கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அ ஆ இ 1993.02

Page 1
1993
FEBRUARY
9?! C ≡. >'); 邦比 「R니 역 s- . [...] [J] TŌ Es=* - 丁鑫 ( )
 


Page 2
A AA IE காலாண்டு இதழ்
கவடு 12
பெப்பிரவரி 1993
வெளியீடு
இலங் கைக் கலாச்சாரக் (5Մ
நெதர்லா ந்து
முகவரி:
A AA IE Post bus 85326 3508 A H Utrecht Nederland
பிரம்படி
(இரண்டு கவிதைகள்) சிவசேகரம்
பிட்டுக்கு மண்சுமந்த பிரான்மீது பட்டஅடி அணையைக் கட்டிமுடிக்காத பிழைக்காக பிரம்பெடுத்த ஆள்மீது பிரானை அடித்ததற்காக ஆணையிட்ட பாண்டியன்மேல் பிரம்பு அவனது என்பதற்காக வாதவூரன்மீது நொந்தழுது வெள்ளத்தை வரவழைத்தற்காக வாணிச்சிமீது. பிட்டு உதிர்ந்தற்காக ஊரார்மீது. அடிக்க ஒரு பிரம்பு இருந்ததற்காக
朝
துரோகி எனத் தீர்த்து முன்னொருநாட் கட்டவெடி கட்டவனைச் சுட்டது கடக்கண்டவனைச் சுட்டது கடுமாறு ஆணை
இட்டவனைச் கட்டது குற்றஞ் சாட்டியவனை வழக்குரைத்தவனைச் சாட்சி சொன்னவனைத் தீர்ப்பு வழங்கியவனைச் சுட்டது தீர்ப்பை ஏற்றவனைச் சுட்டது எதிர்த்தவனைச் சுட்டது சும்மா இருந்தவனையுஞ்
கட்டது
நன்றி: தேவி எழுந்தாள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'. '':ii liitti riisi Jiוץor :', 'PR f' Illi ta' r refer " Itsi : rir! y Fir 's':' + '):'T' } ) 'JI'M: 11:'{] ,ኛ ( , ̈ ና-55!.+
அஆஇ தனது சுவடுகள் பதித்து மூன்று ஆண்டுகள் கடந்து வந்திருக்கிறது. இந்தப் பாதையில் அஆஇ சந்தித்துள்ள சம்பவங்களும், எதிர்ப்புக்களும் மிக அதிகம். ஆயினும் மேலும் தொடர்ந்து வளர்கிறது.
புதிய நோக்குடனும், பலபடிப்பினைகளோடும். உலகம் பரந்த தொடர் புக ளு டனும் ஆதரவுக் கரங்க ளின் நம்பிக்கைகளுடனும் எழுந்து எழுந்து நடக்கிறது.
ஆதரவுக்காம் கொடுத்து ஆக்கபூர்வ விமர்சனங்களை முன்வைத்து அஆஇ வை கடந்த மூன்று ஆண்டுகளாக வளர்த்தெடுத்த வாசகர்கள், ஆக்கதாரர்கள், அபிமானிகளை அஆஇ நன்றியுடன் நினைவில் கொள்கிறது. தொடரும் இதன் முயற்ச்சிகளில் உங்களின் பங்களிப்பினை எதிர்பார்க்கிறது.
உலகின் சில பாகங்களிலும் நிலமை மாற்றங்களும், பல பகுதிகளில் மாறாமலும், மேலும் மோசமாகியும் வளர்கிறது. அ ஆ இ பல விடையங்களின் மீதும் கேள்விகளையும். விமர்சனங்களையும். கண்டனங்களையும் - ஆரவுகளையும் கோரியிருக்கிறது. பல புதிய பார்வைகளையும். தமிழுக்கு புதிதான விடையங்களையும் அறிமுகம் செய்துள்ளது.
ஐரோப்பிய குழலும், இலங்கையின் அரசியல் - இயக்கப் போராட்டங்களும் பலரிடையே விரக்தி, அவநம்பிக்கை, குரோதம், எல்லாம் போதும் என்ற மனப்பாங்கு, நாங்கள் செய்தவையே பெரிது என்கிற எண்ணம் கொள்ளுதலை நிராகரித்து அஆஇ புதிய எழுத்துக்களுக்கும், எப்போதும் புதிய ன தோன்றும் - அதன் உணர்வுகளுக்கு கனம் கொடுத்தல் என்ற எண்ணங்களோடு வளர்கிறது. வளரும் என்ற நம்பிக்கைகளுடன் நாமும்
ஆசிரியகுழு

Page 3
இலக்கியச் சந்திப்பு
நான்கு வருடங்களாக சாதித்தது தான் என்ன? குறைந்த பட்ச வேலைத்திட்டங்கள் ஏதாவது உண்டா? வட்டத்தை அகலித்தால் என்ன? - இப்படிக் குடம் குடமாய் கேள்விகள்
சந்திப்புக்களின் வெற்றி தோல்விகள் பற்றிய மீள் பரிசீலனை பொதுவான இலக்கிய வேலைத்திட்டம் இலக்கியப் பொது நிதியம் - இப்படி மூட்டை மூட்டையாய் இலவச ஆலோசனைகள். வெளிநடப்புச் செய்யப் போகிறேன் ! உங்களை எல்லாம் எப்படி அம்பலப்படுத்துகிறேன் என்று பார் என் கருத்துச் சுதந்திரத்தையே “கருத்தடை செய்து விட்டார்களே! - இப்படி அறிவு குனியங்களின் வயிற்றெரிச்சல் புலம்பல்கள்!
இதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பு நிதானமாய் அமைதியாய் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
பத்திரிகையில் தத்துவ ஆயுதம் செய்து இலங்கைக்கு ஏற்றுமதி செய்து சமூகத்தை ரட்சித்துவிடப் போவதாக சில குனியங்கள் பிதற்றுவதிலிருந்து
எங்களுக்கு இப்படிக் கலந்துரையாடல்களில்- கருத்துப் பரிமாற்றங்களில் நம்பிக்கையில்லை. நான் கவிதையை எழுதி புஸ்தகமாய் போட்டுத் தருகிறேன். நீங்கள் முகம் கொள்ளுங்கள். நான் எனது றுமில்தான் முகம் கொள்வேன் என்ற கவிதை இயக்கப் பிரமாக்களின் உபதேசங்களிலிருந்து
இலக்கிய, பத்திரிகை உலகம் ஐரோப்பாவில் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. பாரிஸ் இலக்கியச் சந்திப்பு மகத்தான வெற்றியைத்தான் தந்திருக்கிறது. சிலருக்கு ஆழ்ந்த கருத்தாடல்கள் எங்காவது நடந்தால் பற்றிக் கொண்டு வருகிறது - தங்களது அறிவு குனியத்தை இது போன்ற இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சிகள் வெளிச்சம் போட்டுக்காட்டி விடுகின்றனவே என்ற இவர்களின் அச்ச உணர்வு நமக்குப் புரியத்தான் செய்கிறது. சந்திரனைப்பார்த்து. (பாரிஸில் ஒரு மூலையிலிருந்து இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியைக்
கேட்டுக் கொண்டிருந்த ஒருவனின் இலவச அபிப்பிராயங்கள்.
ULIrÄida66är
Bங்களாதேஷ் ஒலியன்.
Debabrata Mukhopadhyay
 
 

மகிந்தன் மிச்சமாய் இருந்த கொஞ்ச நஞ்ச விஸ் கியையும் அப்படியே
விழுங்கினான். சிகரெட்டைப் பற்றவைத்து புகையை ஆழமாய் உள் இழுத்து புகை வட்டங்களாய் ஊதினான். விழிகளில் கண்ணிர் துளிகள் திரள மேசைமீது பரவியிருந்த கடிதங்களை நிதானமாகப் பார்த்தான்.
கார்த்திகா இறந்துவிட்டாள் என்பது உண்மைதான். அவள் மரணிக்காமல் இருந்திருக்கக்கூடாதா? என்று மனசு ஏங்கியது.
மாத இதழொன்றிலிருந்து கிழித்து எடுக்கப்பட்ட பக்கமொன்றில் கார்த்திகாவின் படம் அவளது இராணுவத்தின் உயர்பதவிப் பெயருடன் அச்சாகியிருந்தது. படத்தில்தான் எவ்வளவு தீர்க்கமான பார்வையோடு காட்சி தருகிறாள்.
S

Page 4
எத்தனையோ வருடங்களுக்கு முன்பு பார்த்த கார்த்திகா உதடுகளில் ஒட்டிக்கொண்ட அந்த அமைதியான புன்னகை யாராலோ பறிக்கப்பட்டு ராணுவ உடையில் நிதானமாய் ஏக்கமாய் எங்கோ பார்த்து.
துக்கம் அவன் நெஞ்சையடைத்தது.
அவளுடன் பழகிய அந்த கல்லூரி நாட்கள்தான் எவ்வளவு இனிமையானது. இல்ல விளையாட்டுப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள், சஞ்சிகை வெளியீடுகள் என்றெல்லாம் வரும்போது அவளது செயல் திறனையும் முடிவெடுக்கும் ஆற்றலையும் மகிந்தன் எத்தனையோ முறை வியந்து பார்த்திருக்கிறான். தான் எடுக்கும் எந்தமுடிவினாலும் மற்றவர்கள் பாதிப்படையக் கூடாது என்பதில் அவள் எப்போதும் கவனமாக இருப்பாள்.
மகிந்தன் சிகரெட்டை Ash tray யில் அழுத்தினான். கல்லுாரியை விட்டு வெளியேறிய இறுதி நாட்களை நோக்கி அவன் மனம் தாவியது.
"கார்த்தி"
வகுப்பறையில் தனியே இருந்த அவள் திடுக்கிட்டுத் திரும்பினாள். கல்லூரி மாணவிகளுக்கே உரித்தான மாலைநோக் களைப்பு அவளது முகத்தில் துல்லியமாகத் தெரிந்தது. கட்டுக்கடங்காத கூந்தல் கற்றைகளில் சில கன்னங்களில் முத்தமிட்டு விளையாடியது. உதடுகள் ஈரத்தன்மையை இழந்திருந்தும் அழகாய்ப் புன்னகைத்தது. என்னேரமும் படபடப்பாய் மூடித்திறக்கும் அந்த அழகிய விழிமடல்கள் ஒருகணம்
இமைக்க மறந்து நேராகப்பார்த்த போதுதான் வெட்கப்பட்டு குனிந்து கொண்டான்.
"எப்ப மகி விட்டாங்க..?"
"அடித்தாங்கள மகி?"
8 w w
கார்த்திகாவின் விழிகளில் கண்ணிர் அணை கட்டியது. எதுவும் பேசமுடியாமல் குனிந்து கொண்டாள்.
"கார்த்தி"- மெதுவாக அழைத்தான்.

கன்னங்களில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டு நிமிர்ந்தான்.
"நான் இனி ஸ்கூலுக்கு வரமாட்டன்" சட்டென சொல்லி முடித்தான்.
"ஏன் மகி.? "
"சிலகாலம் மறைவாக இருக்கவேண்டிய நிலைமை"
"அப்படியானால்..?"
"இல்ல மகி நான் ஏற்றுக்கொள்ளமாட்டன். அமைதியான போராட்டங்களாலும் ஜனநாயக வழிமுறையாலும் எந்த உரிமையையும் வென்றெடுத்திட முடியும். சற்றுக் காலதாமதம் ஆகலாம் அவ்வளவுதான்"
"நிச்சயமாக முடியாது. அதற்கான காலம் இப்போது கடந்து விட்டது."
"உங்களை நான் தடுத்து நிறுத்தப் போவதில்லை. அது சாத்தியமாகாததும் கூட. உங்களது இலக்குகள் மிகவும் சரியானதும் தேவையானதுமாயினும் நீங்கள் எடுக்கப் போகும் போராட்ட வடிவத்துடன் நான் எப்போதும் முரண்பட்டுத்தான் நிற்பேன். ஆனால் என்றோ ஒரு நாள்."
டெலிபோன் சத்தமிட்டது.
நினைவுகள் துண்டுபட நிசீவரை எடுத்தான். மோனிகா சலஸின் வெற்றி சந்தோஷத்தில் பங்கு போட முனையும் நண்பன் எதிர்முனையில். அந்த சோகத்திலும் மகிந்தன் சிரித்துக் கொண்டான். சிந்தனைகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டு கேள்விக்குறிகளாய் நீண்டது. தேசத்தில் தினமும் நடக்கும் மரணங்களுக்காக அவனது மனம் வருந்தாமல் இருந்ததில்லை. கடந்த காலங்களில் உயிர் நண்பர்கள், உறவினர்கள் என்று எத்தனையோ பேரின் மரணச் செய்திகளை அறிந்த போதும் இவ்வளவு குழப்பங்கள் ஏற்பட்டதில்லை. இவ்வளவு சிந்தனைகள் துாண்டப்படவில்லை. ஆனால் இந்தக் கார்த்திகாவின் மரணம் மட்டும் ஏன் தன்னில் இவ்வளவு குழப்பங்களை ஏற்படுத்துகிறது? புரியாமல் தவித்தான்.
அந்தக் கடைசிச் சந்திப்பிற்குப் பிறகு கார்த்திகாவைச் சந்திக்கும் வாய்ப்பு மகிந்தனுக்கு கிடைக்கவேயில்லை.

