கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குமரன் 1973.10.15

Page 1
புனுக்கு
fulus IB'
அலெ
úL呜 圓」 à
■ 砷 )
■血-喹mā
ஒக்டோபர் 15, 1973 விலை: 30 சதம்
 
 
 

நடுநிலமை திரியும் பிளவும் Giải : Hjải :
நிலம் வேண்டும்
திறவுகோல்
ன்டேயின் வீழ்ச்சி தரும் பாடங்கள்
தியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
வியத்நாம் வேண்டும்
LIDIT IBLI!
ĜiB, IGOLA

Page 2
செஞ்சிவப்பு பேரலைகள் இன்று நாங்க்ள் எங்களிடம் இழப்பதற்கு இருக்கின்ற விலங்குகளை உடைத்தெறியும் வேலைகளைச் செய்கின்றேம். இனி
இப்புவியில் செஞ்சிவப்பு பேரலைகள் தொடங்கிவிடும் இனி உங்களது ஆதிக்கச் சுரண் டல் வால் அடியொட்ட
G6u Luu8ub
அப்போது
எங்கள்மீது
நெடுநாளாய்
சுமந்திருந்த துயரக்கொடும் மலைகள் துர்நாற்றக் காற்றலைகள் சுடுகாடு சென்றடையும் அப்பொழுது உழைக்கின்ற நாங்கள் விடுதலையின் விடிவினிலே புன்னகையை
உதிர்த்திருப்போம்
-கணேசு
மண்ணின் மகன் எங்கே?
ராசரட்டை தலை நகரில் வங்கிக்கிளை மனேஜருக்கு சிறுபோக அறுவடைக்கு தற்காலிக கடனுதவி கேட்டுவந்த கடிதங்களில் பெரும்பாலும் எல்லாமும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு காற்சட்டை அணிந்தோரால் கையளிக்கப்பட்டதஞல் எம் நாட்டில் காற்சட்டை போட்டோரா விவசாயம் செய்கின்ருர்,
--சபேஸ்
மனிதர்கள் நாம்
எதிர்கால சிகரத்தின்
ஒளியினிலே செல்கின்ற
★
மனிதர்கள் நாம் ஈழத்து புவி வெளியில் புது ஒளியை ஏற்றிவைக்கும் இதயங்கள் மத்தியிலே இருக்கின்ற சிறுபொறிகள் இப்புவியில் பெரும் நெருப்பை தோற்றுவிக்கும் பெரும்பணியின் வழியாக எம்பயணம் தொடர்ந்திருக்கும்
-கணேசு
புயலைத் தொடர்ந்து
அந்த மரம் அடியோடு வீழ்ந்துவிடப் போகிறது. சினந்து. கனலான மூச்சுக்கள் புயலாகி விட்டதனுல். உயர்ந்து. பரந்து. செழித்து வளர்ந்துள்ள அந்த மரம். இலைகள் உதிர்ந்து . கிளைகள் முறிந்து. ஆணிவேர் அறுந்து நாளே. நிச்சயமாய் சாய்ந்து விழப் போகிறது.
பாலமுனை பாறுக்- سمبر
மாற்றங்கள். இரத்தச் சிகப்பான வானத்தில் குளித்தெழும் இளம் பரிதியால் மட்டுமே இந்த உலகத்தில் இருளினை அகற்றி இன்பத்தைப் பெருக்கி .
இயங்க வைக்க முடியும்
- 2 –
பேஞ. மனேகரன்

அந்தந்த மாதங்களில் ட கீலகிலும் இலங்கையிலும் நடை பெரும் முக்கிய நிகழ்வுகளை குமரன் எழுதத்தவறமாட்டான். பிற ஏடுகள் போல் நிகழ்வுகளைக் குறிப்பவனல்ல, குமரன்.அந்நிகழ் :வுகளின் பின்னே மறைந்த ருக்கும்
வர்க்கப் போராட்டத்தை வர லாற்று விஞ்ஞான பூர்வமாக குமரன் தர முயல்கிறன்.
இந்த இதழில் மேற்காசிய யுத்தம் பற்றி பெருமாள் விரித் துள்ளார். அரேபியர்கள் வெல்லவேண்டும் என்ற உணர்வு பலரிடை எழலாம். ஆயினும் வெற்றி அத்தனை எளிதல்ல. ஏனெனில் அமெரிக்க ஏகாதிபத்தியமே இஸ்ரேல் ஊடாக நிற்கிறது. அதை அத்தனே எளிதாக வீழ்த்தி விட முடியாது, நீண்டகால மக்கள் யுத்தம், மற்ருெரு வியத்நாம் வேண்டும் என்று பெருமாள் கூறுகிறர்.
ஒரு கொத்தரிசியிலிருந்து இரண்டு கொத்து இலவச அரிசியை 1970ல் எதிர்பார்த்து வாக்களித்த மக்கள் அரைக்கொத்துப் பெறுவது என்பது ஆத்திரமான நிகழ்வே இதையொட்டி அரசு இரு கோட் பாடுகளை முன்வைத்தது: (1)மேலும் கட்ன்பெற்று எம்குழந்தைகளை ஈடு வைக்க மாட்டோம், (2) உற்பத்திப்போர்.
முன்னதில் அரசின் பேக்சு, செயல் ஆகியவற்றில் உள்ள முரண் பாடுகளை தியாகு தெளிவாக்கியுள்ளார். மாதவன் உணவைப்பெருக்க "உழுபவனுக்கே நிலம் வேண்டும்" என்று கூறி பல புதிய கருத்துகளை முன்வைத்துள்ளார். s: a
டாக்டர் விக்கிரமசிங்கா, கெனமன் ஆகியோரிடை ஏற்பட்ட பிரிவின் அடியிலுள்ள சித்தாந்த வேறுபாடுகளை மாதவன் எழுதியுள் ளார். இவை தனிநபர் முரண்பாடுகளல்ல. உள்நாட்டு, சர்வதேச வர்க்க முரண்பாடுகளின் பிரதிபலிப்பாகும்.
அரங்கேற்றம் பட விமர்சனம் மூலம் 'நியூவேவ் என்ற முதலாளித் துவத்தின் புதிய உருவத்தை ஆனந்தி அழகாக அம்பலப்படுத்தியுள்ளார். ஏகபோக முதலாளித்துவம் அல்லது அரசு முதலாளித்துவத்தில் பண்டங்களின் விலைகள் தொடர்ந்து ஏறுகின்றன; பண்டங்களின் உற் பத்தி குறைவடைகிறது. ஏன்? எல்லோரும் எழுப்பும் வினவே. வர்க்க சமுதாயத்தில் இது தவிர்க்க முடியாது என்று மார்க்சிச அறி ஞர், பேராசிரியர் தொம்சன் கூறுகிருர், அவரது வெளிவர உள்ள நூலொன்றின் சுருக்கத்தை "பண்ட உற்பத்தியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் தருகிறது. Y. O
-| 3 |-

Page 3
| * அச்சுக் கலையில்
* ஐம்பது ஆண்டுகள் |
* அனுபவம் பெற்றேர்
குமரன் அச்சகம் | 201, டாம் வீதி : : கொழும்பு-12. ܥ ܢ
தொலைபேசி : 2 388
அழகான
* அவசர
Air 6) urieooT
ع அச்சுவேலைகளுக்கு
. எம்முடன் உடனே தொடர்புகொள்ளுங்கள்!
- 141 -
 

