விதித்தபடி செய்துகொண்டும், எங்க%ளக் கல்?லயும் செம்பையும் வணங்கும் அஞ்ஞானிகளென்றும், க்டவுளுக்குச் செய்யற்பாலதாகிய வழிபாட்டை அறிவில் லாத விக்கிரகங்களுக்குச்செய்யும் பாவிகளென்றும், தூஷிப் பது மதிமயக்கமன்முே? அறிகுறியும் அதிட்டேயமுமாகிய இலிங்கத்தினலே காட்டப்படும் தமக்குச்செய்யும் வழிபாட் டைத் தமக்கென்றே கொள்ளாது இலிங்கத்துக்கென்று கொள்ளுதற்குக் கடவுள் மதிமயக்கமுடையவரல்லர்.

Page 22
5. அபிஷேகப் பிரகரணம்
இலிங்கங்களை அதிட்டித்து அருள் செய்யும் கடவுளுக்கு எண்ணெய் பால் தயிர் நெய் கேன் இளநீர் முதலியவைகளி ஞல் விதிப்படி அபிஷேகம் பண்ணுதல் புண்ணியமென்று
சைவாகமங்கள் சாற்றுகின்றன.
பாக். 30, 22-33. யெகோவா மோசேயை நோக்கி, அதிஉத்தம சுகந்த திரவியங்களாகிய சுக்கமான வெள்ளைப் போளத்தில் பரிசுத்த ஸ்தானத்துச் சேக்கலின்படி, 500 சேக்கலும், கருவாப்பட்டையில் அதிற்பாதியாகிய 250 சேக்கலும், சுகந்தவசம்பு 250 சேக்கலும், இலவங்கப் பட்டையில் 500 சேக்கலும், சீதவிருட்சக்கெண்ணெயில் ஒருகின்னும், எடுத்து, பரிமள கைலக்காரனுடைய செய்கை பாய்ச் செய்யப்பட்ட பரிமளதைலத்தைப்போல, அவை களினுற் சுத்த அபிஷேக தைலத்தைச் செய்வாயாக. அதுவே அபிஷேக தைலமாயிருக்கவேண்டும். அதினலே சபையின் ஆவாசத்துக்கும், சாட்சிப்பெட்டிக்கும், பீடத் துக்கும், அதின்பாத்திரங்களெல்லாவற்றிற்கும், கிளை விளக்குக்கும், அதின்கருவிகளுக்கும், தூபவேதிகைக்கும், தகனபலிவேதிகைக்கும், அதின்பாத்திரங்களெவற்றிற்கும், தொட்டிக்கும், அதின்பாதத்துக்கும், அபிஷேகம் பண்ணக் கடவாய். அவைகள் பரிசுத்தமாகும்பொருட்டு, அவைகளைப் பரிசுத்தப்படுத்துவாயாக. அவைகளைப் பரிசிக்கிறயாவும் பரிசுத்தமாகும். ஆரோனும், அவன்புத்திரரும், எனக்கு ஆசாரியத்தொண்டு செய்யும்படி, நீ அவர்களுக்கு அபிஷேகம் பண்ணி, அவர்களைப் பரிசுத்தப்படுத்துவாயாக. மீ இஸ்ர வேற்சந்ததியாரை நோக்கி, உங்கள் தலைமுறைதோறும் எனக்குரிய பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்கவேண்டும்.

நைவேத்தியப் பிரகாணம் 17
இது மனிதருடைய சரீரத்தில் வார்க்கப்படாது. இதற் கொப்பாக நீங்கள் வேறேசெய்யவும்படாது. இது பரிசு க்க மானது. இது உங்களிடத்திற் பரிசுத்தமாயிருக்கவேண்டும். இதற்கொப்பாகத் தைலமுண்டாக்கிறவனும், இதில் எடுத்து அங்கியன்மேல் வார்க்கிறவனும் கன் சனங்களினின்றும் சேதிக்கப்படுவான் என்று சொல்லென்றர்.
இப்படியே உன்சமயநூலிலே அபிஷேகம் விதிக்கப் பட்டமை கண்டும், களனுகார்போல நீ நாங்கள் அபிஷேகம் பண்ணுதலைக் கண்டு, விக்கிரகங்களுக்கு அபிஷேகம் பண் சணினதினலே பயனில்லையென்று பிதற்றுவது நீதியா?
6. நைவேத்தியப் பிரகரணம்
இலிங்கங்களை அதிட்டித்து அருள்செய்யும் கடவுளுக்கு அன்னம் பால் பழம் மோதகம் முதலியவைகளை விதிப்படி நிவேதனம்பண்ணுதல் புண்ணியமென்று சைவ நூல்கள் சொல்லுகின்றன.
யாத். 25. 30. என்சங்கிதியில், பீடத்தின்மேல் நித்த மும் சமூகத்தப்பம் வைக்கவேண்டும். எண். 6. 14-11. தகனபவிக்குப்பழுதற்ற ஒருவருஷத்தாட்டுக் குட்டியையும், பிராயச்சித்த பலிக்குப் பழுதற்ற ஒருவருஷத்துப் பெண் ணுட்டுக் குட்டியையும், ஸ்தோத்திரபலிக்குப் பழுகற்ற ஒராட்டுக்கடாவையும், நைவேத்தியத்துக்கு ஒருகூடையில் எண்ணெயிற்பிசைந்த புளிப்பில்லாத மெல்லியமாவினும் செய்த அதிரசங்களையும், எண்ணெய் தடவப்பட்ட புளிப் பில்லாத அடைகளையும், பானபலியுடன் யெகோவாவுக்கு நைவேத்தியமாகக் கொண்டுவரக்கடவன். அவைகளை
2

Page 23
18 சைவதூஷணபரிகாரம்
ஆசாரியன் யெகோவாவின் சங்கிதியிற்கொண்டுவந்து, அவ
னுடைய பிராயச்சிக்கபலியையும், அவனுடைய தகன பலியையும், நிவேதனம்பண்ணி, ஆட்டுக்கடாவைக் கூடையி
லுள்ள புளிப்பில்லாத அப்பங்களுடனேசுடட, யெகோவா
வுக்கு ஸ்கோத்திரபலியா யிடக்கடவன்; அன்றியும் ஆசாரி
யன் நைவேத்தியத்துடனே பானபலியைச்செலுத்துவானக.
லேவி. 24. 5-9, நீ மெல்லியமாவை எடுத்து ஒவ்வொரு
அப்பம், ஒரு எபாவிற் பத்தில் இரண்டுபங்குள்ளதாகப்
பன்னிரண்டு அப்பஞ்சுடவேண்டும். நீ அவைகளை யெகோ
வாவின் சங்கிதியில் பரிசுத்தபீடத்தின்மேல் ஒவ்வொரு
அடுக்கில் அவ்வாறு இருக்கும்படி இரண்டு அடுக்காக வைத்து யெகோவாவுக்கு அக்கினியிலிடப்படும் ஞாபகக்குறியாகிய நைவேத்தியமாகும்பொருட்டு, அடுக்குத்தோறுஞ் சுத்த
குந்துருவை யிடக்கடவாய். அவைகளை நித்தியவுடன்படிக்
கையாய் இஸ்ரவேல்சந்ததியார் கையில்வாங்கி ஒய்வுநாள்
கோறும் யெகோவாவின் சங்கிதியில் அடுக்கிவைக்கக் கடவன்.
கித்திய நியமமாக யெகோவாவுக்கு அக்கினியிலிடப்படும்
நைவேத்தியங்களுக்குள் அவைகள் மிகவும் பரிசுத்தமான
வைகளாகையால் அவைகள் ஆரோனுக்கும் அவன் புத்திர
ருக்கும் உரித்தாகும்; அவைகளைப் பரிசுத்த ஸ்தானத்தில்
புசிக்கக்கடவர்கள். இன்னும் நைவேத்தியத்தைக் குறித்து யாத், 29ம் அதிகாரத்திலும் லேவி. 2, 3, 4ம் அதிகாரங்’ களிலும் பிறவிடங்களிலும் விரிவாகச் சொல்லப்பட்டிருக் கின்றது. இங்கே எடுத்துச்சொல்லிற் பெருகும்.
இப்படியே உன் சமயநூலிலும் நிவேதனம் விதிக்கப் பட்டமைகண்டும், நீ நாங்கள் எங்கள் கடவுளுக்கு நிவேத
னம்பண்ணுதலை அறிந்து, நீங்கள் அன்னம் பழம் முதலிய

தூபதீபப் பிாகாணம் 19
வைகளை இலிங்கத்துக்கு முன் படைக்கிறீர்களே; அது அவைகளை உண்ணுமா என்று இகழ்கின்முய். இதனல் பூர்வகாலத்திலே உன் யெகோவா பசியினல் தமக்குமுன் படைத்தவைகளை உண்டாரென்பதே உன் கருத்தென்று தோன்றுகின்றது.
7. தூபதிபப் பிரகரணம்
இலிங்கங்களை அதிட்டித்து அருள்செய்யுங்கடவுளைத் ஆாபதீபங்களினலே விதிப்படி பூசித்தல் புண்ணியமென்று
சைவாகமங்கள் சொல்கின்றன.
யாக். 30. 34-36. யெகோவா மோசேயை நோக்கி வடிந்த வெள்ளைப்போளமும், குங்குலியமும் சாம்பிராணியு மாகிய சுகந்ததிரவிய்ங்களையும், பரிசுத்தமான குந்துருவை யும் சமநிறையாக எடுத்து, பரிமளதைலக்காரன் செய்கிறது . போல அவைகளைக் கலந்து கிர்மலபரிசுத்தசுகந்த தூபமாக்கு வாயாக. அதில் ஒருபங்கை இடித்துப் பொடியாக்கி, நான் உன்னைச்சந்திக்கும் சபையின் ஆவாசத்திலிருக்கும் சாட்சிப் பெட்டிக்கு முன்னே வைக்கவேண்டும். அது உங்களுக்கு மிகவும் பரிசுத்தமா யிருக்கவேண்டும். லேவி 16, 12, 13 யெகோவாவின் சங்கிகியிலிருக்கும் வேதிகையிலெரியும் நெருப்புக் தணல்களினலே தன்தூபகலசத்தை நிறைத்து, தூளாக்கப்பட்ட சுகந்த தூபவர்க்கத்தில் தன்கைநிறைய அள்ளித் திரைக்குள்ளே கொண்டுவந்து, கான் சாகாதிருக் கும்படி தூபமேகம் சாட்சிப்பத்திரத்தின் மேலிருக்குங் கிருபாசயத்தை மூடத்தக்கதாக, யெகோவாவின் சங்கிதியில் அக்கினியின்மேல் தூபவருக்கத்தைப் போடக்கடவன்

Page 24
20 சைவதுரஷணபரிகாரம்
எண். 16, 46. நீ தூபகலசத்தை எடுத்து வேதிகையின் அக்கினியை அதிலிட்டு, அதில் மேலே தூபவருக்கந் தூவிச் சபையினிடத்திற் சீக்கிரமாயோடி அவர்களுக்குப் பிராயச் சித்தஞ்செய் என்முன். யாக் 30, 7, 8. ஆரோன் காலை தோறும் விளக்குகளைச் சோடிக்கும்பொழுது அதின்மேலே சுகந்ததூபமிடக்கடவன். மாலையில் விளக்கேற்றும்பொழுதும் அதின்மேலே சுகந்ததூபமிடக்கடவன். இதுவே உங்கள் தலைமுறைதோறும் யெகோவாவின் சங்கிதியில் இடவேண்டிய நித்தியதூபம், வெளி. 8. 3-5. வேருெருதாதன் தூபங் காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துவந்து வேதிகையின் அருகே நின்முன்; சிங்காசனத்துக்கு முன்பாக இருந்த பொன்வேதிகையின்மேலே, எல்லாப்பரிசுத்தவான்களுடைய பிரார்த்தனைகளோடும் இடும்பொருட்டு, சுகந்ததூபவருக்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. பரிசுத்தவான்களுடைய பிரார்த்தனைகளோடே சுகந்த வருக்கங்களின் புகை, தூத னுடைய கையினின்று தேவனுக்கு முன்பாக எழும்பிற்று. பின்பு அந்தத் தூதன் அாபகலசத்தை எடுத்து, அதை வேதிகையிலுள்ள அக்கினியினலே நிரப்பிப் பூமியிலே விச, சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமி யதிர்தலுமுண்டாயின. w
இவ்வாறே உன்சமயநூலிலே யெகோவாத் தமக்குத் தூபமிட விதித்தாரென்றும், அவ்வாறே அவர்பத்தர்கள் செய்தார்கள் என்றும் சொல்லப்பட் டிருத்தல்கண்டும், நாங்கள் எங்கள் கடவுளுக்குத் தூபதிபங்காட்டு தலை நீ இகழ்வது மூடத்துவமே.

8. தீபப் பிரகரணம்
சிவாலயங்களிலே திருவிளக்கேற்றுதல் புண்ணிய மென்று சைவ நூல்கள் சொல்லுகின்றன.
லேவி. 24. 1-4. பின்னும் யெகோவா மோசேயை நோக்கி, நித்தமும் விளக்கெரியும்படிக்கு இஸ்ரவேல் சந்ததி பாரிடித்துப் பிழிந்த சீதவிருக்ஷத்தின்சுத்தமான எண் ணெயை உன்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களுக்குக் கட்டளையிடு; ஆரோனனவன் சபையின் ஆவாசத்தில் சாட்சிப்பத்திரத்தின் திரைச்சீலைக்கு வெளியே சாயங்காலக் தொடங்கி விடியற்காலபரியந்தம் யெகோவாவின் சங்கிதியில் நித்தமும் ஏற்றக்கடவன்; இது உங்கள் தலைமுறைதோறும் கித்திய நியமமாயிருக்கும். அவன் பரிசுத்தக்கிளைவிளக்கின் அகல்களை யெகோவாவின் சங்கிதியில் ஒழுங்குப்படுத்த வேண்டும். யாக். 27. 20, 21 வசனங்களிலே மேற்கூறிய வாறே சொல்லப்பட்டிருக்கின்றது. எண். 8. 1 - 4. யெகோவா மோசேயைநோக்கி, ஆரோனுக்கு, நீ விளக் கேற்றும்பொழுது எழுதீபமும், கிளைவிளக்குத்தண்டிற்கு நேரே ஒளிகொடுக்கவேண்டும் என்று சொல் என்றர். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்ட பிரகாரம் ஆரோன் கிளை விளக்குக்கண்டிற்கு நேரே எரியவிளக்கேற்றினன். இந்தக் கிளைவிளக்குத் தண்டுமுதல் புஷ்பங்கள் வரைக்கும் பொன்னினுல் வைர வேலை யாகச் செய்யப்பட்டது. யேகோவா மோசேக்குக் காண்பித்த சாயலின்படியே அந்தக் கிளை விளக்கை உண்டாக்கினன்.
இப்படி உன் சமயநூலிலும் ஆலயங்களிலே திருவிளக் நேற்றுதல் விதிக்கப்பட்டமை கண்டும், நீ எங்களைநோக்கி,

Page 25
22 சைவதூஷணபரிகாரம்
ஆலயங்களிலே வெகுபொருள் செலவிட்டு விளக்கேற்றி வைக்கிறீர்களே? உங்கள் கடவுளுக்குக் கண்தெரியாதா? என்று தூஷிப்பது பேதைமையன்றே?
9. வாத்தியப் பிரகரணம்
அபிஷேகம் பூசை உற்சவம் முதலியன நடக்கும் பொழுது சிவ சங்கிதானத்திலே பலவகைப்பட்ட வாத்தி யங்களை முழக்குதலும் நடனம்பண்ணுதலும் புண்ணிய மென்று சிவசாத்திரங்கள் செப்புகின்றன.
1. நாளா. 15. 15, 16. யெகோவாவின் வாக்கின்படி மோசே கட்டளையிட்டபிரகாரம் தேவனுடைய பெட்டியைத் திண்டோடும் தங்கள் தோளின்மேலெடுத்துக்கொண்டு வந்தார்கள். தங்கள் சகோதரரைத், தம்புருவும், கின்னரமும், கைத்தாளங்களுமாகிய கீதவாத்தியங்கள் முழங்க, ஆனந்தத் துடன் உரத்தசத்தமாய்ப் பாடும்பொருட்டு, ஏற்படுத்தும் படி தாவீதுகட்டளையிட்டான். ைெடி. அதி. 19-21. பாடகராகிய ஏமானும், ஆசானும் ஏதானும், வெண்கலத்தி குலே செய்த தொனிக்குங் கைத்தாளம்போடவும், சகரி யாவும் அசீயேலும் ஷிமிராமொத்தும், யிகியேலும் உன்னி யும், இலியாப்பும், மாசெயாவும், பிஞயாவும், அலாமேத்தில் தம்புருகளைவாசிக்கவும், மத்திதீயாவும், இலீப்பேலேகும், ஒபெத் எதோமும், யெயீயேலும், அச்சீயாவும், ஷிமினித்தி ஞல் உயர்ந்த தொனிசெய்து கின்னாம் வாசிக்கவும், கியமிக் கப்பட்டார்கள். டிை. அதி. 28. ஊதுகொம்போடும், பூரிகைகளோடும் கைத்தாளத்தோடும் தம்புருவும், கின்னர மும் முழங்க, இஸ்ரவேலர் அனைவரும் யெகோவாவின்

வாத்தியப் பிரகாணம் 23.
உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவந்தார்கள். டிை 16. 6. ஆசாரியாாகிய பிஞயாவும், யாகசியேலும், தேவ லுடைய உடன்படிக்கைப்பெட்டிக்கு முன்பாக கித்தமும் பூரிகையூதிஞர்கள். எண். 10, 8-10. ஆரோகின் புத்திரர்க ளாகிய ஆசாரியர்களே எக்காளங்களை ஊகக்கடவர்கள். உங்கள் தலைமுறைதோறும் இந்தவிதி கித்தியகியமமா யிருக்கும். உங்கள் தேசத்தில் உங்களைக் கிலேசப்படுத்தும் சத்துருவுக்ரு விரோதமாய் யுத்தத்துக்குப் போகும் பொழுது, நீங்கள் எக்காளங்களைப் பேரொலியாய் ஊதக் கடவீர்கள்; அதினுல் உங்கள் தேவனகிய யெகோவா உங்களை கினைப்பார், நீங்கள் உங்கள் சத்துருக்களினின்றும் இாட்சிக்கப்படுவீர்கள். அன்றியும் உங்கள் ஆனந்ததினத்தி லூம், உற்சவநாள்களிலும் மாசாரம்பங்களிலும், உங்கள் தகனபலிகளையும், ஸ்தோத்திரபலிகளையும் செலுத்தும் பொழுது எக்காளங்களை ஊதவேண்டும்; அது யெகோவாவின் ஈங்கிதியில் உங்களுக்கு ஞாபகக்குறியாயிருக்கும். நானே உங்கள் தேவனுகிய யெகோவா என்ருரர். சங், 98, 5. கின்னரத்தினுலும் கின்னரத்தோடு கீதத்தினேசையினுலும், யெகோவாவைப் பாடுங்கள். தாரையினுலும் எக்காளத்தினு ஆலும் இராசாவாகிய யெகோவாவின் சமுகத்தில் ஆனந்தத் கொனிசெய்யுங்கள். 2. சாமு. 6. 5. தாவீதும் இஸ்ரவேல் Fந்ததியார் சமஸ்தரும் யெகோவாவின் சமுகத்தில் தேவ தாருவினுற் செய்யப்பட்ட கின்னாமும், தம்புருவும், மிருகங்கமும், விணையும், கைத்தாளமுமாகிய காணுவித வாத்தியங்களையும் முழக்கினர்கள்.
இப்படியே உன் கேவசங்கிதானத்திலே வாத்திய கோஷஞ் செய்தல்வேண்டுமென்று விதித்தமைகண்டும், நீ எங்கள் சிவாலயங்களிலே வாத்தியங்கள் முழக்குதலைக்கண்டு இகழ்வது தகுதியன்றே.

Page 26
10. புண்ணியகாலப் பிரகரணம்
சோமவாரம் மங்கலவாரம் சுக்கிரவாரம் பானுவாரம் அமாவாசி பூரணை சதுர்த்தி சட்டி கார்த்திகை சிவராத்திரி மாசப்பிறப்பு வருஷப்பிறப்பு உற்சவகாலம் முதலிய தினங்கள் புண்ணியகாலங்களென்றும், அவைகளிலே மனம் பொறிவழி போகாமல் உண்டிசுருங்குதல்செய்து கடவுளை விதிப்படி விசேஷமாக வழிபடுதல் பெரும்புண்ணியம் என்றும் சைவ நூல்கள் சொல்கின்றன.
2. இரா. 4. 22, 23. தன் புருஷனைக் கூப்பிட்டு நான் தேவனுடைய தாசனிடத்திற் போய்வரும்படி வாலிப்ரில் ஒருவனையும், கழுதைகளில் ஒன்றையும் என்னிடத்தில் அனுப்பும் என்ருள். அதற்கு, அவன் நீ இன்றைக்கு அவ னிடத்திற் போகவேண்டியதென்ன; அமாவாசியுமல்ல, ஒய்வு நாளுமல்லவென்று சொல்ல, அவள் நன்மையாய் முடியுமென் முள். 1. நாளா 23, 31. ஒய்வுநாளிலும், அமாவாசியிலும், நியமிக்கப்பட்ட உற்சவங்களிலும், தொகைப்படி, தங்களுக் குக் கட்டளையிடப்பட்ட விதிப்பிரகாரம், யெகோவாவின் சங்கிதியில் கித்தமும் யெகோவாவுக்குச் சகல தகனபலிகளையு மிடவும், லேவி. 23-ம் அதிகாரத்திலும் பிறவிடங்களிலும் ஒய்வுநாளும் மாசப்பிறப்பும் அமாவாசியும் பூரணையும் உற்சவ நாள்களும் புண்ணியகாலங்கள் என்றும், அந்தக்காலங்களிலே யெகோவாவின் ஆவாசத்தை விட்டுப் பிரியலாகாதென்றும், எவ்வித சாதாரணவேலையுஞ் செய்யலாகாகென்றும், கிக்கி யாக்கினியிலே இறைச்சிமுதலியவைகளையிட்டுத் தகனபலி செய்தல்வேண்டும் என்றும், தங்கள் தங்கள் சங்கற்பத்தின் படியே நியமித்த தினங்களிலே உபவசித்து விரகமனுட்டித் தல் வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது.

