கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அ ஆ இ 1994.03

Page 1
1. ク Tijdschrift voor Ta
 
 


Page 2
o arísk.
1. togasättar afkoksigió தொடர்கிந்து ஈஸ்வரன்
2 பெண்களும்
amapup 二码
கவிதைகள் -
ான்னம்பலம்-ஒரு Rika IMEX)
பிர்கதிகமான கொல்
ன் எண் செர்ரர்? பூங்ரனேந்தனர்
Post bus 85326 - ပွိုဂျို၊ AH Utrecht
Nederland
10 alth சிறுகதை
இல் ši தித் தெடுத்த
 
 
 
 
 
 
 
 

W, Pa friarrafi Iyer 2?"-"F+ ''sigyffStreet "Porfiristi97y ... If it. "E.T. (2:7) 'WዞI: ህIጛህ ,84 ፖI* $jÉ3
மற்றவர்கள் எழுதுகின்ற அல்லது சொல்லுகின்ற கருத்தை நீ ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதில்லை. அதை நீ தாராளமாக எதிர்க்கலாம். ஆனால் அவர்கள் கருத்துச் சொல்வதைத் தடுப்பது. அக் கருத்துக்களுக்காக அவர்களுக்கு மேல் வன்முறையைப் பயன்படுத்துவது நீதியாகாது. என்பதைக் கவனத்தில் கொள். நீ அடிப்பதானாலோ, கொல்லுவதனாலோ, கொழுத்துவதனாலோ கருத்துக் களைத் தடுத்து விடலாம் என்று எண்ணாதே.
பத்திரிகைகள், சிறுசஞ்சிகைகள் மீது வன் முறைகளைப் பிரயோகிப்பது. எழுதுபவர் களைத்தாக்குவது. அவர்கள் எழுதுவதையும், கருத்துச்சொல்வதையும் தடுத்துவிடுவது என்று எல்லாம் எமது பாரம்பரியங்களோ என்று எண்ணும் அளவிற்கு சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
கடந்தகாலத்தில் ஈழத்திலும், தமிழர்வாழ் புகலிட நாடுகளிலும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மீதும் அதில் எழுதுவோர். வெளிக்கொணர்வோர் மீதும் நடத்தப்பட்ட வன்முறைகளை ஒரு பட்டியலே போட்டுவிடலாம். பிரான்ஸ்,கனடா, நெதர்லாந்து. நோர்வே போன்ற நாடுகளில். பள்ளம், ஈழநாடு, தாயகம், உரிமை, சுவடுகள்.என்று நீழுகிறது.
easus

Page 3
புகலிட நாடுகளில் இந்த வன்முறைக்கு உட்பட்ட வர்கள் சிறு சஞ்சிகையாளர்களும் சஞ்சிகைகளும் தான் . விற்பதற்கும், விநி யோகிப்பதற்கும் கூட அவர்களுக்கு தடைவிதிக் கப்படுவதும் மறைக்க முடியாத உண்மைகள் அப்படி யிருந்தும் அதற்கெதிராகக் குரல் கொடுப்பவர்களும் அவர்கள்தான்.
அண்மையில் "பாரிஸ் ஈழநாடு" பிரான்ஸ் அலுவலகம் தீ வைக்கப்பட்டு முற்றாகச் சேதமானதும்கூட கருத்தை மறுக்கும் வன்முறையே. விடுதலைப்புலிகளினால் கைது செய்யப்பட்ட பிரதித்தலைவர் மாத்தையா பற்றிய செய்தியை வெளியிட்டதால் அவரின் ஆதரவாளர்களினால் இவ்வன்முறை பிரயோகிக்கப் பட்டதென உரிமை கோரியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஈழநாடு மீண்டும் வெளிவருவதற்கான பொருளாதார பலம் கொண்டதால் அது உடனடியாகவே வெளிவரத் தொடங்கி விட்டது . ஆனால் இவ் வகை வன்முறைகளினால் கழுத்து நெரிக்கப்பட்ட சிறு சஞ்சிகைகள் பல. அது எவ்வாறாயினும் கருத்தை மறுக்கும் வன்முறைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
நாம் கோருவது இவ்வகையான வன்முறைகளை நீங்கள் கைவிட வேண்டும். கருத்துச் சுதந்திரத்தை அங்கீகரிக்காத சமூகமாக எம்மை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டாம். தனிநபராகவோ, குழுவாகவோ, இயக்கமாகவோ, அரசாகவோ நீங்கள் யாராக இருப்பினும் இவ் வன்முறைகளுக்கு தலைமை ஏற்பதையும் , ஊக்கம் , ஆதரவு கொடுப்பதையும் நிறுத்துங்கள்.
ஆஇயக்கி

IDIaj60.5III விவகாரம் தொடர்கிறது - ஈஸ்வரன்
*மாத்தையா கைது “மாத்தையாவிற்கு மரணதண்டனை' 'மாத்தையாவிற்கு தேசத்துரோகக் குற்றத்துக்காக அதியுயர் தண்டனை". அண்மைக்காலமாக வெளிவந்த செய்திகள் இவை. விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், பிரதித்தலைவரும், வன்னிப்பிரதேசத் தளபதியும், விடுதலை புலிகளின் மக்கள் முன்னணி தலைவருமான மாத்தையா என்று அழைக்கப்படுகின்ற மகேந்திரராஜா அவர்களும் அவரது ஆதரவாளர்களும் விடுதலைப்புலிகளினால் கைது செய்யப்பட்டதும் விசாரணைக்குட்படுத்தப் பட்டதும் இப்போது பலராலும் அறியப்பட்ட செய்திதான்.
பிரபாவும் மாத்தையாவும் . فلما سمة لس؟ . Suuase ( ().
கைது செய்யப்பட்ட செய்தியானது ஆரம்பத்தில் வெறும் வதந்தியாகவே வெளிவந்தது. ஈழத்தில் இவ்வதந்திகள் தலைவர் பிரபாகரனுக்கும், மாத்தையாவுக்குமிடையான கருத்துமுரண்பாடுகள்
ஆதி க்3

Page 4
என்றும், தனது உறவினர்களுக்குபால் வழங்கினர் என்றும், பல்வேறு விதமாகப் பேசப்பட்டு பின்னர் "இத்திய உணவுப்படையுடன் சேர்ந்து காட்டிக் கொடுக்க சதி செய்தார்’ என்றும் "கிட்டுவின் கொலைக்குக் காரணமாயிருந்தார்" என்றும் பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டிருந்தன.
ஆரம்பகாலத்திலிருந்தே விடுதலைப்புலிகளை களத்தில் நின்று போராட வளர்த்தவர்களில் மாத்தையாவும் முக்கியமானவர். வன்னிப்பிரதேச தளபதியான மாத்தையாவுக்கு நல்ல மதிப்பும் புகழும் புலிகளிடத்தில் எப்போதும் இருந்து வந்திருக்கிறது. இயக்கத்தில் மாத்தையாவும், பிரபாகரனும் மிக முக்கியமானவர்களாகவும் சமமான வர்களாகவும் கருதப்பட்டு வந்திருக்கிறார்கள். விடுதலைப்புலிகளின் மக்கள் முன்னணி அமைக்கப்பட்டு, இலங்கை ஜனாதிபதி பிரேமதாசவுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டவரும் இவர்தான். இந்தியப்படைகளின் காலத்தில் கைது செய்யப்பட்டிருந்த புலேந்திரன், குமரப்பா மற்றும் பல புலிகளின் முக்கியஸ் தர்களின் மரணங்கள் சம்பந்தமான விடையங்களில் முக்கிய இராஜதந்திரியாய் இருந்து புலிகளால் பாராட்டப்பட்டவரும் மாத்தையாதான் என்பது பரவலாக அறியப்பட்ட ஒன்று.
விடுதலைப்புலிகளின் தலமைக்குள்ளோ, இயக்கத்துக்குள்ளோ முரண்பாடுகள் வந்து உடைந்து போகாத ஒரு இறுக்கமான அமைப்பாக உள்ளதாகவும் அதனாற்தான் இது இறுதிவரை தாக்குப்பிடித்து நிற்பதாகவும் மக்கள் மத்தியல் அபிப்பிராயம் உண்டு. ஆனால் காலம் காலமாக முரண்பாட்டாளர்களைத் தனிமைப்படுத்தி "தியாகங்கள்' ‘தண்டனைகள் மூலம் 'முரண்பாடுகள் தீர்க்கப்பட்டதும், அதுவுமல்லாமல் வெவ்வேறு இயக்கங்களின் மீது பழிகளைப் போட்டுக் கொண்டதும் இப்போதும் வெளிவருகின்ற செய்திகள்தான். தேச நலனுக்காகப் பாடுபட்ட பல தனிமனிதர்களையும், வெவ்வேறு இயக்கத்தினரையும் துரோகப் பட்டங்கட்டி மரண தண்டனையும் (பச்சமட்டை அடி) சித்திரவதைகளையும் செய்தவர்களில் ஒருவரான மாத்தையாவே இன்று துரோகியாகிப் போனார். அவரது சிறப்பான தலைமையின் கீழ் தமிழீழ உளவுப்படை வளர்ந்ததாகவும் வேலைகள்

விரிவுபடுத்தப் பட்டதாவும் புலிகளே பெருமை கொள்வார்கள். அந்த உளவுப்பிரிவினுாடாக ஈழத்தில் மற்றவர்களை மூச்சு விடாமல் பண்ணியவர்களில் ஒருவரான மாத்தையாவே இன்று உளவுப்பிரிவின் தலைவர் ‘பொட்டம்மானின் விசாரணையில் உள்ளார் என்பது
ஆச்சரியமான உண்மைதான்.
கடந்த சில ஆண்டுகளாக மாத்தையாவின் நடவடிக்கைகள் முடக்கப்பட்டிருந்தது என்னவோ உண்மை தான். ஆயினும் மாத்தையாவிற்கான ஆதரவு ஈழத்தில் கணிசமான அளவு இருந்திருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. அவருடன் பலர் கைது செய்யப்பட்டிருப்பதும் விசாரணைக் குட்படுத்தப்பட்டதும் இதற்குச் சான்றுகளாகும். வெளிநாடுகளில்பல்வேறு விதமான நடவடிக்கைகளில் அவரது ஆதரவாளர்கள் இறங்கினார்கள். லண்டன் தெருக்களில் சுவரொட்டிகள், பிரான்சில் ஈழநாடு பத்திரிகை அலுவலகம் தீக்கிரை, பிரபாகரனைத்தாக்கி மாத்தையா பிரிவினரின் துண்டுப்பிரசுர வெளியீடு என்று பலவாறான பிளவுகள் வெளிப்படையாக தெரிய
ஆரம்பித்துள்ளது.
கடைசியாகக் கிடைத்த செய்திகளின்படி மாத்தையாவிற்கு விதிக்கப்படவிருந்த மரணதண்டனை பல்வேறு எதிர்ப்புகள் காரணமாய் பின்போடப்பட்டுள்ளதாகவே அறியப்படுகிறது. குறிப்பாக பிரபாகரனின் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையில் இருந்தும் வந்த எதிர்ப்புகள். அவருக்கு அவர்பக்க நியாயங்களை சொல்வதற்கு வாய்ப்புக்கள் கொடுக் கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளினால் தற்காலிகமாவேனும் பின்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
ஒரு இயக்கத்துக்குள் இராணுவப் போட்டாபோட்டியும் பதவி ஆசைகளும் கருத்துமுரண்பாடுகளும் இருக்கமாட்டதென்பது எவ்வளவு பொய்யானதென்பதும், ஜனநாயப் பண்புகள் என்ன விதமாகவெல்லாம் மறுக்கப்படுகிறதென்பதற்கும் கடந்தகாலம் நல்ல வரலாறாகவே அமைந்துவிட்டது. போராடப் புறப்பட்டவர்களிடத்தில் உட்கொலைகளும் மரணதண்டனைகளும் தேவையான போது அதற்குகந்த காரணங்களும் சொல்லப்பட்டே வந்திருக்கிறது.

