கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2001.12

Page 1


Page 2
ஒடும் மரங்களுக்கு பாடும் பயணி
மரங்கள் ஓடின் வாகனம் ஒடிசினால் மரங்களும் ஒடும் எனது ஊருக்கு நான் வேறு ஊர் போக
பெரிய கொம்புடன் மனம் நிறைந்த தியிருடன் ஓடும் மரங்களே எனது ஊருக்கு முட்டிவிடாதீர்கள் ஒர் அப்பாவிக் கிராமம் ஒருசில முளைகள் கிள்ளப்பட்டன ஒரிரு முளைகள் அழிக்கப்பட்டன ஒரு சின்ன ஊர்தான்
பெரிய மலைகள் நீங்கள் மோதி இடிக்கும் அளவுக்கு
இல்லை
இல்லை
இருந்த ஒன்றையும் அண்மையில் இழந்தோம் அது காலச் சூழ்நிலை
ஒர் ஒட்டுப் பள்ளி அதன் அருகில் கடலையை நம்பி வாழும் வயதுப் பெண்மணி தெருவில் சந்தை சிலர் வளர்க்கும் ஆடுகள் அலைந்து திரிகின்ற வீதிப் பள்ளமும்
இந்த ஊரில் நான்தான் கவிதை எழுதலாம் அதைக் கேட்டுப் படிக்கும் காற்று மட்டுமே சிலர் செத்த கவிதைகள் சிலர் தொலைந்த பாடல்கள் பல்லைக் குத்தபிம் ஈக்கும் இல்லாமல் வாழும் மக்களின் சோக கீதங்கள் காதல் இனிப்புமாப்
இன்பமும் துன்பமும்
அனைத்தும் அடங்கிய பெட்டியும் உள்ளது
சோலைக்கி
 
 

உள்ளே.
66 மூலம்
விரிவும் ஆழமும் பெறுவது
ஞானம்.
சிரதம ஆசிரியர்: தி.ஞானசேகரன் இணை ஆசிரியர்கள்: ந.பார்த்திபன் ஞா.பாலச்சந்திரன் ஓவியர் நா. ஆனந்தன்
ஞானம் சஞ் சிகையfள்
கருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடை
TT GETT.
தொடர்புகளுக்கு.
தி.ஞானசேகரன் 1977, பேராதனை விதி, கன்டி. Gg5T.GL. -08-478570 (Office)
08-23.4755 (Res.)
O77-306505
FX - OE-45
E-MiiEDaDamma gazineshot IIlail.co. "
பரசுரமாகும் படைப்
நேர் காணல் inggagasabbs 1 4
சிறுகதை
தொண்டு செய விரும்பா
அடிமைகள் டியா 04 திசேரா
கட்டுரைகள்
எழுதத் தாண்டும் எண்ணங்கள் . 09 கலாநிதி துரை. மனோகரன்
நதிப் பாதையின் மேலே. in I2 வி.கெளரிபாலன் கவிதைகள் ஓடும் மரங்களுக்கு பாடும் பயணி. O சோலைக்கிளி கிரிக்கற் யுத்தங்கள் .பா. 13 மாவை.வரோதயன்
படி 22
சி.சிவசேகரம் மனம் தகித்துக்கொண்டிருக்கிறத. 교 교 எம்.ஸாலிஹற் அஸிம்
głby jörð 606 fó! ............... கவிஞர் ஏ.இக்பால் இயேசுவுக்கு ஒரு மடல் சபா 31 செல்வி ஜெ.நிரோசா விசர் நாயும் போகும் பய32 த.ஜெயசீலன்
... I
நெற் றிக் கண் 5 நக்கீரன்
புதிய குயிலகம். O
வாசகர் பேசுகிறார்.28
O3

Page 3
தொண்டு
செய விரும்பா அடிமைகள் .
திசேரா - லிந்துலை
அரசியற் கூட்டத்துக்கெனவே யான தனியான அலங்களிப்புடன் மேடை திகழ்கிறது.
மெல்லிய பாடலுடனும், இசையுட னும் மேடை திறவுபட கையில் சோதி யுடன் குனிந்து நிற்கின்றான் பாரதி.
வெற்றி கூறச்சொல்லியும், வெண் சங்கை ஊதச்சொல்லி கற்றவரால் உலகைக் காப்பற்றப்பட்டதாகவும், பற்றைய அரசர் பழிபடு படையுடன் இருந்து, சொற்றை நீதியை தொகுத்து வைத்திருப்பது பற்றியும் விடிவு நெருங்கு வதாகவும் சொல்லிச் சிலையானான்.
அவன் உயிருடன் இருந்து இறப்பு நிகழும் வரை இப்படித்தான் விடிவு பற்றியே கதைத்தான்.
விடியல் ஒன்றிற்கான குறியீடாய் அச்சோதியை வைத்திருந்தான்.
சபையின் பின்புறப்பகுதியில் இருந்து வந்தவர்களின் கூச்சல் காதைத் துழைத்தது. "எங்கள் தலைவர்” தங்கத் தலைவர்”, “எங்கள் தலைவர்" . “சொந் தத் தலைவர்” தலைவரைக் கண்டு கொள்ள முடியாவண்ணம் சூழ்ந்து கொண்டு அழைத்துவந்தார்கள். கழுத் தில் மாலையுடனும், அவர்களுக்குரித் தான வெள்ளையுடையுடனும் வருவது கூட்டத்தில் ஏற்பட்ட சிறு வெடிப்பினுாடு தெரிந்தது.
நிறங்கள் எல்லாவற்றினதும் சேர்க்கைதான் வெண்மையாம். அதனுள் எல்லா நிறங்களும் மறைந்து இருக்கு மாம், அதனால் வேண்டிய வேளைகளில் தன்னுள் உள்ள நிறங்களில் ஒன்றை அல்லது இரண்டு, மூன்றையேனும் காட்ட முடிகின்றதாம். எப்போதோ எனக்குச் சொல்லப்பட்டிருந்தது. .
பிரதானமாகக் கத்திக்கொண்டு
வந்த தொண்டனும் கூட்டத்தை நெருங் கிக் கொண்டு வந்த காப்பாளனும், கைகளிரண்டையும் இடது புறமாக்கிக் கொண்டு வந்த தலைவனும் மேடையி லேற கத்திக்கொண்டு வந்த கூட்டத்தினர் கீழே குந்திக் கொண்டனர். தலைவனது கண், சோதியில் குத்தியது. அவர் களுக்கு எப்போதும் அது பிடிப்ப தில்லை. அவனுக்குப் பின்னிருந்த கறுப்பு உருவம் (அவனுள் இருக்க வேண்டியது) அதையணைத்து விட்டுப் போனது. தலைவன் சிரித்துக்கொண்டு தன் கண்களுக்கு சக்திகள் அதிகம் என் றான் காவலனிடம்.
கூட்டத்துக்கு இன்னமும் ஒன்றி ரண்டு பேர் வந்து கொண்டிருந்தார்கள். நோட்டமிட வந்தவன் போல முறைத்துப் பார்த்துக்கொண்டே வந்தான். "இவர் களுக்கு வேறு வேலை இல்லை” என்னையும் முறைத்துவிட்டு அமர்ந்தான். மனிதர்களுக்கு முகங்கள் அதி கரித்த காலம், தலைவனாக இனங் காணப்பட்டவர்களுக்கு கட்டாயமானதாக இருந்தது. மக்களுக்கு, தனித்துவம் காக்க, சொந்தத் தேவைகருதி சாந்த - கோப - ஞான - சத்திய - காம எனப் பல முகங்கள் இருந்து கொண்டோ, தோன்றிக் கொண்டோ, தோற்றுவிக்கப்
பட்டுக் கொண்டோ, இருக்கலாம். அதனால் எல்லாமுமாய் அவன் உரு வாக்கப்பட்டிருந்தான்.
"உங்களுக்காய் எதுவும் செய் வேன். நான் என்றால் நீங்கள் . நீங்கள் என்றால் நான், உங்களுக்கு வருபவை எல்லாம் எனக்கும் வருபவை. உங்கள் குடிசைகளை மாளிகையாக்குவேன், வீடு களை வெள்ளிப் பாத்திரங்களால் நிரப்பு வேன், தங்கத்தட்டில் உணவருந்த
04
 
 

வைப்பேன்." - மக்களுக்கு செய்ய முடியா தவைகளை மக்களுக்கோ பூரிப்பு, ரொட்டித்துண்டுகள் தங்கத் தட்டில் இருந்தன. தண்ணிர் வெள்ளிக் கிண்ணத் தில் இருப்பதைக் கண்டு பெருமை கொண்டார்கள். ஆனால் ரொட்டி தேங் காய் இல்லாத ரொட்டியாகவேதான் இருப்பது கூடத்தெரியாமல் கைதட்டினார் கள்.
பின்பு வந்தமர்ந்து கொண்டவன் எழுந்து நின்றான். அவனது முகம் கோபத்தில் விகாரமடைந்திருந்தது. என்னவோ கத்தினான். அவனது சத்தம் என்னையும் தாண்டி பின்புறம் நீண்ட தூரத்துக்குப் பயணித்தது. "கைதட்டித் தட்டி கோசம் போட்டு ஏமாந்து போன வர்கள் நாம். அதனால் உயர்ந்தவன் அவன்.” இன்னமும் சொல்லி மக்களைத் திட்டினான். அவன் சொல்லியவைகள் கேட்கக்கூடிய வார்த்தைப் பிரயோகத் தில் இருந்தாலும் எனக்கு நினைவில் நிற்கவில்லை. குழப்பக்காரனாகத் தோன் றியதால் எல்லோரும் முறைத்தார்கள். (குறிப்பாக மேடையில் நின்றவர்கள்)
தலைவரை இழிவுபடுத்துவதாய் எண்ணி தொண்டன் பொங்கினான். "நாங்கள் சொல்வதைக் கேட்க வேண்டி யவர்கள்தான் நீங்கள்" அது எல்லோரை யும் அடக்கும் வார்த்தையாக மட்டுமில் லாமல், தாழ்த்தி இழிவுபடுத்துவதாகவும் ll-gil.
அந்தச் சலசலப்பை தன்னை நோக்கி ஈர்க்க வேண்டி தலைவன் “உங் களுக்குக் குறைகள் இருக்காது. உணவும் வீடும் தொழிலும் வழங்கப் LLTulsor'
"அவ்வளவுதானா” “அவ்வளவு தான் எங்கள் தேவையா” கூட்டத்தில் பலர் கதைக்கத் தொடங்கியிருந் தார்கள்.
"வேறென்ன இருக்கிறது". தலை யைச் சாய்த்துக் கொண்டான் தலைவன். அவனது கேள்வி எல்லோரையும் எழுப்பி நிறுத்தியது.
"தலை நகருக்குச்
சென்ற
மகனைக் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை”
“சிதைக்கப்பட்ட என்மகளுக்கு நியாயம் வேண்டும்” மகனைக் காட்டிய இன்னொருத்தி
“இவனின் தந்தை உயிருடன் இருக்கின்றாரா இல்லையா எனத் தெரிய வில்லை” என்றாள்.
“என் கடை கொள்ளையிடப் பட்டது. வீடு எரிக்கப்பட்டது. நட்டஈடு ஏதுமில்லை”
மாறி மாறி புலம்பினார்கள். நிம்மதியைத் தொலைத்து விட்டு சோகத் துடன் வாழ்வதாய்த்தான் சொன்னார்கள். இப்படி நிறையவைப் பேசவும், எழுதவும் முடியாமல் கட்டிப்போடப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். இதற்குரிய முடிவு களைச் சொல்லமுடியுமா? என்றான் குழப்பக்காரன்.
ஆயுதத்துடன் நின்று கொண்டிருந் தவனுக்கு முகம் மாறியது. தலைவனை எதிர்த்ததாலாக இருக்கலாம். "நீ கதைப் பது பற்றியும், யாரிடம் என்பது பற்றியும் அறிவாயா? புரிந்துதான் கதைக் கிறாயா?”
"கொள்ளைக்காரனிடம் என்பதும், நீங்கள் கடல் கொள்ளைக்காரர்கள் என்பதும் கூட"
கீழிருந்தவனுக்கு வாய் நீண்டு விட்டதாய், தொண்டன் கத்தினான். நான் யாரெனக் காட்டவேண்டுமா எனக் கை களை மூடி இருந்த சட்டையின் கை களை மடித்தது கண்டு கீழிருந்தோர் சத்தமிட்டனர். "ஏய்" கூட்டுச் சத்தம் அவனதைவிட பல மடங்கு கூடிய தாகவும் இருந்தது. ஒன்றுபட்டுவிட்ட தையும் காட்டியது. கோபத்தில் ஆடினார் கள். கூத்து முறையை ஒத்திருந்த ஆட்டத்துடன் உரிமைகள் வேண்டுவ தாயும், நினைத்ததைப் பேசிட வேண்டி யது பற்றியும், கைகள் ஓங்கிடவும், நாட் டைச் சுற்றிவரவும், சுதந்திரமாய் எங்கும் திரிந்திடவும் வேண்டுமெனவும் பாடினார் கள்.
அடக்கப்பட்டிருந்தவர்கள் திடீ
05

Page 4
ரென எழுந்து கொண்டார்கள் என்பதை விட, கனன்று கொண்டிருந்த எரிமலை வெடித்து விட்டதாகவும், சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டதாகவுமேபட்டது. அருகில் வெற்றிலையைக் குதப்பி காவி யேறிய பற்களுடன் இருந்தவன் சுறண்டி "ஏன் ஆடுகிறார்கள்” என்றான். அவனுக் குப் பூரணத்துவமாய் விளக்கி முடிக் கவும், உடலியல் மொழிக் கூறுகளை எடுத்துரைக்க காலத்தின் போதாமையை யும் உணர்ந்து கொண்டு “கோபத்தில் ஆடுகிறார்கள்” என்றேன். மாண்புறு மக்கள் வீறுடன் எழுந்ததாகவும் பகை மையை ஒட்டி சுதந்திரம் பெற்றுவாழ்ந்திட எழுந்ததாகவும் தோன்றியது.
அது ஒன்றும் கடைச்சரக்கல்ல எனவும், எல்லோருக்கும் கொடுக்கக் கூடியதுமல்ல, அதுவும் உங்களுக் கெனக் கணிகளை சிவப் பாக்கி, பல்லைக்கடித்து அசையாமல் நிற்க, பாரதி அசைவு கொண்டு "என்று தணி யும் இந்தச் சுதந்திரதாகம், என்று மடியும் இந்த அடிமையின் மோகம் என்றெம் இக்கைவிலங்குகள் போகும், என்றெம தின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்” என்ற கவலையுடனே அசைவற்றுப்போனான். மக்கள் புலம்பத் தொடங்கினார் கள். தீராத கவலைகள் பற்றியும் சந்தோ சித்து வாழக் கிடைக்காத வழி பற்றியும் புலம்பும்போதுதான் ஒருவன் "ஆண்டான் கள் அழிபடும் போதும், அடிமைத் தளைகள் விடுபடும் போதும், சமஉரிமை பெறப்பட்டு சந்தோசம் கிடைப்பதாய்ச் சொன்னான். அவன் சொல்லியது அவர் கட்குப் புரிந்தது. முகங்கள் முன்னை விடவும் அகன்றது. "நாங்கள் யாருக்கும் கீழானவர்களல்ல" கோஷித்துமேடையில் ஏறத்தொடங்கினார்கள். கீழே இறங்கா விட்டால் தலையைச் சுட்டுப் பொசுக்கி விடுவதான காவலின் எச்சரிப்பையும் மீறி "தலைகளுக்குப் பயந்தவர்களல்ல நாங்கள்” என ஏறினார்கள்.
ஒவ்வொருவராய் ஏறும் போது அவர்களது பாதங்கள் முகத்தில் வைக்கப்பட்டது போல முகம் சுருங்கிக்
06
கறுத்தது. "ஏய் அடிமைகளே" உரக்கக் கத்தினான். இயலாமையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் சத்தம் பெருத்திருந் தது. பின்னுக்கு ஒழிந்திருந்த கறுத்த உருவத்தின் உறுமல் பய்ங்கரத்தை உண்டாக்கியது. இன்னமும் சத்தமாய், கொழுப்பெடுத்து ஒற்றுமையில்லாமல், சாதிகளாய், சமயங்களாய்ப் பிரிந்திருப் பதையும், ஒற்றுமையில்லாமல் காட்டிக் கொடுப்பது பற்றியும் திட்டினான். “சாதி களைக் காட்டி சங்கம் அமைத்தது நீ” “சாதிகளைக் காட்டிப் பினங்களைக் குவித்ததும், உண்டியலுக்காய் கோயில் களை அமைத்ததும் நீங்கள் தான்” பொறுமினார்கள். இன்னொருவன்
“உங்கள் சாதியினருக்கு மட்டும் இந்தா
வென எல்லாவற்றையும் வாரிவழங்கி எங்களை ஏய்க்கின்றீர்கள்.”
"இவைகளைக் கதைக் க உங்களுக்கு அதிகாரம் இல்லை, முது கெலும்பு அற்றவர்களே, நீங்கள் வந் தேறு குடிகள் எங்களைச் சுற்றும் கொடி கள்” குறுக்கிட்டுக் கத்தினான் தொண் L61.
கூட்டத்திலிருந்து முன்னே பாய்ந் தான் ஒருவன் தொடக்கத்திலிருந்து இவனேதான் கதைத்திருந்தான்.
இங்கு நடப்பவையெல்லாம் நிஜ மாய் இருந்தால் நாளை இவனைப் பார்க்கமுடியாதே என்ற கவலை எனக் கிருந்தது. நரம்புகள் கூடப் புடைத் திருந்தது, கைகளில் அதைத்தெளி வாகக் கண்டேன்.
கொடிகள் படர்ந்து நிலத்தை மூடிவிடுவதையும் திரண்டு மிடுக்காகும் அடம்பன் கொடியையும் உதாரணப்படுத் தினான்.
அவர்களால் திரளமுடியாது. காட்டிக்கொடுத்து அழியக் கூடியவர்கள் தலைவன் சிரித்தான்.
கோபம் அதிகமாகி எழுந்தார்கள். (நெஞ்சை நிமிர்த்தினார்கள்) 'நீ பல முகங்களைக் கொண்டவன், எங்களுக்கு சாந்தமானதை மட்டும் காட்டுகின்றாய், உன்னுடைய கோரத்துவம் எங்களுக்குத்