p.
. தியாகு .
. இத்தலைப்பில் பேராசிரியர் தொம்சன் அவர்களின் நூலொன்று அண்மையில் வெளிவர உள்ளது. வெளியானதும் அந்நூலின் முக்கிய பகுதிகளை கு ம ர ன் தரமுயல்வான். இந்நூலின் சாராம்சத்தை பேராசிரியர் தொம்சன் பின்வருமாறு தாமே சுருக்குகிருர்:
பூர்வீக கம்யூனிசத்திலிருந்து வர்க்க சமுதாயத்திற்கு மாறும் காலகட்டத்தினதும் வர்க்க சமுதாய வளர்ச்சியினதும் அடிப்படை பண்ட உற்பத்தியின் வளர்ச்சியாகும். அதாவது, பண்ட உற்பத்தி பயன்படுத்துவதற்கு எதிராக பரிமாறுவதற்காக உற்பத்தி செய்வ தாகும். இவ்வழியாகவே மனிதன் அநாகரிகத்திலிருந்து நாகரிகத்திற்கு உயர்ந்தான். ஆயினும் அதேவேளை பண்ட உற்பத்தியால் ஏற்பட்ட சமூக உறவுகளை அவஞல் கட்டுப்படுத்த முடியவில்லை. பண்ட உற் பத்தியின் படிமுறை வளர்ச்சியினதும் வர்க்க சமுதாயத்தினதும் கடைசிக்கட்டம் ஏகபோக (monopoly) முதலாளித்துவமாகும். இக் கட்டத்தில் பண்ட மூலம் ஏற்படும் பண உற்பத்தி (production of Wealth) பண்ட உற்பத்தியின் மேற்கொண்ட அபிவிருத்திக்குத் தடை ய்ாகிறது; சமுதாயத்தின் வர்க்க அமைப்பு வேகமாக அழிவை நோக்குகிறது. அதேபோல, சோஷலிச புரட்சியில் பண்ட உற்பத்தி தொடர்ச்சியாக கட்டுப்படுத்தப்பட்டு வர்க்கச் சுரண்டலுக்கு முடிவு கொண்டுவரப்படுகிறது. இவ்வழியாக பண்ட உற்பத்தி பரிமாறலுக் காகாது தேவைக்குப் பயன்படுத்துவதற்காகக் கொண்டுவரப்படுகிறது. இதன் மூலம் மனிதன் சமூக உறவுகளைக் கட்டுப்படுத்தி மீண்டும் வருங்காலக் கம்யூனிசத்திற்கு வழிதேடுகிறன்; இங்கு எல்லோருக்கும் பண்டங்கள் ஏராளமாகக் கிடைக்கும்.
பண்ட உற்பத்தி மனிதனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப் ' படுவது சோஷலிச பொருளாதாரமாகும். சோஷலிச ஜனநாயகம் சீன
மக்களது கம்யூன் உதாரணத்தை முன்வைத்து விளக்கப்படுகிறது.
- 5 -

Page 4
மேற்காசியாவில்
இஸ்ரேலின் ஆகும் வர்க்க யூதத்தலைவர்கள் பாஷிஸ்டுகள்
பயங்கரவாதிகள்; இராணுவபலத்தைக் கொண்டு அரேபிய நாடுகளில் நிலம் பிடித்து தம் நாட்டை விஸ்தரிக்கும் நோக்கம் கொண்டவர்கள்.
மேற்காசியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிலைக்களஞக இஸ்ரேல் விளங்குகிறது. அமெரிக்க, ஆங்கில, மேற்கு ஜெர்மனிய மூலதனங்கள் கூட இஸ்ரேலில் ஆதிக்கம் செலுத்துகின்றன . மத்திய கிழக்கு எண்ணெய் செல்வத்திற்கு பாதுகாவலனுக இஸ்ரேல் விளங்குகிறது.
இஸ்ரேல் ஏகாதிபத்திய ஆயுத பலத்தால் சிருட்டிக்கப்பட்ட ஓர் நாடு, அரபு மக்கள் சுற்றிவர பெரிய நாடுகளுடன், பெரிய குடிசனத்துடன் வாழ்ந்த போதும் இஸ்ரேலின் ஆதிக்கத்தை அழிப்பது என்பது எளிதல்ல, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சியிலேயே இஸ்ரேலின் பாஷிஸப் போக்கையும் கட்டுப்படுத்த முடியும்.
ஏகாதிபத்தியத்தை இஸ்ரேலிலிருந்து விரட்டியதும் அரேபியருக்கு விமோசனம் மட்டுமல்ல இஸ்ரேலிய உழைக்கும் வர்க்கத்தவரும் சுரண்டலிலிருந்து விடுதலை பெறுவர். அவர்கள் அரேபிய உழைக்கும் வர்க்கத்தவரின் தோழர்களாவர்.
அரேபிய மக்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை முற்ருக எதிர்க் கின்றனர். ஆயினும் ஜோடான், எகிப்து, சிரியா, லிபியா, ஈராக், சவுதிஅரேபிய ஆளும் வர்க்கத்தைச் சார்ந்த எண்ணெயில் சுரண்டல் பங்கு பெறும் முதலாளிகள் ஏகாதிபத்தியங்களை முற்ருக எதிர்க் கின்றனரா? இந்நாடுகளில் பாலஸ்தீனைப் போல விடுதலை இயக்கங்கள் தோன்ற முடிகின்றதா? வீரவியத்நாமியரின் இயக்கம் போன்று அரபு நாடுகளில் ஏன் தோன்றவில்லை?
பாலஸ்தீன விடுதலை இயக்கம் அரபு நாடுகள் எங்கும் பரவ வேண்டும். அவ்வேளை ஏகாதிபத்தியம், முதலாளித்துவம், நிலவுடைமை ஆகியவை ஒரு புறமும் மக்கள் மறுபுறமுமாக மக்கள் போர் ஆரம்பிக்கும். இது வியத்நாம் போன்ற நீண்டகால யுத்தமாகும். அமெரிக்க ஏகாதிபத்தியம் விரட்டப்பட இஸ்ரேலின் பாஷிலக் கொள்கை வீழ்ச்சியடையும், இஸ்ரேல் மக்கள் அரேபிய மக்களுடன் ஒன்ருவர்.
-1 6 1

சில வாரங்களில், சில மாதங்களில் இஸ்ரேலியரை வீழ்த்திவிட முடியும் என்று ஆசைப்படுபவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை சில மாதங்களில் ஒழித்துவிடலாம் என நம்புபவர்களாகும். நீண்ட காலத்திற்கு அரேபியர்கள் யுத்தத்திற்குத் தயாராகும்போது தான் ஏகாதிபத்திய ஆதிக்கத்தையும் சிறிது சிறிதாக வீழ்த்த முடியும்.
ஐ. நா. சபை 1967ல் இஸ்ரேல் பிடித்த அரேபியப் பகுதிகளை விட்டு வெளியேறி விடவேண்டும் என ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. இன்று வரை இஸ்ரேல் இதை நிறைவேற்றவில்லை. இப்போது அப் பகுதிகளை எகிப்தியர் விடுவிக்க முயலும் போதும் அமெரிக்க செனட் சபை அரேபியர் ஒக்டோபர் 6ம் திகதி இருந்த இடத்திற்குத் திரும்பி விடவேண்டும் என கூக்குரல் எழுப்புகிறது. அரேபியர்களை வன்மை யாகக் கண்டிக்கிறது. இதிலிருந்தே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிலைக்களனை நன்கு அறிந்து கொள்ள முடியும். இவர்களை அரேபிய ஆளும் வர்க்கத்தவர் முற்ருக எதிர்ப்பார்களா? தமது எண்ணெய் வளங்களை விட்டுத்துரத்துவார்களா? வியத்நாம் போல நீண்டகாலப் போராட்டத்திற்கு தயாராவார்களா? இவற்றிலிருந்தே வெற்றி தோல்வியைக் கணிக்க முடியும், Ο
பொய்யும் GLDUILLib! ேேயா, பெ,
அவன் ஒரு துறவி. இவ்வுலக பந்த பாசங்களை வெறுத்த வன். அவன் ஒரு மலச்சரிவில் நின்று பரமானந்தத்தைப்பற்றி யும் இவ்வுலக நிலையாமை பற்றியும், இவ்வுலக வாழ்வை நாம் ஏன் நம்பக்கூடாது. ஏன் வெறுக்க வேண்டும் என்று போதித்து, கடவு ளுடன், இறைவனுடன் சேர்வதே, ஐக்கியமாவதே பரமானந்தம், நித்தியானந்தம், என்று அடிக்கடி அழுத்திக்கூறிக்கொண்டிருந்தான். மக்கள் பயபக்தியுடன் துறவியின் பிரசங்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
திடீரென ஒரு பெரும் இரைச்சல் ஒலி எழுப்பியது.
"ஐயோ! என்னைக்காப்பாற்றுங்கள்
என்னைக்காப்பாற்றுங்கள்!'" என்று துறவி ஓங்காரமாகக் கத்தினர். மக்கள் குடல் தெறிக்க ஓடிக்கொண்டிருந்தார்கள். துறவி நின்ற மலைச்சரிவு இடிந்து விழுந்து அவர் அதற்குள் புதைந்து கொண்டிருந்தார். O
ー/7 |-

