கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மனிதம் 1994.05-06

Page 1
MANITHAM
28
 
 

A. McITF
I70,31 Xavier Nagar Thorba II Kaisai THANJA VUR 61 3001

Page 2
Ligj
இறங்காத
காற்று
பூக்களும் இதழ்விரித்து என்னை நையாண்டி செய்கின்றன. பூ என்றதும் நிறம், மென்மை, மணம் என்றெல்லாம் பல பரிமாணம் வந்து போகும். இப்படியே எப்போதும் வாழ்ந்து காட்டிவிட்டுச் செல்கிறது.
எண்மீது சூரியனுக்கும் வெறுப்பு. என் மேனி அழுது உரோமங்களை நனைத்தாலும் இரங்காத மனசு அதுக்கு. சுட்டெரிக்கும் சிடுமூஞ்சிக்காரனாய் என்னை சீண்டிச் செல்கிறது.
கட்டிடச் சேரிக்குள் நான் வாழ்வு பொறுக்கிச் சீவிக்கிறேன். நீட்டி நிமிர்ந்து உளைவெடுக்க முடியாமல்
நெளியும்
தெருக்களைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருக்கிறது.
எண் வாழ்வும் அதுபோல் சிக்கலானது.
சாமப் பொழுதின் குருட்டு விழிகளில் தெருக்களின் அமைதி என்னைப் பயமுறுத்துகிறது.
ஒடையும் செத்துக் கிடப்பதாக <数@H நாவரண்டு செய்தி சொல்லிற்று. மரங்களும் மனம் எரிந்து இரகசியமாய் ஏதோ பேசுகின்றன.
என் மனம்மீதும் நீர்நீவி தவழ்ந்து சுகம் தந்த ஓடை அது. எப்படி மறப்பது? ஆனாலும் மழையைக் கூட்டிவந்து நீதி கேட்கும் வலிமை எனக்கில்லை. நான் ஒரு மனிதப்புழு!
- LI166isits, if

MAI
s JUNI
1994
Zwei Monatlich Einmal
lImpressum & Herausgeber:
Manitham Postfach-212
3000 Bern -1 1 28
SCHWEIZ : Redaktion - . . .-. ... ..." אלx. תיא>
V.Logadas M. Narendran S. Ragawan 8. Manitham Redaktion komitee
Abonnament : 22 SFr 8 d (pro Jahr) 23 சந்ததிக் கடமை E தென்னாபிரிக்கா . Post Koro இ உளவியல் பார்வையில் நாசிசம் Manitham
3000 Bern- 1
25 ருவண்டா . PC : 30-3752-1
Bank KOffO ഖി கவதைகள Schweizerische Kreditanstalt
3001 Bern சிறுகதை : Manitham இ காற்றுவிடு வசை சுட்டு 22O348-70
நேர்காணல் : Druck
Offset Druckerei AG FörribuCik Str-66 8005 ZÜrich
2 பாலேந்திராவுடன் .

Page 3
சந்ததிக் கடமை
உங்கள் குழந்தை எந்த ரீதியில் பின்தங்கியிருக்கின்றதெனக் கணிக்கின்றீர்கள்
விரல் சூப்புறாள், படிச்சதை மறந்து போறாள்
உங்களுக்கு விளங்குகின்றதா
ஓம், விளங்கிறது
எனது கேள்வி
பாடசாலை உளவியளாளர், ஓர் தாய், குழந்தை இவர்களுடன மொழிபெயர்ப்பாளர் இவர்களுக்கிடையிலான சமீபாசணைவருடத்தின் இந்த காலகட்டங்களில் சுவிசில் பரவலாக நடைபெறும் நிகழ்வு.
ஒரு குழந்தை பாலர் வகுப்பிலிருந்து முதலாம் வகுப்பிற்குச் செல்வதில் ஏற்படும் சிக்கல்கள் பல,சில வேளைகளில் இரணர்டு, மூன்றாம் வகுப்புகளிலும் இந்தத் தடங்கல் இடறுவதுண்டு.
இது இங்கு வளரும் தமிழி குழந்தைகளுக்கும் அல்லது வெளிநாட்டவர் குழந்தைகளுக்கு மாத்திரம் ஏற்படும் பின்னடைவல்ல, இந் நாட்டவரின் குழந்தைகளும் இதில் சேர்த்திதான் ஆனால் விகிதாசாரத்தில்
STG)
வெளிநாட்டவரின் குழந்தைகள் அதிகமாகவே பின்னடைவை எய்துகின்றன.
பாலர் பாடசாலை ஆசிரியைகள்-(இதில் ஆசிரியர்கள் வெகு குறைவு) தங்களின் வகுப்பில் ஓர் குழந்தை பின்னடைவுடையதெனக் காணும் போது அதிக கரிசனத்தை எடுத்துக கொள்கிறார்கள். அப்படியம் அக் குழந்தையின் முன்னேற்றம் திருப்திகரமானதாக இல்லாவிடின்
့် နံ & தாய் தந்தையரிடம் ஓர்" முறை இது பற்றிக்
கதைத்துக் இதற்கு என்ன செய்யலாம் என்ற முடிவுகளை ஆசிரியை பெற்றோர் இருவருமாக எடுக்கின்றனர். இது முதல் படி, இதுவும் பயனளிக்காமல் போயின் வகுப்பு மாற்றத்தின் போது தங்களுக்குரிய பிரச்சனையை அறிக்கையாக்கி பிராந்தியப் பாடசாலை உளவியலாளரிடம் சமர்பிக்கின்றனர். பிராந்தியப் பாடசாலை உளவியலாளர் குழந்தையின் முதிர்ச்சி பற்றிய விளக்கத்தைப் பெற்றோருக்கு விளக்கி இந்தக் குழந்தை மீண்டுமொரு முறை அதே வகுப்பில் இருக்க வேணடுமா அன்றேல் மொழியில் பிரச்சனையிருந்தால் அதற்கான விசேட பாடசாலைக்கு அனுப்புவதா இக் குழந்தைக்கு அதிவிசேட கவனம் தேவையுடைதாயினி மிகச்சிறிய தொகையினையுடைய வகுப்பில்(இதில் ஆகக் குறைந்தது 2 அல்லது 5) அதே பாடங்களைப் பயிலுவதா மருத்துவ ரீதியாக ஏதாவது குறைபாடுகள் இருப்பின் தாடை, கணிபார்வை, நாக்கு, காது இவைகளின் தொழிற்பாட்டில் குறையிருப்பின் அவற்றை இனங்கண்டு அதற்கான பரிகாரம் என்பன பற்றி அறிவுறுத்துவார். இதில் கூட பாடசாலை உளவியலாளர் தான் ஓர் அதிகாரி என்ற
2
வைகாசி-ஆனி 1994
 
 

ஆளுமையை உபயோகிப்பதில்லை. இங்கு பெற்றோரின் விவாதங்களும் காரணங்களும் கணக்கிலெடுக்கப்பட்டு ஓர் கூட்டு முடிவாகவே எடுக்கப்படுகிறது. இந்த முடிவில் பெற்றோர் ஏற்றுக்கொள்ளாவிடின் பாடசாலை நிர்வாகக் குழுவின் தலைவருக்கு முடிவினைத் தாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதென்ற காரணங்கள் காட்டி மறுபரிசீலனைக்கு விணணப்பம் செய்ய இடமு னடு. இதனை நுழைவிற்கான முதிர்வின் விளக்கம் அழைக்கின்றனர்.
LI TL 3F fo6o0O 6)
67况摩
நம் நாட்டுக் கல்வி முறை குழந்தை வளர்ப்பு நடைமுறை சூழல், குடும்ப உறவுகள், மரபுகள் என பன இந்நாட்டு நிலையிலும் மாறுபட்டதென்பது தெளிவான ஒன்றுதான். இவை ஓர் குழந்தையின் கிரகிப்புத்தன்மை கற்பனைவளம், மனோ வளர்ச்சி, ஆன்மீக வளர்ச்சி என்னும் பல பிரிவுகளில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன. ஓர் குழந்தையுடன் தொடர்புடைய பெற்றோர், மற்றையோர் எல்லோருமே பொதுவாள இந்த விடயங்கள் பற்றி அதிக கவனம் செலுத்துவதில்லை. ஆனால் தங்கள் தங்கள் நிலைகளில் தாம் தங்கள் குழந்தைகளுக்காக எலலாவற்றையும் செய்கின்றோம் செய்வோம் என நம்பிக் கொள்கின்றனர். எல்லாவற்றையுமென்றால் சடப் பொருள்தியான பார்வை மட்டுமே அங்கு வைக்கப்படுகிறது. உணர்வு பூர்வமான தொடர்புகளைப் பாசம் எனக் கூறிக கொள்கின்றனர். பாசம் என்றால் தங்கச் சங்கிலி தொடங்கி விளையாட்டுச் சாமான்கள் (இவை விதம்விதமாகப் பத்திரிகைகளிலும் T. W யிலும் வந்து கொண்டேயிருக்கும் வாங்கித் தீர்க்க முடியாததொன்று) மக்டொனால்சில் சிறிய உணவுவரை பாசத்தின் வெளிக்காட்டல், இதுவே ஓர் குழந்தையின் பூரண வளர்ச்சியினை எய்த உதவி செய்யுமா? அல்லது இக கண்ணோட்டமும் நடைமுறையும் சரியானதல்ல இவை மாற்றியமைக்கப்ப பட வேண்டியவையா?
பாலர் பாடசாலைப் புகுமுகப் பிரச்சனையைப் பார்த்தால் தாய் மொழியல்லாத வேற்று மொழிச்
சூழிநிலையில வளருமி குழந்தைகள் தங்கள் தாய் மொழி எல்லையை மிகச் சிறிய வயதிலேயே கடக்க வேண்டிய நிர்பந்தமிங்கிருக்கின்றது. ஓர் குழந்தை பாலர் பாடசாலை நிலைப்படியினை மிதிக்கும் போது அது எந்த நாட்டில் வளர்கின்றதோ அந்த நாட்டில் மொழி அங்கு முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது. புத்திக் கூர்மையில் மற்றெல்லாக் குழந்தைக்கும் வேற்று மொழிக் குழந்தை சமமானதாயிருந்தும். கணிணால் பார்த்துக் கிரகித்தல், காதால் கேட்டுக் கிரகரித்தலி எனபனவற்றில் எந்தக குறையுமில்லாதிருப்பினும் மொழிப் பிரச்சனையால் மனஞ்சுருங்கும் குழந்தைகள் ஏராளம். இது மனத்தினில் தாழிவுணர்வினை வித்திடக் கூடியதொரு அவலமான நிலை. பாலர் பாடசாலையில் நம்மூரில் போல் ஆங்கிலத்தில் காலை வணக்கமும் ஒன்று இரண்டுமோ அன்றேல் தமிழில் கடவுள் வாழ்த்தோ அவரவர் சேர்க்கப்படும் பாடசாலையின் தகுதியைப் பொறுத்துச் சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை. இது குடும்பம் என்ற சிறிய வட்டத்தை விட்டுச் சமூகம் என்ற பெருவட்டத்திற்குள் வைக்கும் முதலடி. தானே தனியனாக அன்றேல் தனது சகோதரன் சகோதரிகளுடன் விளையாடிக் கொணடிருந்த குழந்தை இங்கு எண்ணிக்கையில் கூடியோருடன் ஒரே இடத்தில் தனியாக வோ சேர்ந்தோ விளையாடத தொடங்குகிறது. வீட்டில் அது தனது விருப்புக்கு விளையாட்டுப் பொருட்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பின்பு வேறொன்றை எடுத்துக் கொள்ள வாய்ப்புமிருந்தது பல குழந்தைகளுடன் விளையாடும் நிலையில் நான் இந்த விளையாட்டுப் பொருளுடன் அன்றேல் இவர்களுடன் இந்தப் பொருட்களுடன் விளையாடப் போவதென்று முடிவு எடுத்துக் கொள்கிறது. இங்கு மற்றவர்களுடன் சேர்ந்து பாடுதல் சுற்றுச் சூழலைப் பற்றிய அறிமுகம் சிறிது துாரம் நடத்தல் கைவேலை கத்தரிக் கோலால வெட்டி ஒட்டல் வணணப் பென்சில்களால் வண்ணக் கலவைகள் கொண்டு வரைதல் என்பன இப் பிள்ளையின் கற்பனா சக்தி நிறங்களின் பெயர்கள் வடிவங்கள் பற்றிய அறிவை வளர்க்கத் துாணர்டு கோலாக
மனிதம் -28
3

Page 4
அமைகின்றன. பாலர் பாடசாலையில் எமது வழக்கப்படி படிப்பதில்லை. ஆனாலி எழுத்துக்களின் வடிவம் தொனி என்பனவற்றைச் சுலபமாகப் பின்பு புரிந்து கொள்வதற்கான ஆரம்பப் பயிற்சியே.
பாலர் பாடசாலையிலோ அன்றேல் வீட்டிலோ ஓர் குழந்தை படங்களை வரைந்தால்(இவை எங்களுக்கு கிறுக்கல்கள் தான்) அவற்றைப் பாராட்ட வேண்டும். கைவேலைகள் செய்தால் அவை அழகாக இருப்பதாகக் கூறவேண்டும் இந்தப் பாராட்டுக்கள் இன்று பாடசாலையில் நடந்தவை என்ன என்று குழந்தை ஆர்வமாகச் சொலலும் போது கேட்டல மிக அவசியமானதென்று குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்குமிடையிலான நேயத் தொடர்பு நெருக்கம், நம்பிக்கை என்பன தொடர இங்கு ஆரம்பம் ஆரம்பிக்கின்றது.
முதலாம் வகுப்பு எழுத்து வடிவங்கள் சொற்கள் என்பன குழந்தையை புதியதோர் உலகிற்கு அறிமுகம் செய்கின்றது. இது தொடர்ந்து கொண்டே போகும் குழந்தை பெற்றோரிடையிலான தொடர்பு சூழல் மாற்றம் காரணமாக வெவ்வேறு பரிமாணங்களுக்குள் நுளைந்து கொள்ள வேண்டிய அவசியத்தையும் இங்கு வைக்கின்றது.
நமது சமுதாயப் போக்கில் சமூகத்தட்டு அப்பா-அம்மா-அணிணன்-தங்கை-அக்கா என்ற படி வரிக் கண்ணோட்டத்தில் இயங்குவது அத்துடன் பெரியவர்கள் சொல்வதைக் கட்டாயம் சின்னவர்கள் கேட்க வேண்டும் என்ற எழுதாச் சட்டம் ஆட்சி புரிகின்றது. குழந்தை பெற்றேரைச் சார்ந்து நிற்பது, ஆகவே அது எங்களது ஆளுமைக்குட்பட்டது இது எங்களது கண்ணோட்டம் இன்னுமொரு கண்ணோட்டமும் நடைமறையும் உண்டு. குழுந்தை பெற்றோரைச் சார்ந்திருககும் அதே வேளையில தனித்துவமுள்ள ஓர் சக ஜீவி. இரண்டாவது கண னோட்டததில சமூகத தட்டு வலியுறுத்தப்படுவதில்லை ஆணாதிக்கப் பெணணடிமை வேர்கள் நிலை
கொள்வதுமில்லை. உயிரியல் ரீதியில் பெற்றோர் உறவில் சக மனிதர்கள் என்ற கோட்பாடு இங்கு நிலை பெறுகிறது. 7
அப்ப பொடியைக் காவாலியாக வளரவிடுகிறதா- அது தன்ர விருப்பத்திற்கு வாழ்ந்து இஞ்சத்தையான்கள் போல கட்டடிச்சுக் கொணடு கழுசடையாத்தானி திரியும் உடனடியாக எதிர்மறைக்குச் பெற்றோர்களின் பதில் நமது சமூகத்தில் புற அஐத்தங்களின் நிர்ப்பந்தங்கள் அதிகம். அதை எத்தனை பேர் குழந்தை ஓர் சிறிய குற்றம் செய்தது என்பதற்காக விளாசி வடிகாலாக்கிக் கொள்கிறோம். ஆழுமையை அராஜகத்தின் மூலம் நிலைநாட்டிக் கொள்கிறோம். ஓர் குழந்தை பிழை செய்தால் நெறிப்படுத்த வேணடியது பெற்றோரின கடமை இல்லையென்று யாரும் சொல்லவில்லை. கண்டனமும் தண்டனையும் எங்கள் சினத்தைத் தீர்க்கலாம் பின்பு சொக்கிளேற்றும் விளையாட்டுச் சாமான்களும் வாங்கிக் கொடுத்து எங்கள் மனதினையும் ஆற்றிக் கொள்ளலாம். குற்ற உணர்வில் எல்லாம் உங்களுக்காகத்தானே உழைக்கிறன் சேர்க்கிறன் என பினாத்தவும் செய்யலாம் ஆனால் குழந்தையின் மனதில் விழும் காயங்கள் அதன் பின் விளைவுகளை ஒரு நிமிடம் சிந்திக்கிறோமா. நாம் வளர்ந்த சூழ்நிலை வேறு எங்கள் சமூக அமைப்பு வேறு. வாத்தி விளாசிற கல்வி அமைப்பு சப்பி எழுதும் பரீட்சைகள் வாழ்விலே மனித விழுமியங்களைஉயர்ந்த லட்சியங்களை, மன உறுதியை, சுயகெளரவத்தைக் கணக்கிலெடுக்காத போக்கு பணத்தை அளவு கோலாக்கிய சமூக நியதி எஞ்சினியர், டொக்டர், எக்கவுண்டன் சமன்பாட்டுக் கலவி எதிர்பார்ப்புககள் இவைகளை மனதிலிருந்து களைய சமூக சித்தையை சுதந்திரத்தின் பரிமாணங்களைப் புரிந்து கொள்ள மனிதநேயத்தைக் கற்க என்ன பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். இவை எல்லாவைற்றையும் மறந்து மீண்டும் அடுத்த தலைமுறையின் தலையில் சுமத்த வேண்டுமா? அவர்களின் தலைக்கு நிச்சயம் வேறு சுமைகளும்
செல்லும்
4.
வைகாசி-ஆனி 1994

காத்திருக்கின்றன.
என்து நேரடி அனுபவங்கள் சமுதயா இடைவெளியா அன்றேல் உண்மை கசக்கிறா.
இருசகோதரர்கள் 7-9 வயதுகளில் அப்பா வேலையால் வருகிறார் அலுத்துக் களைத்து இவர்களின் குழப்படி மூத்தவருக்கு பூசை இளையவர் கையெடுத்துக் கும்புடுகிறார். அப்பா அணர்ணாவுக்கு அடிக்காதேங்கோ நடந்து முடிந்த அடுத்த நாள். இளையவரின் கேள்வி அப்பா நீங்கள் எங்களுக்கு அடிக்கலாம் நானேன் உங்களுக்கு அடிக்கக் கூடாது? நாறிற்றுதா. தகப்பன் என்ன பதில் சொல்லலாம் நான் உங்களை அடித்தது பிழை. அப்பாவால் கோபத்தை அடக்க முடியவில்லை. மன்னிப்புக் கேட்கலாமா? பெரிய கேள்வி. பதில் இருக்கிறது இல்லாமல் இல்லை ஆனால் அது கசப்பானதுதான்.
இரண்டாவது அனுபவம் 9 வயதில் தங்கச்சி 11 வயதில் பெண் இரட்டையர். மொழி தமிழ் தாராளம் ஜெர்மன் தணிணிபட்டபாடு. இங்கு இவர்கள் இருவருக்குமிடையில் சச்சரவு லீவுநாள் அப்பா நித்திரை தணிணியும் அடித்திருக்கலாம் அம்மா பாத்றுாமில் குளித்துக் கொண்டிருக்கிறா சத்தம் கூடுகிறது அம்மா வெளியே வந்து பேச்சு அப்பா எழும்பினார் புட்டுத்தள்ளும் தடியால்
விளாசல் சச்சரவு இருவர் இடையில் பூசை பரவலாக மூவருக்கும். முதல் நாளே சிறிது நடந்து வர நாங்கள் நால்வரும் ஏற்பாடு செய்து கொண்டோம். நால்வருமாக சிறிது நடந்து வர வீட்டில் என்ன நடந்தது? எனக் கேட்டேன். தமிழ் அங்கு வரவில்லை ஜெர்மனியில் பொரிந்து
தள்ளினார்கள்.
நாங்கள் பிழை செய்தால் அப்பா அம்மா கண்டிக்கலாம் அடிப்பது பிழை. குற்றம் செய்தால் வீட்டு வேலைகளில் அம்மாவிற்கு உதவச் சொல்லலாம் உடுப்பு மடிக்கச் சொல்லலாம் இத்தனை மணிநேரம் வீட்டைவிட்டு வெளிக்கிடக் கூடாது என்று சொல்லலாம் அடிப்பது பிழை. எங்கள் உணர்வுகளை இவர்கள் எங்கே மதிக்கிறார்கள். எப்பவும் கலியாண வீடு, சாமத்திய வீடு, பிறந்தநாள்
மனிதம் -28
கொணர்டாட்டம் என்றுதான்
ஓய்வு நாட்களில் அலைகின்றோம் எங்களுக்கு எனறு அவர்கள் சிறிது நேரம் செலவழிக்கிறார்களா? உலாத்தக் கூட்டிக்கொண்டு போகிறார்களா? பாடசாலையில் படம் வரைகின்றோம் கை வேலை செய்கிறோம் அதைப் பாராட்டுகிறர்களா? பார்க்கத்தானி செய்கிறார்களா? மற்ற சுவீஸ் வீடுகளில் தங்கள் பிள்ளைகளின் கைவேலையைக் சுவரில் கொழுவி வைக்கிறார்கள் படங்களைப் பிரேம் போட்டு மாட்டி வைக்கின்றார்கள். எங்கள் வீட்டில் குப்பைத் தொட்டிக்குள் போய்விடுகின்றன. எங்களுக்கு மனதில் சந்தோசமே இல்லை இனி வரைதல் கைவேலைகள் செய்ய உற்சாகமே இல்லாமல் போய் விட்டது. தமிழர்களுக்கு தெரிந்ததெல்லாம் சீட்டும், வட்டியும், காசும்தான் எங்கள் உணர்வுகள் பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. முன்பு கேட்டால் நீங்கள் சின்னப் பிள்ளைகள் வெளியே போகக் கூடாது தனியாக என்றார்கள். இப்போது நீங்கள் வளர்ந்து விட்டீர்கள் வெளியே போகக் கூடாது என்கிறார்கள். வேலைகளைச் செய்து பழகுங்கள் கலியாணம் முடிந்தால் புருசனுக்கு நீங்கள்தானே எல்லாம் செய்ய வேண்டும். இது அப்பா. எங்களுக்கு எவ்வளவு ஆத்திரம் வருகிறது. நாங்கள் இன்னும் சின்னப் பிள்ளைகள் தானே இவரேன் கலியாணத்தைப் பற்றி இப்போது பேச வேண்டும்? அழகிய மூன்று பெண் குழந்தைகள் அன்பான குழந்தைகள் மனம் சுருங்கிக் கொண்டே போகிறது.
இந்த இரு உணர்மைச் சம்பவங்களும் எவ்வளவு கவலையானவை. வருங்காலச் சந்ததியின் பாதிப்புக்கள் இப்படி எத்தனை? எங்கள் கலாச்சாரம் தற்போதைய சூழ்நிலை இவை இரண்டும் செலுத்தும் ஆதிக்கம் அதிகமாயினும் அறியாமையும் சமபங்கினை வகிக்கிறதென்பதும் உண்மையே. அறியாமை சமபங்கினைவகிப்பதில் அறிய ஆவல் இல்லாமை பெரும்பங்கினை எடுத்துக் கொள்கின்றது. இந்நாட்டில் சிறுகுழந்தை வளர்ப்புப் பிரச்சனையிலிருந்து பாடசாலை செல்லும் குழந்தைகள் இளவயதினர் பிரச்சனைகளைப் பற்றியெல்லாம் ஆலோசனைபெற 不 48 5

Page 5
அவள் கடந்தவில் சூடிய தென்னாபிரிக்கக் காற்று
- GC MGDGD
விIற்றைக் கிள்ளி தன் தலையில் சூடி போனாள் அவள்.
எங்கு தேடி கொய்தெடுத்தாள் இந்த நறுமணக் காற்றை ! தெருவின் தொடக்கத்தில் அவள் நுழையும்போதே வாசம் வீசத் தொடங்கிய அது, இன்னொரு தெருவின் வாய்க்குள் விழுந்து அதன் பற்கள் அவளை அரைத்துப் புசித்து துாங்கிக் கிடந்த பின்னரும்கூட,
என் மூக்கைக் கொழுவி அவள் பின்னால் இழுத்து
(155.94)
செல்லும், அவள்; கூந்தலில் சூடிய காற்றின்
தேசம் எங்கே உண்டு ?
தென்னாபிரிாக்காவா !
6 வைகாசி-ஆனி 1994

தெனினாபிரிகீகா :
கறுப்பின மக்கள் சூடிய சுதந்திரப் பூ
தென் ஆபிரிக்கா கறுப்பின மக்களின் நுாற்றாண்டு கால கனவு நனவாகிவிட்டது. வெள்ளை நிறவெறி காலனி ஆதிக்கவாசிகள் கறுப்பின மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுவந்த வன்முறை ஆட்சிமுறை கறுப்பின மக்களின் விடாப்பிடியான போராட்டத்தின் முன்னால் மண்டியிட்டுள்ளதை உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் வரலாறு பதிவு செய்து நிற்கின்றது. சில தவறான போக்குகளை தனது நீண்டகால போராட்ட பாதையில் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்த போதினும் ஆபிரிக்க தேசிய காங்கிரசினதும் குறிப்பாக நெல்சன் மண்டேலாவினதும் கறுப்பின மக்களின் விடுதலையின்பாலான நேசிப்பும் அர்ப்பணிப்பும் இன்று வெற்றிவாகை குடியுள்ளது.
சோகமாக உட்கார்ந்திருக்கின்றார். இதுவரை காலமும் ஆபிரிக்க நாட்டின் சொந்த மக்களாகிய கறுப்பினத்தவரை அடக்கி ஒடுக்கி தமது வாழ்வை வலுப்படுத்திக் கொண்டவர்களுக்கு அந்த இறுதி இரவு அப்படித்தான் இருந்தது. ஆனால் மறுபுறத்திலோ தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சிமுறை நீக்கப்பட வேண்டுமென போராடியதற்கான நோபல் பரிசைப் பெற்றவர்களில் ஒருவரான பிஷப் Desmondbutu உதிக்கப் போகும் தனது நாட்டிற்கும் தனது மக்களின் விடுதலைக்குமாக தனது வாழ்நாளில் முதல் தடவையாக வாக்களித்த போது அடைந்த மகிழ்ச்சி வார்த்தைகளில் விபரிக்க முடியாதது.
ஏற்கனவே மூன்று நாட் களென தீர்மானிக் கப்பட்டிருந்த வாக்கெடுப்பு எதிர்பார்த்ததற்கு மாறாக நான்கு நாட்கள் நீடிக்க
வேண்டியளவு மக்கள் வாக்களிப்பில் கலந்து
தேர்தலுக்கு முன்தினம் இரவு (25.494) தென் ஆபிரிக்க வெள்ளைநிற பண்ணையார் தனக்கு சொந்தமான 500 கெக்ரேர் விவசாய நிலத்தை பார்வையிட்டுவிட்டு வீடு திரும்பியதும் தனது மாளிகையைச் சுற்றி பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள முட்கம்பி வேலிக்கு மின்சாரத்தை பாய்ச்சிவிட்டு தனது வேட்டை நாய்களையும் திறந்துவிட்டு, தனது துப்பாக்கி ரவைகளை நிரப்பி அருகில் வைத்தபடி மாலைநேர மகிழ்ச்சிக்காக தான் வாசிக்கும் பியானோ பெட்டியின் மேல் தலையை பதித்தபடி
கொண்டனர். பல மைல்கள் நீண்ட கீழ்வரிசையில் நீண்ட மணிக் கணக்கில் வாக்களிக்க காத்திருந்தார்கள். மூன்று பெண்கள் வாக்களிப்பு கியூவிலேயே குழந்தையை பிரசவித்ததும், 108 வயதான மூதாட்டி வாக்கெடுப்பில் கலந்து கொண்டதும், இருதய நோயாளியான ஒரு பெண் வாக்கெடுப்பு நிலையத்தில் இறந்தது போன்ற நிகழ்வுகள் மக்களின் விடுதலையின்பாலான
ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தது.
g g (65 ff și 60d6 8 66 6ứuu 6ơi Zulu இனமக்களை பிரதிநிதித்துவம் செய்யும் மங்கசோது புத்தலேசி தலைமையிலான சிங்காதா கட்சியானது வெள்ளை நிறவெறி தீவிரவாத அமைப்புக்களுடன் கூட்டமைத்து தேர்தலை பகிஸ்கரிக்க முடிவெடுத்திருந்த நிலையில் தேர்தலுக்கு ஒரு வாரம் இருக்க நெல்சன்மண்டேலாவிற்கும், டி கிளார்க்கிற்கும், புத்தலேசிக்கும் இடையேயான தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் மூலம் இணக்கம் காணப்பட்டு சிங்காதா கட்சியும் தேர்தலில் பங்கு பற்றியது.
மனிதம் -28
7