சிவாசாரியப் பிரகாணம் 25
இப்படியே உன்விவிலிய நூல் பேசுவதைக் கண்டுகொண் டும், எங்களைப்போலவே பானுவாரத்தைப் புண்ணியகால மேன்று கொண்டாடிக்கொண்டும் எங்களைநோக்கி, நீங்கள் காலமெல்லாம் சமமாயிருக்கச் சிலவற்றை வேறுபிரித்துப் ண்ணியகாலங்களென்றுகொண்டு, விரதம் அனுட்டித்தலும் திருவிழாக்கொண்டாடுதலும் வீண்செய்கைகள் என்று பிதற்றுவது அழகா?
11. சிவாசாரியப் பிரகரணம்
பரார்த்தலிங்கப்பிரதிட்டை பரார்த்தபூசை உற்சவம் என்பனவும் தீகூைடிமுதலியனவுமாகிய சகலகர்மங்களும் செய்தற்கு கெளசிகாதி பஞ்சரிஷிகோத்திரத்திற் பிறந்த ஆதிசைவர் என்னும் சிவப்பிராமணர்களுள், பாவங்களை வெறுத்துப் புண்ணியங்களைச் செய்பவர்களாய், சமயம் விசேஷம் நிருவாணம் என்னும் மூன்றுதீகூைடியும் பெற்றவர் களாய், சைவாகமங்களை ஒதியுணர்ந்தவர்களாய், சிவாகமங் களில் விதித்த இன்னுேரன்னபல இலக்கணங்களையும் உடை யவர்களாய் ஆசாரியாபிஷேகம்பெற்ற சிவாசாரியர்களே அதிகாரிகள் என்றும், மற்றைப்பிராமணர் க்ஷத்திரியர் வைசி யர் குத்திரர் என்னும் நான்கு வருணத்தார்களுள்ளும் மேற் கூறியவாறே ஆசாரியாபிஷேகம் பெற்றவர்கள் மேற்கூறிய பரார்த்தலிங்கப் பிரதிட்டை முதலியன நீங்கலாக மற்றை ஆன்மார்க்கலிங்கப் பிரதிட்டை தீசைஷ முதலியன செய்தற்கு அதிகாரிகளென்றும், அவர்களெல்லாரும் மனிதப்பிறப்பின ாயினும் தேவர்களாகப் பாவிக்கற்பாலர் என்றும் அவர்களைப் பூசிப்பவர்கள் சிவனைப்பூசிப்பவர்களென்றும், அவர்களைத் தூஷிப்பவர்கள் சிவனைத் தூஷிப்பவர்கள் என்றும், அவர்க

Page 27
26 சைவதூஷணபரிகாரம்
ளுக்குக் கொண்டுசெய்து அவர்கள் சொற்கேட்டு 15ட த்தல் பெரும்புண்ணியமென்றும், சிவாகமங்கள் செப்புகின்றன.
யாத். 2. 9-ம் அதிகாரத்தில் ஆரோனையும் அவன் புத்திர ரையும் ஆசாரியராக அபிஷேகம் பண்ணல்வேண்டும் என்றும் அபிஷேகவிதி இன்னது என்றும் யெகோவா விதித்தார் என அம், ைெடி 40-ம் அதிகாரத்தில் அவ்விதிப்படி மோசே அவர்க ளுக்கு அபிஷேகம் பண்ணினன் எனவும், எண். 8-ம் அதி காரத்தில் யெகோவாவுக்கு மற்றைக்கொண்டுகளைச் செய்யும் பொருட்டு லேவியர் இஸ்ரவேலரினின்றும் பிரித்து அபி ஷேகம் பண்ணப்பட்டார்கள் எனவும், எண். 18-ம் 20-ம். வசனத்திலும், உபா. 18. 1, 2. வசனங்களிலும், ைெடி 16-ம். வசனத்திலும், ஆரோனுக்கும் அவன் புத்திரருக்கும் அவன் பிதாவின் வம்சத்தாராகிய லேவியாசாரியருக்கும் அவர்கள் சகோதரராகிய இஸ்ரவேலரோடு பாகமும் சுதந்தாமும் @షుడు யெகோவாவே அவர்களுக்குச் சுகந்தரம் எனவும், எண். 18-ம் அதிகாரத்தில் இஸ்ரவேலர் யெகோவாவுக்குக் கொண்டுவந்து கொடுக்கும் இறைச்சி அப்பம் காணிக்கை முதலியவைகளில் ஆரோனுக்கும் அவன் புத்திரருக்கும் லேவியருக்கும் பங்கு உண்டெனவும், உபா. 12-ம் அதிகாரக் தில் லேவியரைக் கைவிடலாகாது எனவும் டிை 11-ம் அதி காரத்தில் சகலரும் லேவியர்சொற்கேட்டு நடத்தல்வேண்டும் எனவும், எண். 16-ம் அதிகாரத்தில் ஆரோனுக்கு விரோத மாகப் பேசினவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் எனவும், லேவி. 21-ம் அதிகாரத்தில் இவர்கள் சந்ததியார்களே தலைமுறை தோறும் ஆசாரியர்களாதற்கு அதிகாரிகள் எனவும், இன்ன இன்ன இலக்கணங்களையுடையவர்களே ஆசாரியர்களாதற்கு
உரியரெனவும், மத். 10-ம் அதிகாரத்தில் யேசு தன்னுடைய,

சரீாசத்திப் பிரகாணம் 2.
சீஷரை நோக்கி உங்களை அங்கீகரிக்கின்றவன் என்னையும் அங்கீகரிக்கின்றன் என்னை அங்கீகரிக்கின்றவன் என்னை அனுப்பியவரையும் அங்கீகரிக்கிருன் இந்தச் சிறியவர்களில் ஒருவன் என்சீஷனென்று அவனுக்கு ஒருகலசத் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன்பலனை இழந்துபோகான் என்று சொல்லி வியாதிகளை நீக்கவும், பிசாசுகளை ஒட்டவும், அவர் களுக்கு அதிகாரம் கொடுத்தார் எனவும், சொல்லப்பட்டிருக்" கின்றது.
இப்படியே உன் சமயநூல் பேசுதல் கண்டும், மனிதர்க ளெல்லாருஞ் சமமாயிருக்க, சைவர்கள் தங்கள் அறியாமை யால் அவர்களுட் சிலரை ஆசாரியர்களென்றும் பிராமணர்க ளென்றும் பெயரிட்டு, அவர்களே உத்தமோத்தமர்களென்று அவர்களை வணங்கி அவர்களுக்குக் தொண்டுசெய்து திரிகி முர்களென்று நீ புலம்புவது என்ன?
12. சரீரசுத்திப் பிரகரணம்
தினந்தோறும் அனுட்டானம் செபம் பூசை சிவாலய் சேவை வேதாகமாதி சாத்திரபடனம் முதலிய சற்கருமங் களை, சலத்தினலே விதிப்படி சரீரசுத்திபண்ணித் தெளத வஸ்திரம் தரித்துக்கொண்டே செய்தல் வேண்டுமென்றும், அவ்வாறே செய்யாமை பாவமென்றும், சைவ நூல்கள் சாற்று கின்றன.
யாத், 10, 11. யெகோவா மோசேயை நோக்கி மூன்ரும் நாளிலே யெகோவா சகலசனங்களுக்கும் பிரத்தியக்ஷமாகச் சீனுய் மலையின்மேலிறங்குவார். ஆதலால் நீ சனங்களிடத் திற் போய், இன்றைக்கும் நாளைக்கும், அவர்கள் தங்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்க்கும்படி செய்து அவர்களைப்

Page 28
28 சைவதூஷண்பரிகாரம் I
பரிசுத்தப்படுத்தி மூன்ரும் நாளுக்கு ஆயத்தமாயிருக்கும்படி செய்வாயாக. ைெடி 40, 12. 13, 16. 31, 32, நீ ஆரோன யும் அவன் புத்திரரையும், சபையின் ஆவாசவாசலில் வாச் செய்து அவர்களைச் சலத்தினுல் ஸ்நானம்பண்ணுவிக்த, ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களைத் தரிப்பித்து எனக்கு ஆசாரியக்கொண்டுசெய்யும்படி, அவனுக்கு அபிஷேகம் பண்ணி, அவனைப் பரிசுத்தப்படுத்துவாயாக-அப்படியே மோசே செய்தான். யெகோவா தனக்குக் கட்டளை இட்ட படியெல்லாம் செய்தான். அவ்விடத்திலே மோசேயும், ஆரோனும் அவனுடைய புத்திரரும், தங்கள் கைகளையும் கால்களையும் கழுவினர்கள். யெகோவா மோசேக்குக் கட்டளை இட்டபடி அவர்கள் சபையின் கூடாரத்திற் பிரவேசிக்கிற பொழுதும், வேதிகையைச் சமீபிக்கிறபொழுதும் கழுவுவார் கள். ைெடி 30, 17-21. யெகோவா மோசேயை நோக்கி, கழுவுகிறதற்குப் பித்தளையினலே ஒருதொட்டியையுண்டு பண்ணு. அதின்பாதமும் பித்தளையாயிருக்கவேண்டும். அதைச் சபையின் ஆவாசத்துக்கும் வேதிகைக்கும், இடை யில் வைத்து, அதிலே சலம்வார்க்கவேண்டும். அதில் ஆரோனும், அவன் புத்திரரும், தங்கள் கைகால்களைக் கழு வக் கடவர்கள். அவர்கள் சபையின் ஆவாசத்தில் பிரவேசிக் கும்பொழுதும், யெகோவாவுக்குத் தகனபலி செலுத்தும்படி தொண்டுசெய்ய வேதிகைக்குச் சமீபிக்கும்பொழுதும், சாவாதபடி சலத்தினுல் கங்களைக் கழுவக்கடவர்கள். இது தலைமுறை தலைமுறையாக அவனுக்கும், அவன் சந்தகியா ருக்கும், கித்திய கியமமாயிருக்குமென்ருர், ! f
இப்படியே சரீரசுத்தி அத்தியாவசியகமென்றும், அது செய்யாதார் தண்டிக்கப்படுவார்கள் என்றும், உன் சமயநூல் பேசுதல் கண்டும், நீ எங்களை இகழ்வது மடமையன்முே?

13. ஆசௌசப் பிரகரணம்
சனனமாணங்களினலே ஆசெளசமுண்டு என்றும், அது விதித்த கால எல்லையிலே பிராயச்சித்தத்தால் நீங்கு மென்றும், ருதுமதிக்கு மூன்றுநாள் ஆசௌசமுண்டு என் றும், அது நான்காம்நாள் பிராயச்சித்தத்தாற்றீரும் என்றும் இவ்வாசெளசங்களுடையவர்களைத் தீண்டலாகாது என்றும், சைவ நூல்கள் சாற்றுகின்றன.
லேவி. 12. 1-5. யெகோவா மோசேயை நோக்கி, நீ இஸ்ரவேற்சந்ததியாரிடத்தில், ஒரு ஸ்திரீ கருப்பவதியாகி ஆண்பிள்ளை பெற்ருள். அசுசியினிமித்தம் ருதுமதியைப் போல ஏழுநாள் அசுசியாயிருக்கக்கடவள். எட்டாந்தினக் தில் அந்தப்பிள்ளை தன் அக்கிரசருமத்தில் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும். பின்பு அவள் முப்பத்துமூன்று நாள்வரைக்கும் உதிரசுசியினிலைமையிலிருப்பாளாக. சுசிக் கேற்றதினங்கள் நிறைவேறுமளவும், எந்தப் பரிசுத்தவஸ்து வையும் பரிசிக்கவும், பரிசுத்தஸ்தானத்திற் பிரவேசிக்கவும் வேண்டாம். பெண்பிள்ளையைப் பிரசவித்தால் ருதுமதி யைப்போல இரண்டுவாரம் அசுசியாயிருந்து, பின்பு தன் லுதிரசுசியினிலைமைக் கேற்ப அறுபத்தாறு நாளிருக்கக் கடவள். ைெடி 21, 1-3. யெகோவா மோசேயை நோக்கி, ஆரோனுடைய புத்திரராகிய ஆசாரியர்களில் எவனுகிலும், தன்சனத்தாளில் ஒருவன் மரித்தால், அசுசியாயிருக்கப் படாது. தன்பிதாவும் மாதாவும் புத்திரனும் புத்திரியும், ! சகோதரனுமாகிய தன்கிட்டின உறவின்முறையாருக்காகவும், தன் கிட்டின இனத்தாளும் புருஷனில்லாத கன்னிகையு மாகிய தன் சகோதரிக்காகவும் அசுசியாயிருக்கலாம். ைெடி 11. 39. உங்களுக்கு ஆகாரத்துக்கான மிருகஞ் செத்தால்,

Page 29
30 சைவதூஷணபரிகாரம்
அதின் பிணத்தைப் பரிசிக்கிறவன் சாயங்காலபரியந்தம் அசுசிப்பட்டிருப்பானுக. ைெடி 15. 19-24. ருதுமதி யான ஸ்திரீ கன்சரீரத்தின் ஊறலினிமித்தம் ஏழுநாளளவும் அசுசியாயிருப்பாள். அவளைப் பரிசிக்கிறவன் எவனே அவன் சாயங்காலபரியந்தம் அசுசியாயிருப்பான். அவள் அசுசியாயிருக்கையில் அவள்படுத்த எந்தப்படுக்கையும் அவ விருந்த எந்த ஆசனமும் அசுசியாயிருக்கும். அவளுடைய படுக்கையைப் பரிசிக்கிறவனெவனே அவன் தன் வஸ்திரங் களைக்தோய்த்து, சலத்திலே ஸ்நானம் பண்ணக்கடவன்: சாயங்காலபரியந்தம் அவன் அசுசியாயிருப்பான். அவள் இருந்த ஆசனத்தைப் பரிசிக்கிறவன் எவனே அவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்துச் சலத்திலே ஸ்நானம்பண்ண வேண்டும். சாயங்காலபரியங்கம் அவன் அசுசியாயிருப்பான். அவளுடைய படுக்கையின்மேலாகிலும் அவளுடைய ஆசனத் தின் மேலாகிலும் இருந்த யாதொன்றைப் பரிசித்தவன் சாயங்காலபரியந்தம் அசுசியாயிருப்பான். ருதுமதியான ஸ்திரீயுடன்படுத்தும், அவளால் தீண்டப்பட்டுமிருக்கிற எந்தப்புருஷனும் எழுநாள் அசுசியாயிருப்பான். அவன் ப்டுக்கும் படுக்கையும் அசுசியாகும். இன்னும் ஆசௌசங் களைப்பற்றி மேற்படி புத்தகம், 11, 12, 13, 14, 15, 21. அதிகாரங்களிலே விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.
இப்படியே, சனனமாண முதலியவைகளால் விதித்த கால எல்லைவரைக்கும் ஆசௌசமுண்டென்றும், ೨॥ é列 பிராயச்சித்தத்தால் நீங்குமென்றும், உன் சமயநூல் பேசுதல் கண்டும், நீ எங்களை நோக்கி, சனனசெளசம் மரணுசெளசம் உண்டென்று சொல்கின்றீர்களே! அதற்கு உருவமுண்டா? பிரேதமுதலியவற்றைத் தீண்டில் அது தீண்டினவனைத் தொடருமா? அது பிராயச்சித்தம் செய்தாலன்றி நீங்காதா? என்று தூஷிப்பது என்ன?
ക്കത്ത

14. நிபந்தத்திரவியப் பிரகரணம்
சிவாலயங்களுக்குத் தங்கள் தங்களாலியன்றபடி நிபந்தத் திரவியங்களைக் கொடுத்தல் புண்ணியம் என்று சைவ நூல்கள் சொல்லுகின்றன.
யாத். 25. 1-7. யெகோவா மோசேயை நோக்கி, இஸ்ரவேல்சந்ததியார் எனக்குக் காணிக்கையைக் கொண்டு வந்து செஅலுத்தும்படிக்கு, அவர்களுடனே பேசுவாயாக. இஷ்டத்துடன் மனப்பூர்வமாய்க் கொடுப்பவன் எவனே, அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக, சீங்கள் அவர்களிடத்தில் வாங்கவேண்டிய காணிக்கையாவன: பொன், வெள்ளி, பித்தளை, நீலம், தூமிரம், சிவப்பு என்னும் சீறங்களையுடைய மெல்லிய பஞ்சிநூல், வெள்ளாட்டு மயிர், சிவப்புவன்னங்கொடுத்த ஆட்டுக்கடாத்தோல், தகசின் தோல், சீத்தீம்மாம், விளக்கெண்ணெய் அபிஷேக தைலத் துக்குப் பரிமளதிரவியங்கள், துரபத்துக்கு, சுகந்தவருக் கங்கள், கோமேதகரத்தினம், எபோத்து வஸ்திரத்திலும் மார்புப்பதக்கத்திலும் பதிக்கும் இரத்தினங்கள், என்னு மிவைகளாம். ைெடி. 35. 4-9. வசனங்களில் இவ்வாறே சொல்லப்பட்டிருக்கின்றது. ைெடி 22. மனப்பூர்வமுள்ள ஸ்கிரீ புருஷர்கள் யாவரும் அஸ்தகடங்களும்; காதணிக ளும், மோதிரங்களும், ஆாங்களுமாகிய சகலவிதப் பொன்ன பரணங்களையுங் கொண்டுவந்தார்கள். எண். 7. 3. இவ் விரண்டு பிரதானிகள் ஒவ்வொருவண்டிலும், ஒவ்வொருவன் ஒவ்வொருமாடுமாக, ஆறுகுலால் வண்டில்களையும், பன்னி ரண்டு மாடுகளையும் யெகோவாவுடைய சங்கிதியில் காணிக்கை யாகச் செலுத்தும்படி ஆவாசத்துக்கு முன்பாகக் கொண்டு வந்தார்கள். ைெடி 13-17. அவனுடைய காணிக்கையாவது,

Page 30
32 சைவ்தூஷணபரிகாரம்
நைவேத்தியத்துக்கு எண்ணெயிற் பிசைந்த மெல்லியமாவி ணுல் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தானத்து ஷேக்கலாக நூற்று முப்பது ஷேக்கல் நிறைகொண்டதுமான ஒரு வெள்ளித் தாலமும், எழுபது ஷேக்கல் கிறைகொண்ட ஒருவெள்ளிக் கலமும், தூபவருக்கம் நிறைந்த பத்துஷேக்கல் நிறை கொண்ட ஒரு பொற்கிண்ணமும், தகனபலிக்கு ஒரு இளங் காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வருஷத்து ஒரு ஆட்டு குட்டியும், பிராயச்சித்தத்துக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவும், ஸ்தோத்திரபலிக்கு இரண்டுமாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக் களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வருஷத்து ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இவையே அம்மினதாயின் புத்திரனுகிய நாக்ஷோனுடைய நைவேத்தியம். இன்னு மிவ்வாறே கிதனேல் எலியாம் முதலிய பிரபுக்கள் காணிக்கை செலுத்தினர்கள் என்பது இவ்வதிகாரத்திலேதானே சொல்லப்பட்டிருக்கின்றது. யாத், 30. 15. உங்கள் ஆத்து மங்களின் பொருட்டுப் பிராயச்சித்தம் பண்ணும்படி நீங்கள் யெகோவாவுக்குக் காணிக்கை கொடுக்கும் பொழுது, செல் வர், அரைச்சேக்கலுக்கேறக் கொடுக்கவும் வேண்டாம்: தரித்திரர், அதற்குக் குறையக் கொடுக்கவும் வேண்டாம். 2. இரா. 12,13,14,16. யெகோவாவின் ஆலயத்திற் கொண்டு வரப்பட்ட பணத்தினல், யெகோவாவின் ஆலயத்துக்காக வெள்ளிக்கிண்ணங்களும், திரிவெட்டிகளும், பாத்திரங்களும், எக்காளங்களும், எந்தப் பொற்பாத்திரங்களும், வெள்ளிப் பாத்திரங்களும் செய்யப்படவில்லை. யெகோவாவின் ஆலயத் தைப் புதுப்பிக்கும்படி அதை வேலைக்காரருக்குக் கொடுத்து விட்டார்கள். குற்றத்தினிமித்தமும் பாவத்தினிமித்தமும் கொடுக்கப்பட்டபணம், யெகோவாவின் ஆலயத்தில் கொண்டு
வரப்படவில்லை; அது ஆசாரியர்களுக்கு உரியது. மத், 8. 4.

விவேசனம் 33
பின்பு யேசு, நீ இதை ஒருவனுக்கும் சொல்லாதபடி சாவ ானமாயிரு, போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, அவர்களுக்குச் சாட்சியாக, மோசேவிதிக்க காணிக்கையைச் செலுத்துவாயாகவென்ருர் மத். 2. 11. பின்பு அவர்கள் அந்தவிட்டிலே பிரவேசித்து, அதின் (யேசுவின்) மாகா வாகிய, மரியாளோடே பிள்ளையைக்கண்டு, வணக்கமாய் விழுந்து, அதை நமஸ்களித்தார்கள். அன்றியும் அவர்கள் ஈங்கள் பொக்கிஷப்பெட்டிகளைத் திறந்து, பொன்னையும், குந்துருவையும், வெள்ளைப்போளத்தையும், அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள். ..
இப்படியே உன்கடவுள் தமக்குக் காணிக்கை தரும்படி விதித்தார் என்றும், அவ்வாறே அவர் பக்தர்கள் செய்தார் கள் என்றும், உன் விவிலியநாலுணர்த்துதல் கண்டும், சிறி தாயினும் ஆராய்ச்சியின்றி எங்களை நோக்கி, மனிதருக்குப் பரிதானங் கொடுத்தல்போல நீங்கள் எல்லாப்பொருள்களையு முடைய கடவுளுக்குப் பொன் வெள்ளி முதலியவைகளைக் கொடுக்கின்றீர்களே! இதனுலே கடவுள் பிரியப்படுவாரா?, இது புண்ணியமாகுமா? என்று சொல்லி இகழ்கின்முய்.
வி வேசனம் புண்ணியஸ்தலப் பிரகாணமுதலாக நிபந்தத்திரவியப்
பிரகாணtருக உள்ள பிாகாணங்களிலே, உன்சமயநூலாகிய விவிலியநூலினின்றும் எடுத்துக்காட்டப்பட்ட வசனங்களி ஞலே, புண்ணியஸ்தல யாத்திரை முதலிய கிரியைகள் செயற் பாலன என எங்கள் சமயநூலில் விதிக்கப்பட்டவாறே உன் சமயநூலினும் விதிக்கப்பட்டமையைக் தெளிவுறக் காட்டி னுேம், நாங்கள் எங்கள் சமயநூலில் விதிக்கப்பட்ட கிரியை

Page 31
S4 சைவதூஷணபரிகாரம்
களே விடாது செய்து வருகின்முேம். நீயோ உன் சமய அாலில் விதிக்கப்பட்ட கிரியைகளைச் செய்யாமல் வெறுத்து ஒழித்ததுமன்றி, ஐயையோ பாவி எங்களை நோக்கி, நீங்கள் செய்யும் இக்கிரியைகள் எல்லாம் பயனில்லாதனவாம்; ஆகவே இவைகளைச் செயற்பாலனவென விதிக்க உங்கள் கடவுள் முற்றறிவுடைய மெய்க்கடவுள் அல்லர் என்று இகழ்தலும் செய்கின்ருய்; செய்யவே, உன் சமயநூலில் விதித்தகிரியைகளும் அவ்வாறே பயனில்லாதன என்றும், அவைகளை விதித்த யெகோவாவும் அவ்வாறே மெய்க்கடவுள் அல்லரென்றும் இகழ்கின்றவனுயியே.
எங்கள் கடவுளாகிய யேகோவா பிதாக் குமாார் பரிசுத் தாவி என மூவராயிருப்பர். அவர்களுள், குமாார் எனப் பட்டவர் மனித அவதாரமெடுத்து, யேசுக்கிறிஸ்து எனப் பெயர்பெற்று, அக்கிரியைகள் எல்லாவற்றையும் தள்ளி விட்டார். ஆதலால், நாங்கள் அவைகளைச் செய்யாதொழித் தனம் என்பாயாகில்; உன் யேகோவா அக்கிரியைகள் தலை முறைதோறும் நித்தியமும் செயற்பாலன என்று விதித் திருக்கின்றரே. அதற்குப்பிரமாணம் ஆதி. 17. 1, 12, 13. யாத் 12. 14, 17. டிை 28, 43. டிை 29, 9, 28, 42, டிை. 30, 8, 10, 21, 31. டிை. 31, 13, 16. டிை. 40, 15 லேவி. 3. 17. ைெடி 6, 22 ைெடி, 7. 33, 35 டிை 10, 11, 15. டிை. 16, 29, 31, 34 டிை, 17 1. டிை. 22, 3. டிை 23, 14, 21, 41. டிை 24, 3, 8, 9, argóir. 10, 8, 6dh ... 18. 11, 19, 28. 60h f-. 19. 10. டிை 28, 6. என்னுமினவகளாம். யேசுக்கிறிஸ்து இப்படி நித்தியமும் தலைமுறைதோறும் செயற்பாலனவெனத் தமது பிகாவாகிய யெகோவாவால் விதிக்கப்பட்டவைகளைப் பய னில்லாதன என்று தள்ளினரெனில், தாம் அவரினும் நுண்

விவேசனம் 35
ணறிவுடையரெனக்கிாட்டி, அவருக்கு விரோதியாயினரே. இப்படி மாறுபட்ட இருவரைச் சமமாகிய அறிவும் ஆற்ற முடையரென்று கொள்வது எப்படி? W
அக்கிரியைகளைத் தள்ளுதல் பிகாவாகிய யெகோவாவுக் கும் ஒத்த கருத்தே என்பாயாகில்; அவர்தமக்கு அது கருத்தாமாயில் அவை பின்னர் இன்னகாலத்திலே தள்ளப் படும் என முன்னுணர்ந்து காலவரையறை குறித்திருக்கல் வேண்டும்; அங்ஙனங்குறியாது ‘கித்தியகியமம்’ எனக் கூறினமையாலும், பின்னர்ப் ப்யனிலவெனத் தள்ளற்பாலன வற்றை முன்னர்ப் பயனுடையனவெனக் கொண்டு விதித்தார் எனப்பட்டு இயற்கையுணர்வில்லாதார் என முடிதலாலும், அவர்க்கு அது கருத்தன்றென்க. இன்னும், நித்தியகியமம் என்று யெகோவா விதித்தபடி கிறிஸ்துநாதருக்கு விருத்த சேதனம் பண்ணப்பட்டது என்றும், அவருடைய பிதா மா தாக்கள் அவரைத் தேவாலயத்துக்குக் கொண்டுபோய் அவர்பொருட்டு யெகோவாவுக்குப் பலியிட்டார்களென்றும், அவர் ஒருகுஷ்டே ராகியைச் சொஸ்தப்படுத்தி,அவனைநோக்கி, ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசேயின் கட்டளைப் படி நீ சுத்தமானதைக்குறித்துப் பலிசெலுத்துவாயாக என்று கட்டளையிட்டாரென்றும், உற்சவகாலங்களிலே ତ தவாலயசேவை செய்தார் என்றும், மத்தேயு மாற்கு லூக்கா யோவான் எழுதிய சுவிசேஷங்களிலே சொல்லப் பட்டிருத்தலால், அவருக்கும் அது கருத்தன்றென்க.
மனிதர்கள் சகலரும் பாவிகளானபடியினுலே, அவர்கள் பொருட்டு யேசுக்கிறிஸ்து மனிதராய்ப்பிறந்து சிலுவையி லறையுண்டு மரிப்பார் என்பதனை முன்னுணர்ந்து, அதற்கு அறிகுறியாகவே இக்கிரியைகளை யெகோவா விதித்தார்.

