கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சக்தி 1990.08

Page 1
I:s físő đĩ5 bilgsusuolo spissus@@ņs ofìo 'm'Œ
서구川가지내州外
辩即
臀聆#
 
 
 

ப்
வடுகளி
ஓவியம் மாரின்
பெண்களின் ச
No *1
|-|:|| |-|-•----sae، kmえェ
斗)
!
·邨|× 匪)*』
sı7,saeae

Page 2
' ' ". .ثائر** நோர்வேயின் முதற் பெண் சபாநாயகர்
இச்சாதனையைப் படைத்திருப்பவர் ஷிஸ்ரி கொல்ல குரொண்டால் Kirsi Kole GTAndahl) என்பவர். இவருடன் இந்நாட்டுப் பெண்கள் ஏறத்தாழ எல்லா உயர்பதவிகளையும் வகித்துவிட்டனர் எனலாம். நொய்க்கன் (Rநீyken)ஐப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது நிர்வாகத் திறனைத் தனது பாடசாலை நாட்களிலிருந்தே பெற்றுக்கொணடார்.
தொழிற் கட்சியைச் சேர்ந்த இவர் அரசியல் உலகில் அதிகம் அறியப் பட்டவரல்ல. எனினும் அவரது அரசியல், மானுட முழுமைத் தன்மை குறித்து மதிக்கப் பட்டவர். பாராளுமன்றத்தில் பாரபட்சமற்ற பங்கு வசித்தலை ஒரு சவாலாக ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறும் இவர் இரு வளர்ந்த பிள்ளைகளின் தாயார் ஆவார்.
ஐரோப்பிய அகதிக் குழுவில் ஈடுபாட்டுடன் இயங்கி வரும் இவர் உலகில் ஒவ்வொரு நாளும் போரும் தாக்குதலும் இடம் பெறுதலும், எல்லா மனித உயிர்களுக்கும் பெறுமதி மிகுந்த வாழ்வுக்கான உரிமை உண்டென்ற தனது கொள்கையுமே அகதிகள் புனர்வாழ்வில் தன்னை அக்கறை கொள்ள வைத்ததாகக் கூறுகிறார்.
'மனிதரிடையே சமத்துவம் வேண்டும் திறமையின் அடிப்படையில் அவர்களிைத் தரப்படுத்ததும், பாடசாலையிலும் சமூகத்திலும் சிறப்பான வர்கள்ை மட்டும் வளர்த்தெடுத்தல் தவறானது. நாம் ட வி வீன மா ன வ ர் களுக்கு அ எ வுக் க தி க ம என வனங்களை ப் பயன்படுத்துவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டையிட்டுப் பெருமை அடைகிறோம்" என க் ஆடறும் இவர் தனியார் பாடசாலைகளை ஆரம்பிப்பதை ஆதரிக்கவில்லை.
 
 

W. Patinurtaria yer F- 'பூர் - r'"
'''f''' isf FTF fr) Fr "fiii . '"' } "Jor: - []'''[] „Ro-F!!! NE 3 : 3
ஹென்றிக் இப்சனின்
நாடகங்கள்
எஸ்.த.தே.வி
ஸ் கி யன் எனும் கிராமத்தில், வசதியாய் வாழ்ந்து நொடித்துப் போன ஒரு குடும்பத்தில், 182 இல் ஹென்றிக் இப்சன் பிறந்தார். * fosysi an. La இளைஞர்கள் படிக்க உதவி செய்த தந்தையாரால் தினது ப டி க்கு ம் வ ய ைத * ைடந்த பிள்ளைகளுக்கு வறுமையைத் தான் தீர முடிந்தது. மருத்துவம் படிக்க ஆ ைச ப் பட்ட இவர் சீ து கேசுடடாமல், தனது 16ஆம் வயதில் வீட்டை விட்டு Galau Garfiguur). Grimstad எனுமிடத்தில், ஒரு மருந்துக் கடையில் வே ன வ க் கு ச் சே ர் ந் தா ர் , ஒய்வுநேரங்களில் "மற்றிக்குலேசன்பரீட் சைக் குப் படித்ததோடு நாடகங்களும் கவிதைகளும் எழுதத் தொடங்கினார்.
இவரது (4சிதி சிTவது நாடக மார "கதிலீனா ஈ ஐரோப்பாவில் 1848 அளவில் எழுந்த புரட்சியினதும், அவர் சோதனைக்குப் படித்துக் கொண்டிருந்த லத்தீன் நூல்களினதும் அடிப்படையில் அமைந்தன. 1550 gil கிறிஸ்ரியானியா (இன்றய ஒஸ்லோ) விக்கு குடிபெயர்ந்த இவர் அங்கு ஒன்றரை வருடங்கள் வாழ்ந்தார், அங்கு இவர் " மற்றி கிகுலேசன்" பரீட்சையில் முழுமையாகச் சித்தி எ ய் தாத போதும் மாணவர் # Si af an 35 AL IT GOT A n d h t i m n er இல் ஆசிரியரா யிருந்து உதவினார்.
*ப்போது தான் இவரது தேசிய உணர்வு மிக்க வரலாற்று நாடகமான " H' on o (ở LÁ” (? Lp (?) (The Buria | M0 பார்) மேடையேறியது. இது தோல்வியையே தழுவியது.
நோர்வீஜிய நாடக அரங்குகளுடனான தொ ர்பு
* டு த் த வ ரு ட ம் இ வ ரு க் 卤 பர்கனிலுள்ள "நோர்வீஜிய நாடக அரங்கு" நாடகாசிரியர் வேலை வழங்கியது. அவ் வேலையானது ஒவ்வொரு தை 2ம் திகதியும் (நாடக அரங்கு திறந்த நாளின் நினைவாக) ஒரு நாடகத்தை அரங்கேற்றுதல் ஆகும். இங்கிருந்தபோது ஏனைய நா ட க த் த யாரிப் புக ளி லும் பங்கு பற்றினார். தனது இக்காலு நாடக வாழ்வை நித்திய கருச்சிதைவு என இப்சன் குறிப்பிட்டபோதும் இவ் வனுபவங்களும், அவர் டென்மார்க், ஜேர்மன் நாடக அரங்குகளுக்கு மேற்கொண்ட கல்விச் சுற்றுலாவும் அ வ ர து அ றி ைவ வளம்படுத்தின. இக்காலப் பகுதிகளில் ஏறத்தாழ 150 நாடக உருவாக் கங்களில் பங்குபற்றினார். 1851-57 காலப்பகுதியில் இவரது 5 நாடகங்கள் பர்கனில் அரங்கேற்றப்பட்டன. இவை பெரு வெற்றியைத் தரவில்லை. 1858ல் சுசன்னா தோரெஸனைத் திருமணம் H சிந்து அடுத்த ஆண்டில் ஒரு ஆண்குழந்தைக்குத் தந்தையானார்.
д. т. I 4.

Page 3
1857ன் இறுதியில் கிறிஸ்ரியானி யாவுக் குத் திரும் பிய இப்சன் அங்கிருந்த "நோர்வீஜிய நாடக அரங்கிால் கலை நெறியாளரானார். நிதிவரட்சியில் வாடிக்கொண்டிருந்த இவ்வரங்கு இப்சனின் ஆர்வத்துக்கும் அபிலாசைக்கும் உகந்த இடமாக அமையவில்லை. 1862ல் இவ்வரங்கு முறிவடைய "கிறிஸ்ரியானிய நாடக அரங்கில்" இலக்கிய ஆலோசகரானார். 18 3 7 - 64 ல் இவர் எழு தி ய "ஹெகலாந்தின் வைக்கிங்குகள்" (The Vikings at Hegaland), " s m. 56ólev A56a) 5ár 5 6.) av" (Love's Comedy), "|5g-fu Lua fras dit " (The Pretenders) ஆகியன இவரின் முன் னை ய நாடகங்களை விடச் சிறந்ததாகக் கருதப்பட்டன. 1863ல் கிடைத்த சிறு அரச நிதி உதவியுடன் தனது கடன் களை அடைத்து 1864 ல் இத்தாலிக்குக் குடிபெயர்ந்த இப்சன் 27ஆண்டுகளில் இரு தடவை மட்டுமே தாய்நாட்டிற்கு வந்திருந்தார்.
சிறந்த நாடகங்கள்
1885 ல் வெளியான "பிரான்ட் " (Brand) ஆரம்பத்தில் கவிதா நிகழ்வாக எழுதப்பட்டு பின்னர் வசன நாடகமாக மாற்றப்பட்டு ஒரு
வெற்றிப் படைப்பாயிற்று. 1867ல் " LS) u ir 49 där jo " (P e e r G y n t ) வெளியாயிற் று. நோர்வீஜிய
மக்களின் குறுகிய வட்டத்திலமைந்த வாழ் வினை யும் , உள்ள தோடு திருப்தியடையும் அவர்களின் இயல் பினை யும் விமர் சிக் கும் பாணியில் அமைந்திருந்ததால் இவ்விரு நாடகங்களும் பெருத்த சர்ச்சைக்குள்ளாகின.
4
1 8 7 1 ல் த ன து க வி ைத த் தொகுதியொன்றையும், 1873ல் பத்துக் கா ட் சி க ைள க் கொ ண் ட "சக்கர வர்த்தியும் கலிலியனும் " (Emperor and Galilean) 6Tair so lurt du நாடகத்தையும் வெளியிட்டார். இப்சனால் இந்நாடகம் ஒரு பெரிய சாதனையென்று கருதப்பட்டபோதும் விமர்சகர்ளால் அது ஒரு பலவீனமான நாடகம் என்றே கருதப்பட்டது.
"சமுதாயத்தின் துாண்கள்" (Pillars of Socity) என்ற வெற்றிப்படைப்பு அவர் மியூனிச் சில் வாழ்ந்த காலத்தில் (1875-77) எழுதப்பட்டது. இந் நாடகத்துடன் செய்யுள் வடிவிலான நாடகப் பாணியைக் கைவிட்ட இப்சனுக்கு, பின்னர் எழுதிய வசன ந ைட யி லா ன சமூக க் கே லி நாடகங்களே பெரும் புகழை ஈட்டிக்கொடுத்தன.
1879ல் வெளியான "ஒரு பொம்மை af G) " (A Dolls’ House) Lu GNU läsas சலசலப்பை எற்படுத்தியது. அதில் அவர் ஒரு மனைவியின் அறிவு ரீதியான, பொருளாதார ரீதியான அடிமைத்தனத்துக்கு ஒரு கணவன் காரணமாவதைச் சித்தரிக்கிறார். அத்துடன் ஒரு வர் சமூக விதி முறைகளை அனுசரிக்க முயலும்போது த னி ம னி த சு த ந் தி ர த் ைத இழந்துவிடுவதையும் காட்டுகிறார்.
"ஆவிகள்" (Ghosts) -1881 என்பதில் வாழ் வு க ைள ச் சா க டி க் கும் பாரம்பரியங்களை சமூகத்தைப் பீடித்துள்ள மேக நோ யெனும் குறியீட்டின் மூலம் சித்தரித்தார். இது இலண்டனிலும் பாரிசிலும்