Page 5
பின் ஊமையாய் தேசத்திலிருந்து வெளியேறி ஐரோப்பிய மண்ணின் அகதி வாழ்வுக்குள் சங்கமம்.
வந்து சில மாதங்களிலேயே கார்த்திகாவின் அறுந்துபோன நட்பு மீண்டும் தேவைப் படுவது போல அவனுக்கு தோன்றியது. அதன் விளைவாக எங்கேயோ அவளின் புதிய முகவரியை அறிந்து கடிதத் தொடர்பையும் ஏற்படுத்திக் கொண்டான்.
அவ்வப்போது கார்த்திகாவிடமிருந்து கண்ணிவெடியில் சிக்காமல் காலதாமதமாய் வரும் கடிதங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
முடிந்து போன காலங்களில் ஏற்பட்டுப் போன நிகழ்வுகள், தவறுகள் எதையும் வெளிக்காட்டாமல்-எந்தவித சலனமுமில்லாமல் மகிந்தனின் சுகத்தை விசாரித்திருப்பாள். பல்கலைக்கழக அனுமதி கிடைக்காததை.தொடர்ந்து நடைபெறும் யுத்தம் பற்றி.தான் செய்யும் இலவச மருத்துவ பணிபற்றி.
மகிந்தன் அர்த்தமற்ற அகதி வாழ்வு பற்றி விவரிப்பான். அங்கு நடக்கும் நிகழ்வுகளை தவறாமல் எழுதும்படி உரிமையுடன் கேட்டிருப்பான். பலவருடங்களாக தான் ஓவியம் வரைவதை நிறுத்தியிருப்பதைப் பற்றி. அதற்கு தனது கரங்கள் வலுவிழந்திருப்பதைப் பற்றி - இப்படி எத்தனையோ விஷயங்களைப் பற்றி எழுதியிருப்பான்.
இறுதியாக கார்த்திகா தனக்கு எழுதிய கடிதத்தின் மீது அவன் விழிமீன்கள் மேய்ந்தன.
"...இந்தக் கடிதம் எனது இறுதிக் கடிதமாகக்கூட இருக்கலாம். மக்கள் இல்லாத வெறும் மண்மட்டும்தான் மிஞ்சுமோ என்று அடிக்கடி யோசிக்கிறேன்.
"இனிவரும் நாட்களில் நானுமே மரணிக்க நேரலாம். அதற்கு முதல் உங்களிடம் உரிமையுடன் ஒன்று கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். நிச்சயமாக நான் முடிக்கும் இடத்திலிருந்து தொடங்குங்கள் என்று நான் கேட்கமாட்டேன். நான் கேட்பதெல்லாம் கடந்த காலங்களில் உங்களால் வரைய முடியாது என்று நீங்கள் கைவிட்டுவிட்ட ஓவியங்களை நீங்கள் மீண்டும் தீட்டவேண்டும்".
"சிதையுண்டு போன வாழ்விலிருந்து விடுபட்டு வலுவிழந்து போன உங்கள் கரங்களுக்கு உரமேற்றி எனக்கு பிடித்தமான தைலவண்ணங்களைக் கொண்டு தேசத்தில் நடக்கும் நிகழ்வுகளை துாரிகை கொண்டு நீங்கள் சித்திரங்கள் ஆக்கவேண்டும். இந்த என் அன்பு வேண்டுகோள்களை ஏற்றுக்கொள்வீர்களா?"

மகிந்தனுக்கு தனது கரங்கள் வலுப்பெறுவது போலத் தோன்றியது. கார்த்திகா என்ற அன்புமலர் கொடுத்துவிட்டுப் போன வேண்டுகோளின் அர்த்தங்களை அவன் இப்போது புரிந்து கொண்டு விட்டான்.
ஒரு புதிய வேகத்துடன் மதுக் கோப்பைகளை அகற்றிவிட்டு காய்ந்து போயிருந்த வர்ணங்களை எடுத்துவந்து கலவை செய்தான். மனமும் லேசாக இளகியது. கார்த்தியின் கல்லறையிலிருந்து அவனது தைலவண்ண ஓவியங்கள் மீண்டும் உயிர் பெறப் போகின்றது!
வாழ்வு எந்தமண்ணில்தான் மலரமாட்டாது?
குரிய ஒளி இல்லாதுபோனால்.
கலாநிதி சி.பத்மமனோகரன்
இலங்கை, இந்தியா போன்ற உஷ்ணவலய நாடுகளிலிருந்து ஐரோப்பாவை நோக்கி குடியேறியவர்கள் மத்தியில் விஷேசமான் சத்துக் குறைவுத் தன்மைகள் காணப்படுவது இப்போது தெரியவந்துள்ளது. குரிய ஒளி ஐரோப்பாவில் மிகவும் குறைவாக இருப்பதால் உஷ்ணவலயங்களிலிருந்து குடியேறியவர்களின் மத்தியில் எலும்பில் பல பாதகமான தாக்கங்கள் ஏற்படக் காரணமாய் உள்ளது. ஏனெனில் இவர்கள் தாங்கள் ஏற்கனவே பழகிக்கொண்டுவிட்ட உணவு, உடைப் பழக்கவழக்கங்களையே தொடர்ந்தும் இங்கும் கைக்கொள்வதால் இவர்களுக்கு விற்றமின் D பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் இவர்களின் எலும்புகள் போதியளவு வளர்ச்சியடையாமல் இருப்பதுடன் வளரும் எலும்புகளும் வளையும் தன்மையை கொண்டிருப்பதுடன் அவை வேறு வடிவங்களையும் எடுக்கின்றன. முக்கியமாக, இளம்பெண்கள் வீட்டினுள்ளேயே அதிக நேரத்தைக் கழிப்பதனால் இவர்கள் அதிக உடல் நலக்குறைவுகளுக்கு உள்ளாகும் நிலை பெரிதும் நிலவுகிறது. அண்மையில் வெளியான நெதர்லாந்து மருத்துவ சஞ்சிகையில்" இக்கருத்து தெரிவிக்கப் பட்டுள்ளது.

Page 6
இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி ஒன்றிலிருந்து ஆசியாவிலிருந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்து அங்கு 5 வருடங்களுக்கு மேல் வசிப்பவர்களில் 10% - 25% மானோருக்கு விற்றமின் D குறைபாடு அல்லது பற்றாக்குறை உண்டு என கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பெரும்பாலும் மரக்கறி மட்டுமே உண்ணும் சைவசமயத்தவர்களே இதனால் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளார்கள் என்றும் தெரியவருகிறது. இவர்கள் இறைச்சி, மீன் வகைகளை உண்ணாதவர்களும், தனித்து மரக்கறியை மட்டுமே உண்பவர்களுமாவர். இவர்கள் கால்நடை மிருகங்களிலிருந்து பெறப்படும் உணவுப் பொருட்களான பால்,முட்டைபட்டர் என்பவற்றையும் உண்பதில்லை.
நெதர்லாந்திலும் அனேகமாக வெளிநாட்டவர்கள் விற்றமின் D பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்குக் காரணம் தனியே குரிய ஒளி பலமணி நேரங்களுக்கு கிடைக்காதது மட்டுமல்ல இவர்கள் தங்கள் உடலை கழுத்திலிருந்து கால்வரை உடைகளால் மூடிக்கொள்வதால் போதியளவு குரிய ஒளியைப் பெறமுடியாமல் போவதுமாகும். மேலும் அனேகமாக இந்த உஷ்ண வலய நாடுகளிலிருந்து குடியேறியவர்கள் கறுத்த தோல் படைத்தவர்களாக இருப்பதால் கழி ஊதாக்கதிர்கள் இலகுவாக உடலினுள் செல்லமுடியாது. குரியனிலிருந்து வெளிவரும் கழி ஊதாக்கதிர்கள் எமது விற்றமின் D யின் மூலப்பொருள் காரணியாகும். போதியளவு குரியஒளி எமது தோலில் பட்டால், எங்களுக்குத் தேவையான அளவு விற்றமின் D யை உணவிலி ருந்துதான் நாம் பெற்றுக்கொள்ளவேண்டிய தேவை இல்லை. ஆனால் இந்த நாடுகளில் விற்றமின் D பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு நாம் பால் உணவுகளையும் மீனையும் போதியளவு உட்கொள்ளவேண்டும். மரக்கறி மட்டுமே உண்பவர்கள் மாஜரின் பாவித்தால் அதில் சேர்க்கப் பட்டிருக்கும் விற்றமின் D அவர்களுக்கு போதியதாக இருக்கும். அல்லாமல் போனாமல் விற்றமின் A,D துளிகளைச் சேர்த்து உண்பதன் முலமும் போதியளவு விற்றமின்களைப் பெற்றுக் கொள்ளலாம். விற்றமின் D உடலில் போதியளவு இல்லாவிடில் என்புருக்கி நோய் தோன்றுவதால் உணவிலுள்ள கல்சியத்தை பயன்படுத்த முடியாமல் கல்சியம் வீணாகிப் போய்விடும். கல்சியம் சிறுவர்களின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. சிறுவர்கள் மிகவும் விரைவாக வளர்வதன் காரணத்தால் அவர்களின் எலும்பு வளர்ச்சிக்கு விற்றமின் D மிக முக்கியமானது. மண்ணிறத் தோலைக் கொண்ட பிள்ளைகளுக்கும் மற்றவர்களைவிட வெளியில் அவ்வளவு துாரம் போய் வராத பிள்ளைகளுக்கும் மேலதிகமாக விற்றமின் D தேவைப்படும். கருவுற்றிருக்கும் தாய் போதியளவு குரிய ஒளியை உள்ளெடுக்காவிடில் பிறக்கும் குழந்தைக்கும் விற்றமின் D குறைபாடு காணப்படும். இவர்களின் குழந்தைகளுக்கு என்புருக்கி நோய் தோன்றுவதற்கு அதிக சந்தர்ப்பங்கள் உண்டு. இங்கு எலும்புகளில் தாக்கங்கள் ஏற்படுவது மட்டுமன்றி சுவாசிப்பதிலும் சிக்கல்கள் ஏற்படலாம். வளர்ந்தவர்களுக்கு விற்றமின் D குறைவடையும் போது உணவிலுள்ள கல்சியத்தை போதியளவு பாவிக்க முடியாமல் போய்விடுவதால் எலும்புகளின் தடிப்பு குறைவடைகின்றது. இதனால் இடுப்பெலும்பு,

