கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காலம் 1993 (7)

Page 1

ينتمي * ب: مخ" "نیت- سی
- , முன்னிரீனிரவி 199

Page 2
0 மங்கையர் நாடும் நாகரீக உடைகள், சேை மற்றும் அலங்காரட்
0 பட்டு வேட்டிகள், சால்வைகள்,
0 குழந்தைகளுக்குத் தேவைய
O தரமான அன்பளிப்
0 கனேடிய இலங்கை இந்திய தமிழ்,
0 பழைய புதிய தமிழ்,மலையாள, இந்தி வி வாடகைக்
0 பூமாலை, சடைநாகம்,சரம் போன்றவற்ை முறையிலு
S S SLSS SLSS S LLL a SS Saa S SJE S S SSaLSSS SSESS SHS S S LLSaS S SaSS S SSSLS S S SLSS SLSS SLSaS S Aa مرميميرسمي " مى "مى "مى "مى "حي "ي "مى "مى "م
பறுவதற்கு நீங்கள் நாடவே
LUELLA 272 MARKAM ROAD,
TEL: (416) 2669638
 
 
 
 
 

லகள், பட்டுப் புடவைகள், கரிதார்கள்.
பொருட்கள்
குருத்தா, சேட் வகைகள்
ான பரிசளிப்பு வகைகள்
புப் பொருட்கள்
ஆங்கிலப் புதினப்பத்திரிகைகள் -
டியோ திரைப்படங்கள், விற்பனைக்கும்
குறைவான விலையிலும் அழகான லும்
SCARBOROUGH, ONT
FAX: (416) 266 7431

Page 3
BIJ GIÙ Ló /
முனி பனிபிணிபவி 1993
| ... fi I, fii '4.
ته
፵ fÑJI' சென் வம் :3-179 3GL. ::III . , , : ... Es + '' + 302 Star Ex gf exig Hi, I ritar lMk. 1.
CA,
இந1ாா :
ஆங்ந தி பி சாதி
Ariki:
குமரி மூர் நீதி 3Ů ŮŮ) 'iti & l. Po k; Å g. 438 F&F F H ' . tr|
AF DÅ
л.:rчты вы
E, G g LJ JT
st Eifri Ji-ters
Taf ta 'l is
| EIFLE || 『EF
Lir, K ÅLA, A PLE LIIAT) F S
Ÿ . 'ፆነî fካ ".1;'†Jሥ'ir Wùr '' ... ' ' ' ' ' '.' I
6)
" Li all - r' li di : * !
ஜிஆர் + 7:
.. :É f+;႔ျင်္ ီး... .fi #;ü်’ ့်ဒါ’
ார் ; நீந7:ர்:
? ***': 『 bir xəri 3, s. iif fix + ';', , .
* :r i :hi::-:-:-
rாக்ஃபீன் மு; k!! !! -**3**
*ጎySJo" ̆❖ች }g ! كبا #, if
ஜெபதி தீநீக :
it, is: , T: .
L, ጎኑïLፓ† ኅ'W | Mዄ†8É '
தோ சட்டர் ஈந்து
sist in 1: , , , i.
“ጅቶ÷3ኃዽኛ'ያ { {..JJኡጎ Joj' ! !!!!!!!!1! # !! !!! !!! !!' );
. . Lኹ :'ííí''፡ 'ናí j፧ T፡ሥ ፲፰..! I
*1**': '#33 3!*
"-
செவன்'
 
 

" மத சுபி
**ீர் இர :ெஅரிக் ச. :- கெ: :
! Juix: x კool '' j;" #:1; * 5'-' jiჯ-si; მr:r-wr ify:No J'irišჭu^N
ாேந்து | . - ,
தீர்க் நி: ஜி , சுட்
ழாக 3: த 4: இது '-1' கா: ஓ.31 :
. , .
' .. : , , , , ஆக் , ஃ7 பர்கருதி 1:ன: கா: சேக்ரது
- - - و با نام ரடிரி
"무TF 31 F, 구 FL 1, 후
:* சு: + , "+ம் :ஆர்:
।।।।
、 :: பூங் 7-F ل. کال پاتي நி ਆ ।
ES eE000E a LLurruS L S TuSK KCT Ck LSLa SuS y J
ஆ++' 1ே:ச்**: : +91 பர்
J* " ጁ ቶ wr** *ጎ' **, Lr & ፣ 1. F፣ + ኣli •'J፡ + *ፓ''J *ት፡ ﷽ ሄ...፥የ fr‛
:ெ 0S uB T00 S SSKSS S a AA A uS u SAL AcLS u Ay T
: if it $' கிபீடி ப' : 4 .. '&u} &T ქ. # li; + :لf" {; =#
. . : ATTS SS S SS SS SSA SS S tSTSS STS SS S SAAS AS *、 구 L. 구 구, 3I 구,
ர்: பாக்கி கதர் சிக்ரோ

Page 4
LDöTä56 Lipp.
. அனுபவ நிகழ்வுகள்
மஹாகவியை நினைக்கும் போதே வரதரின் ஆனந்தா அச்சகம் நினைவுக்கு வருகிறது. அங்கேதான் அவள் எமக்கு அறிமுகமானார்.
1955. எழுத்துலகில் குறுநடை தொடங்கிய காலம். புதுமை லோலன். வரதர் இருவரும் ஆசிரியராக இருந்து தொடக்கிய 'ஆனந்தன் சஞ்சிகையில் எனக்கும் ஒரு சிறு பங்களிப்பு. அடிக்கடி அச்சகம போகவேண்டும். அப்போது தான் வரதரால் 'மஹாகவி அறிமுகப்படுத்தப்பட்டார்.
அப்போது, மிக மெலிந்த, உயரமான, நிறம் குறைந்த தோற்றம் : அரைகுறைச் சிரிப்பு: பவ்யமான தலையாட்டல் : அசிரத்தையான பார்வை; என்னுள் ஒஹோ என்ற அபிப்பிராயத்தை உண்டாக்கவில்லை. ஆனால் இப்போதோ நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. ஆஹா, வாழ்ந்த காலத்துள் இத்தனை சிறப்பானவற்றை யாராலும் செய்ய முடியுமா எனும் மலைப்பு
'ஆனந்தனுக்கு சோடியாக ஒரு கவிதை சஞ்சிகை வெளியிடும் நோக்கம் வரதருக்கு நீண்டகாலமாக இருந்து வந்தது. அதற்காக, மறுமலர்ச்சிக்காலக் கவிஞர்கள் நண்பர்களாக இருந்த போதும், சுறுசுறுப்பு நிறைந்த இளங்கவிஞர் ஒருவரைத் தேடிக் கொண்டிருந்தார். மஹாகவி அவருக்கு அறிமுகமாகவும் தேன்மொழி என்னும் பெண் குழந்தையும் பிறந்தது. உடனே மஹாகவியையும் ஆசிரியராகச் சேர்த்துக்கொண்டார். ’தேன்மொழி எனும கவிதைச் சஞ்சிகையும் 1955ல் ஈழத்தின் முதலாவது கவிதைச் சஞசிகையாகப் பிறந்து விட்டது.
காலம் முன்பனி பின்பணி 1993
2

குறமகள்
தங்கத் தாத்தா நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் அட்டைப் படத்தைத் தாங்கி முதலாவது சஞ்சிகை வெளிவந்ததும் கவிஞர்களுக்கு ஒரே ஆனந்தம் வந்து குவியும் கவிதைகளை மஹாகவி வீட்டுக்கு எடுத்துச் செல்வார். திருத்தங்கள் அல்லது தெரிவுகள் செய்வார். தொகுப்பர். நாவற்குழியூர் நடராசன். பண்டிதர் வீரகத்தி, அ.ந.கந்தசாமி. சோநடராசன் முதலிய பழையவர்களோடு புதிய கவிஞர்களுக்கும் இடம் கிடைத்தது. மரபு குன்றாத யாப்புக் கவிதைகளாக இருந்தாலும், புதிய கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. புதிய கவிஞர்களை ஊக்குவிப்பதற்காக வெண்பாவின் ஈற்றடிகளைக் கொடுத்து (உதாரணமாக, எங்கெழிலென் ஞாயிறெமக்கு, வீட்டிலே வைத்த விளக்கு) போட்டிகள் வைக்கப்பட்டன. மொழிபெயர்ப்புக் கவிதைகள், நகைச்சுவைக் கவிதைகள் இடம் பெற்றன. மஹாகவியின் கவிதை நாடகம் தொடர் கவிதையாக வெளிவந்து கொண்டிருந்தது. தலைப்பு மறந்து விட்டது. யாப்புத் தவறாத, ஆனால் பொதுமக்களுக்கும் புரியக்கூடியதான எளிமையான சொல்லாட்சி, கருத்துவளம் உள்ள கவிதைகளையே மஹாகவி ‘தேன்மொழிக்குத் தேர்ந்தெடுப்பார். வரதரும் புதுமைகளையே விரும்புபவர். எனவே தேன்மொழி யாவராலும் விரும்பப்படும் இனிமையையுடையதாக வெளிவந்து கொண்டிருந்தது. புத்தகம் அச்சிடுவது மாத்திரமல்ல கவிஞர்கள். எழுத்தாளர்கள். பிரமுகர்களுக்கு தபாலில் அனுப்புவதும் வரதர் தொழிலாயிற்று. இதனை இலக்கிய உலகம் வரதரின் வள்ளல் தன்மை எனக் கருதியதாற் போலும் இரு பத்திரிகைகளை நடத்தியவருக்கு பெருஞ்சிரமம். திணறல். அத்துடன் மஹாகவிக்கும் இடமாற்றல், வேறும் காரணங்களைக்
கொண்டும் ’தேன்மொழி ஆறு இதழ்களுடன் நின்று

Page 5
விட்டது.
தேன்மொழி தொடங்கிய காலத்தில், ஆசிரியா ஒரு நூலையாகிலும் வெளியிட வேண்டும். அது கவிதை இதழுக்குப் பெருமை சேர்க்கும் என்பது சிலர் அபிப்பிராயம். எனவே தனிப் பாடல்கள் சில தொகுக்கப் பட்டன. என்ன பெயர் வைக்கலாம் என்பது ஆலோசனை. ஒவ்வொன்றாக ஆலோசித்து ஈற்றில் வரதர் "வள்ளி என்றே வைத்துவிடும் உயிர்ப்பும் துடிப்பும் உள்ளதாகவும் இருக்கிறது. பெயரும் நமக்கு நெருக்கமாக இருக்கிறது" என்று சிரித்துக் கொண்டே சொல்லவும் மஹாகவியும் புன்முறுவலுடன் ஆமோதித்தார். வள்ளி என்றொரு பாடலும் அச்சிறு தொகுப்பில் இருந்தது. உருவத்தில் சிறியதாய் கவர்ச்சியான குங்கும நிறத்தையும், புல்லுக் கடகத்துடனும் ஆட்டுக்குட்டியுடனும் போகும் கிராமக் கண்ணியின் படத்தையும் அட்டையாகக் கொண்டு வெளிவந்த வள்ளியே அவரை மஹாகவியாக்குவதற்கு முதன்முதல் குத்தப்பட்ட முத்திரையாயிற்று.
மஹாகவி எமது திருமணத்தின்போது வரைந்து தந்த வாழ்த்துப்பா புதுமை நிறைந்தது. எட்டுப் பாடல்களுள் ஆறு பாடல்கள் எந்தத் திருமணத் தம்பதிகளுக்கும் மிகப்பொருத்தமானவை. தமிழ் மண்ணில் வாழும் புதுமைப் பெண்களுக்கு ஏற்ற கருத்துக்கள் கொண்டவை. இலங்கை இராணுவத்தின் தயவு இருந்தால் இன்றும் ஊரிலே அது வாழ்ந்துகொண்டிருக்கும். கவிதைகளால் வாழ்த்தியதற்குப் பிரதியுபகாரம் செய்யும் வாய்ப்பு அவர் வாழும்வரை கிடைக்கவில்லை. 1970-71 (மறதி) அவருடைய திடீர் மறைவு எம் போன்ற அவரது இலக்கிய நண்பர்களை உலுக்கிவிட்டது. அந்தியேட்டியன்று இரவு அளவெட்டியிலே நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில், மாலையுடனான அவரது பெரிய புகைப்படம் பின்னணியாக, கண்ணீருடன் சொன்மாலை
சூட்டும் துர்ப்பாக்கிய நிலையே எமக்குக் கிடைத்தது.
மஹாகவியின் சாந்தமான போக்கிற்கும்

கவிதைகளிற் காணப்படும் சிந்தனைகளுக்கும் தொடர்பேயில்லாதது போலத்தான் ஆரம்பத்தில் தோன்றியது. எமது அயலூரவர் ஆனபடியால் அவரது கவிதைகளின் பிறப்பு, களம் அத்தனையும் தெரிந்துதானிருந்தது. அந்த ஆழமான உணர்வுகளைப் புரிந்துகொண்டு ஒன்றி ரசிக்கக்கூடியதாகவும் இருந்தது. முப்பது அடி ஆழத்தில் தான் நீரூற்று வரும் கிணறுகள். கண்மணியாள் காதையிலும் மீண்டும் தொடங்கும் மிடுக்கு எனும் கவிதையிலும் யாழ்ப்பாண விவசாயி வாழ்கிறான்.
"ஆழத்து நீருக்கு அகழ்வான். நாற்று வாழத்
தன்னாவி வழங்குவான்
எனவும்.
"ஆழநீர் கொண்டு வாழ இளைஞர்
அகழ்கின்றார் தம் நிலத்தினைத் தானே
எனவும் அவர் அடிக்கடி தன் கவிதைகளில் யாழ் மக்களின் அவல நிலையை ஒரு தவிர்க்க முடியாத சவாலை ஏற்கும் பெருமிதமாகவே கொள்கின்றார். அத்தகைய ஆழமான உணர்வு, மனித நேயம். வாழ்க்கையின் மீது நம்பிக்கையும் பிடிப்பும், சமூகத்தில் வரும் எதிர்ப்புகள், எதிர்பார்ப்புகள். தோல்விகள் எல்லாம் இயல்பானவை அவற்றிற்கு எதிர்நீச்சல் போடுவதும் இயல்பானதே எனும் உள்ளச் சமநிலை இவைதான்
மஹாகவி என்பது அனுபவரீதியான உண்மை.
ஒரு படைப்பாளி தனது திருந்திய மனதிலே சமுதாயம் இப்படித்தான் வாழவேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டு காலத்தையும் களத்தையும் காத்திருப்பான். 1980களில் நாட்டில் பசுமைப்புரட்சி தொடங்கியிருந்தது. காடு கொன்று நாடாக்கும் பணி பலப்பட்டது. விவசாயப் புரட்சி என்றும் விவசாய மன்னர் எனவும் நாடு கலகலக்கத் தொடங்கியது. இளைஞர் ஊக்குவிக்கப்பட்டார்கள். ஆனால் கல்வியில் மேம்பட்ட
நமது பிரதேசமோ குடாநாட்டுக்குள்ளேயே வறுகி
காலம் முன்பனி , பின்பனி 1993

Page 6
வறுகிக் கொண்டு சந்ததி பெருகப் பெருகப் பரம்பரைக காணிகளைப் பங்கிட்டுப் பங்கிட்டு ஏக்கர்கள பரப்புகளாகி பரப்புக்கள் குழிகளாகிக் கூறுபட்டுக்கொண்டிருக்கவும் மக்கள் மனம் மேசை கதிரை உத்தியோகங்களையே நாடிக்கொண்டிருக்கவுமான நிலை கண்டு கவல்கின்றர் மஹாகவி காவியம் உருவாகிறது. அது மக்கள மத்திக்குச் செல்ல வேண்டும். களமும் வடிவமும் தேடுகிறார். அக் காலகட்டத்தில் கதாப்பிரசங்கம் பின்னணிக்குப் போக வில்லிசை முன்னணிக்கு வந்து கொண்டிருக்கிறது. அதையே ஏற்ற வடிவமாகத தீர்மானிக்கிறார். சாதித் தடிப்புள்ள மாவிட்டபுரம் களமாகிறது. அங்கே இன்றும் கலட்டியாகவே இருக்கும் உயனைக் கலட்டி வடமாகாணம் முழுவதும் செறிந்து கிடக்கும் தரிசு நிலங்களாக - இளைஞர் முயற்சியில் பக்குவப்பட்டு இளகுகிறது. சாதிப்பிரச்சினை கருவாகிறது. "கண்மணியாள் காதை" வில்லுப்பாட்டுக் காவியமாகப் பிறந்து விட்டது. யாழ்ப்பாணத்தை ஈழத்தமிழகம் என்று கூறி "ஏறி உயர்ந்த மலை இல்லையாயினும் என்ன? இருந்தன தோள்கள்" என எம்மவரின் முயற்சியையும் உயற்சியையும் சவாலை ஏற்கும் இரத்தத்தோடு ஊறிய பண்பையும் படம்பிடித்துக் காட்டுகிறார்.
மஹாகவியின் நூறு குறுமீபாக்களைக் கொண்ட தொகுதியொன்று புதிய உருவ அமைப்பில் 1968ல் வெளியானது. இக் குறும்பா வடிவம் அக்காலத்தில் தமிழுக்குப் புதியது. இளம்பிறை சஞ்சிகையில் அடிக்கடி வந்துகொண்டிருந்து பின் நூல் வடிவமாயிற்று. சமுகப் பிரச்சின்னயுடன் கூடிய பொருள் பொதிந்த புதுமைப்பாக்களாக அவை மிளிர்ந்தன. "ஒன்றும் ஒன்றும் மூன்று போன்ற சில குறும்பாக்கள் குறும்புகள் நிறைந்தனவாயும் சிந்தனையைத் தூண்டவல்லதாகவும் நாகுக்கான
நகைச்சுவை கொண்டவையாகவும் விளங்கின.
<°项ó 6x6) கலாச்சாரங்களுக்கு
முக்கியத்துவம் கொடுத்த காலகட்டத்தில் கிராமியக்
காலம் முன்பனி , பின்பணி 1993

கலைகளின் வளர்ச்சியும் புதிய நாடக முயற்சிகளும் மேலோங்கத் தொடங்கின. வெளிநாடுகளுக்குக் கலைப்பயிற்சி பெறக் கலைஞர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். மேல் நாட்டு நாடக விற்பன்னர் அங்கே வந்து சில களப்பயிற்சிகளை நடத்தினர். அக்காலத்திலே மஹாகவி கவிதை நாடகங்களைப் படைத்துக் கொண்டிருந்தார். இவற்றுட் சில மேடையேற்றப்பட்டன. மேல் நாட்டுப் பாணிகளிலும் கிராமியக் கலைகளிலிருந்தும் பெற்ற அனுபவத்திலிருந்து புதிய உத்திமுறைகளைக் கையாண்டு நாடகங்களை நெறியாள்கை செய்வதில் முதன்மை பெற்றவர் இன்று பிபிசி. தமிழோசையில் இருக்கும் தாசிேயஸ் அவர்கள். அவரது கடாட்சம் மஹாகவியின் கவித்துவத்தில் விழுந்தது. கவிதை நாடகங்களை வேறு பல கவிஞர்கள் ஆக்கியிருந்தாலும் அவை சிறிது கடினத தன்மையுடையனவாய் கற்றோர்க்கு மட்டும் புரியக் கூடியனவாய், கவிஞனின் புலமையையும் அறிவையும் வெளிப்படுத்துவனவாக அமைந்நிருந்தன என்பது எனது உறுதியான அபிப்பிராயம். ஆனால் மஹாகவி தான் ஒரு சாதாரண மனிதன் என்ற நிலையிலிருந்து யாருக்கும் புரியும் வண்ணம் இயல்பாக எழுதினர். இந்த எளிமையும் இயல்புமே தாசீசியஸின் இலட்சியமாகவும் இருந்தது. எனவே தாஸிேயஸின் நெறியாள்கையில் 'கோடை நாடகம் இலங்கை முழுவதும் மேடையேற்றப்பட்டது.
வேர்ணன் அபயசேகரா யாழ் அரசாங்க அதிபராக இருந்த காலத்தில் அரச ஆதரவுடன் கலை மறுமலர்ச்சி ஏற்படுத்தப்பட்டபோது நாடகக் குழுவினர் கோடையை மேடையேற்ற முயற்சிகள் செய்தனர். மஹாகவியவர்கள் யாழ்ப்பாணத்தில் ஓரளவு சமூகத்தில் பிரபல்யமாக இருந்தவர்களைக் கதாபாத்திரங்களாகப் போட்டு நடாத்த விழைந்தார். நீண்ட காலத்தின் ಆಷ್ಟ எமது வீடுவந்த கவிஞர் என்னை செல்லம் பாத்திரத்தில நடிக்கும்படி கேட்டுக் கொண்டார். நடிப்புக்காகத தன்னிலும் பிற்போக்குடைய பாத்திரத்திரமாக நடிக்க நான் ஒருப்படவில்லை. "உங்களைப் போன்றவர்கள் மேடையில் ஏறி நடித்தாலே முற்போக்குத் தானே எனத் தனது மென்மையான குரலால் வலியுறுத்திச் சம்மதிக்க

Page 7
வைத்தார். இதில் ஏ.ரி.பொன்னுத்துரை, வி.வி.வைரமுத்து, கவிஞர் கந்தவனம், தனேஸ்வரன முதலியோரும் நடிப்பதாக இருந்தது. இரண்டு, மூன்று தடவைகள் கச்சேரிக்குப் போய்வந்ததோடு ஏனோ அது நின்றுவிட்டது. மஹாகவியின் மறைவின் பின்னர் 1980களில் குழந்தை சண்முகலிங்கத்தின் நாடக அரங்கக் கல்லூரியினரால் தாசீசியஸின் நெறியாள்கையில் 'கோடை மீண்டும் யாழ்ப்பாணத்தில் உலாப்போந்தது. களப்பயிற்சி காலங்களில் அடிக்கடி சமூகமளிப்பதுண்டு.
இதன் பின்னர் மஹாகவியின் புதியதொரு வீடு எனும் கவிதை நாடகம் என்னுள் காத்திரமான தாக்கத்தை விளைவித்தது. இந்நாடகத்தை உருவாக்கவும் இசையமைக்கவும் தாசீசியசும் மஹாகவியும் மன்னார், புத்தளம், நீர்கொழும்புக கடல்களிலே மீன்பிடி வள்ளங்களில் இரவு நேரங்களிலே பிரயாணம் செய்வார்களாம். தொழிலாளர்களின் பாடல்களைச் செவிமடுப்பார்களாம். சாதாரணமான ஒரு கதையை குறியீடுகள் உத்திமுறைகளைக் கையாண்டு ஏற்ற இசையும் அமைத்து மேடையேற்றினார்கள். இந் நாடகம் 1979 ல் என்று நினைக்கிறேன். பாடசாலை நாடகப் போட்டியொன்றுக்கு சென் ஹென்றிக் கல்லூரிப் பழைய மாணவனான தாசீசியஸ் நெறியாள்கை செய்ய அக்கல்லூரி ஆசிரியையாகிய நான் பயிற்சி உதவியாளராக இருக்க மாணவர்கள் றேமன், கலிஸ்ரா, ஜீவதாஸ், ஸ்ராலின் முதலியோர் நடிக்க சுலபமாக வெற்றி விருதுகளைத் தட்டிச் சென்றது அது. அப்போது ஒவ்வொரு வார்த்தையும் எழுத்தெண்ணித் தெரிந்திருந்தது. எவ்வளவு அர்த்தபுஷ்டியும் ஜீவகளையும் உள்ளவையாக அவை இருந்தன என எண்ணும்போது மஹாகவி எப்படி சாதாரண மக்களுடே பழகி - சாதாரண பேச்சு வழக்கை இயல்பாகக் கையாண்டு பொதுமக்கள் பிரதிநிதியாக விளங்கியிருக்கிறார் என மகிழ முடிகிறது.
"சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும் சிலவேளை அதை வந்து அலை கொண்டு
-போகும்"

