கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அமெரிக்கா

Page 1
TFT
 


Page 2

அமெரிக்கா
வந. கிரிதரன்
ஸ்நேகாரமங்கை பதிப்பகம்

Page 3
அமெரிக்கா
சிறுகதைகளும் குறுநாவலும் வ.ந. கிரிதரன்
முதல் பதிப்பு டிசம்பர் 96
உரிமை கலைச்செல்விசிரிதரன்
ஒளிஅச்சு ஏகம் கம்ப்யூட்டர்ஸ், சென்னை-2.
அச்ச பார்சன் பிரிண்டர்ஸ், சென்னை - 14
வெளியீட்டாளர்கள்
ஸ்நேகா, மங்கை பதிப்பகம், 348 டிடிகேசாலை, 38த்ரான் கிளிஃபே, இராயப்பேட்டை, 510 டொராண்டோ, சென்னை - 600 014. ஒண்டாரியோ
○(044)8221997 &6ort fir AA4ዙ† ሀ9
ტ. პ0/-
AMERICA
SHORTSTORIES AND NOVEL
VN. GRAAN
FIRSTEDITION : DECEMBER 1996
C) : KALAISELVI GIRITHIARAN
LASERTYPESET : YEGAM COMPUTERS, MS-2.
PRINTED BY : PARSUN PRINTERS, MS-14.
PUBLISHERS
SNEHA MANGAI PATHIPPAGAM, 348, TTK ROAD, 38, THRON CLIFFEpkd, ROYAPET TAH, 510 TORONTO, CHENNA - 14. ONTARJO,
○ : (O44り 822 799ク CANADA M4H 9
Rs... 30/.

புதியதோர்படைப்பாளர்
அறிமுகம்
கவிதை வடிவிலேயே காவியங்கள் எழுதப்பட்டுவந்தன. அதே வேளையில் ஓசை நயம் குன்றிய செய்யுள்களும் ஏடுகளில் எழுதப் பட்டன. இவற்றை சங்க இலக்கிய காலம் தொட்டுக் காணலாம். இது புலவர் பரம்பரையின் தொழிலாகவும் நயத்தலாகவும் இருந்தது. அதேவேளைகதைகள் கேட்கும் ஆர்வமே பரந்துபட்ட மக்களிடையே தொன்றுதொட்டு நிலவிவந்தது.
கிழவர் தொடக்கம் குழந்தைகள் வரை கதைகளை விரும்பினர். எழுதப்படிக்கத் தெரியாத காலம். கிராமியக் கதைகள், நீதிக்கதைகள், காவியங்களின் கதைகள், உபகதைகள்இவற்றிற்கும் பயன்பட்டன.
சென்றநூற்றாண்டில் முதலாளித்துவ வளர்ச்சியும், எழுதப்படிக்கத் தக்க நடுத்தரவர்க்கமும் வளரத் தொடங்கி கிராமத்திலிருந்து நகரங்களுக்கு வந்து தனிமையில் வாழநேரும் காலத்தில் அவர்களின் உணர்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்யநாவல், சிறுகதை என்ற புதிய கலை வடிவங்கள் எளிய வசனநடையில் தோன்றின.

Page 4
அச்சுயந்திர வளர்ச்சியுடன் இப்புதிய வடிவங்கள் வளர்ச்சியடைய கவிதை, செய்யுள் வடிவங்கள் தேயத் தொடங்கின. அண்மையில் வெளிவரும் பிரபல சஞ்சிகைகளைப் பார்ப்பினே அறியலாம். முற்றாக அவை அழிந்து விட மாட்டா. ஒரிரு பக்கங்கள் மட்டும் அவற்றிற்காக ஒதுக்கப்படுகின்றன. கவிதை என்றும்இசையோடுபாடுவதற்குநிலைத்து நிற்கும். செய்யுள் வசன கவிதை, புதுக் கவிதை, ஹைக்கூகவிதை என்ற புதிய பெயர்களுடன் அவ்வடிவம் நிலைக்க முயல்கிறது. இவை கூட பெரும்பாலும் வசன நடைகளில் கூறப்படும். கருத்தை அவரவர் விரும்பியவாறு சொற்களை ஒன்றன் கீழ் ஒன்றாக ஒழுங்குபடுத்து வதாகவே அமைவதைக் காணலாம். மோனை எதுகை ஒலிநயங்களைக் காணமுடியாது. துக்கடாக்கள் போலப் பெரும்பாலும் கருத்துக்களைக் கூறுவதாகவும் உள்ளன. இதனால் இசைக்கலைகளோடு கவிதைகள் இணைந்துநிலை பெற, செய்யுள்கலைத்தன்மையை இழந்து வருகிறது என்பதே என் கருத்தாகும்.
நாவல், சிறுகதைநவீன கலைவடிவங்களாக வளர்ந்து வருகின்றன.
சிறுகதை வடிவம் சென்ற ஒரு நூற்றாண்டில் தமிழில் மிக ஆதிக்கம் பெற்ற கலைவடிவமாக வளர்ந்து வந்துள்ளது. ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான சிறுகதைகள், நூற்றுக்கணக்கான படைப்பாளிகளால் எழுதப்பட்டு வருகிறது. சிறுகதைக்கு அழுத்தமான வரைவிலக்கணம். எதுவும் நாம் வகுத்து விடவில்லை. புதுமைப்பித்தன் போன்ற பிரபல எழுத்தாளனின் கதைகளே இவ்வடிவ வளர்ச்சிக்கு முன்மாதிரியாக அமைந்தன.
எந்தக் கலைக்கும், அமைப்பும் சமூகப் பணியும், உருவமும் உள்ளடக்கமும் உள்ளது என்ற அடிப்படைக் கருத்துக்களை வைத்துக் கொண்டே சிறுகதை,நாவல்களை நலனாய்வு செய்து விடலாம்.
‘பனியும் பனையும்' என்ற புலம் பெயர்ந்த இலங்கைத்தமிழர்களின் சிறுகதைத் தொகுதியை இந்து ஆங்கில நாளிதழுக்கு விமர்சனம் எழுதும்படி அதன் உதவிஆசிரியர் என்னிடம் தந்திருந்தார். அக்கதைத் தொகுதியிலுள்ள கதைகள் யாவையும் படித்தபோது 'ஒரு மாட்டுக்கதை' என்னை மிகவும் கவர்ந்தது.

அவ்விமர்சனத்தில் சிறப்பாக அக்கதையைக் குறிப்பிட்டிருந்தேன். இரண்டு மாதங்களுக்கு முன்னர் முன்னாள் யாழ்பல்கலைக் கழக விரிவுரையாளர் மு. நித்தியானந்தன் அவர்கள் பாரிசுக்குப் புறப்படுமுன் 'பனியும் பனையும்' பற்றிப்பேசிக் கொண்டிருக்கும் போது இக்கதை அத்தொகுதியில் சிறப்பானது என்று சம்பவத்தைக்கூறியபோது அவரும் அக்கதையே தனக்கும் பிடித்ததாகக் கூறியிருந்தார். அக்கதை மூலமே நூலாசிரியர் கிரிதரன் எனக்கும் அறிமுகமானார். அந்த நினைவுடன் அவரது இச்சிறுகதைத் தொகுதியை ஆர்வத்துடனேயே படித்தேன்.
தஞ்சம் புகுந்த நாட்டில் கண்ட, அனுபவித்த சம்பவங்களை அடிப்படையாக வைத்தே கதைகளைக் கிரிதரன் புனைந்துள்ளார். இது தமிழ்நாட்டவர், ஈழத்தவர், பிறநாட்டவர்கட்கு புதுமையாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பெரும்பாலும் தானும் ஒரு பாத்திரமாகவே தன்மை நிலையில் இணைந்து ஆசிரியர் சம்பவங்களை விவரிக்க முயன்றுள்ளார். இப்போக்கே படிப்பவர்க்கு யதார்த்தமாக, நடைமுறையில் நடந்ததாக, நடப்பதான உணர்வை ஏற்படுத்த வல்லது.
ஒவ்வொரு கதையிலும் ஆழமான கருத்து ஒன்றைக் கூறவும் ஆசிரியர் முனைந்துள்ளார். அக்கருத்தே அவரை எழுதத் தூண்டியது என்பதை எளிதில் காணலாம்.
'மான்ஹோல்' என்ற சாக்கடைவாயிற்புறத்தில் வாழ்ந்து மரணிக்கும் மனிதனை கனடா ஒண்டாரியோ பாராளுமன்றத்தின் எதிரே சட்டமியற்றிக் கொண்டிருப்பவரின் முன்நிறுத்திக் காட்டுகிறார், தன் முதல் கதையில். 'பொந்துப் பறைவகள்' என்ற கதையில் சிறு அறையில் வாழ்ந்து, மூட்டுவாதத்துடன் வேலைக்குச் சென்று வரும் மனிதனை அவன் குறைவாகக் கருதிவந்த கறுப்பனான ஜமேக்கன் தீயிலிருந்து காப்பாற்றிநிறபேதமற்ற மனித நேயத்தைநிலைநாட்டுகிறார்.
'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினையில்' வாழும் சுதந்திரம் வேண்டி கொலைக் கூடத்திலிருந்து தப்பும் மாடு ஒன்று வாகனப் போக்கு வரத்தையே தடை செய்கிறது. அதன் போராட்டம் மூலம் ஈழத்தமிழனின்

Page 5
இன்றைய நிலையை விளக்குகிறார். கதையின் அமைப்பும் எடுத்த நிகழ்ச்சியும் இது நல்லதோர் சிறுகதைக்கு இலக்கணமாய் திகழ்கிறது.
'மனித மூலம் பாலின்பத்தேவை இன, நிற பேதமற்ற அனை வருக்கும் ஒன்றே என'யங்ஸ்ரீட்"டில் அங்கும்இங்கும்நடப்பவர்மூலம் ஆபாசமின்றி அடக்கமாக, பண்பாக, விவேகமாக சொல்லுகிறார். ‘சுண்டெலி ஒன்றின் மூலம் உயிர்வாழ்வின் மனித அடித்தள இருத்திலியலின் தாற்பரியத்தைக் கூற முயன்றுள்ளார். 'கணவன்', 'ஒரு குடியும் விடிவும்' மூலம் திருமணத்தின் பின், நடந்த காலத்தைப் பற்றிக் கவலைப்படக்கூடாது என்ற கருத்தை முன்வைக்கிறார்.
'அமெரிக்கா' என்ற கதையே தொகுதியில் மிகநீண்ட கதையாகும். அமெரிக்காவின் சட்டங்களையும் நடைமுறைகளையும் முரண் நகைச்சுவையாக விரித்துள்ளார். அகதிகளை அமெரிக்க அரசுச் சட்டங்கள் எவ்வாறு கையாள்கிறது என்பதை விபரமாக, யதார்த்தமாக இக்கதை கூறும்.
கிரிதரன் அவரிகள் பரந்து வளர்ந்துவரும்தமிழ் இலக்கியப்பரப்பில் சிறந்த ஈழத்துச் சிறுகதை எழுத்தாளராக இச்சிறு தொகுதிமூலம் நிரூபிக்கிறார்.
ஆங்கிலமொழியிலுள்ள எத்தனை சிறுகதைகள், நாவல்களைப் படித்தாலும் தஞ்சம் புகுந்த தமிழர்களைப் பற்றி மட்டுமல்ல, புகுந்த நாட்டவர் வாழ்க்கையையும் தமிழ் மொழி மூலம் படைக்கப்படும் எழுத்துக்கள் மூலம் அறிந்துணர்ந்து கொள்வது போலத் தெரிந்து கொள்ள முடியாது என்ற என் கருத்துக்கு இத்தொகுதியும் ஓர் எடுத்துக்காட்டாகும்.
செ.கணேசலிங்கன்.
சென்னை
12/1/1997,

எனது கதைகள்.
மேது புலம் பெயர்ந்த சூழலில் ஏற்படும் நிலைமைகளையும், அதேசமயம் எமது நாட்டுப் பிரச்சனைகளை மையமாக வைத்தும் என் படைப்புக்கள் எழுந்துள்ளன. இன்றைய புலம்பெயர்ந்த எமது தமிழ்த் தலைமுறையைப் பொறுத்தவரையில், புலம் பெயர்ந்த நாட்டுச் சூழலிற்கும், புலத்தின்நினைவுகளிற்குமிடையில் அகப்பட்டு ஒரு வித திரிசங்கு வாழ்க்கை நடத்தும் தலைமுறை. இத்தலைமுறையினரில் நானும் ஒருவன் என்ற வகையில் எனது படைப்புகளில் புலத்தின் பிரச்சனைகளையும், புலம் பெயர்ந்த நாட்டுச் சூழலின் நிலைமை களையும் சித்தரிப்பதை என்னால் தவிர்க்க முடியாது. நிறப்பிரச்சனை யென்பது புலம் பெயர்ந்து வாழும் குழலின் முக்கியமான பிரச்சனை. புலம் பெயர்ந்த ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனை. நாளைய எம் தலைமுறையும் இதற்கு விதிவிலக்கல்ல. எமது படைப்புக்கள் இப்பிரச்சினையை வெளிப்படுத்தும் அதேசமயம் புதிய சூழலின் ஏனைய பிரச்சனைகளையும், ஆராய வேண்டும். பூர்வீக இந்தியர்களின் பிரச்சினை, இந்நாட்டுப் பொருளாதாரச் சூழலால் உருவாகும்நிர்ப்பந்தங்கள், வாழ்வில், அவற்றாலேற்படும்தாக்கங்கள், பெண்களின் நிலைமை, புதிய சூழல் நம்மவர் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்கள், அனுபவங்கள்இவற்றையெல்லாம்நாம் எம் படைப்புகளில்

Page 6
வெளிப்படுத்த வேண்டும். அதேசமயம்நாட்டுப்பிரச்சனைகாரணமாக ஓடிவந்தவர்கள் நாங்கள். அப்பிரச்சனையை மீண்டும் மீண்டும் கூறுவதென்பது தவறானதல்ல, தவிர்க்க முடியாததும் கூட. அண்மைக் காலமாக எம்மவர்களில் சிலர் ‘புலம் பெயர்த்த எழுத்தாளரின் படைப்புக்கள் தொடர்ந்தும் பிறந்த நாட்டுப் பிரச்சனைகளை, விரக்தியையே புலப்படுத்தி வருகின்றன. இவர்கள் புகுந்த நாட்டுச் குழலை மையமாக வைத்துப் படைப்புக்களை உருவாக்க வேண்டும்' என்ற கருத்துப்பட கூறி, எழுதிவருகின்றார்கள். இவர்களது கருத்துப்படி புகுந்தநாட்டுச்சூழலை வைத்து எழுதுவதுதான்இலக்கியத்தரமானதாக அமையுமென்ற நோக்கமும் இழையோடுகின்றது. இவர்களெல்லாம் ஒன்றை உணரவேண்டும். தரமான படைப் பென்பது எதனைப் பற்றியதாகவும்இருக்கலாம்.இரண்டாம்உலக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யூத எழுத்தாளர்களின் படைப்புகளில் சிறந்த படைப்புக்கள் அவர்களது சொந்த நாட்டுப் பிரச்சனையை மையமாக, வைத்து எழுந்தவையே. உதாரணமாக போலந்து யூத இனத்தைச் சேர்ந்து ஜேர்ஸி கொஸின்ஸ்கியின் Painted Birds என்ற மிகப் பிரபலமான நாவலைக் குறிப்பிடலாம். 1991 இல் தற்கொலை செய்து கொண்ட கொளவின்ஸ்கியின் படைப்புக்கள் பிரச்சனைக்குரியவை. நிறமூட்டப் பட்ட பறவைகள்' (Painted Birds) நாவலில், யூதச் சிறுவனாக யுத்தச் சூழலில், நான்காண்டுகளாக கிழக்கு ஐரோப்பியநாடுகளில் அலைந்து திரிந்த தனது சொந்த அனுபவங்களையே கொளின்ஸ்கி விபரிக்கின்றான்.இன்று இந்தப்படைப்பு:ஆங்கிலஇலக்கியத்தின்முக்கிய படைப்புக்களில் ஒன்றாக விளங்குகின்றது. இதனை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். கொளின்ஸ்கியால் அவர்மேல் அவரது சொந்த நாட்டு அரசியல்நிலைமை ஏற்படுத்திய பாதிப்பை மறக்கமுடியவில்லை, அதனைப்படைக்காமல் இருக்கவும் முடியவில்லை.
என் கதைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. என் சொந்த நாட்டுப் பாதிப்புக்களை என்னால் மறக்கமுடியாது. என்கதைகள் அவற்றிலிருந்து தப்பவும் முடியாது. அதேசமயம் புதிய சூழலின் தாக்கங்களிலிருந்தும் என்னால்தப்பமுடியாது. என்படைப்புக்கள்அவற்றை வெளிப்படுத்தவே செய்யும். ஆனாலும் அப்படி வெளிப்படுத்தும் போதுகூட என்நாட்டுப் பிரச்சனையின் சாயல் அவற்றினூடே வெளிப்படத்தான் செய்யும்.
வத. கிரிதரன்
56

மான்ஹோல்
ஜெயகாந்தனின் ரிஷிமூலத்தில் வரும் ராஜாராமனைப் போல்தாடி மீசை வளர்த்திருந்தான். கால்களில் ஒன்றினைசப்பணமிட்டநிலையிலும் மற்றதை உயர்த்தி மடக்கி முழங்காலினை வலது கையினால் பற்றியிருந்தான்.இடதுகையை பின்புறமாகநிலத்தில் ஊன்றியிருந்தான். முடிநீண்டு வளர்ந்து கிடந்தது, வாயினில் பாதித்துண்டு சிகரட் புகைந்த படியிருந்தது. கண்களில் மட்டும் ஒரு விதமான ஒளி வீச்சு விரவிக் கிடந்தது. மான் தோலில் அமர்ந்திருக்கும் சாமியாரைப் போல மான் ஹோலின் மேல் அமர்ந்திருந்தவனின் தோற்றமிருந்தது. இவன் நடைபாதை நாயகர்களிலொருவனென்றால் நான் ஒரு நடைபாதை வியாபாரி. "கொட் டோக்" (Hot Dog) விற்பது என் தொழில்.
வடக்கில்'தொலைவில் ஒண்டாரியோ பாராளுமன்றக் கட்டடம் தெரிந்தது. எமக்குப் பின்புறமாக புகழ்பெற்ற குழந்தைகளிற்கான வைத்தியநிலையம், 'சிக்கிட்ஸ்'ஹாஸ்பிடல் அமைந்து கிடந்தது சிறிது நேரம் சாமியார் ஒண்டாரியோ பாராளுமன்றத்தையே பார்த்தபடி யிருந்தான். பிறகு சிரித்தான்.
目 வ. ந. கிரிதரன் С 9

Page 7

'ஏன் சிரிக்கிறாய்' என்றேன் 'பார்த்தாயா காலத்தின் கூத்தை. '
'காலத்தின் கூத்தா...' 'காலத்தின் கூத்தில்லாமல் வேறென்ன' சிறிது நேரம் ஆகாயத்தைப் பார்த்தான், அதில் முழுமதியை ரசித்தான். நேரத்துடனேயே இருட்டத் தொடங்கிவிட்டது. இன்னமும் மாநகரத்தின் பரபரப்பு குறையவில்லை. ஆளிற்காள் அரக்கப் பரக்க நடந்துகொண்டிருந்தார்கள். இதற்கிடையில், எனக்கும் ஒரு சில கஸ்டமர் கள் வந்தார்கள். எனது வாடிக்கையாளர்களில் ஒருவனான நைஜீரியா டாக்ஸி டிரைவர் டாக்ஸியை வீதியோரம்நிறுத்திவிட்டு வந்தான்.
'ஹாய். எப்படியிருக்கிறாய் 'சீவ் (Chief)' வென்றேன். 'பிரிட்டி குட் மான். நீஎப்படி' யென்றான் 'எனக்கென்ன. நான் எப்பொழுதுமே ஓ.கே.தான்' என்று விட்டுச் சிரித்தான். அருகிலிருந்த சாமியும் சிரித்தான்.
இவன் உண்மையிலேயே ஒரு 'சீவ்' இவனது சொந்த நாடான நைஜீரியாவில் இவனைநம்பி இவனிற்குக் கீழ் மூவாயிரம் பேர்களிருக் கின்றார்கள், இவனது இனம் நைஜீரியாவிலுள்ள பல ஆதிக் குடிகளில் ஒன்று. ஒவ்வொரு முறையும் இவனது ஒப்புதலிற்காக பத்திரங்களை இங்கு அனுப்புவார்கள். இங்குள்ள பல்கலைக்கழகமொன்றில் பட்டம் பெற்றவன், 'வின்ரர் இல் இங்கு டாக்ஸி ஓடுவான், 'சமர் என்றதும் நைஜீரியாவிற்கு ஓடிவிடுவான். இவனது மக்களிற்கு இவன் இங்கு டாக்ஸி ஓடுவது தெரியாது. தெரிந்தால் இங்கிருக்க விட்டு வைக்க மாட்டார்கள் என்பான். இவனைப்போல் வேறு பல 'சீவ்'களும் டாக்ஸி ஒடுவதாக ஒரு முறை இவன் கூறியிருந்தான்.
அப்பொழுதுதான் அருகிலிருந்த சாமியைப் பார்த்தான். 'ஹாய் சீப். எப்படியிருக்கிறாய்." என்றான். ஆபிரிக்க 'சீவ்' கனேடிய 'சீவ் வைப் பார்த்துக் குசலம் விசாரிக்கின்றான். சாமியின் இனத்தவர்கள் ஒரு காலத்தில் அமெரிக்கக் கண்டத்தையே ஆண்டவர்
E வ. ந. கிரிதரன் KDE

Page 8
கள். ஆண்ட பரம்பரையின் வாரிசுகளில் ஒருவன் இன்று சிறு பான்மைக்குள் சிறுபான்மையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்,
சாமி பதிலிற்குச்சிரித்தான். ஆபிரிக்கச் 'சீவ் கனேடியச் 'சீவ் விற்கு சிகரெட் ஒன்றைத் தந்துவிட்டுச் சென்றான். நல்லவன்' என்றுவிட்டுச் சாமி சிகரட்டை ஊதிப் புகையை விட்டான். எனக்கு அவன் காலத்தின் கூத்தைப் பற்றிக் கூறியது ஞாபகத்திற்கு வந்தது.
'ஏதோ. காலத்தின் கூத்து' என்றாயேயென்றேன். 'பார்த்தாயா. இந்தியனானநீஇங்கேநடைபாதையில் வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றாய், இந்தியனான நான் நடைபாதையில் ஜீவித்துக் கொண்டிருக்கின்றேள். ஆபிரிக்கனான அவன் நடுரோட்டில் வாகனமோட்டி வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றான்' என்றவன் பாராளுமன்றக் கட்டடத்தைக் காட்டினான்
'அங்கிருந்து அவர்கள் சட்டங்கள் இயற்றிக் கொண்டிருக்கின்றார் கள். காலத்தின் கூத்தில்லாமல் வேறென்ன.'
இதனைத் தொடர்ந்து ஒரு சிறுபாடலை அழகாகப் பாடினான். 'காலம் சுயாதீனமானதோ.
காலம் சார்பானதோ.
ஆனால் நிச்சயமாகக்
காலம் பொல்லாதது' இந்தச்சாமியின்பூர்விகம் மர்மம்நிறைந்திருந்ததாகப்பட்டது. இவன் பாடிய பாடலின் கருத்து அவ்வளவு அறிவுபூர்வமாகவிருந்தது. பூர்வீகத்தில் பெளதீக விரிவுரையாளனாகவிருந்த எனக்குஇந்தப்பூர்வீக இந்தியன் புதிர் நிறைந்தவனாகவே பட்டான். எனக்கு கடந்த மூன்று மாதங்களாக இவனைத் தெரியும். இவனைப் பற்றி இதுவரையிலான என் அனுபவத்தின் வாயிலாக நான் அறிந்தவற்றைப் பின்வருமாறு தொகுக்கலாம்.
இவனொரு பூர்வீக இந்தியன், அடிக்கடி நடைபாதைகளில் போத்தலும் ஆட்டமுமாகக் காணப்படும் இவனது இனத்தவர்களி
அமெரிக்கா =

லிருந்து வித்தியாசமாகவிருந்தான் சிகரட் தவிர இவன் மதுவைத் தொடுவதில்லை. இவனிற்குக் குடும்பம் என்று இப்பொழுது எதுவு மில்லை, முன்பு ஏதுமிருந்ததா? தெரியவில்லை. இவன் தன் பூர்வீகத் தைப் பற்றி இதுவரை ஏதும் கூறியதில்லை. ஒரு முறை அறிய முயன்ற பொழுதுதட்டி மழுப்பிவிட்டான். அதன்பிறகுநானும் கேட்கவில்லை இவனும் கூறவில்லை.
நடைபாதை வழியே போகும் மனிதர்கள் போடும் தர்மத்தில் இவ னது வாழ்க்கை ஒடிக்கொண்டிருக்கின்றது நாள் முழுக்க சிகரட் பிடிப் பான், இவன்சிகரட்டிற்காக பணமெதுவும் செலவழிக்க மாட்டான். அரு கிலுள்ள கட்டடங்கள் முன்பாக நடைபாதைகளில் காணப்படும் சிகரட் துண்டுகளைப் பொறுக்கி வந்து குடிப்பான். சாப்பாட்டைப் பொறுத்த வரையில் அருகிலுள்ள டோனட் கடையில் அடிக்கடிகாப்பி வாங்கிக் குடிப்பான், சிலவேளைகளில் டோனட் வாங்கிவருவான். இரவில் நான் ஒவ்வொருநாளும் 'கொட்டோக்கும், குடிப்பதற்கேதாவது யூஸ்'சும் கொடுப்பேன். இலவசமாக வாங்க மாட்டான். கையிலிருப்பதைத் தருவான். வேண்டாமென்றால் கொடுப்பதை வாங்கமாட்டான். பெரும் பாலும் அதிகமான வேளைகளில் மோனத்திலாழ்ந்திருப்பான் அல்லது என்னுடன் அளவளாவுவான். இயற்கைக் கடன்களைக் கழிப்பது முகங் கழுவுவதெல்லாம் அருகிலுள்ள ஆஸ்பத்திரி 'வாஸ்ளும்' களில்தான். எப்போதாவது சிலசமயங்களில் எங்கோவொரு ஹாஸ்டலிற்குச் சென்று குளித்துவிட்டு வருவான். இதைத்தவிர இவனது வீடு உலகமென்றால் அவன் அமர்ந்திருக்கின்ற அந்த மான் ஹோல்தான். இவனது கந்தல்களடங்கிய மூட்டையொன்றை அதற்குள் தான் வைத்திருக் கின்றான். அந்த மூட்டைக்குள் அப்படியென்னதானிருக்கின்றதோ.
இவனைப் பற்றிஇவ்வளவுதான் இதுவரையில் அறிந்திருந்தேன். இனிமேல்தான் மேலதிகமாக ஏதாவது அறிய முயல வேண்டும்.
இன்னுமொரு இரவு அசைந்தபடி சிறிது ஓய்ந்திருந்தது. பிஷினசும் சிறிது மந்தநிலையிலிருந்தது. சாமி எதனையோ சிந்தித்தான், பின் சிரித்தான்.
'ஏன் சிரிக்கிறாய்' என்றேன்.
E qu. ந. கிரிதரன் 3KO 3D}=

Page 9
"உலகமெல்லாம்.இந்தியர்கள்நிறைந்திருக்கிறார்கள்' என்று விட்டுச் சிரித்தான், ஏதோ தத்துவமொன்றைக் கூறிவிட்டது போன்றதொரு திருப்திமுகத்தில் படர்ந்திருந்தது.
'உண்மையில் நீயும் இந்தியனில்லை, நானும் இந்தியனில்லை' யென்றேன்.
'நான் இந்தியனில்லையென்பது சரி, இந்திய உபகண்டவாசி யாருமே இவர்களிற்கு இந்தியன்தான், ஈஸ்ட் இன்டியன்'
'ஆனால் பலரிற்கு 'பாக்கி' 'யென்றேன். இதைக் கேட்டதும் சாமிபலமாகச் சிரித்தான். 'இங்கென்னவென்றால் இந்தியனைப் 'பாக்கி யென்கிறார்கள், பாக்கிஸ்தான்காரனையும்இந்தியனென்கின்றார்கள். அங்கென்னவென் றால் பாகிஸ்தான்காரனும் இந்தியனும் ஆளிற்கால் அடிபட்டுக் கொண் டிருக்கின்றார்கள்' என்றேன்.
இதற்கும் சாமி சிரித்தான். அப்பொழுது தான் சிரிப்பையும் மீறிச் சாமியின் முகத்தில் படர்ந்திருந்த சோர்வினை அவதானித்தேன்.
'என்ன உடம்பிற் ' கென்றேன், 'ஒன்றுமில்லை இலேசான காய்ச்சல்' என்றான். நான் எப்பொழுதுமே ஒரு அஸ்பிரின் பார்ட்டில், பிளாஸ்டர் பக்கற் வைத்திருப்பது வழக்கம்.
'ஆஸ்பிரின் வேண்டுமா' வென்றேன். 'இலேசான காய்ச்சல் சரியாய் விடும்' என்றான். நானும் வற்புறுத்தவில்லை.
மறுநாள் நான் கடையை விரித்தபோது ஒன்றை அவதானித்தேன், சாமியை அவனிருப்பிடத்தில் காணவில்லை. வழக்கமாக அவன்தான் வரவேற்பான். மனதிற்கென்னவோ மாதிரிஉணர்ந்தேன். இந்த மூன்று மாதங்களாக இன்று நான் முதல் முறையாக சாமியின் வரவேற்பை இழந்திருந்தேன். வழந்கமாக நான் கடையை விரிப்பது பத்துமணி யளவில்தான். அதற்கிடையில் சாமிதனது காலைக் கடன்கள், சாப்பாடு எல்லாவற்றையும் முடித்து விட்டுத் தனது சிம்மாசனத்தில் அமர்ந்து விட்டிருப்பான். அந்த ஒளிமிகுந்த கண்களின் ஞாபகம் வந்தது. அந்தப்
国 4. அமெரிக்கா 菲

புன்னகைநினைவில் தெரிந்தது. சிலவேளை லேட்டாகச்சாமி எழும்பி யிருப்பானோ அப்பொழுதுதான்முதல்நாளிரவு இலேசான காய்ச்சலு டன் சாமியிருந்தது ஞாபகத்தில் வந்தது. காய்ச்சல் அதிகமாகி ஆஸ்பத்திரியில் முடங்கியிருக்கின்றானோ என எண்ணினேன். சிறிது நேரத்தில் நான் வியாபாரத்தில் மூழ்கினேன். வியாபாரம் சிறிது மந்த நிலையை அடைந்தபோது இருட்டி விட்டிருந்தது. சாமியை இன்னும் காணவில்லை. என்மனதை மீண்டும் எதுவோ செய்வதை உணர்ந்தேன்.
இரவு பத்து மணியளவில் நைஜீரியா 'சீவ் வந்தான் 'எப்பிடிபிஸி னஸ்' என்றான். அப்பொழுது தான் 'மான் ஹோல்' வெறுமையா யிருப்பதை அவதானித்தான்.
'சீவ் எங்கே. 'யென்றான்.
'இன்று முழுக்க அவனைக் காணவில்லை எங்கு போனானோ தெரியவில்லை."
'நேற்றிரவு ஏதாவது சொன்னானா. '
'சிறிது காய்சலுடன்தானிருந்தான், அஸ்பிரினும் வேண்ட மறுத்து விட்டான். '
'அவன் வேறெங்காவது தங்குவதுண்டா. 'எனக்குத் தெரிந்து அவன் இந்த 'மான்ஹோல்' மூடியின் மேல்தான் படுப்பது வழக்கம். அவனுடைய உடமைகளைக் கூட இந்த மான்ஹோலிற்குள் தான் வைத்திருப்பான்.
"அப்படியா.'ஆபிரிக்க 'சீவ் சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கி நினைவிற்கு வந்தான்.
'எனக்கொன்று தோன்றுகின்ற' தென்றான்.
'என்ன'
'ஒரு வேளை அவன் தன் இருப்பிடத்தை மாற்றி விட்டானோ. எதற்கும் மான் ஹோலைத் திறந்து பார்த்தால் தெரிகின்றது. அதற்குள் அவனது பொக்கிஷங்களில்லையென்றால் அவன்தன்னிருப்பிடத்தை மாற்றிவிட்டானென்று அர்த்தம். '
E வ. ந. கிரிதரன் C5.

