கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சக்தி 1992.03

Page 1
bël
 

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''უ გუჯუს ჯ_გ გ. ჭჯგუ-to_om;", "უ";"J_", "კოკუ, ლუთj"-შუშკmჯ უშუშუფუ ურუ-ულ-), ()

Page 2
கவிதை
மலர்களின் நறுமணம் மிதக்கும்;
பனிபடரும்;
நள்ளிரவு
வானத்தைப் பார்த்தபடி வாசலிற் குந்தியுள்ளேன். வெகு தொலைவிலிருந்து யாரோ ஒருவர் பாடுதலும் மத்தளமும்
ஏந்திவரும்
காற்று.
மேலும் தொலைவிலிருந்து இடையிடையே துவக்கின்
பாட்டின் தாளத்தில் விண்மீன் அசையும் மேகங்கள் நடனமிடும் காற்று சலசலக்கும் ககனமெல்லாம் இசைநிறையும்
எனதுடலும் எனதுயிரும் இவ்விரவை உள்வாங்கும் தென்றல் தடவும் எனது தலைமயிரில் கால் விரலில் இடைவளைவில் மார்பகத்தின் மேட்டில் இன்பம் கொப்பளிக்கும்.
நான் விண்ணை வலம் வந்து விண்மீனை முத்தமிட்டு மேகத்தைத் தழுவிச் சந்திரனைப் பாடி மலர்களினைத் தடவி மரத்தில் இளைப்பாறி
எல்லையில்லா அண்டப் பெருவெளியில் என்னை இழப்பேன் என்நாமம் கெட்டுச் சதிராடிச் சுழல்வேன் துயர் மறுப்பேன்
வெடியொலிகள்.
6l Voluntous 6T சங்கரி (16.04.87)
என்றாலும் யாழ்ப்பாணம். அதைமீறி
பக்கம் 2 சக்தி மார்ச் 92
 

27-B High Street
Plaistozv
fondon E13 027D தமிழகம் ses: O2O 8472 3323
gR, Pathmanaba Iyer
நீங்கள்பராசக்தி.நீங்கள் அமர்ந்துள்ள இடம்ஆலயம்.நீங்கள்காட்டும்இடம்தேவலோகம் நீங்கள்சொல்லும்வார்த்தைவேதம் (சட்டசபையில் ஜெயலலிதாவை நோக்கி தமிழக அரசுக் கொறடா திருபட்டாபிராமன்)
ஒவ்வொருவராக அந்த எம்எல்ஏக்கள் ஜெயலலிதாலின் காலில் விழுந்து வணங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் முகத்தில் வர்ணிக்கவியலாத பரவசம் திடிரென்று அவர்களிடையே சிறுசலசலப்பு என்னவோ ஏதோ என்று அவர்களிடையே பதட்டம் ஒரு எம்எல்ஏயானவர்,ஜெயலலிதாவை வணங்கிக் கொண்டிருந்த இன்னொரு எம்எல்ஏ காலில் செருப்புஇருந்த"அபச்சாரத்தைக்கவனித்துவிட்டதுதான்.அந்தச்சலசலப்புக்குக்காரணம்
என்று தெரிய வருகிறது. உடனே இதுவரை அந்த தெய்வ நிந்தனையைக் கவனிக்காமலிருந்த எம்எல்ஏக்கள் பதைபதைத்தபடி தங்கள் செருப்புக்களை கழற்றி வைத்துவிட்டு வணங்க ஆரம்பிக்கிறார்கள். ஜெயலலிதாவின் முகத்தில் ஆனந்தமயமான
சக்தி மார்ச் 92 பக்கம் 3

Page 3
தமிழகம்
சிரிப்பு. "கல், மண் எல்லாம் தோன்ற முன்பே தோன்றிவிட்ட கருணாநிதியின் தமிழினம்
தன்காலில்விழுந்துகிடப்பதை நினைக்கையில்வந்தபெருமிதச்சிரிப்புஅது.
சனநாயகத்தின் பெரிய பலவீனம் இதுதான். மக்களின் ஆதரவை யார் பெற்றாலும் அவர்களிடம் ஆட்சி அதிகாரம் ஒப்படைக்கப்பட்டு விடுகிறது. மக்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என்பது பற்றி சனநாயகம் அக்கறை கொள்வதேயில்லை. மக்களை, மக்களின் பகுத்தறிவை வெகுவாக நம்புகிறது சனநாயகம். ஆனால் சிந்தனை வளர்ச்சி குறைந்த ஒரு சமுதாயத்தில் மக்கள் மீது நம்பிக்கை வைப்பது மிகவும் ஆபத்தானது. வறுமையால், கல்வியறிவின்மையால் வாடும் இந்தியச் சமூகம் போன்ற ஒரு சமுதாயத்தில் பரவலான சிந்தனை
வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது.
இந்தச் சமுகத்தில் வாழும் ஒரு
பிரசையின் கையில் இருக்கும் வாக்குச் .
சீட்டினால் எந்தப் பயனும் இல்லை; ஆபத்தானது. அந்தப் பிரசைக்கு அதன் முக்கியத்துவம் புரிவதில்லை. இந்தப் பிரசையிடமிருந்து இந்த வாக்குச் சீட்டை ஒரு அற்ப தொகைப் பணத்தைக் கொடுத்து அல்லது மிரட்டி வாங்கிவிட முடிகிறது. "ஒரு
முட்டாள் மனிதன் பயன்படுத்திய வாக்குச் சீட்டு இது, விலை கொடுத்து வாங்கிய வாக்குச் சீட்டு இது, இது மிரட்டி வாங்கிய வாக்குச் சீட்டு இது. எனவே இவைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா" என்று தரம் பிரிக்கும் வலிமை இந்திய சனநாயகத்திற்கு இருந்திருக்குமானால் இன்று "அரசியல் வானில் சுடர்விடும் நட்சத்திரங்களில்" பெரும்பாலானோரை நாம் அறிந்திருக்கவே முடியாது.
இந்திய சனநாயகத்தில் சாராயத்துக்காகவும், சேலைக்காகவும் வாக்குச் சீட்டுக்களை "பண்டமாற்றம்" செய்வது ஒரு பாரம்பரியமாகவே இருந்து வருகிறது. குண்டர்களை விட்டு மிரட்டி வாக்குகளைப் பறித்தல், திருட்டுத் தனமாக பிறரின் வாக்குக் சீட்டுக்களைப் பயன்படுத்தல், வாக்களிப்பு நிலையங்களைப் கைப்பற்றுதல் போன்ற நடவடிக்கைள் இந்திய சனநாயகத்திற்கு மேலும் மெருகூட்டுகின்றன.
பக்கம் 4
சக்தி மார்ச் 92

ஆனால் இந்திய சனநாயகமே இப்படித்தான் என்று கூறிவிடுவதற்கில்லை. மக்களால் விரும்பப்படுவர்கள்தான்
ஆட்சியதிகாரத்தை அடைகிறார்கள்
என்ற சனநாயகத் தத்துவம்
நடைமுறைப் படுத்தப்பட்டுத்தான் வருகிறது. ஆனால் மக்கள் யாரை விரும்புகிறார்கள்? தெருவில் வித்தைகள் செய்யும் வித்தைக்காரன் ஒருவன் காட்டும் சாகசத்தினால் மகிழ்ந்து போன ஒரு இந்தியன் அந்த வித்தைக்காரன் மீது அபிமானம் கொள்கிறான். திடீரென்று "நான் தேர்தலில் நிற்கிறேன். உங்கள்
வாக்குகளைத் தாருங்கள்" என்று அந்த
வித்தைக்காரன் கேட்டால் தயக்கமின்றி உடனே கொடுத்துவிடுவான். "இந்த வித்தைக்கானின் சாகசத்துக்கு ஒரு சில நாணயங்களை வீசியெறிவதற்குப் பதிலாக எனது சனநாயக உரிமையையே வீசியெறியலாமா?" என்ற சாதாரண கேள்வி இந்த இந்தியப் பிரசையிடம் தோன்றுவதில்லை. தான் வீசியெறிந்த
வாக்குச் சீட்டைப் பயன்படுத்தி
தன்னையும், தனது நாட்டையுமல்லவா."
ஆளப்போகிறான்! இந்த வித்தைக்காரன் நிறைய விநோத
தமிழகம்
விளையாட்டுக்கள் செய்வதில் வல்லவன்தான்; ஆனால் எனது தேசத்தை ஆள்வதற்குத் தகுதியுடையவனா என்னறல்லாம் சிந்திக்க இவனால் முடிவதில்லை. மாறாக தனது அபிமானத்துக்குரிய வித்தைக்காரனே நாட்டையும் ஆள்கிறான் என்று எண்ணி மகிழ்கிறான். ஒரு நாட்டை ஆளுவதற்கு ஒருவருக்கு சில தகுதிகள், தகைமைகள் வேண்டும் என்று ஒரு சராசரி இந்தியன் நினைத்திருந்தால் இந்திரா காந்தியின் மகன் என்ற காரணத்திற்காக மட்டும் ராசீவ் காந்தி இந்தியப் பிரதமராகியிருக்க முடியாது; சினிமா நடிகர் M.G.Rஇன் அழகான, கவர்ச்சியான காதலி என்ற காரணத்துக்காக மட்டும் ஜெயலலிதா தமிழக முதல்வராக வந்திருக்க முடியாது; கிருட்டினபகவானின் தோற்றமுடையவர் என்ற காரணத்திற்காக மட்டும் இன்னொரு சினிமா நடிகர் என்டீராமராவ் ஆந்திரப் பிரதேச முதல்வராக இருந்திருக்க
الأقTاللاواط)
இந்தியாவிலேயே அரசியல் பிரக்ஞை குறைந்த மக்களை அதிகமாகக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்று
சக்தி மார்ச் 92
பக்கம் 5

Page 4
தமிழகம்
சொல்லலாம். "அரசியல்" என்ற பதத்திற்கு இங்கு மரியாதையே கிடையாது. பரந்த பொருளாதார வறுமை- அதனால் படிப்பறிவின்மை தமிழக மக்களை மந்தைகளாக்கியுள்ளது. சினிமாக்காரர்களின் அந்தரங்கங்களை
வைத்துப் பிழைக்கும் "குமுதம்", "தராசு",
"திரைச்சித்திரா" போன்ற தரங்கெட்ட பத்திரிகைகளே எழுத, வாசிக்கத் தெரிந்தவர்களில் பெரும்பான்மையானவர்களின் சிந்தனைக் கருவூலங்களாகத் திகழ்கின்றன. இந்தியா எப்போது சுதந்திரம் அடைந்தது என்று ஒரு சராசரித் தமிழ்நாட்டுப் பிரசைக்குத்
தெரியாமலிருக்க நிறைய வாய்ப்புண்டு;
ஆனால் அமலாவுக்கும் நாகார்ச்சுனனுக்கும் திருமணம் நடந்துவிட்டதா இல்லையா என்ற விபரம் நிச்சயமாகத் தெரிந்திருக்கும். சிலுக்கு கடித்த ஆப்பிள் பழத்தை பல ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் ஒருவனாக, M.G.Rஇன் எச்சில் சோடா கலந்த தண்ணிரைக் குடிக்கத் தவமிருக்கும் ஒருவனாக, ஜெயலலிதாவுக்காகத் தீக்குளிக்கும் ஒருவனாக, ரஜனிகாந்தின் படம் வெளியிடத் தாமதமானால் குண்டு
வைப்பேன் என்று மிரட்டுபவனாக
உருவாகியிருக்கும் ஒரு தமிழ்நாட்டுக் குடிமகனின் தெரிவு ஜெயலலிதா அல்லாமலிருந்தால்தான் ஆச்சரியம்.
தமிழகம் ஏன் இப்படி?
வறுமை வறுமையின் கொடுமையினால் வாழ்க்கையையே நரகமாகக் காணும் ஏழைமக்களுக்கு பள்ளிக்கூடம் சென்று கல்விபெற எங்கே வாய்ப்பிருக்கிறது? நான் ஏன் இப்படி வாழ்கின்றேன்? நான் இப்படி வாழ்வதற்கு யார் காரணம்? என்று ஒரு சராசரித் தமிழகப் பிரசை சிந்திக்காமலிருப்பதற்கு கல்வியறிவின்மைதான் முக்கிய காரணம். வாழ்க்கையின்
அவலங்களை மறப்பதற்கும்,
தற்காலிகமாகத் தப்பித்துக்
கொள்வதற்கும் சாராயமும், சினிமாவும் உதவுகின்றன. சேரியில் வாழும் ஒருவன் மாடமாளிகைகளை திரையில் பார்த்துத் திருப்தியடைகிறான். பட்டினி கிடந்தாயினும் தன் அபிமான நடிகரின் சினிமாவைப் பார்த்துவிட முயல்கின்றான். உண்மையான "வில்லன்களால்" சுரண்டப்படுகின்ற இந்த அப்பாவிகள் சினிமாவில்
கதாநாயகன் வில்வனை
பக்கம் 6
சக்தி மார்ச் 92

தமிழகம்
உதைக்கும்போதும், பழிக்குப் பழி வாங்கும்போதும், அளவிலா மகிழ்ச்சியடைகிறான். அரைகுறை ஆடையுடன் அழகான நடிகை மழையில் நனைந்தபடி கதாநாயகனுடன் பாடும்போது இவன் தன் பசி, பட்டினி, துயர் எல்லாவற்றையும் மறந்து போகிறான். மறுபடியும், மறுபடியும் அந்தப் படத்தைப் பார்க்கத் துடிக்கிறான். குமுதமும், தராசும், திரைச்சித்திராவும் அந்த நடிகையின் மறைவிடங்களில் எங்கெங்கே மச்சம் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள ஐம்பத்தி மூன்றாம் பக்கத்தைப் புரட்டச்சொல்லி இந்த தமிழகப் பிரசையை உற்சாகப் படுத்துகின்றன. சேரியில் பிறந்தவன் எப்படிப் பெரிய நடிகனானான் என்று மலிவுப் பதிப்புகள் இந்த தமிழகப் பிரசைக்கு வரலாறு போதிக்கின்றன. கேட்பது, பேசுவது, வாசிப்பது எல்லாம் அந்த நடிகனைப் பற்றியதாகவே இருக்க, அந்த நடிகன் இந்தப் பிரசையின் சிந்தனையை ஆக்கிரமித்துக் கொள்கிறான்; இவனுக்கு வாழ்க்கையில் மிகவும் நெருக்கமானவனாகிவிடுவான். அவனது உருவத்தை உடம்பில் "பச்சை" குத்தி அவனது ரசிகர் மன்றத்தில் அங்கத்தவனாகி அவனது
படங்கள் வெளியிடும்போது தோரணங்கட்டி, அவனது பிறந்த நாளைக் கொண்டாடி. வீட்டில் பசியும், வறுமையும் ஆட்சி செலுத்த, ஒரு சராசரி தமிழகப் பிரசையின் வாழ்வு சுறுசுறுப்பாக நகர்கிறது. சிவாசி ரசிகர் மன்றத்தில் அங்கத்தவனாக இருந்த ஒரு தமிழகப் பிரசையின் வாரிசுகள் இன்று ரஜனிகாந்தின், கமலஹாசனின் உருவங்களை "பச்சை" குத்திக் கொள்ளுகிறார்கள். சராசரி வருடத்திற்கு நூற்றுக்கு மேற்பட்ட தமிழ்ப்படங்கள், அதாவது மூன்று நாளுக்கு ஒரு படம் என்ற விகிதத்தில், தமிழகத்தில் தயாரிக்கப்படுகின்றன. இந்தப் படங்கள் அத்தனையையும் தமிழக மக்கள்தான் பார்த்துத் தள்ளுகிறார்கள் என்றால், ஒரு சராசரித் தமிழகப் பிரசையின் வாழ்க்கையில் சினிமா எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என உய்த்தறிந்து கொள்ளலாம். சினிமா என்பது ஒரு கலைவடிவம் என்ற நிலையைத் தாண்டி, சினிமாவே இல்லையென்றால் வாழ்வே இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு தமிழக மக்கள் சினிமாவுக்கு
அடிமையாகியுள்ளார்கள்.
சக்தி மார்ச் 92
பக்கம் 7

Page 5
5őgaib
தமிழக மக்களின் வெறித்தனமான சினிமாப்பற்றினை உணர்ந்து கொண்ட முதலீட்டாளர்கள், அவர்களுக்கேற்ற விதத்தில் படங்களைத் தயாரித்துப் பெருமளவு
இலாபத்தைச் சம்பாதித்து வந்தார்கள்.
வேறெந்தத் தொழிற் துறையினையும்விட அசுர வேகத்தில் தமிழகத்தில் சினிமாத்துறை வளர்ந்து கோடிக்கணக்கான ரூபாய்களைப்
புரளவைத்தது.
இவ்வாறு பொருளாதார இலாபத்தை ஈட்டித்தந்த சினிமாத்துறையினை, அரசியல் இலாபம் ஈட்டித்தரும் துறையாகவும் மாற்றிய பெருமை திராவிட முன்னேற்றக் கழகத்தையே சேரும்.
அண்ணாத்துரையின் வேலைக்காரி கருணாநிதியின் பராசக்தி போன்ற அரசியல் பிரச்சாரச் சினிமாப்படங்கள் ஏற்படுத்திய பரபரப்பும், வெற்றியும் திமு.கழகத்தினர்க்கு சினிமாமீது உறுதியான நம்பிக்கையை ஏற்படுத்தின. அடித்தொண்டையினால் பேசும் அடுக்கு மொழியினாலும், நாடகங்களினாலும் இதுவரை தங்கள்
பிரச்சாரத்தை நடாத்தியவர்களுக்கு சினிமாத்துறை இலகுவான, வெற்றிகரமான பிரச்சார
ஊடகமாகியது.
ஐம்பதுகளின் ஆரம்பத்தில் "வாள்வீசிச் சாகசம் புரியும்" இளம் கதாநாயகனான M.G.Rம், "மூச்சுவிடாமல் வசனம் பேசும்" இன்னொரு இளம் கதாநாயகனான சிவாசி கணேசனும் பழம்பெரும் நடிகர்களான சின்னப்பா, D.R. JTLošsššJ6öT, D.S.UT60)6)UT போன்றவர்களை பின்னுக்குத் தள்ளியபடி, முன்னணி நடிகர்களாக வந்து கொண்டிருந்தனர். இவர்களுக்கு திமு.கழகத்தின் "துடிப்பு மிக்க" இளந்தலைவரான கருணாநிதியின் "கனல்பறக்கும் வசனங்கள்" பெருமளவில் கைகொடுத்தன. இவர்களின் இணைவில் வெளியான மந்திரி குமாரி ராஜா ராணி போன்ற படங்கள் தமிழக அரசியலில் குறாவளியை ஏற்படுத்தின.
அறுபதுகளின் இறுதியில் திமு.கழகத்தின் பெருவெற்றிக்கும், பிரபலத்துக்கும் சினிமாத்துறைதான் மிகமுக்கிய காரணமாக இருந்தது. திமுகவின் திராவிடக் கொள்கைகள்
பக்கம் 8
så Lorrírés 92

