கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2001.08

Page 1

フー
===-س، D
0க்கியச் சஞ்சிகை

Page 2
னைவமிக்கல் நி ழித் P: каль
உன்னை நினைவூட்டிய ஒவ்வொரு தடயத்தையும்
கவனமாக அகற்றுகிறேன் சுவரில் தொங்கிய படத்தையும்
தொங்கவைத்து ஆணியையும் அகற்றி ஆணி இருந்த துளையையும் அடைக்கிறேன் உன் கடிதங்களை ஒன்று விடாமல் எரித்து
வைத்திருந்த காகித உறையையும் தூளாக்குகிறேன் நீ தந்த பரிசுப் பொருட்களைக் குப்பையில் இட்டால் அவை ஒரு வேளை என்னிடம் மீளலாம் என்று குழி தோண்டிப் புதைக்கிறேன் தோட்டத்தில் உன் விரல் தொட்ட ஒவ்வொரு ச்ெடியையும்
வேரோடு களைந்து எறிகிறேன் நீ ஒழுங்குபடுத்திச் சென்ற என் மேசையை
மீளவும் ஒழுங்கீனமாக்குகிறேன். உன்னை நினைவூட்டக் கூடாத ஒவ்வொன்றுமே உன்னை நினைவூட்டுகின்றனவே!
ஒன்றும் விளங்கவில்லை!
உண்மையைக் கூறு உன் நாட்டின் மக்கள் தொகை என்ன? எங்கள் நாட்டில் சிங்களவர் தமிழர் முளப்லிம் பறங்கியர்கள் இந்திய வம்சாவழி வந்தோர் இத்தனை பேர் வாழுகிறார் நான் ஒன்று கேட்க நீ ஒன்று சொல்லுக்றாய் வேறென்ன சொல்ல இன்னும் விளக்கம் வேண்டுமெனின் இதோ! சாதிகளில் பெளத்தர்கள் சதவீதம் அறுபத்திரண்டு சிங்கள மொழி பேசும் சீரியர்கள் எழுபத்தொன்பது
கவிஞர் ஏ.இக்பால் கிறிஸ்தவர் முஸ்லிம் தமிழர் பறங்கியர்கள் எனக்காட்டிக் கூறுகையில் முப்பத்தெட்டு வீதம்! அதற்குள்ளே நூறு வீதம் பெளத்தர்கள் வாழ்வதுபோல் பம்மாத்து இங்கே இலங்கைப் பிறப்புக்கள் முழு நாடும் வாழுவதை ஏற்பதற்கு என்ன குறை எனக்கொன்றும் விளங்கவில்லை! சாதி மொழி பேசி சரிந்து விழுவதையே ஒதியுணராது இலங்கை மக்கள் ஒன்றுபட ஏன் தயக்கம்! எனக்கொன்றும் விளங்கவில்லை

உள்ளே.
《《།།
28:
á18373)
g:WikiFig
பகிர்தலின் மூலம்
விரிவும் ஆழமும்
பெறுவது
சூானம்
பிரதம ஆசிரியர்: தி.ஞானசேகரன் இணை ஆசிரியர்கள்: ந.பார்த்திபன் ஞா.பாலச்சந்திரன்
ஞானம் சஞ்சிகையில் பரசுரமாகும் படைப்புகளின் கருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடை
பவர்கள்.
தொடர்புகளுக்கு.
தி.ஞானசேகரன் 1977, பேராதனை வீதி, கன்டி. GETT. CELI. --08-478570 (Office)
08-23.4755 (Res.)
-SOSO
Fax - 08-34755
E-Mail-gnanamı?sltuetilk
பொம்புளப்
குறுநாவல் புதிய மலர்கள் மலர்கின்றன . 07 மொழிவரதன்
சிறுகதை
எம்.சுஹாதா.பீ.
கட்டுரைகள் வண்ணி மண்ணில் சிலம்பு கூறல் ... 04 இரா. சிவலிங்கம் இலக்கியப் பணியில் இவர். 20 ந. பார்த்திபன் எழுதத் தாண்டும் எண்ணங்கள் . 22 கலாநிதி தரை மனோகரன்
கவிதைகள் நினைவழித்தல் . 02 சி.சிவசேகரம் ஒன்றும் விளங்கவில்லை. 02 கவிஞர் ஏ.இக்பால்
ofôIDT ..................................................... é கலைஞண் கே.நாகேந்திரன் 5ĩIổ Iü8Xio"bú........................... ? 4 வே.தினகரன்
"ஞானம்". ... . . . . . . . . . 26 மட்டுபில் 'சதாசிவம் ان2 = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = ۔ ۔ ۔ ۔ ۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔ ۔ ?
சதவமணிதேவி வாழ்க்கை ஓர் மெழுகுவர்த்தி. 31 கந்தளாய் ஏ-தாரிக் எது நிஜம். தே. சங்கீதா உறைந்து போன மனிதர் . 32 பாை கோதுரோகவன்
. 31
நூல் மதிப்புரை. 25 கே. விஜயன்
ఈIITF6 பேசுகிறாம் +++ H++ 2
புதிய நூலகம் .30 அந்தனிஜீவா
அட்டைப்படம் - நா.ஆனந்தன்
OG

Page 3
வன்னி மண்ணில் சிலம்பு கூறல்
- சில சிந்தனைகள் இரா சிவலிங்கம் B.A.(Hons.)
இலங்கையில் கண்ணகி வழக்குரை, கோவலனார் கதை ஆகிய கதைப் பாடல்கள் உள்ளன. இவை இரண்டுமே ஒரே கதையைக் கூறுகின்றன. மட்டக் களப்பில் கண்ணகி வழக்குரை சிறப்பிடம் பெற்றுள்ளது. இக்காவியம் பற்றியும் மட்டக்களப்பில் கண்ணகி வழிபாடுபற்றியும் பண்டிதர் வி.சி.கந்தையா, ம.சற்குணம் போன்றோர் விரிவாக ஆராய்ந்துள்ளனர். வன்னிப் பிரதேசத்திலும் கண்ணகி வழிபாடு சிறப்பாக இடம் பெற்றுள்ளபோதும், இதுபற்றி ஆழமான ஆய்வுகள் வெளிவரவில்லை. மட்டக்களப்பு மக்களுக்கு கண்ணகி வழக்குரை இருப்பது போன்று, வன்னி மக்களுக்கு கோவலனார் கதை அல்லது சிலம்பு கூறல் விளங்கு கின்றது.
தமிழிற் தோற்றம் பெற்ற முதற் காப்பியமான சிலப்பதிகாரத்தைப் பின்பற்றி எழுந்தனவே இவ்விரு கதைகளுமாகும். உயர்ந்தோர் இலக்கியமான சிலப்பதிகாரக் கதை மக்களிடம் பரவியபோது, மக்கள் அக்கதையினைத் தமது வாழ்வு நெறி களுடனும், உணர்வுகளுடனும் நோக்கத் தலைப்பட்டனர். காலவோட்டத்திற் கதைக்கு ஒரு கிராமிய வடிவம் உருவாகத் தொடங்கியது. இதனால் சிலப்பதிகாரக் கதை ஈழத்திலே கிராமியப் பண்பும் சமயப் பண்பும் கொண்ட கதையையும் தோற்றுவித்தது.
கண்ணகியைத் தெய்வமாகக் கொள்வதில் ஆறுமுகநாவலர் தயக்கம் காட்டினார். (இதற்கான காரணங்கள் விரிவான ஆய்வுக்குரியன). இதனால், யாழ்ப்பாணத்திலுள்ள பெரும்பாலான கண்ணகியம்மாள் கோவில்கள் மனோன் மணியம்மாள் கோவிலாகவும், இராசஇராஜேஸ்வரியம்மாள் கோவிலாகவும் மாறி விட்டன. ஆனால், நாவலரது நடவடிக்கைகள் அழுத்தம்பெறாத வன்னிப் பிரதேசத்தில், இவ்வழிபாடு சிறப்பாக நிலவிவருகிறது.
கோவலனார்கதை ஏடு வற்றாப்பளை கண்ணகையம்மன் திருவிழாக் காலத்தில் படிக்கப்படுகின்றது. வைகாசிப் பூரணையை அண்டிய ஒரு திங்கட்கிழமை இக்கதையைப் படிக்கத் தொடங்குவர். இதனைப் 'படிப்பு என்று கூறுவர். திங்கட் கிழமை படிப்புத் தொடங்கினால் அடுத்த திங்கட்கிழமை பொங்கலுடன் படிப்பு முடிவடையும். படிப்புத் தொடங்கி ஐந்தாம் நாள் கலியாணப்படிப்பு நடைபெறும். கோவலனுக்கும் கண்ணகிக்குமிடையே நடைபெற்ற திருமணம் பற்றிய கதை படிக்கப்படும். ஆறாம் நாள் படிப்பு “மாதவி கூத்து" எனவும் ஏழாம் நாள் படிப்பு *சிலம்புகூறல்” எனவும் அழைக்கப்பட்டன. கோவில் பூசகர் ஒவ்வொருநாளும் காப்புச்செய்யுள் படிப்பினை ஆரம்பித்து வைப்பார். கோவலனார் கதையிலுள்ள இரண்டு காப்புச் செய்யுள்களையும் படித்த பின்னரே கதை படிக்கப்படுவதுண்டு.
கடவுள் வணக்கப் பாடல்கள் 21 உள்ளன. இவை தவிரப் பாயிரச் செய்யுள் களைத் தும்பளையைச் சேர்ந்த கதிர்காமர் மகன் சங்கரன் பாடினார் என இருப தாவது பாடல் மூலம் அறியமுடிகிறது. கோவலனார் கதையை இயற்றியவர் குடாரப்பு என்னும் இடத்தினைச் சேர்ந்த கந்தரின் மகன் வெற்றிவேலர் எனப் பாயிரம் மூலம் அறியமுடிகிறது.
O4

கண்ணகி, மதுரையை எரித்த பின் இலங்கை வந்து பத்து இடங்களிற் தங்கியதாகவும், பத்தாவது இடமே பத்தாம்பாளை எனவும், அதுவே வற்றாப் பளையென மருவியதெனவும் கூறுவர். இலங்கைக்கு வந்த கண்ணகி வற்றாப் பளையில் தங்கியதைப்பற்றி,
"எதிதணிய மழை கொடுத்து இடைச்சியர் செய் பூசை கண்டு பெரியவதி சுயமுடனே பெண்ணணங்கு மிலங்கை நல்கி உரியபல தலங்களிலே உற்றசில பூசைகண்டு சரியரிய வரங் கொடுத்துத் தாழ் குழலாள் வற்றாப்பளையில் மருவியிருந் தருள் கொடுத்து வளர் கதிரை மலையணுகி அருவியுயர் கயிலை சென்றும் ஐயனிடத் தமர்ந்தனளே” என்ற பாடல் மூலம் அறியலாம்.
சிலப்பதிகாரத்தில் புகார்க் காண்டத்தில் இடம்பெறும் நிகழ்வுகள் யாவும் கோவலனார் கதையில் பூர்வகாண்டம், நாகமணிக்காண்டம், பூம்புகார்க்காண்டம், வஞ்சிக்காண்டம், மதுரைக்காண்டம் ஆகிய ஐந்து காண்டங்களில் காட்டப்படுகின்றது. நாகமணிக் காண்டத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள் எதுவும் சிலப்பதிகாரத்தில் இடம்பெறவில்லை. சிலப்பதிகாரத்தில் கூறப்படாத செய்திகள் கோவலனார் கதை யில் இடம்பெறுகின்றன. சிலப்பதிகாரக்கதை சோழநாடு, பாண்டிநாடு, சேரநாடு எனத்தொடர, கோவலனார் கதையில் கதை முழுவதும் சோழநாட்டிலேயே தொடர்கிறது.
சிலப்பதிகாரத்தில் வஞ்சிக்காண்ட நிகழ்வுகள் சேரநாட்டில் நிகழ்வதால் வஞ்சிக்காண்டமெனப் பெயர் பெற்றது. கோவலனார் கதையில் வஞ்சிக்காண்ட மாதவியினுடைய நடன அரங்கேற்றம், கோவலனும் மாதவியும் ஒன்றாய் வாழ்ந் தமை, கோவலனிடம் பொருள் பறிக்க மாதவியும் சித்திராபதியும் சேர்ந்து சூழ்ச்சி செய்தமை போன்றவற்றையே கூறுகின்றது. மாதவியின் தாய் கோவலனை வஞ்சித் தமையால் இப்பகுதிக்கு வஞ்சிக்காண்டம் எனப் பெயர் ஏற்பட்டிருக்கலாம்.
சிலம்பைக் காரணமாகக் கொண்டு கதை நிகழ்வதால் தமது காவியத்திற்கு இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எனப் பெயர் சூட்டினார். சிலப்பதிகாரம் கற்பு ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க, கிழக்கு மாகாணத்தில் வழக்கிலுள்ள கதை கண்ணகியை நீதியின் தேவதையாகக் காட்ட முனைகின்றது. இதனாலேயே கண்ணகி வழக்குரை என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம். பெண்ணிலைச் சிந்தனை யாளர்கள் இப்பெயர்ப் பொருத்தம் பற்றி விதந்துரைப்பர். மாறாக வன்னியில் வழங்கும் கதை கோவலனார் கதை என வழங்குகிறது. இது பின்னர் ஆணாதிக்க சிந்தனையை வெளிப்படுத்துவதாகக் கருதுவதாலேயே "சிலம்பு கூறல்” என்ற பெயர் பின்னர் ஏற்பட்டிருக்கலாம். −
மட்டக்களப்புக் கண்ணகி வழக்குரைக்கும் வன்னிப்பிரதேசக் கோவலனார்
05

Page 4
கதைக்குமிடையே பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. கண்ணகி வழக்குரை காவியம், கண்ணகி வழக்குரைப்பதோடு முடிவடைகிறது. ஆனால், கோவலனார் கதையோ அதற்குப் பின்னர் மீட்சிக் காண்டம் என்றொரு பகுதியினையமைத்து, அதில் கண்ணகி மதுரையைத் தகனம் செய்ததும்,
பூசை செய்தங் கிடைச்சியர்கள்
பொற்கொடியை வீழ்ந்திறைஞ்சி
தேசொளியே பாண்டியன் செய்
தீ வினையி னானசினம்
நாயகியே குளிர்ந்தருள்வாய்
நற்கொடியே குளிர்ந்தருள்வாய்
6urrëF(Ljpg|D LIDIT60T ET &Bfr
மாமகளே குளிர்ந்தருள்வாய்
என்று அம்மன் கோபந்தணிந்ததுவும், அவர்களது பூசையை ஏற்றதும்,
இலங்கை வந்து வற்றாப்பளையில் தனக்குப் பூசை செய்யும்படி கூறுவதும் ஆகிய செய்திகள் கூறி, முடிவடைகின்றது. இவ்வாறு, பல வேறுபாடுகளைக் கொண்டமையும் இருகாவியங்களும் ஒப்பீட்டடிப்படையில் ஆழமான ஆய்வுக்குட் படுத்தப்பட வேண்டியவை. வன்னியில் கண்ணகி அம்மாள் கோவில்களில் படிக்கப் படும் ஏடுகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு ஒப்புநோக்கி ஆராயப்படுவதோடு, கோவலனார் கதை பற்றி இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பின் படிப்பு ஆய்வுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் நூலுருப் பெறுதல் அவசிய LDITGig5 T5b.
மணிக்கொடியில் உயிர் இழைத்து 9. LD L DIT பத்திரமாய் பத்துமாதம் கருவறையில்
எனைஉருவாக்கிய அன்னையே! எனை இந்த உலகிற்கு அடையாளம் இட்டவள் உனது திருப்பாதங்களுக்கு எனது சிரசு
என்றும் அடிமை அம்மா! பாலூட்டும் போதே அன்பும் பண்பும் அறனும் 器 சேர்ந்தே பகிர்ந்துரட்டுபவள் தாயவள். 출 எனை அழகிட்டு கன்னக்குழியில் பொட்டிட்டு
Se அம்புலி காட்டி உணவூட்டி தாலாட்டுப் பாடுபவள்ه * 3 துன்பச் சூளையில் அவள் குளித்தாலும் ཁཚེསྤྱི་ இன்பத்தை மட்டும் எனக்களித்து
அன்பு வளர்க்கும் புவித் தெய்வமவள் சின்னச் சின்ன பாதங்களை சித்திரமாய் ரசிப்பவள் பூவிதழ் சிரிப்பில் மகிழ்ந்து சிலிர்ப்பவள் 影 மழலை மொழியை இன்பமென நினைத்திடுவாள்
அந்தத் தாய்க்கு நிகர் வேறெதுவும் உணர்டோ இந்த அவனியில்,
O6
 
