கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இவர்கள் நம்மவர்கள் 2

Page 1
- கலாபூஷணம் பு
 

USETRSIKE
հԾՈՓ Ց1-12
ଅ5@it

Page 2

863
35 Alesiasyria Satgali
w
Gosstodd5-12
இவர்கள் நம்மவர்கள் பாகம் 02
- கலாபூஷணம் புன்னியாமீன் -
GaAsmru f'G: சிந்தனை வட்டம் த.பெ.இல: 01, பொல்கொல்லை, ரீலங்கா. e-mail: pmpuniyameen@yahoo.com 289 / 2008

Page 3
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி - 12
ஆசிரியர் :பி.எம். புன்னியாமீன்"
பதிப்பு :1ம் பதிப்பு - ஜூன்.15.2008 வெளியீடு சிந்தனை வட்டம்.
14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை, ரீலங்கா. அச்சுப்பதிப்பு:சிந்தனை வட்டம் அச்சீட்டுப் பிரிவு . . . . 14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை,
ரீலங்கா. கணனிப் பதிப்பு:எஸ்.எம். ரமீஸ்தீன்
Lusitasius6ň : viii+108= 116
விலை 200/- E 5.00
Ilangai Euththalarkal, Olodahlaviyalalarkal, Kalaingarkal Vipa raththirattu. Vol-12 Subject : Brief History of Fifteen Srilankan Writers, Journalists and Artists.
Author : PM. Puniyameen. Printers & Publishers: Cinthanai Vattam
CV Publishers (Pvt) Ltd, 14, Udatalawinna Madige, i Udatalawinna 20802, Sri Lanka. Edition: 1st Edition June. 15.2008 Language : Tamil Type Setting : S.M. Rameezdeen
ISBN: 978-955-1779-13-9 Pages : viii+108= 116
Price : 200/- E 5.00
G) P.M. Puniyameen, 2008 All Rights Reserved. No part of this Documentation may be reproduced or utilised, stored in a retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording or otherwise, without the prior written permission of the author.

ஆயிறு:
కలప 薯碟糖艇点艇郎酸聚桑黏
ஆசிரியர் பாரதி இராஜநாயகம் Yad/fair
அன்புடன் வழங்கிய
மதிப்புரை
A riderer is rit W.
காலத்தின் தேவையொன்றை நிறைவுசெய்யும் வகையில் கலாபூஷணம் புன்னியாமீன் ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலா ளர்கள், கலைஞர்களின் விபரங்களை உள்ளடக்கிய இந்நூலினை "இவர்கள் நம்மவர்கள் இரண்டாவது பாகம் எனும் தலைப்பில் மிகவும் சிறப்பான முறையில் வெளியிட்டுள்ளார். இலங்கை எழுத்தா ளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களை உள்ள டக்கிய நூல் வெளியீட்டுத் தொடரில் இது அவருடைய பன்னிரண் டாவது நூலாகும்.
இது யாருமே துணிந்து இறங்காத, கடினமான ஒரு முயற்சி தான். இந்த அடிப்படையில் இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவிய லாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டின் பன்னிரண்டு நூல்களை, அவர் வெளியிட்டுள்ளமை இந்த முயற்சியில் அவர் பெற்றுக் கொண்ட வெற்றியைத்தான் பறைசாற்றுகின்றது எனக் கொள்ளலாம். சோர்வடையாத அவரது உழைப்புக்கும், முயற்சிக்கும் கிடைத்த வெற்றி இது
புன்னியாமீனுடைய இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவிய லாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு பன்னிரண்டு தொகுதிகளி லும் முன்னுாறு எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்க

Page 4
ளின் விபரங்கள் பதிவாக்கப்பட்டுள்ளன. இந்த விபரங்களுள் 43 புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்களுடைய விபரங்கள் பதிவாக்கப்பட்டுள்ளமை விசேடமாகக் குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒரு விடயமாகும். மேற்படி நூல்வெளியீட்டுத் தொடரில் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்க ளின் விபரங்களை 4ஆவது தொகுதியில் 25 பேரினதும், 9ஆவது தொகுதியில் 15 பேரினதும், இத்தொகுதியில் 3 பேரினதும் விபரங்களை இணைத்துள்ளார்.
புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்களு டைய விபரங்கள் எதற்காகத் தொகுக்கப்பட வேண்டும் என்ற கேள்வி இந்தச் சந்தர்ப்பத்தில் சிலரிடமாவது எழலாம். புலம்பெயர்ந் தவர்கள், தாம்வாழும் நாடுகளில் கலை; கலாசாரம் மற்றும் மொழி என்பவற்றுடன் ஒன்றிப் போய்விடும் நிலையை நாம் பல் வேறு சந்தர்ப்பங்களில் பார்க்கின்றோம்.
அந்த நிலை தவிர்க்க முடியாததாகக்கூட இருக்கலாம். இந்தப்பின்னணியில் புலம்பெயர்ந்த எம்முடைய தமிழ்ச் சமூகத் துக்கு எம்முடைய பாரம்பரியங்களைக் கொண்டு செல்லும் பொறுப்பை இவர்களே ஏற்றுக் கொள்கின்றார்கள் எனக்கூற
புலம்பெயர்ந்த நிலையிலும் கலை, இலக்கியத் துறைகளில் மட்டுமன்றி ஊடகத்துறையிலும் இவர்கள் காட்டும் ஈடுபாடும் அதற்காக அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதும் பாராட் டப்பட வேண்டியது. புதிய சூழல், புதிய மாற்றங்கள் என்பவற்றுக்கு மத்தியிலும், பொருளாதார நிர்ப்பந்தங்களையும் எதிர்கொண்டு எம்முடைய அடையாளங்களைப் பாதுகாப்பதிலும், அவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்வதிலும் இவர்களு டைய பங்களிப்பு கணிக்கப்பட வேண்டியது.
உலகம் இன்று ஒரு கிராமமாக குறுகிக் கொண்டுவரும் நிலையில் எமது சமூகம் பரந்து கொண்டு செல்கின்றது. அமெ.
` V

ரிக்கள் முதல் அவுஸ்திரேலியா வரையில் ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்றிருக்கின்றார்கள். பல்வேறு துறைகளில் இவர்கள் தம்முடைய திறமைகளை வெளிப்படுத்தியிருக்கின் றார்கள். இவர்களில் பெரும்பாலானவர்களின் முயற்சிகள் பரந்து விரிந்து வாழும் எமது தமிழ்ச் சமூகம் அறியாத ஒன்றாகவே இருந்து வருகின்றது.
இவர்களைப் பற்றியும், எமது சமூகத்துக்காக இவர்கள் என்ன செய்துள்ளார்கள் என்பதைப் பற்றியும் ஒரு பதிலாக மட்டுமன்றி, பரந்து வாழும் தமிழ்ச் சமூகத்துக்கு இவர்களைப் பற்றிய தகவல்களைக் கொண்டு செல்வதற்கான ஒரு ஊடக மாகவுமே புன்னியாமீனுடைய இந்த நூல்கள் அமைந்துள்ள தெனக் கூறலாம். .
ஆரம்ப கால கட்டங்களில் புன்னியாமீன் முஸ்லிம் எழுத் தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களை மாத்திரம் தொகுத்து வெளியிட்டு வந்தார். பின்பு புலம் பெயர் தோர்களையும் இணைத்துக் கொண்டார். தற்போது இம்முயற்சி யைப் பொதுமைப்படுத்தி இவர்கள் நம்மவர்கள்’ எனும் தலைப் பில் ஞாயிறு தினக்குரலில் தொடர்ச்சியாக எழுதி வருகின் றார். 2007.11.11 முதல் 2008.06.15வரை “இவர்கள் நம்மவர்கள்’ தொடரில் 25 ஈழத்துத் தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவிய லாளர்கள், கலைஞர்களின் விபரங்களை எழுதியுள்ளார். இவைக ளுள் முதல் 10 பேரினது விபரங்கள் இவர்கள் நம்மவர்கள் பாகம் 01ல் பதிவாகிவிட்டது. மீதமான 15 பேரினது விபரங்களும் இத்தொகுதியில் பதிவாகின்றது.
இந்த நூலுக்குத் தேவையான தகவல்களைத் திரட்டிக் கொள்வதிலும், பின்னர் அவற்றை உறுதிப்படுத்துவதிலும் புன்னி யாமீன் அவர்கள் எதிர்கொண்டிருக்கக் கூடிய தடைகள் அனை வராலும் புரிந்து கொள்ளக் கூடியவைதான். பலத்த சிரமங்களின் மத்தியில் கடினமானதொரு முயற்சியை மேற்கொண்டு தமிழ்ச் சமூகத்துக்கு அவசியமான ஒரு வரலாற்றுப் பதிவை புன்னியா மீன் திறம்படச் செய்திருக்கின்றார்.
V

Page 5
இலங்கை எழுத்தாளர்கள், கலைஞர்கள் பற்றிய விபரங்களை சுருக்கமாக அதேசமயம் சுவையாக முக்கிய அம்சங்களைத் தவறவிடாமல் புன்னியாமீன் அவர்கள் வெளிக்கொண்டு வந்தது தினக்குரல் வாசகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றி ருக்கின்றார். இதனை ஒரு முக்கிய பதிவாக சேகரித்து வைத்தி ருப்பவர்கள் பலர்! −
புன்னியாமீனின் இந்தப்பணி தொடர வேண்டிய ஒன்று. பரந்து விரிந்து செல்லவேண்டியது. இந்த முயற்சிக்கு தமிழ்ச் சமூகம் உதவியாகவும், ஒத்தாசையாகவும் இருக்கும் என்பதுடன் நன்றியாகவும் இருக்கும். அவரது இந்தப் பணி மேலும் தொடர வாழ்த்துகிறோம்.
இது போன்ற நல்முயற்சிகளுக்கு “ஞாயிறு தினக்குரல்" என்றும் கைகொடுக்கும்.
- பாரதி இராஜநாயகம் - - ஆசிரியர் ‘ஞாயிறு தினக்குரல்"
68 எலி ஹவுஸ் ரோட் கொழும்பு-15 ரீலங்கா

பகுதிப்புரை
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரத்
திரட்டின் 12ஆவது தொகுதியினை இவர்கள் நம்மவர்கள் பாகம் இரண்டாக
சிந்தனைவட்டத்தின் 289ஆவது வெளியீடாக வெளியிடுவது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
இந்நூலில் இடம்பெற்றுள்ள 15 இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவிய லாளர்கள், கலைஞர்களின் விபரங்கள் உங்கள் அபிமான ஞாயிறு தினக்குரலில் பிரசுரமானவையாகும். இத்தொடரினைப் பிரசுரித்து வரும் ஞாயிறு தினக்குரல் ஆசிரியர் திருவாளர். பாரதி அவர்களுக்கும், தினக்குரல் ஆசியர் குழாம், நிர்வாகத் திற்கும், இத்தொடருக்கு தங்களது விபரங்களைத் தந்துவரும் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித் துக் கொள்கின்றேன். இத்தொகுதி வெளியிட்டுடன் 300 இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் தொகுக்கக் கிடைத்தமை யிட்டு இறைவனுக்கு நன்றி கூறும் அதேநேரத்தில் பல்வேறுபட்ட பிரச்சினைக ளுக்கு மத்தியில் இதனை மேற்கொண்டு வந்தாலும்கூட இதனால் ஏற்படக்கூடிய உளத்திருப்தியை அளவிட முடியாது. இறைவன் நாடினால் குறைந்தது 500 இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களை யாவது பதிவாக்க வேண்டும் என்பதே என் இலட்சியம்.
எனவே, "இவர்கள் நம்மவர்கள் தொகுதியில் எழுத்தாளர்கள், ஊடக வியலாளர்கள், கலைஞர்களாகிய தங்களது விபரங்களும் இடம்பெற வேண்டு மாயின் பின்வரும் வழிமுறைகளுக்கமைய என்னுடன் தொடர்பு கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
0. இவர்கள் நம்மவர்கள் தொடரில் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழ்மொழி மூல எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்கள் மாத்திரம் சேர்த்துக் கொள்ளப்படும். O2. அத்துடன் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவிய
லாளர்கள், கலைஞர்களின் விபரங்களும் சேர்த்துக் கொள்ளப்படும்: O3. இத்தொடரில் இடம்பெறும் ஆக்கங்கள் எத்தகைய தரப்படுத்தலுக்கும் உட்படுத்தப்படமாட்டாது. விபரங்கள் எமக்குக் கிடைக்கும் ஒழுங்கிலே எழுதப்படும்.
v

Page 6
4. சமகாலத்தில் வாழ்பவர்களினதும், அதேநேரத்தில் கிடைக்கும் தகவல் களை அடிப்படையாகக் கொண்டு மரணித்தவர்களினதும் விபரங்களும்
. இத்தொடரில் சேர்த்துக்கொள்ளப்படும்.
05. "இவர்கள் நம்மவர்கள் தொடரில் இடம்பெறும் இலங்கை எழுத்தாளர்
கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்கள் 100 - 120 பக்கங்களைக் கொண்ட புத்தகமொன்றினை ஆக்கக்கூடிய வகையில் இடம்பெற்றதும் அவை நூலுருப்படுத்தப்படும்.
06. புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர் களின் விபரங்களும் இவர்கள் நம்மவர்கள் தொடரிலே சேர்த்துக் கொள்ளப்படும்.
07: "இவர்கள் நம்மவர்கள் தொடரில் இடம்பெறும் சகல தரவுகளும்
ஆதாரபூர்வமாகவே எழுதப்படும் அதேநேரத்தில் எழுத்தாளர்கள், ஊடக வியலாளர்கள், கலைஞர்களினால் தரப்படும் தகவல்களுக்கேற்ப கட்டு ரையின் பருமன் அமைந்திருக்கும். மாறாக சிலருடைய கட்டுரைகள் அதிகமாக எழுதப்படுவதற்கு வேறு எந்தக் காரணங்களும் அமையாது. 08. இத்தொடரில் இடம்பெறும் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலை ஞர்களின் புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களின் புகைப்படப் பிரதிகள் போன்றனவும் சேர்த்துக் கொள்ளப்படும். 09. புத்தகமாக வெளிவந்தபின் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும்
அவை ஆவணப்படுத்தப்படும்.
இத்தொடரில் இலங்கை மற்றும் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் ஊடகவி யலாளர்கள், கலைஞர்களின் விபரங்கள் இடம்பெற விரும்பின் உரிய விபரத்திரட்டுப்
படிவங்களைப் பெற்றுக் கொள்ள என்னுடன் தொடர்பு கொள்ளவும்.
சிந்தனைவட்டத்தின் ஏனைய வெளியீடுகளுக்கு ஆதரவினைத் தரும் வாசக நெஞ்சங்களான நீங்கள் இந்நூலுக்கும் ஆதரவினைத் தருவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு. .
மிக்கநன்றி அன்புடன்
P.M. Puniyameen Cinthanai Vattam 14, Udatalawinna Madige, Udatalawinna 20802, SriLanka Tel:-009-812-493892/0094-812-493746 e-mail:pmpuniyameen@yahoo.com
wr
 
 

ஏறகெனவே பகுதிவானோர்: இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 1
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
: பாகம் 1
பதிவு 01 ஏ.யூ.எம்.ஏ. கரீம் பதிவு 02 எஸ்.எம்.ஏ. ஹஸன் பதிவு 03 அன்பு முகையதின் பதிவு 04 ஐ.ஏ. றஸாக் பதிவு 05 முபீதா உஸ்மான் பதிவு 06 எச். ஸலாஹதீன் பதிவு 07 எம்.எச்.எம். அஷ்ரப் பதிவு 08 எம்.எச்.எம். புஹாரி பதிவு 09 அப்துல் கஹம்ஹார் பதிவு 10 எஸ். முத்து மீரான் பதிவு 11 எச்.ஏ. ஸ்கூர் பதிவு 12 ஏ.எஸ். இப்றாஹீம் பதிவு 13 எம்.ஐ.எம். தாஹிர் பதிவு 14 எம்.ஜே.எம். கமால் பதிவு 15 ஏ.எச்.எம். யூசுப் பதிவு 16 நூருல் அயின்
பதிவு 17 எம்.ஸி.எம். இக்பால் பதிவு 18 ஆ. அலாவுதீன் பதிவு 19 எம்.இஸட்.ஏ முனஷ்வர் பதிவு 20 சித்தி ஸர்தாபி
பதிவு 21 ஏ.எம்.எம். அலி பதிவு 22 எம்.எச்.எம். ஹலீம்தின் பதிவு 23 என்.எஸ்.ஏ. கையூம் பதிவு 24 எஸ்.எம். ஜவுபர் பதிவு 25 ஏ.எல்.எம். சத்தார் பதிவு 26 ஜே.எம். ஹாபீஸ் பதிவு 27 ஏ.எச்.எம். ஜாபிர் பதிவு 28 ஏ.எம். நஜிமுதீன் பதிவு 29 எஸ்.எல்.ஏ. லத்தீப் பதிவு 30 எஸ்.ஐ.எம்.ஏ. ஜப்பார் பதிவு 31 மொஹம்மட் வைஸ் பதிவு 32 எம்.எம். ஸப்வான் பதிவு 33 ஹிதாயா ரிஸ்வி பதிவு 34 என்.எம். அமீன்
பதிவு 35 மஸ்தா புன்னியாமீன் பதிவு 36 கே.எம்.எம். இக்பால்
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 2
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
: utasib 2
பதிவு 37 எம்.பி.எம். அஸ்ஹர் பதிவு 38 ஜிப்ரி யூனுஸ் பதிவு 39 எம்.எஸ்.எம். அக்ரம் பதிவு 40 ஏ.எச்.எம். மஜீத்
பதிவு 41 ஏ.ஏ. றஹற்மான் பதிவு 42 எஸ். கலீல் பதிவு 43 எம்.எம். ராஸிக் பதிவு 44 கே. சுலைமா லெவ்வை பதிவு 45 யூ.எல்.எம். ஹவைலித் பதிவு 46 ஏ.ஆர்.ஏ. பரீல் பதிவு 47 சுலைமா சமி பதிவு 48 ரஸினா புஹார் பதிவு 49 ஐ.எம். மாருப் பதிவு 50 ஸெய்யித் முஹம்மத்
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புண்னியாமின் 01.

Page 7
பதிவு 51 ஏ.எஸ்.எம்.ரம்ஜான் பதிவு 52 அப்துல் லத்தீப் பதிவு 53 எம்.எம்.ஜமால்தீன் பதிவு 54 ஏ. ஐபார் பதிவு 55 முஹம்மது பெளஸ் பதிவு 56 சிபார்தீன் மரிக்கார் பதிவு 57 மஷரா சுஹறுத்தீன் பதிவு 58 யூ, ஸெயின் பதிவு 59 ஏ.எல்.எம். அஸ்வர் பதிவு 60 எம்.எம்.எஸ். முஹம்மத் பதிவு 61 முஹம்மட் கலில் பதிவு 52 எஸ்.எல்.எம். அபூபக்கர் பதிவு 63 எம்.யூ. முஹம்மத் பஷிர் பதிவு 64 முஹம்மத் இஸ்மாஈல் பதிவு 65 முஹம்மட் பைரூஸ் பதிவு 66 எம்.ஐ.எம். முஸ்தபா
பதிவு 67 றபீக் பிர்தெளஸ் பதிவு 68 புர்கான். பீ. இப்திகார் பதிவு 69 எம்.எஸ்.எஸ்.ஹமீத் பதிவு 70 அப்துல் மலிக் பதிவு 71 அப்துல் ஸலாம் பதிவு 72 எம்.எச்.எம். கரீம் பதிவு 73 எம்.எஸ்.றம்ஸின் பதிவு 74 அப்துல் அசன்
பதிவு 75 ஏ.எஸ்.எம். நவாஸ் பதிவு 76 முஹம்மத் ஹஸனி பதிவு 77 எஸ்.எஸ். பரீட் இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 3 முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்கள் விபரம்
: பாகம் 3 பதிவு 78 கல்முனை முபாறக் பதிவு 79 ஏ.எம். நஸிம்மன் பதிவு 80 மாத்தளைக் கமால் பதிவு 81 நூறுல் ஹக் பதிவு ஜமால்தீன் பதிவு 83 முஹம்மட் றபீக் பதிவு முஹம்மத் சுகைப் பதிவு 85 மு.மு. விஜிலி பதிவு 86 யூ.எல் ஆதம்பாவா பதிவு 87 ஏ.எம்.எம். ஸியாது பதிவு 88 எம். நவாஸ் செளபி பதிவு 89 முகுசீன் றயிசுத்தின் பதிவு 90 எம்.ஐ.எம். அன்சார் பதிவு 91 மஸ்ஹது லெவ்வை
பதிவு 92 எம். அனஸ் பதிவு 93 எம்.கே.எம்.முனாஸ் பதிவு 94 பாத்திமா பீபி பதிவு 95 ஸர்மிளா ஸெய்யித் பதிவு 96 பாத்திமா சுபியானி பதிவு 97 மொஹம்மட் சியாஜ் பதிவு 98 நிஸாரா பாரூக் பதிவு 99 பெளசுல் றஹீம்
பதிவு 100 ஏ.எல்.எம். புஹாரி பதிவு 101 ஏ.எப்.எம். றியாட் பதிவு 102 யு.எல்.எம். அஸ்மின் பதிவு 103 அப்துஸ்ஸலாம் அஸ்லம் பதிவு 104 எம்.ஏ. அமீனுல்லா பதிவு 105 நயிமுத்தீன் பதிவு 106 எச்.எல். முஹம்மத் பதிவு 107 ஹஸைன் பதிவு 108 ஹய்ருன்னிஸா புஹாரி பதிவு 109 எஸ்.எல். லரீப் பதிவு 110 அலி உதுமாலெவ்வை பதிவு 111 எம்.ஐ.எம். மஷஹர் பதிவு 112 கிண்ணியா நஸ்புல்லாஹ்பதிவு 113 திருமதி பரீதாசாகுல் ஹமீட் பதிவு 114 அரபா உம்மா
02 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 12

இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 4
புலம்பெயர் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
: LuITa5tb 1 பதிவு 115 என். செல்வராஜா (ஐக்கிய இராச்சியம்) பதிவு 116 நவஜோதி ஜோகரட்ணம் (ஐக்கிய இராச்சியம்) பதிவு 117 த. ஜெயபாலன் (ஐக்கிய இராச்சியம்) பதிவு 118 பத்மாஷணி மாணிக்கரட்ணம் (ஜெர்மனி) பதிவு 119 வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்) பதிவு 120 நகுலா சிவநாதன் (ஜெர்மனி) பதிவு 121 நா.தெய்வேந்திரம் (வண்ணை தெய்வம்) (பிரான்ஸ்) பதிவு 122 வை. சிவராஜா (ஜெர்மனி) பதிவு 123 சுந்தரம்பாள் பாலச்சந்திரன் (ஜெர்மனி) பதிவு 124 க. சண்முகம் (சண்) (டென்மார்க்) பதிவு 125 கித்தா பரமானந்தன் (ஜெர்மனி) − பதிவு 126 அடைக்கலமுத்து அமுதசாகரன் (இளவாலை அமுது) (ஐ. இ) பதிவு 127 இராசகருணா (ஈழமுருகதாசன்) (ஜெர்மனி) பதிவு 128 கே.கே. அருந்தவராஜா (ஜெர்மனி) பதிவு 129 கொண்ஸ்டன்ரைன் (ஐக்கிய இராச்சியம்) பதிவு 130 அம்பலவன் புவனேந்திரன் (ஜெர்மனி) பதிவு 131 பொ. சிறிஜிவகன் (ஜெர்மனி) பதிவு 132 கலைவாணி ஏகானந்தராஜா (ஜெர்மனி) பதிவு 133 வை. யோகேஸ்வரன் (ஜெர்மனி) பதிவு 134 அன்ரனி வரதராசன் (ஜெர்மனி) பதிவு 135 பொ. தியாகராசா (வேலணையூர் பொன்னண்ணா) (டென்மார்க்) பதிவு 136 பொ. கருணாகரமூர்த்தி (ஜெர்மனி) பதிவு 137 ஜெயாநடேசன் (ஜெர்மனி) பதிவு 138 இ.மகேந்திரன் (முல்லைஅமுதன்) (ஐக்கிய இராச்சியம்) பதிவு 139 றமேஷ் வேதநாயகம் (ஐக்கிய இராச்சியம்)
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு- தொகுதி 5
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
; பாகம் 4 பதிவு 140 அஷ்ரப் - ஏ - ஸமத் பதிவு 141 எம்.எம்.எம்.மஹற்றுப் பதிவு 142 அன்பு ஜவஹர்ஷா பதிவு 143 ஏ.எம். இஸ்ஸடின் பதிவு 144 எஸ்.எம். அறுாஸ் பதிவு 145 எம்.ஆர்.கே. மவ்பியா
பதிவு 146 எம்.யூ.எம். ஜிப்ரி பதிவு 147 ஏ.எல்.எம். ஸம்ரி
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 2) : கலாபூஷணம் புண்னியாமின் 03

Page 8
பதிவு 148 எம்.எச்.எம். ஹாரித் பதிவு 149 அபூதாலிப்
பதிவு 150 த. மீரால்ெவை பதிவு 151 எம்.எம்.எம். கலில் பதிவு 152 முஹம்மது பாறுக் பதிவு 153 யூ.எல். முஸம்மில் பதிவு 154 பாயிஸா கைஸ் பதிவு 155 மொஹிதீன் அடுமை
பதிவு 156 எம்.பீ. ஹசைன் பாருக் பதிவு 157 ஏ.எம்.எம். அத்தாஸ் இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 6
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
: UNTELÈ 5
பதிவு 158 எம்.எம். சாலிஹற் பதிவு 159 என்.எம். ஹனிபா பதிவு 160 ஏ.எம். றசீது பதிவு 161 ஏ.எல்.எம். பளில்
பதிவு 162 சுலைமான் புலவர் பதிவு 163 ஏ.எம். கனி
பதிவு 164 ஆ.மு. ஷரிபுத்தின் பதிவு 165 எம்.ஏ. முஹம்மது பதிவு 166 எம்.ஸி.எம். ஸபைர் பதிவு 167 எம்.எச்.எம். ஷம்ஸ் பதிவு 168 பி.எம்.ஏ. சலாஹதீன் பதிவு 169 வை. அஹற்மத் பதிவு 170 ஏ.ஸி. பிர்மொஹம்மட் இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 7
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
பாகம் 6 பதிவு 171 நயிமா சித்தீக் பதிவு 172 ஏ. சித்தி ஜஹானறா பதிவு 173 ஸர்ஹிரா நாஸிர் பதிவு 174 முகம்மது முர்சித் பதிவு 175 எம். எப். ரிம்ஸா பதிவு 176 எம். எல். லாபிர் பதிவு 177 ஹிபிஷி தெளபீக் பதிவு 178 என். எல். ரஷின் பதிவு 179 தமீம் அன்சார் பதிவு 180 ரஷித் எம். றாஸிக் பதிவு 181 ஏ.சி. றாஹில் பதிவு 182 செய்ன் தம்பி ஸியாம் பதிவு 183. எஸ்.எம். சப்ரி பதிவு 184 எம். ஏ. அமீர் ரிழ்வான்
பதிவு 185 ஏ.ஆர்.ஏ. அஸிஸ் பதிவு 186 வை.எல்.எம். றிஸ்வி பதிவு 187 எம்.எச். முஹம்மட் பதிவு 188 மொஹம்மட் அக்ரம் பதிவு 189 மு.மீ. அமீர்அலி பதிவு 190 எஸ். நஜிமுதீன் பதிவு 191 என்.பி. ஜூனைத் பதிவு 192 மல்ஹர்தீன் பதிவு 193 றஹற்மான் ஏ.ஜெமீல் பதிவு 194 எம்.எல். இஸ்ஹாக் பதிவு 195 எஸ்.எம்.எம்.நஸிறுதீன் பதிவு 196 றிஸ்வியூ முஹம்மத் நபீல் பதிவு 197 எம்.எஸ்.எம்.ஸல்ஸயில் பதிவு 198 முகமட் இமாம் ஹன்பல் பதிவு 19 அ.கா.மு.ஹிஸ்வின் பதிவு 200 எம் .எம். கலீல்
04 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 12)

இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்,
கலைஞர்களின் விபரத்திரட்டு- தொகுதி 8 முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
: Isb 7 பதிவு 201 என்.எம். நூர்தீன் பதிவு 202 ஏ.எல். முகம்மட் முக்தார் பதிவு 203 ஆரிப் அஜ்மீர் பதிவு 204 ஏ. புஹாது பதிவு 205 ஏ.எல். ஜூனைதீன் பதிவு 206 எம்.பி.எம். காஸிம் பதிவு 207 அப்துல் அஹத் பதிவு 208 எம்.யூ.எம். சனூன் பதிவு 209 மொஹமட் ரமலி பதிவு 210 எச்.எம். ஷரீப் பதிவு 211 அப்துல் ஸலாம் பதிவு 212 மருதூர் அலிக்கான்
பதிவு 213 எம்.என். அப்துல் அஸிஸ்பதிவு 214 எம்.ஐ.எம்.ஐ பாவா பதிவு 215 எம்.எம். பகுர்தீன்பாவா பதிவு 216 ஏ.சி. அகமது லெவ்வை பதிவு 217 அப்துல் ரவூப் பதிவு 218 எம்.ஐ. இம்தியாஸ் பதிவு 219 ஏ.கே.எம். அன்ஸார் பதிவு 220 எம்.ஐ.எம். பாரீஸ் பதிவு 221 முஹம்மது அஸ்ஹர் பதிவு 222 எஸ்.எம். உவைத்துல்லா பதிவு 223 எம்.பி, அஹமட் ஹாறுரண்பதிவு 224 சுபைர் இளங்கீரன் பதிவு 225 எம்.ரி. முகம்மது ஹஸைன்
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 9
புலம்பெயர் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
பாகம் 2 பதிவு 226 வள்ளிநாயகி இராமலிங்கம் (குறமகள்), (கனடா) பதிவு 227 பொன்னரசி கோபாலரட்ணம், (நோர்வே) பதிவு 228 பத்மன் பசுபதிராஜா, (ஜேர்மனி) பதிவு 229 க. சக்திதாசன் (இணுவை சக்திதாசன்), (டென்மார்க்) பதிவு 230 ஆமகேந்திரராஜா, (ஜேர்மனி) பதிவு 231 வைத்தீஸ்வரன் ஜெயபாலன், (ஐக்கிய இராச்சியம்) பதிவு 232 முகத்தார் எஸ். ஜேசுறட்ணம், (பிரான்ஸ்) பதிவு 233 தர்மலிங்கம் இரவீந்திரன், (ஜேர்மனி) பதிவு 234 செல்லத்தம்பி சிறீக்கந்தராசா (ஐக்கிய இராச்சியம்) பதிவு 235 எம்.என்.எம. அனஸ் (இளைய அப்துல்லாஹம்) (ஐ. இராச்சியம்) பதிவு 236 மட்டுவில் ஞானக்குமாரன், (ஜேர்மனி) பதிவு 237 சகாதேவன் இராஜ்தேவன் (இராஜ் கண்ணா), (நோர்வே) பதிவு 238 மனோன்மணி பரராஜசிங்கம், (ஜேர்மனி) பதிவு 239 சீ. பன்னிர் செல்வம், (இந்தியா) பதிவு 240 இராஜேஸ்வரி சிவராசா (ஜேர்மனி)
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புன்னியாமீன் 05.