Page 10
இவ்விதம் கூறிவிட்டு அவன் மான்ஹோல் மூடியைத் திறந்தான். திறந்தவன் 'என் கடவுளே. ' என்று கத்தினான். இங்கே வந்து பாரென்றழைத்தான். எட்டிப் பார்த்தேன். உள்ளே தனது மூட்டை முடிச்சுகளை மார்போடனைத்தபடி சாமி குடங்கியிருந்தான். அடக் கடவுளே. இன்று முழுக்க இதற்குள்ளேயாகிடந்திருக்கின்றான்.
'ஏ சீவ். சீவ். ' நைஜீரிய 'சீவ் சத்தமிட்டு அழைத்தான். அசைவொன்றையும் காணவில்லை. இதற்கிடையில் சென்று கொண்டி ருந்தவர்கள் சுற்றிவரக் கூடினர். நைஜீரிய 'சீவ்' மான் ஹோலினுள் குதித்தான். தொட்டுப் பார்த்தான்.
'போய்விட்டான்' என்றான்.
தொலைவில் இருளில் ரொமான்ஸ்க் கட்டக்கலைப் பாணியிலமைந் திருந்த ஒண்டாரியோ பாராளுமன்றம் அழகாகப் பிரகாசமாகத் தெரிந்தது. 'அங்கிருந்து அவர்கள் சட்டங்கள் இயற்றிக் கொண்டிருக் கிறார்கள்' என்று சாமி கூறியது நினைவில் தெறித்தது.
தேடல் - யூலை, ஒகஸ்ட் 1996
| 6 D- அமெரிக்கா =

பொந்துப்பறவைகள்
இ ரண்டு நாட்களாக இலேசாகயிருந்த வலி இன்று அதிகமாகி விட்டிருந்தது. முருகேசனுக்கு இந்த மூட்டுவலி ஒன்றும் புதிதான தொன்றல்ல. இலங்கையில் இருந்த சமயத்திலிருந்தே அடிக்கடி வந்து வந்து தொந்தரவு செய்து கொண்டிருந்ததொன்றுதான். உடம்பு பலவீனப் பட்டுப் போகும் சமயம் பார்த்து வந்து மூட்டுகளைப் பிடித்து விடும். முக்கியமாக கால்மூட்டுகளையும்தான்தாக்குவது வழக்கம். இலேசாகத் தொடங்கி மூட்டுகள் கொதிக்கத் தொடங்கி விடும். நடக்க முடியாது. காரணமில்லாத எரிச்சலும் வலியும் அதிகமாகி மூட்டுகளைப்பிளந்து விடலாமாவென்றிருக்கும். ஆரம்பத்தில் கீல்வாத மென்று தான் சந்தேகப்பட்டார்கள் பலவித இரத்தப் பரிசோதனைகளுக்குப் பிறகு அவனிற்கிருப்பது கீல்வாதமல்ல ஒரு விதமானமூட்டுவலிதான் என்பது நிருபணமாகியது. இதற்காக எந்த நேரமும் அவன் கைவசம் விட்டமின் பிகுளிகைளையும் டெட்ராசைக்கிளின் கப்சூல்களையும் வைத்திருப்பது வழக்கம். கனடா வந்த புதிதில் ஆரம்பத்தில் ஒருமுறை வந்த பொழுது அவனது குடும்ப வைத்தியரான டாக்டர் பொங் அக்யூபங்சர் முறையிலான ஒரு முறையைக் கடைப்பிடிக்கும் படி அறிவுரை
E வ. ந. கிரிதரன் KO 17DE

Page 11

கூறியிருந்தார். பொதுவாக மூட்டு வலிக்கத் தொடங்குவதற்குமுன்னர் அப்பகுதியைச் சுற்றி ஒரு வித உளைவு தொடங்கிவிடும். மூட்டுவலி வருவதற்கான முன்னெச்சரிக்கை அத்தகைய சமயங்களில் எல்லாம் எந்தக்கால்மூட்டு வலிக்கத்தொடங்குகிறதோஅந்தப்பக்கத்துக்கையின் கட்டை விரலுக்கும் அடுத்த விரலுக்கும்இடைப்பட்ட பகுதியை அழுத்தி அழுத்திவிட்டுவர வேண்டுமென்பது டாக்டர்பொங்கின் ஆலோசனை. அதற்குப்பிறகு முருகேசன் டாக்டரின் ஆலோசனையே பின்பற்றி வந்தான். ஐந்து வருடங்களாக வலிதலைகாட்டவேயில்லை. டாக்டர் பொங் உண்மையிலேயே கெட்டிக்காரன்தான். சைனாக்காரங்கள் கட்டையன்கள் என்றாலும் சரியான விண்ணன்கள்தான். ஐந்து வருடங்களாக தலைகாட்டாதிருந்த வலி மீண்டும் கடந்த இரண்டு நாட்களாகதலைகாட்டத் தொடங்கிவிட்டிருந்தது. இதற்கு முருகேசன் தான் காரணம். வழக்கமாக மூட்டு உளையத் தொடங்கியதுமே பின்பற்றவேண்டிய டாக்டரின் ஆலோசனையை பின்பற்ற அவன் தவறிவிட்டான். கடந்த இரண்டு கிழமைகளாக சரியான ஓவர்டைம். ஒழுங்காக நேரத்திற்கு சாப்பாடில்லை. உடம்பு நன்கு பலவீனப்பட்டுப் போய் விட்டிருந்தது. வலியை வரவிடக்கூடாது. வந்துவிட்டாலோ குறைந்தது இரண்டுநாட்களாவது அடம்பிடித்து இருந்துவிட்டுத்தான் செல்லும், ஆஸ்பிரினை நான்கு மணித்தியாலத்திற்கு ஒரு முறை இரண்டிரண்டாகப் போட்டுவர வேண்டும். சாதாரண ஆஸ்பிரின் அல்ல, எக்ஸ்ட்ரா ஸ்ரென்த் ஆஸ்பிரின் ஆஸ்பிரினைப் பாவிக்க ஆலோசனை கூறியதும் டாக்டர் பொங்தான்.
சோபாவில்படுத்திருந்தபடி டி.வியைப் பார்த்துக்கொண்டிருந்தான். கடந்த நான்கு மணித்தியாலங்களாக வலி அதிகமாகிநடக்கமுடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டிருந்தான். ஆஸ்பிரினை ஒழுங்காக எடுத்துவந்தால் இரவு வலிகுறைந்துவிடும். இதுமட்டும் பொறுமையாக யிருக்க வேண்டும். இத்தகைய சமயங்களில் அவனுக்கு ஊரிலிருக்கும் அம்மாவின் ஞாபகம் வந்துவிடும். அவனை அப்படி இப்படி அசைய விடமாட்டாள். வெந்நீரால் மூட்டுகளுக்கு ஒத்தடம் கொடுத்து விடு வாள். அவளுக்கு எப்பொழுதுமே அவனென்றால் செல்லம்தான்.
E வ. ந. கிரிதரன் C9E
O

Page 12
இத்தகைய சமயங்களில் அத்தகைய ஆறுதலும் வேண்டித்தான் இருக்கிறது. அதையெல்லாம் இங்கு எதிர்பார்க்க முடியாது. அவன் தனித்து இந்த பச்சிலர் அப்பார்ட்மெண்டில் வாழ்கிறான். காங்கிரீட் காட்டினுள் ஒரு பொந்து வாழ்க்கை. அவனிற்கு எதிர்ப்புறமாகவுள்ள பொந்தில் ஆங்கிலக் குடும்பம், இடப்புறம் ஒரு சீனக்குடும்பம். வலப்புறமாக. ஒரு யமேக்கன், 'இந்த யமேய்கன் கறுவல்களை யெல்லாம் அடித்துக்கலைக்கவேண்டும். குடியும் பெட்டையும் மருந்தும் இருந்தால் இதுகிற்குக் காணும் ஒழுங்காக உழைத்துப் படித்து வாழ இதுகளாலை முடியாது. களவெடுக்கிறதும் சுட்டுத்திரியிறதும். சீ.' இதுமுருகேசனின் கறுப்பினத்தவர்களைப் பற்றிகுறிப்பாக யமேய்க்கன் நாட்டுக் கறுப்பின மக்களைப்பற்றி எண்ணப்போக்கு. இவ்விதம் முத்திரை குத்தும் பழக்கம் அவனது தொட்டிற்பழக்கம் சுடுகாடுவரை போகாமல் விடாது. தொப்பி பிரட்டிகள், மோட்டுச் சிங்களவன் என்ற கருதுகோள்களின் பரிணாம வளர்ச்சி.
நேரம் சென்றுகொண்டிருந்தது. எத்தனை நேரம்தான் டி.வியைப் பார்த்துக் கொண்டிருப்பது. அலுத்துவிட்டது. டி. வி. சத்தமே எரிச்சலையும் தலையிடியையும் தரத் தொடங்கியது. டி.வியை நிற்பாட்டினான். நோய்வருமட்டும் நோயற்றவாழ்வின் அருமை தெரிவ தில்லை. இத்தகைய சமயங்களில்தான் தெரிந்துவிடுகிறது. இனி ஒழுங்காக உடம்பைக் கவனித்துக் கொள்ளவேண்டும். சாப்பாட்டைச் சரியாக நேரத்திற்கு எடுக்க வேண்டும்.இந்தச்சமயம்பார்த்துபயர்அலாம் அடிக்கத் தொடங்கியது. இந்த அலாம் அடிப்பதே இங்கு ஒரு முக்கியமான பிரச்சினை. எல்லாமிந்த கறுவல்களின்ற சேட்டைதான். விளையாட்டுக்கு அடித்துவிட்டு பயர்பிரிகாட் ஒடித்திரிவதைப் பார்ப்பதில் இவங்களிற் கொரு திரில். இவ்விதமாக முருகேசன் எண்ணினான். வழக்கமாக அலாம் அடித்துவிட்டு சிறிது நேரத்திலே ஒய்ந்து விடும். ஆனால்இம்முறை ஒய்வதாகத் தெரியவில்லை. விடாமல் அடித்துக்கொண்டே இருந்தது. வெளியில் மனிதர்கள் ஒடித்திரியும் நடமாட்டம் அதிகரித்தது. ஏதோ ஒரு புளோரில் இருந்து பெண்கள் சிலரின் கூக்குரல் கேட்டது. முருகேசன் சிறிது கலவரமடைந்தான்.
EC20 அமெரிக்கா

வெளியில் பயர்பிரிகாட்டின் சைரன் பலமாக ஒலிக்கத் தொடங்கியது. ஏதோ உண்மையாகவே நடந்திருக்க வேண்டும்போல் முதன்முறையாக முருகேசன் உணர்ந்தான். இன்னும் அலாம் விடாமல் அடித்துக் கொண்டே இருந்தது.
முருகேசன் எழும்புவதற்கு முயன்றான். மூட்டு பலமாக வலித்தது. அசைய முடியவில்லை. இலேசானமணமொன்று மூக்கைத்துளைத்தது. எங்கோ, ஏதோ எரியும் வாசனை. முருகேசனின் கலவரம் அதிகரிக்கத் தொடங்கியது. இந்த இக்கட்டிலிருந்து எப்படித்தப்புவது? 'கடவுளே! எப்படியாவது என்னைக் காப்பாற்றிவிடு' பொதுவாக முருகேசனுக்கு கடவுள்நம்பிக்கை அதிகமில்லை; ஆனால் இத்தகைய சமயங்களில்தான் கடவுள் நம்பிக்கை அதிகமாகி விடுகின்றது. எரியும் வாசனையைத் தொடர்ந்து பல்கனிப் பக்கமாக இலேசான புகை பரவிக் கொண்டிருந்தது தெரிந்தது. வெளியில் ஒடிக்கொண்டிருந்த மனிதநடமாட்டம் குறைந்து மெல்ல மெல்ல ஓய்ந்துபோய் விட்டது. எல்லோரும் ஒடிப்போய் விட்டார்கள். முருகேசன் தனித்துப் போய் விட்டான். இப்படியே முடிந்துவிட வேண்டியதா? எப்படி தானிருப்பதை வெளியில் தெரியப்படுத்துவது? முருகேசனுக்கு ஒரு வழியும் தென்படவில்லை. ஊர்நினைவு உடனடியாக எழுந்தது. ஆவலும் எதிர்பார்ப்புமாக அம்மா, அக்கா, தங்கச்சிமார், தம்பி. 'ஒரு லைப் இன்சூரன்ஸ் கூட எடுத்து வைத்திருக்கவில்லையே. எடுத்திருந்தாலாவது கொஞ்சக் காசாவது அவர்களுக்குக் கிடைக்கும்'முருகேசன் முடிவைநோக்கித்தன்னைத் தயார்ப்படுத்துவதில் ஈடுபட்டான். 'வருவது வரட்டும் எதிர்கொள்ள வேண்டியதுதான். 'புகையின்காரம் அதிகரிக்கத் தொடங்கியது. கண்கள் எரியத் தொடங்கின. தொண்டை செருமத் தொடங்கியது. இறுதிமுறை யாக எழும்புவதற்கு முடிவுசெய்தான். முடியவில்லை. முயற்சியைக் கைவிட்டவனாக சோபாவில் ஆயாசத்துடன் சாய்ந்தான்.
இந்தச் சமயம் பார்த்து கதவு பலமாகத் தட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்த பலமான குதல். 'எனிபொடி இன்?'
அந்தக் குரல் அவனுக்கு நன்கு விளங்கியது. பக்கத்து வீட்டு யமேக்கனின் குரல். பலமுறை அந்தக் குரலை இவன் கேட்டிருக்கிறான்.
E வ. ந. கிரிதரன் EC2D

Page 13
முருகேசனுக்கு தென்பு மீண்டும் அதிகரித்தது. கடவுள்தான் யமேக்க னின் உருவில் வந்ததாகப் பட்டது. பதிலிற்குப் பலமாக இவன் கத்தினான்.
"ஐ ஆம் கியர் ஐ ஆம் கியர்.
ஐகனட் வோக்மான்காவிங் ஜாயின்ட் ப்ராப்ளம்.' யமேக்கனுக்குஇவனது உச்சரிப்புசரியாக விளங்கவில்லை. பலமாக மீண்டும் கதவைத்தட்டினான்.
'ஒப்பின் யுவர் டோர் மான்: குயிக் குயீக் பில்டிங் இஸ் இன் பிளேம்ஸ்," முருகேசன் மீண்டும் பலமாகக் கத்தினான்.
'பிரேக் த டோர். பிரேக் த டோர் ' யமேக்கனுக்கு இவன் ஏதோ இக்கட்டில் இருப்பது விளங்கியது. பலமாக கதவை மோதினான். அவனுடைய உருக்கு உடம்பு வலிமைக்குமுன்னால் கதவுஈடுகொடுக்க முடியவில்லை. உள்ளே உடைத்து வந்தவனைப் பார்த்து
'ஐ கான்ட் வோக் மான்' என்றபடி தன் மூட்டைக் காட்டினான் முருகேசன். வெளியில் புகையின் செறிவு அதிகரிக்கத் தொடங்கியது. உள் நடைபாதையிலும் புகை பரவத் தொடங்கியது. யமேக்கன் கொஞ்சமும் தாமதிக்கவில்லை. முருகேசனை அலாக்காகத் தூக்கிய வனாக வெளியேறினான்.
'ஏ மான் யு லுக் ஸ்கின்னி, பட் டூ ஹெவி மன்' என்று அந்தச் சமயத்திலும் ஜோக் அடித்துவிட்டுப் பலமாகச் சிரிக்கவும் அந்த யமேக்கன்தவறவில்லை. முருகேசனுக்கு அதிசயமாகவிருந்தது. அவன் முதல் முதலாக கறுப்பர்களைப் பற்றியதன் கணிப்பீட்டை மாற்றியது அன்றுதான். அந்த மாற்றம் கூடச் சுயநலத்தால் விளைந்ததொன்றாக இருந்ததையெண்ணி முருகேசன் உண்மையிலேயே வெட்கித்துப் போனான்.
- சுவடுகள்
EC22) அமெரிக்கா =

ஒரு மா(நாUட்டுப்
பிரச்சனை
ஞாயிற்றுக்கிழமையாதலால் றோட்டினில் அவ்வளவு சனநடமாட்ட மில்லை. வாகன நெரிச்சலுமில்லை. பொன்னையாவின் 'கொண்டா அக்கோர்ட் சென்ற் கிளயர் வெஸ்டில் ஆறுதலாக ஊர்ந்து கொண்டிருக்கின்றது. ஞாயிற்றுக் கிழமைகளில் அல்லது விடுமுறை நாட்களில் காரோடுவதென்றால் பொன்னையாவிற்கு மிகவும் பிடித்தமானதொன்று. எந்தவித டென்ஷனுமின்றி பின்னால் ஹோர்ன் அடிப்பார்களென்ற கவலையேதுமின்றி ஆறுதலாக நகரை ரசித்துச் செல்லலாமல்லவா? இருந்தாலும் அண்மைக் காலமாகவே ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஹோர்ன் அடிக்கத்தான் தொடங்கிவிட்டார்கள், சிட்டி பெருக்கத் தொடங்கிட்டுது. சிட்டி பெருக்கப் பெருக்க சனங்களும் பொறுமையை இழக்கத் தொடங்கிட்டாங்கள் போலை. இவ்விதம் இத்தகைய சமயங்களில் பொன்னையா தனக்குத்தானே சொல்லிக் கொள்வான். நகரம்வளருகின்ற வேகத்திற்குச் சமனாக சனங்களின்ற வாழ்க்கைத் தரமும் உயரவேண்டும். இல்லாவிட்டால் பிரச்சனைதான்
E வ. ந. கிரிதரன் 巨○圭

Page 14
என்றும் சிலவேளைகளில் ஒரு வித தீவிர பாவத்துடனும் அவன் சிந்தித்துக் கொள்வான்.
ஒல்ட்வெஸ்டன்றோட்டைக் கடந்து "கீல்"இன்டர் செக்ஷனையும் கார்கடந்து விரைந்தது. இடப்புறத்தில் 'கனடா பக்கர்ஸின் ஸ்லோட்டர் கவுஸ்' பெரியதொரு இடத்தைப் பிடித்து படர்ந்திருந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் மாடுகளை துண்டுபோடும் பெரியதொரு கசாப்புக் கூடம்.
பொன்னையா இயற்கையிலேயே சிறிது கருணை வாய்ந்தவன். ஏனைய உயிர்களின் மேல் அன்பு வைக்கநினைப்பவன். ஊரிலைஇருக் கும் மட்டும் சுத்த சைவம்தான். இங்கு வந்ததும் கொஞ்சங் கொஞ்சமாக மாறிவிட்டான். இங்கத்தைய கிளைமட்டிற்கு இதையும் சாப்பிடாட்டி மனுசன் செத்துத் துலைக்க வேண்டியது தான். ' திடீரென ஊர்ந்து கொண்டிருந்த ட்ரபிக் தடைப்பட்டது. பொன்னையாமணியைப் பார்த் தான். நேரம்பதினொன்றைத்தாண்டிவிட்டிருந்தது. பஞ்சாப்காரன்பத்து மணிக்கே வரச் சொல்லியிருந்தான்.
பொன்னையாவிற்குத் தெரிந்த ஓரளவு நாணயமானகராஜ் அந்தப் பஞ்சாப்காரனின் கராஜ்தான். ஸ்டியரிங்கில் மெல்லியதொரு உதறல். நேற்றிலிருந்து அதைக் காட்டத்தான் பொன்னையா விரைந்து கொண்டி ருந்தான். 'நேரங்கெட்ட நேரத்தில் இதென் ட்ரவிக் புளக். 'இவ்விதம் எண்ணியபடி ட்ரபிக் புளக்கிற்குக் காரணம் என்னவாகயிருக்குமென எதிரே நோக்கினான்.
இதற்குள்றோட்டுக்கரையில்சனங்கள் விண்ணானம் பார்க்கக்கூடத் தொடங்கிட்டுதுகள். இந்த விசயத்தில் எல்லா மனுஷருமே ஒன்றுதான். எதிரே அவன் பார்வையை மறைத்தபடி கனடா பக்கர்ஸிற்குச் சொந்த மான பெரிய ட்ரக்கொன்று நின்றதால் இவனால் ஒழுங்காகப் பார்க்க முடியவில்லை.
றோட்டுக்கரையில் விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்த சைனாக் காரனொருவனைப் பார்த்து 'ஏ. மேன் வட்ஸ் த மட்டர்? வட்ஸ் கோயிங் ஒன். 'என்று பலமாகக் கத்தினான்.
EC24) அமெரிக்கா

அதற்கு அந்த சைனாக்காரன்தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் "பீவ். எஸ்கேப். ஸ்லோட்டர்' என்றான்.
அருகிலிருந்த வெள்ளையனொருவன் சைனாக்காரனின் ஆங்கிலத் தைக் கேட்டுச் சிரித்தான். இவனுக்கும் சிரிப்பாக இருந்தது. ஆனால் அந்த ஆங்கிலம் கூட விளங்கியது. மாடொன்று ஸ்லோட்டர்ஹவுஸ்ஸி லிருந்து தப்பி வந்து விட்டது என்பதைத்தான் அந்த சைனாக்காரன் அவ்விதம் கூறினான் என்பது விளங்கியது.
மரணத்திலிருந்துதப்பிவந்த அந்த இனந்தெரியாத மாட்டின் மேல் ஒரு வித பரிதாபம் தோன்றியது; அநுதாபம் படர்ந்தது. காரை வெட்டி றோட்டுக்கரையோரம் பார்க் பண்ணிவிட்டு பொன்னையா காரை விட்டிறங்கி வேடிக்கை பார்க்கும் சனங்களில் ஒன்றானான். 'ஸ்ட்ரீட் கார் செல்லும் இரும்புப்பாதையின் மேல், சுற்றிவர வேடிக்கை பார்த்தபடிநிற் பவர்களைப் பார்த்துமுறைத்தபடி அந்த மாடுநின்றது. அதன் கண்களில் மரணபயம் கவ்விக்கிடந்ததை இவன் உணர்ந்தான். அதைப் பார்க்கப் பாவமாகவிருந்தது. பொன்னையாவிற்குக் கவலை தோன்றியது.
உருண்டு திரண்டு கொழு கொழு வென்று வாட்டசாட்டமாக வளர்ந்திருந்தது. அருகில் சென்று பிடிக்க முனைந்த 'கனடா பக்கர்ஸ்' ஊழியர்களைப் பார்த்துமுறைத்தது. முட்டுவது போல் பாசாங்கு செய்து முரண்டுபிடித்தது. அருகில் ஒருவரையும் வரவிடாமல் தடுத்து வைப்ப தில் ஓரளவு வெற்றிகண்டிருந்தது.
எவ்வளவு நேரத்திற்குத்தான் அதனால் அந்த ஐந்தறி உயிரினால் தாக்குபிடிக்க முடியும்? மட மாடே மனிதனுடன் போட்டி போட்டு உன் னால் வெல்ல முடியுமா என்ன?
திடீரென பொன்னையாவின்சிந்தனையில் ஒரு எண்ணம் எழுந்தது. இந்த மாட்டின் மனநிலை என்னவாகயிருக்கும்?' அருகிலுள்ள ஸ்லோட்டர் ஹவுஸிற்குள் வெட்டுப்படுவதற்காகக் காத்து நிற்கும் ஏனைய மாடுகளின் ஞாபகமும் எழுந்தது. இவ்விதம் தப்பி வர இந்த மாடு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்?
கிடைத்த சுதந்திரத்தின் நிரந்தரமற்ற தன்மையை பாவம் இந்த மாட்டால் உணரமுடியவில்லை. அதனால்தான் தன்னுயிரைக் காத்துக்
E வ. ந. கிரிதரன் C25

Page 15
கொள்ள கிடைத்த அற்ப சுதந்திரத்தைப் பாதுகாக்க இந்த மாடு வீரேவேசத்துடன் முயல்கின்றது.
ஊரில் இருப்பவர்களின் நினைவுகளும் எழாமலில்லை. இந்த மாட்டைப் போன்ற நிலையில் இருப்பவர்கள் எத்தனை பேர். ? அரைகுறையாகத் தப்பி மீண்டும் அகப்பட்டவர்கள் தப்புவதற்கு முடியாமல் சமாதியாகிப் போனவர்கள்.
மீண்டும் கவனம் மாட்டின் மேல் திரும்புகின்றது. இன்னமும் அது மூர்க்கத்துடன்தன்னை நெருங்குபவர்களை எதிர்க்கின்றது.
யாரும் நெருங்காத சமயங்களில் ஒரு வித சோகம் கலந்த பாவத்துடன் அமைதியாக ஒரு வித பயத்துடன்நிற்கிறது.
அதன் கண்களிலிருந்து மெல்ல மெல்ல இலேசாகக் கண்ணீர் வடிகிறது. எதைநினைத்து அழுகிறது? தன் பரிதாபகரமானநிலையை நினைத்தா? தன்னைச் சமாதியாக்குவதற்குக் கங்கணம் கட்டி நிற்கும் மனிதர்களால் தனக்கேற்பட்டநிராதரவானநிலையை உணர்ந்தா? ஏன் அது அழுகிறது.
திடீரென பொன்னையாவிற்கு ஒரு எண்ணம் தோன்றுகின்றது. 'ஏன் இந்த மாட்டிற்குரிய விலையை குடுத்து, இதன் உயிரைக் காப்பாற்றினா லென்ன?'ஊரிலென்றாலும் வீட்டு வளவிலையாவது கொண்டு போய்க் கட்டி வைக்கலாம். இங்கு எங்கு போய்க்கட்டி வைப்பது. அப்பார்ட் மன்ற்றிலையா. அப்படித்தான்காப்பாற்றினாலும்இந்த ஒரு மாட்டைக் காப்பாற்றுவதால் மட்டும் இதன் நிலையில் இருக்கின்ற ஏனைய மாடுகளின் பிரச்சினைதீர்ந்து விடுமா?
இதற்கிடையில் யாரோ மாடு ட்ரப்பிக்கிற்குத்தடையாகயிருப்பதை பொலிஸிற்கு அறிவித்துவிட்டார்கள் போலும். எமர்ஜன்சிபிளாஷிங் லைட்டுடன் சைரன் முழங்க பொலிஸ் காரொன்று விரைந்து வந்து இறங்கியது. இரு பொலிசார்இறங்கினார்கள். கயிரொன்றில் வளையம் செய்து சிறிது நேரம் முயற்சி செய்தார்கள். பலனில்லை. மாடு மிகவும் உறுதியாகவே எதிர்த்துநின்றது. இதற்கிடையில் விஷயத்தை மோப்பம் பிடித்துப் பத்திரிக்கைகாரர்கள் தொலைக்காட்சிக்காரர்களென்று கமராக்களுடன் கூடிவிட்டனர்.
EC 26) அமெரிக்கா =

