கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இன்றைய மலையகம் (கட்டுரைத் தொகுப்பு)

Page 1

ரத் தொகுப்பு)
மூக்கையா

Page 2
L L L L L u uLSqSqqS uuuS uu uuSuu uuSuuu uSuS SuuuSuSuSuSuS o േ. േ. T
Gatoll instill ബ ܘܐܘܼܠܠܝܪܝܩܢܘܢܬܐ
|L
இன்றைய ബ
|
। இன்றைய see । UL LL
ue
G). Du Lotus
േ L. NA sue
இன்றைய
AG LA NA Բ երկրյա
ILLUD TILL |L
uas இன்றைய ബ iawn yw Llanrwst இன்றைய Qing Louis
ബ Ըն տվյա ബ
। இன்றைய nuus
இன்றைய au றபடிமயகம் இன்றையாகப் പി.ഉം ܠܠ ܤܢܣܢܘܘܘܘܘܐ uas train |L
/॥ ...au ܠܠ4 ܕܗܢܘܩܝܐ
ക്ഷേ. see
Il ODI LI LINDLU LILLI
L.A.
|L
॥
... . ܐܡܘܬܐ | இன்றைய Aniini
الس..................... ܐܠܠܧܟܢܝܘܚ-------ܩܐ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

==
u இன்றைய u LL ।
േീ.ഉം ബ و 1790. لا ܐܵܬܘ இன்
|L
uas இன்றைய sis இன்ற ܘܐܘܼܠܠܝܐ
seus
இன்றைய மலையகம்
us
Lill
| Բ. գլյլն
LL
േീ.ഉം sue Տ ոլյա
வட்டு ബ
See alarii GILLALLI
இன்
இன்றைய மலையகம்
॥ இன்றைய மலையகம்
Բ-ն իրյա 7 ܠܠ4 ܕܣܘܘܚܐ |L ਮ।
ബ இன்றைய ܠܠ4 ܕܐܩܪܝܙܘܣܝܐ இன்
இன்றைய ॥ L இன்றைய |L
use இள் L.A. 7
Uਮ LL
use ബ. இன்
|L |L
u ബി. இன்ற
|L
au இன்ற
இன்றைய மலையகம்
| ܒܘܠܒܪܢܫܢܘܬܐ. இன்றைய
au
LL GUILO LILOSIDIBAJUEL
.ള
all.
॥
анарицаја шант. |L ബ ...au/ 量 IN DIE இன்றைய
പി. ॥ ബി. இன்று

Page 3

இன்றைய மலையகம் (கட்டுரைத் தொகுப்பு)
மா.செ. மூக்கையா சிரேஷ்ட விரிவுரையாளர் புவியியல் துறை பேராதனைப் பல்கலைக் கழகம் பேராதனை பணிப்பாளர், வடமாகாண இணைந்த பல்கலைக்கழக கல்லூரி, Guay Gorffluunt, இலங்கை.

Page 4
பதிப்புரிய ஆரியரு
| -- T TITITIF INSTITT miri
புவியியல் துவி) பேராதனைப் பல்கலைக் கழகம் பேராதன்ை
இலங்கை
ட்டோர் - பி.ஆர்.லித்தோ கிராபர்ஸ், சென்னை-5000
 

கடந்த அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக மக்களின் சுபீட்சத்திற்காகவும் அரசியல் மேம்பாட்டிற்காகவும்
அயராது உழைத்து வரும் மலையகப் பெருந்தலைவர்
செள மிய மூர்த்தி தொண்டமான்
அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்

Page 5

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் மாண்புமிகு அமைச்சருமான தொண்டமான்
தரும முகவுரை
இந்து சமுத்திரத்தின் மத்தியிலே, இந்திய துவீபம் என்ற ஆரத்தின் மர கதப் பதக்கம் போல் விளங்கும் இலங்கை மணித் திருநாட்டில், பிரித்தானிய ஆட்சியின்தூண்டுதலால், ஒன்றரைநூற்றாண்டுக்குமுன்னர் வந்து குடியேறிய இந்திய வம்சாவளி தமிழக மக்கள் கல்வித்துறையிலும், பொருளாதாரத் துறையிலும் இன்னும் ஒரு பின்தங்கிய சமுதாயமாகவே கருதப்படு கின்றனர்.
என்றாலும் கடந்த ஐம்பது ஆண்டுகளாக அவர்களுடைய முன்னேற்றமும், வாழ்க்கைத் தரமும், சம்பாத்தியமும் படிப்படியாக உயர்வடைந்தே வந்திருக்கின்றன என்பதைமறுக்கவோ, மறைக்கவோமுடியாது. இதற்கு காரணம். அவர்களுடைய தொழில் உரிமைகளையும், அரசியல் அந்தஸ்தையும், சமுதாயக் கட்டுக்கோப்பையும் பாதுகாப்பதற்காக, பாரத ஜோதி பூநீபண்டித ஜவஹர்லால் அவர்களால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட இலங்கை இந்திய காங்கிரஸ் என்ற ஸ்தாபனத்தின் நற்பணியேயாகும். இந்த ஸ்தாபனமே பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்று பரிணமித்தது.
ஒரு சமுதாயம் தன்னைத் தான் சுதாகரித்துக் கொண்டு, தன்நிறைவையும், குறைவையும் உணர்ந்து கொண்டு, வாழ்க்கையிலும், அந்தஸ்திலும் உயர்வதற்கு தனது இன்றைய நிலையையும், கடந்த கால வரலாற்றையும்

Page 6
ஆழமாக அறிந்திருப்பது அவசியமாகும். நமது பூர்வீக சரித்திரத்தை நன்கு தெரிந்து கொண்டால்தான், எதிர்காலத்தில் நாம் எப்படித் திட்டமிட்டு முன்னேறலாம் என்பதை நிர்ணயிக்க முடியும்,
இப்போது நீங்கள் படிக்கப் போகின்ற இந்த நூல் பல்கலைக் கழக விரிவுரை யாளர் திரு. மூக்கையா அவர்களால் எழுதப்பட்டதாகும். இந்த நூலிலே இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களுடைய, குறிப்பாக மலையகத்தில் குடியேறி வாழும் தோட்டத்தொழிலாளர்களுடைய, பழைய வரலாற்றையும், அவர்களுடைய இன்றைய நிலையையும் நூலாசிரியர் நன்கு எடுத்துக் கூறியிருக்கின்றார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் தொண்டமான் அறக்கட்டளை' என்ற அமைப்பின் நோக்கங்களில் ஒன்று இந்திய வம்சாவளிமக்களின் விஷயஞானத்தை விசாலிக்கச்செய்வதுமாகும். இந்தப் பின்னணியில்தான் 'தொண்டமான் அறக்கட்டளை' நிதியத்தைக் கொண்டு இந்நூல் வெளியிடப்படுகிறது. இப் பனுவல் பொதுவாக இந்திய வம்சாவளி மக்களுக்கும், குறிப்பாக தோட்டத் தொழிலாள மக்களுக்கும், விசேஷமாக ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டிருக்கும் கல்விமான்களுக்கும் பயனுடையதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்தியாவிலிருந்து, மலேஷியா, சிங்கப்பூர், தென் ஆபிரிக்கா, மொறிஸியஸ் போன்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்த இந்திய வம்சாவளி தமிழ் மக்கள், அங்கெல்லாம் நல்ல உயர்ந்த வாழ்க்கை வாழ்கிறார்கள். சாதாரண உடல் உழைப்பாளிகளாகச் சென்றவர்களின் வழித்தோன்றல்கள், உயர்ந்த உத்தியோகங்களிலும், சிறந்த வர்த்தகங்களிலும் ஈடுபட்டு வாழ்க்கையின் உன்னதங்களை எல்லாம் அனுபவித்து வருகிறார்கள்.
இலங்கையில் குடியேறியவர்கள் அந்த அளவுக்கு தங்களை உயர்த்திக் கொள்ள முடியாமல் போனமைக்கு ஐந்து காரணங்களைக் குறிப்பிடலாம்.
1. ஆரம்பத்தில் இவர்களிடையே ஒற்றுமை நிலவவில்லை. தனித்தனியாகச் செயல்பட்டார்கள். கூட்டு பலத்தின் உயர்வு இவர்களால் உணரப் படவில்லை.
2. தகுதிவாய்ந்ததலைமைத்துவம்இவர்களுக்குஅமையவில்லை. தலைவர் என்று வந்தவர்கள் தியாக உணர்ச்சி அற்றவர்களாகவும், சுயநலத்தையே நோக்கமாகக் கொண்டவர்களாகவும் இருந்தார்கள்.
3. அரசியல் அதிகாரங்களைத்தம் கையில் வைத்திருந்தவர்கள் இவர்களைப் புறக்கணித்தார்கள். பிரஜா'உரிமை, வாக்குரிமை போன்ற அடிப்படை மனித உரிமைகளைப் பறித்து அடக்கு முறை தர்பார் நடத்திவந்தார்கள்.
4. இவர்களிடையே அச்சஉணர்வும்,துணிவின்மையும்நிலவின. அநீதியை
எதிர்த்து போரிடும் வீர உணர்வு இல்லாதவர்களாக வாழ்ந்தார்கள்.

5. கல்வித் துறையில் கூடிய கரிசனை காட்டி, உயர் பதவிகளைக் கைப்பற்ற
முடியாமல் தன்நம்பிக்கை அற்றவர்களாக வாழ்ந்து வந்தார்கள்.
மேற்கூறிய 5 காரணங்களுமே இந்திய வம்சாவளி தமிழ் மக்களைப் பின்தங்கிய நிலையில் தள்ளி வைத்தன.
மேற்கூறிய ஐந்து காரணங்களுள் இரண்டு மிகவும் பிரதானமானவை. ஏனைய நாடுகளுக்குச் சென்றவர்களைப் போலவே, இங்கு வந்து குடியேறியவர்களும் நல்ல உடல்வலுவுடனும், உளவலுவுடனும், உழைப்புத் திறனுடனும்தான் வந்தார்கள். ஆனால் அவர்களிடையே ஒற்றுமை நிலவவில்லை. அவர்களைஒற்றுமைப்படுத்திஒருபலம்வாய்ந்தசமுதாயமாக ஆக்குவதற்கு அக்கறையுள்ள ஸ்தாபனங்களும் இருக்கவில்லை, தகுதி வாய்ந்த, தியாக சிந்தையுள்ள, சுயநலம் சிறிதுமின்றி, பொது நல நோக்கமுடைய தலைமைத்துவமும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
மற்றும் ஒன்று, அவர்கள் துணிவு அற்றவர்களாகவும், அஞ்சும் சுபாவமுடையவர்களாகவும் இருந்தார்கள். ஆட்சியாளரிடம் அச்சம், அதிகாரிகளிடம் அச்சம், தோட்டத்துரைமாரிடம் அச்சம், கங்காணிமாரிடம் அச்சம்,கிராமத்துமுதலாளிகளிடமும், குண்டர்களிடமும்அச்சம், பேய்பிசாசு என்று அச்சம், இப்படியே எதற்கெடுத்தாலும் பயந்து நடுங்கும் சுபாவம் உடையவர்களாக இருந்தார்கள். புரட்சிக்கவி பாரதி பாடியது போல 'அஞ்சியஞ்சிச் சாவார், அவர் அஞ்சாத பொருளில்லை. அவனியிலே' என்ற நிலையிலேயே வாழ்ந்தார்கள்.
இலங்கை இந்திய காங்கிரஸ் என்றும், பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்றும் ஓர் அமைப்பு ஏற்பட்டு, இந்த ஸ்தாபனம் அவர்களை வழிநடத்த முற்பட்டபோதுதான் அவர்களிடையே ஒற்றுமை உதயமாயிற்று. பயம் அவர்களை விட்டு அகன்றது.
ஒற்றுமையின் பலன் தந்த பரிசாகத்தான் இன்று இந்திய வம்சாவளி மக்களின் பிரதிநிதிகள் ஒன்பது பேர் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடிகிறது. அதுபோலவே பல ஸ்தல ஸ்தாபனங்களிலும், மாகாண சபைகளிலும் அவர்களுடைய பிரதிநிதிகள்இடம்பிடித்துக்கொண்டுநாட்டின் நிர்வாகத்தில் பங்காளிகளாக இருக்கிறார்கள். இரண்டு அரசாங்கங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்கள் அமைச்சர்களாக அங்கம் வகிக்க முடிந்திருக்கிறது.
கடந்தகாலங்களில்நாட்டில் இனக்கலவரம் நேர்ந்தபோதெல்லாம் இந்திய வம்சாவளியினர் பெரும்பான்மை இனக் குண்டர்களால் தாக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். எதிர்த்தாக்குதல் நடத்த இவர்கள் அஞ்சினார்கள். இப்போது நிலைமை பெருமளவில் மாற்றங்கண்டு விட்டது. இந்திய வம்சாவளியினர் வன்செயல்களுக்கு பணிய மறுக்கிறார்கள். அஹிம்சையில் நம்பிக்கை வைத்திருக்கும் அவர்கள் தாமாக யாரையும் இம்சைப் படுத்துவதில்லை. அதே வேளையில் வன்செயல் புரிய முற்படுபவர்களை தடுத்து நிறுத்தித் தற்காப்புத் தேடிக் கொள்வதற்காகத் தாமும் எதிர்த்

Page 7
தாக்குதல்களைக் கையாளத் தயங்குவதில்லை. இத்தகைய வீரமும் துணிச்சலும் அவர்களுக்கு ஏற்பட்டு விட்டமையினால் இந்திய வம்சாவளியினர் வாழும் மலையகத்தில் வன்செயல் நிகழ்ச்சிகள் எவ்வளவோ குறைந்துவிட்டன.
இருபத்தோராம் நூற்றாண்டில் பிரவேசிக்கப் போகிற இந்திய வம்சாவளி மக்கள் தங்கள் வாழ்வில் புதிய திருப்பங்களை எதிர்நோக்கி நிற்கிறார்கள். அவர்களுக்கு இனி என்ன தேவை என்பதை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆறு அம்சத் திட்டக் கோரிக்கை ஒன்றின் மூலம் அரசாங்கத்துக்கு தெளிவாக்கியிருக்கிறது. இந்தக் கோரிக்கைகளில் தோட்டத் தொழிலாளிக்கு சொந்தவீடு, மின்சாரம், குடிதண்ணீர், சுகாதாரம், கல்வி, தொழில் என்பன அடங்கியுள்ளன.
இந்த நூலைப் படிக்கும் இந்திய வம்சாவளி மக்கள் தமது மூதாதையர் எப்படிவந்தார்கள், எப்படிவாழ்ந்தார்கள் என்ற விவரங்களையும், அவர்தம் பொருளாதார சமூக வளர்ச்சிகளையும் அறியும் அதே வேளையில், தமது எதிர்காலம் எப்படி அமையப்போகிறது, எப்படி அமைய வேண்டும் என்பதையும் சிந்தித்துச் செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்.
இந்நூல் படிப்பதற்கு மட்டுமின்றி, படித்தபின் நூலகங்களில் போற்றிப் பாதுகாக்கவேண்டிய செறிபொருள் அடங்கிய ஒரு சிறந்த நூலுமாகும் என்று தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
சௌமியமூர்த்தி தொண்டமான் இ.தொ.கா. தலைவர் அமைச்சர் கால்நடை வளர்ச்சி, 01.01.1995. சிறு கைத்தொழில் அபிவிருத்தி

நூன Cupd5 LD
இலங்கையிலே பிரித்தானியரின் ஆட்சி ஏற்பட்டதன் விளைவாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டிலே நவீன மயமாக்கம் ஆரம்பமாகியது. தங்கள் ஆதிக்கத்தை உறுதிப் படுத்துவதற்கும் பொருளாதார அபிவிருத்தி கருதியும் தேசத்தின் எல்லாப் பகுதிகளையும் இணைக்கும் வகையிலே தெருக்களையும் புகையிரதப் பாதைகளையும் அமைத் தார்கள். செங்குத்தான மலைச் சாரல்களையும் காடுகள் நிறைந்த ஆற்றுப் படுக்கைகளையும் கொண்ட மலைநாடு தனது தனித்துவத்தை இழக்க நேர்ந்தது. மலையோரங் களை வெட்டிப் பல நூற்றுக்கணக்கான மைல்தூர தெருக் களை அமைத்துப் பிரித்தானியப் பொறியியலாளர்கள் இலங்கை வரலாற்றிலே மிகப் பிரமிக்கத்தக்க சாதனையைப் புரிந்தார்கள்.
பிரித்தானியர் உருவாக்கிய பெருந்தோட்டங்கள் இலங்கையின் பொருளாதார அமைப்பிலே பெருமாற்றத்தை ஏற்படுத்தின. மலைகளிலும் மலைச்சாரல்களிலும் படர்ந் திருந்த காடுகள் அழிக்கப்பெற்றுப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதற்பகுதியிலே கோப்பிப் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டது. நோயின் காரணமாகக் கோப்பிச் செடிகள் அழிவுற்றதும் தேயிலைச் செய்கை பரந்தளவில் மேற்கொள்ளப்பட்டது. மலைநாட்டின் உயரமான பகுதி களிலே தேயிலைத் தோட்டங்களும் இறப்பர்த் தோட்டங் களும் என்ற வகையாகப் பெருந்தோட்டங்கள் உருவாகி வந்தன. அரசாங்கத்திற்குக் கிடைத்த வருமானத்தின் பெரும் பகுதிப் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை மூலமே கிடைத்தது. இலங்கையில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சி, போக்குவரத்துச் சாதனங்களின் அபிவிருத்தி, தொலைத் தொடர்பு சாதனங் களின் உபயோகம், சுகாதாரச் சேவைகளின் அபிவிருத்தி முதலியனவற்றுக்குப் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை முறை ஏதுவாகவிருந்தது.
பெருந்தோட்டங்கள் விருத்தியுற்றதன் விளைவாகச் சமுதாய மாற்றங்களும் புதிய பல நகரங்களின் எழுச்சியும் ஏற்படலாயின. கண்டி, நுவரெலியா, மாத்தளை, பதுளை, பண்டாரவளை, இரத்தினபுரி போன்றன பல்லின மக் கள் வாழும் பெருநகரங்களாக வளர்ச்சியுற்றன.

Page 8
பெருந்தோட்டங்களின் பிரதான அம்சம் ஐரோப்பியர் முதலாளிகளாகவும் இந்திய வம்சாவழித் தமிழர் தொழி லாளராகவும் அமைந்தமையாகும். பிரித்தானிய காலனித் துவ அரசாங்கம் ஐரோப்பிய முதலாளிகளுக்குப் பெரு மளவிலான நிலங்களைச் சொற்ப விலைக்குக் கொடுத்தும் பிற சலுகைகளை வழங்கியும் ஆதரவளித்து வந்தது. மலைப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கும் பெருந்தோட்டங்களை உருவாக்குவதற்கும் இலங்கையிலே தொழிலாளர் காணப்படாதமையினால் முதலீட்டாளர் அரசாங்கத்தின் ஆதரவுடன் தமிழகத்திலிருந்து பல்லாயிரக் கனக்கான தொழிலாளர்களை வரவழைத்தனர். இவ் வாறாக வரவழைக்கப்பட்ட தொழிலாளர்கள் பாதைகளை அமைப்பதிலும் காடுகளை அழித்து நிலத்தைப் பயன் படுத்துவதிலும் தோட்டங்களிலே உற்பத்திகளை அறு வடை செய்வதிலும் ஈடுபட்டனர். அவர்கள் சொற்பமான வேதனத்தைப் பெற்றதோடு சுகாதார வசதிகளின்றியும் கல்வி வசதியின்றியும் தலைமுறை தலைமுறையாகத் தோட்டங்களிலே அடங்கி வாழ்ந்தனர். அவர்களின் நலன்களைக் கவனிப்பத்ற்கெனத் தொழிற்சங்கங்கள் உரு வாக்கப்பட்டிருந்த போதும் தோட்ட நிர்வாகம் ஆட்சி யாளரின் ஆதரவுடன் அடக்குமுறை மூலம் அவற்றைக் கட்டுப்படுத்தி வந்தது. இத்தகைய சூழ்நிலையிலே தோட்டத் தொழிலாளர் இலங்கையின் மிக ஒடுக்கப்பட்ட சமுதாய மாக வாழ்ந்து வந்தனர்.
பிரித்தானியர் ஆட்சியின் கீழிருந்த தென்னாபிரிக்கா, மொறிசீயஸ், பீஜி, மலாயா, சிங்கப்பூர் முதலிய நாடு களுக்கும் வெவ்வேறு துறைகளிலே வேலை செய்வதற் குத் தென்னிந்தியர் சென்றிருந்தனர். அவை ஒவ்வொன் றிலும் தொழிலாளர் பெற்ற அனுபவங்களும் வாழ்க்கை வசதிகளும் சூழ்நிலைக்கேற்ப வேறுபட்டிருந்தன. ஆயி னும், அவற்றில் வாழும் இந்திய வம்சாவழி தொழி லாளர்கள் இந்நாட்களிலே வறுமையின் பிடியிலிருந்து விடுபட்டுக் குறிப்பிடத்தக்க வாழ்க்கை வசதிகளோடும் வாழுகின்றனர். நிறத்தவர் என்ற காரணத்தினாலே தென்னாபிரிக்காவில் மட்டும் சம உரிமைகளின்றி அவர் கள் வாழ நேர்ந்தது. மேலே குறித்த ஏனைய நாடுகள் சுதந்திரம் பெற்ற பின் அங்குள்ள சுதேசிகளுக்கு வழங்கப்

படும் நலவுரிமைகள் தொழிலாளராகவுள்ள இந்திய வம்சா வழியினருக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. கல்வித் துறையில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக அவர் கள் மத்தியிலே சமுதாய முன்னேற்றம் காணப்படுகிறது. அரசாங்க சேவையிலும் தனியார் துறையிலும் பல் வேறு நிலைகளிலே பதவிகளைப் பெற்று அவர்கள் சேவை புரிகின்றனர்
இந்நூற்றாண்டின் இரண்டாவது காற்பகுதியிலே ஏற்பட்ட அரசியலமைப்பு அபிவிருத்திகளினால் மலை யகத் தமிழர்களுக்கும் சில வாய்ப்புக்கள் கிடைத்தன. அவர்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டதனால் அவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் தொழிற்சங்க வாதிகள் சிலர் சட்டசபையிலும் பின்பு பாராளுமன்றத் திலும் அங்கத்தவராக முடிந்தது. டொனமூர் அரசியற்றிட்ட மும் சோல்பரி அரசியற்றிட்டமும் மலையக மக்களை இலங்கையின் சமுதாயங்களுள் ஒன்றாக ஒப்புக் கொண்ட தோடு அவர்களுக்குக் குடியுரிமை, வாக்குரிமை என்ப வற்றை வழங்கியிருந்தன.
இலங்கை சுதந்திரம் பெற்றபின் பாராளுமன்றமானது மலையக மக்களின் வாக்குரிமை, குடியுரிமை என்பவற்றை ரத்துச் செய்யும் வகையிற் சட்டங்களை இயற்றியது. அவற்றின் விளைவாக மலையக மக்கள் நாடற்றவர் என்ற நிலையினை அடைந்தனர். இம்மக்களின் தொகை 1,200,000 ஆக இருந்த போதிலும் 1952-1977 ஆகிய கால் நூற்றாண்டுக் காலத்திலே ஒரு பிரதிநிதியையேனும் மலையக மக்களாற் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்ய முடியவில்லை.
1964-ஆம் ஆண்டு ஏற்பட்ட சிறிமா-சாஸ்திரி ஒப்பந் தத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக மலையக மக்களிடையே பல மாற்றங்கள் ஏற்படலாயின. ஏறக்குறைய 600,000 மக்கள் இந்தியாவிற்குச் சென்றுள்ளனர். மலையக மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் பிரதான தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 1977 ஆம் ஆண்டி லிருந்து பதவியிலிருந்து வரும் அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களின் மூலமாக நாடற்றவர் பிரச்சினை முடிவுற்றது. இலங்கையிலே தங்கியுள்ள இந்திய வம்சா

Page 9
வழித் தமிழர் அனைவருக்குமே குடியுரிமை வழங்கு வதென்று தீர்மானமாகியுள்ளது.
பிரித்தானியர் காலத்தில் பின்தங்கியுள்ள நிலையி லிருந்த மலையக மக்கள் நாடற்றவர்’ என்ற நிலையினை அடைந்ததும் மிக மோசமான முறையிலே பாதிக்கப் பட்டனர். இப்பொழுது தேசிய வாழ்க்கையிலே பங்கு கொள்ளக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ள போதிலும் மலையக மக்கள் அதனாற் பயன்பெறக்கூடிய நிலையை அடைவதற்கு நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
‘இன்றைய மலையகம்' என்னும் இந்நூலானது மலையக மக்களின் முன்னேற்றத்தைக் கருத்திற் கொண்டு உருவாக்கப் பெற்றதாகும். 23 கட்டுரைகளின் தொகுப் பாயுள்ள இவ்வெளியீடானது மலையகமக்கள் எதிர்நோக் கும் பிரதான பிரச்சினைகள் பற்றியதாகும். ஆங்கில மொழியிலே வெளிவந்த நூல்களிலும் ஆராய்ச்சிக் கட் டுரைகளிலும் அமைந்துள்ள புள்ளிவிபரங்களும் இந் நூலாசிரியர் தாமாகவே மேற்கொண்ட ஆராய்ச்சியின் பயனாக பெற்ற செய்திகளும் இதிலிடம் பெறும் கட்டுரை களுக்கு ஆதாரமாய் அமைந்துள்ளன. மலையகத்தவரான இந்நூலாசிரியர் பல்கலைக்கழகத்திலே நீண்ட காலம் ஆசிரியராகக் கடமைபுரிந்தும் ஆராய்ச்சிகள் செய்தும் பயிற்சி பெற்ற தகைமையுடையவர். தொழிலாளர் நலன் பற்றிய பல சர்வதேச மாநாடுகளிலே பங்குபற்றிய அநு பவங்கொண்டவர். மலையக மக்களின் முன்னேற்றத்திலே கொண்டுள்ள மிகுந்த அக்கறையினாற் காலகாலம் அவர் களின் வாழ்க்கை பற்றி பல கட்டுரைகளைச் செய்தித் தாள்களிலும் பிற சஞ்சிகைகளிலும் வெளியிட்டு வந் துள்ளார். வாழ்க்கைத் தரம், சுகாதார வசதி, வீடு, காணி, கல்வி, தொழில் வாய்ப்பு என்பன குறித்து மலையக மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளும் எதிர் காலத்திலே மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக் கைகளைப் பற்றியும் புள்ளி விபரங்களோடு ஆசிரியர் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளரின் வாழ்க்கைப் பிரச்சினை பற்றிய இதுபோன்று விரிவான விபரங்கள்

அடங்கிய நூலெதுவும் இதுவரை வெளிவரவில்லை. மலையகத் தமிழரின் முன்னேற்றத்தில் ஈடுபாடு கொண் டவர்களும் அவர்கள் சார்பிலே கொள்கை வகுப்பவர் களும் கட்டாயமாகப் படிக்க வேண்டிய நூல் இதுவாகும். இந்நூலானது எல்லோரும் இலகுவிலே படித்துப் புரிந்து கொள்ளத் தக்க வகையில் எழுதப்பட்டள்ளமையும் குறிப் பிடத்தக்கதாகும்.
பேராசிரியர் பத்மநாதன் வரலாற்றுத் துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம்
18.12.1992.

Page 10

முனனுரை
பிரித்தானியர் இலங்கைக்கு வந்த காலப் பகுதி யோடு இங்கு அறிமுகம் செய்யப்பட்ட பெருந்தோட்ட வரலாற்றுடன் இணைந்ததாக மலையகத் தமிழ் மக்களின் வரலாறும் காணப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டு வரை பாட்டாளி மக்களாக இன்னலுற்றுச் சமூக பொருளாதார வளர்ச்சி நிலைமைகளிற் பின் தங்கியவர்களாக காணப் பட்ட மலையகத் தமிழர்களுடைய நிலை சுதந்திரத்தின் பின்னர் குடியுரிமை நிராகரிக்கப்பட்டமையினால் மேலும் மோசமாக்கப்பட்டது. இலங்கையில் இவ்வாறு துன்புற்ற இம்மக்களில் பெரும்பான்மையினர் இன்றும் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பின்தங்கியவர் களாகவே காணப்படுகின்றனர். இத்தகைய பின்தங்கிய நிலைமைகளின் உண்மைத் தாற்பரியங்களை அரசாங்க மும், மக்களும், அறிஞர்களும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். பாதிப்புக்குள்ளானவர்கள் தமது நிலை யினை நன்கு உணரும் போதுதான் அவர்களிடையே விழிப்புணர்வும், அதனால் அந்நிலையிலிருந்து விடுபடும் உணர்வும் ஏற்பட முடியும். அரசாங்கத்தினர் இப்பிரச் சினைகளை நன்கு விளங்கிக் கொண்டால் மட்டுமே அதற்கான தீர்வுகளை வழங்குவது பற்றிச் சிந்திக்கத் தலைப்படுவார்கள். ஏனையோர் இவற்றைப் பற்றி நன்கு விளங்கிக் கொள்வதன் மூலமே பாதிக்கப்பட்டவர்களுக்கு சார்பான பொதுசன அபிப்பிராயம் உருவாக முடியும்.
இத்தகைய சிந்தனைகளுடன் காலத்திற்குக் காலம் பலர் தமது எண்ணங்களுக்கு உயிர் கொடுக்கின்றனர். அத்தகைய பணிகளின் தேவைகள் குறிப்பாக மலையகத் தமிழ்ச் சமுதாயத்தினைப் பொறுத்து அகிலத்தளவில் தேவைப்படுமானால் அதில் ஒரு அணுவளவினதான பணியினையாவது என்னால் ஆற்ற முடியும் என்ற எண் னத்தில் தோன்றியவை இக்கட்டுரைகள்.
இக்கட்டுரைத் தொகுப்பு கடந்த சில வருடங்களாக பத்திரிகைகள், சஞ்சிகைகள், என்பனவற்றில் பிரசுரிக்கப் பட்டவற்றையும், வானொலி, தொலைக்காட்சி என்பன வற்றிற்கு நான் அளித்த பேட்டிகளையும் கொண்டுள்ளது. இவை ஆழமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் அல்ல. அதற்

Page 11
காக மேலெழுந்த வாரியாக எழுதப்பட்ட கட்டுரைகள் எனக் கூறி விடவும் முடியாது. இக்கட்டுரைகள் மலை யகத் தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார, வரலாற்றுப் பின்னணி பற்றிய அடிப்படை நிலைமை களை உயர்நிலைப் பாடசாலை . மாணவர்களும், பல்கலைக் கழக மாணவர்களும் பிற வாசகர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட கட்டுரை களாகும்.
இக்கட்டுரைகள் ஒவ்வொன்றும் தனிப்பட்ட கட்டுரை களாகவே கருதப்பட வேண்டும். அவ்வாறான முறை யிலேயே எழுதப்பட்டதனால் ஒரு கட்டுரையில் கூறப் பட்ட விஷயமானது இன்னுமோர் கட்டுரையிலும் கூறப் படும் ஒரு குறைபாட்டினை, இக்கட்டுரைகள் நூல்வடிவம் பெறுவதனால் வாசகர்களினால் அவதானிக்கக் கூடிய வாய்ப்புண்டு. எனவே இக்கட்டுரைகள் எழுதிய நோக்கத் தின் அடிப்படையில் அவற்றை விளங்கிக் கொள்ள வேண்டும் என வாசகர்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இக்கட்டுரைத் தொகுப்பு இருபத்து மூன்று ஆக்கங் களைக் கொண்டுள்ளது. இவற்றுப் பெரும்பாலானவை வீரகேசரியில் ஏற்கனவே வெளிவந்தவை. இக்கட்டுரை கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதனாலும், இவை எழுதப்பட்ட கால நிலைமைகளைப் பின்வரும் காலங் களில் மலையக மக்களின் வரலாறுபற்றி அறிய விரும்பு வோருக்காக அவற்றை ஆவணப்படுத்தும் நோக்கத்துட னும் இக்கட்டுரைகளுக்கு நூல் வடிவம் கொடுக்கத் தீர் மானித்தேன். இத்தகைய தீர்மானத்தினை நான் எடுக்கக் காரணமாயிருந்தவர்கள் என் சக பல்கலைக்கழக பேராசிரியர் களும் விரிவுரையாளர்களுமாவர். அவர்களுடைய ஆக்கப் பூர்வமான தூண்டுதலுக்கு என்றும் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன்.
இந்நூலினை அச்சேற்க முழுப்பொறுப்பினையும் ஏற்றுக் கொண்ட தொண்டமான் அறக்கட்டளை நிறுவனத்திற்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். இந்நூலுக்கு முன்னுரை வழங்கி யும் ஆலோசனைகள் பல கூறியும் வழிகாட்டிய என்

மதிப்புக்குரிய ஆசிரியர் பேராசிரியர் பத்மநாதனுக்கு எனது நன்றிகள் உரித்தாகும்.
இந்நூலை சிறப்பாக அச்சடித்து கொடுத்த பி.ஆர். லித்தோகிராபர்ஸ் நிறுவனத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
மா.செ. மூக்கையா
புவியியல் பகுதி, பேராதனைப் பல்கலைக் கழகம், பேராதனை, இலங்கை.

Page 12

l.
2.
3.
10. 11.
12.
13.
l4. 15. 16. 17. 18. 19. 20.
21.
22.
உள்ளடக்கம்
இலக்கம் Lhéhub
இலங்கையில் மலையகத் தமிழ் மக்களின் குடிவரையியற் பண்புகள் மலையகத் தமிழ் மக்களின் சமூக பொருளாதார நிலை 25 நூற்றாண்டுகள் கடந்தும் மாற்றம் காணாத
லயன்" முறை 55 பெருந்தோட்டத் தொழிலாளர்களும் குடும்பக் கட்டுப்பாடும் 61 நாமும் நமது கலாச்சார வளர்ச்சியும் 69 மலையகத் தமிழ் மக்களும் - குடியுரிமையும் 77 வாக்காளராகப் பதிந்து கொள்வதிற் போதிய கவனம் செலுத்த வேண்டும் 85 மலையகத் தமிழ் மக்களுக்குச் சர்வசன வாக்குரிமை - உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் 9. தோட்டத் தொழிலாளர்களின் சுபீட்சமும் உயர் கல்வியும் 99 மலையக இளைஞர்களும் எதிர்காலமும் 107 அபிவிருத்திச் செய்முறையில் மலையக இளைஞர்களின் பங்கு 115 வளர்முக நாடுகளின் அபிவிருத்தியும் கல்வி வளர்ச்சியும் 12 மலையகக் கல்விப் பிரச்சனைகள் 1 131 மலையகக் கல்விப் பிரச்சனைகள் II 1.37 மலையகக் கல்விப் பிரச்சனைகள் II 141 மலையகம் - இன்றும் நாளையும் 145 நிலச்சீர்திருத்தமும் தேயிலைத் தொழிலும் 157 இலங்கையிலே தேயிலைத் தொழிலின் போக்கு 165 பெருந்தோட்டங்கள் தனியார் மயமாக்கம் 175 இலங்கையின் பெருந்தோட்டங்களைத் தனியார் மயப்படுத்தலும் தொழிலாளர் நலன்களும் 185 மலையகத் தமிழர்களும் நிலப் பங்கீடும் 193 இரசாயனப் பயன்பாடும் - தொழிற்தளப் பாதுகாப்பும் 199
23.
இன்றைய மலையகம் 209

Page 13

அட்டவணைகள்
இலக்கம்
1.1 இலங்கை - இலங்கைத் தமிழர்கள்
1.2
1.3
1.4
I.5
1.6
1.7
1.8
1.9
1.10
2.1
2.2
2.3
2.4
2.5 2.6
2.7
2.8
II. 1
இலங்கை - மலையகத் தமிழ் மக்கள் தொகை ( 1911 - 1981) இலங்கை - மலையகத் தமிழ் மக்களின் பெருக்கம் (1911 - 1981) இலங்கை - மாகாண ரீதியாக மலையகத் தமிழ் மக்களின் பெருக்கம் (1971 - 1981)
இலங்கை - தாயகம் திரும்பியோர் (1971 - 1984)
இலங்கை - பாலமைப்பு இலங்கை - மலையகத் தமிழ் மக்களின் (ம.த.ம.) பரம்பல் - (1971 - 1981) மாவட்ட ரீதியாக (வீதத்தில்) இலங்கை - வயதமைப்பு - 1981/82 இலங்கை - எழுத்தறிவு - 1981 இலங்கை - மலையகத் தமிழ் மக்களின் நகர - கிராமிய பரம்பல் - 1981 இலங்கை - பெருந்தோட்டங்களின் இனப்பரம்பல் - 1981 இலங்கை - தேயிலைத் தோட்டங்களில் வேலை நாட்கள் (1964 - 85) (தொழிலாளர் ஒருவருக்கு மாதம் ஒன்றிற்கு வழங்கப்பட்டிருந்த வேலை நாட்கள்) , இலங்கை - பெருந்தோட்ட நாளாந்த வேதனங்கள் (ரூபாவில்) (1947 - 89) இலங்கை - தேயிலைத் தொழிலாளர்களின் வருமானம் (1971-85) இலங்கை - பெருந்தோட்ட வீடுகளின் அளவு இலங்கை - வீட்டு வசதியும் மாற்றங்களும் (1971 - 1981) இடைத்தர முதலீட்டு திட்டம் (தொழிலாளர் வீட்டுவசதி 1985 - 1989) இலங்கை - பெருந்தோட்டங்களில் சிசுக்கள், தாய்மார் இறப்பு வீதம் (1972 - 74) இலங்கை - தோட்டப் பகுதிகளில் கல்வி வளர்ச்சி (1953 - 1988) (வீதத்தில்)
Luišsih
10
12
13 13
15 16 18
22
28
33
34
35
42
44
45
49
19

Page 14
17.1 இலங்கை - தேயிலை உற்பத்தி (மில்லியன்
கிலோவில்) 18.1 இலங்கை - அந்நிய செலாவணி உழைப்பில்
தேயிலையின் பங்கு (வீதத்தில்) 18.2 இலங்கை - தேயிலை உற்பத்தி - 1945 - 1990
(மில்லியன் கிலோவில்) 18.3 இலங்கை - தேயிலை உற்பத்தி நிறுவனங்கள் - 1985 - 1990 (மில்லியன் கிலோவில்) 18.4 இலங்கை பொதுத்துறைத் தேயிலை உற்பத்தியும்
விற்பனையும் - (1985 - 1987) 18.5 தேயிலை - விளைச்சல் (தெரிவு செய்யப்பட்ட
நாடுகளில்) 18.6 இலங்கை - ஒரு ஹெக்டயர் தேயிலை நிலத்தின்
விளைச்சலுக்குச் சமமான ஏனைய உற்பத்திகள்.
வரைபடங்கள்
Lu Llib
i. இலங்கை - பெருந்தோட்ட மக்கள் தொகையின்
இனரீதியான பரம்பல் - 1981 (மாவட்ட ரீதியாக)
2. இலங்கை - பெருந்தோட்ட வீடுகளின் அளவு
மாற்றம் - 1971 - 1981 * ぐ 3. இலங்கை - வீட்டுவசதியும் மாற்றங்களும்
(1971 - 1981) 4. இலங்கை - மொத்த ஏற்றுமதியில் தேயிலையின்
பங்கு (1959 - 1990) 5. இலங்கை - தேயிலை உற்பத்தி 6. இலங்கை - தேயிலை உற்பத்தித் துறைகள்.
6.
165
168
70
171
171
17.3
பக்கம்
29
43
43
166
169
169

இலங்கையில் மலையகத்.
1. இலங்கையில் மலையகத் தமிழ் மக்களின் குடிவரையியற் பண்புகள்
ஆங்கிலேயர் இலங்கையின் ஆட்சியினை 1815-ஆம் ஆண்டு முழுமையாகக் கைப்பற்றினர். அதன் பின்னர் பல அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்கள் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டன. பொருளாதார நடவடிக்கைகளிற் கோப்பிச் செய்கையும், பின்னர் ஏற்பட்ட தேயிலைச் செய்கை யும் இலங்கையின் பொருளாதாரத்தில் மாத்திரமின்றி அதன் அரசியல் சமூகத் துறைகளிலும் பல புதிய விளைவுகளை உருவாக்கின. அவற்றில் இந்தியாவிலிருந்து குறிப்பாகத் தென் னிந்திய மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தொழிலா ளர்கள் இலங்கையின் அரசியல், சமூகத் துறைகளில் பல பாதிப் புக்களை ஏற்படுத்தியுள்ளமை முக்கியமானதாகும். இத்தகைய தொழிலாளர்களின் குடிபெயர்வு இலங்கையிற் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே ஆரம்பித்த போதிலும் பதினெட்டாம் நூற் றாண்டளவிலேயே இந்தியாவிலிருந்து உலகின் ஏனைய நாடு களுக்குத் தொழிலாளர்கள் குடிபெயர்ந்துள்ளார்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன (ரொபட்ஸ் 1966).
பிரித்தானியாவுக்குக் கோப்பி ஏற்றுமதி செய்த மேற்கிந் திய குடியேற்றங்களில் அடிமை வியாபாரம் தடைசெய்யப்பட் டதால் அங்கே மலிவான தொழிலாளர்களுக்கான வாய்ப்புகள்
1.

Page 15
இன்றைய மலையகம்
குறைந்தன. பிரித்தானியாவுக்கு இறக்குமதியாகிய மேற்கிந்திய உற்பத்திகளுக்கு இருந்து வந்த வரிச்சலுகைகள் இரத்துச் செய்யப் பட்டன. அதே நேரத்தில் பிரித்தானியாவிற் கோப்பியின் உபயோகம் அதிகரித்தபோது, மேற்கிந்திய தீவுகளிற் கோப்பி உற்பத்தி வீழ்ச்சியுற்றிருந்தது. (ஐ.எய்ச், வெண்டன் ரீசன் 1953) இந்நிலையில் பிரித்தானிய முதலீட்டாளர்களுக்குத் தமது தொழிலை வளர்ப்பதற்கான மாற்று நிலங்கள் தேவைப்பட்டன. எனவே அரசியல் உறுதிப்பாடும், நிருவாக ரீதியாக ஐக்கியப் படுத்தப்பட்டதும், சுவாத்திய ரீதியாகப் பொருத்தமானதும், இராசகாரிய முறையின் கீழ் இலவச உழைப்பினை அளித் தவர்கள் விடுதலை பெற்றதால் அவர்களின் ஊழியத்தைப் பெற வாய்ப்புகளைக் கொண்டதுமான இலங்கை அவர்களின் முதலீட்டிற்கு வாய்ப்பான இடமாகத் தோன்றியதில் வியப்பில்லை. எனவே 1835-ஆம் ஆண்டு முதல் 1880-ஆம் ஆண்டு வரை இலங்கை கோப்பித் தொழிலிற் சிறப்புற்று விளங்க முடிந்தது. இதற்குத் தேவையான முதலீடு பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முதலில் பிரித்தானிய நிர்வாகிகள் அலுவலர்கள் மூலமாகவும் பின்னர் பிரித்தானிய முயற்சியாளர்கள் மூலமாகவும் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டது (கே.எம்.டி. சில்வா 1964). ஆரம்பகாலப் பெருந்தோட்டங்கள் கண்டிப் பகுதிகளிற் குடியானவர்களின் கிராமங்களுக்கு அண்மையிலுள்ள பகுதி களில் அவர்களின் சேனை நிலங்களிலும் ஒதுக்கு நிலங்களிலும் ஆரம்பிக்கப்பட்டது. கடல் மட்டத்திற்கு 1700 அடிக்கு மேற்பட்ட காடழிக்கப்பட்ட நிலங்களிலே கோப்பி சிறப்பாக வளரும் ள்ன்பது உணரப்பட்டதால் பின்வந்த காலங்களில் அத்தகைய நிலங்களிலேயே கோப்பித் தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. 1840-ஆம் ஆண்டின் பன்னிரண்டாம் இலக்க நிலச் சட்டத் தினாலும், 1841-ஆம் ஆண்டின் ஒன்பதாம் இலக்க நிலச்சட்டத் தின் மூலமும் பிரித்தானியர்கள் நிலங்களை சிரமமின்றி விலைக்கு வாங்க் முடிந்தது. அவர்கள்"ஏக்கர் ஒன்றுக்கு அரசிடம் ஐந்து சிலிங் விலை கொடுத்து வாங்கினர் (கே.எம்.டி. சில்வா 1964)
பெருமளவு கோப்பித் தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட போது தொழிலாளர்கள் பெருமளவிலே தேவைப்பட்டனர். இதனைப் பூர்த்தி செய்வதற்காகவே கண்டிப் பகுதிக் குடியான வர்களை இராசகாரிய சேவையிலிருந்தும் கோல்புறுாக் ஆணைக் ழு விடுவித்ததாகவும் கூறப்படுகிறது. (ஜி.சி. மெண்டிஸ் 1956). ஆரம்ப காலங்களிற் பெருந் தோட்டங்கள் சிறியளவிலேயே காண்ப்பட்டதால் ஓரளவு சிங்களக் குடியானவர்கள் அவற்றிலே
2

இலங்கையில் மலையகத்.
தொழில்புரிந்தனர். ஆனால் பெருந்தோட்டங்கள் அதிகரிக்கவே அவற்றுக்குத் தேவையான தொழிலாளர்களைப் பெற்றுக்கொள்ள முடியாதிருந்தது. தோட்டங்களிலே தங்கி முழு நேரத் தொழில் புரிபவர்களாகவும், நிருவாகத்திற்குக் கட்டுப்பட்டு நிரந் தரமாகத் தொழில் புரிபவராகவும் இல்லாததுடன் தமது கிராமங்களில் வாழ்வதனையே விரும்பியதாலும் சிங்களத் தொழிலாளர்கள் பொருத்தமாக அமையாததால் பிரித்தானியர் இந்தியாவிலிருந்து தொழிலாளர்களைக் கொண்டுவர நேர்ந்தது. இதற்கு வாய்ப்பாகத் தென்னிந்திய மாநிலங்களிற் காணப்பட்ட பயிர்ச் செய்கைக்கு காலநிலை சார்பற்ற மாவட்டங்களில் இருந் தும், பஞ்சம் காரணமாக மக்கள் துன்புற்ற மாவட்டங்களில் இருந்தும் தொழிலாளர்கள் கொண்டு வரப்பட்டார்கள் (எம்.டபிள்யூ. ரொபட்ஸ் 1966).
கிராமங்களுக்கு அண்டைய நிலங்கள் பிரித்தானியராற் சுவீகரிக்கப்பட்டு, நில உரிமையினை ஒப்பனைகள் மூலமாகப் பெற்றுக்கொண்டதாலும், நாட்டின் ஆட்சி பிரித்தானியர் வசம் இருந்ததாலும், சிங்களிக் குடியானவர்களுக்குப் பிரித்தானியர் மேல் அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எதிர்ப்பு நடவடிக் கைகளை வெளிப்படுத்தியதன் காரணமாகத் தோட்டங்களில் வேலை செய்த சிங்கள மக்களைப் பிரித்தானிய அதிகாரிகள் கடுமையாக நடத்தினர் என அறிய முடிகிறது. இதனால் இருசாராரிடையேயும் ஒருவர் மீது மற்றொருவர் வெறுப்பும் சந் தேகமும் கொள்ள நேர்ந்தது. எனவே பிரித்தானியர்களுக்குச் சொந்தமான தோட்டங்களிலே தொழில்புரிய அவர்கள் வெளிப் பகுதிகளில் இருந்து தொழிலாளரைக் கொண்டு வந்ததில் வியப்பில்லை (இ.எம்.சி. லுடோவிக் 1966).
இவற்றைவிட கண்டிய மக்கள் பெருந்தோட்டங்களில் வேலைக்குச் சென்றிருந்தாலும் கூட, அப்போது கண்டிப் பகுதிகளிற் காணப்பட்ட சிங்கள மக்களின் தொகை அதற்குப் போதுமானதாக இருந்திருக்காது. (டி. வெசும்பெரும் 1986 ப. 3) எனவே இத்தகைய வேறுப்பட்ட பல காரணங்களின் நிமித்தம் தென்னிந்திய மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் இங்கு கொண்டுவரப்பட்டுக் குடியமர்த்தப்பட்டனர். ஆரம்பத்தில் கோப்பித் தோட்டங்களிற் பருவகாலத் தொழில்களே முக் கியமாக இருந்ததாகவும், தேயிலைத் தொழில் போன்று வருடம் முழுதும் அனைத்துத் தொழிலாளருக்கும் வேலை இல்லாத
3

Page 16
இன்றைய மலையகம்
தாலும், காலத்திற்குக் காலம் அவர்கள் இந்தியாவிலுள்ள தமது கிராமங்களுக்குச் சென்று வந்தனர்.
இந்தியாவிலிருந்து 1830-ஆம் ஆண்டிலிருந்து 1923-ஆம் ஆண்டுவரை எந்தவித அரசு கட்டுப்பாடுகளும் இல்லாது சுதந் திரமாகத் தொழிலாளர் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டார்கள். இலங்கையைப் பொறுத்தமட்டில் 1923-ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் இயற்றிய 1922-ஆம் ஆண்டின் நான்காம் இலக்க குடியகல்வுச் சட்டம் குறிப்பிடத்தக்கதாகும். இதனைத் தொடர்ந்து இலங்கையில் 1923-ஆம் ஆண்டின் முதலாம் இலக்கத் தொழிலாளர் சட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி இலங்கை யில் ஒரு இந்திய ஏஜெண்ட் நியமிக்கப்படுவார். அவர் குடிபெயரும் இந்திய தொழிலாளர் நலனை மேற்பார்வை யிடுவதுடன் ஒரு நிதியத்தினையும் ஆரம்பித்து அதன் மூலம் தொழிலாளர்களை இலவசமாகக் கொண்டு வரவும் திருப்பி யனுப்பவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இலங்கையின் பெருந்தோட்டங்களுக்கு இந்தியாவிலிருந்து தொழிலாளர்களைத் திரட்டுவதற்கும், பின்னர் பெருந்தோட்டங் களுக்கு அவர்களைக் கூட்டிவருதல், மற்றும் தொழிலாளர் உறவு தொடர்பான விடயங்கள் அனைத்திற்கும் கங்காணி" என்பவரே கோப்பிக் காலம் முதல் முக்கியம் வகித்து வந்தார். தோட்ட நிருவாகிகள் இப்பொறுப்பை கங்காணிகளிடம் அளித்தனர். கங் காணிகள் மீதான நம்பிக்கைத் தகுதி, தொழிலாளர்களைத் திரட்டல் முதலியவற்றைப் பொறுத்து அவர்களது திறமை என்பன வற்றின் அடிப்படையிலேயே அவர்கள் நிருவாகத்தினராலே தேர்ந்தெடுக்கப்பட்டனர். கங்காணிகள் தோட்ட நிருவாகத் திடம் தொழிலாளரது போக்குவரத்து மற்றும் அவர்களைத் திரட்டுவதற்கான ஆரம்ப செலவினங்களுக்குப் போதிய முற் பணத்தினைப் பெற்றுக் கொள்வார்கள். இது தோட்டத்தில் உள்ள கடன் புத்தகத்திற் கங்காணி, தொழிலாளர்கள் கணக்கில் பற்றாக எழுதப்படும்.
தோட்டங்களில் உள்ள தொழில் நிலைமைகள் பற்றிய விபரங்களைக் கங்காணிகளே தொழிலாளர் மத்தியில் எடுத்துக் கூறி அவர்களைத் திரட்டி வந்தார்கள். இவ்வாறு தொழிலாளர் களைத் திரட்டிக் கூட்டி வந்ததுடன் கங்காணிகளது பொறுப்பு கள் முடித்துவிடவில்லை. தொழிலாளர்கள் தோட்டத்திலும் அவருக்கு கீழேயே ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தனர்.
4

இலங்கையில் மலையகத்.
தோட்ட வேலைகளையும், சமயங்களில் அவர் மேற் பார்வை செய்ததுடன் நிருவாகம் தொழிலாளர்களுக்கிடையே யான உறவுகளையும் அவரே மேற்பார்வை செய்து வந்தார். இதனாலே தோட்ட நிருவாகம் முற்றாகக் கங்காணி மீதே தங்கி யிருந்த நிலை காணப்பட்டது. இதன்ால் அவர்கள் தோட்டத் திற்கு வேண்டிய தொழிலாளர்களை வழங்கும் ஒரு ஒப்பந்தக் காரராகவும் விளங்கினார். அத்துடன் தொழிலாளரைப் பொறுத்து கங்காணிகளே உடனடி எஜமானராகவும் விளங்கினார்கள்.
கங்காணிகளின் இத்தகைய சேவைகளுக்காக முதலில் அவர்கள் திரட்டி வரும் தொழிலாளர் எண்ணிக்கைக்கு ஏற்ப்க் கட்டணம் ஒன்றினை பெற்றுக் கொண்டதுடன், ஒவ்வொரு நாளும் வேலைக்குச் சென்று வரும் தொழிலாளர்களது எண்ணிக் கைக்கு ஏற்ப "பென்சும்” மாதச் சம்பளமும் பெற்றனர். தொழிலாளர் ஒருவர் தோட்டத்தில் தொழில் புரியும் ஒவ்வொரு நாள் வேலைக்கும் தோட்ட நிருவாகம் கங்காணிக்கு இரண்டு சதம் கமிஷனை வழங்கும். அக்கமிஷன் 'பென்ஸ்' எனப்பட்டது.
நிருவாகத்தைப் பொறுத்தமட்டில் தொழிலாளருடன் நேரடித் தொடர்பு கொள்ளுதல், கடன்களை வசூலித்தல் போன்ற பொறுப்புக்களை கங்காணிகளிடமே ஒப்படைத்தல் வசதியா யிருந்தது. ஏனெனில் அதற்குத் தேவையான மொழி, அறிவு, சமூக பழக்கவழக்கங்கள் பற்றிய அறிவு ஆங்கில நிருவாகத்திடம் போதிய அளவு இருக்கவில்லை. அதனால் மறுபுறத்தில் கங்காணியே தொழிலாளர்களைப் பொறுத்துப் பலவகையிலும் அதிகாரமிக்க உடனடி எசமானராயிருந்தார். தொழிலாளர்கள் கங்காணியிடமே கடன்பட்டதாக கருதப்பட்டனர். இதனால் அவர்கள் கங்காணியிடம் கூடிய விசுவாசத்துடனும், பொறுப் புடனும் நடந்துகொள்ள வேண்டியவராயினர். கிராமத்தில் இவர்களுடைய சமூக, குடும்ப பின்னணிகளையும், அத்துடன் பெரும்பாலும் தனிப்பட்ட வகையில் ஒவ்வொருவரைப் பற்றி யும் நன்றாக அறிந்தவராகவும் இருந்ததால், கங்காணியுடன் இவர்கள் பல்வேறு பரிமாணங்களிலும் தொடர்புற்றவராயிருந்தனர்.
ஏனைய குடியேற்ற நாடுகளுக்கு - குறிப்பாக மேற்கிந் தியத் தீவுகள், பிஜி போன்ற நாடுகளுக்குத் தொழிலாளரைத் திரட்டியவர்கள் பல்வேறு உண்மையில்லாத ஏமாற்றுக் காரியங் களைச் செய்த போதிலும் இலங்கைக்குத் தொழிலாளர்களைத் திரட்டியவர்கள் அவ்விதமாகச் செயல்படுவதற்கான சாத்தியங் கள் குறைவாகவே இருந்துள்ளதாக அறிய முடிகிறது. இதற்குக்
5

Page 17
இன்றைய மலையகம்
காரணம் கங்காணிகள் தொழிலாளரைப் பெரிதும் உறவினர்கள், நண்பர்கள் போன்ற அறிமுகமான வட்டங்களிலிருந்தே திரட்டினர். இதனால் அளவுக்கு மீறிய ஏமாற்றுக் காரியங்கள் தவிர்க்கப் பட வேண்டியதாயிற்று. தவிரவும் அடிக்கடி தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் தமது கிராமங்களுக்குச் சென்று வந்ததால் கங் காணிகள் ஒரு சிறிய அளவுக்கு மேல் தொழிலாளர்களிடம் உண் மைக்குப் புறம்பான ஆசை வார்த்தைகளைக் கூற முடியாதிருந்தது. இருந்த போதிலும் தோட்ட நிருவாகம் வழங்கிய முற்பணத்திற் பெரும்பங்கினைக் கங்காணிகள் தாமே வைத்துக் கொண்ட துடன், தொழிலாளர்களின் பயணத்தின் போதான வசதிகளை ஒழுங்காகக் கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் இருந்து வந்தன.
கங்காணிகளிலே தலைமைக் கங்காணியை விட உபகங் காணிகளும் இருந்தனர். இவர்களுட் பலர் ஒவ்வொரு தோட்டத் திலும் தலைமைக் கங்காணியின் கீழ்க் கட்டுப்பாட்டுடன் செயற் பட்டனர். உபகங்காணிகளின் கீழ் 4-15 பேர் வரையினாலான தொழிலாளர்கள், அநேகமாக அவர்களது குடும்ப அங்கத் தினர்களும் உறவினர்களும் தொழில் புரிந்தனர். இத்தகைய உபகங்காணிகளின் எண்ணிக்கை தோட்டத்தின் தொழிலாளர் தேவைக்கு ஏற்ற அளவிலேயே காணப்பட்டது. தலைமைக் கங்காணியின் நேரடிப் பார்வையிலும் தொழிலாளர்கள் இருந் தனர். அது 25-60 பேர் வரையும் காணப்பட்டது. (இலங்கைத் தொழிலாளர் ஆணைக்குழு அறிக்கை 1908). இவ்வெண்ணிக்கை யின் அளவு கங்காணியின் தொழில்திறன், அவர் தொழிலா ளர்கள் மத்தியிற் கொண்டிருந்த செல்வாக்கு, அவரது நிதிவளம், அவர் நிருவாகத்திடம் கொண்டிருந்த தொடர்புகள் என்பனவற்றால் நிர்ணயிக்கப்படுவதாக இருந்தது.
உபகங்காணிகள் தொழிலாளர்கள் போலவே தோட்டத்தில் தொழில் புரிந்ததுடன் அவர்கள் பெற்ற வேதனங்களையே பெற்றார்கள். தொழிலுக்குச் சென்ற ஒவ்வொரு நாளுக்கும் 4 சதத்தினைப் பென்சாகவும் பெற்றார்கள். ஆனால் கங்காணி தொழிலாளரை மேற்பார்வை செய்தல், ஒழுங்குபடுத்துதல் போன்ற கடமைகளைப் புரிந்து மாதச் சம்பளமும் தொழிலாளர்கள் வேலை செய்யும் ஒவ்வொரு நாள் வேலைக்கும் 2 சதம் பென் லினையும் பெற்றார். ஆயினும் கங்காணியும், உபகங்காணியும் இந்தியாவில் தொழிலாளரைத் திரட்டும்போது நிருவாகம் கொடுத்த முற்பணத்திற் கட்டிய பங்கினைத் தாமே பெற்றுக் கொண்டனர் என்பதும் உண்மையாகும்.
6

இலங்கையில் மலையகத்.
பின்வந்த காலங்களில் இலங்கை, இந்திய அரசாங்கங் க்ளும், தோட்ட நிருவாகங்களும் தொழிலாளர்களைத் திரட்டு வதில் நிறுவன ரீதியாகச் சில தலையீட்டு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் இந்நூற்றாண்டின் நடுப்பகுதி வரை கங்காணிகளின் செல்வாக்குத் தவிர்க்க முடியாத வகையில் இருந்தே வந்துள்ளளது.
1830-ஆம் ஆண்டுகளில் தொழிலாளர்கள் இலங்கைக்கு வர ஆரம்பித்தபோது பாம்பன்-மன்னார் படகுச் சேவை மூலமே வந்து சென்றார்கள். வழகிழக்குப் பருவக் காற்றுக் காலங் களில் பேசாலையிலும், தென்மேற்குக் காற்றுக் காலங்களில் வங்காலையிலும் வந்திறங்கினர். மன்னாரில் இருந்து மாத்தளைக்கு 150 மைல்கள் நடக்க வேண்டியிருந்தது. 1880-ஆம் ஆண்டள விலேயே மாத்தளை வரை புகையிரத சேவை அமைக்கப் பட்டிருந்தது. பணமுள்ளவர்கள் புகையிரத மூலமும், இல் லாதவர்கள் நடந்தும் தோட்டங்களைச் சென்றடைந்தனர்.
இதனை விடத் தென்னிந்தியாவில் தூத்துக்குடியிலிருந்து கொழும்புக்கும் நீராவிப் படகுச் சேவையும் இருந்தது. இச்சேவை வாரத்திற்கு ஒரு முறையே நடைபெற்றது. பாம்பன்மன்னார் பயணத்திற்கு கட்டணம் இருபத்தைந்து சதம். ஆனால் தூத்துக்குடி கொழும்பு பயணத்திற்கு கட்டணம் மூன்று ரூபாவாக இருந்தது. கொழும்பிலிருந்து பெருந்தோட்ட மாவட்டங்களுக்குச் செல்பவர்களுக்கு புகையிரத சேவை இருந்தது.
பாம்பன்-மன்னார் பாதை பல குறைபாடுகளைக் கொண் டிருந்தது. தொழிலாளர்கள் தமது கிராமங்களிலிருந்து பாம்பன் வரையிலும், மன்னாரிலிருந்து மாத்தளை வரையிலும், கால் நடையாகவே தூரத்தைக் கடக்க வேண்டியிருந்தது. இதனால் பல நாட்கள் பயணம் செய்ய (7 முதல் 9 நாட்கள்.) வேண்டி யிருந்தது. ஆனால் தூத்துக்குடி-கொழும்பு புகையிரதங்களினாலே தொடுக்கப்பட்டிருந்ததனால் இந்திய கிராமங்களிலிருந்து புறப்பட்ட 3 நாட்களில் இலங்கையின் பெருந்தோட்டங்களை தொழிலாளர்கள் அடையக் கூடியதாயிருந்தது. வடபாதை வழியாக வந்தவர்கள் நீண்டதூர நடை காரணமாகப் பல இன்னல் களுக்கு ஆளாகினர். வழியிற் காலரா, சின்னம்மை போன்ற வற்றால் நோயுற்றதுடன் அவர்களிற் சிலர் வழியிலேயே இறந்து விட்டனர். (எஸ்.ஏ. மீகம் 1968 ப.18). மன்னார்ப் பகுதிகளில் காலராவினால் மாத்திரம் 1892, 1893, 1895 ஆகிய ஆண்டுகளில் முறையே 133, 139, 199 தொழிலாளர்கள் இறந்ததாக
7

Page 18
இன்றைய மலையகம்
அறிகிறோம். (வெசும் பெரும் - 1986 ப.49). 1913-ஆம் ஆண்டில் மன்னார்-வவுனியா புகையிரப் பாதை அமைக்கப்பட்ட பின் இத்தகைய அசம்பாவிதங்கள் குறைந்தன.
மலையகத் தமிழ் மக்கள் தொகை:
19-ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த இந்திய வம்சாவளியினரை மலையகத் தமிழ் மக்கள் என குறிப்பிடுதல் இன்று மரபாகி விட்டது இவர்களில் பெரும்பான்மையினர் பெருந் தோட்டத் தொழில் வாய்ப்புகளுக்காகவே வந்தனர். புகையிரத வீதிகள், துறைமுகம் போன்றவற்றிலே தொழில் புரியவும், வர்த்த கர்களாகவும், ஆசிரியர்களாகவும் மற்றும் ஏனைய தொழில் களுக்காகவும் வந்தவர்களும் பலர். பல இன்னல்களுக்கிடையே யும் இலங்கைக்கு இந்தியத் தொழிலாளர்கள் 1948-ஆம் ஆண்டு வரை வந்து சென்றனர். 1946ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணிப்பீட்டின் போது 780,600 இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கையில் இருந்துள்ளனர். இத்தொகை இலங்கையில் அவ் வருடத்தில் வாழ்ந்த மொத்த மக்கள் தொகையில் 11.7 வீதமாகும். இது 1953-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணிப்பீட் டில் 974,100 பேராகவும் அது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 12 வீதமாகவும் காணப்பட்டது.
இலங்கையில் 1881-ஆம் ஆண்டு முதல் மக்கள் தொகை கணிப்பீடு செய்யப்பட்டு வருகின்றது. அதில் 1881, 1891, 1901 ஆகிய வருடங்களிற் செய்யப்பட்ட கணிப்பீடுகளில் மலையகத் தமிழ் மக்களையும் இலங்கைத் தமிழர் என்ற வகைப்பாட்டிற் குள்ளேயே அடக்கப்பட்டிருந்தது. அவ்வாறு பெறப்பட்ட விபரங்கள் பின்வரும் அட்டவணை 1.1-ல் காட்டப்பட்டுள்ளன.
அட்டவணை 1.1 இலங்கை - இலங்கைத் தமிழர்கள்
கணிப்பீட்டு இலங்கைத் மொத்த மக்கள் தொகையில்
வருடம் தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள் வீதம்
1881 687,300 24.9 1891 723,900 24.1 1901 951,700 26.7
Source: Department of Census and Statistics, General Report-1981,
Vol.3 (1986) (Columbo) P.113
8

இலங்கையில் மலையகத்.
பின்னர் 1911, 1921, 1931, 1946, 1953, 1963 ஆகிய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணிப் பீடுகளில் இலங்கைத் தமிழ் மக்களினதும், மலையகத் தமிழர் களினதும் எண்ணிக்கை சமனாகவே (அட்டவணை 1.2) இருந்து வந்துள்ளது. எனவே 1881, 1891, 1901-ஆம் ஆண்டு காலப் பகுதிகளிலும் இலங்கையில் மலையகத் தமிழ் மக்களது பங்கு 12 வீதத்திற்கு மிகக் கிட்டியதாகவே இருந்திருக்கும் என ஊகிக் கலாம். பின்னர் மேற்கொண்ட மக்கள் தொகை மதிப்பீடுகளை அட்டவணை 1.2 காட்டுகின்றது.
அட்டவணை 1.2 இலங்கை - மலையகத் தமிழ் மக்கள் தொகை (1911-1981)
வருடம் மலையகத் மொத்த மக்கள் தொகையில்
தமிழ் மக்கள் வீதம் 1911 531,000 : 12.9 1921 602,000 13.4 1931 817,200 15.4 1946 780,000 11.7 1953 974,000 12.0 1963 1,123,000 0.6 1971 1,174,000 9.3 1981 818,000 5.5
Source: Department of Census and Statistics, General Report-1981.
Vol.3: (1986), (Colombo) P.113
மலையகத் தமிழ் மக்களின் வீதம் 1931-ஆம் ஆண்டு இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 15 வீதத்திலிருந்து பின்னர் படிப்படியாகக் குறைவுற்று 1981-ஆம் ஆண்டு 5.5. வீதமாக காணப்படுகிறது. ஆனால் 1981-ஆம் ஆண்டில் இலங் கையின் மக்கள் தொகையில் மலையகத் தமிழ் மக்கள் தொகை 5.5 வீதமாக காணப்படுவதில் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. 1981-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணிப்பீட்டின் பொது அறிக்கையில் அவ்வாண்டின் சரியான மலைகத் தமிழ் மக்கள் எண்ணிக்கை 1,031,656 பேராக இருக்க வேண்டும் என்றும் 213,000 மலையகத் தமிழ் மக்கள் தம்மை இலங்கைத் தமிழர் என்று கூறிக்கொண்டதாலேயே கணிப்பீட்டில் அவர்களது எண்ணிக்கை
9

Page 19
இன்றைய மலைகர்கம்
88.656 பேராக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே அறிக்கையின்படி இலங்கையில் வாழ்ந்த 14.85 மில்லியன் மக் களில் மலையக தமிழ் மக்கள் தொகை 1,031,656 பேரானால் அது மொத்த மக்கள் தொகையில் 6.9 வீதமாகும். எனவே இதனைக் கவனமாக அவதானிக்க வேண்டும்.
மக்கள் பெருக்கம்:
இலங்கையில் மலையக மக்களின் பெருக்க வீதமே கடந்த சில தசாப்தங்களில் மிகக் குறைவாகக் காணப்படுகின்றது. அதுவும் 1971-81-ஆம் ஆண்டு காலப்பகுதியில் வீழ்ச்சியும் அடைந்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் மலையகத் தமிழ் மக் களின் பெருக்க வீதத்தினைப் பின்வரும் அட்டவணை (1.3) காட்டு கின்றது. 1881-ஆம் ஆண்டிற்கும், 1901-ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலங்களில் மலையகத் தமிழ் மக்களின் தொகை தனித்துக் கணிப்பிடாததன் காரணமாக 1911-ஆம் ஆண்டின் பின்னர் ஏற்பட்ட பெருக்கத்தின் இயல்புகளை மாத்திரமே அறிந்து கொள்ளக்கூடிய வகையிலே தரவுகள் கிடைக்கின்றன.
அட்டவணை 1.3 இலங்கை - மலையகத் தமிழ் மக்களின் பெருக்கம் (1911-1981)
காலப்பகுதி பெருக்கவீதம்
1911 - 1921 1.26
1921-1946 1.03
1946-1953 3.16
1953-1963 1.38
1963-1971 . 0.54
1971-1981 -3.83
Source: Department of Census and Statistics General Report-1981,
Vol.3 (1986), (Colombo), L1.114.
கடந்த 70 வருட காலத்தில் 1963-ஆம் ஆண்டின் பின்னர் வந்த காலப்பகுதி தவிர்த்து ஏனைய காலப்பகுதிகளில் வருடாந்தம் மக்கள் பெருக்கம் சாதகமாகவே இருந்து வந்துள்ளது. 1948-ஆம் ஆண்டின் முன்னர் இந்தியாவிலிருந்து மக்கள் வந்து சென்ற போக்குகள் இருந்தன. சுதந்திரத்தின் பின் இது தடை செய்யப் பட்டது. எனவே இயற்கைப் பெருக்கம் மாத்திரமே காணப்
10