தமிழகம்
சினிமாவூடாக மக்களைச் சென்றடைந்ததால் கிடைத்த வெற்றி அது என்றுதான் பொதுவாகக் கருதப்பட்டு வந்துள்ளது. ஆனால் அது ஓரளவு உண்மையே தவிர முற்றிலும் உண்மையல்ல. பிரபலமான சினிமா நடிகர்கள், குறிப்பாக M.G.R S.S.R போன்றவர்கள், தி.மு.கழகத்தில் இருந்ததனால், இவாகளுக்காக உயிரையும் கொடுக்கத் தயாராகவிருந்த ரசிகப் பெருமக்கள் இலட்சக் கணக்கில் இருந்ததனால், அவர்கள் M.G.Rன் வாள்வீச்சு சாகசங்களுக்காககவும், சினிமா வில்லன்களை சினிமா ஏழைகளைக் காப்பாற்ற உதைத்ததற்காகவும், தங்கள் வாக்குகளை வீசியதனால் கிடைத்த வெற்றிதான் அது.
M.G.Rம், சினிமாத்துறையும் திமு.க.வுக்கு கிடைக்காமல் இருந்திருந்தால் இன்றுவரை திமுக ஆட்சிக்கு வந்திருக்காமலிருந்திருக்கக்கூடும். சினிமா ரசிகர்களின் ஆதரவில் ஆட்சிக்கு வராமலிருந்திருந்தால் இன்று திமு.க (கருணாநிதியின் தலைமையில் இல்லாமல் ஒரு நல்ல அரசியல் கட்சியாக இருந்திருக்கக்கூடும்.
எனவே திரைப்பிம்பங்களில் மயங்கியிருந்ந தமிழக மக்களின் முட்டாள்த்தனத்தை வாக்குகளாக்கி ஆட்சியையே பிடிக்கலாம் என்று காட்டியது திமுகதான்; கருணாநிதிதான். தமிழக அரசியலுக்கு தகுதி எதுவும் தேவையில்லை; அப்பாவி மக்களின் கரகோசத்தை பெறுகின்ற குறளி வித்தைக்காரன் கூட தமிழகத்தின் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற வரலாற்றை ஆரம்பித்து வைத்தது திமு.கழகம்தான். அந்தத் துணிச்சலில், தமிழக மக்களின் முட்டாள்த்தனத்தில் கொண்ட நம்பிக்கையில்தானே வகுல்மன்னன் ரஜனிகாந்த், பல்கலைமன்னன் ராஜேந்தர், காதல் இளவரசன் கமலஹாசன், உங்கள் பாக்கியராஜ், புரட்சிக் கனல் விஜயகாந்த், மக்கள் நாயகன் ராமராஜன் போன்றோர் தமிழகத்தின் ஆட்சியைப் பிடிக்க அணிவகுத்து நிற்கிறார்கள்
உலகத் தமிழர்களின் தலைவரான கருணாநிதி தமிழக மக்களுக்கு செய்த துரோகத்தைப்போல் வேறு எவரும் செய்யவில்லை. பார்ப்பனர்களின்
கையிலிருந்த அதிகாரம்
சக்தி மார்ச் 92
பக்கம் 9

Page 6
தமிழகம்
கருணாநிதியிடம் கணிசமான காலம் இருந்தது. இந்தக் காலகட்டத்தில் மந்தைகள் மாதிரி வாழ்ந்த தமிழக மக்களை மீட்டெடுக்க முயன்றிருக்கலாம். கல்வியறிவைக் கட்டாயப்படுத்தியிருக்கலாம்; சினிமாப் போதை தமிழக மக்களை அடிமைப் படுத்த விடாது தடுத்திருக்கலாம். ஆனால் சினிமாவையும், சினிமாக்காரர்களையும் நம்பித் தனது பிழைப்பை நடாத்திய கருணாநிதி சினிமாச் சனியனை தானே முன்னின்று வளர்த்தெடுத்தார். இதுவரை சினிமாவுக்கு வசனம் எழுதிய கருணாநிதி பூம்புகார் புரடொக்ஷன் என்ற பெயரில் தானே படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தார். அத்துடன் நில்லாமல் தனது மகனான மு.க.முத்துவை சினிமாக் கதாநாயகனாக்கி ரசிகர் மன்றங்களை உருவாக்கினார். இவ்வாறு தமிழக மக்களை தொடர்ந்து மந்தைகளாகவே
வைத்திருந்த கருணாநிதி வீதிகளுக்கு
தமிழ்ப் பெயர் குட்டி தமிழினத்துக்கும், திராவிடக் கொள்கைக்கும் சேவைகள் செய்தார். கிட்டத்தட்ட கால்நுாற்றாண்டு காலமாக மக்கள் மீது சிறிதும் அக்கறையில்லாத சினிமாக்காரர்களால் மாறிமாறி
தமிழகம் முற்றுகையிடப்பட்டதால்தான்,
இன்று ரசிகர் மன்றங்களின் தொகுப்பே தமிழக மக்கள் என்று ஆகிவிட்ட சோகத்தைக் காண்கிறோம். இந்தத் தமிழகத்தின் ஆட்சியைத்தான் ஜெயலலிதா பிடித்திருக்கிறார். அதில் என்ன புதுமையிருக்கிறது? அந்தக்காலத்திலேயே (அறுபதுகளின் இறுதியில் வயதுவந்தவர்களுக்கு மட்டும் என்று முத்திரை குத்தப்பட்ட வெண்ணிற ஆடையில் கவர்ச்சியாகத்தோன்றி தமிழகப் பிரசைகளின் உள்ளங்களை சுண்டியிழுத்தவர் ஜெயலலிதா. அறுபதுகளின் இறுதியில், பத்துப் பன்னிரண்டு வயதில் ஜெயலலலிதாவின் பொன்னிற மேனியில் மயங்கிய தமிழகப் பிரசைகளே தமிழகத்தின் இன்றைய வாக்காளப் பெருமக்களில் பெரும்பான்மையானவர்கள். இந்த வாக்காளப் பெருமக்களின் "இதய தெய்வம்" M.G.R ஜெயலலிதாவை "தங்கச் சிலை" என்று அழைத்து தனதாக்கிக் கொண்டபோதே ஜெயலலிதா எதிர்காலத் தமிழக முதலமைச்சராகிவிட்டார்.
தமிழக மக்களின் "பொன்மனச் செம்மலின்" உத்தியோக பூர்வ மனைவி
திருமதி ஜானகி தனது கணவரின்
பக்கம் 10
சக்தி மார்ச் 92

"இரத்தத்தின் இரத்தங்களை" நம்பித் தேர்தலில் குதித்தபோது தமிழக மக்கள் அவரைத் துாக்கி எறிந்தது ஒரு முக்கியமான அம்சம். சம்பிரதாயம், சடங்குகளில் ஊறிப்போன தமிழக மக்கள் தங்கள் தலைவரின் தாலிகட்டிய மனைவியை நிராகரித்தது ஏன்? திருமணமற்ற உறவுகளை கேவலம் என்று கருதும் பிற்போக்குத் தமிழகச் சமூகம் M.G.R ன், "வைப்பாட்டி" என்று அழைக்கப்பட்ட ஜெயலலிதாவை ஆவேசத்துடன் வணங்குவது ஏன்? பதில் தெரிந்ததுதான். தமிழக மக்களுக்கு வேண்டிய "கவர்ச்சி" திருமதி ஜானகியிடம் இல்லை. "கலைச் செல்வி ஜெயலலிதாவிடம் அது தாராளமாக இருந்தது. கருணாநிதியும் தன்னால் முடிந்ததெல்லாம் செய்துதான் பார்த்தார். தமிழுணர்வு, திராவிடக் கொள்கை என்பவை தமிழக மக்களிடம் கொஞ்சமாவது மிச்சம் இருக்காதா என்ற எதிர்பார்ப்பில் "தமிழகத்தை கன்னடப் பெண் ஒருத்தி எப்படி ஆளலாம்?", "திராவிடக் கட்சிக்கு எப்படி ஒரு பிராமணப் பெண் தலைமைதாங்கலாம்?" என்றெல்லாம் கேட்டுப்பார்த்தார். ஆனால் தமிழக மக்கள் அசைந்து கொடுப்பதாயில்லை.
இனம், மொழி எல்லாப் பேதங்களையும்
தமிழகம்
கடந்தது "கவர்ச்சி" என்பதை தமிழக மக்கள் நிரூபித்தார்கள். ஜெயலலிதா தனது பலத்தை உணர்ந்து கொண்டார். ஏனைய தலைவர்களை ஜெயலலிதா நாயே, பேயே, செருப்பே, உதிர்ந்த ரோமமே என்று பொது மேடைகளில் பேசப் பேச தமிழக மக்கள் மூர்க்கத்துடன் அவரை ஆதரிக்கிறார்கள்; "காவல் தெய்வமே! தாயே பராசக்தியே! என்று பக்தி வெறிபிடித்து பாதத்தில் விழுந்து சேவிக்கிறார்கள். குமுதமும், தராசும் "என்ன அழகாய் எழுந்தார், என்ற அழகாய் நடந்தார்" என்று எழுதுகின்றன. "கங்கை வென்று, கடாரம் வென்று, கனக விசயன் தலையில் கல்லேற்றிக் கண்ணகிக்குச் சிலையெடுத்த தமிழினம்" என்று புழுகிய தமிழகப் பல்கலைக்கழக கல்விமான்கள் தாங்கள் கொடுக்கும் "டாக்டர்" பட்டத்தை "ஏற்றருள மாட்டீர்களா தேவி?" என்றுஜெயலலிதாவை கண்ணிர் மல்க
கேட்டபடி அலைகிறார்களாம்.
தமிழகத்தில் அதிகாரத்தை இழந்து,
புதுடில்லி பரிவாரங்களின் தயவில் தமிழகச் சினிமா ஆட்சியாளர்களை மிரட்டிக் கொண்டிருந்த பார்ப்பன புத்திசீவிகள் ஜெயலலிதா ஆட்சிக்கு
சக்தி மார்ச் 92
பக்கம் 11

Page 7
தமிழகம்
வந்ததும் உயிர் பெற்றிருக்கிறார்கள்.
சினிமாத்துறையில் பாலச்சந்தர், சோ போன்ற பார்ப்பனர்கள் பிரபலம் பெற்றிருந்தாலும், சினிமாவைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வருமளவுக்கு தமிழக மக்களிடம் அவர்களால் ஒரு M.G.Rரை உருவாக்க முடியவில்லை. M.G.Rஇன்மறைவுக்குப் பின் ஜெயலலிதாவின் முக்கியத்துவம் அதிகரித்துவருவதை அவதானித்த இவர்கள் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தைப் பெறும் முயற்சியில் இறங்கினார்கள். ஆயினும் காங்கிரஸ் தலைவராக இருந்த மூப்பனார் ஜெயலலிதாவை எப்போதும் அருவருப்புடனேயே நோக்கிவந்தார். அதனால் காங்கிரஸ் ஜெயலலிதா கூட்டணி அமைய வாய்பில்லாமல் போய்விட்டது. அத்துடன் அதிமுக வேறு பிளவுண்டிருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திமுக ஆட்சியைப் பிடித்துக் கொண்டது. அறிவும், சாணக்கியமும் நிறைந்த இந்தக் கூட்டத்தினர் மெச்சத் தகுந்த விதத்தில் திட்டங்களைத் தீட்டிச் செயற்படுத்தினார்கள். ஆட்சியில் இருந்த திமு.கவைப் பதவியிலிருந்து இறக்கி காங்கிரஸ் - ஜெயலலிதா
கூட்டணியை உருவாக்கினால்
ஜெயலலிதாவைப் பதவியேற்ற முடியும் என்று தெரிந்துகொண்டார்கள். முதற்கட்ட நடவடிக்கையாக காங்கிரசின் தலைவரான மூப்பனார் பதவியிறக்கப்பட்டு, ஜெயலலிதாவின் வீட்டுக் கூர்க்கா மாதிரிச் செயல்பட்ட வாழப்பாடி ராமமூர்த்தி காங்கிரஸ் தலைவரானார். உடனேயே காங்கிரஸ் - ஜெயலலிதா கூட்டு உருவாயிற்று. அடுத்த கட்டமாக திமுக ஆட்சியைக் கலைத்தாக வேண்டும். இந்தப் பணியை தமிழகப் பத்திரிகைகள் ஆரம்பித்தன.
தமிழகத்தின் பிரபல பத்திரிகைகளில் பெரும்பாலானவை பார்ப்பனர்களின் கைகளிலேயே இருந்தன. ஜெயலலிதாவைப் பாராட்டி எழுதுவதற்கு எதுவும் இல்லை என்று இவர்களுக்குத் தெரியும். எனவே திமுகவைத் தாக்குவதில் குமுதம், துக்ளக், கல்கி, தினமலர் போன்ற பத்திரிகைகள் உக்கிரத்தைக் காட்டின. இவர்களின் இந்த முயற்சிக்கு விடுதலைப் புலிகள் நிறையவே உதவி செய்தார்கள். தமிழகத்தின் பலபகுதிகளில் விடுதலைப் புலிகளால் பொறுப்பற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை
இந்தப் பத்திரிகைகள் நன்கு
பக்கம் 12
சக்தி மார்ச் 92

தமிழகம்
பயன்படுத்திக் கொண்டன. ஈற்றில் விடுதலைப் புலிகளால் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு குலைந்து போயிருக்கிறது என்ற காரணத்தைக்காட்டி திமுக ஆட்சியைக் கவிழ்ப்பதில் பார்ப்பனப் புத்திசீவிகள் வெற்றி கண்டார்கள். ராசீவ் கொலையால் அதிக நன்மையடைந்தவர்கள் இந்தக் கூட்டத்தினர்தான். ஜெயலலிதா அமோக வெற்றியுடன் ஆட்சியேறினார். ராசீவைக் கொன்றவர்களை வேட்டையாடுவது என்ற பெயரில் தமிழகப் பார்ப்பனர்களின் இலட்சியமான ஈழவிரோதம் தமிழக அரசாலேயே அரங்றேற்றப்பட்டது.
ஒருவேளை ஈழத்தமிழர்களுக்கு நாடொன்று கிடைத்தால் முதலாவதாகத் தற்கொலை செய்துகொள்பவர் துக்ளக் ஆசிரியர் சோ ராமஸ்வாமி யாாகவே இருக்கும். இவர்தான் தமிழகத்தின் இன்று சக்திவாய்ந்த புத்திசீவி ஜெயலலிதாவின் பக்கத் துணையாகச் செயற்படும் இவர் போன்றவர்களின் ஆலோசனையின் பெயரிலேயே இன்று தமிழகத்தில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக வாய்திறந்தாலே சிறைவாசம் என்னும் கொள்கை அமுல்படுத்தப்பட்டு
வருகிறது. ஈழத்தமிழரை விரட்டும்போது, கன்னடத்து பிராமணத்தி எங்கள் ஈழத்துச் சகோதரர்களை விரட்டுவதா? என்று கருணாநிதி சிலவேளை கிளர்ந்தெழுந்துவிடலாம் என்று கருதி தமிழுணர்வில் தானும் கருணாநிதிக்கு சளைத்தவரல்ல என்று காட்டுவதற்காக கட்டாயத் தமிழ், கச்சதீவு, காவேரி ஆறு விவகாரங்களுடாக பரபரப்பை ஜெயலலிதா ஏற்படுத்தி வருகிறார்கள்.
சினிமா நடிகையான ஜெயலலிதாவுக்கு எந்த மாதிரியான காட்சிகளுக்கு தமிழக மக்கள் கைதட்டுவார்கள் என்பது நன்கு தெரியும். உதாரணமாக கச்சதீவு கைச்சாத்திடப்பட்டு, சட்டரீதியாக இந்தியப் பிரதமரால் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட தீவு அதை திருப்பிப் பெறுதல் முடியாது என்பது ஜெயலலிதாவுக்கு நன்கு தெரியும். ஆனால் தமிழக மக்கள் இதை அறிந்திருக்கக் கூடியவர்களல்ல என்பதும் ஜெயலலிதாவுக்குத் தெரியும். அதனால் "கச்சதீவை திருப்பிப் பெற்றே தீருவேன்" என்று காட்சியில் நடிக்கும்போது தமிழகம் மெய்சிலிர்த்துப் போய் கைதட்டியது. கருணாநிதிக்கு ஏன் இந்த மாதிரி
மூளை வேலை செய்வதில்லை என்று
சக்தி மார்ச் 92
பக்கம் 13

Page 8
தமிழகம்
திட்டியது. ஜெயலலிதாவின் நோக்கம் நிறைவேறியது.
முரண்பட்டிகுந்தM.G.Rம்,கருணாநிதியும்
ஏதோஒருகாரணத்துக்காக ஈழப்போராட்டத்தை ஆதரிக்க முன்வராதிருந்தால் தமிழகத்தில் விரல்விட்டுஎண்ணக் டியசிலரே ஆதரிப்பவர்களாக இருந்திருப்பார்கள். ஈழப்போராட்டமும்கீரழியாது. சிரானபாதையில்சென்றிருக்கும்.
தமிழக மக்களைப் பொறுத்த வரை கருணாநிதி அல்லது M.G.R நினைவுபடுத்தினால்தான் திராவிடம், தமிழ் என்ற சொற்கள் ஞாபகத்திற்கு வரும். M.G.R சொன்னார் என்பதால் அவரின் ரசிகர்களும், கருணாநிதி சொன்னார் என்பதால் அவரின் ரசிகர்களும் எழுப்பிய குரல்தான் இதுவரை ஈழத் தமிழருக்கு தமிழகத்தில் கிடைத்த ஆதரவு. முரண்பட்டிருந்த M.G.Rம், கருணாநிதியும் ஏதோ ஒரு
காரணத்துக்காக ஈழப்போராட்டத்தை ஆதரிக்க முன்வாாதிருந்தால் தமிழகத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே ஆதரிப்பவர்களாக இருந்திருப்பார்கள். ஈழப்போராட்டமும் சீரழியாது, சீரானபாதையில் சென்றிருக்கும்.
ஜெயலலிதாவை இனித் தமிழ்நாட்டிலிருந்து அசைக்க முடியாது என்று பரவலாகக்கருதப்படுகிறது. தமிழக
மக்களை ஜெயலலிதாவிடமிருந்து மீட்க M.G.Rரைவிட அதிகமான ரசிகர்களையும், ரசிகர் மன்றங்களையும் கொண்டிருக்கும் ஸ்டைல் நடிகர் ரஜனிகாந்த் ஒருவரால்தான் முடியும் என்று நம்பிக்கை தமிழகத்தில் உருவாகத் தொடங்கியுள்ளது. இதனை ஜெயலலிதாவும் நம்புவதாகவும், அதனால் ரஜனிகாந்தை ஒழித்துக்கட்டும் முயற்சியில் ஜெயலலிதா இறங்கியிருப்பதாகவும் அண்மையில் கிடைத்த தமிழகச் செய்திகள் சொல்கின்றன. தமிழக விவகாரங்கள் எதையும் பகிடி என்று ஒதுக்கிவிடமுடியாது. சிலவேளை ரஜனிகாந்த் அடுத்த தமிழக முதல்வராகக்கூடும். யார்
கண்டார்கள்?
பக்கம் 14
சக்தி மார்ச் 92

கருத்து
விழிப்புணர்வு
உலகப் பெண்களைப் பொறுத்தவரை சமுகத்தில் அவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவது இன்னும் ஒரு பெரும் பிரச்சனையாகவே உள்ளது. எனினும் கீழைத்தேய பெண்களுடன் ஒப்பிடும் போது மேலைத்தேய பெண்களின் நிலையில் எவ்வளவோ முன்னேற்றம் காணப்படுகிறது. அவர்கள் எம்மிலும் அதிக சுயாதீனத்துடன் இயங்குகிறார்கள்; அவர்களது உரிமைகள், சமமாக நடத்தப்படவேண்டும் என்பன போன்ற விடயங்கள் சட்ட ரீதியாகவேனும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதன் விளைவுகளாகவும் பெண்கள் உறவினர் அல்லது சமூகத்தில் சார்ந்து வாழும் தன்மைகள் குறைவு படுவதாலும் அவர்கள் தமது மனதிற்கு ஒவ்வாத விடயங்களை சமூகத்திற்குப் பயந்து தம்மீது திணித்துக் கொள்ளும் நிலை குறைந்து வருகிறது.
இவர்களின் சமூக அந்தஸ்து உயர்வதற்கு இவர்களது ஆரம்பகால போராட்டங்கள் வழிவகுத்துள்ளன. வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு தேவைகருதி இவர்களின் குரல் உயர்ந்துள்ளது. இதற்கு அவர்களது கல்வி மேம்பாடடைந்தமை, தொழிற் சங்கங்கள் பலமடைந்திருந்தமை, பெண்கள் பொருளாதார விடுதலை அடைந்திருந்தமை, அரசின் சமூகநல நடவடிக்கைகள் பெண்களின் தங்கிவாழும் தன்மைகளைக் குறைத்தமை
போன்ற பல காரணிகளைக் கூறலாம்.
சக்தி மார்ச் 92 பக்கம் 15

