கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மீறல்கள்

Page 1

இதயராசன்

Page 2

மீறல்கள் கவிதைத் தொகுதி
இதயராசன்
登
தேசிய கலை இலக்கியப் பேரவை

Page 3
தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடு :108
Title
Author
Published By
<3ớhfluử வெளியீடு
வெளியீட்டுத் திகதி : நூல் அளவு தாள் அச்சு எழுத்தளவு : பக்கங்கள் அச்சுப்பதிப்பு
666)
: Meeralkal
(Collection of Poems) : Ithayarasan
41/1, Sri Saranankara Rd, Kalubowila, Dehiwala
: Thesia Kalai Illakiyap Peravai
44, 3rd Floor,
Colombo Central Super Market Complex Colombo -11
: மீறல்கள்
(கவிதைத் தொகுதி) இதயராசன்
: தேசிய கலை இலக்கியப் பேரவை
இல:44, 3ம் மாடி, கொழும்பு மத்திய சந்தைத் தொகுதி, கொழும்பு - 1. தொலைபேசி இல: 2335844, 2381603 O9-O2-2OO8 1/8
7O gsm Shadow Bank Paper ll Point
και 1ΟΟ : டெக்னோ பிறின்டர்ஸ்
55, Dr. E.A. குரே மாவத்தை, கொழும்பு - 6. தொ.பே : O777-3OI92O
: ObUIT l5O-OO ISBN 978-955-8637-24-1

BLOUGOOTf
திரு. V. சின்னத்தம்பி திருமதி. S. செல்லம்மா
திண்ணமுற என்னை மண்ணில் விதைத்து விண்ணளந்து விந்தை மகிழ்ந்து வாழ்தலிலே எண்ணம் கொண்ட என்னன்னை எந்தையிருவர்க்கும் வண்ணமுறும் இச்சிறுகவிநூல் சமர்ப்பணமே.

Page 4

பதிப்புரை
தேசிய கலை இலக்கியப் பேரவை தனது 35ஆண்டு கலை இலக்கியப் பயணத்தில் கவிஞர் இதயராசன் எழுதிய “மீறல்கள்" என்னும் இக்கவிதை நூல் 108 ஆவது நூலாகவும் 32ஆவது கவிதை நூலாகவும் வெளிவருகின்றது.
மாதாந்தம் ஒரு நூல் என வெளியிட்டு வந்த எமது செயற்" பாட்டில் கடந்த சில வருடங்களாக ஏற்பட்டு வந்த தடங்கல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
நூல் வெளியீட்டைப் பொறுத்தவரையில் எழுத்தாளர், பதிப்பாசிரியர், வெளியீட்டாளர், அச்சகத்தார் ஆகிய நான்கு திறத்தவருடைய ஒத்துழைப்பு இருந்த போதுங் கூட நூல்களை வாசகர் மத்தியில் எடுத்துச் சென்று பரவலாக்கும் பணியைச் செய்வதற்கு இலக்கியச் செயற்பாடுடைய சமூக அக்கறையாளர்கள் தேவைப்படுகின்றனர். நூல் விற்பனையை வணிக ரீதியில் மேற்கொள்வோர் இந்திய இலக்கிய ஒருவழிப்பாதையின் ஆக்கிரமிப்பினுள் அகப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சிறிய அளவிலேயே வாசக விநியோக நலனை எதிர்பார்க்க முடியும்.
இத்தகைய வணிக விநியோகஸ்த்தர்களின் உதவி ஒரு பக்கம், எழுத்தாளரே வெளியீட்டாளராக மட்டுமின்றி விநியோகஸ்தராகவும் மாறி உறவினர், ஊரவர், நண்பர்கள் எனத் தேடிப் பிடித்து இழுத்துவந்து இருத்தி முதற்பிரதி, சிறப்புப்பிரதி, கெளரவப்பிரதி என விநியோகிப்பது மறுபக்கம் என இவ்வாறே எமது ஈழத்தமிழ் இலக்கிய நூல் விநியோகத் திறன் வாய்க்கப் பெற்றுள்ளமை வருந்தத்தக்கது.
இத்துயரிலிருந்து ஈழத்து இலக்கிய வெளியீட்டுத்துறை விடுபடுவதற்கு நாம் அனைவரும் எழுத்தாளர், பதிப்பாசிரியர், வெளியீட்டாளர், விநியோகஸ்தர், ஆர்வலர், வாசகர் எனச் சகல
V

Page 5
தரப்பினரும் சமூகத்தின் நலன் விரும்பிகளும் புத்தகப் பண்பாட்டு மையங்களை உருவாக்கி வாசகர் வட்டங்களைத் தேசம் முழுவ தும் அதாவது நகரம் - கிராமம், பாடசாலை, தொழிற்சாலை, அலு" வலகங்கள், தொடர்மாடிகள் எனப் பல தளங்களிலும் அமைத்து அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைத்து விநியோக வலையமைப்பு அமைப்பதற்கு இலக்கியச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் ஒன்றிணைவதைத் தவிர வேறு எவ்விதக் குறுக்கு வழிகளும் கிடையாது.
ஆளுக்குப் பத்துப் பேர், ஊருக்கு நூறு பேர் ஆக நாம் அணி திரண்டால் அகிலம் நம் கைவசமே.
கவிஞர் இதயராசன் எமது கலை இலக்கியச் சஞ்சிகையான “தாயகம்" இதழில் அவ்வப்போது கவிதைகளை எழுதியுள்ளார். மிக நீண்ட காலமாகவே கவிதையில் அக்கறையிருந்தும் ஒரு நூலாக வெளியிடும் தருணம் இப்போது தான் அவருக்கு வாய்க்கப் பெற்றுள்ளது.
இதயராசன் தனது கல்வித்துறை அலுவலகப் பணிகளுக்கிடையிலும் சமூக அக்கறையுள்ள மனிதராக படைப்பிலக்கியத்திலும் தன்னை ஆழப்பதித்து தேசிய கலை இலக்கிய ஈடுபாட்டை வெளிப்படுத்தி எமது பேரவையின் வெளியீடாக இந்நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். விமர்சனங்களை வரவேற்கிறோம்.
தேசிய கலை இலக்கியப் பேரவை இல:44, 3ம் மாடி, கொழும்பு மத்திய சந்தைத் தொகுதி,
ズ கொழும்பு - 11. தொலைபேசி இல: 2335844, 2381603

அணிந்துரை
மரபுக்கும் மீறல்களுக்குமான இடம்
தமிழ்க் கவிதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றுப் பாரம்பரியம் உடையது. அதன்கணி உள்ள பெறுமதிமிக்க நன்மணிகளைப் பொறுக்கி எடுப்பதைவிட்டு முழு மூட்டையாகச் சுமந்து முதுகொடிந்து போய்க் கிடக்கிறது தமிழ்ச்சமூகம்; இரண்டாயிரம் ஆண்டுச் சுமை தாளாமல் சோலிபலவுடையவராய் நாம் அல்லாடுகிறோம் என்பது குறித்து முதுபெரும் கவிஞர் முருகையன் கவிதையொன்று வடித்துள்ளார்.
கனதிமிக்க தமிழ்க்கவிதை வரலாறு வசனநடை கைவந்த வல்லாளரான நாவலரையும் பணிய வைத்திருந்தது; எளிமையான வசனநடை முன்னோடியான அவர் தமிழ்க் கவிதை ஆளுமைக்குப் பணிந்து கடின நடையில் கவிதை பாடினார். மாறாக பாரதியோ ஆளுமையுடன் தமிழ்க் கவிதையைக் கையாண்டு சாதாரண எழுத்தறிவு படைத்தவரும் புரியும் வகையில் நவகவிதைச் செல்நெறி ஒன்றைத் தொடக்கி வைத்தார். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பது சார்ந்து, அதுவரை பேசாப்பொருளாய் இருந்தவற்றைப் பாடுபொருளாக்கியதன் பேறு அது. அனைவராலும் எளிதில் புரிய முடிந்ததாய்ச் சொல் புதிது, சுவை புதிது எனும் வகையில் நவகவிதை பாரதிவாயிலாக எழுச்சி பெற்றது.
ஆயினும் புதிய பாடுபொருளை எளிதாகக் கவியாக்குவது என்ற பேரில் கண்டது கழியதும் எழுதப்பட்டு, இனிக் கவிதையாக்க எதுவுமில்லை என்ற நிலை மூன்று நான்கு தசாப்தங்களிலே ஏற்பட்டுப் போயிருந்தது. அண்ணாந்து கொட்டாவி விட்டதெல்லாம் தமிழ்க் கவிதையாகி விட்டது எனச் சலித்துக் கொண்டார் புதுமைப்பித்தன்.
இனிக் கவிதையல்ல, புனைகதை இலக்கியமே கோலோச்சும் என்ற ஆரூடங்களும் முன்வைக்கப்பட்டன. அவ்வாறு ஆகிவிடவில்லை. இன்னும் வீச்சுடன் புதுக்கவிஞர்கள் வளமிக்க
VII

Page 6
கவிதைகளைத் தமிழ் இலக்கியத்துக்குப் படைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மக்கள் விடுதலைக்காக அர்ப்பணிப்போடு போராடும் சக்திகள் பல்வேறு வடிவங்கள் வாயிலாக மக்கள் குரலைக் கவிதைகளாய் வடித்து வழங்கியவாறே உள்ளனர்.
அந்தவகையிலான புதிய வருகையான இந்தக் கவிதைத் தொகுதி புத்தம் புதிய கவிஞர் ஒருவரைக் காட்டவில்லை: மூன்று தசாப்தங்களாக (1977 இலிருந்து இன்று 2007 வரை) எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு இது. இந்த முப்பது வருடங்களின் வரலாற்றுப் போக்கின் மானுடப் பங்கேற்பு மாற்றங்களும் உணர்வு மாறுபாடுகளும் இக்கவிதைகள் வாயிலாகக் காணும்போது மலைக்கவைப்பனவாயிருக்கின்றன. அவற்றை வாசகர் ரசனைக்" கும் நோக்குக்கும் உரியனவாய் விட்டுவிடுகின்றேன்.
இந்த உணர்வு மாற்றத்துக்கான ஒரு உதாரணத்தை மட்டும் இங்கு தொட்டுக்காட்டலாம். "என் பிரியமானவரே!” என விளித்து 1983 இல் எழுதப்பட்ட ஒரு கவிதையில்,
"அணை கட்டியதில் சிறு அணிவினர் பங்காக - எண் உழைப்பும் சேர்ந்திருக்கும் அன்பே எங்கள் தேசத்துக் கனவுகளோடு, காதலையும் சுமந்தபடி காத்திருப்பேன்." என்று ஈழத்தமிழ்த் தேசிய எழுச்சியில் மக்கள் பங்கேற்பின் ஒரு குரலைக் கேட்க முடிகின்றது. மக்கள் போராட்ட இலட்சியத்தைக் கோட்பாடாகக் கொண்டிருந்த இயக்கங்கள் இத்தகைய மக்களது எழுச்சி உணர்வை உண்மையில் சாதகமாக்கி மக்களை வலுமை" யாக ஸ்தாபன மயப்படுத்தியிருப்பின், பின்னர் நான்கு வருடங்களுக்குள் முற்றாகவே மக்கள் வரலாற்றுப் பங்கேற்பிலிருந்து ஒதுங்கிச் சென்று மலினமான ரசிகமனோபாவம் கொள்ளும் அவலம் ஏற்பட்டிருக்காது. ஆனால் ஏற்பட்டுவிட்டது. ベ
"ஈழவரலாற்றில் இருள் மண்டிய இன்றைய நிலை" என 1987இல் “புத்தாண்டே நீவா!" என்ற கவிதையில் பாடும் அவலக்" குரல் இன்றுவரை வளர்ந்து கொண்டுதான் வருகிறது.
மக்கள் மீண்டும் தமது வரலாற்று உணர்வைக் கையேற்க வேண்டும்; ஆரம்பத்தில் இருந்தே விமரிசன மனப்பாங்கு இருக்கவில்லைத்தான். இனியாயினும் விமர்சனை விழிப்புணர்வுடன் வரலாற்றுணர்வு கொள்வோம், அரசியல் தெளிவுடன் அனைவரை
VIII

யும் புரிந்துகொண்டு ஏற்ற தீர்வை எட்ட முயல்வோம். அதற்கு ஏற்றதாக விமர்சனம் சுயவிமர்சனத்தைத் தயவு தாட்சண்யமின்றி முன்னெடுப்போம்.
இந்தக் கவிதைத் தொகுதியைப் படித்து முடித்தபோது மக்களின் ஒரு அங்கமாக இருந்தபடி இந்தச் சிந்தனைகளை வந்” தடைவது தவிர்க்க இயலாததாய் இருந்தது. நண்பர் இதயராசன் பெளராணிக மரபுபற்றிய அறிவுடையவர். மக்கள் எழுச்சிகளுடாக வரலாற்றுப் பிரயோகமான மார்க்சியத்தைத் தனது உலக நோக்காக வரித்துக் கொண்டவர்.
அந்தவகையில் மரபைத் தெளிவாக விளங்கிக் கொண்டு, அவசியப்படும் மீறல்களை கலைநயங் குன்றாமல் கவிதைகளாக்" கித் தரவல்லவராய் உள்ளார் இதயராசன். இந்தக் கவிதைகள் படிப்பவர் உணர்வுத் தளத்துக்கு இடம்மாறித் தளமாற்ற வளர்ச்சியை ஏற்படுத்த முடிவது, மரபும் மாற்றமும் அவசியப்படும் இடங்களை அவர் தெளிவாக விளங்கியவாற்றின் பேறானது.
கலாநிதி. ந. இரவீந்திரன் தேசிய கல்வியியல் கல்லூரி வவுனியா. 2007.11.23.

Page 7
முன்னுரை
கவிஞர் இதயராசனுடைய கவிதைத் தொகுப்பு என் மேசை மீது கிடக்கின்றது. அதற்கொரு முன்னுரை எழுதுமாறு அவர் என்னைக் கேட்டுக்கொண்ட போது அப்பொறுப்பினை மனமகிழ்வுடன் ஏற்றுக்கொண்டேன். கவிதைத் தொகுப்பினை வாசித்து முடித்த பின்னர் என் நினைவுகள் சுமார் பதினைந்து ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று நிலைக்கின்றது. கணிதத்துறையில் நிபுணத்துவம் பெற்று ஓர் பொறியியலாளனாக வரவேண்டும் என்ற என்கனவுகள் சிதைந்து, கலைத்துறையில் எனது கல்வியை தொடர்ந்திருந்த காலத்திற்தான் நான் கவிஞர் இதயராசனை முதன்முதலிற் சந்தித்தேன். அவரது இந்துநாகரிக வகுப்பில் ஒருநாள் மாணவனாக கல்விகற்கும் வாய்ப்புக் கிடைத்தது. தொடர்ந்து இந்தவாய்ப்புக் கிடைக்காமை துரதிஷ்டமான ஒன்றே. இருப்பினும் தொண்ணுாறுகளின் நடுக்கூற்றில் கொட்டக்கலை ஆசிரியர் கலாசாலையில் நாங்கள் இருவரும் விரிவுரையாளர்களாகக் கடமையாற்றிய காலம் தொடக்கம், இன்றுவரை அவ்வுறவு பலவிதங்களில் பலமடைந்து வந்துள்ளது; வருகின்றது.
அவருடைய உரையாடல்களில் பெரும்பாலும் சொந்த விவகாரங்கள் எதுவும் இருக்காது, படித்த நூல்களில் இருந்த குறிப்புக்கள், ரசனைகள், பல நூல்கள் பற்றிய தகவல்களை அவர் கூறுவார். இக்காலங்களில் முன்னர் எழுதிய கவிதைகளுடன் கூடவே அவர் அவ்வப்போது எழுதிய கவிதைவரிகளையும் வாசித்துக்காட்டுவார்.
ஒரு வகையில் அவரது பெரும்பாலான கவிதைகளின் முதல் வாசகனாகவும் விமர்சகனாகவும் நான் இருந்திருக்க வேண்டும் என நினைக்கின்றேன். அப்போதெல்லாம் அவரது கவிதைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவரவேண்டும் என்ற எனது அவாவைக் கூறியுள்ளேன். "கனவு மெய்ப்படவேண்டும்" என்பார் பாரதி. இத்தொகுப்பின் மூலம் அக்கனவு மெய்ப்படுகின்றது.
Χ

சமகால மக்களின் வாழ்வின் பின்புலத்தில் போர்க்கால அவலம் என்பது மக்கள் வாழ்க்கையின் சகல அம்சங்களையும் பாதித்து வருகின்ற சூழல் இலங்கைக்கு மட்டும் உரியதொன்றல்ல. யுத்தங்கள் பொதுவாக தேசம், இனம், மதம், மொழி, சாதி என்ற பெயரில் தத்தமது வர்க்க நலன்களை நிலைநிறுத்தும் அடிப்படை யில் எழுகின்றன. தலைமைதாங்கும் வர்க்க சக்தியின் அடிப்படையில் அவ் யுத்தங்கள் தமது வர்க்க நலனை வெளிப்படுத்தி நிற்கும் என்பது வரலாற்று நியதியாகும்.
ஈழத்தில் அறுபதுகளில் சாதிய எதிர்ப்புப் போராட்டம் பண்ணையடிமைத்தனத்தைத் தகர்க்கும் தேசியத்தின் வடிவமாக இருந்தது போன்று, எழுபதுகளில் தமிழ்த் தேசிய இனவிடுதலைப் போராட்டம் முனைப்புப் பெற்றுக் காணப்பட்டது. இதனைத் தமிழ் முதலாளித்துவ சக்திகள் இனவாதத்தினுள் அழுத்திச் சென்றனர். இத்தகைய வன்முறைகளின் பின்னர் துளிர்க்க கூடிய வசந்தத்திற்கான நம்பிக்கையை இதயராசன் தன் எழுத்தின் ஊடாக பதிவு செய்ய முனைகின்றார்.
சமூகத்தின் எண்ணற்ற முரண்களை நியாயப்படுத்தவோ சமரசப்படுத்தவோ முனையாத கவிஞர், முரண்களின் தாற்பரியத்தை இவ்வாறு கவிவரிகள் கொண்டு தீட்டுகின்றார். "ஏழ்மையின் கொடூரத்தினை ஏமாற்றத்தின் உச்சத்தினை - இந்தப் பூமிப்பந்தின் சூட்சுமத்தினை சூசகமாய் உணர்த்தி - எண் தேடலின் தேறலுமாய் நின்று வாசிப்பினர் ஆழத்தினையும் செவிமடுத்தலின் செம்மையினையும் வெம்பலும் வெதும்பலுமின்றி வாழ்தலில் உணர்த்தி - எண் ஆத்மாவின் ஆத்மாவாய் உழைத்து உழைத்தே உருக்குலைந்த உத்தம ஆவண்கள் சரிதம்.”
நாகரிகத்தின் இரு முரண்பட்ட அர்த்தங்களை, பரிமாணங்களை இங்கே சந்திக்கின்றோம்.
ΧΙ

