கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அ ஆ இ 1992.06

Page 1
JUNI 1992
 


Page 2
அவர்கள் என்னைத்தேடிவந்த போது .
முதலில் அவர்கள் கம்யூனிக்டுக்களைத் தேடி வந்தார்கள்
நான் அதற்கு ஒன்றும் சொல்லவில்லை
ஏனென்றால் நான் ஒரு கம்யூனிள்டு இல்லை
பின்னர் அவர்கள் யூதர்களைப் பிடித்தார்கள்
அதை நான் எதிர்க்கவில்லை
ஏனென்றால் நான் ஒரு யூதன் இல்லை
அதன்பின் தொழிலாளர்களைத் தேடி வந்தார்
நான் என் வாயைத் திறக்கவில்லை ஏனென்றால் நான் ஒரு தொழிலாளியோ,
தொழிற்சங்கத்தில் அங்கத்துவம் வகிப்பவனோ இல்லை
பின்னர் அவர்கள் கத்தோலிக்கரைப் பிடித்தனர்
நான் மெளனமாக இருந்தேன் ஏனெனில் நான் ஒரு புரொட்டள்தாந்துக்கான்
கடைசியாக அவர்கள் என்னைத்தேடி வந்தார்கள்
அப்போது எனக்காகப் போராட யாருமே இருக்கவில்லை.
ஜேர்மனியில் பாசிசத்துக்கு எதிராக குரல் எழுப்பிய வண.நீமுல்லர்(Niemoeler)எழுதியது. டச்சுமொழிமூலத்திலிருந்து தமிழில்: பத்ம மனோகரன்

காலாண்டு இதழ்
சுவடு 9
யூன் 1992
வெளியீடு இலங்கைக் கலாச்சாரக் நெதர்லாந்து
":R. "Pirr firrII rI aÉry:T Iyycʼr 27-4 sysi Street 'I' is a 7.
Witጋwሃሒፓሆ! 'F: [ i [](ቭኅ!'] "Jբ: (12լ) եւ 73 13:3
முகவரி:
A A A IE Post blI5 85326 3508 A H Utrecht Nederland
எந்த மாமுனிவனுக்கு வாக்குக் கொடுத்ததால் எங்கள் ஈழபூமியின் வேந்தர்கள் இன்று. இத்தனை மயானங்கள் காக்கிறார்கள்?
"சாதி முனிவன்" சகமனிதனைக் கேட்டான் "கலாச்சார முனிவன்" சுய அறிவினைக் கேட்டான் "இனவாத முனிவன்" உடமைகள் கேட்டபின் "உட்பகை முனிவன்"
மீதி
அவல வாழ்வையும் கேட்டான்.
இன்னமும் , எந்த மாமுனிவனுக்கு வாக்குக் கொடுத்ததால் எங்கள் ஈழ பூமியின் வேந்தர்கள் இன்று. இத்தனை மயானங்கள் காக்கிறார்கள்
.இராறஜின்குமார் நன்றி. இருபதாம் நூற்றாண்டின் ஈழத்துப் புறநானூறு

Page 3
மனித நாகரீகம் வளர்ந்து ஒவ்வொருவரும் மற்றவரை அவர்களது தனித்துவங்களை மதிக்கவும் மனிதசமூகத்தின் இறமையைப் பேணவும் அவர்களுக்கான உரிமையையும், கடமைகளையும் ஏற்றுக்கொள்ளவும் பழகி விட்டார்களா? இப்படித்தான் பலர் சொல்லிக் கொள்கிறார்கள். இது உண்மைதானா? இந்தப் பூமிப்பந்தின் நாகரீகம் மிண்டும் க ற் கா ல த் தி ற் கு போ ய் வி ட் ட தோ எ ன் றே எண்ணத்தோன்றுகின்றது. இத்தனை ஆண்டுகளாக கடந்து வந்த மனித நாகரீகத்தின் பண்பாடும் பயன்பாடும் எதைச் சாதித்துத்துள்ளது என்றே எம்மைக் கேட்க வைக்கிறது.
மதம், தத்துவங்கள், அறிவியல், சமூகவிஞ்ஞானம். என்று வளர்ந்து மேலும் வளரவும் முனைப்புப் பெறுகின்ற இவைகள் எல்லாமே இதுவரை காலமும் எதைத்தந்துள்ளன? நாடுகளுக்கும், கண்டங்களுக்கும் இடையே வேறுபாடு பேணுவதையும் வெவ்வேறு இனக்குழுக்களுக்குமிடையே வேற்றுமைப் பட்டு இனத்துவேசத்தைக் காட்டுவதும், சக மனிதனைச் சுரண்டி தனியொருவன் வாழ்வதையும், ஒருவருக்கொருவர் எதிரிகளாகி அழிக்க முற்படுவதும், மதங்களுக்கு மதம் குரோதம் கொண்டவையாகவும், ஆண்-பெண் வாழ்வின் சகல பக்கங்களிலும் வேறுபாடு காட்டுவதையும், அப்பாவி மனித உயிர்களைத் தமது அதிகாரங்களுக்காக பலி கொள்வதையும், சிறை, சித்திரவதை, கொலை என்ற பல்வேறு பக்கங்களையும் எமக்குத் தந்துகொண்டிருக்கின்றன.
மனிதத்தைச் சாகடித்து வலம் வருகின்ற இவர்களுக்கு பல முகங்கள் இவர்களது இந்த முகங்களும் இவர்கள் பலதை உருவாக்கிப் பெயர் குட்டி உலாவவிட்டிருக்கும் வேடிக்கையைப் பார்த்து அவர்களே வெட்கப்பட வேண்டிய காலம் இன்று.

மனித நாகரீக வெற்றியும், சுரண்டலற்ற அமைப்பும் என்று மார்தட்டிய சோவியத்தும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் இவைசார்ந்த ஏனைய நாடுகளும் உள்ளே இந்தப் பொய்மைக்கு எதிராகப் புகைந்து இன்று எரி கொண்டும், அதேமக்கள் கேவலத்துக்குரிய இனவாதிகளாகியும், புதிய நாசிகளாகவும் மாறியுள்ளார்களே ஏன்? இந்த இரும்புத் திரைகளுக்குள் இருந்தது என்ன?
மனித நாகரீகம் தம் நாடுகளில்தான் செழித்து வளர்ந்து தம் நாடுகளில்தான் மனிதாபிமானம், மனித உரிமைகள், நீதி முறமைகள் எல்லாம் பேணப்படுவதாக பசுத்தோல் போர்த்து அமெரிக் கா வும் , மேற்கு ஐரோப்பா வும் உலகில் சண்டித்தனக்காரனாகி ஏனைய நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்துவதும் , தமது நாகரீகம் கறுப்பு வெள்ளை இனத்துவேசத்துக்கு நீர் பாச்சுவதையும் நாம் அனுபவத்தில் பார்க்கிறோம்.
இப்படி உலகின் மூலை முடுக்கெங்கும் மனிதத்தைப் புதைத்துவிட்டு அந்தப் புதைக்குழிக்கு மேல் நின்று கொண்டே ‘வேதம் ஒதுகின்ற சாத்தான்கள் பலரை நிஜ வாழ்க்கையில் நாம் கண்டுகொண்டிருக்கிறோம். சொந்த மக்களையே கொன்று குவித்தும், கொடும் சிறையில் அடைத்து சித்திரவதை செய்தும், அதற்கு ‘விடுதலை’ என்று பெயரும் இட்டு நாடகமாடும் அரசுகளும், விடுதலைக் குழுக்களும் எமக்கு பெற்றுத் தந்தவை என்ன? எம்மை மீண்டும் கற்காலத்திற்கு போக வைத்ததுதான?.
அரச கொலைகளுக்குச் சமமாகவும் அதன் அதிகாரத் திமிருக்குச் சமமாகவும் ‘விடுதலை பெற்றுத் தருபவர்களும் தமது சொந்த மக்கள் மீதே நடந்து கொண்டால் அதை என்னென்பது? ஆளுக்கொரு சிறைக்கூடம். அடைத்து வைக்கப்படுபவர்கள் அரசியல் எதிரிகள். ஆனால் அதிகம் பேர் அப்பாவிகள் அல்லது சொந்த நாட்டை நேசித்தவர்கள். அவர்கள் செய்த குற்றங்கள் இவைதானோ?

Page 4
இவர்கள் மீது என்ன குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது? இவர்களுக்குரிய நீதி விசாரணைகள் எப்போது எங்கு எந்த நீதி மன்றத் தி ல் நடை பெறும் ? சட்டங்கள் எ ப் படி பாதுகாக்கப்படுகிறது? அவர்களுக்கு மனித உரிமைகள் உண்டா? இரண்டு மூன்று வருடங்களாக பெற்றோரோ மனைவி பிள்ளைகளோ அவர்களைச் சந்திக்கத் தடையாக இருப்பது எது? மிகக்கொடிய சித்திரவதை செய்யப் பட்டிருக்கலாம் அல்லது அதனால் கொல்லப் பட்டிருக்கலாம் என்று பலர் எண்ணக் காரணங்கள் உண்டல்லவா. இவ்வகைச் சிறைக்கூடங்கள் நிகழ் காலத்தில் எந்த நாட்டில் உள்ளன?
மனிதநேயமும், இரக்கமும், கொல்லா மையும், காருண்யமும் வேண்டும் என்றும். பழிதீர்த்தலும், குரோதமும், அப்பாவிகளைத்தண்டிதலும் கேடானவை என்று போதித்து எம்மை எல்லாம் நம்ப வைத்த ஈழ தேசத்திலா? இன்று இந்தத் தேசத்திற்கு இவற்றை எல்லாம் போதித்தவர்கள் யார்? மீண்டும் கற்காலத்திற்குப் போங்கள் என்று எம்மைச் சபித்தவர்கள் யார்? நாங்கள் சபிக் கப்பட்டவர்களா அல்லது பலராலும் புசிக்கப்பட்டவர்களா?
ஆசிரியகுழு.
Felix Minthalia
நூல்களும் ஒரு கட்டிலும்
@ው சுவரொட்டியுமே உள்ளன ஒரு போர்விமானம் வந்து கட்டிலையும் கடைசிப் புத்தகத்தையும் தூக்கி சுவரொட்டியிற் தன் சுவடு பதித்தது.
தமிழில்: மணி
6

பிரசுரம்: 3
முடிவு எப்போது?
டிசம்பர் மாதத்தின் இறுதி வாரம்.
வழமை போல தனது புத்தகக் கடையில்
வீட்டுக்குத் தேவையான மரக்கறிச் சாமான்களை வாங்கிவந்து வைத்துவிட்டு வியாபாரத்திற்காக உட்காந்திருந்தார் அவ ர். சில நிமிடங்களில் ஆயுதமேந்திய புலி
வீரர்கள் சைக்கிளில் வந்து குதித்தனர்.
யாழ்பாணம் ல்ரான்லி வீதியிலிருந்த அந்தப் பழையகடைத் தொகுதியிலிருந்த இந்தப் பிரபல்யமான - ஆனால் முக்கி
முனகி இயங்கிக்கொண்டிருந்த - புத்த கக் கடைக்குள் அவர்கள் நுழைந்தனர்.
புத்தகங்களை விற்பது ஒரு பணம் தரும் suTuTLDTa இருந்த முன்னைநாள் இல்லை இது இன்று.
படிக்க நேரமில்லாமல்
யாழ்ப்பாணம் புத்தகங்களைப் தமது அன்றாட அழவேண்டியது குறிப்பிட்ட
ஜீவனோபாயத்திற்காக ஒருபுறம். இந்தக் கடையின் புத்தகங்களைப் கருதப் للعلالا والا படுமோ மறுபுறமாக புத்தகங்கள் விலை போகாத ஒரு புத்தகக்
தேசத்துரோகமாகக் என்ற அச்சம்
கடையாக அது மாறிவிட்டது.
அந்தப்புத்தகக்கடைதான் "யாழ்புக்கவுல்".
நுழைந்தவர்கள் புத்தகங்கள் படிப்பதற்கே என்பதை அறியாதவர்கள் என்பதால் விடையம் வேறு என்பது வியாபாரத்திற்கா உட்காந்திருந்த அவருக்குத் தெரிந் திருந்தது.
சீன உழவாளி என்றும் இன்னோரன்ன
வேறு அடை மொழிகளாலும் கப்பட்ட, கட்சியின்
கொம்யூனிஸ்ட்
அழைக் முன்னை நாள் கொம்யூனிஸ்ட் உறுதி குலையாத 905
அவர். தேசத்தினதும், மக்களினதும் விடுதலையில் ஆர்வமும், அக்கறையும் கொண்டிருந்த போதும் நடைமுறையிலுள்ள 'அரசியற்
அற்றிருந்த காரணத்தால்
ஒருவராக இருக்க என வழமைபோல அநியாய
பாதையில் நம்பிக்கை
துரோகிகளில் க்கூடுமோ”
மாக சந்தேகிக்கப்பட்டவர்.
அவர் வேறுயாருமல்ல. அறுபதுகளில் தீவிர கொம்யூனிஸ்ட்டும், Curt (JT6f பத்திரிகையின் ஆசிரியரும், எழுபதுகளிலும், ளிலும் பலராலும் மதிக்கப்பட்ட ளிகளில் ஒருவருமான தான் அவர்.
முன்னாள் எண்பதுக அறிவா
மணியண்ணை
கருத்தாளரையும் பண்பாளரான
மாற்றுக் மதிக்கத் தெரிந்த அவர் ஒரு குழந்தைக்குத்தந்தை. ஒன்றரை வயதான பெண்குழந்தைக்குத் தகப்பனான அவர் தனது குடும்பத்தின் நிலை பற்றி எடுத்துக்கூறியது எப்போதும் போலவே புலிகளுக்குக் கேட்கவில்லை.
அரசியற்காரணங்களுக்காக
உதறி விட்டு முழுநேர கொம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ)
அறுபதுகளில்
பல்கலைக்கழகப் படிப்பை
உறுப்பினராகிய மணியண்ணை தொழி
லாள விவசாயிகளின் விடுதலைக்காக
தன்னை எந்நேரமும்
அர்பணிக்க

