கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வயல் 1986.09-12

Page 1
*
கலே இலக்கிய சமூத அறி
ஆண்டு 1 அறுவடை
부
கதை
* ஈரமில்லாத கல்லுக
3.
சமாதானத் துரோகி
கவிதை
* பர்ண்டவரே வெவ்ஸ்
? நன்றி! போய் வருகி
* வர்க்க உணவு
கட்டுரை
சமய இலக்கியங்களில் தி
படையின் சிறப்பு
அதிகாரப் பரவலாக்கலுட இலங்கையின் அரசியலை
மேத்தாக்களும் புறநானு
இக்கியம் இல்லாச் சமூகம்
 

வியற் காலாண்டிதழ்
1986 செப்டம்பர் - டிசம்பர்
| ||
Ti
ருேம்
ருமுருகாற்றுப்
击
மப்பும் |-
Iறும்
இயக்கம் இல்லாச் சமூகம்

Page 2
esses
XX A. X W வயல் விளைய எமது
ν X y
W
X RAK XX s XX 减 X W X X 2 X X W : y y 4 உளம் நிறைந்த வாழ்த்துக்கள் 4 X WX W ...........مہ ... ۔یہ ...ہ 4! y அன்பளிப்பு : X VX Χ : THE FINANCE CO LTD. : 锡 y இல. 65, மத்திய வீதி - மட்டக்களப்பு. 影 X/A Y
*ssexessessissississessissessissexE3x

ஆசிரியர் தலையங்கம் 66) 1986 செப்டம்பர் - டிசம்பர் s
வயலை விளையச் செய்யுங்கள் இதுவே எமது அறைகூவல்
வடக்கிலும், கிழக்கிலும், மலையகத்திலும் மனித வாழ்க்கை நெருக்கடிக்கு உள்ளாகிவிட்டது. மெல்லமெல்ல இந்த நெருக்கடியே வாழ்க்கையின் வழக்காகியும் வருகின் றது. நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமிழ் பேசும் மக்கள் தம்மை நிமிர்த்தி நிலைநிறுத்திக் கொள்ளவேண்டும். இந்த நிமிர்த்தலுக்கான முயற்சி வழிகள் பலதாக இருக்கலாம். இது மிகமிக அவசியம். நோயின்போதே ஒருவனுக்கு மருந் தும் ஊட்டமும் அதிகம் தேவையான ஒன்ருகும். மனித சமூகமும் இதற்கு விதிவிலக்கல்ல. உலகின் அதிஉயர் மனி தர்கள் எல்லோரும் சமூக நெருக்கடியால் உருவாக்கப்பட்ட வர்களே. இவைகளை உணர்ந்ததின் வெளிப்பாடே எங்க Rன் இச்சிறு முயற்சி எனலாம். இந்தச் சிறுமுயற்சியை நாங்கள் கிழக்கில் இருந்து தொடங்குகின்ருேம். இங்குதான் எமது முயற்சியின் முக்கியத்துவம் உணரப்படல்வேண்டிய தாகுகின்றது. கீழ் மாகாணம் கீழ் மாகாணமே என்று வாஸ்த்தவமாகிவிட்ட ஒரு விடயத்தை வரலாற்றின் பொய் மையாக்க வேண்டும் என்ற எமது இதயத்துடிப்பே இந்த வயல். இந்த வயலை விளையச்செய்யுங்கள். ஆரோக்கியமான தும் ஆற்றல் மிக்கதுமான ஆக்கங்களையே நாம் எதிர்பார்க் கின்ருேம்.
ஆசிரியர் குழு
தொடர்புகள் :
நிர்வாக ஆசிரியர்,
“a uci”
30, பயணியர் வீதி,
மட்டக்களப்பு.

Page 3
சமய இலக்கியங்களில்
திருமுருகாற்றுப்படையின் சிறப்பு
P. பேரின்பராசா (BA ஒறப்பு)
தென் இந்திய மக்களின் மத இன உணர்வினை பிரதிபலிப் பவை சைவமும் தமிழுமாகும். எந்த ஒரு நூலும் இவ்விரண்டையும் எடுத்துக்காட்டாமல் விடவில்லை அத்துடன் சைவத்தினுல் தமிழ் வள முற்றதா? தமிழால் சைவம் வளமுற்றதா? என்பது இன்றும் சர்ச் சைக்குரிய ஒரு விடயமாகவே உள்ளது. சமய விழிப்புணர்வுகளே காலத்துக்குக்காலம் மொழி உணர்விலும், பாடல் அமைப்பிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது என்பதை இன்று பல ஆய்வாளர் கள் காட்டுவதையும் நாம் அறியலாம் இவ்வாறு தோன்றிய சைவத் தமிழ் இலக்கியங்களையும் ஏனைய பக்தி இலக்கியங்களை நாம் இன்று சமய இலக்கியங்கள் என அழைக்கின்ருேம். இப்பின்னணியில் இக்கட் டுரை இந்துசமய இலக்கியம் என்னும் நோக்கிலே இடம்பெறுகிறது.
இவ்வாருன சமய இலக்கியங்கள் ஒரு நாட்டில் ஏற்பட வேண் டிய காரணம் என்ன? என்பதனை நாம் உணர்வதும் அவசியம். சம யக் கோட்பாடு ரீதியான புதிய கருத்துக்கள் உருவாகும்போதும் பிற சமயங்களின் ஊடுருவல் ஏற்படும் வேளையிலும், அரசியல் நிலையில் சமய நிறுவனங்கள் அதிகமாக அமைக்கப்படும்போதும் புதிய கோட் பாடுகளைக் கொண்ட சமய இலக்கியங்கள் உருவாகும் சந்தர்ப்பம் ஏற் படுகிறது. அதுமட்டுமன்றி சமூக வளர்ச்சி; சமய இலக்கியங்களிலும் தன் செல்வாக்கினை ஏற்மடுத்தியிருப்பதனை அவதானிக்கலாம் மேற் கூறிய காரணங்களின் மத்தியில் தமிழ் நாட்டில் முதல்முதல் தோன் றிய ஓர் பக்திக்காவியமாக கருதவேண்டியதே திருமுருகாற்றுப்படை ஆகும்.
இத்தகைய பக்திக்காவியமாகிய திருமுருகாற்றுப்படை தோன் றிய காலத்தையும் அக்காலத்தில் எத்தகைய சமயச் சிறப்பு இருந்தது என்பதையும் நாம் அறியவேண்டியது அவசியமாகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் தனக்கென இயற்கை உணர்வினைப் பிரதிபலிக்கும் சங்க இலக்கியங்களில், பத்துப்பாட்டு நூல்களில் ஆற்றுப்படை நூலாக இந் நூல் விளங்குகிறது. இந்நூல் கடைச்சங்க நூல்களில் ஒன்ருக அமைந் துள்ளது.
இக்காலத்தில் மக்கள் வாழ்வினை அவதானிக்கையில் தமிழக நில அமைப்புக்கு ஏற்றவாறு வாழ்வியலும் சமயக் கொள்கைகளும்
2

அமைக்கப்பட்டிருப்பதனை நீாம் அவதானிக்கலாம். உதார்ணமாக குறிஞ்சிநில மக்கள் போர்த் தொழிலில ஈடுபட்டதால் போர்க் கடவு ளr கிய முருகனையும், அவருேடு சம்பந்தமுற்ற விழாக்களையும் மேற் கொண்டனர். தொல்காப்பியத்தில் "சேயோன் மேய மைவரை உல கும்" என்பது இதனைச் சித்தரிசகிறது. அத்துடன் இக்காலத்திலே தான் வட இந்தியாவில் இருந்து வைதிக கலாச்சாரம் தமிழ் நாட்டி லும் ஆரியர்களால் பரப்பப்பட்டது. அப்போது தமிழ் நாட்டிற்கே உரிய சுயகலாச்சாரமாகிய திராவிட சமயமும் மேற்படி ஆரிய கலாச் சாரத்துடன் இணைக்கப்பட்டது. இவ்விரண்டினதும் சிறப்பினை வெளிப் படுத்தி நிற்கும் நூலே திருமுருகாற்றுப்படை அதாவது சங்ககால சமய நிலையில் ஆரிய திராவிட சமயக்கலப்பினை வெளிப்படுத்தும் ஒரே காவியம் இதுவென்றே கூறலாம்.
இந்நூலின் உள்ளடக்கத்தினை ஆராயுமுன்பு அதன் ஆசிரியருடைய வாழ்க்கைப் பின்னணி, அவருடைய சமயம் நூலை உருவாக்குவதற்கு காரணம் என்பவற்றை அறியவேண்டியது அவசியமாகும் இந்நூலின் ஆசிரியர் நக்கீரராவார். திருமுருகாற்றுப்படை மட்டுமல்லாது அக நானுாறு, புறநானூறு ஆகிய நூல்களிலும் இவர் பல பாடல்களைப் பாடியுள்ளார். நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாடிய வரலாற்றினை நோக்குகையில் இதற்கென தனிக்கதை ஒன்று புர ணங்களில் இருப் பதைக் காணலாம். இவர் சிவபூசையில் குற்றமிழைத்தார் எனவும் இதனல் ஓர் பூதம் இவரைப்பிடித்து மலைக்குகையில் அடைத்தது என் றும். அச்சந்தர்ப்பத்திலேயே இவர் திருமுருகாற்றுப்படை பாடினர் எனக் கூறப்படுகிறது. மற்றுமோர் கதையில் சங்க இலக்கியங்களிலும் திருவிளையாடற் புராணத்திலும் சிவனுக்கும் நக்கீரருக்கும் இடையி லான சமவாதம் எடுத்துக்காட்டப்பட்டிருக்கியது. "நெற்றிக்கண்ணைக் காட்டிலும் குற்றம் குற்றமே" என சிவனுடன் செய்த சொற்சமர் இவருடைய அறிவுத்திறமையைப் புலப்படுத்தும்.
நற்றிணை நற் றிணை குறுந்தொகை ஆகிய நூல்களிலும் பாடல்களைப் பாடிய இவர் தமது உள்ளக்கருத்தான நோக்கத்தை சமயத்துவ ரீதி யான நோக்கமாகவே வைத்திருந்தார். முருகனை நாடிச் செல்பவர் கட்கு முருகன் தரும் பரிசு வீட்டின்பமே என்பது இவர் இந்நூலில் கூறும் விடயமாகும். திருமுருகாற்றுப்படையில் பக்தி உணர்வு வெளிப் படுவதற்கு நக்கீரருடைய பக்தியே காரணமாகும். இவருடைய ஊர் மதுரை என்றும் மதுரை கணக்காயனரின் மகனுகவே இவர் விளங்கு கிருர் எனவும் இவருடைய குலம் சங்கறுக்கும் குலம் என்பதும் இலக் கியக்கதைகளாக உள்ளன. நக்கீரருக்குரிய விழாக்கள் இன்றும் திருப் பரங்குன்றத்தில் உள்ளன. காளத்தி இறைவனுக்குப் பெயர் நக்கீர ங்கம் என இருப்பதையும் அவதானிக்கலாம். அத்துடன் சிவனை நக் கீரர் பாடினர் என்றும் பின் தன்னைப் பாடவேண்டும் என முருகன் நக்கீரரைச் சிறைவைக்க அவர் முருகனைப் பாடினர் எனவும் கூறப்படு கிறது.

Page 4
இந்நூல்களின் கருத்துப்படி நக்கீரர் பிராமண குலத்தில் பிறந் தவர் என்பது கூறப்படுகிறது. - - . . . . . . .س . . . . . .
‘'தேவிசை கூட்டி வேதமொழி சூட்டு நக்கீரன்' என்னும் பாட லடிகள் இதனைத் தெளிவுபடுத்துகின்றன. இத்ஞலேயே தமிழ் நாட்டுக் கலாச்சார உணர்வினையும் ஆரிய கலாச்சார உணர்வினையும் கொண்டு இவர் பாடல்கள் பாடினர் எனச் சொல்லலாம்.
இந்நூலின் அமைப்பினை நாம் நோக்குகையில் இது 317 அடி களையுடைய ஒர் தொடர்பான இலக்கியமாகும். இந்நூலிற்கு உரை எழுதுகையில் நசசினர்க்கினியர் இதற்கு புலவராற்றுப்படை என்னும் பெயரிட்டு அழைத்தார். ஆற்றுப்படை என்பது வழிப்படுத்தல் எனப் பொருள்படும். ஏனைய கூத்தராற்றுப்படை, பொருநராற்றுப்படை போன்ற ஆற்றுப்படை நூல்கள் வழிகாட்டப்படுகின்றவனுடைய பெய ருடன் தொடர்புற்றதாக அமைந்திருக்க இந்நூல் முருகனிடம் உலக மக்களை வழிப்படுத் துவதாக அமைந்திருப்பதால உலக மக்களை எவ் வாறு அழைப்பதென நக்கீரருக்கு சொல்லமுடியாத ஒன்ருகியிருக்க லாம். அதாவது உலகியல உணர்வைவிட ஆன்மீக உணர்வே இந் நூலில் கூடுதலாக உள்ளலால் பக்தி உணர்விற்கு முன்னல் குல உணர்வு தேவையற்றது என்பதனைக் காட்டவும் நக்கீரர் இதனைப் பாடியிருக்க லாம் என்றும் கூறுவர். பாடல்கள் இவர் ஒர் அந்தணர் என்பதற் கான ஆதாரங்களை வெளிப்படுத்கினலும் கீர், கீர் என சங்கறுக்கும் கீரன்" என இறைவன் குலவிசை பாடியது நச்கீரருக்கு ஒர் மன வெதும்பலை ஏற்படுத்தியதோ? என்றும் எம்மால் எண்ணத் தூண்டு கிறது. இதனுலேயே அவர் உலகமக்களை மையமாகக் கெண்டு இரவ லர் பெயர் கூருது புரவலர் பெயரால் இந்நூலைத் திருமுருகாற்றுப் படை என அழைத்தார் என உணர்கிருேம்.
இத்தகைய நூலில் உள்ள விடயம் பற்றிச் சுருக்கமாக நோச்கு கையில் பக்தி உணர்வினைத் தூண்டும் முறை காட்டப்படுதலைக் காண் கிருேம். அவற்றில் பதிகம், ஊஞ்சல் உலா, அம்மானை ஆகிய இலக் கியங்கள் சிறப்பானவை. இவ்விலக்கிய அமைப்பின் ஆரம்பநிலை அனைத் தும் திருமுருகாற்றுப்படையில் காட்டப்படுதலை நாம் அறிகிருேம். முருகவழிபாட்டின் ஆரம்பம் இவ்விலக்கியம் மூலமாகவே காட்டப்படு தலை நாம் காணலாம். தமிழில் தனிப்பட்ட ஒர் தெய்வத்தின் புகழை, வழிபாட்டை, வரலாற்றை எடுத்துக்காட்டும் ஒர் பக்திக்காவியமும் இதுவே. மனிதனுக்கு மனிதனே அருளுவான் என ஏனைய ஆற்றுப் படை நூல்கள் காட்ட மனிதனுக்கு தெய்வம் அருளும் என்பதை இந் நூல் காட்டி நிற்பதனை அவதானிக்க முடிகிறது. அரசனை விட ஆண் டவனிடம் பக்தன் ஒருவனை ஆற்றுப்படுத்துவதும் இந்நூலில் காட்டப் படும் விடயங்களின் சாரமாகும். அவற்றுடன் யிட்டர் துரையங்க சாமி அவர்கள் இந்நூல் பற்றிக் கூறும் கருத்துக்களையும் ஒப்பிடல் அவசியம்.
"அன்பர்களிடம் அன்பைப்பெற முருகனை ஆற்றுப்படுத்தல்" என் பதை இந்நூல் காட்டும். தவிர “வீடுபேற்றிற்கு விரும்பிய இரவலனை
33ம் பக்கம் பார்க்க.