தாசீசியஸின் நெறியாள்கையில் பாடல்களிலே பாவம், இசையிலே பாவம் நடிப்பிலே பாவம், காட்சியிலே, ஒளியமைப்பிலே பாவம். மொத்தமாகவே உணர்ச்சிப் பின்னல் சபை மூச்சு விடுவது கூடக் கேட்காத அளவுக்கு நிசப்தம். ஆம் மஹாகவி வாழ்கிறார். இன்றும் வாழ்கிறார். கனடாவிலும் சென ஹென்றிஸ் மாணவர்களால் மீண்டும் மேடையேற்றும
முயற்சி நடைபெறுகிறது.
இன்னமும் ஒன்றைக் கூறாது விடின் எண் அனுபவங்களும் குறையுடையனவாய் விடும். மஹாகவியின் தனிப்பாடலொன்று "மீண்டும் தொடங்கும் மிடுக்கு" என்பது. இது தமிழ் எட்டாம் வகுப்பு பாடநூலில் இடம்பெற்றுள்ளது. இக்கவிதை எனக்கு மிகப் பிடித்த ஒன்று. அடிக்கடி இயம்பி இயம்பிக காட்சியொன்றும் மனதில் உருவாகி இருந்தது.
மஹாகவியின் சொல்லாட்சியில் நமது வீடுகளில் பேசிவந்த சில இயல்பான சொற்கள் (நம்மால் மறக்கப்பட்டோ மறுக்கப்பட்டோ இப்போ வழக்கொழிந்தவை) சங்கைப்பிசகு, பஞ்சியாய் கிடக்கு, ஏன் கொதிக்கிறாய், வியழங்கள் கேட்கிறது. திங்களோடு திங்கள் எட்டு, கரண்டகம், உப்புக்கரிச்சல், பேந்தென்ன எனப் பல காணப்படும். இவை மேலும் மெருகூட்டும். வலிந்து புகுத்தப்படுவதில்லை. இப்படியான ஒரு சொல் 'மிடுக்கு. இதற்கு முயற்சி என்று பலர் பிழையான பொருள்கூறிப் படிப்பித்துள்ளனர். இப்பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த சோ.பத்மநாதன் கூட அதன் பொருளைக் கொண்டுவரத் தடக்கெடுக்கிறார். இயற்கையே எதிரியாகி கமக்காரனின் முயற்சி பலனளிக்கும் அந்த நேரத்தில் பயிரை அழித்துவிடுகிறது. இதனைக்கண்டு அவன் சோர்ந்து மூலையில் இருந்து விடுவதில்லை. மிடுக்குடன் மண்வெட்டியைத் தூக்குகிறான். சவால் விட்ட இயற்கைக்கே சவால் விடுகிறான். உடலில் உயிா இருக்கும் வரை உழைத்தே தீருவேன் எனும் வீறாப்பு.
1977ம் ஆண்டு பட்டப்பின் படிப்பு நாடக
காலம் முன்பனி பின்பணி 1993

Page 8
டிப்ளோமா பயிற்சி. கற்பித்தல் பரீட்சை, வகுப்பறைப பாடமொன்றிற்கு நாடக முறைக் கற்பித்தல் செய்யவேண்டும். பலரும் நாடக ரூபமான கதைகளைத் தேர்ந்தெடுத்தனர். மஹாகவியின் இப்பாடலையே தேர்ந்தெடுத்தேன். வகுப்பு மாணவர் அனைவருமே பங்குபற்றக்கூடியதாக,
"சப்பாத்தி முள்ளும் சரியாக விளையாத
மண்பாறைபாறை பிளந்து பயன் விளைவிப்பான் என்னூரான்"
ஆம் கிணறு வெட்டப்பட்டது. நீர் இறைக்கப்ப்டது. காளை உளமாட்டாது சோர்ந்தது. மண்வெட்டி உபயோகப் படடது. நாற்றுக்கள வளர்ந்தன. ஆடி அசைந்தன. கதிர்களைத் தாங்கி நடனமாடின. அவற்றைக் கண்டு கிறுகிறுக்கிறான உழவன். மின்னல் இடிமுழக்கம், கொடுங்காற்று. மழை, பயிர்கள் வீழ்ந்து வெள்ளத்தால் அடியுண்டு போயின. மயான அமைதி, உழவன் வருகிறான். வானத்தைப் பார்க்கிறான். மீண்டும் மண்வெட்டியைத் தூக்குகிறான். மாணவரெல்லாம் உயிரற்ற பொருள்களாக மாறி ஒரு நாடகமே நடந்தது. வேற்று மொழியாளர்கள், பரீட்சகர்கள் மெய்மறந்திருந்தனர். அந்த வகையில் மஹாகவி அவர்கள் நிறைந்த பாராட்டுக்களையும் ஏ புள்ளிகளையும் வாங்கித் தந்தார். மறைந்தும் நன்மை செய்தவருக்கு நன்றி சொல்ல வேண்டாமா ?. இதனைப் பின்னர் யாழ் நாடக அரங்கக் கல்லூரிக் களப்பயிற்சியில் அறிமுகம் செய்து வைத்ததோடு அரங்கக் கலையும் நாடகமும் எண்ற பாடத்தின் கலைத்திட்டத்திலும் சேர்த்துள்ளோம்.
மஹாகவி வாழ்ந்த குறுகிய காலத்துள் நிறைந்த தடயங்களை விட்டுச் சென்றுள்ளார். கவிதைகள், கவிதை நாடகங்கள், வானொலி நாடகங்கள் எனப் பலவிதமான ஆக்கப் பணிகளைப் புரிந்துள்ளார். சில கலைஞர்களோடு மட்டும் ஆத்மபூர்வமான தொடர்பு ஏற்படுகிறது. அத்தகையவர்களில் மஹாகவியும் ஒருவர். குறைந்த வயதில் மறைந்து விட்டாலும் அவரது
காலம் முன்பனி , பின்பனி 1993

எழுத்துக்கள் மூலமாக அவர் இன்றும் வாழ்கின்றார். உள்ளார்ந்த உணர்வுகள் ஒரு கால கட்டத்துக்கு உட்பட்டவையல்ல. அவை சமுதாயத்தில் என்றும் வாழ்பவை. அத்தகைய சில கவிதைகள் அவர் என்றும்
வாழக்கூடிய தகுதியையும் பெற்றுவிட்டார்.
C&ES CESES CERES
LAKES FJ
* BIRTHDRAWS
ENGAGEMENT
* AND ALL OTHER OCCRS ONS
சகல வைபவங்களிற்குமான
கேக் ஓடர்களுக்கு
திருமதி வசந்தா ஆனந்தராஜா
BRDAL HAR DRESSING AND HARDO FOR ALL OCCASIONS...
இத்துடன் அனுபவம் வாய்ந்தவரால் சிகையலங்கார வேலைகள்
TEL: (415) O754

Page 9
au af als: Logopurases?
சிகரத்தை நாண் அமைப்
நன்றாக இல்லையென நாச்சவுக்கை வீசுகிறார் நண்பா, அறிந்திலரா நல்லவையிை? சிச்சி எ பொன்றாத பச்சைடளம்பொத்து வெடித்துக் பூத்து நிறைந்துளதைப் புவி கவனிக் காவிடி இன்றப் பழங்கம்பன் எம்மிடையே மீண்டுள்ள என்றெழுந்து நின்றாடர் ஏதிலர்கள் என்றாலும் என்தாளெலாம்எழுத்தே எழுத்துக்கே என்ஆ குன்றாது காண், எதெவர் கூறிடினும் என்மூச்
இல்லாத கற்பனையை இங்கிழுத்துக் கொண் இனிக்காது தென்மொழியும் என்றெழுதிக் கா சொல்லால் உறுத்துபவர் சூழ்ந்திருக்கும் உ6 கம்மாஇருக்கமுடி யாமலொரு சோம்பேறி கல்லாய்ச் சமைந்த தமிழ்க் கவிதைக் குயிரூ காதைக் கொடுக்காது. கருத்தை வழங்கிடில் செல்லாது போய்விடுமே .ே இதைநான் அறி செந்தா மரை மலரைச் சேறறிய மாட்டாதே!
இன்னஇவன் கூறுகிறான் இதுஇத் தகையெ இங்கெமது 'சிங்களர்கள் இன்னும்உணராவி பொன்ணைஇது பொன்னென்று போற்றத்தெரிய பொய்புகழ்ச்சி யால்என்னைப் போர்த்தாமற் போ என்ன? இவையெல்லாம் இங்கெவர்க்கு வே6 எழுத்தைப் பிறருக்காய் இறக்கிட என் சிந்த சின்ன மனிதர்க்காய்ச் சிறிதாக்கத் தேவையில் சிறப்புக் கொருபுதிய சிகரத்தை நான் அமைப்

Uଇi
வி
க1
tடுவந்தே ட்டிஎமைச் ன்னாட்டில்
ட்டிக் ), ஆம், luxano
1ணும். தார் னாலும் ண்டும்போ னையைச்
லை!
பேன்!
SYGaaib yaituaí • dikiana 1993

Page 10
aiaf ail: ingnorseáil
அண்டம் முழுதும்அளந் தறிவைஎடுத் தூ அந்திச் சுடர்வானை அப்படியே தீட்டஅயல் மண்டும் கொடுமைகளை மாய்த்தறமே நாட் மாசற்ற இன்பவெறி மக்களிடை மூட்டவரி வண்டைப் புறங்காண வார்த்தைகளை மீட் வாழும் இலக்கியங்கள் வார்த்துயர்வு காட்ட கொண்டேன்கொடுக்கின்றேன்கொள்ளாவிட்ட கோதைப் பழமென்போர் குறைகள்கண் டால்
பிஞ்சுப் புதுநெஞ்சைப் பீறிட்டுப் பொங்கிவரு பேச்சில், பிறநாட்டர் பெறாதபெரும் பேற்றில், மிஞ்சித் தெறிக்கின்ற மேம்பாட்டுப் பாட்டில். மீறிப் பறக்கின்ற மின்சார வீச்சில், அட
கிஞ்சித்து மேஅழகு கிடையாதாம். கேட்டா கேடுற்றவரிடையே கெட்டழியா தென்னிடே எஞ்சிக் கிடக்கின்ற இன்தமிழ் இவ் வெண்பா எண்றைக் கொருநாளோ எத்திசையை யும்6ெ
காலம் முன்பணி ; பின்பணி 1993 8

ட்ட அதோ
زU)69.ا۔
டிப்பல்
Louisů
ால்என்ன?
என்ன?
நம் e Luíslir
ur?
酸
ாக்கள்.
வல்லும்

Page 11
en af af: Lingap Frasesso
கிராமம்
நாள் முழுதும் பாடு படு வார்கள்நன்று புரி வார் இரங்கு வார்கள் ஆள் புதியன் ஆனாலும் ஆதரிப்பர் போய்உதவுவார்கள்-ஊ
மாரிகளில் ஆறுவழிந் தோடும்-இ மக்களும் மகிழ் வடைதல் கூடும் ஏரை எடுப் பார். உழுவர்
எங்கும் பயிர் காற்றில்அசைந்தாடும்
நீண்டவயலில்மழைநீர் தேங்கும் நெற்பயிர்கள் அங்கதனை வாங்கும் பூண்ட இளம் பாவையர்கள் போன்று அவை பொற்கதிர்கள் தா
தோப்புகளில் மாமரம்ப முக்கும்-ெ தொத்தும் அணில், சிறுவர்கள்.கி சாப்பிட அளிக்கும் அது சண்பகப்பூக் காற்றினில்ம ணக்கும்
ஆட்டிடையன் பாட்டினிமை கூட் அந்தஇசை வந்துஅயர்(வு) ஒட்டு நீட்டி அதோ வேப்பமர
நீழலிற் படுத்துறங்கு பாட்டும்-தா
பூமலியும் பொய்கைமகிழ் வாக்கும் பேர்அருகில் குயில்பாடல் கேட்கும் நீ மடிந்ததென்றிருந்த
நின்கவிதை யுணர்வுதலை தூக்கு
நல்லவர்களுக்கிதுதான் நாடு-ெ நாகரிகத் துக்கப்பால் ஒடு முல்லை நடு பக்கத்தில் மூன்றறைக ளோடுசிறு வீடு-போ

-Lussarond Guid.
56ק60פ-ר (
ங்கும்-எப்பங்கும்!
னை
assics, is
-உயிர்க ளிக்கும்.
டும்
ம்- கால்
AvTL’6uñ!
-அங்கு
ம்-பா ஆக்கும்
தும்எடு ஏடு
கானம் முன்பனி , பின்பணி 1993

Page 12
aQv Ruf ad: Logamp Tasosß
ljúlIaló d
இந்நா ளெல்லாம் எங்கள் வீட்டு பொன்னெச் சிச்செடி பூத்துச்செ முல்லையும். அருகில் மல்லிகை கொல்லெனச் சிரித்துக் கொண்டி அல்லவோ ? வயல்கள் எல்லாம் நெல்நிறைந் திருக்கும்என் நாட் பாடாத உழவன் பாடுவான் துல
ஆபாது நிற்க்கும் அன்றோ இன்
யாழ்ப்பா ணத்தை யான்அடையே கூழ்ப்பா னையின்முன் கூடிக் கு இருந்திலை கோலி இடுப்பில்இ கரம்தெரிந் தூற்றும்அவ் விருந் பட்டினி போக்கா பழம், பால், இ6 ஒட்டஸிலின் முட்டை ரொட்டிக பழஞ்சோற் றுண்டி கிழங்கொடு வழங்கலை நினைத்தால் வாயூ ர
கடவுளே உடனே உடுத்துக் ெ அடுத்த ரயிலைப் பிடித்துக் செ யாழ்ப்பா ணத்தை யான்அடைவே தாழ்ப்பாள் இட்டுத் தனிப்பெட் டி நித்திரை போய்ப்பின் நிமிர்ந்துபா அத்தரை அன்றோ அடடா, அர் பெற்றபொன் னாட்டைப் பிரிந்தினி சற்றும்இக் கொழும்பில் தங்கேன்
முலைஇளம் முளைகள் முனை கலைகுறைத் தணியும் கன்னியர் தலைஇழந் தேநாம் தடந்தோள் சட்டைகள் கைகள் முட்ட இட் பட்டிகள் கழுத்தை வெட்ட விட கொட்டிடும் வியர்வையிற் குமை விட்டெறிந் தெண்சாண் வேட்டி முட்பொழி யலாம்.அம் மூதூர் ெ
காலம் முன்பனி , பின்பணி 1993
1 (

பனோ!
ந்தி
ட் டுட்டிய தருந்திலணேல்.
வவூா ள் அன்னை
பிசைந்து ாதோ ?
காண்டு. ாள்கிறேன்! வனே!
யிலே
ர்த்தால், தப்
மேலே ! இங்கே,
ந்தெழுவதனைக்
காட்டவும்,
ஒளிக்கும்
டும்
ட்டும்,
வதா?இவற்றை
கட்டி
சல்வேன்

Page 13
en af af: Loganprasesió
காதவியாள்
கன இருட்டைக் கதிர் கிழிக்கக் கஷ்டமெலாம் மறந்துவிடக், காற்று நினைவொடு யான் சென்றிருந்தேன நீள்நிழல்கள் நிலத்தினிலே கோலங் மனமுருகக் குயில்பாட மயில்களா மாமரங்கள் மலர்ந்துமணம் வீசுஞ்
எனைமறந்து நடந்துசெல. எந்தன் ஈர்த்தணைத்தாள் தென்றலவள். அ
வளைகின்ற இடையினிலே குடயெ வார்குழலில் வாயவிழும் வசனம் ஏ கிளிமொழியாள் என்னுடைய நெஞ் ஹிருதயத்தி லேபொருத்திச் சென்ற அளிமொய்க்கும் அலங்காரப் பதும ஆவியெலாம் உருக்குகிற அழகு
குளிர்கின்ற பூநிலவை முகில்வென கிழிசலினால் மூடியபோல் மூடிச்செ
தாசியவள் தலையிருந்து தண்ண தனக் குவியல் தனில் தவழும், தர வீசுகின்ற காற்றினிலே புரண்டு பெ விளையாடும், வனப்பினுக்கு வனப் மாசியிலே பனிப்புகார் படர்ந்த போ மலர்ந்தொனிக்கும் வெயில்போல, ம தேசொழும் முகம் பார்த்தால் கண் தேன்மொழியாள் என் நெஞ்சை அ
நடையழகில், நவமணிகள் இழை நயனத்தில் நெளிந்தங்கே நடனமாடு இடையழகில், இருதனத்தில், இரு இரண்டாக்கி ஓடுகின்ற எழில் வகி படையடையாய் வந்தின்பம் பாய்ந்த பரிதவித்தேன் பாடுபட்டேன்! பட்ச கடைவிழியில் கருவண்டைச் செ
கக்கவிட்டாள் காதலியாள் கண்டே

566) is
வாங்கும்
ர், சோலையூடு.
கீற.
டும்.
சோலை,
ஆகம்
ந்த நேரம்
மான் றேந்தி, ந்தி, சைக் கிள்ளி, ாள் மாது ப் பூப்போல், மார்பைக்
ன் பட்டுக் ன்றாள்!
ரீர் சொட்டித் எமாகும். ங்கும். புக் கூட்டும்
5. ங்கையானின்
5ள் கூசும்,
ள்ளிவிட்டாள்
ந்த வாயில்,
ιδ
ளைப் பிய்த்து ட்டில்
போது ம்பொங்கக்
லுத்திக் காதல் ன் இன்பம்!
காலம் முன்பணி பின்பனி 1993

Page 14
an siad: ingnorself
காதலுக்காய் மணக்க வேண்
எண்ணமெலாம் நானாகி.இரவில் பாதி இமைதிறந்த படியேநீ இருப்ப தெல்லாம் பெண்ணரசி, அறிவேன்நான். நான் உனக்காய்ப் பிறந்திருப்ப தறிவாய் நீ. எனினும் கேள். இம் மண்ணிலே வளர்கின்ற பயிர்தான் காதல், மாறும்.கூடும்.குறையும், மடியக்கூடும்! விண்ணிவர்ந்த பொருளல்ல. காமமென்ற வேர்விட்ட தளிர்தானே காதல் கண்ணே
ஆதலினால் சொல்கின்றேன் எனது கைக்குள் அகப்பட்ட கிளைக் குயிலே சிந்தித்துப்பார். காதலுக்காய் எனைமணக்க வேண்டாம்பெய்யாய் கல்யாணம் நடுக்கடலை ஒக்கும் அங்கே மோதுகின்ற புயற்பட்டுக் காதல் தோணி மூழ்கிவிட வும்கூடும். நாங்கள் எந்தப் போதுமே தனித்தொன்றாய் இருக்கும்போது புளித்துப்போய் விடக்கூடும் காதல்கூட
புன்னகை ஒன்றுக்காகக் காத்திருந்து பூரிப்பேன் கிடைத்திட்டால், அடியே எங்கள் இந்நிலை எந் நாளுமே இருக்கும் என்பது) இயல்பில்லை இவ்வுலகத் திற் கில் வாழ்க்கை உன் அழகை மலிவாக்கும் எனை உய்விக்கும் உன் அன்பு கூடத்தான் பழகிப் போகும், என்னடிநீ இவற்றை எலாம் யோசித்தாயா ? எனையேகைப் பிடிப்பதற்குத் துடிக்கின்றாயே!
காலம் முன்பணி , பின்பணி 1993

LATIð
ஒருநாளும் எண்ணாதே விவாகமென்றால் உல்லாசம் தானென்று நம்மணத்தை விரும்பாத பெற்றோரின் வெறுப்பைக்கூட வென்றாலும், தவறாமல் சுற்றிச்சுற்றி வருகின்ற தொல்லைகனைத் தாண்டினாலும் வறுமைக்குத் தோற்கத்தான் வேண்டும்எங்கள் வருமானம் போதாமற் போனால், அன்பும் உருமாறிப் போகும்மற் றெதையும் போல
சற்றேகேள் காமமோ உடலின் வேட்கை, அதேபோலத் தான்காதல் உளத்தின் வேட்கை மற்றொன்றுண்டு). அதுவேண்டும் மனைக்குகாதல் மட்டும்போ தாதென்பேன். மாசில்லாத கற்பென்ற ததுஎன்றும் கலங்கிபாத கல்நெஞ்சு இல்வாழ்வின் உயிர் அதன்றோ பொற்பாவாய், புரிந்ததுவா? புரிந்ததென்றால் புறப்படுவாய் வா போவோம். வாழ்வில் ஒன்றாய்!

Page 15
a afa: Insorsal
காதலும்
கடல்மணலைக்
கண்முலைகளை உடல்சோர வரு அதுவுந்தான் உ வடிவாகப் பழுத்த வீழ்ந்தழுகித் தா6 இடையுந்தான் இ இல்லைகா மத்தி
பாற்கடலில் ஆல பழுதாகும் பாயும காற்றலைக்கும் ச கார்முகிலாய் இரு காற்சிலம்பும் சை கைவீசி வருகின் தோற்றுவிட்டால், ஏற்றுவிட்டால், ச
முத்திருக்கும் ப மயங்கிவிட்டால்,
எத்திவிட்ட பின், ஆதலால் அணங் பத்தாதில் வாழ்க் பாதையெது வா அத்தானும் நானு என்றுசொலும் க
3

ID
குவித்தாற்போ லேயிருக்கும் ச்செதுக்கும் காலச்சிற்பி கின்ற முதுமையாலே டைகிறது முழுதாய்முற்றி
பழக் கன்னமெல்லாம் ன்போகும் துடியைப்போன்ற, }ப்படியே இருக்கப்போவ(து) நிற்கும் உண்டேஎல்லை
மாம் கண்ணின்வேல்கள் ா பின்னும் ? தென்றற் கருங்கூந்தல் முகில்என்றும் நக்கமாட் டாது வெள்ளிக் வளையும் கதைத்துக்கொள்ளக் றாள். காலத்திற்குத்
நடைதளர்ந்து கையிற்கோலும் ாமத்திற் கிடம்அங்கேது ?
வளத்தின் சிமினில்மட்டும் அவற்றையெல்லாம் காலக்கள்வன் ஆசை ஒழிந்துபோகும்! கேயுன் எழில்களெல்லாம். கையிலே பயணம்போக.
னாலும் கஷ்டப்பட்டும். மாய்ப் போகவேண்டும் தலுளம் அதுவும்வேண்டும்.
காலம் முன்பணி பின்பணி 1993

Page 16
awaf ad: Logansparsaf
அன்பினால்
இரவுக்குப் பாலூட்டு அம்மகவைப் பிரிவாக சிரித்தமலர் அந்தியிே சென்றுவிடும் மணெ உருவத்தில் எரிமூட் உடலால் என் னுடன் பிரியமாட் டாயே என்
பிரிக்காவே இனிஎம்ை
போற்றி வைத்து வள போகும்!கைப் பிணை ஊற்றினிலே நன்றாக உ இறுக்காது பின்னரும் காற்றடிக்கா தெந்நாளுட காலமெலாம் வசந்தமின் ஆற்றொணா முதுமை அன்பினால் ஒன்றாகி வ
கானம் முன்பனி , பின்பணி 1993

ஒன்றாகி
மதியென்னுந் தாய் ாம் காலை முற்றும்
வாடிப்போகச் ல்லாம் எங்கோ வாழ்ந்த
உயிரும் போகும்! ன்றாய் இருக்கின்றாயே, பிரியே. என்றும்? ம உலகில் ஒன்றும் ?
ர்த்த ம்லர் கொடியைவிட்டுப் ப்புந்தான் இன்பமென்ற ாறி விட்டால் இந் நாட்டில் தென்றற் $1 புயலும் வீசும்! லை ஆதலாலே
வந்தால் அதிலுந்தானே ாழ்வம்மானே!
14

Page 17
a'afa: laporses
எட்டாக் கனி
என்னன்பே தோழி, எதைெ கன் நெஞ் சுடையாள்அக்
என்னை.
மகிழ்ந்தேன் புதிய மணாள இகழ்ந்தாளாம் என்ன இது
அன்புடையர் என்னை அற வன்புடையார் தந்தை வை இன்படைய, என்றோ நினைந்ன்ே இயலா அன்றோ துறந்தாள் அடி ?
அப்பன் அதட்ட அயலர்கள் எப்பாடு பட்டேன் என உண அப்படியே. என்னைத் தனியேவிட் டெ என் மீதி லேயா பழி ?
காத்திருந்தேன் அன்று கன பூத்ததுதான் உண்டு புனல் நீத்தே.
அகன்றோ ரிடமென் அவல; புகன்று வருவாயோ போய்
தமிழர்க் கிதுதான் தகுமோ அமிழ்தேபோ. ஆற்றோரம் நீ தமியாளை. நட்டாற்றில் விட்டு நகர்ந்தார் எட்டாக் கனிநான் என

பன் றுரைப்பேன்நான்?
கண்ணம்மாள்
ரைக் கொண்டென்(று)
2
மறந்தார். பொல்லாத கையறியேன்
த பெண்ணை அவர்
ர் தூற்ற, தான்
яцяй!
கோ அவர் மறைந்தால்
Xurni (96)
விழிகள்
த்தைச் சற்றே
ர்க்குச்சொல்இனிமேல்
5 காலம் முன்பணி பின்பணி 1993

Page 18
a fall: Laporsal
புதுநாயகி
ஏட்டிற் தமிழில் எழுதப் படுதற் கெனது எத்தின் கூட்டுட் கிடந்து குமுறா(து) அவிழ்ந்த குழலை முடித்(து) ஒட்டம் பிடி! இங் கிரண்டொரு நூறாண்டு) உனை இனி என் வீட்டுள் அடுக்க விரும்பேன் அகல விலகி இரு
நீங்காமல் என்றன் நினைவே முழுதும் நினைக் களித்துப் பாங்கான தென்றெப் பயலும் புகலாத பாட்டெ முதித் தூங்கா திருக்க இயலா தெனக்(கு) ன் துணைக் கினிமேல்
ஏங்கா தடிஎன் மனம் ஒரு போதும், எழுந்து நட
ஆளாகி, என்ன அடைந்து விட்டேன் நான் ? அடி கவிதை மூளா திணியும். முடியாதெனக்(கு) என் முழுப் பொழுதும் வாளாய் விழிகொண் டவள் ஒருத் திக்கு வழங்கி விட்டேன். தோளால் அகன்ற துகிலே சரிசெய் தொலைந்து விடு!
காலம் முன்பணி ; பின்பணி 1993

அத்தைக்கு வாய்த்த மகனே இருக்க, அவளை மறந்(து) எத்திக்கும் என்னை இகழும் படியுன்னிடம் அடைந்து. கத்திக் களைத்தேன். தமிழ்நாடு கேட்டுக் களைத்த(து) இனிப் புத்திக் கலக்கம் சிறிதேனும் இல்லை புறப் படு நீ!
கன்னஞ் சிவக்கக் கனிவாய் துடிக்கக் கவிழ்ந்த படி சின்னஞ் சிறிய அடியே பெயர்த் தொரு சிற்றிடை யால் என்நெஞ்சை முற்றும் இனிஆளு வேன் என்றிதோ வரும்அப் பொன்னின் சிலை என் புதுநாயகியடி போய்விடு நீ!