Page 5
தயாராக இருந்த ஒரு தேசபக்தன்.
"விசாரணை" க்காக புலிகளால்
அழைத்துச் செல்லப்பட்ட மணியண்ணை
எதிர்பார்த்தது போலவே இன்று வரை விடுவிக்கப்படவில்லை. இலங்கையின் இனவெறி அரசு, இந்திய மேலாதிக்கம்
என்பவற்றை உறுதியாக எதிர்த்த அவர் சனனாயகம், விடுதலை என்பவற்றின் அவசியம் தேசவிடுதலைக்கு ஒரு தவிர்க முடியாத முன்நிபந்தனை என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்தவர் என்பது மட்டுமே அவரது "துரோகம்"
மக்களின்
அண்மைக்கால கைதுகளான கேசவன் முதல் செல்வி, தில்லைநாதன் வரையான
கைதுகளில் இவர் பதின்மூன்றாவது நபர்.
கடத்தப்பட்டதிற்கான காரணம் தெரிவிக் கப்படவில்லை. அப்படித் தெரிவிப்பது அவசியம் என்ற அம்சம் புலிகளின்
அகராதியில் ஒரு போதும் இல்லை.
மனிதர்களின் சிந்தனைகளை நசுக்கி
தாம் நினைப்பதைப் பேசுவதே தேசபக்தி
வாசகர்களே
என்று சாதிக்கும் "விடுதலை"ப்புலிகளது போராட்டம் தேடித்தந்திருப்பது அராஜகத் திற்கும், அடக்குமுறைக்கும், மனிதப் படுகொலைகளுக்குமான சுதந்திரத் தையே.
தேசத்தின் வாயை மூடிவிட நினைக்கும்
புலிகளுக்கு ஒரு வார்த்தை; இதை மூடுவதற்கு உள்ள ஒரே வழி முழுத் தேசத்தின் மக்களையுமே கொன்று விடுவதுதான்! அதைச்செய்யுங்கள். பின் னர் மனிதர்கள் இல்லாத தேசத்தில் புலிகள் மட்டுமே உறுமும் விடுதலை வாங்கித்தந்த பெருமை உங்களுக்குச் சேரும்,
உலகெங்கும் வாழ்கின்ற தமிழ் பேசும்
மக்களே.
கேசவன்.செல்வி.தில்லை.வரிசையில்
இன்று புதிதாக மணியண்ணை. இன்னும் எத்தனை பேரோ? இந்த மனிதப்படுகொலைகளுக்கு முடிவுகட்டுவ
து எல்லோரும் அழிந்த பின்பா?
இவ்வருடத்திற்கான புதிய சந்தாக்களை அஆஇ உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறது. முடிந்துபோன தங்களின் சந்தாக்களைப் புதிப்பிக்குமாறும், புதிய சந்தாதாரர்களை அறிமுகம் செய்யுமாறும் நன்றியுடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஆசிரியகுழு.
 
 

4zITUdü Jjff -
உலகில் விஞ்ஞான துறைகளில் இருந்து அரசியல் துறைகள் வரையிலான சகல துறைகளுக்கும் "நோபல்" பரிசுகள் கிடைத்துக் கொண்டிருப்பதை பல வழிகளிலும் அறிந்து கொண்டிருக்கிறோம். பல நாடுகளிலும் பல்வேறு துறைக் கண்டுபிடிப்புக்களுக்காகவும், வியத்தகு சேவைகள் புரிந்தமைக்காகவும் நோபல் பரிசுகள் கிடைத்துள்ளன. இப்பரிசானது மிகப் பெறுமதி மிக்க ஒன்றாகவே கருதப்படுகிறது.
1833ல் பிறந்த அல்பேட் பேர்னாட் நோபல் என்பவர் மிகப்பாதுகாப்பானதும், அதிக சக்தியுடன் வெடிக்கக் கூடியதுமான "டையணமெற்றை"கடந்த நூற்றாண்டில் கண்டு பிடித்தார். இது இவரது இரசாயன துறை சார்ந்த ஒரு கண்டுபிடிப்பாகும்.
கற்பாறைகளை உடைப்பதற்கும், மலைக்குகைகளைத் தோண்டுவதற்கும், புகையிரதப்பாதை அமைப்பதற்கும், ஆறுகளை திசைதிருப்புவதற்கும், எண்ணெய் கிணறுகள் குழாய்கள் அமைப்பதற்கும், துறை முகங்கள் கட்டுவதற்கும் நோபல் கண்டுபிடித்த "டையனமெற்" வெடிகள் பேருதவியாய் அமைந்தன.
நோபல் அவர்கள் பல நாடுகளிலும் "டையனமெற்" ஆராச்சிகளை நடத்தியும், தொழிற்சாலைகளை அமைத்தும் பல மில்லியன் பணத்தை திரட்டியிருந்தார்.
1896ம் ஆண்டில் நோபல் அவர்கள் மரணமடைந்ததன் பின் அவர் எழுதி வைத்த உயிலில் 'தான் விட்டுப்போகும் பணத்தின் வட்டியினை பயன்படுத்தி இம்மனித சமுதாயத்திற்கு முதற்தரமான சேவை புரிபவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பரிசில்கள் வழங்குமாறு எழுதி வைத்திருந்தது பலருக்கும் ஆச்சரியமாய் அமைந்தது.
இவர் விட்டுப் போன பணமான 250 மில்லியன் டொலர்களை கொண்டு, அதானால் கிடைக்கும் வட்டியினை நோபல் பரிசுக்குரிய திட்டமாக்கினார்கள். நோபல் பரிசானது ஐந்து வருடத்திற்கொரு முறை வழங்கப்படுகிறது. 1901ம் ஆண்டு முதலாவது நோபல் பரிசு வழங்கப்பட்டது. இப்பரிசானது சுவீடன் நாட்டு இளவரசரால் அன்நாட்டின் தலைநகரான 'ஸ் ரொக்கோலன் னில் நோபல் இறந்த நாளான 10 டிசம்பரில் வழங்கப்படுகிறது. இப்பரிசைப் பெறுபவர்கள் உலகில் அதி உயர் பரிசுக்குரியவர்களாக மதிக்கப்படுகிறார்கள்.
இந்நோபல் பரிசினை இந்தியாவில் கவிஞர் ரவீந்திர தாகூர் இலக்கியத்திற்காகவும் , சி.வி.ராமன், சுப்பிரமணிய சந்திரசேகர் பெளதிகத் துறைகளுக்காகவும், பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Page 6
இன்று காலை
ககன்
gyp pyp 99 g) 4 g ራ / M A AVAY Zク ggs spp. 99999 Af , (, ダ タン
99p 99999 A t M روبرمح ልፖ மெதுவர்கவும் பின்னர் கடுமையாகவும் மழை பெய்கிறது.
வெள்ளம் §ပ္ပါ శాg ہلال$\ے
് /*
முன்னக்காத இடங் முள்ைத்தும் சிறியன பெரியனவாகவும் புல்- செடி- மரங்கள்
கோவில் தெருவென மீன் கொண்டுபோகாத தெருவில் மழை அட்டையை விலத்திப் போவோரும்- நசுக்கிப்போவோருமான கடவுளைப் படைத்த மனிதர்களின் கண்கள் பனித்திருக்க
தெரு நாயொன்று
தனியே ஒரு ஆண் உடம்பை சப்ப முடியாமல் சப்பி வாழும் நாட்கள்
10
 

நேற்று மத்தியானம்
உலகம் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறது உன்னைத்தவிர என்றவளின் மூடிய கண்ணின் புருவம் - இமை இரண்டின் இடைவெளி மடலில் துப்பாக்கி நிதானமாக எழுதியது --கற்பில்லாதவள்.
எனக்கு படமெண்டால்.
எனக்குப் படமெண்டால் வலு புளுகம் அதுகும் தமிழ்ப் படமெண்டால். நாலஞ்சு சண்டை, மேலால பறந்து வந்து அடிபடுறது , துள்ளி ஓடிப்பிடிச்சுப் பாட்டுப்பாடி காதலிக்கிறதெண்டால் சோக்காய் இருக்கும். வில்லன் வந்து தள்ளி விழுத்தி கற்பழிக்கிறதெண்டால் கம்மா பாத்துக் கொண்டேயிருக்கலாம். என்ர ஆறு வயது மகனும் ஐஞ்சு வயது மகளும் நல்லாப் படம் பாப்பினம் நடிக்கிற ஆக்களிட பேர் எல்லாம் சொல்லுவினம். கவுண்டன்மாமா, செந்தில்மாமா, எண்டெல்லாம் முறை எல்லாம் கொண்டாடுவினம். அவயிற்ற அதுகளையெல்லாம் கேக்கேகக எனக்கு உடம்பெல்லாம் புல்லரிச்சுப் போகும்

Page 7
ஊரில இருக்கேக்க படம் பாக்கிறத்திற்கு எனக்கு ஒரு சொட்டு நேரமும் கிடைக்கிறேல்ல. பேப்பர், புத்தகங்கள் எண்டு வாசிகசாலையில போயிருந்து பின்னேரங்களில வாசிக்கிறது. வேலையளும் ஆக்களுக்கு வேற வேற உதவியளும் செய்யிறதால படம் பாக்கிறத்திற்கு அவ்வளவு நாட்டமும் இருக்கயில்ல. படிக்கிற காலத்தில படம் ஏதும் பாத்துட்டு வந்தால், அப்பர். பூவரசம் தடியால விளாசு விளாசெண்டு விளாசுவார். முதுகில கறங்கட்டிப்போய் இருக்கும். அதுகள் வயது போனதுகளுக்கு இதெல்லாம் எங்க விளங்கப் போகுது எண்டுதான் அப்ப நினைச்சனான்.
இப்ப படம் பாக்கேக்க அப்பரை நினைச்சால் ஒரு சின்ன நடுக்கம். இப்ப என்ர மனிசியும் பிள்ளயஞம்தானே வேற ஒரு பொழுது போக்குமில்ல படம்தான் நல்லாப் பொழுது போகும். என்ர பிள்ளையள் படம் பார்த்து நேரம் செண்டு படுத்தாலும் நேரத்துக்கு எழும்பிப் பள்ளிகூடம் போயிடுங்கள். இப்ப நான் வீடியோப் படமெல்லாம் சேர்க்கிறன். பிறகொரு வீடியோக்கடை போடலாம் எண்டுதான் யோசினை
நான் ஜேர்மனியில நடந்த எங்கிட தமிழாக்களின்ர விழா ஒண்டு பாத்தனான் அதில ஒரு போட்டி நிகழ்ச்சி ஒண்டு வைச்சினம் முக்கால்வாசிக் கேள்வியள் தமிழ்ப் படத்தைப் பற்றித்தான். நல்ல பரிசெல்லாம் குடுக்கினம்
தமிழ்ப்படமெண்டால் ஒரு மாதத்தில எத்தினை வெளிவருகுது? இவ்வளவத்தையும் சனம் பார்த்துத்தானே முடிக்குதுகள். நாங்கள் இப்ப கதைக்கிற முறையள் எல்லாம் மாறி "அந்தமாதிரி" படத்தில வாற மாதிரித்தான்
ஆனா இங்கையும் சிலதுகளுக்கு வேற வேலையில்ல புத்தகமும் பேப்பரும் காவிக்கொண்டு திரியுதுகள். விழாக்களும்; நாடகம் கூத்து டான்ஸ் சு எண்டு அலையுதுகள்.
பிள்ளையஞக்கு படம் காட்டுறதைக் குறைக்கட்டாம், நித்திரை காணாட்டில் அதுகள் படிக்காதுகளாம், சுகதேகிகளாய் இருக்காதுகளாம். தமிழ் படங்கள் சனத்திட்ட மோட்டுக் கொள்கையளை எல்லாம் பரப்புதாம். கனக்க நேரத்தையெடுத்து நல்ல பல காரியங்களை எல்லாம் செய்ய விடாமல் தடுக்குதாம். எங்களுக்கெண்டிருக்கிற எங்கிட நல்ல கலையளை எல்லாம் அழிச்சுப் போட்டுதாம். நாங்கள் தனியப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால் வாசிக்கிறதெல்லாத்தையும் விட்டிடுவமாம். எழுத்துக்களை மறந்த ஆக்களாயும், எழுத்துக்கள் தெரியாத ஆக்களாயும் மாறியிருவமாம்.
இதுகளெல்லாம் இந்தப் பேப்பொடியளிட கதையோ அல்லது ஏதும் உண்மைகளும் இருக்குமோ?
12

யமலோஇ இன்ரீனில். ŠKSSN 李 வீரபத்திரன்,
స్త్రీ Ş)
யமலோக வாசிகளின் தாக சாந்தி நேரமோ என்னவோ கன்ரீனில் அதிக கூட்டமாக இருந்தது. குழு குழுவாக, இருவராக, தனிதனியாக அங்குமிங்கும் பாவிக்கானப்பட்டனர். தடித்த கறுத்த மீசையும் பெரிய கண்களும் கூரிய பற்களுமுடைய கிங்கரர்கள் சிறிய வாளுடன் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தனர். பெரிய எருமை மாடொன்று இடதுபுற கதவு வாசலில் கிடந்து அசை போட்டுக்கொண்டிருந்தது.
மூலையில் வட்டமான மேசையில். டட்லி, N.M.பெரேரா, S.W.R.D. பண்டாரநாயக்கா, அமிர்தலிங்கம், ஜி.ஜி.பொன்னம்பலமும் அவரகளுக்கு நேர் பக்கவாட்டு மேசையில் உமாமகேள்வான், சிறிசபாரத்தினம், பத்மநாபா மற்றும் சிலரும் கதைத்துக்கொண்டிருக்கின்றனர்.
அமிர்: இன்டைக்கு என்ன ஒரே கூட்டமாயிருக்கு?
N M.பெரேரா : ஒண்டு மில்லை! தேவலோகத் தி லை யிருந்து ய ம லோ கத் துக் கு " ல் ம கிளிங் " பண் ணி ன சோம பா ன ம்
கொடுக்கிறான்களெண்ட ஒரு வதந்தி. அதுதான்.
டட்லி. எனக்கு இப்படியான விசயங்களில் நல்ல விருப்பம். ஜி.ஜி எங்கடை பிராண்டை (Brand)விட இந்த சோமபாணம் விசேசமாயிருக்குமெண்டு நினைக்கிறீரோ?

