கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2001.09

Page 1
கலை இ
செப்டெம்பர்
 

லக்கியச் சஞ்சிகை

Page 2
இருத்தி
சேரஐலுத்திரி =
எவ்விடத்தில் எந்தெந்தச் சொல்லை இருத்தினால் ஒரு சிறந்த கவிதை வருமோ
அதைப்போல
உன் உதட்டை இருத்தி நீள் விழியை இருத்தி பொன் முகத்தை இருத்தி அதில் ஒளியை இருத்தி இன்னுமின்னும்
இருத்தி இருத்தி
செய்த கிளி
சுடுதண்ணிர் கேட்டது தொண்டைக்குள் முள் பொறுத்து வீங்க
கொதிதண்ணீர் இல்லை கொஞ்சம் ஆறியது? ိ%; குடித்தால் இறங்கிவிடும் பூவுக்குள் நில்லாது
முள்
நீ அழுவதனால் உண்டாகி என் நெஞ்சுக்குள் பொறுத்த குற்றி பனைமரத்தில் வெட்டியதா
பாரம்
இதற்கு நானெனின் குடிக்க மரம் உருண்டு புரள்கிறது
நாளைக்கு எழுதிப்
படிக்கலாம் என்றிருந்த பாட்டின் தலையை அது நசித்துக்கொண்டதனால்
உன்னுடைய நகம்போல அந் நகமிருக்கும் விரல்போல கண்ணுடைய இமைபோல
இமை துளிர்த்த மயிர்போல
எதையும் இருத்திவைத்தல் தெரியாத ஒருவனென்று
மீண்டும் தெளிவானேன் உன் தலைமுடியைக் குழப்புகின்ற காற்றுப்போல்
 
 

பிரதம ஆசிரியர்: தி.ஞானசேகரன் இணை ஆசிரியர்கள்: ந.பார்த்திபன் ஞா.பாலச்சந்திரன்
ஞானம் சஞ்சிகையரில் பிரசுரமாகும் படைப்புகளினர் கருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடை பு:துர்தினர்.
தொடர்புகளுக்கு.
தி.ஞானசேகரன் 197, பேராதனை வீதி, கண்டி, Qg5 T.G.L. -08-47.857O (Office)
08-23.4755 (Res.) O77-30GSO
F - OS-34755
E-Mail - guania nhữslitet.llk
ސ...................................................N
சிறுகதைகள்
- . . . . () či
இடிபாடுகள்.
புலோலியூர் செ. கந்தசாமி உறவுக்காரன் .
... . . . . . . . . . . . . . . . . . . . .
அக்விானப் சவரிமுத்து
கட்டுரைகள்
எழுதத் தாண்டும் எண்ணங்கள் . 10 கலாநிதி துரை மனோகரன் இலக்கியப் பணியில் இவர். ஏ.பிளிகோமளம் - ந. பார்த்திபன்
2."
கவிதைகள்
βΦά βαττ-ιτ-τιταστατιστατα . Ο2 சோலைக்கிளி ஏங்குவதை யாரறிவார். குறிஞ்சிநாடன் இருளுக்குள் . பொ.சத்தியநாதன் நான் தேடும் rயம் . மாவை.வரோதயன் இது எண்ன இரவல் நாடா?.
வாகனரவாண்ண்
ք է:
III
. 32
GHi Est skred -. 17 கவிஞர் அம்பி
வாசகம் பேசுகிறார். 29
புதிய நூலகம் .30 அந்தணிதீவா
அட்டைப்படம் - நா.ஆனந்தன்
O3

Page 3
இடிபாடுகள்
டுலோலியுர் செ.கந்தசாமி)
னெத்தைக் கீறி வையத்தைப் பறித்தெடுக்கத் துடிக்கும் விடுதலை வீரனின் ஆவேசத்துடன் காக்கைக் கூட்டங்கள் பறந்து பறந்து ஆர்ப்பரிக்கும் விடியல் பொழுது.
காலை ஆறரை மணி இருக் (503LDIt
அந்தத் தனியார் கல்வி நிறுவனத் தில் இருந்து வண்ணப்பறவைகளாய் வெளியேறியது மாணவியர் குழாம்.
அந்தச் சிங்காரச் சிட்டுக்கள் ஆளுக்கொரு துவிச் சக்கர வண்டி மீதேறிச் சிறகை விரித்தன. ஏதோ வீதி அவர்களின் பாட்டன் வீட்டுச் சொத்து என்ற தோரணையில் பாதையை மூடிய படி அந்த ஐவரும் சமாந்தரமாகப் பறந்து கொண்டு.
கல்விக்கூடத்தில் கற்பிக்கும் ஆசிரியர்கள், இவர்களுக்கு இந்தப் பாதை விதிமுறைகளையும் கொஞ்சம் போதித்துவைத்தால் என்ன என்று காண்பவர் மனம் ஆதங்கப்படும்.
போகிற போக்கில் ராஜி என்ற வண்ணக்கிளி திருவாய் மலர்ந்தது.
"இண்டைக்குச் சுகந்தியின் ரை அலங்காரம் கலக்கலடி. தேவயாணி uDTof..."
"இல்லாட்டி அவள் அழகில்லை எண்டோ சொல்ல வருகிறாய்" அமுதா இடக்காக,
"அதுக்கில்லையடி எப்பவும் அழகு சுந்தரிதான் அவள். இண்டைக்கு அலங் காரம் பிரமாதமாக இருக்கு அதைச் சொல்ல வந்தால்.”
அப்பொழுது...! எதிர்த் திசையில் இருந்து துவிச்சக்கர வண்டியில் வந்த ஆதவன் சுகந்தியை நோக்கிக் கண்ணைச்
04
சிமிட்டி, நாவைத் தொங்கப்போட்டு ஒரு அழகுக்கோலம் காட்டிவிட்டு ‘விசுக்" கென்று நகர்ந்தான்.
“இப்போ கண்டீரோ அலங்காரத் தின்ரை ரகஸ்யம். அண்ணனும் நோக் கினான், அவளும் நோக்கினாள்” அமுதா நக்கலடித்தாள். கடைவாயில் புன்னகையைக் கசியவிட்டபடி,
"போங்கோடி.." சிணுங்கினாள் சுகந்தி. "உவனை யார் பார்த்தது? எனக்குக் காதலும் இல்லை மண்ணாங் கட்டியும் இல்லை. உவனை யாரும் காதலிப்பாளவையோ. குடியன். பெருங்குடியன். வெறிக்குட்டி"
"ஓ..! பெருங் குடியன்." எல்லோரும் 'கொல்லென்று சிரிக்க சுகந்திக்குப் பற்றிக் கொண்டு வந்தது. எல்லோரையும் எரித்து விடுபவள் போல் பார்த்தாள்.
"அதுக்கேனடி வெறுக்கிறாய். இது ஒரு தலைராகம் போலை. விடுங்கடி" என்றாள் அமுதா ஒரு போலிப் பெரு மூச்சை உதிர்த்தபடி,
அப்பொழுது சங்கர் எதிரில் வந்தவன் வெகு பவ்வியமாக நல்ல பிள்ளைத்தனமாக இவர்களை விலத்திக் கொண்டு சென்றான்.
“பாரடி, ஆளைத் தெரியுதோ?” “ஆரடி அது?” "இவர்தான் சங்கர்-நளினியின்ரை காய்"
"சரிதான் போடி, இவன் எங்கே யிருந்து வருகிறானடி. அது 'ஓல்ட் நியூஸ் இவர் இப்போ மாலதிக்கெல்லோ "லைன் அடிச்சுத் திரியிறார்.”
"பாருங்கோடி இவனை. இவன் நளினிக்கெல்லோ "லவ் அடிச்சுத்திரிஞ்ச வன். அவளைவிட்டு இப்போ மாலதி
 

யோடை. என்ன ஆண்களோ. காதலும் கத்தரிக்காயும்.” சலிப்புக் காட்டினாள் ராஜி.
இனி இவர்கள் வீடு போய்ச்சேரும் வரை கேலியும் கிண்டலும் இவர்கள் பேச்சாக இருக்கும். சிரிப்பும் கும்மாள மும் மூச்சாக, கலகலப்பும் வளவலப்பும் 'சைக்கிள் பாய்ச்சலாக. உலகமே தனிதான் போங்கள்.
அவர்கள் ஒராங்கட்டைச் சந்தி யைத்தாண்டி 'பிரியா தியேட்டருக்கு அண்மையில் அந்த வளைவில் திரும்பும் போது 'சடக்கென்று எதிரில் துவிச்சக்கர வண்டியில் வந்த வயோதிபர் இவர் களின் வண்டிகளோடு மோதப்போக, இவர்கள் ஒவ்வொரு வராய் வண்டியை வெட்டி ஒடித்து மடக்கித்திருப்பி ஒருவாறு சமாளித்து நிமிர்ந்து நோக்கினால், கிழவன் இவர்களை நோக்கி ஒரு முறைப்பு முறைத்து, கீழ் உதட்டை மேல்வாய்ப்பற்களால் கவ்வி அழகு அகன்றது.
“LT ri சனியனை, இந்த நைன்ரிக்கு இப்பவும் ஏதோ வேணும் போல; வீதியிலே சைக்கிள் ஒடத்
தெரியேல்ல."
"பாவமடி!" பரிந்து பேசினாள் கவிதா. “வயதுபோன மனுஷன் ."
வீதியை முடியபடி ஓடிவந்த எங்களிலும் குற்றம்தானே"
"போடி இவ அவருக்குப் பரிந்து பேசவந்திட்டா. வயது போனா அதுக் கேற்ற மாதிரி ஒதுங்க வேண்டியது
தானே! இந்த ஆள் இப்படித்தான் ஒரு
LDHgS. f..."
"ஒமடி, இவர் கொஞ்சநாளா இப் படித்தான் . தொடருவதும் இடிப்பதும். நொடிப்பதும்" ஒத்தூதியது அமுதா.
"இதுக்கு ஒரு ‘ஐடியா நான் சொல்லட்டுமா” ராஜியின் திடீர் அறிவிப்பு.
“என்னடி ஐடியா’ வண்ணப்
e s
அவர்கள்
பறவைகள் கூட்டமாகக் கீதமிசைத்தன. ராஜி சிறிது சரிந்து அருகில்
ஓடிக்கொண்டிருந்த வதனியின் காதில்
கிசுகிசுக்க.
வதனி சுகந்திக்கும், சுகந்தி அமுதாவுக்கும், அமுதா கவிதாவுக்கு மாக. செய்தி அஞ்சல் முறையில் கிசுகிசுக்கப்பட்டது.
“மணியான ஐடியா. ராஜிக்கு ஒரு மாலை போடலாம்; இந்த பிரமாதமான 'ஐடியாவுக்கு” இது சுகந்தி.
"வேண்டாமடி. பாவமடி கிழவன்" கவிதா கெஞ்ச,
"போடி இவங்களுக்கெல்லாம் நல்ல பாடம் படிப்பிக்க வேணும்." என்றாள் ராஜி கண்டிப்புடன்.
பறவைகள் ஒரு புது உற்சாகத் துடன் தத்தம் வீடு நோக்கிப் பறந்தன.
அடுத்த நாள் படிப்பறையில் யாருக்குமே இருப் புக் கொள்ளவில்லை. ஆசிரியர் கற்பிக் கும் பாடத்தில் அவர்களின் மனம் ஒன்றி னால்தானே. தாங்கள் அரங்கேற்றப் போகும் வீதி நாடகத்தைப் பற்றிக் கற்பனையின் சுகத்தில் திளைத்திருந் தனர்.
"அம்மாடியோவ் இந்த மாஸ்டர் என்னடி அறுக்கிறார்” என்று புளுங்கியபடி இருந்தவர்களுக்கு, “இன்றைய பாடம் இத்தோடு முடிந்தது. இனி.” என்று தமிழோசை புகழ் ஆனந்தியின் பாணியில் ஆசிரியர் அறிவித்ததும்தான் தாமதம் அவர்கள் பரக்கப் பரக்க வெளியேறி சைக்கிளில் தாவி.
அப்போது சொல்லி வைத்தாற் போல் எதிரே கிழவன் தூரத்தே வரு வதைக் கண்ட ராஜி சுகந்திக்கும் வதனிக்கும் கண்ஜாடை காட்டினாள்.
சுகந்தியும் வதனியும் படக்கென ஒரு ஒழுங்கையில் திரும்பி குறுக்கு வழியே ஒடிச்சுற்றி மீண்டும் பிரதான வீதியில் ஏறி இப்போது கிழவனுக்கும் பின்னால் அருகே. மிக அருகே.
05

Page 4
இப்போது ஏறக் குறைய எல்
லோருமே கிழவனைச் சுற்றி வளைத்து
கிழவன் ராஜியை மோதுகிறாற் போல் வேப்புக்காட்டிவிட்டுத் துவிச்சக்கர வண்டியை வெட்டி அப்பால் செல்ல எத்தனிக்க சுகந்தியும் வதனியும் கிழவனை இப்பாலோ அப்பாலோ நகர விடாமல் அவரவர் வண்டியை முறித்து மடக்கி
"ஐயோ! என்ர தெய்வமே." கிழவன் கால் இடறி சைக்கிளோடு தடம் புரண்டு வீதியில் விழ.
அங்கே அவர்கள் யாரையும் காணோம். எல்லோரும் ஒழுங்கை ஊடாகத் திரும்பி மாயமாகிவிட்டனர்.
வீதியில் விழுந்த கிழவன் தடுமாறி நிமிர்ந்து தன்னைச் சுதாரித்து எழுமுன்பு வேகமாக வந்த ஜீப் ஒன்று கிழவன் உடலைப் பதம் பார்த்துக்கொண்டு, சைக்கிளை நொருக்கிக் கொண்டு பயங்கர "கிறீச்சலுடன் சிறிது தூரம் அப்பால் சென்று குலுங்கி நின்றது. கிழவன் இரத்த வெள்ளத்தில்! அடுத்தநாள் அவர்கள் எல்லோரும் சந்தித்தபோது அவர்கள் செய்த ‘மடைத் தனத்தை நினைத்து மனம் மறுகிக் கொண்டனர். ஒரு அவசர ஆலோசனை நடத்தி ஒரு முடிவுக்கு வந்தனர். அதன் படி மாலை வேளையில் எல்லோரும் ஒன்றுகூடி கிழவனது வீட்டைத் தேடிச் சென்றடைந்தனர்.
புதுமை நாகரிகம் புரைக்கேறிவிட்ட இக்கால கட்டத்திலிலும் பழமையின் சுவடுகள் இன்னும் முற்றாக அற்றுவிட வில்லை என்பதை நிரூபிப்பது போல் ஒன்றரை ஆள் உயர சுற்றுமதிலும்.
வீட்டு படலை திறந்தே கிடந்தது. முற்றம் முழுவதும் கும் பையும் கூழமுமாய். செல் வீச்சினாலும் “பொம்பரின் அட்டகாசத்தினாலும் வீட்டினுள் பெரும்பகுதி கொலுக் குலைந்து சீரழிந்து கிடந்தது. சிதைவு களும் சிதறலுமாய் கிடந்த இடிபாடு
06
துவிச் சக்கர
களுக்கிடையிலும் தப்பிப்பிழைத்துக் கிடக்கும் ஒரு பக்க அறையில்தான் அவர்களின் வாசம். வீட்டுச் சொந்தக் காரன் கனடாவில் என்பதால் இவர்கள் இதில் தஞ்சமடைய வாய்ப்பாகப் போய் விட்டது.
‘ஆரது? தீனமாய் வினாவிக் கொண்டு வெளிப்பட்டது ஒரு மெலிந்த உருவம். காலத்தின் சுவடுகள் அவள் ஒட்டிய கன்னங்களில் குரூரமாகத் தம் ரேகைகளைப் பதித்திருந்தன. துயரத்தில் தோய்ந்து போன விழிகள். அந்த அபலையின் முகத்தில் கவலையின் திவலைகள்.
"என்ன பிள்ளை வேணும்?" “ஒன்றுமில்லை அம்மா! அந்த விபத்து நடந்த அப்பு வீடு இதுதானோ?”
“ஓம் பிள்ளை! என்ன விசயம்?" "இல்லை அம்மா, அண்டைக்கு வீதியிலை சைக்கிளிலை வந்த நேரம் தான் அவர் சைக்கிளை மோதப்போக. நாங்கள் விலத்த முயற்சிக்க அந்த விபத்து நடந்தது.
"அப்படியோ சங்கதி. அவருக்கு சிக்காரான அடிபிள்ளை. தெருவிலை நிண்ட ஒரு லொரிக்காரன்தான் அவரை ஆஸ்பத்திரியிலே சேர்த்து.”
"அதை ஏன் பிள்ளை கேட்பான், இந்த மனுஷனுக்கு மூளை கொஞ்சம் மாறாட்டம்.”
தோழிகளின் விழிகள் ஒன்று சேர
 