Page 5
"GuGiorsSISub 9, UGOLSJITscupub" (Women and Fundamentalism) என்ற பொருளில் பெர்லினில் கடந்த ஜனவரி 14,15 ம் திகதிகளில் நடைபெற்ற கருத்தரங்கு முக்கியம் வாய்ந்த ஒன்றாகும். பங்களாதேஷ், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்த பெண்கள் திறந்த ஒரு விவாதத்தில் இறங்கும் நோக்கத்துடன் வழங்கிய கருத்துரைகள் பற்றிய ஆய்வு தொடர்வது அவசியமானதாகும். அடிப்படைவாதம் பற்றிப் பல்வேறு கருத்தோட்டங்களும் வெவ்வேறுபட்ட அபிப்பிராய அழுத்தங்களும் நிலவும் நிலையில் ஒரு கருத்தரங்கு இது போன்ற பரந்த ஒரு பொருளில் அனைத்தையும் பற்றி விவாதித்து முடிவு கட்டி விடுவது சாத்தியமில்லை.
பெண்களும் அடிப்படைவாதமும் பற்றிச் சிந்திக்கும் போது இன்று சகல நாடுகளிலும் எழுச்சியுற்றிருக்கும் அடிப்படைவாதமானது இதுகாலவரை பெண்கள் போராடிப் பெற்றுக் கொண்டுள்ள கொஞ்சநஞ்ச வெற்றிகளைக்கூடப் பின்தள்ளிப் போடச் செய்துவிடுகிறது. இந்த அடிப்படை வாதங்களை இரண்டு வகையாகப் பாகுபடுத்தி நோக்கலாம்.
1) அரசு ரீதியிலான அடிப்படைவாதம் 2) அரசு சார்பற்ற அடிப்படைவாதம்
 
 

இலங்கையில் பெளத்தசமயமும் இந்தியா வில் இந்து சமயமும் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் அரபு நா டு களி ல் இஸ் லா மும் அரசுரீதியிலான அடிப்படைவாதங்களை முனைப்போடு செயற்படுத்தி வருவது ஆபத்தான விளைவுகளையே ஏற்படுத்தி உள்ளது. அரசின் ஆசி பெறாத சமயங்கள் இந்தப் போக்கிற்கு எதிர்
விளைவாக மறுமுனையில் தீவிரமாகச்
செயற்பட்டுக் கொண்டு வருவதையும் நாம் காண்கிறோம்.
அர சி ய ல் மயப்படுத்துவதே அடிப்படைவாதத்தின் மையக்கருத்தாகும். நாளாந்த சமய அ னு ஷ் டா ன ங் கள் மக்களிடையேயும் காணப்படும் ஒன்றுதான். அடிப்படை வாதமோ இந்த நாளாந்த சமய நடைமுறைகளோடு
ச ம ய த்  ைத
6T si) s) st
ச ம ய த் தி ன் தொன்  ைம யான ep 6) is as 60) 6T5 C5 (Back to the Sources) அதன் அடிப்படையிலான அரசியல் கருத்தினை முன்வைத்து அதற்கான கட்ட மை ப்பையும் உருவாக்கி அதிகாரத்  ைத க் கைப்பற்றும் நோக்குடனேயே இயங்கி வருகிறது.
இஸ் லாமியத் தீவிரவாதிகள் இஸ்லாத்தின் கலாச்சார அமைப்பினை அரசியல் மயப்படுத்தி , தத்தம் சமூக ங் கள் எ தி ர் நோ க்கு ம்
கொள்ள வேண்டும் என்பதற்கு இஸ்லாமிய அடிப்படை வாதம் கூறும் :--------- ரஸ்யமானது. ஒவ்வொரு ஓநாய் போலவே ஒரு
u tr f க்கிற r
弼 ங்கே:ள் முடிக்கொண்டுவிடவேண்டும்
மற்ற ஓநாய்களின் கழுகுக் கண்களிலிருந்து தனது மனைவியைப்
: tffrở åkas tiff toiv தானே نوا الم பாதுகாத்து பார்த்து அநுபவித்து

Page 6
நெருக் கடிகளோடு இணைந்த
அரசியல், பொருளாதாரத் தேவைகளை
வெளிப்படுத்தும் கருவியாகவே அதன் குறியீடுகளைப் பிரயோகித் து வருகின்றனர்.
இதுகாலவரை மத்தியகிழக்கு நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட தாராளவாத, ஜனரஞ்சக அரசியல் மு  ைற  ைம க ள் தோ ல் வி யில் முடிந்துள்ள ன வெ னினும் நவ இஸ்லாமிய அடிப்படைவாதம் அதற்கு ஒரு மாற்றாக அமையமாட்டாது என்று சமீர் அமின் போன்ற அறிஞர்கள் கருதுகின்றனர்.
"இன்று நாம் எதிர்நோக்கியுள்ள ஆழமான நெருக்கடியின் மத்தியில் கலாச்சார முதுசம் பற்றி அல்லது ம க் க ள் 9 b LD T ś f ஒன்றைப் பற்றிக்கொண்டிருக்கும் கருத்து பற்றி பெரும் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எ வ் வா றா யி னும் இது ஒரு நெருக்கடியின் அடையாளமே தவிர, இதற்கான தீர்வை வழங்க ஒரு முயற்சியும் மேற் கொள்ளப்படவில்லை.
சாகவில்லை. ஆனால் இந்தத் தண்டனை மூலம் தன க் கு
Si Georgicka communications, Pro Box 1031, station" :Toronto, Ont, M4Y2T7, Canada.:
 
 
 
 
 
 
 
 
 

பிரச்சினைகள் ஒன்றும் புதியன அல்ல என்றும் இப்பிரச்சினைகளுக்குக் கடந்த காலமே தீர்ப்பு நல்கக்கூடியன என்ற பிழையான அனுமானத்தையே இந்த அணுகுமுறை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இது சமயத் தொன்மைவாதக் கண்ணோட்டமாகும்." SAMR AMIN
இன்று எழுச்சியுற்றுக்கொண்டிருக்கும் அடிப்படை வாதச்சிந்தனையில் பெண்கள் பற்றிய பிரச்சினை மையமாக உள்ளது. ஆனால் பாக்டர். புவாட் சக்காரியா கூறுவதுபோல, "பெண்கள் பிரச்சினைக்கு இந்த அளவு கூடிய அழுத்தம் கொடுத்திருப்பதற்கு அடிப்படைவாதச்சிந்தனையில் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உன்னதமான அந்தஸ் தோ அல்லது பெண்கள் பிரச்சினையை உண்மையான அக்கறையோடு ஆராய வேண்டும் என்ற நோக்கமோ காரணமில்லை. மாறாக குடும்பம் என்ற அமைப்பிலும் ஆண்கள் தொடர்பான உறவிலும் பெண்களின் நிலைப்பாட்டை இவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதற்கு இரண்டு நோக்கங்கள் உள்ளன: முதலாவது சமூகத்தின் உண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பி இப்பிரச்சினைகளுக்கு அடிப்படைவாத சமயக் கருத்தினாலான மேலோட்டமான அணுகு முறை மூலம் இதனை பூசி மெழுகுவதாகும். இரண்டாவது பெண்களின் பிரச்சினைகளைத் தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்தி நாம் பல வருஷங்களுக்கு முன்னரே கடந்து வந்து விட்டோம் என்று கருதிக் கொண்டிருக்கும் முன்னரிருந்த பின் தங்கிய நிலைமைக்குப் பெண்களைப் பின் தள்ளிப் போக நிர்ப்பந்திக்கும் நோக்கமும் ஆகும்"
இந்த சமய அடிப்படைவாதிகள் சமூகத்தில் வேரோடிப்போயிருக்கும் தார்மீக விழுமியங்களையும் மரபுரீதியான வழக்காறுகளையும் பற்றி அடிக்கடி குரலெழுப்பிய வண்ணம் உள்ளனர். குடும்பத்தின் அடிப்படை பெண்தானென்றும் பெண்கள் முறைதவறிக் குற்றமிழைப்பது பெரும் ஆபத்தானது என்றும் கூறி வருகிறார்கள். ஆண்கள் அதே தவறுகளை இழைத்தால் அவர்களை சமூகத்திற்குள் மீண்டும் ஏற்றுக்கொண்டுவிடத் தயங்காத இவ்வடிப்படை வாதிகள் பெண்கள் அதே தவறுகளை இழைத்தால் அதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்வதில்லை.
பெண்களை மிக இழிந்த பின் தங்கிய நிலைக்கு சமய அடிப்படைவாதிகள் தள்ளிச் செல்லும் அதே நேரத்தில் சகல

Page 7
போராட்டங்களிலும் பெண்களை வெற்று வார்த்தைகளில் உயர்த்திப் பேசும் பாசாங்குத்தனத்திலும் ஈடுபட்டுள்ளனர். தமிழ் மகனைக் கொன்ற துட்டகெமுனுவை ஈன்ற தாயென அன்னை விஹாரமாதேவியைச் சிங்கள மக்கள் மத்தியில் மகிமைப்படுத்தும் அதே நேரத்தில் "வீரத்தாய்" என்றும் "வீரமறவனை ஈன்ற தாய்" என்றும் தமிழ்த்தாயை உன்னதப்படுத்தும் போக்குகளும் நாமறிந்தவையே. அதே நேரத்தில் தங்களை விமர்சித்த ஒரு காரணத்துக்காக மட்டுமே இன்னுமொரு தாயைச்சுட்டு நடு வீதியில் வீசி விட்டுப் போவதும் இவர்களுக்குச் சாதாரணமான நிகழ்வே.
சமய, கலாச்சார அடிப்படைவாதம் தங்களை நசுக்கிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் பெருந்தொகையான பெண்கள் தங்களைத் தியாகத் தாய்களாக இந்த அடிப்படைவாதிகளின் அரங்குகளில் பகிரங்ககமாகத் தோன்றியும் அவர்கள் வகுத்துத்தரும் நடத்தைமுறைகளை அப்படியே பின்பற்றியும் வருகின்றனர்.
இந்த மிகவும் பிற்போக்கான-வரலாற்று வளர்ச்சிப் போக்கிற்கு எதிரான அடிப்படைவாத மாயையில் மக்கள் ஈர்க்கப்பட்டிருப்பது ஏன் என்ற கேள்வியும் நம்முன்னால் உள்ளது.
இன்று சமய அல்லது கலாச்சார அடிப்படைவாதம் ஏன் இவ்வளவு முனைப்போடு செயற்பட்டு வருகிறது? இதனைச் சாத்தியமாக்கும் அரசியல், பொருளாதார அடிப்படைகள் தான் என்ன?. இந்த அடிப்படைவாதச் சுலோகங்களையும் கருத்துக்களையும் மக்கள் அப்படியே ஏற்றுக் கொண்டு விடுமளவுக்கு மக்களின் மனதில் எவ்வாறு அத்தகைய வெறுமை விரவியது?
இவை நாம் விடைகாண வேண்டிய வினாக்கள்.
sseay, 3
 