Page 6
இதே கால கட்டத்தில் வெள்ளை நிற வெறியர்களுடனி சேர்நீது தேர்தலை குழப்புவதற்கான நடவடிக்கைகளிலும் சிங்காதா கட்சியினர் ஈடுபட்டனர்.
தேர்தல் முடிவுகளின்படி ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (A.N. C) 65 வீதமான வாக்குகளை பெற்று 7 மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளது. முன்னைய ஜனாதிபதி டி கிளார்க்கின் தலைமையிலான தேசியக் கட்சி 22 வீத வாக்குகளைப் பெற்று கேப்டவுன் மாகாணத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. சிங்காதா கட்சி நேடால் மாகாணத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இத் தேர்தல் விகிதாசார அடிப்படையில் பாராளுமன்றத்திற்கு உறுப்பாளர்களை தெரிவு செய்யும் முறையைக் கொண்டுள்ளதால் பாராளுமன்றத்தில் A.N. C யால் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற முடியாமல் போய்விட்டது. இது மண்டேலாவிற்கு தனது கட்சியின் திட்டங்களை நடைமுறைப் படுத்துவதிலும் சட்டத்திருத்தங்களை மேற்கொள்வதிலும் நிறைய முட்டுக்கட்டையை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 400 அங்கத்தவர்களை கொண்ட தேசிய சபைக்கு 252 பேர் A.N. C யிலும் 82 பேர் தேசியக் கட்சியிலும் 43 பேர் சிங்காதா கட்சியிலும் அங்கம் வகிப்பார்கள்.
ஜனாதிபதி தேர்தலின் போது எதிர் வேட்பாளர் எவரும் நிறுத்தப்படாத நிலையில் நெல்சன் மண்டேலா ஏகமனதாக நாட்டின் அதிபராக தெரிவு செய்யப்பட்டார். உபஜனாதிபதி இருவரில் ஒருவராக டி கிளார்க் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கறுப்பின மக்கள் தாம் இதுவரை போராடி வந்த இலக்குகளில் அரசியல் ரீதியான அந்தஸ்தை இத்தேர்தலின் மூலம் அடைந்துள்ளனர். நெல்சன் மண்டேலாவும் இதன் மூலம் தனது தேசியக் கடமையை நிறைவேற்றியுள்ளார். மறுபுறத்தில் தென்னாபிரிக்கப் பொருளாதாரத்தை இன்று வரை தமது முழுக்கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கும் வெள்ளையர்கள் அவ்விடத்திற்கு கறுப்பர்கள் நுழைவதை அனுமதிப்பதற்கான அறிகுறிகளை
காணமுடியவில்லை. அரச அலுவலகம், வியாபார நிறுவனங்கள் போன்றவற்றில் மிகக் குறைந்தவர்களே கறுப்பர்கள் பணியாற்றுகின்றார்கள் இதுவரை காலமும். தங்கம், வைரம் போன்ற கணிப்பொருட்களின் சர்வதேச விநியோகத்தில் முன்னணியில் நின்ற தென்னாபிரிக்கா அவ்வளங்களின் பெறுகை வீழ்ச்சியடைந்து தரமும் குன்றதி தொடங்கியுள்ளது. ஏற்கனவே வெளிநாட்டு முதலீட்டுக்கோ, ஏற்றுமதி இறக்குமதிக்கோ, எதுவித பாதிப்பும் ஏற்படுத்த மாட்டாது என மணி டேலா உறுதியளித்துள்ளார். மாறாக உள்நாட்டிலோ அளவிற்கதிகமாக சொத்துக்கள் வைத்திருக்கும் வெள்ளையர்களிடம் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கோ, உயர்ந்த பட்ச வரிவிதிப்பை மேற்கொள்வதற்கோ சட்டத்தைக் கொண்டுவர பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. யு.ஊே தான் தேர்தலில் கறுப்பின மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளான வேலைவாய்ப்பு, உணவு, குடிநீர், போன்றவற்றை தீர்ப்பதற்கான நிதியை எங்கிருந்து பெறப் போகின்றனர் என்ற வினாவும் அதன்முன் உள்ளது. இவற்றிற்காக மணி டேலாவும் உலகவங்கி, T.M.F போன்றவற்றிடமே கையேந்த வேண்டியுள்ளது. ஏற்கனவே பல ஆபிரிக்க நாடுகளை காவு கொண ட
சுகாதாரம், வீடமைப்பு
வரட்சி தென்னாபிரிக்காவையும் தாக்க ஆரம்பித்துள்ள நிலையில் மண்டேலா பதவியேற்றுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையும் இது வரை தென்னாபிரிக் காவிற்கு தடை விதித்து வைத்திருந்த ஆயுதவிற்பனை ஏற்றுமதிக்கான தடையை நீக்கியுள்ளது. இது ஏற்கனவே குழு மோதல் களுக்கும் , இன விரோத நடவடிக்கைகளுக்கும் துப்பாக்கியே தீர்வாக பழக்கப்பட்டுவந்த குழுவில் ஜனநாயக வழிமுறைக்கு வருவதை சாத்தியமற்றதாக்குவதாக உள்ளது. மேலும் முக்கியமாக ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் இதுவரை கடந்து வந்த கடினமான போராட்டப்பாதையின் வெளிச்சத்தில் நாட்டை வழிநடத்துமளவிற்கு இன்று கட்சி உட்பலம் கொண்டதாக உள்ளதா என்று எழுப்பப்படுகின்ற
8
வைகாசி-ஆனி 1994

உன் வரவிற்காய்.
(წupჩh! கலங்கியவைகளை
விளிக்கிறேன்.
செதுக்கிய சொரூபம் சிரிப்பதாய். ஒக்கிட் ஒரு முறையே மலர்வதாய். புருவ விதானங்களின் மீது சேர்ந்து நடப்பதாய். நீயும் நானும் புல் வெளி உலாவில் மீண்டும் சேர்வதாய்.
வினாவும் கறுப்பின மக்கள் தங்களுக்குள் ஐக்கியப்படுவதை தடுப்பதற்கு கறுப்பின மக்களுக்கிடையில் மோதலை உருவாக்கி அவர்களை பிரிவடையச் செய்வதன் மூலம் தான் ஆட்சிக்கு வரமுடியும் என்ற நம்பிக்கை வெள்ளை இனத்திற்கு உண்டு. டி.கிளார்க்கின் தென்னாபிரிக்காவின் அடுத்த ஜனாதிபதி தான்தான் என கூறியிருப்பது இச்சநீதே கதி தை உண்டுபண்ணுகின்றது. எனவே ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் இதுவரை கட்டி வளர்த்துவந்த கறுப்பின மக்களின் ஐக்கியத்தின் அடித்தளம் அரசியல் அந்தஸ்து என்ற நிலையை நிறைவேற்றி பல்வேறு பரிணாமங்களை எடுத்துள்ளது. இவற்றை நிறைவேற்றுவதில்தான் கறுப்பினமக்கள் இன்று அடைந்துள்ள வெற்றியின் உண்மை அர்த்தம் பெறப்படும்.
வரதன்
தங்கையே! நெருடப்பட்ட நிரூபணங்களின் ஒரு துளி விலகலில் பசும் புலவில் உட்கார்ந்து உரைப் பற்றிக் கதைப்பதற்காய். இன்னும் உன் முன்னலை நோக்கிய எனது வரவு.
நயன விளிம்புகளில் ஈரம் உலர்த்திய உனது கைக்குட்டையை எனக்குத் தருவதற்காய் SP(b அமர்வு
வெயில்
முரண்பாடு. ஷெல் கள் தாண்டி பாஸைக் காட்டி உயிரைக் கொடுத்தாவது நானும் நீயும் சேர வேண்டும். என்றொரு உடன்பாட்டில் கை நாட்டிடுவதற்காய் நாளையாவது அகதி முகாமிற்கு வருவாயா?.
- இளைய அப்துல்லா -
இலங்கை (01-01-1994)
மனிதம் -28

Page 7
2 GT6NuGÖ LIITñen6uuls) Taffib
Psychology of Nazism
1944 யூன் 6ம் தேதியன்று பிரான்சிலுள்ள நோர்மண்டி என்ற இடத்திலிருந்து நாசிகளுக்கெதிரான போரை அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து என்பன கூட்டுச் சேர்ந்து தொடுத்த நாளின் 50வது ஆண்டு கொண்டாடப்படுவதையொட்டி இக் கட்டுரை பிரசுரமாகிறது. நாசிசத்தை உளவியல் அடிப்படையில் விளக்க முனையும் இக் கட்டுரை இன்றைய
நிலைமைகளை இன்னொரு பரிமாணத்தில் விளங்கிக் கொள்ள உதவும்.
لـ -- -- -- -- --س- -- س--- ---- -- -- سس- س----- -- -- --س- -- -- -- --س- --س- -- -- -- -ا
சிசத்தை உளவியல் பார்வையில் விவாதிப்பதற்கு முன்பு நாசிசத்துடன் தொடர்புடைய உளவியல் காரணிகள் பற்றிய தெரிந்து கொள்ளல் நாசிசத்தைப் பற்றி புரிந்து கொள்ள உதவும். நாசிசம் பற்றிய விஞ்ஞானபூர்வமான பார்வையிலும் சரி, அன்றேல் சாதாரணமான பார்வையிலும் சரி இரு விதமான எதிர்க்கருத்துக்கள் பிரசன்னமாகின்றன. முதலாவதாக உளவியலில் பொருளாதார, அரசியல் உந்தல்களின் சிக்கலான பாசிசத்திற்கு எவ்விதமான விளக்கமும் இல்லை என்பதும் இரண்டாவதாக பாசிசம் முற்றும் முழுவதுமான ஓர் உளவியல்சார் பிரச்சினை என்ற விவாதம்.
முதலாவது பார்வை நாசிசத்தை முற்று முழுவதுமாக பொருளாதாரப் பிரச்சினையாக ஜேர்மன் முதலாளித்துவத்தின் விரிவாக்க ஆவலின் வெளிப்பாடாக, அன்றேல் அரசியல் நிலைப்பாடாக ஓர் பிராந்திய அரசியல் கட்சி பெருந் தொழில் உரிமையாளர்களாலும், ஜேர்மன் கோமகன்களாலும் (Junkersஇவர்கள் ஜேர்மனியில் மட்டுமல்லாது பேர்சியாவிலும் தனி ஆளும் உரிமை பெற்றவர்கள்) வெற்றிபெற்றதன் விளைவாகவும் காட்டப்படுகிறது. சுருக்கமாக நாசிசம் ஓர் சிறுபான்மையினரின் கபடத்தனமெனவும், அது பெரும்பான்மை மக்களின் ஒத்துழைப்புடன் கட்டியெழுப்பப்பட்டதென்ற கருத்தையும் * முன்வைக்கிறது இவ்வாறான விவாதம்.
இரண்டாவது கருத்து: நாசிசம் உளவியல் மட்டத்தில் த் மாத்திரம் விளக்கங் கொள்ள முடியுமென்றும், அதிலும் ஒருபடி இ ဇွိုက္ကံ மேலேபோய் உளவியல் நுண் ஆய்வின் மூலம் என்றும் சாதிக்கிறது. கிட்லர் ஓர் வெறியனாகவும் நியூரோட்டிக்காகவும் (Neurotic) இவரது சகாக்களும் இவருக்குச் சமனான பைத்தியங்களாகவும் மூளை குழம்பியவர்களென்றும் வலியுறுத்துகிறது. மம்போர்டின் விளக்கப்படி பாசிசத்தின் உண்மையான காரணங்களை மனிதனின் ஆன்மாவில்தான்
10 வைகாசி-ஆனி 1994
 

மிஞ்சிய பெருமை, மற்றையோர்கள் வருத்தத்தில் மகிழ்வு, குரூரத்தன்மை போன்ற மனோவியல் கோவிாறுகளை ( N e ur o t i c D is inter gration) g60) 65 6f 65 காணமுடியுமேயல்லாது, ஜேர்மனியக் குடியரசின் கையாலாகாத் தன்மையிலோ அன்றேல் அதன் சூழ்நிலைக் கேற்ப தன்னை மாற்றியமைக்கும் தன்மையின்மையே எனக் கணக்கிட முடியாது.
எம்மைப் பொறுத்தவரை பொருளாதார அரசியல் காரணங்களை மாத்திரம் வலியுறுத்தும் விளக்கங்களோ, அன்றேல் முற்றும் முழுவதுமாக மனவியல் காரணங்களை மாத்திரம் முன்வைத்து விவாதிக்கும் போக்கோ ஏற்றுக் கொள்ள முடியாதவொன்று. நாசிசம் ஓர் உளவியல் பிரச்சினை. ஆனால் இதன் உளவியல் சார்பு காரணிகள் சமூக பொருளாதாரத்தினுாடுதான் வளர்ச்சி பெறுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாசிசம் ஓர் பொருளாதார அரசியல் சார் பிரச்சினை ஆயினும் மக்கள் திரளின் மீதான இதனது ஆதிக்கத்தை, மக்களை தன் பிடியினில் வைத் திருக்கும் குனாமி சதி தை உளவியலுாடாகத்தான் புரிந்து கொள்ள முடியும். இக் கட்டுரையின் சாராம்ச நோக்கு நாசிசத்தின் உளவியல் தன்மைகள் பற்றிய பார்வை, மனிதரீதியான இதன் அடிப்படை. இவைகள் இரு பிரச்சினைகளை எம்முன் வைக்கின்றன. இதனது அறைகூவலை ஏற்று கவரப்பட்ட மக்களின் குணாம்சங்கள். இந்தக் கொள்கையின் உளவியல்சார் குணாம்சம் இம் மக்களைக் கவர்வதில் பெற்ற வெற்றி.
நாசிசத்தின் வெற்றிக்கு அடிப்படையாய் அமைந்த உளவியல் அடிப்படையை கவனத்தில் எடுத்துக் கொண்டால் இதில் (வெற்றியில்) செயற்பட்ட வித்தியாசமான காரணிகளைக் கண்டு கொள்ளலாம். மக்கள் திரளின் ஒரு பகுதி எந்த வித எதிர்ப்புமினி றி நாசிசதி திற்கு தலைவணங்கியது. ஆனால் இவர்கள் நாசிசத்தை விரும்புபவர்களாகவோ, அன்றேல் நாசிச அரசியல் செயற்பாடுகளில் பங்கேற்பவர்களாகவோ இருக்கவில்லை. மற்றைய பகுதியோ இப் புதிய சித்தாந்தமான நாசிசத்துடன் தங்களை ஆழமாக
இணங் கணிடு கொண்டு
இதனை அறைகூவியவர்களுடன் தங்களை மகிழ்வுடனும் தீவிரத்துடனும் இணைத்துக் கொண்டது. நாசிசத்திற்கு தலைவணங்கிலும், அதைச் சித்தாந்தமாக விரும்பி ஏற்காமலும் அதன் நடவடிக்கைகளிலும் பங்குபற்றாமலும் இருந்த முதலாவது குழுவில் தொழிலாளர் வர்க்கம், லிபரல்-கத்தோலிக்க பூர்சுவாக்கள் ஆகியோர் அடங்குகின்றனர்.
அமைப்பு ரீதியில் அணிதிரண்டிருந்த தொழிலாளர் வர்க்கம் நாசிசத்தினை ஏற்றுக் கொள்ளாத எதிர்ப்பு நிலையைக் காட்டி நின்றிருந்தும் (இவ் எதிர்ப்பு நிலை நாசிசத்தின் தோற்றத்திலிருந்து 1933 வரை காணக் கூடியதாக இருந்தது) இவர்களின் உள்ளார்த்தமான எதிர்ப்பு, இவர்களின் அரசியல் ஈடுபாட்டினி அடிப்படையிலான போராட்டக் குணாம்சம் என்பன இவர்களிடமிருநீது எதிர்பார் கி கக கூடியதொன்றாகினும், அது வெளிப்படாமலே போயிற்று. எதிர்ப்பிற்கான மனோவலிமை மிகவேகமாகவே குலைந்து போயிற்று. ஆகவே நாசிச அரசிற்கும் அமைப்புக்கும் இவர்களுடாக வரக்கூடிய ஆபத்து கணக்கிலெடுக்க முடியாத சிறிய எதிர்ப்பாகப் போயிற்று. (ஓர் சிறிய குழு வீரியமாக நாசிசத்திற்கெதிரான போராட்டத்தை முடிவுவரை போராடியதையும் இங்கு கவனத்தில் எடுக்க வேண்டும்). நாசிச அரசிற்கு எதிரான எதிர்ப்போ போராட்டமோ இன்றி தங்களைக் கையளித்ததற்கு உளவியல் ரீதியான காரணங்களாக, உணர்வு நிலையில் களைத்துப் போன தன்மை மற்றும் தங்களுள்ளேயே முடங்கிப் போன தன்மை என்பன இனம்காணப்படுகின்றன. இந்தக் காரணங்கள் ஜனநாயக நாடுகளின் தனிமனித தீ தண்மையில் இன்றளவும் காணக்கூடியதாகவே இருக்கிறது.
இன்னுமொரு மேலதிக காரணமாக - ஜேர்மனியில் தொழிலாளர் வர்க்கத்தில் காணக் கூடியதாக விருந்தது - 1918 இல் முதன்முதலில் வென்றெடுத்த புரட்சி கைநழுவிப் போனதையும் குறிப்பிடலாம். தொழிலாளர் வர்க்கம் முதலாம் உலக யுத்தத்திற்கு பிந்திய
மனிதம் -28
11

Page 8
காலகட்டத்தில் முழுநம்பிக்கையுடன் சோசலிசத்தை மலரச் செய்வதற்கான முயற்சிகளில் இறங்கியிருந்த நேரம். ஆகக் குறைந்தளவு தங்கள் வர்க்கத்தின் அரசியல் பொருளாதார சமூக அந்தஸ்து நிலைமைகளில் மேம்பாடடைவதில் பெரும் நம்பிக்கையுடன் தலையெடுத்து நின்றிருந்தது. ஆனால் பல காரணங்களால் தொடராக பல தோல்விகளைச் சந்தித்ததால் மனமுடைந்து சோர்வு நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. 1930 இல் இதன் ஆரம்ப கால வெற்றியின் பலன்களை முற்றும் முழுவதுமாக இழந்த நிலையில், மனதால் சுருங்கிப் போயிருந்த
தொழிலாளர் வர்க்கம் தங்கள் தங்கள் தலைவர்கள்
தொடங்கியது. கிட்லரின்
ஆட்சியேற்றத்துடன் ஜேர்மனி ஒன்றாக இனம் காணப்பட்டது. ஆட்சியிலிருக்கும் கிட்லருக் கெதிரான போராட்டம் எதையும் ஜேர்மன் சமூகத்திலிருந்து தன்னைப் பிரித்துக் காட்டும் நடவடிக்கையாக ஜேர்மன் மக்கள் பார்க்கத் தொடங்கினர். மற்றெல்லா அரசியல் கட்சிகளும் ஒழித்துக்கட்டப்பட்டு நாசிசக் கட்சியே ஜேர்மனி
என்றானபோது, இதற்கெதிரான போராட்டம் ஜெர்மனிக்கு எதிரான போராட்டமாயும் போயிற்று. ஓர் சாதாரண மனிதனுக்கு தனது சமூகத்தை விட்டுப் பிரிந்து தனிமை உணர்வுடன் அதே சமூகத்தில் வாழ்வது மிகவும் கடினமானது தான்.
ஆட்சியிலிருக்கும் கிட்லருக் கெதிரான போராட்டம் எதையும் ஜேர்மன் சமூகத்திலிருந்து தன்னைப் பிரித்துக் காட்டும் நடவடிக்கையாக ஜேர்மன் மக்கள் பார்க்கத் தொடங்கினர். மற்றெல்லா அரசியல் கட்சிகளும் ஒழித்துக்கட்டப்பட்டு நாசிசக் கட்சியே ஜேர்மனி என்றானபோது, இதற்கெதிரான போராட்டம் ஜெர்மனிக்கு எதிரான போராட்டமாயும் போயிற்று. ஓர் சாதாரண மனிதனுக்கு தனது சமூகத்தை விட்டுப் பிரிந்து தனிமை உணர்வுடன் அதே சமூகத்தில் வாழ்வது மிகவும் கடினமானது தான். ஒரு ஜேர்மன் பிரஜை, நாசிசத்திற்கு எவ்வளவு எதிர்ப்பாளனாக இருந்தும், தனது உணர்வுகளுடன் தனியனாக வாழ்வதா அன்றேல் ஜேர்மனியனாக வாழ்வதா என்ற நிலையைத் தேர்ந்தெடுக்கவேண்டுமாயின் அவன் இரண்டாவதையே தேர்ந்தெடுப்பான். நாசிசத்திற்கெதிரான தாக்குதல்களில், நாசிசத்தை ஏற்றுக் கொள்ளாத ஜெர்மனியர்கள் கூட, அதனை விமர்சிக்கும் வெளிநாட்டவர்களுக்கெதிராக நாசிசத்தை ஆதரித்து குரல்கொடுத்த பல சந்தர்ப்பங்களைக் காணக்கூடியதாக இருந்தது.
மீது நம்பிக்கை இழந்து, எந்தவிதமான அரசியல் அணிசேரல்களையும் அரசியல் நடவடிக்களையும் சந்தேகக் கண்களுடன் பார்க்கத் தொடங்கியது. தாங்கள் எந்த அரசியல் கட்சிகளில் அங்கத்துவம் வகித்தார்களோ அவைகளில் அங்கத்தவர்களாகவே தொடர்ந்தும் இருந்து வந்தார்கள். மேலோட்டமாக இவைகளின் சித்தாந்தங்களில் நம்பிக்கை வைத்திருந்தாலும், மனதளவில் அரசியல் நடவடிக்கைகள் மீதான எவ்வித நம்பிக்கையுமற்றுப் போயிருந்தனர்.
நாசிச அரசினி மீது நம்பிக்கை வைத்திருந்தவர்களின் தொகை கிட்லர் ஆட்சிக்கு வந்தவுடன் இலட்சக் கணக்கில் அதிகரிக்கத்
ஒரு ஜேர்மன் பிரஜை, நாசிசத்திற்கு எவ்வளவு எதிர்ப்பாளனாக இருந்து ம; தனது உணர்வுகளுடன் தனியனாக வாழ்வதா அன்றேல் ஜேர்மனியனாக வாழ்வதா என்ற நிலையைத் தேர்ந்தெடுக்க வேணடுமாயினி அவனி இரணி டாவதையே தேர்ந்தெடுப்பானி , நாசிசத்திற்கெதிரான தாக்குதல்களில், நாசிசத்தை ஏற்றுக் கொள்ளாத ஜெர்மனியர்கள் கூட, அதனை விமர்சிக்கும் வெளிநாட்டவர்களுக்கெதிராக நாசிசத்தை ஆதரித்து குரல்கொடுத்த பல சந்தர்ப்பங்களைக் காணக்கூடியதாக இருந்தது. இவர்களைப் பொறுத்தவரை நாசிசத்திற்கெதிரான வாதங்கள் ஜேர்மனிக்கு எதிரான வாதங்கள். தனிமைப்பட்டுப் போகும் பயம் மற்றும் தார்மீக
12
வைகாசி-ஆனி 1994

தனிமைப்பட்டுப் போகும் பயம் மற்றும் தார்மீக பலம் குன்றிப்போன நிலைமையில், எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வருகின்றதோ அக்கட்சி சமூகத்தின் பெருமளவு மக்களை தன்பக்கம் இழுத்துக் காரணங்கள் மிக உதவியாகவே அமையும். இதனை நாசிச அரசு தனது அரசியல் பிரச்சாரத்திற்கு முழுமையாகப் பாவித்துக் கொண்டது.
கொள்வதற்கு மேற்சொன்ன
ஜேர்மனிக் கெதிரான எநீத வித அபிப் பிராயங்களோ அனிறேல் ஜேர்மனியருக்கெதிரான தப்பான பிரச்சாரங்களோ, நாசிசத்துடன் தங்களை இனங்காணாதவர்களைக் கூட, ஜேர்மனியன் என்ற அடிப்படையில் நாட்டின் மீதான பற்றைக் கூட்டவே உதவி செய்தது. மனித சாராம்சம் நாட்டுப் பற்றிலும் பெரியது. இந்த உண்மை பல நாடுகளில் வெற்றி பெற்றும் ஒவ்வொரு தனிமனிதனும் வாழ்ந்த/ வாழ்ந்து கொண்டிருக்கும்/ வாழப் போகின்ற சமூகத்தில் மேற்கூறிய பிரச்சினை பற்றிய பார்வை மாறுமே யல்லாது, எவி வளவு தானி வெற்றிகரமானதும் புத்திசாலித்தனமானதுமான பிரச்சாரத்தில் மாத்திரம் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. கதீ தோலிக் கப் பூர்சுவாக்களதும், லிபரல்களதும், தொழிலாளர் வர்க்கத்தினரதும் எதிர்மறையான பார்வையைப் பெற்ற நாசிசம் நடுத்தர வர்க்கத்தின் கீழ்த்தட்டு மக்களான சிறுவியாபாரிகள், கலைசார் தொழிலாளர்கள், உத்தியோகத்தர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
இவ் வர்க்கத்தின் பழைய தலைமுறை மந்தமான செயற்பாட்டை கொண்டிருக்க, இளம் தலைமுறையினர் தீவிரமான நாசிப் போராளிகளாகவும் மாறினர். இவர்களைப் பொறுத்தவரை தலைமைக்கு கண்மூடித்தனமான அர்ப்பணிப்பு, அரசியல், இன ரீதியான சிறு இனக் குழுக்கள் மீதான வெறுப்பு, நாசிசத்தின் வெற்றியின் மீதான வெறி, அடக்கியாளும் தன்மை, ஜேர்மன் மக்களின் உயர்வு நோர்டிக் இனம்
(Nordic Race) 6T6tru60T p 600Tito figuits, இவர்கள் மேல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதுவே நாசிசக் கொள்கை மீது இவர்கள்
இவர்கள்
மாறாத நம்பிக்கை வைக்கவும், நாசிப் போராளிகளாக மாறவும் காரணமாக அமைந்தது.
நடுத்தர வர்க்கத்தின் கீழ்த்தட்டு நாசிசக் கொள்ளையால் கவரப்பட்டதற்கான காரணம் எனின என்பதை இந்த வர்க் கதி தினி குணாம்சங்களினுாடான காரணிகளால் கண்டறியலாம். இவர்களது வர்க்க குணாம்சம் மேல்தட்டு நடுத்தர வர்க்கம், தொழிலாளர் வர்க்கம், பூர் ஷி வா வர் கி கமீ போனி றோரினி குணாம்சத்திலிருந்து வேறுபடுகிறது. இன்னும் ஒருபடி மேலாக இவ் வர்க்கத்தின் வரலாறு முழுவதிலும் இந்தக் குணாம்சம் காணக்
ஜேர்மனிக் கெதிரான எநீத வித அபிப் பிராய ந களோ அணி றே லி ஜேர்மனியருக்கெதிரான தப் பான
பிரச்சாரங்களோ, நாசிசத்துடன் தங்களை இனங்காணாதவர்களைக் கூட, ஜேர்மனியன் என்ற அடிப்படையில் நாட்டின் மீதான பற்றைக் கூட்டவே உதவி செய்தது. மனித சாராம்சம் நாட்டுப் பற்றிலும் பெரியது. இந்த உண்மை பல நாடுகளில் வெற்றி பெற்றும் ஒவ்வொரு தனிமனிதனும் வாழி நீத / வாழி நீது கொண்டிருக்கும் / வாழப் போகின்ற சமூகத்தில் மேற்கூறிய பிரச்சினை பற்றிய பார்வை மாறுமேயல்லாது, எவ்வளவுதான் வெற்றிகரமானதும் புத்திசாலித்தனமானதுமான பிரச்சாரத்தில் மாத்திரம் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணமுடியாது.
கூடியதாகவும் இருக்கிறது. பலசாலிகள் மீதான அபமிர்த அபிமானம், பலவீனமானவர்கள் மீதான மாறாத வெறுப்பு, நடவடிக்கைகள், எதிர்ப்புணர்வு, உணர்வுகள், பணம் என பவற்றைச் செலவு செய்வதில் வரைமுறையினி மை என்பவற்றோடு இவர்களது வாழ்க்கை நோக்கு குறுகலானதும், அந்நியர்களைச் சந்தேகித்தலும் வெறுத்தலும், தங்களது நேரடி தீ தொடர்புடையவர்கள் பற்றி குடைந்து குடைந்து
சினி ன தீ தனமான மற்றும்
மனிதம் -28
13