Page 9
கருத்து
எம் போன்ற கீழைத்தேய சமூகங்களில் பெண்களின் நிலை இன்னமும் மாற்றமின்றியே உள்ளது. இதுவரை அங்கு பெண்கள் தமது சொந்த உரிமைகளுக்காக போராடிய விடயம் என்று ஏதாவது வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறதா என்பது ஐயத்திற்கிடமானதே. வாக்குரிமை போன்ற உரிமைகளும், உடன்கட்டை ஏறல் போன்ற அநீதி ஒழிப்புக்களும் பெரிய போராட்டமின்றியே பெறப்பட்டன. சமசம்பளமின்மை அல்லது இன்று உயிர் குடிக்கும் சீதனக் கொடுமைகளுக்கு எதிராக எம் பெண்கள் ஒரு விரலைக் கூட அசைத்ததாகத் தெரியவில்லை. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது எமது உரிமைகளைப் பற்றியோ அவை எமக்கு கிடைக்க வேண்டிய நியாயப்பாடு பற்றியோ நாம் விழிப்புணர்வின்றி இருப்பதாகும். சமூகத்தில் நாம் பாரபட்சமாக நடத்தப்படுவது பற்றி அறியாதிருக்கிறோம். அறிந்தாலும் தலைமுறை தலைமுறையாக இதுவே வழமையாகிப் போனதால் அதை மாற்ற விரும்பாதிருக்கிறோம். பழகிய பாதையை மாற்றுவதற்கு சிந்தனையையும், உழைப்பையும் பயன்படுத்துவதை எமது சோம்பல் தடுக்கிறது.
ஆனால் தாங்க முடியாதளவிற்கு ஏதாவது ஒரு அநீதி எமக்கு நடக்கும் போதுதான் இச் சோம்பலை உதறி விட்டு விழித்துப் பார்க்கிறோம். ஆனால் அப்போது தெரிகிறது வெள்ளம் தலைக்கு மேல் போய்விட்டது என்று. நாம் எதிர்க்காமல் கட்டிக் காத்து வந்த சமூகத்தின் இரட்டை நியாயங்கள் எவ்வாறு எம்மை கரைசேர முடியாமல் இறுக்கிப் பிடிக்கின்றன என்று புரிகிறது. இந்நிலை ஒருவருக்கல்ல. பலருக்கு ஏற்படுகிறது. ஆனாலும் நாம் உதிரிகளாக இருப்பதால் சேர்ந்து போராடி மீள முடியாதிருக்கிறது. இதுவும் பெண்கள் போராடாதிருப்பதற்கு முக்கிய காரணியாகும்.
நாம் எமது பலமற்ற நிலையை உணர வேண்டும். உதிரிகளாக இருத்தல் மேலும் எம்மைப் பலவீனமாக்கும். மேலும் பெண்கள் ஒன்றிணைந்து எல்லோருமாக ஒத்து ஒரு செயலைச் செய்யும் போது சமுகத்திலிருந்து அந்நியப்பட்டுப் போகும் பயமும் இல்லாது ஒழிகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக நாம் சிந்திக்க வேண்டும். ஒரு நடைமுறையை அது இவ்வளவு காலமும் பின்பற்றப்பட்டதே என்பதற்காக பின்பற்றாமல் அதன் நியாயத்தைக் கேள்விக்கு உள்ளாக்க வேண்டும். எம்மிடையே நட்பை எம் நிலை பற்றிய விழிப்புணர்வை, ஒருவருக்கொருவர் உதவி என்ற உறுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பக்கம் 16 சக்தி மார்ச் 92

கருத்துச் சமர்
சக்தி இரண்டாவது இதழில் வெளிவந்த எனது கட்டுரையின் கருத்துக்களை விமர்சித்து திரு குணபாலன் மனிதம் எனும் சஞ்சிகையில் எழுதிய கட்டுரையைப் படித்தேன். அவரது விமர்சனங்களின் பெரும் பகுதியுடன் என்னால் ஒத்துப் போக முடியவில்லை. சோசலிஸம் பற்றிய எனது சொற் பிரயோகங்களின் மட்டத்திலேயே அவரது விமர்சனம் பெருமளவில் நிற்கிறது. அத்துடன் ஸ்கண்டிநேவியா போன்ற சமூக ஜனநாயக அமைப்புகள் பற்றிய எனது கருத்துக்களை அவர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளதாகவே Ggif&pg. Civil Society 6Tgh பதத்திற்கு சுயாதீன சமூகம் என்பதைவிட சிவில் சமூகம் எனும் தமிழாக்கத்தைப் பாவித்தலே பொருத்தமானது என அவர் குறிப்பிடுகிறார். இந்தச் சொற்பிரயோக மட்டத்தில் அவருடன் வேறுபடுவதில்
எனக்குப் பாரதூரமான ஆர்வம்
சமுத்திரன் கிடையாது. ஆனால் சிவில் சமூகம் (சுயாதீன சமூகம்) பற்றிய விளக்கம் விவாதத்திற்குரியது. அவருடைய а (Diggii. Civil Society sigib Glamp
பிரயோகமே கிராம்சியால்
உருவாக்கப்பட்டது. அவரது விளக்கத்தில் சிவில்சமூகம் எனும் கோட்பாடு கிராம்சியுடன் ஆரம்பித்த கிராம்சியின் கோட்பாடு. இவையெல்லாம் முற்றிலும்
தவறானவை.
குணபாலன் சிவில் சமூகம்பற்றி கிராம்சியின் கருத்துக்களை அறிந்துள்ளார் எனத்தெரிகிறது.
g60TT6d Civil Society STgh ug(yph கோட்பாடும் கிராம்சியினால் உருவாக்கப்பட்டவை எனும் ஆணித்தரமான முடிவுக்கு அவர் எப்படி வந்தார் என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. கிராம்சியின் கட்டுரைகளையும் அவர் பற்றிய
பக்கம் 17
சக்தி மார்ச் 92

Page 10
ஆய்வுகளையும் வாசிப்பவர்கள் கிராம்சியின் சிவில் சமூகம் பற்றிய கருத்துக்களின் வரலாற்றுப் பின்னணியையும் கிராம்சிக்கும் மார்க்சுக்கும் இடையே இந்த விடயத்தில் இருக்கும் வேறுபாடுகளையும் அறிவார்கள். அத்துடன் சிவில் சமூகம் மார்க்ஸ், ஹெகல் போன்றோருக்கு முன்பே உருப்பெற்ற கோட்பாடாகும். இதற்கு நீண்ட வரலாறு உண்டு. கிராம்சி தனது சிறைக் குறிப்புக்களில் (சிவில் சமூகம் சுயாதீன சமூகம்பற்றிய தனது கருத்துக்கும் ஹெகலின் கருத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டையும் சுட்டிக்காட்ட முயன்றுள்ளார். சிவில் சமூகத்திற்கு மார்க்சின் விளக்கத்திலிருந்து வேறுபட்ட ஒரு விளக்கத்தையே கிராம்சி கொடுத்தார். இது அவர் வாழ்ந்த காலகட்டத்தின் வரலாற்றுச் சூழ்நிலைகளால் அரசியல் தேவைகளினால் நிர்ப்பந்திக்கப்பட்டது. அதேபோல் கிழக்கு ஐரோப்பாவின் அரசியல் குழுக்களும் தமது நிலைமைகள் பற்றிய கருத்தமைவு ரீதியான புரிந்து கொள்ளலை வைத்து சிவில் சமூகத்திற்கு வரைவிலக்கணம் கொடுக்கின்றன. இங்கு முக்கியமான கேள்வி அரசு- சிவில் சமூகம் பற்றிய உறவாகும். வரலாற்று ரீதியில் மேற்கு
கருத்துச் சமச்
ஐரோப்பாவின் தத்துவஞான அரசியல் பொருளாதார மரபில் சமூகத்தின் பொருளாதாரக் கோளமே சிவில் சமூகத்தின் அடிப்படை உறுப்பெனக் கருதும் போக்கே தலையாயது. அத்துடன் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் அமையாத ஸ்தாபனங்கள் பல கட்டங்களில் சிவில் சமூகத்தின் அங்கங்களாக சேர்க்கப்பட்டன. குணபாலனின் கருத்தில் பொருளாதாரக் கோளம் சிவில் சமூகத்தில் அடங்காது. அப்படிக் கருதுவது தவறு என அவர் கூறுகிறார். அப்படியானால் மார்க்சும் வேறுபலரும் (சகல லிபரல் சிந்தனையாளர்களும் உட்பட) சிவில் சமூகம் பற்றிய தவறான கருத்தையே கொண்டிருக்கிறார்கள் என்ற முடிவுக்குத் தான் குணபாலன் வரவேண்டும். எனது அபிப்பிராயத்தில் குணபாலன் சிவில் சமூகம் பற்றிய கிராம்சியின் கருத்தாக்கத்தை மட்டுமே ஒரே ஒரு அறுதியான கருத்தாக்கம் என நம்புகிறார். கிராம்சிக்கு முன்னரோ அல்லது பின்னரோ உள்ள விளக்கங்களை அவர் கணக்கிலெடுக்கவில்லை. இப்படி நான் சொல்வது கிராம்சியின் கருத்தாக்கம் தவறானது என்பதாகாது. எனது அபிப்பிராயத்தில் கிராம்சி 20 ம் நூற்றாண்டின் தலைசிறந்த மார்க்சிச
சக்தி மார்ச் 92
பக்கம் 18

கருத்துச் சமர்
சிந்தனையாளர்களில் ஒருவர். சிவில் sepasub, (3.06uITéléesLib(Hegemony), கருத்தமைவு பற்றிய அவரது சிந்தனைகள் மிகவும் ஆக்கத்தன்மை கொண்டவை. அதே நேரத்தில் கிராம்சி அரச சிவில் சமூகம் பற்றி ஒரு அறுதியான முழுமையான விளக்கத்தை விட்டுச் செல்லவில்லை. அரசு, அரசியல்சமூகம் (Political Soceity), சிவில்சமூகம் ஆகிய மூன்றும் பற்றி அவர் பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார் என்பதை அவரது கட்டுரைகளை வாசிப்போர் காணத்
தவறமாட்டார்கள். உதாரணத்திற்குசில:
1. அரசியல் சமூகமும் சிவில் சமூகமும் (Political Soceity & Civil Soceity)
இணைந்ததே அரசு,
2. யதார்த்தத்தில் சிவில் சமூகமும்
9|J&th 96trip. "in political reality civil
soceity are one and same")
3. சிவில் சமூகம் பொருளாதார அமைப்பிலிருந்து வேறுபட்டது.
4. சிவில் சமூகம் பொருளாதார நடப்பினை உள்ளடக்கியது. இவை போன்ற கருத்தாக்கப் பிரச்சனைகளை கிராம்சியின் சிறைக்
குறிப்புக்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சீரமைத்த Geoffery N.Smith சுட்டிக்காட்டுவதுடன் பின்வரும் அபிப்பிராயத்தை தெரிவிக்கின்றார்: "what is, however, true is that Gramcie
did not succeed in finding single,
wholly satisfactory conception of "Civil
Society" or "State"."
(ஆனால் உண்மை என்னவெனில் சிவில் சமூகம் பற்றி கிராம்சி ஒரு முழுமையான கருத்தாக்கத்தை தேடுவதில் வெற்றி பெறவில்லை") ஆயினும் கிராம்சி மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி எவ்வளவு தூரம் போல்செவிக் (Boishevik) புரட்சிமாதிரியை மேற்கு ஐரோப்பாவிற்கு ஒவ்வாததாகிவிட்டது என்பதை விளக்குவதிலும் முதலாளித்துவம் வளர்ச்சி பெற்ற ஐரோப்பிய நாடுகளில் புரட்சிக்கு ஒரு மாற்று வழியின் தேவையையும் விளக்குவதில் வெற்றி பெற்றார். இந்த மாற்று வழியின் அணுகுமுறையை ? புரட்சியின் செயலாக்கத்தை தேடினார். இதன் விளைவானதே கிராம்சியின் சிவில் சமூகம் - அரசியல் சமூகம் - அரசு பற்றிய கருத்தாக்கங்கள். அவருடைய மேலாதிக்கம் (hegemony)
எனும் கருத்தாக்கம் அரசியல்
பக்கம் 19
சக்தி மார்ச் 92

Page 11
கலாச்சாரம்-தத்துவம் ஆகியவற்றின் ஒருங்கிணைப் பெனலாம். பாட்டாளி வர்க்கத்தின் முழுச் சமூகத்தில் புரட்சிகர அறிவூட்டலுக்கான வழிமுறையை வகுக்க எனும் கருத்தாக்கத்தை பிரயோகித்தார். இதை ஐரோப்பிய, குறிப்பாக இத்தாலியின் வரலாற்றின் மீள் ஆய்வின் மீள் வியாக்கியானத்தின் வாயிலாக அவர் செய்தார். இந்த முக்கியமான திட்டத்தில் அவர் Machiavelli, Croce போன்றோரின் கருத்துக்களால் ஈர்க்கப் பட்டார். சமூகத்தை மாற்றும் அரசியல் நடைமுறைகளின் தேவைகளை வரையறுத்து கிராம்சி தனது சிவில் சமூகம் பற்றிய கருத்தாக்கத்தினை உருவாக்கினார். இதில் அவருக்கேயுரிய இத்தாலிய வரலாற்றினால் ஈர்க்கப்பட்ட அம்சங்கள் மேலோங்கி நிற்பதைக் காணலாம். சிவில் சமூகத்தின் 96T6T60LD 560)6OT ( anatomy of Civil Soceity) ஆராயும் நோக்குடனே மார்க்ஸ் தத்துவஞான மட்டத்திலிருந்து அரசியல் பொருளாதாரத்தை நோக்கிய அறிவியல் பயணத்தை மேற்கொண்டார். மார்க் ன் நோக்கம் ஹெகலை விமர்சித்து முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் இயக்கப்பாட்டினை விளக்குவதாகும்.
கருத்துச் சமர்
மார்க்சைப் பொறுத்தவரை சிவில் சமூகம் பொருளாதார அமைப்பின் உறைவிடம். இதன் உள் அமைப்பினை தனியாக ஆய முற்பட்டார் அவர். இதன் ஒரு விளைவு மார்க்சின் முக்கிய பொருளாதார ஆய்வு நூலான "மூலதனத்தில் அரசு பற்றிய ஆய்வு ஒதுங்கிப்போனமை. சிவில் சமூகம் பற்றி பிறிதொரு கட்டுரையை இந்த இதழில் எழுதியுள்ளேன். விபரமான உரையாடலுக்கு கட்டுரையைப்
பார்க்கவும்.
* கிழக்கு ஐரோப்பா * சமூக ஜனநாயகம் எனது சிறிய கட்டுரையில் "சோசலிசம்" "நடைமுறைச் சோசலிசம்" "இருந்து வந்த சோசலிசம்" எனும் சொற்பிரயோகங்கள் இருப்பது உண்மை. அதே நேரத்தில் சோவியத் மரபிலான சோசலிச பரிசோதனை தோல்வியடைந்து விட்டது என்பதையும் அக்கட்டுரையில் தெளிவாகக் குறிப்பிட்டேன். எனது நோக்கம் சோசலிசம் பற்றிய விளக்கத்தில் அல்லது ஆய்வில் ஈடுபடுவதல்ல என்பதையும் அதைப்பற்றி பிறிதொரு கட்டுரையில் பார்ப்போம் என்பதையும்
குறிப்பிட்டிருந்தேன். அந்தக்
சக்தி மார்ச் 92

கருத்துச் சமர்
கட்டுரையின் நோக்கம் கிழக்கு ஐரோப்பாவின் சமீபத்திய சம்பவங்கள் சில பற்றிய ஒரு அரசியல் குறிப்பு மட்டுமே. அத்தகைய கட்டுரையை சோசலிசம் பற்றிய விவாதத்திற்கான அடிப்படையாகவோ அல்லது சோசலிசம் பற்றிய எனது கருத்தின் அறுதியான வெளிப்பாடாகவோ கொள்ளுதல் நியாயமற்றதாகும். சோசலிசம் விவாதிக்கப்பட வேண்டியது என்பதை மறுக்க முடியாது. ஆனால் அது ஒருவரின் சொற் பிரயோகங்களைத் துாக்கி கோட்பாடு மட்டத்தில் அமர்த்தி தமது மனதிற்கு வந்த கருத்துக்களை அச் சொற் பிரயோகங்களுக்கு வழங்கி அவற்றை மற்றவரின் கருத்துக்கள் எனக்காட்டி நடத்தும் அப்பியாசமாக அமையக் கூடாது. அது கருத்துக்களின் பரிமாற்றத்திற்கு வழிவகுக்காது. வெறும் தப்பபிப்பிராயங்களுக்கே அடிகோலும், சோசலிசம் பற்றி பலவிதமான கருத்துக்கள், கருத்தமைவுகள் உள்ளன. ஒருவரின் கருத்தமைவு ரீதியான பார்வையில் மற்றவரின் நிலைப்பாடு தவறாகப் படலாம். குணபாலன் கூறுவது போல் "சோசலிசம்" என மேற்கோள் குறிகளுக்குள் பயன்படுத்தப்படுவது
சொற்பிரயோக மட்டப்
பிரச்சனைகளைத் தீர்க்கலாம். ஆனால் கோட்பாட்டு மட்ட தத்துவ மட்ட பிரச்சனைகள் மிகவும் ஆழமானவை சிக்கலானவை.
சோவியத் சீன அமைப்புக்களின் சோசலிசமற்ற தன்மைகள் பற்றி நான் பிறிதோர் இடத்தில் ஓரளவு விளக்கியுள்ளேன் (பார்க்க "சுவடுகள்" யூலை 91), குணபாலனையும் மற்றும் அக்கறை கொண்ட வாசகர்களையும் அந்தக் குறிப்பை படிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். அதிலுள்ள கருத்துக்கள் பற்றி விவாதிக்க தயாராகவுள்ளேன். நான் சுயாதீன சமூகம் (சிவில் சமூகம்) பற்றிக் குறிப்பிட்ட கருத்துக்கள் கிழக்கு ஐரோப்பிய நிலைமைகள் தொடர்பானவை. அங்குள்ள அறிவாளர்கள், ஜனநாயக உரிமைக்குழுக்கள் சார்ந்தோர் சிவில் சமூகத்தின் மீள் நிர்மாணம் பற்றிய விவாதங்களை முன் வைத்த வண்ணம் இருக்கின்றனர். கிழக்கு ஐரோப்பிய விவாதங்களை அவதானித்து வருவோருக்கு இது தெளிவாகத் தெரியும். அத்துடன் சுயாதீன சமூகம் பற்றி நான் கொடுத்த விளக்கத்தின் சந்தர்ப்பத்தையும் புரிந்து கொள்வர். ஆனால் சிவில் சமூகம் முரண்பாடுகள் கொண்ட கோட்பாடாகி விட்டதென்பது
sa 6doT6on.
பக்கம் 21
சக்தி மார்ச் 92

Page 12
சமூகஜனநாயகம் பற்றிசமூக ஜனநாயகம் பற்றி குறிப்பாக ஸ்கன்டிநேவியா பற்றி நான் பின்வருமாறு குறிப்பிட்டேன்: "ஸ்கன்டிநேவிய நாடுகளில் உள்ள சமூக ஜனநாயக அமைப்பால் கிழக்கு ஐரோப்பிய இயக்கங்கள் கவரப்பட்டுள்ளன. இதில் நியாயமுண்டு. அவர்களின் பார்வையில் ஸ்கன்டிநேவியா முதலாளித்துவத்தின் பொருளாதார வளர்ச்சித் திறனையும் சோசலிசத்தின் சமூக நலன்களையும் ஒன்றிணைப்பதில் வெற்றி கண்டுள்ளதாகப் படுகிறது. ஆனால் சமூக ஜனநாயக அமைப்பு (அது எவ்வளவு துாரம் சோசலிச நலன்களை உள்ளடக்குகிறது என்பது விவாத்திற்குரியது என்ற போதும்) முதவாளித்துவத்தின் ஒரு "இலவசமான" அல்லது இயற்கையான விளைவு எனக்கருத முடியாது. இன்று நாம் ஸ்கன்டிநேவியாவில் காணும் வாழ்க்கைத் தரமும் சமூக நலன்களும் இந்தநாடுகளின் தொழிற்சங்கங்களின் போராட்டங்களின் விளைவாகும். அது வர்க்கப் போராட்டங்களின் விளைவாகும். இவ் வர்க்கப் போராட்டங்கள் சீர்திருத்தவாதக் கட்டமைப்புக்குள் வழிநடத்தப்பட்டவை
என்பது உண்மை. ஆனால் இவ்
கருத்துச் சமர்
வர்க்கப் போராட்டங்களின் முக்கியத்துவத்தைக் குறைத்து எடை போட முடியாது" இந்தப் பந்தியில் ஸ்கன்டிநேவிய நாடுகள் சோசலிச சமூக நலன்களைக் கொண்டவை என நான் எங்கே கருதுவதாகக் கூறப்பட்டடுள்ளதென குணபாலனைக் கேட்க விரும்புகிறேன். அதற்கு மாறாக இந்நாடுகள் முதாலளித்துவ நாடுகள் என்பதையும் வர்க்கப் போராட்டங்கள் இடம் பெறும் சமூகங்கள் என்பதையும் மேற்காணும் கருத்துக்கள் தெளிவாக்கவில்லையா? கிழக்கு ஐரோப்பியர்களின் பார்வையில் ஸ்கன்டிநேவியா எப்படிப் படுகிறது என்ற வசனங்களை ஒருவேளை குணபாலன் எனது பார்வை எனக் கருதினாரோ தெரியவில்லை. இங்கு குணபாலன் மார்க்சிய
அணுகுமுறைக்குப் புறம்பான
(அதாவது வரலாற்று ரீதியான
இயங்கியல் பார்வையில் அமையாத வேறு சில கருத்துக்களையும் முன் வைக்கிறார். மேற்கத்தைய நாடுகளின் வாழ்க்கைத் தரத்தின் அடிப்படை ஏகாதிபத்திய சுரண்டலில் அடங்கியுள்ளதாகவும் வர்க்கப் போராட்டங்களில் அவற்றின் வடிவங்களான தொழிற்சங்களின்
போராட்டங்களில் தங்கியிருக்கவில்லை
சக்தி மார்ச் 92
பக்கம் 22