Page 5
நிலவுடைமை, முதலாளித்துவ அமைப்புகளின் வீழ்ச்சியை யும் அழிவையும் அவர்கள் படைத்துவரும், வளர்த்துவரும் கலே, இலக்கியங்கள் மூலமாகவே எளிதில் அறிந்துகொள்ளலாம். முதலா" ளித்துவ நாடுகளில் "நியூவேவ்" என்ற பெயரில் புதிய கலை, இலக்கிய உருவங்கள் தோன்றி வளர்வதாக எம்நாட்டு விமர்சகர்கள்கூட பிர மாதப்படுத்துவதை யாவரும் அறிந்திருப்பர். இவ்வளர்ச்சி எம் நாட் டில் தோன்றவில்லையே என்று முன் ஏங்கியவரும் உளர். இன்று தோன்றிவிட்டதாக ஆரவாரிப்பவர் பலர்.
தமிழ் நாட்டில் ஜெயகாந்தனும் அவரது சீடர்களும் இத்துறை யில் ஆர்வம்காட்டினர். விகடன் இன்று "நியூவேவ்" பற்றி அதிகம் விமர்சிப்பது மட்டுமல்ல கதைகள், கதைக்கேற்ற சித்திரங்களையே இப் பாணியில் வெளியிடுவதாகக் கூறப்படுகிறது. மார்க்சிச, லெனினிஷ கோட்பாடுகளை முன்வைத்து இவற்றை ஆழ்ந்து நோக்குபவர்கள் நில வுடைமை, முதலாளித்துவ அமைப்புகள் உக்கி, உழுத்து சரிந்து வரு வதை இக்கலை, இலக்கியங்கள் மூலம் காண்பர்.
அண்மையில் பிரமாதப்படுத்தி "நியுவேவ் பாணியில் வந்திருக் கும் சிறந்த படம் என்று முதலாளித்துவ ஏடுகளால் பாராட்டப்பட்ட அரங்கேற்றம் என்ற திரைப்படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நில வுடைமையில் ஊறி அவ்வமைப்பைப் பாதுகாக்கும் மதத்தில் ஊறிய வைதீக ஆசார பிராமணக் குடும்பம் வறுமையில் உழலும்போதும் நிலவுடைமைக்குரிய ஆசார, ஒழுக்கங்களைப் பேணும் பிராமணத் தந்தை; மேல்மட்ட அமைப்பான மதபக்தி, ஆசார, ஒழுக்கங்களின் வலிமை; இவற்றைப் படத்தின் ஆரம்பத்திற் காணலாம்.
முதலாளித்துவ சமுதாயத்தின் தாக்கம் பிராமணப் பிள்ளைகளின் படிப்பார்வம், தனியுரிமை ஆசை, எண்ணங்கள்மூலம் பிரதிபலிக்கிறது. இரு சமுதாய அமைப்புகளிடையேயும் முரண்பாடு, இயைபின்மை எழுகிறது. மூத்த பெண் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக வீட்டை விட்டு கூலி அடிமையாகிருள். தம்பிக்கு மருத்துவக் கல்லூரியில் இடம்பெற பட்டணம் செல்கிருள். நிலவுடைமையில் பெண்களின் நிலைக்களஞகக் கொள்ளப்படும் கற்பை இழக்கிருள், பின் அதையே தொழிலாக்கி குடும்பத்தின் வாழ்க்கைத்தரத்தை மிக உயர்த்தி முத லாளித்துவ சமுதாயத்தில் கொள்ளப்படும் அந்தஸ்துக்குக் கொண்டு வருகிருள். ஒழுக்கம் கெட்டவள் என தம்பிமாரும் பெற்ருரும் அறிந் ததும் தவருண வழியில் தேடிய பணத்தை வைதீகக் குடும்பத்தவர்
- 8 7
 

திரஞ்ன பழைய காதலன் பிராம்ணத்திக்கு வாழ்வளிக்க முன்
தபோதும் அவள் வாழ விரும்பவில்லை.
இப்படக்கதை தமிழில் திடீரென தோன்றியதல்ல. மலையாளம், 岛 岛 தான ܝܼܖ ܵ
கன்னட் மொழிகளில் இதேபோன்ற நாவல்கள், திரைப்படங்கள் ஏற்
கனவே தோன்றிவிட்டன. அதன் தாக்கம் தமிழ் நாட்டை விட்டு விட முடியாது. VA
... குடும்பத்தைக் காப்பாற்ற விபசாரத்தையே ஒரு தொழிலாகக் கொள்ளலாம்; விபசாரம் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற கருத்தை இப்படம் புகட்டுகிறது. முதலாளித்துவ சமுதாய அமைப்பு உடைத்தெறியப்படவேண்டும். சோசலிச சமுதாய அமைப்பில் இத் தகைய இழிவான தொழில் கிடையாது என்று திரைப்படத்தில் எங்கும் கோடிட்டுத்தானும் காட்டப்படவில்லை. திரைப்படக்கலையின் வளர்ச்சி என்று காட்டப்படும்போது இச்சமுதாயத்தின் சீர்கேட்டை யும், சிதைவையுமே இப்படத்தின்மூலம் காணமுடிகிறது.
இத்திரைப்படத் தயாரிப்பாளர், டைரக்டரான கே. பாலச்சந்தர் கருணுநிதியின் தி. மு. க.வை சார்ந்தவர். பிராமணியத்தின் சீர் கேட்டை அழகாகச் சித்தரிக்க முயன்றுள்ளார்! தி.மு.க.வின் நேர்
மையையும் குடும்பத்திட்டத்தையும் பிரசாரம் செய்கிருர், அதன லேயே திரையிடவும் அனுமதிபெற்ருர், விபசாரம்செய்து குடும்பத்
தைப் பேணும் மகள்மீது அனுதாபமும் இரக்கமும் ஏற்படுகிறது. எதிர்மறையாக நிலவுடைமை, முதலாளித்துவ அமைப்பின் அலங்
கோலத்தை இப்படம் சித்தரிப்பதாகவே கொள்ளவேண்டும். விபசா ரிக்கும் திருமண வாழ்வு கிட்டும்போது அதை ஏற்றுக்கொள்ளும் முடிபைக் கொண்டுவரும் துணிச்சல் கே.பாலச்சந்தருக்கு ஏற்படவில்லை.
இத்தகைய கதைகள், படங்கள் இயற்பண்புவாதத் (Naturalism), −
தைச் சார்ந்தவை. முதலாளித்துவ கலே இலக்கியத்தில் கற்பனுவாதம் (Romantism) அலுப்புத்தட்ட அதன் அடுத்த கட்டமான இயற்பண்பு
வாதம் தோன்றுகிறது. சமுதாயத்தில் நிலவுவதை அப்பட்டமாகக் காட்டுவதே கலையின் வளர்ச்சி என்று கொள்ளப்படுவது; கற்பணுவாத காலகட்டத்தில் கூறுவதற்கு, காட்டுவதற்கு அஞ்சப்படுவதை இக்கட் . டத்தில் காட்டுவர். இத்தகைய சமூக அமைப்பு அழிக்கப்படவேண்' டும் என்ருே, சோஷலிச சமுதாயத்தில் இத்தகையவை நிகழமுடியாது. என்று கூறி அவ்வளர்ச்சிக்குக் கோடிட்டுக் காட்டுதற்கோ இவர்கள்
முன்வரமாட்டார்கள்; "நியூவேவ்" என்பதும் முதலாளித்துவ அமைப்
பைப்பேணும் கலை, இலக்கிய மரபேயாகும். முரண்பாடுகளையும் சமூக
4.