Page 9
அறிய ஆவலும் எரிச்சலும், இந்த எரிச்சலையே நியாயப்படுத்தும் குணமும் எல்லாமும் சேர்ந்து இவர்களது முழுவாழ்க்கையும் உணர்வு ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பற்றாக்குறையிலே கழிந்துவிடுகிறது.
கீழ்த்தட்டு நடுத்தரவர்க்கக் குணாம்சம் தொழிலாளர் வர்க்கக் குணாம்சத்திலிருந்து வேறுபடுகிறதெனினும், தொழிலாளர் வர்க்கத்தின் குணாம்சங்களிலும் இவை இல்லாமலில்லை என்ற கருத்தைக் கொள்ளக்கூடாது. இந்தக் குணங்கள் கீழ்த்தட்டு நடுத்தர வர்க்கத்தின் விசேட குணாம்சம் . தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு சிறு பகுதியே இக் குணாம்சங்களை மிகத் தெளிவாகக் காட்டி நிற்கிறது. இக் குணாம்சங்களின் தீவிரத் தன்மையில் இரு வர்க்கங்களுக்குமிடையே வித்தியாசங்கள் இருக்கலாம். சில பொதுவான குணாம்சமாகவும் காணப்படுகிறது. உதாரணமாக அதிகாரத்திற்கு மேலதிக மரியாதை கொடுத்தல் செட்டுத்தன்மை என்பன. மறுகையிலோ உத்தியோகத்தர்களும், உடலுழைப்பாளிகளும் வர்க்க குணத்தில் கிட்டத்தட்ட ஒருவரை ஒருவர் நெருங்கியே காணப்படுகின்றனர்.
பழைய நடுத்தர வர்க்கம் மாத்திரம் இதற்கு விதிவிலக்காக அமைந்தது. ஏனெனில் ஏகபோக முதலாளித்துவத்தின் வளர்ச்சியில் இது பங்கு பெறாமல் போனதுடன் இதன் வளர்ச்சியினால் பாதிப்பையே அடைந்தது.
நடுத்தர வர்க்கத்தின் கீழ்மட்ட மக்களின் வர்க்க குணங்கள் 1914 போரின் முந்திய காலகட்டத்தில் ஒரே மாதிரியாக இருந்தது எவ்வளவு உண்மையோ, அதேபோல் போரின் பின்காலகட்ட நடவடிக்கைகள் மேலும் இக் குணங்களைக் கூர்மையடையச் செய்தது. நாசிகளின் அறைகூவல் இங்குதான் ஏற்பைக் கண்டது. அதாவது இவ வர் கி கதி தினி அடிபணிவிற்கானதாகவும் ஆதிக்கத்திற்கான வெறியும் நாசிகளின் கொள்கையுடன் நன்றாக ஒத்துப் போயின.
1918 ஜேர்மன் புரட்சிக்கு முந்திய காலத்திலேயே நடுத்தர வர்க்கத்தின் கீழ்மட்டத்தின் சரிவு நிகழத்
தொடங்கிவிட்டது. ஆயினும் இந்தச் சரிவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஏனெனில் இவ் வர் கி கதி தினை நிலைநிறுத்தும் , முட்டுக்கொடுக்கும், காரணிகளும் இங்கே காணப்பட்டன. முடியாட்சியின் அதிகாரம் யாராலுமே எதிர்க்கமுடியாததொன்றாக இருந்தது. இதனுடன் தங்களை இனம் கண்டு கொண்டும் இதனுடன் சார்ந்துமிருந்த நடுத்தர கீழ்த்தட்டு வர்க்கம் தங்களைப் பாதுகாப்பானவர்களாகவே கண்டு கொண்டது. அத்துடன் சமயத்தின் ஆளுமை, பாரம்பரிய ஒழுக்க நெறிகள் என்பனவும் இவ் வர்க்கத்தில் ஆழமாக வேரூன்றியவை. குடும்பம் என்ற கட்டமைப்பு இன்னும் குலையாத நிலை. எதிர்ப்புகள் காட்டும் வெளியுலகத்தில் நின்று அமைதியுடன் அடைக் கலம் புகுந்து கொள்ள வெகு பொருத்தமான குடையாக குடும்பம் தொழிற்பட்டு வந்தது. தனிமனிதனொருவன் தான் ஓர் நிலையான சமூக, கலாச்சாராத்தின் அங்கத்தவன் என்ற எண்ணமும், இதில் தனக்கு குறிப்பிட்ட இடமுணர்டு என்ற எண்ணமும் அவனை ஆட்கொண்டிருந்தது. நடைமுறையில் இருக்கும் அதிகாரத்திற்கு தன்னை அர்ப்பணித்துக் கொள்ளல், அதற்கு உண்மையாக இருத்தல் என்பன தன்னைத்தானே ஒறுக்கும் இம் மனிதனுக்கு எளிதான காரியமே. ஆயினும் தன்னை முற்றும் முழுவதுமாக அர்ப்பணிக்காது தனது தனித்தன்மையைச் சிறிது பாதுகாத்து அதில் பெருமையும் கொள்பவன் அவன்.
-தொடரும்
Iš 50963Dy Erich From STgfuu Escape from Freedom என்ற நூலிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
Erji Ch Formim : - 1990 இல் Frankfurt இல் பிறந்தவர். - 1992 g)6ů Heidelberg University gsů சமூகவியலில் PhD பட்டம் பெற்றார்.
- 1925 காலப்பகுதிகளில் சமூக கலாச்சார பிரச்சினைகளை உளவியல் பகுப்பாய்வு அடிப்படையில் ஆய்வுசெய்வதில் ஈடுபடலானார்.
- 1933 இல் தற்காலிக விரிவுரையாளராக அமெரிக்கா சென்ற அவர் அங்கு குடியேறினார்.
- பின்னர் சர்வதேச உளவியல் பகுத்தாய்வு சங்கத்தில் சேர்ந்து பணியாற்றினார்.
L4
வைகாசி-ஆனி 1994
 

சேதியைக்
சாய்க்கப்பட்ட சந்தி இலுப்பை மரத்தின்
காற்றுவிடு வசைசுட்டு ...!
தமயந்தி
கூறியழுமுன்னிடம். வேரோடு
மரணத்தை சொல்லி கண்ணிர் விடும். நன்னீர்
ஊற்றுக் கணிகள் சப்பாத்துக் கால்களால்
குறுக்கிக் கொள். உன்னை உனக்குள், உனது வீட்டிற்குள், உனது கிணற்றடியில், ஆகக்கூடுதல் உனது கடப்படிக்குள் உன்னைக் குறுக்கிக் கொள். அதையும் மீறி நீ வெளிவர முயற்சிப்பின் உனது கிராமத்துக் கோயில் முன்றல்வரை, கோயிலின் திருவிழாவுக்காக மட்டும் காத்துக் கிடக்கும் அலங்கோலமான கூரை சுமந்த
தேநீர்க் கடைவரை. அதையும் மீறுகில் ஆணித்துழைகளால் வெளிச்சம் பீறிட்டு உள் நுழையும் மூட்டை பூச்சிகளின் கோட்டையான படக் கொட்டகை வரை. இதற்குள் உன்னைக் குறுக்கிக் கொள். இவற்றை மீறி வெளிவர முயற்சிக்காதே.
எலி லா இடங்களையும் , எலி லா வெற்றிடங்களையும் தம் ஆசனங்களால் நிரப்பிக் கொள்ள ஏகப்பட்ட கனவான்களும், கனவான்களின் சுட்டு விரல்களும், அந்த விரல்களின் நகங்களும், நகங்களினுள்ளான ஊத்தைக் கோடுகளும் துரகதபதாதிகளுடன் கங்கணமாயிருக்கையில் நீ எதற்கு? உனக்குள் குறுகிக்கொள் நீயுன்னை.
சாரளத்து வெளியால் அனுமதியின்றி உள் நுழையும் காற்று, பச்சை தளிர்கள் உதிர்ந்த
அடைபட்ட சேதியை வரண்ட நாவினால் வார்த்தைகளை சிரமப்பட்டுச் சேர்த்துக் கூறும். நகரத்தின் எல்லா தெரு முனைகளும், கிராமத்தின் எல்லா ஒழுங்கைகளும் வெறிச்சோடி கிடப்பதை சொல்லிச்சொல்லிக் கவலையுறும்.
விதைகி கப்படாத ഖ u് ബ് திடலில் புதைக்கப்பட்டிருக்கும் சந்திரனை நினைந்து விக்கி விக்கி அழுமுன்முன்னால். உடைந்து நொறுங் குண்டு சில்லவல்லமாய்ப் போன கண்ணாடிச் சிதறல்களைப் போல் சூரியன் நொறுங்குண்ட கதையை வரிவரியாக கூறும். மரத்தை உலுப்பி நிலத்தில் குவித்துவிட்ட கனிந்த பாலைப் பழங்களைப் போல் வானத்தை உலுப்பி பூமியில் குவியலாகப் போட்டு நெருப்புக்கு காவு கொடுக்கப்பட்ட நட்சத்திரங்கள் துடித்த துடிப்பை கதறிக்கதறி முறையிடும்.
வைரம் பாய்ந்தவர் நாமேயென தலை நிமிர்ந்து மிடுக்காய் உயர்ந்து நின்ற கரும் பனைகளெலாம் தலையிழந்து மொட்டையாய் நிற்பதை, கீற்றுக்கள் எரிந்து கருகிய தென்னைகளை, பாட்டன் பூட்டன் நட்டு வளர்த்த பரம்பரைக் கதைகளைக் கூறும் பருத்த பூவரசின் வேரடியில் தீ மூண்டதை, ஊரிமணற் கரையில் உழுது திரிந்த சோகிக் கூட்டம் சதை செத்ததை. பாசி படிந்த நங்கூரங்கள் மட்டும் படகுகளை இழந்தனவாய் களக்கடலில் சேற்றுள் புதைந்து போனதை, காக்கைதீவு பரந்த பசும் புல்வெளியில் மாடு மேய் தீத சிறுவனி மணி டையோட்டுக் குவியலிலமர்ந்து காக்கைவன்னியனை கனவில் கண்டு பித்துப் பிடித்ததை, இன்னும்.
நெருப்புச் சூட்டினால் முலைகள் வெந்து, பால்கொடுக்க நாதியற்று வலியால் துடிக்கும்
tD65tf-28
15

Page 10
தாய்மையைப்பற்றி பால்க்கார மணியாச்சியின் மூன்று குட்டியீன்ற மறையாட்டின் கதையைக் கூறும். கோயில்க்கேணியில் நீரெடுத்து சூப்பியிலுாற்றி மணியாச்சி குட்டிகளுக்குப் பருக்கிய கதையையும், மூன்றாம் நாள் மூன்று குட்டிகளுமே செத்துப் போனதையும், செத்துப் போன குட்டிகளை மணியாச்சி அழுதபடி புதைக்கையில் பூச்சியோ, பூரான் கடித்து கை வீங்கிக் கிடப்பதையும் கூறும்.
கனவான்கள் இரட்டை நாசியாலும், கூடவே கணிகளாலும், காது களாலும் , மல சல வாயில்களாலும் மூச்சு விடுகின்றனர். விட்டதை இரட்டிப்பாய் உள் வாங்குகின்றனர் என்பதற்காக நீயுன்னை உனக்குள் குறுக்குக் கொண்டு விட்டாய். சாரளத்தால் நுழைந்து அவலங்களைச் சொன்ன காற்றும் உனக்கு சோம்பல் என சொல்லிவிட்டு, முன்கதவாலேயே போய் விட்டது தீயணைக்க.
போகுமுன் அது உனக்குச் சொன்ன வார்த்தை மட்டும் உனக்குச் சுட்டுவிட்டதாய் கொதிக்கிறாய். சுற்று நிலமெல்லாம் சவங்களால் பாத்திகட்டப்பட்டபோது, வானம் வஞ்சித்ததால் வெடித்த நிலத்தில் இரத்தம் ஊர்ந்து நனைத்த போது, கொதிக்காத நீ இப்போது காற்று கடைசியாக சொன்ன வார்த்தை சுட்டு விட்டதென கொதிக்கிறாய்.
காற்றின் வார்த்தை சுட்டதோ உன்னை.? அலறாதே. உளறாதே. அது சொன்னதில் என்ன பொய்மை இருக்கிறது. எந்தக் கனவான்களும் மூச்சை எந்தக் கழிவுத் துவாரங்களாலும் வெளியேற்றி விட்டுப் போகட்டும். உன்னால் அது முடியவில்லை என்பதற்காக ஏனுன்னைக் குறுக்கிக் கொண்டாய்? மூச்சை விடுவதும் பெறுவதும் உயிர் வாழ்தலுக்கே. அடைபட்டு, வாழ்தலை குறுக்கிக் கொள்வதைக் காட்டிலும், சுவாசத்தை நிறுத்தி இயங்காமல் கிடை காணலாம். என்ன நடக்கும் பெரிதாய்..? நாறிப் போவாய். அப்படியே போய் விடுவதுதானே. பூமியை நிறைக்கும் சவங்களுடன் உனது சவமும் அடக்கமாகும். நல்லதுதானே. உனக்குள்
உன்னை குறுக்கிக் கொண்டு
புழுத்த வியர்வைக்குள் கிடந்து புழுத்துப் போவதைவிட, சவக் கிடங்கில் புழுக்களுக்கு உணவாகு. உனது பெயரால் புழுக்களாவது சீவிக்கும். சுட்டதோ காற்றின் வார்த்தைகள் உன்னை.?
மீட்பரும் யாமே! மீட்பளிக்கும் வார்த்தைகளும் எமதே!! எமது காணிக்குள் யாரும் நுழையாதீரென கனவான்களும், சுட்டுவிரல்களும், அதன் நகங்களும், அவற்றிடை ஊத்தைக் கோடுகளும் ஒப்பாரி வைத்தன என்பதற்காக நீயுன்னைக் குறுக்கிக் கொண்டாய் உனக்குள். யாரிவர்கள் உனக்குக் கட்டளையிடவும், அடக்கி அடைக்கவும்.? சிறகெட்டும் வரை சிறுகுருவிகூட தன் வாழ்தலின் பொருட்டு சுதந்திரமாக, நீ உனக்குள் உன்னைக் குறுக்கிக் கொண்டு. இல்லை. உண்மை அதுவல்ல. காற்று சொன்னதே உண்மை. கனவான்கள். அவர்கள் உனினை குறுக் கியுள்ளனர். அச்சம் . அவர்களுக்குச் சாதகமான உனது அச்சம். நீ குறுக்கப்பட்டுள்ளாய். உனக்குள் அவர்களால்.
வெளியில் வா. காற்றின், கடலின், கடலலைகளின், வானத்தினி , வானத்து முகில் களினி , வயலி வரப்புகளினி , பனங் கூடல் களினி , தென்னந்தோப்புகளின், பறவைகளின், மரங்களின், மனிதர்களின். இப்படி உன்னைச் சூழவுள்ள நேசத்திற்குரியவை அனைத்தின் துயரங்களிலும் பங்கெடு.
அறிந்து கொள். விதைக்கப்படாமல் நிலமேன் காய்ந்ததென, அந்த விதைக்கப்படாத வயற் திடலில் சந்திரன் எப்படி புதைந்தானென, சில லவல் லமாய் சூரியனி ஏனி சிதறடிக்கப்பட்டானென, சாம்பராய்க் கிடக்கும் நட்சத்திரங்களின் வாழ்க்கை எங்கே போயிற்றென அறிந்து கொள். அறிந்து கொள்ள முயற்சி செய். வெளியில் வா.
தலைகளை இழந்த பனைகளின், கீற்றுக்கள் கருகிய தென்னைகளின் எதிர்காலம் என்னவென்று கேள். வீதியில் நின்று உரத்த சத்தமாய்க் கேள்வி
16
வைகாசி-ஆனி 1994

A.
ஆலாக்கள் இறந்து கனகாலம் ஐயையோ,
கோழிக் குஞ்சும் கருகிக் கனகாலம். வண்ணத்துப் பூச்சி தலை உருட்டும் சிறுதும்பி முழுவதையும் பொசுக்கி ஊருக்கு நெருப்பு வைக்கும்;
எழுப்பு. பரம்பரைக் கதை கூறும் பாட்டன் பூட்டன் நட்டு வளர்த்த பருத்த பூவரசின் வேரடியில் யார் தீ வைத்தாரென விசாரணை செய்.
எமது தேசப்படத்தை கரை நீளம் வரைந்த சோகிக் கூட்டம் சதை செத்ததெதனாலென விரிவான ஆய்வு நடாத்து. படகுகளை இழந்து, பாசிப்படைக்கும், களக்கடற் சேற்றுக்கும் பலியான நங்கூரங்களின் பட்டியலைத் தயாரி. நிலத்திலிருந்து வானம் வரை புகை மணி டலம் எப்படி உருவாயிற்று என்று தெரிந்து கொள். நீ உனக்குள் குறுக்கப்பட வேண்டியவனா என்ற கேள்விக்கான விடை கிடைக்க வேண்டுமெனில் நீ முதலில் வெளியில் வா. உனக்குள்ளிருந்து விடுதலையாகு.
காக்கைதீவு மண்பிட்டிகளில் மண்டையோடுகள் எப்படிக் குவிந்தன என்று விசாரணை செய். அந்த மண்டையோடுகளுக்குச் சொந்தமானவர் யாரென கேள்வியெழுப்பு. தேசத்தின் எஞ்சியுள்ள எல்லா சுவர்களிலும் தொலைந்தவர்களின் பட்டியலைப் பொறித்து, எங்கேயென்று கேள். வெளியில் வா. உனக்குள்ளிருந்து விடுதலையாகு முதலில்.
http:Wwww.th
- சோலைக்கிளி
வானமே நீ பாடாதே மழைப்பாட்டு. தவளை இங்கில்லை, மேளம் கொட்ட.
சிறுமரங்கள் தீயணைக்கும் மழை
என் வீட்டின் கூரையிலே ஆவி பறக்கிறது. இந்த வெள்ளத்தின் மேல் வெள்ளம், வெள்ளத்தின் மேல்வெள்ளம், வெள்ளம், வெள்ளம், ஒன்றின்மேல் ஒன்றாக
போடும் மழைக்குள்ளே ஊரே எரிகிறது.
குளிர்மழை, தேன்மழை, நான் விரும்பும் அழகுமழை, எல்லாம் நீங்கி, இப்போது விஷமழை! நெளிய நிலத்திற்குள் மண்புழுவும் இல்லை;
அது பொசுங்கி
சாம்பல் பறந்தது.
எல்லாம் அளவோடு இருந்தால்தான் அனைத்திற்கும்
நல்லது, இந்த மழை மாதம் மாதம் மாதமாய் கனத்துக் கனத்து
தீயாய் ஒழுக,
ஒழுகி ஒழுகி உஷணததை ஊடட, முழுமரமும் இப்போது தீயணைக்கும் படைவீரர்
ஆகி வாகனத்துள் பாய்வதற்கு ஆயத்தம்.
என் வீடெரிந்தால் தப்பும். இனிச் சிறுமரமும்
தீயணைக்க.
amizham. net
மனிதம் -28
17

Page 11
- தொடர்ந்த நாடக மேடையேற்றங்களே தீவிர நாடக இயக்கத்தை வலுப்படுத்தும் என்ற கோசத்துடன், 1978 ல் இருந்து 82 வரை நூற்றுக்கும் அதிகமான நாடகங்களை மேடையேற்றி நவீன நாடக முயற்சிக்கென ஒரு ரசிகர் பரம்பரையை உருவாக்கியவர்களில் தமிழ் அவைக்காற்றுக் கழகத்தினருக்கும் குறிப்பிடததக்களவு பங்குண்டு.
அவைக்காற்று கழகத்தினரின் இம்முன்முயற்சி புலம் பெயர்ந்த தமிழர்களிடையேயும் தொடர்ந்து கொண்டிருப்பது கண்கூடு. 1985ல் தமது கழகத்தை லண்டனில் மீளமைப்பு செய்து 60 க்கு மேற்பட்ட மேடையேற்றங்களையும் நிகழ்த்தியதோடு தமது 15 வது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்ற (1993) ஆண்டு, லண்டனில் நாடக விழாக்கள், கருத்தரங்குகள், பயிலரங்குகள் என்று பல நிகழ்ச்சிகளை தொடர்ந்தனர். இன்று ஐரோப்பிய நாடுகளை பவனி வரும்
g இவர்கள யற்சியில் ஏப்ரல் 1 ல் இலிருந்து 9 வரை
UTBağğlıyısıyli ¶? பல பாகங்களில் சுமார் 10 மேற்பட்ட
நாடகங்களையும், கானசாகரம் இசை நிகழ்ச்சியையும்
மேடையேற்றி உள்ளனர். eñáneorgió
ஈழத்து நவீன நாடக முயற்சிக்கு வித்திட்ட முதன்மையானவர்களில் ஒருவராகவும், அவைக்காற்றுக் கலைக் கழகத்தின் பிரதம இயக்குனராகவும், வழிகாட்டியாகவும் விளங்குகின்றவர் பாலேந்திரா. மிகவும் எளிமையான தோற்றம், இலகுவான பேச்சுநடை, விமர்சனங்களை உள்வாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் இத்தகைய குணாம்சம் மிக்க அந்த இயக்குனரை 84-94 வெள்ளியன்று சூரிச்சில் நிகழ்ந்த நாடக விழாவில் சந்தித்த போது அவருடன் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் சிலவற்றை கீழே நோக்குவோம்.
? இலங்கையில் தமிழ் நாடகத்தின் தற்போதைய போக்குப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
** இலங்கையை பொறுத்த வரை கொழும் பில் மேடையேற்றப்படுகின்ற நாடகங்கள் பற்றித்தான் ஓரளவு அறியக்கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக தேவராஜாவின்
அபகரம் குழந்தை சண்முகசிவலிங்கத்தின் கூடிவிளையாடு பாப்பா யாழ்ப்பாணத்தில் தாசியசின் நெறியாள்கையில் உருவான குழந்தை சண்முகசிவலிங்கத்தின் எந்தையும் தாயும் இவைகள் தான் நான் அண்மைக் காலங்களில் கேள்விப்பட்ட நாடகங்கள். வளர்ச்சி நிலையைப் பொறுத்த வரை மந்தமான நிலை என்றுதான்
18 வைகாசி-ஆனி 1994
 

கூறவேண்டும். சீரியஸ் நாடக முயற்சிகள் மிகக் குறைவு. 78 பிற்பகுதியிலும் 80 களின் முற்பகுதியிலும் ஏற்பட்ட பரபரப்பு, இவை பற்றிய விவாதங்கள் இப்போ இல்லை. இதைவிட புகலிடங்களில் சில முயற்சிகள் நன்றாகவே நிகழ்ந்துள்ளன. எதற்கும் எழுதப்பட்ட நாடகங்கள் (Skript) மிகக் குறைவாக இருப்பதும் ஒரு காரணமாகவே இருக்கிறது.
? உங்கள் நாடகங்கள் பொதுவாக உயர்ந்த தரத்தில் இருப்பதனால் இவை ஒரு குறிப்பிட்ட ரசிகர் வட்டத்திற்குள்ளேயே சுழல்வதாக கருதுகிறோம். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
** நாம் தயாரித்த எல்லாவித நாடகங்களும் இங்கு(சுவிஸ்) கொண்டுவரப் படவில்லை. குறிப்பாக நடுத்தரவர்க்கத்தின் பிரச்சனைகளுடன் கூடிய, போக்குவரத்தில் உள்ள நடைமுறை பிரச்சனை காரணமாக குறைந்தளவு நடிகர்களை உள்ளடக்கிய நாடகங்களைத்தான் இங்கு கொணர்ந்துள்ளோம். மற்றும்படி நாம் வெவ்வேறு உத்திகளை பயன்படுத்திய பல நாடகங்களை உருவாக்கியுள்ளோம்.
கண்ணாடி வார்ப்புகள் அது ஒருவித உத்தி. கவித்துவம் கலந்தது. ஒரு பாலைவீடு, ஒரு சிம்பொனிக் நாடகம். பெண்கள் மட்டும் பங்கு பற்றிய ஒரு நேரடி நாடகம் மாதிரி.
முகமில்லாத மனிதர், வெவ்வேறு மனிதர் ஒரே மேடையில் பல பாத்திரங்களாக மாறுவது. இது எங்கள் மரபுக்கும் இணைவான நாடகம்.
நாடகத்தின் கனம் அதன் உள்ளடக்கத்திலும் தங்கியிருக்கிறது. அதே வேளை இயக்குபவரிலும் தங்கியுள்ளது. நாடகத்தை எழுதியவுடன் அதன் கடமை முடிவதில்லை. சேக்ஸ்பியரின் நாடகங்களுக்கும் வெவ்வேறு இயக்குனர்கள் வெவ்வேறு கருத்தமைவைக் கொடுக்கும் வகையில் இயக்கியுள்ளனர்.
? இது சார்பாக நாம் மேலும் கேட்பது. உயர்ந்த ரசிகர் மட்டத்திற்கு கொண்டு செல்லப்படும் நாடகங்களுக்கும், குறைந்த ரக ரசிகர் மட்டத்தில் உள்ளவர்களுக்கும் நாடகத்தில் வித்தியாசம் ஏற்படுத்த வேண்டும் என நாம் கருதுகிறோம். இதை நீங்கள் எப்படி செய்கிறீர்கள்?
** நாம் அப்படி வித்தியாசப்படுத்துவதில்லை. எல்லா மட்ட ரசிகர்களுக்கும் இது போய்ச் சேரும். ஆனால் பரந்த மட்டத்தில் முயற்சிகள் நடத்த வேண்டும். இது 78 இலும் 80 களின் முற்பகுதியிலும் நாட்டில் சாத்தியமாகியிருக்கிறது. சிங்களத்தில் இம்முயற்சிகள் நியாயமான அளவுக்கு சாத்தியமாகியிருக்கிறது. தீவிர நாடகங்கள் எம்மவர்க்கும் புதிதாக இருப்பதனால், இவற்றை ரசிப்பதற்கும் பார்வையாளர்களுக்கும் பயிற்சியை உருவாக்க வேண்டும். இத்தகைய நாடகங்களை அடிக்கடி மேடையேற்ற வேண்டும். கடலையைக் கொறித்துக்கொண்டு கதாப்பிரசங்கம் கேட்ட பழக்கம், அத்துடன் தெரிந்த கதைகளுக்குரிய கூத்துக்களையே அடிக்கடி பார்ப்பது, இதனால் எமது பார்வையாளர்களுக்கு அவதானிக்கும் பழக்கம் குறைவு. நவீன நாடகத்தில் ஒவ்வொன்றையும் அவதானிக்க வேண்டிய தேவையுண்டு. உற்று நோக்கினால் நாடகங்களை விளங்கிக் கொள்வதில் கஸ்டமிருக்காது. உதாரணத்திற்குப்
பசி நாடகத்தை எடுப்போம். விளங்குவதற்கு கஸ்டமான நாடகம். ஆனால் அதிகமாக எல்லோர்க்கும் விளங்குகிறது. அதனால் அதன் உள்ளடக்கம் அவரவர் பார்வைக்கு ஏற்ற
மனிதம் -28 19