சமுதாயத்தின் சின்னத்தனங்களையும், சீரழிவுகளையும் சுட்டிக்காட்டுவதில் இப்சனுக்கிருந்த ஆர்வத்தை அவரது நாடகங்கள் வெளிப்படுத்தின. அத்தகைய நோக்கினை முதன்மைப் படுத்தும் நாடகங்களினால் அவருக்குக் கிடைத்த கடுமையான விமர்சனங்களையும், கண்டனங்களையும் சந்திப்பதற்குத் அவர் தயக்கமற்றவராகவே இருந்தார். அவரது "ஆவிகள்" (Ghosts) நாடகம்தான் மிக மிகக் கடுமையான விமர்சனத்துக்குள்ளான நாடகம் எனலாம். எப்போதும் சமுகத்தினால் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளத் தயங்கும் மேகநோய், தகாத பாலியல் உறவு(incest), கருணைக் கொலை போன்ற விடயங்களைக் கையாளும் இந்நாடகம் திருமணம், கிறிஸ் துவ ம் , சமுதா யம் போன்ற ைவகளினால் நிர்ப்பந்திக்கப்படும் போலியான ஒழுக்க(moral) நெறிகளைச் சா டி யது . இந் நாடகத்தை அரங்கேற்ற அனைத் து ஸ்கன்டிநேவிய நாடக அரங்கங்களும் மறுத்தன. "இப்சன் குடித்து விட்டோ அல்லது சித் தம் சுவா தின மற்ற நிலையிலோதான் இந் நாடகத்தை எழுதியிருக்கிறார்" என்பது போன்ற விமர்சனங்கள் இந்நாடகத்தை தயாரிக்க எண்ணிய ஐரோப்பிய நாடகத் தயாரிப்பாளர்களை அச்சுறுத்தியது. அதனால் முதன்முதலாக இந்நாடகத்தை அமெரிக்க நகரமான சிக்காகோவில்தான் 1882ல் மேடையேற்ற முடிந்தது. "ஆவிகள்" வெளியிடப்படமுன் அதை ஆவலுடன் எதிர்பர்த்திருந்த மக்கள், அது வெளியிடப்பட்டபோது அது ஒரு நச்சுப் பாம்பை ஒத்தது எனப் பயந்து அலறுவதாகச் சித்தரிக்கும் (மேலுள்ள) கருத்துச் சித்திரம் 1881ம் ஆண்டு Vikingen என்ற பத்திரிகையில் வெளியானது.

Page 4
வரவேற்பினைப் பெற்றபோதிலும் நோர்வேயில் கடும் விமர்சனத்துக் குள்ளாகியது. இதன் பின்னர் "LD&safair origid" (An Enemy of the People) 1882 yün, "&srtu" Ss 5/Turmr” (The Wild Duck). "G6ivGur r sv GI eyp m á úð“ (Rosmersholm) -es 48 Bu g) g 6ör Gün 1886லும் வெளிவந்தன.
இவரின் இறுதிக்கால நாடகங்கள் முன்னைய சமுக, ஒழுக்கவியல், பி ர ச் சி ைன வெளி ப் பா ட் டு நாடகங்களிலிருந்து வேறுபட்டு உள ரீதியான , காட்சி ம ய ப் படு த் த ப் பட்ட குறியீட் டு நாடகங்களாக விளங்குகின்றன: " as Li Guair" (The Lady from the Sea) -1888, "Gap LT stuair" (Hedda G a b l e r ) - 1 8 9 o , * 5 GO GAV GO) LD &s as " q - is 35 GO) Gav S5 dia * (The Master Builder) -1892, "சின்ன இயொல்வ்"
(Little Eyolf) -1894, "Gagstair studiuá G Lu r ir á un cir o (John Gabriel Borkman) -1896, இவரைப் பற்றிய சுயஆய்வாக அமைந்த "இறந்த நாம் a) tó) ássGL m gi“ (When We Dead Awaken) என்ற நாடகமே பாரிச வாதத்தினால் தாக்குண்டு 1906 ல் மரணமான இவரின் இறுதி நாடகமாயிற்று.
இவரது நாடகங்கள் "இப்சனிசம் (சமகால ஒழுக்கத்தை நாடக வடிவில் விமர்சித்தல்)" என்ற சொல் உருவாகக் காரணமாயின. நவீன, யதார்த்த, உரைநடை நாடகங்களின் தந்தை என
இப்சன் புகழப் படுகிறார்.இவரது
நாடக ங் களி ல் காண ப் படும் தொழினுட்பத் திறமை, ஊடுருவும் மனோ த த் துவ உள் ளொ R , குறியீட்டுப் பிரயோகம் ஆகியன நவீன விமர்சகர்களால் புகழப்
படுகின்றன.ய
நொவீஜிய நவீன நாடகத்தின் தந்தை எனப் புகழப்படும் ஹென்றிக்
இப்சனின் நாடகவிழா ஒஸ்லோவில் (நகடினல் தியேட்டரில்) இலையுதிர் காலத்தில் இடம்பெற உள்ளது. இதில் புகழ் பெற்ற இவரது நாடகங்கள் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த நாடகக் குழுக்களால் அரங்கேற்றப்படும். இதில் ஆங்கிலத்தில் நடிக்கப்படும் நாடகங்களைப் பார்க்கும் சந்தர்ப்பங்களும் எமக்குக் கிடைக்கும்.
 

ஏ.ஆனந்தசிவகுமார்
கிணறு
எங்கள் வீட்டின் பின்புறமிருந்தது அது. அளவான வட்டமாக
மேலெழுப்பப்பட்ட சுவர்ப்பாதுகாப்போடு
கயிறிழுத்து நீர் அள்ள இசைக்கும் கப்பி மனதுக்கு ஏதோ ஒரு இதம் தரும்.
அருகில் பரந்த வேப்பமரம் அந்த கிராம மடத்தின் மொத்த வெளிப்பாடாய். பச்சைக் குடைக்குக் கீழே மெல்லிய குளிர்ச்சியுடன் நீர் குளித்தல் அடிக்கடி நிகழும் சுற்றுச்சுவரின் ஒரு பகுதியில் எப்பவும் படர்ந்திருக்கும் ஈரம்
முதல் பார்வையில் ஆழம் பயமுறுத்தியது பரிச்சயப்படாத நீரிழுத்தல் அதிக தயக்கமாகியது மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் மலர்ந்த நட்பு
காலம் சிரித்தது நாங்களும் சிரித்துக் கொண்டோம்
பெளர்ணமி இரவுகளில்
வானத்து நிலா இதற்குள் வீழ்ந்து கிடக்கும் நிறைய கவிதை எல்லாம் வரும் அப்போது
நாட்கள் மிகப் பல கழிந்தாயிற்று உத்தியோகம், திருமணம், நகர் வாழ்க்கை போகிற போக்கில் உருவாகி அறுந்துபோன உறவுச் சங்கிலிகள்: எல்லாமே உதிர்ந்து போன மாதிரி
உடைந்த முக்குக் கண்ணாடியினுாடு சுருங்கிய கண்கள் சிறிதே விரிய ஏக்கத்தோடு
அடிக்கடி
மனம் நினைவு கூரும் -எங்கள் வீட்டின் பின்புறமிருந்தது அது அளவான வட்டமாக
மேலெழுப்பப்பட்ட சுவர்ப்பாதுகாப்போடு

Page 5
இதழ் 1:1 ஆகஸ்ட் 1990
நமது கடமை
எமது தாயகத்திலிருந்து வருகின்ற செய்திகள் பேரதிர்ச்சியைத் தந்து கொண்டிருக்கின்றன. வடக்கிலும் கிழக்கிலுமாகப் பல இலட்சக் கணக்கான ஈழத்தமிழ் மக்கள் அகதிகளாகியுள்ளனர். இனிவரும் சந்ததியினர் ஈழப்பிரச்சினையைத் தொடராதிருக்க ஏற்ற நடவடிக்கை எடுக்கப்போவதாகக் கூறிப் பாரிய இனவழிப்பு நடவடிக்கையில் இலங்கை அரசும் , இராணுவ மும் ஈடுபட்டு வருகின்றன. தென்னிலங்கையில் பல்லாயிரக் கணக்கான சிங்கள இளைஞர்களைக் குருரமாய் கொன்றழித்து அடுத்த சந்ததிக்குப் பிரச்சினை பரவாது தடுத்துவிட்டதாக தம்பிக்கொண்டிருக்கும் இலங்கை அரசு அதே தந்தி ரோ பாயத்தை ஈழத்திலும் பிரயோ சிக்க எத் தனித்துக் கொண்டிருப்பதால் தமிழினம் முழுவதுமே அழிகின்ற, அகதிகளாகின்ற அபாயத்தை ஈழம் அண்மித்துக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் வீடுவாசல்களை இழந்து பற்றை மறைவுகளிலும், பதுங்கு குழிகளிலும் அகதிகளாக வாழ்ந்தபடி பட்டினியுடனும், மரணத்துடனும் போராடிக்கொண்டிருக்கும் எமது பெற்றோர்களுக்கும், சகோதரர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எந்த வழியி லாயினும் எம்மா லியன்ற வரை உதவுவது அந்நிய நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களாகிய நமது கடமையல்லவா!
சக்தியின் வருகை
உலகில் பெரும்பாலானவை தந்தைவழிச் சமூகங்கள் என்றாகிப் போன இன்றய காலகட்டத்தில் பெண் ணுக்கெதிரான பாகுபாடுகள் காணப்படுவதும், காலப்போக்கில் அவை தாங்க முடியாதளவுக்கு அதிகரிக்கும் போது அவற்றிற்கெதிராகப் போராடுவதும் தவிர்க்க முடியாத வரலாற்று நியதியே.
வெவ்வேறு கலாசாரங்களைக் கொண்ட வேறுபட்ட இனக் குழுக்களைச் சேர்ந்த பெண் களை எடுத்து நோக்கின் அடிப்படையில் அவர்களிடையே ஒத்த குணாதிசயங்கள் காணப்படுவதும், அவர்களின் எண் ண ப் போக்கு, நடத்தைகள் ஒரே மாதிரி இருப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. உதாரணமாகப் பிள்ளை வளர்ப்பில் காட்டும் அக்கறையும், அன்பும், சகிப்புத்தன்மையும் சாதாரண பெண்களிடம் பொதுவாக உள்ளன. இவற்றை விட அவர்களின் சிந்தனைப் போக்கிலும் ஒற்றுமை காணப்படுகிறது.
இதற்குக் காரணம் வெவ்வேறு காலகட்டங்களில் அவர்கள் வாழ்ந்த சமூக அமைப்பும், அங்கு காணப்பட்ட ஆண் மேலாதிக்கமும், இதன் விளைவாக வரையறுபட்டுப் போன பெண்ணின் வாழ்க்கை முறையும் ஒத்திருந்தமையே என்றால் மிகையாகாது. இவர்கள் பெற்ற அனுபவங்கள், இன்னல்கள், துன்பங்களின் விளைவாக வெவ்வேறு காலகட்டங்களில் இவர்கள் போராட ஆரம்பித்திருக்கின்றனர். எனினும் இது ஒரிரு நூாற்றாண்டு கால வரலாற்றையே கொண்டுள்ளது.
இவ்வரலாற்று நீரோட்டத்தில் தமிழ்ப்பெண்களும் இழுபட்டுள்ளனர். எனினும் இவர்கள் வாழும் மூன்றாம் உலக நாட்டுப் பொருளாதார நிலையும், வர்க்க, சாதிப்பிரச்சனைகளும் இவர்களைப் பிளவு படுத்திப் பின்தங்க வைத்துள்ளன. அதிலும் குறிப்பாக ஈழத்தமிழ்ப் பெண்களை எடுத்து நோக்கின் இலங்கையில் தமிழினத்துக் கெதிரான அரச