Page 8
ஜி.ஜி: நாங்கள் யமலோகம் வராமல் சாகா வரம் பெற்றிருந்தால் ஏதாவது Western country யிலை ASy1 அடிச்சிருக்கலாம், அங்கை சீப்பாக பியர் அடிக்கலாம். ஜில்லெண்டு இருக்கும். ஜாலியாய் பொழுது போக Politics கதைத்துக் கொண்டிருந்திருக்கலாம். எங்களுக்கு அந்த சான்ஸ் இல்லை.(மனதுக்குள் வெதும்புகிறார்)
S. W. R. D u 6ivT L-ITT 5 Tuu & & T : 57 säst g.g 6Tri sub Politi cs கதைக்கலாம் தானே! நீர் ஏதாவது நம்ம நாட்டு விசயம் விசேசமாக கேள்விப்பட்டனிரே? நான் அறிந்தவரை எங்கடை நாட்டு பிரச்சனை தீர்வில்லாமல் முரண்பாடு கூடிக்கொண்டு போய்க்கொண்டேய் இருக்குது. வேதனை தரும் விசயம். உது ஒண்டும் வந்திருக்காது நான் செல்வா வோ  ைட செய்த ஒப்பந்தத்தை உவன் ஜே. ஆர்
குழப்பாட்டால்.அக்கம் பக்கம் பார்க்கிறார்)
N.M.பெரேரா: என்ன சொல்லிப்போட்டு மிரளுறிர்?
S, W. R.D. இவன் ஜே.ஆருக்கு அறளை பேந்து வயதாகிவிட்டுது. இஞ்சாலை வந்திட்டானோ இல்லையோ தெரியாது. (டட்லி தலையை ஆட்டிக்கொண்டேயிருக்கிறார்)
ஜி.ஜி: பிறகு தனி சிங்கள சட்டம் (பண்டாவை பார்த்து) நீர் போட்டதை மறந்து கதைக்கிறீர்.
SW.R.D. என்ன சொன்னாலும் பரவாயில்லை! இந்தக்காலத்தில் எது எதுகளோ Politics கதைக்குதுகள். அந்தநேரத்தில் லண்டன் University களிலிருந்து படிச்சு வந்தவை மட்டும்தான் முதலாளித்துவமும் கதைப்பம்! சோசலிசமும் கதைப்பம்! சீச் சீ..! அந்த நேரம் எங்கடை ரத்வத்தை (5 Gbucupb Jaffna High Society whost 600 Federel Party ub சமாதானத்துக்கு வந்திருந்தால் எவ்வளவு eaSy யாக இருந்திருக்கும்.
அமிர்: சத்தியாக்கிரகம், சிறி எதிர்ப்பு போராட்டம். மற்ற சிங்களவன்ரை
தோலை செருப்பு தைச்சு போடுறன் எண்டு சொல்லுறதெல்லாம் இந்த
நாயக்கா துரைமார்களுக்கு கம்மா டுப்பெண்டு நல்லாய் தெரியும். பகலிலை
14

டூப் விடுவம், இரவிலை Parliament கன் ரீனிலை அந்தமாதிரி ஒட்டு! மற்ற அந்த இந்த Coctail Party யிலை எல்லாம் உருண்டு புரளுவம். இவர் ஜே.ஆர், தான் பெரிய ராஜதந்திரி எண்ட நினைப்பிலை விசயம் தெரியாமல் 83 ல் கொழும்பிலை தமிழ் சின்னமுதலாளியளை வெருட்டி எங்கடை Politics விளையாட்டை குழப்பப்பார்த்தார். உவன் J.V.P காரன் இந்த முரண்பாட்டை பயன்படுத்தி அரசாங்கமே வங்குரோட்டிலை போறமாதிரி, உள்ள பெரிய கொம்பனியெல்லாம் எரிச்சுப்போட்டான். (பெரிய விசயத்தை சொல்லிப்போட்டன் எண்ட நினைப்பிலை நெஞ்சை நிமித்தி கொலர் இழுக்க நினைக்கிறார். கொலரே இல்லாததை நினைத்து வெதும்புகிறார்.)
ாஜிவ் Toiet ரிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தபோது தூரத்தில் ஆகாயத்தில் கந்தருவர்கள் புஷ்பகவிமானத்தில் பறந்துகொண்டிருந்தனர்.
ரஜிவ்: Hallot Friends! அங்கை பாருங்கோ! சிவாஜி கணேசனும் மனோகரும் என்னமாதிரி இலாவகமாக tly பண்ணினம் எண்டு. உதைப்
பாக்கேக்கை எங்கடை Piolet படிப்பெல்லாம் waste.
முத்தையா:(அண்மையில் யமலோகம் வந்தவர்) டே நேரு பெத்த இந்திராவின் மோட்டு ரஜிவ்! முடி வைச் சவனெல்லாம் சிவாஜியும் மனோக ருமேயேடா? சிறீபெரம்பூதுாரிலை மண்டையைப் போடமுந்தி அங் கையுள்ள சினிமாக் கொட்டகையிலை "ராஜராஜசோழன் படம்
பாத்தனியே? அவங்கள் தேவலோக வாசிகள்மோனை.
S, W. R. D: வாரும் ரஜிவ்! இரும்! உங்கடை தாத்தாவும் நானும் அந்தமாதிரி. சினேகிதர்கள். எனக்கு கவலை என்னெண்டால் உம்மடை அம்மா உருவாக்கின அரசியல் தான் உம்மையும் முடிச்சு இஞ்சை கொண்ணந்து விட்டுது.
அமிர்: 9 J58 (os Tsugutosus, Gassr. His mother great idea 6,66mb வைச்சிருந்தவ. பெடியங்களைப் பயன்படுத்தி இலங்கைக்குள்ளை நுழைஞ்சு
மெல்ல மெல்ல முழு இலங்கையையும் தனது control க்கு கொண்டுவந்து

Page 9
தெற்கிலை அங்கை ஒருவர் அவவுக்கு தலையாட்ட நான் வடக்கிலையிருந்து அவவுக்கு தலையாட்டிக் கொண்டிருந்தால் India வின் தெற்குப்பக்க பாதுகாப்பு உறுதியாக இருக்குமெண்டு நினைச்சா. நான் ஒரு பெரிய ராஜதந்திரி எண்ட நினைப்பிலை இப்ப கொஞ்சம் பொறுங்கோ! சனங்கள் பெடியளுக்கு கொஞ்சம் ஆதரவாய் இருக்கிறமாதிரி இருக்கு! இவங்கள் தங்களுக்குள்  ைஎ அடிபட்டு சனங்களா லை நிராகரிக்கப்படேக்கை உள்ளடுறது நல்லாய் இருக்குமெண்டு. ஆனால் நடந்த கதை கொஞ்சம் வேறுவிதமாய்ப்போச்சு.
உமாமகேள்வரன்: (அமிரை நோக்கி) அண்ணை! எங்கடை கழகத்தின்ரை idea Success ஆக வந்திருக்கவேணும் தென்கிழக்காசியாவே பாட்டாளிவர்க்கத்தின்ரை கையிலை இருந்திருக்கும்.
முத்தையா: டே! முனியடிப்பானே! ஏன் சொல்லமாட்டாய்! உன்ரை வர் க்கக் குனத்தை வரலாறு பார்த்ததே! ஏன் ரா உங்கடை புத்தகங்களிலையெல்லாம் ஒரு பக்கம்"மார்க்ஸ்",
மற்றப்பக்கம் கீழ்வெண்பனி கொலைகார கூட்டாளி அண்ணாத்துரை எண்டு புதிதாய் திராவிட மார்க்சிசம் காட்ட வெளிக்கிட்டியள்? இப்ப எல்லாம் கிழிஞ்ச சீலையாய்ப்போச்சு! கோதாரி விழுவானே! பாட்டாளி வர்க்கம் எண்டு சொல்லி உன்ரை சுவில் Bank கணக்கை மறந்து
இப்பவும் அந்த கஷ்டப்பட்ட சனங்களைப்பற்றி கதைக்கிறாய்.
சிறிசபாரத்தினம்: அமிர் அண்ணை சொல்லுறமாதிரியுமில்லை! உமா சொல்லுறமாதிரியுமில்லை நாங்கள் Indian Military யோடை நுழைஞ்சு சோசலிச ஈழம் மலர வைத்திருப்பம், உவன் புலிக்காரன் முந்தி எங்களை அழிக்காட்டால்,
(இரு கிங்கரர்கள் புடைசூழ சித்திரபுத்திரனார் கையில் துாக்கப்படமுடியாத புத்தக கட்டுடன் இவர்கள் இருந்த மேசைப்பக்கமாய்ப் பார்த்து முறைத்துக்கொண்டு நடந்து செல்கிறார்.
முத்தையா: டே! சிறிசபாரத்தினம்: Indian military யோடை நுழைந்து
16

சோசலிச தமிழீழ ஆட்சி மலரவைக்க இருந்தனியோ? உங்கை போறார் சித்திரபுத்திரனார் உங்கட பாவ கணக்கு போல வரலாற்றிலை தான் காணவில்லையாம். இன்னும் எண்ணம் இருக்கோ மோனை தமிழ் சனத்தின் ரை பெயரைச் சொல்லிக் கொண்டு சினிமாக்காரரோடை கூத்தடிக்கலாமெண்டு.
பத்மநாபா: ஏன் தோழர் மூன்றாம்தர வார்த்தைகளால் கொட்டுறீர்?
முத்தையா! தோழரோ? ஏன்டா! உண்மையான வார்த்தையை பொய்யாய் சொல்லிக் கொண்டு பூலோகத்திலை திரிஞ்சியள்! பிறகும் ஏன் யமலோகத்திலும் வந்து அளக்கிறியள்!
பத்மநாபா: முன்றாம் உலக நாடுகளிலுள்ள விடுதலை இயக்கங்களின் நண்பனான India வுடன் சேர்ந்து சோசலிச ஆட்சியை மலர வைத்திருப்பம், இந்த அராஜகவாதிகள் இல்லாமலிருந்தால்.
முத்தையா! டே! புத்தகம் தின்னியன்! அவங்களை மட்டும் ஏன்டா அராஜகவாதிகள் எண்டு சொல்லுறியள்? நீங்கள் எல்லாரும் சேர்ந்து உருவாக்கின துப்பாக்கி கலாச்சாரம்தானே, இன்டைக்கு உங்களுக்கு தெரிகிற அராஜகம். India வோடை சேர்ந்து சாதிக்க போறியளோ? வாயிலை வருகுது. உந்த சோசலிசம் கீசலிசம் கதைக்கிற உங்களுக்கு
அரசாங்கம் எண்டது என்ன செய்யுமெண்டு தெரியேல்லையோடா?
முருகேசு:(வெளிநாட்டில் Asyl Gæl'G Guers SL-åsso Hart at tack இல் இறந்து வந்தவர்) முத்தையாண்ணை Adress இல்லாமல் போனவங்களைப்பற்றி திட்டி என்னண்ணை பிரயோசனம்? இப்ப நாட்டிலை எவ்வளவு அநியாயம் நடக்குது. அவங்களைப்பற்றி கதைக்க யமலோகம்
வந்தும் பயம்போலை!
முத்தையா: குறை நினைக்காதையுங்கோ, முருகேசு நீங்களெல்லாம் Armyக்காரன் எப்பிடி இருப்பான் எண்டு தெரியாத காலத்திலை மேற்கை போனனிங்கள்தானே! ஷெல் அடியும் தெரியாது, பங்கரும் தெரியாது, மேற்கை போய் செத்த பிணங்களை சொல்லி ASyl அடிச்சு சொகுசு