மாடு தன்னுயிரைக் காப்பதற்கானதொரு போராட்டத்தில், ஜீவமரணப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றது. இதை அடக்க வேடிக்கை பார்க்க படம்பிடிக்க ஒரு கூட்டம். ஒன்றிற்கும் செயல்பட முடியாத, இயலாத கூட்டம்தானும் அக்கூட்டத்தில் ஒருவன் என்பதை நினைக்கையில் பொன்னையாவிற்குதன்மேல் ஒரு வித வெறுப்புக்கூட தோன்றியது.
தங்கள் முயற்சிசிறிது தோல்வியுற்றதைக் கண்ட பொலிசார்தங்களிற் குள் கூடிக்கதைத்தார்கள். இதற்குள் வீதியில்இருதிசைகளிலும் வாகனங் கள் பெருமளவில் முடங்கிவிட்டன.
தொலைவிலிருந்தவர்கள் போக்குவரத்து தடைப்பட்டதன் காரணத்தை அறியாத நிலையில் ஹோர்ன்களை மாறி மாறி அடிக்கத் தொடங்கி விட்டார்கள். நிலைமை கட்டுமீறுவதை பொலிசார் உணர்ந்தார்கள்.
இறுதியில் மாட்டுப் பிரச்சினை ஒரு முடிவிற்கு வந்தது. ஆறறிவுப் பிராணியின் முன்னால் சுதந்திர வேட்கை நசுக்கப்பட்ட நிலையில் ட்ரான்குலைசரால் மயக்கப்பட்டு சாய்ந்த மாட்டை தூக்கிய கனடா பக்கர்ஸ் ஊழியர்கள் அதனை ஸ்லோட்டர் ஹவுஸ்ஸிற்குக் கொண்டு சென்றார்கள்.
ஒரு வழியாகப் போக்குவரத்துச் சீர்பட்டது. சனங்கள் ஒவ்வொரு வராக கலையத் தொடங்கினார்கள்.
பஞ்சாப்காரன் திட்டப்போகிறான் என்ற நினைப்புடன் தன் காரில் பாய்ந்தேறினான் பொன்னையா, கூடவே அடிக்கடி மிருகங்களை வதைப்பதாகக் கூறி வழக்குப் போடும் ஹியூமேன் சொசைட்டி'யின் நினைவு வந்தது. சிரிப்பு வந்தது.
சிறிது போராடித் தோல்வியுற்ற மாட்டின்நிலைமை அநுதாபத்தைத் தந்தாலும் அதன் சுதந்திர வேட்கையும் அதற்காக அது போராடிய தீவிரமும் அதன்மேல் ஒரு வித பயபக்தியை பெருமிதத்தை ஏற்படுத் தியது. சொன்னால் நம்பமாட்டீர்கள்! அன்றிலிருந்து பொன்னையா மீண்டும் முழுச் சைவமாகிவிட்டான்.
- தாயகம்
目 வ. ந. கிரிதரன் Cald

Page 16
மனித மூலம்
கடந்த ஒரு மணிநேரமாக இவன் நடந்துகொண்டிருக்கின்றான். யார் இவன் என்கின்றீர்களா? வேறு யாருமில்லை. இவன்தான். இவன் இவனேதான். அவன் அவனேதான் என்று சொல்வதில்லையா? அது போல்தான். இவனும்இவனேதான். இவனிற்குக் கொஞ்சநாட்களாகவே ஒரு சந்தேகம். என்னவென்று கேட்கின்றீர்களா?
வேறொன்றுமில்லை. வழக்கமாகநம்நாட்டு வேதாந்திகளிற்கு வரும் சந்தேகங்களில் முக்கியமானதொன்றுதான். 'நான் யார்.நானென்றால் நான் யார்? இது தான் இவனது சந்தேகம். அதற்கு முன்னால் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். அது என்ன? அதுதான் இவன் நடந்து கொண்டிருக்கின்ற பாதை, 'நான் கடந்து வந்த பாதை' என்றிருக் கின்றதே அது போல் தான் இவன் கடந்து கொண்டிருக்கின்ற இந்தப் பாதையும். இவன் சிறுவனாகயிருந்தபோது இந்தப் பாதையைப் பற்றி இவன் நடந்து கொண்டிருக்கின்ற பாதை. நான் கடந்து வந்த பாதை' என்றிருக்கின்றதே அது போல்தான் இவன் கடந்து கொண்டிருக்கின்ற இந்தப் பாதையும். இவன் படித்திருக்கின்றான். இன்னமும் ஞாபகத்தில் இருக்கின்றது. இவனிற்குப்புவியியல் கற்பித்த ஆசிரியையின் ஞாபகம்
28 அமெரிக்கா E

கூட இருக்கின்றது. இவ்வளவுஞாபகசக்திமிக்க இவனிற்கு இவனைப் பற்றி மட்டும் அப்படியெப்படி சந்தேகம் வரலாம் என்கின்றீர்களா? பொறுங்கள்! சற்றே பொறுங்கள். அதற்கு முன் இவன் கடந்து செல்கின்ற பாதையைப் பற்றிச்சிறிது பார்ப்போம்.
'யங்'ஸ்ட்ரீட். உலகப் புகழ் பெற்ற "யங் வீதி. அடடா. அவன் வேறு யாருமில்லை. இவன் வேறு யாருமில்லை. கனடா மனிதனே தான் என்கின்றீர்களா? சந்தேகமில்லை. இவன் கனடா மனிதனேதான். அதோ தெரிகின்றதே. உலகின் உயர்ந்த கோபுர வகை கட்டடம். அதுதான் சி.என்.கோபுரம். அது போதும் இவன் கனடாமனிதன்தான் என்பதற்கு. ஆனால் அதிலும் ஒரு சிக்கல். கனடா வீதியொன்றில் நடப்பவன் கனடா மனிதன்தான் என்று வைத்துக் கொண்டால் நிச்சயம் இவன் கனடா மனிதன்தான். ஆனால் அப்படியும் சொல்வதற்கில்லை. கனடா புகழ் பெற்ற செல்வந்தநாடு. சர்வ வல்லமை பொருந்திய அதி வீரபராக்கிரம அமெரிக்காவின் அண்டைநாடு. அதிலும் ரொரண்டோ பல்வேறு உலக அதிசயங்களை உள்ளடக்கிய மாபெரும் நகரங்களில் முக்கியமானதொன்று. உல்லாசப் பிரயாணிகளிற்கா குறைச்சல். இவர்களைத் தவிர அடைக்கலம் நாடி வரும் அகதிகள். ஆபிரிக்கர் கள். ஆப்கானியர்கள். ஆசியர்கள். இந்தியர்கள். இந்தியர்கள் வேறு ஆசிரியர்கள் வேறு. முழிபிதுங்காதீர்கள். ஆசியர்களென்று இங்கு பொதுவாக சீன உபகண்டநாடுகளைச் சேர்ந்தவர்களைத்தான் குறிப்பிடுகின்றார்கள். அது தான். வேறொன்றுமில்லை. அப்படி யென்றால் இவன் யார்? யார் இவன்?இவனுடன் தான் சிறிது நடந்து சென்று பார்ப்போமே. ஒரு வேளைபுரிந்து விடலாம். இவனைப் பார்த் தால்தாடிவளர்த்துசடைபின்னிசாமியாரைப்போலல்லவாஇருக்கின்றது. நதிமூலம் அது இது என்பது போல் ரிஷிமூலம் தெரிவதில்லை என்கின்றார்களே. ஒரு வேளை இவன் மூலமும் இந்த வகையானது தானா?நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். சற்றும் பொறுமையாகத் தான் இவனைப் பின்தொடர்ந்து பார்ப்போமே. 'மீன் டைம்.' அடடா, எனக்கும் இங்கு வந்த இந்த ஆறு மாதத்தில் தாய் மொழியே மறந்து விடும் போலிருக்கின்றதே. அதாவது இவனைப்பின்தொடர்ந்து
e
目 வ. ந. கிரிதரன் 王○ 29

Page 17

கொண்டு இவனைப் பற்றி அறிய முயன்று கொண்டிருக்கின்ற அதே சமயம்இவனது உடை, தோல்நிறம் என்பவற்றைச்சிறிது ஆராய்ந்துதான் பார்ப்போமா. உடை. கந்தல்தான் கனடாவில் கந்தலா. கந்தல் மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அதுவும் கனடாவில். சொன்னால் நம்ப மறுப்பார்கள். நமக்கேன் வம்பு. சரி இவனது தோலின் நிறம். நிச்சயமாக வெள்ளையில்லை. அழுக்கு உடல் முழக்கப்பரவியிருப்பதால்தாடி மண்டிக்கிடப்பதால் சொல்வதற்கில்லை. தளர்ந்து விடாதீர்கள். நம்பிக்கைக்கு இன்னும் இடம் இருக்கத்தான் செய்கின்றது.
இதோ இப்பொழுது புகழ்பெற்ற 'ஈட்டன் சென்ட'ரைக் கடந்து யங்வீதியில் வடக்காக 'டன்டாஸ் வீதியைக் கடந்து நடந்து கொண்டி ருக்கின்றான். 'ஈட்டன் சென்டர் இருக்கின்றதே. கனடாவின் வீட்டை விட்டு ஓடி வரும் இளசுகளின் ஆரம்ப அடைக்கல மாளிகை இதுதான். இங்கிருந்து தான் இவர்களில் பெரும்பாலோனோர் உலகின் மிகப் பழமை வாய்ந்த தொழில் செய்வதற்கு அடியெடுத்து வைக்கின்றார்கள். ஆனால் இவனிற்கு இது பற்றியெல்லாம் கவலைப் பட நேரமெங்கே யிருக்கின்றது. விரைவாக வடக்கு நோக்கிநடந்து கொண்டிருக்கின்றான். 'சன்சிபாரை'க் கடந்து விட டான். 'சன்சிபார்' என்ற ஆபிரிக்க நாடொன்றின் ஞாபகம் வந்து விட்டதா? ஆனால் அது வேறு; இது வேறு. இது வேறு வகையானதொரு 'சன்சிபார் நிர்வாண அழகிகளின் ஆடல் களிற்குப் புகழ்பெற்ற களியாட்ட மாளிகை. இது போன்ற பல களியாட்ட மாளிகைகளை இந்தப் புகழ்பெற்ற "யங் வீதியில் நீங்கள் காணலாம். ஆனால் இவன்தான் சாமியாரைப் போல் தெரிகின்றானே. சாமிக்கு இந்த 'காமிக்கிற விஷயங்களிலெல்லாம் தான் கவலையில்லையே (வேறொன்றுமில்லை. சிறு வயதிலிருந்து அண்ணாத்துரை, கருணாநிதி போன்ற அடுக்கு மொழி விற்பன்னர்களின் நூல்களைப் படித்ததால் ஏற்பட்ட பழக்கம்தான் இந்த 'சாமி (காமியெல்லாம்) சாமி வடக்கு நோக்கிநடந்து கொண்டேயிருக்கின்றார். ஒரு வேளை வடக்கிருக்கப் போகின்றாரோ? சாமி அதாவது இவன் இப்பொழுது வெலஸ்லியைக் கடந்து விட்டான்(ர்). இந்த கொலிஜ்ஜிற்கும் வெலஸ்லியிற்கும்
目 வ. ந. கிரிதரன் C3 DE

Page 18
இடைப்பட்டயங் வீதிக்கு மேற்காகயிருக்கின்ற பகுதியிருக்கின்றதேஇது ஒரு வித்தியாசமான பகுதி. பகலில் தெரியும் இதன் தோற்றத்திற்கும் இரவில் தெரியும் இதன் தோற்றத்திற்கும் 180பாகை வித்தியாசமுண்டு. இறுக்கமாக ஒட்டிய டெனிம் ஜீன்ஸ் அணிந்து ஆணழகர்களை இங்கு நீங்கள் அப்பொழுது காணலாம். இரவு ராணிகள், இரவு ராஜாக்கள் இப்படி பல்வேறு வகையான ராச்சியங்களை உள்ளடக்கியமாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் தலைநகர்தான் இந்த "யங் வீதி எல்லாம் இரவில் தான். பகலில் இந்தப் பூனையும் பால் குடிக்குமாரகம்தான்.
அது சரி அந்த இவனிற்கு என்ன நடந்துவிட்டது. அடடா நல்ல வேளை ஒன்றுமே நடக்கவில்லை. அதோ போய்க் கொண்டிருக் கின்றானே. இன்னமும், வடக்காக. விரைந்துதான் நடப்போமா. பல்வேறு திசைகளிலுமாகப் பல்வேறு மனிதர்கள். சீனர்கள், யவனர்கள், ரோமர்கள் அதாவது இத்தாலியர்கள், ஆங்கிலேயர்கள், அராபியர்கள், இஸ்ரேலியர்கள், ஆபிரிக்கர்கள், வட அமெரிக்கர்கள், போர்த்து கேயர்கள், ஜெர்மானியர்கள், சிலர் தெற்காக நடக்கிறார்கள். சிலர் மேற்காக. சிலர் கிழக்காக. சிலர் வடக்காக. இன்னும் சிலரோ குறுக்காக. எதிரே தடித்த, அடர்ந்த மீசையுடன் ஒரு ஆங்கிலேயன். நடுத்தர வயதினன். அலட்சியமும் அகங்காரமும் படர்ந்த முகத்தினன். தெற்கு நோக்கி வந்து கொண்டிருந்தான். இவன்' வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தான். இவனும் கவனிக்கவில்லை. அவனும் கவனிக்கவில்லை. சிறு மோதல். எரிச்சலுடன்ஆத்திரத்துடன்இவனைத் திரும்பிப் பார்க்கின்றான் தெற்கு நோக்கிப் போய்க் கொண்டிருந்தவன். வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தவனின் தோற்றம் அவனிற்கு அருவருப்பைத்தருகின்றது போலும். வார்த்தைகள் உதிருகின்றன.
'. டேர்ட்டி இன்டியன்' இவன் எதையுமே கவனிக்கவில்லை. தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றான். யார் இவன். ? இலேசாகப் புரிகின்றதா? இந்தியனாகயிருப்பானோ? பலவகையான இந்தியர்கள் இருக்கின்றார்கள். இவன் அவர்களில் எந்த வகை? சிவப்பா. மேற்கா. கிழக்கா. யார் இவன்? எதிரே இன்னுமொருவன் வருகின்றான். தலை மொட்டையடித்து இராணுவ உடையணிந்த
K32) அமெரிக்கா =

சிப்பாயைப் போல் , யார்இவன்? தோற்தலையர்களில் ஒருவனோ. இவனும் தெற்கு நோக்கிச் சென்று கொண்டிருப்பவன். வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருப்பவனைக் கண்டதும் இவன் இதழ்களில் ஏளனம் கடந்ததொரு. புன்னகையாகத்தானிருக்க வேண்டும். புன்னகையைத் தொடர்ந்து வார்த்தைகள். 'பாக்கி.' வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருப்பவன் இவை எதனையுமே கவனிக்கவில்லை தொடர்ந்து வடக்கு நோக்கிச் சென்று கொண்டுதானிருக்கின்றான். யார் இவன்? 'பாக்கி' என்றழைக்கப்படுகின்றானே. பாகிஸ்தானைச் சேர்ந்தவனாகயிருப்பானோ? இந்தியனா? பாகிஸ்தானைச் சேர்ந்தவனா? அல்லது. யார்இவன்?இவன் ஒரு மனிதன்.நிச்சயமாகத் தெரிகின்றது. ஒரு தலை, இரு கண்கள், இரு கைகள், இரு கால்கள். நிச்சயமாக மனிதன்தான். மனிதன்என்று சொல்வதால் பெண்விடுதலைப் பிரியர்களே சண்டைக்கு வந்துவிடாதீர்கள். மனிதர்களில் ஒருவர் என்று சொல்லும்படி வற்புறுத்திவிடாதீர்கள். சந்தேகமில்லாமல் இவன் ஒரு மனிதன் தான் அதில் மட்டும் சந்தேகமில்லை. அது சரி அப்படியென்றால் இவன் அந்த வகையான மனிதன். ? அட அவனிற்குத்தான் அவனைப் பற்றிச் சந்தேக மென்றால் உங்களிற்கும் வந்து விட்டதா? நதி மூலம் ரிஷிமூலம் தான் தெரியவில்லையென்று பார்த்தால், இந்த மண்ணில் மனித மூலம் கூடத் தெரியவில்லை.
- தாயகம் ! 15.4.1994
目 வ. ந. கிரிதரன் 33d
YA.

Page 19
சுண்டெலிகள்
கீரப்பான் தொல்லையைத்தாங்கமுடியவில்லை. எல்லா வழிகளிலும் முயன்று பார்த்தாகிவிட்டது. சைனாக்காரனின் சோக் தொடக்கம் முயலாத வழிகளில்லை. வெற்றிகரப்பான்பூச்சிக்குத்தான். பேசாமல் தோல்வியைப் பெருந்தன்மையாக ஒப்புக் கொண்டு அப்பார்ட்மென்ட் விட்டு அப்பார்ட்மென்ட் மாறினால் கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட கதைதான். கரப்பான்பூச்சிகளிற்குப்பதில் சுண்டெலிகளின் தொல்லை. கனடாவில் கட்டடங்கள் தான் உயர்ந்தனவேயே தவிர எலிகளல்ல. கொழுத்து கொழுத்து உருண்டு திரண்ட ஊர் எலிகளைப் பார்த்த எனக்கு இந்தச் சுண்டெலிகள் புதுமையாகத் தெரிந்தன. நாட்டுக்கு நாடு மண்ணிற்குமண் உயிர்கள் பல்வேறு வடிவங்களில் உருமாறிவாழத்தான் செய்கின்றன. சுண்டெலிகளின் பால் என் கவனம் திரும்பியதற்கு என் தர்மபத்தினியின் ஓயாத கரைச்சலும் புறுபுறுப்பும் இன்னுமொரு காரணம். குழந்தை வேறு ஆங்காங்கே ஒடித்திரியும் பூச்சிகளையும் சுண்டெலிகளையும் வியப்புத்ததும்ப பார்ப்பதைக் கண்டதும் என்ன வளிற்கு நெஞ்சைக் கலக்கத் தொடங்கி விட்டது. "இஞ்சாருங்கோ. உந்த சுண்டெலிகளை அடிச்சுத்துரத்தாட்டி ஒருநிமிசங்கூட என்னால்
K34): அமெரிக்கா E

இங்கேயிருக்கேலாதுதவளுறகுழந்தையிருக்கிற வீட்டிலை. "கனடா வந்து ஆறு மாதங்களிலே பலரிற்குத்தமிழ் மறந்து போய்விடுகின்றது. என் மனைவியோ வந்து ஆறு வருடங்கள் ஓடியும் இன்னும் சுத்தமான யாழ்ப்பாணத் தமிழில்தான் கதைத்து வருகின்றாள். தமிழ் மறந்தவர் களைப் பற்றிக் கூறினால் இதெல்லாம் சுத்தப் புலுடா, பம்மாத்து சுத்து மாத்து என்பாள். எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொண்டிருக் கலாம் இவளுடைய நச்சரிப்பையும் பொச்சரிப்பையும் தாங்க மட்டும் என்னால் முடியாது. சுண்டெலிகளிற்கு ஒரு முடிவு கட்டாமல் இவளும் விடமாட்டாள். முடிவாகச்சுண்டெலிகளை ஒரு கை பார்ப்பதற்கு முடிவு செய்தேன். சுண்டெலிகளை ஒரு வழிக்குக் கொண்டு வருவதற்கு முதல் படி சுண்டெலிகளைப் பற்றி அறிவது. சுண்டெலிகளின் பழக்கவழக்கங் கள்நடமாட்டம் பற்றியதகவல்களைப் பற்றிப்போதுமானதகவல்களை எவ்வளவு அதிகம் பெற முடியுமோ அவ்வளவிற்கு அவற்றை அடக்குவதும்இலகுவானதாக அமையக்கூடும். சுண்டெலிகளைப்பற்றி ஆரம்பத்தில்நாம் கவனத்தில் பெரிதாக எடுக்கவில்லை. ஆனால் அரிசி, மாப்பைகளைப் பதம் பார்க்கத் தொடங்கிய போதுதான் விழித்துக் கொண் டோம். இப்படியே விட்டால் நிலைமை கட்டுக்கடங்காது போகலாம். மனைவியின் பொச்சரிப்பிலும்நியாயமிருப்பதை உணரக் கூடியதாகவிருந்தது. ஓரிரவு என் சகதர்மினியும் குழந்தையும் படுக்கையில் விழுந்தபிறகு சுண்டெலிகளைப் பற்றி உளவுபார்ப்பதற்கு முடிவு செய்தேன். புதிதாக வாங்கிய எலிப்பொறிகளை வைப்பதற்குப் பொருத்தமான இடங்களைத் தெரிவு செய்வதற்கு இந்த உளவு நடவடிக்கை உதவக் கூடும். அரிசி, மாப்பைகளைக் கொண்டு வந்து சாப்பாட்டு மேசையின்மேல் வைத்துவிட்டு வந்து சோபாவில்சாய்ந்தபடி டி.வியைத் தட்டி விட்டேன் சுண்டெலிகளின் வரவை எதிர்பார்த்தபடி ஆவலும் காவலுமாக இடையிடையே லெட்டர்மானின் அறுவைகளை யும் பார்த்தபடியிருந்தேன். நேரம் ஒடிக் கொண்டிருந்தது. சுவர் மூலையில் மெல்லதொரு சத்தம். காதுகளையும் கண்களையும் கூர்மை யாக்கிக் கொண்டேன். சாப்பாட்டு மேசைக்கருகாமையில் போடப்பட்டி
ருந்த பழைய சோபாவின் அருகாக சிறியதொரு குறுணி என்போமே
目 வ. ந. கிரிதரன் 35

Page 20

அப்படியொருதலை மெல்ல எட்டிப்பார்த்தது. சிறிய கருமணிக்கண்கள், குட்டிச்சுளகுக்காதுகள் ஒரு கணம் எந்த அசைவையும் காணோம். அந்த நேரம் பார்த்துத்தான் இந்தப் (பாழாய்ப்போன என்று சொல்லப் போகின்றேன் என்றுதானேநினைக்கின்றீர்கள். அதுதானில்லை) இந்தப் பொல்லாததும்மல் வந்து தொலைக்க வேண்டும். அடக்க முயன்றும் என்னையும் மீறிவெடித்துவிட்டது. சுண்டெலியின் வேகத்தைப் பார்க்க வேண்டுமே. கடுகிப் பறந்தது. மறைந்தது என்று வேண்டுமானால் கூறலாம். சிறிது நேர அமைதிக்குப் பின்னர் பழையபடி அதே குட்டித்தலை, கருமணிக் கண்கள், சுளகுக் காதுகள், இம்முறை வெகு அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன் சமையலறைப் பகுதியில் வழக்கமான இடத்தில் அரிசி, மாப்பைகளைத் தேடிப்பார்த்து விட்டுத் தான் அவற்றின்மணம் பிடித்து சாப்பாட்டு மேசைப் பக்கம் வந்து விட்டது போலும். எனக்குள் விநோதமானதொரு ஆசை உருவானது. மேசைக் குக் கதிரைகள் மூலம் ஏறாதவண்ணம் கதிரைகளைத் சற்றுத்தள்ளி ஏற் கனவே இழுத்து வைத்து விட்டிருந்தேன். எப்படி அந்தச் சுண்டெலி மேசையில் ஏற முயல்கிறதோஇயலுமானவரையில் என்அசைவுகளைக் குறைத்துக் கொண்டு அதன் அசைவுகளையே அவதானித்துக் கொண் டிருந்தேன். சிறு அசைவு கூட அதனை உசார்படுத்தி விடுவதை ஏற் கனவே அவதானித்து விட்டிருந்தேன். சிறிது நேரம் அங்குமிங்குமாக அலைந்துவிட்டு மோப்பம் பிடித்தபடி மேசைக்குக் கீழ் விழுந்துவிட்டது அந்தச் சுண்டெலி. சிறிது நேரம் அமைதியாகக் செவிகளை உசார் நிலையில் வைத்தபடிநின்றிருந்தது. பின்னர் அண்ணாந்து ஒரு முறை பார்த்தது. உணவு இருக்குமிடத்தை ஊகித்து விட்டது போலும், அறை யினுள் சிணுங்கிய குழந்தையைத்தட்டிச்சீராட்டியபடி என்இல்லத்தரசி மெல்லப் புரண்டு படுப்பதின் அசைவை என்னால் உணரக் கூடியதாக விருந்தது. இந்தப் பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிருமே தனது வாழ்நாளில் இயலுமான மட்டும் முயன்றுதான் பார்க்கின்றது; இந்தச் சுண்டெலியைப் போல ஏன் என்னைப் போல என்றும் வேண்டு மானால் சொல்லிக்கொள்ளலாம். நாட்டில் பிரச்சனை மூண்டுவிட்ட தென்று சொந்த மண்ணைவிட்டு வந்ததிலிருந்து இன்றுவரை எத்தனை
E வ. ந. கிரிதரன் マエ

Page 21
வழிகளில் எத்தனை முயற்சிகள் ஒன்று சரி வந்தால் இன்னுமொரு முயற்சி ஒன்று பிழைத்துவிட்டாலும் இன்னுமொரு முயற்சி. எத்தனை அதிசயமான பிரமாண்டமான பிரபஞ்சம், புதிர்கள் நிறைந்த பிரபஞ்சம். இந்தச் சுண்டெலி இப்பொழுது மேசையின் வழவழப்பான உருக்குக் காலொன்றில் ஏறுவதற்கு மீண்டும் மீண்டும் முயன்று கொண்டிருந்தது. எப்படியும் மேசையின் மேலிருக்கின்ற உணவை அடைந்து விட வேண்டுமென்ற அவா பேரார்வம் அதனிடம் தொனிப்பது போல் தென்பட்டது. ஏறுவதும் விழுவதும் ஏறுவதும், விழுவதும், ஏறுவதும் விழுவதுமாக அந்தச்சுண்டெலிமுயன்று கொண்டிருந்தது. சிலவேளை அது தன் முயற்சியில் வெற்றியடையலாம். அடையாமற்போகலாம். அதற்காக அதுதன்முயற்சியைக் கைவிடும் வகையைச் சேர்ந்தது போல் தென்படவில்லை. இறுதி வெற்றிகிடைக்கும் வரை அல்லது களைத்துச் சோரும் வரை அதுதன்முயற்சியைத் தொடரத்தான் போகின்றது.இந்தச் சின்னஞ்சிறு உயிரிற்குள் தான் எத்துணை நூதனமான வைராக்கியம். முயற்சிசுண்டெலிகளிற்கு ஒரு வழிகாண வேண்டுமென்று என்மனைவி நச்சரித்தது இலேசாக நினைவிற்கு வருகின்றது. எடி விசரீ நம்மைப் போலதானே இந்தச் சுண்டேலிக்கும் ஒரு குடும்பம் குழந்தையென்று சொந்த பந்தங்கள். இதைநம்பி எத்தனை உயிர்களோ? இது ஒரு எப்பன் சாப்பாட்டைதின்னுறதாலை எங்களிற்கென்ன குறைவாப் போகுது..?
நித்திரைகண்களைச்சுழற்றுகின்றது. அந்தச்சுண்டெலி மட்டும்தன் முயற்சியைக் கைவிட்டதாகத் தெரியவில்லை. அரைத் தூக்கத்திலும் அதன் சிறு அசைவுகள் கேட்கத்தான் செய்கின்றன.
- தாயகம் ! 13.5.94
巨 38 OE அமெரிக்கா 菲