Page 32
6 சைவதுரஷணபரிகாரம்
ஒருபொருளைக்காட்டும் அறிகுறியானது தன்னுலே காட்டப் படும் அப்பொருள் கைவரும்வரைக்கும் பயன்பட்டு, அது கைவந்தபின்னர்ப் பயன்படாதொழியுமே; அவ்வாறே யேசுக் கிறிஸ்துவின் மரணத்தைக்காட்டும் அறிகுறியாகிய இக் கிரியைகள் அது நிகழும்வரைக்கும் பயன்பட்டு அது கிகழ்ந்த பின்னர்ப் பயன்படாதொழிந்தன என்பாயாகில்; அங்நன மாயின், கிறிஸ்துநாதர் மாணித்த உடனே, இக்கிரியைக ளெல்லாம் பயனில்லன எனக்கொண்டு ஒழிக்கப்படுதல் வேண்டும்: அங்ஙனம் ஒழிக்கப்படாது, அக்கிறிஸ்துவின் அப்டோஸ்தலராகிய பவுல் முதலியோராற் செய்யப்பட்டன வென்ப்து, அப். 18, 18-21. “பவுல் தான் முன்பண்ணின Fங்கற்பத்தினிமித்தம் கெங்கிரேயாவிலே கலைச்செளாம். பண்ணிப் பிரிஸ்கில்லாளும் அக்விலாவுமானவர்களுடன் சூரிய தேசத்திற்குக் கப்பலேறிச்சென்றன். அவன் எபேசு நகரத்தைச் சேர்ந்தபொழுது, அவர்களை விட்டுநீங்கி, ஆலயத் தில் பிரவேசித்து, யூகருடனே சம்பாஷணை பண்ணினன். அவர்கள் அவனைச் சிலகாலம் தங்களுடன் இருக்கவேண்டும் என்று கேட்க, அவன் சம்மதியாமல், வருகிற உற்சவத்தை ஆசரிப்பதற்கு எதுவிதமும் நான் யெரூஷலேமில் இருக்க வேண்டும்; தேவனுக்குச் சித்தமுண்டானல், திரும்பி உங்க ளிடத்தில் வருவேன் என்றுசொல்லி, அவர்களுடைய உத்தரவைப் பெற்றுக்கொண்டு கப்பலேறி எபேசுவை விட்டுப் புறப்பட்டான்.” என்பதனலும், டிை 21, 26. *மறுநாளிலே பவுல் அந்த மனுஷரைச்சேர்த்து அவர்க ளுடனே தானுஞ் சுத்திசெய்துகொண்டு, தேவாலயத்திற் பிரவேசித்து, அவர்களில் ஒவ்வொருவனுக்காகவும் வேண்டிய பலிகொடுக்கப்படுமளவும். சுத்தமாவதற்கான நாட்களை நான்
கிறைவேற்றுவேன் என்று அறிவித்தான்’ என்பதனுலும்,

வேசனம் ቋገ
ைெடி 18, 3. ‘பவுல் தீமோத்தேயுக்கு விருத்தசேதனம் பண்ணினுன் என்பதனுலும் தெளிவுறத் தோன்றுத லானும், பின்னர் அப் பவுல் எபிரேயருக்கு எழுதிய கிருபத் திலே பலியையும், உரோமா நகரத்தாருக்கு எழுதி கிருபத்
கிலே விருத்தசேதனத்தையுமாத்திரமே விலக்கினு:னன்றி வே7ெ ன்றையும் விலக்காமையா லம் ந்தப் பவுல்
டுரி ,و سه قم מ அங்
மனிதனேயன்றித் தேவனல்லாமையாலும், தேவனுகிய கிறிஸ்துவின்சொற்பற்றி விலக்கினனெனில், அவர் மரித்த வுடனே தான் அக்கிரியைகளைச் செய்யாதொழித்துவிடுவனே அங்ஙனமின்மையானும், கிறிஸ்துநாதர் விலக்கினரென்பது புதிய உடன்படிக்கையில் யாண்டும் பெறப்படாமையாலும், யார் விலக்கினும் யெகோவா கித்தியகியமமெனக் கூறியதற்கு மாறுபடுதலானும், நீ கூறுவது எவ்வாற்ருனும் பொருங் தாது.
இன்னும், யெகோவா பழையவுடன்படிக்கையில் விதித்த கிரியைகளெல்லாம் அறிகுறிகள் எனக்கூறினயே, அங்ஙனமாயில், அக்கிரியைகளெல்லாம் இன்னது இன்னதற்கு அறிகுறியெனப் பொள்ளெனப் புலப்படினன்றி பயன்படுதல் கூடாமையாலும், அங்ங்ணம் இன்னகிரியை இன்னதற்கு அறிகுறியெனத் தெளிவுற யெகோவா விதித்தாரென பாண்டும் கூறப்படாமையாலும், கூறப்படாதாகவே, அக் கிரியைகளே அனுட்டித்த மோசேமுதலியவர்கள், அவைகள் அறிகுறியெனவும் அவ்வறிகுறிகள் காட்டும் பொருள்கள் இவைகளெனவும் அறிந்திரார்களாகையானும், அறிந்திரார் கள் ஆகவே அவைகளாற் பயன்பெற்றிலர்கள் என்பது தெள்ளிதிற் பெறப்படுதலானும், நீ கூறுவது சற்றும் பொருந்தாது. இப்படிப் பொருந்தா உரைகள் பல பிதற்று தலை இனியொழித்துவிடு.

Page 33
38 சைவதூஷனபரிகாரம்
எங்கள் சமயமுதனூல்களாகிய சிவாகமங்கள் கிரியா
காண்டம் ஞானகாண்டம் என இருபகுதியனவாம். அவற்றுள், பின்னைய காண்டத்தாற் பிரதிபாதிக்கப்படும்
சிவஞானமே பாமம்ாகிய முத்திக்கு நேரே காரணமாம்.
முன்னையகாண்டத்தாற் பிரதிபாதிக்கப்படும் கிரியைகள் அந்தச்சிவஞானத்தையுதிப்பித்து முத்தியைப் பயப்பித்த லால் பரம்பரைக்,காரணமாம். அக்கிரியைகள் எல்லாம் சிவ ஞானத்திற்கு அறிகுறிகளாகும். அது பசுக்களாகிய எங்கள் யுத்தியினல் இடர்ப்பட்டு அமைக்கப்பட்டதன்று. சிருட்டி காலத்திலே சைவாகமங்களில் அக்கிரியைகளை விதித்த அதிபரமாப்தராகிய சிவனே அக்கிரியைகளுள் இன்னது இன்னதற்கு அறிகுறியென அவ்வாகமங்களிலேதானே தெளிவுறத் திருவாய்மலர்ந்தருளியிருக்கின்ருர், முத்திக்கு நேரே சாதனமாகிய சிவஞானங் கைவரும் வரைக்கும் இக் கிரியைகளை யாவரும் தங்கள் தங்கள் பக்குவத்துக்கிசைய ஆசாரியர் உபதேசித்தபடி செய்தல்வேண்டும் எனவும் சிவ ஞானங் கைவந்தபின்னர் அவைகளைச் செய்யாதொழியினும் ஒழியலாம்; பரோபகாரத்தின் பொருட்டு அவைகளைச் செய்யினும் செய்யலாம் எனவும், அக்கடவுளே அருளிச் செய்திருக்கின்றர். இப்படியே பூர்வாடா விரோத முதலிய தோஷங்கள் இன்றிவிளங்கும் சிவப்பிரணிதமாகிய சைவாக மங்களைக் குருமுகமாக உணர்ந்து, அவைகளால் விகிக்கப் படும் சிவஞானசாதனமாகிய கிரியைகளை காங்கள் செய்து வருகின்முேம். இவ்வுண்மையை நீ சிறிதாயினும் ஆராய்ந் தறியாமையாலும், நான்பிடித்த தேசாதிப்பன் என்னுங்
கருத்தினலும், எங்களையும் எங்கள் சமயத்தையும் வேண்டிய
வாறே இந்நாள்காறும் இகழ்ந்தமைபோல இன்னும் அவ்

சிவசின்னப் பிரகாணம் 39
விகழ்தலே தொழிலெனக்கொண்டு, உன் வாழ்நாளை வின ளாகப் போக்காமல் மெய்யுணர்வைப்பெற்று உய்கு தி, உய்குதி. V
15. சிவசின்னப் பிரகரணம்
சிவமந்திரங்கொண்டு விதிப்படி தகிக்கப்பட்ட கோமய மாகிய விபூதியும், அவ்வாறே விதிப்படி பிரதிட்டை செய்யப் பட்ட உருத்திராக்ஷமணியும், முறையே பசுமல நீக்கத்துச் சிவத்துவக்குறியாயும், சிவனது திருக்கண்ணிற்முேன்றும் திருவருட்குறியாயும் இருத்தலாலும், தம்மைத் தளிப்பவர் களை, நாம் சர்வலோகாதி நாயகராகிய பரசிவனுடைய அடிமைகள் என்று இடைவிடாது கினைந்து, தங்கள் மனம் வாக்குக் காயம் மூன்றையும் சிவத்தொண்டுகளிலே செலுத்து விக்த, அவர்களைச் சிவனடியார்களோடு சேர்த்தற்கும், அவர்களைக் காண்பவர்களியாவரையும், இவர்கள் எம்பெருமா ணுகிய சிவனுக்கு அடிமைபூண்டவர்கள் என்று தெளிந்து அவர்கள்மேற் பத்திபண்ணுவித்தற்கும், ஏதுவாயிருக்த லாலும், அவைகள் சைவசமயமே சற்சமயம் எ ன் று துணிந்து, அதன்வழிகிற்கப் புகுந்த யாவரும் விதிப்படி கித்தியமுங் கரிக்கற்பாலனவாகிய சிவசின்னங்களாமென்று வேதாகமங்களெல்லாம் விளம்புகின்றன.
எண். 19, 5, 9. கடாரியின்தோலும் மாமிசமும் இரத்த மும் சாணியும் எரிக்கப்படவேண்டும்; சுசியாயிருக்கிறவ ணுெருவன் அந்தக் கடாரியின் சாம்பலைப் பாளயத்திற்குப் புறம்பே சுசியான ஒரு இடத்திலே கொட்டிவைக்கக்கடவன்; அது இஸ்ரவேற் சந்ததியின் சபையார் கிமித்தம் சுசிசெய்யும் சலத்தின்பொருட்டு வைக்கப்படவேண்டும். அது பாவத்

Page 34
40 சைவதூஷணடரிகாரம்
தைப் பரிகரிக்கும். எபி. 9, 13. காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், கடாரியின் சாம்பலும், அசுசிப் பட்டவன் மேலேதெளிக்கப்பட்டு, சரீர அசுசி மிக்கி அவனைச் சுத்திகரிக்கும். எண். 15, 37-40. யெகோவா மோசே ை நோக்கி, நீ இஸ்ரவேற் சந்ததியாரிடத்தில் உங்கள் தலைமுறை தோறும் வஸ்திரங்களின் ஓரங்களில் குஞ்சங்கை உண்டாக்கி, ஒரத்தின் குஞ்சத்திலே நீலநாடாவைக் கட்டவேண்டும். உங்களுக்காக அது குஞ்சத்திலே இருக்கவேண்டும். அதைப் பார்த்து வியபிசாரமார்க்கமாய்ப் போகிற உங்கள் சுவ இருத யத்துக்கும் உங்கள் சுவகண்களுக்குமேற்க நடவாமல், என் சகல கட்டளைகளையும் கினைத்துக் காத்து உங்கள் தேவ அணுக்குப் பரிசுத்தராகும்படி நீங்கள் பார்த்து, யெகோவாவின் சகலகட்டளைகளையுங் கைக்கொள்ளும்படி கி ஜன க்கு Lf, பொருட்டு, அது உங்களுக்கு ஒரு குஞ்சமாயிருக்கவேண்டும். யாத். 12, 22, 23. இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலிருந்த பொழுது யெகோவாவிதித்தபடி ஆட்டிரத்தத்தினலே தங்கள் தங்கள் வாசல் நிலைக்காலிாண்டிலும் நிலையின்மேல் விட்டத்திலும் அடையாளமிட்டு வைத்தார்க்ள் என்றும், அந்தத் தேசத்தாரைக் கொல்லும்படி யெகோவாவாலனுப்பப் பட்ட தூதர் அவ்வடையாளம் உள்ளவீடுகளிற் போகாமல் அவ்வடையாளம் இல்லாதவீடுகளிற்போய் அங்குள்ள தலைப் பிள்ளைகளைக் கொன்ருசென்றும், சொல்லப்பட்டிருக்கின்றது. ଗରା ଜମି. 9, 4. 3தவனுடைய முத்திரையை நெற்றிகளில், தரியாதமனுஷர்களை மாத் திரமே வருத்தப்படுத்துகிறதற்கு அவைகளுக்குக் கட்டளை கொடுக்கப்பட்டது.
虏 உன்சமய நூலிலுள்ள இவ்வசனங்களை வாசித்தறிந்து கொண்டும், கோதுமை அப்பத்தையும் திராட்சாசத்தையும்

தியானுதிப்பிரகாணம் - 41
உன் தேவனுகிய கிறிஸ்துவின் மாமிசமும் இரத்தமுமாக வேனும் அவைகளுக்கு அறிகுறியாகவேனும் பாவித்து உட் கொண்டு கொண்டும், நாங்கள் சிவசின்னமாகிய விபூதி உருத்தி சாக்ஷம் தரித்தலை இகழ்வது நீதியன்றே.
16. தியானதிப் பிரகரணம்
சிவமந்திரத்தைக் குருமுகமாக அறிந்து, தினந்தோறும் கண்ணினலே ஆனந்த அருவிசொரிய அழலிடைப்பட்ட மெழுகுபோல மனங்கசிந்துருகச் சிவனைத் தியானித்து அச்சிவமந்திரத்தை விதிப்படி அதன் பொருளைவிடாது சிந்திக்குஞ் சிந்தையோடு செபம் பண்ணுதலும், அவருடைய திருநாமங்களையும் கீர்த்தனங்களையு மெடுத்தெடுத்துச்சொல்லி அவரை ஸ்தோத்திரம் பண்ணுதலும், புண்ண்ணியமென்று
சிவசர்த்திரங்கள் செப்புகின்றன.
1. நாளா. 16. 8-10. யெகோவாவைத் துதித்து அவருடைய நாமத்தைச் சொல்லிப் பிரார்த்தனைபண்ணுங் கள்; அவருடைய கிரியைகளைச் சனங்களுக்குள்ளே பிரசித் தப்படுத்தங்கள். அவரைப் பாடுங்கள்; அவரைக் கீர்த்தனம் பண்ணி, அவருடைய ஆச்சரியமான கிரிய்ைகளெல்லாவற்றை யும் தியானித்துச்சொல்லுங்கள். அவருடைய பரிசுத்த நாமத்தின் மேன்மையைப் பாராட்டுங்கள். கொலோ. 3. 16. சங்கீதங்களினுலும், கீர்த்தனங்களினலும், ஞானப் பாட்டுக்களினலும், ஒருவருக்கொருவர் போதித்து, புத்தி சொல்லி, பத்தியோடு மனசிலே கர்த்தருக்கென்று பாட்டுப் பாடுங்கள். 1 தெச. 5. 17. இடைவிடாமற் பிரார்க்கனை பண்ணுங்கள். உரோ. 15, 11. புறத்தேசத்தாரே நீங்க

Page 35
42 சைவதுரஷனபரிகாரம
ளனைவரும் கர்த்தாவை ஸ்தோத்திரியுங்கள்: சனங்களே நீங்களனைவரும் அவரைத் துதியுங்கள். மக். 6-ம். அதி காரத்திலே யேசுக்கிறிஸ்து தமது சிஷரைநோக்கி, யெகோவா வைப் பிரார்த்தனை செய்யவேண்டுமென்றும் அது செய்யும் முறைமை இதுவென்றும் உபதேசித்து, “பாமண்டலங்களி விருக்கிற எங்கள்பிதாவே’ என்பதை முதலிலுடைய ஒரு பிரார்த்தனையை உண்டாக்கிக் கொடுத்தாரென்று சொல்லப் பட்டிருக்கின்றது.
இவ்வாறே உன் சமயநூலில் விதிக்கப்பட்டமை கண்டு கொண்டும், மீயும் அவ்வாறே தினந்தோறும் உன்கடவுளைப் பாடிப் பிரார்த்தனே செய்துகொண்டும், நாங்கள் எங்கள் கடவுளாகிய சிவனைத் தியானித்து அவருடைய மந்திரத்தைச் செபம்பண்ணி அவரை ஸ்தோத்திரஞ் செய்தலைப் புண்ணிய மன்றென்று இகழ்வது நீதியா Y x
17. நமஸ்காராதிப் பிரகரணம்
கடவுளை விதிப்படி நமஸ்கரித்தலும் பிரதசுதிணம் அங்கப்பிரகாஷிணம் செய்தலும், புண்ணியமென்று சைவ நூல்கள் சாற்றுகின்றன.
சங், 95, 6. நம்மைச்சிருட்டித்த யெகோவாவை தாம் நமஸ்கரித்து முழங்காற்படியிட்டு ஆராதனைசெய்வோம் வாருங்கள். லேவி 9, 24. யெகோவாவின் சந்நிதியில் கின்றும் அக்கினி தோன்றிவந்து வேதிகையின்மேலிருந்த தகனபலியையும், கிணத்தையும் பட்சித்தது. சனங்களெல் லாரும் அதைக்கண்டமாத்திரத்தில் சத்தமிட்டு முகங்குப்புற விழுந்தார்கள். யோசு, 5. 14. அப்பொழுது யோசுவா

நமஸ்காாாதிப் பிாகாணம் 43.”
தரையிலே முகங்குப்பு றவிழுந்து நமஸ்காரம்பண்ணி, அவ ருடனே, என்னுண்டவர் தமது அடியேனுக்கு என்ன சொல்லுகிறீரென்றுவினவ. மக். 2. 11. பின்பு அவர்கள் அந்த வீட்டிலே பிரவேசித்து அதின் மாதாவாகிய மரியா ளோடே பிள்ளையைக்கண்டு, வணக்கமாய் விழுந்து, அதை கமஸ்கரித்தார்கள். வெளி. 7. 11, 12. தேவதூதர்யாவரும் சிங்காசனத்தையும், முதியோரையும், நாலுபிராணிகளையும் சூழகின்றர்கள். அவர்கள் சிங்காசனத்துக்கு முன்பாக முகங்குப்புறவிழுந்து, ஆமென்: எங்கள் தேவனுக்குத் துதி பும், மகிமையும், ஞானமும், தோத்திரமும், கனமும், பராக் கிரமும், வல்லமையும் சதாகாலமும் உண்டாக்கக்கடவன்.
ஆமென் என்றுசொல்லித் தேவனை நமஸ்கரித்தார்கள்.
இப்படியே உன் சமயநூலிலே முழங்காற்படியிடுதலும் நமஸ்காரம் பண்ணுதலும் புண்ணியமென விதிக்கப்பட்டமை கண்டுகொண்டும், அவைகளுள் முழங்காற்படியிடுதலை நீயும் புண்ணியமென்று செய்துகொண்டும், நாங்கள் எங்கள் கடவுளை நமஸ்களித்தலையும் பிரதகதிணம் அங்கப் பிாதகநிணம் செய்" தலையும் புண்ணியமல்லவென்று இகழ்கின்றயே, விவேக மில்லாதவனே, எங்கள் அவயவங்களிலே இரண்டு மாத்திரம் கர்த்தாவுக்கு முன்னே நிலத்திற்முேயும்படி வணங்குதல் புண்ணியமென்று அவ்வாறே செய்கின்ற நீ எட்டு அங்கம் பூமியிற்பட நமஸ்காரம்பண்ணுகல் அதன் மிகவுமதிகமென்" றும், ஒருமுறை பிரதாவிணம் செய்து நமஸ்காரம் பண்ணுதல் அதினும் மிக அதிகமென்றும், அங்கப்பிரகாஷிணஞ் செய்து நமஸ்காரம்பண்ணுதல் அநேகமடங்கு அதிகமென்ற்ம் அறி யக்கடவாய்.

Page 36
44 சைவதூஷணபரிகாரம்
18. சிவபுராணப் பிரகரணம்
சிவபுராணங்களிலே சிவனுடைய மகிமையும், அவராலே விதிக்கப்பட்ட சிவபுண்ணியங்கள் பசுபுண்ணியங்களும், அவைகளைச் செய்யும் முறைமையும், அவைகளைச் செய்தவர் கள் பெற்ற பெரும்பேறும், சிவத்துரோகம் முதலிய பாவங் களும், அவைகளைச் செய்தவர்கள் பெற்றதண்டமும், சொல்லப்படுகிறபடியால், அவைகளை அறிந்தவர்களுக்குப் பாவங்களிலே வெறுப்பும், புண்ணியங்களிலே, விருப்பும், சிவ னிடத்திலே பத்தியும் உதிக்கும். ஆதலால், அச்சிவ. புராணங்களை ஆலயம் மடம் முதலிய பரிசுத்தஸ்தானங்களிலே அன்புடனே விதிப்படி பூசித்து வாசித்தலும், பிரசாரம் பண்ணுதலும், கேட்டலும் புண்ணியம் என்று சைவ நூல்கள் சாற்றுகின்றன.
கிகி. 9, 3. அவர்கள் தங்கள் தங்கள் ஸ்தானங்களிலே கின்றுகொண்டு ஒருசாமமட்டும் தங்கள் தேவனுகிய யெகோ வாவின் நியாயப்பிரமாண புஸ்தகத்தை வாசித்தார்கள். 1. கெச. 5. 27. இந்த நிருபத்தைப் பரிசுத்தமான சகோதரர் யாவரும் வாசிக்கும்படி செய்யவேண்டுமென்று, கர்த்தரைக் கொண்டு உங்களை ஆணை இடுவிக்கின்றேன். கொலோ, 4. 16. இந்த கிருபம் உங்களிடத்தில் வாசிக்கப்பட்டபின், இலா வோ திக்கையா சபையிலும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள்.
உன்சமய நூலிலே இப்படிப் பேசப்பட்டமை கண்டு கொண்டும், நாங்கள் எங்கள் சிவபுராணங்களை வாசித்தல் பிரசரித்தல் கேட்டல்களினலே யாதொருபயனும் இல்லை யென்று பேசுகின்ருய். அப்படியாயின், நீ உன் சமயநூலை வெகுபொருள் செலவிட்டு அச்சிற்பதிப்பித்து அநேகர் வாசிக்கும்படி கொடுப்பது என்ன? நீ வாசித்து அதன் பொருளைப் பிறருக்குச்சொல்வது என்ன? இப்படித் தனக்

புண்ணியதீர்க்கப் பிரகாணம் 45.
கொரு கியாயம் பிறர்க்கொரு நியாயம் பேசலாமா? நாங்கள் l, எங்கள் சிவபுராணங்களை வாசித்தல் பிரசரித்தல் கேட்டல் களினலே பெரும்பயனுண்டென்பை தச் சகல பிரமாணங்களி லுைம் பூரணமாயறிந்திருக்கிமுேம்,
19. புண்ணியதீர்த்தப் பிரகரணம்
சிவகங்கை கங்கை சேது முதலியன சிவனது அருட் சத்தி பதிதலால் புண்ணியதீர்த்தங்களாம் என்றும், அவை களிலே அன்புடன் விதிப்படி ஸ்நானம் பண்ணுகின்றவர் களுக்குப் பாவங்களும் குஷ்டம் முதலிய நோய்களும் நீங்கு மென்றும் சைவ நூல்கள் சாற்றுகின்றன.
2. இராசா 5-ம் அதிகாரத்திலே நாமான் என்பவன் யோர்தான் நதியிலே ஸ்நானம் பண்ணினதினுல், அவனே வருக்திய குஷ்டரோகம் நீங்கிற்று என்றும், யோவான். 5-ம் அதிகாரத்திலே குருடர் சப்பாணிகள் கும்பின உறுப்பை யுடையவர்கள் முதலான அநேக வியாதிக்காரர் யெரூஷலேமி லுள்ள பேகெஸ்தா என்னப்பட்ட குளத்திலே ஸ்நானம் பண்ணினதினலே சொஸ்தமடைந்தார்களென்றும் சொல்லப் பட்டிருக்கின்றது. அன்றியும் ஒருவன் உன்சமயத்திலே பிரவேசிக்கும் பொழுது, அவனுடைய அஞ்ஞானமெல்லாம் போக்கி அவனிடத்தே ஞானத்தைப் பதிக்கின்றேமென்று சொல்வி, தண்ணீரினலே அவனைஸ்நானம்பண்ணுவிக்கின்முய்
இப்படியிருக்க நீ எங்களை நோக்கி, பூமியிலே உள்ள மற்றைத் தண்ணிரைப்பார்க்கிலும் புண்ணியதீர்த்தம் என்னப் பட்டதில் இருக்கும் விசேஷம் யாது? அதிலே ‘ஸ்நானம் பண்ணுதலினல் சரீரத்திலுள்ள அழுக்குப்போமேயன்றிக் குஷ்டம் முதலிய வியாதிகள் நீங்குமா? பாவங்கள் விமோசன மாமா? என்று இகழ்வது என்ன?

Page 37
46 சைவதூஷணபரிகாரம்
நாமான் என்பவனுடைய குஷ்டரோகம் நீங்கின. , தேவதாசனுகிய இலீஷா என்பவன் “நீபோய் யோர்க்கான் நதியில் எழுதாம் ஸ்நானம்பண்ணு. உனதுமாமிசம் 1.கிகா கும்; நீ சுசியாவாய்” என்று சொல்லிய சொல்லினது விழே ஷத்தினுலேயன்றி அந்நதியினது விசேஷத்தினுல் அன்று என்றும், குருடர் சப்பாணிகள் முதலிய வியாதிக்காார் சொஸ்தமடைந்தது தேவதூதணுெருவன் விசேஷகாலத்திலே அந்தக்குளத்திலிறங்கிச் சலத்தைக்கலக்கிய விசேஷத்தினலே பன்றி அக்குளத்தின் விசேஷத்தினுல் அன்று என்றும், தாங்கள் ஒருவனை எங்கள் சமயத்திற் சேர்த்துக்கொள்ளும் "பொழுது பரிசுத்த ஆவியானவர் அவனுடைய பாவங்களைக் கழுவிச் சுத்தணுக்குவார் என்பதற்கு அடையாளமாகக் தண்ணீரினல் அவனை ஸ்நானம் பண்ணுவிக்கிருேம் அது எங்கள் சமய ஒழுங்காகச் செய்யும் சடங்கு அது வன்றி அந்தத்தண்ணீர் அவனுடைய பாவங்களைப்போக்கி அவனைச் சுத்தணுக்குமென்று நாங்கள் உபதேசிப்பதில்லை என்றும் சொல்வாயாகில்; அப். 2. 38, பாவமன்னிப்பின் நிமித்தம் யேசுக்கிறிஸ்துவின் நாமத்திலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள் அப்பொழுது பரிசுத்தாவியாகிய வாத்தைப் பெறுவீர்கள் என்று சொல்லப்பட்டிருக்கின்றகே. இது புண்ணியதீர்த்தம் இதிலே நாம் விதித்த விகிப் படியே நம்மேல்வைத்த அன்புடனே ஸ்நானம் பண்ஒற கல் புண்ணியம் என்று சர்வசாமர்த்தியமுள்ள சிவன் திருவாய் மலர்ந்தருளினமையாலும் அந்தத்தீர்த்தத்திலே அவருடைய அருட்சத்தி w பதிந்திருக்கும். விசேஷத்தினுலும், ճ , ), ( 1ւյգ, அதிலே ஸ்நானம் பண்ணுகின்றவர்களுடைய பாவங்களும் நோய்களும் போமென்பது நிச்சயம்.