இலங்கையில் மலையகத்.
பட்டது. இதனால் 1953-ஆம் ஆண்டுக்கும் 1963-ஆம் ஆண்டுக்கும் இடையே மலையகத் தமிழ் மக்களின் இயற்கை இனப் பெருக்கத் தினை அவதானித்தால் அது மிகக் குறைந்த அளவிலேயே ஏற் பட்டுள்ளமையினை காண முடிகின்றது. இக்காலப் பகுதியில் சிங்களவர் மத்தியில் 2.82 வீதப் பெருக்கமும், இலங்கைத் தமிழரிடையே 2.67 வீதப் பெருக்கமும், முஸ்லீம் மக்களிடையே 2.80 வீதப் பெருக்கமும், மலாயர்கள் மத்தியில் 2.6 வீதப் பெருக் கமும் காணப்பட்டது. ஆனால் மலையகத் தமிழ் மக்கள் மத்தி யில் 1.38 வீதமே காணப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் இவர்கள் மத்தியில் சிசு மரண வீதம் அதிகமாகக் காணப்பட்ட தேயாகும். அத்துடன் சுகாதார வசதிகள் போதியளவின்மை, தாழ்நிலையில் காணப்பட்ட வீட்டு வசதிகள், போஷாக்குக் குறைவு என்பனவற்றுடன் இவற்றிற்கெல்லாம் அடிப்படையாகப் போதிய கல்வி வளர்ச்சி இன்மை போன்றனவும் காரணமாக இருந்தன.
அடுத்து வந்த பத்தாண்டுகளில் (1963-71) மலையகத் தமிழ் மக்களின் இனப்பெருக்கம் 0.54 வீதமாக வீழ்ச்சியடைந் திருந்தது. இக்காலப் பகுதியிலும் ஏனைய இனத்தவர்களிடையே 2.36 வீதம் முதல் 32 வீதம் வரை இனப்பெருக்கம் காணப்பட்டது. இலங்கையின் சராசரிப் பெருக்கம் 2.2 வீதமாயிருந்தது. ஆனால் மலையகத் தமிழ் மக்களின் பெருக்கம் மிகவும் வீழ்ச்சி யடைந்திருந்தமைக்கு முன்னர் கூறிய தாழ்ந்த வாழ்க்கைத் தரங் களும் அத்துடன் 25,384 பேர் 1971-ஆம் ஆண்டில் மாத்திரம் தாயகம் திரும்பியமையும் காரணமாகும்.
1971-ஆம் ஆண்டிற்கும் 1981-ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் மலையகத் தமிழ் மக்களின் பெருக்கம் முன்னர் இருந்த தொகையிலும் 3.83 வீத வீழ்ச்சியினை காட் டியது. இதற்கு வழக்கமான தாழ்ந்த வாழ்க்கைத் தரங்களும், இந்தியாவுக்கு 312,000 பேர் திருப்பியனுப்பப்பட்டதும் முக்கிய காரணமானாலும், 1972, 1974-ஆம் ஆண்டுகளில் நிலச்சீர்திருத்த அமுலாக்கத்தின் போது தோட்டங்களில் இருந்து அவர்கள் விரட்டியடிக்கப்பட்டு, வறுமையால் பாதிக்கப்பட்டு துன்புற் றமையும் அத்துடன் அக்காலத்தில் நாட்டில் உணவுக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டால் ஏற்பட்ட பஞ்சத்தின் பாதிப்புக்களையும் நாம் குறைவாக மதிப்பிட முடியாது. இக்காலப் பகுதியில் வடபகுதி நோக்கி இவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அனைத்து மாகாணங் களிலும் அக்காலப் பகுதியில் மலையகத் தமிழ் மக்களின் இனப்பெருக்கம் வீழ்ச்சியடைந்துள்ளது.
1 Π

Page 20
இன்றைய மலையகம்
அட்டவணை 1.4 இலங்கை - மாகாண ரீதியாக மலையகத் தமிழ் மக்களின் பெருக்கம், (1971-81)
Lonesitarb பெருக்கம் (வீதத்தில்) மேல் மாகாணம் ー5.29 தென் மாகாணம் - 3.22
சப்ரகமுவ மாகாகணம் -3.09 ;
மத்திய மாகாணம் ー4.22 வடமத்திய மாகாணம் 一9.44 வடமேற்கு மாகாணம் -8.17 ஊவா மாகாணம் 一4.94 கிழக்கு மாகாணம் ー0.22 வட மாகாணம் +3.71 இலங்கை -3.80
Source: Census and Statistics, General Rerport-1981, Vol. 3,
(Colombo). P.121
இக்காலப் பகுதி இலங்கையில் மலையகத் தமிழ் மக்களைப் பொறுத்து ஒரு இருண்ட காலமேயாகும். அனைத்து மாகாணங் களிலும் இவர்களுடைய எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. தவிரப் பெருந்தோட்டங்களிற் காணப்பட்ட உணவு பஞ்சம், நிலச் சீர்த்திருத்தம் காரணமாக அவர்களில் சிலர் தோட்டங் களிலிருந்து வன்முறையாக வெளியேற்றப்பட்டமை என்பன காரணமாக வடமாகாண மாவட்டங்களில் உள்ள பண்ணைகளில் விவசாயத் தொழிலாளராகக் குடியேற வேண்டிய நிர்ப்பந்தத் திற்கு அவர்கள் ஆளாகினர். எவ்வாறாயினும் 1964-ஆம் ஆண்டிற் கைச்சாத்திடப்பட்ட சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் 312,000 பேர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டமை இக்கால
(அட்டவனை 1.5)
troussold fity:
ஆண்-பெண் விகிதாச்சாரதைப் பொறுத்து 1981-ஆம் ஆண்டு கணிப்பீட்டின்போது 100 ஆண்களுக்கு இலங்கையில் 104 பெண்கள் காணப்பட்டனர். ஆனால் மலையகத் தமிழ் மக் களைப் பொறுத்து இது 101.3 பெண்களாக காணப்பட்டது.
12

இலங்கையில் மலையகத்.
1981-ஆம் ஆண்டில் இலங்கையின் ஏனைய சமூகங்கள் யாவற்றை யும் விட ஆண் பெண் சமநிலை மலையகத் தமிழ் மக்கள் மத்தியிலேயே கூடுதலாகக் காணப்பட்டது.
அட்டவணை 1.5 இலங்கை - தாயகம் திரும்பியோர்
1971-84
ஆண்டு தாயகம் திரும்பியோர் தொகை
1971 25,384 1972 32,877 1973 41,153 1974 44,978 1975 24,570 1976 45,891 1977 39,818 1978 29,438 1979 23,794 1980 18,867 1981 26, 18 1982 28, 120 1983 32,526 1984 31,824
மொத்தம் 446,358
Source: Department of Census statistics, General Report-1981 (1986) (Colombo) P.114 and Central Bank of Sri Lanka, Economic and Social Statistics-1992, P.
அட்டவணை 1.6 இலங்கை - பாலமைப்பு (1981)
இனங்கள் 100 ஆண்களுக்கான
பெண்கள்
சிங்களவர் 103.7 இலங்கைத் தமிழர் 106.5 முஸ்லீம்கள் I 04.5 மலையகத் தமிழ் மக்கள் 101.3
Source: Department of Census and Statistics, General Report-1981,
Vol.3 (1986), (Colombo), P.87.
13

Page 21
இன்றைய மலையகம்
மலையகத் தமிழ் மக்களின் பரம்பல்:
1981-ஆம் ஆண்டு மலையகத் தமிழ் மக்கள் இலங்கை யில் காணப்படும் 25 மாவட்டங்களிலுமே பரவிக் காணப் பட்டனர். இப்பரம்பல் மொத்த மலையகத் தமிழ் மக்களின் எண்ணிக்கையில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 0.03 சதவீதம் காணப்படுவது முதல் நுவரெலியா மாவட்டத்தில் 31.5 சதவீதம் காணப்படுவது வரை வேறுபட்டுக் காணப்பட்டது. ஆயினும் நுவரெலியா (31.5), பதுளை (15.8) இரத்தினபுரி (10.4) கண்டி (12.0), கேகாலை (5.6) களுத்துறை (4.1), மாத்தளை (3.0), கொழும்பு (2.4) ஆகிய எட்டு மாவட்டங்களிலேயே மலையகத் தமிழ் மக்களில் 85 வீதமானோர் 1981-ஆம் ஆண்டில் வாழ்ந் தனர். இதனை அட்டவணை 1.7 விளக்கமாக காட்டுகின்றது. பிரதான 8 மாவட்டங்களில் முதல் ஏழு மாவட்டங்களும் பெருந் தோட்ட மாவட்டங்களாகும். 1971-ஆம் ஆண்டிற் காணப்பட்ட நிலைமைகளை அவதானிக்கும்போது கண்டி, கொழும்பு மாவட்டங்களில் இவர்களின் அளவு வீழ்ச்சியுற்ற அதே நேரம் நுவரெலியா மாவட்டத்தில் வீதம் அதிகரித்துள்ளது. இதற்கு நிலச்சீர்த்திருத்தத்தின்போது ஏற்பட்ட விளைவுகளால் கண்டி மாவட்டத் தோட்டங்களில் இருந்து பெருமளவினர் நுவரெலியா மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்தமையும், இந்தியா சென்ற மையும் குறிப்பிடத்தக்கனவாகும். அத்துடன் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தில் கொழும்பு போன்ற நகரங்களிலே தொழில் புரிந்த வர்களுக்கு இலங்கைக் குடியுரிமை நிராகரிக்கப்பட்டதுடன், அரசு விழிப்புடன் செயல்பட்டு இந்தியாவுக்கு விண்ணப்பித்தவர் களை அனுப்பி வைத்தமையும் முக்கிய காரணமாகக் கூறப் படுகின்றது. வடக்கு கிழக்கு மாவட்டங்களிலும் இவர்களுடைய வீதம் அதிகரித்துள்ளது. இதற்குத் தொழிலாளர்கள் தொழில் நிமித்தம் இடம் பெயர்ந்தமை முக்கிய காரணமாகும். இத்தகைய வடக்கு கிழக்கு மாகாணங்கள் நோக்கிய இடம் பெயர்வுக்கு 1977 முதல் தெற்கில் இடம் பெற்ற இனக்கலவரங்களும் முக்கிய காரணங்களாகும்.
மாவட்டங்கள் ஒவ்வொன்றினும் மக்கள் தொகையுடன் ஒப்பிட்டுப் பார்த்தாலும் கூட நாட்டின் மாவட்டங்கள் அனைத் திலும் மலையகத்தமிழ் மக்கள் அம்பாந்தோட்டையில் 0.1 வீதம் முதல்நுவரெலியாவில் 42.7 வீதம் வரையில் வேறுபட்டு காணப் படுகின்றனர். மாவட்ட ரீதியில் நுவரெலியா (42.7) பதுளை (20.2), வவுனியா (19.6), முல்லைத்தீவு (14.5) மன்னார் (13.0),
14

இலங்கையில் மலைவகத்.
அட்டவணை - 1.7
இலங்கை - மலையகத் தமிழ் மக்களின் (ம.த.ம) பரம்பல் - (1971-1981) மாவட்ட ரீதியாக (வீதத்தில்)
மொத்த ம.த.ம. இன் மாவட்டத்தின் மொத்த
எண்ணிக்கையில் மொத்த மக்கள் மாவட்டங்கள் குறித்த மாவட்டத்தில் தொகையில் வாழ்வோர் ம.த.ம. வீதம்
1971 1981 1971 1981
கொழும்பு 5.1 2.4 2.2 1.2 கம்பகா O 0.7 ыыы» 0.4 களுத்துறை 3.3 4.l 5.3 4.l கண்டி 24.3 12.0 24.1 9.4 மாத்தளை 3.9 3.0 14.9 7.0 நுவரேலியா 20.0 31.5 52.3 42.9 காலி 1.3 1.4 2.1 l.4 மாத்தறை 1.6 1.7 3.2 2.2 அம்பாந்தோட்டை 0.3 0.03 0.1 0.1 யாழ்ப்பாணம் 1.5 2.4 2.6 2.4 ιρσότώότητrf 1.1 1.7 16.7 13.0 வவுனியா 1.2 2.3 14.5 19.6 முல்லைத்தீவு O 1.4 OMO 14.5 மட்டக்களப்பு 0.4 0.5 1.7 1.2 அம்பாறை 0.2 0.2 0.6 0.4 திருகோணமலை 0.4 0.7 2.7 2.1 குருனாகலை 1. I 0.8 1.3 0.6 புத்தளம் 0.5 0.3 1.6 0.5 அநுராதபுரம் 0.2 0.1 0.5 0.1 பொலன்னறுவை 0.2 0.02 0.2 0.1 பதுளை 17.8 I5.5 34.0 20.2 மொனராகலை 0.9 1.l 6.0 3.2 இரத்தினபுரி 9.6 10.4 17.1 10.6 கேகாலை 5.3 5.6 ・ 9.4 6.7 இலங்கை 100.0 100.0
Source: Department of Census Statistics, General Report-1981 (1986)
(Colombo), P. 117 to 118.
I5

Page 22
இன்றைய மலையகம்
இரத்தினபுரி (10.6), கண்டி (9.4) மாத்தளை (7.0) கேகாலை (6.7) ஆகியவற்றில் 6.7 வீதம் முதல் 42.7 வீதம் வரை முக்கியத் துவம் வாய்ந்த பிரிவினராகக் காணப்படுகின்றனர். எவ்வாறா யினும் இது 1981-ஆம் ஆண்டு நிலைமையேயாகும். அண்மைக் காலங்களில் குறிப்பாக 1983-ஆம் ஆண்டு முதல் 1990-ஆம் ஆண்டு வரை ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களின் காரணமாக வடக்கு கிழக்கு மாவட்டங்களில் காணப்பட்ட நிலைமைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமையினையும் அசட்டை செய்ய முடியாது. கொழும்பு நோக்கிப் பலர் இடம் பெயர்ந்துள்ள மையும் இந்தியாவுக்கு ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்த மையும் குறிப்பிடத்தக்கனவாகும். இலங்கையின் பத்து மாவட் புடங்கள் மலையகத்தமிழ் மக்களின் பரம்பலைப் பொறுத்து முக் கியமானவையாகக் காணப்படுகின்றன. ஒழுங்கடிப்படையில் நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கண்டி, வவுனியா, முல்லைத் தீவு, மன்னார், களுத்துறை, மாத்தளை, கேகாலை என்பன முக்கியம் வாய்ந்த மாவட்டங்களாகும்.
அட்டவணை - 1.8 இலங்கை - வயதமைப்பு 1981/82
வயது பிரிவு பெருந்தோட்ட தேசிய First Fif? சராசரி
0-4 14.37 11.67 5-9 10.83 11.75 10-13 9.19 10.55 14-18 1007 11.33 JI9-25 13.96 13.52 26-35 15.54 14.42 36-45 12.14 9.85 46-55 7.99 7.98 55 க்கு வயதுக்கு 5.91 8.93
மேல்
மொத்தம் 100.00 100.00
Source: Department of Census Statistics, General Report-1981 (1986)
(Colombo).
16

இலங்கையில் மலையகத்.
வயதமைப்பு:
1981/82 ஆம் ஆண்டு மாதிரியெடுப்பு கணிப்பீட்டின் படி பெருந்தோட்டங்களில் மக்களின் வயதமைப்பு பின்வருமாறு காணப்பட்டது.
அட்டவணையின் படி (1.8) இலங்கையின் தேசிய சராசரியுடன் ஒப்பிடுகையில் சிறு குழந்தைகள் பெருந்தோட்டங் களிலேயே அதிகமாக உள்ளனர். கிராமங்களிலும், நகரங்களிலும் இதன் அளவு குறைவாகும். அத்துடன் சிசு மரண வீதமும் பெருந் தோட்ட மாவட்டங்களிலேயே அதிகமாக உள்ளது. தவிரவும் 55 வயதுக்கு மேற்பட்டவர்களின் தொகை தேசிய மட்டத்தில் 8.93 வீதமாக காணப்பட பெருந்தோட்டங்களில் அது 5.91 வீதமாகவே உள்ளது. இதிலிருந்து தோட்ட மக்களிடையே வாழுங்காலம் குறை வென்ற தகவலும் பெறப்படுகின்றது.
சமயங்கள்:
மலையகத் தமிழ் மக்களைப் பொறுத்து அவர்களில் 90 வீதமானோர் இந்து மதத்தினையே பின்பற்றுகின்றனர். இவர் கள் மத்தியில் இந்துக்கள் (90 வீதம்), உரோமன் கத்தோலிக்கர் (6.2 வீதம்), கிறிஸ்துவர்கள் (1.4 வீதம்,) பெளத்தர்கள் (1.8 வீதம்) ஆகியோர் உள்ளனர். இந்தியாவிலிருந்து 125 வருட காலத்திற்கு முன்னரே இலங்கை வந்த இம்மக்கள் வறுமை, குடியுரிமையின்மை, கல்வியறிவு வளர்ச்சியின்மை, இனக் கலவரங்களால் நசுக்கப்பட்டமை போன்றவற்றால் பெரிதும் பலவீனமடைந்துள்ள போதிலும், இந்நாட்டின் பல்வேறு மதச் சார்பான இயக்கங்களின் மதமாற்ற நடவடிக்கைகள் போன்றவற் றிற்கு இன்றும் பலியாகாது தமது சுயமரியாதையினைக் காப் பாற்றிக் கொள்ளும் வகையில் தொடர்ந்தும் இந்துக்களாகவே இருப்பதன் சிறப்பினைப் பாராட்ட வேண்டியுள்ளது. இந் தியாவிலிருந்து ஏனைய நாடுகளுக்குத் தொழிலாளராக இடம் பெயர்ந்தவர்கள் தமது தாய்மொழி, கலாச்சாரம், மதம் போன்ற வற்றை கைவிட்டவர்களாக வாழ்வதனை உலகின் பல பாகங் களில் காண முடியும். அநேகமான பெருந்தோட்டங்களில் இந்துக் கோவில்கள் காணப்படுகின்றன. தோட்ட நிர்வாகங்களின் அனுசரணையுடன் தொழிலாளர்களும் இணைந்து கோவில் களைப் பராமரித்துத் தமது சமய நம்பிக்கைகளை வளர்த்து வருகின்றனர்.
17
2

Page 23
இன்றைய மலையகம்
கல்வி வளர்ச்சி:
மலையத் தமிழ் மக்களைப் பொறுத்த மட்டில் அவர்களே இலங்கையிற் கல்வி வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியவர்களாக காணப்படுகின்றனர். 1981-ஆம் ஆண்டில் ஆகக் குறைந்தது தமது பெயர், விலாசம் ஆகியவற்றை ஏதோ ஒரு மொழியில் எழுதத் தெரிந்த எழுத்தறிவுத் தகுதி வாய்ந்தவர்கள் இலங்கையில் 87.2 வீதத்தினராயிருந்தனர். இதில் ஆண்கள் 91.1 வீதமாகவும் பெண்கள் 83.2 வீதத்தினராகவும் இருந்தனர். ஆனால் மலையகத் தமிழ் மக்களைப் பொறுத்து இது பொதுவில் 68.0 வீதமாகவும், ஆண்கள் மத்தியில் 79.6 வீதமாகவும் காணப்பட்டது. வேறான இனப்பிரிவினரிடையே எழுத்தறிவில் காணப்பட்ட உயர் நிலைமைகளைப் பின்வரும் அட்டவணை (1.9) காட்டுகின்றது.
அட்டவணை - 1.9 இலங்கை - எழுத்தறிவு - 1981
இனங்கள் எழுத்தறிவு (வீதம்)
சிங்களவர் 89.3 இலங்கைத் தமிழர் 87.3 முஸ்லீம்கள் 79.3 LD GeofTul u fi 91.5 பறங்கியர் 97.1 ஏனையோர் 83.6 மலையகத் தமிழர் 68.0
Source: Department of Census Statistics, General Report-1981 (1986)
Vol.3 (Colombo), P.131.
அட்டவணை 1.9 இலங்கையில் மலையகத் தமிழ் மக்களே எழுத்தறிவில் மிகவும் பின் தங்கியுள்ளனர் என்பதனை எடுத்துக் காட்டுகின்றது. இலங்கையில் இலவசக் கல்வி ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு மேலாக வழங்கப்பட்டு வருகின்றது. இதனால் பெரும்பாலான இலங்கையர் எழுத்தறிவு மிக்கவராக இருக்கும் போது மலையத் தமிழ் மக்களில் 68.5 வீதத்தினரே எழுத்தறிவு கொண்டவராக உள்ளனர். அதிலும் பெண்களின் நிலை இன்னும் மோசமாகும் (56.3 வீதம்). தோட்டப் பாடசாலைகளில் ஐந்தாம் வகுப்பு வரையிலேயே கல்வி மிகவும் குறைந்த வசதி களுடன் கற்பிக்கப்படுகின்றது. பெரும்பாலான பாடசாலைகள் நூற்றுக்கணக்கான மாணவர்களுடன் பாடசாலைக்கு ஒரு
18

இலங்கையில் மலையகத்.
ஆசிரியர் என்ற நிலையில் உள்ளன. இவற்றின் விளைவாக ஏறத் தாழ 15 வீதத்தினரே 11 வருடங்கள் பாடசாலைக்கு (1988) சென்றுள்ளனர். உயர்கல்வி மிகவும் அருமையாகவே உள்ளது. இலங்கையில் உள்ள பத்து லட்சம் மக்கள் மத்தியில் 500 பேர் கூடப் பல்கலைக்கழக மட்ட உயர்கல்வியினைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்க வேதனை மிக்க ஒரு செய்தியாகும். தொழில் பயிற்சி பெற்ற தொழிலாளர்களும் இதனால் மிகவும் குற்ைவு.
தொழிலற்றோர்:
1981-ஆம் ஆண்டு கணிப்பீட்டின்படி இலங்கையின் மொத்தத் தொழிலாளர் படையில் வேலையில்லாதோர் அளவு 11.7 வீதமாகக் காணப்பட்டது. அது நகரப் பகுதிகளில் 14.2 வீதமாகவும் கிராமியப் பகுதிகளில் 12 வீதமாகவும் காணப்பட தோட்டங்களில் இது 5.0 வீதமாகவே காணப்பட்டது. அதே நேரத்தில் இன ரீதியாக வேலையற்றோர் அளவினைப் பார்க்கும் போது இந்தியத் தமிழர் என்று வகைப்பாட்டில் அடக்கப்பட் டோர் மத்தியில் தொழிலாளர் படையில் இருப்போரில் 4.9 வீதத்தினரே தொழிலற்றவர்களாயிருந்தனர். மலையகத்தமிழ் மக்கள் பல்வேறு துறைகளிலும் குறிப்பாக கல்வி, தொழிற் பயிற்சி, பொருளாதாரத் துறைகளில் பின் தங்கியவர்களாகக் காணப்பட்ட போதிலும் தொழில்களில் ஈடுபட்டமையை பொறுத்தமட்டில் அவர்களின் தொழில் படையில் பெரும்பான்மையினர் தொழில் புரிபவர்களாகவே காணப்படுகின்றமை ஒரு முரண்பாடான நிலை என்பதனை உணரலாம். இதற்குப் பல காரணங்கள் உள்ளன.
முதலாவது காரணம் அவர்கள் போதியளவில் உயர் கல்வி யினைத் தொடராததால் சிறு வயதிலேயே (14 வயதளவில்) தொழிலுக்குச் செல்கின்றனர். எனவே ஆரம்பக் கலவி முடிந்த வுடனேயே பெரும்பாலானவர்கள் தொழில்களுக்குச் சென்று விடுகின்றனர். இரண்டாவது காரணம் இவர்களுக்கு பெருந் தோட்டங்களில் வழங்கப்படும் வேதனம் தொழில் புரியும் நாட் களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே வழங்கப்படுவ தாலும், வேதனங்கள் சமகால வேதனங்களுடன் ஒப்பிடும் போது கீழ்மட்டத்தில் காணப்படுவதாலும் பெருந்தோட்டத் துறை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் தயக்கம் க்ாட்டுவது இல்லை, மூன்றாவது காரணம் தோட்டத் தொழி
9

Page 24
இன்றைய மலையகம்
லாளரது குடும்ப வருவாய் குறைவாக இருப்பதனால் பெண் களும் தொழில் புரிய நிர்ப்பந்திப்படுகின்றனர். முன்னர் கூறியது போன்று தோட்டத்துறை வேதனங்கள் குறைவாயிருப்பினும், தேயிலை அறுவடைக்குக் கூடிய தொழிலாளர் தேவைப்படுவ தாலும் தொழிலுக்குச் செல்லத் தயாராயிருக்கும் பெண்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கின்றது. அத்துடன் தோட்டத் தொழிலில் வருமானம் குறைவாதலால் குடும்பத்தில் கூடிய அங் கத்தினர்கள் தொழில் புரிய வேண்டிய பொருளாதார வற்புறுத்தல் காணப்படுகின்றது. இத்தகைய காரணங்களினால் இலங் கையில் பெண்கள் மத்தியில் பெருந்தோட்டத் துறையினை சார்ந்த பெண்களே கூடியளவு தொழில் புரிகின்றனர். எனவே மலையகத் தமிழ் மக்கள் மத்தியில் தொழிலற்றோர் அளவு குறைவாகவே காணப்படுகின்றது.
குறை தொழில் புரிவோர்:
குறை தொழில் புரிபவர்களில் பெருந்தோட்ட மக்களே பெரும்பான்மையினர் இலங்கையின் நகர்ப்புறங்களில் 12.8 வீதத்தினரும், கிராமங்களில் 20.6 வீதத்தினருமே குறை தொழில் புரிபவர்களாக இருக்கின்றனர். ஆனால் பெருந்தோட்ட தொழி லாளர்களில் 26.3 வீதத்தனர் குறை தொழில் புரிபவர்களாக உள்ளனர். இதன்படி குறைதொழில் புரிபவர்கள் என்பவர்கள், "தமது தொழில் புரியும் உள்ளார்ந்த வளத்தினை முழுமையாக பயன்படுத்தாமல் குறைந்தளவில் பயன்படுத்துபவர்களையே குறிக்கும். அத்துடன் குறை தொழில் புரிபவர்கள் வழக்கமான அளவு நேரம் தொழில் புரியாமலும், மேலதிக வேலை தேடுபவர்களாகவும், இருக்கின்றார்கள். அத்துடன் சில தொழி லாளர்கள் தமது முழுத் தொழில் வளத்தினையும் பயன்படுத்தாது இருப்பதனையும் இது குறிக்கும்"
இதனைப் பற்றிக் குறிப்பிடும் போது காலநிலையில் தங்கி யிருக்கும் பெருந்தோட்ட பொருளாதார நடவடிக்கைகள் தொழிலாளர்களுக்கு தினமும் தொழில் வழங்கும் வாய்ப் பினைக் கொண்டிருக்கவில்லை என்றும், அவ்வாறு போதிய தொழில் கிடைக்காத நிலையிலும் தொழிலாளர்கள் வேறு தொழில் நோக்கி இடம் பெயருவது குறைவு என்றும், மத்திய வங்கியின் சமூக பொருளாதார (1981/82) அளவீடு விமர்சிக்கின்றது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஏன் தொழில் நாடி ஏனைய பகுதிகளுக்கு அசைவதில்லை என்பதற்கு நாட்டின்
20

இலங்கையில் மலையகத்.
அரசியல், மற்றும் அவர்களது தொழிற் பயிற்சி குறைவு நிலைமைகளுமே காரணம் என்பதனை மறக்கக் கூடாது.
வருமானம்:
1981/82 ஆம் ஆண்டு மத்திய வங்கியினால் மேற்கொள்ளப் பட்ட சமூக பொருளாதார கணிப்பிட்டீன்படி பெருந்தோட்டங் களில் வேறுபட்ட தொழில் புரிபவர்களில் 1405 பேரை மாதிரியாக எடுத்து அவர்களுடைய வருமானங்கள் கணிப்பிடப் பட்டன. அவர்களுடைய மொத்த மாதாந்த வருவாய் ரூபாய் ஆறு லட்சத்து 31 ஆயிரமாக இருந்தது. இதன்படி சராசரித் தொழிலாளி ஒருவரின் மாதாந்த வருமானம் ரூபா 449/-ஆகவே இருந்தது. இது போன்றே கிராமிய, நகர்ப்புறத் தொழிலாளர் களுடைய வருவாயும் கணிப்பிடப்பட்டபோது நகர்ப்புறத் தொழிலாளரது சராசரி வருவாய் ரூபா 1625/- ஆகவும் கிராமத் தில் அது ரூபா 1,077/- ஆகவும் இருந்தது இத்தரவுகள் இலங் கையில் பெருந்தோட்டத் தொழிலாளரது பொருளாதார நிலையினை எமக்குப் புலப்படுத்துவதாக உள்ளது.
மக்கள் தொகையில் நகர-கிராமிய மக்கள்:
1981-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணிப்பீட்டின்படி இலங்கையின் நகர்ப்புறங்களில் 53.954 மலையகத் தமிழ் மக்கள் வாழ்ந்தனர். இது 825, 233 மொத்த மலையகத் தமிழ் மக்கள் தொகையில் 6.5 வீதமாகும். ஏனையோர் கிராமங்களிலும், பெருந்தோட்டங்களிலுமே வாழ்ந்தனர். யாழ்ப்பாணம், மன் னார், வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, புத்தளம், அநுராதபுரம், பொலனறுவை, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் வாழும் ஏறத்தாழ 120,000 பேர் கிராமங்களில் வாழ்பவராவர். (14.5 வீதம்) இவர்களைத் தவிர்த்து ஏனையோர் பெருந்தோட்டங்களில் வாழ்ந்தவர்களாகவே கருதப்படலாம். எனவே மலையகத் தமிழ் மக்களில் ஏறத்தாழ 21 சதவீதத் தினரைத் தவிர்த்த எஞ்சிய 79 வீதமானோர் பெருந்தோட்டங் களிலேயே வாழ்கின்றனர் என அனுமானிக்கலாம். விபரங்களை அட்டவணை (1.10) காட்டுகின்றது. இவற்றின் அடிப்படை யிலேயே தொழில் முறைகளும் காணப்படுகின்றன. கல்வியில் மிகப்பின் தங்கியிருப்பதாலும் நீண்டகாலமாக குடியுரிமைப் பிரச்சனைகள் இருந்ததாலும், மலையகத் தமிழ் மக்களின் பெரும் பான்மையினர், பெருந்தோட்டத் தொழிலாளர்களாகவும், கிர்ாமப் புறங்களில் விவசாயத் தொழிலாளர்களாகவுமே
2

Page 25
இன்றைய மலையகம்
அட்டவணை - 1.10 இலங்கை - மலையகத் தமிழ் மக்களின் நகர - கிராமப் பெருந்தோட்ட பரம்பல் - 1981
மாவட்டம் நகரம் கிராமப் பெருந் மொத்தம்
தோட்ட
கொழும்பு I5,860 5,644 21,504 களுத்துறை 856 32,654 33,510 கண்டி 6,415 98,425 104,840 மாத்தளை 1,340 22,744 24,084 நுவரேலியா 6,010 241,121 247,131 மாத்தறை 20 13,721 13,931 காலி 268 10,801 11,069 அம்பாந்தோட்டை 18 190 308 யாழ்ப்பாணம் 5,282 14,719 20,001 LbaiöT60Tñrri 429 13,643 14,072 வவுனியா 3,406 15, 186 18,592 மட்டக்களப்பு 752 3,116 8,868 அம்பாறை 484 926 1,410 திருகோணமலை 2,254 45l.3 6,767 குருணாகலை 414 6,013 6,427 புத்தளம் 831 2,153 2,964 அநுராதபுரம் 266 5 I9 785 பொலன்னறுவை 08 197 205 பதுளை 2,765 133,030 135,795 மொனராகலை 220 8,944 9 , Ꭰ6Ꮞ இரத்தினபுரி 1,248 87, 181 88,429 கேகாலை 707 43, 172 43,879 கம்பஹர் 3,717 2,105 5,822 முல்லைத்தீவு 94 10,672 10,766
மொத்தம் 53,954 771,369 825,323
Source: Department of Census Statistics, General Report-1981 (1986)
Vol.3 (Colombo), P.109.
தொழில் புரிகின்றனர். சிறியளவினர் நகர்ப்புறங்களில் சில்லறை வியாபாரம், உணவு விடுதிகள், வாகனம் பழுது பார்க்கும் தொழில் தளங்கள் போன்றவற்றில் தொழில் புரிகின்றனர். அண்மைக் காலங்களில் தோட்டப் பாடசாலை ஆசிரியர்களாக நூற்றுக்
22

இலங்கையில் மலையகத்.
கணக்கில் தொழில் பெற்றுள்ளனர். இருந்தாலும் இத்தகைய தொழில்களில் முழு நாட்டிலும் 2,000 பேர் கூட இருப்பதாகத் தெரியவில்லை. அத்துடன் இன ரீதியாகத் தொழில் புரிபவர் களின் புள்ளி விபரங்கள் கிடைப்பதற்கில்லை. ஆனாலும் உத்தேச மதிப்பீடுகளைக் கொண்டு அவதானித்தால் மலையகத் தமிழ், மக்களிற் பெரும்பாலோனோருக்கு உயர் தொழில் வாய்ப்புகள் மற்றும் அரசாங்க தொழில்களில் வாய்ப்புகள் மிக மிக அரிதாகவே காணப்படுகின்றது.
இது ஒரு வட்ட செய்முறையினால் விளக்கப்படலாம். மலையக மக்கள் குடியுரிமை இன்றி சுபீட்சம் இல்லாதிருந்தனர். எனவே இவர்களுக்கு உயர் தொழில்கள் கிட்டவில்லை. இவ் வாறு உயர் தொழில்கள் கிட்டாததால் வாழ்க்கையில் சுபீட்சம் அற்று கல்வியில் பின் தங்கியிருந்தனர். இவ்வாறு கல்வியில் பின் தங்கியதால் உயர்நிலை கிட்டவில்லை. இந்நிலைமையினைக் குடியுரிமை இன்மை மேலும் வலுப்படுத்தி இம்மக்களைப் பலவீனப்படுத்தியிருந்தது. ܗܝ
தற்போது வழங்கப்பட்டுள்ள குடியுரிமை (1988) வருங்காலத்தில் இம்மக்களின் வாழ்க்கை வளம் பெற உதவும் என நம்பலாம். ஆனால் மலையகத் தமிழ் மக்கள் தாமாக விழிப் புணர்வினைப் பெறாது விட்டால் இவ்வெதிர்பார்ப்புகள் வீணாகும் ஆபத்தும் உண்டு.
Bibiliography
1. Central Bank of Ceylon, Consumer Finance Survey, - 1981/82, (1984),
(Colombo). 2. Ceylon Labour Commission (1908), Report and Proceedings, (1908,
Colombo). 3. De Silva K.M., (1964), "Studies in British Policy in Ceylon - 1", The Ceylon
Journal of Historical and Social Studies, Vol. 7, No. 1. 4. Department of Census and Statistics, Census of population and Housing -
1981, General Report Vol. 3, (1986), (Colembo). 5. Ludowyk, E.F.C., (1966), The Modern History of Ceylon, (London). 6. Meegama, S.A., The decline in Mortality in Ceylon since the end of the 19th century with particular reference to economic and social Developments, Ph. D. Thesis, London, 1968. 7. Mendis, G.O., (1944) Ceylon under the British, (Colombo). 8. Roberts, M.W., (1966) Indian Estate Labour in Ceylon during the Coffee period (1830-1880). "The Indian Economic and Social History" Review Vol. III NO.2.
23

Page 26
இன்றைய மலையகம்
9. Wanden Drieson, I.H. (1953), "Coffee Cultivation in Ceylon" (1) The Ceylon
Historical journal Vol. 3 No. 1
10. Wesumperuma (1986), Indian Immigrant Plantation Workers in Sri Lanka, A
Historical Perspective (1980-1910), (1986), (Colombo).
11. Indian Emigration Proceedings, Vol. 692 (1871-1923).
ప్రోశీణ

மலையகத் தமிழ் மக்களின்.
2. மலையகத் தமிழ் மக்களின் சமூக பொருளாதார நிலை
இலங்கையின் பெருந்தோட்டங்களிற் பணிபுரியும் தொழி லாளர்களுள் மிகப் பெரும்பான்மையினர் இன்றும் (1989) இந்திய வம்சாவழியினைச் சாாந்த தமிழ்த் தொழிலாளர்களாக விளங்குகின்றனர். இலங்கையின் அரசியல் பொருளாதாரத் துறைகளில் இன்று அவர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர். 1964-ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி இலங்கையில் தொழில் புரிந்தவர்களுள் 22 வீதமானோர் பெருந்தோட்டத் தொழிலாளர் களாவர். மேலும் இவ்வருடத்தில் விவசாயத் துறையில் ஈடுபட் டிருந்தவர்களுள் 41 வீதமானோர் பெருந்தோட்ட தொழிலாளர்களே ஆவார்.
நாட்டிற் பயிர் செய்யப்பட்ட நிலப்பரப்பில் ஏறத்தாழ 50 வீதமான நிலப்பரப்பிற் பெருந்தோட்டங்கள் அமைந்துள்ளன. 1960-ஆம் ஆண்டிற்கும் 1970-ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் பெருந்தோட்ட துறையின் மூலமே நாட் டின் 85 வீதமான வெளிநாட்டுச் செலாவணியை பெறக் கூடியதாகவிருந்தது. இன்றும் இத்துறையே முக்கியமான தனி ஒரு துறையாக இயங்கி வருவதுடன், இலங்கையின் பொருளா தாரத்தின் முதுகெலும்பாகவும் காணப்படுகின்றது. அண்மைக் காலங்களில் குறிப்பாக, கடந்த பத்தாண்டுகளில் (1980-89) இத் துறையின் முக்கியத்துவம் குறைந்து செல்லும் ஒரு போக்கினைக்
25

Page 27
இன்றைய மலையகம்
காணமுடிகிறது. 1982-ஆம் ஆண்டில் நாட்டில் பயிர் செய்யப் பட்ட மொத்த நிலப்பரப்பில் 28 வீதமான நிலமே பெருந்தோட்டப் பயிர்செய்கைக்கு உட்பட்டிருந்தது. ஏற்றுமதியிலும் 45 வீதம் பெருந்தோட்ட உற்பத்திகளின் பங்காக இருந்தது. 1981-ஆம் ஆண்டு இலங்கையிலே தொழில் புரிந்த தொழிலாளர்களில் 16 வீதமானோர் பெருந்தோட்டங்களின் பயிர்ச் செய்கை, பதனிடல் ஆகிய தொழில்களில் ஈடுபட்டிருந்தனர். நாட்டின் விவசாயத்தை மேற்கொள்ளும் தொழிலாளர்களில் 36 வீதமாக அது அமைந்திருந்தது. விவசாயத் துறையை சார்ந்ததான நெற் செய்கை மற்றும் உணவுப் பயிர்ச் செய்கை என்பன கூடிய முக்கியத்துவத்தினைப் பெற்றன. இரத்தினக் கற்கள் ஏற்றுமதி, தைத்த ஆடைகள் ஏற்றுமதி, வெளிநாடுகளிற் பணிபுரிந்த இலங் கையர் அனுப்பிய பணம் என்பனவும் தேசிய பொருளாதாரத்தில் பிரதான இடத்தினை வகித்தன (மத்திய வங்கி அறிக்கை 1981).
இக்கட்டுரையானது, பெருந்தோட்டத் தொழிலாளர் களில் (85%) மிகப் பெரும்பான்மையினர் "நாடற்றவர்களாக" (1988 வரை) இருந்தமைக்கும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையாது தேக்கமுற்றிருந்தமைக்கும் அடிப்படையாக அமைந்த காரணங்களை இனங் காணுவதுடன், அவர்களின் இன்றைய பின் தங்கிய நிலைக்குப் பொறுப்பாக இருந்த ஏனைய காரணிகளையும் இனங்காணுவதனையும் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. இத்தொழிலாளர்களின் வருமானம், கல்வி நிலை, வீட்டு வசதி சுகாதார வசதிகள் என்பன அவர்களின் இன்றைய வாழ்க்கை நிலையினை இனங்காட்டும் குறிக்காட்டி களாகும். அவற்றைக் கொண்டு அவர்களுடைய சமூக பொருளாதார நிலைமையினை அளவீட்டு ரீதியாக நாம் அறிந்து கொள்ள முடியும். இத்தகைய குறிகாட்டிகள் ஏன் நீண்ட காலமாகக் கீழ் நிலையிலேயே இருந்தன என்பதனை இக்கட் டுரையில் விவாதிப்போம். இதற்காக நாடற்றவர் என்ற நிலை, குறைந்த வேதனங்கள், தாழ்ந்த கல்விநிலை, தாழ்நிலையிலான வீட்டு வசதி, மற்றும் திருப்தியற்ற சுகாதார வசதிகள் என்பன வற்றிற்கான மூலகாரணங்களையும், அவற்றின் விளைவுகளையும் விளக்கி, அவை எவ்வாறு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் இன்றைய சமூக பொருளாதார நிலைமைகளுக்குப் பொறுப் பாயிருந்தன என்பதையும் விளக்குவதாக இக்கட்டுரை அமைந் துள்ளது.
26

மலையகத் தமிழ் மக்களின்.
ஒன்று அல்லது, இரண்டு வகையான சந்தைப்படுத்தக்கூடிய விவசாய பொருட்களைப் பயிரிடுவதனையும், நேரடியான மேற் பார்வையின் கீழ் பெருமளவிளான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதனையும் பிரதான பண்பாகக் கொண்ட ஒரு விவசாய பொருளாதார நடவடிக்கையே பெருந்தோட்டம் என வரையறை செய்யப்படுகிறது. விளை நிலங்களில் இயந்திரப் பயன்பாடு அதிகமாகக் காணப்படுமாயின், அவற்றைப் பெருந் தோட்டங்கள் எனக் கூற முடியாது என ஜோன்ஸ் (1968) பெக் போாட் (1972) ஆகிய இத்துறை சார்ந்த ஆய்வாளர்கள் அபிப் பிராயம் கூறியுள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையிற் பார்க்கும் போது பெருந்தோட்டங்களிலே தொழில் புரிபவர்களிற் சுமார் 80 வீதமானவர்கள் அந்தத் தோட்டங்களிலேயே குடியிருப்பவர்களாக இருந்திருக்கின்றனர். எனவே, இவர்களின் நிலைமையினை விளக்கும் வகையில் 'பிடியில் சிக்குண்ட (captive) தொழிலாளர்கள் எனப் பாரம் பரியமாக வர்ணிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் அண்மைக் காலங்களில் கிராமியப் பகுதிகளுக்கும் நகரப் புறங்களுக்கும் இத்தொழிலாளர்கள் சிறிய அளவுகளில் இடம் பெயர்ந்து செல் வதனால் இத்தகைய நிலைமைகள் தளர்ச்சியடைந்து செல்கின்றன எனக் கூறலாம். இருந்த போதிலும், இன்றும் கூடப் பெருந் தோட்டங்களிலே தொழிலாளர்களை யதேச்சதிகாரமாக நிர் வகிக்கும் கட்டுப்பாடுகள் மிகுந்த நிர்வாக முறைகளைக் காணக் கூடியதாக உள்ளது. இதற்கு ஒத்தவகையில், தொழில் அமைப்பு இங்கே ஒரு கூம்பு அமைப்பிற் காணப்படுகின்றது. தோட்ட நிர்வாக அதிகாரிகள், அக்கூம்பின் உச்சியிலும், அடிமட்டத்திற் பரந்தளவிலான தொழிலாளர்களும் காணப்பட இடைமட்டத்தில் தொழிலாளர்களை மேற்பார்வை செய்யும் சில கீழ்மட்டச் சேவையாளர் காண்ப்படுகின்றனர். (Snodgrass 1964).
இந்த ஒழுங்கமைப்பில் மேல் நோக்கி நகர்ந்து செல்லத் தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள் மிக மிக அரிதாகவும், சில இடங்களில் முற்றாக இல்லாதுமே காணப்படுகின்றன. இதற்கு இன, சாதி மற்றும் வர்க்க வேறுபாடுகள் காரணமாக உள்ளன. நீண்ட காலமாகக் காணப்பட்டு வரும் நாடற்றவர்கள் என்ற நிலைமை இத்தகைய பாரபட்சமான நிலைமைகளை மேன் மேலும் பலப்படுத்துகின்றது. இதனாலும் இன்னும் வேறு சில காரணங்களினாலும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் தாழ்ந்த ஒரு சமூக, பொருளாதார நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். இவ்வாறு இத்தொழிலாளர்கள் தொடர்ந்தும்
27

Page 28
இன்றைய மலையகம்
நீண்ட காலமாக விவசாயத் தொழிலாளர்களாக குறைந்த சம்பளங்களைப் பெற்று வந்தமைக்கு பிரதானமாக நாடற்ற நிலைமையும் அதன் தொடர்பாக ஏற்பட்ட ஏனைய பாதிப்பு களுமே காரணங்களாக அமைந்துள்ளன.
1982-ஆம் ஆண்டு செய்யப்பட்ட விவசாயக் கணிப்பீட்டின் படி பெருந்தோட்டத் தொழிலாளர்களில் 85 வீதமானோர் தோட்டங்களிலேயே குடியிருந்தனர். இவர்களில் 95 வீத மானோரோ அல்லது, அதற்கு மேலான வீதத்தினரோ இந்திய வம்சாவழித் தமிழர்கள். எனவே, இங்கே பெருந்தோட்டத் தொழிலாளர்கள் என்ற சொற்பதத்தின் கீழ் விவாதத்திற்கு உட்படுபவர்கள் இந்திய வம்சாவழித் தமிழர்களேயாவர்.
அட்டவணை 2.1 இலங்கை - பெருந்தோட்டங்களில் இனப் பரம்பல் - 1981
மாவட்டம் | மொத்த
தோட்ட இந்தியத் இலங்கைத் மொத்த சிங்க- ஏனைமக்கள் தமிழர் தமிழர் தமிழர் | ளவர் யோர் நுவரேலியா 312,057 74.0 18.0 92.0 6.3 1.7 பதுளை 161,344 | 77.2 13.3 90.5 7.6 1.9 கண்டி | 130,495 | 64.6 15.6 80.2 15.3 4.3 இரத்தினபுரி 107,569 78.1 8.7 86.8 11.7 2.5 கேகாலை | 54,908 69.1 13.9 83.6 16.3 0. களுத்துறை | 44,518 70.0 8.5 78.5 20.9 0.6 மாத்தளை 29,777 60.15 24.7 85.2 - 12.3 2.7 காலி 20,880 48.3 - 14.4 62.7 36.6 0.7 மாத்தறை 20,077| 61.6 1.6 73.2 26.3 0.5 மொனராகலை | 8,974 | 67.0 18.1 85.1 14.7 0.2
Source: Department of Census Statistics, General Report-1981 (1986)
(Colombo), P.82
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சமூக பொருளாதார நிலைமைகளை இனங்காணுவது இந்தக் கட்டுரையின் பிரதான நோக்கமாக இருப்பதனால், இலங்கையின் பிரதான பெருந் தோட்ட மாவட்டங்களிலுள்ள தோட்ட மக்கள் தொகையின் இன அமைப்பினைப் பற்றிய சில விவரங்கள் இங்கே தரப் படுவது பொருத்தமாக அமையும் எனலாம். அட்டவணை 2.1இல் காட்டப்பட்டுள்ள பத்து பிரதான பெருந்தோட்ட
28

மலையகத் தமிழ் மக்களின்.
இலங்கை - பெருந்தோட்ட மக்கள் தொகையின் இனரீதியான
பரம்பல் - 1981(மாவட்டரீதியாக)
ւաւ-ւb - 1 % இலங்கைத் தமிழர் 100 ) இந்தியத் தமிழர்
後 ஏனையோர்
"| 攤日目目日散 豹 卧 广 翻 科 獼 斷
60 * 斷
40
20
O

Page 29
இன்றைய மலையகம்
மாவட்டங்களில் 7 மாவட்டங்களிலே 80 வீதத்திற்கு மேலான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இலங்கைத் தமிழர்களாகவோ அல்லது இந்தியத் தமிழர்களாகவோ இருந்திருக்கின்றனர் (படம் 1). மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி இலங்கை அல்லது, இந்தியத் தமிழர்கள் பற்றிய வரையறை தெளிவற்றதாக உள்ளது. பெருந்தோட்டங்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் எனப்படுபவர்கள் உண்மையிலேயே இந்தியத் தமிழர்களே யாவர். இவர்கள் இலங்கைக் குடியுரிமையினைப் பெற்ற காரணத்தினாலே தம்மை இலங்கைத் தமிழர்கள் எனப் பதிவு செய்து கொண்டுள்ளனர். இலங்கைத் தமிழர்கள் எனப்படு பவர்கள் தமது இரண்டு அல்லது மூன்றுக்கு மேற்பட்ட மூதாதையின் வாழ்விடத்தை இலங்கையின் வடகிழக்கு மாகாணப் பகுதிகளில் ஏதேனும் ஒன்றுடன் தொடர்புபடுத்தக் கூடியவர் களாக இருக்க வேண்டும். இலங்கை குடியுரிமை பெற்றவர்கள் இலங்கைத் தமிழர்களாகப் பதிவு செய்து கொள்ளப்பட்டதனால் உண்மையான அளவை விட இலங்கைத் தமிழ் மக்களது எண்ணிக்கை கூட்டிக் காட்டப்பட்டுள்ளது.
1948-ஆம் ஆண்டு இந்தியர், பாகிஸ்தானியருக்கான (பிரஜாவுரிமை) சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், 1964-ஆம் ஆண்டளவில் 975,000 நாடற்றவர்கள் இருந்தனர். வாக் குரிமை நீக்கப்பட்டமையினாலும், பிரஜாவுரிமை இன்மை யினாலும் இந்தியத் தமிழர்கள் இலங்கையிற் பல்வேறு பொருளா தார இடையூறுகளை எதிர்நோக்கிய அதே வேளையில் வேறு பல இன்னல்களையும் எதிர்நோக்க வேண்டியதாயிற்று. நாடற்ற வர்கள் உயர்கல்வியினைப் பெறுவதிற் பல பிரச்சனைகளை எதிர்நோக்கினர். அரசாங்கத் துறையில் தொழில்கள் பெற முடியாது போயிற்று. தனியார் துறையிலும் கூட, பல்வேறு பிரச்சனைக்ள் எழுந்தன. இவற்றை விட வீடுகட்ட அரசாங்கத் தாற் கொடுக்கப்படும் நிலம் இவர்களுக்கு நிராகரிக்கப்பட்டது. நிலச்சீர்திருத்த சபையினால் நிலப்பங்கீடு செய்யப்பட்ட போது பரம்பரையாக அந்நிலங்களில் வாழ்ந்த இந்தியத் தொழிலாளிகள் அந்நிலங்களில் இருந்து விரட்டியடிக்கப் பட்டனர். பல்வேறு கிராமிய அபிவிருந்தித் திட்டங்களிலும் அவர்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டனர். இவற்றை விட அவர்கள் நாட்டை விட்டு வெளியே பிரயாணங்களை மேற் கொள்ளத் தேவையான கடவுச்சீட்டு வழங்கத் தடை செய்யப் பட்டிருந்தனர். (1977 ஆம் ஆண்டு தொடக்கம் அவசரகால சான் றிதழ்கள் வழங்கப்படலாயின) இத்துடன் இவர்கள் நிலங்களைக்
30

மலையகத் தமிழ் மக்களின்.
கொளவனவு செய்ய முடியாது போயிற்று. வியாபாரம் செய்யத் தம்மைப் பதிவு செய்ய முடியாதிருந்தது. (அண்மையில் நாடற்ற வர்கள் வியாபாரப் பதிவுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்).
இவ்வாறு இலங்கையில் வாழ்ந்த இந்தியத் தமிழர்கள் திட்ட மிட்ட வகையிலோ அல்லது வேறு காரணங்களாலோ, இங்கு இயற்றப்பட்ட சட்டங்கள் மூலமாகத் தேசிய நீரோட்டத்திலும் தேசிய சமூக அமைப்பிலும் கலக்க முடியாத வகையிலும், அரசியலில் பங்கெடுத்துத் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய முடியாத வகையிலும் ஒதுக்கப்பட்டிருந்தனர். இதனாற் பெரும் பான்மையான இந்தியத் தமிழர்கள், வாழ்க்கையில் முன்னேற முடியாதவாறு தாழ்ந்த வாழ்க்கைத் தரத்தினுடைய தோட்டத் தொழில்களிலேயே தங்கியிருக்க நிர்பந்திக்கப்பட்டனர். சமூக ரீதியில் உயர்நிலை நோக்கிய முன்னேற்றங்களுக்கு வாய்ப்புகள் மூடப்பட்டிருந்தன. மிகச் சிறியளவில் அங்கொன்றும் இங் கொன்றுமாக வியாபார வாய்ப்புகள் மாத்திரமே அவர்களுக்குக் கிடைத்தன.
பொருளாதார நிலைமை
பெருந்தோட்ட வரலாற்றின் ஆரம்ப காலங்களிற் பெரும்பாலும் தொழிலாளர்கள் யாவருமே கங்காணி என் பவரிடம் கடன்பட்டவர்களாகவே இருந்தனர். இந்தக் கங் காணிமார் இலங்கையில் பெருந்தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் முக்கியமான இடத்தினை வகித்து வந்திருக்கின் றனர். இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்து வந்த தொழிலாளர் களுக்கான கட்டுப்பாட்டாளர், இத்தொழிலாளர்கள் பற்றி குறிப் பிடுமிடத்து கடனில் பிறந்து, கடனில் வளர்ந்து கடனிலேயே மடிந்திருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். இத்தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகியிடமும் கடன்பட்டிருந்தனர். அக்காலத்தில் தொழிலாளர்களின் வேதனங்கள் கங்காணியிடமே கொடுக்கப் பட்டன. வேதனங்கள் ஒழுங்காக வழங்கப்படவில்லை. சில தோட்டங்களில் மாதக்கணக்கிலே தொழிலாளர்களுக்கு வேத் னங்கள் வழங்கப்படவில்லை.
வேதனங்கள்:
இந்திய அரசினது வற்புறுத்தல்களினால் 1927-ஆம் ஆண்டு தோட்டத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச வேதனைச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி, பெருந்தோட்டங்
3.

Page 30
இன்றைய மலையகம்
களின் வேறான பண்புகளுக்கு ஏற்ற வகையில், ஒவ்வொரு ப்குதிக்கும் குறித்த வகையில் குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயிக் கப்பட்டது. அதாவது, உயர்நிலம், இடைப்பட்ட நிலம், தமிழ் நிலம் ஆகிய பெருந்தோட்ட பிரிவுகளுக்கு உரிய வகையில் வேதனங்கள் நிர்ணயிக்கப்பட்டன. அத்துடன் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்குரிய வேதனங்களைத் தொழிலாளர்களிடமே கொடுத்தல் வேண்டும் என்பதும் வற்புறுத்தப்பட்டது. இருந்த போதிலும், 1930களில் ஏற்பட்ட பொருளாதார மந்தம் காரண மாகத் தொழிலாளர்களின் வேதனங்கள் குறைக்கப்பட்டன.
1941-ஆம் ஆண்டிற் சம்பள நிர்ணய சபைச் சட்டம் நிறைவேற்றப்பட்டதோடு, பெருந்தோட்ட மாவட்டங்கள் ஒவ் வொன்றிற்கும் தனித்தனி சம்பள நிர்ணய சபைகள், உருவாக்கப் பட்டன. தொழிற் சங்கங்கள் முதலாளிகள் பிரநிதிகள், ஆகியார் இச்சபைகளில் அங்கம் வகிப்பர். தேயிலை, இரப்பர், தென்னை தோட்டங்களில் தோட்டங்களிடையோ, அல்லது பிரதேசங் களிடையோ சம்பளங்களில் வேறுபாடுகள் காணப்படவில்லை. அடிப்படைச் சம்பளத்துடன், வாழ்க்கைச் செலவு அதிகரிப் பினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களைச் சமன்படுத்தும் வகையில் சில மேலதிக படிகளும் சேர்க்கப்பட்டிருந்தன. அவர்களுக்கு மாதாந்த சம்பளம், வேலை செய்த நாட்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டிருந்தது. ஒரு நாளைக்குச் செய்ய வேண்டிய வேலையின் அளவு நிர்ணயிக்கப் பட்டிருந்த போதிலும், அது மாவட்டத்திற்கு மாவட்டமும், பருவத்திற்குப் பருவமும் வேறுபாடுகளைக் கொண்டிருந்தது. புல் வெட்டுவதற்கான ஒப்பந்த ரீதியான சம்பளங்களும், இடத் திற்கு இடம் பயிரின் பருவகாலச் செழிப்புக்கு ஏற்ப வேறு பட்டிருந்தன
மாதத்திற்கு ஒரு முறை கொடுக்கப்பட்ட வேலை நாட் களுக்கு மாத்திரம் நிர்ணயிக்கப்பட்ட வேதனங்களின் அடிப் படையில், கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன. பயிரின் இயல் புகள், பிரதேசம், பருவ காலம், குறித்த தோட்டத்தின் ஏக்கருக் குரிய உற்பத்தி என்பவற்றிற்கு ஏற்பவே, வேலை நாட்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். பெருந்தோட்டங்கள் தேசீய மயமாக்கப்படுவதற்கு முன்னர் 40 முதல் 50 வீதம் வரையிலான தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு கிழமையில் 3 நாள் வேலையே வழங்கப்பட்டது என்றும், 40 வீதமான தோட்டங் களில் கிழமைக்கு 4 நாள் வேலையும், 10 வீதமான தோட்டங்
32

மலையகத் தமிழ் மக்களின்.
களில் ஐந்து நாள் அல்லது அதற்கு மேல் வேலையும் வழங்கப் பட்டது என்றும் அறிய முடிகிறது. 1978-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உயர் பகுதியில் உள்ள நான்கு தோட்டங்களில் 16.4 முதல் 21.9 நாட்களும், இடைப்பகுதித் தோட்டங்கள் ஐந்தில் 17.0 முதல் 19.3 நாட்களும், தாழ்பகுதித் தோட்டங்கள் மூன்றில் 13.2 முதல் 15.5 நாட்களும் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப் பட்டிருந்தது. (ரச்சல் கூறியன் 1981)
கடந்த 20 ஆண்டுகளில் மாதத்துக்குச் சராசரியாக ஆண் களுக்கு 16.0 முதல் 22.2 நாட்களும் பெண்களுக்கு 17.2 முதல் 23.3 நாட்களுமே வேலை வழங்கப்பட்டிருந்தது. இவ்விபரங்கள் அட்டவணை 2.2இல் காட்டப்பட்டுள்ளன.
அட்டவணை 2.2 இலங்கை - தேயிலை தோட்டங்களில் வேலை நாட்கள் (1964-1985)
(தொழிலாளர் ஒருவருக்கு மாதம் ஒன்றிற்கு வழங்கப்பட்டிருந்த வேலை நாட்கள்)
ஆண்டு ஆண்கள் பெண்கள்
1964 19.3 18.6 1974 16.0 17.2 1977 20.0 19.0 1982 16.0 I5.5 1984 I 7.5 18.5 1985 22.2 23.3
Source: Department of Labour Annual Report 1964 to 1985.
தேயிலைத் தோட்டங்களினது பயிர்களின் வருடாந்த உச்ச விளைவுக் காலமான இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தவிர்ந்த ஏனைய மாதங்களிலே தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்தளவு நாள் வேலையே கொடுக்கப்பட்டு வந்தது. 1984-ஆம் ஆண்டில் அவர்களுக்கு மாதாந்தம் 26 நாள் வேலைக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டது. ஆயினும், பல தோட்டங்களில் இது இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
1944-ஆம் ஆண்டிற்கும் 1987 ஆம் ஆண்டிற்கும் இடைப் பட்ட காலப்பகுதியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின்
33 3

Page 31
இன்றைய மலையகம்
வேதனங்களிற் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. கடந்த 40 வருட காலத்திலே பெருந்தோட்ட வேதனங்களில் ஏற் பட்ட மாற்றங்கள் அட்டவணை 2.3இல் தரப்பட்டுள்ளது.
அட்டவணை 2.3 இலங்கை - பெருந்தோட்ட நாளாந்த வேதனங்கள் (ரூபாயில்)
வருடம் ஆண் பெண் சிறுவர்கள்
1944க்கு
முன்னர் 0.41 0.37 0.25 1947 1.72 1.38 1.12 1954 2.43 1.93 1.63 1967 3.01 2.45 2.13 1977 4.56 3.70 3.23 1984 24.23 24.23 1987 33.92 33.92 1989 37.00 37.00
Source: Labour Department Annual Reports-(1945-1989).
கடந்த பத்தாண்டுகளில் பெருந்தோட்டத் தொழிலாளர் களின் குறைந்தபட்ச வேதனங்களில் ஐந்து முறை அதிகரிப்புச் செய்யப்பட்டது. (தொழிற் திணைக்கள அறிக்கை) இவற்றில் 1984-ஆம் ஆண்டு செய்யப்பட்ட 44 வீத அதிகரிப்பு முக்கிய மானது. நாடு முழுவதிலும் உள்ள பெருந்தோட்டங்களில் ஏற் பட்ட வேலை நிறுத்தத்தைச் சமாளிக்க அரசாங்கமே நேரடியாக இதில் தலையிட்டு வேதன அதிகரிப்பை வழங்கியதோடு, நீண்ட காலமாக கோரப்பட்டு வந்த ஆண்களுக்குச் சமமாகப் பெண் களுக்கும் வேதனங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக் கையும் நிறைவேற்றப்பட்டது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கடந்த காலங் களில் பலமுறை வேதனங்கள் அதிகரிக்கப்பட்டதென்பது உண்மை தான். எனினும், நாட்டில் ஏற்பட்ட பணவீக்கம் அதனால் ஏற்பட்ட வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பு வீதம் என்பனவற்றுடனும், நாட்டின் ஏனைய தொழிலாளர்களுக்கு (உடலுழைப்பு) வழங்கப் பட்ட மாதாந்தச் சம்பளங்கள், அரசாங்கத்தின் ஒவ்வொரு வரவு செலவுத் திட்டத்திலும் கொடுக்கப்படும் சம்பள உயர்வுகள்
34

மலையகத் தமிழ் மக்களின்.
போன்றவற்றுடன் ஒப்பிடுகையில், இவர்களுடைய வேதனங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.
இத்தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உணவு மானியங்கள் நிறுத்தப்பட்டன. அது அவர்களுடைய மொத்த வருமானத்தைப் பெரிதும் பாதித்தது. அட்டவணை 4-இல் இவர்களின் சில தெரிவு செய்யப்பட்ட வருடங்களிலும், மாதாந்த வருமானம் 1952-ஆம் ஆண்டின் விலைகளிற் கொண்டிருந்த பெறுமான அடிப்படையிற் அட்டவணை 2.4 காட்டப்பட்டுள் ளது.
அட்டவணை 2.4 இலங்கை - தேயிலைத் தொழிலாளர்களின்
வருமானம் (1971-1985)
தனி நபருக்குரிய மாதாந்த 1952 ஆம் ஆண்டு விலைகளில் வருமானம் (ரூபாயில்) தனி நபருக்குரிய மாதாந்த
சராசரி வருமானம் (ரூபாயில்)
ஆண்டு ஆண் பெண் 1952=100
1971 64.68 67.05 111 1975 128.96 87.00 131 1980 285.97 192.00 18 I955 | 624.52 | 599.I5 262 نہ
Source: Labour Department, Annual Reports-1971 to 1985.
தொழிலாளர்களின் வருமானத்தைப் பற்றிய ஆய்வீஇ 1979-ஆம் ஆண்டுக்கு முன்னர் கிடைத்து வந்த உணவு மானியங் முக்கியமானவை. 1979-ஆம் ஆண்டு இலங்கையில் "உ முத்திரை" என்னும் வறுமை நிவாரண முறை அரசாங்கத்த நடைமுறைப்படுத்தப்பட்டது. 1965-ஆம் ஆண்டு வன்ர அரசாங்கம், தொழிலாளர்களுக்கு அரிசி மானியத்தை வழங் கியது. அதில் அரிசியின் உண்மை விலையில் ஒரு பகுதியினை அரசாங்கம் செலுத்தியது. அந்தச் சகாய விலையினால் தொழி லாளர் ஒருவருக்கு 1960-ஆம் ஆண்டில் ரூபா 61.36-ம் 1965-ஆம் ஆண்டில் ரூபா 65.52-ம் இலாபமாக கிடைத்தது. 1967-ம் ஆண்டு முதல் இலவச அரிசி வழங்கப்பட்டது. அதனால் 1967-ஆம் ஆண்டில் ரூபா 59/28-ம், 1969-ல் ரூபா 64/48-ம் இலாபமாயிற்று. 1970 முதல் 1978-ஆம் ஆண்டுவரை அரிசி இலவசமாகவும், மானிய விலையிலும் வழங்கப்பட்டது. இதனால் 5 அங்கத்
35

Page 32
இன்றைய மலையகம்
தவர்களைக் கொண்ட தொழிலாளர் குடும்பம் ஒன்று மாதாந்தம் 1974-ஆம் ஆண்டில் ரூபாய் 105/=யும் 1979-ஆம் ஆண்டில் ரூபாய் 53/33 சதத்தையும் இலாபமாகப் பெற்றுக் கொண்டனர். இது தொழிலாளர் குடும்பத்தின் மாதாந்த வருமானத்தில் 20 முதல் 30 வீதம் வரையிலான பெறுமதியினைக் கொண்டதாக மதிப்பிடப்பட்டிருந்தது. உணவு முத்திரை வழங்கப்பட்டதோடு, அதற்கு முன்பிருந்த உணவு மானியங்கள் தோட்டத் தொழிலாளர் களுக்கு நிறுத்தப்பட்டது. உணவு முத்திரை முறையின் சலுகைகள் இவர்களுக்கு மறுக்கப்படும் வகையில், உணவு முத்திரை பெறத் தேவையான தகுதிகளின் எல்லைகள் நிர்ணயிக்கப் பட்டிருந்தன.
தனி நபர் வருவாய்:
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தலைக்குரிய வருவாய் சில அனுமானங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுடைய குடும்பங்களிலே தொழில் புரிவோர் அளவு 2.4 என்றும், மொத்தம் 5 பேர் வாழ்கின்றனர் என்றும், தொழிலாளர்கள் மாதாந்த 26 நாட்களுக்கு உழைக்கின் றனர் என்றும் அனுமானிக்கப்பட்டது. இதனடிப்படையில், தனி தபருக்குரிய வருடாந்த வருமானம் 5242 ரூபாவாகும். இது 131 அமெரிக்க டாலருக்குச் சமமானதாகும். அவர்கள் பெறுகின்ற இலவச வீடு (வருடாந்த பயன் ரூபா 900/-) இலவச விறகு (வருடாந்த பயன் ரூபா 900/-) மானிய விலை தேயிலை (வருடாந்த பயன் ரூபா 360/-) என்பவற்றின் நன்மைகளுக்கு பணப் பெறுமதி கொடுத்து மதிப்பீடுகள் செய்தாலும் அவர் களுக்கு தனிநபருக்குரிய வருட வருமானம் ரூபா 5600/= ஆகவே காணப்படுகிறது. இது 140 அமெரிக்க டாலருக்குச் சமமானதாகும். இலங்கையின் நகரப் பகுதிகளில் தனி நபரது வருமானம் ரூபா 11.654/- ஆகவும், கிராமியப் பகுதிகளில் ரூபா 8572/- ஆகவும் 1981-ஆம் ஆண்டில் காணப்பட்டமை, குறிப்பிடப்பட வேண்டிய தாகும். 1986-ஆம் ஆண்டில் சராசரி இலங்கையரது வருடாந்த வருமானம் அமெரிக்க டொலர் 375 ஆக இருந்ததாக குறிப் பிடப்படுகின்றது. இலங்கையின் பெருந்தோட்ட மக்களுக்கான தலைக்குரிய வருவாய் 140 டொலர்கள் மாத்திரமேயாகும். இவ் வாறு பெருந்தோட்டங்களில் தொழிலாளர்களில் வேதனங்கள் குறைந்தனவாகக் காணப்படுவதற்குப் பெருந்தோட்டங்களே காரணமாகும். உற்பத்தியினைச் சந்தைப்படுத்துவதற்காக உற்பத்திச் செலவை இயன்றளவுக்குக் குறைந்த மட்டத்தில் வைத்திருப்
36

மலையகத் தமிழ் மக்களின்.
பதற்கு முயல்வது பெருந்தோட்டப் பொருளாதாரத்தின் இயல் பாகும.
பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் பெருந்தோட்ட அமைப்பு தொழிலாளர்களுக்குக் குறைந்த தர வாழ்க்கையையே அளிக்கிறது என்பதனையும், இந்நிலையினை மாற்றி வாழ்க் கைத் தரத்தினை உயர்த்துவதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவு என்பதையும் ஏற்றுக் கொண்டுள்ளனர். பெருந்தோட்டங்கள் ஒரு மூடிய இயல்பினதாகச் செயல்படுவது, தொழில் சந்தையில் போட்டி ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளைத் தவிர்த்து அவற் றினைப் பாதுக்கக்கின்றன. இதனால் வேதனங்களைத் தொடர்ந்து குறைவாகவே வைத்திருக்க முடிகின்றது. குறுங்காலத்தில் கூடிய இலாபத்தினைப் பெற்றுக் கொள்வதற்காகப் பெருந்தோட்டங்கள் அவற்றின் சமூக உள்ளமைப்புகளில் இயன்றளவு சிறிதள விலான முதலீட்டினையே செய்கின்றன. முன்னர் இத்தகைய நிலைமைகளே பெருந்தோட்டங்களில் தனியார் நிருவாகத்தின் கீழ் காணப்பட்டது. தற்போது அரசாங்க நிர்வாகத்தின் கீழும் இத்தகைய நிலைமைகளே காணப்படுகின்றன.
கல்வி மற்றும் சேவை வசதிகள் என்பன பெருந்தோட்ட மக்களுக்குப் போதியளவில் கிட்டவில்லை. வீட்டுவசதிகள், சுகாதார வசதிகள் என்பனவும் மிகவும் தாழ் நிலையிலேயே காணப்படுகின்றன. இவைய்ாவும் பெருந்தோட்டத் தொழி லாளர்களது வறுமை நிலையினை எடுத்துக் காட்டும் குறிகாட்டி களாக உள்ளன.
வேலையின்மை:
இலங்கையின் பொதுவான பொருளாதார பிரச்சினைக்கு அடிப்படையாக அமைவது வேலைப் படைக்கு வேலையின்மை யேயாகும். இப்பிரச்சினை பெருந்தோட்டங்களிலும் காணப் படுகின்றது. அதனால், இலங்கையிற் காணப்படுகின்ற வேலை யில்லாதோர் விகிதாசாரத்தைவிட, இலங்கையின் பெருந்தோட் டங்களில் வேலையில்லாதோர் விகிதாசாரம் குறைவாகும். 1981/82 ஆம் ஆண்டில் நாட்டின் வேலைப்படையினரில் 11.7 வீதமானோர் வேலையற்றவராக இருந்தனர். அதே வருடத்தில் இந்தியத் தமிழர்களிடையே வேலையில்லாதவர்களின் தொகை 4.9 வீதமாயிற்று ஆனால் கரையோரச் சிங்களவர் மத்தியில் வேலையற்றோர் அவ்வருடத்தில் 14.6 வீதமாக இருந்ததாக இலங்கையின் மத்திய வங்கி அறிக்கை (1986) கூறுகிறது. இதற்குப்
37