Page 6
எங்கள் குழந்தைகளே ஈடு வைக்க மாட்டோம்'
'உண்மையில் நாங்கள் பிறநாடுகளையும் கடன்தரும் நிலையங்களையும் நீண்டகாலம் நம்பியிருந்துவிட்டோம், எங்கள் குழந்தைகளை இனிமேலும் ஈடுவைக்கமாட்டோம். தன்நம்பிக்கை, தைரியம், துணிபு கொள்வோம்.'
நமது பிரதமர் 1-10-73 ல் உணவு உற்பத்தியை உயர்த்துவ தற்காக நாட்டு மக்களுக்கு விடுத்த அறிக்கையில் இவ்வாறு கூறி யுள்ளார். இலங்கை மக்கள் வரவேற்க வேண்டிய பேச்சு, எம்மால் எம் நாட்டைப் பேணமுடியும்; எம் தேவைகளை நாமே உற்பத்தி செய்வோம்; எந்த நாட்டிற்கும் அடிமைப்படோம். இதற்காக எத்த கைய கஷ்டத்தையும் தாங்கிக்கொள்வோம்.
பிற நாட்டாரிடம் கடன்பட்டதுபோதும். அதற்கு வட்டி
செலுத்துவதற்காக எம் நாட்டவர் உழைத்து அலுத்துவிட்டனர்.
செட்டி வாழ ஏழைதுள் உழைப்பதுபோல ஏகாதிபத்திய, முதலா ளித்துவ நாடுகள் ழ் நாம் உழைத்து அலுத்துவிட்டோம். எங்கள் குழந்தைகளும் தொடர்ந்து பிற நாட்டவர் வாழ உழைக்க வேண்டுமா? எம் அத்தியாவசிய தேவைகளையெல்லாம் நாமே உற்பத்திசெய் வோம். உணவு, உடை, வசிப்பிடம். ஆடம்பர பொருட்களை யெல்லாம் விட்டுவிடுவோம்.
வெளிநாட்டுக்கடன் மட்டுமல்ல. வெளிநாட்டு மூலதனங்களும் அகற்றப்படவேண்டும். மூலதனம் லாபத்தைச் சம்பாதிப்பது. வட் டியிலும் பார்க்க வலிவானது. எமது நாட்டு வளங்களையும் உழைப் பையும் சுரண்டுவது. ஆகவே நாட்டு மக்கள் தொழிலாள விவசா யிகள் ஒன்றுபட்டு வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி உழைப்பதற்கேற்ற உண்மையான பலன் கிடைக்க வேண்டும். ஒருவர் உழைப்பை மற் றவர் திருடுவது, சுரண்டுவது முற்ருக ஒழிக்கப்படவேண்டும். அரசின் பேச்சில் கொள்கையில் செயலில் உண்மையும் வாய்மையும் உள்ளதா? சலுகைகளை நிறுத்தியது பாராட்டத்தக்கது. இனிமேல் கடன் தரு வோம் என உலகவங்கியோ, பிற நாடுகளோ தரின் அரசு முற்ருக மறுத்து விடுமா? இலங்கைக்கு உதவும் நாடுகளின் கூட்டம் ஆண்டுதோறும் நடைபெறுமே. நாம் அங்கு கடன் பெறமாட்டோம் உண்மையா?
ஆரம்பத்தில் குறிப்பிட்டதைப் பிரதமர் கூறி 5நாட்கள் ஆகவில்லை. 'பிறநாட்டவர் முதலீடுகளுக்கு நாம் பாதுகாப்பளிப்போம்" ரத்தோட்டையில் 5-10-73 ல் புதிய மட்பாண்டத் தொழிற் சாலையைத் திறந்துவைத்துப் பேசும்போது எமது பிரதமர் குறிப்பிட் டார். இது இலங்கை அரசு நொறிரேக் லிமிடெட் என்ற யப்பா னிய தனியார் கம்பனியின் மூலதனத்துடன், இணைந்து ஆரம்பிக்கப் பட்ட கைத்தொழிலாகும். - தியாகு
--- / 10 || نشست.

வெளிவந்துவிட்டது!
தமிழவேள் எழுதிய 60 Ꮷ Ꭿl Ꮷ tᎠ lllll வினு - விடைமுறை விளக்கம்
க. பொ. த. 1974 முதல்
* சுருக்கமுறை, விரிமுறை வினவிடைமூலம் புதிய பாடத் திட்டம் முழுவதையும் எளிதில் கற்க உதவும் ஒரு நூல்.
* சைவசமய உண்மைகளையும் வரலாறுகளையும் உள்ளடக்
கிய அரிய நூல்.
பரீட்சையில் விசேட சித்திபெற விரும்பும் மாணவர்க்கு சிறந்ததோர் துணை நூல்.
உயர் வகுப்புகளில் பல்லாண்டு கற்பித்த அனுபவமும் புதிய பரீட்சை முறைகளில் ஈடுபாடும் அனுபவமும் கொண்ட ஆசிரியரால் எழுதப்பட்டது.
விலை : ரூ. 5-00
வெயிட்டாளர் :
விஜயலட்சுமி புத் தகசாலை 248, காலி வீதி : : வெள்ளவத்தை
கொழும்பு-6.
தொலைபேசி : 88930

Page 7
பதில் கேள்வி,பதில் கேள்வி பதில் கேள்ன் பதில்
கே:
கே. பாராளுமன்றப் புதிய கட்டிட வேலை ஏன் நிறுத்தப்பட்டது?"
நெருக்கடி வேளையில் அதற்கு அண்மையில் அவசியம் ஏற்படாது
என்று அரசு கருதியிருக்கலாம். . . . அரசு முதலாளித்துவத்தில் உற்பத்தி தேக்கமடைகிறது, இதனல் தான் பண்டங்களின் பற்ருக்குறை, விலையேற்றம் ஏற்படுகிறது என்கிறேன்? க. முத்துவேல்-கண்டி வர்க்கங்கள் உள்ள சமுதாயத்தின் உச்சக்கட்டம் ஏகபோக முதலாளித்துவம் (Monopoly Capitalism) அல்லது அரசு முத
லாளித்துவம் (State Copitalism) ஆகும். இவ்வமைப்பில் பண்ட உற்பத்தி தேக்கமடைகிறது. இதனுல் முரண்பாடுகள் தோன்றி
வர்க்கப்போராட்டம் வலுவடைந்து சோஷலிச உற்பத்தி முறைக்கு வழிகாட்டுகிறது. மார்க்ஸிய அறிஞர் ஜோர்ஜ் தொம்சனின்
கருத்தை பக் 5 இல் பார்க்க.
(g O
d 671 O
கே:
கே:
பிற நாடுகளின் மூலதனத்தை வரவழைத்து, அவற்றுடன் இணைந்து, உள்நாட்டில் உற்பத்தியில் ஈடுபடுவதா அல்லது கட
னுதவி பெறுவதா ஆபத்தானது? நி, சிவகாமி-யாழ்.
மூலதனத்தை நுழைய விடுவதே ஆபத்தானது. மூலதனம் oft மாகச் சுரண்ட வாய்ப்பளிக்கிறது. கடனுதவியிலுள்ள ஆபத் துகளை அரசு உணர்ந்திருப்பதாகக் கூறிக்கொள்கிறது. கடனுதவி
இருவகைப்படும் திட்டக்கடனுதவி, பண்டக்கடனுதவி. பண்
டக்கடனுதவி முற்ருக தவிர்க்கப்பட வேண்டும். திட்டக்கடனு தவி நீண்டகாலத்திற்கு குறைந்த வட்டி விகிதமாயின் நாட் டின் வளர்ச்சிக்கு நலன்திரலாம். சீன மட்டுமே இத்தகைய உதவி தருகிறது. உலக வங்கி செட்டிகளிடம் அல்லது "சேட்" டுகளிடம் கடன் பெறுவது போன்றது. பொலிஸ், முப்படைகளை அரசுகள் ஏன் விஸ்தரித்துக்கொண்டு செல்கின்றன? கி, ஆன்ந்தி-கொழும்பு.
==
-م
ஆளும் வர்க்கம் மக்களுக்கு அஞ்சுவதாலேயே தம் பாதுகாவ
லர்களை தொடர்ந்து விரிவாக்குகின்றது.
- 12 -
வி பதில் கேள்வி? பதில் கேள்வி பதில் கேள்வி பதில் கேள்வி பதில் கேள்வி? பதில் கேள்வி
 
 
 
 
 
 
 
 
 
 
 