கணவன்
பல்கனியிலிருந்து எதிரே விரிந்திருந்த காட்சிகளில் மனம் ஊன்றாத வனாகப் பார்த்தபடிநின்றிருந்தான் சபாபதி. கண்ணிற்கெட்டியவரை கட்டங்கள். உயர்ந்த, தாழ்ந்த, அகன்ற, ஒடுங்கிய கட்டடங்கள்.
டெஸ்மண்ட் மொறிஸ் கூறியது போல் மனிதமிருகங்கள் வாழ்கின்ற கூடுகள். நகரங்கள் மனித மிருகங்கள் வாழுகின்ற மிருககாட்சிச்சாலை என்று அவர் குறிப்பிட்டதில் தவறேதுமிருப்பதாகத் தெரியவில்லை. பார்க்கப் போனால் இன்றைய மனிதனின் அடிப்படைப் பிரச்சினை களிற்கு ஒரு வகையில்நகரங்களும் காரணமாயிருக்கலாம். மிருகங்களை கூண்டுகளில் அடைத்து வாழ நிர்ப்பந்திக்கும் போது அவற்றின் இயல்புகளில் ஏற்படும் மாற்றங்கள் பல, நகரத்தில் செறிந்திருக்கும் கட்ட டக் கூண்டுகளிற்குள் அடைப்பட்டுக் கிடக்கும் மனித மிருகங்களிலும் காணப்படுகின்றனவாம், நகரத்தில் இருந்து கொண்டுதானே இன்றைய மனிதன் சக மனிதன் மேல் அதிகாரத்தைப் பிரயோகிக்கின்றான். X=Y Y=Z, ஆகவே X-Z என்ற வகையான கணித சாத்திரத்திற்குரிய தர்க்க நியாயத்தின்படி பார்க்கப்போனால் இன்றைய மனிதனின் பிரச்சினை களிற்கு முக்கிய காரணம் நகரத்து மனிதன் என்றல்லவா ஆகிவிடு
E வ. ந. கிரிதரன் C39)

Page 22
கின்றது. இதுபற்றியெல்லாம் சிந்திக்கும் மனநிலையில் சபாபதிஇருக்க வில்லை.
வழக்கத்தை விட குளிர்இந்த வருடம் அதிகம். இன்னும் பனிமழை பொழியத் தொடங்கவில்லை. டொரன்டோ வந்த புதிதில் இவனிற்கு குளிர்காலம் நெருங்கும் போதே தலையிடி தொடங்கி விடும். ஊர் ஞாபகம் தோன்றிவிடும். கசோரினா பீச்சில் ஒருமுறை மூழ்கிஎழவேண் டும் போலிருக்கும்.நவாலிமண்கும்பிகளிற்கருகில் சாய்ந்தபடி விரிந்து கிடக்கும் வயல்வெளிகளை தொலைவில் தெரியும் காக்கைதீவுக் கடற் கரையை, கல்லுண்டாய் வெளியைக்காற்றிலாடும்பனைப் பெண்களை ரசிக்க வேண்டும் போலிருக்கும். வருடம் செல்லச் செல்ல டோரண்டோ இவனிற்குப் பழகிவிட்டது. குளிர் காலமும் ஸ்னோவும் முன்புபோல் இவனை இப்பொழுதெல்லாம் அதிகம் பயப்படுத்துவதில்லை. பழகி விட்டன. இப்பொழுதெல்லாம் நேரத்துடனேயே இருட்டி விடுகின்றது. நாலரை ஐந்து மணிக்கெல்லாம் இருள் கவிந்து விடுகின்றது. இலேசான இருளில் தூங்குவதற்குத்தயாராகயிருக்கின்றது கட்டடக்காடு உயர்ந்து, நீண்டு தொலைவில் சீ என். கோபுரம் இவ்வளவு தொலைவிலும் வடி வாகத் தெரிகின்றது. வழக்கமாக இவற்றையெல்லாம் ரசிக்கும் மனதிற்கு ஒரு கிழமையாக விடுமுறை. பானுவைப் பற்றித்தான் மீண்டும் மீண்டும் குமைந்து போய்க்கிடக்கின்றது. பானுமதிஇவனது இல்லாள் இல்லாள் இல் வருவதற்கு இன்னும் ஒரு மணியாவது செல்லும். இந்தப் பிரச்சி னைக்கு எப்படியாவது இன்று முடிவொன்றைக் கண்டு விடவேண்டும். மனதிற்குள் தீர்மானித்தவனாக உள்ளே செல்கின்றான். சென்றவன் 'டக்கிளா"வையும் மார்கரீட்டா"வையும் எடுத்து அளவாகக் கலந்து பிரிட்ஜிலிருந்து ஐஸ் கட்டிகளை எடுத்துப் போட்டபடி மீண்டும் பல்கனிக்கு வருகின்றான். ஊரிலிருந்த காலத்தில் இவனது பிரியமான மதுபானங்கள், உடனிறக்கிய பனங்கள்ளும், குரங்கும் (நம்மூர்ச் சாராயம்தான்), குரங்கென்று பெயர் வைத்த மகராசிக்கு வாயில் சக்கரையை அள்ளித்தான் போட வேண்டும். நமது மூதாதையர் யார் என்பதில் சந்தேகப்படுபவர்களின் சந்தேகத்தைத்தீர்த்து வைத்துவிடும் வல்லமைமிக்கது அந்தக் குரங்கு. இந்நாட்டுக்குடிவகைகளில் இவனிற்
40 DX அமெரிக்கா E

கெதுவுமே பிடிக்கவில்லை. எவ்வளவு குடித்தாலும் குரங்கின் அந்தக் கிக் இவனிற்கு இப்பொழுதெல்லாம் வருவதில்லை. ஒரு வேளை இவனிற்கு வயசாகிவிட்டதன் அறிகுறியாகயிருக்கலாம். ஆனால் இந்த டக்கிளா (மெக்ஸிகோவின் புகழ்பெற்ற மதுவகை) மட்டும் ஓரளவிற்கு இவனுக்கு பிடித்தமானது.
டக்கிளாவின் அறிமுகம் இவனிற்குக் கிடைத்தற்குக் காரணமே "கிட்டார் அடிக்கப் போனதுதான். 'கிட்டார் அடிப்பதற்கும் 'டக்கிளா' விற்கும் என்ன சம்பந்தமென்று மூக்கில் விரலை வைத்துவிடாதீர்கள். "கிட்டார் அடிப்பது என்பது ரெஸ்டாரண்டில் கோப்பை கழுவதற்குரிய பரிபாசை அவ்வளவுதான் கனடா வந்த புதிதில் இவன் செய்த முதல் வேலை கிட்டார் அடிதான். கிரேக்கனுடைய ரெஸ்டாரன்ட் வேலை செய்வதில் கவுண்டமணி அடிக்கடி கூறுவதுபோல் இவன் ஒரு மாடு மாதிரி. கிரேக்கர்களிற்குமாடு மாதிரி வேலை செய்பவர்களை நல்லாப் பிடிக்கும், மாடு மாதிரி வேலை வாங்கவும் நல்லாப் பிடிக்கும். அதேசமயம் நீங்கள் மட்டும்.நன்கு வேலை செய்து விடுகிறீர்களென்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்களை மாதிரி உங்களைக் கவனிக்க வேறு யாராலுமே முடியாது.
இவன் ஏற்கனவே கனடா வருவதற்கு முன்பு கிரேக்கக்கப்பலொன் றில் வேலை செய்திருந்தான். கிரேக்கர்களைப் பற்றிச்சிறிது அறிந்திருந் தான். க.பொ.த. (சாதாரணம்) பரீட்சை எடுத்த காலத்தில் பெளதிகத்தில் ஆர்க்கிமிடிசு போன்ற கிரேக்க விஞ்ஞானிகளைப் பற்றிச் சிறிது படித்திருந்தான். மனித சமுதாயநாகரீக வளர்ச்சியில் கிரேக்கர்களிற்கு முக்கியமான பங்கொன்று உண்டு. ஒரு காலத்தில் கொடிகட்டி வாழ்ந்த இனம் நம்மவரைப் போல கிரேக்கர்களிற்குப் பிடித்த இன்னுமொரு விடயம் பழம்பெருமை பேசுவது, அதுவும் நம்மவரைப் போல்தான். ஆர்சிமிடிசு பற்றியோபிளேட்டோபற்றியோ கூறிவிட்டால் உடனடியாக மகிழ்ந்து விடுவார்கள். கிரேக்கர்களைப் பற்றிய அறிவு சபாபதிக்குக் கிரேக்கர்களுடன் வேலை செய்யும் போதெல்லாம் கை கொடுக்கத் தவறுவதேயில்லை. இவனது ‘கிரேக்க” அறிவிலும், வேலைசெய்யும் பண்பிலும் அகமகிழ்ந்து போன ரெஸ்டாரண்ட் சொந்தக்காரனான
E வ. ந. கிரிதரன் C4D

Page 23
பீட்டர் வேலை முடிந்து வீடு செல்லும் சமயங்களில் இவனிற்குத் தன் கையாலேயே மது வகைகளிலொன்றை அதற்குரிய 'கொக்டெயிலுடன்' அளவாகக் கலந்து கொடுப்பான். வேலைக்களைப்பு நீங்க அதனைச் சுவைத்தபடி இவன் அரிஸ்டாட்டில் பற்றிக் கூறுவதை ஆர்வமாகக் கேட்பான், 'ஆங்கிலேயன்கள் தான் எல்லாப் பிரச்சனைகளிற்கும் காரணம், உங்களுடைய நாட்டை மட்டுமல்ல எங்களைக் கூடக் குட்டிச்சுவராக்கியவர்கள் இவர்கள் தான்' என்று அடிக்கடி பீட்டர் கூறுவதுண்டு. அந்த ரெஸ்டோரண்ட் அனுபவம்இன்று இவனிற்குக்கை கொடுக்கின்றது.
ஒரு மிடறை விழுங்குகின்றான். நெஞ்சிற்கு இதமாகவிருக்கின்றது. மீண்டும் பானுமதியின்நினைவுகள். பிரச்சினை இதுதான். இவனிற்கும் பானுமதிக்கும் திருமணம் முடிந்து ஒரு வருடம் தான். ஒரு வருடமாக ஏற்படாத பிரச்சினை ஒரு கிழமையாக ஏற்பட்டுவிட்டிருந்தது. அதற்குக் காரணம் போன கிழமை இவன் காதுகளில் விழுந்த ஒரு கதைதான். நண்பனொருவன் வீட்டில் நடந்த சிறு பார்ட்டியொன்றில் அடிபட்ட கதைதான் இவன் நெஞ்சில் பிரச்சினைத் தீயை வளர்த்து விடக் காரணமாகயிருந்தது. குடிபோதையில்நண்பர்கள் அண்மைக் காலமாக ஏஜண்டுகள் என்ற பெயரில் ஒரு சிலர் பண்ணும் திருவிளையாடல் களைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்தார்கள். தாய்லாந்திலும், சிங்கப்பூரிலும் சீரழிந்து கொண்டிருக்கும் அப்பாவிப் பெண்களைப் பற்றிக் கண்ணிர் விட்டுக் கொண்டிருந்தார்கள். நண்பர்களிலொருவன் ஏஜண்ட் வேலை செய்பவன். ஏஜண்ட் வேலை செய்பவன், 'ஏஜண்ட்' மாரைப் பற்றித் தரக் குறைவாகக் கதைக்கும் ஏனைய நண்பர்களைப் பார்த்துச்சீறினான். 'எல்லாஇடங்களிலும் கிரிமினல்கள் இருக்கத்தான் செய்யிறான்கள். அதற்காக எல்லா ஏஜண்ட்மாரைப் பற்றியும் கூடாமல் கூறுவது தவறு' என்பது அவனது வாதம். உண்மைதான். ஏஜண்டமா ரென்று ஒருத்தரும் இல்லையென்றால் இன்று கனடாவில் நம்மவரின் சனத்தொகை பெருகியிருக்கப் போவதில்லைதான். ஊசித்துளைகளிற் குள்ளும் தலையை நுழைத்துவிடும் ஒட்டகங்கள் அல்லவாநம்முடைய ஏஜண்டுகள். சபாபதி கூட ஏஜண்ட் ஒருவன் மூலமாக வந்தவன்
巨でE> அமெரிக்கா E

தான். எல்லா மட்டத்திலும் கிரிமினல்கள் இருப்பதைப் போல் தான் ஏஜண்ட்காரர் விசயத்திலும் இருக்கின்றது என்பதுதான் அவனது எண்ணம். இன்று நம்மவர் சீரழிந்து கொண்டிருப்பதற்குக் காரணமே நாட்டுநிலைமைதான்,நாட்டுநிலைமைதானே எல்லோரையும் ஒடஒட விரட்டி வைக்கிறது. அதனால்தானே பிரச்சினைகளும்.நாட்டுநிலைமை மட்டும் சீராகட்டும் தற்போதுநடைபெறும் சீரழிவுகள் அரைவாசியாகக் குறைந்துவிடும் என்று நண்பனொருவன் கூறிக் கொண்டிருந்தான். அது வரையில் சபாபதிக்குப் பிரச்சினையே ஏற்படவில்லை. அதன் பிறகு ஏஜண்ட் ஒருவனைப் பற்றி அவர்கள் கதைக்கத் தொடங்கியதும்தான் பிரச்சினை ஆரம்பமாகியது.
ரொராண்டோவில் மனைவி பிள்ளைகளென்று வாழும் ஏஜண்ட் ஒருவனைப் பற்றிய கதை அது. அந்த ஏஜண்ட் தான் இவன் மனைவி பானுமதியையும் கூட்டி வந்தவன். சந்தேகத் தீ விசுவரூபமெடுத்து விட்டது. இந்த ஏஜண்டுடன் ஒரு மாதமளவில் பானுமதி சிங்கப்பூரில் நின்றிருக்கின்றாள். நினைப்பதற்கே சங்கடமாகியிருந்தது.இவனையே பைத்தியமாக்கும் அழகு பானுமதியினுடைய அழகு. மதமதர்த்த உடல்வாகு. எவ்வளவுதான் நெகிழ நெகிழ ஆடைகள் அணிந்தாலும் அவளால் திமிறித் துடிக்கும் அழகுகளை ஒளித்து வைக்கவே முடிந்ததில்லை. இவனது சந்தேகம் சுவாலைவிட்டுப் படர்வதற்குக் காரணமே அவளது அந்தப் பேரழகுதான். மீண்டும் ஒரு மிடறை விழுங்கினான். உள்ளே சென்ற மதுஇலேசாக வேலை செய்யத் தொடங்கியது.
கேட்டு விடுவோமா? மனதை அரித்துக் கொண்டிருக்கின்ற சந்தேகத்தைக் கேட்டு விடுவோமா? எப்படி கேட்பது காறித் துப்பி விடமாட்டாளா? கேட்காவிட்டால்இவனிற்குமண்டை வெடித்து விடும் போலிருந்தது. என்ன செய்வது? அவளும் தான் மாடு மாதிரி தொழிற்சாலையொன்றில் வேலை செய்கின்றாள். களைத்து வரும் அவளிடம் எப்படிக் கேட்பது? எவ்வளவிற்கு அடக்க முயன்றானோ அவ்வளவிற்கு மனஉளைச்சல் அதிகரித்துக் கொண்டேயிருந்தது.
கிறிஸ்டினா அடிக்கடி கூறுவாள். "யாரைத்திருமணம் செய்தாலும் இந்தியன் ஒருவனை செய்யவே மாட்டேன்."
E வ. ந. கிரிதரன் G43d

Page 24
'ஏன் கிறிஸ்டினாஇந்திய ஆண்களை மாதிரிப் பொறுமை சாலிகள் ஒருத்தருமேயில்லை அது உனக்குத் தெரியுமா?"
"சும்மா பொய் அளக்காதே, சபாபதி உங்களுடைய ராமாயணம் பார்த்திருக்கின்றேன். உங்களுடைய கடவுள் ராமனே மனைவியை நம் பாமல் சந்தேகப்பட்டுத் தீக்குளிக்க வைக்கவில்லையா? 'கிறிஸ்டினா இவனுடன் கிரேக்க ரெஸ் டோரண்டில் வெயிட்ரஸ்ஸாக வேலை பார்த்தவள். சிலர்நிறத்திமிர் பிடித்தவர்கள். அதிகம் கதைக்க மாட்டார் கள். இவள் அவர்களில் சிறிது வித்தியாசமானவள், அவளைப் பொறுத்த வரையில் சிறிலங்காவோ, பாகிஸ்தானோ, பங்களாதேசோ, இந்தி யாவோ. இப்பகுதிகளிலிருந்து வருபவர்கள் எல்லோருமே இந்தியர் கள்தான். இந்த விசயத்தில்இவள்நிறவெறிபிடித்தவர்களிலிருந்து சிறிது வேறுபட்டவள். நிறவெறிபிடித்தவர்களிற்குஇப்பகுதிமக்கள் யாவருமே 'பாக்கி'கள். அவ்வளவுதான் வித்தியாசம்.
'சபாபதி! உங்களுடைய ராமனைப் பார், கடவுளென்று வைத்துக் கொண்டாடுகிறீர்கள். சொந்த மனைவியையே அவனால் நம்ப முடியாமலிருக்கின்றது. அவன் என்ன காரணம் சொன்னாலும் சீதையைத்தீக்குளிக்க வைத்தது.தவறு."
'ராமன் உண்மையில் மனைவியைச் சந்தேகிக்கவில்லை அவனிற்குத் தெரியும் அவள் உத்தமி என்பது. உலகிற்கு அவளது நேர்மையை வெளிப்படுத்தத்தான் அவன் அப்படிச் செய்தான்'
'அப்படிச் செய்வதைத் தான் பிழை என்கின்றேன். கடவுளின் அவதாரமான ராமனே இப்படிச் செய்வது மக்களையும் மனைவியைச் சந்தேகிப்பது சரியான செயலெனநம்பச் செய்து விடுகின்றது.'
'அதிலென்ன தவறு. ' 'அதுதான் தவறென்கின்றேன். திருமணமென்பது சாதாரண விடயமொன்றல்ல. வாழ்க்கை முழுவதும் ஒருவரையொருவர் நம்பி வாழும் ஒரு வகையான உறவு. இதற்குப் பரஸ்பர நம்பிக்கை மிகவும் அவசியம். ஒருவர் உரிமையை மற்றவர் மதிக்க வேண்டும். சீதை விரும்பியாஇராவணனிடம் போனாள்? ஊர்கந்தேகப்படுவதாக வைத்து
EC44d அமெரிக்கா 菲

ராமன் சீதையை எவ்வித சந்தேகமுமின்றி ஏற்பதாக இருந்திருந்தால் ராமாயணத்தை எனக்குப் பிடித்திருக்கும். எங்களைப் பார்திருமணம் செய்யும் மட்டும் நாங்கள் மனம் போனபடி வாழ்கின்றோம்.முடித்த பிறகோ கடந்தகாலத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆனால் இந்தியர்களானநீங்களோ. நீங்கள் எத்தனை பேருடனும் செல்வீர்கள் உங்களிற்கு உங்கள் மனைவி மட்டும் பத்தினியாகயிருக்க வேண்டும்.
கிறிஸ்டினாவின் குரல் காதில் ஒலிக்கின்றது. அருகிலிருந்து அவளிற்கேயுரிய சிரிப்புகதைப்பது போலிருக்கின்றது. இன்னுமொரு மிடறை விழுங்குகின்றான் சபாபதி மனது இன்னமும் இலேசாகி உடைகின்றது. 'பானுவிடம் கேட்பதற்கு என்ன தகுதி எனக்கிருக் கின்றது? கேட்பதற்குரிய தார்மீகமான காரணம் தான் ஏதாவதிருக் கின்றதா? மனைவிஎன்ற ரீதியில் அவள் எனக்கென்னகுறை வைத்தாள்? அவளிடம் என் சந்தேகத்தைக் கேட்பது புருஷன் என்ற என் ஸ்தானத் திற்கு மாசு கற்பித்து விடாதா? ஒரு மனைவியைச் சந்தேகப்படுவதே தவறான செயலென்றால். சந்தேகப்படுவதற்குரிய தகுதியாவது எனக் கிருக்கின்றதா?
சபாபதிக்கு வெறி ஏற ஏற பழைய நினைவுகள் சில படம் விரிக் கின்றன. நெஞ்சுப் புற்றுக்குள்ளிருந்து வெளி வந்தாடும் நினைவுப் பாம்புகள். அப்பொழுது அவன் இளமையின் ஆரம்ப படிக்கட்டில் காலடி வைத்திருந்தான். கப்பலில் வேலை செய்யத் தொடங்கியிருந்த சமயம் தாய்லாந்து அழகிகளிற்கும் தென்னமெரிக்க அழகிகளிற்கு மிடையில் உள்ள வித்தியாசங்களைக் கணக்கிட்டுக் கொண்டிருந்த காலம். அவன் எப்பொழுதாவது பானுமதியிடம் தனது கடந்த காலத் தைப் பற்றிக் கதைத்திருக்கின்றானா? ஒரு சமயம்நாளைக்கு கப்பலில் வேலை செய்பவர்கள் சிலரின் இதுபோன்ற லீலா விநோதங்களைக் கேட்டுவிட்டு சந்தேகப்பட்டு இவனிடம் வந்து பானுமதி விளக்கம் கேட்டால் எப்படியிருக்கும்?
"எங்களைப்பார்திருமணம் முடிந்தபிறகுநாங்கள் கடந்த காலத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை ஆனால் இந்தியர்களானநீங்களோ.' கிறிஸ்டினா அன்று நீ சொன்னதன் பொருளை என்னால் உணர
E வ. ந. கிரிதரன்

Page 25
முடியாதிருந்தது ஆனால்இன்று. சபாபதி மிஞ்சியிருந்த கடைசிப்பகுதி யையும் விழுங்குகின்றான். விண்விண்னென்று வலித்துக் கொண்டிருந்த தலையிடிக்கு என்ன நேர்ந்தது? பானுமதி வரும் நேரமாகிவிட்டது. வேலை முடிந்துகளைப்புடன்வரும் மனைவிக்குச்சூடாக ஒரு கப்காப்பி போட்டுக் கொடுக்கக் கூடாதா? சபாபதிகளைத்து வரும் மனைவியை வரவேற்பதற்குத் தயாராகின்றான். கிறிஸ்டினா மட்டும் இதனைக் கண்டிருந்தால் நிச்சயமாக இந்தியக் கணவர்களைப் பற்றிய தனது கருத்தை மறுபரிசீலனை செய்திருப்பாள்.
- தாயகம் 4.12.94
Egod அமெரிக்கா =

ஒரு முடிவும் விடிவும்
மெல்லமெல்ல இருண்டு கொண்டிருக்கிறது. அந்தியின் அடிவானச் சிவப்பில் சிலிர்த்துப் போன கதிரவன் பொங்கி எழுந்த காதலுடன் அடிவானைத்தழுவிதன்னை மறந்து கொண்டிருந்தான். பரந்து விரிந்து அமைதியில் இருந்தது குளக்கரை, பறவைகள் கூட்டம் கூட்டமாய் தத்தமது உறைவிடங்கள் நாடிப்பறந்த வண்ணம் இருந்தன. இந்த நேரத்திலும் சில மீன் தொத்திகள் பேராசையுடன் இரைக்காக அருகில் உள்ள மரக்கொப்பொன்றில் காத்துக்கிடக்கின்றன. அமைதியில்இதமாக தென்றல் வீசியபடி இருந்தது.
குளக்கரையில் மேட்டில் பரந்திருந்த புற்றக்கரையில் அலைந்து கொண்டிருந்த குழந்தையின் மேல் கையும் விரிந்திருந்தநீர்ப்பரப்பில் பார்வையுமாக யமுனா கூர்ந்த பார்வை. அகன்ற நெற்றி. அடர்ந்திருந்த கூந்தலைமுடிந்துவிட்டிருந்தாள். சாதாரணநாற்சேலையில் செக்கச்சிவந்த உடல்வாகு. எந்நேரமும் கனவு காணும் அந்த அழகான கண்களில். அந்த சோகம்.
இவளிற்குஇந்தநிலை வந்திருக்க வேண்டாம். எனக்குள் ஒருமுறை கூறிக் கொண்டேன். பாழாய்ப் போன சமூகத்தின் மேல் கோபம் கோப
r
E வ. ந. கிரிதரன் 三○47

Page 26

மாய் சலிப்பும் வெறுப்புமாய் வந்தது அவளது இந்தநிலைக்கும் இந்த சிந்தனையோட்டங்களும் நடைமுறைகளும் அல்லவா காரணம்.
நீண்ட நாட்களின் பின்னால் கொழும்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவன் அந்நியப் படைகளின் வெளியேற்றத்துக்கு பின் கிராமம் வந்திருந்த என்னை முனாவின் இந்த கோலம் பெரிதும் சித்திரவதை செய்தது. சிறுவயது முதலே ஒன்றாக ஓடி விளையாடி இந்த மண்ணில் என்னுடன் வளர்ந்தவள். என்னை விட இரு வயதுகள் மூத்த வள். அவளது அறிவும் அந்த அழகும். இரண்டு வருடங்களுக்கு முன் தான் அவளுக்கு கலியாணம் ஆகியிருந்தது. அவளது கலியாணத்துக்கு கூட நான் போகவில்லை. மோதலும் இரத்தக் களரியுமாக நாடிருந்த சூழ்நிலையில் நடந்த அந்த கல்யாணதினத்தன்று சந்தேகத்தின் பேரில் கொழும்பில் கைது செய்யப்பட்ட இளைஞர்களில் ஒருவனாக நான் இருந்தநிலையில். இந்தஇருவருடங்களில் எத்தனையோ மாறுதல்கள். வாழ்வே ஒரு மோதல்தான் தப்பிப்பிழைத்தல்தான்.இந்த மோதல்களிற் குள் இன்னுமொரு மோதலாக தப்பிப்பிழைத்தலாக, நடந்து முடிந்து போன சம்பவங்கள். இன்று மழை விட்டும் தூவானம் விடாதநிலை. மோதலும் அழிவுமாகப் போய்விட்டிருந்த கடந்த காலத்தின் ஒரு அவமானகரமான கணத்தில் படையினன் ஒருவனின் மிருக உணர்வு களுக்கு பலியாகிப் போன யமுனாவின் கதை.இது யார்தவறு? அவ ளென்ன விரும்பியா இந்த தவறைச் செய்தாள்? நாதியற்ற குழலில் வேலியே பயிரை மேய்ந்த கதையில் கருகிப் போனது யார் குற்றம்?
காந்தி பாரதியிலிருந்து எத்தனை எத்தனையோ பேர் பெண் விடு தலை சமூதாயச் சீர்திருத்தம் அது இதென்று மேடைக்கு மேடை கத்திக் கத்தி கூப்பாடு போட்டதுதான் மிச்சமாகப் போனதா?
'உயிரைக் காக்கும், உயிரினைச் சேர்ந்திரும் உயிரினுக்குயிராய் இன்பமாகிடும் உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா! ஊது கொம்புகள், ஆடுகளி கொண்டே' பாரதியின் பாடல் ஞாபகத்தில் எழுகிறது கூடவே ஏளனம் கலந்த ஒரு விதஇளநகையும் பரவிட.
E வ. ந. கிரிதரன் 目○君

Page 27
தியாகராசன்.அவன் தான் யமுனாவின் புருசன். அம்மி மிதித்து அருந்ததிகாட்டி 'உயிருள்ள வரை என் கண்ணின் மணி போல் காப் பேன்'உறுதிகூறிகைப்பிடித்த பெண்மையை சோதனை நேர்ந்த இக்கட் டான சந்தர்ப்பத்தில் ஆறுதலும் அரவணைப்பும் தந்து அன்பு செய்து காக்க வேண்டிய நேரத்தில் ஆண்மைத்தனத்தையே இழந்து 'மானம் கெட்டவள், கற்பிழந்தவள்' எனத் தூற்றிச் சென்று விட்ட பாவி ஒரு குழந்தைக்குதாயான யமுனாவின்நிலை என் நெஞ்சில் வேதனையைப் பெருக்கிற்று. ஏற்கனவே ஒரு மிருகத்தால் கொத்திக்குதறப்பட்டிருந்த யமுனாவின் வேதனைதீருமுன்னரே இன்னுமோர் பேரிடி. கற்பு. கற்பு என்பது மனத்துடன் கூடுதலாக சம்பந்தப்பட்டிருக்க வேண்டுமே அன்றி பெண்களை வெறுமனே அடக்கி ஒடுக்கும் கருதுகோளாக இருக்கவே
கூடாது.
தியாகராஜன் ஏன் அவ்விதம் நடந்து கொண்டான். 'ராஜேந்திரா நான் பாரதியல்லடா முற்போக்கு பேச. என் மனைவி இன்னொருத் தனால் கெடுக்கப்பட்டாள் என்ற நினைப்புடன் அவளுடன் வாழ்வ தென்பது என்னால் நினைக்கவே அருவருப்பாய் இருக்கிறதடா'
'தியாகு. யமுனா என்ன வேண்டும் என்றா தவறிப் போனாள். ஆறுதலும் அரவணைப்பும் தரவேண்டியநீஇவ்விதம் பேசலாம்? ஒரு கணம் குழந்தையைநினைத்துப் பாரேன்."
'ராஜேந்திரா, குழந்தையை நான் பொறுப்பெடுக்கத் தயார் ஆனால் அதற்கு யமுனாசம்மதிக்கமாட்டாள் என்று கேள்விப்பட்டேன். நீயே நினைத்துப் பார். றோட்டாலை யமுனாவோட போகேக்கை பின்னால் வாற குத்தல்களை ஏற்றுக் கொண்டு வாழ ஆண்மைக்கே இழுக்காகப்படவில்லையா...'
ஆண்மைக்கே இழுக்கா. ஆண்மைக்கு இழுக்கு அது இல்லை யடா. உனது செயல்தான் ஆண்மைக்கே இழுக்கடா. உண்மையாகப் பார்க்கப் போனால் ஒருவிதத்தில் தியாகராசனின் இந்த நடத்தைக்கு காரணம் இந்த சமூகமும் அல்லவா. இந்த சமுதாயம். இங்கு நிலவும் கோட்பாடுகள். இதனால் தானே தியாகராசன் அவ்விதம் நடந்து கொள்கிறான். அவனால் அவன்வாழும் சூழலையும் மீற முடியவில்லை.
50 அமெரிக்கா E