கருத்துச் சமர்
எனவும் குறிப்பிடுகிறார். ஏகாதிபத்திய சுரண்டல் நிதர்சனமானது. ஆனால் மேற்கத்திய நாடுகளின் உள்ளார்ந்த மாற்றங்களையும் வரலாற்றுப் போக்குகளையும் "ஏகாதிபத்திய சுரண்டலால்" விளக்க முயற்சிப்பதும், வர்க்கப் போராட்டங்களின், தொழிலாளர், வெகுஜன ஸ்தாபனங்களின் வரலாற்றுப் பங்குகளை மறுப்பதாகும்; இயங்கியல் அணுகுமுறைக்கு மாறானதாகும். ஏகாதிபத்தியத்தின் இயக்கப்பாட்டினைப் புரிந்து கொள்ள முதலாளித்துவம் பற்றிய முழுமையான கோட்பாடும் அதன் குறிப்பிட்ட வரலாற்றுக்கட்டங்கள், தேசிய சர்வ தேசியதன்மைகள் பற்றிய விளக்கமும் அவசியம்.
சுரண்டல் ஒரு வர்க்கக் கோட்பாடாகும்.
அது வர்க்க உறவைக் குறிக்கிறது. முதலாளித்துவ சமுதாயத்தில் மூலதனம்- உழைப்பு எனும் வர்க்க முரண்பாட்டைக் குறிக்கிறது. சுரண்டல்- அதாவது உழைப்பை மூலதனம் சுரண்டும் உறவைக் குறிக்கிறது. இப்படிக் கூறுவது முதலாளித்துவ சமூகத்தின் உறவுகள் எல்லாம் வர்க்க உறவுகள் மட்டுமே என்பதாகாது. வரலாற்றின் சகல
அம்சங்களையும் வர்க்கப்
போராட்டமெனும் ஒரு "எதையும் விளக்கும்" கட்டமைப்புக்குள் அடக்குவது எனது நோக்கமல்ல. அத்தகைய மலினப்படுத்தப்பட்ட மார்க்சிசத்தில் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஆனால் மூலதனம் - உழைப்பு உறவு வர்க்க உறவென்பது
மறுக்க முடியாத உண்மை.
மேற்கத்திய நாடுகளின் உள்ளார்ந்த உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின்றி முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக உருவாகி இருக்க முடியாது. ஏகாதிபத்தியத்தை லெனின் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் என்றார். இந்த வளர்ச்சியின் அடிப்படையில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியைக் காண்கிறோம். இந்த உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு வர்க்கப் போராட்டமும் உந்து சக்தியாக இருக்கிறது. இன்னொரு உந்துசக்தி மூலதனத்திற்கு இடையிலான போட்டி விஞ்ஞான தொழிநுட்பங்களின் வளர்ச்சி உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு அவசியம். மேற்கு ஐரோப்பிய
தொழிலாளர்களின் வர்க்கப்
போராட்டங்கள் பல வடிவங்களை எடுத்தன. சில சந்தர்ப்பங்களில் இவை புரட்சிகரமாக, அரசியல் அதிகாரத்தை நோக்கியவையாக அமைந்தபோதும்
பக்கம் 23
சக்தி மார்ச் 92

Page 13
பொதுவாக இப் போராட்டங்கள் சீர்திருத்தங்களை நோக்கியே வளர்ந்தன. தொழிற்சங்க உரிமை, வேலை நேரத்தின் குறைப்பும் அதன் சட்ட பூர்வமான அமுலாக்கலும், ஆகக் குறைந்த கூலியின் நிர்ணயிப்பும் அமுல்நடத்தலும், தொழிலாளியின் வேலைத்தலங்களில் அவர்களின் உடல் உயிர் பாதுகாப்பு இளைப்பாறியோருக்கு ஓய்வூதியம், வேலையற்றிருக்கும் போது சமூக உதவி ஆண்- பெண் கூலி சமப்படுத்தல் (இது இன்னும் பூரணமாகவில்லை வயோதிபருக்கான சமூக நலன்கள் போன்ற பல உரிமைகள் நீண்ட போராட்டங்களின் விளைவே. இந்த உரிமைகளில் பல ஐக்கிய அமரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் இன்னும் பூரணமாக ஸ்தாபனமயமாக்கப்படவில்லை. அதற்கான சாத்வீகப் போராட்டங்கள் நடை பெறுகின்றன. பெண்ணுரிமைகள், குழல் பாதுகாப்பு போன்ற அம்சங்களும் போராட்டங்களின் விளைவானவை. இன்று மேற்கு ஐரோப்பாவில் எழுந்து வரும் பொருளாதார லிபரலிஸம்
நீண்டகாலப் போராட்டங்களால்
கருத்துச் சமர்
முயற்சிப்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இவற்றையெல்லாம் "ஏகாதிபத்திய சுரண்டல்" எனும் சுலோகத்தால் மறைக்க முயற்சிப்பது பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ள நீண்ட வரலாற்றை மறுப்பதற்குச் சமம். ஐரோப்பிய தொழிலாளரும் பெண்ணுரிமை இயக்கங்களும் பொதுமக்களும் வரலாற்றில் வகித்த பங்குகளை மறுப்பதால் ஏகாதிபத்தியத்தைப் புரிந்து கொள்ள முடியாது. ஏகாதிபத்திய சுரண்டலால் மேற்கத்திய நாடுகள் (அதன் தொழிலாளர் பெண்ணிலைவாதிகள், குழல்வாதிகள் உட்பட) பயனடைகின்றன என்பது உண்மை. இந்த உண்மையை தெளிவாக்க நாம் இன்னொரு முக்கிய உண்மையை மறுக்கத் தேவையில்லை. அது விஞ்ஞானத்திற்கு மட்டுமல்ல சமூகநீதிக்கும் புறம்பான விருப்பு நிலை சிந்தனையாகும்.
எந்த ஒரு ஆளும் வர்க்கமும் அவசியமின்றி உரிமைகளை வழங்குவதில்லை. நான் மேலே குறிப்பிட்ட உரிமைகள்
போராட்டங்களின் விளைவாயிருக்கும்
வென்றெடுக்கப்பட்ட இத்தகைய அதேவேளையில் அவை போராளிகளை உரிமைகளைப் பறித்துவிட அதாவது மக்களை முதலாளித்துவ
sáš LDmřš 92 பக்கம் 24

கருத்துச் சமர்
அமைப்புக்குள் சிந்தனை, கலாச்சார ரீதியில் சிறை வைக்கும் வகையில் ஸ்தாபன மயமாக்கப்பட்டுள்ளன. LD&as sist subungsglóir (consent) முதலாளித்துவம் தனது ஆட்சியைமேற்கத்திய நாடுகளில் நடத்த இந்த ஸ்தாபனமயமாக்கலும் அதைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள கருத்தமைவு ரீதியான மேலாதிக்கமும் உதவுகின்றன. இந்தப் போக்கினை கிராம்சி நன்கு கிரகித்து தனது புதுமையான கருத்துக்களை உருவாக்கினார் என்பதையும் இங்கு குறிப்பிடலாம். குறைந்த பட்ச ஜனநாயகம் முதலாளித்துவத்திற்கு இன்றியமையாதது எனும் அர்த்தம்பட குணபாலன் கூறுகிறார். ஆனால் இது எப்படி முதலாளித்துவம் கட்டவிழ்த்து விடும் சமூக சக்திகளால் உருவாக்கப்படுகிறது என்பதை, இது எப்படி காலத்துக்கு காலம் சந்தர்ப்பங்களுக்கு அமைய, குறிப்பிட்ட சமூகங்களின் உள்ளார்த்த சக்திகளின் சமன்பாட்டிற்கமைய, குறிப்பிட்ட உருவங்களை, உள்ளடக்கங்களை பெறுகிறது என்பதை அவர் காண மறுக்கிறார் போல் படுகிறது. முதலாளித்துவம்- ஜனநாயகம் உறவுக்கான விளக்கத்தைக் குறிப்பிட்ட சமூகங்களின் அரசியல் சக்திகளின்
சமன்பாட்டிற்கு வர்க்க, வெகுஜன இயக்கப்பாடுகளுக்கு அப்பால் தேட முடியுமா? காலனித்துவங்களுக்கு
இடையேயுள்ள வேறுபாடுகளை
எடுத்துக் கொள்வோம். உதாரணமாக போத்துக்கல், ஸ்பெயின் போன்ற நாடுகளும் காலனித்துவ வல்லரசுகளாயிருந்தன. இவை இங்கிலாந்திற்கு முன்னரே தெற்கத்திய நாடுகளை ஆக்கிரமித்து ஆண்டன. காலனித்துவ சுரண்டலால் இந்நாட்டு அரசுகளும் ஆளும் வர்க்கங்களும் பெரும் செல்வங்களைச் சேர்த்தன. ஆனால் போத்துக்கல்லிலோ, ஸ்பெயினிலோ பூர்சுவா ஜனநாயகமும் சமுகநலனும் எழுச்சி பெற்று வளரவில்லை. இதற்கான காரணங்களை நாம் இந்நாடுகளின் உள்ளார்ந்த அரசியல் பொருளாதார அமைப்புக்களிலேயே தேட வேண்டும். காலனித்துவ வல்லரசுகளாயிருந்த போத்துக்கல்லும் ஸ்பெயினும் ஏன்
சமூக ஜனநாயக அமைப்புக்களாகவில்லை என்பதை பெரும் காலனித்துவ வல்லரசாயிருந்து பிரித்தானியா எப்படி பூர்சுவா ஜனநாயகத்தின் சமூகநலன்களின் பிறப்பிடங்களில் ஒன்றானதென்பதை, மூன்றாம் உலகில்
நேரடிக்காலணிகளைக் கொண்டிராத
பக்கம் 25
சக்தி மார்ச் 92

Page 14
ஸ்கன்டிநேவிய நாடுகள் எப்படி சமூக ஜனநாயகத்தின் அதி உயர்ந்த வளர்ச்சியைக் கொண்ட முதலாளித்துவ அமைப்புகளாகின என்பதையெல்லாம் அந்தந்த நாடுகளின் உள்ளார்ந்த வர்க்கப் போராட்டங்களின் வரலாறுகள், சமூக இயக்கங்களின் போக்குகள் கலாச்சாரத் தன்மைகள் போன்றவற்றை ஆராய்வதன் மூலமே புரிந்து கொள்ளலாம்.
மேற்கத்திய நாடுகளின் தொழிற்சங்கப் போராட்டங்கள், சமூக நலன்களுக்கான மக்கள் இயக்கங்களின் போராட்டங்கள், பெண்களின் உரிமைக்கான போராட்டங்கள், குழல்பாதுகாப்பு போராட்டங்கள் இவையெல்லாம் இச் சமூகங்களின் அரசியலமைப்பில் ஜனநாயக விழுமியங்களின் தன்மைகளை உருப்படுத்துவதில் முக்கிய பங்குகளை வகித்துள்ளன, வகித்துவருகின்றன. வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ அமைப்புக்களில் நாம் &Tg b &ep8 9 L6Tup&60)8 (social contract).35560&uu போராட்டங்களினதும் வர்க்க சமரசங்களினதும் விளைவானதே. அதே நேரத்தில் இன்றைய சமூக
கருத்துச் சமர்
நலன்களும் நவீன முதலாளித்துவ உற்பத்தி உறவுகளினதும் முழுச்சமூக அமைப்பினதும் மீள் உற்பத்திக்கு அவசியமானவை. இந்த புறநிலை ரீதியான தேவை ஆளும் வர்க்கங்களையும் அரசையும் மற்றைய வர்க்கங்களுடனும், சமூகப் பிரிவுகளுடனும் சமரசம் செய்து ஒருவித சமூக உடன்படிக்கையை உருவாக்க
நிர்ப்பந்திக்கிறது.
வளர்ச்சி பெற்ற சமூக ஜனநாயக அரசியலமைப்புக்கள் (உதாரணமாக ஸ்கன்டிநேவிய நாடுகள்) மிகவும் பலம் வாய்ந்த முதலாளித்துவ சமூக அமைப்புக்களெனக் கருதலாம். இந்த அமைப்புக்களின் பலம் அரசியல் ரீதியானது மட்டுமல்ல கலாச்சா ரீதியானதும் கூட சமூக ஜனநாயகசமூக நல முதலாளித்துவ அமைப்பில் Gaggs T 9 L&TUTG (mass consent) மிகவும் சாதுர்யமாக சுமுகமாகப் பெறப்படுகிறது. இங்கு முதலாளித்துவத்தின் சமத்துவம் எனப்படும் கருத்தமைவு பொதுமக்களின் அரசியல் கலாச்சாரத்துடன் இணைந்துள்ளது. முதலாளித்துவத்தின் சமத்துவம்
உடன்படிக்கையில் அடங்கியுள்ள அடிப்படையில் தனிமனிதவாதத்தில் அடிப்படை உரிமைகளும் சமூக அமைந்த சுயபோட்டி சந்தையிலும்
சக்தி மார்ச் 92 பக்கம் 26

கருத்துச் சமர்
சர்வஜன வாக்குரிமையிலும் பலமான வேர்களைக் கொண்டுள்ளது. ஆனால் சமூக ஜனநாயகம் பலமட்ட வர்க்க சமரசங்களுக் கூடாக இந்தச் சமத்துவத்தின் அடிப்படையை பரவலாக்குகிறது. வருமானவரி செல்வவரி போன்ற கருவிகளையும் அரசினால் ஸ்தாபனமயமாக்கப்பட்ட சமூக நலன்களையும் பயன்படுத்தி சமூகஜனநாயம் சமத்துவம் எனும் கருத்தமைவுக்கு புறநிலைபூர்வமான சில அடிப்படைகளை உருவாக்குகிறது. சமூகஜனநாயகத்தின் இன்றைய வடிவத்தின் பிதாக்களான Kantsky, Benstein போன்றோர் இந்தச் சாத்தியப்பாடுகளைக் கண்டனர். அவர்களின் நோக்கில் இத்தகைய சீர்திருத்தங்களுக் கூடாக முதலாளித்துவத்தை சோசலிஸமாக மாற்றியமைக்க முடியும் எனக் கண்டார்கள். ஆனால் நடைபெற்றது அத்தகைய ஒரு மாற்றமல்ல, முதலாளித்துவத்தின் சீர்திருத்தமே.
சமூக ஜனநாயக முதலாளித்துவ அனுபவங்கள் முதலாளித்துவம் பற்றி சில முக்கிய பாடங்களைப் புகட்டுகின்றன. இந்த அமைப்பில் அதி உயர்ந்த லாபத்தை தேடும் நோக்கிற்கும் ஒரு குறிப்பிட்ட
அரசியல் சமூகக் கலாச்சார வரலாற்றுக் கட்டத்தில் முதலாளித்துவத்தின் நியாயமாக்கலின் (legetimation) தேவைகளுக்குமிடையே முரண்பாடுகள் உண்டு. இந்தத் தேவைகள் முதலாளித்துவ அமைப்பின் மீள் உற்பத்தியுடன் அதன் காலரீதியான தொடர்ச்சியுடன் சம்பந்தப்பட்டவை. சமரசங்களுக் கூடாக அடையப்படும் சமூக உடன்படிக்கை இந்த நியாயமாக்கலின் தேவைகளையும் உள்ளடக்குகிறது. இந்தப் போக்குமுறைகளின் ஒரு தவிர்க்க முடியாத ஒரு தேவையாக அமைகின்றன அரசின் தலையீடுகள். இந்த தலையீடுகள் முதலாளித்துவத்தின் அடிப்படையான பொருளாதார கோளத்தின் சுயாதீனத்தைப் பாதிக்கிறது - அதாவது சிவில்சமூகத்தின் முக்கிய அலகைப் பாதிக்கிறது. சமுகஜனநாயக முதலாளித்துவத்தின் பொருளாதாரம் பலவிதமான அரச கட்டுப்பாடுகளைக் கொண்டது. இங்கு சிவில் சமூகம் அரசியல் சமுகத்தின்
ஆதிக்கத்திற்குள்ளாகும் தன்மைகள்
அதிகம். இன்று மேற்கு ஐரோப்பாவில் எழுந்து வரும் லிபரல் பொருளாதாரக் கருத்தமைவு அலையும் அதன் சுதந்திர சந்தைப் பொருளாதார கொள்கையும்
பக்கம் 27
சக்தி மார்ச் 92

Page 15
சமூக ஜனநாயகத்தின் நியாயப்படுத்தலின் தேவைகளை பலமாகத் தாக்குகின்றன. சமூகநலச் சேவைகளை தனியார் Lou DITássi), (privatisiation) suffs606t
முடிந்தவரை ஒழித்தல் அல்லது குறைத்தல் சகல பொருளாதாரத் துறைகளையும் திறந்த சுய போட்டிச் சந்தையின் கைகளில் விடல் போன்ற நடவடிக்கைகள் வலுப் பெறுகின்றன. இவையெல்லாம் முதலாளித்துவ சமூக நல அமைப்பிற்கு சாவு மணி அடிக்கின்றதா என்ற கேள்வி எழுகிறது.
மறுபுறம் நீண்டகாலப் போராட்டங்களுக் கூடாகப் பெற்ற உரிமைகளை மக்கள் விட்டுக் கொடுக்கத் தயாராக இருப்பார்களா என்ற கேள்வியும் எழுகிறது. வரலாறு g(Djib UTub 6T6öT60Y? U6ù அடிப்படையான சமூகப் பிரச்சனைகளுக்கு சந்தைத் தீர்வு சாத்தியமில்லை. இதனால் வளர்ச்சி பெற்ற சந்தைப் பொருளாதாரங்களில் அரசின் பொருளாதார சமூகப் பங்குகள் வலுப் பெற்றன. சந்தையின் நியாயத்துவம் (rationality) சமூக நீதி மனித வாழ்வுக்கு இன்றியமையாத குழலின் தன்மை ரீதியான நீண்ட கால
பாதுகாப்பு போன்றவையை
கருத்துச் சமர்
பொறுத்தவரை குருட்டுத்தன்மையது என்பதை முதலாளித்துவத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் உணரத் தொடங்கினர். ஆகவே மக்களின் உரிமைகளுக்கும் குழலின் பேணலுக்குமான போராட்டங்கள் சுய போட்டிச் சந்தை எனும் ஸ்தாபத்தினத்திற்கும் கருத்தமைவிற்கும் எதிரான
போராட்டங்களாக உருப்பெற்றன.
ஆனால் இந்தப் போட்டங்களின் தீர்வுகள் பூர்சுவா அரசின் தலையீடுகளின் அடிப்படையிலேயே அமைந்தன. இன்று பொருளாதார
Guy Gssib (economic liberalisation)
இப்படியாகப் பெற்ற உரிமைகளைப் பறிக்க கங்கணம் கட்டிநிற்கிறது. இந்த முரண்பாட்டின் அடுத்த கட்டம்
எப்படியாக அமையலாம்? மக்கள் மீண்டும் முன்பு போல் அரச
தலையீட்டுக் கூடாக சமூக
நலன்களைப் பேண வேண்டும் எனப்
போராடலாம். இது ஏற்கனவே நடைபெறுகிறது. புரட்சிகர இடதுசாரிகள் இதற்கு வேறொரு மாற்று வழியைத் தேடலாம். இது
சக்தி மார்ச் 92
பக்கம் 28