Page 33
இன்றைய மலையகம்
பல்வேறு காரணங்கள் உள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் ஏறத்தாழ 450,000 பேர் பெருந்தோட்டங்களில் இருந்து இந்தியா வுக்குத் திருப்பியனுப்பப்பட்டு விட்டனர். இது வருடா வருடம் ஏற்பட்ட குடிப்பெயர்வாகும். இவ்வாறு அனுப்பப்பட்ட வர்களின் எண்ணிக்கை விபரங்கள் அட்டவணையில் (1.5)-இல் காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு ஏறத்தாழ, 10 இலட்சம் மக்கள் வாழ்ந்த பிரதேசத்தில் இருந்து 4/, இலட்சம் பேர் குடிபெயர்ந்ததால் புதிதாக வேலைக்கு வருவோருக்கு வேலை வழங்குவதால் அங்கு பிரச்சினையாயிருக்கவில்லை. ஆனாலும், பெருந்தோட்டத் துறையில் உள்ள இச்சமூகத்தினரின் பிரச்சினை கீழுழைப்புப் பிரச்சினையாகும். இங்கு கல்வி வளர்ச்சி பெருமளவில் ஏற் படவில்லை. மிகச்சிறியளவினரே கல்வித் தகுதியினை அடைந் துள்ளனர். 1985/86-ஆம் ஆண்டு காலப்பகுதியில் தோட்டப் புறங்களில் சுமார் 15 வீதமானோர் இரண்டாந்தர கல்வி நிலையினை எய்திருந்தனர். இவர்கள் செய்யக்கூடியதான எழுதுவினைஞர், வேலைக்கள மேற்பார்வையாளர், குழந்தை பராமரிப்பு நிலையத்தாதிகள், தொழிற்சாலைச் சிறு உத்தி யோகங்கள் போன்றதான பெருந்தோட்டங்களில் கிடைக்ககூடிய தொழில்கள் தானும் பெருந்தோட்டத் தொழிலாளர்களில் கல்வி பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக. 11ம் வகுப்பு வரை கல்வி பயின்றுள்ள ஆயிரக்கணக் கான இளைஞர்களும், யுவதிகளும், தோட்டங்களில் விவசாயத் தொழிலாளர்களாகவே கீழுழைப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் யாதெனில், ஏனைய சமூகங்களில் இத்தகைய கல்வித்தகுதியைப் பெற்றவர்கள் விவசாயத் தொழிலாளர்களாகவோ அல்லது ஏனைய கீழுழைப்பு களுக்கோ செல்லாது வேலையற்றவர்களாகவே பெரும்பாலும் காணப்படுகின்றனர். எனவே, அச்சமூகங்களில் வேலையற்றோர் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகின்றது. அத்துடன் அவர்கள் தமது பெற்றோரிலே தங்கி வாழுவதற்கான குறைந்த பட்ச வசதியினையாவது கொண்டிருக்கின்றனர். ஆனாற் பெருந் தோட்டங்களிலே தங்கி வாழக்கூடிய வசதிகள் இல்லாமையால் ஏதாவது தொழிலைச் செய்தாக வேண்டிய நிர்ப்பந்தம் காரண மாகக் கீழுழைப்பில் ஈடுபடுகின்றனர். இவ்வேலையின்மை இளைஞர்கள் மத்தியில் மனவிரக்தி, வெறுப்பு போன்ற உணர்வுகளை தோற்றுவிக்கவும் காரணமாக அமைகின்றது.
38

மலையகத் தமிழ் மக்களின்.
சொத்துரிமை:
பெருந்தோட்டங்களிலே தொழில்புரிந்த நாடற்றவர் களிடையே சொத்துரிமை பற்றிய விவாதம் அர்த்தமற்றதாகும். ஏனெனில், இலங்கையில் பிரஜாவுரிமை இல்லாதோர் நிலம் வாங்க முடியாது. எனவே நகரங்களிலும், கிராமங்களிலும் வாழ்ந்த விரல்விட்டு எண்ணக்கூடிய அளவினரான ஒரு சிலரைத் தவிர, ஏனையோர் நிலவுரிமையோ தாம் வாழும் வீடுகளுக்கு உரிமை யுடையராகவோ இருக்கவில்லை. வடக்கு, கிழக்கு மாகாணங் களிற் சென்று குடியேறியோர் மத்தியிலும் நிலவுரிமை பெரும் பாலும் இல்லை. மிகச்சிறிய அளவினரே சொந்தமாக நிலம் வைத்திருந்தனர். 1964-ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட 1,34,000 பிரஜாவுரிமை பெற்றவர்கள் மற்றும் வம்சாவளிப் பிரஜைகளாகக் கருதப்பட்டவர்கள் ஆகியோர் மத்தியிலேயே நிலச் சொத்துரிமை காணப்பட்டது. அதுவும் பிரஜாவுரிமை பெற்ற பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மத்தியிற் பொருளா தார வசதியின்மை காரணமாக நிலவுரிமை காணப்படவில்லை. அதனைவிட வேறுசில காரணங்களும் முக்கியமானவையா யிருந்தன. தோட்டத் தொழிலாளர்கள் பிரஜாவுரிமை பெற்ற போதும், தோட்ட நிலங்களை வாங்க முடியவில்லை. அவை பிரித்து விற்கப்படக்கூடாதென்று சட்டம் காரணமாக அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் நிலம் விற்பனைக்கு வரவில்லை. கிராமங் களில் சிங்கள மக்கள் மத்தியிற் சென்று நிலம் வாங்கக்கூடிய சுமுகமான அரசியல் சூழ்நிலை இருக்கவில்லை. நகரப் பகுதி களில் நிலத்தின் விலை அதிகமாக காணப்படும் காரணமாக தொழிலாளர்களுக்கு நிலம் வாங்க முடியாதிருந்தது. அதேநேரத்தில், அரசாங்கம் நிலமற்ற விவசாயிகளுக்கு நில ஒதுக்கீடு செய்யும் போது இவர்களைப் புறக்கணித்தே வந்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையிற் பாரம்பரியமான சமூகப் பெறுமானங்கள் காரணமாக சிறியளவிலே தொழிலாளர்கள் மத்தியில் தங்க ஆபரணங்களிலே தமது சேமிப்பை முதலீடு செய்யும் பழக்கம் காணப்பட்டது. ஆனால், அத்தகைய சிறு சேமிப்பு களும் நிலச்சீர்திருத்தக் காலத்தில் ஏற்பட்ட "பஞ்சம்" பின்னர் 1977, 1981, 1983 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட இனக்கலவரங்கள் என்பவற்றினால் அழிந்து விட்டதாகவே கருத வேண்டியுள்ளது.
1986, 1988-ஆம் ஆண்டுகளில் இயற்றப்பட்ட பிரஜா வுரிமைச் சட்டங்களின் விளைவாக, நாடற்றவர் என்ற பிரிவினர்
39

Page 34
இன்றைய மலையகம்
இந்த நாட்டில் இருக்கமாட்டார்கள். இச்சட்டம் முழுமையாக அமுல் செய்யும் பட்சத்தில் நிலைமைகள் சீரடையலாம். இதுவரை காலம் அரசாங்கத்தின் நிலப்பங்கீட்டுத் திட்டங் களிலே தோட்டத் தொழிலாளர்கள் குறிப்பாக, இந்திய வம்சாவளித் தமிழர்கள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஆனால், 1988ஆம் ஆண்டு அட்டனுக்கு 5 மைல் தூத்தில் உள்ள சென். ஹெலியாஸ் என்னும் அரசுக்குச் சொந்தமான தேயிலைத் தோட் டத்தில் 189 ஏக்கர் நிலம் 63 தொழிலாளர் குடும்பங்களுக்குதலா 3 ஏக்கர் வீதம் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. வெற்று நிலங்களில் நன்னீர் மீன்பிடி முயற்சி, சுமார் 40 குடும்பங்களினாற் செய்யப் படுகிறது. இதுவே அரசுக்கு சொந்தமான தேயிலை நிலத்தை முதன்முதலாக இந்திய தொழிலாளர்களுக்குப் பிரித்து கொடுத் துள்ள முன்னேற்றகரமான சிந்தனை மிக்க நடவடிக்கையாகும். நிலத்தின் உரிமைக்கான ஒப்பனை இப்போது (1990) தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த முன்னோடித் திட்டத்தினைத் தொடர்ந்து இவ்வாறான நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட்டால் இச்சமூகத் திற்கு பெரும் நன்மைகள் ஏற்படலாம்.
வீட்டு வசதி
உலகின் எல்லாவித சூழல்களிலுமே அத்தியாவசியமான மூன்று அடிப்படை வசதிகளுள் வீட்டுவசதியும் ஒன்றாகும். இலங்கையின் தேயிலைத் தொழிலின் ஆரம்ப கால முதலாகவே தோட்டத் தொழிலாளர்களின் வீட்டு வசதி மிகவும் தாழ்ந்த நிலையிலும், பின் தங்கியதாகவும் இருந்து வருகிறது. தேயிலைத் தொழிலின் இயல்பின் காரணமாக, தோட்டத்திலேயே தங்கி வாழும் தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். எனவே தேயிலைத் தோட்ட நிருவாகம் வேறு வழியின்றி வீடு என்ற பெயரில் ஏதாவது ஒரு வகைத் தங்குமிட வசதிகளைத் தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருந்தது. அதே நேரத்தில் தமது கிராமங்களில் இருந்து பல நூறு மைல்களுக்கு அப் பால் சர்வதேச எல்லையினால் பிரிக்கப்பட்ட பிரதேசத்தில் உள்ள பெருந்தோட்டங்களிலே உள்ள தொழில்களுக்காக வந்து குடியேறிய தொழிலாளர்களும் வேறு வழியின்றித் தோட்ட நிருவாகத்தினால் வழங்கப்பட்ட லைன் வீடு" களிற் கடந்த 150 ஆண்டு காலமாக வாழ்ந்து வருகின்றனர். படிப்படியாக, குடி பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் நிரந்தர தொழிலாளர்களாக மாறிய போதிலும் கூட, கோப்பிக் காலம் முதலாக இருந்து வந்த லைன் வீடுகளின் அமைப்பில் எதுவித மாற்றங்களும் ஏற்பட
40

மலையகத் தமிழ் மக்களின்.
வில்லை. அவை ஒவ்வென்றும் 18 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்ட சிறிய வாழ்விடங்களாகும். பெருந்தோட்டங்களை ஏற் படுத்தியவர்கள் அதிலே தொழிலாளர்களாகப் பணி புரிபவர்கள் சாதாரண வசதிகளுள்ள வீடுகளிலாவது குடியேற்றப் பட வேண்டும் என்று சிந்திக்கவில்லை.
தமக்குப் பெருமளவு செலவினங்களை ஏற்படுத்தாத லைன் வீடுகளையே இவர்கள் கட்டினர். இத்தகைய வீடுகள் அமைக்கக் கூடாதென அரசாங்கம் 1950-ஆம் ஆண்டுகளிலேயே சட்டங்களை இயற்றி உள்ளது. இருந்த போதிலும், 40 ஆண்டு களின் பின்னரும் தோட்டங்களில் லைன் வீடு அமைப்புகளே பிரதானமானவையாக இருக்கின்றன. சிதறிய முறையில் தனித் தனி அல்லது இரட்டை வீடுகளை ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஏற்ற முறையில் அமைப்பதனால் நிருவாகம் பின்வரும் இரண்டு பிரச்சினைகளை எதிர் நோக்க வேண்டியிருக்குமென கருதப் படுகிறது.
(அ) வீட்டு வசதிக்காக பெரும் முதலீடு ஒதுக்கப்பட வேண்டும். (ஆ) தொழிலாளர்கள் மீதான மத்தியப்படுத்தப் பட்ட கட்டுப்பாடு தளர்ந்து விட நேரிடும்.
எனவே, தோட்ட நிருவாகம் வீட்டு வசதிகளை அபிவிருத்தி செய்வதில் அக்கறை செலுத்தவில்லை.
லைன் வீடுகள் இரண்டு வகையின. ஒன்று: ஒன்றன் பின் ஒன்றாக அமைந்த லைன் வீட்டமைப்பு: அடுத்தது: சமையல் கட்டுடனான ஒற்றை வீட்டு லைன் வீடுகள். இவை இரண்டு வகையுமே (10 x 8) 180 சதுர அடி இடப்பிரச்சினைக் கொண்ட வாழ்விடங்களாகும். அதில்தான் சராசரி 5 அங்கத்தவர் களைக் கொண்ட தொழிலாளர் குடும்பம் வாழ வேண்டி யுள்ளது. சில சந்தர்ப்பங்களில், இத்தகைய சிறிய வீடுகளிலே ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிப்பதும் உண்டு. ஒரு சில லைன் வீடுகளே மலசல கூட வசதிகளைக் கொண்டவை. அவையும் அமைந்திருக்கும் முறை, நெருக்கமான குடியிருப்புப் பகுதிகளுக்குப் பொருத்தமற்றவையாகக் காணப்படுவதால் அவை பயன் படுத்த முடியாதனவாய் உள்ளன. அது போலவே, குழாய் நீர் விநியோகமும் ஒரு சில தோட்டங்களிலேயே காணப்படு வதுடன், அவை சுத்திக்கரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுவ தில்லை.
41

Page 35
இன்றைய மலையகம்
1971 ஆம் ஆண்டு நடைபெற்ற சமூக பொருளாதார அளவீட்டின்படி, 85 சதவீதமான பெருந்தோட்டத் தொழி லாளர்கள் வாழ்ந்த வீடுகளில் 89 சதவீதமானவை லைன் வீடுகளே. தோட்ட மக்கள் தொகையில் 50 வீதத்திற்கும் மேற் பட்ட குடும்பங்கள் ஒரு அறை மாத்திரம் கொண்ட வீடுகளி லேயே வாழ்ந்தனர் (படம் 2, அட்டவணை 2.5).
அட்டவணை 2.5
இலங்கை - பெருந்தோட்ட வீடுகளின் அளவு
வீடுகளின் அறைகள் குடும்பங்களின் வீதம்
1971 1981/82
1 அறை 50., 1 31.2 2 அறைகள் 33.3 45.4 3 அறைகள் 11.8 12.8 4 அறைகள் 3.0 7.2 5 அறைகள் 0.9 1.6 6 அறைகள் 0.9 1.7
Source: Central Bank of Sri Lanka, Social and Econimic, Statistics
Consumer finance Survey, 1971 and 1981/82.
இவ்வீடுகளிலும் பெரும்பான்மையானவை மிகவும் பழையனவாகி விட்டன. அவற்றில் பெரும்பாலானவை 1921 ஆம் ஆண்டிற்கும், 1945 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்திற் கட்டப்பட்டவை, அவை தொடர்ந்து ஒழுங்காகப் பராமரிக்க படாததாலும், பழுதுகள் உடனுக்குடன் திருத்தப் படாததாலும் பெருமளவு வீடுகள் பயன்பாட்டிற்கு பொருந்தாதனவாகப் போயின. இதனால், 1971 ஆம் ஆண்டிற்கும், 1981-ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்திற் பெருந்தோட்ட வீடுகளில் 8.1 வீதமானவை அழிந்து போயின.
பின்வரும் அட்டவணையில் (2.6) இலங்கையிற் பிற துறைகளிலே வீட்டு வசதிகளில் 1971 ஆம் ஆண்டிற்கும், 1981-ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஏற்பட்ட மாற் றங்கள் காட்டப்பட்டுள்ளன. (படம் 3 ).
42

மலையகத் தமிழ் மக்களின்.
LLib – 3
ultib - 2
19 - 1981
1971
%
டு வசதியும் மாற்றங்களும்
ris -
%. 1971
9- 198
ந்தோட்ட வீடுகளின் அளவு மாற்றம்
fiebes - (5
98.
杉ergazá 丝”
レ彩iミ 丝
| RN 丝Ķsoạrriųopgjorto
20
ựn ș +
10
05
吃įssoɖoeks” 9 (ợī£șozīmēj ps@p)tae w王N4yssodio oko g 丝グ#ssoɖɛɛkɛo # 丝
衫der
வீதம் 100
75
0
5
O
43

Page 36
இன்றைய மலையகம்
அட்டவணை 2.6 இலங்கை - வீட்டு வசதியும் மாற்றங்களும் (1971-1981)
துறை 1971 1981 மாற்றங்கள்
நகரம் 421,000 509,400 20.9% கிராமங்கள் 1,558,000 2,004,400 33.7% பெருந்தோட்டங்கள் 237,558 217,451 -8.5%
Source : Marga Institute, Housing in Shrillanka Colombo, (1985).
பெருந் தோட்டங்களிலே ஏற்படும் மக்கள் பெருக்கத்திற்கு ஏற்ப வீடுகள் பெருகாத அதே நேரத்தில் ஏற்கனவே இருந்த வீடுகளிற் சுமார் 8.5 வீதமானவை அழிக்கப்பட்டுள்ளன. எனவே அளவுக்கு மீறிய நெருக்கடியான முறையில் லைன் வீடுகளிலே தொழிலாளர் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. 1970 ஆம் ஆண்டு நடைபெற்ற நுகர்வோர் நிதிய அளவீட்டின் மூலம் பெருந்தோட்டங்களில் 75 சதவீதமானோர் இட நெருக்கடியுடன் வாழ்கின்றனர் என அறிய முடிகின்றது. இந்த நெருக்கடிப் பிரச் சனையின் அளவு அவ்வருடத்தில் நகரங்களில் 35 வீதமாகவும் கிராமங்களில் 37 சதவீதமாகவும் இருந்துள்ளன.
பெருந்தோட்டங்களின் 80 சதவீதமான வீடுகள் லைன் வீடுகளே, அவை தரத்தில் மிகவும் கீழ் நிலையில் இருப்பதுடன், காற்றோட்ட வசதியின்றியே காணப்படுகின்றன. வீட்டிற்குள் நுழைய உள்ள வழியே காற்றோட்டத்திற்கான ஒரே வழி, வீடுகளைச் சூழ்ந்து கழிவு நீரகற்றும் வசதிகளும் குறைவாகவே, உள்ளன.சுத்திகரிகப்பட்ட நீர் விநியோகம் இல்லை. அதே நேரத்தில் முன் கூறியவாறு ஒரு சில தோட்டங்களிலேயே குழாய் நீர் வசதிகள் காணப்படுகின்றன. 1970 ஆம் ஆண்டிற் சர்வதேசத் தொழில் நிறுவனம் நடத்திய அளவீட்டின் மூலம் தோட்டப் பெண்களின் மிக முக்கிய பிரச்சினை வீடுகளிற் போதிய இட வசதியின்மையும், நீர் விநியோக வசதியின்மையும் என அறிய முடிகின்றது.
இடநெருக்கடி லைன் வீடுகளில் இன்றும் நிலவிவரும் ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது. 1989-ஆம் ஆண்டில் முடிவுற்ற இடைத்தர முதலீட்டுத் திட்டத்தின் மூலம் பெருந்தோட்டங்களின் வீட்டு வசதிகளில் மிகச் சிறிய முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது (அட்டவணை 2.7).
44

மலையகத் தமிழ் மக்களின்.
அட்டவணை 2.7 இடைத்தர முதலீட்டுத் திட்டம் (தொழிலாளர் வீட்டு வசதி 1985-1989)
வீட்டு வகை இலங்கைப் மக்கள் மொத்தம் பெருந்தோட்ட பெருந்தோட்ட
ட்டுத்தாபனம் அபிவிருத்திச் சபை புதுக்கட்டிடங்கள் 251 783 1,034 தரமுயர்த்தப்பட்டவை 396 692 1,088
Source: SLSPC and JEDB, General Reports-1985 to 1989.
நில்ச்சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் தோட்டங்கள் அரசாங்கத் தினால் சுவிகரிக்கப்பட்டதன் பின்னரும் கூட இந்நிலைமைகளிற் குறிப்பிடக்கூடிய அளவில் எதுவித மாற்றங்களும் ஏற்பட வில்லை. மாத்தறை மாவட்டம், நுவரெலியா மாவட்டம் ஆகியவற்றில் அமுல்செய்யப்பட்ட ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டங்களிற் பெருந்தோட்ட வீடுகளை விருத்தி செய்யும் செயல் திட்டங்கள் சிறியளவில் இருந்தன. பெருந் தோட்டங்களில் வாழும் மக்களின் தொகை 850,000 ஆகும். எனவே இத்தகைய ஒரு பெரிய மக்கள் தொகையின் வீட்டு வசதிகளைத் திருத்த எடுக்கப்பட்ட சிறிய அளவு நடவடிக்கைகள் எத்தகைய குறிப்பிடத்தக்க மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லை. தனியார்துறை நிருவாகத்தின்போது தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி வழங்கும் பொறுப்பு தோட்ட நிருவாகத்திடமே இருந்தது. அத்தோட்டங்களின் வீட்டு வசதிகளை விருத்தி செய்யும் செயல் திட்டங்கள், அத்தோட்டங்கள் இலாபத்தில் இயங்கிய காலங் களில் மட்டுமே அமுல் நடத்தப்பட்டன. இத்தகைய ஒரு ஏற்பாடு வீட்டு வசதியின் அபிவிருத்திக்கு சாதகமானதாக இருக்கவில்லை. 1977-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஆணைக்குழு பெருந்தோட் டங்களின் வீட்டு வசதி பற்றிச் செய்த ஆய்வின் இறுதியிலே தோட்ட நிர்வாக அமைப்புக்கள் தமது வருடாந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ள முதலீட்டுச் செலவினங்களிற் குறைந்தது 10 வீதத்தினை வீட்டு வசதி அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட வேண்டும் என சிபாரிசு செய்தது. ஆனாலும், வீட்டு வசதி அபிவிருத்தி நடவடிக்கை மிகவும் மெதுவாகவே செயற்பட்டது. இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டன. அவையாவன:
(அ) கட்டிடப் பொருட்கள் பற்றாக்குறை
45

Page 37
இன்றைய மலையகம்
(ஆ) பயிற்சி பெற்ற கட்டிடத் தொழிலாளர்களின் பற்றாக் குறை
(இ) அதிகரித்துச் செல்லும் கட்டிடப் பொருட்களின் விலைகள் என்பனவாகும்.
இவற்றைவிட, சில பெருந்தோட்டப் பகுதிகளிற் கட்டிட வேலைகள் வரண்ட காலத்தில் மாத்திரமே மேற்கொள்ளப்பட முடியும். ஏனெனில், அதிக மழை பெய்யும்போது கட்டிட வேலைகள் தடைப்பட்டன. அத்துடன், வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணத்தில் ஒரு சிறிய அளவே செலவிடப் பட்டிருந்தது.
...:. iš பெருந்தோட்டத் தொழிலாளர்களிற் பெரும் பங்கினரது வாழ்க்கைத் தரத்தினைக் குறிப்பிடத்தக்க அளவில் விருத்தி செய்ய வேண்டுமானால், அடுத்துவரும் குறுகிய காலப் பகுதிக்குள், பெருமளவு வீடுகள் கட்டப்பட வேண்டியுள்ளதுடன், தற்போது பயன்படுத்தப்படுகின்ற வீடுகள் யாவும் திருத்தப்பட்டுத் தர முயர்த்தப்படுதலும் வேண்டும். மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபைத் தோட்டங்களிலும், அரச பெருந்தோட்டக் கூட்டுத் தாபனத் தோட்டங்களிலும் 1995-ஆம் ஆண்டிற்கு முன்னர் பின் வரும் வீட்டு வசதிகள் சார்ந்த அபிவிருத்திகள் மேற்கொள்ளப் படுதல் வேண்டும்.
(அ) மாற்றி திருத்தப்படவேண்டிய வீடுகள் - 137,051 (ஆ) கட்டப்பட வேண்டிய வீடுகள் - 36,790 (இ) தரம் உயர்த்தப்பட வேண்டிய லைன் வீடுகள் - 96,231
(ஈ) தரம் உயர்த்தப்பட வேண்டிய வீடுகள் - 8.992
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தோட்டப்புற வீட்டு வசதி பற்றிய அளவீடு ஒன்றின் மூலம் தொழிலாளர்கள் தாம் வசிக்கும் வீடுகளின் குறைகளைத் திருத்தம் செய்வதற்கு தோட்ட நிருவாகத்திலேயே தங்கியிருக்காமல், தாமும் அப்பொறுப் பினைப் பகிர்ந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்து வருவதாகக் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டை வீட்டு அமைப்பு வீடுகளில் குடியிருப்பவர் களிடையே இத்தகைய மனப்பாங்கு காணப்படுகிறது. அவர் களுக்குச் சொந்தமாக இல்லாத அவ்வீடுகளிற் பணத்தினையோ, நேரத்தினையோ அவர்களாற் செலவிட முடிவதில்லை. வீட்டு
46

மலையகத் தமிழ் மக்களின்.
உரிமையில் மாற்றம் ஏற்படாத பட்சத்தில், தோட்டப்புற வீடுகளில் வாழும் தொழிலாளரான குடியிருப்பாளர்கள் தாம் வாழும் வீடுகளைத் திருத்தம் செய்து சிறந்த முறையில் பராமரிப் பார்கள் என எதிர்பார்க்க முடியாது. வீட்டு வசதி நிலைமைகளை விருத்தி செய்வதன் மூலம் கிராமப்புறத் தொழிலாளர்களைப் பெருந்தோட்டங்களுக்கு வரச் செய்யலாம் எனத் தோட்ட நிர்வாகம் நினைத்தது. இது காலம் காலமாகத் தோட்டங்களில் வாழ்ந்து வந்த தொழிலாளர்களை விரக்தி அடையச் செய்தது. பெருந்தோட்டங்கள்ல் வாழாது வேலைக்கு வந்து செல்லும் தொழிலாளர்களின் வீட்டு வசதி நிலைமைகள் மாறுபட்டன. அவர்களிற் பெரும்பாலானவர்கள் அரசாங்கத்தின் உதவித் திட்டங் களான வீடு கட்டுவதற்கான கடன், உதவிப் பணம், இலவச வீட்டுமனை போன்றவற்றுக்கும் வேறும் பல சலுகைகளுக்கும் உரித்துடையவர்கள். இவற்றை விட நிலமற்ற கிராம வாசிகள் பலவந்தமாக அரச காணிகளில் அத்துமீறி குடியேறி நில வுரிமையைப் பெற்றுக்கொள்ளும் முறைகளும் இன்னும் இலங் கையிற் காணப்பட்டு வருகின்றன. இதுவரை காலமும் இத் தகைய வாய்ப்புகள் நாடற்றவர்’ என்ற காரணம் காட்டித் தோட்டத் தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த நிலைமை இனிமேல் எத்தகைய வடிவம் பெறப் போகின்றது என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சுகாதார வசதிகள்:
இலங்கையின் பெருந்தோட்டங்களில் அவற்றின் ஆரம்ப காலம் முதலாகவே சுகாதார வசதி நிலைமைகளும், தொழி லாளர்களின் ஆரோக்கிய நிலைமைகளும் மிகவும் தாழ்ந்த நிலைகளிலேயே இருந்து வந்துள்ளன. அதேநேரத்தில் தேசிய அளவில் அவை பெரிதும் விருத்தியடைந்துள்ளமையினை நாட்டின் பொதுவான மரணவீதங்களில் ஏற்பட்ட வீழ்ச்சியிலிருந்து அறிந்துகொள்ளக் கூடியதாகவுள்ளது. இன்று சராசரி இலங்கை யரின் வாழும் காலம் 70 வருடங்களாகும். பெருந்தோட்டத் தொழிலாளர்கள் செறிந்து வாழும் மாவட்டங்களில் குழந்தை களின் மரணவீதம் அதிகமாகவே இருந்தது. போசாக்குமிக்க உணவுடன் உடல் ஆரோக்கியமானது நேரடியான முறையில் தொடர்புள்ளது போன்றே இவை இரண்டும் மக்களின் வரு மானங்களுடன் தொடர்புற்றுள்ளன. தோட்டத் தொழிலாளர் களுக்கு வழங்கப்படுகின்ற மிகவும் குறைந்த வேதனங்களுடன் அவர்கள் சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் இருக்க முடியாது.
47

Page 38
இன்றைய மலையகம்
தோட்டங்கள் அரசாங்கத்தினாற் சுவீகரிக்கப்படுவதற்கு முன்னர் பெருந்தோட்ட உரிமையாளர்கள் தொழிலாளர்களின் சுகாதார ஆரோக்கிய நிலைமைகளைத் தோட்ட நிதிநிலைமைகளுடன் இணைத்தே நோக்கினர். பெருமளவுக்கு குடும்பக்கட்டுப்பாட்டிற்கும், திட்டமிட்ட குடும்பம் போன்றவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்ததில் இருந்து இதனை அறிந்துகொள்ளக் கூடியதாய் உள்ளது. பெருந்தோட்டங்களிற் கூடிய பிறப்புகள் நிகழ்வது என்பது தோட்ட நிர்வாகத்தைப் பொறுத்தவரையிற் பிரசவ சலுகைகள், பாடசாலைகளுக்கான அதிகரித்த செல வினங்கள் போன்ற செலவினங்களே என்ற கருத்து நிலவியது.
தோட்டங்களில் நடைபெற்ற ஆய்வுகள் மூலம் அங்கே தொழிலாளர் மத்தியிலும், அவர்கள் குடும்பத்தவரிடையேயும் கடும் இரத்தசோகை, போசாக்கின்மை, நீடித்த போசாக்கின்மை, குறைப்போசாக்கு என்பன பெருமளவுக்குக் காணப்பட்டமையை அறியக் கூடியதாயுள்ளது.
தொழிலாளர்களின் வருமானம் வீழ்ச்சியடைவதால், ஏற் கனவே வறுமையினாலே துன்புறும் தொழிலாளரிடையே அதிகரித்த போசாக்கின்மையும், பட்டினியும் ஏற்படுகின்றன போசாக்கின்மை காரணமாக உடல்வளர்ச்சியிலும், உளவளர்ச்சி யிலும் பெரும்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனாற் பாடசாலையிற் சிறந்த முறையிற் கல்வி கற்க முடியாமலும் போகின்றது. இவற்றின் விளைவாக வறுமையின் பிடியிற்பரம்பரை பரம்பரையாக மக்கள் சிக்குண்டு சீரழிகிறார்கள்.
உலக சுகாதார நிறுவனம் இலங்கையில் உள்ள ஒரு சுகாதார நிருவாகப் பிரதேசம் ஒன்றில் உள்ள தோட்டங்களிலுள்ள சுகாதார வசதிகள் பற்றிய ஆய்வு ஒன்றினை மேற்கொண்டது. அதன் முடிவுகளின்படி, அப்பகுதியின் சுகாதார வசதிகள் இலங் கையின் தேசிய சராசரி வசதிகளை விட மிகவும் குறைந்த அளவிலேயே காணப்பட்டன எனத் தெரிய வருகிறது. இலங் கையில் ஒவ்வொரு இலட்சம் மக்களுக்கும் சராசரியாக 25.7 மருத்துவ நிபுணர்கள் காணப்படுகின்றனர். ஆனாற் பெருந் தோட்டங்களை அதிகமாகக் கொண்டுள்ள மத்திய மாகாணத்தில் இவ்வீதம் 15.2 ஆகவும், ஊவா மாகாணத்தில் 13.2 ஆகவும், சப்ரகமுவ மாகாணத்தில் 13.4 ஆகவும் இருந்தது.
இதனைப் போன்றே இலங்கையில் வாழும் ஒவ்வொரு இலட்சம் பேருக்கும் தேசிய மட்டத்தில் 50.8 மருத்துவ தாதிமார்
48

மலையகத் தமிழ் மக்களின்.
சேவை புரிகின்றனர். ஆனால், மத்திய மாகாணத்தில் 29.5 பேரும், ஊவா மாகாணத்தில் 24.1 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 34.6 பேரும் சேவை புரிகின்ற மாறுபட்ட நிலைமையினையே காணமுடிகிறது.
இவ்வாறான வசதிகளிற் பின்தங்கிய நிலைமை காரண மாக பெருந்தோட்ட மாவட்டங்களான கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி ஆகியவற்றில் 1000 உயிருடனான பிறப்புக்களுக்கான சிசுக்களின் மரணவீதமானது மிகவும் கூடிய அளவினதாக இருந்தது. இதனையே அட்டவணை 2.8 விளக்குகிறது.
அட்டவணை 2.8 இலங்கை - பெருந்தோட்டங்களில் சிசுக்கள், தாய்மார் இறப்பு வீதம் 1972-1974
ஆண்டு 1000 உயிருடனை 1000 உயிருடனை பிறப்புகளுக்கான பிறப்புகளுக்கான
சிசு மரணங்கள் பிரசவ கால இறப்புகள் 1972 100.6 2.0 1973 103.8 3.6 1974 135.1 6.7
Source: Planters Association Annual Reports, 1972-74. Janatha Estates
Development Board-1975.
1976-ஆம் ஆண்டு நிகழ்ந்த 'இலங்கைப் போசாக்கு அளவீடு' வெளியிட்ட தகவலின்படி, கிராமியச் சிறுவர்களை விட, தோட்டப்புறச் சிறுவர்களே பெருமளவு நீடித்த போசாக் கின்மையாலும், குறை போசாக்கினாலும் பாதிக்கப்பட்டுள் ளனர் எனத் தெரிய வருகிறது. தோட்டப் பகுதிகளிற் கலோரி யளவில் உணவு நுகர்ச்சி சராசரிக்கு மேலாக இருப்பினும், புரத. உயிர்ச் சத்துக்கள் நிறைந்த உணவு நுகர்ச்சி மிக மிகக் குறைவாக இருப்பதனால், அவர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.
1979-ஆம் ஆண்டு நிலைமைகளுடன் ஒப்பிடுகையில், 1975-ஆம் ஆண்டிலிருந்து தோட்டப்புற மக்களின் சுகாதார நிலைமைகளிற் படிப்படியாக மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ள மையினைக் காணமுடிகின்றது. பெருந்தோட்டத் தொழிலாளர் மத்தியிற் காணப்பட்ட சுகாதாரக் கேடுகள் காரணமாக எழுந்த
49 *4

Page 39
இன்றைய மலையகம்
பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகப் பல நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன. தற்போது (1990) இலங்கையின் பெருந் தோட்டங்களில் பெரும்பாலானவை அரசாங்க நிருவாகத்தின் கீழ் இருப்பதனால், பல்வேறு வெளிநாட்டுக் கடன் உதவிகள் தோட்டத் தொழிலாளர்களின் நன்மைக்காகப் பயன்படுத்தப் படுகின்றன. அரசாங்கத் தோட்ட நிருவாகங்கள் தோட்டப்புறங் களிற் குடிநீர் விநியோகம் செய்வதற்காக "யுனிசெப்' நிறுவனத் திடம் உதவி கோரியுள்ளனர். வீட்டு வசதிகளில் ஏற்படக்கூடிய அபிவிருத்திகள் இறுதியில் மக்களது சுகாதார நலனிலும் சிறந்த விளைவுகளைக் கொண்டுவரலாம்.
யுனிசெப் நிறுவனம் வழங்கும் உதவிகளைக் கொண்டு குழந்தைகள் பராமரிப்பு அபிவிருத்தித் திட்டங்கள் மூலமாகத் தோட்டத் தொழிலாளர்களையும், அவர்களது குடும்பங்களையும் முன்னேற்றி விடலாம் என அபிப்பிராயங்கள் தெரிவிக்கப் பட்டுள்ளன. 11 அரசாங்கத் தோட்டங்களிற் செய்த அளவீட்டில் 65 வீதமான குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் தரமுயர்த்தப் பட்டுள்ளதுடன், 33 வீதமான குழந்தைப் பராமரிப்பு நிலையப் பணியாளர்கள் தகுந்த பயிற்சி பெற்றவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
ஆனால், இந்தப் பணியாளர்கள் பற்றி வேறான அபிப் பிராயங்கள் தோட்டத் தொழிலாளர் மத்தியில் நிலவுவதனைனக் காணலாம். இத்தகைய குழந்தைப் பராமரிப்பு நிலையப் பணியாளர்கள் பெரும்பாலும் தோட்டங்களுக்கு வெளியே இருந்து நியமிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அத்துடன், வேறு சில காரணங்களினால் இவர்கள் இத்தொழிலுக்குப் பொருத்தமற்றவர்களாகவே கருதப்படுகின்றனர். குழந்தைப் பராமரிப்பு நிலையங்களில் விடப்படும் குழந்தைகளுக்குத் தமது தாய்மொழி மாத்திரமே தெரியும். பெருமளவான குழந்தைப் பராமரிப்புப் பணியாளர்களுக்குக் குழந்தைகளின் தாய்மொழி அறிவு இல்லை. இவர்கள் வருமானம் ஒன்றிற்காகவே இப் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனரே தவிர, முக்கிய கடமையான குழந்தைகளைச் சுத்தப்படுத்தும் பணியினை இவர்கள் விரும்பு வதில்லை. தொழிலாளர்களின் பின்தங்கிய நிலைமைகள் காரணமாக ஆரோக்கியமற்றவர்களாக உள்ள குழந்தைகளைப் பராமரிக்கும் சேவை மனப்பான்மை இயல்பாக இவர்களிடம் இல்லை. எனவே அவர்கள் தொழிலாளர்களின் குழந்தைகளைப் பராமரிக்கப் பொருத்தமற்றவர்களாகக் கருதப்படுகின்றனர்.
50

மலையகத் தமிழ் மக்களின்.
இந்தப் பராமரிப்பு நிலையங்கள் விநியோக மையங் களாகவும் இயங்குகின்றன. பாடசாலை செல்லும் வயதிற்கு முந்தைய வயதிற் காணப்படும் குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார் போன்றவர்களுக்குப் போசாக்குணவு அளிப்பதற்காகப் பால், திரிபோச உணவு என்பவற்றை வழங்கும் திட்டங்களும் சிறியளவில் இங்கு அமுல் செய்யப்பட்டு வருகின்றன.
தொழிலாளர்களினதும், அவர்களிலே தங்கி வாழ்பவர் களினதும் சுகாதார-ஆரோக்கிய நிலைமைகளை முன்னேற்று வதற்குத் தடையாக இருக்கும் காரணிகளில் முக்கியமானது அவர்கள் கல்வியிற் பின் தங்கியவர்களாக இருப்பதுவே என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர்களுடைய சுகாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்குத் தடையாக இருக்கும் இன்னுமோர் காரணி, இதற்குத் தேவையான தகுதி வாய்ந்த பயிற்சி மிக்க ஊழியர்களின் பற்றாக்குறையாகும். இன்றும் கூட, பெருந்தோட்டங்களிலுள்ள மருத்துவமனைகள், மருந்து கொடுக்கும் கூடங்கள், மகப்பேற்று நிலையங்கள் என்பவற்றிற் போதிய பயிற்சியற்ற ஊழியர்களே பணிபுரிகின்றனர்.
1988-ஆம் ஆண்டுமுதல் ஏறத்தாழ, ஒருவருட காலம் வரை இலங்கையின் பெருந்தோட்டப் பகுதிகளிலே தொழில் புரியும் பெண்களின் ஆரோக்கிய நிலைபற்றி ஆராயப்பட்டது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸினால் ஏனைய நிறுவனங் களின் உதவியுடன் மேற்கொண்ட இவ்வாராய்ச்சி பல்வேறு கவலைக்குரிய உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது.
தோட்டங்களிற் பணிபுரியும் பெண்களின் தொழில் களின் இயல்புகள் காரணமாக, அவர்களிடையே பல்வேறு ஆரோக்கியக் கேடுகள் ஏற்பட்டுள்ளன. குழந்தைகள் இறந்து பிறப்பதும், சிறுபிராயத்திலேயே. குழந்தைகள் இறந்து விடுவதும் இதனாலேயே என இவ்வாய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
இலங்கையில் ஆகக்கூடிய இறப்பு வீதம் (8.6%) பெருந் தோட்ட மாவட்டமான நுவரெலியாவிலேயே பதியப்பட்டுள்ளது. பிரசவகால இறப்பும் (1.6%) இங்கேயே அதிகமாகக் கிாணப்பட்டது. 1982-ஆம் ஆண்டில் இளம்குழந்தைகள் இறந்த அளவின் அடிப்படையில் இம்மாவட்டம் இலங்கையில் இரண்டாம் இடத்தினைப் பெறுகின்றது.
51

Page 40
இன்றைய மலையகம்
மலைச் சரிவுகளில் ஏறி இறங்கி வேலை செய்ய வேண்டி யிருப்பதனால், இப்பெண்கள் பல்வேறு பிரசவம் தொடர்பான உடற்கோளாறுகளினால் துன்பப்படுவதும், எடுத்துக்காட்டப் பட்டுள்ளது. ஈரக் காலநிலையில் நாள் முழுவதும் வேலை செய்யும் பெண்கள் தடிமன், இருமல் ஆகிய நோய்களினால் எப்போதும் துன்புறுகின்றனர். இந்த ஆய்வில் இன்றும் பெண்களிற் பெரும்பாலோனார் இரும்புச் சத்துக் குறைவு, இரத்த அழுத்த நோய் (26%), பெருவிரல், ஆள்காட்டி விரல்கள் புண்ணாகுதல் (93%) தோல்பட்டை, முதுகெலும்பு வலி, காலில் ஆணி ஏற் படல் (37%) போன்ற நோய்களினால் துன்புறுதாகவும், இதற்கு அவர்கள் புரியும் தொழில்களின் இயல்பே காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது. பெண்கள் சராசரியாக 9 முதல் 10 மணிநேர வேலை செய்வதும், ஓய்வின்மையும், போசாக்கின்மையும் காரணமாகவே இத்தகைய நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள தாகவும் அறிய முடிகிறது.
குறிப்பிடத்தக்க அளவில் சுகாதார அபிவிருத்தி வேலை களுக்காகச் செலவிடப்பட்டிருந்தும், தொழிலாளர் வருவாயில் சிறிய அதிகரிப்பு ஏற்பட்டிருந்தும் கூட, சில நோய்கள் இன்றும் பெருந்தோட்டங்களில் பெருமளவு காணப்பட்டு வருகின்றன. இரத்தச்சோகை நோயினாலே அதிகமானவர்கள் பாதிக்கப்பட் டுள்ளன்ர். இது தொழிலாளர்களின் உற்பத்தித் திறனைப் பாதிக்கக் கூடிய அபாயத்தினைக் கொண்டுள்ளது என்பது நாட்டின் பொருளாதாரத்தைப் பொறுத்தும் மிக முக்கியமானதாகும்.
முடிவுரை
இலங்கையின் பெருந்தோட்டங்களிலுள்ள தொழிலாளர்கள் ஆகக் குறைந்தபட்சத்தில் ஏற்றுக்கொள்ளக் கூடியதான வாழ்க்கைத் தரத்திற்கும் கீழான நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர் என்றே கூற வேண்டியுள்ளது. அவர்களுடைய பிரச்சினை வறுமைப் பிரச்சினை என்று மாத்திரம் கூறிவிட முடியாது. அவர்களுடைய இன்றைய சமூக, பொருளாதார நிலைமையினை அவர்களுடைய நாடற்ற நிலை, இனப்பாகுபாடு, அரசியல் மற்றும் பாரபட்சம் போன்றவற்றுடன் இணைந்த காரணங்களுடன் தொடர்புபடுத்தியே விளக்க முடியும். நம்பிக்கையின்மை சந்தர்ப்பங்களும், வாய்ப்புக்களும் மறுக்கப்படுதல் என்பன சுயமரியாதையினைேைய அழித்து விடுவதுடன், தீர்க்கப்பட
52

மலையகத் தமிழ் மக்களின்.
முடியாத சமூகப் பிரச்சினைகளை எதிர்காலச் சந்ததியினருக்கு ஏற்படுத்தும் ஆபத்துக்களும் உள்ளன.
வறுமை என்பது இந்நாட்டிலே தோட்டத் தொழிலாளர் களிடம் மாத்திரம்தான் உள்ளது என நாம் வாதாட முடியாது. ஆனால், ஒரு சமூகக்குழு என்ற முறையில் அவர்களிடம் கூடிய அளவில் வறுமை காணப்படுகின்றது. இலங்கையில் சராசரியாக வறுமையானவன் யார் என்ற கேள்விக்குச் சமூக ரீதியில் தோட் டத்து இந்தியத் தமிழர்களே என்ற விடையே கிடைக்கும். இலங் கையில் வாழும் சுமார் 10 இலட்சம் இந்திய வம்சாவழித் தமிழர்களில் 25,000 பேருக்கும் குறைந்த எண்ணிக்கையில் நகரங் களில் வாழும் மலையகத் தமிழ் மக்களைத் தவிர அச்சமூகத்தைச் சார்ந்த ஏனையோர் அனைவருமே குறைந்த வாழ்க்கைத் தரத் தினைக் கொண்டவர்களே. அவர்களுடைய முன்னேற்றம் நாடற்ற நிலையினால் பெரிதும் நசுக்கப்பட்டிருந்தது. இந்தப் பிரச்சினை இல்லாதிருந்தால் தோட்டத் தொழிலாளர்கள் இந்நாட்டின் விவசாயத் தொழிலாளர் குழுவின் ஒரு அங்கமாகவே இருந்திருப் பார்கள். அதனால் விவசாயத் தொழிலாளர் வகுப்புக்குரிய பிரச் சினைகளையே எதிர்நோக்கியிருப்பார்களேயன்றி, இன்று காணப் படுவது போன்று இந்நாட்டிலுள்ள ஒரு சிறுபான்மை இனம் என்ற முறையில் எதிர்நோக்கும் இனரீதியான ஒதுக்கல், பாரபட்சம் போன்ற பிரச்சினைகளை எதிர்நோக்கியிருக்க வேண்டியதில்லை.
வாக்குரிமை பறிக்கப்பட்டமையும், நாடற்ற நிலைமையும் தோட்டத் தொழிலாளர்களைக் கீழ்நிலைக்குத் தள்ளியதுடன், அரசியல் அந்தஸ்து இல்லாத ஒருவர் எத்தகைய அந்தஸ்துக்கும் தகுதியற்றவராகக் கருதப்படும் இன்றைய உலகில், அவர்கள் பலமற்றதும், பெறுமதியற்றதுமான ஜீவன்களாகவே கருதப்பட் டார்கள். தொழிலாளர்கள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள அரசியலைப் பயன்படுத்த முடியவில்லை. ஏனெனில், அவர்களிடம் வாக்குரிமை இல்லாதிருந்ததால், அரசியல்வாதிகள் எதுவித பயமுமின்றி இவர்களை ஒதுக்கிவிட்டுத் தமது காரியங்களை மாத்திரம் செய்ய முடிந்தது.
சுதந்திரத்திற்கு முன்பிருந்தே தோட்டத் தொழிலாளர்கள்
கிராமசபை, நில அபிவிருத்தித் திட்டங்கள் என்பவற்றில் எல்லாம்
ஒதுக்கியே வைக்கப்பட்டிருந்தார்கள். இவற்றால் இவர்கள்
அரசியல்வாதிகளின் பார்வைக்குத் தென்படாதவர்களாகவே
இருந்துள்ளனர். இதற்கு அரசியல்வாதிகளுடன் பேரம் பேசக்
கூடிய தகுதியினை அளிக்கும் வாக்குரிமை அவர்களிடம் இல்லா
53

Page 41
இன்றைய மலையகம்
திருந்தமையே முக்கிய காரணமாகும். இதனால் அவர்கள் அடைந்த துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இப்போது நாடற் றவர் என்ற கறை நீக்கப்பட்டுள்ளது. இது தொழிலாளர்களின் நிலையில் சார்பான மாற்றங்களைக் கொண்டுவரும் என நம் பலாம். அரசியல் ஆதரவின்மை, குறைந்த கல்வி நிலைமை, ஆரோக்கியமற்ற சுகாதார நிலைமைகள், அதற்குக் காரணம்ான போசாக்கின்மை என்பன காரணமாகத் தோட்டத் தொழிலாளர்கள் தமக்குத் தேவையானவற்றை வற்புறுத்திக் கேட்டுப் பெற்றுக் கொள்ளவோ, அல்லது அவை பற்றிச் சரியாக அறிந்துகொள் ளவோ உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் வலிமையற்றவர் களாகவே இருந்தனர். எனவே, நாடற்றவர் என்ற நிலைமை, குறைந்த கல்வி நிலைமை, மட்டரகமான வீட்டு வசதிகள், ஆரோக்கியமற்ற சுகாதார நிலை என்பன யாவும் ஒன்றிணைந்து தோட்டத் தொழிலாளரது பொதுவான வாழ்க்கையினையும், வாழ்க்கைத் தரத்தினையும் மோசமாகப் பாதிப்பதை உணரலாம். இலங்கையிலே வாழும் ஏனைய மக்களின் வாழ்க்கைத்தரத்துடன் ஒப்பிடுகையில் தோட்டத் தொழிலாளரது வாழ்க்கைத்தரம்
மிகவும் தாழ்ந்த நிலையிலேயே காணப்படுவது தெளிவாகும்.
BBLOGRAPHY
1. Balasuriya, Tissa (1978) “Education of Estate Population of Indian Origin'
Logos, 17 (7) Centre for Society and Religion, (Colombo). Central Bank of Ceylon, Annual Report-1981, (1982) (Colombo) Central Bank of Ceylon, Consumer Finance Survey, 1981/82, (1983), Colombo. Ceylon Workers Congress (1988) "Workers Housing on State Plantation - A new Strategy (Colombo) (unpublished). 5. Congress Labour Foundation, "A Research Study on the Health Status of
Women. Plantation Workers in Sri Lanka", (Sep. 1990) (Colombo). 6. Dept. of Census and Statistics Census of Population, General Report-1981,
Vol. I (1983) (Colombo). 7. Department of Labour, (1986), Employment Survey - 1984 (Colombo). 8. Gnanamuthu G.A., (1977) Education and the Indian Plantation Worker in
Sri Lanka, (Colombo). 9. Kurian Rachael (1981), The Position of Women Workers in the Plantation
Sector in Sri Lanka, ILO, W.F.P. Working Paper (Geneva). 10. Marga Institute, (1976) Housing in Sri Lanka, (Colombo) 11. Mookiah, M.S., (1990) "Social and Economic Conditions of the Plantation Workers in Sri Lanka", Workshop paper, Movement for Inter Racial Justice and Equality, (Colombo).
54

நூற்றாண்டுகள் கடந்தும்.
3. நூற்றாண்டுகள் கடந்தும் மாற்றம் காணாத லயன்’ முறை"
இலங்கையின் பொருளாதாரத்தில் நீண்டகாலமாகவே பெருந்தோட்டத்துறை முக்கிய பங்கினை அளித்து வருகின்றது. இலங்கையின் விவசாய நிலத்தில் 50 வீதத்திற்கு மேலானவற்றில் பெருந்தோட்ட விவசாய நடவடிக்கைகளே காணப்படுகின்றன. நாட்டின் 10 வீதத் தொழிலாளர்கள் இத்துறையிலேயே பணியாற்றுகின்றனர். பொருளாதாரத்தைப் பன்முகப்படுத்த எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள், பெருந்தோட்ட உற்பத்திகளின் விலை வீழ்ச்சி என்பனவற்றின் மத்தியிலும் கூட 1987-ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருவாயில் 38 வீதத்தினைப் பெருந்தோட்டத் துறையே அளித்துள்ளது.
ஆனால் பெருந்தோட்டத் தொழிலாளரது வீட்டு வசதி யானது நூற்றாண்டு காலமாகவே கவனிப்பற்றும், தரங்குறைந்த தாகவும் காணப்படுகின்றது. பெருந்தோட்டங்கள் ஆரம்பிக்கப் பட்ட காலங்களில் தொழிலாளர் தங்குவதற்காகத் தற்காலிகக் குடிசைகளே அமைக்கப்பட்டிருந்தன. பின்னர் தேயிலைத் தொழில் சுபிட்சம் பெற்றதையடுத்து 1927-ஆம் ஆண்டு முதல் 1945-ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் கட்டப்பட்ட "லைன்” வீடு களே இன்றும் காணப்படுகின்றன.
* இக்கட்டுரை 'வீரகேசரி’ பத்திரிகையில் 24.3.91-இல் பிரசுரிக் கப்பட்டது.
55

Page 42
இன்றைய மலையகம்
இலங்கையின் பெருந்தோட்டங்களில், 1981-இல் காணப்பட்ட 2 லட்சத்து 17,451 வீடுகளை 1971-ஆம் ஆண்டு காணப்பட்ட 2 லட்சத்து37,560 வீடுகளுடன் ஒப்பிடுகையில் 8.5 வீத வீழ்ச்சியினைக் காண முடிகிறது. எண்ணிக்கையில் வீழ்ச்சி யுற்றுள்ளதுடன் எஞ்சிய வீடுகளும் 65 வருடங்களுக்கு முந்திய லைன்அறை அமைப்புக்களாகும். இலங்கையின் கிராமிய நகரப் பகுதிகளின் பெரும்பாலான வீடுகள் ஏறத்தாழ கடந்த 40 வருடங்களுக்குட கட்டப்பட்டன வாகும். அத்துடன் பெருந் த்ோட்ட வீடுகளில் 50 வீதமானவை ஒரு அறையினைக் கொண்டனவாகக் காணப்பட்டன. 83.4 வீதமானவை இரண்டு அறைகளுக்குக் குறைவான வீடுகள். இதனை விட மொத்த வீடு களில் 89 வீதமானவை லைன் வகையான வாழ்விடங் களாகும். தொழிலாளர்களுடைய வசிப்பிடங்கள் பெரும் பாலும் 180 சதுர அடி இடப்பரப்பிலேயே கட்டப்பட்டுள்ளன. எனவே மிகவும் பழையதான சிறிய வசிப்பிடங்களில் ஒரு சராசரிக் குடும்பத்தில் 5.2 பேர். வாழவேண்டிய துரதிஷ்ட நிலை காணப்படுகின்றது. தேசியரீதியிற் சராசரியாகத் தனியொரு வனுக்குச் சுமார் 100 சதுர அடி வாழ்விட வசதி காணப் படுகின்றது. ஆனால் தோட்டங்களில் வாழ்வோருக்கு 46 சதுர அடி வாழ்விட வசதியே காணப்படுகின்றது. இவ்வாறு மிகச் சிறிய வாழ்விடங்களே காணப்படுவதுடன் அவற்றில் ஏனைய வசதிகளும் மிகக் குறைவாகவே உள்ளன. அண்மையிற் பேரா தனைப் பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட வெளிக் கள ஆய்வொன்றின்போது பெரும்பாலான தோட்டப்புற லைன்” வீடுகளின் கூரை தகரத்தினாலானது என்பதும் அவை 100 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டதன் பின்னர் மாற்றப் படாமல் மழை காலங்களில் முழு வீட்டிலும் மழைநீர் ஒழுகுவ தால் குடியிருப்பாளர் பெரிதும் துன்புறுவதும் அறியப்பட்டது.
வீடு என்பது தனியே வெயிலுக்கும் மழைக்கும் ஆன ஓர் ஒதுங்கிடம் அல்ல. அது சமூக நிறுவனமும் கூட. அங்கேதான் சமூக நாகரிகத்தின் அஸ்திவாரம் இடப்படுகின்றது. எனவே வீடு என்பது குறைந்தபட்ச தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும். காற்றோட்டம் குடிநீர் வசதி, கழிவகற்றும் வசதிகள், சுகாதாரமான சமையல் வசதி என்பனவும், வாசிக்க இட வசதிகளும், மின்சார வசதியும் தேவை. இந்தியக் கிராமங்களில் வீடுகளுக்கு மின்சார வசதி ஏற்பட்டதோடு அங்கே கல்வி வளர்ச்சி நிலைமைகளில் விருத்தி ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சிகள் எடுத்துக் கூறுகின்றன.
56

நூற்றாண்டுகள் கடந்தும்.
எனவே இத்தகைய அடிப்படை வசதிகள் ஆடம்பர மானவையல்ல. சுகாதாரமான ஆரோக்கிய வாழ்க்கைக்கு இவ்வசதிகள் அத்தியாவாசமானவை. ஆனால் தோட்டப்புற வீடுகளில் இந்நிலமைகள் கவலைக்கிடமானவையாகவே காணப் படுகின்றன. குடிநீர்வசதி நிலமைகள் திருப்திகரமானதாக இல்லை. ஏறத்தாழ 60 வீதமான "லைன்"களுக்குக் குழாய் நீர் வசதி இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால் இக்குழாய் மூலம் வழங் கப்படும் நீர் சுத்திகரிக்கப்பட்ட நீர் அல்ல என்பதும் கிரமமாக நீர் இதில் வருவதில்லை என்பதும் முக்கிய குறைபாடுகளாகும்.
மலசலகூட வசதிகள் சில இடங்களில் காணப்பட்டாலும் அவை பாதுகாப்பான முறையில் அமைக்கப்படாது பல குறைபாடுகளைக் கொண்டுள்ளன. அத்துடன் ஏறத்தாழ 40 வீதமான தோட்ட வசிப்பிடங்களுக்கு எதுவித மலசலசுட வசதிகளும் இல்லை என்பதும் பெருங்குறைபாடாகும்.
தோட்டப்புற இளஞ்சந்ததியினரே இன்று கல்வியிற் பெரிதும் பின்தங்கியுள்ளனர். இதற்குப் பல காரணங்கள் பொறுப்பாக - இருந்தாலும் மிகவும் தாழ்நிலையில் உள்ள வீட்டு வசதியும் முக்கியமானதொரு காரணி என்பதனை நாம் மறக்க லாகாது. 5 பேரைக்கொண்ட குடும்பம் ஒன்று ஒரே அறையில் வசிக்கும்போது பாடசாலை செல்லும் மாணவர் எவ்வாறு வீட்டில் தனது பாடங்களைத் தயார் செய்ய முடியும் என்பது முக்கிய வினாவாகும். மின்சார வசதியோ ஒருசில தோட்டங்களைத் தவிர்த்து ஏனையவற்றில் கிடையாது. எனவே அதனால் ஏற் படக்கூடிய பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாது மாணவர்கள் கஷ்டப்படுகின்றனர்.
எனவே சிறிய வசதிகளற்றதும் சுகாதாரக்கேட்டை ஏற் படுத்தக் கூடியதுமான தோட்டப்புற வீடுகள் விருத்தி செய்யப் படுவது உடனடித் தேவைகளில் ஒன்றாகும். பெருந்தோட்டங் களின் உற்பத்திகளுக்கு விலைகுறைந்துள்ளது. பெருமளவு தோட் டங்கள் நட்டத்திற் செயல்படுகின்றன. இந்நிலையில் எவ்வாறு தொழிலாளர்களது நலன்களைக் கவனிக்க முடியும் என்பது ஒரு வினா? இந்நாட்டின் பொதுநலன் புரிச்சேவைகளான கல்விச் சேவை, சுகாதார சேவைகளுக்கு அரசாங்கம் செலவிடும் கோடானு கோடிக்கணக்கான பணம் எங்கிருந்து கிடைக்கிறது என்பது எமக்கும் தெரியும். அதைவிட இப்போது பாதுகாப்புச் செலவினங்கள் பெருமளவுக்கு உயர்ந்துள்ளது. எனவே தோட்ட நிருவாகங்கள், தொழிலாளர் நலச் சேவைகள் என மாத்திரம்
57

Page 43
இன்றைய மலையகம்
இவற்றைக் கருதி வீட்டு வசதிக்கான செலவினங்களை ஒரு செலவினமாகக் கருதாது வீடுகளைப் பராமரித்து, வீடுகள் தோட் டத்தின் செல்வம் எனக் கருதுவதுடன் அதனால் சொத்தின் பெறுமதி அதிகரிக்கப்படுகிறது எனக்கருதும் எண்ணம் வளர வேண்டும். இது தோட்டத்தின் உள்ளமைப்பு வசதிகளைப் பெருக்கும் முதலீட்டு நடவடிக்கையாகவே கருதப்படல் வேண்டும்.
இரண்டாவது தொழிலாளர்களைச் சுயவீடமைக்கும் முயற்சிகளில் ஈடுபடுத்த வேண்டும். நாட்டின் 15 லட்சம் வீடுகள் திட்டத்தில் தொழிலாளர்களைப் பங்குதாரர்களாக்கலாம். வங்கிகள் 75 ஆயிரம் ரூபாய்க்குக் குறைந்த வீடமைப்புக்குக் குறைந்த வட்டி வீதங்களில் கடன் வழங்குகிறது. இதனைத் தொழி லாளர்கள் பயன்படுத்திக் கொள்ள சிறந்த வாய்ப்புண்டு. ஒவ் வொரு தோட்டமும் தனது தோட்டத்தில் உள்ள 50 வீதமான குடும்பங்களுக்கு சுயமுயற்சியில் வீடுகட்டிக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்பு வழங்க வேண்டும். இதற்காக இலவசமாகச் சிறிதளவு நிலத்தை வழங்கலாம். இதனைத்தான் ஜனாதிபதியின் ஜனசவிய' திட்டமும் ஊக்குவிக்கின்றது. இதற்குத் தேவைப்படக்கூடிய நிலம் மிகக் குறைவாகும். குடும்பம் ஒன்றிற்கு 10 பர்ச் நிலம் கொடுத்தாலும் 2,500 ஏக்கர் பயிர் செய் நிலமுள்ள தோட்டம் ஒன்றிற்கு சுமார் 60 ஏக்கர் நிலமே இதற் காகத் தேவைப்படும். ஆனால் அது 525 புதுவிடுகளை உருவாக்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்தும். இதுபோன்று சுயஉதவியால் வீடு அமைக்கும் திட்டங்களை ஏற்படுத்துவதன் மூலம் தோட்டங் களில் மாத்திரம் ஒரு லட்சம் வீடுகளைக் கட்டி முடிக்க வாய்ப் புண்டு. இத்திட்டம் பெருந்தோட்டங்களுக்காகக் கோரப்படும் விசேட சலுகையல்ல. ஏற்கனவே வீட்டுவசதி வாரியம் (சைட் அன்ட் சேர்வீஸ்) "இடமும் சேவைகளும்" என்ற வீட்டு அபிவிருத்தி உபாயம் மூலம் இலங்கையில் வீடுகட்ட நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது நகரப் பகுதிகளில் ஏற் கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய 50 வீதமான வசதியற்ற தொழிலாளர்களுக்கு இப்போது வாழும் இரண்டு லைன் வீடுகளை ஒன்றாக்கிப் பழுதுபார்த்துக் கொடுக்கலாம்.
இவ்வாறு அவர்களுக்குச் சொந்தமான வீடுகளைக் கட்டிக் கொள்ளவும் உரிமை கொள்ளவும் செய்யும் நடவடிக் கைகளின் விளைவுகளை மிக விரைவில் காணமுடியும். வீடு அவர்களுக்குச் சொந்தமாகும் பட்சத்தில் தமது செலவினங்களில் வீட்டு அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுத்து முதலிடுவார்கள்.
58

நூற்றாண்டுகள் கடந்தும்.
இது சராசரி மனிதரது இயல்பாகும். தனக்கெனச் சொத்திருந் தால் அதனைப் பலப்படுத்துவதில் ஏற்படும் அக்கறை பற்றிச் சந்தேகப்படத் தேவையில்லை. எனவே வீடுகளைத் தொழிலாளர் களுக்குச் சொந்தமாக்க உடனடியாக நடவடிக்கை தேவை என்பது விளங்குகின்றது.
உணவு சமைப்பதற்கான வசதிகள் போதியதல்ல. வீட்டு வாசலில் ஒரு மூலையில் அவர்கள் சமைப்பது வழக்கமாகும். இதனால் சமைக்கப்பட்ட உணவு சுகாதாரமாகப் பாதுகாக்கப் படுவதில் குறைபாடுகள் உள்ளன. இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இன்மை, மலசல கூட வசதியின்மை, உணவு முறையாகப் பாதுகாக்கப்படாமை என்பன பலவகை நோய்கள் பரவுவதற்கு இடமளிக்கின்றன. மேலும் இவர்களுடைய வறுமைநிலை காரணமாக உணவிற் போதிய புரதம், கொழுப்பு, உயிர்ச்சத்துக்கள் இன்மையால் பல நோய்களுக்கு இலகுவில் ஆளாகின்றனர். சராசரியான பெண் தோட்டத் தொழிலாளி மாதத்தில் ஒரு முறையாவது நோயால் பீடிக்கப்படுகின்றார் என்ற தகவலும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வெளிக்கள ஆய்வு மூலம் தெரியவருகிறது. கொழுந்து கொய்திடுங்காலத்திலே தோட்டங் களில் மாதாந்தம் 23 நாட்கள் வரையில் வேலை கொடுக்கப்பட் டாலும் சராசரியாக அவர்கள் 3 நாட்கள் வரை வேலைக்குப் போகாது இருந்துள்ளனர். இதற்கு அவர்கள் நோயால் பீடிக்கப் பட்டுள்ளமையே காரணமாகும். நாடற்றவர்களாக இருந்த மலையகத் தமிழ் மக்கள் அனைவரும் இன்று (1988-இன் பின்னர்) இலங்கைப் பிரஜைகளாக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது குடியுரிமையில் மிக முக்கியமானது குறைந்த பட்சம் தாம் வாழும் வீட்டிற்காவது உரிமையாளர்களாக இருக்க வேண்டும். அத்தகைய உரிமைகள் அவர்களைப் பொறுப்புள்ள பிரஜைகளாக்குவதுடன் இந்நாட்டு மக்கள் என்ற அந்தஸ் தினை உறுதிப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவும் அமையும் என நம்பலாம்.
Bibiliography
1. Ceylon Workers Congress, (1988) "Workers Housing on State Plantation"
A New Strategy, (Colombo), (Unpublished), 2. Department of Census and Statitics Census of Population and Housing,
General Report I-1981, Vol. 3 (1983), (Colombo.) 3. Gnanamuthu G.A., (1977), Education and the Indian Plantation Worker in
Sri Lanka, (Colombo). 4. Marga Institute, (1976), Housing in Sri Lanka, (Colombo),
59

Page 44

பெருந்தோட்டத்.
4. பெருந்தோட்டத் தொழிலாளர்களும் குடும்பக் கட்டுப்பாடும்*
மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபையும் (ம.பெ. அ.ச.) இலங்கை அரசாங்கப் பெருந்தோட்டக் கூட்டுத்தாபனமும் (இ.அ.பெ.கூ.) இணைந்து அடுத்து வரும் காலங்களிலே தோட்டத் தொழிலாளர்களுக்குக் குடும்பக் கட்டுப்பாட்டு நிகழ்ச்சி களை ழேற்கொள்வது பற்றிய ஒரு கலந்துரையாடலை 1992ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27-ஆம் திகதி ஹோட்டல் ரேணுகாவில் ஒழுங்கு செய்திருந்தன. தோட்ட நிர்வாகிகள், குடும்பத் திட்ட பிரசாரகர்கள், குடும்பத்திட்ட வைத்தியர்கள், தோட்ட மருத்துவ உதவியாளர்கள், மகப்பேறுத் தாதிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் போன்றோர் இக்கலந்துரையாடலில் பங்கு பற்றினார்கள்.
கடந்து பத்தாண்டுகளுக்கு மேலாக ஐக்கிய நாடுகள் சபையின் குடும்பத்திட்டச் சங்கம் இதற்கு நிதியுதவி அளித்து அதன் மூலம் குடும்பத் திட்டம் பற்றிய நிகழ்ச்சிகள் இடம் பெற்று வந்துள்ளன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சிகளின் நிர்வாக முறைகளில் ஏதேனும் குறைபாடுகள் உண்டா, அவ் வாறாயின் அவற்றினைத் திருத்தி அமைக்க மேற்கொள்ள வேண்டிய
(இக்கட்டுரை ‘வீரகேசரி’ பத்திரிகையில் 17/5/92, 24/05/92 ஆகிய தினங்களில் பிரசுரிக்கப்பட்டது.)
61

Page 45
இன்றைய மலையகம்
நடைமுறைகள் யாவை என்பது பற்றி கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தமட்டில் அவர்களுடைய குடும்பங்கள் பெரிய குடும்பங்கள் எனக் கூறுவதில்லை. 1981-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட குடிந் தொகைக் கணிப்பீட்டின் போது பெருந்தோட்டத் தொழிலாளர் களது குடும்பங்களின் சராசரி அளவு 5.4 ஆகவே இருந்தது. சராசரியாகக் குடும்பம் ஒன்றிற்கு 3.4 பிள்ளைகளே உள்ளன என்பதை இதன் மூலம் அறியலாம்.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் குடுமபத் திட்ட மிடலை அறிமுகப்படுத்துவதற்கான நோக்கங்களில் முக்கிய மானது அத்தொழிலாளர் குடும்பங்களில் வாழ்க்கைத் தரத் தினை உருவாக்குதலே என்னும் கருத்து முன் வைக்கப்பட்டது. தொழிலாளர் குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்தைக் கொண்ட குடும்பத் திட்ட மிடல் முயற்சி பாராட்டுதற்குரியது. ஆனால் இத்தகைய நோக் கத்தினை அடைவதற்கு மேற்கொள்ள வேண்டிய அடிப்படை ஏற்பாடுகள் இன்னும் பல உள்ளன. அவற்றில் வெற்றி காணாமல் குடும்பத்திட்டமிடல் நடவடிக்கையினால் மாத்திரம் அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திவிட முடியுமா என்பது தொழி லாளர்கள் மத்தியில் இன்று பெரும் வினாவாக இருக்கின்றது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தின் குறைநிலைக்கு, அவர்களுடைய குறைந்த வேதனங்கள், குறைந்த கல்வித் தகைமைகள், மிகவும் பின்தங்கிய வீட்டுவசதி நிலைமைகள் என்பனவும், இவை யாவற்றையும் விட 1988 ஆம் ஆண்டு இறுதி வரை நிலவிய குடியுரிமை அற்ற நிலைமையும் காரணங்கள் என்பது யாவரும் அறிந்த உண்மையாகும்.
கடந்த 20 வருடங்களாக ம.பெதோஅசயும் அபெதோகூ வும் இணைந்து இலங்கையின் தேயிலை ரப்பர் பெருந் தோட்டங்களில் 60 வீதமானவற்றை நிர்வாகம் செய்து வந்தன. தொடர்ந்து ஏற்பட்ட நட்டம் காரணமாகவும், இப்போதைய அரசின் தனியார் மயமாக்கல் கொள்கை காரணமாகவும் இப் பெருந்தோட்டங்களைத் தனியார் நிர்வாகத்தில் விடப் போவ தாகச் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதுவரை காலம் தொழிலாளர்களின் வீட்டு வசதி பற்றி உலக வங்கியிடம் கடன் பெறும் திட்டங்கள் பேசப்பட்டன. நாட்டின் கிராமிய, நகர்ப்
62

பெருந்தோட்டத்.
புறங்களில் ஒரு இலட்சம், பின்னர் பதினைந்து இலட்சம் வீடுகள் என்ற திட்டங்கள் அமுல் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய வீட்டு வசதித் திட்டங்கள் பெருந்தோட்டங்களில் கடந்த 20 வருடங்களில் அமுல் நடத்தப்பட்டிருந்தால் குறைந்தது 50 வீத வீடுகளையாவது திருத்தியிருக்கலாம்.
அரசாங்கம் தோட்டங்களைப் பொறுப்பேற்ற உடனேயே அவற்றிலிருந்த பாடசாலைகளையும் பொறுப்பேற்றிருந்தால் 20 வருட அபிவிருத்திகள் தோட்டத் தொழிலாளர்களுடைய பிள்ளைகளுக்கும் சென்றடைந்திருக்கும். கடந்த சில வருடங்கள் வரை அப்பாடசாலைகள் எத்தகைய அபிவிருத்தித் திட்டங்களுக்கும் உட்படவில்லை. அதே போன்று தோட்டங்களில் உள்ள மருத்துவ மனைகளில் ஒரு சில தவிர்த்து பெரும்பாலானவை அரசாங்க சுகாதார திணைக்களத்தினால் இன்றும் கூடப் பொறுப்பேற்கப்படவில்லை. எனவே அவற்றில் பெரும்பாலான வற்றில் போதிய மருந்து விநியோகமின்மை பயிற்சி பெற்ற மருத்துவ உத்தியோகத்தர்கள் இல்லாத குறை என்பன காணப் படுகின்றன.
அரசாங்கம் தோட்டங்களைப் பொறுப்பேற்ற காலம் முதலாக இன்றுவரை தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொழிற்சங்க நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே செயற் படுகின்றது. அரசாங்க உடமைகளில், அல்லது நிறுவனங்களிலே தொழில் புரிவோருக்கு, அரசாங்கம் தனது வருடாந்த வரவு செலவு திட்டத்தின் மூலம் வழங்கும் சம்பள உயர்வுகளை வழங் குதல் வழக்கம். பல்வேறு கூட்டுத்தாபனங்களும், அரச திணைக் களங்களும் நட்டத்தில் இயங்கிய போதிலும், அரசின் சம்பள உயர்வுத் திட்டங்கள் அவற்றில் அமுல் செய்யப்பட்டே வந்துள்ளன. ஆனால் பெருந்தோட்டங்களில் ஏற்படும் இலாப-நட்டக் கணக்கு, தேயிலையின் விலை வீழ்ச்சி என்பன காரணமாகக் காட்டப் பட்டு அரசின் அத்தகைய சம்பள உயர்வுக்கான பிரேரணைகள் தோட்டங்களில் மறுக்கப்பட்டு வந்துள்ளன. தொழிலாளர் களின் சம்பள உயர்வுகள் தொழிற்சங்கங்களின் முயற்சியால் மாத்திரமே பெறப்படுகின்றன.
நிலச் சீர்த்திருத்தத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றான நிலமற்ற விவசாயத் தொழிலாளருக்கு நிலம் வழங்குதல் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தோட்டத் தொழிலாளர் மத்தியில் நிலப்பங்கீடு ஏற்படவில்லை. 1940-ஆம் ஆண்டு முதல் வரண்ட வலயக் குடியேற்றத் திட்டங்கள், ஆற்றுப்பள்ளத்தாக்கு
63