Page 9
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்,
கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 10
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்,
கலைஞர்கள் விபரம்
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
241,
243 245 247 249
251
253 254 256 258 260
262 264
* 266
268 270 272 274
யூஎல், அலியார் பதிவு கே.எல். அமீர் பதிவு ஏ.ஜி.எம். தமீம் பதிவு
பி.எம். நியாஸ்தீன் பதிவு
றுவைதாமதீன் - பதிவு
மஸாஹிரா இல்யாஸ் பதிவு
எம்.எஸ். அஹ்மது பதுர்தீன்
அப்துல் காதர் அஸிம் பதிவு
முஹம்மது ஸித்தீக் பதிவு ஏ.எல்.அலியார். பதிவு அல்-அஸ்மத் பதிவு
இப்பன் சால்டின். பதிவு ஞெய் றஹீம் சயீத் பதிவு எம்.எச்.பௌசுல் அமீர் பதிவு நூர்ஜான் மர்ஸ்சக் பதிவு ஆமினா பேகம் பாரூக் பதிவு ஞெய் குமாலா சவ்ஜா பதிவு
எம்.எஸ். முஹம்மத் பதிவு
242
244 246 248 250 252
255 257 259 261 263
26S
267 269 27 273 275
LufTabb 8
ரஸ்மினா றாஸிக் எஸ்.ஆர்.எம்.எம். முஹ்ஸி மு.க.அ. முகம்மது றாஸிக் எஸ்.எச். அமீர் எம்.ஏ.எம். செல்ல மரிக்கார் (85.6th. ausiness
எம்.எஸ். நெளஷாட் எம்.ஏ. கபூர் எம்.ஸி.எம்.அஸ்வர். லாஃபிர் ஸஹிட் அபூதாலிப் அப்துல் லதீஃப் கே.ஏ. ஜவாஹர்
எம்.எம்.ஏ. லத்தீப்.
ஹம்ஸா ஆரீப் நிஹாரா சபூர்தீன் டோனி ஹஸன் எம்.ஏ. புஹாரி
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 11
இவர்கள் நம்மவர்கள்-பாகம் 01
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
பதிவு
பதிவு
276 277 278 279
280
281 282 283
284
285
தம்பிஐயா தேவதாஸ்
எஸ்.எச்.எம். ஜெமீல்
அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை
அந்தனி ஜீவா
பாலா. சங்குப்பிள்ளை ஜே. மீராமொஹிதீன்
வை. அநவரத விநாயகமூர்த்தி
சாரல்நாடன் வீ.வீரசொக்கன்
நாகலிங்கம் தர்மராஜா (அகளங்கன்)
06 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 12)

இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 12
இவர்கள்
நம்மவர்கள்
— Umabuò 02 - பதிவுசெய்யப்படுவோர்.
பதிவு 286
பதிவு 287
பதிவு 288 பதிவு 289 பதிவு 290 பதிவு 29
பதிவு 292
பதிவு 293
பதிவு 293 Uதிவு 29கு.
பதிவு 296 பதிவு 297 பதிவு 298 பதிவு 299 பதிவு 300
செUஸ்தியானர் செUமாலை (குழந்தை) பாலேஸ்வரி நல்லவரட்னசிங்கம் சந்திரவகளரி சிவபாலனி சாந்தி முஹறியித்தினர் கிச்சிலானி அமதுர் றஹரீம் வண. Uதா தமிழ்நேசனி அடிகளார் சி.எனர். துரைசிங்கம் எம்.எம். மக்கினி (மானா மக்கினர்) சு. முரிகந்தராசா gnTagsT 6a6ofaśPegofað
ச. முருகானந்தனர்.
த. சந்திரசேகரனி இராசையா நாகலிங்கம் (அர்ைபுமணி)
கே. எம். பாரூக்
சினினத்தம்பரி ரவீந்திரனி
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புண்னியாமின் O7.

Page 10
nsoomuscoso (v qı-ırıņúcoogs (£
1909rnroodoo (9 (#7
Ļ9Đứ1191Irmú099)Ţoș&#Impe) (g. 1ļ9?su9urnỆrmee) (z
1ļ9ostný gostā” (I
nsoorniooctoß (# qi-Iriņodesh (ç
· 1,9æứusurn@rnee) (z ự9æsmųígoo (I
*田eg@e 田oug咀n
quae-uigí (z osmựessosoɛɛ o sı[$ (noe) * __ ņ9æ (1@osoɛ oĻso sus uosmusso-Tissos
regemiste6(ç 1909rnls809(9 (ç
quos effonso (yqno-lugi († @ņJúło ogs-s (g. Ọ919 ligi (ç qī£đì) e (z$.coogoo (z
Qormựús@ (Iogsoms (i
úos@jio gırmış, soosựıņ~ıctori
posguem soos
9711$$úrīgs soos@ososooņsæsusuosmissoinsossosioloģđòb
qjusốùóırı riforno -
- (தொகுதி 12)
08 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரத்திரட்டு

இவர்கள் நம்மவர்கள்,
Uாகம் 02
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புன்னியாமின் 09:

Page 11
எனும் தொடரினை பிரசுரிக்க முன்வந்த
ஆசிரியர் திருவாளர் - பாரதி இராஜநாயகம் -
அவர்களுக்கும். தினக்குரல் ஆசிரியர் பீடத்துக்கும். தினக்குரல் நிர்வாகத்தினருக்கும் என்னுடைய இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
- கவாயூஷனர் புனர்னியாமீனர் - pmpuniyameen(alyahoo.com
10 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 12)
 
 
 
 

செபஸ்தியான் செபமாலை "குழந்தை” '
செபஸ்தியான் GeFLILDIT60)6) (குழந்தை)
வடமாகாணம், மன்னார் மாவட்டம், வன்னி தேர்தல் தொகு தியில் நானாட்டான்’ பிரதேச செயலாளர் பிரிவில் முருங்கன் கிராமசேவகர் பிரிவில் வசித்து வரும் செபஸ்தியான் செபமாலை அவர்கள் “குழந்தை” எனும் பெயரில் புகழ்பூத்த ஒரு நாடகக் கலைஞர். நாட்டுக்கூத்து, மரபு நாடகங்கள், வில்லுப்பாட்டு, இசை நாடகங்கள், நாடகநெறியாள்கை, கவிதை, பாடல் போன்ற பல்துறை களிலும் கலையாற்றல் மிக்கவர். மன்னார் மாவட்டத்தில் மட்டுமன்றி அகில இலங்கை ரீதியிலும் நாடகத்துறை தொடர்பான பேச்சு எழும் பொழுது கலைஞர் குழந்தையின் பெயர் குறிப்பிடப்படுவது தவிர்க்க முடியாததாகும்.
1940 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08ஆம் திகதி ம. செபஸ்தியான், மு. செபமாலை தம்பதியினரின் புதல்வராக முருங்க னில் பிறந்த செபமாலை மன்னார் முருங்கன் மகாவித்தியாலயத்தில் பாடசாலைக் கல்வியைப் பெற்றார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புன்னியாமீன் 11

Page 12
செபஸ்தியான் செபமாலை “குழந்தை”
ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சி பெற்ற இவர், கல்லூரி ஆசிரியராகத் தனது தொழிலை ஆரம்பித்து 40 வருட சேவையின் பின்னர் ஓய்வுபெறும் போது முதலாந்தர அதி பராக் பதவி வகித்து வந்தார். இவரின் அன்புப்பாரியார் பெயர் றோஸ்மேரி. இத்தம்பதியினருக்கு செ. லூந்துநாயகம், செ. இன்பராசா, செ. அன்புராசா, செ. திருமகள், செ. மலர்விழி, செ. கயல்விழி ஆகிய அன்புச் செல்வங்களுளர்.
இவரின் தந்தையார் நன்கு மத்தளம் வாசிக்கும் அண்ணாவி யார். இவருடைய சகோதரர்கள் மூவர் நன்கு பாடக்கூடிய இசைக் கலைஞர்கள். இத்தயை பின்னணியில் 50களிலே முருங்கன் மகா வித்தியாலயத்தில் மாணவனாக இருந்த காலத்தில் பாடசாலையின் இசை, நாடக நிகழ்ச்சிகளில் பங்கு பற்றித் தனது ஆற்றல்களை செபஸ்தியன் வெளிப்படுத்தினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த கிட்டப்பா, சின்னப்பா, தியாகராஜபாகவதர், டி.ஆர். மகாலிங்கம் ஆகியவர்க ளின் பழைய பாடல்களைக் கேட்டு அப்படியே பாடும் ஆற்றலுள்ள வராக விளங்கினார். ஒலிப்பதிவுச் சாதனை வசதியற்ற அந்தக் காலத்தில் எப்போதோ வானொலியில் கேட்கும் பாடல்களை அப்படியே பாடிப் பிரமிக்க வைத்தார். பாடசாலையில் நிகழும் கலை நிகழ்ச்சிகளில் இசை தொடர்பான விடயங்களுக்குப் பொறுப் பாக இவரையே ஆசிரியர்கள் விட்டுவிடுவார்கள்.
பாடசாலையில் தொடங்கிய குழந்தையின் கலைப்பயணம் கொழும்புத்துறை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையிலும் அதன் பின்னர் ஆசிரியராக வெளியேறிய பின்னரும் வேகமாக வளர்ச்சிய டைந்தது. ஆரம்ப காலங்களில் இவரது இசை நாடகங்களில் தமிழ்நாட்டின் பழம்பெரும் பாடகர்களின் சினிமா மெட்டுக்கள் இடம்பெற்றன. பிரபலமான இம்மெட்டுக்களை இவர் அனாயாசமா கக் கையாண்டதாலும் பொருத்தமாகப் பயன்படுத்தியதாலும் இவரது நிகழ்ச்சிகள் சிறியோர் முதல் பெரியோர் வரை எல்லோ ரையும் கவர்ந்தது.
மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவரை சனச்செறிவு குறைந்த இடமாக இருந்தபடியால் கலையார்வம் உள்ளவர்கள் 12 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 12)

செபஸ்தியான் செபமாலை "குழந்தை” தங்கள் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் கலைக்குரிய களம் விரிவடைந்திருக்கவில்லை. இங்கு இந்துக்களால் ஆடப்படும் 'காத்தவராயன் என்ற கூத்தும், கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களால் ஆடப்படும் புனிதர்களின் வரலாறுகளைக் கொண்ட கூத்துக்களும் கிராமத்துக்குக் கிராமம் ஆடப்படுவது வழக்கம். இவைகளில் இவரின் பங்களிப்பு மிகைத்துக் காணப்பட்டது.
ஒரு மேடை நாடகம் என்ற அடிப்படையில் இவரின் முதல் நாடகம் 1964ஆம் ஆண்டில் மேடையேறியது. அதிலிருந்து இதுவரை இவரால் எழுதி, தயாரித்து மேடையேற்றப்பட்ட நாடகங்களை பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.
பணத்திமிர் (சமூக நாடகம்), பாட்டாளிக்கந்தன் (சமூக நாடகம்), இறைவனின் சீற்றம் (இலக்கிய நாடகம்), தாரும் நீரும் (இலக்கிய நாடகம்), புதுமைப்பெண் (இசை நாடகம்), தாகம் (சமூக நாடகம்), காவல்தெய்வங்கள் (சமூக நாடகம்), விண்ணுலகில் (நாடகம்), கல்சுமந்த காவலர்கள் (நாட்டுக்கூத்து மரபு நாடகம்), வீரத்தாய் (நாட்டுக்கூத்து மரபு நாடகம்), . . . . வீரனை வென்ற திரள் (நாட்டுக்கூத்து மரபு நாடகம்), யார் குழந்தை (நாட்டுக்கூத்து மரபு நாடகம்), இணைந்த உள்ளம் (நாட்டுக்கூத்து மரபு நாடகம்), அன்புப் பரிசு (இசை நாடகம்), அழியா வித்துக்கள் (நாட்டுக்கூத்து மரபு நாடகம்), வாழ்வளித்த வள்ளல் (இசை நாடகம்), நல்வாழ்வு (சரித்திர நாடகம்), பணமா? கற்பா? (சமூக நாடகம்), விடுதலைப்பயணம் (நாட்டுக்கூத்து மரபு நாடகம்), பரதேசி மகன் (சரித்திர நாடகம்), இறைவனா? புலவனா? (நாட்டுக்கூத்து மரபு நாடகம்), கவரி வீசிய காவலன் (இலக்கிய நாடகம்),
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புண்னியாமினி ,31

Page 13
செபஸ்தியான் செபமாலை “குழந்தை”.
முதல் குடும்பம் (நாட்டுக்கூத்து மரபு நாடகம்), மனமாற்றம் (சமூக நாடகம்), திருந்திய உள்ளம் (சமூக நாடகம்), இலங்கையைவென்ற இராசேந்திரன் (சரித்திர நாடகம்), சிலம்பின் சிரிப்பு (இலக்கிய நாடகம்), இலட்சியவாதிகள் (சமூக நாடகம்) தியாகிகள் (சமூக நாடகம்), நவீன விவசாயம் (நாட்டுக்கூத்து மரபு நாடகம்), பூதத் தம்பி (நாட்டுக்கூத்து மரபு நாடகம்), குண்டலகேசி (நாட்டுக்கூத்து மரபு நாடகம்)
1964ஆம் ஆண்டு இவரால் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை நாடகங்களையும், இதர கலை நிகழ்ச்சிகளையும் வழங்கி வரும் “முத்தமிழ் கலா நாடகமன்றம்” இவரது ஆற்றலுக்கும், உழைப்
புக்கும் சாட்சியாக விளங்கி வருகின்றது.
இலக்கியத்துறையில் இவரின் ஈடுபாடு 1955ஆம் ஆண்டு ஆரம்பித்தது. இருப்பினும் இவரது முதல் ஆக்கமான “அறப்போர் அரைகூவல்’ எனும் கவிதை இலங்கை வானொலியில் 1963ஆம் ஆண்டு முதலில் ஒலிபரப்பானது. அதிலிருந்து இலக்கியம், கலை இலக்கியம், நாடகம், கவிதை என இலங்கை வானொலியிலும், தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் எழுதி வருகின்றார். இத்தகைய நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்கள் வானொலி, பத்திரிகைகளில் ஒலிபரப்பாகியும், பிரசுரமாகியுமுள்ளன.
இவரால் இதுவரை எழுதி, வெளியிடப்பட்டுள்ள நூல்களின் விபரம் பின்வருமாறு:
இன்பத்தமிழின் இதய ஒலம் அறப்போர் அறை கூவல் இயாகப்பர் இன்னிசைப் பாடல்கள் நாம் (மலர் - 1) நாம் (மலர் - 2)
biTb (LDooj - 3)
14 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 12)

செபஸ்தியான் செபமாலை “குழந்தை”
e பரிசு பெற்ற நாடகங்கள்
(சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது - 1998)
0 மரபு வழிநாடகங்கள்
9 மாதோட்டம் (கவிதை)
சிறந்த பேச்சாளரான கலைஞர் குழந்தை, மாணவப் பருவத் திலேயே தமிழரசுக் கட்சிக் கூட்டங்களிலும், தமிழ் எழுச்சி மாநாடுகளிலும் பங்குகொண்டு உரையாற்றித் தாக்குதல்களுக்கும் உள்ளாகியுள்ளார். பின்னர் அரசியலில் ஏற்பட்ட விரும்பத்தகர்த போக்குகளினால் அரசியல் சாக்கடையிலிருந்து இவர் கழன்று கொண்டது கலைத்துறையின் அதிர்ஷ்டமாகும். இவர் தீவிர அரசிய லில் இருந்து ஒதுங்கினாலும் மொழிப்பற்று, இனப்பற்றுள்ள ஒரு கலைஞனாகவே வாழ்ந்து வருகிறார். இவரது படைப்புக்கள் பலவும் இவற்றை அடிப்படையாகக் கொண்டவையே. -
இவரின் இத்தகைய சேவைகளைக் கருத்திற்கொண்டு அரச நிறுவனங்கள் வழங்கியுள்ள கெளரவங்களும், விருதுகளும் 6(5 DIT:
0 1998ல் அரச இலக்கிய விழாவில் இவரது பரிசு பெற்ற நாடகங்கள் என்று நூலுக்குச் சாஹித்திய விருது வழங்கப்பட்டது.
0 1999ல் கொழும்பில் கலாசாரத் திணைக்களத்தினால்
கலாபூஷணவிருது வழங்கப்பட்டு, பொன்னாடை போர்த் திக் கெளரவிக்கப்பட்டார்.
0 2000ஆம் ஆண்டில் வடக்கு கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் ஆளுநர் விருது வழங்கப்பட்டு, பொன்னாடை போர்த்திப் பொற்கிழியும் வழங்கப்பட்டது.
இப்படிச் சாஹித்திய விருது, கலாபூஷண விருது, ஆளுநர் விருது ஆகிய மூன்றையும் மன்னார் மாவட்டத்தில் பெற்றவர் இவர் ஒருவரே.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : “ கலாபூஷணம் புன்னியாமின் 15.

Page 14
செபஸ்தியான். செபமாலை "குழந்தை" . ܀ ܝܖ
இவை தவிர அரச சார்பற்ற பல நிறுவனங்களும், அமைப்பு களும் பிரதேச மட்டத்தில் இவருக்கு பல கெளரவங்களை வழங்கி யுள்ளன. உதாரணத்திற்கு சில வருமாறு:
e 1982ல் முருங்கன் மகாவித்தியாலயத்தின் பாடசாலை அபி
விருத்திச் சபை பாராட்டுவிழா எடுத்து பொன்னாடை போர்த்திப் பரிசுகள் வழங்கியது. * 01.1194ல் மன்னார் மாவட்டக்கலை பண்பாட்டுக்கழகத்தினர் விழாவெடுத்து ஆண்டான்குளத்தில் பொன்னாடை போர்த் திப் “முத்தமிழ் வேந்தர்” எனும் பட்டத்தை அளித்தனர். d 1995ல் மட்டக்களப்பில் நடைபெற்ற வடக்குக் கிழக்கு
மாகாண இலக்கிய விழாவில் பொன்னாடை போர்த்தப் பட்டு விருதும் வழங்கப்பட்டது. . 02.09.2000 அன்று மன்னாரில் இடம்பெற்ற நாடக நிகழ்வில் வந்தனைக்குரிய மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களால் “திருக்கள வேந்தன்” எனும் விருது அளிக்கப்பட்டு பொன்னாடை போர்த்தப்பட்டு கெளரவிக்கப்பட்டு பொற்கிழியும் வழங்கப்பட்டது. 9 2005ல் மட்டக்களப்புப் பக்கலைக்கழக நுண்கலைத்
துறையினரால் “தலைக்கோல் விருது’ வழங்கப்பட்டது.
ஆன்மீகப் பற்றுள்ள கத்தோலிக்கரான குழந்தை செப மாலை அவர்களின் கலையை ஊடகமாகக் கொண்ட சமயப் பணிகள் மாவட்டமெங்கும் பிரசித்தமானவை. தபசு காலத்தில் பாடப்படும் கிறிஸ்துவின் திருப்பாடுகள் பற்றிய பசானை இந்த வயதிலும் களைப்பின்றிப் பாடுவார். இவரது கலைப் பணியை ஐரோப்பிய நாடான பிரான்சில் இவரது இரு புத்திரர்கள் நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் கூட இசை மெட்டுக்களில் புதிய புதிய மாற்றங்களைப் புகுத்திவரும் வேளையில், கலைஞர் குழந்தையின் நாடகங்களுக்கு இன்றும் சிறியவர் முதல் பெரியவர் வரை ஆர்வம் காட்டுவது அவரது திறமைக்குச் சான்றாகும்.
இவரின் முகவரி;- S. SEBAMALAI (KULANTHI) ST. JAMES CHURCH MURUNKAN
16 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 12)

பாலேஸ்வரி
ந.பாலேஸ்வரி
கிழக்கு மாகாணம், திருக்கோணமலை மாவட்டம், திருகோ ணமலை பிரதேச செயலாளர் பிரிவில் மனையாவழி கிராமசேவகர் வசத்தைச் சேர்ந்த திருமதி பாலேஸ்வரி நல்லரெட்னசிங்கன் அவர்கள் “பெண்மையின் தனித்துவத்தன்மை பிரதிபலிக்கும். ஆக்கங்களை எழுதிவரும் ஈழத்து முதலாவது பெண் நாவலாசிரி யை மட்டுமல்லாது அதிகநாவல்களை எழுதிய ஈழத்துப் பெண் எழுத்தாளருமாவார்.
ஆயிரத்துத் தொழாயிரத்து இருபத்தொன்பதாம் ஆண்டு மார்கழி மாதம் 07ம் திகதி முகாந்திரம் த.பாலசுப்ரமணியம், பா.கமலாம்பிகை தம்பதியினரின் புதல்வியாக திருகோணமலையில் பிறந்த இவர் தனது ஆரம்பக்கல்வியை திருகோணமலை பூரீசண்முக வித்தியாலயத்தில் பெற்றார். பின்பு சுன்னாகம் ஹிஸ்கந்தவரோ தயாக் கல்லூரி, உடுவில் மகளிர் கல்லூரி, திருக்கோணமலை புனிதமரியாள் கல்லூரி ஆகியவற்றில் பயின்றார். மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர்கல்லூரியில் பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியையான
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புன்னியாமினர் 7

Page 15
பாலேஸ்வரி
இவர் ஆசிரிய சேவையில் நீண்ட காலம் சேவையாற்றி ஓய்வுபெற் றார். இவர் தனது சேவைக்காலத்தில் பல நன்மாணாக்களை உருவாக்கியுள்ளதுடன் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அரும் பாடுபட்டவருமாவார். −
தான் கற்கும் காலத்திலிருந்து வாசிப்புத்துறையில் ஈடுபாடு மிக்கவராக இருந்த இவரின் கன்னிக்கதை ‘வாழ்வளித்த தெய் வம்’ எனும் தலைப்பில் தினகரன் பத்திரிகையில் 1957ம் ஆண்டு பிரசுரமானது.
அன்றிலிருந்து இன்றுவரை இருநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், முப்பதுக்கு மேற்பட்ட கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். இத்தகைய ஆக்கங்கள் இலங்கையிலுள்ள தேசியப் பத்திரிகைகளிலும், சஞ்சிக்ைகளிலும் பிரசுரமாகியுள்ள அதே நேரத்தில் கல்கி, குங்குமம், உமா, தமிழ்ப்பாவை, கவிதை உறவு போன்ற இந்திய சஞ்சிகைகளிலும் ‘உலகம் (இத்தாலி) ‘ஈழநாடு’ (பாரிஸ்) தமிழ்மலர் (மலேசியா) ஆகிய சர்வதேச சஞ்சிகைகளி லும் பிரசுரமாகியுள்ளன.
பாலேஸ்வரி இதுவரை பன்னிரண்டு நாவல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இலங்கையில் பெண் எழுத்தாளர் ஒருவர் பன்னிரண்டு நாவல்களை எழுதி வெளியிட்டிருப்பது இலங்கை தமிழ் இலக்கிய வரலாற்றில் இதுவே முதற்தடவை எனக் குறிப் பிடலாம். இவரின் முதலாவது நாவல் “சுடர்விளக்கு’ எனும் பெயரில் ‘திருகோணமலை தமிழ் எழுத்தாளர் சங்கத்தினால் 1966ம் ஆண்டு வெளிவந்தது.
1970ம் ஆண்டில் மித்திரன் வாரமலரில் இவர் எழுதிய தொடர் நவீனமான 'பூஜைக்கு வந்த மலர்’ நாவலாக 1971ம் ஆண்டு மாசி மாதத்தில் முதல் பதிப்பாகவும், பின்பு, 1972ம் ஆண்டு சித்திரை மாதம் இதே நாவல் இரண்டாம் பதிப்பாகவும் வெளிவந்தது. இந் நாவலினை வீரகேசரி வெளியீட்டு நிறுவனத் தினர் வெளியிட்டனர். இதே நாவல் மீண்டும் 1994ம் ஆண்டு மித்திரனில் தொடர்கதையாக வெளிவந்தது.
8 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 12)

பாலேஸ்வரி
இவரால் எழுதப்பட்ட ஏனைய நாவல்களாவன
‘உறவுக்கப்பால்' - 1975
(வீரகேசரி வெளியீடு), *கோவும் கோயிலும் -1990 ஜனவரி
(நரசி வெளியீடு), ‘உள்ளக்கோயில் - 1983 நவம்பர் (வீரகேசரி வெளியீடு), “உள்ளத்தினுள்ளே” -1990 ஏப்ரல்
(மட்டக்களப்பு செபஸ்டியர் அச்சகம் வெளியீடு), ‘பிராயச்சித்தம்' - 1984 ஜூலை
(ரஜனி பப்ளிகேஸன்), “மாது என்னை மன்னித்துவிடு -1993 ஜனவரி
முறிபத்திரகாலி அம்மன் தேவஸ்தால வெளியீடு), ‘எங்கே நியோ நானும் அங்கே உன்னோடு - 1993
ஆகஸ்ட் (காந்தளகம் வெளியீடு இந்தியா), *அகிலா உனக்காக” 1993
(மகாராஜ் அச்சகம் இந்தியா), ‘தத்தைவிடு தூது’ - 1992 ஜூலை
(மட்டக்களப்பு கத்தோலிக்க அச்சகம்), ‘நினைவு நீங்காதது - 2003
(மணிமேகலைப்பிரசுரம் இந்தியா)
இவர் இரண்டு சிறுகதை தொகுதிகளையும் வெளியிட்டுள் ளார். s
சுமைதாங்கி - 1973
தெய்வம் பேசுவதில்லை - 2000
(காந்தளகம் வெளியீடு இந்தியா)
பாலேஸ்வரியின் இலக்கிய ஆக்கங்களை பல்கலைக்கழக மட்டத்தில் இதுவரை மூன்று மாணவர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
1. பேராதனை பல்கலைக்கழக தமிழ் துறை இளங்
கலைமாணி பட்டப்படிப்பினை நிறைவு செய்வதன்
இவர்கள் நம்மவர்கள் (பாகம் O2) கலாபூஷணம் புண்னியாமீன் 19

Page 16
பாலேஸ்வரி
பொருட்டு 1999- 2000 கல்வியாண்டில் திருகோண மலை யைச் சேர்ந்த செல்வி அப்துல்ரஹீம் சர் மிலா என்பவர் ‘பாலேஸ்வரியின் நாவல்களில், பெண்கள்’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வுக்கட்டுரை சமர்பித்துள்ளார்.
2 சப்ரகமுவ பல்கலைக்கழக தமிழ் விசேட துறை சிறப்புக்கலைமாணி பட்டப்படிப்பினை நிறைவு செய் வதன் பொருட்டு 1999- 2000 கல்வியாண்டில் செல்வி சிவகெளரி சிவராசா என்பவர் ‘பாலேஸ் வரியின் தமிழ் நாவல்கள பற்றிய ஓர்ஆய்வு எனும் தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வுக்கட்டுரை சமர்பித்துள்ளார்.
3. தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் விசேட துறை இளங்கலைமாணி பட்டப்படிப்பினை நிறைவு செய் வதன் பொருட்டு 2001- 2002 கல்வியாண்டில் செல்வி கச்சி முஹம்மது சில்மியா என்பவர்
ந.பாலேஸ்வரியின் சமூக சிறுகதைகள் ஒரு நோக்கு’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வுக்கட்டுரை சமர்பித்துள்ளார்.
பாப்பா, ராஜி ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதி வரும் ந.பாலேஸ்வரியின் தமிழ் இலக்கியம், சமயம், பொதுவிட யங்கள் தொடர்பான பல்வேறு கட்டுரைகளும் பிரசுரமாகியி ருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல ஆரம்ப காலங்க ளில் இலங்கை வானொலியில் பல இசையும் கதையும் பிரதியாக்கங்களையும் எழுதியுள்ளார். அதே நேரம் தினபதி சிறுகதை தெரிவுக்குழுவில் இவர் ஒரு அங்கத்தவராக இருந்துள்ளார். இவரது சிபாரிசு பல இளம் எழுத்தாளர் களை எழுத்துலகில் பிரவேசிக்கவைத்தது. இத்தகையவர் கள் இன்று எழுத்துலகில் பிரகாசித்துக் கொண்டிருக்கின் றார்கள்.
20 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 12)

பாலேஸ்வரி பாலேஸ்வரியின் எழுத்துலக முன்னேற்றத்திற்கு பின்னணி யாக இருந்து இவரை இந்நிலைக்கு உயர்த்தி விட்ட, மறைந்தும் மறையாமால் மானசீக குருவாக இவருள் வாழ்ந்து கொண்டிருக்கும் நல்லரெட்ணசிங்கம் அவர்களையும், தனது பெரிய தந்தைமார் தி.த. கணகசுந்தரபிள்ளை, தி.த. ஆவணமுத்துப்பிள்ளை ஆகியோ ரையும், இளவயதில் தன்னுடைய வாசிப்புப் பழக்கத்தை ஊக்கு வித்த தனது அன்புத்தாயார் கமலாம்பிகை அவர்களையும் இன்றும் அன்புடன் நினைவுகூர்ந்து வருகிறார்.
இவரின் எழுத்துத்துறை சேவையைக் கருத்திற்கொண்டு 1992ம் ஆண்டில் இந்து சமய கலாச்சார அமைச்சினால் ‘தமிழ் மணி’ எனும் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டார். . . . .
1996ம் ஆண்டில் மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை முத்தமிழ் மன்றம் “சிறுகதை சிற்பி’ என்ற பட்டமளித்து கெளர வித்தது.
1999-10-17 வடக்கு கிழக்கு மாகாணக்கல்வி, பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு இவரின் சேவையை மெச்சி 1999ம் ஆண்டிற்கான வடக்கு கிழக்கு ஆளுனர் விருதினை வழங்கியது. . . .
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 2) : கலாபூஷணம் புண்னியாமின் 21. ..

Page 17
பாலேஸ்வரி
அதே நேரம் இலங்கையின் கலைத்துறைக்கு ஆற்றிய மேலான சேவையினை பாராட்டும் வண்ணம் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற உயரிய அரச விருதான கலாபூஷண விருது 2002-12-26 ம் திகதி வழங்கி கெளரவிக்கப் LILLIJ.
இவை தவிர பல்வேறு பட்ட பிரதேச இலக்கிய விழாக்களில் பல்வேறு விருதுகளையும், கெளரவங்களையும் பெற்றுள்ளார்.
இன்னும் தமிழை வளர்ப்பதிலும், தமிழ் இலக்கியத்தை
வளர்ப்பதிலும் தன்னை அர்ப்பணித்து வரும் ந. பாலேஸ்வரியின் முகவரி:
திருமதி பாலேஸ்வரி நல்லரெட்னசிங்கம்
இல.157 டைக் வீதி
திருக்கோணமலை.
22 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 12)
 

சந்திரகௌரி சிவபாலன்
சந்திரகௌரி சிவபாலன்
புலம்பெயர்ந்த எழுத்தாளர்-41
பதிவு 288
எழுத்துத்துறை
கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் கிராம சேவகர் பிரிவினைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி சந்திரகெளரி சிவபாலன் அவர்கள் இலக்கியம், கவிதை, பொறிக் கவிதை, வானொலிவாக்கு, சிறுகதை, ஆன்மீக சிந்தனை, பாடல் கள் என பல்துறைகளிலும் ஈடுபாடு காட்டி வரும் ஒரு பெண் எழுத்தாளராவார். தற்போது புலம் பெயர்ந்து தனது அன்புக் கணவர் சிவபாலன், ஆசை மகள் மெனூஷா ஆகியோருடன் ஜெர்மனியில் “சோலிங்கன் நகரில் நிரந்தரமாக வசித்து வருகின் றார.
ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபதாம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏழாம் திகதி ஏறாவூர் வேலுப்பிள்ளை, பரமேஸ்வரி தம்பதியினரின் மகளாகப் பிறந்த சந்திரகெளரி ஏறாவூர் மகாவித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியையும், மட்டக் களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலையில் உயர்தரக் கல்வியையும் கற்றார். பின்பு பேராதெனிய பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தைப்பெற்றதுடன், நுகே
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புன்னியாமீன் 23

Page 18
சந்திரகௌரி சிவபாலன் w
கொடை திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வியியல் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுள்ளார்.
இலங்கையில் வாழ்ந்த காலத்தில் தொழில்ரீதியாக ஆசிரி யையாகப் பணியாற்றிய இவர் மட் /கறுவாக்கேணி தமிழ் வித்தியாலயம், மட் /ஏறாவூர் தமிழ் மகாவித்தியாலயம், நீர்கொ ழும்பு விஜயரெத்தினம் மத்திய மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கடமை புரிந்துள்ளார். பின்பு ஜெர்மனிக்குப் புலம்பெயரும் வரை நீர்கொழும்பு கல்வித் திணைக்களத்தில் ஆசிரிய ஆலோசகராகத் தனது பணியினைத் தொடர்ந்துள்ள இவர் புலம்பெயர்ந்த பின்பு சில காலம் சோலிங்கன் தமிழ் ஆலயத்தில் ஆசிரியையாக இணைந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மாணவர்களுக்குத் ‘தமிழ் கற்பித்து வந்துள்ளார்.
சந்திரகெளரியின் தமிழ் இலக்கியப் பணிகளை நோக்கு மிடத்து இவரின் கன்னியாக்கம் 1986ஆம் ஆண்டில் தினகரன் பத்திரிகையில் 'யானை உரியும் உமையாள் அச்சமும்’ எனும் தலைப்பில் பிரசுரமானது. இதைத் தொடர்ந்து பல தரமான ஆக்கங்களை இவர் இலங்கைத் தேசிய பத்திரிகைகளில் எழுதி வந்தார். இக்காலகட்டங்களில் நாட்டில் ஏற்பட்ட போர்ச் சூழ்நிலை களினால் ஊர்விட்டு ஊர்தாவி நாடோடியாகத் திரிந்தமையால் தொடர்ந்தும் ஈழமண்ணில் இலக்கியப் பணியில் ஈடுபட முடியாமல் போய்விட்டதாகக் கவலை கொள்கின்றார். m
தனது சிறப்புக் கலைமாணிப் பட்டத்தேர்வுக்காக இவரால் சமர்ப்பிக்கப்பட்ட “இருபதாம் நூற்றாண்டு மட்டக்களப்புத் தமிழ் இலக்கியமும், பிரதேசப் பண்பும்” எனும் ஆய்வுக் கட்டுரை நூல் வடிவம் பெற்றும் - அதனை வெளியிட்டுக் கொள்ள முடி யாத நிலையில் தான் வாழ்ந்த விட்டுடன் அக்கினிக்கு இரையாகி விட்டதை எண்ணி இன்றும் வேதனை கொள்கின்றார். அதேநேரம் அவ்வாய்வுக் கட்டுரையின் மூலப்பிரதியையும் இழந்துவிட்ட நிலையில் தற்போது பேராதனைப் பல்கலைக்கழக வாசிகசா லையில் உள்ள நூற்பிரதியைப் பெற்று புதிய திருத்தங் களுடனும், சேர்க்கைகளுடனும் மீண்டும் புத்தகமாக்கும் முயற்சி யில் ஈடுபட்டு வருவதாக அறிய முடிகின்றது. இந்த அடிப் படையில் இவரின் துணிச்சலைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
24 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 12)