 
 
 
 
 

புதிய மலர்கள் மலர்கின்றன (குறுநாவல்)
() ay Ra at سر τ υι μυ), εξ ου ν ρνουν τ
(மலையக இளைஞர் முன்னணி நடாத்திய ‘மலையக குறுநாவல் போட்டியில் பரிசும் பாராட்டும் பெற்றது.)
பனி பொழியும் காலை. வெண்மேகக் கூட்டங்கள் எங்கும் பரவிக்கிடக் கின்றன.
ராஜா, அனுலா வரும் அந்த ஒற்றையடிப் பாதையையே பார்த்துக்கொண்டு நிற்கின்றான். வெண்மேகப் போர்வைக்கிடையிலும் தூரத்தே அனுலா வருவது அவனுக்கு 'கறுப்பு நெகிட்டிவ்வில் தெரியும் உருவம்போல் மங்கலாகத் தெரிகிறது. பச்சைநிற வயல் வெளியினிடையே உள்ள அந்த ஒற்றையடிப் பாதையிலே அவளது சிவந்த கால்கள் மேலும் அழகு பெறுகின்றன. வயல் தண்ணிரில் முழுகி எழுந்து வரும் காலைக்காற்று அவளது கவுனுடன் கொஞ்சுகிறது.
"குட் மோனிங்" அவளது குரல் நளினமாய் ஒலிக்கிறது. "குட் மோனிங்" அலறும் அலாரமாய் பதிலுக்கு ஒலித்து அடங்குகிறது அவனது குரல்.
இருவரும் நடக்கின்றனர். ஆதவனின் சூடான கதிர்கள் அவர்களது பின்புறத்திலே விழுகின்றன.
ராஜாவின் இருபது இருபத்திரண்டு வருட கால வாழ்க்கையிலே எத்தனையோ சிங்கள சகோதர சகோதரிகளுடன் பழகி உள்ளான். இதன் பலனாக அவன் பெற்ற அநுபவங்கள் பல. என்றாலும்கூட அவன் அனுலாவுடன் பழகியதன் பின்னர்தான் பல விஷயங்களையும் அவர்களைப்பற்றிய பல விளக்கங்களையும் பெற்றான் எனலாம். அனுலாவுடன் பழகியதன் பின்னர்தான் சிங்கள விவசாயிகளது பிரச்சினைகளையும் உணர்வுகளையும் நன்கு உணரக்கூடியதாக இருந்தது. அவள் தனது சிந்தனையைச் சரியான வகையிலே பிரயோகித்து விவசாயிகளினதும் தொழிலாளர்களினதும் பிரச்சினைகளைத் தொட்டுக் காட்டக் கூடியவளாய் இருந்தாள். அதற்குக் காரணம் அவளும் ஒரு கூலி விவசாயியின் மகளாய் இருந்தமையாகும்.
இருவரும் நடக்கின்றார்கள். எங்கும் ஒரே மாணவ, மாணவியர் கூட்டம். அந்த நேரத்திற்கே உரிய 'சரக் சரக்' எனும் பாதணிகளின் இரைச்சல். தோட்டப் பகுதியிலிருந்தும் கிராமப் பகுதியிலிருந்தும் வரும் பாடசாலைப் பிள்ளைகள் வரும் பாதை அது. வழமையாக அவர்கள் நடந்துவரும் பாதை. அனுலா ராஜா இருவரையும் பொறுத்தவரையில் அவர்களது கடந்த சுமார் ஆறு வருட கால பழக்கத்திலே தம்மைச் சார்ந்த இனத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கின்றனர். நேற்று தோட்டத் தொழிலாளரின் வாழ்வைப்பற்றிக் கதைத்தபோது மனங்கலங்கிய அவள் இன்றும் அதனைப்பற்றி ஏதாவது சொல்வாள் என்றே ராஜா நினைத்தான். அவள் நேற்றுவிட்ட இடத்திலிருந்து கதையை ஆரம்பித்தாள்.
“சிங்கள விவசாயியின் பிரச்சினையைவிட தோட்டத்தொழிலாளரின் பிரச் சினை சில வழிகளில் மாறுபட்டதாகவே உள்ளது. சிங்கள விவசாயியைப்
07

Page 5
பொறுத்தவரையில் அவன்தான் இந்நாட்டின் பிரஜை என்பதை உறுதிப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அப்படி ஒரு பிரச்சினையே அவனுக்கு இல்லை. அவனுக்கு சாதாரணமாக இந்நாட்டின் பிரஜை என்ற ரீதியிலே எத்தனையோ சலுகைகள் கிடைக்க இடமிருக்கிறது."
இடையிலே குறுக்கிட்ட ராஜா சொன்னான்: "தோட்டத் தொழிலாளியின் வாழ்விலே." "அவனது வாழ்வே நிர்க்கதியாய் உள்ளது. இந்நாட்டிலே பிறந்து இந்த மண்ணுக்கே தம்மை அர்ப்பணித்து வாழும் அவர்களை நாட்டைவிட்டே வெளியேற்ற சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. உழைப்பவரின் சக்தியைப் பயன்படுத்தி நாட்டினை அபிவிருத்தி செய்வதனை விட்டுவிட்டு அந்த உழைப்பை இழக்க இந்நாடு கங்கணங்கட்டிக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து அவர்களின் சுய வடிவம் தெரிகிறது” என்றாள் அவள்.
“ஒரு பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த நீங்கள் இவ்வளவு தெளிவாக எங்களது நிலையை உணர்ந்து கொண்டதற்காக நான் சந்தோஷப்படுகிறேன். இப்ப நம்ம ரெண்டு பேரும் வெவ்வேறு மொழி பேசுபவர்களாக இருந்தாலும்கூட ஒரு விஷயத்தில் நம்ம ரெண்டு பேரும் ஒன்று படுறம்."
அவள் குறுக்கிட்டுச் சொன்னாள்: "நம்ம ரெண்டு பேருமே ஒழைக்கிறவங்களுடைய பிள்ளைகள் என்ற ரீதியில ஒன்று படுறம்.”
"ஆமா சாதி, மத, மொழி இவை எல்லாவற்றிற்கும் மேலாக இங்க நம்ம ரெண்டு பேரும் வர்க்க உணர்வுக்கே முதன்மை கொடுக்கிறோம் என நினைக்கிறேன். ஆனா இந்த உணர்வைத்தான் காலங்காலமாகப் பல சக்திகள் மழுங்கடிக்க சதி செஞ்சிச்சு.”
"நீங்க சொல்லறது உண்மைதான்.” அவன் தொடர்ந்தான்: "பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் சரி, முதலாளித்துவமும் சரி, தேசிய முதலாளித்துவமும் சரி இந்த உணர்வைத்தான் விரும்பாமல் இருந்துச்சு. பிரிட்டிஷார் தேயிலைத் தோட்டங்களை இங்கே உண்டாக்கியபோது உள்நாட்டு சிங்கள விவசாயிகள் ஏதோ உழைக்க முன்வராதது உண்மையாய் இருக்கலாம். ஆனா, அதற்கும் மேலாக ஏகாதிபத்தியம் ஒரு சிறுபான்மை இனத்தவரான தமிழர்களைக் கொணர்ந்து குடியேற்றியபோது கண்டியில் சிங்களவர்களின் காணிகள் பறிமுதலாக்கப்பட்டது உண்மைதானே?"
அவள் சொன்னாள்: "பறிமுதலாக்கப்பட்டது மாத்திரமா? எவ்வளவோ குறைந்த விலைக்கு அவை விற்கப்பட்டன. இது கண்டியர்களின் மனதை பெரிதும் புண்படுத்திய ஒரு செயலாகும்.”
"ஆம், இதுவே சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் ஒரு பகைமையாயிற்று. இவ்விரு சமூகங்களுக்குமிடையே அமைந்த இரும்புத் திரையாயிற்று. இதனை ஏகாதிபத்தியமும் அதன்பின் முதலாளித்துவமும் நிரந்தர பகையுணர்வாக மாற்றுவதில் பின் நிற்கவில்லை. அவர்கள் விதைத்த அந்த விதை முளைத்து இன்று நச்சுவாடை வீசுகிறது." என்றான் அவன்.
08

"இலங்கையைப் பொறுத்தவரையில் இரு பெரும் சமூகங்கள் இருப்பதனை என்னால் உணரமுடிகிறது. அவர்களுக்கு இரண்டு விதமான மொழிகளும், சமயங்களும் இருக்கின்றன. கடந்த நூறு நூற்றைம்பது வருடகால மலைநாட்டுத் தொழிலாளரின் வாழ்விலே மட்டுமல்லாது இலங்கைத் தமிழ் விவசாயிகளின் வாழ்விலேயும் கூட அவர்களது தமிழ் மொழியும் அரசியல் வியாபாரப் பொருளாக்கப்பட்டிருப்பதை எவராலும் மறுக்கமுடியாது. இதேபோல பெரும்பான்மை இனத்தவரின் வாழ்விலேயும்கூட விவசாயிகள் என்ற ரீதியிலே சிறுபான்மை தொழிலாளர் விவசாயி இனத்துடன் இணைய இதுவே பலரால் பிழையான விளக்கங்களுடன் அரசியல் வியாபாரமாக்கப்பட்டுள்ளது என்பதனை மறுக்க முடியாது.” என்றாள் அவள்.
"தமிழர்களைப் பொறுத்த வரையில் நான் ஒன்றைத் தெளிவாக உங்களுக்கு விளங்கப்படுத்த விரும்புகிறேன். அவர்கள் எப்போதுமே இந்நாட்டுக்கு விசுவாசமாகத்தான் இருக்க விரும்புகிறார்கள். ஆனா அந்த விசுவாசத்திற்கு உரமிடும் வகையில் இந்நாட்டு சனநாயக அரசாங்கம் என்றழைக்கப்படும் அரசுகளின் நடவடிக்கைகள் அமையவில்லை. இதனால் விரக்தியும் வெறுப்பும் அவர்கள் இதயங்களிலே கனல்விட்டுக் கொண்டிருக்கின்றன. எனினும் புதிய சமுதாயமோ அதை எதிர்த்துப் போராடி தங்கள் இரத்தத்தையும் தியாகம் செய்யத் தயாராகிவிட்டது."
அவர்களது நடை சற்று தடைப்பட்டது. தூரத்தே தேயிலை மலைகளில் பல நிறங்களில் மெழுகு ரெட்டை அணிந்து கொண்டு பெண்கள் கொழுந்தெடுத்துக் கொண்டிருக்கும் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். அந்த உழைக்கும் கரங்களின் நளினத்தையும் அதேநேரத்தில் அவர்களின் களங்கமில்லாத சிரிப்புக்குப் பின்னே மறைந்து கிடக்கும் இருளையும் அவளால் உணர முடிந்ததுபோல் முதலில் அவர்களைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் பின்னர் அதனை விரும்பாதவள்போல், "கொடுமை! கொடுமை!!” எனச் சத்தமிட்டாள்.
சலசலத்தோடும் ஒரு சிற்றாற்றின் ஓரத்திலே நின்று அவள் அவ்வாறு கத்தியது அவன் இதயத்துள் அலவாங்கை இறக்கியதுபோல் இருந்தது!
“அனுலா." அவனது குரல் அந்தச் சிற்றாற்றின் சலசலப்புக்கிடையிலும் அவ்வாற்றின் கரையினிலே வளர்ந்தோங்கி நிற்கும் மூங்கில்களினது அசைவின் சப்தங்களுக்கிடை யிலும், தூரத்தே சவுக்கு மரங்களில் இருந்து பாடிக்கொண்டிருக்கும் கரிச்சான் குருவிகளது குரல்களுக்கிடையிலும் மேலோங்கி ஒலித்தது. அவன் சொல்கிறான்: "அனுலா, வெறும் உணர்ச்சிமயமான கோஷங்களோ நடவடிக்கைகளோ வெற்றி பெற முடியாது. எந்தவோர் கணத்திலும் சரி வாழ்க்கையில் நாம் மேடுபள்ளங்களைக் காணும்போது உணர்ச்சி வசப்பட்டு விடுவது உண்மையே. ஆனா அதற்காக நாம் திடீரென்ற ஒரு சிலரின் புரட்சிகளையோ சிந்தனை களையோ சரியென்று எண்ணி தஞ்சம் அடைந்து விடுதல் கூடாது. ஒவ்வொரு இனத்தையும் சரியான வகையிலே இனங்கண்டு கொள்வதே ஒரு பெரிய கடமை." "நீங்க சொல்வதன் உள்ளர்த்தம் விளங்குகிறது. சோஷலிஸம், சமத்துவம், சனநாயகம் என்பவையெல்லாம் கூட இன்றைய நிலையில் எப்படி எப்படி
09