Page 46
இன்றைய மலையகம்
அபிவிருத்தித் திட்டங்கள், ஆறு திசை திருப்புத் திட்டங்கள் என் பனவற்றில் இன்று வரை ஏறத்தாழ பத்து இலடசம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலம் கிராமவாசிகள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்பட் டுள்ளது. இதனால் நிலமற்ற கிராமவாசிகளின் அந்தஸ்து உயர்த் தப்பட்டதுடன் அவர்களுக்குத் தமது நிலம், தமது வீடு என்ற பொறுப்புணர்ச்சிகள் வளரவும் அதனால் எதிர்காலத்தைப் பொறுத்த உயர்ந்த அபிலாசைகளை வளர்த்துக் கொள்ளவும் வாய்ப்புகள் அரச நிறுவன ரீதியான அணுகுமுறைகளினால் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய திட்டங்கள் பெருந்தோட்டங் களில் காணப்படுவது இல்லை என்ற மனக்குறை மக்கள் மத்தியில் ஏற்படுகிறது.
தோட்டப்பாடசாலைகள் அரசாங்கத்தினால் அண்மைக் காலம்வரை பொறுப்பேற்கப்படாததனால் அவற்றின் கல்வி நிலை தொடர்ந்தும் தாழ் நிலையிலேயே இருந்தது. 60 வீதமானோரே தோட்டங்களில் எழுத்தறிவுடையோர்கள். அதிலும் 50 வீதமானோர் 5-ஆம் வகுப்புக்கு குறைந்த தகமையி னேயே உடையவர்கள். ஆறு வீதமானோரே பத்து வருடங்கள் கல்வி கற்றுள்ளனர்.
வீடுகளைப் பொறுத்து இன்னும் ஒரே அறையினைக் கொண்ட 180 சதுர அடிப்பரப்பில் 5 பேருக்கு மேல் வாழும் நிலையே காணப்படுகிறது.
இத்தகைய பின்னணி நிலைமைகளைத் தொகுத்து நோக்கும் போது, கல்வியில் முன்னேறாத ஒரு சமூகத்தின் அங்கத் தவர்களிடம், குடும்பம் திட்டமிடல் தொழில் நுட்பங்களை வெற்றிகரமாக விளங்கப்படுத்தி அமுல் செய்து வெற்றியடைய முடியுமா என்பதனைத் தர்க்க ரீதியாக ஆராய வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு.
பெண் தொழிலாளர் மத்தியில் குடும்பத் திட்டமிடல் பற்றிய பிரசாரம் செய்யும் உத்தியோத்தவர்கள் பலரிடம் அவர் களுடைய அனுபவங்களைப் பற்றிக் கேட்டறியும் வாய்ப்பேற்றப் பட்டது. தோட்டப் பெண்கள் பெரும்பாலானோர் சிறந்த உடலாரோக்கியம் இல்லாதவர்கள் என்பதால் சில குடும்பத் திட்ட மிடல் முறைகள் பல பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாகக் கூறினர். பெரும்பாலான பெண்கள் மூன்று மாத்திற்கொருமுறை குடும்பக் கட்டுப்பாட்டு ஊசியை ஏற்றிக் கொள்வதாகவும், வேறு சிலர் குடும்பக்கட்டுபாட்டு வில்லைகளை உட்கொள்வதாகவும்
64

பெருந்தோட்டத்.
கூறினார்கள். இதில் ஊசியை ஏற்றுக் கொள்பவர்கள் ஆரோக்கிய மாகவும் திடகாத்திரமாகவும் இருந்தால் பக்க விளைவுகள் இல்லை என்றும் பலவீனமானவர்களாக இருப்பவர்களின் மத்தி யில் கூடிய இரத்தப் போக்குக் காணப்படுவதாகவும் அறிய முடிந்தது. பெருந்தோட்டப் பெண்களிடம் இரத்தச் சோகை என் னும் உடல் பலவீனக் கோளாறு பெருமளவில் உள்ளதென்பது பற்றிப் பெருமளவு செய்திகள் ஏற்கனவே வெளிவந்துள்ளதனை நாம் அறிவோம். எனவே ஆரோக்கியமற்ற உடல் பலவீனமான பெண்கள் எப்படி குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளுதல் பொருத்தமாகும், ஆரோக்கிய உடம்பிற்குச் சிறந்த போஷாக் கான உணவு தேவை. இன்றைய வாழ்க்கைச் செலவு நிலைகளிலே தொழிலாளரது வருவாய் போஷாக்கு உணவிற்கு போதியதா? என்ற கேள்விக்கு எமது குறை மட்ட பகுத்தறிவினைக் கொண்டே பதில் பெற்றுக் கொள்ளலாம்.
கல்வியறிவு போதியளவில் இல்லாத போது குடும்பக்கட்டுப் பாட்டு நுட்பங்களை விளங்கிக் கொள்ளுதல் இலகுவானதல்ல. குடும்பக் கட்டுப்பாடு வில்லைகளை ஒரு நாள் எடுக்கத் தவறினாலும் அதன் பலன் இல்லாது போய்விடும். இதன் முக் கியத்துவத்தினையும் ஒழுங்கினையும் கல்வியறிவில்லாத பெண் களிடம் பிரச்சாரங்கள் மூலம் மாத்திரம் விளங்க வைத்து விட முடியுமா? பெருந்தோட்டங்களில் கல்வித் தகமைகள் பொது வாக மிகக் குறைவு என்பது ஒரு புறம் இருக்க, பெண்கள் மத்தியிலோ இது மிக மிகக் குறைவு. எனவே வளர்ச்சியடைந்த சமூகங்களில் குடும்பக் கட்டுப்பாடு வெற்றியடையப் பெண் களின் கல்வியறிவும், நாம் ஏன் குழந்தைகளை அடுக்கடுக்காகப் பெற்று நமது உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற சுய பாதுகாப்பு எதிர்ப்புணர்வும் காரணமாக உள்ளன. எனவே தோட்டப் பெண்களும் கல்வியறிவில் முன் னேறி இத்தகைய உணர்வுகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு கள் அதிகரிக்க வேண்டும்.
குடும்பம் ஒன்றில் குடும்பக் கட்டுப்பாட்டு நுட்பங் களைப் பின்பற்ற வேண்டுமானால் அங்கு திருமணமான தம் பதியினர் வாழத் தனி அறை ஒன்று மிக மிக அவசியம். தனி ஒரு அறையில் குடும்பத்தினர் அனைவரும் வாழும் குடும்பம் ஒன்றில் தனிமையான குடும்ப வாழ்விற்கு வாய்ப்பே இல்லை. இன்யை பெருந்தோட்டங்களில் 1971 ஆம் ஆண்டில் இருந்த 237, 358 வீடுகளுடன் ஒப்பிடுகையில் 1981 ஆம் ஆண்டில் 217, 193
65
5

Page 47
இன்றைய மலையகம்
வீடுகளே இருந்தன. இருந்தவற்றில் 8.4 வீதமானவை அழிந்து விட்டன. 56 வீதமான வீடுகள் வெளிப்பகுதிகளில் இருந்து நீரைப் பெற வேண்டியவை. 36 சதவீதமான வீடுகளுக்கு மலசல கூட வசதியே இல்லை. அவர்கள் வாழும் வீடுகளில் இரண்டு அறைகளுக்கும் குறைந்தனவே 78 வீதமான வீடுகள். இத்தகைய வசதிகளைக் கொண்ட வீடுகளில் வாழும் குடும்பங்களிடையே குடும்பக் கட்டுப்பாட்டு பிரச்சாரம் எத்தகைய பயனை அளிக் கும் என்பது பெரும் புதிராகவே உள்ளது.
இத்தகைய பின்னணியில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பின்வரும் கேள்விகள் எழுகின்றன.
(அ) போதிய கல்வியறிவில்லாத மக்களால் குடும்பக் கட்டுப் பாட்டின் அடிப்படை நோக்கங்களையும் அதன் உண்மைத் தாற்பரியங்களையும் விளங்கிக் கொள்ள முடியுமா?
(ஆ) இரத்தச் சோகை பெருமளவில் காணப்படும் பெண் களின் உணவு முறைகளில் முன்னேற்றம் இல்லாத போது குடும்பக் கட்டுப்பாடு முறைகளால் ஏற்படும் பக்க விளைவுகளைத் தவிர்ப்பது எப்படி?
(இ) வீட்டுவசதி, குறிப்பாக தனியறை, வசதிகளற்ற வீடுளில் குடும்பக் கட்டுப்பாட்டினைப் பின்பற்றும் தம்பதி யினருக்கு வசதிகளை எவ்வாறு வழங்கலாம்?
(ஈ) உலக வங்கி இலங்கை அரசாங்கம் போன்றவை நீட்டிய நேசக்கரங்களை பயன்படுத்தித் தொழிலாளர் வீட்டு வசதிகளை முன்னேற்றப் போதிய அக்கறை காட்டாத தோட்ட நிர்வாகங்கள் இப்போது அவை இல்லாதொழியும் தருவாயிலும் கூட தமக்குப் பிறகு ஐக்கிய நாடுகள் குடும்பத்திட்டச் சங்கத்துடன் இணைந்து வெறறிகரமாகத் தொழிலாளர்கள் மத்தியில் குடும்பக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆர்வத் துடன் செயல்படுவதன் உண்மை நோக்கம் யாது?
(உ) குடும்பக் கட்டுப்பாட்டை வெற்றிகரமாகச் செயல் படுத்த உதவியாகத் தோட்ட மருத்துவ நிலையங்களை அரசின் சுகாதார திணைக்களத்தின் பொறுப்பில் விட்டுவிடாமல் இன்னும் ஏன் அரைகுறை வசதியுடன் தோட்ட நிருவாகத்தின் கீழேயே செயற்பட விடப்படுகின்றது.
(ஊ) நாட்டில் ஏனைய அரச தொழிலாளர்களுக்கு வழங்கப் படும் அரசின் சம்பள உயர்வுகள் தோட்டத் தொழிலாளர்களுக்கு
66

பெருந்தோட்டத்.
மட்டும் அசட்டை செய்யப்படுகிறது. ஆனால் குடும்பக்கட்டுப் பாட்டு விஷயத்தில் மாத்திரம் விசுவாசமாகச் சம சந்தர்ப்பம் வழங்கிச் செயற்படக் காரணமென்ன?
(எ) நிரந்தர குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைக்கு 3 குழந்தைகள் உள்ள குடும்பங்களே தெரியப்படும் என்பது கொள்கை. ஆனால் இரண்டு குழந்தைகள் மட்டும் உள்ள பெண் கள் சிலருக்கும் அத்தகைய கு.க. அறுவை சிகிச்சை (1991 குதி. அறிக்கை 6.1) அளிக்கப்பட்டிருப்பது ஏன்?
இத்தகைய சந்தேகங்கள் திருப்தியான முறையில் தொழி லாளர் மத்தியில் தீர்க்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் எவ்வித நல்ல நோக்கங்களுடனும் குடும்பக் கட்டுப்பாட்டு நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் கூட தொழிலாளரதும், அவர்களின் நலன்களில் அக்கறை கொண்டுள்ள நிறுவனங் களினதும், எண்ணங்களில் ஏற்படக்கூடிய சந்தேகங்களை இலகுவில் தீர்த்து விட முடியாது.
Bibiliography
1. Central Bank of Ceylon, Consumer Finance Survey - 1981/82, (1983)
Colombo.
2. Gnanamuthu G.A., (1977), Education and the Indian Plantation Worker in
Sri Lanka, (Colombo)
3. EDB and SLSPC, workshop background paper on "Family Planning
Programmers for the Plantations", 27-3-92, Colombo.
4. Marga Institute, (1976) Housing in Sri Lanka, (Colombo).
_sశీఖం
67

Page 48

நாமும் நமது.
5. நாமும் நமது
கலாச்சார வளர்ச்சியும்
மனித இனத்தின் வரலாற்றை நோக்கினால் உலகில் அனைத்துப் பாகங்களிலிருந்தும் வெளிப்பகுதிகள் நோக்கி மக் களின் குடிப்பெயர்வுகள் இடம் பெற்றுள்ளன என்பது புலானா கின்றது. சீனாவிலிருந்து தென்கிழக்காசியப் பகுதிகள் மற்றும் மத்திய அமெரிக்கப் பகுதிகள் நோக்கியும் ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்க கரிபீயன் பகுதிகள் நோக்கியும், ஐரோப்பாவிலிருந்து வட அமெரிக்கா, தென் அமெரிக்கா நோக்கியும் இந்தியாவிலிருந்து தென், தென்கிழக்காசியா, ஆப்பிரிக்கா, கரிபியன், பசுபிக் தீவுகள், ஐரோப்பிய நாடுகள் நோக்கியும் மக்கள் குடிபெயர்ந் துள்ளனர். இவற்றுள் இந்தியாவிலிருந்து வெளிநாடுகள் நோக்கி ஏற்பட்ட குடிப்பெயர்வுகள் அதற்கான காரணங்கள் என்பன நம்மைப் பொறுத்து மிக முக்கியமானவை ஆகும்.
இவ்வாறு குடிபெயர்ந்து இலங்கையில் வாழும் மலையக மக்கள் தமது கலாச்சாரத்தினைப் பேண வேண்டுவதன் தர்க்க ரீதியான காரணங்களையும் அதனைப் பேணும் செய்முறையில் கல்வி, தாய்மொழி இரண்டினதும் முக்கியத்துவத்தினயுைம் இக் கட்டுரை சில உதாரண நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறி விளக்குகின்றது. குடிபெயர்வுக்கான காரணங்கள்:
மக்கள் ஒரிடத்திலிருந்து வேறிடம் நோக்கிக் குடிபெயர் வதற்கான் காரணங்கள் பல உள்ளன. அவற்றுள் தொழில் காரணமாகவும் அதற்கான கல்விப்பயிற்சி பெறுதல் காரணமாக
69

Page 49
இன்றைய மலையகம்
வும் குடிபெயர்தலே மிக முக்கியமாகும். ஆரம்ப காலங்களில் இந்தியாவிலிருந்து குடிபெயர்வுகள் ஏற்பட்ட போது, தொழில் புரியும் ஆண்கள் மட்டுமே குடிபெயர்ந்து சென்றுள்ளனர். இதனால் இக்குடி பெயர்வுகள் தற்காலிகமானவையாகவும், சில காலத்தின் பின்னர் தாய்நாட்டிற்குத் திரும்பி விடுபவர்களாகவும் இருந்தனர். இலங்கை, மலேசியா, பர்மா, இந்தோனேசியா, தாய்லாந்து, கிழக்காப்பிரிக்கா நாடுகள் சூரினாம், கயானா, மொரிஷியஸ், பீஜி, இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கு இத்தகைய குடிபெயர்வுகள் ஏற்பட்டன. ஆனால் இத்தகைய தற்காலிக குடிபெயர்வுகள் பல பெருளாதார நடைமுறைப் பிரச்சனைகளை உருவாக்கியதால் பின்னர் குடும் பங்களுடன் குடிபெயர்தல் ஏற்படலாயிற்று. இவ்வாறு குடும்பங் களுடன் ஏற்பட்ட குடிபெயர்வுகளே, பின்வந்த காலங்களில் பல் வேறு சமூக அரசியல் பொருளாதார சூழலகளின் வளர்ச்சிக்கு அத்திவாரமிட்டதெனலாம்.
உலகின் பல பாகங்களிலும் கோடிக்கணக்கான இந்திய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் (850) மில்லியன்) ஏறத்தாழ 7 வீதமானோரே தமிழக மக்கள் இதனை ஒத்ததாகவே உலக நாடுகளில் வாழும் இந்திய மக்களிலும் ஏறத்தாழ 10 வீதத்திற்கும் குறைந்தவர்களே - தமிழ் மக்கள். இதில் பெருமளவினரான மக்கள் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலேயே வாழ்கின்றனர். இந்நாடுகளை விட ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, கனடா அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் குறிப்பிடத்தக்க அளவினர் வாழ்கின்றனர். இவர்களைத் தவிர ஏனைய நாடுகளில் நீண்ட காலமாக வாழும் இந்தியத் தமிழ் மக்கள் - குறிப்பாக, பீஜி, மொரிஷியஸ், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் - தமிழ் மொழி கலாச்சாரம் போன்றவற்றிலிருந்து வெகுதூரம் சென்று இன பாரம்பரியங்களை இழந்து நிற்பது கண்கூடு.
பாரம்பரியங்கள் பேணப்பட வேண்டுமா?
இன கலாச்சார பாரம்பரியங்கள் பேணப்பட வேண்டுமா என்பது மிகப் பாரதூரமானதும் தர்க்கத்திற்குரியது மான ஒரு வினாவாகும். உலக மக்கள் அனைவரும் ஒருவரே; வேறுபாடுகளைக் களைவோம்; ஒரே மொழி, பண்பாடு என் பனவற்றால் ஒன்றுபடுவோம் என்றெல்லாம் சமத்துவ ஐக்கிய எண்ணங்கள் பரிமாறப்படும் வளர்ச்சி பெற்ற இக்காலக் கட்டத்
70

நாமும் நமது.
தில், நம்மைத் தனிமைப்படுத்திக் கொள்ளும் கலாசாரச் சிந் தனைகள் அவசியமா என வினவக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
இன்று ஐக்கிய நாடுகள் சபையில் 175 அங்கத்துவ நாடுகள் உள்ளன. இந்நாடுகளில் ஏறத்தாழ 150 மொழிகளாவது உத்தியோக பூர்வமான மொழிகளாக நடைமுறையில் இருக்கின் றன. ஒவ்வொரு நாடும் தனக்கேயுரிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கலாச்சார பாரம்பரியங்களைக் கொண்டவை. ஐக் கிய நாடுகள் சபை ஒவ்வொரு நாட்டினதும் இறைமையினை மதிக்கும் அதே வேளையில், அவையாவும் ஒன்றிணைந்து சமாதான சக வாழ்வினைப் பேண வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே செயல்படுகின்றது. இந்நிலையில் இந் நாடுகளிடையே பாரம்பரியம் கலாச்சாரம் என்பனவற்றினைப் பேணுவதனையும் வளர்ப்பதனையும் "யுனெஸ்கோ" என்னும் ஐ.நா.வின் உபநிறுவனம் ஊக்குவிக்கின்றது. இவையெல்லாம் உலக நாடுகளிடையே கலாச்சாரங்கள் முக்கியமானவை என் பதனையும், அவை பேணப்பட வேண்டும் என்பதனையுமே நமக்கு எடுத்துக் கூறுகின்றன.
பல்வேறு கலாச்சாரங்களையும் அவதானித்து அவற்றின் சங்கமத்தில் ஊற்றெடுப்பனவே யாவராலும் போற்றப்படும் கலாச்சாரங்களாகின்றன. அராபிய இந்திய இசைகளின் கலப் பான இந்துஸ்தானி இசையை யாவரும் விரும்புகிறோம். நமது இசைக்கருவிகளும் மேற்கத்திய இசைக்கருவிகளும் இணைந்து இசைக்கப்படும்போது சங்கீதம் மெருகேறுகின்றது. தென் இந்திய பட்டுப்புடவையினை மேல்நாட்டுப் பாணியில் அணியும் போது புது அழகு மிளிர்கின்றது. மேல்நாட்டுத் துணி வகைகளை இந்தியப் பாணியில் அணியும்போது வேறொரு அழகு தோன்றுகிறது. நம் நாட்டு மருத்துவத்தில் ஆங்கில மருத்துவ தொழில் நுட்பம் கலந்து சிறப்புறுகின்றது. சமையற் கலையில் சீனவாசனைப் பொருட்கள் ருசியினை மேம்படுத்து கின்றன. இப்படி ஒவ்வொரு துறையிலும் பல நாட்டுக் கலாச் சாரங்கள் ஒன்றினையும் போது புதுமையும் சிறப்பும் பெறு கின்றன. இதற்காக ஒவ்வொரு கலாச்சாரமும் பேணிப் பாதுகாக்கப் படுவதுடன் அவை காலத்திற்கேற்பப் புதுவடிவமும் பெற வேண்டும். அத்தகைய புதுவடிவம் அடிப்படை இயல்பினையோ அல்லது பண்பினையோ சிதைப்பதாக இருந்து விடக் கூடாது என்ற எச்சரிக்கை அவசியம். வேறொரு வகையாகக் கூறுவதா னால் நம் கலாச்சாரத்தின் சாராம்சம் கெடாமல், அதன் இயல்
71

Page 50
இன்றைய மலையகம்
பினைப் பேணும் அதே நேரத்தில் நமது கலாச்சாரத்தின் சிறப் பினை சிதைக்கும் குறைபாடுகளை அகற்ற வேண்டும். உதாரண மாகச் சைவ உணவு வெப்ப காலநிலைப் பிரதேசங்களுக்கு மிக உகந்தது. ஆனால் அது சமநிறையான (Balance Die) உணவுப் பதார்த்தங்கள் அடங்கியதாக இருக்க வேண்டும். தனியே நெல் லரிசியிலும், காய்கறியிலும், தங்கியிருப்பதனை விட, மேலதிக தானிய வகைகள், பால், பழங்கள், வெண்ணெய் போன்றவற் றுடன் சமநிறையாகச் சாப்பிடும் ஒருவர் ஆரோக்கியமாக வாழலாம். ஆங்கிலக் கல்வியினைக் கற்பதென்பது தொழிற் கல்வி கற்பதற்கும் நம்மொழியில் இல்லாதவற்றினைக் கற்று சர்வ தேச ரீதியாகக் கருத்து, தொழில்நுட்ப அறிவினைப் பரிமாறிக் கொள்வதற்குமே ஒழிய, வீட்டில் ஒருவருக்கொருவர் ஆங்கிலத்தில் பேசி, அதன் மூலம் போலிச் சமூக அந்தஸ்துக்களை உயாத்திக் கொள்வதற்காக இருக்கக் கூடாது. பிறநாட்டு உற்பத்திப் பொருட்களையும், கருவிகளையும் நாம் நமது உள்நாட்டு அபிவிருத்தியினை, மேம்படுத்தவும், அதிகரிக்கவும் இறுதியில் அவற்றை நாமே உற்பத்தி செய்யும் நோக்குடனும் பயன்படுத்த வேண்டுமே ஒழிய அப்பொருட்களின் பயன்பாட்டால் நாம் பெருமையடைவதாக எண்ணும் கருத்துக்கள் வளரக் கூடாது.
இந்தியாவில் "சதி" என்னும் பெயரில் தமது கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறும் காட்டுமிராண்டித்தனம் அகற்றப் பட்டமை போற்றுவதற்குரிய கலாச்சார அகற்றலாகும். பெண் கள் கல்வி கற்க வேண்டியதில்லை என்பதும் அதனை ஒத்த ஒரு காட்டுமிராட்டித்தனமே, மனிதன் ஒருவனுக்கு கைகளும், கால் களும் தேவையில்லை எனக் கூறுபவரை நாம் எப்படி மதிப்பீடு செய்கிறோமோ அதே முறையில் தான் பெண்கள் கல்வி கற்க வேண்டியது அவசியம் இல்லை என்ற கருத்தையும், அவர்கள் உயர் கல்வி பெறக் கூடாது அல்லது அவர்களுக்குத் தேவையில்லை என்ற கருத்தினையும் நாம் மதிப்பீடு செய்ய வேண்டும். கை, காலற்ற அங்கவீனனுக்கும் கல்வியறிவற்ற அல்லது அறிவு ஊனமுற்றவருக்கும் இடையே வேறுபாடு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அதற்கு மேலாக அறிவு வளர்ச்சியுள்ள அங்க வீனன் உடலின் அனைத்து உறுப்புக்களையும் கொண்ட அறிவிலியை விட மேலானவன் என்றாலும் பொருந்தும்.
நாமும் நமது கலாச்சாரமும்:
இலங்கையில் கடந்த நூற்றைம்பது ஆண்டுகளாக வந்து குடியேறிய இந்திய வம்சாவழியினரது எண்ணிக்கை 1964-ஆம்
72

நாமும் நமது.
ஆண்டில் 10 இலட்சமாக இருந்தது. இவர்கள் மலையக மக்கள் என அழைக்கப்படுகின்றனர். அந்தத் தொகையில் ஐந்து இலட் சத்து ஆறாயிரம் பேர் இந்தியா செல்ல வேண்டியவர்கள். சுமார் ஒரு இலட்சம் பேர் தவிர ஏனையோர் சென்று விட்டனர். எஞ்சிய வர்களும் கடந்த 28 வருட கால இயற்கைப் பெருக்கமும் சேர்த்து, இப்போது 12 இலட்சம் பேராக உள்ளனர். இவர்கள் இப்போது மத்திய மலைநாட்டிலுள்ள பெருந்தோட்டங்களிலும் வடகிழக்கு மாவட்டங்களிலும் பெரும்பான்மையாக வாழ் கின்றனர். இலங்கையின் அனைத்து நகரங்களிலும் 1981 ஆம் ஆண்டில் வாழ்ந்த மலையகத் தமிழ் மக்களின் எண்ணிக்கை ஏறத் தாழ 55,000 பேர் ஆகும். (அட்டவணை 110). 1992 இல் இவர்களின் எண்ணிக்கை 65,000 ஆகப் பெருகியிருக்கலாம். இவர்களை விட இலங்கைக் குடியுரிமை பெற்றதனால் தம்மை இலங்கைத் தமிழர் எனப் பதிந்து கொண்ட மலையகத் தமிழ் மக்களும் ஏறத்தாழ 15,000 பேரளவில் நகரங்களில் வாழ் கிறார்கள் என எண்ண இடமுண்டு.
நகர்ப்புறங்களில் வாழ்வோரை விட ஏனையோர் யாவரும் விவசாயத் தொழிலாளர்களே. இவர்களுடைய கல்வி வளர்ச்சி மிகவும் தாழ்நிலையிலேயே உள்ளது. இலங்கையில் சராசரியாக 89.5 வீதமானோர் எழுத்தறிவுள்ளவராக இருக்க மலையகத் தமிழ் மக்கள் மத்தியில் இது 64 வீதமாகவே உள்ளது. அதிலும் 2 வீதமானோரே பள்ளியில் 10 வருடங்கள் அல்லது அதற்கு மேல் கல்வி கற்றவர்கள். உயர்கல்வி பெற்றவர்களோ மிக மிகக் குறைவு.
மலையகத் தமிழ்ச் சமூகத்தின் சமூக கலாச்சார பாரம் பரியங்களின் செல்வாக்கும் நடைமுறைகளுமே மலையகத்துக்குப் பொதுவானதாகக் கருதப்பட முடிகிறது. எனவே மலையகத் தமிழ் மக்களும், அவர்களுடைய கலாச்சாரப் பின்னணியும் அவற்றின் அடிப்படையில் கலாச்சாரம் சுபீட்சம் பெறச் சாதகமான ஏனைய சூழ்நிலைகள் பற்றியும் நாம் அவதானிக்க வேண்டியுள்ளது. அதன் மூலமே மலையகத் தமிழ் மக்களது கலாச்சார மேம்பாட்டிற்கான பொருத்தமான அனுமானங்களை நாம் வளர்த்துக் கொள்ள முடியும். பொதுவாக இலங்கை வாழ் மலையக மக்களில் பெரும்பங்கினர் விவசாயத் தொழிலாளர் களாகவும், ஒரு சிறிய அளவினர் வர்த்தகர்களாகவும் மிக மிகச் சிறிய அளவினரே ஏனைய உயர் தகைமை மிக்க தொழில் புரிவோராகவும் உள்ளனர்.
73

Page 51
இன்றைய மலையகம்
இந்நாட்டின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் இலங்கைத் தமிழரும் கணிசமான அளவில் (20 இலட்சம் பேர்) வாழ்வதால் இங்கே தமிழக கலாச்சாரம் தமிழ்மொழி என்பன இன்றும் வளமுடன் வாழ்கிறது. இதற்கு மலையக மக்களது பங்கு பற்றி யும் நாம் இங்கே அவதானிப்பதும் இக்கட்டுரையின் நோக்கங் களில் ஒன்றாகும்.
முன்னர் கூறியவாறு உணவு, உடை, மொழி, கலைகள் யாவுமே நமது கலாச்சாரத்தின் பிரதிபலிப்புகளாகும். மலையக மக்கள் தமது கலாசாரங்களில் காலத்திற்கு ஒவ்வாதவனவற்றைத் தவிர்த்து ஏனையவற்றைப் பேணுவதும் பாதுகாப்பதும் அவர் களது நீண்டகால முன்னேற்றத்திற்கு மிக முக்கியமானதாகும்.இத் தகைய கலாச்சார பாதுகாப்பில் கல்வியும், மொழியும் எந்தளவுக்கு முக்கியமானவை என்பதும், அதன் மூலம் அடையக் கூடிய நீண்ட கால நன்மைகள் பற்றியும் இங்கே கவனிப்போம்.
சிறிய சமூகம் ஒன்று செயற்கையான முறையில் தனது அரசியல் ஸ்திரத்தன்மையையும், அதன் மூலம் பாதுகாப்பினையும் ஏற்படுத்திக் கொள்ள முடியாது. அதற்கு ஒழுங்கு முறையானதும், பக்க விளைவுகளற்றதுமான பலமிக்க ஸ்திரத் தன்மையினை உருவாக்கிக் கொள்ளுதல் அவசியமாகும். இலங்யிைன் இன் றைய தனியார் மயமாக்கலும் பொதுத்துறை சார்ந்த அரச ஆதரவுடனான பொருளாதார நடவடிக்கைகளின் மறைவும் வாங்கி விற்கும் தொழில்களைப் பொறுத்து ஒரு எச்சரிக்கை யினை விடுத்துள்ளமையினை அசட்டை செய்யக் கூடாது. பொருளாதாரத்தின் சீரமைப்பு, நீண்ட காலத்தில் தனிப்பட்ட வர்களது வர்த்தக நடவடிக்கைகளைக் குறைத்து, நிறுவன ரீதியான கூட்டமைப்புகளின் தோற்றத்தையே உருவாக்கும். பிரித்தானியா கலப்புப் பொருளாதாரத்தைக் கொண்ட ஒரு நாடு. அங்கே 22 விசேட அங்காடி நிறுவனங்கள் பிரித்தானியா முழுவதிலும் இருபதாயிரத்திற்கு மேற்பட்ட விற்பனை நிலை யங்களை இயக்கி, நாட்டின் 80 சதவிகித சில்லறை விற்பனை யினைக் கட்டுப்படுத்துகின்றன. இலங்கையில் இன்று கல்வி, சுகாதாரம், வங்கி, காப்புறுதி, கைத்தொழில்கள், பெருந்தோட் டங்கள், ஹோட்டல்கள் அனைத்துமே தனியார் மயப்படுத்தப் படுகின்றன. கோடிக்கணக்கான முதலீடு தேவைப்படும் போது, பங்கு சந்தையில் அவை விற்கப்பட்டு பெருமளவினர் பங்கு தாரராவார்கள். அவற்றின் நிர்வாகம், சிறப்புத் தேர்ச்சி பெற்ற வர்களின் கட்டுப்பாட்டிற்கு வரவேண்டி நேரிடும். அந்நிலை யில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற நிபுணர்கள் நிர்வாகிகளாகவும்
74

நாமும் நமது.
ஏனையோர் ஊழியம் புரிபவர்களாவும் செயற்படும் ஒரு சமூக அமைப்பினையே உருவாக்கும். இது சாதாரண வாங்கி விற்கும் தொழிலைப் பொறுத்தவரையில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
எனவே, சம்பிரதாய வியாபாரத் தொழில்கள் தேக்க முறுவதுடன் இத்துறை சார்ந்த தொழில் வாய்ப்புகள் ஸ்தம் பிதமடைய நேரிடும்.
மலையகத் தமிழ் மக்களில் நிலமற்ற விவசாயத் தொழி லாளர்களே பெரும்பான்மையாக வாழ்கின்றமையால், சமூகத்தின் உயர் மட்டங்கள் நோக்கி இச்சமூகம் அசைய முடியாதுள்ளது. இவ்வாறான சமூகம் முன்னேற வேண்டுமானால் அதற்குப் படிமுறை வளர்ச்சியில் இச்சமூக மக்கள் மத்திய தர வகுப் பினராக வளர வேண்டும். விவசாயத் தொழிலாளர்களாக உள்ள நிலை மாறி, ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், பொறியியலாளர்கள், வர்த்தகர்கள், மருத்துவர்கள் போன்ற கல்விகற்ற மக்களைக் கொண்ட நடுத்தர வர்க்கத்தினராக வளரும் போது தான், சமூகம் எதிர்பார்க்கும் உயர் வாழ்க்கைத்தரத்தை அடைய முடியும். இவை யாவற்றிற்கும் தேவையானது கல்வி, மொழி, தொழிற் பயிற்சி நிபுணத்துவம் என்பனவாகும். இதனையே வளர்ச்சி பெற்ற சமூகங்களின் வரலாறுகள் நமக்கு உணர்த்துகின்றன. வியாபாரத்தில் பெரும்பான்மையாக ஈடுபட்டிருப்பவர்கள் எதிர் காலத்தில் இத்துறைகளில் தொழில் நிபுணத்துவம் பெறுவதில் கவனத்தைச் செலுத்த வேண்டிய தேவையுள்ளது. வியாபார முகாமைத்துவம், நிர்வாக சந்தைப்படுத்தல், காப்புறுதி, வங்கித் தொழில், கணக்காளர் தொழில், பங்குதரகர் பயிற்சி போன் றதும் உற்பத்திப் பொறியியல் நிர்வாக உதவியாளர், கணனி இயக்குநர் போன்ற வியாபாரம் சார்ந்த பல்வேறு நிபுணத்துவங் களிலும் இவற்றைவிட மருத்துவத்தின் பல்வேறு துறைகள், பொறியியல், விவசாயம் போன்ற துறைகளின் பல கிளைப் பிரிவுகளிலும் பெறும் நிபுணத்துவப் பயிற்சி எதிர்கால்ச் சுபீட் சத்திற்கு வழிகாட்டியாக அமையும். நவீன தொழில் பயிற்சி யுடன் வியாபாரம், கைத்தொழில், விவசாயம் என்பவற்றில் ஈடுபடும் போதுதான் சந்தையின் நவீன போக்குகளுக்கு ஈடு கொடுக்க முடியும்.
இத்தகைய நவீன தொழிற் துறைசார் பயிற்சிகளுக்கு ஆங்கிலம் போன்ற உலகப்பொது மொழிகளின் பயிற்சி மிக அவசியமாகிறது. நவீன அறிவியல், தொழில்நுட்பக் கல்விக்கும்
75

Page 52
இன்றைய மலையகம்
பிறமொழி நூல்களைக் கற்கவும் நவீன மொழிகள் அவசியம் அடிப்படைக் கல்வி ஒரு பிள்ளையின் தாய்மொழியில் தான் அமைய வேண்டும் என்றும் அதன் மூலம்தான் அப்பிள்ளையின் சிந்தனைச் சக்தியினை வளப்படுத்தலாம் என்றும் கல்வியியல் அறிஞர்கள் கருதுகின்றனர். இலங்கையில் தாய்மொழியில் கல்வி கற்காத சில சமூகத்தினரது இளைய தலைமுறையினரது சிந் தனை வளர்ச்சியானது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அத் துடன் இறுதியில் அவர்கள் எந்த ஒரு மொழியிலும் தமது கருத் துக்களை வெளியிட முடியாத குறைபாட்டுடன் காணப் படுகின்றமையினை இங்கே எடுத்துக் கூறுதல் பொருத்தமான தாகும். ஆரம்பத்தில் தாய்மொழியில் கல்வி கற்கும் குழந்தை ஆரோக்கியமாகத் தனது சிந்தனை முறைகளை வளர்த்துக் கொள்கிறது. பின்னர் குறைந்தபட்சம் மேலதிகமாக இரண்டு மொழிகளையாவது கற்க முடியும். இலங்கையைப் பொறுத்து எமக்கு சிங்களமும், ஆங்கிலமும் மிக அவசியம். மூன்று மொழிகள் கற்பது ஒன்றும் பெரும் சாதனையல்ல. தத்துவமேதை இராதாகிருஷ்ணன் மனிதன் ஒருவன் 14 மொழிகளில் பாண்டித் தியம் பெறலாம் என்பதனை உலகிற்குக் சாதித்துக் காட்டியிருக் கின்றார். ஐரோப்பிய நாடுகளின் பள்ளிக்கூடங்களில் மூன்று மொழிக் கல்வி இப்போது வற்புறுத்தப்படுகிறது.
எனவே, தாய் மொழியான தமிழில் கல்வியினைக் கற் பதன் மூலம் தெளிவாக சிந்திக்க வாய்ப்பேற்படுகிறது. குறித்த வயதோடு மேலதிக மொழிகளைக் கற்க முயற்சிக்க வேண்டும். அடிப்படைக் கல்வியின் பின் தொழிற்பயிற்சி தேவை. இதனால் நமது கலாச்சார பாரம்பரியங்களைத் தொடர்ந்து பேணவும். பிறமொழிகளிலும் பிற நாகரீகங்களிலும் உள்ள சிறந்த அம்சங்களை நமது கலாசாரத்தில் இணைக்கவும் வாய்ப்பேற்படுகிறது.
மனிதன் ஒருவனுக்குச் சுயமரியாதையில் கிடைக்கும் திருப்தியும் உற்சாகமும், வேறெதிலும் கிடைப்பதில்லை. இதன் அருமையினைச் சுயமாரியாதையை விட்டுக் கொடுக்க வேண் டிய சந்தர்ப்பத்திலேயே உணர முடியும். நமது கலாசாரம் சுயமரியாதையுடன் தொடர்புபட்டது. பிற கலாச்சாரங்களை அறிந்து கொள்ள கல்வியும், மொழி வளமும் தேவை. இதனால், நமது கலாச்சாரத்தின் சிறப்பினை உணர முடிவதுடன் பொருந் தாதவற்றை அகற்றிச் சிறந்ததும் வாழ்க்கையின் உயர்வுக்குத் தேவையானதுமான அம்சங்களை இணைத்துக் கொள்ள வாய்ப்பு கள் உருவாகின்றன.
76

மலையகத் தமிழ் மக்களும்.
6. மலையகத் தமிழ் மக்களும் - குடியுரிமையும்
இலங்கையில் வாழும் இந்தியத் தமிழர்களின் வாழ்க்கை நிலைமைகளை நிர்ணயிக்கும் மிக முக்கிய பிரச்சினை குடி யுரிமையான பிரஜாவுரிமைப் பிரச்சினையாகும். ஆங்கிலேயர் இலங்கையின் அரசியலில் அதிகாரத்தைக் கைப்பற்றியதோடு, பொருளாதாரத் துறையிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டனர். இதன் விளைவாக ஏற்பட்ட கோப்பிப் பயிர்ச் செய்கை, தேயிலைப் பயிர்ச் செய்கை, பின்னர் ஏற்பட்ட இரப்பர் பயிர்ச் செய்கை என்பனவற்றிற்குப் பெருமளவான தொழிலாளர் தேவைப்பட்டனர். இவர்கள் தோட்டங்களிலேயே வாழ்பவர் களாகவும், மலிவான வேதனங்களுக்குத் தொழில் புரிபவர்களாக வும், நிருவாகத்தின் கட்டளைகளை மறுப்பு எதுவுமின்றி நிறைவேற்றுபவர்களாகவும், இருக்க வேண்டிய தேவைகளை மனதில் கொண்டு தென்னிந்திய மாவட்டங்களிலிருந்து அத் தகைய தகுதிகளுடன் வாழ்ந்த தொழிலாளர்கள் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டனர்.
1830-ஆம் ஆண்டை அடுத்த காலப்பகுதிகளிலே தென் னிந்தியப் பகுதிகளில் - குறிப்பாகத் தமிழ்நாட்டின் பல விவசாயப் பகுதிகளில் - வறுமை, பஞ்சம் என்பன காரணமாக வும், ஆங்கிலேயர் இந்தியாவில் பின்பற்றிய இறக்குமதிக் கொள்கை யாலும் விவசாயத் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்த
77

Page 53
இன்றைய மலையகம்
துடன் அவர்கள் தொழில் வாய்ப்புக்கள் போதியளவில்லாது கஷ்டப்பட்டுக் கொண்டும் இருந்தனர். எனவே இலங்கையின் பெருந்தோட்டங்களுக்கு அவர்களைக் கொண்டு வருவதில் சிரமம் ஏதும் இருக்கவில்லை. 1830-ஆம் ஆண்டிற்கும் 1948-ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட 118 வருட காலங்களில் ஏற்பட்ட இந்தியத் தொழிலாளர் குடிவரவு, குடியகல்வுகளின் பின்னர் 1964-ஆம் ஆண்டில் இலங்கையில் இந்தியத் தொழிலாளர்கள் ஏறத்தாழ 975,000 பேர் காணப்பட்டனர். இது அக்கால இலங் கையின் மொத்த மக்கள் தொகையில் 12 வீதமாகும்.
இவர்களின் குடியுரிமை பற்றிப் பல்வேறு கால கட்டங் களிலும் விவாதங்கள் ஏற்பட்ட போதிலும் சுதந்திரத்திற்குப் பின் னர் இலங்கையில் நடந்த முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் இந்தியத் தொழிலாளர்கள் வாக்குரிமை பெற்றிருந்தனர். இவர்கள் தேர்தலின்போது இடதுசாரிக் கட்சிகளையே ஆதரித்து 17 இடதுசாரிப் பாராளுமன்ற அங்கத்தவர்களின் தெரிவுக்குப் பொறுப்பாக இருந்தனர் என்பது பொதுவான அபிப்பிராயமாகும்.
இக்கால கட்டத்தில் ஆசியாவின் ஏனைய பகுதிகளிற் காணப்பட்ட அரசியல் சித்தாத்தங்களின் வளர்ச்சி பற்றியும் ஒரளவு குறிப்பிடுதல் பொருத்தமாகும். 1948-ஆம் ஆண்டில் சீனாவின் கம்யூனிசப் புரட்சியுடன் ஆசியாவின் குடித்தொகையில் ஏறத்தாழ 50 வீதமான மக்களைக் கொண்ட சீனா மாசேதுங்கின் தலைமையில் ஒரு கம்யூனிச சமுதாயத்தினை உருவாக்க முற்பட் டது. வடகொரியா, வடவியட்நாம் போன்ற நாடுகளினதும் கம் யூனிச சித்தாந்தத்தின் செல்வாக்குகள் வளர்ச்சியுற்றதுடன், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளும் கம்யூனிசத்தின் ஊடுருவலை எதிர்த்துப் போராட முனைந்திருந்தன. இத்தகைய பின்னணியில் இலங்கையிலும் பாராளுமன்றத் தேர்தலில் தொழிலாளர்களின் நலம் பற்றிப் பேசும் கட்சிகள் கணிசமான அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டமை, முதலாளித்துவச் சிந்தனை மிக்க அரசியல் கட்சிகளைக் கவலையடையச் செய்திருக்கும் என் பதனை மறுப்பதற்கில்லை. எனவே, இன, மொழி, சமய பேதமின்றி நேரடியாகவும், மறைமுகமாகவும் முதலாளித்துவ சக்திகள் இணைந்து தொழிலாளர்களின் பலத்தை முறியடிக்கச் செய்த முதல் சதிவேலையாக, இலங்கையில் அப்போது இருந்த சுமார் 10 இலட்சம் இந்தியத் தொழிலாளர் சமூகத்தின் குடியுரிமை பறிக்கப்பட்டது. இத்தகைய மேலெழுந்த கம்யூனிச அச்சுறுத்தல் மாத்திரமின்றி உள்ளூரிற் காணப்பட்ட இனவாத
78

மலையகத் தமிழ் மக்களும்.
அரசியல் கருத்துக்களும் இதற்கு வலுவூட்டுவனவாயிருந்தன. எவ்வாறாயினும், இறுதி விளைவாக, இந்தியத் தொழிலாளர்கள் இலங்கையின் அரசியல் வாழ்விலிருந்து ஒதுக்கப்பட்டனர்.
குடியுரிமை இழந்தவர்கள் அதன் விளைவாகப் பல்வேறு உரிமைகளை இழந்தனர். சொந்தமாகக் குடியிருக்க வீடுவாங்க முடியாது; விவசாயம் செய்ய நிலம் வாங்க முடியாது; அரசாங்க உத்தியோகங்களில் அமர முடியாது; பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவானால் கூடிய கட்டணங்கள் செலுத்த வேண்டும். வியாபாரம் செய்ய அனுமதியில்லை. ஏற்றுமதி, இறக்குமதி அனுமதி கிடைக்காது. இவ்வாறு அரசியல் பொருளாதார துறைகளில் அவர்களால் எவ்வித முன்னேற்றமும் அடைய முடியாத நிலை ஏற்பட்டது. யாவற்றிற்கும் மேலாக, இந்தியாவிற் பல்வேறு சமூக, கலாச்சார உறவுகளைக் கொண்டிருந்த இம் மக்கள், ஏதேனும் தேவைக்காக இலங்கையை விட்டு இந்தியாவுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ செல்ல வேண்டுமானால், அதற்கான கடவுச்சீட்டுகள் பெற இயலாது இன்னலுற்றனர். இவ் வாறு குடியுரிமையிழந்த இந்தியத் தொழிலாளர்கள் பல்வேறு வகையிலும் துன்புற்றுக் கல்வி, பொருளாதாரம் போன்ற துறைகளில் பின்தங்கிக் காணப்பட்டனர்.
1950-ஆம் ஆண்டின் பின்னர் இன்றுவரை (1987) இவர்களது குடியுரிமைப் பிரச்சினையினைத் தீர்க்கப் பல முயற்சி கள் எடுக்கப்பட்ட போதிலும், 40 வருட முயற்சிகள் எதுவித முடிவான தீர்வினையும் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை பாகும்.
1950-ஆம் ஆண்டின் பின் எடுக்கப்பட்ட முதல் முயற்சி இந்தியர்-பாகிஸ்தானியர் வசிப்பிடச் சட்டமாகும். இச்சட்டத் தினடிப்படையில் 1964 அளவில் சுமார் 134,000 பேரே பிரஜாவுரிமை பெற்றிருந்தனர். விசாரணை விதிமுறைகள் மிகவும் கடுமையாக இருந்ததாலும் அதன் மூலம் அதிகாரிகள் இயன்றளவு பிரஜாவுரிமை மனுக்களை நிராகரிக்க விரும்பிய தாலும், மிகச் சிறிய அளவினரே உரிமை பெற்றனர். இவ்வாறு 14 ஆண்டுகள் கழிந்தன.
1964-ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்ட சிறிமாவோ- சாஸ்திரி உடன்படிக்கை, அந்த ஆண்டில் இலங்கையில் வாழ்ந்த 975,000 இந்தியத் தமிழர் களைப் பொறுத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த ஒப்பந்
79

Page 54
இன்றைய மலையகம்
தத்தின்படி இந்தியா 525,000 பேரை ஏற்றுக்கொள்ள வழிசெய்தது. இலங்கை 300,000 பேருக்கு இலங்கைப் பிரஜாவுரிமை வழங்க ஒத்துக் கொண்டது. எனவே, இலங்கையில் அப்போ திருந்த இந்தியத் தமிழர்களில் 50 வீதத்திற்கு மேலானோரைத் தாயகம் திரும்ப வழி செய்த அந்த ஒப்பந்தம், இலங்கை வாழ் தமிழரின் அரசியல் பலத்தினை அழிக்கச் செய்த முயற்சிகளில் பிரதானமானது என்றும் வர்ணிக்கலாம். இவ்வொப்பந்தப்படி, 1964 முதல் 1979-ஆம் ஆண்டுக்குட்பட்ட 15 வருடத்தில் 825,000 பேரின் குடியுரிமை நிர்ணியிக்கப்பட வேண்டும் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தியாவுக்கு 7 பேருக்குப் பிரஜா வுரிமை வழங்கப்படும் அதேவேளையில், இலங்கைக்கு விண்ணப்பம் செய்த 4 பேருக்கு இலங்கைப் பிரஜாவுரிமை வழங்க வேண்டும் என்பதும் ஒப்பந்தமாகும். இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட அளவில் இலங்கைப் பிரஜாவுரிமை வழங்கப்படவில்லை என்பது பின்னர் கூறப்பட்ட குற்றசாட்டுகளில் ஒன்றாகும்.
எவ்வாறாயினும், 1974 ஆம் ஆண்டில் இந்தியாவில் திருமதி இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது, இலங்கை அரசாங்கத்துடன் மீண்டும் ஓர் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, 1964 ஆண்டில் தீர்த்துக் கொள்ளப்பட்ட கணக் கின்படி எஞ்சியிருந்த 150,000 நாடற்றவர்களில் அரைப் பங்கினரான 75,000 பேரை இந்தியாவும், எஞ்சிய அரைப் பங்கினரான 75,000 பேரை இலங்கையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அந்த ஒப்பந்தமாகும். இவ்வாறான ஒப்பந்தங் களின்படி ஏட்டளவில் நாடற்றவர் பிரச்சினை தீர்க்கப்பட்டிருந்தது. ஆனால், நடைமுறையில் இதில் பல சிக்கல்கள் காணப்பட்டன. இவ்வொப்பந்தத்தின்படி 15 வருடங்களில் யாவும் நடைமுறைப்படுத்தல் வேண்டும் என்பதும் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தது.
இவ்வாறாக ஒப்பந்தங்கள் எழுதப்பட்டிருந்த போதிலும்
1971 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரையில் 446,358 பேர் தாயகம் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர். அதன் விபரம் அட்டவணை 1.5இல் தரப்பட்டுள்ளது.
1986-ஆம் ஆண்டின் இறுதி வரையில் 224,000 பேருக்கே இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டிருந்தது.
இக்காலப்பகுதியில் குறிப்பாக 1974 ஆம் ஆண்டிற்கும் 1988 ஆம் ஆண்டிற்கும் இடையே பலதரப்பட்டதும் அதே
80

மலையகத் தமிழ் மக்களும்.
வேளையில் மலையக மக்களைப் பொறுத்து மிக முக்கியமானது மான அரசியல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. 1977-ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியினைக் கைப்பற்றியது. மலையக மக்களைப் பிரதானமாகப் பிரதிநிதித்துவம் செய்யும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினர் ஆளும் கட்சியுடன் இணைந்து செயலாற்றினர். தலைவர் செள. தொண்டமான் மந் திரி சபை உறுப்பினராக இருந்தார். அதே வேளையில் 1977, 1981, 1983, 1986 ஆம் ஆண்டுகளில் பல கலவரங்கள் இலங் கையில் இடம் பெற்றன.
இத்தகைய பின்னணியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 1986 ஆம் ஆண்டு தைப் பொங்கல் தினத்தன்று பிரார்த்தனை இயக்கம் ஒன்றினை ஆரம்பித்தது. இதன் பிரதான நோக்கம் மலையக மக்களது அடிப்படை உரிமையான குடியுரிமை இழுத் தடிக்கப்படுவதினை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதும், அதன் மூலம் நாடற்றவர் என்ற பிரச்சினைக்கு முழுமையான தீர்வினைக் கொண்டு வர அரசினை வற்புறுத்துவதுமாகும்.
அப்போதைய நிலையில், ஒப்பந்தங்களின்படி இலங்கை 375,000 பேருக்கும், இந்தியா ஆறு லட்சம் பேருக்கும் குடியுரிமை வழங்க வேண்டும். ஆனால் 4 இலட்சம் பேரே இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தனர். ஆனால், இலங்கைக் குடியுரிமைக்கு மேலதிகமாக விண்ணப்பித்திருந்தனர். இலங்கை நிராகரித்த விண்ணப்பங்களையும் சேர்த்து இந்தியா இறுதியில் ஐந்து இலட்சத்து ஆறு ஆயிரம் பேருக்கு குடியுரிமை வழங்க ஒத்துக் கொண்டது. எனவே, 1964 ஆம் ஆண்டில் இருந்ததாகக் கூறப்படும் 975,000 இந்திய வம்சாவழியினரில் இலங்கை 375,000 பேருக்கும், இந்தியா 506,000 பேருக்கும் குடியுரிமை வழங்கினாலும், 94,000 பேர் குடியுரிமையற்றவர்களாக இருந் தனா.
பல்வேறு அரசியல் சம்பவங்களும், குறிப்பாக ஜயவர்தன அரசாங்கத்துடன் திரு. தொண்டைமான் தலைமையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்படுத்திக் கொண்ட தீர்க்க தரிசனமிக்க அரசியல் இணங்கங்களும், மலையக தமிழ் மக் களின் அரசியல் ஆதரவை அரசுக்கு வழங்கி அதன் மூலம் 1986 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் எஞ்சிய 94,000 பேருக்கும் இலங் கைக் குடியுரிமை வழங்க அரசாங்கத்தினை ஏற்றுக்கொள்ள செய்ததுடன், பாராளுமன்றச் சட்டம் ஒன்றினைப் பிரேரித்து அங்கீகாரமும் செய்தது. அத்துடன் இலங்கை தனது பங்கிற்கு
81

Page 55
இன்றைய மலையகம்
ஏற்றுக்கொண்ட 469,000 பேருக்கும் 18 மாதங்களில் குடியுரிமை வழங்கவும் ஒத்துக் கொண்டது.
ஆனால் 1989 ஆம் ஆண்டில் ஏற்படவிருந்த ஜனாதிபதி தேர்தல் வரை முழுமையான, அமுலாக்கம் தொடர்ந்தும் இழுபறி நிலையிலேயே இருந்தது. இக்காலப்பகுதியில் குடியுரிமை வழங்கப்பட வேண்டியவர்களுக்குக் குடியுரிமைச் சான்றிதழ் வழங்கும் நடைமுறைகள் விரைவு படுத்தப்பட்ட போதிலும், எதிர்பார்த்த பெறு பேறுகள் கிட்டவில்லை. அரசினது சட்டம், ஆதரவு என்பன இருந்த போதிலும், அமுலாக்க உத்தியோகத் தவர்களின் உதாசீனப் போக்குக் காரணமாக அமுலாக்கத்தினை விரைவுபடுத்த முடியவில்லை. அத்துடன் குடியுரிமைச் சான்றிதழ் வழங்கும் முறைதான் இதற்கு முக்கிய முட்டுக்கட்டை என்பதும் உணரப்பட்டது.
1988 ஆம் ஆண்டு இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தலும், அப்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவர் திரு. தொண்டமான் ஜனாதிபதி வேட்பாளருடன் சாதுயர்யமாக ஏற் படுத்திக் கொண்ட அரசியல் இணக்கமும் இலங்கை வாழ் இந்திய மக்களின் குடியுரிமை வரலாற்றில் மிக முக்கியமான சம்பவமாக அமைந்தன.
இத்தேர்தலில் மலையக மக்கள் திரு. பிரேமதாசாவிற்கு ஆதரவினை வழங்குவர் என்ற அடிப்படையில் இ.தொ.கா. வினால் பேரம் பேசப்பட்டது. மலையக மக்களின் குடியுரிமைப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கொண்டு வரும் பட்சத்தில் மலையக மக்கள் அவருக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங் குவர் என்றும், அதற்காகத் தேர்தலுக்கு முன்னர் அனைவரது குடியுரிமையும் அமுலாக்கம் செயல்படல் வேண்டும் என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன் விளைவாக இந்தியக் குடியுரி மைக்கு விண்ணப்பிக்காத மலையகத் தமிழ் மக்கள் அனைவரும் இலங்கைக் குடியுரிமைக்கு அருகதையுடையவர்கள் என்றும், இதனை எடுத்துக் கூறும் சத்தியக் கடதாசி ஒன்றே இவ்வுரிமை யினை அவர்களுக்கு அளிக்கும் வகையிலும் 1988 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சட்டம் ஒன்று அமுலாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் குடியுரிமை பெற்ற மலையக மக்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களை உடனடியாக வாக்காளராகப் பதிவு செய்யவும் பாராளுமன்ற அனுமதி வழங்கப்பட்டது. இப் போது குடியுரிமைச் சான்றிதழ் அவசியமானது என்ற நிலை
82

மலையகத் தமிழ் மக்களும்.
மைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதனால், பல்வேறு நிலைமைகளின் வளர்ச்சியினையும் காணமுடிந்தது.
1988 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்துடன் இலங்கை வாழ் இந்திய வம்சாவழியினர் அனைவரும் நாடற்றவர் என்ற நிலைமையிலிருந்து விடுபட்டனர். இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்கள் இந்தியர்கள், அவர்கள் விரும்பினால் இந்தியா செல்லலாம். ஏனையோர் யாவரும் இலங்கையர்கள்.
இதுவரை காலம் இலங்கைக் குடியுரிமை பெற்றவர்கள் சான்றிதழ் ஒன்றினை அரசிடம் பெற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. 1988 ஆம் ஆண்டு சட்டத்தில் அத்தகைய நிர்ப்பந்தம் இல்லாமல் போனது. மலையக மக்களும் தமது பிறப்புச் சான்றிதழ் (இலங்கை), அடையாள அட்டை, இலங்கையில் சட்ட ரீதியாக வாழ்ந்தமை போன்றன மூலமும், மேலதிகமாக ஒரு சத்தியக் கடதாசியினைச் சமர்ப்பிப்பதன் மூலமும் தமது குடியுரிமையினை நிருபித்துக் கொள்ள முடியும். இவர்கள் வாக். குரிமை, மற்றும் ஏனைய மக்களுடைய அடிப்படை உரிமை களுக்கும் உரித்தாவார்கள்.
ஆயினும், நடைமுறையில் இன்னும் பல இன்னல்கள் உள்ளன. பல்வேறு தேவைகளுக்கும் முதலில் குடியுரிமைச் சான்றிதழ் அதிகாரிகளினால் கோரப்படுகின்றது. இதற்காக அத்தகைய அதிகாரிகளுக்கு 1988 ஆம் ஆண்டுச் சட்டம், அதன் உள்ளடக்கம் என்பன பற்றிக் கூறிவிளக்க வேண்டிய கடினமான பணி ஒவ் வொரு மலையகத் தமிழருக்கும் இப்போது ஏற்பட்டுள்ளது. எனவே, இப்போது வழங்கப்பட்டுள்ள குடியுரிமையினை இம் மக்கள் நன்கு விளக்கிக் கொள்வதோடு, 18 வயதாகியதும் எச்சரிக் கையுடன் ஒவ்வொரு மே மாதமும் விழிப்புடன் இருந்து வாக் காளராகத் தம்மைப் பதிவு செய்து கொள்ளுதல், 18 வயதாகிய தும் தேசிய அடையாள அட்டையினைப் பெற்றுக் கொள்ளுதல், வெளிநாடு செல்லாவிட்டாலும் கூட ஒர் இலங்கைக் கடவுச்சட் சீட்டிற்கு விண்ணப்பித்து, அதனைப் பெற்றுக் கொள்ளுதல் 1988 ஆம் ஆண்டுக்கு குடியுரிமைச் சட்ட மூலத்தின் பிரதிஒன் றினைக் கைவசம் வைத்துக் கொள்ளுதல், தமக்குப் பிறக்கும் குழந்தைக்கு முறையான பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொள் ளுதல், பாடசாலைக் கல்வி முடிந்ததும் பாடசாலையில் கற்ற தற்கான சான்றிதழினைப் பெற்றுக் கொள்ளுதல் போன்ற ஆவணச் சேகரிப்பில் ஈடுபட வேண்டிய பணியும் ஏற்பட்டுள்ளது. ஒரு வகையில் இது போதியளவு கல்வியறிவற்ற ஒரு சமூகத்
83

Page 56
இன்றைய மலையகம்
தினருக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ள போதிலும், அரை நூற்றாண்டாக இழந்திருந்து பெற்றுள்ள அடிப்படையுரிமை யினைப் பாதுகாத்துக் கொள்ள இது ஒரு தவிர்க்க முடியாத விலையாகும்.
தவிரவும், குடியுரிமைச் சான்றிதழ் பெறுவதனையும், தொடர்ந்து அதனைப் பயன்படுத்துவதனைத் தவிர்ப்பதும் ஒரு வகையில் சிறந்த சிந்தனையேயாகும். ஏனெனில், தொடர்ந்தும் இச்சமூகத்தினர் காலங்காலமாகக் குடியுரிமைச் சான்றிதழினைத் தூக்கித் திரியும் துர்பாக்கியம், இவர்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக மதிப்பிடவே உதவும். எனவே, இந்நாட்டின் ஏனைய பிரஜைகள் தமது குடியுரிமையினை நிரூபிக்கப் பயன் படுத்தும் ஆவணங்களை மாத்திரமே இவர்களும் பயன் படுத் தும் நிலையினை உருவாக்க, சில இடைக்கால இன்னல்களை அனுபவிப்பது தவிர்க்க முடியாததாகும். இதன் மூலம் மலையக மக்களின் எதிர்க் காலச் சந்ததியினராவது ஒவ்வொரு அரச அலுவலகங்களுக்கும் குடியுரிமைச் சான்றிதழ்களைத் தூக்கித் திரியும் அல்லல் நிலையினை ஒழித்து விடலாம் என நம்பலாம்.
_6ళ్నీ

வாக்காளராகப் பதிந்து.
7. வாக்காளராகப் பதிந்து கொள்வதிற் போதிய கவனம்
செலுத்த வேண்டும்
நாட்டில் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிப்பது ஒவ் வொரு பொறுப்புள்ள நாட்டுப் பற்றுடைய பிரஜையினதும் தலையாய கடமையாகும். அவ்வாறு வாக்களிப்பது ஜனநாயக ஆட்சியினை நிலைபெறச் செய்வதற்கான ஒரு வழிமுறை என்ற ஒரு பொதுவான நோக்கத்தின் பின்னணியில், வேறும் பல நோக் கங்களும் உள்ளடங்கி உள்ளன.
அதிலும் குறிப்பாகச் சிறுபான்மையினர் எப்போதும் தேர்தல்களில் பங்கெடுப்பதன் மூலமே தனது அபிலாஷைகளை யும், தேவைகளையும் பூர்த்தி செய்துக் கொள்ள முடிவதுடன், தமது பலத்தினையும் அடுத்த குழுக்களுக்கு எடுத்துக்காட்ட முடிகிறது. இத்தகைய நோக்கங்களை மனதிற்கொண்டு, இன்று மலையகத் தமிழ் மக்கள் தேர்தல்களைப் பொறுத்து ஆர்வம் கொள்ள வேண்டும்.
V- கடந்த 40 வருடங்களாக மலையக மக்களிற் பெரும்பான்மை யினராக விளங்கும் தோட்டத் தொழிலாளர்கள், இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு, வாக்குரிமையினை இழந்த வர்களானார்கள். சுதந்திரத்திற்குப் பின் நடைபெற்ற தேர்தலில் இவர்களின் பிரதிநிதிகளாக 7 பேரும், இவர்களுடைய ஆதர வைப் பெற்றவர்கள் 10 பேருமாக 17 பேரைத் தேர்ந்தெடுத்திருந்
&5

Page 57
இன்றைய மலையகம்
தார்கள். 94 பேரைக் கொண்ட நாடாளுமன்றத்தில், 17 பேர் இவர்கள் மீது அக்கறை கொண்டவர்களாக இருந்தனர்.
ஆனால், அடுத்து வந்த ஒரு சில வருடங்களில் இவர் களுடைய வாக்குரிமை பறிக்கப்பட டதனால் நாடற்றவர்களாக்கப் பட்டனர். இதன் பாதிப்புக்கள் மிக அண்மைக் காலம் வரை தொடர்ந்து வந்ததுடன், அத்தகைய பாதிப்புக்கள் தொடர்ந்தும், நிலவ, மலையக மக்களது சில அசட்டையான போக்குகளும் ஒரளவுக்குப் பொறுப்பாக உள்ளமையினையும் நாம் இங்கே சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. அரசியல் ரீதியில் மலையக மக்களின் பலவீன நிலை காரணமாக, அரசியல் கட்சிகள் மலையக மக் களைப் பற்றி எதுவித அக்கறையும் செலுத்தாத கடந்த கால அனுபவங்கள் எமக்குண்டு. வாக்குகளைக் கொடுத்தால்தான் அரசியல் கட்சிகளும் மக்கள் மேல் அக்கறை காட்டும்.
உதாரணமாக, இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்கு வாக் குரிமை இருந்ததால், கடந்த காலங்களில் நாட்டில் இருந்த பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சி யும் முஸ்லிம் வேட்பாளர்களைக் கொண்டிருந்தன. தமிழரசுக் கட்சி கூட முஸ்லிம் வேட்பாளர்களைக் கொண்டிருந்தது.
எனவே, அரசியல் கட்சிகள் எந்தக் குழுவினரையும் ஆதரிக்கத் தயாராக இருக்கும். ஆனால், அதற்குப் பதிலாக அக் கட்சிகளின் வெற்றியை உத்தரவாதம் செய்யும். வகையில் வாக்கு களை அளிக்கக் கூடியவர்களாக இவர்கள் இருக்க வேண்டும்.
எனவேதான், கடந்த 40 வருடங்களாக மலையகத் தமிழ் மக்கள் வாக்குரிமை அற்றவர்களாக இருந்ததனால், அரசியற் கட்சி கள் அவர்கள் மீது அக்கறை செலுத்தவில்லை.
ஆனால், இன்று நாடற்றவர் என்ற நிலைமையிற் பல
மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 1964-ஆம் ஆண்டின் சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம், 1974-ஆம் ஆண்டின் சிறிமா-இந்திரா ஒப் பந்தம் ஆகிய இரண்டின் கீழும் இந்தியப் பிரஜாவுரிமைக்காக விண்ணப்பிக்காத மலையகத் தமிழ் மக்கள் அனைவரும் இலங்கைப் பிரஜைகளாகக் கருதப்படுவார்கள் என்ற சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.
கடந்த காலங்களில் இந்திய-பாகிஸ்தானியர் வசிப்பிட சட்டத்தின் கீழும், சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழும் பிரஜாவுரிமை பெற்றோருக்குச் சான்றிதழ்கள் (சர்டிபிக்கேட்)
86

வாக்காளராகப் பதிந்து.
வழங்கப்பட்டிருந்தது. ஆனால், 1988-ஆம் ஆண்டின் சட்டம், இலங்கைப் பிரஜாவுரிமை பெறுவோர் அத்தகைய சான்றிதழ் எதனையும் பெற வேண்டுமென்ற சரத்தைக் கொண்டிருக்கவில்லை. அத்துடன் நடைமுறைத் தேவைகளுக்குத் தமது பிரஜா வுரிமையை உறுதிப்படுத்த வேண்டியபோது, சம்பந்தப்பட் டவர் ஒரு சத்தியக் கடதாசியினை வழங்குவதன் மூலம் தமது தகுதியினை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். ஆனாலும், இது வரை காலம் மலையகத் தமிழ் மக்களைக் கண்டதும், பிரஜா வுரிமைச் சான்றிதழ்களைக் கேட்டுப் பழகிவிட்ட அதிகாரிகளும், ஏனையோரும் ஒன்றில் அறியாமை காரணமாகவோ, அல்லது நாடற்றவர்கள் எப்படி பிரஜாவுரிமை பெறலாமென்ற மனத் தாங்கல் காரணமாகவோ தொடர்ந்தும் இத்தகைய சான்றிதழ் களைக் கேட்டு வருகின்றனர். நாற்பது (40) வருட பழக்கத்தை, அதிகார வர்க்கத்தின் இரத்தத்தில் ஊறிவிட்ட இத்தகைய சிந் தனைகளை இரண்டு வருடத்தில் அகற்றிவிட முடியாது என்ற சாதாரண தத்துவத்தை யாவரும் உணர வேண்டும்.
இந்நிலையில் இத்தகைய இடர்களை எவ்வாறு அகற்றலா மென்பதை மலையக மக்கள் மிகவும் விழிப்பாகவும், அவதானமாகவும் நோக்க வேண்டும். கடந்த காலங்களில் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தேவையான கடவுச்சீட்டுப் பெறுவதற்கு, வாக்குரிமை அட்டவணையில் பதிவு செய்வதற்கு, நிலம் வாங்கி அதனைத் தமது பெயரில் எழுதிக் கொள்வதற்கு எனப் பல்வேறு தேவைகளுக்கும் பிரஜாவுரிமை தேவைப்பட் டது. அதற்குப் பிரஜாவுரிமை சான்றிதழினைக் காட்டியே காரியம் சாதிக்க முடிந்தது. இப்போது பிரஜாவுரிமை சான்றிதழ் இல்லாதிருப்பினும், இலங்கைப் பிரஜாவுரிமைக்குத் தகுதி உடையவர்கள் ஒரு சத்திய கடதாசி வழங்குவதன் மூலம் இவற் றைப் பெற்றுக் கொள்ளலாம்.
இதனை விட முக்கியமானது, தம்மை வாக்காளராகப் பதிவு செய்து கொள்ளுதலாகும். அதன் மூலம் மலையக மக்கள் தாமோர் அரசியல் சக்தியாக வளருவதற்கு வாய்ப்பினை உருவாக்கிக் கொள்ள முடியும். 1988-ஆம் ஆண்டுப் பிரஜா வுரிமைச் சட்டத்தினை அடுத்து, 1989-ஆம் ஆண்டில், 1988-ஆம் ஆண்டு வாக்காளர் அட்டவணைக்கு ஓர் இணைப்பு அறிமுகப் படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மலையகத் தமிழர் சார்பான பல இயக்கங்கள் சுமார் எட்டு (8) இலட்சம் சத்தியக் கடதாசிப்
87

Page 58
இன்றைய மலையகம்
படிவங்களை விநியோகித்து, சுமார் 2/, இலட்சம் மணிலயக மக் களை வாக்காளராகப் பதிவு செய்தன. ஆனால், 1989-ஆம் ஆண்டு வாக்காளர் அட்டவணையில் இந்த எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து விட்டதாக, இத்தகைய சங்கங்களும், இயக்கங்களும் கவலைப்படுகின்றன.
இவ்வாறு வாக்காளர் எண்ணிக்கை குறையக் காரணம் என்ன என்பதனை நாம் கவனமாகச் சிந்திக்க வேண்டும். எதிர்ச் சக்திகள் இவர்களுக்கு எதிராக இயங்கலாமென்பதனை நாம் ஒதுக்கியே பார்க்க வேண்டும். ஏனெனில், அச்சக்திகள் இயங் காத வண்ணம் செயற்பட வேண்டியது மலையகத் தமிழர்களின் கடமையாகும். இதற்காக என்ன செய்ய வேண்டுமென்பதை மலையகத் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் விழிப்புடன் இருந்து அவதானிக்க வேண்டும்.
முதலாவதாக, ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதல் ஜூன் மாதத்திற்குள் தம்மை வாக்காளராகப் பதிவு செய்வதற்கான விண்ணப்பப்படிவம் அவ்வப்பகுதிக்குரிய கிராம சேவகரால் வழங்கப்படும். அதனை அவதானமாக விசாரித்துச் சேகரிக்க வேண்டும்.
இரண்டாவதாக, சத்தியக் கடதாசியுடன் விண்ணப்பத் தைப் பூர்த்தி செய்துக் கொடுப்பதுடன், சங்கங்கள், குழுக்கள் அமைத்து, அவை பற்றிய விபரங்களைத் தமது தொழிற் சங்கங் கள், அல்லது தாம் அங்கத்துவம் வகிக்கும் சங்கங்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
மூன்றாவதாக, விண்ணப்பம் சமர்ப்பித்த பின்னர், தமது பெயர்கள் அட்டவணையில் உள்ளனவா என்பதனைத் தமது பகுதிக்கு ஒரு விழிப்புக் குழுவினை உருவாக்கி, அதன்மூலம் பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு தமது பெயர் இல்லாதபட்சத்தில், தொழிற்சங்கங்களுக்கோ, அல்லது அரசியல் அமைப்புகளுக்கோ உடனடியாகப் புகார் செய்தல் வேண்டும்.
வாக்காளராகப் பதிவு செய்தல், வாக்களிப்பதற்காக மாத் திரம் அல்ல என்ற உண்மையையும் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். ஏனெனில், வாக்காளராகப் பதிவு செய்து கொள் வதன் மூலம், தமது பிரஜாவுரிமைக்கான அத்தாட்சியாகவும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
88

வாக்காளராகப் பதிந்து.
இத்தகைய பிரச்சினைகளை நாம் உதாரணங்களுடன் விளக்கினால் மேலும் பொருத்தமாக இருக்கும். கண்டி மாவட் டத்தை எடுத்துக் கொண்டால், 1990-ஆம் ஆண்டில் அங்கு வசித்த ஏறத்தாழ ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் (150,000) தமிழ் மக் களில், 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் தொண்ணுாறாயிரம் (90,000) மக்கள் வாக்குரிமை பெற வேண்டியவர்களாவர். இவர்களில் சுமார் 15 வீதத்தினரை, அவர்கள் இந்தியாவுக்கு விண்ணப்பித்தவர்களாகக் கருதிக் கழித்து விட்டாலும் கூட, சுமார் எழுபத்தையாயிரம் (75,000) பேருக்கு வாக்களிக்கும் உரிமை இருக்க வேண்டும். ஆனால், 1989-ஆம் ஆண்டு வாக் காளர் அட்டவணையில் சுமார் முப்பதாயிரம் (30,000) பேரே தம்மை வாக்காளராகப் பதிவு செய்துள்ளனர். இது இருக்க வேண்டிய வாக்காளர் எண்ணிக்கையின் 40 வீதமேயாகும். இதன்மூலம், மலையக மக்களின் உரிமைகள் எந்தளவுக்கு வீணாகிச் செல்கின்றன என்பதனை நாம் அறிந்து கொள்ளலாம். இதுபோன்றே, பெரியளவில் பதுளை, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு மாவட்டங்களிலும், குறிப்பிடத்தக்க அளவில் நுவரெலியா மாவட்டத்திலும் வாக்காளராக மலை யகத் தமிழ் மக்கள் தம்மைப் பதிவு செய்து கொள்ளாது காணப் படுகின்றனர். கிராம சேவகர் வரவில்லை, பதியவில்லை, படிவம் தரவில்லை என்பன போன்ற காரணங்கள் அவர்களுக்கு விமோசனம் அளிக்கப் போவதில்லை. அவர்களே ஆர்வத்துடன் செயல்பட்டு, தமது உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ள அக் கறையுடன் முயற்சிக்க வேண்டும்.
விபரங்களைச் சரியாகத் தெரிந்து கொள்ள, இதுபற்றிய விபரங்கள் தெரிந்தவர்களுடன் கலந்துரையாடுதல் நன்மை தரும். ஒவ்வொரு தோட்டத்தில் உள்ளவர்களும், தமக்கு ஒரு விழிப்புக் குழுவை, இதுபோன்ற தேவைக்காக உருவாக்கிக் கொள்ளலாம். அடிப்படைச் சனநாயக உரிமைகளை முழுமை யாகச் சுவீகரித்துக் கொள்வதன் மூலம், நிச்சயமாகப் பல்வேறு உரிமைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.
_(శీl_
89

Page 59

மலையகத் தமிழ் மக்களுக்குச்.
8. மலையகத் தமிழ் மக்களுக்குச் சர்வசன வாக்குரிமை - உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள்
இலங்கையில் இவ்வருடம் (1991) மே மாதம் 11ஆம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள், இப்போது இலங்கையில் வாழும் மலையகத் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சியாகக் கருதப்பட வேண்டும். இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, இத்தேர்தல்தான் மலையகத் தமிழ் மக்களுக்குச் சர்வசன வாக்குரிமை அளிக்கப்பட்டதன் பின்னர் நடைபெற விருக்கும் முதலாவது தேர்தல் என்பதாகும். இரண்டாவது, இத்தேர்தலிலேதான் சிறுபான்மை இனத்தவரைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கட்சியின் சின்னத்தில் பெரும்பான்மை மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதும், இப்போதைய ஆளுங்கட்சி யாக இருப்பதுமான கட்சியின் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்பதுமாகும்.
இக்காரணங்களை மேலும் தெளிவாக விளக்குதல் பொருத்தமானதாகும். 1948-ஆம் ஆண்டோடு மலையகத் தமிழ் மக்களின் வாக்குகள் இந்நாட்டில் பறிக்கப்பட்டன. அன்று முதல் 1988-ஆம் ஆண்டு வரை இம்மக்களின் வாக்குரிமையினையும், அதற்குத் தேவையான குடியுரிமையையும் பெறுவதற்கான முயற்சிகளும், நடவடிக்கைகளும், போராட்டங்களுமே, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வரலாற்றில் பெரும் பங்கினைக்
9.