தெரியாதென நினைத்தது தவறு, தாண் டவமும் தெரியும்" - "எச்சங்கள் இன்னமும் இருக்கின்றன” - "எதற்கும் துணிந்து விட்டோம்” வார்த்தைகள் கறுத்த உருவை ஆடப் பணி னி வெளியே கொண்டு இழுத்தது. கடித்துக் குதறிவிடுவது போல நெருங்கி கத்தி, ஆடியது.
“சாதியின் அரசன் நானே நானே, உங்களை ஆட்டிட வந்தேன் வந்தேன், பூவுலகெங்கிலும் சாதியை நாட்டி உங் களைப் பிரித்திட வந்தேன் வந்தேன். வர்க்கத்தின் அரசன் நானே நானே. வக்கிரம் தீர்த்திட வந்தேன், வந்தேன்". சுயத்தைக் காட்டியது பின்னே சென்று ஒழிந்து கொள்ளவில்லை. தலைவனுக் குப் பக்கபலமாய் இடுப்பில் கைவைத்து வசதியாய் நின்று கொண்டது. எதுவும் முடியாது அடிமை வேலையே சரியா னது. ஈனமான தொழிலே உங்களுக்கு உகந்தது. நாடு காக்க ஞானமில்லாத வர்கள் எனத் துரத்தினான். போக மறுத்துக் கொண்டு மனிதர் தோளில் மனிதர் ஏறமுடியாதெனவும் சமமாய் வாழவேண்டுமென கோஷமிட்டனர்.
கத்தி அடக்க முனைந்தான் தலைவன். “கொடுத்துவிடமுடியாது. பெற்றுக்கொள்ளும் தகுதி இல்லை உங்களுக்கு, ஊத்தைப் பட்டுக்கிடக்கும் என் காலை, நாக்கை நீட்டி நக்கித் துடைக்க வேண்டியவர்கள்" - "அதற்கு நாங்கள் இருக்கின்றோம் என நினைத் துக்கொண்டிருக்கிறாய், அது கனவு. விழித்துக்கொள் எங்களது கால்களை நீ துடைப்பது பற்றி ஆட்சேபனை இல்லை. நாக்காலா, கைகளாலா என்பது உன் விருப்பம்” குனிந்து கொண்டும், முகத்தைச் சுழித்தும் நாக்கை நீட்டி அழகாய்ச் சொன்னான். "உதிரத்தை வியர்வைத் துளி களாக்கி தோலினுடு வெளியேற்றிய வர்கள், இனியும் உன் விருப்பின் கீழ் அடக்கமுடியாது.”
அவர்களுக்கு உண்மைகள் எல்லாம் புரிந்திருந்தன. யானைகளைப்
போல இழைக்கப்பட்ட கொடுமைகளை ஞாபகத்துள் வைத்திருந்தார்கள். கொடுமைகளிலிருந்தும், சித்திரவதைப் பட்ட வாழ்க்கையில் இருந்தும் வெளி யேற வேண்டுமென்பதில் உறுதிப்பட் டிருந்தார்கள்.
இவைகளைப் பார்த்துக் கொண் டிருந்த என்னைப் போலவே பாரதிக்குக் கூட சந்தோசமாய் இருந்தது. நான் மனித னாய் இருந்து பேச நினைத்துப் பயந் ததை சிலையாய் நின்றவன் பேசினான். யுகப்புரட்சியொன்று எழுந்ததாகக் கூறி சந்தோசத்தைக் காட்டியவன். அப்புரட்சி பற்றியும் எதிர்வு கூறினான். “கொடுங் காலன் அலறி வீழ்வான், பேய்களெல் லாம் வருந்திக் கண்ணிர் போகாமல் கண் புகைந்து மடிந்துபோம். வையகத் தீர் புதுமை காணிர்” என்றான்.
ஆனாலும் தலைவன் இழகிப் போவதாக இல்லாமல் வீரியத்தைப் பற்றிக் கதைத்தான்.
உருவம் உறுமியது. "நான் சக்தி பலம் வாய்ந்த சக்தி” எனவும் உங்கள் எல்லோரையும் விழுங்கிவிடப் போகின் றேன். நீங்கள் அடிமைகள், உங்கள் தலைகளின் மீது ஏறி நடப்பேன். உங்கள் இரத்தம்” நாக்கை நீட்டி விழுங்கிக் கொண்டு "என்தாகம் தீர்க்கும் பானம்" பயங்கர சத்தத்துடன் சிரித்தது. அதன் வாய்க்குள் இரத்தச் சிவப்புத் தெரிந்தது. நெடியும் அடித்திருக்க வேண்டும். பல் ஈறுகளில் சதைத்துண்டு களும் சிக்கிக் கொண்டிருக்கலாம்.
அவர்களுக்குள் ஊடாடி இருந்த கோபம் இன்னமும் அதிகரித்திருந்தது. சலுகைகள் வேண்டாம், உரிமைகளைப் பெற விழித்தெழச் சொல்லி மேடையை அதிரச் செய்தார்கள். எப்போதும் இது தான் நிகழ்ந்தது. தரவேண்டியதில் பத்தி லொரு பகுதியை இரகசியமாகக் கொடுத்து பத்திரப்படுத்தக் கூறுவார்கள். அது பாராட்டித் தரப்பட்டதாகக் கருதப் படும். அபிமானம் பெற்றுக் கொண்டதாக எண்ணப்படும்.
"சோர்ந்து வீழ்ந்து கிடந்த காலம்
07

Page 5
போனது மிரட்டலுக்குப் பணிந்து இனியும் வாழமுடியாது” எனக் கூவி னான் ஒருவன்.
அவர்களுள் இருந்து குனிந்து கிடந்தது எழுச்சியுற்றதாய்க் கண்டேன். "இப் படித்தான் இருக்கவேண்டும்" நிமிர்ந்து அமர்ந்து கொண்டு “விடக் கூடாது இவர்களை ஒழிக்க வேண்டி இருக்கின்றது." "முடியுமா என்றேன்.
"எதையும் முடியாதெனக் கூற முடியாது.” என்றான் பக்கத்தில் இருந் தவன். உணர்ச்சிவசப்பட்டு தன் அப்பா இதுபற்றி முன்னமே அவனிடம் கூறியிருக் கின்றாராம், ஒன்றாய் இணைந்திருந்தால் எல்லாவற்றையும் சாதிக்கலாமாம், உல கத்தைக்கூட அடக்கிவிடக்கூட முடியு மாம் என்றான்.
அடிமைத் தளைகள் போயப் கொடுங்கோலாட்சி முடிந்ததாம். மேடை யில் இருந்த கூட்டத்திலிருந்து ஒருவன் சொன்னான். எல்லோராலும் எழுந்து நிற்கமுடியும் என்றும் சொன்னான். (மனது சம்பந்தப்பட்டதாய் இருக்கும்) அனேகமானவர்கள் உணர்ச்சிவசத்தில் தான் நின்றார்கள். இருப்புக் கொள்ளா மல் முன்னிருந்தவன் எழுந்து உடலைச் சரிசெய்துவிட்டு அமர்ந்து கொண்டான். மனதுகள் முணுமுணுத்த ஒலிகளும், குறிகளும் அவரவர் முகங்களில் தெரிந்தது.
பாரதி நின்று கொண்டிருக்க முடியாமல் பீடத்திலிருந்து குதித்தான். (அதிகமாய் உணர்வு கொள்பவன்) “மாசக்தி மக்கள்சக்தி திரண்டெழுந்தது. சிறுதுளியொன்று பெருந்தீயாய் ஆனது இனி வெந்து தணியும் இந்தக்காடு” கண்கள் அகலித்திருந்தன. கோபத்தில் நிற்க முடியாமல் மக்களையும் கூட்டுச் சேர்த்து ஆடினான். பயமெனும் பேயை விரட்டி பொய்மைப் பாம்பைக் கொன்று யிரைக் குடிப்பதாகவும், அடிமைத் தளையை அழித்து நல்லறிவுடைவித்தை வளர்த்திடுவதாகவும், மக்களெல்லாம் ஒன்று கூடி புரட்சி விதையதை நாட்டிடுவ தாகவும் கூறி கொடுங்காவலர்களைச்
சுற்றிச் சுற்றி ஆட ஆண்டான்கள் குனிந்து சுருங்கிப் போனாலும் கறுப்புரு கூட்டத்தின் வெடிப்பால் வெளியேறி மாரைத் தட்டிநின்றான். "நான்” நிமிர்ந்து கொண்டு "நான் சாதிகளின் தலைவன் வர்க்கங்களின் அரசன் கோரங்களின் சக்கரவர்த்தி அழிக்கமுடியாது, யாராலும் முடியாது" இறங்கி ஓடி மறைந்தான். அவனையும் கொன் றிருக்கலாம் . உண்மையாகாது. திரண்டெழுந்து தீயாய் மாறி சுட்டெரித்து விட்டதாகவும், ஒன்றுபட்டு வாழ்வோமெனவும் (கை களை இணைத்து உயர்த்திக் கொண் டார்கள்) ஆண்டான்களை அடக்கிவிட்ட தாகவும் கூறிச் சந்தோசப்பட்டு நின்ற போது திரை மூடிக்கொண்டது.
இப்போது யாரும் யாருக்குக் கீழே யும் குனிந்துகொள்ள விரும்புவதில்லை. உணர்ந்துகொண்டவர்கள், நிமிர சந் தர்ப்பம் தேடியவர்களுக்கு இது உரிய கணமாய்க் கூடத் தோன்றியிருக்கலாம். ஒவ்வொருவருக்கும் போகும் பாதை தென்பட்டாலும், அச்சம் காரணமாக வழிகாட்டிகள் தேவைப்பட்டார்கள். அல்லது சேர்ந்து போக எண்ணி னார்கள். சேர்ந்து கொண்டவன் தலைவ னானான். ஆனால் காட்டப்பட்ட வழிகள் சரியானதென உறுதிப்படுத்த முடியாது. பலரது அபிப்பிராயமும் இதுவேயாக இருந்ததில் ஆச்சரியப்படவோ, கேள்வி கேட்கவோ முடியாதிருந்தது. அவைகள் முரடானது என்பதைக்காட்டிலும் கொடுர மானது என்பது உண்மை. சுயவளர்ச்சி கள் முன்னின்று கொண்டதால் மீண்டும் மீண்டும் முதுகுகளின் மீதே கால்கள் வைக்கப்படவேண்டியிருந்தது. நிமிர்ந்து
போது, குறிப்பாக ஐந்து வருடங்களுக் கொருமுறை வருவதால், மாரை நிமிர்த் திக்கொள்ள முடியும். நிஜத்துள் எங்கே யும் இப்படி தீப்பற்றிக் கொண்டால் சந்தோசமாய் இருக்கும். நனவாக்கப்பட வேணி டிய தேவையாய் மட்டுமே தோன்றியது.
08

எழுதத் தூண்டும் எண்ணங்கள்
குலாநிதி துரை.மனோகரன்)
i i ra ret T." 糖莎建魄露 விமர்ச f str r rea ne Ver II Vukov I - KE LA VZNIKLV 1 V i wdruk. V JVWW Viu
டிசம்பர் மாதம் என்றதும், தமிழ் இலக்கியத் துறையிற் சீரிய பங்களிப்புச் செய்த இருவர் பற்றிய நினைவு இயல்பாகவே ஏற்படும். ஒருவர் மகாகவி பாரதி, மற்றவர் பேராசிரியர் கைலாசபதி. முன்னவரின் பிறந்த நாளும், பின்னவரின் இறந்ததினமும் டிசம்பரிலேயே வருகின்றன. பாரதிமீது மிகுந்த ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்த கைலாசபதி, அவர் பற்றிய ஆய்விலும் அதிக அக்கறை செலுத்திவந்தார். ‘பாரதியியல்’ என்ற சொல்லைத் தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்தியவராகவும் கைலாசபதி விளங்கினார்.
தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படித்துச் சுவைப்பதும், அவற்றை இரசனை உணர்வோடு வெளிப்படுத்துவதும், சமூகநெறி அறியாமல் பழமைபேண் பண்பைப் பரப்புவதுமே "தமிழ் ஆராய்ச்சி” என்றிருந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை சர்வதேசத் தரம் வாய்ந்த ஆய்வுநெறி முறையைத் தமிழில் அறிமுகப்படுத்தினார். அவரின் பின்னர், தமிழ் ஆய்வுத்துறையை இன்னொரு பரிமாணத்துக்கு இட்டுச்சென்றவர், கைலாசபதியே ஆவர்.
மாணவப் பருவத்திலேயே அவர் பெற்றிருந்த பல்துறை அறிவு, பத்திரிகைத்துறையிலும், பல்கலைக்கழக மட்டத்திலும் அவர் சாதனைகள் புரிய அடிப்படையாக அமைந்தது. சுவாமி விபுலானந்தர், பேராசிரியர்கள் எஸ்.வையாபுரிப்பிள்ளை, க.கணபதிப்பிள்ளை, வி.செல்வநாயகம் ஆகியோரின் ஒப்பியல் நோக்கும், ஆய்வுப் பார்வையும், அறிவுத்திறனும் ஒன்றிணைந்து, கைலாசபதியிடம் சங்கமமாகின. அதேவேளை இவர்களிடத்துக் காணப்படாத முறையில், மார்க்சிய ஒளியில் இலக்கியத்தைச் சமூகவியல் அடிப்படையில் நோக்கும் பரிபக்குவத்தை அவர் பெற்றிருந்தார். கைலாசபதியின் இலக்கிச் சகாவான பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் கூறியுள்ளமை போன்று, “சங்க இலக்கியம் முதல், நவீன இலக்கியம் வரை வரும் தமிழிலக்கியப் பாரம்பரியத்தின் சமூக - இலக்கியப் பின்னணியைத் தெளிவுபடுத்திய ஆய்வுத்துறையில், கைலாசபதியின் பணி மிகச் சிறந்ததாகும்.”
தமிழ் ஆய்வுத்துறையிலும், விமர்சனத்துறையிலும் கைலாசபதியின் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை. பண்டைத்தமிழ் இலக்கியங்களைச் சமூகவியல் அம்சங்களோடு அவர் பொருத்தி நோக்கினார். நவீன இலக்கியத்துக்குச் (சிறப்பாக நாவலுக்குச்) சிறந்த அங்கீகாரத்தை அவர் தேடிக்கொடுத்தார். ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை முற்போக்குச் செல்நெறியில் இயக்கியதோடு, அவ்விலக்கியத்தின்பால் தமிழ்நாட்டினரையும் ஈடுபாடு கொள்ளச்செய்தார். மேலும், தமிழ் இலக்கியத்தின்மீது சர்வதேசப் பார்வையை அவர் திருப்பினார். அவரது அயராத உழைப்பு, இத்தகைய பங்களிப்புக்களைச் செய்வதற்கு அடிப்படையாக அமைந்தது.
09