அதிகாரப் பரவலாக்கமும் இலங்கையின் அரசியல் அமைப்பும்
G. a. 355 JITF1î sit&T B. A. (Hons.)
உலகின் பெரும்பாலான நாடுகளில் அதிகாரப்பரவலாக்கம் பற்றி பொதுவாகப் பேசப்படுகின்ற போதிலும், ஏனைய நாடுகளைவிட இலங்கை யில் இதுபற்றி அதிகளவாகப் பேசப்பட்டு வருவதையும், அரசியல் தலைவர்களிடத்தில் முன்னர் இல்லாதவாறு அதிகாரம் பரவலாக்கப் படவேண்டும் என்ற எண்ணம் இன்று சற்று வலுப்பெற்றிருப்பதையும், இதன் வெளிப்பாடாக அரசாங்கம் அதிகாரப் பரவலாக்கத்துக்கான வழிமுறையாக "மாகாணசபை'களை அமைக்கும் யோசனையை முன் வைத்து, அது தொடர்பான ஆலோசனைகளை நடத்தி வருவதையும் நாம் அறிவோம். அதிகாரப் பரவலாக்கத்துக்காக முன்வைக்கப்பட் டுள்ள மாகாணசபை அமைப்புயோசனைகள் தமிழ் மக்கள் இன்று எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகளைத் தீர்த்து, அவர்கள் அபிலாசைகளை நிறை வேற்றி வைக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதா? இல்லையா? என்ப தைப் பற்றி அறிவதைவிட, அதிகாரப்பரவலாக்கத்துக்கு இடமளிக்கும் ஒன்ருக இலங்கையின் அரசியலமைப்பு அமைந்துள்ளதா?, இல்லையா யின் அதிகாரப் பரவலாக்கத்துக்கு இடமளிக்கச் செய்யும் விதத்தில் அரசியலமைப்பில் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண் டும்? அத்தகைய நடவடிக்கைகள் எந்தளவு வரைக்குமான அதிகாரப் பரவலாக்கத்துக்கு வகை செய்யலாம்? என்பதைப்பற்றி அறிந்து கொள்ள முயல்வதே இக்கட்டுரையின் முக்கிய நோக்கமாகும்.
இன்று நடைமுறையில் இருந்துவரும் சனநாயக சோசலிசக் குடி யரசின் அரசியல் திட்டம், இதற்கு முன்னர் நடைமுறையில் இருந்து வந்த அரசியல் திட்டங்களைவிட அதிகளவு கடினமான ஒரு யாப்பாக அமைந்துள்ளது. அதாவது அரசியல் திட்டம் நெகிழாத்தன்மை கூடிய தொன்ருக இருந்து வருகின்றது. சாதாரண வழி முறைகள் மூலமாக அல்லாது யாப்புத் திருத்தம் விசேட வழிமுறைகளை வேண்டிநிற்கும் ஒன்ருக உள்ளதால், இவ்வரசியல் திட்டத்தின் கீழ் அதிகாரப் பரவலாக் கத்தினை நினைத்த மாதிரி இலகுவான முறையில் கொண்டுவர முடி யாது. இலங்கை சுதந்திரமும், இறைமையும், தன்னதிக்கமும் கொண்ட ஒற்றையாட்சிக் குடியரசு என்பதை அரசியல் திட்டம் வலியுறுத்தியிருப்ப தோடு, இலங்கையின் இறைமையினையும், ஐக்கியத்தினையும், ஆள்புல ஒருமைப்பாட்டையும் அரசானது பாதுகாக்க வேண்டும் எனவும் கூறு
5

Page 5
கின்றது. அரசியல் திட்டத்தின் இந்த இறுக்கமான தன்மைக்கு மத்தி யில் மேற்கொள்ளப்படும் அதிகாரப் பரவலாக்கத்துக்கு யாப்பு எந்தள வுக்கு மட்டும் இடம் கொடுக்கும்?. என்பதை விளங்கிக்கொள்ள முன்பு அதிகாரப் பரவலாக்கம் என்ற எண்ணக்கருவானது எதனைப் பொருள்படுத்துகின்றது? எத்தகைய சூழ்நிலையின்போது அதிகாரங் களைப் பரவலாக்கல் செய்யவேண்டிய அவசியம் ஏற்படுகின்றது? அதி காரப் பரவலாக்கத்துக்கான வழிமுறைகள் என்ன? என்பவற்றைப்பற்றி பொதுவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.
சட்டங்களை ஆக்குவதற்கும் அதனை நிர்வகிப்பதற்குமான அதிகாரங் கள் ஒரே இடத்தில் குவிந்து காணப்படாது பல இடங்களில் பகிர்ந் தளிக்கப்பட்ட பரந்து காணப்படும். ஒரு நிலையினை நாம் அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட்டுள்ள ஒருநிலை எனக்கூறலாம். அதாவது மத்தியில் செறிந்திருக்கும் அதிகாரத்தை மாவட்ட அல்லது மாகாண ரீதியான பிரதேச அமைப்புக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கான ஒரு வழி முறையினையே அதிகாரப் பரவலாக்கம் என்பது குறிக்கின்றது. இங்கு சட்ட ஆக்க, நிர்வாக அதிகாரங்கள் அனைத்து மத்தியில் மட்டும் குவிந் திருக்கும் நிலையினை விடுத்து, சிலவகையான சட்ட ஆக்க, நிர்வாக அதிகாரங்கள் பிரதேச ரீதியான அபைப்புகளுக்கு வழங்கப்படுகின்றது. இவ்வாறு அதிகாரங்கள் மத்தியில் இருந்து பிரதேச அமைப்புக்களுக்குப் பரவலாக்கப்படும் போது மத்தியில் உள்ள சகலவிதமான அதிகாரங் களும் பிரதேச ரீதியான அமைப்புக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதோ அல்லது மத்தியில் உள்ள சட்ட ஆக்க, நிர்வாக அதிகாரங்களுக்கு ஒப் பான அதிகாரங்களை பிரதேச ரீதியான அமைப்புக்கள் பெற்றிருப்பதோ இல்லை. மாருக மத்திய அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டு, அதன் சட்ட ஆக்க அதிகாரங்களுக்கு குந்தகம் உண்டுபண்ணுத வகையில் தொழிற் படுவதற்கான அதிகாரங்களையே இ  ைவ பெற்றிருக்கும். அதிகாரப் பரவலாக்கம் பற்றிய இந்த விளக்கங்களின் படி. * சட்டபூர்வமாக அமைக்கப்பட்ட பிரதேச ரீதியான சுய ஆட்சி அமைப்புக்கள் உள்ளூர் விவகாரங்களைக் கொ ண்டு நடத்துவதற்கான அதிகாரத்தை மத்திய அரசி ணுல் இயற்றப்படும் பாராளுமன்றச் சட்டத்தின் மூலம், நாட் டி ன் அரசியலமைப்பு உத்தரவாதங்களுடன் பெறுவதே அதிகாரப்பரவலாக்கம் ” எனக் கூறலாம். ஆயின் பிரதேச ரீதியான சுயாட்சி அமைப்புக்கள் தம் உள்ளூர் விவகாரங் களை சுயமாகக்கொண்டு நடத்துவதற்கான சட்டஆக்க, நிர்வாக அதி காரங்களைப் பெற்றிருக்கும் என்பதும், அவ்வதிகாரங்கள் மத்திய அர சினல் லழங்கப்படுபவை என்பதும் தெளிவான முறையில் பொருள் படுத்தப்படுகின்றது. * . . .

அதிகாரப் பரவலாக்கம் மேற்கொள்ளப்பட வேண்டியதனை L1 ல தரப்பட்ட காரணிகள் நிர்ணயிப்பவையாக அமையலாம், இந்த வகை யில் குறிபபிட்ட நாட்டில் வாழும் சிறுபான்மை இனங்களுடையே தேசிய தனித்துவம் வலியுறுத்தப்படும் போது, அல்லது மக்களின் சன தாயக உரிமைகளை ஸ்திரப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும் போது அல்லது அபிவிருத்தியின் அடிமட்ட நிலையில் மக்கள் பங்கு பற்ற வேண்டிய தேவை உணரப்படும்போது அல்லது நாட்டின் தேசிய, பிரதேச வேறுபாடுகள் கூர்மையடையும்போது இவற்றில் ஒன்ருே அல் லது பலவோ அதிகாரப் பரவலாக்கம் இடம்பெறுவதற்கான சூழ்நிலை யைத் தோற்றுவித்துவிடுகின்றன. ஆயின் இந்த அதிகாரப் பரவலாக் கத்தின் அளவு, அரசியலமைப்பின் நெகிழும் - நெகிழாத் தன்மைக்கு ஏற்பவும், மத்திய அரசின் ஸ்திரப்பாட்டிற்கு ஏற்பவும் அடிமட்டத்தில் இருந்து எழுகின்ற சக்திகளின் தாக்கத்துக்கு ஏற்பவுமே அமைந்திருக்கும்*
அதிகாரங்களைப் பரவலாக்குவதற்கான வழிமுறையானது இரண்டு விடையங்களோடு சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். அரசியல் பரவலாக் கம், நிர்வாகப் பரவலாக்கம் என்பவையே அவை இரண்டுமாகும். பிர தேச ரீதியான சுயாட்சியமைப்புகளுக்கு தம் பிரதேசம் சம்பந்தமாக சட்டங்களை ஆக்கக்கூடிய வகையில் அதிகாரம் பரவலாக்கப் பட்டிருந் தால் அது அரசியல் பரவலாக்கமாகவும், பிரதேச ரீதியான நிர்வாகக் காரியாலயங்களுக்கு தம்பிரதேசம் சம்பந்தமாக சுயமான முறையில் நிர்வாகங்களை மேற்கொள்ளக்கூடிய வகையில் அதிகாரம் பரவலாக்கப் பட்டருந்தால் அது நிர்வாகப் பரவலாக்கமாகவும் கொள்ளப்படுகிறது" விரிவான முறையில் கூறுவதானல் பிரதேச ரீதியான பிரதிநிதித் துவ அமைப்புக்களை புதிதாக உருவாக்கி அவற்றிற்கு அதிகாரங்களை வழங்கி, அல்லது ஏற்கனவே பிரதேசரீதியாக இருந்துவருகின்ற பிர திநிதித்துவ அமைப்புக்களுக்கு புதிய அதிகாரங்களை வழங்கி தம்பிர தேசம் தொடர்பாக தேவைப்படும் சட்டங்களை ஆக்கக்கூடியவாறு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதை அரசியற் பரவலாக்கம் எனவும், மத் தியில் காணப்படும் நிர்வாகக் காரியாலயங்களினது அமைப்புக்களை பிரதேச ரீதியாக அமைத்து அவற்றிற்கு தம் பிரதேசம் தொடர்பான நிர்வாகத்தினைக் கொண்டு நடத்துவதற்கு ஏற்றவாறு அதிகாரங் களைப் பகிர்ந்தளிப்பது நிர்வாகப்பரவலாக்கம் எனவும் கூறலாம். ஒரு பிரதேசத்தின் தனித்துவம் பேணப்பட வேண்டுமானல் இந்த இரண்டு விடயங்களிலும் பரவலாக்கம் இடம் பெற வேண்டும்.அரசி யல் பரவலாக்கம் இடம் பெற்று நிர்வாகப்பரவலாக்கல் இடம்பெற வில்லையானல் அல்லது நிர்வாகப்பரவலாக்கல் இடம்பெற்று அரசியற் பரவலாக்கல் இடம்பெறவில்லையானல் பிரதேச தனித்துவத்தைப் பேணுதல் என்பது பொருள் நிறைந்ததாக இருக்க மாட்டாது. எனவே
7