அரசில் தேசிய முதலாளித்துவத்தன்மையிலும் பார்க்க தரகு முதலாளித்துவத்தன்மை அதிகரித்துவருகிறது என்பதற்கு எச். கரிரணங்கள்ைக் கூறமுடியும்? கந்ேதரம் திரும்லே. : ( ) உள்நாட்டு தேசிய முதலாளிகளின் தோட்டங்களை சுவீ
கரிக்கும் வேளையில் ஸ்ரேலிங் கம்பனிகளில் கைவைக்கவில்லை. (2) பிறநாட்டு வங்கிகளைத் தேசியமயமாக்கும் முன்னேய கொள்கை கைவிடப்பட்டுள்ளது. (3) வெளிநாட்டுக்கடன்களின் அதிகரிப்பு. (4) வெளிநாட்டு மூலதனங்களுக்கு பாதுகாப்பு.
(5) சர்வதேசக் கம்பனிகள் எமது கைத்தொழில்களில் செலுத்
தும் ஆதிக்கம் (6) உள்நாட்டில் மூலதனவரியும் தனியார் १ . . " । முயற்சிகளுக்கு ஊக்கமின்மையும். (7) பெருங்கைத்தொழில் தனியார் பிறநாட்டு கடனுடன் இணைவதைத்தடுத்து அரசு பிறநாட்டுதவியுடன் நடாத்துவது (8) மேல்மட்ட அமைப்பில் கல்வியில் ஆங்கில மொழியின் புத்துயிர்ப்பு, மேல் நாட்டு கலை, கலாச்சாரங்களின் தொடர்ந்த ஆதிக்கம்.
வேல்" பதில்!
கே. இஸ்ரேலின் ஆளும் வர்க்கம் எது?
- - - அ. உவைஸ்-கண்டி. ப; பெருங் கைத்தொழிலதிபர்களும், யூத உயர் வகுப்பு ராணுவ,
அரச உத்தியோகத்தருமாவர். உற்பத்திச் சாதனங்கள் அரசு யந்திரத்தின் ஆதிக்கம், பொருளாதார, அரசியல், சமூக,
கலாச்சார அமைப்புகள் அனைத்தும் இவர்கள் கட்டுப்பாட்டி லேயே உள்ளன. வைரம், எலக்ரோனிக், யுத்த தளபாடங்கள்,
எண்ணெய் சுத்திகரிப்பு, உலோகம், அச்சிடுதல், கனரக யந்தி
ரம், ஆடை, ரப்பர்த்தொழில் ஆகியன அதீத லாபந்தரும் பெருங்கைத்தொழில்களாகும். மேற்கு ஜெர்மனிய, ஆங்கிலேய
அமெரிக்க பெரு முதலாளிகள் மேற்குறிப்பிட்ட கைத்தொழில்
வில் பங்கு பெறுகின்றனர், . . . . . . . . . . . . . . . "
இகள்வி: பதில் கேள்வி பதில் கேள்வி பதில் கேள்வி பதில் கேள்வி பதில் கேள்வி பதில் கேள்வி பி.

Page 8
அலென்டேயின் வீழ்ச்சி தரும் பாடங்கள்
* கலி "
டாக்டர் என். எம். பெரெரா அலென்டேயின் வீழ்ச்சியை ஒட்டி வெளியிட்ட அறிக்கையின் சில முக்கிய பகுதிகள் வருமாறு:
(1) அலென்டேயின் வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலுமிருந்து நாம் பல பாடங்கள் கற்க உள்ளன. முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதிக்கத்தை உடைப்பதற்கேற்ற வழிகளைக் கையாளாவிடின் தேர்தல் மூலம் வெற்றி பெற்றுவிட்ட காரணத்தினல் தொடர்ந்து ஆள முடியும் என்று எண்ணி விடப்படாது. முதலாளித்துவ ஆதிக்கத்தை உடைப் பதை கவனமாக, ஒவ்வொரு காலடியும் விழிப்பாக முன் வைத்தே முன்னேற வேண்டும்.
தேர்தல் மூலமான சமுதாய மாற்றத்திற்கு எல்லைகள் உண்டு. ஏனெனில் முதலாளித்துவத்தை முறியடிக்கத்தக்க வர்க்க உணர்வு முற்றவில்லை.
(2) மாற்றத்தை நிறுத்திவிடாது தொடர வேண்டும். மூலதன ஆதிக்கத்தை உடைப்பதில் முன்னேற்றம் தொடர்ந்து இருக்க வேண்டும்..... பிரசாரமே சமுதாய மாற்றத்தின் திறவு கோல்.
(3) முப்படைகளை அளவுக்கு மீறி விஸ்தரிக்கப்படாது. சிவில் ஆட்சியின் கீழேயே இராணுவம் எப்பொழுதும் இயங்க வேண்டும். அலென்டே அமைச்சரவையில் இராணுவத்தினரைச் சேர்த்தது பெருந் தவருகும். ' w
குறிப்பு: (1) முதலாளித்துவத்தை தேர்தல் மூலம் வெற்றி பெற்று அழித்துவிடமுடியும் என்ற நம்பிக்கை தொனிக்கிறது. மார்க்சிச சித்தாந்தப்படி இது சாத்தியமல்ல. உலகில் எந்த நாட்டிலும் தேர்தல் மூலம் வெற்றி பெற்று சோஷலிசம் நிலை நாட்டப்படவில்லை.
(2) மூலதனத்தை உடைப்பதன்மூலம் மட்டும் முதலாளித் துவத்தை அழித்துவிட முடியாது. பூஷ்வா மனுேபாவம், சித்தாந்தம் தொடர்ந்து பூஷ்வா வர்க்கத்தவரிடை நிலைத்து, எதிர்ப்புரட்சிக்கு தூண்டவே செய்யும். புதிய ஜனநாயகப் புரட்சியின் பின்னர் சீனுவில் கலாச்சாரப் புரட்சியே நடாத்த நேரிட்டது.
-/ 14 /.است

(3) மக்கள் எழுச்சி வளர ஆளும் வர்க்கம் பொலிஸ், முப் படைகளைப் பெருக்கி பாதுகாப்புத் தேடுவது இயல்பே. ஆளும் வர்க்க நலன் பேணும் தேர்தல் மூலம் பதவி பெற்ற அலென்டேயால் முப்படைகளை ஒதுக்கிவிட முடியவில்லை; அவர்களே ஆளும் வர்க்கப் பாதுகாவலராவர்; தமது பதவிக்காலத்தை நீட்டுவதற்காகவே அலென்டே முப்படைகளை அமைச்சரவையில் சேர்த்தார். முதலாளித் துவ பாதையை நம்புவோர் அதே வழியேயே செல்ல முடியும். சீர்திருத்தம் செய்ய முயலலாம். பாட்டாளியின் புரட்சியைக் கொண்டு
வர முடியாது. R
* சோஷலிச அமைப்பு தவருது முதலாளித்துவ அமைப்பை கைப்பற்றிக்கொள்ளும். இது நியதி; தனி மனித விருப்புக்கு அப் பாற்பட்டது. வரலாற்றுச் சக்கரங்களைப் பிற்போக்குவாதிகள் எவ் வளவாகப் பின்னுேக்கி இழுத்தாலும் அண்மையிலோ, பிந்தியோ புரட்சி நடைபெற்று வெற்றியடைவது தவிர்க்கமுடியாதது. . மாவோ
விரைவில் வெளிவருகிறது !
இலங்கையின் தேசப் படப் புவியியல்
பேராசிரியர் க. குலரத்தினம் அவர்களது முன்னுரையுடன்
ඒක-liquෂි]. s
G. A. O, க. பொ. த. உயர்தர, சாதாரண வகுப்புகளுக்கு மட்டுமன்றி கீழ்வகுப்புகளுக்கும் பயன்படத்தக்க உயர்ந்த நூல். கிடைக்குமிடம்:
விஜயலட்சுமி புத்தகசாலை 248, காலி வீதி, வெள்ளவத்தை,
கொழும்பு-6.
தொலைபேசி 88930
- I 15 /ー