Page 8
ஓர் காலகட்ட ஆர்ப்பரிப்பில் வர்க்க விடுதலையை தீவிர
மாகப் பாடிய இக்கவிஞன் இலங்கையில் இனவாதம் இனவெறி
என்பன கேவலமானதோர் பின்னணியில் மோசமானதோர்
நிலையை எட்டியபோது இன அடக்குமுறைக்கு எதிரான
கவிஞராகப் பரிணமிக்கின்றார்.
"இரத்த வெள்ளம் வீதியெல்லாம் சதைச்சேறுகள் நடையிற் சிதற நவீன ஆயுதங்கள் பிணக்கோலமிட ஈழப்பொங்கல்”
"கணிணி வெடிகள் தேடியது போதும் மணர்ணின் விதைகளைத் தேடுவோம் அடுத்த தலைமுறையாவது அறுவடை செய்யட்டும்". உழைக்கும் மக்களின் நலனிலிருந்து அந்நியமுறாமல் பேரினவாதத்தை பெரிதும் சாடுகின்ற பண்பு கவிஞன் ஒருவனுக்கு இருக்கக் கூடிய ஆன்ம பலத்தையே எமக்கு உணர்த்துவதாய் அமைகின்றது. தேடல், காலத்தின் புலம்பல், யுத்த பூமியின் அன்றாட ஜிவனம், கறுப்பு யூலை, ஈழப்பொங்கல் ஆகிய கவிதைகள் இன்றைய போர்க்கால அவலங்களையும் நெருக்கடி" களையும் அதனடியாக எழும் உணர்வுகளையும் வெளிப்படுத்தி நிற்கின்றன.
"சிவனொளிபாதம் நகரும்", "மலைத்தாய் விழிப்பாள்" ஆகிய கவிதைகள் மலையக சமூகம் குறித்தவையாகும். மலையகத்தின் வாழ்வியல் குறித்து, அதன் அசைவியக்கம் குறித்து தன் சரித்திரத் தூரிகை கொண்டு புதியதோர் நாகரிகத்தை இவ்வாறு தீட்டித்தர முனைகின்றார்.
“தேசத்தின் கல்வி தேசிய உடைமையாயின தோட்டப்பாடசாலைகள் தேடுவாரற்று - பின்னர் தோட்டக்கம்பனிகள் தேசிய உடைமையாயின தோட்டப் பாடசாலைகளும் தேசியத்தினர் அங்கமாயின
ΧIΙ

தேசிய இடமாற்றக் கொள்கையினால் அணி அணியாய் ஆசிரியர் வந்தனர் மலைப்பிள்ளைகள் மகிழ்வுறக் கற்றனர் இலவசக் கல்வியின் தந்தையும் உணர்மையாய் உறங்கினார் - நம்மவர் விண்ணர்கள் என்பேனர் கண்ணினில் மண்ணைத் தூவி கல்விக்கும் களங்கம் செய்தனர் தப்பிப் பிழைத்தவர் தலையெடுத்தனர் - அவர் வித்தகர் என்பேனர் விவேகிகள் என்பேன் மலையினில் விளைந்த முத்துக்களெனர்பேண் - அதில் சொத்துக்காய்ச் சோரம் போனவரைச் சோகத்திற் சேர்ப்போம் - மிதி "மாணிக்கவாசகர்களை' மனதார மெச்சுவோம்".
"மத்திய தரத்தினை அதிகமாய் மலையில் நட்டனர் மலிவாய்க் கிடைத்த வாத்தியாரோடு மிதமான ஆளணிசேவைகள் மூலம் உழைக்கும் மக்களிடம் இடைவெளியை
விதைத்தனர் முரணர்பாட்டினைச் சூழலால் ஊதிப் பெருக்கினர் மெல்ல மெல்ல நகரத்தை நோக்கியபடி தோட்டத்தை விட்டு விரட்டினர் நிம்மதியின் உச்சத்தில் அவர்கள் சூழ்ச்சியின் சூட்சுமம் புரியாமல் புரட்சியாய்ப் புழுகித் திரிகின்றார் பூரித்துப்போன மேதைகள், உணர்மையில் உழைப்பாளர் உயர்வுவேணர்டினர் நாட்கூலி என்பதை நடுநிசியில் நிறுத்தட்டும் அரச ஊழியர்போல் அனைத்தையும் பேணபட்டும்"
உண்மைதான்! ஆயிரக் கணக்கான தொழிலாளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதோர் சமூகமாக விளங்குகின்ற சமூகவமைப்பானது எண்பதுகளின் பின்னர் ஏற்பட்ட அரசியல்
XIII

Page 9
சமூக பொருளாதார மாற்றம் காரணமாக வர்க்க நிலையிலும் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. அதன் வெளிப்பாடாகவே இன்று மலையகத்தில் பலம் பொருந்திய மத்தியதரவர்க்கம் ஒன்று உருவானது. அவ்வர்க்க மாற்றமானது ஆசிரியர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், பொறியியலாளர்கள், வர்த்தகர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள், அரசியல்வாதிகள், தொழிற்சங்க" வாதிகள் எனப் பல்துறைகளில் அதன் வளர்ச்சி பரவல் அடைந்து வருவதனைக் காணலாம்.
இச்சூழலானது இரு நிலைப்பட்ட பண்புகளைக் குணாதி
சயங்களைக் கொண்ட வர்க்கங்களை உருவாக்கியது. ஒன்று சமூகம் குறித்த எவ்வித சிந்தனைகளோ கரிசனையோ அற்று செக்குமாடுகளாய் வளர்ந்துவிட்ட இக்கூட்டம் தமக்குத் தேவையேற்படுகின்ற போது பாட்டாளிவர்க்க நலன்களையும் பாடுவதற்குத் தவறுவதில்லை. உழைக்கும் வர்க்கம் “அபிவிருத்தி” என இவர்கள் கூப்பாடு எழுப்பிக் குதியாட்டம் போடுகையில் இவர்களின் வரவு நல்வரவாகவும் அர்த்தமுள்ளதாகவும் தோன்றும். சற்று ஆழமாக நோக்கினாற்தான் அதன் வர்க்க நலன்களுக்குப் பின்னணியில் அரசியல் பிற்போக்குத்தனம் மறைந்திருப்பதனைக் காணலாம்.
இதற்கு மாறாக சமூக நலனை ஆதாரமாகக் கொண்டு அம் மக்களின் விடுதலையே தமது உயிர் மூச்சாகக் கொண்டு உழைத்து வருகின்றவர்கள் மற்றொருதரப்பினர். இவர்களைத் தொழிலாளர் வர்க்கம் சார்ந்தவர்கள் எனக் குறிப்பிடலாம். இவர்கள் உழைக்கும் மக்களின் நலன் சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் புரட்சிகர அணியினராக விளங்குகின்றனர். கவிஞரின் மேற்குறித்த வரிகள் இந்தத் தாற்பரியத்தின் பின்னணியை அழகுறக் காட்டுகின்றது.
“விபச்சார வைபவங்கள்", "குரியோதயம்", "மானுடம் தளைத்திட” எனும் கவிதைகள் பெண்களின் மீதான ஆண்களின் ரோமம் அடர்ந்த கரங்களின் ஆதிக்கத்தை வெளிப்படுத்துகின்றது. பிரமச்சரியத்தைக் கடைப்பிடித்த காந்தி தமது அந்திம காலத்தில் தமது பிரமச்சரியத்தின் புனிதத் தன்மையைப் பரிசோதிப்பதற்காக ஒர் அம்மையாருடன் ஆடை களைந்து படுத்து, அந்நிலையிலும் தனது உணர்ச்சி தூய்மை கெடுகின்றதா எனப் பரீட்சித்துக் கொண்டாராம். காந்தியின் பரிசோதனை அவரளவில் நியாயமானதாகத் தோன்றினாலும் அந்தப் பெண்ணின் உணர்ச்சி குறித்து காந்தி
XIV

சிந்தித்தாரா? இது இவ்வாறு நிற்க, கண்ணதாசன் போன்ற வகை" யறாக்களைக் கூற வேண்டிய அவசியமே இல்லை. இவர்களின் பார்வையில் பெண் பாலியல் உறுப்பாகவே கிடந்தாள். பெண்களை மனித ஜீவனாக ஆன்மாவாகக் காணும் சிந்தனை பாரதிக்" குப் பின்னர் மிக வலிமையாகவே இலக்கியங்களில் இடம்பெற்று வந்துள்ளன. அந்தவகையில் ஒராயிரம் ஆண்டுகளாகப் பழமை" வாய்ந்த கலாசாரத்தின் மீது ஆத்திரம் கொண்ட இக்கவிஞன் செல்லரித்துப் போன அசிங்கங்களைத் தாண்டி தன்னம்பிக்கை" யுடன் மாத்திரமல்ல, கூடவே கர்வத்துடன் பெண்மையின் மகத்" துவம் குறித்துப் பாடுகின்றார்.
இவ்வாறு தேசவிடுதலை, பெண் விடுதலை, சாதி விடுதலை எனப் பல விடயங்கள் குறித்துச் சிந்திக்கின்ற கவிஞரின் எண்ணம் காலத்தோடு ஒட்டியதாகக் கிளைபரப்புகின்றது. ஆந்தைக் கூட்" டங்களுக்கு எதிராகவும் இருளின் ஆத்மாவுக்கு எதிராகவும் கவித்தீ உமிழ்கின்ற இவரது கவிவரிகள் உழைக்கும் மக்களின் விடுதலைக்காய் மக்களின் பிரதிநிதிகளாய் இருந்த மனிதர்கள் குறித்தும் இவர் கவிதை தீட்டத் தவறவில்லை.
இவ்வகையில் “மாசேதுங் என்னும் மாமனிதன்", "யுகக் கவிஞன் யுக்தியைக் கையிலெடுப்போம்", "கைலாச பதியென்று கைகோர்த்து நிற்போம்” எனும் கவிதைகளில் மாசேதுங், பாரதியார், கைலாசபதி குறித்த இவரது கவிதைகள் முக்கியமானவையாகும். காலமாற்றத்திற்கேற்பவும் தம் நாட்டுச் சூழ்நிலைக்கு ஏற்பவும் உழைக்கும் மக்கள் நலன் சார்ந்த நாகரிகங்கள் எத்தகைய தளத்தில் நின்று முன்னெடுக்கப்பட்டன என்ற நிதர்சனங்கள் இங்கு பதிவாக்கப்பட்டுள்ளன.
இவ்விடத்தில் பிறிதொரு விடயம் குறித்தும் நோக்குதல் காலத்தின் தேவையாக உள்ளது. மதம் குறித்த பார்வையை முன்வைக்கும் வரட்டு மார்க்ஸியவாதிகட்கும், மார்க்ஸியவாதிகளுக்கும் இடையிலான வேறுபாடு தெளிவானது. மதத்தை அதன் சமுதாய சூழலில் வைத்து நோக்குவதன் மூலம் ஒடுக்கு முறைக்கு ஏதுவாக உள்ள காரணிகள் எதிர்க்கப்பட வேண்டும் என்ற உண்மையும், ஒடுக்கு முறைக்கு எதிராக வெளிப்பட்டுள்ள போர்க்குணத்தை சமுதாயமாற்றச் செயற்பாடுகளுக்கு ஏற்ப ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டிய பார்வையினையும் உணரமுடியும்.

Page 10
மதம் குறித்த தேடல், அதன் மீதான விமர்சனப் பார்வை குறித்து அண்மைக் காலங்களில் எழுதியும் விமர்சித்தும் வருகின்ற கலாநிதி ந. இரவீந்திரனின் ஆய்வுகள் தமிழ் இலக்கிய ஆய்வுகளில் புதிய சிந்தனையைத் தருகின்றன. சமூகமாற்ற போராட்டங்களில் மதங்கள் எத்தகைய தாக்கத்தை செலுத்துகின்றன, நேர்மையோடு சமுதாய மாற்றம் குறித்து சிந்திக்கின்ற மார்க்ஸியவாதி அதனை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்பன குறித்து அவரது பின்வரும் கூற்று முக்கியமானதொன்றாகும்.
“மக்கள் நாம் விரும்பும் புரட்சிகரக் கட்டத்தில் இல்லை. பழமையில் தோய்ந்திருக்கும் அவர்களிடம் போய் நாம் சேறுபூசமுடியாது என்றெல்லாம் ஒரு புரட்சியாளன் சொல்ல முடியாது. மக்களை அவர்களது வயற் காட்டின், தொழிற் கூடங்களின் புழுதியிலும் சேறிலும் உள்ளபோது தான் அணுகி, புரட்சிகர உணர்வின்பால் ஈர்க்கவேண்டும். புழுதியும் சேறும் எம்மில் படிந்து விடுமென்றால் அவர்களுக்கு எங்களையே வேண்டாமல் இருக்கும். அவர்கள் எங்களிடம் வரவேண்டுமென்றால் நாம் யார் அவர்களுக்கு? தூர ஒதுக்கிவிட்டு அவர்கள் பாட்டுக்குப் போவார்கள். பலதரப்பட்ட பிற்போக்கு சக்திகள் அவர்களிடம் போய்க் கொண்டிருப்பார்கள். அதெல்லாம் வேண்டாம் என ஒதுங்கி, அதிதீவிரப் புரட்சிவாதம் பேசி, அப்போதைய கையரிப்புக்குப் பாறையில் கையை மோதிய "மகத்தான புரட்சி வீரர்கள்” எல்லாம் இறுதியில் பிற்போக்கு சக்திகளுக்கே உதவியிருக்கிறார்கள். கையைச் சுட்டுக்கொண்ட பின்னர், எல்லாம் கேடுகெட்டுப் போய்க் கிடக்கிறது எனப் புலம்பி, ஏதாயினும் ஒரு ஞானமார்க்க ஒளியில் கரைந்திருக்கிறார்கள். நாம் உண்மையில் சமூக மாற்றத்தையும் சமத்துவ நெறியையும் நேசிப்போமாயின், புதிய-கலாசார இயக்கத்துக்கான வேலைத் திட்டம் ஒன்றைக் கூடிக் கலந்துரையாடி வகுத்து, அந்த வலிய ஆயுதத்துடன் மக்களிடம் செல்வோம். ஏனெனில், மக்கள் மட்டுமே வரலாற்றின் உந்து சக்தி".
இவ்வகையில் மக்களை உணர்ந்து மக்களின் சமூகமாற்ற செயற்பாடுகளை முன்வைப்பதற்கு மதம் குறித்த தெளிவு அவசியமாகின்றது. இப்பின்னணியானது பல அதீத மார்க்ஸியர்
XVI

களை (மாக்ஸிசத்தினைக் கற்காமல் அதன் உச்சாடனங்களை, கோசங்களை மனனம் செய்து, புரட்சியின் தளத்தில் மக்களை நேசசக்திகளை நிராகரித்து, தன்னை மாத்திரம் புரட்சியாளனாகக் காட்டும் கோமாளிகள்) ஆத்திரம் கொள்ளச் செய்வதும், அவர்களின் மூக்கைச் சிணுங்க வைப்பதும் தற்செயல் நிகழ்ச்சி. யல்ல. பாரம்பரிய மரபுகளை எவ்வாறு பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்தில் நோக்க வேண்டும். களத்திலிருந்து நாம் கற்க வேண்டியவை யாவை என்பன குறித்து லெனின் அவர்களின் பின்வரும் கூற்று முக்கியமானது.
“பாட்டாளி வர்க்க கலை பற்றிப் பேசும்போது இதை நாம் மனத்திற் கொள்ள வேண்டும். மனிதவர்க்கத்தின் வளர்ச்சி பற்றிய துல்லியமான அறிவும் அதனை மாற்றக் கூடிய ஆற்றலும் சாத்தியமானாற் தான் பாட்டாளி வர்க்க கலை படைக்க முடியும். இக்கலை வானத்திலிருந்து குதிப்பதல்ல. பாட்டாளி வர்க்க கலை நிபுணர்கள் என அழைத்துக் கொள்பவர்களின் கண்டு பிடிப்பல்ல. அப்படிச் சொல்வது எல்லாம் சுத்த அபத்தம். பாட்டாளிவர்க்க கலை என்பது முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அதிகாரத்துவ சமூகம் ஆகியவற்றில் சேகரிக்கப்பட்ட மனித குல அறிவின் தர்க்க ரீதியிலான வளர்ச்சியாகும்".
ஆதிக்க சக்திகள் உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்குவதற்காக எத்தகைய வகையில் பாட்டாளி வர்க்கத்தின் கலாசார பண்பாடுகளிலிருந்து கற்கின்றதோ அவ்வாறே அந்நுகத்தடியை தூக்கியெறிவதற்காகப் போராடுகின்ற சக்திகளும் வரலாற்றிலிருந்து கற்க வேண்டும் என்பதை மேற்குறித்த வரிகள் எடுத்துக் காட்டுகின்றன. அதனை அவ்வாறே ஏற்றுக் கொள்ள வேண்டும் எனப் பொருள்படாது.
அதனை உழைக்கும் மக்கள் நலனிலிருந்து அந்நியப்படாது, பாட்டாளிவர்க்க சிந்தனையின் நிலை நின்று நோக்க வேண்டும் என்பதை மார்க்ஸியர்கள் எப்போதும் வலியுறுத்தியே வந்துள்ளனர். கவிஞரைப் பொறுத்த மட்டில் இந்துசமயத்தில் புலமை நிலைத் தேடலை மேற்கொண்டவராக இருக்கின்ற அதே சமயம் அத்தேடலை சமூகமாற்றச் செயற்பாடுகளுக்கு ஏற்ற வகையில் உழைக்கும் மக்களின் நலன் சார்ந்த பார்வையிலிருந்து அந்நியப்படாமல் ஆக்கிக் கொண்டமை ஆரோக்கியமானதாகும்.
XVII