Page 19
a fad: in aprasa
தாமதம் ஏன் ?
கைத்தேனா உங்களுக்கு ? கால்நடையில கூடக் கந்தோர்விட் டெப்பொழுதோ வந்திருக்கக் கூடும்! பத்தான தேமணிஅப் பாவருவார் என்று பார்த்திருந்த கண்மணியாள் போய்த் துயின்று விட்டாள் அத்தான்.ஏன் வீடுவர இவ்வளவு நேரம் ? ஆவலுடன் உங்களுக்காய்க் காவலிருந் திங்கே பித்தானேன் நான். நீங்கள் போயிருந்த தெங்கே ? பேதைஎனை யோமறநந்தீர்? தாமதம் ஈ தென்ன ?
'பால்மொழியே. நான்உன்றன் பக்கத்தை விட்டப் பால்நகர மாட்டேன்'என் றெள்வளவோ சொன்ன ஆல்விழுதே என்றன்ஒரே ஆதரவே அத்தான்! அந்தரித்துப் போனேன்நான். அண்டையிலே உள்ள நூல்நிலையம் போய்வரவா இவ்வளவு நேரம் ? நூறுதரம் வாசலிலே வந்துவந்து நின்று கால்கடுக்க லாச்செனக்கு கடைத்தெருவில், என்ன. கம்பனைக்கண் டோ பேசிக் கொண்டிருந்தர் அன்பே ?
ஓடிவந்து வெண்மணல்மேல் வீழும்போய் மீளும், ஒயாஅந் நீள்அலைக ளோடுவிழி ஒன்றி நாடியிலே கைகொடுத்துக் கொண்டிருந்தே காற்றில் நாழிகழித் தீர்களென நம்பிடவா அத்தான் ? தேடிஇங்கே நான்கிடந்து தேம்பிடவும் விட்டுச் சென்றதுவே றெங்கே?செந் தேன்காதிற் சிந்தி வீடடைந்தால் மீட்டேனோ வீணையினை ? இன்று வேண்டாமல் போய்விடுமோ பாண்டிய,என் பாட்டும் ?

விண்புதிய தொன்றோ?அவ்விண்ணைநிறைக் கின்ற வெள்ளிகள்என் னும்கிறிய புள்ளியின்கூட்டத்தில் கண்பதிந்தால் என்நினைவு காற்றோடும் போமோ ? காதல.ஏன் வீடுவரத் தாமதமாயிற்று ? நண்பர்களோ டேகூடி, நாலடிக ளோடு நாள்ஒன்று போக்குதும் நன்றோ?அங் கங்கே உண்பதனைக் கூடமறந் துட்கார்ந்தே என்றன் உள்ளத்தை வாட்டுவதில் இன்பமுமோ உண்டு ?
வந்துவந்து மோதுகிற வார்த்தைகளின் உள்ளே வாராத வெண்பாவின் ஈற்றடியைத் தேடும் சிந்தனையோ யாப்பிடையே சிக்கிவிட'என்ன சேதி? எனும் தோழர்க்கும் காதுகொடுக் காது எந்த ரயில் வண்டியிலே ஏறிவழி மாறி எங்குவரை போனிர்கள் என்னுடைய அத்தான்? செந்தமிழை நான்வெறுக்கச் செய்கிறதோ வீடு சேர்வதற்கும் பித்துவதோ தான்இருக்கும் போது?
காலம் முன்பணி பின்பணி 1993

Page 20
ad diff: Dingaporsaf
அற்புதம் ஒன்று !
ஐயர் வளர்த்த அப்புகை மத் தருகே, நீர் பெய்து மகிழ்ச்சி கணணை மறைக்கப் பெரியோர்கள் "உய்க! உயர்க" என்றுரை ஈய, உலகின்முன் கைபிணை பட்ட காலையில் இன்பக்
கடலுட்போய்க்
குப்புற வீழ்ந்த அப்புத நாளிற் குறை உண்டே கைப்புள தேநற் காதலும் இன்றே
கலையாத சொப்பனம் இல்வாழ் வென்றறிகின்றேன்! சுவைகண்டேன்! அற்புதம் ஒன்றை ஆஒரு தாதி அறிவித்தாள்
உங்கள் அகத்தாள் ஓர் மக வுற்றாள் எனும்இன் சொல் அங்கவள் தந்தாள் ஆவி சி லிர்த்தேன்! அடடா அச் செங்கைஅ சைத்துச் சின்னம லர்வாய் அலர்வித்துப் பொங்கி அழக் கேட் கப்பெறுகின்றேன் புறநின்றேன்!
காலம் முன்பணி பின்னி 1993 1

நொந்துநடந்தாள் நுண்ணிடை வெள்ளை நுதலின்மேல் வந்து விழுந்த கூந்தல் அகற்றா
மதி ஓர் ஈர் ஐந்து கடந்தென் ஆவலின் எல்லைக் களவிட்டின்(று) இந்த இனிக்கும் இன்பமழைக்குள்
எனை விட்டாள்!
இன்றுடன் என்றன் இனல் அகன்றேன். இனி அந்தக் கன்று விழித்துக் காலைம டித்துக்
கடைவாயில் நன்றுக டித்துக் கொண்டு மு கிழ்க்கும் நகைகாட்டக்
கண்டு கிடந்தென் கால முழுக்கக்

Page 21
an aff: Ingaprases
இப்பொழுதே துர்கிவிடு
ஆற்றின் படுகை யெலாம் ஆற்றுமணல் தான், தண்ணி ஊற்றுக் கிடையாது. உங்கள் தமிழ் நாட்டினிலே
மாரிகளில் ஓர் சிறிது மழையுண்டு), அதற்காய் இவ் ஊர், உழவர், ஆறு, குளம் ஏரியெலாம் காத்திருக்கும்
பச்சை மரம் காணாமல் பல காதம் போய் வருதல் இச்செந் தமிழ் நாட்டில் இயலுமடா என் மகனே!
பஞ்சுத் துணியில்லை. பசி பஞ்சம் உண்டோ நெல் கொஞ்சம் விளைகிறது, கொடுநோய்கள் தான்அதிகம்.
இந்த நிலையினையே சிந்தித்துக் கொண்போ என் மைந்த, துயிலா(து) அம் மா வென் றலறுகிறாய்

தூங் கென் குல விளக்கே தூங்காயோ ? தூங்காயோ ? நீங்காத தொல்லை நிறைந்த தமிழ் நாட்டினிலே,
இப்பொழுதே தூங்கிவிடு இல்லையெனில் பின்னாளில் எப்பொழுதும் நேரம் கிடைக்குமென எண்ணாதே.
இத்தேச முன்னேற்றம் இனிஉன் பொறுப்பாகின் எத்தனையோ காரியங்கள்
இங்குள நீ சாதிக்க
தூங்கா உண்(து) உழைப்புத் தேவைவரும், தூங்கு, அந்நாள் தூங்கில் எனதுமணம் துன்பப் படும்மகனே!
ஆதலினால் இப்பொழுதே ஆந்தைவிழி மூடி ஒரு போது சிறிது துயில் போகாயோ, கண்மணியே
காலம் முன்பணி பின்பணி 1993

Page 22
R si di: In porses
வள்ளி
வெள்ளை வெய்யில்இம் மாலை வேளையில் கொள்ளை கொள்ளும்ஒர் மஞ்சள்-நிறம் கொண்டிருக்குது, கொஞ்சும் கிள்ளை கள்அதோ கிளைஅ டைந்தன. வள்ளி வீடுசெல் கின்றாள்-வியல் வரப்பி லேநடக் கின்றாள்.
ஆடு முன்செல. அந்த மான்தொடர்ந்(து) ஒடுகின்றனள். ஒட-சிலம்(பு) ஓசை கேட்குது கூட மாடு கொண்டு) "அவன் மனைதிரும்புமுன் வீடு கூட்டுவ தற்கோ-அவதி ? விளக்கு வைத்திடு தற்கோ ?
நில்ல டிமிக நேரம் ஆனதோ ? "மெல்ல வேதடக் காயோ ? - கொடி மேனி ஏன் களைப் பாயோ ? சொல்ல டி.சிறு கல்லும் முள்ளும்உன் மெல்ல டி உறுத் தானே.-என அம் மின்னல் ஏன் சிரித் தாளோ !
வர்த்தை யோடுதான் வாழும்தோழநான் பூத்த மல்லிகை அல்ல. - பாதம் புதிய பூவிதழ் அல்ல. வேர்த்தெந் நாளுமே வேலை செய்பவள் காய்த்ததோல்எனக்(கு) என்றாள்.அவளோ காலி லும்எழில் கொண்டாள்
நெல்லி டிக்குமாம், நீர்இறைக்குமாம். புல்செதுக்குமாம் கைகள்,- அதனால் பொலிவு பெற்றஅவைகள்! கல்லொடு) ஒத்தது காரி கை உடல் வல்லி டைஇடை எனிலும்-அது வருத்தக் கண்டு) உளம் உழையும்
காளம் முன்பணி. பின்பணி 1993

LITO
கோட்டையைப் பிடித்தவன்பேல் கும்மாளம் கொட்டுகிற நாட்டரச னே.இங்கே வாடா-தம்பீ நான் சொல்வ தைக்கேட்டுப் போடா!
பாட்டுரக்கப் பாடு அந்தப் பாட்டில் நிறைந்த சுவைத் தேட்டத்தி லே மனதைத் தேக்குகவிதைத் தேன் உணல்இன் பப்பொழுதுபோக்கு.
பெற்றவள் அளித்தது நீ பேசுகிற நம் தமிழில் நற்கவிதை என்கிறகற் கண்டு-படி நாவலுத்துப் போகும்அள வுண்டு.
கற்றிட நினைந்திடுவாய் கம்பன்எழுதித்தந்த பொற்குவிய லுக்குவிரைந்தோடு-உயர் பாரதியின் பாட்டுக்களைப் பாடு
தேடித் தூ ரம் நடக்கத் தேவையில்லை. உன் தமிழின் ஏடுகள் எல் லாம்கவிதைக் காடே!-பெருமை எய்தியதனால்தான்எம் நாடே!
கூடியினம் நண்பரொடு கூத்தாடல் போல், பாட்டுப் பாடுவதும் வேண்டுமடாயாடு-கவிதைப் பாற்கடலி லேநீச்சல் போடு

Page 23
a afas: Logop was essa
பாதசரம் எங்கே ?
கட்டினமைசொட்டுகின்ற
கண்ணியர்கள் அன்று மொட்டனைய கொங்கை இணை முந்திவர, நொந்து பட்டழிய வஞ்சி இடை,
பஞ்சடிபெயர்க்கின் மெட்டிஇசை கொட்டும். அதில்
மெய் புளகம் எய்தும்
ஆடுகையி லேஅவைகள் கூடஇசை பாடும். ஒடுகையி லேயும்அவை
Spä59 pi. LMவீடிழியும் அப்படிகள்
மீதினிலும், முன்றில், கூடம்இவை எங்கும்.அவை
கூப்பிடுதல் கேட்கும்!
கூச்சிடுவ தேன்நமது
கோதையர்கள். அன்றைக் கோசை அழ கால்அழகை
ஒர்படிஉ யர்த்தி ஆசைகிள றும்வகையில்
அள்ளிநகை சிந்திப் பேசிடுச தங்கைதரு
பின்னணியை இந்நாள் ?

பொட்டழகு. பூச்சழகு,
போர்த்திஉளமென்மைப் பட்டழகு வெல்லுவது
பார்வையினை நெஞ்சைத் தொட்டளையும் இன்னொலிகள் தோன்றிடஅதிர்ந்து கிட்டஉளள்" என்பவைஅக்
கிண்கிணிகள் அன்றோ ?
ஆர்த்திடும்.அ ரற்றிடும்.அ-
னுங்கிடும்.உ ளத்தை ஈர்த்திடஇழுத்திடஇ
எங்குமரி காலில், போர்த்தொழில்அ நங்கனது
பூக்களில்வி ழுத்தப் பார்த்திடும்இன் றஸ்வினிய
பாதசரம் எங்கே ?
காலம் முன்பனி பின்பணி 1993

Page 24
ar af d: Lamprasas
அழகிாை போட்டி ?
செவ்வியநெறி எதென்றே அவர் தெரிகிலர் சீர் இறங்கிட இழி செய்கையே புரிகிறார் எவ்வழிச் செலினும்ஏ றுகளுடன் நிகரென. எத்திசை தனிலும் முன் ஏறுதல் விட்டுநம் மவ்வழ வொத்திடும் மழலையின் இனிமையை மாந்திமாந் தித்தவ மகவுடன் மகிழ்தல்விட்டு) இவ்விழிப் புற்றபெண் இனம்இதோ உடைகளைந்(து) எடையிடும் வடிவை என் றெமதுமுன் வருகிறார்!
அச்சமும் மடமுமே துச்சமென் றழியவிட்டு), அழகெனும் அழுகும்அப் பழம்நிலை பொருள் என சிச்சிஓர் சிறுதுணிக் கச்சுடன், புற எழில் சிந்திவண் சிறகறுந் திடுபசுங் கினிகள்போல் இச்சையட் டுலைகளன் றிங்கு மொய்த்தவரிடை இளையமங் கையர்ஒயில் நடைஇயல் பயில்கிறார்! பச்சையாய்ப் பவனிவந் திடுபுலை வெறிஇதைப் பார்த்துநம் பழையண்பா பதுங் கிடுவது ?
தொட்டிடில் எட்டுநா ஞக்குள்ளே தொய்ந்து தம் கட்டவிழ்ந் திடுபுதுக் காரிகை மார்கடா முட்டமுன் வருவபோல் மோதிடும் முலைமயல் மூட்டுவெற் றழகிலா போட்டியிட் டிடல் ?இமை வெட்டி வெவ்வலையிலே வீழ்த்தி மெய் விற்றிடும் வேற்றுழைப் பற்றலை வேசியும் கூசிடத் தட்டுவா னிகள் இடைத் தர(கு)ஒழித் திடவுமா தசைநெடுந் தொடைஇணை தமை வெளிக் கொணர்கிறார்?
காலம் முன்னி பின்பணி 1993 22

சிற்பியின் அற்புதச் சிலையைவென் றிடுதுடிச் சிற்றிடைச் சிறுமையைச்சீ-மறைக்காது, தம் பொற்பிழந் தேஉயர் பெண்மைபோ கப்பெரும் போதையே என்னும் ஓர் புண்மை எண் ணத்தினர். கற்பைஉண் டிடஇரு கண்எறிந் திடுமொழிக் காமியர் முன்உடற் காட்சிதந் திடுகிறார்! சொற்கிடைக் காதிதைச் சொல்லவும் கூடஇச் சுவைகெடும் நிலைஎமைச் சூழவிட் டிடுவதா ?
மைப்பொரு விழியின் ஓர் மாசறு நோக்கெனும் மண்சிலிர்த் திடவரும் மாமழை-மின்னினால், கப்பெனும் படிவளர் காளையர் நெஞ்சின் அக் கல்லுடைத் துட்புகும் கன்னியர் கன்னமே குப்பெனப் போய்ச்சிவந் திடடறும்நாணம்இன் றெப்புறத் தே?பிற நாட்டவர் கீழ்மையைக் கப்பலிட் டேநடுக் கடலிடைத் தமிழகக்
கரையைவிட் டோட்டிடக் கங்கணங் கட்டடி

Page 25
ar saif afl: Logap T856î
DugáfpITIð
காட்டிலே முரட்டுக் கரடிகள் புலிகள் காலிலே மிதிபடும் பாம்புக் கூட்டமே உறவாய்க் குழைகளே உடையாய்க் குடிப்பதோ அருவியின் நீராய் ஈட்டியி லேபட் டிறந்தவை உணவாய் இருந்தனர் இரந்திடா(து) இன்பத் தோட்டமே தொழிலாய்த் திரிந்திடா தன்று திருந்திய குடித்தனம் புரிந்தார்.
வாணையே சுமக்க நிமிர்ந்தகட் டிடத்தில் வசித்திலர், யன்னல்கள் அறியார், ஆனையோர் கோடி அமர்த்தினாற் போல அழுத்திடும் விசையினில் ஓடி ஏனையோர் கள்வந் துதவினாற் போல எந்திரத் துதவிபெற்றிலர் மட் பானையே வணையத் தெரிந்திலர் எனினும் பழையமுன் னேர்களும் வாழ்ந்தார்.
கொம்பிலே குதித்துத் தவறிவீழ்ந் துருண்ட குறுவிழி அணில்இணை எழுமுன் அம்பிலே கொலைகொண் டலைகையி லேகண்டு) அவைகளை எடுத்(து) அவை அஞ்சி வெம்பநெஞ் சிஎகி விடுத்(து) அயல்வெம்பி வீழ்ந்துள கனிகளைப் புசித்த நம்பழை யவர்கள் வழியிலே உதித்தும் நாகரீகத்தினை இழந்தோம்!

உடைப்பெருஞ் செல்வர் ஊரினுக் கொருவர். உறிஞ்சிடப் படுபவர் பலபேர் நடப்பது குறைவே. வண்டியில் விரைவோம். நகைப்பது மிகக்குறை(வு) ஒற்றை நொடிப்பொழுதுக்குள் எதனையைம் முடிப்போம். நூல்சில உள்ளன எனினும் கிடைத்ததா அமைதி ? இல்லையே கேட்டுக் கிடங்கிடை விழுந்துணர் வழிந்தோம்!
குரங்கிலே பிறந்து கொலையையே பயின்று கொடியராய்க் குருடராய் இன்று கரங்களில் ரத்தக் கறைவிழ அணுவின் கடையுகக் கண்லெழும் யுத்தத்(து) அரங்கிடைப் பூமி உருண்டையைப் பிளக்க அடுக்குகள் எடுக்கிறோம்! முன்பு மரங்களில் வாழ்ந்தும் மகிழ்ந்தநம் இனத்தை மாய்க்கிறோம் மடிகிறோம் மனிதர்
காலம் முன்பணி பின்பணி 1993

Page 26
ad arf : Loggrsaf
இனம் உய்ய
நெல்உள. நிதிஉண்டு, நி கல்இள முலைமாதர் கை சொல்லன வினிலேனும் சு நல்லழ கொழுகும்பா நான்
வீதிகள் உள. ஆங்கே வி சேதிக ளொடுநம்மைச் சே போ(து)அழ, வெறுவாயே தாதியும் உளள், புட்டிப் ப
விரல்பட முதுவீணை க முரலுவ துளதேயாழ். மு குரலின்இ னிமைக்கூட்டிக் புரிகிற நடனத்துப் புதுமை
தொட்டதும் இருள்தீய்க்கு கட்டிடம் உள, கோடி கரு வட்டமும் உளதே!-தன்
பட்டண உலகத்தைப் பார்
பாயிரம் உரையோடும் பனு கோயில்கள் குளமுண்டு, ே போய்அடை வதும்உண்டு ஆயினும் அகிலத்தில் அை
மஞ்சிடை வருதற்கும் வ அஞ்சிட எரிகக்கும் ஆயுத பிஞ்சுகள் உயிர்வாழப் பிறி எஞ்சிநம் இனம்உய்ய இங்
காலம் முன்பனி , பின்பனி 1993
24

ழி உணர்டா ?
றைவுள பொருளுண்டு. டவிழி மொழிமீதில் நம்உள தென. மண்ணில்
தரு வனஉண்டே!
ரைபவை உள. தூரச் ர்இதழ் உள. வெட்கிப் பூத்திடும் மகவுக்குத் ால்வகை தருதற்கு
ரிவெறி விளைவித்து ழவொடு குழலுண்டே
குமரிகள் இடைவாட்டிப் மயும் உளதன்றோ ?
ம் சுடர்உள. நெடுமாடிக்
ருவிகள் உள.காசு
வழிகெட அதனோடே,
சுழல் கிறதம்மா!
வல்கள் பலவுண்டு, கோபுரம் உயர்வானைப் டு, போதனை மிகஉண்டே
மைதியை எவர்கண்டார் ?
கனம் உளவிண்ணும் நம் உளமக்கட் தொரு நிலமின்றேல், கொரு வழிஉண்டோ ?