சந்திரகௌரி சிவபாலன்
தனது பெயரின் முதலெழுத்தான 'கௌ' வையும், தனது அன்புக் கணவர் சிவபாலனின் பெயரில் முதலெழுத்தான ‘சி’ யையும் இணைத்து “கெளசி’ எனும் புனைபெயரில் புலம்பெயர் நாட்டில் இவர் ஆக்கங்களைப் படைத்து வருகின்றார். இலக்கண நயத்துடன் இலக்கியம் படைத்து வரும் இவரின் கவிதைகளுள் பொறிக்கவிதைகள் குறிப்பிடத்தக்கவை. ஒரு குறிப்பிட்டசொல்லை வைத்துக் கொண்டு அச்சொல் புலப்படுத்தும் பல கருத்துக்களுக் கிணங்க இவர் கவிதை படைக்கும் உத்தி சிந்தனையைத் தூண்டக் கூடியது. உதாரணத்துக்காக ஒரு கவிதையைத் தந்துள்ளேன்.
சீலம் சிலமும் சிலமும் கொண்டு வாழ்வில் சிலம் செய்து வாழ்வதே சீலம் - அவர் சிலம் கொண்டு சிலம் பெறாது சிலம் வாழ்வில் காண்டார்.
பொருள்:-
நல்லொழுக்கமும், நல்லறிவும் கொண்டு வாழ்வில் நல்லறம் செய்து வாழ்வதே ஒருவருக்கு அழகெனப்படுவது. அவர் நல்லுணர்வு பெற்று வாழ்வில் தண்டனை பெறாது வரலாறு காண்பார்.
நல்லொழுக்கம் நல்லறிவு அறD
99(35 நல்லுணர்வு தணடனை வரலாறு
கெளசியின் இத்தகைய கவிதைகளும், இதனையொத்த கவிதைகளும் ஜெர்மனியில் இருந்து வெளிவரும் ‘மண்' சஞ்சிகையுட்பட இதர சஞ்சிகைகளிலும் பிரசுரமாகி வருகின்றன. அதேபோல இலண்டன் தமிழ் வானொலியில் இவர் தரமான
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புன்னியாமீன் 25

Page 19
சந்திரகௌரி சிவபாலன்
இலக்கியங்களைப் படைத்து வருகின்றார். நூற்றுக்கும் மேற்பட்ட தொடர் இலக்கிய ஆக்கங்கள் இதுவரை ஒலிபரப்பாகியுள்ளன. இவரின் தமிழ் இலக்கண, இலக்கியப் புலமையை பறைசாற்றி வரும் இக்கட்டுரைத் தொடரில் இருந்து ஒரு பகுதியை கீழே தந்துள்ளேன்.
.கருவிழி மறைக்க, இமையொன்று திரையிட நாளென்ற திரைப்படம் முடிவடைகிறது. நீண்ட ஓய்வு தேடினும் சில மணிநேரமாவது இறந்து மீண்டும் பிறப்பெடுக்கும் உயிரோட்டம். படபடவென்று செக்கண்களைச் செலுத்திக் கொண்டிருக்கும் கடிகாரமும் உண்மையான ஊழியனாய் மீண்டும் ராதிகா, உலகில் சஞ்சரிக்க உலுப்பி விட்டது. அவள் உணர்வுகளை, திரையகற்றிச் சாரளத்தை மெல் லத் திறந்தாள் சத்திரத்து வாசல் பிச்சைக்காரனைப்போல் புகுபுகுவெண்று உள்நுழைந்து சில்லிட்ட தென்றல் காற்று மனதுக்கு இதமான உணர்வை உணர்த்தியது. செய் தொழில் முடித்துத்தன் தொழில் தொடங்க வீட்டைவிட் டுப் படியிறங்கினாள். சூரியனைக் கட்டிப் போட்டிருந்த இருள் தன்பிடியை மெல்லமெல்ல தளர்த்தியது.
ராதிகா, அவசர அவசரமாகப் பேருந்து நிலையத்தை அடைந்தாள். சத்தமின்றி அருகே ஊர்ந்து வந்த பேருந்து தரித்து நின்று வாசலைத் தாராளமாகத் திறந்து விட்டது. குபுகுபுவென்று உள்நுழைந்த எறும்புக்கூட்டத் தினுள் நுழைந்தவளுக்கு இருக்கை சந்தர்ப்பவசமாய் இடந்தந்தது. தண்முன்னே அமர்ந்திருந்த இரு பருவக் குழந்தைகளின் முகத்தில் பட்டுத்தெறித்த அவள் பார்வை மீண்டும் சென்று அதில் ஒரு பளிங்குச் சிற்பத்தை விட்ட கல முடியா வண்ணம் அப்பிக் கொண்டது. தேநீருக்குள் விழுந்த சீனி போல் கரைந்து போனாள் புன்னகை புரி யும் பாங்கில் புதியவள் முகத்தில் அந்நியோன்யம் நாடினாள் சிறகடிக்கும் இமையினுள் கைப்படாத சித்திரம், சிற்பி வடிக்காத சிலை, ஆயிரம் கண்களை வசப்படுத்தும் அற்புத உடல்வண்ணம். அவள் தாயார் தங்கபஸ்பம் உண்டாளோ! கலர்கலர் மரக்கறிகளைக் கரைத்துக் குடித் 26 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 12)

சந்திரகௌரி சிவபாலன்
தாளோ! பிரம்மன் சிருஷ்டிப்பில் நேரம் ஒதுக்கியதும் இவளுக்குத்தானோ! இவ்வாறெல்லாம் மனதில் சிந்தனை கள் ராதிகாவின் முளையில் முற்றுகையிட்டுக் கொண்டி ருந்தன.
தான் எழுத்துத்துறையில் ஈடுபடக் காரணகர்த்தாவாக இருந்தவர் என்ற அடிப்படையில் வித்துவான் எம்.எக்ஸ்.சி. நட ராஜா அவர்களை அன்புடன் நினைவுகூர்ந்து வரும் கெளசி புலம்பெயர்ந்த பின் ஊடகங்களுக்கான ஆக்கங்களையும் படைப்ப தற்கான ஊக்கத்தை ஏற்படுத்தியவர்களாக திரு. பவானந்தராஜா குடும்பத்தினருக்கும், இலண்டன் தமிழ் வானொலிக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்.
2008ஆம் ஆண்டில் இவரின் இலக்கியப் படைப்புக்கள் அடங்கிய சில நூல்கள் வெளிவரும் என எதிர்பார்க்க முடியும்.
இவரின் மகள் செல்வி மெனுாஷாவும் ஒரு வளர்ந்துவரும் எழுத்தாளராவார். மெனுஷாவின் கவிதை, கட்டுரை போன்ற தமிழ் ஆக்கங்கள் ‘மண்', 'தமிழ்நாதம் ஆகிய சஞ்சிகைகளிலும், இலண்டன் தமிழ் வானொலியிலும் இடம்பெற்று வருகின்றன.
இவரின் முகவரி;- -
Mrs.C.Gowry Berg Str - 342 42651 Solingen Germany. E-mail. c.gowry (a) yahoo.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் a2) : கலாபூஷணம் புன்னியாமீன் 27

Page 20
சாந்தி முஹியித்தின்
சாந்தி முஹியித்தின்
பதிவு 289
எழுத்துத்துறை
கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் காத்தான்குடி 165 கிராம சேவகர் பிரிவில் வசித்துவரும் அகமதுலெவ்வை சாந்தி முஹியித்தீன் அவர்கள் ‘பாவலர்’, ‘காத்தான்குடிக் கவிராயர்’, ‘ஷா’, ‘சாஅதி’ ஆகிய பெயர்களில் எழுதிவரும் ஒரு சிரேஷ்ட கவிஞரும், எழுத்தாளரு LDIT6JTJ.
ஆயிரத்துத் தொழாயிரத்து நாற்பத்து இரண்டாம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்பதாம் திகதி முகம்மது மீராசாகிபு அகமது லெவ்வை என்ற இயற்பெயரைக் கொண்ட சாந்தி முஹியித்தீன், முகம்மது மீராசாகிபு, கதீஜா உம்மா தம்பதியினரின் புதல்வராக மட் / காத்தான்குடியில் பிறந்தார். இவர் தமது ஆரம்பக் கல்வியை மட் /காத்தான்குடி மெத்தைப் பள்ளி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை காத்தான்குடி மத்திய மகாவித்தியாலயத்திலும் கற்றார். இவர் தனது தந்தையை இளமைக் காலத்தில் இழந்துவிட்டதாலும், இளமைக் காலத்தில்
"28 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 12)
 

சாந்தி முஹியித்தீன்
இவரின் பொருளாதார நிலை திருப்திகரமான முறையில் இன்மை காரணமாகவும் தொடர்ந்தும் உயர்கல்வியைப் பெற முடியாது போனமை இவரது துர்ப்பாக்கியமே! பாடசாலைக் கல்வியில் உயர முடியாவிட்டாலும் தன் அயராது முயற்சியால், தமிழ் மீது கொண்டபற்றால் இவர் இன்று உயர்ந்து விளங்குவதுடன், மட்டக் களப்பு மாவட்டத்தில் வாழும் ஆற்றல் மிகு சிந்தனையாளர்களில் ஒருவராகவும் கருதப்பட்டு வருகின்றார். *
1960ஆம் ஆண்டு கிழக்கு மாகாணப் பேச்சுப் போட்டியில் 1ஆம் இடத்தைப் பெற்ற இவர், சிறந்த பேச்சாளராவார். இவரது சரளமான பேச்சாற்றலுக்காக 1961ஆம் ஆண்டு ‘நாவலர் எம்.ஐ. தாவுத்ஷா அவர்களது தலைமையில் தமிழ்நாடு திருப்பூர் முகையதின் அவர்கள் கலந்துகொண்ட மீலாது விழாவில் இவருக்கு "சாந்தி முஹியித்தீன்” என்ற சிறப்புப் பட்டம் வழங்கப்பட்டது. அன்றிலிருந்து இவர் சாந்தி முஹியித்தீன் என்ற பெயரில் பிரபல்யமானார்.
சாந்தி முஹியித்தினுடைய முதலாவது கவிதை 1409.1963 இல் வீரகேசரி 'இஸ்லாமிய உலக மலரி'ல் “வெண்ணிலாவே” என்ற தலைப்பில் வெளிவந்தது. அன்று முதல் தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, தினக்குரல், சுடரொளி, மித்திரன், நவமணி ஆகிய தேசியப் பத்திரிகைகளிலும், ஏனைய சிறு பத்திரிகைகள், சஞ்சிகை, பிரதேச கலாசார மலர்கள் போன்றவைகளிலும், பல இந்தியச் சஞ்சிகைகளிலும் கவிதை, கதை, ஆய்வுக் கட்டுரைகள் போன்ற வற்றை எழுதி வருகின்றார். இவர் இதுவரை 500க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 12 சிறுகதைகளையும், 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நாவலர் தாவுத்ஷா, பாவலர் சாந்தி முஹியித்தீன் ஆகிய இருவரும் இணைந்து காத்தான்குடியில் நவ இலக்கிய மன்றத்தை 1959ஆம் ஆண்டு(0709.1959) ஸ்தாபித்து இலக்கியப்பணி புரியத் தொடங்கி னர். இப்பணியை 49 ஆண்டுகளாக பாவலர் செய்து வருகின்றார். நவ இலக்கிய மன்றம் நடாத்திய பயிற்சி வகுப்புக்கள் மூலம் நாடறிந்த கவிஞர்கள், கலைஞர்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள் பலர் உருவாகியுள்ளார்கள். (வர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புண்ணியாமினர் 29

Page 21
சாந்தி முஹியித்தீன்
12க்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டு, 20க்கு மேற்பட்ட கலை இலக்கிய கர்த்தாக்களைக் கெளரவித்து, 40க்கு மேற்பட்ட கவியரங்கு, பட்டிமன்றம் போன்ற இலக்கிய அரங்குகளை நடத்தி தொடர்ந்து செயற்பட்டுவரும் இம்மன்றத்தின் வழிகாட்டியாகவும், இன்றையத் தலைவராகவும் செயற்படுபவர் பாவலரே!
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவையின் செயலாளராகவும், "பாவலர் பண்ணை’யின் காவலராகவும் செயற் பட்டுவரும் சாந்தி முஹியித்தீன் பரவலாக 50க்கு மேற்பட்ட கவியரங்குகளுக்குத் தலைமைத் தாங்கியுள்ளார். கவியரங்குக ளுக்கு தலைமைத் தாங்கி அதனைச் சிறப்பாக நடாத்தும் விரல் விட்டு எண்ணக்கூடிய நம் நாட்டுக் கவிஞர்களில் பாவலர் சாந்தி முஹியித்தின் ஒருவராவார். பாவலரது ஆழமான இலக்கிய அறிவை இவரது பட்டிமன்ற விவாதங்களில் கண்டு கொள்ளலாம். மீலாது கவியரங்குகள் முதல் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட் டுக் கவியரங்குகள் வரை பங்கு கொண்டு சிறப்பித்தவர் என்பதுடன், தொடர்ந்தும் அரங்குகளில் பங்கேற்று வருகின்றார். −
காத்தான்குடி நவ இலக்கியமன்றம் 1962களில் வெளியிட்ட “இலக்கிய இதழ்’ கையெழுத்துப் பத்திரிகை முதல் பாவலர் பண்ணை வெளியிட்ட ‘பா’ என்னும் கவிதைப் பத்திரிகை வரை பல பத்திரிகைகளின் ஆசிரியராக, ஆலோசகராக செயற்பட்டுள் ளார். கவிஞருடைய கவிதை வளத்தை கருத்துற்ற ‘நவமணி இலக்கியப் பீடம் இவருக்கு 01.10.2000ல் 'பாவலர்’ என்ற பட்டத்தை சூட்டியது.
சாந்தி முஹியத்தின் இலக்கியத்தில் பல துறைகளிலும்
பங்களிப்புகளைச் செய்துள்ள போதிலும்கூட இதுவரை இவரது பெயரில் இவரது சுய புத்தகமொன்று வெளிவரவில்லையென்பது மிகப் பெரும் குறையாக இருந்து வருகின்றது. இருப்பினும் இவர் நான்கு நூல்களை நூலுருப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சியைத் தருகின்றது. அவையாவன:
1. காரணக் குருசி
2. பதச் சோறு
3. அரங்கமும், இரங்கலும்
4. படித்தேன், ஒரு படித்தேன் 30 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 12)

சாந்தி முஹியித்தின் ஒரு எழுத்தாளன், கவிஞனைப் பொறுத்தமட்டில் ஒரு சுய புத்தகம் வெளிவரும் போதே அது ஆவணமாகின்றது. இந்த அடிப்படையில் எதிர்காலத்தில் பாவலரின் படைப்புக்கள்அனைத்தும் ஆவணமாகுமென எதிர்பார்க்கலாம்.
கலைத்துறை ஈடுபாடு
கலைத்துறையைப் பொறுத்தமட்டில் பாவலர் பல நாடகங் களில் பங்கேற்று தனது கலைத்திறமையை வெளிக்காட்டியுள்ளார். காத்தான்குடி இக்பால் சன சமூக நிலையக் கட்டட நிதிக்காக சட்டத்தரணி டி.எல்.கே. முஹம்மத் அவர்களினால் எழுதி தயாரிக்கப் பட்ட ‘நிம்மதி எங்கே?' என்ற நாடகம் இவருடைய நடிப்புத்திறனை அடையாளப்படுத்திய முதல் நாடகமாகும். 12 காட்சிகளைக் கொண்ட மேற்படி நாடகத்தில் 10க் காட்சிகளில் தோன்றி சக்கை போடு போட்டதை மக்கள் இன்றும் நினைவில் கொள்கின்றனர். இது தவிர “நீதியே நீ கேள்”, “பரிகாரியார் வீட்டிலே”, “எனக்கும் உனக்கும்”, “அந்த நாள் ஞாபகம்’ போன்ற பல நாடகங்களிலும், நாடகச் சாயலைக் கொண்ட “கோடு கச்சேரி”, “நினைவின் நிழல்” போன்ற நிகழ்வுகளிலும் பங்கு கொண்டுள்ளார்.
முஸ்லிம்களின் கலாசார விழுமியங்களை அடிப்படையாக வைத்து அவ்வப்போது தோன்றும் சமூக அனாச்சாரங்களைச் சாடி பல வில்லுப்பாட்டுக் கச்சேரிகளையும் தயாரித்தவர் பாவலர். இவரால் உருவாக்கி நெறிப்படுத்தப்பட்ட வில்லுப்பாட்டு அரங்குக ளில் “தரகர் தம்பிலெவ்வை”, “காவன்னாமூனா”, “என்கட தம்பிக்கு என்ற தெரியாது”, “பத்றுப் போர்”, “பால்காறப் பொண்ணையா’ போன்றவைகள் இன்னும் மக்கள் மத்தியில் பேசப்படுவதும் அதன் ஒலிப்பதிவு நாடாக்கள் இன்னும் ஒலித்துக் கொண்டிருப்பது சான்றுகளாகும்.
கோலாட்டம் தமிழ் முஸ்லிம் கிராமிய கலை இலக்கிய வழக்கில் கோலாட்டம் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. கோலாட்டம் பல சமூகத்தவர்கள் மத்தியிலுமிருந்து பாதுகாக்கப்பட்டு வருகின்ற அரும்பெரும் கலையாகும். இவை சமூகத்திற்கும், நாட்டிற்கும் தக்கவகையில் வேறுபட்டிருப்பதையும் நாம் காணக்கூடியதாகவுள்ளது.
(வர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புண்னியாமீன் 31

Page 22
சாந்தி முஹியித்தீன்
தமிழ் சகோதரர்களுக்கு மத்தியில் கும்மி, கோலாட்டம், வசந்தன், வில்லுப்பாட்டு, நாட்டுக்கூத்து ஆகியன கிராமியக் கலை வடிவங்களாகக் கருதப்படுவது போன்று முஸ்லிம்களிடமும் பக்கீர்பைத்து, நாட்டார் பாடல், களிகம்பு, சிலம்பு, சீனடி ஆகியன அவர்களது கலைகளாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவற்றுள் முஸ்லிம் மக்களது கிராமிய கலை வடிவங்களுள் ஒன்றான களிகம்பு இன்று மறைந்து வரும் ஒரு கலையாகவுள்ளது.
நமது அண்டை நாடான இந்தியாவின் சகல மாகாணங்களி லும் கிராமியக் கோலாட்ட வடிவங்கள் உரிய இடத்தை வகிக்கின் றன. தமிழ் நாட்டில் கோலாட்டங்கள் நான்கு வகையாக ஆடப்படுகி றது. அவையாவன பின்னல் கோலாட்டம், வைந்தானைக் கோலாட் டம், அயிந்தரை, களியல் ஆகியனவாகும். வைந்தானைக் கோலாட் டமும், களியலும் ஆண்கள் பங்கு கொள்கின்ற ஆட்டங்களாகும். கர்நாடக மாநிலத்தில் கோலாட்டம் “சித்தல்தூர்க்” என்றும் ராஜஸ்த்தானில் “டாண்டியராஸ்” என்றும் செளராஷ்டிரத்தில் “பாண்டியா” என்றும் கேரளத்தில் “கோல்களி” என்றும் அழைக் கப்படுகிறது. “களியல்” என்றால் மலையாளத்தில் ஆட்டம் என்பது பொருள். “கோல்” தடியையும் “களி” ஆட்டத்தையும் “கோல்களி? என்ற வார்த்தை குறிப்பிடுகின்றது. w
இலங்கை முஸ்லிம்களின் கலாசார கலை இலக்கிய
பாரம்பரிய வடிவங்களில் கோலாட்டம் மிக முக்கியமானது. இக்கலை நெடுங்காலமாக முஸ்லிம்களால் பாதுகாத்து வருகின்ற ஓர் கிராமியக் கலையாகும். தற்பொழுது இக்கலை நமது நாட்டில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளான மன்னார், மட்டக்களப்பு புத்தளம், கற்பிட்டி, குருனாகல், பேருவலை போன்ற இடங்களில்
ஆங்காங்கே வழக்கத்தில் உள்ளது.
முஸ்லிம்கள் கோலாட்டத்தை கம்படி, பொல்லடி, களிகம்பு, களிக்கம்படி என்று பலவாறாக அழைத்தாலும் “களிகம்பு” என்றே அதிகமாகப் பேசப்படுகின்றது. இலங்கை முஸ்லிம்களின் களிகம்புக் கலை இந்தியாவிலுள்ள களியல் ஆட்டத்தையும், மலையாளத் திலுள்ள கோல்களி ஆட்டத்தையும் உள்ளடக்கியதாகும். இதனை
32 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 12)

சாந்தி முஹியித்தீன் வைத்து ஆராயும்போது முஸ்லிம்களது களிகம்பு ஆட்டம் கேரள முஸ்லிம்களிடமிருந்து தோற்றம் பெற்றிருக்கலாம்.
இதில் எட்டுப் பேர் முதல் முப்பத்திரண்டு பேர் வரை ஆடுவர். கேரளத்தில் இதற்கு அதிகமானவர்கள் சேர்ந்து ஆடுவ துண்டு. இவ்வாட்டம் வட்டவடிவமாக அமைவதினால் அதிகமான ஆட்டக்காரர்களைச் சேர்த்து ஆட முடிகின்றது. அதுமாத்திரமல் லாது தனிமையான அமைதியையும் ஏற்படுத்துகின்றது. - .
சாஸ்திரிய முறை ஒன்று இல்லாததால் இதன் ஆட்டவடி வங்கள் இதனை உருவகப்படுத்துகின்ற (குரு) அண்ணாவிமார்க ளின் எண்ணத்திற்கு ஏற்றவாறு மாறுபடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஆகையால் ஒரே விதமான ஆட்டத்தைப் பழகியவர்கள் ஒன்று சேர்ந்து ஆடும் போது சீர்-அடி-அசை-கால்மானம் எதுவும் பிழைக்காமல் சிறப்பாக ஆடலாம்.
இக்கலையை 'பாவலர்: முறையாகத் துறைபோகப் பயின் றுள்ளதுடன், அதனைக் கற்றுக் கொடுக்கும் ஆற்றல் படைத்த ஒரு வாத்தியாராகவும் திகழ்கின்றார். களிகம்பு ஆட்டக்கலையை ஆராய்ந்து பல கட்டுரைகள் எழுதியும், விரிவுரை வகுப்புக்கள் நடாத்தியும் அதன் சிறப்பை எடுத்துப் பேசிவரும் பாவலர் இத்துறை சார்ந்த ஆய்வாளர்களுள் முக்கியமானவர். இஸ்லாமிய இலக்கிய ஆய்வுகள் தேடல் முயற்சிகளில் ஆர்வமுள்ளவர்கள் பாவலர் சாந்தி முஹியித்தினுடைய தொடர்பை எப்பொழுதும் வைத்துக் கொள்வதற்குக் காரணம் இஸ்லாமிய இலக்கியம் பற்றிய ஆழ்ந் தறிவுப் புலமையும், ஞாபக சக்தியுமாகும். . .
சாந்திமுஹியித்தின் அவர்களின் மேற்குறித்த சேவைகளைக் கருத்திற்கொண்டு பல்வேறு இலக்கிய அமைப்புகள் இவருக்கு 'பாவலர்',“இலக்கியச்சுடர்”, “இலக்கிய வித்தகர்”, “கலாஜோதி”, "இலக்கியக் காவலர் ஆகிய பட்டங்களை வழங்கி கெளரவித்துள் ளன. அதேநேரம் 01.102001ல் வடகிழக்கு மாகாண கல்வி கலாசார விளையாட்டுத்துறை அமைச்சினால் ஆளுநர் விருதும் 2002ம் ஆண்டு இலங்கை அரசினால் கலாபூஷணம் விருதும் வழங்கப் Ull-gil.
(வர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புண்ணியாமின் 33

Page 23
சாந்தி முஹியித்தீன்
மட்டக்களப்பு மாவட்ட கலாசாரப் பேரவை, காத்தான்குடி பிரதேச கலாசாரப் பேரவை, நவஇலக்கிய மன்றம், பாவலர் பண்ணை, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவை போன்ற பல இலக்கிய அமைப்புகளோடு இணைந்து செயற்படும் சாந்தி முஹியித்தீன் அவர்களின் அன்புப்பாரியாரின் பெயர் செயினப் ஆகும். பாவலர் சாந்திமுஹியித்தீன் செயினப் தம்பதிகளுக்கு சமீம், சாதாத், சாதிக், சாபித், சாபிர் என ஐந்து புதல்வர்கள் உள்ளனர். இவர்களில் நால்வர் பொறியியலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் முகவரி:
PAAVALAR SHANTHI MOHIDEEN PAAVALARPANNA. PROCTOR ST,
KATTANIKUD - 2
34 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 12)

கிச்சிலான் அமதுர் றஹீம்
கிச்சிலான் அமதுர் றஹீம்
கலைத்துறை
மேல் மாகாணம், கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு தேர்தல் தொகுதி, 'தளுபொத்த கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த திருமதி கிச்சிலான் அமதுர் றஹீம் அவர்கள் எழுத்து, ஊடகம், கலை ஆகிய முத்துறையிலும் பங்களிப்பினை நல்கிவரும் மலாய் இனத்தைச் சேர்ந்த மூத்த முஸ்லிம் பெண் எழுத்தாளரும், கலைஞருமாவார்.
1945ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி துவான் தர்மா கிச்சிலான், ஸ்ரோதி டிவங்சோ அஜ்மஈன் அப்பாய் ரெலியா பீபீ தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியாகப் பிறந்த அமதுர் றஹீம் நீர்கொழும்பு அல்ஹிலால் மத்திய கல்லூரி, அளுத்கமை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவியாவார். கல்லூரி காலத்திலிருந்தே இலக்கிய ஆர்வமும், கலையுணர்வுகளும் இவரிடத்தில் இயல்பாகவே வெளிப்பட்டன. இவற்றை இனங்கண்ட கல்லூரி ஆசான்கள் சரிவர நெறிப்படுத்தி யமையினாலேயே பிற்காலத்தில் அமதுர் றஹீமால் ஒரு தாரகையாக பிரகாசிக்க முடிந்தது.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புன்னியாமீன் 35

Page 24
கிச்சிலான் அமதுர் றஹீம்
1958 ஆம் ஆண்டில் இவர் பாடசாலை மாணவியாக இருக்கும் போது ‘வெளிச்சம் எனும் தலைப்பில் இவரின் கன்னிக் கவிதை கல்லூரி சஞ்சிகையில் இடம்பெற்றது. பின்பு அதேயாண் டில் பாடசாலை இலக்கியமன்றம் இவருக்கு முதற் கவிதை மேடையை அமைத்துக் கொடுத்தது. 1965ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை கலை இலக்கியமன்றம் இவரது கலை இலக்கியத் திறனை எடைபோட்டு முதல் இலக்கியப் பரிசினை வழங்கியது. பாடுவதிலும், பேச்சாற்றலிலும் ஆற்றல் கொண்டி ருந்த இவர் 1972ஆம் ஆண்டில் பொதுமேடைகளில் தனது திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்தார். இச்சந்தர்ப்பத்தினை 'கல்பனா இசைக்குழு' இவருக்கு வழங்கியது.
இதுவரை இருபத்து மூன்று சிறுகதைகளையும், இருநூறுக்கும் மேற்பட்ட கவிதைகளையும், முன்னூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்கள், வானொலிப் பிரதியாக்கங்கள், கட்டுரைக ளையும் எழுதியுள்ள கிச்சிலான் அமதுர் றஹீமின் முதல் வானொலி ஆக்கம் 1975இல் 'சமூகத்தில் முஸ்லிம் பெண்களின் பங்கு' எனும் தலைப்பில் இலங்கை வானொலியில் ஒலிபரப்பப் பட்டது. தொலைக்காட்சிக்கென இவரால் பிரதியாக்கம் செய்யப் பட்ட இசைநாடகம் ‘நீதி’ எனும் தலைப்பில் 1985ஆம் ஆண்டில் இலங்கை ரூபவாஹினியில் ஒளிபரப்பாகியது.
தமிழ்மொழியினைப் போலவே சிங்களமொழியிலும் மிகவும் தேர்ச்சிபெற்ற இவர் பெண்களின் நல உரிமைகள் சம்பந்தப்பட்டதும், சமூக உணர்வுமிக்கதுமான பல கட்டுரைகளை சிங்களப் பத்திரிகைகளில் எழுதியுள்ளார். இந்த அடிப்படையில் சிங்கள மொழியில் எழுதப்பட்ட இவரது முதலாவது ஆக்கம் 'சஹன' எனும் பத்திரிகையில் 1991இல் பிரசுரமானது. இதே யாண்டில் இவரால் எழுதி, தயாரிக்கப்பட்ட 'வினிச்ஷய' எனும் சிங்கள இசைநாடகம் இலங்கை ரூபாவாஹினியில் ஒளிபரப்பாகி நேயர்களின் வரவேற்பினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
தற்போது வலது குறைந்த நிலையிலுள்ள இவர் ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் (முதன்மொழி தமிழ்) ஆவார். மாணவப் பருவத்தலிருந்தே கலை இலக்கியமன்றப் பொறுப்பு
36எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 12)

கிச்சிலான் அமதுர் றஹீம்
களோடு சிரேஷ்ட மாணவத் தலைவியாகவுமிருந்து கையெழுத் துப் பத்திரிகைகளையும் நடத்தியுள்ளார். ஆசிரிய உலகிலும், பின்னும் கலைவிழாக்கள், சமயவிழாக்கள், இலக்கிய மன்றங்கள், பத்திரிகை, வானொலி, ரூபாவாஹினி என்று இவரின் கலை, இலக்கியப் பணி தொடர்ந்தது. வானொலி பிரதி எழுதுதல், சிறுகதையாக்கம், கவிதை, கட்டுரை, உரையாடல்கள், நாடகங்கள் எழுதுதல், வானொலி தொலைக்காட்சி நாடகங்கள் நடித்தல், நடிப்பித்தல், பேச்சு, நிகழ்ச்சிகள் அமைப்பு, பெருநாள் விசேட நிகழ்ச்சிகள் தயாரித்தல், பாடல், பாடலாக்கம், கிராமியப் பாடல் கள் என்ற அடிப்படையில் இவரின் ஆற்றல்கள் வெளிப்படுத்தப்
L60.
கல்வி வெளியீட்டு நூல்கள் (கையெழுத்துப் பிரதிகள்) ஆக்கியும் அவை அச்சேற முதலே பாடவிதானத் திணைக்களத் திலேயே தொலைத்து விட்டிருந்தனராம். வேறு நகல் வைத்திருக் கவில்லை. ஆதலால் அப்பகுதிக்குரிய பொறுப்பதிகாரியாயிருந்த கலாநிதி செல்வி கமலாபீரிஸ் அவர்கள் ஒரு சான்றிதழை வழங்கியுள்ளார். இச்சான்றிதழ்க் கடிதம் இவரின் இப்பணியினை உறுதிப்படுத்துகின்றது. மேலும் இவரின் அனேகமான பிரசுரமான ஆக்கங்களும், ஒலிபரப்பான ஆக்கங்களின் பிரதிகளும் முக்கிய ஆவணங்களும் வாசஸ்தான மாற்றம், வெள்ளம் போன்ற கார ணங்களினால் அழிந்து விட்டதை எண்ணி மிகவும் ஆதங்கப் படுகின்றார். இருப்பினும் இவரது சமகாலத்து வானொலிக் கலைஞர்களிடமும், மூத்த பத்திரிகையாளர்களிடமும் கேட்ட போது அவற்றை உறுதிப்படுத்தக் கூடியதாக இருந்தன. அதே நேரத்தில் இவரது பல்துறை ஈடுபாடுகளை நிருபிக்கக்கூடிய வகையில் 1959ம் ஆண்டு முதல் இன்று வரை சம்பந்தப்பட்ட அதிபர்கள், சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகள், நேயர்கள் அனுப்பிவைத்திருந்த கடிதப்பிரதிகளையும், இவரது தொழில்சார் நியமனங்கள் குறித்த கடிதப்பிரதிகளையும் பார்க்கும் போது தகவல்களின் உண்மை நிலையைக் காணமுடிந்தது.
இவர் இசைக்கலை, கிராமிய நடனம், வில்லுப்பாட்டு, கிராமியப்பாடல், சாரணியம், சமூகசேவை, ஒவியம், சிற்பம், கைப்பணித்துறை, கலை, தையல், உடையமைத்தல், மெழுகுச் சிற்பம், சமையற்கலை, மிமிக்ரி (பல்குரலில் ஒலித்தல்) கலை, விளையாட்டுத்துறை இவை அனைத்திலும் கணிசமான பங்களிப்
(வர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புன்னியாமீன் 37