கருத்துச் சமர்
அரசுக்கு எதிரானதாக மக்களின் கைகளுக்கு அதிகாரத்தை மாற்றும் அணுகுமுறைகள் பாற்பட்டது. சமூகநலன்கள், உள்ளுர் நிர்வாகம், குழல், பொருளாதார முகாமை போன்ற முக்கிய செயற்பாடுகள் மக்களின் சுயாதீனமான அமைப்புக்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதல். இந்தச் சிந்தனைப்போக்கு சுயாதீன சமூகத்திற்கு ஒரு புதிய புரட்சிகர சோசலிஸ் வரைவிலக்கணத்தைக் கொடுக்கிறது. இது ஒரு மாற்று மேலாதிக்கத்திற்கான (alternative
hegemony) GurTUTu'LLDITal5
அமையலாம். ஒருபுறம் பொருளாதார லிபரலிசம் தனது மரபிற்கு ஏற்ப சிவில் சமூகத்தை பண்ட உறவுகளின் சுயாதீனமான பகுதியாக்க முற்படுகிறது. இதுவே அரச துறையின் தனியுடமையாக்கலின் நோக்கம். மறுபுறம் புதிய சமுக இயக்கங்கள் (new social movements).9J&LEDig
சுயாதீனமான கீழ்மட்ட அமைப்புக்களை பண்ட உறவுகளை மாற்றும் வகையில், முடிந்த வரை சுய
முகாமைத் தாபனங்களை உருவாக்கி
பலமாக்கும் வகையில் தமது செயற்பாடுகளை வழிநடத்த முயல்கின்றன. சிவில்சமூகத்திற்கு மேலும் புதிய உள்ளடக்கத்தை தேடுவதில் பல சமூக இயக்கங்கள் ஈடுபட்டுள்ளன. சுயாதீனம் எனும் பிரயோகம் ஒப்பீட்டு (autonomy)
ரீதியானது. மார்க்சீய சமுக விஞ்ஞான மரபில் அரசு, பொருளாதாரம், கருத்தமைவு போன்றவற்றின் சுயாதீனம் என்பது பூரண சுயேச்சை எனும் கருத்தாகாது என்பது ஏற்றுக்
கொள்ளப்பட்ட ஒன்றாகும்,
இத்தகையவிவாதங்களில்சுயாதீனம் (autonomy)என்னும்போது அதுelative
autonomy என்றகருத்தையே
Glassi(sirary absolute autonomy
அல்ல.இந்தஅர்த்தத்திலேயே நான்
சுயாதினம்எனும்பதத்தை. யும்
சிலசமயம்சுதந்திரம்
எனும்பதத்தையும்உயயோகிக்கிறேன்.
கிராம்சியிடமும்இந்தஅர்த்தத்தில் அரசியலின்சுயாதீனம்பற்றிautonomy
of politics)நிலைப்பாட்டினைக்
காணலாம்.
பக்கம் 29
சக்தி மார்ச் 92

Page 16
சிறுகதை
ராஜேஸ்வரிபாலசுப்பிரமணியம்
லண்டன்
ஈழத்துஎழுத்துக்கு மிகக்குறைந்த சிலபெண்களே பங்களிப்புசெய்துள்ளனர்.அதில் ராஜேஸ்வரியும் ஒருவர்.தற்போதுலண்டனில் வசித்துவரும் ராஜேஸ்இதுவரையில் ஐம்பதிற்குமேற்பட்டசிறுகதைகளும் ஐந்துநாவல்களும்எழுதியுள்ளார்.
சக்தி மார்ச் 92 பக்கம் 30
 

சிறுகதை
.நானென்னலண்டன்மாப்பிள்ளை இல்லையெண்டாஅழுதன்ாநல்லஇடம், லண்டனில்படிக்கிறபெடியன் எண்டெல்லாம்புழுகிஇப்பிடிஎன்ர வாழ்க்கையைஅநியாயமாக்கிப் போட்டினம்.ஊரிலஒருஏழையைச் செய்துபோட்டுநிம்மதியாய் இருந்திருக்கலாம்.
டொக்டர் சாந்தி தன் முன்னால் மெளனமாய் உட்காந்திருக்கும்
புவனேஸ்வரியை எடை போடுகிறார்.
புவனேஸ் டொக்டர் சாந்தியின் சொந்தக்காரப் பெண் ஒருத்தியின் சினேகிதி சொந்தக்காரப் பெண் நேற்றிரவு சாந்திக்குப் போன் பண்ணி புவனேசுக்கு உதவி செய்யச் சொல்லியிருந்தாள்.
புவனேசின் முகம் வீங்கியிருக்கிறது. இரவெல்லாம் அழுதிருக்க வேண்டும். கண்கள் சிவந்து பார்வை தெளிவில்லாத மாதிரி வெறித்துப் போயிருக்கிறது.
"கோப்பி ஏதும் குடிக்கப் போகிறீர்களா?"
சாந்தி புவனேசைக் கேட்டாள்.
புவனேஸ் "இல்லை எனக்கு வேண்டாம்" என்ற பாவனையில்
தலையாட்டினாள்.
வெளியில் சரியான காற்று போலும், ஏற்கனவே இலையுதிர்காலத்தால் இலையிழந்த மரங்களிலிருந்த ஒன்றிரண்டு இலைதழைகளும் இப்போது அடித்துக் கொண்டிருக்கும் பெருங்காற்றில் பறந்து கொண்டிருக்கிறன. சரியான குளிர் என்று சாந்தியின் மகன் சொல்லிக் கொண்டதை சாந்தி காலையில் கேட்டாள். சாந்திக்கு எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று பிரச்சனையில்லை. ஆனால் புவனேசுக்கு எப்படி உதவி செய்ய முடியும் என்றுதான் அவளால் மட்டுக்கட்ட முடியாமலிருந்தது. அவள் படும் துயரத்தின் சாடை சோகமான முகபாவனையில் தெரிகிறது. ஆனால் சோகத்தின் காரணத்தை எப்படி இந்த டொக்டரால் நிவர்த்தி செய்யலாம் என்பது தான் கேள்வி
"ஏன் ஆண்பிள்ளைகள் கண்டதெற்கெல்லாம் பிழை பிடிக்கிறார்கள்" புவனேஸ் திடீரென்று
கேட்டாள்.
பக்கம் 31
சக்தி மார்ச் 92

Page 17
சிறுகதை
சாந்தி கோப்பிக் கோப்பையை மேசையில் வைத்தபடி தனக்கு முன்னாலிருந்து கேள்வி கேட்கும் பெண்ணை ஊடுருவிப் பார்த்தாள்.
பாவம், மிகவும் கலங்கியிருக்கிறாள்.
"எனக்கு உண்மையாகவே பைத்தியம் பிடிக்கப் போகுதோ தெரியேல்ல" புவனேஸ் விம்மினாள். "மனம் நிறைந்த துன்பம் வரும்போது, துன்பத்தை நீக்க வழி தெரியாமலே போய்விடுமோ என்று தோன்றும் போது அப்படிச் சில சிக்கலான கேள்விகள் வருவதுண்டு. அதற்காகத் துன்பம் வந்து பிரச்சனை கூடிவிட்டால் பைத்தியம் பிடிக்கப் போகிறது என்று முடிவு கட்டக் கூடாது" டொக்டர்
ஆறுதலாகச் சொல்கிறாள்.
வேண்டாத பெண்சாதிகைபட்டாலும் பிழை, கால்பட்டாலும் குறை என்றது சரிதான்" மூக்கைச் சீறிக் கொள்கிறாள் புவனேஸ்.
"அவர் விரும்பித்தானே உங்களைச்
செய்தார்?"
"ஓம் ஒரே பிடியில நிண்டு கல்யாணம் செய்து கொண்டு வந்தவர். இப்ப
இப்பிடியெல்லாம் கஷ்டப்பட வேண்டிக் கிடக்கு"
"உங்களின்ர சகோதரங்கள் என்ன
சொல்லுகினம்"
"அண்ணா எப்பிடி உங்கட தனிப்பட்ட பிரச்சனையில குறுக்கிடுகிறது என்று கேட்கிறார், அக்கா சொல்லுறா புருஷன் கையால அடிவாங்கிறது புண்ணியமாம், ஒரு பொம்புளை புருஷனால செத்துப் போனா ஏழு பிறப்புக்கு நல்லதாம்"
டொக்டருக்குக் கோபம் வருகிறது. ஒருபிறப்பில் இந்த பெண் அவனுடன் படும்பாடு போதாது.ஏழுதரம் பிறக்கட்டாம்.
"நான் எத்தினை நாளைக்கு இப்பிடி
வாழுற" புவனேஸ் வாய்விட்டு அழத்
தொடங்கி விட்டாள். "புவனேஸ், இது உன்ர வாழ்க்கை. எப்பிடி வாழப் போகிறாய் என்பதை முடிவுகட்டுவது உன்ர பொறுப்பு இப்போது உனக்கு உடம்பு சுகமில்லை
என்றால் நான் உதவி செய்யலாம்."
"டொக்டர் எனக்கு என்ர வயித்தில
வளரும் பிள்ளை உயிரோட பிறக்க
சக்தி மார்ச் 92
பக்கம் 32

சிறுகதை
வேணும், இதையும் அவன் அழிக்கப் பார்க்கிறான், தயவு செய்து உதவி செய்யுங்கோ" அவளது விம்மல் டொக்டரின் நெஞ்சைப் பிழிகிறது.
"நானென்ன லண்டன் மாப்பிள்ளை இல்லையெண்டா அழுதன்; நல்ல இடம், லண்டனில் படிக்கிற பெடியன் எண்டெல்லாம் புழுகி இப்பிடி என்ர வாழ்க்கையை அநியாயமாக்கிப் போட்டினம். ஊரில ஒரு ஏழையைச் செய்து போட்டு நிம்மதியாய் இருந்திருக்கலாம்"
அவள் தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறாள். இப்பிடி எத்தனையோ தரம் தனக்குத் தானே அவள் சொல்லியிருக்கலாம்.
டொக்டருக்குப் புவனேஸ் இரவு போன் பண்ணி தன்னைப் பற்றி எல்லாமே சொல்லியிருக்கிறாள். புவனேசுக்கு வயது இருபத்திரண்டு. ஒரளவான மத்தியதரக் குடும்பம். தமையன் டொக்டர். தமக்கையின்
கணவனும் லண்டனில்,
இலங்கையில் ஒயாத பிரச்சனை. மாப்பிள்ளை தட்டுப்பாடு புவனேசுக்கு தான் யூனிவர்சிட்டிக்கு போகவேண்டும் என்ற ஆசை.
"லண்டன் மாப்பிள்ளை, அவனைக் கலியாணம் செய்து கொண்டு லண்டன் போனால் படிக்கலாம்,
வசதியாக வாழலாம்"
அப்பா அம்மா ஊரார் எல்லோரின் பரவலான கருத்து அது நடராஜன் எல்லோருக்கும் நல்லவனாகத் தெரிந்தான். லண்டனில் மாணவனாக இருக்கிறானாம். அவள் வந்து ஒரு மாதத்தில் தெரிந்தது அவன் படித்துக் கொண்டிருக்கும் பட்டதாரியில்லை, குடித்துக் கொண்டு திரியும் ஊதாரி என்று.
அவள் தாத்தா கள்ளுக் குடித்ததற்காக பாட்டி பேசிக் கொண்டேயிருந்தது ஞாபகம் வந்தது. நடராஜன் பியர் குடிக்கிறான். பியர், விஸ்கி மாதிரி ஒன்றும் பொல்லாத சமானில்லை என்று புவனேசுக்குச் சொன்னான். அவளுக்கு அவனை நம்புவதைத் தவிர வேறு வழியில்லை.
பக்கம் 33
சக்தி மார்ச் 92

Page 18
"நீர் உடனே படிக்கத் தொடங்க முடியாது, இங்கிலிஸ் பழக வேணும், வேலைக்கு அங்க இங்க எண்டு போனால் இங்கிலீசு பிடிச்சுப் (EuTLsortib" அவன் சொல்லை நம்புவதைத் தவிர வேறு வழியில்லை.
"நீங்கள் படிக்கப் போகயில்லையா?"
அவள் தயக்கத்துடன் கேட்டாள்.
"கொலீஜ் பீஸ் கட்டாம போன வருசம் போக முடியல்ல, இனிஎன்ன ரெண்டு பேரும் பார்த்துச் சமாளிப்பம்" அவன் சிரித்தான். அவள் உழைக்க அவன் கொலிஜ் அட்மிஷன் எடுத்தான்.
இரண்டு கிழமை அவனுக்குச் சந்தோசம். இந்திய கடையில் இந்திய முதலாளி நாயாய் வேலைவாங்கி உடம்பை முறிப்பதைப் பற்றி அவனுக்கு கவலையில்லை. கணவன் படிக்க வேண்டும். எனது கணவன் பட்டதாரி என்று ஆட்களுக்கு சொல்ல வேண்டும். அவள் உழைத்தாள்.
"கனகாலம் கல்லூரிக்குப்
போகாததால படிக்கிற மூட் வருதில்ல"
சிறுகதை
அவன் பியர் குடித்தபடி, வீடியோவில் குப்பை ஆபாசப் படம் பார்த்தபடி அவளைப் பார்த்துச் சிரித்தான். அவன் என்ன "மூட்"டில் இருக்கிறாள் என்பது அவளுக்குத் தெரியும். வேலை செய்து களைத்த உடம்பு கணவன் தேவைக்கு. கல் என்றாலும் கணவன்
புல் என்றாலும் புருஷன்.
அவளுக்கு ஊர் புதிது, குளிர் கொடுமை, அண்ணாவும் அக்காவும்
தங்கள் பாடு
அவன் பெரும்பாலும் பின்னேரங்களில் அரை வெறியில் இவளுக்காகக் காத்திருப்பான். கடையில் இந்திய முதலாளி, வீட்டில் கட்டிய கணவன். அவள் உடம்பு பொருள் முதல்வாதத்திற்கும் கற்பு முதல்வாதத்திற்கும் பயன்பட்டது.
அவளுக்கு வயிற்றில் குழந்தை. "ஏன் குழந்தை வராமல் பார்த்துக் கொள்ளவில்லை" அவன் கோபத்தில் முணுமுணுத்தான். அவனால் குழந்தைப் பொறுப்பு வந்தால் படிக்க முடியாதாம்.
"நான் இப்ப என்ன செய்ய?"
சக்தி மார்ச் 92
பக்கம் 34

சிறகதை
அவள் தான் குற்றம் செய்த தொனியில் தயங்கிறாள்.
"அபோஷன் செய்யுறது" அவன்
சாதாரணமாகச் சொன்னான்.
நெஞ்சில் ஏதோ அடைப்பது போன்ற உணர்ச்சி. அவள் சிநேகிதிக்குக் குழந்தையில்லை என்று இந்தியாவில் புண்ணிய தலயாத்திரை செய்கிறாள்.
"என் கணவர் ஒரு மாணவர். எங்களுக்குப் பிள்ளை பிறந்தால் அவர் படிப்புத் தடைப்படும்"
அவள் வெள்ளைக்கார டொக்டரிடம் முறையிட்டாள். இவள் ஒரு கறுத்தப் பெண். இவளுக்குப் பிள்ளை பெற வேண்டுமென்பது அக்கறையில்லை யென்றால் வெள்ளைக்கார
டொக்டருக்கென்ன.
கருக்கலைப்புச் செய்து விட்டு வீட்டுக்கு வந்தாள். அண்ணா, அக்கா, அயலார் யாருக்கும் தெரியாது. அடிவயிறு நொந்த போது அவள்
அழிந்து போன "குழந்தை"யை நினைத்து அழுதாள். இப்போது அவளுக்கு அவள் "குடும்ப" வாழ்க்கையில் தன் நிலைமை சரியாகப்
புரிந்தது.
அவள் இன்னொரு தரம் பிள்ளை வராமல் இருக்க எடுத்த கற்பத் தடைக் குளிசையால் அவளுக்கு வாந்தியும், தலைசுற்றும்.
"சில பெண்களுக்குக் கற்பத் தடைக்குளிசைகள் ஒத்து வராது. உங்கள் கணவரைக் கொண்டோம்"
பாவிக்கச் சொன்னால் என்ன?"
டொக்டர் அவளைக் கேட்டார்.
'றப்பர் உறை பாவிக்கிறவன் தேவடியாள்களிட்டப் போறவன்" அவன் அவளைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தான்.
நடராஜன் தன் "ஆண்மைக்கு" உறை போடத் தயாரில்லை.
அவளுக்கு அடுத்த பிள்ளை வயிற்றில்,
"பிள்ளை வந்து வாழ்க்கையைப் குழப்பப் போகுது" அவன் முணுமுணுத்தான். இன்னும்
சோதனை பாஸ் பண்ணவில்லை.
பக்கம் 35
சக்தி மார்ச் 92

Page 19
சிறுகதை
"அப்படி எண்டாப் படுக்காமல் இருந்திருக்கலாம் தானே?" கோபத்தில் அவள் வார்த்தைகள் வெடித்தன. பெரிய தாக்கம்.
"ஆண்மை" பேச மறுத்தால் அடுத்த நடவடிக்கை அடி இந்தத் தடவை அவள் டொக்டரிடம் அபோஷனுக்குப்
போகவில்லை.
அவன் உதைத்த தாக்கத்தில் அவள் மயங்கி விழுந்து எழும்பியபோது அவள் கால்களுக்கிடையில் இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது. ரொய்லட்டில் "தொப்" என்று விழுந்தது வெறும் இரத்தக் கட்டியல்ல. தான் சுமந்த குழந்தை என்றதும் அவள் துடித்துப் போய்விட்டாள்.
இவள் அழுவது அவனுக்குப் பிடிக்காது. அவள் இரண்டொரு நாள் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டிய நிலை. அப்போதுதான் தன் வாழ்க்கை என்ன திசையில் போய்க் கொண்டிருக்கிறது என்று அவளால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. இருபத்தியொரு வயது. அவள் இரண்டு குழந்தைகளை இழந்து விட்டாள்.
அவனுக்குப் படிப்புச் சரிவரவில்லை.
"என்ன படித்தாலும் என்ன? இந்த வெள்ளைக்காரன் படிச்ச படிப்புக்கு வேலை தரப் போறானா?"
நடராஜன் வியாபாரம் ஒன்று தொடங்கப் போகிறானாம். புவனேஸ் உழைத்துக் கொண்டேயிருந்தாள். சொந்தக்கார் கண்களுக்கு அவர்கள் ஒரு சந்தோசமான தம்பதிகள். ஏதும் அவள் கேட்டாள் அல்லது எதிர்த்துப் பேசினால் அவன் அடிப்பதில் கெட்டிக்காரன்.
அவன் தொடுவது ஒன்றில் அடியில் முடியும் அல்லது கட்டிலில் முடியும். அவன் தொடுவதையே அவள் அருவருப்பாக நினைத்தாள்.
"என்னடி நான் தொடாட்டா வேற யாரையடி தொட விடுகிறாய்" அவனின் ஆபாசக் கேள்வி அவளுக்கு வாந்தியை வரவழைத்தது.
"கற்புள்ள தமிழ் பெண்பிள்ளை கணவன்
விருப்பத்துக்கு நடக்க வேண்டும்"
சக்தி மார்ச் 92
பக்கம் 36;

சிறகதை
அவன் கற்பையும் கலாச்சாரத்தையும் பற்றி பிரசங்கம்செய்தான்.
கற்பைப்பற்றி கதைத்தால் அவள் குழம்பிப் போய்விடுவாள். கந்தன் முருகனைக் கோவிலில் வைத்திருக்கிறார்கள். பயப்பிடலாம் கும்பிடலாம். கற்பு எங்கேயிருக்கிறது? அவளுக்குத் தெரியாது. ஆனால் பயப்பட வேண்டிய நிர்ப்பந்தம்.
"கற்பெண்டா என்ன? என்னைப் படுக்கத்தானே பாவிக்கிறியள்" அப்பாவித்தனமாக அவள் கேட்டாள்.
"பல்ல உடைப்பன் நாயே" அவன் சீறினான். அடிக்குப்பயம், அவள் வாய்திறக்கவில்லை.
அடுத்த குழந்தை வயிற்றில்
அவள் அவனுக்குச் சொல்லவில்லை. பயம், அவள் கற்புள்ள மனைவி கணவன் சொல் தட்டக் கூடாது. ஆனாலும் அவள் சொல்லவில்லை. அவள் காலையில் சத்தி எடுக்க அவன் கண்டு பிடித்து விட்டான்.
"ஒரு வியாபாரம் தொடங்க இருக்கிறன். அதுக்கிடையில பிள்ளை வேணுமா" அவன் கேள்வி சாதாரண தொனி
"ஏதோ பார்த்துச் சமாளிப்பம்" அவள் கோபத்தை யடக்கிக் கொண்டு
கூறினாள்.
"நீர் வேலை செய்யாட்டா சமாளிக்க
(UPULUT용"
"எனக்கொரு பிள்ளை தேவை" அவளுக்கு கோபமில்லை, ஆனால் வேதனையில் கண்ணீர் வந்தது.
இன்னொருதரம் அபோர்ஷன் செய்ய அவள் விடப் போவதில்லை.
"என்னடி மாய்மாலக் கண்ணிர்"
அவன் சிரித்தான்- கேவலமான சிரிப்பு
அன்றிரவெல்லாம் சண்டை அடிபிடி அவள் தன் அடிவயிற்றில் உதைவிழாமலிருக்க எத்தினையோ பாடுபட வேண்டியிருந்தது. அன்றிரவு அவள் தன் சிநேகிதியிடம்: உதவி கேட்டுப் போய்விட்டாள்.
பக்கம் 37
சக்தி மார்ச் 92