Page 27
மஹாகவியும் தமிழ்க் கவிதையும்
கடந்த முப்பது வருட காலமாக கவிதை எழுதி வரும் மஹாகவி அவர்கள் பொதுவாக அன்றிலிருந்து இன்று வரை இலங்கையின் தலையாய தமிழ்க் கவிஞர் 66 அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார். இன்றுள்ள தற்காலக
கவிஞருள்ளே காலத்தால் முந்தியவரும் இவரே.
இவருடைய நூற்றுக் கணக்கான தணிக கவிதைகளும் பல காவியங்களும் கவிதை நாடகங்களும் இசைப் பாடல்களும் பத்திரிகை மூலமாகப் பிரசுரமாகியுள்ளன. நூலுருவாக வள்ளி, குறும்பா என்ற கவிதைத் தொகுதிகளும், லடிஸ் வீரமணி அவர்களால் மக்கள் மத்தியில் வில்லுப்பாட்டாக இசைக்கப்படும் கண்மணியாள் காதை (கலட்டி)என்ற காவியமும் வெளிவந்துள்ளன. சிறிது காலம் தேன்மொழி என்னும் கவிதை இதழையும் நடத்தியுள்ளார். இப்போது நாடோடிகள் நாடகக் குழுவினரால் பலமுறை மேடையேற்றப் பட்டு, வைதீகர்களின் எதிர்ப்பையும் மக்களின் ஆதரவையும் பெற்ற கோடை என்னும் கவிதை நாடகம் வெளிவந் துள்ளது. புதியதொரு வீடு.முற்றிற்று, கோலம் முதலிய அவருடைய மற்ற நாடகங்களும் மேடையேற்றப்பட உள்ளதாக அறிகிறோம்.
இவ்வளவு அதிகமான ஆக்கங்களை வெளிக் கொணர்ந்திருந்தும். அவரைப் பற்றிய ஆதார பூர்வமான விமர்சனம் எதுவும் இன்னும் நம்மிடையே முயற்சி செய்யப்படவில்லை. அவரைப் பற்றி மட்டுமல்ல. பொதுவாக அநேக தமிழ் எழுத்தாளர்களைப் பற்றியநிலைமை இதுவே. அண்மைக் காலத்தில்,

சண்முகம் சிவலிங்கம்
மாக்ஸிசக் கண்ணோட்டத்தில் எமது சில இலக்கியப் படைப்புகள் பொருள் ரீதியாக ஆராயப்படுகின்றன எனினும் கலை ஆக்க ரீதியாக எமது படைப்புகளை ஆராய்வதற்குத் தகுந்த அடிப்படைக் கோட்பாடுகளை இன்னும் நாம் வகுத்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில் தற்க்காலத் தமிழ்க் கவிதைப்பரப்பில் மஹாகவிக்கு உள்ள இடத்தையும், தற்காலத் தமிழ்க கவிதை வரலாற்றில் அவர் சாதித்து இருப்பதையும், வருகின்ற ஆண்டுகளில் நாம் மேலும் மேலும் சீர்தூக்கிப் பார்ப்பது அவசியம்.
எந்த ஒரு இலக்கியக்காரனும், அவன் வாழ்கின்ற நாட்டின் சரித்திரச் சூழலாலும் அவனுக்கு அமைந்த வர்க்கத் தொடர்பாலும் பாதிக்கப் படுகிறான என்பதும், அவற்றின் பிரதிபலிப்பு அவனுடைய படைப்புக்களில் இடம் பெறும் என்பதும், பொதுவாக ஒப்புக் கொள்ளப்படும் உண்மை. அதேபோல இந்தப் புறச்சூழல் பாதிப்புக்கு ஒவ்வொரு இலக்கியக் காரனும் தன்னில் அமைந்த சில தன்மைப் பாடுகளினால் முகம் Cொடுக்கிறான் என்பதும், அந்த முகம் கொடுத்தலில் காணப்படும் இணக்கமும் இணக்கமின்மையுமே அவனுடைய வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் என்பதும், அவ்வாறு ஒரு சரித்திரச் சூழலுக்கு அவனுடைய தன்மைப்பாடு உருவாக்கும் இணக்கம் அல்லது இசைவாக்கம் பின்தொடரப் படுமாயின். அவன் ஒரு புதிய சந்ததியை விருத்தியாக்கியுள்ளான் எனப் பொருள் படும் என்பதும் ஆழ்ந்து பெற்றுக்
25 காலம் முன்பனி , பின்பணி 1993

Page 28
கொள்ளக்கூடிய உண்மைகளே.
மஹாகவி நாட்டின் அரசியல் சுதந்திரத்திற்கான கோரிக்கை வலுப்பெற்ற காலகட்டத்திலிருந்து, தமிழ்சிங்கள தேசிய மறுமலர்ச்சிக் காலகட்டத்தினூடாக வர்க்கமுரண்பாடுகள் கூர்மையடைந்துவரும் இன்றயர் காலகட்டத்தினுள் பிரவேசிக்கிறார் என்பதையும், அவர் யாழ்ப்பாணத்துக் கிராமமொன்றில் சாதாரண மத்தியதர வர்க்கத்தில் பிறந்து. பெரும் பகுதிக் காலம் கொழும்பில் உத்தியோகம் பார்த்து, அரசாங்க நிர்வாக சேவையாளராகி, இன்றி நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கடைமையாற்றும் ஒரு புத்திஜீவி என்பதையும் நாம் மனதில் வைத்துக் கொண்டால் அவருடைய படைப்பில் காணக்கூடிய சரித்திரப் புறத்தாக்கங்களை நாம் பெரும்பாலும் எல்லைப் படுத்திக் கிரகித்துக்
கொள்ளலாம்.
அரசியல்- பொருளாதாரச் சுதந்திரத்துக்கான கோரிக்கைகளும் மாறுதல்களும், சமூக சுதந்திரம், பண்பாட்டுச் சுதந்திரம் ஆகியவற்றிற்கான கோரிக்கைகளையும், மாறுதல்களையும் அவற்றின் உடனடியாகத் தோற்றுவிக்கின்றன. மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகச் சுதந்திர உணர்வு, சாதிக் கட்டுப்பாடு, பெண்ணடிமை, பண்ணையடிமை போன்ற சமூகத் தளைகளிலிருந்து விடுதலை கோருகின்றது. பண்பாட்டுச் சுதந்திர உணர்வு, விதேசியக் கலாச்சாரத்தை வெறுத்து.சுதேசியக் கலாச்சாரத்தை மீட்டெடுத்தலுடன், பழைய நிலமான்ய சமூக அமைப்பின் ஆசார அனுஷ்டான சடங்கு சம்பிரதாயங்களிலிருந்து, விடுதலையையும், தனிமனித மனப்ாண்மையையும், பகுத்தறிவு வாதத்தையும். பழைய கலை-இலக்கிய வடிவங்களை உடைத்துக் கொண்டு. தனக்குப் பொருத்தமான புதிய கலை-இலக்கிய வடிவங்களை ஆக்கிக் கொள்ளும் வேட்கையையும் உண்டாக்கிறது. எப்பொருளும் கவிதைக்கு - இலக்கியத்திற்கு ஆகும் என்ற கட்டற்ற தேடலையும் அதனால் கவிதை வெளியீட்டிலும் புதிய புதிய
asTaub (upacitas • failua 1993 2

முறைகளையும் சொல் வார்ப்புக்களையும், உவமானங்களையும், உருவகங்களையும் கவிதையுள்ளம் நாடுவதற்குரிய பெளதிகச் சூழலும் இதுவே. சரியாகச் சொன்னால், தற்காலக் கவிதை அல்லது நவீன கவிதை என்பதே இந்தச் சகாப்தத்திற்குரிய ஒரு புதிய வார்ப்புத் தான்.
தேசிய மறுமலர்ச்சிக் காலத்தில் மத்திய தர வர்க்கத்தின் சிந்தனையில் ஏற்பட்ட இந்தப் பொதுவான வளர்ச்சிக்கும் மாறுதலுக்கும் மஹாகவி பிரத்தியேகமானவரல்ல. உண்மையில் அவரே அதன் சிறந்த பிரதிநிதியாய், மேற்குறித்த சகல சிந்தனைஉணர்வுகளையும், தமது கவிதைப் பொருளாகக் கொண்டு விளங்குவதை அவருடைய படைப்புக்களிலிருந்து அறியலாம். இன்று வரையுள்ள மஹாகவியின் கவிதைப் பொருட் பரப்பை விரிவாக ஆராய விரும்புகிறவர்கள் இந்தப் வது
எல்லைப்பாட்டை அறிவார்கள்.
ஆனால் பொருள் ரீதியான இந்த எல்லைப்பாட்டை, அல்லது, இந்த பொதுவான சரித்திரச் சூழல் மஹாகவியின் சிந்தனையை எப்படிப் பாதித்தது என்றவிபரங்கள். தமிழ்க் கவிதைப் பரப்பில் அவருடைய பங்கு எத்தகையது என்பதைச் J fiuma. அறியத்தரமாட்டாது. இந்தச் சரித்திரச்சூழலின் பாதிப்புக்கு மஹாகவி முகம்கொடுக்கும் போது, அவா தன்னிடம் அமைந்த என்ன தன்மைப்பாடுகளினால், என்ன இணக்கத்தைத் தமிழ்க் கவிதைக்கு ஏற்படுத்தினர் என்பதனை ஆராய்வதன் மூலமே அவருடைய சரியான பங்கை அறிந்துகொள்ள முடியும். உதாரணமாகப் பாரதியும் பெரும்பாலும் தேசிய மறுமலர்ச்சிக் காலத்தவர் தான். பாரதியின் சிந்தனை உணர்வுகளும், ஏறக்குறைய மேற்குறித்த எல்லைக்குள்ளேயே உள்ளன. எனினும் பாரதியின் கவிதைக்கும் மஹாகவியின் கவிதைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. இது மேலோட்டமான வேறுபாடு அல்ல. மிகவும் ஆழமான வேறுபாடு ஆகும்.
இத்தகைய வேறுபாடே அவரவரின் தன்மைப்பாடும்
6

Page 29
இணக்கப்போக்கும் ஆகும். பாரதியைப் பொறுத்த வரையில், பரந்துபட்ட மக்களின் சமூக அரசியல் விழிப்புணர்ச்சிக்கும், போராட்டத்திற்கும் தமிழ்ச் செய்யுளையும் கவிதையையும் அழைத்ததே அவருடைய தன்மைப்பாடு ஆகும். அதன் பயனாய தமிழ்ச் செய்யுளும் கவிதையும் சில பிரத்தியேகத்தன்மையைப் பெற்றன. அத்தன்மைகள் வழி வழியாகச் சிலரின் கவிதைகளில் வளர்ச்சியடைந்தன. அதுதான் பாரதியின் முக்கியத்துவம். அப்படியல்லாமல், அந்தக் காலத்து சமூக அரசியல் விழிப்புணர்ச்சிக்கும் போராட்டத்திற்கும் பாரதி வசனத்தை மாத்திரம் அழைத்திருந்தால், அல்லது தீவிரமான இயக்க நடவடிக்கைகளை மாத்திரம் மேற்கொணடிருந்தால் பாரதி தமிழ்க் கவிதை உலகு அறியாத ஒருவராகவே இருந்திருப்பார். அல்லது அவர் கவிதையை, தோத்திரப்பாடல், கீர்த்தனைகள், குயிற்பாட்டு போன்றவற்றிற்கு மட்டும் அழைத்திருந்தால், ஒரு இடைக்காலப் புலவனுக்குக் கூடிய எந்த அந்தஸ்த்தும் பாரதிக்கு ஏற்பட்டிருக்காது. அதுபோல மஹாகவியின் முக்கியத்துவத்தையும் நாம் சரியாகக் கண்டறிய வேண்டுமானால் குறித்த சரித்திரச் சூழலுக்கு முகம் கொடுத்த அவரின் தன்மைப்பாடு எனவும், அதனால் தமிழ்க் கவிதைக்கு ஏற்பட்ட இணக்கத்திறன் எனவும் ஏதாவது இருந்தால் அவை எவை எனக் கண்டறிதல் வேண்டும்.
இதற்கு முதலில் தமிழ் நாட்டினதும் இலங்கையினதும் சமகாலக் கவிதைப் போக்கை ஒப்பு
நோக்கிப் பார்ப்பது அவசியம்.
தமிழ் நாட்டின் தற்காலக் கவிதை பாரதியுடன் ஆரம்பமாவதாகச் சொல்லப் படுகிறது. பாரதியின் தேசிய இசைப் பாடல்களையும், தோத்திரப் பாடல்களையும், பழைய காவிய மரபில் தோன்றிய முப்பெரும பாடல்களையும், சில தனிக் கவிதைகளையும்
2

தொடர்ந்து, பாரதிதாசன் திராவிட இயக்கத்திற்காக எழுதிய பிரச்சாரச் செய்யுள்களும். அதே தொனியில் அமைந்த சில காவியங்களும் தோன்றின. அத்துடன் இசைப்பாடல்களின் சந்த அமைப்பில் ஒரு வித்தியாசத்தையும், இயற்கை அழகு பற்றித தனித்துண்டமாக எழுதும் ஒரு மரபையும் அவர் தோற்றுவித்தார். அதே காலத்தில் வாழ்ந்த நாமக்கல்லர். தேவி, சுத்தானந்த பாரதியார் போன்றோர் பெரும்பாலும பாரதியும் பாரதிதாசனும் கையாண்ட விருத்தப் பாக்களையும் சிந்துக்களையும் அதேபாணியில் கையாண்டார்கள். பாரதி பரம்பரை என்று ஒன்று
அடையாளம் காணப்பட்டது.
பாரதி பரம்பரையின் வளர்ச்சி திருப்திகரமானதல்ல என்பது இன்று தமிழ்நாட்டில் பலரது தீர்க்கமான கருத்து. அவர்கள் பெரும்பாலும் எழுதும் சிந்துகளும் விருத்தங்களும் இயற்கை வருணனையும் காதலும் கருத்துரையும் மலிந்த சொற்சிலம்பமாகி விட்டது என்பதை அநேகமாக எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள்.
பாரதி இலகுபடுத்தியதாகச் சொல்லப்படும் செய்யுள் நடை இவ்வாறு ஜீவனுள்ள எதையும் தாங்க முடியாத வெற்றுக் கூடாகி, வெறும் சிலம்பொலியாகிக காணப்படும் தமிழ் நாட்டில் தான் செய்யுள் உருவம் உடைக்கப் பட்டு, வசன கவிதை அதன் உடைந்த ஓடுகளினுள் இருந்து குஞ்சு பொரித்து வரவும் காண்கிறோம். இந்த வசன கவிதை, சிதம்பர ரகுநாதன் சிலகாலம் காட்டிக்கொள்ள முயன்றது போலத் தமிழ் நாட்டில் மடிந்து கொண்டு போகும் ஒரு மரபு அல்ல. மாறாக, இன்று தமிழ் நாட்டில் கவிதை என ஏதாவது எழுதப்படுமானால், அது 66 கவிதை எழுதுபவர்களிடையேதான் காண முடியும் என்ற ஒரு நிலை உருவாகி விட்டது. எழுத்தில் மட்டுமல்லாது. கணையாழி, நடை, ஞானரதம் முதலியவை போன்ற பல பத்திரிகைகளிலும் செய்யுள் நடை வழக்கொழிந்த வசனபாணியினாலான இந்த வசன கவிதைகளே
பிரகரமாகின்றன. தாமரையில் வெளிவரும் கவிதைகள
7 காலம் முன்பனி பின்பணி 1993

Page 30
கூட, அந்தப் புதுக் கவிதைகளின் விகாரத் தன்மை அற்றனவாய் இருப்பினும், வசனத் தன்மையைசெய்யுள் உடைவை- அதிகமாகக் கொண்டவையே. கலைமகள், கல்கி, தீபம் போன்ற பத்திரிகைகளும
வழக்கமான கவிதையைப் புறக்கணித்துள்ளன.
இலங்கையின் நிலை என்ன? பாரதியையும பாரதிதாசனையும் பின் பற்றிய அவர்கள் பரம்பரையினர் எழுதிய அதே விருத்தப் பாக்களையும் சிந்துக்களையும் தான் இலங்கையிலும் ஒரு தற்காலக் கவிஞர் பரம்பரையினர் எழுதத் தொடங்கினர் என்று கூறக கூடுமாயினும், அதைத் தொடர்ந்து இன்று மூன்று முக்கியமான மாற்றங்கள் நடந்துள்ளதைப் பின்னோக்கிக்
காணலாம். அவை,
(அ) சிந்து வகை வரவரத் தன் முக்கியத்துவத்தை இழந்து ஆரம்பக் கவிஞர்களின் ஆரம்பப் படியாக ஓய்ந்தது.
(ஆ) வெண்பாப் பயிற்சி பரவலாக்கப் பட்டு. அதன் ஓசை பேச்சோசைத் தொனிக்கு மாற்றப் பட்டது. அகவலிலும் இவ்வாறே.
(இ) விருத்தப்பா முதலியவை இரு கிளையாக வளர்ச்சியடையத் தொடங்கின. ஒரு கிளை சந்த விகற்பங்களை வளர்ந்து வளர்ந்து, 80 ம் ஆண்டுகளில் ஷிணிக்கத் தொடங்கியது. மறு கிளை பேச்சு மொழியின் தொனியை நோக்கி வளர்ந்தது- இன்னும் வளர்கிறது.
இலங்கைத் தமிழ்க் கவிதைகளில் பரிணமித்துள்ள இந்தப் பேச்சோசை அறுபதாம ஆண்டுகளில் இனம் கண்டு கொள்ளப் பட்டது. 4-1168 இல் பேச்சோசையும் பாட்டோசையும் என்ற தலைப்பில் எழுதிய முருகையன், ”பேசும் குரலுக்கேற்ற சுதந்திரமான தாள லயத்துடன் ஒழுங்கு கெடாமல்
(
காலம் முன்பனி , பின்பனி 1993 28

இயங்கிச் செல்வதே' பேச்சோசை இயற்பா என வரையறை செய்தார். 1-3-70 இல் பேச்சு மொழியும் கவிதையும் என்ற தலைப்பில் எழுதிய நுஃமான். பேச்சோசைப் பண்பு பெற்ற சில இலங்கைக் கவிதைகளை எடுத்துக் காட்டிப் பின்வருமாறு எழுதுகிறார். ” (இக் கவிதைகள் ) ஒரு செய்யுளுக்குரிய எதுகை மோனை, சீர்தளைக் கட்டுப்பாடுகளை இழக்காமலேயே பேச்சோசையின் சகல பண்புகளையும் கொண்டுள்ளன. வசனத்தைப் போல் நிறுத்தக் குறிகளைப் பெற்று. சிறுதொடர் அமைப்புக்களைக கொண்டு, செய்யுள் இசையின் ஆதிக்கத்தை விட்டு நீங்கி உள்ளதை நாம் இங்கு காண்கிறோம். மரபு ரீதியான எல்லாச் செய்யுள் உருவங்களிலும், குறிப்பாக வெண்பா, கட்டளைக் கலிப்பா, கட்டளைக் கலித்துறை, கலிவிருத்தம் போன்ற வரையறுப்புக்கள் மிகுந்த வடிவங்களிலும், இன்றய எமது நவீன கவிஞர்கள் இந்தப் பேச்சு மொழிப் பண்பைச் செயற்படுத்தி இருக்கின்றார்கள். ஈழத்துத் தமிழ்க் கவிதை இலக்கியத்துடன் தொடர்பு கொண்டவர்களுக்கு அது தெரியும்.”
ஆகவே இருநாட்டுக் கவிதைப் போக்குகளையும் நாம் ஆராயும் போது, தமிழ் நாட்டில செய்யுள் உடைந்து 66 கவிதை தோன்றியுள்ளதையும், இலங்கையில் செய்யுளில் உடைவு நிகழாமல், அது பேச்சோசை என்னும் புதிய கட்டத்திற்கு உயர்த்தப்பட்டு உள்ளதையும் அவதானிக்கிறோம். இலங்கையில் வசன கவிதை தோன்றவில்லை. அதாவது தமிழ் நாட்டில் செய்யுள் உடைந்து, புதிய பொருளை உள்ளடக்க முடியாத ஒரு வக்கற்ற பழம் பாத்திரமாக இற்றுப் போக, இலங்கையில், புதிய சூழ்நிலைகளையும் திய பொருளையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தொனிக்கு அது மாற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு, தமிழ் நாட்டின் கவிதைப
o பாக்கிற்கு முற்றிலும் மாறுபட்டு, இலங்கையில

Page 31
சுயாதீனமான ஒரு கவிதைப் போக்கு வளர்ந்துள்ளது என்றால் அதற்கு இலங்கைக் கவிஞரே பொறுப்பாளியாவார் என்பதும், இந்த மாற்றம் ஒரு கவிஞருக் குள்ளேயே அடங்கிக் கிடக்க முடியாதெனினும், அதன் முதற் காரணமாக ஒரு கவிஞரே அமைந்திருப்பார் என்பதும் வெளிப்படை. உண்மையில் இலங்கைக் கவிதையின் பேச்சோசீைப் பண்பை இனங்கண்டு எழுதிய விமர்சகர்களின் கட்டுரைகளில், பேச் சோசைப் பணிபுடையன எனக்கொடுக்கப்பட்ட பல எடுத்துக் காட்டுகளிலும் பெரும்பாலானவை மஹாகவியினுடையவை என்பது வெறும் சந்தர்ப்ப வசமல்ல. இதுவரை பிரசுரமாகியுள்ள தமிழ் கவிதைப் பரப்பில், பேச்சோசைப் பண்பைச் சரியாக நிதானித்துக் கொண்டு பார்க்கும் போது, பேச்சோசைப் பண்பு பெற்ற கவிதைகளின் தர்ப் பெறுமானத்திலும், மஹாகவியே முதன்மை பெறுகிறர் என்பதுடன், காலத்தால் முந்தியவையும் அவருடையதே
என்பதை அவதானிக்கலாம்.
மஹாகவியின் கவிதைகள் இப் பேச்சோசைத்
தன்மை பெறக் காரணம் என்ன?
நெடுங்காலமாக, சங்க காலத்திற்கும். சங்கம் மருவிய பதினெண் கீழ்க் கணக்கு நூல்களின் காலத்திற்கும் பிறகு வந்த ஏறத்தாழ எண்ணுறு ஆண்டுகளாக தமிழ்க் கவிதை சந்தத்தையும் ஒசை மிகப்பையுமே பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறது. கவிதையின் மொழி ஊடகமான செய்யுளே இசைப் பாடலின் மொழி ஊடகமாகவும் இருந்ததால், இசைப் பாடலின் செவிப் tjႀခီ கலையாக்கம் கவிதையின் கலையாக்க முறையாகவும்
ஆனதே இதற்குக் காரணம் எனலாம்.
O
ஆனால் சங்க காலத்துக் கவிதைகளில சந்தமும் ஓசை மிகைப்பும் கலைப் பாணியாகக் காணப்
o 0. படவில்லை. முதற் பொருள், கருப்பொருள் என்னும் பருமையான, உருப்படியான காட்சிப் பொருள்களின்
29

மூலம் உருப் பொருளை உணர்த்தும் கட்புலக்
கலையாக்கம் அந்நாளில் ஒரு நெறியாகவே வளர்க்கப்
பட்டது இதற்குக் காரணம் ஆகும்.
ஆகவே செவிப் புலக் கலையாக்கம், கட்புலக் கலையாக்கம் என இரு வகையான கலையாக்கங்களை நாம் பிரித்தறியலாம். இசை பொருந்திய செவிப் புலத் கலையாக்கம், உணர்வை உணர்ச்சி நிலையில பரிவர்த்தனை செய்ய முற்படுகிறது. கவிதைக்கு உணர்ச்சி இன்றியமையாதது என்ற ஒரு கோட்பாடு இதன் அடிப்படையாகவே வந்தது. ஆனால் கவிதைக்கு உணர்ச்சி இன்றியமையாததொன்றல்ல. சங்க காலத்துக் கவிதைகளை வாசித்து ஒருவன் உணர்ச்சி வசப்பட இயலாது. ஆனால் அவன் ஆழ்ந்த உணர்வினுள் ஆழ முடியும். கட்புலப் படிமங்களினூடாக அங்கு உணர்வு பரிவர்த்தனை செய்யப் படுவதே இதற்குக் காரணமாகும்.
அது எப்படி எனினும், சந்தமும் ஒசை மிகைப்பும் உள்ள, இசை தழுவிய செவிப்புலக் கலையாக்கம் உணர்வை உணர்ச்சி உன்னும் பாய்நிலை ஊடகத்தில் பரிவர்த்தனை செய்யக் கூடியது என்பதே இங்கு மனம் கொள்ள வேண்டியது. சமூக இயக்கங்கள் வலுப் பெறும் காலம் உணர்ச்சிப் பெருக்குள்ள காலமாதலால், செவிப்புலக் கலையாக்கமுள்ள கவிதைகளே அக்காலத்தில் தோன்றும். உதாரணமாக பக்தி இயக்க காலம். தமிழ் நாட்டின் சுதந்திரப் போராட்ட இயக்க காலத்திலும், நிராவிட இயக்கப் பொற்காலக் கனவு நிலைக் காலத்திலும் இதுவே நிலைமை. அந்த இயக்க காலங்களில் பாரதியும், பாரதிதாசனும், எழுதிய தேசிய - திராவிட இயக்க இசைப் பாடல்களினதும், ரிந்துக்களினதும் செல்வாக்குத் தவிர்க்க முடியாதவாறு செய்யுளின் ஓசை நயத்தையே கவிதையின் கலைப்பாணியாக மாற்றி விட்டது.
O ,
ஆனால் இலங்கையின் புறநிலைக் காரணிகள
P ற்று வித்தியாசமாய் இருந்தன. இங்கு சுதந்திரப்
ہو. &(پ:تمغنخنجخترجمہ:قزمہ ‘ عدد 680ء
arcub (ysius • úkliuas 1993