Page 10
வாழ்கை நடத்தினனிங்கள் உப்பிடித்தான் கதைப்பியள்.
முருகேசு: என்ன ஆத்திரப்பட்டு கதைக்கிறியள்?
முத்தையா: பொறு முருகேசு நான் இன்னும் சொல்லிமுடிக்கேல்லை. இவங்களுக்கும் எனது கொள்கைக்கும் எட்டாத துாரம் கண்டியோ! ஆனால் இந்த புலியள் தேசிய விடுதலைப் போராட்டத்தில் அரசுக்கு எதிராக தொடர்ச்சியாய் போராடுவது என்னை பொறுத்தவரை சாதகமான ೨ಆ. மற்றது புரட்சிகர நண்பர்களை அடைக்கிறது அவங்கடை அரசியல் சுதந்திரத்தை மறுக்கிறது ..இப்பிடி நண்பன் யார் பகைவன் யார் என்று தெரியாமல் நடப்பாங்களெண்டால் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு வெறும் துப்பாக்கிகளை மட்டும் வைத் திருக்கும் சம்பல் பள்ளத் தாக்கு
கொள்ளைக்காரர்கள் மாதிரித்தான் போவான்கள். இது எனது நம்பிக்கை,
முருகே சு: என்ன இருந்தாலும் புலியளை விமர்சிக்க கொஞ்சம் தயங்கிறியள்.இவங்களைத்தான் திட்டோ திட்டெண்டு திட்டுறியள்.
பத்மநாபா: சரியாய் சொன்னிங்கள்.
முத்தையா: டே சொறிநாயே! நீயும் கதைக்கிறியே விசயம் தெரியாமல் கொர்பச்சோவின்ரை கட் அவுட்டோடை May day நடத்தின அறிவிலிகள் இப்ப கொர்பச்சோவும் போச்சு கோவணமும் போச்சு கத்தரிக்காயும் போச்சு பாலகுமாரன் ஆட்கள் மாதிரி விலாங்கு மீனாக இருந்திருந்தாலாவது யமலோகம் வந்திருக்கமாட்டாய். தம்பி முருகேசு இவங்களை தனிப்பட்ட ஆளை திட்டுறனெண்டு நினைக்காதை இவங்கள் எங்கடை சமுகத்திலுள்ள வர்க்க எதிரிகளின் பிரதிகள், இவங்கள் Adress இல்லாமல் போனதாக நினைத்தால் அது மடைத்தனம். இவங்கள் ஒரு அராஜகத்தை அழிக்கப்போறமெண்டு சொல்லி இன்னொரு வடிவத்திலை அராஜகத்தை தர இருக்கிறான்கள்.
முருகேசு: என்னதான் நீங்கள் மேற்கை இருக்கிற ஆட்களைப்பற்றி குறை கூறினாலும் அங்கையும் நல்ல முயற்சிகள் செய்யினம், அரசியல் இலக்கிய
வெளிப்பாடுகளை வெளிப்படுத்த பத்திரிகை கூட்டங்களெண்டு நடத்தினம்.
18

முத்தையா: முருகேசு உந்த ஒண்டையும் நான் நம்பமாட்டன். எனது வயது அநுபவத்தில் கணக்க பார்த்திட்டன். இவங்கள் இவ்வளவு காலமும் புத்தகத்துக்குள்ளை மட்டும் தலையை ஒட்டிப்போட்டு வெளியிலை எடுக்க தெரியாமல் நிண்டுட்டு பிறகு அங்கை அராஜகம் வெருட்டுது: இங்கை பாசிசம் துரத்து து! எண்டு பூச்சாண்டி காட்டிக்கொண்டு மேற்கை ஓடிப்போய் சொகுசாய் இருந்து கொண்டு விழுங்கினதை வாந்தி எடுக்கிறான்கள். அவ்வளவுதான். புத்திஜீவித கசக்காரருக்கும் இந்த லும்பன் கூட்டத்துக்கும் சம்மாடி கட்டிக்கொண்டு கதைக்கிறதுக்கு மேற்கு நாடுகள்
நல்ல வசதியான இடம் தானே?
முருகேசு: நல்ல வியங்கள் சொல்லிறியள் அதற்காக உங்கடை எல்லா கருத்தையும் ஏற்கேலாது அண்ணை!
பெரிய சத்தம் இரைச்சலாக கேட்கிறது. எருமை மாட்டின் சத்தம் பெரிதாக கேட்கிறது. கன்ரீன் இழுத்து மூடும் சத்தம் கேட்கிறது. யாழ்ப்பாணத்தில் பெரிய மனிதஇழுப்பாம்! யமன் ஒரே பிசியாம்! நிறையில்லா அந்த யமலோக வாசிகள் கன்ரீனை விட்டு இனம் தெரியா த இரு ட் டுக் குள் அ  ைசந்து கொண்டிருக்கின்றனர்!
தமிழர் ஒற்றுமை
கடந்த மே மாதம் சுவிற்சிலாந்தில் நடை பெற்ற மேதின ஊர்வலத்தில் தமிழர் இயக்கங்கள் இரண்டு கலந்து கொண்டன. கலந்து கொண்ட இரு இயக்கத்தினரும் வேறென்ன ஐரோப்பியத் தெருக்களிலும் அடிதடியில் இறங்கிவிட்டார்கள். பொல்லுகள் கம்பிகள் கத்திகள் பயன்படுத்தப்பட்டன. அவ்வூர்வலத்தில் கலந்து கொண்ட சுவிற்சிலாந்துக்காரர்களும், குர்திஸ்காரர்களும், ஏனையவர்களும் ‘தமிழர் ஒற்றுமை’ கண்டு வியந்தே விட்டனராம் . வெவ்வேறு நாட்டுக்காரர்கள் பல கருத்து முரண்பாடனவர்கள் கலந்து கொண்டாலும் இவ்வகை வீர மறவர் போல் யாரும் இல்லை என்றே பலரும் பேசிக்கொள்கிறார்கள்.

Page 11
நெதர்லாந்துச் செய்திகள் 'விழ்பேர்க்'
புதுவருட விழா
நெதர்லாந்தின் கிழக்கு லிம்பேர்க் நகரமான லான்கிறாயில் Landgraaf ல் நடைபெற்ற தமிழ் புதுவருட விழா மிகச்சிறப்பு என்று என்னால் சொல்லமுடியவில்லை. ஆயினும் பாராட்டப்பட வேண்டியவையே.
விழாவின் கலைநிகழ்ச்சிகள் பெரும்பாலும் நெதர்லாந்துக்காரர்கள் ரசிப்பதற்காக ஒழுங்கு படுத்தப் பட்டிருந்ததுபோல் தோன்றியது. ஆயினும் மண்டபம் நிறைந்த தமிழர்கள் வந்திருந்தனர். நடனம், இசைநிகழ்ச்சிகள், நாடகம் , கவிதை என்பன தரமானவை என்பதை மறுப்பதற்கில்லை, ஆனால் பார்வையாளர்கள் அக்கறையில்லாமல்'ஒரே கதைகாரர்களாக இருந்தார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அரங்கினுள்ளே Bar ஐத் திறந்து வைத்து வியாபாரம் நடத்தினால் பலர் பியர் குடிகாரராகி அலம்பிக் கொண்டிருந்தார்கள். அரங்க உரிமையாளர்களே அதை நடத்தினாலும், இப்படி ஒரு பொது விழா மண்டபத்துள் மதுப்பாவனையை நிறுத்துவது மிக நல்லது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். நடனம், இசைநிகழ்ச்சிகளை நீண்ட நேரம் நடத்துவது பலருக்கு "போர் அடித்துப் போகிறது. நம்மவர் பலருக்கு இவற்றை அமைதியாக ரசிக்கும் பக்குவம் வரவில்லை என்று சொன்னால் என்னை உதைப்பார்கள்தான் என்ன செய்வது சொல்லித்தானே ஆகவேண்டும். அதிலும் ஒலி அமைப்பு பல நல்ல நிகழ்ச்சிகளைக் கூட கழுத்தறுத்து விட்டது. எனிவரும் காலங்களில் ஒலி பெருக்கி அமைப்பிலும் கவனம் செலுத்துவது மிக அவசியமானதென கருதுகிறேன்.
நிகழ்ச்சிகள் பார்வையாளர்கள் ரசிக்கக் கூடியதாக அமைவது மிக நல்லது. மண்டபம் நிறைந்த இந்தத்தமிழர்கள் எல்லோரும் நெதர்லாந்தில்தான் உள்ளார்களா என்று எண்ணத்தோன்றியது. அப்பிடி ‘நல்லசனம் பலபகுதிகளிலிருந்தும் வந்திருந்தார்கள்.
எப்போதும் பார்வையாளர்களைப் பற்றியோ அல்லது நகைசுவைகள் விட்டோ, வேறு விதமான உத்திகளைக் கையாண்டோ அவர்களை நிகழ்ச்சிகளோடு ஒன்றிப் போகவைக்கலாம். அவ்வகை உத்திகள் பல நிகழ்ச்சிகளில் கையாளப்படவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. விழா நடத்துனர்கள் பல புதிய கலைவடிவங்களையும் அறிமுகப்படுத்துவது நல்லது. அத்துடன் விவாதங்கள், கவிதாநிகழ்வுகள், சிரிப்பு சிந்திப்பு நாடகங்கள் போன்றவற்றையும் ஒழுங்கு படுத்தினால் பார்வையாளரையும் சிந்திக்கத் துாண்டுமல்லவா?. 2O

அம்ஸ்ரடமில்:
இனவாதிகளுக்கெதிரான மாபெரும் ஊர்வலம்
ஐரோப்பாவில் எண்பதினாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்ட கறுப்பு இனத்துவேஷத்துக்கு எதிரான ஊர்வலமொன்றும் பொதுக் கூட்டமும் நெதரலாந்தின் தலைநகரான ‘அம்ஸ்ரடாம்"ல் 21-03-92 ல்நடைபெற்றது. ر
பலத்த கோ வங்களுடனும் பாடல்களுடனும் சுலோக அட்டைகளுடனும் ஊர்வலம் Dam Plein ல்லிருந்து தொல்பொருள் காட்சிச்சாலை முடியும்வரை நகர்ந்து கொண்டிருந்தது. அகன்றவிதி எங்கும் வாகன ஓட்டமும், "Tறாம் வண்டி ஒட்டமும் தடைசெய்யப்பட்டிருந்தது. இருமருங்கும் பல பார்வையாளர்கள் கலந்திருந்ததால் ஆங்காங்கே பாட்ல்களை பாடி உள்ளூர் பாடகர்கள் வரவேற்பளித்தனர். ஐரோப்பிய நாடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இனவாத கொடுமைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட மாபெரும் ஊர்வலம் இது வென்றே கருதவேண்டியுள்ளது. இவ்வூர்வலத்தில் பல அரசியல் தலைவர்களும், தொழிற்சங்கத்தினரும், மதத்தலைவர்களும், பிரதமமந்திரியும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஐரோப் பா வெங் கும் புதிய நா சிப் பேய் களின் தாக்குதல்களுக்குட்பட்டு பல வெளிநாட்டவர் கொல்லப்பட்டும், காயங்களுக்குள்ளாகியும் உள்ளனர். இத்தாக்குதலுக்குட்பட்டவர்களில் பல தமிழர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. தாக்குதல்கள் நடாத்தப்படும் அதே நேரத்தில் பாசிசக் கட்சிகளின் செல்வாக்கும் அதிகரித்துக் கொண்டு போவதுடன், பாராளுமன்றங்களில் அவர்களது பிரதிநிதித்துவமும் அதிகரக்கிறது. இதற்குதாரணமாக பிரான்வில் லாபென்னும், பெல்ஜியத்தில் பிலாம்ள் புளொக்கும், ஜேர்மனியில் றிப்பப்பிளிக் காணும் பல பகுதிகளில் மாகாண அரசாங்கங்களில் தெரிவாகியுள்ளார்கள்.
ஐரோப்பாவில் பெருகிவரும் பொருளாதாரப்பிரச்சினைகளுக்கும், குடியிருப்பு வீட்டுவசதிகளின் தட்டுப்பாடுகளுக்கும், அதிகவரிஅறவிடுதற்கும், வெளிநாட்டவரகளும், கறுப்பு இனத்தவரகளுமே காரணமென்றும் (பிரச்சாரம் செய்வதுடன்) கறுப்பர்கள் வேலை செய்ய விருப்ப மற்றவர்கள், உதவிப் பணத் தி ல் வாழ் பவர்கள் என்றும் பல்வேறு விதமான பொய்ப்பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு தம்மைப்பலப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