ஆச்சரியத்தில் அகல விரிந்தன.
கிழவி சுவரில் தொங்கிய சட்ட
மிட்ட புகைப்படம் ஒன்றைச் சுட்டிக்
காட்டினாள்.
"அந்தா, அந்த போட்டோவில இருக்கிறாளே அவள்தான் கமலி. எங்கள் ஒரே மகள்"
மீண்டும் ஒரு ஆச்சரியக்குறி தோழிகளின் வதனத்தை ஆட்கொண் டது. அவர்கள் வெகு உன்னிப்பாக கிழவி சொல்லும் விருத்தாந்தத்தைச் செவி மடுத்தனர்.
ஒருநாள் ரியூஷன் எண்டுசொல்லி காலை ஆறுமணிக்கு போனவள் பத்துமணியாகியும் திரும்பி வரவில்லை. விசாரித்துப்பார்த்தால், சந்தியில் ரவுண்ட் அப் பில் தலை ஆட்டிமுன்னே நிறுத்தி வைத்திருந்ததாகக் கேள்விப்பட்டுப் போய் இராணுவ முகாமில் கேட்டுப் பார்த்தால் அப்படி ஒரு ஆள் பிடிபட வில்லை என்று கையை விரிச்சினம்.
பிறகு அடுத்தமுகாம், அண்டிய முகாம் எண்டு பலாலி ஈறாகப் பார்த்துக் களைத்ததுதான் மிச்சம். அன்று தொட்டு ஆலோசிச்சு ஆலோசிச்சு ஆள் மூளையை விட்டு விட்டார். ஒழுங்கான சாப்பாடு இல்ல. தொழில் துறை யில்லை. பைத்தியமாகித் திரிகிறார். நான்தான் இடியப்பம் பிட்டு அவித்துச் சாப்பாட்டுக் கடைக்குக் குடுத்து அரை வயிறும் கால் வயிறுமாகக் காலம் கழியுது.
“இப்படி ஒரு நாளில் தான்.” கிழவி சுகந்தியைச் சுட்டிக்காட்டி
சரியாகப் பத்தெழுத்தும் பாவனை யும் இந்தப் பிள்ளை கமலியின்ரை சாயல். இந்தப் பிள்ளையைக் கண்டால் போதும் கமலி என்று சொல்லிக் கொண்டு பின்னால போவார். இவளைக் கண்டால் ஒரு சந்தோஷம். இப்படித்தான் அண்டைக்கும் இந்தப் பிள்ளையைத் தொடர்ந்திருக்கிறார் போலை. எங்க
07
ளின்ரை விதி அப்படி. விபத்து நேர்ந்து போச்சு. இனி அவர் தப்பிப்பிழைக்கிறது
எண்டால்.
வார்த்தைகளில் அவநம்பிக்கை இழையோடியது. அவள் விம்மி விம்மி அழத்தொடங்கிவிட்டாள்.
“நாங்கள் செய்த பாவம் பிள்ளையை வாழுகிற வளர்கிற வயசில பறி கொடுத்திட்டு நிற்கிறம். அது சீவனோடு தான் இருக்குதோ, இல்லை பலாலியிலோ களுத்துறை யிலோ. அனுராதபுரத்திலோ இல்லை செம்மணியிலோ யார் அறிவார்.
நாங்கள் போகாத இடமுமில்லை. தேடாத தளமுமில்லை. முறையிடாத பேருமில்லை. எல்லாக் கட்சிகளின்ரை கவனத்துக்கும் கொண்டு போனதுதான். மனித உரிமைக் குழுவிலுந்தான்.
அங்கே போனபோது தானே கண் டது. எத்தனை எத்தனை பாவிகள். வீட்டில் வைத்து தொலைந்து போன வரின் பெற்றோர். பாதையிலை, பாட சாலையிலை போனவழியிலை தவறிய பிள்ளைகளின் பெற்றோர், உறவினர். கணவனைத் தொலைத்த இளம் பெண்கள். பிள்ளைகளைத் தொலைத்த பெற்றோர்.
அப்போதுதான் எண்ணினன். இது எனக்கு மட்டும் ஏற்பட்ட இடுபாடு இல்லை. இது நாடளாவிய சோகம். எங்கள் சமூகத்துக்கு ஏற்பட்ட சாபக் கேடு எண்டு மனத்தைத் தேற்றிக் கொண்டேன். ஆனால் இந்த மனு ஷன்ரை மூளை பிசகிக் கிடக்குது.
இனி நானும் மூளையை விட்டால் இந்த மனுஷனர கதி. இனி இங்கே முழிக்கிற இந்தப் பாலகன்ர கதி. அது அந்தரிச்சுப் போகும்.
நானும் மனதைக் கல்லாக்கி. என்ர பிள்ளையின்ரை செய்தி வரும். எங்களுக்கும் விடிவு வரும். ஒரு தீர்வு
கிட்டும் எண்டு ஏங்கி ஏங்கி காலத்தை
நெட்டித் தள்ளிக் கொண்டிருக்கிறன்.

Page 5
இப்போ இந்த மனுசன். இப்படி ஐயோ! இனி எங்களுக்கு ஆர் துணை" மார்பில் அடிக்காத குறையாக விம்மி விதிர்விதித்து.
"அம்மா! அழாதையுங்கோ! தமிழன்ர விதி இதுவாகப் போச்சு இனி நடக்கிறதை காணவேண்டியதுதான்"
காணாமல் போனவைக்கு நஷ்ட ஈடு குடுக்கிறதாகச் செய்தி வந்தது. பிறகு சில பேரின்ரை இருப்பிடமே தெரியவில்லை எண்டு செய்தி வந்தது.
மொத்தத்தில செம்மணி விவகாரம்
புகைஞ்சு போச்சு.
இழந்த உயிருக்கு என்ன தொகை குடுத்தாலும் ஈடாகுமே ஆனால் அப்படி தத்துவம் பேசிப்போட்டு இருக்க மனம் கேட்குது இல்லையே! பெற்ற வயிறு பற்றி எரியுதடி நான் தனிச்சுப்போன 6ttg...
"நீங்கள் தனியில்லை அம்மா நாங்கள் உங்கள் பிள்ளைகளைப்
போல உறுதுணையாக இருப்போம்
யோசியாதையுங்கோ.”
அடுத்தநாள் காலையில் அவர்கள் எல்லோரும் வைத்திய சாலைக்குச் சென்று கிழவனைப் பார்ப்பதாக உறுதி யளித்துவிட்டு தோழிகள் பிரிந்தனர்.
ஏற்கனவே தீர்மானிதததுபோல் தோழிகள் எல்லோரும் குறிப்பிட்ட இடத்தில் சந்தித்துக் கொண்டனர். சுகந்தி மட்டும் வந்து சேரவில்லை. எல்லோர் முகத்திலும் ஒரு வித சோகத் தின் சாயல். அவர்களுக்கு இயல்பாக வேயுள்ள குதூகலமும் உற்சாகமும் எங்கே முடங்கிவிட்டதோ! கை மணிக் கூட்டையும் பாதையையும் அடிக்கடி மாறிமாறிப் பார்த்த வண்ணம் ஒருவித பரபரப்பில் யாவரும்.
"அதோ சுகந்தி” கூவினாள் வனிதா.
சுகந்தியைக் கண்டதும் எல்லோ ரும் வியப்பின் விளிம்பில்.
"இது சுகந்தி தானா?”
08
முதல்நாள் அந்தக் கிழவன் வீட்டில் கண்ட கமலியின் போட்டோவில் கண்டமாதிரி.
நடு வகிடுவிட்டு தலை மேவிச்சீவி, இரண்டு பின்னலும் இரு தோளின்மேல் முன்பக்கம் மார்பில் தொங்க. பின்னல் நுனியில் வட்ட ரிபன். நெற்றியில் கரும் புள்ளியாக ஒட்டிய திலகம். நீளமாய்க் குருவிக்கூடு போல் தொங்கும் காதணி. கையில் "ஃப்றில் வைத்துத் தைத்த சட்டை அப்படியே உரித்து வைத்தாற் போல் கமலி. கமலியேதான்.
உலகில் எங்கையாவது ஒத்த சாயலில் ஏழுபேர் உண்டு என்பார் களே. இங்கேயே. இருவரா. அமுதா சொன்னாள். "நீ பேய்காய் தானடி சுகந்தி, உன் அலங்காரம் 'அந்த மாதிரி இருக்கடி. நீ அசல் கமலி மாதிரியே இருக்கிறாய். உன்னைக் கண்டால் கிழவன்.”
*சரி சரி, ஆஸ்பத்திரிக்குப் போவமடி. நேரம் தாமதமாகுது” அவசரப்படுத்தினாள் ராஜி.
வைத்திய சாலையில் மணியடித் துப் பத்து நிமிடங்கள் கடந்து விட்டன. துரிதமாக நடந்து வார்ட்டில் போய்த் தேடினர். அங்கே தாயும் மகனும் சோகமாக நிற்பதைக் கண்டு அருகில் சென்று பார்த்தால்.
"இரத்தம் ஊறிய கால் கட்டு. வயிற்றில் கட்டுடன் சோர்ந்துபோய் கிழித்துப் போட்ட வாழைநாராக நொய்ந்துபோய் படுத்திருந்த கிழவனைக் கண்டதும் பரிதாபமாக இருந்தது. சுகந்தி யைக் கண்டதும் அவர் விழிகளில் ஒரு விகசிப்பு. எழுந்திருக்கவோ பேசவோ
எத்தனித்தும் இயலாத நிலையில்
உதடுகள் மட்டும் கமலி என்று அரற்று வது துல்லியமாகத் தெரிந்தது. கிழவன் சுகந்தியைத் தன் மகள் கமலி என்று எண்ணிவிட்டது எல்லோருக்கும் புரிந்து விடுகிறது. எல்லோரும் சுகந்தியை உற்று நோக்குகின்றனர். சுகந்தி அவர்

அருகில் சென்றாள்.
"அப்பா!' என்ற வார்த்தை அவர் காதில் அமுத தாரையாக விழ அவர் முகத்தில் மலர்ச்சியின் கீற்று. எழுவ தற்கு எத்தனிக்கும் அவரை அமர்த்திப் படுக்க வைக்கிறாள் சுகந்தி. அவர்கள் கொண்டுவந்த வெந்நீர்ப் போத்தலில் இருந்து ஊற்றி அவள் பருக்கிய பாலை மிடறு முறிய மென்று விழுங்குகிறார் கிழவர். அவர் முகத்தில் என்றுமில்லாத
O d
அன்பார்ந்த வாசகர்களே!
கொழும்பு;-
யாழ்ப்பாணம்:-
திருகோணமலை:-
திரு. சித்தி அமரசிங்கம் கந்தளாய்: சொய்ஸ் பலஸ், கந்தளாய். மட்டக்களப்பு:-
முல்லைத்தீவு:-
முல்லைத்தீவு. வவுனியா:
கண்டி
கொட்டக்கலை:-
புத்தளம்:-
ஞானம் சஞ்சிகையைத் தொடர்ந்து பெற விரும்புவோர் சந்தாதாரர்களாகச் சேர்ந்து கொள்ளும்படி வேண்டுகின்றோம்.
"ஞானம்' சஞ்சிகை கிடைக்கும் இடங்கள்:
பூபாலசிங்கம் புத்தகசாலை - 340, செட்டியார் தெரு, கொழும்பு 11. பூபாலசிங்கம் புத்தகசாலை - 309A 2/3, காலி வீதி, வெள்ளவத்தை. வசந்தம்- S - 44,3வது மாடி, மத்திய கூட்டுச் சந்தை, கொழும்பு - 11.
பூபாலசிங்கம் புத்தகசாலை - ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம். திரு பஞ்சலிங்கம் - உதயன் புத்தகசாலை, பருத்தித்துறை.
வாணி புத்தகசாலை - 69, இராஜவரோதயம் வீதி, திருகோணமலை.
- 21 ஒளவையார் வீதி, திருகோணமலை.
சக்தி நூல்நிலையம் - 58, திருமலை வீதி, மட்டக்களப்பு. எஸ். தர்மகுலசிங்கம், சுவைத்திரள் - 41, பார் வீதி, மட்டக்களப்பு.
கே. சின்னத்தம்பி - அறிவு அமுது புத்தக நிலையம், புதுக்குடியிருப்பு,
சந்திரபோஸ் சுதாகர் - 87, வியாசர் வீதி, தோணிக்கல், வவுனியா.
கலைவாணி புத்தகசாலை - 231, டி லங்கா சென்றல் புத்தகசாலை - 81 கொழும்பு வீதி, கண்டி.
சாரல் என்டர்பிறைஸ் - 7, ஷொப்பிங் கொம்பிளெக்ஸ், கொட்டக்கலை.
சாரா பேப்பர் சென்ரர் - 14, யூ.சி. ஷொப், குருநாகல் றோட், புத்தளம்.
ஒரு அபரிமிதமான ஒளிவீச்சு. அவர் விழிகள் மலர கன்னம் விகச்சிக்க உதடுகள் விரிய கமலி. க. ம. லி
பட்டென அவர் தலை சாய்கிறது. அவர் மீளா நித்திரையில் ஆழ்ந்து விட்டார்.
水 水 本 米 率
S L S
எஸ்.சேனநாயக்க வீதி, கண்டி.
O
so o e o e o o o so e o so o os o oo e o so e o o 0 e o O o o e o O o os o os e o '
09