Page 6
தான் இந்த இாண்டு விடயங்களிலும் அதிகாரம் பரவலாக்கப்பட் டிருக்க வேண்டுமெனக் கூறப்படுகின்றது. எனினும் இந்த அரசியற் பரவலாக்த்திற்கும், நிர்வாகப்பரவலாக்கத்திற்கும் அடிப்படையில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்ருத்தல் முக்கிய நிபந்தனையாகும். இந்த அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுவதை இயலச் செய்வதற்கு அதிகார ஒப்படைப்பு (Delointion) இடம் பெற வேண்டியது அவசியமாகும். ஆயின் அதிகாரமானது மத்தியில் இருந்து பிரதேச அமைப்புக்களுக்கு கைமாறப்படுவதையே இங்கு "அதிகார ஒப்படைப்பு’ என்பது குறிக் கின்றது . அதிகார ஒப்படைப்பு மூலம் பிரதேச அமைப்புக்களுக்கு அதி *ரம் கைமாற்றப்படுவதால் தம் பிரதேசம் சம்பந்தமானசட்டவாக்கத் தினை மேற்கொள்ளுகின்ற உரிமையினை பிரதேச பிரதிநிதித்துவ அமைப் புக்கள் பெற்றுக் கொள்கின்றது. இதனல் மத்திய அரசின் கட்டுப் பாட்டிலும், தயவிலும் தங்கியிருக்காமல் ‘சுயசார்புக் 'கோட்பாட் டின் அடிப்படையில் தமது பிரதேசத்தின் தனித்துவத்தைப் பேன வும், அபிவிருத்தி செய்யவும் வாய்ப்பு ஏற்பட்டு விடுகின்றது"
அதிகாரப்பரவலாக்கம் பற்றி இதுவரையும் விளங்கிக் கொண்ட தன் அடிப்படையில் மத்தியில் உள்ள அதிகாரம் பிரதேச அமைப்புக் களுச்கு பகிர்ந்தளிக்கப்படுவதையும், அப்பிரதேச அமைப்புக்களுக்கு அதிகாரம் ஒப்படைக்கப்படுவதையும், இவற்றினல் பிரதேசரீதியில் சட்ட ஆக்க அதிகாரம் கொண்ட சுயாட்சி அமைப்புககள் எழுந்து விடுவதையும் காணமுடிந்தது. எனவே இத்தகைய சுயாட்சி அமைப் Hக்களை மாகாணரீதியாக நிறுவி அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு இலங்கையின் தற்போதுள்ள அரசியலமைப்பு இடமளிக்கின்றதா என நோக்கும்போது யாப்பின் இறுக்கமான தன்மையினல் பல பிரச்சனை ** தோன்றுகின்றது. சாதாரண வழிமுறையின் மூலமாக அல்லது விசேட வழிமுறைகளைக் கையாளுவதன் மூலம் அதிகாரப் பரவலாக் கத்தினை மேற்கொள்ளவேண்டியிருப்பதே பிரச்சனை தோன்றக் கார ணமாகும். சாதாரண வழிமுறையில் அதிகாரப் பரவலாக்கத்தினை மேற்கொள்வதற்கு அரசியலமைப்பு இடம் கொடுக்கவில்லை. அரசிய லமைப்பின் 1ஆம், 2ஆம், 3ஆம், 6ஆம், 7ஆம், 8ஆம், 9ஆம், 10ஆம், 14ஆம் உறுப்புரைகளின் அல்லது அந்த உறுப்புரைகளில் ஏதேனும் ஏற்பாடுகளைக் திருத்துவதற்கான அல்லது நீக்குவதற்கும், மாற்றீடு செய்வதற்குமான சட்டமூலமும், அல்லது மேற்கூறிய உறுப்புரைக ளின் அல்லது இந்த உறுப்புரைகளின் ஏற்பாடுகளுடன் ஒத்துவராத சட்டமூலமும், பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தையும், ஜனதிபதி யின் பதவிக்காலத்தையும் நீடிப்பதற்கான அல்லது இப்பதவிக்காலம் பற்றிய ஏற்பாடுகளைத் திருத்துவதற்கான அல்லது நீக்குவதற்கும்
8

மாற்றீடு செய்வதற்கான அல்லது இந்த ஏற்பாடுகளுடன் ஒத்து வராததாக இருக்கும் சட்ட மூலமும் பாராளுமன்ற உறுப்பினர்களில் (சமூகமளிக்காதோர்_உட்பட) மூன்றில் இரண்டு பங்கிற்குக் குறை யாதோரின் வாக்குப்பலத்தால் நிறைவேற்றப்பட்டு, மக்கள் தீர்ப் பொன்றின் போது மக்களால் அங்கிகரிக்கப்பட்டு ஜனதிபதியின் சான்றுரை ஒன்று அதன்கண் எழுதப்பட்டால் சட்டமாக வருதல் வேண்டும் என யாப்பின் 83 ஆம் கூறுகின்றது. இது யாப்பின் இறுக்கமான தன்மையினையே புலப்படுத்துகின்றது. ル
அரசியலமைப்பின் 2 ஆம் உறுப்புரையை நோக்கும் போது அவ் வுறுப்புரை 'இலங்கைக் குடியரசு ஒற்றையாட்சியுடைய அரசாகும்' எனக் கூறியிருப்பதைக் காணலாம். ஆயின் இங்கு மேற்கொள்ளப் படும் எந்த ஒரு அதிகாரப்பரவலாக்கமும் ஒற்றையாட்சிக்கு முரனுக் சமஸ்டி ஆட்சி முறையிலான அமைப்பினை உருவாக்கும் அளவுக்கு அதி காரப்பரவலாக்கம் இடம்பெற சுயமாக இடமளிக்கவில்லை என்பதைக் காண்கின்றேம், ஆனல் நாம் விளங்கிக்கொண்ட அதிகாரப்பரவலாக் கம் பற்றிய கருத்துக்கள் சமஸ்டி முறையிலான அமைப்பினை உருவாக் கும் அளவுக்கு இடம் பெறுவதனல் ஏற்கனவே கூறப்பட்டுள்ள 83ஆம் உறுப்புரைக்கு அமைவாக விசேட வழிமுறைகளைக் கையாண்டு அரசி யல் அமைப்பில் திருத்தத்தினை மேற்கொள்ள வேண்டும். யாப்பில் திருத்தத்தைக் கொண்டு வரும் போது சட்டமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையைப் பெறுவது சாத்தியமாகக் கூடியதொன்ரு க இருப்பினும் மக்கள் தீர்ப்பொன்றில் அவர்களது சம்மதத்தைப் பெறு வது நடைமுறையில் சாத்தியமற்றது என்றே கூறவேண்டும். இத்தகைய சாத்தியமற்ற நிலைமைகளுக்கு மத்தியில் பூட்டான் நாட்டின் தலைநகர் திம்புவில் யூலை 9ம் திகதி இடம்பெற்ற மகாநாட்டில் கலாநிதி எச். டபிள்யூ. ஜயவர்த்தன கியூ சி ஆற்றிய உரையின் சாரம் இலங்கை யில் மேற்கொள்ளப்படும் அதிகாரப்பரவலாக்கம் இலங்கையின் ஒற்றை யாட்சி அமைப்புக்கும், யாப்புக்கும் முரண்படாத வகையிலேயே இருத்தல் வேண்டும் என்பதைப் பொருள்படுத்துவதாக இருப்பதைக் காணலாம். இவர் இம் மகாநாட்டின் தொடக்க உரையில்
"தமிழ் மக்கள் பிரச்சனைக்கு நிலையானதும், வலுவானதுமான தீர்வொன்றைக் காணும் வகையில் அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளை புதிய கண்ணுேட்டத்தில் அணுகுவதே மகாநாட் டின் நோக்கமாயினும் அத்தகைய ஒரு தீர்வு இலங்கையின் இறை மையையும், ஐக்கியத்தையும், ஒற்றையாட்சித் தன்மையிலான அரசியலமைப்பினையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டி யதுடன் எல்லாச் சமூகத்துக்கும் ஏற்புடையதாகவும் இருத்தல் வேண்டும்” எனக் கூறியிருந்தார். ஒற்றையாட்சித் தன்மை
9

Page 7
வலியுறுத்தப்பட்ட போதிலும், அரசியலமைப்பின் 83ஆம் உறுப்புரையில் கூறப்பட்டுள்ள விசேட நிபந்தனை பூர்த்தி செய்து யாப்பில் திருத்தம் செய்யப்பட்டால் சமஸ்டி முறையிலான அமைப்பினை உருவாக்குமள வுக்கு அதிகாரப்பரவலாக்கம் இடம் பெறுவதற்கு யாப்பு இடமளிக் கலாம் இருப்பினும் இலங்கையைப் பொறுத்து மக்கள் தீர்ப்பின் அவசியல் இதனை இயலச் செய்வதைக் கடினப்படுத்திவிடுகின்றது. இந்த நிலையில் எந்தவிதத்திலும் மக்கள் சம்மதத்தைப் பெறமுடியவில்லையா னல் நாம் அதிகாரப் பரவலாக்கத்தின் அளவினை ஒற்றையாட்சி என்ற அளவு கோலுக்குள் கட்டுப்படுத்திக் கொண்ட வகையிலேயே அதிகாரப் பரவலாக்கத்தை மேற்கொள்ள வேண்டியேற்படும்.
மேலும் அரசியலமைப்பின் 76 ஆம் உறுப்புகையின் 1 ஆம் பிரிவு “பாராளுமன்றம் அதன் சட்டமாக்கற்றத்துவத்தை துறத்தலோ எந்த விதத்திலும் பராதீனப்படுத்தலோ ஆகாது என்பதுடன் ஏதேனும் சட்டமாக்கற்றத்துவம் கொண்ட ஏதேனும் அதிகாரத்தை நிறுவுதலு மாகாது' எனக் கூறுகின்றது. ஆனல் அதிகாரப் பரவலாக்கம் என்ற எண்ணக் கருவானது சட்டமாக்கற்றத்துவம் கொண்ட நிறுவனங்களை ஆக்கமுயல்வதையும், அதிகாரத்தைப் பராதினப்படுத்துவதையும் முக் கிய அம்சமாகக் கொண்டிருப்பதனை நாம் ஏற்கனவே விளங்கியிருந் தோம். இதற்கு அமைவாகத்தான் அதிகாரத்தைப் பரவலாக்குவதற் காக அரசு முன்வைத்துள்ள மாகாணசபை யோசனை அதிகாரத்தைப் பராதீனப்படுத்தி சட்டமாக்கல் நிறுவனங்களை மாகாணமட்டத்தில் ஏற்படுத்தும் எண்ணம் உடையதாக இருப்பதைக் காண்கின்ருேம். எனவே இங்கு அதிகாரப்பரவலாக்கத்தின் அடிப்படையும் அரசின் யோசனையும் அரசியலமைப்பின் 76 ஆம் உறுப்புரையுடன் ஒத்துவராது முரண்படும் ஒன்ருக இருக்கின்றது. இருப்பினும் இந்த உறுப்புரை விசேட வழி முறைகளை வேண்டி நிற்கும் யார்ப்புத்திருத்த உறுப்புரை களுள் ஒன்ருக இல்லாதிருப்பதால் மக்கள் தீர்ப்பு ஒன்றின் அவசியத் தைப் பெருது, அதிகாரப்பரவலாக்கத்தினைக் கொண்டுவர யாப்பு இடமளிக்கின்றது, என்னும் அரசின் அதிகாரப்பரவலாக்கல் யோசனை 76ஆம் உறுப்புரையுடன் ஒத்து வராததொன்முக இருப்பதால் அதா வது மாகாண மட்டத்தில் அதிகாரத்தினைப் பரவலாக்கி சட்டவாக்கு நிறுவனங்களை உருவாக்க வகை செய்வதால் இது அரசியலமைப்புடன் ஒத்துவராததொன்ருகி விடுகின்றது எனவே இந்த அதிகாரப்பரவலாக் கல் யோசனையை பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பாண் மை ஆதரவின் படியே நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. இந்தப் பெரும்பாண்மையினைப் பெருது யாப்புடன் ஒத்து வராத எந்த ஒரு சட்டமூலமும் சட்டமாகமுடியாது என்பதை யாப்பு வெளிப்படுத்தி புள்ளது அரசியலமைப்பின் இந்த இறுக்கமான தன்மையினை உயர்
10

நீதிமன்றத்துக்கு யாப்பு வழங்கியுள்ள சட்டமூலம் தொடர்பான நியாயாதிக்கத்தில் இருந்தும் அறியமுடிகின்றது. அரசியலமைப்பின் 113 ஆம் உறுப்புரையின் (2) ஆம் உப்பிரிவு (ஆ) பகுதி அரசியல் மைப்புடன் ஒத்துவராத சட்டமூலம் பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மைமூலம் மாத்திரமே நிறைவேற்றப்படலாம் எனக்கூறும் அதிகாரத்தினை உயர் நீதிமன்றத்துக்கு வழங்குகிறது. விசேட பெரும் பான்மை என்பது மூன்றிலிரண்டு பெரும்பான்மையையே குறிக்கின் றது. மேலும் 123ஆம் உறுப்புரை 4 ஆம் உபபிரிவில் “ஏதேனும் சட்டமூலம் அரசியலமைப்புடன் ஒத்து வராததாக உள்ளது என தீர் மானிக்கப்படுகின்றவிடத்து அல்லது தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுமிடத்து அத்தகைய சட்டமூலம் உயர் நீதிமன்றத்தின் தீர் மானிப்பில் கூறப்பட்டுள்ள முறையில் தவிர நிறைவேற்றப்படுதி" காது' எனவும் கூறப்பட்டுள்ளது. யாப்பின் இந்த விதிகள் உயர் நீதிமன்றத்தின் நிபந்தனையை மீறி, அரசியலமைப்புடன் ஒத்துவராத எந்தச் சட்டமூலமும் பாராளுமன்றத்தின் விசேட பெரும்மையைப் பெருது சட்டமாக்கமுடியாது என்பதையே வலியுறுத்துகின்றது. என வே உயர் நீதிமன்றத்துக்கு யாப்பு வழங்கியுள்ள அதிகாரம் அரசியல் திட்டத்தின் நெகிழாத்தன்மையைப் பேணும் மற்ருெரு அம்சமா? அமைந்து விடுவதைக் காணமுடிகின்றது.
அரசியலமைப்பின் நெகிழாத்தன்மை ஒற்றையாட்சி என்ற கட்டுக் கோப்புக்குள் அதிகாரப்பரவலாக்கம் இடம் பெற வழிவகுக்கின்ற போதிலும் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கிற்குக் குறை யாதோரின் ஆதரவைப் பெறுதல் என்பது மேலும் ஒரு த!ை-வி! ஏற்படுத்தி விடுகின்றது. எனினும் இன்று மத்திய அரசாங்கத்துக்குள்ள ஸ்திரப்பாட்டின் அடிப்படையில் இத் தடையைத்தாண்டுவது அவ்வளவு கடினமானதல்ல. அதிகாரப்பரவலாக்க யோசனையைக் கொண்டுவந் துள்ள கட்சிக்கு அரசாங்கத்தில் மூன்றிலிரண்டுக்கு மேற்பட்ட பெரும் பான்மை இருப்பதால் இந்த யோசனையை அரசியலமைப்பின் உத்தர வாதத்துக்கு அமைய நடைமுறைப்படுத்துவதற்கான சூழ்நிலை இன்று காணப்படுகின்றது. இதன் அடிப்படையில் அதிகாரப்பரவலாக்கம் இடம் பெறுவதை இயலச் செய்வதற்கு இன்றுள்ள அரசியல் சூழ் நிலையே வாய்ப்பானது என நாம் கூறலாம். நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு அறிமுகப்படுத்தியுள்ள புதிய விகிதாசாரப் பிரதிநி தித்துவ முறையின்படி எதிர்காலத்தில் எந்த ஒரு கட்சியும் மூன்றிலி ரண்டுக்கு மேற்பட்ட பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவது சாத் தியமற்றது. இதனல் எதிர்கால அரசியல் நிலைமையினைப் பொறுத்து அதிகாரப்பரவலாக்கம் இடம் பெறுவதென்பது நிச்சயமற்ற தன்மை யின் அடிப்படையில் சிலவேளைகளில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு

Page 8
இல்லாது போய் விடலாம். எனவேதான் மத்திய அரசின் நிலையைப் பொறுத்து அதிகாரப்பரவலாக்கத்தை மேற்கொள்ளுவதற்கு இன்றைய அரசியற் சூழ்நிலையே வாய்ப்பானது என அரசியளாளர்கள் கூறு கின்றனர்.
அரசியலமைப்பின் இறுக்கமான தன்மைக்கு மத்தியில் அதிகாரப் பரவலாக்கம் இடம்பெறினும் எதிர்கால அரசியல் நி3லயைப் பொறுத்து தற்போது மேற்கொள்ளப்படவிருக்கும் அதிகாரப்பரவலாக்கம் நிலை யானதாக இருக்கும் என்பது சந்தேகத்துக்குரியதே. அதிகாரங்களை பகிர்ந்தளித்த லும். அதிகாரங்களைப் பிரதேச அமைப்புக்களுக்கு ஒப் படைப்பதும் மத்திய அரசின் சிறப்புரிமை என்ற உண்மையையும், மத்திய அரசு தான் ஒப்படைத்த அதிகாரங்களைத் தான் நினைத்த போது மீளப்பெறக்கூடிய உரிமையைக் கொண்டுள்ளது என்ற உண் மையுமே இதற்குக் காரணமாகும். மத்திய அரசுக்குள்ள இந்த சுயா திக்கத்தின் அடிப்படையில் வரும் காலத்தில் மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தில் மாற்றம் ஏற்படுமானுல் சிலவேளை அதிகாரங்களை மீளப் பெற்று அதிகாரப்பரவலாக்கலைச் சீர்குலைத்து விடலாம். இன்று அரசாங்கம் முன்வைத்துள்ள அதிகாரப் பரவலாக்கத்துக்கான மாகாண சபை யோசனையை முக்கியமான எதிர்க்கட்சிகளில் ஒன்றன சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஏற்றுக்கொள்ள முன்வர"திருப்பது இந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகின்றது. எனவே தற்போதைய சூழ்நிலையில் மேற்கொள்ளப்படும் அதிகாரப் பரவலாக்கம் எதிர்காலத் தில் நிலையானதாக இருப்பதை உறுதிப்படுத்தவேண்டுமானல் மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மாகாண சபைகளின் அனு மதியுடனேயே மத்திய அரசு மீளப்பெற வேண்டும் என்ற விதியினை அதிகாரப் பரவலாக கத்தினை மேற்கொள்ளும்போது யாப்பில் தெளி வாக வகுத்துக் கொள்ளவேண்டியது அவசியமாகும். மாகாண சபை களின் அனுமதியின்றி அதிகாரத்தை மீளப் பெறலாம் என்ருல் அதி காரப் பரவலாச கல் நிட்சயமான தன்மையினைக் கொண்டதாக இருக்க மாட்டாது.
எனவே அதிகாரப் பரவலாக்கம் என்பதனை இலங்கையின் அரசியல மைப்புடன் தொடர்புபடுத்தி நோச கியதன் அடிப்படையில் அரசியல மைப்பானது இங்கு மேற்கொள்ளப்படும் அதிகாரப் பரவல க்கமானது இலங்கையின் ஒற்றையாட்சி அமைப்புக்கு முரணுன வகையில் சமஸ்டி முறையிலான அமைப்பினைத் தோற்றுவிக்கும் அளவுக்கு உயர்வடைய இடமளிக்க மாட்டாது என்பதையும், மேற்கொள்ளப்படும் எந்த ஒரு அதிகாரப் பரவலாக்கத்தின் அளவும் ஒற்றையாட்சி என்ற அளவு கோலுக்குள் அமைந்ததாக இருப்பதற்கே இடமளிக்கும் என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடிந்தது. இந்த அளவுக்குள் மிக உயர்ந்த அளவில் அமைந்த அதிகாரப் பரவலாக்கம் இடம் பெறுவதைச் சாத் தியப்படுத்த வேண்டுமானல் இன்று மத்தியில் உள்ள அரசியல் சூழ் நிலையை சாமர்த்தியமான முறையில் பயன்படுத்தி சகல அரசியல் கட்சி யினரும் விட்டுக்கொடுத்து ஒத்துழைப்பதிலேயே அதிகாரப் பரவலாக் கத்தின் வெற்றி தங்கியிருக்கும் எனலாம்.
12

ஈரமில்லாத கல்லுகள் :
மிதிலன்
"என்ட சம்பளத்தை இனி நான் என்ர விருப்ப படிதான் செல வழிப்பன். பத்து வருஷம் கலியாணம் முடிச்சு நான் என்னத்தக் கண்ட நீங்க உங்கட சம்பளத்தில ஆருக்கெண்டான கொடுங்க. உங் கட புள்ளயஞக்கும் எனக்கும் சேர்த்துத் தந்து போட்டு"
முகம் முழுவதும் எனக்கு ஒரே வியர்வை. வெறும் கைகளின லேயே முகத்தை அழுத்தி வழித்து துடைத்த நான் மோட்டு வளை யை அண்ணுந்து பார்த்தேன். எலியொன்று எதையோ வினே அறுத் துக் கொட்டிக் கொண்டு இருந்தது. கை கால்கள் எல்லாம் நடுங் கின. மிகச் சிரமமாக இருந்தது. சினம் என்னையும் மீறி கொதித் தது. எல்லோரையும் போல் நானும் இல்லாமல் இருந்தற்காக உண் மையில் நான் வேதனைப்பட்டேன். என்னுடைய பலவீனங்கள் மீதே அவள் தனது வாதங்களை நிறுத்திக் கொண்டு இருந்தாள்.
அவர்கள் ஒன்றும் அடிக்கடி என்னை உதவி கேட்டு தொந் தரவு செய்தவர் இல்லை. ஏதோ ஒருமாதிரி அவர்கள் வாழ்க்கையை ஒட்டிக் கொண்டுதான் இருந்தார்கள். நானுக நினைத்து சில சந்தர்ப் பங்களில் உதவிய பொழுது அவர்கள் வேண்டாம் என்று சொன்னது இல்லை. ஆனல் கடந்த சில மாதங்கள்.
தாக்குதல்கள்! எதிர் தாக்குதல் குண்டு வைத்து தகர்ப்புக்கள்! மரணங்கள்! ஒலங்கள்! அவர்கள் தப்பியிருந்தனர்; ஆனல் தில்லை வேலையை இழந்து இருந்தான். தொட்டுத் தடவி இருட்டுள் நடந்த அவர்களின் மாலைக் கண் வாழ்வு முற்றும் குருடானது இந்த நிலை யி ல் தா ன் பிடித்துக் கொள்வதற்கு எனது கைகள் அவர்களுக்கு தேவைப்பட்டது. ஏதோ ஒரு வகையில் மீண்டும் அவர்களின் மாலைக் கண்ணை திறக்க வைக்கும் வரையில், *M. ni * x . M
சின்னத் தங்கச்சி எழுதின கடிதம் எனது சேர்ட் பொக்கற்றுக் குள் இருந்தது. அதன் வார்த்தைகள் என் நெஞ்சில் கனத்துக் கொண்டே இருந்தன.
13

Page 9
*அண்ணுச்சி மத்தியானம் ஆனவுடனே தம்பி தட்டைத் தூக் கிக் கொண்டு அம்மா சோறு என்று கேக்கிருன். அண்ணுச்சி நானும் அவரும் எவ்வளவும் பட்டினி கிடப்பம் ஆனல் அவன் தம்பி தட் டோட நின்று அம்மா சோறு என்று கேக்கைக்குள்ள தான் எனக்கு அழுகை அழுகையாக வருகிறது. அவனுக்கு என்னத்த நான் சொல் றது, நான் என்ன சொல்லி அவனுக்கு என்ன விளங்கும். s
கடந்த சில மாதங்களாக நான் கொடுக்கும் அந்த முந்நூறு ரூபாய் இந்த மாதம் தாமதமாகி விட்டதினல் தங்கச்சியும் நாலு கடிதம் எழுதி விட்டாள். எல்லா வழிகளில் முயன்றும் எதுவும் கை கூடாத முடிவிலேயே நான் "இருப்பில்" கை வைக்க மனைவியிடம் ஆலோசனை கேட்டேன்.
கழுத்தில் தாலி ஒண்டுக்குப் பத்துச் சேலை; வளையல், பெருமள வான கையிருப்பு, எல்லாரையும் போல தலை நிமிர்வான வ ழ்க்கை அற்பமான ஆசைகள், கேவலமான நினைவுகள் அவள் அதையே விரும்பி ஞள் மனைவி என்று சொல்லிக் கெ:ள்ளவே எனக்கு கசந்தது.
"எல்லாரையும் போல என்னட்ட என்ன இருக்கு? மற்றவளு கள் ஒவ்வொருத்தியும்.
எதையும் ஜீரணத்துக் கொள்வோம் என என்னையே நிர்ப்பந் தித்துக் கொள்ளும் நானே என்னில் இருந்து திமிறும் அந்தரங்களை உருவாக்கி விடும் வாக்கியங்கள் இவைகள்.
*எல்லோரையும் போல” யார் இந்த எல்லோரும்?
பசித்துப் பசித்துப் பழகிப் போய் பசியையே மறந்து உலாவித் திரியும் தன்னுடைய குழந்தைகளை நினைத்து நெஞ்சம் வருகி அந்த நினைவுகளும் மரத்து கஞ்சிக்காகப் போராடி கந்தலோடு வாழும் அந்த எல்வோரும்.
‘எல்லாரையும் போல’ யார் அந்த எல்லாரும்?
சொத்துக்களை சீதனமாக தீர்த்து வாங்கிய மாப்பிள்ளையோடு காவிலும், கையிலும், காதிலும், கழுத்திலும் பொன் விலங்கு பூட்டி
14.

புன்னகைத்து ற்கும் அந்த எல் s 歌 4. புகின்ருய்? நிற்கு நத எல்லாரும் இவர்களில் யாரை நீ விரும்
கெஞ்சும் கண்கள் ஐந்து ரூபா கல்லுத்தோடு அல்லது ஒரு குச்சித் துண்டு காதோட்டையை அடைக்க கழுத்J b கையும் காலும் உழைப்பின் வெறுமையைக் காட்ட எத்தனை பெண்கள்? இவர்களே எங்களைச் சுற்றிய பெரும்பான்மையினர் இவர்களுக்காக நீ இரங்க வில்லையா?
p 'உழைக்கும் பெண் நான் என்னுடைய உழைப்பை அனுப விக்கும் உரிமை எனக்கு வேண்டும்? என்கின்ருய் எனக்கு சிரிப்பே வருகின்றது.
மோட்டு வளையையே பார்த்திருந்த எனக்குள் தொட்டும் தொட ராமலும் சிதறி நின்ற சிந்தனைகள் என்னை அமைதியாக்கி இருந்தது. என்னுடைய அமைதி அவள் விரும்பாத ஒன்று என்னிடம் இருந்து வார்த்தைகளைப் பிடுங்கி பிறகு அதைக் கொண்டே என்னை குதறுவது. நான் பிய்ந்து தூள் தூளாகும் வரை அவள் என்னைக் குதறுவது "அம்மா!" அப்படியொரு சுகமும் என் வாழ்க்கையில் நான் காணுத ஒன்று. கைகளும் கால்களும் நடுங்கிக் கொண்டிருந்தன. என்னில் இருந்து திமிறிப் போய் விடக் கூடிய என்ன நான் அழுத்தி அமர்த்தி வைத்திருந்தேன்.
மோட்டு வளையில் எலியொன்று எதையோ வீணே அறுத்துக் கொட்டிக் கொண்டு இருந்தது.
"என்ன அம்ம முண்டி மாதிரி இருக்கிறீங்க. உங்களுக்கென்ன என்னைப் பற்றியும் புள்ளயளைப் பற்றியும் கவலை இருந்தாத்தானே? அந்த குறக் கூட்டங்களுக்கு உழைச்சுக் கொட்டிறFலதான் உங் களுக்கு கவனம்’’
மோட்டு வளையில் எலியொன்று எதையோ வீணே அறுத்துக் கொட்டிக் கொண்டு இருந்தது.
நானக இந்தத் தவறைச் செய்தவன் இல்லை. தனது சகோதரி யின் ஒரே மகள் வழி வழி வரும் உறவு விடுபடக் கூடாது. நீயா 'பெரியதம்பி என்ர சொல்லைக் கேள் لینے لھ6
S