Page 32
போராட்டம் என ஒன்று நடக்கவில்லை என்பதோடு, ஆதி லரலாறு பற்றிய பொற்காலக் கனவும் சற்று தூரத்திலேயே இருந்தது. தமிழரசுக் கடசியின் இயக்கத்துக்கான ஒசைப் பாங்கான செய்யுட்கள் எழுதப் பட்டன என்றாலும், அதன் மிச்ச சொச்சங்களை இப்பொழுதும் காணலா மென்றாலும், அது நீடிக்கவில்லை. தவிர மஹாகவி என்ன காரணத்தினாலோ தேசிய மறுமலர்ச்சி உணர்வு நிறையக் கொண்டிருந்தும், அத்தகைய இயக்கப் பாடல்களில் அவ்வளவாக ஈடுபடவுமில்லை. இலங்கையின் சமூக பொருளாதார - அரசியல் சூழலில் தமிழரசுக் கட்சியின் அந்த இயக்கமும் அணுகல் முறையும் பயனற்றது என்ற கருத்து அந் நாட்களிலிருந்தே பலரிடமிருந்து வந்தது 8?(U5 காரணமாய் இருந்திருக்கலாம். எப்படியெனினும், 1958ம்ஆண்டு இனக்கலவரத்துக்குப் பிறகும், 1980ம் ஆண்டு சத்தியாக்கிரகத்திற்குப் பிறகும். அத்தகைய இயக்கப் பாடல்கள் கெளரவக் குறைவாகவே
கருதப்படடன.
இந்த நிலையில், மஹாகவியின் கவிதை தவிர்க்க முடியாதவாறு இயக்கப் போக்குகளிலிருந்து அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் அனுபவங்களையும் நோக்கித் திரும்பியது. அன்றாட நிகழ்ச்சிகளையும் அனுபவங்களையும் நோக்கி மஹாகவியின் கவிதை திரும்பியதே முக்கியமான ஒரு திருப்புமுனையாகும். ஏனெனில் மஹாகவி போல் தமிழ் நாட்டில் பிச்சமூர்த்தியோ அல்லது வேறு எவரோ அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சி அனுபவம் என்னும் பெளதிக அடிப்படையை அல்லது யதார்த்த அடிப்புடையை நோக்கித் திரும்பியிருந்தால் இன்று தமிழ் நாட்டின் கவிதைச் சரித்திரம் வேறாக இருந்திருக்கும். ஆனால் அந்தத் திருப்பம் ஏற்பட முடியாத தனிமையும் விரக்தியுமுள்ள ஒரு வர்க்க நிலைப்பாட்டை பிச்சைமூர்த்தி முதலியோர் கொண்டிருந்ததால், அவர்கள் அன்றாட நிகழ்ச்சி அனுபவங்களின் அடியான யதார்த்தத்தில் நிலை
கொள்ளாது
காலம் முன்னி , பின்பணி 1993 3(

அதிலிருந்து பெறும் கருத்துக்களையே முதன்மையாக வைத்து கருத்துச் சூக்குமத்தையே கலையாக்கமாகவும் கொண்டார்கள். அவர்களைப் போலி என்றும் டூப் என்றும் முருகையன் முதலியோர் கேலி செய்தாலும், அவர்களுடைய போக்கிற்குரிய இந்தப் பெளதிக அடிப்படையை அல்லது தன்மைப் பாட்டை நாம் தெத்திக் கடந்துவிட முடியாது. கருத்து நிலையை முதன்மையாக வைத்து, செவிப்புலக் கலையாக்கத்தை மறுத்து கட்புலக் கலையாக்கத்தின் இயல்பின்பாற் படாமல் கருத்துச் சூக்குமக் கலையாக்கத்தை அவர்கள் மேற்கொண்ட படியால்தான், செய்யுளின் தவறாத ஒத்திசைப்பையும் தமக்கு அயலாகக் கண்டு இடைக்கிடை நேரும் குறைந்த பட்ச ஒத்திசைப்போடு வசன கவிதைக் காரர்கள் ஆனர்கள். ஆனால் மஹாகவியோ இக் கருத்து முதல் நிலைக்கு உட்படாமல் திடமான, மெய்மையான, யதார்த்தமான அன்றாட நிகழ்ச்சி அனுபவங்களில் கால்குத்தி நின்றார். இதுவே. தமிழ்க் கவிதைப் பரப்பில் வேறெங்கும் காணமுடியாத அவருடைய தன்மைப்பாடு ஆகும்.
மஹாகவி அன்றாட நிகழ்ச்சி அனுபவங்களுக்கு உணர்வு முனைப்பட்டு, அவைகளை அவருடைய உள்ளம் ஆழமாகத் துருவி நோக்குவதை, வீடும் வெளியும். கண்களும் கால்களும். மோட்டி, செத்துப் பிறந்த சிசு, விட்ட முதல், பல்லி மற்றவர்க்காய் பட்ட துயர், நீருழவன் முதலிய மிகப் பெரிய கவிதைகளில் பரக்கக் காணலாம். இவைகளில் அந்நிகழ்ச்சி அனுபவத்தின் இயக்க பூர்வமான ஆக்கத்தைமுண் எப்போதும் இல்லாத முறையில, சிருஷ்டித்துள்ளார்.
இந்த அன்றாட நிகழ்ச்சி அனுபவம் என்பது கூரிய அறிதிறனும் கண்டுபிடிப்பாற்றலும் பெற்றது. அன்றாட நிகழ்ச்சி என்பது அன்றாடம் சந்திக்கும் மனிதர்களின் உறவையும், அவரின் இன்ப துன்பத்தையும் உடன் அமைத்தது. அன்றாட வாழ்வில் சந்திக்கும் பல மனிதர்களையும் அவர்கள் உறவுகளையும் கவிதையில்
சரியாக வார்க்கும் போது, அவர்களின் அன்றாடப்

Page 33
பிரச்சினைகளும், அதன்மூலமாக அவர்களின் பொதுவான மனப்போக்கும் இயல்புகளும், அவர்கள் அமைந்துள்ள சமயத்தில் நடைபெறுகின்ற மாற்றங்களும் புலப்படாமல் போக இயலாது.
இவ்வாறு தனித்தனி நிகழ்ச்சிகளிலிருந்து, தம்மைச்சுற்றி வாழுகின்ற மனிதர்களின் பிரச்சினைகளையும், மனோபாவங்களையும். இயல்புகளையும், அந்த சமூகத்தில் நிகழும் மாறுதல்களையும், அவற்றின் முழு மொத்தமான சமூக சட்டத்தையும் அவதானிக்கும் போது , அந்த முழுமொத்தமான சமூக மனிதகுல - ஒட்டத்தை உள்ளடக்கிய பெரும் படைப்புக்கள் 9(5 இலக்கியக்காரனிடமிருந்து தோன்றுதல் இயல்பே. தனிக் கவிதைகளிலிருந்து காவியத்துக்கும் நாடகங்களுக்கும் மஹாகவியின் பிரவேசம் இப்படித்தான் ஆரம்பமாகிறது. சடங்கு, கண்மணியாள் காதை, ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம் போன்ற அவரது காவியங்களையும், கோடை முற்றிற்று, புதியதொரு வீடு பொன்ற அவரது கவிதை நாடகங்களையும் பார்க்கும் போது தன்னைச் சுற்றியுள்ள கிராமியச் சமூகத்தையும், தனி மனிதர்களையும், அவரவரின் இயல்பும், முரண்காடும். மாறுதலும், தேடுதலும் புலப்படும்படி அவர் எவ்வாறு சிருஷ்டித்துள்ளார் என்பது விளங்கும்.
சடங்கு என்ற காவியத்தில் ஒரு யாழ்ப்பாணத்து விவசாயக் குடும்பத்தின் வகைமாதிரியான சில பாத்திரங்களை வார்ப்பதோடு, முந்திய நில மான்யச் சமூக அமைப்பின் மிச்ச சொச்சங்களை மீறமுடியாத பழைய தலைமுறையினர் போலியான சமூக ஆசாரங்களிலும் சடங்குகளிலும் எவ்வாறு கட்டுண்டு கிடக்கின்றனர் என்பதையும் புதிய தலைமுறையினர் அநதச் சடங்குகளை உடைத்தெறிய எவ்வாறு முனைகின்றனர் என்பதையும், அவ்வாறு உடைத்தெறிதலின் உடனிகழ்ச்சியாக குடிப்பெயர்வு அல்லது பிரதேச மாற்றம் நிகழ்வதையும் சித்தரிக்கிறது.
கண்மணியாள் காதை சில ஆண்டுகளுக்கு
31

முன்னர் எமது கிராமங்களில் இளைஞர்கள் மத்தியில் உண்டான சுதேசிய விழிப்பினதும் , தமது கிராமத்து ஸ்தாபனங்களையும் மக்களையும் முன்னேற்றுவதற்கு அவர்கள் எடுத்த சிறு முயற்சிகளினதும் சீர்திருத்த நடவடிக்கைகளினதும் பின்னணியில் ஒரு இளைஞனை வளர்த்தெடுத்து, அவன் மூலமாக யாழப்பாணத்தில் இந் நாளையப் புரட்சி வெடிக்கக் காரணமான சாதிப் பிரச்சினையில் வெடிகுண்டு வீசி அந்தப் பிரச்சினை காதல் மூலமாகவோ கலப்புத் திருமணத்தின் மூலமாகவோ, உயர் சாதிப் பையன்களின் தயாள சிந்தையினாலோ தீர்க்கப்பட முடியாது என்பதைக் காட்டுகிறது. இரத்தக் களரியில் முடிகின்ற இந்தக காவியம், தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்குப் போராடும் ஒரு வஞ்சினத்தை வாசகரிடையே தோற்றுவிப்பதுடன். 'ஒரு சேதி: கீழ்ப்புற வானில ஞாயிறு நீதி காண எழுந்தது’ என்ற அழுத்தமான நம்பிக்கைக் குரலுடன் முடிகிறது. தன்னிலும் தன் நாட்டவர் திறமையிலும், பொதுவாக மக்கள் இனத்திலும். வாழ்க்கையின் ஓயாத முன் உந்தும் முனைவிலும் மஹாகவிக்கு உள்ள நம்பிக்கை தடித்த வைரமுடையது. வெறும் கோட்பாட்டளவில் இல்லாது. அவருடைய வாழ்க்கையோடு ஒன்றிய இதனை அவருடைய படைப்புக்களிலிருந்து பலர் கண்டு எதிர் காலத்தில் பேசுவார்கள்.
ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம், அற்புதமான சிருஷ்டித் திறனுடன், தமிழ்ச் செய்யுள் வரலாற்றில் ஒரு சாதனை என்று சொல்லத்தக்க எளிமையும் அழகும் இயற்பண்பும் கொண்ட கட்டளைக் கலிப்பாக்களால் ஆகி பிறப்புத் தொடக்கம் இறப்பு வரை ஒரு மத்திய தர வர்க்கத்து மனிதனின் ஊசலாட்ட நிலையைச் சித்திரித்து. உயிர் ஒரு நெடுந்தொடர்ப் பரிணாமம் என்பதை உணர்த்துகின்றது. இளமை, வாலிபம் , ஆண்-பெண் உறவு, முதுமை முதலியவற்றின் ஊடுள்ள வாழ்வியல் இயகக்கத்தை ஒரு முழுமையாகக் காணுகின்ற முயற்சியே அது. வாழ்வை, அதன் சகல புறநிலை முரண்பாடுகளும் உள்ளடங்கிப்
காலம் முன்பணி, பின்பணி 1993

Page 34
போக, அதனை ஓர் உயிர்ப்பு இயக்கமாகக் காணு மஹாகவியின் முயற்சியின் மிக உயர்ந்த பேறு என்று அதனைக் குறிப்பிடலாம்.
கோடை, இலங்கையில் பிரிட்டிஷாரின் ஆட்சியின் போது யாழ்ப்பாணத்து கிராமமொன்றிலுள்ள ஒரு நாயனக் காரரின் ஒரு நா வீட்டு நிகழ்வைக் கொண்டது. ஒரு காலனித்து5 நாட்டில், ஏகாதிபத்திய வாதிகளின் தேவைக்காக புகுத்தப்படும் கல்வி முறையையும், அதற்கமைந் தொழில் முறையையும், ஒரு சிறிய கிராமத்து மக்களின் மனோபாவத்தைக் கூட எவ்வளவு பாதிக்குட என்பதையும், அதனால் மதிப்பீடுகள் எவ்வள6 தலைமாறிப்போய் இருந்தன என்பதையும், அந் நாளி ஊர்ச்சனங்களின் மத்தியில் அந்நிய ஆட்சிக்கெதிரா எவ்விதம் புகைச்சலும் குமைச்சலும் இருந்த6 என்பதையும் தொட்டுச் செல்லும் இந் நாடகத்தில் ஒரு கிராமத்தின் குறுக்கு வெட்டு முகத்தையே சந்திப்பது தமிழ்க் கவிதை நாடகத்தில் நேர்ந்த முதலாவது சந்திப்பாகும். முற்றிற்று. புதியதொரு வீடு போன் நாடகங்களிலும் இதுபோல் சொல்லலாம். மஹாகவியில் யதார்த்தத் தன்மைப் பாட்டை இவைகள் மி.
ஆழமாகக் கீறித் துலக்குகின்றன.
இவ்வாறு அன்றாட நிகழ்ச்சிகளையும் அன்றாட நிகழ்ச்சியில் சந்திக்கும் மனிதர்களையும் அவர்கள் நினைப்பவற்றையும் நிகழ்த்துவனவற்றையு கவிதையாகச் சித்திரிப்பதாய் இருந்தால், இத்தகை சித்திரிப்பின் கலையாக்கம் நிச்சயமாக செவிப்புல6ை அடிப்படையாகக் கொண்ட ஒலிமயப் பாணியி அமைய முடியாது. இது கேட்டுக் கிளர்ந்தெழ செய்கின்ற விஷயமோ அல்லது தாளம் போட்டு தலையாட்டச் செய்யும் விஷயமோ அல்ல. இது நிகழ்ச்சிகளையும், நிகழ்ச்சிகளின் காரணங்களா இயங்கும் மனிதர்களையும் வாசகன் கண்முன் கொண்(
வர வேண்டிய விஷயம். இந்த நிகழ்வையும்
காலம் முன்பனி , பின்பனி 1993

இயக்கத்தையும் வாசகன் கண் முன் கொண்டு வர வேண்டுமானால், இவைகளின் தொடர்புக்கும் துலக்கத்துக்கும் இன்றியமையாத பின்னணியையும் களத்தையும் இயங்கு முறையில் கட்புலப் படிமங்களின் மூலம் சிருஷ்டிக்க வேண்டியது அவசியம். இந்த அவசியத்தை நாம் இன்று உணர்வதற்கும் காரணமாகி, ஒரு படைப்பாளியின் யூகத்தோடும் செய்திறனோடும் ஒர்ந்து, அன்றாடம் சந்திக்கும் வகை மாதிரி மனிதர்களைக் கொண்டு. காலம், களம் ஆகியவற்றோடு கூடிய ஓர் இயங்கு முறைக் கலையாக்கத்தை மஹாகவி உருவாக்கினார். மஹாகவி உருவாக்கிய இந்தக் கலையாக்கத்திற்கும் , சங்க காலத்து அகத்துறைப் பாடல்களின் கலையாக்கத்திற்கும் ஒற்றுமை உண்டு. ஆனால் சங்க காலத்துப் பாடல்களில் வருகின்ற பாத்திரங்கள் தனித் தன்மையோ, வகை மாதிரித் தன்மையோ உள்ளனவாக இல்லாமல் ஒரே அச்சு வார்ப்பில் அமைந்த குறியுருவமாக அமைந்துள்ளன. இது இரண்டு காலத்துக்குமுள்ள சமூக வளர்ச்சியின் வேறுபாடு. ஆகவே மஹாகவி தமிழ்க் கவிதைக்கு உருவாக்கிய கலையாக்கம் தனித்தன்மை வாய்ந்தது. இதையே நாம் யதார்த்த தெறி என்கிறோம்.
இந்த யதார்த்த நெறிக் கலையாக்கத்திற்கு கட்புலப் படிமங்களை இயங்கு முறையில் அமைக்கும் போது, வெவ்வேறான அளவீடுகளும், குறுகிய வாக்கிய அமைப்புக்களும் இடம் பெறும். இதனால் தாளக் கட்டுக் குறைந்து கட்டின்மை மிகும். தாளத்தின் கட்டின்மை மிகும்போது, பாட்டோசை குன்நிப் பேச்சோசையே மிகும். அவசியமன்றி ஒசைக்காகச் சேர்த்துக் கொள்ளப் படும் அடைமொழிகள், பண்புச் சொற்கள் ஆகியன தவிர்க்கப் படுவதுடன். ஏகார ஈறுகள் புறக்கணிக்கப்படும். அடிகளின் வரி உருவமும் பொருட் புலப் பாட்டுக்குத் தக்கபடி மாற்றியமைக்கப் படும். ஆகவே மஹாகவியின் கவிதைகளில் காணப் படும் பேச்சோசைப் பண்பு அவருடைய யதார்த்த நெறிக
கலையாக்கத்தினால் விளைந்ததாகும்.
32

Page 35
இதுவரைஅவதானிக்கப்பட்டவிஷயங்களிலிருந்து,
(அ) மஹாகவி தேசிய மறுமலர்ச்சிக் காலத்து மத்தியதர வர்க்க முற்போக்குச்சிந்தனையைப் பிரதிபலித்தவர் என்பதும்,
(ஆ) அன்றாட நிகழ்ச்சிகளினதும் அனுபவநங் களினதும் அடிப்படையில் யதார்த்த பூர்வமாய், அல்லது மெய்மை சார்ந்து செய்யப்பட்ட படைப்புகள் மூலம் அந்தச் சிந்தனையைப் புலப்படுத்தியவர் என்பதும்,
(இ) அந்த யதார்த்த பூர்வமான படைப்புக்குத் தேவையான முறையில் செய்யுள் நடையை ஒரு புதிய கட்டத்திற்கு வளர்த்தெடுத்தவர் என்றும்,
அறியலாம்.
ஆனால் அவர் வளர்த்தெடுத்த இந்தக் கவிதைப் பண்புகள் அவருடனேயோ அல்லது அவா பிரதிபலித்த மத்தியதர வர்க்க முற்போக்குச் சிந்தனைகளுடனோ மட்டும் முடிந்து விடப் போகிறவை அல்ல என்பது தான் நாம் இறுதியாகத் தெரிந்து கொள்ளவேண்டியது. இன்று அவருடைய தலைமுறையைச் சேர்ந்த கவிஞர்களிடமும் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த கவிஞர்களிடமும் காணப்படுகிறது என்பது மட்டுமல்ல, இன்றய இளம் சந்ததியினரிடையே, இன்றய காலகட்டத்தில் உலகெங்கணும் மிகவும் கூர்மையடைந்துவரும் வர்க்கப் போராட்டத்தைச் சித்தரிக்கவும் திசைப்படுத்தவும் அவர் வளர்த்த கவிதைப் பண்புகள் சக்தி மிக்க ஆயதமாகப் பாவிக்கப் படுகின்றன.
மஹாகவியின் மூலம் கிடைத்த இந்த யதார்த்தப
33

1ண்புகள் சமுதாய மாற்றத்துக்கான கீழ்த்தட்டு மக்களின் பாராட்ட உணர்வைச் சித்திரிக்கப் பயன் படுத்தப் படும் பொழுது, அந்தப் போராட்ட உணர்வுக் கவிதை இலக்கியத்திலே ஒரு புதிய கட்டம் உண்டாகிறது ாணலாம். ஏனெனில் , இதுவரை இந்தப் போராட்ட உணர்வுகள், பாரதி பாரதிதாசன் பாணியில் வெறும் ரச்சாரமாகவே இசைக்கப்பட்டு வந்தன. ஆனால் இன்றய இளம் சந்ததியினர் போராட்ட உணர்வு மிக்க மது படைப்புக்களை இந்த யதார்த்த நெறியில் ருஷ்டிக்கப் புகுவதால், ஆழ்ந்த பாதிப்புள்ள போராட்டப் டைப்புக்களை ஆக்கும் திறமையைப் பெற்றுள்ளார்கள். அந்த அளவுக்கு மஹாகவியின் யதார்த்தப் பண்பை அவர்கள் மேலும் வளர்த்து இணக்கமுறச் செய்ய
உள்ளார்கள்.
ஆகவே தான் மஹாகவி ஒரு புதிய சந்ததியை விருத்தியாக்கும் ஓர் காலகட்டம் ஆகிறார். நாம் இன்னமும் பாரதி யுகத்தில் இருக்கிறோம் என்று சொல்வது தவறு. பாரதி பரம்பரையின் இறுதித் தளிர்கள ழுத்துக் கொண்டிருக்கின்றன. பாரதி ஒரு யுகசந்தி ாண்பது மெய்யே. ஆனால் அந்த யுகசந்தி பிரிந்து விட்டது. அதன் ஒரு கிளை பிச்சமூர்த்தி என்றால் அதன் மறுகிளை மஹாகவியே. பாரதி வளர்த்த சில விதைப் பண்புகளின் தோல்வியே பிச்சைமூர்த்தி ான்றால், அத் தோல்வி நிகழாமல் அதனை இன்னுமொரு ட்டத்திற்கு உயர்த்திய வெற்றியே மஹாகவி எனலாம்.
காலம் முன்பனி பின்பணி 1993

Page 36
நான் வளர்ந்த கருப்பை
நான் வளர்ந்த கருப்பையை நான் இழந்து போனேன்காண். நான் வளர்ந்த கருப்பை, ஆம் நான் வளர்ந்த கருப்பையை
நான் இழந்து போனேன்காண்.
என்னுடைய வித்து விழுந்து முளைத்த இடம் என்னுடைய வித்து விழுந்து வளர்ந்த இடம் என்னுடைய வித்து வளர்ந்து மலர்ந்த இடம் அந்த இடத்தை அடியோடு நான் இழந்தேன். அந்த இடத்தை அடியோடு நான் இழந்தேன்.
வாழ்வு மலர் ஒன்றை மரணம் பொசுக்கியது வாழ்வின் மலர். தன் மணத்தை வெளியெங்கும் வீசி நிலைத்திருக்க விட்டு விட்டுச் சாவென்னும்
தீயில் குளித்துத் திடீரென் றழிந்ததுகாண். ஆமாம்
மஹாகவி, என் அண்பா இறந்து விட்டாய் நீ இறக்கு முன்னர் இரண்டுமணி முன்புவரை
காலம் முன்பனி , பின்பணி 1993

எம்.ஏ.நுஃமான்
உன்னோடு நான் இருந்தேன்
உன் அருகே நின்றிருந்தேன். கட்டிலில் நீண்டு கிடந்தாய் நரைகலந்த
தாடி வளர்ந்து
தளர்ந்து
களைத்திருந்தாய் வேடிக்கைப் பேச்சும்
சிரிப்பும் விடைபெற்றுப் போய்விட்டன உன்னிடம் இருந்து.
நோய்ப்பட்ட மார்பு வலிக்குதென்றாய் வைத்தியரைக் கூட்டிவந்தேன் பார்த்தார் அவர், ஊசி மருந்தேற்றச் சொன்னர் பின்
ஆட்கள் நிற்றல் நல்லதல்ல என்றே அவர் நடந்தார். ஆட்கள் நிற்றல் நல்லதல்ல. ஆகையினால் கிட்டவந்து ‘போய் வருகிறேன் என்றேன் போய்வாரும் என்றொரு சொல் சொல்வதற்கும் வார்த்தைத் துணைவியின்றி
மல்லர்ந்து கட்டிலில் நீண்டு கிடந்தே
34