Page 6
எழுதத் தூண்டும் எண்ணங்கள்
(கலாநிதி தரை.மனோகரனி)
அடக்கமான இலக்கியவாதி
லங்கையில் தரமான முறையில் அடக்கமாக இலக்கியப்பணி புரியும் இலக்கியவாதிகளில் முதன்மையான ஒருவர், தகவம் இராசையா அவர்கள். நான் எனது கல்லூரி நாட்களில் வானொலியில் விரும்பிக் கேட்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று, சனிக்கிழமைதோறும் மாலை வேளைகளில் இடம் பெற்று வந்த 'இளைஞர் மன்றம் நிகழ்ச்சி. பெரும் பாலும் அந்த நிகழ்ச்சிகளைத் தவறாமல் செவிமடுத்து ? வந்துள்ளேன். சிறப்பான முறையில் அந்த நிகழ்ச் சியை நடத்தி வந்தார், 'வானொலி அண்ணாவாக விளங்கிய இராசையா அவர்கள். மாணவப் பருவத்திலிருந்து எனக்கு மிகவும் பயனளிக்கும் நிகழ்ச்சியாக அது விளங்கியது. அவரது குரல்வளமும், தரமான நிகழ்ச்சியமைப்பும் 'இளைஞர் மன்றத்தைச் சிறப்பித்தது. அந்த வானொலி அண்ணாதான் திரு. இராசையா என்பது பின்னர்தான் எனக்குத் தெரிந்தது.
இராசையாஅவர்களின் முழு முயற்சியால் உருவாகிய தகவம் என்னும் இலக்கிய அமைப்பு, அவரின் பெயரைப் பாதுகாத்து வந்துள்ளது. இந்நாட்டின் இலக்கியவாதிகளின் படைப்புகளைத் தரங்கண்டு மதிப்பீடு செய்யும் முயற்சியினை அது மேற்கொண்டு வந்துள்ளது. தமிழ்நாட்டின் ‘இலக்கியச் சிந்தனை அமைப்போடு இது ஒப்பிட்டுக் கூறப்படுவது வெறும் புகழுரையன்று.
இலங்கையின் தரமான இலக்கிய விமர்சகர்களை விரல்விட்டு எண்ணினால், அவர்களுள் ஒருவராக நிச்சயம் இராசையா அவர்களும் இடம் பிடித்துக் கொள்வார். 'விபவி சஞ்சிகை அவரது சிறந்த விமர்சன வாய்க்காலாக விளங்குகிறது. அவரது விமர்சனங்களில் நிதானமும், தரமும் இயல்பாகவே இழையோடுவதை எவரும் அவதானிக்க இயலும்.
இலங்கையின் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் அடக்கமாகவும், நிதான மாகவும், தரமாகவும் செயற்படும் அவரது பங்களிப்பும் இணைந்துள்ளது என்பதை மறுப்பதற்கு இயலாது. அவரது மனவுறுதியும், ஆழ்ந்த சிந்தனைத் திறனும், தரமான எழுத்துப் பணியும், அமைதியான செயற்பாடுகளும் மேன்மேலும் தொடரும் என்ற நம்பிக்கை, இலக்கிய அபிமானிகளுக்கு இயல்பாகவே உள்ளது.
தெருக்கூத்து
"தெருச்சண்டை கண்ணுக்குக் குளிர்ச்சி" என்பார்கள். எங்கள் நாட்டில் நாள்தோறும் விதம்விதமான கோலங்களில் தெருக்கூத்துகள் நடைபெற்று வரு கின்றன. எந்தப் பக்கம் திரும்பினாலும் தெருக்கூத்து ஆட்டக்காரர்களின் நடிப்புத் திறன் மெய்சிலிர்க்க வைக்கிறது.
தெருக்கூத்து ஆட்டக்காரர்களில் ஒரு சாரார், காது இனிக்கக் கதை
10
 

களைப் பேசி, ஒரே கருவையே பலமுறை வெவ்வேறு கூத்துகளாக ஆடி வருகின்றர். ”பேச்சுப் பல்லக்கு தம்பி கால்நடை" என்பதே அவர்களது கூத்தின் அடிப்படையாகும். மக்களின் பெயரில் நாடகமாடும் கொட்டகை ஒன்றைச் சொந்த வீடு போலப் பூட்டி வைத்துவிட்டுத் தெருக்களில் கூத்துகளை அவர்கள் ஆடிவரு கின்றனர். இவர்களின் கூத்து மிகவும் சுவாரசியமானது. ஒரே கருவை வித்தியாச மான முறைகளில் நடித்துக் காட்டும் அபாரமான திறமையை இவர்கள் கொண் டுள்ளனர். இவர்களது கூத்துகளில், ஒரு நடிகர் பேசுவதற்கு முற்றிலும் மாறாகப் பிறிதொரு நடிகர் பேசுவார். தொண்டை கிழியக் கத்திக் கோமாளித்தனம் செய்வதற் கென்றே சில நடிகர்களுக்கு இவர்கள் பயிற்சியளித்து வைத்துள்ளனர். எல்லா நடிகர்களும் சொல்லிவைத்தாற்போல், தமக்குப் போட்டியான பிறிதொரு தெருக் கூத்து குழுமீது சகல பழிகளையும் சுமத்தி நடிப்பர். தாமே ஆட்டத்திற் சிறந்தவர்கள் என்றும், தமது குழுவே நாட்டிற் கலையை வளர்க்கும் சிறந்த குழு எனவும் இவர்கள் மேடைகளில் நன்றாக நடித்துக் காட்டுவர். சொல்வது எல்லாவற்றையும் செய்யவேண்டியதில்லை என்பதே, இவர்களது தெருக்கூத்துகளால் மக்கள் பெறும் நீதியாகும். இவர்களது நடிப்பில் மெய்மறக்கும் ரசிகப் பெருமக்கள் தமிழ்பேசும் மக்களிடையேயும் உண்டு.
இவர்களுக்கு ஏட்டிக்குப் போட்டியான இன்னொரு தெருக்கூத்துக் குழுவும் உள்ளது. குழுக்களாகவுள்ள கோமாளிகள் பலர் சேர்ந்து, தமது கூத்துதான் நாட்டில் நல்ல கலையை வளர்க்கும் என்று கூறித் தெருக்கூத்துக்களை நிகழ்த்தி வருகின்றனர். இத்தெருக்கூத்துக் குழுவிலும் சுவாரசியமான அம்சங்கள் நிறைந் துள்ளன. ஒரு குட்டிக்குழு கூறுவதை, மறு குட்டிக்குழு மறுதலித்துப் பேசும். ஒரு குழுவின் ஆட்டத்தை மறுகுழு மட்டந்தட்டி நடக்கும். தலைமைக் கூத்துக்காரர் களைப் பொறுத்தவரையில், தமது குழுவைச் சேர்ந்தவர்களோ, பிற குழுக்களோ எப்படி ஆடினாலும் பரவாயில்லை, தமது கூத்து வெற்றிவாகை சூடினால் போதும் என்பதையே தமது கலைக்கொள்கையாகக் கொண்டிருக்கின்றனர். இத்தெருக்கூத்து ஆட்டக்காரர்களின் ஒரே நோக்கம், தமக்குப் போட்டியாகக்கூத்து நடத்தும் மற்றப் பெரிய குழுவின் தெருக்கூத்தை இடைநிறுத்தி, தமது கூத்துக்கு ரசிகப் பெருமக்கள் ஆதரவளிக்கவேண்டும் என்பதாகும்.
வாயால் சோசலிசம் பேசி வயிறு வளர்க்கும் ஒரு தெருக்கூத்துக் குழு, பிற குழுக்கள் நல்ல கலையை வளர்ப்பன அல்ல என்றும், தானே அதற் குத் தகுதி படைத்தது எனவும் கூறித் தெருக்கூத்துகளை நடத்தி வருகிறது. இக்குழுவினர் பெரும் தெருக்கூத்துக் குழுக்களுக்குக் கண்ணாமூச்சி விளையாட்டுக் காட்டி, ரசிகர்முன் தமது கூத்துகளை அரங்கேற்றி வருகின்றனர்.
குருக்கள்மாரின் நல்லாசி பெற்ற சில தெருக்கூத்து ஆட்டக்காரர்கள், பெரிய நாடகக் குழுக்களை ஒன்றுசேர்த்துப் பிரமாதமான தெருக்கூத்தை ஆட வைக்கும் முறையில் ஈடுபட்டு உழைத்து வருகின்றனர்.
இடதுசாரி வேடந் தரித்த சில தெருக்கூத்து நடிகர்கள், சொந்தமாக ஆடுவதை மறந்து, பிறருடைய கூத்துகளுக்கு நீண்டகாலமாகத் தாளம்போட்டுப் பழகிவிட்டனர். இவர்கள் வேடம் தரிக்காமல், உண்மையான கலைக்கொள்கை யோடு சொந்தக்காலில் ஆடினால், இவர்களது கூத்தை ஓரளவு ரசிக்க முடிந்திருக் கும். தனித்துவமான இடதுசாரி ஆட்டக்காரர் இருவர்மீது தமிழ் ரசிகர்களுக்கு நல்ல அபிப்பிராயம் இருந்துவந்தது. ஆனால், அவர்கள் இப்போது கன்னைமாறி, 11

Page 7
பெரும் தெருக்கூத்துக் குழுக்களுக்குத் தாளம்போடத் தொடங்கியுள்ளனர். கொஞ்ச மாவது கலைக்கொள்கை கொண்ட சில இடதுசாரி ஆட்டக்கலைஞர்களுக்கு, மற்றைய தெருக்கூத்து ஆட்டக்காரரைப் போல நடிக்கத் தெரிவதில்லை. அவர் களோடு ஆட்டத்தில் போட்டிபோடவும் முடிவதில்லை. அதனால், பெரும்பாலான ரசிகப் பெருமக்கள் அவர்களை ஏறிட்டுப் பார்க்காமல் இருந்தே பழகிவிட்டனர்.
தமிழ் தெருக்கூத்து ஆட்டக்காரர்கள் திக்குத்திசை தெரியாமல் தடுமாறி, எந்த மேடையில் எப்படி ஆடுவது என்று திகைத்து நிற்கின்றனர். தனித்துவமாகத் தாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, எந்தப் பெரிய தெருக்கூத்துக் குழுவுக்கும் பின்னால் கைகட்டிச் சேவகம் செய்யாமல், கலைக்கொள்கையோடு ஆட்டம் நிகழ்த்தினால், ஓரளவு தமது கூத்து களைகட்டும் என்பதை புரிந்து கொள்ளமுடி யாமல் தவிக்கின்றனர். பெரிய தெருக்கூத்துக் குழுக்களுக்குப் பின்னால் வால் போலத் தொடர்வதையே, தமிழ் தெருக்கூத்துக்காரர்கள் விரும்பித் தொழிற்படு கின்றனர். இவர்களது கூத்துகளைப் பெரும் தெருக்கூத்துக் குழுக்கள் பொருட் படுத்துவதில்லை எனினும், இவர்கள் அதுபற்றிக் கவலைப்படுவதில்லை.
முஸ்லிம் தெருக்கூத்து ஆட்டக்காரர்களும் தெருக்கூத்து ஆடுவதில் தாங்களும் எவருக்கும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை ரசிகப் பெருமக்களுக்கு நிரூபித்து வருகின்றனர். எதிரும் புதிருமாக இரு ஆட்டக்குழுக்களை வைத்துத் தெருக்கூத்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு குழுவும் தான்தான் கலைவளர்க்கும் உண்மையான தெருக்கூத்துக் குழு என்று நடித்துக் காட்டி, ரசிகர்களைக் குழப்பி வருகின்றது.
முடிசூடா மகாராணி
அலைகடலுக்கு அப்பால் தமிழ்நாட்டில் இடம்பெறும் நிகழ்வுகள், அரசியல் அநாகரிகத்தின் உச்ச எல்லையைத் தொட்டு நிற்கின்றன. தமக்கு மீண்டும் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்த முதலமைச்சர் பதவி கிடைத்ததும், ஜெயலலிதா தம்மை ஓர் இராணியாகவே கருதிச் செயற்படத் தொடங்கிவிட்டார். முடியும், குதிரையும், தேரும் யானையும் இல்லையென்ற குறையைத் தவிர, ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணியாகவே அவர் தம்மை நினைத்து விட்டார். "யார் அங்கே" என்று கட்டளையிட்டதும், உடனடியாகச் செயற்படும் சேவகர்களாகத் தமிழ்நாட்டுக் காவல்துறையை அவர் ஆக்கியிருக்கிறார். முன்னாள் முதல்வர் என்பதற்காக அல்லாமல், நாட்டின் பிரசை என்ற முறையிலாவது கருணாநிதியின் கைது தொடர்பாக நாகரிகமாக அவர் நடந்துகொண்டிருக்கலாம். தாம் ஆட்சிபீடம் ஏறியதே கருணாநிதியைக் கைது செய்வதற்காகத்தான் என்பது போன்று அம்மணி நடந்து கொண்டுள்ளார். ஆட்சிக்கு வரமுன்னரே, "கரு ணாநிதியை சிறையில் அடைப்பேன்" என்று சபதம் செய்தவர், இந்தப் பெருந்தகைப் பெண்மணி. அண்மையில் தி.மு.க பேரணிமீது தமிழ்நாடு காவல் துறை தொடுத்த தாக்குதலும், அம்மாநிலம் மீண்டும் முடிமன்னர் காலத்துக்குச் செல்லத்தொடங்கு கிறதோ என்ற பிரமையை ஏற்படுத்துகிறது. "பேயரசு செய்தால் பிணம் தின்னும்
சாத்திரங்கள்" என்று பாரதி குறிப்பிட்டது இவர்களைத்தான் போலும்!
12

മ സമ്മേസ്ത്
அக்னஸ் சவரிமுத்தி
605 ப்பையைக் கவனமாகப் பிடித்துக்கொண்டிருந்தாள் தெய்வானை. அவளது எட்டு வயது மகன் கைப்பை யோடு சேர்த்து அவளது கையையும் இறுகப் பிடித்திருந்தான். வலது கையால் முகத்தில் வடிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டாள். கள்வர் பயம் ஒருபுறம்; அடையாள அட்டை கைவசம் இருந்தபொழுதிலும் நாட்டு நிலைமை, பரிச்சயமற்ற கொழும்பின் நிலைமை அவளுக்கு நடுக்கத்தையே ஏற்படுத் தியது. கோட்டை புகையிரத நிலையத் திற்கு முன்பாக பஸ்ஸுக்காக நின்றி ருந்த ஜன நெரிசலிடையே அவளும் நின்றுகொண்டிருந்தாள்.
'கண்ணாஸ்பத்திரிக்குப் போகும் பஸல் எது? என்று யாரையாவது கேட்க நினைத்தாள். ஆனால் எல்லோரும் புது முகங்கள். பொட்டு வைத்த முகம் ஒன்றும் தென்படாதா என்ற ஏக்கத்தோடு கூட்டத்தில் நின்றிருந்த பெண்களி டையே மெதுவாகப் பார்வையை வீசியவள் "அக்கா" என்று அழைக்கப் படும் சப்தம் கேட்டு திடுக்கிட்டுப் பின்னால் திரும்பினாள். திகிரென்றி ருந்தது அவளுக்கு. எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டாள். உதவிக்காக ஏங்கும் வேளை உபத்திரவத்தில் மாட் டிக்கொள்ளப் போகிறோமே என்று
நினைத்தபோது தலை சுற்றுவதுபோல
இருந்தது.
"ஏங்க்கா, என்னே அடையாளந்
தெரியலியா?, என்னாங்க்கா நா.
கொழும்புக்கு வந்து ஐஞ்சு வருஷத் தானே ஆவுது. அதுக்குள்ள என்னெ மறந்திட்டீங்களா?” என்றான் குரலுக்
13
குரியவன்.
"இல்ல ராஜா, நீ. நீயெங்க இங்க” என்று தடுமாற்றத்துடன் கேட் டாள். 'ராஜா என்று அவள் அழைத்ததற் கென்ன ‘திருட்டு ராஜா என்பதே அவனுக்கு வழங்கப்பட்டு வந்த பெய ராகும்.
நாவலப்பிட்டிய பகுதியிலுள்ள அக்கரமலை என்னும் தோட்டத்தில் சிறுபிள்ளையும் 'திருட்டு ராஜா எனும் அடைமொழியோடேயே அவனை அழைப்பது வழக்கம். ஆட்சேபனையின்றி அவனும் அதை ஏற்றுக்கொள்வது - தான் பகிரங்கத் திருடன் என்பதைத் துணிவுடன் எல்லோருக்கும் காட்டுவதற் காகவே என்று அவன் அடிக்கடி சொல்லிக்கொள்வான். மனிதாபிமானத் துக்கு மதிப்புக் கொடுப்பவர்கள் அடை மொழியைத் தவிர்த்துவிட்டு ராஜா என்று நாகரிகமாக அழைப்பார்கள்.
தோட்டத்திலுள்ளோர் அவர்
அவர்க்குச் சொந்தமான சிறிய தோட்டங்
களில் பயிரிடும் காய்கறிகள், வீட்டி லுள்ள பெறுமதி வாய்ந்த உடைகள், பொருட்கள் உட்படப் பணம், தங்க நகைகள் போன்றவை திருட்டுப் போனால் நிச்சயமாக அவனேதான் காரணம் என்பதைத் திடீரென உறுதி செய்து, உரியவர்கள் போலீஸில் புகார் செய்வதும் போலீஸாரும் அவனைப் பிடிப்பதும் அடைப்பதும் குறிப்பிட்ட சில நாட்களில் மீண்டும் அவன் திரும்பி வரு வதும் வழக்கமான நிகழ்ச்சி. வெளியிடங் களில் திருடினால் பிரச்சினையின்றி அவன் நிம்மதியாகவிருப்பதிலிருந்து கையில் காசு, பொருட்கள் இன்னும்