Page 12
விதத்தில் கருத்தமைவை கொடுக்கிறது. இன்னும் கூறப் போனால் ரசிக மட்டத்தை உயர்த்துவது ஒரு சமூகம் சார்ந்த நிகழ்ச்சி. தமிழ் சினிமாக்கள் எம்மவர்களின் ரசனை மட்டத்தை மேலும் தாழ்த்திச் செல்கிறது. இந்நிலைமையில் நாடகத்த்ை மேடையேற்றுவதிலும் பயிற்சியுடன் கூடிய செழுமை வேண்டும். அண்மையில் இந்திரா பார்த்தசாரதி கூறினார்: ஞானி என்ற பழைய நாடக இயக்குனர் ஒருவர் ஒவ்வொரு கிழமையும் நாடகங்களை மேடையேற்றுவது வழக்கம். 52 நாடகங்களை மேடையேற்றியுள்ளார். அவையெல்லாம் அரைவேக்காட்டுத்தனமாக இருந்தது என்பதுதான் அவரது கருத்து. பார்த்தசாரதியின் ஒரு நாடகமும் அங்கு மேடையேற்றப்பட்டது. வசனங்களை மேடையில் கொண்டு வந்து வாசிப்பதுபோல்தான் இவ் மேடையேற்றங்கள் காணப்பட்டது. இத்தகைய மேடையேற்றங்கள் ரசிகர்களை எஸ் வி. சேகர் போன்றோரிடம் தான் கூட்டிச் செல்லும். இந்நிலைமைகளில் இருந்து பார்வையாளர்களை மீட்பதற்கு எங்களது பயிற்சியும் உத்திகளும் செழுமையாகவும் சிறப்பாகவும் இருக்க வேண்டும். உதாரணம் பசி. ஒரு அபத்த நாடகம்.
யுகதர்மம், ஒரு காவியப்பாணி நாடகம் என்றுதான் BERTOLT BRECHT அதைக் கூறுகிறார். அதில் மரபுக்கூத்தின் பாதிப்பும் உண்டு. இதில் ஒரு பாத்திரம் பார்வையாளருடன் கதைப்பது போலவும் அமையும். எமது மரபுக்கும் உட்பட்ட மழை, பசி போன்ற நாடகங்களைவிட இவ்வித இசை நாடகங்கள்தான் சாதாரணமக்களை சென்றடைவது சுலபம்.
? ஈழத்தைப் பொறுத்த வரை உங்களைப் போலவே தாசியஸ் உம் பிரபலமான பிரதம நாடக இயக்குனராக கருதப்படுபவர். ஆனால் உங்கள் இருவருக்கும் இடையில் நாடகப்பாணியில் (உத்தி,தன்மை) வேறுபாடு உண்டு என நாம் கருதுகிறோம். இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
0 0 அவரது நாடகங்கள் கூடியவரை இசை சார்ந்த முயற்சிகளாகவே உள்ளன. உதாரணத்திற்கு பொறுத்தது போதும், கந்தன் கருணை போன்ற நாடகங்களை நோக்கலாம். நாங்களும் சிலவற்றை அப்படி செய்துள்ளோம். மெளனகுருவின் மூன்று சிறுவர்நாடகங்களை தயாரித்துள்ளோம். இதில் இசை பிரதான பங்கு வகிக்கின்றது. தாசியஸ் பிச்சை வேண்டாம் என்ற நாடகத்தையும் தயாரித்துள்ளார். அது நான்கு நரேற்றர்களை உள்ளடக்கிய ஒரு மொழி பெயர்ப்பு நாடகம். அவரது கவிதை நாடகம், கோடை, புதியதோர் வீடு, சுந்தரலிங்கத்தின் அபகரம் நாடகத்தை லண்டனில் தயாரித்துள்ளார். அவரும் குறிப்பிட்ட முறையில்தான் நாடகத்தை உருவாக்குகின்றார் என்றில்லை. அதே போல் நாமும் பல முறைகளில் நாடகங்களை உருவாக்கியுள்ளோம். உதாரணத்திற்கு இந்தியாவில் சிறந்த நாடக ஆசிரியர்களாக விளங்குகின்றவர்கள் முத்துசாமி, இந்திரா பார்த்தசாரதி போன்றோர். இதில் முத்துசாமியின் சுவரொட்டிகள், நாற்காலிக்காரன் போன்ற கூத்துப்பாணி நாடகங்களையும் மேடையேற்றியுள்ளோம்.
புகலிடங்களில் உள்ள பிரச்சனை நேரமின்மை, எல்லோரும் ஒரே நேரத்தில் கூடி பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பின்மை. இதனால் குறைந்தளவு நடிகர்களை உள்ளடக்கிய நாடகங்களை தெரிவு செய்ய வேண்டியிருக்கிறது.
? புகலிட இலக்கியங்கள் என்று புதிய கருத்தமைவுகளை உள்ளடக்கிய இலக்கியங்கள் எம்மிடையே உருவாகிவருவது போல் புகலிட நாடகங்கள் ஏதாவது உண்டா?
20 வைகாசி-ஆனி 1994

() () இந்த வகையில் நாடகம் செய்தது குறைவு. ஆனால் அதற்கான நோக்கமுண்டு. முகமில்லாத மனிதர் இலங்கையில் மேடையேற்றப்பட்ட நாடகத்தில் இங்கு இச்சூழலுக்கேற்ப சில வசனங்களை மாற்றியுள்ளோம். எனக்கு நாடக வசனம் எழுதுவதில் பயிற்சியில்லை. நல்ல நாடக வசனம் (script) கிடைக்கும் பட்சத்தில் மேடையேற்ற தயாராக உள்ளேன். அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளேன்.
? உங்கள் நாடகங்களில் நீங்கள் இசைக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக தெரியவில்லை. அதன் உள்ளார்ந்த அர்த்தம் என்ன?
() () முகமில்லாத மனிதர், யுகதர்மம் போன்ற நாடகங்களில் எல்லாம் பல பாடல்களை இசையுடன் பாவித்துள்ளோம். இதில் உள்ள சில பாடல்களை கானசாகரம் இசை நிகழ்ச்சியில் சேர்த்துள்ளோம். அதே போன்று எரிகின்ற எங்கள் தேசத்தில் கண்ணன் இசையமைத்த பாடல்களைத்தான் கூடுதலாக இப்போதும் நாம் பாவிக்கின்றோம்.
ஆனால் பின்னணி இசையைப் பொறுத்தவரை சினிமா மாதிரி நாடகத்திற்கு இசையை பாவிக்க முடியாது. தேவையுமில்லை. சில முக்கிய இடங்களுக்கு மட்டும் இசை அவசியம். கொழும்பில் ஒரு சிங்களவர் வயலின் மூலம் இசையமைத்தார். அது சிறந்த அமைவாக இருந்தது. அப்படியான திறமைசாலிகளை கண்டு கொள்வது கஸ்டமாக இருக்கிறது. கசற்றைப் பயன்படுத்தவும் நான் அதிகம் விரும்புவதில்லை. மழை நாடகத்தில் தவிர்க்க முடியாதபடி பாவிக்க வேண்டியுள்ளது. கண்ணாடி வார்ப்புகளிலும் பாவித்திருக்கிறோம்.
பொதுவாக இப்படிப்பட்ட சீரியஸ் நாடகங்களுக்கு இசை அவசியம் இல்லை. சில சந்தர்ப்பங்களில் இசை நாடகத்தின் கருத்தமைவையே மாற்றிவிடுகிறது. மன்னிக்கவும் நாடகத்தில் இசையே இல்லை. ஆனால் அது நன்றாகவே இருக்கிறது. இசையை கூடியவரை நாடக இடைவெளியில் பயன்படுத்துவது தான் வழக்கம்.
? மேற்குலகில் யாருடைய நாடகங்கள் சிறப்பாக உள்ளன?
() ) கரல் பின்ரர், ஃப்ரொஸ்ட், ரெனிஸ்வில்லியம், காசி அல்லோகா ஆகியோர்களை குறிப்பிடலாம். இதில் முக்கியமாக, எமது நாட்டு சூழலுக்கு ஓரளவு ஒன்றிக்கக்கூடிய நாடகங்களை தேர்வு செய்யும் போது குறிப்பாக 1950 க்கு முந்திய நாடகங்களை எடுத்துக் கொள்கிறோம். அடுத்தது எமது நன்மைக்காக உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியர்களின் நவீனங்களைத் தான் சேர்த்துக் கொள்ள முயற்சிக்கின்றோம்.
? உங்கள் நாடகங்கள் பொதுவாக மொழிபெயர்ப்பு நாடகமாக இருப்பதனால் அந்நாடகத்திற்குரிய உண்மையான அர்த்தத்தை பார்வையாளர்கள் விளங்கிக் கொள்ளுகிறார்கள் என்று நினைக்கிறீர்களா?
99 மொழிபெயர்ப்பு நாடகம் எனும்போது பொதுவாக எமக்கு இசைவான நாடகங்களையே தெரிவு செய்கிறோம். உதாரணமாக மன்னிக்கவும் நாடகம்: இதில் உள்ள பாத்திரங்கள் எம்மில் பலரை சார்ந்திருப்பதை உணர்கின்றனர். புகலிடத்திற்கு குறிப்பாக லண்டனில் உள்ள பழையவர்கள், தமது போலி கெளரவங்களை பெருமையடிப்பதை காட்டுவதற்காக புதிதாக வந்து கஸ்டப்படுபவர்களை வீட்டுக்கு விருந்துக்கு அழைப்பதை பிரதிபலிக்கிறது.
மனிதம் -28 21

Page 13
இன்னும் போகிற வழிக்கு ஒன்று நாடகமும் ஒரு சர்வதேச பிரச்சனையை மையப்படுத்தியிருக்கிறது. இன்னும் சம்பந்தம் முகமில்லாத மனிதர்கள் போன்ற பல நாடகங்களை எடுத்துக் கொண்டால் இவற்றை நாம் மொழிபெயர்ப்பு நாடகம் என்று குறிப்பை கொடுக்காவிடின் (ஏற்கனவே வாசித்திருக்காவிட்டால்) மொழிபெயர்ப்பு என்ற தொனி ஏற்படுவதற்கு சந்தர்ப்பம் இல்லை.
? உங்கள் நாடகங்கள் பொதுவாக பழையனவாகவே உள்ளன. சமகாலத்தையும் பிரதிபலிக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?குறிப்பாக 83 இற்குப் பின்பு சமூக நிலைமைகளில் சிந்தனை முறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. இவ்வித சமூகப் பிரக்ஞையுடன் கூடிய நாடகங்கள் பார்வையாளர்களை ஒன்றிக்க வைக்கும் என நம்புகின்றோம். காலத்தின் பிரதிபலிப்பும் அவசியமான ஒன்றுதானே!.
() () இதை செய்யலாம். செய்வது நல்லது. ஆனால் பிரச்சனை Script தான். அதனால் காலத்தையும் எமது சமூகத்தையும் பிரதிபலிக்கும் வகையில் சமகால கவிஞர்களின் சிறந்த கவிதைகளை தொகுத்து எரிகின்ற எங்கள் தேசம் கவிதா நாடகத்தை உருவாக்கியுள்ளோம். ஆனால் போகிற வழிக்கு ஒன்று என்ற நாடகம் எமது தற்கால வாழ்வை பிரதிபலிக்கிறது என்றுதான் நம்புகின்றேன். உடலியல் சித்திரவதை, உளவியல் சித்திரவதை, சித்திரவதை செய்பவன் எவ்வித நிர்ப்பந்தத்தில் இதைச் செய்கின்றான். போன்ற பல பிரச்சனைகளை பிரதிபலிப்பதோடு, சர்வதேச ரீதியானதும்கூட.
(இச்சந்தர்ப்பத்தில் போகிற வழிக்கு ஒன்று நாடகம் பற்றிய எமது விமர்சனத்தை முன் வைத்தோம். இந்நாடகம் இன்னும் மெருகூட்டப்பட வேண்டும் என்ற கருத்தையும் கூறினோம். இந்நாடகம் இதுதான் முதல் மேடை. அதனால் நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம் என்று கூறி பாலேந்திரா எம்முடன் உடன்பட்டார்.)
? சுவிற்சலாந்தில் உங்கள் நாடகங்களை மேடையேற்றிய போது ஏற்பட்ட அனுபவம் பற்றி ஏதாவது கூறமுடியுமா?
0 0 பொதுவாக ஒரு கலைவிழா நிகழ்ச்சியுடன் சேர்ந்த நாடகத்திற்கு என்று இல்லாமல், நாடகத்திற்காக மட்டும் என்று பார்வையாளர்கள் வருகை தந்ததனால் இது எமக்கு பெரு வெற்றி என்றுதான் கூற வேண்டும். அத்துடன் ஏற்கனவே எமது நாடகங்களை சந்திக்காதவர்கள்தான் பார்வையாளராக வந்துள்ளனர். அத்துடன் எமது நாடகம் பற்றிய அவர்களது பார்வைகளையும் உடனுக்குடன் அறியக்கூடியதாகவும் இருந்தது. அந்த வகையில் எமக்கும் பெரும் திருப்தி. லண்டனைப் பொறுத்த வரை எமக்கென்று ஒரு பார்வையாளர் கூட்டத்தை உருவாக்கியுள்ளோம். நீங்கள் இங்கு வாழ்பவர்கள் இத்தகைய நாடக முயற்சிகளை மேற்கொள்ளலாம். அத்துடன் நாடகத்தை மேடையேற்றும் போது Script ம் பயிற்சியும் மிகவும் செழுமையாக இருக்க வேண்டும். ஓரளவு சிறப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்ந்து கொள்ளும் நாடகமும் தரமாக அமைவதும் முக்கியம். நாம் எல்லோருமே தொழிலாக நாடகத்தை செய்பவர்கள் அல்ல. ஆனால் அதில் ஈடுபடும் போது அதற்கென்று பலமான முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவில் இருந்து நாடகங்களையோ, சினிமா கலைஞர்களையோ வரவழைப்பதை தடுக்கலாம். தென்னிந்தியக் கலைஞர்களின் வருகை லண்டனிலும் பார்க்க இங்கு அதிகமாக இருக்கிறது. இதை உடைப்பதற்கு முக்கியமாக செழுமையாக நாம் நாடகங்களை மேடையேற்ற வேண்டும்.
火*安永*火安素*火安安***紫安火 k 安安
22 வைகாசி-ஆனி 1994

49 C
கலியாணம் முடிச்சு புள்ள குட்டிகளோட உன்ர் எதிர்காலம் நல்லா இருக்கோனும் படிப்பில் கவனம் செலுத்து எங்கேயோ நாமெல்லோரும் கேட்டதுதான, ஆனால இப்போது குழந்தைகளுக்காக எதிர்காலச் சந்ததிக்காக இவற்றினுாடக சமுதாயக் கடமையாக நாங்கள் இவைபற்றி மீண்டும் அறிய வேண்டிய கடமை எங்கள் மேல் உள்ளது. பிள்ளையின் கல்வியில் கிரகித்துச் சாராம்சத்தைச் சீரணிக்கும் பழக்கத்தை தமிழிலேயே பழக்கலாம் இதற்கு வேற்று மொழி தேவையில்லை. இயற்கையை அன்றாடச் சம்பவங்களை இவற்றிற்கு பயன்படுத்தலாம் சுய விருப்பு வெறுப்பினை நியாயமான வழிகளில் காட்டப் பழக்கலாம். அவற்றை நாம் மதிக்கப் பழகலாம். தீர்மானப் பழக்கங்களை ஊக்குவிக்க முடியும். தனது தீர்மானத்தில் தளராது நிற்க தானே பழகிக் கொள்ளாது நாம் பயிற்றுவிக்க வேண்டும். ஊக்கிவிக்க வேண்டும்.
பிரச்சனைகளை எவ்வாறு கையாள்கிறோம் எவ்வாறு முடிவுகளை எடுக்கிறோம் என நாம் செய்வதைப் பார்த்துக் குழந்தை பழகிக் கொள்ளும் நாளாவட்டத்தில் குடும்பச் சிறுபிரச்சனைகளில் அது தானாக நுழைந்து கொள்ளும். சமூகம் சார்பான சிந்தனையை எங்களிலிருந்துதான் முதலில் பயில்கிறது. சப்பட்டை, கறுவல், தொடங்கி வடிவில்லாதவன், நொணர்டி, விசரன் அதன்பின்பு செந்தமிழ் ஜெர்மனியில் இருக்கவே இருககிறது
கொப்பத்தாமினமோள் தொடங்கி சைசே
ஈறாக அதன் அகராதிச் சேர்ப்புக்களுக்கு நாமே வழிவகுக்கக் கூடாது. இவை சொல்லத் தகுந்த சொற்களல்ல என்பது புரிந்து கொள்ளும் குழந்தை நாளடைவில் ஏன் என்பதை தானகவே புரிந்து கொள்ளும். மனித நேய இயற்கையை மதரித தல மிருகங்களை எவி வாறு புரிந்துகொள்ளல் என்பன பற்றியும் நாம்தான் முதலில் அறிமுகம் செய்து வைக்கிறோம். சர்ச்சைக்குரியதாயினும் ஓர் ஏற்றுக் கொள்ளப்பட்ட முடிவாக ஓர் குழந்தையின் குணம் ஐந்து வயதில் தீர்மானத்திற்கு வந்துவிடும். அதன்பின்பு அது உடலால் மனத்தால் ஆன்மாவால்
வளருகின்றது. இது |-
முடிவின் பின்னான வளர்ச்சி.
குழந்தைக்கு பரந்த உலகை இயற்கையை சக மனிதர்களை நாம் தானி அறிமுகப் படுத்துகிறோம் இயற்கையின் அழகை, பனியின் குளிர்மை, பூவின் வண்ணத்தை, இலைகளின் வடிவமைப்பை, நீரோடையை, மாறிவரும் பருவகாலத்தை, அதன் குதுாகலங்களை, இலையுதிர் கால வறுமையை, வசந்தத்தின் புத்துயிர்ப்பை, இவையெல்லாம் தரும் இன்பங்களைச் சிறிது சிறிதாகப் புரிய வைக்க அலுப்பினைப் பாராது குழந்தையுடன் வெளியே செல்லத்தான் வேண்டும். அதன் கற்பனையைத் துாண்டிவிடுகினற செயல்கள் இவை. இசையை ரசிக்கப் பழக்க வேண்டும். அந்த இசையை மாத்திரம் வழங்கிவிட வேண்டும். சின்னச் சின்னப் படம் போட்ட புத்தகத்தில் கதை சொன்னால் உம் கொட்டிக் கொண்டும் பின்பு படத்தைப் பார்த்துத்தானே எங்களுக்குக் கதை சொல்லும். அன்பைக் கொடுத்து அண்பைப் பெறலாம். அலறும் எப்ரீயோவும் ஓயாத T. V வீடியோவும் குழந்தைக்குத் தேவையா. மரபுகளென்று வெளிக்கிட்டால் கொண்டாட்டங்கள் மாத்திரமா எமது நோக்காக இருக்க வேண்டும்.
தொழில்களில் ஏற்றத்தாழ்வை வளரும் வயதில் விளக்கிடலாம். ஏதோ கடமைக்குப் படித்து வைத்தியனாகவோ, எக்கவுணர்டனாகவோ அன்றேல் எதுவாகவோ யாரையோ பூர்த்தி செய்யத் தன் தொழிலைத் தேர்ந்தெடுத்து வாழ்கை பூராக மனம் புழுங்காமல் தனக்குப் பிடித்த துறையினைத் தேர்ந்தெடுக்க அதில் நிற்க ஆரம்ப ஊற்றினை நாம்தான் கொடுக்க வேண்டும். எல்லோர்க்கும் வாசனைப் பழக்கமிருக்க வேண்டுமென்றில்லை ஏதோ ஓர் கலையை அது தானாகவே தேடிக் கொள்ள நாம் ஊக்கிவிக்கலாம். அவையெல்லாவற்றிற்கும் நாம் முதலில் கற்கவேணடியுள்ளதே மனோவியல் சிறிது பழக்கவழக்கங்கள் புதிதாக புதிய பார்வைகள்
எவ்வளவோ இருக்கிறது இப்போது.
உங்கள் குழந்தை எந்த ரீதியில்
பின்தங்கியுள்ளது
不 26
மனிதம் -28
23

Page 14
1994
VVV
இரு மாதத்துக்கு
ஒருமுறை வெளிவரும் இதழ்
முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிய தொழிலாளர் போராட்டத்தை ஒடுக்க முற்பட்டதில் பல தொழிலாளர்களிர் உயிர்கள் பலியெடுக்கப்பட்டு, அமெரிக்காவின் சிக்காக்கோ நகரமே இரத்தத்தால் தோய்த்தெடுக்கப்பட்டது. இது 1886ம் ஆண்டு. அன்று உலகத் தொழிலாளர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்ட மே ஒன்று படிப்படியாக அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களினதும் எழுச்சி நாளாகப் பரிணமித்தது. தொழிலாளர், விவசாயிகள், பாட்டாளிகள் என்று அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களினதும் எழுச்சி நாளான மே ஒன்று இன்றும் இம்மக்களின் விரோதிகளினாலும்- அதன் உண்மை அர்த்தத்தை இழந்து- கொண்டாடப்படுவதும் கண்கூடு. உலகம் வாழ் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களினதும் எழுச்சி நாளான மே ஒன்றில்தான், புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் அடிப்படையான கருத்துச் சுதந்திரத்திற்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாக:
15 வருட தமிழீழ இயக்க வரலாற்றில் எஞ்சியதும், விஞ்சியதுமான ஆயுதக்கலாச்சாரம் (1994 மே ஒன்றில்) பாரீஸ் நகரிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆம்! அருமை நண்பர் சபாலிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான சபாரெட்ணம் சபாலிங்கம், 1973இல் பாலம் ஒன்றிற்கு குண்டு வைத்தவர் என்ற குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து தப்ப முயற்சித்ததில் நாரியை முறித்துக் கொண்ட இவர் சில கால தலைமறைவு வாழ்விற்குப்பின் பார்சிற்கு புலம் பெயர்ந்தார்.
இங்கும் தமிழுக்கும், தாய்மண்ணிற்கும் தம்மால் இயன்ற சேவையைச் செய்யும் நோக்குடன் ”ஆசியா” (ASSCAY: Arts and Social Science of Ealam Acadamy) 6 TgO}JuĎ நிறுவனத்தை உருவாக்கி அதன் இயக்குனராகவும் இருந்துகொண்டு, யாழ்ப்பாண வைபவமாலை , புத்தளம் முஸ்லிம்களின் வரலாறு போன்ற நுால்களை மறுபதிப்பு செய்ததுடன், சமகால ஈழக்கவிஞர்களின் கவிதைநூல்களையும் வெளியிட்டார், சில அரசியல் நுால்களை பிரான்ஸ் மொழியிலும் மொழிபெயர்த்து பதித்துள்ளார். சமகாலத்தில் சிறந்த ஆவணக்காப்பாளராகவும் திகழ்ந்தார்.
எண்பதுகளின் முற்பகுதியில் பெடியங்கள் விடுதலைக்காக எதைச் செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்ற எண்ணமும், அது அவனுக்குத்தானி, எனக்கில்லை என்ற மனோபாவமும், இறுதியில் ஆயுதப் பழக்கம் மேலோங்கியதும் பயந்த மனோநிலையில் எதையுமே தட்டிக் கேட்க துணிவற்ற, திராணியற்ற சூழ்நிலையில் தமிழ் சமூகம் இயக்கங்களுக்கு
 

அளித்த அங்கீகாரம் தான் இவ் ஆயுதக்கலாச்சாரம் என்பதை காலம் கடந்த பின்னும் எத்தனை பேர் உணரதி தல்ைப்பட்டுள்ளனர்?
உண்மை! இவ் ஆயுதக் கலாச்சாரம் நேற்று, இன்று திடீரென முளைவிட்ட ஒன்று என்றோ புலிகளிடத்தில் மட்டும் உருப்பெற்ற ஒன்றாகவோ கருதிவிட முடியாது.
சரி: சனமும் சமூகமும்தான் தட்டிக் கேட்கவில்லையென்றால் இயக்கங்களுமா? தட்டிக் கேட்கும் பழக்கம் சமூகத்தில் இருந்தால்தானே அது இயக்கத்திற்குள்ளும் வளர்ந்திருக்கும் என்ற ஒரு பதிலை கூறிவிடலாம். சனங்களுக்கு முன்னோடிகளாக செயற்பட்ட வர்கள் என்றதால் தட்டிக் கேட்பதில் இயக்கங்களுக்குத்தான் முக்கிய பங்குண்டு என்கிறது சனங்கள் பக்கத்துப் பதில், அதிலுமோர் நியாயமுண்டு.
ஓர் இயக்கம் படுகொலைகளில் ஈடுபட்டதென்றால் மற்ற இயக்கங்கள் ஏன் தட்டிக் கேட்கவில்லை. இங்குதான் உண்மை புலப்படுகிறது. இயக்கங்கள் பலவும் தமக்குள்ளேயே உட்கொலைகளை கொண்டிருந்ததும், சக இயக்க நண்பர்களை கொலை செய்வதிலும் எவ்வித பாவ, பரிதாபமோ, சகோதர உணர்வோ இன்றிச் செயற்பட்டனர். இந்த வகையில் இவ் ஆயுதக் கலாச்சார வளர்ச்சியில் இவர் இயக்கங்கள் அனைத்துக்கும் பங்குண்டு என்பதே உண்மை! இதை அனுமதித்தவர்கள் என்ற வகையில் சமூகம்(சமூக உறுப்பினர்கள் ஒவ்வொருவரும்) இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். நாம் விதைத்த வினையை நாமே அறுத்தாக வேண்டும்!
சபாலிங்கம் தமது இறுதிக்காலத்தில் ஈழ விடுதலை இயக்கங்கள் பற்றிய வரலாற்றை ஆரம்பத்தில் இருந்தே வெளிக்கொணர்வதில் முனைப்புடன் செயற்பட்டார். முறிந்த பனைமரம் நுாலின் ஊடாக இத்தகைய ஒரு முன்முயற்சியின் முன்னோடியாக திகழ்ந்த யாழ் பல்கலைக்கழக பேராசிரியப் பெண்மணி ராஜினி திரணகம கொலை செய்யப்பட்டதன் தொடர்ச்சியாகவே சபாலிங்கத்தின் உயிர்ப் பறிப்பும் நிகழ்ந்துள்ளது என்பதில் ஐயமில்லை.
சபாலிங்கத்தின் கொலையை அடுத்து, மே 23 அன்று நள்ளிரவு ஒரு மணியளவில் கனடா ரொரன்ரோவில் இயங்கிவரும் தேடகம் நுால் நிலையமும் ஆவணக் காப்பகமும் போத்தல் குண்டெறிந்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. 1981 மேயில் யாழ் நூால் நிலையம் சிங்கள இனவெறி இராணுவத்தால் தீக்கிரையாக்கப்பட்டபோது வருந்தியவர்கள் நாம், மேற்கொண்டு இயக்கங்களின் வளர்ச்சிக்குகூட உந்துசக்தியாக விளங்கியதில் யாழ்நுாலக
சந்தா விபரம் :
தனிப்பிரதி 3 SFr வருட சந்தா :22SFr
ஐரோப்பிய நாடுகளிற்கு . -25 SFr
Postcheck Korfo 30-3752-1 Manitham
Bank KOnto : Schweizerische Kreditanstalt 300 BERN Nr 220348-7O
இலங்கை, இந்தியன -இலவசம்