Page 6
பத்திரிகையாளர் என்ற முறையிற் கைலாசபதி ஆற்றிய பங்களிப்பும் விதந்து குறிப்பிடத்தக்கது. இலங்கையின் தேசிய இலக்கிய வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதற்குத் தினகரன் பத்திரிகை அவருக்கு வாய்ப்பான களமாக அமைந்தது. பத்திரிகை ஆசிரியர் என்ற முறையில், இலங்கைத் தமிழ் எழுத்துலகின் வளர்ச்சிக்குப் பாரிய பங்களிப்பை அவர் நல்கினார். தேசிய இலக்கிய உணர்வு வலுப்பெறுவதற்கும், இந்நாட்டு இலக்கியவாதிகளை வாசகர் இனங்கண்டுகொள்வதற்கும், புதிய எழுத்தாளர்களை இனங்காட்டுவதற்கும் சிறந்த களமாகத் தினகரன் பத்திரிகையை அவர் பயன்படுத்தினார். என்.எஸ்.எம்.ராமையா சிறுகதைத்துறையில் ஈடுபடுவதற்கும், கே.எஸ்.சிவகுமாரன் விமர்சனத்துறையிற் கால் பதிப்பதற்கும், இன்னும் பலர் இலக்கியத்துறையில் வளர்வதற்கும் காரணகர்த்தராக விளங்கியவர், கைலாசபதி,
கைலாசபதியின் உரைநடை தனித்துவமானது. இருபதாம் நூற்றாண்டில் கவிதைத்துறையிற் பாரதியும், சிறுகதைத்துறையிற் புதுமைப்பித்தனும் ஏற்படுத்திய நடைக்கவர்ச்சியை, விமர்சனத்துறையிற் கைலாசபதியிடம் காணலாம். எளிமையும், கனதியும், கவர்ச்சியும் கலந்ததாக அவரது உரைநடை விளங்குகிறது. சான்றுகளைத் தொகுத்து, தர்க்கரீதியாகவும், தெளிவாகவும், படிப்பவரைக் கவரும் முறையிலும் எழுதும் பாணியை அவர் கைக்கொண்டார். அவரது எழுத்துக்கள் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுபவை.
தமிழ் இலக்கிய உலகில், பேராசிரியர் வையாப்புரிப்பிள்ளைக்குப் பின், மிகுந்த சர்ச்சைக்குரியவராக விளங்கிய தமிழறிஞர் கைலாசபதியே. பழமை பேண்வாதிகளாக விளங்கிய தமிழ் அறிஞர்களுக்கு அவர் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார். தி.க.சிவசங்கரன் கைலாசபதி பற்றிக் குறிப்பிடும்போது, "அவரது ஆய்வுமுறை, பல்கலைக்கழகங்களிலும் பல்கலைக்கழங்களுக்கு வெளியேயும் பழமைவாதிகளை உலுக்கி வருகிறது. புதுமைவாதிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துவருகிறது. இதன் விளைவுகள் நீண்ட நெடுங்காலம் நீடிக்கும் என்பது உறுதி” எனக் கூறியுள்ளார். பழமைவாதிகளை மட்டுமன்றி, நவீனவாதிகளுள் ஒருசாராரையும் அவரது கருத்துகள் உலுக்கவே செய்தன. அத்தகைய நவீன வாதிகளுள் ஒருவர்தான், வெ.சாமிநாதன்.
கைலாசபதி எழுதிய நூல்களும், கட்டுரைகளும், முன்னுரைகளும் ஒருபுறம் இருக்க, அவர் மறைந்த பின்னர் அவர் பற்றிய பல நூல்களும், கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. டொமினிக் ஜீவா தொகுத்த எங்கள் நினைவுகளில் கைலாசபதி (1985, 1996) எம்.சித்திரலேகா, கெ.சண்முகலிங்கம், எஸ்.மெளனகுரு தொகுத்த கைலாசபதி நினைவேடு(1988), புசி.கணேசனின் க.நா.சு.வும் கைலாசபதியும் (1988), கே.எஸ்.சிவகுமாரனின் கைலாசபதியும் நானும்(1990), தேசிய கலை இலக்கியப் பேரவையின் பன்முக ஆய்வில் கைலாசபதி (1992), சி.கா.செந்திவேலின் கைலாசபதியின் சமூக நோக்கும் பங்களிப்பும் (1992), சுபைர் இளங்கீரனின் பேராசிரியர் கைலாசபதி நினைவுகளும் கருத்துக்களும் (1992), நா.சுப்பிரமணியனின் தமிழ் ஆய்வியலில் கலாநிதி கைலாசபதி (1999) ஆகியவை என் பார்வையிற்பட்ட கைலாசபதி பற்றிய நூல்களாகும். இவற்றைவிட, கோ.கேசவனின் பாரதி முதல் கைலாசபதி வரை (1998), அ.சண்முகதாஸின் இலங்கைப் பேராசிரியர்களின் தமிழியற் பணிகள்(1998) ஆகிய நூல்களிலும் கைலாசபதி பற்றிய குறிப்பிடத்தக்க கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
இலங்கைத் தமிழ் அறிஞர்களைப் பொறுத்தவரையில் ஆறுமுகநாவலர்,
O

சுவாமி விபுலானந்தர், கைலாசபதி ஆகியோர் பற்றியே அதிகமான நூல்கள் வெளிவந்தள்ளன எனக் கூறலாம்.
ஆச்சரியமூட்டும் ஓர் ஆங்கில நூல்
இலங்கையின் சிங்கள - தமிழ் இன உறவுகள் தொடர்பாகப் பேராசிரியர் அநுராத செனவிரட்னவின் நூலொன்று சிங்கங்களும் புலிகளும் (The Lions and the Tigers) என்ற பெயரில் வெளிவந்துள்ளது. முதற்பதிப்பு (1999) லண்டனிலும் திருத்திய இரண்டாம் பதிப்பு (2001) இலங்கையிலும் வெளிவந்துள்ளன. சிங்கள - தமிழ் உறவுகளின் சமய, கலாசாரப் பின்னணி என்னும் துணைத் தலைப்பும் நூலுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. சிங்களவரைச் சிங்கங்களாகவும், தமிழரைப் புலிகளாகவும் நூலாசிரியர் குறியீடு செய்துள்ளார்.
நுாலாசிரியர் தமது நூலில் வலியுறுத்த விழையும் முக்கிய அம்சம், பாண்டியரும், சேரரும் தமிழர்கள் அல்லர், சோழர் மட்டுமே தமிழர் என்று காட்டுவதே. சிங்களவரின் மூதாதை என்று கருதப்படும் விஜயன் காலத்திலிருந்து சிங்களவருக்கும், பாண்டியருக்கும் இடையே அரசியல் உறவுகளும், திருமண உறவுகளும் இருந்துவந்துள்ளன. இத்தகைய உறவுகள் பேராசிரியருக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்துகின்றன. அதனால், பாண்டியரைத் தமிழர் அல்லர் என்று "நிரூபித்துவிட்டால்", பிரச்சினை சுமுகமாகத் தீர்ந்துவிடும் என்று அவர் கருதுவது நூலின் மூலம் தெளிவாகிறது. இதனால், வேடிக்கையான சில முடிவுகளுக்குப் பேராசிரியர் வருகிறார். பாண்டியர்களையும், மகாபாரதக் கதாநாயகர்களான பாண்டவர்களையும் முடிச்சுப்போட விரும்புகிறார். வடஇந்திய நகரமான மதுராவை யும், பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையையும் தொடர்புபடுத்திக் காட்டவும் அவர் முனைகிறார்.
விஜயன் திருமணம் முடித்த பாண்டிய இளவரசி, ஒருவேளை அவனது உறவினனாக இருந்திருக்ககூடும் எனவும், அவள் வட இந்திய ஆரிய மொழி யொன்றைப் பேசுபவளாக இருந்திருக்கவேண்டும் என்றும் நூலாசிரியர் கருத்து வெளியிட்டுள்ளார். விஜயன் குழுவினருக்கும், பாண்டியர்களுக்கும் இடையில் இனரீதியான தொடர்பு இல்லாதிருப்பின், எவ்வாறு இத்தகைய மணஉறவுகள் இடம்பெற்றிருக்கும் என்பதே பேராசிரியரின் பெருங்கேள்வி. எனவே, பாண்டியர் விஜயனைப் போன்று, வட இந்திய ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்திருக்கவேண்டும் என்பது அவரது ஊகம்.
பாண்டியர் சிங்கள மன்னருடன் அரசியல், திருமண உறவுகள் கொண்டிருந் தமையால், அவர்களை ஆரியர் என்றும், சோழர் இலங்கையைத் தமது ஆதிக்கத் தின் கீழ்க் கொண்டுவந்து ஆட்சி செலுத்தியமையால் அவர்களைத் தமிழர்கள் எனவும் காட்டக்கூடிய சுலபமான வாய்பாடு ஒன்றை ஏற்படுத்தப் பேராசிரியர் தமது நூலிற் பெருமுயற்சி செய்துள்ளார்.
உண்மையில் தமிழ்நாட்டு வரலாற்றில் மூவெந்தருள் முதலில் தோன்றிய அரச பரம்பரையினராகவும், இறுதியில் மறைந்த அரச பரம்பரையினராகவும் விளங்கியவர்கள் பாண்டியரே. தமிழோடும், சைவத்தோடும் அதிக உரிமை பாராட்டியவர்களும் அவர்களே. எனினும், பேரினவாதக் கண்ணாடி அணிந்த பேராசிரியர்கள் இவற்றையெல்லாம் விளங்கிக் கொள்ளப்போவதில்லை.
«>
11

Page 7
நதிப் பாதையின் மேலே.
வி.கெளரிபாலன் சி.சிவசேகரம் அவர்களின் ‘நிலவு” கவிதையின் அருட்டல் உணர்வில் எழுதப்பட்டது.
அறிவுச் சுக்கான் உடைந்த காலப் படகு கரை ஒதுங்கி கவிழ்ந்து கிடந்தது வெண்மணலில். பொய் உணர்வுகளின் கட்டவிழ்ப்புப் பரிமாணப் படைப்புப் பசளையில் கிளைத்து செழித்துக் கிடந்தது கரும்பசிய நிற படிமப் பாசிகள், காலப் படகின் மீது.
"ஆயிரம் மலைகளின் வெற்றுச் சிகரங்களுக் - கப்பால் விரிந்த, பரந்த வானம். நதிப் பாதையின் மேலே ஒளிவடும் நிலவு" - (சென் உரை) ஆயிரம், மலைகள், வெற்று, சிகரம், விரிந்த, பரந்த போன்ற சொற்களுக்குள் ஒருவர் தத்துவத்தை தேடுவாராயின் அது எவ்வளவு அபத்தமானது என்பது புரியவைக்க முடியாத விசயம். வார்த்தைகளின் நகர்வில் கோர்வையாக வரும் வாக்கியங்களின் இடுக்குகளுக்குள்ளும் ஏதும் தத்துவார்த்தங்கள் வந்துதிக்கப்போவதில்லை.
எண்ணங்களின் சலன அருட்டல் அற்ற நிலையில் இவ் வாக்கியங்களின் ஊடு இயங்கும் படிமங்களை மோன நிலையில் எண்ணங்களில் காட்சிப்படுத்தினால், விரியும் காட்சிப் புலமானது, கருத்து இருள் போர்த்திய மலைமுகடுகளுக்குப் பின்னே கரிய வானில் கண் விழித்துக் கிடக்கும் நட்சத்திரங்கள், அங்கும் இங்குமாக சில முகிற்திட்டுகள், மலைகளின் ஊடு வடிந்த அருவி, அந்த அருவியில் நிலவின் ஒளிர்வுக் குறுக்குக்கோடுகள், அந்தரத்தில் தொங்கும் நிலவு, எல்லாமே ஓர் உறைநிலையில் காட்சிப்படும். இப்போது மெல்ல ஒளி, ஒலி பண்புகளுடன் இவற்றைச் சலனப்படவிட்டால்; இரவின் ஒசைகள், மிருதுவான தென்றலின் சீண்டல், சலசலக்கும் நதியின் ஒசை, நதியில் இடம் மாறும் நிலவின் ஒளிர்வுக் குறுக்குக்கோடுகள். இத்தகைய காட்சிப் புலத்தினுTடு ஒருவர் தன் சிந்தனையை விரிவுபடுத்துவாராயின்; நிலவு, மலை முகடு, வானம், நதி போன்ற மனிதக்கூர்ப்புக்கு முன்னான தொன்மங்கள்; மனிதனால் கட்டமைப்புச் செய்யப்பட்ட நாகரிகம், மதம், தத்துவம், சட்டம், இனம், மொழி, கலாசாரம், சடங்கு, யுத்தம் எனும் ஒரு நீண்ட பட்டியலின் சாட்சியங்களாக காலத்தால் நம்முடன் அவை தொடர்வதையும் இந்த சென் உரையைப் படிமப்படுத்தியவர்களையும் மரணம் தின்று, மரணம் தன் இருப்பை வலியுறுத்துவதன் சாட்சியாகவும் இவை இருப்பதை உணர்வார். இவ்வாறுதான் தத்துவார்த்தங்கள் வந்தடைய முடியும். "நதிப்பாதை" கவித்துவப் படிமம்.
புகையிரத்தினுள் இருக்கும் சார்பு வேகத் தத்துவம் புரிந்த ஒளிப்பதி வாளரின் நுட்பம் செறிந்த படப்பிடிப்புப் பார்வைக் கோணத்தின் ஊடாக ஒரு புகையிரதம் புகையிரத நிலையத்தில் இருந்து புறப்படுகிறது.
"புகையிரத மேடை, பேர்ப்பலகை மின்விளக்குகள் எல்லாமே என்னை விலகிச் சென்றுவிட்டன. - ("வடலி” - பக்கம் - 75) இங்கு மொழியின் லாவகமும் அமைதியாகத் தொடங்கி பின் வேகம் எடுக்கிறது.
12

மரங்களும் கம்பங்களும் தலை தெறிக்க ஓடுகின்றன ஒளிப்பதிவாளர் தன் பார்வைக் கோணத்தை மாற்றுகிறார். அவர் பார்வை நிலவுத் துண்டில் பதிகிறது. நிலவின் தொலைவால் ஏற்படும் சார்பு வேகம் காரணமாக இரயில் சடுதியாக மந்தகதிக்கு வந்து நிலவின் பார் வைத் தொடுகையுடன் ஒரு ஒத்திசைவான ஒட்டம் நிகழ்கிறது. மொழியும் சடுதியாக வேகம் குறைந்து ஒத்திசைவுடன் இயங்குகிறது.
யன்னலுடு தலை நீட்டும் அந்த நிலவுத் துண்டு மட்டும் என்னைத் தொடந்து வருகிறது. பின் கண்கள் மூடிக்கொள்ள அவள் நிலையில் இரயில் ஓய்வுக்கு வருகிறது.
அம்மாவின் நினைவுத் துண்டு போல” புகையிரத மேடை, பேர்ப்பலகை, மின்விளக்கு மரங்கள், கம்பங்கள் எல்லாம் சி.சி என்னும் தத்துவார்த்தவாதியின் புறம்பற்றிய தாக்கங்கள். இவை எல்லாமும் அவரைவிட்டு தலைதெறிக்க ஓடிவிடுகின்றன. நிலவுத் தண்டு, அம்மா வின் நினைவுத்துண்டு எல்லாம் தொன்மங்களின் அருட்டலின் அக விழிப்பு. இரயிலின் சார்பு நிலை அமைதியைப் போல் அக விழிப்பும் அமைதியைப் பெறு கிறது. இங்கு அக விழிப்புக் கொண்ட தத்துவார்த்தக் கவிதையாக சி.சிவசேகரம் அவர்களின் "நிலவு” என்னும் இக் கவிதையை அடையாளப்படுத்தலாம்.
攀 拳 கிறிக்க նվ ங்கள் கிறிக்கற் யுததங்கள களம் ?? தொடரும்! துடுப்பில் பட்ட வாக்குகளாய் குறியற்ற தேடலுடன் விலைவாசிக் கச்சுகள் செஞ்சறிகள் வீழும் a எட்டாமல் உயரப்பறக்கும்! ဂ္ယီဖွ%2:42၇၅% အံဓါ சிக்ஸ்ராய் எல்லைகளைத் தாண்டி! ' இல்லாத வருமான ஓவர்கள் மட்டும் றிகள்! மட்டுப் படுத்தப் பட்டிருக்கும்! ஆனாலும் நாங்கள் கைகொட்டி மகிழ்ந்திருப்போம்
எல்லோரும் போல நாங்கள் கைகொட்டி மகிழ்ந்திருப்போம் மதுவுண்ட மந்திகளாய்!
மதுவுண்ட மந்திகளாய்! விக்கெட்டுகள் திக் கெட்டிலும்
. o காணமற் போகும் காதுககுள புகுந்திருந்து ஸ்கோர் போட்டுக்குத்
வானொலி புழுகுரைக்கும், வீதித் தொலைக் காட்சிகள் விழிகளை வாங்கி நிற்கும் ஆயுதக் களஞ்சியம் போல் பட்டாசுக் கடைகள் திறந்திருக்கும்! விளம்பரங்களால் நாங்கள் கைகொட்டி மகிழ்ந்திருப்போம் மதுவுண்ட மந்திகளாய்!
- மாவைவரோதயன் -
13
தெரியாமல் வீதியோரமும் கிடக்கும்! அடுத்த வசந்தம் வரும்வரை ஆடியாக வேண்டும் இடர் மறந்து நாங்கள் கைகொட்டி மகிழ்ந்திருப்போம் மதுவுண்ட மந்திகளாய்!