Page 11
கலையும் இலக்கியமும் மக்களுக்காக என நாம் கூறுகின்ற போது அது வெறும் கோசங்களாக, சுலோகங்களாக மட்டும் வெளிப்பட்டு நிற்பதாக அமைந்துவிடக்கூடாது. எல்லாக் கலை இலக்கியங்களும் பிரச்சாரங்களேதான், எல்லாப் பிரச்சாரங்களும் இலக்கியமாகா என்ற சிந்தனையானது மார்க்ஸ் முதல் கைலாசபதிவரை தெளிவுபடுத்தப்பட்டு வந்துள்ளது. இலக்கியம் எனக் கூறும் போது அது மக்கள் விரோத இலக்கியங்களிலிருந்து மாறுபட்டதாகவும் தனித்துவம் கொண்டதாயும் விளங்குகின்றது. அவ்விலக்கியமானது உள்ளடக்கத்தில் மட்டுமன்று உருவத்திலும் தனித்துவம் கொண்டதாக விளங்குகின்றது.
கவிதையின் ஊடாக உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற போது அதனை இரண்டு முறைகளில் வெளிப்படுத்தலாம். ஒன்று சமுதாய பிரச்சனைகளையும் முரண்பாடுகளையும் அவற்றினடி" யாக எழும் கருத்தோட்டங்களையும் சமூக உறவுகளின் உணர்ச்சிப் பின்புலத்திற் தருவது. மற்றது சமுதாயப் பிரச்சனைகளை நமது பண்பாட்டுச் சூழலில் காணப்படும் குறியீடுகள், படிமங்கள், புராண இதிகாசக் கதைகள் மூலமாகத் தருவது.
கவிஞரைப் பொறுத்தமட்டில் இவ்விரு முறைகளையும் துணைக்கொண்டே கவிதைகளை ஆக்கியிருக்கின்றார். தத்துவத் தெளிவும் சிருஷ்டிகரத் திறனும் ஒருங்கே வாய்க்கப்பெற்றிருப்பதே. இதற்கு அடிப்படையாக அமைந்துள்ளது.
ஆக, கவிஞரொருவர் அழவும் முறைப்பட்டுக் கொள்ளவும் வசவுகளை அள்ளித் தெளித்து நம்பிக்கையின்மையில் தோய்ந்து சகதியில் புரளவும் நேர்ந்த சந்தர்ப்பங்கள் இருந்தும் வாழ்வை இப்படி ஆக்கபூர்வமாய்ச் சிந்திப்பது கவிஞரொருவரின் பரந்துபட்ட இதயத்தை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. இவரது கவிதைத் தொகுப்பினை வாசித்த போது கவிஞர் பப்லோ நெருடா கூறிய பின்வரும் வரிகள் எனது சிந்தனையைத் தொட்டன.
"இந்த யுகத்தின் கவிஞனின் முக்கிய பொறுப்பு மக்களுடன் இயல்பான சூழ்நிலையில் இரண்டறக் கலப்பது தான். அந்த உணர்வு என்னுடைய வாழ்க்கையைப் பெருக்கியது. சிலியின் சமவெளியில் மோதிச் சிதறும் அலைத்தொடர்களின் போர் முரசை நான் அடையாளம் கண்டுகொண்டேன். மணல் வெளியுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் உப்பு நீரில் கரைந்து
XVIII

கொண்டிருக்கும் மாமலையும், சமுத்திர வாழ்க்கையின் பல்வேறு விசித்திரங்களும், பறவைகள், பாதசாரிகளின் கூட்டமும், உப்பு நீரின் துவர்ப்பும் என்னைத் திண்ணப்படுத்தியது.
ஆனால் இவை எல்லாவற்றையும்விட வாழ்க்கையின் தகிப்பும் நெடியும்மிக்க அலையேற்றத்திலிருந்துதான் நான் நிறையக் கற்றுக்கொண்டேன். அத்துடன் என்னை உற்று நோக்கும் நூற்றுக்கணக்கான கண்கள்! அந்தக் கண்களில் நான் அன்பின் மென்மையை உணர்கின்றேன். ஒரு வேளை எல்லாக் கவிஞர்களாலும் இதை புரிந்து கொள்வது சிரமமாக இருக்கலாம். ஆனால் இந்த அதிஷ்டம் வாய்த்தவர்கள் யாரோ அவர்கள் இதை இதயத்துக்குள் வைத்து தாலாட்டவே செய்வார்கள். அவர்களுடைய ஒவ்வொரு படைப்பிலும் இதன் பிரதிபலிப்பு இருக்கும்."
வாழ்விலிருந்து அந்நியப்படாமல், தொலைதுார தீவுகளுக்குள் ஒதுங்கி விடாமல் இவர் தீட்டியிருக்கும் கவிதை வரிகள் ஈழத்து கவிதை உலகிற்குப் புது வரவாகும்.
எமது யாசிப்பு இவர் தொடர்ந்து இது போன்ற கவிதைகளை மேலும் வெளிக் கொணர வேண்டும் என்பதேயாம்.
லெனின் மதிவானம் பிரதி ஆணையாளர் / தலைவர் - தமிழ்ப் பிரிவு கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கல்வி அமைச்சு
E-mail:leninmathivanamGPgmail.com
2007.12.24

Page 12
என்னுரை
உங்களுடன் சில நிமிடம்!
எங்கள் தேசத்தின் அவலங்கள் மனக் கோலங்களின் புரிதல்கள் மனித நடத்தையின் மீறல்கள் இதயம் நொருங்குண்ட ஜீவன்கள் உண்மையின் தரிசனம் இன்றி உளன்றிடும் முரண்நிலை வாழ்வுகள் இத்தனைக்கும் மத்தியில்,
மானுட நேசிப்பின் பரிணமிப்பில் ஆத்மாவின் ராகங்களை இசைமீட்டும் - என் கவிக்குழந்தை உங்கள் கரங்களில் இணையோடு விளையாடும் அசைவுகள் வீரிட்டு எழும் அலறல் களோடு நம்பிக்கை முத்துக்கள் சிந்தி சில கணங்கள் சிறைப்படுத்தல் வசமானால் - உங்கள் உணர்வுகளின் உண்மை நேசிப்பெண்பேன்
நிறை நாடிக் குறைகளைந்து உச்சிமுகர்ந்து - என் உழைப்பின் உதயத்தை உவந்தேற்கும் அனைவர்க்கும் இதய நன்றிகள் - என் கவிவரிகள் கருவிருந்து களம்காண துணை நின்றோர் வரிசையில் என்னை நானறிய நறுங்கவித் தேனூட்டிய, மக்கள் கவிஞர் முருகு கந்தராசாவை முதல் வணங்கி - என் முதற்கவியை அச்சேற்றிய சுப்பையா அண்ணருக்கும்
XX

தாயகம் சமர் கலையருவி சஞ்சிகைகளுக்கும் வரிவரியாய்ப் படித்து வடிவமைத்து அணிந்துரையும் முன்னுரையும் ஈய்ந்து - என் கவிப்புலத்தை மெய்ப்பித்து களமிறங்கத் தூண்டிய அறிவார்ந்த நண்பர்கள் வட்டத்தின் கலாநிதி என். இரவீந்திரன், திரு.லெனின் மதிவானம் மனம் போற்றி,
கருத்துரை பகிர்ந்து அப்பப்போ ஊக்குவித்த கலாபூசணம் எம்.எஸ்.ழறிதயாளன் திருமதி. ப. இளங்கோவனுக்கும் நண்பர்கள் திரு.ஜெ.சற்குருநாதனோடு வரதராசாக்கள் கவிஞர் சந்திரலேக்கா கிங்ஸிலி, ரமணி அக்கா அன்பின் தங்கை றஜனி, மகள் தனுஜா - என்னை 'என்பாட்டில் விட்ட என்னருமை மனைவி ஷிராணி இன்னும் பெயர்சுட்ட அவர்விரும்பா எண்ணற்ற இதயங்கள் நுழைந்து,
பதிப்புரையுடன் பதிப்பிக்க மனமுவந்த தேசிய கலை இலக்கியப் பேரவைக்கும் நண்பர் கவிஞர் சோ. தேவராஜாவுக்கும் அழகுற வடிவமைத்து அச்சிட்ட ரெக்னோ பிறின்ரினர்க்கும் நண்பர் கேசவனுக்கும் " என் அன்பின் நெகிழ்வினைக் குழைத்தென்றும் நன்றிகள் உரித்தாக்கி மகிழ்கின்றேன்.
அன்புடன், இதயராசன் 41 யூரீ சரணங்கர வீதி, களுபோவில - தெஹிவளை. தொ.இல: 071-6646174
2007.I2.21.

Page 13
01.
O2.
O3.
O4.
05.
O6.
O7.
08:
O9.
10.
11.
12.
13.
14.
15.
I6.
17.
18.
I9.
20.
21.
22。
23.
24.
இதழ் விரிக்கும் கவிகள்
பிரசவிப்பு. வாழ்தல். a a ஆத்மாவின் ராகங்கள் . என் பிரியமானவரே . புத்தாண்டே நீவா! .
காலத்தின் புலம்பல் .
விபச்சார வைபவங்கள் .
ஈழப் பொங்கல்
கறுப்பு யூலை
உயிரிந்த ஜீவன் சரிதம்.
மலை நங்கை
மலை முறுக்கல். நிறை சொல்வரோ!. மலைத்தாய் விழிப்பாள் աուա சிவனொளிபாதம் நகரும். யுத்த பூமியின் அன்றாட ஜீவனம்.
ஆழிப்பேரலை
மாசேதுங் என்னும் மாமனிதன் .
தமிழர் உயிர்மம் மோனத் தீவிது
இன்றைய பொங்கல். திசைமாறும் பறவைகள்.
விடுதலை எழுச்சி மீறல்கள்
O
03
05
O6
O8
10
13
16
17
19
2.
22
24
25
28
:
40
41
45
46

25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
38.
39.
40.
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
யுகக் கவிஞன் யுக்தியைக் கையிலெடுப்போம். விடியாத வேட்கை. LÉGalaofub BUG ..........• வல்லமை தாரீரோ!.τα
வாழ்க்கை சூரியோதயம் தீதும் நன்றும் பிறர்தர வாரா. .............
வேண்டுதல்
(δΦπμpgύ)/3Θ ΘΦ 5ις βιb . . எது கவிதை
வானிடை ஒளிரும் செஞ்சுடர். எங்கள் ஜனனபூமி.
நாம் அது ஆவோம். அர்ப்பணம்
மானுடம் தளைத்திட . தவக்கோலம்
விந்தை நிகழ்விதா!. எதிர்ப்பால் "கவர்ச்சி'. - LJé60)ér 6Ju6o BTG) ............ நிலையும் நினைப்பும். கைலாசபதியென்று. 德弱 போர்க்கால ஜனநாயகம் . மீண்டும் உயிர்ப்புடன் .
உனக்குச் சாவில்லையோ!. p p g * b * 8)) è 80 88 0 துயரங்களின் கருவறைக்கு.
தேடல்
47
50
52
53
55
56
58
59
60
62
63
64
66
67
68
70
7.
72
74
75
76
78
79
8O
81
83

Page 14

பிரசவிப்பு
சம்மந்தி பகுதியினரின் சரமாரியான பரீட்சைகள் தாண்டி ஊர்கூடித் தேரிழுத்த பின்னர் உறங்காத உள்ளங்கள் இணைந்து முன்னூறு நாட்களும் 'கடந்தாகி - பிறர் மகிழ்வதற்காய் மகிழ்ந்து உச்சி முகரும் சிசுக்கள்
| மீறல்கள்|இதயராசன்

Page 15
'ஒன்றும் இல்லாமல் ஒன்றாகி, நாளாக நாளாக - அது ஏதோ ஒன்று உள்ளதாகி பிரிவால் நினைப்பாகி எதிர்ப்பால் பிணைப்பாகி - மீண்டும் 'ஒன்றும் இல்லாமல் ஒன்றாகி - ஒரு விடுமுறைக் காலத்துள் சிசுக்களுடன்
கூடிப் பயணித்த ரயிற் பயணத்திலோ 1 திருவிழா நெரிசலிலோ ! - இல்லை எதிர்பாராத விபத்திலோ! தற்செயலாக ஏற்பட்ட பந்தம் நினைத்துப் பார்ப்பதற்குள் கருப்பையினை உதைத்து ஆச்சரியத்தின் உச்சியில் - நெஞ்சில் தவழ்ந்து விளையாடும்.
முன்னுாறு நாட்களில் பிறந்தது - சிலவேளை முடமாகிப் படுத்திருக்கும் 'முப்பது பொழுதில் உதித்தது முத்தென மிளிரும் 'ரிஷிபிண்டமாய் கணத்தினில் வந்தது, கனதியாய்ப் பரிணமிக்கும்.
பிறப்பிற்கும் புரள்விற்கும்
முடிச்சவிழ்க்க முடியாமல்
c{pgọếì c{pgọế} ...
முத்தெடுக்கும் நினைப்பில்
பிரசவ வேதனையுடன்
'கன்னிப் பிரசவங்களும்
கடந்த பிரசவங்களுமாய் - என்
கருக்கலைப்புக்களும்
இயல்பாயும் பலவந்தமாயும்
தொடர்கின்றன. C2OO7)
| மீறல்கள்|இதயராசன் 2 ܗܝ

வாழ்தல்
வாலை உசரத்தூக்கித் துள்ளி ஒடும் பசு கன்றோடு பசுக்கன்றாய் அன்புப்பாலில் போஷிக்கப்பட்டேன். கறக்கும்வரை மட்டுமே மகாலக்ஷ்மி வெறுத்தது வாழ்க்கை - நான் சிங்கத்துடன் சிங்கமாய் பிடரிமயிர் சிலுப்பி, சிங்கநடை பயின்றேன் வல்லவர் வாழும் தத்துவம் வலுவிழந்தது புழுவிலும் கேவலமாய், மீண்டும் வாழ்க்கையின் தேடல்
3. | மீறல்கள்|இதயராசன்

Page 16
நரிகளிடையே நரியாய் நரித்தனமாய் வாழ்ந்தேன் நரிகளிடையேயும் நரித்தனம் கலைந்தது வேஷம் - மீண்டும் கழுதைகளிடையே கழுதையாய் "பொதி பொதியாய் சுமைகள் தாங்கி உதைமட்டுமே வெகுமானம் கழுதைக்கே பொறுக்கவில்லை உதைத்தது மீண்டும் வாழ்க்கையின் தேடல்
வாலைக் குழைத்து, நன்றி விசுவாசத்துடன் நாய்களுடன் நாயாய் - அங்கேயும் நன்றியில்லாத நாய்த்தனங்கள் நாளும் மலிந்தன. மீண்டும் வாழ்க்கையின் தேடல்
மனிதர்களுடன் மனிதனாய் மனிதத்துடன் வாழ்ந்து பார்த்தேன் பாதி, பாதி மிருகங்கள் - அப்பப்போ முகம்மாறி,குணம்மாறி நாக்கினைத் தொங்கப்போட்ட ஒநாய்க் கூட்டமாய் செயற்கைக் காட்டிடையே 'கழுத்துப்பட்டிகளைத் தொங்கப் போட்டபடி வேட்டையாடித் திரிகின்றன.
மீண்டும் காட்டினை நோக்கி கால்கள் நகர்கின்றன - அங்கே நசுங்கண்ட எறும்புகள் போக, மீதி எறும்புகள் சற்றும் தளராத விக்கிரமாதித்தனாய் மீண்டும் சுறுசுறுப்புடன் - தமது கட்டுமானப் பணிகளில் மிடுக்குடன்,
(2004) (நன்றி - தாயகம்)
| மீறல்கள்|இதயராசன் | 4.

ஆத்மாவின் ராகங்கள்
அதுவாய் இருந்து எதுவோ ஆகாமல், அருவாய் கருவாய்ச் சுமந்து உயிரும் உணர்வும் கலந்தெனக்கு கவினுறக் காவலுமாய் இருந்தென்றும் பயனுறு அனுபவப்பாடங்கள் பகிர்ந்து வென்றும் தோற்றும் உயர்ந்தும் தாழ்ந்தும் ஏழ்மையின் கொடூரத்தினை ஏமாற்றத்தின் உச்சத்தினை - இந்தப் பூமிப்பந்தின் சூட்சுமத்தினை சூசகமாய் உணர்த்தி - என் தேடலின் தேறலுமாய் நின்று
வாசிப்பின் ஆழத்தினையும் செவிமடுத்தலின் செம்மையினையும் வெம்பலும் வெதும்பலுமின்றி வாழ்தலில் உணர்த்தி - என் ஆத்மாவின் ஆத்மாவாய் உழைத்து உழைத்தே உருக்குலைந்த உத்தம ஜீவன்கள் சரிதம் சொல்லில் மாழாது - அவர் துயர்துடைக்கத் துவாயளவிலும் துணியாத துன்பியற் பிறவியாய்ப் போனதற்காய் துன்பக்கேணியில் மூழ்கிமூழ்கியே துாயவர் நினைவாய்க் கனவாய் வாழ்தலில் வழுக்கி வழுக்கியே - என் ஆத்மாவின் ராகங்கள் இவர்கள். C2OO7)
|5| மீறல்கள் |இதயராசன் |

Page 17
என் பிரியமானவரே!
அன்பே என்னை மன்னித்துவிடு, உந்தன் ஆசைக் கனவுகளுக்கு மோசம் பண்ணிவிட்டேன் முடிந்தால் மறுபிறப்பில் சந்திப்போம் - என்று எல்லாக் காதலனும் எழுதுவது போல் எழுதிவிட்டீர்கள் என்றுதான் கவலைப் படுகின்றேன் வேறொன்றுக்கும் அல்ல.
| மீறல்கள்|இதயராசன் | 6
 

என் பிரியமானவரே எங்கள் சந்திப்பின் போதெல்லாம் சீர்கெட்டுப் போயிருக்கும் சமுதாயத்தின் விடிவுக்காகவே விவாதித்துக் கொள்வோமே! எம்மிடையே கருத்து முரண்பாடுகள் தோன்றிய போதெல்லாம் சரியான கருத்தினையே இருவரும் ஏற்றுக் கொள்வோமே! ஞாபகம் இருக்கிறதா
மனம் கொண்டவரை மணக்கும்படி மனம் கொண்டவரே எழுதுவது என்ன நியாயம்? - முடிந்தால் மறுபிறப்பில் இணைவோம் என்று, வார்த்தைகளை எண்ணம்போல் வடித்து - எந்தன் இதயத்தை ரணமாக்கி விட்டீர்களே!
எங்கள் தேசத்தின் விடியலுக்கு - என் பங்களிப்பும் பயன்படாதோ!? - இல்லை உபத்திரமென்று நினைத்திரோ!? உள்ளத்தால் ஒன்றுபட்ட பின்பு உடலுக்கு மட்டும் 'சம்பந்தமா!? - இது என்ன நியாயம்!?
நான் வேண்டுவதெல்லாம் உங்களின் அன்பினை மட்டுமே! - ஒரு வசந்த காலத்தில் மீண்டும் இணைவோம்
அதுவரை
உங்களின் பணிசிறக்க வாழ்த்துவேன்,
அணை கட்டியதில்
சிறு அணிலின் பங்காக - என் உழைப்பும் சேர்ந்திருக்கும் அன்பே எங்கள் தேசத்துக் கனவுகளோடு, காதலையும் சுமந்தபடி காத்திருப்பேன். C1983)
|水 |மீறல்கள் இதயராசன் |