Page 25
கிச்சிலாண் அமதுர் றஹீம் பினை வழங்கியுள்ளார். வட்டார, மாவட்ட பாடசாலை விளையாட் டுப் போட்டிகளிலும், ஆசிரியப் பயிற்சிக்கல்லூரியில் உடற்பயிற்சி, கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம் ஆகிய குழு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பல வெற்றிகளையீட்டியுள்ளார். ஆசிரியராக பணிபு ரிந்த காலத்தில் உப அதிபராகவும், உடற்கல்வி போதனாசிரி யராகவும், NCGE/HNCE தராதரப் பத்திரப் பரீட்சையின் போது உடற்கல்வி பரிசோதகராகவும் தரம்1 தொடக்கம்5 வரை ஆரம் பக் கல்வி தொடர்பான ஆசிரிய ஆலோசகராகவும், 1978 முதல்
1990 வரை க.பொ.த (சாதாரண தர) முதன்மைமொழி தமிழ் ஆசிரிய ஆலோசகராகவும், மதிப்பீட்டு பரீட்சகராகவும் தனது சேவையை வழங்கியுள்ளார்.
அழகியற் கல்வி தொடர்பாக கொழும்பு மாவட்டத்தில் மாத்திரமன்றி பல்வேறு மாவட்டங்களிலும் பல்வேறு கருத்தரங்கு களில் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு வழிகாட்டியுள்ளதுடன், அவர்களின் பிரச்சினைகளையும் அழகிய முறையில் தீர்த்து வைத்துள்ளார். 1980இல் கொழும்புத்துறை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் அகில இலங்கை ஆசிரிய ஆலோசகர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கின் போது 'மிமிக்ரி' நிகழ்வொன்றைச் செய்து அனைவரையும் மகிழ்வித்தமைக்கு யாழ். மாவட்ட கல்வி அத்தியட்சகர் ஈ. மாணிக்க வாசகர் பாராட்டியதை இன்றும் நினைவுகூர்கின்றார். இதன் பின்னணியிலேயே இவர் 'மிமிக்ரி கலையினை மேலும் நுணுக்கமாக சுயமாகக் கற்கலானார்.
'மிமிக்ரி' எனும் கலை இலகுவானதொன்றல்ல. ஒரு நடிகரைப் போல அல்லது ஒரு அரசியல்வாதியைப் போல அல்லது ஒரு பிரபல்யமானவரைப் போல அவரின் குரலால் பேசுவதும், அவரின் அபிநயங்களை வெளிப்படுத்துவதும் அனை வராலும் புரிய முடியாததொன்று. அதேநேரம் 1986ஆம் ஆண்டில் இவர் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை இளைஞர் இதயத் தில் 9 பாத்திரங்கள் கொண்ட பத்து நிமிட நாடகத்தினை தனி யொருவராக குரல்கொடுத்து நடித்தமை இவரின் திறமைக்கு சான்றாக அமைந்துள்ளது. குறிப்பாக நாடகத்தில் இடம்பெற்ற ஒன்பது பாத்திரங்களுக்கும் இவரே மிமிக்ரி முறையில் குரல் கொடுத்தமையை வானொலி முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் உட்பட பலரின் பாராட்டுக்கும் உரித்தானார். 38 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 12)

கிச்சிலான் அமதுர் றஹீம் இவரின் வானொலி நாடகத்துறையில் இந்நாடகம் ஒரு திருப்புமுனையை அமைத்தது என்றால் மிகையாகாது. வானொலி யில் மாதர் மஜ்லிஸ், இளைஞர் இதயம், இல்முல் இஸ்லாம் ஆகிய நிகழ்ச்சிகளில் குரல் கொடுக்கும் கலைஞராக கடமையாற் றிய இவர் பல நேர்காணல்கள், உரையாடல்களிலும், பெருநாள் விசேட உரைச்சித்திரங்களிலும் பங்கேற்றுள்ளார். இவரால் நடிப்பில் பங்கேற்ற நாடகங்களுள் ‘ஒரு ராகம் சுருதி கலைகிறது, ‘அவர்கள் நடிக்கிறார்கள்', 'மகனே எனக்கா இப்படி செய்தாய்', 'வீடு, ‘உண் மைகள் உணரப்படும் போது, இரத்தத்தில் வந்த சொந்தங்கள் போன்ற நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை.
1974இல் பெண் சாரணிய 37வது குழுத்தலைவியாகக் கடமையாற்றியுள்ளார். 1965இல் அரபு எழுத்தணிக்காக வெண் கலப்பரிசிலையும், சீலை ஓவியந்தீட்டலுக்காக தேசிய விருதினை யும் (லயன்ஸ் கழகத்திலிருந்து) பெற்றிருக்கிறார். −
எல்லாவகையான திறமைகளும், ஆற்றல்களும் ஒரே இடத்தில் அமையப் பெறுவது இறைவனின் அபரிமிதமான அருளேயன்றி வேறில்லை என்று கூறிக்கொள்ளும் இவர் எல்லாத் துறைகளிலும் ஈடுபாடு காட்டிப் பரந்து அகன்று போஷிக்கப்பட்ட தால் ஒரு துறையில் வளர்ந்து உயரும் வாய்ப்பினை இழந் துள்ளதாகவும் தனது அனுபவத்தினைக் கூறுகிறார்.
1963.04.01இல் ஆசிரியையான இவர் 1990.05.15ல் ஓய்வு பெற்றார். எல்லாச் சவால்களுக்கும், பிரச்சினைகளுக்கும் துணி வுடன் முகங்கொடுக்கும் இவருக்கு ஓய்வுபெற்ற பின் ஆன்ம சுத்தி, உளதிருப்தி, அமைதி தேவைப்பட்டவராய் பாத்திமா நலன்புரிச்சங்கம் எனும் அமைப்பில் பொறுப்பாளராக தன்னை அர்ப்பணித்து சேவை புரிந்து கொண்டிருந்த காலகட்டத்தில் ஒருநாள் இரவு பாரிசவாதத்தினால் திடீரென படுக்கையிலேயே செயலிழந்துவிட்டார்.
தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக இவர் மேற்கொண்ட புனருத்தாபன பெளதீக சிகிச்சையின் மூலமாகவும், இறைவனின் அருளினாலும் இடதுபக்க இயக்கம் மீளவே தனது வழமையான வேலைகளை சிறுகச் சிறுக செய்ய இடது கையைப் பழக்கிக் கொண்டார். (இவர் ஏற்கெனவே வலது கையால் எழுதியவர்)
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் பண்னியாமின் 39

Page 26
கிச்சிலான் அமதுர் றஹீம்
சிகிச்சை பெற்றுவந்த காலகட்டங்களில் புனருத்தாபன ஆஸ்பத்திரியில் வலது குறைந்தவர்களுக்கிடையே நடைபெற்ற போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ‘சோலோ’ நாடகத்தில் முதலி டத்தையும், பாடுவதில் இரண்டாமிடத்தையும் பெற்றிருக்கிறார். வலங்குறைந்த இடது கையைப் பயன்படுத்தி இவரால் வரையப் பட்ட சித்திரம் மேற்படி ஆஸ்பத்திரி ஏழாவது வோர்டில் தற் போதும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இயற்கையான பாரிசவாதத்தால் இவர் பாதிக்கப்பட்ட போதிலும் கூட சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி இன்றும் இலக்கியப் பணியாற்றுகின்றார் என்றால் இவரின் மன உறுதியே மூலகாரணமாகும். தேகாரோக்கியமாக இருந்த காலத்தில் நிறை வேறாத ஒரு பணியினை இவர் தற்போது நிறைவேற்ற முனைந் திருப்பது உண்மையிலேயே பெருமைப்பட வேண்டிய ஒரு விடயம். இக்கட்டுரை எழுதப்படும் நேரத்தில் இவரின் கன்னிக் கவிதைத் தொகுதியான ‘கவிக்குழந்தை கணனியில் பதிக்கப்பட்டு புத்தக வடிவில் வெளிவர சகல ஆயத்தங்களையும் கண்டிருந்தது.
‘கவிக்குழந்தை கவிதைத்தொகுதியில் இவரால் எழுதப் பட்ட 61 கவிதைகள் இடம்பெற்றிருந்தன. 80 பக்கங்களைக் கொண்ட இந்நூலுக்கு ரூபாவாஹினி பணிப்பாளரும், அறிவிப்பாள ருமான ரஷிட்.எம். ஹபீழ், மற்றும் புர்கான் பீ. இப்திகார் ஆகி யோர் வாழ்த்துரைகளை வழங்கியிருந்தனர். அதேநேரம் அணிந் துரை வழங்கியுள்ள நீர்கொழும்பு சுல்தான் மரைக்கார் புலவரின் புத்திரர் எஸ்.எஸ்.ஹமீட் அவர்கள் ஒரு கசங்கிய மலரின் அவா’ எனும் தலைப்பில் எழுதியுள்ள கருத்துக்கள் நெஞ்சை நெகிழ்வடையச் செய்கின்றன.
இப்புத்தகத்தைத் தொடர்ந்து ‘பட்டதும் சுட்டதும், ‘சிந்தை
யில் சிந்தியவை’, ‘கவிக்குழந்தை - இரண்டாம் பாகம்’, ‘அனுப
வங்கள் ஆகிய புத்தகங்களை வெளியிடும் முயற்சியில் ஈடுபட் டுள்ளமை வரவேற்கத்தக்கதே.
எழுதுவதைத் தவிர இப்பொழுது இவரால் எதுவும் செய்ய முடிவதில்லை. தஜ்வீத் ஒதுங்கலையில் வளர்ந்தோர் பிரிவில் மாவட்ட ரீதியாக முதலிடத்தையும் அகில இலங்கையில் 3வது
40 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 12)

கிச்சிலான் அமதுர் றஹீம்
இடத்தையும் பெற்ற இவர் ஊரில் தன் நண்பிகளோடு சேர்ந்து “அஸ்ஸாலிஹாத்” எனும் முஸ்லிம் மாதர் நலன்புரி நட்புக் கழகம் என்றவொரு அமைப்பினைத் தோற்றுவித்துள்ளார்.
எவ்வளவு திறமைகள் ஆற்றல்கள் இருந்த போதும் அவற்றை முன்னெடுத்துச் செல்ல ஒரு முஸ்லிம் பெண் சில சமூக வரையறைகளைப் பேண வேண்டியவளாகிறாள். ‘நமக்கென்ற சரியான உறுதியான கலை இலக்கியக் கலாசாரக் கட்டமைப்பின்மையே இதற்குக் காரணம்' என்கிறார். பொதுவாக முஸ்லிம் பெண் கலைஞர்களை வாழ்த்தி அப்படியே அடிப்படுத்தி விடுவது, புதியவர்களைத் தோற்றுவிப்பதையும் வளரவிடுவதையும் தடுப்பது, உண்மையான திறமைகளைக் கண்டும் காணாதது போல் மறைத்து விடுவது போன்ற செயல்கள் எல்லாம் கலை யுலகின் புல்லுருவிகள்’ என்கிறார்.
இவரது குடும்பத்தில் தற்போது மூவரே. இவரும் மகன் றோஷான் தாரிக்கும், மகள் எம்.எஸ்.காமிலாவும் ஆவர்.
இவரது முகவரி;-
Mrs. Kitchilan Amathurraheem, 116/10 Ekamuthu Mawatha, Dalupotha, Negombo. Tel:- 031 2231599 031492.5157
இவர்கள் நம்மவர்கள் (பாகம் a2) : கலாபூஷணம் புண்னியாமின் 41

Page 27
வண. பிதா தமிழ்நேசன் அடிகளார்
வண. பிதா தமிழ்நேசன் அடிகளார்
பதிவு 291
எழுத்துத்துறை
வடமாகாணம், மன்னார் மாவட்டம், வன்னி தேர்தல் தொகுதி, மன்னார் பிரதேசசெயலாளர் பிரிவைச் சேர்ந்த 'முருங் கன்’ கிராம சேவகர் எல்லைக்குள் பிறந்த வண. பிதா பாவிலு கிறிஸ்து நேசரெட்னம் அடிகளார் அவர்கள் மன்னார் மறை மாவட்ட அருட்தந்தையும், தமிழ்மொழி மூலமாக எழுதிவரும் ஒரு எழுத்தாளரும், சுமார் ஏழு ஆண்டுகளுக்கு மேல் மன்னார் மறைமாவட்டத்தின் தமிழ் கத்தோலிக்க மாதப்பத்திரிகையான ‘மன்னா’ பத்திரிகையின் ஆசிரியருமாவார்.
ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபத்தொன்பதாம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் திகதி சந்தான் பாவிலு, சந்தாக்குட்டி தம்பதியினரின் புதல்வராக இம்மண்ணில் ஜனனித்த நேசரெட்னம் அவர்கள் முருங்கன் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி யையும், வரலாற்றுப் புகழ் வாய்ந்த யாழ்ப்பாணம் சம்பத்திரிசி யார் கல்லூரியில் உயர்தரக் கல்வியையும் முடித்துக் கொண் டார். தேகசுகம், வருமானம், பணம், பொருள், இன்பம், ஒய்வு எல்லாவற்றையும் துச்சமாய் மதித்து, சிலுவையின் பின்னால் சென்று மக்களுக்கு சேவை செய்பவர்களே கத்தோலிக்க மதத்
42 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுசி 12)
 

வண. பிதா தமிழ்நேசன் அடிகளார்
துறவிகள். 1986ஆம் ஆண்டில் யாழ். புனித மாட்டீனார் ஆரம்ப குருமடத்தில் இணைந்து தனது குருத்துவ உருவாக்கத்தை ஆரம்பித்தார். கண்டி அம்பிட்டிய தேசிய குருத்துவக் கல்லூரியில் மெய்யியல் கல்வியையும் B, Ph (Rome), யாழ்ப்பாணம் புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியில் இறையி யல் கல்வியையும் B. Th (Rome), நிறைவு செய்தார்.
மன்னார் மறைமாவட்டக் குருவாக 1997இல் திருநிலைப் படுத்தப்பட்ட இவர், வங்காலை புனித ஆனாள் ஆலயம் (19971998), “மன்னார் புனித செபஸ்தியார் பேராலயம் (1998-2000) ஆகிய இடங்களில் உதவிப் பங்குத்தந்தையாகவும், தலை மன்னார் புனித லோறன்சியார் ஆலயத்தின் பங்குத் தந்தையா கவும் (2000-2003) பணியாற்றினார். கடந்த ஐந்து ஆண்டுகளாக (2003 முதல்) மன்னார் மறைமாவட்டத்தின் மறைக்கல்வி, கல்வி, விவிலியப்பணிகள் ஆணைக்குழுவின் இயக்குனராகவும், 2006ஆம் ஆண்டிலிருந்து மன்னார் மறைமாவட்டத்தின் மறைத்தூதுப் பணி கள் ஆணைக் குழுவின் இயக்குனராகவும் பணியாற்றி வருகின் றார.
அருட்தந்தை பாவிலு கிறிஸ்து நேசரெட்னம் அவர்கள் தமிழ் எழுத்துத்துறையில் அருட்தந்தை ‘தமிழ்நேசன்’ எனும் பெயரில் நன்கு பரிச்சயமானவர். இவரின் கன்னி ஆக்கம் இலங் கையின் முதுபெரும் கத்தோலிக்க பத்திரிகையான ‘பாதுகாவலன் பத்திரிகையில் ‘அகதிகளை அரவணைப்பீர்’ எனும் தலைப்பில் 1986ஆம் ஆண்டு பிரசுரமானது. இதைத் தொடர்ந்து இன்றுவரை 12 சிறுகதைகளையும், 30 கவிதைகளையும், 46 கட்டுரைகளை யும் எழுதியுள்ள இவரின் இத்தகைய ஆக்கங்கள் பாதுகாவலன், மன்னா, தொண்டன், நான், இறையியல் கோலங்கள், புதிய உலகம், தாய், மல்லிகை, அன்புமயம் ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் மற்றும் தினகரன், வீரகேசரி போன்ற தேசிய பத்திரிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.
அடிகளாரின் கவிதைகளில் விழிப்புணர்வு, மனிதத்துவம், எழுத்தாக்கம், வரவேற்பு, சமயம், பொதுவிடயங்கள், சமகால நிலைப்பாடுகள் போன்றவற்றைக் காண முடிகின்றது. ‘நெருப்பின் நாக்குகள்’ எனும் கவிதையில் இவர் பின்வருமாறு குறிப்பிடு கின்றார்.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புன்னியாமீன் 43

Page 28
வண். பிதா தமிழ்நேசன் அடிகளார்
இலக்கியக் கடலில் மூழ்கி விடவல்ல. முத்துக் குளிக்கத் தான் எனது பேனா பிரயத்தனம் செய்கின்றது.
கடந்த 22 வருடங்களாக எழுதிவரும் தமிழ்நேசன் அடி களார் அதிகளவில் எழுதாவிட்டாலும் அவரால் எழுதப்பட்ட அனைத்துக் கவிதைகளும், சிறுகதைகளும், கட்டுரைகளும் முத்துக்களாகவே காணப்படுகின்றன. காலத்தின் தேவையுணர்ந்து மானிடத்துக்கும், மானிடநேயத்துக்கும் உணர்வூட்டும் ஆக்கங் களே அவை என்றால் மிகையாகாது. அடிகளார் இதுவரை இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
01) தண்ணிருக்குள் தாகமா? 02) வெளிச்சத்தின் வேர்கள்.
இந்த இரண்டு நூல்களினதும் வெளியீட்டுவிழா 2007ஜூன் 30ஆம் திகதி மடுமாதா சிறிய குருமட அதிபர் அருட்பணி யாளர் பி.யேசுராஜா அடிகளாரின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் மன்னார்ஆயர் மேதகு இரா. யோசேப்பு ஆண்டகை அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார். யுத்த சூழ்நிலையிலும் இவ்வெளியீட்டு விழாவில் 600க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து சிறப்பித்தனர் என்று அறிய முடிகின்றது. இலங்கை யில் நடைபெற்ற தமிழ்நூல் வெளியீட்டு விழாவொன்றில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கலந்துகொண்டமை ஒரு வரலாற் றுப் பதிவு என்றால் மிகையாகாது.
தண்ணிருக்குள் தாகமா?
மன்னார் ‘மன்னா’ பதிப்பகத்தின் முதலாவது வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூல் ஓர் விவிலியக் கண்ணோட்டத்தில் இறைவனின் இனிய இயல்புகளை எளிய தமிழ் நடையில் விளக்கு கின்றது. இந்நூலின் முதற்பதிப்பு 2007 ஜனவரியில் பதிப்பிக்கப்பட் டுள்ளது. 103+XVi = 121 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் முகப்பட்டையை அழகிய முறையில் தமிழ்நேசன் அடிகளாரே
44 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 12)

வண. பிதா தமிழ்நேசன் அடிகளார்
வடிவமைத்துள்ளார். நூலின் சர்வதேச தராதர புத்தக எண் (ISBN) 955-1627-00-8 ஆகும். இந்நூலினை தனது அன்புத் தந்தை சந்தான் பாவிலு அவர்களுக்குச் சமர்ப்பித்துள்ளார். தனது சமர்ப்பணத்தில்
விலையில்லாக் கலைஞானம் எனக்குத் தந்தாயப்
வித்தான கவிகளைக் கொத்தாகக் காட்டினாய்
சிலையாக நீ இன்று நிலைபெற்று நின்றாலும்
சிந்தை உன் நினைவினில் விந்தையாய் விரையுதே!
அலையாகத் துன்பங்கள் அடுக்கடுக்காய் வந்தாலும்
தலையான உன் வார்த்தை தத்துவமாய் ஒலிக்கிறதே!
நிலைவாழ்வு பற்றியே நித்தமும் பேசினாய்
நிண்பதம் இந்நூலினை சமர்ப்பணம் செய்கின்றேன்!
இவரின் தந்தையார் முருங்கனைச் சேர்ந்தவர். "சீனியர்' என்று அழைக்கப்பட்ட காலம்சென்ற திரு. சந்தான் பாவிலு அவர்கள் ஒரு புகழ்பெற்ற நாட்டுக் கூத்துப் புலவரும், அண்ணாவி யாருமாக இருந்தவர் என்று அறிய முடிகின்றது. இவர் பல கத்தோலிக்க நாட்டுக் கூத்துக்களை எழுதி முருங்கன் பகுதிகளில் அரங்கேற்றியுள்ளார் ‘தண்ணிருக்குள் தாகமா? எனும் நூலில் அருட்தந்தை தமிழ்நேசன் அவர்கள் தன்னால் அவதானிக்கப்பட்டு உணரப்பட்ட பல்வேறு உணர்வுகளையும், உண்மைகளையும்

Page 29
வண. பிதா தமிழ்நேசன் அடிகளார்
விவிலியப் பரப்பில் பொருத்தி விவிலியத்திற்கும் - சமூகத்திற்கு முள்ள இயங்கியல் தொடர்புகளை நிறுவமுயன்று வெற்றியும் கண்டுள்ளார்.
வெளிச்சத்தின் வேர்கள்
ஓர் விவிலியக் கண்ணோட்டத்தில் செபம் பற்றிய சில புரிதல்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. முதற்பதிப்பு 2007 ஜூனில் பதிக்கப்பட்டுள்ளது. 184 + XX - 204 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் முகப்பட்டையை அ. றெஜினா தர்ஷினி வடிவமைத்துள்ளார்.
தனது அன்புத் தாயாருக்கு சமர்ப்பணம் செய்துள்ள இந்நூலில் நூலாசிரியர் மதம் சார்ந்த உள்ளடக்கங்களைக் கருச்சிதைவின்றி இலகுபடுத்தி சாதாரண மக்களுக்கு மாத்திர மல்ல கிறித்தவத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் கொண் டுள்ள அந்நிய மதத்தவர்களுக்கும் புரியக் கூடிய வகையில் எழுதியிருப்பது மிகவும் சிறப்பாகவுள்ளது. அதே போல் ‘மதம் என்பது அங்கீகாரத்துக் குரியது' என்ற உணர்வினை அருட் தந்தை தமிழ்நேசன் அவர்கள் பல இடங்களில் வெளிப்படுத் தியுள்ளார்.
மன்னா
மன்னார் மறைமாவட்டத்திலிருந்து வெளிவரும் "மன்னா' மாதப்பத்திரிகைக்கு 2000 ஆண்டு முதல் ஆசிரியராக இருந்து அதனை வளப்படுத்தி வருகின்றார் அருட்தந்தை தமிழ்நேசன் அவர்கள்.
தற்போது ஐக்கிய இராச்சியத்தில் வசித்துவரும் மூத்த எழுத்தாளரும், கவிஞருமான இளவாலை அமுது அவர்கள் ‘மன்னா’ பற்றி குறிப்பிட்டிருந்த சில கருத்துக்களை அவதானிப் (3uATLb.
“. ‘மன்னா’ என்பது மதச் சார்புள்ள பெயராய் திருவி ருந்து என்று சொல்லப்பட்டாலும் “அரசே என்று
46 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 12)

வண. பிதா தமிழ்நேசன் அடிகளார் எங்களை அழைக்கும் குரலைக் கொண்டது. "எல்லோரும். இந்நாட்டு மன்னர் என்றார் பாரதியார்செந்தமிழ்ப் பற்று, சிந்தனைச் செல்வம், படைப்பாற்றல், ஓயாத உழைப்பு, மனிதநேயம் என்பன அவருள்ளத்தில் கிளைகளாகப் பரந்து புஷ்பாஞ்சலி செய்கின்றன. பத்திரிகைகள் காலத் தின் கண்ணாடி மக்களின் குரல் பத்திரிகையின் சுக்கா னைப் பிடிப்பவர், நிதானம் இழந்தால் மக்களுக்கும், அரசுக்கும் பதில் கூற வேண்டிவரும்,
சுவாமி தமிழ்நேசன் அவர்கள் அலையடிக்காத அமைதிக் கடல், தூரத்தில் நின்று பார்த்தால் சிரித்துக் கொண்டு ஒடும் ஒரு சிற்றாறு, அருகில் சென்று பார்த்தால் அன்பும், பண்பும், அமைதியும், அறிவும் நிரம்பிய ஓர் அருட்கடல், கிறிஸ்து பெருமானின் உண்மைத் தொண்டனாகவும், செந்தமிழ்த் தாயிடத்தில் சிந்தையைப் பறிகொடுத்த ஆழ்வார்களில் ஒருவராகவும் அவர் தெரிவார். r
அவர் வெளியிடும் “மன்னா’ அவருடைய சேவையின் காணிக்கை. இப்பத்திரிகையை இரு கைகளால் விரிக்கும் போது இருபது பக்கங்களிலும் ஞானத்தின் நட்சத்திரங்கள் கண் சிமிட்டுகின்றன. விவிலிய நூலின் முத்துக்கள் உள் ளத்தை முத்தமிடுகின்றன.
ஒரு தத்துவஞானியின் கருத்தை ஒரு ஞான வைத்தியரின் வாகடத்தை ஒரு பேராசிரியரின் அறிவு நிதியத்தை ஒரு வேத போதகரின் சிந்தனைச் செல்வத்தை தன் பேனாவுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார் தமிழ் நேசன்.
அவருடைய ஆசிரிய வசனங்கள் போற்றத்தக்கவை.புல் வெளியில் பூக்கள் உதிர்வது போல், அவருடைய சொற் கள் மகிழ்ச்சியைத் தரும், ஆனால் அந்தக் கட்டுரைக ளில் எல்லாள வேந்தனின் தராசு தெரியும். நீதிதேவன் அங்கே உட்கார்ந்திருப்பதைக் காணலாம். ஈழத்தில் நடைபெறும் அநியாயங்களையும், அக்கிரமங்களையும் ஆட்சியாளர்களின் தகிடுதத்தங்களையும்கண்டும் கேட்டும் அறிந்தவர் அடிகளார். வீடுகள் இடிந்தபோதும், தேடிப்
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புண்னியாமீன் 47

Page 30
வண. பிதா தமிழ்நேசன் அடிகளார்
போனவர் திரும்பிவராத போதும், உள்ளம் உருக
வெள்ளைவான்’ அள்ளிச் சென்ற போதும், இறைவனின் இருப்பிடமே தரைமட்டமான போதும், பெண்கள் பெருமை இழந்த போதும், மனம் குமுறிக் கொதித்ததோடு நாம் நின்று விட்டோம்.
ஆனால் சிலர் ஏன் என்று தலை நிமிர்ந்து கேட்டனர். சிலர் மரணப்படுக்கையில் கிடக்கும் நீதியைத் தண்ணிர் தெளித்து எழுப்பி அதை வாய்திறக்க வைத்தனர். அப்ப டியான எழுதுகோலைப்பிடித்தவர்களில் ஒருவர் அடிகளார்.
நமது சமுதாயத்துக்கு விழும் சவுக்கடிகளை என் போன் றவர்கள் பிற நாட்டிலிருந்து பார்க்கும்போது எங்கள் முதுகு புண்ணாகி விடுகிறது. ஆனால், தாய் மண்ணில் துன்புறும் மக்களோடு தன்னையும் இணைத்துக் கொண்டு இயேசுவின் சிலுவைப்பாடுகளைத் தன் உடலிலும், உள் ளத்திலும் இவர் சுமந்து கொண்டிருக்கிறார். இடம் பெயர்வு, வறுமை, பட்டினி, அகதி வாழ்வு, மக்கள் காணாமற் போதல், கொலை அச்சுறுத்தல். இந்த நீண்ட பட்டியலை அவர் கரைத்துக் குடித்தவர்.”
அருட்தந்தை தமிழ்நேசன் அவர்கள் தமிழ்மொழியினைப் போலவே ஆங்கிலத்திலும் எழுதக் கூடியவர். இவரது பல ஆங்கிலக் கட்டுரைகள் Messenger பத்திரிகையில் பிரசுரமாகியுள் ளன. இவர் தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கிறிஸ் தவ இஸ்லாமிய நாகரிகத்துறையில் முது தத்துவமாணி (M- Phil) பட்டத்திற்காக ஈழத்துக் கத்தோலிக்க தமிழ்கவிதையும் பண்பாட்டு மயமாக்களும் (1950-2005) என்ற தலைப்பில் ஆய் வினை மேற்கொண்டுள்ளார்.
மன்னா பத்திரிகை வாயிலாக சமாதானத்திற்கு இவர் வழங்கிய பங்களிப்பைப் பாராட்டி 2005ஆம் ஆண்டு சர்வதேச சமாதானப் பேரவையும், உலக அமைதிக்கான சர்வமத, சர்வ (35 F 960LDLib S60600rpig (Universal Peace Federation and Interreligious and International Federation for Peace)" &LDT.g5T60s giTg56.5' (Ambassdor for Peace), 6T6ip 6ic b605 supras இவரைக் கெளரவித்தது, A -
48 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 12)

வண. பிதா தமிழ்நேசன் அடிகளார்
மன்னா பத்திரிகை ஊடாக இவர் ஆற்றிய பணிகளைப் பாராட்டி தேசிய கத்தோலிக்க சமூகத் தொடர்பு ஆணைக்குழு ஒவ்வோர் ஆண்டும் வழங்கும் தேசிய கத்தோலிக்க ஊடகத்துறை 6(bgistes (National Catholic Media Awards) g6 (560Lu Gulf பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இலங்கையின் முன்னணி இலக்கிய ஏடான 'மல்லிகை தனது 2007 நவம்பர் இதழில் அருட்தந்தை தமிழ் நேசனின் புகைப்படத்தை முகப்பட்டையில் பிரசுரித்து கெளரவித் திருந்தது. மிகவும் அன்பாகப் பேசிப்பழகக் கூடிய அருட்தந்தை யின் தொடர்பு முகவரி;-
Rev.Fr. P. Thamil Nesan :
Catechetical Centre St. Sebestian's Cathedral Street
Mannar
T/P023-2222377 / .
060-2233276
龛
ப்ேசசுக்கள்மூலமான
சமாதானத்திவுக்கு உதவ நாம் தயார்
; :* * *
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புன்னியாமீன் 49

Page 31
சி.என். துரைசிங்கம்
சி.என். துரைசிங்கம்
பதிவு 292
கலைத்துறை எழுத்துத்துறை
கிழக்கு மாகாணம், திருக்கோணமலை மாவட்டம், திருக் கோணமலை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள 243C கிராமசேவகர் எல்லையில் வசித்துவரும் சின்னத்துரை நடராஜா துரைராஜா அவர்கள் ஒரு கலைஞரும், எழுத்தாளருமாவார்.
ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பத்து மூன்றாம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் திகதி சின்னத்துறை நடராஜா, சின்னவன் செல்லமுத்து தம்பதியினரின் புதல்வராக வல்வெட்டித்துறை பொலிகண்டியில் பிறந்த துரைராஜா யாழ்ப்பாணம் வதிரி, மெத டிஸ்தமிஷன் பாடசாலை, திருக்கோணமலை சென் சேவியர் பாடசாலை, யாழ்ப்பாணம் வதிரி தேவரையாழி இந்துக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார்.
1970ஆம் ஆண்டில் இலங்கைப் போக்குவரத்து சபையின்
காப்பாளர்’ உத்தியோகத்தராகப் பதவி நியமனம் பெற்ற இவர்
1997இல் வீதிப் பரிசோதனைக் குழுத் தலைவராகப் பதவி உயர்வு பெற்று 2003ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஓய்வு பெற்றார்.
50 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 12)
 

ச.என். துரைசிங்கம்
இவரின் அன்புத் துணைவியார் பெயர் இராஜகுமாரி, இத்தம்பதியினருக்கு மங்கள நாயகி, குமணராஜா, ஜெயந்தி, பத்தமராஜா, பாரதிராஜா, நிருசிதா கெளரிதரன் ஆகிய அன்புச் செல்வங்கள் உளர்.
யாழ்ப்பாணம் வதிரி மெதடிஸ்தமிஷன் பாடசாலையில் கற்கும் காலத்தில் ஆசிரியர் அண்ணாசாமி அவர்களின் நெறி யாள்கையில் 1957ஆம் ஆண்டின் பாடசாலை முதலாம் தவணை யில் இவர் ஒளவையார்’, ‘குமணவள்ளல் ஆகிய நாடகங்களில் நடித்துள்ளார். இந்நாடகங்களே கலைத்துறையில் இவரின் கன்னிப் பயணத்துக்கு அரங்கமைத்துக் கொடுத்தன. தொடர்ந்து நெல்லியடி மத்திய கல்லூரியில் நடைபெற்ற போட்டியின் போது பரிசும், பாராட்டும் பெற்றதை இன்றும் இனிய நினைவுகளாக நினைவு கூர்கின்றார்.
கலைத்துறை வாழ்க்கையில் ஐம்பது ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ள துரைராஜா இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். 1967இல் திருக்கோணமலை ஆத வன் நாடக மன்றம்’ எனும் பெயரில் நாடக மன்றமொன்றினை ஸ்தாபித்து “காகிதப்பூ', 'மஞ்சுளா ஆகிய பெயர்களில் அரங் கேற்றம் பெற்ற நாடகங்கள் இவருக்கும் பெரும் புகழைப் பெற் றுக்கொடுத்தன.
திருமலைக்கலைமாறன், குணகெளரி, ரீகபியார், சச்சி-துரை, பொலிகைமாறன் ஆகிய புனைப் பெயர்களிலும் எழுதிவரும் சி.என். துரைராஜாவின் கன்னிக் கவிதை 1959ஆம் ஆண்டில் கல்வெட்டு' எனும் தலைப்பில் கல்லூரிச் சஞ்சிகையில் பிரசுரமானது. அன்றிலிருந்து இன்றுவரை முன்னூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள், கட்டுரைகள், ஆத்மீகக் கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். இத்தகைய இவரின் ஆக்கங்கள் சுதந்திரன், வீரகேசரி, தினகரன், சுடரொளி, தினக்குரல் ஆகிய தேசிய நாளேடுகளிலும், பல்வேறுபட்ட சஞ்சிகைகளிலும் அதே நேரம் இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, முரசொலி ஆகிய இந்திய பத்திரிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புன்னியாமீன் 51