Page 8
த. கலாமணி
சந்திப்பு: தி.ஞானசேகரன்
> சிறுகதை, நாடகம், விமர்சனம் முதலான துறைகளில் ஈடுபாடு உள்ளவர்.
> யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வியியற்துறை விரிவுரையாளராகப் பணி யாற்றியவர். தற்போது அவுஸ்திரேலியாவில் கலாநிதிப் பட்டப்படிப்பு மேற்கொள்கிறார்.
> நாட்கள் கணங்கள் நமது வாழ்க்கைகள் - இவரது சிறுகதைத்தொகுதி
தி.ஞா: நீங்கள் நாடகத்துறையில், குறிப்பாக இசை நாடகத்தறையில் அதிக ஈடுபாடுகாட்டி வருகிறீர்கள். இதில் உங்களுக்கு ஆர்வம் ஏற்படக்காரணம் என்ன?
த.க: வாழ்வியற் சூழல் கலைச்சூழலாக அமைந்ததுதான் பிரதான காரணம். எனது கிராமம் வடமராட்சியிலுள்ள அல்வாய். எனது தந்தையார் தம்பிஐயா ஓர் இசை நாடகக் கலைஞர்; அண்ணாவியார். எங்களூர் ஆலடிவிநாயகர் ஆலயத்தில் ஒவ்வொரு சிவராத்திரியின்போதும் விடிய விடிய நாடகங்கள் மேடையேற்றப்படும். இன்று பிரபல இசை நாடகக் கலைஞர்கள் என்று பேசப்படும் பலரும் இந்தமேடைகளில் நடித்தவர்களே.
இவ்வாறு மேடையேற்றப்படும் நாடகங்களைத் தீர்மானிப்பது, அவற்றுக்கான பிரதிகளை எழுதுவது, நடிகர்களைத் தேர்ந்தெடுப்பது, அவர்களைப் பழக்குவது என அநேகமான பொறுப்புகள் நீண்ட காலமாக ஐயாவிடமே(எனது தந்தை) ஒப்படைக்கப்பட்டிருந்தன. எமது ஆலய நிர்வாகத்துக்கென 'பரிபாலன சபை' ஒன்றிருந்தபோதிலும் சிவராத்திரி நாடகங்களைப் பொறுத்தவரை 'தம்பிஐயா பார்த்துக்கொள்வார்’ என்ற நம்பிக்கை பரிபாலன சபைக்கு இருந்தது.
மேடையேறும் நாடகங்களில் ஒன்று சிறுவர்கள், இளைஞர்கள் சேர்ந்து நடிக்கும் நாடகமாகவும் மற்றையது பெரியவர்கள் நடிக்கும் புராண, இதிகாச நாடகமாகவும் இருக்கும். சிறுவர்களுக்கான நாடகத்தை ஒரு மனித்தியாலம் அல்லது ஒன்றரை மணித்தியாலத்துக்குரியதாக வரையறுத்துக் கொண்டு இசை நாடகமாகவே நாடகப் பிரதியை எழுதி சிவராத்திரிக்கு நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே ஐயா பழக்கத் தொடங்கிவிடுவார். இந்நாடகப் பழக்கம் இரவுகளில் எங்கள் வீட்டு முற்றத்தில் நடைபெறும். பெற்றோமாக்ஸ் வெளிச்சத்தில், பெற்றோர் பலரும் கூடியிருக்க, பிள்ளைகளுக்கு நாடகப் பழக்கம் நடைபெறும். சிவராத்திரிக்கு இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பதாக "வெள்ளுடுப்புப் போட்டு அந்நாடகம் எமது தெருவில், அல்லது எமது வீட்டுக்கும் எமது பக்கத்து வீட்டுக்கும் இடையிலுள்ள வேலியை அகற்றிப் பெறப்பட்ட நீண்ட முற்றத்தில் மேடையேறும்.
14
 

இதுவே ஒரு நாடக மேடையேற்றம் போலத்தான். ஒரு நாடகம் மேடையேறுமுன் அதன் தயாரிப்புத் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகள் இன்று எழுத்தில் பதிவுசெய்யப்படவில்லை. இன்று நாம் நாடகப் பட்டறைகள், பயிற்சிகள் குறித்து விதந்து பேசிக்கொள்கிறோம். அன்றும் பட்டறைகள் நடாத்தப்பட்டன. அவ்வை சண்முகம், பம்மல் சம்பந்த முதலியார், சகஸ்ரநாமம் முதலானோர் எழுதியவைபோல ஈழத்து இசை நாடகக்கலைஞர்களிடமிருந்து அவர்களின் அநுபவங்கள் குறித்த சுயவரலாற்றுக் குறிப்புகளை ஈழத்து நாடக உலகம் பெறமுடியாமற் போனமை துர்ப்பாக்கியமே.
சிவராத்திரிக்கெனப் பழக்கப்பட்ட நாடகங்களில் சிறுசிறு பாத்திரங்களில் நானும் நடித்தேன். பல்வேறு நாடகங்களில் நடித்த நினைவுகள் பசுமையானவை. ஆரம்பகால இவ் விதைப்புத்தான் பின்னர் இசைநாடகங்களில் நான் ஆர்வங் கொள்ளக் காரணமாக இருந்திருக்கவேண்டும்.
சிறுவர் நாடகங்களில் மாத்திரமன்றி பெரியவர்களின் நாடகங்களிலும் பல பாத்திரங்களில் எனக்கு வாய்ப்புக்கிடைத்தது. சிவராத்திரிக்கான பெரியவர்களின் நாடகத்தை ஐயா தயாரிக்கின்றபோது, நாடகத்தின் கட்டுக்கோப்புக்காக ஒருதினம் எங்கள் வீட்டில் எல்லோரும் கூடி ஒத்திகை பார்த்துக் கொள்வார்கள். கலாவிநோதன் எம்.பி.அண்ணசாமி ஆசிரியர், நடிகமணி வைரமுத்து, அரியாலை வே.ஐயாத்துரை, க.இரத்தினம், க.நற்குணம், பபூன் சின்னத்துரை என நீளும் பட்டியலிலுள்ள பல கலைஞர்களையும் எங்கள் வீட்டிலேயே பிரமிப்புடன் பார்த்து அவர்களின் பாடல்கள் சிலவற்றை முணுமுணுத்துக் கொண்டு திரிந்தமையே என்றும் இக்கலைஞர்களை மதித்து என்னுள் ஆதர்சித்துக் கொள்வதற்கு அடிப்படையாயிற்று.
தி.ஞா: முன்னைய காலத்தில் விடிய விடிய ஆடிய கூத்து இப்போது ஒரு சில மணித்தியாலத்தில் ஆடிமுடிந்துவிடுகிறது. இது நமது மரபுக் கூத்துக்களின் ஜீவனைச் சுருக்கிவிட்டதாக அமைகிறதா?
த.க: சமூக அசைவாக்கத்தின் விளைவாகவும் நகரமயமாதலின் விளைவாகவும் இன்றைய யந்திரமய வாழ்வில் விடியவிடியக் கூத்து பார்க்கும் சூழல் பலருக்கும் இல்லை. கால,தேச,வர்த்தமானங்களே எந்த ஒரு இலக்கிய வகையின் போக்கையும் நிர்மாணிப்பன என்றவகையில் கூத்துக்களை ஒரு சில மணித்தியாலத்தில் சுருக்க வேண்டியது கால நிர்ப்பந்தம்.
ஜேர்மன் நாடக ஆசிரியரான பேர்டோல்ட் பிறெக்ற் சீன இசைநாடகங்கள் குறித்துக் கொண்டிருந்த கருத்து அவை Smoking theatre என்பதுவே. ஓரிரவு முழுவதும் நடைபெற்ற நாடகங்கள் என்ற வகையிலும் அதிக பாடல்களுடன் கூடியதாக அமைந்தவகையிலும், பாயில் படுத்துக்கொண்டும் தேநீர் குடித்துக் கொண்டும் புகைபிடித்துக்கொண்டும் ரசிக்கக் கூடியதாக இருந்த எமது மரபுக் கூத்துகளும் "Smoking theatre என்ற வகையின்பாற்படுபனவே.
இவ்வாறு இறுக்கமற்றுக் காணப்பட்ட கூத்துக்களின் ஓர் இறுக்கத்தை ஏற்படுத்தவும் அவற்றைச் சுருக்கவேண்டியது அவசியமாகின்றது. ‘விடியவிடிய ஆடப்பட்ட நாடகங்களிற் புதுமையைப் புகுத்தி குறுகிய நேரத்தில் மேடையிட வேண்டிய அவசியத்தை பேராசிரியர் வித்தியானந்தன் நிகழ்த்திக் காட்டியபோது அண்ணாவிமார் பலரும் அதனை வரவேற்கவே செய்தனர். வடமோடி, தென்மோடி மரபுக் கூத்துக்களை சுருக்கியது மாத்திரமின்றி, நடிகமணி வைரமுத்துவின் 'அரிச்சந்திர மயான காண்டத்தை சுருக்கி மேடையேற்றுவதிலும் பேராசிரியர்
1S

Page 9
வித்தியானந்தன் துணைநின்றார்.
கூத்தின் விவரணத் தன்மையில் இருந்து (Narative nature) அதனை விடுவித்து, நடிப்புக்கு முதன்மை கொடுக்கும் நாடகமாக வழங்குவதிலும் கூத்தை ஒரு சில மணித்தியாலத்துள் சுருக்க வேண்டியது அவசியமாகின்றது. கூத்துப் பாடல்களை சுருதி பேதத்துடன் "கத்திப் பாடலாம் என்ற நிலையைத் தவிர்த்து சுருதி சுத்தமாக ஒரு வரையறைக்குள் அப்பாடல்களைப் பாடவேண்டியதும் பாத்திரத்தின் குணாம்ச வெளிப்பாட்டுக்கும் நடிப்புக்கும் அவசியம். ஆடலிலும் கூடப் புது மெருகு இழைக்கப்பட்டு, நடிப்புக்கு இடையூறு விளைவிக்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டியதும் கவனத்திற் கொள்ளவேண்டியதாகும். எனவே மரபுக்கூத்துக்களைச் சுருக்கி அரங்கேற்றுதல் என்பது பாடல்களின் எண்ணிக்கை யையோ அல்லது ஆட்டக் கோலங்களின் எண்ணிக்கையையோ குறைப்பதாகக் கொள்வது தவறு. அவற்றின் நாடகத்தன்மையை உயர்த்தும் வகையிலான நேரக்குறுக்கமாகவே அது அமைய வேண்டும்.
இக்குறுக்கத்துக்குக் காரணியான மற்றுமோர் அம்சம் இன்றைய கூத்துக்கள் அரங்கேறும் மேடைகளின் அமைப்பின் தன்மை மாறுபாடாகும். முன்பு வட்டக் களரியில் ஆடப்பட்ட கூத்துக்கள் இன்று முன்முகப்புக்கொண்ட புரோஸினியம் மேடைகளில் ஆடப்படுகின்றன. முன்பு வட்டக்களரியில் வெவ்வேறு திசைகளில் ஆடியது போன்று ஒரே ஆட்டத்தைத் திரும்ப ஆடவேண்டிய நிர்ப்பந்தமும் இல்லை. பாத்திர வருகை, பாத்திர அறிமுகம், நிகழ்கள விவரணம் எனவரும் ஒவ்வோர் அம்சங்களிலும் இறுக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கைகளுடனான நேரக்குறுக்கம், மரபு நாடகங்கள் நின்று நிலைத்தலுக்கு அவசியமானவையே. ஆயினும், மரபு நாடகங்களுடனான பரிச்சயமும் நுண்ணாய்வுத் திறனும் இந்நேரக் குறுக்கத்தை வினைத்திறனுடன் (Efficiently) கையாளத் துணை நிற்கும்.
தி.ஞா: நமது மரபு வழி நாடகங்களின் உள்ளடக்கத்தில், புராண, இதிகாச, சரித்திர விடயங்களைத் தவிர்த்து நமது நவீன விஷயங்களைப் புகுத்துவது
u?
த.க. நமது மரபு வழி நாடகங்களின் உள்ளடக்கத்தில் புராண, இதிகாச, சரித்திர விடயங்கள் இடம்பெற்றமைக்கு அன்றைய நாளில் மக்களுக்குப் புகட்டவல்ல படிப்பினைகளாக அவை இருந்தமையே காரணம். ஆனால் இன்று நிலைமை வேறு. மனித வாழ்வின் அவலங்கள், மன அவசங்கள், முரண்பாடுகள் பல்வேறு பரிமாணம் கொண்டவை. கலைகள் மக்களுக்காகவே என்ற வகையில், மக்கள் வாழ்வியலை, நடப்பியலை முன்வைக்கிற கலைப்படைப்புகள் இன்று அவசியம். வடிவம் வேறு கருப்பொருள் வேறு. எடுத்துக்கொண்ட கருப்பொருள் மக்கள் முன் சென்றடைவதற்குரிய வடிவத்தை அது பெற்றிருக்கின்றதா என்று சிந்திக்கும் நிலையிலேயே நமது மரபுத்தேடல் பற்றிய சிந்தனையும் அம்மரபு வடிவங்களின் வினையாற்றல் மிகு கையாளுகையும் அவசியமாகின்றது.
எமது மரபு வடிவங்களின் தூய்மை பேணுதல் என்பது ஒரு புறத்திலே முக்கியமானதுதான். ஏனெனில் இம்மரபு வடிவங்கள் பற்றிய வரலாறுகளும் ஆவணங்களும் எம்மிடம் முறையாக இல்லாத நிலையில் இவ்வடிவங்கள் பற்றிய தெளிவான பார்வையும் அவ்வடிவங்களின் சிறப்புகளினை உள்வாங்கும் தன்மையும் சிறக்க இம்மரபு வடிவங்கள் தூய்மை கெடாது பேணப்படவேண்டும்.
ஆயினும், இன்றைய காலகட்டத்தில், இப்பாரம்பரிய மரபுகள் பேணப்பட வேண்டும் என்பதற்கு, இப்பாரம்பரிய வடிவங்கள் நவீன அரங்காக்கச் செயற்பாடு
16

களில் "அரங்க மொழியாகப் பயன்படுத்தப்படவல்லன என்பதே முக்கியமான காரணமாகும். கல்விச் செயற்பாட்டின் ஒரு முக்கிய அம்சம் தெரிந்தவற்றிலிருந்து தெரியாததற்கும் எளிமையானதிலிருந்து சிக்கலானதற்கும் செல்வதாகும். இவ்வகையில் ஆட்ட மரபுக் கூறுகளும் இசைமரபுக் கூறுகளும் நவீன அரங்காக்கச் செயற்பாடுகளில் அரங்கமொழியின் வீரியத்துக்கு வலுச்சேர்ப்பன.
நமது மரபுவழி நாடகங்களின் உள்ளடக்கத்தில் தற்கால விஷயங்களைப் புகுத்துவது புதிய செய்தியல்ல. அம்பலத்தாடிகளின் கந்தன் கருணை காத்தவராயன் சிந்துநடைக் கூத்துப் பாணியிலமைந்ததாயின் அதன் உள்ளடக்கம் சாதிப்பிரச்சினை யாகும். பேராசிரியர் மெளனகுருவின் ‘சங்காரம் ஆட்ட மரபை முதன்மைப்படுத்தும் நவீன நாடகமாகும்.
அம்பலத்தாடிகளின் ஆரம்பகால உறுப்பினராக விளங்கிய இளைய பத்மநாதன், பேர்ட்டொல்ட் பிறெக்ற்றின் "The exception and the rule என்பதை ஒரு பயணத்தின்கதை என்ற பெயரில் ஆட்டக் கூத்தாகத் தயாரித்து சென்னையில் அரங்கேற்றினார். இதே நாடகம் "சிட்னி தமிழ் அரங்கக் கலைகள் சக இலக்கியப் பவர்’ அமைப்பின் தயாரிப்பில் இளைய பத்மநாதனின் அண்ணாவியத்தில் நீண்ட பயிற்சிகளோடு சிட்னியில் இரு தடவைகளும் மெல்பேர்ணில் ஒரு தடவையும் மேடையேறியது. வட்டக்களரி அமைப்பில் இடம்பெற்ற இந்நவீன நாடகம் பலரின் பாராட்டையும் பெற்றுக்கொண்டதாயினும், நமது இன்றைய பிரச்சினையை மையப்படுத்திய ஒரு கூத்தாகத் தயாரிக்கப்பட்டிருந்தால் இன்றைய சூழலில் அது அர்த்தம் பெற்றிருக்கும்’ என உள்ளடக்கம் குறித்த கண்டனத்தையும் பலரிடம் பெற்றுக்கொண்டது.
எனவே, பாரம்பரிய மரபு வடிவங்களை அடிநாதமாகக் கொண்டு இன்றைய வாழ்வியல் நவீன நாடகமாக உருப்பெறவேண்டும் எனும் கருத்து முன்னேற்ற கரமானது.
தி.ஞா: கோலம், சொக்கரி போன்ற சிங்களக் கூத்து வடிவங்களுக்கும் நமது தமிழ் மரபுக் கூத்து வடிவங்களுக்கும் இடையில் இருக்கும் ஒற்றுமை, வேற்றுமைகளைக் கூறுங்கள்.
த.க: நாடகத்தின் தோற்றம் குறித்த ஆய்வு முயற்சிகள், சமயச் சடங்குகளிலிருந்தே நாடகம் உருவாகியது என்பதை வலியுறுத்துகின்றன. சடங்கினடியாகப் பிறந்து வளர்ந்த நாடகம், சடங்கு நிலையினின்றும் முற்றாக விடுபடாத நிலையில் இன்றும் பல இடங்களிற் காணப்படுகின்றது. அதேவேளை, சடங்கு நிலையிலிருந்து விடுபட்டு சமூகப்பின்னணி உருவாக்கத்தோடு கூடியதாக நவீன நாடகமாகவும் அது இன்று வளர்ந்திருக்கின்றது.
சிங்களக் கூத்து வடிவங்களான ‘கோலம்', 'சொக்கரி ஆகியனவும் சமயச் சடங்குகளிலிருந்து பிறந்து வளர்ந்த நாடகங்களே. இலங்கையின் கரையோரச் சிங்களவரின் கலாசாரப் பிரதிபலிப்பாக கோலமும் மலைநாட்டுச் சிங்களவரின் கலாசாரப் பிரதிபலிப்பாக சொக்கரியும் விளங்குகின்றன. வழமையாக முகமூடி அணிந்து, பாடல்களுடன் கூடியதாக ஆடப்படும் கோலம் பல்வேறு வகை நடனங்களை உள்ளடக்கியது. அரசன் ஒருவன் முன்னிலையில் ஆடப்படுவதாக கோலம் அமைந்திருப்பதும், வசந்தராசன் கொலுவில் ஆடப்படுவதாக வசந்தன் கூத்து அமைந்திருப்பதும் ஒப்புநோக்கத்தக்கன.
ஆசிய நாடக மரபுகள் ஒவ்வொன்றுக்குமே ஆடலும் பாடலும் அடிப்படையில் இன்றியமையாதனவாக இருந்து வந்திருக்கின்றன. ஆசிய நாடுகளுள் ஒன்றான
17