பூப்பெலும்பு என்பன வளைவதுடன் உருவ மாற்றங்களும் ஏற்படுகின்றன. இதனால் முதுகில் வலி ஏற்படுவதுடன் நடக்கும் போது தடுமாறுவது போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இது தசைகளையும் தாக்குவதால் நடக்கும் போது விழுந்துவிடுவதற்கும் இடமுண்டு. இது அனேகமாக வயது முதிர்ந்தவர்களுக்கே ஏற்படும். இதனால் அவர்களின் எலும்புகள் முக்கியமாக அவர்களின் இடுப்பெலும்பு முறிவடைவதற்கு சந்தர்ப்பங்கள் உண்டாகின்றது. பெண்களில் மாதவிடாய் நின்றுவிடும் பருவத்தில் மேற்கூறிய தாக்கங்கள் அதிக அளவில் ஏற்படும். வளர்ந்தவர்களில் உணவிலிருந்து பெறப்படும் மேலதிக கல்சியம் சிறுநீர் முலமாகவும் வியர்வை முலமாகவும் வெளியேற்றப் படுகிறது. பெண்களுக்கு மேற்கூறிய பருவத்தில் "ஈஸ்ரிரோஜன்" என்னும் ஹோர்மோன் சுரப்பது குறைவடைவதால் உணவிலுள்ள கல்சியத்தில் பெருமளவு வெளியேறிவிடுகிறது. இதனால் எலும்புகளின் நிறை குறைவடைகிறது. இந்த ஆராய்ச்சியின்படி வளரும் பிள்ளைகளுக்கும் கருவுற்றிருக்கும் தாய்மாருக்கும் விற்றமின் D மேலதிகமாகத் தேவைப்படும். 3 வயதுக்குக் குறைந்த பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் விற்றமின் துளிகளை உட்கொள்ளவேண்டும். 3-6 வயது வரையான பிள்ளைகள் செப்டெம்பர், ஒக்டோபர், நவம்பர் டிசெம்பர் மாதங்களில் இத்துளிகளை உட்கொள்ளவேண்டும்.
புதிய வாழும் குழ்நிலைகள், உஷ்ணமாற்றங்கள், குளிர்பருவங்கள், நமது உணவுப்பழக்கவழக்கங்கள், சுகாதார நலன் பற்றிய நமது புரிதல் ஆகியன நாம் பெரிதும் கவனத்தில் கொள்ளவேண்டிய அம்சங்களாகும்.
தாய்நாட்டை எதிர்த்து ஒரு தத்துவஞானியின் குரல்
உலகில் புகழ் பெற்ற தலைசிறந்த தத்துவஞானியான பேராசிரியர் ESAHOE LEBOWITSCH இஸ்ரவேலில் அதிஉயர் புகழ்பெற்ற அறிஞருக்கு வழங்கப்படும் விருதினை ஏற்றுக்கொள்ளமறுத்துள்ளார்.90 வயதான இவர் எட்டுத்தடவைகள் "டாக்டர்" பட்டம் பெற்றவராவார். இவர் 1967இல் மத்தியகிழக்கு நாடுகளான எகிப்து, சிரியா, ஜோர்தான் ஆகிய நாடுகளுடன் போரிட்டு அந்நாடுகளின் சில பகுதிகளை இஸ்ரவேல்" தன்னுடன் இணைத்துக் கொண்டதை "வரலாற்றில் பெரும் கொடூரம்" என்றும் இஸ்ரேலை "ஒரு யூத நாசி" எனவும் வர்ணித்துள்ளார். அராபிய நாடுகளில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பினை தீவிரமாகௗதிர்த்த இவர் இஸ்ரவேலால் ஆக்கிரமிக்கப்பட்ட ஆராபிய பிரதேசங்களுக்கு இராணுவச் சேவையில் செல்ல வேண்டாம் எனவும் இஸ்ரேவிலின் இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Page 7
பேராசிரியர் சி.சிவசேகரம்
கருத்தடையும் கருக்கலைப்பும்
அண்மையில் ஒரு சிறு ஐரோப்பியா வாழ் தமிழ் இடதுசாரிக் குழு தன் உறுப்பினர் ஒருவரது மனைவி கருக்கலைப்புச் செய்ததை சிசுக்கொலை என்று
கண்டனஞ் செய்து அவரைத் தமது குழுவினின்று விலக்கியதாகப் பெருமையுடன் தனது வெளியீடொன்றில் அறிவித்திருந்தது. ஒரு அரசியல் இயக்கத்தின் ஸ்தாபனரீதியான கட்டுப்பாடுகள் உறுப்பினரது தனிமனித வாழ்க்கையுடன் எவ்வளவு துாரம் தொடர்புடையன என்பது பற்றிய விவாதங்கள், ஒவ்வொரு இயக்கமும் எத்தகைய சமுதாயக் கண்ணோட்டத்தினின்றும் உலகு பற்றிய பார்வையுடனும் செயற்படுகிறது என்பதைக் கணிப்பிலெடுக்க வேண்டும். எனவே அது பற்றிய சர்ச்சையை அஆஇ வில் எழுப்ப நான் விரும்பவில்லை. அதேவேளை, தம்மை முற்போக்கு வாதிகள் எனக் கூறும் பலர் மனதில் பெண்ணுரிமை தொடர்பான பத்தாம் பசலித்தனமான கருத்துக்கள் எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளன என்பதையே முற் கூறிய சம்பவம் எனக்கு நினைவூட்டியதை நான் மறைக்க முடியாது. பெண்களுக்கு விவாகரத்து, மறுமணம், கருத்தடை, கருக்கலைப்புப் போன்ற விஷயங்களில் இன்னமும் பூரண உரிமை இல்லை. இவை பற்றி நாம் மேலும் சிந்திக்கவேண்டியுள்ளது. பெண்களுக்குக் குழந்தை பெறும் உரிமை பற்றித் தமிழர் மத்தியில் ஒரு விரிவான விவாதம் அவசியம் என்பதலாயே இக் கட்டுரையை எழுதுகிறேன்
 

" மனித சமுதாயத்திற் காலம், இடம், குழல் வேறுபாடுகளைக் கடந்த விழுமியங்கள் இல்லை. நிரந்தரமான சரி-பிழைகளென எதுவும் இருந்ததில்லை. போற்றுதற்குரியதாக இருந்த செயல்கள் கால மாறுதலாற் பரிகாசத்துக்குரியவையாக மாறுவதை நாம் அறிவோம். கடவுள் விதித்தவை என்று போதித்தவற்றை மதங்கள் காலத்துக்கேற்ப மாற்றியமைக்கவும் புதிய முறையில் விளக்கவும் முற்படுவதை நாம் அறிவோம். இன்றைய உலக சமுதாயங்கள் அனைத்துமே ஆணாதிக்கத்தின் அடிப்படையில் அமைந்தவை. ஆணாதிக்கத்தை எதிர்க்கும் நோக்குடைய சமுதாய அமைப்புக்களிலும் ஆணாதிக்கப் பாரம்பரியத்தின் பாதிப்புக்களை இன்னும் முற்றாக நீக்க முடியவில்லை. மதங்களின் பேரிலும் மரபு, கலாச்சாரம் என்ற பேர்களிலும் மட்டுமே ஆணாதிக்கம் தொடரவில்லை. அவற்றை விட அபாயகரமான முறையில் முற்போக்கின் பேராலும் தொடரலாம் என்பதையே நான் முன்னர் குறிப்பிட்ட சம்பவம் வலியுறுத்துகிறது.
ஒரு பெண்ணுக்குத் தாம்பத்தியத்துக்குப் புறம்பாகக் குழந்தை பெறும் உரிமை உண்டா? இக்கேள்விக்கு இன்று மேலைநாடுகளிற் சாதகமான பதில் கிடைக்கிறது. இது இரண்டாம் உலகயுத்தத்தின் பின் ஏற்பட்ட சில சமுதாய நெருக்கடிகளின் விளைவு. இதன் சமுதாய நன்மை தீமைகள் பற்றிய விவாதங்கள் தொடர்கின்றன. தாம்பத்தியத்திற்குப் புறம்பாகப் பிறக்கும் குழந்தைகளின் தேவைகட்கு முகங்கொடுப்பது சமுதாயங்களுக்கு எளிதல்ல. ஏனெனில் நவீன சமுதாயத்தின் மிகப் பெரும் பகுதி தாய்-தகப்பன்-குழந்தைகள் என்ற விதமான குடும்ப அமைப்பிற்கே பரிச்சயப்பட்டுள்ளது. குழந்தைகள் முழுச் சமுதாயத்தினதும் பொறுப்பு என்ற நிலைமை வரும் வரை இச்சமுதாயங்களில் தனித்து வாழும் பெற்றவருக்குரிய குழந்தைகள் பிரச்சனைக் குரியவர்களாகவே கருதப்படுவர். கூட்டுக் குடும்ப் அமைப்புக் குலைந்த நிலையில், ஒரு ஆணும் பெண்ணும் தமது குழந்தைகளைப் பார்த்துப் பராமரிக்கச் சமுதாயத்தின் உதவியை நம்பியுள்ளனர். நவீன வசதிகள் வீட்டுவேலைகளைச் சிறிது இலேசாக்கினாலும் தமது வாழ்வுக்காகக் கடுமையாக உழைக்கும் தேவையின் மத்தியிற் குழந்தைகளைப் பராமரிப்பது மிகவும் சிரமமானதே. இதன் விளைவாகப், பெண்களது உழைப்பு அவசியமாகவுள்ள சமுதாய அமைப்பு, பிள்ளைப் பராமரிப்புக்கு الكهرو செய்யுமாறு நிர்ப்பந்திக்கிறது. எவ்வளவு சமுதாய உதவிகளும் வசதிகளும் இருந்தாலும் பிள்ளைப் பராமரிப்பின் சுமை இறுதியாகத் தாய் தகப்பன் மீது, நடைமுறையிற் பெருமளவும் தாய் மீது, விழுகிறது. பொருளாதாரக் காரணங்களும் இதனுடன் இணையக், குடும்பக் கட்டுப்பாடு அவசியமாகிறது.
ஒரு பெண்ணுக்குக் குழந்தைகள் வேண்டுமா, எத்தனை, எப்போது என்ற கேள்விகட்கு இறுதிமுடிவான பதில் அப் பெண்ணிடமிருந்தே வரமுடியும். இப் பதில்
சமுதாயப் பொறுப்பான முறையில் அமைய வேண்டும் என்பது அப் பெண்
13

Page 8
சமுதாயத்தின் ஒரு பகுதி என்றளவில் நியாயமானதே யொழிய, ஒரு பெண்ணைக் குழந்தை பெறுமாறு எவரும் நிர்ப்பந்தம் செய்வது நியாயமில்லை. ஒவ்வொரு சமுதாயமும் குறிப்பிட்ட குழ்நிலைகளிற் குழந்தைகளின் எண்ணிக்கைபற்றிக் கட்டுப்பாடுகளை விதிக்கலாம். அத்தகைய بهوا ول , சரி - பிழைகளின் அடிப்படையிலன்றி, முழுச்சமுதாயத்தினதும் தேவைகளுடைய அடிப்படையில் எடுக்கப்படுகிறது. இவ்வாறான ஒரு நிலமை இல்லாதவிடத்து, ஒரு பெண் தான் விரும்பியவாறு பிள்ளைகளைப் பெறுவதற்குள்ள ஒரே தடை அப் பிள்ளைகளின் நலன் தொடர்பானது மட்டுமே.
ஒரு தம்பதி பிள்ளைகளைப் பெற ஆயத்தமாக இல்லை என்று கருதினால் கருத்தடை முயற்சிகளில் இறங்குவதிற் தவறில்லை என்பதைக் கத்தோலிக்கத் திருச்சபையும் சில பழமைவாதிகளும் மட்டுமே எதிர்க்கின்றனர். இதிற் கூடப் பெண்ணுக்கு முன்னுரிமை அவசியம் என்பது பெண்நிலைவாதிகளது நியாயமான நிலைப்பாடு. பெண் என்பவள் ஆணென்பவனின் பிள்ளையைப் பெறும் பொறியல்ல; பிள்ளை பெறுமாறு ஒரு பெண்ணை எவரும் நிர்ப்பந்திப்பது தவறு என்ற வாதங்களின் அடிப்படையிலேயே அந்த நிலைப்பாடு உருவானது. வம்ஸ விருத்தி பற்றிய ஆணாதிக்கக் கோட்பாடுகள் தாம்பத்திய உறவை நிர்ணயிப்பதாலேயே ஆணின் விருப்பத்திற்கேற்பப் பிள்ளைகள் பெறுமாறு பெண் எதிர்பார்க்கப்படுவது இயலுமாயிற்று. பிள்ளை பெறும் உரிமை பெண்ணுடையதாகிவிட்டால் ஆணுக்கு அதில் எதுவித உரிமையும் இல்லை என்பது ஒரு தவறான முடிவு. பிள்ளையைப் பராமரிப்பது தொடர்பாக இருவரும் சேர்ந்து தீர்மானிக்கவேண்டிய அளவில் இருவருக்கும் அதில் உரிமை உள்ளது. ஆயினும் எப்போதுமே பெண்ணுடைய மனவிருப்பே அடிப்படையில் முக்கியமானது என்று நான் கருதுகிறேன்.
விரும்பியோ விரும்பாமலோ தற்செயலாகவோ ஒரு பெண் கருத்தரித்தால் அப்பெண் குழந்தையை பெற்றேயாக வேண்டும் என்று கருதுவோர் பலர் உள்ளனர். இவர்களுட் கருச் சிதைவைக் கொலை என்றும் பாவ காரியமென்றும் கருதுவோரே அனேகர். கருச் சிதைவு பற்றிய முடிவைத் தம்பதி எவரும் எளிதாக வந்தடைவதில்லை. ஆண் மட்டுமே கருக்கலைப்பை நிர்ப்பந்திக்கும் குழ்நிலைகளும் பெண் மட்டுமே அதை நாடுஞ் குழ்நிலைகளும் உள்ளன. இந்த இடத்திற் சரி - பிழை பற்றிய எளிய தீர்வுகள் எதுவும் இல்லை. ஆயினும் சில வழிகாட்டல்களை நாம் வகுத்துக் கொள்ளலாம் இவற்றைச் சில கேள்விகளின் அடிப்படையில் நாம் வந்தடையலாம் என நம்புகிறேன்.
குழந்தையைப் பெறுவது பெண்ணுடைய உடல் நலத்திற்கோ மனநலனுக்கோ தீங்கானது என்று நம்ப இடமிருந்தாற் கருக்கலைப்பு சரியானதா?
குழந்தை பாரிய குறைபாடுடையதாகவே பிறக்குமென்பது உறுதியெனில் கருக்கலைப்பு சரியானதா?