Page 32
சி.என். துரைசிங்கம்
0
இவரின் கலை, இலக்கிய, சமூக சேவைகளின் முக்கிய
கட்டங்களைப் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.
1969இல் பதிமர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ‘அண்ணா கவிதாஞ்சி' கவிதை நூலில் 24 கவிஞர்களின் கவிதை' கள் இடம் பெற்றுள்ளன. இதன் முதற்கவிதையை கலைஞர் மு. கருணாநிதி எழுதியிருந்தார். இப்புத்தகத் தில் சி.என். துரைசிங்கத்தின் கவிதையொன்றும் பிரசுர மாகியிருந்தது. 1979இல் திருக்கோணமலை நகராட்சி மன்ற உறுப்பி னராகத் தெரிவு செய்யப்பட்டு 1981ஆம் ஆண்டுவரை கடமையாற்றியுள்ளார். பின்பு 1983இல் மீண்டும் நகராட்சி மன்ற உறுப்பினராக போட்டியிட்டுத் தெரிவானார். 1981இல் திருக்கோணமலை கோணேஸ்வரர் நகர் ஊர் வலமன்ற செயலாளராக இருந்து பத்தாம் ஆண்டு நினைவு மலரை வெளியிட்டார். 1982இல் இந்து கலாசார அமைச்சினால் வெளியிடப்பட்ட *திருகோணமலை மாவட்ட திருத்தலங்கள்’ எனும் புத்த கத்தில் முறிகற்பகப்பிள்ளையார் ஆலய கோவில் வரலாறு வெளிவர உதவினார். 1990இல் நாட்டில் ஏற்பட்ட இனவன்செயலினால் குடி
பெயர்ந்து அகதியாக வீட்டின் பொருட்கள் எதுவுமே
எடுக்காமல் வெறும் கையுடன் குடும்பத்தாருடன் புறப்
பட்டு, உப்புவெளி, கும்புறுபிட்டி, திரியாய், புடவைக்கட்டு
ஊடாக முல்லைத்தீவு சென்று அங்கிருந்து புதுக்குடியி. ருப்பு சென்று அங்கு பாடசாலையில் அகதிமுகாம் அமைத்து அதில் தலைவராக இருந்து பின்னர் யாழ்ப்
பாணம் சென்று அங்கிருந்து வள்ளத்தின் மூலம் இந்தியா
தமிழகம் சென்றுள்ளார்.
இந்தியாவில் அகதியாக வாழ்ந்த காலத்திலும் இலங்
கையின் நடவடிக்கைகளை அவதானித்துக்கொண்டே வந்த இவ ரின் திருக்கோணமலை வீடு முழுமையாக அழிக்கப்பட்டு பொருள்
கள் வேதனைப்பட்டவராகியிருந்தார். குறிப்பாக தான் கற்கும்
யாவும் கொள்ளையடிக்கப்பட்டதையறிந்து மிகவும் மன
காலத்திலிருந்து சிறுக சிறுக சேகரித்த சுமார் 50ஆயிரம் ரூபாய்
52 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விரத்திரட்டு - (தொகுதி 12)

சி.என். துரைசிங்கம் பெறுமதிமிக்க புத்தகங்கள் இழக்கப்பட்டதை எண்ணுகையில் இவரின் துயரம் பல மடங்காகின.
() 1991இல் அகதிமுகாமில் பாலர் பாடசாலை, படிப்பகம்
முதலானவை ஆரம்பித்து அதன் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். அகதிமுகாமிலிருந்த காலத்தில் ஈழத் தமிழர்களின் அவல நிலை குறித்து பல்வேறுபட்ட ஆக்கங்களை இந்திய பத்திரிகைகளுக்கு எழுதியுள் ளார.
() மீண்டும் இந்திய அகதிமுகாமிலிருந்து 1993ஆம் ஆண்
டில் இவரும், இவரது குடும்பத்தினரும் தாயகம் மீண்டனர். இச்சந்தர்ப்பத்தில் இந்தியாவிலிருந்து வெளிவ ரும் பிரபல நாளிதழான 'தினமுரசு' இவரின் செவ்வியை வெளியிட்டது. இதன் மூலம் அகதிமுகாம்களில் வாழும் ஈழத் தமிழரின் உணர்வலைகளை காண முடிந்தது.
() 2000ஆம் ஆண்டில் சித்தி அமரசிங்கம் அவர்கள் வெளி
யிட்ட ‘கவிதாலயம் கவிதைத் தொகுதியில் இவரின் ‘எங்கே போகிறோம் கவிதை இடம்பெற்றதுடன், அநேக விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டினையும் பெற்றது.
இவரின் பல கட்டுரைகளும், கவிதைகளும் இருபத்து நான்கிற்கும் மேற்பட்ட நினைவு மலர்களில் பிரசுரமாகியுள்ளன. இதுவரை சி.என். துரைராஜா அவர்களின் தனிப்பட்ட நூலொன் றும் வெளிவரவில்லை. தன்னால் எழுதப்பட்டுள்ள ஆத்மீகக் கட்டுரை களைத் தொகுத்து வெகு விரைவில் நூலொன்றனை வெளியிடவுள்ளதாக அறிய முடிகின்றது.
இவரின் முகவரி;-
சி.என். துரைராஜா, 169/2, திருஞானசம்பந்தர் விதி:
திருக்கோணமலை, தொலைபேசி: 060-2263120
இவர்கள் நம்மவர்கள் (பாகம் (2) : கலாபூஷணம் புன்னியாமீன் 53

Page 33
எம்.எம். மக்கின் (மான மக்கீன்)
எம்.எம்.மக்கீன் (மானா மக்கீன்)
பதிவு 295
எழுத்துத்துறை
மேல் மாகாணம், கொழும்பு மாவட்டம், கொழும்பு 10ல் வசித்து வரும் எம்.எம். மக்கீன் இலங்கையில் ஜனரஞ்சகமான ஒரு எழுத்தாளரும், ஊடகவியலாளரும், பன்னூலாசிரியருமாவார். தன்து சொந்தப் பெயரான எம்.எம். மக்கீன் எனும் பெயரை விட மானா மக்கீன் என்ற பெயரிலே இவர் இலங்கையிலும், இந்தி யாவிலும் ஜனரஞ்சகமடைந்திருக்கின்றார். கொழும்பு ஜம்பட்டா வீதியில் முத்து முஹம்மத், நூருல் ஹஃபீலா தம்பதியினரின் புதல்வராக 1937ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி பிறந்த இவர், கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவராவார்.
சிறு வயது முதலே இவர் இலக்கிய ஆர்வமிக்கவராக காணப்பட்டார். இது பற்றி அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “.1940களின் இறுதிப் பகுதியில் (1948) ‘துணிவே துணை' என தனி வழியில் இதழியலில் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கிய எழுத்தாளர் அமரர் ‘தமிழ்வாணன் அவர்களால் 1948.11.05ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட 'கல்கண்டு’ இதழ் என்னைக் கவர்ந் திழுத்தது. இதேகால கட்டத்தில் எனதருமைத் தந்தை நாகூர் 54 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 12)
 

எம்.எம். மக்கின் (மான மக்கீன்)
மீரா முத்து முஹம்மத் இஸ்லாமிய சஞ்சிகைகளை வாசிக்கவும் தூண்டினார். இத்தகைய காரணங்களினாலேயே நானும் எழுத வேண்டும் என்ற உந்துதல் எனக்குள் ஏற்பட்டது. இந்த அடிப்படையில் என்னுடைய முதலாக்கம் 1950களின் ஆரம்பத்தில் வீரகேசரி ‘பாலர் வட்டாரத்தில் ‘பால்காரன்’ என்ற குட்டிக் கதையாக பிரசுரமானது. அதைத் தொடர்ந்து 'தினகரன் பாலர்' கழகத்தில் பல கதைகள் எழுதியுள்ளேன். "சுதந்திரனி’ல் சில ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளேன். “ரேடியோ சிலோனில் ரேடியோ மாமாவினால் (சாவக்கச்சேரி எஸ்.சரவணமுத்து) நடத்தப் பட்ட நிகழ்ச்சிகளில் பல ஆக்கங்களை எழுதியும், நேரடியாகப் பங்குபற்றியும் உள்ளேன். இவ்வாறாகத் தான் என் ஆரம்பகால இலக்கிய ஈடுபாடு இருந்தது.”என்கிறார் மானா மக்கீன்.
வானொலியில் இவரால் வாசிக்கப்பட்ட முதல் குட்டிக் கதையின் தலைப்பு ‘நாயின் உதவி’ என்பதாகும். இவர் தனது பால்ய வயதில் இலங்கை நாளேடுகளான வீரகேசரி, தினகரன், பாலர் பக்கங்களில் தடம் பதித்தும், தமிழகக் கண்ணன் - பூஞ் சோலை சிறுவர் சஞ்சிகைகளில் வலம் வந்தும், இதழாளனாக - இலக்கியவாதியாக - வானொலி நாடக எழுத்தாளராக - மேடைத் தயாரிப்பாளராக - நெறியாளராக - இசை நிகழ்ச்சிகள் அமைப்பா ளராக பல பரிமாணங்கள் பெற்றுள்ளார். இவர் தொடாத துறை தொலைக்காட்சி மட்டுமே
ஒரு நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளில் எதிர்நீச்ச லிட்டு முத்திரைகள் பதித்து இப்பொழுது பன்னூலாசிரியராகப் பளிச்சிடுகிறார். இதழியல் துறையில் புகழ்பெற்ற திறனாய்வாளர் கே. கைலாசபதி காலத்துத் தினகரனில் அவரது ஊக்குவிப்பால் முஸ்லிம்களின் தொழில்துறை சம்பந்தமாக ஆய்வுடன் கூடிய நடைச்சித்திரக் கட்டுரைகளில் ஆரம்பித்து, பின் கலாசூரி சிவகுருநா தன் காலத்தில் பரபரப்புச் செய்தி நிருபராகி (எம்.ஆர்.ராதா - எம்.ஜி.ஆர். கொலை முயற்சி) கண்டதுண்டா கேட்டதுண்டா” வை நாள்தோறும் தந்து, பின் ஒரு முழுப்பக்கம் பெற்று "லைட் ரீடிங்'காக்கி தொடர்ந்து நான்காண்டுகள் வாரந்தோறும் இனமத பேதமின்றி சகலர் இல்லங்களிலும் ஒரு தேசிய இதழில் முழு சாதனை புரிந்த சுயாதீன (ஃப்ரீலான்ஸ்) எழுத்தாளர் இவர் என்றால் மிகையாகாது.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 2) : கலாபூஷணம் புண்ணியாமின் 55

Page 34
எம்.எம். மக்கீன் (மானா மக்கின்)
“இவரது பங்களிப்பின் தன்மையை யாரும் தட்டிக்கேட்க இயலாதபடி இவரது சேவை அமைந்துள்ளது. இந்தச் சேவைக்கு யாரும் சவால் விடவும் இயலாது” என பிரபல திறனாய்வாளர், திரு. கே.எஸ். சிவகுமாரன் “ஜலன்ட்” இதழில் இவரைப்பற்றி சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை.
கல்கண்டு லேனா தமிழ்வாணன் அவர்களோ, “எதையும் சுவைபடச் சொல்லும் ஆற்றல் உள்ளவர் மானா’ என்று சொல் வதோடு, “தற்சமயம் தமிழகத்தில் மானா மக்கீனின் வளர்ச்சி பிரகாசமாக இருக்கிறது” எனவும் வாழ்த்துகிறார். “மானா மக்கீன் ஈழத்தைச் சேர்ந்தவர், புயல்வேக எழுத்தாளர். தமிழகத்தோடு நெருங்கிய தொடர்புடையவர். “முஸ்லிம் கதை மலர்கள்”, “பேனா முனையில் அவரை நூற்றாண்டு”, “லைட்ரீடிங், முஸ்லிம் டைஜஸ்ட்” முதலான பல நூல்களின் ஆசிரியர். மக்கள் இரசனை உணர்ந்து எழுதுவதில் வல்லவர்” என பேராசிரியர் காரைக்கால் மு.சாயப்புமரக்காயர் (செயலாளர், தமிழ்நாடு இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகம்) தனது, 'இஸ்லாமியர் தமிழ்த் தொண்டு (டிச.1996) என்ற ஆய்வு நூலில் 11 ஆண்டுகளுக்கு முன்பே குறிப்பிட்டுள்ளார். இந்த வகையில் தமிழக வாசகர்களுக்கும் நன்கு தெரிந்த இவரது எழுத்துக்களை தற்சமயம் 'சமரசம் மாதமிரு சஞ்சிகையில் அடிக்கடி பார்க்க முடிகிறது.
'.இதுவரை 100க்கும் மேற்பட்ட கதைகளையும் 1000க்கு மேற்பட்ட கட்டுரைகளையும் இலங்கை இந்திய தேசிய பத்திரிகை களிலும் சஞ்சிகைகளிலும் எழுதியுள்ள மானாமக்கின் 1980ஆம் ஆண்டு முதல் இன்றுவரை 30 புத்தகங்களை எழுதி வெளியிட்டுள் ளார். அவற்றை பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.
ஆடு தன் ராணி -
முதலாம் பதிப்பு: 1980 ஏப்ரல்
வெளியீடு: அஷ்டலட்சுமி வெளியீட்டகம், 217 மொஹிதீன் மஸ்ஜித்
வீதி கொழும்பு 10
அச்சீடு: உதயம் பிரிண்டர்ஸ் 84, பீர்சாகிபு வீதி, கொழும்பு 12
பக்கம்: 64 h M0
விலை: ரூபாய் 5
somo 12.5x18.5 cm
56 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 12)

எம்.எம். மக்கின் (மான மக்கீன்)
ஆடும் ராஜா -
முதலாம் பதிப்பு: 1981 மே வெளியீடு: அஷ்டலட்சுமி வெளியீட்டகம், 217 மொஹிதீன் மஸ்ஜித் வீதி, கொழும்பு 10. அச்சீடு: உதயம் பிரிண்டர்ஸ் 84 பீர்சாகிபு வீதி கொழும்பு 12 .
பக்கம்: 64
விலை: ரூபாய் 5
s6T6 12.5x18.5 cm
கமல் - அகில இந்திய சிறந்த நடிகர் - முதலாம் பதிப்பு: 1983 அக்டோபர் வெளியீடு: அஷ்டலட்சுமி வெளியீட்டகம், 217 மொஹிதீன் மஸ்ஜித் வீதி, கொழும்பு 10 அச்சீடு: உதயம் பிரிண்டர்ஸ், 84 பீர்சாகிபு வீதி கொழும்பு 12. பக்கம்: 64
விலை: ரூபாய் 5
ssI6 12.5x18.5 cm
இலண்டன் ரயில் கொள்ளை -
முதலாம் பதிப்பு: 1990 ஜூன் வெளியீடு: அஷ்டலட்சுமி வெளியீட்டகம், 217 மொஹிதீன் மஸ்ஜித் வீதி, கொழும்பு 10 அச்சீடு: உதயம் பிரிண்டர்ஸ், 84 பீர்சாகிபு. வீதி, கொழும்பு 12 பக்கம்: 80 - விலை: ரூபாய் 10 அளவு 12.5x18.5 cm
லைட்ரீடிங்
முதலாம் பதிப்பு: 1994 ஏப்ரல் - 23
வெளியீடு: புரவலர் ஹாசிம் உமர் (அவரது முதல் வெளியீடு)
கொழும்பு 14
அச்சீடு: உதயம் பிரிண்டர்ஸ், 84 பீர்சாகிபு வீதி, கொழும்பு 12
.usbib; 96 விலை: ரூபாய் 30
s6T6 l2.5xl8.5 cm
"Go6o'shqJs , 2b LIITafsib -
முதலாம் பதிப்பு: 1995 பெப்ரவரி . .
வெளியீடு: நவமணிப் பதிப்பகம் 12 2வது மெயின் ரோட், சி.ஐ.டி
காலனி, சென்னை 600004
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புண்னியாமினர் 57

Page 35
எம்.எம். மக்கின் (மானா மக்கீன்)
அச்சீடு: குறிப்பிடப்படவில்லை. . Liddisb: 112 ... " விலை: ரூபாய் 50 அளவு 12.5x18.5 cm
பேனாமுனையில் அரை நூற்றாண்டு முதலாம் பதிப்பு: 1995 ஒக்டோபர் வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம் 7, தணிக்ாசலம்சாலை தி.நகர்
சென்னை 17 . அச்சீடு: பூரீமுருகன் ஆப்செட் 27, பி.வி.கோயில் தெரு, சென்னை14 பக்கம்: 142 விலை: இந்திய ரூபாய் 26 இலங்கை ரூபாய் 75 e6T6 12.5x18.5 cm
இளைய தலைமுறையினருக்கு இனிக்கும் இஸ்லாமிய
கதைகள் - முக்தார் -ஏ. முஹம்மத் தொகுப்பாசிரியர்: மானா. மக்கிண் முதலாம் பதிப்பு: 1996 மே மாதம் வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம் 7, தணிகாசலம்சாலை தி.நகர்
சென்னை 17 . . . அச்சீடு: ஜோதி ஆப்செட், 159/1, வி.எம். தெரு, சென்னை 14 பக்கம்: 54 விலை: குறிப்பிடப்படவில்லை s6m6 24x12 cm
முஸ்லிம் டைஜஸ்ட் -
முதலாம் பதிப்பு: 1996 மார்ச்
வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம் 7, தணிகாசலம்சாலை தி.நகர்
சென்னை 17
அச்சீடு: கவாட்ச் ஆப்செட் பிரிண்ட்ஸ், 1 மேற்கு சிவன் கோவில்
வீதி, வடபழனி, சென்னை 26
பக்கம்: 128 விலை: இந்திய ரூபாய் 24 இலங்கை ரூபாய் 50
sj6T6 12.5x18.5 cm
எண்னைக் கேளுங்கோ
முதலாம் பதிப்பு: 1996 ஏப்ரல் வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம் 7, தணிகாசலம்சாலை தி.நகர்
சென்னை 17 . . . அச்சீடு: பூரீமுருகன் ஆப்செட் 27, பி.வி. கோயில் தெரு, சென்னை
60007 பக்கம்: 80 விலை: ரூபாய் 5 e6n6 12.5xl8.5 cm
58 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 12)

எம.எம். மக்கீன் (மானா மக்கீன்)
இதழியல் முன்னோடி எங்கள் பாரதியார் - முதலாம் பதிப்பு: 1997 வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம் 7, தணிகாசலம்சாலை தி.நகர்
சென்னை 17 . . . அச்சீடு: ஜோதி ஆப்செட், 159/1, வி.எம். தெரு, சென்னை 14 பக்கம்: 88 விலை: இந்திய ரூபாய் 17 இலங்கை ரூபாய் 46 அளவு 12.5x18.5 cm
*ஜெயில் லலிதா சிப்ஸ் -
முதலாம் பதிப்பு: 1997 வெளியீடு: அஷ்டலட்சுமி வெளியீட்டகம் டி. 545 தேசிய வீடமைப்பு, மாளிகாவத்தை, கொழும்பு 10 ... அச்சிடு: லியா பிரிண்டர்ஸ் கொழும்பு 09
பக்கம்: 92 விலை: ரூபாய் 40 g6T6 12.5x18.5 cm
மானா மக்கின் கதை மலர்கள் -
முதலாம் பதிப்பு: 1997
வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம் 7, தணிகாசலம்சாலை தி.நகர்
சென்னை 17
அச்சீடு: ஜோதி ஆப்செட், 159/1, வி.எம். தெரு, சென்னை 14
பக்கம்: 100 விலை: இந்திய ரூபாய் 19 இலங்கை ரூபாய் 50
e6T6 12.5x18.5 cm
என் நினைவில் ஒரு கவிஞர் -
முதலாம் பதிப்பு: 1997
வெளியீடு: அய்யூப் இல்லம் 162/5, கோவில் வீதி பதுளை
அச்சீடு: ழரீமுருகன் ஆப்செட் 27, பி.வி. கோயில் தெரு, சென்னை
60007
பக்கம்: 64 விலை: இந்திய ரூபாய் 18 இலங்கை ரூபாய் 45
s6Ta. 12.5x18.5 cm
இரு சமூகங்கள் இரு கண்கள் -
முதலாம் பதிப்பு: 1997
வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம் 7, தணிகாசலம்சாலை தி.நகர்.
சென்னை 600007
அச்சீடு: யூரீமுருகன் ஆப்செட் 27, பி.வி. கோயில் தெரு, சென்னை
60007
பக்கம்: 160 விலை: இந்திய ரூபாய் 30 இலங்கை ரூபாய் 75
sj6r6 12.5x18.5 cm
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புன்னியாமீன் 59

Page 36
எம்.எம். மக்கின் (மான மக்கீன்)
இலங்கை கிழக்கரை இனிய தொடர்புகள் - முதலாம் பதிப்பு: 1998 வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம் 7, தணிகாசலம்சாலை தி.நகர்
சென்னை 600007 அச்சீடு: ஸ்கிரிப்ட் ஆப்செட், சென்னை 600094 பக்கம்: 304 விலை: இந்திய ரூபாய் 57 இலங்கை ரூபாய் 156 sj616 12.5x18.5 cm
இந்திய இலங்கை எழுத்தாளர்களின் ஈகைப்பெருநாள் கதைகள் முதலாம் பதிப்பு: 1998 வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம் 7, தணிகாசலம்சாலை தி.நகர்
சென்னை 17 அச்சீடு: எம்.கே. என்டபிரைசஸ் சென்னை 5 பக்கம்: 180 விலை: இந்திய ரூபாய் 33 அளவு 12.5x18.5 cm
இந்திய இலங்கை எழுத்தாளர்களின் தியாகத் திருநாள்
கதைகள் - முதலாம் பதிப்பு: 1998 வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம் 7, தணிகாசலம்சாலை தி.நகர்
சென்னை 17
அச்சீடு: ஜி.பி. பரின்டஸ் 159/1, வி.எம். தெரு.சென்னை 14 பக்கம்: 140 விலை: இந்திய ரூபாய் 27 இலங்கை ரூபாய் 70 si6Ta. 12.5x18.5 cm
நீடூர்- நெய்வாசல் நெஞ்சங்கள் -
முதலாம் பதிப்பு: 1999 வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம் 7, தணிகாசலம்சாலை தி.நகர்
சென்னை 17 அச்சீடு: ஸ்கிரிப்ட் ஆப்செட் சென்னை 24 பக்கம்: 260 விலை: இந்திய ரூபாய் 45 இலங்கை ரூபாய் 115 s6T6. 12.5x18.5 cm · · ·
கிழக்கரைப் பண்பாட்டுக் கோலங்கள் - முதலாம் பதிப்பு: 2000 டிசம்பர் வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம் 7, தணிகாசலம்சாலை தி.நகர்
சென்னை 17
அச்சீடு: ஸ்கிரிப்ட் ஆப்செட் சென்னை 24 பக்கம்: 104 விலை: இந்திய ரூபாய் 30 இலங்கை ரூபாய் 75 அளவு 12.5x18.5 cm
*) எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 12)

எம்.எம். மக்கீன் (மானா மக்கின்)
வரலாற்றில் இலங்கையும் காயல் பட்டினமும் - முதலாம் பதிப்பு: 2001 வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம் 7, தணிகாசலம்சாலை தி.நகர்
சென்னை 17 அச்சிடு: ஸ்கிரிப்ட் ஆப்செட் சென்னை 24 பக்கம்: 304 விலை: இந்திய ரூபாய் 65 இலங்கை ரூபாய் 165 ej66 12.5x18.5 cm
இலங்கை -
முதலாம் பதிப்பு: 2000 வெளியீடு: குட்புக்ஸ் பப்ளிகேஷன்ஸ், அஸியாநாகூர், சென்னை அச்சீடு: பி.வி.ஆர். ஆப்செட் சென்னை 14 ... .........့် பக்கம்: 158 விலை: இந்திய ரூபாய் 35 இலங்கை ரூபாய் 90 sj6Ta. 12.5x18,5 cm
சிறுவர் பாலியல் கொடுமைகள் - முதலாம் பதிப்பு: 2002 வெளியீடு: அஷ்டலட்சுமி பதிப்பகம் பி. 54-1/2 தேசிய வீடமைப்பு
வளாகம் கொழும்பு 10 - அச்சீடு: பூரீதேவி ஆப்செட் சென்னை 600004 பக்கம்: 164 விலை: ரூபாய் 150 அளவு 12.5x18.5 cm
இலங்கை கண்டகுமரி -
முதலாம் பதிப்பு: 2003
வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம் 7, தணிகாசலம்சாலை தி.நகர்
சென்னை 17
அச்சீடு: ஸ்கிரிப்ட் ஆப்செட் சென்னை 24 .
பக்கம்: 228 விலை: இந்திய ரூபாய் 70 இலங்கை ரூபாய் 175
அளவு 12.5x18.5 cm
வாழும்பொழுதே வாழ்த்துவோம் - முதலாம் பதிப்பு: 2003 ஜூன் வெளியீடு: புரவலர் எம்.எம்.எம். பாயிக் ஜே.பி. கொழும்பு 15 அச்சீடு: இமேஜ் நாகூர்கோவில் பக்கம்: 20 விலை: குறிப்பிட்ப்படவில்லை அளவு 12.5x18.5 cm:
வள்ளல் ஹபீபு முகம்மது அரசர் - முதலாம் பதிப்பு: 2004 . வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம் 7, தணிகாசலம்சாலை தி.நகர்
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புண்ணியாமினி 61.

Page 37
எம்.எம். மகதீன் (மானா மக்கீன்)
அச்சிடு: ஸ்கிரிப்ட் ஆப்செட் சென்னை 24
18585ub: 252 விலை: இந்திய ரூபாய் 80 இலங்கை ரூபாய் 300 e6T6 12.5x18.5 cm
ஒரு முண்டாகக் கவிஞரின் முஸ்லிம் நேசம் - முதலாம் பதிப்பு: 2005 வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம் 7, தணிகாசலம்சாலை தி.நகர் சென்னை 17 அச்சீடு: ஸ்கிரிப்ட் ஆப்செட் சென்னை 24
பக்கம்: 132 விலை: இந்திய ரூபாய் 40 இலங்கை ரூபாய் 120 . e66. 12.5x18.5 cm
நீடூர் காமராஜர் ஜுபைர் பாய் - முதலாம் பதிப்பு: 2006 வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம் 7, தணிகாசலம்சாலை தி.நகர் சென்னை 17 அச்சீடு: ஸ்கிரிப்ட் ஆப்செட் சென்னை 24
ludi5ébb: 240 விலை: இந்திய ரூபாய் 70 இலங்கை ரூபாய் 275 s26T6 12.5x18.5 cm
தமிழுக்கு முதல் புதினம் கிழக்கரையிலிருந்து - முதலாம் பதிப்பு: 2007 மே வெளியீடு: ஹாஜி ஏ.ஜி.ஏ.ரிஃபாய் கிழக்கரை அச்சீடு: குறிப்பிடப்படவில்லை
Usissib: 20 விலை: குறிப்பிடப்படவில்லை e6T6 0x13.5 cm
முத்தான முத்துப்பேட்டை - முதலாம் பதிப்பு: 2007 டிசம்பர் வெளியீடு: றஹற்மத் அறக்கட்டளை சென்னை 4 அச்சிடு: டிஜிட்டல் பிரின்ட்சிஸ்டம், இராயப் பேட்டை சென்னை 1 பக்கம்: 189 விலை: இந்திய ரூபாய் 95 இலங்கை ரூபாய் 350 e6T6 12.5x18.5 cm
கலை - இலக்கியத் துறை சம்பந்தமான அரசு நியமனங்களில் 1969இல் இலங்கைக் கலைக் கழக இஸ்லாமிய நுண்கலைக்குழு உறுப்பினராகவும், பின்பு 1977இல் அதே
62 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 12)

எம்.எம். மக்கின் (மான மக்கீன்)
குழுவின் செயலாளராகவும் நியமனம் பெற்றார். 1978ல் கலைக் கழக நாடகக்குழு அங்கத்தவராகத் தெரிவு செய்யப்பட்டார்: 1992ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் திரைப்படநாடகத் தணிக்கைசபை அங்கத்தவராகப் பணியாற்றி պ6fi6IITit.
திட்டமிடுவதிலும் அதை செயற்படுத்துவதிலும் தன்னி கரற்ற செயல்வீரர் இவர். புகழ்பூத்த ஆங்கில நாடகங்களான டயல் எம் போர் மர்டர்’, ‘விட்னஸ் போ த பிரசிகியூஷன்", ‘நொட் இன் த புக்’ நாடக தமிழாக்கம் செய்து தனது புதுமை அரங்கின் மூலம் (Modern Stage) அரங்கேற்றியவர். பலருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர். "டயல் எம் போ மர்டர்’ ஒரே காட்சியில் (One Set Play) நடக்கும் நாடகம். இலங்கையில் அரங்கேற்றப்பட்ட பின்பே தமிழக்கத்தில் One Set Play பிரபல இயக்குனர் கே. பாலச்சந்தர் எழுதிய “சதுரங்கம் அறிமுகப்படுத 'தப்பட்டது.
மானாமக்கீனின் இத்தகைய இலக்கிய கலைத்துறைச் சேவைகளைக் கெளரவித்து அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல விருதுகள், பட்டங்கள், பொற் கிழிகளை வழங்கியுள்ளன. அவை பற்றிய விபரங்கள் கீழே சுருக்கமாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
விருதுகள்
தாஜல் உலூம் - 1991, இலங்கை முஸ்லிம் கலாசார அமைச்சு ‘தமிழ் மணி' - 1992. இலங்கை இந்துசமய, கலாசார அமைச்சு “எழுத்து வேந்தன். 1994. தமிழ்நாடு முஸ்லிம் பத்திரிகையாளர்
BF5D. ‘தமிழ்மாமணி' - 1994. தமிழ்நாடு, இஸ்லாமியத் தமிழிலக்கியக்
85p85LD. ‘தமிழ்க் குமரன்'- 1994 அனைத்திலங்கை எம்.ஜி.ஆர் மன்றம் ‘முத்தமிழ் வித்தகர். 1990 உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம். ‘தமிழ்காவலன்'. 1996 தாய்லாந்து தமிழ்ப்பண்பாட்டுக் கழகம். “ஆய்வு இலக்கியச்சுடர். 1999 சென்னை ராத்திபு ஜலாலிய்யா
மையம். *இலக்கிய சிரோமணி' - 1999 மலேசியா, கவிஞர் மன்றம். ‘தீன்வழிச் செம்மல்”. 2003 குளச்சல் இஸ்லாமிய இளைஞர்
FBLD,
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புன்னியாமீன் 63

Page 38
எம்.எம். மக்கீன் (மான மக்கீன்)
*கலாபூசணம்' - 2004 இலங்கை அரசு தேசிய விருது.
‘தேசத்தின் கண். 2005 இலங்கைப்பிரதமர் சாகித்திய விருது.
‘ஆய்வுத்தமிழ் ஆற்றுனர். 2007 உலகத் தமிழுறவு பண்பாட்டு
மன்றம். சென்னை.
‘இலக்கிய நிறைமதி - 2007 ரீலங்கா முஸ்லிம் கலைஞர்
முன்னணி,
பொற்கிழிகள் தமிழ் நாடு, அய்யம்பேட்டை, 14வது அல்-குர்ஆன் மாநாடு - 1993 தமிழ்நாடு, சென்னை வி.ஜி.பி. சந்தனம்மாள் அறக்கட்டளை- 1993
தன்னுடைய கலை இலக்கியத்துறை ஈடுபாட்டுக்கு ஆரம்ப காலகட்டங்களில் ஆக்கமும் ஊக்கமும் வழங்கியவர்கள் என்ற அடிப்படையில் கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன், சுதந் திரன் துணையாசிரியர் எம்.எச்.எம்.இப்ராகிம், வானொலி மாமா எம்.சரவணமுத்து. சுதந்திரன் ஞானசுந்தரம். பேராசிரியர் கே.கைலா சபதி, தினபதி ஆசிரியர் கலாசூரி எஸ்.டி.எஸ்.சிவநாயகம். தினக ரன் ஆசரியர் ஆர்.சிவகுருநாதன் ஆகியோரை இன்றும் நினைவு கூர்ந்து வருகின்றார். w
ஐந்து தசாப்தங்களுக்கு மேல் எழுதிவரும் மானா மக்கி னின் வெற்றியின் பின்னணியில் அவரின் அன்புப் பாரியார் நூர் மின்ஷா அவர்களும், மகள் பாத்திமா அஞ்ஜானா (இவர் ஒரு டாக்டர். தற்போது பங்களாதேஷில் பணி புரிகின்றார். மகன் அஸிம் அஹற்மட். இவர் ஒரு கணனிப் பொறியியளாளர். தற்போது சிங்கப்பூரில் பணிபுரிகின்றார்) இருப்பதையிட்டு மிகவும் பெருமிதம் அடையும் இவர், இது பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின் றார். “ஒன்றில் வெற்றி கிடைக்கின்றதோ இல்லையோ, செயலொன்றில் விடாப்பிடியாக முனைவதற்கு இல்லத்தரசியின் ஒத்துழைப்பு வேண்டும். இது எனக்குப் பூரணமாக கிடைத்தது, கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மனைவியை, துணைவியை நான் அப்படி அழைப்பதே இல்லை. நிழல் என்பேன். சற்று ஆழமாக சிந்தித்தால் அதுவே சரியாகப்படும். பூரணமான நிழலொன்று என் மீது படர முன்னால் எப்படி எப்படியோ எழு
64 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 12)