வளர்மதியும் ஒரு GDI'IdfliÝGIID&fpui
ராஜேஸ்வரிபாலசுப்பிரமணியம்
ax メ வளர்மதிக்கு இரண்டரை வயது. 'அம்மா,அப்பா'என்ற வார்தைகளை அழகாகச் சொல்கிறாள். தத்தித் தத்தி நடந்து விழுந்தது நேற்று நடந்தது போல் இருக்கிறது. இப்போது தள்ளுவண்டியில் இருக்கமாட்டாளாம். எந்த நேரமும் ஓட்டமும் நடையும் ஒரு இடத்தில் இருக்கவே மாட்டாளாம்.
இரண்டாவது வருட வளர்ச்சியைப் பரிசோதித்த பொக்டர் வளர்மதி மிக துடிகையான பெண் என்றும் அவள் கெட்டிக்காரியாக வருவாளென்றும் சொன்னார். ஆனாலும் வளர்மதியின் எடை இரண்டு வயதுக் குழந்தைகளுக்கு இருக்கவேண்டியதை விடக் குறைவாக இருப்பதாகவும் அவளின் சாப்பாட்டில் கவனமாக இருக்கவேண்டும் என்றும் வளர்மதியின் தாய் மாலதிக்கு டொக்டர் சொன்னார்.
வளர்மதி மிகவும் துடிகையான பெண்தான். ஆனாலும் நிறம் கொஞ்சம் சிவப்பாக இல்லையென்று மாலதிக்கு கவலை.
"என்னெண்டு பிள்ளை சிவப்பாக இருக்கும்,நீ கரிக்குஞ்சு மாதிரி "மாலதியின் கணவன் சிதம்பரம் பாய்ந்து விழுந்தான்.
அனுக்கு மாலதியைக் கலியாணம் செய்து ஒரு வருடத்தில் பிள்ளை பெற்றுக்கொண்டது அவ்வளவு பிடிக்கவில்லை. மாலதியும் சிதம்பரமும் கொஞ்சம் மிச்சம் பிடித்துவிட்டு குழந்தை குட்டிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தான் பேசிக்கொண்டார்கள்.
ஆனால் மாலதிக்குக் கற்பத்தடைக் குளிசை ஒத்துக்கொள்ளவில்லை.
ஆதி பகி3

Page 8
இரண்டு கிழமைதான் கற்பத்தடைக் குளிசை எடுத்தாள். அந்த இரண்டு கிழமைகளும் சத்தியும் தலைச்சுற்றுமாகத் தவித்து விட்டாள். கற்பத்தடைக் குளிசை எடுப்பது சில பெண்களுக்கு ஒத்துவராது என்று டொக்டர் சொன்னார். குழந்தை இப்போது பெற்றுக்கொள்ளும் யோசனை இல்லை என்றால், ஒன்றில் குளிசை எடுக்க வேண்டும் அல்லது கற்பப்பைக்குள் "கொயில் போட்டுக்கொள்ள வேண்டும் அல்லது சிதம்பரம் "உறை" பாவிக்கலாம் என்று டொக்டர் அட்வைஸ் கொடுத்தார்.
மாலதிக்கு குளிசை சரிவரவில்லை. தலைச்சுற்று, ஓயாத ஓங்காளம், இரண்டு கிழமை எடுத்துப் பார்த்துவிட்டு அவள் குளிசை எடுப்பதை நிறுத்தி விட்டாள்.
கற்பப்பைக் குள் 'கொயில் போட்டுக்கொள்வதைப் பற்றித் தெரிந்துகொள்ளப் போனபோது பல பெணகளும் பல கதை சொன்னார்கள். பிளாஸ் ரிக்கால் ஆன ஒரு சுருண்ட வளையத்தைக் கற்பப்பைக்குள் திணிப்பார்களாம். அது கற்பம் உண்டாவதை தடுக்குமாம். ஆனால் சில பெண்களுக்கு இந்த கொயில் கற்பப்பையின் சுவர்களில் உரசி இரத்தப் பெருக்கு, தாங்கமுடியாத நோ என்பனவற்றையெல்லாம் உண்டாக்குமாம். சிலவேளை infection வந்தால் மிகப்பார தூரமான விளைவை- கிட்டத்தட்ட உயிருக்கு ஆபத்தையே உண்டாக்கி விடுமாம். மாலதி கொயில் மாட்டிக் கொள்ளவில்லை. டொக்டர் 'இதுதான் கொயில்" என்று காட்டிய பிளாஸ்ரிக் வளையமே அவளுக்குப் பயத்தை உண்டாக்கிவிட்டது.
குளிசை போட்டுக்கொள்ள முடியாது, கொயில் மாட்டிக் கொள்ள முடியாது. இனி என்ன செய்வது? "டையாபுரம் மாட்டிக் கொண்டால் என்ன? டொக்டர் கேட்டார்
பெண்ணுறுப்பை- கர்ப்பப் பையிலிருந்து காப்பாற்றும் கவசம் அவளிடம் டொக்டர் ஒரு டையாபுரத்தைக் கொடுத்தார். மாலதி அதைப் போட வேண்டிய இடத்தில் போடமுனைந்து பட்ட பாடு பெரும் பாடாகப் போய் விட்டது.
பெண்கள் தான் எல்லாப் பொறுப்பையும் எடுக்க வேண்டுமா? அவள் பெருமூச்சு விட்டாள். கிளினிக்கில் டொக்டர் சொன்ன மாதிரி சிதம்பரணை உறை போட்டுக் கொள்ளச் சொல்லலாமா?
"கிளினிக்" க்கு வந்திருந்த பெண்கள் Free யாகக் கொடுக்கும் 'condons உறைகளை வாங்கிக் கொண்டு போனார்கள். இவளுக்கும் ஒரு
 

பைக்கட்டை அந்த நேர்ஸ் குறும்பாகச் சிரித்தபடி கொடுத்தாள் மாலதி ஒன்றும் புரியாமல் விழித்தாள். கிளினிக் நேஸ் ஒரு கறுத்தப் பெண். ஆபிரிக்கப்பெண்ணாக இருக்கலாம். நறுக்கு நறுக்கு என்று இங்கிலிஸ் பேசினாள்.
மாலதி லண்டனுக்கு வந்தே இரண்டு வருடங்கள் தான் ஆகிறது. ஏஜன்சிக் காரணுக்குக் கொடுத்த காசு இன்னும் கட்டி முடியவில்லை. இந்த வருடம் எப்படியும் தனது தம்பியை எடுத்து விடுவது என்று சிதம்பரம் சொல்லிக் கொண்டிருக்கிறான்.
இந்த லட்விடிணத்தில் பிள்ளை பெற்றுக்கொள்ள கட்டுப்படி se.(5LDr? அவள் கொண்டு வந்த 'உறைகளைச் சிதம்பம் பேயைப் பார்ப்பதைப் போல் பார்த்தான்.
லண்டனுக்கு வந்து என்னவெல்லாம் செய்யவேண்டிக் கிடக்கிறது? லண்டன் மனிதர்களின் பாஷை; இந்த மண்ணுங்கட்டிச் சுவாத்தியம் எல்லாவற்றையும் தாங்குவது வேறு கதை. இப்போது கவசம் போட்டுக் கொண்டு கலவி செய்வதென்றால்.
சிதம்பரம் மெளனமாகப் போய்விட்டான். அவனுக்கு இவள் புத்தி சொல்ல முடியாது ஏதோ "கவனமாக' இருப்பம் என்று முனு முணுத்தான்.
கொடிய குளிருக்கு எங்கே "கவனம்' இருக்கிறது. மனைவியின் அணைப்பில் வரும் குடு எந்தவிதமான central heating லும் கிடைக்குமா?
"அழகான குழந்தை" நேர்ஸ் கம்பளியைச் சுற்றிக்கொண்ட குழந்தையை மாலதிக்கருகில் கிடத்தினாள்.
அழகான குழந்தையாம்! அதுவும் பெட்டைக் குழந்தை! "லண்டனில் என்ன அழகு பார்க்கிறாய்? நாங்கள் எல்லாரும் கறுப்பர்தானே" சிதம்பரம் வெறித்துப் பார்க்கும் மனைவியைப் பார்த்து ஆறுதல் கூறினான்.
மாலதி கன்னங்கரேல் என்று பிறந்து தன் விரலை வாய்க்குள் திணிக்கும் தன் மகளைப் பார்த்துக் கொண்டாள். மாலதி மூன்றாவது பெண்ணாக ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்தவள். பெரிய குடும்பம் என்றால் பணத்தில் பெரிய குடும்பமில்லை. குழந்தைகளின் எண்ணிக்கையில் பெரிய குடும்பம் . அந்தக் காலத்தில் யார் ஆண்மைக்குக்கவசம்’ போட்டார்கள்? கலகலவென எட்டுக் குழந்தைகள். மாலதி மூன்றாவது பெண் மூத்த இரு அக்காக்கழுக்கும் கல்யாணம் முடிய இவள் முப்பது வயதைத் தாண்டி விட்டாள்.
25 and 15

Page 9
உள்ளது எல்லாம் கொடுத்து சிதம்பரனை கல்யாணம் செய்து கொண்டு லண்டன் வந்து மாலதி மகள் வளர்மதியைப் பெற்றுக் கொண்ட போது அவளுக்கு வயது முப்பத்தி ஒன்று.
"பிள்ளை பிறக்க ஆசையென்றால் இப்போதே பெற்றுக்கொள்இல்லை என்றால் இடுப்பெலும்பு வளைந்து கொடுக்காது" எல்லாந் தெரிந்த ஒரு கிழவி லண்டன் கலியாணவீட்டில் வடையை விழுங்கிக் கொண்டு இவளுக்குப் புத்தி சொன்னாள்.
வளர்மதி என்று பெயர் வைத்ததே மாலதிதான். வ,வா, வில் ெ வைக்கச் சொல்லி ஊரிலிருந்து கடிதம் வந்தது. "வாசுகி என்று வைப்போமோ" சிதம்பரம் கேட்டான் "இந்தப் பெயரை ஆங்கிலேயர் சரியாக உச்சரிப்பார்களா? அவள் கேட்டாள். அவனுக்குக் கோபம் வந்து விட்டது. "வெள்ளைக்காரனுகுத் தக்க பெயர் வைப்பதென்றால் மார்க்கிறட் தச்சர் எண்டு வை " என்று திட்டினான்.
கடைசியாக எப்படியோ வளர்மதி என்று பெயர் வைத்தார்கள். மதி என்று தாய் அழகாகக் கூப்பிட வளர்மதியைப் பகலில் பார்த்துக் கொள்ளும் ஐரிஸ் பெண் மட்டி' என்று செல்லமாகக் கூப்பிடுவாள், அவள் குழந்தைகள் மாதி’ என்று ஆசையாகச் சொல்வார்கள்.
குழந்தையை ஐரிஸ் காரி பராமரிக்க மாலதி இந்தியன் கடை ஒன்றில் வேலை செய்கிறாள். குழந்தை பிறந்து மூன்றாம் மாதமே வேலை செய்யத் தொடங்கி விட்டாள். குடும்பப் பொறுப்புக்கள் ஏராளம்.
சிதம்பரனின் தம்பியை எப்படியும் எடுத்து விட்டால் அடுத்ததாகத் தன் தம்பியையும் எடுக்கலாம் என்பது மாலதியின் ஆசை.
தெரிந்த கொஞ்சம் மனிதர்களுடன் சேர்ந்து சீட்டுக் கட்டிய காசை எடுத்துக் கொண்டு தனக்கு தெரிந்த ஏஜன்சிக்காரனிடம் அலைகிறான் சிதம்பரம்.சீட்டுக்காக ஒவ்வொரு மாதமும் கட்ட வேண்டும். சில வேளை அவள் வேலை செய்யும் இந்தியக் கடையில் இவளோடு வேலை செய்யும் பெண் வராவிட்டால் மாலதி கூட வேலை செய்வாள். ஓவர் ரைம் செய்யும் காசை வீட்டுச் சாமான்கள் வாங்கப் பாவிப்பாள்.
குழந்தை வளர்மதியுடன் விளையாட இப்போதெல்லாம் நேரமில்லை, பின்நேரம் வந்தால் சமையல், வீட்டு வேலைகள் என்று நிறைந்து கிடக்கும். அதன்பின் சமயல் பாத்திரங்களைக் கழுவி முடிய நேரம் ஒன்பது மணியாகி விடும்.
சிதம்பரம் ஒரு பெற்றோல் செட்டில் வேலை செய்கிறான். எட்டு