Page 6
O
அடக்குமுறையும், அதன் விளைவான ஆயுதப் போராட்டமும் ஆண் பெண் வேறுபாடின்றி அன்றாட வாழ்வை, உயிரை ஊசலாட வைத்துள்ள நிலையில் பெண்கள் தமது உரிமைகளுக்காகப் போராடுவதென்பது குறைந்த முன்னுரிமையையே கொண்டிருக்கிறது.
இப்பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் நாட்டை விட்டு வெளிநாடு வந்த பெண்களாவது தாம் வாழும் நாட்டில் தமக்கு எதிரான பாகுபாடுகளை அவதானித்து அவற்றை எதிர்க்க முன் வருகிறார்களா என்றால் அதுவுமில்லை. புகுந்த நாட்டில் நிலை கொள்வதற்காக வேலை, கல்வி என்று காலத்தைக் கழிப்பதும், அவர்கள் நிறுவன ரீதியாக ஒன்றிணைய முடியாதிருப்பதும் இதற்குக் காரணங்களாகின்றன.
வெளிநாட்டில் தமிழரிடையே பலவிதமான சங்கங்கள், ஸ்தாபனங்கள் காணப்படுகின்றன. இவை பொதுவாக ஆண்களால் ஆண்களுக்காக நடத்தப் படுகின்ற அமைப்புகளாகவே இயங்கி வருகின்றன. வெளிநாட்டில் வெளிவரும் தமிழ்ப் பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் அவ்வாறே. இவை பொதுவாக ஆண்களின் கருத்துகளையும், கண்ணோட்டங்களையும், ஆண்களின் பார்வையில் பெண்களின் பிரச்சனைகளையும் தெரிவிப்பனவாயே உள்ளன. தப்பித் தவறி வரும் பெண்களின் ஆக்கங்களிலும் சில இருக்கும் ஆணாட்சிக்கு ஆலவட்டம் பிடிப்பனவாயுள. எஞ்சிய ஓரிரு பெண்களே விழிப்புணர்வுடன் எழுதுகின்றனர்.
புகுந்த நாட்டில் புதிய மொழி, கலாசார, வாழ்க்கைச் சூழலில் வாழ வந்திருக்கும் பெண்கள் இங்கு முகம் கொடுக்க நேரும் பிரச்சினைகளோ பல. "புகுந்த நாட்டிலும் கூட பிறந்த நாட்டில் வாழ்வது போலவே வாழ வேண்டும்' என்று நிர்ப்பந்திக்கும் புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்திற்கும், இங்கு வாழும் வெளிநாட்டார் வித்தியாசமாக வாழக்கூடாது' என எதிர்பார்க்கும் புகுந்த நாட்டின் இனவாதப் போக்கிற்கும் இடையில் அல்லற்படுவதும் கூடப் பெண்களே. ஏனெனில் தமிழ்ச் சமூகத்தின் பெண்பாகுபாட்டு விதிகளில் ஒன்று: "தமிழ்க்கலாசாரத்தைப் பெண்களே பேண வேண்டும், ஆண்களுக்கு அந்தக் கடப்பாடு இல்லை"
இத்தகு கலாசார முரணில் சிக்குப்பட்டுப் பெண்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளை வெளிப்படுத்துவதும், அவற்றுக்கு ஏதாவது தீர்வு காண்பதும், பெண்கள் மீதான பாகுபாடு பற்றி விழிப்புணர்த்துவதும், அதற்கெதிராகச் செயற்படுவதன் முதற்படியாக அவர்களிடையே ஒரு ஒருங்கிணைப்பை, நட்பை, ஒற்றுமை(solidarity)யை உருவாக்க ஒரு களம் அமைத்துக் கொடுப்பதும் 'சக்தியின் பிரதான நோக்கமாகும்.

பெண்களின் சுவடுகளில். எழுதியவர்: சாந்தி சச்சிதானந்தம்.
வெளியீட்டாளர்: தமிழியல் disool disguillio: Cre-A, 268 Royapettah High Road, Madras 600 014, South India.
விலை: இருபது(இந்திய) ருபாய்
8É፵ பெண் அடிமைத்தனத்தின் விளைவாக எழும் பல ரச்சினைகளை எதிர்நோக்குகின்றாள். அவற்றிற்கெதிராகப் போராட முனைகையில் அதன் முதற்படியாக அவள் மனித வரலாற்றின் ஆரம்பத்தில் பெண் வகித்த இடத்தைத் தேட முனைகின்றாள். இத்தேடல் இலகுவானதல்ல. ஏன் என்பதைச் சாந்தி பின்வருமாறு விளக்குகின்றார்:
எந்த வரலாறுமே அதைச் சொல்பவரது சார்பு நிலைக்கு ஏற்பவும் அதனைக் கூறும் சூழ்நிலைக்கேற்பவும் திரிபு படுத்தப்பட்டே நம்மை வந்தடைகின்றது. மக்கள் மத்தியில் பேர்போன புத்தகங்கள் என்று சொல்லப்படுவனவற்றில் உண்மை வரலாறுகள் கிடைப்பதில்லை. அன்று அரசர்கள் வரலாற்றை ஆண் களைக் கொண்டே எழுது வித்தனர். இன்றும் அரசில் அங்கம் வகிப்பவர்கள் ஆண்களைக்கொண்டே வரலாற்றை எழுதுகின்றனர். எப்போதும் ஆளும் வர்க்கத்தின் கண்ணோட்டங்களும் அவர்களின் வீரப்பிரதாபங்களுமே வரலாறு என்று பேர்பண்ணப்படுகின்றது.
உதாரணமாக தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய இராஜரா சோழனை எடுத்துக் கொள்வோம். அவருடைய பிரசித்தமானது. ஆனால் உண்மையில் தஞ்சைக் கோவிலைக் கட்டியதோ, கடல்கடந்த போர்களில் வெற்றியிட்டியதோ அவரல்ல. ஆயிரமாயிரம் கலைஞர்களும் ஈக்களென மடிந்த போர் வீரர்களுமே இச்சரித்திரத்தை சிருட்டித்தனர். ஆனால் இவர்களுடைய வாழ்க்கை முறைகள், பாரம்பரியங்கள். போராட்டங்கள் பற்றி எமக்கு எதுவும் தெரியாது. எமது கருத்திலும் சிந்தனையிலும் இவர்கள் துரத்து நிழல் உருவங்களாக, மிகவும் கலங்கலாகத்தான் தோற்றம் அளிக்கின்றார்கள்.
11

Page 7
இப்படித்தான் பெண்கள் ஆண்டாண்டு காலமாய்ச் சிருட்டித்தவை எல்லாம் ஆண்களின் கைவண்ணத்தினாலானவை என்று நமக்குச் சொல்லித் தரப்பட்டிருக்கின்றது. எவ்வாறு மன்னர்களின் வரலாறு மக்களின் வரலாறாகப் போதிக்கப்பட்டதோ அவ்வாறே சரித்திரங்கள் ஆண் களினால் ஆண்களுக்காக ஆண் களைப் பற்றிக் கூறப்பட்டவையாகத்தான் இருந்திருக்கின்றன. பெண்களின் சரித்திரம் முற்றுமுழுதாக இருட்டடிப்புச் செய்யப்பட்டிருக்கிறது. மாறாக மனிதகுல வரலாற்றின் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் பெண் களது சாதனைகள் எவ்வளவு மகத்தான பங்கினை
வகித்துள்ளன என்பதைப்பற்றி இந்நூல் பேச விரும்புகின்றது.
எவ்வாறு மனிதர் தன்னின உண்ணியாக வாழ்ந்த காலத்தில் அவர் தம் இனத்தைத் தாமே உண்டு மனித இனத்தை அழித்து விடுவதைப் பெண்களே தடுத்து நிறுத்தினர் என்பதிலிருந்து காட்டுமிராண்டி நிலையிலிருந்து நாகரீக நிலைக்கு மனிதர் மாற ஏதுவாயிருந்த விவசாயம், கைத்தொழில் என்பனவற்றின் ஆரம்பகர்த்தாக்கள் பெண்கள்தான் என்பதுவரை இந்நுால் மானிடவியல் ஆராய்ச்சி ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டுகின்றது.
ஆரம்பகாலச் சமூகங்கள் தாய்வழிச் சமூகங்களே என்றும் அங்கு பெண்களுக்கிருந்த பொறுப்பையும் அந்தஸ்தையும் அத்துடன் தாய் வழிச் சமூகங்களின் வீழ்ச்சிக்கும் தந்தை வழிச் சமூகங்களின் தோற்றத்திற்குமான சாத்தியமான விளக்கங்களையும் இந்நுால் தெளிவாகவும் எளிய நடையிலும் எடுத்தியம்புகின்றது.
தாய்வழிச் சமுகங்கள் உலகளாவிய அமைப்பாக ஒரு காலகட்டத்தில் இருந்திருக்கின்றன என்பது மட்டுமன்றி அவைதான் மனிதர்களின் முதற் சமூக அமைப்பாக உருக்கொண்டன என்பதுதான் இந்நுால் மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்பும் உண்மையாகும்.
-ஜசிந்தா
/ =ܗܝܡܒ ܓ A 《།༄།།
{ ہسپحسعسمبر
| W A X ༽ سیا سميرمحسوچ f た。 t ܮܓܠ | V / مسا با خلا || | 人 4. محمیہ سیسہ Yጀ : ክጕ ہ{ A. سمو ܝܵܨܠ
比》 rー Φ. 'ஆண் : நான் உம்மைக் காதலிக்கிறேன். .பெண். சுத்தி வளைக்க வேணாம் - سمجيا
உம்மடை விலை என்ன? - சகிர்தா "سى سمكة
ஆண் : 777
 

மைத்ரேயி மொழியில் பெண்களுக்கெதிரான பாகுபாடு
மொழி தொடர்பாக மேற்கொள்ளப்படும் இத்தகைய ஆய்வுகள் அதன் குறைபாடுகளைக் களைந்து வளம் சேர்ப்பதுடன், மொழிக்கு ஒரு புதிய பரிமாணத்தை குறிப்பாக மொழி தொடர்பான பெண்களின் பார்வையை கொடுப்பதன் முலம் அதை வளர்க்கவும் பூரணப்படுத்தவும் உதவும். இவ் அடிப்படையிலான ஒரு பூரண ஆய்வைத் தமிழில் மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழறிஞைகளை வேண்டிக் கொள்வதுடன் அத்தகு ஆய்வுக்கு இக் கட்டுரை முலம் சக்தி அத்திவாரமிடுகிறாள். ஆர்.
மனிதரின் நாளாந்த வாழ்க்கை நடைமுறையும், அதனுாடாக உருப்பெறுகின்ற மனிதகுல வரலாறும் மொழி மூலமே வெளிப்படுத்தப் படுகின்றன. ஆனால் ஒரு குறிப்பிட்ட விடயத்தை வெளிப்படுத்த அம்மொழியால் இயலாமற் போகும் போது, (அ-து போதிய சொற்றொடர்கள் இல்லாமலிருப்பின் அல்லது அதன் இலக்கண விதிகள் அதற்கு இடம் கொடாதிருப்பின்) அம்மொழி மூலம் எழுதப்படும் வரலாறும் முழுமை அற்றதாயும், உண்மையற்றதாயும் போய் விடுகிறது.
இன்றய தந்தைவழிச் சமுதாய அமைப்பில் மொழி தொடர்பான வரைவிலக்கணங்கள் அச்சமுதாயத்தில் முதன்மைப்படுத்தப்பட்டிருந்த ஆண்களினாலேயே உருவாக்கப் பட்டன. இதனால் இவை உலக விடயங்கள் தொடர்பாக அவர்களின் பார்வையையும் கிரகிப்பையுமே பிரதிபலித்தன. இவ் உருவாக்கத்தில் அவ்வாறு முதன்மை பெற்றிராத பெண்ணின் பங்களிப்பு இருக்கவில்லை. இதனால் பெண்ணைப் பொறுத்த வரை மொழியானது ஒருதலைப் பட்சமானதாயும், பாகுபாடு உடையதாயும் போய்விடுகிறது.
பெண்நிலை ஆய்வாளரான டேல் ஸ்பென்டர் (Dale Spender) என்பவர் ஆங்கில மொழி பற்றிச் செய்த ஆய்வொன்றில் இதில் காணப்படும் ஆணாதிக்கத்தைத் தெளிவாயும் சிந்திக்கத் துாண்டும் முறையிலும் "ஆண் மொழியை உருவாக்கினான் (Man made language)" எனும் நுாலில் எடுத்துக் காட்டியுள்ளார்.
மொழியில் பால்வாதம்(sexism)
ஒரு குறிப்பிட்ட இனத்தவர்க்கெதிரான பாகுபாடு இனவாதம்
எனப்படுவது போல ஒரு குறிப்பிட்ட பாலாருக்கு (நடைமுறையில்
13