பெண்ணோ, பெண்ணும் ஆணுமோ பிறக்கவிருக்கும் குழந்தையைத் தம்மாற் சரிவரப் பராமரிக்க முடியாது என்று அறிந்த நிலையில் அவர்களாகவே கருக்கலைப்பு பற்றி முடிவுக்கு வருவது சரியானதா?
பெண்ணுடைய தனிப்பட்ட வாழ்க்கை ( தொழில், கல்வி, சமுதாயப்பணி, அரசியல் வேலை உட்பட்டு) குழந்தைப் பிறப்பாற் பாதிக்கப்படுமாயின் கருக்கலைப்பு
SuLUTLLJLDT60TgEIT?
ஏற்கனவே உள்ள குடும்பச் சுமையை, இன்னொரு பிள்ளைக்கு ஆயத்தம் இல்லாத நிலையில், வரவுள்ள புதிய குழந்தை தாங்க முடியாததாக்கி விடலாமென்றாற் கருக்கலைப்பு நியாயமானதா?
கருக்கலைப்பு கர்ப்பத்தின் எக்கட்டத்திற் செய்யப்படலாம் என்பது பற்றிய விவாதம் இன்னமும் மருத்துவத் துறைக்குட் தொடர்கிறது. சமுதாயத்தின் தேவைகள் வாதத்தை ஒருபுறம் இழுக்கின்றன. பொறுப்பற்ற முறையிலும் சமுதாய நலனுக்கும் விழுமியங்கட்கும் முரணான முறையிலும் கருத்தடையும் கருக்கலைப்பும் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சங்கள் மறுபுறமாக இழுக்கின்றன. சரி பிழைகள் பற்றிய இறுகிப்போன கோட்பாடுகளும் தனிமனித சுதந்திரம் பற்றிய குருட்டுத்தனமான தாராளவாதமும் சரியான தீர்வுகட்கு உதவுமா என்பது மிகவும் ஐயத்துக்குரியது. ஆயினும் புதிய சமுதாயச் குழலில் வந்து புகுந்துள்ள தமிழர் சமுதாயத்தின் ஒரு பகுதியும் மாறிவரும் உலகச் குழலிற் தாய்நாட்டில் வாழும் அதன் பெரும் பகுதியும் இவ்விஷயம் பற்றி மனந்திறந்த விவாதத்தில் இறங்குவது நல்லது.
சீனிவாசனின் முன்மொழிவுகள் ஒரு பார்வை
எல்லோரும் ஏறிவிழுந்த குதிரையில சக்கிடுத்தார் ஏறிச் சறுக்கி விழுந்தாராம். என்பது நாம் அறிந்த கதை. இப்போது மீண்டும் வேதாளம் முருங்கை மரத்திலேறி. உலுப்பிக் கொண்டிருக்கிறதாம். இலங்கை அரசியல் நிலமைகளைப் பொறுத்தவரை எப்போதோ ஏறிய வேதாளம் இன்னமும் இறங்கவேயில்லை என்பது கண்கூடு.
is

Page 9
அண்மையில் இலங்கை அரசுக்கும் , எதிர்க் கட்சிகளுக்கும் , தமிழ்க்குழுக்களுக்கும், பத்திரிகைகளுக்கும் வெறுவாய்க்கு அவல் கிடைத்த கதையாய் திரு சிறிநிவாசன் முன்வைத்த தீர்வுக்கான யோசனைகள் மெல்லப்படுகின்றது.
திம்புயோசனைகள், தொண்டமான்யோசனைகள், தமிழ்கட்சிகளின் 4அம்சக்கோரிக்கைகள் எல்லாம் உடப்பில் போடப்பட்டு இப்போது நட்டுக்கொண்டு நிற்கும் யோசனைகள்தான் என்ன? இலங்கை வரலாறு எங்கணும் ஏதாவது யோசனைகள் தெரிவிக்கப்பட்டாலே ‘தமிழ்ஈழம்" பிரிப்பதற்கான தயாரிப்பு என்று கூக்குரல் போடும் சிங்கள இனவாதிகளும், புத்தபிக்குகளும் இவர்களை மறைமுகமாகத் துாண்டிவிடுகின்ற அரசும் எதிர்க் கட்சிகளும் இந்த யோசனைகளுக்கு சற்று தலையசைத்து உள்ளார்களாமே என்றபோதே இதைச் சந்தேகத்தோடு பார்க்கவேண்டிப் போய்விட்டது.
அப்படி திரு.சிறிநிவாசன் முன்வைத்த யோசனைகள்தான் என்ன?
ஒற்றைஆட்சியிலுள்ள தற்போதைய இலங்கை அரசமைப்பை மாற்றி Fபடறல் என்கிற சமஷ்டி அமைப்பாக மாற்றி வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு தனித்தனியான அதிகாரப் பரவலாக்கம் வழங்கப்பட வேண்டும் என்பதும்.
அவ்வாறான ஒவ்வொரு அதிகாரப் பரவலாக்கல் பிரதேசங்களுக்கும் கூடிய அதிகாரங்களை ஏற்றுக் கொண்டபடி வழங்கவேண்டும் என்பதும்
இனங்களுக்கான அதிகார அமைப்புக்களின் எல்லைகளை வரையறுக்க எல்லைக்கமிசன் ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என்றும்.
அவ்வாறு வகுக்கப்பட்ட அரச அமைப்பின் எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்குள் பெரும்பாலும் ஒரே இன மக்களுக்கான குடியிருப்பு, விவசாயம், மேச்சல்நிலம் போன்ற சொத்துக்கள் உள்ளடங்கவேண்டும். இவ்வகை ஒவ்வொரு பிரதேசங்களிலும் முஸ்லீம் மக்களது பாதுகாப்புக்கான அமைப்பு ரீதியான ஒழுங்குகள் செயற்ப்படுத்தப்பட வேண்டும் என்பதும்.
பொதுவாகவுள்ள அரச காணிகளை வேறுபட்ட சமூகங்களுக்கு பிரித்து வழங்குவதற்கான காணிக்கமிசன் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதும்.
ஒவ்வொரு அதிகார அமைப்புகளிலும் உள்ள இனங்களின் சமநிலையானது 1971ல் இருந்ததைப்போன்று பேணப்பட வேண்டும் என்பதும்.

கடந்த காலங்களில் நடைபெற்ற சிங்களக் குடியேற்றங்களை அப்படியே பேணுவதுடன் பல இனங்களும் புலம் பெயர்ந்த இடங்களில் அவர்களின் நிலவுடமையை மீண்டும் உறுதிசெய்யும் வகையில் காணிப்பங்கீட்டுத் திட்டம் அமைய வேண்டும்
என்பதும்தான் அவைகள்.
காலங்காலமாக, மறுக்கப்படுகின்ற வடக்குக்கிழக்கு இணைப்பும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் தமிழ் இன அழிப்பின் பிரதான போக்காய் இருந்து வந்துள்ளது. தமிழ்மக்கள் வடக்கும் கிழக்கும் தமது பாரம்பரியத் தாயகம் என்றும் அதன் பாதுகாப்பு அதிகாரங்கள் யாவும் தம்மிடம் வழங்கப்படவேண்டுமென்றே குரல் எழுப்பி வந்துள்ளனர். இது ஒரு புறமிருக்க வட்கையும் கிழக்கையும் தனித்தனியே பிரித்து அதிகாரம் வழங்குவதென்பது தமிழ்த் தேசிய இனம் பிரித்து அழிக்கப்படுவதற்கான இன்னுமோர் தயாரிப்பு என்பது நாம் உணர்ந்த ஒன்றுதான். இது புதிய மொந்தையில் பழைய கள்ளுத்தான் வேறொன்றும் இல்லை.
ஒற்றை ஆட்சி முறையிலிருந்து இலங்கை சமஷ்டி ஆட்சி முறைக்கு மாறுவதென்பது ஏதோ ஒரு பெரிய விடையமாகவும் அரசும், எதிர்க்கட்சிகளும் இறங்கி வந்துள்ளன என்று பல பத்திரிகைகளும், சில தமிழ்க்குழுக்களும் “சந்தோஷம் காட்டுகின்றன. ஆனால் இவையெல்லாம் வெறும் பம்மாத்து என்பது போகப் போகத் தெரிந்து கொள்வோம்.
இனப்பிரச்சனை பூதாகரமாய் வளர்ந்ததற்கு தமிழர் நிலங்கள் பறிக்கப்பட்டு திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நடத்தப்பட்டதை மிக முக்கிய காரணமாய் கொள்ளலாம். எல்லைப்பிரதேசங்கள் எங்கணும் பெயர்மாற்றப்பட்ட சிங்களக் கிராமங்களையும், சிங்களவர்களையும் பாதுகாப்பதற்கான ஒரு மாற்றுத்திட்டமே இவ்வகை யோசனைகள். பல சிங்களக் குடியேற்றங்களை பாதுகாப்பதோ உதவி வழங்குவதோ இயலாத காரியமாய் இருக்கின்ற இன்றைய குழலில் இவரின் யோசனைகள் இனவாதிகளுக்கு அமிர்தாமாகத்தான் இருக்கும்.
இலங்கையில் தமிழ் இனம் பாகுபாடு காரணமாய் துன்புறுத்தப்படுகிறது என்பது மறைக்கப்பட்டு தமிழர்களுக்கு பிரச்சனைகளே இல்லை அவர்கள் கொழும்பு திருகோணமலை போன்ற பகுதிகளில் சுதந்திரமாக வாழ்வதற்கான சாத்தியங்கள் உள்ளதாவும், வடக்கில் புலிகளால் மட்டும்தான் பிரச்சனை என்று அரசும், எதிர்க்கட்சிகளும் ஓயாமல் போடுகின்ற கூச்சலாகும். விடுதலைப்புலிகள் இல்லாவிட்டால் இலங்கையில் பிரச்சனை என்பதே இல்லை என்ற பிரச்சாரத்தை பல தமிழ்க்குழுக்களும், பத்திரிகைகளும் கூட முன்வைக்கின்றன.
17