Page 6
யெல்லாமோ மாறி வருகின்றன. தொழிலாளர்களையும் விவசாயிகளையும் மயக்கும் மாயக்கண்ணாடிகளாக இவ்வார்த்தைகள் மாறி வருகின்றன." என்றாள் அவள்.
அவர்கள் இருவரும் அவர்களது பாடசாலையில் நெருங்கிக் கொண்டிருந் தார்கள். இருவரினது பாடசாலைகளும் தூரத்தூரவே இருந்தன. மாதா கோயிலில் மணி ஏழு அடித்தது. இருவரும் இரண்டு திசைகளை நோக்கி நடந்தனர் பாடசாலைக்கு.
ராஜா, அனுலா இருவரும் தினமும் தங்களது வீட்டிலிருந்து ஏறக்குறைய பல மைல்கள் நடந்தே பதுளைக்குப் படிக்க வரவேண்டி இருந்தது. அவளது கிராமத்துக்கும் பாடசாலைக்கும் ஏறக்குறைய மூன்று மைல்கள். ராஜாவுக்கோ அதைவிட தூரமாகும். அவன் ஏறக்குறைய ஆறு மைல்கள் அவனது தோட்டத்திலிருந்து வரவேண்டி இருந்தது. மேலும் இருவருமே அரசியல் கொள்கைகளிலும் இயக்கங்களிலும் ஒத்த கொள்கை உடையவர்களாக இருந்தார்கள்.
2
ஒருநாள் சந்தித்து மிக நீண்ட நேரம் உரையாடிய பின்னர் ராஜா அனுலாவை சந்திக்கவேயில்லை. முதலில் அவனுக்கு காரணம் விளங்காதிருந்தது. பின்னர்தான் விளங்கியது.
அது நெல் அறுவடைகாலம். ஆகவே அனுலாவுக்கும் வயலிலே வேலை யிருக்கும் அவளும் பாடசாலைக்கு முழுக்குப்போட்டுவிட்டு வயலில் இறங்கிடுவாள். இம்முறையும் அவ்வாறே அவளுக்கு வேலை அதிகம்.
ராஜா உயர்ந்த அந்த மலையுச்சியிலிருந்து வயல்வெளிகள் பரந்து கிடக்கும் பள்ளமான நாட்டுப் புறத்தைப் பார்த்தான். தங்கம் கரைந்தோடுவதுபோல் நீரரு விகள் பொன்னிற மண்ணைக் கரைத்துக் கொண்டு ஓடின. வெள்ளியைக் கரைத்துத் தெளிப்பதுபோல் சிறு நீர்வீழ்ச்சிகள் நீரைத் தெளித்தன. மரகதம் போல் தேயிலைச் செல்வி அந்தக் காலை வேளையில் பனிமுத்து சிந்தி மினுமினுத்தாள்!
வயலிலே அறுவடை நடந்துகொண்டிருந்தது. உழவர்களின் வியர்வைத் துளிகள் நெல்மணிகளாக பிரசவித்திருந்தன. கூலி விவசாயிகளின் கூட்டத்திலே ஒரு குடும்பமான அனுலாவின் குடும் பமும் அதோ அந்தக் கூட்டத்தினரைப் போலவே நெல் அறுத்துக் கொடுப்பார்கள். அவன் அதற்கு மேலும் அங்கு நிற்கவில்லை. வழமையான தனது பாட சாலைப் பயணத்தைத் தொடர்ந்தான். வெறுமையான அவனது காலின் பாதங் களைக் குளிர், செத்தவனின் உடம்பை விறைக்க வைப்பதுபோல் விறைக்க வைத்தது. மீண்டும் ஒரு வார காலம் சென்றது. அவன் அனுலாவைச் சந்தித்தான்.
"அறுவடையா?” அவன் விஷமச் சிரிப்புடன் ஒரு கேள்வியைக் கேட்டான். அவள் விளையாட்டுத்தனம் ஏதும் இல்லாமல் பதிலளித்தாள். "ஆமா, ஆனா எங்கள் வயலில் அறுவடை இல்லே. நெல் அறுத்துக் கொடுத்தோம்."
இலங்கையின் சரித்திரத்தைப்பற்றி அவள் கதைக்கத் தொடங்கினாள். சளித்திர நூல்களையும் அதன் ஆசிரியர்களையும் பற்றிக் குறைப்பட்டுக் கொண்டாள்.
10

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளான சில சரித்திர ஆசிரியர்கள் எவ்வாறு சரித்திரத்தைத் திரித்துக் கூறியுள்ளார்கள் என்பதையிட்டுக் கொதித்தாள்! .
அவள் பெரிய அறிவாளியல்ல. ஆனால் அரசியல் துறையில் நெருங்கிய தொடர்புடையவள். சிந்தனைச் செறிவுமிக்கவள். அதுதான் அவளது பரந்து விரிந்த அரசியல் பேச்சுக்குக் காரணம்.
அவன் ஒரு கேள்விக் குண்டைத் தூக்கிப் போட்
T6.
"1838ஆம் ஆண்டளவில் இந்தியத் தொழி லாளர்கள் வந்தபோது கண்டியரின் நிலங்களை ஏகாதி பத்தியம் பறிமுதலாக்கியதே. இதைப்பற்றி என்ன நினைக்
“என்ன நினைக்க இருக்கிறது.? எய்தவன் இருக்க அம்பை நோகலாமா? இந்தியத் தொழிலாளர்கள் மீது என்ன குறைகூற முடியும்? அவர்கள் உழைப்பிற்காக வந்தவர்கள். அதுவும் இந்தக் காலத்தில் 1838ஆம் * 感、リ : :ぶ羅。 ஆண்டளவில் இந்தியாவில் ஏற்பட்ட பெரும் பஞ்சமே காரணமாக அமைந்தது. மேலும் அந்தக் காலத்தில் நாடுவிட்டு நாடு சென்று வாழுவதும் ஒரு பிரச்சினை அல்லவே. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் குடியேற்றக் கொள்கையின்படி இலாபநோக்கத்திற்காகத் தொழிலாளர்களைக் குடியேற்றுவதும் ஓர் அம்சம்தானே?" "தமிழர்களின் குடியேற்றத்தை பற்றித் தவறான அபிப்பிராயம் இலங்கையில் சில அரசியல் கட்சியினரின்டயே உள்ளது. தமிழர்கள் இலங்கையில் பெரும் பான்மை இனத்தவரின் இன, மத, மொழி கொள்கைகளுக்கு மாறானவர்கள் என்று கருதப்படுகிறது. இதனையே முக்கிய சரத்தாகக் கொண்டு தங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களிலேகூட தமிழர்களை வெளியேற்றவேண்டும் என்றும் பிரசாரம் செய்யப்பட்டது. இவ்வாறான வெளிப்படையான பிரசாரங்களுக்கும் கொள்கைகளுக்கும் இடையே மறைமுகமான ஓர் உண்மை ஒளிந்து கிடக்கிறது."
அனுலா இடைமறித்துச் சொன்னாள். "அவ்வாறான பிரசாரமும் கொள்கையும் ஒருசில பிற்போக்குச் சக்திகளி னாலும் சந்தர்ப்பவாதிகளினாலுமே செய்யப்பட்டது என்பதை நீங்கள் உணர வேண்டும். மாறாக உண்மையான முற்போக்குச் சக்திகள் இதற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. அவை இவர்களது இந்தப் பிரசாரத்தையும் கொள்கைகளையும் வன்மையாகவே கண்டித்தன. கண்டித்தும் வருகின்றன. அந்த முற்போக்கு இயக்கம் எந்தவொரு தொழிலாளரையும் இழக்கத் தயாராகவில்லை. ஆனால் தேசிய முதலாளித்துவக் கும்பலோ எத்தனையோ இலட்சம் தொழிலாளர்களை இழக்கத் தயாராகிவிட்டது. வழியும் செய்துவிட்டது. இங்கேதான் கறுப்பு முதலாளிகளின் சுயரூபம் தெரிகிறது.” О.
ராஜா உடனே சொன்னான்: "இதுதான் பாராளுமன்ற சனநாயகம். வோட்டு, தேர்தல், சேனநாயகம்) என்பதன் மறு அர்த்தங்கள். சுயவடிவங்கள்."
ராஜா சிரித்தான். அவளும் சிரித்தாள். இருவரினது சிரிப்பும் ஒன்றாய்க்
11

Page 7
கலந்தொலித்தன. அணில்கள் மரத்துக்கு மரம் தாவிச் சென்றன.
அவர்கள் அமைதியாக நடந்து கொண்டிருந்தார்கள். அந்த றோடு வெள்ளை சரளை றோடு ஆதலால் சரக் சரக்' என்று ஒலி எழுந்தது. அந்த ஒலிக்குப் பின்னணியாக எங்கோ ஒரு மரங்கொத்தி மரத்தைக் கொத்தும் ஒலியும் கேட்டுக் கொண்டிருந்தது.
"ஓ, நான் ஒரு விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டேன். நீங்கதான் இடையில குறுக்கிட்டு விட்டீர்கள். பிற்போக்குச் சக்திகள் மலையகத் தமிழர்களைப் பற்றி தவறான பிரசாரம் செய்தனவென்றும் ஆனால் அதற்குப் பின்னே ஓர் உண்மை மறைந்து கிடந்தது என்றும் சொன்னேனே அதனைத்தான்.”
"அதென்ன..?” - அவன் ஆவல் ததும்பும் குரலுடன் கேட்டான். "இலங்கையிலே பெரும்பான்மையான சிங்கள விவசாயிகளுடன் இலங்கையின் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் வர்க்க ரீதியில் இணைந்தால் அது முதலாளித்துவத்திற்கு ஆபத்து என்பதனை பிற்போக்குச் சக்திகள் நன்கு அறிந்திருந்தன. வர்க்க உணர்வை மழுங்கடிக்கவும், தங்களது நலன்களைப் பாதுகாக்கவும் அவை காலங்காலமாக முயன்று வந்தன. மலையக மக்கள் மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்பகால இயக்கங்கள், சங்கங்கள் எல்லாம் தெளிவான சீரிய ஆரசியல் வர்க்க உணர்வுடன் ஆரம்பிக்கப்படவில்லை. அவற்றை ஆரம்பித்தவர்களினிடையே எத்தனையோ கருத்து முரண்பாடுகள் இருந்தன. குறிப்பாகக் கூறப்போனால் அந்த இயக்கங்கள், சங்கங்கள் எல்லாம் இந்திய மயமானதாக, சார்புடையதாக அமைந்திருந்தன. அவர்கள் தங்கள் தலைவர்களாக இந்தியத் தலைவர்களையே ஏற்றார்கள். தொழிலாளிகளினதும் விவசாயிகளினதும் தலைவர்களையல்ல."
"ஏன்? அவள் குறுக்கிட்டுக் கேட்டாள். "தமிழர்களுக்குத் தமிழர்கள்தான் வழிகாட்ட முடியும் அதுவே சரியானது என்பதனை அவர்கள் உள்நோக்கமாகக் கொண்டிருக்கலாம். இங்கேயும் வர்க்க ரீதியில் ஒன்றுபடுவதனை தவிர்த்து தமிழர் சிங்களவர் என்ற ரீதியில் ஒன்றுபட்டிருப் பதனைக் காணக்கூடியதாக இருக்கிறதல்லவா?”
"இந்தியத் தலைவர்களைத் தமது தலைவர்களாக இலங்கையின் இயக்கங்கள் கொண்டமையே ஒரு பெருந்தவறாகும். இதிலிருந்தே இந்த இயக்கங்களின் தாற்பரியம் புரிகின்றது."
"உண்மைதான். எனினும் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். “என்னா?” "இந்தியத் தலைவர் என்ற காரணத்திற்காக அவர்களை நாம் புறக்கணிக்கத் தேவையில்லை. ஆனால் அவர்கள் எந்த வர்க்க நலனுக்காக உழைக்க முன்வருகி றார்கள் என்பதனை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்."
அவர்கள் கதைத்துக் கொண்டே நடந்தார்கள். நேரம் போனதே தெரிய வில்லை. அவர்கள் பிரிந்து செல்லவேண்டிய சந்தியும் வந்துவிட்டது.
"நீங்கள் ஒரு நாளைக்கு எங்கள் வீட்டுக்கு வரவேண்டும்." அவள் வேண்டினாள்.
"இதில் என்ன இருக்கின்றது. அடுத்த வாரம் வரமுயல்கின்றேன். சரியா.” "இப்படிச் சொல்லி நீங்கள் என்னை ஏமாற்றக் கூடாது.”
12

“இல்லை, ஏமாற்ற மாட்டேன். நான் நிச்சயம் வருவேன்." "நான் உங்களைப்பற்றி என் அம்மா, அப்பா, அண்ணா என்னுடைய அவர் எல்லோரிடமும் கூறியுள்ளேன்."
“என்னுடைய அவர். அது யார்?" அவள் மணம் முடிக்கவிருக்கும் அவளது சொந்த மாமன் மகனை அவனுக்கு நன்றாகத் தெரியும். அவன் ஒரு "மெக்கானிக், இலங்கை போக்குவரத்துச் சபையில் வேலை செய்கிறான். என்றாலும் சும்மா விஷமத்தனமாக அவன் அப்படியொரு கேள்வியைக் கேட்டுவைத்தான்.
"அவர்தான்" என்று அவள் கூறிவிட்டு அவர்கள் கடந்து வந்த பாதையைப் பார்த்தாள். அங்கே அவள் குறிப்பிடப்போன அவரே - "சரத்” வந்துகொண்டிருந்தார்.
ராஜா சொன்னான் "ஆ! உன் மச்சானுக்கு ஆயிசு நூறு." அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு அவன் புறப்பட்டான். ராஜா அந்தச் சோடிடையைத் திரும்பிப் பார்த்தான். பின் நடந்தான். தூரத்தே பசும்போர்வையுள் தன்னுடலைத் திணித்திருந்த தேயிலைச் செல்வி வெண்ணுடை தரித்து மகிழ்வதைக் கண்டான்.
3
அனுலாவின் வேண்டுகோளுக்கிணங்க அவன் ஒரு நாள் அவளது வீட்டுக்குப் புறப்பட்டான். மிகவும் அழகும் எளிமையும் நிறைந்த குக்கிராமமாகவே தூரத்தே இருந்து பார்க்கும் பொழுதே அக்கிராமம் தென்பட்டது. வறுமையின் சின்னமாய் வயல் வெளிகளை அண்டி ஆங்காங்கே சிறுசிறு குடிசைகள் அமைந்திருந்தன. உழைப்பை ஈந்து ஒன்றுமில்லாமல் வாழும் குடிமக்கள் இவர்கள் என்பதினை இது புலனாக்கியது. குடிசைகள் தென்னோலையினால் வேயப்பட்டிருந்தன.
அவன் சென்ற அவ்வேளை நெற்பயிர்கள் வளர்ந்து கண்ணுக்கும் பசுமை யாய் இருந்தன. வயல் வெளியின் தீரத்தில் நின்றிருந்த தென்னை மரங்களும், பாக்கு மரங்களும் வயலுக்கும் கிராமத்துக்கும் எழிலூட்டின.
ஒற்றையடிப் பாதைகளால்தான் அக்கிராமம் இணைக்கப்பட்டிருந்தது. இடை யிடையே குறுக்கிட்ட ஓடைகளைக் கடக்க மரப்பாலங்கள் இடப்பட்டிருந்தன.
அனுலாவினது வீடும் ஒரு சாதாரண குடிசைதான். அவனது குறிப்பின்படி அவளது வீட்டை அவன் அடைந்தபோது வயதான ஒரு முதாட்டி அவனை வர வேற்றாள்.
அவனைப் பற்றிய விபரம் ஒன்றுமறியாத அவள் திகைத்துக் கொண்டு நிற்கையில் அனுலா வந்துவிட்டாள். அவனை அவளது ஆச்சியான அந்த வயதான மூதாட்டிக்கு அறிமுகஞ் செய்துவைத்தாள்.
ஏறக்குறைய எழுபத்தைந்து வயதை எட்டிவிட்ட உடம்பு அவளது உடம்பு. நல்ல கறுப்பு. வெள்ளை வெளேரென பஞ்சுபோல் தலைமுடி வெளுத்துவிட்டது. இலவம் பஞ்சு காற்றுக்குப் பறப்பதுபோல் வெள்ளை முடிகள் பறந்தன.
ஓரளவு தமிழ் பேசினாள் ஆச்சி. சில தமிழ்ச் சொற்கள் நல்ல உச்சரிப்புடன் தெளிவாக இருந்தன. சில சொற்கள் சிங்கள மொழி வாசனையுடன் கலந் தொலித்தன. மொத்தத்தில் அது ஒரு தமிழ் சிங்கள கலப்பட மொழியாக இருந்தது.
13