Page 12
அரசியல்கட்சிகளும், பத்திரிகைகளும், வெளிநாட்டவர்களுக்கும், கறுப்பர்களுக்கும், அகதிகளுக்கும் எதிரான பலபிரச்சாரங்களில் மொத்தமாக ஈடுபடுகின்றனர். நெதர்லாந்தில் VVD கட்சி யின் பிரதிநிதி Bolkestein எல்லா இனத்தவரையும் தம்கலாச்சாரத்துக்கு இணைந்து நடக்கக் கட்டாயப்படுத்தவேண்டுமென்கிறார். பத்திரிகைகளோ, பெரும்தொகையான அகதிகளும், கள்ளக்குடியேற்றவாசிகளும் குவிகிறார்கள் என்று பிதற்றுகின்றன.
வளரும் துவேஷத்தை தடுப்பதாகக்கூறிக்கொண்டு அரசுகளோ வெளிநாட்டவர்களுக்கும், அகதிகளுக்கும் எதிரான பல புதிய சட்டங்களை உருவாக்குகிறார்கள். இப்புதிய சட்டங்கள் மனித உரிமை மீறியவைகளாகவும், புகலிடம் கோரும் அகதிகளைத்தடுப்பதாகவும் உள்ளன.
இவ் வகை அரசுகளும் கட்சிகளும் காட் டு கின்ற துவேஷத்துக்கெதிராகவும், ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காகவும், சுதந்திரத்திற்காகவும், அத்துடன் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு ஆதரவாகவும் இவ்வூர்வலத்தில் கலந்துகொண்டமக்கள் குரல் எழுப்பினர்.
4தாயும் , , முருந்துU
பேராசிரியர் எஸ்.சிவசேகரம்
முதலாளித்துவ சமுதாயம் மனிதத் தேவைகள் அனைத்தையும் வியாபாரமயமாக்கிவருகிறது. எந்தவொரு துறையிலும் சமுதாயத்தின் தேவைகளை விட இலாபநோக்கு முதன்மைப்படுத்தப்படாமல் இல்லை. மனிதரது உயிர்வாழ்வுக்கும், அடிப்படையான பாதுகாப்புக்கும் அவசியமான உணவு உறைவிடம் என்பனவற்றுக்கு அடுத்தபடியாகவுள்ள உடல்நலமும் வியாபாரநோக்கிற்குப் பலியாகிவிட்டது. மனிதருக்குத் தம் உயிரைக் காக்கவும் உடல்நலத்தைப் பேணவும் உள்ள அக்கறை காரணமாக, மருத்துவத்தில் பணச்செலவு பற்றிக்குறைவாகவே தயக்கங்காட்டுகின்றனர். மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடிய நிலைகள் பெரும்பாலும் எதிர்பாராமலே வருவதால், எது மலிவானது எது நீண்டகால நன்மை தருவது
22

என்றெல்லாம் ஆராயும் வசதி பலருக்குக்கிடைப்பதில்லை. இதை விட, நவீன சமுதாயம் மனிதருக்குள்ள நேர அவகாசத்தையும் நெருக்குவதால் விரைவான நிவாரணம் தேடும் நிர்ப்பந்தமும் பலருக்கு உண்டாகிறது. சில சிறிய நோய்கட்குரிய மேனாட்டு மருந்துகள் வசதியாகக் கடைகளிற் பெறக்கூடியன என்பதாலும், மரபுசார்ந்த மருத்துவமுறைகளை விட நவீன மேனாட்டு மருத்துவமுறைகள் விரும்பப்படுகின்றன.
முதலாளித்துவ முறையின் கீழ் விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் மிகவும் விருத்தியடைந்துள்ளன. பல அரிய கண்டுபிடிப்புக்கள் செய்யப்பட்டுள்ளன. நோய்கட்கான காரணங்களும் பரிகாரங்களும் ஆழமாக ஆராயப்பட்டு அறியப்பட்டுள்ளன. ஆயினும், உணவு உற்பத்தி பெருகியும் உலகிற் பஞ்சம் பரவிவருவது போலவும் தொழில் வளர்ச்சி ஏற்பட்டும் வறுமை அதிகரிப்பது போலவும், நவீன மருத்துவத் துறையின் பாரிய வளர்ச்சியை மீறி நோய்கள் பெருகிவருகின்றன.
இதற்கான பல காரணங்கள் இருக்கின்றன. விஞ்ஞானமும் மருத்துவமும் தாம் சார்ந்துள்ள சமுதாயத்திற்கு ஏற்பவே செயற்படுகின்றன. நவீன் முதலாளித்துவ சமுதாய விருத்தி விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்கு அளித்துள்ளது என்றாலும், விஞ்ஞானிகளின் சமூகப் பிரக்ஞை அவர்களது அறிவுத் திறனுக்கு விகிதாசாரமான அளவில் இல்லை. இன்றைய விஞ்ஞான விருத்தி விஞ்ஞானிகளை அவர்களது விஷேஷமான அறிவுத்துறைகளின் வரையறைகட்குட் குறுக்கி வருகிறது. ஒரு துறையில் ஏற்படும் விருத்திகளை முழுமானுட இனத்தினதும் நலனுடன் இணைத்துப் பார்க்க இயலாத நிலையிலேயே அத்துறையிற் செயற்படும் விஞ்ஞானிகள் உள்ளனர். விஞ்ஞான ஆராய்ச்சி அறிவுக்கான தேடலாக அல்லாது ஒரு வியாபாரக் கருவியாக மாறிவிட்டது.
பெளதிக விஞ்ஞானத்துக்குள்ளே விருத்தியடைந்து வந்த யாந்திரிகமான பார்வை, பிரயோக விஞ்ஞானத் துறைகளையும் பிடித்துள்ளது. ஒவ்வொரு தொழிற்துறையும் தன்னையே முதன்மைப்படுத்தி அதற்குச் சார்பாகவே உலகை நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விஷயங்களைக் கூறுபோட்டு ஆராயும் போக்கு, சமுதாயத்தைப் பல வகைகளிலும் பாதிப்புக்கு ஆளாக்கியுள்ளது.
வித்ஞானம் என்பது விஷயங்களைக் கூறுபோட்டுப் பட்டியலிட்டு வகுப்பது மட்டுமல்ல. பகுதிக்கும் முழுமைக்கும் உள்ள உறவை அறிவதும் அதன் ஒரு முக்கியமானபணி. சமுதாயப் பிரக்ஞையற்ற விஞ்ஞான விருத்தி இந்த உறவை அலட்சியப்படுத்துகிறது. மருத்துவத்திற்கு இந்தமுறை நீடிக்கப்படும் போது, இருதய அறுவைச் சிகிச்சை நிபுணருக்கு இருதயமும் இரத்த ஒட்டமும் தொடர்பான கூறுகளைவிட, மற்ற விஷயங்களில் அதிகம் ஈடுபாடு இருக்க அவசியமில்லை. இவ்வாறே ஒவ்வொரு உடற்கூறும்

Page 13
ஒவ்வொரு நிபுணத்துவத்திடம் பாகம் போடப்பட்டு மனிதன் ஒரு இயந்திரம் போலவும் உறுப்புக்கள் அதன் பகுதிகள் போலவும் காணப்படும் நிலை வளர்ந்து வருகிறது. மனிதன் என்ற முழுமையையோ அந்த மனிதனது சமுதாயச் சூழலுடன் அந்த ஜீவனின் உறவையோ மருத்துவம் முதன்மைப்படுத்துவதில்லை. இதன் விளைவாகவே, ஒரு நோய்க்குத் தேடப்படும் பரிகாரங்கள், சில சமயம், வேறு பெரிய நோய்கட்குக் காரணமாக நேருகிறது. அபாயகரமான மருந்துவகைகள் போதியளவு எச்சரிக்கையின்றியும் பின்விளைவுகளின் தன்மை பற்றிய விளக்கமின்றியும் விற்பனையாகின்றன. மருந்து வியாபாரக் கம்பனிகள் ஈட்டும் கொள்ளை லாபம் பற்றி அரசாங்கங்கள் தட்டிக்கேட்கத் தயங்குமளவுக்குப் பெரிய கம்பெனிகளிடம் பணமும் அரசியற் செல்வாக்கும் உள்ளது.
அனைத்திற்கும் அடிப்படையாக மருத்துவம் ஒரு நுகர்வுச் சந்தையாகவும் நுகர்வை அதிகரிப்பதற்கான தேவையே மூலதனத்தின் குறிக்கோளாகவும் உள்ளது. உதாரணமாக, அண்மைக் காலங்களில் இயற்கைப் பிரசவம் சாத்தியமான குழல்களில் அறுவை மூலம் பிரசவம் ஊக்குவிக்கப்படுவதை அறிகிறோம். மருத்துவப் பரிசோதனைகள், மருந்துகள், சிகிச்சைகள் எல்லாமே ஒரு மருத்துவ வியாபாரத்துறையின் விருத்தியுடன் சேர்ந்து விரிவடைந்து கொண்டு போகின்றன. இதற்கான செலவு, நேரடியாகவோ மறைமுகமாகவோ, நுகர்வோரிடமிருந்து (பொதுமக்களிடமிருந்து) கறக்கப்படுகிறது. இதற்கான இறுதி விலையைச் சுரண்டலுக்கு ஆளாகும் மூன்றாமுலக நாடுகளே பெருமளவிற் பலவேறு வகைகளிற் கொடுக்கின்றன.
மருத்து வத் தி ன் வளர்ச் சியோ நவீனத் துவ மோ பிரச்சினைக்குரியதல்ல. அதன் ஒரு தலைப்பட்சமான வளர்ச்சி க வ ைலக் குரிய து . நோய் - பரிகாரம் என்ற உறவு, நோய்-பரிகாரம்-பரிகாரத்தின் விளைவான நோய்-புதிய பரிகாரம் என்று முடிவின்றி வளையவளைய வருவது கவலைக்குரியது. நோய்-பரிகாரம் என்ற உறவை விட நோய்க்கான காரணம்-தடுப்பு என்ற உறவுக்குக் கூடிய அழுத்தந் தரப்படக் கூடுமானால், மருத்துவத் துறையின் விருத்தியின் பயன்களை மனித இனம் மேலும் முழுமையாகப் பெற முடியும் என நினைக்கிறேன்.
இன்று மருத்துவத்தை வியாபாரமாகக் கருதும் முனைப்புக்கும் மனிதனைக் கூறுபோட்டு வைத்தியம் செய்யும் போக்கிற்கும் எதிரான சிந்தனைகள் எழுச்சி பெறுகின்றன. சுற்றாடல் பற்றிய அக்கறையும் இதனுடன் உறவுடையது. இவை மானுடரின் பொதுநலன் சார்ந்த அரசியற் சிந்தனையுடன் இணைந்தால் உலகை மாற்றுவதில் இவையும் பெரும் பங்களிக்க இடமுண்டு.
24

அஆஇ இதழுக்கு, தங்கள் இதழ்
தொடர்ந்து பல்வேறு ஆக்கங்களும் சிறப்பாக அமையப் பெற்றுள்ளன. மேலும்
வெளிவருவதுடன்
ஆசியும். அச்சிடப்
என் வாழ்த்துக்களும்
மிகச்
சிறப்புற இதழ் 8 சிறப்பாக பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சியடைகிறோம். பிரதி அச்சுப் பிரதியாக குறித்தும் பெருமிதமடைகிறோம். மேலும் வளரட்டும்.
மிகவும் கையெழுத்துப் முன்னேறியது மென்
பா.இரவீந்திரன் காடகிறாப்-நெதர்லாந்து.
ஆசிரியர் அவர்கள், நெதர்லாந்து நண்பர்கள் உயிர்
உணர்வுடன் இந்த ஏட்டை நடத்தி பணியாற்றி வரும் அனைவருக்கும் நன்றிபாராட்டுகிறோம். அஆஇ சுவடு 8 கிடைத்தது.
பலஇனிய புதுக்கவிதைகள் மிகவும் சிறப்பு." எம்மைப்பற்றி" விமர்சனம் கலங்கரை விளக்கம். தெளிவுள்ள தங்கள் ஆணித்தரமான தலையங்கம் சிறப்பு. 'தமிழில் புகலிட
ந்தர்கித்ள்
ஆழமான
இலக்கியங்கள்' பார்வை, தொடரும் கடத்தல்கள்' வருந்தத்தக்க படப்பிடிப்பு. ருசியான குடும்பி சின்னத்தம்பியார் புறுபுறுப்பது பலமுறை படிக்கத்தக்க யாழியல் போன்ற யாழ்தமிழ் அருவி. உங்கள் கருத்துக்கள் மக்கள் பாராளுமன்ற Si6), ’கனவுகள் இனிமையானவை எழுதியவரின் உயிர்ப் படைப்புக்கள் தமிழக இலக்கியப் படைப்புக்களுக்கு சவால். 35560)&Lu உயிரோட்டமான வாழ்வியல் இலக் கியங்களே இன்று தேவை. ஈழவரலாறு
புதியவர்கள் படித்துப் பார்க்க ஒரு நல்ல பக்கம். ஈழவர்களால் 60 ஏடுகள் உலகில் தமிழைப்
LJÚLí வேற்றுமைக்குள்
ஒன்றுபட்டு உயரச் செய்யட்டும்.
பேராசிரியர் இரா.வீரப்பன்
தலைவர்
உலக தமிழ் பண்பாட்டு இயக்கம்.
கிள்ளான்- மலேசியா.
அஆஇ
 ைக  ெய மு த் துப் பி ர தி கணணிப்பிரதியாக வெளிவந்துள்ளது. வந்த ஆக்கங்கள் பல தும் தரமான வை. உங்களைப்பற்றி கருத்து வாசகர்களுக்கு உங்களை ப் பற்றிய தெளி வைக் கொடுத்துள்ளது.
சிவா. நெதர்லாந்து.