Page 60
இன்றைய மலையகம்
கொண்டுள்ளன. வாக்குரிமையற்றவர்களாக இருந்ததால்,
இம்மக்களின் நலனில் நாட்டில் உள்ள முக்கிய அரசியல்
கட்சிகள் போதியளவு அக்கறை காட்டவில்லை. தொழிலாளர் வர்க்கத்தின் நன்மைக்காகவே உருவாக்கப் பெற்றதென கூறிக்
கொண்ட இடதுசாரி கட்சிகளும் கூட, இந்நாட்டின் இனவாத
அரசியலில், பொருளாதாரத்தின் முதுகெலும்பென வர்ணிக்கப்
படும் பெருந்தோட்டங்களிலே தொழில் புரியும் இலட்சக்கணக் கான பாட்டாளி மக்களின் அடிப்படைக் குடியுரிமைக்காகப்
போராட முன்வரவில்லை. இந்நாட்டின் இனவாத அரசியலில்
சிக்குண்ட மலையக மக்களைப் பலவீனமாக்கச் செய்த சதியின் உச்சக்கட்ட நடவடிக்கையாக, அவர்களில் 5'/ இலட்சம் பேரை இந்தியாவுக்கு அனுப்பத் திட்டமிடப்பட்டது. அதன்படி 1981 ஆம்
ஆண்டளவில் 312,000 பேரும், அடுத்து வந்த மூன்றாண்டு
களில் இன்னும் ஒரு இலட்சம் பேரும் இந்தியாவுக்குத் திருப்பி
யனுப்பப்பட்டனர். அவ்வாறு அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்
படாது இருந்திருந்தால், 1981-ஆம் ஆண்டில் இலங்கையில் 13/ இலட்சம் மலையகத் தமிழ் மக்கள் வாழ்ந்திருப்பார்கள்.
அவர்களுடைய இயற்கைப் பெருக்கத்துடன் இன்று 151 இலட் சமாக மலையக மக்கள் பலமுடன் இருந்திருப்பார்கள். இன்று 11
இலட்சம் பேரே உள்ளனர். இத்தகைய பலத்தை மலையகத்
தமிழ் மக்கள் இழக்கச் செய்வதற்கு 1964-ஆம் ஆண்டு சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தமே காரணமாகும். அன்று இலங்கையின் ஆளுங்கட்சியாக இருந்த இலங்கைச் சுதந்திரக் கட்சி, இலங்கை
வாழ் மலையகத் தமிழ்க் கட்சிகளின் ஒப்புதலை இதற்குப்
பெறாததுடன், அசட்டை செய்தமையின் விளைவே இன்றைய
நிலை.
எஞ்சியோருக்கு இலங்கைப் பிரஜாவுரிமை கொடுக்க ஏற்றுக் கொண்டபடி, குடியுரிமை வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டது. பின்னர் நாட்டில் ஏற்பட்ட பல்வேறு அரசியல் நிகழ்ச்சி களும், சம்பவங்களும் நாமறிந்தவையே. இக்கால சூழ் நிலையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் செயல் திட்டங்கள் இன்று மலையக மக்களுக்குச் சர்வசன வாக்குரிமைக்கு வித்திட்டது என்றால் மிகையாகாது. அதேநேரத்தில், சமகால ஏனைய அரசியல் பின்னணிகளும் இதற்கு வாய்ப்பாக அமைந்த மையினையும் நாம் மறக்க முடியாது.
இறுதியாக, எஞ்சிய 94,000 மலையகத் தமிழ் மக்கள் இலங்கைப் பிரஜைகளாகும், வகையில் சட்டமியற்றப்பட்டது.
92

மலையகத் தமிழ் மக்களுக்குச்.
மட்டும்தான் இக்காலகட்டத்தில் ஏற்பட்ட சாதனையென எண்ணி வ. டக் கூடாது. இலங்கைப் பிரஜையாகத் தகுதி வாய்ந்தவர் எனக் கருதப்பட்டவர்கள் கூட, பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப் பட்டனர். ஆனால் 1988-ஆம் ஆண்டுச் சட்டத்தின்படி, இவ்வாறு இழுத்தடிக்கும் ஏமாற்று வித்தைக்கு முற்றுப்புள்ளி வைக் கப்பட்டது முதற்சாதனையாகும். அடுத்தது, எஞ்சிய 94,000 பேருக்கும் இலங்கைக் குடியுரிமை வழங்க ஏற்பாடு செய்யப் பட்டமையாகும். இந்தியப் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்காத அனைத்து மலையகத் தமிழ் மக்களும் இலங்கைப் பிரஜைகள் என்ற சரத்து, மலையக மக்கள் குடியுரிமையினைப் பெற்றுக் கொள்ள உருவாக்கப்பட்ட மிகப் பிரதான சட்டமாகும். இந்தச் சட்டத்தின் சிருஷ்டி கர்த்தா இலங்கைத் தொழிலாளர் காங் கிரஸின் தலைவர் தொண்டமான் அவர்களே என்ற உண்மை மலையகத் தமிழ் மக்களின் வரலாற்றில் இடம்பெறும் முக்கிய குறிப்பாகும்.
இவ்வாறு மலையகத் தமிழ் மக்கள் அனைவரும் இந்நாட்டுப் பிரஜைகளே என ஒத்துக்கொள்ள இயற்றப்பட்ட சட்டத் தினையடுத்து, உடனடியாக அவர்களை வாக்காளராகப் பதிவு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி, 1988-ஆம் ஆண்டு வாக்காளர் அட்டவணை, அவ்வருடம் ஜூன் மாதமே பூர்த்தி செய்யப்பட்டுவிட்டதென்ற, நிருவாகப் பிரச்சினை யினைச் சுட்டிக்காட்டி, அமைச்சர் அவையின் விசேட அனுமதி யோடு ஒர் இணைப்பினை ஏற்படுத்தும் வாய்ப்பினை இலங் கைத் தொழிலாளர்கள் காங்கிரஸ் உருவாக்கியது. அதன் விளைவாக, 2 இலட்சம் மலையகத் தமிழ் மக்கள் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டனர். 1988-ஆம் ஆண்டு இணைப்பில் இலங் கையின் மாவட்டங்களில் புதிதாக மலையக மக்கள் வாக் காளராகப் பதிவு செய்யப்பட்ட விபரம் பின்வருமாறு:-
1. நுவரெலியா - - 57,506 2. கொழும்பு ー 30,&35 3. கண்டி - 18,987 4. பதுளை 一 42,722 5. இரத்தினபுரி - 20,663 6. கேகாலை - 10,762 7. ஏனையன - 32,074 மொத்தம் 213,549
93

Page 61
இன்றைய மலையகம்
இவ்வாறு பதிவு செய்ததன் பின்னரும், இன்னும் வாக்காளராகப் பதிவு செய்ய வேண்டியவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்திற்கு மேலாக இருக்க வேண்டும் என் எதிர்பார்க்கப் படுகிறது. இவ்வாறு மலையக மக்கள் இன்றைக்கு 40 வருடங் களுக்கு முன்னர் இழந்த வாக்குரிமை திரும்பப் பெறப்பட்டு, சர்வசன வாக்குரிமையினைப் பெற்றதன் பின்னர் நிகழும் முதலாவது தேர்தல் என்ற வகையில், இதன் முக்கியத்துவம் மலையகத் தமிழ் மக்களால் நன்குணரப்படும் என்று நம்பலாம்.
இரண்டாவது முக்கிய அம்சம், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் சின்னத்தின் கீழ், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடுவதாகும். இந்நாட்டில் பல கட்சிகள் பெரும்பான்மைக் கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டி யிடுகின்றன. அங்கெல்லாம் பெரும்பான்மை இனத்தவருடன் மற்றவர்கள் இணைவதனையே கண்டிருக்கிறோம்.
ஆனால், இன்று சிறுபான்மையினரான மலையகத் தமிழ் மக்களின் கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சேவல் சின்னத்தின் கீழ், ஐக்கிய தேசியக்கட்சி பிரேரித்து 20 சிங்கள வேட்பாளர்கள் நுவரெலியா, அம்பகேமுவ பிரதேச சபை களிற் போட்டியிடுகின்றனர். இந்த இரண்டு தொகுதி களிலும் 46,000 சிங்கள வாக்காளர்கள் உள்ளனர். இத்தகைய நிலைமையின் வளர்ச்சிக்கான காரணத்தை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.
ஒன்று, மலையகத் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில், அவர்களுடன் இணைந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் பெரும்பான்மை இனக்கட்சியினரிடம் தோன்றி யுள்ளது. இரண்டாவது, அத்தகைய எண்ணத்தை வளர்க்கும் வகையிலும், சந்தேக உணர்வுகளை வளர்க்காத வகையிலும் மலையகத் தமிழ் மக்கள் பெரும்பான்மை மக்களுடன் ஒற்று மையாக இணைந்து வாழவும், அதேநேரத்தில் தமது கலாச் சார பாரம்பரியங்களிலே தனித்துவத்தினைப் பேணும் வகை யிலும் தமது நடவடிக்கைகளை ஒழுங்கு செய்து கொண்டுள் ளார்கள்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் சந்தேகங்களுக்கு இடமில்லாத வகையில் இத்தேர்தலில் உடன்பாடுகளை வளர்த்துக் கொண்டுள்ளன. சிறந்த ஜனநாயக முறையிலான இவ்வொப்பந்தம், மலையக மக்கள்
94

மலையகத் தமிழ் மக்களுக்குச்.
இந்நாட்டில் சம அந்தஸ்துள்ள பிரசைகளாக அங்கீகரிக்கப்பட் டுள்ளமைக்கு ஒரு சான்றாகும். நாட்டில் எங்கெங்கு சிங்கள மக்கள் பெரும்பான்மை வாக்களராக உள்ளனரோ, அங்கே எல்லாம் ஐக்கிய தேசியக் கட்சிச் சின்னத்தில் மலையகத் தமிழ் வேட் பாளர்கள் போட்டியிடுகின்றனர். மலையகத் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக உள்ள பிரதேச சபைகளான நுவரெலியா, அம்பேகமுவ தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி, தனது வேட்பாளர்களை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியில் சேவல் சின்னத்திற் போட்டியிட ஏற்றுக் கொண்டது. எனவே, இவ்வாறு சனநாயக முறையில் இனவாத இயல் பற்றதும், ஆனால் பெரும்பான்மை நிலைமையினை அங்கீகரிக்கும் வகையில் சமபங்காளிகளாக மலையகத் தமிழ் மக்களை, பிரதான சிங்கள அரசியல் கட்சி அங்கீகரித்துள்ளதுமான ஒரு தேர்தல் என்ற காரணத்தினாலும் இது முக்கியத்துவம் பெறு கிறது.
இத்தகைய இரண்டு அம்சங்களும் மலையகத் தமிழ் மக் களின் அரசியல் வரலாற்றைப் பொறுத்துக் குறிப்பிடத் தக்கனவாகும். இவற்றை விட வேறு சில அம்சங்களும் குறிப்பிடத் தக்கனவாகும். இத்தேர்தலில் மலையகத்தைச் சார்ந்த இரண்டு பெண்களும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியிற் போட்டியிடத் தெரியப்பட்டுள்ளனர்.
இதுவரை காலம் பாராளுமன்றத் தேர்தல்களிலும், மாகாண சபைத் தேர்தல்களிலும் மலையகத் தமிழ் மக்கள் பங்குபற்றியுள்ளனர். உள்ளூர் அதிகாரச் சபைகளைக் கீழ்மட்டக் குடியரசுகள் என்று வர்ணிக்கிறார்கள். பிரதேச சபைகள் என்பவை, ஒவ்வொரு உதவி அரசாங்க அதிபர் பிரிவிலும் உள்ள மாநகராட்சி, நகராட்சி பகுதிகளைத் தவிர்ந்த பகுதிகளாகும். இப்பகுதிகளின் நிர்வாக இயந்திரம் பிரதேச சபைகள் எனப் படுகின்றன. மலையகத் தமிழ் மக்கள் பிரதானமாக பெருந்தோட்டங் களில் வாழ்வதால், அப்பகுதிகளுக்குரிய பிரதேச சபைகளில், நமது அங்கத்தவர்கள் இடம்பெறுவது மிக முக்கியமாகும். வீட்டு வசதி, குடிநீர், மின்சாரவசதி, போக்குவரத்து வீதிகள், பொது பஸ் தொடர்புகள், பாடசாலை அமைப்பு வசதிகள் என்பன மக்களுடைய அன்றாட தேவைகளாகும். இவற்றைப் பொறுத் துப் பிரதேச சபை அங்கத்தவர்கள் பல அபிவிருத்திக் காரியங் களைப் புரியமுடியும். எனவே, தமது அங்கத்தவர்களைத் தெரிந் தெடுத்து அனுப்புவதன் மூலமே தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
95

Page 62
இன்றைய மலையகம்
இந்தத் தேர்தலில் மலையகத் தமிழ் மக்களின் நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு, கடந்த தேர்தலில் அவர்கள் விட்ட பிழைகளை எண்ணிப் பார்க்க வேண்டும். சிலரின் பிழையான பிரச்சாரங்களையும், கவர்ச்சிப் பேச்சுக் களையும் செவிமடுத்து, அதனால், அங்குமிங்குமாகத் தமது வாக்குகளை இம்மக்கள் சிதற விட்டிருந்தார்கள். ஆனாலும், இம் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கிய மூன்று இலட்சம் வாக்கு களுக்குப் பிரதியாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர்கள் மூவரை அரசாங்கம் அமைச்சர்களாக அங்கீகரித் துள்ளது.
அதேநேரத்தில், வாக்குகளைச் சிதறவிடாது, கட்டுப் பாட்டுடன் தமது பிரதிநிதிகளைப் பாராளுமன்றத்திற்கு அனுப்பி யிருந்தால், இவர்களது பலம் பல மடங்கு அதிகரிக்கும். எனவே, வாக்குப் பலம் இவர்களிடம் வரும்வரை, இவர்களைப் புறக்கணித்திருந்த சக்திகள், இன்று இம்மக்களுக்கு வாக்குப் பலம் கிடைத்ததும், இவர்களை நாடி அதிகாரம் பெற ஓடி வரு கின்றனர். இவர்களுக்குக் குடியுரிமை கிடைக்க, கடந்த காலங்களில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தவிர்த்து வேறெந்த பிரதான கட்சிகளும் அதில் ஆர்வம் காட்டவில்லை. இன்று 15 இலட்சம் மக்களைக் கொண்ட சமூகமாக இருக்க வேண்டிய இவர்களை, இன்று 11 இலட்சம் மக்களாக குறைத்த சக்திகள் எவை? அதற்குத் துணைபோன சக்திகள் எவை? இன்று இவர்களுக்குச் சர்வசன வாக்குரிமை கிடைப்பதற்குப் பொறுப் பானவர் யார்? குடியுரிமைச் சட்டத்திற்காக மாத்திரமின்றி, அதனை வாக்குரிமைகளாக மாற்றியமைக்குப் பொறுப்பான சக்தி எது? இவற்றை நன்கு இனங்கண்டு, மலையகத் தமிழ் மக்கள் இன்று தன்மானத்துடனும், சம அந்தஸ்துடனும் வாழும் நிலை தொடர வேண்டும் என்பதனை, அவர்கள் தம்மைத் தானே கேட்டு, அதன் பின் தமது வாக்காளரைத் தெரிந்து, இத்தேர்தலில் பங்கு கொள்வதன் மூலமே இலங்கையில் மலையகத் தமிழ் மக்கள் ஓர் அரசியல் சக்தி என்பதனை நிலைநாட்ட முடியும் என்பதனை அம்மக்கள் மறக்கக் கூடாது.
அதேநேரத்தில், வேட்பாளர்களுக்கும், அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுக்கும் சில பொறுப்புக்கள் உள்ளன. வேட்பாளர்கள் தமது கட்சியின் கொள்கைகளைத் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். மலையகத் தமிழ் மக்களின் இன்றைய முக்கியப் பிரச்சினைகள், கல்வி வளர்ச்சி, வீட்டுவசதி,
96

மலையகத் தமிழ் மக்களுக்குச்.
நிலப்பங்கீடு, வேலை வாய்ப்பு, சிறந்த வேதன அமைப்பு, சுகாதார வசதிகள் என்பனவற்றை அரசினது விகிதாசாரப் பங்கீடு, சனசக்தி திட்டம் என்பன மூலம் எவ்வாறு பெற்றுக் கொடுக்க முடியும் என்பதனை அடிப்படையாகக் கொண்டு, தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை உருவாக்கி மக்கள் முன் வைக்க வேண்டும். மலையக மக்களின் குடியுரிமையினை நடைமுறையில் எவ் வாறு பிரபல்யமாகச் செயற்படுத்தலாம் என்பது பற்றிய கருத் துக்களும் ஆலோசிக்கப்படல் வேண்டும்.
வேட்பாளர்கள் தமது கட்சிக் கொள்கைகளுக்கு முரண் பாடற்ற வகையில், குறித்த தேர்தல் பிரிவுகளுக்குள் வாழும் வாக் காளரிடம் தம்மை இனங்காட்டி வாக்குகளைக் கோர வேண்டும். இதற்கு, வாக்காளர்கள் பற்றிய அனைத்துப் புள்ளி விபரங் களையும் சேகரிக்க வேண்டியுள்ளது. தேர்தலுக்கு இடையே உள்ள காலப்பகுதியில் வாக்காளரைச் சந்திக்க ஏற்ற கால அட்ட வணையையும் தயார் செய்து, திட்டமிட்ட முறையில் பிரசார வேலைகளை மேற்கொள்ளுதல் அவசியமாகும். இவ்வாறு மலையகத் தமிழ் வேட்பாளர்களும், வாக்காளர்களும், ஒழுங் கிற்கு உட்பட்ட வகையிலும், சமூக உணர்வுகளுடனும் சாத்திய பூர்வமாகச் செயல்படும் போதுதான் சமூகத்தின் நீண்டகால நோக்குமிக்க தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும்.
_sశీa_
97

Page 63

தோட்டத் தொழிலாளர்களின்.
9. தோட்டத் தொழிலாளர்களின் சுபீட்சமும் உயர் கல்வியும்
இலங்கையில் 1989-ஆம் ஆண்டின் இறுதியில் சுமார் 11 இலட்சம் இந்திய வம்சாவழித் தமிழர்கள் வாழ்ந்ததாகக் கணிப் பீடுகள் கூறுகின்றன. இவர்களிற் சுமார் 80,000 பேரைத் தவிர்த்து, ஏனையோர் பெரும்பாலும் தேயிலை, இரப்பர் தோட்டங் களிலும், வவுனியாவை உள்ளடக்கிய வடமாகாணப் பிரதேசங் களின் கிராமப்புறங்களிலும், ஒரு சிறியளவிற் கிழக்கு மாகாணக் கிராமங்களிலும் வாழ்ந்தனர். முன்னர் குறிப்பிட்ட 80,000 பேர் பெரும்பாலும் கொழும்பு, கண்டி, நாவலப்பிட்டி, அட்டன், பதுளை போன்ற நகரங்களிலும், வேறு சில பிரதேசங்களின் கிராமங்களிலும் வாழ்ந்தனர். நகரங்களில் வாழ்பவர்களிற் சுமார் 25,000 பேரைத் தவிர்த்த ஏனையோரும் தோட்டங் களிலும், கிராமங்களிலும் வாழ்பவர்களையும் உள்ளடக்கிய 10 இலட்சத்து 75 ஆயிரம் பேர்களின் வாழ்க்கை நிலைமைகளை துணுக்கமாகக் கவனித்தால், அவர்கள் அனைவருமே ஏற்றுக் கொள்ளக் கூடியதான குறைந்தபட்ச வாழ்க்கைத்தரத்திற்கும் கீழான வாழ்க்கையினையே வாழ்ந்து வருகின்றனர் என நாம் தீர்மானிக்கலாம்.
வாழ்க்கைத் தரம் என்பது, ஒருவர் எந்தளவிற்குத் தமது அடிப்படைத் தேவைகளான உணவு,உடை, வீடு, சுகாதாரவசதி, க்ல்வி, போக்குவரத்து வசதிகளை பெற்றிருக்கின்றார்
99

Page 64
இன்றைய மலையகம்
என்பதனை விளக்கும் ஒரு கோட்பாடாகும். இத்தகைய அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொள்ள, ஒருவருக்கு ஏற்ற இலாபகரமான தொழில் வாய்ப்பும் தேவை என்பதனை யாவரும் அறிவோம். எனவே, மேற்கூறிய அடிப்படை வசதிகளைப் பொறுத்தமட்டில், இலங்கையில் வாழும் இந்திய வம்சாவழித் தமிழர் மிகவும் தாழ்ந்த நிலையிலேயே வாழுகின்றனர் என்பதனைப் பல்வேறு சமூக, பொருளாதார ஆய்வுகள் எடுத்துக் கூறுகின்றன.
இலங்கையின் மத்திய வங்கி தனது 1988-ஆம் ஆண்டு வருடாந்தர அறிக்கையில், இலங்கையின் நகரங்களில் வாழும் மக்களது தலைக்குரிய (வருடாந்த) வருவாய் ரூபா 11,654/- என்றும், கிராமியப் பகுதிகளில் அது ரூபா 8,572/- என்றும் குறிப் பிடப்பட்டுள்ளது. அண்மைக் கணிப்பிடொன்றின்படி, தோட்டப் புறங்களிலே தலைக்குரிய வருவாய் ரூபா 5,600/- எனத் தெரிய வருகின்றது. இதிலிருந்து, தோட்டப்புற மக்களது வருமானங்கள் எந்தளவுக்குப் பின்தங்கியனவாகக் காணப்படு கின்றன என்பது புலப்படுகின்றது.
இவ்வாறு, இச்சமூகத்தினரின் வருமானம், வாழ்க்கைத் தரம் ஆகியன ஏன் பின்தங்கியதாக உள்ளன என்பதனை நாம் அவதானித்தால், அதற்கான காரணங்களை இனங்காண முடியும்.
1948-ஆம் ஆண்டோடு இவர்களுடைய வாக்குரிமையும், பிரஜாவுரிமையும் இந்நாட்டிற் பறிக்கப்பட்டன. இதனால், இவர்கள் பல வழிகளிலும் இரண்டாந்தரப் பிரஜைகளாகவே நடத்தப்பட்டனர். பொருளாதார வாய்ப்புக்களும், வசதிகளும் இல்லாது போயின. அரசசலுகைகள், அரசாங்க உத்தியோகங்கள் என்பன இல்லை என்றாகின. அதேநேரத்தில், தோட்டப் புறங்களில் காணப்பட்ட பாடசாலைகளும் தகுதியற்றன வாகவே காணப்பட்டன. அத்துடன், தொழிலாளர்களும் தமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்டவில்லை. எனவே, கிடைக்கக் கூடியதான ஒரு சில வாய்ப்புகளும் கிட்டாது போயின. பிரஜாவுரிமை இன்மையால் உயர்கல்விக்குச் செல்ல வில்லை என்பது உண்மையானாலும், அக்கருத்தினை வேறொரு கோணத்தில் இருந்து பார்த்தால், இன்னுமோர் உண்மையும் புலனாகும். அதாவது 1964-ஆம் ஆண்டில் ஏறத்தாழ 1,34,000 பேர் இந்திய-பாகிஸ்தானிய (வசிப்போர்) பிரஜாவுரிமைச் சட்டத்தின் கீழ் இலங்கைப் பிரஜாவுரிமை பெற்றிருந்தனர். உத்தேச கணிப்பீட்டின்படி, இத்தொகையில் சுமார் 10,000 பேர் 18-24 வயதிற்கும் உட்பட்டவர்களாக இருந்திருப்பார்கள். இவர்களிற்
100

தோட்டத் தொழிலாளர்களின்.
கூட அந்நேரத்தில் 200 பேர் தானும் பல்கலைக்கழகங்களிற் படிக்க வில்லை. அவர்களில் இருந்தாவது பெரும்பாலானோர் கல்வி கற்றவர்களாகியிருக்கலாம். அதுவும் நடைபெறவில்லை. அதே நேரத்தில் பிரஜாவுரிமை இல்லாதோரில் மிகச் சிலர் 1963-ஆம் ஆண்டிற்கும், 1975-ஆம் ஆண்டிற்கும் உட்பட்ட காலப் பகுதிகளில் பல்கலைக்கழகம் சென்று, பல்வேறு இடையூறு களின் மத்தியிலும் கல்வி பயின்றனர். ஆனால், இன்று அவ்வாறு பல்கலைக்கழகக் கல்விக்கு செல்வோரின் எண்ணிக்கையில் விருத் தியோ, முன்னேற்றங்களோ ஏற்படவில்லை.
இவ்வாறு பல இடையூறுகளும், ஆர்வமின்மையும் காரணமாகத் தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வியிற் பின் தங்கியதனாலே தொடர்ந்தும் தோட்டத் தொழிலாளர்களாகவே குறைந்த ஊதியத்திற்குத் தொழிற்புரிபவர்களாக இருந்து வருகின்றனர். கல்வியில் ஒரு சமூகம் உயரும்போது, அங்கே வாழ்க் கைத் தரத்திலும் உயர்ச்சி ஏற்படுகின்றது என்பது பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவாகும்.
WM- இலங்கையில் உள்ள தோட்டங்களில் வாழும் தமிழ்த் இதாழிலாளர்களில் 40 சதவிகிதமானோருக்கு எழுதவோ, வாசிக் தீவோ தெரியாது. எஞ்சியதில் 43 வீதமானோர் ஐந்தாம் வகுப் புடனோ, அல்லது அதற்குக் குறைந்த வகுப்புக் கல்வியுடனோ படிப்பை நிறுத்திக் கொண்டவர்கள். சுமார் 15 வீதமானோரே 10-ஆம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்பு வரை (1988) படிப் பைத் தொடருகின்றனர். பல்கலைக்கழகத்திற்கும் மற்றும் உயர்கல்விக்கும் ஒரு சதவீதமானோர் கூடச் சென்றதில்லை. எனவே, இத்தகைய கல்விப் பெறுபேறுகளினால் பெறக்கூடிய தொழில் வாய்ப்புக்களும் மிகக்குறைவாகவே உள்ளன.
எனவே சிறந்த தொழில் வாய்ப்புகளுக்குச் சந்தர்ப்பம் வேண்டுமானால் உயர்கல்வியும், தொழிற்கல்வியும் அவசிய மானவை, இன்று (1988) இலங்கையில் உள்ள 9 பல்கலைக் கழகங்களிலும் சுமார் 30,000 மாணவர்கள் உயர்கல்விக்காகத் தம்மைப் பதிவு செய்துள்ளனர். ஆனால், இதில் தோட்டப் பகுதிகளையும், இந்தியத் தமிழ்ச்சமூகத்தையும் சார்ந்தவர்கள் 4 வீதத்திற்கும் குறைவான 200க்கும் குறைந்த எண்ணிக் ஒகயிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற இலங் கையில் (1988) பணிபுரியும் சுமார் ஒன்றரை இலட்சம் பாடசாலை ஆசிரியர்களில் 2,000 ஆசிரியர்களோ அல்லது 1984 ஆம் ஆண்டில் அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்களில்
10.

Page 65
இன்றைய மலையகம்
பணிபுரியும் 515,000 பேரில் 1 வீதத்தினேரா கூட இச்சமூகத் தினை சார்ந்தவர்கள் இல்லை. இத்தகைய பணிகளில் ஈடுபட்டுள்ள வர்களில் பெரும்பான்மையினர் உயர்கல்வி, இடைநிலைத் தொழிற்பயிற்சி என்பன பெற்றவர்களாவர். இலங்கையின் மக்கள் தொகையில் சுமார் 8 வீதத்தை இந்தியத் தமிழ்மக்கள் வகித் தாலும், இத்தகைய தொழிலாளர்களில் இச்சமூகத்தைச் சார்ந்தவர் களில் ஒரு வீதத்தினர் கூட இல்லை என்பது கசப்பான உண்மையே யாகும். 1985 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக் கழகங்களில் சுமார் 2000 பேராசிரியர்களும், விரிவுரையாளர்களும் பணிபுரிந் தனர். இதில் 1 வீதமான 20 பேர்கூட இச்சமூகத்தைச் சார்ந்தவர் கள் இல்லை. இதுதான் இன்று இலங்கையில் கல்வி கற்றுத் தொழில் புரிபவர்களின் மத்தியில் இச்சமூகத்தவரின் நிலையாக இருக்கிறது. இவ்வாறு கல்வியிற் பின்தங்கிய நிலை, மாற்றமுற்று, கல்வி கற்ற சமூகமாக மாறும்போது, கணிசமான அளவில் கல்வி கற் றோர் எண்ணிக்கையிலும் வீதாசாரத்திலும் அதிகரித்து, தொழில் வாய்ப்புக்களையும், அந்தஸ்துகளையும் பெற்றுக்கொள்ள முடியும். தோட்டப்புறப் பாடசாலைகளின் கல்விநிலை உயர வேண்டுமானால், அப்பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் அப்பகுதிகளைச் சார்ந்தவர்களாகவும், அப்பகுதி மாணவர்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும் என்ற கருத்தினை அரசு ஏற்றுக் கொண்டதோடு, அதற் காக 1000 ஆசிரியர்களை நியப்மிக்க விண்ணப்பங்கள் கோரிய போது, தகுதிவாய்ந்த 1,500 பேர்கூடத் தோட்டத் தொழி லாளர்களின் மத்தியில் இருந்து விண்ணப்பிக்கவில்லை. அண் மையில் நாடு முழுவதற்கும் 25,000 ஆசிரியர்களை நியமிக்க விண்ணப்பங்கள் கோரியபோது, 3 இல்ட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. கிடைக்கக்கூடிய ஒரு பதவிக்கு 12 பேர் தகுதி வாய்ந்தவர்களாக இருக்கும் போது, தோட்டப்புறங்களில் உள்ள பதவிக்கு அங்கிருப்பவர்களின்டயே 2 விண்ணப்பதாரி கூடச் சரியாக இல்லை. இவ்வாறு கிடைக்கும் சில வாய்ப்புக் களும் போதிய கல்விப் பெறுபேறுகள் இன்மையால் வீணா கின்றன. அண்மையில் பொலிஸ், கிராம சேவகர்கள் போன்ற உத்தியோகங்களுக்கு விண்ணப்பங்கள் கோரியபோதும், இத்தகைய நிலைமையே காணப்பட்டது. இவ்வாறு போதிய கல்வி இன்மை யால் சமூகத்தின் உயர்ச்சிக்கு அவர்களினாலே தொண்டாற்ற முடியாது போவது மாத்திரமன்றி, சமூகத்தினாலும், தேசத் தினாலும் அவர்களுக்குக் கொடுக்கப்படுகிற வாய்ப்புக்களையும் அவர்களாற் பயன்படுத்திக்கொள்ள முடியாது போகின்றது.
102

தோட்டத் தொழிலாளர்களின்.
இத்தகைய பின்னணியிற், தோட்டப்புற மக்களின் கல்வி நிலை உயர்ந்து, அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத் தினை உயர்த்திக்கொள்ள வேண்டுமானால், அதற்கு யாது செய்ய வேண்டும் என்ற வினா எம்மை எதிர்நோக்குகின்றது. இதற்கு இரண்டு முக்கிய பரிகாரங்களே தேவைப்படுகின்றன. அவ்ை
T66
(அ) கல்வியில் முன்னேற ஆவன செய்தல். (ஆ) இம்மக்கள் சமூகம், ஒற்றுமையுடன் தாம் ஒரு ஒன்று
பட்ட சமூகம் என்ற நிலைப்பாட்டினை வளர்த்துத் தம்மை ஒரு கட்டுக்கோப்பு மிக்க அரசியல் சக்தியாக வளர்த்துக் கொள்ளுதல்.
முதலாவது பரிகாரத்தினைப் பொறுத்தமட்டில், மூன்று வேறுபட்ட சாராரது ஒன்றிணைந்த பங்களிப்பும், ஒத்துழைப்பும் தேவைப்படுகின்றது.
தோட்டப்புறங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி வசதிகள் மிகமிகக்குறைவு போதிய அளவில் ஆசிரியர்கள் காணப்படுவதில்லை. எனவே, தகுதியான ஆசிரியர்கள்ையும், போதியளவான ஆசிரியர்களையும் நியமிப்பதுடன், ஏனைய வசதிகளான கட்டிடங்கள் போன்றவற்றைச் சிறந்த முறையில் அமைத்துக் கொடுப்பது அரசினது கடமையாகும். இச்சமூகத்தின் தலைவர்களின் அரசியல் சாணக்கியங்களினால் அண்மைக் காலங்களிலே தோட்டப்புறப் பாடசாலைகளின் முன்னேற் றத்தில் ஒரளவிற்கு அரசினால் அக்கறை காட்டப்பட்டு வருகின்றது.
४ இரண்டாவது, பெற்றோரின் கடமை, இலங்கையில் கல்வி இலவசமான போதிலும், சில தேவைகள் பெற்றோரினாலும் பூர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளது. உணவு, போக்குவரத்து, எழுத்து உபகரணங்கள், உடை, சிறிதளவு பாடசாலைக் கட்டணங்கள் என்பன அத்தகையன. தொழிலாளர்களின் குறைந்த வருவாய் இதற்குத்தடையாக இருந்த பொழுதிலும் பெற்றோரது சரியான செலவிடும் முறைகளினாலும், செலவினங்களின்முக்கியத்துவ ஒழுங்கிற் கல்விச் செலவுகளுக்கு முக்கியத்துவம் அளிப் பதனாலும், ஒரு சில சாத்தியமான தியாகங்களினாலும் இப்பிரச் சனையைச் சமாளிக்க முயல வேண்டும். யாவற்றிற்கும் மேலாக, தமது பிள்ளைகளின் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவர்களைப் படிக்க வைப்பதில் ஆர்வம்காட்ட முன்வருதல் வேண்டும்.
103

Page 66
இன்றைய மலையகம்
மூன்றாவது, ஆனால் முக்கியமான பங்கு, மாணவர் களினால் நிறைவேற்றப்பட வேண்டியதாகும். மாணவர்கள் கல்வியின் நோக்கங்களையும் முக்கியத்துவத்தினையும் உணர்ந்து, தமது சூழல், வசதிகள், ஆர்வம் என்பனவற்றிற்கு ஏற்றவாறு கற்கை நெறிகளைத் தெரிவு செய்து, கவனமாகவும், முழுமையாகவும் கல்வியில் ஆர்வத்தினைச் செலுத்த வேண்டும். தாம் வாழ்வில் முன்னேறக் குறுக்கு வழிகள் இல்லை என்ற தத்துவத்தை நம்புவதுடன், கல்வி ஒன்றே இலகுவானதும், தவறு ஏற்பட முடியாத வழியும் என்பதில் தீர்க்கமான நம்பிக்கையினை வளர்த்துக் கொள்ளுதல் அவசியமாகும். அதே நேரத்தில் மாணவர்கள் இத்தகைய கற்கை நெறிதான் சிறந்தது என்பதனை விட, தமக்கு ஆர்வமும், அதனைக் கற்பதற்குப் போதியளவு வசதியும் உள்ள கற்கை நெறிகளைத் தெரிந்தெடுத்துக் குறைந்த பட்சம் பல்கலைக் கழக பட்டத்தினையாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் தீவிரமாயிருத்தல் அவசியமாகிறது. அதுபோன்றே 10, அல்லது 12ஆம் வகுப்புத் தகுதிகளுடன் மாத்திரம் தொழில்களில் சேர்ந் தோர், அத்துடன் திருப்தி அடைந்து விடாது தொடர்ந்தும் கல்வி யினைத் தொடருவதுடன், அதன் மூலம் மேலதிகத் தகுதி களையும் தொழிற்பயிற்சிகளையும் பெற்றுக்கொள்வது மிக அவசியமாகும்.
இரண்டாவது பரிகாரம், தொழிலாளர்கள் மத்தியிலும், பொதுவாக அச்சமூக அங்கத்தவர்கள் அனைவர் மத்தியிலும் அரசியல் ரீதியாக ஐக்கிய உணர்வு ஏற்படுத்துவதனை உறுதி செய்வதாகும். இன்றையு அரசினது இனரீதியான விகிதாசார ஒதுக்கீடு செய்வதனையும், திறமைக்கு இடம் அளிக்க வேண்டும் என்ற கொள்கையின் வளர்ச்சியும் வாய்ப்பான ஒரு சூழ்நிலை யாகும். இன்றைய நிலையில் இலங்கை வாழ் இந்தியத் தமிழருக்கு இனரீதியாக விகிதாசார ஒதுக்கீட்டு முறையினை, தொழில், உயர்கல்வி, மற்றும் பொருளாதார வாய்ப்புக்களின் மீது பிரயோகிக்கப்படும் பட்சத்தில், அது இச்சமூகத்தின் போக்கில் ஒரு புரட்சிகரமான நிலைமையை ஏற்படுத்திவிடலாம். இதற்கு இவர்கள் அனைவரும் ஐக்கியப்பட்டுக் கட்டுக்கோப்புடன் ஒரே தலைமையில் ஒன்று சேர்ந்து தமது கோரிக்கைகளை முன்வைக்கும் போது, அவர்களைச் சேர வேண்டிய பொருளாதார வாய்ப்புக் களும், உரிமைகளும் இலகுவாக அவர்களை வந்து சேர வாய்ப் புக்கள் உருவாகும் என நம்பலாம்.
104

தோட்டத் தொழிலாளர்களின்.
இறுதியாகக் கூறுவதானால், தோட்டத் தொழிலாளர் களிடையேயும், அனைத்து மலையகத் தமிழர்களிடையேயும் உயர்கல்வியும், தொழிற்பயிற்சியும் வளருவதே எதிர்காலத்தில் ஒரு திட்டவட்டமான முறையில் அவர்கள் முன்னேறுவதற்கான ஒரேவழி என்பதனைத் தவிர, இன்றைய சூழ்நிலையில் அச் சமூகத்தின் எதிர்கால சுபீட்சத்திற்கு வேறுவழி எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை.
_sశీణ_
05

Page 67

மலையக இளைஞர்களும்.
10. மலையக இளைஞர்களும் எதிர்காலமும்
மலையக இளைஞர்களின் எதிர்காலம் சுபீட்சமாக அமையவேண்டும் என்பதில், பல்வேறு சாராரும் அக்கறை காட்ட முயலும் ஒரு போக்கு இந்தத் தசாப்தத்தின் ஆரம்பம் முதலாகவே ஓங்கி வளர்ந்து காணப்படுகின்றது. கடந்த இரண்டு தசாப்தங்களாக இத்தகைய போக்கின் வளர்ச்சிக்கான அத்தி வாரம் இடப்பட்டு வந்துள்ளமையினையும் நாம் நினைவுகூற வேண்டியவர்களாக உள்ளோம். இந்நாடு சுதந்திரம் பெற்ற காலமுதலாகச் சிறுபான்மையினர் மீது திருப்பிவிடப்பட்ட பல் வகையான அநீதிகளின் உச்சமாக நிலச்சீர்திருத்தத்தின் சில விளைவுகளையும் குறிப்பிடலாம். இவர்கள் மீது கட்டவிழ்க்கப் பட்ட இத்தகைய அநீதிகளின் பின், இலங்கையில் மாத்திர மன்றிப் பிரித்தானியா போன்ற மேற்கு நாடுகளிலும் கூட இம்மக் களின் துர்ப்பாக்கிய நிலைமைபற்றிக் காரசாரமாகத் தொலைக் காட்சி, வானொலி, புதின பத்திரிகை என்பவற்றினால் விமர்சிக் கப்பட்டது. இத்தகைய பின்னணி நிலைமைகளின் வளர்ச்சி களைத் தான் நாம் இன்று காண்கின்றோம். ஆனாலும், இம்மக்கள் மீதான அக்கறை பேச்சளவிலும், எழுத்துவடிவிலும்தான் காணப்படுகின்றது. நடைமுறையில் ஒருசில தீர்வு நடவடிக் கைகளே ஏற்பட்டுள்ளன. அவற்றின் விளைவாக எதுவிதமான குறிப்பிடத்தக்க மாற்றங்களும் ஏற்பட்டுவிடவில்லை என்ப தனையும் திட்டவட்டமாக நாம் குறிப்பிட்டுக் கூறலாம்.
107

Page 68
இன்றைய மலையகம்
பல்வேறு துறை சார்ந்தவர்களும் மலையகத் தமிழ் மக்கள் கல்வியில் பின்தங்கிய நிலையில் இருப்பதுதான் அவர் களுடைய பின்தங்கிய வாழ்க்கை நிலைக்கு அடிப்படையான காரணம் என்பதனை உறுதியாக நம்புகின்றனர். இதற்குப் பல காரணங்களையும் இனங்கண்டுள்ளனர். முக்கிய காரணமாகக் கூறப்படுவது, அவர்கள் கல்வி கற்க ஊக்குவிக்கப்படவில்லை என்பதாகும். அதனை மறுக்கவும் முடியாது. பெருந்தோட்டங் களுக்குத் தாராளமாகத் தொழிலாளர் கிடைக்க வேண்டுமென்ப தற்காகத் தோட்ட நிருவாகம் இவர்களைக் கல்வியில் முன்னேற ஊக்குவிக்கவில்லை. அரசாங்கமும் இந்நிலையினையே பின் பற்றியது. இம்மக்களோ நாட்டிற் குடியுரிமை இல்லாததாற், கல்வி கற்றாலும் அரசாங்க, மற்றும் உயர் தொழில்களுக்குச் செல்ல முடியாதென்றே காரணம் குறித்துக் கல்வியில் ஊக்கம் காட்ட வில்லை. எவ்வாறாயினும், இறுதிவிளைவாக, இவர்கள் கல்வி யில் ஊக்குவிக்கப்படாத நிலையின் வளர்ச்சியே ஓங்கி நின்றது. எனவே, இதன் காரணமாகச் செயற்பட்ட பல்வேறு சக்தி களின் விளைவே இம்மக்களின் இன்றைய பிற்போக்கு நிலைமைகளுக்குக் காரணமாகும்.
ஆனால், இன்று பலமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சிறிமாசாஸ்திரி ஒப்பந்தம் காரணமாக, ஏறத்தாழ ஐந்து இலட்சம் பேர் இந்தியா சென்று விட்டனர். எஞ்சியவர்களில் நாடற்றவர் என்ற வகைப்பாட்டிற்குட்பட்டோர் அனைவரும் இலங்கையர் என்ற (1988) அந்தஸ்திற்கு உயர்த்தப்பட்டுள்ளனர். ஆனால், இது ஏட்டளவில் தான் இருக்கின்றது என்பது எமது மனக்குறையாகும். இது நடைமுறையிலும் இடம்பெற வேண்டும். இதற்காக, அனைத்துச் சாராரினதும் முயற்சியும், பங்களிப்பும் அவசிய மாகிறது. இவையாவற்றிற்கும் அடிப்படையாக மலையகத் தமிழ் மக்களின் விழிப்புணர்வும், அதற்குத் தமது உரிமைகளைக் கட்டிக்காக்க வேண்டுமென்ற விடாப்பிடிவாதமான சிந்தனையின் வளர்ச்சியுமே இன்றைய உடனடித் தேவைகளாகும்.
கடந்த சில வருடங்களில் - குறிப்பாக 1977 ஆம் ஆண்டின் பின்னர் - மத்திய மாகாண அபிவிருத்திக்காகப் பரவலாக் கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் கீழான நிதி ஒதுக்கீட்டி லிருந்து பெருமளவான முதலீடு மலையகத் தமிழ்ப் பாட சாலைகளுக்கான வளர்ச்சிக்காக வேறான முறைகளிற் பயன் படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சுவீடன் ப்ோன்ற சில நாடுகளின் (சீடா) நிதி உதவியுடன் மலையகத்தில் குறிப்பாகத்
108

மலையக இளைஞர்களும்.
தோட்டப் புறப் பாடசாலைகளின் விருத்திக்காகச் சில நடவடிக் கைகள் இடம் பெற்றுள்ளன. இவ்வாறான நடவடிக்கைகளின் விளைவுகள் என்ன என்பதனை நாம் மதிப்பீடு செய்தல் அவசியமாகும். இவ்வாறாகக் கல்வி வளர்ச்சிக்காகச் செய்யப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் இம்மக்களின் எதிர்கால விழிப் புணர்வுக்கான கல்வியறிவின் வளர்ச்சிக்கு ஏதுவாக அமையும் என்பது அனுமானமாகும்.
இன்று மலையகப் பாடசாலைகளின் அபிவிருத்திக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளினால் ஏற்படக்கூடிய விளைவுகளை அடுத்துவரும் காலப்பகுதிகளில் தான் நாம் காண முடியும். ஏறத்தாழ 8 இலட்சம் மலையகத் தமிழ் மக்களைக் கொண்ட பிரதேசங்களில் உள்ள பாடசலைகளை முழுமையாகச் சீர்திருத்த இன்னும் சில தசாப்தங்கள் செல்லும் என்பதனை நாம் மறக்க லாகாது. மலையகத்திற் கல்விகற்ற சில இளைஞர்கள் இப்போது ஆசிரியர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர். இது எண்ணிக்கையளவிற் பார்க்கும் போது இப்போதைய தேவையிற் சரியாக 20 வீதம் கூடப்பூர்த்தியாக்கப்படவில்லை என்றே கூறப்படுகின்றது. ஊர்ஜிதம் செய்யப்படாத சில மதிப்பீடுகளின்படி, குறைந்தது இன்னும் 4000 ஆசிரியர்களாவது மலையகப் பாடசாலை களுக்குத் தேவைப்படுகின்றனர். இதற்கான விண்ணப்பங்கள் கோரும்போது, விண்ணப்பிக்கத் தகதி வாய்ந்த மலையக இளைஞர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. எனவே மலையகக் குழந்தைகளின் கல்வி மென்மேலும் பலவீன மடைகிறது.
இதைப் பொறுத்து வேறு சில கருத்துக்களும் நிலவுகின்றன. அத்தகைய கருத்துக்களில் முக்கியமான ஒரு கருத்தினை நாம் சிறிது நுணுக்கமாகப் பரிசீலித்தல் பயனுடையதாகும். மலையக மாணவர்களைக் கற்பிக்க மலையகத்தைச் சேர்ந் தவர்கள் தான் ஆசிரியர்களாக இருக்க வேண்டும் என்பதிலுள்ள நியாயங்கள் என்ன? இதுவரை காலம் ஏனைய பகுதிகளில் இருந்து வந்து கற்பித்தவர்களின் சேவைகளைக் குறைவாக மதிப்பிட முடியுமா? இவைபோன்ற வினாக்களை நாம் கவனமாக மறுபரிசீலனை செய்ய வேண்டி உள்ளது.
இதற்கு இன்றைய நாட்டுநிலை, வாழ்க்கைச் செலவுக்கும், ஆசிரியர்களின் சம்பளங்களுக்கும் இடையேயான தொடர்பு, பிரதேச வேலைவாய்ப்புக்கான சந்தர்ப்பங்கள் போன்ற ஒருசில
09

Page 69
இன்றைய மலையகம்
முக்கிய கட்டுப்பாட்டுக் காரணங்களைப் பற்றி விவாதித்தல் இங்கு பொருத்தமாக இருக்கும்.
கடந்த காலங்களில் மலையகப் பாடசாலைகளிலே தமிழ் மொழி மூலம் கல்வி கற்பித்த ஆசிரிய பரம்பரையினது சேவையினை நாம் எது காரணம் கொண்டு குறைவாக மதிப்பிட முடியாது. கடமை உணர்வுகொண்டு ஆசிரியர் தொழிலுக்கே பெருமை சேர்த்த சில கடமை வீரர்களை என்றென்றும் எம்மால் மறக்கவும் முடியாது. ஆங்காங்கு பொறுப்பற்ற ஆசிரியர்களும் இருந்திருக்கலாம். ஆனால், பொதுவில் நினைவு கூறப்பட வேண்டி யவர்களும் இருந்திருக்கின்றனர். ஆனால், கடந்த சில காலங் களாக ஏற்பட்ட அரசியல் ஸ்திரமின்மையாலும், வன்முறைப் பிரச்னைகளினாலும் இடம் பெயர்ந்த பல நூற்றுக்கணக்கான ஆசிரியர்களின் இடத்தை நிரப்ப வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. அத்துடன், சென்றவ்ர்கள் திரும்பி வரக்கூடிய வாய்ப்பு களுக்கான நம்பிக்கையும் அருகிவிட்டது. அப்படி ஒரு சிலர் மீண்டும் "புதிதாக நியமனம் பெற்று வந்தாலும், மனிதாபிமான அடிப்படையில் நியாயப்படுத்தக்கூடிய பல காரணிகளின் நிமித்தம், மலையகப் பகுதிகளை விட்டு இடம் பெயரும் போக்குகள் நிலையாகிவிட்டன.
அடுத்ததாக, இன்று காணப்படும் வாழ்க்கைச் செலவுக்கும், சம்பளவிகிதங்களுக்கும் இடையே சார்பற்ற இடைவெளி அதிகரிப்பதால், ஆசிரியர் தொழில் போன்றவற்றில் உள்ளவர்கள் தமது சொந்த இடங்களில் இருந்தால் மாத்திரமே செலவினங் களைச் சமாளிக்கலாம் என்ற நிலை காணப்படுகின்றது. எனவே பிறபகுதிகளில் இருந்து மலையகப் பாடசாலைகளுக்கு வருபவர் களுக்கு, வாழ்க்கைச் செலவு அவர்களைத் தொடர்ந்து அங்கு பணி புரிய ஊக்குவிப்பதில்லை. எனவே, சில காலங்களின் பின்னர் தமது சொந்த இடங்களுக்கு மாற்றம் பெற்றுச்செல்ல விரும்பு கின்றனர்.
மலையகப் பாடசாலைகளில் இருந்து கல்வி கற்றுப் போதிய தகுதிகளுடன் வெளியேறும் இளைஞர்களுக்கு உடனடி யாகப் பெரியளவிலே தொழில் வழங்க வேண்டும். ஆனால் அவர்களோ ஏனைய தொழில் நுட்பங்களிற் பயிற்சி பெற்ற வர்கள் அல்ல. எனவே கிடைக்கக் கூடியதான ஒரேயொரு வாய்ப் பினையும் அவர்களுக்கு வழங்காமல் விட்டு விட முடியாது. ஆகவே, மலையகப் பாடசாலைகளில் ஏற்படும் ஆசிரியர் தொழில்களுக்கு அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
110

மலையக இளைஞர்களும்.
இவை யாவற்றையும் விட மிக முக்கியமான இன்னு மொரு காரணமும் உள்ளது. குறித்த சமூகத்தில் உள்ள ஆசிரியர் ஒருவரின் பாராட்டத்தக்க சேவை, அவருடைய சொந்தச் சமூகத்தில் ஏற்படும்போது அவருக்கு வழங்கப்படும் சமூக அங்கீகாரம், அவருக்குப் பெரும் ஆத்ம திருப்தியினையும், கெளரவத்தையும் வழங்கக்கூடியது. அவருக்கு மாத்திரம் அன்றி அவருடைய பரம்பரையினருக்கும் அக்கெளரவம் தொடர்ந்து செல்லும். அதேபோல், ஆசிரியராகப் பணிபுரிபவரின் பொறுப் பற்ற நடவடிக்கைகள் முழுச் சமூகத்தினாலும் கண்டனத்திற்குள் ளாகும். எனவே, ஆசிரியராகப் பணிபுரிபவர், தமது சமூகத்தின் விமர்சனங்களைத் தவிர்க்க முடியாத வகையில் அவற்றை அங்கீ கரிக்க வேண்டியவராகி, அதன் நிமித்தம் தமது கடமையினைச் செவ்வனே செய்யத் தூண்டப்படுகிறார். ஆனால், அதே வேளை இந்தப் பகுப்பாய்வுக்கெல்லாம் உட்படாத புறநடைகள் இல்லை என்றும் சொல்வதற்கில்லை. அண்மையில் அரசியல்வாதி ஒருவர் ஒரு விரக்தியுற்ற நிலையில் நமது இளைஞர்கள் ஆசிரியர்களாகி மக்களுக்குச் சிறந்த சேவை ஆற்றுவார்கள் என நினைத்ததற்கு மாறாக, அவர்கள் தான் பெரிதும் பொறுப்பற்றவர்களாக நடந்து கொள்கின்றனர்” என்று கூறிய விமர்சனத்தையும் கேட்க நேரிட்டது. இப்படியானவர்கள் மிகமிகச் சிறுபான்மையினர் என்பதே எமது அபிப்பிராயமாகும்.
ஆசிரியத் தொழிலுக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்குச் சிறந்த பயிற்சி தேவை. அத்துடன், அவர்கள் தொடர்ந்து கற்றலும், கற்பித்தலுமே தமது கடமை என்பதனை மறக்காமல், சிறந்த முறையில் கற்பிக்கத் தாம் தொடர்ந்து கற்க வேண்டும் என்ற உண்மையினைச் சிறிதும் மறக்கக்கூடாது. உலகம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதனால், மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. எனவே ஆசிரியர்கள் தாம் தொடர்ந்து கற்பதன் மூலமே மாணவர்களுக்குச் சமகால இயல்புகளைக் காரண காரிய ரீதியாகக் கற்பிக்க முடியும்.
இத்தகைய பின்னணியிலேதான், மலையகப் பாடசாலை களுக்கு மலையக ஆசிரியர்கள் தேவை என்ற எண்ணம் வலுப் பெறுகின்றது. அடுத்ததாக, போதிய பெளதீக வசதிகளையும், போதிய ஆசிரியர்களையும் - அதுவும் உள்ளூர் ஆசிரியர்களையும் - மலையகப் பாடசாலைகளுக்குக் கிடைக்கச் செய்தால், நீண்ட காலத்தில் மலையகக் கல்விநிலை மேலோங்கலாம் என நம்பலாம். இவற்றுடன் இணைந்தாக, மலையகப் பாடசாலை
111

Page 70
இன்றைய மலையகம்
களின் நிர்வாக முறைகளிலும் பல வளர்ச்சி நிலைமைகள் தேவைப்படுகின்றன.
அடிப்படைக்கல்வியின் வளர்ச்சியோடு இணைந்ததாகத் தொழிற் பயிற்சிகளுக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கப்பட வேண்டும். தற்போது அதற்கான வாய்ப்புக்கள் மிகமிகக் குறைவு. கடந்த காலங்களிற் குடியுரிமை இல்லாததால், கல்விகற்ற இளைஞர்களுக்குப் போதியளவிலே தொழில்வாய்ப்புக் கிட்டாது இருந்தது. ஆனால் இப்போதோ, அவர்கள் தொழிற் பயிற்சி பெறாததால், வேலை வாய்ப்பற்றுக் காணப்படுகின்றனர். எனவே, கல்வி கற்பதுடன், தொழிற் பயிற்சிக் கல்வியும் தேவை என்ற முக்கிய கருத்தினையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். கண்டி, நுவரெலியா, கொழும்பு ஆகிய நகரங்களில் உள்ள அரசாங்ககத் தொழில் நுட்பக் கல்லூரிகளிலும் தமிழில் தொழிற் பயிற்சிகள் நடாத்தப்பட இருக்கின்றன. கொட்டகலைக்கு அருகில் உள்ள 'சிறியாத கல்விக்கல்லூரியில் 300க்கும் அதிகமானோரை ஆசிரியர் பயிற்சிக்குச் சேர்த்துக் கொள்ள இருக்கின்றனர். இதுபோன்ற தொழில் பயிற்சிகளில் மலையக இளைஞர்கள் அக்கறை காட்டுவது அவசியமாகிறது.
கல்வியும், தொழிற்பயிற்சியும் தேவையான தகுதிகளா னாலும், அவற்றினைப் பயன்படுத்தித் தொழில் வாய்ப்புக் களையும், சிறந்த வாழ்க்கையையும் அமைத்துக்கொள்ளக் குடியுரிமையினைப் பெற்றிருப்பது மாத்திரமன்றி, அதனை உறுதி செய்துகொள்ளலும் மிக முக்கியமானதாகும்.
கடந்தகால அனுபவங்கள் எமக்குச்சில படிப்பினைகளை ஊட்டியுள்ளன. குடியுரிமையினைப் பெற்றுள்ள மலையக மக்களுக்கு, அதனை உறுதிப்படுத்திக்கொள்ளவும், அது இல்லாததன் காரணமாக இழந்தவற்றைப் பெற்றுக்கொள்ளவும் தேவையான வழிமுறைகளை விளக்கித் தெரிந்துகொள்ளச் செய்வதும் இன்றைய உடனடித் தேவையாகும்.
தொண்டர் நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், தொழிற் சங்கங்கள் யாவும் தன்னந்தனியாகவோ, அல்லது ஒன்றிணைந்தோ தமது வேலைத்திட்டங்களில் இவற்றிற்கு முன்னுரிமை வழங்கி, மக்களுக்கு விளங்கப்படுத்தலாம். மலையக மக்கள் அனைவரையும் வாக்காளராகப் பதிவு செய்வதில் இந்நிறுவனங்கள் முன்னின்று செயல்படுவதன் மூலமே இம்மக்களைப் பாதுகாக்கலாம். ஒவ்வொரு வருடமும் மே மாதம் ஆரம்பிக்கும்
2

மலையக இளைஞர்களும்.
வாக்காளர் பதிவு அட்டவணையில் இவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையே மலையக மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கச் செய்யும் மகத்தான தொண்டாகும்.
எனவே, மலையக இளைஞர்களின் எதிர்காலம், அவர் களைக் கல்விகற்ற, தொழிற்பயிற்சி மிக்கவர்களாக்குவதிலும், அதற்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் தங்கியிருப்பதுடன், தமது குடியுரிமைகளை உறுதிப்படுத்துவதிலும் தங்கியுள்ளது என்பதை மறக்கக்கூடாது.
_G|శ్రీపై
8

Page 71

அபிவிருத்திச் செய்முறையில்.
11. அபிவிருத்திச் செய்முறையில் மலையக இளைஞர்களின் பங்கு
அபிவிருத்தி என்பது பொதுவாகக் குறிப்பிட்ட ஒரு நிலையிலுள்ள ஒன்றைச் சிறந்த ஒரு நிலை நோக்கி மாற்றத்திற்கு உட்படுத்தும் ஒரு செய்முறையினைக் குறிப்பதாகும். ஆனால், பொருளாதார அபிவிருத்தியை மனதிற் கொண்டே அபிவிருத்தி என்ற சொல் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. முழுமையான அபிவிருத்தி என்னும் போது, மக்களது சமூகம், பொருளாதாரம் சார்ந்த அனைத்து அம்சங்களும் சார்பான முறையில் மாற்றம் பெற வேண்டும் என்பதனையே குறிக்கும்.
இத்தகைய சமூக, பொருளாதார அபிவிருத்தி ஏற்படுவதில் இளைஞர்களின் பங்கு யாது என்பதும், குறிப்பாக இலங்கையில் உள்ள பெருந்தோட்டத்துறையைச் சார்ந்த இளைஞர்கள் எத்தகைய பங்கினை வகிக்கின்றனர் என்பதும் உண்மையில் அவர்கள் எத்தகைய பங்கினை வகிக்க வேண்டும் என்பதும் பற்றிய சில முக்கிய கருத்துக்களே இக்கட்டுரையில் விவாதிக்கப்படும்.
ஒரு நாடு முன்னேற்றம் அடைய வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் அனைவருமே முன்னேற்றத்தினை அடைந்திருக்க வேண்டும். பின்தங்கிய மக்களைக் கொண்ட ஒரு நாடு எவ்வளவு தான் செல்வமிக்கதானாலும், அதனை அபிவிருத்தி அடைந்த நாடெனக் கருத முடியாது. குவைட், சவூதிஅரேபியா, லிபியா என்பன பெருமளவு எண்ணெய் வளத்தைக் கொண்டிருந்த

Page 72
இன்றைய மலையகம்
போதிலும், எத்தகைய கணிப்பொருட்களையும் பெருமளவு கொண்டிராத யப்பான் நாட்டுடன் ஒப்பிடுகையில், அவை மிகவும் பின்தங்கிய நாடுகளாகவே கருதப்படுகின்றன. எனவே, சுருக்கமாகச் கூறுவதானால், ஒரு நாட்டினது அனைத்து மக்களினதும் முன்னேற்றம் அபிவிருத்தியில் மிக முக்கியமானதாகும். மக்கள் முன்னேற்றம் என்பது எதனைக் குறிக்கிறது என்பதனையும், இதில் இளைஞர்களின் பங்கு யாது என்பதனையும் நாம் கவனிக்க வேண்டும்.
ஒரு நாட்டினது மக்களின் எண்ணிக்கையோ, அல்லது அங்குள்ள இயற்கை மூலவளமோ மாத்திரம் அதன் பலத்தினைக் குறிக்காது. மக்கள் கல்வியிற் சிறந்த முறையிலே தேர்ந்து தொழிற்பயிற்சி மிக்கவர்களாக மாறும்போதே, அவர்கள் நாட்டின் அபிவருத்திக்குப் பயனுடையவர் ஆகிறார்கள். மக்களின் கல்வியும், தொழிற் பயிற்சியும் தான் இன்றைய வளர்ச்சியுற்ற நாடுகளின் பொருளாதாரச் சுபீடசத்துக்கு முக்கிய காரணம் என்பதனை யாவரும் அறிவார்கள்.
சில வளர்ச்சியுற்ற நாடுகள் சிறிய நிலப்பரப்பில் பெருமளவு மக்களைக்கொண்டு சுபீட்சத்துடன் காணப்படுகின்றன. பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பேர்க், யப்பான் போன்றன அவ்வாறனவையாகும். சிறிய குடித்தொகையினைக் கொண்ட பிரேசில், மற்றும் பலபெரும் நிலப்பரப்பினைக் கொண்ட ஆப்பிரிக்க நாடுகள் என்பன வறுமையிலே துன்புறுகின்றன. எனவே, இவற்றில் இருந்து, மக்கள் வளம் என்பது ஏனையவளங் களைவிட எந்தளவுக்கு முக்கியமானது என்பது உணரப்படல் வேண்டும்.
நாடுகளில் உள்ள இயற்கை வளங்கள் சிறந்த முறையில் பயன்படுத்தப்பட வேண்டுமானால், மக்கள் அவற்றினைப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை அறிந்திருக்க வேண்டும். கல்லினைக் கொண்டு ஆயுதங்களைச் செய்து பயன்படுத்திய மக்களைவிட, உலோகங்களால் ஆயுதங்களைச் செய்தவர்கள் முன்னேற்றம் கூடியவர்களாகக் கருதப்பட்டனர். வேட்டையாடி உணவு சேகரித்தவர்களைவிட, பயிர்செய்து உணவினைப் பெற்றுக் கொண்டவர்கள் முன்னேற்றம் கூடியவர்களாகக் கருதப்பட்டனர். எனவே, நாளுக்குநாள் தொழில்நுட்பம் வளர, வளர மக்களும் வளர்ந்தனர். இது மனித இனத்தின் வளர்ச்சியின்போது நாம் கண்ட அபிவிருத்திச் செய்முறைகளாகும்.
6

அபிவிருத்திச் செய்முறையில்.
இப்போது உலகிற் பல நாடுகள் நன்கு வளர்ச்சியுற்றுள்ளன. சில நாடுகள் வளர்ச்சியிற் பின் நிற்கின்றன. இலங்கையை ஒரு சிறிய நாடென்றே கருத வேண்டும். சராசரி அமெரிக்க பிரசை வருடம் ஒன்றுக்கு ஐந்தரை லட்சம் ரூபாய் (1980இல் சுமார் 12,000 அமெரிக்க டொலர்) வருவாயைப்பெறும் அதே வேளையில், சராசரி இலங்கைப் பிரஜை வருடம் ஒன்றுக்கு 13,000 ரூபாயை (சுமார் 330 அமெரிக்க டொலர்) வருமானமாகப் பெற்றுள்ளான். இதிலிருந்து நாம் எந்தளவுக்கு வருமானத்திலும், அதன் காரணமாக வாழ்க்கைத் தரத்திலும் பின் நிற்கின்றோம் என்பது புலனாகும். சராசரி இலங்கையரது வருமானம் இவ்வாறானால், சராசரிப் பெருந்தோட்டத் தொழிலாளரது நிலை இன்னும் மோசமானதாகும். 35 ரூபாய் வேதனத்தில் 26 நாட்கள் தொழில் புரிய வாய்ப்பைக் கொண்ட 2.4 பேர் தொழில் புரியும் குடும்பம் ஒன்றில் 4.8 அங்கத்தவர்கள் சராசரியாக இருக்கும் நிலையில் தலைக்குரிய வருடாந்த வருமானம் சுமார் 6,000 ரூபாயாகும். (இது சுமார் 150 அமெரிக்க டொலராகும்). இந்நிலையில் தோட்டத் தொழிலாளி ஒருவரது வாழ்க்கைத் தரம் எவ்வாறு இருக்கும் என்பதனையும் யாவரும் உணர முடியும்.
எனவே, இத்தகைய பொருளாதார நிலையில் இருக்கும் தொழிலாளரது வாழ்க்கைத் தர உயர்வும், ஒரு சமூகமாக இத்தொழிலாளர் வகுப்பு உயர்வும் ஏற்பட சமூக பொருளாதார நிலைமைகளிற் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் அபிவிருத்தி ஏற்பட முடியும். இதற்கு இளைஞர்கள் யாது செய்ய வேண்டும் என்பதனை அறிவதே இப்போது எமது நோக்கமாகும்.
தொண்டர்களும், பொதுநல ஊழியர்களும் ஆற்றும் பணிகளினால் மாத்திரம் ஒரு சமூகம் வளர்ந்துவிட முடியாது. ஒவ்வொரு சமூகமும், அல்லது நாடும் தாம்புரிந்த கடும் உழைப் பினாலும், தியாகங்களினாலும் இன்றைய சுபீட்சத்தினை அடைந்திருக்கின்றன. அந்த வழியிலேயே பெருந்தோட்டத் தொழிலாளர்களும் அபிவிருத்தியினை அடைய வேண்டியுள்ளது. தற்கு அடிப்படையாக, இச்சமூகத்தில் மனித வளம் திறமையாகப் பயன்படுத்தப்படல் வேண்டும். அதற்கு, தொழி இலாளர்கள் தமது வாழ்க்கைப் படியின் ஒவ்வொரு நிலையிலும் பல்வேறு காரியங்களை ஆற்ற வேண்டியுள்ளது.
117