Page 8
14
பெண்களுக்கு) எதிரான பாகுபாட்டைச் சுட்டப் பால்வாதம் என்ற சொல் இங்கு பயன்படுத்தப்படுகிறது. ஆங்கில மொழி யானது பால் வாதத்துக்கு உட்பட்டது என்பதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. இவற்றிற் சிலவற்றை நாம் பார்ப்போம்.
ஆண், பெண் இருவரையும் உள்ளடக்கிய முழு மனித சமூகத்தையும் குறிக்க man (மனிதன்) என்ற சொல்லே பயன்படுத்தப் படுகிறது. தமிழுக்கும் இது பொருந்தும்.
D-D: மனிதனின் பகுத்தறியும் தன்மையே அவனை மிருகங்களிலிருந்து வேறுபடுத்துகிறது. இங்கு மனவருத்தம் தரும் விடயம் மொழியானது மனிதகுலத்தின் பாதியை அப்படியே இருட்டடிப்புச் செய்த துரோகமாகும்.
பெண் தொடர்பான கருத்திழிவு
மொழியில் காணப்படும் பால்வாதத்தைச் சமூக அமைப்புடன் தொடர்பு படுத்தியவர் மியூரியல் குல்ஸ (Muriel Schulz 1975) என்பவள். இவளின் கருத்தின்படி ஆங்கிலத்தில் ஆண்பாலாரைக் குறிப்பிட ஒப்பீட்டுரீதியில் அதிகளவு நேர்மறைச் (நல்ல) சொற்கள் காணப்படுவதோ அல்லது பெண்பாலாரை எதிர்மறையில் (கூடாமல்) சுட்டும் சொற்களுக்கு ஒத்த ஆண் பாற் சொற்கள் இல்லாமலிருப்பதோ (உ-ம் விபசாரி) தற்செயலானது அல்ல. பெண்ணைக் குறிக்கும் பெண்ணோடு தொடர்பு படும் சொற்கள் தம் மூலக் கருத்திலிருந்து இழிந்து தேய்ந்து விடும் என்ற தந்தைவழிச் சமூகவிதியின் வெளிப்பாடே இதுவாகும். ஒரு சொல்லின் மூலம் அல்லது அதன் தோற்றத்தின் நோக்கம் கருத்திலெடுக்கப்படாமல் பெண்பாலாரைக் குறிக்கும் சொற்கள் எதிர்மறைப் பொருள் கொண்டமையை முறைமையான (systematic)
பெண்கருத்திழிவு என இவர் குறிப்பிடுகிறார்.
உம் bachelor(பிரம்மச்சாரி) - Spinister (பிரம்மச்சாரிணி) என்ற சொற்களை நோக்குவோம். Bachelor என்பது சாதாரண கருத்தில் நேர்மறையாக ஒரு திருமணமாகாத ஆணைக் குறிக்க spinister என்பது எதிர்மறைக் கருத்தில் (மதிப்புக் குறைந்த) ஒரு திருமணமாகாத பெண்ணைக் குறிக்கிறது.
இத்தகைய கருத்திழிவு மேற்கூறிய ஒன்றிரண்டு உதாரணங்களுக்கன்றி வக் கிரமாக எல்லா பெண் களைக் குறிக்கும் சொற்களிலும் பரவியிருக்கிறது. இதை விளக்க சூல்ஸ் கூறும் உதாரணத்தைப்
பார்ப்போம்.
1. ஒரு Woman(மனுஷி)ஐப் பார்த்து யாராவது old man என்றால் அதன் காரணம் ஆளைத் தவறாக அடையாளம் கண்டு கொண்டமையே என

விளங்கப் படுகிறது. ஆனால் அதே போல் ஒரு man(மனிதன்) ஐப் பார்த்து Old Woman (கிழவி) என்றால் அதன் காரணம் ஆளைத் தவறாக அடையாளம் கண்டு கொண்டமையே என விளங்கப் படாதது மட்டுமன்றி அம் மனிதனை அவ மதிப்பதற்காக அச் சொல் பிரயோகிக்கப்பட்டதாகவே கொள்ளப்படும்.
தமிழிலும் கூட ஒரு பெண்ணை அவள் ஒரு ஆண்பிள்ளை என்று கூறும் போது அவள் துணிவு, வீரம் போன்ற ஆண் குணங்களைக் (?) கொண்டவள் என நேர்மறையாக கருதப்படும். ஆனால் ஒரு ஆணை அவன் ஒரு பேடி அல்லது பெண்பிள்ளை என்று கூறுவது அவனை மிகவும் இழிவு படுத்தும் ஒரு பிரயோகமாகும்.
2. ஆண்களும் பெண்களும் அடங்கிய ஒரு கூட்டத்தைப் பற்றிக் கூறும் போது guys/men என்ற ஆண்பாற் பன்மைப் பதமே பாவிக்கப் படுகிறது. ஆனால் அதை gals/women என்று விளிப்பது சரியற் றதும், அக்கூட்டத்திலுள்ள ஆண்களை அவமதிப்பதுமாகும்.
பெண்களை ஆண்களெனச் சுட்டும் போது அதனால் பெண்களுக்குக் கெளரவக் குறைவு ஏற்படாத அதேவேளை மாறி நடப்பின் ஆண்களுக்குக் கெளரவக் குறைவு ஏற்படுகிறது.
இவ்வுதாரணங்களிலிருந்து man எற்ற சொல்லுடன் அதன் பெண்பாற் சொல்லான Woman என்பது மொழியியல் ரீதியிலோ அன்றியோ சம அந்தஸ்தைக் கொண்டிருக்கவில்லை என்பது தெரிகிறது. காரணம் கருத்து(semantic)விதிப்படி Woman என்ற சொல் தேய்ந்து விட m an என்ற சொல் மட்டும் ஆணுடன் அது கொண்டிருந்த கருத்து ரீதியான தொடர்பு காரணமாக துாய்மை யாயும் களங்கப்படாமலும் விளங்குகிறது.
பெண்பாற் சொற்களில் கருத்திழிவு
உயர்ந்த ஸ்தானத்திலுள்ள மனிதர்களைக் குறிக்கவென உருவாக்கப்பட்ட ஆண்-பெண்பாற் சொற்களில் ஆண்பாற் சொற்கள் தொடர்ந்தும் தாம் ஆரம்பத்தில் கொண்ட கருத்தையே கொண்டிருக்க அவற்றுக்குச் சமதையான பெண்பாற் சொற்களோ தம் மூலக்கருத்தை விட இழிவான/ குறைந்த கருத்தையே காலப்போக்கில் கொள்ளத் தொடங்கின. உம்: 1. Lord-lady (சீமான்.சீமாட்டி)
2. Governor- governess (genetit-genetir) 3. Master-mistress (argudstair-argudstaf) 4. Sir-madam (மரியாதையாக விளிக்கும் சொல், ஆங்கில அரசியினால் வழங்கப்படும் பட்டம்)
5. Courtier-courtesen
15

Page 9
16
6. King-queen(-9prafsir-sud)
மேற்கூறப்பட்ட ஆண்பாற் சொற்கள் இன்றும் அதே கருத்துகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால் நடைமுறைவழக்கில் முதலிரு பெண்பாற் சொற்களும் ஜனநாயகப்படுத்தப்பட்டு சாதாரண கருத்தைக் கொள்ள Lady- (சாதாரண) பெண்
Governess- பிள்ளை பார்க்கும் ஆயா
ஏனையன பாலியல்ரீதியில் திரிபுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளன: Mistress- வைப்பாட்டி
Madam- விபசாரவிடுதித்தலைவி
இவ்வாறு பெண்பாற்சொற்கள் தம் மூலக்கருத்தி னிழிந்து எதிர்மறைப் பொருள் கொள்ளக் காரணம் ஆண்மேன்மைப் படுத்தப்பட்ட சமூகத்தின் அடிப்படைக் கருத்துவிதியே. கருத்துகள் வெறுமனே அச்சொல் குறிக்கும் பாலினடிப்படையிலேயே தீர்மானிக்கப் படுகின்றன. எம் சமூகத்தில் சொல்லுக்குப் பொருளை உருவாக்குவது என்பது சமூகத்தை நேர்மறை ஆண்பால், எதிர்மறைப் பெண்பால் எனப் பிரிப்பதிலேயே தங்கியுள்ளது.
இவ்வாறே உருவகங்களும் முத்திரைகளும் ஆணைக் குறிக்கும் போது உயர்ந்த கருத்திலும் பெண்ணைக் குறிக்கும் போது இழிந்த கருத்திலும் பாவிக்கப்படுகிறது. உ- ம்
He is a professional.
She is a professional. ஒரு சம்பாஷணையை இடையிலிருந்து ஒட்டுக் கேட்கும் ஒரு ஆங்கில மொழி பேசுபவர் முதலாவது வசனத்திலிருந்து அவன் ஒரு தொழில் வல்லுனன் (மருத்துவர், சட்டத்தரணி போன்றன) என்றும், இரண்டாவது வசனத்திலிருந்து அவள் ஒரு விபசாரி (உண்மையாக அல்லது உருவகமாக) என்றுமே பொருள் கொள்வார். இவ்வாறே tramp எனும் சொல்லும்.
ஆணும் ஆணல்லாதவரும்
யூலியா ஸ்ரான்லி என்ற பெண் நிலை-மொழி ஆய்வாளரின் கொள்கைப்படி மொழியில் காணப்படும் மேற்படி வித்தியாசத்துக்குக் காரணம் நடைமுறையில் பால்வேறுபாட்டை ஆண், ஆணல்லாதவர் எனப் பிரித்ததே. இப்பிரிப்பே மொழியில் "பால் (gender) என்ற அம்சத்தைத் தீர்மானித்தது. இங்கு பாரம்பரியமாக பெண் என்பது ஆணல்லாதது என வரையறுக்கப் பட்டது. அ-து முழு மனிதகுலத்திற்கும் ஒப்பீட்டுக்குரிய நியமம் ஆணாயும், பெண் அதிலிருந்து விலகியவளாயும் கருதப்பட்டனர்.
ஆங்கிலத்தில் ஆண்பால் என்பது குறிக்கப்படாதது. உலகம். வேறு