Page 10
செத்துப்போன அப்பாவின் முகம்; அவரின் அந்தக்குரல் இன் னும் என்னுடைய காதினுள் ஒலித்துக் கொள்வது போல் இருந்தது. தாய் இல்லாமல் நின்ற எங்களுக்கு தாயாக நின்றவர். என்றும் ஒரு ஆணுக நான் அப்பாவைக் கண்டதே இல்லை. எல்லை மீறிய அமைதி யும் எப்படியென்றே புரியவைக்க முடியாத மென்மையும். அப்பா நிரம்பவும் வித்தியாசமானவர்.
எல்லாப் பிள்ளைகளும் அப்பாவைப் போலத்தான் என்னைத் தவிர. நான் மிகவும் துடுக்கன். வாயாடி எடுத்தற்கும் கோபப் படும் மூஞ்சூறு பெரிய தங்கச்சியும் இப்படியொரு நாள் என்னைப் பேசி இருக்கிருள் அட்பா சிரிப்பார். "அவன் அவன்ர அம்மாவப் போல" அமைதியாக அப்பா இதைச் சொல்லும் போதே அவர் கண்கள் கலங்கும். இறக்கும் வரை அப்பா என்மீ) கொண்டிருந்த அலாதிப் பிரியம் என்னில் அவர் அம்மாவைக் கண்டதினலோ?
அப்பா அதிர்ந்தே போனர். அவர் நினைத்துக் கூடப் பார் திருக்க முடியாது. எனக்கே ஆச்சரியமாக இருந்தது மூத்தவன் நானிருக்க எனக்கு இளையோர் தம் இஷ்டப்படி திருமணத்தை தீர் மானித்துக் கொண்டதும் அதனை அவர்கள் நிறைவேற்றிக் கொண்ட முறைகளும் அதிர்ந்தவர்தான் அப்பா. ஆனலும் அவர் தன் அமை தியை இழந்து விட் வில்லை என்றைக்குமே அப்பா தனது மன சிற்க் குள் தானும் தனது குழந்தைகளை வைதிருக்க மாட்டார் 2ے{ gi[ எனக்கு நிச்சயம்.
அப்பாவிற்கு நான் மறுத்து இருக்கலாம். எனது விருப்பத்தைத் தெரிவித்து இருக்கலாம். இல்லையென்று சொல்லியிருக்க மாட்டார்.
ஒ.!ருக்கு அவள்தான் எவ்வளவு இனிமையானவள் தின மும் காலையில் நான் வீட்டுப் படியால் சைக்களைத் தள்ளி தெருவில் இறங்கும் பொழுது எதிர் வீட்டு செத்தை வேலியில் செருகினற் போல் பூத்து இருக்கும் அந்தச் சின்ன முகம் அவளும் என்னைப் போல் என்னேடு தன்னை இணைத்து எத்தனையோ கனவுகளைக் கண்டு இருக்கலாம். . .
நேற்று மத்தியானம் வெய்யில் தெருவின் வெம்மையை விட என் நெஞ்சின் வெம்மை என்ன வதைக்க சைக்கிளில் நான் சந்தைப்
பக்கமாய் போய் கொண்டிருந்தேன். ஒரு வெளிறிய நீல நைலக்ஸ்
I6

சேலையுடன் கூடை நிறைந்த சாமான் வலது தோள்பட்டையை தாழ்த்த ஒரு ப, கம் சாய்ந்த நிலையில் வெறும் காலுடன் ருக்கு வந்து கொண்டிருந்தாள். முகம் கழுத்தெல்லாம் வியர்வையால் நனைந்து இருந்தன. அவள் இளைத்து , இளைத்து நடப்பவள் போல் நடந்து வந்தாள் வயிறும் சற்றுப் பருத்து இருந்தது, கர்ப்பமாக இருக்கலாம் மிக நீண்ட நாட்கள் ந7 னும் அவளும் முகம் முகமாய் சந்தித்தது என்னைக் கண்டதும் அவள் முகம் வாடியது இதே முகம் தான் பத்து வருடங்களுக்கு முன் என்னைக் கண்டால் எவ்வளவு ஜொலிப்புடன் பூக்கும்
அப்பா ! எனக்கு உன்னிலும் ஆத்திரப் பட முடியவில்லையே உன் மன ஆறுதலும் மகிழ்விற்குமாக நான் உனக்குச் செய்யும் நன்றி* கடனக உன்னுடைய சொல்லுக்கு ஒம் என்றேன். நான் சொல்லவில் லையா எனககு என்னில் தான் ஆத்திரம்.
மாமியின் மகள் , படித்தவள் , தந்தையின் திருப்தி , நானும் ருக்குவும் மெளனத்தால் போட்ட கோலத்தை ரொம்பவும் குரூரமாய் சிதைத்தேன் இப்போ அதற்காக நான் சிதைபட்டுக் கொண்டு இருக் கிறேன்.
இப்படியொரு பேராசையா? எங்கிருந்து இந்தப் பண வெறி மாலை, காப்புத்தோடு சீலை, சட்டை, பணம், மாலை, காப்புத்தோடு லை சட்டை, பணம் மீண்டும் மீண்டும் இதுவே வாழ்க்கை என்ருல் என கு கோமளத்தை நினைக்க நினைக்க குமட்டிக் கொண்டு வந்தது
என்னுடைய அரசியல், என்னுடைய பொது வாழ் க்கைத் Tெ 7 டர்பு இவைகள் ஒவ்வொன்றின் மீதும் அவள் திட்டமிட்டுத் தr * குவாள் குடும்பம் என்ற வேலிக்குள் மாடாக உழைக் கும் உழைப்பாளியாக மட்டுமே நான் இருக்க வேண்டும். என்பது தான் அவளின் எதிர்பார்க்கை. ஏன் இவள் இப்படிச் சிந்திக்கிருள்? பெண் ணடிமைத்தனத்தின் அந்த அச்சம் தான் அவளை இப்படி எச்சரிக்கை கொள்ளச் செய்ததோ? திருமணம் முடித்த ஆரம்ப காலத்தில் என்னை நான் அவ்வாறு தான் சமாதானம் செய்து கொண்டேன். பத்து வருடம் கணவனை விளங்கிக் கொள்ள ஒரு மனைவிக்கு இந்த பத்து வருடங்களும் போதவில்லையானல்? எனக்கு என்னில் தான் ஆத்திரமாக வந்தது. ருக்குவும் இப்படித்தான் நடந்து இருப்பாளா? இவ்வாறு ஒரு கற்பனையை என்னல் தவிர்க்க முடியாததாய் இருந்தது.
17

Page 11
கோமளம் ஒன்றும் பெரிய அந்தஸ்துக் கொண்டவள் அல்ல. அப்பாவின் தங்கை மகள் தானே மாமாவும் ஒரு சிறிய கடை வைத்தே உழைத்தவர் அந்தக் கடை பெருத்ததும் இல்லை சிறுத்ததும் இல்லை. ஒரே மகள் அந்த வகையில் ஒரு எழெட்டுப் பவுனு 'குள் நகைகள். ஒரு கல்வீடு இவ்வளவுதான் ம? மாவின் இருபது இருபத் தைந்து வருட உழைப்பு. மாமாவும், மாமியும் கடும் சிக்கனப் பேர் வழிகள் என்று ஊரார் பேசிக் கொள்வது உண்டு. சுத்தக் கருமிகள் எனச் சொன்ன வார்த்தைகளும் கூட என் காதில் விழுந்தது உண்டு என்ருலும் கோமளம் இப்படியொரு தண்டனையாக எனக்கு வந்து வாய்ப்பாள் என்று நான் எண்ணிப் பார்க்கவே இல்லை.
சின்னத் தங்கச்சியைக் கண்டாலே கோமளாவிற்கு கடுகடுப்பு வந்து விடும் எங்கே அவள் எல்லாவற்றையும் வறுகிக் கொண்டு போய் விடுவாளோ? என்ற அச்சம் கோமளா விற்கு. தன் நடத்தை யில் கோமளா இதனை வெளிப்படையாகவே காட்டிக் கொள்வாள் சின்னத் தங்கச்சிக்கும் இது விளங்கும் அதனல் அவள் என்னுடைய வீட்டிற்கு வருவதையே விட்டு விட்டாள்.
மோட்டு வளையில் எலியொன்று எதையோ வீணே அறுத்துக் கொட்டிக் கொண்டிருந்தது.
“சிற்றம்பலத்திர பெண்டாட்டியை பாத்தியளா? அவரும் உங்களைப் போல்தானே உத்தியோகம். எல்லாம் நான் தந்த இடம். நான் உங்களைக் கட்டியிருக்காட்டி.."
எனக்கு சடார் என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது. "நான் நிம்மதியாக ருக்குவோடு வாழ்ந்திருப்பேனென்று' மனதை அடக்கிக் கொண்டேன். ஆனலும் அது என்னில் இருந்து திமிறியது
"கோமளம் நானும் ஒரு எல்லைக்கு வந்திட்டன். நானும் என் ல்ை முடிஞ்ச மட்டும் உழைக்கிறன் உமக்கு மட்டும் இல்லை எனக் கும் பிள்ளைகளில அக்கறை உண்டு. அதற்காக நீர் சொல்வது போல் வறண்ட பாலைவன வாழ்க்கை வாழ நான் தயாரில்லை. எனக்கும் ஒரு மனசு இருக்கு. அதிலயும் அன்பு, பாசம், சகோதர வாஞ்சை என்ற அபிலாசைகள் இருக்கும் குடும்பம், என்பது ஒரு வழியல்ல. அது இரண்டு வழிகளின் சங்கமம் ஒரு வழி மறிக்கப்படுமாயின் அங்கே சங்கமம் நிகழாது. பிரிவும் பிளவும் தான் நிகழும்"
மோட்டு வளையில் எலியொன்று எதையோ வீணே அறுத்துக் கொட்டிக் கொண்டு இருந்தது.
18

"ஏன் இன்னும் ஒழிச்சு மறைச்சுக் கதைக் கிறியள். உங்களுக்கு என்னையும் என்ர புள்ளகளையும் விட உங்கட தங்கச்சிமார் பெரிசாப் போச்சு. உங்கட தங்கச்சிமாருக்கு நீங்க கொடுக்கோனும், பாக்கோ னும் எண்டு நினைச்சா நீங்க இனி அங்க போய் இருந்து உழைச்சுக் கொடுங்க இனி மேலும் வீட்டில இருந்து ஒரு செப்பாலடித்த சத மும் எடுத்துக் கொடுக்க நான் விடமாட்டன் நான் என்ன செய்யிற! என்ர தலையெழுத்து. என்ர அம்மையும், அப்பனும் என்னை இப் பிடிக் கொண்டு வந்து தள்ளிப் போட்டாங்க நான் உங்களைக் கட்டி னதுக்கு."
எனக்கு குபிரென்று ஏதோ ஒன்று தலையில் போய் மோதியது. கோமளம் சுவரோடு கதிரையில் சாய்ந்து இருந்தாள் எனது வலது கை என்றுமே இல்லாத வேகத்துடன் பின் வாங்கி அசூர வேகத்தில் முன் வந்து கொண்டு இருந்தது இன்னும் சில அங்குல இடைவெளி கள் தான் எனது கையும் கோமளத்தின் முகமும் மோதிக்கொள்ள. திடீரென என்னையும் மீறி எனது கை உயர்ந்தது எனக்குள் ஒரு அதிர்வு பொத்திய கைகள் சுவரில் மோதித் தரும்பின வெள்ளைச் சுவரில் குருதிச் சொட்டுக்கள் சிதறலாய் கதிரையில் கிடந்த சேர்ட்டை எடுத்து கைகளை மாட்டினேன். வலது கை இருப்பதாக உணர்வே இல்லை வீட்டில் இருந்து இறங்கிக் வெளிக் கேற்றைத் துறந்தேன்.
6 *gy"ut_urT ! ** மூத்த மகள் முற்றத்தில் நின்று இருந்தாள் அவளின் வெள்ளை முகம் கன்றிக் சிலந்து இருந்து கண்கள் பணித்துப் போய் இருந்தன. என் நெஞ்சு பட படத்தது அதற்கு மேலும் கேற்றைத் றக்க நான் பலமற்றுப் போனேன். என்னையும் மீறி எனது கால்கள் மைதி லியை நோக்கின. அப்படியே முழங்காலில் அமர்ந்து அவளது வயிற் றில் முகத்தைப் புதைத்த போது எங்கிருந்தோ பெரும் வெள்ளம் மைதிலியின் சட்டையை நனைத்து ஓடியது. இரண்டு சொட்டு சூடான துளிகள் குனிந்து இருந்த எனது பிடரிக்கு கீழே விழுந்தன. நிமிர்ந்தேன் மைதிலியின் அந்த மைனுவிழிகள்!
*"gļur’’ அவள் விக்கித்து நின்ருள். “ “SyðLDTT; ’ ” அப்படியொரு சுகம் என் வாழ்க்கையில் நான் காணுத ஒன்று.
மீண்டும் மைதிலியின் வயிற்றில் நான் முகத்தைப் புதைத்தேன். ‘ஈரமில்லாத கல்லுகள்" யாரோ காதினுள் சொல்வது போல் இருந்தது.
19

Page 12
பாண்டவரே வெல்வார்
- சாருமதி -
தூரத்தில் வெடி நெஞ்சிலே இடி பாரதக் கதையில் இப்போ பாஞ்சாலி அலறுகிருள் துச்சாத னன் கைகளில்
துரெளபதையின் துகில்,
வெறித்துச் சிவந்தன அர்ஜுனர் கண்கள் விமனின் கோபம்
வெம்மையாய் எரிந்தது.
சதுரங்க மேசையில் தருமர்களின் சோரம் சகுனியின் சதிக்கு பாஞ்சாலி தேகம்
விரல்களைச் சூப்பும் குழந்தையும் அறியும் பாரதப் போரில்
பாண்டவரே வெல்வார் .