Page 37
என் கைபற்றிக் கிட்ட இழுத்தெடுத்தாய்
கிட்ட இழுத்தெடுத்து நெஞ்சில் கிடத்தினாய். நெஞ்சில் கிடத்துகையில் முட்டிவரும் கண்ணிரைக் கண் இமைக்குள் மூடிவிட்டு மெல்லத் தலையசைத்துப் போக விடை கொடுத்தாய் போக விடை கொடுத்தாய் நாம் பிரிந்து போனோம் காண்.
மற்ற நாள் வந்தேன் வறிதாய்க் கிடந்த அந்தக் கட்டிலைத்தான் கண்டேன். உன்
கட்டிலைத்தான் கண்டேன்காண்.
கட்டிலில் நீண்டு கிடந்தே என் கைபற்றிக் கிட்ட இழுத்தெடுத்து நெஞ்சில் கிடத்துகையில் முட்டிவரும் கண்ணிரைக் கண் இமைக்குள் மூடிவிட்டு மெல்லத் தலையசைத்துப் போக விடை கொடுத்த
நெருக் கென்ற தென்நெஞ்சு” புள்ளியளவில் ஒரு பூச்சியினைத் தற்செயலாய்ச் சாகடித்து விட்டுத் தவிததுக் கலங்கிய நீ இறந்து போனாய் என் நெஞ்சம் பதறியது.
35

பெட்டியுள் நீண்டு கிடந்து துயிலவதைத்தான் மற்றநாட் கண்டேன். மழித்த முகத்தோடு நித்திரைதான் என்று நினைக்கும்படி கிடந்தாய்
நித்திரை அல்ல. அது நித்திரையே அல்ல இனி எத்தினமும்
மீண்டும் எழுந்திருக்க மாட்டாத நீண்ட மரணம் அது நீண்ட மரணம் காண். அந்த மரணத்துள் ஆழ்ந்து கிடந்தஉனைப் பார்த்தபடி நின்றேன் நான் பார்த்தபடி நினறேன் காண்.
நீண்டு கிடந்தபடி நீ துயின்ற பெட்டியினை வண்டியிலே ஏற்றுதற்கு நானும் இரு கைகொடுத்தேன்
கை கொடுத்து விட்டுக் கருந்தார்ப் பெருந்தெருவைப் பார்த்தபடி நின்றேன் நான் பார்த்தபடி நின்றேன் காண்.
வீட்டிலே சுற்றத்தார் வீழ்ந்து புலம்பியதை நீட்டிக் கிடந்தபடி நீ துயின்ற பெட்டியினை
காலம் முன்பணி > பின்பணி 1993

Page 38
கண்ணம் இடித்த மகன் சேர்ந்து விழுந்ததனை கண்ணா என உம்
மனைவி கதறியதை நண்பர் உனைப்பற்றி நல்லுரைகள் கூறியதை புள்ளி அளவில் ஒரு பூச்சியினை ஒதியதை பார்த்தபடி நின்றேன் நான் பார்த்தபடி நின்றேன காண்.
பாடையைத் தோனில் பலபேர் சுமந்ததனைப் பாடையின் பின்னால்
பலபேர் நடந்ததனை ஓங்கி உயர்ந்த பனைகள் உசும்பியதை
நான் பார்த்தபடி சென்றேன் காண். கட்டை அடுக்கிக் கறுத்து நெடுத்த உன் கட்டையை அங்கேற்றி
வைத்ததனைக் கண்டேன் நான்.
கட்டைகளை மேலும் கறுத்து நெடுத்த உடல் மீதினில் ஏற்றி
மறைத்ததையும் கண்டேன் நான்.
கோதி ஒதுக்க ஒதுக்கக் குலைந்து விழும் கட்டற்ற உன் கேசம் காற்றில் உலைந்து கலைந்து பறந்ததனைக் கட்டைகளின் ஊடே
சில கணங்கள் கண்டேன் நான்.
காலம் முன்னி , பின்பனி 1993

அவ்வளவே.
அவ்வளவே. அந்த நெடும்பனைகள் ஓங்கி உயர்ந்தே உலையும் சுடலையிடை நீங்கா நினைவுகளை நெஞ்சில் சுமந்திருந்து மாண்டோரின் சாம்பல்
படிந்த அம் மேட்டினிலே மீண்டும் ஒரு மனிதன்.
மேன்மைக் குணங்களின் பாண்டமாய் வாழ்ந்தோன் பலரைத் தன் அன்பினால் கட்டி இணைக்கும் கனிந்த இருதயத்தைப் பெற்றோன். மனித இனம் பெற்ற பேறாகத் தற்கால வாழ்வைத் தனது கவிதைகளில் சித்திரித்து வைத்த சிறந்த பெருங்கவிஞன் இந்த நூற்றாண்டின் இடைநடுவில் வாழ்ந்திருந்த Lists 6,
ஆம். நீ மரணப் பெருந்தீயில் சாம்பராய் விட்டாய்.
உன்னுடைய சாம்பல் அச்சாம்பல் திடலில்
தனித்துத் தெரியவில்லை.
சாம்பலிலா உண்டு தனித்தனமை? ஓ அந்தச் சாம்பலிலா உண்டு
36

Page 39
தனித்தன்மை அன்பனே
எல்லாம் முடிந்தன எல்லாம் முடிந்தன காண். எல்லாம் முடிந்த பிறகு தடதடத்து ஒடுகின்ற வண்டியிலே உட்கார்ந்திருக்கையில் வீடும் வெளியும் விரைந்து கழிகையில் பத்தாண்டு காலப் பசிய நினைவுகள் பொத்துக் கிளம்பும் தனிமைப் பொழுதில்
நீ இல்லாதிருக்கும் இழப்பின் கனதி. என் நெஞ்சில் நிறைந்தது என் நெஞ்சில் நிறைந்தது காண்.
ஓங்கி உயர்ந்த பனைகனே. பனைகளிடைத்
துரங்கிக் கிடத்து
துணுக்குற்று வீசுகிற காற்றே, அக்காற்றில் வண்த்தெழும்பும் வெந்நீயே.
பின் காற்றில் விசுறுண்டு செல்லுகின்ற சாம்பல்த் துகள்களே உங்களைப்போல்
தானும் இருத்திருந்தால்.
நான் ஒரு மனிதன் நரம்பும் உணர்ச்சிகளும்
உள்ள ஒருவன்
37

உறவின் நெருக்கத்தில் உள்ளம் குழைந்தும் பிரிவு உலுப்புகையில் உள்ளம் உடைந்து கலங்கிக் கசங்கியும் வாழ்ந்து மடியும் மனிதன்
நீங்கா நினைவில் நினைவின் நிழல்களில் சஞ்சரிக்கும்போது தவித்துக் கலங்குகிற வேளை பல உள்ள
வாழ்வை உடையவன்
ஆகையினால், என்னை அரும்புகின்ற காலத்தே கண்டு பிடித்தவன் காணாமற் போனதனல் என்னை மதித்த
இதயம் மறைந்ததனால் என்னுடைய ஊக்கிகளில் ஒன்றை இழந்ததால் இன்று கலங்கிக் கசிகின்றேன் இக்கசிவை
ஆற்றுதற்காக அவனின் நினைவுகளின் ஊற்றுக்கண் மீதில்
பத்தாண்டு காலம்
படிந்த நினைவுகளை
மீண்டும் இழுத்துவந்து மீண்டும் அதில் வாழ்கின்றேன்.
காலம் முன்பணி பின்பணி 1993

Page 40
STCLAIR - DUF CEI
2045 DUFFERIN ST., TORO
DR. SUKUMAR
இலங்கையில் பிறந்து கனட
சுகுமார் சொ
குடுமீப
MMGRA
X
E
LABO
PHYSIO
SPEC
2045 DUFFERINS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

FERIN MEDICAL NTRE
NTO, ONT, CANADA M6E 3R4
SOLOMON B.Sc., M.D. ாவில் படித்த தமிழ் மருத்துவர் DDG B.Sc., M.D. -
வைத்தியர்
TION VISA RAY
CG ΡΑΤΟΡΥ THERAPY CIALIST
ROGERS RO
STCAR
T,TORONTO, ONT. 651 1210

Page 41
ஈழம் ஸ்டோர்ஸ்
Ο 0 உங்களுக்குத் தேவையான சகல இலங்கை
இந்திய உணவுப் பொருட்கள்இ இறைச்சி, இறால், மீன், கணவாய், உடன் மரக்கறி வகை, பால், பழ வகைகளைப் பெற்றுக்கொள்ளலாம். O
0 பிறந்த நாள். திருமணநாள், மற்றும் பண்டிகை
நாட்களுக்கு தேவையான பரிசுப் பொருட்களை மலிவாகப் பெற்றுக்கொள்ளலாம். Ο
o உங்களது திருமண வைபவங்களுக்குத் தேவை Ο
யான மணவறை, தலைப்பாகை குத்துவிளக்கு போன்றவற்றை எங்களிடம் வாடகைக்கு பெற்றுக்
கொள்ளலாம். O
தொலைபேசி
(416) 298 7255
4565 SHEPPAR
SCARBOROUGH,

V.P.ENTERTAINMENT
தமிழ்மலையாள, சிங்கள வீடியோக்களை வாடகைக்கும் விற்பனைக்கும் எங்களிடம் பெற்றுக்கொள்ளலாம்.
ECHO (Original) pilablLTlibi CD லேசர் இசைத்தட்டுக்கள், சகல விதமான தமிழ் சஞ்சிகைகள் எம்மிடம் பெற்றுக்கொள்ளலாம்
குறைந்த செலவில் FAX சேவை.
தமிழ் விடியோப்பம் நாளென்றுக்கு 99 சதம்
திருமண வைபவங்களை மனதைக் கவரும்
வண்ணம் வீடியோவில் படம் பிடித்துத் தரப்படும்
தொலைபேசி
(416) 609 1744)
FAX (416) 609 3395
D AWE. EAST
ONT, M1S 1V3

Page 42
தகவல் ஒரு மாபெரும் ச
ஜோன் பில்கர்
கட்டுரை ஆசிரியர் பற்றிய குறிப்பு
ஜோன் பிலிகர் சிட்னி அவுஸ்திரேலியாவில பிறந்தவர். யுத்த நிருபர். படம் எடுப்பவர். நாடகாசிரியர் பத்திரிகையாளர். பிரிட்டனில் பத்திரிகையாளருக்கான உயர்ந்த பரிசை இரண்டு வருடங்கள் பெற்றவர் சர்வதேச பத்திரிகைப் பரிகளையும் தொலைக் காட்சி - படம் ஆகியவற்றிற்குரிய பரிசையும் பெற்றவர். . உணர்மை அவருடைய கையில் ஒரு ஆயுதம் தீமைக்கும் அநீதிக்கும் எதிராக அதைத் தூக்கிச சுழற்றுகிறார். அதிகார அறிக்கைகளின் பின்னாலுள்ள
உணர்மையான கதைகளையே e91óIll சொல்கிறார். அவருடைய குரலில் பலரிடம் காணப்படாத நேர்மை, ஐயப்படுதல் (scepticism) காணப்படுகின்றன. .
அவருடைய தூரத்துக் குரல்கள் (Distance Voices) 6Taip Badaj e sis கட்டுரைகள் தற்கால ஐதீகங்களை உடைத்தெறிகின்றன.எங்கள் மனச்சாட்சியை உறுத்தி சஞ்சலப்படுத்துகின்றன. நடைபெறும்அநியாயங்க ளுக்கு நாம் அமைதியாக இருந்து ஒத்தோடும் போது (Consensual Silence) egysop6), 6tuó sou நெருடுகின்றன.
அவருடைய நூலிலிருந்து "தகவல் ஒரு Loraciliš rais" (Information is Power) என்ற ஒரு கட்டுரையை இங்கு தமிழில் மொழிமாற்றம் செய்து தருகிறோம்
காளம் முன்பனி , பின்பனி 1993

தமிழில்:மணி
றொபட் மக்ஸ்வெல் (பிரித்தானியாவின் பல பத்திரிகைகளின் உரிமையாளர்) இறந்த அதே நாளில் பிலிப்பைனஸ் தீவில் ஒரே நகரத்தில் 6000 மக்கள் சூறாவளியால் இறந்தனர். பிரிட்டனின் வெகுசனத தொடர்புச் சாதனங்கள் அத்தனைக்கும் மாக்ஸ்வெல இறந்த செய்தியே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அவருடைய கதை சில உண்மைகளும் பல புதிர்களும் நிறைந்தவையாக இருந்தது. அவருடைய படகு படுத்த கட்டில் அவரும் சகாக்களும் குடித்த கிளாசுகள் செல்வச் செருக்கு விபரங்களுடன விபரிக்கப்பட்டிருந்தன. அவர் 80000 பவுண் பெறுமதியான மதுபானம் அருந்தினார் என்றும் சொல்லப்பட்டது. அந்த மாமனிதனின் படம் கட்டைக
காற்சட்டையுடன் பெரியளவில் பிரசுரமாகி யிருந்தது.
பிலிப்பைன்ஸ் மக்களின் சாவு ஒரு சிறிய அளவில் பத்திரிகைகளில் வெளிவந்தது. பிபிசி ஒன்பது மணிச் செய்தியில் மாக்ஸ்வெல் தான் முதற்செய்தி. பிலிப்பைன்ஸ் மக்களின் சாவு பற்றியது இறுதியாக இட்டு நிரப்பும் செய்தியில் ஒன்று.
ஒருவகையில் இரண்டு நிகழ்ச்சிகளும் தொடர்பானவை. மாக்ஸ்வெல் 'ஏகாதிபத்திய செல்வத்தின் புதிய யுகத்தின் பிரதிநிதி' அதாவது இரகசியங்கள் அரசுடன் கூட்டு, கடன் ஆகியவற்றால் கிடைத்தவை. பிலிப்பைன்சில் அழிவு நடந்தது என்ற இடம். அது முன்னெப்போதும் அழிவு நடக்காத இடம். அதில் வெள்ளத்தாலும் மண் சரிவாலும் மக்கள் உயிரிழந்தனர்.
40

Page 43
மண் சரிவும் வெள்ளமும் ஏற்படக் காரணம் அங்கிருந்த காடுகளை அழித்ததே. மனிதனால் உண்டாக்கப்பட்ட அழிவுக்கு இயற்கை ஒத்தாசை புரிந்தது என்று அதன் கவர்னர் கூறியுள்ளார். அதை இன்னும் விரிவாகப்
பிலிப்பைன்ஸ் தேசீய வரவு - செலவுத் திட்டத்தின் அரைப் பகுதிப்பணம் உலக வங்கி, சர்வதேச நிதி நிதியம், மேல் நாட்டு வங்கிகள் ஆகியவற்றுக்கு வட்டியாகச் சென்று வருகிறது. அத்துடன் பிலிப்பைன்ஸ் மக்கள் தங்கள் அழகான நாட்டை டொலரையும் யென்னையும் பெறுவதற்காகக கற்பழிக்கிறார்கள். பவளப் பாறையை (cora1 reets) சயனைட் நஞ்சினால் நச்சுப்படுத்தி வளர்ப்பதற்கு அமெரிக்காவிற்கு தங்கமீன் அனுப்புகிறார்கள். மரங்களற்ற மொட்டையான யப்பான் நாட்டிற்கு மரங்களை வெட்டி அனுப்புகிறார்கள். காடுகளை சட்டப்படியே அழிக்கிறார்கள். எப்படி இறந்தவர்கள் செய்திகளாகும் தகமை பெறவில்லையோ அதேபோலத்தான் இத்தகைய அழிவுகளும் செய்திகளல்ல. "சிறிய பூமி நடுக்கம் அதிகம் பேர் இறக்கவில்லை' என்ற வக்கரித்த பகிடிகள். இவைபோன்ற செய்திகளுக்கு உலக செய்தி ஸப்தாபனங்களில் ஓர் இடத்தைத் தான் பெறுகின்றன. சூறாவளி, பூமி நடுக்கம், யுத்தம் போகும் போக்கில குறிப்பிடப்படும் செய்திகள். அவை மேற்கத்தய நாடுகளிடமிருந்து தர்மங்கள் கொடைகள் பெறுவதற்கு திருப்திகரமான முன் நிபந்தனைகள். மூன்றாம் உலக நாடுகளில் நடைபெறும் விடுதலைப் போராட்டங்களை மேற்கு நாட்டின் வெகுசனத் தொடர்பு சாதனங்கள் எதிர்மறையானவயாகக் காட்டுகின்றன. காரணம் விடுதலை இயக்கங்கள் மேற்கு நாடுகளில் தங்கியிருக்கும் நிலையை இல்லாமல் செய்துவிடும் என்ற
Juni,
இன்னொரு உதாரணம், ஆபிரிக்கா பற்றிய மேற்கு நாடுகள் பற்றிய எண்ணத்தைப் பாருங்கள். ஆபிரிக்காவின் தொடர்ச்சியான பஞ்சம் வறுமை புதிய
41

யுகத்தின் இன்னொரு குணாம்சம். அதிகரித்து வரும் இந்த வறுமைக்கு அரசியல் காரணம் மேற்கு நாடுகளில வேரூன்றி உள்ளது. எதியோப்பியாவின் வறுமையும்
உலகு முழுவதும் பரவிய செய்தி. ஆனால் அதே ஆண்டில் ஆபிரிக்க நாடுகளில் இருந்து மேற்கு நாடுகளுக்கு வட்டிப்பணமாக இரண்டு மடங்கு செலுத்தியிருக்கிறார்கள். இது பலருக்கும் தெரியாத செய்தி.
பிள்ளைகள் பசியால் அவஸ்த்தைப் படுவதையும் சாவதையும் தாழ்ப்பதையும் தொலைக் காட்சியில் காட்டினர்கள். ஆனால் அவர்களுடைய சாவில் எமது நிதி ஸ்தாபனங்களின் பங்கைப் பற்றிக குறிப்பிடவில்லை.
அது செய்தி அல்ல. பொய்யான ஒரு நடுநிலையை (false neutrality) (65Tš6 காமெராக்கள் திருப்பப்பட்டிருக்கின்றன. செய்தி நிருபர் வஞ்சகமில்லாமல் ஒரு பார்வையாளனாக நிற்கிறார். பின்னர் தலைப்புக்கள் எழுதுவார். முற்சாய்வுகள் களையப்படாதவிடத்து, விடுபட்டவை நிரப்பப்படாதவிடத்து பொய்த் தகவல்கள் உண்மையாகி விடுகின்றன. இது ஒரு முரண் அது இறுதியில சட்டமாகி ஒரு வகைப் புனிதத்துவமும் கொடுக்கப் UGSps, possi (5 (objectivity) 6Teip (a Fi முகத்தைக் களைந்தால் இதன் உண்மை வெளிவரும்.
இதற்கு அண்மைக்கால உதாரணம் வளைகுடாப் பேர்.
அதிகமான பிரித்தானிய அச்சுக் கூடங்களுக்கு உரிமையாளர் ஒரு சிலரே. மேடொக், மக்ஸ்வெல் (இப்போ இல்லை). ஸ்டீவன் பிரபு, லருத்மியா போன்றோர். மேடொக்குக்கு ரீ.வி.வானொலி ஆகியவற்றிலும் உரிமை D 6-i(6, 6T6i.6Tai.6Tsip -9Qufl is, (Cable News Network) தான் இன்று அதிக ஆதிக்கம செலுத்துவது. அவர்களுக்கு ஒரு விமானப்படை விமானி பல்லாயிரக் கணக்கில் கொல்லப்பட்ட ஈராக்கிய
மக்களுக்குச் சமன். அவர்களில் அமெரிக்க புல்
காலம் முன்பனி , பின்பணி 1993

Page 44
டோசர்களால் குழிகளில் உயிரோடு மண்ணால் மூடி புதைக்கப்பட்டவர்களும் அடங்குவர். ஒரு பிரித்தானியச் குழந்தை எண்ணற்ற ஈராக்கியக் குழந்தைகளுக்கும மேலானது.
90 வீதமான சர்வதேச செய்திகள் நான்கு பெரிய மேற்கத்தய ஸப்தாபனங்களின்
கட்டுப்பாட்டிலுள்ளன. அவை
UPI (United Press International) , AP (Associated Press) , Reuter AFPE
(Associated E' r a C e Presse) முதலிரண்டும் அமெரிக்கருடையவை. மற்றது பிரித்தானிய பிரான்சிய அரசுகளுக்குரியவை அவர்களுடைய வெளியீட்டிற்கு மேடொக்கிலிருந்து ரைம்ஸ், வார்ணர், சி.என்.என். வரை உதவுகிறார்கள் இவை எல்லாம் அமெரிக்கருடையவை. மிகப் பெரிய ஸ்தாபனமான யூ.பீ ஐ க்கு அமெரிக்க செய்திப் பத்திரிகைகளிடமிருந்து நிதியுதவி கிடைக்கிறது.
1980 பதுகளில் எடுத்த கணக்கெடுப்பின்படி யூ.பீ.ஐ. செய்தி ஸ்தாபனம 71 வீதம் ஐக்கிய அமெரிக்க செய்திகளையும் 9.6 வீதம் ஐரொப்பிய செய்திகளையும் 59 வீதம் ஆசிய செய்திகளையும் 32 வீதம் லத்தின் அமெரிக்க செய்திகளையும் 18 வீதம் ஆபிரிக்க செய்திகளையும் தருகிறது.
டொன் றோஜஸ் என்ற கிறெனேடிய எழுத்தாளர் பின்வருமாறு கூறுகிறார். 'இந்த புள்ளி விபரங்கள் தகவல் ஏகாதிபத்தியத்தின் தன்மையைக் காட்டும் நல்லதொரு படம். 56 நாடுகளுக்கு மேலிருக்கும் ஆபிரிக்காவுக்கு கொடுக்கப்பட்ட இடத்தைப் பார்க்கிலும் ஐக்கிய அமெரிக்காவிற்குக் கூடிய இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது"
முன்னைநாள் தன்சானிய ஜனாதிபதி யூலியஸ் நயராரே நக்கலாக இப்படிக் கூறினார். ’ ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் அபிவிருத்தி
காலம் முன்னி , பின்பனி 1993

அடைந்து வரும் நாட்டுப் பிரஜைகளை வாக்களிக்க அனுமதியளிக்க வேண்டும். ஏனெனில் அங்கு போட்டியிடும் அங்கத்தவர்களைப் பற்றிய முழு விபரமும் எவ்வளவு அந்த நாட்டுப் பிரஜைகளுக்குத் தெரியுமோ அதேயளவு இவர்களையும் தாக்கியிருக்கின்றன".
லிம்பாப்வே செய்தியாளராகிய டிண்காண் ம்பொன்பா "மேற்கிலிருந்து வரும் அகன்ற செய்தி ஆற்று நீரோட்டத்திற்கு எதிராக மூன்றாம் நாடுகளிலிருந்து சொட்டும் தகவல்கள் நியூயோர்க், லண்டன், பாரிஸ் நாடுகளில் இருக்கும் வாசல்களை மிகவும் சிரமப்பட்டுத்தான் அடைகின்றன’ எண்று கூறுகிறார்.
மேற்க்குக்கும் ஆசியாவுக்கும் இடையில் நடைபெறும் செய்திப் பரிமாற்றத்துக்கு ஒரு உதாரணம், அசோசியேட்டட் பிறெஸ் சராசரி 90,000 வார்த்தைகளை ஒரு நாளில் நியூயோர்க்கிலிருந்து ஆசியாவிற்கு அனுப்புகிறது. பதிலுக்கு திருப்பி 9,000 வார்த்தைகளையே அங்கிருந்து பெற்றுக்கொள்கிறது. ஏ.எஃப்யி பிரஞ்சு மொழி பேசும் நாடுகளில் பலம் பெற்றது. ஏ.பி. யும் யூ.பி.ஐ. யும் அமெரிக்கா யப்பான், தென கொரியா, பிலிப்பைன்ஸ் நாடுகளிலும், றொய்ட்டா பொதுநலவாய நாடுகளிலும் பலம் வாய்ந்தவை.
றொய்ட்டர் செய்தி ஸ்தாபனத் தலைவரான றொடிரிக் ஜோன்ஸ் 1930 ல் பின்வருமாறு கூறினார். ’பிரித்தானியாவின் மதிப்பைக் காப்பாற்றுவதற்கு றொய்ட்டர் ஸ்தாபனம் பாடுபட்டதைப் போல வேறெந்தக் காரணியுமே பாடுபட்டதில்லை” இந்தக் காலத்தில் சந்தைத் தகவல் களை உலகத்திற்கு அளிப்பதன் மூலம் கொள்ளை லாபம் ஈட்டுகிறது.
செய்தி ஸ்தாபனங்கள் நேரடிச் செய்திகளைத தருகின்றன. நிகழ்வுகளை விமர்சிக்கின்றன. ஆராய்கின்றன. இருந்தும் இவை பொய் எடுகோள்களை சுட்டிக் காட்டுவதில்லை. மாற்றமுறாத ஒரே அச்சான (st er e o type s ) சிந்தனைகளி லிருந்து
42