Page 18
புத்தாண்டே நீவா!
புத்தாண்டே நீ வா! புதுமைகள் புரிந்திட - என்றும் இத்தரையில் மாந்தர் இன்னல் அறுத்திட புத்தாண்டே நீ வா! நாற்பத்தி எட்டாம் ஆண்டு எஜமானர் மாற்றத்தை நம்பி தேசிய கீதத்தைப் பாடினோம் தோன்றியதா தேசிய ஒற்றுமை குன்றிய மனிதத்துவமாவது உயிர்ப்புற புத்தாண்டே நீ வா - என்றும் பூபாளத்தையே பாடு.
| மீறல்கள் இதயராசன் | 8
 

புத்தாண்டே நீ வா! புரட்சித் தீயினை மூட்டிடு அடலேறும் சிங்கத்தை எதிர்கொண்டு விரட்டும் காளை - இங்கே மடலேறும் மடமையினை மாய்த்திடப் புத்தாண்டே நீ வா! புரட்சித்தீயினை மூட்டிடு.
ஈழ வரலாற்றின் இருள்மண்டிய இன்றைய நிலைமாறி இழப்புக்கள் அத்தனையும் ஈடுசெய்திட, வளமனைத்தும் வாரித்தாரும் புதிய வார்ப்புக்கள் எழுச்சிபெற இளைய தலைமுறை விழிப்புற புத்தாண்டே நீ வா!
சொத்துக்காய்ச் சோற்றுக்காய்
அலைமோதும் கூட்டம் சுற்றுவட்டப் பாதையிலேதான் - ஆதலினால் முற்றுப்புள்ளி அதற்கிட்டுப்
புரட்சிப் பாதையினைத் தேர்ந்து,
புதியவரலாறு படைத்திட புத்தாண்டே நீவா! (1987)
19 |மீறல்கள்|இதயராசன் |

Page 19
காலத்தின் புலம்பல்
ஓமானிடமே - நீ வீதிக்கு இறங்கிவிட்ட பைத்தியக்காரன் போல உனக்குள்ளேயே புலம்பிக் கொள்கின்றாயா?
| மீறல்கள்|இதயராசன் |
10
 

ஆபரணங்களென அப்பப்போ - நீ சூடிக்கொண்ட தெல்லாம் 'விலங்குகளாகி உபாதை தருகின்றதென்று
ஒமானிடமே - நீ வீதிக்கு இறங்கிவிட்ட பைத்தியக்காரன் போல உனக்குள்ளேயே புலம்பிக் கொள்கின்றாயா?
குழந்தைகளின் விளையாட்டுத் திடல்களில் 'அக்கிலி வேலிகளை விதைத்து விட்டு அவர்களின் ரணங்களிலிருந்து,
அசுத்த வாயுக்கள்
சுவாசக்குழாய்களில்
அலேர்ஜிக் ஆவதனால் அவர்களின் அவயவங்களையே அகற்றுவதற்கு அறுவை நிபுணர்களுக்காக காத்திருப்பதனால்
ஒமானிடமே - நீ வீதிக்கு இறங்கிவிட்ட பைத்தியக்காரன் போல உனக்குள்ளேயே புலம்பிக் கொள்கின்றாயா?
11 | மீறல்கள் இதயராசன்

Page 20
கையாலே கிழிக்கும் பனங்கிழங்கை பாராமுகமாயிருந்து விட்டு பனைமரங்களைப் பிளக்க ஆப்பும் வல்லிட்டுக் குத்தியும் மலிவாயும் மானியமாயும் பெறுவதற்காக, முதலைகளுக்கு மீன்குஞ்சுகளை ஆகுதியாக்குவதனால்
ஒமானிடமே - நீ வீதிக்கு இறங்கிவிட்ட பைத்தியக்காரன் போல உனக்குள்ளேயே புலம்பிக் கொள்கின்றாயா?
வெண்மணலில் அரும்பிய புன்னகைப் பூக்களை மிதித்துவிட்டு நீறிப்போயிருக்கும் சாம்பல் மேட்டினிலே பாரிஜாதம் மலருமென கனவுத் தொழிற்சாலைக்குச் சூடம் காட்டுவதனால்
ஒமானிடமே - நீ
வீதிக்கு இறங்கிவிட்ட
பைத்தியக்காரன் போல
உனக்குள்ளேயே
புலம்பிக் கொள்கின்றாயா? C1997)
| மீறல்கள்|இதயராசன் 12

விபச்சார வைபவங்கள்
பஞ்சத்தை முதுசொமாய்க் கொண்டு கஞ்சிக்கே அல்லாடும் குடும்பத்தில் நெஞ்சத்தை நேர்வழியில் செலுத்தி விஞ்சியே நின்றார் கல்வியால் அறிவால் உயர்ந்து - பின் உறவினையும் சேர்த்து குறைவிலாச் சொத்தினைச் சேர்த்திட நிறைவாய்க் கேட்டார் சீதனம்.
13 |மீறல்கள்|இதயராசன் |

Page 21
குமர் கரைசேரக் குமாரர்களை விற்று திமிர் பிடித்தலையும் அப்பன்மாரோடு, நிமிர் நடைபயிலும் அம்மாக்களையும் வெயில் கொழுத்தி வேகாதோ! கொடுவினை சாகாதோ!
ஆணுக்கு நிகர் பெண்ணாகி வந்தபின்னும் வீணுக்கு நின்று வீண்வம்பு பேசலாமோ! பவுணுக்குப் பவுண் பத்தரை மாத்தாமோ! ஆணுக்கும் பெண்ணுக்கும் வேதனம் ஒன்றேதான்.
பொறியியல் மாப்பிள்ளைக்கு வைத்தியப் பொம்பிளை - முப்பது இலட்சம் வரதட்சணை பட்டணத்து வீடொடு 'பஜ்ரோ" இத்தியாதிப் பட்டியல் மறுபுறம் ஆணுக்குப் பெண் நிகரென்று - அந்தப் பெண்ணுக்கும் மெய்சிலிர்த்து . "P
வீட்டுக்கொரு குமர் ஏங்கிப் பொருமுதென நாட்டுக்கு நாடு நாய்போலக் குலைக்கின்றார் - தம் வீட்டினில் தம்பியர் தங்கையை
ஏலம் போடாமல் உழைத்து வாழ உதவுவரோ! - இல்லை உறவுக்கு விலை குறிப்பரோ! பெண்ணுக்கு ஆண்துணை தேவை ஆணுக்கும் பெண்துணை தேவை - இதை பொதுவினில் வைத்து நோக்கிடவும் - இருவர் உறவினுக்கும் புரிந்துணர்வைக் குறிப்பாக்குவரோ"
படிப்பிருக்கும் பதவியிருக்கும் துடிப்புடனே திறமையிருக்கும் பரம்பரைத் தினிசிருக்கும் - அத்தனையும் சொத்தாகக் கொண்டிருந்தும் உழைப்பினை நம்பிடாச் சோம்பேறியாய்,
| மீறல்கள்|இதயராசன் | 14

பெண்ணின் அப்பனதும் அண்ணனதும் வியர்வையினை அட்டையாய் உறிஞ்சி உல்லாசமாய் உயர்ந்திடும் நினைப்பினில், ஷெல்' விழாதோ - இல்லை கிளைமோர்தான் வெடிக்காதோ!
எழுபதுபேர் அறுபது தேங்காயை அழுதழுது சுமந்த கதையாய் - இந்தச் சீதனக் கதையும் தொடருது ஆணும் பெண்ணும் அடிமட்டச் சிந்தனையை அகழ்ந்து மனதுக்குப் பிடித்ததோடு, பிடித்தவருடன்
பிரியமாய் வாழ்ந்திடும் பிணைப்பே திருமணமெனத் தீர்மானமாய்
நிறைவேற்றாத வரைக்கும் முப்பது முக்கோடி தேவர்களும் வாழ்த்த, பெரியோர்கள் நிச்சயிக்கும்
'விபச்சார வைபவங்கள்
விமரிசையாக நிறைவேற,
ஊடகங்கள் படம்பிடித்து மகிழும். C2OO7)
15 . |மீறல்கள் இதயராசன்

Page 22
ஈழப் பொங்கல்
வெண்முகிற் துகிலுடுத்தித் தைமடந்தை மெல்ல நடைபயிலும் வேளையிலே, கோலமிட்டுக் குத்துவிளக்கேற்றி, பச்சரிசி புதுப்பானையில் இட்டு, பட்டாசு வெடித்து ஆதவனுக்குப் படைத்திடும் பொங்கலே தைப்பொங்கல் - இது உழவர் திருநாளெனப் போற்றும் பழமைப் பழக்கமாய் இன்னும் வழமையாய் தொடர்கின்ற திருநாள்.
ஈழத்து மண்ணெல்லாம் ஈசற்பூதங்கள் சிறகடித்துச் சிறுமையினைத் தொடர, ஏவற்பேய்கள் கூரையைப் பிய்த்திட கலிங்கத்துப் பேய்கள் - மீண்டும் மண்டை ஒட்டிலே கூழ்வார்த்து, மண்டையிலே ஒன்றுமில்லாமல் கவிழ்த்துப் பார்க்கின்ற காரியங்கள் கனகச்சிதமாக. இரத்த வெள்ளம் வீதியெல்லாம் சதைச்சேறுகள் நடையிற்சிதற, நவீன ஆயுதங்கள் பிணக்கோலமிட, ஈழப்பொங்கல்
மீண்டும். மீண்டும். மீண்டும். C1988)
| மீறல்கள் |இதயராசன் | 16
 

கறுப்பு யூலை
ஊர்கள் தோறும் ஆடிமாத ஆரவாரங்கள் உற்சவ மூர்த்திகளின் வீதி உலாக்கள் விடிய விடிய மின்விளக்குகள் பகலைப் பொழியும் எல்லைக் கிராமத்துத் திருவிழாவில் நள்ளிரவு இன்னிசை முழக்கம் அச்சமில்லை அச்சமில்லை உச்சிமீது வானிடிந்து வீழ்கின்ற போதிலும் - நானும் பாடலை முணுமுணுத்தபடி இடி விழுந்தது - இல்லை வெடி தீர்ந்தது மின்விளக்குச் சுக்கலானது, சுடுபடை சடசடத்தன வில்லங்கம் விளங்கின றேடியோவில் அலைவரிசை மாற்றியபடி விடிபொழுதுக்காய் ஏங்கியபடி
17 | மீறல்கள் இதயராசன்

Page 23
'கன்னிக் கண்ணிவெடி திண்ணை வேலியில் பதின்மூன்று படையினர் பலியெடுத்த பரிதாபம் என்ன நடக்குமோ!? - அச்சமுடன் நெஞ்சம் படபடத்தது,
படையணி பவனிவரப் பாதை விலகி வழிவிடும் பரிதாபப் பொழுதில் இனிக்காத செய்தியிது.
வெறிற்றாஸ் பீபீசி ஆகாசவாணி லங்காபுவத் - இன்னும் பெயர் தெரியாத அலைவரிசைகள் தவறாமல் கேட்டபடி, புலரமறுத்த பொழுதுகளில் இடிமின்னலாய் வந்த செய்தி நெஞ்சம் ஒப்ப மறுத்தது, வெலிக்கடைச் சிறையில் ஐம்பத்திரண்டு தமிழ்க் கைதிகள் பதிற் பலியெடுப்பு
குட்டிமணி கண்கள் பிடுங்கி எறியப்பட்டு
தென்னிலங்கையில் நெருங்கியிருந்த தமிழ் சிங்களச் சோதர உறவுகளுக்கு, உயர்மட்ட ஆசீர்வாதத்துடன் - மீண்டும்
கருக்கலைப்பு வாரம்
ஆடிவேல் விழாவையும் மிஞ்சி கண்டிப் பெரஹராவையும் விஞ்சி. C1983)
| மீறல்கள்|இதயராசன் 18

உயிரிந்த ஜிவன் சரிதம்
ஆழப்புதைந்து அடிமனதை நெருடும் - அடிக்கடி அம்மாவும் ஞாபகப்படுத்திய பாலிய பிராயத்தின் இரத்தசாட்சியான சரிதம்:
உப்பிட்டவர்க்காய் உயிரையும் கொடுத்த நன்றியுள்ள ஜீவனின் சரிதம்
ஐந்தினுக்கும் ஆறினுக்கும் இடையிலோர் ஆண்டு வயதில் இருட்டும் பொழுதின் அதிர்ச்சியது
பாலிய வயதுத் தோழன் வீமனென்பதில் அலாதிப் பிரியம், பகையில்லாக் காலமதில் பரிவொடு பகிர்ந்துண்டு படையாக அவன் துணை
|19 | மீறல்கள் |இதயராசன்

Page 24
நடையாக நான் சென்ற யோசன்ை தூரங்கள் - என் விரல்களில் அடங்காது - ஆதலால் எண்ணிடவும் தெரியாது.
மாலைக் கருக்கல் வேளை புளியங் கொப்பில் ஊஞ்சல், புழுகமாய்' ஆடினேன் ஊஞ்சற் கயிற்றில் கருநாகம் நிழலாட, கடமையிற் கண்ணான வீமன் கடுகிப் பாய்ந்தனன்
கீரியும் பாம்புமாய் - இல்லை வீமனும் நாகமுமாய் கட்டிப் புரண்டன சண்டையில் குருதிப்புனலாடின காலகண்டன் கதை முடிந்தது கணப்பொழுதில் வீமன் சுருண்டு வீழ்ந்தனன் கதறி அழுதேன் காடதிர, வீடொலிக்க அக்கணமே அனைத்தும் இழந்தேன்.
அற்பசொகுசுக்காய்
அனைத்தையும் அடகு வைக்கும் அழுகுரலுக்கும் கதவடைக்கும் - காலத்தில் எஜமான நண்பனுக்காக,
உயிரீந்த ஜீவனுக்காய்
நினைவுள்ள வரைக்கும் நினைந்தென்றும் பிரார்த்திப்பேன் - வீமா! நின்போன்றோர் தியாகத்தில்
நிலைபெறும் தேசங்கள். C1990)
| மீறல்கள் இதயராசன் 20

மலை நங்கை
வானுயர் மராமரங்கள் தோப்பாகி வழிநெடுத்து அருஞ்சோலைகள் பூத்துக்குலுங்கிட நெழிந்தோடும் அருவிகள் சலசலக்க நிமிர்ந்தும் இருந்தும் மலைகள் தொடராக பனித்தொடர்கள் படர்ந்து குடைபிடிக்க சிலுசிலுக்கும் சீதளத்தென்றல் அசைந்தாட வெண்முகில் கூட்டம் ஊர்வலம் போக பஞ்சவர்ணப் பறவைகள் பண்ணிசை மீட்ட மின்மினிப் பூச்சிகள் கண்ணாம் பூச்சியாட சில்வண்டினம் வில்லிசை நாண்மீட்ட பைந்துளிர் தேயிலைத் துகிலுடுத்தி, நர்த்தனமேடை நாயகியாய் கவினுறு மலை நங்கை நகைக்கின்றாள். C1985)
21 | மீறல்கள்|இதயராசன் |

Page 25
மலை முறுக்கல்
மலை முகட்டில் மழை மேகங்கள் அழுது வடிந்து நசுநசுவென ஒட்டிக்கொள்ள, இருட்டு முடுக்கலில் இருண்ட மனங்களுடன் புறப்பட்டு இரவுகளே வழமையான பொழுதுகளாய் உழைத்து உழைத்து உழன்றிடவே உயர்நிலத்திற் பிறப்பெடுத்த பிஞ்சு மனப் பஞ்சைகளின் வியர்வைகளின் ஈரலிப்பில் விரலடிக்கும் முதலைகள்
செலவு வைப்பதற்கே செலவுக் கடைகள் செல்லாத சரக்குகளை செலுத்தும் சலுகை விலைத் தரகர்கள் சொல்லாத செய்திகளைச் சொல்லியதாய் பொய்யுரை வல்லுனர்கள் - மக்களின் ஒட்டுமொத்த உரிமைகளையும் நம்பியாரூரன் நம்பிய ஒலைச் சுவடிகளால் ஒம்பித்து ஒம்பித்தே பல்தேசியக் கம்பனிகளின் பங்காளியாகி, குறுநில மன்னர்களாய் படை பட்டாளங்களுடன் கப்பம் வசூலித்தபடி,
| மீறல்கள்|இதயராசன் | |22

றொட்டியும் சம்பலும் சாயாவும் ஒட்டிய வயிற்றினை நிறைக்கும், முட்டிய பிரச்சனையில் மோதி மோதியே முதுமையும் வந்தெய்தும் - இது தலைமுறை வழமையாய் தலை நிமிர்ந்து தொடருது 'புண்ணுக்குப் புனுகு பூசும் 'என்ஜியோக்கள் காளான்களாய் முளைத்தபடி " நாளும் மூளைச் சலவையில் முழுமூச்சாய் - அதில் மூளை மழுங்கிய புத்திஜீவிகள் புதிய 'இஸங்களை மந்திரித்தபடி நிஷ்டையில்.
வாக்கு வங்கியைக் குறிவைத்துப்
போக்குக் காட்டுவர் - பின் வாக்குத் தவறி வாய்ப்பினைத் தேடுவர் யோக்கியம் பேசுவர் யோகிபோல் நடிப்பர் போக்கிடம் இல்லா மக்களிடம் போகத்தினை மோகிப்பர் - இவர்
நாகத்தின் நஞ்சினை
நெஞ்சத்திற் கொண்டிருக்கும்
நடிகர் திலகங்கள். C2OO2)
23 | மீறல்கள் |இதயராசன்

Page 26
நிறை சொல்வரோ!
குத்தும் குளிர் சுண்ட மழைச் சாரல் சிலுசிலுக்க, வைரம்பாய்ந்த பாதங்கள் பனிப்புற்களைப் பதம்பார்க்க 'அட்டை முனைகள் தருணம் பார்த்துத் தாவிட
குட்டைச் செடியின் நெட்டைக் கொழுந்தினைப் பட்டெனக் கிள்ளி விட்டெறிந்து கூடையில் லாவகமாய் வேக வேகமாய் விண்முட்டு மலை முகட்டில் பண்ணிவரும் பக்குவத்தை 'மலைப்பாவையர் 'படுவதையை' எண்ணிடாப் பாவியர்
கொழுந்தினில் முத்தல் பார்ப்பர் - அவர் தொழிலால் முத்திய நோய்
முழுதாய் மறப்பர்.
கிலோவிற்கு ரூபாய் என்பர் - இவர்
வியர்வைத் துளிக்கு
நிறை சொல்வரோ? - அதற்கு
விலை கொடுப்பரோ! (1986)
| மீறல்கள் |இதயராசன் | 24
 
 