அந்தச் சூழல் அவன் மேல் ஏற்படுத்திய பாதிப்பையும் மீற முடிய வில்லை. கதிரவன்தொலைவில் அரைவாசிதன்னைத்தொலைத்துவிட்டி ருந்தான். முன்னை விட இருள் கூடி இருந்தது. இரை பார்த்துக் கொண் டிருந்த அந்த ஒரு சில மீன் கொத்திகள் கூட போய் நெடுநேரமாகிவிட்டி ருந்தன. இதமான தென்றல் மட்டும் இதமாக வீசியபடி. யமுனா அரு கில்இருந்த சிறு சிறுகற்களை குளத்தில் எறிந்து அதனாலேற்படும் வட்ட வட்டமாகப் பரவும்நீரலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். குழம்பி யிருந்த எனது நெஞ்சிலும் ஒரு வித தெளிவு. நானும் ஒரு முடிவு செய்து கொண்டேன். தெளிவான ஆனால் உறுதியான முடிவு. என் முடிவை அவளிடம் கூறினேன். ஒருகணம் அவள்திகைத்துப் போனாள் சிறிது நேரம் அத்திகைப்பின் விளைவாக எழுந்த மெளனத்தில் மூழ்கிக் கிடந்தாள்.
'ராஜேந்திரா"அவள் கண்கள் கலங்கின. அவளால் மேலே பேசவே முடியவில்லை. அவளால் என்ன பேசமுடியும்? அவள் வாழ்ந்த சமூக அமைப்பு அப்படி. அவளோ மணமானவள். ஒரு குழந்தை வேறு உள்ளவள். இந்த இளம் வயதிலேயே வெறிமிருகம் ஒன்றால் கடித்துக் குதறப்பட்டு கணவனாலும் கைவிடப்பட்ட நிலையில் இருப்பவள். ஆனால் அவளும் ஒரு பெண் தான். அவள் நெஞ்சிலும் உணர்வுகள் பொங்கத்தான் செய்யும் என்பதை இச்சமுதாயம் என்ன நினைத்துப் பார்த்தாதீர்ப்புச்சொல்லப் போகிறது?
எனக்கு இவளுக்கும் இடையில் இப்படி ஒரு தொடர்பு இருப்பதை அறிந்தால் ஊரவர்கள் என் அம்மா, உறவினர்கள் காறித்துப்ப மாட்டார்களா? காமவெறி பிடித்தவள் அப்பாவிப் பெடியனை வளைத்துப் போட்டாள்-இவ்விதம் வாய்க்கு வந்தபடி அவளைக்கிழிக்க மாட்டீர்களா? ஒரு ஆண்எத்தனைதிருமணங்கள் செய்து கொண்டாலும் யாரும் கவலைப்படப் போவதில்லை. ஒரு அறுபது வயதுக் கிழவன் பதினாறு வயதுச்சிறுமியை கலியாணம் செய்யலாம். ஒன்றல்லஇரண்டு மூன்று கள்ளத் திருமணங்கள் கூடச் செய்து கொள்ளலாம். யாருமே கவலைப்படப் போவதில்லை. ஆனால் ஒரு பெண். அதிலும் யமுனா வைப் போல் அனாதரவானநிலையில் உள்ள பெண் ஒரே ஒருமுறையே
E வ. ந. கிரிதரன் EO5DE

Page 28
வாழும் இந்த வாழ்வில் பெரும்பகுதியைதுணையின்றி பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக உள்ளத்து உணர்வுகளை கொன்றடிக்கி துறவியாக வாழ வேண்டும். இதுதான் சமூகநியதி. சமூதாயம் வேண்டு வது அதைத்தான். இவற்றை நான் உணர்ந்திருந்தேன் அதனால்தான் என் முடிவில் உறுதியாயிருந்தேன். ஆனால் யமுனாவோ அருகில் புற் றரையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை நோக்கினாள். பரிதா பமாக என்னை நோக்கினாள்.
மீண்டும்நானே தொடர்ந்தேன். 'யமுனா திருமணம் என்பது ஒரு வரை ஒருவர்புரிந்து விளங்கி ஒன்று சேர்வதுதான். ஆனால்தியாகராஜ னின் நடத்தை அவன் உங்களுக்கு ஏற்றவன் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. என்னைப் பொறுத்தவரை உங்களது இந்த இக்கட்டான நேரத்தில் உங்களிற்கு தேவை ஒரு துணை பாதுகாப்பு தரக்கூடிய ஆதரவும் அன்பும் கலந்த துணை. அது சிறுவயது முதலே உங்களுடன் பழகி வளர்ந்தநானாக ஏன் இருக்கக் கூடாது?"
'ராஜேந்திரா, நீஇலேசாகக் கூறிவிட்டாய். ஆனால் இது எத்தனை பேரின் எதிர்ப்பை உருவாக்கும் தெரியுமா. உங்கம்மா. ஊரவர்கள். எல்லோரும் என்னைத் தானே திட்டுவார்கள். அவர் என்னைக் கைவிட்டது சரிதான் என்றல்லவா கூறுவார்கள். எனக்காக நீயேன் உன் வாழ்வை வீணாக்குகிறாய். என் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படும் பொறுப்பை என்னிடமே விட்டுவிடு'
இவ்விதம் கூறிய யமுனா சிறிது நேரம் மெளனமாக இருந்தாள். எல்லாவற்றையும் தாங்கித்தாங்கி அடங்கிவிட்ட பெண்மையல்லவா பேசுகிறது. ஆனால் நானோ. என் முடிவில் உறுதியாய் இருந்தேன்.
'யமுனா அம்மாவைக்காலப்போக்கில் சமாதானப்படுத்த என்னால் முடியும். நீங்கள் மட்டும் சரியென்று சொல்லுங்கள். அது போதும் எனக்கு உங்களை இந்நிலைக்குதள்ளிவிட்ட சமூக கோட்பாடுகளைப் பற்றிநான் கவலைப்பட வேண்டாம். நாமிருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் அதுவே போதும்.'
இவ்விதம் கூறியவன் அவள் கண்களையே உற்று நோக்கினேன். அவளோ மெளனமாக எனது கண்களை உற்றுநோக்கினாள். அந்த
EC52d அமெரிக்கா =
C

மெளனத்தில் பொருளை நான் உணர்ந்து கொண்டேன் அதில் பொங்கிய தூய உணர்வுகளை அன்பினை காதலை, நம்பிக்கையைநன்றியைநான் உணரமுடிந்தது.
'யமுனா'அவளை வாரியணைத்துக் கொள்கிறேன். என்பிடிக்குள் தன்னை அடைக்கலமாக தன்னையே தந்த யமுனா அந்த அணைப்பில் தன்னையே மறந்தாள். அடிவானோ, கதிரவனின் முழுமையான இழப்பில் தழுவலில் சிலிர்த்துநாணிக்கிடந்தது
目 வ. ந. கிரிதரன் 巨でエ目

Page 29
அமெரிக்கா
உலகப் புகழ்பெற்ற நியூயார்க் மாநகரின் ஒரு பகுதி புருக்லீனின் ஒரு ஒரத்தே, கைவிடப்படும் நிலையிலிருந்தே, பழைய படையினரால் பாவிக்கப்பட்ட கட்டடத்தின் ஐந்தாம் மாடி, அந்தக் கட்டடத்திற்கு, எத்தனை மாடிகள் உள்ளது என்பதே தெரியாது. எனக்கு தெரிந்த தெல்லாம் நான் இருந்த கட்டத்தின் ஐந்தாவது மாடி என்பது மட்டும் தான். என்னைப் பொறுத்தவரையில்இந்த ஐந்தாவது மாடி, அமெரிக்கா வைப் பொறுத்தவரையில்இன்னுமொறு உலகம். "ஒய்யாரக் கொண்டை யாம் தாழம்பூவாம். உள்ளேயிருப்பது ஈரும் பேனும். 'எனது அமெரிக்கப் பிரவேசமும் இப்படித்தான் அமைந்து விட்டது. உலகின் செல்வச் செழிப்புள்ள மாபெரும் ஜனநாயகநாடு பராக்கிரமம் மிக்க வல்லரசு இந்த நாட்டில் காலடி எடுத்துவைக்கும் மட்டும் எனக்கு அமெரிக்கா ஒரு சொர்க்க பூமிதான். மனித உரிமைகளுக்கு மதிப்புத்
தருகின்ற மகத்தான பூமிதான். ஆனால் என் முதல் அனுபவமே என் எண்ணத்தைச் சுட்டுப் பொசுக்கிவிட்டது. ஒரு வேளை உன் அமெரிக்க அனுபவம் பிழையாகயிருக்குமோ என்று சிலவேளை நான் நினைப்ப
ES4 அமெரிக்கா =
SCSCSLSLSLSLSLSLSLSLSLSLSLSLS

துண்டு. மிகுந்த வெற்றியுடன் வாழும் என்னினத்தைச் சேர்ந்த ஏனைய அமெரிக்கர்களை எண்ணிப்பார்ப்பதுண்டு. உண்மைதான். பணம் பண்ணச்சந்தர்ப்பங்கள், வெற்றியடைய பல வழிமுறைகள் உள்ள சமூகம் தான் அமெரிக்க சமூகம். ஆனால் அந்தச்சமுதாயத்தில்தான் எனக்கேற் பட்ட அனுபவங்களும் நிகழ்ந்தன என்பதையும் எண்ணித்தான் பார்க்கவேண்டியிருக்கிறது. சுதந்திர தேவி சிலை நீதி, விடுதலை, சமஉரிமையை வற்புறுத்துகிறது. அமெரிக்கா அரசியலமைப்பும் மனிதனின் அடிப்படை உரிமைகளை வற்புறுத்துகின்றது. இக்கரை மாட் டுக்கு அக்கரை பச்சை வெளியிலிருக்கும்மட்டும் அப்படித்தானிருந்தது. எல்லாம் உள்ளே வரும் மட்டும்தான்.
இதை எழுதுகின்ற இந்தச்சமயத்தில்நானொரு இளம் எழுத்தாளன். எழுத்துலகில் பலவற்றை சோதிக்க வேண்டுமென்ற பேரார்வத்துடன் முயன்று கொண்டிருக்கின்றஇளம் எழுத்தாளன். அதே சமயம்நானொரு தமிழ் கனடியன். இன்றை சூழ்நிலையில் எனது அமெரிக்க அனுபவங் களை மீளாய்வு செய்யும் போதுதான் பல உண்மைகள் வெளிப்படு கின்றன. புருக்லின்நகரில் (தடுப்பு முகாமில்) எனது மூன்று மாத கால அனுபவமும் அமெரிக்காநியூயார்க்நகரில் எனது ஒரு வருட அனுபவ மும் எனக்கு எத்தனையோ விடயங்களை தெளிவுபடுத்தின. வாழ்வு பற்றிய பல்வேறு உண்மைகளை புரிய வைத்தன. அனுபவங்கள் கசப் பானவையாக இருந்த போதும் அவ்வனுபவங்கள் தந்த படிப்பினைகள் மகத்தானவை. விலைமதிக்கமுடியாதன. எனது இந்த அனுபவங்களை, இன்று அமெரிக்காவில் பல்வேறு தடுப்பு முகாமிகளில் கைதிகளாக, ஏக்கங்களுடன் எதிர்பார்ப்புகளுடன் காத்துக்கிடக்கும் பல்வேறுநாட்டு மக்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.
ஆ. எனது பெயரைக்கூட மறந்து விட்டேன். இளங்கோ என் பெயர்தான் அது. என் அப்பா ஒரு சிலப்பதிகாரப்பித்தர். அந்தப்பித்தில் எனக்கு வைத்தப் பெயர்தான் இளங்கோ. இளங்கோவென்று பெயர் வைத்த ராசிபோலும். பொதுவாகவே எழுத்தில் ஈடுபாடு ஏற்பட்டதோ?
目 வ. ந. கிரிதரன் C55

Page 30
விரைவதே தெரியாமல், விமானம் விரைந்து கொண்டிருக்கின்றது இன்னும் நான்கு மணித்தியாலங்களில் பொஸ்டனை அடைந்துவிடும். மிகமிக விரைவாகவே சம்பவங்கள் நடந்து முடிந்துவிட்டன. தின்ன வேலியில் பதின்மூன்று இராணுவத்தைச் சுட்ட செய்தியுடன் பெரிதாக வெடித்த கலவரம்நாடு முழுவதும் பரவியது.நான் பொறியியலாளனாக வேலை செய்து கொண்டிருந்த அரசாங்கத் திணைக்களத்திற்கு சொந்தமான கார்கள் ஐம்பது வரை பார்க்கிங் லொட்டில் இருந்தன. யாருமே உதவி செய்ய வரவில்லை. கடைசியில் எங்கள்திணைக்களத் தில் கடமையாற்றிய யு.என். ஒ. வைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவரு டன் ஒரு மாதிரித் தப்பி வெளியேறி, வெள்ளவத்தை ராமகிருஷ்ண ஹோலைப் போய்ச்சேர்ந்தால் குண்டர்களின் அட்டகாசம் அங்கும் வெடித்தது. அச்சமயம் ஹோலில் ஏறத்தாழ ஐம்பது பேர் வரையில் இருந்தோம். எல்லோரும் ஹோலின் மொட்டை மாடிக்கு ஓடினோம் பெண்கள், ஆண்களில் சிலர் தண்ணீர் டாங்கிற்கு இடையிலிருந்த பகுதியில் ஒளிந்து மறைந்து கொள்ள எஞ்சிய நாங்கள் மொட்டை மாடியில் நீட்டிக்கொண்டிருந்த தூண்களிற்குப் பின்னால் மறைந்து கொண்டோம். நாங்கள் பதுங்கி ஒளிவதை எதிரே பிரைட்டன் ஹோட்ட லிருந்தே வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் படம் எடுப்பது தெரிந்தது.
வெள்ளவத்தை பகுதியிலிருந்து வீடுகளிலிருந்து அடித்து விரட்டப்பட்டதமிழர்கள், குடும்பம் குடும்பமாக தெகிவளைப் பக்கமாக ரெயில்வே தண்டவாளம் வழியாக ஒடுவது தெரிந்தது. வெள்ளவத்தைப் பகுதியிலிருந்து புகைமண்டலம் நானா பக்கமும் பரவிக் கொண்டிருந் தது.தண்டவாளம் வழியாக வயதானதமிழ்ப்பெண்கள்முழங்கால்வரை சேலையை இழுத்துப் பிடித்தப்படி ஒடிக்கொண்டிருந்தார்கள்.பார்க்கப் பாவமாகயிருந்தது.
ராமகிருஷ்ண ஹாலிற்குமுன்புற்றரையில் நின்றிருந்த யாழ்ப்பாண பஸ்ஸொன்றைக்குண்டர்கள் கொளுத்திவிட்டார்கள். கிறவுண்புளோர்
கண்ணாடிகளை உடைத்தார்கள். ஹோலைக் கொழுத்த முற்பட்டபோது
56 அமெரிக்கா =

அதுவரை வேடிக்கை. பார்த்துக் கொண்டிருந்த பொலிசார் உள்ளே நுழைந்தார்கள்.
பின்னேரம் வரை ராமகிருஷ்ணன் ஹோலில் தங்கியிருந்தோம். அங் கிருந்ததைக் கொண்டு ஆக்கிச்சாப்பிட்டோம். அன்றிரவே லொறிகளில் சரஸ்வதி ஹோலிற்குப் போய்ச்சேர்ந்தோம். லொறிகளில் ஏற்றியபோது பெண்கள் அழுதார்கள். யாரிற்குமே எங்கு போகிறோமென்பது தெரிந் திருக்கவில்லை. சரஸ்வதி ஹோலில் அகதிகளாக சிதம்பரம் கப்பலில் யாழ்ப்பாணம் போகும்வரை ஏறத்தாழ இரண்டு கிழமைகள் தங்கி யிருந்தோம்
யாழ்ப்பாணம் சிதம்பரத்தில் சென்று கொண்டிருந்தபோதுகூடநான் வெளிநாட்டிற்குப் புறப்படுவேனென்று எண்ணியிருக்கவில்லை. அழிவும், கொள்ளையும் இரத்தக் களரியுமாகநாடிருந்த சூழலில் நான் வெளியில் போவதேநல்லதாகப் பெற்றோரிற்குப்பட்டது. கனடாவிற்கு அகதிகளாகப் போகலாமென்ற விஷயம் காதில் பட்டது. இந்தச் சமயத்தில் சின்னம்மாவின்பணம்நான் வெளிநாடு போவதற்கு மிகவும் உதவியது. UTA சிந்தித்துச்சீர்தூக்கிக் காரியங்களைப் பார்ப்பதற்குள் ஏஜென்சிக்காரனின் உதவியுடன், கனடாவிற்கு புறப்பட்டுவிட்டேன் கட்டுநாயக்காவிலிருந்து பரீஸ் வரை UTA பிளைட் பரீஸிலிருந்து பொஸ்டன் வரை 1.W.A. பொஸ்டனிலிருந்து மொன்றியாலிற்கு டெல்டா ஏயார்லைன்ஸ் பயணத்தின்முதற்தடையைத்தாண்டிவிட்டது. பாரீஸில் விசா இல்லாமல் விடமாட்டேன் என்றார்கள் கனடாவிற்கு செல்ல. பொதுநலவாய நாட்டைச் சேர்ந்தவனிற்கு விசா தேவையில்லை என்ற விடயத்தை எடுத்துக்கூற ஒரு வழியாகச் சம்மதித்துவிட்டார்கள். இனி அடுத்த தடை பொஸ்டனில்- அங்கும் பிரச்சனை முடிந்துவிட்டால் கனடாதான். மொன்ரியாவிற்குப் போய்விட்டால் பிரச்சனையில்லை. கனடா அகதிகளை அனுப்பாது என்ற நம்பிக்கை இருந்தது.
'என்ன இளங்கோ ஒரே யோசனை'அருள்ராசா கேட்டான்.இவன்
ஒரு அக்கவுண்டன். இவனும் என்னை மாதிரித்தான் கனடாவிற்கு அகதி
Ea. ந. கிரிதரன் EC572

Page 31
யாகப் போய்க் கொண்டிருந்தான். அண்மையில் தான் திருமணம் செய்திருந்தான். அண்மைய கலவரங்களில் பாதிக்கப்பட்டிருந்தான், கலவரங்களின் பாதிப்பு அவனை நாட்டை விட்டே துரத்தியிருந்தது அவனுடன் பணியாற்றிய ஒரு தமிழ் பெண்ணை குண்டர்கள் மான பங்கப்படுத்தியதை நேரிலேயே பார்த்தவன். அந்தப் பாதிப்பிலிருந்து இன்னும் விடுபடாத அருள் 'போகிற இடத்திலை வரவேற்பு எப்படி யிருக்குமென்று யோசித்துப் பார்த்தேன்' என்றான்.
'பிரச்சனை அவ்வளவு இருக்காதென்றுதான் படுது. ஆனாஇந்த பிளைட்டிலை மட்டும் ஐந்து பேராவது எங்கட ஆட்கள் இருக்கினம் போலை படுதே'
'அதுவும் ஒரு பிரச்சனைதான் ஆனா எல்லாம் நல்லபடியா முடியு மென்றுதான் படுகிறது' இவ்விதமாக கதைத்துக் கொண்டிருந்த பொழுதே லோகன்கிண்டர் நாஷனல் ஏர்போர்ட்டில் மெல்ல வந்து இறங்கியது. மொத்தம் ஐந்து பேர் எங்கட சனம் எல்லாருடைய நிலைமையும் ஒரே மாதிரி. ஐந்து பேர் ஒரே பிளைட்டில் வந்திருந்தது விமானநிலைய அதிகாரிகளிற்குச் சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டது. எல்லோருடைய கடவுச்சீட்டுக்களிலும் ட்ரான்சிட் விசாகுத்தியவர்கள் கடவுச்சீட்டுக்களைத் திருப்பித்தரவில்லை. டெல்டா ஏர்லைன்ஸ் மறுத்துவிட்டது. பிரச்சனை ஆரம்பமாகியது. எங்கள் ஐந்து பேரையும் விமானநிலையத்தின் ஒரு பகுதியில் பொலிஸ் காவலுடன் வைத்தார்கள் என்ன நடக்குமோ என்ற யோசனையில் எல்லோரும் மூழ்கிப் போனோம். எவ்வளவோ கஷ்டப்பட்டு வீட்டை ஈடு வைத்து வட்டிக்கு மாறி வந்திருந்தவர்கள் தான் எங்களில் பெரும்பாலானவர்கள். இந்நிலையில் திருப்பி அனுப்பினார்களென்றால். நேரம் போய்க்கொண்டிருந்தது. பிற்பகல் 2 மணியளவில் லோகன் விமான நிலையத்தை வந்தடைந்தோம் வந்ததிலிருந்து ஐந்து மணித்தியாலங்கள்! போனதே தெரியவில்லை. பசிவயிற்றைக்கிள்ளியது. சோர்வு எல்லோர் முகங்களிலும் படரத் தொடங்கிவிட்டிருந்தது. நாங்கள் ஐந்து பேரும்
EGS அமெரிக்கா =

ஒருவருக்கொருவர் பழக்கமானவராகிவிட்டோம். ராஜசுந்தரம் இலங்கை வங்கிக்கிளையொன்றில் மானேஜராகக் கடமையாற்றியவர். நாட்டிலை மனைவி பிள்ளைகளை விட்டுவிட்டு இந்த வயசிலை இன்னுமொரு புது வாழ்வை வேண்டிப் பயணித்திருந்தார். மற்றவர் சிவகுமார் இவருக்கு வயசு முப்பதுதானிருக்கும். ஆனால் அதற்குள்ளேயே தலையில் இலேசாக வழுக்கை விழுந்துவிட்டது. இவர் கொழும்பில் மகாராஜாவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர். திருமணமாகாதவர். அடுத்தவன் ரவிந்திரன் பதினெட்டு வயதுதானி ருக்கும் ரத்மலான இந்துக் கல்லூரியில் அட்வான்ஸ் லெவல் படித்துக் கொண்டிருந்தவன். இதற்கிடையில் இமிகிரேஷன் அதிகாரி ஒருவர் வந்து எங்களைபத்துமணிசுவிஸ் எயார்பிளைட்டில் கொழும்புதிருப்பி அனுப்பப் போவதாகவும் ரெடியாயிருக்கும் படியும் கூறினார். எங்களிற்கு இலேசாக பயம் ஏற்பட்டது. உண்மையிலேயே திருப்பி அனுப்பிப் போடுவார்களோ.
இதற்கிடையில் ராஜசுந்தரம் கூறினார். 'பை போர்ஸா எங்களைத் திருப்பிஅனுப்ப போறாங்கள் போலிருக்கு. என்ன பிரச்சனை வந்தாலும் எதிர்க்க வேண்டும். 'இச்சமயம் முன்பு வந்த அதேஇமிகிரேஷன் ஒபீசர் வந்தார்.
எனக்குப் பசி வயிற்றைக் கிள்ளியது. சிவகுமாரால் அடக்க முடியவில்லை 'சேர்வீஆர் சோல் ஹங்றி இவ்யூ அலோ அஸ்டுபை சம்திங் டூ ஈட் வீவுட் பிரியலிகிரேட் புல் என்று சிவகுமார் கூறியதற்கு 'யூ கான் காவ் யுவர் பிரெக்பாஸ்ட் இன் கலம் போ' என்று எகத்தாளமாகப் பதில் கூறிய போது எல்லோரிற்கும் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ஆத்திரப்பட்டு என்ன பயன்! பேசாமலிருந்தோம். அந்த அதிகாரி திரும்பி கொழும்பு போவதற்கான போர்டிங் பாஸ் எல்லாவற்றுடன் திரும்பிவந்திருந்தார். போர்டிங் பாஸ்சைத் தருவதற் காக எங்களது பெயர்களைக் கூப்பிட்டார். ஒருத்தரும் அசையவில்லை;
பதில் பேசாது மெளனமாயிருந்தோம். அந்த அதிகாரியின் முகத்தில்
目 வ. ந. கிரிதரன் 5
س

Page 32
ஆத்திரம் படரத் தொடங்கியதை அவதானித்தோம். இதற்கிடையில் இன்னுமொரு பெண் இமிகிரேஷன் ஓபிசரும் அவ்விடத்திற்கு வந்தார். அவரைப் பார்க்கும் போது எங்களிற்கு ஓரளவுநம்பிக்கை ஏற்பட்டது. எங்கள் பிரச்சனைகளை நாட்டுநிலைமையை விளங்கப்படுத்தினோம். அவர் எங்கள் பிரச்சனைகளை மிகவும் அக்கறையுடன் செவிமடுத்தார், ராஜசுந்தரம் கூறினார்.
"மேடம்நாங்கள் எவ்வளவோ பிரச்சனைகள் பட்டு கனடாவிற்குப் போவதற்காக புறப்பட்டிருக்கின்றோம். கனடாவைப் பொறுத்தவரையில் எங்களிற்கு விசா தேவையில்லை. எங்களுடைய டிக்கற்ரை டெல்டா ஏர்லைன்ஸ் ஏன் ஏற்கவில்லையென்று தெரியவில்லை. ' அதற்கு அப்பெண் அதிகாரிகூறினார்'சட்டப்படி அவர்கள் உங்களை மறுப்பது சரியில்லை என்றுதான்படுகிறது. ஆனால் எங்களால் செய்வதற்கொன்று மில்லை. ஏற்கனவே மூன்று சிறிலங்கன் தமிழர்களை மொன்றியாலில் இறங்கியதற்காக கனடிய அரசு அவர்களை அபராதம் கட்டும்படி பணித் துள்ளது. இந்நிலையில் அவர்களால் செய்வதற்கொன்றுமில்லை. ' இதற்கு ராஜசுந்தரம் 'இந்தநிலைமையில் எங்களிற்கு அமெரிக்காவில் அகதி அந்தஸ்து கோருவதை தவிர வேறு வழியில்லை. நாங்கள் எல்லோரும் அமெரிக்கவில் அகதிகளாக விண்ணப்பிக்கின்றோம்.' என்றார். ராஜசுந்தரம் அகதிகோரிக்கையை விட்டதும் அப்பெண் அதிகாரியின் முகத்தில் மாற்றம் தெரிந்தது. அருகிலிருந்த கடுகடுத்தபடி யிருந்த அதிகாரியின் முகத்திலும் கடுமை குறைந்ததை அவதானிக்க கூடியதாகவிருந்தது. இவ்விதம் எங்கள் அகதிக் கோரிக்கையுடன் எங்கோ சென்ற அந்தப் பெண் அதிகாரிவிரைவிலேயேதிரும்பிவந்தார். 'நீங்கள் அகதிகளாக விண்ணப்பித்த காரணத்தால் உங்களைத்திருப்பி அனுப்புவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எல்லோருக்கும் மகிழ்ச்சி தானே. ' உண்மைதான் எல்லோரும் மகிழ்ச்சியுடன் ராஜசுந்தரத்தை நோக்கினோம்.
மழைவிட்டு தூவானம் விடவில்லை என்பது எங்கள் விடயத்தில் சரியாகிவிட்டது. எங்களை இரண்டுநாட்கள் ஹில்டன் ஹோட்ட லில்
C
EC60 அமெரிக்கா 目