Page 9
சித்தாந்தமே
திறவுகோல்
“மக்கள் உடல் நலத்துடன் நன்கு உண்டு புதிய சீன மக்கள் என்ற உணர்வுடன் தங்கள் கடமைக்ளேச் செய்கின்றனர். 40 ஆண் டு
களின் முன் இருந்த கிராமப்புறத்துடன் ஒப்பிடும்போது நம்ப
முடியாத அதிசயமாகவே இருந்தது. என்றும் நடைபெற Փգաn 5 புரட்சியே. 1930, 1940ல் வீழ்ந்துகொண்டிருந்த சீனவை 1972 யூனில் ஒற்றுமையுடன் இணைந்திருந்த நாட்டைப் பார்த்ததும் இதுவே என் முதல் மதிப்பாயிருந்தது. நாடு முழுவதும் முடிவற்ற கிராமப்புறங் களில் நடந்திருக்கும் அபிவிருத்திக்கு விளக்கம் கேட்பது இயல்பே. இத்தகைய பெரும் வியப்புறு வளர்ச்சி எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது? எவ்வாறு வழிகாட்டப்படுகிறது? இதைக் கட்டுப்படுத்த முடியுமா? இங்குதான் சிந்தாந்தப் பிரச்னைபற்றி எண்ணத்தோன்றுகிறது. அமெரிக் கரால் இதைப் புரிந்துகொள்வது மிகக்கடினமே! ‘ஹார்வேட் பல்கலைக் கழகத்துப் பேராசிரியர் ஜோன் பெயர்பாங் தனது புதிய சீன அனுபவத்தை இவ்வாறு விபரித்துள்ளார்.
"மக்களுக்குச் சேவை செய்" என்பதே சீனுவின் பிரதான சித்தாந்த சுலோகமாகும்.
*திறமை வாய்ந்தவை வாழுகின்றன" என்ற முதலாளித்துவ சுலோகத்தோடு பழகியவர்களுக்கு தனிமனிதனிலும் பார்க்க கூட்டு. நலன் முன்வைப்பது பயபக்தியான உணர்வு தரலாம். சீன சோஷலிச சமூகத்தில் வாழ்க்கையின் திறவுகோல் இதுவே. புரட்சி என்பது பொருளாதாந்த்தில் மட்டுமல்ல; மனிதனது சிந்தனை, பழக்கம், நோக்கம், #ီနှီး உணர்வு இவற்றுக்கும் மேலாக சமூக அனுஷ் டானத்திலும் "புரட்சி வேண்டும் என மாவோ சீன மக்களுக்குக் கற்பித்தார். உற்பத்திச்சாதனங்கள், விநியோகம் ஆகியவை தனிச் சொத்தாயிருப்பதை தடை செய்வது மட்டும் போதாது என்ருர் "மாவோ, சோஷலிச பொருளாதார அடிப்படையை அமைத்து பண்பாட்டு மேல்மட்ட அமைப்பு அதற்கு இயைந்தவாறு அமைந்து கொள்ளவிடுதல் போதாது. முதலாளித்துவத்திலிருந்து வந்த ஒழுக்க முறைகளை, கொள்கைகளை எவ்வாறு மாற்றுவது என்பதை மக்கள் கற்றுக் கொள்ளாதவரை சோஷலிசத்தைக் கட்டி எழுப்பவோ, நிலை
 

நி தவோ, முடியாது. சோஷலிசம் என்பது வெறும் உற்பத்தி, வாழ்க்கைத்தரம், வசதிகள் அல்ல; அதிக உற்பத்திக்கு வாய்ப்பான அமைப்பு என்பது மட்டுமல்ல; சோஷலிசம் என்பது ஒரு முழுமையான வாழ்க்கைமுறை; மக்களிடை ஏற்படும் முரண்பாடுகளை நினைவு பூர்வமாக படிமுறையாக தீர்ப்பது; நாள்தோறும் கடைப்பிடிக்கும் சமூக அனுஷ்டானத்தின் மூலம் சமூகத் தேவைகளுக்கு முடிவு காண்பது. பேராசிரியர் பெயர்பாங் சீ ஞ வி ன் சரியான சிந்தாந்தமே வியக்கத்தக்க அபிவிருத்திக்கு திறவுகோல் என்று சரியாகவே விடை கூறியுள்ளார்.
இந்த உண்மை மிகத் தெளிவானது, வாட்டர் கேட் விவகாரம் ஆதிக்கப் பசி கொண்ட சில அரசியல் வாதிகளின் அம்பலமல்ல, முதலாளித்துவத்தின் முழு உருவத்தையும் அது காட்டி நிற்கிறது; சோஷலிசத்தில் லஞ்சம் ஊழல்களை மக்களே களைந்து கொள்வர். இத்திறமையை சீன காட்டி நிற்கிறது:
விரோட் இசீட்"
ஜனவரி 73 முதல் குமரன் விலை :
தனிப்பிரதி சதம் 30 அரைஆண்டுச் சந்தா 6 இதழ்கள் ரூ. 2/- ஆண்டுச் சந்தா 12 இதழ்கள் ரூ. 4/- ஒர் ஆண்டிற்கு 6 சந்தா ரூ. 20/-
ஐந்து பிரதிகளுக்குமேலாக ஆங்காங்கே வரவழைத்து விற்பனை செய்ய விரும்புவோர் உடன் தொடர்பு கொள்க. இவர்களுக்கு வாய்ப்பான விசேட சலுகைகள் உள்ளன.
நிர்வாக ஆசிரியர், குமரன், 201, டாம் வீதி, கொழும்பு-12
மலிவு விலையில் முன் பிரதிகள்
25 இதழ்கள் (1 - 25) தனித்தனி ரூ. 5.00 25 இதழ்கள் (1 - 25) பைன்டு செய்தபடி ரூ. 6.00
- 17 -

Page 10
வெளிவந்துவிட்டன
புலவர் தமிழவேள் எழுதிய
தமிழ் இலக்கியத் தொகுப்பு - வினுவிடை ரூ. 375 தமிழ் இலக்கியத் தொகுப்பு - விளக்கம் ரூ. 5/50
க. பொ. த. (9-10) வகுப்பு -"அ" பாடத்திட்டம்
பொறியியலும் சடப்பொருட்களின் இயல்புகளும்
MECHANICS & PROPERTIES OF MATTER
ஜி. சி. ஈ. சாதாரணம், உயர்தர வகுப்புகளில் பெளதிகம், பிரயோக கணிதம்
ஆகிய பாடங்களில் பயன்படத்தக்க நூல்
பரீட்சை மாதிரி வினு - விடைகளையும் கொண்டது
இ வே. இலகுப்பிள்ளை B. Sc. (Hons.) இரத்தினு தனபாலசிங்கம் B. Sc.
டாக்டர் மகேசன் ராசநாதன் எழுதிய அறிவுக் களஞ்சியம் (Junior Encyclopaedia in Tamil)
es. 5-50 பா. பாலேஸ்வரி எழுதிய
சுமைதாங்கி
e5. 1-90
விஜயலட்சுமி புத்தக சாலை 248, காலி வீதி, - கொழும்பு-6
, தொலைபேசி : 88930
- 1 18 1

giff b if SIT a c. 4 - DO OOOO
உள் கட்சிப் போராட்டங்கள் தனி நபர் முரண்பாடுகளல்ல. இவற்றிற்கு வர்க்கப்பிளவு, சித்தாந்தம், சர்வதேச அரசியல் தொடர்புகள் காரணமாகின்றன.
டாக்டர்விக்கிரமசிங்கா, கெனமன் பிரிவுக்கும் இத்தகைய சக்திகளே காரணமாகும். இலங்கை இந்துசமுத்திரத்தின் ஒரு கேந்திரஸ்தானமா கும். இந்தியாவின் அண்மையில் உள்ளதீவு. இங்கு சீனுவின் தொடர்பு வலுத்து வருவதை சோவியத் ரஷ்யாவும் இந்தியாவும் விரும்பவில்லை. சோவியத் ரஷ்யா, இந்தியாவுடன் எமது வியாபாரம், கடனுதவி, முதலீடு ஆகியவற்றை வலுப்படுத்தவேண்டும் என்பதே டாக்டர் விக்கிரமசிங்கா குழுவினரின் சித்தாந்தமாகும்.
ஆளும் வர்க்கத்தவருடன் அண்டியிருப்பதே தற்போதைய மொஸ்கோ சார்புடைய கட்சிகளின் கொள்கையாகும். சோவியத் ரஷ்யாவும் இதையே வேண்டுகிறது. அப்படியிருந்ததும் டாக்டர் விக்கிரமசிங்கா குழுவினர் ஏன் வெளியேறினர்? சீனுவுடன் எமக்குள்ள தொடர்பை முற்ருக முறியடிக்க வேண்டுமென்பதே அவர்கள் கருத் தாகும். அரசிடம் ரஷ்யா சில சலுகைகள் பெறுவதிலும் பார்க்க சீன உறவை முறிப்பதே முக்கியமாகும்.
கெனமன் குழுவினர் தற்போது பெற்றுவரும் அரசியல் ஆதிக் கத்தை விட்டுவிட விரும்பவில்லை. அதற்காகவும், சோவியத் ரஷ்யா வின் நலன்களைப் பேணவும் ஒன்றியிருக்கின்றனர்.
திரிபுக்கொள்கைகள் மிக விசித்திரமாக இயங்கத்தக்கவை. அடுத்த தேர்தலில் யு. என். பி. வெற்றிபெறின் சோவியத் ரஷ்யா விடமே சரணடையும், அமெரிக்கத் தொடர்பை குறைத்துக்கொள் ளலாம். இதை நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்தின்போது யு. என். பி. தலைவர் ஜே. ஆர். ஜயவர்த்தன மறைமுகமாகத் தெரிவித்தார். பிரெஷ்னேவிடம் கேட்கின் எமது உணவு நெருக்க டியை உடன் தீர்த்துவிடுவார் என்று கூறிஞர்.
இந்திய, ரஷ்யப்பாதையில் யு.என்.பி. நிச்சயமாக அணி திரளவே செய்யும். அவ்வேளை டாக்டர் விக்கிரமசிங்காவின் கட்சியினர் யு என். பி.யுடன் சேர்ந்துகொள்ளமாட்டார்கள் என்பது என்ன உறுதி?
திரிபு சறுக்குமரம் போன்றது. விஞ்ஞான கோட்பாடுகளின் பிடியற்றது. அவ்வழி நிற்போர் எங்கே சென்று இறங்குவார்கள் என்று திடமாகக் கூறிவிடமுடியாது. - மாத்வன்
- 19 |-