Page 8
புழங்குகிறது என்பதும் யாவருக்கும் வெளிச்சமான விடயமாய் இருக்கும்.
இப்பொழுது தனது கணவனுக் குரிய உடைகள், பொருட்கள், செலவுக் கான காசு என்பன அடங்கிய தனது பையைப் பறித்துக் கொண்டு போய்விட் டால் என்ன செய்வது என்ற அச்சம் கலந்த குரலில்தான் அவனைப்பற்றிக் கேட்டாள்.
*நா. இப்ப நல்லாருக்கேனுங் கக்கா, பஸ்ட்டேன்ட் கிட்ட ஸ்வீட் விற்
கிறேன். சின்னக் கட ஒன்று வைச்சிருக்
கேன். ஒரு வேலையா இந்தப் பக்கம் வந்தேன். ஒங்களைக் கண்டதும் இப் பிடியே வந்துட்டேன்; சரி, நீங்க ஏன் தனியா இந்த சின்னப் பிள்ளையோட நிக்கிறீங்க? வேறு யாரும் வரலியா?” "இல்ல, மகனத்தான் கூட்டிக்கிட்டு வந்திருக்கேன்.”
*காலங்கெட்டுக் கெடக்குறப்ப கொழும்புக்கு இப்பிடி வந்திருக்கிங் களே!” என்றான் அக்கறையோடு.
அவன் சொன்னவற்றை ஆச்சரியத் தோடு கேட்டவள், அரை நம்பிக்கை யோடு பையனைக் காட்டி, "இவங்க அப்பா - யென்வீட்டுக்காரரு போஞ்சி கொடியேற்ற கம்பு வெட்டிண்டிருந்த நேரத்துல எப்படியோ வலது கண்ல குச்சி குத்தி ரொம்ப வருத்தமாப் போச்சி ராஜா. உடனே நுவரெலியா ஒஸ்ப்பிட்டலுக்குக் கொண்டுபோயி பாத்தும் சரிவரல்ல; அதுதான் டொக்டரா கொழும்புக்கு கொண்டு போகச் சொல்லி எழுதினாரு” என்று விபரித்தாள்.
“ரொம்ப வருத்தப்படரேங்க்கா: எப்டியிருந்தாலும் இந்த அவசரமான நேரத்துல அண்ணனையாவது, தம்பி குமாரையாவது கூட அழைச்சிட்டு வந்திருக்கலாமே."
அந்த உணர்மையை அவன் எடுத்துக் கூறியபொழுது அவள் உள்ளம் கசிந்தாள். அவள் கணவன் சுந்தரம் கண் பாதிக்கப்பட்ட அன்று தோட்டத்து
லொறியில் அவனை ஏற்றிக்கொண்டு
போய் நுவரெலியா வைத்தியசாலையில் விட்டு வந்ததிலிருந்து இரண்டொரு நாள் அண்ணன் குடும்பத்தார் வந்து பார்த்து விட்டுப் போனதுடன் சரி. பெற்றோரோ, உடன்பிறப்புக்களோ அற்ற சுந்தரத்தின் ஒருசில நண்பர்கள் நுவரெலியாவில் இருந்து கொழும்பு கண் வைத்திய சாலையில் கொண்டுவந்து விட்டுப் போனார்கள்.
இரண்டு வாரங்கள் கழித்து அவள் கொழும்பு வைத்தியசாலைக்குச் செல்வ தற்காகத் தன் அண்ணனை அவர்கள் வீட்டில் போய் அழைத்தபொழுது அவன் தனது கொழுந்தியா - அவனது மனைவி
யின் தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்
துள்ளதாகவும் மாப்பிள்ளை வீடு பார்க்க மஸ்கெலியாவிற்குப் போகவிருப்பதால் தனக்கு வசதியில்லையென்றும் தனது தம்பி குமாரை அழைத்துப் போகும்படி யும் கூறினான். அவளும் தன் அண்ணன் கூறிய விடயத்தைச் சொல்லி அவனை அழைத்தாள். அவனோ "தோட்டத்தில சம்பளம் போட்டிருக்கு, இந்த நேரத்தில பிசினஸ் பாத்தாத்தானக்கா. இதவிட் டேனா அநியாயம்; பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடச் செலவுபோக வீட்டில போற செலவுகள் எப்ப்டிக்கா சமாளிப் பேன். இந்தக்கிழம வரமுடியாதுக்கா; நா. வசதி கெடைக்கிறப்போ மச்சான
14
 

போய்ப் பார்த்துக்கிறேன். ஒனக்குத்தான் அட்ரஸ் தெரியுமே. கொழும்புக்கு ட்ரெயின்ல போயி, அங்க யார்கிட்டை யாவது விசாரிச்சுப் பாத்துப் போக்கா" என்று கூறிவிட்டான். அதன் காரணமாகத் தன் மகனை அழைத்துக்கொண்டு புறப்பட்டிருந்தாள். “இந்த உண்மைகள எல்லாஞ் சொன்னா இவன் நம்ப குடும்பத்தை மதிப்பானா, அண்ணன் தம்பிமார கணக்கெடுப்பானா. ஊகும் சொல்லக்கூடாது என்று எண்ணியவள் "அண்ணனுக்கு சொகமில்ல; தம்பி குமார் பிசினசுக்குச் சாமான் கொண்டு வர இந்தியா போயி இரண்டு வாரமாச்சி; அவனுக்கு இதுபத்தி தெரியாது ராஜா” என்று அப்பட்டமான ஒரு பொய்யை அப்படியே எடுத்துக் கூறினாள்.
"அப்படியா, சரி எங்கையும் போகாம இந்த எடத்திலயே நில்லுங் கக்கா" என்று கூறிவிட்டு அவளது பதிலுக்காகக் காத்திராமல் சென்று விட்டான். ஐந்து நிமிடங்கள் சென்றிருக் கும் ஒரு வெள்ளை நிற வேனில் வந் திறங்கி அவர்களை அதில் ஏறிக் கொள்ளும்படி கூறினான். தெய்வா னைக்கு எல்லாமே புதிராகவும், கலக்க மாகவும் இருந்தபோதிலும் அநாதரவான
15
நிலையில் அவன் அறிமுகமானவன் என்ற ஒரு நம்பிக்கையில் தன் மகனுடன் வேனில் ஏறிக்கொண்டாள். "இவரு எங் கூட்டாளிதான்கா; இரண்டுபேரும் ஒரே யிடத்துல தான் இருக்கிறோம் என்று சாரதியையும் அறிமுகம் செய்து கொண்டான். சற்று நேரத்தில் வேன் வைத்தியசாலையில் வந்து நின்றது. அவளிடம் சுந்தரம் இருக்கும் வார்ட இலக்கத்தை வாங்கி அவர்களை அழைத்துச் சென்றான். அங்கே சுந்தரம் வலது கண்ணுக்கு மருந்து போடப்பட்டு ஒற்றைக் கண்ணில் பார்த்தபடி இவர்கள் வருவதைக் கவனித்தான். மூவரும் அருகில் சென்றதும் கேள்விக்குறியுடன் ராஜாவைப் பார்த்தான். தெய்வானை அவனைச் சந்தித்த விபரத்தைக் கூறிய பொழுது அவனது ஒற்றைக் கண்ணில் நீர் வடிந்தது.
“இத்தன வருஷத்துக்கப்புறம் இந்த நிலமையில ஓங்கள பாக்கணுமின்னு இருந்திருக்கு அண்ணே” என்று கவலை யுடன் கூறிய அவன், பழங்கள் அடங்கிய ஒரு பேக்கையும் தின் பண்டங்கள் அடங்கிய ஒரு பார்சலையும் அவனிடம் கொடுத்தான். அவற்றை வாங்கிக் கொண்ட சுந்தரம், "ராஜா! தனியா வந்த இவங்க இரண்டு பேரையும் கடவுள் மாதிரி வந்து கூட்டிக்கிட்டு வந்துருக்கிறியேப்பா, ஒனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல்ல; அப்புறம் எப்டி நல்லாருக்கிறியா?”
"நல்ல சொகமாருக்கேண்ணே; எத்தனையோ வருஷத்துக்கப்புறம் ஓங்களையெல்லாம் கண்டதில ரொம்ப சந்தோஷம். அந்தத் தோட்டத்து வாழ்க்கை எல்லாத்தையும் ஒதறித்தள் ளிட்டு வந்துதான்ணே நா. மனுஷனா வாழ ஆரம்பிச்சேன். கலியாணம் பண்ணி ஆம்புளப்புள்ள ஒன்னும் பொண்ணு ஒன்னும் இருக்கு அண்ணே" என்று பெருமையுடன் கூறினான்.
ஏதோ படம் பார்ப்பதுபோல

Page 9
சுந்தரமும் தெய்வானையும் ஆச்சரியத் தோடு அவனைப் பார்த்துக் கொண் டிருக்கத் தானே மீண்டும் தொடர்ந்தான். “சென்றல் பஸ்ட்டேன்டு கிட்டத் தான்ணே ஸ்வீட் கட வைச்சிருக்கேன். பக்கத்து கட முதலாளிக்கு சொந்தமான ஒரு வீட்டுல வாடகைக்கு இருக்கிறோம்; ஒரு சொந்த வீடும் பாத்திருக்கேன். சீக்கிரமா அங்க போயிருவோம்ணே."
"அடேயப்பா! கடவுள் ஒம்பக்கந் தான் இருக்காரு; நீ இப்பிடி ஒரு வாழ்க்கைக்கு வந்து சேருவேன்னு யாரு நெனைச்சது; நீ நல்லாருக்கணும். இனி னும் இதவிட ஒ சத்தியான நிலமைக்குப் போகணும்" என்று கூறிய சுந்தரம் அவனது இரு கைகளையும் பிடித்துத் தன் கன்னங்களில் ஒற்றிக் கொண்டான்.
"ராஜா தோட்டத்துல இருக் கிறப்போ ஒன்ன. ஓங்கள என்னென்ன மோ சொன்னவங்களெல்லாம் இப்ப இங்க வந்து பாத்தாக்க ரொம்ப ஆச்சரி யப்படுவாங்க. ஏதோ ஒரு காலத்துல அப்படிருந்தாலும் ஒரு காலத்துல நல் லாருக் குரேப் பா” என்றாள் தெய்வானை.
இவ்வேளை நோயாளர்களைப் பார்க்கும் நேரம் முடிவடைந்ததால்
அவர்கள் புறப்பட ஆயத்தமாயினர்.
மகனைக் கட்டித் தழுவிக்கொண்ட சுந்தரம் தெய்வானையைப் பரிதாபமாகப் பார்த்தாள். "தெய்வானை, இப்ப எப்பிடி போகப் போறே?" என்று கவலையுடன் கேட்டான்.
"கவலப்படாதிங்க, நைட் மெயில்ல போயிடுவோம்; ராஜா இருக்குத்தான ஸ்டேசன் வரைக்கும் வர்ரதுக்கு" என்றாள் அவள்.
"என்னணினே! நா. இருக் கிறப்போ ஏம் பயப்படுறிங்க? அக்கா வையும் தம்பியையும் வீட்டுக்கு அழைச்
சிட்டுப் போறேன். நாளைக்கு அண்ணன
வந்து பாத்திட்டு நாளன்றைக்கு அக்கா
போகட்டும். அப்புறம் நீங்க வரத் தேவையில்லைக்கா. நா. அன்றன் றைக்கு வந்து பாத்துக்கிறேன். அண்ணே சொகமானதும் நீங்க வந்தாப் போதும். நானுமா தோட்டத்துக்கு வந்து விட்டிட்டு வர்ரேன், சரியாண்னே?"
அதிக உரிமை பாராட்டிப் பேசிய ராஜாவைப் பார்த்து, "தெய்வமே நேர்ல வந்த மாதிரி இருக்கு சாமி, ராஜா, இனிமே நீதான் எனக்கு உறவுக்காரன்; சொந்தக்காரங்களவிட நீ காட்டுற அன்பு கடல் மாதிரி இருக்குப்பா. இன்னயிலருந்து என் வீட்டு நன்மை தீமையெல்லாத்துக்கும் நீ தான் முன்னுக்கு நிக்கணும்" என்று தனது கண்வருத்தத்தையும் மறந்தவனாகக் கூறி உருகினான் சுந்தரம்,
தெயம் வானை ஒரு கணம்
‘வேதனை, சோர்வு என்பவற்றை மறந்து
தன் சொந்த சகோதரனின் பின்னே செல்வதுபோல மகனைக் கையில் பிடித்தவளாகக் கணவனுக்கு ஆறுதல் வார்த்தை கூறிப் புறப்பட்டாள்.
திருட்டுராஜா தெய்வராஜாவாக அவர்களின் கண்ணுக்குத் தென்பட்டான்.
米 米 米 朱 本
『ー - அன்பார்ந்த வாசகர்களே.
ஞானம் சஞ்சிகை பற்றிய கருத்துக்களைக்களையும் சஞ்சிகை யின் தரத்தை மேம்படுத்த உங்க ளது ஆலோசனைகளையும் அறி யத் தாருங்கள்.
ஆக்க இலக்கிய கர்த்தாக்களே. உங்களது படைப்புகளினர் மூலம் ஞானம் சஞ்சிகையின் இலக் கிய தரத்தை மேம்படுத்துங்கள்.
ܥܐ
16

சந்திப்பு: 6000]]'' தி.ஞானசேகரன் 6)
கேவிஞர், ஆய்வாளர்
தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளுக்கெல்லாம் பயணம் மேற்கொண்டு
‘உலகளாவிய தமிழர் என்ற நூலை எழுதியவர். "ேகொஞ்சும் தமிழ் நூலுக்கு இலங்கை சாகித்திய விருது பெற்றவர். அெனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டில் கவிதைக்காகத் தங்கப் பதக்கம்
பெற்றவர். ஆேங்கிலத்திலும் இவரது கவிதை நூல் வெளியாகியுள்ளது. இேலங்கையில் பாடத்திட்ட - பாடநூல் எழுத்தாளராகவும் , சிட்னியில் தமிழ்
பாடநூல் ஆலோசகராகவும் பணியாற்றியவர்.
தி.ஞா: சிறுவர்களுக்கான கவிதைகள் எழுதுவதில் தேர்ச்சியும் அநுபவமும் மிக்கவர் நீங்கள் என்ற வகையிலே, சிறுவர் கவிதை எழுதும்போது மனதில் கொள்ளவேண்டிய விடயங்கள் யாவை என்பதுபற்றிக் கூறுங்கள். அம்பி; சிறுவர் இலக்கியமே ஒரு முக்கிய துறை. சிறுவர் இலக்கியத்தில் கவிதை மிகவும் முக்கியமான முதன்மையான இடத்தை வகிக்கிறது எனலாம். ஏனெனின், அது மொழிவிருத்திக்கு மட்டுமல்ல, இசையும் அசைவும் இணைந்து விருத்தி அடையவும் பச்சிளம்பாலகப் பருவம் முதலாகத் துணை புரிகிறது.
பாலகப் பருவத்திலே குழந்தைகளின் கருத்தை ஈர்த்துத் தொடர்புகொள்ள கவிதை அரியதொரு ஊடகம், பாடியும், பாடியாடியும், பாடியாடித் தாளம்தட்டியும், அபிநயஞ் செய்தும் பாலர் பல்வேறு விருத்திகளை அடைவர். இவை எல்லாம் இனிமையான கற்றல் அநுபவங்கள். இந்த அநுபவங்கள் முழுமையாகப் பயன்தர வேண்டின் கவிதைகள் சில முக்கிய அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும்.
• எளிய சொற்கள்: வாயில் நுழையக்கூடிய, பருவத்துக்கு ஏற்ற இலகுவான சொற்கள். རིགས་
• எளிமையாக இசைக்கக் கூடிய கவிதைகள். நீளமில்லா வரிகள் பல்வேறு சந்தங்கள் குழந்தைகளின் சூழலொடு தொடர்புள்ள நாட்டப்பொருள்களை மைய
மாகக் கொண்ட பாடல்கள். சொற்கள் சுவைபட மீண்டும் மீண்டும் வரும் பாடல்கள். நடிப்பதற்கு / அபிநயம் செய்தற்கு ஏற்ற பாடல்கள். கதைப் பாடல்கள். இசையும் அசைவும் அபிநயமும் ஒருங்கிணையும் பாடல்கள். இப்படி இன்னும் பலவற்றைக் கூறலாம். இவை ஒரு நோக்கு. உளவியல் பற்றிய 17
:
:

Page 10
ஓரளவு அறிவு மிகப் பயன்படும். அவசியமானதும் கூட.
பாடல்களை மையமாகக் கொண்டு பல்வேறு பாடங்களையும் ஒருங்கிணைத்து கற்பித்தற்கும் இந்தக் கவிதைகள் கருவியாகலாம். அறிவியல், உளவியல், சுகாதாரம் சார்ந்த கருத்துகளை பாடல்கள் மூலம் அறிமுகஞ் செய்தல் நல்லதோர் உத்தி. சோலையில் பறந்துசெல்லும் வண்ணத்துப் பூச்சியை நோக்கி பிள்ளை வினாவுகிறது. சோலையிலே ஏன் பறந்து திரிகிறாய்.
சோலையிலே பூவிருக்கும் பூவினிலே தேனிருக்கும் தேனிருக்கும் பூக்களை நான் தேடுகிறேன் தங்கையரே. இதைப் படி யாகக் கொண்டு அறிவியலில் அடியெடுத்து வைக்கலாம். அத்தகைய குறிக்கோள்களுடன் நாம் பாடற்பொருளை மையப்பொருளாகத் தெரிவு செய்தால் அறிவியல், சுகாதாரம் போன்ற கருப்பொருள் அறிமுகத்தை இளம் பருவத்திலேயே தொடங்கலாம். ஒருங்கிணைந்த பாடத்திற்கேற்ற பாடல்கள் மிகவும் பயன் தரும்.
குழந்தைப் பாடல்களை அச்சிடும்போதும், அழகிய வண்ணப் படங்களுடன் கண்ணுக்கு விருந்தாக அச்சிட வேண்டும். கருத்துக்கேற்ற படங்களாகவும் அமைதல் வேண்டும். ஆங்கிலச் சிறுவர் இலக்கியங்களோடு ஒப்பிடும்போது இந்த அம்சத்தில் நாம் மிகப் பின்னிற்கிறோம்.
தி.ஞா: உலகளாவிய ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகள் பலவற்றிற்குச் சென்று, ‘உலகளாவிய தமிழர் என்ற நூலை எழுதியவர் நீங்கள். புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் குறித்த தங்கள் கணிப்பு யாது?
அம்பி புலம்பெயர்ந்து - உண்மையிலே, புலம் பெயர்க்கப்பட்டு வாழுகின்ற ஈழத்தமிழர், பல நாடுகளில் வாழுகின்றனர். உலகின் எல்லாக் கண்டங்களிலும் சிதறி வாழ்கிறார்கள். இரண்டு தசாப்தங்களுக்கு முன், ஈழத்தமிழினம் எத்துணை நம்பிக்கையுடன் வாழ்ந்தது. அவர்தம் வாழ்க்கைமுறையும் இலக்குகளும் எவ்வண் அமைந்தன. "ஈழமே எங்கள் நாடு. இங்குதான் நாம் வாழப்போகிறோம், என்று ஊரிலே காணிநிலம் வாங்கி, வீடு கட்டினார்கள். பரம்பரைக் காணியுள்ளவர்கள் தமது சொந்தக் காணியில் வீடு கட்டினார்கள். ஊர் பெயர்ந்து தொழில் செய்ய நேரிட்டாலும், ஊரிலே 'விரிந்த குடும்பத்தினருடன் வாழுமுள்ளத்துடன் சொந்தமான ஊரிலும் குடும்பம் நடத்தியவர்கள். திரைகடலோடித் திரவியந் தேடி, சொந்த ஊரிலே இளைப்பாறியவர்கள் என்ன செய்தார்கள்? தாம் விரும்பிய ஒரு சூழலை அமைத்தார்கள். வீட்டுக்காணியிலும் தோட்டக்காணியிலும் தெங்கும் வாழையும், மாவும் பலாவும் நட்டு நீருற்றி உரமிட்டு வாழ்ந்தவர்கள் தமது பணத்தையும் உடல் உழைப்பையும் நிதியமாக முதலீடு செய்து, சொந்த வியர்வை சிந்தி வாழ்க்கை நடத்தியவர்கள். ஆனால் - தமிழுரிமைப்போர் - அதை முறியடிக்கவென்று போர் முரசறைந்து அரசு மேற்கொண்ட வன்முறை - அதனால் ஏற்பட்ட உயிரிழப்பு, பொருளிழப்பு சந்தேக நபர் என்று கைதாகி அல்லல் பட்டோர் - காணாமல் போனோர் இவை போன்ற காரணங்களால், அச்சத்துடனும் ஆறாத்துயருடனும் புலம் பெயர்க்கப்பட்டவர்கள், இரவோடிரவாக ஏதிலிகள் ஆனார்கள். சுட்டவெடி ஒலி அதிர்ந்து எதிரொலிக்க, வாழ்ந்த ஊர்த்தெருவே சுடுகாடாக மாற, வீடுகளெல்லாம் கற்கும்பல்களாகக் குவிக்கப்பட, தேடிவைத்த பொருளெல்லாம்
18

தெருவில் சிதறப்பட, பட்டிப்பசுவையும் பால்கறந்த செம்பையும் விட்டுவிட்டு ஒடியவர் எத்தனை? எத்தனை லட்சம்? இவ்வாறு, வெறுங் கையோடு பெயர்க்கப்பட்டவர்கள் ஈழத்தமிழருள் பெருந்தொகை எனலாம். அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட எதிர்பாரா மாற்றத்தின் விளைவுகள்தாம் எத்தனை சிக்கலானவை அந்த நிலையில் உடைமை, உற்றார் பெற்றாரைவிட்டுப் பிரிந்து சென்றமை சற்றும் எதிர்பாராப் பெயர்வு. சிந்தித்துத் திட்டமிடாது திடீரென ஏற்பட்ட ஒரு மாற்றம்.
அம்மாற்றத்தின் மூலமும் பெயர்ந்தவர்கள் ஏதோ ஒருவித நிறைவு பெறவே முயல்வர். அம்மாற்றம் ஏமாற்றமாகாமல் இருப்பதற்கு அவர்கள் விரைவிலே புது நிலனுடனும் சூழலுடனும் இணங்கி வாழவேண்டிய தேவை உள்ளது. காலங்காலமாக வாழ்ந்து நிலைத்திருந்த மண்ணையும் சூழலையும் விட்டுப் பிரிந்த மக்கள், வேரிழந்த மக்கள். புதிய சூழலுடன் இணைந்து வேரோடித் தழைவரும்வரையில் வாழ்க்கை போராட்டமாகவே அமையும்.
மனிதன் ஒரு சமூகப் பிராணி. அவன் தன்னவருடன் கூடிச் சமுதாயமமைத்து வாழ்பவன். சமுதாயமமைத்து வாழ்வதற்கு, தனது சமுதாயத்திற்குச் சொந்தமானது என்று கூறும் "நிலன் அவசியம். அதிலேதான் அவன் வேரூன்றுகிறான். அந்நிலப்பிரதேசத்துடன், அவன் இனங்காணப்படுகிறான். தனி ஒருவனுக்கு எப்படி ஒரு நிலப்பரப்புச் சொந்தமோ, அதேபோல ஒரு சமுதாயத்திற்கும் ஒரு எல்லை குறித்த நிலப்பரப்புத் தேவை என்பதை நாம் அறிவோம். அதனைவிட்டுப் பெயரும்போது, புதிய நிலனிலே நான் ஓர் அந்நியன் என்ற எண்ணம் தன்னியல்பாகவே எழும். ஆக, பல்லின மக்கள் வாழும் நாடுகளிலே, புதிய சூழலிலே வாழ்க்கையை ஆரம்பிக்கும்போது, பழைய நினைவுகளும் புதிய கனவுகளும் பொருத வாழ்வு வேதனைக்களமாக அமையும். "இரண்டு உலக வாழ்வில் எதிர்நோக்கும் முரண்களையும் உள்ளத்து உணர்வுகளையும் சமாளித்து முன்னேறுதற்கு ஒரு வகையான "இணக்கம் தேவைப்படும். அதனால் -
பெயர்ந்த முதல் தலைமுறையினரின் வாழ்வில் பல்வேறு பிரச்சினைகள் தொடரும். உடலியல் பிரச்சினைகளாகவும் உளவியல் பிரச்சினைகளாகவும் அவை விசுவரூபம் எடுக்கும். பழையன இதயத்தில் தொங்கி நிற்க, புதிய தேவைகள் இதயத்தை அழுத்த 'இருதலைக் கொள்ளி நிலையொன்று சிலகாலம் தொடரும். இணங்கி வாழும் நிலை ஓரளவு நிலைபெறும்வரை ஒருவித சலன வாழ்வே 二、
புதிய சூழலுடன் இணங்கி வாழ்வது ஒரு மாற்றமாகும். அம்மாற்றம் எமது பாரம்பரிய வழக்கில் ஏற்படும் மாற்றமாகும். சூழல்மொழி, உண்ணும் உணவு, அணியும் உடை, வாழும் வீடு, காலநிலை இப்படிப் பலப்பல தினமும் ஒருவித முரனை ஏற்படுத்தும். அப்பாவும் அம்மாவும் இடியப்பம் சொதி என்று சுவைத்துச் சாப்பிடும்போது, பிள்ளைகள் "மக்டொனல்ட் என்றும் 'கே.எப்.சி என்றும் பிடிவாதம் செய்வர். இப்படி ஆரம்பிக்கும் மாற்றம் இளம் வயதினரை சூழலுடன் இணங்கி வாழத்தூண்டும். இந்த இளம் தலைமுறையினர் இணங்கி வாழும்வேகத்தை, கவிஞர் மாவை நித்தி இப்படி வர்ணித்துள்ளார்:-
“வெள்ளை மக்களின் சமுத்திரத்தில் இரு புள்ளி போலவே வந்து விழுந்தபின் திக்கினை அறியாது வாடியே முக்கு பூழித்த பிள்ளைகள் இருவரும்
19

Page 11
மூன்று மாதம் கடக்கு முன்னரே இந்த நாடுதான் சொந்தம் என்றனர்" அவுஸ்திரேலியாவில் இருக்கும் மாவை நித்தி ஒரு கோலத்தைக் காட்ட நீயூசிலந்து ஹமில்ரன் கவிஞர் ஜெயசிங்கம்,
“கார்குழலைக் கத்தரித்த காரிகையைக் காணும் - இரு காது குத்தித் தோடுவைத்த காளையரைக காணும பூவாடை காணாத பூமகளின் கூந்தல் - அதில் புதிய பல வண்ணத்தில் பூச்சுகளைக் காணும். என்று மாற்றத்தின் இன்னொரு கோலத்தைக் காட்டுகிறார். கனடா, இங்கிலாந்து, நீயுசிலந்து, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஜேர்மனி, நோர்வே, டென்மார்க், சுவிஸ். இவ்வண் எங்குமே இளம் தலைமுறையினர் "இணங்கி வாழ முயற்சிக்கும்போது எமது பாரம்பரிய கலாசாரத்தைப் பேணுதற்கு "பெரியோர் தலைமுறையினர் துடிக்கின்றனர்.
அந்நிய சூழலிலே பிறந்து வளரும் பிள்ளைகளுக்கு தமிழர் கலாசாரம், பண்பாடு என்பன எல்லாம் புரியாத புதிர்களே. பிறக்கும்போது பிள்ளைகள் எவ்வித கலாசார அறிவுடனும் பிறப்பதில்லை. வாழ்ந்து வளரும்போது சூழலில் இருந்து உள்வாங்கித் தமதாக்கும் செல்வம் அக்கலாசாரம். அதற்கு அடிப்படை யாகவும் ஊடகமாகவும் அமைவது மொழி. தமிழ் மண்ணில் அச்சூழல் “இயற்கை. அந்நிய மண்ணில் வளரும் பிள்ளையின் நிலை என்ன? அதனால் முரண்கள் எத்தனை? ஆக, சமுதாயத்தில் பெற்றோர் - பிள்ளைகள், பெரியோர் - இளையோர் இவ்வண் கூறுபட்டு அவதியுறும் நிலை. அளவுகோல் வேறுபாட்டால் முரண்கள். மொழி, சொற்களஞ்சியம், விழுமியங்கள், நடை, உடை, உணவு, தனித்துவம் என்று யாவுமே அளவுகோல் வேறுபாட்டால் சிக்கல்களை ஏற்படுத்தும்.
தமிழர் தனித்துவம் என்பது யாது? தமிழ்மொழியின் துணைகொண்டும் பண்பாடு, கலாசாரம், கலைகள், விழுமியங்கள், நடத்தை என்பன போன்றவற்றின் துணைகொண்டும் தமிழர் தனித்துவம் பாரம்பரிய முது சொத்தாகக் கையளிக்கப் பட்டு வந்தது. தனித்துவம் என்பது, ஒரு தனிமனிதன் தன் இனத்தவருடையதெனத் தொடர்ந்து பேணும் ஒரு வகையான ஒருமைப்பாடு எனலாம். அது சுய எண்ணக் கருவாக மனதில் உயிர்க்கிறது. தமது சூழல் அநுபவத்தால் வளர்கிறது. முதலில் வீட்டிலும், பின்பு படிப்படியாக நண்பன், சம வயதினர், சமுதாய உறுப்பினர் ஆகியோர்மூலம் விரிவடைகிறது. இந்த விரிவடைதலிலே, சிறுவயதுமுதல் பெறும் சூழல் அநுபவத்தால் வளரும் பிள்ளை தனது இன அடையாளத்தை உள்வாங்கு கிறது. சொந்த நாட்டில் வாழும் சிறுவர் இதை உள்வாங்கிப் பேணும் சந்தர்ப்பம் இயற்கையாக ஏற்படுகிறது. ஆனால் -
பல்கலாசாரச் சூழலில் வளரும் பிள்ளை அந்நியச் சூழலில் வளர்கிறது. தனது சூழலில் உள்ள தன்போன்ற மற்றும் சிறார்பேசும் முறை, சொற்களஞ்சியம், அணியும் உடை, நடத்தை முறை, அவர்களின் மனப்பாங்கு, விழுமியம். இவைபோன்ற பலவும் பிள்ளையின் வாழ்க்கை முறையை நிர்ணயிக்கின்றன. அதுவும் இயற்கையே. தன் நாட்டிலே, தமிழர் சமுதாயத்தில் வளரும் பிள்ளை
20