20. சுவர்ணதானப் பிரகரணம்
சிவனடியார்களுக்கும், வறியவர்களுக்கும், குருடர் முடவர் நோயாளர் முதலியவர்களுக்கும் பொன் வெள்ளி முதலிய திரவியங்களைக் கொடுத்தல் புண்ணியமென்றும், சிவனடியார்களுக்குக் கொடுக்கும் தானங்கள் ஒன்று அனந்த s விருத்தியடையும் என்றும் சைவ நூல்கள் சாற்று கின்றன.
சங், 112, 9. அவன் வாரி இறைக்கிருன், தரித்திரருக் குக் கொடுக்கிருன்; அவன் மீதி என்றும் கிற்கும். அவ ணுடைய கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும். எபி. 13, 16. நன்மையையும் தானதருமத்தையுஞ் செய்யமறவாதிருப்பீர்க ளாக இவ்விதமர்ன பலிகள்மேல் தேவன் மிகவும் பிரியமா யிருக்கிமுர், உரோ 12. 13. பரிசுத்தர்களுடைய குறைவு கள் கிறைய உதவிசெய்யுங்கள்; அன்னியரை உபசரிக்கக் கருத்தாயிருங்கள். 2. கொரி 9, 6, 7, 12. சிறுக விதைக் கிறவன் சிறுக அறுப்பான்; பெருக விதைக்கிறவன்பெருகவே அறுப்பான். அவன் அவன் விசனமாயாவது, கட்டாயமா யாவது அல்ல, தன்கன் மனவிருப்பத்தின்படி கொடுக்கக் கடவன் மனவிருப்பமாய்க் கொடுப்பவனில் தேவன் பிரியமா யிருக்கிருர், உங்களுடைய இந்தக்கிருபையின் கிரியை பரி சுத்தர்களுடைய குறைகளை நிறைவேற்றுவதற்கு மாத்திர மல்ல அனேகர் தேவனை ஸ்தோத்திரிக்கிறதற்கும் மிகவும் உபயோகமாயிருக்கும். மத். 5. 42. உன்னிடத்தில் வேண் டிக்கொள்ளுகிறவனுக்குக் கொடு; உன்னிடத்திற் கடன் வாங்க விரும்புகிறவனுக்குப் பராமுகம்பண்ணுதே. நீதி. 21, 13. தரித்திரன் ஒலமிடும்போது தன்செவியை அடைத்துக் கொள்ளுகிறவன் தானும் ஒலமிடும்பொழுது கேட்கப்படான். ைெடி 19, 17. தரித்திரனுக்குத் தயைசெய்பவன் யெகோவா

Page 38
48 சைவதுரஷணபிரகாணம்
வுக்குக் கடன்கொடுக்கிருன்; அவன் செய்ததற்கு அவர் பிரதியளிப்பார். 1. யோவா. 3. 17, 18. இவ்வுலகத்தின் பொருளை உடையவன் ஒருவன் தன் சகோதரன் குறைவு படக் கண்டும், தன்னிருதயத்தை அவனுக்கடைத்துக்கொண் டால், அவனுக்குள்ளே தேவனுடைய அன்பு நிலைத்திருக்கிற தெப்படி, என்பிள்ளைகளே! சொல்லினுலும் நாவினுலும் அல்ல, கிரியையினலும் உண்மையினலும் அன்புகூரக்கட வோம். தானி, 4, 27. இராசனே; நான் சொல்லும் ஆலோ சனையை நீர் அங்கீகரித்துக்கொண்டு, நீதியைச்செய்து, உமது பாவங்களையும், தரித்திரருக்குத் தயைசெய்து, உம்முடைய அக்கிரமங்களையும் அகற்றுவீராக; அப்படியானல் உம்முடைய வாழ்வு நீடித்திருக்கவுங்கூடும். லூக், 6. 38. கொடுங்கள், அப்பொழுது உங்களுக்குங் கொடுக்கப்படும். 60 - 18, 22. உனக்குண்டானவைகளையெல்லாம் நீ விற்றுத் தளித்திரருக் குக்கொடு பாமண்டலத்திலே பொக்கிஷத்தைப் பெறுவாய். டிை 19, 8, 9, சக்கேயு கர்த்தரைநோக்கி, கர்த்தாவே, என்பொருளிற்பாதியைத் தரித்திரருக்குக் கொடுக்கிறேன்; நான் ஒருவனிடத்தில் எதையாயினும் அகியாயமாய் எடுக் திருந்தேனனல், நாலுமடங்காய்ப் பிரதியளிப்பேன் என்ருன். யேசு அவனைக்குறித்து, இவனும் ஆபிரகாமின் புத்திரன், இதினிமித்தம் இன்றைக்கு இந்தவீட்டுக்கு இரட்சிப்பு வந்தது. அப். 10. 4. தேவதூதன் கொருநேலியை நோக்கி, உன்பிரார்த்தனைகளும் உன்தானதருமங்களும் தேவனுடைய சமுகத்தில் ஒரு ஞாபக்குறியாய்வந்தன. லூக், 12. 33. உங்களுக்குண்டானவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள்; பழையதாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரமண்டலத்திற் சேர்த்துவையுங்கள்; அங்கே திருடன் அணுகான், பூச்சியுங் கெடுக்காது.

அன்னதானப் பிரகாணம் 49
இப்படி உன் சமயநூலிலே பேசப்பட்டிருக்கல் கண்டும் நாங்கள்செய்யும் சுவர்ணதானம் புண்ணியம் அன்றென்றும், அதனுலே நாங்கள் பயன்பெருேம் என்றும், பாதிரியே! நீ
சொல்வது புத்தியினம்.
21. அன்னதானப் பிரகரணம்
சிவனடியார்களுக்கும் வறியவர்களுக்கும் குருடர் முடவர் முதலியவர்களுக்கும் அன்னதானம்பண்ணுகல் மேலாகியபுண்ணியம் என்று சைவறுால்கள் சாற்றுகின்றன.
மக். 10. 42. இந்தச் சிறியவர்களில் ஒருவன் என் சீஷன் என்று அவனுக்கு ஒரு கலசந்தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் கன்பலனேயிழந்துபோகானென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேன். (ஒருவனுக்குத் தண்ணி குடிக்கக் கொடுக்கல் புண்ணியமாகில் அன்னங்கொடுத்தல் அதினும் எவ்வளவு அதிக புண்ணியமாம்.) மக். 25. 34-46. பின்பு இராசா தமது வலதுபாரிசத்திலுள்ளவர் களேநோக்கி, வாருங்கள், என்பிதாவினுல் ஆசீர்வதிக்கங் பட்டவர்களே உலக சிருட்டிதொடங்கி உங்களுக்காக ஆயக்கம்பண்ணப்பட்ட இராச்சியத்தைச் சுதந்தரித்துக் கொள்ளுங்கள். நான் பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போசனத்தைக் தந்தீர்கள். நான் காகமாயிருந்தேன், நீங்க்ள் எனக்குப் பானத்தைக் கொடுத்தீர்கள். நான் பரதேசியா பிருந்தேன், நீங்கள் என்னை உங்களிடத்தில் சேர்த்துக் கொண்டீர்கள்: நான் நிருவாணியாயிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள். நான் வியாதியாயிருந்தேன், என்ன விசாரித்தீர்கள். நான் காவலிலிருந்தேன், என்னிடத்திற்கு

Page 39
56 ச்ைவ்தூஷணபரி isit it is
வந்தீர்கள் என்றுசொல்ல, நீதிமான்கள் அவருக்குக்கரமாய் கர்த்தாவே நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவ ராகக்கண்டு போசனங்கொடுத்தோம், காகமுள்ளவராகக் கண்டு பானக்கைக்கொடுத்தோம். நாங்கள் எப்பொழுது உம்மைப் பரதேசியென்றுகண்டு சேர்த்துக்கொண்டு, நிரு வாணியென்று கண்டு வஸ்திரம்கொடுக்கோம், நாங்கள் எப்பொழுது உம்மைவியாதியுள்ளவரென்றும், காவலிலிருச் கிறவரென்றுங்கண்டு, உம்மிடத்தில் வந்தோமென்பார்கள். அதற்குத்தரமாய் இராசா, மிகவுஞ் சிறியரான என் சகோதா சாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச்செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்களென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேனென்பான். பின்பு அவர் தமது இடது பாரிசத்திலுள்ளவர்களை நோக்கி, சபிக்கப்பட்டவர்களே! நீங்கள் என்னைவிட்டுப் பிசாசானவனுக்காகவும், அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தப்படுத்தப்பட்ட கித்திய அக்கினி பிடத்தில் போங்கள். நான் பசியாயிருந்தேன், நீங்கள் ன்னக்குப் போசனங் கொடுக்கவில்லை. நான் தாகமாயிருந் தேன், நீங்கள் எனக்குப் பானங்கொடுக்கவில்லை. நான் பரதேசியாயிருந்தேன், நீங்கள் என்னை உங்களிடத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை; நான் நிருவாணியாயிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரம்கொடுக்கவில்லை; நான் வியாதியுள்ள வனும், காவலில் வைக்கப்பட்டவனுமாயிருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்கவில்லையென்பான். அப்பொழுது அவர்கள் அவருக்குத்தரமாய், கர்த்தாவே உம்மைப் பசியுள்ளவரென் முவது, தாகமுள்ளவரென்றுவது, பரகேசியென்முவது, கிரு வ்ாணியென்றுவது, வியாதியுள்ளவரென்முவது, காவலிலிருப் பவரென்முவது நாங்கள் எப்பொழுதுகண்டு,உ மக்குதவிசெய்ய
வில்லையென்பார்கள். அதற்குத்தரமாய் அவன், மிகவுஞ்

அன்னதானப் பிாகாணம் 5且
சிறியரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச்செய்யா திருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்களென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேனென்பான். இவர்கள் நித்திய தண்டனையையும், நீதிமான்களோ, கித்தியசீவனையும் அனுபவிக்கப் போவார்களென்ருர் ரேசா. 58, 7, 10. பசி யுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைக் கொடுக்கிறதும், தள்ளுண்டதளித்திரரை உன்வீட்டிலே சேர்க்கிறதும், வஸ்திரமில்லாதவனேக் கண்டு அவனுக்கு வஸ்திரத்தைக் கொடுக்கிறதும், உன் மாமிசத்தைப்போன்றவர்களுக்கு உன்னை மறைத்துக்கொள்ளாம லிருக்கிறதுமாகிய இவைக ளல்லவா எனக்குப் பிரியமான உபவாசம். பசியுள்ளவன் மேல் மனமுருகி, துயரப்படும் ஆக்துமாவைத் திருத்திப் படுத்தினுல், அந்தகாரத்திலும் உன் ஒளி தோன்றும்; உன் இருளும் மத்தியானத்தைப் போலாகும். லூக், 3. 11. யோவான், இரண்டு சட்டைகளையுடையவன் இல்லாதவ ணுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தையுடையவனும் அப்படியே செய்யக்கடவனென்முன், ைெடி. 14. 13. நீ விருந்துபண்ணும்பொழுது தரித்திரர், ஊனர், சப்பாணிகள், குருடர் இப்படிப்பட்டவர்களே அழைப்பாயாக.
இப்படியே உன் சமயநூலிலே பேசப்பட்டமைகண்டும், நாங்கள் அன்னதானம்பண்ணுதல் புண்ணியமன்று என்றும், அதனுலே பயன்பெருேமென்றும் பேசுகின்முய்.
łamw

Page 40
22. தவப் பிரகரணம்
ஆன்மாக்களுக்கு மனிதப்பிறப்புக்கிடைத்தது சிவனை வழிபட்டு கித்தியமாய் ஆனந்தமாயுள்ள முக்தியையடைகற் பொருட்டாகலால், அதற்கு விக்கினமாயுள்ள மண்ணுசை பொன்னுசை பெண்ணுசை என்னும் மூன்றையும் முழுமை யும் வெறுத்துத்தள்ளி, தவவேடந்தரித்து, வனத்தில வாசஞ் செய்துகொண்டு, உண்டிசுருக்குதல் செய்து, ஐம் பொறிகளையும் அடக்கி, சிவனை கிணைந்து தவம்பண்ணுதல் பெரும்புண்ணியம் என்று சைவதால்கள் சாற்றுகின்றன.
ஆசைகள் மூன்றிையும் முழுமையும் நீக்கவேண்டிய அவசியம்யாது? வேடத்தினுற் பயன்யாது? உண்டி சுருக்கு தலினுற் பயன்யாது? இப்படித் தவம்பண்ணினதினுலே மோக்ஷம் சோலாமா? என்பாயாகில், சொல்வோம் கேள்.
மண் பொன் பெண் என்னும் மூன்றும் அகித்தியமுந் துக்கந்தருவனவுமாயிருத்தலாலும், அவற்றின்மேலாசை யுண்டாயவழிக் கடவுள்மேல் அன்புவைத்தல் கூடாமை பாலும், அவற்முேடுகூடிய வழி ஆசையுண்டாகல் ஒருதலை ஆதலாலும், அவைகளை முழுமையும் வெறுத்து ஒழித்தல் வேண்டும். அங்ங்னம் எல்லாப்பொருளையும் ஒழித்து ஒரு பொருளை ஒழியாவழியும், பெருநெருப்பைத் தணித்து ஒரு சிறுபொறியை இதுயாதுசெய்யுமென்று தணியாவிடத்தும் பக்கத்துள்ள பொருள்களெல்லாவற்றினும் அதிசீக்கிர [ڑھئیے மாகப் பற்றிப் பின்னுமெரிந்தாற்போல, அவ்வொருபொரு ளாசை முன் விடப்பட்டவெல்லாப் பொருளாசைகளையும் மீண்டும் வருவித்து, பண்ணியசங்கற்பத்தை அழித்துக் தவத்திற்கு இடையூருய்க் கலக்கஞ்செய்யும். ஆகையால் அவைகள் எல்லாவற்றையும் ஒருங்கே விடுதலே தகுதியாம்.

தவப் பிரகாணம் 53
1. கொரி. 7. 1, 32, 33, 40. ஸ்திரீயைத் தொடாம விருப்பது மனுஷனுக்கு நலம். நீங்கள் கவலையில்லாமல் இருக்கவேண்டும் என்பதே என்வாஞ்சை. விவாகமில்லா தவன், கர்த்தரைப் பிரியப்படுத்தும்படி கர்த்தருக்கு ஏற்றவை களைக் குறிக்தி விசாாமாயிருப்பான். விவாகம் பண்ணின வன், மனைவியைப் பிரியப்படுத்தும்படி உலகத்துக்கேற்றவை களுக்காகக் கவலைப்படுவான். அவள் விவாகம்பண்ணுமல் இருந்தால் அதிக செளக்கியத்தை அனுபவிப்பாள். மக். 19. 10-12. அவருடைய சீஷர் அவரைநோக்கி, ஸ்திரீயுடனே புருஷனுடைய சம்பந்தம் இப்படியிருக்குமேயாகில், விவாகம் பண்ணுவது நன்மையல்லவென்றர்கள். அவர், அவர்க ளுடனே, எவர்களுக்கு அளிக்கப்பட்டதோ அவர்களே பன்றி, மற்றவர்கள் இவ்வாக்கைப்பற்ருரர்கள், அண்ணகர்க ளுண்டு, சிலர் மாகாவின் கருப்பத்தில் அப்படியே பிறந்தார் கள். சிலர் , மற்றைமனுஷர்களால் அண்ணகர்களாகப்பட் டார்கள். சிலர் பரமராச்சியத்தினிமித்தம் தங்களை அண்ண கர்களாக்கினர்கள். இதற்குடன்பட வல்லவனெவனே, அவன் உடன்படக்கடவனென்றர். ைெடி அதி. 23, 24. யேசு தம்முடைய சீஷரைநோக்கி, ஐசுவரியவான் தேவனுடைய பாமராச்சியத்திற் பிரவேசிப்பதளிதென்று மெய்யாய் உங்க ளுக்குச் சொல்லுகின்றேன். ஐசுவரியவான் தேவனுடைய இராச்சியக்கிற் பிரவேசிப்பதிலும், ஒரு ஒட்டகம் ஊசியின் காதிலே நுழைவது எளிதென்று உங்களுக்குச் சொல்லு கின்றேன் என்முர். ைெடி அதி. 29. என் நாமத்தினிமித்தம் வீடுகளையாகிலும் சகோதாரையாகிலும், சகோதரிகளை பாகிலும், பிகாவையாகிலும், மாதாவையாகிலும், மனைவியை பாகிலும், பிள்ளையையாகிலும், கிலங்களையாகிலும், விட்டவ னெவனே அவன் நூறுமடங்கு பலன்பெற்று, கித்தியசீவனை

Page 41
54 சைவதுரஷணபரிகாரம்
யும் சுதந்தரித்துக்கொள்வான். லூக். 14. 26. 33. ஒருவன் என்னிடத்தில் வந்து தன்பிதாவையும், மாதாவையும் மனைவி யையும் பிள்ளைகளையும், சகோதரரையும் சகோகரிகளையும் தன்சுவயிராணனையும், வெறுக்காவிட்டால் என்ரிஷ்ணு யிருக்கமாட்டான். உங்களில் எவனும் தனக்குண்டான யாவற்றையும் வெறுத்துவிட்டாலொழிய அவன் என் சீஷணு யிருக்கமாட்டான். மக். 6. 24. ஒருவன் இரண்டு எசமான் களுக்கு ஊழியஞ்செய்யமாட்டான். ஒருவனே அவன் பகைத்து, மற்றவனை நேசிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அலட்சியம் பண்ணுவான், நீங்கள் தேவனையும் மம்மோனையும் சேவிக்கமாட்டீர்கள்.
இப்படி உன் சமய நூலிலே பேசப்பட்டமைகண்டும், முற்றத்துறத்தலினலே பயனில்லையென்று நீ சொல்வது புத்தியினம். முற்றத்துறங்கோமென்று தவவேடங்களித்துக் திரிகின்றவர்களுள் அநேகர் ஆசையில் அமிழ்க் திக் கெட்டுப் போனுர்களே என்பாயாகில், உன்னுடைய கிறிஸ்து தமக்குச் சீஷராகத் தெரிந்துகொண்ட பன்னிருவருள் இருவர் கொடிய பாவஞ்செய்தார்களென்று உன் -Flou, BIrG6'(?તો (?/ r:Fr'; பட்டதைகினைந்து பேசக்கடவாய்,
2-வது. தவவேடமானது, கன்னைத் தரிக்கின்றவனே. அவன் தவம்செய்யும்படி மனசிலே பண்ணிய சங்கற்பக்தை இடைவிடாது கினைப்பித்து, அவனத் தவத்திலே கிலே நிறுத்தி, தபோதனர்களோடு சேர்த்தலாலும், அவனக் கண்டோர் யாவரையும், அவனைக் கபோகனனென்று உணர்ந்து அவன்மேற்பத்தி பண்ணுவித்தலானும், கன்னத் கரிக்கின்றவர்களுக்கும் பிறர்க்கும் பயன்படுகின்றது.

தவ்ப் பிரகாணம் 55
அப். 18. 18. பவுல் தான் முன்பண்ணிய சங்கற்பத்தி மனியித்தம் கெங்கிரேயாவிலே தலைச்செளரம்பண்ணி, சூரிய தேசத்திற்குக் கப்பலேறிச்சென்முன், டிை 21, 24. நீ அவர்களைச் சேர்த்து, அவர்களுடனே உன்னையுஞ் சுத்தி பண்ணிக்கொண்டு, அவர்கள் தலைச்செளாம் பண்ணிக் கொள்வதற்கு வேண்டிய செலவு பண்ணுவாயாக. எண். 6. 5. அவன்பிரதிட்டை சங்கற்பகாலம் முழுதும் செளாகன் கத்தி அவன் கலையின்மேற் படலாகாது; யெகோவாவுக் கென்று பிரதிட்டைபண்ணினகாலம் கிறைவேறுமளவும், அவன் பரிசுத்தமாயிருந்து தன்தலைமயிரை வளாவிடக் கடவன். கிகி. 9. 1. அங்கமாகத்தின் இருபத்துநாலாங் தினத்திலே, இஸ்ரவேற்சந்ததியார் உபவாசஞ் செய்து, இரட்டுடுத்து, புழுதியைத் தலையின்மேற்போட்டுக்கொண்டு கூடினர்கள். லூக். 10. 12. அவர்கள் நெடுங்காலத்துக்கு முன் இரட்டைக்கரிக்கு, சாம்பலிலுட்காந்து மனந்திரும்பு வார்கள்.
இப்படியே உன் சமயநூலிலே தவவேடம் விதிக்கப் பட்டமை கண்டும், சைவர்கள் முண்டனம் செய்தலையும் சடைவளர்த்தலையும் காவி வஸ்திரம் தரித்தலையும் இகழ்வது மடமையன்முே?
3-வது. உண்டிசுருக்குதல் மனம் பொறிவழிபோகாமல் கிற்றற்பொருட்டேயாம்.
கொலோ, 2, 23. இவைகள் சுவசித்த ஆராதனையிஞ ஆம், தாழ்மையினலும், சரீரத்தைப்பேணுமல் அதை வருத்தப்படுத்துகையினுலும், ஞானவேடமுள்ளவைகளா யிருக்கின்றன. சங். 109. 24. உபவாசத்தினுல் என் முழங் தாள்கள் தடுமாறுகின்றன. நிணமின்றி என்மாமிசம் காய்ந்து

Page 42
56 சைவதூஷணபரிகாரம்
போகின்றது. உரோ. 13, 14. உங்கள் மாமிசத்திற்காக அதின் இச்சைகளைத் திருத்தியாக்கும்படி தேடாமல், கர்த்த ராகிய யேசுக்கிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள். மத், 6. 16. நீங்கள் உபவாசம் பண்ணும்பொழுது கபடிகளைப் போல முகவாட்டக்கைக் காட்ட்வேண்டாம். அவர்கள் தாங்கள் உபவாசமாயிருப்பதை மனுஷர் காணும்படி, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிருரர்கள்.
இப்படியே உண்டிசுருக்குதல் உன்சமய நூலில் விதிக்கப் பட்டமைகண்டும், சைவர்கள் உண்டிசுருக்குவதை நீ இகழ் வது பேதைமை அன்ருே?
4-வது. மனசைப் பொறிவழிபோகாமல் அடக்குதல் கடவுளை இடைவிடாது தியானித்து முத்தி பெறற் பொருட் t-st De
மத். 6. 6. நீ பிரார்த்தனை செய்யும்பொழுது, உன் உள்ளறையில் பிரவேசித்து, அதின் கதவைப் பூட்டினபின்பு, அந்தாங்கத்திலுள்ள உண்பிதாவை நோக்கிப் பிரார்த்தனை செய்; அப்போது அந்தாங்கத்திலுள்ளதைப் பார்க்கிற உன் பிதா, பிரத்தியட்சமாய் உனக்குப் பலனளிப்பார்: (உலகக் கவலையையொழித்துக் தனியேசற்றுநேரம் இருந்து பிரார்க் தனபண்ணுதல் பெரும்பயனைத்தருமாயின், அருவாதமும் கடவுளை இடைவிடாது சிந்தித்துத் தவம்பண்ணுகை அதி லும் எத்தனைபங்கு அதிகமாகிய பயனைக் கருமென்பதனை, புத்தியில்லாத பாதிரியே! நீ கானே சிந்தித்துப்பார்) லூக். 11. 5-10. பின்னும் அவரவர்களிடத்தில் உங்களில் ஒருவன் அத்தராத்திரியிலே தனக்குச் சினேகனுணவனிடத்திற்குப் போய், அவனுடனே, சினேகனே! என்சினேகிகன் ஒருவன் பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கின்முன். அவனுக்கு