எம்.எம். மக்கீன் (மான மக்கிண்)
திக் கொண்டிருந்த என் பேனா என் வாழ்க்கையில் என் மனைவி யின் இணைவோடு நிழலாகி மாறியதும் என் எழுத்துக்கள் சீரமைக்கப்பட்டன. மெருகேற்றப்பட்டன.” . .
இந்த சிரேஷ்ட எழுத்தாளரின் தற்போதைய முகவரி:
Maana Mackeen B-54-%, N.H.S. FLATS, Colombo -10 Tel:- 011-2332225
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புன்னியாமின் 65

Page 39
சு. ரீகந்தராசா
சு. பூரீகந்தராசா
புலம்பெயர்ந்த எழுத்தாளர்-42
எழுத்துத்துறை
கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ் சிக்குடியைச் சேர்ந்த சுப்பையா பூரீகந்தராசா அவர்கள் பாடும்மீன் பூரீகந்தராசா, மட்டுநகர் பூரீ, திருமுருகராசன், செந்தமிழ்ச் செல்வர், சு.பூரீகந்தராசா ஆகிய பெயர்களில் எழுதிவரும் ஒரு எழுத்தா ளரும், கலைஞருமாவார். 1991 ஆண்டு அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்து தற்போது "மெல்போன்’ நகரில் தனது குடும்பத்தி னருடன் நிரந்தரமாக வசித்து வருகின்றார்.
1953ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 01ஆந் திகதி கனகசபை சுப்பையாபிள்ளை, சின்னம்மா தம்பதியினரின் புதல்வ ராக பூரீகந்தராசா களுவாஞ்சிக்குடியில் பிறந்தார். இவரது தந்தை யாழ்ப்பாணத்தையும், தாயார் களுவாஞ்சிக்குடியையும் சேர்ந்தவர் கள். தனது 13வது வயதிலே தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்த இவர், தனது பாடசாலைக் கல்வியை பட்டிருப்பு மகாவித்தியாலயத்திலும், பின்னர் கோட்டமுனை அரசி னர் கல்லூரியிலும் (தற்போதைய இந்துக்கல்லூரி) பெற்றார். 1972 பெப்ரவரி முதல் 1985 ஏப்ரல் வரை இலங்கை பொது
66 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 12)
 

சு. யூரீகந்தராசா
எழுதுவினைஞர் சேவையில் இணைந்து தொழில்புரிந்து வந்தார். இக்காலகட்டத்தில் (1983ஆம் ஆண்டு) சட்டப்பட்டதாரியானார். பின்பு 1984இல் சட்டக்கல்லூரி இறுதிப் பரீட்சையில் சித்திய டைந்து சட்டத்தரணியாக சத்தியபிரமாணம் எடுத்துக் கொண்டார்.
தன்னுடைய இலக்கியத்துறை ஈடுபாடு பற்றி சட்டத்தரணி சு.ழரீகந்தராசா பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “.1968ஆம் ஆண்டு எனது 14 ஆவது வயதில் எழுத்துத்துறையில் என்னை “இறக்கி’விட்டவர் அப்போது எனது பாடசாலையில் உயிரி யல் ஆசிரியராக இருந்த திரு. முயிலங்கூடலூர் பி. நடராசன் அவர்கள். என்னுள்ளே எனக்குத் தெரியாமல் இருந்த எழுத்துத் திறமையை இனங்கண்டு “உயிர்ப்பு” என்ற பாடசாலையின் சஞ்சிகையின் ஆசிரியராக என்னை நியமித்து என்னை எழுத வைத்தவர் அவர். பின்னர் 1970ஆம் ஆண்டு சுதந்திரனில் அரசி யல் செய்திகளையும், கட்டுரைகளையும் எழுதத் தொடங்கினேன். 1970ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் அரசியல் சார்ந்த எனது எழுத்தின் வேகத்தையும், தேவையையும் அதிகரித்தது. அவ்வப் போது சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் பத்திரிகைகளில் வெளிவந்தன. நாடகங்களை மேடையேற்ற வேண்டிய தேவை ஏற்பட்டபோது நாடகங்களை எழுதினேன். அவுஸ்திரேலியாவில் தேவையேற்பட்ட போதெல்லாம் கவிதைகளையும், பாடல்களை யும் எழுதியுள்ளேன்.”
இவரின் முதலாவது ஆக்கம் வயிற்றுக்கொடுமை எனும் தலைப்பில் தினபதிப் பத்திரிகையில் 1968ம் ஆண்டு பிரசுரமானது. அன்றிலிருந்து இன்றுவரை 10 சிறுகதைகளையும், இருநூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகளையும் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. அதேபோல இலங்கை வானொலியிலும் இவரது பல ஆக்கங்கள் ஒலிபரப்பாகியுள்ளன. மேலும் புலம்பெயர்ந்த நாடான அவுஸ்ரேலியாவிலிருந்து ஒலிபரப்பாகும் இன்பத்தமிழ் ஒலி, 3CR- தமிழ்க்குரல், 3ZZதமிழோசை, வானமுதம் போன்றவற்றில் ஒலிபரப்பாகியுமுள்ளன.
இவர் இதுவரை ஐந்து நூல்களை எழுதிவெளியிட் டுள்ளார். விபரம் வருமாறு.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புன்னியாமினி 67

Page 40
சு. ரீகந்தராசா
01. சந்ததிச் சுவடுகள் (நாடகங்களின் தொகுப்பு)
02. மனதைக்கவரும் மட்டக்களப்பு நாட்டப்பாடல்கள்
03. தமிழினமே தாயகமே (கவிதைத் தொகுப்பு)
04. தமிழின் பெருமையும், தமிழரின் உரிமையும்
(ஆய்வுரைகள்)
05. ஓர் ஆஸ்திரேலிய ஈழத்தமிழரின் இந்தியப்
LULj600UD
பின்வரும் நூல்களை விரைவில் வெளியிடவுமுள்ளார்.
01 சங்ககாலமும், சங்க இலக்கியங்களும்
02 மாமன்னர் எல்லாளன் (வரலாற்று நாடகம்),
03 திருவெம்பாவைச் சிறப்பு தமிழ் இன்பம் (வானொலிப்
பேச்சுக்கள்)
அதேநேரம் இவர் பிறஎழுத்தாளர்களின் இரண்டு நூல் களை வெளியிட்டுமுள்ளார். கண்ணகியம்மன் ஊர்சுற்றுக்காவியம் (களுவாஞ்சிக்குடி சைவமகாசபையின் சார்பில்) புலம்பெயர்ந்த பூக்கள் (அவுஸ்திரேலியாவில் விக்ரோறிய இலங்கைத் தமிழ்ச்சங் கத்தின் சார்பில்)
கலைத்துறை ஈடுபாடு
பாடசாலைக் காலத்தில் பல்வேறு பேச்சுப் போட்டிகளில் முதற்பரிசு பெற்றுள்ள இவர் பல நாடகங்களில் நடித்துள்ளார். 15ஆவது வயதில் சோக்கிரட்டீஸ் நாடகத்தினை இயக்கி மேடை யேற்றிதுடன், அதில் சோக்கிரட்டீசாக நடித்து மிகுந்த பாராட் டைப் பெற்றார். இவரே எழுதி, இயக்கி, சகமானவர்களோடு நடித்து மேடையேற்றிய நாடகம் “சாப்பாடா சமிபாடா”. இவ்விரு நாடகங்களும் 1969ஆம் ஆண்டு பாடசாலையின் பரிசளிப்பு விழாவில் மேடையேற்றப்பட்டு ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரதும் பாராட்டுக்களைப் பெற்றன.
1970ஆம் ஆண்டு இவர் எழுதி, இயக்கி, பிரதான பாத்திரத்தில் (நாரதர்) நடித்த நாடகம் “கற்பனையில் தேவ லோகம்” கலாசாரப் பேரவையின் நாடகப் போட்டியில் முதற்பரி சையும், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் ஆகியவற்றுக்கான பரிசுகளையும் பெற்றது.
68 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 12

சு. ரீகந்தராசா மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் பலமுறை மேடையேற்றப்பட்டன.
வில்லுப்பாட்டுக்களை எழுதி வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தியதுடன், மட்டக்களப்பு கலாசாரப் பேரவையின் வில்லுப ‘பாட்டுப் போட்டிகளிலும் சிறந்த வில்லிசைக் கலைஞராக பரிசுகள் பெற்றுள்ளார். மாதவியின் வாழ்க்கை வரலாற்றைக்கூறும் வில்லுப் பாட்டு பல்வேறு மேடைகளில் மேடையேறியது. அக்காலத்தில் சமுதாயத்தில் பல்வேறிடங்களில் ஊழல்கள், அதிகார துஷ்பிர யோகங்களும் இடம்பெற்றுவந்தன. அவற்றை மக்களுக்கு இனம் காட்டுவதற்கும், மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்து வதற்கும் நாடகங்களைப் பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத் தக்கது. மேலும், அழிந்துகொண்டு போகும். அல்லது பயன்பாடு குறைந்துகொண்டுபோகும் கிராமியக் கலைகளான நாட்டுப்பாடல், வில்லுப்பாட்டு என்பவற்றையும் மேடைநாடகக் கலையையும் வளர்க்க வேண்டும் என்ற மன உந்தலின் வெளிப்பாடுகளை இவரின் நாடகங்களில் காணமுடியும்.
இதுவரை இவரால் மேடையேற்றப்பட்ட நாடகங்கள் 6) ICBLDTC: -
கற்பனையில் தேவலோகம், தம்பியாடி இது, அளவுக்கு மிஞ்சினால், ஊருக்குத்தாண்டி உபதேசம், சிதைந்த கனவுகள், பகையிலும் பண்பு,
புத்திரபாசம்,
உணர்ச்சிகள்,
சந்ததிச் சுவடுகள்,
பிராயச்சித்தமி, கன்னி மனம் (அவுஸ்திரேலியாவில்), ஆலம்பழம்.
இவரால் நடித்த நாடகங்கள் 6l5 DMT:
01. நந்திவர்மன் காதலி (வரலாற்று நாடகம்) 02. ஆலம்பழம் அளவுக்கு மிஞ்சினால்
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புண்னியாமின் 69

Page 41
சு. ரீகந்தராசா
03. ஊருக்குத்தாண்டி உபதேசம்
04. சந்ததிச் சுவடுகள்
05. பிராயச்சித்தம்
06. மாவீரன் எல்லாளன் (அவுஸ்திரேலியாவில்)
களுவாஞ்சிக்குடியில் நூல் நிலையம் ஒன்று இல்லாத குறையைப் போக்குவதற்காக நண்பர்களோடு சேர்ந்து எம்.ஜி.ஆர். மன்றத்தினை அமைத்து அதன் சார்பில் நூல்நிலையம் ஒன்றை 1970ஆம் ஆண்டில் ஏற்படுத்தினார். களுவாஞ்சிக்குடி பொதுமக் களின் உதவியால் அமைக்கப்பட்ட அந்த நூல்நிலையம் மிகவும் நல்ல முறையில் இயங்கியது. களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த நல்லுள்ளம் கொண்ட பலரின் அன்பளிப்புக்களாக நாளேடுகள், வாரசஞ்சிகைகள், மாதப்பத்திரிகைகள், மற்றும் நூல்கள் என்பன நூல்நிலையத்துக்குக் கிடைத்து வந்துள்ளன. அரசியல் காரணங் களால் தேர்தல் காலத்தில் சிலரால் அது தீக்கிரையாக்கப்பட்டது. அத்துடன் இலங்கையில் பல்வேறுபட்ட பொது சேவை அமைப்பு களில் பல்வேறுபட்ட பதவிகள் வகித்து சேவை புரிந்துவந்தார். அதேபோல இவரின் பொதுச்சேவைப் பணிகள் அவுஸ்திரேலி யாவிலும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இவரின் பொதுச் சேவையில் சில வருமாறு
01 செயலாளர், எம்.ஜி.ஆர். மன்றம், களுவாஞ்சிக்
குடி (1970லிருந்து) 02 இயக்குனர், இளம் நாடக மன்றம். களுவாஞ்சிக - குடி (1970முதல்)
03 செயலாளர் இளைஞர் மறுமலர்ச்சி மன்றம்
களுவாஞ்சிக்குடி (972) 04 ம.தெ.எ. பலநோக்குக் கூட்டுறவுச்சங்க இயக்க
னர் சபை உறுப்பினர் (1973-74) 05 செயலாளர் பட்டிப்பு மகாவித்தியாலய பழைய
மாணவர் சங்கம் (1974 77) 06 செயலாளர் களுவாஞ்சிக்குடி புனர் வாழ்வக்
கழகம் (1977 புயலுக்குப்பின்)
70 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விரத்திரட்டு - (தொகுதி 12)

சு. ரீகந்தராசர்
07
08
09
10
11
12
தலைவர், பட்டிருப்புத் தொகுதி கலைஞர் ஒன்றியம் (1982லிருந்து) செயலாளர், களுவாஞ்சிக்குடி வரியிறுப்பாளர் சங்கம் 1987 செயலாளர், களுவாஞ்சிக்குடி சைவமகாசபை
(1986 - 88) இணைச் செயலாளர், களுவாஞ்சிக்குடி
பிரஜைகள் சங்கம் (1988 - 1991) அம்பாறை மாவட்டச் செயலாளர், அரசாங்க எழுதுவிளைஞர் சங்கம் (1972 - 76) செயற்குழு உறுப்பினர், அரசாங்க எழுது விளைஞர் சங்கம் (1974 - 75)
அவுஸ்திரேலியாவில்
01. செயற்குழு உறுப்பினர், இலங்கைத் தமிழ்
சங்கம் 1992 - 2002
02. முத்தமிழ் விழாக்குழுத் தலைவர் 1993 -
2002 .
O3. தலைவர் இலங்கைத் தமிழ்ச்சங்கம்
(ஈழத்தமிழ்ச்சங்கம்) 1999 - 2001
04. தலைவர் அவுஸ்திரேலியா தமிழ் அகதிகள்
கழகம் (1993 - 1994)
05. sfifuj "gsLégp s 605tb - Tamil World' :
(இருமொழிப் பத்திரிகை) 1994 - 1995
06. தலைவர் விற்றல்ஸி தமிழ்ச்சங்கம் (2005வரை)
07. தலைவர் மற்றும் அறிவிப்பாளர், “வானமுதம்”
தமிழ் ஒலிபரப்புச் சேவை (2005வரை)
1994b ஆண்டு அவுஸ்திரேலியாவிலிருந்து தொடர்ந்து ஒரு வருடகாலமாக வெளிவந்து கொண்டிருந்த தமிழ் உலகம் (மாதம் இருமுறை) என்ற இருமொழிப் பத்திரிகையின் ஆசிரியராக
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புன்னியாமீன் 71

Page 42
சு. ரீகந்தராசா
1994ம் ஆண்டு அவுஸ்திரேலியாவிலிருந்து தொடர்ந்து ஒரு வருடகாலமாக வெளிவந்து கொண்டிருந்த தமிழ் உலகம் (மாதம் இருமுறை) என்ற இருமொழிப் பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றி வந்தார். தற்போது அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ஈழமுரசு (மாதம் இருமுறை) பத்திரி கையில் செந்தமிழ்ச் சோலை எனும் பத்தியை தொடர்ந்தும் எழுதி வருகின்றார்.
இவரின் இலக்கியத்துறை, கலைத்துறை ஈடுபாட்டினை கெளரவிக்குமுகமாக பல விருதுகளையும், கெளரவங்களையும் பெற்றுள்ளார். விபரம் வருமாறு
சிறந்த நடிகர், சிறந்த நாடக இயக்குனர், சிறந்த நாடக எழுத்தாளர், சிறந்த வில்லிசைக் கலைஞர் முதலிய விருதுகளை மட்டக்களப்பு கலாசாரப் பேரவையினால் 1970ஆம் ஆண்டுக்கும் 1982ஆம் ஆண்டுக்கும் இடையில் பலமுறை பெற்றுள்ளார்.
பேச்சுப் போட்டிகளில் களுவாஞ்சிக்குடி சைவமகாசபைப் போட்டிகளிலும் மற்றும், மாவட்ட ரீதியிலும், அகில இலங்கை ரீதியிலான போட்டிகளிலும் பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.
அவுஸ்திரேலியாவிலும் இவரது தமிழ்ப்பணிக்காக விக்ரோறிய ஈழத்தமிழ்ச் சங்கம், விக்ரோறிய தமிழ் கலாசாரக் கழகம், மெல்போன் தமிழ்ச்சங்கம் என்னும் அமைப்புக்கள் பாராட்டி விருதுகளை வழங்கியுள்ளன.
2005ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் “செந்தமிழ்ச் செல்வர்” என்ற பட்டமும், சிறப்பு விருதும், பல்லினக் கலாசார அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது.
2007இல் அவுஸ்திரேலிய அரசால், விக்ரோறிய மாநிலத் துக்கான சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டார்.
72 எழுத்தாளர்கள், ஊட்கவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 12)

சு. றிகந்தராசா 2007இல் இந்தியா, தமிழ் நாட்டில், திருச்சிராப்பள்ளியில் உள்ள புனித வளனார் கல்லூரி "அயலக முத்தமிழ்ப் பணி”க் கான விருதை வழங்கிக் கெளரவித்தது. .
மாணவப்பராயத்திலும் அதன் பின்னரும் தமிழ்மொழி மீதும், தமிழ் இலக்கியங்கள் மீதும் தமிழ் நாடகக் கலைமீதும் தனக்கு ஆர்வம் வருவதற்கும், அது வளர்வதற்கும் காரணகர்த் தாக்களாகவும், வழிகாட்டிகளாகவும் இருந்தவர்கள் என்ற அடிப்ப டையில் மதிப்பிற்குரிய ஆசிரியர்கள் அமரர் பண்டிதர் க. கந் தையா அவர்களையும், வித்துவான், தமிழ்ஒளி க. செபரெத்தினம் அவர்களையும், அன்புடன் நினைவு கூர்ந்து வரும் இவரின் அன்புப்பாரியார் பெயர் கோமலாதேவியாகும். இவர் இரசாயனவி யலாளராக அவுஸ்ரேலியாவில் பணியாற்றி வருகின்றார். இத்தம் பதியினருக்கு சஞ்சீவ், விதுர்ஷன், ஜனகன் ஆகிய மூன்று ஆண்செல்வங்கள் உள்ளனர்.
இவரின் முகவரி
S.SRIKANTHARAJAH, 1 PETRACOURT EPPING, VICTORA 3076 AUSTRALA
PHONE: 61394084519 MOBILE : 61 422 444 132 e-mail: srisuppiah (@hotmail.com
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புண்னியாமீன் 73

Page 43
ராஜா ஜென்கின்ஸ்
ராஜா ஜென்கின்ஸ்
பதிவு
295
கலைத்துறை
மத்தியமாகாணம் கண்டி மாவட்டம் கங்கவட்ட கோரளை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த கங்கவட்ட கோரளை கிராம சேவகர் பிரிவில் வாழ்ந்துவரும் ராஜா ஜென்கின்ஸ் நாடறிந்த ஒரு கலைஞராவார். கலைத்துறையில் கடந்த 13 ஆண்டுகளாக 600ற்கும் மேற்பட்ட கலைஞர்கள்,எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், திறமைமிக்க மாணவர்கள், ஆசிரியர்களை இன,மத, பால் வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று விருது வழங்கி
கெளரவப்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துக் கொண் டுள்ள இவர், “ரத்னதீபம்’ விருதுவழங்கும் “ரத்னதீப பதனம” நிறுவனத்தின் ஸ்தாபகரும், மலைய கலை, கலாசார சங்கத்தின் ஸ்தாபகரும், காமினி பொன்சேகா ஞாபகார்த்தமன்றம், ஏ.எம். ராஜா ஞாபகார்த்த மன்றம் ஆகியவற்றின் ஸ்தாபகருமாவார்.
கலைஞர்கள் வாழும் போதே கெளரவிக்கப்படல் வேண் டும். உலகில் உள்ள கலை வடிவங்கள் அனைத்துமே அந்தந்த காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள். ஒரு கலைஞன் தான் வாழும் சூழலில் சமூகத்திலுள்ள பலதரப்பட்ட அம்சங்களை
74 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 12)
 

ராஜா ஜென்கின்ஸ் தன்னகத்தே ஈர்த்துக்கொண்டு மீளவும் அதனை உலக மக்கள் அறியும் வண்ணம் நெறிப்படுத்தி தனக்கு முடிந்த கருத்து வெளிப்பாட்டின் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றான். இப்படிப்பட்ட உன்னதப் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொள் ளும் கலைஞர்கள் தமது சுயநலம் பற்றி அக்கறையின்றி இருப் பார்கள். இறுதியில் எவராலுமே கண்டுகொள்ளப்படாத ஒதுக்கப் பட்ட மனிதர்களாக மரணிப்பதுதான் வழமையாக நடைபெறும் நிகழ்வாகும். ஒவ்வொரு கலைஞனும், எழுத்தாளனும், ஊடகவி யலாளனும் தான் வாழும்போது கெளரவிக்கப்படுவதை ஒரு பாக்கியமாக கொள்வான். அதுமட்டுமல்ல அவனது திறமைக்கு அது உந்துசக்தியாகவும் அமையும். ஒரு அரச நிறுவனம் அல்லது ஒரு இயக்கம் செய்ய வேண்டிய பணியினை தனியொரு மனிதனாக நின்று தொடர்ச்சியாக 13 ஆண்டுகள் சாதித்து வருவது ராஜா ஜெகின்ஸ்சின் இமாலய சாதனையாகும்.
கண்டியைச் சேர்ந்த எஸ்.ஜென்கின்ஸ், சந்திரா தம்பதியினரின் புதல்வராக 1957ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி பிறந்த ராஜா க.பொ.த உயர்தரம் வரை க/ வித்தியார்த்த கல்லூரியில் கல்வி பயின்றவர். கலைத்துறையையே தனது முழுநேரப் பணியாகக் கொண்டுள்ள சாமு எனும் புனைப் பெயரில் நன்கு அறியப்பட்ட இவரின் வாழ்க்கைத் துணைவியின் பெயர் ஜெயந்தி. இத்தம்பதியினருக்கு நிதர்சனி, வாணிசிறி, பிரேம் ஆகிய மூன்று அன்புச் செல்வங்கள் உளர்.
2006 ஜனவரி 29ஆம் திகதி ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய பேட்டியொன்றில் தனது கலைத்துறை ஈடுபாடு பற்றி பின்வருமாறு பிரஸ்தாபித்திருந்தார். “...எனது பாடசாலை வாழ்க் கையில் சுமார் 10 வயதாக இருக்கும் போது நகைச்சுவை நடிகராக மேடைநாடகத்தில் நடித்தேன். அப்போது நான் பலரது பாராட்டுகளையும் பெற்றேன். அதன்பிறகு ரகுநாதன் தயாரித்த நிர்மலா திரைப்படத்தில் 12 வயதிலேயே சிறு சிறு சேவைகளைச் செய்யும் எடுபிடியாக வேலை செய்தேன். இதன்போது சினிமாவை மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பும் இத்துறையில் நாமும் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற பேரவாவும் ஏற்பட்டது. எனது 17 வயதில் “காத்திருப்பேன் உனக்காக’ திரைப்படத்தில் ஒரு சிறு பாத்திரம் ஒன்றில் தோன்றி
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புண்னியாமின் 75

Page 44
ராஜா ஜென்கின்ஸ்
நடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அன்று தொடங்கிய எனது கலைப்பயணம் இன்றுவரை தொடர்கிறது. கடந்த 3 தசாப்தங் களுக்குள் தமிழ், சிங்களம், ஆங்கிலம், பிரஞ்சு, யப்பான், இத் தாலி ஆகிய மொழிகளைக் கொண்ட படங்களில் துணை நடி கராக பல்வேறு வேடங்களில் நடிக்கக்கூடியதாவிருந்தது ஒரு மகிழ்ச்சியான விடயம். இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் வர்ணத்திரைப்படமான ஷர்மிலாவின் இதயராகம் திரைப்படத்தை சிங்களத்தில் “ஒபமட வாசனா” என்று மொழிமாற்றம் செய்தார்கள். அதற்கு சிங்களத்தில் உதவி வசனகர்த்தாவாக 1993ஆம் ஆண்டு நான் கடமையாற்றியிருந்தது ஒரு குறிப்பிடக்கூடிய விடயமாகும். அதுமாத்திரமன்றி இலங்கையில் தயாரிக்கப்படும் சர்வதேச திரைப்படங்களுக்கு துணை நடிகர்களை ஒழங்குப்படுத்தும் முக வராக செயற்பட்டுக் கொண்டிருப்பதையும் பெருமையாக கருது கின்றேன்” என்கிறார்.
இவர் சவூதி அரேபியா நாட்டில் பணிபுரிந்த காலகட்டங் களில் சில கலைநிகழ்ச்சிகளைத் தயாரித்து அங்கிருந்த மக்க ளுக்கு அந்நிகழ்ச்சிகளை ஒலி, ஒளிப்பதிவு செய்து பார்க்கச் செய்துள்ளார். இதுவரைக்கும் முழு இலங்கையிலும் பல்வேறு துறைகளில் தங்கள் சாதனை முத்திரைகளைப் பதித்த சுமார் 600ற்கும் மேற்பட்டவர்களுக்குப் பிரமாண்டமான விழாக்கள் நடத்திக் கெளரவித்து, சான்றிதழ், பதக்கம், விருதுகள் போன்ற வற்றை வழங்கியுள்ளார். இதுவரை இலங்கையிலுள்ள 80க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களை இவரது “ரத்னதீபம்’ பதனம எனும் அமைப்பு கெளரவித்துள்ளது. அது மாத்திரமன்றி “நெஞ்சில் ஓர் ஆலயம்” திரைப்படத்தில் உதவி இயக்குனரும், சிங்கள திரைப்படத் தயாரிப்பாளரும், ஒலி, ஒளிப்பதிவாளருமான நடிகை சங்கீதாவின் அருமைத் தந்தையாகிய திமோதி வீரரத் னவின் “Eye of 65” என்ற புகைப்படக் கண்காட்சி ஒன்றை கண்டியில் பாரிய முறையில் நடத்தினார். தொடர்ந்தும் மத்திய மாகாணத்தில் பரதநாட்டியத்துறையில் சிறந்த மாணவர்களுக்கு (கலாலயங்களுக்கு) சான்றிதழ் வழங்கி “ரத்னதீப பதனம” மூலம் ஊக்கப்படுத்தி வருகின்றார். மேலும் சிங்கள திரைப்பட நடிகர்கள்,
76 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 12)

ராஜா ஜென்கின்ஸ்
நடிகைகளின் இசைக்கலை நிகழ்ச்சியொன்றை “சயோநாரா” என்ற பெயரில் தனது அமைப்பினுடாக நடத்தினார். மறைந்த பிரபல திரைப்படநடிகர் காமினி பொன்சேகாவின் சிரார்த்ததின வைபவத்தை தொடர்ச்சியாக 4 ஆண்டுகளாக நடத்தி மத்திய மாகாண பாடசாலை மாணவ, மாணவிகளின் சிறந்த ஆற்றல் உள்ள மாணவர்கள் 150 பேருக்கு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தியுள்ளார். அதேநேரம், 1996 இலிருந்து 2000ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ரத்னதீபம்’ விழாக்களை இறுவெட்டுகள் மூலம் வெளிக்கொணர்ந்து பதிவாக வைத்திருப் பதும் இவரது சேவைகளில் ஒன்றாகவே திகழ்கின்றது.
ராஜா ஜெகின்ஸ் பழகுவதற்கு இனியவர். பிற கலை ஞர் களையும், எழுத்தாளர்களையும், ஊடகவியலாளர்களையும் கெளரவித்து, அவர்களை ஊக்கப்படுத்துவதை தன் வாழ்நாள் உள்ளவரை மேற்கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டவர். பொதுவுாக இவரது “ரத்னதீப" விருது வழங்கும் விழாக்கள் மிகவும் பிரமாண்டமான முறையில் கொண்டாடப் படுவது வழக்கம். இலங்கையிலுள்ள பிரபலமாக கலைஞர்கள், அரசியல்வாதிகள் வரவழைக்கப்பட்டு இந்த நிகழ்ச்சியினை நடத்துவார். “ரத்னதீப பதனம” எனும் அமைப்பில் ஒரு அமைப்பி ருந்தாலும்கூட அதன் முழுநேர உழைப்பாளி இவரே. ஏதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள “ரத்னதீப' விருது வழங்கும் நிகழ்ச்சியில் இலங்கை சிங்கள இசையுலகிற்கு தமது உயரிய பங்களிப்பினை வழங்கிய தென்னிந்தியாவைச் சேர்ந்த பிரபல பாடகர்களான ஏ.எம். ராஜா அவர்களையும், பிரபல பாடகி ஜிக்கி அவர்களையும் கெளரவிக்கவுள்ளார். நடைமுறையில் பார்க்கும்போது ஒரு விருதுவழங்கும் வைபவத்தை நடத்துவதென் பது இலகுவான காரியமல்ல. பல்வேறு தியாகங்களின் மத்தியிலேயே அதனை நிறைவேற்ற வேண்டியிருக்கும். பொது வாக அரச சார்பான நிறுவனமொன்று ஒரு விருது வழங்கும் வைபவத்தை நடத்தும்போது எத்தனை பிரச்சினைகளுக்கும், சிக்கல்களுக்கும், விமர்சனங்களுக்கும் முகம்கொடுப்பதை நாம் கண்கூடாக காண்கின்றோம். ஆனால், ஒரு தனி மனித செயற்பாட்
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புன்னியாமின் 77

Page 45
ராஜா ஜென்கின்ஸ்
டின் கீழ் நடைபெறும் “ரத்னதீப விருது வழங்கும் வைபவம் பெருமளவுக்கு விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டிருப்பது இவரின் திட்டமிட்ட செயற்பாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
உலகப் புகழ்பெற்ற ஆங்கில நடிகர் சார்லி சப்ளினின் அருமைப் புதல்வி ஜெராய்ட் சப்ளின் (Gerald Chaplin) டாக்டர் வழிவாகோ “Doctor Zhivago” என்ற திரைப்படத்தில் நடித்து, ஆஸ்கார் விருது பெற்ற நடிகையாவார். இவரின் “மதர் திரேசா’ Mother Theresa’ என்ற ஆங்கில படத்தில் துணை நடிகராக
"இரத்தினதி விருது விழா
78 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 12)
 

ராஜா ஜென்கின்ஸ் நடித்ததையும், ஹிந்தி பிரபல நடிகர் கபீர்பேடி, இந்தி திரைப்பட வில்லன் நடிகர் குல்சான் ஆகியோர்களுடன் இணைந்து நடித்த தையும் தன்னுடைய கலைத்துறை வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக இவர் கொண்டுள்ளார். இவரின் இத்தகைய சேவை களைக் கருத்திற்கொண்டு 1999ஆம் ஆண்டில் மத்திய மாகாண முஸ்லிம் கலாசார அமைச்சு “கலைச்சுடர்” எனும் பட்டம் வழங்கி கெளரவித்தது. தமிழ் கலைஞர் அபிவிருத்தி நிலையம் ஏற்பாடு செய்த கெளரவிப்பு விழாவில் அப்போதைய கலாசார அமைச்சர் விஜிதஹேரத் "கலாகுரு’ பட்டம் வழங்கி கெளரவித் தார். இவை தவிர மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சினா லும் இவர் கெளரவிக்கப்பட்டுள்ளார்.
தன்னுடைய கலைத்துறை ஈடுபாட்டுக்கு உந்துசக்திகள் என்ற வகையில் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.எல். ஜூனைதீன், நடிகர் ரோகிதமானகே, இலக்கியஆர்வளர் இரா. ராமன், நடிக ரும், சகோதரருமான எஸ். விஸ்வநாதராஜா, ரூபவாஹினி கூட்டுத் தாபனப் பணிப்பாளர் எஸ். விஸ்வநாதன் ஆகியோரை அன்புடன் நினைவுகூர்ந்துவரும் இவரின் முகவரி;-
RAJAJENKINS 25/15A PUSHPATHANAMAWATHA,
KANDY.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புன்னியாமீன் 79