விதமாகக் குறிக்கப் படாதவரை. ஆண்பாலையே குறிக்கும். உம்: lawyer (சட்டத்தரணி) என்று பொதுவாகக் கூறின் அது ஒரு ஆணையே குறிக்கும். பெண்பால் என்பது குறிக்கப்பட வேண்டியது. உம் w0man lawer(பெண் சட்டத்தரணி).
ஏனைய உதாரணங்கள்:
Female surgeon-Giugiarosaurédéa)& dilatf Lady doctor-Guairabaliséuir மற்றும் குறைந்த மதிப்புடைய தொழில்களில் உம்: Waitress- பரிசாரகி (ஹோட்டல் பணிப்பெண்) Stewardess- (விமான/ கப்பல்) பணிப்பெண். உess" என்ற அடைமொழி பெண்பாலைக் குறிக்கவென அவற்றுக்குரிய ஆண்பாற் சொற்களுடன் சேர்க்கப்பட்டுள்ளன.
இவ்வாறு தொழில்களுடன் தொடர்பு பட்ட பொதுப்பாற் சொற்கள் பெண்களைளக் குறிக்காமல் விடும் பிரச்சனையைத் தீர்க்க ஐக்கிய அமெரிக்கத் தொழிற்றிணைக்களம் தனது தொழிற் சொற்கோவையில் கிட்டத்தட்ட 3500 சொற்களைப் புதுப்பிக்க நேரிட்டது.
இக்கருத்துவிதி எவ்வாறு அகராதியை உருவாக்கிய ஆண்களால் அழுத்தமாகப் பிரயோகிக்கப் பட்டுள்ளது என்பதைச் சில பெண்நிலை ஆய்வாளர் எடுத்துக் காட்டியுள்ளனர்.
==
மொழியில் பெண்ணின் பெறுமதிக் குறைவிற்கும் சமூ கத்தில் அவளின் பெறுமதிக் குறைவிற்கும் என்ன தொடர்பு ? பெண்ணை இழிவு படுத்தும், மலினப் படுத்தும் குறைத்து மதிப்பிடும் சொற்களின் உருவாக்கத்தில் பெண் வகித்த பங்கு என்ன ? மொழியில் பால்வாதம் தோன்றவும். தம்மைப் பாலியல் ரீதியாக மலினப் படுத்தும் கருத்துகள் உருவாகவும் Gloss கருவியாகப் பயன்படுத்தப் பட்டாளா ? மொழியில் பால்வாதம் பற்றி ஆராயும் போது மேற்படி கேள்விகளுக்கு விடை காணல் தவிர்கப்பட முடியாததாகும்.
!=
மொழியில் பெண்ணுக்கு எதிர்மறைக் கருத்துவெளியே (negative semantic Space) காணப்படுகிறது என்பதற்கு இவை ஆதாரங்களாகும்பெண்ணைக் குறிக்க ஆணைக் குறிப்பதை விடக் குறைந்த எண்ணிக்கைப் பெயர்ச் சொற்கள் காணப்படுவது மட்டுமன்றி அவையும் கூட பெண்ணுக்குக் குறைந்த மதிப்பைக் கொடுப்பதாயே உள்ளன. பெண்ணுக்கெனக் குறிக்கப்பட்ட சொற்கள் கூட ஆணின் மதிப்பீட்டில் பெண்ணின் நடவடிக்கைகளைக் குறிப்பனவாயே அமைந்தன.
17

Page 10
18
பெண்கள் தமக்கென ஒதுக் கப்பட்ட குறைந்த மதிப்பீட்டுத் தளத்திலிருந்து வெளிவரும் போது கூட நேர்மறை அந்தஸ்த்தை அனுபவிப்போரின் (அ-து ஆணின்) தளத்தை அடைய முடிவதில்லை. காரணம் அவர்கள் தமது பெண்மையைத் தம்முடன் எடுத்துச் செல்வதாகும். பெண்கள் எவ்வளவு சாதனை செய்த போதும் அவர்கள் பெண்கள் என்றே முத்திரை குத்தப்படுவதால் தமக்கென எவ்வித நேர்மறை அர்த்தத்தையும் உருவாக்க முடியாமற் போகிறார்கள். ஏனெனில் நேர்மறை அர்த்தங்களைக் கொண்ட தளம் மொழியில் ஏற்கனவே ஆண்களுக்கென்று ஒதுக்கப் பட்டு விட்டது.
ஆண் பரம்பரை
குடும்பப் பேர்கள் நடைமுறையில் தந்தை வழியிலானவையாக இருக்கின்றன. சரித்திரத்தைப் பின்நோக்கி ஆராய்கையில் இவ் வழக்கம் ஆணுக்கன்றிப் பெண்ணுக்கு ஒரு இடைஞ்சலை ஏற்படுத்துகிறது. உ-ம்: விகான் நகர நெசவாளர் ஒன்றியத் தலைவியாக இருந்து மிக ஈடுபாட்டுடன் இயங்கிய ஹெலன் சைலொக் என்பவர் பற்றிய குறிப்புகள் 1902-ன் பின் திடீரெனச் சரித்திரத்திலிருந்து இல்லாமற் போயின. தற்செயலாக “பெண்கள் தொழிற்சங்க மீளாய்வு" என்ற சஞ்சிகையைப் புரட்டிய போது அதன் ஒரு முலையில் வந்திருந்த செய்தியிலிருந்து இம் மர்மம் துலங்கியது. அச் செய்தி: "திரு. வேர் ஹேர் ஸ்றைத் (Fairhurst)திருமணம் செய்த செல்வி. சைலொக்கை வாழ்துகிறோம்". அதன் பின் அவர் ஹெலன் வ்ெர் ஹேர்ஸ்ற் என்ற பேரிலேயே காணப்படுகிறார். இவ்வாறு பெண் பேர் மாற்றிக் கொள்வது சரித்திரத்தில் அவள் பற்றிய தகவலைத் தேடுவதில் சிக்கலை உருவாக்குவதுடன் அவளை இருட்டடிப்பும் செய்கிறது.
மேலும் இக்குடும்பப் பேர்கள் ஆரம்பத்தில் தந்தைவழி, திருமணத்தின் பின் கணவன்வழிப் பேர்களாயே அமைகின்றன. இது ஒரு வகையில் தந்தை வழிச் சமுதாய அமைப்பு பெண்களைப் பண்டமெனக் கருதியதுடன் அவற்றை அடையாளம் காண இலகு என்று உரிமையாளர் (தந்தை/கணவன்) பேரைப் பின்னால் சேர்த்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததையும் காட்டுகிறது. அத்துடன் பெண்ணுக்கென்று ஒரு தனி அடையாளம் இல்லாமல் அவள் சார்ந்து நிற்கும் தந்தை/கணவனின் வண்ணமாக ஆவதையும் இது காட்டுகிறது.
இதற்கு மாற்றுவழிகளாகச் சில பெண்நிலைவாதிகள் தந்தைபேரோ கணவன் பேரோ இன்றி ஒரு மூன்றாவது பேரை (அது இவ்விரு பேர்களின் இணைவாக இருக்கலாம்)த் தெரிவு செய்தனர். சிலர் தமது தாயின் முதற்பேரை இட்டுக் கொண்டனர்.

இத்தீர்வுகள் இன்றய தந்தைவழிச் சமுக அமைப்பில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாத போதும், பெண்ணுக்குத் தம் பின் பெயரின் தொங்கும் இக்குடும்பப்பேர் பெண் தங்கிவாழல் /அடிமைத்தனத்தில் வகிக்கும் பங்கு பற்றிய ஒரு பிரக்ஞையையாவது ஆகக் குறைந்தது ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
பெண்ணைத் திருமணமானவள்/ ஆகாதவள் எனப் பெயரில் முத்திரை குத்துவது போல் (Miss/Mrs-செல்வி/திருமதி) ஆணைக் குத்துவதில்லை. இவ்ழக்கம் ஆணைப் பொறுத்தவரை மிகவும் வசதியானதாகும். பெண்ணைப் பாலியற் பண்டமெனப் பிரதிநிதிப் படுத்துவதற்கும், பெண்ணின் மீதான ஆணுடைமை உரிமைகளுக்கும் இடையே ஒரு சிக்கலான தொடர்பு காணப்படுகிறது. உதாரணமாகப் பெண்ணைப் பொதுவாகப் பாலியற் பண்டமென ஒரு ஆண் நினைத்தாலும்,
இன்னொருவரின் மனைவியை அவ்வாறு நினைத்து நடக்க முற்படின் அக்கணவனிடமிருந்து பாரதுாரமான விளைவுகளை இவன் எதிர்கொள்ள நேரும். இப்பிரச்சனையைத் தீர்க்க பெண்ணை miss/mrs எனத் தெரியக் கூடியதாகப் பிரிவுபடுத்துவது (எமது தாலி/குங்குமம் போல) அவனுக்கு வசதியாயிருக்கும். ஆனால் அவ்வாறு ஆணைத் திருமணம் ஆனவன்/ ஆகாதவன் எனப் பிரித்துக் காட்டுவது அவனுக்கு இடைஞ்சலாக இருக்குமாதலால் மொழியில் ஆண்கள் தமக்கு அவ்வாறான பிரிப்பை ஏற்படுத்தவில்லை.
19

Page 11
20
இப்பிரிப்பை எதிர்க்கு முகமாக பெண்கள், தம் பேரின் முன், கட்டாயம் ஏதாவது போட நேரும் சந்தர்ப்பங்களில் Miss/mrs க்குப் பதிலாக Ms. என்பதைப் பாவிக்கிறார்கள்.
மொழியில் பெண்ணுக்கெதிரான பாகுபாட்டை இனங் காணலும் அவற்றை நீக்கும் நடவடிக்கைகளை, மொழிச் சீர்திருத்தங்களை, சட்டத்திருத்தங்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளையும் நெருக்குதல்களையும் உடனடியாகச் செய்யவேண்டிய கடப்பாடுடைய காலகட்டத்தில் பெண் இன்று இருக்கிறாள். இக்கடமையிலிருந்து நாம் தவறுவோமாயின் திரித்தெழுதப்படப் போகும் வரலாறும், பாதிக்கப்படப் போகும் எம் எதிர்காலச் சந்ததியும் எம்மை ஒருபோதும் மன்னிக்க மாட்டா.
மொழியில் பெண்ணின் பெறுமதிக் குறைவிற்கும் சமூகத்தில் அவளின் பெறுமதிக் குறைவிற்கும் என்ன தொடர்பு? பெண்ணை இழிவு படுத்தும், மலினப் படுத்தும் குறைத்து மதிப்பிடும் சொற்களின் உருவாக்கத்தில் பெண் வகித்த பங்கு என்ன? மொழியில் பால்வாதம் தோன்றவும், தம்மைப் பாலியல் ரீதியாக மலினப் படுத்தும் கருத்துகள் உருவாகவும் பெண் கருவியாகப் பயன்படுத்தப் பட்டாளா? மொழியில் பால்வாதம் பற்றி ஆராயும் போது மேற்படி கேள்விகளுக்கு விடை காணல் தவிர்கப்பட முடியாததாகும். ப
மேற்கு ஜேர்மனியிலிருந்து ஓவிக்கிறது.
காலாண்டு மாதரிதழ்
FRAUEN KREIS INFORMATION ZENTRUM DRITTEWELT OVERWEG STR 31 4690 HERNE 1 W. GERMANY