Page 15
'
எரிப்புக்கும் முக்கிய பங்குண்டு. இவ்வகையில் தேடகம் நூலக எரிப்பும் இவ்வித பங்கை செலுத்துமோ என்னவோ?
15 வருட இயக்க வரலாற்றில் புடம் போட்டெடுக்கப்பட்டுள்ள இராணுவ பலத்தை எமது விடுதலைப் போராட்டம் பெற்றுள்ளது என்பது உண்மைதான். ஆனால் மாற்றுக் கருத்துடையவர்களை கருத்துக்களால் எதிர்கொள்ளும் வலிமை எமது விடுதலைப் போராட்டத்தில் இணைக்கப்படவில்லை. இதுவே எமது இயக்கங்களிடத்தில் புரையோடிக்காணப்படும் மிகப் பெரிய பலவீனம்! மாற்றுக்கருத்துடையவனோ அன்றி மாற்று இயக்கக்காரனோ! எவனாயிருப்பினும் துப்பாக்கி ரவைகளினால் தீர்த்துக்கட்டப்படுகிறான். துப்பாக்கி ரவைகள்! இவை உடலைத்தான், உடலை மட்டும்தான் துளைக்கும். அவனது ஆன்மாவையோ அல்லது அவனது ஆன்மா உதிர்த்த கருத்துக்களையோ எந்த துப்பாக்கி ரவைகளும் இராணுவ பலமும் துளைத்து விடமுடியாது. அவன் உதிர்த்த கருத்துக்களை பரவாமல் தடுத்து விடலாம் என்று எண்ணலாம்! சிலவேளை அதுவும் தற்காலிகமாகத்தான். சரியான கருத்துக்களை நிரந்தரமாக தடுக்கும் வலிமை எந்த மகா சக்திகளுக்கும் கிடையாது. இதுவே உலக வரலாறு. மனித சமூகத்திற்கு கற்றுக் கொடுக்கும் பாடம்.
எமது விடுதலைக்கும், சமூக வளர்ச்சிக்கும் பெரும் தடையாக நிற்கும் இத்தகைய (மாற்றுக்கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ளும் வலிமையற்ற) இராணுவ கலாச்சாரத்திற்கு எதிராக குரல் கொடுப்பது என்பது மிகக் குறைந்த பட்சமான செயற்பாடே! புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள ஜனநாயகச் சூழலைப் பின்புலமாக கொண்டேனும் இத்தகைய முன்முயற்சியில் இறங்கவேண்டியது எமது சமூகம் முழுமைக்குமான பணியாகும். செய்வதொன்றும் அறியாது தேக்கமுற்ற நிலையில் இருக்கும் சமூகப் பொறுப்பு மிக்கவர்களை இவ்விடயத்தில் விழிப்படைய செய்ய வேண்டும்! ஏற்கனவே விழிப்புற்றவர்கள் இதெல்லாம் சிறிய செயற்பாடு. நாம் பெரிய செயல்களில்தான் இயங்குவோம் என்று கருதுவார்களானால் அவர்கள் இப்படியே கூறிக்கூறி சிறிய வேலைகளைத் தட்டிக்கழித்து இறுதியில் ஒரம்வரை சென்று எதற்குமே முகம் கொடுக்கும் பயிற்சி அற்றவர்களாகி எதிர்நிலைக்குச் செல்லத்தான் வாய்ப்பளிக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஆயுதக்கலாச்சாரத்திற்கு எதிராக குரல் கொடுப்பது என்பது அடிப்படை கருத்துச்சுதந்திரத்திற்கான செயற்பாட்டில் ஒரு துளியே! இச்சிறுதுளி செயற்பாட்டின் அர்த்தத்தை உணர்த்துவதும், ஈழத்தமிழ்ச் சமூகத்தை ஒன்று குவிக்க வேண்டியதும் புலம்பெயர்ந்துவாழ் தமிழர்களின் தலையாய கடனாகும்.
Lauw
23 K
விரல் சூப்பிறாள் படிச்சதை மறக்கிறாள் உங்களுக்கு எனது கேள்வி விளங்குகிறதா? ஓம்
என்ன விளங்குகிறது? மெளனம் உங்கள் குழந்தையின் பின்னடைவு மனோரீதியானதா? உடல் ரீதியானதா? மெளனம் உங்கள் மட்டில் குழந்தை பற்றிய பிரச்சனை என்ன? விரல் சூப்பிறாள். இதனால் என்ன நடக்கும்? பல்லு மிதக்கும் வடிவில்லாமல் போகும். இதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? நெடுகச் சூப்பாதை எண்டு சொல்லுற நான். சில நேரத்தில கையில அடிபோடுவன்.
குழந்தையின் பல்லுமிதந்தால் அதனைச் சரிப்படுத்த நிச்சயமாக வாய்ப்புகளுண்டு அதனது மனமுடைந்தால் திருத்த வாய்ப்பே இல்லை இதைனைப் புரிந்து கொள்ளுதல் எங்களது சந்ததிக் கடமை.
(உளவியளாளரின் பதில்) 26 வைகாசி-ஆனி 1994

Ifīra fī fir
சிங்கள திரைப்படம் பற்றிய சுருக்கமான சில குறிப்புகள்:
இ றவாத மனிதர்கள் அல்லது மரணிக்காத மனிதர்கள் என்னும் இவ் நொமியன்ன மினிகன் திரைப்படம் இலங்கைத் தீவின் எரிகின்ற ஒரு பிரச்சினையைத் தொட்டுச் செல்ல முற்படுகின்றது என்பது மட்டுமன்றி, ஆளும் ஐ.தே.க அரசாங்கததினி பிரதி சபாநாயகரும் கலைஞருமான காமினி பொன்சேகாவினால் தயாரிக்கப்பட்டதென்பதும் அதற்கொரு தகுதியையும் கூடவே ஒரு எதிர்பார்ப்பினையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தமை வியப் புடையதனிறு. ஆனால் இந்த எதிர்பார்ப்புக்களை இலங்கையின் மரணங்கள் மறைத்தனவோ எண்னவோ வழமையான அரசியல் சறுக்கல்கள் இக் கதையிலும் முடிவில் வெறுமையைக் காட்டி விடுகின்றன.
காமினி பொன்சேகா சிங்களத் திரைப்படங்கள் மூலம் நன்கு அறியப்பட்டவர். தற்போது பிரதி சபாநாயகர். வடக்கு-கிழக்கில் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் இலங்கை இராணுவத்திற்காகப் பாராளுமன்றத்தில் அடிக்கடி குரல் கொடுப்பவர். இவர்தான் மரணிக்காத மனிதர்களை மக்கள் முன் படைத்திருக்கிறார். இலங்கையின் சிங்கள திரைப்படத்துறையின் வளர்ச்சி படப்பிடிப்பு, இசை, தயாரிப்பு போன்ற விடயங்களில் நன்கு தெரிகிறது. பாராட்டலாம். விமானம் ஓடும் சத்தத்தோடு ஓடும் எழுத்தோட்டம் பயத்தினையும், யாழ்ப்பாண நினைவுகளையும் பல தமிழர்களுக்கு தவிர்க்கமுடியாதபடி கொண்டுவர, இராணுவ உயர் அதிகாரிகள் பலருக்கு படம் நன்றி கூறுகின்றது. மறைந்த இலங்கைப் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ரஞ்சனி விஜயரட்ண இராணுவ அணிவகுப்பை பார்வையிடுவதுடன் காட்சி தொடங்குகிறது. இது இலங்கையில்
மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள் மிகவும் நியாயமானவை என்பதைச் சொல்லி வைப்பதோடு அதற்காக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் தியாக சிந்தையுள்ள முற்போக கானவை எனறும் சொலல முற்படுவதாகவே படுகின்றது.
இராணுவ அதிகாரியான ஜெயசுந்தர (காமினி பொன்சேகா) தன்னலமற்ற, நாட்டுப்பற்றுள்ள பொறுப்பான ஒருவர். இவர் ஓர் இந்தியப் பெண்ணை (ஹிந்தி மொழி பேசும்) மணம் முடித்து, நாட்டின் அமைதியற்ற குழ்நிலையால் (நாட்டின் வடக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் அமைதி நிலவுவதாக அரசாங்கம் சொல்ல காமினி இல்லை என்கிறார்) மனைவியும் குழந்தையும் அவர்களது பணக்காரத் தந்தையுடன் இந்தியா திரும்ப, நாட்டிற்கு சேவையாற்றும் ஒரே காரணத்திற்காக மனைவி, பிள்ளையின் வற்புறுத்தலுக்கும் மறுத்து இலங்கையில் தங்குகிறார். ஜெயசுந்தராவின் அன்புக்குரிய இளம் இராணுவக் கப்டன் -கப்டனின் காதலி சாதாரண மானுட உணர்வுகளுக்குரிய ஆசைகள் ஏக்கங்கள் நிறைந்த உள்ளங்களாகச் சித்தரிக்கப்படுகின்றனர்.
இளம் இராணுவ கப்டனின் திருமண ஆயத்தங்களுக்கிடையில் அவனது விடுமுறை மறுக்கப்பட்டு அவன் வடக்கு யுத்தமுனைக்கு அனுப்பப் படுகிறான். அங்கு அறத்தோடு கூடிய போர் நடக்கிறது. முடிந்தளவு போராளிகளைக் கொல்லாது அவர்களை நிராயுதபாணிகளாக்கும் வகையில் இராணுவம் போர் புரிகிறது. எதிரியின் கைகளில் அகப்படாமல் தனனுயிரை
நீத்துக்கொள்ளும் இராணுவ வீரர்களும் இதில்
மனிதம் -28
27

Page 16
அடங்குகின்றனர். வெற்றியோடு போராளிகள் தலைவனையும் கைது செய்து கொண்டு, அவனுக்கு மனிதாபிமானத்துடன் தண்ணீர் கொடுத்து உயிரைக் காப்பாற்றி அழைத்து வரும்போது கண்ணிவெடித் தாக்குதலில் அந்த இளம் கப்டன் இறந்து விடுவதாக செய்தி கிடைக்கிறது. காதலியின் துயரம் ஜெசுந்தராவின் உண்மைநிலை தெரியாது அவர்மீதான அவளின் கோபம் என்பன வந்துமாற கப்டன் உயிருடன் இருக்கும் செய்தி கிடைக்கிறது. போராளிகளும் அரசும் தத்தமது கைதிகளை விடுவது பற்றிப் பேச முற்படும்போது இக் கப்டனின் பெயர் முன்மொழியப்படுகிறது. இதுவிடயமாக யுத்த பூமிக்குச் செல்லும் ஜெயசுந்தர அங்கு திடீரென வெடிக்கும் யுத்தத்தில் இறந்துவிடுகின்றார். இதுதான் கதை.
காதலர்களுக்கூடாக பெளத்த, கிறிஸ்தவ ஒற்றுமையை கொண்டுவர முயற்சிக்கப்படுகின்ற போதும் தமிழ்-சிங்கள உறவு வேலைக்காரன்எஜமான நிலையில் தான படததில் காட்டப்படுகின்றது. ஜெயசுந்தரவின் வீட்டு வேலைக்காரனான சுப்பிரமணியம் அவரில் தங்கியிருப்பவன். அவருக்கு சப்பாத்துக் கழற்றிவிடும் விசுவாசமுள்ள தமிழ்ச் சேவகன்.
தமிழ்ப் பகுதியில் கணிணிவெடித் தாக்குதலின் பின் இளம் கப்டனை ஒரு தமிழ் வைத்தியர் குடும்பம் பராமரிக்கின்றது. யுத்த தர்மத்தினை வைத்தியர் பேசும்போது கப்டன் ஆச்சரியத்துடன்
அப்படியானாலி நீங்கள் யாழிபாணத் தமிழரில்லையா? என வினாவுவது பெளத்த போதனைகளை யாழ்பாணத் தமிழர்கள் அறியமாட்டார்கள் என்பது போலுள்ளது. தமிழ்ப் பகுதிக்குப் போகும் ஜெயசுந்தர தமிழில் பேச முற்படுகிறார். போராளிகள் ஆங்கிலத்தில் பேசுகின்றனர். உணர்மையில் தமிழ் தெரிந்த சிங்களவர்களைவிட சிங்களம் தெரிந்த தமிழர்கள் தான் இலங்கையில் அதிகம். படத்தில் கூட டப்பிங்கில் இலங்கை வானொலி தமிழ் அறிவிப்பாளர்கள் சிலரின் சிங்கள உரையாடலைக் கேட்க முடிகிறது. யுத்தகளம் கடற்கரையை அண்டிய பிரதேசமாகத் தெரிகிறது. ஆனால்
மாங்குளம் ஒப்பரேசன் என இராணுவத்தினர் அறிவிக்கின்றனர். (லங்காபுவத் செய்திபோலத்தான் இதுவுமோ?) யுத்தத்தில் ஷெல் ஏவுதல் மூலம் சில பனைகளின் தலைகள் அறுகின்றன. யாழ்பாணத் தலையைக் கொய்வதுதான் இராணுவ நோக்கு என இறவாதவர்கள் சொல்லாமற் சொல்கிறார்களா?
போராளிகளைக் காட்டும் போது தமிழ் வைத்தியரின் மோதிரத்தைப் பறிப்பது, மட்டமான சம்பாஷணை என்பன வேணடுமெனிறே செய்யப்பட்டுள்ளன. யாழிப்பாணத்தில் போராளிகளைக் காட்ட முற்பட்டும் யாழ்ப்பாணத் தமிழ் பேசுவது சரிவரவில்லை. (ராமதாஸ், பூgதர் போன்றோர் யாழ்பாணத் தமிழை மட்டுமல்ல தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் தெரியாதவர்கள் தானே) கப்டனின் (தாய்,காதலி) உறவுகள், உணர்வுகள் போல் போராளிகளுக்கு உறவுகளோ, உணர்வுகளோ இல்லையென இறவாதவர்கள் நம்புகிறார்களா? இதுபற்றிய எந்த தகவலும் படத்தில் இல்லை.
சம்பளத்துக்காகவல்ல இனத்துக்காகப் போராடவந்தவன் என தமிழ்ப் போராளி கூறுவதற்கு.
நான் இனத்திற்காக அல்ல முழுநாட்டிற்கும், முழு இனத்துக்குமாக போராடவந்தவன் என இராணுவ கப்டனை அறைகூவ வைத்த காமினியால ஒரு தமிழ் இராணுவ அதிகாரியையாவது மறந்தும் காட்ட முடியவில்லை.
பிந்தி மொழி பேசிக் கொண்டு வரும் இராணுவத்தினர் கப்டனுக்கு அடைக்கலம் கொடுத்த தமிழ் வைத்தியரைக் கொன்று விடுகின்றனர். பிந்தி இராணுவம் எப்படி வந்தது? யார் அவர்களை இலங்கைக்கு வரவழைத்தது என படம் எதனையும் சொல்லவில்லை.
கடைசியில் கேர்ணல் ஜெயசுந்தர தமிழ்ப் பிரதேசத்திற்குப் போய் போராளிகளோடு பேசும் போது திடீரென யுத்தம் வெடிப்பதற்கான காரணமும் சொல்லப்படவில்லை. ஜெயசுந்தராவின்
28
வைகாசி-ஆனி 1994

இறுதிச் சடங்கில் விசுவாசமுள்ள அவரின் வே ைஐக காரணி சுப் பிரமணியம் அழும்போது. சுப்பிரமணியம் ! அழவேண்டாம். இப்படியான மனிதர்கள் இறப்பதில்லை இவர்கள் இறவாமனிதர்கள் என ஆத்திரத்துடன் வந்த கட்டளை சுப்பிரமணியத்தின் வாயை அடைத்துவிட படம் முடிகிறது. அந்த தமிழ்ப் பாத்திரத்தின் வாயை மூடவைத்து படத்தினை மூடுவது என்னத்திற்காகவென விளங்கவில்லை.
படத்தின் பெயரைப் பார்த்தபோது
மார்க்சீம் கார்க்கியின் தாய் நாவலில் வரும்
அநியாயமாகக் கொலையுணர்ட அனைவரும்
உண்மை நெறியென்னும் பலத்தாலே
உயிர் பெற்று நிற்பார் கவிதைவரிகள் ஞாபகத்திற்கு வருகின்றன. கார்க்கி உணர்மையான புரட்சிக்காப் போராடிய நேர்மையான போராளிகளைச் சொல்ல, காமினி பொன்சேகா ஒரு உரிமைப் போராட்டத்தை நசுக்கும் இராணுவத்தைப் பார்த்து சொல்கின்றார். அவ்வளவுதான் வித்தியாசம்.
எனற
பெளத்த சிங்கள தேசியவாதத்திலிருந்து காமினி பொன்சேகாவின் அரசியல் மட்டுமலல, கலையும் தப்பிக்க முடியவில்லை. மொத்தத்தில் மரணிக்காத மனிதர்கள் சொன்ன சேதி ஒன்றுமில்லை. தீர்வும் எதுவுமில்லை. இராணுவத்தினை வலிந்து மரணிக்காத மனிதர்கள் என காமினி சொன்னாலும், உணர்மையில்
இறவாத மனிதர்கள் யாருக்கும் விளங்கவில்லை. இதுதான் இலங்கையின் உணர்மை நிலை.
யார் என்பது
- எஸ்.எஸ்ரீ
(இலங்கை)
பிது
Գրե ամեննIն
நாணிக்குறுகி
கால்விரலால் செம்மண்ணில் நீளக் கோடுகள் கீறி என்னோடு நீ ஒருவார்த்தை பேசி முடிப்பதற்குள் பிய்த்தெறிந்த செவ்வரத்தை இலைகள் தான் எத்தனை
அன்பே
வரண்டுபோன என் வாழ்க்கைப் பாதையில் சிறு அருவியாய் ஒரு பூவாய்
உன்னை நான் சந்தித்தேன்
அது ஒரு பருவம்
6 TLD பார்வைப் பரப்பில் மொட்டு வைத்த அந்த மெல்லிய காதலைச் சொல்வதற்குள் காலச் சுழற்சி கண்காணாத் துாரத்தில் எம்மைப் பிரித்து.
அன்பே,
இன்னும் எமக்குள் இழையோடும் அந்த மெல்லிய காதல். இருந்தும் என்ன இருவரும் வெவ்வேறு திசைகளில்
மனிதம் -28

Page 17
、Wーベエ
s
1948: ஆண்டும் 1949ம் ஆண்டும்
மலையக மக்களை அநாதைகளாக்குகின்ற குடியுரிமைச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டபோது தமிழ்க் காங்கிரஸ் மற்றும் சிறுபான்மை உறுப்பினர்கள், சிங்கள சுயேட்சை உறுப்பினர்கள், SWRD பணி டாரநாயக் கா எண் போர் எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்கள் என்று பார்த்தோம். இனி அன்றைய கட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற வகையில் இடதுசாரிக் கட்சிகளின் நிலைப்பாட்டினைப் பார்ப்போம்.
இக் காலகட்டத்தில் இடதுசாரிக் கட்சிகளாக மூன்று கட்சிகள் இருந்தன. N.M. பெரேரா தலைமையிலான லங்கா சமசமாஜக் கட்சி, கொல்வின் R. D. தலைமையிலான போல்ஷெவிக் லெனினியக் கட்சி, S. A. விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி என்பன ஆகும். இம் மூன்று இடதுசாரிக் கட்சிகளும் அன்றைய காலகட்டத்தில் பெளத்தசிங்கள பேரினவாத அலைக்குள் இறங்கவில்லை. பிற்காலத்தில் அவர்கள் இறங்கினார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இவர்களில்
ஒருவரான கொல் வினி -
R.D. சில்வாவினாலேயே பேரினவாதத்துக்கு அரசியல் அந்தஸ்து கொடுக்கப்பட்ட 1972ம் ஆண்டு அரசியல் திட்டம் உருவாக்கப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. எனினும் அன்றைய காலகட்டத்தில் பேரினவாத அலைக்குள் இவர்கள் இறங்காதபடியால் இவ் இரு பிரஜாவுரிமைச் சட்டத்தையும் இவர்கள் எதிர்த்து நின்றார்கள். பாராளுமன்றத்திலும் எதிர்த்து வாக்களித்தார்கள். பாராளுமன்ற விவாதத்தின்
போது லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரான N.M.பெரேரா இதுபற்றிக் கூறுகையில், இச் சட்டங்கள் முழுமையான வகுப்புவாதம் கொண்டவை. இவ்வகையான இனவாதம் ஹஸ்டன்,
சம்பர்லேன், அடல்வி ஹிட்லர்
இதொகாவும்மலையக மக்களும் - 6
- மலைமகன்
போன்றோரின் இனவாதமாகவே முடியும். ஓர் அரசியல்வாதி, நாட்டுத்தலைவர் என்று தன்னைக் கூறும் ஒருவர் இத்தகைய ஒரு சட்டத்துக்கு ஆதரவளிக்கும்படி எம்மைக் கேட்பார் என நான் நினைக்கவில்லை. கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகிலிருந்து வேறான ஒரு தனிச் சாதியாக எம்மைக் கற்பனை செய்து இதனை அனுமதிக்க முடியாது. நாம் மட்டுமே இந் நாட்டின் பிரஜைகளாக இருக்கும் பேறு பெற்றவர்கள் என்பது தவறு. எனக் குறிப்பிட்டார்.
போல் ஷேவிக் லெனினியக் கட்சியின் தலைவரான கொல்வின் R.D. சில்வா (1945 இல் கொல்வின் R. D. சில்வா LSSP இலிருந்து வெளியேறி போல்ஷெவிக் லெனினியக் கட்சியை உருவாக்கினார். 1950 இல் புதிய கட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் LSSP யுடன் சேர்ந்து கொண்டார்.) இனவாதத்திற்கும் பிற்போக்கிற்கும் இடையிலான தொடர்பினை எடுத்துக்காட்டி இச் சட்டத்தினைச் சாடினார். மட்டமான அரசின் மோசமான செயலே இச் சட்டம் என்றார். இவர் இதுபற்றி மேலும் பேசுகையில், இச் சட்டத்தின் பின்னணியை இதன் அரசியற் காரணிகளையும் சமூக நோக்கங்களையும் பார்தி தாலி பிற்போக்குத்தனத்தின் சிறந்த உதாரணமாகக்
30
வைகாசி-ஆனி 1994
 

காணலாம். இனவாதம் பிற்போக்கிற்கு வாய்ப்பான ஆயுதம். இச் சட்டம் சர்வஜன வாக்குரிமையின் எதிர்கர் ல சவக் குழியைத் தோணி ட பயன்படுவதாகும். என்றார். ஒரு குறிப்பிட்ட குழுவுக்கெதிராக இனவாத அடிப்படையைப் பிரயோகிக்க அரசாங்கம் தொடங்குவது இன்று இலங்கையர் என ஏற்றுக் கொள்ளப்படும் ஏனைய சிறுபான்மையினத்துக்கு எதிராகவும் வேறுபாடு காட்டுவதற்கு வழிகோலும். என்று ஒரு தீர்க்கதரிசனத்தையும் குறிப்பிட்டார். கொல்வினின் தீர்க்கதரிசனமே பிற்காலத்தில் நடந்தது என்பதும் அறிந்ததே.
இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி இச் சட்டங்களை இனவாத அடிப்படையில் நோக்காது வர்க்க அடிப்படையிலேயே நோக்கியது. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பீற்றர் கெனமன் இதுபற்றிப் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது, வர்க்க நலன்கள் இச் சட்ட விதிகளில் சேர்ந்திருப்பதால் நாம் இம் மசோதாவை எதிர்க்கிறோம். இச் சட்டம் தொழிலாளி வர்க்கத்தைச் சேர்ந்த இந்தியர்களுக்கு எதிரானது. இங்கு எழும் வினா வர்க்கத்திற்கு அப்பாற்பட்டது. இம் மசோதாவின் அடிப்படைத் தத்துவம் நேர்மையற்றது. ஒரு வர்க்கத்துக்கு வேறுபாடு காட்டும் இம் முறையினுாடாக இந் நாட்டு மக்களுக்கு பிரஜா உரிமை வழங்கும்படி கூறிக்கொண்டு UNP அரசு தன் அரசியல் அமைப்பை நிலைநிறுத்த முயல்கின்றது என்றார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான ரி அபேகுணவர்த்தனா இந்தியத் தொழிலாளரை இந்திய அரசின் ஐந்தாம் படையாக கருதும் போக்கைக் கண்டித்தார். இவர் இதுபற்றிக் கூறும் போது, நாம் அவர்களை நேச சக்தியாகவும் இலங்கையில் ஒரு சோசலிச அரசை நிறுவுவதற்கு போராடும் இலங்கைத் தொழிலாளர் வர்க்கத்தினராகவும் கருதுகிறோம். என்றார். இச் சட்டம் பொதுஜன பாதுகாப்புச் சட்டம், பொலிஸ் சட்டம், தொழிற் சட்டம் போன்று அரசாங்கத்தால் உருவாக்கப்படும் அடக்குமுறைச் சட்டங்களில் ஒன்று. என்றார்.
இந்தியர் என்று சொல்லப்படும் தொழிலாளர்
வர் கி கதி திணி ፵ (Ù பகுதியினருக்கு மாத்திரம் இச் சட்டம் எதிரானதல்ல. (UP (9 இலங்கை தீ தொழிலாளருக்கும் எதிரானதாகும். தொழிலாளரைப் பிரிப்பதற்காகவும், அவர்களது உரிமைகளை மறுப்பதற்காகவும் அரசாங்கம் தன்னை அதிகாரத்தில் நிலைநிறுத்துவதற்காகவும் எடுத்த இன்னோர் நடவடிக்கையே இதுவாகும். என மேலும் குறிப்பிட்டார்.
இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பாராளுமன்றத்தில் இவ்வாறு பேசினாலும் இதனை ஓர் போராட்டமாக எடுப்பதற்கான எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை. அன்றைய காலகட்டத்தில் அதற்கான நிறைய வாய்ப்பு இருந்தது. மலையக மக்கள் மத்தியில் இவர்கள் ஓரளவு பலமான நிலையில் இருந்தார்கள். மலையக மக்கள் மத்தியில் பலம்பெற்றிருந்த இலங்கை-இந்தியர் காங்கிரஸ் கூட வர்க்க நிலையில் UNP சார்பாக நிற்கக்கூடியவர்களாக இருந்தும், UNP இனவாதக் கட்சியாக இருந்து, இந்திய எதிர்ப்பு வாதத்தையும் தமிழருக்கெதிரான துவேஷத்தையும் கொண்டிருந்ததனால் அதனை ஆதரித்து மக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொள்ள விரும்பவில்லை. மாறாக இனவாதம் எதுவும் இல்லாதவர்களாகவும் சமவுரிமைக் கோஷத்தை முன் வைதீத வர்களாகவும் இடதுசாரிகள் விளங்கியமையால் அவர்களையே ஆதரித்தனர். இவ் ஆதரவினையும் பயன்படுத்தி அரசுக்கெதிரான வர்க்க ரீதியான போராட்டத்தை முன்னெடுக்க இடதுசாரிகளால் முடிந்திருக்கும். மலையகத்துக்கு வெளியே நகரத தொழிலாளர்களை அணிதிரட்டிய அமைப்பாகவும் பலமான தொழிற்சங்கங்களைக் கொணிட அமைப்பாகவும் இருந்தமை இப் போராட்டத்தை இன்னமும் இலகுபடுத்தியிருக்கும். ஆனால் இவர்கள் இவை தொடர்பான எதுவித முயற்சிகளையும் எடுக்காத சந்தர்ப்பவாதிகளாயினர். பாராளுமன்ற அரசியலில் சிங்கள மக்களின் வாக்குகள் இவர்களுக்கு அவசியமாக இருந்ததால் போராட்டங்களை நடாத்தி சிங்கள மக்களின் எதிர்ப்பினை சம்பாதித்துக்கொள்ள இவர்கள் விரும்பவில்லை. இச் சட்டங்களை சிங்கள பத்திரிகைகள் வெகுவாக ஆதரித்தமையும் கண்டிய சிங்கள மக்கள் இதனை வெகுவாக
மனிதம் -28
3.