Page 45
மீளமுடியாமல் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும வெளிவரும் வார்த்தைகளில் பல திருகப்பட்டவை. சுருக்கங்கள் சர்ச்சைகள் களையப்படுவதில்லை. உதாரணத்துக்கு பயங்கரவாதம் என்ற வார்த்தை. இந்த வார்த்தையை மேற்க்கு நாடுகளுடன் தொடர்பு படுத்தி பாவிப்பதில்லை. அது மூன்றாம் உலகத்துக்கு மட்டுமே சொந்தமானது. அமெரிக்க அரசு பயங்கரவாத இராணுவத்துக்குப் பயிற்சி கொடுத்து, அதன முகவர்களை அனுப்பி கொலைகள் செய்கின்றது. லிபிய அரசு பயங்கரவாதத்தை வளர்க்கிறது என்று வர்ணிக்கிறது.
ஆனால் இஸ்ரேல் அரசு வளர்ப்பதைச் சொல்வதில்லை.
தனியே அராபியர்கள் மட்டும் தான் பயங்கரவாதிகள்.
டினாகன் மபொண்டா குறிப்பிடுவது போல ”மோசாடெக். அலெண்டே போன்ற சுதந்திர எண்ணம் கொண்ட தேசீயத் தலைவர்களை இடதுசாரிகள், "கொம்யூனிஸ்ட்டுகள் என்று நாமம் சூட்டி விடுவர்" இப்படிப்பட்ட நாமம் சூட்டுவதைப்பற்றி நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது. அதன் தாக்கம் மேற்க்கு நாடுகளின் இராணுவம் வியட்னாம். எல் சல்வடோர் போன்ற நாடுகளில தலையிடும் போது மக்கள் அபிப்பிராயத்தை ஏலவே தயாரித்து விடுகிறது.
வியட்நாம் யுத்தத்தின் போது தெற்கு வியட்நாமியர்களான வியட்கொங்குகளை கொம்யூனிஸ்ட வலியச் சண்டைக்குச் சென்றோர் என்றே அழைத்தனர். அமெரிக்கர்களை எந்தப் பொதுசனத் தொடர்புச் சாதனமும் இன்னொரு நாட்டின் மேல் படையெடுத்தவர் (invaders) என்று குறிப்பிடவில்லை. தனியே F# (GLULU-sniči s; si ( involved) 6TGsi gp d (696ud
குறிப்பிடுவர்.
ஆறு மாதத்துக்கு மேல் பொது சனத் தொடர்புச் சாதனங்கள் சதாம் உசேனைப் புதிய
ஹிட்லராக்கிக் காட்டின. அதனால் தான் பின்னர் ஜெனரல
43

ஸ்வார்கொப் வால் ஈராக்கை வெல்ல முடிந்தது. அதை Gungy sor ossini Jings of ulists (Media War) எனலாம். எதிரியை மிகப் பயங்கரப் பிசாசாகக் காட்டி அமெரிக்க மக்களை தயாரித்த பின்னரும் கூட 75 வீதம் மக்களும் பிரித்தனில் 56 வீதம் மக்களும் பேச்சுவார்த்தை தான் சிறந்தது எனக் கூறினர். யுத்தம் ஆரம்பிக்க முன்னர் ஈராக்கியத் தலைவர் பல முறை பலர் ஊடாக, சவூதி அரேபியா மூலமும், தாம் குவைத்திலிருந்து சென்று விடுவதாகச் சொன்னார் என்பது பலருக்கும் தெரியாத சங்கதி. யுத்தம் முடிவடையும் வரை அமெரிக்க பிரித்தானிய பொது சனத் தொடர்புச் சாதனங்கள் இதைச் சொல்லவில்லை. இதனால் எமது 'பொடியள் 'விட்டுக கொடுக்காத எதிரிக்கு எதிராக யுத்தத்துக்குச் சென்ற போது பெரும்பான்மை மக்கள் அதை ஆதரித்தனர்.
ஆனால் மூன்றாம் உலக விமர்சனங்களை வாசித்த போது எனக்கு வியப்பு மேலிட்டது. குளிர் யுத்தத்தின் பின்னர் ஏற்பட்ட புதிய காலனித்துவம் இந்த 556 sů (asrs só go gš5ô (information
technology) 6TDavir.
சிராஸ் கிஸாம் எழுதுகிறார். ”உலகளாவிய செய்தி பேருருவங்கள் எங்களுக்குத் தகவல்களைத் தருகின்றன. அவர்களுக்கு முன் வந்த முன்னோடிகள் (exp1orers) போல தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும் கொள்கை அடிப்படையில் அவர்கள் உலகப் படங்களை வரைந்து கொண்டிருக்கிறார்கள்.
பிரித்தானியாவில் பொது சனத் தொடர்புச் சாதனம் தொழில் நுணுக்கம் வளர்ச்சியடையும் போது LDUL figuro Ui Sifas 6T(pig) (journalism) மறைந்து விடுவது மட்டுமல்ல மதிப்புக்குரிய மரபும் மறைந்து விடுகிறது. செய்திகளாகாத மக்களிடம் தான உண்மையான மரபு இருக்கிறது. அது வெட்கப்படத் தக்க முரண் அணி ஆகும்.
காலம் முன்பனி , பின்பணி 1993

Page 46
சேரண் கவிதைகள்
1 நூறு நட்சத்திரங்களுக்கு அப்பால்
உன் பெரு வெளி அங்கு ஊற்றெடுக்கும் ஆறுகள் t இடைவெளியில், : S பேரண்ட வழியில் ܔ உறைந்து போக 魯 எண்ணற்ற நிலவுப் பிழம்புகள் ܀ ܓ தொடர்ந்தும் கிளம்பி S அந்தரத்தில் S தூங்குகின்றன.
s
என் சிறு நிலத்தின்
தென்னை மரங்கள் நெடுத்து நெடுத்து வளர்ந்து வளர்ந்து அங்கு வருகின்றன.
என் சிறு வேலியின்
முல்லைக் கொடியும்
ஒரு முடிவற்ற தேடலில் முனைப்புற்றுள்ளது.
பிரிவுத் துயரில்
எரியும் பொழுதில்
உயிரைத் திருகும் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் சூரிய வெளிக்குள் நீ பூமிப் பந்தின் வேகச் சுழலுள்
நான காலத்துக்கும் அகாதத்துக்குமிடையில் நம் உறவு.
2 நிலவு தங்கமாய் ஒளிருமா ?
கூதலுக்குச் சிவப்புக் கிரணங்கள் உண்டா ? சூரியனை விழுங்கி விட்டதா மழைத்துளி ?
இன்னும் பெயரிடப்படாத அல்ப்ஸ் மலைத் தொடரின் இரண்டு முடிகளுக்கிடையில்
காலம் முன்பனி , பின்பணி 1993

பனிப்புகார் பெருகும் வெளியில் இப்போது உறைந்திருக்கின்றன என் வார்த்தைகளும் புதிய கேள்விகளும்.
கோடையில் பெருகும் அவை நீர்க் கோலமாக, பெருகி மலை முடியிலிருந்திறங்கி, பாறைகளைக் கடந்து உயர்ந்த செபர் மரங்களுடாகத் தவழ்ந்து கரையுடைத்துப் பாலங்களை மேவி
உன்னிடம் வரும்
பெற்றுக் கொள்.
முடியிழந்து இலையுதிர்த்துச் சூரியனுக் கேங்கும் நெடிய மரத்தின் கீழ் நீ தனித்து நிற்கிற போது உன்னைச் சூழப் பரவுமே குளிர் காலத்தின் புல்லாங்குழலிசை.
அப்போது,
வெண்ணிற இரவுகளில் துயிலைத் தொலைக்கும் சிவப்பு மதுவை என் வார்த்தைகளின் மீது ஊற்று. பேசும் அவை "உறை பனியிலும் பதிகிறது காலத்தின் சுவடு”. உதிரும் இலைகளில் கரைந்தது முன்னைய உயிர்ப்பற்ற காதல். தொலைபுறத்துறவிலும் ஈரக் காற்றிலும் எரியும் என் மூச்சு இன்று.
கேட்டாயா ?

Page 47
GagGOLD
வெள்ளிக் குச்சிகள் இருள் திரையை மேகத்துடன் சேர்த்துக் குத்தி வைத்திருந்தன. இருள் படிய மரங்கள் பயத்தை உருட்டிச் சேரத்து வைத்திருந்தன. தொட்டால் பொட்டு வைக்கலாம போன்ற குழம்பு இருட்டு சில மரங்களில் தேங்கி இருந்தது. வழக்கத்தை விட வெறுமை, விரக்தி, பயங்கரம், வெறுப்பு ஆகியவை ஊண்றி மனதைக
குடைந்தன. .
சாவைப் பற்றிய பயமோ துன்பமோ இருப்பதாகத் துனி கூட நினைவில்லை. மாறாக, அப்படி இருந்தால் சந்தோஷமான நினைவுகள் தான் வரும் போல இருந்தன. விடியும் மட்டும் விழித்திருந்து எதையும் ஊன்றி நினைக்காமல், சிந்திக்காமல் இருந்தால் சுகமாக
இருக்கும் என்று நினைத்துக் கொண்டான்.
சிந்தனைகள் வெறுப்பையும் பல வேளை அலுப்பையும் ஊட்டின. அது சிந்தனைக்கு எதிரான. அறிவுக்கு எதிரான கட்சியைச் சார்ந்ததல்ல. சோம்பலுமல்ல, ஆனால் எதிலும் தேவை தேவையற்ற என்ற பாகுபாடற்ற நிலை. அது முக்தி நிலையுமல்ல துறவுமல்ல. வெறுமையின் மையம், விளக்கங்களை வெறுக்கும் நிலை. அந்த நிலையில் காலத்தின் பிரக்ஞை இல்லாமல் காலத்தை ஒட்டி விடலாம் என்ற நினைவு. இருப்பினும் காலம் என்ற கட்டுப்பாட்டிற்குள் வளர்ந்த காரணத்தால் காலத்தின் நினைவுகள் இடைக்கிடை உதைத்து உலகத்தின் இருப்பை உணர்த்தும். எந்த நினைவுகளுமற்ற வெறுமையில் தியானம் செய்வது அசாத்தியமானதோ?.
گ
45

எண்.கே.மஹாலிங்கம்
ட்டுப்பாடுகளற்ற, கட்டற்ற நிலை. குறைந்தது னத்தின் தளத்தில் கூட ஏற்படுவது, எட்டிவிடுவது யலாத ஒன்றோ. ஞானிகளின் ஞானத்தின் நிலைகள், ஒளி பாட்டுக் காட்டிவிட்டு மறைந்து தோன்றும் மின னிெகளின் தோற்றங்களா? நிலையான நிழல் படத்தின் தளிவான இருப்பா? அல்லது அவனின் இயலாமையின் அழுங்குப் பிடியான மனமில்லாமையின் வெளிப்பாடா? அப்படியானால் அந்த நிலை எட்டாத கணியா? அந்தக னிக்குத் தான் ஏன் ஏங்க வேண்டும். அவற்றைக்கூட அவாவும் நிலை வரக்கூடாது என்பது தான் அதன
அர்த்தமா ?
எங்கோ நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கான ாக்கம் அடி மனதில் நோவாகக் குடைகின்றதே! அதற்கான காரண - காரியங்களை நிகழ்ச்சிகளின் டங்கள் விழித்திரையில் விழுகின்றனவே! அவையின் உண்மைகள் பல ஊடகங்கள் வாயிலாக வந்து ாக்குகின்றனவே! நினைவுகளின் ஏற்கனவே உள்ள அனுபவங்களின் தாக்கமும் விளைவும் வெளிப்பாடுமா அவை? வாழ்க்கை இன்றுள்ளதா அல்லது ஆரம்பம் தாட்டு வந்துள்ள அனுபவங்களினதும்
ன்றுள்ளதும், நாளை நடக்கப் போகும் என்பவற்றின் ற்பனைகளின் கூட்டுக் கலப்பா? எவ்வளவு தான் தூர ருந்தாலும் பலவற்றின் தாக்கம் பல அனுபவங்களுக்கு ாழிசமைத்துக் கொடுத்து விழிப்படையச் சய்கின்றனவே.
வெறுமையான, இல்லாத ஒன்றை (?) தேடி அலைகின்றது மனம். அதற்குச் சாந்தியை எது
காலம் முன்பனி பின்பணி 1993

Page 48
கொடுக்கும். எதுவுமே அற்ற அலைச்சலா? மனத்தி அலைச்சலே அதற்குரிய மருந்தையும் இதமாகத் தட விடுகிறதா? வெறுமையின் - வெறுமையைத் தேடு மனத்தின் - இறுதியில் சாந்தியைப் போன்றதொ சுகமான தென்றல் - இலைகளின் அசைவுகளற்
தன்மைத்தான-வெளிப்பாடான சுகத்தைத் தருகின்றதே
காலத்தின் இடைவெளிக்குள் இை கட்டுப்படும் போது சுகத்தின் வசந்தம் குறைந் விடுகிறது. வீணான கவலைகள் குறுக் கிட் விடுகின்றன. காலம் தான் இவற்றுக்கெல்லா இடையூறாக நின்று வெறுமையின் விளக்கத்ை வீணடித்து விடுகின்றதோ? காலத்தை வெண் வெறுமையை அடையும் உரித்தாக்கும் நிலையு
எண்ணமும் வீணானதோ?
காற்றின் அசைவோ, உயிரின் பிரிவோ இை ஒன்றை உதிர்த்தது. அது அவன் முன்னே விழுந்து சருகாக அசைந்தது. அது ஏதோ ஒன்றின் இருப்பை வெறுமையின் எதை? - காட்டியது. உயிரற் உடல்களின் இருப்பையா? அல்லது சடத்தி பரிணாமத்தின் வளர்ச்சியையா? எது எப்படி இருப்பினு அது வேறொன்றின் அனுபவத்தின் வருகையையு இருப்பையும் உணர்த்தியது.
0 குஞ்சுண்ணி கவிதைகள்
நானெனும் சிலுவையின்மேல் அறையப்படடுக் கிடக்கிறேன் நான் இருந்துமென்ன ஆ
கிறிஸ்துவாக மிடியவில்லையே
காலம் முன்பனி , பின்பணி 1993

ற
0 நகுலன் கவிதை
ஏன்?
என்னை வெறுப்பவர்கள் கூட என்னிடம் அன்பாகவே இருக்கிறார்கள் ஏன் ? இந்தத் தனிமையில் இந்த நிசப்தத்தில். பைபிளின் புதிய ஏற்பாட்டிலிருந்து யேசு தன் எதிரிகளின் குற்றச் சாட்டுகளுக்குச் சுருக்கமாகவே பதில் சொலகிறார்ஜி ஆம். நீங்கள் சொல்கிறீர்கள்ஜி இது எனக்கு ஒரு நிரந்தரமான அமைதியை அளிக்கிறது. ஏன் ?
ஆறாக ஓடும் ஆறும் புழுவாக இழையும் புழுவும் நானாக அலையும் நானும்
அற்புதமன்றோ உலகம் !
46

Page 49
3123வது நண்பனைத்
எனக்குக் கொஞ்சம் கற்றுக் கொடுங்கள் வாழ்க்கைச் சதுரங்கத்தின் காய்களை நகர்த்துவதற்கு
எதிரிக்கு எதிரி எனக்கு நண்பனென்று விதியாகிப் போனதன் விஞ்ஞான விளக்கத்தை
முரண்பாடுகள் தோன்றின் முறிந்துபோகும் நட்பின் சமன்பாடுகள் பற்றி சரியான விளக்கத்தை
நேத்திரங்களின் வீச்சில் நெகிழ்ந்துபோகும் அன்பின் சூத்திரத்தை உணர்ந்துகொண்டு சுகலயத்தில் திளைக்கின்ற மாத்திரத்தில் எல்லாமே மாறிப்போய் வெறுப்பாகி ஆத்திரத்தைப் பிரசவிக்கும் அதிசயத்தின் அர்த்தத்தை
கண்டமுதல் நிமிடம் கனகாலம் பிரிந்தவர் போல் எண்ணவைக்கும் நட்பில் ஏற்படுமோர் சந்தோஷம் பாதங்களுக்கிதமான பழையதொரு சப்பாத்தின் ஆதரவைப்போல் மனதை ஆட்படுத்தும் அன்பதனை
47

தேடல்
ஆனந்த பிரசாத்
காரியமாகும் கடைசிக் கணம் வரையில் வீரியமொழுகாதிருக்கும் வித்தைச் சிநேகிதத்தை
கயலாபத் தூணில் முதுகு சொறிந்து கொள்ளும் நியமத்தில் வாழும் நிழல் வளைந்த மனிதர்களின் தோழமை என்னும் தொல்லைகளே இல்லாத நாளைய நண்பனை
இனங்கண்டு கொள்ளுவதை
எனக்குக் கொஞ்சம் கற்றுக் கொடுங்கள் !
காலம் முன்பணி பின்பணி டி

Page 50
ஒரு மனிதன்
சுள்ளென்று காலை வெய்யில் எரித் கொண்டிருந்த போது வீட்டை விட்டுப் பே சாம்பசிவத்துக்கு அது கண்ணில் பட்டது. ஆ அடிததது போல் அந்த இடத்தில் அப்படியே நி விட்டார். இமை வெட்டாமல் அந்த உருவத்ை பார்த்துக் கொண்டேயிருந்தார். போவோர் வருே எல்லாம் ஒரு கணம் நின்று பார்ப்பதும் புரிந்த: புரியாததுமாக தங்களுக்குள் தலையாட்டிக் கொன அல்லது முகத்தை வெறும் சோகமாகத் தொங் போட்டுக் கொண்டு இடத்தை விட்டு நகர் கொண்டிருந்தனர். மறுபடியும் அந்த தெருவி போகவேண்டிய சூழ்நிலையில் வந்த சிலபேர் அ உருவத்தைவிட சாம்பசிவத்தைப் பார்த் பரிதாபப்பட்டுக் கொண்டனர். அந்த உருவத்து அவர் நெருங்கிய உறவுக்காரர் என்பது அவர்கள் எண்ணமாக இருக்கலாம். ஆனால் சாம்பசிவம் அ உருவத்தின் முகத்தை என்றும் பார்த்ததாக ஞாப இல்லை. முப்பது அல்லது முப்பத்து மூன்று வ இருக்கும் அந்த மனிதனுக்கு. அங்கங்கள் எல்ல எந்தவித குறைபாடுமின்றி கனகச்சிதமாக அமை பெற்றிருந்தது. முகம் மட்டும் உண்மை நிலை இருந்து மாறி விகாரமாகிக் கிடந்தது. விழி இரண்டும் பிதுங்கி தனக்கேற்பட்ட பயங்கரத் விபரிக்க முயன்று கெபண்டிருந்தன. காது வழி இரத்தம் வழிந்து தோள் மூட்டில் உறைற போயிருந்தது. மின் கம்பத்தோடு கட்டி வைத் விட்டுத்தான் அவன் காதுக்குள் சுட்டிருக்க வேண் எண்பதற்கு வலுவான அடையாளமாக கய கட்டப்பட்டிருக்கும் இடங்களில் இரத்தக்க காய்ந்திருந்தது.
பொழுது சாயும் நேரமாகி விட்டிருந்தாஜ்
காலம் முன்பனி பின்பனி 1993

துக்
6
ன்று தப்
தும் ண்டு
கப்
ால்
ந்த துப் க்கு
ரின்
அந்த အင်္ခ
USA
жлцѣ
யப்
பில
கள்
தை
JT莎
fy
குமார் மூர்த்தி அந்த மனிதனைத் தேடி யாரும் வரவில்லை என்பதை நினைத்தபோது அவரை ஆத்திரமும் அருவருப்பும் உலுக்கியது. 'நீங்கள் ஒவ்வொருவரும் கொலையாளிகள். இந்தக் கொலைக்கு நீங்கள் ஒவ்வொருவரும் உடந்தையாகத் தான் இருக்கின்றீர்கள். இதிலிருந்து நீங்கள் தற்காலிகமாகத தப்பித்து ஓடலாம் ஆனால் இதன் பலனை நீங்கள் ஒவ்வொருவரும் அனுபவிக்கத்தான் போகின்றீர்கள். நீங்கள் மட்டுமென்ன உங்கள் சந்ததியே இதற்காக வருந்தத்தான் போகின்றது" என்று ஒவ்வொருவரையும் நிறுத்தி முகத்துக்கு நேரே கேட்க வேண்டும் போல் அவருக்குத் துரு துருத்தது. இருந்தும் எல்லாவற்றையும் நிதானமாக்கி முடிந்த மட்டும் எச்சிலைக் காறிப் பலமாகத் துப்பினார். அது புழுதி மண்ணுக்குள் சுருண்டு தற்காலிகமாகத் தன்னை மறைத்துக் கொண்டது. மனிதர்களும் இப்படித்தான் ஏதோ ஒன்றுக்குள் தற்காலிகமாகத் தங்களை மறைத்துக் கொள்வதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்கின்றார்கள் என்பது அவரின் அசைக்க முடியாத கருத்து.
கருத்துக்களைக் கேட்க யாரும் தயாராக இல்லை எனபதைத் திட்ட வட்டமாகத் தெரிந்து கொண்டயின் அவருக்கு மெளனம் பெரிதும் உதவியாக இருந்தது. இதே சம்பவம் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் நடந்திருந்தால் யாரையும் அசைய விடாமல் ஒவ்வொருத்தரையும் நிறுத்திக கேள்வி கேட்டிருப்பார். அவர்களும் ஏதோ பதிலைச் சொல்லித்தான் ஆகவேண்டும் என்கின்ற நியதிககுள் கட்டுப்பட்டு செயற்பட்டிருப்பார்கள். ஆனால் இன்று யாரும் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம்
இல்லை என்பதை விட யாரும் கேள்வி கேட்கக்
48