மலைத்தாய் விழிப்பாள்
குடியேற்ற நாட்டுக் குடிகளை உறுஞ்சும் அட்டைக் கலாசாரம் செட்டை முளைத்த காலத்தில், வானம் பொய்த்த விவசாயிகள் வளைத்துப் போட்ட கங்காணிகளோடு, கடல்தாண்டி கனவுகள் சுமந்து உடல் உழைப்பினை நம்பி திடமுடன் மலை ஏறினர்.
25 | மீறல்கள் இதயராசன்

Page 27
காடழித்து மேடு திருத்தி கோப்பியும் தேயிலையுமாய் கொட்டினர் பெட்டி பெட்டியாய் கட்டிக் கப்பலேற்றிக் காசாக்கினர் - பின் றொட்டியும் சம்பலும் தூசுத்தூளும் பட்டிபோல் இருட்டுத் தொழுவமும் கூலியாய் என்றும் குறுகிட பிச்சைபோல் போட்டனர் - மீண்டும் உழைப்பினை உறுஞ்சுதற்காய் - அவர் பிணத்தினையும் உரமாக்கி சுவைபானம் பருகி மகிழ்ந்தனர்!
கருவிலிருந்து கல்லறை வரைக்கும் எருவாகி நிற்பதனால் கற்பகதருவும் எல்லோ! - இவர் புகழ்பாடும் கூட்டம்
பிச்சைக்காரன் புண்ணில் ஈமொய்க்க இலையால் விரட்டி விரட்டி இடுப்பினில் செருகும் கருமிகளாய் புண்ணும் சீழும் பார்க்கின்றார் - அதன் மூலத்தை மறந்து மறைக்கின்றார்.
கம்பளிக்கும் கறுப்புக் கம்பளிக்கும் ஏமாந்த காலம் முதல் அப்பப்போ உயிர்ப்பான போராட்டங்கள் தொடர்கின்றன
திரண்ட தொழிலாளர் ஒற்றுமை கண்டு மிரண்டவர் மிலேச்சராகி உருண்ட தலைகள் ஏராளம் - அந்தத் தியாகிகள் போராட்டம் தியாகமாகி திதியோடு முடிந்த கருமாரியாயின - இந்தப்
| மீறல்கள்|இதயராசன் | 26

படிப்பினை யோடு, படியேறிப் படியேற்றம் கேட்டார்.
மல்லிகைப் பூச்சந்தியில் மக்கள் அலை அண்ணனும் தம்பியும் அடுத்தவரும் கொழும்பிருந்து வந்தோரும் உண்ணா விரதம் உண்மையாய் உழைப்பவர் உள்ளமும் சிவந்தது மலைமலையாய் மக்கள் திரண்டனர் தலைமுறை தலைமுறையாய் ஏமாற்றப்பட்டதன் ஆத்திரம் கொப்பளித்தது.
தலைமைகள் தடம் புரண்டன - மீண்டும் தரகு முதலாளிகள் தரமுயர்ந்தன, தறுதலைகள் தவமிழந்து தலைக்குத் தலை விலை பேசி தருத்திரராய்த் தரம் தாழ்ந்தனர் மலைத்தாய் மண்டியிட்டாள் - இந்த விலை பேசும் மந்திரத்தை கலை போலப் பிதற்றுகின்றார் தொழிலாளர் வாழ்வுக்கே உலை வைக்கும் உலுத்தர்க்காய் - ஒருநாள் மலைத்தாய் விழிப்பாள் முலை திருகி எறிவாள் - அதில் வெந்தணல் சுவாலிக்கும் பொய்மைகள் பொசுங்கும் வாய்மையின் நேர்மை நிமிரும். C2005)
27 | மீறல்கள்|இதயராசன்

Page 28
சிவனொளிபாதம் நகரும்
மலைக் குழந்தைகள் மகிழ்வதற்கல்ல விலைபோகும் கொழுந்தினைக் குலைப்பதைத் தடுப்பதற்காய் அப்பனும் ஆத்தாவும் நிலைநின்று உழைப்பதற்கும் பிள்ளை மடுவங்கள் போற்பிறந்தது - அதில் முறுக்கு மீசைக் கங்காணி குருவாக இல்லை மந்தை மேய்ப்பவனாய் - ஒரு காவலாளியாய் வாய்த்தார் மலைக்கல்வியின் கருவறை அது.
மெல்ல மெல்லக் காலப் புரள்வினில் தகரக் கொட்டகையாய் தனியொரு ஆசிரியரொடு ஆனாவும் படித்தனர் அக்கன்னாவரையும் - சிலர் முன்னேறிப் படித்தனர் - பின்னர் வடபுலத்து வாத்தியார்கள் வந்தனர்
| மீறல்கள்|இதயராசன் | 28
 

வாய்த்தனர் சிலர்
ஏய்த்தனர் பலர் மலைக்கல்வி மலைத்து நின்றது - சிலர் சிகரத்தைத் தொட்டனர் அதிலும் பலர் சில்லறை ஆயினர்.
தேசத்தின் கல்வி தேசிய உடைமையாயின தோட்டப்பாடசாலைகள் தேடுவாரற்று - பின்னர் தோட்டக்கம்பனிகள் தேசிய உடைமையாயின தோட்டப் பாடசாலைகளும் தேசியத்தின் அங்கமாயின தேசிய இடமாற்றக் கொள்கையினால் அணி அணியாய் ஆசிரியர் வந்தனர் மலைப்பிள்ளைகள் மகிழ்வுறக் கற்றனர் இலவசக் கல்வியின் தந்தையும் உண்மையாய் உறங்கினார் - நம்மவர் வின்னர்கள் என்பேன் கண்ணினில் மண்ணைத் தூவி கல்விக்கும் களங்கம் செய்தனர் தப்பிப் பிழைத்தவர் தலையெடுத்தனர் - அவர் வித்தகர் என்பேன் விவேகிகள் என்பேன் மலையினில் விழைந்த மாணிக்க முத்துக்களென்பேன் - அதில் சொத்துக்காய்ச் சோரம் போனவரைச் சோகத்திற் சேர்ப்போம் -மீதி "மாணிக்கவாசகர்களை மனதார மெச்சுவோம்
அரசின் மாற்றமும் அரசியல் புரள்வும் இரகசிய ஒப்பந்தங்களும் வடகாற்றின் உக்கிரமும் உழைக்கும் மக்களின் உணர்வுகளை உயிர்ப்புடன் புடம்போட்டன.
29 மீறல்கள் |இதயராசன் |

Page 29
மலை கொதித்தால். P தலைகள் சிந்தித்தன படித்த பாமரர் திரண்டால் மிரண்டன முதலைகள்,
மத்திய தரத்தினை அதிகமாய் மலையில் நட்டனர் மலிவாய்க் கிடைத்த வாத்தியாரோடு மிதமான ஆளணிசேவைகள் மூலம் உழைக்கும் மக்களிடம் இடைவெளியை விதைத்தனர் முரண்பாட்டினைச் சூழலால் ஊதிப் பெருக்கினர் மெல்ல மெல்ல நகரத்தை நோக்கியபடி தோட்டத்தை விட்டு விரட்டினர் நிம்மதியின் உச்சத்தில் அவர்கள் சூழ்ச்சியின் சூட்சுமம் புரியாமல் புரட்சியாய்ப் புழுகித் திரிகின்றார் பூரித்துப்போன மேதைகள், உண்மையில் உழைப்பாளர் உயர்வுவேண்டின் நாட்கூலி என்பதை நடுநிசியில் நிறுத்தட்டும் அரச ஊழியர்போல் அனைத்தையும் பேணப்டும்
மலைமக்கள் மதியினை தேயிலைச் செடிபோல் குட்டையாய் வைத்திருக்க ஆய்வுகள் செய்கின்ற வல்லுனர்கள் கோடரிக்காம்பாய் கோவேந்தர் படையாய் கடைந்தெடுத்த காரியங்கள் பண்ணுகின்றார் மலைமக்கள் சிந்தனையை மடைமாற்ற முயல்கின்றார் மலையகம் விழிப்புற - ஒருநாள் மலைக்காற்று மின்னலொடு வீசும் மலைதோறும் சிவனொளிபாதம் நகரும். C2OO7)
| மீறல்கள்|இதயராசன் 30

யுத்தபூமியின் அன்றாட ஜிவனம்
அந்தப் பூங்காவிலுள்ள ஒவ்வொரு பூக்களும் என்னைப் பார்த்து அறிமுகப் புன்னகைகளைப் பரிமாறிக் கொண்டன.
அவைகள், நான், புன்னகை எல்லாமே ஏகமாகி அனுபவிப்பு மட்டுமே எஞ்சியது - அது கணங்களா! யுகங்களா! நானறியேன்.
மீண்டும் அந்த ஏகாந்தம் சிதைவுறுவதை உணரலானேன்! ஆம் பூக்களிற் சில
தளைகளுக்குள்ளே முகம் புதைத்தன சில ஒடிந்து வீழ்ந்தன - தூரத்தே
மின்னற் பூக்கள் பறந்தன
31
| மீறல்கள்|இதயராசன் |

Page 30
கருமுகில்கள் சூல் கொண்டன இடிமுழக்கம் காதினைப் பிழந்தன
நிச்சயமாக மழைக்கால அறிகுறியல்ல ஏனென்றால் சுடுமணலில் கடலை வேகும் கோடை வெயிற் தகனங்கள் அந்தச் சோலையைத் தவிர "எல்லாமுமே வறண்டவைகள் மழையென்றாலே குளுக்கோஸ் ஏற்றிய நோயாளிபோல் தலைக்குள்ளே, ஐஸ்மழையல்லவா பொழியும்?
வேட்டை நாய்களைக் கண்டு, புல்லுக்குள் பதுங்கும்
முயல்களாய்
காதுகளை மட்டுமே கூர்மையாக வைத்தபடி சுவாசம் கூட உத்தரவுக்காய் காத்திருக்கும் யமலோக யாத்திரைக்கான ஒத்திகைகள். கவச மந்திரங்கள் அவரவர் வசதிப்படி சதா அர்ச்சித்த படி
மீண்டும் வெண்முகில்களின் ஊர்வலம் எல்லாமே சகசநிலைக்குள்
இருமி ஓய்ந்த கசநோயாளி
சில நிமிடங்கள்
ஆசுவாசப் படுவதுபோல. C1993)
| மீறல்கள் இதயராசன் | 32

ஆழிப் பேரலை
ஆழிப் பேரலை எக்கி யெழுந்தது ஊழித் தாண்டவ முத்திரை யுடனே.
மூழிக் கடலென விழிகள் பிதுங்கிட ஆழித் திரைகள் பீறிட்டுக் கிழிய கோடிப் பிரளய மோகினியாய் ஆடி முடித்தாள் ஆசைகள் தீர.
ஆழிப் பேரலை எக்கி யெழுந்தது ஊழித் தாண்டவ முத்திரை யுடனே.
வாழ்க்கைப் படகினை ஒட்டிடவே - என்றும் வாழ் நிலையாய்க் கொண்டோரை அண்டி என்றும் பிழைத் தோரின் தேசக் கனவுகள் தேய்ந்திடவே பாசக் கயிறெறிந்த சுனாமியே மோசம் உந்தன் மூச்சினிலே.
ஆழிப் பேரலை எக்கி யெழுந்தது ஊழித் தாண்டவ முத்திரை யுடனே.
நச்சுப் பாம்பென சீறிப் பாய்ந்து பச்சிளம் பாலகரை எத்தி யெறிந்து
இச்சைகள் தீர்ந்திடவே யன்று, நச்சென உச்சி முகர்ந்தனையோ!?
ஆழிப் பேரலை எக்கி யெழுந்தது ஊழித் தாண்டவ முத்திரை யுடனே. C2OO5)
33 | மீறல்கள்|இதயராசன் |

Page 31
மாசேதுங் என்னும் மாமனிதன்
ஓங்கி உயர்ந்த மலைமுகடுகள் பலதாண்டி கத்துங் கடலலைச் செஞ்சேனையுடன் நீண்ட நெடும் பயணம் கடுங்குளிரிடை கணத்த மனத்துடன் கொத்திக் குதறிய கோமிந்தாங்குடனும் அன்னியப்படை அணுகிடா திருந்திட அணுகியும் அணைத்தும் போன ஐக்கிய முன்னணி தத்துவத்தின் வித்தகவீர தீர்க்கசித்தன் - எங்கள் மாசேதுங் என்னும் மாமனிதன் நவசீனத்தின் தேவதச்சனாம் புதுயுகத்தின் புராண நாயகனை புலர்பொழுதாய்ப் புதுக்கவிதையாய்ப் புரட்சிப் புத்தகமுமாய்க் கற்றிடுவோம்.
மலைமலையாய் விதை விதைத்து மணிமணியாய் கதிரறுத்தும் குலையாத குடும்ப வறுமையொடு கொத்தடிமைக் கூலி விவசாயிகள் கொட்டும் பனிக் குளிரிடை பட்டதுயர் துடைக்கப் புறப்பட்டோன்,
| மீறல்கள் இதயராசன் | 1 34
 

விளங்காத விவசாயிகளை விளப்பமாய் வீச்சான போராளியாய் மடைமாற்றிய விவசாயத் தோழன் பல்துறையாளன் பகுத்தறிவில் ஞானி பாமரர் தொண்டர் சிறுமைகண்டு பொங்கியே சீர்செய்யப் புறப்பட்டோன்.
வெறுமை எதிலும் பொறுமை இழந்திலன் மக்கள்பணி மகத்துவமாய் மனதார ஏற்று நண்பர் குழாமை நாடித்தேடினான் எரியும் பிரச்சனை எதிலும் நுழைந்தான் மக்கள் சார்பாய் மகிழ்வுடன் உழைத்தான் எங்கும் எதிலும் தேடலில் நின்றான் தேடித் தேடியே தேறலைக் கண்டான் மக்களின் அடிமை முடிச்சினை அவிழ்க்கும் இயங்கியல் பொருள் முதல்வாத முறைமையினை மாக்ஸிஸ் லெனினிஸ சிந்தனையைச் சீனப் பெருநிலத்திற் சீருற விதைத்து மாசேதுங் சிந்தனையாய் வளர்த்தெடுத்து எழுச்சியுறும் மக்களிடை மாண்புற வைத்த மகோன்னத பணியின் சொந்தக்காரன் - எங்கள் மாசேதுங் என்னும் மாமனிதன்.
பூர்வீக சீனத்தில் கன்பூசியஸ் சித்தாந்தம் புதிய ஜனநாயகம் நவசீனத்தின் தத்துவம் பலநூறு சிந்தனைகள் பூத்துக் குலுங்கிட முரண்பாட்டினை முரணின்றித் தீர்த்திட உட்கட்சி ஜனநாயகம் உண்மையாய் உலவிட உழைத்த தோழர்கள் பலலட்சம் - கட்சியின் முரண்நிலையில் தூக்கப்பட்டவர் பட்டியலில் மூன்று முறை மாசேதுங் நின்றார் சகித்தலையும் பொறுத்தலையும் மதித்தலையும் நிறுத்தாத மனிதராய் நிதானித்து நடந்தார் உண்மையின் பக்கம் உயிரை நிறுத்தி நின்றார்
35 மீறல்கள்|இதயராசன் |

Page 32
மறுக்கண்ட தோழரிடம் மனம்கொண்டு பழகி சறுக்கும் அடியினைச் சரிசெய்தார் தன்தவறைத் தன்னிலைப்படுத்தி தராதரம் கண்டு
மன்றினில் மனமொப்பி மன்னிப்பும் கண்டார் - இன்று மதிப்புள்ளோர் செய்கின்ற மாண்பில்லாக் காரியத்தை சதியென்று சரிக்கின்ற சங்கதியை சாத்திரத்துக்கும் செய்யாத சாதனையாளன் - எங்கள் மாசேதுங் என்னும் மாமனிதன்.
துப்பாக்கிக் குழலிலிருந்து அரசியல் அதிகாரம் பிறக்கிறதென்று துப்புத் துலக்கிய மேதை - இன்றும் அதிகாரத்தின் கோரப்பிடியினை கோட்பாட்டின் முன் வைத்து ஆயுதத் தளபாடங்கள் ஆர்ப்பரித்து ஆட்டம் போடுவதை நிறுத்தியதில்லை - என்றும் சொத்துடை வர்க்கத்தின் சேமத்திற்காய் அரசபடைகள் காய் நகர்த்தும் தேநீர் இடை வேளைகளில் இலக்கத்தகடும் போக்குவரத்து விதிகளும் குடித்த பிடித்த மறித்த பிணக்குகளும் பார்க்கும் வாய்த்த பொழுதெல்லாம் ஏய்ப்பவர்க்கே துதிபாடித் தேரிழுக்கும் வறுமையும் வெறுமையும் குடியிருக்கும் பாமர மக்களிடம் நீதியும் நேர்மையும் நிறுத்துப் பார்க்கும் சுருட்டிய சொத்தெல்லாம் பிறவியில் வாய்த்ததென கடவுளின் பெயராலே காப்பீடு செய்வர் - அதை காத்திடும் காவலராய் கடவுளின் சேவகர் சேமமாய்ச் செப்பிடும் செம்மொழிகள் ஏராளம் - இதை உடைத்தெறிந்து உண்மையினை வெளிச்சமாக்கி உள்ளதெல்லாம் உரியவர்க்கே உரிமமாக்கி
| மீறல்கள் இதயராசன் | |36

உழைத்து வாழும் உண்மை வாழ்வை பிழைத்திடாமல் வாய்த்திட வழிமொழிந்த கீழைச் செஞ்சுடர் சீனப் பெருமகன் - எங்கள் மாசேதுங் என்னும் மாமனிதன்.
பிரதேச மக்கள் புரள்கின்ற பாட்டில் கருக் கொள்ளும் புரட்சி என்பதனை உள்வாங்கி உணர்வுடன் கலந்து சறுக்கு மரமேறும் கைதேர்ந்த நிபுணனாய் மக்களொடு மக்களாய் வதைபட்ட வாழ்வில் புதையுண்டு போகாமல் புலர்ந்தெழுந்த புரட்சியாளன் எதிரியும் நண்பனும் நேசசக்தியும் எளிதாய் இனம்கண்டு எதிரிடை வைத்து களத்தினில் மோதக் கத்தியைத் தீட்டி கருத்தினில் மோத கருத்தினைத் தீட்டி - நல்ல குருத்தினை வளர்க்கும் குடும்பமாய் வாழ தோழர் குழாத்தினை தோள்கொடுத்து வளர்த்த புரட்சிகரக் கட்சியின் கட்டமைப்பும் சிறுகியிருந்து பெருகித் தாக்குதலும் - பின் சிதைந்தோடி சிறுசாய் நுழைவதும் தேர்ந்தெடுத்த இராணுவப் படைப்பினிற் காட்டி - என்றும் மண்ணுடன் சேர்ந்த மக்களை நேசித்து மக்களின் விடிவிற்காய் புரட்சியை வேண்டி - அது மறுகிடும் வேளையில் மாற்றத்தைப் புகுத்தி புரட்சியின் பின்பும் புரட்சி செய்து உட்கட்சி ஜனநாயத்தின் பிறப்பிடமாகி உயிருடன் உள்ளவரை உயிர்ப்புடன் வாழ்ந்த - எங்கள் மாசேதுங் என்னும் மாமனிதன். C2OO6)
37 | மீறல்கள் இதயராசன் |