மேத்தாக்களும் புறநானுாறும்
க. யோகநாதன் .ே A. (Hons)
தமிழ் இலக்கிய வரலாற்றைக் கூற முற்படுபவர்கள் அதனை-சங்க காலத்தில் இருந்து தொடங்குதல் வழக்கம். அதே பொழுதில் "சங்க காலம்' என்ற சொற்பதப் பிரயோகம் பற்றியும் மாறுபாடான கருத்துக்கள் அறிஞர்கள் இடையே இன்று காணப்படுகின்றன. எல் வாருயினும் சங்ககாலம் என்ப. கி. பி 3 ம் நூற்ருண்டிற்கு முற் பட்ட தமிழக வரலாற்ருேடு கொடர்புடைய பசப்பிரயோகம் என் பதை நாம் நினைவில் நிறுத்தி , கொள்ளி ன இ கட்டுரையில் கூறப்படப் போகும் விடயங்களை விளங்கிக் கொள்ளப் போதுமானது ஆகும்.
வரலாற்று ஆய்வுகளுக்கு உதவும் மூலகங்களில் இலக்கியங்கள் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறக் கூடியவை அவ்வகையில் சங்க காலச் சமூகத்தைக் கண்டுணர சங்க இலக்கியங்களான எட்டுத் தொகை பத்துப் பாட்டு நூல்கள் பெரிதும் உதவுக் கூடியனவே. இவற் றுள் புறநானுறு. பதிற்றுப்பத்து ஆகிய இரு தொகை நூல்களிலும் சங்ககால தமிழகச் சமூகம் பற்றிய போர்ச் செய்திகள் நிறையவே காணப்படுகின்றன அதிலும் 'தமிழர்களின் போர்த்திறன்' பெருமை களுக்கு புறநானுாறே பலராலும் போற்றி உரைக்கப்படும் நூலாக உள்ளது. எனவே இக்கட்டுரையில் புறநானூறு கட்டும் பண்டைய தமிழகத்தின் "புகழப்படும் போர்திறத்தின்” அடிப்படைகளை இக் கட்டுரையில் காண்போம். ܗܝ
பண்டைய தமிழர் சார்ந்த ஆய்வுகள் பலதை இன்று நாம் எடுத்து நோக்கும் பொழுது அவற்றுள் பல அக நிலைச்சார்பு கொண்ட வைகளாக காணப்படுகின்றன. இதற்குக் காரணமாக அமைவது இனப் பெருமித உணர்வுகள் என்று கூறலாம் பண்டயத் தமிழன் எவ்வாறு வாழ்ந்தான் என்பதைக் காட்டுவதை விட தமிழன் உலகில் உயர்வாக வாழ்ந்தான் எனக் காட்ட வேண்டும் என்ற துடிப்பு தமிழர் வாழ் வியல் ஆய்வுகளில் ஈடுபட்ட பலரிடம் காணப்படும் பண்பாக உள் ளது. இதனல் உண்மைத் தமிழர் வாழ்வியல் பற்றிய ஆய்வுகள் கணிசமான வகையில் ஊனப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக சங்ககால இலக்கிய, சமூக ஆய்வுகளிலேயே இவை மிகுதியும் பயன் படுத்தப் பட்டுள்ளன என்றல் அது மிகையாகாது. இத்தகய தமிழினப் பெரு
21

Page 13
மித உணர்வுகள் புறநானுாறு பற்றிய ஆய்வுகளிலும் வெளிப்பட்டே உள்ளன. . .
*சங்ககால மக்கள் தூய காதலொழுக்கத்தையும், அறத்தினின் றும் வழுவாத வீர வாழ்க்கையையும் சிறப்பாகப் போற்றி வந்தன தென்பது அக்கால நூல்கள் வாயிலாக அறியக் கிடக்கின்றது. காத லும் போரும் சங்ககாலச் செய்யுளிற் போல் வேறு எக்காலச் செய் புளிலும் பாராட்டப் படவில்லை" 1 என்று பேராசிரியர் வீ செல்வநாய கம் கூறும் வார்த்தைகளை கொண்டு சாதாரண தமிழ் வாசகன ஒருவன் சங்ககாலம் பற்றித் தனக்குள் கட்டிக் கொள்ளும் கற்பனைக் கோட் டைகள் பிற்பாடு சங்க இலக்கியங்களோடு அவன் தன்னைப் பரிட் சயப் படுத்திக் கொள்ளும் பொழுது அவனுக்கு பேரதிர்ச்சியையே ஏற் படுத்தும் "ஐயோ தமிழனே" என அவன் தன் தலையில் அடித்துக் கொள்வதிலேயே அது போய் முடியும் காரணம் தன் காலத்தில் நின்று கொண்டு பேராசிரியர் செல்வநாயகம் பயன்படுத்தும் தூயகாதலொ ழுக்கம் அறம், வீர வாழ்க்கை என்ற பதங்கள் சங்ககாலம் காட்டும் சமூகத்தைப் பொறுத்தவரையில் அர்த்தம் அற்ற வெறும் எழுத்துச் சேர்க்கைகளே குறிப்பாக செல்வநாயகம் அவர்கள் கூறும் 'அறத் தினின்றும் வழுவாத வீர வாழ்க்கை" என்பதை புறந நூற்றின் துணை கொண்டு நோக்குவோம்.
"பகல், இரவு என்று பாராது எதிரிகளின் ஊரை நெருப்பில் இட்டு அதனல் அவ்வூரார் அழுது புலம்ப அந்த ஊர் எரியும் ஒளி யில் நின்ற உனது சுற்றத்தோடு கூடி கொள்ளையடிப்பதை விரும்புதல் உடையாய்" 2
*எதிரியின் நெல் விளையும் வயல்களை கொள்ளையிட்டு, அவன் ஊர் வீடுகளில் உள்ள மரங்களையே விற கா க க் கொண்டு ஊரை எரித்து, யானைகளைக் கொண்டு அவ்வூரின் கண் உள்ள நீர் நிலைகளை மிகிப்பித்து அழிபடச் செய்து, உன்னுல் எரிக்கப்பட்ட நாட்டின் நெருப் பொளி செக்கர் வானத்தைப் போலத் தோன்றச் செய்த போர்வெற் றியை உடையவன்'3
"எதிரி வேந்தனின் தேர் தடம் பதித்த தெருக்களையும், அவர் தம் அரண்கள் அமைந்த பரந்த இடங்களையும் கழுதை பூட்டி உழுது அழிவித்தனை, பகைவர் தம் வயல்களை உனது தேரை விட்டு அழித் தனை நீரூறும் குளங்களை உனது யானைகளை விட்டு கலக்கி மிதித்து
22

பாழ் செய்தன இவ்வாறு நீ இணைந்து நின்று பகைவரை துவம்சம் செய்த போர்க்களங்களா அல்லது பல புகழ் பாட நீ செய்த வேள்விக் களங்களா எண்ணிக்கையில் மிகுந்தன"4
மேலே புறநானுாற்றில் காணப்படும் மூன்று செய்யுள்களின் செய்திகளை சுருக்கமாகக் தந்தோம் இத்தகைய போர்செய்திகள் கூறும் செய்யுட்கள் பலதை புறநானுற்றில் காணலாம். பேராசிரியர் கூறிய "அறத்தினின்றும் வழுவாத வீர வாழ்க்கை' என்ற ப த த் தைக் கொண்டு மேலே காட்டிய) போன்ற போர்ச் செய்திகளைக் கூறும் புறநானுாற்றுச் செய்யுட்களை வாசிக்கும் ஒருவன் ஊரழிப்பு, வயல்கள் அழிப்பு, கொலைகள் கொள்ளை ஆகியவைதான் தமிழர்களின் அறம் வழுவா வீர வாழ்க்கை என்று கொள்வாஞ? அல்லது வேறு எதைக் கொள்வான்?
ஒரு குறிப்பிட்ட கால வரலாற்றை அல்லது இலக்கிய வெளிப் பாடுகளை அக்கால சமூகப் பின்னனியோடு வைத்துப் புரியாமல் அல்லது விளங்காமல் தம் அக நிலை சார்புக் கருத் க்களை வரலாற்றின் மீது அல்லது இலக்கியத்தின் மீது சுமத்த முனையும் அணுகு முறையின் அபத்தமான முரண்பாடுகளையே பேராசிரியர் கூற்று எமக்குப் புலப் படுத்துகின்றது. பேராசிரியர் செல்வநாயகம் அவர்கள் மட்டும் அல்ல அவர் போன்ற நோக்குடையாரின் கருத்துக்களுக்கு உதாரணமாகவே இவ்விடத்தில் பேராசிரியர் செல்வநாயகம் அவர்களின் கூற்றை எடுத் துக் கையாண்டோம்
இத்தகய அணுகுமுறைகள் இரண்டு முறையிலான விளைவுகளைத் தோற்றுவிக்கும்
(1) அவை போலிக் கற்பனைகளை உருவாக்கும்.
(2) இலக்கியத்தை அல்லது வரலாற்றை வெறுத்து ஒதுக்கும் மனுேபாவத்தை தோற்றுவிக்கும்.
நாம் கருத்துரைப்புக்கு எடுத்துக் கொண்ட புற நா னு ர று சார்ந்து மேற்படி இரு வகையான சிந்தனை வெளிப்பாடுகளையும் இன்றய தமிழர்கள் மத்தியில் நாம் காணக்கூடியதாக உள்ளது. சா மனியர்கள் தொட்டு படித்த பண் டி த ர் க ள் வரை இதற்கு விதி விலக்கல்ல தமிழ் இலக்கியப் பரப்பை ஊன்றிக் கவனிப்போர் இவற் றைக் கண்டு கொள்ளமுடியும். மாதிரிக்கு ஓர் உதாரணம் வருமாறு
23

Page 14
தமிழ்க் கவிதை உலகில் மிகவும் பிரபலஸ்த்தராகக் கருதப்படு பவர் மு மேத்தா. இவர் இன்றய தமிழ் சினிமாப் பாடல் ஆசிரியரும் கூட எனக்குத் தெரிந்த தகவலின்படி இவர் தமிழகத்து பட்டதாரிக் கல் வியை அளிக்கும் நிறுவனம் ஒன்றில் தமிழை ஒரு பாடமாக போதிக் கும் விரிவுரையாளரும் கூட என நினைக்கின்றேன். இவர் தமிழகத்தில் இருந்து வெளியாகும் கலைமகள் சஞ்சிகையில் ‘பக்கம் பார்த்துப் பேசுகின்றேன்" என்ற பகுதியில் வாராவாரம் பல்வேறு விடயங் களைப் பற்றி ஒருபக்கத்திற்குள் எழுதி வருகின்ருர், அண்மையில் வெளிவந்த கலைமகளில் "புதிய கோணத்தில் புறநானூறு' என்ற தலைப்பின் கீழ் இலங்கையின் தமிழர் அரசியல் நிலைபற்றி கவிதையும்
உரை நடையும் கலந்த ஒரு ஆக்கத்தை வெளியிட்டுள்ளார் அதனை முழுமையாக இவ்விடத்தில் தர இடம் போதாமையால் அப்பக்கத் தில் காணப்பட்ட கருத்துக்களை சுருக்கித் தருகின்றேன்.
புறநானூற்றை அவர் படிக்கின்ருர், புறநானூறு அவருக்கு தமிழர்களின் போர்ப் பரணியாக வணங்கா முடித் தமிழர்களின் வாழ்க் கை வரல. முக உறங்காத உணர்வுகளின் ஊர்வலமாக, ஆர்பாட்டப் போர் பாட்டாக இனிக்கின்றது. அதுமட்டும் அல்ல அப்புறநானூற்று வீரப்புயலை அவர் இலங்கை தமிழ் இளைஞர்களோடும் ஒப்பிட்டுப் பெருமை அடைகின்ருர் பின்னர் அவர் உறங்கச் சென்று விடுகின் முர் அடுத்த நாள் காலை விழித்ததும் செய்தித்தாள் இலங்கை தமிழ் இளைஞர்கள் தமக்குள் மோதிக்கொண்ட செய்திகளை தாங்கி நிற் பதை காணுகின்ருர், புறநானூற்றை மீண்டும் துரக்குகின்றர், இப் பொழுது புறநானூறு புதிய கோணத்தில் அவருக்கு பொருள் படு கிறது. அவர் சொல்கிருர்,
'புறநானூறு . . இணைய முடியாத இதயங்களின் கதை மூவேந்தர்களுக்குள் நடந்த மோதல்களின் தொகுப்புரை தமிழன் - ஒருவனை ஒருவன் தகர்த்துக் கொண்டதைப்பற்றி அன்போடு நடாத்திய ஆராய்ச்சி. சோழன் பாண்டியனை உதைத்தையும் பாண்டியன் சேரன மிதித்ததையும் சேரன் சோழனைத் துவைத்ததையும் பாருக்கெல்லாம் பகிரங்கப் படுத்தும் பாட்டுப் பட்டியல் :
இப்போது எனக்குப் புறநானூறும் புரிகிறது புதிதானூற்றுத் தமிழர்களின் ரத்த ஓட்டத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது"
24

இவ்வாறு கலைமகளில் ஒருபக்கம் பார்த்துப் பேசும் தன் கருத் தை முடித்துக் கொள்கின்ருர் மு. மேத்தா.
மேற்படி ஆக்கத்தில் மு மேத்தா அவர்கள் கூறவந்த அரசியல் கருத் க்கள் அல்ல இங்கே எங்கள் கவனத்திற்கு உரியது. தாம் கெண்ட அரசியல் கருத்தை கூறுவதற்கு அவர் உதாரணம் மேற் கொண்ட புறநானுாற்றை அவர் நோக்கிய அணுகுமுறையையே நாம் இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்கின்ருேம்.
ஆரம்பத்தில் மு மேத்தாவிற்கு புறநானூறு தமிழர்களின் போர்ப்பரணியாக இனிக்கிற, அதே புறநானூறு இறுதியில் அவ ருக்கு தமிழன் ஒருவனை ஒருவன் தகர்த் க் கொண்ட துன்பியல் நிகழ்வ கத் தெரிகின்றது இங்குதான் நாம் மிகு அவதானத்துடன் நோக்க வேண்டி உள்ளது ஒரே நூல் ஒரே நபருக்கு ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக தோற்றம் கொண்டது எப்படி? இங்கே தான் இலக் கியத்தை அல்ல. வரலாற்றை அக நிலைச் சார்பு கொண்டு அனுகு வதின் அபத்தத்தைக் காணுகின்ருேம் அதாவது இனப்பெருமித உணர் வுடன் பண்டையத் தமிழ் இல . கியமான புறநானுாற்றை அணுகிய தன் தவிர்க்க முடியாத விளைவு இது மேத்தா புறநானூற்றை வர லாற்று சமூகப் பின்னணி உணர்வுடன் அணுகி இருப்பாராகில் அவ ருக்கு புறநானூறு மீ. டோலிப் பெருமிதங்களோ அல்லது வெறுப் போ ஏற்பட்டு இருக்க இடம் இருந்திருக்காது அவ்வாருயின் புற நானூறு காட்டும் போர்த்திறன்தான் யாது? இக் கேள்வி ஓர் விரி வான விளக்கத்திற்கு உரியது. ஆயினும் கட்டுரையின் விரிவஞ்சி இவ் விடயத்தில் அதனை சுருக்கமாகத் தரமுயல்கின்ருேம்.
மானிடவியல் அறிவு உடையோர் மனித சமூகம் ‘குலக் குழு வாழ்க்கைமுறை' என்ற ஓர் கட்டத்தைக் தாண்டியே இன்றய நாக ரீக வாழ்க்கையைப் பெற்றது என்பதை அறிவர். தமிழர் சமூகத்தில் காணப்பட்ட "ஆதிப் பொது உடமை சமூதாயம்" என்ற வரலாற்றுக் கட்டதை தாண்டி தனிச் சொத்துடமையும் அதன் அடியாகத் தோன் றிய அரசும் நிலை பேறடையத் தொடங்கிய காலமாகவே நாம் புறநா னுாறு காட்டும் தமிழகச் சமூகத்தைச் காண வேண்டும். ஆதிப்பொது உடமைச் சமூகத்தில் காணப்பட்ட குலக் குழுக்கள் சமூகப் பொருள் உற்பத்தியில் ஏற்பட்ட வளர்ச்சியினுல் மிகை உற்பத்தித் திறனைப் பெற்றன. இந்த மிகை உற்பத்தி என்பது குலக் குழுக்களிடையே சொத்து சேகரம் பெறக் காரணமாயிற்று. ஒவ்வொரு குலக்குழுக்களி
25