எப்படித் தமிழர் தனித்துவத்தை அடையாளங்கண்டு தனதாக்கிக் கொள்கிறதோ அதேபோல பல்கலாசாரச் சூழலிலே வளரும் பிள்ளை தனது "உலகின் அடை யாளத்தை தனதாக்க முனைகிறது. வயது முதிர்ச்சியுடன் இந்தக் கோலம் மாறும் நிகழ்ச்சி பல நடத்தைகள் மூலம் வெளிப்பாடாகிறது. அங்கேதான் முரண்பாடும் தோன்றுகிறது.
தமிழ்ச் சூழலிலே சிலகாலம் வாழ்ந்து, பின்பு 2= பெயர்ந்த தமிழ்ப்பிள்ளைகளின் சிக்கல் ஒரு வகை சந்தா விபரம் ஆனால் புலம்பெயர்ந்தபின் அந்நியச் சூழலிலே தனிப்பிரதி : ரூபா 15/. பிறந்து வளரும் சிறாரின் சிக்கல் இன்னொரு வகை. | வருடச்சந்தா : ரூபா 180/- பொதுவாக, பெற்றோர் கருதும் தனித்துவ அடையா (தபாற்செலவு உட்பட) ளங்களைக் காணமுடியாத சிக்கல். தமிழ்ச் சூழ|சந்தா காசோலை மூலமா லிலே வாழ்ந்து வளர்ந்தவர்கள் கூறும் கலாசார வோ LD6C3uJITLír ep6)LDIT அம்சங்களை அந்நிய சூழலிலே வளரும் பிள்ளைக் குத் தெளிவுபடுத்தி விளங்கவைப்பதற்கு காலம் (p856. Frri :- தேவை. அந்தக் கால எல்லையில், "மாற்றத்திற்கு |TGNANASEKARAN ஏற்ப இணங்கி” வாழ்வதும், இணங்கி வாழும் அதே |19/7, PERADENIYA வேளை தமிழரின் தனித்துவக் கூறுகளை நழுவ விடாது “தொடர்ச்சியை" பேணுதலும் புனிதமான பொறுப்புகள்.
ஆக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பது, பெயர்ந்த முதலாவது தலைமுறையினர் தம்பொறுப்பை எத்துணை விசுவாசத்துடன் நிறைவு செய்கிறார்கள் என்பதைப் பொறுத்ததே. படித்து - பட்டம்பெற்று - பணம் சம்பாதித்து - ஒரளவு செளகரிய வாழ்வை எய்துவர் என்று கூறலாம். எனினும் தமிழர்களாக வாழ்வார்களா? இது கேள்விக் குறிதான். நூறு ஆண்டு காலத்தின் பின், எந்நிலை ஏற்படும் என்பதை இன்று கூறிவிடமுடியாது.
எடுத்துக்காட்டாக மொரிசியஸ். அங்கு சைவ ஆலயங்களும், விழாக்களும், தமிழர் முறைகளும் தாராளம். ஆயினும் வீட்டுமொழி “கிறியோல் பெயர்கள் எல்லாம் சுத்தத் தமிழ்ப் பெயர்கள். ஆனால், தமிழ் பேசுபவர்கள் - பேசக்கூடியவர்கள் மிகக் குறைவு. காசுத்தாளிலே "ஐம்பது ரூபாய்' என்றும் “ரூ0 என்றும் கூட அச் சிடப்பட்டுள்ளது. அதை வாசிக்கக் கூடியவர்கள் எத்தனையோ. இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு சென்றவர்களின் இன்றைய தலைமுறையினர் நிலை அது. புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் எதிர்காலம் குறித்து உறுதியான கணிப் பொன்றை என்னாலே கூறமுடியாமல் இருக்கிறது. தமிழ் மொழியையும் தமிழ்க் கலாசாரத்தையும் தனித்துவத்தையும் பேணிக் கையளிப்பதில்தான் அது பொறுத் துள்ளது. காலம்தான் பதில் சொல்ல வேண்டும். இதுதொடர்பாக இன்னும் இரன் டொரு குறிப்புகள் கூறவேண்டும். பிறந்த நாட்டைவிட்டுப் பெயர்ந்த வேறுசில சமுதாயங்கள் தரும் பாடமென்ன? பல நூற்றாண்டுகளாக அமெரிக்காவைச் சென்றடைந்த ஆங்கில, பிரஞ்சு, ஜேர்மன், ஆபிரிக்க, யூத சமுதாயங்களின் விருத்தியும் புது நிலனில் வேரூன்றியும் தமது தனித்துவத்தைப்பேணும் பாங்கை நாம் அவதானித்தால் -
ஆங்கில அமெரிக்கர் அரசியல் சக்தியாகவும், ஆபிரிக்க அமெரிக்கர் விளையாட்டு/களியாட்டத் துறைகளில் முத்திரை பதித்தும், யூதர்கள் பொருளாதார தொடர்பு சாதனத் துறைகளில் ஆதிக்கம் செலுத்தியும் தமது தனித்துவம் ஒன்றை
21
கவோ அனுப்பலாம். அனுப்பவேண்டிய பெயர்,

Page 12
நிலை நாட்டியுள்ளனர். நமது ஈழத்தமிழினம் எங்கே எவ்விதம் தமது சக்தியை உலக அரங்கிலே நிலை நிறுத்துமோ!
முடிவாக ஈழம் கிடைத்தால் திரும்பி அங்கு சென்று வாழத் தயாராக உள்ளவர்கள் யார்? ஏற்றுக்கொண்ட நாட்டின் வசதி வாய்ப்புகளை விட்டெறிந்து "ஊர் சென்று வாழவிரும்பும் ஒரு தலைமுறை இன்று இருக்கிறதுதான். ஆனால் காலப்போக்கிலே.
தி.ஞா: தமிழ் பயிலும் மாணாக்கருக்காக நீயூ சவுத்வேல்ஸ் தமிழ்ப் பாடசாலைகளின் கூட்டமைப்பின் பாடநூலாக்கக் குழுவின் ஆலோசகர் என்ற முறையில் பெற்ற அநுபவங்களைக் கூறுங்கள். அம்பி: தமிழை இரண்டாவது மொழியாகக் கற்பிப்பதற்கு ஏற்ற முறைகள் பற்றி NSW ETHNIC SCHOOLS BOARD, 6îlšBLITrfuum LDIrg6l6deš at56ð6îởas Gou போன்றவை பல வழிகாட்டிகளை வழங்கியுள்ளன. அவற்றைச் செவ்வனே அறிந்து உள்வாங்கிச் செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டது. அதை நிறைவு செய்வதற்கு முயன்றமை நல்லதோர் புதிய அநுபவம். பழக்கப்பட்ட வழிகளை விட்டு விலகிச் செல்லவேண்டிய அவசியத்தை விளக்குதல் சற்றுச் சிரமமாகவே இருந்தது. இருபது ஆண்டு அநுபவம் எல்லாருக்கும் ஒரே மாதிரி இல்லை. சிலருக்கு இருபது புதிய ஆண்டு அநுபவம். வேறுசிலருக்கு திரும்பத் திரும்ப முதலாண்டு அநுபவம். அதாவது காலத்திற்கு ஏற்ப மாறாவிட்டால், தேவையை நிறைவு செய்யமுடியாது. பாடநூல் எழுதும்போது 'பழையன சிலவற்றை சற்று நழுவவிட்டு, 'புதியன
சிலவற்றைப் புகுத்த வேண்டும். “தொடர்பு கொள்வதற்கும் கருத்துப் பரிமாற்றத்துக்குமான மொழித்திறன்களை” விருத்தி செய்தல் என்ற கருப்பொருள் புதியது. எமது முயற்சி முதல் முயற்சி. நடைமுறையில் கற்பிக்கும்போது பல குறை நிறைகளை அவதானிக்கலாம். மூன்று பாடநூல்களும் பயிற்சி நூல்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. நான்காவது இப்பொழுது தயாரிக்கப்படுகிறது. இங்கு வாழுகின்ற தமிழ் சிறார், அந்நிய மொழிச் சூழலிலே வாழ்கிறார்கள். ஆகவே தமிழ் மொழி தாய்மொழி எனினும், சூழல் மொழியல்ல. பெரும்பாலும் “வீட்டு மொழியும் அல்ல என்பேன். ஆதலால் கேட்டல், பேச்சு, வாசிப்பு, எழுத்துத் திறன்கள் படிப்படியாகவே விருத்தியடையும். கேட்டுக் கிரகித்தலும் பேச்சும்போல வாசிப்பும் எழுத்தும் சமமாக விருத்தியடைய மாட்டா. இதனைக் கருத்தில் கொண்டு கற்றல் அநுபவத்தைப் படிமுறைப் படுத்தவேண்டும். பேசுகின்ற பிள்ளை வாசிக்கவும் எழுதவும் ஏக காலத்தில் முன்னேறும் என்று எதிர்பார்க்க முடியாது. இதற்கெல்லாம் வழிகாண முயலும்போது வேறு சில பிரச்சினைகளும் எழுகின்றன. நான்பெற்ற சிக்கலான அநுபவம் மொழிப்பிரச்சினை. அது என்ன என்று சற்று உற்றுப்பார்க்கி றிர்களா? தமிழ் 1 என்ற முதலாவது புத்தகம் எழுதும்போதே மொழிப்பிரச்சினை தலைதூக்கியது. காரணம் ஈழத்தில் இருந்து வந்த தமிழ்ப் பிள்ளைகளுக்கும் தமிழ்நாட்டில் இருந்து வந்த தமிழ் பிள்ளைகளுக்கும் ஒரு புத்தகம். இரு நாட்டவரும் தமிழ்தான் பேசுகிறார்கள். ஆனால் சொற்களஞ்சியம் ஒன்றல்ல. அதைப் பின்வருமாறு விளக்கலாம். தமிழ் நாட்டிலிருந்து வந்தவர்கள்,
- ஆஸ்ரேலியாவுக்கு வந்தார்கள்.
- நாற்காலியில் உட்கார்ந்தார்கள்.
- காப்பி சாப்பிட்டார்கள்.
22.

- ஆப்பிளும் ஆரஞ்சும் விரும்பி உண்டார்கள். - டீவி பார்த்தார்கள். ஈழத்தில் இருந்து வந்தவர்கள்,
- அவுஸ்திரேலியாவுக்கு வந்தார்கள், - கதிரையில் இருந்தார்கள். - கோப்பி குடித்தார்கள். - அப்பிள், தோடை என்று விரும்பி உண்டார்கள். - ரி.வி. பார்த்தார்கள். ஆம். பேச்சு வழக்கில் இரு நாட்டுத் தமிழர்களும் சில சொற்களஞ்சிய வேறுபாடுகளைப் பெரிது படுத்துவதில்லை. ஆனால், எழுதும்போது அச்சொற் களஞ்சியம் பெரும் பிரச்சினை ஆகிறது. - மொழிப்பிரச்சினை தலைதுாக்குகிறது. தமிழ் 1 எழுதும்போதே ஆஸ்ரேலியா சரியா? அவுஸ்திரேலியா சரியா? கதிரை சரியா, நாற்காலி சரியா? ஆப்பிள் சரியா, அப்பிள் சரியா? இத்தகைய சிக்கலொன்று தலைதூக்கியது. ஆஸ்ரேலியாதான் சரி என்றனர் ஒரு சாரார், அவுஸ்திரேலியாதான் சரி என்றனர் இன்னொரு சாரார். "நாம் வழங்கி வந்த சொற்களே சரியென்றும் மற்றவை பிழையென்றும் கொள்ளும்” ஒரு மனப்பாங்குப் பிரச்சினையே இது.
இந்த நாட்டுக்கு வந்தபின், ஈழத்துத் தமிழரும் தமிழ்நாட்டுத் தமிழரும் இனி ஒருமித்து வாழ வேண்டியவர்கள். ஒரு நாட்டுவழக்கை மற்றைய நாட்டவர் அறிந்துகொள்ள வேண்டிய தேவை ஒன்றுள்ளது. தொடர்பு கொள்ளவும் கருத்துப் பரிமாறவும் அத்தகைய தேவை நிறைவு செய்யப்படல் வேண்டும். சிறுபிள்ளைகளுக்குக் கற்பிக்கும் போது மட்டுமல்ல வளர்ந்த மாணாக்கருக்குமே இந்த மொழிப்பிரச்சினை தோன்றலாம். ஒரு பொருள்தரும் பல சொற்கள் எமக்குத் தெரியாதவை அல்ல. அந்த வகையில், கதிரை - நாற்காலி, இரு - உட்கார், பேத்தி பாட்டி, ஆப்பிள் - அப்பிள் இப்படியான வழக்குகளை ஏற்கும் மனப்பாங்கு விருத்தி அவசியம்.
"இலங்க்ைத் தமிழுக்குப் பல தனிக்கூறுகள் உண்டு. இந்தச் சொற்கள் இந்தியத் தமிழுக்கு அறிமுகமாகி வருபவை. இவை பொதுத் தமிழின் அடிப்படையை விரிவு படுத்துகின்றன." இப்படிக் கூறும் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி "இலங்கை வழக்கு” என்று குறிப்பிட்டு நானுற்றி முப்பத்தாறு சொற்களுக்குப் பொருளும் தந்துள்ளது. இது நல்ல அம்சமாகும். இந்த மொழிப்பிரச்சினை காலப்போக்கிலே தீர்வதற்கு அது மிக உதவும் என்று நம்புவோமாக.
வேறு 'அநுபவங்கள் இல்லை என நான் கூறமாட்டேன். இந்த மொழிப்பிரச்சினை சுட்டிக் காட்டப்பட வேண்டியது என்பதால் அதை விபரமாகக் குறிப்பிட்டுள்ளேன். தி.ஞா: நவீன தொடர்பு சாதனங்களால் உலகம் சுருங்கிப்போயிருக்கிறது. இதனால் நேரம் மீதப்படுகிறது. இவ்வாறு மீதப்படும் நேரம் பொழுது போக்குச் சாதனங்களால் ஆக்கிரமிக்கப்படுகிறது. இதன் சாதக பாதக விளைவுகளைக் கூறுங்கள். அம்பி; தொடர்பு சாதனங்களால் உலகம் சுருங்கி வருகிறது என்பது உண்மை. நேரத்தையும் துரத்தையும் அவை சுருக்கி உள்ளன. ஆயினும் அதற்கேற்ப
giovev--zva سرم به س
மனிதனும் மாறவேண்டிய தேவை உள்ளது. அத்தேவைக்கிணங்கி வாழ மனிதனும் மாறுகிறான். அப்படி மாறும்போது புதிய புதிய தேவைகள் தலைதூக்குகின்றன.
23