Page 33
தமிழர் உயிர்மம்
முடிமன்னர்கள் மாறி குறுநில மன்னர்கள் அரசோச்சி வர்த்தகக் கம்பனிகள் வரிசேர்த்து, தேசாதிபதிகள் ஆணையிட்டு, தேர்தலால் கட்சிகள் மாறிமாறி - மீண்டும் குறுநிலமன்னர்கள் அரசோச்சி முடிமன்னர் ஆட்சிக்கு பட்டயம் தீட்டும் காலமிது.
| மீறல்கள் இதயராசன் | 38
 

ஆட்சிச்சக்கரப் புரள்வினால் மண்ணாய், காற்றாய் போனவை எத்தனை?. 6J60060 تئ........ ஆனாலும்
எம்மவர்கள் கொம்பர்கள்தான்!
மாறும் ஆட்சிக்கெல்லாம் அடங்கி ஒடுங்கி சமயாச்சாரம், கலாசாரம், குலதெய்வம் அத்தனையும் பறிகொடுத்து. பலியிட்டு கங்காருபோல கக்கத்தில் கச்சிதமாய்.
உயிரிலும் மானத்திலும்
மேலான சாதியை மட்டும்
புதிய தலைமுறைக்கு
ஞாயிறு நாளிதழ்களிலும்
இணையத்தளங்களிலும்
திருமண விளம்பரங்களாயும்
மரண அறிவித்தல்களாயும்
மிகுந்த பணச்செலவுடன்
ஆவணப் படுத்துகின்றனர். C2OO5)
|39 | மீறல்கள் இதயராசன்

Page 34
மோனத் திவிது
நேர்மைத் தீ வளர்த்து வேள்வி வேட்கும் அலுவலகப் புரோகிதர்கள் நலிந்த தேசமிது - எமது ' கடவுளரின் பெயராலே சாபமிடும் சாத்தான்களின் வேதம் மொழிபெயர்க்கப்படும் காலமிது.
பொய்பேசி,
தந்திரமாய் நடித்து, ஏமாளியாய் பாசாங்கு செய்யத்தெரியாதவன் 'கல்லுளிமங்கனாகும் காலமதில் கதிர்களெல்லாம் கழிவிலொழிய பதர்களுக்கு சூடம்காட்டும் சொப்பன தேசமிது.
தலையிடியைப் போக்க
தலையணையை மாற்றும்: குடிநீர்த் தட்டுப்பாட்டினைப் போக்க கடல்நீர் குடிக்க நிர்ப்பந்திக்கும் விளைச்சல் நிலங்களைத் தரிசாக்கி உணவு இறக்குமதி செய்யும்
மிலேனிய நிபுணர்கள் மலிந்த
மோனத் தீவிது. C1990
| மீறல்கள்|இதயராசன் 40

இன்றைய பொங்கல்
அப்பரும் ஆச்சியும் பாட்டியும் பாட்டனும் வாழையடி வாழையாய் பொங்கித்தான் வருகின்றோம் பொங்கலோ பொங்கலென்று அன்றைய பொங்கலும் நேற்றைய பொங்கலும் இன்றைய பொங்கலும் பொங்குது பொங்குது முடிவில்லை, நாளைய பொங்கலும் இன்றைய பொழுதில் பொங்குது.
41 | மீறல்கள் இதயராசன்

Page 35
அடுப்பில்லை, நெருப்பில்லை, நீரில்லை, விறகில்லை - ஆனாலும் பொங்குது பொங்குது இனத்தால், மதத்தால், மொழியால், நிறத்தால், அதிகாரத்தால்,கோத்திரத்தால் எங்கும் என்றும் பொங்குது பொங்குது பொங்கலோ பொங்கல்.
ஆதவன் பொங்கியதால் அவனியில் பொங்குதென்று மேதினியில் மேழிபிடிப்போர் பச்சரிசிப் பானையிலே பாற்பொங்கல் படைத்து பகலவனை பணிந்திருந்தார் - இன்றோ இரசாயனக் கழிவுகள் ரவியின் 'ரவிக்கையையே கிழிப்பதனால் ஓசோன் ஒட்டைகள் மனித மூளைகளில் - ஆதலால் இயந்திரப் பறவைகள் இடுகின்ற முட்டைகள் பொங்கிப் பொங்கிச் சரிகின்றன. C1985)
| மீறல்கள் இதயராசன் 42

திசைமாறும் பறவைகள்
பாட்டன் பூட்டன் போன பாதையில் மறுக்கண்டு வீட்டிலிருந்து பழங்கதை பேசி வீனில் பாழாகும் காலமென, நாட்டமுடன் நனிசிறக்க நவயுகம் காணப் புறப்பட்டு, ஆட்டம் இழந்த அணிகளின் ஆழ்மனக் கறைகள் மறையாது.
ஊருக்கு ஒருவராய்த் தொடங்கி வீட்டுக்கு ஒருவராய் உயர்ந்து போர்க்குணம் கொண்டெழுந்து தேரிழுக்கும் பக்த வெள்ளமாய் தெருத் தெருவாய்த் தேடிவந்து உயிரிந்து உயிர் கொடுத்த உத்தம வரலாறு மாழாது.
43 |மீறல்கள் |இதயராசன்

Page 36
அப்பனும் அப்பனுக்கு முன் அப்பனும் சென்ற பாதை சொப்பனமாய்ப் போனதற்காய் சோம்பி இருந்து ஏங்காமல் தப்பெனக் கண்டதைத் தொப்பென வீழ்த்திடத் துடித்து, அப்பன் சாமியாய் ஆர்ப்பரித்த ஆற்றுகைப் படலங்கள் ஏராளம்.
மக்களின் கண்ணிர்த் துளிகளில் முகிழ்த்து எழுந்த போராட்டம் எக்களமும் எளிதாய்க் கொண்டு எதிரியாய் வந்தோர் எளிதாய் மறைந்த நிலைமாறி - இப்போ பொக்கணை விழுந்த களமாய் புழுதியிறைக்கும் புலராப் பொழுதாய் இருப்பிடமும் இழக்கும் நிலையில் மக்களை மாக்களாய் மதித்து மாயச் சூதாடும் சகுனிகள் மன்றேறி வெற்றி முழக்கமிட, விளைந்தும் வீடுசேரா வேளாண்மையாய் தொடக்கப் புள்ளியைத் தொட்டுநிற்கும் திசைமாறிய வனாந்தர வழிப்போக்கராய் விடிவெள்ளியின் வரவுக்காய் காத்திருக்கின்றார். C2OO7)
| மீறல்கள் இதயராசன் 44

விடுதலை எழுச்சி
வயல் வெளிகளிலும் வாய்க்கால் வரம்புகளிலும் உப்புக்குளத் தரவைகளிலும் கொய்யா, கிஞ்ஞா பற்றைகளிலும் தென்னை, பனந் தோப்புகளிலும் வெறுங்கால் மிதித்துலாவி
மாங்காய், கொய்யா, இளநீர் பறித்துண்டு கொட்டகைத் தியேட்டரில் சினிமாப் படம் பார்த்து: ஆலயத் திருவிழாக்களிலும் அரங்க நாடகங்களிலும் பொழுதினைப் போக்கி,
கிட்டிபுள்ளு, கிளித்தட்டு, கொடுவாபுலி, கெந்தி ஓட்டம், மழைக்கால நீரேரி நீச்சல், கோடைத்தரைவை வண்டிச்சவாரி, விண்கட்டி பட்டம் விடுதல் கிராமத்தின் பயனுறு விளையாட்டுக்கள் அத்தனையும் அனுபவித்த - எங்கள் இளமைக்காலக் கனவுகளில் எரியும் பிரச்சனையாய் எதிரியின் அச்சுறுத்தலாய் சொத்துடை வர்க்க நலன்சார்ந்த தேர்தல் வெற்றிக்காய் - இருதரப்பும் தோண்டி எடுத்த பூதங்கள் தேவையற்ற தொல்லைகள் செய்தமையால் 'விடுதலைகள் எழுச்சி பெற்றன. (1984)
45 |மீறல்கள் இதயராசன் |

Page 37
மீறல்கள்
கரும்பிளநீர் கவின் சோலை வான்பரப்பில் இரும்பு மழை பொழியும், இருட்டறைகளில் குருட்டு வெளிச்சம்
கோலோச்சும்.
கட்டெறும்பு தொல்லையென காட்டெருமைகளை அழைத்திடும் ராஜதந்திரங்கள் நிஜமானதால் நாட்டையே இழந்திட்ட, நிதர் சனங்கள் .
தவறிழைத்த மேய்ப்பர்களால் தவறிப்போன மந்தைகள் தரம்பிரிக்கும் தந்திரத்தால் தரணியெல்லாம் அகதிமுகாங்கள்.
கிளியும் மைனாவும் கிளித்தட்டு விளையாடிய மைதானத்தில் பிராந்தும் வல்லுாறும் பிராந்திய ஒற்றுமைபற்றிப் பறந்து திரிகின்றன.
மொழிவழிச் சமூகங்கள்
மொழியப் படுவதனால்
வழிவழியாய் வந்திட்ட
விழுமியங்கள்
மீறப்படுகின்றன. (கலையருவி, 1998)
| மீறல்கள் இதயராசன் 46

யுகக் கவிஞன் யுக்தியைக் கையிலெடுப்போம்
காக்கைச் சிறகினிலே கரைந்து அக்கினிக் குஞ்சொடு வந்து, பொய்யினைப் புழுகினைப் பொசுக்கி மானுடத்தை உச்சி முகர்ந்து 'பாரத மோட்டும் பார்த்தசாரதியாய்ப் பழுத்தஞானமுடன் 'சீரறுத்துச் சிக்கெடுத்து சிறுப்பினைப் பட்டோரை ஊரறிய வைத்து உறங்கா துழைத்த, உத்தம மேதை உண்மையின் நேசன் பாரதி என்பதைப் பாரறியச் சொல்வேன்.
47 மீறல்கள் இதயராசன் |

Page 38
பதினொன்றில் துளிர்த்து முப்பத்தொன்பது வரை இருபது வருடங்கள் எழுதியெழுதியே குவித்தார் - அதில் சிந்தொடு சிலிர்த்தெழுந்து சிம்மமாய்க் கர்ச்சித்து அச்சமில்லை அச்சமில்லை உச்சிமீது வானிடிந்து வீழினும் ஓடிவிளையாடு பாப்பா ஒய்ந்திருத்தல் ஆகாதென்று சின்னக் குருவிக்கும் சிறுமணி தூவி மகிழ்ந்ததும் புதுவையில் புரட்சியின் புதுப் பரிமாணம் புலர்ந்தெழப் புனைந்தவை புதுமையென்பேன்.
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதமென்பதை வாய்த்த பொழுதெல்லாம் வாய்ப்பாக்கி ஏய்ப்பவரிடை எழுச்சியுறக் கவிசமைத்து தேய்ந்த மானுடத்தை தேறிடச் செய்தார் ஊருக் குழைத்திடல் யோகம் - நலம் ஓங்குமாறு வருந்துதல் யாகமென்று தத்துவத்தில் தடம் பதித்தார்,
சூத்திர னுக்கொரு நீதி - தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதியிது சாத்திரம் அன்று சதியென்று கண்டோம் - என்று பழமைக்கும் புதுமைக்கும் புரட்சிப்பாலமாய் வழமைக்கு மாறாய் வழக்கொழித்து புதியதோர் விதிசெய்த புலமையாளன் புரட்சிக் கவியவன் வழிநடப்போம்.
பண்பாட்டு மரபில் பழுத்தூறிய புனைவுகளைத் திண்ணமுறு சமுதாய விடிவுக்காய் மீளமைத்து வண்ணமுறு ஒவியமாய்க் காவியமாய்க் கண்ணெதிரே நிறுத்திக் கருத்தேற்றம் செய்து விண்ணெழுந்த வித்தகன் வழிதனில் வடம்பிடிப்போம் நாட்டார் மரபினை நாட்டமுடன் பயின்று மீட்டவை மிளிர்ந்தன சிந்துகளாய்
| மீறல்கள் |இதயராசன் 48

வாய்மொழி இலக்கியம் வழிபாட்டின் சுவடுகளில் தோய்ந்திருந்த தொன்மங்களைத் தேடித்தேடியே கவினுறு தேறலைத் தெவிட்டாமல் தந்தோன் - அதைத் தெளிவோடு கற்று தொடர்வழி நிற்போம்.
புறாக்களின் புதிர்தேடிப் புறப்படின் - அவை பறக்கும் இருக்கும் கோவிலும் கோபுரமும் பாழடைந்த அரண்மனையும் பக்கத்திருக்கும் தோப்பும் அலைந்திடல் வேண்டும் - அதன் தேடலை அறியாப் பேடியர் தேடிய இடத்தினைத் தடயமாய்க் கண்டு தோண்டித் தோண்டித் துளாவுவார் - அவர் கைப்பட்ட துரும்பினைத் துணைக்கொண்டு மயங்குவர்
சுப்பிரமணியன் சொன்னதின் சூட்சுமம் புரியாமல் செப்பிடும் வாய்மொழிகள் புனைந்தேற்றிய கதைகள் பாரதி பாட்டினைப் பாதிபாதியாய்ப் பார்ப்பவர் யானை பார்த்த குருடர் கதைதான் - எதையும் முழுமையாய்ப் பார்த்து முழுமையைத் தரிசிப்போம் யுகக் கவிஞன் யுக்தியைக் கையிலெடுப்போம் - நம் பாரதி கண்ட கிருதயுகத்தினை மீட்டிட சாரதி யாய்நின்று சரித்திரம் படைத்திடுவோம்.
(பாரதியாரின் 125 ஆவது
பிறந்த தினத்தை முன்னிட்டு 2OO7.1211)
49 V மீறல்கள் இதயராசன்

Page 39
விடியாத வேட்கை
புகைத்துப் புகைத்தே பொழுதினைப் போக்கி புகையாத அடுப்பினை நினைப்பரோ! உயிருடன் உறவுக்கும் கொள்ளிவைக்கும் உதட்டுப் பிரியர்களின் உயிருடன் சமாதிக்காய் உண்மையில் நெகிழின் 'புகை மூல உற்பத்தியை விவசாயப் பண்டம் என்பதில் விலக்கு - அங்கே உண்ணும் பருகும் பயிராக்கு.
பனையும் தென்னையும் கித்துளும் பயன்தரும் கற்பக தருவென்பேன் - அதில் சுவைபானமும் சுடுபலகாரமும் திறன்மிகு கைவினைப் பொருளெல்லாம் பொலிந்திட, மயக்குறு மதுவுடன் எரிசாராயம் » ஏற்றமெனக் கண்டனரே பணம் பண்ணிட பிள்ளையைச் சிதைப்பரோ! - இல்லை தாய்ப்பாலில் நஞ்சினைக் கலப்பரோ!
தூளென்றும் புளியென்றும் புனைந்தேற்றும் புதுப்புதுப் பரிபாசைகளிற் பரிமாறி உச்ச இன்பத்தை உறுஞ்சியே பெற்று - பின் நடைப்பிணமாகி நாறிடும் வாழ்வில் குப்பைத்தன மெல்லாம் பண்ணி பேயாய் அலையும் பெரும் கூட்டம் - அதைச் சந்தை வாய்ப்பெனச் சொல்லி
| மீறல்கள்|இதயராசன் 50

சர்வதேச வர்த்தகராய் கொடிகட்டிப் பறப்பர் பணம் சேருமென்றால் பாவங்கள் எல்லாம் பதிவழியும் திறை சேரி நிறையும் ஆயிரம் ஆயிரம் குழந்தைகள் அனாதைகளாய்த் தளர்வதும் அபலைகளாய்ப் பெண்கள் அலைவதையும் எண்ணிடாக் கனவான்கள் கனவில் வெறிநாய்கள் விரட்டும் வரை - இந்தச் சொறித்தனங்கள் தொடரும்.
தேசியப் பொருளாதாரம் தேறிடும் வருமானம் தொழில் வாய்ப்பெனத் தேடித்தேடியே காரணங்களைப் பொதிசெய்வர் - அதனால் விளையும் வினைகளை நிமிர்ந்தும் பாரார் பஞ்சைப்பரதேசிகள் பாடெனப் பதிலிறுப்பர் பாடசாலைச் சிறுவர்களும் இளவயதின் விடலைகளும் விவரம்புரியாமல் படும் அவஸ்த்தை எதிர்காலத்தின் முதுகெலும்பை முறிப்பதை முழுதாய் மறந்தனரோ! சீனத்தின் அபினிப்போரை நினைப்பரோ! சீரழிவின் சீக்கிரத்தை நிறுத்தி சீர்செய்ய முனைப்பரோ! இந்தப் போதைக்கெதிராய் போர்க்குணம் கொண்டெள யோக்கியர் படையொன்று காலத்தின் தேவை. விடுதலையென்பது விதைக்காமல் முளைக்காது.
C1995)
51 |மீறல்கள் இதயராசன் |

Page 40
எரிமலைப் பூக்களால் ஸ்பரிசக்கப்படும் அரவணைப்புக்கள் ஆணியிலறையப்பட்ட சகோதரத்துவங்கள் சுண்ணக்கரைசலால் வறுக்கப்படும் புரிந்துணர்வுகள் திருவிழா நெரிசலில் காணாமல் போன மனிதாபிமானங்கள் தனியார் பஸ்கள் சுவீகரித்துக் கொண்ட சுயமரியாதைகள் புகையிரத நேரசூசிகை தத்தெடுத்த
66)56 தொலைக்காட்சி ஒளிபரப்புக்களில் தொலைந்துபோன தேடல்கள் ஹிட்லரின் வேதப்பொழிவுகளில் அரங்கேறும் வேள்விகள் வீதி விபத்துக்களில் இரத்தம் சிந்தும் மனித உரிமைகள் கம்பியூட்டர் வைரசினால் செயலிழந்த சமாதானப் புறாக்கள் மிலேனியம் BUG இல் அடையாளம் இழந்த முகங்கள்.
(கலையருவி, 1999)
| மீறல்கள் இதயராசன் | 52
 