Page 11
**"
ஒரு வேட்டைக்காரன் தன் வீட்டில் ஆடுகளையும், கோழிகளை யும் அவற்றுடன் ஒரு நாயையும் கொண்டுவந்து வளர்த்தான். ஆடு களும், கோழிகளும், நாயும் ஒன்ருக வாழ்த்து வந்தன. அவையெல் லாம் நல்ல சிநேகிதமாயின. ஒருநாள் வேட்டைக்காரன் ஒரு . نائه டுக்குட்டியைப் பிடித்து, தனது உணவுக்காக வீட்டுக்குப் பின்னல் வைத்து கொன்று கொண்டிருந்தான். அதை ஒரு சேவல் கண்டு
விட்டது. தம்மோடு வாழ்ந்த
ஒருவனைக் கொல்வதைக்கண்டு
அது ஆத்திரம் கொண்டது. வேட்டைக்காரன் * G di கொல்லுமிடத் துக்கு கிட்டவாக ஓடியது.
குட்டியைக்
அங்கே அவன் ஆட்டுக் குட்டியைக் கொல்வதைப் பார்த்துக்கொண்டு நாய் படுத்
துக் கிடந்தது.
சேவல் நாயைப்பார்த்து:
'நண்பனே! பார்! இவன் செய்வது சரியா? எம்மோடு வாழ்ந்த ஒரு உயிரைக் கொல் கிருனே?" என்று மனத்துடித் துக் கேட்டது. V
அதற்கு நாய் 'நான் நடுநிலைமை" என்று கூறி வி ட் டு வேட்டைக்காரனைப் பார்த்துக் கொண்டு மெளன மாகக் கிடந்தது. ஆ ஞ ல் அதன் வால் ஆடிக்கொண்டி
குந்தது.
வேறுபாடுகள். இரத்த வெறிபிடித்த நுளம்புகள் இங்குமங்கும் திரிகின்றன. அவை; யாருடைய குருதியில் குளித்து மகிழலாமென்று இருட்டுக்குள் திரிகின்றன; மரப் பெட்டிகளால். சாக்குத் துண்டுகளால், சரிந்தபடி நிற்கும் ஒற்றைக் குடிலில் சாக்குத் துண்டிலே ஒடுங்கிப் படுத்திருக்கும் ஒருவனின் மேனியில் நுளம்புகளின் சல்லாபங்கள் உல்லாசங்கள்; அவன் உணர்வற்ற மரக்கட்டைபோல் உருண்டு படுக்கின்றன். அவனுடைய உழைப்பின் தரகில் உயர்ந்த மாளிகையில் - நீல விளக்குகள் உமிழும் மெல்லிய ஒளியில் "நுளம்பு வலுை" விரிக்கப்படுகிறது. .பேஞ.-மஞேகரன்
-1 20 F
 
 
 

உழுபவனுக்கு * மாதவன் நிலம் வேண்டும்
இலங்கை ஒரு விவசாய நாடு, நாட்டில் பெரும்பாலான மக்கள் விவசாயிகள். பல நூற்ருண்டு காலம், பல அரசுகள் வந்து போயின. அவ்வக்காலத்தில் நிலவிய ஆளும் வர்க்கங்கள் தமக்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் உணவு உற்பத்தியைப் பெருக் குங்கள் என்று பிரசாரம் செய்தன. விவசாயிகளின் வாழ்வு என்றும் விடிந்ததில்லை. உணவு உற்பத்தி உயர்ந்ததில்லை. விவசாயிகளே அரைப் பட்டினியுடன் வாழ்கின்றனர்.
காரணம் என்ன? விவசாயிகளுக்கும் உற்பத்திக்கும் இடையில் முதல் முரண்பாடாக இந்நாட்டில் விளங்குவது நிலமாகும். உண்மை யாக உழைக்க முன்வரும் விவசாயிகளிடம் நிலமில்லை.
தேயிலை, ரப்பர், தென்னை ஆகிய மூன்றும் உள்நாட்டு வெளி நாட்டு பெரு முதலாளிகளிடம் சிக்கி நாட்டின் பெரும்பகுதி நிலத்தை ஆக்கிரமித்துள்ளன. 12 இலட்சம் ஏக்கர் நிலமே நெல் உற்பத்திக்குப் பயன்படக்கூடியதாக உள்ளது. இதில் பாதிக்கு மேற்பட்ட நிலம் வானம் பார்த்த நிலமாகும். இந்நிலங்களை ஆளுபவர்களுக்கும் உணவு உற்பத்திக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நிலத்தை ஆளுபவர் விவசாயிகளின் ஊக்கத்திற்கும் உழைப்பிற்கும் இடையூருக உள்ளனர்; உழைப்போரின் உற்பத்தியில் சும்மா இருந்தே பங்கு பெற்றுச் சுரண்டு கின்றனர்,
அரசு உணவு உற்பத்தியில் தீவிரமாக ஈடுபடுகிறது. பிற அபிவிருத்தியாவையும் கைவிட்டு அடுத்த ஆண்டில் 20 கோடி ரூபாவை உணவுற்பத்திக்கு செலவிட எண்ணியுள்ளது. இந்த உதவிகள் எந்த விவசாயிக்குப் பயன் தரப்போகிறது? விவசாயிகளை பின்வருமாறு தரம் பிரித்து எம்நாட்டு விவசாயிகள் எவ்வாறு சுரண்டப்படுகிறர்கள் என்பதைக் காணலாம்: கூலி விவசாயிகள், வறிய விவசாயிகள், அரை உடைமை விவசாயிகள், உடைமை விவசாயிகள், பணக்கார விவசாயிகள், நிலவுடைமையாளர்.
கூலி விவசாயிகள் :
எவ்வித சொத்துமின்றி பிறர் நிலங்களில் குடிசைகட்டி வாழ்
பவர், ஏறக்குறைய 5 இலட்சம் குடும்பத்தவர், நாட்டின் 20-25 சத விகிதத்தினர், இவ்வாறே வாழ்கின்றனர்.
- 121 -