"நாமார்க்குங் குடியல்லோம்; நமனையஞ்சோம்" என்ற வரிகளைத் தாரக மந்திரமாகக் கொண்டியங்கிய வி.பொன்னம்பலம் அவர்களின் மறைவு இலங்கையின் குறிப்பாக யாழ்ப்பாணத்தின் இடதுசாரி அரசியலில் முக்கிய பாத்திரம் வகித்த மூத்த அரசியல்வாதி ஒருவரின் இழப்பினைச் சுட்டி நிற்கிறது
மேற்கு நாடுகளுக்குக் கல்வி பயிலச் சென்று கம்யூனிஸ்டுகளாகத் திரும்பிய இலங்கையின் பிற இடதுசாரிகளைப் போலன்றி இவர் சென்னையில் கிறிஸ்தவக் கல்லூரியில் பயின்ற காலத்தில் ப.ஜீவானந்தம் போன்ற தமிழகத்தின் தலைசிறந்த இடதுசாரிகளின் நடவடிக்கைகளால்

Page 10
ஈர்க்கப்பட்டவராய் முற்போக்குச் சிந்தனைகளோடு இலங்கை திருமபினார்.
ஆசிரியராகத் தன் வாழ்க்கையை ஆரம்பித்த வி.பொன்னம்பலம் சுண்ணாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் (கந்தரோடை) ஆசிரியராகப் பணிபுரிந்தபோது மாணவர்களையும் சக நண்பர்கள் போன்றே கருதிப் பழகிவந்ததுடன் மாணவர்களுக்கு இலவசமாக ரியூசனும் வழங்கி வந்தார். 50 களின் ஆரம்பக் கூறில் யாழ் பாடசாலைகளில் ஆசிரிய-மாணவ உறவு என்பது மிகவும் இறுக்கமான உறவாக விளங்கிய நிலையில் வி.பி யின் இத்தகைய போக்கு ஆச்சரியமானதாகவே நோக்கப்பட்டது.
யாழ்ப்பாண மண்ணின் இடதுசாரி இயக்கத்தின் ஆரம்பகால வரலாறு வி.பி யோடு பின்னிப் பிணைந்ததாகும். சமத்துவக் கோட்பாடுகளையும் முற்போக்குக் கருத்துக்களையும் யாழ்ப்பாணக் கிராமிய மக்களும் சாதாரண தொழிலாளரும் விளங்கிக் கொள்ளும் வகையில் எளிமையாக மேடையில் எடுத்துரைக்கும் திறன் வி.பிக்கே கைவந்ததாகும். இடதுசாரி இயக்க அரசியல் மேடைகளில் கவர்ச்சிகரமாகச் சொற்பொழிவாற்றுபவர்களில் வி.பி முதன்மையானவராகவே கணிக்கப்பட்டிருந்தார்.
தென்னிலங்கையில் கே. எம் . பி. ராஜரட்னாவும் வடக்கே தமிழரசுக்கட்சியினரும் வெற்று இனவாத அரசியலில் மூழ்கிக்கிடந்த அக்காலத்தில் வகுப்புவாதத்திற்கு எதிராக மூர்க்கமாகக் குரல் கொடுத்த வி.பி அக்காலத்தில் முற்போக்கு இளைஞர்களின் பெரும் ஆதர்சமாகத் திகழ்ந்தார். 1956 ல் தனது 25 வது வயதில் வி.பொன்னம்பலம் எஸ் . ஜே.வி.செல்வநாயகத்தை எதிர்த்துத் தேர்தலில் நின்றமை வகுப்புவாதத்திற்கு எதிரான வி.பி.யின் போராட்டத்தின் ஒரு அம்சமேயாகும். தமிழ் மக்களை வகுப்புவாதக் குட்டைக்குள் ஆழ்த்திக் கொண்டு மறுபுறம் பிற்போக்குச் சிங்கள அரசுகளுடன் சமரஸம் செய்துகொண்டு முற்போக்கு நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயற்பட்டுக் கொண்டிருந்த தமிழரசுக் கட்சிக்கு எதிரான அரசியற் பணி என்பது யாழ்ப்பாணத்தில் அன்று பெருஞ் சவாலாகவே இருந்தது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடிகளைத் தாங்கிய வண்ணம் யாழ்பிரதேசம் முழுவதும் கிராமங் கிராமமாகச் சென்று சோஷலிஸக் கருத்துக்களைப் பரப்புவதில் முன்னின்றுழைத்த வி.பி.யை முற்போக்கு இடதுசாரிகள் நினைவுகூரவே செய்வர்.
தோழர் கே. ஏ. சுப்பிரமணியம், எஸ்.ரி.என். நாகரட்ணம், எம்.சி.சுப்பிரமணியம், கே.டானியல், எச்.எம்.பி.மொஹதீன், இளங்கீரன், ஜீவா, மாதகல் கந்தசாமி, கரவை கந்தசாமி, டாக்டர்.சு.வே. சீனிவாசகம்,
 

பொன்.கந்தையா, ஒறேற்றர் சுப்பிரமணியம், ப.சந்திரசேகரம் (மறைந்த யாழ்வளாகக் கல்வித்துறைப் பேராசிரியர்), விஜயானந்தன் போன்ற இடதுசாரித் தோழர்களுடனும் முற்போக்காளர்களுடனும் வி.பி நெருங்கி நின்று அரசியற்பணி புரிந்தவராவார். 1960 களில் சர்வதேசக் கம்யூனிஸ முகாமில் சித்தாந்த முரண்பாடுகள் கூர்மையுற்ற போது பாராளுமன்றவாதத்தில் நம்பிக்கை கொண்டிருந்த வி.பி. சோவியத் கம்யூனிஸப் பாதையையே பின்பற்றியிருந்தார்.
இடதுசாரிகள் பதவிக்கு வந்தால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கோவிலைத் திறந்துவிட்டு தேநீர்க் கடைகளைத் தேசியமயமாக்குவார்கள் என்று எதிர்க் கட்சிகள் செய்த இகழ்ச்சியோடு கூடிய தீவிரப் பிரசாரங்களுக்கு மத்தியிலேயே வி.பியும் அவரது தோழர்களும் இயங்க வேண்டியிருந்தது. உடையார், மணியகாரர், விதானைமார் போன்றவர்கள் எளிய சாதாரண மக்களை-பிற்படுத்தப்பட்டவர்களை மந்தைகள் போல நினைத்து அவர்களை ஆட் டிப் படைத்துக் கொண்டிருந்த ஒரு குழ்நிலையில் ஒடுக்கப்பட்டவர்களுக்கான போர்க் குரலாக வி.பி முழங்கியபோது அவரின் இனசனத்தவரின் பெரும் எதிர்ப்பையே வி.பி. சம்பாதித்துக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் அவர் அதற்காக ஒரு போதும் மனந் தளர்ந்து போனதில்லை. V− w
சிறுபான்மைத் தமிழருக்குப் பாடசாலைகளில் சமத்துவமான இடம் வழங்கப்பட வேண்டும் என்பதில் வி.பி அயராது பாடுபட்டு உழைத்திருக்கிறார். பாடசாலைகளை அரசு பொறுப்பேற்க நடவடிக்கைகள் மேற்கொண்ட போது யாழ்ப்பாணத்தின் அதிகாரவர்க்க- உயர்வர்க்க சக்திகள் அதனைக் கடுமையாக எதிர்த்து நின்ற வேளையில் பாடசாலைகளை அரசு கையேற்பது முற்போக்கான - பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நியாயம் தேடித்தரவல்ல நடவடிக்கையே என்று அதற்கு ஆதரவாக வி.பி. ஊக்கத்தோடு பாடுபட்டார்.
சாதாரண மக்கள் மத்தியில் அவர்களுக்கு உடனடி நன்மைகளை ஏற்படுத்தித் தரவல்ல நடவடிக்கைகளில் வி.பி. தனது முழுக்கவனத்தையும் செலுத்தினார். யாழ்ப்பாணத்தில் கூட்டுறவு இயக்கத்தை விஸ்தரிப்பதில் வி.பி. யின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். யாழ்ப்பாணத்தின் பல கிராமங்களில் புதிதாகக் கூட்டுறவுச் சங்கங்களை அமைப்பதிலும் அவற்றின் நன்மைகளைச் சாதாரண மக்களுக்கு எடுத்து விளக்குவதிலும் அவர் முன்நின்றுழைத்தார். அளவெட்டி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகவும் வி.பி. பணியாற்றியுள்ளார்.
ஆதி பக்தி

Page 11
கிராமசபைகளின் செயற்பாட்டிலும் கிராமங்களில் சனசமூகநிலையங்கள் அமைத்தல், நூல்நிலையங்களை நிறுவுதல் என்பதிலும் வி.பி. தீவிரமாக உழைத்து வந்தவராவார். மல்லாகம் கிராமசபையின் தலைவராகவும் வி.பி. திகழ்ந்திருக்கிறார். கே.கே.எஸ். சீமெந்துத் தொழிலாளர், பஸ் ஊழியர்கள், சுருட்டுத் தொழிலாளர், விவசாயிகள் என்று சமூகத்தின் உழைக்கும் வர்க்கத்தின் பல்வேறு வகுப்பினரிடையேயும் வி.பி. செல்வாக்கு மிகுந்தவராக விளங்கினார்.
எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்காவின் அரசு திருகோணமலைக் கடற்படைத் தளத்தைக் கையேற்றபோது அதனை எதிர்த்து பிரிட்டிஷ் மகாராணிக்குத் தந்தி அடித்தும், விவசாயிகளுக்கு நன்மை அளிக்கவல்ல நெற்காணி மசோதாவை எதிர்த்தும் தமிழரசுக்கட்சியினர் முற்போக்கு நடவடிக்கைகளுக்கு எதிராகக் செயற்பட்ட போதெல்லாம் வி.பி. அற்கெதிராக உறுதியோடு போராடினார்.
இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் தரமற்ற வர்த்தகரீதியான சினிமாப் படங்களின் வருகையைக் கட்டுப்படுத்தி உள்ளூர் சினிமா வளர்ச்சிக்காகவும் வி.பி. தனது கவனத்தைச் செலுத்தினார். இந்தியாவலிருந்து தவில்-நாதஸ்வரக் கலைஞர்களை அழைப்பதை விடுத்து இலங்கையின் உள்ளூர்க் கலைஞர்களை, சங்கீத வல்லுநர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதில் அவர் விழிப்பாயிருந்து உழைத்தமை சமூகத்தின் தேவையறிந்து செயற்பட்ட அவரின் எண்ணப் பாங்கினைப் புலப்படுத்துவதாகும்.
பாடசாலைகளிலும் கருத்தரங்குகளிலும் வி.பி. கலந்து கொண்டு ஆற்றிய உரைகளைச் செவிமடுத்தவர்கள் இன்றும் அதனை நினைவுகூர்வர் என்பதில் ஐயமில்லை. சோஷலிஸ நாடுகளுக்கு விஜயம் செய்து அங்கு தான் பெற்ற அனுபவங்களை மக்களுக்கு எடுத்துரைத்தார். யாழ்ப்பாணத்தில் ஆங்கிலத்தில் நடைபெறும் மேடைப் பேச்சுக்களை அழகாகத் தமிழில் மொழிபெயர்த்துக் கூறுவதில் வி.பி யின் திறனை அனைவரும் போற்றுவர். யாழ்ப்பாணத்திற்கு ரஷ்ய விண்வெளி வீரர் யூரி ககாரின் விஜயம் செய்தபோது அவரின் உரையை வி.பி. யே தமிழில் மொழி பெயர்த்தார்.
பாரதி விழா, மேதினக் கூட்டங்கள் மற்றும் வெகுஜனங்களின் கலாச்சார முயற்சிகள் அனைத்திலும் வி.பி ஆர்வத்தோடு பங்கேற்றார்.
அரசியல் வாழ்வில் அவர் நேர்மை மிகுந்த மனிதராகவே அனைவராலும் மதிக்கப்பட்டார். "அவருடைய அரசியற் கருத்துக்களை
 

நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்; ஆனால் அவர் நேர்மையானவர் என்பதை ஏற்றுக் கொள்வோம்" என்பதே அவரது அரசியல் எதிரிகளினதும் மதிப்பீடாக இருந்தது.
பின்னாளில் தமிழர்களின் உரிமைப் போராட்டம் முனைப்பாக எழுந்த போது அவர் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து செயற்பட்டார். வன்முறையில் அவர் தன் அரசியல் வாழ்வில் ஒரு போதுமே நம்பிக்கை கொண்டிருந்ததில்லை. பேச்சு வார்த்தை மூலமும் நல்லிணக்கத்தின் மூலமும் சமரஸத்தின் மூலமும் எதனையும் சாதிப்பதிலேயே அவர் ஆர்வங் கொண்டிருந்தார்.
யாழ்ப்பாணத்தின் அரசியல் விளைநிலத்தில் முற்போக்கு வித்துகளை விதைத்துச் சென்றவர் என்ற விதத்தில் வி.பிக்கு என்றும் ஒரு முக்கிய இடமுண்டு.
அளவிற்கதிகமான
மஸ்திரோல் Gyuiulia ့်'.':' : ''::ပ္ရပ္ေ
濮、鞑 பத்தமமனோகரனர்
அன்றாட உரையாடலிலும் பத்திரிகைகளிலிலும் "கொலஸ்திரோல்" என்ற சொல் அடிக்கடி பாவிக்கப்படுவதை நாம் அறிவோம். நாம் சுகதேகிகளாக இருப்பதற்கு கொலஸ்திரோலின் அளவைக் கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதையும் நம்மிற்பலர் அறிந்து வைத்திருக்கிறோம்.
நாம் இக்கட்டுரையில் கொலஸ்திரோல் என்றால் என்ன? ஏன் கொலஸ்திரோலைத் தவிர்க்க முடியாது? அளவுக்கு மிஞ்சிய கொலஸ்திரோல் எவ்வாறு எம்மைப் பாதிக்கிறது என்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க முனைகிறோம்.
கொலஸ்திரோலின் பங்கு என்ன?
நம் உடலில் ஈரல் நாளொன்றுக்கு ஒரு கிராம் கொலஸ்திரோலை ஆதி பக்2

Page 12
உற்பத்தி செய்கிறது. கொலஸ்திரோல் நமது உடலை சரிவர இயங்க வைப்பதுடன் கலச்சுவர்களை அமைப்பதிலும், சில ஓமோன்களை உற்பத்தி செய்வதிலும், பித்தத்தைச் சுரக்கச் செய்வதிலும் முக்கிய பங்கினை வகிக்கிறது. பித்தமானது இரைப்பையில் உள்ள உணவு சிறு குடலைச் சென்றடைவதற்கு உதவுகிறது. வழக்கமாக ஈரலைச் சென்றடையும் கொழுப்புக்கும் கொலஸ்திரோலுக்கும் அதேவேளை ஈரலில் இருந்து குருதியைச்சென்றடையும் கொழுப்புக்கும் கொலஸ்திரோலுக்கும் இடையில் ஓர் சமநிலை காணப்படுகிறது. ஈரல் தான் தயாரிக்கும் கொலஸ்திரோலின் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் குருதியிலிருந்து எடுக்கும் கொலஸ்திரோலைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் இச்சமநிலையை தானே ஒழுங்கு செய்து கொள்கிறது. கொலஸ்திரோல் கூடிய உணவுப்பொருட்களை உட்கொள்வதன் மூலமோ அல்லது சலரோகம் போன்ற நோய் இருந்தாலோ எம்மில் மேலே குறிப்பிட்ட சமநிலை குழப்பப்பட்டு விடுகிறது.
கொலஸ்திரோலானது நம் உடலில் வேறுபட்ட புரதங்களுடன் பிணைக்கப்பட்ட நிலையில் குருதியினுாடாகக் கடத்தப்படுகிறது. இப்புரதங்களை லிப்போ புரதங்கள் (lipo protein) என்று அழைக்கலாம். இப்புரதங்கள் இரண்டுவகைப்படும் :
1. அடர்த்தி குறைந்த * லிப்போ புரதங்கள் (LDL) Low DENSITY LIPo PROTEIN 2. அடர்த்தி கூடிய லிப்போ புரதங்கள் (HDL) HIGH DENSITY LIPO PROTEIN இந்த LDL கொலஸ்திரோலுக்கும். HDL கொலஸ்திரோலுக்கும் இடையிலுள்ள வித்தியாசம் மிக முக்கியமானது. ஏனெனில் இவை இரண்டும் மாறுபட்ட வழியில் தொழிற்படுபவையாகும்.
LDL கொலஸ்திரோல் குருதிக்கலன்களிற் படிந்து தீங்கு ஏற்படுத்த வல்லன. இவ்வாறு இந்த கொலஸ்திரோல் இரத்த நாளங்களில் படிந்து அதன் சுவர்களைத்தடித்துப் போகச்செய்வதை"arteriosclerosis" என்று கூறுவர். இதனால் குருதிக்கலன்களின் விட்டம் குறைந்து ஒடுக்கமாயோ அல்லது அடைக்கப்பட்டோ போகவும் கூடும். இதுவே இருதய நோய்களுக்குக் காரணமாயுள்ளது.
இதற்கு மாறாக அடர்த்தி கூடிய HDL கொலஸ்திரோல் நன்மை தரக்கூடியதாகும். இது குருதிக்கலன்களின் சுவர்களில் படிந்துள்ள LDL :ஆஇயக்2

கொலஸ்திரோலை அகற்றி மீண்டும் ஈரலுக்குக் கொண்டு செல்லும். ஆகவே ஒருவரது குருதியில் உள்ள மொத்த கொலஸ்திரோலும் அடர்த்தி கூடிய HDL கொலஸ் திரோ லுக்கும் அடர்த்தி குறைந்த HDLகொலஸ் தி ரோலுக்கும் இடையில் உள்ள விசிதாசாரமும் முக்கியமானதாகும். '
ARTERIOSCLEROSIS காரணமாக ஏற்படும் அபாயங்கள். நாடிகள் ஒடுக்கமாவதால் தேவையான அளவு ஒட்சிசன் எல்லா அவயவங்களுக்கும் கிடைக்கமாட்டாது. ஒட்சிசனைக் கொண்டு செல்லும் குருதியின் அளவு குறைவதால்தான் இந்நிலை ஏற்படுகின்றது. இதயத்தைப் பொறுத்தமட்டில் வேலை செய்யும்போது நெஞ்சில் நோ (angina pectoris) ஏற்படலாம். காலில் இரத்த ஓட்டம் குறைவாக இருந்தால் காலில் நோ ஏற்படலாம். நாடித்துவாரங்களின் விட்டம் குறைந்து முற்றாக அடைபட்டுப்போனால் இழையங்களுக்குக் குருதி கிடைக்காமற் போய்விடும். இதனால் அந்த இழையங்கள் இறந்துவிடும். இதனை ஆங்கிலத்தில் infarct என்பர். இது இதையத்தில் நடைபெற்றால் heart infarct என்றும் மூள்ையில் நடைபெற்றால் brain infarct என்றும் அழைக்கப்படும்.
அளவிற்கதிகமான கொலஸ்திரோல் heart infarct நோய்களுக்குக் ஒரு காரணமாகும். புகைப்பிடித்தல், சலரோகம், உயர் இரத்த அழுத்தம் என்பன இதற்கான பிற காரணங்களாகும். உடலின் எடை கூடுதலாக இருப்பதுவும் போதுமான தேகாப்பியாசம், விளையாட்டுப் பயிற்சியின்றி உடலைத் தேவையான அளவு இயக்காமல் வைத்திருப்பதுவும் இதற்கு இன்னும் துணை போகும். சில குடும்பங்களில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுக் கூறக்கூடிய காரணங்கள் எதுவும் இல்லாத நிலையிலும் கூட இந்நோய்கள் வரலாம். உதாரணமாக பெற்றோர்கள் அல்லது சகோதரர்கள் ஒரு குடும்பத்துக்குள் அறுபது வயதுக்கு முன் heart infarct நோயால் தாக்கப்பட்டிருந்தாலும் அக்குடும்பத்திலுள்ள இன்னொருவருக்கு இந்நோய் ஏற்படலாம். "தாக்கப்பட்ட குடும்பத்தின் மருத்துவ சரித்திரத்தை ப் பொறுத்ததே இது. ஆகவே அதிக கொலஸ்திரோலும் மேற்கூறிய காரணிகளும் சேர்ந்து நோய் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்களை அதிகரிக்கச் செய்கின்றன.
இந்நோயைத் தடுப்பதற்கு அளவிற்கதிகமான கொலஸ்திரோலைக் குறைப்பதும் வேறும் இந்நோயை ஏற்படுத்தவல்ல காரணிகளைக்

Page 13
கண்டறிந்து அவற்றை நீக்குவதும் அவசியமாகும்.
இருதய இரத்தக்குழாய் சம்பந்தமான நோயைத் தடுக்க என்ன செய்யலாம்? நாளாந்த உணவில் குறைந்த அளவு saturated உணவு வகைகளையே சேர்த்துக் கொள்ள வேண்டும். பிஸ் கற், உருளைக்கிழங்கு, சிப்ஸ் , சொக்கிளேற் போன்றவை அதிகம் ** Saturated கொழுப்பைக் கொண்டவையாகும். இவற்றை அதிகம் உட்கொள்ளக்கூடாது. இறைச்சிக்குப் பதிலாக மீன் சாப்பிடுவது நல்லது. மீனில் உள்ள குறைந்த Saturated கொழுப்பு மிகவும் நன்மை தருவதாகும்.
நாள்தோறும் நல்ல மரக்கறி, பழங்கள் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. தவிடுநீக்காத அரிசி, மண்நிறப்பாண் (தவிட்டுடன்) ஆகியன சிறப்பானதாகும்.
புகைப்பிடிப்பதை முற்றாக நிறுத்தவேண்டும். புகைத்தல் இரத்தக்குழாய்களுக்கு கூடாது. இதனால் ஏற்படும் தீங்குக்கெதிராக எந்த மருந்தோ பத்திய உணவுகளோ ஒரு நாளும் உதவமாட்டாது.
எந்த அசைவு இயக்கமுமின்றி வீட்டிற்குள் சும்மா இருப்பதை விட்டு உடலை இயக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடவேண்டும். அதற்காக நீங்கள் உடனடியாக மரதன் ஒடத்தேவையில்லை. ஆனால் நாள்தோறும் நடக்கலாம், சைக்கிள் ஓடலாம், வேறு விளையாட்டுக்களில் ஈடுபடலாம். இது உங்கள் இரத்தக்குழாய்களைச் சீரான நிலையில் வைத்திருப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. உடலின் நிறை கூடுவதும் இருதய இரத்தக்குழாய்களுக்குக் கூடாது.
நமது நாளாந்த உணவுப்பழக்கங்களை ஒழுங்குபடுத்திக் கொள்வதன் மூலமும் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் புகைத்தல் போன்றனவற்றைக் கைவிடுவதன் மூலமும் தேகாப்பியாசத்தின் மூலமும் நாம் இந்நோய்க்கு எதிரான தற்காப்பு முறைகளைக் கைக்கொள்ளமுடியும்.
* லிப்போ: கொழுப்பு * Saturated: இரண்டு காபன்களுக்கிடையே ஒற்றைப்பிணைப்புகள் இருத்தல். இரட்டை அல்லது மும்மைப் பிணைப்புக்கள் இருந்தால்
gg - unsaturated
as 2H

நடந்துவந்த துவக்கும்7ெ. - Y. A எல்லா வீடுகளும்
: A திறந்தே கிடந்தன
மரங்களெல்லாம் பிடுங்கி வீசப்பட்டு, கிளைகளும்,வேர்களும் வெளித்தள்ளிக்கிடந்தன
அந்த வீதியின் முடக்கில் நாலைந்து சிறுவர்கள் வானத்து நட்சத்திரங்களுக்காக ஒருவரையொருவர் பிச்சுப்பிடுங்கிக்கொண்டிருந்தனர்
இன்னும் நடந்தேன் தலையில்லாத முண்டங்கள் கிட்டிப்புள் விளையாடின
கொஞ்சம்நடந்து யாருக்கும் தெரியாத வலதுபக்கம்திரும்பி ஒரு நடுராத்திரியில் வாய்க்கால்கட்டில்ஏறி அந்த ஊருக்குள் நான் உட்காந்தேன் நுழைகிறேன்.
நடந்துவந்த ஒன்றையொன்று நாலைந்து துவக்குகள் இறுக்கிப்பிடித்தமாதிரி தீர்ந்துபோன தோட்டாக்களுக்கு ஒரேயிருட்டு அஞ்சலிப்போஸ்டர் ஒட்டின.
Jakima