உண்ட வீடு
நாளிகையில் நனைந்திருக்கும் சோர்ந்த உடல் தலையணைக்குக் காதல் சொல்லும்.
நடுநிசியை உடைத்துவரும் உடுக்குச் சத்தம் படலைக்கு மேல் எழும் தலைப்பாகை,
வீதி எழுப்பும் ஆருடம் கொட்டி
'மகிழ், மகிழ் நிதானமாக மகிழ் நேற்றைய பகை ஊர் மறையும், ஆனாலும் பொழுதோறும் வலம்வரும் வளர்த்தகடா கொம்புசீவி.
இருளில் கரையும் தலைப்பாகை சுற்றிலும் ஒரு கணந்தான் அமைதி 'மகிழ் நிதானமாக மகிழ்?
ஒரக்கண் பதிவில் அமைதி கொட்டித் திண்ணையில் அசைபோட்டு நிற்கும்
பட்டியாடு.
நடுநிசியில் நான் விழித்துக் கொண்டேன். (19.290)
கேட்டது:
குரல்: ச்சி. இந்த அசிங்கத்தை நான் எங்க போய்ச் சொல்ல!
குரல்2:
ஏன்? என்ன விசயம்?
குரல்: நேற்று பாலனும் கவியும் ரோட்டில கட்டிப் பிடிச்சுக் கொண் டு . . சீ, எங்க ட பண்பாடெல்லாம் பறக்குது. நடந்தது: வெண் பணிக் காலத் தில் நடந்த விருந் தொன்றுக்கு கோடை காலச் சப்பாத்துப் போட்டதால் வழுக்காமல் இருக்கப் பாலன் கவியைத் தாங்கிப் பிடித்தபடி சென்றது. சுகிர்தா
ή
み
s ༼་༽ ーパー
21

Page 12
2
2
ஒஸ் லோ மத் திய இரயில் நி ைல ய த் து க் கு வி ல் வ ன் அ வ ச ர அ வ ச ர மா ய் வந் து சேர்ந்தபோது யோக மலர் அங்கு
"என்ன இண்டைக்கு றெயின் ஏளியா வந்திற்றுதா? அ வள ரு கி லி ரு ந் த பெரிய தோற்பையை துாக்கியபடி கேட்டான். "ஒமோம். பத்து நிமிசம் முந்தி வந்திற்றுது. நீங்க தனிய துாக்கிக் கொள்ள மாட்டியள். அது சரியான பாரம். விடுங்க இந்தப் பக்கம் நானும் பிடிக்கிறன்."
ܕܝܗܝܒܬ*=ܡܚنصيب
ஜெயந்தன் சிவசாமி
புதிதாய் விடியும் பொழுதுகள்
"சீச்சீ. நீர் விடும். இதெல்லாம் என்ன Littitun."
என்று சொன்னாலும் அடுத்த கணத்தில் வில் வனுக்கு அந்தப் பெட்டியின் கனம் புரிந்தது. "என்ன சனியன இதுக்குள்ள வச்சிருக்கிறாள். பிணக்கணம் கனக்குது" என்று அவன் ஆத்மா அவதிப்பட்டது. வலதுகை முட்டைவிட்டு விலக முயல்வதுபோல் தெரிந்தது. ஆனால் துாக்கிய
 
 

பெட்டியை மட்டும் வில்வன் கீழே வைக்க மாட் டான். முச் சைப் பிடித்துக் கொண்டு அந்த நகரும் படிக்கட்டுவரை போய் விட்டால் போதும், அதன்பின் நிச்சயமாய் ரக்ஸி ட்றைவர்கள் உதவி செய்வார்கள். "ஐயோ. முதுகுக்குள்ள பிடிக்கப் போகுது வில்வன். விடுங்க நானும் பிடிக்கிறன். அங்கயே ரெண்டுபேர் து.ாக்கேலாம துாக்கிக் கொண்டு வந்தவயள்." அவனுக்குக் கைகொடுக்க அவள் மீண்டும் முயன்றாள். "வேணாம்.வேணாம்.விடும். இது அவ்வளவு. பாரமில்ல' அவன் வார்த்தைகளில், நடையில் பெட்டியின் கனம் ஏறியிருந்தது. அவளுக்கு அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. "இதில தோற்றுப் போறதுக்கு என்ன இருக்கு வில் வன்?" என்று அவள் வில் வனைக் கேட்க மாட்டாள். கேட்டால் அவன் மேலும் தோற்றுப் போனதாய் நொந்து போவான். ஆனால் இவனிடம் தனது முடிவைச் சொல்வதற்காகத் தான் பன்னிரண்டு மணித் தியாலம் பயணம் செய்து ஒஸ்லோ வந்திருக்கிறாள். இவனிடம், இந்த வில்வனிடம் அதை எப்படிச் சொல்வது? எப்படியும் சொல்லியே தீருவது என்று இதற்குமுன் இரண்டு தடவை ஒஸ்லோவிற்கு வந்து இரண்டு தடவையும் சொல்ல முடியாமலே திரும் பி ப் போ யா யி ற் று. இந்த முறையும் அப் படித் தான் திரும்பிப்போக வேண்டி வருமோ?
எதிர்ப்புறமாய் நகரும் படிக்கட்டில் நாலைந்து தமிழர்கள் கண்கள் பிய்ய யோக மலரை ப் பார்த்து விட்டு பக்கத்தில் நின்ற வில்வனைப் பார்த்து
பொறாமித்த படி ஊர்ந்தார்கள். அவர்கள் பார்வை ஏற்படுத்திய பெருமிதத்தில் வில்வனுக்கு பெட்டி ெக (ா டு த் த ேவ த ைன விலகிப்போயிருந்தது. ரக்ஸியில் ஏறுமுன் வில்வன் கேட்டான். "நீர் கட்டாயம் பேரித்தோடதான் தங்க வேணுமா? எங்கட வீட்டில உமக்கு என்ன வசதிக் குறைவு? "இல்ல வில் வன். அவள் எல்லா ஏற்பாடும் செய்திருப்பாள். இந்தப் பெட்டி நிறைய இருக்கிற புத்தகங்கள் எல்லாம் அவளிட்ட நான் லோன் பண்ணினது. இதுகள திருப்பித் தர வரேக்க தன்னோட ரெண்டு நாள் நிற்க வேணும். நிறைய டிஸ்கஸ் பண்ண வேணும் எண்டு அஞ்சாறு தரம் போன் பண்ணினவள். நீங்களே அஞ்சுபேர் ஒரு வீட்டில இருக்கிறியள். அதுக்குள்ள நான் ஆறாவதாளா வந்து நிண்டு. வேணாம் நான் பேரித்தோட தங்கிறன் வில் வன். மற்ற து உங்களோட நிறையக் கதைக்க வேணும். உங்கட வீட்டில எப்பவும் சன ம் . . ஆறு த லா ஒ ண் டும் கதைக்கேலாது. பேரித் வீட்டில அவள் மட்டுந்தான். அதால தான் உங்கள அங்க வரச் சொல்லுறன் ." அவளின் நீளமான பதிலிலிருந்து அவள் முடிவை மாற்ற முயற்சிப்பதில் அர்த்த மில்லை என்று வில் வன் விளங்கிக் கொண்டான். அத்தோடு சந்தைக் கடை மாதிரி இருக்கும் தனது வீ ட் டை விட ஒரு நிம்மதியான இடத்தில் அவளுடன் பேசலாம், பழகலாம் என்ற விசயம் அவனுக்கும் பிடித்திருந்தது. அதனால் அவன் அதற்கு மேல் அவளை வற்புறுத்தவில்லை.
ரக்ஸி நகரத்தொடங்கியதும் வில்வன்
23

Page 13
ஆரம்பித்தான். "அக்காவும் புருசனும் போய்ச் சேந்திற்றினம். நேற்றுக் கதைச் சனா ன் . . ரெ ண் டொரு மா சத்தில கனடாப் பாஸ்போட் கிடச்சிருமாம்." ஒரு கணம் நிறுத் தி அவளைப் பார் த் து விட் டு வெளி யில் பார்வையை வீசியவாறு மீண்டும் தொடர்ந்தான். ".அம்மான்ர கடிதம் போன கிழம வந்தது.இனியும் சுணக்காம நம்மக் கட்டச் சொல்லி எழுதியிருந்தா . அக்காவும் நேற்றுக் கதைக் கேக்க சோதினை சோதினை எண்டு மலர் மி ன க் கெ டு த் தி ன து போதும்.கெதியாய்க் கட்டுங்க எண்டு பேசினா." அ வ ன் சொல் லி வி ட் டு மெளனமானான். அந்த மெளனம் ஏதாவது பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று மலரை நெருக்கியது. அவள் சொல்ல நினைத்த பதிலை இப்போதே சொல்லிவிட அவள் தயாராகவில்லை. அதற்கு இன்னும் தனிமை வேண்டும். மொழியறியாத இந்த ரக்ஸி ட்றைவர் தானும் இல்லாத தனிமை. அவனும் அவளும் மட்டும் இருக்கும் தனிமை வேண்டும். "அதப்பற்றிப் பேசத் தான் நானும் வந்தனான் வில் வன். அத வீட்ட போய்க் கதைப்பமே." அதுவும் சரிதான். அவள் வந்ததும் வராததுமாய் கல்யாணத்துக்கு நாள் குறிக்க முயலும் தன் அவசரத்தை நினைக்க வெட்க மா யிருந்தது வில்வனுக்கு கடிதத்தில் எழுதினால் அல்லது ரெ லி போ னில் சொன் னால் முகத்துக்கு முன்னால் சொல்லும் சங் க ட த் ைத த் த வி ர் த் துக் கொள்ளலாம் என்று மலர் பல முறை
24
நினைத் தாலும் அது சரியல்ல; ச ரியே யல்ல என்ற முடிவுக்கு வந்திருந்தாள். அவனிடம் நேருக்கு நேராக விளக்கமாகச் சொல்ல வேண்டும். கடிதத்தில் எழுதி விட்டு அல்லது ரெலி போனில் சொல்லி விட்டு நான் சொல்லவேண்டியதைச் சொல்லி விட்டேன்; அவன் எப்படிப் போனால் எனக் கென்ன என்று அவளால் இருக்க முடியாது. அவன் திகைத் துப் போ வான்; பதறிக் கொள்வான்; தன் வாழ்க்கையே முடிந்து விட்டது என்று அழப் போகிறான்; தான் தோற்றுப் போனதாக நம்பப் போகிறான்; இந்தத் தோல்வியால் தன் மானம் மரியாதை எல்லாம் போய் விட்டதாக நினைக்கப் போகிறான். ஆனால் மலர் அவன் நினைப்பது தவறு என்று அ வ ைன உ ண ர ைவ க் க ப் போகின்றாள். இதில் தோற்பதற்கு எ துவுமில் ைல எ ன்று இந்த வில் வனுக்கு விளங்கப் படுத்தப் போகின்றாள். இந்த வில் வன் தனக்காக, தன் உணர்வுகளுக்காக வ (ா மு ம் ம ணி த ன ல் ல . மற்றவர்களுக்காக, மற்றவர்களின் அபிப்பிராயத்துக்காக வாழ்பவன். து r க்க முடியா த பெட் டி யை மூச்சிழுக்கத் துாக்குபவன். “சரியான பாரம்" என்று சொன்னால் மலர் தன்னைக் கேவலமாய் நினைத்து விடுவா ள் என்று நிச்சயமாக நம்புபவன்.
எண்பது குரோணர்கள் என்று ரக் ஸியின் மீட்டர் காட்டியது. வில் வன் நுாறு குரோ ண ர் தாளொன்றைக் கொடுத்து விட்டு மிகுதிப் பணத்தை வாங்க மறுத்தான். அவனை விசித்திரமாய்ப் பார்த்து