Page 10
விடுதலைப்புலிகளின் பல தவறான நடவடிக்கைகளை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு அரசுக்கும் சிங்கள இனவாதிகளுக்கும் துணைபோகும் போக்கு ஒன்று ஓங்கி வளர்ந்து வருகிறது. இதற்கு உறுதுணையாக தமிழ்க் குழுக்களும், தனிநபர்களுமாக பல தமிழர்களே இருந்து வருவது வேதனைக்குரியது. இவ்வாறான யோசனைகளில் பலரது இயலாமையின் வெளிப்பாடுகளையும், மூளைச்சலவைக்குட்பட்ட கருத்துக்களையும், சுயநலப் போக்கின் சங்கதிகளையும்தான் காண முடிகிறது. எனக்கு முக்குப்போனாலும் பறுவாயில்லை எதிரிக்குச் சகுனம் தப்ப வேண்டும் என்றமாதிரி.
மறு புறத்தில் விடுதலைப்புலிகளின் ஜனநாயக மறுப்பும் ‘தமிழ்ஈழச்சிறைகளும்" பேச்சு எழுத்துச் சுதந்திரத்தடைகளும், தொடர்ந்த யுத்தமும், ஏனைய தமிழ்க்குழுக்கள் மீதான தாக்குதல்களும், முஸ்லீம் மக்கள்மீதான தொடர்ந்த தாக்குதல்களும், பலபகுதிகளில் புலிகளின் பின்வாங்கல்களும், ஒரு தீர்வைநோக்கிய யோசனைகளை மக்களும், சில தமிழ்க்குழுக்களும், பலதனிநபர்களும் ஆதரிக்கவே செய்வார்கள். உணவுப்பற்றாக்குறை, அகதிகளின் நெருக்கடிகள், மருந்து வைத்தியஉதவி, அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடுகள் என்பன மக்களுக்கு "தீர்வுகளுக்கான'ஒரு ஏக்கத்தையே உண்டாக்கும். நெருக்கடியிலுள்ள மக்கள் உடனடித்தேவைகளுக்கே அதிக விலை கொடுக்கிறார்கள்.
இன்று முஸ்லீம் மக்களின் நிலை நிதானமாக சகல தரப்பினராலும் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. அவர்கள் காலம் காலமாய் வாழ்ந்த பிரதேசங்களிலிருந்து துரத்தப்படுவதும் பெண்கள் குழந்தைகள் கர்ப்பிணிகள் என்று பாராமல் இரவிரவாகக் கொல்லப்படுவதும் மிக வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை. இன்று இது தமிழருக்கும் முஸ்லீம்களுக்குமான உறவில் பெரும் விரிசலாகிப்போய்விட்டது. அவர்களது தனித்துவங்கள் பெரும்பான்மை சிங்கள, தமிழ் மக்களால் மதிக்கப்படவேண்டும்.
இலங்கையில் யோசனைகள் தெரிவிக்கப்பட்டால் தீர்வுகள் கிடைத்து விடும் என்று எண்ணுவது எம்மை நாமே முட்டாள்களாக்கிக் கொள்வதாகும். ஒவ்வொரு யோசனைகளின் மீதும் திறந்த விவாதங்கள் முன்வைக்க வேண்டியது எம் ஒவ்வொருவரதும் கடமையாகும். குணம்
வாசகர்களே
இவ்வருடத்திற்கான புதிய சந்தாக்களை அஆஇ உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறது. முடிந்துபோன தங்களின் சந்தாக்களைப் புதிப்பிக்குமாறும், புதிய சந்தாதாரர்களை அறிமுகம் செய்யுமாறும் நன்றியுடன் கேட்டுக்கொள்கிறோம்.

905 மார்க்ளியவாதியின் மறைவு
கடந்த பெப்ரவரி 8 ம் திகதி பர்மிங்ஹாமில் காலமான என்.சண்முகதாசனின் மறைவு மூன்றாம் உலகின் தலைசிறந்த ஒரு மார்க்ளிய-லெனினிய சிந்தனாவாதியின் இழப்பைக் குறித்துநிற்கிறது. இலங்கையின் இடதுசாரி இயக்கத்தின் வரலாற்றில் என்.சண்முகதாசன் வகித்த தீர்க்கமான பாத்திரம் குறித்து எத்தகைய வாதப் பிரதிவாதங்கள் இருந்தபோதிலும் அவற்றின் சரித்திர முக்கியத்துவம் பற்றி குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.
1943 ல் இலங்கைப் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு வெளியேறியதிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியனாகத் தன் வாழ்வைத் தொடங்கிய சண்முகதாசன் இறுதிவரை அவரே தமது நினைவுக்குறிப்பில் எழுதியது போல "Unrependent communist" ஆகி- உறுதியான - மனம் தளராத கம்யூனிஸ்ட்டாக இருந்தது குறித்த பெருமிதத்தோடுதான் வாழ்ந்து முடிந்திருக்கிறார் என்பது நினைவில் இருத்தப்படவேண்டிய உண்மையாகும்.
1963 ல் சர்வதேசக் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சோவியத் நிலைப்பாடு பற்றிய பெரும் விவாதம் கிளர்ந்த போது மார்க்ளிய- லெனினிய- மாஓ யிஸ சித்தாந்தத்தை வாதாடி நிலைநிறுத்தி, இலங்கை கம்யூனிஸ் ட் கட்சி (மா லெ) யின் பொதுக்காரியதரிசியாகத் தெரிவு செய்யப்பட்டு, அன்றிலிருந்து மார்க்ஸிய, லெனினிய, மாஒயிஸ சித்தாந்தத்திற்கு இறுதிவரை விசுவாசமுள்ள தொண்டனாக அவர் ஆற்றிய பணிகள் சரித்திரத்தில் என்றும் இடம் பெறுவதற்குரியனவாகும்.
சரித்திர ஞானமும், இயக்கவியல் வாத-வரலாற்றுப் பொருள்முதல் வாதச் சிந்தனை நோக்கிலும் சிறந்த ஆளுமை கொண்டவரான சண்முகதாசன் எந்தப் பிரச்சினையையும் மிகத் தெளிவாக ஆராய்வதிலும் விளக்குவதிலும் மிகுந்த திறமை கொண்டவராக விளங்கினார்.

Page 11
பாரிஸ் கம்யூனின் நுாற்றாண்டு நிறைவுப் பேருரையை 1971 ŝi) சண்முகதாசன் கொழும்பில் ஆற்றியபோது திரண்டு மண்டபம் நிறைந்து வழிந்த கூட்டம் சண்முகதாசனின் பேச்சின் வலிமையை உறுதிப்படுத்துவதாகும்.
இலங்கையின் தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக இருந்து நடத்திய தொழிற்சங்கப் போராட்டங்கள் சண்முகதாசனின் வெற்றிகரமான தொழிற்சங்கத்
தலைமையைக் காட்டுவனவாகும்.
வடக்கில் காலங்காலமாக நிலவி வந்த சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக - ஆலயங்களைத் திறந்து விடக்கோரியும் - பொது இடங்களில் நடந்த பாரபட்சமான முறைகேடுகளுக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட மக்களைத் திரட்டி ஆயுதப் போராட்டத்தின் தேவையை முதலில் வலியுறுத்திப் போராடியவர் சண்முகதாசனே என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. வடபுலத்தின் ஆயுதப் போராட்டத்தின் தோற்றம் சாதி ஒடுக்கு முறைக்கு எதிரான கிளர்ச்சியோடுதான் தன்னை இனங்காட்டியது என்பது சரித்திரத்தில் நினைவு கூரப்படவேண்டிய உண்மையாகும்.
1960 களிலும் 1970 களின் மிக ஆரம்பப் பகுதியிலும் சண்முகதாசன் இலங்கையின் இடதுசாரி இயக்கத்தில் தன்னிகரற்ற தலைவனாகவே விளங்கினார். கொழும்பு நகர்சார் தொழிலாளர்கள் மத்தியிலும், மலையகத் தொழிலாளர்கள் மத்தியிலும் சண்முகதாசனின் அரசியல், தொழிற்சங்க அமைப்புகள் மிகப் பலம் கொண்டவையாக இருந்தன.
சண்முகதாசன் முன்வைத்த "தொழிற்சங்கங்களை புரட்சிகர மயமாக்கும்" கொள்கை பற்றி அரசியல் மட்டத்தில் எதிர்வாதங்கள் முன்வைக்கப் பட்டதுவும், பல்வேறு சந்தர்ப்பங்களில் தீவிர மாஒயிஸ் நிலைப்பாட்டை எடுப்பதில் சண்முகதாசன் தலைமையிலான அரசியல் இயக்கம் பின்னிற்கிறது என்றும் பல குற்றச் சாட்டுகளுடன் சண்முகதாசனின் அமைப்பிலிருந்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பலர் வெளியேறி பல சிறு அமைப்புகளை உருவாக்கினாலும் அவை எவையும் நிலைமையில் பெரும் மாற்றம் எதனையும் கொண்டுவரவில்லை.
தமிழர்களின் சுயநிர்ணயப் பிரச்சினையை சண்முகதாசன் அப்போதே மார்களிய நிலைப்பாட்டில் முன்னெடுத்திருக்கவேண்டும் என்றும் விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டுள்ளன.
1 9 7 1 ம் ஆண் டு ஜே. வி . பி கிளர் ச் சி யி ன் போ து சிறிமாவோபண்டாரநாயக்காவின் காலத்தில் 10 மாதகாலம் கைதுசெய்யப்பட்டு சண்முகதாசன் சிறையில் வைக்கப்பட்டார்.

1970 ற்கு பிற்பட்ட இலங்கையின் அரசியல் வரலாற்றில் சண்முகதாசனின் காலம் மங்குதிசை என்றுதான் குறிப்பிடவேண்டும்.
1987 ஒக்டோபர் மாதம் நெதர்லாந்துக்கு சண்முகதாசன் விஜயம் செய்தபோது டச்சுப் பத்திரிகைகளுக்கும் டச்சுத்தொலைக்காட்சிக்கும் பேட்டி வழங்கியபோது இலங்கை இந்திய சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்திவிட்டு இந்திய அரசு தமிழ் இயக்கங்களை ஆயுதங்களைக் களைந்து நிராயுத பாணிகளாக்கும் செயற்பாட்டுக்கு எதிரான தனது கருத்துகளை திட்டவட்டமாக முன்வைக்கத் தயங்கவில்லை.
டென்வுறாக்கில் சமுகக்கல்வி நிறுவனத்தில் அவர் ஆற்றிய சிறப்புமிக்க உரையிலும் சமாதானத்தின் பின்பு இந்தியா பெருந்தொகையான ஆயுதங்களுடன் வடக்கே குவிந்தது எதற்காக? இருபதினாயிரம் மேலதிக இந்திய ராணுவத்துருப்புக்கள் குவிக்கப்பட்டது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
மக்களை தமது அரசியற் செயற்பாட்டின் மூலமே வென்றெடுக்கவேண்டும் என்றும், வடக்கே நடைபெறும் தனிநபர் படுகொலைகளையும் இயக்கங்களுக்கிடையே நடைபெறும் ஆயுதமோதல்களையும் எதிர்த்த அதேநேரத்தில் இந்திய ராணுவத்துக்கெதிராக வடக்கே நடந்த ராணுவ எதிர்ப்புப் போராட்டத்தை சண்முகதாசன் தீவிரமாக ஆதரித்தார்.
இந்திய அரசு எமது பிரச்சினையைத் தீர்க்கப் போவதில்லை என்றும் முற்போக்கான இயக்கம் இலங்கையில் பலம் பெற்றே தீரும் என்றும் இடதுசாரித் தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு போராடுவதே சரியான மார்க்கமென்றும் இலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் சமாதானமின்றி வாழ்வதற்கு எந்தவிதமான காரணங்களும் இல்லை என்றும் அவர் கருத்துக் கொண்டிருந்தார்.
மார்க்ளிய அறிஞரான சண்முகதாசன் எழுதியவைகளில் "The political memories of an unrependent commuinist" (905 LD6Tib. 6 (5.55 Tg5 sibysofsfull sit 9 Jáusi) is 60601 Glassir), "Future of the plantation workers" ( (5 till-is sity surrorisoflair 67 gifasst sub ), "A marxist looks at the history of Srilanka" ( இலங்கை வரலாறு பற்றிய ஒரு மார்க்ளியவாதியின் பார்வை ) போன்ற நூல்கள்
குறிப்பிடத்தக்கன.
இதனைவிட சர்வதேச மார்க்ளிய சஞ்சிகைகளில் சண்முகதாசன் எழுதிய தத்துவார்த்தக் கட்டுரைகளும் தரம் மிகுந்த கட்டுரைகளாகும். அன்வர்ஹோஷாவுக்கு எதிராக சண்முகதாசன் எழுதிய தத்துவ விமர்சனக் கட்டுரை இன்றும் மார்க்ளியர்களால் பெரிதும் பாராட்டப்படும் கட்டுரையாகும். நடராஜன்
2 1

Page 12
கலாநிதி இ.அண்ணாமலை ک2
தமிழின் தலைசிறந்த மொழியியலாளரும் அகராதியியல் அறிஞருமான கலாநிதி இ. அண்ணாமலை அவர்கள் தமிழர் பண்பாடு குறி தும் தமிழ் மொழியின் இ ன்  ைற ய நிலை குறித் தும் |இக்கட்டுரையில் தெரிவித்திருக்கும் கருத்துக் கள் ஆழ்ந்த அர்த்தம் கொண்டவை; தமிழின் புதிய சாதனைகள் பற்றிய ஆதங்கத்திலிருந்து எழுபவை. காலச்சுவடு (1991 சிறப்பிதழ்) சஞ்சிகை மலரிலிருந்து இக்கட்டுரை நன்றியுடன் இங்கு மறுபிரசுரம் செய்யப்படுகிறது.
தமிழர் நோக்கில் பண்பாடும் மொழியும்
தமிழ்ப் பண்பாடு பெருமையாகச் சொல்லிக்கொள்ளப்படும் ஒன்று. தமிழர்களுக்கே உரிய பண்புகள் சில உண்டு என்பதும் அவை தமிழர்களைத் தனிமைப் படுத்திக்காட்டுவன, சிறப்புப் படுத்திக்காட்டுவன என்பதும் தமிழ் சார்ந்த அறிவுஜீவிகளிடம் பரவலாகக் காணப்படும் நம்பிக்கை. தமிழர்களைத் தனிமைப் படுத்திக் காட்டுவதில் முதன்மையானது மொழி என்பதில் ஐயமில்லை. மொழி பண்பாட்டின் அடிப்படையான அம்சம்; பண்பாட்டை வெளிப்படுத்தும் சாதனம். தனிமைப்படுத்திக் காட்டும் மற்ற பண்பாட்டுக் கூறுகள் எவையென்று நிறுவுவது எளிதானதல்ல. அந்தப் பண்பாட்டுக் கூறுகள் மற்ற சமுகத்தினரிடம் இல்லாதவையாக இருக்கவேண்டும்; தமிழ் சமுகத்தின் எல்லாப் பிரிவினரிடையேயும் இருப்பவையாக இருக்கவேண்டும். அப்போதுதான் அவற்றை தமிழருக்கே உரிய பண்பாட்டுக் கூறுகளாகச் சொல்லமுடியும்.
 