Page 18
ஆதரித்ததோடு சட்ட ஏற்பாடுகள் தாராளத் தன்மை கொண்டவை என்று கண்டித்த நிலைமைகளும் போராட்ட செயன்முறைகளிலிருந்து இவர்களைப் பின்வாங்க வைத்திருக்கும்.
இது தொடர்பாக இவர்களுடைய போக்குப் பற்றி மலையக மக்கள் முன்னணி செயலாளர் காதர், மோகன்ராஜ் என்ற பெயரில் தான் எழுதிய
20ம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம் என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
இடதுசாரிகள் இச் சட்டத்தை எதிர்த்து பாராளுமன்றத்தில் உரைநிகழ்த்தியதுடன் தமது கடமையை முடித்துக்கொண்டனர். சுதந்திரத்தின் பின்னர் அவர்கள் பாராளுமன்றத்துக்கும் பாராளுமன்ற ஜனநாயகத்துக்கும் அப்பால் போராடுவதைக் கைவிட்டமையை இது காட்டியது. இப் பிரச்சினையில் பாராளுமன்ற ஜனநாயக வரம்புக்குள் கூட இவர்கள் போராடவில்லை. இது அவர்கள் பாராளுமன்ற சந்தர்ப்பவாத அரசியலில் தமது முதலாவது அடியை எடுத்துவைத்ததைக் குறிக்கிறது.
உணர்மையில் இச் கடுமையான எதிர்ப்பு மலையக மக்களுக்குப் புறம்பாக சிறுபான்மை இனமென்ற வகையில் இலங்கைத் தமிழர்களிடமிருந்தும் வர்க்க ரீதியாகப் பாதிக்கப்பட்ட நாட்டின் தொழிலாளர்கள் எனிற வகையில் இடதுசாரிக் கட்சிகளிடமிருந்துமே தோன்றியிருக்க வேண்டும். இவ்விரு சாராரும் சட்டங்களை எதிர்த்தனர் என்பது உண்மையேயாயினும் அவ் எதிர்ப்புக்கள் கடுமையானவையாகவோ பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவையாகவோ அமையவில்லை. இதுபற்றி பேராசிரியர் நிதிதியானந்தனி குறிப்பிடுகையில், சட்டங்களுக்கு நிலவியிருந்த ஆதரவின் மத்தியில் அவற்றின் அமுலாக்கத்தைத் தடுப்பதற்கு இந்த எதிர்ப்புக்கள் போதியவையாக இருக்கவில்லை. என்றார்.
சட்டங்களுக்கான
இடதுசாரிக் கட்சிகள் மலையக மக்களின் பிரச்சினைகள், சிங்க ள அபிலாசைகளுக்கு எதிரானதாக இருந்தால் சிங்கள மக்களுக்குச் சார்பாக நடந்து
மக் களினி
கொள்வதையே தமது வரலாற்று செயன்முறையாக கொண்டிருந்தன. இவை இப் போக்கை 1940 களிலேயே கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டன. 1945ம் ஆணி டு சோல் பரி அரசியல் திட்டம் வெளிவந்தபோது மேற்படி திட்டம் பொருளியல் ரீதியாகவும் குடியியல் ரீதியாவும் ஏகாதிபத்திய அதிகாரிகளிடமிருந்து இந்தியத் தமிழர் எதிர்நோக்கியிருந்த பாதுகாப்புக்கள் எதனையும் பிரித்தானிய அரசாங்கம் வழங்கவில்லை எனவும், இவ் வகையில் சோல்பரி அரசியல் அமைப்பு மலையக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமே என்றும் இலங்கை-இந்தியர் காங்கிரஸ் அதற்கு கண்டனம் தெரிவித்தது. ஆனால் இடதுசாரிக் கட்சிகள் இதனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. நாவெஸ்மயர் சம்பவத்தில் மலையக மக்கள் குடியிருந்த காணிகள் பறிக்கப்பட்டு சிங்கள மக்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட்டபோது இலங்கை-இந்தியர் காங்கிரஸ் இதற்கு கண்டனம் தெரிவித்ததுமல்லாமல், ஒருநாள் ர்த்தால் வேலைநிறுத்தப் போராட்டத்தையும் நடத்தியது. இதிலும் இடதுசாரிக் கட்சிகள் கலந்துகொள்ளாதது மட்டுமின்றி இத்தகைய போராட்டங்கள் தொழிலாளர்களைக் கூறுபோடும் செயல் எனக் கண்டனமும் தெரிவித்தன. இடதுசாரிக் கட்சிகளின் இத்தகைய போக்கின் தொடர்ச்சியாகவே பிரஜாவுரிமைச் சட்டங்கள் மீதான அவர்களின் நடவடிக்கைகளும் அமைந்திருந்தன.
- தொடரும்
aust-Su
வெளிவந்துவிட்டது !
மார்க்சியத்தின் பெயரால் - அ.மார்க்ஸ் - தொடர்புகளுகட்கு,
விடியல் பதிப்பகம், 3.மாரியம்மன் கோவில் வீதி, உப்பிளிப்பாளையம், (8Ꮷ5[Ꭲ 60ᎧᎧ ] -641015
32
வைகாசி-ஆனி 1994

ஈழத்தில் அமைதிப்படை.
hbletLIEled Lll:ðislumL- ...l!
fழத்தமிழர்களுக்காய் ஓர் அமைதிப்படை சோமாலியா மக்களுக்காய் ஒரு நம்பிக்கை நடவடிக்கை இதே லட்சணத்தில் ருவாண்டாவில் பிரான்ஸ் இராணுவத்தின் துார்கி ஒப்பிரேசன் நடவடிக்கை.
ஈழத்தில் இந்திய இராணுவமும் சோமாலியாவில் அமெரிக்க, ஐநா துருப்புக்களும் எந்த நோக்கில் தலையீடு செய்தார்களோ அதே வகைப்பட்ட தலையீட்டைத்தான் பிரான்ஸ் ருவாண்டாவில் மேற்கொண்டுள்ளது. இத் தலையீட்டுக்கு ஜநா வின் பத்துப் பேர் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் அரைவாசிப் பேர் பகிஸ்கரித்த நிலையில் அங்கிகாரம் அளித்துள்ளது.
Zaire ist bereit, die franဒိဋ္ဌိစ္ထိီ Amee von drei
n aus opereren Zu lassen.
rr RUANDA BURUND
ஐயாயிரத்திற்கும் அதிகமான ஐ.நா துருப்புக்கள் ஏற்கனவே ருவாண்டாவில் நிலை கொண்டிருந்தும் தொடரும் யுத்தத்தையோ (அரசபடைகளுக்கும்-டுஸ்சி இன தேச பக்த விடுதலை முன்னனிக்கும் இடையே) குறிப்பாக ஹிடு பேரின வெறியர்கள் சிறுபான்மை டுஸ்சி இன மக்கள் மீது நிகழ்த்தும் கொடுர படுகொலைகளை நிறுத்தவோ, ஒரு யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தவோ முடியாத நிலையில் தான் பிரான்ஸ் சினி இராணுவ நடவடிக்கைக்கு அங்கிகாரம் அளித்துள்ளதாக ஐநா அறிவித்துள்ளது.
ஆனால் சிறுபான்மை டுளப்சி இன மக்களின் விடுதலைக்காகப் போரிடும் தேச பக்த விடுதலை முன்னணியின் அரசியல் பிரிவுப் பேச்சாளர் பிரான்ஸ்சின் இராணுவத் தலையீடு என்பது ருவாண்டா அரசுக்கு முழுக்க முழுக்க ஒத்துழைப்பதாகவே இருக்கும் என்றும்
ா ப ம ப ம ய சி. அமுதன்
ருவாண்டா :
LIJIL 6T6 - 26338 km2
சனத்தொகை - 7148496 இனங்கள் - ஹிடு 88%
டுஸ்சி 11 *
இதர நாட்டினர் - 1 * (அதிகம் பெல்ஜியம், இந்தியர், ஆசியர்)
தாய், சேய் இறப்பு விகிதம் (1983) - 111 % குழந்தைகள் இறப்பு விகிதம் - 222 * எழுத்தறிவு அற்றவர்கள் - 50 % மொழி - பிரெஞ், கின்யார்வான்டா
இரண்டும் அரசமொழிகள் மதம் - கத்தோலிக்கர் 47 *
250000 புரட்டஸ்தாந்தும், இஸ்லாமும்.
மனிதம் -28
33

Page 19
வண்மையாகக் கண்டித்துள்ளார். மேலும் இருதரப்பும் மோத வேண்டிய நிலமை ஏற்படாலம் என்பதால் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் இருந்தும் வெளியேறுமாறும் எச்சரித்துள்ளார்.
கடந்த மூன்று தசாப்பங்களுக்கும் மேலாக விடு பேரினவாதம் டுஸ்சி இனத்தின் மீது தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த கோர ஒடுக்கு முறைகளின் உச்சக்கட்டம் இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் தான் ஆரம்பமாகியது. ருவாண்டா நாட்டின் தலைவரும், புருண்டி நாட்டின் தலைவரும் ருவாண்டாவில் தொடரும் இன ஒடுக்கு முறையை முடிவுக்குக் கொண்டு
வரவும், இரு நாடுகளிலிலுமுள்ள டுஸ்சி இன
மக்களின் பிரச்சனைக்கான தீர்வு ஒன்றைக் காணும் நோக்கிலும் தான்சானியா அதிபரின் தலமையில் பேச்சுவார்த்தை நடாத்திவிட்டு ருவாண்டா தலைநகரை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்த போது பாய்ந்து வந்த ஏவுகணையால் கொல்லப்பட்ட சம்பவம்தான் டுளம் சி சிறுபான்மை மக்களுக்கெதிரான மூர்க்கமான படுகொலை வெறியை விடு பேரினவாதிகளுக்கு ஊட்டிவிட்டது. இப் படுகொலைகளை டு ஸ் சி இன தேச பக்தவிடுதலை முன்னனியே செய்தது என்ற பிரச்சாரத்தில் அரச வானொலி மும்மரமாய் ஈடுபட்டது.
தலைநகர் கிகாலி சாவீடாய் ஆகியது. டுஸ்சி இனமக்கள் ருவாண்டாவில் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் படுகொலை வெறி தீயாய் பரவியது. ஆஸ்பத்திரிகள், வீடுகள், வீதிகள் தோறும் மதகுருக்கள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் எனற வேறுபாடினி ரி கொலைவெறித்தாண்டவம் ஆடியது.
ஏப்ரல் மாததி தில் மட்டும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டும் போது அண்டைநாடான தான்சானியாவுக்கு தப்பியோடியவர்களின் எணணிக்கை இரண டு லட்சத்து
ஐம்பதினாயிரத்தையும் தாண்டிச் |-
சென்றது என்கிறது மேற்கின் செய்தி நிறுவனங்கள். யூன் மாதத்தில் படுகொலைகளின் எண்ணிக்கை மொத்தம் ஐந்து லட்சத்திற்கும் அதிகம் என்றும் அகதிகள் எண்ணிக்கை கணக்கிட முடியாத பெரும் புயலாய் கிளம்புகிறது. என்றும் மேலும் செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.
நாஜிகளால் கொல்லப்பட்ட யூதர்களின்
எண்ணிக்கைகளையும் இந்த படுகொலைகள் மிஞ்சி விட்டன என சில ஜெர்மனிய பத்திரிகைகள்
எழுதுவதினுடாக நாஜிகளின் கொைைல வெறியை இன்று குறைத் து முயல்கின்றன. உண்மையில் நாஜிகளால் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை பல பத்து லட்சங்களையும் மிஞ்சியிருக்கும் போது கிட்டத்தட்ட என்பது லட்சம் சனத்தொகையை மட்டும் கொண்ட ருவாண்டா நாட்டில் டுஸ்சி இன மக்கள் எட்டு லட்சம் மட்டுமே. இதிலும் இதுவரை நிகழ்ந்த படுகொலைகளில் ஐந்து லட்சடம் பேர் மாண்டு போக, மிகுதி ஏற்கனவே ருவண்டாவில் அண்டை நாடுகளான தான்சானிய, உகண்டா, போன்றவற்றில் மூன்று
காட்ட
சைமீர்
34
வைகாசி-ஆனி 1994
 

லட்சத்திற்கும் அதிகமானோர் அடைக்கலம் புகுந்துள்ளனராம். அப்படியேனில் ருவண்டாவில் தற்போது டுஸ்சி இன மக்களே இல்லையே? பின்பு எதற்கு டுஸ்சி இன மக்களை பேரினவாத கொ ைலகாரர்களிடமிருந்து காப்பாற்றும் இரட்சகனாய் பிரான்ஸ் இராணுவம் அமெரிக்கா, ஸ்பெயின் முழு ஆதரவோடும் சேநகல், எகிப்து அடியாள்துணை இராணுவப்படையுடனும் ருவண்டாவில் இறங்கியிருக்கிறது.
உண்மை நிலையாதெனில், ருவண்டாவில் ஹிடு பேரினவாதம் சிறுபான்மை டுஸ்சி இன மக்களை கடந்த மூன்று மாதத்துள் கொடுரமாக கொலை செய்திருக்கிறார்கள். இது இன்னும் ஒயவில்லை. ஆயினும் எரிகிற கொள்ளிக்கு எணிணை வார்க்கும் வேலையைத் தான் வல்லரசுகள் மேற்கொள்கின்றன. ஐந்தை ஐம்பதாய் ஊதிப் பெருக்க வைத்து அதனுடாக தமது நலன்களை அடைய முயல்கின்றன. வளைகுடா யுத்தம் முதல் சோமாலியா, பொஸ்னியா ஈறாகவும் நிகழிநிதவைகள் எமக்கு நிகழி காலப் படிப்பினைகள். இதற்குப் பலியாகும் மேலும் ஒரு நாடு ருவாண்டா.
எங்களுக்கு இனி எதற்கு பிரான்ஸ் இராணுவம். கொலை மலிந்த இந்த மூன்று மாதத்திற்குள் வராமல் இப்போ ஏன் வருகிறீர்கள். என்று வீதியில் குதித்த டுஸ்சி பெண்களே பிரான்ஸ்சின் இராணுவத் தலையீட்டை எதிர்க்கின்றனர்.
யுத்ததை நிறுத்துவது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவி அளிப்பது, பட்னிச்சாவிலிருந்து காப்பாற்றுவது, இந்த நற்காரியங்களை செய்ய தடைபோடும் ஆயுத கிளர்ச்சியாளர்களை முறியடிப்பது, இவை எல்லாவற்றிக்கும் மேலாக ஒரு ஜனநாயக துழலை ஏற்படுத்துவது, இந்த நற் காரியங்களைச் செய்யத்தான் நாம் இராணுவ தலையீட்டைச் செய்கிறோம என்று இன்று பிரான்ஸ் சொல்வதைத்தான் முன்பு அமெரிக்காவும் 92 டிசம்பரில் சோமாலியாவுக்குள் நவீன யுத்த விமானங்களை இரவோடு இரவாக இறக்கியபோது சொன்னது. இன்று பிரான்ஸ்சும்
கொஞ்சமும் வேறுபாடின்றி
இதையே செய்கின்றது. ஐ.நா வினி அங்கிகாரத்திற்கு முன்பே சைமீர் நாட்டில் தயார் நிலையில் நின்ற நாற்பது யுத்த விமானங்களும் 2500 துருப்புக்களும் 500 க்கு மேற்பட்ட யுத்த வாகனங்களும் ஐநா பாதுகாப்பு கவின்சிலில் அனுமதி கிடைத்ததுதான் தாமதம் ருவாண்டாவிற்குள் நுழைந்து விட்டன.
இனி சோமாலியாவிலும் பொஸ்னியாவிலும் நிகழ்ந்த நாடகத்தின் தொடர்ச்சி ருவாண்டாவில் பிரான்ஸ் இராணுவத்தில் துார்க்கி (Turkis) ஒப்பிரேசன் காட்சியில் அரங்கேறப் போகிறது. இதில் வேடிக்கை என்னவெனில் பிரான்ஸ் , இராணுவம் ருவாணர்டா நாட்டின் மீதான இராணுவ நடவடிக்கைக்கு 8000 இராணுவ வீரர்களை முனி னைய சோவியதி குடியரசுகளிலிருந்தும, கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்தும், வேலைக்கு அமர்த்தியுள்ளது. இவர்களும் ருவாணி டாவில் இறக் கி விடப்பட்டுள்ளனர். மாத சம்பளம், இராணுவத்தில் ஐந்து வருடம் சேர்ந்து வேலை செய்யின் பிரானிஸ் குடியுரிமை போன்ற ஆசை வார்த்தைகளை காட்டி ருவாண்டாவில் தனது இராணுவ வலிமையைக் காட்ட இரவல் சேலையில் கொய்யம் வைக்கிறது பிரான்ஸ் இராணுவம். பாவம் இந்த முன்னைய சோசலிச வீரர்கள் சோமாலியாவில் பாகிஸ்தானியர்கள் போல ருவாண்டாவில் இவர்கள்.
பிரான்ஸ்சைப் பொறுத்தவரை தம்முன்னைய காலனித்துவ நாடுகள் என்று கூறிக்கொண்டாலும் இன்னமும் ஒருவித முதிச சொத்தாகவே கருதுகிறது. ஆபிரிக்காவில் பெயர்காசோ போன்ற கொடுரமான சர்வாதிகாரிகளைக் கூட ஆதரித்து மேலாதிக்கத்தை தக்க வைத்தமை வரலாற்றில் பாடமாக எழுதப்பட்டிருக்கும் போது டுஸ்சி இன மக்களை ஒடுக்கும் அரசபடைகளின் நடவடிக்கைகளுக்கு பிரான்ஸ் அரசு உதவுவதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது. ஹிடு பேரினவாதிகளால் வந்தேறும் குடிகளாக கருதப்பட்டபோதும் டுஸ்சி இன மக்களும் ருவாண்டாவில் நீண்ட கால பாரம்பரியத்தை கொண்ட மணிணினி மைந்தர்கள் தான்.
மனிதம் -28
35

Page 20
வத்தீன் அமெரிக்கா:
சூறாவளியின் மையமாக 120 மில்லியன்
குழந்தைகள்
1970 &gi Sigarel. Ir assrailurrea III (Eduardo Galeano) signiu OPEN VEINS OF LATIN AMERICA என்ற புத்தகத்தின் முகவுரை முதல் பகுதி சென்ற இதழில் பிரசுரமாயிற்று. இதன்
இறுதிப் பகுதி இங்கு பிரசுரமாகிறது. இப் புத்தகத்தின் முடிவுரையை எடுவாடோ 7 ஆண்டுகளின் பின் எழுதிமுடித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழில் - தேவா
விIலம் இன்னும் கடந்துவிடவில்லை. நாங்கள் ஏதாவது நடவடிக்கை எடுக்கலாம். ஏனெனில் மூன்றாவது உலகப் போரைத் தொடக்கும் காரணியாக ஏழைகளால் தொழிற்பட முடியாது. ஆனால் முதலாளித்துவம் கவலை கொள்கிறது - இதனால் உணவைக் கூட்டமுடியவில்லை. இது தன்னாலானவரை உணவைக் குறைப்பதைத் தான் செய்ய முடிந்தது. என்கிறார் பால்.
பிச்சைக்காரர்கள் பிறப்பதற்கு முன்னரே அவர்களளைக் கருவில் கொலைசெய்யும் திட்டத்தினையும் இன்னொருவர் முன்வைத்தார். அவர்தான் றொபேட் மக்னம்மாறா. போர்ட் நிறுவனத்தின் தலைவராக இருந்தவர். உலக வங்கியின் தலைவராகவும் பின்னர் பாதுகாப்புச் செயலாளர் நாயகமாகவும் ஆனவர். இவரின் கணிப்பின்படி லத்தீன் அமெரிக்காவின் வறுமைக்கு முழுக் காரணமுமே அதன்
சனத்தொகைப் பெருக்கம்தான். உலக வங்கி
வறுமையை எதிர்த்துப் போராடு- ஒரு கருத்தடை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்
பிச்சைக் காரனைக் கொல்! (Fight நாடுகளுக்குத்தான் தனது கடன்கொடுப்பில் poverty- Kill a Beggar) முன்னுரிமை வழங்குமாம். இவர் கவலையுடன ஒரு மேதாவியின் இந்தக் கறுப்பு கண்டுபிடித்தது - ஏழைகளின் மூளை 25
வீதம் குறைவாகவே சிந்திக்கும் சக்தி
நகைச்சுவை லாபாஸ் சுவர்களில் கிறுக்கலாக
வாய்ந்ததென்பது .
மின்னியது. இதைவிட ஒருபடி மேலேபோய்,
areased.--KS4s
பெல்ஜியத்தின் காலனித்துவ காலகட்டத்தில் காலனித்துவவாதிகளின் அடிவருடிகளாகவும் நாட்டின் அரசியல் பொருளாதார அதிகாரத்தில் பெரும்பான்மை மக்களைவிட உயர்நிலையில் இருந்ததின் விளைவே ஹிடு பேரினவாதம் டுஸ்சி இன மக்களுக்கு எதிராக ருவாண்டாவில் இவ்வளவு மோசமான அளவு வளர வழிவகுத்தது. 53 ல் நிகழ்ந்த பெரும் கிளர்ச்சியானது சிறுபான்மை டுஸ்சி இன மக்களிடமிருந்த நாட்டின் அதிகாரத்தை பெரும்பான்மை ஹிடு இனம் பிடுங்கியெடுக்கும் புரட்சியாகவே நிகழ்ந்தது. 61 ல் நிகழ்ந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டி பெரும்பான்மை இனம் அதிகாரத்தை தனது கையில்வரியெடுத்தும் 62ல் பெல்ஜியத்திடமிருந்தும், சுததந்திரமடைந்தும், பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக அன்று தொடங்கிய போர் இன்றும் தொடர்கிறது. பல்வேறுபட்ட சமாதானங்களும் உடன்பாடுடகளும் ஏற்பட்டும், முறிவுபட்டும் இலட்சக்கணக்கான பேரிழப்புக்களுடனும் அண்டைய நாடுகளில் அடைக்கலப் புயலுடனும் இன்று பிரான்ஸ்சின் இராணுவத் தலையீட்டை எதிர்க்கும் முனைப்புடனும், டுஸ்சி இன மக்கள் போர்க்களத்தில் ருவண்டாவில்!
36 வைகாசி-ஆனி 1994

உலக வங்கியின் ரெக்றோக்கிறாட்ஸ்கள் (இவர்கள் ஏற்கனவே பிறந்து விட்டார்கள்) தங்களது கொம்பியூட்டர்களை முடுக்கி இனிப் பிறக்கப் போகிறவர்களின் நன்மைகளைக் கணிக்கிறார்கள். இவைகள் எல்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டால் . ஒரு வங்கி ஆவணம் எங்களுக்கு உறுதியளிக்கிறது.
ஒரு அபிவிருத்தியடையும் நாடு அதனது சராசரி தலா வருமானம் வருடத்திற்கு 150 இலிருந்து 200 அமெரிக்க டொலர்கள்வரை
கொண்டிருக்குமாயின், அத்துடன் அது வெற்றிகரமாக தனது பிறப்பு வீதத்தை -50 வீதத்தை ஐந்து வருடங்களுக்குள்- குறைத்துக் கொள்ளுமாயின், முப்பது வருட காலங்களில் அதன் தலா வருமானம் நிச்சயமாக 40 வீதமாகக் குறைந்த அதிகரிப்பைப் பெற்றிருக்கும். இந்த அதிகரிப்பு அது வேறெந்த வழியிலும் அதிகரித்ததைவிட நிச்சயம் கூடுதலாகவே இருக்கும். 60 வருட காலங்களில் இதன் தலா வருமான வளர்ச்சி இரண்டு மடங்களவிற்கு
அதிகரிக்கும்.
லின்டன் B. ஜோன்சனின் கூற்று இன்னும் பிரபல்யம் வாய்ந்தது.
குடும்பக்கட்டுப்பாட்டுக்காக செலவழிக்கும் 5 டொலர்கள் பொருளாதார முன்னேற்றத்திற்காகச் செலவிடப்படும் 100 டொலர்களிலும் பார்க்கப் பெறுமதிவாய்ந்த தென்ற உணமையின் அடிப்படையில் எங்கள் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம். ஐசன்கோவர் தனது தீர்க்கதரிசனத்தில் உலகின் மக்கள் தொகை இதே ரீதியில் அதிகரித்துக் கொண்டுபோகுமாயின் புரட்சிகள் கிளம்புவதற்கான பயங்கரச் சாத்தியக் கூறுகள் இருப்பதுடன், உலக மக்களின் வாழ்க்கைத்தர வீழ்ச்சி -எமது மக்கள் உட்படவிழுக்காடடையும். எனப் பகர்ந்துள்ளார்.
உலக நாடுகள் எல்லாவற்றையும்விட வட அமெரிக்கா குடும்பக்கட்டுப்பாட்டை உலகின் மூலைமுடுக்கெல்லாம் நிறைவேற்றுவதில் வெகு தீவிரமாகவே முனைந்துகொண்டிருக்கிறது. வட அமெரிக்க அரசு மட்டுமல்லாது, போர்ட் பவுண்டேசன், றொக்பெல்லர் பவுண்டேசன் என்பவைகூட மில்லியன் கணக்கான மூன்றாம் உலக நாட்டுக் குழந்தைகள் வெட்டுக்கிளி படையெடுப் பைப் போல தொடுவானை மறைத்துக்கொண்டு தங்களை நோக்கி மெல்ல மெல்ல முன்னேறுவதுபோன்ற கெட்ட கனவுகளால் குலைநடுங்கிப் போயிருக்கிறார்கள். மால்துாசிற்கும் மக்னமாறாவிற்கும் முன்னமே அரிஸ்டோட்டிலும் பிளேற்றோவும் இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டார்கள். உலக அடக்குமுறையாளர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இன்று ஏற்றுக் கொண்டிருக்கும் பாத்திரமிது. நாடுகள்/வர்க்கங்களுக்கிடையிலான சமனற்ற செல்வப் பங்கீட்டினை நியாயப்படுத்தும் கட்டுக் கதை, குழந்தைகள் பெற்றுக்கொள்வதுதான் வறுமைக்குக் காரணமாம். அவர்கள் பெற்றுக்கொள்வதல்ல - வறியவர்கள் குழந்நை பெற்றுக்கொள்வது என்ற காரணத்தைக் காட்டி வறிய மக்களின் புரட்சிகர உணர்வை மழுங்கச்செய்யும் மாயாஜாலம் இது.
கருத்தடை வளையங்களுக்குப் போட்டியாக வெடிகுணடுகளினதும் இயந்திரதி
மனிதம் -28
37