விட்டு "ஆயிரம் நன்றிகள்" சொல்லி ரக்ஸி ட்றைவர் விடை பெற்றான். கட்டியணைத்து முத்தமிட்டு பேரித் வரவேற்றாள். "இவர் வில்வன்.எனது நண்பர் " என்று வில்வனை மலர் அறிமுகப்படுத்தியதும் "ஒ. இவர் தானா அவர்" என்றவாறு அவனுடன் கைகுலுக்கினாள். "உனக்குப் பசிக்குமே.உனக்காக நிறைய மிளகாயைக் கொட்டி அரிசி உணவு தயாரித்திருக்கிறேன்.விரைவாக ஆடை மாற்றிக் கொண்டு வா. நீங்களும் எனது பரிசோதனையைச் சுவையுங்களேன்" என்று வில்வனையும் வேண்டினாள். கேட்பது அவளின் சம்பிரதாயக் கடமை மறுப்பது வில் வனின் சம்பிரதாயக் கடமை. " இ ல் ைல . . நன்றி . . மிக வும் நேரமாகிவிட்டது. நான் எனது வீ ட் டி ற் குத் தி ரு ம் பி யா க வேண்டும்.நான் நாளைக் காலை வருகிறேன்" " சென்று வாருங்கள் . . நாளை சந்திப்போம் பேரித் கைகுலுக்கி விட்டு மலருக்கும் அவனுக்கும் தனிமையைக் கொடுத்து, நோர்வீஜிய இங்கிதத்துடன் உள்ளே போனாள். "நாளைக்கு எத்தின மணிக்கு வாரீங்க வில்வன்?
"எத் தின மணிக் கெண்டாலும் வாறன். பத்துமணி மட்டில வரட்டா? " சரி. சரியா நேரம் போச் சுது போய்ற்று நாளைக்கு வாங்க" வில்வன் வீதியில் இறங்கும் போது தாங்ஸ் வில்வன்" என்றாள். அது வில் வ ைன ச் சந்தோ சப் படுத்தவில்லை. மெல்லிய குழப்பம் மனதில் முகிழ்த்தது. " நண் பன் எ ண் டு அறிமுக ப் படுத் திறாள். நன்றி யெல்லாம் சொல்லுறாள்."
இந்த முறையாவது வேண்டிய தைரியத்துடன் வந்திருக்கிறாயா அல்லது சென்ற முறையைப் போல்." பேரித் உணவைப் பரிமாறியபடி கேட்டாள். மலர் பதில் சொல்லவில்லை. சாப்பிட ஆரம்பித்தாள். எனவே பேரித் தொடர்ந்தாள். "நீ இதுவரை சுணக்கியதே தவறு. இந்த முறையும் அதே தவறைச் செய்யாதே. அவனிடம் சொல்வதில் தவறே யில்லை. சொல்லாது காலந் தாழ்த்துவது தான் பெருந் தவறு." "அது எனக்குப் புரிகிறது பேரித். ஆனால் அவரிடம் எப்படிச் சொல்லப் போகிறேன் என்பது தான் எனக்குப் புரியவில்லை. நான்கு வருடங்கள். நான்கு வருடங்களாக ஒருவன் நம்பியிருப்பதை திடீரென்று எப்படி" "உனது சங்கடத்தை நான் புரிந்து கொள்கிறேன் .அது உண்மையிலே மிகவும் சங்கடமான விடயம்தான். ஆனால் உன் சங்கடம் நான்கு வருட ங் களை ஐந்தா க வோ ஆறா க வோ போ வ ைத நீ அனுமதிக்கப் போகின்றாயா? அதன் விளைவுகளை நீ நினைத் துப் பார்க்கவில்லையா? .உன்னை நான் ஒன்று கேட்கட்டுமா? நீ நோர்வேயில் வாழும் தமிழ்ச் சமூகத்தை நினைத்து அச்சப் படுகின்றாயா? "இல்லை பேரித். இங்கே வாழும் தமிழர்கள் மிகவும் கொதித்துப் போவார்கள் தான். ஆத்திரப் படுவார்கள் தான். என்னைப் பற்றிக் கேவலமாகப் பேசுவார்கள் தான். ஆனால் நான் அவர்களைப் பற்றிக் அக்கறைப்பட்டு கொள்ளவில்லை. நான் கவலைப்படுவ தெல்லாம் வில்வனைப் பற்றித் தான். இது எ ன க் கும் இ ங் கே வாழும் தமிழர்களுக்குமான பிரச்சினையல்ல.
25

Page 14
எ ன க் கும் வில் வ னு க்கு மா ன தனிப்பட்ட பிரச்சினை. எங்களின் சொந்தப் பிரச்சினை"
"இவ்வளவு தெளிவாகப் பேசும் நீ ஏன் ஒரு சாதாரணமான பிரச்சினையை எதிர்கொள்ளத் தயங்குகிறாய். வில்வனுக்கு மனைவி யாவதற்காகவே உன் பெற்றோ ரா ல் இங்கே அனுப்பப்பட்டாய் என்பதற்காகவோ அல்லது வில் வனின் வருங்கால மனைவி என்ற பெயரில் இங்கே நான்கு வருடம் வாழ்ந்து விட்டாய் என்பதற்காகவோ நீ அவனைத் திருமணம் செய்ய முடியாது. உனக்கு விருப்பமான ஒருவனுடன் தான். உன்னால் நேசிக்கப் படுபவனுடன் தான் நீ வாழ வேண்டும். உன்னால் வில் வனை நேசிக்க முடியாமல் போனது உனது குற்ற மல்ல; நீ அவனுக்கிழைத்த துரோகமல்ல. மாறுதல் மனிதருக்கு இயல்யானது மலர். இந்த நான்கு வருடங்களில் நீ மிகவும் மாறிப் போனாய். நிறையக் கற்றுக் கொண்டாய். உலகத்தைப் புதிய பார்வையினுாடாக பார்க்க ஆரம்பித்தாய். வில்வனுக்கும் உனக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன என்பதை நீ அடையாளம் கண்டு கொண்டாய். ஒன்றாக வாழும் அளவுக்கு அவனின் இயல்புகள் உனக்குப் பிடித்தமானவை யல்ல என்று அறிந்து கொண்டாய். நீ அ வ ைன வெறு க் க வில் ைல . . ஒதுக்கவில்லை. ஆனால் அவனை உன் கணவனாக நேசிப்பதற்கு உன்னால்
முடியவில்லை. மனதால் அவனை நேசிக்காமல் அவனைக் கணவனாக ஏற்று, உன் பெற்றோர்களுக்காகவும் இங்கே வாழும் தமிழர்களுக்காகவும் அவனுடன் உறவு கொண்டாடுவது விபச்சாரத்தை ஒத்தது. நீ அப்படி வாழ விரும்பவில்லை. இதனை நீ அவனிடம் நாளை சொல்லப் போகின்றாய். உடனடியாக இல்லா விட்டாலும் தன்னை நேசிக்காத பெண்ணோடு வாழ்வது வாழ்க்கை யல்ல என்று அவ னும் புரிந்து கொள்வான். நாளையோடு இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டப் போகின்றாய். அப்படித்தானே மலர்? மூச்சு விடாமல் பேசி முடித்த பேரித்தை மலர் நிமிர்ந்து பார்த்தாள். "இதுதான் உன் வியாதி, அதற்கு இதுதான் மருந்து" என்று சரியாக நா டி பி டி த் துச் சொல் லும் வைத்தியரைப் போல எவ்வளவு தெளிவாக எவ்வளவு கூர்மையாக தன்னை, தனது பிரச்சினையைப் புரிந்துகொண்டிருக்கிறாள். அறிவும், ைத ரிய மு ம் , சு ட ர் வி டு ம் இவளைப் போன்ற பெண்ணின் தோழமை தனக்குக் கிட்டியதையிட்டு
மலரின் மனம் ஆனந்தித் துக்
கொண்டது. "நிச்சயமாக பேரித்"
புதிதாய் விடியப்போகும் நாளையப் பொழுதை வரவேற்க இரவு கரைய ஆரம்பித்தது.
se
தரிது
26
 

*
தோழிகளே! பெற்றோர், சகோதரர்கள், உறவினர்களைப் பிரிந்து வெளிநாடுகளில் வாழும்.
பெண்களாகிய நாம் பெருமளவில் எமது பிரச்சினைகளை நாமே கையாளவேண்டியவர்களாக இருக்கிறோம். ஆனால் எல்லாப் பிரச்சினைகளையும் நம்மால் தனித்தே சந்திக்கமுடிவதில்லை.
புரியாத மொழியில், அறியாத
முகங்களிடம் எமது பிரச்சினைகளை எப்படிச் சொல்வது என்று தடுமாறும் தோழிகளுக்கு தன்னாலியன்றவரை உதவிசெய்ய உங்கள் தோழி "சக்தி" காத்திருக்கிறாள். உங்கள் சட்டரீதியான,
மருத்துவரீதியான, மற்றும் வாழ்க்கைப் பிரச்சினைகளை
(சொந்தப் பெயர் அவசியமில்லை) "சக்தி"க்கு எழுதினால், உங்கள் பிரச்சினைகளை உரிய நிபுணர்களிடம் எடுத்துரைத்து அவர்களின் ஆலோசனைகளைப் பிரசுரிப்போம். தயக்கமின்றி உங்கள் பிரச்சினைகளை
உங்கள் "அன்புள்ள தோழிக்கு."
எழுதுங்கள்.

Page 15
சில குறிப்புகள்
குற்றச்செயல்களும்
நாடடவரும
நோர்வேயில் கத்திக்குத்து, கற்பழிப்பு போன்ற குற்றச் செயல்களில் வெளி நா ட் ட வ ரின் பங்கு ஒப்பீட்டு ரீதியில் கூட என்று அண்மையில் வெளியான புள்ளிவிபரம் இங்கு மிகுந் த ப ர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நோர்வீஜிய மக்கள் மத்தியில் ஒருவித பயத்தையும் அதே வே ைள அ தி க ரி த் த இனவாதத்தையும், வெளிநாட்டவர் ம த் தி யி ல் ஒரு வி த கு ற் ற உணர் ைவ யும் , பா து காப்பு இன்மையையும் ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகைகள் இதற்குச் சாதகமாயும், பா த க ம |ா யும் க ட் டு ைர கள் , பேட்டிகளை வெளியிட்டன. தேசியத் தொலைக் காட்சியும் தன் பங்குக்கு 'Sy Gör Gg Gör GT f(antenne ti)” GT cist so
தொடரில் இதுவரை 2 நிகழ்ச்சிகளை
ஒளிபரப்பி உள்ளது.
இங்கு வெளிநாட்ட வர் என்று குறிப்பிட்டது ஆசிய, ஆபிரிக்கர் களை யே. எனினும் குற்ற ச் செயல்களிற் பெரும் பகுதி இங்கு நிரந்தரமாக வசிக்காத வெளி நாட்டவராலேயே (அ-து உல்லாசப் பய னி க ள் G L т єk G др т ії ) செய்யப்படுகின்றன என்று ஒரு பாதுகாப்பு வாதமும் முன்வைக்கப் பட்டது. எது எவ்வாறு இருந்த போதும் சாதாரண தோர்வீஜியனின் கண் களு க் கு எ ல் லா நிற வெளிநாட்டவரும் ஒன்றே.
28
நோர்வீஜியத் தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள்: வெளிநாட்டவர் இங்கு வாழும்போது தம் சட்டங்களை மதிப்பதில்லை; த ம் மு ட ன் ஒரு ங் கி ைண ய விரும் புவ தி ல் ைல , முயற்சி எடுப்பதுமில்லை; குறிப்பாக இஸ்லாம் மதத்தவர். இவர்களின் ஆணாதிக்கக் கலாசாரம் பல பிரச்சனைகளுக்கு வழிகோலுகிறது. இஸ்லாமியரைத் திருமணம் செய்த இந் நாட்டுப் பெண்கள் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது போன்றன. மற்றும் பாகிஸ்தானியர் பல சாதரண நொவீஜிய வழக்கத்துக்கு மாறான வி சே ட த ைட மு ைற க ைள வேண்டுகிறார்கள். உ -ம் பெண் பிள்ளைகளுக்குத் தனிப் பாடசாலை போன்றன.
வெளிநாட்டவர் இதற்குக் கூறிய விளக்கங்கள்:
வெளிநாட்ட வர் மோசமான பொருளாதார, சமுகச் சூழலில்
வாழ்கிறார்கள். வேலையின்மை,
மொழிப் பிரச்சனை, இனவாதம், சமூகத்திலிருந்து அந்நியமாகியமாதல் போன்றவற்றை எதிர் கொள்ள நேர் கிறது. வே லை யின் றித் திரிபவர்கள் பொழுதுபோக்கின்றிக் குடி போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள் கண் முன்னே காணப்படும் பாகுபாடும்
மேற்கூறிய ஏனைய காரணிகளும் திரும் அழுத்தமும் குற்றச் செயல்களில் (உ-ம் டிஸ்கொதேகளில் உட்செல்ல அனுமதி மறுக்கப் படும் போது காவலாளியைக் கத்தியால் குத்துதல்) இவர்களை ஈடுபட வைக்கிறது