Page 14
"தமிழர்களைத் திருப்பி அனுப்பாதே"
- நெதர்லாந்தில் ஒரு சிங்கள அரசியல்வாதி
"இலங்கைத் தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்புவதென்பது அவர்களை ஒநாய்களிடம் ஒப்படைப்பதைப் போன்றது. தென்னிலங்கையில் கூட தமிழர்களுக்கு
பாதுகாப்பில்லைத்தான்."
Toestand op Sri Lanka erger dan ooit"
Singalees neemt het op
voor de Tamils
Van een oneer verslaggeefsters AMSTERDAM - Het is heel gevaarlijk in het zuiden van Sri Lanka, de Tamils kunnen er niet heen. Zelfs de hoofdstad Colombois voor hen onveiliggeννοΓdeΙα."
De Singalese jurist Edmand Sarnarakooddy zei dit gisteren in de Mozes en Aaronkerk in Amsterdam. Samarakoddy was Jarenlang parlementslid voor de socialistische oppositiepartjen is nt vakbondsleider. Hij woont zelf in het zuiden van Sri Lanka en reist nu door Europa om lezragen te houden en TamAls toe
justita el Pax. Nederland leverde gisteren kritiek op het rapport van de commissie Wijnaendts. waarnn staat dat het zuiden van Sri Lanka veilig is voor Tannuls. ... We zijn van mening dat de regering de situatie op Sri Lanka erthstig onderschat. Uit de feiten van afgelopen week blijkt weer dat de regering van Sri Lanka tvjet in staat is om de veiligheid van de bevolking te garanderen", zei de secretaris W. Scheffers van Justikia et Pax.
Hij gaf een toelichting op het door Justitia et Pax opgestelde
rapport Tamils in Sri Lanka: Ongewenste vreemdelingen in eigen land?’, schesters vond het merkwaardig dat de regering op een rapport afgaat, terwijl een groot aantal organisaties tot andere conclusies zijn gekomen.
te spreken. Hij zei dat in zijn eigen straat huizen van Tarrails in brand waren gesticht.
De situatie is nu erger dan ooit. Ik ben heet verbaasd over het rapport dat de Nederlandse regering heeft uitgebracht', aldus de 8ingalees... Ik was juist zo blij dat de Tanits in Europa opgevangen worden. Er zijn ook vele Tamils naar India gevlucht. maar naar andere anden in onze regio kunnen ze niet gaan'. zei hij.. wijzend op Afghanistan, Pakistan en Indonesis.
besecretaris van Justitia et Pax riep de achterban van het CI)A op een heel duidelijke druk op de regering en coxok op» buet parle · 1 ment ut te Oesoe Col de Trails op dit moment met terug te Sturef)"
Ook de katholieke commissie
எட்மன் சமரக்கொடி. இவ்வாண்டு ஜனவரி 5ம் திகதி மறைந்த அந்த இலட்சியப் பெருமனுக்கு நாம் நமது ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நெதர்லாந்திலிருந்து இலங்கைத் தமிழர்கள் பற்றி ஆராந்து அறிக்கை & LD if S is 5 Wijnaen dts as Lil 6, 6ir அறிக் கையில் தென்னிலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பாக வாழலாம் என்று கு றி ப் பி ட் டி ரு ந் த து த ன க் கு ஆச்சரியமாயிருக்கிற தென்றும் ,
26
இவ்வாறு அம் ஸ் டர் டமில் உரையாற்றி இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பற்றி நெதர்லாந்து அரசிற்கு எடுத்துரைத்த துணிச்சல் மிகுந்த சிங்கள இடதுசாரி அரசியல் வாதிதான் தோழர்
NRC HANDELSBLAD Donderdag 30 mei
Sinhalese vakbondsleider:
Ook zuiden van
Skip'; āmils Önveilig:
at * MSTERDAM(DENHAAG,30*iër AlpT; iklopen werkelijk gevaar in fië 熬
ge. Zij houden het daar hooguit enkele dagen “ಕ್ಲೀ! problemen uit, cikla အဲtင်္ဃkf”
w , Yer 炫A 槛常 ''ñ:
den van Sri Lanka wel De wakhoodskeid en veilig zou
y ::ဒူး ". den zijn. Zelfs de boofdstad Co. 1
- is onveilig geworden' Culfideo yma: Sri Lanka en mai Anto- deze 端臨リ* S. of Europa. 晏.*儲 reageerde hiermee op het rapport Talk': yo de commissie wynand richter van de socialistische орро- "opdracht Yan de Nederland sitkeparti) -- beboortod. S: SS9738 de situatie op Sri Lanka
onderzocht en ao is Eerbeiden zijn land E"E E zuiden ဗုဖူးဖူး
* Are zo zei hij bij hem ind
#: }
afnofs tou
пет оргаan
3de kunt de Tamils in de huidi. 'கே, zet blij te zi
jn
odeon da”: − -Yluchtelin -
• " "El Samarukuddy Hij E.E.E.
wstropase ande
தென்னிலங்கையில் தமிழர்களை தீயிட்டுக் கொளுத் திய  ைத தா ன் நேரில் கண்டிருக்கிறேன் என்றும் இலங்கையில் தமிழர்களின் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கிறது என்றும் , 1985 மே மாதத்தில் அவர் ஆற்றிய உரையினை அரசும் மனித உரிமை இயக்கங்களும் கருத்துான்றிக் கேட்டன.
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் குளிர் காய்ந்து கொண்டு, தமிழகத்து தேர்தல் மேடைகளில் ‘தமிழீழத்தனியரசை'
 
 

வியாபாரம் செய்தும் அவ்வப்போது
ஐரோப் பிய யாத் திரை களையும் மேற்கொண்டு திரும்பும் உல்லாசியல்ல எட்மன் சமரக்கொடி. தமிழர்களுக்கு ஆதரவான தனது குரலை-அத்தகைய ஒரு நிலைப்பாடு சிங்கள இனவாத அரசின் குழலில் தனக்கு செல்வா க்கைத் தேடித்தராது என்று தெரிந்தும் கூட தனது இலட்சியத்தில் இறுதிவரை தடம் புரளாது செயற்பட்டவர் தோழர் எட்மன் சமரக்கொடி ஆவார்.
1961ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் சத்தியாக்கிரகத்திற்கு தென்னிலங்கையிலிருந்து நேரில் வந்து கலந்து தன் ஆதரவைத் தெரிவித்த முதல் சிங்கள எம்.பி இவர்தான். மாவிட்டபுர
நடைபெற்ற
ஆலயப் பிரவேசப் போராட்டத்திலும் கலந்து கொ ண் டு ம னி த அ டி ப் ப  ைட உரிமைகளுக்காகப் போராடியவர் இவர்.
எதையும் வெளிப்படையாகச் சொல்லும் தீரத்தையும் மறைக் காது வெளியிடும்
உண்மையை
இவரது நேர்மையையும் இவரது அரசியல் எதிரிகள்
கூட எற்றுக் கொள்வர்.
இலங்கை யின் அரசியல் வரலாற்றிலும் தொழிற்சங்க வரலாற்றிலும், தமிழ்-சிங்கள உறவின் சரித்திரத்திலும் எட்மன் சமரக் கொடி தீர்க்கமான பாத்திரத்தை வகிக்கிறார். சமூக நீதிக்காகவும் மனிதனின் அடிப்படை உரிமைகளுக்காகவும் இறுதிவரை போராடினார்.
சிங்கள அரசுகளின் இனவாதத்தை மிகக் கடுமையாக விமர்சித்த எட்மன் சமரக்கொடி தமிழ் விடுதலை இயக்கங்கள் சிங் கள அரசுடன் சந்தர்ப்பவாதக் கைகோர்த்துத் திரிந்த போதும் அதனைக் கண்டிக்கத் தவறவில்லை.
அரசுகளும் அரசியல் வாதிகளும் இயக்கங்களும் பொய்யை வாரி இறைத்து பிரச்சாரம் செய்ய வெட்கப்படாத ஒரு அரசியல் குழலில் தோழர் எட்மன் சமரக்கொடி போன்ற ஒரு உண்மையான அரசியல்வாதியின் மறைவு துயரமானதுதான்
அட்டைப்படம்:
660)60TLI LILS6:
WALTER KELLER. GERMANY
தூண்டில், பனிமலர், புதியகலாச்சாரம் சஞ்சிகைகளிலிருந்து நன்றியுடன் மறு பிரசுரம் செய்துள்ளோம்

Page 15
காணி நிலம் வேண்டும்
விண்ணப்பம் ஏற்கப்பட்டு அகதியென்று விடை தேவை
அகதியென்று ஆனபின்னால் நல்லதோர் நகரசபை என்னைப் பொறுப்பெடுத்தல் வேண்டும்
ஏற்ற நகரசபை
ஐந்தால் பெருக்குகையில் ஐம்பது மிஞ்சுமாப்போல் வேலையொன்று தரவேண்டும்.
வேலையை நிரந்தரமாய் ஆக்கி விட்டு
ஒள்லோவில்
விடு வாங்குவதற்கு வசதியேனில் காரொன்றெடுப்பதற்கு கடனுதவி செய்யவேண்டும்.
ஊரில் காணியோடும் வீடு, கிணற்றோடும் இன்னொருஜெயப்ரதா அமைய வேண்டும்
இவைகள் தருவாயோ? இல்லை" என்று மறுப்பாயோ?
சொல்லு பராசக்தி சேர்த்த காசை வீட்டுக்கனுப்புமுன்னம்
28 இளவாலை விஜயேந்திரன்

இலங்கைப் பிரச்சனையில் ஐக்கியநாடுகள்சபை தலையீடு சாத்தியமா?
.6T6).le.d6)&lrt
தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் கருத்துக்களத்தில் சிறந்த பணி புரியும் அ.ஆ.இ விற்கு எனது வாழ்த்துக்கள். இலங்கையின் இன்றைய அரசியல் நிலமைகளை மனதிருத்திக் கொள்ளும் பொழுது ஏனைய அரசியல் கருத்துக்களையும் ஒரு ஜனநாயகமான முறையில் மக்கள் முன் விவாதத்துக்குட் படுத்துவது ஒர் சிறந்த சஞ்சிகையின் உடனடியான தேவையாகும். அதனால் அ.ஆ.இ வை தொடர்ந்தும் ஒழுங்காக வெளியிடுவீர்கள் என நான் நம்புகிறேன்.
இலங்கை அரசின் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் உள்ள இன்றைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஐக்கியநாடுகள் சபையை (un.o) மத்தியஸ்தராக வரும்படி சமீப காலமாக சிலர் வேண்டுகோள் விடுவது பற்றி இங்கு நான் சில கருத்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
ஓர் தாராள (liberal) மனப்பாங்கு கொண்டவர்கள் அல்லது ஒரு மனிதாபிமான அடிப்படையில் நோக்கும் பொழுது மேற்கூறிய மத்தியஸ்தம் மூலம் ஓர் அரசியல் பேச்சு வார்த்தையை ஏற்படுத்தி அதனால் போரை நிறுத்தவும், இராணுவ மயமாக்குவதை நிறுத்தவும், மக்கள் தாமே தேர்ந்தெடுக்கும் ஓர் ஆட்சியை ஏற்படுத்தவும், இரு புறத்திலும் அடைத்து வைத்துள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும் அதிகாரத்தையும், மூலசாசனங்களையும் (devolution) அந்தந்தப் பிரதேசங்களுக்கு கொடுப்பதற்கும் மற்றும் இது போன்ற பிரச்சனைகட்கு தீர்வு காணலாம் என்ற நோக்கத்துடன் இவ்வகைக் குரல் எழுவதை நாம் மிகவும் பாராட்ட வேண்டியதுதான்.
ஆனால் இரு பக்கத்திலுள்ள சோவினிசமும் ஒருவருக் கெதிராக மற்றவர் காட்டும் பகைமையும் ஐக்கியநாடுகள் சபையின் மத்தியஸ்தம் மூலம் ஓர் திட்டத்தை அமுல் படுத்துவதற்கு முட்டுக்கட்டையாக அமைகிறது.
சமாதானத்துக்காக குரல் எழுப்புவோர் எந்த வேறுபட்ட நோக்கை நாடினாலும் அவர்கள் எல்லோரும் உண்மையில் மக்களின் உண்மையான பாதிப்புக்களை உணர்ந்து குரல் எழுப்புகிறார்கள் என்றே உணரப்பட வேண்டும். அப்பாதிப்பானது பொதுமக்கள் ஓர் பொறிக்குள் அகப்பட்டு தங்களின் அவல நிலைக்கு ஓர் தீர்வை எதிர் பார்க்க

Page 16
  

Page 17
இலங்8ை) : 880s தமிழ் இனமோறன்
கலாநிதி Pசரவணமுத்து
இனப்போர்:
ந்நிய சக்தியின் வில்த்தாரம்
இனரீதியான யுத்தம் முழுஅளவில் தொடர்ந்த போதுதான் இந்த மோதலில் சம்பந்தம் கொள்ள நேர்ந்த அன்னிய சக்திகளின் பரிமாணங்கள் தமிழக அரசின் அபிலாசைகளையும் இலங்கையிலிருந்து குவிந்த பெருந் தொகை அகதிகளின் பிரச்சனைகளையும் கருத்தில்க் கொண்டு இந்தியா இப்பிரச்சனையில் மத்தியல்தம் வகிக்க முனைந்தது. ஆனால் இலங்கைத் தமிழர் பிரச்சினையை இராணுவ
32
 