Page 20
சிறகதை
சிநேகிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தன் மாமி டொக்டர் சாந்தியிடம் அனுப்பியிருக்கிறாள்.
"இப்ப என்ன செய்யப் போகிறாய்,
புவனேஸ்"
"அந்த மனிசனிட்ட போனா என்ர பிள்ளைக்கு ஏதும் நடந்திடும், எங்கே எண்டான ஒரு இடம் எடுக்க உதவி
செய்யுங்கோ"
"உங்கட சகோதரங்களிட்டப் போனா
6T66OT?"
"இதெல்லாம் என்ர தனிப்பட்ட குடும்ப விஷயம் என்று சொல்லிப் போட்டினம். அவயிட்ட போனா கற்புள்ள பெண்பிள்ள புருஷனோட இருக்க வேணும் எண்டு என்னை பார்ஸல் பண்ணி என்ர மனிசனிட்ட அனுப்பிப் போடுவினம்" அவள் அழுகிறாள்.
"சரி என்னால ஆனதைச் செய்யுறன் டொக்டர் சாந்திக்கு வேலைக்கு அவசரம்.
வேலையிடத்தில் நிறைய பேர் காத்திருக்கிறார்கள். முதலாவது நோயாளி டொக்டர் சாந்தி முன் வந்து இருக்கிறாள்.
"பெயர் என்ன"
டொக்டர் சாந்தி தனக்கு முன்னால் மறுமொழி சொல்லாமலிருக்கும் நோயாளியைப் பார்க்கிறாள். அவளைப் பார்த்ததும் புவனேசின் ஞாபகம் வருகிறது. சோகமான முகம். கிட்டத்தட்ட அதே வயதாக இருக்கலாம். கண்கள் பேதலித்து, முகம் சோர்வாக, முன்னால் அந்த இளம் பெண் உட்காந்திருக்கிறாள். நோயாளியின் குறிப்பை அவதானமாகப் படிக்கிறாள் டொக்டர் சாந்தி
இந்த பெண் போதைவஸ்து பாவிக்கும்
பழக்கத்துக்கு அடிமையானவள். இப்போது நெஞ்சில் ஏதோ சுகமில்லை
என்று வந்திருக்கறாள்.
இவள் வாழும் வாழ்க்கையில் என்ன
வருத்தமும் வரலாம்.
சக்தி மார்ச் 92
பக்கம் 38

சிறகதை
"உனது பெயர் என்ன? டொக்டர் சாந்தி குரலை உயர்த்திக் கேட்கிறாள்.
- "யூடித் சிம்ஸன்"
"வயது"
"இருபது"
"என்ன மருந்துக்கு அடிமையாய் இருக்கிறாய்?"
"ஹெரோயின்." குரலில் தயக்கம்.
"ஹெரோயின் வாங்க எப்படிக் காசு கிடைக்கிறது?"
"விபச்சாரம் செய்வதன் மூலம்"
"விபச்சாரம் செய்யும் போது வரும் அபாயங்கள் தெரியும்தானே"
வந்தவள் மறுமொழி சொல்லவில்லை.
"எயிட்சிலிருந்து பாதுகாத்துக்
கொள்கிறாயா"
"நான் எயிட்ஸ் பற்றிக்
கவலைப்படவில்லை"
ஏனோதானோ என்ற மறுமொழி
"நீ ஒரு விபச்சாரி
" அதற்கென்ன"
"பலபேருடன் படுப்பவள்"
"நான் படுத்தெழும்புவதாக நீ ஏன் முடிவு கட்டுகிறாய் டொக்டர்"
யூடித் சிம்ஸன் என்ற விபச்சாரி அதிகம் படித்த டொக்டர் சாந்தியைக் கேள்வி கேட்கிறாள்.
"ஒரு விபச்சாரி உடம்பை விற்றுப் பிழைப்பவள், பல ஆணுடன் உடலுறவு வைத்துக் கொள்ளாமல் என்னவென்று
தொழில் செய்கிறாய்?"
"உங்களுக்கு எங்கள் வாழ்க்கையின் நெளிவு சுழிவுகள், எப்படி வாழ்கிறோம், எப்படி முடிவுகள் எடுக்கிறோம் என்று தெரியாது போலிருக்கிறது"
வந்தவுடன் சோர்ந்துபோய் இருந்தவள் டொக்டர் கேட்ட கேள்வியால் கோபம் வந்திருக்க வேண்டும் போலிருக்கிறது.
உசாராகப் பேசிக் கொண்டிருந்தாள்.
uish 39
சக்தி மார்ச் 92

Page 21
சிறுகதை
டொக்டர் மெளமானமாக அவள் சொல்வதைக் மிக அவதானமாக
கேட்டுக் கொண்டிருக்கிறாள்.
"விபச்சாரிகள் என்றாலும் இப்படி இப்படித்தான் வாழ வேண்டும், இன்ன இன்னதான் செய்ய வேண்டும் என்று வைத்திருக்கிறோம்"
டொக்டர் அவளைப் பேச விடுகிறாள். "எனக்கு எயிட்ஸ் வராது. ஏனென்றால் நான் எந்த ஆண்களுடனும் உடலுறவு வைத்துக் கொள்வதில்லை. பெரும்பாலான எனது வாடிக்கைக்காரர் பேசிக்
கொண்டிருக்க என்றே வருவார்கள்"
"உடலுறவுக்கு உன்னை
வற்புறுத்தினால் என்ன செய்வாய்"
"அதற்கென்றே வேலை செய்கிற விபச்சாரிகளைக் காட்டி விடுவேன், இது வரைக்கும் என்னை எந்த ஆணும் வற்புறுத்தவில்லை"
"உனக்கு உனக வாடிக்கைகார்களில்
கு 용
ஆசை யவருவதில்லையா?"
"செய்யுற தொழிலில ஆசை வந்த போல நடிக்கிறதுண்டு. இது என்ா தொழில்" அவள் சிரிக்கிறாள்.
டொக்டர் ஆச்சரியத்துடன் யூடித்தைப்
பார்க்கிறாள்.
"எனக்கு என்னை முழுமையாக விரும்புகிற ஒருத்தனிடம் தான் ஆசை வரும். அது வரைக்கும் காத்திருக்கிறேன்."
"அப்படியென்றால் .” டொக்டருக்கு குழப்பம். தன் உடம்பை கணவனிடம் காப்பற்றிக் கொள்ள முடியாத புவனேசின் முகம் ஞாபகம் வருகிறது.
"என்ன டொக்டர் விளங்கவில்லையா, நான் இன்னும் யாருடனும் உடலுறவு கொள்ளாதவள், என்றோ ஒர் நாள் நான் விரும்பும் ஆணுக்கு என்னைக் கொடுக்க காத்திருக்கிறேன்" அவள் சிரிக்கிறாள். இந்த விபச்சாரிக்குக் கூட தன் விருப்பு வெறுப்பை நிர்ணயிக்கும் வழியும் உரிமையும் இருக்கிறது. புவனேசுக்கு இல்லையே!
பாவம் புவனேஸ் போன்ற பெண்கள்
சக்தி மார்ச் 92
பக்கம் 40

இலக்கியத்தில் பெண்கள்
தற்காலத்தமிழ்ப்யூழுேத்தவர்ல்
சித்ரலேகா மெளனகுரு
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து முன்னரிலும் அதிகமான பெண்கள் எழுத்துத் துறையில் ஈடுபட்டனர். இக் காலத்தில் பெண்கள் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் சமூகத்தில் இடம் பெறத் தொடங்கியமையும் கல்வி கற்கும் பெண்களின் தொகை அதிகரித்தமையும் இதற்குக் காரணங்களாக அமைந்தன எனலாம். தற்காலத்தில் இலக்கிய உலகில் பிரபல்யம் பெற்ற பெண் எழுத்தாளர்களான லக்சுமி அனுத்தமா, ஆர் சூடாமணி, ராஜம் கிருஷ்ணன்,
ஜோதிர்லதா கிரிஜா, கிருத்திகா, அம்பை, செண்பகம், ஊர்வசி, கோகிலா மகேந்திரன், சிவசங்கரி விமலா ரமணி, குயிலி ராஜேஸ்வரி, அனுராதா ரமணன், இந்துமதி வாஸந்தி, உஷா சுப்பிரமணியன் போன்றோரைக் குறிப்பிடலாம். இவர்களுட் பெரும்பாலோர் நாவலாசியர்களாகவும் தொடர்கதை ஆசியர்களாகவும் புகழப்
படுபவர்களாவர்.
பெரும்பாலான பெண் நாவலாசிரியர்கள் குடும்பக்
கதைகளையே எழுதுகின்றனர். பெண்
பக்கம் 41
சக்தி மார்ச் 92

Page 22
இலக்கியத்தில் பெண்கள்
பாத்திரங்கள் இவற்றில் முக்கிய இடம்பெறும். பெண்மை தாய்மை ஆகிய பண்புகள் பற்றி விதந்தோதும் போக்கும் இவர்களது நூல்களிலே பொதுவாக உள்ளது. இவ் விடயங்களை அணுகுவதில் ஆண் எழுத்தாளர்களிடமிருந்து இவர்கள் வேறுபடுகிறார்கள் எனவும் கூற முடியாது. தாயின் பாசம், மனைவியின் தியாகம் போன்ற குறிப்பிட்ட வரையறைக்குள் தமது பாத்திரங்களை உருவாக்குகின்றனர். பெண்ணின் மனப் போராட்டங்களையும், வாழ்க்கையில் ஏற்படும் முரண்பாடுகளையும் சமூகப் பகைப் புலத்தில் வைத்து நோக்காது அவற்றை தனி மனிதப் பிரச்சனைகளாகவே இவர்களிற் பலர் கையாளுகின்றனர். இவ்வகையில் பொழுதுபோக்கு இலக்கியங்களைப் படைப்போர் வரிசையில் இவர்களைச் சேர்த்து விடலாம்.
பெண் குடும்ப வாழ்க்கைக்கே
சித்தரிக்கப் படுவாள்.
சுருக்கமாக சொன்னால் பெண் பற்றி இதுகாறும் எமது சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளப் பட்டு வந்த குறிப்பிட்ட சில கருத்தோட்டங்களின்
பின்னணியில் பெண்ணைச்
சித்தரிப்பவராகவே எமது பெண் எழுத்தாளர்களிற் பெரும்பாலோர் காணப்படுகின்றனர். "இன்றைக்கு வெளிவரும் கதைகளில் பெரும்பாலும் பெண்களுடைய அடிப்படைப் பிரச்சனைகள் பிரதிபலிக்கப்படுவதில்லை என்றே நான் நினைக்கிறேன். ஒரு சிலர் பெண்களின் பிரச்சனைகளை ஓரளவிற்குத் தொட்டாலும் இறுதியில் சம்பிரதாயப் போக்குகளையும் நடவடிக்கைகளையுமே நியாயப் படுத்தி கட்டுப் பெட்டித்தனமான முடிவுகளையே கொடுத்து விடுகின்றனர். பெண்களைப் பற்றிய சித்தரிப்பில் பெண் எழுத்தாளர்களை விட ஆண்களே சற்றுமேல் என்றுகூட எண்ணுமளவிற்கு எழுத்தாளர்கள் கோழைகளாகி விடுகிறார்கள். திருமணம் ஆகாத பெண், பெண்கள் வரதட்சணையை எதிர்த்தும், கலப்பு மணத்தை ஆதரித்தும் ஆணாதிக்கப் போக்குகளை எதிர்க்கும் துணிவும் இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் எழுதினால் தங்களுடைய திருமண வாய்ப்புக்களே பாழாகி விடும் என அஞ்சுகிறார்கள் போலும். இதேபோல் விதவைத் திருமணத்தை ஆதரித்து எழுதுவதற்குத் திருமணமான
பக்கம் 42
சக்தி மார்ச் 92

பெண்கள் அஞ்சுவதாக தெரிகிறது. பெண் எழுத்தாளர்களுடைய உண்மையான உணர்வுகளும் எண்ணங்களும் முழுமையாக அவர்கள் எழுத்துக்களில் வெளிவருவதில்லை" மேற்கண்டவாறு ஜோதிர்லதா குறிப்பிடுவது பொருத்தமாக உள்ளது.
பெண்மை என்ற மரபுரீதியான கருத்தாக்கத்தினை பல்வேறுவகைகளில் பெண் எழுத்தாளர்கள் கையாண்டுள்ளனர். பெண்மை என்பதை வரைவிலக்கணம் செய்து பெண்ணின் தாழ்த்தப்பட்ட நிலையை நியாயப் படுத்துகின்றனர். சுயதியாகம், சமர்ப்பணம் ஆகியவை உயர்ந்த பெண்மைக் குணங்களாகப் போற்றப்படுகின்றன. ஆனால் அதே சமயம் இப் போற்றுதலை வெளிப்படையாக வன்றி மறைமுகமாகவே செய்கின்றனர். இதனால் பெண்மையின் பழைய இலட்சியங்களுக்கும் தற்காலத்தின் தேவைகளுக்குமிடையே சமரசம் காணும் பாத்திரங்கள் பலவற்றைத் தற்கால பெண் எழுத்தாளர்கள் படைத்துள்ளனர். இன்றைய இலட்சிய பூர்வமான பெண் இத்தகைய சமரச பாத்திரமாகவே காட்டப்படுகிறாள். தொழில் பார்ப்பவள், துணிவுடையவள்,
இலக்கியத்தில் பெண்கள்
புத்திகூர்மை மிக்கவள், கல்வி கற்றவள், அதேசமயம் திருமணமாகி கணவன் குழந்தை ஆகியோருக்காக தன்னை அர்ப்பணிப்பவள். வெளி உலகின் அழுத்தங்களையும் குடும்பத்தின் தேவைகளையும் ஒருசேர வெற்றிகரமாக சமாளிக்கும் ஒரு சுப்பர்வுமன் ஆகவே இத்தகைய பெண் பாத்திரம் அமைகிறது. இதேசமயம் நவீன குடும்ப வாழ்க்கையில் பெண்ணுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளையும் இவ் எழுத்தாளர்கள் தொட்டுள்ளனர் என்பதையும் மறுக்க முடியாது. ஆனால் தற்போது நிலவும் அசமத்துவ உறவு முறைகளுக்கு நியாயம் கற்பித்து, அதனை மனித இயற்கையாகக் காட்டுவதே பொதுப்போக்காக உள்ளது.
சில கதைகளில் எவராலும் பாராட்டப் படாத தனது உழைப்பு பற்றி பெண் விசனப்படுவது பேசப்படுகிறது. உதாரணமாக ராஜம் கிருஷ்ணனின் "பித்தம் தெளிந்தது" என்ற சிறுகதையைக் கூறலாம். தனது குடும்பத்தில் தன்னை முக்கியமல்லாதவளாக உணரும் ஒரு பெண் கணவனையும் குழந்தைகளையும் பிரிந்து செல்கிறாள். சிலகாலம் உறவினர் வீட்டில்
சக்தி மார்ச் 92
பக்கம் 43

Page 23
இலக்கியத்தில் பெண்கள்
தங்குகிறாள். ஆனால் அங்கும்கூட தான் சுரண்டப்படுவதாய் உணர்ந்து வீடு திரும்புகிறாள். அப்போது தான் கணவரும் பிள்ளைகளும் அவளது பிரிவினால் எவ்வளவு துயருற்றனர் என்பதை உணர்கிறாள். வெளிப்படையாகக் காட்டப் படாவிடினும் தனது முக்கியத்துவத்தை யாவரும் உணர்ந்துள்ளனர் என்பது குறித்து அவளுக்கு மனநிறைவு ஏற்படுவதாக கதை முடிகிறது.
சமீப காலத்தில் வீட்டிற்கு வெளியே உழைக்கும் பெண்களது தொகை அதிகரிப்பானது அவர்கள் வாழ்க்கைப் பிரச்சனைகள், திருமணம் சீதனம் போன்றவை- பற்றிய ஆக்கங்கள் தோன்றுவதற்கு வழி வகுத்துள்ளது. பொருளாதார நிர்ப்பந்தங்களால் பெரும்பாலும் கீழ் மத்தியதர வர்க்கத்துப் பெண்கள் தொழில் செய்வதாகவும் அது ஏற்படுத்தும் பிரச்சனைகளையும் இத்தகைய இலக்கியங்கள் காட்டுகின்றன. ஆண்களான வேலைகொள்வோரின் தொந்தரவிற்கு அவர்கள் ஆளாக நேர்வதும் இவர்களது ஆக்கங்களில் எடுத்தாளப்படுகிறது. ஆனால் இப் பிரச்சனை கண்டிக்கத் தக்கது என்ற
கருத்து இன்றி, வீட்டிற்கு வெளியே
தொழில் புரிவது பெண்மையின் முழுமைக்குத் தடைக்கல்லாக உள்ளது 6T66, D &(565 splu60)LuT& அமைகிறது. இத்தகைய போக்கிற்கு மாறுபட்ட ஒரு போக்கிற்கு ஒரு போக்கும் மிக சமீபகாலப் பெண் எழுத்தாளர்களிடையே காணப்படுகிறது. ஆணாதிக்கக் கருத்துக்களும், பெண்விடுதலைக் கொள்கைகளும் முட்டி மோதும் போது ஏற்படும் பிரச்சனைகள், பெண்களது உண்மையான உணர்வுக் கோலங்கள் என்பவற்றை இவர்கள் கையாளுகின்றனர். ஜோதிர்லதா கிரிஜா, அம்பை, மா செண்பகம், ஊர்வசி, சிவரமணி போன்றோர் இவ்வகையில் குறிப்பிடக் கூடியவர்கள். இவ்வாறு நோக்கும் போது பெண் பற்றிய மரபுரீதியான கருத்தோட்டங்களுக்கு வடிவம் கொடுத்து எழுதுவோர், பெண்களது பிரச்சனைகளை யதார்த்தமாக சித்தரிப்போர் என அடிப்படையில் இருவகையாகப் பெண் எழுத்தாளர்களை பாகுபாடு செய்யலாம்
போலுள்ளது.
இதில் இரண்டாவது வகையினர் விரல்
விட்டு எண்ணக் கூடியவர்கள்.
பக்கம் 44
சக்தி மார்ச் 92