Page 8
அவனுக்கு இதொன்றும் புதிய அநுபவம் அல்ல. அவன் பிறந்து அவனுக்கு நல்ல ஞாபகம் பிறந்ததிலிருந்து நாள்தோறும் இதேபோன்று எத்தனையோ சிங்கள மக்களின் பேச்சை அவன் கேட்டிருந்தான்.
கூலி விவசாயி குடும்பத்தைச் சார்ந்த அனுலாவின் குடிசைக்கும் வெறும் கூலி விவசாயிகளான தோட்டத் தொழிலாளிகளின் ‘லயத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமையை அவனது மனம் சிந்தித்தது. எப்போதோ பன்றிக் குடிசைபோல் வரிசையாக கட்டப்பட்ட "லயங்கள் அங்கே வியர்வையைச் சிந்தும் இனத்தவர்க்கு. ஒழுகும் கூரை, சுகாதார முறையான வீடமைப்பிற்கும் அப்பாற்பட்ட அறைகள், தாய், தகப்பன், பிள்ளை யாவருக்கும் ஓர் அறையுள் அடைந்து கிடக்கும் அவலம், ஒரு மனிதனுக்குரிய ஆசாபாசங்கள் - அதன் எதிர் விளைவுகள். அவனால் அதற்கு மேலேயும் சிந்திக்க முடியவில்லை. அவன் பெருமூச்சுடன் அமைதியானான்.
"எங்க வீடு சின்ன வீடுதான். வசதி குறைவு" ஆச்சி மெதுவாக இவ்வாறு கூறிவிட்டு அவனைப் பார்த்தாள். அவனது அந்தப் பார்வையிலே ஒரு பெரிய காவியமே அடங்கியதுபோல் அவன் உணர்ந் தான். அவர்களது வீட்டுக்குச் சென்ற விருந்தாளியான அவனை சிறந்த முறையில் உபசரிக்க முடியாத தங்களது ஏழ்மையின் கொடுமையை அவளது அந்த வார்த்தைகள் கூறாமல் கூறின. அந்தக் குடிசை அமைந்திருந்த முறை, அங்கிருந்த தளபாடச் சாமான்களின் தன்மை யாவும் அவர்களது வாழ்வின் பின்னணியைப் படம்பிடித்துக் காட்டின.
"எங்களது வீடும் இப்படித்தான். வசதி மிகமிகக் குறைவுதான். அதனால் எனக்கு இவையெல்லாம் ஒன்றும் புதிய அநுபவமல்ல."
"நாங்களும் இந்த வீட்டை உடைத்து சரிப்படுத்த எண்ணுவதுண்டுதான். எண்ணி எண்ணியே எங்கள் காலமும் போய்விட்டது. பேரப்பிள்ளைகள் பிறந்தும் வீடு என்றோ உள்ள நிலையில்தான் இன்னுமே உள்ளது.”
இவ்வேளை தேநீர்க் கோப்பையுடன் வந்த அனுலா தேநீர்க்கோப்பையை அவனிடம் கொடுத்துவிட்டுச் சொன்னாள்:
"வீடு எங்க தாத்தா கட்டின மாதிரித்தான் இருக்கு. ஆனா எங்க ஆச்சிக்குத் தான் வயசு போயிருக்கு." m
"உண்மைதான்" எனப் பேர்த்தியின் பேச்சை ஏற்றுக்கொண்டு ஆச்சி தொடர்ந் தாள்.
"நாங்கள் பரம்பரை பரம்பரையாக விவசாயிகள்தான். எனது தாய் தந்தையர் பிறந்ததும் உழைத்ததும் மடிந்ததும் இதே மண்ணில்தான். எங்கள் முதாதையர், அடுத்து நாங்கள், அதற்கடுத்து இவர்கள் காலமும் ஓடுகிறது. ஓடிவிட்டது." ஆச்சி பெருமூச்செறிந்தாள்.
ஆச்சி என்ன யோசிக்கிறாள் என்பதை அவனால் அனுமானிக்க முடிந்தது. அவளது இதயம் கடந்த காலத்தை நினைத்து ஏங்குகிறது. நடந்து முடிந்தவை களைப் பற்றி எண்ணி அழுகிறது!
அவள் சொன்னாள்: “எனது கணவர் - அனுலாவின் தாத்தா இறந்ததே ஒரு காணித் தகராறில் தான்.” என்றவாறு நிறுத்தினாள்.
14

தேயிலையின் இலையிலிருந்து வடியும் பனிநீர்போல் அவளது மங்கிய : குழிவிழுந்த கண்களிலிருந்து கண்ணீர் வடிவதை அவன் கணினுற் றாண் , ஆத்திரத்தாலும், கோபத்தாலும் அவளது* உடல் குலுங்கியது. ..ت
"ஏன் . ஏன். இப்படி அழ வேண்டாம்.” -
ராஜா பதட்டமடைந்தான். m م..." ، " .". . ." .. அனுலா, ஆச்சியின் கண்ணிர்த் துளிகளை அவளது வெள்ளைச் சேலைத் தலைப்பால் துடைத்துவிட்டுச் சொன்னாள்:
"நடந்து முடிந்தவைகளை நினைத்து வருந்தி அழுது என்னா பயன்." என்றாள்.
அமைதி நிலவிற்று. ராஜாவின் குரல் ஒலித்தது. "நான் உங்கள் அப்பா எப்படி இறந்தார் என்பதை அறிய விரும்புகிறேன்.”
"நாங்கள் பரம்பரையாக இதே கிராமத்தில்தான் வாழ்ந்து வருகிறோம். அனுலாவின் தாத்தாவிற்கு ஒரு நண்பர். அவருக்கு ஏறக்குறைய ஐந்து ஏக்கர் நிலம் சொந்தமாய் இருந்தது. அவருக்குப் பணக்கஷ்டம் வந்தபடியால் அந்நிலத்தை ஒரு நிலவுடமையாளனுக்கு ஈடுவைப்பது போல் எழுதிக்கொடுத்து பணம்பெற்று விதை நெல்வாங்கியும் உரம் வாங்கியும் பணத்தை செலவழித்திருக்கிறார். ஆனால் அந்த ஆளுக்கு குறித்த நாளில் பணத்தைக் கொடுத்துத் திருப்ப முடியவில்லை. அவ்வேளை பணங்கொடுத்தவன் வட்டி கேட்டிருக்கிறான். இதனால் இரண்டு பேருக்குமிடையே வாக்குத்தர்க்கம் ஏற்பட்டு முடிவில் கொலையில் முடிந்துவிட்டது. ஒருநாள் இரவில் இவளது தாத்தாவும் அவரது நண்பரும் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும்போது அந்த பணங்கொடுத்தவன் ஆட்களைத் தயார் பண்ணி அந்த ஆளை அடித்திருக்கிறார்கள். இவரும் அந்த ஆளுடன் வந்தபடியால் அடிக்கவேண்டாமென மன்றாடியிருக்கிறார். இவரும் அவர்களைத் தாக்கியிருக்கிறார். அந்த ஆட்கள்." அவள் அதனைச் சொல்லவில்லை. ஆச்சியின் கண்ணிர்தான் அக்கதையின் முடிவைச் சொன்னது.
“எங்க தாத்தாவை மண்வெட்டியால் வெட்டிக் கொன்று விட்டார்கள்" அனுலா சொன்னாள். ی۔
ஒரு பல்லியின் "கீச் கீச்" என்ற சத்தம் மட்டுமே ஒரு சில நிமிடம் அந்தக் குடிசையில் ஒலித்தது. அங்கே மூன்று உள்ளங்கள் ஒரே நேரத்தில் அந்தக் கோரக்காட்சியை எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தன.
“பொலிசுக்கு சொல்லவில்லையா?" - ஒரு தேவையில்லாத, பிரயோசனமற்ற கேள்வியை சும்மா கேட்டுவைத்தான் அவன்.
“பொலிசா? எஜமானுக்கு வாலாட்டும் நாய்கள்." - அனுலா சீறினாள்! "அவர்களால் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களைக் குற்றஞ் சொல்லி என்னா பயன்?” என்றாள் ஆச்சி.
“இங்கே இந்த ஆட்சியிலே பணத்தால் நீதியை வாங்கவும் முடியும், விற்கவும் முடியும், நாங்கள் ஏழைகள், நாங்கள் எப்படி பணமில்லாது நீதியை
1S

Page 9
வாங்கமுடியும்? இப்படிக் கேட்டாள் அனுலா.
"உண்மைதான். உண்மைதான்" என ராஜா பலமாக தலையை ஆட்டினான். ஓர் உள்ளம் நடந்ததை நினைத்து அழுகிறது. அதனால் அழத்தான் முடிகிறது. காரண காரியங்களை ஆராயத் தெரியவில்லை. இது ஆச்சியின் உள்ளம்
மற்றோர் உள்ளம் ஒவ்வொரு செயலுக்கும் பின்னே மறைந்து கிடக்கும் பின்னணியை நன்றாக உணர்கிறது. காரண காரியங்களை உணர்ந்து நீதியை நாமே தேட வேண்டும் எனத் துள்ளி எழுகிறது - இது அனுலாவின் உள்ளம்.
குறிப்பிட்ட இவ்விரு பேருக்குமிடையிலே உள்ள மாற்றங்கள், முரண்பாடுகள், வளர்ச்சிகள்தான் எத்தனை?
ராஜா சொன்னான்: "ஒழைக்கிறவங்களுடைய நிலத்தை வாங்கவும் கூறு போடவுமே ஒரு வர்க்கம் இங்கே இருக்கு. இது மேல்மட்ட அமைப்பின் ஒரு பகுதியாக உள்ளது. பணச் செல்வாக்கும், நீதி சம்பந்தமான செல்வாக்கும் மட்டுமல்ல. பலம் பொருந்திய, ஆனா போலி அரசியல் செல்வாக்கும் பெற்றதாக உள்ளது. உண்மைகளை உழைக்கும் வர்க்கம் உணராதவரை போலிகளைக் களைந்தெறியாதவரை உங்கள் தாத்தாவைப்போல் இன்னும் எத்தனையோ உயிர்கள் இம்மண்ணிலே உருளவுள்ளன. அந்த உயிர்களின் மரணத்திற்கு நீதி எங்கே கிடைக்கப் போகிறது.? நாம் நீதி தேடிப் புறப்படாதவரை?”
ஆச்சி அமைதியாகச் சிரித்துக் கொண்டிருந்தாள்! வாலிப மிடுக்குடன் ராஜா ஏதோ உளறுவதாக அவளது மனதுக்குப் பட்டது போலிருந்தது அவளது சிரிப்பு. உண்மையில் அவள் அப்படித்தான் நினைக்கிறாள்.
இதை உணர்ந்து கொண்ட அனுலா சொன்னாள்: “உங்களைப் போலவேதான் நானும் ஏதாவது பேசத்தொடங்கினால் ஆச்சி ஒரு வறட்டுச் சிரிப்புச் சிரிக்கிறாள். ஏதோ நாம் அறியாத் தனமாகக் கதைப்பதாக எண்ணுகிறாள். இது அவளது குறையில்லை. அவள் வந்த வழி இப்படி எண்ணத் தூண்டுகின்றது."
ராஜா இடை மறித்துச் சொன்னான்: "புதிய சமுதாயத்தின் சிந்தனையைப் பற்றி பழைய சமுதாயம் இப்படி எடை போடுவதுண்டுதான். காரணம் தறிகெட்டுத் திரியும் மேல்வர்க்கப் பரம்பரையின் வாரிசுகளுடன் நெறியுட்ன் வாழத் துடிக்கும் மற்றோர் புதிய சமுதாயத்தையும் இணைத்து எடைபோடுவதுதான். இது எவ்வளவு தவறு? இவ்விரண்டிற்கும் இடையே வேறுபாடு உள்ளது. இதனை அவர்கள் உணரவேண்டிய காலமும் விரைவில் வரும்”
இப்படியே கதை தொடர்ந்தது. நேரமும் கழிந்தது. நிழல் படியாத வேளையாகிவிட்டது. ஆனால் வயற் காற்று சில்சில் என்று வீசியது. நெற்பயிர்கள் களிநடம் புரிந்தன. வெள்ளைக் கொக்குகள் கூட்டமாய் வயல் வெளியினுள் இறங்கின. இந்தக் காட்சிகளை அவன் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கவிஞனல்ல. ஆனால் இயற்கையின் கோலங்கள் மனித சக்தி பயன்படுத்தும் அற்புதக் கலையைப் பற்றி அறிந்தவன்.
"இந்தச் சூழல் உங்களுக்குப் பிடிச்சிருக்கா?” அனுலா அவனது இரசனை
16

யின் வெளிப்பாட்டைப் புரிந்துகொண்டே இப்படிக் கேட்டாள்.
“இதற்கான பதிலும் உங்களுக்குத் தெரியும்” என்றவாறு அவ்விருவரிடமும்
விடைபெற்று நடந்தான அவன்.
அவனது வருகைக்கு நன்றி கூறுவதுபோல் தென்னோலைகள் "கிறிச்
கிறிச்”சென ஒன்றோடொன்று ஊராய்ந்து சத்தமிட்டன.
4.
ராஜா லயத்தின் "ஸ்தோப்பிலே அமர்ந்திருக்கிறான். அதுதான் அவனது படிக்கும் அறை, படுக்கும் அறை எல்லாம். அந்த ஸ்தோப்பிலேயே தனது காலடிக்குக் கீழே படுத்துக்கிடக்கும் தம்பி தங்கையர்களின் கூட்டமும் வேறு. விறாந்தை வழியே உள்ளே புகுந்த பனிச்சாரல் அவனைத் தொட்டு என்ன என்று கேட்கின்றது? விறாந்தையின் இடைவெளிகளை மறைக்கக் கட்டப்பட்டிருந்த பழைய சாக்கும் தனது இயலாமையைக் காட்டி நிற்கின்றது. கரிபிடித்து, புகை பிடித்து, பிய்ந்து நைந்து போய்க் கிடக்கும் சாக்கின் ஓட்டைகளின் வழியே காற்று உள்ளே புகுந்து விளையாடுகின்றது.
தனது இரண்டு கால்களையும் சாக்குக்குள் திணித்துக் கொண்டும் ஒரு படங்குச் சாக்கைப் போர்த்துக் கொண்டும் ராஜா உட்கார்ந்திருக்கின்றான். அவனது உதடுகள் பனிக்காற்றால் வெடிப்புண்டு கிடக்கின்றன. கைகளோ விறைத்த வண்ணம் இருக்கின்றன.
அவனெதிரே பாடப்புத்தகங்கள் விரிந்து பரந்து சிதறிக் கிடக்கின்றன. பாடங்கள், பாடப் புத்தகங்கள், பாடசாலைகள்..? அவனுக்கே அவனை அறியாமல் சிரிப்பு வருகின்றது. குப்பிலாம்பு அவனது எண்ணத்தைப் போலவே மங்கி மங்கி எரிகின்றது. −
ராஜா அவனையே கேட்டுக்கொள்கிறான். "நான் படிக்கும் இந்தப் படிப்பு யாருக்காக?"
ஏதோ ஒரு சிலருக்கு வெள்ளைக் காற்சட்டை அணிந்து உலவித் திரியும் உத்தியோகத்தை அளிப்பதற்காக சமுக அந்தஸ்த்து ஏற்றத்தாழ்வு என்பவற்றை இந்தக் கல்வி கற்பிக்கின்றது. நான் படித்து முன்னேறி விட்டேன் என்றால் எனக்கும் இதோ இந்த மண்ணுக்குள்ளே மாண்டுகிடக்கும் எனது மூதாதையரின் எலும்புகளுக்கும் சம்பந்தமில்லாது செய்துவிடுகிறது. வெறும் கல்வி. புத்தகக் கல்வி. இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் சம்பந்தமேயில்லாத கல்வி. எங்கோவுள்ள மண்ணினது வாசனை அந்தக் கல்வியிலே கமழ்கிறது. உளுத்துப்போன அந்நாட்டுக்கே உரிய பண்பாட்டொளி அதிலே சிந்துகின்றது. இந்தச் சமூகத்துக்கு உதவாத கல்வி தூ! அவனுள்ளே ஒரு கேள்வி எழுகின்றது. அவனைப் பொறுத்த வரை அந்தக் கல்வி ஒரு கருவி. அவனது இலட்சியத்தை அடைய அவ்வளவே. அந்த இலட்சியம் அவனது இனத்தைப் பற்றியது.
இந்த சமூக அமைப்பைத் தூக்கி எறியாதவரை - இதே படிப்புத்தான். அவனது சிந்தனை தொடர்கின்றது.
எங்கோ வயல்வெளியினிலே உழவர்கள் உழும் சத்தம் கேட்கின்றது. அந்த ஒ. ஒ. உழவர்களின் குரல் அவனுக்குக் கேட்கிறது. சிங்கள விவசாயிகள் நெல் அறுவடைக் காலங்களில் பாடும் பாடல்கள் அவனுக்கு நினைவுக்கு
17