Page 13
ஆக நேரம் தாராளமாக உள்ளது என்பதை நான் நம்பவில்லை. வேறு கோலத்தில் நேரம் விரையமாகிறது.
தொலைக்காட்சியும் தொடர்பு சாதனங்களுள் ஒன்று. அதைப் பயன் படுத்துவதும் பயன்படுத்தாததும் நமது கையில். தமிழ்ப் பண்பாட்டு வேரை விழுமியங்களை யார் நிலைநாட்ட வேண்டும்? அது எமது பொறுப்பு. எமது சமு தாயத்தின் பொறுப்பு அதற்கு இலட்சியவாதிகள் திட்டமிட்டுச் செயற்படவேண்டும். இன்றைய சிறுவர்கள் தொலைக்காட்சி முன் எத்தனை மணித்தியாலங்கள் வீற்றிருக்கின்றனர். பார்த்து ரசிக்கும் காட்சிகளும் நிகழ்ச்சிகளும் என்ன?
இவற்றை நாம் ஆராய்ந்தால் உண்மை புலனாகும். தொலைக்காட்சி, ஒலியிழை நாடா போன்றவற்றின் இலக்கு அவற்றை ஆட்சி செய்பவரின் விருப்பு. அது சமுதாய சேவையல்ல; தன்னல முயற்சி. "கல்வியூட்டும் ஒலியிழை நாடாக் களை, குழந்தைகளுக்கேற்ற கல்வி கலாசார மூல வழங்களாக அமைப்பதற்கு இதுவரை தமிழில் முழு முயற்சி எடுக்கப்படவில்லை.
சினிமாத்துறையில் ஈடுபட்ட ஒருவரிடம் கேட்டபொழுது, "நாம் பணத்தை முதலீடு செய்து, எமது இலக்கை அடைய முயல்கிறோம். மற்றோரும் தமது இலக்கை அடைய வேண்டாம் என்றோமா?” என்று பதில் கொடுத்தார். சில ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலே கேட்கப்பட்ட கேள்வி இது. தேவை வெளிப்படை ஆனால் "பூனைக்கு மணிகட்டுவது யார்?" இதுதான் நாம் சிந்திக்கவேண்டியது. அதுமட்டுமல்ல செயலாற்றவேண்டியதும்.
தி.ஞா: ஆணும் பெண்ணும் தனித்தனித் தீவுகளி போன்று வாழ்கின்ற ஒரு தன்மை புலம்பெயர்ந்த நாடுகளில் காணப்படுகிறது. இதனால் குடும்பப் பிரச்சனைகள், விவாகரத்துகள் அதிகரிக்கின்றன. இதுபற்றி மூத்த தலைமுறையினராகிய உங்கள் கருத்து. அம்பி; புலம்பெயர்ந்து புதிய சூழலில் பல்கலாசார சமுதாயத்தில் வாழ்பவர்கள் மட்டுமல்ல, தமது சொந்தச் சூழலில் வாழ்கின்றவர்களுக்கும் பொருந்துகின்ற பிரச்சினை இது.
இன்றைய உலகில், ஆணும் பெண்ணும் நடாத்தும் குடும்பவாழ்வும் அவர்கள் வாழ்க்கை இலட்சியமும் சற்று மாறி வருகின்றன. உறவும் உள்ளத்து உணர்வுகளும் திரிபடைகின்றன.
காலையில் யார்முந்தி வேலைக்குச் செல்வது? யார் பிள்ளைகளைப் பார்ப்பது என்ற அந்தர வாழ்வு வாழும் நிலை. அத்தகைய வாழ்வைத் தவிர்க்கவும் முடியாது; தொடரவும் முடியாது என்றொரு நிலையில் உணர்ச்சி வசப்பட்ட சிந்தனையின் வழியில் செயற்படும்போது குடும்பப் பிரச்சினை தலைதூக்கும். உண்மை நிலைச் சிந்தனை மூலம் உறவை மலரச் செய்யத் தவறின், குடும்பப் பிரச்சினை, விவாகரத்து என்று வழி பிரிவதும் தவிர்க்க முடியாததொன்று.
எந்த நாட்டில் வாழும்போதும் குடும்பப் பிரச்சினை, விவாகரத்து என்று வழிபிரிதல் நாம் அறிந்த ஒன்றுதான். ஆயின், புலம்பெயர்ந்து வாழும்போது, அத்தன்மை சற்று அதிகரிக்கக் காண்கிறோம் ஏன்?
முதலாவதாக, சொந்த சமூகத்தில் வாழும்போது நிலைமை வேறு. ஊரவர், உறவினர், சமூகம், நெடுநாள் பழகிய நண்பர் என்று பல சக்திகள் தமது நடத்தையை வழிதிருப்பும். பெற்றோர், முதியோர் தலையீடு பிழவுகளை காலா காலத்திலே சீர்செய்ய முயலும். அவை பெரிதும் உறவு துணிக்கப்படுதலைத்
24

தவிர்க்கும். ஆனால், -
புலம்பெயர்ந்து, அந்நிய சூழலில் வாழும்போது நிலைமை அதுவல்ல. ஊரவர், உறவினர் என்பவரெல்லாம் புதியவர்கள். அவர்கள் என்ன சொல்வார்கள் என்பதும் அவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதும் எமது நடத்தையை அதிகம் பாதிக்கமாட்டா. அதனால், பிரிவும் விவாகரத்தும் அதிகரிக்க இடமுண்டு.
புலம்பெயர்ந்து வாழ்கின்றவர்கள் வாழ்கின்ற புதிய ‘சூழல் நிலையும் நிலைமையைப் பாதிக்கும் இன்னொரு காரணி. அவுஸ்திரேலியச் சூழலை எடுத்தால், குடும்பப் பிரிவும், விவாகரத்தும் சர்வசாதாரண சம்பவங்கள். எந்த மனைவி, எத்தனையாவது மனைவி என்பது எவ்வகையிலும் பாதிக்காத நிலை. திருமணம் செய்யாமல் கூடி வாழ்வதும் ஆண் - ஆண், பெண்- பெண் உறவுகள் அங்கீகரிக்கப் படுவதும், "ஒற்றைப் பெற்றோர்" என்ற நிலை வடுவற்ற நிலை என்பதும் நாம் அறிந்தவையாகும். அதனால், பாரம்பரியமாக பேணப்பட்டு வந்த "அளவுகோல்கள் மாறுகின்றன. வாழ்க்கை இலட்சியங்கள் திரிகின்றன. குடும்பப் பிணைபபுகள் வலுவிழக்கின்றன. மனம்போன போக்கெல்லாம் போவதற்குத் தடைபோடும் விழுமியங்களும் செயலிழக்கின்றன. புதிய சூழலிலே வந்து வாழும்போது முரண்கள் பலவும் குடும்ப உறவைப் பாதிப்பதைக் காண்கிறோம். பிள்ளை வள்ர்ப்பு முதல் உடையலங்காரம், ஆடை, அணிகலன், போன்றவை ஈறாக இந்த முரண்கள் முளைகொள்ளக் காரணமாகின்றன. கணவன் அல்லது மனைவி, தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப நடந்து கொள்ள எண்ணும் பொழுது முரண்கள் தலைதூக்கி பாதை விலகத் தூண்டுகின்றன.
பிரிந்தவர் விவாகரத்துச் செய்தவர், மறுவிவாகம் செய்தவர் என்று வடுக்களும் இல்லை. தமது விம்பம் பிறழ்வடையும், சமூகத்தின் கண்ணிலே குறைபாடுள்ளவர் என்ற வடு சேரும் என்றெல்லாம் "விழுமியம் இல்லை” இதனால் இயந்திர வாழ்வு - உணர்ச்சிகளும், சொந்தபந்தப் பிணைப்பும் பற்றும், குறைந்த ஒரு மனோநிலை.
ஆயினும் இன்னொரு அம்சத்தைக் குறிப்பிடல் அவசியம் என எண்ணுகிறேன். அதுதான், நமது நாட்டில் இல்லாததும், "இந்த நாடு” களில் உள்ளதுமான “பொதுநலப்படி.
நாட்டு மக்கள் நலமுற்று வாழவேண்டுமென்று நல்லெண்ணத்துடன் "பொது நலப்படி (WELFARE) பல நாடுகளில் வழங்கப் படுவதை நாம் அறிவோம். புலம்பெயர்ந்த நாடுகளில், இந்த வசதிகளையும் வாய்ப்புகளையும் அறிந்து அநுபவித்தவுடன், குடும்ப உறவும், பழுவும் உதறித்தள்ளப்படுவதும் சாதாரணமாகிறது. பிரிந்தும் விவாகரத்துச் செய்தும் வாழ்பவர்க்கு அந்தந்த நாட்டுச் சட்டப்படி பொதுநலப்படி கிடைக்கும். அதனால் ஒரு பிரச்சினை தீரும். உளவியல் ரீதியிற் பிரச்சினைகளை ஆய்வுசெய்து ஆலோசனை வழங்கும் (counseling) வாய்ப்புகள் சமூக சேவைகளாக இருக்கின்றன. எனினும், அவற்றை நம்மவர் நாடுவது குறைவு. இவ்வகை ஆலோசனைகளை உரிய வேளையிற் பெறாவிடின் சிக்கல்கள் வாழ்வைச் சீரழித்து வழிபிரியும் நிலை எழும். ஆகவே, "தனித்தனி” தீவுகள் போல உள்ளத்தில் ஈர்ப்பு நலிவுற்று வாழ்கின்றனர். இதை மேலும் விரித்துக்கூற நான் விரும்பவில்லை.
25

Page 14
OVU()
s
கவ்வாத்து வெட்டியும்
கான்வெட்டி மணி எடுத்தும் செவ்வானம் காட்டும்
செங்குருதி வெளியாக ஒவ்வொரு நாளுந்தான்
உழைத்தாலும் இந்நாளில் அவலுருண்டைச் சோறோ
அரைவயிற்றை நிரப்பாது
குடும்பத்தைக் குழந்தைகளை
குடைந்தெடுக்கும் பசிபோக்க அடுத்திருக்கும் கிராமத்து
அப்புகாமித் தோட்டத்தில் இடுப்பொடிய வேலைசெய்து எடுத்துவரும் நெல்லரிசி அடுப்பெரியத் துணைசெய்து
அரைவாசிப் பசிதீர்க்கும்
எண்மனைவி நகையெல்லாம்
ஈடுவைத்து மூழ்கிற்று என்மகளைக் கரைசேர்க்க
இங்கெனக்கு வழியில்லை துன்பத்தின் விளிம்பினிலே
துடிதுடித்துச் சுடுகாட்டின் இன்பத்தைத் தேடும் நான்
எடுத்திருக்கும் முடிவாலே துன்பங்கள் தீர்ந்திடுமா?
துயரங்கள் மாய்ந்திடுமா? இன்பநிறை மணநாளை
எதிர்பார்த்துக் காத்திருக்கும் என்மகளின் கனவுகளும்
இனிதுநிறை வேறிடுமா எண்ணி எண்ணி நானிங்கு
ஏங்குவதை யாரறிவார்?
குறிஞ்சிநாடனி புசல்லாவை
இருளோடு பிறந்த பூமியில் ஒளியேற்றுவதற்காக
உருப்பெற்றது
சூரியன் தாங்கமுடியாத வெப்பத்தை தணித்துக் கொள்ள விடாது பொழிந்தது
வானம்.
gj6ff
வெளிக்கிளம்பியது
முளை
மரம் செடி கொடி
(O606)
அழகில்
விட்டு
அட்டாளைச்சேனை
கடல் நதி கல்வியல் கல்லூரி
மயங்கிக் கிடந்தது
பூமி,
மண்ணை எடுத்து விளையாட்டாக ஊதிப் பார்த்தான் முதல்வன்
26
இருளுக்குள்.
பொ.சத்தியநாதனி
கண்ணைத் திறப்பதற்குள் கைவிளக்கோடு வந்து நின்றான்
ஒருவன் காற்றை மறித்தான் கல்லைப் பிளந்தான் ஆற்றை மாற்றினான் அதிசயம் புரிந்தான் சொக்கிப் போனது சூரியன். பூமி வெளுப்பதற்கு தனககு வேலை இல்லையென்று விக்கித்து நின்றது. ஒளிக்கம்பங்கள் எழுந்து இரவைப் பகலாக்கின. “செக சோதியாய்” ஒளி.
மூழ்கிக் கொண்டிருந்தது.
 

ஏ.பி.வி.கோமஸ்
லையக கலைச்செல்வம் எனக் கெளரவிக்கப்பட்ட திரு ஏ.பி.வி.கோமஸ் LDநாடறிந்த நல்ல இலக்கிய கர்த்தா. 'ஜெயம்', 'அறிவரசன் என்ற புனை பெயர்களிலும் இலக்கியப்பணி புரிந்து வருகிறார். க.பொ.த.(உயர்தரம்), வகுப்பை கோட்டே கிறித்தவ கல்லூரியில் பயின்ற பொழுது(1954இல்) தினகரன் பத்திரிகையில் ஆசிரியருக்குக் கடிதங்கள் எழுதியதுடன் தனது எழுத்துப்பணியைத் தொடங்கி இன்றுவரை ஓயாது எழுதிக் கொண்டிருக்கும் இலக்கியவாதி இவர். கல்லூரிக் காலத்திலேயே தமிழ் மொழியில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் எழுதியவர். பின் சிறு சிறு கவிதைகள் மூலமாகத் தன் எழுத்துப் பணியினைத் தொடர்ந்து, ‘வாழ்க்கையே ஒரு புதிர் என்ற சிறுகதைத்தொகுதி, அங்கமெல்லாம் நெறஞ்ச மச்சான்’ நாட்டார் பாடல்கள் இடையிட்ட குறுநாவல், "எழுத்தார்வமுள்ளவர்க்கு கையேடு என்னும் நூல்களை தமிழ் வாசகர்களுக்குத் தந்துள்ளார்.
சுதந்திரன், வீரகேசரி, சிந்தாமணி, தினபதி, தினகரன் ஆகிய பத்திரிகைகளில் கவிதை, கட்டுரை, சிறுகதை என எழுதிக் கொண்டிருக்கும் இவர் அகில இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கத்தின் ஆசிரியன்’ எனும் ஏட்டின் ஆசிரியராகப் பணி புரிந்தவர் என்பது குறிப்பிடக்கூடியது. மேலும் திறமையான மாணவர்களை உருவாக்குவதெப்படி? என்ற கட்டுரையை தினகரனிலும், நாட்டார் பாடல்கள் என்ற கட்டுரையை சுதந்திரனிலும் தொடராக வெளியிட்டதன் மூலம் தமிழ் இலக்கிய உலகுக்கு பயனுள்ள பணியை ஆற்றியவர். இன்னும் மெசன்சர்டுMersanger) ஆங்கிலப் பத்திரிகையிலும், வொய்ஸ் ஒப் த வொய்சலர்ஸ் (Voiceofthe voicelers) என்ற பத்திரிகையிலும் ஆங்கில ஆக்கங்களை அதிகமாக எழுதியுள்ளார்.
டாக்டர் மு.வரதராசனைத் தன் முன்னோடியாகக் குறிப்பிட்ட போதும், கல்லூரியில் இருந்தபொழுது தன் தமிழாசிரியர்கள் பண்டிதர் ஆறுமுகன், பால பண்டிதர் கதிரேசன் என்போரை நன்றியுடன் நினைவுகூர்கிறார். அண்ணாத்துரை, கருணாநிதி, கண்ணதாசன் போன்றோரின் எழுத்துக்களில் கவரப்பட்டதும், தி.மு.க.கட்சியின் ஓர் அங்கத்துவனாக இருந்ததும், திராவிடநாடு-தென்றல்-முரசொலி(Homeland) ஹோம்லன்ட் போன்ற இதழ்களின் தீவிர வாசகனாக இருந்ததும் எழுத்துத் துறைக்கு தூண்டுகோல்கள் எனக் குறிப்பிடும் இவர் மல்லிகையையும் மனதில் கொண்டுள்ளார். கலாநிதி.க.கைலாசபதி தனக்கு நண்பனாகக் கிடைத்த வாய்ப்பும், தினபதி சிந்தாமணி ஆசிரியர்கள் எஸ்.டி.சிவநாயகம் / இராஜ அரியரத்தினம் ஆகியோரது ஆலோசனைகளும் வழிகாட்டலும் அளப்பரியன என்றும் மறக்காமல் குறிப்பிடுகிறார்.
வீரகேசரிப் பத்திரிகை முதன்முதல் நடாத்திய மலையக சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசினையும், சுதந்திரன் சிறுகதைப்போட்டியில் மூன்றாம் பரிசினையும் பெற்ற இவர், இந்து சமய கலாசார அமைச்சு, மலையக கலை
27