Page 10
இலங்கையின் நாடக மரபுகளிலும் இப்பண்பு காணப்படுதல் இயல்பே. இலங்கையின் சிங்கள மக்களிடமும் தமிழ் மக்களிடமும் சமயச் சடங்குகளினடியாகப் பிறந்த நாடக வடிவங்கள் இருந்தன. கோலம், சொக்கரி, பொம்மலாட்டம் போன்ற சிங்கள மரபு வடிவங்களும், மகுடி, பறைமேளக்கூத்து, வசந்தன் கூத்து போன்ற தமிழ் மரபு வடிவங்களும் ஆரம்பகால வடிவங்களாய் அமைந்திருந்த வேளை, தென்னிந்திய நாடக மரபுகளின் வருகையே சிங்களத்தில் நாடகம' என்ற சிங்கள நாடகத்தின் உருவாக்கத்துக்கும் தமிழில் நாட்டுக் கூத்து உருவாக்கத்துக்கும் காரணமாக இருந்திருக்கிறது என ஆய்வாளர் தெரிவிக்கின்றனர். நாடகம' என்பது சமயச் சடங்கிலிருந்து விடுபட்ட கிராமிய நாடக வடிவம். இவ்வாறு, இலங்கையின் நாடக மரபு உருவாக்கத்தில் தென்னிந்தியத் தாக்கம் இருந்துள்ளபோதிலும், உருவாகிய அம்மரபுகள் இலங்கைக்கேயுரிய தனித்துவத்தோடு சிங்கள மயப்பட்டவையாயும் இலங்கைத் தமிழ் மயப்பட்டவையாயும் உருவாக்கம் பெற்றிருப்பதும் இங்கு மனங்கொள்ளத்தக்கது.
தி.ஞா: மேலை நாட்டு நாடகங்களை மொழிபெயர்த்து மேடையேற்றும் போக்கு சில இடங்களிற் காணப்படுகின்றது. இது நமது தேசிய நாடக வளர்ச்சிக்கு உகந்ததா?
த.க: மேலைநாட்டு நாடகங்களையும் பிறமொழி நாடகங்களையும் மொழிபெயர்த்து மேடையேற்றும் போக்கு இன்று ஏற்பட்டதன்று. இது நீண்ட கால வரலாறு உடையது. வள்ளிதிருமணம், கோவலன், மணிமேகலை, சாவித்திரி முதலான புராண இதிகாச இசைநாடகங்களை எழுதியவரும் தமிழ் நாடகத் தலைமை ஆசான்’ எனப் போற்றப்பட்டவருமான சங்கரதாஸ் சுவாமிகள் அந்நாளிலேயே ஷேக்ஸ்பியரின் "ரோமியோ-ஜுலியத்’, ‘சிம்பலைன்" என்ற நாடகங்கள் உள்ளடங்கலாக எட்டு நாடகங்களை மொழிபெயர்த்துத் தமிழில் வழங்கியிருந்தார். தமிழ் நாடகத் தந்தை என அழைக்கப்பட்ட பம்மல் சம்பந்த முதலியார் ஷேக்ஸ்பியரின் ஐந்து நாடகங்களை தமிழில் பெயர்த்தெழுதி மேடையேற்றியுள்ளார். ஈழத்தில் கலையரசு சொர்ணலிங்கம் ஷேக்ஸ்பியரின் நாடகங்களின் மொழிபெயர்ப்புகளை மேடையேற்றியுள்ளார். சிங்களவர் மத்தியிலும் கூட இம்மொழிபெயர்ப்பு நாடக மரபு இடம்பெற்று வந்திருக்கின்றது. இப்போக்கு இன்றுவரை தொடர்ந்து, புலம்பெயர்ந்த நாடுகளிலும் கூட மொழிபெயர்ப்பு நாடக மேடையேற்றங்கள் நடைபெற்று வருகின்றன.
எழுபதுகளின் பிற்கூறில், இலங்கையில் அவைக்காற்றுக் கலைக்கழகம் பல மொழிபெயர்ப்பு நாடகங்களைத் தமிழில் அரங்கேற்றியுள்ளது. லண்டனில் தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகத்தினுடாக பாலேந்திரா பல மொழிபெயர்ப்பு நாடகங்களைத் தமிழில் அரங்கேற்றி வருகின்றார். வல்கிளவ் ஹவலின் பிரத்தியேகக் காட்சி, தரிசனம், ஹரோல்ட் பின்ரரின் 'போகிற வழிக்கு ஒன்று, சாமுவேல் பெக்கற்றின் திக்குத் தெரியாத காட்டில், கார்சியாலோர்க்காவின் ‘ஒரு பாலைவீடு, பேர்டோல்ட் பிறெக்ற்றின் யுகதர்மம்' என ஒரு நீண்ட பட்டியலை வழங்கக் கூடிய அளவுக்குத் தமிழ் அவைக்காற்றுக் கழகம் லண்டனிலும் பிற மேலைநாடுகளிலும் மொழிபெயர்ப்பு நாடகங்களைத் தமிழில் மேடையேற்றி வருகின்றது.
மேலைநாட்டு நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்து மேடையேற்றிய அநுபவங்கள் தமிழிலும் நாடகத்தின் இலக்கணம் குறித்த சிந்தனைக்குக்
18

களனாயின. 'நாடகத்தின் உயிர்நாடி என்பது மனித வாழ்க்கையின் பிரச்சனைகளும் மனப்போராட்டங்களுமே என்ற செய்தி உள்வாங்கப்பட்டு, நாடகத்தில் 'முரண்' (Conflict) வகிக்கும் பங்கு பற்றியும் சிந்திக்கும் சிந்தனை வளர்ச்சிப் போக்கு ஏற்பட்டது. மனித வாழ்க்கையில் இம்முரண் நிலை சர்வசாதாரணமானது.
மனிதன் அக முரண்பாடுகளைக் கொண்டவன். அவன் தன்னுள்ளும் பிறருடனும், சமூகத்துடனும் கொள்ளும'முரண்பாடுகள் காட்சிப்படுத்தப்படும்போது மனித வாழ்வின் சிக்கலைத் தெளிவுறுத்தும் உயிர்ப்புள்ள நாடகம் உருவாக்கம் பெறுகிறது. நாடகம் பற்றிய இவ்வரையறையுடன், நாடகப் பிரதியாக்கம், நடிப்புப் பயிற்சி, நாடகத் தயாரிப்பு, நாடகக் காட்சி அமைப்பு என ஒரு நாடகத்தின் பல்வேறு அம்சங்களிலும் கவனம் செலுத்தும் பண்பும் இன்றுவரை வளர்ந்து வந்திருக்கின்றது. இவையாவுமே மேலைநாட்டு நாடக மரபின் தாக்கத்தினால் விளைந்தவையே.
இதேவேளை ஈழத்து நாடக மரபில் ஏற்பட்ட தாக்கங்களையும் நோக்குவது பொருத்தமானது. ஈழத்தின் தேசிய வாதம் சிங்கள நாடக மரபுத்தேடலிலும் ஈழத்துத் தமிழ் நாடக மரபுத் தேடலிலும், விளைவித்த தாக்கங்கள் மறக்கப்படமுடியாதன. ஈழத்துத் தமிழ்த்தேசிய வாதத்தின் எழுச்சியாகவே தமிழரின் நாடக மரபை மீள்கண்டு பிடிப்பதற்கான முயற்சிகள் உத்வேகம் பெற்றன. சிங்கள நாடக மரபுத் தேடலில் முக்கியமாக ஈடுபட்டோருள் ஒருவரான பேராசிரியர் சரச்சந்திரா குறுகிய தேசியவாதத் தளைகளுக்குமப்பால் பிறமொழி நாடக மரபுகளை உன்னிப்பாகக் கவனித்து அம்மரபுகளின் சிறப்புகளை உள்வாங்கி, புதியதொரு சிங்கள நாடகமரபை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இவ்வாறாக, இவரும் பிறரும் கொண்டிருந்த சிந்தனை அகற்சியே கிராமிய மரபில் அமைந்த புதிய நாடக மரபொன்றை உருவாக்குவதற்கு கால்கோளா யிற்று.
இதேபோன்று, ஈழத்துத் தமிழ் நாடக மரபுத்தேடலுக்கும் ஈழத்துத்தமிழ் தேசியவாதமே, அடிநாதமாய் விளங்கிற்று. பேராசிரியர் சரத்சந்திராவின் "மனமே, ‘சிங்கபாகு நாடகங்கள் விளைவித்த தாக்கமே ஈழத்து மரபுவழித் தமிழ் நாடகங்கள் மீது பேராசிரியர் வித்தியானந்தன் ஆர்வம் கொள்ள அடிப்படையாயிற்று. சிங்களமரபு வழி நாடகங்களின் அரங்கை' (theatre) விட ஈழத்துத் தமிழ்க் கூத்து அரங்கு சற்றும் குறைந்ததன்று எனப் பேராசிரியர் வித்தியானந்தன் கொண்டிருந்த எண்ணமே தமிழ் மரபுவழி நாடகங்களை செம்மையாகவும் நவீனமாகவும் தயாரிக்கும் பணிக்கு அவரைத் தூண்டிற்று.
சிங்கள மரபிலும் தமிழ் மரபிலும் கூத்துக்கள் விவரண அரங்காகவே (Narative Theatre) இருந்து வந்திருக்கின்றன. "மனமே"இலும் ‘சிங்கபாகுவிலும்
முரண்நிலைகளைப் புகுத்திப் பேராசிரியர் சரத்சந்திரா நாடகமாக்கியது போன்றே பேராசிரியர் வித்திய்ானந்தனும் கூத்துக்களை நாடகமாக்க முயன்றார். பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்டு கர்ணன்போர், நொண்டி நாடகம், இராவணேசன், வாலிவதை ஆகிய பழைய கூத்துக்களை நாடகமாக்கி அளித்தமையானது தமிழரின் அரங்கு பற்றிய தேடலில் ஒரு மைல்கல் என்றே கூறலாம். இவற்றில் நடித்த மெளனகுரு (பேராசிரியர் மெளனகுரு) இன்று ஈழத்துத் தமிழ் நாடக மரபுத் தேடலுக்கு அளித்துவரும் பங்களிப்பானது பேராசிரியர் சரத்சந்திரா, பேராசிரியர் வித்தியானந்தன் போன்றோரின் நாடக விதைப்பின் அறுவடையே.
19

Page 11
கிராமிய மக்களின் கையிலிருந்த மரபுக் கூத்துக்கள் படித்தவர்க்கத்தினரிடம் கைமாறியதால் (கிராமியக் கலைஞர்கள் தம்மை 'அடக்கி வாசிக்கும் நிலை சில சந்தர்ப்பங்களில் ஏற்படுவதைத் தவிர), அவை தமிழ் நாடக, அரங்க வளர்ச்சியில் ஏற்படுத்திய நன்மைகள் பலவே. மேலைநாட்டுச் சிந்தனைகளை, மேலைநாட்டு உத்திகளை, மேலைநாட்டு நடைமுறைகளைத் தமிழ் நாடகங்களில் பரிசீலித்துப் பார்க்கும் தன்மையும், புதிய தயாரிப்பு முயற்சிகளும் படித்தவர்கத் தினராலேயே சாதகமாயின. இன்று பல திறமையான நெறியாளர்கள் உருவாகி யிருக்கிறார்கள். தமிழ்நாடக அரங்கு இவர்களினால் விசாலிப்படைந்து வருகின்றது.
மெலைநாட்டுச் சிந்தனைகளை உள்வாங்கக் கூடிய ஆங்கில மொழி ஆற்றலும் வாய்ப்புகளும் கிடைக்கப்பெற்ற இந்நாடக நெறியாளர்கள் நமது பாரம்பரிய அரங்குகளில் எத்துணைக் கவனம் செலுத்துகின்றார்கள் என்பதே தமிழின் புதிய நாடக மரபுத் தேடலுக்கு வளம் சேர்க்கும். பாரம்பரிய அரங்குகளில் தரிசனம் பெறல் இவர்கள் கடன். எமது புதிய நாடக மரபுத்தேடலின் அடிநாதம் எமது பாரம்பரிய அரங்கின் தேட்டங்களே என்பதை இவர்கள் விளங்கிக் கொள்ளவேண்டும். நிதானிப்பு, அகலித்த பார்வை, புதுப்பொருள் காணவிழையும் அவா, பிரயோகத்திறனாற்றல், யாவும் இன்றைய எமது நெறியாளர்களின் தமிழ் நாடக மரபுத் தேடல்’ எனும் பணியை நெறிப்படுத்துவனவே.
தி.ஞா: நமது மரபுக் கூத்துக்களில் தாளக்கட்டுக்கள் அதிகம். அதற்கேற்ப ஆடல், பாடல்களுடன் நடிக்கக்கூடிய கூத்துக் கலைஞர்களைத் தேடிப்பிடிப்பதில் சிரமம் இருக்கின்றதா?
த.க: இலங்கையில் வளர்ச்சியடைந்த மரபுவழிக் கூத்துக்கள் பொதுவாக வடமோடி, தென்மோடி எனும் இரு பெரும் பிரிவுகளுள் அடங்குபவை. வடமோடி, தென்மோடி என்ற இந்த வகைப் பிரிப்புக்கு, அவை ஒவ்வொன்றுக்குமான ஆட்ட முறைகளுக்கிடையேயும் அவ்வாட்டங்களுக்குப் பயன்படுத்தும் தாளங்களுக் கிடையேயும் காணப்படும் வேறுபாடுகளே காரணம். வடமோடியில் பாதம்முழுவதும் நிலத்திற் பதியவும், தென்மோடியில் உள்ளங்காலைத்தவிர்ந்த பாதத்தின் முன்பகுதியும் பின்பகுதியும் மாத்திரம் பதியவும் ஆடவேண்டுமென வடமோடி, தென்மோடி நாடகங்களுக்கிடையேயான அடிப்படை வேறுபாட்டை விளக்குவர். வடமோடி, தென்மோடி நாடகங்களுக்கென வெவ்வேறாக அமைந்த அடிப்படைத் தாளங்களின் மீது கட்டியெழுப்பப்படும் தாளக்கட்டுக்களும் வெவ்வேறானவை. வெவ்வேறான ஆட்டங்களுக்குரிய தாளங்களைச் சொற்கோப்பினாலே தொடுத்து அப்பத வரிசைகளை வாயினாற் சொல்வதனால் உருவாகும் இத்தாளக்கட்டுக்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறாக அமையும்.
வடமோடி நாடகத்தில் பாத்திரத்தின் தன்மைக்கேற்பவும் நிகழ்ச்சியின் சந்தர்ப்பத்திற்கேற்பவும் தாளக்கட்டுக்கள் மாறுபடும். அது மட்டுமன்றி, பாத்திரத்தின் சமூக அந்தஸ்த்திற்கேற்பவும் அ.'றினைப்பொருள் வேறுபாட்டுக்கமையவும் தேர், குதிரை, யானை வாகனாதி வேறுபாடுகளுக்கமையவும் கூட இத்தாளக் கட்டுக்கள் வடமோடியில் வேறுபடும். இவ்வாறாக, பல்வேறு விதமான தாளக்கட்டுக்கள் வடமோடியில் பயன்படுத்தப்பட, தென்மோடியில் ஆண்களுக்குரியவை, பெண்களுக் குரியவை, வீரர்களுக்குரியவை என்ற வகைப்பிரிப்புக்கேற்ப சிறுசிறு வேறுபாடு களுடன் கூடிய, ஆனால் அடிப்படையில் அதிகம் வேறுபடாத தாளக்கட்டுக்களே பயன்படுத்தப்படுகின்றன என பேராசிரியர் மெளனகுரு குறிப்பிடுகின்றார். ஆயினும், வடமோடி நாடகங்களில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான தாளக்கட்டுக்
20