Page 46
டாக்டர் சண்முகம் முருகானந்தன்
ச. முருகானந்தன்.
பதிவு 296
எழுத்துத்துறை
வட மாகாணம், யாழ்ப்பாண மாவட்டம், உடுபிட்டிய தேர்தல் தொகுதியில் கரணவாய் கிழக்கு கிராமசேகவர் பிரிவைச் சேர்ந்த டாக்டர் சண்முகம் முருகானந்தன் அவர்கள் கடந்த மூன்று தசாப்த காலங்களாக சிறுகதைகள், குறுநாவல்கள், விமர்சனக்கட்டுரைகள், நலவியற்கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றை எழுதிவரும் இலங்கையில் புகழ்பெற்ற மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். ச. முருகானந்தன் என்ற பெயரில் பிரபல்யமடைந்துள்ள இவர், பிரகவாதஆனந்த, வன்னேரிஐயா, வன்னியன், தமிழ்ப்பித்தன், கந்தமகிழ்னன், கருணைமுருகு ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதி வருகின்றார். இவரின் சொந்த முகவரி: அன்பகம், கரணவாய் கிழக்கு, கரவெட்டியாகும்.
1950ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதி சி. சண்முகம், ச. இராசம்மா தம்பதியினரின் புதல்வராக கரணவாய் இல் பிறந்த முருகானந்தன் கரணவாய் அமெரிக்கன் மிஷன் ஆரம்பப் பாடசாலை, கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி ஆகியவற்றில் தனது ஆரம்பக் கல்வியினைப் பெற்றார். யாழ் இந்துக்
80 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 12)
 

டாக்டர் சண்முகம் முருகானந்தன் கல்லூரியில் உயர்கல்வியைப் பெற்ற இவர், கொழும்பு மருத்து வக் கல்லூரி, யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆகியவற் றில் தொழில்சார் கல்வியைப் பெற்றுள்ளார். தற்போது ஒரு வைத்தியராகத் தொழில்புரிந்து வரும் இவர், தற்போது கொழும் பில் வசித்து வருகின்றார். இவரின் அன்புப் பாரியார் சந்திரகாந்தா முருகானந்தன். இவர் இரத்மலான கொழும்பு இந்துக் கல்லூரி யின் ஆசிரியை. இத்தம்பதியினருக்கு அகல்யா, அனுசியா ஆகிய இரண்டு அன்புச் செல்வங்களுளர்.
கல்லூரியில் கற்கும் காலத்திலிருந்தே வாசிப்புத்துறை யிலும், இலக்கியத்துறையிலும் ஈடுபாடுமிக்கவராக இருந்த இவர் தனது 26வது வயதில் மிகவும் இளமை பொருந்திய வேளையில் கதை உலகில் பிரவேசித்தார். இவரின் கன்னி ஆக்கம் 1976ஆம் ஆண்டு ஆவணி திங்களில் தினகரன் பத்திரிகையில் ‘கண்களின் வார்த்தைகள் தெரியாதோ’ எனும் தலைப்பில் இடம்பெற்றது. அதைத்தொடர்ந்து டாக்டர் ச. முருகானந்தன் அவர்கள் அரசியல், பொருளாதாரம், சமூகம், கலை, நகைச்சுவை, பக்தி, வீரம் என்பன போன்ற உணர்வு நிலைகளின் கருப்பொருள்களில் நின்று இதுவரை 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200ற் கும் மேற்பட்ட கவிதைகளையும், 100க்கும் மேற்பட்ட கட்டுரை களையும், 10 குறுநாவல்களையும், பல விமர்சனங்கள், நாடகங் களையும் எழுதியுள்ளார்.
ஒரு சிறுகதையாவது பல்வேறு வகைப்பட்ட மனித உணர் வுகளில் ஏதேனும் ஒரு உணர்வை ஒரு கண நேரத்திற்குள் தோன்றி மறையச் செய்யுமாயின் அது மிகவும் சிறந்த ஒரு சிறுகதையாக போற்றிப் பயன்படுகின்றது. இவ்வாறான எத்த னையோ சுண்டியிழுக்கும், படித்தவுடன் அப்படியே மனதில் பதிந்துவிடும் சிறுகதைகளை உருவாக்கித்தந்தவர் ச. முருகானந் தன். இவரது கதைகளில் சமுதாய நோக்கும் தேசியப் பிரச்சினை களும் கருக்களாக அமைந்துள்ளன. இவரது கதைகளில் ஒரு நிதானமும், காலத்துக்கு உகந்த கருத்துக்களும் கலைத்துவம் பெற்றிருக்கின்றன.
இன்றுவரை தொடர்ச்சியாக இலக்கியத்துறையில் ஈடு பட்டு வரும் இவரின் மேற்படி ஆக்கங்கள் இலங்கையில் தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, தினக்குரல், ஈழநாடு, சுதந்திரன்,
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புன்னியாமீன் 81

Page 47
டாக்டர் சண்முகம் முருகானந்தன்
சுடர்ஒளி, தினமுரசு, ஈழநாதம், முரசொலி, வெள்ளிநாதம், நவ மணி, கொழுந்து, தமிழ்அலை, ஈழமுரசு, மித்திரன், சரிநிகர், சங்குநாதம், மல்லிகை, சிரித்திரன், சுடர், மூன்றாவது மனிதன், கதம்பம், ஞானம், இருக்கிறம், இலங்கைவிகடன், தாரகை போன்ற தேசியப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. அதேநேரம், இந்தியாவிலிருந்து வெளிவரும் முற்போக்கு இலக்கிய சஞ்சிகைகளான தீபம், கணையாழி, சிகரம், தாமரை, செம்மலர், மற்றும் குங்குமம், ராணி போன்றவற்றிலும், புலம்பெயர் நாட்டின் இலக்கிய சஞ்சிகைகளான எரிமலை, பிரான்ஸ் ஈழநாடு, சுடர் ஒளி ஆகியவற்றிலும் பிரசுரமாகியுள்ளன.
1976ம் ஆண்டில் இவர் எழுத்துலகில் பாதம் பதித்தாலும் இவரின் முதலாவது சிறுகதைத்தொகுதி மீன்குஞ்சுகள் எனும் தலைப்பில் மல்லிகைப்பந்தல் வெளியீடாக 1994ம் ஆண்டிலே வெளிவந்தது. இதைத்தொடர்ந்து இதுவரை 12 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவற்றுள் மின்குஞ்சுகள், தரைமீன்கள், இது எங்கள் தேசம், இனிவானம் வசப்படும், ஒரு மணமகனைத் தேடி, நாம் பிறந்த மண் ஆகிய சிறுகதைத் தொகுதிகளும், நாளை நமதே, எயிட்ஸ் இல்லாத உலகம் ஆகிய கட்டுரைத் தொகுதிகளும் நீ நடந்த பாதையிலே, துளித்தெழும் புதுச் செடிகள், நெருப்பாறு, அது ஒர் அழகிய நிலாக்காலம் ஆகிய கவிதைத்தொகுதிகளும், குறுநாவல்களும் இவரால் எழுதப்பட்டு வெளிவந்துள்ளன. மணிமேகலைப் பிரசுரத்தினால் 2005ம் ஆண்டு வெளியிடப்பட்ட நீ நடந்த பாதையில் எனும் கவிதை நூல் இவரின் முதலாவது கவிதைத் தொகுதியாகும், தற்போது தேயி லைப் பெண், காணாமல் போனவர்கள் ஆகிய நூல்கள் அச்சிலுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
தமிழ் நாட்டில் நா. பார்த்தசாரதி அவர்களின் தீபம் சஞ்சிகையில் இவரது மீன்குஞ்சுகள் சிறுகதை வெளியாகியது. சென்னை இலக்கியச் சிந்தனையின் சிறந்த சிறுகதையாகவும் தெரிவு செய்யப்பட்டது. நா. பார்த்தசாரதி அவர்களின் பாராட்டுக் கடிதமும் இவருக்கு மென்மேலும் உற்சாகமளித்திருக்கிறது. 2003இல் வெளியான தரைமீன்கள் சிறுகதைத் தொகுதிக்கு 2004 சிறுதைக்கான சாஹித்திய மண்டலம் பரிசு கிடைத்தது. இவர் இதுவரை 25க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்று
82 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 12)

டாக்டர் சண்முகம் முருகானந்தன் பல்வேறு பரிசில்களை வென்றுள்ளமை விசேடமாக சுட்டிக்காட்ட வேண்டிய ஒரு விடயமாகும்.
மனித நேயம் மிக்க எழுத்தாளரான இவர் அமைதி யானவர். ஆனால், இவரது படைப்புக்களோ ஆக்ரோசமானவை. வாசகனைச் சிந்திக்கவைப்பவை. காலத்தின் கண்ணாடியாக இலக்கியங்களை வெளிப்படுத்தி நிற்கின்ற ச.முருகானந்தனின் இலக்கியப் பணி மெச்சத்தக்கது. இவரது ஆக்கங்கள் சமூக விழிப்புணர்வு, மனிதநேயம் என்பவற்றைத் தாங்கி வருவதுடன், உணர்வுபூர்வமான எழுத்து நடையும் குறிப்பிடத்தக்கதாக அமை கின்றது. இலங்கையின் யுத்த துன்பியல் நிலைமைகளையும், மக்களின் இன்னல்களையும், தமிழர் போராட்டத்தின் நியாயத் தன்மையினையும் படம்பிடித்துக்காட்டும் இவரது அண்மைக்கால சிறுகதைகள் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருக் கின்றமை குறிப்பிடத்தக்கது. .
தன்னுடைய இலக்கியத்துறை ஈடுபாட்டுக்குக் காரணகர்த் தாக்களாகவும், ஊக்குவிப்பாளர்களாகவும் இருந்தவர்கள் என்ற அடிப்படையில் செ.கதிர்காமநாதன், மல்லிகை ஜீவா ஆகியோரை இன்றும் அன்புடன் நினைவுகூர்ந்துவரும் இவர், கிளிநொச்சி தமிழ்சங்க தலைவராவார்.
இவரின் தற்போதைய முகவரி:
Dr. S. MURUGANANDAN 81, MANNING PLACE WELLAWATTACOLOMBO-06
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புண்னியாமீன் 83

Page 48
த. சந்திரசேகரன்
த. சந்திரசேகரன்
புலம்பெயர்ந்த எழுத்தாளர்-43
பதிவு 297
எழுத்துத்துறை
வடமாகாணத்தின் வவுனியா சின்னப் புதுக்குளத்தில் பிறந்து, கோவில் புதுக்குளத்தில் வளர்ந்து 1981ஆம் ஆண்டி லிருந்து தென்னிந்தியா- திருச்சியில் நிரந்தரமாக வசித்துவரும் த. சந்திரசேகரன் நந்தவனம் சந்திரசேகரன்’ எனும் பெயரால் அறியப்பட்ட பிரபல கவிஞரும், எழுத்தாளரும், பத்திரிகை ஆசிரியருமாவார். சந்திரசேகரனின் தாத்தா இந்தியாவின் திருச்சி யைச் சேர்ந்தவர். அவர் இலங்கை வந்து சுமார் 70 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். சந்திரசேகரனின் பெற்றோர் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். தற்போது திருச்சியில் தாத்தாவின் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார்.
ஆயிரத்துத் தொழாயிரத்து எழுபத்தோராம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி செ. தனவந்தன், சின்னம்மாள் தம்பதியினரின் புதல்வராக வவுனியா சின்னப்புதுக்குளத்தில் பிறந்த இவர், தனது ஆரம்பக்கல்வியை கோவில் புதுக்குளம்
84 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 12)
 

钴。 சந்திரசேகரன்
பூரீமாவித்தியாலயத்தில் (தரம் -04 வரை) கற்றார். பின்பு 1981ஆம் ஆண்டில் தென்னிந்தியா சென்று திருச்சியில் குடியேறினார். திருச்சியில் தாயகம் திரும்பியோருக்கான உயர் பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். பின்பு தொழில்சார் கல்வித் துறையில் ஆர்வம்காட்டி தொழில்சார் கல்வித்துறையை திருப்தி கரமாக நிறைவு செய்த இவர், தொழில் ரீதியாக கடந்த பதினைந்து ஆண்டுகளாக இந்தியன் கெமிகல் நிறுவனத்தின் விற்பனை முகவராகப் பணியாற்றி வருகின்றார். 1998.09.04ஆந் திகதி தனது வாழ்க்கைத் துணைவியாக சங்கீதாவை கரம்பிடித்து இல்லறத்தில் இணைந்த சந்திரசேகரன், சங்கீதா தம்பதியினருக்கு ஆசைக்கும், ஆஸ்திக்குமாக எட்டு வயது நிரம்பிய சே.முகிலன் எனும் ஆண் மகனொருவர் இருக்கின்றார். .
தமிழ்நாடு திருச்சியில் கற்கும் காலங்களிலிலிருந்தே இந்திய இலக்கிய சஞ்சிகைகளையும், புத்தகங்களையும் வாசிக் கும் பழக்கம் இவரிடம் இருந்தது. இவர் சிறுவயதிலிருந்தே இந்தியாவின் முற்போக்கு இலக்கிய சஞ்சிகைகளான தாமரை, கணையாழி, தீபம் மற்றும் ஜனரஞ்சக சஞ்சிகைகளான குமுதம், ஆனந்தவிகடன், கலைமகள் போன்றவற்றை தவறாது வாசிக்கும் பழக்கத்தினை இயல்பாகவே கொண்டிருந்தார். இத்தகைய வாசிப்பு தானும் எழுத வேண்டும், தானும் ஒரு எழுத்தாளராக மாற வேண்டும் என்ற ஆசையையும், உத்வேகத்தையும் இவருள் ஏற்படுத்தியது. இந்த அடிப்படையில் இவர் சுயமாக எழுத ஆரம்பித்தார்.
1990ஆம் ஆண்டில் திருச்சியிலிருந்து வெளிவரும் "புதிய தோணி’ எனும் சஞ்சிகையில் இவரது கன்னிக்கவிதை ‘காகிதக் கப்பல்” எனும் தலைப்பில் பிரசுரமானது. இக் கவிதையின் பிரசுரத்தைத் தொடர்ந்து தான் மேலும் மேலும் எழுத வேண்டும் என்ற வேகம் அதிகரித்தது. இந்த அடிப்படையில் இரண்டு தசாப்தகாலங்களாக இடைவெளியின்றி இலக்கியத்துறையில் கவிதை, சிறுகதை, கட்டுரை என எழுதிவருகின்றார்.
இதுவரை 500க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 400க்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிதைகளையும், 50க்கும் மேற்பட்ட
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புன்னியாமீன் 85

Page 49
த. சந்திரசேகரன்
சிறுகதைகளையும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இத்தகைய ஆக்கங்கள் தென்னிந்தியாவிலிருந்து வெளிவரும் ராணி, தினகரன், பாக்கியா, கண்மணி, பூக்காரி, கல்வெட்டு, காவேரி, ஆனந்தவிகடன், குமுதம், மாலைமலர், தினத்தந்தி, காலைக்கதிர் போன்ற 50க்கும் மேற்பட்ட இலக்கிய சிற்றேடுகளிலும், பத்திரிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.
திருச்சி வானொலியில் இவரின் பல கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. இதுவரை இவரின் கவிதைகள் தொகுக்கப் பட்டு “காகிதப்பூவின் தேன்துளிகள்’ எனும் தலைப்பில் கவிதை நூலொன்று 2007ஆம் ஆண்டு வெளிவந்தது. தற்போது தான் எழுதிய ஹைக்கூ கவிதைகளைத் தொகுத்து தனது இரண்டாவது நூலினை வெளியிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.
சந்திரசேகரனின் கவிதைகளிலும், சிறுகதைகளிலும் சமூகப்பிரச்சினைகள் இழையோடியிருப்பதை காணமுடியும். தான் வாழும் சமூகத்தில் சமூக நிலை, அரசியல், பொருளாதாரம், கல்வி, கலாசாரம் போன்ற பல்வேறுபட்ட கருப்பொருள்களை மையமாகக் கொண்டு இவரின் படைப்பிலக்கியங்கள் அமைந்தி ருப்பதை அவதானிக்கலாம். ஒருவரின் ஒரு செயல்பாட்டை முதுகில் குத்துவதைப் போல் எழுதுவதே அண்மைக்கால இலக்கியம் என்ற நிலை மாறி வரும் இக்காலகட்டத்தில் ஒருவ ருடைய மனதையும் புண்படுத்தாது மிகவும் நலினமான முறையில் இலக்கியத்தின் ஊடாக தனது கருத்துக்களை யதார்த்தபூரவமாக முன்வைப்பது இவரின் எழுத்துக்களின் சிறப்பம்சமாகும்.
இனிய நந்தவனம்
கவிஞர் த.சந்திரசேகரன் அவர்களுடைய இதழியல் பணியில் உச்சமாகக் காணப்படுவது இவரால் வெளியிடப்படும் ‘இனியநந்தவனம்’ எனும் கலை, இலக்கிய சஞ்சிகையாகும். உலகத் தமிழர்களிடையே உலாவரும் மக்கள் மேம்பாட்டு இதழான ‘இனியநந்தவனம்’ 1997ஆம் ஆண்டு ஜனவரி தொடக் கம் மாதம் தோறும் இடைவிடாது வெளிவந்து கொண்டிருக் கின்றது. 2000ம் ஆண்டு முதல் ‘இனியநந்தவனம் பலவர்ண முகப்பட்டையை தாங்கி வருகிறது. இச்சஞ்சிகை கிரவுன் 8
86 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 12)

த. சந்திரசேகரன்'
அளவில் முகப்பட்டையுடன் சேர்த்து 36 பக்கங்களைக் கொண் டுள்ளது. விலை இந்திய ரூபாய் 5.00
‘இனியநந்தவனம்' சஞ்சிகைகளை நோக்கும்போது இதில் காணப்படக்கூடிய ஒரு சிறப்பம்சம் உலகளாவிய ரீதியில் சிதறிக்கிடக்கும் தமிழ் எழுத்தாளர்களை ஒன்றிணைக்கும் ஒரு தமிழக சஞ்சிகையாக இருப்பதாகும். இச் சஞ்சிகையின் ஆலோச னைக்குழுவில் உலகளாவிய ரீதியில் வாழும் பல தமிழ் எழுத் தாளர்களை இணைத்துக் கொண்டிருப்பது கோடிட்டுக்காட்டக் கூடிய ஒரு விடயமாகும். குறிப்பாக ‘இனியநந்தவனம்' சஞ்சிகை யில் ஆலோசகர்களாக பிரான்சில் 'வண்ணைதெய்வமும், இலங்கையில் “அந்தனிஜீவாவும், அவுஸ்திரேலியாவில் ‘ழறி கந்தராசா”வும், மலேஷியாவில் "நபச்சைபாலனும், சிங்கப்பூரில் “சிங்கைத் தமிழ்ச்செல்வமும், டென்மார்க்கில் “வேலணையூர் பொன்னன்ணாவும், சுவிச்சர்லாந்தில் ‘கல்லாறுசதிசு”ம், ஜெர்மனி யில் “புவனேந்திரன்’ ஆகியோரும் இணைந்துள்ளனர்.
‘இனியநந்தவனத்தின் பிரதம ஆசிரியராக த.சந்திரசே கரன் பணியாற்றுகின்றார். இணை ஆசிரியர்களாக கவிஞர் தன்னம்பிக்கை லேணா, சி. சங்கீதா ஆகியோரும், துணை ஆசிரியராக எஸ்.செந்தில்குமாரும் சிறப்பாகப் பணியாற்றி வருகின் றனர். ‘இனியநந்தவனம் இடைக்கிடையில் ஒவ்வொரு சிறப்பிதழ் களை வெளியிட்டு வருகின்றது. 2008 ஜுன் இதழை கல்விச் சிறப்பிதழாக வெளியிடவுள்ளது. 2008 செப்டம்பர் இதழ் இலங் கைச் சிறப்பிதழாக வெளிவரவுள்ளது. சிறப்பிதழ்கள் 80 பக்கங் களுக்கு மேல் அமைந்திருக்கும். அதேநேரம், ஒவ்வொரு சிறப்பி தழ்களிலும் துறைசார்ந்த ஒருவரைத் தேர்ந்தெடுத்து ‘இனியநந் தவனத்தின் பலவர்ண முகப்பட்டையில் பிரசுரித்து கெளரவம் செய்கின்றது. மேலும் தமிழ் இலக்கியவாதிகள், தமிழ் அறிஞர்கள், சாதனையாளர்கள், உலகத்தமிழ் எழுத்தாளர்கள் ஆகியோரின் புகைப்படங்களையும் பிரசுரித்து வருகின்றது. கவிதை, கட்டுரை, சிறுகதை, நூல்நயம், துணுக்குகள் போன்ற பல்வேறு அமசங் களை இனியநந்தவனம் தன்னகத்தே கொண்டுள்ளது. ஜனரஞ்ச கப் போக்குமிக்க ‘இனியநந்தவனம் 2007ஆம் ஆண்டில் உலக ளாவிய ரீதியில் 56 கவிஞர்களை ஒன்றிணைத்து ‘கண்ணாடிச் சித்திரங்கள்’ எனும் தொகுப்பினை வெளியிட்டிருந்தமையும்,
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புன்னியாமீன் 87

Page 50
莎· சந்திரசேகரன்
2008 ஆம் ஆண்டிலும் இம்முயற்சியைத் தொடர இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவரின் இதழியல் சேவைக்காக 2006ம் ஆண்டில் “சிற்றிதழ்செம்மல் விருதும் 2007ஆம் ஆண்டில் “சிறந்த சிற்றிதழ் விருதும் இவருக்குக் கிடைத்துள்ளது.
உலகத் தமிழ் சிற்றிதழ்கள் சங்கத்தின் பொருளாளராக செயற்பட்டுவரும் இவர், இதுவரை 3 மகாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். அதேநேரம், தமிழ் இலக்கியம் தொடர்பான பல்வேறு கருத்தரங்குகளை நடத்தியுள்ளதுடன், பிறகருத்தரங்குகளில் கலந்து தனது பங்களிப்பினையும்
- உலகத் தமிழர்களிடையே உலாவரும். &: 2032 a 5.ix's കിമീf ( ( (; :
88 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 12)
 
 
 
 

த. சந்திரசேகரன்
வழங்கியுள்ளார். மக்கள் மேம்பாட்டுக்காக என்னால் முடிந்த கருத்துக்களை சொல்வதும், அதற்கான பணிகளையும் மேற்கொள்வதும் இனியநந்தவனம் மூலம் புதிய எழுத்தாளர் களுக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதும் உலகத் தமிழ் எழுத்தாளர்களை தமிழகத்தில் அறிமுகம் செய்து வைப்பதும் என் எழுத்துப் பணியின் குறிக்கோள் என்று அடக்கமாகக் கூறி வரும் நந்தவனம் சந்திரசேகரன் பழகுவதற்கு இனியவர். தனது கருத்துக்களை துணிவுடன் முன்வைக்கக்கூடிய இவர் தன்னு டைய இலக்கிய இதழியல் பணிகளுக்கு ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் இருந்து வரும் தனது ஆசான் புலவர் தியாக சாந்தன் அவர்களையும், தனது இதழியல் பணிகளுக்கு ஒத்து ழைப்பாக இருக்கும் சசி.பாரதி கலாரட்ணம், டென்மாக்கில் வண்ணைதெய்வம் ஆகியோரையும் அன்புடன் நினைவு கூர்ந்து வரும் இவரினதும்: ஈழத்து எழுத்தாளர்களுக்கு நேசக்கரம் நீட்டக்காத்திருக்கும் இனிய நந்தவனத்தினதும் முகவரி;-
NANDAVANAM CHANDRASEKARAN INIYA NANDAVANAM NO. 5, New Street, Opp. CSI Hospital, Woraiyur, Trichy - 620 003 TamilNadu South India Tel:94432 84823
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புன்னியாமின் 89

Page 51
இராசையா நாகலிங்கம் (அன்புமணி)
இராசையா நாகலிங்கம் (அன்புமணி)
பதிவு 298
எழுத்துத்துறை
கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில், ஆரயம்பதி-01 கிராமசேவகர் பிரிவில் வசித்துவரும் இராசையா நாகலிங்கம் இலங்கையில் புகழ்பெற்ற சிரேஷ்ட எழுத்தாளரும், கல்விமானும், நிர்வாக சேவை அதிகாரி யும் நாடகக் கலைஞருமாவார். அன்புமணி, அருள்மணி, தமிழ் மணி ஆகிய பெயர்களில் இலங்கை வாசகர்களிடத்தில் நன்கு பரிச்சயமான இராசையா நாகலிங்கம் இன்றுவரை அமைதியாக தன் இலக்கிய, கலைத்துறைப் பணிகளை மேற்கொண்டு வருகின் றார.
ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பதைந்தாம் ஆண்டு மார்ச் மாதம் 06ஆம் திகதி வைரமுத்து இராசையா, பொன்னர் தங்கப் பிள்ளை தம்பதியினரின் புதல்வராக மட்டக்களப்பு ஆரயம்பதியில் பிறந்த நாகலிங்கம் மட்டக்களப்பு ஆரயம்பதி ராமகிருஷ்ண வித்தியாலயத்தில் தனது ஆரம்பக்கல்வியைப் பெற்றார். பின்பு இடைநிலைக் கல்வி, உயர்தரக்கல்வி ஆகியவற்றை மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய கல்லூரியில் பெற்றார். பூரீலங்கா நிர்வாக
90 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 12)
 

இராசையா நாகலிங்கம் (அன்புமணி)
சேவையின் ஒய்வுபெற்ற அதிகாரியான இவரின் அன்புப் பாரியார் பார்வதி நாகலிங்கம். இவர் இளைப்பாரிய கல்லூரி ஆசிரியை. இத்தம்பதியினருக்கு நா.அன்புச் செல்வன் (நெதர்லாந்து), நா. அருட்செல்வன் (மக்கள் வங்கி ஆரயம்பதி), நா. சிவச்செல்வன் (விரிவுரையாளர் ஆசிரியர் கலாசாலை மட்டக்களப்பு), நா. தீரச்செல்வன், நா. பொன்மனச் செல்வன், நா. பூவண்ண செல்வன் (கட்டார்), ஆகிய அன்புச் செல்வங்களுளர்.
1952ல் கல்வித்திணைக்கள இலிகிதராக தனது தொழிலை ஆரம்பித்து 1981ல் இலங்கை நிர்வாக சேவைப் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, களுவாஞ்சிக்குடி உதவி அரசாங்க அதிபர், மட். கச்சேரி தலைமையக உதவி அரசாங்க அதிபர், வடக்கு, கிழக்கு மாகாண சபை உள்துறை உதவிச் செயலாளர் முதலிய பதவிகளை வகித்து ஆளுநர் செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளராகப் பணிபுரிந்து தற்போது பாராளு மன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி கதிராமன் அவர்களின் செயலாளராக பணியாற்றி வருகின்றார்.
கல்லூரியில் கற்கும் காலத்திலும், தனது இளம்பராயத் திலும் ஒரு சிறந்த வாசகனாக இவர் திகழ்ந்து வந்தார். இந்தியாவிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகளையும், இலங்கையிலி ருந்து வெளிவரும் பத்திரிகைகள், சஞ்சிகைகளையும் தவறாது வாசிப்பது இவரின் பழக்கமாக இருந்தது. ஒரு எழுத்தாளன், சிந்தனையாளன் உருவாகுவதற்கு வாசிப்பு மிக முக்கியமான ஊடகமென்பார்கள். வாசிப்பே ஒரு மனிதனை பூரணப்படுத்து கின்றது. தான் வாழும் சமூகத்தைப் பற்றிய அறிவினைப் பெற்றுக் கொள்ளவும், சமூகத்தில் புரையோடியிருக்கும் ரணங்களை இனங்கண்டு கொள்ளவும் வாசிப்பு ஒருவருக்கு அத்தியாவசியம்ா கின்றது.
இந்த அடிப்படையில் அன்புமணியின் முதல் ஆக்கம் ‘கிராம்போன் காதல்’ எனும் தலைப்பில் இந்தியாவிலிருந்து வெளிவரும் பிரபல இலக்கிய ஏடான கல்கி இதழில் பிரசுரமானது. அன்றிலிருந்து இன்றுவரை 500க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், ஆய்வுக் கட்டுரைகள், ! நாடகங்கள் ஆகியவற்றை இவர் எழுதியுள்ளார். இத்தகைய
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புன்னியாமீன் 91

Page 52
இராசையா நாகலிங்கம் (அன்புமணி.)
ஆக்கங்கள் இலங்கையிலும், இந்தியாவிலும் வெளிவரும் தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் மற்றும் இலங்கை வானொலி போன்றவற்றில் பிரசுரமாகியும், ஒலிபரப்பாகியுமுள்ளன.
பொதுவாக அன்புமணியின் எழுத்துகளில் சமூக பிரக்ஞை யுள்ள கருத்துக்களைக் காணமுடியும். இலக்கியத்தினுடாக, நாசுக்காக பிறருக்கு உபதேசம் செய்யும் பாங்கு சிறப்புமிக்கது. இவரின் படைப்பிக்கியங்களில் கற்பனைவாதத்தைவிட யதார்த்த நிலைகளே முக்கியத்துவம் பெற்றிருக்கும். அதேநேரம், தான் எடுத்த கருப்பொருளை ஆற்றொழுக்காக எழுத்தால் வடிப்பது இவருக்கு கைவந்த கலை, எச்சந்தர்ப்பத்திலும் தன் பெயர் ‘அன்புமணிக்கேற்ப பிறர் மனங்களை நோகடிக்காது அன்பாகவும், மென்மையான அணுகுமுறையிலும் கருத்துக்களை முன்வைப் பதில் இவர் சிறப்புமிக்கவர்.
இவரால் இதுவரை சுயமாக ஏழு புத்தகங்கள் எழுதி வெளியிடப்பட்டுள்ளன.
92 எழுத்தாளர்கள், ஊகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 12)
 

இராசையா நாகலிங்கம் (அன்புமணி)
01.
02.
O3.
O5.
06.
O7
இல்லத்தரசி (சிறுகதை) 1980 உதயம் பிரசுரம் மட்டக்களப்பு வரலாற்றுச் சுவடுகள் (சிறுகதை) 1992 உதயம் பிரசுரம் மட்டக்களப்பு ஒரு தந்தையின் கதை (நாவல்) 1989 உதயம் பிரசுரம் மட்டக்களப்பு ஒரு மகளின் கதை (குறுநாவல்) 1995 அன்பு வெளியீடு தமிழ் இலக்கிய ஆய்வு இல 7 சென்னை மணிமேகலைப் பிரசுரம் எட்டுத் தொகை பத்துப்பாட்டு நூல்கள்-2007 இல 7 சென்னை மணிமேகலைப் பிரசுரம் பதினெண் கீழ்கணக்கு நூல்கள்-2007 இல 7 சென்னை மணிமேகலைப் பிரசுரம்
அன்பு மணியின் சில நூல்களை நான் வாசித்திருக்கின்
றேன். அந்நூல்களுள் தன் ஒரே மகளின் மறைவையிட்டு ‘ஒரு மகளின் கதை’ எனும் தலைப்பில் வெளியிட்டிருந்த கல்வெட்டு என்மனதை வெகுவாகப் பாதித்தது. ஒரு துயர்மிக்க சம்பவத்தை ஒரு குறுநாவலாக எழுதியிருந்தார். அதில் அவரால் எழுதப்பட்ட குறிப்பைக் கோடிட்டுக் காட்டுவது பொருத்தமானதாக அமையும் மெனக் கருதுகின்றேன்.
..இது ஒரு வித்தியாசமான கல்வெட்டு பஞ்சபுராணங்கள் இல்லாமல், உறவினர்களின் புலம்பல்கள் இல்லாமல், அமரத்துவம் அடைந்தவரைப் பற்றிய உணர்வுகளே . நினைவு மலராகிறது. ஆயிரம் மலர்கள் அகிலமெங்கும் பூத்தாலும், நமது தோட்டத்தில் மலர்ந்து சிரிக்கின்ற ஒருமலர் நமக்கு முக்கியமாகிறது. அதுபோலத்தான் எமது சோகமும் உலகில், ஆயிரக்கணக்கில் மனிதர்கள் அவலச்சாவு அடைகின்றனர். தீயில், வெள்ளத்தில், போரில், பூகம்பத்தில், விபத்தில், விஷமத்தனத்தில் அந்த ஒவ்வொரு உயிரும் சம்பந்தப்பட்டவர்களுக்கு முக்கிய மாகிறது. அவ்வாறு தான் எங்கள் திருநிறைச் செல்வியின் அகாலமரணமும் எங்களைப் பாதிக்கிறது. அந்தப் பாதிப்பு கள், மனஉணர்வுகள் அமைதியடையவே இந்த எழுத்து.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புன்னியாமின் 93