வல்லமை தாரிரோ!
பொங்கிப் படைத்து பூவொடு பழமும் தேங்காய் கற்பூரமும் குறைவின்றித் தருவேன் செந்தமிழிற் கவிபாட
வல்லமை தாராயோ!
மதியம் என்றாலே 'மகிழ மரத்தடியில் மந்தியாய் குந்தியிருந்து மங்கையர் மனங்கவர வல்லமை தாராயோ!
கண்ணுக் கினிதான கன்னியரைப் பின்னேற்றி கொண்டாவில் போக வல்லமை தாராயோ!
எனக் கவி பாடுவோரை நுகத்தடியிற் பூட்டி கட்டாந் தரையினில் கட்டியிழுக்க வல்லமை தாரீரோ!
53
| மீறல்கள் இதயராசன்

Page 41
வறுமையிலும் செம்மை காண்டிட பொறுமையுடன் கற்றுத் தேறினும் தரப்படுத்தல் எனும் தரித்திரத்தால் சிறைப்படும் உயர்கல்வி வாய்ப்பை திறந்த பல்கலைக் கழகத்திடம் ஒப்படைத்து உயர்வினைக் கண்டிட, வல்லமை தாரீரோ!
ஒன்றாய்ப் படித்து ஒன்றாய் விளையாடி மகிழ்ந்த சின்னஞ் சிறுசுகளின் நெஞ்சில் சாதியெனும் சாக்கடையை ஊற்றி, சீழ்பிடித்து நாறும் தமிழினத்தின் சாபக்கேட்டினைச் சாகடிக்க வல்லமை தாரீரோ!
பெற்றோர் தடுத்து பெரியோரும் கண்டித்து உற்றவரும் உதவாதென்ற பின்னும் தொற்று நோயாட்டம் உற்ற நோயாய் பற்றிய காதல் வைரஸ்" எல்லாமும் மறைத்து உள்ளத்தால் உறவாடியபின் சீதனத்தின் சீலையில் தொங்கும் சீர்கெட்ட சமுதாய அமைப்பினை ஊர்கூட்டி எரியூட்டிட, மக்கள் சக்தியே எனக்கு வல்லமை தாரீரோ!
மேடும் பள்ளமும் சொத்தினில் மேற்தட்டு வர்க்கத்தின் சார்பாய் அனைத்துப் புனைவுகளும் - அதைப் புதிதாய்ச் சமன் செய்திட சிந்தனைப் புரட்சி செய்திட - தோழர்களே! வல்லமை தாரீரோ!
(1983, கோப்பாய் ஆசிரியகலாசாலை - கவியரங்கம்)
| மீறல்கள்|இதயராசன் | 54

வாழ்க்கை
தீயன முளைவிடும், முளையிடும் சாக்கடைக் குட்டைகளாய் சுயமிழந்து துர்வாடை வீசுவது வாழ்க்கையல்ல.
பாய்ந்தோடி
முட்டிமோதி வலிமை பெறும்வரை தேங்கிநின்று, வீறுடன் உடைப்பெடுத்து சீறிப்பாய்ந்து பெளதீக இயல்பின் செயற்கைத் தடைகளை வேரடி மண்ணுடன் பெயர்த்து, இயல்பு நிலமைகளுக்கேற்ப சலசலத்தோடும் நதியின் நகர்வுதான் வாழ்க்கை. (2OO1)
55 | மீறல்கள் |இதயராசன் |

Page 42
ད། اس سب سے
Z 幼
ཅི་རེད།དེ་རིར་རོ་ཚུ4
'சூரியோதயம்'
அதிகாலைப் பொழுதே அருமருந்துப் பொழுதே உதியாத சூரியனே உண்மையின் ஒளியே நினைவிழந்து நிசமெல்லாம் திசையாக்கி உறையாத உள்ளமொடு ஊரறிய மிதந்து ஒளிச்சிறகினை மெல்ல மெல்ல விரித்து, விழித்திரை இமைக்காது முழிப்பிருக்க பொன்மஞ்சள் மேனி பளபளக்க காலையின் மயக்குறு மோகினியாய் காவிய நாயகியாய் கீழைத் திசையில் கிளர்தெழுந்து
வாழத் துடிக்கும் வாலிபத்தின் ஜீவராசிகளின் ஜீவசக்தியாய் ஏழ்வண்ணக் குதிரை தேரிழுக்க விண்ணெழுந்து வியனுறு கோலம் காட்டி இருள் விலக்கி இடை அசைத்து கடை விழி வீச்சில் பனி கரைத்து கதிரெறிந்து கமலம் மலர்த்தி குயிலும் மயிலும் கூவியாடிட கரைந்து கரைந்தே காகம் பறப்புற
| மீறல்கள்|இதயராசன் | 56
 
 
 
 

துயிலும் மாந்தர் துடிப்புடன் எழுந்திட - எந்தன் இதயச் சிறகினை இசையினில் அசைத்திட இளமையின் இன்ப சாகரமாய் இதழ்விரித்து கன்னம் சிவக்க கனிமுகம் காட்டி பென்னம் பெரியவளாய் பொய்யில்லாப் பேதையாய் வேதம் போற்றும் விழுப்பொருளாய்
பேதமில்லாப் பேதையாய்
மோகம் களையும் மோட்சமாய் ஜன்னல் ஓரத்தின் இரட்சகியாய் இதயம் நெகிழ இடமும் மாற இன்பமழை பொழிந்து பொழிந்தே
இரட்சிப்பின் இதய தேவதையே! - நீ எச்சிமனிதர் இழிவு கண்டோ? உச்சி வெய்யிலாய் உரசி எரிக்கின்றாய் சுடர் விழியில் சுடுபடை சுமக்கின்றாய் விடை தேடி வேள்வி புரிகின்றாய் - நாற் படை உதறி நிமிர்ந்து நிற்கின்றாய் வேற்படையும் விழற்கதையும் மேற்படையுடன் நீக்கி மேன்மையுடன் வேர் அறுத்து விழுதெறிந்து
கடல் அலை புரண்டெழும் கலத்தினைக் கரைசேர்க்கும் விடிவெள்ளியாய் குமுதம் மலர்த்திடும் மதிமுகமாய் அமாவாசை இரவின் நட்சத்திர விழிகளாய் பகலிரவாய்ப் பயணித்தவாறே வரலாற்றைத் துடைத்துப் போடும் தூரிகைகள்' - உன் போன்றோர் விழிப்பினில் கருவுற்று ஒளிவட்டமாய்ப் பிரகாசிக்கும் விடியல்கள்.
(சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு - 2007)
57 | மீறல்கள் |இதயராசன்

Page 43
  

Page 44
தோழனுக்கு ஒரு கடிதம்
புத்தகப் பொதி சுமந்து, கற்பனை உலகினிற் சஞ்சரித்த என்னை இத்தரைக்கு இழுத்துவந்து, எங்கள் துயரினைப் பாரடாவென்று நிரை நிரையாய் வகைவகையாய் வார்த்தையிலே வடித்து வைத்தாய் எந்தன் இதயத்தில் - நீ சுதந்திர தீபத்தை மூட்டிவிட்டாய்.
தணியாத தாகமுடன் தேச விடுதலைக்காய் உழைத்தோம் கனிவான பேச்சாலே கருத்தினைப் பொழிந்தாய், உடைமைகள் வேண்டாமென்று நான் கற்றிடும் புத்தகமுமானாய்.
| மீறல்கள்|இதயராசன் | 60

உந்தன் ஒவ்வொரு அசைவுக்கும் நுணுக்கமான விளக்கங்களை என்னுள்ளே ஏற்படுத்திக் கொண்டேன். அவை உனக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லைத்தானே!
இடைக்கால நிகழ்வுகள் இருண்ட அத்தியாயம்தான் இடிவிழுந்த இழவுச் செய்திதான் - ஆனாலும் புரட்சிவாதிக்குப் புலம்பல் பிடிக்குமா? காலடி தேசத்தில்
இரத்தம் பாயுதென
மேற்கு நாட்டிலே மோட்சம் நாடுதல் தகுமோ! மூச்சிரைக்கப் பேசி, மூர்க்கமாய்ச் சாடியதைத் - தோழா முழுதாக மறந்தாயோ! முழுமதியும் மழுங்கியதோ!
இன்று தேசாந்திரம் போகலாம் - ஆனால் என்றோ ஒரு நாள் இங்கு வந்துதானே ஆகவேண்டும் அப்பொழுது தியாகிகள் இரத்தால் தோய்ந்திருக்கும் எமது தேசத்தில் உனது பாதச்சுவடுகள் பதிவதற்கு, பாத்தியமுள்ளதா? சிந்தித்துப்பார் தோழா ! காலம் இன்னமும் உனது கைகளிற்தான். C1988)
61 | மீறல்கள் இதயராசன்

Page 45
எது கவிதை
உண்மையும் உணர்ச்சியும்
உயிர்ப்புற,
எண்ணமும் வண்ணமும்
பிணைந்து பிறப்பது
கவிதை. C2OO6)
| மீறல்கள்|இதயராசன்
62
 

வானிடை ஒளிரும் செஞ்சுடர்
மகத்தான அக்டோபர் மலர்த்தி - லெனினுடன் சகத்திலே சாதனைச் சரித்திரம் படைத்தோன் சுகத்தினைத் துறந்து சுதந்திரம் வேண்டி அகத்திலே கனன்று அவனியில் மூட்டியோன்.
பட்டணமாம் ஸ்ராலின் கிராட்டில் படையினை விரட்டி கெட்ட நாஜிகளைக் கதிகலங்க வைத்தோன் - ராணுவ திட்டங்கள் பலதீட்டி தீரமுடன் போரிட்டு பட்டங்கள் பலபெற்ற பாட்டாளி மைந்தன்.
பாட்டாளி வர்க்கம் பதவிக்கு வந்திட கூட்டாளி யாயுழைத்த குடிமகன் - தேசத்தை மீட்டிடும் யுத்தத்தில் மீட்பராய் வந்தோன் ஆட்டிப் படைத்தோர்க்கு எமனாகி நின்றோன்.
மானிடத்தை நேசித்த மகத்தான மனிதன் ஏனிடர் வந்ததென எதார்த்தமாய்ச் சிந்தித்து மானிடர் மகிழ்வுக்காய் மரிக்கும்வரை உழைத்து வானிடை ஒளிரும் செஞ்சுடர் ஸ்ராலின். C1990)
63 மீறல்கள் இதயராசன்

Page 46
ޒަފަ!
எங்கள் ஜனனபூமி
برکے
நேற்று: புதர்வெட்டி வாய்க்கால் திருத்தி சேற்றுநிலம் புதுக்கி வெட்டை வெளியெங்கும் வரிசை வரிசையாய் மரம் வளர்த்து சாலை வளைவுகள் நடைபாதைகள் வண்ணமுறச் சமைத்து பாதையோர விபத்துக்கும் துக்கிக்கும் மக்கள் மிகுந்தது எங்கள் ஜனனபூமி.
| மீறல்கள் இதயராசன் | 64

இன்று: வாய்க்கால் வரம்பென்ன கையொழுங்கை நடைபாதை யெங்கும் புதர் மண்டி, வீதியோரங்களில் மருந்துக்கும் மரமில்லை ஆநிரைகள் புழுதி இறைக்கும் வழியெல்லாம் பன்றிகளும் நரிகளும் நிறைந்து மனிதங்கள் தரியாத மானுட வசிப்பிடங்களில், பழமெனக் காய்பறிக்கும் நிறக் குருடர்களோடு களையெடுப்பின் பெயராலே பயிர்பிடுங்கும் பரிதாபங்கள் மாமுனிகளின் ஆசீர்வாதத்துடன் கனவுகளை மட்டுமே சுமந்தபடி மயானமாய். எங்கள் ஜனனபூமி.
历TGDs亦: காலத்தின் புலர்வுக்காய் காத்துக்கிடக்கும் உறங்குநிலை வித்துக்கள் பருவமழையின் தூறலில் முளைவிடும் புதிய தலைமுறை தலையெடுக்கும் - அதில் எல்லாமும் எல்லோரும் பெற்று
மீண்டும் மிடுக்குடன்
மெய்சிலிர்த்து நிற்பர் - என்றும் வாழ்வின் வசந்தங்களைத் தரிசிக்கும்
எங்கள் ஜனனபூமி. C2OO5)
65 | மீறல்கள்|இதயராசன் |

Page 47
நாம் அது ஆவோம்
சினமென்ற களையைச் சீராகச் சிக்கறுத்து கணமொன்றாய் முளைவிடும் சபலத்தைக் கிள்ளித் திணவெடுக்கும் புலனேறை சாத்வீக நுகத்தடியிற் பூட்டி மனவயலை மறுவின்றி உழுது விரிசிந்தை விதைப்போம் - ஆங்கே பூத்துக்குலுங்கும். எழிலோடு எழிலாவோம் அன்போடு அன்பாவோம். C2OO4)
| மீறல்கள்|இதயராசன் | 66

அர்ப்பணம்
உயிரும் சதையும் கலந்தெம்மை
உணர்வுடன் உலாவிட உண்மையாய் உழைத்த உத்தமராம் - எம் அன்னையும் பிதாவும்
அன்புடன் அரவணைத்து உச்சிமுகர்ந்த உன்னதப் பொழுதினையும் உச்சிவெய்யிலில் வியர்வை சிந்தி மெய்நொந்து நோயினிற் பட்டதையும் - அந்த வேதனை மறந்து மக்களின் வாழ்வினில் மெய்சிலிர்த்ததையும் பாசத்தைக் குழைத்து பணிவினை ஊட்டி நேசத்தினை நேர்மையுற நேசிக்க மோசத்தினைக் கண்டால் கோபத்தினைக் கொப்பளிக்கவும் வழுவழுத்த உறவிலும் வைரித்த பகையை வரித்திடவும் திறந்த புத்தகமாய் வாழ்தலையும் பரந்த மனத்தினராய்ப் பாரினைப் பார்த்தலையும் வருவிருந்தோம்பி மேன்மையுற்றதையும்
கடுகளவு நாடினும் மலையளவு உதவிடவும் போஷித்த உள்ளங்கள் நெஞ்சத்தை நீங்காது - அவர் நிழலாக வாழ்ந்து மகிழ்தலில் நனைகின்றோம். C2OO7)
67 | மீறல்கள் இதயராசன்

Page 48
மானுடம் தளைத்திட
வார்கொண்ட வன முலையாள் உண்ணா முலையாள் மீறும் இலஞ்சிக் குறத்தி மகளே - என்று சுடர் விளக்குச் சுற்றிப் பிடித்து அங்கத்தின் வாளிப்பில் சொக்கித்திணறி தெய்வக் கவிசமைத்த புண்ணிய சீலர்கள் அம்மனையும் அவள் பக்தையையும் எச்சியுடன் பார்ப்பதை என்னென்பேன் நக்கும் நாய்க்குச் செக்கும் சிவலிங்கமும் ஒக்கவே நிற்பது ஒப்பவே இதுவும் ஆணுக்கென்றே அத்தனையும் ஆண்டவன் படைத்தான் ஆணுக்கு அடிபணிந்து அவன் தொண்டாற்றி தேவைக்கு உணவூட்டித் தன் உடலூட்டி - அவன் மகிழ்வில் அடக்கமாயத் தான்மகிழ்ந்து உறங்கு நிலை உணர்வொடு ஊசலாடி ஆணின் கருசுமக்கும் இயந்திரமாய் - இது நிலவுடைமை சொத்துடைமைச் சமூகத்தின் ஆண்நிலை ஆதிக்க வெளிப்பாடன்றி வேறில்லைக் கண்டீர் விழிபெறுவீர்.
சிவன்பாதி சக்தி உமையென்று போற்றி அவளுக்கும் சேர்த்து தீட்டினை வைத்தாரை சிரசினிற் குட்டித் தோப்புக்கரணம் போடுங்கள், ஆதாமைப் படைத்து அவன் மகிழ ஏவாளைப் படைத்த வேதத்தைப் போற்றுங்கள்,
| மீறல்கள்|இதயராசன் | 68
 

பாவத்தின் பங்கு பெண்ணென்றும் சாத்தானின் ஏவற் பேயென்றும் - இன்னும் மோகத்தை மூட்டிடும் மோகினியென்று பாகத்தை மூடிக்கட்டி மூலையில் வைத்து சோகத்தைப் பாராமல் 'சொர்க்கத்தைத் தேடும் வர்க்கத்தின் சூதினை விழித்தெழுந்து வெல்லுங்கள்.
சாக்கடை கண்டு மூக்கினைச் சுழியாமல் - ரிஷி மூலத்தைக் கண்டு மூச்சுடன் நிறுத்துங்கள் பிறப்பிலும் உறுப்பிலும் பழுதில்லை சிறப்பொடு வளரும் சிறாரிலும் பேதமில்லைப் - பின் சிறுப்பினை வாய்த்திட வாய்ப்பென்ன, மதத்தால் பாரம்பரியப் பண்பாட்டால் சொத்துடை வாரிசு வழக்காறால் சித்தம் கலங்கிய மூளைச் சலவையால் - நம் முன்னவரன்று புனைந்திட்ட பூர்வீகக் கதைகளில் புராணமும் சாத்திரமும் வேதாகமமும் நல்லதொரு போதனையாய்ச் சொன்னவையில் ஆண்நிலை ஆதிக்க வேர்கள் விழுதுான்ற, மேம்படுத்தித் தெய்வத்தின் குரலாய் மடைமாற்றி உண்மையின் வரிகளாய் தூய்மையின் சின்னமாய் தலைமுறை தலைமுறையாய்த் தலைமாற்றும் சங்கதியின் சாரத்தைச் சந்தியில் நிறுத்தி சிப்பிலி யாட்டிச் சிங்கமெனச் சிலிர்த்துநில்.
ஆண்டவன் சொத்து அனைவர்க்கும் பொதுவெனில் - அதை ஆள்கின்றவர் சிலராகி அனுபவித்திடலென்ன நீதி எல்லோர்க்கும் எல்லாமும் பகிர்ந்துழைத்து நல்லோராய் வாழ நல்வழி நடப்போம் - இதில் ஆணென்றும் பெண்ணென்றும் பேதமை வேண்டாம் மானுடமென்றும் தளைத்திட போர்க்கொடி பிடிப்போம்.
C2OO7)
69 |மீறல்கள் இதயராசன் |

Page 49
தவக்கோலம்
தத்துவங்கள் பல சொல்லி
தர்க்கங்கள் செய்துவந்த
தத்துவ வித்தகர் - இப்போ
தவக்கோலம் பூண்டு விட்டார்.
(தாயகம், 1977 இல் பிரசுரமான முதற் கவிதை)
|மீறல்கள் இதயராசன் 70
 