வைத்திருந்தார்கள். பொஸ்டன் குளோப் பத்திரிகையில் எங்களைப் பற்றிய செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்துப்படத்துடன் பிரசுரித்தார் கள். வோய்ஸ் ஒவ்அமெரிக்காபி.பி. ஸியிலெல்லாம் எங்களைப்பற்றிய செய்தியை ஒலிபரப்பினார்கள். இலங்கை இனக்கலவரம் சர்வதேச வெகுஜன தொடர்பு சாதனங்களில் பரபரப்பாக அடிபட்டுக் கொண்டி ருந்த சமயத்தில் தான் எங்களது பயணமும் தொடங்கியிருந்தது. இத னால்தான் எங்களைப் பற்றிய செய்தியும் பிரபலமாகியிருந்தது. எங் களைப் பற்றிய பூர்வாங்க விசாரணைகள் முடிந்ததும் எங்களை நியூயோர்க்நகரிற்கு அனுப்பினார்கள். அப்பொழுது கூட எங்களிற்கு தடுப்பு முகாமிற்கு அனுப்பும் விடயம் தெரிந்திருக்கவில்லை.
பிரத்தியகே பஸ்ஸொன்றில் எங்களை நியூயோர்க் அனுப்பிய பொழுது ஏற்கனவே இரண்டு நாட்கள் ஆடம்பர ஹோட்டலான ஹில்டனில் இருந்த சந்தோஷத்தில் நாங்கள் சந்தோஷமாகவேயிருந் தோம். நியூயோர்க் நகரைப்பற்றி அதன் பிரசித்தம் பற்றிஇலங்கையி லேயே கேட்டிருந்தோம். அத்தகையதொரு நகரிற்குச் செல்வதை நினைத்ததுமே நெஞ்சில்களிப்பு பல்வேறு கனவுகள் திட்டங்கள் படம் விரித்தன. அன்று மட்டுமல்லஇன்றும் கூட என் நெஞ்சை ஒரு கேள்வி குடைந்தபடி தானிருக்கின்றது. பொஸ்டனில் பிடிபட்ட எங்களை எதற்காகநியுயோர்க்அனுப்பினார்கள். பொஸ்டனில் தமிழ்அமைப்புக் கள் மிகுந்த செல்வாக்குடன் விளங்கின. இந்நிலையில் எங்களை அங்கேயே வைத்திருந்தால் அரசியல் ரீதியில் அமெரிக்க அரசிற்குப் பிரச்சனை வரலாமென்று அமெரிக்க அரசு எண்ணியிருந்திருக்கலாம் என்ற ஒரு காரணம் தான் எனக்குப்படுகிறது. பொஸ்டனிலிருந்து நியூயார்க்கிற்கான எங்கள் பஸ் பயணம் எமக்கு இன்பமாக விருந்தது முதன்முதலாக 'எக்ஸ்பிரஸ்வே'யில் பயணம். பல்வேறு வகையான ட்ரக்குகளை வியப்புடன் பார்த்தோம். அடிக்கடி இரண்டு ட்ரெயிலர் களை ஒன்றாகஇணைத்தபடி செல்லும்ட்ரக்குகள் நெஞ்சில் ஆச்சர்யத்தை
விளைவித்தன. 'அப்பாடா ஒரு வழியாக எதிர்ப்பட்ட தடைகளை
வ. ந. கிரிதரன் (6

Page 33
யெல்லாம் கடந்து விட்டோமேன்று பட்டது. எல்லோரும் ஒரு விதமான ஆனந்தத்தில் மூழ்கியிருந்தோம். எனக்கு வீட்டு ஞாபகங்கள். எவ்வளவு விரைவில்முடியுமோ அவ்வளவு விரைவில்உழைத்து வீட்டுப்பிரச்சனை களை முடித்து விட வேண்டும். தம்பியை மெதுவாகஇங்காலை இழுத்து விட வேண்டும். அக்காவின் திருமணத்தை கோலாகலமாக நடத்தி வைத்து விட வேண்டும். எல்லாவற்றையும் ஒரு வழியாக முடித்து விட்டுத்தான் கெளசல்யாவின்நிலையைப் பார்க்க வேண்டும். கெளசல் யாவின்நினைவுகள் நெஞ்சிற்கு இதமாகவிருந்தன. கெளசல்யாவிற்கு எத்தனையோ தடவை எடுத்துக் கூறிவிட்டேன். எனது பொறுப்புகள் பிரச்சனைகளை விரிவாக விளங்கப்படுத்தினேன். அவள் பிடிவாதமாக என்னைத்தான் மணப்பதாக காத்துநிற்கப் போவதாகக் கூறுகின்றாள். இந்நிலையில் நானென்ன செய்ய? காத்துநிற்கும் பட்சத்தில் ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை. நியூயோர்க் நகரிற்குள் நுழைந்தபோதும் எங்களிற்குநிலைமை விளங்கவில்லை.
பஸ் நியூயோர்க்நகரின் வறுமை படர்ந்த பகுதியொன்றில்நுழைந்த போது தான் நெஞ்சை ஏதோ நெருடியது. வறுமையான தோற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த கறுப்பின பிள்ளைகள் பழமை வாய்ந்த கட்டடங்கள் இத்ததையதொரு பிரதேசத்தினூடு பஸ் சென்றபோது எங்களிற்கு நிலைமை விளங்காமற் போனாலும் எங்கேயோ பிழை யொன்றிருப்பது பட்டது. கடைசியில் பஸ் பழமையான கட்டடம் ஒன்றின் முன்னால் நின்றது. நாங்கள் எங்கள் உடமைகளுடனிறங்கப் பணிக்கப்பட்டோம். அப்பொழுதும் எங்களிற்குநிலைமை வடிவாகப் புரியவில்லை. ஐந்தாவது மாடியை அடைந்த போதுதான் நிலைமை ஓரளவு புரிந்தது. நாங்கள் சென்றடைந்த பகுதி ஐந்தாவது மாடியில் அமைந்திருந்த ரிசப்சன்பகுதி. ஜெயில்கார்டைப் போன்ற தோற்றத்துடன் மேசையில் பைலொன்றில் மூழ்கியிருந்தவரிடம் எங்களை ஒப்படைத்த பொஸ்டன் இமிகிரேஷன் அதிகாரிகுட்லக் கூறிவிட்டுப் போனபோது தான்குழலின் யதார்த்தமே எங்களிற்கு உறைத்தது. ஏதோ ஒரு வகையான
அமெரிக்கா E

சிறையொன்றிற்குநாங்கள் கொண்டு வரப்பட்டோமென்ற உண்மையை உணர்த்தியது.
கம்பிக் கதவுகளிற்குப் பின்னால் எங்களை ஆவலுடன் சிறை உடுப்புகளுடன் நோக்கியபடியிருந்த விழிகள் புரிய வைத்தன. சிறைக்காவலர்கள் ஆங்காங்கே காணப்பட்டார்கள். எங்கள் உடமைகளெல்லாம் எங்களிடமிருந்துநீக்கப்பட்டன. எங்களிடமிருந்த பணம் எங்களிடமிருந்து எடுக்கப்பட்டது.நாங்கள் அவ்விடத்திலிருந்து வெளியேறும் சமயங்களில் அவை மீண்டும் திரும்பத்தரப்படும் எனக் கூறப்பட்டது. லோகன் விமான நிலையத்தில் நடைபெற்றது போல் பூர்வாங்க சோதனைகளை நடத்தப்பட்டன. கைரேகைகள் எடுக்கப் பட்டன. ஒரு வழியாக சோதனைகளெல்லாம் முடிவடைந்த பின்னர் எங்களிற்கு சிறை உடுப்புகள் தரப்பட்டன. அணிந்து கொண்டு உள்ளே சென்றோம். கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதைதான். இவ்விதம் ராஜசுந்தரத்தார் ஒருவித விரக்தியுடன் கூறினார். பனையாலை விழுந்தவனை மாடேறி மிதித்ததாம். இவ்விதம் சிவகுமார் சலித்துக் கொண்டார். ஊரிலை பிரச்சனையென்று வெளிக்கிட்டால். இப்படி மாட்டுப்படுவமென்று தெரிந்திருந்தால் அங்கேயே கிடந்து செத்துத் தொலைந்திருக்கலாமே. இவ்விதமாக ரவிச்சந்திரன் முணுமுணுத்துக் கொண்டான். அருள்ராசா எதுவுமே பேசாமல் மெளனமாகவிருந்தான். 'நடப்பதைப் பார்ப்பம்'இவ்விதம் கூறினேன்.
எங்களிற்குப்பின்னால்சிறைக்கதவுகள்மூடப்பட்டன. மல்லர்களைப் போல் கறுப்பினகாவலர்கள் ஆங்காங்கே காணப்பட்டார்கள். ஐந்தாவது மாடித்தடுப்பு முகாமின் கூடம் இணைக்கும் கடைபாதை கூடம் என்ற மாதிரியானதொரு அமைப்பில் காணப்பட்டது. ஒவ்வொரு படுக்கைக் கூடத்திற்கும் எதிராக ஒரு கூடம் பொழுதுபோக்குவதற்காகக் காணப்பட்டது. இப்பொழுது போக்குக்கூடத்தில் ஒரு மூலையில் டி.வி. வென்டி மெஷின், டேபிள் டெனிஸ் விளையாட மேசை டெலிபோன்
ஆகியவை காணப்பட்டன. படுக்கைகளிற்கான கூடத்தில் 'பங்
E ou. ந. கிரிதரன் ○3 毒

Page 34
பெட்ஸ்'. கப்பல்களில் ஹாஸ்டல்களில் இருப்பதுபோல் இரண்டு கட்டில்கள் ஒன்றிற்கு மேல் உன்றாக அமைந்திருந்தன. கூடங்களை இணைக்கும் நடைபாதைகள் பலமான இரும்புக் கதவுகளுடன் காவலர்களுடன்இருக்கக் காணப்பட்டன.
இரு கூடங்களையும் இணைக்கும் நடைபாதையுடன் சேர்ந்து குளியலறை மலசலகூடம் ஆகியவை காணப்பட்டன. இதுதவிர உணவு கூடம் தேகப்பியாசப பயிற்சி செய்வதற்கான பகுதி ஆகியவையு மிருந்தன. நோய்வாய்ப்படும் சந்தர்ப்பத்தில் மருத்துவவசதிகளும் அளிக்கப்பட்டன. டாக்டரின் அறை தடுப்பு முகாமின் முன்பகுதியில் ரிசப்சனிற்கு முன்புறமாக அமைந்திருந்தது. எங்களது பகுதியில் தடுப்புக்கைதிகள் எல்லோரும் ஆண்களே. பெண்கள் வேறொரு பகுதியில் இருந்தார்கள். உணவிற்காக காத்து நிற்கும் போது மட்டும் முன்னதாகவே உணவை முடித்துவிட்டுச்செல்லும் பெண் கைதிகளைப் பார்ப்பதற்கு ஆண்கள் முண்டியடித்துக் கொள்வார்கள். இதற்காகவே உணவுச்சாலையில் வேலை செய்வதற்காக முண்டியடிப்பார்கள். இவ்விதம் வேலை செய்தால் ஒருநாளைக்குச்சம்பளமாக ஒரு டொலர் தருவார்கள்.
நாங்கள் தங்கியிருந்ததடுப்புமுகாமில் ஆண்கள் இருநூறு பேர்வரை யில் இருந்தார்கள். பெரும்பாலானவர்கள் ஆப்ரிக்கா தென்ன மெரிக்காவைச் சேர்ந்தவர்கள். நாடென்று பார்த்தால் ஆப்கானிஸ்தான் நாட்டவர்களே அதிகமாகவிருந்தார்கள். இலங்கையைப் பொறுத்த வரையில் நாங்கள் ஐவர்தான். பங்களாதேஷ் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இருவர் மட்டுமேயிருந்தார்கள். எல் சல்வடோர் கெளதமாலா போன்ற மத்திய அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்களு மிருந்தார்கள். விமானநிலையத்தில் போதிய கடவுச்சீட்டுக்கள் ஆவணங்களின்றி அகப்பட்டவர்கள். அகப்பட்டு அகதி அந்தஸ்து கோரியவர்கள், சட்ட விரோதமாக வேலை செய்து அகப்பட்டவர்கள்
போதைவஸ்து முதலான குற்றச் செயல்களில் ஈடுபட்டு நாடு கடத்து
EC64) அமெரிக்கா E

வதற்காகக் காத்துநிற்பவர்கள். இவ்விதம் பல்வேறு நாட்டைச் சேர்ந்த பல்வேறு விதமான கைதிகள், ஆப்கானிஸ்தான்நாட்டவர்களின்நிலை பெரிதும் பரிதாபத்திற்குரியது.
பெரும்பாலானவர்கள் இரண்டு வருடங்களாக உள்ளே கிடக்கின்றார் கள். இங்குள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் போதிய ஆவணங்களின்றி அகதி அந்தஸ்து கோரியவர்கள் தான். உறவுகள் பிரிக்கப்பட்டநிலையில் உணர்வுகள் அழிக்கப்பட்டநிலையில் வாழும் இவர்களின் நிலை வெளியில் பூச்சுப் பூசிக் கொண்டு மினுங்கிக் கொண்டிருந்த உலகின் மாபெரும் வல்லரசின் இன்னுமொரு இருண்ட பக்கத்தை எனக்கு உணர்த்தி வைத்தன. அமெரிக்கர் களைப் பொறுத்தவரையில் இவர்கள் புத்திசாலிகள் கடின உழைப் பாளிகள் விடாமுயற்சி மனோபலம் மிக்கவர்கள் எத்தனையோவற்றில் உலகில் முன்மாதிரியாகத் திகழுபவர்கள் ஆனால் அதே அமெரிக்காவில்தான் உலகில் வேறெந்தநாட்டிலும்இல்லாத அளவிற்கு மனோவியாதிபிடித்த ட்ெடபண்டி போன்ற கொலையாளிகளும்இருக்கின்றார்கள். உரிமைகள் மறுதலிக்கப்பட்ட நிலையில் அகதிகளும் தடுப்புமுகாம்களென்ற பெயரில் திகழும் சிறைகளில் வாடுகின்றார்கள். வாய்க்கு வாய் நீதி, நியாயம், சமத்துவமென்று முழங்கப்படுமொருநாட்டில் காணப்படும் மேற்படி நிலைமைகள் ஆய்விற்குரியன. நாங்கள் எங்களிற்கு ஒதுக்கப்பட்ட கூடத்திற்குச் சென்றதும் கூடத்திலிருந்தவர்களில் சிலர் எங்களை வந்து சூழ்ந்து கொண்டார்கள். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அப்துல்லா எல்சல் வடோரைச் சேர்ந்த டானியல் கெளதமாலாவைச் சேர்ந்த டேவ் ஆகியோர்இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். எங்களைப் பற்றி எங்கள்நாட்டைப்பற்றி எவ்விதம் இங்கு அகப்பட்டோம் என்பது பற்றியெல்லாம் ஆர்வத்துடன் வெகு ஆதரவுடன் கேட்டார்கள். பூரீலங்கா கலவரம் உலகம் முழுவதும் தெரிந்திருந்த காலகட்டத்தில் வந்திருந்தால் அவர்களிற்கு பூரீலங்காவைத் தெரிந்திருந்தது. எங்கள்
கதையைக் கேட்டு அனுதாபப்பட்டுக் கொண்டார்கள்.
E qu. ந. கிரிதரன் (65

Page 35
இந்த அமெரிக்கர்களே இப்படித்தான் எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் பிரச்சனை தருவது இவர்கள்தான். இவ்விதம் டானியல் கூறினான். டானியலுக்கு பதினெட்டு வயதுதானிருக்கும். இன்னும் சிறுவனுக்குரிய தன்மைகளை அவன் முகம் இழந்து விடவில்லை. அவன் தொடர்ந்தும் கூறினான். "எங்களுடையநாட்டுப்பிரச்சனைக்குக் காரணமே இந்த அமெரிக்கர்கள்தான். இவர்கள் தருகிற பிரச்சனை களிலிருந்து தப்பிப் பிழைத்து இங்கு வந்தாலோ மனிதாபிமானமே யில்லாமல் மிருகங்களைப் போல் அடைத்து வைத்து மனோரீதியாகச் சித்திரவதை செய்கின்றார்கள். 'நீஎவ்வளவு காலமாக இங்கிருக்கிறாய் டானியல்'இவ்விதம் கேட்ட எனக்கு அவனிற்குப்பதில் ஆப்கானிஸ் தானைச் சேர்ந்த அப்துல்லா பதில் தந்தான். அப்துல்லாவின் பதில் என்னை மட்டுமல்ல எங்கள் எல்லோரையுமே கலங்க வைத்தன.
'கடந்த இரண்டு வருடங்களாக நானும் என் நாட்டைச் சேர்ந்த சிலரும் ஆனால் டானியல் வந்து ஒரு வருசமாவதிருக்கும்.'
'இரண்டு வருஷமாக இவங்கள், இந்த அமெரிக்கர்கள் என்ன செய்கின்றார்கள்' கலக்கத்தால் சற்றே பொறுமையிழந்தார் ராஜசுந்தரத்தார். 'இவங்களுடைய சட்டங்களின்படி எந்தவித ஆவணங் களுமில்லாமல்நாட்டிற்குள் வரமுதல் பிடிபட்டால் அப்படிப்பட்டவர் களுடைய வழக்குகள் முடியும் வரையில் உள்ளேயே இருக்க வேண்டி யதுதான். அதற்கு ஒரு வருஷம் எடுக்கலாம் அல்லது இரண்டு வருஷங் களாவதெடுக்கலாம். 'இவ்விதமாக எங்களுடன்சிறிது நேரம் ஆதரவாக கதைத்துவிட்டு அவர்கள் தத்தமது வழமையான அலுவல்களை பார்ப்பதற்கு புறப்பட்டு விட்டார்கள். நாங்கள் எல்லோரும் சிறிதுநேரம் கூடிக் கதைத்தோம். எங்கள் எல்லோரிலும் ராஜசுந்தரத்தாரே பெரிதும் கலக்கத்துடன் காணப்பட்டார்.
'இப்படி இரண்டு மூன்று வருஷம் உள்ளேயே கிடக்க வேண்டு மென்றதை காசைக் செலவழித்து ஏன் வெளிக்கிட்டனென்றிருக்கு. ஊரிலை மனுவியும் பிள்ளையையும் கனடாவிற்குப் போய் கெதியிலை
巨でエう அமெரிக்கா =

கூப்பிடுறனானென்றிருக்கிறேன்' 'அண்ணை மனசைத் தளரவிட்டு ஆகப் போறதென்னவிருக்கு. இனி எப்படிஇங்கிருந்துதப்பலாமென் பதைப் பார்ப்பம். இவ்விதம் சிவகுமார் கூறவும் இடைமறித்த ராஜசுந்தரத்தார் கேட்டார்.
'நீயென்ன ஜெயில் பிரேக்கைச் சொல்லுறியோ.'
'அண்ணைநான் அதைச் சொல்லேலை. எப்படிஇங்கையிலிருந்து வெளியிலை போகலாமென்றதைத்தான் சொன்னான். '
'பொஸ்டன்தமிழ் அமைப்பைச் சேர்ந்தவங்களோடைகதைத்தால் ஏதாவது வெளிக்கலாம், 'இவ்விதம்நான் கூறினேன். 'ஆனால் எப்படி அவங்களோடை கதைக்கிறது'அருள்ராசா கேட்டான். அப்பொழுது தான் பொஸ்டன் அமைப்பைச்சேர்ந்தவர்களின் டெலிபோன்நம்பர்கூட எம்மிடமில்லை என்ற உண்மை விளங்கியது. இதற்கு ரவிச்சந்திரன் கூறினான். 'அண்ணை எனக்குத் தெரிஞ்சவங்கள் நியூயோர்க்கிலை இருக்கிறான்கள். அவங்களிட்டை கேட்டால் எடுத்துத் தருவாங்கள்' இவ்விதம் சிறிது நேரம் கதைத்தபடியிருந்துவிட்டு ஒவ்வொருவரும் தத்தமது படுக்கைகளிற்கு திரும்பினோம். நானும் அருள்ராசாவும் ஒரு 'பங்பெட்டி'ல் மேல் கட்டிலில் அவனுமாக படுத்துக் கொண்டோம். வந்து ஒரு மாதம் ஒடி ஒளிந்தது. இதற்கிடையில் தடுப்பு முகாம் வாழ்க்கைக்கு ஓரளவு பழக்கப்படுத்தியாகிவிட்டது.
காலை, மதியம் மாலையுடன் மூன்று நேரச்சாப்பாடு முடிந்து விடும். வழக்கமாக இரவு சாப்பிடும் பழக்கமுள்ள எமக்கு இரவெல்லாம் வயிற்றைப்பசிசுரண்டத் தொடங்கிவிடும். ஒவ்வொரு முறை உணவகத் திற்குச் செல்லும்போதும் ஒவ்வொரு ஹோலைச் சேர்ந்தவர்களும் முதலில் பெண்கைதிகள் வந்து உணவருந்திவிட்டுச்செல்வார்கள். அதன் பின்னர் எங்கள் கூட்டைத் திறந்து விடுவார்கள். சாப்பாட்டைப் பொறுத்தவரையில் எங்களிற்குப் பழக்கமில்லாதபோதும் சத்தானதை நிறையுணர்வாகப் போட்டார்கள். காலையில் ஒரு யூஸ், கோப்பி, ஒரு
E வ. ந. கிரிதரன்

Page 36
பழம், பால், சீரியல், இது தவிர ஸ்கிராம்பிள் எக் அல்லது பான் கேக் சிரப்புடன் தருவார்கள். மத்தியானம் சோறு கொஞ்சம், ஸ்பாகட்டி, இறைச்சி உருண்டைகள், ஒரு யூஸ், பழம், கோப்பி தருவார்கள். பின்னேரம் போல்தான் பழங்கள் அல்லது கோப்பியையோ, யூசையோ நாங்கள் எங்களது படுக்கையறைக்குக் கொண்டு செல்ல முடியாது. காவலர்கள் விட மாட்டார்கள். அகப்பட்டால் பறித்து விடுவார்கள். எங்களிற்கோ இரவெல்லாம் பசி வயிற்றைக் கிண்டும். களவாக எப்படியோ பழங்களைக் கடத்திக் கொண்டு சென்று விடுவோம். இன்னுமொரு முக்கியமான விடயம், அடிக்கடி முகாமில் கைதிகளை அப்படியப்படியே இருக்கும் இடங்களில் நிறுத்தி விட்டு அதிகாரிகள் வந்து கணக்கிடுவார்கள். அப்படி கணக்கிடும்போது சில வேளைகளில் ஒன்றிரண்டு நம்பர் பிழைத்து விடும். அப்படி பிழைத்து விட்டால் மீண்டும் மீண்டும் கணக்கெடுப்பார்கள்.
ஆரம்பத்தில் முதலிரண்டு கிழமைகளும் எங்களிற்கு வாழ்க்கையே வெறுத்துப் கோயிருந்தது. யன்னலினூடு தொலைவில் விமானங்கள் சுதந்திரமாக கோடு கிழிப்பதைப் பார்க்கும்போது, தொலைவில் வறிய கறுப்பினக்குழந்தைகள்விளையாடுவதைப் பார்க்கும்போது சுதந்திரமற்ற எங்கள் நிலைமை நெஞ்சை வருத்தியது. விசா பிடித்தவர்களைப் போல் நாங்கள் ஐவரும் எங்கள் எங்களது படுக்கைகளில் புரண்டு கிடந்தோம். ஊர் நினைவுகள் நெஞ்சில் பரவும் வீட்டு நினைவுகள், கெளசல்யாவின் நினைவுகள் சிறகடிக்கும். கலவர நினைவுகளின் கொடூரம் கண்களில் வந்து நிற்கும். எத்தனையோ கனவுகள் எத்த னையோ திட்டங்கள் பொறுப்புக்கள் இருந்தன. வெளிக்கு ஒளிர்ந்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் இருண்ட பகுதிக்குள் வந்து இப்படி மாட்டுப்படுவேனென்று யார் கண்டது. இவர்களால் ஏன் எங்களது நிலைமைகளை உணரமுடியவில்லை. எல்சல்டோர் ஆப்கானிஸ்தான் இளைஞர்கள் வாழ்க்கை எவ்விதம் வீணாகிக் கொண்டிருக்கின்றது. குற்றச் செயல் புரிந்தவர்களையும் கொடுமை காரணமாக நாடு விட்டு
EC68 அமெரிக்கா =

ஓடிவந்தவர்களையும் ஒன்றாக வைத்திருக்கிறார்கள். கைதிகளைப்போல் சட்டதிட்டங்கள் காவலர்களின் அதட்டல்கள் உறுக்கல்கள் தத்தமது நாடுகளில் நிகழும் நிகழ்ந்த அனர்த்தங்களிலிருந்து உள்ளூர் உறவினரைப் பிரிந்து நொந்தமனத்துடன் வரும் அகதிகளை இவர்கள் மேலும் வருத்தும் போக்கு. எங்களைப் பொறுத்தவரையில் இன்னும் கலவரத்தின் கொடூரத்திலிருந்து இன்னமும் விடுபடவேயில்லை.
அதற்குள் எங்களிற்கு இங்கு ஏற்பட்டு விட்டநிகழ்வுகள். எனக்கு இன்னும் ஞாபகமிருக்கின்றது. அப்பொழுது நான் நான்காம் வகுப்பு மாணவன். ஒரு கட்டுரைப் போட்டியில் நான் விரும்பும் நாடு' என்ற தலையங்கத்தில் எழுதும் படி கூறியிருந்தார்கள். அதற்கு நான் தேர்ந்தெடுத்த நாடு 'அமெரிக்கா" அதற்காக நான் குறிப்பிட்ட காரணங்கள். அமெரிக்கா ஒரு மிகப்பெரிய ஜனநாயகநாடு. ஆபிரகாம் லிங்கனைப் போன்ற ஒரு சாதாரண விறகு வெட்டிகூட ஜனாதிபதியாக வரமுடியும் சாத்தியமுள்ளநாடு அமெரிக்கா, அமெரிக்காவில் மனித உரிமைகள் மதிக்கப்படுகின்றன. அவர்களது சுதந்திரதேவிச்சிலையே இதற்குச் சான்று. இவ்விதமாக எழுதியிருந்தேன். ஆனால் இன்று யாராவது இப்படியொரு கட்டுரை எழுதச் சொன்னால் நிச்சயமாகநான் அமெரிக்காவை தேர்ந்தெடுக்கமாட்டேன். அகதிகளாக ஓடி வருபவர் களை பெரிதாக அரவணைக்க வேண்டாம். ஆனால் அவர்களை மேலும் மேலும் மனோரீதியாக வருத்தா மலிக்கலாமல்லவா. இதே சமயம் சட்டவிரோதமாகநாட்டிற்குள்நுழைபவர்கள் விடயத்தில் அமெரிக்கா ஒரு வித்தியாசமான விநோதமான சட்டமொன்றையும் இயற்றி வைத்திருக்கின்றது. நீதியையும் நியாயத்தையும் பாதுகாக்கத்தான் சட்டங்கள். ஆனால் அந்தச் சட்டம் எந்தநியாயத்தைப் போதிக்கிறதோ தெரியவில்லை. ஆனால் அந்தச் சட்டத்தை நாங்கள் உணர்ந்ததே தற்செயலாகத்தான். அதுவும் மூன்று மாதங்கள் கழிந்து விட்டபிறகு தான். அதுமட்டும் தெரியாமல் போயிருந்தால் சிலவேளைஇன்னமும் அமெரிக்கதடுப்பு முகாமில்தானிருந்திருப்போமோ தெரியவில்லை.
E வ. ந. கிரிதரன் エ自

Page 37
தடுப்பு முகாம் வாழ்க்கை இப்பிரபஞ்சத்தின் சார்புத்தன்மையை எங்களிற்கு வெளிக்காட்ட உதவியதென்று கூடக் கூறலாம். வெளி யிலிருந்தபோது விரைவாக ஒடிக்கொண்டிருந்த காலம் தடுப்பு முகாமினுள்ளேயோ ஒடவேமாட்டேனென்று சண்டித்தனம் செய்தது. எதிர்காலம் நிச்சயமற்றியிருந்தது. முடிவெதுவும் தெரியாத திரிசங்கு நிலை இருந்தாற் போலிருந்தது. விரக்தி கலந்த உணர்வுகள் வெடிக்கத் தொடங்கிவிடும். சோர்வு தட்டிப் படுக்கைகளில் படுத்திருப்போம். தொடர்ந்தும் இப்படியே இருப்பது எங்களிற்கு எந்த வித பலனையும் தரப்போவதில்லை என்பது மட்டும் தெளிவாகவே தெரிந்தது நாங்கள் நம்பிக்கையைத் தளரவிடக்கூடாது என்பதும் புரிந்தது. ஒரு நாளிரவு ஐவரும் படுப்பதற்கு முன்னால் ராஜசுந்தரத்தாரின் கட்டிலில் ஒன்று கூடினோம். இதற்கிடையில் தடுப்பு முகாம் வாழ்க்கை எங்கள் பழக்க வழக்கங்களில் ஒருசில மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது. சிவகுமாரின் வாயில் அடிக்கடி தகாத வார்த்தைகள் வெளிவரத் தொடங்கின. ரவிச்சந்திரன் இரவில் எல்லோரும் படுக்கையில் சாய்ந்து லைற் அணைத்தும் 'உ' என்று சத்தமிடுவான். இவனிற்கு பதிலை டானியல் அனுப்புவான். இவர்களைத் தொடர்ந்து ஏனையவர்களும் அந்நிகழ்வில் கலந்து கொள்ள காவல் அதிகாரிகள் வந்து ஒழுங்கை நிலைநாட்டிச் செல்வார்கள். இதே சமயம் சவிச்சந்திரனிற்கு ஆங்கில அறிவு மிகவும் மட்டாகவே இருந்தது. இவற்றையெல்லாம் கணக்கெடுத்து அன்றைய கலந்துரையாடலில் எங்களது நிலைமையை அலசி ஆராய்ந்தோம். அன்றைய கலந்துரையாடலில் பொழுதைப் பயனுள்ளவாறு கழிப்பது என்பது பற்றியும் எமது எதிர்கால நடவடிக்கைகள் என்ன என்பது பற்றியும் விவாதித்ததில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
அமெரிக்காவில் அகதிநிலைகோரி விண்ணப்பித்திருந்தாலும் ஏற்கனவே பொஸ்டன்தமிழ் அமைப்பு எங்கள் விடயத்தில் கை போட்டு விட்டதாலும் எது செய்தாலும் அவர்கள் மூலமாகவே அவர்களை கலந்தாலோசித்தே செய்யவேண்டும். என்றும் கனடா செல்வதற்கு
سسسسس
国ー70) அமெரிக்கா 8