Page 53
இராசையா நாகலிங்கம் (அன்புமணி)
அன்புமணியின் இலக்கியச் சேவையை மிக முக்கியத் துவப்படுத்தக்கூடிய சேவை தன்னுடைய நூல்களை மாத்திரம் வெளியிடுவதில் கரிசனைக் காட்டாது பிற எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடுவதிலும், வெளியீட்டுக்கு உதவி புரிவதிலும் இவர் விசாலமான சேவையைப் புரிந்துள்ளார். இவரின் அன்பு வெளியீட்டகம் மூலம் வெளியிட்டுள்ள சில நூல்களின் விபரங் களை நோக்குவோம்.
மகோன் வரலாறு - தங்கேஸ்வரி குள கோபடன் தரிசனம் - தங்கேஸ்வரி நூறு வருட மட்டு நகர் அனுபவங்கள்
- ஆசிரியர் திலகம் எஸ். பிரான்ஸிஸ் மட்டக்களப்பில் ஒரு மாமனிதர் ஜோசெப்வாஸ்
- ஆசிரியர் திலகம் எஸ். பிரான்ஸிஸ் வாழ்க்கைச் சுவடுகள் (சுயசரிதம்)
- ஆசிரியர் திலகம் எஸ். பிரான்ஸிஸ் நீருபூத்த நெருப்பு (நாடகங்கள்) ஆரையூர் இலவர்
மேலும் கனடாவிலுள்ள ‘ரிப்னெக்ஸ்’ பதிப்பகத்தின் மூல மாக இலங்கையில் வரலாற்றுப் புகழ்பெற்ற பல முக்கிய நூல் களை மறுபதிப்பு செய்து வெளியிடுவதிலும் இவரின் பங்ளிப்பு மிகைத்துக் காணப்படுகின்றன. இந்த அடிப்படையில் கனடாவில் பதிப்பித்துள்ள சில நூல்களின் விபரம் வருமாறு:-
சீ. மந்தினி புராணம் - வித்துவான் ச. பூபாலலிங்கம் மாமங்கேஸ்வர பதிகம் - வித்துவான் அ. சரவணமுத்தன் சனிபுராணம் - வித்துவான் அ. சரவணமுத்தன்
இதேபோல க.த. செல்வராஜாகோபால் எழுதிய ‘புலவர் மணிக்கோவை’ செ. குணரத்னம் எழுதிய 'விபுலானந்த பாவியம்’ ஆகிய நூல்களையும் கனடாவில் வெளியிடுவதற்கான ஏற்பாடு களை செய்துள்ளார்.
அன்புமணி அவர்கள் களுவாஞ்சிக்குடி உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய காலகட்டங்களில் சைவமாமணி விஸ்வலிங்கம் எழுதிய ‘மண்டூர் பிள்ளைத் தமிழ்’ எனும்
94 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 12)

இராசையா நாகலிங்கம் (அன்புமணி)
நூலினையும், தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்துவரும் சு. யூரீகந்தராசா எழுதிய ‘சந்ததி சுவடுகள்’ எனும் நூலினையும். ஆரையூர் நல். அலகேசமுதலியார் எழுதிய ‘ஆரையூர் கோவை' எனும் நூலினையும் வெளியிட காரணகர்த்தாவாக இருந்துள்ளார். அதேபோல இலங்கையில் மூத்த பெண் எழுத்தாளர் ந. பாலேஸ் வரி எழுதிய ‘தத்தை விடு தூது’ எனும் நூலினையும் எஸ்.எல். எம். ஹனிபா எழுதிய ‘மக்கத்து சால்வை’ எனும் நூலினையும் மட்டக்களப்பு செபஸ்டியன் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடுவ தற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கியுள்ளார்.
மேலும் இவருடைய இலக்கிய வாழ்வில் பல மலர்களை பொறுப்பாளர்களாக இருந்து வெளியிட்டுள்ளார். அவற்றுள் ‘புலவர்மணி நூற்றாண்டு மலர்', ‘ஆரையூர் கந்தர் சிறப்பு மலர்' போன்ற சிறப்பு மலர்களை வெளியிடுவதில் இவர் காட்டிய ஈடுபாடு அதிகம்.
அன்புமணியின் கலை இலக்கிய சேவையின் இவரால் வெளியிடப்பட்ட மலர் இலக்கிய சஞ்சிகை ஒரு முக்கிய இடத் தைப் பெறுகின்றது. 1970ஆம் ஆண்டு முதல் 1972ஆம் ஆண்டு வரை மலர் பத்து இதழ்கள் விரிந்தன. ஈழத்து சஞ்சிகை வர லாற்றில் ஒரு முக்கிய இலக்கிய சஞ்சிகையாக கருதப்படும் மலர் கிழக்கு மாகாணத்தில் மாத்திரமன்றி நாடளாவிய ரீதியில் பல இளம் எழுத்தாளர்களுக்கு களமமைத்துக் கொடுத்து. அவர்களை வளர்த்து விட்டிருக்கின்றது. ·
சத்தியமான இலக்கியத் தேடலுடன், கடந்த 55 வருடங் களாக இலக்கியத்துறைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இவர் தன் நண்பர்களின் இலக்கியத்திறனை இனம்கண்டு ஊக் குவிப்பதில் சாதனை படைத்தவர். மட்டக்களப்பில் இடம்பெறும் எந்தவொரு இலக்கிய நிகழ்விலும் இவரது மறைமுகமான பங்க 'ளிப்பு இருக்கும்.
மட்டக்களப்பு தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளர்,
தலைவர் (1961 - 1972), "மலர்” ஆசிரியராக (1970 - 1971), மாவட்டக் கலாசாரப் பேரவை நீண்ட கால உறுப்பினராக
(1962 முதல்),
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புன்னியாமீன் 95

Page 54
இராசையா நாகலிங்கம் (அன்புமணி)
புலவர்மணி நினைவுப் பணிமன்றத் தலைவராக
(1991 - 1995), இந்து இளைஞர்மன்றச் செயற்குழு உறுப்பினராக
(1970 முதல்) பல்வேறு சமய, சமூக, கலாசார, இலக்கியப் பணிகளில் காத்திரமான பங்களிப்பைச் செய்தவர் இவர்.
அன்புமணியின் நாடகப் பணியும் குறிப்பிட்டுக் காட்டக் கூடிய ஒன்றாகும். கல்லூரியில் கற்கும் காலத்திலிருந்தே பல நாடகங்களில் முக்கிய வேடங்களில் இவர் நடித்துள்ளார். அதே போல கல்லூரி காலத்தில் ஓரரங்க நாடகங்களிலும் இவர் பிரபல்யம் பெற்றிருந்தார். கல்லூரி வாழ்க்கையில் ஏற்பட்ட நடிப்பு ஆர்வம் பிற்காலத்தில் இவரை ஒரு நடிகராக, நெறியாள்கை யாளராக, நாடக ஆசிரியராகவும் இனம்காட்டியது. இந்த அடிப்ப டையில் ஆரையம்பதியில் 1952ஆம் ஆண்டில் ‘மனோகரா’ எனும் பொது மேடை நாடகத்தில் இவர் நடித்ததும் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடையலானார். இதே காலகட்டங்களில் ‘அமரவாழ்வு’, ‘ஏமாற்றம்’, பிடியுங்கள் கலப்பையை’ போன்ற ஓரரங்க நாடகங்கள் இவரால் தயாரித்து, நடித்து, மேடையேற்றப் பட்ட நாடகங்களாகும்.
1962ஆம் ஆண்டு இவரால் எழுதப்பட்ட ‘தரைகடல் தீபம்’ எனும் நாடகப் பிரதியாக்கத்திற்கு சாகித்தியமண்டலப் பரிசு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. பின்பு இந்நாடகம் பல இடங்களில் அமோக வரவேற்புடன் மேடையேற்றப்பட்டது. அதே போல இவரின் ‘சூழ்ச்சிவலை’ எனும் மேடை நாடகமும் ஜனரஞ் சகத்தன்மை பெற்றிருந்தது.
1962ஆம் ஆண்டு முதல் இலங்கை வானொலியில் அவர் பல் நாடகங்களை எழுதியுள்ளார். 1967ஆம் ஆண்டு ‘நமது பாதை’ எனும் தொடர் நாடகம் வானொலியில் 3 மாதங்கள் தொடர்ச்சியாக ஒலிபரப்பாகியதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை இவர் உருவாக்கிக் கொண்டார். ஒரு நடிகர், நெறியாள்கையாளர், நாடக ஆசிரியர் ஆகிய அன்புமணி ஒரு சிறந்த நாடக விமர்சகருமாவார். அதுமட்டுமன்றி பிரதேச, மாவட்ட, தேசிய ரீதியில் பல நாடகப் போட்டிகளில் நடுவராகவும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.
96எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 12)

இராசையா நாகலிங்கம் (அன்புமணி)
அன்புமணியின் கலை இலக்கிய சேவைகளைக் கருத்திற் கொண்டு இந்து சமய விவகார அமைச்சு 1992ஆம்ஆண்டில் ‘தமிழ்மணி’ எனும் பட்டம் வழங்கியது. அதேபோல 2001ஆம் ஆண்டில் வடக்கு, கிழக்கு ஆளுனர் விருது இவருக்குக் கிடைத் தது. ரீலங்கா அரசு கலைஞர்களுக்கு வழங்கும் உயரிய விருதான ‘கலாபூஷணம்’ விருதினை 2002ஆம் ஆண்டு இவர் பெற்றுக்கொண்டார். இவை தவிர பிரதேச, மாவட்ட, மாகாண மட்டத்தில் பல்வேறுபட்ட இலக்கியச் சங்கங்கள் இவருக்குப் பொன்னாடை போர்த்தியும், கெளரவப் பட்டங்கள் வழங்கியும் கெளரவித்துள்ளன. இவற்றுள் மட்டக்களப்புக் கச்சேரி, ஆரையம். பதி கவின்கலைமன்றம், மட்டக்களப்பு எழுத்தாளர் பேர்வை, காத்தான்குடி சமாதானப் பேரவை, திருகோணமலை இலக்கிய ஒன்றியம் போன்ற அமைப்புகளின் கெளரவம் இவருக்குக் கிடைத்துள்ளமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதே.
வயதில் மூப்படைந்தாலும், கலை இலக்கியத்தின் அரை நூற்றாண்டைக் கடந்து உன்னத சேவையைப் புரிந்துவந்தாலும் பல்வேறு பொறுப்புகளில் உயர் அதிகாரியாகப் பணியாற்றினாலும் பழகுவதற்கு இனிய சுபாவமும், பேச்சில் அன்பும் கலந்த அன்புமணி அவர்களின் முகவரி;-
R. NAGALINGAM 19, SURIYA ROAD, BATTCALOA. T/P:- 065-2226850
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புண்னியாமின் 97

Page 55
பதியதளாவ பாறூக்
பதியதளாவ பாறுக்
பதிவு 299
எழுத்துத்துறை
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், பதியதளாவ கிராமசேவகர் பிரிவை வசிப்பிடமாகக் கொண்ட காசிமுஹம்மது முஹம்மது பாறுாக் அவர்கள் ‘பதியதளாவ பாறுக்’, ‘கலைநதி’, ‘சாலிஹாமணாளன்’ ஆகிய புனைப்பெயர்களில் எழுதிவரும் ஒரு சிரேஷ்ட கவிஞரும், எழுத்தாளருமாவார்.
1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி காசி முஹம்மது, றாபியத்தும்மா தம்பதியினரின் புதல்வராக காத்தான் குடியில் பிறந்த பாறுாக், காத்தான்குடி அரசினர் முஸ்லிம் கல வன் பாடசாலையில் தனது பாடசாலைக் கல்வியைப் பெற்றார். தற்போது பதியதளாவ நகரில் ஒரு பிரபல வர்த்தகரான இவர் எஸ்.ஏ. ஸாலிஹாவின் அன்புக் கணவராவார். இத்தம்பதியினருக்கு அனீஸா, மாஹிர் ஆகிய அன்புச் செல்வங்களுளர்.
1967ம் ஆண்டு தினகரனில் கட்டுரை மூலமாகவும், 1970ம் ஆண்டு தினபதியில் கவிதை மூலமாகவும் இலக்கியத் தளத்தில் தடத்தைப் பதித்துக் கொண்ட பாறுாக்கின் கன்னிக் கட்டுரை 98 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 12)
 
 

பதயதளாவ பாறுாக
இஸ்லாமிய பெண்கள் ஏனையோருக்கு முன்மாதிரியாக நடக்க வேண்டும்’ எனும் தலைப்பில் (1967ஆம் ஆண்டு) தினகரன் பத்திரிகையில் இடம்பெற்றது. அதிலிருந்து இன்றுவரை தொடர்ச்சி யாக 4 தசாப்தங்களுக்கு மேல் எழுதிவரும் இவர் 10க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 500க்கும் மேற்பட்ட கவிதைகளை யும், 200க்கும் மேற்பட்ட கட்டுரைகள், நாடகங்கள் உட்பட ஏனைய ஆக்கங்களையும் எழுதியுள்ளார்.
தனது வாழ்க்கை அனுபவங்களையும், தான் காணும் சம்பவங்களையும் கருப்பொருளாகக் கொண்டு எழுதிவரும் இவ ரின் இத்தகைய ஆக்கங்கள் தினகரன், தினபதி, சிந்தாமணி, வீரகேசரி, நவமணி, மித்திரன் வாரமலர், தினக்குரல், அபியுக்தன், வாரஉரைகல், பாசமலர், உதயம், தாமரை, தடாகம், வானோசை, பிறைக்கலசம், தலைவன், அல்அறப், அல்ஜெஸிரா, முஸ்லிம் குரல், ப்ரியநிலா, மணிமலர்கள், மல்லிகை, சுஹதாக்கள், அல் ஹிறா. வாழ்வோரை வாழ்த்துவோம், சுவடு, சாளரம், வெற்றிமணி, ஹஜ்ஜத் (இந்திய சஞ்சிகை), ஸம்ஸம், பா, முக்கனி, காலத்தின் குரல்கள், ஞானச் சரங்கம், கலப்பு, சிரிப்பொலி, ஜும்ஆ ஆகிய தேசியப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் மற்றும் பல்வேறு இலக்கிய தொகுப்புகள், சிறப்பு மலர்கள் ஆகியவற்றிலும் இடம் பெற்றுள்ளன.
V− அதேநேரம், பாறுாக் சிங்கள மொழி மூலமாகவும் எழுதக் கூடியவர். இவரால் சிங்கள மொழி மூலமாக எழுதப்பட்ட சில கட்டுரைகளும், கவிதைகளும் சிங்களப் பத்திரிகைகளான தவஸ, குமுதுமலி, ஸரசவிய, விஸித்துற போன்றவற்றில் பிரசுரமாகியுள் ளன. இவரின் ‘ஆதரபஹன’ (அன்புவிளக்கு) எனும் தலைப்பிலான சிங்களக் கவிதைத் தொகுதி ஒன்று விரைவில் வெளிவரவுள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தியாகும். ஏனெனில், சிங்களத்தில் கவிதையெழுதும் முஸ்லிம் எழுத்தாளர்கள் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே உள்ளனர். இந்த அடிப்படையில் பாறுாக்கின் கவிதைத் தொகுதியொன்று வெளிவருமாயின் அது முக்கியத்து வமிக்கதாகவே அமையுமென எதிர்பார்க்கலாம்.
அதேநேரத்தில் இவரின் தமிழ்மொழி மூல நூல் ஒன்றுகூட இதுவரை வெளிவரவில்லை. இது பற்றி பாறுக்கிடம் கேட்டபோது
இவர்கள் நம்மவர்கள் (பாகம் (2) : கலாபூஷணம் புன்னியாமீன் 99

Page 56
பதயதளாவ பாறுக்
அவர் தந்த பதில் பின்வருமாறு: "...நீண்டகாலம் இலக்கியத் தளத்தில் தடம்பதித்த நான் இதுவரை எந்தவொரு தொகுதி களையும் வெளியிடாதது இலக்கிய உலகில் கூறப்படுகின்ற பெருங்குறையாகவே இருக்கிறது. பல இலக்கிய இதயங்களின் அன்பான வேண்டுகோளை மதித்து
“மனந்தூது மண்வாசம்”,
“நபியமுதம்",
“கைவிளக்கு”,
“நல்லறங்கள்” போன்ற நூல்களை வெளியிடுவதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றேன். நான் போட்டிக்காகவும், புகழுக்காகவும் எழுதாது இலட்சிய நோக்கை' இலக்காகக்கொண்டு எழுதிவருகின்றேன். இன்பத்தமிழ் என்பது எனது படைப்புகள் மூலம் இலகுவானமுறையில் சமுதாயத் துக்குப் போய்ச் சேரவேண்டும் என்பதே எழுத்தாளும் எனது இலக்கியப் பணியின் நோக்கமாகும். மொழி எனும் அழகிய சில்லுகளை உடைத்துவிட்டு தோராட்டம் பார்க்க விரும்புவது
99.
ஆரோக்கியமானதல்ல என்பது எனது கணிப்பாகும்.”
இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சி, ஒலிமஞ்சரி, வாலிப வட்டம், இளைஞர் அரங்கு, பிஞ்சு மனம், அஹதியா நிகழ்ச்சி, கதை சொல்லும் ஒரு கிராமம் போன்ற நிகழ்ச்சிகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஆக்கங்கள் ஒலிபரப்பாகியுள்ளதுடன் வானொலிக் கவியரங்குகள் பலதில் இவர் நேரடியாக கலந்து கொண்டுமுள்ளார். அதேபோல இவரின் தலைமையில் பல மேடைக் கவியரங்குகள் அரங்கேறியுள்ளன. பாறுக் ஒரு சிறந்த மேடைப் பேச்சாளருமர்வார்.
எழுத்துத்துறையைப் போலவே நடிப்புத்துறையிலும் இவ ருக்கு இயல்பான ஆர்வமுள்ளது. 1972ம்ஆண்டு இவரின் கதை வசனம் தயாரிப்பில் உருவான ‘சாவதோ நீதி’ என்ற சமூக நாடகம் இவரின் முதல் நாடகமாகும். இந்நாடகம் கிழக்கிலும், மலையகத்திலும் மேடையேற்றப்பட்டு அமோக வரவேற்பினைப் பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் சில நாடகங்களை எழுதி தமது பிரதேசத்தில் மேடையேற்றினார். ஆனாலும், இவரின் தொழில்நிமித்தமாக இத்துறையில் இவருக்குத் தொடர்ந்தும் ஈடுபடக்கூடிய வாய்ப்புக் கிடைக்கவில்லை.
100 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 12)

பதியதளாவ பாறுாக்
1975ம் ஆண்டில் சுடர் எனும் பெயரில் கையெழுத்துப் பத்திரிகையொன்றினை ஆசிரியராக நின்று நடத்தினார். இது கையெழுத்துப் பத்திரிகையாகக் காணப்பட்டபோதிலும்கூட பல புதிய எழுத்தாளர்களுக்கு களமமைத்துக் கொடுக்கும் ஒரு அரங்காகவும் திகழ்ந்தது. அதேநேரம், தினகரன், தினபதி, ஜும்ஆ போன்ற பத்திரிகைகளின் பிரதேச நிருபராக குறுகிய காலம் கடமையாற்றிய அனுபவம் இவருக்குண்டு.
இவ்வருடம் சென்னையில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கலந்து கொண்ட இவர் சிறுகதைகள் பற்றிய ஆய்வரங்கில் சுலைமா ஏ.சமி இக்பால் எழுதிய திசைமாறிய தீர்மானங்கள் என்ற சிறுகதைத் தொகு திக்கு இவரால் வழங்கப்பட்ட பா வாழ்த்துக்கான அறிமுக உரை ஒன்றையும் நிகழ்த்தினார்.
அண்மைக் காலத்திலிருந்து ஈழத்து எழுத்தாளர்களால் வெளியிடப்பட்ட கதை, கவிதை, கட்டுரை, நாவல் போன்ற பல தொகுதிகளுக்கு ஆசியுரை, அணிந்துரை, வாழ்த்துப்பா போன்றவைகளை வழங்குவதிலும் முத்திரை பதித்து வருகின்றார்.
காத்தான்குடி பாவலர் பண்ணை, நவ இலக்கிய மன்றம், தாமரை கலை இலக்கிய மன்றம், கொழும்பு பூரீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணி, பதியதளாவ பள்ளிவாயல்கள் நிருவாக சபை ஆகியவற்றில் அங்கத்துவம் வகிக்கும் இவர், அகில இலங்கை முஸ்லிம் வாலிப லீக் முன்னணியின் அம்பாறை தொகுதி அமைப்பாளருமாவார்.
இவரின் இலக்கிய பணிக்காக 2006ம் ஆண்டு சாய்ந்த மருது தடாகம் கலை இலக்கிய வட்டத்தினால் குருநாகல் நகரமண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட கெளரவிப்பு விழாவின் போது பொன்னாடை போர்த்தி “கலைதீபம்’ பட்டம் வழங்கப் பட்டது. மேலும் 2007ஆம் ஆண்டு காத்தான்குடி பிரதேச செயலக பிரதேச கலாசார சாஹித்திய விழாவில் ‘கவிப்பரிதி எனும் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புண்னியாமீன் 101.

Page 57
பதியதளாவ பாறுக்
என்மக்கள் வாழ்வுக்காக என்றும் என்னெழுதுகோல் தாள்மீது தவழும். என்னிதயமுட் அதற்கேற்ப நின்றே இயங்கியே இம்மண்ணில் வாழும். என்ற அடிப்படையில் ஆர்பாட்டமில்லாமல் அமைதியா கவும் அதேநேரம் அர்த்தமுள்ளதாகவும் எழுதிவரும் இவரின் முகவரி;-
பதியதளாவ பாறுக் 104. பிரதான வீதி பதியதளாவ
102 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 12)

சின்னத்தம்பி ரவீந்திரன்
சின்னத்தம்பி ரவீந்திரன்
எழுத்துத்துறை
鑫袁龜』
மேல்மாகாணம், கொழும்பு மாவட்டம், கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதியில், மட்டக்குளிய கிராமசேகவர் பிரிவில் வசித்துவரும் சின்னத்தம்பி ரவீந்திரன்: வதிரி.சி.ரவீந்திரன், வானம் பாடி, குளைக்காட்டான் ஆகிய பெயர்களில் எழுதிவரும் ஒரு எழுத்தாளராவார்.
வ. சின்னத்தம்பி, சீ. றோசம்மா தம்பதியினரின் புதல்வராக 1953ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ஆந் திகதி வடமாகா ணத்தைச் சேர்ந்த சாவக்கச்சேரியில் பிறந்த ரவீந்திரன் தனது ஆரம்பக் கல்வியினை யாழ்/சாவக்கச்சேரி டிறிபேக் கல்லூரியி லும், பின்பு யாழ்/ வதிரி-வடக்கு மெ.மி. பாடசாலை, யாழ்/கர வெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரி ஆகியவற்றிலும் கற்றார்.
ஆரம்ப காலங்களில் காவல்துறையில் பணியாற்றிய இவர், பின்பு ரெலிகொம் நிறுவனத்தில் பணியாற்றி தற்போது கொழும்பு மாவட்ட விவாகப் பதிவாளராக சேவையாற்றிக் கொண்டிருக்கின்றார். இவர் சிவராணியின் அன்புக் கணவராவார். ரவீந்திரன் - சிவராணி தம்பதியினருக்கு சஞ்சயன், சிவானுஜா,
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புன்னியாமீன் 103

Page 58
சின்னத்தம்பி ரவீந்திரன்
குபேரன், ஆதவன் ஆகிய நான்கு அன்புச் செல்வங்களுளர்.
கல்லூரியில் கற்கும் காலத்திலிருந்தே வாசிப்புத்துறையில் ஈடுபாடுமிக்கவராக இவர் காணப்பட்டார். இலங்கையிலிருந்து வரும் சஞ்சிகைகள், இந்தியாவிலிருந்து வரும் சஞ்சிகைகள் போன்றவற்றை தொடர்ச்சியாக வாசிப்பதில் இவர் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இளவயதில் ஏற்படக்கூடிய வாசிப்புத்திறன் எழுத்தாக்க ஆர்வத்துக்கு ஊக்குகரமாக இருக்குமென்பர். இந்த அடிப்படையில் ரவீந்திரனும் தனது இளம்பராயத்திலேயே எழுத ஆரம்பித்தார்.
இவரின் கன்னியாக்கம் 1969ஆம் ஆண்டில் ‘பூம்பொழில்’ எனும் சஞ்சிகையில் ‘எங்கள் எதிர்காலம்’ எனும் தலைப்பில் பிரசுரமானது. அதிலிருந்து இதுவரை 150க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 3கிறுகதைகளையும், 40க்கும் மேற்பட்ட நேர்காணல்களையும், 200க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 馨
இவரின் இத்தகைய ஆக்கங்கள் ‘பூம்பொழில்’, ‘நான்’, ‘மல்லிகை”, “ஞானம்’, ‘ஈழநாடு’, ‘வீரகேசரி’, ‘தினக்குரல்’, 'தினகரன்’, ‘தினபதி’, ‘சிந்தாமணி’, ‘தினமுரசு’, ‘நமது ஈழநாடு’ போன்ற ஈழத்துத் தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும், “பொறிகள்’, ‘அக்னி’, ‘சுவடுகள்’, ‘ஏன்’ ஆகிய இந்திய சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. அதேபோல இலங்கை வானொலியில் ஒலிமஞ்சரி’, ‘வாலிபவட்டம்’, ‘கலைப்பூங்கா’, ‘பாவளம் மற்றும் வானொலிக் கவியரங்குகளிலும் ஒலிபரப்பாகி யுள்ளன. மேலும் இலங்கை ரூபவாஹினியில் 'உதயதரிசனம்", ‘நான்காவது பரிமாணம்’ போன்ற நிகழ்ச்சிகளிலும் இவர் பங்
கேற்றுள்ளார்.
ரவீந்திரனின் எழுத்துத்துறைப் பங்களிப்பில் இவரால் மேற்கொள்ளப்படும் நேர்காணல்கள் ஒரு முக்கிய இடத்தினை வகிக்கின்றன. இலங்கையிலுள்ள கலைத்துறை, அரசியல்துறை சார்ந்த பல முக்கிய பிரமுகர்களை இவர் நேர்கண்டு எழுதியுள் ளார். குறிப்பாக இலங்கையின் பிரபல பாடகரான மொஹிதீன்பேக் அவர்கள் மரணிப்பதற்கு முன் இறுதி நேர்காணலை எழுதியவர் இவரே.
104 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 12)

சின்னத்தம்பி ரவீந்திரன்
இவரின் நேர்காணல்கள் மிகவும் சரளமான முறையில் அமைந்திருக்கும். ஒருவருடைய மனதைப் புண்படுத்தாது மிகவும் பக்குவமான முறையில் நேர்காணல்களை மேற்கொள்ளக்கூடிய வர். அதேநேரம், முற்போக்குக் கருத்துக்களில் ஆர்வமிக்க இவர், முற்போக்கு எழுத்தாளர் சங்கங்களில் ஆரம்ப காலங்களில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
மறுபுறமாக இவரின் கவிதைகளில் இலக்கிய நயத்துடன்
கூடிய சமூகக் கருத்துக்களைக் காணக்கூடியதாக இருக்கும். சமூகத்தில் காணப்படக்கூடிய மூடநம்பிக்கைகள், சமூக அவலங் கள் போன்றவற்றைக் கருப்பொருளாகக் கொண்டு இவரது இலக்கியங்கள் அமைந்திருக்கும். இதுவரை இவர் சுயமாக ஒரு நூலை வெளியிட்டதில்லை. இருப்பினும் இவரால் எழுதப் பட்ட கவிதைகளையும், நேர்காணல்களையும் தொகுத்து இரண்டு புத்தகங்களாக வெளியிடக்கூடிய பூர்வாங்க ஏற்பாடுகளை செய்துவருவதை அறியமுடிகிறது.
தன்னுடைய இலக்கிய ஈடுபாட்டுக்கு காரணகர்த்தாக்கள் என்றடிப்படையில் தனது மாமனார் திரு. டி.ஏ. நைல்ஸ், கவிஞர் காரை.செ.சுந்தரம்பிள்ளை, நந்தினிஷேவியர், க.நவம் - தெணியான் ஆகியோரையும், பத்திரிகைத்துறை ஈடுபாட்டிற்கு காரணகர்த்தாக்கள் என்றடிப்படையில் வீரகேசரி அமரர் பொன் - ராஜகோபால், லெ. முருகபூபதி, தேவகெளரி ஆகியோரையும் இன்றுவரை அன்புடன் நினைவுகூர்ந்து வருகின்றார்.
1960களின் ஆரம்ப காலகட்டங்களில்: பாடசாலையில் கற்கும் காலத்தில் இவர் நாடகத்துறையில் ஈடுபாடுகொண்டி ருந்தார். தேவரையாளி இந்துக்கல்லூரியில் (1968) கலாநிதி கவிஞர் காரை.செ.சுந்தரம்பிள்ளையின் ‘சாஸ்திரியார்’ நாடகத் திலும், இளவரசு ஆழ்வாப்பிள்ளையின் ‘காலவாவி’ நாடகத்திலும், கோவிநேசனின் ‘நவீன சித்திரபுத்திரன்’ நாடகத்திலும் நடித்துள்ள தையும், கலாவினோதன் பே.அண்ணாசாமியின் நாடகப் பட்டறையில் இணைந்து செயல்பட்டதையும் இன்றும் பசுமையான நினைவுகளாகக் கொண்டுள்ளார். இவரின் தொழில்துறை நிமித்த மாக நாடகத்துறையில் தொடர்ந்தும் ஈடுபாடுகொள்ள முடியாவிடி னும்கூட இன்று ஒரு சிறந்த நாடக விமர்சகராக இவர் திகழ்கின்றார். 2006ஆம் ஆண்டில் தேசிய நாடகவிழாவில் நடுவர்
இவர்கள" நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புன்னியாமீன் 105

Page 59
சின்னத்தம்பி ரவீந்திரன்
களில் ஒருவராக இவர் பணியாற்றியுள்ளார். இலங்கைக் கலைக் கழகத்தின் தேசிய நாடகசபை உறுப்பினராக 2006ஆம் ஆண்டு முதல் அங்கம் வகித்து வருகின்றார். அதேநேரம், பல நாடகக் கலைஞர்களின் நேர்காணல்களையும் பத்திரிகைகளுக்கு எழுதிவருகின்றார்.
2008.01.21ஆந் திகதி தினக்குரல் பத்திரிகையில் டியார் எழுதிவரும் "ஒளிவுமறைவின்றி” என்ற பகுதியில் இடம்பெற்ற ஒரு செய்தி என்னைக் கவர்ந்தது. ‘. மிக நீண்டகாலத்தின் பின் கொழும்பு வடக்கில் ஒரு திருமணப் பதிவு முழுமையாகத் தமிழில் நிகழ்ந்ததை அவதானித்தபோது மனதுக்கு குளிர்ச்சியாக இருந்தது. அந்த விவாகப் பதிவாளர் சகல படிவங்களையும் தமிழில் நிரப்பியது மட்டுமல்லாமல் திருமண ஜோடியிடம் பெறவேண்டிய உறுதிமொழியை சகல விருந்தினர்களுக்கும் கேட்கும் வகையில் உரத்த குரலில் வாசித்தார். அத்துடன், பதிவை வேறு மொழியில் செய்துகொண்டு பின்னர் பெயர் விபரங்கள் தவறாகப் பதியப்பட்டுவிட்டன என அங்கலாய்த்து அவதிப்படும் தமிழர்கள், தமிழ் விவாகப் பதிவாளரை நாடலாமே. இது தமிழ் மொழிக்கும் செய்யும் பணியாகும். இச்செய்திக் குரியவர் யாரென்று ஆராய்ந்து பார்த்தபோது இந்த விவாகப் பதிவாளர் ரவீந்திரன் என்று அறியமுடிந்தது.
இவரின் முகவரி;- S.RAVEENDRAN 68/1, STMARY'S LANE
MATTAKULIYA
COLOMBO - 15 T/p: 0112-540680
106 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 12)

இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்டுரைகளும்
ஆாயிறு
இக்ரே
寧影發縣機義範輸轉額為機 A "b 'sede faernodernt Viveig klly voice ir Tarrni
இல் பிரசுரமானவையாகும்.
பிரசுரமான திகதிகள்
கீழே தரப்பட்டுள்ளன.
செபஸ்தியானி செபமாலை (குழந்தை) பாலேஸ்வரி நல்லரெட்னசிங்கம் சந்திரகௌரி சிவபாலனி சாந்தி முஹறியித்தின் கிச்சிலாண் அமதுர் றஹிம் வண. பிதா தமிழ்நேசன் அழகளார் சி.என். துரைசிங்கம் எம்.எம். மக்கின் (மானா மக்கினர்) சு. முரீகந்தராசா
ராஜா ஜென்கின்ஸ் ச. முருகானந்தன். த. சந்திரசேகரன் இராசையா நாகலிங்கம் (அன்புமணி) βά5, 6τιό υπeύά சின்னத்தம்பி ரவீந்திரன்
2004.2008 06.04.2008 2001.2008 23.03.2008 30, 12.2007 06.01.2008 27.01.2008 18.05.2008 27.04.2008 04.05.2008 11.05.2008 25.05.2008
01.06.2008
08.06.2008 15.06.2008
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 2) : கலாபூஷணம் புண்னியாமின்
107.

Page 60
108 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 1.
 


Page 61

ISBN:978-955-1779-13-9