இ ைத த் த வி ர் க் க அ ர சு வெளிநாட்டவரின் வாழ்க்கைத்தரம், கல்வி, வேலைவாய்ப்பு வசதிகளை உயர்த்த வேண்டும்.
கலாசார வேறுபாடு: பெண் அடங்கி ஒடுங்கி வாழும் கலாசாரங்களிலிருந்து வரும் ஆண்கள் நோர்வீஜியப் பெண்களின் வெளிப்படையான போக் கைத் தவறாக விளங்கிக் கொள்கிறார்கள். இப் பிழையான விளக் க மே பெரும் பா லா ன கற்பழிப்புகளுக்குக் காரணமாகிறது. இ ைத த் தவிர்க்க அரசு இரு பகுதியினருக்கும் மற்ற வ ரின் கலாசாரம் பற்றித் தகவல்கள் தர வேண்டும்.
பிழை இரு பகுதியினரிடமும் இருந்த போ தும் பா தி க் க ப் பட ப் போவதென்னவோ வெளிநாட்டவர் தான். வெளி நாட்டவருக்காகக் பரிந்து ரை ப் போரின் வாயை முடியுள்ள இப் புள்ளி விபரம் அதிகரிக்கும் இனவாதத்துக்கும் அரசின் இறுக்கமான குடி வரவுக் கொள்கைக்கும் சாதகமாகிப் போவது கவலைக்குரியதே.
ஜெயா
நோர்வீஜியமுடிக்குப் பெண்ணும் வாரிசு
எதிர் காலத்தில் நோர்வேக்கு ஒரு பெண் அரசுத் தலைமையாக வரலாம். நொவீஜியப் பாராளு மன்றத்தில் இ த ற் கு த் தே ைவ ய ர ன அரசியலமைப் புத் திருத்தப் பி ரே ர ைண நிறை வே ற் ற ப் பட் டு ள்ள து . எனினும் இது இப்போதுள்ள சின்ன இளவரசன் ஹோக்கன் மக்னஸின் அரசுரிமையைப் பாதிக்காது. இவர் இளவரசி மார்த்தா லுாயிஸின் தம்பி என்பது குறிப்பிடத் தக்கது.
இம் மாற்றம் பல நடை முறைச் சிக்கல்களைத் தீர்த்துள்ளது என்பதை விட இது நோர்வேயில் பெண்கள் சமத் துவத்தை முழுமையாக ப பிரதிபலிக்கும் ஒரு குறியீடு என்பதே இதற்கான முக்கியத்துவம் ஆகும். அ-து, ஒரு பெண் நோவீஜியச் சமூகத்தின் அதியுயர்ந்த ஸ்தானத்தை வகிக்கலாம். இதற்குச் சட்டரீதியாக இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றில் இதற்கெதிராக விழுந் த சில வாக்கு களும் முடியாட்சிக்கு எதிரானவையே. சோசலிச இடதுசாரி(SV)க் கட்சியின் பிரேரணையான ‘முடியாட்சியைத் துறந்து குடியாட்சிக்கு மாறுதல்" என்பது ஆகப் 19 வாக்குகளையே ஆதரவாகப் பெற்றது. 1905இல் "சுதந்திர நோர்வேக்கு முடியாட்சி தேவை யா" என்பதை அறிய வைக் கப்பட்ட அபிப் பிராய வாக்கெடுப்பில் நோவீஜிய மக்கள்
 ேத ைவ " எ ன் ப ைத யே ஆதரித்திருந்தார்கள். விஜி
29

Page 16
ஆர்விஸ்ரா
பெண்ணாகிப் ே ாயிருந்து
கருவைத் தகர்த்து உணர்வுகள் உரியப்பட்டு கெளரவ அடிமையாய் நான் பூவுவகை மிதித்திருந்தேன்
வானக்கென்னவோ செழிப்பாகத்தான் இருந்தது.
ஆனால் நான் மிதிபட்டுக் கொண்டிருப்பது இப்போது விபரமாய்
சுற்றியிருந்த விலங்குகளெல்லாம் உறவுகளாகத் தம்மை அறிமுகப்படுத்தி.
TT
அடிமை வேள்வியில்
வருடாவருடம்
குளிர் காய்ந்து கொண்டிருந்த காலம்
அது மட்டுமா? மனிதனையும் வாங்கலாம் விற்கலாம் என்ற மனித வியாபாரம் விளம்பர வாசலுடன் படியேறியிருந்த காலம்
இன்று எமது இருப்பையும் வாழ்வையும் நிர்ணயிக்கும் நிதர்சன ஆயுதமாய் இந்தப்
நிர்வாண பேரம்ட
இன்னும். நாம் விழித்து விட்டாலுமென ULL's53ij
அச்சத்துடன், மடமாகி பயிர்ப்பாகி
சங்கமத்தின் பின்
தெய்வமாகி. என்று பழலே மொழிகளை மட்டும் பிரசவித்து மறைந்தனர்.
ஆனாலும் நாம் விழித்து விட்டோம் என்பது கீடுமையானதோர் உண்துை
Th +
காத்திருக்கிறேன்
அடக்கமானவள் அமைதியானவள் ஒழுக்கமானவள் பத்தினி. இவையெல்லாம் எனது நடிப்புக்குக் கிடைத்த நற்சாட்சிப் பத்திரங்கள். எனவே தான் நான் மேடையிலிருந்து இறங்க மறுக்கிறேன்.
நான் நடித்த போது
நிஜம் என்றார்கள் நான் நிஜமானபோது நடிப்பு என்றார்கள் விசித்திரமாகப் படவில்லை ஏனெனில் நிஜத்துக்கு அவர்கள் அந்நியர்கள்
நான் நிஜம் ஆகும் நாள் தேடி ஒரு நிஜத்துக்காய் காத்திருக்கிறேன்.

(osso) sississiųırıH SOÐ je păiuţa) (ossO) sɔsqde 19 speNaod. :ļosods.L. HuIEL
《Cz이어지어 어디서나ESy력 《花山 미코(《나 빅(日: 日 (「d「○ Å\}\\}{ON' HTN-SWW ZEĶI "IZI SĄ0q '„IHJ XWS,
–'0ሥ-1}HN –1ļaelsi mısraes) —"so IXIN – Isossus mae bilaeuo to, antiqu ıssassie
'\')+(ītņotos, ușorus) 1ț¢ i su m o Iso l' in sẽ sự us, wo sẽ love się 6 sæsoroloוחצדד Fuחי וח טשטו | 1. st. E si in Từ sự til ri se, si ri q'ı sī, † 成龍, uum ula m 후 법 명 “T學風E*ニョミョ』『 'III sulluloomųısıııııııữ lại); Isfjorųısırıņ-Iskori Isossýrules soos Tīserswffïo qisĘını, yı 'qilluminisilɛ liɛŋoo uuaesosfēr? Isī£
*Liu sollit, siis, 5,1 F 'LTỪojo Lugo, Esus sumo
L. 1, 5 + 1, 1, * # : * \) -t u qs \,, o sirv 5 se u uso sɛ we w sĩ p g * ? **T*
· 1, Litūņos suri ļae là sẽ sử sựı-ıųış oors-a , §§ TF f, Llo : * + w + '|+' £ și su u ro
*suso LoĒĢjư*E. ofis is"역nw義民國."¡lás

Page 17
சக்தியின் அடுத்த இத்ழில்
கிழக்கு
சோவடி
கிழக்கு ஐரோப்பிய நா சோஷலிசச் சித்தாந்தங் அறிகுறிகளா? இம்
எதிர்காலம் எப்படி அமை
ெ
"பத்திரிகை நிறுவ முதலாளிகள் வசமே பெருந் ெ நிறுவனங்கள் செயற்படுகின்ற மதிப்பீடுகளை கட்டிக்கள் பெயர்கள் அனைத்தும் பெண் குங்குமம், ராணி, தேவி, மங்
முக்குத்தி மெட்டி, காவேரி பெண்களைக் க பெரும்பான்மையும் ஆண்களி: பெண் ஒரு போகப் பொருளா எவவாறு ஆண்களால் நடாத்த இழிவுபடுத்துகின்ற
வெ
H
வெளிநாடுகளில் வாழுகின்ற துன்பங்களையும், அவர்களின் பி
சம்பவங்

ஐரோப்பிய மாற்றங்களும் லிசத்தின் எதிர்காலமும்
டுகளில் நிகழ்ந்துவரும் மாற்றங்கள் கள் காலாவதியாகிப்போனமையின் மாற்றங்களினால் சோஷலிசத்தின் யக்கூடும்? போன்ற விடயங்களை
சமுத்திரன் ஆராய்கிறார்.
ர்பாட்டு உருவாக்கத்தில் பெண்கள் பத்திரிகைகள்
னங்கள் முழுவதும் பணம்குவிக்கும் தாழிற்சாலைகள்போல் பத்திரிகை ன. எனவே இவை, நிலவும் சமூக க்கவே செய்யும் பத்திரிகைகளின் கள் தொடர்பானவையே. குமுதம், கை, மங்கையர் மலர், சுப மங்களா, தாய் முதலான பத்திரிகைகளில் வரும் பகுதிகள் அதிகம் ஆனால் * இரசனைக்குத் தான் முதலிடம் கத்தான் சித்தரிக்கப்படுகின்றாள்." ப்படும் பத்திரிகைகள் பெண்களை ண் என்று பெண்ணிய ஆய்வாளர் க.அரங்கராசுசுட்டிக்காட்டுகிறார்.
ரிநாடுகளில் துயருறும்
எமது பெண்கள்
எமது பெண்கள் அனுபவிக்கின்ற பிரச்சினைகளையும் பல உண்பைச் களை அடிப்படையாகக்கொண்டு
சந்தியா-சுயா விபரிக்கிநார்கள்.