Page 15
இலக்கியவட்டம், மத்திய மாகாண சாகித்திய விழாக்குழு (1999, 2000) என்பவற்றால் கெளரவிக்கப்பட்டவர். மேலும் இவருடைய இலக்கியப் பணிக்கு ஆசிரியராக, அதிபராக, மத்திய மாகாண கல்வி அமைச்சின் பிரத்தியேக செயலாளராக, மலையக எழுத்தாளர் மன்றப் பொருளாளராக, கிறித்தவ யூனியன் தலைவராக பணியாற்றி வந்தமையும் முக்கிய காரணங்களெனலாம். இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் நிகழும் இலக்கிய விழாக்களில் சிறப்புப் பேச்சாளராகத் திகழும் இவர், ஆண்டுதோறும் கிளிநொச்சியில் நடைபெறும் திருக்குறள் மாநாட்டில் உரையாற்றி, கவிதை பாடி இலக்கியப் பணி புரிந்துவருகிறார் . பண்டிதர்.கா.பொ.இரத்தினம் அவர்களால் கவரப்பட்டு திருக்குறள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டமை பற்றி பசுமையான நினைவுகள் அவை என மகிழ்ச்சியடைகிறார். பல கவியரங்குகளில் பங்குபற்றி கவிதை படித்ததோடு, பல கவியரங்குகளுக்குத் தலைமை தாங்கியும் உள்ளார்.
இலக்கியப் பணியோடு கலைப் பணியையும் தனது இரு கண்களாகப் போற்றுவதுடன், தன்னாலான பங்களிப்பினையும் செய்து வருகிறார். இதுவரை 40ற்கு மேலான நாடகங்கள் எழுதி - நெறிப்படுத்தி-அரங்கேற்றியுள்ள செயல்வீரன். 1957இல் நண்பர்களான மணவைத்தம்பி, பீர் முகமது இருவருடனும் சேர்ந்து அண்ணாதுரையின் நீதிதேவன் மயக்கம்' என்ற நாடகத்தை கொழும்பு நகரசபை மண்டபத்தில் அரங்கேற்றினார். தோட்டங்கள் தோறும் நாடகங்களை அரங்கேற்றி விழிப்புணர்வைத் தூண்டியவர். வத்தேகம இந்துக்கோயில் கும்பாபிஷேக நிதிக்காக நாடக அரங்கேற்றத்தை நிகழ்த்தி நிதியுதவி முயற்சியிலும் ஈடுபட்டவர். தான் மட்டுமன்றி தனது புத்திரர்கள் இருவரையும் நடிக்கவும் செய்து குடும்பமே கலைக்குடும்பம் எனப் புகழப்பட்டவர். கண்டி திரித்துவக் கல்லூரியில் பல நாடகங் களை மேடை ஏற்றி நாடகத்துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்தவர்களுள் ஒருவராகத் திகழ்பவர்.
திரு.ஏ.பி.வி.கோமஸினுடைய இன்னொரு கலைப்பணியானது சமூகப்பணியா கவும் திகழ்ந்துள்ளதைக் காணலாம். தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் வத்தளை நகரசபை மண்டபத்தில் முன்னின்று தன் மாணவர்கள் - ஆசிரியர்கள் துணையுடன் முழுஇரவு கலை நிகழ்ச்சிகளை நடாத்தியுள்ளார். கற்பித்தல் செயற்பாட்டின் காரணமாக மாவனல்லையில் இருந்தவேளை இஸ்லாமிய பாடல்களையும் எழுதி யுள்ளார். நவாலியூரார் நடாத்திய ‘போயா கவியரங்குகளில் பங்கு பற்றியதன் மூலம் சிறந்த கவிஞராக வானொலி நேயர்களுக்குப் பரிச்சயமானார். இவர்கள் வித்தியாசமானவர்கள் என்ற எழுத்தாளர் அந்தனிஜீவாவினால் எழுதப்பட்ட நூலில் திரு.ஏ.பி.வி.கோமஸ் அவர்களும் இடம்பெறுவதுடன் அந்த நூலில் உள்ள 30 பேர்களில் தனிநாயகம் அடிகளார் உட்பட இவரும் உள்ளார் என்பது இவரது சிறப்பை இனங்காணத் துணைபுரியும்.
மரபோ - இல்லையோ எழுதுபவர்கள் மக்களுக்காக எழுதட்டும். ஒன்றே குலம் - ஒருவனே தேவன் என்பதைக் கடைப்பிடிக்கட்டும். மக்கள் நலமே - வளமே - வாழ இதுதான் வழிவகுக்கும். உலகுக்கு ஆங்கிலம், உறவுக்கு சிங்களம், உற்றது தாய்மொழியான தமிழ் என்றெல்லாம் இலக்கியம் பற்றி, ஜாதி பற்றி, சமூக முன்னேற்றம் பற்றி, இன்று புரையோடிப் போயிருக்கும் மொழிப்பிரச்சனை பற்றி சீரிய - சிறந்த கருத்துக்களைக் கொண்டிருக்கும் திரு.ஏ.பி.வி.கோமஸ் தமிழ் கலை - இலக்கிய நெஞ்சங்களில் நிறைஞ்ச மச்சானாகத் திகழ்கிறார் என்பதில் வியப்பில்லை. இவரது இலக்கியப் பணி தொடர்ந்து தமிழ் இலக்கிய நெஞ்சங்களுக்கும் பயன்பெற வாழ்த்துகிறோம்.
28

տJifժair பேசுகிறார்.
ஆசிரியர் ஞானம்
அன்புடையீர்,
பதிலாகச் சொல்வதற்கு உருப்படியான கருத்து இல்லாதபோது, வசை மொழிகள் மிகவும் பயன்படுகின்றன. தனிப்பட்ட தாக்குதல்கள் மூலம் தம் தவறு களை மூடிக்கட்டலாம் என்ற போக்கு புதிதல்ல, உங்கள் ஏடு இதுவரை கண்டித்து நிராகரித்தும் அல்ல. எஸ்.பொன்னுத்துரை சார்பாக தர்மகுலசிங்கம் எழுதியது பற்றி பிரச்சினைக்குரிய கதைத் தலைப்பு பிழைபடத் தரப்பட்டது மருதூர்க் கொத்தனால் அல்ல என்பது முக்கியமானது. அக்கதை தன்னாலேயே எழுதப்பட்டது என்று பொன்னுத்துரை சொல்லவில்லை. அவருக்கும் மருதூர்க்கொத்தனுக்கும் இடையிலான 'கொடுக்கல் வாங்கல் கணக்கை வாசிக்கும்போது, பின்னவருக்கு அவர் ஆற்றிய உதவிக்குக் கைமாறாக எதையோ பெற்றார் என்றே விளக்க மாகிறது. இவ்விடயம் பற்றி மருதூர்க் கொத்தன் எப்போதோ சொல்லியிருந்த போதும், ஏனோ அண்மையிலேயே இது பிரச்சினையாகியுள்ளது. மருதுர்க் கொத்தன் பொன்னுத்துரை தயவில் பிழைத்தோராகச் சொல்லப்படுவோர் பட்டியலில் ஒருவராகவே இருந்துவிட்டுப் போகட்டும். அது, எந்த வகையிலும், முன்வைக்கப் பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு உரிய மறுப்பாகி விடாது. சிலகாலம் முன்பு இதுபோல இன்னொரு குற்றச்சாட்டு பொன்னுத்துரைமீது சரிநிகரில் நட்சத்திரன் செவ்விந்திய னால் முன்வைக்கப்பட்டது. அப்போது, சம்பந்தப்பட்டவர் குற்றச்சாட்டை முன்வைக் காதபோது, இன்னொருவர் அதைச் செய்வது அழகல்ல என்று எழுதினேன். காலங்கடந்து இவ்வாறான விடயங்கள் கிளறப்படும்போது புதிய சிக்கல்களும் முளைவிடுகின்றன. இவ்விடயத்தில் மருதுர்க் கொத்தனும் எஸ்.பொன்னுத்துரையும் தமது நிலைப்பாடுகளை ஒரேயடியாகத் தெளிவுபடுத்துவதுடன் இவ்விடயம் முற்றுக்கு வருவது நல்லது.
ஞானத்தில் விரிவான அரசியல் விளக்கங்களை எழுத நான் விரும்பவில்லை. தமிழ்த் தேசியம் பற்றியும் இடதுசாரி இயக்கம்பற்றியும் விரிவாக நிறையவே எழுதி வந்திருக்கிறேன். விரும்புகிறவர்கள், அவற்றை வாசித்து விளங்கிக் கொள்ளலாம். திராவிட இயக்கம் பற்றிய மயக்கங்கள் பல நம்முள் உள்ளன. பொதுப்பட, ஈ.வெ.ராவின் சிந்தனைகள் மிகமுற்போக்கானவை. ஆயினும், பார்ப் பனிய எதிர்ப்பைப் பார்ப்பன எதிர்ப்புடன் பிணைத்து, அதை முதன்மைப்படுத்தியதால், சில தவறுகளும் நேர்ந்தன. பாராளுமன்ற அரசியலிலில் கண்ணை வைத்துக் கொண்டு தி.மு. கழகத்தை தொடக்கிய அண்ணாதுரை போலித் காரணங்காட்டித் திராவிட நாட்டைக் கைவிட்டார். என்றாலும் அவர் பொருளாதார ஊழல் இல்லாத அரசியல் தலைவர். கருணாநிதி குடும்பச் சொத்து விவகாரம் பற்றிப் பட்டியல் போட உங்கள் பத்திரிகையில் நீளம் போதுமோ தெரியாது. கருணாநிதி கதை வசனம் எழுதி இவ்வளவு சொத்தும் சேர்த்தார் என்றால், ஜெயலலிதாவும் சினிமாவில் நடித்து அவ்வளவு சொத்தும் சேர்த்தார் என்றும் சொல்லலாம். கூவம் கால்வாயின் வலக்கரையா இடக்கரையா அதிகம் நாறுகிறது என்ற ஆராய்ச்சி
29

Page 16
அவசியமாகத் தெரியவில்லை, போக, கன்னட அய்யங்கார் அம்மணியைவிட அதிகமாக இந்துத்துவ பார்ப்பனிய பார திய ஜனதாவுக்கு தமிழகத்தில் வேரூன்ற இடமளித்த கருணாநிதியின் அரசியில் சீரழிவுபற்றியோ ஈழத்தமிழர் விடயத்தில் எல்லாரையும் மிஞ்சிபா அவரது நாடகத் திறமை பற்றியோ நான் எழுதித்தான் வாசகர்கள் அறிய வேண்டிய அவசிய மும் இல்லை, கறுப்புத் துண்டுக்குப் பதிலாக மஞ்சள் துண்டு வந்ததிற்கும் பகுத்தறிவு விளக்கங்கள் தருவது சிரமமில்லை. மழுப்புவதும் இயலாத தில்லை. இவ்வாறான விழல் நியாயங் களுக்கு விரிவாகப் பதில் எழுதும் படியான தலைவிதியோ "கர்மவினை போ" எனக்கும் வேண்டாம். எவருக்கும்
sustLITs.
அன்புடன் சி.சிவசேகரம்
இன்றைய காலத்தில் வியாபார நோக்கோடும் வெறும் பிரச்சாரப்புகழ் நோக்கோடும் வெளிவந்துகொண்டிருக் கும் சஞ்சிகைகள், நூல்கள் ஆக்கங் களிடைய, "ஞானம்" கலை இலக்கியப் பணி என்ற நோக்கோடு வெளிவரு கின்றது. இது காலத்தின் தேவையையும் காத்திரமான இலக்கியத் தேவையையும் தன்னுள் அடக்கியிருப்பது தனித்துவ மானது. எனவே தரமான தங்கள் ஏட்டிற்கு நீண்டதொரு இலக்கிய வழிக் கான வாயில் திறக்கப்பட்டுள்ளது. இந்த வழியில் ஈழத்தமிழ் மக்களின் சோகங் களையும், தாகங்களையும் எடுத்துக் காட்டி மேலும், ஞானம் வளர, பரந்து ஒளிவிச எம் போன்ற வாசகர்களின் வாழ்த்து என்றும் இருக்கும்
பொ.சத்தியநாதன் விரிவுரையாளர் அட்டாளைச்சேனை
31)
புதிய
நூலகம்
அந்தனிஜிவா
மலையரசி (கவிதைகள்)
எழுதியவர் - பூண்டுலோயா தர்மு முதற்பதிப்பு: மாசி 2000 வெளியீடு :- ராஜி பதிப்பீட்டகம்,
அட்டன், தோட்டத் தோழிலாளப் பெண் களின் துயரங்களையும் ஏக்கங்களைபயும் அவர்களது தாய்மை உணர்வுகளையும் கவிஞர் தமது பாடல்களில் அற்புதமாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார். பாடலின் இனிமையும் சந்தலயமும் எளிமையும் சொல்வளமும் ஆசிரியர் கூறவந்த கருத்தை உள்ளத்தில் ஆழமாகப் பதியு மாறு செய்வதற்குதவுகின்றன. கலாநிதி க.அருணாசலம் (மலையக தமிழ் இலக்கியம் 1994)
பின்னட்டைக் குறிப்பிள்.
புதியதொனி (ஏப்ரல் - ஜூன் 2001) (சஞ்சிகை) வெளியீடு: இளங்கலை இலக்கியப் பேரவை, வாழைச்சேனை.
போது மூன்றாவது ஆண்டுச் சிறப்புமலர் (வைகாசி - ஆணி 2001) ஆசிரியர்:
வாகரைவாணன்
தொண்டன் (CBLD - g"wil 2001) வெளியீடு- சமூகத் தொடர்பு நிலையம், அ.பெ.எண் - 44, மட்டக்களப்பு.
 

நான் நீயாக இருந்து $TୋTୋ୩୮, ୬୩୩ அளந்து பார்க்கவேண்டும்! என்னைப் பற்றிய எனது மதிப்பீடுகள் அபரிமிதமானவையாக இருக்கலாம் என்னைப் பற்றிய உனது மதிப்பீடு கூட தவறானதாக இருக்கலாம் என்னைப் பற்றி அவனது அளவிடு போதாமல் இருக்கலாம்! நான் நீயாக இருந்து ୩୩୩୩, ୬୩୩ அளந்து பார்க்க வேண்டும்!
விமர்சனங்கள்ை விரோதிகளாகப் பார்க்கும் வக்கிரங்களுக்குள் நான் வினையாகிப் போயிருக்கிறேன்! முன்னால் கைகுலுக்கி முதுகில் கத்தி பாய்ச்சும் மூர்க்கத் தனங்களுக்குள் முடமாக்கப் பட்டிருக்கிறேன்!
நான் தேடும் சுயம்
அறியாமை வினாக்களின் பின்னால் என்னை அளந்து பார்க்க அளவு கோல்கள் வந்ததை நான் அறியாமல் இருந்திருக்கிறேன்!
பூக்களின் பிறப்புக்களுக்குள் புதிய கோட்பாடுகளைப் புகுத்திப் பார்க்க முடியாமல் நான் புகழ்ந்து மகிழ்ந்திருக்கிறேன்! கனவுகளைக் காட்சிப்படுத்தும் கால இலக்கணங்க்ளில் நான் கருத்துத் திணிக்காமல் கைநழுவ விட்டிருக்கிறேன்! இடைவெளிகளைக்
- குறைத்துக் கொண்டு எல்லைகளைத் தாண்டி வாழ்வின் அடைதல்களை நிச்சயப்படுத்து என்னை அளந்துபார்க்க வேண்டும்!
என்னைப் பற்றி
எனது மதிப்பீடு அபரிமிதமானதாக இருக்கலாம்.

Page 17
இது என்ன இரவல் நாடா?
இது என்ன இரவலி நாடா? எந்த நேரத்திலும் இடம் மாற?
சொந்த பந்தம் என்பதெல்லாம் சொப்பனம் தானா?
சுதந்திரம் என்பது வெறும் ೧೫ தானா?
இலங்கையை ஆள்வது இனநாயகம்ா அல்லது ஜனநாயகமா?
பாண்டவர்க்கு பதின்மூன்று வருடம் எங்களுக்கு எத்தனை வருடம்?
சாகும் வ்ரையும் இந்தச் சரித்திரம் தான் தொடரப்போகிறதா?
சமாதானத்திற்காகப் போர் என்றால் சமாதானம் எதற்கு சண்டைக்கா?
தமிழர்கள் தம் உரிமையை யாருக்கு உயில் எழுதிக்
கோளி
நோர்வேக்கு "நோ சொன்னவர்கள் பனத்திற்காகப் பாரினப் வரை பாத்திரம் ஏந்துவதேன்?
 
 
 
 
 

அடையானார் இல்லாதவனா தமிழன்? அதனால் தானா அவனுக்கு அடையாளம்அட்டை?
܅ܬܐܬܐ
ஆணிப்போன
இந்த நாடு குன்றாக நிமிராவிட்டால் நிச்சயம்
நிலத்திற்குள் புதைந்து போம்