Page 73
இன்றைய மலையகம்
பால்ய வயது முதல் 18 வயது வரையுள்ள இளம் பிராயத்தில் உடல் ஆரோக்கியம், மனவளர்ச்சி, கல்விப் பயிற்சி, தொழிற் பயிற்சி என்பனவ்ற்றைச் சிறந்த முறையிற் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும். இதற்குச் சுகாதாரமான வாழ்க்கை முறை சிறந்த உணவு (விலை கூடிய ஆடம்பர உணவுகள் அல்ல) சிறந்த கல்வி, தொழிற்பயிற்சி என்பன அவசியமாகும். இது பெற்றோரின் பொறுப்பாகும். அத்துடன், அவர்களது கடமையும்கூட கல்வியிற் கணிதம், மொழி என்பனவற்றிற்குப் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படல் வேண்டும். கல்வியிற் பாடப்படிப்பு அவசியமான அதே நேரத்தில், பொது அறிவு வளர்ச்சிக்கான பொது நூல்கள், தினசரி புதினப் பத்திரிகைகள் என்பனவற்றை வாசிக்கும் பழக்கங்கள் மிக அவசியமாகும். ஒவ்வொருவரும் தாம் விரும்பிய அளவு அடிப்படைக் கல்வியைப் பெற்ற பின்னர், ஏதோ ஒரு துறையிலே தொழிற் பயிற்சி பெறுதல் என்பது மிகமிக அவசியம். மாடு வளர்ப்பாகிலும் சரி, தச்சு வேலை யாயினும் சரி, கணக்காளர் தொழிலாயினும் சரி, முறையான பயிற்சி இருந்தால்தான் சிறந்த உற்பத்தித்திறன் மிக்க தொழிலாளியாக அவர் பயன்படுவார்.
இத்தகைய முறையில், வளர்ச்சியடைந்த இளைஞர்கள் ஆண்கள், பெண்கள் இருபாலாரும் 55 வயது வரை தொழில் புரியத் தகுதியடைகின்றனர். இந்நிலையில், முதலில் தொழிலில் அனுபவம் பெறுகின்றனர். சில வருடங்களில் தொழிலின் இயல்புக்கு ஏற்றவகையில் பெற்ற அனுபவத்துடன் தமது தொழில்களில் அவர்கள் நிபுணத்துவம் அடைகின்றார்கள். இக்காலத்தில் தமது சமூகப் பொறுப்புகளையும், சமூக வாழ்க்கையின் பல்வேறு படிகளையும் எதிர்நோக்கி, எதிர்காலச் சந்ததியினை உருவாக்கி, பயனுள்ள பிரஜைகளாக்க வேண்டியுள்ளது. இது மனித இனத்தின் வட்ட அமைப்பில் முக்கியமானதாகும். தானும் வளர்ந்து மற்றோரையும் வளர வைப்பது, ஒவ்வொருவரும் தமது வாழ்நாளிற் கடக்க வேண்டிய கட்டாயப்படிகளாகும். இவற்றினை இளைஞர்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். இளைஞர்கள் தமது இளம் வயதிற் பொறுப்புடன் வளர வேண்டியது மிகமிக அவசியம். இவ்வாறு அவர்கள் வளர வழிகாட்டித் துணைநின்று உதவிபுரிவது பெற்றோரின் கடமை. ஒவ்வொரு காலத்திலும் ஏதோ வகையான பிரச்சினைகள் மக்களை எதிர்நோக்குவது இயற்கை.இத்தகைய பிரச்சினைகளின் இயல்புகளை உண்ர்ந்து, அதற்கேற்ப வாழ்ந்து, தமது தேவைகளைச் சாதித்துக் கொள்பவர்கள் வெற்றியடைகின்றனர். பிரச்சினை
118

அபிவிருத்திச் செய்முறையில்.
களைக் கண்டு குறைகூறிச் சலிப்புற்று விரக்தியடைவோர் தோல்வி யையே காணுகின்றனர்.
தொழிலாளர்களின் மத்தியில் இருந்து கல்வி கற்றோர், உயர் தொழில் பயிற்சி பெற்றோர் ஆகியோர் மிகமிகக் குறைவு என்பது உண்மையானாலும், அந்த ஒரு சிலராற் சாதிக்க முடிந்த தனை, ஏன் மற்றோரும் பின்பற்றிச் சாதிக்க முயற்சிக்கக் கூடாது? இதுவும் ஒரு பெரும் வினாவாகவே இருந்து வருகின்றது. இதனை உணரவேண்டியவர்கள் இளைஞர்களே. முதியோர்கள் இன்று காலம் கடந்தவர்கள் முதியோர்களைவிட நாட்டின் அபிவிருத்திக்கும், தமது சமூகத்தின் அபிவிருத்திக்கும் ஆற்றக்கூடிய பணிகள் இளைஞர்களுக்கு அதிகம் உண்டு. அதில் முதலாவது தம்மைத் தாமே விருத்தி செய்து கொள்வதாகும் ஒவ்வொரு இளைஞனும் தன்னைக் கல்வியில், பொது அறிவில், உடல் ஆரோக்கியத்தில், தொழிற்பயிற்சியில் விருத்தி செய்து கொள்வானேயாகில், சமூகத்தின் வளர்ச்சியும் விரும்பும் அளவிற்கு விரைவில் ஏற்பட்டுவிடும். இன்று தோட்டப்பகுதிகளில் கல்வி யறிவின்மை, ஆரம்பக்கல்வி, இரண்டாம் நிலைக்கல்வியின் நிலைமை பற்றி அட்டவணையிலே தரப்பட்டுள்ள தரவுகள் கூறுகின்றன:
அட்டவணை 11.1 இலங்கை - தோட்டப் பகுதிகளில் கல்வி வளர்ச்சி 1953-1988 (வீதத்தில்)
ஆண்டு எழுத்தறி முதனிலை கல்வி இரண்டாம் நிலை
வற்றோர் மட்டும் வரை கல்வி பெற்றோர் பெற்றோர்
1953 61 36 3. 1963 57 35 8 1973 52 42 6. 1978/79 45 48 7 1981/82 46 45 s 8.5 1985/86 41 43 14 1988 32 53 15
இன்னும் தோட்டப்புறங்களில் 32 வீதமானோர் எழுத வாசிக்கவும் தெரியாது இருப்பது நாட்டின் சகலரும் வெட்கப்பட வேண்டிய நிலை இந்நிலைமாற வேண்டுமானால், அதில் 119

Page 74
இன்றைய மலையகம்
இளைஞர்களே ஆர்வம் காட்ட வேண்டும். படிக்காத இளைஞர்கள் முதியோர் கல்வி போன்றவற்றில் அக்கறை காட்ட வேண்டும்.
படித்த இளைஞர்களிற் பெரும்பாலானோர் எதுவிதத் தொழில் பயிற்சியுமின்றிப் பல பிரச்சினைகளுக்காளாகின்றனர். முறையான தொழில்பயிற்சி பெற்றோருக்குப் பல்வேறு தொழில் வாய்ப்புக்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ளன. கனரக வாகன சாரதிகள், வாகனம் பழுது பார்ப்போர், தட்டச்சு அலுவலகச் செயலாளர் வானொலி, தொலைக்காட்சி மின்சார உபகரணங்கள் திருத்தும் வேலை, மருத்துவத் தாதி போன்றவற்றில் பயிற்சியும், அனுபவமும் - மிக்கோருக்கு இன்றுள்ள வாய்ப் புக்கள் அதிகமாகும். இவை பற்றிய மிகவும் பாரம்பரியச் சிந்தனைகளே பெரும் தடையாக இருக்கின்றன. எனவே, அடிப் படைக்கல்வி பெற்ற இளைஞர்கள் தம்மை ஏதாவது ஒரு தொழிலுக்குப் பயிற்றுவித்துக் கொள்ளுதல் அவசியம்.
இலங்கையிலே தோட்டத் தொழிலாளரது வாழ்க்கைத் தரத்தினை அடையாளங் காண அவர்களுடைய வாழ்விடங் களின் நிலைபற்றிய விபரங்களும் உதவியாக இருக்கும். தொழிலாளர்களின் வீடுகளின் தரங்கள் பற்றிய விபரங்கள் அட்டவணை 2.5இல் தரப்பட்டுள்ளது.
இத்தகைய பின்னணியினைக் கொண்டு காணப்படும் சமூகத்தின் இளைஞர்களே (15-35 வயதுக்கிடைப்பட்டவர்கள்) இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டியவர்கள். அரசியல் தலைவர்கள், தொழிற் சங்கங்கள் என்பன இவற்றிற்கான பல தொண்டுகளைப் புரிந்தாலும் இளைஞர்கள் முழுமையாகத் தமது சமூகத்தின் பிரச்சினைகளை இனங்கண்டு முழு மூச்சுடன் சீரிய முறையிலே தம்மை வளர்த்துக் கொள்ளுதல் மூலமே சமூகத்தின் அபிவிருத்திக்கு வழிகோல முடியும். தன்னை வளர்த்துக் கொண்ட பின்னரே மற்றோருக்கு தொண்டு புரியவும், வழிகாட்டவும் ஒருவன் தகுதியுடையவனாகிறான். ஆனால் அதேநேரத்தில் தன்னை வளர்த்துக் கொள்ளுதல் என்ற கோட் பாட்டை பிழையாக விளங்கிக் கொள்ளவும் கூடாது.
_sశ్నీ
120

வளர்முக நாடுகளின்.
12. வளர்முக நாடுகளின் அபிவிருத்தியும் கல்வி வளர்ச்சியும்
எல்லா நாடுகளும், குறிப்பாக விருத்தியுறும் நாடுகளும், தமது மக்களுடைய கல்வியறிவு, தொழில்நுட்ப அறிவு என்பனவற்றின் வளர்ச்சியில் ஆர்வம் காட்டவேண்டியமையினையும், அதற்கு அடிப்படையாகப் பின்தங்கிய சமூகங்கள் தமது நிலைபற்றி அறிந்துகொள்ள வேண்டியமையையும், முக்கிய நோக்கங்களாகக் கொண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் கல்விப் பகுதி சர்வதேசக் கல்வியாண்டினைப் (1990) பிரகடனம் செய் துள்ளது.
சர்வதேக் கல்வியாண்டின் நோக்கங்கள் பல்வேறானவை. நாடுகள் வெவ்வேறான வளர்ச்சி மட்டங்களிற் காணப்படுகின்றன. வேறுபட்ட வளர்ச்சி நிலைமைகளை, அந்நாடுகளின் பொருளாதார நிலைமைகள், மக்களின் வாழ்க்கைத்தரம் என்பனவற்றின் மூலம் அறிந்து கொள்ளலாம். பொருளாதார நிலைமையினைக் குறித்தநாட்டின் தொழில் வளர்ச்சி மட்டங்கள் வேலைவாய்ப்புக்கள், ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் என்பன வற்றின் மூலமும், மற்றும் அந்நாட்டின் தலைக்குரிய மொத்தத் தேசிய உற்பத்தியின் அளவு என்பனவற்றின் மூலமும் விளங்கிக்
* ஐக்கிய நாடுகள் சபையின் கல்வியாண்டு’ நிகழ்ச்சியின்போது 18-6-90-இல் ஆற்றிய உரையின் சாராம்சம்.
121

Page 75
இன்றைய மலையகம்
கொள்ளலாம். அத்துடன், தலைக்குரிய வருவாய் என்பனவற்றின் மூலமும் விளங்கிக்கொள்ளலாம். எளிமையாக உதாரணம் கூறி விளக்குவதானால், இலங்கை, இந்தியா, வங்காளதேசம், பாக்கிஸ்தான், மொசாம்பிக், எத்தியோப்பியா, சூடான், பர்மா போன்ற பல்வேறு நாடுகள் தலைக்குரிய வருவாயாக வருடாந்தம் 400 தொலருக்குக் குறைவாகவே பெற்றுள்ளன. அதேநேரத்தில் ஐக்கிய அமெரிக்கா, டென்மார்க், சுவீடன் ஜெர்மனி, நோர்வே போன்ற நாடுகளில் தலைக்குரிய வருடாநந்த வருவாய் 15,000 தொலருக்கு மேலாகக் காணப்படுகின்றது. இதன் மூலம் வறுமையான நாடுகளுக்கும், சுபீட்சமான நாடுகளுக்குமிடையே யான வேறுபாடு பெருமளவுக்கு காணப்படுகின்றது என்பதனை அறிந்து கொள்ள முடிகின்றது.
இவ்வாறு நாடுகளிடையே வெவ்வேறான வளர்ச்சி நிலைமைகள் காணப்படகின்றமைக்கான காரணங்கள் எவை என்பதனையும் விளக்கிக்கொள்ளுதல் வேண்டும். இன்று இவ் வாறு நாடுகளிடையே பொருளாதாரவளர்ச்சியிலும், தொழில் நுட்ப வளர்ச்சியிலும், பெருமளவுவேறுபாடுகள் காணப்பட் டாலும் கூட, இத்தகைய வேறுபாடுகள் மிக அண்மைக் காலமுதலாகவே நிலவுகின்றன என்பதனை நாம் மறந்து விடலாகாது. மனித இனம்தோன்றிப் பல்லாயிரக்கணக்கான வருடங்களாகின்றன. ஆனால், வளர்ச்சியுற்ற நாடுகள், வளர்ச்சி யில் பின்நிற்கின்ற நாடுகள் என்ற வேறுபாடுகள் நாடுகளிடையே கடந்த 250 வருடங்களாகவே காணப்படுகின்றன.
இந்து நதிப்பகுதியினை அடுத்த இந்தியப் பகுதிகளிற் காணப்பட்ட சிந்துவெளி நாகரிகம், யூபிரடீஸ் தைகிரீஸ் நதிகளை அடுத்த மொசப்பத்தேமிய நாகரிகம், நைல்நதியினை அடுத்த எகிப்திய நாகரிகம், யாங்சிக்கியங் நதியினை அடுத்த பகுதிகளிற் காணப்பட்ட சீன நாகரிகம், அந்தீஸ் மலைப்பகுதியிற் காணப்பட்ட இன்கா நாகரிகம் என்பன புராதன நாகரிகங்கள், மனித வரலாற்றின் வளர்ச்சியின் செய்முறையில் இயல்பாக நாகரிக வளர்ச்சி எங்கெங்கு ஆரம்பகாலங்களில் தோன்றியதாகக் கூறப்படுகின்றதோ, அங்கெல்லாம் வறுமையும், துன்பமும் பெருமளவிற் காணப்படும் அதேநேரத்தில், சமகாலத்திற் பின் தங்கியவர்களாக வாழ்ந்த ஐரோப்பிய இனத்தவரே இன்று பெரிதும் கல்வி, தொழில்நுட்பம், பொருளாதாரம், நாகரிகம், வாழ்க்கைத்தரம், அரசியல் அதிகாரம் என்பவற்றில் முன்னேறிக் காணப்படுகின்றனர். இதற்குக் காரணம் யாது என நோக்கினால்,
H 22

வளர்முக நாடுகளின்.
அதுதொழில்நுட்பவளர்ச்சியும், அறிவியல் வளர்ச்சியும், அவற்றுக்கு அடிப்படையான கல்விவளர்ச்சியுமே என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.
18ம் நூற்றாண்டின் மத்திய காலப்பகுதியில் ஐரோப்பிய நாடுகளிற் கல்வி வளர்ச்சி ஏற்பட்டிருந்ததோடு, அங்கே கல்விகற்ற மத்தியதர வகுப்பினரின் மத்தியில் எழுச்சி ஏற்பட்டிருந்தது. அறிவியலாளர்கள் தொழில்நுட்ப அறிவின் வளர்ச்சிக்குப் பெரி தும் துணைபுரிந்தனர். இதன் விளைவாகப் பல்வேறு இயந்திரங் களும், இயந்திரங்களைச் செய்யும் இயந்திரங்களும் கண்டு பிடிக்கப்பட்டன. பொருள்உற்பத்தி, போக்குவரத்து, தொடர்பு சாதன, மருத்துவ, பொறியியல், தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இணைந்ததான இயந்திரங்களின் கண்டுபிடிப்புக் காரணமாக ஏற் பட்ட விளைவுகள் அமோகமானவை. இதுவரைகாலம் மனிதவலு வினாலும் விலங்குகளினாலும் செயல்பட்ட விவசாய கைத் தொழில், சேவை தொழிற் உற்பத்திகளில் இயந்திரங்கள் அறிமுகமானதுடன் உற்பத்திகள் பலமடங்கு அதிகரிப்புற்றன. தமது தேவைக்குப் போக மேலதிகமானவை அந்நிய சந்தையில் விற்கக்கூடிய அளவில் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டன. போக்குவரத்தில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக, பிறபகுதி களிலிருந்து மூலப்பொருட்கள் கொண்டுவரப்பட்டதோடு, உற் பத்திப் பொருட்களைச் சந்தைக்கும் இலகுவாகக் கொண்டுசெல்ல முடிந்தது. இதனால், தொழில்நுட்ப அறிவில் முன்னேறிய நாடுகளிற் செல்வம் குவியலாயிற்று. மேலதிக செல்வம் அந் நாடுகளின் கல்வி, அறிவியல், ஆராய்ச்சி என்பனவற்றின் வளர்ச் சிக்காக மென்மேலும் செலவிடப்பட்டது. ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் என்பன பெருமளவிலே திறக்கப்பட்டன. ஆனால், சமகாலத்திற் பின்தங்கிய நாடுகள் ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ் சுரண்டப்பட்டன. மக்களும் பெரியளவிற் கல்வி யில் ஆர்வத்தினையும் அக்கறையினையும் காட்டாதிருந்தனர். இதற்கு, அந்நாடுகளில் நிலவிய பிற்போக்கான சமூக,பண்பாட்டுப்
பெறுமானங்களும், வாழ்க்கைமுறையுமே காரணங்களாகும்.
வளர்ச்சியுற்ற நாடுகளின் இயற்கைச் சூழலும் அவர்களை மென்மேலும் உழைக்கத் தூண்டிற்று. வெப்பநாடுகளில் வாழ்க் கைத் தேவைகள் குறைவு. எளிமையான சிறியவிடுகளில் குறைந்த பட்சத் தேவைகளுடன் வாழ்ந்துவிட முடியும். ஆனால் இன்று வளர்ச்சி அடைந்துள்ள இடைவெப்ப காலநிலையினைக்கொண்ட
H 23

Page 76
இன்றைய மலையகம்
ஐரோப்பிய நாடுகளில், மனிதன் சாதாரணமாக வளர்வதற் கும் பல்வேறு தேவைகள் உள்ளன. வீடுகளுக்கு எப்போதும் வெப்பம் ஏற்றப்படல் வேண்டும். எப்போதும் வெப்பம் தரும் மேலதிக ஆடைகளை அணிந்திருந்தல் வேண்டும். குளிரைத் தாங்கிக்கொள்ளக்கூடிய கொழுப்பு உணவுகளை உண்ணவேண்டும். எனவே, அவர்களுக்கு இயற்கையாகவே கடின உழைப்பு குக்க வேண்டியது மிகமிக அவசியம். ஆனால் இலங்கை, தியா, பர்மா போன்ற நாடுகளில் மரத்திற்கடியில்கூட மனிதன் வாழ்ந்து விடக்கூடிய காலநிலை காணப்படுகின்றது. எளிமையான பருத்தி ஆடைகளும், எளிமையான உணவுவகைகளும் போதுமானவை. எனவே, அவர்களும் கூடிய வாழ்க்கைத்தரத் திற்காக இயற்கையால் வற்புறுத்தப்படாததால், பெரும்பாலா னோர் இலகுவாக வாழ்ந்து வருகின்றனர். இதனால் மக்கள் பெருகி, மூலவளங்களுக்குப் போட்டியிட ஆரம்பிக்கவே, எளிமையான சில தேவைகளுக்கும் இன்று பற்றாக்குறை ஏற்பட்டு, இப்போது வறுமைச்சிக்கலில் மாட்டித் தவிக்கின்றனர். இதற்குச் சாதகமாக இந்நாடுகளிற் கல்வி, தொழில்நுட்ப வளர்ச்சி என்பன போதியளவில் ஏற்படவில்லை.
இலங்கையில் எழுத்தறிவு வீதம் 85% என்ற ஒரு புள்ளிவிபரத் தினை வைத்துக்கொண்டு, நம்மை நாமே நீண்டகாலமாக ஏமாற்றிக் கொள்ளும் ஒரு தெளிவற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. எழுத் தறிவு என்பது ஏதோ ஒரு மொழியில் எழுத வாசிக்க மட்டும் தெரிந்த ஒரு நிலை, கல்வியறிவு என்பது, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நெறியினைப் பின்பற்றிச் சான்றிதழ் பெற்ற ஒரு நிலையாகும். அறிவு வளர்ச்சி என்பது, பிரச்சினைகளைப் பல்வேறு கோணங் களில் இருந்து நோக்கக்கூடிய ஓர் அறிவு வளர்ச்சிநிலை,கல்வி வளர்ச்சியும், அறிவுவளர்ச்சியும் மிக்க ஒரு நிலையினை மக்கள் அடைதல், நவீன சமுதாயத்திற்கு அவசியமாகும். இத்தகைய நிலையினை எய்தியவர்கள் இன்று சமுகத்தில் முன்னணியில் இருக்கின்றனர். இவர்கள் ஒவ்வொரு சமூகத்திலும் ஒரு மிகச் சிறிய அளவினரேயாவர். ஒருசமுதாயம், அல்லது ஒரு நாடு முன்னேற வேண்டுமானால், அங்கே அனைவருக்குமாகக் குறைந்த பட்ச வாழ்க்கைத்தரம் பேணப்பட்டிருத்தல் வேண்டும். அடிப் படைத் தேவைகளான உணவு, உடை, வீடு, மருத்துவவசதி, போக்குவரத்துவசதி, கல்வி என்பனவும், இவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான தொழிலும் மிக அவசியம். அரசியல் சிக்கல் களும், முரண்பாடுகளும் நிறைந்த இக்கால கட்டத்தில், பாது காப்பு என்பதும் ஒரு தேவையாக இன்று வளர்ந்துள்ளது. எவ்
124

வளர்முக நாடுகளின்.
வாறாயினும், மேற்குறிப்பிட்ட அனைத்து அடிப்படைத் தேவை களும் எளிமையான அளவிலாவது ஒரு சமூகத்தின் அனைத்து அங்கத்தினரையும் சென்றடையாத பட்சத்தில், அச்சமூகம் வளர்ச்சியடைந்துள்ளது என்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத தாகும். ஓய்வு பெற்றவர்கள் ஊனமுற்றார் என்பவர்களைப் பராமரிப்பதும் ஒவ்வொரு சமூகத்தினதும் மனிதாபிமானமிக்க தார்மீகக் கடமையாகும்.
இத்தகைய பின்னணியில், வளர்ச்சியில் பின்நிற்கும் சமூகங்களைக்கொண்ட வளர்முகநாடுகளின் பிரச்சினைகளை இனங்காணவும், அவற்றுக்குரிய பரிகாரங்களைக் கண்டு, அவற் றைத் தீர்க்க வழிகோலவும் காலம் காலமாக - குறிப்பாக இரண் டாம் உலகப்போரின் பின்னர் ஜக்கிய நாடுகளின் சபை தனது பல்வேறு கிளை நிறுவனங்களின் மூலம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதில், கல்வியாண்டினைப் பிரகடனம் செய்து, இந் நாடுகளிடையே அவை பின்தங்கிய நிலைமைக்கு, அங்கு கல்வி, தொழில்நுட்பம் என்பன எந்தளவுக்குப் பின்நிற்கின்றன என் பதும், விருத்தியில் முன்னேறிவரும் நாடுகள் எவ்வாறு தமது மக்களைக் கல்வி, தொழில்நுட்பத் துறைகளில் முன்னேற்றிவருகின்றன என்பதும்பற்றிய நுணுக்கங்களை விளக்கியும் பிரசாரங்களை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கல்வியின் முக்கியத்துவம்யாது ஏன் மக் கள் கல்வியில் அக்கறை செலுத்தவேண்டும் என்பது போன்ற விளக்கங்கள் அத்தியாவசியமாகின்றன. முதலில், மனிதன் ஏனைய சீவராசிகளில் இருந்தும் வேறுபட்டவனாக விளங்குவது அவனிடம் உள்ள சிந்தனா சக்தியினாலேயேயாகும். எல்லாவுயிர் களுக்கும் மூளை என்னும் பெளதீக உறுப்பு உள்ளது. ஆனால், மனிதனுக்கே தனது மூளையினை விருத்திசெய்துகொள்ளும் வாய்ப்பு இன்று விருத்தி பெற்று உள்ளது. இவ்விருத்திக்குக் கல்விப் பயிற்சியே சிறந்த மார்க்கமாகும். எனவே, கல்வி தேவை யாகின்றது. இரண்டாவது, இன்றைய சமூகத்தில் அதிகாரத் தினைப் பெற்றுக்கொள்வதற்கும் கல்வி பயனுடையது. புராதன காலத்தில் புஜபலம் மிக்கவனே சமூகத்தில் தலைமையினை ஏற்று அதிகாரமிக்கவனாக விளங்கினான். ஆனால், பின்னர் மானிய முறைச் சமுதாயத்தில், நிலவுரிமை உடையோரே செல்வாக்கும், அதிகாரமும் படைத்தவர்களாயிருந்தனர். நவீனகாலத்தின் ஆரம்பத்தில், பணப் பொருளாதாரத்தின் செல்வாக்குக் காரண மாகச் செல்வமிக்கவர்கள் சமுகத்தில் செல்வாக்கினையும்,
H 25

Page 77
இன்றைய மலையகம்
அதிகாரத்தினையும் பெற்றிருந்தனர். ஆனால், இந்நூற்றாண்டின் பின்னரைப் பகுதியுடன் அறிவாளிகளே அரசாங்கங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில்துறைகள் என்பவனவற்றின் வெற்றி கரமான செயற்பாட்டிற்குக் காரணமாயுள்ளனர். ஆலோசகர் களாக, நிருவாகிகளாக, திட்டமிடுபவர்களாக, செயல்படும் அதிகாரிகளாக யாவற்றையும் கட்டுப்படுத்திச் செயல்படுத் துவதன் மூலம் அதிகாரத்தைப் பெற்றுள்ளனர். எனவே, அறிவே இன்று அதிகாரத்தை வழங்கும் சக்தியாக உள்ளது. கற்றதன் மூலம் பொருளாதார வாய்ப்பினையும் பெற்றுக்கொள்ள முடியும். கல்வி பெற்றவர்களுக்கும், வருமான அதிகரிப்பிற்கும் இடையே கூடிய தொடர்பு இருப்பதாக உலகெங்கும் செய்யப் பட்டுள்ள ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே, கல்வியின் தேவை தவிர்க்க முடியாததென்றாகும். கல்வியில் இன்றுவளர்ச்சி பெற்றுள்ளவையும், உலகின் 12 சதவீதமான மக்களை மாத் திரமே கொண்டுள்ளவையுமான ஐக்கிய அமெரிக்கா, யப்பான், மேற்கு ஜேர்மனி, பிரான்சு, இத்தாலி, பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகள் உலகின்மொத்த வருடாந்த உற்பத்தி வருமானத் தில் 50 வீதத்திற்கு மேலான அளவினைப் பெற்றுள்ளன. இவற்றை நாம் கவனத்திற்கொள்ளுதல் அவசியமாகும்.
இந்நிலையில், இலங்கையில் வாழும் மலையக மக்களின் கல்விநிலை எவ்வாறு இருக்கின்றது என்ற வினா, நமது சொந்த பிரச்சினை சார்ந்த ஒன்றாகும். மலையக மக்கள் என்பவர்கள் யார்? இவர்கள் கடந்த 160 வருடக் காலப்பகுதியிலே தமிழ்நாட் டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இலங்கைக்கு வந்த வர்களின் வம்சாவழியினராவர். பெரும்பாலும் பெருந்தோட் டங்களிலேயே இப்போது வாழ்கின்றனர்.
இவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 11 இலட்சம் ஆகும். இலங்கையின் இன்றைய மொத்த மக்கள் தொகை 16.5 மில்லியனாகும். மலையகத் தமிழ் மக்களின் பங்கு இதில் ஏறத்தாழ 7 வீதமாகும். இந்த 11 இலட்சம் மக்களில் பெரும்பாலானோர் பெருந்தோட்டத் தொழிலாளர்களாகவே தொழில் புரிந்தாலும், வடக்கு கிழக்கு மாகாணக் கிராமங்களிலும், மற்றும், கொழும்பு, கண்டி, பதுளை, அட்டன், நுவரெலியா, இரத் தினபுரி, கம்பளை, அவிசாவளை, எட்டியாந்தோட்டை, மாத் தளை மஸ்கெலியா, தலவாக்கொல்லை, பூண்டுலோயா, களுத் துறை, காலி, பண்டாரவளை, கேகாலை, தெல்தெனிய, வத்துகாமம், கம்பளை, நாவலப்பிட்டி ஆகிய நகரங்களிலும் வாழ்
26

வளர்முக நாடுகளின்.
கின்றனர். 1981 ஆம் ஆண்டில் ஏறத்தாழ 55,000 பேர் இத் தகைய நகரங்களில் வாழ்ந்தனர். நகரங்களில் வாழ்வோரிற் பெரும்பாலானோர் வியாபாரிகளாகவும், அவர்களுக்கு ஊழியம் புரிபவர்களாகவும் இருக்கின்றனர்.
இவர்களுடைய கல்வித் தகைமைகள், கல்வி வளர்ச்சி என்பன பற்றி நோக்கும் போது, அவர்கள் மிகவும் பின்தங் கியவர்களாகக் காணப்படுகின்றனர். இதனை, அவர்கள் கல்வித் தகைமைகளுடன் ஆற்றக்கூடிய தொழில்களில் ஈடுபட்டுள்ள நிலைமைகளுடன் ஒப்பிட்டு பார்ப்பதன் மூலம் விளங்கிக்கொள்ளலாம். இன்று இலங்கையின் பொதுத்துறை சார்ந்த தொழில் களில், கல்வித் தகைமைகளின் அடிப்படையில் தொழில்புரியும் ஏறத்தாழ 500,000 பேரில் மலையகத்தவர்கள் 2,000 பேர் கூட இல்லை. ஆசிரியர்களாக ஏறத்தாழ 150,000 பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் 3000 பேரும் மலையகத்தவர்கள் இல்லை. பல் கலைக் கழகத்தில் 30,000 மாணவர்கள் உயர்கல்விக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் 200 பேர்கூட மலையக இளைஞர் கள் இல்லை. பல்கலைக்கழக மட்டத்தில் 2050 விரிவுரையாளர் களும், பேராசிரியர்களும் பணிபுரிகின்றனர். இதில்20 பேர் மட்டிலேயே காணப்படுகின்றனர். இலங்கை நிருவாக சேவையில் 1500 பேர் பணிபுரிகின்றனர். இதில் மூன்று பேரே மலையகத் தவர்கள். இத்தகைய சில புள்ளி விபரங்கள் 1980 ஆம் ஆண்டில் இலங்கையில் மலையக மக்களின் கல்விச் சாதனைகளை எமக்கு விளக்குகின்றன. மிக அண்மைக்காலத்தில், மலையகத் தலைவரது முயற்சியால், கல்வி வளர்ச்சிக்குச் சில பணிகள் ஆற்றப்பட் டுள்ளன. மலையகப் பாடசாலைகளில் சீர்த்திருத்தங்கள் சிறியளவில் ஒற்பட்டுள்ளன. 150 வருடங்களாக நசுக்கப்பட்டிருந்த οιρά ஏற்றுக் கொள்ளக் கூடிய தகுதிக்கு வளர்த்தெடுப்பது šo பகீரதப் பிரயத்தனமே யாகும்.
இறுதியாக, இக்கட்டுரையின் நோக்கத்திற்கு ஓரளவில் அப்பாற்பட்ட ஆனால் முக்கியமான ஒரு கருத்தினைக் கூறி இக் கடுரையை முடிக்கலாம் என எண்ணுகிறேன். மாணவர்கள் னப் படிக்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான கேள்வி. இத்னைத்தான் படிக்கலாம், இதுதான் சிறந்த கற்கை நெறி என் றெல்லாம் ஒன்றுமே இல்லை. நம்மில் சிலர் குறிப்பாக தமிழ் மக் களை வாட்டும் ஒரு "கல்வி நோயால்” பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது படித்தால் வைத்தியர், பொறியியலாளர், கணக்காளர் போன்ற படிப்பை மாத்திரமே படிக்கவேண்டும். இல்லாவிட்
127

Page 78
இன்றைய மலையகம்
டால் படிக்காமல் வியாபாரிகளாக மாறிவிட வேண்டும் என்ற எண்ணத்தினால் ஏற்படும் நோய்.
ஒரு சமூகம் இயங்கப் பல்வேறு தொழில்களும் செயற் பட வேண்டும் என்பது மிக மிக அவசியம். இதனைத்தான் இந்து சமயத்தின் வேதங்களில் ஒன்றான இருக்கு வேதம் கூறுகின்றது. பிரம்மாவின் உடலின் நாவிலிருந்து பிராமணர்களும், புஜங் களில் இருந்து சத்திரியர்களும், பாதங்களில் இருந்து சூத் திரர்களும் படைக்கப்பட்டதாகவும், அதேபோல் ஏனைய வகுப் பினர் ஏனைய பாகங்களிலிருந்து படைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதன் தத்துவம் நாவிலிருந்து தலையிலிருந்து படைக்கப்பட்டவர்கள் உயர்ந்தவர் என்பது அல்ல. உண்மைத் தத்துவம் ஓர் உடல் இயங்கத் தலை, புஜம், கால் போன்ற பல உறுப்புக்களும் எவ்வாறு அவசியமோ அதேபோல் ஒரு சமூகத் தின் இயக்கத்திற்கும் அனைத்து வகுப்பினரும் அவசியம் என்ற கருத்து வற்புறுத்தப்படுகிறது.
ஆனால் இன்று சில தொழில்களைப் புரியும் வகுப்பினர் குறைந்த வருவாயினையும், குறைந்த வாழ்க்கைத் தரத்தினையும் கொண்டிருப்பதனால் அவர்கள் சமூகத்தில் குறைந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். இவற்றிற்கெல்லாம் காரணம் அவர்களது கல்வியறிவின்மையே. கல்வி வளர்ச்சியே விமோசனத்தினை அளிக்கக் கூடியது. வளர்ச்சியடைந்த நாடுகளில் அனைவரும் கல்வி கற்று பின்னர் எந்தத் தொழிலை புரிந்தாலும் அங்கே வாழ்க் கைக்குப் போதிய வருவாயினையும் பெறலாம் என்ற நிலை காணப்படுகின்றது. எத்தொழிலைச் செய்கிறார் என்பதனை விட, அதனை எப்படிச் செய்கிறார் என்பதே அங்கே முக்கியம். வியாபாரிகள் அனைவரும் செல்வந்தர்கள் அல்ல. மருத்துவர்கள் யாவரும் புகழ்பெற்ற மருத்துவர்கள் அல்ல. எனவே ஒருவர் தனக்கு எதில் ஆர்வம் உண்டு என்பதனையும், தாம் கல்வியைத் தொடரத் தம் சூழலில் எத்துறையில் போதிய வசதிகளைக் கொண்டுள்ளார் என்பதனையும், நன்கு உணர்ந்து, அதன் அடிப் படையில் கற்கை நெறியைப் பின்பற்றிக் கற்பதன் மூலமே அத் துறையில் நிபுணராகலாம். அதே போலத்தான் தொழிலும், ஒருவர் தமக்கு ஆர்வமும், தகுதியும் உடைய தொழிலைச் செய் வதன் மூலமே தமக்கும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனுள்ள வகையில் பணியாற்ற முடிகிறது.
பேராசையின் அடிப்படையில் செல்வச் சேமிப்பை மாத் திரமே குறிக்கோளாகக் கொண்டு மேற்கொள்ளும் எந்த நட
128

வளர்முக நாடுகளின்.
வடிக்கையுமே இறுதியில் விரும்பத்தகாத பக்க விளைவையே ஏற்படுத்தும் என்பதிற் பகுத்தறிவுமிக்க சிந்தனையாளர்கள் மத்தி யில் எதுவித மாறுபட்ட கருத்துக்களும் இருக்க முடியாது என்பதே சரியான அபிப்பிராயமாகும்.
எனவே இன்றைய வளர்ச்சி பெற்ற நாடுகளை முன் மாதிரியாகக் கொண்டு, அவை எவ்வாறு எம்மைப் போன்று விவசாயச் சமூகங்களாகவே இருந்ந்து, பின்னர் கல்வி, தொழில் பயிற்சி, தொழில்நுட்ப வளர்ச்சி, போன்ற துறைகளில் இன்று பெரும் வளர்ச்சியுற்றுள்ளன என்பது பற்றி நாம் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்.
இவற்றின் அடிப்படையில், நமது வளர்ச்சிக்குக் கல்வி, பொருத்தமான தொழிற்பயிற்சி, தொழில்நுட்பத் துறைகள் என் பன வளர்க்கப்பட வேண்டும் என்பதனைப் பற்றியும், தெளிவாக ஆராய வேண்டும். ஆடம்பர மின்சார உபகரணங்களைப் பயன் படுத்துதல் நமக்கு தேவையற்ற ஆடம்பர வாழ்க்கை முறை களைப் பின்பற்றல் போன்றனவற்றில் வளர்ச்சியடைந்த நாடு களைப் பின்பற்றும் போலித்தனங்கள் அகற்றப்படல் வேண்டும். அந்நாடுகள் முன்னேற்றம் அடைந்ததற்கான காரண காரிய நடவடிக்கைகளை நமக்கேற்ற வகையில் உருவாக்குதலே அபி விருத்திக்கான வழி முறையாகும்.
_sశీa_
129

Page 79

மலையகக் கல்விப் ().
13. மலையகக் கல்விப் பிரச்சனைகள் 1
வானொலிப்பேட்டி (நவம்பர் 1989)
கேள்வி: மலையக இளைஞர்களின் முன்னேற்றமின்மைக்கு, அவர்கள் கல்வியில் பின் தங்கியிருப்பது பிரதான காரணமாகக் கூறப்படுகின்றது. இது பற்றி உங்கள் கருத்து என்ன என்று கூறுவீர்களா?
பதில்: மலையக இளைஞர்கள் கல்வியில் பின்தங்கி இருக்கின் றனர் என்ற கருத்திற்கு எதுவித மறுப்பும் என்னால் மாத்திரம் அல்ல, எவராலுமே கூற முடியாது. ஆனாலும், கல்வியில் பின் தங்கியிருப்பதற்கான காரணத்தினைப் பற்றித்தான் நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். மலையக மக்கள் கல்வியில் பின் தங்கியமைக்கு நாம் இரண்டு பிரதான காரணங்களைச் சுட்டிக் காட்டலாம். ஒன்று, இவர்கள் பிரதானமாகத் தோட்டத் தொழிலாளர் களின் பிள்ளைகளாக இருந்தவர்கள். இவர்கள் கல்வி கற்று ஏனைய தொழில்களுக்குச் சென்றுவிட்டால் தோட்டங்களில் தொழில்புரியத் தேவையான தொழிலாளருக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற தோட்ட நிருவாகத்தின் கவலை காரணமாக மலையக இளைஞர்கள் கல்வியில் முன்னேறுவது ஊக்குவிக்கப் படவில்லை. இரண்டாவது, சுதந்திரத்தின் பின் இலங்கையில் ஏற் பட்ட குடியுரிமை இரத்துக் காரணமாகக் கல்வி கற்ற இளைஞர் களுக்கு உத்தியோக வாய்ப்புகள் கட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தமையால், அவர்கள் கல்வித் துறையில ஊக்குவிக்கப்
131

Page 80
இன்றைய மலையகம்
படாது, அத்துறையிலே பின்தங்கி விட்டனர். ஆனால், இந்த இரண்டு நிலைகளுமே இன்று மாறிவிட்டன. எனவே, இனிமேல் கல்வியில் மலையக இளைஞர்கள் ஆர்வம் செலுத்த வேண்டியது மிக அவசியமாகும்.
கேள்வி: நல்லது, மலையக இளைஞர்கள் கல்வியில் ஆர்வம் செலுத்த வேண்டிய இக்கால கட்டத்தில், அவர்கள் தமது கல்வி முறைகளைத் தெரிவதில் தெரிந்து கொள்ள வேண்டியன பற்றி ஏதும் கூற விரும்புகிறீர்களா?
பதில்: இதைப் பொறுத்தும் சில முக்கிய கருத்துக்கள் ஓரிரண் டினைக் கூறுவது பொருத்தமாயிருக்கும் என்று நான் நினைக் கிறேன். அதாவது, மலையக இளைஞர்களின் கல்விப் பயிற் சியானது, அவர்களுக்கு ஒர் எதிர்காலத்தை வழங்கும் திறன்மிக் கதாக இருக்க வேண்டும். ஆனால், அதற்கு அடிப்படையான அடிப்படைக் கல்வியும் திட்டவட்டமானதாக இருக்க வேண்டும். இன்றைய நிலையிற் பெயரிட்டுக் கூறுவதானால், இவர்கள் குறைந்தபட்சம் 12 ஆம் வகுப்பான கல்விப் பொதுத் தராதர உயர்நிலை பரீட்சையாவது சித்தி எய்தியிருத்தல் மிக அவசியமாகும்.
இதன் அடிப்படையில், பின்னர் ஏதாவது தொழில் பயிற்சி யினைக் கற்றுக் கொள்வது, அவர்களுக்குச் சிறந்த வாழ்க் கையை அமைத்துக்கொள்ள வாய்ப்பாயிருக்கும்.
இதற்கு அடிப்படைக் கல்வி ஏன் தேவை என்பது பற்றியும் சிறிது விளக்கமாகக் கூறினால் நல்லது என நினைக்கின்றேன். 5ஆம் வகுப்பின் பின்னர் ஏதாவது இயந்திரங்களைப் பழுது பார்த்தல், தச்சு வேலை, வாகனங்கள், வானொலி, தொலைக் காட்சி, குளிர்சாதனங்கள் போன்றவற்றைப் பழுதுபார்க்கவும் பயிற்சி பெறலாம். இத்தகையவர்கள் எதிர்காலத்தில் அத் தொழிலில் பெறக்கூடிய அனுபவத்தின் பின் விசேடத்துவப் பயிற்சிகளுக்குச் செல்லுவது தடைய்ாக இருக்கும். எனவே, அவர்களுடைய மேலதிக முன்னேற்றம் தடைப்படுகிறது. எனவே, இவர்களது எதிர்கால வளர்ச்சி ஓர் எல்லைக்குள் நின்றுவிடும். ஆனால், அடிப்படைக் கல்வி ஒழுங்காக அமைந்தால், அவரவர் திறமைக்கு ஏற்ப மேன்மேலும் தமது தொழிலில் சிறப்புற்றுப் பிரகாசிக்கப்பெரும் வாய்ப்புகளுண்டு. எனவே, அடிப்படைக் கல்வியைப் பெற்றுக் கொண்டு, அதன் பின்னரே அவர்கள் ஏதாவது தொழிற் கல்வியினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றே கூற விரும்புகிறேன்.
32

மலையகக் கல்விப் ().
கேள்வி: மலையக இளைஞர்கள் இவ்வாறு தொழிற் கல்வி யினைப் பெற்றுக்கொள்ள இப்போது எத்தகைய வாய்ப்புகள் உண்டெனக் கூறுவீர்களா?
பதில்: கேள்வி பொருத்தமானதானாலும், பதில் கூறுவது சிறிது சிரமமாக இருக்கும் என்றே நினைக்கிறேன். இலங்கையிலே தொழிற்கல்விப் பயிற்சிக்காக அரசாங்கம் 1986 ஆம் ஆண்டளவில் 27 தொழிற் பயிற்சிக்கல்லூரிகளை நிறுவியிருந்தது. அதில் சுமார் 20,000 இளைஞர்கள் கல்வி பயின்றனர். இன்றைய இன ரீதியான விகிதாசார ஒதுக்கீடுகளின் படி, அதிற் குறைந்தது 1000 இளைஞர்களாவது மலையக இளைஞர்களாக இருந் திருக்க வேண்டும். ஆனால், அதில் 100 பேராவது அவ்வாறு இருந்திருப்பார்கள் என்பதே சந்தேகமாக இருக்கிறது.
காரணம், வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளில் இந்த ஆண்டின் (1990) ஆரம்பம் வரை தமிழ் மொழி மூலம் தொழில் பயிற்சி நெறிகள் நடத்தப்படவில்லை. இப்போது அரசாங்கம், நுவரெலியா, கண்டி, கொழும்பு ஆகிய நகரங்களிலே தமிழ் மொழி மூலம் இப்பயிற்சிகளை வழங்க முன் வந்திருக்கிறது. கொட்டகலையில் இப்போது கல்விக் கல்லூரி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் நமது இளைஞர்கள் விரும்பினால், குறைந்தது 300 பேர் இடம் பெறலாம். இவற்றில் சென்று தொழிற் பயிற்சி பெற நமது இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.
இதைத் தவிர, கொட்டகலையில் உள்ள காங்கிரஸ் தொழில் நிறுவனம், சில பயிற்சி நெறிகளை வழங்கி வருகின்றது. வாகனம் பழுது பார்த்தல், வெல்டிங் எனப்படும் உலோகங்களை உருக்கி ஒட்டும் வேலைகள், மின்சாரப் பொருத்துநர் பயிற்சி, நெசவு, தச்சு, கட்டிட வேலை என்பனவற்றிற்கு இளைஞர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றனர். ஆனால், இங்கே மிகக் குறைந் தளவினரே பயிற்றுவிக்கப்படுகின்றனர். தொழிலாளர்களின் பிள்ளைகளுக்குச் சலுகை இங்கே தரப்படுகின்றது. இத்தகைய வாய்ப்புக்களையும் கூட நமது இளைஞர்கள் சிறந்த முறையிற் பயன்படுத்திக் கொள்வதாகத் தெரியவில்லை.
கேள்வி: மலையக இளைஞர்கள் தொழில் கல்வி பயிற்சியில் ஊக்குவிக்கப்பட, இன்றைய தேவைகள் என்ன என்று கூறுவீர்களா?
பதில்: இதில் 3 முக்கிய அம்சங்கள் முக்கியமானவை.
33

Page 81
இன்றைய மலையகம்
1. இளைஞர்கள் தாம் எந்தத்துறையிற் கூடிய ஆர்வம் கொண்டுள்ளனர் என்பதனை இனங் காண வேண்டும்.
2. அத்தகைய ஆர்வமான துறையுடன் தொடர்புடைய பயிற்சிகள் எங்கே வழங்கப்படுகின்றன என்பதனை அறிந்து கொள்ளுதல் வேண்டும்.
3. அத்தகைய பயிற்சி நெறிகளைப் பின்பற்றத் தேவை யான அடிப்படைக் கல்வியின் அவசியத்தை நன்கு அறிந்து, அத்தகுதிகளை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
இதற்கு இளைஞர்கள், தமது ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோருடன் கலந்துரையாடி, தமக்குச் சந்தேகமானவற்றைக் கேட்டுத் தீர்த்துக்கொள்ளுதல் வேண்டும். அதற்கு ஏற்றவகையில், பெற்றோரும், ஆசிரியர்களும் இவ்விளைஞர்களின் எதிர்காலக் கல்வி, தொழிற் கல்விகளைப் பொறுத்து, அக்கறையுடன் வழி நடத்துவதிற் போதிய ஆர்வமும் காட்ட வேண்டும்.
கேள்வி: நமது இளைஞர்களின் பெற்றோர் பெருமளவுக்கு கல்வி அறிவற்றவர்கள். இந்த நிலையில் அவர்கள் எப்படித் தமது பிள்ளைகளுக்கு இந்த நுணுக்கமான விஷயங்களில் வழி காட்ட முடியும் என நம்புகிறீர்கள்? பதில்: இது ஒரு வகையில் சிக்கலான பிரச்சினை என்றாலும், முற்றாகத் தீர்க்க முடியாததல்ல. பெற்றோர்கள் கல்வியறிவற்ற வர்களாக இருப்பதனை விட, தமது பிள்ளைகளின் கல்வியில் ஆர்வமில்லாதிருப்பதுதான் பெரும் பிரச்சினை. ஆர்வம் இருக்கு மானால், ஆசிரியர்கள், மற்றும் படித்தவர்களுடன் தமது பிள்ளைகள் பற்றிக் கலந்தாலோசித்து, வழி காட்டல்களைப் பெற்றுக்கொள்வது பெரும் பிரச்சினையல்ல என நாம் திடமாக நம்பலாம். கேள்வி: நல்லது, தொழிற் கல்வியின் முக்கியத்துவம் பற்றிப்பல கருத்துக்களைக் கூறினீர்கள். மலையக இளைஞர்களிற் பெரும் பாலானோர், ஏன் பள்ளிப் படிப்பை இளமையிலே நிறுத்திக் கொள்கின்றனர்?
பதில்: இது மலையக இளைஞர்களின் கல்வியைப் பொறுத்த மட்டில் மிக மிக்கியமான பிரச்சினை என்பதனை நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இதற்குப் பல காரணங்கள் கூறப் படுகின்றன. அவற்றுட் பிரதானமானவை;
1. பெற்றோர்களின் வறுமை.
134

மலையகக் கல்விப் ().
2. பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்வியில் அக்கறையின்மை. இதற்குக் கல்வி பற்றிய அறியாமையும் காரணமாகும். 3. மாணவர்கள் 5 வருடக் கல்வியினைத் தோட்டப் பாடசாலையில் முடித்ததும், கல்வியைத் தொடரக்கூடிய வகையில் பெரிய பாடசாலைகள் போதியளவில் இல்லாமை. 4. தோட்டப்பாடசாலைகளிற் போதிய வசதிகள், அதாவது பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் இல்லாமை போன்ற குறைபாடுகள். 5. பிள்ளைகளும் தொழிலுக்கு வந்துவிட்டாற் குடும்பத்தின் வருமானத்தைக் கூட்டலாம் என்ற பெற்றோரின் நம்பிக்கை. 6. படிக்கக்கூடிய இளைஞர்கள் சிலரும் கூட, நகர்ப் புறங் களுக்குச் சென்று வரும் ஏனைய இளைஞர்களால், கல்வித் தகுதியின்றியே வியாபாரத் துறையிற் கூடிய வருமானம் பெறலாம் எனக் கூறப்படும் தவறான கவர்ச்சிமிக்க கருத்துக்களின் செல்வாக்கு. 7. தற்போது குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் உடலுழைப்புத் தொழில்களுக்கும் கூடிய வருவாய் கிடைக்கும் வாய்ப்புகள். 8. பெண்கள் பெருமளவாகப் பணிப்பெண்களாக
வெளிநாடுகளுக்குச் செல்லக் கிடைத்த வாய்ப்புக்கள்.
இவை போன்ற பல காரணங்களின் ஒன்றிணைந்த விளைவுகள் தான் இன்றைய மலையக இளைஞர்களைப் பாடசாலை மட்டத்திலேயே கல்வியைக் கைவிடத் தூண்டு கின்றன.
கேள்வி: இறுதியாக மலையக இளைஞர்களின் எதிர் காலத்திற்குக் கல்வி பற்றி ஏதும் கூற விரும்புகிறீர்களா?
பதில்: மலையக மக்கள் நீண்டகாலமாகப் பல்வேறு காரணங் களினாலும் நசுக்கப்பட்ட ஒரு சமூகக்குழு, இவர்கள் இதனாற் பெரிதும் பலவீனமடைந்துள்ளனர். மிக அண்மையிலேதான் குடியுரிமை கிடைத்துள்ளது. இதனைப் பயன்படுத்தி, தம்மை உயர்த்திக்கொள்ள இவர்கள் சில யதார்த்தங்களை விளங்கிக் கொள்ள வேண்டும். அதில் மிக முக்கியமானது முன்னேற்றத்திற்குக் குறுக்கு வழி இல்லை என்ற கருத்தை முழுமையாக விளங்கிக் கொள்வதாகும்.
35

Page 82
இன்றைய மலையகம்
மக்கள் தம்மையும், தமது பலவீனங்களையும் உணர்ந்து, தாம் பலமடைய ஒரே வழி தம்மை - அதாவது இச்சமூகத்தின் மக்கள் தாம் மனித வளமாக மாற்றப்பட வேண்டும் என்ற கருத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும். உடலுழைப்புக் குறைவானதல்ல. ஆனால், அதனால் நம் நாட்டிற் கிடைக்கும் வருவாய் குறைவு. எனவே, அவர்கள் தம்மைத் தொழிற் பயிற்சி மிக்கவர்களாக்கி, பயனுள்ள மனித வளமாக மாற்றிக்கொள்ள வேண்டும். இது அடிப்படைக்கல்வியுடன் இணைந்ததாக வளர வேண்டும். கல்வியில் முன்னேறிய சமூகங்களின் பலம் நாம் அறியாததல்ல. எனவே, மலையக மக்கள் கல்வியில் இனி மேலாவது ஆர்வத்தினைக் காட்டி, நூற்றாண்டு காலமாக அடிமைகளாக இருந்த நிலையினை, அடுத்து வரும் ஓரிரண்டு தலைமுறைகளிலாவது அறுத்தெறிய முயற்சிக்க வேண்டும்.
_sశీe_
136

மலையகக் கல்விப் (I}.
14. மலையகக் கல்விப்
பிரச்சினைகள் -II *
வானொலிப் பேட்டி (பெப்ரவரி 1991)
கேள்வி: மலையகப் பாடசாலைகளின் இன்றைய நிலைபற்றி விளக்குவீர்களா?
பதில்: தோட்டப்புறப் பாடசாலைகள் மிக அண்மைக்காலம் வரை தோட்ட நிர்வாகத்தினாலேயே பராமரிக்கப்பட்டு வந்தன. பெற்றோர்கள் வேலைக்குச் சென்ற நேரத்தில் சிறு குழந்தை களைப் பார்த்துக்கொள்ளும் குழந்தைகளின் அறைகளாகவும், சிறு குழந்தைகள் விளையாடும் போது தேயிலைச் செடி களைப் பழுதாக்கிவிடாமல் இருப்பதனைத் தடைசெய்யும் வகையில் குழந்தைகளைக் காவல்காக்கும் இடமாகவுமே தோட்ட நிர்வாகங்கள் பாடசாலைகளைக் கருதி வந்தன. எனவே பெரும்பாலும் தோட்டப்பாடசாலைகள் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் ஓர் இடமாக இருந்தனவே ஒழிய, ஒரு பாடசாலைக்குரிய தகுதிகளைக் கொண்டிருக்கவில்லை. அரசாங்கம் சுமார் 750 பாடசாலைகளைப் பொறுப்பேற்றாலும், இன்னும் பல குறைபாடுகள் அவற்றிற் காணப்படுகின்றன. முக்கிய மான குறைபாடுகள் சில இருக்கின்றன. ஒரே அறையிற் பல
1991 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத் தாபனம் ஒலிபரப்பிய குன்றின் குரல் நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டி,
137

Page 83
இன்றைய மலையகம்
வகுப்புகளுக்கு ஒர் ஆசிரியர் மாத்திரமே காணப்படுகிறார். ஆசிரியர்களில் பெரும்பாலானோர் கல்வித் தகுதி போதியளவில் இல்லாதவர்கள். ஆசிரியர் தொழிலுக்குரிய பயிற்சியும் இல்லாதவர்கள். நாட்டின் ஏனைய பாடசாலைகளில் 25 மாணவர் களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை இருக்கிறது. ஆனால், தோட்டப் புறப் பாடசாலைகளில் அது 64 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற நிலையே காணப்படுகின்றது. இதுபோன்று பல் வேறு அடிப்படை வசதிகள் இல்லாதே தோட்டப்புறப் பாட சலைகள் காணப்படுகின்றன.
கேள்வி: அண்மைக் காலங்களிலே தோட்டப்பாடசாலைகளுக்கு என ஆசிரியர்கள் நியமக்கப்பட்டார்களே, அதுபற்றிச் சிறிது விளக்கிடுவீர்களா?
பதில்: 1983 ஆம் ஆண்டு 394 ஆசிரியர்களும், 1985 ஆம் ஆண்டு 744, ஆசிரியர்களும், 1988 ஆம் ஆண்டு 1000 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். இதிற் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. அரசாங்கப் பாடசாலைகளாதலால், முதலிற் தோட்டப் பாட சாலைகளில் நியமக்கப்பட்டவர்கள், பின்னர் பயிற்சி பெற்றதும், ஏனைய பகுதிகளுக்குச் சென்று விடுகின்றனர். இதனால், தோட்டப் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்ந்தும் நிலவி வருகின்றது.
கேள்வி: இப்பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லையா?
பதில்: அப்படிக் கூறமுடியாது. அரசாங்கம் இப்பிரச்சினை ஏற்படக் கூடாது என்பதற்காகத் தான் தோட்டப்பகுதிகளில் இருந்து ஆசிரியர்களை நியமிக்க விரும்புகிறது. ஆனால் சட்டப் பலவீனங்களால் அது முற்று முழுதாக நடைமுறைப்படுத்தப் படுவதில்லை. எனவே, இப்பிரச்சனை தீர்க்கப்படுவதிற் கஷ்டங்கள் ஏற்படுகின்றன. கேள்வி: தோட்டப்பகுதிகளில் உள்ளவர்களை நியமிப்பதால் இப்பிரச்சினை தீர்ந்துவிடுமா? பதில்: முற்று முழுதாகத் தீர்ந்துவிடும் எனக் கூறமுடியாது. ஆனால், பெருமளவுக்குச் சாதகமான நிலை உருவாகலாம் என நம்ப இடமுண்டு. தோட்டப்புறப் பாடசாலை பற்றி ஆராய்ந்த ஒரு கல்வி ஆணைக்குழு தோட்டப்புற பாடசாலை ஆசிரியர் களுக்குத் தாம் பணி புரியும் பகுதிகளில் எதுவித மானசீகமான
138

மலையகக் கல்விப் ().
ஈடுபாடும் இல்லை என்பதனையும், அதற்கு அவர்கள் தோட்டப் புறத்தைச் சார்ந்தவர்கள் அல்ல என்ற காரணத்தையும் கூறியுள்ளது. எனவே, அவ்வப்பகுதிகளில் உள்ளவர்களை ஆசிரியர் களாக நியமிப்பதால் நன்மை ஏற்படலாம். கேள்வி: நகரப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் ஏனைய பகுதிகளிலிருந்து வருகிற ஆசிரியர்கள் காலம் காலமாக இருக் கிறார்களே, அப்படியிருக்க, தோட்டப்பகுதிகளில் மாத்திரம் ஏனைய பகுதிகளிலுள்ளவர்கள் ஏன் தொடர்ந்து இருப்பதில்லை? பதில்: நகரப்பகுதிகளில் பல்வேறு வாழ்க்கை வசதிகள் உள்ளன. தோட்டப்புறப் பகுதிகளில் ஒருசிலவற்றைத் தவிர, ஏனையன பல்வேறு வசதிகளைக் கொண்டிருப்பதில்லை. எனவே, பிற இடங்களில் இருந்து வருபவர்களை அவை கவருவதில்லை. ஆனால், அங்கேயே உள்ளவர்களைப் பொறுத்தமட்டில் நிலைமை வேறு. தமது சொந்த இடமாயிருப்பதால், பல வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடிவதோடு, அவர்கள் அங்கேயே இருப்பதனை ஊக்குவிக்கும் பல சூழ்நிலைகள் உள்ளன. தவிர, எனது ஊர், எனது உற்றார் உறவினர், சமூகம் என்ற உணர்வுகள் மேலோங்குவதுடன், எதிர்காலத்தில் அச்சமூகம் அவர்களை அங்கீகரித்துச் சில சமூக அந்தஸ்துகளை வழங்கும் வாய்ப்புகளும் உள்ளன. எனவே, அவ்வப்பகுதிகளில் உள்ள வர்களுக்கு அது பொருத்தமாயிருக்கும். கேள்வி: தோட்டப்பாடசாலைகளில் இப்போதுள்ள குறை பாடுகள் எந்தவகையில் மலையக மாணவர்களின் கல்வியைப் பாதிக்கின்றது என்பது பற்றிச் சிறிது விளக்குவீர்களா?
பதில்: முதலாவது, அப்பாடசாலைகள் இளம் பிள்ளைகளைக் கவருவனவாக இல்லை. கூடிய வசதிகள் பிள்ளைகளைக் கவரலாம். அடுத்தது, பெற்றோருக்கும், பாடசாலைகளின் வசதியீனங்கள் காரணமாகக் கல்வியின் பயன் பற்றிய நம்பிக் கையை ஏற்படுத்துவதில்லை. இன்னொரு முக்கிய விஷயத் தையும் நாம் கவனிக்கவேண்டும். அதாவது, தோட்டப்பாட சாலைகள் பெரும்பாலும் 5 ஆம் வகுப்புவரையே படிப்பிக் கின்றன. அதனால், தோட்டப்புற மாணவர்களில் சுமார் 50 வீதமானோர் 5ம் வகுப்புவரை படித்து வருகின்றனர். அதற்கு மேல் வகுப்புகள் இல்லாததால், எஞ்சிய 50 வீதத்தில் 10 வீதம் தவிர்த்த 40 வீதமானோர் கல்வியை விட்டுவிடுகின்றனர். இதிலிருந்து, பாடசாலை வசதியிருந்தால் 10-12 வகுப்புகள் வரையிலும் படிப்பைத் தொடர்வார்கள் என நம்பலாம்.
139

Page 84
இன்றைய மலையகம்
கேள்வி: தோட்டப்பாடசாலைகளைத் தரமுயர்த்த இப்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்னவென்று கூறுவீர்களா?
பதில்: பாடசாலைக்குத் தேவையான கட்டிடங்கள், உபகரணங்கள், தளபாடங்கள் என்பன போதியளவிலே தேவை. கூடிய பாடசாலைகள், குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு வரையிலாவது செயற்பட வேண்டும். இப்பாடசாலைகள் கல்விப் பகுதி யினராலே தொடர்ந்தும் மேற்பார்வை செய்யப்பட வேண்டும். பிரதேசக் கல்வி அதிகாரி அலுவலகத்திலே தோட்டப்பாட சாலைக்குப் பொறுப்பாக அதிகாரிகள் நியமிக்கப்படல் வேண்டும். பாடத் திட்டங்கள் அடிக்கடி மேற்பார்வைக்கு உட்படுத்தப் படல் வேண்டும் போதிய தகுதிவாய்ந்த ஆசிரியர்களை அவ்வப் பகுதிகளில் இருந்தே நியமிக்கவேண்டும். தோட்ட நிர்வாகமும், பாடசாலை ஆசிரியர்களும் இணைந்து செயற்பட வேண்டும். யாவற்றையும் விட, பாடசாலைகள் கல்வியில் நம்பிக்கை ஊட்டுவனவாகவும், மாணவர்களைக் கவருவனவாகவும் அமைய வேண்டும். இறுதியானது, ஆனால் மிக முக்கியமானது என்னவென்றால், பெற்றோர்கள் தமது பிள்ளைகள் கல்வியில் முன்னேற வேண்டும் என்பதில் எதுவித கருத்து முரண்பாடும் இன்றிச் செயல்பட வேண்டியதாகும்.
_6ళీఖ_
140

மலையகக் கல்விப் (H)...
15. மலையகக் கல்விப் பிரச்சனைகள் - II
தொலைக்காட்சிப் பேட்டி (ஜூன் 1990)
கேள்வி: மலையக இளைஞர்கள் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாகக் கூறப்பட்டு வருகின்றதே, இக்கருத்துப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன என்பதனை விளக்குவீர்களா?
பதில்: இக்கருத்திற், பிழை ஏதும் இல்லை என்பதே எனது அபிப் பிராயம். மலையக இளைஞர்கள் என நாம் இங்கே கருத்தில் கொண்டிருப்பது, பெருந்தோட்டங்களில் குறிப்பாகத் தேயிலை, ரப்பர்த் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளேயாவர். அவர்களிற் சிலர் இப்போது நகர்ப்புறங்களுக்கும் இடம் பெயர்ந்திருக்கின்றார்கள். ஒரு லட்சம் பேர் வரையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் கல்வியிற் பின்தங்கியவர்களேயாவர். இலங்கைக்கு அவர்கள் விவசாயத் தொழிலாளர்களாகக் கொண்டுவரப்பட்டுத் தேயிலை, ரப்பர்த் தோட்டங்களில் குடியமர்த்தப்பட்டனர். அவ்வாறு வந்தவர்களிற் பெரும்பான்மையினர் கல்விப் பயிற்சி அற்றவர்கள் என்று கூறலாம். பின்னர் தோட்ட நிர்வாகமும் அவர்களைத் தொடர்ந்தும் அடங்கிய தொழிலாளர்களாகவே வைத்திருக்க வேண்டும் என்பதற்காக ஆகக்கூடியது 5 ஆம் வகுப்புக்கு மேல் படிக்கமுடியாத வகையில்தான் தோட்டங்களிற் பாடசாலை வசதிகளை ஏற்படுத்தியிருந்தனர். இதில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இலங்கை சுதந்திரமடைந்த பின்னரும் கூட, நாட்டின் ஏனைய மக்கள் அனுபவித்த இலவசக் கல்வியின்
41

Page 85
இன்றைய மலையகம்
பயன் எந்தவிதத்திலும் இந்த மக்களைச் சென்றடையவில்லை. தோட்டங்களிலிருந்து அண்மையில் உள்ள நகர்ப் புறங்களுக்குச் சென்று கல்வி பயிலப் பல்வேறு இடையூறுகள் காணப்பட்டன. இத்தகைய இடையூறுகளைத் தாண்டிக் கல்வி பயின்றவர்கள் மிகச் சிலரேயாவர். அரசாங்கம் இப்போது தோட்டப்பாட சாலைகளைத் தேசியமயமாக்கியுள்ளது. இதன் மூலம் தேவையான மாற்றங்கள் ஏற்பட்டு, நன்மைகள் ஏற்படக் கணிசமான காலம் செல்லும். இவற்றின் காரணமாக, பெருமளவினர் முதனிலைக் கல்வியினைப் போதியளவில் பெறாததால், இரண்டாந்தரக் கல்வியினைச் சென்றடைவதில்லை. உயர்நிலைக் கல்வியிலும் இவர்களின் கல்வி வளர்ச்சி மிக மிகக்குறைவாகவே உள்ளது. நுணுக்கமாகப் புள்ளிவிபரத் தெளிவுடன் கூறுவதனால், இலங்கையின் பல்கலைக் கழகங்களிற் கல்வி கற்பவர்கள் எண்ணிக்கை, அதன் மொத்த மக்கள் தொகையுடன் பார்க்கையில் மிகவும் குறைவாகவே காணப் படுகின்றது. 15 மில்லியன் மக்களுக்கு 19,000 பேர் பல்கலைக் கழகங்களில் கற்கிறார்கள். அதில் இலங்கையின் குடித் தொகையில் சுமார் 8 வீதமாக இருக்கும் இந்தச் சமூகத்தினைச் சார்ந்தவர்கள் 1 வீதம் கூட இல்லை. எனவே, இதிலிருந்து கல்வியில் இவர்கள் பின்தங்கியிருப்பது விளங்குகின்றது.
அதே வேளையில், பல்கலைக் கழகக் கல்வியில் மாத்திர மின்றி, 10-ம் வகுப்பு, 12ம் வகுப்புப் பரீட்சைகளிற் தகுதியுற் றோரும் மிகக் குறைவே. இதனை இத்தகைய தகுதிகளுடனான தொழில்களுக்கு இவர்களிடம் இருந்துவரும் விண்ணப்பங் களிலிருந்து அறிய முடிகிறது.
கேள்வி: இவ்வாறு மலையகத்திலே தோட்டப்பகுதிகளைச் சார்ந்தவர்கள் கல்வியில் பின்தங்கியமைக்குக் காரணங்கள் என்னவென்று கூறுவீர்களா?
பதில்: இதற்கான காரணங்கள் பல உள்ளன. தகவல்களை முழுமையாக்குவதற்காக, முதலாவது காரணத்தைக் கூறவேண்டும். அதாவது, ஆரம்பகாலங்களிற் பெருந் தோட்டநிர்வாகம் தொழிலாளர்களை அடங்கியவர்களாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காகக் கல்வி வசதிகளை அதற்கு ஏற்றவகையிலேயே வைத்திருந்தது. இதைப்பற்றி இன்று பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை. ஆனால், முக்கியமான காரணங்கள் சில உள்ளன. அரசாங்கம் போதியளவு பாடசாலைகளை அமைத்துப் போதிய வசதிகளை - அதாவது போதியளவிலான பயிற்றப்பட்ட
142