களை விடவும் தென்மோடி நாடகத் தாளக்கட்டுக்கள் நுணுக்கமானவை என்ற பேராசிரியர் வித்தியானந்தனின் கூற்றும் இங்கு கவனத்திற்குரியது.
இவ்வாறாக, தாளக்கட்டுக்களிலேயே பல்வேறு நுணுக்கங்கள் இடம்பெறு கின்ற அதேவேளை, இத்தாளங்களுக்கேற்ப இடம்பெறும் ஆட்டக்கோலங்களும் பல்வேறு வகையானவை. குறிப்பாக, ஒவ்வொரு பாத்திரத்தின் வரவின்போதும், குறித்த பாடலுக்கான ஆட்ட முடிவின்போதும் காட்சி மாறலின்போதும் ஆடப்படும் ஆட்டக்கோலங்கள் பல்வேறு வகையானவை. இவை மாத்திரமன்றிக் குறித்தவொரு தாளக்கட்டில் ஆடும்போது முன்வருதல், பின்போதல், திரும்புதல், சுழலுதல், பாய்தல் என வரும் ஒவ்வொரு அசைவுக் கோலங்களிற்கேற்பவும் மாறுபடும் ஆட்டக்கோலங்களையும், நாலடி போடுதல், எட்டுப்போடுதல், வீசாணம் போடுதல் என அமையும் ஆட்டக்கோலங்களையும் உள்ளடக்கியனவாகவே நமது மரபுக் கூத்துக்கள் வளம்நிறைந்து காணப்பட்டன. இத்தகு நுணுக்கங்களுடனும் வேறுபாடு களுடனும் கூடிய ஆட்டமரபுக் கூறுகளை உள்ளடக்கிய நமது மரபுக்கூத்துகளுக் கான கலைஞர்களைத் இனங்காண்பது சிரமமான விடயமாகவே உள்ளது.
தி ஞா: நவீன தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தும் வாய்ப்பு இன்று உண்டு. இச்சாதனங்கள் பாரம்பரிய கலைமரபு பேணல் என்ற நிலைக்கு எத்தகைய பங்களிப்பினை ஆற்றும் என நீங்கள் கருதுகிறீர்கள்.
த.க: கலை மரபு பேனல்’ என்பது எமது பாரம்பரிய கலைகளை அடுத்த சந்ததியினர்க்கு கையளிப்பதுடன் சம்பந்தப்பட்டது. இசை, நடனம், இலக்கியம் ஆகியன செந்நெறிக் கலைகளாக (Classical Arts) தமிழரிடையே வளர்த்தெடுக்கப் பட்டு வந்துள்ளமையால் இக்கலைகளுக்கான வரலாறுகளும் ஆவணப்பதிவுகளும் முறையாகப் பேணப்பட்டு வந்துள்ளன. மாறாக, நாடகத்துக்குத் தமிழரிடையே சமூக அங்கீகாரம் கிடைக்காத காரணத்தினாலும் கூத்து ஒரு குறித்த மக்கட் கூட்டத்தினர்க்கே உரியதானதெனக் கருதப்பட்டமையாலும் தமிழ் நாடகக் கலை முறையாக ஆவணப்படுத்தப் படாததோடு, அதன் விளைவாக தமிழர்க்கென ஒரு நாடக வரலாறே இல்லை என்ற பரிதாப நிலையும் ஏற்பட்டது.
ஆவணப்படுத்தல் இரு நிலைகளை உள்ளடக்கியது. தரவுகள் சேகரித்தல், அவற்றைப் பதிவுசெய்தல் என்ற இவ்விரு நிலைகளும் ஒரு முறையியலையும் சார்ந்து நிற்பன. எனவே இம்முறையியல் பயிற்சிபெறல் கலைமரபுத் தேடலில் ஈடுபட்டுள்ளோருக்கு அவசியமான ஒன்று. இம்முறையியல் குறித்த புலமையோடு, தரவுகள் சேகரிப்பதற்கான திட்டங்கள் வகுத்துக்கொண்டு நவீன தொழில் நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தும்போதே ஆவணப்படுத்தல் பொருளுறும்.
இன்றைய நவீன தகவற் தொழில் நுட்ப யுகத்தில் ஆவணப்பதிவுக்கென நவீன தொழில் நுட்பசாதனங்களைப் பயன்படுத்தும் வாய்ப்புக்கள் அதிகம். இச்சாதனங்களின் துணையுடன் பாரம்பரிய நாடகக் கலைஞர்களின் ஆற்றல் வெளிப்பாடுகளைப் பதிவு செய்தலும் புதிய சந்ததியினரிடத்து இப்பதிவுகளையும் அவற்றின் பேறான புத்தாக்க முயற்சிகளையும் கையளித்தலும், பழைமையிலும் புதுமையிலும் இளஞ்சந்ததியினர்க்குப் பயிற்சியளித்தலும், இவை யாவற்றுக்குமான கல்விசார் செயற்பாடுகளை வகுத்தலும் என விரிந்து கொண்டு செல்லும் செயற்பாடுகள் பல எதிர்காலவியல் நோக்கில் திட்டமிடப்பட்டுச் செயற்படுத்தப்படு கின்றபோதே 'கலை மரபு பேணல் விளக்கம் பெறும்.
0 0 ()
21

Page 12
یحیی
t தமிழில்: ༤༽ சி.சிவசேகரம்)
சிகரங்கட்கும் மேலாக, வானம் தீப்பற்றி எரிகிறது. அந்தத் தங்கத் திரைக்கும் அப்பால் நீ முற்றிலும் அமைதியுடனும் சாந்தத்துடனும் இருக்கிறாய் என் ஆவலின் இன்னுயிரே, அதன் பிறப்பிடமே நானோ கடல்கடந்து இங்கே, தடைசெய்யப்பட்டவன் போல.
ஆ, உன் முழு வனப்பினதும் ஒரு சிறுதோற்றம் என் கண்ணில் விழுமா! இருண்ட இந்நாட்களில், நான் இனிதாகவும் மென்மையாகவுமன்றி உனக்கு ஏதேனி மொழிவேனா, என் தாய்நாடே!
○ ஒTொன் Z"பான்சிச் (1879 - 1949) - ஸ்லொவீனியக் கவிஞர் )
மனம் தகித்துக் கொண்டிருக்கிறது
எம்.ஸாலிஹற் அஸிம்
ரமழானே புத்தளம் ಫೆ. மலுக்காய் பிணமாக்கிப் போட்டிருக்கிறது
நத வணை வறுமையின் வீச்சில் இத்துப்போய்க் கிடக்கிறது வாழ்க்கை கூறாகிக் ஈமான் கிடக்கிறது. இளைத்துப் போனதால் இப்போதும் W ஈனம் மொய்த்ததா ar ஒரு பிறைப்புவில்
6T0 மொய்த்ததால் நோண்பே 對 ஈமான் இளைத்ததா பிறந்து இருக்கிறாய் உனக்காக ஆனால என் ஆத்மா எனககுளஏன ஏங்கிய பொழுதுகள் அந்த இனிமைகள் எனக்கு மாத்திரம் ஞாபகமாய் இருக்கிறது சவக்குளியாய் கிடக்கிறது அப்பொழுதுகளிலெல்லாம் தீ வைக்கும் துன்ப ஈக்கில்கள் பந்தம் போல துளை போட்டிருந்தாலும் நீவைக்கும் இந்தப் உன் அருள் மழையில் பாதச் சுவடாவது அவ்வடுக்கள் என் பாவங்களை ஆறிப்போகும். m கொளுத்தி விட்டு ஆனந்த இறக்கை முளைத்து வறுமை புதைதது சந்தோஷ வானத்தை ஒரு உரசிப் பார்க்கும் வாழககை தருவாயா என் ஆவல் சிட்டு ஏக்கத் தணலில்
06
கொடுமைகளின் வீக்கம் கிக்கக் கொண்டிருக்கி என் உணர்வுகளை ಬ್ಲೈ? டிருககிறது
22
 
 
 
 
 
 

2001 அரச இலக்கிய விருதுக்குரிய நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டமை தொடர்பான தமிழ் இலக்கியக் குழுவின் அறிக்கை
2000 ஆம் ஆண்டில் பிரசுரிக்கப்பட்ட இலங்கை எழுத்தாளர்களின் சிறந்த தமிழ் நூல்களுக்குரிய அரச இலக்கிய விருதுபற்றிய விபரங்கள் அறிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து பரிசுபெறாத சில எழுத்தாளர்கள் புனைபெயரிலும் வேறு பெயர்களிலும் பரிசுத்தேர்வு பற்றியும், நடுவர்கள் பற்றியும், இலக்கியக்குழு உறுப்பினர்கள் பற்றியும் சில பத்திரிகைகளில் உண்மைக்குப் புறம்பான, அவதூ றான முறையில் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களது பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கூறவேண்டிய அவசியம் இல்லை எனினும், பரிசுத்தேர்வு நடைமுறைபற்றி எழுத்தாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெளிவுபடுத்துவதற்காகத் தமிழ் இலக்கியக் குழு இவ்வறிக்கையை வெளியிடு கின்றது.
2000 ஆம் ஆண்டு வெளிவந்த நூல்களே பரிசுத்தேர்வுக்கு ஏற்றுக்கொள்ளப் பட்டன. தேர்வு விதிகளுக்குப் புறம்பான நூல்கள் நிராகரிக்கப்பட்டு, தேர்வுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட நூல்கள் வழக்கம்போல் அவ்வத் துறையில் தேர்ச்சியும் அனுபவமும் உடைய மும்மூன்று நடுவர்களுக்கு அனுப்பப்பட்டன. நடுவர்களின் அறிக்கைகள் நன்கு பரிசீலிக்கப்பட்ட பின்னர் அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே பரிசுக்குரிய நூல்கள் இலக்கியக் குழுவினால் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. இம்முறை நடுவர்களாகப் பணியாற்றியவர்களின் அறிவிலும் அனுபவத்திலும் நடுநிலைமையிலும் இலக்கியக் குழுவுக்குப் பூரண நம்பிக்கை உண்டு.
தேர்வுக்கு அனுப்பப்படும் எல்லா நூல்களும் பரிசு பெறுவதில்லை. சிறந்த நூல்களே தெரிவு செய்யப்படுகின்றன. ஒருதுறையில் தரமான நூல்கள் எவையும் இல்லையென்றால் அத்துறைக்குப் பரிசு வழங்குவதில்லை என்பது இலக்குழுவின் தீர்மானம். தரமற்ற நூலுக்குப் பரிசு வழங்கிப் பரிசின் தரத்தைக் குறைக்கக்கூடாது என்பதில் சுயகெளரவமுள்ள எழுத்தாளர்கள் உடன்படுவார்கள் என்றே இலக்கியக்குழு நம்புகிறது. தரத்தைத் தீர்மானிப்பது நூலாசிரியரா, நடுவர்களா என்பதே பிரச்சினை. தன்நூல் மிகச் சிறந்தது என்று கருதும் உரிமை நூலாசிரியருக்கு உண்டு. நடுவர்களும் அவ்வாறே கருதவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கக்கூடாது. தன்நூலை விருதுக்குத் தேர்ந்தெடுக்காமைக்காக நடுவர் களைப் பழிதூற்றுவது எழுத்தாளருக்குக் கெளரவமாகாது. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது என்பது எல்லாப் போட்டிகளுக்கும் உரிய ஒரு பெர்து விதியாகும்.
நமது எழுத்தாளர்கள் சிலர் பரிசு பெறுவதற்காக எத்தகைய முறைகேடான வழிமுறைகளைக் கையாள்வதற்கும் தயங்குவதில்லை என்பது கவலைக்குரியது. இத்தகைய முறைகேடுகள் பல கடந்த ஆண்டுகளிலும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
இம்முறையும் முகப்புப்பக்கத்தில் முதற்பதிப்பு 2000 என்று அச்சிடப்பட்ட ஒரு சிரேஷ்ட எழுத்தாளரின் பதினொரு சிறுகதைகளைக் கொண்ட தொகுதியில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ஐந்து சிறுகதைகள் வெளியீட்டுத் திகதியுடன் இடம்பெற்றிருந்தன. 2001 ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட சிறுகதைகள் 2000ஆம் ஆண்டு வெளிவந்த நூலில் இடம் பெற்ற மர்மம் அந்த எழுத்தாளருக்கே வெளிச்சம்.
23

Page 13
இத்தகைய மோசடிகளையும், எழுத்துத் திருட்டுக்களையும் பத்திரிகை யாளர்கள் அம்பலப்படுத்துவார்களாயின் அது எமது இலக்கிய வளர்ச்சிக்கு உபகாரமாகும். பொறுப்புணர்வுள்ள பத்திரிகையாளர்கள் வயிற்றெரிச்சல் இல்லா தவர்களாகவும், உண்மைகளைத்தேடி வெளியிடுபவர்களாகவும், தகவல்களைத் திரட்டுமிடத்து நம்பத் தகுந்தவர்களையும் தக்க மூலாதாரங்களையும் நாடித் தமது பத்திரிகையின் நம்பகத்தன்மையைப் பேண விழைபவர்களாகவுமே இருப்பர் என்று கருதுகிறோம்.
பரிசுத் தேர்வு விபரங்கள் முறைப்படி அறிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் அறியாமையின் விளைவானதே. சிங்கள, தமிழ், ஆங்கில நூல்களுக் குரிய பரிசு விபரங்கள் ஒரே தினத்தில் அவ்வவ் குழுத் தலைவர்களினால் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் அறிவிக்கப்பட்டன. தொலைக்காட்சியிலும், வானொலியிலும் அவை அறிவிக்கப்பட்டன. தமிழ் பத்திரிகைகள் சில உரிய காலத்தில் இதனை வெளியிடவில்லை என்பதற்காகக் குழுவைக் குற்றம் சாட்டுவது முறையல்ல.
இலக்கியக் குழுச் செயலாளர் கொச்சையாகத் தமிழ் பேசும் ஒரு சிங்களப் பெண் என்றும் அநாகரிகமான இனத் துவேச நோக்கில் குற்றஞ்சாட்டப்படுகின்றது. திருமதி அசோகா ஜெயலத் தன்கு தமிழ் பேசத்தெரிந்தவர். அவரது பணிகளை யிட்டு இலக்கியக் குழு மகிழ்ச்சியும் திருப்தியும் அடைகிறது. 1970 களில் கே.ஜி. அமரதாச என்ற தமிழ் அறிந்த சிங்களவரே தமிழ் இலக்கியக்குழுவுக்கும் செயலாள ராக வெகு சிறப்பாகப் பணியாற்றினார் என்பதையும் நாம் இங்கு நினைவூட்ட விரும்புகின்றோம்.
பரிசு பெறாத எழுத்தாளர் சிலரின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை தமிழ் இலக்கியக் குழு மீண்டும் வலியுறுத்திக் கூறுகின்றது.
பேராசிரியர் சிதில்லைநாதன் தலைவர், தமிழ் இலக்கியக்குழு இலங்கைக் கலைக் கழகம்.
* நெற்றிக் கணி” விமர்சனம் எழுத்தாளர்களே,
நெற்றிக் கண் பகுதியில் உங்களது நூல் விமர்சனம் இடம்பெற வேண்டுமெனில், நூலின் இரு பிரதிகளை அனுப்பி வையுங்கள். ஒரு பிரதி மட்டுமே அனுப்பினால், நூல் பற்றிய அறிமுகக் குறிப்பு புதிய நூலகம் பகுதியில் இடம்பெறும்.
-ஆசிரியர்.
محے ܢܪ
சந்தா விபரம்
அன்பார்ந்த வாசகர்களே.
ஞானம் சஞ்சிகை பற்றிய தனிப்பிரதி - ரூபா 15/- கருத்துக்களைக்களையும் சஞ்சிகை வருடச்சந்தா * ரூபா 180/- பின் தரத்தை rேth !டுத்த உங்க (தபாற்செலவு உட்பட) ளது ஆலோசனைகளையும் அறி சந்தா காசோலை மூலமாகவோ மனி யத்தாருங் கள். யோடர் மூலமாகவோ அனுப்பலாம்.
24