தவப் பிரகாணம் 57
முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை; நீர் எனக்கு மூன்று அப்பங் கடனுகக் கொடுக்கவேண்டுமென்று கேட்கும்பொழுது, உள்ளே இருக்கின்றவன், என்ன வருத்தப்படுத்தாதே. இப்பொழுது கதவு பூட்டியாயிற்று, என் பிள்ளைகள் என்னுடனே படுத்திருக்கிருர்கள்: நான் உனக்குத் தருகிறதற்கு எழுந்திருக்கக் கூடாதென்று உத்தரஞ்சொல்லி, அவன் தனக்குச் சினேகிதனுயிருப்பதி னிமித்தம் அவனுக்கு எழும்பிக்கொடாதிருந்தும், தன்னை அவன் வருந்திக்கேட்கிறபடியினுல் எழுந்து, அவனுக்கு வேண்டிய அளவு கொடுப்பானென்று உங்களுக்குச் சொல்லு கிறேன் வேண்டிக் கொள்ளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப் படும்; கேடுங்கள், கண்டடைவீர்கள்; கட்டுங்கள், உங்களுக் குக் திறக்கப்படும். வேண்டிக்கொள்ளுகிறவனெவனும் வாங்கிக்கொள்ளுகிமுன்; கேடுகிறவன் கண்டடைகிமுன்; தட்டுகிறவனுக்குத்திறக்கப்படும். ைெடி. 18, 7. தேவன் சிலநாள் காமதித்தாலும், கம்மால் தெரிந்துகொள்ளப்பட்டு, தம்மைநோக்கி இரவும் பகலும் வேண்டுதல்பண்ணுகிற அவர் களுக்காகப் பழிவாங்காமலிருப்பாரா.
இவ்வாறே கடவுளை இடைவிடாது சிந்தித்தல்பெரும் புண்ணியமென்று உன்சமயநூல் பேசுதல்கண்டும், சைவர்க ளூள் அநேகர் சங்கியாசிகளாய்ச் சிவனை இடைவிடாது தியா னித்துத் தவம்பண்ணுகலை ஆவசியகம் அன்று என்று 名 பேசுவது பெரும்பாவமே, a
மத். 3. 1, 4. யோவான் ஸ்நானன் யூதேயாவின் மனத் கிலே வந்து, ஒட்டகமயிருடையைத் தரித்து, தன் அரை யிலே வார்க்கச்சுக் கட்டிக்கொண்டிருந்தான்; வெட்டுக்கிளி களும் காட்டுத்தேனும் அவனுக்கு ஆகாரமாயிருந்தன. ைெடி,

Page 43
58 சைவதூஷணபரிகாரம்
11. 7-11. அவர்கள் போனபின்பு, யேசு, யோவானைக் குறித்துச் சனங்களிடத்திலே, நீங்கள் வனத்தில் எதைப் பார்க்கப் புறப்பட்டீர்கள், காற்று அசைக்கும் நாணலையோ; எதைப்பார்க்கப் புறப்பட்டீர்கள் மெல்லிய வஸ்திரங்களைத் தரித்த ஒருமனுஷனையோ; மெல்லிய வஸ்திரங்களைத் தரித்திருப்பவர்கள் அரசர்மாளிகைகிளி லிருக்கிறர்கள். எதைப்பார்க்கப் புறப்பட்டீர்கள், தீர்க்கதரிசியையோ; ஆம், தீர்க்கதரிசியிலும் அதிக மேன்மையுள்ளவனேயேயென்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். “பாரும், என்தூத%ன உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்குமுன்னே போய், உமது வழியை ஆயத்தப்படுத்துவான்’ என்று ஒரு வனைக் குறித்து எழுதியிருக்கின்றது. அவனே இவன். ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில், யோவான்ஸ்நானனிலும் பெரியவன் ஒருவனுங் தோன்றவில்லையென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றர். இதனுல் யோவான் ஸ்நானன் லெளகிகஆசைகளை முழுமையும் வெறுத்துத்தள்ளி, தவவேடந்தளித்து, உண்டிசுருக்கி, வனவாசியாய், தவம் பண்ணினன் என்றும், அதினலே அவன் பூமியிலே பிறந்த வர்கள் எல்லாருள்ளும் மிகப்பெரியவனுயினுன் என்றும் காண்கின்றது. அதுவுமன்றி, இலீசா என்பவன் தவவேடம் பூண்டு, கவம்பண்ணினுன் என்று, 2. இரா. 1. 8-ம் வசனக் திற் காணப்படுகின்றது. r
விவே சனம்
சிவனே பரமபதியென்றும், அவர் அருளிய வேதாகமங் களே மெய்ந்நூல்களென்றும், அவைகளில் விதிக்கப்பட்ட வைகளெல்லாம் புண்ணியங்களென்றும், அப்புண்ணியங்களி ஞலே பெரும்பயனுண்டென்றும், சகலபிரமாணங்களினுலும்

விவேசனம் 59
நாங்களறிந்திருக்கின்ருேம். அப்படிப்பட்டவைகள் புண் Eயங்கள் அல்லவென்றும், அவைகளினலே பயனில்லை யென்றும் பயன் உண்டென்று சொன்ன நூல் பொய்ந்நூ லென்றும், அப்படிச் செய்தவர்களுக்கு இன்ன இன்ன பய னளிப்போமென்று சொன்னதேவன் பொய்த்தேவனென் அறும், உனக்குக் கெளிவாகவிளங்கினுல், நீ அவ்வாறுகிய புண்ணியங்களையே விதித்த உன் சமயநூலையும் பொய்ந்நா லென்று கிழித்தெறிந்து, இப்போது கீ தேவனென்று வழி படுகின்ற பொய்க்தேவனையும் உன் மனசினின்றுமகற்றிவிடு.
கிறிஸ்துவை விசுவசிக்கும் விசுவாசத்தினுலன்றி, யாவ ராயினும் தாங்கள்செய்யும் புண்ணியங்களினூலே மோட்சம் சேர்தல் கூடாகென்கிறேன். அதுவன்றி, சொல்லப்பட்ட புண்ணியங்களைப் புண்ணியங்களல்லவென்று நான் ஒருபொழு தும் சொன்னதில்லை என்பாயாகில், மற்றைப்புண்ணியங்களைக் தவிர்த்தால் விசுவாசம் என்பது ஒன்றில்லையே. யாக். 2. 14-26. ‘என்சகோதரரே, ஒருவன் கனக்கு விசுவாசமுண் டென்று சொல்லியுங் கிரியைகளில்லாகவனனுல் அவனுக் கென்னபலன்வரும்; விசுவாசம் அவனை இரட்சிக்குமா. சகோதாணுயினும், சகோதரியாயினும் வஸ்திரமில்லாதவர் களும், தின ஆகாரமில்லாதவர்களுமா யிருக்கும்பொழுது, உங்களில் ஒருவன், அவர்கள் சரீரத்துக்கு வேண்டியவை களேக் கொடாமல், அவர்களுடனே, நீங்கள் Fமாதானத். தோடே போய்க் குளிர்காய்ந்து பசிபாறுங்கள் என்றுசொல் வதினுல் என்னபலன், இவ்வண்ணமே விசுவாசமும், அதற் குக் கிரியையில்லாதிருந்தால், தனித்து மரித்ததாயிருக்கும். ஒருவன்வந்து, உனக்கு விசுவாசமுண்டு, எனக்குக்கிரியைக ளுண்டு; உன்கிரியைகளில்லாமல் உன்விசுவாசத்தை எனக்குக் காண்பி, நான் என்விசுவாசத்தை என்கிரியைகளிகுல் உனக்

Page 44
60 சைவதூஷணபரிகாரம்
குக் காண்பிக்கிறேனென்பான். தேவன் ஒருவருண்டென் றும் விசுவசிக்கிருய்; நீ கன்முய்ச் செய்கிமுய்: பிசாசுகளும் விசுவசித்து நடுங்குகின்றன, உணர்வற்றமனுஷனே! கிரியைக எளில்லாத விசுவாசம் மரித்ததென்று அறிய விரும்புகிமுயா? 5ம்முடைய பிதாவாகிய ஆபிரகாம், வேதிகையின்மேல் தன் புத்திரனுகிய ஈசாக்கைப் பலியிட்டபொழுது, கிரியைகளின லல்லவா நீதிமானுக்கப்பட்டான், விசுவாசம் அவன் கிரியைக ளுடனேகூட முயற்சிசெய்து, அந்தக்கிரியைகளினலே விசு வாசம் முடிவுபெற்றதென்று நீ காணலாகும். “ஆபிரகாம் தேவனை விசுவசித்தான், அது அவனுக்கு நீதியென்றெண் ணப்பட்டது” என்கிற வேதவாக்கியம் நிறைவேறலாயிற்று: அவன் கேவனுடைய சினேகனென்னப்பட்டான்; ஆதலால் ஒருமனுஷன் விசுவாசத்திஞலே மாத்திரமல்ல, கிரியைகளி ணு,லும் நீதிமானென்றெண்ணப்படுவதைக் கண்டிருக்கிறீர் கள், மேலும் இராகாப்பென்னும் வேசை தூதர்களை ஏற்றுக்கொண்டு, வேறுவழியாய் அவர்களை அனுப்பிவிட்ட பொழுது கிரியைகளினுலல்லவா நீதியுள்ளவளாக்கப்பட் டாள். ஆகலால், ஆவியில்லாமல் சரீரம் சாவுக்குட்பட்டதா யிருப்பதுபோல், கிரியையில்லாமல் விசுவாசம் மரித்ததா யிருக்கின்றது.’ என்று இப்படி மற்றைப் புண்ணியங்களைத் தவிர்க்கில் விசுவாசம் என்பது ஒன்றில்லையென்று உன் சமய நூலிலேதானே சொல்லப்படுகின்றது. அதுவுமன்றி, இரக் கம் பொறை முதலியனபோல விசுவாசமும் மனசினுலே செய்யப்படும் புண்ணியந்தானே, ஆகையால் யாவரும் காம் செய்யும் புண்ணியங்களினுலே மோக்ஷம் சேர்தல்கூடா கென்று நீ பிகற்றுவது பொருந்தாது. மக். 7. 21. என்ன நோக்கி, கர்த்தாவே கர்த்தாவே, என்றுசொல்லுகிற எவனு மல்ல, பரமண்டலத்திலுள்ள என்பிகாவுடைய சித்தத்தின்

விவேசனம் 6.
படி செய்கிறவனே. பாமராச்சியத்திற் பிரவேசிப்பான். லூக், 6. 46. நான் இடுகிற கட்டளைப்படி நீங்கள் செய்யாம லிருந்து என்னைக் கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்வ தென்ன. யாக், 1, 22. நீங்கள் உங்களை வஞ்சியாமல் வாக்கி யத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல. அதின்படி நடக்கிறவர்களாயுமிருப்பீர்களாக, இப்படி உன்சமயநூலிலே தானே புண்ணியங்களின்றி மோக்ஷஞ்சேர்தல் கூடாதென்று சொல்லப்பட்டிருக்கின்றதே.
விசுவாசம் மனம் வாக்குக் காயங்களினலே செய்யப் படும் புண்ணியங்களுள் ஒன்று என்பதும், புண்ணியங்க, ளின்றி மோக்ஷஞ்சேர்கல் கூடாதென்பதும் மெய்யே: ஆபி லும், அவைகளை எங்கள் சமயத்தினின்று செய்தல்வேண்டும்; மற்றைச் சமயிகள் செய்யும் கிரியைகளெல்லாம் புண்ணியங், களைப் போன்றிருப்பினும் அவைகளாற் சிறிதும் பயனில்லை. அவைகள் ஸ்திரீகளுடைய ஆசௌசம்பட்ட வஸ்திரங்கள் போன்றிருக்குமேயன்றி, ஒருபொழுதும் கர்த்தாவுடைய திருவுளத்திலேறுவாம். ஆகலால், அவர்கள் எவ்வகைப் பட்ட புண்ணிடங்களைச் செப்பினும், கித்திய நாகவேகனயை அனுபவிப்பார்கள் என்பாயாகில், கிறிஸ்துசமயம் சிறிதாயி, அனும் பாவாக இடங்களிலுள்ளவர்களும் தாம்தாம் எவ்வெப் புண்ணியங்களைச் செய்பினும் கிறிஸ்துவை விசுவசியாமை பால், நரகத்திற் செல்வாரெனச் சொல்லல்வேண்டும்; அங்ஙன. மாயில், அவர்கள் கிறிஸ்துவை விசுவசியாமைக்கேது உன் கடவுள் தமது சமயநூலை அவர்களுக்குணர்த்துவியாமை பாம். ஆகவே, குற்றம் யாரிடத்தது? விவேகஞ் சிறிது மில்லாதவனே! சொல்லு. இன்னும், கிறிஸ்துசமயம் பரவிய இடங்களிலுள்ளவர்களும் அச்சமயநூலை வாசித்தும், தத்தஞ் சமயநூலே மெய்ந்நூலென்று அணிந்து, அததனுள் விளக்கப்

Page 45
f 62 சைவதூஷணபரிகாரம்
பட்ட பாவங்களையொழித்து விதிக்கப்பட்ட புண்ணியங்களைச் செய்து அதகனலே கடவுளெனப்பட்டவரை வழிபடுகின்ற வர்கள் கித்தியநாகத்திற் செல்வார்களெனல்வேண்டும்; அப்படியாகில், அவர்கள் கிறிஸ்துசமய நூலே மெய்ந்நூலெனக் கொள்ளாமைக்கேது உன் பரிசுத்தாவி அவர்களுள்ளத்திற் புகாமையேயாம். ஆகவே, குற்றம் பரிசுத்த ஆவியினிடத்த கேயாம். இங்கியாயத்திலே “கிறிஸ்துவை விசுவ்சியாதவர் கள் எல்லாரும் கித்திய நாகத்திற் செல்வார்கள்.’ என்னும் உன்னுரை சிறிதும்பொருந்தாமை சிறுவருக்கும் தெள்ளிதிற் புலப்படும். எங்கள் சமயநூல்களாகிய வேதாகமங்கள், சைவசித்தாந்தமொன்றே சற்சமயமென்றும், அதன்வழி நிற்பவர்களே பரமமாகிய முத்தியையடைவார்கள் என்றும், அந்நூல்களை மெய்ந்நூல்களெனத் தெளியாது பிறசமயநூல் களை மெய்ந்நூல்களெனக்கொண்டு அவற்றின் வழி நிற்பவர் கள் சுவர்க்காதிகளிலே தங்கள் தங்கள் கர்மத்துக்கேற்ற பயன்களை அனுபவித்து, தங்கள் தங்கள் புண்ணியவிசேடத்தி ஞலே பின்னர்ச் சைவத்திற்புகுவார்கள் என்றும், சைவமே சற்சமயமென்று தெளிந்தும் பரசமயங்களிற் புகுந்தவர்கள் நரகத்திலே துயருறுவார்களென்றும் சொல்லுகின்றன. இதனைக்குறித்துச் சைவாகமங்களிலே விரித்தவாறே விரிக் கப்புகில், பெருகுமாதலாலும், விரிக்கினுமுனக்குச் சிறிதும் பயன்படாதாகலாலும், விரித்துரைத்திலம் என்றறியக் கடவாய்.
அநேகர் அற்பபுண்ணியத்தினுலும்மோக்ஷம் சேர்ந்தார்க ளென்று உங்கள் சிவபுராணத்திற் சொல்லப்படுகின்றது; இது யுத்திக்குச் சிறிதும் பொருந்தவில்லையே என்பாயாகில்; இன்னது இன்னது புண்ணியமென்றும், இன்னது இன்னது பாவமென்றும் அவைகளுக்கு இன்னது இன்னது பயனென்

விவேசனம் 63
றும், ஆதியிலே கடவுள் தாமே வகுத்தார். கடவுள் எதனைப் புண்ணியமென்று விதிக்காரோ அதுவே புண்ணியமும், அதற்கு எதனைப் பயனென்று விதிக்காரோ அதுவே பய னும், எதனைப் பாவமென்று விலக்கினரோ அதுவே பாவமும், அகற்கு எதனைப் பயனென்று விதிக்காரோ அதுவே பயனு மாயிருக்கும்; அங்ங்ணமன்றி, அவரால் விதிக்கப்படாதது புண்ணியமுமன்று, விலக்கப்படாதது பாவமுமன்று. இப்படி வகுக்கப்பட்ட புண்ணியங்களுள் சற்றும் பிரயாசமின்றி மிக எளிதிற் செய்யப்படுவனவாயும் மிகுந்த பயனைத் தருவன வாயும் இருக்கும் புண்ணியங்களுமுண்டு; பெரும்பிரயாசத்தி ஞற் செயப்படுவனவாயும் சிறுபயனைத் தருவனவாயும் இருக்கும் புண்ணியங்களுமுண்டு; பாவங்களும் இப்படியே யிருக்கும். இப்படிப்பட்ட புண்ணியபாவங்களைச் செய்பவர் கள் அதற்குக் கடவுளால் நியமிக்கப்பட்ட சுகதுக்கங்களை அடைவார்கள். ஆகையால் பிரயாசமின்றி மிக எளிதிற் செய்யப்படும் புண்ணியங்களினலும் மோக்ஷமடையலாம் என்பதற்குச் சந்தேகமில்லை. கிறிஸ்துவுடனே சிலுவையில் அறையப்பட்ட மகாசண்டாளராகிய கள்வரிருவரும் அறி விருக்கும்வரைக்கும் அவரை கிந்தித்தார்களென்றும், பின்பு அவர்களுளொருவன் அவரைநோக்கி, கர்த்தாவே நீர் உம்முடைய இராச்சியத்திற் பிரவேசிக்கும்பொழுது அடி யேனை கினைந்தருளுமென்முன் என்றும், அதனுல் அவன் மோக்ஷமடைந்தானென்றும், மத். 27. 44. லூக், 23, 42. 43. வசனங்களிற் காணப்படுகின்றது. இப்படிச் சற்றேனும் பிரயாசமின்றிச் செய்யப்படுவனவாயும் பெரும்பயனைத் தருவனவாயுமிருக்கும் புண்ணியங்கள் உண்டென்று உன் சமயநூலிலே காணப்படுகின்றது. பெரும் பிரயாசத்தினுற் செய்யப்படுவனவாயும் சிறுபயனைத் தருவனவாயும் இருக்கும்

Page 46
64 சைவதூஷணபரிகாரம்
புண்ணியங்களை உன் சமயநூலில் வந்தவழிக்கண்டுகொள்க. ஒருவன் அற்ப பாவத்தினலே நரகடைவானெனின், அற்ப புண்ணியத்தினலே ஒருவன் மோகூடிமடைதலுங் கூடுமே. பாவத்தினுல்வருந் துன்பம் அவனுக்கு உண்டெனில், புண்ணியத்தினல்வரும் இன்பமும் அவனுக்கு உண்டென்ப தற்குச் சந்தேகமில்லையே.
லூக். 7. 36-48. பரிசேயரில் ஒருவ்ன் தன்னுடன் போசனம் பண்ணும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் பரிசேயனுடைய வீட்டிற் பிரவேசித்துப் பந்தியிருந் தார். பரிசேயனுடைய வீட்டிலே பந்தியிருக்கிறதை அந்த ஊரிலுள்ள பாவியாகிய ஒருஸ்திரீ அறிந்து, ஒருபாணியிற் சுகந்த தைலத்தைக் கொண்டுவந்து, அவருடைய பாகங்களி னருகே பின்னுககின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங் களைக் கண்ணீரினுலே கழுவி, தன் தலைமயிரினலே துடை க்அ, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, சுகந்தகைலத்தைப் பூசினுள். அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்ட பொழுது, இவள் பாவியே. இவர் தீர்க்கதரிசியானல் தம்மைக் தொடுகிற ஸ்திரி இன்னுளென்றும், இப்படிப் பட்டவளென்றும் அறிந்திருப்பாரென்று தனக்குள் எண் ணிக்கொண்டான். அப்பொழுது யேசு அவனைநோக்கி: சிமோனே, உனக்கு ஒன்றைச்சொல்ல விரும்புகிறேனென்று சொல்ல, அவன் போதகரே, சொல்லுமென்முன். கடன் காரன் ஒருவனுக்குக் கடனளிகள் இரண்டுபேரிருந்தார்கள், அவர்களில் ஒருவன் ஐந்நூறு தேனுரியக்காசும், மற்றவன் ஐம்பதுங் கொடுக்கவேண்டியதாயிருந்தது. அவர்கள் கொடுக் கிறதற்குத் திராணியில்லாதவர்களா யிருந்தபொழுது, இருவ ருக்குங் கடனமன்னித்தான். அவர்களில் எவன் அவனிடக் தில் அதிக அன்பாயிருப்பான்; அதை எனக்குச் சொல்

விவேசனம் 65
லென்று கேட்க, சீமோன் அவருக்குத்தாமாக மிகுதிக்கு மன்னிப்புப் பெற்றவனேயென்று நினைக்கிறேனென்றன். அப்பொழுது அவர் நீ யதார்த்தமாய்த் தீர்த்தாயென்று சொல்லி, பின்பு ஸ்திரீக்கு நேரே திரும்பி, சீமோனைநோக்கி இந்த ஸ்கிரீயைப் பார்க்கிமுயா; நான் உன்வீட்டில் வந்த பொழுது நீ என் கால்களுக்காகத் தண்ணீரைத் தரவில்லை; இவளோ கண்ணீரினுல் என்கால்களைக்கழுவி, தன் தலை மயிராலே துடைத்தாள். நீ என்னே முத்தஞ்செய்யவில்லை; நான் இங்கே பிரவேசித்தது முதல் இவள் என்பாகங்களை ஒயாமல் முத்தஞ்செய்கிருள். நீ என்கலைக்கு எண்ணெயிட வில்லை. இவளோ சுகந்த தைலத்தை என்பாகங்களிற் பூசினுள்; ஆதலால் இவள் தான் செய்த அனேக பாவங்கள் மன்னிக்கப்பட்டதைக்குறித்து மிகவும் அன்பாயிருக்கிமு ளென்று உனக்குச்சொல்லுகிறேன்; கொஞ்சமாக மன்னிப்புப் பெற்றவனெவனே அவன் கொஞ்சமாய் நேசிப்பானென்று சொல்லி, பின்பு அவளைகோக்கி, உன் பாவங்கள் மன்னிக்கப் பட்டனவென்முர். இவ்வாறே அற்ப புண்ணியங்களினலே பெரும் பாதகங்களும் கிவாரணமாகுமென்றும், அநேக பாவங்களைப் பொறுத்து விடுதலே தகுதியென்றும், உன் னுடைய சமயசாத்திரத்திலே சொல்லப்பட்டிருக்கின்றது. அதுகண்டும், சற்றேனும் பிரயாசமின்றிச் செய்யப்பட்ட அற்ப புண்ணியத்திற்குப் பயன்கிடைக்குமா? அதுபொய்: அப்படிவிதித்த தேவனும் பொய்த்தேவன்; அப்படிச் சொன்ன சமயநூலும் ப்ொய்ந்நூல்; அது மெய்யாகில், உலகத்தில் உள்ள சகலரும் உள்ளநாள் எல்லாம் பெரும் பாதகங்களைச்செய்து, இறக்கும்போதாயினும் அதற்கு முன்னுயினும், அப்படியொரு அற்பபுண்ணியஞ்செய்து மோக்ஷம்சேரலாமே! ஒரு அற்பபுண்ணியத்தைச்செய்து
5

Page 47
66 சைவதூஷணபரிகாரம்
மோக்ஷம் சேர்ந்துகொள்ளலாம் என்று நினைந்து சகலரும் மற்றைப் புண்ணியங்களெல்லாவற்றையும் செய்யாமல் விட்டு விடுவார்களே; இப்படிச்சொல்லும் சமயநூல் பாவஞ்செய் யும்படி சகலரையும் ஏவுகின்றதே, இப்படிப்பட்ட அற்ப புண்ணியம் செய்தவனுக்கு இவ்வளவு பயனென்ருல், பெரும்புண்ணியத்தைச் செய்தவனுக்கு எவ்வளவு அதிக மாகிய பயனுண்டு? அப்படிப்பட்ட புண்ணியங்கள் ஆயிரம் பதினுயிரம் ஒருவன் செய்தால், அவனுக்குக் கிடைக்கும் பயனுக்கு அளவில்லையே, என்று வாயில் வந்தபடியே பிதற்றுகின்முய், ஆன்மாக்கள் காம் தாம் செய்த புண்ணிய பாவங்களுக்குத்தக்க சுக துக்கங்களை அனுபவிப்பார்க ளென்றும், பாவங்கள் வீதிப்படி பிராயச்சித்தம் செய்தவழி நீங்குமென்றும், பின்னர் பிராயச்சித்தஞ்செய்துகொள்வோ மென கிணைந்து முன்னர்ப் பாவஞ்செய்தார் தண்டிக்கப்படுவா ரென்றும், சிவசாத்திரங்கள் செப்புகின்றன. இப்படிச் சொல்லும் எங்கள் சமயநூலோ, எவ்வகைப்பட்ட பாவங் களைச் செய்தும் இறுதியிலே கிறிஸ்துவை விசுவசித்தவர் நித்தியமோட்சத்தை அடைவாரென்றும், எவ்வகைப்பட்ட புண்ணியங்களைச் செய்தும் இறுதியிலே கிறிஸ்துவை விசுவசியாதவர் கித்திய நாகத்தை அடைவாரென்றும் சொல்கிற உன்சமயநூலோ, ஆன்மாக்களைப் பாவம்செய்யும் படி ஏவும் நூல்? நன்முகச்சிந்தித்துணர்ந்து பேசு.
எங்கள் தேவனுகிய கிறிஸ்துவை அந்தக்கள்ளன் புத்தி பூர்வமாகப் பிரார்த்தித்தபடியால் மோக்ஷம்சேர்ந்தான்; அந்த ஸ்திரீயும் அவரைப் புத்திபூர்வமாக வழிபட்டதனல் அவளுடைய பாவங்கள் நிவாரணமாயின. உங்கள் சிவ
புராணங்களிற் சொல்லப்படும் சரித்திரங்கள் இப்படிப்

விவேசனம் 67
பட்டனவல்லவே; சிவ சிவ என்றுசொன்னதினுலும், விபூதி சரீரத்திலே பட்டதினுலும், புண்ணிய ஸ்தலத்திலே சற்று நேரம் தங்கினதினுலும் மோகூடிம் சேர்ந்தார்களென்று சொல்லப்படுகின்றதே என்பாயாகில்; கடவுள் சர்வசாமர்த் திய முள்ளவாாகையால், ஒன்றுக்கும் பற்முக ஒருதுரும்பை நோக்கி நீ உலகமெல்லாவற்றையும் தாங்கு என்று அருளிச் செய்யினும், அது அங்ஙனம் செய்யவல்லதாகும்; தாங்கென் அறுரைத்த அக்கடவுளதுசத்தி தன்னிடத்தே பதிந்திருக் கின்றமையிஞலேயே, அது அங்ஙனம் விசேஷமுள்ள தாயிற்று. அவ்வாறே அக்கடவுளால் கியமிக்கப்பட்ட பொருள் இடம் காலம் கிரியை என்பவைகளெல்லாம், அவருடைய சத்தி தங்களிடத்தே பதிந்திருக்கின்றமையால், புண்ணியப்பொருள்களும், புண்ணியஸ்தலங்களும், புண்ணிய காலங்களும், புண்ணியக்கிரியைகளுமாய், விசேஷம் அடைந் தன. சிவசிவ அரகர சம்பு மகாதேவ என்றற் முெடக் கத்துச் சொற்களும் அவருடைய திரு5ாமங்களாயிருத்த லால், அவரைத்தொட்டுப் புண்ணியநாமங்களாய் விசேஷம் அடைந்தன. விபூதிருத்திராக்ஷங்களும் அவராலே தளிக்கப் பட்டமையாலும், அவருடைய சத்தி தங்களிடத்திலே பதிந்தமையாலும், புண்ணியப்பொருள்களாயின. அவரை வழிபடுகின்றவர்களும் அவருக்கு அடிமைகளாயினபடியா அலும், அவருடைய சத்தி தங்களிடத்தே பதிந்தமையாலூம் புண்ணியவான்களாய் விசேஷமடைந்தார்கள். மத். 26. 26-28. யேசு அப்பத்தை எடுத்து, துதிசெய்து, அதைப் பிட்டு, சீஷருக்குக்கொடுத்து, நீங்கள் எடுத்துப் புசியுங்கள்; இதுவே என்சரீாமென்முர். பின்பு அவர் பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரஞ்சொல்லி, அதை அவர்களுக்குக்
கொடுத்து, நீங்கள் எல்லாரும் இதிற் பானம் பண்ணுங்கள்.