மலையகக் கல்விப் (!).
ஆசிரியர்கள், மற்றும் வசதிகளை - தோட்டப்புறங்களிலோ அல்லது இலகுவாக மாணவர்கள் சென்று பயிலக்கூடிய மையங் களிலோ அமைத்து, இளைஞர்களை ஊக்குவிக்கவேண்டும். இரண்டாவது, பெற்றோர்களின் பங்கு. இலவசக் கல்வி என் றாலும், ஓரளவாவது பெற்றோரும் பொருள் செலவிட வேண்டியதா யிருக்கிறது. இது தொழிலாளர்களுக்குத் தாங்க முடியாததா யிருந்தாலும், ஒரளவு தியாகம் செய்வதன் மூலம் இதனைச் சமாளிக்க முடியும். ஐந்தாம் வகுப்பிலும், பத்தாம் வகுப்பிலும் கல்வியைக் கைவிட்டு விடும் மலையகப் பிள்ளைகளின் அளவு ஏனைய சமூகங்களை விட மிக அதிகமாகும். இது பெற்றோரின் பொறுப்பாகும். நிதிப்பிரச்சினைக்கு ஒருசில நிதி வசதி ஏற் பாடுகள் உள்ளன. அவையும் முழுமையாகப் பயன்படுத்தப் படுவதில்லை. மூன்றாவது, மாணவர்களாகக் கல்வியின் நோக்கம், அதனை எவ்வாறு கற்கவேண்டும் என்பது பற்றிய விபரங் களைத் தெரிந்து, கல்வியில் அக்கறை செலுத்த வேண்டிய பிரச்சினை. இந்த மூன்று பிரச்சினைகளுமே சம முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள். எனவே, இந்த மூன்றும் தீர்க்கப்படாத வரை சமூகத்தின் கல்வி வளர்ச்சி கேள்விக்குறியாகவே தேங்கி நிற்கும்.
கேள்வி: பல்கலைக் கழக விரிவிரையாளராக நீங்கள் பெற்றுள்ள அனுபவத்தின் அடிப்படையில், இந்த இளைஞர்களுக்கு அவர்கள் எத்தகைய பாடநெறிகளைப் பின்பற்றினால், தொழில் வாய்ப்புக்களும், அதனால் சிறந்த எதிர்காலமும் கிடைக்கும் என்பதுபற்றி எதாவது கூற விரும்புகிறீர்களா?
பதில்: கல்வித்துறை நிபுணர்கள் இந்தக் கற்கை நெறியைத்தான் பின்பற்றவேண்டுமென்று கூறுவதில்லை. மாணவர்கள் தாம் வாழும் சூழல், குடும்பப் பின்னணி தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், ஆசிரியர்கள், நண்பர்கள் போன்ற பல்வேறு காரணிகளால் குறித்த கல்வித் துறையில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளு கிறார்கள். எனவே, அதனை இனங்கண்டு, குறித்த மாணவர்கள் எந்தத் துறையில் ஆர்வம் கொண்டுள்ளனரோ, அத்துறையில் அவர்களை ஈடுபாடு கொள்ளச் செய்யவேண்டும். அதனால் நிச்சயம் பலன் உண்டு. மருந்தில் இனிப்பைக் கலந்து உட்கொள்வது போன்றதுதான், கல்வியறிவை விரும்பிய துறையின் மூலம் பயிற்சி பெற்றுக்கொள்வது, பல்கலைக் கழகத்தில் கட்டாயப் பாடம், விரும்பிய பாடம் என்ற முறைகள்தான் உள்ளன. சிறந்த பாடம் என்று ஒன்று இல்லை. அவர்கள் விரும்பும் பாடத்தை ஆழமாகப் படித்துச் சிறந்த முறையில் சித்தியெய்தினால், அதுவே எதிர்காலச் சுபீட்சத்திற்கு வழிவகுக்கும்.
143

Page 86

மலையகம் - இன்றும்.
16. மலையகம் - இன்றும்
நாளையும் *
இலங்கையில் கடந்த வருடம் (1991) மே மாதம் நடைபெற்று முடிந்த உள்ளூர் ஆட்சி அதிகார சபைத் தேர்தல் களின் முடிவுகளையும், அதன் விளைவுகளையும் பற்றிய பல சாராரதும் கருத்துக்கள் பரவலாக வெளியிடப்பட்டும் விவாதங் களுக்கு உட்பட்டும் வருகின்றன. இந்நிலையில் இத் தேர்தல் முடிவுகள் மலையகத் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் அளிக்கக் கூடிய நன்மைகள் என்ன என்பதனைப் பற்றியும், அவை நன்மைகளா, அல்லது வேறுபட்ட விளைவுகளா என்பதனைப் பற்றியும் ஒரு சில மேலெழுந்த அவதானங்களை இக்கட்டுரை விமர்சிக்க முயலுகிறது.
இத்தகைய நோக்கின் போக்கில், உள்ளூர் ஆட்சி அதிகாரசபை அமைப்புகளினது பண்புகளின் இயல்புகளை அவதானிக்க வேண்டும். கடந்த காலங்களில் மாநகர, நகர, பட்டின, கிராம சபைகளே நடைமுறையில் இருந்தன. அவ்வமைப் புக்கள் அவ்வப்பகுதிகளின் ஆட்சி அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் சில அன்றாட வாழ்க்கையுடன் நேரடித் தொடர்பு கொண்டுள்ள குடிநீர் வழங்கல், மின்சாரத் தொடர்புகள், கழிவகற்றல், வீதி வெளிச்சம் வழங்கல், சிறியளவு மருத்துவ,
* இக்கட்டுரை "காங்கிரஸ்" பத்திரிகையில் 1-5-92-இல் பிரசுரிக்கப்பட்டது.
145 1Ο

Page 87
இன்றைய மலையகம்
நூலக சேவைகள் போன்றவற்றை முழுதாகவோ, முழுமையற்ற அளவிலோ வழங்கி அதற்கான வரி வசூலிப்பு போன்றவற்றைச் செய்து வந்தன. ஆனால், பெருந்தோட்டங்கள் இந்த நிருவாக முறைகளைக் கொண்டிருக்கவில்லை. இவற்றைத் தோட்ட நிருவாகங்களே வேறான முறையிற் செயற்படுத்தின. ஆனால், முதல் முறையாக 1991 ஆம் ஆண்டு, பெருந்தோட்டங்களில் உள்ளூர் ஆட்சியினையும் உள்ளடக்கிய நிருவாக முறைக்கான தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதன்படி, ஒவ்வொரு உப அரசாங்க அதிபர் பிரிவிலும் உள்ள மாநகர, நகர சபைகள் தவிர்ந்த பகுதிகள்யாவும் ஒரு பிரதேச சபையாக அமையும், இன்று இலங்கையில் வட, கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த பகுதிகளில் இத்தகைய சபைகள் உள்ளன.
எனவே, முதன் முறையாகப் பெருந்தோட்டங்களுக்கும் தமது பிரதிநிதிகளைக் கொண்டு, தமது அன்றாடத் தேவைகளுக் கான நிருவாகத்தைப் பார்த்துக் கொள்ள அறிமுகம் செய்யப்பட் டுள்ள இம்முறைகளை, மலையக மக்கள் என்ற முறையில், வரவேற்கிறோம், ஏனெனில் மலையகத் தமிழ் மக்களில் 75 வீதத்திற்கு மேலானோர் இன்றும் ஏதோ ஒரு வகையிற் பெருந் தோட்டத்தினைச் சார்ந்தவர்களே என்பது முதற் காரணமாகும். மலையக மக்கள் கடந்த 50 வருடங்களாக வாக்குரிமையற்ற ஒரு சமூகத்தினராக இருந்து வந்துள்ளனர். எனவே, 1948 ஆம் ஆண்டில் 20 வயதாக இருந்த மலையகத் தமிழ் மக்கள் 1991 ஆம் ஆண்டு வரை வாக்களிக்க உரிமையற்றவர்களாக இருந்திருந்தார்கள். 1948 ஆம் ஆண்டில் 21 வயதிற்கு மேற்பட்டோருக்கு வாக்களிக்கும் உரிமை இருந்தது. எனவே, மலையக மக்களில் 1927 ஆம் ஆண்டின் பின் பிறந்தவர்களில் மிகப் பெரும்பான்மையான வர்கள் தமது வாக்குரிமையினை பெற்றுக் கொண்டதன் பின் நடைபெற்ற முதல் தேர்தல் என்ற வகையிலும் இத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
அடிப்படை உரிமையான வாக்குரிமை இல்லாதிருந் தமைக்குக் காரணம், மலையகத் தமழ் மக்களுக்கு இந்நாட்டில் குடி உரிமை இல்லாதிருந்தமையேயாகும். இதனால் மறுக்கப் பட்டிருந்த முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அநேகமாகும். கல்வி குறிப்பாக உயர்கல்வி - தொழில், இதில் குறிப்பாக அரசாங்கத் தொழில்களும் ஏனைய அரச அனுமதி பெற வேண்டிய வியாபார கைத்தொழில் நடவடிக்கைகளும் நிலவுரிமை, பிற நாட்டுக்கான பயணங்கள் போன்ற வாழ்க்கை வளம் பெறத்
146

மலையகம் - இன்றும்.
தேவையான அனைத்து உரிமைகளும் குடியுரிமை இல்லாததன் காரணமாக மறுக்கப்பட்டிருந்ததனை விளக்கமாகக் கூற வேண்டிய தேவையில்லை.
குடியுரிமை பெற்றோம்
1948 ஆம் ஆண்டு பறிக்கப்பட்ட குடியுரிமை 1988 ஆம் ஆண்டில் மீண்டும் பெறப்பட்டதன் பின்னணியினை மலையக மக்கள் நன்றாகவும் தெளிவாகவும் அறிந்திருத்தல் மிக அவசிய மாகும். 1988 ஆம் ஆண்டு வரை மலையக மக்களின் பிரதிநிதிகளும், தலைவர்களும் குறிப்பாகத் தொழிற்சங்க” தலைவர்களும் செய்த போராட்டங்களே இன்றைய தீர்வுக்குக் காரணமாகும். 1964 ஆம் ஆண்டில் முன்னர் சுமார் ஒன்றரை இலட்சம் மக்களே குடியுரிமை பெற்றிருந்தனர். சிறிமாசாஸ்திரி ஒப்பந்தத்தின் விளைவாகவும், அதன் இடைவெளியை நிரப்பிய சிறிமா-இந்திரா ஒப்பந்தம் விளைவாகவும் 6 இலட்சம் பேரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பவும், அதன் மூலம் எஞ்சிய 3 இலட்சத்து 75 ஆயிரம் பேருக்கு இலங்கை பிரஜா உரிமை வழங் கவும் வழி ஏற்பட்டது. இதில் 94 ஆயிரம் பேர் போதியளவில் இந்தியாவுக்குச் செல்ல விண்ணப்பிக்காததால், தொடர்ந்தும் பிரச்சினை நிலவியது.
1977-1988 ஆம் ஆண்டுப் பகுதிகளில் ஏற்பட்ட குடியுரிமை சார்ந்த சம்பவங்கள் முக்கியமானவை. 1983 ஆம் ஆண்டு எமது மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வன்முறை என்ற தடுப்பு ஊசி, 1988 ஆம் ஆண்டில் எமது குடியுரிமை நோயைத் தீர்க்க உதவியது. இந்த 5 ஆண்டுகளே தீர்வில் முக்கிய காலப் பகுதி எனலாம். பல பேச்சு வார்த்தைகள் ஏற்பட்டன. சர்வகட்சிக் கலந்துரையாடல்கள், சர்வதேச மகாதாடுகள் என்பன தமது விவாதங்களின் இறுதியில் 94 ஆயிரம் நாடற்றவர்கள் பற்றியும் ஆராய்ந்தன. ஆனால், வழங்க வேண்டியவர்கள் ஒத்திப் போடும் கலையில் சிறந்தவர்களாக, பிரச்சினையினைத் தள்ளிப் போட்டு வந்தனரே ஒழிய, வேறெதுவும் செய்யவில்லை. இது தான் கடந்த அரை நூற்றாண்டுகளாகச் சிறுபான்மையினரின் பிரச்சினைக்கு அரசு மேற்கொண்ட சமாளிப்பு உபாயமாக இருந்து வந்துள்ளது. அதே நேரத்தில், மிக முக்கியமான ஆனால் பல சாராரும் போதிய முக்கியத்துவம் கொடுக்காத ஒரு பிரச்சி னையையும் நாம் இங்கே குறிப்பிட வேண்டும். அதாவது, இந்தியா தான் ஏற்றுக்கொள்ள வேண்டிய 5 இலட்சத்து 6 ஆயிரம்
147

Page 88
இன்றைய மலையகம்
விண்ணப்பங்களையும் முடிவு செய்துவிட்ட வேளையில், இலங்கைய ராக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய 4 இலட்சம் (1964இல்) பேரை இலங்கையராக அங்கீகரித்துவிட வேண்டியதற் கான அமுலாக்கம் பற்றிய நடடவடிக்கையில் இலங்கை அரசு அசட்டையாகவே இருந்து வந்தது. அமுலாக்கம் செய்ய வேண்டி யதன் அவசியம் பற்றி அறிந்திருந்தாலும், இது பற்றி வற்புறுத்த வேண்டியதன் தேவைபற்றி எல்லாக் குழுக்களும் ஆர்வம் காட்ட வில்லை. இந்நிலையில் தான் 1988 ஆம் ஆண்டின் இறுதியில் வந்த புதிய ஜனாதிபதி தேர்தல் எமக்குச் சாதகமாக அமைந்தது.
அமுலாக்கம் என்ற அம்சம், நிருவாகச் சிவப்பு நாடாவின் அசமந்த மாட்டு வண்டி வேகத்தினால் தவிர்க்க முடியாத வகையிலே தேங்கி நின்றது. தோட்டம் தோட்டமாகச் சென்று குடியுரிமை வழங்கினாலும் கூட, 4 இலட்சம் பேரைக் குடியுரிமை பெற்றவர்களாக்குவது பெரும் கால தாமதத்தைக் காட்டியது. இந்நிலையில், மலையக மக்களின் சில பலவீனங்கள் - குறிப்பாக ஆவணங்கள், சான்றுகளைப் பேண முடியாத அறியாமையுடன் தொடர்பான பலவீனங்கள் - தாமத போக் குடன் செயல்படுபவர்களுக்குச் சாதகமாயிருந்தது. எனவே தான், விசாரணை, ஆவணங்கள், சான்றிதழ்கள் என்பவற்றுடன் தொடர்பில்லாத ஒரு சர்வசனக் குடியுரிமை முறைக்கான சட்ட சரத்துத் தேவை என்பதனை மலையகத் தமிழ் மக்களின் தலைமைப் பீடம் உணர்ந்தது. ஆகவே, அமுலாக்கம் தான் உண்மையான பிரச்சினை என்பது தெட்ட தெளிவாக உணரப் பட்டதுடன், குடியுரிமை அமுலாக்கம் பற்றிய புதிய சட்ட உருவாக்கம் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ப்ட வேண்டியதாயிற்று.
இன்றைய ஜனாதிபதி அவர்களை மலையக மக்கள் தேர்தலில் ஆதரிப்பார்கள் என்ற புரிந்துணர்வின் வளர்ச்சியினை உருவாக்கி, பலரும் தயக்கம் காட்டிய குடியுரிமை மசோதாவை (1988) பாராளுமன்றத்தில் அவரால் சமர்ப்பிக்கச் செய் வதற்காக அரசியல் ஒப்பந்தங்கள் - கனவான்கள் ஒப்பந்தங் களாகச் செய்துக் கொள்ளப்பட்டன. அதன் விளைவாக ஏற்பட்டது தான் 1988 ஆம் ஆண்டு பாராளுமன்றக் குடியுரிமைச் சட்ட மாகும். முன்னைய ஜனாதிபதியின் காலப்பகுதியில், அல்லது 1988ஆம் ஆண்டிற்கு முன் பெறப்பட்டவை, ஏற்கப்பட்டவை யாவும் காலம் கடத்தும் அணுகுமுறையுடன் தொடர்பானவை. 1988 ஆம் ஆண்டுச் சட்டம் யதார்த்தமான செயலாக்கம்
148

மலையகம் - இன்றும்.
பற்றியது. இச்சட்டத்தின்படி, மலையகத் தமிழ் மக்களில் இந்தியாவுக்குக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்காத அனைவரும், ஒரு சத்தியக் கடதாசியினை வழங்கினால், அதன் மூலம் அவர்கள் இந்த நாட்டுப் பிரஜை என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.இதன்படி, இதுவரை காலம் அரசாங்கம் கிரமமாகச் செய்யாத செயல்களினால், அமுலாக்கம் தாமதமாகியிருந்தது. இப்போது அப்பொறுப்பு, மலையக மக்களின் பொறுப்பான நடவடிக்கைளின் மீது திருப்பிவிடப்பட்டுள்ளது. அதாவது, இனிக் குடியுரிமை என்பது, மலையக மக்கள் விழிப்பாக இருந்து தமது உரிமையினை நிலை நாட்டிக்கொள்ள வேண்டும் என்ற நிலைமையினை உருவாக்கிவிட்டது. அவற்றில், அவர்கள் அடையாள அட்டையைப் பெற்றால், 18 வயதானவுடன் ஜூன் மாதத்தில் தம்மை வாக்காளராகப் பதிவு செய்து கொள்ளுதல், தேவையானவர்கள் தமது கடவுச் சீட்டுக்களை வாங்கி வைத்துக் கொள்ளுதல், ஏனைய பிரஜைகளைப் போன்று பிறப்பு, திருமண, இறப்புச் சான்றிதழ்கள், மற்றும் பாடசாலை, தொழில் சார்ந்த ஆவணங்களைப் பாதுகாத்தல் என்பன முக்கியமாகும்.
ஏனைய மக்கள் தமது குடியுரிமையை நிரூபிக்கத் தேவையான முறையிலேயே மலையக மக்களும் தம்மை நிரூபித்துக் கொள்ள வேண்டும். பிரஜாவுரிமைச் சான்றிதழ் மலையக மக்களுக்கு மட்டும் ஏன் என்ற தலைமைத்துவக் கருத்து முக்கியமானது. எனவே, இன்றைய மலையக மக்களின் குடியுரிமையினை அங்கீகாரம் செய்த குடியுரிமைச் சட்டம், 1988 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது பேச்ப்பட்ட "தொழிற்சங்கப் பேரம்" என வர்ணித்தாலும் மிகையாகாது. அதே நேரத்தில், சர்வதேச, சூழற் காரணிகளின் செல்வாக்கு முற்றாக இல்லை என்ற ஒரு தலைப்பட்சக் கருத்தும் ஏற்றுக்கொள்ளக் கூடிய்தல்ல.
அடுத்தது. என்ன? குடியுரிமை பெற்று விட்டால் போதுமா? நிச்சயமாக இல்லை. அது வாக்குரிமையாக, தொழிலுரிமையாக முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் கடவுச் சீட்டாக மாற வேண்டும். இத்தகைய நோக்கங்களுடன் நாம் செயற்பட வேண்டும்.
இதற்கு யாது செய்ய வேண்டும்?
புரிந்துணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டும். ஒவ்வொரு வருடமும் மே மாதம், ஜூன் மாதம் ஆகிய இரண்டு
49

Page 89
இன்றைய மலையகம்
மாதங்களிலும் விழிப்பாகச் செயற்பட்டுத் தம்மை வாக்காளராகப் பதிவு செய்து கொள்ளல் வேண்டும். 1988-ஆம் ஆண்டுச் சட்டப் பிரகடனத்தை அடுத்து 1989-ஆம் ஆண்டில் தொழிற் சங்கத்தின் தனிப்பட்ட முயற்சியால், ஒரு வருடத்தில் 2 இலட்சத்திற்கு மேற்பட்டோர் புதிய வாக்காளராகப் பதியப்பட்டனர். ஆனால், அடுத்த பதிவில் சிறிது அசமந்தமாயிருந்ததால், பதியப் பட்டவர்கள் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டது. குறிப்பாகக் கண்டி, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை மாவட்டங் களில் இவ்வீழ்ச்சி காணப்பட்டது. இது ஒருபுறம் கிராம சேவகர்கள் உட்பட்ட அரச இயந்திரத்தின் பொறுப்பற்ற சில காரணங்களால் ஏற்பட்டிருந்தாலும், மக்கள் மத்தியில் காணப் படும் அசமந்த போக்கின் விளைவுகளையும் மறுக்க முடியாது. வாக்குரிமை என்பது, மலையகத் தமிழ் மக்களைப் பொறுத்த மட்டில், வாக்களிப்பதற்கான உரிமை என்பதனைவிட, குடி உரிமையினை உறுதிப்படுத்தும் கருவி என்ற பல்நோக்குப் பயன் பாட்டினை மறக்கக் கூடாது.
மலையக மக்களும் இன்றைய தேவைகளும்:
மலையக மக்களின் இன்றைய சமூக, ப்ொருளாதார நிலையில், அவர்களுடைய உடனடித் தேவைகளை விட, எதிர்கால முன்னேற்றத்திற்கான அடித்தளத்தினை உருவாக்கும் முயற்சிகளே மிக முக்கியமானவை. இதற்காக, உடனடித் தேவைகள் உதாசீனப்படுத்தப்படலாம் என்பது கருத்தல்ல. உடனடித் தேவைகளைக் கவனிக்கும் அதே வேளையில், எதிர்காலத்தில் ஏற்பட வேண்டிய ஒழுங்குமுறையான வளர்ச்சிக்கு அத்திவாரம் ஏற்படுத்துவதிலும் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
மலையகத் தமிழ் மக்கள் சிறுபான்மையினராக (8 வீதம்) இருப்பதால், தொடர்ந்து, விவசாயத் தொழிலாளர்களாகவே வாழ்ந்து, அதன் மூலம் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திக்கொள்ள வாய்ப்புக்கள் மிக மிகக் குறைவு. Tra, தொழிலாளர் வகுப்பில் இருந்து இவர்கள் மத்திய தர வகுப்பினராக மாற வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் காணப்படுகிறது.
மத்திய தர வர்க்கம்:
இத்தகைய வர்க்கத்தினராக மாற வேண்டுமாயின், அதற்குக், கல்வி வளர்ச்சி, தொழில் பயிற்சி, சேமிப்பு என்பனவும்.இதற்
150

மலையகம் - இன்றும்.
காக இன்றைய பெற்றோருக்கு இதுபற்றிய புரிந்துணர்வும் மிக அத்தியாவசியமானவை. இந்த இலக்கினை முழுமையாக அடைவதற்குக் குறைந்தது, கடந்த நான்கு வருடங்களுக்குள் பிறந்த குழந்தைகள் உட்பட இரண்டு தலைமுறைகளாவது செல்ல வேண்டும், அல்லது அதற்கு மேலாவது செல்லும்.
இன்று மலையகத் தமிழ் மக்களில் தமது விலாசம் கூட எழுதத் தெரியாதவர்கள் 40 வீதமாக உள்ளனர். 10 வகுப்பு வரை படித்துச் சித்தி எய்தியவர்கள் 15 சதவீதமும் இல்லை. இத் தகுதியின் சராசரி 40 வீதமாகும். உயர் கல்வியில் சதவீதம் கூறினால், அது சராசரி நபரால் புரிந்துகொள்ள முடியாத தசம வீதப் பிரிவாகத் தசம், சைபர், சைபர் எனக் காணப்படுகிறது.
கல்வி கற்று, ஆசிரியர்கள் எழுது வினைஞர்கள், கணக் காளர், பொறியியலாளர்கள், வக்கீல்கள், மருத்துவர்கள் அறிவியலாளர்கள், ஆரர்ய்ச்சியாளர்கள், பத்திரிகையாளர்கள், முகாமையாளர்கள், நிருவாகிகள் மற்றும் மேற்படி துறைகள் சார்ந்த இடைமட்டத் தொழில்நுட்பவியலாளர்கள் என்போர் இம்மக்கள் மத்தியில் பெருமளவிலே தோன்றி, அதன் விளைவாக, விவசாயத் தொழிலாளர்களின் விகிதாசாரம் 20 சதவீதத்திற்குக் கீழ்ச் செல்லும் வரை அம்மக்கள் குழு முன்னேறியதாகக் கூற முடியாது. பணவருவாய் கூடினால் மட்டும் போதாது. அதன் மூலம் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதும், ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான ஒரு வாழ்க் கைத் தரம் உருவாக வேண்டும். இதற்குப் பொதுவான கல்வி வளர்ச்சியும், வர்க்க மாற்றமும் தேவைப்படுகிறது.
ஆசிரியர்கள்:
வெறுமையிலிருந்து ஏதோ ஒரு நிலையினை (நிச்சயமாக போதாது) எய்தியிருக்கின்றோம் என்றால், இப்போது அது ஆசிரியர் தொழிலாகும். தொழில்களைக் கூறும்போது, ஆசிரியர்களை இங்கே முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு விளக்கம் வேண்டும். ஒரு சமூகம் சாதாரண தொழிலாளர் வர்க்கமாக, அல்லது கல்வியிற் பின்தங்கியிருந்து மேல் நோக்கி வளரும் போது முதலில் ஏற்படும் சாதனை, ஆசிரியர் தொழில் கள்ைக்கைப்பற்றுவதாக இருப்பதனைப் பல்வேறு சந்தர்ப்பங் களிலும் அவதானிக்க முடிகிறது. குறிப்பாக, இலங்கையில் இஸ்லாமிய சகோதரர்களின் அனுபவங்களை நமக்கு முன்னோடி அனுபவங்களாகக் கருதலாம். 1960-ஆம் ஆண்டுகளில்
51

Page 90
இன்றைய மலையகம்
மலையகத் தமிழ் மக்களை ஒத்த வகையிலேயே கல்வி வளர்ச்சியில் அவர்களும் காணப்பட்டார்கள். அப்போது ஆரபித்த அவர்களுடைய கல்வி முன்னேற்றப் பணியின் போது, ஆயிரக் கணக்கானோர் ஆசிரியர்களாக அறிமுகப்படுத்தப்பட்டனர். அது குறித்து வேறுபட்ட விமர்சனங்கள் காணப்பட்டன. ஆனால், இயற்கையின் செய்முறையில், இன்று அது பழுத்துப் பல்கலைக்கழகங்களிலும் அம்மக்கள் நூற்றுக்கணக்காகக் கல்வி பயிலச் செல்லும் நிலைக்கு வளர்ந்துள்ளதுடன், அவர்களுடைய இன்றைய கல்வி வளர்ச்சியினையும், மத்தியதர உருவாக்க செய் முறையில் ஏற்பட்டுள்ள சாதனைகளையும் குறைவாக மதிப்பிட முடியாதுள்ளது. இதற்கு அடிப்படையாக அமைந்தது, அம்மக்கள் மத்தியில் ஏற்பட்ட கல்வியின் முக்கியத்துவம் பற்றிய விழிப் புணர்வாகும். எனவே, ஆசிரியர் தொழில் முதற் சாதனை என நாம் மகிழ்ச்சியுற்றாலும், அடுத்த படிகளும், சாதனைகளும் இன்னும் எவ்வளவோ உண்டு என்பதனை உணரும் போது, ஒரு புறம் மலைப்பாகவே இருக்கிறது.
என்ன செய்யப் போகிறோம்?
இன்று நவீன அபிவிருத்தி பொருளியலாளர்கள், வளர்ச்சி பெறும் சமுதாயங்களின் முன்னேற்றத்திற்கு, அவை தமக்குப் பொருத்தமானதும் சரியானதுமான வழிகளைக் கண்டறிய வேண்டும் என்றும், முன்னேறிய நாடுகளின் வழிகள், ஒரு சில உதவிகளை - உதாரணமாகத் தொழில்நுட்ப உதவிகளை மாத் திரமே வழங்க முடியும் என்றும் நம்புகின்றனர். எனவே, தமது பிரச்சினைகளை நன்கு புரிந்து கொண்டு, தமது சூழலுக்கும் தமது பிரச்சினைகளுக்கும் ஏற்ற தீர்வுகளையும் வழிவகைகளும் கண்டறிதல் வேண்டும். இக்கருத்து, மலையக மக்களைப் பொறுத்தும் ஏற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
தீர்வுகளைப் பற்றிச் சிந்திக்கும் மலையக மக்கள், வள்ளுவர் கூறும் தன் வலி, மாற்றான் வலி, துணை வலி போன்றவற்றை அறிந்துகொள்ள வேண்டும். தன் வலி எனப்படும் சுய பலத்தினைப் பொறுத்து, இவர்கள் இந்நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 8 வீதமே காணப்படுகின்றனர். மத்திய, தென் மாகாணங்களிற் சிங்கள மக்கள் மத்தியிற் சிதறியும், குழுமியும், முற்றாகச் சிங்கள மாவட்டங்களாற் சூழப்பட்டும் வாழ்கின்றனர். கல்வியில் மிக மிகப் பின்தங்கி உள்ளனர். பொருளாதார நிலையினை எடுத்துக் கொண்டால், 10 வீதத்திற்கும் குறைந்த
52

மலையகம் - இன்றும்.
வீதமானோரே அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டவர்கள். ஏனையோர் வறுமைக் கோட்டுக்குக் கீழேயோ, அல்லது அக்கோட்டிற்கு அண்மை நிலைகளிலேயோ வாழ்பவர்களாவர். துணை வலி எனக் கருதக்கூடிய இந்தியாவின் நிலைப்பாட்டினை அவதானித்தால், விரக்தி நிலைதான் மிஞ்சும். இதற்கான ஒரு குறிகாட்டி, சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தமாகும். உலகம் முழுதும் பரவிச் சென்ற இந்திய மக்களைத் திருப்பி எடுக்கத் துணியாத இந்தியா, நம்மை மாத்திரம் திருப்பி ஏற்றுக் கொண்டதுடன், அவர்களை நிராதரவாக, தமிழகத்துடன் போதியளவு கலந்து ஆலோசிக்காது இன்று, இங்கே நம்மைப் பலவீனமாக்கியுள்ளதுடன், அங்கேயும் ஏறத்தாழக் கைவிட்ட நிலையில் வைத்திருக்கிறது. 1983-ஆம் ஆண்டின் பின் சென்ற இலங்கை அகதிகளுக்கான சலுகைகளில், மலையகத் தமிழ் மக்கள் தமிழக அரசினாலேயே ஒதுக்கித் தள்ளப்பட்டனர் என்ற முறைப்பாடுகளையும் நாம் அறிவோம். உயர்கல்வி, தொழில் வாய்ப்புகள் அங்கே மலையகத் தமிழ் மக்களுக்கு முற்றாக வழங்கப் படவில்லை. 1983-ஆம் ஆண்டில் ஏறத்தாழ 18 ஆயிரம் கட்டிடங்கள், தென், மத்திய இலங்கையில் அழிக்கப்பட்ட போது, இந்தியா அவதானியாக இருந்தது. இவையெல்லாம் இந்தி யாவின் கொள்கையினை நாம் கவனமாகச் சிந்திக்கவேண்டிய நிலையினை உருவாக்கியுள்ளது. மலையக மக்கள் மலையக மண்ணின் மைந்தர்கள். இதுவே அவர்களின் தாய்நாடு. இந்த உண்மையை உணர வேண்டும். அதன் அடிப்படையின் பேரில் மக்களின் உணர்வுகளைப் புரிந்து, அதற்கேற்பத் தம்மை வளர்த்துக் கொள்ளத் தம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டியுள்ளது. இரண்டு முக்கிய பணிகள் மலையகத் தமிழ் மக்களின் எதிர்கால சபீட்சத்திற்கான இன்றைய உடனடித் தேவைகளாகும். இவை அவர்களாலே சாதிக்கப்படல் வேண்டும். வழிகாட்டல்களும், தலைமைத்துவமும் அங்கிருந்தே வளர வேண்டும்.
ஒன்று, எதிர்கால சந்ததியினர் மத்தியதர வர்க்கத்தினராக உருவெடுக்கத் தேவையான கல்வி வளர்ச்சி. ஒரு சிலர் மாத்திர மின்றி, அனைவருக்கும் கட்டாயக் கல்வி தேவை. மலையகத்தில் 6 வயதுக்கும் 16 வயதுக்கும் இடையில் சிறுவர்கள் பாடசாலை தவிர்த்த வேறெங்கும் பாடசாலை நேரங்களிற் காணப்படாத நிலை உருவாக வேண்டும். இது கட்டாயத் தேவையாகும். இன்றைய சூழ்நிலையில் இதற்கான வாய்ப்புக்கள் இல்லாத இடங்கள் மிக மிகக் குறைவாகும். எனவே, இதனைப் பயன்படுத்திக் கொள்ளுதல் அறிவுடைமையாகும். இதனை
153

Page 91
இன்றைய மலையகம்
மலையகத் தொழிற்சங்கள், அரசியல் கட்சிகள், மற்றும் பொது நல அமைப்புக்கள், பிரசாரம் செய்வதுடன், மக்கள் மத்தியில் இதன் முக்கியத்துவத்தினை விளக்கும் ஏனைய முயற்சிகளுக்கும் தமது நிகழ்ச்சிகளில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இரண்டாவது, மலையகத் தமிழ் மக்கள்தாம் ஒரு தனிமக்கள் குழு என்ற அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையிலும், அவர்களுடைய பிரச்சினைகள், பண்புகள் என்பனவற்றை இனங்காட்டி, அரசியல் அங்கீகாரத்தை உருவாக்க வேண்டும். இதற்கு நாம் யாவரும் ஒன்றுபட்டவர்கள், ஒரு சக்தி என்ற நிலைப் பாடுகளை உருவாக்கி, தமது எதிர்காலத்தை வளப்படுத்துவதற் காக அணி திரள வேண்டும். இவர்கள் யாவரும் ஒன்றுபட்ட ஒரு குழுவினர், இவர்களை அங்கீகரிக்கத் தவறினால், அவர்கள் ஜனநாயக ரீதிப்ாலானதும், அகிம்சை முறையிலானதுமான எதிர் நடவடிக்கைக்குச் சற்றும் தயங்கமாட்டார்கள் என்பதும், தலைமைத்துவத்தின் கீழ்க் கட்டுப்பட்டுச் சமூக நன்மையின் அடிப்படையில் இன உணர்வுடன் செயல்படும் பொறுப்பான சக்தி என்பதும் வளர்த்துக் கொள்ளப்பட வேண்டிய பொதுசன அபிப்பிராயங்களாகும். இதற்கு அனைவரும் தம்மை வாக்காளர் களாகப், பதிவு செய்து கொண்டு, ஒரே தலைமைத்துவத்தின் கீழ் அணி திரளுதலே சிறந்த வழியாகக் கருதப்படுகிறது. இத்தகைய பண்புகளின் இரண்டாவது வகையினைப் பொறுத்த மட்டில், கடந்த காலங்களில் மலையக மக்கள் பொறுப்புடன் செயல் பட்டுக் காட்டியிருக்கிறார்கள்.
1987-ஆம் ஆண்டின் மாகாண சபைத் தேர்தல்களும், 1991-ஆம் ஆண்டின் உள்ளூர் ஆட்சி அதிகார சபைத் தேர்தல் களும் இதற்குச் சிறந்த சான்றாகும். இதனால், மாகாண சபைகளில் 11 பேர் அளவிலும் உள்ளூர் ஆட்சிக்கு 100 பேர் மட்டிலும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கிற் போட்டி யிட்டு, 60 ஆசனங்களைப் பெறாத குழுக்களும் உள்ள இந்நாட்டில், 125 பேர் போட்டியிட்டு 100 பேர் வெற்றியீட்டி உள்ளனர் என்றால், இது மலையக மக்களின் சுயநலம் கருதாததும், பதவிக் காகத் தோன்றும், சமூக துரோகிகளைத் தூக்கி எறியும் பண்பும் கொண்டதுமான இன உணர்வுமிக்க அரசியல் நடத்தையினைத் தான் இணங்கான முடிகின்றது. இத்தகைய நடத்தைகளும், ஆங்காங்கு சில சந்தர்ப்பங்களில் ஏற்படும் சிறு விலகல்களையும் முற்றாகக் களைந்து விடும் மாற்றங்களும் ஏற்பட்டால், மலையக மக்கள் அரசியல் ரீதியாக ஐக்கியப்பட்ட சக்தியாகச் செயல்படலாம்.
154

மலையகம் - இன்றும்.
இன்றைய இலங்கையின் அரசியலில் ஓர் ஒழுங்கிற்குட்பட்ட சக்தி யாக ஐ.தே.க., சுதந்திர கட்சி ஆகியவற்றை அடுத்து, இவர்களுடைய அரசியல் கட்சியே (இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்), செயல்படக் காரணம், மக்களின் புரிந்துணர்வே யாகும். இதில் சிறு கலக்கங்கள் இருந்தாலும், அவை எதிர்காலத்தில் நீக்கப்படலாம். இதற்குக் கற்றவர்களும், மலையக மக்களின் நலனில் அக்கறை உள்ள நிறுவன அமைப்பு களும் கூடிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆகவே, மலையகத் தமிழ் மக்கள் இந்நாட்டில், விவசாயத் தொழிலாளர்களாகவே வாழும் நிலை தொடரக் கூடாது என்பதனை நாம் விரும்பினால், அதற்கான தீர்வுகளை உருவாக்க வேண்டியவர்களும் அம்மக்களே. மாற்றங்கள் முழுமையாக உருவெடுக்கக் குறைந்து, இரண்டு, அல்லது மூன்று தலைமுறைகளின் உறுதியான தியாகமிக்க பங்களிப்புத் தேவை. அவை கல்வி வளர்ச்சிக்கும், அரசியல் ரீதியான ஐக்கியப் படுதலுக்குமான, சுயநலமற்ற முறையில் எதிர்காலச் சந்ததி யினருக்காக நரம் செய்யும் இன்றைய தியாகங்களாகும்.
_6ళ్నీ
I55

Page 92

நிலச் சீர்திருத்தமும்.
17. நிலச்சீர்திருத்தமும் தேயிலைத் தொழிலும்*
இலங்கையில் 1972-ஆம் ஆண்டை அடுத்த காலப் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலச்சீர்திருத்தம் இரண்டு முக்கிய அடிப்படை நோக்கங்களைக் கொண்டிருந்தது. விவசாய நடவடிக்கைகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்வது, முதலாது பொருளாதார நோக்கமாகவும், மக்கள் மத்தியில் சமத்துவத்தினை ஏற்படுத்தும் சமூக நோக்கத்தினை இரண்டாவது நோக்கமாகவும் கருதலாம்.
இத்தகைய நோக்கங்களைக் கொண்டதாக அமைந்த நிலச்சீர்திருத்த முயற்சி, எந்தளவுக்குத் தேயிலைப் பயிர் நிலங் களில் மாற்றங்களை ஏற்படுத்தியது என்பதும், எதிர்பார்க்கப் பட்ட நோக்கங்கள் நிறைவேற்றப்பட்டனவா என்பதும், கடந்த 18 வருடங்களாக அரசு மேற்பார்வையில் இயங்கும் தேயிலைப் பெருந்தோட்டங்களின் இன்றைய (1990) நிலை யாது என்பதும் பற்றிய சில நடைமுறை சார்ந்ததும், சராசரி இலங்கையரது ஆர்வத்தினைத் தூண்டக்கூடியதுமான சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் விவாதிக்கப்படும். அத்துடன், தேயிலைத் தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதற்குக் காரணம், தொழி லாளர்களின் வேதனங்கள் அதிகரிக்கப்பட்டமை என்ற அர்த்த மற்ற வாதத்தின் பின்னணியினையும், உண்மை நிலையி னையும் இக்கட்டுரை எடுத்துக்காட்ட முயற்சிக்கின்றது.
* இக்கட்டுரை 'வீரகேசரி’ பத்திரிகையில் 1-4-90-இல் பிரசுரிக்கப்பட்டது.
57

Page 93
இன்றைய மலையகம்
நில உரிமையானது, சமுதாயங்களில் மக்களுக்கு அந்தஸ்து, அதிகாரம், செல்வாக்கு என்பனவற்றை அளிக்கின்றது. இலங்கை யில் விவசாய நிலமற்ற குடியானவர்கள் பெருமளவினராகக் காணப்படுவதுடன், இதற்காக மேற்கொள்ளப்பட்ட வரண்ட வலயக் குடியேற்றங்கள் போதியளவு விளைவுகளை ஏற்படுத்தவு மில்லை. எனவே, நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்குதலும், அதன் மூலம் நிலவுரிமை பெற்ற விவசாயிகள் சிறந்த முறையில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு, அந்நிலங்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்வதும் என்ற நோக்கங்களின் அடிப்படையில் நிலச்சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. நிலமற்ற ஏழைக் குடியானவர்கள் நிலவுடைமை பெறுவதன் மூலம் சமூக அந்தஸ்தினைப் பெற்றுக் கொள்ள வாய்ப்புகள் ஏற்படலாம்; இது சமூகத்தில் சமத்துவத்தினை வளர்க்க உதவியாய் அமையலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. -
1972-ஆம் ஆண்டு நிலச்சீர்திருத்தச் சட்டம் இலக்கம் ஒன்றின் மூலம், நிலச்சீர்திருத்த ஆணைக்குழு அமைக்கப்பட்டு, தனியார் உரிமை கொண்டிருக்கும் நிலங்களுக்கு உச்ச வரம்பு கொண்டுவரப்பட்டது. அதன் பிரகாரம், பெருந்தோட்ட நிலங் களாக இருந்தால் 50 ஏக்கரும், மற்றைய நிலங்களாக இருந்தால் 25 ஏக்கர்களும் மட்டுமே தனிப்பட்ட (18 வயதிற்கு மேற்பட்ட) ஒருவர் வைத்திருக்கலாம் என்பது உச்ச வரம்பாக நிர்ணயிக்கப் பட்டது. இச்சட்டத்தினை விட 1950-ஆம் ஆண்டின் நிலச் சுவீகரிப்புச் சட்டம், 1972-ஆம் ஆண்டின் பெருந்தோட்டம் சட்டம், (இலக்கம் இரண்டு) 1972ஆம் ஆண்டின் நாட்டின் விவசாய கூட்டுத்தாபனச் சட்டம் இலக்கம் இரண்டு 1973-ஆம் ஆண்டு விவசாய நிலச் சட்டம் இலக்கம் 42 ஆகிய சட்ட மூலங்களைப் பயன்படுத்தியும், பின்னர் உருவாகிய 1975-ஆம் ஆண்டு நிலச் சீர்திருத்தச் சட்டம் (திருத்தப்பட்டது) ஆகிய சட்டங்களை பயன்படுத்தியுமே இலங்கையில் நிலச்சீர்திருத்தம் நடைமுறைப் படுத்தப்பட்டது.
இச்சட்டங்கள் வழங்கிய அதிகாரங்களின் அடிப் படையில் 166, 405 ஹெக்டயர் தேயிலை நிலங்களை உள்ளடக்கி, மொத்தமாக 419,101 ஹெக்டயர் நிலம் அரசாங்கத்தின் பொறுப்பின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. இது 1976-ஆம் ஆண்டில் இலங்கையிற் காணப்பட்ட மொத்த விவசாய நிலப்பரப்பில் 22 வீதமாகும். இவ்வாறு பெறப்பட்ட பெருந்தோட்டப் பயிர் நிலங்கள் (230,000 ஹெக்டயர்) மூன்று பொதுத்துறை
麓55

நிலச் சீர்திருத்தமும்.
நிறுவனங்களின் மேற்பார்வையில் விடப்பட்டது. வேறுபட்ட கூட்டுறவு நிறுவனங்களும் சுமார் 105,000 ஹெக்டயர் நிலங்களை நிருவாகம் செய்தன. சுவீகரிக்கப்பட்ட நிலப்பரப்பில் 10 வீதமான 45,000 ஹெக்டயர் நிலப்பரப்பே நிலமற்ற விவசாயி களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.
1978-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தேசிய விவசாய பன்முகப்படுத்தல் குடியிருப்புகளுக்கான அதிகார சபை ஏறத் தாழ 26,000 ஏக்கர் நிலத்தினைக் குடியானவர்களிடையே பகிர்ந் தளித்தது. அதில் பணப்பயிர்கள் வளர்க்க ஊக்குவிக்கப்பட்ட போதிலும், பெருமளவானோர் ஏனைய இடங்களுக்குச் சென்று விவசாயத் தொழிலாளர்களாகவே தொழில் புரிந்தனர். தமது நிலங்களை விருத்தி செய்யவில்லை. இதற்கு, அவர்களிடம் அந்நிலங்களை விருத்தி செய்யும் சம காலத்தில் வாழ போதிய வருவாய் இல்லை என்பது காரணமாகக் கூறப்பட்டு, உலக நாடுகளின் உதவியுடன் ஐந்து வருடங்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் அமுல் செய்யப்பட்டு வருகின்றது. மேலெழுந்த வாரியான கணிப்பீடு ஒன்று, இந்தக் குடியிருப்புகளுக்கு இதுவரை ஏக்கர் ஒன்றுக்கு ஏறத்தாழ ரூபாய் 25,000/- பெறுமதியான மானியங்கள் அரசினால் வழங்கப்பட்டுள்ளன எனக் கூறுகிறது. இந்த விவசாய அபிவிருத்தி முயற்சி கடந்த 12 வருட முயற்சியின் பின்னரும் எதுவித முன்னேற்றத்தையும் காட்டவில்லை.
1977-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின்னர், பொதுத் துறை நிறுவனம் ஒன்று வாபஸ் பெறப்பட்டதுடன், கூட்டுறவு நிறுவனங்களும் நீக்கப்பட்டு, அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்திடமும் (அபெசு) மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை (மபெஅச) யிடமும் பொதுத்துறை சார்ந்த தான பெருந்தோட்டங்களின் நிருவாகம் ஒப்படைக்கப்பட்டது.
1988-ஆம் ஆண்டு தேயிலை உற்பத்தித் தரவுகளைப் பார்க்கும் போது, மபெஅச-இன் கீழ் உள்ள தோட்டங்கள் 32.5 சதவீதத் தேயிலையையும், அ.பெ.கூ தோட்டங்கள் 30.5 சதவீதத் தேயிலையையும், 37 சதவீதத் தேயிலையைத் தனியார் துறை சார்ந்த தோட்டங்களும் உற்பத்தி செய்துள்ளமை தெரிய வருகிறது. ம.பெ.அ.ச கீழ் உள்ள தோட்டங்களில் 1985, 1986, 1987-ஆம் ஆண்டுகளில், தொடர்ந்து மூன்றாண்டுகள் உற்பத்திச் செலவுக்கும், குறைந்த விலைக்கே தேயிலை விற்கப்பட்டுள்ளது. இந்த நிருவாகம் 1985-ஆம் ஆண்டு 78.5 மில்லியன் கிலோ
159

Page 94
இன்றைய மலையகம்
தேயிலையை, கிலோ ஒன்றுக்கு ரூபா 3.11 நட்டத்திலும், 1986-ஆம் ஆண்டு 74.5 மில்லியன் கிலோ தேயிலையை கிலோ ஒன்றுக்கு ரூபா 8.04 நட்டத்திலும், 1987-ஆம் ஆண்டு 72.4 மில்லியன் கிலோ தேயிலையை கிலோ ஒன்றுக்கு ரூபா 4.12 நட்டத்திலும் உற்பத்தி செய்து விற்றிருக்கிறது. இதன் மூலம், இந்த மூன்றாண்டு களில் இவை அடைந்திருக்கக்கூடிய நட்டம் எவ்வளவு என்பதனை நாம் அறிய முடிகிறது. ஏறத்தாழ 100 கோடி ரூபாய் நட்டமாகும். அ.பெ.கூ. 1986-ஆம் ஆண்டு 71.3 மில்லியன் கிலோ தேயிலையைக் கிலோ ஒன்றுக்கு ரூபா 3.11 நட்டத்தில் உற்பத்தி செய்து விற்றதில், ஏறத்தாழ 225 மில்லியன் ரூபா நட்டத்தை எதிர்நோக்கியது. s
இவ்வாறு தோட்டங்கள் நட்டத்தில் இயங்கியமை, ஏதோ வகையில் உற்பத்தித் திறன் விருத்தியடையவில்லை என்ற அனுமானத்திற்கு வர இடமளிக்கின்றது. சம்பந்தப்பட்ட புள்ளி விபரங்களை எடுத்துப் பார்த்தால், இது நன்கு புலனாகின்றது. அண்மையில் வெளியாகிய "மையக் குழு அறிக்கை" இத்தகைய பாரிய நட்டங்களுக்குத் தொழிலாளர்களின் வேதனங்கள் அதிகரித்தமை குறிப்பான காரணம் என்ற ஒரு நகைப்புக்குரிய விளக்கத்தைக் கூறி, எம்மை வியப்படையச் செய்துள்ளது.
எனவே, இத்தோட்டங்களின் உற்பத்தித் திறன் பற்றிய விபரங்களை நாம் அவதானிக்க வேண்டியுள்ளது. சர்வதேச ரீதியில் தேயிலை உற்பத்தி செய்யும் பல நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது - குறிப்பாக இந்தியா, இந்தோனேசியா, கென்யா, மாலாவி ஆகிய கறுப்புத் தேயிலை உற்பத்தியாளர் களுடன் ஒப்பிடுகையில் - இலங்கையில் ஹெக்டயருக்குரிய தேயிலை உற்பத்தி மிகவும் குறைவாயுள்ளது. 1986-ஆம் ஆண்டு ஒரு ஹெக்டயர் நிலத்தில் இந்தியா 1,570 கிலோ வினையும், இந்தோனேசியா 1,235 கிலோவினையும், கென்யா 1,728 கிலோ வினையும் மாலாவி 2,000 கிலோவினையும் உற்பத்தி செய்திருக்க, இலங்கை 1,005 கிலோவினையே உற்பத்தி செய்துள்ளது. இது இலங்கை எந்தளவுக்குத் தேயிலை உற்பத்தித் திறனில் பின்னிற் கின்றது என்பதனை எடுத்துக்காட்டுகின்றது.
இதனைப் பொறுத்து, அண்மை ஆய்வொன்றில், 1985-ஆம் ஆண்டு இலங்கையிலுள்ள 87 தேயிலைத் தோட்டங்களில் ஏக்கருக்குரிய உற்பத்தியுடன் உற்பத்தி செலவினது தொடர்பு அவதானித்துப் பார்க்கப்பட்டது. இதன்படி, ஹெக்டேயருக்கு ஏறத்தாழ 2,700 கிலோ உற்பத்தி செய்த தோட்டங்களில் உற்பத்தி
60

நிலச் சீர்திருத்தமும்.
செலவு கிலோ ஒன்றிற்கு ஏறத்தாழ ரூபா 26/- ஆகஇருந்தது. அது 2,000 கிலோவாக குறையுமிடத்து ரூபா 32/- ஆகவும், 1000 கிலோவாகக் குறைந்த போது ரூபா 38/- ஆகவும், 900 கிலோவாகக் காணப்பட்ட தோட்டங்களில் ரூபா 40/- ஆகவும் இருந்தது. இதன்படி, ஹெக்டயருக்குரிய விளைச்சல் கூடிய தோட்டங்களில் உற்பத்திச் செலவு குறைந்து இலாபம் அதிகரித் துக் காணப்படுகின்றது என்பது நமக்குத் தெளிவாகிறது. எனவே, ஹெக்டயருக்குரிய உற்பத்தி குறைந்திருப்பதே நட்டத் திற்குப் பொறுப்பான பிரதான காரணி என்பது புலனாகின்றது.
தனியாருக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டங்களில் இருந்தும், ம.பெ.அ.ச. தோட்டங்களில் இருந்தும், அ.பெ.கூ தோட்டங்களில் இருந்தும் 1985-ஆம் ஆண்டு முதல் 1988-ஆம் ஆண்டு வரை உற்பத்தி செய்யப்பட்ட தேயிலையின் அளவுகள் அட்டவணை ஒன்றில் (17.1) காட்டப்பட்டுள்ளது.
அட்டவணை 17.1 இலங்கை - தேயிலை உற்பத்தி (மில்லியன் கிலோ)
உரிமையாளர்கள் 1985 1986 1987 1988
தனியார் 53.3 57.5 66.2 74。0 தோட்டங்கள் Loðsøir பெருந்தோட்ட அபிவிருத்தி சபை 78.5 74.5 72.4 73.9
அரசாங்கப் பெருந்தோட்ட கூட்டுத்தாபனம். 77.9 71.3 66.7 70.1
Source: Central Bank of Shrilanka, Annual Reports-1987 and 1988.
அட்டவணையில் இருந்து, தனியார் தோட்டங்களில் வருடாந்தர தேயிலை உற்பத்தியானது அதிகரித்துச் சென்றுள் ள்மையினைக் காணமுடிகிறது. அதே நேரத்தில், பொதுத்துறை சார்ந்த இரண்டு நிறுவனங்களதும் தோட்டங்களில், தேயிலை டிற்புத்தியானது வீழ்ச்சிப் போக்கினையே கொண்டிருந்தமை மானையும் நாம் அவதானிக்க முடிகிறது. எனவே, தனியார் துறையில் உற்பத்தி பெருகிச் சென்று நான்கு வருடங்களில் ஏறத்
16 11

Page 95
இன்றைய மலையகம்
தாழ 37.5 வீத உற்பத்தி அதிகரிப்பு ஏற்பட்டிருக்கப் பொதுத் துறை சார்ந்ததும், நாட்டின் 63 வீத உற்பத்தியைச் செய்வது மான தோட்டங்களில் உற்பத்தி, வீழ்சசியினையே கண்டுள்ளது. எனவே, அரச நிருவாகங்கள் உற்பத்தியில் அக்கறை காட்ட வேண்டும் என்ற கருத்து முக்கியமாகின்றது. இவற்றிலிருந்து, நிலச்சீர்திருத்தத்தின் முதல் நோக்கமான உற்பத்தித் திறனில் அதிகரிப்பு என்பது தோல்வி அடைந்துள்ளது என்றுதான் கூற வேண்டும். -
நிலச் சீர்திருத்தம் வரப்போகின்றது என்பதால், முன் னைய நிருவாகங்கள் தோட்டங்களைப் புறக்கணித்து விட்டன என்பதும், தோட்டங்களைப் பொறுப்பேற்ற காலத்தில், தகுதி யான நிருவாகம் இல்லாது தோட்டங்கள் முறையாக நிருவகிக் கப்படாமை காரணமாகத் தோட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில் இருந்தன என்பதும் கூட, பொதுத் துறைத் தோட்டங் களின் உற்பத்தி வீழ்ச்சிக்கு காரணங்களாகக் கூறப்படுகின்றன. ஆனால், நிலச்சீர்திருத்தம் ஏற்பட்டு 18 வருடங்களின் பின்னரும் உற்பத்தியினைச் சீரடையச் செய்யாமை நியாயப்படுத்தக் கூடியதல்ல.
மையக் குழு அறிக்கையே சில இடங்களில் நிருவாகத் திறமை போதாமை, ஊழல், மூலவள விரயம், கூடிய செலவினங் களைக் கொண்ட திறமையற்ற முகாமைத்துவம் போன்ற குறைபாடுகளைத் தேயிலைத் தோட்டப் பொது நிறுவனங்களில் இனங்கண்டுள்ளதுடன், புதிய நிருவாகப் புனரமைப்புக்கும் ஆலோசனை வழங்கியுள்ளது. அத்துடன், தோட்டக் கிராமிய ஒருங்கிணைப்புப் பற்றியும் ஆழ்ந்த அக்கறையுடன் சிபாரிசு வழங்கியுள்ளது. வளங்களின் உச்சப் பயன்பாட்டிற்கான ஒருங் கிணைப்பு நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியவை. இனங்களிடையே சமூக உறவுகளை உருவாக்கத் தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்பட வேண்டியவை. ஆனால், தோட்டங்களின் வளங்களை கிராமங்களின் வளர்ச் சிக்காக மாத்திரம் பயன்படுத்தும் உள்நோக்கங்களும், ஒரு பக்கச் சார்பான நோக்கங்களும், இச்சிந்தனையில் வெளியிடப்படாத தும் கூறப்படாததுமான நோக்கங்களாயிருந்தால், அது திட்ட வட்டமாகக் கண்டிக்கப்பட வேண்டியதும், தேவையானால் உடன் வாபஸ் செய்ய வேண்டியதொன்றும் என்பது அத்தியா வசியமானதாகும்.
162

நிலச் சீர்திருத்தமும்.
தனியார் துறை சிறந்த முறையில் நிலச்சீர்திருத்தத்திற்கு முன்னரும் இயங்கியுள்ளது. இப்போதும் அதே நிலைமை காணப்படுகின்றது. நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்கப் படுவது தேசிய, சமூகக் கண்ணோட்டத்தில் நிச்சயமாக அர்த்த மிக்க தேவையாகும். இன்று அரசு நாடற்றவராயிருந்த தொழிலாளர்களை இலங்கைப் பிரசைகளாகச் சட்டத்தின் மூலம் அங்கீகரித்துள்ளது. அதன் தொடர்பாக, வாய்ப்புள்ள இடங் களில் அவர்களுக்கும் நிலப்பங்கீட்டிற் சந்தர்ப்பங்களை அளிக்க வேண்டும். நிலச்சீர்திருத்தத்தின் சமூக நோக்கங்கள் இவர்களையும் சென்றடைய வேண்டும்.
தேயிலைத் தொழிலைத் தொடர்ந்து விருத்தி செய்தல் பொருளாதார நோக்கிற் பயன்மிக்க ஒன்றாகும். “தேயிலைக் கான முதன்மைத் திட்ட அறிக்கை இதுபற்றித் தரவுகள் ரீதியாகக் கருத்து வெளியிட்டுள்ளது. அதாவது, ஒரு ஹெக் டயரிற் பயிரிடப்படும் தேயிலையினாற் கிடைக்கும் வருவாய், 6 ஹெக்டயர் நெல் விளைநிலத்தின் உற்பத்தி, அல்லது 3.1 ஹெக் டயர் இறப்பர் விளைநிலத்தின் உற்பத்தி, அல்லது 5.6 ஹெக் டயர் தென்னை விளைநிலத்தின் உற்பத்திக்குச் சமமானதாக 1977-ஆம் ஆண்டில் இருந்ததாக இந்த அறிக்கை கூறுகின்றது.
எனவே, தேயிலை எமது பொருளாதாரத்திற்குப் பெருந் துணையானது என்பதனை நாம் நன்கு உணர வேண்டும். இதனாலேதான், பஸ் போக்குவரத்து, காப்புறுதி ஆகிய தொழில்களைத் தேசிய மயமாக்கிய அன்றைய பிரதமர், தேயிலைத் தோட்டங்களைத் தேசியமயமாக்கினால், பொன் முட்டையிடும் வாத்தினைக் கொல்லுவதாகும் எனக் கருதி, அதனை அன்று தவிர்த்தார்.
இறுதியாகக் கூறுவதானால், நிலச்சீர்திருத்தத்தின் முக்கிய நோக்கங்கள் முழுமையாக இன்னும் நிறைவேறவில்லை. தேயி லையின் மூலம் பெறப்படும் பொருளாதார நன்மைகள் இலங் கைக்கு இன்றும் அத்தியாவசியமானது. எனவே, அதனைச் சிறந்த முறையில் விருத்தி செய்வதுடன், தொழிலாளர்களின் நன்மை களைப் புறக்கணிக்காது, அவர்களுடைய வாழ்க்கைத்தர உயர்வினை வளர்க்கும் வகையில் நிருவாக, உற்பத்தி திறமைகளை வளர்த்துக் கொள்ளுதலே எமது இன்றைய முன்னுரிமைகளாகும்.
63

Page 96

இலங்கையிலே தேயிலைத்.
18. இலங்கையிலே தேயிலைத் தொழிலின் போக்கு
இலங்கையின் பொருளாதாரத்தைப் பொறுத்தமட்டில், தேயிலைத் தொழில் மிகவும் முக்கியமானது. இலங்கை சுதந் திரம் அடைந்த காலப்பகுதிகளில், அது ஏற்றுமதி செய்த பொருட்களின் மூலம் பெற்ற அந்நிய செலாவணியிற் பெரும் பங்கினைத் தேயிலையே பெற்றுத் தந்துள்ளது. 1948-ஆம் ஆண்டை அடுத்த காலப்பகுதிகளில், தேயிலை ஏறத்தாழ 60 வீதம் வரையான ஏற்றுமதி வருவாயினைப் பெற்றுத் தந்துள்ளது. (அட்டவணை (18.1) படம் 4).
அட்டவணை 18.1 இலங்கை - அந்நிய செலாவணி உழைப்பில் தேயிலையின் பங்கு (வீதத்தில்)
ஆண்டு வீதம் ஆண்டு வீதம் ஆண்டு | வீதம்
1959 59.6 1978 48.5 1987 25.9 1961 64.3 |,丑9&0 35.1 1988 26.2 1969 57.8 1982 29.6 1989 24.3 1974 39.1 1985 33.1 1990 24.9 1976 43.6 1986 27.2
Source: Central Bank of Shrilanka, Annual Reports-1961, 1969, 1974,
1978, 1982, 1985, 1988, 1991.
165

Page 97
இன்றைய மலையகம்
இலங்கை - மொத்த ஏற்றுமதியில் தேயிலையின் பங்கு {{39 - 13:30
6
5
S25
للـلـلـلـلـلـلـلـلـلل-ا°" (ஆண்டு) 1959 1980 1969 1974 1976 1978 1980 1982 1985 1988 1989 1990
அண்மைக் காலங்களிலே தேயிலையின் மூலம் இலங்கை பெற்றுக்கொண்ட அந்நிய செலாவணியின் பங்கு குறைந்து சென்றாலும் கூட, அதுவே மிக முக்கிய உற்பத்தியாக இருந்து வருகிறது. தைத்த ஆடைகள் ஏற்றுமதிப் பெறுமதியின் அடிப் படையில் முதலிடத்தை வகித்தாலும், அதன் பெறுமதியில் 60 சதவீதமானது மூலப்பொருள் இறக்குமதிக்காகவும், அயல்நாட்டு முதலீடுகளின் இலாபத்திற்காகவும் மீண்டும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட வேண்டியுள்ளது.
பின்வரும் தரவுகள் இதனை எமக்கு புலப்படுத்துகின்றன.
(மில்லியன்
விபரம்
ரூபாய்களில்) 1. தேயிலையினாற் பெறப்படும் வருவாய் 13,664 2. தைத்த ஆடைகளினாற் பெறப்படும் ஏற்றுமதி வருவாய் 17,631 3. தைத்த ஆடைகளுக்காக இறக்குமதி செய்யப்படும் மூலப் பொருட்களுக்கான அந்நிய செலவாணி 9,981 4. புடவை, உடுபுடவைத் தொழில்களிற் கிடைக்கும் உண்மை வருவாய் 7,650
Source; Central BankofCeylon, Annual Report-1989, (Colombo) PP. 134-136.
புடவை, உடுபுடவைகளினாற் கிடைக்கும் உண்மை வருவாயான 7,650 மில்லியன் ரூபாயில், வெளிநாட்டு முதலீடு களுக்காகவும், வெளிநாட்டுச் சிறப்பு நிருவாகிகள் வேதனம் போன்றவற்றிற்காகவும் மேலும் ஒரு தொகை வெளியேறுகின்றது.
66
 

இலங்கையிலே தேயிலைத்.
எனவே, மொத்தப் பெறுமதியில் 40 வீதமே இலங்கைக்கு இதனால் வருவாயாகக் கிடைக்கும் எனக் கணிப்பிட்டால், 1989ஆம் ஆண்டு 7,062 மில்லியன் ரூபாயே இத்துறையில் இருந்து கிடைத்திருக்கும். ஆனால், தேயிலை மூலமோ 13,664 மில்லியன் ரூபாய் வருவாயாகக் கிடைத்துள்ளது.
இலங்கை ஏற்றுமதி செய்யும் புடவைத் தொழிலுக்கான மூலப்பொருட்களுக்கான அந்நியச் செலாவணி, பெட்ரோலிய ஏற்றுமதிகள் இரண்டையும் கழித்துவிட்டுப் பார்த்தால், 1989ஆம் ஆண்டு மொத்த ஏற்றுமதிப் பெறுமதி, 43,772 மில்லியன் ரூபாயாகும். இவ்வருடம் மொத்தத் தேயிலை ஏற்றுமதி மூலம் பெறப்பட்டது 13,644 மில்லியன் ரூபாய்கள். இது 31 வீதமாகும். ஆகவே, இன்றும் தேயிலையே தனி ஒரு ஏற்றுமதிப் பொருளாக முக்கியத்துவம் வகிக்கின்றது என்பதனை மறக்கக் கூடாது. இதுபோன்றே, 1990-ஆம் ஆண்டிலும் ஏற்றுமதி வருவாயினாற் பெறப்பட்ட உண்மை வருவாய் தேயிலை மூலமே முதன்மையாகப் பெறப்பட்டுள்ளது.
− இவற்றைவிட, இலங்கையில் தொழிற்படையில் 10 வீதத் தினரும், விவசாயத் தொழில்களில் ஈடுபட்டுள்ளோரில் 12 வீதத் தினரும் தேயிலைத் தொழிலைச் சார்ந்தவர்களாக இருக் கின்றனர். இலங்கையின் மொத்த விவசாய நிலப்பரப்பிலும் 10 வீதமான நிலப்பரப்பு இப்போது தேயிலைப் பயிர்ச் செய்கைக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே, இத்தகைய முக்கியத்துவம் கொண்ட தேயிலை உற்பத்தியின் போக்கு, இலங்கையில் இன்று திருப்தியற்றதாக இருப்பதனால், அது பற்றிய ஆய்வு அத்தியாவசிய மாகிறது. தேயிலை உற்பத்தி:
இலங்கையில் 1985-ஆம் ஆண்டில் 231,650 ஹெக்டயர் பரப்பிலே தேயிலை பயிரிடப்பட்டது. இது கடல்மட்டத்தில் இருந்து 400 மீற்றருக்கும் மேற்பட்ட நிலப்பகுதியிலேயே சிறப் பாக பயிர் செய்யப்பட முடியும், பயிரிடப்படும் நிலப்பகுதிகளின் உயரத்திற்கேற்பப் பயிரிடும் பகுதிகள் வகைப்படுத்தப்படுகின்றன. 400 மீற்றர் முதல் 900 மீற்றர் வரை-தாழ்நில வளரி (Lowgown). 900 மீற்றர் முதல் 1800 மீற்றர் வரை - இடை நில் வளரி (Medium
67

Page 98
இன்றைய மலையகம்
1800 மீற்றருக்கு மேல் - உயர் நில வளரி (Highgown).
இவ்வாறு வேறுபட்ட உயரங்களிலே தேயிலை பயிரிடப் பட்ட போதிலும், காலநிலையும் தரைத் தோற்றமும் எல்லா இடங்களிலும் சில குறிப்பிட்ட பண்புகளைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
வருடாந்த மழைவீழ்ச்சி 200 மில்லி மீற்றருக்குக் குறையாத தாகவும், வெப்பம் 80 பாகை பாரன் ஹைட்டுக்கு மேற் படாததாகவும் இருத்தல் அவசியம். அத்துடன், நிலமும் மென் சரிவினதாக, மழை நீர் தேங்கி நிற்காமல் வடிந்துவிடக் கூடியதாக இருக்க வேண்டும். ஏனெனில், நெற்ப்யிருக்குப் போன்று நீர் தேங்கி நிற்கக்கூடாது. செடி வளரும் காலத்தில் அழுகி விடலாம். இதனால்தான், தேயிலைத் தோட்டங்களில் இடைக் கிடை கான்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை மண் அரிப் பினைத் தடை செய்யும் ஒரு முறையுமாகும்.
கடந்த பத்தாண்டுக் காலங்களில் இலங்கை தேயிலை உற் பத்தியில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. 1965-ஆம் ஆண்டிலிருந்து 1988-ஆம் ஆண்டுவரை உற்பத்தி மிகவும் வீழ்ச்சி அடைந்தே காணப்பட்டது. (அட்டவணை (18.2) படம் 5).
அட்டவணை 18.2 இலங்கை - தேயிலை உற்பத்தி (மில்லியன் கிலோவில்) (1945-1990).
ஆண்டு உற்பத்தி ஆண்டு உற்பத்தி
I945 I25.6 1978 1989 1950 139.1 1980 1913 1955 I72.5 1982 187.8 1960 197.5 1985 214. 1965 228.6 I986 2.11.3 1970 221.2 1987 213.7 1972 23.9 1988 227.2 1974 204.5 1989 2070 1976 1966 1990 233.0
Source: Central Bank of Shrilanka, Annual Reports-(1945 to 1990).
இத்தகைய வீழ்ச்சி பற்றிச் சிறிது விபரமாகப் பார்க்க வேண்டும். 1975-ஆம் ஆண்டு நிலச்சீர்திருத்தத்தின் பின்னர்
168

இலங்கையிலே தேயிலைத்.
தேயிலை நிலங்கள் பல்வேறு பொது நிறுவனங்களின் நிருவாகத் தின் கீழ் வந்தன. சுதந்திரம் முதல் 1965-ஆம் ஆண்டுவரை தேயிலை உற்பத்தியானது அதிகரித்துக் கொண்டு சென்ற போக் கினையே காணமுடிகிறது. 1972-ஆம் ஆண்டிலும் உற்பத்தி உச்ச நிலைக்கு அண்மையிலேயே இருந்தது. 1946-ஆம் ஆண்டு 125 மில்லியன் கிலோ உற்பத்தி செய்யப்பட்டது. அது படிப்படியாக வளர்ந்து, 1965-ஆம் ஆண்டில் 228.6 மில்லியன் கிலோவாக உயர்ந்திருந்தது.
16üsluâr acar titlth 5
25O. Reikiamas - GSúlannau abuši
99.5
200
175
150
1925
للـلـللسلل لللللل لللللاo
1945 50 55 60 65 70 79 74 76 78 80 89 8s 8s 87 88 89 90
süsalauäur kar (ஆண்டு) Li l-Lib 6
80 kas - Gan ju apst
7O
60
50
O
1985 1988 1987 1988 1989 1990
ஆனால், நிலச் சீர்த்திருத்தத்தின் பின்னர் படிப்படியாக வீழ்ச்சியுற்று, 1982-ஆம் ஆண்டில் 187.8 மில்லியன் கிலோவை வந்தடைந்தது. மீண்டும் 1985-ஆம் ஆண்டோடு உற்பத்தி பெருகி, 1988-ஆம் ஆண்டு 1965-ஆம் ஆண்டு உற்பத்தியை எட்டிப் பிடித்திருந்தது. 1989-இல் 9 வீத வீழ்ச்சியினைப் பெற்றிருந்தது.
இவ்வாறு உற்பத்தி கடந்த 5 ஆண்டுகளில் திருப்திகர மான போக்கினைக் காட்டினாலும், அதில் பொதுத்துறை சார்ந்த தோட்டங்களின் உற்பத்தியில் திருப்தியான உற்பத்தி இல்லை.
169

Page 99
இன்றைய மலையகம்
தனியார் துறையிலேயே உற்பத்தி சிறப்பாக வளர்ந்துள்ளது (படம் 6).
அட்டவணை 18.3 இல் தரப்பட்டுள்ளன. புள்ளி விபரங் களின்படி, இரண்டு பிரதான பொதுத்துறை தோட்டங்களிலும் தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சியினையே காணமுடிகிறது. தனியார் துறையே 1985-ஆம் ஆண்டு உற்பத்தியில் இருந்து 1990-ஆம் ஆண்டில் சுமார் 80 வீத உற்பத்தி அதிகரிப்பினைக் காட்டி யிருக்கிறது. இது சுமார் 41 மில்லியன் கிலோவாகும். எனவே, நாட்டின் மொத்த உற்பத்தியில் ஏற்பட்ட அதிகரிப்புக்குத் தனியார் துறையே பொறுப்பாக இருந்தமையினை நாம் காண முடிகிறது.
அட்டவணை 18.3 இலங்கை - தேயிலை உற்பத்தி நிறுவனங்கள் (1985-1990) (மில்லியன் கிலோவில்)
துறை 1985 1986 1987 1988 1989 1990
மக்கள் |பெருந்தோட்ட 78.5 | 74.5 72.4 73.9 | 69.4 | 72.0
அபிவிருத்தி F6)-
அரச பெருந்தோட்ட 74.9 71.3 66.7 70.1 63.4 67.0
ட்டுத்
ஏனைய 1பொதுத்துறை | 7.4 | 8.0 8.5 9.2
தோட்டங்கள் தனியார் தோட்டங்கள் | 53.3 | 57.5 | 66.2 | 74.0 | 74.0 | 94.0 மொத்தம் 1214.1 211.3 213.8 227.2 206.8 233.0
Source: Tea Bulletin; Vol.8, No.2 and Vol.6, No.2 (1986 and 1988) Central Bank of Ceylon. Annual Report-1990 (Colombo) (1991) P.2. பொதுத்துறையில் இத்தகைய உற்பத்தி வீழ்ச்சியின் காரணமாகத் தொழிலில் நட்டம் ஏற்பட்டுள்ளது. 1985, 1986, 1987 ஆகிய ஆண்டுகளிலே தேயிலை உற்பத்திச் செலவுக்கும், விற்பனை விலைக்குமிடையே உள்ள வேறுபாடு நட்டத்தினையே காட்டுகின்றது (அட்டவணை 18.4).
170