Page 12
வறிய விவசாயிகன் : . .
மீள முடியாத கடனலும் வட்டியின் வளர்ச்சியாலும் பணக்கார விவசாயிக்கு நிலத்தை விற்றுவிட்டு வாரம் கொடுத்து நிலத்தை உழுபவன் மண்வெட்டி, கலப்பை ஆகிய சிலவற்றை மட்டும் உடைமையாக வைத்திருப்பான், நாட்டின் 15-20சத விகிதத்தினர் இவ்வாறு வாழ்பவர்களே. ܚ அரை உடைமை விவசாயி :
அரைவாசி சொந்த நிலமும் அரைவாசி குத்தகை நிலமும் கொண்டு உழுது வாழ்பவன் . மாடு, கலப்பையை சொத்தாக ஒரு பகுதியினர் வைத்திருப்பர். உடைமை விவசாயி :
தன் சொந்த நிலத்தில் பயிரிடுபவன், சில முக்கிய விவசாயக் கருவிகளை உடைமையாகக் கொண்டவன். சங்கங்களில் கடன் பெற ஒரளவு வாய்ப்பு உள்ளவன். பணக்கார விவசாயி :
விவசாயத்தில் வாய்ப்புகள் பெற்றவன். டிராக்டர், கூலிகளை வைத்திருப்பவன் வங்கியில் கடன் பெறுவான். சங்கங்கள் யாவும் இவன் ஆதிக்கத்திலேயே இயங்கும். வரிச்சலுகைகள் யாவையும் பெற்று சொத்து சேர்ப்பதில் வளர்ச்சி பெற வாய்ப்புள்ளவன். நிலவுடைமையாளன் :
நிலத்தை வாரத்திற்கு விட்டு வாழ்பவன், கூலிகளைக் கொண்டும் பயிரிடுவான், பரம்பரையாக அடிமைகனாக தன் நிலத்தில் கூலிகளை வைத்திருப்பவன். வெளிநாட்டாரால் நன்கு மதிக்கப்பட்டவன். இன்று அரசியலிலும் பங்கு பெற்றுள்ளான். நில வீழ்ச்சியை அறிந்து இன்று கைத்தொழில்களில் நிலத்தை விற்று முதலீடு செய்பவன்.
இத்தகைய பிரிவுகளில் அரசு இன்று உணவு உற்பத்தியில் எவரின் ஒத்துழைப்பை நாடுகிறது? அரசின் கடன் வசதி, வருமான வரி சலுகைகள், உத்தரவாத விலையாவும் பணக்கார விவசாயிகளுக்கே பயன்படும். உணவு உற்பத்தியால் பயன் பெறப்போகிறவர் இவர்களே. நாட்டிலே இவர்க்ள் தொகை சில ஆயிரங்குடும்பங்களேயாகும். அர இவர்களை மட்டும் நம்பின் ஏமாற்றமே கிட்டும்.
நிலம், நீர், டிராக்டர் முதலான நவீன கருவிகள், உரம், களை, கிருமிநாசினிகள் யாவையும் பயன்படுத்தத்தக்க வாய்ப்பும் வசதியும் அரசியலாதிக்கமும் பெறத்தக்க விவசாயிகள் இவர்களேயாவர், ஆயினும் இவர்கள் சென்ற 25 ஆண்டுகளாக நெல் உற்பத்தியில் என்ன சாதனையை சாதித்துள்ளனர்? பிறநாடுகளில் ஏக்கருக்கு 100 புசலுக்கு மேலாக உற்பத்தி செய்யப்படும் போதும் எம்நாட்டு சராசரி உற்பத்தி 50 புசலுக்குக் குறைவாகவே உள்ளது.
- 22 (-

காரணம் நாட்டின் 60 சத விகிதத்திற்கு மேலான பெரும்பகுதி நிலம் துண்டாடப்பட்டு வறிய, அரை உடைமை, உடைமை விவசாயி களிடம் உள்ளன. இவர்களுக்கு உற்பத்தியை உயர்த்துவதற்கேற்ற வாய்ப்புகள் கிட்டவில்லை. முக்கியமாக வறிய விவசாயிகளும், அரை உடைமை விவசாயிகளும் சொந்த நிலமில்லாததால் வாரத்தால் சுரண்டப்பட்டு வறுமையில் வாழ்பவர்கள், உழைக்க முயன்று தோல்வியடைபவர்கள்.
கூலிவிவசாயிகள் நிலத்திற்காக ஏங்குபவர்கள், அரசு என்றும் தரிசு நிலங்களை இவர்களுக்குப் பங்கிட்டதில்லை, பணவசதி உள்ளவர் களுக்கே முடிக்குரிய நிலங்களையும் வழங்கினர்.
உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டுமாயின் மக்களிடை சமநீதி வழங்க வேண்டும். உழுபவனுக்கே நிலம் என்பது உறுதியாக வேண்டும். தரிசு நிலங்கள், முடிக்குரிய நிலங்கள் யாவும் நிலமற்ற, கூலி விவசாயிகளிடை பங்கிட்டுக் கொடுக்கப்படுதல் வேண்டும் . அர சின் உதவிகள் யாவும் நசிந்த இவ்விவசாய வர்க்கத்தினருக்குக் கிட்ட வேண்டும். அப்போதுதான் நாம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவோம். பிறநாடுகளிடம் பிச்சையோ கடனே பெறவேண்டியதில்லை. நசிந்த விவசாய வர்க்கம் அரசியலாதிக்கம் பெறும் வரை அவர்களுக்கு எவ்வித சலுகைகளும் கிட்டப் போவதில்லை. பணக்கார விவசாயிகள் மேலும் அரசியலாதிக்கம் பெற, கூலி விவசாயிகளே நாட்டில் பெருகிவருவர்.
நாட்டின் முன்னேறிய வர்க்கமான தொழிவாளர்கள் நசிந்த விவசாயிகளுடன் இணைந்து புதிய ஜனநாயகப் புரட்சிக்கு வழிதேட வேண்டும். அத்தகைய ஒரு புரட்சியாலேயே நாட்டில் உண்மையான ஜனநாயக சோஷலிசத்தை நிலை நாட்ட முடியும். நிலமனைத்தும் மக்கள் சொத்தாகும், அனைவரும் நாட்டின் தேவையை ஒட்டி உழைப்பர். நாம் அனைத்திலும் தன்னிறைவு பெறுவோம். விலை யேற்றம், பற்ருக்குறை, பட்டினி. துன்பம் அனைத்தும் மறைந்துவிடும்.
கண்ணிரூற்றி அதனை வளர்த்தோம்-கோழிக் கூட்டைப்போன்ற வீட்டில் நாளும் குந்தியிருந்து மனம் நொந்தும் அழுதும் விடியும் என்றிருந்தோம் பயனில்லை . ! அதஞல் இன்று புறப்பட்டு விட்டோம்.
வ. இராமுவேல் புரட்சிக் கொடிதாங்கி,
«M இன்று புறப்பட்டோம் காட்டை அழித்துத் தேயிலை நட்டோம்
- 23 /-

Page 13
இலங்கையில் செய்திப் பத்திரிகையாகப் பதி:
ஜி சி + (உயர்தர
உயர்தர இரசாயனம் தாவரவியல்-பரமானந் விலங்கியல் சங்கரஐயர் விலங்கியல் பயிற்சிகள் திருத்தொண்டர் புரான இரட்சணிய பாத்திரிகம்
A CONCISE ATLAS
- foreword by Prof. E
5
7
ஜி. சி. ஈ. (சாதாரண 1 நவீன இரசாயனம் 1 2 நவீன இரசாயனம் IT
பரமானந்தன் & பாலசுந்த நவீன் உயிரிய நவீன உயிரியல்
பரமானந்தன், இராஜ
(திருத்திய நவீன பெளதிகம் 6. தமிழ் இலக்கிய விளக்கம்
リ km、高Lーエ
岳
வாங்கிவிட்டர்களா ?
தமிழவே தமிழிலக்கியத் தெ 'அ' பாடத்திட்டம்
கிடைக்குமிடம்:
விஜயலட்சுமி 248 காவி விதி,
கொழு
இப்பந்திரிகை கொழும்புடி, பாம் வீதி, 10 அதே முகவரியிலுள்ா குமரன் அ நிருவாக ஆசிரியர் மீ கணேசலிங்கள்
 
 

புசெய்யப்பட்டுள்ளது.
வகுப்பு) நூல்கள் :
– og FIFrf & AFLr vi. 36
தன் 3 பகுதிகள் |28|- 4 பகுதிகள் 25.75
3|- T 3
- சிலுவைப் பாடு GEOGRAPHY OF CEYLON &. Klaratnam 5
வகுப்பு) பாட நூல்கள்:
450 875 5ரம் திருத்திய பதிப்புகள்
500 550 சேனன் & குலேந்திரன் பதிப்புகள்
5/50 300
& இரத்தின் சிங்கம்
பள்' எழுதிய
ாகுப்பு - விளக்கம்
வீனுவிடை
புத்தகசாலை வெள்ளவத்தை |ւՃւկ-6
தொலைபேசி: 88930
வசிக்கும் மீ கரோசரி: அவர்ாாங் *சகத்தில் அசிடப்பட்டு வெளியிடப்பட்டது