ஏதாவது வழிகளிருக்கும் பட்சத்தில் அதுபற்றி அறியும் பொறுப்பை அவர்களிடமே விட்டு விடுவதென்றும் முடிவு செய்தோம். அதே சமயம் தகாதவார்த்தைகளைப் பாவிப்பதை நிறுத்துவதென்றும் இரவில் படுக்கையில் கூப்பாடு போடுவதைத் தவிர்ப்பதென்றும் ரவிச்சந்திர னிற்கு ராஜசுந்தரத்தார் ஆங்கிலம் படிப்பிப்பதென்றும் மேலதிக முடிவுகள் எடுக்கப்பட்டன. இதே சமயம் எங்களிற்கு எங்களைப் பற்றியும் எங்களது கலந்துரையாடல் பற்றியும் எடுத்த முடிவுகள் தொடர்பாக சிரிப்பாகவுமிருந்தது. அன்றைய எமது கலந்துரையாடலின் அடுத்த அடுத்த சிலநாட்கள் எங்கள் நெஞ்சில் சிறிதுநம்பிக்கைதுளிர் விட்டிருந்தது. அவ்விதம் கலந்துரையாடியதன்மூலம் எங்கள் நெஞ்சின் பாரமும் ஓரளவுகுறைந்திருந்தது.
என்னைப் பொறுத்தவரையில் தொடர்ந்தும் தேவையற்ற சிந்தனை கள் நெஞ்சைத்தாக்கவிடுவதில்லையென்று உறுதிசெய்து கொண்டேன். என் பொழுதைக் கூடுதலாக காலையில் டி.வி. பார்ப்பதிலும் டேபிள் டென்னிஸ் டானியல், ரிச்சர்ட் ஆகியோருடன் விளையாடுவதிலும் சிவகுமார் ரவிச்சந்திரனுடன் "செஸ் விளையாடுவதிலும் கழிக்கத் தொடங்கினேன் 'செஸ் விளையாட்டைப் பொறுத்தவரையில் ஸ்பானிஷ் பாதுகாப்பதிகாரிக்குத் தான் நன்றி கூற வேண்டும். இப்பாதுகாப்பு அதிகாரிகளும் சிலசமயங்களில் தங்களுக்கிடையில் "செஸ்' விளை யாடிக்கொள்வார்கள். அந்த ஸ்பானிஷ் அதிகாரியிடம் கேட்டபோதும் அவன் முறைப்பில்லாமல் ஒரு செஸ் போர்டையும் காய்களையும் கொண்டு வந்து தந்தான். இது தவிர சமயங் கிடைக்கும் போது தேகப் பியாச பயிற்சியும் செய்யத் தொடங்கினேன். டி.வி.நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரையில்காலையில்கார்ட்டூன்நிகழ்ச்சிகளையும் செய்திகளை யும் பார்ப்பதில் விருப்பமாயிருக்கும்.தடுப்புமுகாமில்இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கார்ட்டூன்நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் விருப்பம் செலுத்துவதை அவதானிக்கக்கூடியதாயிருந்தது. 'பிங் பாந்தா டொம்
அன்ட் ஜெரி முதலான கார்ட்டூன்களையே பெரும்பாலானவர்கள்
E வ. ந. கிரிதரன் 三○三

Page 38
பார்த்து ரசித்தார்கள். இதே சமயம் எமது தடுப்பு முகாமினுள்ளிருந்த 'வென்டிங் மெஷின்" களிலிருந்தும் பானங்கள், உணவுவகைகளைப் பெறக்கூடியதாக இருந்தது. அதற்காக எங்கள் பணத்திலிருந்து ஐந்து டொலர்களோ பத்து டொலர்களோ சில்லறையாக மாற்றித் தரும்படி எங்களது முகாம் பொறுப்பதிகாரியிடம் நேரத்துடனேயே சொல்லி வைத்தால் பெரும்பாலும் ஓரிருவாரங்களில் மாற்றித்தருவார்கள்.
இதற்கிடையில் டானியல் ரிச்சர்ட் அப்துல்லா ஆகியோருடன் நெருக்கமாகப்பழகத்தொடங்கியிருந்தேன். ரிச்சர்ட் ஒரு வித்தியாசமான பிறவி எந்த நேரமும் பைபிளும் கையுமாகத்தானிருப்பான். இவனிற்கு ஆத்திரம் வந்தேநான்பார்த்தது கிடையாது. இவனது வாழ்க்கை மிகவும் எளிமையானது. சிக்கலில்லாதது. எல்லாவற்றையும் கடவுள் மேலேயே போட்டுவிடுவான். மற்றவர்கள் எல்லோரும் அமெரிக்க சட்டதிட்டங் களை விளாசு விளாசென்று விளாசித்தள்ளும் போது இவன் ஒரு நாளாவது அமெரிக்க அரசு மீது ஆத்திரப்பட்டதே கிடையாது. எனக்கே வியப்பாகவிருந்தது. "ரிச்சர்ட் உனக்கு உண்மையிலேயே இவர்கள் மேல் ஆத்திரம் வரவில்லையா' என்று கேட்டால் அதற்கு அவன் சிரித்துக் கொண்டே 'இல்லை இவர்கள் எனக்குச் சாப்பாடு போட்டுதங்க உதவி செய்ததால் இவர்களுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். கடவுளையும் வேண்டுகிறேன்' என்பான். சில வேளைகளில் இவனது கடவுட் பக்தி அதிதீவிரமான மூடத்தனம் நிறைந்ததோ என்று கூடநான் நினைத்தது உண்டு.இவன்கடவுளைத்தவிர ஏன்நவீன விஞ்ஞானத்தைக்கூடநம்ப மறுப்பவன். பூமி உருண்டை வடிவமானதென்று சொல்வதை இவன் நம்பவே மாட்டான். ஒரு விதத்தில் பார்க்கப்போனால் இவன் மேல் பொறாமை ஏற்பட்டது. இவனைப்போல் மட்டும் இருந்துவிட்டால் பிரச்சனையென்று ஒன்று மில்லாதல்லவா போய்விடும்.
இவனிற்கு முற்றிலும் எதிரானவன் டானியல். இவனது கடவுள் சேகுவேரா. கொரில்லாப் போராட்டம் பற்றிய நூலொன்றைச் சமயம் கிடைக்கும் போதெல்லாம் படித்தபடியிருப்பான். இவனது குடும்பம்
EC 72d அமெரிக்கா E
C

முழுவதுமே சல்வடோர் அரசபடைகளின் பயங்கரவாத நடவடிக்கை களிற்குப் பலியாகிவிட்டிருந்தது.இவனது அண்ணன் ஒரு கொரில்லா அனுதாபி. அரச படைகள் இவனது அண்ணனைச் சுட்டுக் கொன்று விட்டிருந்தன. இந்நிலையில் இயல்பாகவே டானியல் சிறிது ஆவேசத்துடனிருந்தான். இவ்விதமான எங்கள் வாழ்க்கையில் ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்த விரும்பிய பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு வாரத்தில் ஒருநாள் அதுவும் அரைமணிநேரம் எங்களை விரும்பினால் நாங்களிருந்த தடுப்பு முகாம் கட்டடத் திற்குச் சொந்தமான, சிறிய முள்ளுக்கம்பிப் பாதுகாப்புடன் கூடிய விளையாட்டு மைதானத்தில் விளையாட அனுமதிப்பதாகக் கூறினார்கள். வெளியுலகைக் காணும் மகிழ்ச்சியில் சம்மதித்தோம்.
எங்களை அந்த மைதானத்திற்கு கூட்டிப் போவதே ஒரு வேடிக்கையான அனுபவம்தான். இரண்டிரண்டு பேராக விலங்கிடு வார்கள். முன்னுக்கும் பின்னிற்கும் பலத்த பாதுகாவலுடன் எங்களைக் கூட்டிச் செல்வார்கள். ஒரு பந்தைத் தருவார்கள் ஒருவரிற்கொருவர் எறிந்து பிடித்தோ அல்லது காலால் அடித்தோ விளையாடிக் கொண்டி ருக்கும் போது இடையில் குறுக்கிட்டு மறுபடியும் விலங்கிட்டு எங்களை எங்களிடத்திற்கே அழைத்துச்செல்வார்கள். தனித்துவமானமுறையில் மனித உரிமைகளைப் பேணும் இவர்களது நடவடிக்கைகள் ஒரு சமயம் எங்களிற்குச்சிரிப்பையும் வெறுப்பையும் ஒருங்கேதந்தன.
மிகப்பெரிய பயங்கரவாதிகளாக எங்களை உருவகித்து எங்களை விலங்கிட்டு இவர்கள் அழைத்து வருவது உண்மையிலேயே எங்கள் மேல் இவர்கள் கொண்ட பயத்தினால் தானா என்பதில் எங்களிற்கு ஒருவித சந்தேகமாகவுமிருந்தது. எங்கள் சந்தேகத்தை அப்துல்லாவின் பதில் ஓரளவு தீர்த்து வைத்தது எனலாம். 'உண்மையில் இவ்விதம் விலங்கிடுவது சிறையில் வைத்திருப்பது எல்லாம் எங்களை மனோரீதியாகப் பலஹினப்படுத்த. இதைத் தாங்காமல் சிலர் தாங்களாகவே முன்வந்து நாடு கடத்தும்படி கேட்டுவிடுவார்கள்.
目 வ. ந. கிரிதரன் C3

Page 39
இவ்விதம் என் நாட்டைச் சேர்ந்த முகமட் முன்னர் சென்றிருந்தான் ஆனால் இன்று அவனது நிலை என்ன என்பது பற்றி யாரிற்குமே தெரியாது?' அதேசமயம் ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரையில் அமெரிக்கா சோவியத் சார்பு அரசாங்கத்திற்கெதிரான முஜாகிதீன் கொரில்லா அமைப்பிற்கு உதவிசெய்துவருகின்றது. ஆனால் அந்நாட்டு நிலைமைகளால் ஓடிவரும் அப்துல்லா போன்றவர்கள் விடயத்தில் கண்டும் காணாதது போலிருக்கின்றது.
ஒரு வேளை அகதிகளென்ற பெயரில் ஆப்கான் அரசின் உளவாளி கள் வருகிறார்களென்ற சந்தேகமோ? ஒவ்வொரு நாளையும் ஒரு புதுநாளாகக் கருதி எங்களது சிறை வாழ்வை மறக்க எண்ணி ஏனைய வற்றில் கவனம் செலுத்த முயன்று கொண்டிருந்த போதும் முற்றாக எங்களால் அவ்விதம் செய்யமுடியவில்லை. எத்தனை நேரமென்றுதான் டி.வி. பார்ப்பது? டேபிள் டென்னிஸ் விளையாடுவது? தேகப்பயிற்சி செய்வது? சுதந்திரமற்ற சிறை? வாழ்வின் கனம் இடைக்கிடை எம்மை மேலும் மேலும் அமுக்கத் தொடங்கிவிடும் இத்தகைய சமயங்களில் படுக்கைகளில் வந்து புரண்டு கிடப்போம். இதே சமயம் வெளியில் இல்லாததைவிட அதிகளவில் உள்ளே எங்களிற்கு ஒரு வசதி இருக்கத்தான் செய்தது. உலகின் எந்த மூலை முடுக்கில் உள்ளவர் களுடனும் தொடர்புகொள்ள எங்களால் முடிந்தது. சட்டவிரோதமாகத் தான். பெரிய பெரிய கம்பனிகள் செல்வந்தர்கள் ஆகியோரின் டெலி போனிற்கான கிரடிட்கார்ட் நம்பர்கள் ஏதோ ஒரு வழியில் முகாமில் உள்ளவர்களிற்குக்கிடைத்த வண்ணமிருந்தன. எப்படி கிடைத்ததோ அவர்களிற்கே வெளிச்சம். யாரோ ஒரு வெஸ்ட் இண்டியனின் கேர்ள் பிரண்ட் ஒபரேட்டராக வேலை செய்கிறாளாம். அவள்மூலம் கிடைத்தது எனகதைத்துக் கொண்டார்கள்.
இவ்விதமாக கிடைக்கும் நம்பரைக் கொண்ட உலகின் மூலை முடுக்கெல்லாம் தொலைபேசிநம்பர்கள் விரைவிலேயே செயலற்றுப் போய்விடும் இவ்விடத்தில் புதியன வந்து விடும். பழையன கழிதலும்
EC7DE அமெரிக்கா 3

புதியனபுகுதலுமாக எங்களது டெலிபோன்உரையாடல்களும்நீண்டன. இச்சமயத்தில் யாழ்பாணத்தில் உள்ளவர்களுடன் கூடத் தொலைபேசி யில் கதைக்கக்கூடியதாயிருந்தது. ரவிச்சந்திரனின் வீட்டில் தொலைபேசி வசதி இருந்தது. ஓரிரு சமயங்களில் காலை ஏழுமணிக்கு பொங்கும் பூம்புனலை டெலிபோனிற் கூடாகக் கேட்டுக் கூட மகிழ்ந்ததுண்டு. முகாமில் உள்ளவர்களில் ஒரு சிலர் நாள் முழுக்கக் கதைத்துக் கொண்டிருப்பார்கள். இச்செயலின் சட்டவிரோதத்தன்மை எங்களின் சிறைவாழ்வின் உளவியல் வேதனையின் முன்னால் உருண்டன.
ஆரம்பத்தில் எங்கள் விடயத்தில் அக்கறை செலுத்திய தமிழ் அமைப்பின் அக்கறை சற்றே குறைந்தது. அவர்களில் சிலர்நியூயோர்க் வந்து போயிருந்தார்கள். ஆனால் எங்களை எட்டிப்பார்க்கும் அளவிற்கு அவர்களிற்கு நேரம் கிடைக்கவில்லை. அதே சமயம் ஓரிரு நல்ல உள்ளங்களும் இல்லாமலில்லை. ஒருநாள் எங்களைச் சந்திக்க யாரோ விசிட்டர்ஸ் வந்திருப்பதாக அறிவித்தார்கள். எங்களிற்கு வியப்பாக யிருந்தது. எங்களைத் தேடி விருந்தாளிகளா? யாராவிருக்குமென்று மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டோம். கட்டையான உருவம், கனிவான குரல்வளம். தமிழகத்தைச் சேர்ந்த தற்போது நியூயோர்க்கிலுள்ள சேர்ச்சொன்றில் பணிபுரியும் பாதர் ஏபிரகாம்தான் எங்களைச் சந்திக்க வந்திருந்தவர். பத்திரிகைகள் மூலமாக எங்களைப் பற்றி அறிந்திருந்ததாகக் கூறினார். எங்களிற்கு வாசிப்பதற்கென்று பத்திரிகைகள் சில கொண்டுவந்திருந்தார்.தடுப்புமுகாமில் விருந்தினர் களைப் பார்ப்பதற்கு ஒரே சமயத்தில் இருவரை அனுமதிப்பார்கள். விருந்தினரையும் எம்மையும் கம்பி வலைபிரித்திருந்தது. சந்திப்பதற்கு நானும் ராஜசுந்தரத்தாரும் சென்றிருந்தோம். சுதந்திரமற்ற சிறை அனுபவத்தால் விரக்தியுற்றிருந்தநிலையில்பாதரின்சந்திப்பு ஆறுதலாக இதமாகவிருந்தது. "ஏதாவது என்னால் முடியக்கூடிய உதவிகள் ஏதுமிருந்ததால் கூறுங்கள். பாதர் கேட்டார். எங்களைப் பொறுத்த வரையில் முதலாவது பிரச்சினை தடுப்பு முகாமை விட்டு எவ்விதம்
வ. ந. கிரிதரன்
Ciss

Page 40
வெளியேறுவது என்பது தான். ஏற்கனவே கலங்கிப் போயிருந்த ராஜசுந்தரத்தார் கூறினார்.
'பாதர் என்ற மனுஷி பிள்ளைகளை ஊரிலை விட்டு வந்திருக் கிறான். இவங்கள் அறுவான்கள் இப்படியே உள்ளுக்கையே வைத்திருப்பான்கள் போலைக் கிடக்குது. வெளியிலை போறதிற்கு ஏதாவது வழிபற்றி விசாரித்தீங்களென்றால் நல்லது.' 'ஒன்றிற்குமே கவலைப்படாதீங்க எனக்குத் தெரிந்து 'கிறிஸ்டியன் சொசைட்டி' ஒன்றிலை வேலை செய்கிற லோயர் ஒருவர்இருக்கின்றார். அவ்விடம் விசாரித்துப் பார்க்கின்றேன். உங்களிற்கு என்ன தேவையென்றாலும் போன் பண்ணுங்கோ முடிந்தால் செய்கிறேன். 'உண்மையில் பாதரின் சந்திப்பு கடலில் அகப்பட்டுத் தத்தளித்துக் கொண்டிருந்தவனிற்கு துரும்பொன்று அகப்பட்டதைப்போன்று எங்களிடத்தில்நம்பிக்கையைத் துளிர்க்க வைத்தது. பாதருடனான சந்திப்பை முடித்துக் கொண்டு மீண்டும் எமது படுக்கைகளிற்குத் திரும்பியபொழுது சிவகுமார் அருள்ராசா எங்களை குழ்ந்து கொண்டார்கள். பாதருடனான சந்திப்பு முழுவதையும் உரையாடலின் ஒவ்வொரு சொல்லையும் விடாமல் ஞாபகப்படுத்திக் கூறும்படிக் கேட்டுத்துளைத்தெடுத்து விட்டார்கள்
'இளங்கோபாத்தியா! யாரோ முன்பின் தெரியாத பாதர் அதுவும் எங்கடைநாட்டைச் சேராத இந்தியாவைச் சேர்ந்த பாதர் பேப்பரிலை பாத்துவிட்டு எங்களைப் பாத்து ஆறுதல் கூற வந்திருக்கிறார். ஆனா எங்கடை பிரச்சனையிலைதலையை போட்ட எங்கடை ஆட்கள்நாங்கள் எப்படியிருக்கிறோம் என்றுகூடப் போன்கூட அடித்துப்பார்க்கவில்லை." சிவகுமாரின் குரலில் சலிப்பு தென்பட்டது.
'தமிழ் அமைப்புக்காரங்களெல்லாம் இந்த நாட்டிலை 'எஸ்டா பிளிஸ்ட்' பண்ணிய சிட்டிசன் காரங்கள். நாங்களோ இந்த அரசிற்கு வேண்டாத விருந்தாளிகள். நமக்கேன்வம்பென்று ஒதுங்கிவிட்டார்கள் போலை 'அருள்ராசா கூறியதும் ஒருவிதத்தில் சரியாகத்தான் பட்டது. இந்த நிலையில் தான் பாதர் ஏபிரகாமின் வரவின் முக்கியத்துவம் எங்களிற்கு விளங்கியது. பாதரைப் பொறுத்த வரையில் எங்கள் விடயத்தில் பெரிதாகக் கவனம் எடுத்திருக்க தேவையில்லை. எடுத்து
EC760 அமெரிக்கா 3

வந்து ஒன்றிரண்டு ஆறுதல் வார்த்தைகள் கூறியதே எவ்வளவோ மேல் எனப்பட்டது.
இதன் பிறகு எங்கள் கவனம் பாதர் கொண்டு வந்திருந்த பத்திரிகைகளில் திரும்பியது. எங்களைப் பற்றிய செய்திகளை வெளியிட்டிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பத்திரிகைகள் பொஸ்டன் குளோப், சிலோன் டெய்லி நியூஸ் "ஏசியன் மொனிட்டர் மத்திய கிழக்கைச்செர்ந்த கல்ப்டைம்ஸ்முதலானபத்திரிகைகளே அவை, இதில்கல்டைம்ஸ்ஸில் வந்திருந்த செய்திஎங்களிற்குச்சிரிப்பைத்தந்தது. இரண்டு வாரங்களில் எங்களதுநிலைமைக்குத்தீர்வு கிடைக்கலாம் எனக் கருத்துப்பட அமெரிக்க அரசு அதிகாரியொருவர் கூறியிருந்தது பிரசுரமாகியிருந்தது. அதில் பொஸ்டன் குடிவரவு திணைக்கள அதிகாரியொருவர் திமோதி வீலன் என்பது அவர் பெயர். தாம் மத்திய அரசிடம் எங்கள் வழக்கை துரிதப்படுத்துமாறு கேட்டுள்ளதாகவும் இரண்டு வாரங்களில் முடிவு கிட்டலாம் எனக் கூறியிருப்பதும் பிரசுரிக்கப்பட்டிருந்தது. டெயிலிநியூஸில் பொஸ்டனிலிருந்து புருக்லீன் தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டிருந்த விடயமும் தமிழ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எங்களிற்காக வழக்கறிஞர் ஒருவரை அமர்த்தியுள்ள விடயமும் வெளியாகியிருந்தது. இவ்விதம் எங்கள் விடயத்தில் பெரிதாகத்தலையைப் போட்ட தமிழ் அமைப்பினர் பின்னர் ஏன் பின் வாங்கினார்கள் என்பது மட்டும் சரியாகத் தெரியவில்லை.
பாதர் ஏபிரகாம் எங்களைச் சந்தித்துப் போனபின் இரண்டு நாட் களின் பின் வேறிரண்டு எதிர்பாராத விருந்தாளிகள் எங்களைச் சந்திக்க வந்திருந்தனர் ஸ்பார்ட்டஸிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒலிவர் இங்கிரிட் ஆகிய இருவருமே அவர்கள். ஸ்பார்ட்டஸிஸ்ட் கட்சியினரைப் பொறுத்தவரையில் ட்ரொஸ்கியை பின்பற்றும் மார்க்ஸியவாதிகள் இவர்கள் பத்திரிகையில் இலங்கை தமிழர்களின் பிரச்சனை பற்றிய கட்டுரை வெளிவந்திருந்தது. அதில் ஜே. ஆரின் அமெரிக்க சார்பு அரசிற்கெதிராக தமிழ் சிங்களப்பாட்டாளிகள் ஒன்று சேர்ந்து போராட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டிருந்தது. எங்களை ஏதோ புரட்சிகரப் போராளிகள் போல் உருவகித்துக் கொண்டு எங்கள்
目 வ. ந. கிரிதரன் C7

Page 41
பிரச்சினைகளின் தீர்வு சிங்கள தமிழ் பாட்டாளிகளின் ஒன்றிணைந்த போராட்டத்தில் தான் தங்கியுள்ளதென்பதை அடிக்கடி எடுத்துக் கூறினார்கள். அமெரிக்க அரசு எங்களை நடத்தும் முறை பற்றி கவலை பட்டுக் கொண்டார்கள். இவர்களைப் பற்றி ராஜசுந்தரத்தாரிற்கும் சிவகுமாரிற்கும் நல்ல அபிப்பிராயமேயில்லை. 'இவங்களெல்லாம் சி.ஐ.ஏக்காரங்கள் எங்களை நாடி பிடித்து பார்க்கவாறாங்கள்' என்று ராஜசுந்தரத்தார் கூறியபொழுது குரலில் ஒருவித எச்சரிக்கை உணர்வு தென்பட்டது.
இவ்விதமாக எங்கள் தடுப்பு முகாம் வாழ்க்கை வரவேண்டிய விருந்தாளிகளின் வராத நிலை, எதிர்பாராத விருந்தாளிகளின் வரவு ஆகிய சந்தர்ப்பங்களை எதிர்கொண்டு தொடர்ந்தபடியிருந்தது. இதே சமயம் உலகந்டப்பிலும் குறிப்பிடும்படியான விளைவுகள் சில நிகழ்ந் தன. பிரயாணிகளுடன் சோவியத் நாட்டு எல்லைக்குள் அத்து மீறிப் பறந்த கொரிய விமானமொன்று ரஷ்ய படையினரால் சுட்டு வீழ்த்தப் பட்டது. இச்செயல் சர்வதேசரீதியில் ஒரு வித பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பெரும்பாலான நாடுகள் மத்தியில ரஷ்யாவிற் கெதிரான உணர்வுகளை கிளர்ந்தெழ வைப்பதற்குஇச்சம்பவம் பெரிதும் துணையாக இருந்தது. இதே சமயம் எம்நாட்டை பொறுத்த வரையில் கொழும்பு சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ் தாக்கப்பட்டதும், வவுனியாவில் இருதமிழ் இளைஞர்கள் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதும் குறிப்பிடும்படியான செய்திகள்.
எதிர்பாராத விருந்தாளிகளின் வரவினால் சற்றே தென்புற்றிருந்த எங்களது நிலைமை மீண்டும் சிறை வாழ்வின் தாக்கத்தால் நிலை மாறியது பழைய குருடி கதவைத் திறந்த கதைதான். ஆனால் பாதரின் தொடர்பு எங்களை உளவியல் ரீதியாக உறுதியாக்குவதற்கு பெரிதும் உதவியாகவிருந்தது. அடிக்கடி ஒருவர்மாறி ஒருவர் பாதருடன் போனில் கதைத்துக் கொள்வோம். பாதரும் எந்த நேரமென்றாலும் அலுக்காமல் சலிக்காமல் ஆறுதலாக இதமாக எங்களுக்குத் தேறுதல் சொல்வார். அந்தச்சமயத்தில்இவ்விதம் கதைப்பதே எங்களிற்குப் பெரிய தென்பைத் தந்தது. எங்களில் மிகவும் அதிகமாக ராஜசுந்தரத்தாரிற்குத்தான் பாதரின்
巨○ அமெரிக்கா E

தொடர்பு உதவியாகவிருந்தது. மனுஷன் பிள்ளை குட்டிகளை தவிக்கவிட்டு விட்டு இந்த வயசிலைநாடு விட்டுநாடு அகதியாக ஓடி வந்திருந்த நிலையில் தடுப்பு முகாம் வாழ்வு அவரை ஓரளவு நிலைகுலைய வைத்திருந்தது என்றுகூடச் சொல்லாம்.
இது இவ்வாறிருக்க தடுப்பு முகாமைப் பொறுத்தவரையில் புதியவர்கள் வருவதும் உள்ளேயிருப்பவர்கள் போவதுமாக காலம் போய்க் கொண்டிருந்தது. சிலர் நாடு கடத்தப் பட்டார்கள். சிலர் பிணையில் வெளியில் சென்றார்கள். ஆனால் எங்களைப் பொறுத்த வரையில் வழக்கு முடியும் வரையில் வெளியில் செல்லமுடியாது போல் Ull-gi.
இதற்கிடையில் டானியலின் வாழ்க்கையில் ஒரு வித மலர்ச்சி. அவனும் அடிக்கடி உணவுக்கூடத்தில் வேலை செய்வான். அவ்விதம் வேலை செய்யும்போது அவனது நாட்டைச் சேர்ந்த பெண் கைதியுடன் காதல் வயப்பட்டிருந்தான். குழந்தைத்தனம் சிறிது சிறிதாக அவனை விட்டுப் போய்க் கொண்டிருந்தது. இது தவிர இன்னுமொரு முக்கியமான விடயம் நாடு கடத்துவதற்காகக் காத்திருந்த நைஜீரிய இளைஞனொருவன் ஓரிரவு சன்னி கண்டு விட்டது போல் பிதற்றத் தொடங்கியது. பலவித எதிர்ப்பார்ப்புகளுடன் பணவிரயத்துடன் அமெரிக்கா வந்திருந்தவன் திட்டங்கள் நிறைவேறாத நிலையில் வந்திருந்தவன் நாடு கடத்தப்பட விருந்ததினால் அவனது புத்தி பேதலித்துவிட்டது என்று கூறிக் கொண்டார்கள். பேய் பிடித்துவிட்டது. என்றும் கதைத்துக் கொண்டார்கள். எங்கள் தடுப்பு முகாமில் இருந்த ஆபிரிக்ர்களில் ஒருவர் மந்திரதரந்திரங்களில் கைதேர்ந்த விற்பன்னராம். உடம்பில் குடியிருக்கும் கெட்ட ஆவிகளை ஒட்டுவதில் சமர்த்தராம்.
அன்று இரவு முழுக்க பேய்பிடித்த நைஜீரிய இளைஞனிற்கு ஆவியோட்டிக் கொண்டிருந்தார், நாங்களும் விடிய விடிய முழித்திருந்தோம். ஆபிரிக்க வாழ்வைக்காட்டும் ஆங்கிலப்படங்களில் வரும்மந்திரவாதிகளைப் போல் ஆபிரிக்க மொழியில் கெட்ட ஆவியை விரட்டிக் கொண்டிருந்த காட்சி வியப்பாகவும் சுவையாகவுமிருந்தது. புதுமையாகவுமிருந்தது. முகாம் பாதுகாவலர்கள் இந்த விடயத்தில் தலையிடாமல் பெருந்தன்மையுடன்நடந்து கொண்டார்கள்.
目 வ. ந. கிரிதரன் ○75