இந்த இரண்டு அடிக்கோல்களின் ( Criteria ) அடிப்படையில் புறநோக்கில் ( objectively ) தனித்தன்மையைக் கணிப்பது கடினமானது. தமிழ்ப் பண்பாடு என்று தமிழர்கள் சொல்லும் போது அவர்கள் அகநோக்கில் தங்களைப் பற்றி மானசீகப் படுத்திக் கொள்வதையே (perception) குறிக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் அதுதான் உண்மையானது. இவ்வாறு மானசீகப் படுத்திக்கொள்வது பெரும்பாலும் அறிவுஜீவிகளால் செய்யப்பட்டுப் பொதுமக்களுக்குப் பரவும். எனவே அது அறிவுஜீவிகளின் வாழ்க்கை மதிப்பீட்டை(value system ) ஒட்டி அமைந்திருக்கும். இவ்வாறு மானசீகப் படுத்திய பண்புக்கூறுகள் வேறு சமுகத்தினரிடையேயும் இருக்கலாம்; தமிழர்களின் நடைமுறைவாழ்க்கையில் இல்லாமலிருக்கலாம். மானசீகப் படுத்துவதற்கு இந்த நடைமுறை உண்மைகள் தடையாக இருப்பதில்லை.
தங்கள் பண்புக்கூறுகள் சிறந்தவை என்பதும் ஒருவகை வாழ்க்கை மதிப்பீட்டின் அடிப்படையில் கூறுவதுதான். மதிப்பீடு இல்லாத நிலையில் பண்புகளில் ஏற்றத்தாழ்வு இல்லை.
கற்பு என்ற தமிழ்ப்பண்பு
கற்பு என்ற பண்பை எடுத்துக்கொள்வோம். தமிழ்க்கற்பு என்பது உயர்ந்த பண்பாகப் போற்றப்படும் ஒன்று. பொது நிலையில் கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பால் ஒழுக்க உறவை வரையறுக்கும் ஒரு பண்பு. எந்தச் சமுகத்திலும் அதன் கட்டுக்கோப்பைக் காக்கவும், அதன் சுயவளர்ச்சியை உறுதிசெய்யவும் அவசியமாக இருக்கும் பண்பு. இந்தப் பண்பு ஒவ்வொரு சமுகத்திலும் அதன் தேவைக்கு ஏற்றபடி ஒவ்வொரு விதமாக இருக்கலாம். ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு பலர் போன்ற பலவும் வெவ்வேறு சமுகங்களில் வழங்குகிற, அந்தந்த சமுகங்களுக்குத் தேவையான கற்புநெறிகள்தான்.
ஒருத்திக்கு ஒருவன் என்ற கற்புநிலையே தமிழ்பண்பாடாக பேசப்படுகிறது. ஏகபத்தினிவிரதன், பிறன்மனை நோக்காப் பேராண்மை என்று ஆண்நிலையிலும் கற்பு பேசப்பட்டாலும் கற்பு பெண்ணின் ஒழுக்கநெறியாகவே நடைமுறையில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. மழைவருவித்தல், ஊரைஎரித்தல் போன்ற இயற்கை விதிகளை மீறும் ஆற்றலை பெண்ணின் கற்புக்கு கொடுத்திருப்பதைப் போல ஆணின் கற்புக்குத் தனி ஆற்றல் எதுவும் கொடுக்காதது இதை வெளிப்படுத்தும். எனவே கற்பு என்பதற்கு தமிழ்பண்பாட்டில் தனிஅர்த்தம் கொடுக்கப்படுகிறது. அது பெண்ணின் பால் ஒழுக்க நெறியை வரையறுக்கும் பண்பாகவே கொள்ளப்படுகிறது.
மனத்தாலும் மற்ற ஆணை நினைக்கக் கூடாது என்று பெண்கற்பை வலியுறுத்தும் தமிழ்ச்சமுகத்தில்தான் திரைப்படக் கதாநாயகனை மனத்தால் கூடும் " சினிமாவுக்குப் போன சித்தாளு" வும் உறுப்பினராக இருக்கிறார்கள். இதேபோல்
ረጋ”እ

Page 13
பெண்ணைத் தெய்வமாகப் போற்றுவது தமிழ்ப்பண்பு என்று சிறப்பித்துக் கூறிக்கொள்ளும் தமிழ்ச்சமுகத்தில்தான் பெண்குழந்தைகளைப் பிறந்தவுடன் கொன்றுவிடுகின்ற பிரிவினரும் இருக்கிறார்கள். எனவே தமிழ்பண்புகள் என்று போற்றப்படுபவை நடைமுறையில் இல்லாவிட்டாலும் மானசீகப்படுத்திக் கொண்ட பண்புகளே.
மானசீகப்படுத்திக் கொண்ட பண்புகள் ஆதர்சநிலையை (ideal State) காட்டுகின்றன. ஆதர்சநிலை விதிநிலையை(norm) நிர்ணயிக்கிறது. தமிழ்ப்பண்பாடு என்று தமிழர்கள் பேசும்போது தாங்கள் ஆதர்சநிலையிலும் விதிநிலையிலும் காண்கிற ஒன்றைத்தான் குறிக்கிறார்கள். அதுநடைமுறையில் இருக்கவேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை.
பண்பாடு என்றால் என்ன?
இப்படி நடக்கவேண்டும் என்ற நடத்தை விதிகளும் (code of conduct) பண்பாட்டின் கூறுதான். அவை இதை இப்படிச் சாப்பிடவேண்டும் என்று மருத்துவர் விதிப்பது போல சமுகத்தின் அறிவுஜீவிகள் விதிக்கும் பண்புக்கூறுகள்(prescriptive rules). அவை ஒருவன் தன்னியல்பாக உண்ணும் உணவல்ல. மருத்துவ விதிப்படி உண்ணும் பத்திய உணவு. மரபிலக்கண விதிகள், எப்படி மொழியைப் பயன்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தும் மொழிவிதிகள்(prescriptive rules), ஒருவனுடைய இயல்பான பேச்சின், எழுத்தின் அடிப்படையாக அமைந்திருக்கும் விளக்கவிதிகள் (Descriptive rules)அல்ல. தமிழர்கள் தமிழ்பண்பாடு என்று சொல்லும் போது மேலேசொன்ன கட்டுப்பாட்டு விதிகளையே குறிக்கிறார்கள்.
இது இப்படி இருக்கவேண்டும் என்று விதிமுறையில் அல்லாமல் இது இப்படி இருக்கிறது என்று விளக்கமுறையில் பார்க்கும் போது உலகின் எல்லாப் பண்பாடுகளுக்கும் பொதுவான, அடிப்படையான கூறு, வாழ்க்கையை அர்த்தப் படுத்திக்கொள்வது. உண்பது, உறங்குவது, உடல்உறவுகொள்வது மட்டுமே மனிதவாழ்க்கை அல்ல என்று விலங்குகளிடமிருந்து வேறுபடுத்தி, தன்னைச்சுற்றியுள்ள மனிதர்களையும் பிற உயிர்களையும் இயற்கைப் பொருட்களையும் தன் வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி, அவற்றுக்குத் தன் வாழ்க்கையில் இடம் தந்து தன் இருப்பைப் புரிந்து கொள்வதே வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்வதாகும். இந்த வாழ்க்கை அர்த்தம் கருத்துக்கள், நம்பிக்கைகள், நடைமுறைகளின் மூலம் வெளிப்படும். இவற்றின் தொகுப்பையே விளக்கநிலையில் பண்பாடு என்கிறோம்.
தமிழ் சமுகத்தை இந்த நோக்கில் பார்த்து அதன் தனிப்பண்புகளைஅதாவது வாழ்க்கையைப் பற்றிய அதன் தனி அர்த்தங்களை - நிறுவும்போதுதான்

விளக்கநிலையில் தமிழ் பண்பாட்டின் தனித்தன்மையைப் பற்றி பேசமுடியும். விளக்கநிலையில் பண்பாடுகளுக்கிடையே - அர்த்தப்படுத்திக் கொண்ட வாழ்க்கைகளுக்கிடையே- உயர்வு தாழ்வு இல்லை. இந்த நோக்கில் அமெரிக்கப் பண்பாடு, தமிழ்பண்பாடு என்ற இரண்டில் எது உயர்ந்தது என்ற கேள்வி அர்த்தமில்லாதது. இதைப் போலவே தமிழ்ச் சமுகத்தின் சங்ககாலப் பண்பாட்டையும் இக்காலப் பண்பாட்டையும் ஒப்பிட்டு உயர்வு தாழ்வு காண்பதும் தவறானது. ஒரு சமுகத்தினுடைய, ஒரு காலத்தினுடைய பண்பாட்டின் அடிப்படையில் இன்னொரு சமுகத்தினுடைய, இன்னொரு காலத்தினுடைய பண்பாட்டை எடைபோடுவது தவறாகும். ஒவ்வொரு சமுகமும் தன்னைக் காத்துக்கொள்ளும் வகையில் தன் சமகால வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்கிறது. இது பரிணாம நியதி. எனவேதான் பண்பாட்டு மாற்றம் இருக்கிறதே தவிர பண்பாட்டு அழிவு இல்லை என்கிறோம். ஒரு சமுகத்தினர் முற்றிலுமாக அழியும்போது, ஒரு சமுகத்தினர் தங்கள் பண்பாட்டை விட்டு இன்னொரு சமுகத்தினரின் பண்பாட்டை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளும் போது பண்பாட்டு அழிவு நேரலாம். ஆனால் இது அபூர்வம். மொழிக்கு இது பொருந்தும்.
வாழ்க்கையின் அர்த்தம்- பண்பாடு - நிலையானது அல்ல. அது காலந்தோறும் மாறும். மாற்றம் தவிர்க்க முடியாதது. ஏனென்றால் மனிதனைச் சுற்றியிருப்பவை மாறுகின்றன. அந்த மாறுதல்களோடு தன்னை இணைத்து வாழ்க்கையைப் புரிந்து கொள்வதும் மாறுகிறது. தமிழ்ப்பண்பாடு இரண்டாயிரம் ஆண்டுகளாக மாறவில்லை என்று சொல்வது உண்மைக்குப் புறம்பானது, நடக்கமுடியாதது. அதேநேரத்தில் வெளிவடிவம் மாறினாலும் அடிப்படைத் தன்மை மாறாமல் இருக்கும் பண்புகளும் பண்பாட்டில் உண்டு. ஆழ்நிலையில் இருக்கும் அவற்றைக் கண்டுபிடிக்கவேண்டும்.
இன்றைய தமிழ்ப்பண்பாடு என்பது என்ன?
இந்த இரண்டின் அடிப்படையிலும் இன்றைய தமிழ்ச் சமுகத்தின் பண்பாடு என்ன என்ற கேள்விக்கு விடைகாண முயலவேண்டும். சங்ககால மரபுப் பண்பாடே தமிழ்ப்பண்பாடு என்பதும், ஏற்றுக்கொண்ட மேல்நாட்டின் புதிய பண்பாடே இன்றைய தமிழ்ப்பண்பாடு என்பதும் விடையாகாது. இரண்டின் ஊடாட்டத்தில் விளைந்த ஒன்றே இன்றைய தமிழ்ப்பண்பாடாக இருக்கமுடியும்.
பண்பாட்டின் அடிப்டை அம்சமான மொழியைப் பற்றிய தமிழர்களின் கருத்துக்களும் மேலே சொன்ன பிற பண்பாட்டுக் கூறுகளை பற்றிய அவர்களது கருத்துக்களைப் போன்றவவையே. அவர்களுடைய மொழி நோக்கு, மொழியின் நடைமுறை வழக்கின் அடிப்படையில், விளக்கநிலையில் அமையாமல் மானசீகப்படுத்தப்பட்ட ஆதர்சநிலையில், விதிநிலையில் அமைந்திருக்கிறது. அமைப்பில்
25