Page 48
68 சைவதூஷணபரிகாரம்
இதுவே புதிய உடன்படிக்கைக்கேற்ப, பாவமன்னிப்புக் கென்று அனேகருக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தம் என்ருரர். இப்படியே அப்பமும் திராட்சாசமும் உன்தேவனுலே நியமிக்கப்பட்டமையால், விசேஷமடைக் தனவென்பது உன் சமயநூலிலே காணப்படுகின்றது. அவ்வாறே நீயும் இப்பொழுது இராப்போசனம் உட்கொள்ள விரும்பி, உன்சபையார் எல்லாரும் சூழ்ந்திருப்ப, அப்பத்தை யும் மதுவையும் கொண்டுவந்து, பீடத்தின் மேலே வைத்து, உங்கள் தேவனைநோக்கி, அவைகளை ஆசீர்வதிக்கும்படி விண்ணப்பம் பண்ணினதன்மேல், அவைகள் அவராலே ஆசீர்வதிக்கப்பட்ட்மை பற்றி அவருடைய சரீரமும் இரத்தமுமாய் விசேஷமடைந்தனவென்று துணிந்து, நீயும் உட்கொண்டு அச்சபையாருக்கும் உட்கொள்ளக் கொடுக்
கின்ருயே.
சிவசிவ அரகா என்றற்முெடக்கத்துப் பெயர்கள் சிவ லுடைய திருநாமங்களாயிருக்கும் விசேஷத்தினலே, அந்தப் புண்ணியநாமங்களை கினைப்பினும், நாவினுல் உச்சரிப்பினும் பிறர்சொல்லக் கேட்பினும், பாவங்கள் நீங்கிப் புண்ணியங்க ளுண்டாம். கிறிஸ்துசமயத்திலே பிரவேசியாதவர்களும் கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லி, பிசாசுகளை ஒட்டினுர்க ளென்று, மாற்கு, 9. 38. வசனத்தினுலும், லூக், 9, 49-ம் வசனத்தினுலும், தோன்றுகின்றது. அப் பிசாசு களை யோட்டினவர்கள் கிறிஸ்துவை விசுவசியாதவர்களாகையால், அவருடைய நாமத்தினது விசேஷத்தினலேயே அப்பிசாசு கள் பயந்தோடின என்பது சங். 99. 3. “மகத்துவமும் பயங்கரமுமான 2-D-g நாமத்ை த அவர்கள் துதிப்பார்களாக, அது பரிசுத்தமுள்ளது” என்னும் வசனத்தினலே விளங்கு கின்றது.

(
விவேசனம் 69
விபூதி ருத்திராக்ஷங்கள் சிவஞல் அணியப்பட்ட சஷம் உடையன ஆதலால், அந்தப்புண்ணியப் பொருள் களைத் தளிக்கின்றவர்களுடைய பாவங்கள் நீங்குகின்றன. பன்னிரண்டுவருஷமாகப் பெரும்பாடு உடையவளாய், அநேக வைத்தியரிடத்தில் மிக வருத்தப்பட்டு, தனக்குண்டான யாவையும் செலவழித்தும் சற்றயினும் சொஸ்தமடையாமல் மிகமெலிவடைந்த ஒரு ஸ்திரீ யேசுவைக்குறித்துக் கேள்விப் பட்டுப்போய், அவருடைய வஸ்திரத்தைத் தொட்ட வுடனே, அவளுடைய இரத்த ஊறல் நின்றுபோயிற்று. அவள் உபத்திரவம் நீங்கி, ஆரோக்கியமடைந்தனள் என்றும், மாற்கு 5, 25-29. வசனங்களிலே சொல்லப்பட் டிருக்கின்றது. அவள் அந்த வஸ்திரத்தைத்தொட்ட உடனே நோய் நீங்கினமையால், அவ்வஸ்திரத்தினது விசேஷத்தினலேயே அவளுடைய நோய் நீங்கிற்றென்று கோன்றுகின்றது.
இலீஷா என்பவன் யோர்தான் நதிக்கரையிலே கின்று கொண்டு, இலீசாவினுடைய மேலங்கியினலே சலத்தை அடிக்க, அது இருபுறமும் ஒதுங்கிப் பிரிவுபட்டது; இலீஷா கடந்துபோனுன் என்று, 2. இரா. 2. 13, 14. வசனங் களிலே சொல்லப்பட்டிருக்கின்றது. இதனுல், அந்த வஸ்கிரத்தினது விசேஷத்தினலேயே அந்நதி இலீஷாவுக்கு வழிவிட்டது என்று காண்கின்றது. இப்படியே, புண்ணிய ஸ்தலம், புண்ணியகாலம், புண்ணியக்கிரியை முதலியவை களின் விசேஷத்தினலே பாவம்நீங்கினமை வந்துழி வந்துழிக் கண்டுகொள்க.
கிறிஸ்துவினுடைய சீஷர்கள் அவருடைய காமத்தைச் சொல்லி, பிசாசுகளை ஒட்டினமையைக் கண்டு, கிறிஸ்து

Page 49
70 சைவதூஷணபரிகாரம்
சமயத்திற் பிரவேசியாதவர்கள் தாங்களும் அப்படியே அவருடைய நாமத்தைச்சொல்லில், ஒருபோது பிசாசுகள் நீங்குமென்று விசுவசித்துச் சொன்னமையினலேயே பிசாசுக ளோடின; பன்னிரண்டு வருஷமாகப் பெரும்பாடுள்ள அந்த ஸ்திரீ அவ்வஸ்திரத்தைத் தொட்டால்தான் சொஸ்தம் அடைவாளென்று விசுவசித்துத் தொட்டதினலேயே சொஸ்தம் அடைந்தாள்; உங்கள் சிவபுராணங்களிற் சொல்லப் படும் சரித்திரங்கள் இப்படிப்பட்டன அல்லவே; இன்னது செய்தால் பயனுண்டென்று விசுவசியாதிருக்கவும்; வியூ தி ருத்திராக்ஷம் தீர்த்தம் முதலியவைகள் சரீரத்திற்பட்டமை யால் மோக்ஷம் சேர்ந்தார்களென்று சொல்லப்பட்டிருக் கின்றதே என்பாயாகில்; நன்றுசொன்னுய்; சிரத்தையே பரம தருமம் என்றும், சிரத்தையே சமஸ்தபுண்ணியங்களுக்கும் மூலம் என்றும், புண்ணியங்களெல்லாம் அச்சிரத்தையோடு கூடியவழியே பயன்படுமென்றும், அச்சிரத்தையோடு கூடா வழியும், ஒருவாறு தத்தம் விசேஷங்களுக்குத் தக்க பயன் களைப் பிறப்பியாது விடா என்றும், எங்க்ள் சமயநூல்கள் சாற்றுகின்றன. ஆகையால், இது புண்ணியப்பொருள் இதைத்தொட்டால் பாவம்நீங்கிப் புண்ணியம் உண்டாம் என்று விசுவசியாதிருப்பினும், அப்பொருள் ஒருவனுடைய சரீரத்திற்பட்டால், அப்பொருளின் விசேஷத்துக்குத் தக்க பயன் அவனுக்குக்கிடைக்கும் என்பதற்குச் சந்தேகமில்லை. அப். 5. 15, 16. பிணியாளிகளைப் படுக்கைகளிலும், கட்டில் களிலுங் கிடத்தி, பேதுரு5டந்துபோகையில் அவனுடைய கிழலாகிலும் சிலரிற்படும்படி, அவர்களை வெளியே விதிகளிற் கொண்டுவந்து வைத்தார்கள். நான்கு திசையிலுமுள்ள பட்டணங்களிலும் நின்று திரளானசனங்கள், பிணியாளி
களையும், அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களையும்

விவேசனம் 1.
யெருஷலேமுக்குக் கொண்டுவந்தார்கள். அவர்கள் எல்லா ரும் சொஸ்தமாக்கப்பட்டார்கள்: டிை 19, 22. பவுலுடைய சரீரத்திலிருந்த வேர்வைப் பரிவட்டங்களையும் கச்சுக்களையும் வியாதியுள்ளவர்களிடத்தில் கொண்டுவர, வியாதிகள் அவர் களைவிட்டு நீங்கிப்போயின; துஷ்ட ஆவிகளும் அவர்களி னின்றும் புறப்பட்டன. இந்த நோயாளர்களுள் அநேகர் சன்னிமுதலிய வியாதிகளினுலும் பிசாசினலும் முழுமையும் அறிவிழந்திருப்பார்களே; அப்படி அறிவிழந்து கிடப்பவர் கள் பேதுருவினுடைய கிழல் தங்கள்மேற்பட்டால் தாங்கள் சொஸ்தமடைவார்களென்றும், பவுலுடைய வேர்வைப்பரி வட்டங்களும் கச்சுக்களும் தங்கள்மேற்பட்டால் காங்கள் சொஸ்தமடைவார்களென்றும் விசுவசித்தல் கூடாதே; அவர் களுள் அநேகர் அறிவிழந்திருப்பார்களென்பது புதிய உடன்
படிக்கையிற் சொல்லப்பட்ட சரித்திரங்களால் விளங்கும்.
இவர்கள் பேதுருவினுடைய நிழல் தங்கள்மேற்பட் டால் சொஸ்தமடைவார்களென்றும், இவர்கள் பவுலினுடைய வேர்வைப் பரிவட்டங்களும் கச்சுக்களும் தங்கள்மேற் பட்டால், சொஸ்தமடைவார்களென்றும், பிறராயினும் விசு வசித்து அங்ஙனம் செய்தமையால், அவர்களைப் பிடித்த வியாதிகளும் பிசாசுகளும் நீங்கின; உங்கள் சிவபுராணங் களிற் சொல்லப்படும் சரித்திரங்கள் இப்படிப்பட்டன அல்லவே, மகாபாதகனுகிய ஒருவனுடைய எலும்புகளில் ஒன்றை ஒருகழுகு கொண்டுபோயக் கங்கையிலே போட்ட தணுல், அவன் மோட்சம் சேர்ந்தானென்றும், காவேரி நதிக் கரையிலே கிடந்த ஒருவன்மேல் ஒருதிவலை தெறித்ததனல் அவனுடைய பைத்தியம் நீங்கிற்றென்றும், சவத்திலே விபூதிபட்டதனல் அவ்வான்மா மோட்சம் சேர்ந்ததென்றும்

Page 50
ሽ2 சைவதூஷணபரிகாரம்
சொல்லப்பட்டிருக்கின்றதே என்பாயாகில், அவைகளெல் லாம் அப்புண்ணியப்பொருள்களின் விசேடத்தினுலேயே நிகழ்ந்தன. ஒரு சவத்தைச் சிலாடக்கும்படி கொண்டுபோம் பொழுது, பகைஞருடைய சேனைகளைக் கண்டு பயந்து, இலீஷாவின் பிரேதவறையில் அந்தச்சவத்தை எறிந்துவிட அது இலீஷாவின் எலும்புகளின் மேலே பட்டதஞ்ல், உயிர் பெற்றெழுந்து காலூன்றிக்கொண்டுகின்றது என்று, 2. இரா. 13, 21 வசனத்திற் சொல்லப்பட்டிருக்கின்றது. இலீஷாவி னுடைய எலும்பைத் தீண்டினல் கான் உயிர்பெற்று எழும்புமென்று அந்தச் சவம் விசுவசிக்கல்கூடுமா? கூடாதே. அதைச் சுமந்துகொண்டு போனவர்களாயினும் விசுவசித்
தார்களா? இல்லையே. இப்படி உன் சமயசாத்திரத்திற் சொல்லப்பட்டவைகள் உனக்கு நியாயமாகத் தோன்றுவது என்ன? இவைகளெல்லாவற்றையும் உன் சமயசாத்திசத் திலே நீ வாசித்திருந்தும், பிறசமயநூல்களிலே அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் சரித்திரங்களைப் பொய்யென்று தூஷிப்பது என்ன?
சிவசின்னதாரணம் சிவபூசை சிவமந்திரசெபம் முதலிய சிவபுண்ணியங்களினலே பயன் இல்லையென்று உங்களாலே மெய்ஞ்ஞானிகளென்று பேசப்படும் பட்டணத்துப்பிள்ளை யார் சிவவாக்கியர் தாயுமானசுவாமிகள் முதலியோர்கள் பேசுவதேது? என்பாயாகில்,
‘நீற்றைப் புனைந்தென்ன நீராடப் போயென்ன நீ மனமே
மாற்றிப் பிறக்க வகையறிக் தாயில்லை மாமறைநூ லேற்றிக் கிடக்கு மெழுகோடி மந்திர மென்னகண்டா யாற்றிற்கிடந்துந் துறையறியாம ல?லகின்றையே.?
எனவும்,

விவேசனம் 73
"சொல்லிலுஞ் சொல்லின் முடிவிலும் வேதச்சுருதியிலு
மல்லிலு மாசற்ற வாகாயந் தன்னிலு மாய்ந்துவிட்டோ ரில்லினுமன்பரிடத்திலு மீசனிருக்குமிடங் கல்லிலுஞ் செம்பிலுமோ விருப்பானெங்கள் கண்ணுதலே.? எனவும்,
“எட்டுத்திசையும் பதினறுகோணமு மெங்கு மொன்முய்
முட்டித்ததும்பி முளைத்தோங்கு சோதியை மூடரெல்லாங் கட்டிச் சுருட்டித்தங் கக்கத்தில் வைப்பர் கருத்தில் வையார் பட்டப்பகலை யிரவென்று கூறிடும் பாதகரே.? எனவும்,
“ஆரூாரிங்கிருக்க வவ்வூர்த் திருநாளென்
றுரூர்க டோறு முழலுவீர்-நேரே யுளக்குறிப்பை நாடாதவூமர்கா னிவிர் விளக்கிருக்கத் தீத்தேடு வீர்? எனவும் கூறியவர் தாமே, *ஐயுந்தொடர்ந்து விழியுஞ் செருகி யறிவழிந்து
மெய்யும் பொய்யாகி விடுகின்றபோதொன்று வேண்டுவன்யான் செய்யுங் திருவொற்றி யூருடையீர் திருநீறுமிட்டுக் கையுங் தொழப்பண்ணி யைக்தெழுத்தோதவுங் கற்பியுமே.” எனவும்,
“ஊரீ ருமக்கோ ருபதேசங் கேளு முடம்படங்கப்
போரீர் சமணக் கழுவேற்று நீற்றைப் புறந்திண்ணையிற் சாரீ ரனந்தலைச் சுற்றத்தை நீங்கிச் சகநகைக்க வேரீ ருமக்கவர் தாமே தருவ ரிணையடியே.? எனவும்,
“அஞ்சக் கரமெனுங் கோடாலி கொண்டிச்த வைம்புலனும்
வஞ்சப் புலக்கட்டை வேரறவெட்டி வளங்கள்செய்து விஞ்சத் திருத்திச் சதாசிவ மென்கின்ற வித்தையிட்டுப் புஞ்சக் களைபறித்தேன் வளர்த்தேன் சிவபோகத்தையே.”
எனவும்,

Page 51
74 சைவதூஷணபரிகாரம்
*6ாய்க்குண்டு தெண்டு நமக்குண்டு பிச்சை :னவெல்ல
வாய்க்குண்டு மக்திர பஞ்சாட்சர மதியாமல்வரும் பேய்க்குண்டு நீறு திகைப்புண்டுகின்ற பிறவிப்பிணி நோய்க்குண்டு தேசிகன் றன்னருணுேக்கங்க னேக்குதற்கே.” எனவும், “உரைக்கைக்கு நல்ல திருவெழுத் தைந்துண்டுரைப்ப்டியே
செருக்கித் தரிக்கத் திருநீறுமுண்டு தெருக்குப்பையிற் றரிக்கக் கரித்துணி யாடைபுமுண் டெந்தச்சாதியிலு g மிரக்கத்துணிந்து கொண்டேன் குறைவேது மெனக்கில்லையே? எனவும், “நல்லாயெனக்கு மனுவொன்று தந்தருண் ஞானமிலாப்
பொல்லா வெனைக்கொன்று போடும் பொழுதியல் பூசை செபஞ் சொல்லார் நற்கோயினியமம் பலவகைத் தோத்திரமு மெல்லா முடிந்தபின் கொல்லுகண் டாய்கச்சி யேகம்பனே.” எனவும்,
*நல்லா ரிணக்கமு நின்பூசை நேசமு ஞானமுமே யல்லாது வேறு நிலையுளதோ வகமும்பொருளு மில்லாளுஞ் சுற்றமு மைந்தரும் வாழ்வு மெழிலுடம்பு மெல்லாம் வெளிம்யக்கே யிறைவாகச்சி யேகம்பனே.” எனவும்,
“அடியாருறவு மான்பூசைநேசமு மன்புமன்றிப்
படிமீதில் வேறு பயனுளதோ பங்கயன் வகுத்த குடியானசுற்றமுங் தாரமும்வாழ்வுங் குசக்கலங்க டடியா லடியுண்ட இாருெக்கு மென்றினஞ் சார்ந்திலரே.? எனவும், w
“சுடப்படு வாரறி யார்பு மூன்றையுஞ் சுட்டபிரான்"
றிடப்படுமாமதிற் றென்னெற்றி யூரன் றெருப்பரப்பி னடப்பவர் பொற்பத நந்தலை மேற்பட நன்குருண்டு கிடப்பது காண்மன மேவிதியேட்டைக் கிழிப்பதுவே.?
எனவும்,

விவேசனம் 5.
“சொக்கிட் டாமனைப் புக்குட் டிருடிய துட்டர்வர்து
திக்குற்ற மன்னரைக் கேட்பதுபோற் சிவ நிந்தைசெய்து மிக்குக் குருலிங்க சங்கம நிந்தித்து வீடிச்சிக்கு மெக்குப்பெ ருத்தவர்க் கென்சொல்லு வேன்கச்சியே கம்பனே.”
-பட்டினத்துபிள்ளையார். எனவும்கூறியுளார். மற்றைஞானிகள் வாக்கியமும் இப்படியே இருக்கும். இப்படி இரண்டையும் ஒருவர் தாமே திருவாய் மலர்ந்தருளினமையால், அவைகள் ஒன்றையொன்றழிக்க மாட்டாவாம்; அதற்குச்சமாதான மிருத்தல் வேண்டும்; ஒன்றை ஒன்று அழிப்பினும், முன்னர்த் தழுவியதற்கும் பின்னர்த் தள்ளியதற்கும் காரணம் இருக்கல்வேண்டும் என்று பெரியோர்களிடத்திற் கேட்டறிதல் வேண்டும்: அப்படிக் கேட்டறியாமல், எங்கேயாயினும் ஒரு செய்யுளை எடுத்துக்கொண்டு, சைவசமயிகளே! இந்தச்செய்யுள் இப்படிச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் இப்படிச் செய்கின்றிர்கள்? அது பெரியதப்பு, தப்பு என்று சொல்லிக்கொண்டு திரிகின் முய். வியாதி நீங்கும்படி மருந்துண்பவனுெருவன் வைத்திய சாத்திரத்தில் விதித்தவாறே அனுபானத்தோடு உண்ணுமை யையும் அவபத்தியங்களைத்தள்ளிப்பத்தியங்களைக் கொள்ளா மையையும் வைத்தியசாத்திரம் வல்லாணுெருவன் கண்டிரங்கி, மீ உண்ணும் இம்மருந்தினுற் பயன்யாது? என்றக்கால், அவனுக்கு அம்மருந்துண்ணற்கவென்பது கருத்தன்ரும்; அதுபோல, மலபரிபாகம் வரும்படி கிரியைகளைச்செய்வோர் சிவசாத்திரத்தில் விதித்தவாறே அன்போடு செய்யாமையை யும் கொலை முதலிய பாவங்களைத்தள்ளி இாக்கம் முதலிய புண்ணியங்களைக் கொள்ளாமையையும் சிவசாத்திரம் வல்லார் கண்டிாங்கி, நீர் செய்யும் இக்கிரியைகளாற் பயன்யாது? என்றக்கால், அவருக்கு அக்கிரியைகளைச் செய்யற்கவென்பது

Page 52
76 சைவதூஷணபரிகாரம்
கருத்தன்ருமென்றறிக. இன்னும், சிவாக மங்களிலே சொல்லப்படும் பாதங்கள் சரியை கிரியை யோகம் ஞானம் என நான்காம். அவற்றுள், முன்னைய மூன்றும் பொதுப்படக் கிரியைகளெனவேபடும். இந்நான்கினுள்ளும், சரியையின்றிக் கிரியையும், கிரியையின்றி யோகமும், யோகமின்றி ஞான மும் கைகூடாவாம். அது
‘விரும்புஞ் சரியை முதன் மெய்ஞ்ஞான நான்கு
மரும்புமலர் காய்கனிபோ லன்ருே பராபரமே.?
-தாயுமானசுவாமிகள். என்னும் திருவாக்கால் உணர்க. இந்த ஞானத்தாலடையப் படுவது பாமுத்தியாகிய சிவசாயுச்சியமாம். கிரியைகளி னலே அடையப்படுவது பதமுத்தியாம். அப்பதமுத்தி பலபேதப்படும். கிரியைகளைச்செய்து அகதற்கேற்ற பத முத்திகளைப்பெற்றுப் போதம்புசித்தவர்கள், திரும்பப் பூலோகத்திலேவந்து சென்மித்து, இருவினையொப்பு மலபரி பாகத்தினலே சிவஞானத்தைப் பெற்று, சிவசாயுச்சியத்தை அடைவார்கள். பட்டணத்துப்பிள்ளையார் முதலியோர் இப்படிப்பட்ட பெருஞ்சிறப்பினதாகிய சிவஞானத்தைப் பெற்றவர்கள். அவர்கள், அச்சிவஞானமே பரமுத்திசாதன மென்றும், கிரியைகளெல்லாம் அதற்குக் கருவிகளென்றும் உணர்ந்து அக்கிரியைகள் வாயிலாகச் சிவஞானத்தைப்பெற முயலாது, அக்கிரியைகளையே பொருளெனக்கொண்டு களிப் பாரைக்கண்டிாங்கி, இகழ்ந்தாரென்க. ஆதலால், சிவஞானக் தைக் குறித்துக் கிரியைகள் கீழ்ப்பட்டன என உணர்த்து தலே அவர்களுக்குக் கருத்தாம். அஃதன்றி, அச்சிவ்ஞானத் துக்கு இன்றியமையாக் கருவியாகிய அக்கிரியைகளைச் செய்யற்க என்பது கருத்தன்மும்; இவ்விரு சமாதானமும் ஏற்குமிடமறிந்து கொள்ளப்படும்.