அவர்களது படைப்புகளும் மிகக் குறைந்தவையே. எனினும் இதனை வளர்ந்து வரும் ஒரு ஆரோக்கியமான போக்காகவே நான் இனம் காண்கிறேன். இதனால் இப்போக்குப் பற்றி சற்று விரிவாக குறிப்பிடுதல் வேண்டும்.
இத்தகைய எழுத்தாளர்களுள் முதன்மை வாய்ந்தவர் அம்பை ஆவர். "இறகுகள் முறியும்" (1976), "வீட்டின் மூலையில் ஓர் சமையலறை" (1988) ஆகிய சிறுகதைத் தொகுதிகள் இவருடையவை. எழுத்தாளர்களால் இதுவரை காலம் அலட்சியப் படுத்தப்பட்ட பெண்களது சில வகையான சிந்தனைகள், உணர்வுகள் என்பவை இவரது கதைகளில் இடம் பெறுகின்றன. காதல், பாலியல், குடும்பம் ஆகியவை குறித்து ஆழமான வலுவான வினாக்களை இவரது சிறுகதைகள் எழுப்புகின்றன.'ஸஞ்சாரி' என்ற இவரது கதையின் பாத்திரம் ருக்மா சுதந்திர உணர்வுள்ள ஒரு பெண். அவரது சுயாதீனத்தால் கவரப்படும் ரங்கா அவளைக் காதலிக்கிறான். அதே சமயம் அவளது தன்னிச்சையான போக்கில் வெறுப்பும் பொறாமையும் அவளை
உடமையாக்கும் எண்ணமும்
இலக்கியத்தில் பெண்கள்
அவனுக்கு உண்டாகின்றன. ருக்மா தமது காதல் எனப்படுவது பற்றி பின்வருமாறு எண்ணுகிறாள். "இது உண்மையா ரங்கா? லவ் என்றால் என்ன? நமக்குத் தெரியுமோ? நீ சொல்லும் சில சொற்கள் அடிவயிற்றில் சீறிப்பாய்ந்து நெஞ்சை முட்டுகிறதே. இதுவும் லவ்வா? நான் உன் உடமைப் பொருளா? நீ அரசோச்சும் ராஜ்யமா? ஒருமுறை உன்னிடமிருந்து எதையோ கோபத்துடன் பிடுங்க வந்தபோது, என்னைக் கீழே தள்ளிவிட்டுப் பார்த்தாயே, அப்போது குதற வரும் நாயின் பைத்தியக்கார வெறி உன் கண்களில் எனக்குத் தெரிந்தது. இதுவும் காதலா? என்னை நீ மதிக்கிறாயா?" (ஸஞ்சாரி-சிறகுகள் முறியும் இந்நிலையில் இவ்விருவருக்கும் இடையில் ஏற்படும் முரண்பாடுகள் உணர்வுச் சுழிப்புகள் என்பன
அற்புதமாக கதைவடிவம் பெறுகின்றன.
ராஜம் கிருஷ்ணனின் "வீடு" என்ற நாவலும் இவ்விடத்தில் குறிப்பிடத் தக்கது. குடும்பத்தின் பெண்ணின் நிலை குறித்து வினா இங்கு எழுப்பப் படுகிறது. வாழ்நாள் முழுக்க தனது உழைப்பை நல்கிய வீட்டில் தனக்கு அங்கீகாரமும் உரிமையும் இல்லை
சக்தி மார்ச் 92
பக்கம் 45

Page 24
இலக்கியத்தில் பெண்கள்
என்ற "ஞானோதயம்" ஏற்பட்ட போது விண்ணிற்பறக்கவும் தேவி வீட்டை விட்டு வெளியேறுகிறாள். ஏங்கினேன். இந்நாவல் நோர்வே நாவாசிரியரான ஹென்றிக் இப்சனுடைய பலத்த வானின் சர்ச்சைக்குள்ளான ஒரு நட்சத்திரங்களையும் நூற்றாண்டிற்கு முந்திய "பொம்மை சூரியனையும் வீடு" என்ற நாடகத்தை தொட்டுப்பார்க்க நினைவூட்டுவது, வீட்டை விட்டு அவாவிற்றுஎன்ஆன்மா வெளியேறுதல் என்கின்ற இக் கருத்து பூமியின்பரப்புக்கு கோகிலா மகேந்திரனின் "துயிலும் அப்பால் ஒருநாள் கலையும்" என்ற நாவலிலும் அண்டவெளியில் காணப்படுவதை இவ்விடத்தில் சுட்ட ஸ்பேஸ்ஒடிசியின்விண்கலம்போல விரும்புகிறேன். எல்லையின்றிச்சுழலவும்
எண்ணினேன்.
யாழ்ப்பாணத்தில் செயற்படும் வானிற்பறக்கவும் பெண்கள் ஆய்வு வட்டம் என்ற புள்எல்லாம்நானாக அமைப்பினால் 1986 ஆம் ஆண்டு மாறவும்எண்ணினேன். இலங்கைத் தமிழ் பெண் கவிஞர்கள் சிலரின் கவிதைகள் ஒரு தொகுதியாக ஆனால். வெளியிடப்பட்டன. "சொல்லாத சேதிகள்" எனும் அத் தொகுப்பு காலிற்பினைத்த கவிஞர்களின் 24 கவிதைகளைக் இரும்புக்குண்டுகள் கொண்டது. பெண்களின் வெளிச் அம்மியும்பானையும் சொல்லப்படாத சில கருத்துக்களையும் தாலியும்வேலியும் உணர்வுகளையும் இவற்றில் சில கவிதைகள் வெளிப்படுத்தின. என்னை.
நிலத்திலும்
எனது நிலத்தின்கிழே ஒராமபிரம்சிறகுகளை பாதாள இருட்டிலும் விரிக்கவும் அழுத்தும்
பக்கம் 46 சக்தி மார்ச் 92

இலக்கியத்தில் பெண்கள்
(விடுதலை வேண்டினும் - சொல்லாத சேதிகள்) மேற்குறிப்பிட்ட இப் போக்கு வளர்ந்து வருவதாயினும் தற்காலப் தமிழ் பெண் எழுத்தாளர்களின் பொதுப்போக்கு என்று கூற முடியாது. பொதுப் போக்கானது அடிப்படையில் பழைய கருத்தோட்டங்களை, பெண்ணினது தாழ்த்தப்பட நிலையை நியாயப்படுத்தும் கருத்துக்களை மீள உருவாக்கம் செய்வதாகவே உள்ளது.
பெண் எழுத்தாளர்கள் முகம் கொடுக்கும் சவால்கள்
பெண்களது நிலையைத் தாழ்த்துகின்ற பிம்பங்களையும், கருத்துக்களையும் இலக்கியத்தல் பெண்களே உருவாக்கும் நிலையிலிருந்து விடுபடுதல் இன்றைய பெண் எழுத்தாளர்களை எதிர்நோக்கும் சவால்களில் முதன்மையான தாகும். பெண்ணின் முன்னேற்றத்திலும் உயர்ச்சியிலும் அக்கறையுடையோர் என்ற வகையில் இது அவர்களது
கடமையாகும்.
தமது படைப்புகளின் செய்தி பொருள் குறித்து இத்தகைய ஒரு நோக்கு நிலை மாற்றத்தை ஏற்படுத்திக்
கொள்வது பற்றி பெண் எழுத்தாளர்கள் சிந்திக்க வேண்டியிருப்பதுடன் அவற்றில் ஆக்க முறைமைகள் பற்றியும் விசேட கவனம் செலுத்துதல் வேண்டும்.
பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் தமிழ் இலக்கிய உலகில் அதிகளவு கவனிக்கப்படுவதில்லை. இதற்கு
இரண்டு காரணங்கள் உண்டு.
1. தரமான படைப்புக்கள் கூட படைப்பாளிகள் பெண்கள் என்ற காரணத்தினால் ஆண்களே ஆதிக்கம் பெற்றுள்ள விமர்சன உலகில்
கவனத்தைப் பெறுவதில்லை.
2. பெரும்பாலான பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் மலினமானவையாகும். இவற்றில் இரண்டாவது காரணம் குறித்து நாம் அக்கறை காட்டுதல் வேண்டும்.
பெண்கள் மலினமான, தரமற்ற இலக்கியம் படைக்கின்றனர் என்பது பொதுக் குற்றச்சாட்டு "கண்ணிர் இழுப்பிகளைத் தயாரிக்கின்றனர் என்று பேராசிரியர் சிவத்தம்பியும் குற்றஞ் சாட்டுவார். இவை குறித்து
நாம் பரிசீலனை செய்தல் வேண்டும்.
சக்தி மார்ச் 92
பக்கம் 47

Page 25
இலக்கியத்தில் பெண்கள்
பெண் எழுத்தாளர்களில் மிகச் சிலரைத் தவிர ஏனையோர் தமது படைப்பின் பாணி, மொழிநடை அமைப்பு ஆகிய ஆக்கம் சார்ந்த அம்சங்களில் அக்கறை காட்டுவதில்லை. இதனால் படைப்புத்தரம் குறைந்த ஆக்கங்களாகவே இவை அமைகின்றன. எடுத்துரைப்பாங்கான மொழி நடையே கையாளப்படுகின்றது. ஒரே வகையாக அமைகின்ற உவமைகள், வர்ணனைகள், சொற்றொடர்கள் மீண்டும் மீண்டும் இடம் பெறுகின்றன. வெவ்வேறு பாணிகட்கு ஆண் எழுத்தாளர் உதாரணம் காட்டப்படுவது போல பெண் எழுத்தாளர்கள் பேசப்படுவதில்லை. தனித்தன்மை, தனிப்பாணி என்பன குறித்து அக்கறை கொள்வோர் மிகச் சிலரே. மேலும் இவர்கள் திரும்பத் திரும்ப நாவல்களையும் சிறுகதைகளையுமே எழுதுகின்றனர். ஆரம்பத்தில் கவிதைகள் எழுதினாலும் கவிஞராக வளர்வோர் மிகக் குறைவு. கதைகூறும் மரபு நன்கு பழக்கமானது. ஆகையால் அதிக முயற்சியின்றி அதனைக் கையாள முடிவதால் கவிதையில் இவர்கள் அக்கறை காட்டுவதில்லை எனலாம். கவிதை ஆழமான உணர்ச்சி
செறிவையும், சிக்கனமான மொழிக்
கையாளுகையையும் வேண்டி நிற்பதாகும். ஆழ்ந்த தேடலும், போதிய மொழிப்பயிற்சியும் இன்றி வெற்றிகரமான கவிதைளைப் படைக்க முடியாது. ("சொல்லாத சேதிகள்" மூலம் இனம் காணப்பட்ட கவிஞர்கள்
நம்பிக்கை யூட்டுகின்றனர்)
பெண் எழுத்தாளர்கள் இலக்கிய உலகில் பெருஞ் சாதனையாற்றாமைக்கு இரு காரணங்களைக் கூறலாம். இவற்றில் முக்கியமானது சமூகத்தில் பெண்களுக்குள்ள கட்டுப்பாடு ஆகும். இது பெண்களது சிந்தனைகளையும், அநுபவங்களையும் எல்லைப் படுத்துவதாகும். பெண் பற்றி நிலவும் பழைய கருத்தோட்டங்களும் அதில் அவள் கட்டுண்டு கிடப்பதும் இந்த எல்லைப் படுத்தலுக்குக் காரணமாகின்றன. பெண்கல்வியில் முன்னேற்றம் ஏற்பட்ட போதிலும் இக் கருத்தோட்டங்களே பெண்ணின் சிந்தனையையும், பெண்பற்றிய சமூக சிந்தனையையும் வடிவமைக்கின்றன. பெண் தனது முழுமையினை குடும்ப வாழ்க்கையிலேயே அடைய முடியும் என்ற கருத்தே சமூகத்தின் சகல மட்டங்களிலும் இன்னும் ஆதிக்கம் செலுத்துகிறது. தமது அன்றாடத்
பக்கம் 48
சக்தி மார்ச் 92

தேவைகளிலிருந்து ஆத்மார்த்த ஈடுபாடு வரை பலவற்றையும் ஓர் ஆணின் அதிகார எல்லைக்குள்ளேயே அடைய முடியும் என்ற நிர்ப்பந்தம் பெண் எழுத்தாளர்களது அநுபவம், ஆற்றல் என்பவற்றைக் கட்டுப் படுத்துவதாகும். இதனால் விடயங்களின் அடிஆழத்தை ஆராயும் விமர்சன நோக்கும் தேடலும் பெண் எழுத்தாளர்களிடம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. எத்தனை முரண்பாடுகளைச் சித்தரித்த போதிலும் நடைமுறையில் நிலவும் அமைப்பின் எல்லைக்குள்ளேயே அவர்கள் தீர்வுகளைத் தேடுகின்றனர். சில குறிப்பிட்ட அடிக் கருத்துக்களை பெண்கள் முற்றிலும் கையாள்வதில்லை. குறிப்பாக சமயம், வர்க்க முரண்பாடுகள், பாலியல் என்பவற்றை விமர்சன நோக்கில் எழுத எந்தத் தமிழ்ப் பெண் எழுத்தாளரும் ஆழமாகக் கையாளத் துணியவில்லை (அம்பை விதிவிலக்கு). இவ்விடத்தில் எகிப்தியப் பெண் எழுத்தாளரான நவால் எல் சாடவி பின்வருமாறு கூறியுள்ளமை சிந்தனைக் குரியது. "இம் மூன்று விடயங்களையும் தவிர்த்து விட்டு சுய சிந்தனையுள்ள எந்த ஒரு ஆணோ பெண்ணோ ஆழமிக்க
இலக்கியங்களைப் படைக்க முடியாது.
இலக்கியத்தில் பெண்கள்
ஆனால் இவ்விடயங்கள் பற்றி விமர்சனம் செய்யத் துணியும் பெண், இவற்றைக் கையாளும் ஒரு ஆணை விட அதிகளவு அபாயத்துக்கு உள்ளாகிறார். இதற்குக் காரணம் எமது சமூகத்தில் ஒழுக்கம் குறித்து நிலவும் இரட்டை
மதிப்பீடுகளாகும்"
பெண்களது இலக்கிய சாதனை குறைவுக்கான அடுத்த காரணம், தமது ஆக்கத் திறமையை வளர்த்துக் கொள்ளப் போதுமான ஊக்கம், ஒத்துழைப்பு வாய்ப்பு நேரம் அவர்களுக்கு கிடைக்காமையாகும். எழுத்துத் தேர்ச்சி, பயிற்சியில் அதிகம் தங்கியுள்ளதாகும். இப் பயிற்சிக்கான வசதிகள் பெண்களுக்கு அருகி யே உள்ளன. கலை இலக்கியங்களில் பெண்களின் ஆக்கத்திறன் வெளிப்பாடு குறித்து எவரும் கவலைப் படுவதில்லை. குடும்பக் கடமைகளில் குழந்தை வளர்ப்பு, சமையல் வீட்டலங்காரம் ஆகியவற்றில் அவளது ஆக்கத்திறன் அதிகரித்திருக்க வேண்டுமென்பதே பொது எதிர் பார்ப்பாகும். இதனை நிறைவேற்ற முயலும் போது தனது சொந்த ஆர்வங்களையும் திறனையும் விட்டுக் கொடுக்கும்படி நேரிடுகிறது. இந்த நிலைமைகளை எழுத்தாளராகிய
சக்தி மார்ச் 92
பக்கம் 49

Page 26
இலக்கியத்தில் பெண்கள்
பெண்கள் எவ்வாறு எதிர் கொள்ளப் போகின்றனர் என்பது ஒரு பெரிய
வினாவாகும்.
தொகுத்து நோக்கும் போது பெண் எழுத்தாளர்களுக்கு முன்னால் மூன்று
பாரிய கடமைகள் உள்ளன.
1. இலக்கியத்தில் காலம்காலமாக பெண் சித்தரிக்கப்படும் முறையை மாற்றுதல்,
2 பெண் எழுத்தாளர்கள் தமது படைப்புத் திறனை வளர்த்தல். ஆழமும் தேடலும் உடைய படைப்புகளை
உருவாக்குதல்,
3. இவற்றின் மூலம் கணிக்கப்படக் கூடிய, தரம் வாய்ந்த பெண்களின் இலக்கியத் தொகுதியை உருவாக்குதல் .
இவை கடினமான சவால்கள் தாம். இவற்றை எதிர் கொள்ளும் வழியில் எகிப்தியப் பெண் எழுத்தாளரின் பின்வரும் வாசகங்கள் உற்சாகம் தருவதாய் அமையும். " ஆக்கத்திறனுள்ள பெண்கள் சமூகத்திடமிருந்து பாராட்டையோ,
ஏற்புடைமையையோ எதிர்பார்க்க
முடியாது. இந்த விளக்கம் பெண்ணை எதற்கும் தயாராக்கி எதிரிகளுக்கு முகம் கொடுக்கவும் வெற்றி பெறவும் உதவுகிறது. எந்த ஒரு மனித உயிருக்கும் வெற்றி ஒரு மகிழ்ச்சிகரமான அநுபவம் என்றாலும் தோல்வியும் கூட பயனுள்ள அநுபவமாகவே அமையும். தோல்வியை அநுபவமாக்கி தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் முன்னோக்கி நடத்தல் வேண்டும். மக்களது இதயத்தை ஊடுருவி அவர்களின் பாதிப்பை ஏற்படுத்த முடியுமாயிருப்பதே சுய சிந்தனையும் ஆக்கத்திறனுமுள்ள ஒரு பெண்கலைஞரின் அடிப்படைப் பலமாகும். தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டுச் செயற்பாடே இத்தகைய பெண்களுக்கு உண்மையில் ஆதரவாக அமையும்.
முற்றும்
முஸ்லிம்மாதர்ஆராய்ச்சிசெயல் முன்னணி அண்மையில்தமிழ்ப்பெண் எழுத்தாளர்களுக்கென நடத்திய கருத்தரங்கில்யாழ்பல்கலைக்கழக விரிவுரையாளர்கலாநிதிசித்திரலேகா மெளனகுருசமர்ப்பித்தகட்டுரை இது.
பக்கம் 50
சக்தி மார்ச் 92

மனிதர் மனிதரை நிந்திக்கப்
பயன்படுத்தும் சொற்கள் பலவகையின.
ஒருவரை இழிவாகப் பேச அவரைத் தாழ்த்தும் வகையிலான சொற்களும்
சொற்தொடர்களும் பாவிக்கப்படுவது வழமை. எனவே நிந்தனைச் சொற்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ அவற்றுக்குரிய சமுதாய விழுமியங்களைப் பிரதிபலிப்பன. பல்வேறு மனித சமுதாயங்களிலும் பயன்படும் நிந்தனைச் சொற்களில் கணிசமான ஒற்றுமை உள்ளது. இது சமுதாய விழுமியங்களிடையே உள்ள
USST60T ஒருமையின் காரணமானது.
அதேவேளை சமுதாய வேறுபாடுகளும் மொழிவிருத்தியின் வேறுபாடும் நிந்தனைச் சொற்களிலும் வேறுபாட்டுக்குக் காரணமாகின்றன. நமக்குப் பரிச்சயமான மொழிகளில்
உள்ள நிந்தனைச் சொற்கள் பற்றியும்
சொற்களில் ஆணாதிக்கம்
சிவசேகரம்
குறிப்பாக பாலியல் தொடர்பான சொற்கள் பற்றியும் கவனிப்போமாயின் பலஆயிரம் வருடப் பெண்ணடிமை நடைமுறை இழிசொற்களிலும் ஆழமாக வேரூன்றி இருப்பதைக் காணலாம். ஒருவரது தோற்றம், உடல்வலிமை, செயற்திறமை, அறிவு, பண்பாடு, ஒழுக்கம், ஆடைஅலங்காரம் தொடர்பான நிந்தனைச் சொற்கள் பல உண்டு. இவற்றுக்கு உதாரணம் தந்து விளக்க வேண்டிய அவசியமில்லை. எனினும் பெரும்பாலும் இவ்வாறான நிந்தனைச் சொற்கள் ஒருவரது குறைபாடுகளை மிகைப்படுத்தும் முறையிற் பயன்படுவதுண்டு. சிலசமயம் ஒருவரது செயல்களின் மதிப்பீடாகவும் இவை
பயன்படுவதுண்டு. சாதிப் பேராலும் பகையானதாகக்
கருதும் ஒரு சமுதாயத்தின் பேராலும்
சக்தி மார்ச் 92
பக்கம் 51