Page 14
தமிழ்மொழி தனித்தன்மையுடையது, மற்ற மொழிகளைவிடச் சிறந்தது, 2000 ஆண்டுகளாக மாறாதது என்ற கருத்து தமிழ்சார்ந்த அறிவுஜீவிகளால் போற்றப்படுகிறது.
ஒவ்வொரு சமுகமும் அதன் பண்பாட்டின் அடிப்படையில் சில சாதனைகள புரிகிறது. வெவ்வேறு பண்பாடுகள் வெவ்வேறு சாதனைகளைப் புரியலாம். பண்பாட்டின் சாதனைகளையே நாகரிகம் (civilization) என்கிறோம். சாதனைகளில் உயர்வு தாழ்வு உண்டு, வாழ்வு தாழ்வும் உண்டு. எனவே ஒரு நாகரிகம் சிறந்த நாகரிகம் என்றோ அழிந்த நாகரிகம் என்றோ சொல்லலாம். ஒரு சமுகம் தன் பண்பாட்டின் விளைவாக எழுத்தையோ வெடிமருந்தையோ கண்டுபிடித்து அதன்மூலம் அதிகாரபலம் பெற்று உயர்ந்த நாகரிகம் என்று பெயர் பெறலாம். வேறு சாதனைகளால் அதிகார பலம் பெற்ற இன்னொரு நாகரிகத்தால் வெல்லப்பட்டு அழிந்த நாகரிகம் என்றும் பெயர் பெறலாம். பண்பாட்டுக்கு உயர்வோ அழிவோ இல்லை; நாகரிகத்துக்கு உண்டு. ஒருவன் பண்பாட்டை உயர்ந்தது, தாழ்ந்தது என்று வகைப்படுத்தினால் 995ے நாகரிகத்தை வகைப்படுத்துவதாகவே அமையும்.
தமிழ்ப்பண்பாடு கட்டடக்கலை, நுண்கலை, நீர்ப்பாசனம், கடல்வணிகம் முதலியவற்றில் முன்காலத்தில் படைத்த சாதனைகளைத் தமிழ்நாகரிகம் எனலாம். தமிழ்மொழி இலக்கியம்,இலக்கணம், ஓரளவு தத்துவம் ஆகியவற்றில் படைத்த சாதனைகளும், தமிழ்நாகரிகத்தில் அடங்கும். இருபண்பாடுகளின் ஊடாட்டத்தால் புதியசாதனைகள்- நாகரிகங்கள்- பிறப்பதை உலகவரலாறு காட்டுகிறது. மேலே சொன்ன மொழித்துறைகளில், முக்கியமாக இலக்கணத்திலும் தத்துவத்திலும் பாளி,பிராகிருதம்,சமஸ்கிருதம் ஆகிய வடமொழிகளின் ஊடாட்டம் தமிழ்மொழிக்கு கிடைத்தது.
இன்று தமிழ் மொழியின் சாதனை என்ன?
தமிழ்நாகரிகம் உயர்ந்த நாகரிகம் என்று நாம் பெருமைப்படலாம். இது தமிழ் முன்னோர்களின் பெருமை. நம்பெருமை, இதற்கு நாம் வாரிசு என்பதே. இன்றைய தமிழ்பண்பாட்டின், தமிழ்மொழியின் சாதனை என்ன என்ற கேள்விக்கு விடை இல்லை. கலை, அறிவியல், இலக்கியம் முதலியவற்றில் இன்றைய தமிழ்பண்பாட்டின், தமிழ்மொழியின் தனிப்பட்ட சாதனைகள், சிறப்பான சாதனைகள் என்று பெருமைப்பட எதுவுமில்லை. ஆங்கிலப் பண்பாட்டின், மொழியின் ஊடாட்டம் தமிழ் பண்பாட்டுக்கு, மொழிக்கு இன்று இருக்கிறது. ஆனால் இதன் விளைவாக புதிய சாதனைகள் எழக் காணோம். செய்தவை எல்லாம் ஆங்கிலப் பண்பாட்டினுடைய, மொழியினுடைய சாதனைகளின் நிழலாகத்தான் இருக்கின்றன. இப்படித் தமிழ்நாகரிகம் ஒடுங்கி விட்டதற்குத் தமிழ்ப்பண்பாட்டில் ஏதாவது காரணம் இருக்கிறதா என்று பார்க்கலாம்.
பண்பாட்டைப் பற்றியும் பண்பாட்டின் சாதனமான மொழியைப் பற்றியும்

தமிழர்கள் கொண்டிருக்கிற மனப்பாங்கும் கருத்துக்களும் ஒரு காரணமாகலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. மேலே சொன்னபடி, இரண்டைப் பற்றிய தமிழர்களின் மனப்பாங்கும் கருத்துக்களும் ஒரேமாதிரியானவை. தமிழ்ப்பண்பாடு துாய்மையானது, இந்தத் துாய்மையைப் போற்றவேண்டும் என்ற எண்ணமும் அந்த எண்ணத்தின் விளைவான செயல்களும் மொழிக்கும் ஏற்படுகின்றன. தமிழ்மொழியைத் தமிழ்ப்பெண்ணாக உருவகிக்கும் போது அதன் கன்னித்தன்மை இளமை,துாய்மை என்ற இரண்டு பொருளிலும்- வலியுறுத்தப் படுகிறது. கன்னித்தன்மையைக் காக்கச் சுதந்திரமான வளர்ச்சிக்கு கட்டுப்பாடுகள் போடப்படுகின்றன. தமிழ்நாகரிகம் உயர்ந்திருந்த காலத்தில் இருந்தது போல் இன்றும் தமிழ் வீட்டு மொழியிலிருந்து நாட்டு மொழியாக வேண்டுமென்றால் கட்டுப்பாடுகள் துணைசெய்யாது. வீட்டைவிட்டு நாட்டுக்கு உழைக்கச் செல்லும் பெண் புடவையிலேயே இருப்பாள் என்று எதிர்பார்க்க முடியாது. பழைய மரபை மேற்கோள் காட்டி நெறிப்படுத்தும் பண்புகளுக்கும் இன்றைய வாழ்க்கை நிர்ப்பந்தங்களுக்கு ஏற்ப நடைமுறையில் கடைப்பிடிக்கும் பண்புகளுக்கும் இடையே இடைவெளி இருப்பதைப் போல மரபு இலக்கணங்களிலிருந்து மேற்கோள் காட்டி நெறிப்படுத்த முனையும் தமிழ் மொழிக்கும் இன்றைய தேவைகளை நிறைவு செய்யத் தேவையான தமிழ்மொழிக்கும் இடைவெளியிருக்கிறது. போற்றுவது ஒன்றும் பின்பற்றுவது ஒன்றுமாக பிறபண்பாட்டுக் கூறுகளில் இரட்டை நடத்தை இருப்பது போல, மொழியிலும் போற்றுவது தமிழ், பின்பற்றுவது ஆங்கிலம் என்றநிலை இருக்கிறது. இந்த இரட்டை நடத்தையால் கலை, அறிவியல், இலக்கியம் ஆகிய எல்லாத் துறைகளிலும் படைப்பாற்றல் முழுமலர்ச்சி அடையவில்லை. நம் ஆளுமையை உருப்படுத்தும் நம் பண்பாட்டை, மொழியைச் சார்ந்து சாதனைகள் செய்ய மனமில்லை; வாய்ப்பு இல்லை. நாம் முழுமையாக தன்வயப் படுத்திக்கொள்ளாத இனனொரு பண்பாட்டை, மொழியைச் சார்ந்து சாதனைகள் செய்ய இயலவில்லை. மீறிச் சிலர் செய்கின்ற சாதனைகளை பிறப்பால் தமிழர்களின் சாதனைகள் எனலாமே தவிர தமிழ்ப்பண்பாட்டின், மொழியின் சாதனைகள் என்று கூறமுடியாது.
தமிழ்ப்பண்பாட்டிடம் தமிழர்களுக்கு ஒரு பக்தி இருப்பது போல் தமிழ்மொழியிடமும் ஒரு பக்தி இருக்கிறது. தமிழைத் தாயாக, தெய்வமாகக் கொள்வதன் விளைவு இது. பக்தி இன்னொரு படி போய் பயபக்தியாகிறது. பயபக்தி மொழியை நம்மிடமிருந்து துாரப்படுத்துகிறது. மேலே சொன்னபடி மரபின் அடிப்படையில் மொழிக்கு விதிக்கும் கட்டுப்பாடுகள் துாரப் படுத்துதலை உறுதிசெய்கின்றன. மொழிக்கு நாம் வணங்குவதை விட மொழியை நமக்கு வளைக்க வேண்டும். மொழியைத் துாரத்தில் வைக்காமல் நெருக்கம் காட்டவேண்டும். மொழியோடு தோழமை உறவு கொண்டு ஊடியும் கூடியும் அதன்மேல் ஆட்சி செலுத்தினாலேயே புதிய மொழி பிறக்கும். புதிய படைப்புக்கள் பிறக்கும். கலை, அறிவியல், இலக்கியப் படைப்புக்களில் புதிய சாதனைகள் படைக்க மொழியிடம் உரிமை எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழ்ப்பண்பாட்டின், மொழியின் விளைவாகப்
27

Page 15
புதிய சாதனைகள் படைக்கும் போதுதான் புதிய தமிழ் நாகரிகம் பற்றிப் பேசலாம். அதைப் பற்றிப் பெருமைப்படலாம்.
fu o GIGU5. ந்தர்கித்ள்
நவீன அறிவியலின் சாராம்சங்களை உள்வாங்கி குழலியல் சிறப்பிதழாக வெளிவந்த அ ஆ இ டிசம்பர் இதழ் ஐரோப்பிய புகலிட சஞ்சிகைகளின் வளர்ச்சியின் ஒரு சிகரம் என்றே கூறவேண்டும். முற்போக்கு சஞ்சிகைகள் என்ற பெயரில் அபத்தமான - நகைப்புக்கிடமான கட்டுரைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தங்கள் சஞ்சிகையின் காத்திரமான கட்டுரைகள் என் போன்ற அறிவுத்தாகம் கொண்ட வாசகருக்கு நல்விருந்தாகும்.
எஸ்.லோறன்ஸ்
பரிஸ்
மெழி கலாச்சார சிக்கல்களுக்கு மத்தியிலும் புலம் பெயர்ந்த தாங்களும், தங்களைப் போன்றவர்களும் ஈழத்துத் தமிழ்க் கலை வளர்ப்பது ஆரோக்கியமான நிகழ்வே. தங்களது பணி முழுமையாகத் தொடரவேண்டும். தங்களைப் போன்றவர்களின் செயற்பாட்டினால் தான் ஐரோப்பிய கலாச்சாரங்களில் தமிழ் கலைகலாச்சாரத்தின் பாதிப்பு நிகழும் நிலை உண்டாகியிருக்கிறது. இது தொடர்ந்தும் வலுப்பெறவேண்டும். எம்.எல்.எம்.அன்சார்
காத்தான்குடி
இதழ் 10 ல் வெளிவந்த "ஒரு வீதிக்கு வந்தமனிதன்" சிறுகதை நன்றாக இருந்தது.
புதிய உலகிற்கு முகம் கொடுக்க முடியாமல் சிதைந்து போகும் எமது மனிதர்களின்
அவல, நிர்ப்பந்த வாழ்வு நன்றாகச் சொல்லப் பட்டிருக்கிறது. இலங்கைத் தமிழர் பல
பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒன்று கலாச்சார
மோதல். வெளிநாட்டில் நம்மவர்கள் பணம் உழைக்கிறார்கள் என்பது மட்டும்தான்
இங்குள்ளவர்களால் அறியப்படுகிறது. ஆனால் தன்வாழ்வை தன் ஆத்மாமை” அபிலாஷைகள் அத்தனையையும் தொலைத்து அவலமாய் நிற்கிறார்கள் என்பதை
என்றுதான் அறியப் போகின்றார்களோ தெரியவில்லை.
பெயர் குறிப்பிடவிரும்பவில்லை
இலங்கை
 