Page 21
கருத்தடை வளையங்களுக்குப் போட்டியாக வெடிகுண டுகளினதும் இயந்திரதி துப்பாகிகளினதும் குண்டுமழை மூலம் வியட்னாமின் சனத்தொகையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தது ஒரு வகை. லத்தீன் அமெரிக்காவிலோ சுகாதாரமாக, வலுதுப்பரவாக, கெரில்லாக்களை கருவிலேயே கொல்லும் முயற்சி இது. ஏனெனிறால் மலைப் பிரதேசங்களிலும் வீதிகளிலும் இவர்களைத் தேடி, துரத்தியடித்துக் கொல்வதைவிட இது இலகுவானதல்லவோ! பலதரப்பட்ட வட அமெரிக்க மிசன்கள் ஆயிரக்கணக்கில் அமேசன்
எங்கள் புத்திக்கூர்மையைப்
பழிப்பதாக அமைகிறது- இவர்கள் சனத்தொகை
நாடகம். இவர்களது உள்நோக்கம் எங்களைக்
கோபத்திற்குள்ளாக்குகிறது. பாதிக்குக் குறைவின்றி சிலி, பொலீவியா, ஈக்குவடோர், பரகுவே, வெனிசூலா என்பன குடியேற்றமற்ற வெறுமைப் பிரதேசங்களாகவே இருக்கின்றன. லத்தீன் அமெரிக்காவின் முழுச் சனத்தொகை அதிகரிப்பு உருகுவே நாட்டின் சனத்தொகை அதிகரிப்பிலும் குறைவாகவே இருக்கிறது. உருகுவே நாட்டின் சனத் தொகையில் வயதுமுதிர்ந்தவர்களே அதிகமானவர்கள் -
கருத்தடை வளையங்களுக்குப் போட்டியாக
வெடிகுண்டுகளினதும் இயந்திரத் துப்பாகிகளினதும் குண்டுமழை மூலம் வியட்னாமின் சனத்தொகையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தது ஒரு வகை. லத்தீன்
கெரில்லாக்களை கருவிலேயே கொல்லும் S. S1 முயற்சி இது. ஏனென்றால் மலைப் 2 பிரதேசங்களிலும் வீதிகளிலும் இவர்களைத் தேடி, துரத்தியடித்துக் கொல்வதைவிட இது இலகுவானதல்லவோ
பிரதேசப் பெண்களுக்கு கருத்தடையைச்
செய்தன. உலகிலேயே குறைந்த சனத்தொகை வாழும் பிரதேசங்களில் ஒன்று அமேசன் பிரதேசம்.
லத்தீன் அமெரிக்காவின் பல பிரதேசங்கள் சனத்தொகை குறைந்த பிரதேசங்களே. ஒரு சதுரமைல் குடியிருப்பாளர்கள் பிரேசிலில் ஒரு மடங்கு என்றால் பெல்ஜியத்தில் 33 மடங்கு அதிகமாயிருக்கிறது. இங்கிலாந்திலும் பார்க்க பரகுவே 49 மடங்கு குறைவான சனத்தொகையைக் கொண்டுள்ளது. பெருவோ ஜப்பானைவிட 32 மடங்கு குறைவானது. கெயிற்றியும் எல் சல்வடோரும் லத்தீன் அமெரிக்காவின் எலும்புக் குவியல் சனத்தொகைப் பிரதேசம் ஆயினும், இத்தாலியைவிட சனத்தொகைச் செறிவில் குறைந்தவையே.
அமைரிக்காவிலோ சுகாதாரமாக, வலுதுப்பரவாக,
அதனால் இந் நாட்டை வயதுமுதிர்ந்தவர்கள் நாடு என்றே அழைக்கின்றனர். அப்படியிருக்க இந் நாடு பட்ட அடிகள் அண்மைக் காலங்களில் எண்ணிலடங்கா. இங்கு நீண்டுகொண்டே போகும் பிரச்சினைகள் இந் நாட்டினை நரகத்தின் கடைசிப் பாதாளம் வரை இழுத்துச் செல்வதுபோல் தோன்றுகிறது. உருகுவே வெறுமையான நாடாகிவிட்டது. இதன் செழுமையான விளைச்சல் நிலங்கள் இன்று வறுமையில் வாடும் சனங்களை விட அதிகமானவர்களுக்கு காலாகாலத்திற்கும் உணவு வழங்கக்கூடியது.
ஒரு நுாற்றாண்டு காலத்திற்கு முன்பு குவாத்தமாலா அரசின் வெளிநாட்டமைச்சர் கூறினார், நோயைக் கொண்டுவந்தவர்களே நோய் கி கான மருநீதையும்
38
வைகாசி-ஆனி 1994

கொண்டுவருவார்களாயின் அது வினோதமான ஒன்றுதான். என்று. முன்னேற்றத்திற்கான உதவி அமைப்பு இறந்து வெகு காலமாகிவிட்டது. முதலாளித்துவமே வளம் பெற்றுக் கொணடிருக்கிறது. லத்தீனி அமெரிக்காவின் பிரச்சினையை லத்தீன் அமெரிக்கர்களைக் கொன்று தீர்வுகாண முயல்கிறது வட அமெரிக்கா. நல்லெண்ணமல்ல, பயப்பிராந்தியே காரணம். வாஷிங்டன் சந்தேகம் கொள்வது நியாயமானதே - ஏழைகள் ஏழைகளாக இருக்க விரும்பவில்லை. தீர்வை விரும்புபவர்கள் தீர்வுக்கான வழியை விரும் பாதிருக்க முடியாது. லத்தீனி அமெரிக்காவில் புரட்சியை விரும்பாதவர்கள் எங்களது ஒரே மறுபிறப்பு வாய்ப்பையும் நிராகரிப்பதுடன், இன்றிருக்கும் அமைப்பில் தீமைகள் எதுவுமில்லை என வக்காலத்தும் வாங்குகிறார்கள்.
கூறுகிறது. பெரும்
நிலச்சுவாந்தர்களை விவசாய உற்பத்தியைப் பெருக்கும் நடவடிக்கைகளில் இறங்கும்படி வருந்தியழைக்கின்றது. சமூக விரோதிகளிடம் சமூக நீதிபரிபாலனத்தை நடைமுறைப்படுத்தச் சொல்கிறது. வர்க்கப் போராட்டம் இந் நாட்டில் இருக்கிறதாம் - இல்லை என்று சொல்லவில்லை. அதனை வெளிநாட்டு ஏஜென்டுகள்தானாம் கிளறிவிடுகிறார்கள் என எங்களுக்குச் சொல்கிறது. வர்க்க சமுதாயம் இருக்கிறது. இதில் ஒன்று மற்றொன்றை சுரண்டுகிறது, அடக்கியாள்கிறது. இது மேற்குலக வாழ்க்கை முறையாம். கடற்படையினர் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் - நாட்டினி சமூக அமைதியையும் சட்டத்தினையும் நிலைநாட்ட மாத்திரம்தானாம். வாஷிங்டனுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கும் சர்வாதிகாரி சிறைச்சாலையில் சட்டத்தை மதிக்கும்
எங்களுக்கு எங்கள் கைகளை மார்பில் குறுக்காகக் கட்டி நிற்பதைத் தவிர எல்லாமே தடைசெய்யப்பட்டுள்ளதா? வறுமை கிரகங்களில் எழுதப்பட்டிருக்கவில்லை. வளர்ச்சியடையாமை கடவுளின் புரியும் சிந்தைக்கெட்டாத நடவடிக்கைகளில் ஒன்றுமல்ல. புரட்சிக்குப் பிந்திய தத்தளித்த காலகட்டமும் போய்விட்டது. ஆளும் வர்க்கம் அமைதியாக அவ்வப்போது எம் எல்லோர் மீதும் தனது வெறியைக் கட்டவிழ்த்துவிடுகிறது -இது வலதுசாரியினருக்கு அமைதியான ஒழுங்கான சமுதாயந்தான், அவர்களைப் பொறுத்தவரை இதுவும் சரியானதுதான். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இது நாளாந்தச்
சித்திரவதை,
எங்கள் இளஞ் சந்ததி பல்கிப் பெருகுகிறது. எழுச்சி கொள்கிறது. காது கொடுத்துக் கேட்கிறது. இன்றைய அமைப்பின் குரல் அவர்களுக்கு என்ன சொல்கிறது? அது குர்ரியலிசப் பரிபாஷையில் இவர்களுடன் பேசுகிறது. வெறுமையான நாட்டில் குடும்பக் கட்டுப்பாட்டை நடைமுறைப் படுத்தப் பரிந்துரைக்கிறது. தேவைக்கதிகமானளவு முதல் இருக்கும் நாடுகளில் முதல் குறைவாக இருக்கிறது என்று ஆலோசனை கூறுகிறது. அந்நிய முதலீடுகள் மூலம் செல்வத்தை உறிஞ்சிக் கொள்வதை உதவி என விளக்கம்
சமூகத்திற்கு அதி திவாரமிடுகிறார் - வேலைநிறுத்தங்களைத் தடைசெய்து, தொழிற் சங்கங்களை உடைத்து வேலைவாய்ப்பையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கின்றார்.
எங்களுக்கு எங்கள் கைகளை மார்பில் குறுக்காகக் கட்டி நிற்பதைத் தவிர எல்லாமே தடைசெய்யப்பட்டுள்ளதா? வறுமை கிரகங்களில் எழுதப்பட்டிருக்கவில்லை. வளர்ச்சியடையாமை கடவுளின் புரியும் சிந்தைக்கெட்டாத நடவடிக்கைகளில் ஒன்றுமல்ல. புரட்சிக்குப்
மனிதம் -28
39

Page 22
பிந்திய தத்தளித்த காலகட்டமும் போய்விட்டது. ஆளும் வர்க்கம் அமைதியாக அவ்வப்போது எம் எல்லோர் மீதும் தனது வெறியைக் கட்டவிழித்து விடுகிறது 一@g」 வலதுசாரியினருக்கு அமைதியான ஒழுங்கான சமுதாயந்தான், அவர்களைப் பொறுத்தவரை இதுவும் சரியானது தானி , ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இது நாளாந்தச் சித்திரவதை. ஆயினும் இது ஒரு ஒழுங்கு. அந்த ஒழுங்கில் அநீதி தொடர்ந்து நீதித்துவம் பெறும். பசி பசியாகவே இருந்துவரும். எதிர்காலம் ஆச்சரியம் நிறைந்த குகையாக இருப்பின் பழமைவாதிகள் ஐயோ நான் ஏமாற்றப்பட்டுவிட்டேனே என்று கத்தக் காரணமில்லாமல் போகாது. அத்துடன் வரட்டுச் சித்தாந்தவாதிகளும், எஜமானின் கண்கொண்டு பார்க்கும் அடிமைகளும் முன்னையவருடன் சேர்ந்து கத்த நிறைய நேரமாகப் போவதில்லை. மெயினி நகரத்தின் வெண்கலக் கழுகு கியூபா புரட்சியின் வெற்றியடையாளமாக பீடத்திலிருந்து கீழே இழுத்து வீழ்த்தப்பட்டது. இன்று கவானாவின் நுழைவாயிலில் சிறகுகள் உடைந்து கைவிடப்பட்ட நிலையில் கிடக்கிறது. நாடுகள் சிலபல வேறுபாதைகளில் மாற்றம் தேடி பரிசோதனைப் பயணத்தைத் தொடங்கிவிட்டன. கிரிமினல்தனமான, இன்று இருக்கும், அமைப்பு கிரிமினல்தனத்தில் தொடங்கிய கிரிமினல்தனத்தின் தொடர்ச்சி. இதிலிருந்து நாம் மீள எடுக்கும் முயற்சி எங்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.
லத்தீன் அமெரிக்காவின் குரல்வளை நெரிக்கப்பட்ட, அன்றேல் துரோகத்தினால் வீழ்ந்துபோன புரட்சிகளின் ஆன்மாக்களெல்லாம் இந்தப் புதிய பரிசோதனையில் புத்துயிர் பெறும். இனி றைய நிலை முனி பே யாராலோ தொலைநோக்குப் பார்வையில் கண்டதுபோல், காலத்தின் காரணிகள் எதிர்மறையில் இதற்காகவே நின்றதுபோல் கூட உருவகம் கொள்ளலாம். வரலாறு ஒரு தீர்க்கதரிசி. அது கடந்த காலத்தையும் திரும்பிப் பார்க்கும். ஏனெனில் எது எதுவாக இருந்தது, எதற்கு எதிராக எதுவாக இருந்தது என்று பார்த்து வருங்காலத்தில் எது
வருமென அறிவிக்கும்.
எனவேதான் இந்தப் புத்தகமும் முன்பு என்ன நடந்தது என்பதை வரிசைப்படுத்தி; அதே வேளையில் இன்றைய சுரண்டல் அமைப்பு எவ்வாறு இயங்குகின்றது என்பதையும் விளக்குகிறது. அதேவேளையில் பாய்மரக் கப்பலில் நாடு பிடிக்க வந்தவர்களுக்கும், ஜெட் விமான வேகம் கொண்ட ரெக்னோக்கிராட்டுகளும் எவ்வளவு ஒற்றுமையுடையவர்கள் என்பதும் தெளிவாகும். கிராணி கோர்ரெஸ் ஸும், கடற்படையினரும், ஸ்பானிய முடியின் பிரதிநிதிகளும் TME உம் அடிமை வியாபார லாபமும் ஜெனரல் மோட்டர்சின் பங்கு லாபமும், அதுமட்டுமல்ல தோல்வியைத் தழுவிய எங்கள் புரட்சியின் நாயகர்களும், எங்கள் காலப் புரட்சியும், பஞ்சங்களும் இறந்துபோன எங்கள் நம்பிக்கையின் மீள் உயிர்ப்பும், எம் முன்னோடிகளின் உரமூட்டும் அளவற்ற தியாகங்களும் எல்லாமே இப் புத்தகத்தில் வரும்.
அலெக்சாண்டர் வொன் கம்போல்ட் பொகோட்டாச் சமவெளி ஆதிக்குடிகளின் நாகரீகத்தை ஆராய்ந்தவர். இம் மக்களின் பலியிடுதல் பற்றி அவர் கண்டுகொண்டது - இப் பழங்குடி மக்கள் (இந்தியர்கள்) தாங்கள் LJ6ôAuf Glu6u6OJ (56ởuu5T (Quihica) 6T6IOT அழைப்பார்களாம். இச் சொல்லின் அர்த்தம் கதவு பலியாகும் ஒவ்வொருவரும் 185
புதிய பெளர்ணமிச் சுற்றின் கதவைத் திறப்பாராம்.
- முற்றும்
இலங்கையிலிருந்து இரண்டு கிழமைக்கு ஒருமுறை வெளிவரும் இதழ். தொடர்புகட்கு:
|
4. ஜெயரட்ண மாவத்தை திம்பிரிகளப்யாய கொழும்பு- 5
40
வைகாசி-ஆனி 1994

கொலைக் களத்தில் .
10ண்ணிலிருந்து மூசி எழும் மலைகள், நிலா ஒளி உதிர்ந்தது போல் அசைந்து விழும் பனித்திரள்கள், பருவகாலங்களில் கோலம் மாறும் மரங்கள், பூக்கள். ! எமது ரசனையை உரசிப் பார்க்கும் இந்த இயற்கையின் அற்புதம் வாழ்வு நேசிக்கப்பட வேண்டியது என்பதை அடித்துச் சொல்லும், ரசனையற்ற மனசுக்கு இவைகள் தொல்லைகளாவதும் உண்டு. மனிதனை மதிக்காத மனசு, மனித உயிர்களின் பெறுமதி அறியாத துப்பாக்கி குண்டுகள். இலகுவான தீர்மானங்கள். பிறகென்ன எடுத்ததற்கெல்லாம் கொலை. படுகொலை,
ஒரு குழந்தையைப் பெற ஒரு தாய் மரண வேதனையின் வாசலுக்கு போய் வருமளவு துயருறுகிறாள். பின்னர் குழந்தை முகம் பார்த்து இன்புறுகிறாள். இந்த உணர்வுப் பாலத்தின் மேல் குழந்தை துள்ளி விளையாடி வளர்கிறது. வளர்ந்தவனாகிறது. எவ்வளவு அனுபவங்கள், உணர்வுகள், உணர்ச்சிகள் எல்லாம் சேகரித்து இரத்தமும் சதையுமாய் வளர்ச்சியுறும் ஒரு மனிதனை ஒரேயொரு கணப்பொழுதில் கொலை செய்வது எவ்வளவு கொடுரமானது. பறிபோன உயிரை மீளப்பெறுதல் யாரால் முடியும்? மின்கம்பத்திலிருந்து இந்தியப் பற்றைக்காடுகள் ஈறாக இன்று பாரீஸ் வரை பரவிய கொலை வெறி மனநோய்க்கு எத்தனை பேர் இரையாகினர். தண்டனை வழங்கிய எத்தனை மாஜி போராளிகள் இன்று இயக்கங்களை விட்டு ஓடிவந்து வெளிநாடுகளில் தாம் உண்டு தம் வேலையுண்டு என்று வாழ்கிறார்கள். இவர்கள் பறித்த உயிர்கள் தானும் மீண்டு எழும்பிவிடவா போகிறது. அதுவும் இல்லை. கொடுரம். அநியாயம். இது தொடர்ந்து கொண்டே போகிறது.
ஒருவனது கேள்வி கேட்கும் உரிமைதானும் எஞ்சியதா என்றால் விடுதலையின் பேரால் அதுவும் இல்லை. சுதந்திரமாய் எழுதும் உரிமை, சுதந்திரமாய் பேசும் உரிமை எல்லாவற்றையும்
இயக்கங்கள், இலங்கை அரசு, இந்திய இராணுவம் என அவரவர் பங்குக்கு சரிக்கட்டிவிட்டார்கள்/ விடுகிறார்கள். உண்மைச் செய்திகள் என்பது (அதிகாரம் செலுத்துபவர்களது) சார்புநிலையான செய்திகளாகவும்.(அவர்களுக்கு) வக்காலத்து வாங்குபவையாகவும் திரிபடைகின்றன. மாற்றுக்கருத்துக்கள் கொண்ட பத்திரிகைகள், சஞ்சிகைகள், வெளியீடுகள் என்பவற்றை தடைசெய்து, இச்சுயசார்புக் கருத்துக்களை வளர்த்தெடுக்க முயல்வது ஜனநாயகமாகாது. மக்கள் பல முனையிலிருந்து வரும் கருத்துக்களை தம்மளவில் பகுத் தாய்வு செய்துகொள்ளும் ஆற்றல் நிரம்பியவர்கள். சார்புநிலை கொணட மக்களின் அக விருப்பையும் மீறி இப்பகுத்தாய்வு அவர்களுக்குள் நிகழ்ந்துவிடுகிறது. அதாவது மக்களின் இவ்வாறான பகுதிதாய்வு சாராம் சத்தில் கருத்துநிலை சார்ந்த சிந்தனைகளை வளர்த்து விடுகிறது. இதை இல்லாமற் செய்யும் வழி முறையாகவே மூளைச் சலவை செய்யும் முயறி சியில் தொடர்பு சாதனங்கள் கையாளப்படுகின்றன. இனவெறி, நிறவெறி. என்பவை ஊட்டப்படுகின்றன. தமக்கு எதிரானவர்கள் எல்லாம் விடுதலைக்கு / நாட்டுநலனுக்கு எதிரானவர்கள் என்ற கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. இவை தற்போதைய இயக்கங்கள், அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும். இன்னும், அதிகாரத்துவதி தை பயனர் படுதி தி மாற்றுக்கருத்துக்கள் எழுவதை அடக்குவது, வாசிக்கும்/அறியும் சந்தர்ப்பங்களை இல்லாமல் செய்வது என்பனவும் நடந்தேறுகிறது. இதன் மூலம் கருத்துநிலை சார்ந்த மக்களின் ஆதரவுக்குப் பதிலாக, இயக்கம்/கட்சி சார்ந்த ஆதரவை திரட்டும் நிலையில், அதிகாரத்துவம் இல்லாமல் போக இந்த ஆதரவும் இலகுவில் உடைந்து நொறுங்கிவிடுகிறது. கருத்துநிலை சார்ந்த ஆதரவோ, பங்களிப்போதான் விடுதலைப் போராட்டத்தை முன்தள்ளும். போராட்ட இயக்க தவறுகளிலிருந்து (நடைமுறையிலும்
மனிதம் -28
41.

Page 23
தத்துவார்த்த ரீதியிலும்) மீட்டு படிப்படியாக தமது இலக்கை நோக்கி முன்னேற்றும். இயக்கங்கள் எதிரிகளால் பலவீனப்படுத்தப்படும் நிலையிலும்கூட இக்கருத்துநிலையே இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்பும் ஆற்றல் படைத்தது. (இயக்க சார்புநிலை இதற்கு எதிர்மாறானது.) எவ்வளவுதான் அடக்குமுறைகள் இருந்த போதும், பல விலைகள் கொடுக்கப்பட்ட போதும், இந்த நியதி அகநிலை விருப்பு வெறுப்புக்களை மீறி செயற்படும். மனித வரலாற்றை திரும்பிப் பார்ப்பவர்களுக்கு இது புரியும்.
இந்த நியதிக்கு எதிராக மோதும் கெடு வில் மாற்றுக்கருத்துக்களை எல்லா வழிகளிலும் அடக்கி ஒடுக்கும், தலைகால் புரியாத, போராட்ட வன்முறை உச்சக்கட்டம் அடைந்துவிட்டது. தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றை தமது வரலாறாக குறுக்கும் முயற்சிக்கு குறுக்கே வரும் எழுத்துக்களை அழித்தொழிக்கிறது. எழுத்துக்களை எழுத்துக்களால் சந்திக்கும் வலிமை இல்லாத போது துப்பாக்கிக் குண்டுகளால் குதறுகிறது.
மே மாதம் 1ம் திகதி பாரீஸ் நகரில் வைத்து சபாலிங்கம் கொலை செய்யப்பட்டார் என்றதும், இருக்குமா? என்றெல்லாம் பலபக்கமும் யோசிக்க வைத்த போது. கொலை நடந்தமுறை, பாதிக்கப்பட்ட உறவினர் நண்பர்களின் தகவல்கள் எல்லாமே இச்சாத்தியப்பாட்டை இல்லாமல் செய்தது. முடிவு-ஒரு அரசியல் படுகொலை. இங்கும் எழுத்துக்களை எழுத்துக்கள் சந்திக்காத துயரம்-துப்பாக்கிக் குண்டுகளே சந்தித்துக் கொண்டன. ஓரளவாவது ஜனநாயக மரபுகளை பேணும் ஐரோப்பிய சமூகத்துள் தமிழ்ச் சமூகம் தன்னை விடாப்பிடியாகவே அடையாளப்படுத்திக் கொண்டது-நாம் இப்படித்தான் என்று மறுப்பு அறிக்கைகள் வழமைபோல் படிவத்தில் சபாலிங்கத்தின் பேரை நிரப்பிக் கொண்டது.
தனிப்பட்ட கொலையாக
யார் இந்த சபாலிங்கம்? என்பதைவிட,
U.N.P அதிகாரத்திலிருந்த போது, பத்திரிகையாளனும், கலைஞனுமான றிச்சர்ட் டி சொய்ச கொலை செய்யப்பட்டதை புரிந்து கொண்டவர்களுக்கு, புலிகளின் அதிகாரத்தில் யாழ்ப்பாணம் இருந்த போது பல்கலைக்கழக விரிவுரையாளரான ராஜினி செய்யப்பட்டதை புரிந்து கொண்டவர்களுக்கு, சபாலிங்கத்தின் கொலையையும் புரிந்து கொள்வதில் கஸ்டமிருக்காது. கொல்லப்பட்ட இடம்தான் வித்தியாசம்-எதிர்பாராதது.
கொலை
எல்லா இயக்கங்களினதும் செயற்பாடுகளை தகவல்கள், புள்ளிவிபரங்களோடு ஆதாரப்படுத்தி ஒரு வரலாற்று ஆவணமாக கொண்டு வரப்பட்ட BROKIEN PALMYRAH 6 Tsop Ly 535 535 576öi சூத்திரதாரியான ராஜரினியை சைக்கிளில் வந்த வன்முறை சுட்டுக் கொன்றது. (பல்வேறு ஊகங்களின் பின் புலிகள்தான் கொன்றார்கள் என்பது தீர்மானகரமானது). தமிழ்மக்களின் போராட்ட ஆரம்ப (தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தோற்றத்துக்கு முன்பே) வரலாற்றில் தொடங்கும் ஒரு நுாலை எழுதுவதில் துணை நின்ற சபாலிங்கத்தை வணி முறை வீடு தேடி வந்து கட்டுக் கொன்றுள்ளது. போராட்ட வரலாறு விடுதலைப் புலிகளுக்கு முன்பே தொடங்கிய ஒன்று என்ற உண்மையை அந்த நூல் சொல்ல முற்பட்டதா? வன்முறை இடறிவிட்டது. சயனைட் அறிமுகமே போராளி சிவகுமாரனுக்கு சொந்தமில்லாமல் போனபோது, ஆரம்ப போராட்ட வரலாறு மட்டும் யாருக்கு சொந்தமாகிவிட முடியும்? என்று அந்த வன்முறை கேட்டிருக்கக்கூடும்.
öf负}
சிறிய சலசலப்புக்கும் அடிக்கடி தலைநிமிர்த்தி முன்காலில் மீண்டும் தலை வைத்து உறங்க முடியாமல் சினப்படும் ஒரு வன்முறையும். எல்லாவற்றுக்கும் பழக்கப்படுத்திக் கொள்ளும் மனோபாவத்தில் நாங்களும். எங்களுக்கொரு விடுதலைப் போராட்டமும்.
ஏன் இந்தக் கொலை? என்று புரிந்து கொள்வதே - மூளி அவசியம்.
42 வைகாசி-ஆனி 1994

தென் மாகாணசபை தோல்வியும்
چ
அரசு துணைக்குழுவின் அறிக்கையும்
தென்மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வி ತೀರಾ? அதற்கான காரணங்களை கண்டுபிடிப்பதற்காக ஜனாதிபதி ஒரு துணைக்குழுவை நிய த்திருநதார்.அவ துணைக்குழு ஆராய்வின் பின்னர் தோல்விக்கான காரணங்களாக பின்வருவனரி கூறியுள்ளது.
1- எதிர்கட்சிகள் அரசினால் கொல்லப்பட்ட சிங்கள இளைஞர்களின் தாய்மார்சி" மேடையில் ஏற்றி இக்கொடுமைக் எல்லாம் அரசு தான் காரணம் எனப் பிரச்சாரம் இரதமை. 2:- இளைஞர்களின் கொலைக்குக் காரணமானவர் என நம்பப்பட்ட உடுகழ்பொலவை ஐ.தே.கா மேடைகளில் ஏற்றியமை. 3- காமினி, அனுரா, ரொனி, டி. மெல், ஒலிசுபயகுண சேகரா போன்றவர்களின் Sk፴”* எதிபாததளவு பயனைத் தரவில்லை. அவர்களும் தேர்தல் வேலைகளில் அதிகளவு பங்களிப்தினை நல்கவில்லை. பங்களிப்பினை நல்கியிருந்தாலும் மக்களிடம் அவர்களை உதாசீனப்படுத்தும் இக்கே காணபடடது. 4:- அரசின் அத்து மீறல்கள் அதிகரித்துக் காணப்பட்டது. சீ.வி குணர" சுடபபடடமை. முக்கியஸ்தரான மகிந்தராகமக்ச, தி.மு ஐயரட்னா என்போர் கைது செய்யப்பட்ட" என்பவற்றினை மிக கொடுரமான அத்துமீறலாக மக்கள் பார்த்தமை.
இவ் துணைக் குழுவை விட இலங்கை அரசின் உளவுப் பிரிவுகளில் ஒனறான தேசியப் புலனாய்வுப் பிரிவிடமும் ஆய்வு செய்யுமாறு ஜனாதிபதியினால் உ ۰لفقہ الالامر 65 آنکھ தேசியப் புலனாய்வுப் பிரிவும் அது போன்ற காரணங்களைக் கூறியதுடன் இன்ரிை" நிலையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று எதிர்க் கட்சிகள் சார்பில் சந்திரிகா போட்டியிடுவ" குறைநதது 4 லட்சம் வாக்குகளினால் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வி அடைய நேரிடும் ரக்குறிப்பிட்டுள்ளது.
அரச பக்கத்திலும் பலரிடம் தோல்வி அடையலாம் என்ற கருத்தே மேலேங்கியுள்ளது: இப்போது
v a O o O தோல்வியாக எப்படி அவர்களுக்குள்ள பிரச்சனை தோல்விதான் ஆனால் அதனைக் குறைந்த பட்ச மாற்றிக் கொள்வது என்பதே.
மனிதம் -28 43