Page 10
வருகின்றன. நிலா பொழியும் அந்த இரவுகள்தான் எத்தனை இன்பமயமானவை. நிலம்தான் விவசாயியின் சொத்து என்பர். ஆனால் இங்கே அவர்களின் உழைப் பிற்கும் இந்த நிலத்திற்கும்தான் என்ன சம்பந்தம்? அவனது சிந்தையிலே மின்னல் ஒளிபோல் ஒரு வெடிப்பு ஏற்பட்டு அது தொடர்கின்றது. அதுபோல் இந்த உயர்ந்த மலைகள் தேயிலைச் செடிகள் இவைகளுக்கிடையே அவர்களது உழைப்பு.? அந்த மலைகளுக்கும் அவர்களது உழைப்புக்கும் என்ன சம்பந்தம்? நாங்கள் என்ன வெறும் சக்கைகளா?
ஒருநாள் அனுலா சொன்னாள்: “இன்று முதலாளித்துவக் கட்சிகளக்கூட சோஷலிஸம் பேச ஆரம்பித்துவிட்டன. அதுவும்கூட முதலாளித்துவ அமைப்பில் ஒரு அரசியல் தந்திரமே. தங்களது அரசியல் கோட்பாடுகளுக்கு முரணான கொள்கைகளையும் கூட தங்களது கோட்பாடுகளுக்குள் திணித்துவிட எண்ணும் இப்போக்கு விசித்திரமானது. இன்னுமே தொழிலாளர்கள் நிலத்திற்கும் தமக்குமிடையே உள்ள பிணைப்பை உணராமல் இருப்பதற்கு அவர்கள் என்ன வெறும் சக்கைகளா? இல்லை. பச்சையை சிலர் பார்க்கும் முயற்சி வெற்றிபெற முடியாது. பச்சை பச்சைதான் என்பதை தொழிலாளர் இனம் இன்று கண்டு கொண்டது."
இரவு தனது பயணத்தைத் தொடங்கி எவ்வளவோ நேரமாகிவிட்டது. ராஜாவும் உறக்கத்தை வரவழைக்கிறான். ஆனால் அவனது மனவிழிப்புக்கு முன்னே உறக்கம் எப்படி வரும்!
5
பங்களாவின் உள்ளே புகுந்த புகையைக் கண்டு யன்னலைத் திறந்து புல்லுமலைப் பக்கம் பார்க்கிறான் துரை காடெல். புல்லுமலை எரிவது நன்றாகத் தெரிகின்றது. குளிர்ந்த காற்று நீலப் புகையையும் சேர்த்து இழுத்து தோட்ட மெல்லாம் புகைக் காடாக்குகின்றது. கரித்தூள்கள் பசிய தேயிலை இலைகளிலே வந்து படிகின்றன.
ராஜாவின் தலைமையில் ஒரு கூட்டம் அங்கே காடழித்துக் கொண்டிருக் கிறது. தோட்டமே அங்கு திரண்டு நிற்கின்றது. ராஜாவின் மூக்கினிலே வியர்வைத் துளிகள் முத்தாய் அரும்பி நிற்கின்றன. பனியன் நனைந்து நாறுகின்றது. பண்டா, மாணிக்கம், அனுலா அங்கே வேலையில் மும்முரமாய் ஈடுபட்டிருக்கின்றனர்.
"எனது தோட்டமே எரிகின்றது. நாட்டாட்களும், தோட்டக் கூலிகளும் கொள்ளை அடிக்கிறார்கள். உடனே வரவும்." துரை காடெல் பொலிசுக்குச் சொல்லுகிறான்.
"இதோ வருகிறோம்” இது பொலிசின் பதில். நாட்டுச் சனங்களும், தோட்டச் சனங்களும் அந்தத் தோட்டத்தை ஆக்கிரமித்து விட்டார்கள். இனிமேல் அவர்கள் பிடித்த இடத்தை விடப்போவதில்லை. தோட்டச் சனமே திரண்டு வந்து கொண்டிருக்கிறது. மண்வெட்டி, கத்தி ஆகியவற்றுடன் அவர்களின் முகங்கள் இரத்தமாய் சிவநது கிடக்கின்றன - தீ சுவாலை விட்டு எரிகிறது!
ராஜா முழு மூச்சுடன் அந்தத் தோட்டத் தொழிலாளர் வாழ்வுடன் தன்னையும் இணைத்துக் கொள்ளத் தீர்மானித்துவிட்டான்.
பொலிஸ் ஜீப் தூரத்தே வருவது தெரிகிறது. என்றாலும் தொழிலாளர்கள்
18

பயப்படவில்லை. அவர்கள் அந்த நிலத்தை விட்டுப் போகப்போவதில்லை.
பொலிசுடன் வந்த துரை காடெல் சொல்கிறான்: “இந்தத் தோட்டம் என்னுடையது. நீங்கள் எல்லோரும் வெளியேற வேண்டும். இல்லாட்டி சுட்டுத்தள்ளுவேன்.”
“முடியாது - முடியாது. இந்த நிலம் எங்களுக்கே. முதலாளித்துவம் ஒழிக. ஏகாதிபத்தியம் ஒழிக..!"
எல்லாக் குரல்களும் ஒன்றாய் ஒலிக்கின்றன. "முடியாது. முடியாது.” பண்டா கத்துகிறான். அவனது கையிலே மண்வெட்டி இருக்கிறது. வேட்டுக்கள் முழங்குகின்றன. அதையும் மறைத்துக்கொண்டு வருகின்றன பல குரல்கள்.
"நாங்கள் வெளியேற மாட்டோம். "ஐயோ. அம்மா." "ஐயோ. அம்மே." ஜீப்கள் எரிகின்றன. இரத்தங்கள் செம்மண்ணில் பீரிட்டுப் பாய்கின்றன.
என்றாலும் செஞ்சிவப்பு மலர்கள் பூத்தவண்ணம்தான் இருக்கின்றன. வேட்டுக்கள்தான் தீர்ந்துவிட்டன.
gg
S SS SS S
."அன்பார்ந்த வாசகர்களே! '. ஞானம் சஞ்சிகையைத் தொடர்ந்து பெற விரும்புவோர் சந்தாதாரர்களாகச் சேர்ந்து கொள்ளும்படி வேண்டுகின்றோம். "ஞானம்' சஞ்சிகை கிடைக்கும் இடங்கள்:
கொழும்பு;- பூபாலசிங்கம் புத்தகசாலை - 340, செட்டியார் தெரு, கொழும்பு 11. பூபாலசிங்கம் புத்தகசாலை - 309A 2/3, காலி வீதி, வெள்ளவத்தை. வசந்தம்- S - 44,3வது மாடி, மத்திய கூட்டுச் சந்தை, கொழும்பு - 11. யாழ்ப்பாணம்:- பூபாலசிங்கம் புத்தகசாலை - ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம். திரு பஞ்சலிங்கம் - உதயன் புத்தகசாலை, பருத்தித்துறை. திருகோணமலை:- வாணி புத்தகசாலை - 69, இராஜவரோதயம் வீதி, திருகோணமலை. திரு. சித்தி அமரசிங்கம் - 21 ஒளவையார் வீதி, திருகோணமலை. மட்டக்களப்பு:- சக்தி நூல்நிலையம் - 58, திருமலை வீதி, மட்டக்களப்பு. எஸ். தர்மகுலசிங்கம், சுவைத்திரள் - 41, பார் வீதி, மட்டக்களப்பு. முல்லைத்தீவுகே. சின்னத்தம்பி - அறிவு அமுது புத்தக நிலையம், புதுக்குடியிருப்பு, முலலைததிவு.
வவுனியா:- சந்திரபோஸ் சுதாகர் - 87, வியாசர் வீதி, தோணிக்கல், வவுனியா. கனடி:- கலைவாணி புத்தகசாலை - 231, டி.எஸ்.சேனநாயக்க வீதி, கண்டி. லங்கா சென்றல் புத்தகசாலை - 81 கொழும்பு வீதி, கண்டி. கொட்டக்கலை:- * சாரல் என்டர்பிறைஸ் - 7, ஷொப்பிங் கொம்பிளெக்ஸ், கொட்டக்கலை.
2556TLD:- *.சாரா பேப்பர் சென்ரர் - 14, யூ.சி. ஷொப், குருநாகல் றோட், புத்தளம்."
:
Κ
KQ
象
静
舜
&
●
参
象
参
参见
Y
●
瓷
s
参
·
酸
参见
SL L S SSL S SL S SS S S S S S S S S L L S S S S S L S L L L S S S S S S 0L S L L L L L S SS S S L L L L L L S LS L SSSSLS SSS 0SSL 0S S L S L S L S L S L S SLL SYS LLLL S S LSS SLS0S S L L S L S 0LS S 0L S
19

Page 11
* - 職鬱鬱鱷、ees கலாபூஷணம், தமிழ்மணி வே.சுப்பிரமணியம் )முல்லைமணி( ܠ ܐ .
03-05-1933இல் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த e. முள்ளியவளையில் பிறந்த వి: தனது புனை பெயராக 'முல்லைமணி எனப்போட்டு பல இலக்கியப் பணியைப் புரிந்து கொண்டிருப்பவர். பயிற்றப்பட்ட ஆசிரியராக ஆங்கில பாடத்தில் தன் பணியை ஆரம்பித்த இவர் ஒரு கலைப்பட்டதாரி என்பதும் குறிப்பிடத்தக்கது. கலைஞர் திலகம், தமிழ் அறிஞர் ஆகிய சிறப்புப் பட்டங்களையும் பெற்ற இவர், 1951ல் ஈழகேசரி மாணவர் பகுதியில் எழுதிய கட்டுரையுடன் தன் இலக்கியப் பணியை ஆரம்பித்தவர். பண்டார வன்னியன் நாடகம் 1970, அரசிகள் அழுவதில்லை சிறுகதைத்தொகுதி 1977, 'மல்லிகை வனம் சமூக நாவல் 1985, 'ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரன் பாமாலை 1976, 'நெடுங்கேணி வில்வயடிப் பிள்ளையார் பாமாலை 1978 தமிழ் மொழிப் பயிற்சி 1975, ‘காவத்தை நிலகாமம் முத்துமாரி யம்மன் திருவூஞ்சல் 1978, "வன்னியர் திலகம் வரலாற்று நாவல் 1998, இலக்கியப் பார்வை கட்டுரைகள் 1999, கமுகஞ்சோலை வரலாற்று நாவல் 2000 ஆகிய பத்து நூல்களின் சொந்தக் காரனாகவும் திகழ்கின்றார்.
சிறுவயதிலே வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதற்கு தன்னை ஊக்குவித்த தந்தையாரை அன்புடன் நினைவு கூரும் இவர், இலங்கையர் கோன், அப்பச்சி மகாலிங்கம், நாவல் இலக்கிய முன்னோடி த.கைலாசபிள்ளை ஆகியோரை முன்னோடிகள் என்று கூறுவதோடு, பேராசிரியர் சு.வித்தியானந்தன், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் என்.சிவராசா, முள்ளியவளை இயல் இசை நாடகக் கலா மன்றச் செயலாளர் சிவநேசன், வே. கந்தையா ஆகியோர் தன்னை ஊக்குவித்தோர் என்றும் நன்றியுடன் குறிப்பிடுகிறார். சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், இலக்கிய விமர்சனம், கட்டுரை எனப் பல்வேறு விடயங்களிலும் முத்திரை பதித்தவர் முல்லைமணி. முல்லை இலக்கிய வட்டத் தலைவராகவும், வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்ட உறுப்பினராகவும் பதவி வகித்துக் கொண்டிருப்பவர் இவர். இவருடைய எழுத்துக்களின் சிறப்பை விதந்துரைக்க, பண்டாரவன்னியன் நாடகம் நான்கு பதிப்புகள்(70,7299.2000) வெளியிடப்பட்டதுடன், இந்நாடகத்திற்கு கலைக்கழகப் பரிசு கிடைத்ததையும், அரசிகள் அழுவதில்லை, வன்னியர் திலகம் ஆகியன முறையே சிறுகதைக்கும் . நாவலுக்கும் தேசிய சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றதையும் குறிப்பிட வேண்டும். மேலும் மல்லிகை வனம் நாவல் வன்னிப் பிராந்திய நாவலுக்கான விரகேசரிப் பரிசினையும் பெற்றுக் கொண்டதும் சிறப்பெனலாம்.
அல்லி, சுடர், ஆத்மஜோதி, பண்டிதன், வெளிச்சம், எரிமலை (பிரான்ஸ்) தமிழ்முரசு, கொம்பறை(கனடா) ஆகிய சஞ்சிகைகளிலும் ஈழகேசரி, ஈழநாடு,
20
 
 
 
 
 