Page 42
ஆனால் மறுநாளிரவு அந்த இளைஞன் தனது சுயநிலைக்கு வந்து விட்டான். இது தவிர இன்னுமொரு முக்கியமான விடயத்தையும் கூறித்தான் ஆக வேண்டும். அது இரவு நேரத்தில் முகாமிலுள்ளவர்கள் படுக்கைக்குப் போகும்போது இறுதிக் கணக்கெடுப்பார்கள். இதை எடுப்பது பாதுகாவலர்கள்தரத்திலும் சிறிது கூடிய அதிகாரியொருவர். கறுப்பினத்தவர். பழைய ஆங்கில யுத்த மூவிகளில் வரும் கண்டிப்பான ஜேர்மன் ராணுவ அதிகாரியைப் போன்ற தோற்றம் கண்ணாடி அணிந்து தொப்பியுடன் முகத்தில் கடுமையுடன் கைகளைப் பின்புறமாகக் கட்டியவாறு கண்டிப்பான ராணுவ அதிகாரியை போல் கணக்கெடுக்க வரும் இவரைப் பார்க்க முகாமிலுள்ளவர்களிற்கு சிரிப்பாகவிருக்கும். பகல் முழுக்க பல்வேறு நினைவுகளுடன்மாரடித்துவிட்டு படுக்கையில் சாயும் நேரம் மனம் இலேசாகிக் கிடக்கும். குறும்பு செய்யும் எண்ணம் பரவிக்கிடக்கும். ரவிச்சந்திரன்தனது கட்டிலில்தலையணையை வைத்து போர்வையால் மூடிவிட்டு வந்துவிட்டு எங்களுடன் கதைத்த படியிருப்பான். இதுபோல் டானியலும் செய்வான். எங்களைக் கணக்கெடுக்க வரும் இந்த அதிகாரி ரவிச்சந்திரனை இரண்டு முறை கணக்கெடுத்து விட்டுச் செல்வார். அவர் தலை மறைந்ததும் எங்கள் கூடத்தில் குபிரென்று சிரிப்பு வெடிக்கும் சிரிப்பு வெடித்ததும் அதைக் கேட்டு உடனடியாக எமது கூடத்திற்குத்திரும்பும் எங்களை ஒருமுறை முறைத்து விட்டுச் செல்வார். ஆனால் கணக்கு பிழை என்று அறிவிப் பார்கள். மீண்டும் ஒரு முறை எண்ண அந்த அதிகாரி வருவார். இதற்கிடையில் ரவிச்சந்திரன் நல்ல பிள்ளையாகத் தன் படுக்கையில் போய்ப்படுத்திடுவான்.
இவ்விதமாக எங்கள் தடுப்பு முகாம் வாழ்வில் சுவையான சம்பவங்களும்இல்லாமலில்லை. வாழ்வு தொடர்ந்து கொண்டிருந்தது. நம்பிக்கையை நாங்கள் இன்னும் முற்றாக இழக்கவில்லை. பாதர் ஏபிரகாம் அடிக்கடி கூறுவார் 'ஒன்றிற்குமே கவலைப்படாதீங்க. இமிகிரேஷனிலை இதைத்தான் சொல்லுறாங்க 'ஒவ்வொருமுறை அவரிற்குப் போன் எடுக்கும் போது இதைத்தான் அவர் கூறுவார். பாதர் பாவம் அவரிற்கு நல்ல மனசு ஆனால் எங்களிற்குப் புரிந்திருந்தது
国 80 D. அமெரிக்கா E

பாதரிற்கே நம்பிக்கை போய்விட்டதென்று பாதரிற்கும் புரிந்திருந்தது எங்களிற்கும் குழலின் யதார்த்தம் தெரிந்து விட்டதென்பது. இருந்தும் சுதந்திரம் மறுக்கப்பட்டு கூண்டுக்கிளிகளாயிருந்த நிலையில் எங்களிற்கும் அத்தகைய ஆறுதல் வார்த்தைகளின் தேவையிருந்தது. அதே சமயம்நம்பிக்கையை இழந்து விடநாங்களும் விரும்பவில்லை. நம்பிக்கையின் அடிப்படையில்தானே இருப்பேநிலைநிறுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எங்களது நிலையை மாற்றிவைத்தது விஜயபாஸ்கரனின் வரவு.
இவன்முகத்தில் சிரிப்பு மறைந்துநான்பார்த்ததேயில்லை. எத்தகைய இக்கட்டுக்களையும் சமாளிப்பதற்கும் பழகியிருந்தான். யாழ்ப்பாணத் தில் பிரபலமானவர்த்தகர்களில் ஒருவராக விளங்கிய விநாசித்தம்பியின் ஒரே மகன். எங்களைப் போலவே கனடா செல்லும் வழியில் பிடிபட்டி ருந்தான். இவனைப் பார்க்கப் பாவமாயிருந்தது. நாங்களும் வந்து இரண்டரை மாதங்கள் ஓடிவிட்டிருந்தன. இவனும் இனிமேல் எங்களில் ஒருவன். வந்ததுமே எங்களது எண்ணங்களைச் சொல்லி இவனது மனதைக் குழப்ப விரும்பவில்லை. இவனது உறவினர்கள் பலர் நியூயார்க்கிலேயே இருந்தனர். அவர்களுடன் கதைத்தது விரைவாகவே பிரபலமான சட்டத் தரணியொருவரை தனக்காக அமர்த்திக் கொண்டான். இவனால் முடிந்ததைச் செய்யட்டும் என்று நாங்கள் பேசாமலிருந்தோம். இவன் வந்து சேர்ந்திருப்பது ஒரு இரும்புச் சிறை. இதை உடைத்துக் கொண்டு வெளியேறுவதென்பது அவ்வளவு சுலபமான செயலல்ல. காலம் அதனை இவனிற்கு உணர்த்திவைக்கும். ஏற்கனவே நாங்கள் முயன்று சோர்ந்திருந்தோம். எனவே நாங்கள் அறிந்திருந்தோம் இவனும் அனுபவத்தின்மூலம் அறிந்து கொள்வான். இதற்கிடையில் இலங்கையிலிருந்து நேராக வந்திருந்தால் நாட்டு நிலைமைகளை விசாரித்தோம். தொடர்ந்தும் தலைவிரித்தாடிக் கொண்டிருந்த இலங்கை அரசு பயங்கரவாதத்தை இவன் விபரித்த பொழுது இலங்கை அரசின் மீது பயங்கரமான வெறுப்பும் உணர்வு கலந்த கோபமும் வெளிப்பட்டன. விஜபாஸ்கரன் கூறினான். 'ஒவ்வொரு ஊரிலிருந்தும் பள்ளிக்கூடப் பெடியளெல்லாம்
目 வ. ந. கிரிதரன்

Page 43
இயக்கங்களில் சேர்ந்து கொண்டிருக்கிறான்கள். 'இனி பிரச்சனை முந்தினமாதிரி ஒரு பக்கஇடியாக இருக்காது."அதே சமயம் எங்களிற்கு ஒரு வித குற்ற உணர்வு தோன்றியது. நாட்டைவிட்டு கோழைகளைப் போலல்லவா தப்பி வந்திருக்கின்றோம். தொடர்ந்த சிவகுமாரின் சொற்கள் இதனை வெளிப்படுத்தியது. 'வெளியிலை போனால் இலங்கை அரசின் அக்கிரமங்களிற்கெதிராக வெளிநாட்டு மக்களைத் திருப்ப பாடுபடவேண்டும்.
'குறைந்தது எங்களால் முடிந்த எதையாவது செய்யவேண்டும் என்ற தொனிஅதில் தென்பட்டது. ஒரு வாரம் விரைந்தது. அப்பொழுதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அன்று விஜயபாஸ்கரனின் முகத்தில் இயல்பான புன்னகையை விட ஒருபடி புன்னகை கூடியிருந்தது விஷயத்தை அறியும் ஆவல் மண்டியிட்டது. அவன் கூறினான் 'என்ர லோயர் சொன்னவர் 'பொன்டி லை வெளியிலை போகலாமாம். இரண்டாயிரம் டொலர் கட்டினால் சரி என்ர அங்கிள் நாளைக்குக் கூட்டிப் போறார். நாளைக்கு அல்லது நாளன்றைக்குநான் வெளியிலை போகலாமாம். எங்களிற்குச் சந்தோஷமாகவுமிருந்தது. ஏக்கமாகவு மிருந்தது. அதே சமயம் புதிதாக ஒருவித நம்பிக்கையும் குடிபுகுந்தது. விஜயபாஸ்கரன் வெளியில் பிணையில் போக முடியுமென்றால், ஏன் நாங்கள் வெளியில் பிணையில் போக முடியாது? ராஜசுந்தரத்தாரிற்கு செய்திஅறிந்ததிலிருந்து இருப்புக் கொள்ளவில்லை.
"எங்கட விஷயத்தில் ஏதோ சுத்துமாத்து நடந்திருக்கு எதுக்கும் பாஸ்கரன் மூலமாய் இவன் லோயரிடம் விசாரித்து பார்ப்பம்'இதற்கு எல்லோரும் ஆமோதித்தோம் ஒரு வேளை எங்களது நிலைமைக்கும் விஜயபாஸ்கரனின்நிலைமைக்கும் இடையில் ஏதாவது சட்ட ரீதியான வேறுபாடுகளிருக்கலாம். இவ்விதம்நாங்களும் வெளியில் போகக்கூடிய சந்தர்ப்பமிருக்கும் பட்சத்தில் விஜயபாஸ்கரனின் 'லோயரை யே எங்களிற்காக அமர்த்துவது நல்லதாகப்பட்டது. விஜயபாஸ்கரன் தன் மாமா மூலமாக தனது லோயரிற்கு எங்கள் நிலைமையை எடுத்துக் கூறினான். வெளியில் வந்தால் அவரையே எங்கள் லோயராக வைக்க நாங்கள் முடிவு செய்ததையும் கூறியிருந்தான். எங்களது பொஸ்டன்
82 D. அமெரிக்கா E

லோயரின் டெலிபோன் நம்பரையும் கூறியிருந்தோம். அன்றிரவே எங்களிற்கு முடிவு வந்தது.
விஜயபாஸ்கரனின் மாமா பாதர் ஏபிரகாமிடம் எல்லாவற்றையும் கூறியிருந்தார். பாதர் ஏபிரகாம் எங்களிற்கு போன் பண்ணினார். நியூயார்க் லோயர் போன் பண்ணித்தான் பொஸ்டன் லோயரிற்கே எங்கள் விடயத்தில் ஏற்பட்ட தவறு தெரிந்ததாம். உடனடியாக பொஸ்டன் லோயர் இமிகிரேஷன் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டிருக்கிறார். இதன்படி இன்னும் ஒருவாரத்தில் நாங்கள் வெளியில் பிணையில் போகக் கூடியதாகவிருக்கும். இதுதான் பாதர் ஏபிரகாம் கூறியதன் சாராம்சம். எங்களிற்கு செய்தி தந்த களிப்பை வார்த்தையால் கூற முடியாது. அவ்வளவு சந்தோஷம் இறக்கை கட்டிக்கொண்டு பறப்பதை போலிருந்தது. உண்மையில் நாங்கள் விஜயபாஸ்கரனிற்குத்தான்நன்றி சொல்ல வேண்டும். இவன் மட்டும் வராமலிருந்திருந்தால் நிச்சயமாக எங்களிற்கு இந்த விடயம் தெரிந்திருக்கவே போவதில்லை. அப்படித் தெரிய வந்தாலும் அதற்கிடையில் எவ்வளவு நாட்கள் அல்லது வருடங்கள் ஓடி விட்டிருக்குமோ? விஜயபாஸ்கரனின் 'லோயர் மூலமாக பாதர் ஏபிரகாம் மூலமாக எமக்குக் கிடைத்த தகவல்களிலிருந்து அமெரிக்க அரசின் சட்டவிரோதகுடியேற்றக்காரர்கள் மீதான சட்டதிட்டங்களை அறியக்கூடியதாயிருந்தது.
சட்டபூர்வமாக நாட்டினுள் நுழைந்த ஒருவர் குறிப்பிட்ட அனுமதிக்காலம் முடிவடைந்த பின்னர் சட்டவிரோதமாக நாட்டினுள் தங்கியிருந்தால் இவர் சட்டவிரோதக் குடியேற்றக்காரர். அதே சமயம் சட்ட விரோதமாக கடல் மூலமாக அல்லது எல்லைப் புறத்தினூடாக நாட்டினுள்ந்ழைந்துவிட்ட ஒருவரும் சட்டவிரோதக்குடியேற்றக்காரர் தான். நாட்டிற்குள் ஒருவர் சட்டபூர்வமாக அனுமதிக்கப்படலாம். அல்லது சட்டவிரோதமாகவும் அனுமதிக்கப்படலாம். மேற்குறிப்பிட்ட வகையானவர்கள் சட்ட விரோதமாக நாட்டினுள் அனுமதிக்கப்பட்டு விட்டவர்கள் என்ற பிரிவினுள் அடங்குபவர்கள்.
E வ. ந. கிரிதரன் EKO 83DE

Page 44
இது போல் போலிப்பத்திரங்களுடன் விமானநிலையத்தில் அல்லது எல்லைப்புறத்தில் குடி வரவு அதிகாரிகளிடம் அகப்பட்டு விட்டால் இத்தகையவர்கள் சட்டவிரோதமாகக்கூடநாட்டினுள் அனுமதிக்கப்படா தவர்கள். அதே போல் கடல் வழியாக வரும் ஒருவர்நாட்டினுள் கால் வைக்கும் முன்னர் நீரில் வைத்தே பிடிபட்டு விட்டால் அவரும் சட்ட விரோதமாக நாட்டினுள் அனுமதிக்கப்படாத வகையைச் சேர்ந்தவர். அதே சமயம் இவ்விதம் கடல் வழியாகவோ எல்லைப்புறமாகவோ நாட்டினுள் நுழைபவர் நுழைந்தபின் பிடிபட்டால் சட்டவிரோதமாக அனுமதிக்கப்பட்டுவிட்ட குடியேற்றக்காரர்என்ற பிரிவில் அடங்குவார். சட்ட விரோதமாக நாட்டினுள் அனுமதிக்கப்பட்டு விட்டவர்களைப் பொறுத்தவரையில் இவர்கள் குடியரவு அதிகாரிகளிடம் அகப்பட்டு விட்டால் இவர்களிற்குப் பிணையில் வெளியில் செல்வதற்கு உரிமை உண்டு. இவ்விதம் அகப்பட்டவர்களிற்குக் குறிப்பிட்ட காலத்தினுள் பிணையில் செல்வதற்கான பத்திரங்கள் வழங்கப்பட வேண்டும். அதே சமயம் சட்ட விரோதமாகக் கூட நாட்டினுள் அனுமதிக்கப்படாதவர் களைப் பொறுத்தவரையில் அவரிற்கு அவரது வழக்கு முடியும் வரை வெளியில் செல்ல வழியில்லை. பிணையில் கூடச் செல்ல முடியாது.
ஒரு வேளை வழக்குநிராகரிக்கப்பட்டால்தடுப்புமுகாமில் வைத்தே நாடுகடத்தப்பட்டு விடுவார். எங்களைப் பொறுத்த வரையில் நாங்கள் ஆரம்பத்தில் சட்டபூர்வமாக நாட்டினுள் அனுமதிக்கப்பட்டவர்கள். எங்களது கடவுச் சீட்டுக்களில் பொஸ்ட்டனில் 'ட்ரான்சிட்' விசா அடிக்கப்பட்டிருந்தது. அவ்விதம் சட்டபூர்வமாக அமெரிக்க மண்ணில் இருந்த சமயமே டெல்டா ஏயார் லைன்ஸ் மறுத்த காரணத்தால் அமெரிக்காவிலேயே அகதி அந்தஸ்து கோர ஒரு வித நிர்ப்பத்தத்திற் குள்ளானவர்கள். குறிப்பிட்ட ட்ரான்சிட் விசா காலகட்டத்திற்குப் பின்னால் சட்டவிரோதமாக அனுமதிக்கப்பட்டவர்கள் என்றநிலைமை அடைந்தவர்கள். இங்குதான் அமெரிக்காகுடிவரவு அதிகாரிகள் பிழை விட்டு விட்டார்களாம். எங்களை சட்டவிரோதமாகக் கூடநாட்டினுள் அனுமதிக்கப்படாத பிரிவினராகக் கருதிநடந்து விட்டார்களாம். இங்கு தான் எங்களிற்குச் சந்தேகம்? தெரியாமல் தான் பிழை விட்டார்கள்? அல்லது தெரிந்தே தெரியாதது போல தவறிழைத்தார்களா? அதுதான்
EC84) அமெரிக்கா E

பிணை கூட மறுக்கப்பட்ட நிலையில் எங்களைத் தடுப்பு முகாமிற்கு வந்திருந்தார்கள். எங்கள் ஒவ்வொருவரிற்கும் நாட்டினுள் ட்ரான்சிட் விசாமுடிவடைந்த பின்னரும் தொடர்ந்துநின்றதால், சட்டவிரோதமாக நின்ற குற்றத்தைப் புரிந்ததற்காகத் தரப்படும் குற்றப் பத்திரிகைகள் தரப்பட்டன.
மேலும் அதில் குடிவரவுச்சட்டத்தின் பிரிவுகளான 241 (a) (2) 101 (a) (15) படி எங்களை நாடு கடத்துவதற்கான குற்றங்களை நாங்கள் புரிந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 28ந்தேதிநடந்த குற்றத்திற்காக நவம்பர் 23 ந் தேதி எங்களிற்கு குற்றப்பத்திரங்கள் கையளிக்கப்படுகின்றன. இதில் கூட எத்தனையோ விடயங்கள் மூடி மறைக்கப்பட்டு விட்டன. முதலாவதாகநாங்கள் சட்டபூர்வமாகநாட்டி னுள் அனுமதிக்கப்பட்டவர்கள்முறையாக ட்ரான்சிட் விசா எங்களிற்குத் தரப்பட்டிருந்தது. நாங்கள் சட்டபூர்வமாகத் தங்கியிருந்த கால கட்டத்திலேயே டெல்டா எயார்லைன்சும் மறுத்த நிலையில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்திருந்தோம்.
உண்மையில் எங்களிற்கும் இரண்டு வருடங்கள் தங்குவதற்கான விசா பெற்று வந்த ஒருவன் வந்து ஒரு வருடத்தின் பின்னர் அகதி அந்தஸ்து கோருவதற்கும் இடையில் சட்டரீதியில் வித்தியாசமே யில்லை. இவ்விதம் அகதி அந்தஸ்து கோரும் ஒருவனை இரண்டு வருடங்கள் கழிந்ததும் சட்ட விரோதமாகநாட்டில் இருப்பதாகக் கூறி கைது செய்வார்களோ? அப்படிநடப்பதாகத் தெரியவில்லை. அடுத்தது நாங்கள் அமெரிக்கக் குடிவரவு அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் நாட்டில் தொடர்ந்தும் ட்ரான்சிட் விசா முடிவடைந்த பின்னரும் தங்கியிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நாங்கள்தான் குறிப்பிட்ட காலத்திற்குள்ளேயே அமெரிக்க அரசிடம் அகதி அந்தஸ்த்து கோரி விண்ணப்பித்து விட்டோமே அவர்களின் அனுமதியுடன் தானே அதிகாரத்தில்தானே அவர்கள் காவலில்தானே தொடர்ந்தும் இருக்கி றோம். இவர்கள் எப்படி இவர்களுடைய அனுமதியில்லாமல் அதிகார மில்லாமல் தொடர்ந்தும்தங்கியிருந்தோமெனக் குறிப்பிடலாம்.
இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தது போல் இன்னுமொரு விடயம் இருந்தது. ஏறத்தாழ மூன்று மாதங்கள் ஆகஸ்ட் 28, 1983 இலிருந்து
E வ. ந. கிரிதரன் 35)

Page 45
நவம்பர் 13, 1983 வரை எங்களிற்கு அமெரிக்க அரசியல் சட்டத்தில் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ள டிெ அடிப்படை உரிமை கூட மறுதலிக்கப்பட்டிருந்திருக்கிறது. குற்றம் புரிந்ததாகக் கூறப்படும் பத்திரத்தை மூன்று மாதங்களின் பின்னர் கையளித்திருக்கின்றார்கள். இதை யாரிடம் போய் முறையிடுவது? இழந்து போன அந்தக் காலகட்டத்திற்கு யார் பொறுப்பு? இந்த மூன்று மாதங்களாக சிறைக் கைதிகளாக உளவியல் ரீதியில்நாம் அடைந்த பாதிப்புக்களிற்குப்பதில் சொல்வது யார் பொறுப்பு? அதுவும் சுதந்திர தேவியின் சிலை கம்பீரமாகக் காட்சி தரும் நியூயார்க் மாநகரில் தான் எங்கள் மனித உரிமைகள் எங்களிற்கு மறுதலிக்கப்பட்டிருக்கின்றது. வேடிக்கையா யில்லையா? ஒருவாறு எங்கள் தடுப்பு முகாம் வாழ்க்கை முடிவிற்கு வந்தது. அந்த மூன்று மாதங்கள் நாங்கள் எங்கள் உரிமையினை இழந்திருந்தோம். ஏற்பட்ட அனுபவங்களோ மறக்க முடியாதன. பல்வேறுநாட்டைச் சேர்ந்தவர்களுடன் பழகும் உணரும் சந்தர்ப்பங்கள் பயன்மிக்கவை. டானியல், ரிச்சர்ட், ரோமியோ, அப்துல்லா போன்ற நல்ல உள்ளங்களைப் பிரிவதை நினைக்கையில் வேதனையாகத் தானிருந்தது. எங்களிற்கு விடுதலை என்ற செய்தியை வரவேற்று மகிழ்ந்த அதே சமயம் தங்களது எதிர் காலத்தை எண்ணி அவர்கள் முகத்தில் படர்ந்த ஏக்க உணர்வுகளை எங்களால் உணரமுடிந்தது. அவர்களைப் பொறுத்த வரையில் சட்டவிரோதமாகக் கூடநாட்டினுள் அனுமதிக்கப்படாத வகையினர் என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள் வழக்கு முடியும் வரையில் அவர்களதுநிலை திரிசங்குநிலைதான் வழக்கில் ஒரு வேளை தீர்ப்பு சாதகமாகயிருக்கும் பட்சத்தில் நாட்டினுள் உரிமை களுடன் அனுமதிக்கப்படலாம். இல்லாதபட்சத்தில் நாடு கடத்தப் படலாம். அதுவரை ஏக்கங்களுடன் கற்பனைகளுடன் கனவுகளுடன் அந்த ஐந்தாவது மாடித்தடுப்பு முகாம் என்றழைக்கப்படும் சிறையினுள் வளைய வரவேண்டியதுதான், வேறு என்னதான் அவர்களால் செய்ய
(1ՔւգեւյԼճ?
SG= அமெரிக்கா 들

பின்குறிப்பு :
1983ம் ஆண்டு யூலைக்கலவரத்தைத் தொடர்ந்து கனடா புறப்பட்டபோதுநான் பயணம் செய்த அதே விமானத்தில் என்னுடன் வேறு 19 தமிழர்களும் பயணம் செய்தனர். பொஸ்டனில் நாங்கள் டெல்டா எயார்லைன்ஸ் எடுப்பதாக ஏற்பாடு. நாங்கள் பயணம் செய்திருந்த சமயம் கனடா செல்வதற்கு இன்னுமொரு பொதுநலவாய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில் எங்களிற்கு விசா தேவையாயிருக்கவில்லை. ஆனால் டெல்டா எயார்லைன்ஸ் எங்களை மொன்ரியால் கொண்டு செல்ல மறுத்துவிடவே பிரச்சனை ஆரம்பமாகியது. நாங்கள் 19 பேரும் அமெரிக்காவிலேயே அரசியல் அடைக்கலம் கோரவேண்டியநிலைக்குத்தள்ளப்பட்டோம். இதன்பின் எங்களை அமெரிக்கா அரசு பூருக்லீன்தடுப்பு முகாமிற்கு மாற்றியது. ஏறத்தாழ இரண்டு மாதங்கள் வரையில் அங்கு தடுத்து வைக்கப் பட்டோம்.
அங்கு எங்களிற்கு ஏற்பட்ட அனுபவங்களின் விளைவே உருப் பெற்ற இக்குறுநாவல் உண்மையில் 95 வீதம் உண்மைச் சம்பவங் களையும், அவ்வுண்மைச் சம்பவங்களிற்கு ஊறு விளைவிக்காத வகையில் 5வீதம் கற்பனையையும் கலந்து படைக்கப்பட்ட ஒரு வகை விவரணச்சித்திரமே. எங்கள் 19 பேரின் அனுபவங்கள் இங்கு ஐவரின் அனுபவங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதன் பொருட்டுக் கற்பனைப் பெயர்கள் பாவிக்கப்பட்டுள்ளன. இது தவிர இக் குறுநாவலில் விபரிக்கப்பட்டுள்ளதடுப்பு முகாம்நடைமுறைகள் சம்பவங்களெல்லாம் முழுக்க முழுக்க உண்மையானவையே. தற்போது அமெரிக்க அரசின் அகதிகள் தொடர்பான அணுகுமுறைகளில் சட்டதிட்டங்களில் எவ்வளவு தூரம் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது சரியாகத் தெரியவில்லை. ஏராளமான தமிழர்கள் அமெரிக்கா வழியாக வந்து கொண்டும் இருக்கின்றார்கள். அதே சமயம் 7.193தமிழோசையில் வெளிவந்த செய்தியொன்றின்படி, அளவெட்டியைச் சேர்ந்த
E வ. ந. கிரிதரன் C37)

Page 46
சிவகுருநாதன் சிவசெந்திநாதன் என்பவர் அமெரிக்காவில் ஆறுமாதங் களிற்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டு 31.12.92 நாடு கடத்தப் பட்டதாகவும் 3.193 ல் கட்டு நாயக்காவில் வைத்து கைது செய்யப் பட்டதாகவும் அறியக்கிடைக்கின்றது. ஆனால் இதே சமயம்தற்போதும் அமெரிக்கா விலுள்ள எத்தனையே தடுப்பு முகாம்களில் பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இவர்களது நிலை பரிதாபத்திற்குரியது. இத்தகையவர்களிற்கு இச் சிறுகுறுநாவலைச் சமர்ப்பிக்கின்றேன்.
தாயகம் 124.1.1992-29.1.1993
E அமெரிக்கா E
EKO 88


Page 47
நுட்பம், பொதிகை, புரட்சிப்பாதை, போன்ற பத்திரிகைகள் சஞ்சிகைகள் 'கணங்களும் குணங்களும்'அமெரி அருச்சுனனின் தேடலும் அகலிை நாவல்கள் தாயகம்" இதழிலும்
பாதை"யிலும் வெளிவந்தன. நல் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் தாய வெளிவந்தன. "அண்டவெளி ஆய் விஞ்ஞானக் கட்டுரைகளை வீரே இவரது 'மண்ணின் குரல்" (கனடா அதிமானுடா' (கவிதைத் தொகு வந்துள்ளன.தற்போது கனடாவில்
blO
 

வா.ந.கிரிதரன்
கட்டடக்கலை இலத் திரனியற் பொறியியற் தொழில் நுட்பத் துறை களில் பட்டதாரி. இவ ரின் சிறுகதைகள்,நாவல் கள், கட்டுரைகள், கவி தைகள், சிறுவர்க்குரிய ஆக்கங்கள் போன்றன ஈழநாடு, வீரகேசரி,தின கரன், சிந்தாமணி, வெற் றிமணி, சிரித்திரன், கண் மணி, தாயகம், தேடல்,
குரல், சுபமங்களா, கணையாழி ரில் வெளிவந்துள்ளன. ரிக்கா', 'வன்னிமண், நவசீதா, கயின் காதலும் '1983" ஆகிய "மண்ணின் குரல்" "புரட்சிப் லூர் ராஜதானி நகர அமைப்பு" பகம், ஈழநாடு போன்றவற்றில் வு, சார்பியல் தத்துவம்' பற்றிய கேசரி பிரசுரித்தது. ஏற்கனவே வின் முதற் தமிழ்நாவல்) எழுக ப்பு) ஆகிய நூல்கள் வெளி வசிக்கிறார்.
fist