Page 24
தென்னிலங்கையில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து மீண்டும் தீவிர நிலைப்பாட்டை எடுத்த மக்கள் விடுதலை முண்ணனி 60,000 வரையான இளைஞர்களைப் பலிகொடுத்ததோடும் ரோகண விஜேவீரா, உபதினிஸகம நாயக்கா என்பவர்களின் படுகொலையோடும் தீவிரவாத நடவடிக்கைகளை நிறுத்தி சிதறுப்பட்டது யாவரும் அறிந்ததே இந்நிலையில் அதன் செயற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு லண்டனிலுள்ள சர்வதேச அலுவகத்தின் மூலமாகவே மட்டுப்படுத்தப்பட்ட செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
மீண்டும் பிளவுபடும் UWP
இலங்கையில் அரசின் கொடுர அடக்குமுறையில் மக்கள் விடுதலை முண்ணனியின் மத்திய குழு உறுப்பினர்கள் அனைவரும் கொல்லப்பட்ட போது சோமவன்ச அமரசிங்க என்பவர் மட்டும் தப்பியிருந்தார். இலங்கையில் தேடப்பட்ட இவர் தமிழர் ஒருவரின் உதவியுடன் 1989 ல் இந்தியா சென்று அங்கிருந்து லண்டன் அடைந்தார். சர்வதேச செயலகபொறுப்பாளராக இருந்த C.T. பெர்ணாண்டோவுடன் சேர்ந்து அமைப்பைப் புரணமைக்கும் பணிகளில் ஈடுபட்டார். இப்பணிகளைச் செயற்படுத்துவதற்காக சர்வதேச செயலகத்தின் தலைமைச் செயலாளராகவும் இவர் நியமிக்கப்பட்டார்.
தற்போது சோமவன்ச அமரசிங்காவுக்கும், C.T. பெர்னாண்டோவுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் வெடித்துள்ளது. இதனால் இரு அணிகளைச் சேர்ந்தவர்களும் இரு குழுக்களாயினர். இவர்களது கருத்துமோதல்களை தென்னிலங்கைச் சிங்களப் பத்திரிகைகள் தொடர்ச்சியாக பிரசுரித்து வருகின்றன. இவர்களது கருத்து மோதல்கள் பல இடங்களில் தனி நபர் தாக்குதல்களாகவும் மாறியுள்ளன. அண்மையில் மக்கள் விடுதலை முண்ணனியின் பத்திரிகையான கினிபுர (தீப்பொறி) வின் ஸ்தாபகரான அச்சாத லெனரோல் லண்டனில் இறந்தார். அவரது மரணம் தொடர்பாக விடுக்கப்பட்ட அஞ்சலி அறிக்கையில் ஜனநாயகக் விரோதக் கும்பலின் தலைவரான சோமவன்ச வை எதிர்தது செயல்பட்டவர் தோழர் அச்சாதலினரோல் எனக் குறிப்பிடபட்டிருந்தது.
சுனில் மாதவ வை ஆசிரியராகக் கொண்டு இயங்கும் ஹிரு சோமவன்ச தலைமையிலான குழுவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றது. இவர்களை விட இலங்கையில் இருந்த UVP உறுப்பினர்கள் சிலர் நவசம சமாஜக்கட்சி, பொது ஜன முண்ணனி, முற்போக்கு முண்ணனி என்பவற்றுடனும் செயற்பட்டு வருகின்றனர்.
புதிய கடைதிறப்பில் கூட்டணி
கண்டவன் கிண்டவன் எல்லாம் மக்கள் பிரதிநிதிகளாக வலம் வருகின்றார்கள் தாங்கள் ஏன் மீண்டும் வரக்கூடாது என்ற நப்பாசை பழைய சொல்லின் வீரர்களான தமிழர் விடுதலைக் கூட்டணியினரிடம் ஏற்பட்டுள்ளது. கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் நாங்கள் போட்டியிடாததினாலேயே மக்களினால் கழித்துவிடப்பவர்கள் எல்லோரும் இன்று மக்கள் பிரதிநிதிகளாக வலம் வருகின்றார்கள். நாங்கள் போட்டியிட்டால் இவர்கள் எல்லோரும் மூலைக்குப் போய் விடுவார்கள் என புதிய ஞானம் ஒன்று இதன் மூலமாக அவர்களிடையே தோற்றம் பெற்றது.
44 வைகாசி-ஆனி 1994

புலிக்குப் பயந்து தேர்தலில் போட்டியிடாமல் பூனை போல பதுங்கியவர்கள் இன்று புலிபோல சீறி எழுந்து தேர்தல் முஸ்திபுகளில் இறங்கியுள்ளனர். புதிய எழுச்சியின் முதற்கட்டமாக திருகோணமலையில் தமது கொள்கை விளக்கக் கூட்டத்தை நடாத்தியுள்ளனர். அக் கூட்டத்தில் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் கூட்டணிச் சிங்கம் சிவசிதம்பரம் சுடச்சுட பதிலளித்தார். இன்னெரு சொல் வீரரான ஆனந்தசங்கரி புலி தடுத்தாலும் தாம் போட்டியிடுவோம் எனக் கர்ச்சித்தார்.
தற்போது மட்டக்களப்பிலும் வவுனியாவிலும் அமைப்புக் கூட்டங்களை நடாத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்கள். மட்டக்களப்பு அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கமும் வவுனியா டாவட்ட அமைப்பாளராக முன்னாள் பொலிஸ் அதிபர் நாதனும் நியமிக்கப்பட்டு அமைப்பு வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. வடக்கில் தேர்தல் நடாத்தும் சூழ்நிலையில்லாததால் கூட்டணியின் வடக்கு பிரபலஸ்தர்கள் கிழக்கில் தேர்தலில் நிற்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
தமிழர் கூட்டணியின் இத் திடீர் எழிச்சிக்கு புலிகளின் ஆதரவு உள்ளது போல தெரிகிறது. இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் தனது பகமை இயக்கங்கள் அரசியல் ஆதிக்கம் பெறுவதை புலிகள் விரும்பவில்லை. இந்நிலையில் தான் நினைத்த மாதிரிக் கையாளக் கூடிய கூட்டணி ஆதிக்கம் பெறுவது போலத் தெரிகின்றது. அமிர்தலிங்கம் போன்ற உறுதியான தலைவர்கள் கூட்டணியில் இல்லாத நிலையில் அதனைத் தாம் கையாளுவது சுலபமாக இருக்கும் எனவும் புலிகள் கருதுகிறார்கள்.
கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் புலிகள் பயமுறுத்தியததினாலேயே கூட்டணியினர் போட்டியிடவில்லை திருமலையில் ஒரு குழுவை தமது சார்பில் நிறுத்துவதற்கு கூட்டணியின் முக்கியஸ்தரான தங்கத்துரை முயற்சி செய்தாராயினும் பின்னர் அதனைக் கைவிட்டிருந்தார். தங்கத்துரையின் மனைவிக்கு நீண்டகாலம் பூவோடும், பொட்டோடும் இருக்க விருப்பமில்லையோ? என செய்தி அனுப்பியதால் தான் அவர் முயற்சியைக் கைவிட்டிருந்தார் எனவும் கதை அடிபடுகின்றது. இனியென்ன கிழக்கின் தெருக்களிலும் பாராளுமன்றத்திலும் கூட்டணியின் சிம்மக் குரலைக்
கேட்டு ரசிக்கலாம்.
தோட்டங்களில் தனியார் துறையினர் 1994 ஆம் ஆண்டு 224 கோடி ரூபா நட்டம்
அரச நிர்வாகத்தின் கீழ் தோட்டங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி உலக வங்கியின் ஆலேசனையின் பேரில் தோட்டங்களைத் தனியாருக்கு வழங்கிய அரசு இப்போது பேரிடியை எதிர்நோக்கியுள்ளது. 1992 ஆம் ஆண்டு 800 க்கும் மேற்பட்ட தோட்டங்களை 22 தனியார் கம்பனிகளுக்கு அரசு வழங்கியிருந்தது அறிந்ததே. ஆனால் 93 ஆம் ஆண்டு இக்கம்பனிகள் 224 கோடி ரூபா நஷ்டமடைந்திருப்பதாக அறிய வந்துள்ளது.
ஏற்கனவே அரசின் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் கீழ் மேற்படி கம்பனிகள் இருந்த போது கூட இத்தகைய நஷ்டங்களை எதிர்நோக்கியதில்லை என பொருளியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். அத்துடன் அரசு மேற்படி
மனிதம் -28 45

Page 25
கம்பனிகளுக்கு தோட்டங்களைக் குத்தகைக்கு கொடுத்ததுடன் அவை இயங்குவதற்கு கோடிக்கணக்கான கடனையும் அரசு வழங்கியிருந்தது. தற்போது நஷ்டத்தைக் காட்டி இக்கம்பனிகள் குத்தகைப் பணத்தை மட்டுமல்லாது கடனையும் மீள செலுத்த மறுத்து வருவதாக தெரிகின்றது.
தோட்டங்களை தனியாருக்கு கொடுப்பதற்கு முன் அரசுக்கும் தனியார் துறையினருக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் லாபத்தில் இயங்கினால் மாத்திரமே தொடர்ந்து நிர்வாகிக்க அனுமதியளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் 94 ஆம் ஆண்டு அரை வருடம் கடந்த பின்னும் இது வெளிவராத இரகசியமாகவே உள்ளது.
சாமியின் திரிசங்குநிலை
அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக போய்விட்டது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் செயலாளர் செல்லச்சாமியின் நிலை. ஐக்கிய தேசியக் கட்சியை நம்பி தன்னை வளர்த்த இ.தொ.கா வையே கைவிட்டார் செல்லச்சாமி. இப்போ இருவரும் செல்லச்சாமியை கைவிட்டு விட்டார்கள்.
இ.தொ.கா வுடன் பிரச்சனைப் பட்டாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் உதவியுடன் தனது கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் அமைச்சர் பதவியையும் காப்பாற்றி விடலாம் என்று நினைத்தார் செல்லச்சாமி. ஆனால் இ.தொ.கா அதற்கும் உலைவைக்கும் முயற்சியில் இறங்கிவிட்டது. செல்லச்சாமிக்குப் பதிலாக மேல்மாகணசபை உறுப்பினர் யோகராஜனை முதன்மைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்மையில் இதற்காக கொழும்பு ஜிந்துப்பிட்டியில் தொண்டமான் தலைமையில் மாபெரும் கூட்டமும் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசியவர்கள் எல்லோரும் தொண்டமான் உட்பட செல்லச்சாமியை எந்த வகையில் எல்லாம் திட்டித்தீர்க்க முடியுமோ அந்தவகையில் எல்லாம் திட்டித்தீர்த்தனர். தற்போது மேல்மாகாணத்தில் நடைபெறுகின்ற விழாக்களுக்கெல்லாம் பிரதம விருந்தினர்களாக செல்லச்சாமிக்குப் பதிலாக யோகராஜனும் தொண்டமானுமே அழைக்கப்படுகின்றனர்.
இதைவிட தொண்டமான் இராஜங்க அமைச்சர் பதவியிலிருந்து செல்லச்சாமியை நீக்கும்படியும் மத்தியமாகாண அமைச்சராக இருக்கும் செல்லச்சாமியின் அணியைச் சேர்ந்த கதிரேசனை பதவியிலிருந்து இறக்கும்படியும் அரசை வற்புறுத்தி வருகின்றனர்.
செல்லச்சாமி தனது நிலையை ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளார். ஜனாதிபதி தொண்டமானை மீறி தன்னால் எதுவும் செய்ய முடியாது என கைவிரித்துள்ளார். சோர்ந்து போன சாமி சிறிமாவுடன் இணைவதற்கு கேட்டதாகவும் கதை அடிபடுகின்றது. சாமிதன்னோடு கதைத்ததை சிறிமாவே தொண்டமானுக்கு தெரியப்படுத்தியதாகவும் அதற்கு தொண்டமான் நீங்கள் அவரை இணைத்துக் கொள்வதுபற்றி தனக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை என தெரிவித்தாததாகவும் செய்திகள் கிடைத்துள்ளது.சாமி கடைசி முயற்சியாக தற்போதுகாமினியை அணுகியுள்ளார் எனவும்செய்திகள் தெரிவிக்கின்றன
46 வைகாசி-ஆனி 1994

விதவைகள் ሮዻóቻሀዕ
தமிழ்த் தேசத்தின் தென்பகுதியான மட்டக்களப்பு மாவட்டம் இன்று விதவைகளின் தேசமாக காட்சியளிக்கின்றது. அரச படைகளின் அட்டுழியங்களினாலும், விடுதலை இயக்கங்களிடையே நடைபெற்ற மோதல்களினாலும் கணவனை இழந்ததினாலேயே இவ்வாறு விதவைகள் ஆக்கப்பட்டுள்ளனர். இவ் விதவைகளில் பெரும்பாலானவர்கள் 17 வயதிற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்டவர்களாவர்.
சந்தி வெளி கிராமத்தில் மாத்திரம் புலிகள் இயக்கத்திற்கும், புளொட் இயக்கத்திற்கும் இடையே நடைபெற்ற மோதலில் விதவைகளான பெண்களின் தொகை 45 ஆகும். ஆதாவது இங்கு மூன்று வீட்டுக்கு ஒருவர் என்ற வகையில் விதவைகள் காணப்படுகின்றனர்.
இதோ போல் புலிகள் படையினரின் யுத்தகாலத்தில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ராணுவத்தினர் நடாத்திய தேடுதல் வேட்டையின் போது கைதாகி கொலை செய்யப்பட்டதன்
ணுவத g மூலம் விதவைகளாகிய பெண்களின் தொகை கொம்மா துறை கிராமத்தில் மாத்திரம் 48 ஆகும்.
இதே போன்ற நிலைமைகள் தான் வேறு பல கிராமங்களிலும் காணப்படுகின்றன.
மொத்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் விதவைகளின் நிலையினை பின்வரும் அட்டவணை விளக்குகின்றது.
உதவி அரசாங்க அதிபர் பிரிவு மொத்தவிதவைகள் வன்செயல்களினால்
விதவையானோர்கள்
ஏறாவூர் பற்று உதவி அரசாங்க 1156 828
அதிபர் பிரிவு
மண்துரனப்பற்று உதவி 632 345
அரசாங்க அதிபர் பிரிவு
மண்முனை தென் எருவில் 618 36 பற்று உதவி அரசாங்க அதிபர்
பிரிவு
மொத்தம் 2406 1489
மனிதம் -28 47

Page 26
5 €நிறுவனங்களிருககினறன மொழிப் பிரச்சனையாயின் மொழிபெயர்ப்பாளர் உதவியும் அவர்களே வைத்துக் கொடுக்கின்றார்கள். ஆவலும் நேரமும் தான் நமது பக்கம் ஆனால் இன்நிலைப்படிகளில் எத்தனை பெற்றோர்கள் சுயமாகக் கால்பதித்துள்ளனர்? இவங்களுக்கென்ன தெரியும் என்ற மனோபாவம்? என்னதான் தெரிகிறதென்று பார்த்துவிடலாமல்லவா. எங்கள் மனோபாவப்படி வழுக்கல் சறுக்கலான ஒழுக்க நெறி வசதிக்கேற்ப கலாச்சாரத்தை வளைத்துக் கொள்ளும் சாதுரியம் நாங்கள் கடைப்பிடிப்பவை எங்கள் எண்ணங்களில் குடியிருப்பவை தவிரத் தேவையில்லாமல் எதையும் வளர்த்துக் கொள்ளமாட்டோம் எமது வளர்ச்சி (சிந்தனைஅறிவு பூர்வமான) அதை வளர்ச்சியென்று கொள்வோமேயானால் ஓர் குறிப்பிட எல்லைையக் கடக்க முயற்சிப்பதில்லை. ஆனால் நாங்கள் இந்தச் சமுதாயத்தில் எதிர் நோக்க வேண்டிய பிரச்சனைகளின் வளர்ச்சி அசுரத்தனமானதென்பது மறுப்பற்றதொன்று.
இளவயதினரின் பிரச்சனை இன்னும் பயமுறுத்துகிறது. பாலியல் உணர்வுகள் அரும்பும் நேரம், நடமாடும் உலகில் விளம்பரங்களிலிருந்து உடைவுரை சினிமா T. V யில் இருந்து கணி காணும் காட்சி வரை ஆட்சி
செலுத்தும் மாறுபட்ட பாலியல பழகக வழக்கங்களும் வீட்டில நடைமுறைப்படுத்தப்படும் கட்டுப்பாடுகள்
சட்டதிட்டங்கள் என்பன எதிர் மறையாகவே இருக்கிறது. எமது இளவயதினர் இரு வேறுபட்ட உலகின் தனிப் பிரதிநிதிகள் இங்குள்ள முறை அவர்களுக்கு இயல்பாகவே தெரிகிறது. பிழை எதுவும் தெரிவதில்லை ஆனால் அப்பா, அம்மா, மாமா, அன்ரிமார் கதைப்பதோ கற்பனையில் கூட நடக்குமா என்ற சிரிப்பையும் வரவழைக்கிறது. அதன் பாதிப்பு ஆண்-பெண் இரு பாலாருமிருப்பினும் பெண்ணின் பக்கம் தராசு மிக ஆழமாகத் தாழ்ந்து கொண்டு போகிறது. தடைகள் கூடக் கூட அவர்களால் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது மனதுடைந்து போய்விடுகின்றனர். இது பெற்றோர் பிள்ளைகள் இடைவெளிகளைக் கூட்டி
பேரைக் கெடுக்கப் பிறந்த நாய் பட்டமும்
ஒனறுமே தெரியாத -- காட்டுமிராணர்டி என்ற சிந்தனையிலும் இருபக்க மன உளைச்சலைக் கூட்டிக் கொண்டு போகிறது.
இது ஒரு பெரிய பிரச்சனை இங்குள்ள பெற்றோர்கள் இப்பிரச்சனையைச் சந்தித்தவர்கள் சநீதிக்கப் சநீதித்துக் கொண்டுமிருப்பவர்கள். இது ஒரு பொதுவான சமூகப்பிரச்சனையாகி விட்டது. இதுபற்றிக் கூடிக்கதைக்கலாம். இதற்கு என்ன செய்யலாமென முடிவுகலெடுக்கலாம். மீணடும் எங்கள் மனோநிலையின் குறுக்கீடு ஒன்றில் பிரச்சனையை மறைத்து பிரச்சனையே இல்லையெனச் சாதிப்பது
எங்கட ஓட்டைகளை மற்றவங்களுக்கு காட்டினால் இளப்பமாவெல்லே போவம் கூட்டுமுடிவில் நம்பிக்கை பரீச்சம் இல்லாமை அக்கறையே இல்லை எங்கட புள்ளைகளை அப்படித்தான் வளக்கிறம் நில் எண்டால் காலுக்க நிக்கோனும் செருமல், நில் என்றால் காலுக்க நிக்க நாயா அதைக் கூடப் பழக்கியெடுக்க எத்தனை பிரையாசைப்பட வேணடும். கரிசனம் உழைப்பு வேண்டும். இது பெருமையென எணணிக் கொணர்டு ஏதாகிலும் ஒன்று
நடக்கக் கூடாதது நடந்து விட்டால் குய்யோ முறையோ மற்றவர்கள் ரெலிபோனிலும் கூடுமிடங்களிலும் செய்தி ஒலிபரப்பு நல்லா வேணும் இவையளிட லெவலுக்கு முடிவுரை. இதில் பிரச்சனையின் தீர்வு எங்கே?
போகிறவர்கள்
இளவயதினர் இருக்கும் குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளிடமுள்ள நெருக்கத்தினால் பரஸ்பர நம்பிக்கையால் இப்பிரச்சனைக்கு தீர்வு காண முயலலாம். பாலியல் உடல்ரீதியான மாற்றங்களை எளிமையாகச் சொல்லலாம் பாடசாலையிலும் இது கற்றுத்தரப்படும் ஆயினும் எங்கள் பங்கினையும் நாம் செய்ய வேணடும். செக்ஸ் பற்றிய அவர்களுக்குக் கூறிப்பின் விளைவுகளை விளங்கப்படுத்தலாம். பூடகம் பரிசோதனைகளுக்குத்தான் வழிவகுக்கும். இங்கு எமது கலாச்சாரம் நடைமுறைகள் என்ன
விளக்கங்களை
என்பதை விளக்கலாம். இந்நாட்டு நடமுறைகள் இவர்கள் அதுபற்றிக் கொண்டுள்ள சமூகக்
48
வைகாசி- ஆனி 1994

கண்ணோட்டம் என்பனவற்றை விளக்கலாம். இதன் பின்பு பெற்றோரும் இளவயதினரும் இருபக்கப் பரஸ்பர விட்டுக் கொடுப்புகளினுடாக ஓர் தகுந்த முடிவினை எடுக்கலாம். இங்கு வளர்ந்த இளவயதினள்-வயதினர் முழுமையாக எங்கள் கோட்பாட்டை (அது சரியா பிழையா என்பது வேறு ஒரு விவாதம்) ஏற்பார்களென்பது கேள்விக் குறியே. இவர்களது நடமுறையை நாங்கள் ஏற்பது என்பது எம்மால் முடியவே முடியாத காரியம். எனவே சில விட்டுக் கொடுப் புககள் (இதற்கு தவறான விளக்கங்களைக் கொள்ள வேண்டாம்) அதாவது இருவரும் தங்கள் தங்கள் இடத்திலிருந்து சிறிது நடந்து வந்து சந்திக்கும் நிகழ்வை ஏற்படுத்த வேணடும். அல்லது முற்று முழுவதும் மகளே மகனே உண்பாடு என விட்டுவிட்டு நாம் முற்போக்கானவர்கள் ? என இருக்கலாம். இவை எல்லாமே பெற்றார் பிள்ளைகள் பேணும் உறவில் நம்பிக்கையில் புரிந்துணர்வின தளங்களில நடக க வேண்டியதொழிய ஆழுமையில் கட்டளைத் தொனிகளில் நடக்கக் கூடியவையல்ல. இவைகள் விபரீத விளைவுகளுக்கும் பொய்யாகும் மறைமுகத் தாக்கங்கள் நினைப்பதைச் சாதிப்பதற்கும் அன்றேல் முற்றும் முழுவதுமாகப் பெற்றோரைப் பிரிந்து தனிவழிபோகும் அபாயத்தினையும் ஏற்படுத்தும். இந்த அனுபவம் நடந்துமிருக்கிறது.
இவை எல்லாவற்றையும் நாம் ஏன் செய்ய வேண்டும் குழந்தையைப் பெறக் கூடாது பெற்றால் சரியான வழி நடத்தலைத் தர வேண்டியது எங்களது கடமை. குழந்தைகள் சுமையென நினைத்தால் அவைகளைப் பெறாமலேயே வாழமுடியுமல்லவா. பின்பு அலுப்புச் சலிப்புடன் உங்களுக்குத்தானே எல்லாம் எனக் கூறுவது எந்தவகைகளில் நியாயம். இந்தக் குழந்தை கேட்டதா எனக்கு பவுனும் காசும் வேணும் என்று நாம்தாம் நினைக்கின்றோம். பொன்னையும் பொருளையும் வாரிவைத்துக் கொள்ள வேண்டும் என்று. அன்பான குடும்பம் இதற்கு ஈடு இணை இல்லை. இது அளவற்ற பணம், அறிவு, புகழி எல்லாவற்றிகும்
மேலானதென்பதென்ன எங்களுக்குத் தெரியாததா?
அன்பான குடும்பம் படங்களில் மாத்திரம் வந்து போகு மொனறா பிரச்சனைகளே இல்லாததொரு குடும்பமுணர்டா. இல்லை இரணடுமே இல்லை. ஆனால் இரணடும் உணர்டு, ஒரு குடும்ப அமைப்பில் நாம் எத்தனையைக் கவனத்தில் கொள்கிறோம் இதில் தட்டுக்கள் உண்டா? ஆதிக்கமுண்டா ஆளுமை இருக்கிறதா கேள்விகளைக் கேட்கலாம். முதலில் கணவன் மனைவி பின்பு குழந்தைகள் என்று வருகின்றன அல்லவா ஆரம்பத்திலிருந்தே முடிவுகளைக் கலந்தாலோசித்து எடுத்துக் கொள்ளப் பழகிவிட வேண்டும். வேலைகளை வேலைப்பிரிவினையின்றிப் பங்கீட்டு முறையினில் செய்து பழகவேண்டும் பின்பு குழந்தைகளின் வளர்ச்சித் தகுதியை ஒட்டி அவர்களது பக்கப் பங்களிப்பும் சிறு சிறு ஆலோசனைகளாகச் சின்னச் சின்ன வேலைகளாகச் சேர்த்துக் கொள்ளலாம். குடும்ப அங்கததினர் ஒவ்வொருவரும் மற்றையவர்க்கு கூடியளவு பரஸ்பர மரியாதையைக் கொடுக்கப் பழகிக் கொள்ளலாமல்லவா. அப்பா அம்மா கொஞ்சக் கூப்பிட்டால் குழந்தை கட்டாயம் ஓடிவர வேண்டுமென்பதில்லை அல்லது விளையாடக் சுடப்பிட்டால் உடனடியபக வந்து குந்த வேணடுமென்றில்லை. விரும்பினால் சரி இல்லாவிட்டால் அதுதண்பாட்டில் இருந்து விடும். இதனை மதிக்கலாமல்லவா பழக்கப்படுத்திக் கொள்ளவும் கூடிய காரியம் தானே. இதே போல் இன்று மனநிலை சரியில்லை உற்சாகமில்லை என்றால் (இதையே நெடுகச் வைக்காமல்) குழந்தையிடம் கூறலாம். சிலவேளை குழந்தையே உங்களிடம் கேட்கும். என்ன பிரச்சனை ஏன் அப்படி தகுந்தளவு விளக்கம் கொடுத்தல் இன்னும் நல்லது. இது எழுத அறிவுக்கு இலகுவான விடயம். நடைமுறையில் கடுமையானதுதான். ஆனால் மனநல ஆரோக்கியம் தன்னம்பிக்கை, சமூகக் கூட்டுணர்வு, தனது பக்க நியாயங்களை முன்வைத்தல், கூட்டு முடிவு, தன்முடிவைத் தானே எடுத்தல் எனபல பிரிவுகளில் வளர்ச்சியைக் குழந்தைக்கு அளிக்கிறது. எங்களுக்கும் தான்.
ス 23
சாக்காக

Page 27
http:WWWW, thamizham.net
இருள்
நானாபோ கான
േITI
பன்னாள் சு
சிறிதுசிறிதாக சிண்ட சூரியக் கர்ர்களை நா இது நிக
Lairg Lan எண் சீர்ணவன் மழர் என் தி ஹார்வுகளை
முக்தமிட்டு
கன்னங்கள்
இடரந்து டெரர்
சந்நியீட.
店凸门 இரத்தப் படி மெளனத்துக்
இவ:
இரக்கத்தின் தோ பிந்ச்ே சுரங்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர அஸ்தமனம்
ரோ
ரள மறுதினேமோ
வபுரிவோ
திவுகளை
ரந்து வருகின்று
"ண் தரிசிக்கின்றபோது
முராம்!
ALTITri
ரவிசார் சிரச் சித்ர உரசிப் பார்க்கிறாள்
முந்தமிட்டு சிவந்துபோக
துச் சந்தமிட
ரந்தமிட.
புேகளுடன் கிடக்கிரேன்
af II
ாய்ந்து முகிழ்ந்த
விருடன்.