Page 14
A/a/7/7/07/2/WS/dafaasai. øsólóki Inøaí7
ஒரு கனவுக்காக அஞ்சுகிறேIம்
நாம் ஒரு கனவுக்காக அஞ்சுகிறோம்:நமது வண்ணத்துப் பூச்சிகளை
நம்பாதீர்.
நீர் விரும்பினால் நமது தியாகங்களை நம்புக, ஒரு குதிரையின் w திசைகாட்டியை, வடக்கிற்கான நம் தேவையை நம்புக.
நாம் நமது ஆன்மாக்களின் அலகுகளை உங்கள்பால் உயர்த்தியுள்ளேம். நமக்கு ஒரு கோதுமை மணியை, நம் கனவைத்தருக. தருக, அதை நமக்குத் தருக.
ஒரு கருத்தினாலோ அல்லது மணலிடைப் பாறை ஒன்றின் மீது அலைகளிரண்டின் முறையற்ற கலவியினாலோ பிறந்து பூமிக்கு வந்தது முதலாக நாம் நமது கரையோரங்களை உங்கட்குச் சமர்ப்பித்துள்ளோம்.
வெறுமை, வெறுமை. ஒரு அடி காற்றில் மிதக்கிறோம். நமக்குட்
காற்றுப் பிளவுபடுகிறது.
நீர் நம்மைக் கைகழுவி, நமக்காகச் சிறைக்கூடங்களைக் கட்டி, அவற்றைத் தோடைச் சுவர்க்கமென அழைத்தீர் என நாம்
அறிவோம்.
நாம் கனவு கண்டவாறே இருக்கிறோம். ஓ, ஆசைக்கனவு. நமது கட்டுக் கதைகளாற் போற்றப்படுவோரிடமிருந்து நமது நாட்களை நாம் திருடுகிறோம்.
 
 
 

நாம் உமக்காக அஞ்சுகிறோம், நாம் உம்மை அஞ்சுகிறோம். நாம் ஒன்றாகவே அம்பலமாகியுள்ளோம், நீர் நமது மனைவியரின் பொறுமையை நம்பலாகாது.
அவர்கள் இரண்டு ஆடைகளை நெய்வார்கள், பின் நமது பிள்ளைகட்கு ஒரு கிண்ணம் பால் வாங்கப் பிரியத்துக்குரியவர்களின் எலும்புகளை விற்பார்கள்.
நாம் அவனிடமிருந்து, நம்மிடமிருந்து ஒரு கனவிற்காக அஞ்சுகிறோம். நாம், ஓ, நமது கனவு, கனவு கண்டவாறே இருக்கிறோம்.
நமது வண்ணத்துப் பூச்சிகளை நம்பாதீர்
நான் மீண்டும் முதலிளிறு தொடங்கலாமெனின்
நான் மீண்டும் முதலினின் று தொடங்க லா மெனின்
நான் தேர்ந்தெடுத்தவற்றையே மீண்டும் தேர்ந்தெடுப்பேன்: வேலியிற் கிடக்கும் ரோஜாக்கள். கோர்டோவாவுக்கு என்னை ஒருவேளை கொண்டு செல்லும் அல்லது கொண்டு செல்லாத வீதிவழியே பயணிப்பேன். தப்பியோடும் பறவைகள் என் நிழலின் கிளைகளிற் கூடுகட்டுமாறு
என்நிழலை இரு பாறைகளிடையே தொங்கவிடுவேன் பாதாம் பருப்பின் மணம் துாசுபடர்ந்த முகிலில் ஏறிப் பறக்கையில்
அதைத் தொடருமாறு என் நிழலைத் துண்டிப்பேன், மலையடிவாரத்தே களைத்து நிற்பேன்: வந்து நான் சொல்வதைக்
கேட்பீர். என் ரொட்டியில் சிறிது உண்பீர், என் மதுவை அருந்துவீர், காற்றாடி மரம்போல் பல்லாண்டு காலம்
தனித்திருந்த பாதையில் என்னை விடாதீர் பிரிவின் பாடலின் அடிச்சுவட்டை உணராத, குருதிக்கோ ஒரு பெண்ணுக்கோ தலைவணங்காத நாட்டை நேசிக்கிறேன் எல்லையில் மரிக்கும் புரவிகளின் தற்கொலையைத் தம்
ஆசையுள் மறைக்கும் பெண்களை நேசிக்கிறேன் என்ரோஜாக்கட்கும் என் அடிச்சுவடுகட்கும் மீள வேண்டின் மீள்வேன் ஆனால் என்றுமே கோர்டோவாவுக்குத் திரும்பிச் செல்லேன்

Page 15
வெளிநாட்டவருக்கான புதிய சட்டங்கள் நெதர்லாந்துப் பாராளுமன்றத்தின் இரண்டு சபைகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று சட்டமாக உருப்பெற்றுவிட்டது. 1994 ஜனவரி முதலாந்திகதியிலிருந்து அமுல்படுத்தப்பட்டுள்ள இந்தச் சட்டத்தின் பின்வரும் அம்சங்கள் முக்கியமானவையாகும்:
1)ஒருவர் அகதி அந்தஸ்து கோரியபின் அவருக்கு அதற்கான சட்ட நடைமுறைகளைக் கையாள்வதற்கு அனுமதிப்பதா, இல்லையா என்பதை உதவிநீதி அமைச்சரே தீர்மானிப்பார். போதுமான ஆதாரங்களைக்காட்டாத பட்சத்திலோ அல்லது சட்ட வரையறைக்குள் அடங்கக்கூடியது என்று நிரூபணப்படுத்த முடியாத பட்சத்திலோ நீதிமன்ற வழக்கு நடைமுறையைத்தடுத்து நிறுத்தும் NONSUIT என்ற சட்ட நடைமுறையே இங்கு பிரயோகிக்கப்படுகிறது. இதற்கான தீர்மானம் ஷெங்கன் ஒப்பந்தம், டப்ளினில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய ஒப்பந்தங்கள், நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒப்பந்தங்கள் என்பனவற்றின் அடிப்படையிலேயே அமையும். "அகதி அந்தஸ்து" கோரியவர் சட்டமுறைகளைக் கையாளுவதை உதவிநீதியமைச்சர் பின்வரும்
காரணங்களின் அடிப்படையில் நிராகரிப்பார்.
a) இதற்கு முன்பே இவர் வேறொருநாட்டில் அகதிக்கான அந்தஸ்து கோருவதற்கு இவருக்கு சந்தர்ப்பம் இருந்திருந்தால்
b) முன்னர் இவர் நெதர்லாந்தில் அகதிஅந்தஸ்து கோரி அது முற்றாக மறுக்கப்பட்டிருந்தால்
c) முன்பு இவர் அகதிஅந்தஸ்து கோரியபோது வேறு ஒரு பெயர்
 
 

கொடுத்திருந்தால்
d) அகதிஅந்தஸ்து கோரியவர் தகுந்தகாரணங்களின்றி தான் கைக்கொண்டு ஒழுகவேண்டிய விதிமுறைகளை மீறுதல்
உதாரணமாக, நேர்முகப்பேட்டிக்குச் சமூகமளிக்காமை
e) வெளிநாட்டவர் இங்கே தங்குவதற்கான அனுமதி விசா வைத்திருந்தால்
உதாரணமாக, வைத்தியத்திற்கு, கல்வி கற்க, வேலைசெய்ய விசா வழங்கப்பட்டிருத்தல். அதாவது கல்வி கற்க அனுமதிக்கப்பட்டு இங்கே வந்தவர் இங்கிருந்து அகதிஅந்தஸ்து கோரமுடியாது.
f) அகதிஅந்தஸ்து கோரியவர் நாட்டிற்குள் வந்தபோது செல்லுபடியான ஒரு கடவுச்சீட்டை வைத்திருக்காதுபோனால் அல்லது எல்லையைக்கடந்து உள்ளே வரும் போது வெளிநாட்ட வருக்கான அதிகாரியிடம் உடனடியாகத்தகவல் கொடுக்காது போனால்
I ஓர் ஆதாரமற்ற அகதிக்கோரிக்கை
a) அகதிக்கோரிக்கைக்கு நியாயமான காரணங்கள் அல்லது நோக்கங்கள் இல்லாமை
b) அகதிஅந்தஸ்து கோரியவருக்கு இரண்டாவது நாடொன்றில் பிரஜாவுரிமை இருக்குமானால் அங்கேயே பாதுகாப்பைப்பெற்றிருக்காமை
c) வேறுஒருநாட்டினுாடாக வந்திருந்தால்
d) போலிப்பத்திரங்களை அகதிஅந்தஸ்து கோரியவர் கையளித்திருந்தால்
e) வேறொருவரின் பத்திரங்களை அவர் கையளித்திருந்தால்
அகதிஅந்தஸ்து கோரி விண்ணப்பித்ததற்கு எவ்வாறு சட்ட நடவடிக்கைகள் அமையும் என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால்

Page 16
அகதி அந்த ஸ் து கோரி விண்ணப் பித்த அனைவருக்கும் அனுமதிச்சட்டமுறைகள் ஒரேமாதிரியாகக் கையாளப்படமாட்டாது.
NONSUIT என்ற சட்ட வரம்பிற்குள் அமையாது என்ற முடிவைப்பெற்ற அகதிஅந்தஸ்து கோரிய ஒருவருக்கு அவர்கள் கொடுத்திருக்கும் காரணங்கள் சரியோ, பிழையோ என்று அமைச்சர் பரிசீலித்துப்பார்க்க மாட்டார். ஆனால் ஆதாரமற்ற அகதிக்கோரிக்கையின் உள்ளடக்கம் என்னவென்று பரிசீலனை செய்வார்கள். இந்த இரண்டு முடிவுகளுக்கும் எதிராக டென்ஹாக்கில் (Den Haag, அமைந்துள்ள அகதிஅந்தஸ்து கோருபவருக்கான கவுன்சிலில் மேன்முறையீடு செய்யலாம். இதை முப்பது நாட்களுக்கிடையில் செய்யவேண்டும்.
முன்னிருந்த மறுபரிசீலனைக்குப்பதிலாக இந்தப் புதியசட்டத்தில் நிராகரித்தபின்னரான எழுத்துமூல நடவடிக்கை என்ற அம்சம் குறிப்பிடப்பட்டுள்ளது. முடிவில் நீதிஅமைச்சரின் பெயர் குறிப்பிடப்படாமல் பொலிஸ் அதிகாரியே முடிவை எடுத் திருந்தால் அதனை ”fj 6JT E fusi 6or 60T (p6opuli G" (Administrative appeal) 6T 6T g குறிப்பிடுவார்கள். இந்த நிர்வாகரீதியிலான முறையீட்டை நீதி அமைச்சில் மேற்கொள்ளலாம்.
அகதிக்கோரிக்கைக்கு எப்படியாயினும் நீதியமைச்சின் சார்பிலோ அல்லது பொலிஸ் அதிகாரியின்சார்பிலோ ஓர் பதில் கிடைக்கும். பாதகமான முடிவு கிடைத்தால் அதனை எதிர்த்து எதிர்ப்புப்பத்திர நடவடிக்கையை அல்லது நிர்வா கரீதியிலான முறையீட்டை மேற்கொள்ளலாம் நீதியமைச்சு இதுகுறித்து ஓர் முடிவெடுக்கும் அல்லது இரண்டாந்தரம் ஓர் முடிவை எடுப்பார்கள்.
சுருங்கக்கூறினால் அகதிஅந்தஸ்து கோரியவருக்கு பின்வரும் முறையில் சட்ட நடவடிக்கை அமையும்.
- நேர்முகப்பேட்டி நடைபெற்றபின் அகதிஅந்தஸ்து கிடைக்கலாம்.
- அவ்வாறு கிடைக்காது போனால் மேலும் ஒருமுறை அதாவது