வீரகேசரி, தினபதி, சிந்தாமணி, ஈழமுரசு, உதயன்(கனடா), தமிழர் செந்தாமரை (கனடா) ஈழநாதம் ஆகிய பத்திரிகைகளிலும் தனது ஆக்கங்களைப் பிரசுரித்து தமிழ் வாசகர்கள் பயனடையச் செய்துள்ளார். திருநெல்வேலி பண்டித கலாசாலை இலக்கண இலக்கியக் கல்விக்கு வித்திட்டது எனக்கூறும் இவா, தொல்காப்பியம், நன்நூல், யாப்பருங்கலக்காரிகை, அணியிலக்கணம் என்பவற்றையும், பழந்தமிழர் இலக்கிய நூல்களையும் இங்கு கற்கும் வாய்ப்புக் கிடைத்ததை மகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார். மகரகம ஆங்கில ஆசிரிய கலாசாலையில் பண்டிதர் கா.பொ.சி. கணபதிப்பிள்ளை அவர்களின் தொடர்பு இலக்கிய ரசனையை வளர்த்ததாகவும் கவிஞர் முருகையன் அவர்களின் தொடர்பு இலக்கிய விமர்சனத் துறையில் ஈடுபாடு கொள்ளச் செய்ததாகவும் குறிப்பிடுகிறார். இவற்றால் ஆங்கிலப் பயிற்றப் பட்ட ஆசிரியரான இவர், தமிழ் சிறப்புக் கலைப்பட்டதாரியாகவும் தன்னை உரு வாக்கியமை விதந்துரைக்கப்படவேண்டிய சிறப்பெனலாம்.
வானொலி நாடகங்கள், வில்லுப்பாட்டுப் பிரதிகள் என்பவற்றை எழுதிய தோடு, ‘மக்கள் கலை' என்னும் தலைப்பில் பன்னிரண்டு சொற்பொழிவுகளை வானொலியில் நிகழ்த்தி வன்னி நாட்டார் இலக்கியத்தை அறிமுகப் படுத்தியுள்ளார். மேலும் மூத்த எழுத்தாளர் அன்புமணியின் மூலம் வானொலிக்காகப் பேட்டி காணப்பட்டவர். இவருடைய பேட்டியொன்று நிதர்சனத்திற்காக வன்னியில் நிகழ்ந்தது. வட-கிழக்கு கல்வி கலாசார விளையாட்டுத்துறை அமைச்சு 1995ல் கலைஞர் கெளரவப்பினுடாக இவரைக் கெளரவித்தது. 1999 வட கிழக்கு மாகாண ஆளுநர் விருது வழங்கியும் கெளரவிக்கப்பட்டார். பொன்னாடை போர்த்தல்களும், கெளரவிப்புகளும் அதிகமாக நிகழ்ந்த மூத்த எழுத்தாளர் முல்லைமணி அவர்களுக்கும் ஓர் ஆதங்கம் உண்டு. அது, தனது ஆக்கங்கள் பலவும் நூலுருப் பெறவில்லை என்பதே. ஓர் எழுத்தாளர் பிரசுரிப்பாளராகவும், விற்பனையாளராகவும் இருக்கும் நிலை துர்ப்பாக்கியமானது எனக் குறிப்பிடும் இவர், ஈழத்துத் தமிழ் நூல்களைப் பிரசுரிப்பதற்கு நிலையான நிறுவனம் ஒன்று இல்லையே என்று கவலைப்படுவது நிதர்சனமானது. இவருடைய மழைக்கோலம் என்ற சமூக நாவல் அச்சில் இருக்கிறது என்ற தகவல் இலக்கிய அபிமானிகளுக்கு சற்று ஆறுதலைத் தருகிறது என்றாலும் 10ற்கு மேற்பட்ட நூல்களை வெளியிட ஆக்கங்கள் கைவசமிருப்பதாக அறியும்போது இலக்கிய ஆர்வலர்கள் - அபிமானிகள் இதனைக் கவனத்திற் கொள்வது நலமல்லவா.
அன்பார்ந்த வாசகர்களே. சந்தா விபரம்
ஞானம் சஞ்சிகை பற்றிய கருத்துக்களைக்களையும் சஞ்சிகை வருடச்சந்தா ரூபா 180/- யின் தரத்தை மேம்படுத்த உங்க (தபாற்செலவு உட்பட) ளது ஆலோசனைகளையும் அறி சந்தா காசோலை மூலமாகவோ யத்தாருங்கள். மனியோடர் மூலமாகவோ அனுப்பலாம்.
ஆக்க இலக்கிய கர்த்தாக்களே. Guusir,
è2-fiii d56iT ğ5I Lu 60)L—LU t-{556nf?6öi || f.GNANASEKARAN மூலம் ஞானம் சஞ்சிகையின் இலக் 19/7, PERADENIYAROAD, கிய தரத்தை மேம்படுத்துங்கள். KANDY.
21
தனிப்பிரதி: ரூபா 15/-

Page 12
எழுதத் தூண்டும் எண்ணங்கள்)
(கலாநிதி தரை.மனோகரனி) 裘 தமிழ்த் திரையுலகின் தனித்துவக் கலைஞன்
தமிழ்நாட்டுக்கு மட்டுமன்றி, இந்தியாவுக்கும் ஆசியாவுக்கும் தமது நடிப்புத்திறனால் புகழ் சேர்த்தவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், உலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராக அவர் தமது பெயரைப் பதித்துள் ளார். இந்தியத் திரைப்பட நடிகர்கள் எவரும் ஈட்டிக் * கொடுக்காத பெருமையை, சிவாஜி கணேசன் இந்தியா வுக்கு ஈட்டிக் கொடுத்தார். ஆசிய - ஆபிரிக்கச் சிறந்த நடிகருக்கான பரிசு(கெய்ரோ), செவாலியே விருது' (பிரான்ஸ்) தாதா சாகிப் பால்கே விருது(இந்தியா), டாக்டர்(அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), உட்படப் பல விருதுகளைப் பெற்று, தமது நாட்டுக்கும், தமிழ்த் திரைப்படத் துறைக்கும் மகிமை ஏற்படுத்திக் கொடுத்த கலைஞனாக அவர் திகழ்ந்தார். இலங்கை அவருக்குக் கலைக்குரிசில் பட்டத்தை வழங்கிக் கெளரவித்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர்கூட நமது நாடு மிகப்பெரும் கெளர வத்தைச் சிவாஜி கணேசனுக்கு அளித்தது. பல பட்டங்களை அவர் பெற்றுள்ள போதிலும், பேசும் படம் என்ற சினிமாச் சஞ்சிகை வழங்கிய நடிகர் திலகம் என்ற பட்டமே அவருக்கு மிகப் பொருத்தமானதாகவும், பெருமையளிப்பதாகவும் அமைந்துள்ளது. பேசும்படம் வாசகர் ஒருவரே இப்பட்டத்தைச் சிவாஜி கணேசனுக்கு வழங்குமாறு சிபார்சு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவாஜி கணேசன் பல்வேறு வித்தியாசமான சமூகப் பாத்திரங்களை ஏற்று நடித் துள்ளார். இலக்கியங்களில் ஒளிரும் பல்விதப் பாத்திரங்களைத் தமது நடிப்பாற்றல் மூலம் மக்கள்முன் கொணர்ந்தார். மக்களின் இதயங்களில் வீற்றிருந்த இதிகாச, புராண பாத்திரங்களை தமது நடிப்புத்திறனால் திரையிலே உலாவவிட்டார். வாழ்ந்து மறைந்த வரலாற்றுப் பாத்திரங்களை, அவற்றின் நம்பகத் தன்மைக்கும் பங்கம் ஏற்படாத முறையில் நடித்துக் காட்டினார்.
"செய்யும் தொழிலே தெய்வம்” என்ற உயர்ந்த குறிக்கோள் கொண்ட கலைஞராக சிவாஜி விளங்கினார். நேரம் தவறாமையை கடைப்பிடிப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். அவரின் நடிப்பாற்றலுக்கு உறுதுணையாக விளங்கியது, அவரது அபாரமான ஞாபகசக்தியாகும். நடிப்புக் கலையை நேசித்த அவர் பிற கலைஞர்களையும் ஊக்குவித்தார்.
பல்வேறு பாத்திரங்களையும் ஏற்று நடித்த கணேசன், சமுதாயத்தில் தாம் காணநேர்ந்த பல்வேறு மனிதர்களை மனத்திற் பதித்துக்கொண்டு நடித்துள்ளார். திருவருட்செல்வர்(1967) படத்தில் அப்பராக (திருநாவுக்கரசர்) நடித்தபோது காஞ்சி காமகோடி பீடாதிபதி அவர்களை மனங்கொண்டு நடித்தார். தங்கப்பதக்கம் (1974) படத்தில் பொலீஸ் அதிகாரியாக பாத்திரமேற்றபோது, அப்போது தமிழ் நாட்டிற் கடமையாற்றிய பொலீஸ் அதிகாரி வோல்டர் தேவாரத்தை (இப்போது சந்தனக்கடத்தல் வீரப்பனை துரத்திக்கொண்டு திரிபவர்) மனத்திற் பதித்து,
22
 
 
 
 
 

தமது நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார். தில்லானா மோகனாம்பாளில்(1968) நாதஸ்வரக் கலைஞராக நடித்தபோது படத்தில் தமக்கு நாதஸ்வரம் வாசித்த கலைஞர்களை தமது இல்லத்துக்கு அழைத்து அவர்கள் வாசிக்கும் முறையை நன்கு அவதானித்துவிட்டு நடிக்கத் தொடங்கினார். தாம் ஏற்கப்போகும் பாத்திரம்பற்றி முன்னரே கற்பனை செய்துவிட்டே சிவாஜி நடிக்கத் தொடங்குவார். பொதுவாக இயக்குநர்களே நடிகர், நடிகைகளை இயக்குவது உண்டு. ஆனால் சிவாஜி கணேசன் விடயத்தில் அது மறுதலையாகவே இருப்பதுண்டு. ஒரு குறிப்பிட்ட காட்சியில் அவர் நடிப்பதற்கு முன் அக்காட்சிக்குரிய நடிப்பை நாலைந்து வெவ்வேறு முறைகளில் இயக்குநருக்கு நடித்துக்காட்டி அவற்றில் பிடித்த ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு இயக்குநர்களிடம் தெரிவிப்பார். இயக்குநர்களும் அவ்வாறே செய்வர். சாதனை (1985) என்ற திரைப்படத்தில் சிவாஜி திரைப்பட இயக்குநராக பாத்திரமேற்று நடித்துள்ளார்.
எனக்கு நீண்ட காலமாக ஓர் எதிர்பார்ப்பு இருந்தது. அத்தகைய எதிர் பார்ப்பை தம்மையறியாமல் என்னுள் தூண்டிவிட்டவர், காலஞ்சென்ற கலையரசு சொர்ணலிங்கம் அவர்கள். அவர் தாம் ஏற்ற பாத்திரங்களுள் தமது நடிப்புக்குச் சவாலாக அமைந்த பாத்திரங்களுள் ஒன்றாக விசுவாமித்திரர் பாத்திரத்தைப் பற்றிக் குறிப்பிடுவார். புராணக்கதை மரபின்படி மன்னனாக இருந்து முனிவராக மாறியவர், அவர். அதனால், மன்னருக்குரிய ராஜகம்பீரமும், தபோவலிமைமிக்க ஒரு ரிஷிக்குரிய குண இயல்புகளும் குழைந்த பாத்திரம் அது. அத்தகைய வித்தியாசமான பாத்திரத்தில் சிவாஜி கணேசனின் நடிப்பை நான் பார்க்கவேண்டும் என்பதே, நீண்டகாலமாக இருந்து வந்த எதிர்பார்ப்பாகும். அத்தகைய எனது எதிர்பார்ப்பு ராஜரிஷி(1985) படம் வெளிவந்தபோது நிறைவேறியது. அத்திரைப் படத்தில் விசுவாமித்திரர் பாத்திரமேற்று சிவாஜி கணேசன் நடித்திருந்தார். மிகக் கடினமான அப்பாத்திரத்தை அவர் அநாயாசமாகச் செய்திருந்தார்.
பாத்திரத்திற்கேற்ற ஒப்பனை விடயத்தில் தமிழ்த் திரையுலகத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்வோரில் முதன்மையானவர்களாகச் சிவாஜி கணேசனையும் கமலஹாசனையுமே குறிப்பிடலாம். பாவமன்னிப்பு(1961) திரைப்படத்தில் முஸ்லிம் இளைஞராகப் பாத்திரமேற்றுச் சிவாஜிகணேசன் நடித்திருந்தார். முஸ்லிம் ஆண் களின் நெற்றியில் தொழுகையினால் தழும்பு ஏற்படுவது இயல்பு என்பதை இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஒருவர் மூலம் தெரிந்து கொண்ட அவர் அப்பாத்திரத் திற்கான ஒப்பனையின்போது தமது நெற்றியிலும் தழும்பு இருக்கத்தக்கதாகச் செய்துகொண்டார். திருவருட்செல்வர் படத்தில் அப்பராகப் பாத்திரமேற்றபோது ஒப்பனைக்காகப் பல மணி நேரத்தைச் சிவாஜி ஒதுக்கிக் கொண்டார். அந்தப் பாத்திரத்தின் ஒப்பனையும் அவரது நடிப்பும் இப்போதும் என் கண்முன் நிற்கின்றன. அத்திரைப்படம் வெளிவந்தபோது, கல்கி சஞ்சிகை அப்பாத்திரத்தில் தோன்றிய சிவாஜி கணேசனின் படத்தை அட்டையிற் பிரசுரித்து அவரைக் கெளரவித்தது. சிவாஜி கணேசன் தமது நடிப்பாற்றல் மூலம் ஏற்படுத்திய சாதனைகளில் ஒன்று தமிழ் மொழியின் இனிமையும், வளமும், அழகும் திரையுலகிற் பதிவு செய்யப்பட்டமையாகும். தமிழ் திரையுலக வரலாற்றில் தமிழ் மொழியின் சிறப்புக்கள் அனைத்தையும் தமது வசன உச்சரிப்பாலும், நடிப்பாற்றலாலும் வெளிக்கொணர்ந்த பெருமைக்குரியவர் அவர். அவரது திரைப்படங்கள் சாதாரண மக்களுக்கும்
23

Page 13
தமிழின் வளத்தை உணர்த்தின. சிவாஜி கணேசன் செந்தமிழ் பேசி நடித்தது மாத்திரமன்றி பல்வேறு வட்டார மொழிவழக்குகளையும் பேசி நடித்தவர்.
சிவாஜி கணேசனின் நடிப்பாற்றலின் வெற்றி பற்றிச் சிந்திக்கும்போது, அவருக்குப் பின்னணியில் உழைத்த முக்கியமான இருவரை மறந்துவிட முடியாது. ஒருவா, அவரது குரலுக்கு ஒத்திசைவான குரலில் பாடிய ரி.எம்.செளந்தரராஜன். இன்னொருவர் அவரது நடிப்பாற்றலை மேம்படுத்திக் காட்டக்கூடிய பாடல்களைத் தந்த கவிஞர் கண்ணதாசன். சிவாஜி கணேசனால் செளந்தரராஜனும் செளந்தரராஜனால் சிவாஜி கணேசனும் புகழ் பெற்றனர். கண்ணதாசனது பாடல்களின் கருத்து வளமும், மொழியழகும் சிவாஜியின் நடிப்புத்திறனால் மேலும் மெருகு பெற்றன. சிவாஜி கணேசனிடம் காணப்படும் குறையாக, அவரது மிகைநடிப்பு விளங்குகிறது என்ற கருத்தும் நிலவுகிறது. ஆனால் திரைப்படம் என்ற ஊடகத்தில் இது தவிர்க்க முடியாதது என்பது அவரது வாதம். எவ்வாறாயினும், சிவாஜி கணேசன் என்ற சாதனையாளரின் பல திரைப்படங்கள் எதிர்காலத்திலும் பாதுகாத்து வைக்கப்படவேண்டிய கலைப்பொக்கிஷங்களாகும். தமிழ்நாடு அரசு சிவாஜி கணேசன் நினைவாகத் திரைப்படத்துறையோடு தொடர்புபட்ட பெறுமதி மிக்கதொரு அமைப்பொன்றை ஏற்படுத்துவது அவருக்குச் செய்யும் சிறந்த மரியாதையாகத் திகழும். திரையிசையில் ஒரு பேரரசர்
தமிழ்த் திரைப்பட இசை காலத்துக்குக் காலம் பல்வேறு உருமாற்றங்களைப் பெற்று வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. தொடக்கத்தில் கர்நாடக இசையில் தவழ்ந்த தமிழ்த் திரையிசை காலப்போக்கில் மெல்லிசையாகப் புதிய மணம் பரப்பத் தொடங்கியது. இத்தகைய காலகட்டத்தில் தமிழ் திரையிசைத்துறையில் அறிமுகமாகியவரே அண்மையிற் காலமான இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் அவர்கள். 1940களில் இசையமைக்கத் தொடங்கிய அவர், 1950களிலிருந்து புகழின் சிகரத்தை நோக்கித் தமது இசைப்பயணத்தை ஆரம்பித்தார். தரமும் இனிமையும் கொண்ட தமது இசையமைப்புக்காகப் பல விருதுகளையும் பெற்றவர் மகாதேவன். கர்நாடக இசை, மெல்லிசை, நாட்டுப்புற இசை, மேலைத்தேச இசை ஆகியவற்றில் அவரது பாடல்கள் அமைந்துள்ளன. தில் லானா மோகனாம்பாள், சங்கராபரணம், சம்பூர்ண ராமாயணம், வீரபாண்டிய கட்டப்பொம்மன், தேவதாஸ், திருவிளையாடல், நவராத்திரி போன்ற பல்வேறு படங்களில் இடம் பெற்றுள்ள, அவர் இசையமைத்துள்ள பல பாடல்கள் இன்றும் செவிகளுக்கு இனிமையையும், மனத்துக்கு அவரது நினைவையும் தந்துகொண்டிருக்கின்றன.
爵 தேசியக் கொடியிலிருந்து எம் மண்ணில் இறங்கிப் போய் மிருகச்சாலை
சிறைக்கட்டுக்குள்
வேதின உறங்கியது о од е கரன
சிங்கம்,
கொடியிலிருந்தது வா(ல்)ள். 24