Page 15
டையேயும் காணப்பட்ட செல்வச் சேமிப்பை க வரும் பொருட்டு குழுக்களோடு குழுக்கள் மோதி போர் செய்யலாயின. இவ்வாறு ஒன்றை ஒன்று அழிக்கச் செய்யும் குலக்குழுக்களின் போரில் வெற்றி பெற்ற குழுக்களோ பலம் வாய்ந்த குலக் குழுக்களாக மாறின. இவ்வாறு போர் திறனில் பலம் வாய்ந்த குழுக்களாக மீந்தவையே தமிழக வர லாற்றில் காணப்படும் சேர, சோழ, பாண்டிய குழுக்களாகும். இத் தகய சேர, சோழ, பாண்டிய குழுக்கள் தமிழக வரலாற்றில் ஆதிக் கம் பெற்று நின்ற காலப் பகுதியையே புறநானூறு காட்டும் தமிழ கச் சமுதாயம் பிரதிபலிக்கின்றது. எனவே புறநானூற்றின் காலத் தில் காணப்பட்டது குல உணர்வே தவிர தமிழ் உணர்வு அல்ல இன்று நாம் பேசும் தமிழ் இன உணர்வு அக்காலத்தில் இ ல் லா த ஒன்று புறநானூறு காட்டும் காலச் சமூக வளர்ச்சியில் இன உணர்வு என்ப தோன்ருத காலம் ஆகும் அக்கால வரலாற்றுக் கால கட்டத் * அத்தகயதொரு இன உணர்வு தோன்றுவது கற்பனைக்கும் எட் டாத ஓர் காரியம். இதனையே பேராசிரியர் க. கைலாசபதி பின் வரு மாறு குறிப்பிடுவார் 'புறநானூறு காட்டும் தமிழகத்தில் தமிழ் உணர்வு இல்லை குலமரபு உணர்வே மேலோங்கி நின்றன’’ என்பார் அவர்.
எனவே புறநானூற்றின் காலத் தமிழகத்தில் அரசு வடிவம் பெற்று விட்ட பலம் வாய்ந்த குலக் குழுக்களான சேர சோழ, பாண் டியக் குழுக்கள் தமக்குள் போரிட்டமையும் ஒன்றின் அழிவில் ஒன்று வாழ்வின் ஏற்றம் காண முயன்றமையும் இயல்பானதே ஆகும் அதா வது புறநானூறு காட்டும் தமிழகத்தில் போர் என்பது வெறும் வீரம் சார்ந்த ஒன்று அல்ல. குலங்களின் வாழ்விற்கும் செல்வ ஈட் க்திற்கும் போர் அத்தியாவசிய வாழ்வு வழி முறையாக இருந்தது. 6 மணவேதன் புறநானூற்றுத் தமிழகத்தில் போரும் வீரமும் வாழ் வின் தேவையாகின இந்தத் தேவையையே புறநானூறு பிரதிபலிக் கின்றது. இது தமிழர்களுக்கு மட்டுமல்ல புராதன கால வரலாற் றைக் கடந்து வந்த உலகின் எல்லாச் சமூகங்களுக்கும் பொதுவான ஒர் வரலாற்று விதி. பண்டைய இலக்கிய சான்றுகளை கொண்டிருக் கும் எல்லா மொழிச் சமூகங்களின் இலக்கியங்களிலும் புறநானூறு கூறும் சமூக அடிப்படைச் செய்திகள் காணப்படுகின்றன ஜேர்மனிய
26

கிரேக்க மொழிச் சமூகங்களின் தொன்மை இலக்கியங்களை அறிஞர் கள் இதற்கு உதாரணம் காட்டுவர் மனித சமூகவரலாற்றை விஞ்ஞா னக் கண் கொண்டு ஆராய்ந்த பேராசான் பிரடரிக் ஏங்கல்ஸ் இதனை தனது ‘குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியனவற்றின் தோற்றம்' என்ற நூலில் மிகத் தெளிவாக விளக்கி உள்ளார்.
ஒட்டு மொத்தமாக நோக்கும் பொழுது சேர, சோழ, பாண் டியர் மோதிக் கொண்டதும், இப் போர்களை புலவர்கள் பெ ருமி த உணர்வுடன் போற்றிப் புகழ்ந்ததும் புறநானுாற்றுக் காலச் சமூகத் தின் இயக்க விதிகளுக்கு விதிவிலக்காக முடியாத ஒன்றே ஆகும். எனவே புறநானூறு காட்டும் போர்கள் என்பது அக்காலச் சமூகத் தில் காணப்பட்ட தமிழனின் வீரச் சிறப்பு என்ருே அல்லது அக்காலத் தமிழன் தனக்குள் மோதிக் கொண்ட அசம்பாவிதம் என்ருே இன்று நாம் நோக்கும் நோக்கிற்கு ஏற்புடையதன்று போர் என்பது புற நானூறு காட்டும் தமிழகச் சமூதாயத்தின் வாழ்வு முறை இப்போரை அககாலத்தில் வாழ்ந்தவன் நிராகரித்து விட்டு வாழ்க்கையில் நின்று பிடித்து இருக்க முடியா , ஆகவே தான் அக்காலப் புலவர்களும் வாழ்க்கையின் இருப்பிற்கு விதியாக அமைந்து இருந்த போர் குழி லுக்கு ஏற்றவாறு மனித மனங்களை தயார் படுத்தும் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டனர் போரில் ஈடுபடுவதையும், Guitridi) LDig. வதையும், எதிரிகளை துவம்சம் செய்வதையும் பெருமிதம் மிக்க ஒன் முகப் பாடிப் புகழ்ந்தனர் இவ்வகையில் புறநானூறு கூறும் போர் செய்திகளை விளங்கிக் கொண்டாலே ஒழிய பிற வழிகளில் நாம் புற நானூற்றை அணுகினேம் ஆகில் தவருன முடிபுகளுக்கே வந்து சேர் வோம்.
சான்ருத8ரங்கள்
தமிழ் இலக்கிய வரலாறு - பேராசிரியர் வி. செல்வநாயகம் புறநானூறு 7 ம் பாடல்
புறநானூறு 16 ம் பாடல்
புறநானூறு 15 ம் பாடல்
பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் - பேராசிரியர் க. கைலா
சபதி
27

Page 16
மக்கள் சீனக் குடியரசின் விடுதலைப் போர்க் காலத்தில் எழுதப்பட்ட கவிதையிது. இக்கவிதையின் உள்ளடக்க உணர்வு வெளிப்பாடு இன்றய எமது சூழலில் அவசியமா னது என நாம் கருதுகின்ருேம். (ஆர்)
நன்றி! போய் வருகிறேம்!
அந்த இரவின் மெளனத்தில் இந்த வீரர்கள் பயணப் பொதிகளோடு!
தொடரும் பயணம் வேகமான தாவல் - ஆயினும் மிருவாதுக.
அவர்களைப் பாதுகாக்கும் விவசாயிகளின் தூக்கம் கலைவதை அந்த வீரர்கள் விரும்பவில்லை.
மறு நாட் காலே - பொழுது புலர்ந்தது!
விழித்தெழுந்த கிராமத்தவர் செஞ்சேனை வீரர்கள் சென்றிருப்பதைக் கண்டு கொண்டனர்.
எல்லாத் தண்ணிர் தொட்டிகளும் நிரம்பி வழிந்தன! எல்லா வாசல்களும் கூட்டப் பட்டிருந்தன!!
வெள்ளையடிக்கப் பட்டிருந்த சுவரில் தெரிந்த துண்டுக் காகிதம் சொன்னது 'நன்றி! போய் வருகிருேம்!!”*
சீனமூலம் - வாங் - ஷி - விவாங் தமிழில்:- வைகே.
28

வர்க்க உணர்வு
"உடன் பிறப்புக்களே! கடும் மழையிலும்
கொடும் வெயிலிலும் தோளோடு தோளாக நின்று
வர்க்க உணர்வை
நாம்
புலப்படுத்த வ்ேண்டும்" திறந்த வெளியில் "யூனியன்” தலைவர் சகோதரத்துவம் இயம்பிய சில நிமிடங்களில்
சோணுவாரியாகப் பெய்தது மழை தலைவர்
5Triai)
பதுங்கிக் கொண்டார். அவரது "உடன் பிறப்புக்கள் தெப்பமாய்.
நனைந்தனர்!
y கஸ்ஸாவி அஷ்ஷம்ஸ்
2)

Page 17
്గోగోగో*********
* நவநாகரீக உடைகளுக்கான
நல்ல தரமிக்க துணி வகைகளுக்கும்
தைத்த ரெடிமேட் ஆடை வகைகளுக்கும்
A
6)Ijfi535 LD TGf6))35
ஆண்கள்! பெண்கள்! சிறுவர்! சிறுமியர்
எல்லோரின் தரமான தேர்வுகளுக்கும்
சிகரமாய் விளங்குவது
வசந்த மாளிகை
இல, 42, பிரதான வீதி - மட்டக்களப்பு.
碧 நல்வகையான
la புகைப்படங்களுக்கு நீங்கள்
சியாமஸ் நாடவேண்டிய இடம்
உங்களுக்குத் ரா
எல்லா விதமான
புடவை வகைகளுக்கும்
"த இே ஸ்டுடியோ
நம்பிக்கையான சேவைக்கு O குடும்பப் புகைப் படங்கள்
O திருமணப் புகைப் படங்கள்
ઈી Us D ஸ் O பிறந்தநாள் புகைப் படங்கள்
வெளிக்களச் சேவைகளும்
உண்டு
* இல. 33, பிரதான வீதி,
மட்டக்களப்பு. இல. 53, பிரதான வீதி,
LDւ-ւ-ծ&6Tւյւկ.
Wy *********************
30
ቀ‹

Walay w ****** శాస్మోస్మోస్మోసో*
பல் சுவை சிற்றுண்டிகள் சிறந்த ஜவுளி வகைகளைத்
சுவைமிகு குளிர்பானங்கள் தெரிவுசெய்ய
மட்டுநகரில் சிறந்த இடம் மீண்டும் மீண்டும்
உங்களை அழைக்கிறது
C:
p (:LIT ரெமி
O O O O O
இரீம் ஹவுஸ் டெக்ஸ்டைல்ஸ் இன்றே நாடுங்கள்: இன்றே விஜயம் செய்யுங்கள்: இல, 14, பிரதான வீதி, இல. 3, முனைத்தெரு,
மட்டக்களப்பு. மட்டக்களப்பு.
வாருங்கள் ! வாருங்கள் ! !
வைரமாலா டெக்ஸ் ஆடைப் பிரியர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நவநவ துணி வகைகளுக்கும் தைத்த ஆடைகளுக்கும் குடும்பத்தோடு விஜயம் செய்யவேண்டிய இடம்
வைரமாலா டெக்ஸ்
உங்களின் தேவை ! எங்களின் சேவை !! இல, 76A பிரதான வீதி மட்டக்களப்பு.
t
» vos os: „Fos - „Soo--„os ASeSeSeAMeASASAeAeASAMeSMAqAiASAAeASSASSAeq SASMMekeSAA eAkSSeA eeSA MMekSeAMMekSSSASASY
3.

Page 18
குட்டிக் கதை
சமாதானத் துரோகி
யோ. பெனடிக்ற் பாலன்
*து பெரிய காடு. அங்கு நரிகளும், கோழிகளும் தான் வாழ்ந்து வந்தன.
ஒரு நரி மரத்தின் கீழ் குந்திக் கொண்டு இருந்தது. அங்கு ஒரு சேவல் பயமின்றி மேய்ந்தது. சேவல் தன் அரு கில் வந்ததும் நரி அதைப் பிடித்துக் கொண்டது.
"ஐயோ, என்னை விட்டுவிடு; இரவெல்லாம் சமா தானத்தைப் பற்றிய குரல்கள் தானே கேட்கின்றன. நாங் கள் சமாதானமாக வாழ்வோம். விட்டுவிடு. ,
நரி, சேவலைப் பரிதாபமாகப் பார்த்து விட்டு அதைத்
தன் கால்களால் பிடித்துக் கொண்டு,
"எங்கள் கொள்கை மாழுது. நாங்களும் சமாதா
னத்துக்காகத் தான் நிற்கிருேம்’ என்று கூறி விட்டு சேவலை வாயில் கவ்விக் கொண்டு தனியான இடத்துக்குப் போய் குந்திக் கொண்டது.
சேவல் வேதனை தாங்காமல் நரியின் பிடியில் இருந்து விடுபடுவதற்காகத் தன் கால்களால் பிராண்டி இறக்கை களால் அடித்து வேதனையால் கூவிக் கொக்கரித்தது.
நரி சேவலைப் பார்த்தது.
"சேவலே! இந்தா! இந்தா! ஏன் பலாத்காரம் செய்கிருய்? கலகம் செய்கிருய்? அமைதியாய் இரு! நீ தான் சமாதானத் துரோகி’ என்று உரத்த குரலில் கூறியவாறு சேவலைக் சாப்பிட்டுக் கொண்டிருந்தது.
32