பொங்கல் கலைமாலைப் பொழுது
அண்மையில் தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட 'கலைமாலைப்பொழுது’ நிகழ்ச்சிகளை பார்க்கின்ற சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தது. மத்திய நெதர்லாந்திலுள்ள Zeist எனும் ஒரு சிறு நகரின் தமிழ் இளைஞர்கள் இவ்விழாவை நடத்தினார்கள். மண்டபம் நிறைந்திருந்த சனம் - இலங்கையர் பலரும், நெதர்லாந்துக்காரர்களும் விழாவைப் பார்க்கக் காத்திருந்தனர்.
அகதிகளுக்கான உதவி வழங்கும் நிறுவனத்தின் பிரதேசப் பொறுப்பாளரான திருமதி Riet Klarenbeek பிரதம விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து உரையாற்றும் போது இங்கு வாழும் பலநாட்டவர்களிலும் இலங்கைத் தமிழர்களும் , அவர்களது கலை கலாச்சார வடிவங்களும் - அவற்றை அவர்கள் பேண முயற்ச்சிப்பதும் பாராட்டுக்குரியது' என்று குறிப்பிட்டார்.
முன்னாள் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் மு. நித்தியானந்தன் அவர்கள் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். தமிழர்கள் இயற்கையோடு எவ்வளவு உறவுடையவர்கள் என்பதற்கு பொங்கல் தினம் சான்று பகருவதாகவும், இன்று இயற்கை சிதைந்து பல பிரச்சனைகளுக்கு முகம்
29

Page 16
கொடுப்பதாகவும், இயற்கை என்பது எதிர்காலச் சிறார்களின் சொத்து என்றும், அவற்றைப் பாதுகாப்பது மிக முக்கியமானதென்றும் , அவர் கருத்துத் தெரிவித்தார்."மனிதனுக்குத்தான் இயற்கை தேவை. இயற்கைக்கு மனிதன் தேவையில்லை.மனிதனோ இந்தப் பூவுலகை மனிதர் வாழ முடியாத நரகக்குழியாக மாற்றி வருகிறான். இலாப வேட்டையும் பேராசையும் ஐரோப்பிய நாகரிகத்தின் அடிப்படைகளாகிப் போய்விட்டன. இன்று குழல் நாசமுற்று வரும் குழலில் மேற்குலகிற்கு பொங்கல் மூலம் நாங்கள் சொல்வதற்கு புதிய செய்திகள் உள்ளன. இந்த மண்ணை மதித்தலும், குரிழனை வணங்குதலும் காற்றையும் கால்நடைகளையும் நேசித்தலும் இயற்கையோடு நாம் கொண்டிருந்த நல்லுறவுக்கு நல்ல சாட்சிகளாகும் என்று அவர் தொடர்ந்து பேசுகையில் தெரிவித்த கருத்துக்கள் காத்திரமானவையாகும்.
அதனைத் தொடர்ந்து திரு சிவா இலங்கை அகதிகளுக்கு ஆதரவுக் கரம் கொடுங்கள் என்ற கருத்துப்பட்ட துரையின் பாடலைப் பாடியது உண்மையில் உணர்வு பூர்வமாயிருந்தது. இவ்வகைக் கலைஞர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டியது மிக அவசியமாகும்.
சிறுமி ஜோர்ஜ் ஜோஜினியின் கண்ணன் நடனம் மிகச்சிறப்பு. அவளது அபிநயங்கள்,அசைவுகள் பலத்த கரகோசங்களுக்குட்பட்டது. கொலண்டில் தமிழ்ச் சிறுவர் நிகழ்ச்சிகள் மிக அரிதாகவே மேடையேற்றப் படுகிறது. பெற்ற்ோர்களும், சிறுவர் நிகழ்ச்சிகளில் அக்கறையுள்ளவர்களும் இனிவரும் காலங்களில் அவர்களது மொழி, அறிவியல், கலைநிகழ்ச்சிகளில் கவனம் செலுத்துவது மிக அவசியமானது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். சில பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுப்பதையோ, வீடுகளில் அவர்களுடன் தமிழில் பேசுவதையோ வெட்கமாகக் கருதுகிறார்கள். பெற்றோரின் அந்நிய மோகம் பாவம் சிறுவர்மூலமாக வெளிப்படுத்தப்படுகிறது. அந்நிய நாடொன்றில் அவர்களது செல்லமான கொச்சைத்தமிழ் இனிமையானதென்பதை மறந்து பலர் அதற்காக வெட்கமும் படுகிறார்கள்."
தொடர்ந்து இலங்கைக் கலாச்சாரக்குழுவினர் வழங்கிய கவிதாநிகழ்வு - உலகெங்கும் பரந்து அகதிகளான தமிழர் வாழ்வின் துயரங்களை எடுத்துக்காட்டியது. எல்லைகள் கடந்தபோதும் எம்மிடையே உள்ள வெறுமையின் சோகங்களை கவிதைகளாயும் பாடல்களாயும் தந்தது. பலர் பாராட்டினர் என்பது ஒரு புறமிருக்க, கற்பனை எதுவுமின்றி உண்மையின் பலவடிவங்களைப் பேசியதால் சிலர் முகம் சுழித்துக் கொண்டார்கள். இப்போதும் பலருக்கு தாம் அகதிகள் என்று சொல்ல வெட்கமாகவிருக்கிறது. அரசாங்க, பொது ஸ்தாபனங்கள் வழங்குகின்ற அகதிகளுக்கான அரசியல் சலுகைகளையும் உதவிகளையும் முண்டியடித்து பயன்படுத்தும் இவர்கள் தாங்கள் அகதிகள் என்பதையும் இலங்கைத்தமிழர் என்பதையும் மறைக்க முற்படுவதுதான் ஏன்? பாவம் என்ன செய்வது ?

இலங்கையிலிருந்து பெயர்த்து எறியப்பட்ட நாம் ஐரோப்பிய நகர் ஒன்றில் வேலைசெய்யும் இயந்திரங்களாக நடமாடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில்,எமது பாரம்பரிய கலைவடிவங்களில் ஒன்றான கூத்து ஒன்றைப் பார்க்க முடிந்தது மிக மகிழ்ச்சிக்குரியது. 'கூத்தா போடுகிறீர்கள்'என்று முகம் சுழிக்கின்ற நல்ல கலைகளை மறந்து போன ஐரோப்பியத் தமிழர்களான நம்மத்தியில் கூத்து அரங்கு துணிச்சலான முயற்சிதான் விடிய விடிய கோவில் வெளிகளில் பாடியாடப்பட்ட ‘காத்தவராயன் கூத்து இரு மணிநேரங்களாகச் சுருக்கி இசையுடன் இணைத்து ஆடப்பட்ட விதம் பார்க்க நன்றாக இருந்தது. இவ்வகைக் கூத்துக்கள் மேலும் மேலும் மெருகூட்டி வளர்க்கப்பட வேண்டுமென்பதும், கூத்து வடிவங்கள் புதிய கருத்துக்களோடும், இன்றைய பிரச்சனைகளோடும் இணைக்கப்பட்டு ஆடப்படுவதும் அவசியம் என்பதையும் நாம் கவனத்தில் கொள்வது நல்லது.
அதனைத் தொடர்ந்து ‘சுப்பர்மிக்ஸ்" இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தனியே சினிமாப் பாடல்களையே மீண்டும் மீண்டும் ஒப்புவிக்கிற இசைக் குழுவினர் தாமும் சிலபாடல்கள் ஆக்கி இசையமைப்பது சிறப்பல்லவா? கேட்டுக் கேட்டு புளித்துப் போன பாட்டுக்கள்தானே இவை. நல்ல பாடகிகளும், பாடகர்களும், இசைக் கலைஞர்களும் தாமும் தனித்துவமான இசைவடிவங்களில் கவனம் செலுத்துவது நல்லது. பலகாலமாக இலங்கையின் இசை, நாடகம், நாட்டுக்கூத்து, கிராமியக்கலைகளை வளர விடாமல் தடுத்ததில் தென்னிந்தியச் சினிமாவுக்கும் ஒரு முக்கிய பங்குண்டு. அவற்றையே இங்கும் நாம் பின்பற்றுவது வருந்தத்தக்கது.
இன்று ஈழத்தில் பாரம்பரியக்கலைகளும், புதிய நாடகப் பாங்கும் வளர்ந்து வருவது பாராட்டத்தக்கது. தமிழர் வாழ் பிரதேசங்கள் எங்கும் - அது மேலை நாடுகள் ஆயினும் எமது கலை வடிவங்களைப் பேணி வளர்க்க வேண்டியதும், புதிய மாற்றங்களோடு அவற்றை இணைத்துக் கொண்டு போகவேண்டியதும் நம்முன்னுள்ள கடமைகளாகும்.
இவ்வகை விழாக்கள் ஒரு சில இளைஞர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டு, அவர்கள் கூத்துக்கள்,நிகழ்ச்சிகள் என்பனவற்றை பழகி தமது பணத்தை செலவு செய்து பலருடைய கேலிக்கும், கிண்டலுக்கும் மத்தியில் இப்படியொரு விழாவை நடத்தி முடித்திருப்பது உண்மையில் வரவேற்கப்படவேண்டியதே.
Ziest இளஞர்களும், அவர்களுக்கு ஒத்துழைப்பாக பல தமிழ் குடும்பத்தினரும்
பொங்கல் சிற்றுண்டிகள் வழங்கியதுமிகச்சிறப்பு. தொடர்ந்தும் இவ்வகை விழாக்கள்
நெதர்லாந்து எங்கணும் நடத்தப்பட்டால் எங்களுக்கும் எங்கள் கலைப்பாரம்பரியங்கள்
மீது ஒரு பற்றும் பிடிப்பும் உண்டாகும். சிறுவர்களுக்கும் கலை வடிவங்களின் மீது நாட்டமும் ஈடுபாடும் ஏற்படும். *ܚ
மணி

Page 17
மரத்திலிருந்தும் வேரிலிருந்தும் இலையிலிருந்தும் ஒவ்வோர் அங்கத்திலும் நான் பிரிக்க முடியாதவனாய்
குப்பைமேனியும் வெட்டொட்டியும் நாயுருவியும் பிரண்டையும் எனது குழலில் எது முளைத்தாலும் என்னோடு வளர்ந்தன எனக்கு மருந்தாய் இருந்தன. எதுவுமே அழிந்தொழியவில் நான் எதுவுமற்று ། இரும்பு நகரத்திற்கு வர நேர்ந்தது.
தெய்வ மரங்களும், தெய்வீக மனிதரும் எங்கோ இருக்க
 
 
 

அகதிமனிதனும்
*காத் ஒரேஞ் மனிதனாய் எனது இயக்கம் காத் ஒரேஞ்சுகளோடு மனிதர்கள் சந்திக்கின்றனர் காத் ஒரேஞ்சுகளோடு மனிதர்கள் சிரிக்கின்றனர் காத் ஒரேஞ்சுகளோடு மனிதர்கள் தூங்குகிறார்கள்
பூங்காவனத் திருவிழாவும் கோயிற் கடவுளரும் என்றோ தொலைத்தேன் பூக்கள் பூக்கவைக்கப்படுகின்றன. காய்கள் காய்க்கவைக்கப்படுகின்றன. கனிகள் கனியவைக்கப்படுகின்றன.
பூக்காதிருக்கவும் காய்க்காதிருக்கவும் கணியாதிருக்கவும் இரசாயன நஞ்சுகளுடன் மனிதர்கள் மரங்களைத் துரத்துகின்றனர் மனிதர்கள் மனிதர்களைத் துரத்துகின்றனர் உலகத்தைத் துரத்துகின்றனர்!
Carte orange újTsüTélsöT LDITSTS5 úJuTsouTäéüG