விவேசனம் I
தீர்த்தமாடுகல் முதலிய புண்ணியங்களினலே பாவங் தேயுமெனில், அப்புண்ணியங்களைச் செய்தவர்களிடத்திலே கோபம் முதலிய துர்க்குணங்கள் மாரு?திருக்கக் காண்கின் றேனே; அவர்கள் மீளவும் பாவம் செய்கின்ருர்களே என்பா யாகில்; எங்கள் சமயநூலிலே விதித்தவிதி தவருமல் சிவன் மேல்வைத்த அன்பினுடனே அப்புண்ணியங்களைச் செய் பவர்கள் அநேகர் ஒரு வருஷத்தினுள்ளே உலகப்பற்றுக்களை முற்றவெறுத்து வனவாசம்பண்ணித் தவம்செய்யக்காண் கின்ருேம். இந்தப்புண்ணியம் செய்பவர்களெல்லாரும் இப்படி ஏன் ஆகவில்லை? என்பாயாகில்; எங்கள் உள்ளத்திலே பரிசுத்தாவி புகுந்துவிட்டது என்று சொல்லி, உன்சமயவிதிப் படி ஸ்நானம்பெற்று, இராப்போசனங் கையேற்பவர்கள் அநேகர் கொலை களவு பிறர்மனநயத்தல் முதலிய பல பெரும் பாவங்களைச் செய்யக் காண்கின்ருேமே; கோபம் முதலிய துர்க்குணங்களெல்லாம் அவர்களிடத்திலே மேன்மேலும் பெருகிவளர்கின்றனவே. அதுவுமன்றி, உன்சமயாசாரியர் கள் நாம் பரிசுக்காவியினலே லெளகிக ஆசைகளையும் சகல. பாவங்களையும் வெறுத்துத்தள்ளி நவீனசிருட்டராய்க் தெய்வத்தன்மையோடு கூடியிருந்து நாள்விடுகின்றேம்என்று கள்ளஞானம் பேசுகின்றர்களே. இவர்களுள், எவன் கிறிஸ்துநாதர் கூறியவாறே முத்திவிக்கினமாகிய மண்ணுசை பொன்னுசை பெண்ணுசை என்னும் லெளகிக ஆசைகளைச் சிறிதாயினும் வெறுத்துவிட்டவன்? இவர்களுள் எவன் ஒருமாசமேனும் ஒருவாரமேனும் ஒருநாளேனும் ஒருநாழிகை யேனும் மனம் வாக்குக்காயங்களினலே பாவஞ்செய்யாது ஒழிந்தவன்? இப்படியே நீங்கள் உங்களுள்ளேதானே பேருங் குற்.றங்களை வைத்துக்கொண்டு, பிறரைவேண்டியவாறே தூஷிப்பது என்ன? மத். 7. 1-5. ‘நீங்கள் குற்றம்

Page 53
78 சைவதூஷணபரிகாரம்
சுமத்தப்படாமலிருக்கவேண்டில்; பிறர்மேல் குற்றஞ் சுமத்த வேண்டாம். நீங்கள் குற்றஞ் சுமத்துவதுபோலக் குற்றஞ் சுமத்தப்படுவீர்கள். நீங்கள் அளக்கும் அளவினுல் உங்களுக் கும் அளப்பார்கள். உன்கண்ணிலுள்ள உத்திரத்தை உண ராமல், உன்சகோதரனுடைய கண்ணிலிருக்கிற சிராயைப் பார்க்கிறது என்ன? உத்திரம் உன்கண்ணிலிருக்க, நீ உன் சகோதரனை நோக்கி, உன்கண்ணிலுள்ள சிராயை எடுத்து விடுகிறேன் இடங்கொடு என்றுசொல்வதென்ன? கபடியே முன்பு உன்கண்ணிலுள்ள உத்திரத்தை நீக்கிவிடு, அப் பொழுது உன்கண்தெளிய மீ உன்சகோதரனுடைய கண்ணி லுள்ள சிராயை எடுத்துவிடுவாய்.’ இவ்வசனங்களை அறிந். தும் மறந்தனிர்போலும். இன்னும், உலகப்பொருள்க ளெல்லாம் அகித்தியமென்றும், அவற்றின்மேல் ஆசையை ஒழிக்கல்வேண்டும் என்றும், சனங்களுக்குப்புக்கிசொல்லித் திரிகின்றவர்கள் தாங்கள் அவ்வாறு நடவாதது என்ன? இஃதெல்லாம் பணத்தைச் சம்பாதித்துப் பெண்டிர் பிள்ளைக ளுடனே உண்டுடுத்து வாழ்ந்திருத்தல் வேண்டும் என்னும் அபேட்சையினலே எடுத்த வேஷமென்று காண்கின்றது.
ஆன்மாக்கள் காம்தாம் செய்த புண்ணியபாவங்களுக்கு ஏற்பச் சுவர்க்க நரகங்களிலே சுகதுக்கங்களை ஒருவர் கூடவும் ஒருவர் குறையவும் அனுபவிப்பார்களென்று சொல்லலாமா? என்பாயாகில்; ஒருவன் ஒருபணத்துக்காகச் சொல்லிய பொய்யும், ஒருவன் ஒருவனைக்கொன்ற கொலையும், ஒருவன் ஒரு பெண்ணுடன் செய்த வியபிசாரமும், ஒருவன் ஒரிள நீரைத் திருடியகளவும், ஒருவன் ஒருவனைக் கழுகை என்று சொல்லிய கிந்தையும், ஆகிய பலபல வருக்கமான பாவங்க ளெல்லாம் சமமாகிய பாவங்களென்றும், அப்பாவங்களைச் செய்தவர்களெல்லாருக்கும் சமமாகிய தண்டம் கிடைக்கு

விவேசனம் 79
மென்றும் சொல்வது ககாது. இன்னும், ஒருவன் இரு வேசையுடன்செய்த வியபிசாரமும், ஒருவன் ஒரு கன்னிகை யுடன்செய்த வியபசாரமும், ஒருவன் பாதாரத்துடன்செய்த வியபிசாாமும், ஒருவன் குருபத்தினியுடன் செய்த வியபி சாரமும், ஒருவன் சகோதரியுடன்செய்த வியபிசாரமும், ஒருவன் மாகாவுடன்செய்த வியபிசாாமும், ஒரேவருக்கமா யிருப்பினும், அவைகளெல்லாம் சமமாகிய பாவங்கள் என் . றும்; அப்பாவங்களைச்செய்த ஆடவர்கள் எல்லாருக்கும் சமமாகிய தண்டம் கிடைக்குமென்றும், சொல்வது தகாது. இப்படியே பாவங்களிலே பலவேற்றுமை உண்டு. புண்ணி யங்களையும் அவ்வாறே பகுத்துணர்கல் வேண்டும். நீ இதனைச் சற்றயினும் ஆராய்ந்தறியாமல், ஒரு அற்ப பாவத்தைச் செய்தவனும், அனேகம் பெரும்பாவங்களைச் செய்தவனுமாகிய இருவரும் சமமாகிய கண்டத்தை அடை யார்கள் என்று சொல்வது தப்பு. சிற்றறிவினையுடைய அரசர்களும் குற்றம்செய்தவர்களை அவரவர்செய்த குற்றத் துக்கு ஏற்பத் தண்டிக்கின்றர்கள். குற்றஞ் செய்தவர்கள் எல்லாருக்கும் சமமாகிய கண்டத்தை விதிக்கும் அரசனைக் கண்டுமிரேம், கேட்டுமிரேம். எங்காயினும் ஒரரசன் அவ் வாறு தண்டம்விதிக்கில், அவனை நீதியீனனென்றும் கொடுங் கோலாசனென்றும் உலகத்தார் யாவரும் பேசுவார்களே. சிற்றறிவினையுடையவர்களும் ரீதியில் வழுவக்கூடியவர்களு மாகிய பசுக்கள்தாமும் பகுத்தறிந்து அவரவர் செய்தகுற்றத் துக்குத் தகுந்த தண்டம் விதிப்பார்களாயில், முற்றறிவினை யுடையவரும் நீதிவழுவாதவரும் சர்வசீவதயாபாருமாகிய கடவுள் அவரவர்செய்த குற்றங்களைப் பகுத்தறியாமல், இரக்கமின்றி எல்லாரையும் சமமாகத் தண்டிப்பாரா? கண்டி யாரே.

Page 54
80 சைவதூஷணபரிகாரம்
மத், 12, 31. “மனுஷர்செய்யும் எந்தப்பாவமும், தூஷணமும், மனுஷருக்கு மன்னிக்கப்படும்; பரிசுத்தாவிக்கு விரோதமான பாவமோ மன்னிக்கப்படுவதில்லையென்று நான் உங்களுக்குச் சோல்லுகிறேன்.” இதனுல், பாவங்களில் வேற்றுமையுண்டென்பதே உன்சமயநூற் கருக்கென்று தோன்றுகிறது. புண்ணியங்களிலும் அவ்வாறே வேற்றுமை உண்டென்பதை உன்சமயநூலில் வந்தவழிக் கண்டுகொள்க.
யோசு, 5. 14. ‘நான் யெகோவாவின் சேணைக்கதிபதி யாய் வந்திருக்கிறேன் என்றர்.” மத், 1, 20. “கர்த்த ருடையதுTதன்.” இவைகளினலே, மோட்சவாசிகள் ஒரு வரினுமொருவர் அதிகமகத்துவமும் அதிகாரமும் உடையவர் களென்று தோன்றுகின்றது. மத். 16. 28. * அவர்களை நோக்கி, புதுச்சிருட்டி தோன்றுங்காலத்தில், மனுபுத்திரன் தமது மகிமையுள்ள சிங்காசனத்தில் வீற்றிருக்கும்பொழுது, என்னைப் பின்சென்றுவந்த நீங்களும், இஸ்ரவேலராகிய பன்னிரண்டு வமிசத்தாருக்கு கியாயத்தீர்ப்புக்கொடுக்கும்படி, பன்னிரண்டு சிங்காசனங்களில் வீற்றிருப்பீர்களென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேன்.” இதனுல், மோட் சத்திலே மற்றவர்களுக்கு நியாயந்தீர்க்கு மதிகாரமும் மகத் துவமும் இவர்களுக்கு உண்டென்று காண்கின்றது. வெளி. 14. 1-4. பின்பு நான் பார்க்கையில், சீயோன்மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரும், அவரோடே அவருடையபிதாவின் நாமந் தங்கள் தங்கள் நெற்றிகளில் எழுதப்பெற்ற இலட் சத்து நாற்பத்து நாலாயிரம்பேரும் கிற்கக்கண்டேன். அன்றியும், சலராசியின் இரைச்சல்போலவும், மகா இடியின் முழக்கம்போலவும், பரமண்டலத்திருந்துண்டாகிய ஒரு சத்தத்தைக் கேட்டேன்; நான் கேட்ட சத்தம், தங்கள் சுரமண்டலங்களை வாசிக்கிற சுரமண்டலக்காாருடைய

விவேசனம் S.
ஒசையைப்போலிருந்தது. அவர்கள் அந்தச் சிங்காசனத் துக்கு முன்பாகவும், நாலுபிராணிகளுக்கும் முதியோருக்கும் முன்பாகவும் ஒரு புதுப்பாட்டைப்பாடினர்கள். அந்தப் பாட்டு, உலகத்திலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட அந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரவரேயன்றி வேருெருவருங் கற்றுக்கொள்ளக் கூடாததாயிருந்தது. இவர்களே ஸ்திரி களால் தங்களை அசுசிப்படுத்தாத நிறையுடையவர்கள். இவர்களே ஆட்டுக்குட்டி எங்கேபோனுலும் அதைப்பின் பற்றுகிறவர்கள். இவர்களே மனுஷிரிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட்டுத் தேவனுக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முதற் பலனுணவர்கள். இவ்வசனங்களிலே, “இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேர்’ என விசேடித்துத் த்ொகைகுறித்ததினு லும், “அவர்கள் ஒருபுதுப்பாட்டைப்பாடினர்கள். அந்தப் பாட்டு அந்த இலட்சத்து நாற்பத்து காலாயிரவரேயன்றி வேருெருவருங்கற்றுக்கொள்ளக்கூடாததாயிருந்தது.” என்று மோட்சத்திலிருந்த மற்றவர்களை விலக்கி, இவர்களை விதந்து கூறினமையாலும், “தேவனுக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முதற் பலனைவர்கள்’ எனவே மோட்சத்திலே இரண்டாம் பலமா னவர்களும் உண்டென்பது பெறப்படுதலாலும், மோட்ச வாசிகளுள் வேற்றுமை உண்டென்று காண்கின்றது. லூக். 19-ம் அதிகாரத்திலே ஒரு இருத்தல் திரவியத்தைக்கொண்டு பத்து இருத்தில் ஆதாயம்பண்ணினவன் பத்துப்பட்டணங் களுக்கு அதிகாரியானன் ன்ன்றும், ஐந்து இருத்தல் ஆகா யம் பண்ணினவன் ஐந்துபட்டணங்களுக்கு அதிகாரியானுன் என்றும், சொல்லப்பட்டிருக்கின்றது. இதனுல், ஆன்மாக் கள் மோட்சத்திலே தாம் தாம் செய்த புண்ணியங்களுக்குத் தக்க மேன்மையும் இன்பமும் பெறுவார்களென்று தோன்று கின்றது.
மத். 11. 24. பீகியாயத்தீர்ப்புநாளில் உன் கிலைமையி லும், சோதோம்தேசத்து நிலைமை சகாயமாயிருக்குமென்து
6

Page 55
82 - சைவதூஷணபரிகாரம்
நானுனக்குச் சொல்லுகிறேன் என்ருர்,” லூக், 12, 47. 48. *தன் எசமானுடைய சித்தத்தை அறிந்தும், ஆயத்தமா யிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருக்கின்ற பணிவிடைக்காரன் பல அடிகள் அடிக்கப் படுவான். அறியாமலிருந்து, அடிகளுக்கு ஏற்றவைகளைச் செய்கிறவனே சில அடிகள் அடிக்கப்படுவான்.” உபா. 19. 21. “கண்ணுக்குக் கண்ணும், பல்லுக்குப் பல்லும், கைக்குக் கையும், காலுக்குக் காலும், பிரதியாகவேண்டும்.” இவைகளினலே, அவரவர் பாவத்துக்குத் தக்ககண்டம் விதிக்கப்படுமென்று தோன்றுகின்றது.
ஆன்மாக்கள் தாம்தாம்செய்த பாவத்துக்கு ஏற்ப நாகத் திலே துன்பம் அனுபவிப்பினும், அதனை கித்தியமும் அனு புவிப்பதேயன்றி, இடையிலே அந்நாகத்தினின்றும் மீளு வார்களென்பது கியாயமா? என்பாயாகில், தந்தைதாயர்கள் தங்கள்பிள்ளைகளையும், அரசர்கள் தங்கள் பிரஜைகளையும், தாங்கள் கூறிய நீதி மார்க்கத்திலே நடவாமைகண்டு தண்டித்தல், அவர்கள் மேலே வைத்த அன்பினுலேயாம்; அதுபோல, கடவுள் தாம் அருளிய வேதாகமங்களிலே விலக்கப்பட்ட பாவங்களைச்செய்த ஆன்மாக்களைத் தண்டித் தல், அவர்கள்மேல்வைத்தி கிருபையினலேயாம்; ஆதலால், அத்தந்தைதாயர்களும் அரசர்களும், பிள்ளைகளையும் பிரஜை களையும், அவரவர்செய்த குற்றத்துக்குத்தக்க கால வெல்லை குறித்து, தண்டித்துப் பயப்படுத்தி, முன்செய்த குற்றங் களை அந்தத் தண்டனையினலே ஒழித்து, நீங்கள் முன் போலக் கெட்டுப்போகாமல் இனி நீதிமார்க்கத்திலே நட வுங்களென்று புத்திசொல்வதுபோல, கடவுளும் அவ்வான் மாக்களை அவரவர்செய்த பாவத்துக்குத்தக்க காலவெல்லை குறித்துத் தண்டித்துப் பயப்படுத்தி, முன்பு செய்த பாவங்

விவேசனம் 83
களை அந்தக்கண்டனையினலே ஒழித்து, நீங்கள் முன்போலக் கெட்டுப்போகாமல் இனி வேகாகமவழியிலே நடந்து உய்யுங்களென்று அருளுவார்; ஆகையால், நரகத்திலே விழுந்த ஆன்மாக்கள் தத்தம் பாவங்களுக்கேற்பக் குறித்த கால வெல்லைவரைக்குமே துக்கத்தை அனுபவிப்பார்கள் என்பதற்கும், அதன்பின்னர் அங்காகத்தினின்றும் மீளுவார் கள் என்பதற்கும், சந்தேகமில்லை. ஒருவன் தான்செய்த குற்றத்தினிமித்தம் அாசனலே விதிக்கப்பட்ட கண்டத் தைக் குறித்தகாலம் வாைக்கும் சிறைச்சாலையிலிருந்து அநுபவித்துத் தீர்ந்தால் அச்சிறைச்சாலையினின்றும் நீக்கப் படவேண்டுவதன்றி, பின்னும் அத்தண்டத்தை அநுபவிக்க வேண்டுவதில்லை; அதுபோல ஆன்மாக்கள் காம்செய்த பாவத்தினிமித்தம் கடவுளால் விதிக்கப்பட்ட கண்டத்தைக் குறித்தகாலம்வரைக்கும் நரகத்திலேகிடந்து அதுபவித்துக் தீர்ந்தால், அந்நரகத்தினின்று நீக்கப்படவேண்டுவதன்றி, பின்னுமக்கண்டத்தை அனுபவிக்கவேண்டுவதில்லை.
நாம் செய்த பாவம் அளவற்ற மகிமையையுடைய கடவுளுக்கு விரோதமாகையால், நாம் கித்தியமும் நாகத் திலே கிடத்தல்வேண்டும் என்பாயாகில், நாம் செய்யும் புண்ணியபாவங்களினலே வரும் பலங்களாகிய சுகதுக்கங்கள் தமக்கேயன்றிக் கடவுளுக்கல்ல; ஆகையால், நாம் பாவஞ் செய்தல் நமக்கு விரோதமேயன்றிக் கடவுளுக்கு விரோத மன்று; அன்றியும், புண்ணியபாவம் இரண்டையுஞ் செய்த ஒருவன் தான்செய்த பாவத்தினிமித்தம் கித்தியநாகயாதனைப் படில், தான்செய்த புண்ணியப்பலத்தை இழந்துபோவானே! அளவற்ற மகிமையையுடைய கடவுளது விதிப்படி புண்ணி யத்தையும் செய்தான் ஆகையால், அவன் அந்தப் புண்ணிய பலத்தை இழப்பதற்கு நியாயமில்லையே! அப்படி இழக்கப்

Page 56
84 சைவதூஷணபரிகாரம்
பண்ணுதல் கடவுளுக்கு ரீதியன்றே அரசனனவன் இன்ன நன்மை செய்தவனுக்கு இத்தனைபொன் கொடுக்கப்படு மென்றும், இன்னதிமை செய்தவனுக்கு இத்துணைக்காலம் இன்னதண்டம் செய்யப்படும் என்றும் விதித்திருக்கும் பொழுது, ஒருவன்தானே அவ்விரண்டையும் செய்தானுகில், அவன் அவ்வரசனலே குறிக்கப்பட்ட பொன்னையும் கண்டத் தையும் ஒருங்கே அடைவான்; அங்கினமன்றி அவ்வரசன் ஒன்றைவிட்டொன்றைச் செய்தால், அவனை நீதியீன னென்றும் பொய்யனென்றும் இரக்கமில்லாதவனென்றும் உலகத்தார் யாவரும் இகழ்வார்களன்றே? இப்படியே ஒரு மனிதன்ருனும் தான்சொல்லிய சொற்படியே நடத்தல் வேண்டுமாகில், நீதியும் வாய்மையும் இாக்கமும் உள்ள கடவு ளானவர் தமது விதிப்படி ஒருவன்செய்த புண்ணியங்களை மறந்து அதற்குப்பயன் கொடாதொழிந்து, அவன்செய்த பாவத்தைமாத்திரம் உட்கொண்டு அவனை நிக்கியமும் நரகத்திலே வீழ்த்திக் கண்டிப்பாரா? தண்டிப்பாராகில், அவரிடத்திலே நீதி எங்கே? வாய்மை எங்கே? இரக்க மெங்கே?
கடவுளுடைய விதிப்படியே நாம் எப்பொழுதும் நன்மை செய்யும்படி அவருக்குக் கடன்பட்டோம்; ஆதலால், காம் ஒரு அற்பபாவத்தைச் செய்யினும் கித்தியநாகத்தை அடைதல்வேண்டும் என்பாயாகில், நாம் நன்மை செய்தலி ஞல் வரும்பயன் நமக்கேயாம்: அதினலே கடவுளுக்கு ஒரு பயனுமில்லை; உண்டெனில், அவரை கித்தியானந்தரென்றல் கூடாது; ஆகையால், எப்பெர்ழுதும் நன்மைசெய்யும்படி கடவுளுக்குக் கடன்பட்டோமென்று நீ கூறுவது சற்றும் பொருந்தாது, இதுகாறும் கூறியவாற்றல், ஆன்மாக்கள் தங்கள்தங்கள் பாவத்துக்குத் தக்ககாலம்வரைக்கும் நாகத்

விவேசனம் 85
திலே யாதனை அனுபவித்து, மீளவும் பூமியிலே பிறப்பார்க ளென்பது நிச்சயம். " - . . ;
இறந்த ஆன்மாக்கள் மீளவும் பிறப்பார்கள் என்பதற்கு யாதொரு பிரமாணமும் இல்லையே என்பாயாகில், ஆன்மாக் கள் இறந்ததன் பின்பு சுவர்க்க நாகங்களிலே புண்ணிய பாவ பலங்களாகிய சுக துக்கங்களை அனுபவித்து, பின்னும் சுவர்க்க நாக சேஷத்தினலே பூமியின்கண்ணே பலயோனி பேதங் களிலே பிறந்து, அந்தச் சேடபலமாகிய சுகதுக்கங்களையும் அனுபவிப்பார்களென்று சைவாகமங்கள் சாற்றுகின்றன. ஆன்மாக்களெல்லாம் முன்னேயிறந்து புண்ணியபாவங்க ளாகிய கர்மங்களைச் செய்யாதிருந்தால், சிலர் குருடர் செவிடர் ஊமைகள் முடவர்களாயும், சிலர் அக்குற்றங்க ளொன்றுமின்றி அழகுடையவர்களாயும், சிலர் கித்திய வியாதியாளர்களாயும், சிலர் கித்தியாரோக்கியமுடையவ ராயும், சிலர் வறியவர்களாயும், சிலர் செல்வர்களாயும், சிலர் அவிவேகிகளாயும், சிலர் விவேகிகளாயும், சிலர் துர்க்குண முடையவர்களாயும், சிலர் சற்குணமுடையவர்களாயும், சிலர் அற்பாயுசுடையவர்களாயும், சிலர் தீாக்காயுசுடையவர்க ளாயும் பிறத்தற்குக் காரணம் என்ன? பிறக்கும்பொழுதே இப்படிப்பட்ட வேற்றுமைகளுடன் பிறக்கின்றர்களே. பூர்வசென்மமும் அதிற்செய்யப்பட்ட கர்மங்களுமில்லை யாகில், சமஸ்தான்மாக்களும் சமமாகப்பிறத்தல் வேண்டுமே அங்ஙனமின்மையால், நாம் இம்மையிலே அநுபவிக்கும் சுக துக்கங்கள் பூர்வசென்மங்களிலே செய்த புண்ணியபாவங்களி குலே வந்தன என்பதற்குச் சந்தேகமில்லை.
இவ்வேற்றுமைகளெல்லாம் நாம் முன் செய்த கர்மங் களினலல்ல கடவுளுடைய சித்தத்தின்படி ஆயின என்பா யாகில்; கடவுளானவர் எங்களுக்குத் தம்முடைய சித்தத்தின்

Page 57
86 சைவதூஷணபரிகாரம்
படியேயன்றி, எங்கள் கர்மங்களின்படி சுகதுக்கங்களை அளிப்பவர் அல்லரென்முயிற்று. ” அங்கினமாயில், நாம் புண்ணியம் செய்தாலும் சரி, பாவம் செய்தாலும் சரி, அதினுல் நமக்கு இன்பமுமில்லை, இகினல் நமக்குத் துன்பமு மில்லை என்று முடியும். அன்றியும், யாதொரு காரணமு மின்றிக் தமது சித்தத்தின்படியே பிறக்கும்பொழுதே சிலரை அப்படியும் சிலரை இப்படியும் படைத்தாரெனில், சருவசீவதாயாபார் என்னும் பெயர் இழந்து பக்ஷபாத முள்ளவராவர். ஆதலால், அது பொருந்தாது.
குயவனல் வனையப்பட்ட பாண்டங்களுட்சில, எங்களை ஏன் இப்படி வனங்காய்? என்று அவனுடன் வழக்காடுவது திேயன்றே; அதுபோல, கடவுளாலே சிருட்டிக்கப்பட்ட நாங்கள், எங்களை ஏன் இப்படிப்படைத்தீர்? என்று அவருடன் வழக்காடுவது நீதியன்று என்பாயாகில்; அவை கள் சடப்பொருளாகையில், அந்தத் திஷ்டாந்தம் பொருங் தாது; அவைகளுள் எங்களைப்போலச் சித்துப்பொருளாகில், ஒருவன் தன் பிள்ளைகளைச் சமமாகக் காப்பாற்றதபொழுது, பிள்ளையானது தன் பிதாவை நோக்கி, என் பிதாவே நீர் என் சகோதரனுக்கு இந்தப்போக்கியப் பொருள்களெல்லா வற்றையும் கொடுத்தீர்; எனக்கு ஒன்றுந் தந்தீரில்லையே! உமக்கு நான்செய்த அபகாரம் யாது? அவன் செய்த உபகாரம் யாது? என்று வழக்காடுவதுபோல, வழக்காடுமே.
குயவன் வன்ையும்பொழுது, சிலபாண்டங்கள் கோண லாய் வனையப்படவில்லையா? சிலபாண்டங்கள் வெடித்துப் போகவில்லையா? என்பாயாகில்; குயவன் பாண்டங்களே வனையும்பொழுது, எல்லாப் பாண்டங்களும் யாதொரு குற்றமுமின்றிச் சிறந்தனவாகவே வனையப்படல் வேண்டு மென்று விரும்புகின்றன். விரும்பினும், அவன் சிற்றறிவு