Page 51
கூடாது என்பது எழுதாத sígurs ஆகிவிட்டிருக்கின்றது.
'உலகத்தின் ஒவ்வொரு பொருட்களும்
ஒவ்வொரு நிமிடமும் மாறிக்கொண்டேயிருக்கின்றன. இதன் அடிப்படையில் மனித சமுதாயத்தின் வளர்ச்சியும் முன்நோக்கியது தான். சமூகப் பாகுபாடுகள் மறைவதும் புதிய கோட்பாடுகள் உருவாகுவதும் தவிர்க்க முடியாதவைகள். அடிப்படையில் இவைகள் எல்லாம பொருளாதார வளர்ச்சியின் மையப்புள்ளிகள், இயங்கியல் விதிப்படி மாறுவதும் மாற்றுவதும் நிச்சயமானது' என்று முழங்கிய அந்த மனிதனின் கருத்துக்களோடு , கதலாகிக் கல்லூரியை விட்டுப் புறப்பட்ட அறுபதுகளின் ஆரம்பம் அது. எதையும் செய்து முடிக்கலாம் என்கின்ற துணிவும் நம்பிக்கையும் மலை போல்க் குவிந்திருக்க, வலுவும் ஆற்றலும் முறுக்கிப் போட்ட இருபது வயது இளைஞனாக இருந்து எங்கு அநீதி நடந்தாலும் அங்கு நின்று அதைப்பற்றிப் பேச உரிமையிருந்த காலம்.
வாழ்க்கையின் வசந்தங்களையும் சூழலின் முரண்பாடுகளையும் தந்தை என்ற ஸ்தானம் கிடைக்கும் வரைக்கும் தான் அவரால் அனுபவிக்க முடிந்தது. பிள்ளைக்குப் பால் கள்ளச் சந்தையில் தான் வாங்கியாகவேண்டும் எண்பது அவருக்கு கட்டாயமாக்கப் பட்ட போதுதான் யதார்த்தத்திற்கும் கொள்கைக்கும் உள்ள இடைவெளியின் தூரத்தை அவரால் உணர முடிந்தது. வரித்துக் கொண்ட கொள்கையும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிஜ வாழ்வும் வேறு வேறானவை தான் என்பதைத் தெரிந்து கொண்டாலும் வாழ்க்கையையோ அல்லது கொள்கையையோ உதறித் தள்ள முடியாது திரிசங்கு சொர்க்கமாகியது அவர் வாழ்க்கை. தேவைக்குப் பணம் வேண்டும் பணத்திற்கு உழைப்பு வேண்டும் அதற்கு வேலை வேண்டும். ஆனால் எந்த வேலையையும் மனமிசைந்து செய்வதற்கு அவர் வரித்துக் கொண்டிருந்த கொள்கை விட்டுக் கொடுக்க மறுத்தது. ஒவ்வொரு வேலையிலும் இருந்த ஊழல்களோடும்
நா பற்
s
E
இ
se
49

க்கிரமங்களோடும் அவரால் சமரசமாகிப் போக டியவில்லை. எந்த வேலையும் கொஞ்ச நாட்களில் பாறுப்பில்லாதவன் முன் கோபக்காரன் என்ற ட்டத்தோடு முற்றுப்பெற்றதாகி விடும். அன்றாட ாழ்க்கையில் நடக்கும் சாதாரண புறம்போக்குச் ஈயல்களெனக் கூடத் தாங்கிக் கொள்வதற்கு அவர் ண்டநாளைய முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. ழப்பல்வாதி. "கொமினிசக் காரண் என்கின்ற வலுவான ச்சு அவருக்கு முன்னால் எப்போதும் கைவீசி ந்தது கொண்டேயிருக்கும். மனைவி கூட அவரை தாசீனம் செய்யத்தொடங்கிய போது அவர் பட்ட னக் கஷ்டம் அவருடனேயே அமுங்கிப் போனது. முதாயத்திலுள்ள ஒட்டுமொத்தக் குறைபாட்டுக்கு தன் னைவியையோ அல்லது பிள்ளைகளையோ குற்றம் ால்லுவதற்கு அவர் மனம் சற்றும் இடம் கொடுக்க றுத்தது. கலாச்சாரம் பண்பாடு என்ற போர்வையில் நந்திரம் மட்டுமல்ல எங்கள் முன்னேற்றமும் நாசமாக்கப் கின்றது. மேலைத்தேய நாடுகளின் பரந்த விஞ்ஞான லகத்தின் முன்னேற்றம். அவர்களின் தளையை மீறிய ன்மையில் தான் தங்கியிருக்கின்றது. மொழியையும் நத்தையும் காக்கவேண்டும் என்கின்ற பேரவாவில குதி எல்லாவற்றையும் கோட்டை விட்டு டுகின்றோம். இந்த மொழியையும் மதத்தையும் லத்துக்கேற்றவாறு நவீனப் படுத்தாவிடில் இதையும ழந்து அடையாளம் இல்லாதவர்களாகத் தான் ழவேண்டி வரும்" என்று தன் உற்ற நண்பர்களுடன் திடுவார்.
தனிநாடு கோரிக்கை எழுந்த போது வலுவான திர்ப்பு அவரிடம் இருந்து வெளிப்பட்டது. எங்களை ங்களே கொடுரமாக அடக்கிக் கொண்டு சுதந்திரம் றிப் பேச எங்களுக்கு என்ன அருகதையிருக்கிறது ? ன்று சாதிப் பிரிவினைகளால் நடக்கும் னர்த்தங்களையும் வன்முறைகளையும் சந்தர்ப்பம் டைக்கும் போதெல்லாம் காரசாரமாக விமர்சிப்பார். தற்கு பயமுறுத்தல்களும் கல்லெறிகளும் தான் வருக்குப் பதிலாகக் கிடைக்கும். அடிப்படைப்
STaiö paiuad - kiuas 1993

Page 52
பிரச்சினைகளை மறைப்பதற்கு அரசியல்வாதிகளுக் இது கைவந்த கலையான படியால் அவர் அதைப்பற் பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அ நாளடைவில் ஆயுதப் போராட்ட வடிவெடுத்து, அத ஒரு சில நடவடிக்கைகளின் வெளிப்பாடுகள் இ அவசரமானதும் தொலை நோக்கு இல்லாததும் என்ான எளிதில் புரிந்து கொண்டார். அதை விமர்சித்த போ அவருக்கு கணத்த துப்பாக்கிகளின் காம்புக கடுமையாகப் பதில் தந்தன. தவிட்டைத் தேடிப் பே சம்பா அரிசியை நாய் கொண்டு போன கதைய இருந்த அற்ப சுதந்திரமும் பறிபோய் விட்ட என்பதைத் திட்டவட்டமாகத் தெரிந்து கொண்டபி இனி உயிர் வாழ்வதாயிருந்தால் அவர் பலமாக நேசி மண்ணையும் மக்களையும் விட்டுப் பிரிய வேண்டு அல்லது மெளனமாக வாழவேண்டும். அவரி பொருளாதார நிலைக்கு இரண்டாவதே பெரிது வசதியாக இருந்தது.
காகங்கள் கிடைத்த தண்ணீரில் அவசர அவசரமாகக் குளித்து தங்கள் கூட்டை நோக் விரைந்து கொண்டிருந்தன. அங்கொன்று இங்கொன்றுமாக மனிதர்களின் நடமாற்றமும் வெகுவா குறைந்திருந்தது. களைத்துப் போன மாடுகளோடு வியர்த்து உப்புப் பூர்த்துப்போன மனிதர்களோடும் வந் கொண்டிருந்த வண்டில் தான் அவர் சிந்தனையை துரிதப்படுத்தியது.
முற்றத்து வாங்கில் அந்த மனித உடை படுக்க வைத்து சின்ன வயதில் சாதி மாறித் திருமண செய்ததால் விலக்கி வைக்கப் பட்ட தன் ஒன்று விட தம்பி என்ற போது வீட்டோடு சேர்ந்து அயலும் அதிர்ந் போனது. பொய் சொன்னதற்காக அவர் மனதிற்கு வருத்தப்பட்டுக் கொண்டார். அடக்க வேலைக சம்பிரதாயப்படி நடந்த போதும் கிரிகைகள் நட போதும் அவர் முகத்தில் சோகம் அப்பியே இருந்த ஆனால் போராட்டக் குழுவில் இருந்த அவர் மக மட்டும் ஒரு மூலையில் வெறுமையாக நின்றா
காலம் முன்பனி , பின்பனி 1993

s
ந்த
ன்
|ம்
தன்னால் தண்டனை நிறைவேற்றப் பட்ட அந்த மனிதப் குற்றவாளியா இல்லையா? என்பதை விட உறவினனா இல்லையா? என்பதை அறிவதில் அவன் மனம் அங்கலாய்த்துக் கொண்டது. சம்பந்தமில்லாத யாரோ ஒரு மனிதன் என்ற எண்ணத்தில் கட்டளையை நிறைவேற்ற அவன் காட்டிய அவசரமும் ஆத்திரமும் இப்போது கரைந்து வடிந்து கொண்டிருந்தது. குற்ற உணர்வு மேலோங்கி உடலெல்லாம் மயில்க்காலிட்டது. கெஞ்சல் கதறல் எதையும் கேட்காமல் தந்தைக்குச் சமமானவரைக் கொடுமைப் படுத்திக் கொன்றுவிட்டதே இந்தக் கைகள் என்று கைகளைப் பார்த்தான். அது ஒரு முறை பலமாக நடுங்கி ஆடிக்கொண்டது.
சாம்பசிவம் ஒரக் கண்ணால் அதைப் பார்த்து அமைதி அடைந்து கொண்டார்.
0 காலம்’ இதழுக்குப் படைப்புகள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. 'காலம்" புத்தக கெளியீட்டு முயற்சியிலும் தன்னை ஈடுபடுத்தியிருக் கிறது. கன்னி வெளியீடாக ஆனந்த் பிரசாத்தின் "ஒரு சுயதரிசனம்” கெளியிடப்பட்டிருக்கிறது. தொடர்ந்தும் நல்ல பல புத்தகங்களை வெளியீடும் நோக்கம் இருக்கிறது எங்களை வழி நடத்தும் வகையில் படைப்புக்களும் ஆலோசனைகளும் தந்துதவுங்கள்
ஆசிரியர்
50

Page 53
ஹம்சத்வனி கவிதைகள்
1. வாழிடம் 2
மண்ணில் ஒளிபுகமுடியாதபடி அழுக்கு மேகங்கள் வான் வெளியை அடைத்துக் கொண்டு விட்டன. பறப்பதற்கும் சுவாசிப்பதற்கும் உதவாததாய் வெறுமனே அடிக்கும் காற்று.
நிறம் மாறிய நதிக் கழிமுகங்களில் மீன் குஞ்சுகள் செத்து மிதக்கின்றன.
ஒரே ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு வதைபட வேண்டியிருக்கிறது. வழி நெடுகிலும் நெருஞ்சி முள் பொறுக்கி நடக்கவும் முள் பிடுங்கி இரத்தம் சொட்டவுமே நேரம் சரி. இல்லம் சென்று ஆறியிருக்க ஒரு வழி இல்லை.
அள்ளித் தின்னும்
சோற்றினும் முள்.
காதலால் கொல்லப்பட்ட சந்தோஷம், அறைச் சுவர்கல் பரிதாபமாய் தொங்கிக் கொண்டிருக்கிறது. கனவுகள் சிதைக்கப்பட்ட சிதிலங்களாய், காற்றில்
சூழலில்
மனிதம் எப்போதும் போல குரூரங்களை விதைத்து பிணங்களை அறுவடை செய்கிறது.
51

வாழுங்காலம்
வாழ்க்கை என்னிடம் இருந்தும் உன்னிடம் இருந்தும் நழுவி ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படி, அப்படி.எப்படியுமில்லாமல் அதன் வழியில்.
எனக்குத் தெரிந்தவனைப் போல புத்தகங்களுக்குள் முகத்தைப்புதைத்து தொலைந்து போகலாம். பிரசாத்தின் புல்லாங்குழலில் லயித்து மறந்திருக்கலாம். தத்துவங்களின் அரிப்பெடுப்பில் சொறிந்து சொறிந்து சுகப்படலாம். ஆனாலும்
விடிகையில் நிர்வாணமாய் முன்நிற்கும் வாழ்க்கையை விலத்தவும் முடியாமல் வெல்லவும் முடியாமல் நான். நீ, அவள்.
உறங்கா இரவில் தொலைபேசியில் சுகம் விசாரிக்கும் ஒரு நட்பின், அதன் ஈரத்தில், எந்த விசாரத்திலும் ஈடுபடா என் குழந்தையின் சிரிப்பில் வாழ்க்கையின் கருணை.
ஒரு கணப் பொழுதுக்குத் தான்.
இன்னுமொரு பொழுதில்
மிருதுவான பாதங்களுக்குள் இருந்து நகம் வீசிக் குதறும் அது.
காளம் முன்பனி பின்பணி 1993

Page 54
ரணப்படுவாய், சுகப்படுவாய் ତୁ(5 போதும் வாழ முடியாது உன்னால், என்னால்,
அவளால்,
சகலும் தொலைத்து தரித்திரமான மக்களுக்கு ஒரு கவளம் சோற்றில் சிரிக்கும் வாழ்க்கை. காதலும் எப்போதும் போல வாழ்க்கை பிடுங்கி வஞ்சிக்கும்.
சமாதானம், சுதந்திரம் இரண்டுமே துப்பாக்கி முனைகளில் புகைந்து கொண்டிருக்கும். உயிர்களைப் போல.
ஆனாலும்
நீயும் நானும் அவளும் அரூபமான வாழ்வின் நிழலைத்தேடித்தேடி காலம் கடத்துவோம்.
காலம் முன்பனி , பின்பணி 1993

ரொறோண்டோவின் வாசகசாலையுடன்
கூடிய நூலகம்
”தேடகம்”
566 Parliament St. Toronto, Ont. M4 Χ 1 Ρ8
52

Page 55
கனடாவின் கதை
பாகம் 2
கனடாவின் பூர்வீகக் குடிகளான ஒ செவ்விந்தியர்கள் தமக்கென ஒரு கலாச்சாரம், மொழி உ மற்றும் ஒரு இனத்திற்குத் தேவையான சகல அ அம்சங்களுடனும் வாழ்ந்து வந்தனர். புதிய பிரான்ஸில் சு குடியேறியவர்கள் குளிரினால் வாடி வருந்தி ே துன்பப்பட்டனர். நf
இன்று கனடாவில் பின்வரும் செவ்விந்திய மொழிக் குடும்பங்கள் உள்ளன. இதனை விட மேலும் .ெ 50க்கு மேற்பட்ட மொழிக்குடும்பங்கள் உள்ளன.
தி
1. Algonkian 6. Salishan g 2. Iroquoian 7. Wakashan g 3. Siouan 8. Tasirnshian 5 4. Athapaskan 9. Haida w 5. Kootenayan 10. Tilingit
ஆராய்ச்சியாளர்கள் பின்வரும் கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்
1. ஆசியாவிலிருந்து, குறிப்பாக சைபீரியாவிலிருந்து பெனிங் கடலினூடாக இங்கு வந்தார்கள்.
2. கி.மு. 40,000 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்தார்கள்.
ஒரு பிரெஞ்சுக் கனடியன் பாதிரியர் பிரான்சில் வைத்துக் கூறிய சம்பவம்
”சலட்டுக்குத் தேவையான மரக்கறி
வகைகளைப் பெறுவதற்கு தோட்டத்திற்குச் செல்லும்
53

ரகுநாதன்
ருவர் பாதுகாப்பாக திரும்பி வருவார் என்பது றுதியில்லை. ஏனெனில் இரோக்குவா எந்த நேரமும் 1ங்கு வரலாம். இவர்கள் எப்பொழுதும் ற்றிக்கொண்டே திரிவார்கள் என்றில்லை. ஆனால் எந்த நரம் வருவார்கள் என்று சொல்ல முடியாது. ஏனவே
ங்கள் எந்த நேரமும் தயாராக இருக்க வேண்டும்"
கனடடா மண்ணின் மைந்தர்களான சவ்விந்தியர்கள் பிரஞ்ச் படைகளுக்கு எதிராகவும் ரித்தானிய படைகளுக்கு எதிராகவும் மிகவும் றமையாக பேர் பிரிந்தனர். ஆனால் நவீன ஆயுதங்கள் வர்களை வென்று விட்டது. தமது உரிமைகளுக்காக ன்றும் போராடி வருகிறார்கள். இவர்கள் பற்றி விரிவாக றிதொரு அத்தியாயத்தில் பார்ப்போம்.
திய பிரான்ஸின் வாழ்க்கை
ஆரம்ப காலங்களில் பலர் குளிரால் இறந்தனர். நாற்று நோயால் பாதிக்கப் பட்டனர். இன்றய கனடா
டுகளில் ஒன்று. இதற்கு குளிரையும் ஒரு காரணமா றலாம். ஆரம்ப நாட்களில் குளிருக்காக கால்களில் பாத்துகளை அணிந்து கொண்டு துயில் கொள்வோம் ன நினைவுகூருகிறார் பிரான்ஸ் திரும்பிய ஒரு ஞ்சுக்காரர்.
காலம் முன்பனி பின்பணி 1993

Page 56
IH-IJILII
SALES AN
F T.J. JC
F CAR STEREOS
(SALES,REPAIR, INSTALLATION)
if CRR ALARMs
(SALES AND INSTALLATION)
if comPUTERs
(SALES, SERUICE AND RENTALs)
if MICHES
t CRBLE T.J. CONSERERS
匣田匣匣匣$面凹
DE NISES N
SCR TEL: 416) 256 EBO4
 
 
 
 

ULBODNOCS
D SERVC
# RUDIO systEM # TELE ANSUERI
MACHINES # UIDEO cassETTEs F AUDIO CASSETTES F ELECTRONIC GIFT ဖျွိ EM S 羲 ... 萎  ́၊ `...............: “...”.......:
if AND MANY MORE
YLES: Y SYYSJULKC LJUD GINKY SYYSJULKIca ||
IN AUE. „EAST
UGHONT. RH 46). 265 42O)

Page 57
1. அரசாங்கமீ
KING
WICEROY
MINISTER
COVERNOR
GENERAH
3TAL
GC\WERN0:R
CAPAN OF
MITA
SETTLERS
at. en
INTENDANoto
INTENDANT*S
SUPERWISOR
کسر
1883 ல் முதன் முதலாக அலுவலகம் திறக்கப்பட்ட இவரது அலுவலகம் கியூபெக்கில் அமைந்திருந்த இவரது வருடாந்த வருமானம் 22,000 liver
ஆகும்.
1663- Louis Robert de Fortel
665- Jean Talon
1668-70 Claude de Boutroue d'Alibgny
1670-72 Jean Taon
1675-82 Jacques Duchesneau de
La Doussiniere - et d' Ambault
ஆகியோர் சிலராவர். பின்னர் ஒரு அத்தியாயத்தில் மு
காலம் முன்பனி பின்பணி 1993

து.
es
g
பட்டியலையும் நோக்குவோம்.
The Governor General
உயர் நிர்வாகம் இருவரிடம் பகிர்ந்தளிக்கப ULL-sp. 9(56) if Governor General Lappoi Intendant. இவரது வருடாந்த வருமானம் 40,000 1iveres ஆகும். இவரது நடவடிக்கைகள் போர்
மற்றும் இராணுவ ரீதியானவை.
1608-1635 Samuel de Champlain
(navy Captain)
1636-1648 Charlesde Huaultde
1648-1651. Louis d'Ailleboust de
Coulonge
(தொடரும்)
குஞ்சுண்ணி கவிதைகள்
0 எனக்கோர் ஈஸ்வரன் அவசியம் வேனும்
அவனை நான்தான் படைக்கவும் வேனும்
0 ஏகாந்தியாகவே போகனும்
வேசியைச் சங்கமிக்க ஈசனையும் தான்
0 காந்திக்கு காந்தியே சீடன்
காந்தி சீடருக்கு உலகத்தில் எல்லோரும் சீடராகனும் தன்னைத்தவிர எல்லோரும் காந்தியாகனும்
54

Page 58
குறிப்புகள்
எறும்பூரக் கற்குழியும்
இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஆரம்ப மாநாடு ஒன்று கனடா ரொறோன்டோவில் 1993 ஏப்ரல் 3ம், 4ம் திகதிகளில நடைபெறவிருக்கிறது. இலங்கையில் சமாதான மேம்பாட்டிற்கான பேரவையினால் இம் மாநாடு ஏற்பாடு செய்யப் பட்டு வருகிறது. சிங்கள. தமிழ், முஸ்லிம்கள் இணைந்து சமாதானத்திற்காக எடுத்து வரும் இந்த முயற்சி. யுத்த மேகங்கள் சூழ்ந்து, புகைந்து, எரிந்து கொண்டிருக்கும் இலங்கையின் அரசியல் வானில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நல்லதோர் ஆரம்பம்.
1992 மார்கழியில் இம் மாநாடு டொறோன்டோ நகரில் நடைபெறுவதற்காக இருந்த போது காலநிலையால் ஏற்பட்ட பாதகமான சூழ்நிலை காரணமாகவே வருகின்ற ஏப்ரல் மாதத்திற்கு
ஒத்திவைக்கப்பட்டது.
இம் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இலங்கையில் இயங்கும் அநேக மனித உரிமை, சமாதான அமைப்புகளுக்கும் அழைப்புகள் அனுப்பப பட்டதாகத் தெரிகிறது. மார்கழி 1992 ல் நிகழவிருந்த மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கையில் நீதிக்கும் சமாதானத்திற்குமான உலக ஒத்துழைப்பு அமைப்பின் இலங்கை கமிட்டி தமது பிரதிநிதிகளாக திருலீனல் ஜயதிலகா திரு.வாசல குணரத்ன ஆகியோரை அனுப்பியிருந்தது. அமெரிக்காவிலிருந்து பலர் வரவிருந்த போதும் காலநிலை காரணமாக திரு. காதிர் இஸ்மாயில் மட்டுமே வரக்கூடியதாய் அமைந்திருந்தது. ஏப்ரல் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இலங்கையில்
55

ருந்தும் சிலர் வருகிறார்கள் என்பது தெரிய ந்துள்ளது. சிறப்பாக, புத்த, கிறிஸ்தவ தகுருமாருடன் முஸ்லிம் நண்பர் ஒருவரும் கலந்து காள்ள இருப்பது மாநாட்டின் நோக்கம் வெற்றி காள்ள பெரிதும் உதவும்.
ரொறோன்டோ நகரில் நடைபெறவுள்ள இம் ாநாட்டின் மூலம் இலங்கையில் உடன் சமாதானம் லை நிறுத்தப்படும் என்று கனவு காண்கிறவர்கள் ருக்க முடியாது. மாநாட்டு அமைப்பாளர்கள் திட்ட ட்டமாக அவ்வாறான கருத்தில் இருக்க முடியாது ண்பது நமது நம்பிக்கை. இம் மாநாடு இலங்கையில் ழுந்துள்ள இனப்பிரச்சினைகளுக்கான ாரணங்களையும், இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு ாண்பதற்கான தடைகளை அகற்றுவதற்கான நாக்கங்களையும், இலங்கை மக்களுக்கு எடுத்துச சல்லும் என்று நம்புகிறோம். இலங்கையில் இத்தகைய டிப்படைகளில் சமாதானத்தைக் கட்டியெழுப்ப ஒரு க்கள் இயக்கம் கட்டியெழுப்பப் படுவதற்கு முனைய வண்டும் என்பது நமது அவா.
ஒரு தொலை தூர பாதைதான். என்ன சய்யமுடியும்?. வானத்தில் இருந்தும் |லைகடல்களுக்கு அப்பால் இருந்தும் சமாதானத்தின் ாதுவர்கள் வருவார்கள் என்ற கற்பனைகள் கலைந்து ான பின்பு, நமது மக்களே சமாதானத்தினை ருவாக்கும் சிற்பிகளாக மாறவேண்டியது முடிவான டிவு. ஆண்டுகள் செல்லத்தான் போகிறது. ஆனால் மாதானத்திற்குத் தான் குறுக்கு வழியே கிடையாதே!
காலம் முன்பணி பின்பணி 1993

Page 59
ANTONY
PEOPLE
QUEEN/ - i LANSDOWNEř.
JAMESON காலை 9.00 ; முதல் இரவு : 1100 வரை :
*., QJTJnib 7 Ä
நாட்களும்*
அன்ரனி 1472 QUE|
CRUEEN ST. &
TORONT
TEL:(41 FAX: (41
LLLL SLL LL LLL LL LLL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLL LLLL LL LLS SLLS LL LLL LLLLLL
 

BROTHERS
SMARKET
N
x
g o do 兰茨 踪菲 SN s 莒艾 to) - 至吕
1472 queen st.
Z `NA Ο
姆”
so
பிறதர்ஸ்
ENST. WEST
ANSDOWNEAVE.
), ONTARIO
6) 588 0733 6) 5163903
LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLLLL

Page 60
For Private Circulation only
Tami .aal T
பூரீ சிவ
SR SWA
721 Bloor St. W, SI
(416)
 

CRuarterly
ா ஜா வல ரி
JEWEIERY
uite 2 C, Toronto, Ontario
531 - 1867