விந்தை நிகழ்விதா!
தேசத்தின் வளங்கள் யாவும் மக்களுக்கே சொந்தம் - அதை அனுபவிப்பதும் அவர்தம் உரிமை - இதை உண்டு கொழுத்தவர் தம்மிடை பகிர்தல் ஜனநாயக சுதந்திரமாய் - அவர்தம் அரசியல் தர்மமாய் கொண்டதனால் உழைப்பினை மட்டுமே உடைமையாய் பாவப்பட்ட பரம்பரையாய் வாழும் மக்களின் அன்றாட ஜீவனங்கள் பட்டணத்துப் பிச்சைக்காரரிலும் பரிதாபமாய்!
சொத்துடை வர்க்கம் சொந்த உழைப்பினில் விளைந்ததா? வன்செயல்களால் வாய்த்ததா? - இல்லை முன்வினைப் பயனின் மொழிவா? விந்தை நிகழ்விதா? - ஒருவேளை சுரண்டற் சூழ்ச்சியின் சதியா?
கற்றறிந்தோர் காண்பரோ?
விண்ணை ஆய்ந்திடுவர்
மண்ணின் கதையினை
முழுதாய் மறந்திடுவர்
மாற்றங்கள் என்றும் எதிலும் மழுங்கியிருப்பவர் மதியினில் ஏறாது,
சிந்தை செய்திடுவீர்
செம்மையும் வாய்த்திடுமே! C2OO5)
71. | மீறல்கள்|இதயராசன் |

Page 50
எதிர்ப்பால் கவர்ச்சி
புளியஞ் சோலையில் புலர் பொழுதின் பனிக்காற்றின் சீதளத்தில் மெய்சிலிர்த்து கருநீல வண்ணமுடை ஆண் குயிலொன்று இணைதேடி இசை மீட்டிடக் குக் கூவெனக் குரலிசைக்க, பக்கத்தொரு தோப்பினிலே ஆண் மயிலொன்று வண்ணத் தோகை விரித்தாட குறுஞ்சிறகுடைப் பேடு தன்னை மறந்தங்கே நளினமாய் இசைந்தாடி எதிர்ப்பால் இணைந்திட எண்ணத்தால் இனித்திருந்த குடிசைச் சோலைகள் வனவிலங்குகளின் அட்டகாசத்தில் குதறிப் போடப்பட்டன.
| மீறல்கள்|இதயராசன் | 72,
 

வண்ண மலரிருந்து தேனுறுஞ்சும் தேனியை கருவண்டு சுவைபார்க்கும் பிஞ்சு உடல் சுமக்கும் பொதிப் புத்தகத்தோடு
போதி மாதவன் பெயராலே பேய் கொண்டு போகும் - அதை மறித்து நின்ற, சந்தித் தெய்வங்கள் 'உலகமயமாகி சரிபாதி தமக்கென்று சண்டைபிடித்துப் - பின்னர் அசுர அழிப்பு யுத்தங்கள் ஊழித் தாண்டவமாய் சேர்ந்தும் தனித்தும்.
குறுநில மன்னர்களெல்லாம் குறித்த வெற்றிக்காய் உரிமை கோரல்கள் சக்கரவர்த்தி மகுடத்திற்காய் சச்சரவுகள் அப்பப்போ! அஸ்வமேத யாகத்தின் பின்னர் முருகப்பெருமான் வேஷத்தில் வேலாயுதங்களோடு', சூரபத்மன் தம்பியருடன் கருவறையில் பாதுகாப்பாக நகுலன்' நாட்குறிக்கும் வரை பகீரதப் பிரயத்தனமாய் அருச்சுனன் தபசில் தனித்திருந்து. பாசுபத அஸ்திரத்திற்காய் பரமசிவனையும் போட்டுத் தள்ளியபடி?
73
C2OO7)
| மீறல்கள் இதயராசன்

Page 51
பச்சை வயல் நாடு
கள்ளப் புலனைந்தும் காடைத்தனம் பண்ணிட, வெள்ளை யுள்ளங்கள் அஞ்சியஞ்சி ஒடிட, கொள்ளை போகும் கோட்டை வாயில்களில், எள்ளி நகையாடும் ஏழ்மைகள் கோலமிட, தெள்ளியெடுத்த பேய்கள் தாண்டவமிடும் வெள்ளி யெங்கள் நாடெங்கள் நாடே
உண்மைகள் உறங்கிட ஊமைகள் பேசிட, திண்மைகள் திகைத்திட தீமைகள் தீட்சண்யம் பெற்றிட, அண்மைகள் தொலைந்து ஆதங்கமுறுவோர் உழன்றிட, 'விண்ணர்கள் வீழ்ந்திட வீணர்கள் வீம்பினில் ஆண்டிட, வண்ண மொழியெல்லாம் வாழ்விழந்து வதைபட்டிட, எண்ணங் கொண்ட நாடெங்கள் நாடே
நல்லவை நலிந்திட அல்லவை அரசோச்ச, வல்லவை வலுவிழக்க வந்தவை திண்ணமுற, பொல்லா வகையெல்லாம் பொச்சாப்புற, எல்லா அறங்களும் எமனிடம் சேர்ந்திட, கல்லா அறிஞர் குழாம் கறியாக்கும் வில்லார் நாடெங்கள் நாடே
எச்சங்கள் தொலையும் தொன்மங்கள் மலிந்த சொச்சங்கள் தொடர்கின்ற தோப்புக்கள் மலிந்த, அச்சமென்பது அகராதியிலும் தேவையில்லா துச்சமென மானுடம் சூறையாடப்படும் கொச்சைத் தனமான வல்லுறவுகள் நாறிடும் பச்சைவயல் நாடெங்கள் நாடே. C1988)
| மீறல்கள்|இதயராசன் | 74

நிலையும் நினைப்பும்
நவீன துரியோதனனின் எக்காளச் சிரிப்பினிலே கெளரவ சேனைகள் ஆர்ப்பரிக்கின்றன
வீட்டுமத் தளபதிகளின் வழிகாட்டலில் துச்சாதன தர்மங்கள் உச்சரிக்கப்படுகின்றன
சகுனியின் காய் நகர்த்தல்களால் தாரமுமிழந்த தர்மராஜாக்கள், பொறுமையிழந்து பொருமுகின்ற
வீமசேனன்கள்
பாண்டவச் சிறார்களை நள்ளிரவில் எரியூட்டும் நவீன குருஷேத்திரங்கள் இயந்திரப் பறவைகளின் அக்கினி முட்டைகளால் போஷிக்கப்படுகின்றன
மானுட நேயங்கள் பெருங்கற் பண்பாட்டிற்கு முந்திய படிவுகள் ஆகிவிட்டன
யாரங்கே!
மனித உரிமைகளை
அரும்பொருட் காட்சியகத்தில்
பத்திரப் படுத்துங்கள் டாக்டர் பட்டம் தேவைப்படுவோர் தாராளமாக ஆய்வு செய்யட்டும். C2OOO)
75 | மீறல்கள்|இதயராசன்

Page 52
கைலாசபதியென்று கைகோர்த்து நிற்போம்
உயர் குடிப் பிறந்தோர் வாழ்வில் உதிர்த்திடும் மொழியெல்லாம் உலகியல் வழக்காய் உலவிடக் கண்டு உவகையுற்ற தமிழ் இலக்கியத் தளத்தினை, இடம்மாற்றி இடர்ப்படும் மக்களின் தடயங்களையும் தணிக்கையின்றி வெளிக்கொணர களம்திறந்து கச்சிதமாய் வடிவமைத்த மக்கள் இலக்கியத்தின் மகத்தான விமர்சகன் கைலாச பதியென்று கைகோர்த்து நிற்போம்.
யெளவனக் 'காரிகை கடைவிழி வீச்சும் இடை தொடை வனப்பும் மங்கிய ஒளியில் மறுகிடும் முயக்கும்
கந்தன் புராணத்திலும் கம்பன் ரசத்திலும் மாந்தி மாந்தி மயக்குறும் மாயம் களைந்து, மண்ணை மக்களை நேசிக்கும் பாரதி போன்றோர் பாவின் பவித்தரமும் சங்கச் செய்யுளின் சங்கதியும் இளங்கோவும் வள்ளுவனும் இன்னும் மேலைத் தேயத்து மேன்மையுறு இலக்கியமும்
| மீறல்கள்|இதயராசன் | 76
 

கீழைக் காற்றிலும் தவழ்ந்திட வகைசெய்து மக்கள் கவிஞர் முனைப்புற திண்ணிய விமர்சன வீச்சினை விதைத்தோன் கைலாச பதியென்று கைகோர்த்து நிற்போம்.
இயங்கியல் பொருள் முதற் பார்வையில் சமூக மாற்ற நெறிமுறையினை உலக வரலாற்றின் உன்னத கட்டங்களை கடந்த கால நகர்வுகளின் போக்கறிந்து தொடரும் வரலாற்று அசைவினில் நின்று தனிமனித சரிதைப் புனைவுகள் வரலாறல்ல, சமூக உற்பத்தியின் நகர்வுதான் சரித்திரமாய் விரிகிறதென்ற விளப்பமுடன் தமிழ் இலக்கியமும் உலக இலக்கியமும் வெளிக் கொணரும் வெளிச்சங்களைத் தேடி ஆய்வுக் கட்டுரைகளும் அறிவார்ந்த உரையாடல்களும் மூச்சிருக்கும் வரை முழுநாளும் செய்தோன் கைலாச பதியென்று கைகோர்த்து நிற்போம்.
பாமரர் பாட்டினைப் பதிவுசெய்திட ஈழத்து இலக்கியப் புலத்தினில் - அது இழிசனர் இலக்கியமென முத்திரை குத்தினர் பழம்பண்டிதர் குழாமொன்று இகழ்ச்சியுடன்; முனைப்புற்ற பஞ்சப் பராரிகள் போராட்டம் நெஞ்சை உலுக்கிடும் நெடுஞ்சாவிலும் தொடர்ந்தது, துஞ்சிடா மக்கள் இலக்கியத்தைத் துணிவுடன் போற்றித் தினகரனாய் நின்றார் திசையழிந்தது திருக்கூட்டம் விசைபெற்ற பெருங்கூட்டம் விழிப்புடன் துளிர்த்தது, உடைமையும் உரிமையும் இழந்த உழைக்கும் மக்களிடம் உண்மையைக் கண்டார் மடமையினைக் கொழுத்தி மதியினை உயர்த்தி மகிழ்வுடன் வாழ்ந்து மானுடம் துளிர்த்திட சீருடன் உழைத்த சிந்தனையாளன் - எங்கள் கைலாச பதியென்று கைகோர்த்து நிற்போம். C2OO7)
77 | மீறல்கள் |இதயராசன் |

Page 53
போர்க்கால ஜனநாயகம்
குடை பிடித்து குஞ்சரம் ஊரும் கொற்றவன் ஆட்சி நனிசிறக்கும் காலமிது.
சொத்துக்கள் அத்தனையும் அரசனுக்குச் சொந்தம் சிந்திக்கும் உரிமை மட்டும் மக்களுக்குச் சொந்தம் - இது பழைய ஜனநாயகம்.
உரிமங்கள் யாவும் மக்களுக்குச் சொந்தம் சிந்திக்கும் உரிமை மட்டும் அரசனுக்குச் சொந்தம் - இது சமகால ஜனநாயகம்.
துன்பியலின் அறுவடையாளர்
மக்கள் மட்டுமே,
சகித்தலே அவர்தம் கடமை சிந்தித்தல் மடமையின் சின்னம் - இது போர்க்கால ஜனநாயகம். C2OO4)
| மீறல்கள்|இதயராசன் | |78
 

*ー
නිල්
ビ、○公%s二あ ప్రస్తాస్త్రశ్రే
மீண்டும் உயிர்ப்புடன்
ஒருவேளை சிற்றுண்டியினைக்கூட சுதந்திரமாய்த் தீர்மானிக்க முடியாத ஜனநாயகம் மலிந்த தேசத்தில் உலக்கைபோகும் இடமெல்லாம் அம்பலமாயிருக்க ஊசிபோகும் இடங்களில் காவல்துறையின் கண்காணிப்பு வேலிகள் பெருச்சாளிகள் உண்டு கொழுத்திருக்க,
கம்பியூட்டரில் அவதானிக்கும் உளவுத்துறையினர்.
பிணந்தின்னிக் கழுகுகள் வட்டமிடும்
மயான பூமியில் - நாம் குதுரகலித்திருக்க நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளோம் வனவாசிகளின்
'வாண்மைத்துவப் போட்டிகளில்,
நசுங்குண்டு போகும்
அற்ப ஜீவன்கள் போல்
மனித உயிர்மங்கள் - மீண்டும் உயிர்ப்புடன் அன்றாட கடமைகளில், C2OO2)
79 மீறல்கள் |இதயராசன் |

Page 54
உனக்குச் சாவில்லையோ!
சாவே உனக்குச் சாவில்லையோ! சாவுக்கு உரமிடும் சாவே,
உனக்குச் சாவில்லையோ!
சோகங்களை மட்டுமே சுவாசிப்பதற்கு உயில் எழுதும் பாட்டனார் பரம்பரைகளின் குலதெய்வங்களின் குளிர்த்திக்காய் சந்திகள் தோறும். கடாவெட்டுக்களால் புலம்பெயர மறுக்கும் போர்மூட்டங்கள்
"வடுக்களை விதைக்கின்றன.
சாவே உனக்குச் சாவில்லையோ! சாவுக்கு உரமிடும் சாவே, உனக்குச் சாவில்லையோ! (தாயகம்,2004)
| மீறல்கள்|இதயராசன் | 80

துயரங்களின் கருவறைக்கு.
மண்ணையும் கல்லையும் கிளறி மலிவானதை உண்டு குடித்து திண்ணையிலும் பாயிலும் படுத்து நல்லதை மட்டுமே நினைந்து தொல்லையைக் கண்டு சலித்து வல்லதுக்கு வழிவிட்டு வழிவிட்டு எல்லையில் உறவுகள் கொண்டென்றும் மொழியால் ஒன்றுபட்டு வாழ்ந்த தமிழ் முஸ்லிம் பிணைப்பினில் - ஷெல் விழுந்து பதினேழு ஆண்டுகள் - இன்னமும் சீழ்பிடித்தபடியே சீவனற்றுக் கிடக்கிறது.
|81 | மீறல்கள் |இதயராசன்

Page 55
அனைத்து வளங்களும் அனைவர்க்கும் இனத்துவம் இன்றி சமத்துவமாய்க் கிடைத்திட வேண்டிக் களமிறங்கி விதைத்த விதைகள் விளைந்த போது, அறுவடைக்கு முன்பே அனைத்தையும் சுருட்டிட ஆணவத்தோடு அதிகாரத்தை வீசி களையெடுப்பின் பேரால் களைந்தவை கணக்கெடுப்பில் 'கணக்கில்லை'
பெரும்பான்மையின் பெருமிதத்தால் பொருளற்றுப் போன சிறுபான்மைகள் பொருமிய காலமதில் நொறுங்குண்ட அடக்குமுறை இயந்திரங்கள் - மீண்டும் இராட்சத உருக்கொண்டு உலைக்கின்ற நிலை வாய்த்திட வழிவிட்டவர் வகை கூறட்டும்.
ஆய்வுலகின் அறிவியல் மேதைகள் பொய்யுரைக்கா மெய்யூடகங்கள் குடைந்து குடைந்து உண்மைகள் தேடுவோர் கேள்விக் கணைகளின் கோமகன்கள் விழுந்தது எண்ணும் விழுக்காட்டுப் பேர்வழிகள் பிழைத்தது எங்கென்று பிசிறாமற் பார்க்கட்டும் துரோகி என்றோரே துரோகி ஆனதெப்படி? துரோகத்தின் பிறப்பிடத்தைத் தூசுதட்டித் தேடட்டும் துயரங்களின் கருவறைக்குச் சமாதி கட்டட்டும் - மீண்டும் தமிழ் முஸ்லிம் உறவுகளின் செழிப்பினில் உயிர்ப்பான அனைத்தையும் பேசட்டும்.
(முஸ்லிம் மக்கள் சொந்த இடங்களிலிருந்து விரட்டப்பட்ட 17 ஆவது ஆண்டு நினைவாக. 2007.10.27)
| மீறல்கள் |இதயராசன் 82

தேடல்
பாலிய நினைவலைகளில் மிதந்து மிதந்தே நிதர்ஷன நெருப்புத் தணல்களை ஸ்பரிஸித்தவாறு, வாழ்வின் சுகங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கும் தேசத்தின் நேயர்களே! சமாதானக் கனவுகளுடன் புறாக்களின் வரவுக்காய் விழிவிரித்துக் காத்திருந்த பழங்கதைகள் இனிவேண்டாம்.
83 | மீறல்கள் |இதயராசன்

Page 56
குடும்பத்தாருடன் அயலவரும் கூடிக் கூழ்குடித்த நிலாக்கதைகளின் நீள்பட்டியல் அறுவைகள் போதும் காலைத் தென்றலும் இளம்பருதியும் பயணித்தாயிற்று, மழைக்கால நசுநசுப்புக்கள் தகிக்கின்றன, சற்றே விழித்துப்பார் சூரியப் பிரகாசத்தை.
கூடிப்பயணித்த நண்பர்களின் நரபலியுடன் ஒட்டிய உறவுகளையும் வெட்டி கட்டியெழுப்பிய, சமாதியின் மேலேதான் கற்பகச்சோலை என்பது, காலதேவனின் தீர்ப்பென்றால் கண்ணிரைத் துடைத்தெறி - அது உறவுகளின் செழிப்பல்லவா?
பிரேத பரிசோதனைகள் மருந்துக்கும் இனி வேண்டாம், வெடிச்சத்தங்கள், விழாக்களுக்கும் வேண்டாம், புன்னகைப் பூக்கள்மட்டும் சொரியட்டும் மிதிப்பதற்கல்ல பூஜிப்பதற்கு
கண்ணி வெடிகள்
தேடியது போதும்,
மண்ணின் விதைகளைத்
தேடுவோம்
அடுத்த தலைமுறையாவது
அறுவடை செய்யட்டும். C2OOO)
| மீறல்கள் |இதயராசன் | 84


Page 57
கண்ணி வெடிகள்
தேடியது போதும் மன்னின் விதைகளைத் தேடுவோம் அடுத்த தலைமுறையாவது அறுவடை செப்பட்டும்.
அணைகட்டியதில் சிறு அணிலின் பங்காக உழைப்பும் சேர்ந்திருக்கு
எங்கள் தேசத்துக் கனவுக காதலையும் சுமந்தபடி க
இரத்த வெள்ளம் விதியெ சதைச்சேறுகள் நடையிற் நவீன ஆயுதங்கள் பினக் ஈழப்பொங்கல்
சாவே உனக்குச் சாவில் சாவுக்கு உரமிடும் சாவே உனக்குச் சாவில்லையே
 
 
 

(2000)
GTIG
அன்பே ளோடு,
த்திருப்பேன்.
(1983)
GÖTTI
தற 35TGLÉOL