இர ண் டா வது த ட  ைவ யும் தமது எதிர்ப் பை நீ தி அமைச்சிற்குச்சமர்ப்பிக்கலாம். அதன்பின் உதவி நீதிஅமைச்சர் இது சம்பந்தமாக ஒரு முடிவை எடுப்பார்.
- இரண்டாவது தடவையும் முடிவு பாதகமாக அமையுமானால் டென்வுறாக்கிலுள்ள நீதிமன்றமே இறுதிமுடிவை எடுக்கமுடியும்.
- இந்தநீதிமன்ற முடிவுக்குப்பிறகு அதனை எதிர்த்து மேன்முறையீடு எதனையும் செய்ய முடியாது. அதாவது அதியுயர்நீதிமன்றமான Raad van staten க்கு மேன்முறையீடு செய்ய முடியாது.
வெளிநாட்டவருக்கான இப்புதிய சட்டம் புகலிடம் கோரும் அகதிகளுக்கு எதிரான மரண சாசனம் என்று கூறுவதே பொருந்தும்.
விரைவில் வெளிவருகிறது

Page 17
'மெளனத்தை
bമഞ്ഞുമ്മ
தீப்பந்தங்களை உயர்த்திப்பிடித்தபடியும், வாயை கறுப்புத்துணிகளால் கட்டிக்கொண்டும்,சுலோக அட்டைகளை ஏந்திக்கொண்டும் அந்த ஊர்வலம் நகர்ந்தது. சிறுவர்கள்,பெண்கள், ஆண்கள் அடங்கிய அந்த ஊர்வலத்தில் பெரும்பாலான தமிழர்களும், நெதர்லாந்துக்காரர்களும் அந்த அகல வீதிகளை மறித்துக் கொண்டு நடந்துகொண்டிருந்தனர். இருமருங்கும் பொலிஸார் காவலுக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.
நெதர்லாந்தில் நீண்டகால இடைவெளிக்குப்பின் நடந்த அதுவும் பெரும்பாலான தமிழர்கள் கலந்துகொண்ட இந்த ஊர்வலம் Denhaag நகர
புகையிரதநிலையத்துக்கு முன்னால் ஆரம்பித்து வெளிநாட்டு அமைச்சு, நீதிஅமைச்சு, பாராழுமன்றக் கட்டிடம் வரை நீண்டது.
 
 
 

விடுதலைப்புலிகளினதோ அல்லது வேறெந்த இலங்கை அரசியல் அமைப்புகளினதோ ஆரவுகளோ ஒத்துழைப்புகளோ இல்லாமல் 9 (5 சுதந்திரமான அமைப்பாளர்களினால் இலங்கை அரசியலில் சகல தரப்பினரும் நீதியையும், மனிதஉரிமைகளும் பாதுகாக்கக் கோரியும், வன்முறைகளையும் அடாவடித்தனங்களையும் நிறுத்தக்கோரியும், அரசியல் தீர்வில் ஒரு சர்வதேச அக்கறையையும், அதில் மக்களின் ஆதரவைக்கோரியும், வடபகுதிக்கான பொருளாதாரத் தடைகளை நீக்கவும் , மக்கள் மீது யுத்த நெருக்கடிகளைநிறுத்தவும் கோரி நெதர்லாந்தில் இலங்கை அகதிகளுக்கு உரிய பாதுகாப்பும் அகதிகள் அங்கீகாரம் கோரியும், இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்ப வேண்டாமெனக் கோரியும் இவ்வூர் வலம் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இந்த ஊர்வலம் Platform Solidariteitsgroepen Tamils Nederland என்ற அமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்டு மாசி 8ல் நடத்தப்பட்டது. கிடைக்கப்பெற்றோம் காத்திரமான வாசிப்புக்கு 69. :့် မွို

Page 18
இம்முறை "அ.ஆ.இ" பற்றி ஒரு விரிவானதாய் எழுதவேண்டுமென்ற அவா ஏற்பட்டது. அ.ஆ.இ முழுவதுமாக படித்துமுடித்தவுடன் காத்திரமான இலக்கியப்பதிவில் முன்னேறிக்கொண்டிருக்கும் அ.ஆ.இ வின் ஒன்பது தலைப்புகளும் எடுத்துச் சொல்லத்தக்க அளவில் இருந்தது பற்றி என் மனதில் ஒரு பூரண திருப்தி. விமர்சனம் என்பது பத்திரிகைக்கு ஊண் போன்றது. இதில் நலவுகளும் வரும் வேண்டாதவைகளும் வரும். இரண்டையும் தன் மூளைக்குள் போட்டு செரிபாடாக்கக்கூடியவனே ஒரு சிறந்த பத்திரிகையாளன். இங்கே அ.ஆ.இ இந்த தொண்ணுாற்றுநான்காம் வருட ஆரம்பத்தோடு தனது ஐந்தாவது வருடத்தில் சுவடு பதிக்க இருக்கிறது. இந்த வகையில் அ. ஆ.இ தன்னை எவ்வளவோ வளர்த்துக்கொண்டிருக்கிறது.
16 ஆவது இதழின் முதலாவது விடையதானமே ஒரு இலங்கையரோடு அதுவும் இன்றைய அரசியல் விடையங்களில் உள்ள ஒரு தலைவரோடு செவ்வியாக அமைந்திருந்தது. அ.ஆ.இ குழுவினரின் செவ்விக்கேள்வி மிகவும் பாராட்டும் படியாக இருந்தது. தென் இலங்கையில் பத்திரிகைகளுக்கு செய்யப்படும் இருட்டடிப்புகள், பயமுறுத்தல்கள் என்பன மூலம் உண்மையானவர்களின் சமாதானவிரும்பிகளின் செய்திகளைக்கூட இலங்கையில் இருந்துகொண்டே பெறமுடியாதநிலையில் நாம் உள்ளோம். அ.ஆ.இ போன்ற ஐரோப்பிய சஞ்சிகைகள் ஓரளவாவது இச் செய்திகளை இங்கிருந்து எடுத்தோ அல்லது வந்தவர்களைப் பேட்டி கண்டோ வெளியிடுவது வரவேற்கத்தக்கது. இங்கென்றால் "சரிநிகர் மட்டுமே நடப்பு விவகாரங்களை துணிவோடு தருகிறது. அருவிதான் பாஸ்கரனின் கைதோடு நின்று போய்விட்டதே.
திரு.வாசுதேவநாணயக்காராவின் கருத்துக்கள் பிரதிபலிப்பின் எல்லையை நோக்கி எடுத்துச்செல்லவேண்டியவை. கருத்தாடல் அருமை. திருவாளர். சி.சி அவர்கள் ஒரு பரந்த விமர்சன ஞானமுடையவர். ஒரு
 

கேள்வி கேட்கப்போய் பெண்ணியம்மீதான தத்துவப்போர் ஒன்றையே முடித்துவிட்டார்.
சி.சி யின் 'மானுடருங் கடவுளரும் என்ற கட்டுரையில் எல்லாவற்றையும் என்னோடு ஏற்புடையதாக்க முடியாவிடினும் மதத்தின் பெயரால் போர் தொடுக்கத்துாண்டும் அர்த்தமற்ற இழிநிலை பற்றி நானும் அவர் கருத்துக்கு மதிப்பளிக்கிறேன். பிறிதொரு மொழியின் வரர்ச்சி பரிணுமத்தை பத்மமனோகரனின் கட்டுரை (நெதர்லாந்து மொழி) அழகுறத்தந்திருந்தது.
அடுத்து 'அந்த ஜானகியைத்தேடி. அ.ஆ.இ வின் 14 பக்கங்களை நிறைத்திருந்தது. மலையக மக்களின் வாழ்வோடு வாழ்வாக தனது காலங்களை கடத்திக் கொண்டிருக்கிறவர் மல்லிகை சி.குமார், அவரின் ஒவ்வொரு படைப்புக்களும் மண்ணின் வாசனையைச் சுமந்ததாய் வரும். இங்கே ஒரு அழகான குடும்பம் பின்னப்பட்டிருக்கிறது. மலையக வாழ்க்கையில் இப்படி நாட்டாண்மை காட்டுவாரும் பலர். ஜானகியின் தந்தை முத்துராமன் போல வாய்வெட்டு வெட்டுவோரும் அதிகம். கதையின்ஓட்டம் ராமாயணத்து அனுமாரை கொஞ்சம் நினைவூட்டினாலும் இது ஒரு வித்தியாசமான அனுமார். ஆரம்பமும் முடிவும் அருமையாக இருந்தது இடையில் பலபாத்திரங்களின் அசைவில் கதை நகர்கிறது ஆனால் கதை ஒரு காதல் பற்றியதே என்றாலும் துடிப்புள்ளது மலையகக் கலாச்சார நிகழ்ச்சிகளோடு நகர்த்தியிருக்கிறார். . ம.சி.கு அவர்கள் ஒரு திருப்தியான சிறு கதையை தந்துவிட்டார். தொடர்ந்தும் அவர் எழுதவேண்டும். எழுச்சிபற்றியும் மலையக விழுமியங்கள்பற்றியும் அவர்களின் நிலைப்பாடு பற்றியும்.
அ.ஆ.இ 16ஆவதில் இரண்டு கவிதைகள் இடம்பெற்றிருந்தன. ஒன்று கி.பி.அ வினுடையது. மற்றையது சி.சி யினுடையது.
இறுதியாக உண்மையிலேயே அ.ஆ.இ வின் அழகிற்கு திருவாளர் கே.கே ராஜா வின் ஓவியங்கள் செழிப்பேற்படுத்துகின்றன. என்று மனதாரச் சொல்லவேண்டும்.
அ.ஆ.இ வின் தொடர் நிலைப்பாட்டிற்கும் தரிப்பிற்குமான எனது ஆசைகளுடன் விடைபெறுகிறேன்.
இளைய அப்துல்லாவுற் இலங்கை
ஆதி பக்35

Page 19
தத்தெடுத்த "கல்”சிறுகதைக
விரிவத்தை ரோக
...ஒரு பத்தாண்டு காலத்துள் அரசியல் காரணங்கள் நிமித்தமாக ஈழத்திலிருந்து வெளியேறி பிற நாடுகளில் குடியேறிய இலங்கைத்தமிழர்கள்; சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வல்லதும் இலக்கிய வகைளில் ஒரு புதிய வரவுமான ‘புலம் பெயர்ந்தோர் இலக்கியம்' என்னும் ஒரு இலக்கிய வகையை உருவாக்கித் தந்துள்ளனர். ..இப்பிரசுரக்களங்களின் மூலம் புகலிடச்சிறுகதைகளும் ஒரு புதிய பரிமாணத்துடன் வளர்ந்து வருவதை நாம் கவனிக்கலாம். இதற்கு ஒரு பதமாக வந்திருக்கிறது. புகலிட சிறுகதைச் சிறப்பிதழ். புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் இலக்கிய முயற்சிகளில் சிறுகதைகள் ஒரு சிறப்பான இடத்தைக் கொண்டிருக்கிறன என்பதற்கும் இச்சிறுகதைச் சிறப்பிதழ் சான்றாக நிற்கின்றது. இந்தப் புகலிடச் சிறுகதைகளும் புகுந்த நாடுகளில் பெறப்படும் புதிய அனுபவங்களையும் அங்குள்ள வாழ்க்கை முறைகளையும் அறிமுகப்படுத்தும் பணியினைச் சிறப்பாகச் செய்கின்றன. எமது சொந்தக் கலாச்சாரப் பின்னணியில் ஆங்கிலேயர்களின் வாழ்க்கை முறைகளிலிருந்து பெறப்படும் அனுபவ வடிகாலாக இச்சிறுகதைகள் அமைகின்றன. வேறுபட்ட இரு கலாச்சாரங்களுக்கிடையிலான முரண்பாடுகள், போராட்டங்கள், வெற்றி தோல்விகள் நிறப்பாகுபாடு, அண் பெண் உறவு, மொழிச்சிக்கல்கள் போன்ற இன்னோரன்ன விஷயங்கள்பற்றி இச்சிறுகதைகள் பேசுகின்றன. தமிழகம், ஈழம் என்ற பரப்பிற்கு அப்பால் தமிழர் வாழும் இடங்களில் முற்றிலும் புதிதான அனுபவங்களைக் கொண்டு வந்து தரும் இப்புகலிடப்படைப்புக்கள் தமிழ் இலக்கியத்துக்குப் பொதுவாகவும் தமிழ் சிறுகதை இலக்கியத்துக்குக் குறிப்பாகவும் வளம் சேர்க்கின்றன என்பதில் மறுப்பதற்கு எதுவுமில்லை.
[isiaiiñgäfÔi3K2K9ğ)EÄgioißßaiği;
 