நெற்றிக்கண்
நூல் - அசையும் படிமங்கள் எழுதியவர் :- கே.எஸ்.சிவகுமாரன்
சினிமா இன்று பலரையும் கவரும் ஒரு சாதனமாகிவிட்டது. முன்னர் வீட்டுக்கு வெளியில் இருந்த சினிமா, இப்போது வீட்டுக்குள்ளும் வந்துவிட்டது (சினிமாப் பாடல்கள் என்றோ வீட்டுக் குள் வந்துவிட்டன). சினிமாவைப்பற்றிப் புரிந்து கொள்வதற்கு ஏராளமான நூல்கள் ஆங்கிலத்தில் வெளியாகிய வண்ணம் உள்ளன. ஆனால், தமிழில் மிகக்குறைவான முயற்சிகளே செய்யப் பட்டுள்ளன.
தமிழில் சினிமாவின் கலையம்சம், தொழில்நுட்பம் தொடர்பான தரமான சில நூல்களை அம்ஷன்குமார், எம்.சிவ குமார், க.கோவிந்தன் போன்றோர் எழுதியுள்ளனர். தமிழ்ச்சினிமா பற்றிய சில தரமான நூல்களை அறந்தை நாராயணன், யமுனா ராஜேந்திரன், சு.தியடோர் பாஸ்கரன், சு.விஸ்வநாதன் முதலியோர் படைத்துள்ளனர். சினிமாக் கலைஞர் பற்றியும், திரைப்படப் பாடல் களின் விமர்சனங்களாகவும் சில நூல் கள் வெளிவந்துள்ளன. சலனம் என்ற தரமான சினிமாச் சஞ்சிகையும் வெளி வந்து நின்றுவிட்டது. இலங்கையில் முரளிதரன், கே.எஸ். சிவகுமாரன், தம்பி ஐயா தேவதாஸ், சசி கிருஷ்ணமூர்த்தி, செ.யோகநாதன், உமா வரதராசன், அ.யேசுராசா, எஸ்.ரஞ்சகுமார், அந்தனி ஜீவா போன்றோருடன், பல்கலைக்கழக மட்டத்தில் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, சிதில்லைநாதன், எம்.ஏ.நு.மான், துரை. மனோகரன் முதலானோரும் சினிமா தொடர்பாக எழுதி வந்துள்ளனர். கா.சிவத்தம்பி, தம்பிஐயா தேவதாஸ் ஆகியோரின் சினிமா தொடர்பான நூல்
, fard ~ Arro. ~~~~ F یہی۔ یہ سنسر " یہ خٹ
இலங்கையிற்
سی گہحیہ “ جسبر ۳۹ حۂ = ۔سیسر و سیب களும் toவளிவநதுள்ளன.
பிறந்தவர்களான சிலோன் விஜயேந் திரன் திரைப்படப்பாடகர்கள் பற்றிய
நக்கீரன்) மர்சனம் ----
நூல் ஒன்றையும், கணேசன் மேகநாதன் மொழிபெயர்ப்பு நூல் ஒன்றையும் எழுதி யுள்ளனர்.
இத்தகைய பின்னணியில் கே.எஸ். சிவகுமாரனின் அசையும் படிமங்கள் (2001) என்ற நூல் அண்மையில் வெளி வந்துள்ளது. சினிமா பற்றிய வரலாற்று அம்சங்கள், கலைத்துவம், தொழில் நுட்பம், விமர்சனம் தொடர்பான பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய அவரது பத்தி எழுத்துக்கள் நூல் வடிவம் பெற் றுள்ளன.
சினிமா பற்றிப் பலருக்குத் தெரிந் தவையும், தெரியாதவையுமான பல விடயங்களைச் சிவகுமாரனின் இந்நூல் தருகின்றது. நூலாசிரியர் சினிமா பற்றிய தமது கருத்துக்களையும், அநுபவங்க ளையும் கலந்து எழுதியிருப்பது நூலுக் குத் தனிப்பொலிவை அளிக்கின்றது. சிவகுமாரனின் பத்தி எழுத்துக்களிற் காணப்படும் இரு முக்கிய குறைகளான தகவல்களை மாத்திரம் எழுதிச் செல் வது, தம்மைப்பற்றிய சில விடயங்கள் எங்கே வாசகருக்குத் தெரிந்துவிடாமல் இருந்துவிடப்போகின்றனவோ என்ற அங்கலாய்ப்பில் வில்லங்கமாகத் தம் மைப் பற்றிக் கூறுவது ஆகியவை இந் நூலிற் காணப்படவில்லை என்பது திருப் தியைத் தருகின்றது.
நல்லநூல் என்று பாராட்டப்பட வேண்டிய அதேவேளையில் இந்நூலிற் சில குறைகளும் உள்ளன. சாதாரண மாகத் தமிழிலேயே சொல்லக்கூடிய சொற்களைத் தேவையின்றி ஆங்கிலத் தில் தரவேண்டிய அவசியம் என்ன? நூலின் பல பக்கங்களில் இத்தகைய அநாவசிய முயற்சி இடம்பெற்றுள்ளது. உதாரணமாக ஒரு வசனத்தைக் காட்ட b. “Eastman gầ5ã Film Roll ệgử பயணி படுத் தி Cinema Camera QF Ló 6oo Lo' Lul Thomas A Edison
6RGH! Ĉ. Tra cyfryn carn
25

Page 14
உதவினார்" (ப.94). சிவகுமாரனின் தமிழுணர்வு பற்றிச் சந்தேகிப்பதற்கு இடமில்லை. ஆனால் தேவையற்ற முறையில் ஆங்கிலத்தையும், தமிழையும் கலந்து எழுதுவது நூலுக்குப் பெருமை யைத் தரமாட்டாது. இந்நூலிற் சேர்க்கப் பட்டுள்ள ‘கதைக்கலை என்ற பகுதி, நூலின் நோக்கத்திற்குப் பொருத்த மானது அல்ல.
சில குறைகள் இருந்தபோதிலும், கே.எஸ்.சிவகுமாரனின் அசையும் படிமங் கள் வாசகள் உள்ளங்களை அசைக்கும் என நம்பலாம். நூல் :- கிராமத்துக் கனவுகள் எழுதியவர் :- எம்.எச்.எம்.ஷம்ஸ்
இலங்கையின் நவீன இலக்கியத் துறையிற் புறக்கணிக்கப்பட முடியாத பிரதேசங்களுள் ஒன்றாகத் தென் னிலங்கை விளங்குகின்றது. இப்பிரதேச வாழ்வியற் பின்னணிகளை எழுத்தில் வெளிக்கொணர்ந்துவரும் பெருமையும் திறமையும் அப்பிரதேச முஸ்லிம் எழுத் தாளர்களுடையது. தென்னிலங்கைத் தமிழ் இலக்கியத்துறையை வியப்புடன் பார்க்கவைக்கும் எழுத்தாளர்களுள் ஒருவர், எம்.எச்.எம்.ஷம்ஸ்.
அவரது கிராமத்துக் கனவுகள் (1999) என்னும் நாவல் தென்னிலங்கை முஸ்லிம் கிராமம் ஒன்றின் மூன்று தலை முறை வரலாற்றை இலக்கிய ரீதியாக பதிவு செய்துள்ளது. தென்னிலங்கை முஸ்லிம் கிராமமொன்று எப்படியிருக்கும் என்பதை முஸ்லிம் அல்லாதவர்களும் புரிந்துகொள்ளும் முறையில் இந்நாவல் அமைந்துள்ளது. வாழ்ந்து கெட்ட குடும்பம் ஒன்றைச் சுற்றிக் கதையைப் படரவிட்டுள்ள நாவலாசிரியர், அதனூ
மக்களது வாழ்வியல் அம்சங்களைப் புலப்படுத்தியுள்ளார். நாவலின் கதைப் போக்கினுடாகத் தொன்மவியல் அம்சங் களையும் பயன்படுத்தியிருப்பது, ஈழத்துத் தமிழ் நாவல் துறையில் ஒரு புதிய காணப்படுகிறது. நாவ லின் கதைப்போக்கு எவ்வகைச் செயற் கைத் தன்மைகளும் இன்றிப் பின்னப் பட்டுள்ளது. முஸ்லிம் கிராமப் பின்னணி
SLASqST 0C LALALA AAAAA L S SL AeM LL LLLLLLLAL0S AAALSCC S SLALA LAM S MAqM LLLLLL LAe AT LLL L S S S AAALA LLLAALLLLLAM AeALL LA S0
* -- i --A-F
71 mi i trh de) or it الرقم سيلا
26
தத்ரூபமாக நாவலிற் பதிவு செய்யப் பட்டுள்ளது. மக்களின் இயல்புகள் நம்பிக்கைகள், செயற்பாடுகள் யதார்த் தத்திற்குப் புறம்போகாத நிலையிற் காட்டப்பட்டுள்ளன. இந்நாவலின் கிரா மிய மண்வாசனை வாசகர்களின் மனங் களைத் துளைக்கவல்லதாக விளங்கு கிறது.
பாத்திரப் படைப்பிற் போதிய கவனம் செலுத்தப்பட்டுள்ள ஈழத்துத் தமிழ் நாவல்களில் ஒன்றாகத் கிராமத் துக் கனவுகள் விளங்குகின்றது. சகல பாத்திரங்களும் இயல்பாக வளர்க்கப் பட்டுள்ளன. எந்தப் பாத்திரத்திலும் செயற்கைத் தன்மை ஊடுருவவில்லை. தென்னிலங்கை முஸ்லிம்களின் பேச்சு வழக்கு பாத்திர உரையாடல்களில் அப்படியே பேணப்பட்டுள்ளது. ஆனால் சில சிங்களப் பாத்திரங்களையும் முஸ்லிம் பேச்சுவழக்கையே பயன்படுத்த நாவலாசிரியர் அனுமதித்திருப்பது பொருத்தமானதாக இல்லை.
தரமான நாவல்கள் வேண்டும் என விரும்பும் விமர்சகர்களதும், வாசகள் களதும் கனவை நனவாக்கும் ஒரு முயற்சியாக கிராமத்துக் கனவுகள் விளங்குகிறது. இந்நாவல் அடிப்படை வாதிகளின் முணுமுணுப்புகளையும், முற்போக்குவாதிகளின் பாராட்டையும் ஒரே சமயத்திற் பெறவல்லது. ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றில் கிராமத்துக் கனவுகள் நாவலுக்கு ஒரு நிரந்தர இடம் உண்டு. எதிர்காலத்திலும் நாவலாசிரியர் எம்.எச்.எம் ஷம்ஸிடமிருந்து இத்தகைய தரமான நாவல்களை எதிர்பார்ப்பதற்கு வாசகர்களுக்கும், விமர்சகர்களுக்கும் உரிமை உண்டு. நூல் - கமுகஞ்சோலை எழுதியவர் :- முல்லைமணி
வன்னிப் பிரதேச வரலாற்று அம்சங்களையும், வாழ்வியலையும் படைப்புகளாக்கும் பணியில் ஈடுபட்ட இலக்கியவாதிகளுள் ஒருவர், முல்லை tᎠ6Ꭶü அவிர்து படைப்புகளில் வன்னிப் பிரதேச மண் வாசனை இயல்பாகவே கமழும். இவ் வகையில் அமைந்த ஒரு நாவலாகவே
/fera i rra" . Si rr. r -xx), . ! A, Y (5Glidity Luwu ibu L' y.

அவரது கமுகஞ்சோலை(2001) விளங்கு கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலகட்டத்தில் வன்னிப்பிர தேசம் சார்ந்த தண்ணிரூற்றுப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றே இந்நாவ லின் பொருளாக அமைந்துள்ளது. தண் னிரூற்று உயர்வர்க்கத்தோரின் வயல் களுக்கு நீர் பாச்சுவதற்கு இடையூறாக இருந்த பாமர மக்களின் கமுகஞ் சோலையை உயர்வர்க்கத்தோரின் ஆதரவுடன் ஆங்கில அரச அதிகாரிகள் தறிக்க முயல்வதும், அதற்கு எதிரான மக்களின் எதிர்ப்பும், அடக்குமுறையைக் கையாண்டு ஆங்கில அரச அதிகாரிகள் கமுகஞ்சோலையை அழிப்பதும் நாவ லின் முக்கிய சம்பவங்களாக விளங்கு கின்றன. இவ்விடயங்களைத் தெரிவிக் கும் ‘கமுகஞ்சண்டை என்ற நாட்டுப் புறக் கதைப்பாடலை அடிப்படையாகக் கொண்டு இந்நாவலை ஆக்கியுள்ளார் முல்லைமணி.
நாவலாசிரியர் தமது கதைப் பொருளுக்குப் பக்கபலமாகக் கற்பனை யிற் கதைச்சம்பவங்களைச் சேர்த்திருக் கிறார். துவைனம் துரை, ஹோட்டன் துரை, வன்னியசிங்கர், தாமோதரி, காசி உடையார், கோணன் விதானை முதலான வரலாற்றுப் பாத்திரங்களோடு, பல கற்பனைப் பாத்திரங்களும் நாவலில் உலவுகின்றன. வரலாற்றுச் சம்பவத்தை மையமாக வைத்துக் கற்பனை செய்யப் பட்ட கதைப்போக்கு, வன்னிப் பிரதேச வாழ்வியலோடு ஒட்டிச் செல்கிறது. நூலில் ஆங்காங்கே காணப்படும் எழுத் துப்பிழைகளையும், அச்சுப்பிழைகளை யும் தவிர்த்திருக்கலாம். பாத்திர உரை யாடல்களில் பொருத்தமான முறையிற் பேச்சுவழக்கைக் கையாண்டிருக்கும் நாவலாசிரியர் சில இடங்களில் தம்மை யும் அறியாமல் சில பாத்திரங்களைச் செந்தமிழ் பேசச் செய்துள்ளார். வன்னிப் பிரதேச வாழ்வியலை வரலாற்றுப் பகைப்புலத்தில் சித்திரிக்கமுயலும் குறிப் பிடத்தக்க ஒரு நாவல், கமுகஞ்சோலை.
27
நூல் - ஆண்மரம் எழுதியவர் - ஓட்டமாவடி அறபாத்
இளம் இலக்கியவாதியான ஓட்ட மாவடி அறபாத், ஈழத்து இலக்கியத் துறையில் தம்மைக் கவிஞராகவும், சிறுகதை எழுத்தாளராகவும் இனங் காட்டி வந்துள்ளார். ஏற்கனவே அவரது ‘எரிநெருப்பிலிருந்து (1996) என்ற கவிதைத் தொகுதியும், ‘நினைந்தழுதல் (1998) என்ற சிறுகதைத் தொகுதியும் வெளிவந்துள்ளன. அவரது இரண்டா வது சிறுகதைத் தொகுதியாக ஆண்மரம் (2001) பிரசுரமாகியுள்ளது.
இத்தொகுதியிற் பன்னிரண்டு கதைகள் உள்ளன. பெரும்பாலான கதைகள் இலங்கையின் அரசியல் விடயங்களை அடிப்படையாகக் கொண் டவையாக விளங்குகின்றன. அரசியல் விடயங்களை திறமையாக உருவகப் படுத்தும் ஒருசிலரில் அறபாத்தும் ஒருவர். இத்தொகுதியில் உள்ள ஆண் மரம் என்ற கதையில் குறிப்பிட்ட ஓர் அரசியல் கட்சியே முக்கிய பாத்திரமாக உருவகிக் கப்பட்டுள்ளது. ஆனால் அவை சிறுகதை களாக அமையுமாறு பார்த்துக் கொள் வது எழுத்தாளரின் பொறுப்பு. இந்தத் தொகுதியில் சிறுகதைகள் என்று பொறுக்கி எடுத்தால் மூன்று படைப்பு களே சிறுகதைகளாகத் தேறும். முகங் கள், ரெயில்வே ஸ்டேசன், தனிமை ஆகிய அந்த மூன்று படைப்புகளும் அறபாத்தின் எழுத்தாற்றலை நன்கு இனங்காட்டும் சிறந்த சிறுகதைகளாக விளங்குகின்றன. மற்றவை கதைகள் LD (603LD.
இந்நூலில் எழுத்தாளர் தம் பங்குக்குவிட்ட எழுத்துப் பிழைகளும், அச்சாளர்விட்ட அச்சுப்பிழைகளும் பல இடங்களில் வஞ்சகமின்றி மலிந்து கிடக் கின்றன. பல சிறுகதைகளில் உரையா டல்களை இனங்காட்ட இரட்டை மேற் கோள்குறி பயன்படுத்தப்படவில்லை. “புறுாப் பார்த்தவருக்கு நூலாசிரியர் எதற்காக நன்றி தெரிவித்தார் என்பது புரியவில்லை. இந்த நூலை அழகுறச் செயப் பவை, 9| 60 t. ii U L ( p if மேற்குறிப்பிட்ட முன்று சிறுகதைகளுமே. ஒட்டமாவடி அறபாத்தின் வளர்ச்சியை மேலும் எதிர்பார்க்கிறோம்.