ரீதியாகத் தீர்ப்பதற்காக தங்களின் அணிசேராக் கொள்கையைக் கூட இலங்கை அரசு கைகழுவிவிடத் தயாராக இருக்கிறது என்பது தெட்டத்தெளிவாகத் தெரிந்தும் இந்திராகாந்தி சாதுரியமான இருமுனைத் தந்திரோபாயத்தைக் கையாண்டார். பக்கச் சார்பில்லாத மத்தியல்தராக தன்னைக் காட்டிக் கொண்ட அதே நேரத்தில் இந்திய அரசாங்கம் இலங்கையின் இராணுவ முல்தீபுகளைக் காலவரையறையின்றி ல்தம்பித்து வைக்கக் கூடிய முறையில் தமிழ் கெரில்லாக்களுக்கு தஞ்சம் அளித்ததோடு அரசியல் தீர்வை அவர் தட்டிக் கழிக்கமுடியாது என்று ஜெயவர்த்தனாவுக்கும் உணர்த்த முயன்றது. இந்தியாவின் கேந்திர முக்கியத்துவ முதன்மையை இலங்கைக்கு இந்தியா அழுத்தந் திருத்தமாக ஞாபகமூட்டியது. வெளிநாட்டுச் சக்திகள் இந்தியத் துணைக்கண்டப் பிராந்தியத்தில் தலையிடுவதை இந்தியா ஒரு போதும் அனுமதிக்க மாட்டாது என்பதே அது.
தமிழர்கள் சார்பாக இந்தியாவின் நெருக்குதலைச் சாமாளிக்க மேற்கு நாடுகளைப் பாவிக்க முயன்ற ஜெயவர்த்தனாவின் திட்டம் கைகூடவில்லை. தங்களுக்கு அத்துணை முக்கியத்துவமற்ற ஒரு பிரச்சனை தொடர்பாக புதுடில்லியுடனான உறவுக்ளைக் கைகழுவ மேற்கு நாடுகள் இணங்கவில்லை. இருந்த போதிலும் பல்வேறு நாடுகள் ஆயுதம் வழங்கல், பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சிகள் என்று இலங்கை அரசாங்கத்திற்கு மறைமுகமாக உதவிகளை வழங்கின. பயங்கரவாதத்தை எதிர்த்து அழிப்பது பற்றிய பயிற்சிகள் கொழும்பில் உள்ள அமெரிக்கத்துாதரகத்தில் அமைந்துள்ள இஸ்ரேலிய நலன்களுக்கான தனிப்பிரிவிற் கூடாகவும், மற்றும் சாணல் ஐலண்ட்ஜில் பதிவு பெற்ற கினி மீனி சேர்விலஸ் தனியார் ஸ்தாபனங்களுக் கூடாகவும் வழங்கப்பட்டன. இதனை விட பாக்கிஸ்தானிலிருந்தும் இலங்கை இராணுவப் பயிற்சியும் உதவியும் பெற்றுக் கொண்டமை இந்தியாவுக்கு மிகுந்த எரிச்சலையூட்டியது.
இலங்கையும் இந்தியாவும் நடத்திய போலி எச்சரிக்கைகள் - எதிர்ச் குழ்ச்சிகள் கண்ணாமூச்சி விளையாட்டு நீண்டகாலத்துக்கு போகவில்லை. உண்மையில் இந்த மோதலின் தீவிரமான தந்திரோபாய நடைமுறைகளை விளங்கிக் கொள்வதில் உள்ள சிரமம் தற்காலிகமானதாகத்தானிருந்தது. இலங்கை அரசாங்கமோ அல்லது தமிழ் கெரில்லாக்களோ தாம் தாம் விரும்பியபடி இராணுவ ரீதியாக இப்பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள முடியவில்லை. இந்தப்போராட்டத்தில் புவிசார் அரசியல் அம்சங்களையும் இன ரீதியிலான பரிமாணங்களையும் கணக்கில் எடுத்து நோக்கும் போது, இலங்கை அரசாங்கமோ அல்லது தமிழ் கெரில்லாக்களோ எத்தகைய குறிக்கோள்களைக் கொண்டிருந்த போதும் அவை இந்தியப் பாதுகாப்பு நலன்களுக்கு குந்தகமாகவே அமைந்தன. அரசியல் தீர்வு என்று கருதப்படுவது யாதெனில் எவ்வளவு துாரம் இந்தியா ஈழத்தமிழர் பற்றி ஆழ்ந்து யோசிக்கிறதோ அவ்வளவிற்கு தமிழ் ஈழக் கோரிக்கைக்கு மிக அண்மித்த கூடிய பட்ச மாவட்ட சுயாட்சி கிடைப்பது சாத்தியமாகும்; தனியே பிரிந்து பெறப்படும் ஈழம் அல்ல. இந்த அடிப்படையில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரையும் சாத்தியமான சில தீர்வுகளை ஏற்றுக்

Page 18
கொள்ள இணங்கவைக்கும் முயற்சியாகவே இந்திய மத்தியல்தம் அமைந்தது. இதில் சம்மந்தப்பட்ட சகல தரப்பினரும் குறைந்தபட்ச அபிலாஉை4களைத் திருப்தி செய்யத்தக்க விதத்தில், அதாவது இலங்கையின் ஒற்றையாட்சி அமைப்பு அந்தல்தைப் பேணிக் கொள்கின்ற அதே நேரத்தில் நியாயபூர்வமான தமிழர் பிரச்சனையை அங்கிகரித்தல் போன்ற அம்சங்களை உள்ளடக்கிய கூட்டுப் பிரேரணைகளை இந்தியா முன்வைத்தது.
இரு தரப்பினருக்குமிடையே பகைமை தொடர்ந்து நீடித்த போதும் 1986 ன் பிற்பகுதியில் ஜெயவர்த்தனா அரசாங்கம் கொள்கையளவில் பிரதேச சுயாட்சி வழங்க முன்வருவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. வடக்கையும் கணிசமான அளவில் சிங்களவர்களையும் முஸ்லீம் சிறுபான்மையினரையும் கொண்ட கிழக்கு மாகாணத்தையும் உள்ளடக்கிய தமிழர்களின் பாரம்பரியப் பிதேசம் என்று தமிழர்கள் கோரும் பகுதியை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.
எந்தவித சமரசத்துக்கும் வாமுடியாத நிலையில், 1987 மே மாதம் இலங்கை அரசு புதிய தாக்குதலைத் தொடங்க இராணுவத்திற்கு ஆணையிட்டது. LTTE மிகுந்த பலமுடன் விளங்கிய யாழ்ப்பாணத்தின் மீதான யுத்தத்தை 1987 ம் ஆண்டின் இறுதியில் ஆரம்பிக்க அரசு தயாராக இருந்தது. இதனால் ஏற்படக்கூடிய பாரிய உயிர்ச் சேதங்களையும் அப்போதைய தமிழ் நாட்டின் முதலமைச்சராகவிருந்த M.G. ராமச்சந்திரன் விடுதலைப் புலிகளுக்கு மனிதாபிமான உதவித் தொகையாக 3.2 மில்லியன் டாலர்களை வழங்கியிருந்த நிலையில் தமிழகத்தில் ஏற்படக் கூடிய, பாதிப்புகளையும் மனதில் கொண்டு ராஜீவ்காந்தியின் அரசாங்கம் நேரடி நடவடிக்கையில் துரிதமாக இறங்கியது. முதலில் கடல் வழியாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி இலங்கைக் கடற்படையினரால் தடுக்கப்பட்ட போது , யூன் 4ம் திகதியன்று விமானத்திலிருந்து உணவுப் பொருட்களை யாழ்ப்பாணத்தின் மீது இறங்கிய - பரபரப்பாகப் பேசப்பட்ட நிகழ்ச்சி நடந்தது. இப் பிராந்தியத்தில் தனக்குரிய ஆதிக்க சக்தியின் வில்வரூபத்தை வெளிப் படுத்தவும் இலங்கை இராணுவத் தீர்வை முன்வைக்கும் பட்சத்தில் அதனை புதுடில்லி திட்ட வட்டமாகத் தடுக்கும் என்பதை நினைவு படுத்தவுமே இந்தியா இந்த நடவடிக்கையை மேற் கொண்டிருந்தது. பிராந்தியப் புவிசார் அரசியலில் இந்தப் பாலபாடத்தை இப்போதுதான் கிரகித்துக் கொண்ட கொழும்பு, யுத்தத்தை ஆரம்பித்தால் எதிர் நோக்க வேண்டிய பொருளாதார நாசத்தையும் உணர்ந்ததால் யூலை 29ம் திகதி இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு இணங்கியது.
லங்கை-இந்திய ப்ெபங்கம்
தமிழீழத் தனியரசிற்கு பதிலாக பிரதேச சுயாட்சியை வழங்குவதே இந்த
ஒப்பந்தத்தின் மையமான அம்சமாகும். இருபக்கத்தையும் சேர்ந்த தீவிரவாதிகளின்
34

கருத்தைத் தள்ளி விட்டுப்பார்த்தால் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை எற்படுத்தக் கூடிய ஒரு சாத்தியமான தீர்வு என்று வெளி வெளியாகக் கூறாவிட்டாலும் இது பொதுவாக ஏற்பட்டதெனலாம்.
இலங்கை அரசாங்கம் தமிழை உத்தியோகபூர்வ மொழியாகவும், சிங்களவருக்கும் தமிழருக்கும் இடையிலான இணைப்பு மொழியாக ஆங்கிலத்தைப் பாவிப்பதென்றும் இணங்கியது. மாகாண சபைகளை அமைப்பதற்கான சட்டவாக்கத்தை மேற்கொள்ளவும் யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டு போராளிகள் தமது ஆயுதங்களைக் கையளிக்கும் பட்சத்தில் இராணுவம் தமது முகாம்களிலேயே முடங்கியிருக்க வேண்டும் என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. வடகிழக்கு மாகாணங்களை ஒரு நிர்வாக அலகாக இணைத்ததன் மூலம் பிரதேச எல்லை தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு பெறப்பட்டது. ஆனால் வடகிழக்கு இணைப்பு பிறகு சர்வசன வாக்கெடுப்பிற்கு விடப்பட்டே ஏற்றுக் கொள்ளபடும் எனப்பட்டது. இந்த வாக்கெடுப்பை மேற்கொள்ளும் திகதியை நிர்ணயிக்கும் பொறுப்பு ஜனாதிபதியின் கையில் விடப்பட்டது. 1991 ம் ஆண்டு அந்த வாக்கெடுப்பு நிகழும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் பொறுப்பை இந்தியா ஏற்றுக் கொண்டதோடு, போராளிகள் இதனை நிராகரித்தால் அவர்களது கெரில்லா நடவடிக்கைகளைத் தடுப்பதில் தாம் ஒத்துழைப்பு நல்குவதாகவும் இந்தியா உறுதியளித்தது. இலங்கை ஜனாதிபதியின் வேண்டுதலின் பேரில் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசுக்கு உதவுமுகமாக இந்திய அரசு வடகிழக்கிற்கு சமாதானப் படைகளை அனுப்பி வைத்தது. தாம் உறுதியளித்ததற் கிணங்க இந்தியா உடனடியாக 8000 சமாதானப் படை வீரர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்ததுடன் ஒப்பந்தம் அமுலாக்கப்பட ஆரம்பித்த நாட்களில் 50,000 பேராக இதனை அதிகரித்தது.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் அனுபந்தமாக இணைக்கப் பட்டிருந்த இருநாட்டுத் தலைவர்களுக்குமிடையில் பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்கள் இலங்கை-இந்திய அரசுகளின் மட்டத்தில் மிகுந்த சர்ச்சைக்குரிய தொன்றாக அமைந்தது. இக்கடிதப் பரிவர்த்தனை இணைப்பு இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையின் மீது இந்தியாவிற்கு பூரணமான வீட்டோ அதிகாரத்தை வழங்கியிருந்தது.
இந்தியப் பாதுகாப்பு நலன்களுக்கு ஊறு நேராத வகையில் வெளிநாட்டு இராணுவ உதவிகள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஒலிபரப்பு வசதிகள் செய்து கொடுப்பதிலும் தனது ஒழுங்கமைப்புக்களை இலங்கை மீழ்பரிசீலனை செய்யும் என்று கூறியதோடு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலைத் துறைமுகத்தைப் பொறுத்தும் இதே நடைமுறைகள் பிரயோகிக்கப்படும் என்றும் இலங்கை அறிவித்தது. இந்திய அக்கறையைப் பெரிதும் ஈர்த்திருந்த திருகோணமலையில் உள்ள எண்ணைய் தேக்கி வைக்கும் நிலையங்களை இரண்டு அரசாங்களின் கூட்டு முயற்சியால் விருத்தி செய்வதிலும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