 
 

மணியிலிருந்து எட்டு மணி நேர வேலை. வீடு வந்து சேர இரவு
ஒன்பதரை மணிக்கு மேலாகும். வ்ந்ததும் கதிரையில் "தொம்" என்று விழுவான். உடம்பு உழைப்புடன் உள்ளச் சுமைகளும் அவனைக் கெதியில் கோபக்காரனாக்கி விடுகிறது. குடும்ப விடயங்களைப் பற்றி இவள் ஏதும் சொல்ல வந்தால் அவன் பொறுமையில்லாமல் எரிந்து விழுவான்.
இந்தியக் கடையில் வேலை செய்யும் மற்றப் பெண் லீவில் ஊருக்குப் போய் விட்டாள். அந்தப் பெண்ணின் இடத்துக்கு இன்னெரு பெண்ணை நியமனம் செய்ய விரும்பாத கருமி அந்த குஜராத்தி முதலாளி. மாலதிக்குச் சரியான வேலை. வார நாட்களிலும் வேலை. ஒன்றை விட்டு ஒரு கிழமை ஞாயிற்றுக் கிழமைகளில் ஒவ்' கிடைக்கும்.
இந்தய முதலாளி இவள் வார விடுமுறையில் வேலை செய்யாவிட்டால் வேலையை விட்டு நீக்கிவிடப் போவதில்லை ஆனால் இவளுக்குக் கொஞ்சம் காக மிச்சம் பிடிக்க ஆசை.
இரண்டு மாதம் இப்படி வேலை செய்தால் காசு மிச்சம் பிடித்து ஒரு 'washing mechine' வாங்க யோசித்திருக்கிறாள், கடையில் தவணையிற் as Gib (p60puship'washing machine' order UGior Golf Gill'LIT sir. 9G55 கிழமை washing machine" வீட்டுக்கு வரும். இனி இவள் துணி எல்லாவற்றையும் லோண்டரேட்டுக்குக் கொண்டு போகத் தேவையில்லை.
சிதம்பானுக்கு இவள் ஓய்வில்லாமல் வேலை செய்வது பிடிக்காது தான் ஆனாலும் வீட்டின் நிர்ப்பந்தம் அப்படி ஆகி விட்டது.
கடந்த ஒன்றிரண்டு நாட்களாக வளர்மதிக்குச் சுகமில்லை. ஐரிஸ்கார ஆயாவிடமிருந்து அவளை வீட்டுக்குக் கொண்டு வரும்போது சோர்ந்து போய் இருந்தாள்.
'குழந்தை சரியாகச் சாப்பிடவில்லை" என்று சொன்னாள் ஐரிஸ் ஆயா, வளர்மதி வாடிய வாளைத் தண்டாய்த் துவண்டுபோய் படுத்திருந்தாள்.
இரவில் குழந்தைக்கு கொஞ்சம் 'கல்போல் மருந்து கொடுத்தாள் மாலதி, மாலதிக்கு அன்றிரவெல்லாம் சரியான துாக்கம் இல்லை.
வெளியில் சரியான குளிர்பேய்க்காற்றுவேறு, இவள் அடிக்கடி எழும்பிக் குழந்தையைப் பார்த்துக் கொண்டாள். குழந்தை வழக்கமாக ஒரு போத்தல் பால் குடித்துவிட்டுப் படுப்பவள், ஒரு துளியும் குடிக்கவில்லை.
காலையில் கொஞ்சம் 'விராபிக்ஸ் ' செய்து குழந்தைக்குக் கொடுத்தாள். குழந்தை ஏதோ சிரமப்பட்டு ஒன்றிரண்டு கரண்டி சாப்பிட்டாள். 'ஒடியா டுற வயதில இப்படியெல்லாம் வரும் தானே மாலதி
:ஆஇர7

Page 20
தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு குழந்தையை ஐரிஸ் ஆயாவிடம் கொண்டு போனாள்.
"குழந்தையை டொக்டரிடம் கொண்டு போகவில்லையா?" ஐரிஸ் ஆயா ஆச்சரியத்துடன் கேட்டாள்.
"இல்லை, குழந்தை காலையில் கொஞ்சம் சாப்பிட்டாள், இன்றைக்குக் கொஞ்சம் பரவாயில்லாமல் இருக்கிறாள்."
மாலதி அவசரமாகத் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். கையில் ஒரு பையில் லோண்டரேட் டுக்குக் கொடுத்துவிட எடுத்த உடுப்புகள் கனத்தன.
நாளைக்கு "வாஷிங்மெசின்" கொண்டுவந்து கொடுப்பதாக கொம்பனி அறிவித்திருக்கிறது. இனி இப்படித் துணிகளைச் சுமக்கும் கரைச்சல் இருக்கப் போவதில்லை. மாலதி தனக்குள் முணுமுணுத்துக் கொள்கிறாள்.
"பாசமுள்ள பெண்கள் வீட்டோட இருக்க வேணும்" அவன் குரலில் கிண்டலா அல்லது உருக்கமா தெரியாது. அவன் ஒரு எண்ணெய் வழிந்த முகத்தையுடைய ஒரு கடுமையான முதலாளி. கட்டையுருவம், கண்கள் எப்போதும் துரு துரு என்றிருக்கும். அந்தக் கண்கள் கொள்ளி வாய்ப் பிசாசு போல் இவனை உறுத்திப் பார்த்தன.
வேலைக்குப் போய்க் கொஞ்ச நேரத்தில் டெலிபோன் அடித்தது. குழந்தையின் நிலை மிகக் கடுமையாக இருப்பதால் உடனே வீட்டுக்கு வர முடியுமா என்று ஐரிஸ் ஆயா கேட்டாள்.
முதலாளி திட்டுவதைப் பற்றி அக்கறையில்லை, "இப்படிக் கண்டபாட்டுக்கு லீவெடுத்தால் இனி நான் வேலைக்கு வேறு யாரையும் தான் பார்க்க வேணும்" முதலாளி பட்டேல் முணுமுணுத்தான்.
குழந்தையின் முகத்தில் ஒரு களையுமில்லை. மாலதி கணவனுக்குப் போன் பண்ணி விடயத்தைச் சொல்லிவிட்டுக் குழந்தையை எடுத்துக்கொண்டு டொக்டரிடம் போனாள்.
டொக்டர் குழந்தையை நீண்டநேரம் பரிசோதித்து விட்டுத்தான் குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்க்கக் கடிதம் தருவதாகச் சொன்னார். உடனே ஆஸ்பத்திரிக்குப் போன் பண்ணிக் குழந்தையை அட்மிட் பண்ண வேண்டியதன் முக்கியத்தை விளங்கப்படுத்தினார்.
டொக்டர் சொன்ன விளக்கம் ஒன்றும் இவளுக்கு விளங்கவில்லை. virus meningitis பற்றி ஏதும் தெரியுமா என்று இவனைக் கேட்டார்.
இவள் பாவம் இந்தியக் கடையில் வெண்காயம் தெரிந்து அடுக்குபவள். LJ åleflusiv GluD sofis, MSN ufflesi (Bacterial meningitis) sin aust sly
(அதிக

மெனிங்சையரிஸ் என்று இரண்டுவிதம் இருப்பதாக டொக்டர் இவளுக்கு ஆறுதலாக விங்கப்படுத்திக் கொண்டிருக்கும் போது குழந்தை வாயைக் கோணிக் கொண்டது.
அடுத்த இரண்டு கிழமைகளையும் ஆஸ்பத்திரியிற் செலவழித்தாள் மாலதி, குழந்தை உயிர் பிழைத்தது. ஆனால் அந்த வருத்தம் மூளையைத் தாக்கியதால் குழந்தையின் மூளை பாதிக்கப்பட்டு விட்டது என்றும் குழந்தையின் வளர்ச்சி கேள்விக்குரியதென்றும் டொக்டர்கள் சொன்னார்கள்.
வளர்மதி ஆடி ஓடவில்லை. பிரமையுடன் வெறும் உலகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அம்மா அப்பா சொல்வாளா? மாலதி கண்ணிருடன் மகளைப் பார்த்தாள்.
வாடிய தண்டாய்ச் சுருண்டு கிடந்தாள் வளர்மதி. வீட்டில் ஒரு புதிய வாஷிங் மெஷின் பூட்டியிருந்தது. இந்த மெஷினுக்கு ஆசைப்பட்டு லீவில்லாமல் வேலை செய்யாமல் குழந்தையின் வருத்தத்தை உடனே கண்டு பிடித்திருந்தால் இப்போது வளர்மதி இப்படி இருக்க வேண்டி வந்திருக்குமா? மாலதி பாவம், அவள் ஒரு சாதாரண பெண். சாதாரண ஆசைகளால் ஆட்டிப் படைக்கப்படுபவள்.
வாஷிங் மெஷின் இப்போது கட்டாயம் அவளுக்குத் தேவை. ஏனென்றால் வளர்மதி அடிக்கடி உடுப்புக்களை நனைக்கிறாள், அவளுக்கு வளர்ச்சி இனி வராது
வன்முறைக்கெதிராக நன்கொடையாகவோ, வெளியீட்டுத்திட்டத்துக்குரிய சில ஒவியங்கள் முன்பணமாகவோ அனுப்ப வேண்டிய முகவரி
தாமரைச் செல்வி பதிப்பகம்
'ീ",'; 2
முள் வெளியீட்டுத் திட்ட
புகழேந்தி ஒவியங்கள் பிறழ் நூ. 50-00
ஆதி திதி

Page 21
கடந்த நான்கு ஆண்டு
s NT A LI di C. G. gy (lgyik 4 p. கருக்கு மத்தியில் "அஆஇ தொடர்ந்து வெளிவருகிறது.
Lili sfidi Luart
"அஆஇ' விற்கு
மனம் நிறைந்த ஆதாவுகளை
தந்து கொண்
am Fsffs,
is T N T Arts
டிருக் கிறிர்கள்.
ஆக்கதாரர்கள்.
னின் பணிளிய
"அஆ இ தொடரும் காலங்
களிலும் வேண்டி நிற்கிறது.
வருடசந்தா
நெதர்லாந்து
ರಿಗmurf அமெரிக்கா ஆசியா அவுஸ்திரேலியா
Rabobak
Odijk
Netherlands
ar. L. 73 Tl
fl. 15,-
F.C.-
1Լ]:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அஆஇ
காளண்டு இதழ்
A AA IE Postbus 8536
3508 AH Utrecht
Nederldnd
இந்த வருடத்துக்
காண1994) சந்தாவை அறுப்பி
வைக்குமாறும் புதிய சந்தா தாார்களை அறிமுகம் செய்யு
மாறும் கேட்டுக்கொள்கிறோம்,
சந்தா செலுத்தாதவர்களுக்கு
நாம் தொடர்ந்து அறுப்ப முடியாத நிலையிலுள்ளோம்.