விவேசனம் 8
சிறுதொழிலுடையணுகையால், அவனுடைய விருப்பத்துக்கு மாறுகச் சில பாண்டங்களவ் வாழுகின்றன. கட&ள் எல்லா ாையும் சமமாகவே படைத்தல் வேண்டுமென்று விரும்பி, படைக்கும்பொழுது, அவருடைய விருப்பத்துக்கு மாமுகப் பலர் குருடு முதலிய குற்றமுடையவர்களாய்ப் பிறந்தா ரெனில், அவரை முற்றறிவு முற்றுத்தொழில் உடைய செனல் கூடாது. ஆதலால், பலரைக் குற்றமுடையராகப் படைத்தல் வேண்டுமென்று கினைந்து படைத்திரார் என்பது சிறிதும் பொருந்தாது.
பெருமை சிறுமை இல்லையாகில் உலகம் நடவாதாதலால், அவ்வாறு படைத்தார் என்பாயாகில்; அவர் சர்வசாமர்த்திய முடையவராகையால், பெருமை சிறுமை இல்லாதிருப்பினும், உலகத்தை நடத்துவாரே; ஆகையால் அதுவும் பொருந்தாது. இவ்வேற்றுமைகளெல்லாம் பிதாமாகா செய்த பாவங் களிஞலே பிள்ளைகளுக்கு உண்டாகின்றன. பிரமியம் வெட்டை கிரந்தி ஈளை பாண்டுமுதலிய வியாதிகளிலே அழுந்தும் பிதாமாகாக்களிடத்திலே பிறக்கும் பிள்ளைகளும் அவ்வவ் வியாதிகளை உடையவைகளாய்ப் பிறக்கின்றன ன்ன்பாயாகில், மேற்கூறிய வியாதி உள்ளவர்களுக்கு அவ் வியாதியில்லாத பிள்ளைகளும் வியாதியில்லாதவர்களுக்கு வியாதியுள்ள பிள்ளைகளும் பிறக்கக் காண்கின்ருேமே ஆதலால், ஒரோவழி வியர்தியுள்ள பிகாமாகாக்களிடத்திலே வியாதியுள்ள பிள்ளைகள் பிறப்பினும், அப்பிள்ளைகள் பூர்வ சென்மத்திலே செய்த வினையினலேயே அவைகளுக்கு அல் வியாதிகள் வந்தனவென்று கொள்ளவேண்டும்; இன்னும், பிகாமாகாக்கள் செய்த கர்மத்தினலே பிள்ளைகளைத் தண்டித்தல் நீதியன்று. அரசர்கள், ஒருவனை ஒருவன் கொலைபண்ணிஞல் அவனைக் கொல்வதேயன்றிஅவன் பிள்ளை

Page 58
88 சைவதுரஷணபரிகாரம்
யைக் கொல்லக்கண்டுமிரோம்; கேட்டுமிரோம். இப்படியே சிற்றறிவுைேடயவர்களும் நீதியில் வழுவக்கூடியவர்களும் ஆகிய மனிதர்தாமும் ஆராய்ந்து அவரவர்செய்த குற்றத் அக்கு அவரவரையே தண்டிப்பார்களெனில், முற்றறி வுடையவரும் நீதியில் வழுவாதவருமாகிய கடவுள் ஆரா யாது ஒருவன்செய்த குற்றத்துக்கு வேருெருவனைக் தண்டிப்பாரா! தண்டியாரே. உப்ா. 24. 16. “பிள்ளைகளி னிமித்தம் பிதாக்களும், பிதாக்களினிமித்தம் பிள்ளைகளும் கொலைசெய்யப்படவேண்டாம். அவனவன் செய்த பாவத்தி னிமித்தம் அவனவனே கொலைசெய்யப்படவேண்டும்.” எசே. 18, 2. “இஸ்ரவேல் தேசத்தைக்குறித்து பிகாக்கள் திராட்சக்காய்களைக்கின்றர்கள், பிள்ளைகளின் பற்கள் கூசு கின்றன என்னும் இந்தப் பழமொழியைச் சொல்லுகிற தென்ன? இவ்வசனங்களினலே ஒருவன் செய்தகுற்றம் மேற்றுெருவனைச் சாராதென்பதே உன் சமயநூற்றுணி பென்று தோன்றுகின்றது.
நாங்கள் முன்னும்பிறந்து கர்மஞ்செய்தோமெனில், நாம் முன்னே இன்னபிறப்பாய்ப் பிறந்தோமென்றும், இன்ன இன்ன கர்மங்கள் செய்தோமென்றும், நமக்கு விளங்கா திருக்கவேண்டுவது என்ன? என்பாயாகில்; அறிவுடனே இருப்பவனுெருவன் தன் கையிலிருக்கும் ஒருபொருளைத் தன்வீட்டிலே ஓரிடத்தில் வைத்துவிட்டு, உடனே எங்கே வைத்தேனுே தெரியவில்லையே! என்று தடுமாறுகின்றன். இப்படியாமாகில், கருப்பாசயப்பை உறுத்தலினலும், அதிற் சலம் பூரித்தலினுலும், உதாாக்கினி சுடுதலினுலும், பிாகுத வாயு முரித்துத் தள்ளுதலினுலும், மலையிருத்திக்கொண்டது போலவும், கடலின்கண்வீழ்த்தி அமிழ்த்தல்போலவும், இருப்புக்கடத்திலடைத்து நெருப்பாற் சுடுதல்போலவும்,

விவேசனம் 89
மலைமேல் நின்முனைத் தலைகீழாகத் தள்ளுதல்போலவும் வரும் பெருங்கொடுந் துன்பங்களினலே பலங்கெட்டு மிகுந்த மயக்கத்தைப் பொருந்தி, ஆலையிலிட்ட கரும்புபோல மாதா வின் யோகித்துவாரத்தினலே நெருக்கப்பட்டுப் பிறந்த எங்க ளுக்கு, பூர்வசென்மம் இதுவென்றும், அ திலே செய்யப்பட்ட கர்மங்களிவையென்றும், எப்படித் தெரியும்? தெரியாமை யால், பூர்வசென்மம் இல்லையென்று சொல்லுதல் கூடாது. கடவுளானவர் ஆன்மாக்கள் செய்த புண்ணிய பாவங்களைத் திருவுளத்தடைத்து அவைகளை அனுபவித்துத் தொலைப் பித்து முத்தியடைவிக்கும் பொருட்டு அவ்வக் கர்மங்களுக் கேற்ற சுகதுக்கங்களை ஊட்டுவார் என்று சைவாகமங்கள் சாற்றுகின்றன. ஆதலால், நாம் இம்மையிலனுபவிக்கும் சுக ஆக்கங்களிரண்டையும் நாம் முன்செய்த புண்ணிய பாவங்களி ஞலே பெருங்கருணுகிதியாகிய கடவுள் நமக்கு ஊட்டுகின்மு ரென்பது சக்தியம்.
அப்படியாமாகில், அரசனனவன் குற்றஞ்செய்தவ ணுெருவனைக் கண்டிக்கும்பொழுது, நீ இன்னகுற்றம் செய்த மையால் இன்னதண்டம் பெறுவாய் என்று அவனுக்கு அக் குற்றத்தை உணர்த்தியன்றே அவனைக் கண்டிப்பான். அது போல, நாம் பூர்வசென்மத்திலே பாவம் செய்தோமாகில், கடவுள், நீங்கள் இன்னபாவஞ் செய்தமையால் இன்ன தண்டம் பெறுவீர்களென்று நமக்கு உணர்த்தியன்ருே கம்மைக் கண்டிப்பார். அங்ங்ணம் உணர்த்தாது கண்டித்தல் நீதியன்றே யென்பாயாகில்; அக்கடவுள் இன்ன இன்ன பாவஞ் செய்தவர்கள்.இன்ன இன்ன துன்பங்களை அடைவார் களென்று சைவாகமங்களால் நமக்கு உணர்த்துகின்ருரே. இதுகாறும் கூறியவாற்றல், நாம்செய்த கர்மங்களிஞலேயே மேன்மேலும் பிறந்திறந்து சுகதுக்கங்களை அனுபவிக்கின் முேம் என்பது நாட்டப்பட்டது.

Page 59
90 சைவதூஷணபரிகாரம்
ஆன்மாக்கள் தாம் தாம் செய்த புண்ணிய பாவ கர்மங்க எளினலேயே பிறந்திறந்து சுகதுக்கங்களை அனுபவிக்கின்றர்க ளெனில், அவர்கள் ஆதியிலே கடவுளால் படைக்கப்பட்டுச் சுகதுக்கங்களை அனுபவித்தற்கு, முன்னே என்ன கர்மஞ் செய்திருந்தார்கள்? என்பாயாகில்: பசுக்களும், அப்பசுக்களைப் பந்தித்தபாசமும், அப்பாசத்தை ஒழித்து அப்பசுக்களுக்குப் பேரின்பத்தைக் கொடுக்கும்பொருட்டுப் பதியினலே செய்யப் படும் பஞ்சகிர்த்தியமும் ஆதியல்ல, அணுகியேயாம். பதியைப் போலப் பசுக்களையும் அநாதியெனில், பதியை ஒப்பில்லாதவ ரென்றல் கூடாதே என்பாயாகில், மீ ஆன்மாவுக்கு உற்பத்தி யுண்டு நாசம் இல்லையெனக் கூறுகின்றயே: அவ்வழியும், பதியைப்போலப் பசுவை நாசமில்லாததென்கையால், பதியை ஒப்பில்லாதவரென்றல் பொருந்தாதென்று பேசல் வேண் டுமே பதியும் பசுவும் அனுதிசித்தாயினும், பதி அனுதி மலமுத்தசித்தும், பசு அனுதிமலபெக்கசித்தும் பதி பசுவுக் குப் பரமுத்திவியத்திக்குறி அனுக்கிரகம்பண்ணும் சித்தும், பசு அவ்வனுக்கிரகத்தைப் பதியினிடத்தினின்றும் பெறும் சித்தும், பதி சிருட்டி சங்கார திதி திரோபாவ பத் முத்தி அனுக்கிரகங்களைப் பண்ணுஞ் சித்தும், பசு அந்தப் பஞ்ச கிருத்திய பரதந்திரத்தில் அகப்பட்டுக் கட்டுண்ணுஞ்சித்தும், பதி ஒருவராலறிவிக்கப்படாது தானே அறியுஞ் சித்தும் பக சிற்றறிவு பேரறிவுகளினல் உணர்த்துவிக்க யோக்கியமாகுஞ் சித்துமாய் இருத்தலால், பதியை ஒப்பில்லாதவர் என்றல் கூடாதென்பது கூடாது.
பஞ்சகிருத்தியங்களை அ5ாதி என்றல் எவ்வாறு என்பா யாகில், பஞ்சகிருத்தியஞ் செய்யும்பதியும், அப்பஞ்சகிர்த்தி யங்களில் அகப்படும் பசுவும், அநாதியாமாத்லாலும், அணுகி யாகிய பதி சிலகாலம் வாளாவிருந்து பின்னர்ப் பஞ்சகிர்த்தி

விவேசனம் w 9.
யஞ் செய்யத் தொடங்கினரெனில், அவரை நிருவிகாரியென் றல் கூடாமையானும், ஒருவனிடத்தினின்றும் உயிர்ப் புண்டாயொடுங்குதல் சிலகாலஞ்சென்றபின்னர்த்தோன்றுக பின்றி ஓயாது எக்காலத்தும் வருகல்போல, பதியினின்றும் உண்டாகும் பஞ்சகிருக்தியங்களும் சிலகாலத்துக்குப் பினனர்த்தோன்றுதலின்றி ஒயாது எக்காலத்தும் வருமாத லாலும், பதி பஞ்சகிருத்தியம் அநாதியென்பதே சித்தம்.
இப்படிப்பிறந்திறந்துழலும் ஆன்மாக்கள் எப்பொழுது முத்தியடையும் என்பாயாகில், பலசென்மங்களிலே கிஷ் காமியமாகச்செய்த புண்ணியங்களினலே, மந்ததரம் மந்தம் தீவிரம் தீவிரகாம் என்னும் நான்கு சத்திகிபாகங்களும் கிரமமாகவரும். அப்பொழுது கருணுகிதியாகிய சிவன் ஆசாரியமூர்த்தியை அதிட்டித்து, சிவதீசைஷசெய்து, முறையே சரியை கிரியை யோகம் ஞானங்களிலே நிறுத்துவர். இந்நான்கு பாதங்களின் வழிகின்றவர்கள்முறையே சாலோக சாமீப சாரூப சாயுச்சியங்களைப் பெறுவார்கள். இவைக ளெல்லாம் சைவாகமங்களைக் குருமுகமாக வாசிக்கில், தெளி வாக விளங்கும். ܢ
சைவாகமங்களை எனக்கு உணர்த்தல்வேண்டும் என்பா யாகில்; அவைகளைச் சிவகிந்தை பண்ணும் புறச்சமயிகளுக் குச் சொல்ல எங்களுக்குச் சிவனுடைய அனுமதியில்லை. ஆதலால், உனக்குச் சொல்வதுகூடாது, மத். 7. 6. “நீங்கள் காய்களுக்குப் பரிசுத்தமானதை இடாதிருங்கள், பன்றி களுக்குமுன் உங்கள் முத்துக்களைப் போடாதிருங்கள்; இவை கள் அந்த முத்துக்களைக் கால்களால் உழக்கி, திரும்பி உங்களைப்பீறும்’ என்னும் வசனத்தை கீ மறந்தனை போலும். அதுகிற்க, சைவர்களுள்ளும் எல்லாரும் சைவாக மங்களை வாசித்தற்கு அதிகாரிகளல்லர். சைவாகமங்களில்

Page 60
92 சைவதுர2ைணபரிகாரம்
கிரியாகாண்டத்திற்குச் சமயதீசைடியோடு விசேஷதீகையும் பெற்றவர்கள் அதிகாரிகளாவர்கள். மற்றைஞானகாண்டத் திற்கு அவ்விரண்டோடு கிர்வாணதீகூைடியும் பெற்றவர்களே அதிகாரிகளாவர்கள். அதிகார முள்ளவர்களும் குருவின்றித் தாமே வாசிக்கப்புகுதல், ஆயுதபfக்ஷை இல்லாதவர்கள் குருவின்றி ஆயுதங்களைப் பரீக்ஷிக்கப்புகுதல் கம்ழைத்தாமே சேதித்தற்கு ஏதுவாமாறுபோல, தம்மைத்தாமே கெடுதற்கு ஏதுவாகும். ஆதலால், அவர்கள் சைவாசாரியரை அடைந்து வழிபடடு, அவ்வாகமங்களைப் பூசித்து வாசித்தல் வேண்டும். அவர்களல்லாத சமயிகள் தாம் செய்யவேண்டுவனவற்றையும் விலக்கவேண்டுவனவற்றையும் அறியாது கெட்டுப்போக லாமா? என்பாயாகில்; அவர்கள் சைவாசாரியர்களை அடைந்து வழிபட்டு, தங்கள் தங்கள் பக்குவத்துக்கேற்ப அவர்கள் போதிப்பனவற்றை அறிந்து,அவ்வாறேநடக்கில் ஈடேறுவார் கள். யூகர்களெல்லாரும், கங்கள் சமயசாத்திரத்தை ஆசாரியர் ஆலயத்திலேவைத்துப் பூசித்து இன்னது இன்னது செய்யல் வேண்டுமென்று தங்களுக்குப்போதிக்க, அறிந்து அவ்வாறே நடந்தார்களென்று அந்தச் சாத்திரத்திலே சொல்லப்படு கின்றது. அங்ஙனமன்றி, அவர்களெல்லாரும் அதை எழுதி வைத்து வாசித்தார்களென்று தோன்றவில்லை. இன்னும் யேசுவுடைய சீடர்களும் சனங்கள் இன்னது இன்னது செய்யல்வேண்டும் என்னு வாய்மொழியாக உபதேசித்தார் கள். தூரதேசத்தாருக்கு கிருபங்களை எழுதியனுப்பினர்கள். அங்கினமன்றி, தங்கள் சமயசாத்திரத்தைச் சகலசனங்களுக் கும் கொடுத்தனுப்பினர்களென்றும் அவர்கள் வாசித்தார்க ளென்றுங் காணப்படவில்லை.
பாதிரியே! நீ இவைகளைப் பக்ஷபாதம் இன்றி ஆராய்க் தறிந்து, எங்கள் சைவத்தைத் தூஷியாமல் அடங்கியிருக்கக் 56t. mത്തi

சூசனம் சனங்களே !
ஆன்மாக்களுக்கு ஆணவமாகிய மூலமலகாரணத்தி ஞலே கன்மானுசாரமாக உண்டாகும் பிறப்பு, அண்டசம், சுவேதசம் உற்பிச்சம் சராயுசம் என நால்வகைப்படும். அவை களின் விரி எண்பத்துநான்கு நூருயிரம் யோனிபேதமாம். இவ்வாறுள்ள யோனிகளுள், இகரயோனிகளெல்லாவற்றை யும் மோகத்தினுலும் பிராயச்சித்தாதிகளினுலும் நீக்கி, மனுஷிய ஜன்மத்திலே வருதல் மிகுந்த அருமையாம். அவ் வருமை, ஆராயுங்காலத்துச் சமுத்திரத்தைக் கையிஞலே மீந்திக்கரையேறுதல்போலாம். இப்படிப்பட்ட மனுஷிய ஜன்மத்தை எடுப்பினும், சாத்திரமணமும் விசாக மலைகளி அலும் வனங்களிலும் குறவர் மறவர் முதலியோர்களாய் பிற வாது சாஸ்திரங்கள் வழங்குங் தேசங்களிலே பிறப்பது மிகுந்தபுண்ணியம். அதினும், சிவப்பிரணிதமாகிய வேதாக மங்கள் வழங்காத மிலேச்ச தேசத்தைவிட்டு, அவை வழங் கும் ஆரியதேசத்திலே பிறப்பது மிகுந்த புண்ணியம். அதி லும், வேதாகமவாகிய பரசமயிகள் வயிற்றிலே பிறவாமல், சைவசமயிகள் வயிற்றிலே, பிறப்பது மிகுந்த புண்ணியம். இப்படி மிக அருமையாகப்பெற்ற மனுஷிய ஜன்மத்தினல் வரும் பயன் சற்குருலக்ஷணம் குறைவற அமைந்த சைவா சசரியரை அடைந்து, சிவதீசைடிபெற்று, சைவாகமவிதிவழி யொழுகி, சிவனை வழிபட்டு, பரமபுருஷார்த்தமாகியங்த்தியா
னந்த முத்தியை அடைதலேயாம்.
இந்த அவசியகர்த்தவ்விய சிவபுண்ணியத்துக்கு இன்றி யமையாக் கருவியாகிய இம்மானுடஜன்மத்தைப் பெற்றும், அப்பெரும்பயனை அடைதற்குச் சிறிதும் முயலாதுவிட்டு,

Page 61
*94 சைவதூஷணபரிகாரம்
சிவசாஸ்திரப்பொருள்களைக் குருவருளினுலே யதார்த்தமாக அறியாது விபரீதமாக அறிதலாகிய பிராந்தியினுலும், அச்சிவ சாஸ்திரங்களைச் சிறிதும் அறியாமையாகியமோகத்தினுலும், பரசமயாபிமானிகளைப் பிரீதிப்படுத்தி, வயிறுவளர்க்க விரும்புதலாகிய லோபத்தினுலும், முன்னே சுவீகரிக்கப் பட்ட குற்சித சமயத்தின் மேற்கொண்ட துராக்கிரகமாகிய மத துரபிமானத்தினுலும், இளைமையிலே புறச்சமயிகளோடு பரிசயஞ்செய்தமையால் வந்த துர்வாசனையின் அனுவிருத்தி யினுலும், உங்கள் வாணுளை விணுளாகப்போக்கி, நரகத்தில் விழுந்து அதிதீவிரவேதனைப்பட்டு உழல்வதற்கு உபாயம் தேடுகின்றீர்களே! O
இவ்வாறே நாங்கள்கூறிய பரம புருஷார்த்தமாகிய பேரின்பத்தைப் பெறுதற்கு முயலாது, வியர்த்தமாகிய இம்மைச்சிற்றின்பத்தை நுகர்தற்குக் கருவியாகிய செல்வமே பொருளென்று மயங்கி உலைகின்றீர்களே! நீங்கள் பெறக் கருதிய சிற்றின்பத்தினிழிவு இப்படிப்பட்டதென்பதை,
*அடுகரி தொடரவீழ வைந்தலை Fாகங்காண w
விடிணெற் றறுகின்வேரைப் பற்றிநான் றிடவிவ்வேரைக் கடுகவோ ரெலியும்வந்து கறித்திட வதினின்றேனுக் கிடைதுணி தேனக்கின்பம் போலுமிப் பிறவியின்பம்.” என்று முன்னேர் கூறிய செய்யுளைக்கொண்டு, சிந்தித்துப் பாருங்கள் இவ்வகை இழிவுடைத்தாகிய சிற்றின்பத்தை அனுபவிக்கும் வழியும், சிவனை வழிபட்டு முத்தியடைதற்குக் கருவியாகிய இத்தேகம் இன்னும் வழிபடுவதற்கு ஆரோக்கிய மாய் நிற்கும்பொருட்டு எனக்கொண்டு அனுபவித்தல்வேண் டும். அச்சிற்றின்பத்துக்கு நிமித்தமாகிய செல்வத்தைத் தேடும்வழியும், சமயத்துரோகம் கொலை களவு பொய்ச்சான் றுரைத்தல் விசுவாசகாதம்முதலிய பாதகங்களின்றித் தேடல்

சூசனம் 95
வேண்டும். நீங்கள் இங்ஙனம் செய்யாது, சற்சமயமாகிய சைவக்கைவிட்டு, சிவதூஷணம் சிவசாத்திர தூஷணம் முத லிய அதிபாதகங்களே செய்யும் பாதிரிகளால் மருட்டப்பட்டு, அவர்களுடைய துர்ச்சமயமாகிய கிறிஸ்துசமயப் படுகுழியில் வீழ்ந்து, அதன்வழியாகப் பொருளும் புகழும்தேடமுயன்று, அவர்களோடொத்த அதிபாதகிகளாகின்றீர்களே! இம்மை யில் எளிதிற் பெறப்படுவனவாகிய மிகச்சிறிய பொருளையும் போலிப் புகழையும் குறித்தும், சைவத்தின்மேலே பாதிரிக ளேற்றும் தூஷணத்தினுலே மதிமயங்கியும், எம்மையினும் பெறுதற்கரிய பெருஞ்சிறப்பினதாகிய ஆன்மலாபத்தை இழந்துவிடாது உய்யும்பொருட்டு, சைவதூஷணபரிகாரம் என்னும் இந்நூலைப் பக்ஷபாதமின்றிச் சித்தசமாதானத் அடனே பலமுறைவாசித்து ஆராய்ந்துபார்த்து, அப்பாதிரி கள் ஏற்றிய தூஷணங்களெல்லாம் பொய்யென்பதைக் தெளிந்து, வேளாண்மை வாணிகம் இராசசேவை முதலிய தொழில்களாலும், அவை கூடாக்கால், யாசனத்தினுலும் சீவித்துக்கொண்டு, அகிருதம் பூர்வாபாவிரோதம் முதலிய தோஷங்கள் ஒன்றுமின்றி, யதார்த்தமாய் விளங்கும் சைவத் தின்வழிகின்று, கித்தியானந்த முத்தியைப்பெற முயலக்கட வீர்கள். அதனை இன்னுமொருபிறப்பிலே அடைகுவ மெனின், ஐயையோ! இப்பிறவி கப்பினு லெப்பிறவி வாய்க் குமோ யாதுவருமோ! தெரியாதே இப்பிறப்பிற்ருனே இன்னுஞ் சிலநாட்சென்றபின் அடைகுவமெனின், இப்பிறவி நீங்கும் எல்லை இதுவென்று தெரியாதே! இங்ஙனமே,
*உலகத் தீரே யுலகத் தீரே
நாக்கடிப் பாக வாய்ப்பறை யறைந்து சாற்றக் கேண்டபின் சாற்றக் கேண்மின் மனிதர்க்கு வயது நூறல்ல தில்லை

Page 62
96
சைவதூஷணபரிகாரம்
ஐம்ப திரவிலகலுங் துயிலிஞல் ஒட்டிய விளமையா லோரைந்து நீங்கும் ஆக்கை யிளைமையி லைம்மூன்று நீங்கும் எழுபது போக நீக்கிருப்பன முப்பதே அவற்றுள் இன்புறு நாளுஞ் சிலவே யதாஅன்று துன்புறு நாளுஞ் சிலவேயாதலால் பெருக்கா ருெத்தது செல்வம் பெருக்காற் றிடிகரையொத்த திளமை யிடிகரை வாழ்மா மொத்தது வாழ்நாளாதலால் ஒன்றே செய்யவும் வேண்டு மொன்றும் நன்றே செய்யவும் வேண்டு நன்றும் இன்றே செய்யவு வேண்டு மின்றும் இன்னே செய்யவும் வேண்டு மின்னும் நாளை நாளை யென்பீ ராகில் மவனுடை முறை நாளாவது மறியீர் நம்முடை முறை நாளாவது மறியீர் எப்போ தாயினுங் கூற்றுவன் வருவான் அப்போ தந்தக் கூற்றுவன் றன்னைப் போற்றவும் போகான் பொருளொடும் போகான் சாற்றவும் போகான் றமரொடும் போகான் நல்லா ரென்ன னல்குர வறியான் தீயா ரென்ஞன் செல்வரென் றுன்னுன் தரியா னெருகணங் தறுக ணளன்.?
எனப்பெரியோர் கூறினர். ஆதலால், இச்சரீரமுள்ள பொழுதே, மேற்கூறியவாறே முத்தியடைய முயலக்
கடவீர்கள்.
/
சைவ்தூஷண பரிகாரம் முற்றுப்பெற்றது.


Page 63