Page 19
|ჩიმიIQub தீவிரவாதத்தை நோக்கி.
மாகாண சுயாட்சியைப் பொறுத்தவரை இந்த ஒப்பந்தம் கணிசமாக சாதிக்கக் கூடிய தன்மையைப் பெற்றிருந்த போதும், தமிழ் மக்களின் தெளிவான-திட்டவட்டமான ஆணையின்றி தமிழ் மக்கள் சார்பில் இந்தியா மத்தியஸ்த்தம் வகிக்க முடியும் என்ற அனுமானத்தில் மிகப்பெரிய தவறிழைத்துவிட்டது. இந்தியாவின் பலவந்தத்தின் பேரில் ஆரம்பத்தில் LTTE தனது ஆயுதங்களின் ஒரு பகுதியைக் கையளித்த போதும், இந்தியாவின் தாக்குதல் முல்தீபுகளைத் தொடர்ந்து 1987 அக்டோபரில் IPKF ற்கு எதிரான கெரில்லா யுத்தத்தில் LTTE மீண்டும் இறங்கியது. அழுங்குத்தனமும் தாம் எதிர் நோக்கியுள்ள கடமையின் தன்மை என்னவென்று புரிந்து கொள்ள முடியாத அறியாமையும் நாசகாரமான முறையில் இணைந்தபோது அது தமிழ் மக்கள் இந்திய அரசின் மீது வைத்திருந்த நல்லெண்ணம் அனைத்தையும் அறவே துடைத் தெறிந்து விட்டது. இது ஈழத்தமிழ் மக்களின் பாதுகாவலன் தான் மாத்திரமே என்று LTTE தங்களை முன்நிறுத்திக் கொள்ள உதவியது. இலங்கையின் வட, கிழக்கு அரசியல் நிலமை பற்றி தொடர்ச்சியாக தவறான கணிப்பீடுகளையே கொண்டிருந்த இந்தியா ஈழத்து அரசியல் நடைமுறையில் நேரடியாகத் தலையிடுவதன் மூலம் LTTE னை வெல்ல முனைந்தது. 1988 நவம்பர் மாகாண சபைத்தேர்தலை LTTE பகிஷ்கரித்த நிலையில், கிழக்கு மாகாணத்தை தளமாகக் கொண்ட EPRLF இந்தியாவின் விருப்பத்திற்கு இணைவாகவெற்றி பெறுவதைப் பார்த்துக் கொள்ளும் வேலையில் IPKF இறங்கியது. வடக்கில் உறுதியான ஆதரவு இல்லாத நிலையில் இந்தியப் பாதுகாப்பிலும் கொழும்பின் நல்லெண்ண உறவிலுமே பெரிதும் தங்கியிருந்த EPRLF கவுன்சிலுக்கான சட்டபூர்வமான நியாயம் என்பது ஒரு வரையறைக்குட்பட்டதுதான். LTTE ஐச் சமாளிக்கக் கூடிய சத்தியாக அதனால் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியவில்லை. IPKF யுடன் இதனையும் சேர்த்து ஒரே முகாமுக்குள் தள்ளியதில் ஆச்சரியம் எதுவும் இல்லாது போய்விட்டது.
1990 மார்ச் இறுதியில் இந்தியா தனது படைகளை திரும்ப அழைத்துக் கொண்டிருந்த நேரத்தில், IPKF இந்திய குறிக்கோள்களை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கப் பண்ணியிருந்தது. IPKF சில அட்டூழியங்களுக்கு பொறுப்பானாலும் 1987ல் வடக்கில் ஒரு இரத்த ஆறு பாய்வதைத் தடுத்ததுடன் ஒரு குறுகிய காலத்திற்காவது பிரிவினை வாதத்தைத் தள்ளி வைத்திருந்தது. JVP யின் இரண்டாவது கிளர்ச்சி வெடித்தெழுவதற்கு IPKFன் பிரசன்னமே காரணமாயினும் மறைமுகமாக அக்கிளர்ச்சியை அழித்தொழிக்க அதுவே இலங்கை அரசாங்கத்திற்கு உதவியது எனலாம். இரண்டு முனைகளிலிருந்தும் இலங்கை அரசு கெரில்லா யுத்தத்தை எதிர் நோக்கவேண்டிய நிலையிலிருந்து அதனை இது விடுவித்தது. தமக்கு
36

மிகவும் அனுகூலமான சலுகைகளை வழங்கிய இலங்கைக்கு இந்தியா செய்த பேருதவியாக இது அமைந்தது.
இந்த ஒப்பந்தமும் கடிதப்பரிவர்த்தனை அனுபந்தமும் தெற்கில் சடுதியான வன்முறை எதிர்ப்பை கிளப்பியது. இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் இந்தியாவின் அவசியமே இல்லாத - அநாவசிய தலையீடு என்று இது கருதப்பட்டது. "இந்திய இணைப்பு" பற்றிய அச்சம் குறித்தும் பேசப்பட்டது. "மாகாண சுயாட்சி" பற்றிய உத்தரவாதம் வெறும் ஏமாற்று என கருதப்பட்டதுடன் இலங்கையின் மத்திய அரசின் அதிகாரத்தை அதில் பங்கு கொண்டு பின் அழித்தொழிப்பதற்கு தீர்க்கமான முன்மாதிரி நடவடிக்கையே இது என்று குறிப்பிடப்பட்டது. பிரேமதாசாவும் தேசிய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத்முதலியும் இந்த ஒப்பந்தத்துக்கு எதிரான தங்களின் சந்தேகங்களை வெளிப்படையாகவே தெரிவித்தனர். எதிர்க்கட்சியான SLFP மாகாண சுயாட்சியை பூரணமாக நிராகரித்தது. இலங்கை இந்திய உறவில் தாங்கள் இவ்வளவு கீழிறங்கிப் போகாமலேயே சாதித்திருப்போம் என்று உச்ச ஸ்தாயில் முழங்கியது. அரசியல் ஸ்தாபனங்கள் சிங்கள தேசத்துக்கு இழைத்த நம்பிக்கைத் துரோகம்தான் இந்த ஒப்பந்தம் என்று இதனைச் சித்தரித்த ஜே.வி.பி சிங்களத் தேசியத்தின் நாயகனாக புது அவதாரம் பெற்றது இங்கு கூர்ந்து கவனிக்க வேண்டியதாகும். இச்சந்தர்ப்பத்தில் ஜே.வி.பி தனது ஆயுதக் கிளர்ச்சியை மூர்க்கமாகக் கொண்டு நடத்த ஜனரஞ்சக உணர்ச்சிக் கொந்தளிப்புக்களை சாதகமாக பயன்படுத்திக் கொண்டது.
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் (டிசம்பர் 1988, பெப்பிரவரி 1989) நடைபெற்ற 1987 - 89 காலப்பகுதி முழுவதும் ஜே.வி.பி தனது கிளர்ச்சிகளை சீராக வில்தரித்துக் கொண்டிருந்தது. அரசியல் படுகொலைகள் செய்தலையும் பொருளாதாரச் சீரழிவுகளை ஏற்படுத்தும் வேலைநிறுத்தங்களை மேற்கொள்வதும் ஜே.வி.பி யின் தந்திரோபாயமாக இருந்தது. ஜே.வி.பி யின் நடவடிக்கைகளுக்கு சமதையாக அரச படைகளையும் ராணுவ குழுக்களையும் கொண்டு அரசாங்கம் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை விட்டுக்கொடுக்காமல் மூர்க்கத்துடன் மேற்கொண்டது. ஜே.வி.பி சாதிக்க நினைத்தபடி தேர்தல் பிரச்சாரங்களில் வன்முறை நிலவியது. தேர்தல் வேட்பாளர்கள் அச்சுறுத்தலுக்கு பயந்து போயிருந்தனர். தேர்தல் முடிவுகளும் இதற்கேற்ப வேறுபட்டமைந்தன. ஜே.வி.பி யின் இந்த நடவடிக்கைகளினாலோ அல்லது இவற்றை மீறியோ யூ.என்.பி, ஆட்சி அதிகாரத்தை சுவீகரித்துக்கொண்டதுடன் 1989 ன் இறுதியில் ஜே.வி.பி கிளர்ச்சியையும் முறியடித்தது.
ஜே.வி.பி யை நோக்கி தனது கவனத்தை செலுத்துமுன் பிரேமதாசா இனப்பிரச்சினை சம்பந்தமாக பல்வேறு அரசியல் சக்திகளுடன் தற்காலிகமான புதிய கூட்டினை ஏற்படுத்திக் கொண்டார். IPKF ஐ வெளியேற்றுவதில் ஜனாதிபதிக்கும் LTTE க்கும் இருந்த பொதுத் தேவை கருதி இருசாராரும் இணைந்து செயற்பட்டனர். தனது தேசிய சாதனையைப் பிரகடனம் செய்யவும் அன்னியத் தலையீடு

Page 20
இல்லாமல் இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்கப் போவதாக தான் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவும் LTTE யுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார், LTTE யும் தங்களுக்கு நட்டம் ஏற்படாமல் IPKF வை வெளியேற்றும் லாபகரமான பேரத்தில் ஈடுபட இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தினர். இந்த தொடர்புகளை மே மாதம் அளவிலேயே ஆரம்பித்துவிட்ட பிரேமதாசா பின்னர் இலங்கை இந்திய உறவின் மிக மோசமான நெருக்கடியை கட்டவிழ்த்து செயற்பட ஆரம்பித்து விட்டார். இந்திய சமாதானப் படை இலங்கைக்கு வந்து சேர்ந்த 2 வது ஆண்டு நிறைவுறும் யூலை 29 ம் திகதி IPKF இலங்கையிலிருந்து பூரணமாக வெளியேறிவிட வேண்டும் என்று 1989 யூலை 2 ம் திகதி பிரேமதாசா தானே ஒருமனதான அறிவிப்பை செய்தார். இந்தியா அதனை நிராகரித்து விடுமானால் தாங்கள் அதனை வெளியேற்றுவோம் என்றும் அச்சுறுத்தினார். இது உள்ளுர் அரசியல் லாபம் கருதிய வீராப்புப் பேச்சாயினும் ஒரு பதட்ட நிலையை உருவாக்குவதில் அது வெற்றியளித்தது. LTTE யும் அரசபடைகளுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்திக்கொள்வது போன்ற சமிக்ஞையை அரசுக்கு சாதகமாக அறிவித்தது. இந்திய சமாதானப் படையோடு சேர்த்து ஜனாதிபதியையும் அகற்றுவதில் அக்கறை கொண்ட ஜே.வி.பி தனது பயங்கரவாத நடவடிக்கைகளை அதிகரித்ததுடன் முழு தேசத்தையுமே கிட்டத்தட்ட அராஜகத்தில் அழுத்தியது. இந்தப்பதட்ட நிலை பின் தணிந்து அரசியல் பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகின. சமாதானப் பணி வெளியேறுவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டதுடன் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையேயான புதுஉறவினை நெறிப்படுத்துமுகமாக gմե உடன்படிக்கை செய்து கொள்வது பற்றியும் பிரஸ்தாபிக்கப் பட்டது.
1990 ஏப்ரல் அளவில் இலங்கைக்கு சாதகமாக-அவதானத்தோடு கூடிய நம்பிக்கையோடு இலங்கையை அணுகத்தக்க பல காரணிகளைக் குறிப்பிடலாம். அரசாங்கத்திற்கும் LTTE க்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து கொண்டிருந்தன. தேசிய அரசியலில் பங்கு கொள்ளும் நோக்குடன் 1989 டிசெம்பரில் LTTE "விடுதலைப்புலிகளின் மக்கள் முன்னணி" என்ற பெயரில் அரசியற் கட்சியை அமைத்தது. ஆனால் ஈழத்தைப்ப்றி ஒரு கதையுமில்லை. IPKF விட்டு வெளியேறிய பகுதிகளை எல்லாம் LTTE தன் வசமாக்கியது. வடகிழக்கில் EPRLF ன் கடைசி நோ இராணுவ நடவடிக்கைகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன. LTTE அரைவாசி அரசாங்கம் போல அதிகாரங்களை பிரயோகிக்க ஆரம்பித்தது. தெற்கில் ஜே.வி.பி யின் இராணுவ முதுகெலும்பு நொறுக்கப்பட்டது. பயங்கரவாதத்திற்கு எதிராக அரச நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய மூர்க்கமான நடவடிக்கைகளுக்கு இது நியாயார்த்தம் கற்பித்தது. பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில், கடன் வழங்கும் சர்வதேச அமைப்புக்கள் அவசியமான உதவிகளை வழங்குவதில் தாராளமாக இருந்தன. ஆனால், அரசு ஆடம்பரமான செலவுகளில் ஈடுபடாது சிக்கனமாக நடந்துகொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. மேலோட்டமாகப் பார்க்கும் போது, நல்லிணக்கமும்
புனரமைப்பும் இறுதியில் சாத்தியமாகும் போல் தோன்றியது.
.தொடரும். 38

"OSAII"
CWO STIHIIR L'HELW AM 20, RUE DE LA FOLLE MERICOURT
75O1 PARIS
SSS
காலாண்டிதழ் FRANCE
"SA MAR"
BOITE- 188, BAT E
150.R.UE. LEOPOLD RECHOSSIERE
933}0 ALBERVILLIERS
FRANCE
"MA.NITHAM"
POSTFACH– I
300C) BERN
SWITAERLAND
பனிமலர்
"PANIMALAR"
BCM POLARI,5
LONDON WCIN 3XX
U.K.
"THOON DIL"
SLJEDA SIEN BLUERO
GROSSE HEIM STR 58
4f500 DORTMLJND 1
GERMANY
町以而

Page 21
Tijdschrift voor Tamils ir
"ه
[ፀ፰
 

Nederland