Page 27
சொற்களில் ஆணாதிக்கம்
ஒருவரை அயலார் என்று குறிப்பிடுவதாலும் மனிதரை இழிவு படுத்தாலம், குறிப்பிட்ட ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேராதவரை அச்சாதிப் பெயரால் அழைத்து நிந்திப்பதை அறிவோம். இவ்வாறே சில அயல் இன, அயல் நாட்டுப் பெயர்க் குறிப்புக்கள் பயன்படுவதை அறிவோம். இதைவிட மிலேச்சன், பரதேசி, (சிங்களத்தில் பரதெமலா, அதாவது அந்நியத் தமிழன்) போன்ற சொற்கள் அயலார் மீது நமது சமுதாயங்கள் காட்டும் தயவின்மையையும் வெளிப்படுத்துவன. இவ்வாறே பெண்மையைச் சார்ந்த சொற்களும்
(முக்கியமாக பேடி) ஒரு ஆணைப் பெண்மையுடையவன் எனக் குறிக்கும் சொற்பிரயோகங்களும் நிந்தனையாகப்
பயன்படுவன. கடுமையான நிந்தனை பெருமளவும் பேய் பிசாசுகள், துர்த்தேவதைகள், விலங்குகள் போன்றவற்றின் பெயரால்
மனிதரை அழைப்பதாகவோ அல்லது
பாலுறுப்புக்களையும் பாலுறவைவும் குறிக்கும் சொற்களாகவோ அல்லது இவற்றினதும் பிற நிந்தனைச்
சொற்களதும் சேர்க்கையாகவோ
அமைவதைப் பலரும் அறிவார்கள்.
எருமை, கழுதை, பன்றி நாய், தேவாங்கு போன்றவை சனியன், மூதேவி, பிடாரி போன்று துரதிர்ஷ்டம்
அல்லது துர்க் குணங்களுடன் இணைத்துக் காணப்படும் தேவுகளுடன் ஒப்பிடக் கூடிய
அளவுக்கு மனிதரை நிந்திக்கும் குறியீடுகளாகின்றன. யானை, குதிரை, பசு, பூனை எனும் சொற்கள் பொதுவாக நிந்தனைக்குப் பயன்படுவதில்லை. அவ்வாறு பயன்படும் போது அடைமொழியுடன் (கள்ளப்பூனை என்பது போல வருவதையே அறிவோம். இவையாவும், குறிப்பிட்ட விலங்குகளையும் தேவுகளையும் பெண்களையும் பற்றி
நமது சமுதாய வழக்கில் இருந்து வரும் கருத்துக்களையும் அவை தொடர்பான சமுதாய விழுமியங்களையும் குறிப்பன. எவ்வாறாயினும் மிகுந்த சினமும் மிகையான அவமதிக்கும் நோக்கமும்
கொண்ட சொற்கள் பாலியற்
தன்மையுடையன. அது மட்டுமின்றி
பக்கம் 52
சக்தி மார்ச் 92

நடத்தை, பிறப்பு தொடர்பான சில சொற்களை விட்டால் மற்றவை ஏற்றுக் கொள்ளப்பட்ட மொழிவழக்கிற்குப்
புறம்பான சொற்களே.
பாலுறுப்புக்களையும் பாலுறவையும் குறிக்கும் நிந்தனைச் சொற்கள் தமிழ் எழுத்து வழக்கில் ஏற்கப்படாதவை என்பது குறிப்பிடத் தக்கது. இவ்வாறே, சிங்களம், ஆங்கிலம் போன்ற மொழிகளிலும், எழுத்து வழக்கும் விஞ்ஞான மருத்துவ நடைமுறையும் பயன்படுத்தும் சொற்கள் நிந்தனையாகப் பயன்படும் சொற்களினின்றும் வித்தியாசமானவையாக இருப்பதைக்
காணலாம்.
ஒருவரை விபச்சாரியின் பிள்ளை என்றோ திருமணமாகாத பெற்றோருக்குப் பிறந்தவர் என்றோ ஏசுவதற்குப் பாவிக்குஞ் சொற்கள் எல்லா முக்கிய மொழிகளிலும் உள்ளன என்றே கூறலாம். வழமையாக, இவ்வாறு ஒருவரை ஏசும் போது அது அவரைத் திருடர், ஒழுக்கங்கெட்டவர்
சொற்களில் ஆணாதிக்கம்
என்று ஏசுவது போலில்லாமல் வெறும் அவதுாறான நிந்தனையாகவே இருக்கும். இவ்வாறே ஒரு பெண்ணை ஒழுக்கங் கெட்டவள் என்று பொருட்படுமாறு சொல்லும் வார்த்தைகள் அவரது ஒழுக்கத்தைக் கேள்விக்குட் படுத்துவதைவிட அவரை அவமதிப்பதையே நோக்கமாகக் கொண்டவை. எவ்வாறு நோக்கினும் இவ்வாறான வசைச் சொற்கள் ஒரு ஆணை அவமதிக்கும் போதுகூட அவரது தாயை விபச்சாரி அல்லது ஒழுக்கங்கெட்டவர் என்று அழைப்பதாகவே அமைகின்றன. அனைத்தினும் மோசமாகத் தாயுடன் பாலுறவு கொண்டவன் என்ற சொல்லால் அதிகம் அவமதிக்கப்படுவதும் அவமதிப்புக்கு உட்பட்டவனுடைய தாயேதான். ஒருவனைக் காமுகன் என்றோ ஸ்திரிலோலன் என்றோ குறிப்பிடுவோம் ஆயின் அது வெறும் வசையாக இல்லாது குற்றச்சாட்டான முறையிலேயே சொன்னதாகக் கருதுவதற்கு இடமுண்டு. இந்த
சக்தி மார்ச் 92
பக்கம் 53

Page 28
சொற்களில் ஆணாதிக்கம்
நிந்தனைக்குரிய சொற்கள் ஆணின் ஒழுக்கத்தைவிட பெண்ணின் ஒழுக்கத்தையே கேள்விக்குட்படுத்தும் நியாயம் என்ன? இதற்கு விரிவான விளக்கம் இங்கு அவசியம் இல்லையென்று நினைக்கிறேன்.
ஒருவரைப் பாலுறுப்புகளின் பேர்களால்
அல்லது அவற்றை அடிப்படையாகக் கொண்ட சொற்களால் இழிவுபடுத்தும் போதும் பாலுறவைக் குறிக்கும் சொற்களால் இழிவுபடுத்தும் போதும் ஒருவரை விலங்குகளின் பெயரால் நிந்திப்பதைவிடக் கடுமையான
உணர்வே தென்படுகிறது. மலம், அழுகல், துர்நாற்றம் போன்றவற்றுக்கு ஈடானவையாகவே பாலுறுப்புக்களை குறிக்குஞ் சொற்கள் பயன்படுகின்றன. இங்கும் பெண்களின் பாலுறுப்புக்களைக் குறிக்கும் சொற்களே நிந்தனைச் சொற்களில் அதிகமாக இருப்பதும் அவை ஆணுறுப்புக்களைக் குறிக்கும் சொற்களை விட அதிகமாகப் பாவிக்கப்படுவதும் தற்செயலானதல்ல. பாலுறவைக் குறிக்கும் நிந்தனைச்
சொல் ஏற்றுக் கொள்ளப்பட்ட
மொழிவழக்கில் உள்ள புணர்ச்சி என்ற சொல்லைப் போலன்றி, ஆணாற் பெண்ணுக்குச் செய்யப்படும் காரியமாக இருப்பதும் நம் கவனத்திற்குரியது.
இவை வெறுமனே ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுகள் மட்டுமா அல்லது நமது சமுதாயங்களுட் பாலுறவு பற்றியும் பாலுணர்வு பற்றியும் இருக்கின்ற வக்கிர உணர்வுகள், போலி அருவருப்பு பாசாங்குகள் என்பவற்றின் வெளிப்பாடுகளுமா என்பது சிந்தனைக்குரியது. ஆபாசமான எழுத்து, பேச்சு, படங்கள் என்பவற்றை எதிர்ப்போர் கூட ஆத்திரம் வரும்போது பாலியல் நிந்தனைச் சொற்களைக் கூசாது பாவிப்பதுண்டு. மொழிவழக்கில் உள்ள பல துர்ப்
பிரயோகங்கள் போல நிந்தனைச்
சொற்கள் அதிகம்
சிந்தனையில்லாமலே
பாவிக்கப்படுகின்றன.
சாதிப்பெயராலோ, பிரதேச,
இனப்பெயராலோ எவரையும்
பக்கம் 54
சக்தி மார்ச் 92

நிந்திப்பதை இன்று உலகின்
சமுதாயங்கள் தவறென்று ஏற்கின்றன.
அடிப்படையிலான மனித உணர்வான
பாலுணர்வையும் அதைவிட
சொற்களில் ஆணாதிக்கம்
முக்கியமாக மனித இனத்தின் ஒரு பாதியினரை அவமதிக்கும் சொற்பிரயோகங்கள் பற்றி நாம் கூடிய
கவனம் காட்ட வேண்டாமா?
o KGN
இந்த இதழ்வரை (2:2) ஆசிரியர் குழுவில் இருந்துவந்த தோழி மைத்ரேயி "சக்தியிலிருந்து விலகிக்கொள்கிறார். சக்தியின் அடுத்த இதழிலிருந்து(23) புதிய
நிர்வாகம் பொறுப்பாக இருக்கும்.
சென்ற இதழிலில் ஆரம்பித்த தொடர்கதை "பக்கத்துவிடு" தவிர்க்க முடியாத சில காரணங்களால் தொடர்ந்து பிரசுரிக்க முடியாமலிருப்பதை வருத்தத்துடன்
தெரிவிக்கிறோம்.
SAKTI, P.O.Boks 99 Oppsal,
0619 Oslo 6, NORWAY.
தபாற் கணக்கு இலக்கம் :08240 383676
இலங்கை:இலவசம் ஸ்கன்டிநேவியா:NKr 100 ஏனையநாடுகள்:US$ 20.
சக்தி மார்ச் 92
பக்கம் 55

Page 29
நோர்வேயில் பெண்கள்
நோப்வேறில்பேஷிதர்
இன்று நோர்வே மந்திரி சபையில் ஆண்களும் பெண்களும் ஏறத்தாள சம அளவில் பிரதிநிதிப் படுத்தப்பட்டுள்ளனர்.நோர்வே சமுதாயத்தில் ஆண்பெண்சமப்படுத்தலுக்கு நீண்ட காலமாக நடந்துவரும் போராட்டத்தின் விளைவுகளில் இதுவும் ஒன்று. அதுமட்டுமின்றி 1800களின் நடுப்பகுதியிலிருந்து நோர்வே புணரமைத்து வரும் பொருளாதார சமூக அரசியற் செயற்பாடுகளினதும் ஒரு விளைவே இது என்று கூறினால் அது மிகையாகாது.
நாட்டின் அரசாங்கத்தில் பெண்கள் சனத்தொகையில் தமது பங்கிக்கேற்ப பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டுள்ளனர் என்றவுடன் பொதுவாக அவர்கள் ஆண்களை ஒத்தளவு ஆதிக்கத்தையும், அதிகாரத்தையும் கொண்டுள்ளனர் என்று பொருள் கொள்ளக் கூடாது. எனினும் மற்றநாடுகளுடன் ஒப்பிடுகையில் அவர்கள்
1850- 1990
ஒரு வரலாற்றுப் பார்வை
சமத்துவத்திற்கான பாதையில் போவதற்கான நல்ல ஆரம்பத்தைப் பெற்றிருக்கிறார்கள்.
நோர்வேயில்பெண்கள் இயக்க ஆரம்பம்,
எவ்வாறு நாம் இவ்வியக்கத்தின் ஆரம்பப் புள்ளியை அடையாளம் காண்பது? வழமையாக கமிலா கொலற் எனும் பெண்ணால் எழுதப்பட்நாவல் வெளிவந்த 1854 யே ஆரம்பமாகக் கொள்கிறார்கள். இன்னொருவகையில் நோர்வேய இலக்கியத்தின் முதலாவது நவீன நாவலும் இதுவே. அதேவேளை இது நோர்வே மேல்தட்டு வர்க்கத்தில் பெண்களின் வாழ்வு பற்றிய 93. கடுமையான கண்டனமும், விழிப்புணர்வுடன் கூடிய ஒரு புரட்சியும் ஆகும். இந்நூல் கண்டிக்கப்பட்ட வாழ்வானது, பெண்கள் தையல் வேலை செய்யவும், பியானோ வாசிக்கவும் பழக
வேண்டும், இளமையில் திருமணம்
சக்தி மார்ச் 92
பக்கம் 56

நோர்வேயில் பெண்கள்
முடித்து கணவனுக்கு சேவகம் செய்யும் ஆவியாக இருக்க வேண்டும், அத்துடன் முக்கியமாக வீட்டைப் பேணி ஆண் பிள்ளைகளைப் பெற வேண்டும். கமிலாவின் நாவல் இந்த பாரம்பரிய லட்சியத்தின் பின் உள்ள பிரச்சனையும் துயரமும் நிறைந்த வாழ்வை ஆராய்ந்தது.
இந்நூற்றாண்டின் முடிவில் பெண்களுக்கு வீட்டுக்கு வெளியே சென்று கல்வி பயிலவும், வேலை செய்யவும் வாய்ப்பு ஏற்பட்டது. 1884 இல் நிறுவப்பட்ட முதலாவது நோர்வேப் பெண்கள் சங்கத்தின் முக்கிய நோக்கமாக பெண்களின் உரிமைகளுக்குப் பாடுபடுதல் என்பது அமைந்தது. அந்த வருடமே முதல் முதலாக பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்கும் பரீட்சைகளை எடுப்பதற்கும் உரிமைகளைப் பெற்றனர். அதற்கு அடுத்த ஆண்டில் குறிப்பாக பெண்களின் வாக்குரிமை பெறுவதற்குப்பாடுபடுவதென ஒரு அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. எனினும் பெண்களுக்கு வாக்குரிமை என்ற பிரேரணை பாராளுமன்றத்தில் அஸ்ஷ்ா, 1893, 1895ம் ஆண்டுகளில் நிராகரிக்கப்பட்டது.
பெண்கள் வேறுவகைலுமே தமது இருப்பை அடையாளம் காட்டத் தொடங்கினர்.1899இல் தலைநகரில் ஒரு தீப்பெட்டித் தொழிற்சாலை குறைந்த சம்பளம் வழங்குவதையும் உடலாரோக்கியத்தைப் பாதிக்கின்ற வேலைத்தலச் சூழலைக் கொண்டிருப்பதையும் எதிர்த்து வேலைநிறுத்தம் செய்தனர். இதன் முலம் இப்பெண்கள் இக்கோரிக்கையை அடைய முடியாமல் போனாலும் வேலைநிறுத்தம் எல்லாரது கவனத்தையும் ஈர்த்ததுடன் 1990களில் தொழில் புரியும் பெண்கள் தங்களை ஒரு அமைப்பாக்கிக்கொள்ள இது வழிவகுத்தது. தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள் மட்டும் சங்கம் அமைக்கவில்லை; வீடுகளில் பணிப்பெண்ணாகப்
பணிபுரிந்தவர்களும் தமக்கென ஒரு தொழிற்சங்கத்தை ஆரம்பித்தனர். எனினும் இது உண்மையில் தொழிற்கட்சியைச் சேர்ந்த ஆண்களின் உதவியுடனேயே ஆரம்பிக்கப்பட்டது.
வலிவடைதலாவீழ்ச்சியா?
வாக்குரிமை பெற்ற பின்னரான காலப்பகுதி பலவழியிலும் சமூகத்தில்
பக்கம் 57
சக்தி மார்ச் 92

Page 30
நோர்வேயில் பெண்கள்
பெண்களின் நிலமை ஸ்திரமடைந்ததைக் காட்டியது. படிப்படியாக அவர்கள் புதிய தொழில்களைச் செய்ய அனுமதி கிடைத்தது. 1922ல் கொள்கைரீதியாகப் பெண்கள் அமைச்சரவையில் இடம்பெற முடிந்தாலும் 1945வரை ஒரு பெண்ணும் அமைச்சராக நியமனம் பெறமுடியவில்லை.
1930களின் பொருளாதார மந்தம் பெண்களைத் தொழிலிழக்கச் செய்தது. உயர்வேலையின்மைக்காலங்களில் குடும்பத்தில் ஒருவர் தொழில் புரிவதே போதும் என்று கருதப்பட்டது. இதனால் தொழிற் சந்தையில் ஆண்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. இக்காலப் பகுதியில் பெண்கள் அமைப்புக்கள் தமது வலுவினையும் செல்வாக்கினையும்
இழந்துபோயின.
இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின் ஏற்பட்ட பொருளாதாரச் சீரடைவு காலத்தில் தொழிலாளர் வர்க்கத்தில் பெண்களின் பங்களிப்பு வீட்டுக்கே என்ற நிலமை வலுவடைந்திருந்தது.
"பழைய" பெண் அமைப்பின் போராட்டம் அரச துறைகளில் பெண்களை ஆண்கள் போலவே நடாத்தப்படவேண்டும் என்பன போன்ற சம்பிரதாய பூர்வமான உரிமைகளைப் பெறுவது தொடர்பாக வழிநடாத்தப்பட்டது. எனினும் இது தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் இன்னும் ஆண்களின் கைகளிலேயே இருந்தது. முக்கிய தீர்மானம் எடுக்கும் மன்றுகளில் பெண்களின் பங்குபற்றல் மிகவும் குறைவாகவே இருந்தது.
புதியபெண்கள் இயக்கம்
"புதிய பெண்கள் இயக்கம்" என்று அழைக்கப்பட்ட அமைப்பு 1960களின் பிற்பகுதியில் உருப்பெற்றது. இது உண்மையில் அக் காலப் பகுதியில் செல்வாக்குப் பெற்றிருந்த சர்வதேச அதிகார வர்க்கத்திற்கெதிரான இடதுசாரி இயக்கத்தின் ஒருபகுதியாகவே வளர்ந்தது. 60களில் தொழில் மயப்படுத்தப்பட்ட நாடுகளில் பெருமளவில் அதிகரித்திருந்த மாணவர்களே இவ்வியக்கத்தில் அங்கத்தவராயிருந்தனர். இவர்களின் இவ்வமைப்புக்கும் இவர்கள்
சக்தி மார்ச் 92
பக்கம் 58

நோர்வேயில் பெண்கள்
கல்விபயின்ற வலதுசாரிக் கல்வி நிறுவனங்களுக்கும் எவ்வித பொருத்தமும் இருந்திருக்கவில்லை.
புதிய பெண்கள் இயக்கம் தெளிவாக அதிகார வர்க்க எதிர்ப்பைக் காட்டியது. நோர்வேயில் இவ்வியக்கம், பெரிதும் இறுக்கமாக அமைக்கப்படாத குழுக்களைக் கொண்டிருந்தது. இதனால் தலைமை என்பதின் அதிகாரச் செறிவு மிகவும் குறைக்கப்பட்டிருந்தது. இக்குழுக்கள் அதிகாரப் பகிர்வில் "பிரமிட்" முறைக்குப் பதில் எல்லோருக்கும் சமஅதிகாரமளிக்கும் "கிடைக்கோட்டு" நிர்வாக முறையை வலியுறுத்தின. புதிய பெண்கள் இயக்கம் சமபிரதாய பூர்வமான சமத்துவத்திற்கு அப்பால் போராட விரும்பியது.
இது பெண்களை விழிப்புணர்த்துவது மட்டுமன்றி, சமூகத்தில் ஆண்களின் தேவைக்கு வழங்கப்படும் அதேயளவு முக்கியத்துவம் பெண்களின் தேவைக்கும் வழங்கப்படவேண்டும் என்ற வகையில் சமூகம்
மறுசீரமைக்கப் படவேண்டும் என்று
இது தொடர்பான ஒரு முக்கிய விடயமாக பெண்களின் கருவளம், மகப்பேறு தொடர்பான தீர்மானத்தைத்தானே எடுத்தல் என்பது அமைந்தது. எழுபதுகளில் பெண்ணியக்கத்தின் முக்கிய விடயமாக கருத்தடைச்சாதனப் பாவனை, கருக்கலைப்பு போன்றவை தொடர்பாக பெண்ணே முடிவெடுக்கும் உரிமை என்பன அமைந்தன. 1978ல் "சுயதீர்மானக் கருக்கலைப்புச் சட்டம்" பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எனினும் இன்றுவரை பெண்களின் சுயதீர்மான உரிமையை மட்டுப்படுத்த விரும்பும் பலஅரசியல்வாதிகள் இச்சட்டத்தை மாற்ற முயன்று வருகின்றனர். 1980ல் நிகைவேற்றப்பட்ட சட்டமானது "பெற்றோர்கள் வேறுவகையாகத் தீர்மானிக்கப்படாதவிடத்து பிள்ழைகளுக்குத் தாயின் குடும்பப் பெயரே குட்டப்படும்" என்று கூறுகிறது. இச்சட்டம் சுயதீர்மானக் கருக்கலைப்புச் சட்டத்தைவிட குறைந்த எதிர்ப்பையே
கருதியது. பெற்றுவருகின்றன. சக்திக்காக
Randi Kaarhus (Norsk Institutt for By og Region forskning)
பக்கம் 59. சக்தி மார்ச் 92

Page 31
காலம்
 
 
 
 
 
 

THEDAL 566, Parliament Street, ТшгDпtш, Ontario M4X-1P8, CANADA
KALAM,
K.V.Moorthy, 711 Kennady Road 209, Scarbого,
Тогопto, CANADA
THOONDIL, Siidasien Büro, Grosse Heinster, 58 4600 Drtmund 1, GERWMAW