ஆ.இரத்தினவேலோன் எழுதிய
அண்மைக்கால அறுவடைகள்
வெளியீடு : மீரா பதிப்பகம், கொழும்பு - 06 முதற்பதிப்பு: 23.05.2001
விலை 150ரூபா
கே.விஜயனி)
புலோலியூர் இரத்தினவேலோன் 77-களில் தனது எழுத்துலக யாத்திரையை ஆரம்பித்தார். சிறுகதை சிருஷ்டியாளனாகவே பயணம் கால் தடம் பதித்தது. அறிமுக விழா', 'புதிய பயணம், ‘விடியட்டும் பார்ப்போம் ஆகிய மூன்று சிறுகதை தொகுதிகள் அதன் பிரதிபலனாக தமிழ் இலக்கிய உலகிற்கு வரப்பிரசாதமாகின. பிறர் படைப்புகளில் இலயித்த வாசிப்பும் நுகர்ச்சியும் வாச்கர்களுக்கான பத்தி எழுத்துருவாக்கங்களாயின. அந்த கடின உழைப்பில் மலர்ந்த எழுத்துக்கள் தொகுப்புகளாயின. புதிய சகத்திரப்புலர்வின் முன் ஈழச்சிறுகதைகள்' நூலை முதலில் வழங்கினார். ‘அண்மைக்கால அறுவடைகள் ஒரு பூக்கொத்தாக இரண்டாவதாக இதழ் விரித்துள்ளது.
மூன்று சிறுகதைத் தொகுதிகள், இரு விமர்சன நூல்கள் தமிழ் இலக்கிய உலகிற்கு வேலோனின் அரிய பங்களிப்புகள் எனில் மிகையல்ல. அனைத்தும் மிகக் குறுகிய கால அன்பளிப்புகள். -
ஏனோதானோ என்ற கிறுக்கல்களாக விமர்சன நூல்கள் அமையவில்லை. செறிவும் நேர்த்தியுமான தொகுப்புகளாக அவை திகழ்கின்றன. விமர்சன கருக்களும் சீரான ஊர்வலமாக தொகுத்துத் தூவப்பட்டுள்ளன.
சம்பந்தன் சிறுகதைகள், ஈழகேசரிச் சிறுகதைகள்(செங்கை ஆழியான்), சிறுகை நீட்டி(எம்.ஏ.நுட்மான்), அங்கையன் கதைகள் (கயிலாசநாதன்), சமுதாயத் தோப்பில் சாய்ந்த தென்னைகள்(அன்ரன் செல்வக்குமார்), பிறந்தமண் (புர்கான் பீ.இ.ப்திமார்), மனத்துறல் (நா.பார்த்தீபன்), புதிய வீட்டில்(சு.இராமேஸ்வரன்), எங்கள் தேசம்(லெ. முருகபூபதி), கொட்டியாரக் கதைகள்(வ.அ.இராசரத்தினம்), அந்த ஆவணி ஆறு (ச.அருளானந்தம்), மாங்கல்யம் தந்து நீயேடுராணி சீதரன்), கமகநிலா(ஆ.மு.சி.வேலழகன்), வேட்கை(நீர்வைப் பொன்னையன்), சிவாவின் சிறுகதைகள்(வண்ணை செ.சிவராஜா), நாட்கள் கணங்கள் வாழ்க்கைகள் (த.கலாமணி), எழு சிறுகதைகள்(பதின்மூவர் கதைகளின் தொகுப்பு), ஒரு தேவதைக் கனவு(கெக்கிராவை சகானா), ஒரு நாட்பேர்டுபுலோலியூர் சதாசிவம்), வரண்டுபோன மேகங்கள் (திக்வல்லை கமால்), அண்மைக்கால அறுவடைகள் தொண்ணுாற்றுேழு பக்கங்களைத்தான் கொண்டுள்ளபோதும் அதற்குள் இத்தனை முத்துக்கள் உள்ளடக்கமாகியுள்ளன. செறிவான உள்ளடக்கம். ஆழ்ந்த வாசிப்பும் இருட்டடிப்பு நோக்கமற்ற உள்ளுணர்வும் நேர்த்தியான சேர்க்கைக்கு மூல வேர்கள். பத்தி எழுத்துக்களின் தன்மைகள் மாறி வருகின்றன. வெறும் புகழ்பாடுதலும் எழுதுபவரின் சுய புராணமும் அதன் வளர்ச்சிப்படிகள் அல்ல. அவை சரிவை நோக்கிய பயணமாகும். நூலின் நல்லவற்றை எடுத்துக்காட்டி அதன் வளர்ச்சிப் பரிமாணங்களை விதந்துரைத்து மேலும் ஒருபடி வளர்ச்சிக்கான விமர்சன விதைகளை தூவிவிடுதல் வேண்டும். இதுவே வளர்ச்சிக்கான பசளையாகும்.
25

Page 14
இரத்தினவேலோனின் பத்தி எழுத்துக்கள் அந்தச் சரியான திசையில் தடம்பதித்து வருகின்றன. தரப்படுத்தும் நூல்களை முழுமையாக வாசிக்கும் அவருடைய சலிப்பற்ற வாசிக்கும் திறன் அதற்கு ஆதார சுருதியாகிறது. படைப்பிலக்கியங்கள் பற்றிய ஆழமான அறிவு தேடலும், பயிற்சியும், அயராத தன்மையும் அவருக்குரித்தானவை.
விமர்சனம் அகவுணர்வின் வெளிப்பாடாகும். முழுமையான வாசிப்பு அதற்கு வெளிச்சம் தருகிறது.
அரைகுறை வாசிப்பும், மேலோட்டமான விரைவோட்டமும் இயந்திரத்தன்மை எழுத்தாகிறது. ஒன்றில் புகழோ புகழ், அன்றில் இகழோ இகழ் என்ற தன்மை பத்தி எழுத்துக்களை குப்பைகூடம் நோக்கி நகர்த்துகின்றன. இரத்தினவேலோன் அந்த அழுத்தத்திலிருந்து திமிறிக்கொண்டு வெளிவருகிறார்.
ஒரு நூலைப் பற்றி அறிமுகம் செய்வதற்கு முன்னர் முதலில் தரமான இலக்கியம் பற்றிய சில விமர்சனக் கருத்துகளை தூவிவிடுவது வேலோனின் வழக்கம். தொடர்ந்து படைப்பாளி பற்றி காய்தல் உவத்தலின்றி சில வரலாற்றுக் குறிப்புகள், பின்னர் நூல் தொகுப்பிலிருந்து ஒரு கதையை பிடுங்கி எடுத்து அதன் கதை, கரு, பாத்திரங்களின் சிறப்பு என ஆய்வுகள் தொடரும். இவ்வாறு தொகுக்கப்படும் விசயங்கள் வாசகர்களின் ஆவலைத் தூண்டி நூலை தேடலுக்குட் படுத்துகின்றன. இத்தகைய எழுத்தமைப்பு வளர்ந்து வரும் பத்தி எழுத்துக்களின் சிறப்புத்தன்மைகள். அண்மைக்கால அறுவடைகள் அறிமுகப்படுத்தும் 20 நூல்களும் இவ்வாறு அமைந்து தேடி வாசிக்க ஆவலைத் தூண்டுகின்றன.
இரத்தினவேலோன் சிறப்பான கதைகளைத் தந்த ஒரு படைப்பாளி. பத்தி எழுத்துக்களை தரும்போது மனவுணர்வுகளை மெலிதாக தூண்டிவிடும் இசை நயத்தை இயற்கையாகவே ஒரு படைப்பாளி ஏற்படுத்தி விடுவான். வசனங்கள் கவிதை வரிகளாக பரிமாணம் கொள்வது அதனால்தான். அண்மைக்கால அறுவடைகளை கவிதை நயத்துடன் ஜீரணித்து கரைத்துவிட முடிகிறது. ஆவணப்பதிவுகள் கொச்சைப்படுத்தப்படும் இன்றைய சூழலில் ஒரு நேர்த்தியான வெளியீடு வாசகர்களுக்கும், மாணவர்களுக்கும் அரும் விருந்தாகும்.
99
"எங்ானம் சிங்களத்துத் தெயிலையும் செந்தமிழன் பொயிலையும் சின்ன வெங்காயமும் தொல்லை ஒன்றும் சீனியும் கோப்பியும் இல்லை யென்று
sta مه سع N· ·A UA LA م எங்கள் வயிற்றில் தில்லைச் சிவன் பால்
ஃள்கையில் சிந் தைவைத் திருந் தவர் எங்களுக்குத்தான் எலலைவழககு d இன்னும் எதிர் கொண்டதனால் ஞானம் வரவில்லை. இல்லை யே ஆனார். மட்டுவில் சி.சதாசிவம் சதவமணிதேவி
மல்லாவி விசுவமடு
26

(இம்.சுஹாதா.)
வாப்பா, உம்மா எனக்கு பொம்மை களைத்தான் விளையாடத் தருவார்கள். தம்பி, நானாமார் கிரிக்கற், ஃபுட்போல் என்றெல்லாம் விளையாடுவார்கள். அப்பொழுது எனக்கு மிகவும் ஆசையாக
"இங்க பாரு. நீ பொம்புளப் புள்ள. அதெல்லாம் நீ செய்யக் கூடாது., வாப். பா., இங்க பா.ருங்.க” என்று நிலத்திலிந்து, வீட்டுக் கூரையை நோக்கி நிமிர்ந் திருந்த ஏணியில் ஏறத்துணிந்த என்னைத் தடுத்த தம்பி நியாஸ், விடாது வாப்பாவைக் கூவி அழைப்பதில் அவசரமாய் இருந்தான்.
“இங்க பாரு. நீ பொம்புள புள்ள. புரியுதா. இந்த வேலை யெல்லாம் நீ பண்ணக்கூடாது. பொம் புளப்புள்ளைன்னா அடங்கி. ஒடுங்கி மவுனமா இருக்கனும். போ. போ. குசினியில எண்ன வேலைன் னு பார்த்து. உம்மாக்கு உதவி செய்.” கண்டிப்பும், அன்பும் கலந்த குரலில் வாப்பா என்னை சமாளித்துவிட்டார்.
நான் பெண்தான், அவர்கள் கூறும் விதத்தில். வயதுக்கு வந்ததிலிருந்து கடந்த ஐந்து வருடங்களாக என்னைச் சமையல் கற்றுக்கொள், நிலம் பார்த்து நட, வெட்கப்படு, வீட்டுக் குள்ளிருந்து மறைந்து கொண்டே எட்டிப்பார் என்று தான் எல்லோரும் கேட்டுக் கொள்கி றார்கள். ஏன் என்று எனக்குப் புரிய வில்லை.
அது என்ன. பொம்புளப் புள்ளை யென்றால் இப்படித்தான் இருக்க வேண் டுமா..? யார் சொன்னது? ஆம்புள என்றால் எப்படியும் இருக்கலாம்.?
அதிசயம் என்னவென்றால் இப்படி இரு என்று எனக்குச் சொல்பவர்க ளெல்லாம் ஆண்கள்தான்.
நான் சின்னவளாய் இருந்தபோதும்
27
இருக்கும். நானும் அவர்களோடு சேர்ந்து, விளையாடச் சென்றால் "நீ பொம்புள புள்ள போ அங்கால” என்பார் நானா,
எனக்கு அப்பொழுதெல்லாம் எரிச்சல் எரிச்சலாய் வரும், நான் அழுது அடம்பிடிக்கும் அவ்வேளையில் என்னை அழைத்து உம்மா கூட "அவங்க ஆம்புள புள்ளைங்க. அதல்லாம் ஆம்புளைங்க விளையாட்டம்மா.” என் பார் . எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அது என்ன ஆம்புளைக்கு வேற விளையாட்டான்னு.
ஆம் புள' என்றால் பாரம் தூக்குபவன், கலூசான் அணிஞ்சவன், தைரியமானவன், வெளியில் சென்று தொழில் பார்த்துவிட்டு மாலையாகி வீடு வருபவன் என்றுதான் எனக்கு பலரும் சொல்லித்தருவார்கள். புரிந்தாலும் புரியாவிட்டாலும் எப்படியோ சமாளித்துப் போவேன்.
காலங்கள் பல சென் றன. வாப்பாவும் திடீர் என்று மெளத்தாகிப் போனார். எனக்கு பெரும் கவலையாய் இருந்தது. நான் திருமண வயதை எட்டி நின்ற வேளையிலா வாப்பா மெளத்தாக வேண்டும். உம்மா என் திருமண ஏற்பாடுகளுக்கு நானாவைத்தான் நம்பி இருந்தார். ஆனால் கம்பனியில் ஏற்பட்ட ஒரு சின்ன பிரச்சினையில் நானாவும்