வீடுபேறு பெற்றவன் முருகனிடம் ஆற்றுப்படுத்தல்" என்றும் இதற்கு விளக்கம் கூறமுடிகின்றது எனவே அகத்திணை உணர்வினை நேரடியா கப் பக்தி உணர்வாக மாற்றிய ஓர் கவிஞராக இவர் காட்டப்படுகிருர் என்பதனை நாம் காண்கின்ருேம்.
திருமுருகாற்றுப்படை இலக்கியம்
*உலகமுவப்ப வலனேர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடற்கண்டாங்கு" எனும் பாட லடியில் தொடங்குகிறது இந்நூலில் ஆறுபடை வீடுகளின் சிறப்பும் அவ்விடயங்களில் உள்ள முருகனின் இறமைத்தன்மை திருவுருவச் சிறப்பு பக்தர்கள் போற்றும்முறை. வடநாட்டு தமிழ் நாட்டு சமயக் கலப்பு, ஏனைய இந்துசமயத் தெய்வங்கள், தமிழ்நாட்டு மக்களின் பழக்க வழக்கம் என்பன காட்டப்படுகின்றன. அத்துடன் பல புராணக் கதைக் கூறுகளும் இப்பாடல் பகுதியில் புகுத்தப்பட்டிருப்பதனைக் காணமுடியும்.
இந்நூலின் உள்ளடக்கத்தில் ஆறுபடைவீடுகளின் சிறப்புக்களே அதிகமாகக்காட்டப்படுகிறது. இவற்றில் முதலில் விளக்கப்பட்டிருப்பது திருப்பரங்குன்றமேயாகும். முருகனை ஒளிவடிவான சூரியனுடன் ஒப் பிட்டு அவனை இருள்நீக்கும் ஓர் தெய்வமாக வர்ணித்தே பாடலமைப்பு ஆரம்பமாகின்றது பக்திஉணர்வின் ஆரம்பம் இங்குகாட்டப்படுகின்றது. அத்துடன்தேவாசுரயுத்த ஒப்பீடு இதில் இடம்பெறுகிறது. அவனுடைய தாள்தன்னைச் சேர்ந்தோருடைய தீவினையை நீக்கும் என்றும் அவனு டையகை அசுர கோட்பாட்டை அழிக்கும் என்றும் இப்பாடலில் காட் டப்படுகிறது. முருகனுடைய உருவ வர்ணனை மட்டுமன்றி சிறப்பாக 254 அடிகளில் இறைவன் தீ உருகிய முத்தீ வெளிப்படுத்சப்பட்டது. இது ஒருவகையில் கேள்வியாக்கங்களில் இடம்பெறும் முத்தீ (மூவகை அக் கினி) பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. அத்துடன் புராணக் கதைகளு டன் சேர்ந்ததாக முருகன் பிறந்த கதை ஒப்பிடப்பட்டிருப்பதனையும் நாம் காணலாம் அககதையில் சிவன் மலையரசன் மகளைத் திருமணம் செய்தபோது இந்திரன் சென்று சிவனை நோக்கி உமையுடன் புணர வேண்டாம் என வேண்டினன். அதற்கேற்ப சிவன் தன்னுடைய கருவை இந்திரனிடம் கொடுத்தான். அதன் ஆற்றலை இந்திரன் தாங்க ராட் டாமல் அவ்வாற்றல் தணிவதற்கு வேள்வித்தீயில் இட்டு பின் எடுத்து தம்மனைவியர்க்கு பிரித்துக்கொடுத்ததாக அறிகிருேம். அம்மனைவியருள் அருந்ததி தவிர்ந்த ஏனையோர் அதனை விழுங்கி சரவணப்பொய்கை யில் கருவுயிர்த்தனர் எனக் கூறப்படுகிறது. இதஞலேயே முருகன் ஆறு முகன் என அழைக்கப்பட்டான் எனும் கதை சொல்லப்பட்டது. எனவே இக்கதை முருகன் வடஇந்திய புராணக்கதைகளின் பின்னணி யில் எவ்வாறு பிறந்தான் என்பதைக் காட்டுகிறது. இதைப்போலவே மற்றுமோர் இடத்தில் கொற்றவையின் சிறுவன் என்பதனை வெளிப் படுத்துகிறது. இது தமிழ்மக்கள் முருக வழிபாட்டினைப் பின்பற்றிய முறையினைக் காட்டுகிறது. இதன்மூலம் ஆரியர்களுடைய புராணக் கதை மரபுகளும், திராவிட மக்களின் நம்பிக்கைகளும் சேர்ந்தே திரு முருகாற்றுப்படை வளர்ச்சியுற்றது என்பதனை நாம் அறிகிருேம்.
33

Page 19
" ;
திருப்பரங்குன்றத்தில் முருகன் பெற்ற் புகழினை அடுத்து திருச் சீரலைவாய் எனும் இடத்தின் சிறப்பு விளக்கப்பட்டது. முருகனுடைய திருவுருவ வருணனையும் ஆறுமுக சிறப்பும் அதன் தொழிலும் காட் டப்பட்டிருக்கிறது. அவற்றில் இருள்நீக்கி ஒளிவழங்க ஒருமுகம் அன்பு செய்தவீர்க்கு இன்பம் பயக்க ஒர்முகம் வேதமுறைப்படி மத்திரமோதி யாகம் பாதுகாக்க ஓர்முகம் முனிவர்க்கு அறிவு வழங்க ஓர்முகம். அசுரர்களைக்கொல்ல ஒர்முகம். வள்ளியுடன் இனிது மகிழ்ந்து உற வாட ஓர்முகம் என வர்ணிக்கப்பட்டிருக்கிழது. வேள்வியாக வணக்கம் வைதீக சமய உணர்வினைக் காட்ட வள்ளியைத் திருமணம் செய்யும் கதை தமிழ்நாட்டுக் குறமகள்:வாழ்வினைப் ஜிர்திபலிக்கும். இதனலேயே திருமுருகாற்றுப்படை தமிழ் வைதீக சம்யக்கலப்பாக புகழ்பெற்று விளங்குகிறது. திருச்சீரலைவாய் முருகனின் புகழை உணர்கையில் முரு கன் யானைமேல் பவனி வருகிருன் என்பது காட்டப்படுகிறது. இது தமிழ்நாட்டு மரபை உணர்த்தும் ஓர் நிகழ்ச்சியாகும்.
திருவாவினங்குரீஃப்தியினைப் பற்றிப் பாடும்போது அங்கு முரு கன் குழந்தை வக்ஷ்மர்க விளங்கினன் எனவும் பலதெய்வங்கள் முரு கனைக்காண ஊர்வல்டிாக வந்தன எனக் கூறப்படுகிறது துந்து பி, யாழ் வெள்ளிச்சங்கு" கொம்பு முதலிய பாரம்பரிய "இசைக்கருவிகள் உப யோகமாவதை நாம் காணமுடிகிறது. சைவநெறியை திருமுருகாற்றுப் படையை தனியாகக்காட்டும். அதேவேளை 12 ஆதித்தர், 11 உருத்தி ரர், 8 வசுக்கள், 2 மருத்துக்கள், 1000 கண் இந்திரன் முதலிய தேவர்கள் இங்கு முருகனைக்காண வருவதாக வருணிக்கப்பட்டது. விஷ்ணு புராணங்களில் கருடனில் அமர்ந்த திருமாலும் காட்டப்படு கிருர். என்லே வடஇந்திய உமை உருத்திரன் விஷ்ணு வடிவங்கள் தமிழ்நாட்டில் பலவாறு பரவியிருந்தன என்பதை அறிகிருேம். எனவே திருவாவினங்குடிப்பதியில் கூடுதலாக பிாாமணியச் செல்வாக்கின் அடிப் படையில் முருக வணக்கம் இடம்பெறுகிறது என உணர்கிருேம்.
இதனைப்போலவே திருவேரகம் எனும் தலச்சிறப்பில் பிராமணர் களின் இயல்புகள் காட்டப்பட்டுள்ளது. நூலின் 177ம் பாடல். இரு மூன்று இயல்புடையதான ஒதல் ஒதுவித்தல், வேட்டல், வேட்பிடித் தல் முதலிய தொழிலை இவர்கள் செய்தாாகள் எனக்கூறுகிறது. தவிர முத்தீ பற்றியும் குறிப்பிடப்படுகிறது. ஆகவனியம், தக்கினுக்கினி, காருகபத்தியம் முதலிய முத்தீயுடன் அந்தணர்களின் முப்புரி நூலின்
சிறப்பும் காட்டப்பட்டுள்ளது.
, குன்றுதோருடல் பழமுதிர்சோலை ஆகிய இருதலங்களிலும் கூடு தலாக திராவிட சமயபுர விழாக்கள், கிரியைகள், நம்பிக்கைகள் காட் டப்படுதலை அறிகிருேம். குன்றுதோருடல் என்பது பல்வேறுவகைப் பட்ட குன்றுகளில் இடம்பெறும் ஆடல், வகையினைக் குறிப்பதாக அமைந்திருக்கின்றது. இன்றைய நிலையில் கதிர்காமம் மண்டூர் ஆகிய இடங்களில் நிகழும் ஆகமமுறையற்ற கிரியை முறைதலுடன் குன்று தோருடலில் இடம்பெறும் விழாக்கள் ஒப்பிடப்பட்டி ன்றன.
| ද්&ද්දී ,
34
 
 
 
 
 

'மலர்சிதறி
பொரிசிதறி சிலபலி செய்தல்
நறும்புகை எடுத்து குறிஞ்சி பாடல் *
குருதி செந்திணை தீர்ப்பல் '{{
கைதொழப்பரவி, க்ாலுற வணங்ஜீ என இவற்றில் குரவைக்கூத்து ப்ற்றியும் விளக்கப்ப்திருப்பதனையும்
காணலாம். அத்துடன் குன்றக் b, பிடப்பட்டிருப்பதனை அவதரின்சகமுடியும் இவை * யாவும் பண்டைத் தமிழர் திறமையினைக் காட்டுகிறது
பலமுதிர்சோலைத்தல்த்தோடு தொடர்புடைய கதையில் கூடுத லாக வைதீக வழிபாத்திட ன் முருக வணக்கத்தை இணைத்து இருந் தாலும், স্বল ? ? ? ?
“சிறுதிணை மலரோடுவிரைஇ மறி அறுத்து. . எனும் பாடல்களில் வெறியாட் *ப்புக்கட்டல், பொரிதூவல் (வெள்ளரிசி) முதலிய நிகழ்ச்சிகள் உண்டு அத்துடன் இந்திரன் சிவனுடைய புரா னக் கதைகள் கூறப்படுகின்றன கொற்றவையைக் குறிப்பிடும்போது வெல்போர் கொற்றவை என வெளிப்படுத்தப்பட்டது. இது பராசக்தி போர் செய்து மகிடன் என்னும் அரசனை அழித்த வரலாற்றினைக் காட்டி நிற்கிறது. இறுதியில முருகனைப்பற்றிக் குறிப்பிடும்போது
"வானேர் தலைவ, மங்கையர்கணவ" என்பது முருகன் அசுரர் களை அழித்து தேவர்களைப் பாதுகாத்து தேவசேனதிபதியாக விளங்கி ருன் என்பதையும், வடஇந்திய மரபில் தெய்வானையாகிய குலமகளை யும். தமிழ்நாட்டு மரபில் வள்ளியாகிய குறமகளையும் மணந்து புக ழுற்ருன் என்பதையும் அறியக்கூடியதாக அமைந்து உள்ளது. எனவே ஆறுபடை வீடுகள் பற்றிய குறிப்புகளிலே திருமூருகாற்றுப்படை எனும் நூலில் இந்து சமயநெறி பல்வேறு சமய சிந்தனைகளை வெளிப் படுத்தி நிற்பதை நாம் அறிகிருேம்.
2y"సో Wils with
அன்பளிப்பு:
குபேಕ! ஏஜென்சீஸ் * லொயிட்ஸ் அவனியூ,
மட்டக்களப்பு.
was ay ('('('('('('('.**
35

Page 20
UUJUO3p -ेदै
家
பரவசமூட்டும் பல்வகை வண்ணங்களில் அழகிய கலை மணம் கமழும் * பட்டு * பருத்தி A ரெடிமேட் ஆடைகள் A பண்டிகை காலங்களில் சகாய விலையில் விற்பனை செய்யும் ஒரே ஸ்தாபனம்
Š, DĪIII)
வாடிக்கையாளர்களுக்கு விசேட சலுகைகள் இன்றே விஜயம் செய்யுங்கள் ! இல, 44, பிரதான வீதி - மட்டக்களப்பு. தொலைபேசி : 065 - 2900
உங்களுக்குத் தேவையான அலங்காரம் மிக்க ஜவுளித் தினுசுகளுக்கு
ஆடை துணி வகைகளுக்கு சிறந்த ஸ்தாபனம்
உங்கள் குடும்ப விழாக்களில்
அலங்கார்ஸ்
நினைவில் நிற்கவேண்டிய “f” Dafur
. . டெக்ஸ்டைல்ஸ் O6),8bs T6)
இல, 20, இல, 14, மத்திய வீதி, 2ம் குறுக்குத் தெரு,
மட்டக்களப்பு. மட்டக்களப்பு. سمسم============مسیس صمصمصمصمس--سسمصمص--------
36

zLLL LL LMLMLML LzqLzMLL LqL LLLLLLLLzzTAYS
* மாணவர்களின் தேவைகள் ! * இலக்கிய இரசிகர்களின் தேவைகள் ! * சினிமாப் பிரியர்களின் தேவைகள் ! * அலுவலகங்களின் தேவைகள் ! இவை அனைத்திற்கும் ஒரே இடம்
யோகாஸ் புத்தக நிலையம் இந்திய இலக்கிய சினிமாச் சஞ்சிகை இங்கே கிடைக்கும் பிறந்த நாள் வாழ்த்து மடல் மற்றும் பல் வகையான அச்சிட்ட விண்ணப் படிவங்களும் விற்பனைக்கு உண்டு
இல, 150, பிரதான வீதி *"м மட்டக்களப்பு.
22 கரட் நம்பிக்கையான நகைகளைப் பெற
இன்றே நாடுங்கள்
e - LITia
நாணயம் ! நேர்மை !
எங்கள் நாளாந்த சேவை அழகிய கலை நுணுக்க ஆபரணங்களுக்கு பிரசித்தி பெற்ற ஸ்தாபனம் 39, பிரதான வீதி m. V மட்டக்களப்பு.

Page 21
Aybəyliyi '-
மட்டக்களப்பின் வெளிவ அரும்பெரும் சேவையாற்றும்
LI LILL-ĊILI டிப்புகள்
G. C. E. All
G. A. Q.
B. A.
வகுப்புக்கள் ந!ை
(og, 7 Li Li :
1.
விசேட அறிவிப்பு :
翠 புதிய B, A.
G - 2 - 86 gi
FK Šiau i G. A.
3 - I - Sai -9
***ఖ4"4"4***4 இச்சஞ்சில்: 1 ட'. ” #
சிட்டு.ஒயூஜ் ஆசி: ஆழிவி}ைல் 01
“۔ یہ ,":"۔.3' '
?.Ti!Hھ بھیxہ
 
 

பட்டப்படிப்பிற்கு ஒரேயொரு நிறுவனம்
ாந்தா வாரி
iா கல்லூரி :
| கலை/வர்த்தகம்
டபெறுகின்றன. s
i
மட்டக்களப்பு,
வகுப்புகள் 2. tří itř
O, வகுப்புக்கள் Tið. 'h',
i
Հ * స్పోస్పోసో*****
JSkekS S S S S S JAqS 3:' + { if *ն նյո` 53: 玄清#リ
!!-85ல் வெளியிடப்பட்டது,