Page 15
N ཤག་ལྔ་ 莲_红 AZO دس ”م۔ { گے۔ جو **G*ў Бuкtѣт.
‘ஞானம்' இதழ் 18ல் கலாநிதி துரை மனோகரனின் எழுதத் தூண்டும் எண்ணங்கள் பகுதியில் "தமிழ்த் தினப்போட்டிகளில். நாடகம்"என்ற குறிப்பில், 1990களில் தமிழ்த் தினப்போட்டிகளில் இடம்பெற்ற சமூக நாடகமொன்று மாகாண மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் முதலாம் இடத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அரசியல்வாதி ஒருவர் அந்நாடகத்துக்கு முதல்பரிசு வழங்குவதற்கு தமது கடுமை யான எதிர்ப்பினைத் தெரிவித்தார் என்கிறார் கலாநிதி.
ஆனால், இதனோடு சம்பந்தப்பட்ட மேலும் சில விடயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தமிழ்த்தினவிழாவில் தேசிய மட்டத்தில் தங்கப் பதக்கத்திற்காகத் தெரிவு செய்யப்பட்ட நாடகம் "வெளிச்சம் வெளியே இல்லை" என்ற நாடகம். அட்டன் பிரதேச பாடசாலையின் நாடகம். இதனை மாகாண மட்டத்தில் நடுவர்கள் தெரிவு செய்தார்கள். மாகாண மட்டத்தில் நாடகம் நடைபெற்றபொழுது வருகை தந்திருந்த அமைச்சருக்கு நாடகக் காட்சிகள் ஆத்திரமூட்டியது. இதனைத் தேசிய மட்டத்திற்குப் போகாமல் தடைசெய்யப் பார்த்தார்கள. ஆனால் இந்த நாடகம் நல்லிதயம் படைத்த கண்டி மாவட்ட கல்வி அதிகாரியாகவிருந்த அல்ஹாஜ் முஸ்லிம் அவர்கள் முயற்சியால் வெளிச்சம் நாடகம் தேசிய மட்டத்தில் பங்குபற்றியது.
தேசிய மட்டத்தில் பங்குபற்றிய பொழுது நாடகத்துறையைச் சார்ந்த எழுத்தாளர் மானா மக்கீன், வானொலியைச் சார்ந்த மயில்வாகனம் சர்வானந்தா, நான் உட்பட நாடகத்திற்கு நடுவர்களாகப் பணியாற்றினோம். பின்னர் நாங்கள் மூவரும் முதலாம் இடத்திற்கு இந்நாடகத்தைத் தெரிவு செய்தோம் - முதல் மூன்று இடங்களைப் பெற்ற நாடகங்களை அறிவித்தார்கள்.
மறுநாள் இரண்டாம் மூன்றாம் இடம்பெற்ற நிகழ்ச்சிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. அதற்கு மறுநாள் அகில இலங்கைரீதியில் தங்கப்பதக்கம் பெற்ற நிகழ்ச்சிகளுக்கு பரிசளிப்பு. ஆனால் விழாவில் கலந்து கொண்ட மலையகத்தைச் சேர்ந்த அமைச்சரின் அறிவுறுத்தலால் நாடகத்திற்கு மாத்திரம் தங்கப்பதக்கம் வழங்கப்படவில்லை. இதனை எதிர்த்து நான் மாத்திரமே கல்வி அமைச்சராக இருந்த கெளரவ ரணில விக்கிரமசிங்காவுக்கு அவசரத் தந்தி கொடுத்தேன். அமைச்சருக்கு பயந்து தமிழ்ப் பத்திரிகைகள் செய்திகள் கூட வெளியிடவில்லை. "யுக்திய” என்ற சிங்கள வாரஇதழ் முதல் பக்கத்தில் செய்தியை வெளியிட்டது. அதன் பின்னர் என்னை எதற்கும் நடுவராக அழைக்கக்கூடாது என அறிவுறுத்தப் பட்டது. பின்னர், மத்திய மாகாண கல்வி அமைச்சராக திரு கதிரேசன் இருந்த காலத்தில் அந்த நாடகத்திற்குரிய தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. அதன்பிறகு தமிழ்த் தினவிழாவிற்கு அழைப்பு வந்தாலும் போவதை நான் தவிர்த்தக்கொண்டேன்.
- அந்தனிஜீவா ஞானம் நவம்பர் இதழ் பதினெட்டின் பின்னட்டைப் பகுதியில் மனித மாண்புகளுடன் நான் நேசித்த எழுத்தாளர் வாகரைவாணனின் "தேசமும் தேர்தலும்" கவிதை பார்த்தேன். என் மனவெளிப்பாடாக இதை எழுதுகிறேன்.
28
 
 

தேசமும் நானும்
என்னைப் போல். அரசு அம்மணமாக
நின்று கொண்டிருக்கிறது.
என் வாழ்வைப்போல்
நிருவாகமும் நிட்சயமற்று சரிந்து கொண்டிருக்கிறது.
என் எதிர்காலம் போல். மக்களும் அபாயத்தைப் புரிந்து கொள்ளவில்லை.
“தேசமும் தேர்தலும்” கவிதையில். விபச்சாரிகளுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் எனக் கேட்ட.
வாகரை வாணனும்
அநியாயத்தைப் புரிந்து கொள்ளவில்லை.
தேசம் அழிய சீமான்கள் காரணமெனில்?
“விபச்சாரிகள்” 6) irra) tra) tarih tarih کنسرت میر میدهد تا ۰۰ میکردی - சீமான்கள் தானே காரணம்.
இவர்களை மீறி தேசமும் நானும் எப்படித் தப்பி பிழைப்பது?
வாகரை வாணன் சொல்வது போல் அற்பர்கள் இவர்கள். சொற்ப நேரத்தில் சொன்னதையே மாற்றுகிறார்கள்.
கோடிக்கணக்கில் பணத்தை வீணாகக் கொட்டுவது தேர்தலுக்கு மட்டுமா..?
இவர்களை மீறி
தேசமும் நானும் எப்படிப் தப்பிப் பிழைப்பது?
மேலும் ஞானம் ஒக்டோபர் மாத இதழ் பதினேழில் “வாசகர் பேசுகிறார்” பகுதியில் “உண்மையைச் சொல்வதானால் வானத்துக்குக் கீழே உள்ள யாருமே அதி உத்தமர்கள் அல்ல!” என்று தன்னையும் சேர்த்து ஒப்புக்கொண்ட வாகரைவாணன் விபச்சாரிகளை எப்படி விமர்சிக்கலாம்?
இந்த உலகத்தில் புத்தி ஜீவிகள் அறிவை விற்கிறாங்க
விபச்சாரிகள் தம்
சூழ்நிலைக்கு உடலை விற்கிறாங்க.
இது அவரவர் புண்ணியம். இதை வாகரை வாணன் சற்றுப் புரிந்து
கொள்வாரா?
தில்லை, மட்டக்களப்பு
ஞானம் நவம்பர் இதழில் வெளிவந்த “புதிய வெள்ளிப் பாதசரம்' பற்றி.
இந்தக் கதையின் கருவிலும் புனைவிலும் காணப்பட்ட புதுமை மனதைக் கவர்ந்தது. இப்பொழுது எங்களது வாழ்வின் யதார்த்தம் இந்தக் கதையில்
SMS MSMSAASS SqSeiAAq ee qM S SS SS S L0S L S ASqq uAAS SS SAAL AqAM S Sq S MM AAAAL kL LS S L LL LrrrTL aa LaLrLrTLLa00L LL
می بیبیسی بی سی شاگ : -یس جی محو * تو سبسبب کی عیسوچ سمج
5பாகிறது! இலங்கையாகேசன்து
வெள்ளிப்பாதசரத்தை இழையவைத்து இந்தக் கதையை வெகு சமத்காரமாகப்
புனைந்திருக்கிறார், ஆசிரியர்.
அந்த நடுவயது மணமக்கள் முதலிரவில் என்ன பேசிக் கொள்வார்கள் என்பது பற்றிக் கூறும் இடம் வெகு கச்சிதமான கலைத்துவம் மிக்க சித்திரிப்பு சேகருடைய பேச்சில் தொனித்த நையாண்டியை உள்ளூரச் சிரித்து ரசித்தேன்.
அது சரி;
இலங்கையர் கோனுடைய செல்லையர் இப்போதும் அதே மிடுக்குடன்
தான் காணப்படுகிறார் மனுஷன்!
வ.இராசையா, கொழும்பு

Page 16
妾念
மகாவலியே மாநதியே
எழுதியவர் : மலரன்பன் முதற்பதிப்பு: 05-07-2001 வெளியீடு : மலையக வெளியீட்டகம்
த.பெ.எண் 32, கண்டி. இலங்கையில் மலரன்பனின் மெல்
லிசைப் பாடல்களின் தொகுதியொன்று வெளிவருவது மகிழ்ச்சிக்குரியது. முழுக்க முழுக்க தரமான மெல்லிசைப் பாடல்கள் தொகுதியொன்று இலங்கை யில் நூல்வடிவில் வெளிவருவது இதுவே முதல் தடவை. கலாநிதி துரை.மனோகரன்
முன்னுரையில்.
ஒரு நாடும் மூன்று நண்பர்களும் எழுதியவர் : மொழிவரதன் முதற்பதிப்பு: செப்டம்பர் 2001 வெளியீடு : சாரல்வெளியீட்டகம், 7,பல்கூட்டுச்சந்தை, ரொசிட்டா கடை வீதி, கொட்டக்கலை.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நான் பயின்ற காலத்தில் பெற்ற சுய அனுபவங்களின் கலவையாகி வந்ததே ஒரு நாடும் மூன்று நண்பர்களும். என் உள்ளத்தில் ஆழ்ந்து உறைந்து போன புகமை நினைவுகள் அவைகள்.
மொழிவரதன் என்னுரையில்.
தூவானம் எழுதியவர் : அ.யேசுராசா முதற்பதிப்பு: ஜூன் 2001 வெளியீடு : மூன்றாவது மனிதன்,
37/14 வெக்சோல் ஒழுங்கை, கொழும்பு. அ.யேசுராசா சமூக அக்கறைமிக்க படைப்பாளி. தேடல் மிக்க வாசிப்பாளர்
30
பத்திரிகை ஆசிரியர். படைப்பு, வாசிப்பு செயற்பாடுகளின் ஊடே ஒரு விமர்சன மனோநிலை கண்ணோட்டத்தில் இயங்கு பவர். நமது ஈழத்து சூழலில் 1989-1990 காலப்பகுதியின் பதிவுகளை நம்முன் வைத்துள்ளார். எம்.பெளசர் பதிப்புரையில்.
புதிய சங்கமம் எழுதியவர்கள்: சை.கிங்ஸ்லிகோமஸ்
மா.சந்திரலேகா இக்கவிஞர்களின் சிந்தனைகள் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. மனித உணர்வுகளை உளமார பகிர்ந்து கொண்டு எழுதிய கவிதைகளில் பரிண மிக்கும் சுவையும் ஆழமும் பாராட்டுக் குரியன. எம்.மாயழகு வாழ்த்துரையில்.
முகடு (கலை, இலக்கிய சஞ்சிகை) நவம்பர் - டிசம்பர் 2001 ஆசிரியர் : சு.முரளிதரன்
- முகடு, 7,ரொசிட்ட பல் கூட்டுச்சந்தை, கொட்டக்கலை.
suub தேடல் 1 தெளிவு 1 ஆசிரியர் பெனி யே.ச. நாங்கள் சிந்தனை வாசகர் வட்ட வெளியீடு
- சுயம், 14/11 வித்தியார்த்த மாவத்தை, கண்டி.
மலைக்குரல் - 14வது இதழ் அட்டன் சமூக நிறுவன வெளியீடு
- மலைக்குரல் 30 ஸ்டேசன், அட்டன்.
உரிமை - ஜூன் 2001 கண்டி சமூக அபிவிருத்தி நிறுவக வெளியீடு உரிமை 16 முல்கம்பளை வீதி, கண்டி.
கலைமுத்து - 3 (கலை இலக்கிய, சமூக இதழ்) (ஜுலை - செப்த்டம்பர் 2001) ஆசிரியர்: முஹம்மட் நயீம் 163/10, மிகிந்து மாவத்தை, தெகிவளை.
 
 

ஆயுதம் இலவசம் !
- கவிஞர் ஏ.இக்பால் -
fzlrae 避 ༈ སྡེ་ சிக்கிரட் குடிப்பதைச் இயேசுவுககு @@ (DC-6)
சீக்கிரத்தில் பரப்பிவிட அன்பின் இயேசுவே, எத்தனித்த காலம் நான் நலம். நீர் நலமா?
உம் முகவரி தெரிந்திருந்தால் - இதை சந்தை கூடுமிடம் அஞ்சலில் சேர்த்திருப்பேன். கோவில் திருவிழாக்கள் முகவரி தெரியாததால் கந்தூரி வைபவங்கள் அச்சில் சேர்த்திருக்கிறேன். சனங் கூடுமிடங்க ளெல்லாம் இப்பொழுது இவ்வுலகம்
கூத்தாடிகள் சகிதம் வாகனத்திலிருந்த வண்ணம் சிக்கிரட்டை வீசி எறிந்து சென்றனர்!
இனவெறி ஒருபுறமும் நிறவெறி மறுபுறமுமென பிளவுபட்டுக் கிடக்கிறது. எங்கு பார்த்தாலும்
கூடிநின்ற மக்கள் அகதி முகாம்கள் எடுத்தனர் குடித்தனர் அவலக்குரல்கள்! புகையில் இன்பம் குருதி ஓடைகள்! இலயித்தனர்!
நான் சொல்லுவது என்னவென்றால் இன்னும் இன்னும் இது பெருகி நீர் மீண்டும் இவ்வுலகம் வரவேண்டும்
மடிவதையும் இவ்வுலகை மீட்கவேண்டும். மனிதனதை ஊதுவதால் மறந்தும்
மடிவதையும் காண்கிறோம்! சமாதானம் தரவந்தேன் இது மூன்றாம் உலகில் என்று வெளியிலே சொல்லிவிடாதீர்! புகைப்பிடிக்கும் பழக்கம் அன்றுதான் ஆணிகள்
புகழ் பெற்ற மாதிரியாம்! இன்றோ ஆயுதங்கள்
இப்போது ஆகாயக் கப்பல்கள் இருகைகளில் காயம் கண்ட ஆயுதங்கள் சொரிகின்ற 変n 8 விந்தை தொடங்கியதை உடல முழுதும ஒடடை போடாதீர்
வியக்கின்றோம்! எங்கள் நிலை கூறிவிட்டேன்.
கட்டாயம் நீர் வரவேண்டும்
இனும் சில நாள் இத்துடன் முடிக்கிறேன்.
எல்லோர் கைகளிலும் மற்றவை நேரில்.
இலவச ஆயுதங்கள் c......
வந்து சேரும்! முக்கியமானதை மறந்துவிட்டேன்
அதன்பின் பழக்கமாகி வரும்போது
: வாங்குவதில் ஒ அடையாள அட்டையை மறந்துவிடாதீர்
அலைவோமா? அழிவோமா? - செல்வி ஜெ.நிரோசா -
இது மூன்றாம் உலகில் முக்கியமா யாகிவிடும்! \ வவுனியா கல்வியியல் கல்லூரி لم

Page 17
விசர்நாயும் போ
விசர்நாயால் கடிபுணர்டு. நீர் வெறுத்து நாயைப்போல் புரண்டு, குரைத்து, காணர்போரைப் போய்க் கடித்து துளிநீரை நக்கிக் குடித்து உயி மனிதனினைப் பார்த்தேன்! மனம் பயத்தில் உறைந்தது; நா எனுஞ்சொல்லைக் கேட்க எனக்
விடுதலை பெற்று வீட்டுக்கு வ பொடியனினைப் போப்ப்பார்த் பேர்ந்து கிழிபட்ட நகங்கள், உடலெங்கும் சிகரெட் பாதி உடைபட்ட பற்கள், குரலுடைந்த பேச்சு, நிலை குலைந்தேனர்! “உள்வகிபியை மறைத்துரைத்தா குதிக்கால், மலவாசல் குறித்துவ கொதிக்கும் இரும்புக்கோல் கொஞ்சிய கதுை சொன்னார். தலையோ கிறுகிறுத்துக் குருதி
விசர்நாய்க்கும் போருக்கும் வித்தியாசம் அதிகமில்லை! விசர்நாய் மனிதனினைச் சடல விசப்போரோ மனிதத்துை சடர்பாக் மாற்றுகுது

LF) 75 (J. Hil J D D - . . . s ரும 5 s
C ை
ل= - ܡ =
مجيا نم
J O ". . . ர்விட்ட
ப்
குேள் நடுங்கியது!
ந்து. அயற் தேனர்!
டினர் நக்கல்கள், ܠܠ
ܙܘܝܚܐ ܕ "
இன். ாரம் இங்கெல்லாம்
உறைந்ததென்னுள்!
ܡܐܢ̈ܐ மாக வீழ்த்தியது!