Page 15
வீட்டில் நின்று கொண்டார். அவர் சரியான முன்கோபி, உம்மா, வாப்பா இருவரும் அவரை அப்படித்தான் வளர்த் திருக்கிறார்கள். என்ன. செய்வது, தம்பி இன்னும் படிக்கிறான்.
அப்போதுதான் எனக்கு நல்ல தொரு வாய்ப்புக் கிடைத்தது. எமது வீட்டிற்கு சற்று ஐந்து கி.மீ தள்ளி உள்ள ஒரு தையல் தொழிற்சாலையில் உயர்தரத்தில் கணக்கியலில் சித்தி பெற்றவர்களுக்கு முகாமையாளராகப் பயிற்சி வழங்கப்படும் என்ற செய்தி என் காதில் அடிபட, உம்மா, நானா, எத்தனையோ முறை தடுத்தும் நான் விடாப்பிடியாய் நின்று அத்தொழி லைப் பெற்றுக் கொண்டேன். அத் தொழிலில் எனக்கு முன் அனுபவம் எதுவுமே இருக்கவில்லை. இருந்தும்: என்னிடம் நல்ல திறமை இருப்பதை அறிந்த அக்கம்பனி உயர் அதிகாரி முதல் சம்பளமாக 5000 ரூபா தருவ தாக ஒத்துக்கொண்டார். சந்தோஷமாக இருந்தது. அததனை கால மும வீட்டிற்குள் 994 683DL பட்டுக் கிடந்த எனக்கு அப்போதுதான் இறகு முளைத்த பறவை போல், கலர் கலராய் கற்பனை கள். சந்தோஷம். அத் ՞: 4 մ:l:Pն தனை சந்தோஷம். சிறை 17 !!! யிலிருந்து வெளிப்பட்ட : கைதி போல், புதிதாக உலகைப் பார்க்கிற மாதிரி உணர்வு. என்னைப் போல் இன்னும் எத்தனை பெண்கள் அடைபட்டுக்கிடக்கிறார் களோ.. என் மனம் அவர்களுக்காகப் பிரார்த்தித்தும் கொண்டது.
தொடர்ச்சியாய் நான் அங்கேயே தொழில் பார்த்தது, வீட்டுச் செலவு களைச் சமாளிக்கவும் ஏதுவாய் இருந்தது.
"இந்தா. நீ பொம்புள புள்ள,
28
மிகவும்
KWA * རིགས་ལ། །
வீதியில நின்னுக்கிட்டு நிக்காம உள்ளே போ..” என்று என் நானா கூறவில்லை. ஏன் என்றால் நான்தான் வீட்டில் தூணாக நின்று உழைத்துப் போடு கிறேன் என்பதால்.
"É..... பொம்புளப் புள்ள. இந்த வேலையெல்லாம் நீ செய்யக்கூடாது." என்று என் 22வயது நிரம்பிய தம்பியும் கூறுவதில்லை. ஏனெனில், நான் தானே ஆபிஸில் எத்தனையோ கிலோ பாரமான உடைகள் அடங்கிய பார்சலை நிறுத்துப் பார்க்கிறேன்.
FN "ஆம்புளைங்க முன் னால வராதே. உன் ÅR னால பயமில்லாம தைரி யமா வேலை செய்யமுடி N& யாது. பேசாம வீட்டுக் (குள்ள வந்து குசினி வேலைகளை மாத்திரமே * கவனி” என்று என் உம்மா W கூட கூறுவதில்லை. ஏனெ னில், எத்தனையோ ஆண் "தி களுக்கு மத்தியில், இரவு பதினொரு மணி வரையும் வேலை பார்த்துவிட்டு, எனது காரைத் தனியாக நான் தானே 'ட் ரைவ்’ பண்ணுகிறேன்.
என்னைப் பார்த்து இப்பொழுது யாரும் நீ பொம் புள புள்ள... இப்படித் தான் இரு' என்று \ கூறுவதில்லை. “னித்ரியமானவங்க, பாரம் சுமப்ப வங்க, நிமிர்ந்து நடப்பவங்க தான் ஆம்புளைன்னு முன்னர் ஒவ்வொருவரும் சொல்லித் தந்ததின் காரணங்களின் உண்மைகள் எனக்கு இப்பொழுதெல் லாம் நன்றாகவே விளங்க ஆரம்பித் துள்ளன. நான் அப்படி எல்லா வற்றையும் செய்கிறேனே.
நான்.?
(யாவும் கற்பனை)
 
 
 
 
 
 

XL
(S* பேசுகிறார்.
முற்போக்குக்காரர் சிவசேகரத்திற்கு சாபத்தில் நம்பிக்கை இருக்கிறதா? தமிழ்நாடு சபிக்கப்பட்டமைக்குத் திராவிட இயக்கங்கள்தான் மூலம் என்று அவர் நினைப்பாரானால் அதற்கு அவரின் மார்க்சிசப் பார்வைதான் காரணம்.
அப்பட்டமான நடிகை - பிராமணிய ஆதிக்கத்தின் கடைசி எச்சம் ஜெயலலிதாவோடு கலைஞர் கருணாநிதியை அவர் ஒப்பிட்டமைக்கும் அந்தப் பார்வைக்கோளாறுதான் காரணம்.
மெத்தப்படித்த சிவசேகரம் அவர்களிடம் இரு கேள்விகள் - தமிழகத்துத் திராவிட இயக்கங்களும் (எம்.ஜி.ஆர். - ஜெயலலிதாவை விட்டுவிடுங்கள்) இலங்கைத் தமிழரசுக்கட்சியும் உங்களைப் பொறுத்தவரை பிற்போக்குக் கும்பலாக இருக்கலாம். அப்படியானால் நீங்களும் உங்கள் முற்போக்குச் சகாக்களும் இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் எதைச் சாதித்துக் கிழித்துவிட்டீர்கள்?
இலங்கைக் கொம்யூனிஸத்தையும் முற்போக்கையும் உங்கள் வசதிகருதி எத்தனை கூறு போட்டாலும் அதற்குள் இது, இதற்குள் அது என்பதுதானே வரலாறு! இதை எப்படி மறுக்கமுடியும்? - வாகரைவாணன்.
ஜூலை இதழில்(14வது) உடுவை தில்லை நடராஜா அவர்களின் இலக்கியப் பணிபற்றியும் சமூகப்பணி பற்றியும் குறிப்பிட்டிருந்தீர்கள். உண்மையில் இவர்போலவே இன்னமும் உலகிற்குத் தெரியப்படாது இலக்கியப்பணியாளர்கள் நிறையவே உள்ளார்கள். அவர்கள் பற்றியும் ஞானத்தில் தொடர்ந்து வரும் என்று நம்புகிறேன். இது மட்டுமன்றி வீ.என். சந்திரகாந்தியின் ‘கலாசாரப் புயல்" எனும் சிறுகதை சிறப்பாக அமைந்துள்ளது. அவர் கதையின் ஓட்டத்தை சீரான முறையில் அமைத்துக்கொண்டு போவது கதைக்கு உயிரோட்டத்தைக் கொடுப்பதாக அமைகின்றது. ஞானத்தில் தொகுக்கப்பட்ட ஒவ்வொரு
படைப்புக்களும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவையாக அமைந்துள்ளன.
த.விஷ்ணு, வவுனியா வளாகம்.
சமீபத்தில் நான் எழுத்தாளர் எஸ்.பொ.வுடன் உரையாடியபோது அவரது பேச்சிலே சூடும் இருந்தது. அறியாமையை வேரோடு சாய்க்கும் தீவிரமும்
A
இருந்தது. நான் எதிர்பார்க்காத சடுதியிலே தமது மேஜை லாச்சியைத் திறந்து ஞானம் மே மாத இதழை எடுத்து, கலாநிதி துரை மனோகரன் எழுதிய கட்டுரையை வாசிக்கும்படி தந்தார். வாசித்து முடித்தேன். அவர் சொன்னார்:
"இந்த மருதூர்க்கொத்தன் யார்? நீலாவணனால் எனக்கு அறிமுகஞ் செய்யப்பட்ட, மிகக் கீழ்மட்டத்திலிருந்து, முன்னேறத் துடித்த இலக்கிய ஆர்வம் மிக்க ஒருவர். அவருடைய ஆற்றல்கள் செப்பமிடப்படுவதற்கு நான் உபகாரியாய் இருந்தேன். கோட்டைமுனைப் பாலத்திலே மட்டுமல்ல, மரபு பரிசோதனைக் களத்திலே சிறுகதை எழுதும்படி என்னால் ஊக்குவிக்கப்பட்டவர். மரபு பரிசோதனைக் களத்தின்போது, 'நானே கிழக்கிலங்கையில் சிறுகதை மேதையாக
29

Page 16
இருந்தேன்' என்று நெஞ்சின் மீது கைவைத்து அவர் உரிமை பாராட்டு வாரா? சிறுகதைத் துறையிலே அவரைப் பிரக்ஞையுடனும் தன்னம்பிக்கையுடனும் காலூன்ற வைத்தவன் நான். மட்டக் களப்பு முஸ்லிம் மக்களுடைய பேச்சு வழக்கினை, அன்றைய ஏனைய எழுத் தாளர்களிலும் பார்க்க இயல்பாகக் கையாளத் தூண்டினேன். இத்தகைய என் ஊக்கமும் உதவியும் நூற்றுக்கணக் கானவர்களுக்குச் சித்தித்திருக்கின்றது. இது என் ஊழியத்தின் ஓர் அம்ஸம். பூஜ்யமல்ல என்கிற் என் கதையை வாசிக்கக் கொடுத்து, அதன் உத்தி களைக் கற்றுத் தேர்ந்து கொள்ளும்படி ஊக்குவித்தேன். பின்னர் நான் ஈரா (அவர் சொல்வது போல இத்தா அல்ல, ாரா என்பது கவனத்திற் குரியது) எழுதியபொழுது, கரவாகுப்பற்று வாழ் முஸ்லிம்களுடைய இயல்பான மொழி பைப் பெய்வதற்கு அவர் உதவினார் என்பது உண்மை, மெதடிஸ்த மத்திய கல்லூரியிலும், மட்டக்களப்பு சென்றல் ஹோட்டலிலும் நான் சொல்ல அவர் எழுதிய அன்றேல் செப்பமிட்ட கதை களை பார் கணக்கில் வைப்பது? இவற்றையெல்லாம் மறந்து நான் எழுதிக் கொடுத்தேன் என்று மருதூர்க் கொத்தன் அலறுவது ஏன்? மகா குழந்தைத்தனமானது. ஈரா போன்ற மேலும் நல்ல சிறுகதைகளை மருதூர்க் கொத்தன் படைத்திருந்தால் உண்மை யில் மகிழ்வேன். அதுக்கு நிகரான இன்னொரு கதையை அவரால் ஏன் எழுத முடியவில்லை? அவருடைய வாக்குமுகிப்த்தை சுபதோல் விகளின் ஒப்புதல் என விளங்கி விபாசுலம் அடைகின்றேன்."
இவ்வாறு பல தகவல்களை எஸ்.பொ. நேரிடையாக என்னிடம் கூறி னார் என்னுடைய அச்சிலிருக்கும் தேடல். சில உண்மைகள்' என்ற நாலில் இவை இடம்பெறவிருக்கின்றன. த.தர்மகுலசிங்கம், டென்மார்க்,
3[]
கண நேர நினைவலைகள்
(சிறுகதைத்தொகுதி) எழுதியவர் யோகேஸ்வரி
சிவப்பிரகாசம் முதற்பதிப்பு: சித்திரை 2001 வெளியீடு : பிரனவன் வெளியீட்டகம்,
கோப்பாய், ..இவரது சிறுகதைகள் விரக்தி யின் வெளிப்பாடுகளாக அமைபாது நம்பிக் கையூட்டும் உணர்ச்சிச் சித்திரங் களாகவுள்ளன. இன்றைய தமிழ் மக்களின் வாழ்வியல் நிலைப்பை இவரது சிறுகதை கள் மூலம் மிக நுட்பமாக
அவதானிப் பினைக் கானமுடியும். புத்தொளி. பின்னட்டைக்குறிப்பில்.
சகடயோகம்
நாவல்) எழுதியவர் - க.சிவகுருநாதன் (கசின்) முதற்பதிப்பு: ஜூன் 2001 வெளியீடு சந்திரா வெளியிட்டகம்,
கொழும்பு 1.
- - - - - - கதைநுவல் திறம், கதையினு டாகச் சில உண்மைகளை லாவகமாக வெளிப்படுத்திச் சிந்திக்க வைக்கும் திறம், எவ்விடத்தும் சலிப்பின்றி வாசிக் கத் தூண்டும் எளிபைபான நடை, எதிர் பாராத் திருப்பங்களை அமைத்திடும்
பாங்கு என்பவற்றால் சகடயோகம் ஐம்பது ஆன டுகளின் பின் புடம்
சீரிளமைத் திறத்தோடு விழங்குகின்றது என்பதை எவ்வித தயக்கமுமின்றி எடுத் துரைக்கலாம். க.சொக்கலிங்கம் எம்.ஏ. (சொக்கண்)
அணிந்துரையில்.
 

5) ԱլT
2.б0065g
உரிமைகள் கேட்பார்க் கிங்கு உடமைகள் ஏதுமில்லை மாரிமழை காணும் வரை மடமையுடுத்து வாழ்ந்திடுவர் கரி பூசப்பட்ட நிலாவும் முகம் துடைத் தெழுகையில் பறித்துப் போதுமே மேகங்கள் பால் நிற வெளிச்சத்தை கண் விழிக்கும் நேரமெல்லாம் துப்பாக்கி வேட்டுக்கள் மனதை புண்படுத்தி பூ முகங்களின் புன்னகை திருடிச் செல்லும் வன்முறைகளின் வாலாட்டுகையால் தேசமெங்கிலும் மானிடத்தின் மண் வாசனை மழுங்கிப் போப் மண்டைக்கனங்கள் மகுடமேறுமே!
தோல்விக் கனவுகள் பாய்ந்து நெஞ்சைக் குடைகிற போது கல்வி யிழந்து துயர் கண்முன்னே கைதட்டும் கேள்விக்குறிகள் சூழ்ந்து வார்த்தைகளால் சுடும்போது வாழ்க்கை மெழுகுபோல்
ஒளிர்ந்து மெலிந்து அழியும்
இ.
எது நிஜம்?
இன்றும் நன்றாகத்தான் இருக்கிறோம். பாராபட்சம் பாராத பால்நிலா வெளிச்சத்தில்
நான் கண்டது கனவு அப்படித்தான் இருக்கும். இல்லையெனில் சிட்டுக்கள் சிறகடிக்க குயிலோசை குலவிட மொட்டுக்கள் மலரும் மாலை நேரத்தில் பச்சைப்புல்லில் நாம் சிற்றுண்டி அருந்தியிருப்பது நனவாகுமா? நடந்திருந்தது அணிறொருநாள் இன்றோ, அது கனவுலகக் கதையாயிற்று
கடற்கரையோர மணலில் கைகளைத் தலையணையாக்கி மணவையே கட்டிலாக்கி பனியும் வெயிலும் வாட்டும் பாலைவனத்தோர் ஒலைக்குடிசையில் அரைகுறை உண்வுடன் அல்லல் பட்டுக்கொண்டு. ஆனாலும் பால்நிலாவும் பகல்கனவும் வஞ்சனை செய்யாது வந்து போய்க்கொண்டிருக்கின்றன.
தேசங்கீதா - புத்தளம்

Page 17
S S S S S S
உறைந்து போன ம
வட்டுக் கருக்கு அறுத்தவேளை அதில் வழிந்த இரத்தம், இதயத்துள் நுழைந்து இரணமாகி அவர்கள் காணமல் போயினர். பேயுலாவும் பிணம் கருகி மனக்கு பசும்புல் முளைக்கா - பாழ் உப்பு வெளியில் மண்டை புதையுண்டு போனது இளைய ம நெஞ்சுக்குழி வரண்டு போக - பிஞ்சுப் புதுமலரொன்று தண்ணி தண்ணி கேட்டு விறைத் தெழுந்த சொறிக் குஞ்சாமணியில் சிதைந்து எங்கள் இதயம் இன்னும் ஏன் நின்று போகவில்லை. மலக் கிடங்கினுள் எம்மரணம் - கழுத்தறுத்து வீசப்பட நடுத்தெருவில் நாதியற்றுப் போன துயரக்கதை நீண்டு கிடக்கின்றது. அடித்து, அம்மண்மாக்கி ஆனா? பெண்ணா? ஆராய்ந்து - அறுத்தெடுத்து - லிங்க பூசை நிகழ்ந்ததா? பரிசை கெட்டுப் போன இந்தப் பாழ்வெளியில் வரிசையாய் வரும் சுழுவி முடிக்க கண்காணிபம் ஆகிடுே ஆயிரம் அம்புகள் நெஞ்சைக் குத்தி நடந்தவை - நடக்கப் போறவை இ நம்மை கேவலப்படுத்திக் கொண்டுதானே இருக்கின்றன.
பளை கோகுலராகவனி

T. GNJANJA SEKARÁN 19/7,
Peralde,víoya, Road,
Kavylody,
Srí Levovkov.
鄂|-
雅”, %迎。几圈
கேட்டு,
து போனது.
துயர்
! If I F
ப்ெ பிளக்க - இன்னும்