இலங்கையிலே தேயிலைத்.
அட்டவணை 18.4 இலங்கை - பொதுத்துறைத் தேயிலை உற்பத்தியும் விற்பனையும் - (1985-1987)
ஆண்டு மக்கள் பெருந்தோட்ட அரச பெருந்தோட்டக்
அபிவிருத்திச் சபை கூட்டுத்தாபனம்
மொத்த நட்டம் மொத்த மொத்த நட்டம் மொத்தம உற்பத்தி கிலோவுக்கு நட்டம் : ாவுக்கு தட்டம் (மில்லியன்(ரூபாயில்)மி.ரூபாய்)(மில்லியன்(ரூபாயில்)மி.ரூபாய்)
(கிலோ) (கிலோ)
1985 78.5 3.11 244.1
1986 74.5 8.04 || 598.9 || 71.3 3.11 221.7
1987 72.4 4.卫2 排298.2
மொத்தம்
நட்டம் 1141.2 "221.7
Source: Central Bank of SriLanka, Annual Reports from 1985 to
(1987).
மொத்த உற்பத்தி ஓரளவு அதிகரித்திருந்த போதிலும், பொதுத்துறை சார்ந்த தோட்டங்கள் நட்டம் அடைந்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. இது சராசரியாக ஏற்படுகின்ற உற்பத்தியுடன் தொடர்பான பிரச்சினை. இதனையும் நாம் நுணுக்க மாகவே அவதானிக்க வேண்டி உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு விவசாய நிறுவனம் தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளின் உற்பத்தித்திறன் பற்றிய
அட்டவணை 18.5 தேயிலை - விளைச்சல் (தெரிவுசெய்யப்பட்ட நாடுகளில்)
நாடுகள் ஹெக்டருக்குரிய விளைச்சல்
(கிலோவில்)
1978-81 1986 மலாவி 1800 2000 கென்யா I455 1728 இந்தியா 1462 1570 இந்தோனேசியா 丑222 1235 இலங்கை 990 995
171

Page 100
இன்றைய மலையகம்
விபரங்களைத் தந்துள்ளது. அதன்படி பார்த்தால், தேயிலை உற் பத்தித்திறன் சில நாடுகளில் கூடியும், இலங்கையில் மிகக்குறைந்தும் காணப்படுகின்றமை தெளிவாகின்றது. (அட்டவணை 18.5).
இலங்கையில் ஹெக்டயருக்குரிய உற்பத்தி 0.5 சதவீத அதிகரிப்பையே 5 வருடங்களில் பெற்றுள்ளது. ஆனால், ஏனைய நாடுகளில் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. எனவே, உற்பத்தி அதிகரிப்பினும், இன்றைய உற்பத்தி அளவிலும் எந் தளவுக்கு நாம் பின் நிற்கிறோம் என்பதனை அறிய முடிகிறது. உற்பத்தி அதிகரித்தால், நட்டம் ஏற்பட முடியாது. பேராசிரியர் பிரீஸ் என்பவர் சுமார் 85 தோட்டங்களின் ஹெக்டயருக்குரிய உற் பத்தியையும் ஒரு கிலோ தேயிலை உற்பத்திக்கான செலவினையும் (1986) ஒப்பிட்டுப் பார்த்தார். அந்த ஆராய்ச்சியின் முடிவில், ஹெக்டயருக்கு 2700 கிலோ தேயிலை உற்பத்தி செய்த தோட் டங்களில் ஒரு கிலோ தேயிலைக்கான உற்பத்திச் செலவு ரூபா 26/- ஆகவும், ஹெக்டயருக்குரிய உற்பத்தி குறைந்து செல்லச் செல்ல, ஒரு கிலோ தேயிலைக்குரிய உற்பத்தி அதிகரித்துச் சென்று, ஹெக்டயருக்கு 800 கிலோவாக உற்பத்தி குறைந்த தோட்டங் களில் உற்பத்தி செலவு ரூபா 40/- வரை உயர்ந்துள்ளமையினை அவதானித்துள்ளார். எனவே, தேயிலைச் செய்கையில் ஏக்கருக் குரிய உற்பத்தி என்பது மிக முக்கியமான விஷயமாகும்.
உற்பத்தி வீழ்ச்சிக்கு, நிலச்சீர்திருத்தம் காரணமாக, அதனை அடுத்து வந்த் வருடங்களிலே தோட்டங்கள் ஒழுங் காகக் கவனிக்கப்படாமை ஒரு காரணம் என்றும் சிலர் கூறுவதனைக் கேட்கலாம். ஆனால் அந்தப் பாதிப்பு கடந்த 15 வருட காலமாகத் திருத்தப்படாமையினை நாம் நியாயப்படுத்த முடியாது.
எனவே, குறைந்த உற்பத்தியுடன் "மையக்குழு அறிக்கை" குறிப்பிட்டுள்ளபடி, நிருவாகத் திறமையின்மை, ஊழல்கள், மூலவளவிரயம், கூடிய செலவினங்களைக் கொண்ட திறமையற்ற முகாமைத்துவம் என்பன பொதுத்துறைத் தேயிலை தோட்டங் களின் நட்டத்திற்குக் காரணமாகின்றன. தேயிலை உற்பத்தி எம்மைப் பொறுத்தமட்டில் முக்கியமானது.
1. நமக்குத் தேயிலைத் தொழிலில் சிறந்த அனுபவம்
ஏற்பட்டுள்ளது. 2. ஏற்கெனவே பல கோடி ரூபாய்கள் இத்தொழிலில்
முதலிடப்பட்டுள்ளது.
172

இலங்கையிலே தேயிலைத்.
3. இலட்சக்கணக்கான மக்கள் இதனை நம்பி வாழ்கின்றனர். 4. பல இலட்சக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில்
இப்போது தேயிலை விளைகிறது. 5. அந்நிய நாட்டுச் சந்தை இருக்கிறது. இவையாவற்றையும் விட, 1980-ஆம் ஆண்டு வெளியான "தேயிலை முதன்மைத் திட்டம்” ஒரு முக்கிய கருத்தினை வெளியிட்டுள்ளது. 1977-ஆம் ஆண்டில் ஒரு ஹெக்டேர் நிலத் தில் விளையும் தேயிலையின் பெறுமதியானது, ஏனைய பயிர்களை விளைவித்தால் கிடைக்கும் வருவாயைவிட 3 முதல் 5 மடங்கும் வரை அதிகமானது என அது கூறுகிறது. அட்டவணை 18.6 இல் இதற்கான உதாரணங்கள் தரப்பட்டுள்ளன.
அட்டவணை 18.6 இலங்கை - ஒரு ஹெக்டயர் தேயிலை நிலத்தின் விளைச்சலுக்குச் சமமான ஏனைய உற்பத்திகள்.
பயிர் நிலப்பரப்பு חוףuו_ו
நெல் 6.0 ஹெக்டயர் இறப்பர் 3.1 ஹெக்டயர் தென்னை 5.6 ஹெக்டயர்
Source: Tea Master Plan, (1980) Vol.II P.19.
அட்டவணையில் (18.6) காட்டியுள்ளபடி, ஒரு ஹெக்டயர் தேயிலைப் பயிரின் உற்பத்தியானது 6.0 ஹெக்டயர் நிலப் பரப்பிற் பயிரிடப்படும் நெல்லின் பெறுமதி, அல்லது 3.1 ஹெக் டயரிற் பயிரிடும் இறப்பரின் பெறுமதி, அல்லது 5.6 ஹெக் டயரில் பயிரிடும் தென்னைக்குச் சமமானதாக 1977-ஆம் ஆண்டில் இருந்துள்ளது.
எனவே தேயிலைப் பயிர்ச்செய்கை நிலத்தின் உற்பத்தித் திறனைப் பொறுத்தும் அதிக வருவாயைத் தருகின்ற தொழிலாக இருக்கின்றது. நாட்டின் இன்றைய பொருளாதார நிலை, அதில் தேயிலை வகிக்கும் முக்கிய பங்கு, அத்தொழிலில் பெருமளவு தொழிலாளர் தங்கியுள்ளமை போன்றவனவும், மற்றும் அதுவே பயிர்ச்செய்கையில் விவசாயிக்குக் கூடிய வருவாயை அளிக்கும் பயிராகக் காணப்படுகிறது என்பன போன்ற பல்வேறு காரணங் களையும் பொறுத்து, இத்தொழிலுடன் தொடர்புபட்ட அனைவரும் அதன் வெற்றிகரமான செயல்பாட்டில் அக்கறை செலுத்த வேண்டியுள்ளது.
173

Page 101

பெருந்தோட்டங்கள்.
19. பெருந்தோட்டங்கள் தனியார்
மயமாக்கம்
நாகரிகங்கள் தோன்றிய காலம் முதலாகவே காலத்திற்குக் காலம் சமூகங்களின் அரசியல், சமூக, பொருளாதார அமைப்புக் களில் மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. மக்கள் தாம் கண்ட அனுபவங்களின் அடிப்படையிலே தமக்கு ஒவ்வாத அல்லது பயனில்லாத அமைப்புக்களை நிராகரித்துள்ளனர். மான்ய முறைச் சமுதாயம், முடியாட்சி, முதலாளித்துவம், கலப்புப் பொருளாதாரம், கம்யூனிச சோஷலிச அமைப்புப் போன்ற வேறுபட்ட அமைப்புகளில் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். ஒவ் வொரு அமைப்பிலும் அவர்கள் கண்ட அனுபவங்கள் காரணமாக, மாற்றங்களை எதிர்நோக்கியதால், மாற்று அமைப்பு முறைகள் தோற்றம் பெற்றன. நீண்ட காலத்திற் பல்வேறான அமைப்புக்கள் உலக சமுதாயங்களிலே தோற்றமுற்றன. அதே நேரத்தில், ஒரு சிலவற்றைத் தவிர்த்து ஏனைய அமைப்புக்கள் இன்று உலக நாடுகள் யாவற்றிலும் நிலவுகின்றன. எனவே, ஏன் அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டன? இத்தகைய மாற்றங்களின் முக்கியத்துவம் யாது? இலங்கையில் ஏற்பட்டுள்ள அமைப்பு மாற்றங்களுக்கான காரணங்கள் யாவை? இப்போது பல மட்டங்களிலும் விவாதிக்கப்படும் பொருளாதார அமைப்பில் ஏற்படும் மாற்றங்களுக்கான காரணங்கள் என்ன? இவற்றின் விளைவுகள் யாதாயிருக்கும்? என்பது பற்றிச் சில கருத்துக்களை ஆராய்வதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.
175

Page 102
இன்றைய மலையகம்
நாடுகளில் நிலவி வந்த அரசியல், பொருளாதார, சமூக அமைப்பு முறைகள் என்பன மக்களின் தேவைகளையும், அபிலாஷைகளையும் பூர்த்தி செய்யயத் தகுதியற்றவை என மக் களால் உணரப்படும் போது, அவ்வமைப்பு முறைகள் நிராகரிக் கப்படுகின்றன. இது இயல்பாகச் சமூக, பொருளாதாரப் போக் கில் ஏற்படும் மாற்றங்களாகப் பரிணமிக்கலாம். அல்லது, தலைமைத்துவம் உருவாக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாற்றத்தினை ஏற்படுத்தலாம். உதாரணமாக, கைத்தொழிற் புரட்சி ஏற்பட்டு, இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், ஐரோப்பிய நாடுகள் பலவற்றிற் கைத்தொழிலாக்கம் ஏற்பட்டு ஒரு முதலாளித்துவ முறை நிலையாக ஸ்தாபிக்கப்பட்டது. 1907-ஆம் ஆண்டு முதல் 1917-ஆம் ஆண்டு வரை ஏற்பட்ட மாற்றங்கள் ரஷ்யாவிற் சோசலிச பாணியிலான பொருளாதார அமைப்பை உருவாக்கிற்று. 1949-ஆம் ஆண்டிலிருந்து சீனாவிற் கம்யூனி சத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார அமைப்பு உருவாக்கப் பெற்றது. பல குறைவிருத்தி நாடுகள் குடியேற்ற நாடுகளாக இருந்து சுதந்திரம் அடைந்ததன் பின்னர், பெரும் பாலும் கலப்புப் பொருளாதார அமைப்பினையே ஏற்றுக் கொண்டன. சில நாடுகள் இராணுவ ஆட்சியினைக் கொண்டிருந் தாலும், அங்கும் கலப்புப் பொருளாதார நடவடிக்கைகளே பெருமளவிற் காணப்படுகின்றன. இவ்வாறு ஏற்பட்ட மாற்றங் களால் மக்களுடைய வாழ்க்கை முறைகளிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. கம்யூனிச, சோஷலிச நாடுகளைத் தவிர்த்து, ஏனைய நாடுகள் யாவும் அநேகமாக கலப்புப் பொருளாதார அமைப்புக்களையே கொண்டுள்ளன. முதலாளித்துவ நாடுகள் எனப் பொதுவாகக் கருதப்படும் பிரான்ஸ், இத்தாலி, சுவீடன், ஆஸ்திரேலியா, பிரித்தானியா போன்ற நாடுகளிலும் பொதுத் துறைத் தொழில் முயற்சிகள் உள்ளன. பிரேசில், பாகிஸ்தான், போர்த்துக்கல் போன்ற இராணுவ ஆட்சி நாடுகளிலும், தனியார், பொதுத்துறை தொழில் முயற்சிகளும் உள்ளன. எனவே, இன்றைய பொருளாதாரம் பெரிதும் கலப்புப் பொருளா தாரமாகவே உள்ளது. இதற்குக் காரணம், தனியே ஒரே சித்தாந்தத்தின் கீழ்ப் பொருளாதாரம் இயங்க முடியாதென்பது உணரப்பட்டமையே ஆகும்.
கடந்த 20 வருடங்களிற் பொருளாதார அமைப்புக்களின் பண்புகள் பற்றி விவாதங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அபிவிருத்தி யடைந்த நாடுகள் சிலவற்றிற் பொதுத்துறை சார்ந்த பொருளா
176

பெருந்தோட்டங்கள்.
தார முயற்சிகள், திறமையின்மை காரணமாக நட்டமுற்றதால், அரசின் செலவினங்கள் அதிகரித்தன. அத்துடன், அந்நாடுகளில் செலாவணியின் பெறுமதியிலே தளம்பல்கள் ஏற்பட்டமை, பொருளாதாரங்களின் மந்தப்போக்கு என்பன அவற்றின் சிந்தனையிலும், பொருளாதார அமைப்பு முறையிலும் மாற்றங் களைக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணங்களுக்கு இடம் கொடுத்தது. குறிப்பாக, பிரதான சந்தைப் பொருளாதார நாடுகள் சிலவற்றில் இருந்தே தனியார் மயமாக்கம் குறித்து உந்துவிசை தோற்றமுற்றது எனலாம்.
1985 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க நாட்டின் திறைசேரிச் செயலாளர் நாயகம், நாடுகளின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்கவும், பொருளாதாரத் திறமையினை ஏற்படுத்தவும் வர்த்தகத் தாராளமயக் கொள்கையும், தனியார் துறையினை வளர்த்தலும் அத்தியாவசியமாகும் என்று குறிப் பிட்டமை இங்கே கவனிக்கத்தக்கது. விருத்தி பெற்ற நாடுகள் மாத்திரமன்றி, இப்போது பொருளாதார மந்தம், அந்நிய கடன் நெருக்கடி, வேலையில்லாப் பிரச்சினை, பணவீக்கம், தொழில்கள் ஆரம்பிக்கப் போதிய முதலீடு இன்மை போன்ற பல பிரச்சினை களைக் கொண்ட குறைவிருத்தி நாடுகளும் கூடத் தமது பொருளாதாரத்தில் வர்த்தகத் தாராள மாக்கத்தினையும், தனியார் துறையினை ஊக்குவித்தலையும் மேற்கொண்டுள்ளன. குறிப்பாக இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இத்தகைய மாற்றங்கள் இடம் பெற்று வருகின்றமை, நமது சிந்தனையைத் தூண்டும் முக்கிய சம்பவங்களாகும்.
முன்னர் கூறிய பொருளாதார நெருக்கடிகளே இந்நாடுகளிற் பொருளாதார அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் முக்கிய காரணங்களாகும். இந்நாடுகளில் அரசாங்கங்கள் மாற்றம் பெற்றுள்ளன. முன்னைய அரசுகள் பொருளாதார அமைப்புக் களிற் செய்த சில மாற்றங்களையும், அவற்றினால் ஏற்பட்ட குறைபாடுகளையும் இவை திருத்தி அமைக்க முயல்கின்றன. குறிப்பாக, இலங்கையை எடுத்துக்கொண்டால், அங்கே 19561977 வரை ஒரு மூடிய பொருளாதார அமைப்பே பெரிதும் காணப்பட்டது. உள்நாட்டுத் தொழில் முயற்சிகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக, மூடிய பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையிலான மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது. தேசிய மயூழாக்கம். இறக்குமதிக் கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகள் பெரிதும் இடம் பெற்றன. مح۔
177
12

Page 103
இன்றைய மலையகம்
இவற்றின் விளைவுகள் யாவை? 1977 ஆம் ஆண்டோடு ஏற்பட்ட அரசின் புதிய திறந்த பொருளாதாரக் கொள்கையின் நோக்கங்கள் என்ன என்பதனை நாம் விளக்கமாக ஆராய வேண்டும்.
1976 ஆம் ஆண்டில் 10 இலட்சம் பேரும் (20%), 1982-ல் 11 லட்சம் பேரும் (16%) இலங்கையிலே தொழில் அற்ற வர்களாக இருந்தனர். 16 வீதமானோர் தொழிலற்றிருப்பது அரசுக்குப் பெரும் சுமையாகும். இவர்களுக்குத் தொழில் வாய்ப் புக்கள் தேவை. 1978 ஆம் ஆண்டில் தொழிலற்றிருந்தவர்களில் 60 வீதமானோர் 10 ஆம் வகுப்புக்கு மேற் கல்வி கற்றவர்கள் இன்னும் 20 வீதமானோர் எட்டாம்வகுப்பு வரை கல்விகற்றவர்கள். மொத்தப்பெண் தொழிலாளர்களில் 26 வீதமானோரும், 10 வீதமான ஆண்களும் தொழிலற்று இருந்தனர். இவர்களுக்குத் தொழில் வழங்க வேண்டும்.
அந்நிய கடன் சுமை, நாட்டில் ஏற்பட்ட பணவீக்கம் என்பனவும், அதே நேரத்தில் ஒருசில தனியுரிமை கொண்ட பெற்றோலியச் சுத்திகரிப்பு, மதுபான சுத்திகரிப்புப் போன்றவை தவிர்ந்த அனைத்துப் பொதுத்துறை சார்ந்த தொழில் முயற்சி களும் நட்டத்திலேயே இயங்கின. தவிரவும், வருடாந்தம் அவை பெற்ற நட்டங்களைச் சமாளிக்க அரசு மானியங்களை வழங்க வேண்டியிருந்தது. பஸ்சேவை, புகையிரத சேவை, பெருந்தோட்டங்கள், நூற்றுக்கணக்கான கைத்தொழில் கூட்டுத் தாபனங்கள் யாவும் ஒன்றில் இலாபம் இல்லாமலோ அல்லது நட்டத்திலோ இயங்கின. வருடாந்தம் இத்தொழில்களுக்கு மானியம் வழங்குதல் இலங்கை போன்ற நாடுகளாற் சமாளிக்க முடியாத ஒன்றாகும். அதே நேரத்தில், அரசாங்கத்திலே தொழில் புரியும் பெரும்பான்மை ஊழியர்கள் கீழ்ப்பட்ட வேதனங் களையே பெற்றுவந்தனர் என்பதும் கண்கூடு. தென்னாசிய நாடுகளிற் பங்களாதேஷ் தவிர்த்த எனைய நாடுகளுடன் ஒப்பிடு கையில், இலங்கையிலேயே அரசு ஊழியர்களின் வேதனங்கள் மிகவும் தாழ்ந்ததாக உள்ளது. எனவே, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மேற்கொள்ளும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்குப் பல கோணங்களிலும் இடையூறுகள் காணப்பட்டன.
இந்நிலையில், தொழில்களை உருவாக்க அந்நிய நாடு களிலிருந்து முதலீடுகளைக் கவருவதற்காகப் பல ஏற்பாடுகளைச் செய்ய வேண்டி ஏற்பட்டது. அதன் விளைவுதான், பாரிய கொழும்புப் பொருளாதார ஆணைக்குழுவின் (1978) தோற்ற மாகும். அத்துடன், பொதுத்துறை முயற்சிகளுக்கு அரசு வழங்கும்
178

பெருந்தோட்டங்கள்.
நட்டங்களுக்கான மான்யப்பிரச்சினையைத் தீர்க்கவே பஸ் போக்குவரத்து போன்றவை மக்கள் மயமாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, பல்வேறு அரச கூட்டுத்தாபனங்களும், தொழில் முயற்சிகளும் தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றன. இதில் பெருந்தோட்டத் தனியார் மயமாக்கம் நாட்டின் பொருளாதாரத்தைப் பொறுத்தும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
நிலச்சீர்திருத்தம்:
1972 ஆம் ஆண்டிற்கு முன்னர் தனியார்துறையின் கீழ்ப் பெருந்தோட்டத்துறை நிருவகிக்கப்பட்டது. நிலச்சீர்திருத்தச் சட்டம் காரணமாக 50 ஏக்கருக்கு மேற்பட்ட பெருந்தோட்ட உடமைகள் அரசினால் கையேற்கப்பட்டு, இரண்டு பெரிய அமைப்புக்களால் நிருவகிக்கப்பட்டு வந்தன. கடந்த 20 ஆண்டு அனுபவங்களின் முடிவில் இந்நிருவாகம் பெரும்பாலும் நட்டத்தி லேயே இயங்கி வந்திருப்பதாக அறிய முடிகின்றது. திறைசேரி ஏறத்தாழ 1,000 கோடி ரூபாவை இந்நிறுவனங்களுக்கு மானிய மாக வழங்க வேண்டி ஏற்பட்டது. 20 வருடகால நட்டங்களும், உற்பத்தி வீழ்ச்சியும் இலங்கையின் பொருளாதாரத்திற்கு 5,000 கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்தியிருக்கலாம் எனக் கருதப் படுகின்றது.
1965 ஆம் ஆண்டு இலங்கையின் தேயிலைத் தோட்டங்கள் யாவும் 228 மில்லியன் கிலோ தேயிலையை உற்பத்தி செய் திருந்தன. 1988 ஆம் ஆண்டில் இது மீண்டும் 207 மில்லியன் கிலோவாகக் குறைந்தது. குறைந்தபட்சம் இரண்டு வீத அதிகரிப்பு வருடாந்தம் ஏற்பட்டிருந்தாலும், இன்று குறைந்தது 280 மில்லியன் கிலோவை எட்டியிருக்க வேண்டும். 1962-1963 ஆம் ஆண்டுகளிலும், 1964-1965 ஆம் ஆண்டுகளிலும் வருடாந்தம் 4% உற்பத்திப் பெருக்கம் காணப்பட்டிருந்தமையினை நாம் இங்கே நினைவு கூறுவது பொருத்தமாகும். இத்தகைய உற்பத்தி வீழ்ச்சிக்கு, அரசு தரப்பில் இக்காலப் பகுதியிற் (1972-92) பெருந் தோட்ட அமைச்சர்களாகப் பதவி வகித்த மூவருமே நிருவாக கரழல்கள், திறமையின்மை என்பவற்றை முக்கிய காரணங்களாக எடுத்துக் கூறுகின்றனர்.
அடுத்து, தொழிலாளர் தரப்பில் ஏற்பட்ட 20 வருட அனுபவங்களை எடுத்துப்பார்ப்போம். நிலச்சீர்திருத்தத்தின் அடிப்படை நோக்கங்களில் உற்பத்தித்திறன் அதிகரிப்பு முதலா வதாகும். இரண்டாவது, நிலமற்ற விவசாயத் தொழிலாளர்
179

Page 104
இன்றைய மலையகம்
களுக்கு நிலமளித்து, அவர்களுடைய சமூக அந்தஸ்தினை உயர்த்தி, ஒரு சமத்துவமிக்க சமூக அமைப்பினை உருவாக்குவதாகும். உலகெங்கும் இவையே நிலச்சீர்திருத்தத்தின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளன. ஆனால், இலங்கையைப் பொறுத்தமட்டிலே, தொழிலாளர்கள் இதனைப்பெற்றுக் கொள்வதிற் (அவர்களுக்கு எதிராக) குடியுரிமையின்மை போன்ற அம்சங்கள் செயற்பட்டன. இப்போது இது 1988 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின் மூலம் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு இலங் கையின் பிரதான தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முயற்சியே காரணமாகும். எனவே, இக்காலப் பகுதியின் சாதனைகள் தொழிற்சங்க விளைவுகளேயொழிய, நிலச்சீர்திருத்தத்தால் ஏற்பட்ட விளைவுகள் அல்ல. தோட்டப் பாடசாலைகளும் அண்மையிலேயே அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
அரச ஊழியர்களாகத் தோட்டத் தொழிலாளர்கள் கருதப்படவில்லை. அரசினது வீட்டு வசதி அபிவிருத்தி உபாயங் களைத் தொழிலாளர் நலனுக்காகப் பயன்படுத்துவதில் அரசினது இரண்டு பெருந்தோட்ட நிறுவனங்களும் போதிய அக்கறை காட்டவில்லை. இன்னும் தோட்ட மருத்துவமனைகள் அரசாங் கத்தாற் பொறுப்பேற்கப்படவில்லை. எனவே, பெருந்தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்து, நிலச்சீர்திருத்தத்திற்கு முன்னர் இருந்த நிலையிலிருந்து எதுவித பெருமாற்றமும் அவர்களது முன்னேற்றம், வாழ்க்கைத்தர உயர்வு, ஆகியவற்றை பொறுத்து ஏற்படவில்லை. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முயற்சி யாலேயே கல்வித்துறையிற் சிறிதளவு வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன.
பெருந்தோட்டங்களை மீண்டும் தனியார் மயமாக்கம்:
உற்பத்தியினைப் பெருக்கத் தனியார் மயமாக்கல் சாதக மாக அமையும் என்பது ஒரு அபிப்பிரயமாகும். இப்போது 50 ஏக்கருக்கும் குறைந்ததான தனியார் தேயிலைத் தோட்டங்கள் 30 வீதத்திற்கும் மேலான உற்பத்தி அதிகரிப்பினைக்காட்டிநிற்கின்றன. எனவே தனியார்துறை முகாமைத்துவத்தினைப் பெருந் தோட்டங்களில் ஏற்படுத்தினால் உற்பத்தியினைப் பெருக்கலாம் என்பது ஒரு சிந்தனை ஆகும். இது சாத்தியமா? இது தொழிலாளர் களைப் பொறுத்து நன்மைபயக்குமா? இவற்றை நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.
180

பெருந்தோட்டங்கள்.
உற்பத்தித் திறனை அதிகரித்தல்:
நிச்சயமாக உற்பத்தி அதிகரிக்கும் என நம்ப இடமுண்டு. ஏனெனில், தனியார் முதலீட்டிற்கு இலாபம் இல்லாவிடில் அவர்களால் உடன் நடவடிக்கை எடுக்கப்படும். தவிர, சொந்த முதலீட்டில் அக்கறை, ஆர்வம் என்பன நிச்சயமாக அதிகம். எனவே, இலாபம் அதிகரிக்க உற்பத்தியினை அதிகரிப்பதில் நிர்வாகம் ஆர்வம் காட்டுவது இயல்பாக அமையும். அதற்கு விவசாய முயற்சிகளைப் பயன்படுத்தல், உப விவசாய நடவடிக் கைகளை நிறுவன ரீதியாக மேற்கொள்ளல் என்பன எதிர்பார்க்கப் படுகின்றன. காய்கறி, பூ, மந்தை, பால்மாடு வளர்த்தல், பழமரங்களை வளர்த்தல் என்பன மூலம் நிச்சயமாகத் தோட்டங் களின் உற்பத்தித்திறன் அதிகரிக்கப்படும். உற்பத்தித்திறனை அதிகரிப்பதிலே தொழிலாளர் அக்கறை கொண்டுள்ள அதே நேரத்தில், அவர்களுடைய நலன்களும் பாதுகாக்கப்படுதல் அவசியம்.
தொழிலாளர் நலன்:
உற்பத்தியினை அதிகரிப்பதற்காக மேற் கொள்ளப்படும் இம்முறைகள் காரணமாகத் தொழிலாளர் நலன் புறக்கணிக்கப் படக்கூடிய ஆபத்துண்டு. தொழிற்சங்கங்கள் மிகவும் கவனமாகச் செயற்பட வேண்டிய தேவை உருவாகியுள்ளது. இதற்காகப் பின்வருவன தொடர்பாக இப்போதே அரசாங்கத்திடம் உத்தர வாதம் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்:
1. தொழிற்சங்க நடவடிக்கைகள் முழுச்சுதந்திரத்துடன் இயங்கத் தேவையான உத்தரவாதம். இதில் இப்போது அங்கத்துவ சந்தா (Check Of) பெறும் முறை போன்றன மிக முக்கியமாகும்.
2. தோட்ட நிர்வாகத்தில், தொழிலாளர் நலனைப் பொறுத்த விடயங்களிலே, தொழிலாளர்களின் பிரதி நிதிகளின் பிரதிநிதித்துவம் தொடர வேண்டும். தொழிலாளர் விடுதிகளும், வீட்டு வசதிகளும்:
தொழிலாளரின் வீட்டு வசதியை பொறுத்தவரையில், இனிமேல் அவை கூட்டுறவு அமைப்புக்கள் மூலமும் பிரதேச சபையின் கீழும் நிர்வகிக்கப்படும் எனக்கூறப்படுகிறது. இதன் பிரகாரம், நீர் வழங்கல், மின்சார வசதி, கழிவகற்றல்
18

Page 105
இன்றைய மலையகம்
போன்றனவும், மற்றும் அணுகும் வீதிகள் பராமரிப்பு என்பனவும் பிறிதொரு அமைப்பினற் கவனிக்கப்படும் என அனுமானிக்க இடமுண்டு.
1981 ஆம் ஆண்டிற் பெருந்தோட்டங்களில் 217,451 வீடுகள் இருந்தன. இவற்றை 1971 ஆம் ஆண்டில் இருந்த 237,588 வீடுகளுடன் ஒப்பிடுகையில், 20,000 வீடுகளின் வீழ்ச்சி யினைக் காணமுடிகின்றது. மார்கா நிறுவனம் செய்த ஓர்ஆய்வு இதனைக் கூறுகின்றது (1986). இது பற்றியும் நாம் கவனமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது.
கடந்தகால அனுபவங்களில் இருந்து, பல விடயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. மலையகத் தமிழ் மக்கள் 375,000 பேருக்கு இலங்கைக் குடியுரிமை வழங்க அரசு 1964-ஆம், 1974-ஆம் ஆண்டுகளிலேயே ஒத்துக்கொண்ட போதிலும், 1988 ஆம் ஆண்டுவரை அவர்கள் இழுத்தடிக்கப்பட்டனர். சான்றிதழ்கள் வழங்கும் முறை தொடர்ந்தால், இன்னும் 20 வருடங்கள் ஆனாலும் அவர்கள் அனைவருக்கும் குடியுரிமை நடை முறைப் படுத்தப்பட்டிராது.
எனவே, கடந்த கால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, பிரதேசியசபைகள் இக்குடியிருப்புகளைப் பொறுப் பேற்பதனையும், பெருந்தோட்ட வீட்டுக்கூட்டுறவு அமைப்புக் களை ஏற்படுத்துவதனையும் ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள ஏற்ற நடவடிக்கைகள் தேவை. இவற்றை நடைமுறைப் படுத்தக் கிராமங்களிற் காணப்படுவது போன்ற நலன்புரி சங்கங்களைப் பெருமளவில் ஒவ்வொரு தோட்டத்தலும் அமைக்க வேண்டும். அவற்றில்.
1. சமய நடவடிக்கைச் சங்கம். உதாரணமாக இந்து சமய
சங்கம். மொழி நடவடிக்கைச் சங்கம் - தமிழ்ச்சங்கம். விளையாட்டுச் சங்கம். நூல் நிலையச் சங்கம். வீட்டுத் தோட்ட விவசாயச் சங்கம். . நுகர்வோர் சங்கம்.
மரண நலன்புரிச் சங்கம். . இசைச் சங்கம்.
நாடகச் சங்கம்.
182

பெருந்தோட்டங்கள்.
போன்ற பல்வேறு சங்கங்களை ஒழுங்குமுறையாக அமைத்து, அதன்மூலம் தோட்டக்குடியிருப்புகளிலும் கிராமியப் பண்புகளையும், மக்கள் நலன் பேணும் நடவடிக்கைகளையும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
பிரதேச சபைகளைப் பொறுத்து, அவற்றின் அதிகாரம் தோட்டங்களையும் உள்ளடக்குவதால், தோட்டக் குடியிருப்பு களின் நலன்களைப் பேணுவதிலும், அவற்றை நிர்வகிப் பதிலும் கூடிய ஆர்வத்தினை அவை செலுத்துகின்றனவா என் பதனைப் பிரதேசசபை அங்கத்துவர்களும், ஏனைய மட்டங் களிற் செயற்படும் மக்கள் பிர்திநிதிகளும் ஊர்ஜிதப்படுத்த வேண்டியுள்ளது. இதற்குக் கிராம சேவகர்கள், பிறப்பு, இறப்பு பதிவாளர்களின் ஒத்துழைப்பு பெருமளவிற்குத் தேவைப்படு கின்றது. இவற்றைவிட, தோட்ட மருத்துவ மனைகளை அரசாங்கம் பொறுப்பேற்கச் செய்வதும் உடனடித் தேவைகளில் ஒன்றாக உள்ளது. இதற்கான செயற்திட்டங்கள் தேவை.
Cuplg6/60) Ji
105 வருட தனியார் நிர்வாகத்தின் போது தொழிலாளாரது நலன்கள் திருப்தியாகக் கவனிக்கப்படவில்லை. அதுபோன்றே, கடந்த 20 வருட பொதுத்துறை நிர்வாகத்திலும் தொழிலாளர் நலன்கள் திருப்திகரமாகப் பாதுகாக்கப்படவில்லை. பெற்றுக் கொண்ட சில நலன்கள் தொழிற்சங்க ரீதியிலான ஒற்றுமை யினாலும், அதனால் ஏற்பட்ட பலத்தினாலும் பெறப்பட்டன வாகும். குடியுரிமை, சமசம்பளம் போன்றவை அவ்வாறாகப் பெறப்பட்டனவாகும். எனவே, நலன்கள் உறுதிப்படுத்தவல்ல பேரங்களும், நடவடிக்கைகளுமே தொழிலாளர் நலன்களைப் பாதுகாக்க வல்லவை. தொழிலாளர் அமைப்புக்களின் உறுதிமிக்க தொடர்ச்சியான முயற்சிகளே அம்மக்களின் நலன்களைப் பாதுகாக்கக்கூடிய உபாயங்களாகும். உறுதி மொழிகளையும், சட்டங்களையும் அரசியற் பேரங்களினால் பெற்றுக்கொள்ள முடியும். அவற்றை அமுலாக்கம் செய்வதில் மக்களுடன் அன்றாடம் தொடர்பு கொண்டுள்ள மக்கள் பிரதிநிதிகளினது பங்கு மிக முக்கியமானது. அதுவே அவர்களது கடமையுமாகும்.
ప్రశీఖం
183

Page 106

இலங்கையின்.
20. இலங்கையின் பெருந்தோட்டங்களைத் தனியார் மயப்படுத்தலும் தொழிலாளர் நலன்களும்*
இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என வர்ணிக்கப்பட்டு வந்த பெருந்தோட்டப் பொருளாதாரத்தின் தலைவிதியானது, 1972 ஆம் ஆண்டு நிலச் சீர்திருத்தத்தின் போது ஒருமுறை திருத்தியமைக்கப்பட்டது. இப்போது இருபது வருடத்தின் பின்னர் அரசினது திறந்த பொருளாதாரக் கொள் கையின் பின்னணியில், அதனை மீண்டும் மாற்றி அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய மாற்றம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு நன்மையினை விளைவிக்கக்கூடிய ஒரு நடவடிக்கையா? தொழிலாளரது நலன்களை இது புறக்கணிக்குமா? பெரும்பான்மையினத்தவரது நன்மைகள் புறக்கணிக்கப்படுமா? இவ்வாறெல்லாம் அவரவர் ஆர்வத்தினைப் பொறுத்துத் தேசியமட்டத்தில் இப்போது பல்வேறு விவாதங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
பிரித்தானியர் இற்றைக்கு 125 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் தேயிலை பயிர்ச் செய்கையினை அறிமுகப் படுத்தினர். சில உள்ளுர் நிலவரங்கள் அப்பயிர்ச் செய்கையின் பொருளாதார சுபீட்சத்திற்கு ஏற்றதல்லாது காணப்பட்டதால், இந்தியாவிலிருந்து தொழிலாளர்களைக்கொண்டு வந்து பயிர்ச்
* இக்கட்டுரை "வீரகேசரி" பத்திரிகையில் 153.92இல் பிரசுரிக்கப்பட்டது.
185

Page 107
இன்றைய மலையகம்
செய்கையினை விருத்தி செய்தனர். இவ்வாறு கொண்டுவரப்பட்ட இந்தியத் தொழிலாளர்களதும் அவர்களது சந்ததியினரதும் எண்ணிக்கை 1964 ஆம் ஆண்டளவில் இலங்கையில் பத்து லட்ச மாக இருந்தது. இவர்களில் மிகப் பெரும்பான்மையினர் தேயிலை, இறப்பர் தோட்டங்களிலேயே அப்போதும் தொழி லாளராகப் பணிபுரிந்து வந்தனர். அப்போதைய காலகட்டத்தில், இவர்களுக்கு இந்நாட்டுக் குடியுரிமை இல்லாது இருந்ததால், நிலம் வாங்கவோ, உயர்கல்வியை மேற்கொள்ளவோ, அரசாங்க உத்தியோகங்களுக்குச் செல்லவோ, வியாபார, தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ உரிமையிருக்கவில்லை. இவர்களின் சராசரி வாழ்விட வசதி 180 சதுர அடிக்கொண்ட லயன் காம்பிராக்களும், அதில், சராசரியாக 5.4 பேர் வாழும் நிலைமைகளும் காணப்பட்டன. குழந்தைகள் மரண வீதம், இவர்கள் பெரும்பான்மையாகக் காணப்பட்ட நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி மாவட்டங்களிலேயே கூடுதலாகக் காணப் பட்டது. வாழுங்காலம், கல்வித் தகைமைகள், போஷாக்குணவு நுகர்ச்சி போன்றவற்றில் இத் தொழிலாளர்கள் இலங்கையின் சராசரியைவிட மிகக் குறைந்த நிலையிலேயே காணப்பட்டனர். இத்தகைய ஒரு காலகட்டத்தில் (1972) பெருந்தோட்ட பயிர்ச் செய்கையில் 50 ஏக்கருக்கு மேற்பட்ட உடைமைகள் யாவும் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டன. சுமார் 15-க்கு மேற்பட்ட பொது அமைப்புகள் சுவீகரிக்கப்பட்ட நிலங்களின் நிருவாகத் தைப் பொறுப்பேற்றன. பின்னர், அவை இரண்டு பாரிய அமைப்புக்களான மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபை, இலங்கை அரசாங்கப் பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் நிருவாகத்தின் கீழ்க் கொண்டு வரப்பட்டன. அப் போது நிலச் சீர் திருத்தத்தின் பிரதான நோக்கங்கள் இரண்டாக இனங்காணப்பட்டன. ஒன்று, தோட்டங்களில் உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்தல். இரண்டாவது, நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களை ஊக்குவித்து, நிலம் வழங்கி, அவர்கள் மத்தியில் பொருளாதார சமூக சமத்துவ நிலைமைகளை உருவாக்கு வதாகும். வெளிநாட்டார் இலாபங்களைத் தம் நாட்டிற்கு எடுத்துச் செல்லுதலைத் தடை செய்தல் போன்றனவும் நோக்க மாக இருந்தாலும், அரசியல் தலைவர்களின் கவனத்தில் முதலிரண்டு நோக்கங்களே பிரதானமாக இருந்தமையினை நாம் இங்கே அசட்டை செய்யலாகாது.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பொருளாதார, சமூக சமத்துவங்களைக் கொண்டுவர ஏற்பட்ட நிலச்
186

இலங்கையின்.
சீர்திருத்த நடவடிக்கையின் முதல் படியிலேயே, 1972 ஆம் ஆண்டளவில் குறிப்பாக கம்பளை, புஸ்ஸல்லாவை ஆகிய பகுதிகளை அடக்கிய 26,000 ஏக்கர் தேயிலைத் தோட்டங்களில் தொழி லாளர் மத்தியில் பெரும் விரக்தியினை உருவாக்கியது. ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் தோட்டங்களில் இருந்து விரட்டப் பட்டதோடு, சில தோட்டங்களில் அவர்களுடைய வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு அவர்கள் அண்டைய நகரங்களிற் பிச்சைக் காரர்களாயினர். இவற்றைவிடச் சமூக, பொருளாதார சமத் துவத்தினை உருவாக்க ஏற்படுத்திய இச்சட்டம், கடந்த 20 வருடங்களில் எத்தகைய சமத்துவங்களை உருவாக்கியது என்பது நுணுக்கமாகப் பரிசீலனை செய்யப்படல் வேண்டும்.
நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் அரசினாற் பொறுப் பேற்கப்பட்ட நிலங்களில் எதுவுமே, 125 வருடங்களாகத் தொழிலாளராகப் பணிபுரிந்தவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வில்லை. ஒரு சில தோட்டங்கள் அயல் கிராமத்தவர்களுக்கே பிரித்தளிக்கப்பட்டன. சில இடங்களிலே தேயிலைத் தோட்டங் களைக் கிராமத்தவர்களுக்குப் பிரித்துக் கொடுப்பதன் மூலம், அப்பகுதிகளில் விரும்பத்தகாத சமூக, இன பிரச்சினைகளை உருவாக்கவே திட்டங்கள் உருவாக்கப்பட்டன. தொழிற்சங்க நடவடிக்கையால் அத்தகைய திட்டங்களிற் பெரும்பாலானவை தடுக்கப்பட்டாலும், தொழிற்சங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு மிஞ்சிய நடவடிக்கைகள் ஏற்படவில்லை என நாம் கூற முடியாது. எனவே, நிலச் சீர்திருத்தத்தின் மிகப் பிரதான சமூக நோக்கத்தின் அடிப்படையில் எதுவித சாதனையினையும் செய்துவிடவில்லை. இன்று மலையக இளைஞர்களில் ஒரு சிலர் ஆசிரியராகவும், வேறு சிலர் அரசாங்க சேவையிலும் தொழில்களை பெற்றுள் ளனர் என்றால், அவை அவர்களுக்குக் குடியுரிமை கிடைத்த தனால் தவிர்க்க முடியாத வகையில் வந்து சேர்ந்த விளைவுகளே தவிர, நிலச் சீர்திருத்தத்தின் பெறுபேறு எனக்கூற முடியாது தோட்டங்கள் அரசுடைமையாக்கப்பட்ட போதிலும், அவற்றி லிருந்த பாடசாலைகள் நீண்ட காலமாகவே அரசுடைமையாக்கப் படவில்லை. இதிலிருந்து நிலச் சீர்திருத்தத்தினால் விளையக் கூடிய ஒரு சில நன்மைகளும் தொழிலாளருக்குச் சென்றடையக் கூடாது என்பதிற் சம்பந்தப்பட்டவர்கள் உறுதியாக இருந் துள்ளமை புலப்படுகின்றது. அரச ஊழியர்களான தோட்டத் தொழிலாளர்களுக்கு, வருடாந்தப் பாராளுமன்ற வரவு செலவு திட்டத்தில் பிரேரிக்கப்படும் அரச ஊழியர்களுக்கான வேதன உயர்வுகள் பல மறுக்கப்பட்டே வந்துள்ளன. தொழிற்சங்கத்தின்
187

Page 108
இன்றைய மலையகம்
போராட்டங்களினால் ஒரு சில சந்தர்ப்பங்களில் மாத்திரம் சில உயர்வுகள் வழங்கப்பட்டன. எனவே, தொழிலாளர்களுக்கு அரச ஊழியர்கள் என்ற வகையிலான சலுகைகளும் வழங்கப் படவில்லை.
அடுத்ததாக, உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கத் தினை எடுத்துப்பார்த்தால், இன்றைய நிலையில் நாட்டின் தேயிலைத் தோட்டங்களைப் பொறுத்து, இது ஹெக்டயருக்கு 1,200 கிலோவாகவே காணப்படுவதாகவும், அது தனியார் தோட்டங்களில் 2250 கிலோவாகவும், அரசாங்கத் தோட்டங் களில் 1100 கிலோவாகவும் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. தனியார் உடைமை முறையின் கீழ் உற்பத்தி கூடவில்லை என்ற காரணத்திற்காக, அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்ட தோட்டங்களில், இப்போது முன்னைவிட உற்பத்தி கூடுவதற்கு மாறாக, உற்பத்தி வீழ்ச்சியுற்றுள்ளது என்பது நகைப்புக்கிடமாகி யுள்ளது. உலகின் பிரதான தேயிலை உற்பத்தி நாடுகளான இந்தியா, மலாவி, கென்யா, இந்தோனேசியா ஆகியவற்றுடன் ஒப்பிடு கையில், இலங்கையிலேயே ஹெக்டயர் ஒன்றுக்கான சராசரி உற்பத்தி மிகக் குறைவாக உள்ளது என்பது பெரும் வேதனை தரும் உண்மையாகும்.
எனவே, இரண்டு பிரதானமான மிக நல்ல நோக்கங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நிலச் சீர்திருத்தத்தின் மூலம் பொது உடமையாக்கப்பட்ட பெருந்தோட்டங்களில், இந்நோக்கங்களில் ஒன்றுகூடச் தொழிலாளரைப் பொறுத்து நிறைவேறவில்லை. உற்பத்தி கூடினால் இலாபம் தொழிலாளர் மத்தியில் பகிரப்பட்டுத் தொழிலாளர் வாழ்க்கைத்தரம் உயரும் என்ற கோட்பாட்டுச் சிந்தனைகள் முற்றாகத் தோல்வியுற்று விட்டதாகக் கூறப்படுகின்றது. அரசு மாதாந்தம் ரூபா 40 கோடியை நட்டத்தில் இயங்கும் அரச தோட்டங்களுக்காக மான்யமாக வழங்குவதாகவும், கடந்த 20 வருடங்களில் மான்யம் வழங்கியமை, உற்பத்தி வீழ்ச்சி என்பவற்றால் அரசுக்கு 5000 கோடி ரூபா அளவில் நட்டம் ஏற்பட்டதாகவும் அறிகிறோம்.
எனவே, தோட்டங்களிற் பாடுபடும் தொழிலாளர்களுக்கும் நன்மையில்லை; அரசுக்கும் நன்மையில்லை. அப்படி யானால், அதில் தொழில் புரியும் ஊழல் மிக்க உயர்மட்ட அதிகாரிகளின் குறுநில ஆட்சியின் சுபீட்சத்துக்காக இலட்சக் கணக்கான தொழிலாளர்களின் நன்மைகளும் நாட்டின் மூலவளமும் விரயமாக்கப்பட வேண்டுமா? நட்டம் பற்றிய
188

இலங்கையின்.
விசாரணைக்குழுக்கள் நிருவாக ஊழல்களையே நட்டத்திற்குக் காரணம் காட்டியுள்ளன. தொழிலாளர்களுக்குக் கூடிய ஊதியம் வழங்கப்பட்டதாகக் கூறிய நகைப்புக்கிடமான விளக்கங்களும் தரப்பட்டன. எவ்வாறாயினும், பொதுவுடைமையாக்கப்பட்ட தால், நாடோ, தொழிலாளர்களோ எதுவித நன்மையையும் அன்டயவில்லை என்பதும், சில குறுநில ஆட்சியாளர்களே பயனடைந்தார்கள் என்பதும் தெளிவாகிறது.
இந்நிலை மாற வேண்டும் என அரசும், தொழிற்சங்கங் களும் விரும்புவதில் வியப்படைய முடியாது.
ஆனால், இதற்குத் தனியார் மயமாக்கம் தகுந்த மாற்று நடவடிக்கையா என்பது நன்கு சிந்தித்து எடுக்கவேண்டிய தீர்மானமாகும்.
1972 ஆம் ஆண்டிற்கு முன்னர் இருந்த தனியார் நிருவாகம் யாவுமே இலாபத்தில் இயங்கியதா என்பது முக்கிய வினாவாகும். குறிப்பாக, ஸ்ரேலிங் கம்பனிகள் பெரும் பாலானவை நட்டத்திலேயே இயங்கியுள்ளன. தொழிலாளர்கள் நன்மைகள் புறக்கணிக்கப்பட்டிருந்தன. பெருந்தோட்டங்களின் நட்டத்திற்கு, உற்பத்தித் திறனில் வீழ்ச்சியும், திறமையற்றதும் ஊழல் மிகுந்ததுமான முகாமைத்துவம் பற்றியும் விவாதிக்கப் படுவதனையும் அறிவோம். அதே வேளையில், தேயிலை உற்பத்தி நாடுகளின் உற்பத்திகளுக்குச் சந்தையில் விலை ஸ்திரம் தேவை என்பதனை இங்கு நாம் மறக்கக்கூடாது. 19 ஐரோப்பிய நாடுகள் கொண்ட பொதுச்சந்தையின் அண்மைக்காலத் தோற்றம் பற்றி நாம் அசட்டையாக இருக்க முடியாது. பொருளாதார வல்லமை கொண்ட ஐரோப்பிய நாடுகளே பொருளாதாரக் கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, பின்தங்கிய நாடுகள் தனித்தனியே செயல்பட்டுப் பொருளாதார சுதந்திரத்தை பேண முடியுமா என்பது போன்ற சிந்தனைகளை குறிப்பாகத் தேயிலை விற்பனையைப் பொறுத்து நாம் மனங்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.
1974 ஆம் ஆண்டளவில், இங்கிலாந்திலே தேயிலைத்
தோட்டத் தொழிலாளர்களின் கீழ் மட்ட வாழ்க்கைத்தரத்தைப்
பொறுத்துப் பெரும் எதிர்ப்புகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு
எதிராக ஏற்பட்டதுடன், அக்கம்பனிகளின் தேயிலையினைச்
சந்தையில் மக்கள் பகிஷ்கரித்தனர். இவற்றின் விளைவுகளால்,
அக்கம்பனிகள் தொழிலாளர் வீட்டு வசதி போன்ற நலன்புரி
189

Page 109
இன்றைய மலையகம்
சேவைகளுக்காகப் பல கோடி பணத்தை ஒதுக்கிய அக்கால கட்டத்தில், அக்கம்பணிகளின் தோட்டங்கள் பல இலங்கையில் நட்டத்தில் இயங்கியமையும் குறிப்பிடத்தக்கது. அந்நிலையில், அரசு அக்கம்பனி நிலங்கைள சுவீகரித்தமை, அவற்றிற்குக் கவலையை அளிக்கவில்லை; மாறாக சில கம்பனிகள் மகிழ்ச்சி யுடன் தோட்டங்களை அரசாங்கத்திடம் விட்டுவிட்டன.
100 வருட காலத் தியாகத்தின் விளைவுகளைத் தொழி லாளர்கள் தனியார் கம்பனிகளிடம் பெற இருந்த அச்சந்தர்ப்பத்தில், நிலச் சீர்திருத்தத்தால் அந்நன்மைகள் கை தவறிப்போயின என்றால் மிகையாகாது. நிலச்சீர் திருத்தம் காரணமாக அரசுடைமையாக்கப்பட்ட நிலங்களிலே தொழில் புரிந்தவர்கள் பெற்ற அரச தொழிலாளர் என்ற அந்தஸ்தும் நடைமுறையிற் பயனளிக்கவில்லை.
இப்போது சட்டியிலிருந்து நெருப்பில் விழும் நிலை தனியார்மயமாக்கப்படுவதால் ஏற்படப் போகிறது என அஞ்சு கிறோம். என்றாலும், நிலச்சீர் திருத்தம் என்ற மகிமை மிக்க நோக்கினாலே தொழிலாளர் சமுதாயம் நன்மையடையவில்லை என்ற கருத்தைச் சம்பந்தப்பட்டவர்கள் மறக்கலாகாது. எனவே பெருந்தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரையிலே தனியார் நிருவாகம் பொதுத்துறை இரண்டுமே இலங்கையில் ஒரே முறையில் தான் செயல்பட்டுள்ளன.
ஆனால், இப்போது மாற்றம் வருவதால், அதில் சில தொழிலாளர் நல பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்து, தொழிற்சங்கங்கள் அரசிடம் உத்தரவாதம் பெற வற்புறுத்த வேண்டும். அதில் மிக முக்கியமானது, தொழிற்சங்க நடவடிக்கை களுக்கு எதுவித தடைகளும் கட்டுப்பாடுகளும் ஏற்படாது என்ற உத்தரவாதத்தைப் பெறுவதாகும். குடியிருப்புகளைக் "குடியிருப்புக் கூட்டுறவு அமைப்புகளிடம்” விட்டுவிடுவதாகக் கூறப்படும் முறையில் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைப் பொறுத்து, தொழிற்சங்கங்கள் காலத்திற்குக் காலம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும். நீர், கழிவகற்றல், மின்சாரம், வீதி, பாடசாலை வசதிகள், மற்றம் உள்ளமைப்புக்கள் கிராமிய முறையிற் பிரதேச சபைகளினால் வழங்கபட இருப்பதாகக் கூறப் படும் விளக்கங்கள் கவர்ச்சியானவை. நடைமுறையில் அமுல் நடத்தப்படுவதிலே தொழிற்சங்கங்கள் மேலதிக அக்கறை காட்ட வேண்டிய தேவையினை அசட்டை செய்ய முடியுமா?
90

இலங்கையின்.
உற்பத்தித் திறனை அதிகரித்து, தேசியப் பொருளாதாரம் வளர்ந்தோங்கத் தொழிலாளர்கள். தமது பங்கினை ஆற்றத் தயாராக இருக்கின்றனர். அதே நேரத்திற் பொருளாதார வீழ்ச்சியின் போது, தமது நலன்களை விட்டுக்கொடுத்து வந்த தொழிலாளர்களுக்கு, பொருளாதார வளர்ச்சியினால் ஏற்படும் நன்மைகளும் பாராபட்சமற்ற முறையிற் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என வற்புறுத்துகிறோம்.
కశ్రీa_
191

Page 110

மலையகத் தமிழர்களும்.
21. மலையகத் தமிழர்களும் நிலப்பங்கீடும்*
இலங்கையில் இந்நூற்றாண்டின் முன்னரைப் பகுதியின் நடுப்பகுதி (1930) முதலாகவே, நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்கும் தேசிய விவசாயக்கொள்கை செயல்பட்டு வருகிறது. இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று நாட்டின் உணவுத் தேவையிலே தன்னிறைவு காணுவது; இரண்டாவது, குடியடர்த்தி கூடிய பகுதிகளில் உள்ள மக்களை, அடர்த்தி குறைந்த வரண்ட வலயப்பகுதிகளில் மீளக் குடியமர்த்துதல், மூன்றாவது, நிலமற்ற விவசாயிகளுக்கு நிலத்தைச் கொடுத்து நிலச் சொந்தக்காரர்ளாக்கிச் சமூக அந்தஸ்து, தன்னம்பிக்கை என்பனவற்றை அவர்கள் மத்தியில் ஏற்படச்செய்து, அதன் மூலம் அவர்களைப் பொறுப்புள்ள பிரஜைகளாக நாட்டின் அபிவிருத்தியிற் பங்கேற்கச் செய்வது என்பனவாகும்.
இத்தகைய உயர்ந்ததும், பரந்ததுமான நோக்கங்களின் நன்மைகள், மலையகத் தமிழ் மக்களைப் பொறுத்துச் சென்றடையவில்லை. நிலம் வழங்கும் கொள்கையின் ஆரம்ப காலப்பகுதிகளில், பெருந்தோட்டக்களுக்குத் தொழிலாளரைத் தாராளமாக வழங்க வேண்டும் என்பதற்காகக் குடியேற்ற அரசும் அதில் ஆர்வம் காட்டவில்லை. நாடு சுதந்திரம் பெற்றதும்
* இக்கட்டுரை 'வீரகேசரி’ பத்திரிகையில் 3-2-91-இல் பிரசுரிக்கப்பட்டது.
193 13

Page 111
இன்றைய மலையகம்
ஏற்பட்ட குடியுரிமை நீக்கச் சட்டம் காரணமாக, நிலவுரிமை நாடற்றவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது என்ற ரீதியிலும் நிலம் வழங்கப்படவில்லை. இந்நிலை இன்றுவரை இருந்து வருகின்றது.
நிலப்பகிர்வு:
1930 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டுவரையிலான 57 வருட காலப்பகுதியில், அரசாங்கமானது, நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்குவதனை முக்கிய விவசாய அபிவிருத்தி நடவடிக்கையாக மேற்கொண்டு 105 ஆற்று வடிநில் அபிவிருத்தித்திட்டங்களை அமுல் நடத்தியுள்ளது. அவற்றின் மூலம், ஏறத்தாழ இரண்டரை இலட்சம் ஏக்கர் நிலத்தை ஒரு இலட்சம் குடும்பங்களிடையே பிரித்துக் கொடுத்துள்ளது. கடந்த தசாப்தத்தில், (1980) மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ்ச் சுமார் 55 ஆயிரம் குடும்பங்களுக்கு ஒரு இலட்சத்து 65 ஆயிரம் ஏக்கர்களை பிரித்துக் கொடுத்துள்ளது.
ஆனால், இந்த நான்கு இலட்சம் ஏக்கரில் இதுவரை மலையகத் தமிழ் மக்களுக்கு எந்த ஒரு திட்டத்தின் கீழும் நிலம் வழங்கப்படவில்லை. என்பதனை நாம் கவலையுடன் நினைவு கூற வேண்டியுள்ளது. அங்கும் இங்குமாக ஒரு சிலர் சிறிய துண்டு நிலங்களைப் பெற்றிருக்கலாம். ஆனால், மொத்த மக்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாத அளவிற்கு முக்கியத்துவம் குறைந்த சிறு அளவினதாகவே அவை இருக்கும்.
இன்று, தமிழ் மக்களுக்கு அரசாங்கத்தின் குடியுரிமைச் சட்டத்தின் (1988) கீழ், இதுவரை நாடற்றவர்களாக இருந்த மலையகத் தமிழ்மக்கள் அனைவருக்கும் இலங்கை குடியுரி மையினை வழங்கிவிட்டது. இவர்கள் தன்னம்பிக்கையுடனும், சுய மரியாதையுடனும், நாட்டின் அபிவிருத்திக்குத் தமது பங்களிப்பை ஆற்ற வேண்டியுள்ளது. இதுவரை காலம் நசுக்கப் பட்டவர்களாகக் குறைந்தபட்ச அளவிலேதானும் தன்னம்பிக் கையின்றி அனாதரவாக இருந்த தோட்டத் தொழிலாளிகளின் வாழ்க்கை நிலைமைகளில் சாதகமான மாற்றங்கள் வேண்டும் என்பதனை இன்று இலங்கையின் மூத்த தலைவர்களும், மற்ற வர்களும், கோட்பாட்டு ரீதியில் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனை நடைமுறைப்படுத்தச் சில ஆக்கபூர்வமான நடவடிக் கைகள் அவசியமாகின்றது. இந்த வரிசையில், நிலப்பங்கீடு மிக முக்கியமானதாகும்.
194

மலையகத் தமிழர்களும்.
தோட்டத் தொழிலாளிகளுக்கு ஏன் நிலம் வழங்க வேண்டும் என்பதனைச் சற்று நிதானமாகச் சிந்திப்போமாயின், அது எந்தளவுக்கு நாட்டின் அபிவிருத்திக்கு முக்கியமானது என்பதனை அனைவரும் உணரலாம்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு வருமானம் மிகக்குறைவு மாதாந்தம் 26 நாட்கள் வேலை வழங்குவதற்கு இணங்கிய போதிலும், 20 நாட்களே பெரும்பாலும் வேலை கொடுக்கப் படுகிறது. அண்மையிற் செய்யப்பட்ட ஒரு வெளிக்கள ஆய்வில் தோட்டங்களில் சராசரியாகக் குடும்பம் ஒன்றில் 2.3 பேர் தொழில் புரிவதாகவும், அதனால் மாதாந்தம் ரூபாய் 1970 கிடைப்பதாகவும், அதனைச்சராசரி குடும்பத்தின் 5.4 அங்கத் தவரால் பிரிக்கும் போது தனி ஒருவருக்கு 371 ரூபா மாத்திரமே வருவாயாகக் கிடைப்பதாகவும் அறிய முடிகின்றது.
எவ்வாறாயினும், இன்னும் சராசரியாக 29 ரூபா மேலதிக வருவாய் கிடைத்தாலும், அது 400 ரூபாவிற்கு மேற்படாது. இதிலிருந்து, அவர்களுடைய மாதாந்த வருவாய் நிலைமை எமக்குப் புரிகின்றது. •
எனவே, இத்தொழில்களுக்கு வேதனத்தை அதிகரிப் பதால் மாத்திரம் விமோசனம் ஏற்பட்டுவிடாது. வேதனம் அதிகரித்தால், உணவுப் பொருட்களும், அத்தியாவசியப் பொருட்களும் இறக்குமதி செய்யப்படும் ஒரு நாட்டில், அவற்றின் விலைகளும் அதிகரிப்பது தவிர்க்கப்பட முடியாதது. எனவே, பணத்தின் கொள்வனவுத்திறன் வீழ்ச்சியடைகிறது. இந்நிலையில், தொழிலாளரது சுபீடசத்திற்குக் கல்வி போன்ற பல்வேறு ஏனைய அத்தியாவசிய முன்னேற்றங்கள் தேவைப்படும், சமகாலத்தில், நிலவுரிமை, அல்லது சுயமாக ஓரளவு உணவினை உற்பத்தி செய்து கொள்ளத் தேவையான விவசாயம் செய்யும் உரிமை அவர்களுக்கு அத்தியாவசியமாகும்.
வரண்ட வலயங்களில் வழங்கப்பட்டது போன்று, 3 முதல் 8 ஏக்கர் வரையான நில விநியோகம் பற்றி நாம் இங்கே சிந்திக்கவில்லை. ஆனால், ஏற்றுமதிக்கான பொருளை உற்பத்தி செய்யும் விவசாயத் தொழிலாளர்களுக்குத் தமது அன்றாட உணவுத்தேவையில் ஏதோ ஒரு பங்கினைத் தாமே உற்பத்தி செய்து கொள்ள வாய்ப்பினை அளிக்க வேண்டும்.
ஜனசவிய திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றான
உள்ளூர் உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கம் முழுமையாக்கப்
195

Page 112
இன்றைய மலையகம்
படுவதற்காக எமது ஜனாதிபதியின் பரிந்துரையின் பேரில், பயன்படுத்தாதிருக்கும் நிலங்கள் அடையாளம் செய்யப்படு கின்றன. ஊர்ஜிதம் செய்யப்படாத சில செய்திகள், அரசாங்கம் தற்போது (1991) இரண்டரை இலட்சம் ஏக்கர் நிலத்தை அத்தகைய தேவைக்காக இனங்கண்டிருப்பதாக அறிய முடிகிறது. இவை நிலமற்றவர்களுக்காக வழங்கப்படவுள்ளது. இவற்றினை விநியோகிக்கும் போது மலையகத் தோட்டத் தொழிலாளர் களும் சேர்த்துக் கொள்ளப்படல் வேண்டும். அவர்களும் தொடர்ந்து விவசாயத் தொழிலாளர்களாக இருக்க முடியாது. தோட்டங்களில் உள்ள தொழிலாளர் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தனக்குத் தேவையான உணவுப் பொருட்களில் ஒரு பங்கினை உற்பத்தி செய்வதற்கு ஏற்ற ஒரு சிறிய பரப்பு நிலம் வழங்கப்பட வேண்டும் இதன் மூலம் நாட்டின் உணவு நிரம்பலில் பெரும் விருத்தி ஏற்பட வாய்ப்புண்டு.
அரசாங்கம் 31.12.1990 அன்று குறிப்பிட்ட பிரேரனை ஆணைக்குழு, முறைப்பாட்டு ஆணைக்குழு பற்றிய மசோதா மூலம் நாட்டின் தொழில்வாய்ப்புக்கள் இன விகிதாசாரப்படி, வழங்கப்பட இருப்பதாக அறிய முடிகின்றது. அதன் மூலம், தமிழருக்கு நுவரெலியா மாவட்டத்தில் 54 வீதமும், பதுளையில் 26 வீதமும், கண்டியில் 14 வீதமும், இரத்தினபுரியில் 12.6 வீதமும் வழங்கப்படவிருப்பதாக அறிய முடிகிறது.
நிலம் வழங்குதலும் இத்தகைய அடிப்படையிலேயே வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையில் எவ்வித முரண் பாடுகளும் இருப்பதாகத் தெரியவில்லை. அரசாங்கம் இதனை ஏற்று நடைமுறைப்படுத்துவதிலும் பிரச்சினை ஒன்றுமிருக்க முடியாது விவசாயத்திற்காக நிலம் வழங்கும் திட்டத்தின் தொடர்ச்சியாகப் பெருந்தோட்டங்களிற் காணப்படும் வீட்டு வசதியுடனான பிரச்சினைகளையும் இணைத்துத் தீர்வுகாண முயற்சிப்பது நீண்ட்கால நன்மைக்கான வழியாகும்.
இப்போது தொழிலாளர்களின் வசிப்பிடம் ஏறத்தாழ 180 சதுர அடி பரப்பினைக் கொண்டதாகவே உள்ளது. 5.4 பேரைக்கொண்ட குடும்பத்திற்கு இவ்வாறான இரண்டு வீடு களினது இடப்பரப்பினையாவது கொடுத்து, அவற்றைத் திருத்தித் தேவையான வசதிகளுடன் வழங்க வேண்டும். அப்போது இப்போதிருக்கும் தொழிலாளர்களில் 50 வீதமானோருக்குப் புதிய வீடுகள் கட்ட வேண்டியிருக்கும். எனவே, ஒவ்வொரு தோட்டத்திலும் அதன் தொழிலாளர் குடும்பங்களில் 50
196

மலையகத் தமிழர்களும்.
வீதமானோருக்காவது நிலம் வழங்க வேண்டும் அதில் சுமார் 600 சதுர அடி வீட்டிற்கும், எஞ்சியது உணவுப் பயிர்ச் செய்கைக்கு வசதியளிக்கும் வகையிலும் அமைய வேண்டும் இதனால், இவர்களுக்கும் தமது குடியுரிமையில் அர்த்தம் இருப்பதாக நம்பிக்கை ஏற்படுவதுடன் நாம் வாழும் இடத்தின் குழந்தைகள் என்ற உணர்வு உறுதிப்படுத்தப்படும்.
நாட்டின் எதிர்காலச் சுபீட்சம், அதற்கான உற்பத்திப் பெருக்கம் போன்ற திட்டங்கள் வெற்றி பெறவேண்டுமானால், நாடாற்றவராயிருந்து இலங்கைப் பிரஜைகள் என ஏற்றுக்கொள்ளப் பட்ட மலையகத் தொழிலாளர்களுக்கும், அரசினது விவசாயக் கொள்கையின் முக்கிய அங்கமான நிலம் வழங்கும் நடவடிக் கைகளில் பங்களிக்க வேண்டும்.
_(శ్రీa_
197

Page 113

இரசாயனப் பயன்பாடும்.
22. இரசாயனப் பயன்பாடும் - தொழிற்தளப் பாதுகாப்பும்
தொழிலின் போது பயன்படுத்தும் இரசாயனங்கள், இயந்திரங்கள், கருவிகள் என்பனவற்றாலே தொழிலாளர்கள் காயப்படுவதும், உடலுறப்புக்களை இழப்பதும், நச்சுப்படுத்தப் படுதலும், அதனாற் பல்வேறு சரும, சுவாச மற்றும் நோய்களுக் காளாவதும், சில சமயங்களில் உயிரையே இழப்பதும் கூட நாம் அனைவரும் அறிந்த ஒரு பொதுவான செய்தியாகும். ஆனாலும், இதனைப்பற்றிக் கேட்கும் போதும், வாசித்தறியும் போதும் அனுதாப உணர்வுகளை வெளியிடுகிறோம். இதனுடைய பயங் கரத்தைத் தமக்கு ஏற்பட்டாலன்றி அதனை மற்றவர்களால் உணர்ந்து கொள்வது கடினம். தொழிலாளர்களும் தமக்கு ஏற்படக்கூடிய இத்தகைய ஆபத்துக்களைப் பற்றிப் போதியளவு அறிந்துள்ளனரா என்ற கேள்விக்குக் கூட மிகவும் கவலைக்குரிய பதில்களே கிடைக்கின்றன. அந்தளவிற்குத் தொழில்களினால் ஏற்படும் விபத்துக்கள், அபாயங்கள் பற்றித் தொழிலாளர்கள் அதுவும் குறிப்பாக அவிருத்தியிற் பின்தங்கிய ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஜப்பான், சிங்கப்பூர், வட கொரியா போன்ற ஒரு சில நாடுகளைத் தவிர்ந்த பெரும் பான்மையான நாடுகளில் போதிய கவனமின்றி இருப்பது பெரும் கவலைக்குரிய நிலைமையாகும். இப்போது சர்வதேசத் தொழில் நிறுவனம், மற்றும் தொழிலாளர் அமைப்புக்கள், தொழிற் சங்கங்கள் என்பன தொழிற் தளங்களில் ஏற்படக்கூடிய விபத்
199

Page 114
இன்றைய மலையகம்
துக்களையும் ஆபத்துக்களையும் பற்றித் தொழிலாளர் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதிலும், அதற்காகப் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் பெருமளவு பிரசார, அறிவுறுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இத்தகைய தொழில் தள விபத்துக்களை, இரசாயனங் களைப் பயன்படுத்துவதனால் ஏற்படும் விபத்துக்கள், இயந் திரங்களைக் கையாளும் போது ஏற்படும் விபத்துக்கள், கருவிகள் உபகரணங்களைக் கையாளும் போது ஏற்படும் விபத்துக்கள், சாதாரண விபத்துக்கள், வாய்ப்பற்ற சூழல்களை கொண்ட தொழிற்தளங்களில் ஏற்படும் மாசுறல் காரணமாக ஏற்படும் இடர்கள் என வகைப்படுத்தலாம்.
இவ்வகையான விபத்துக்கள் அனைத்துமே தொழிலாளர் களுக்குப் பெரும் தீங்கினை விளைவிப்பதாயினும், இரசாயனங் களால் ஏற்படும் தீங்குகளே பெரிதும் பயங்கரமானவை. எனவே இரசாயனங்களின் இயல்புகளையும் தீங்கு விளைவிக்கும் பண்புகள் பற்றியும் விளக்கமாக இக்கட்டுரையில் அவதானிப்பதே எமது நோக்கமாகும்.
இன்று உலகில் மக்கள் தொகை பெருகிச் செல்லும் அளவிற்கு, விளைச்சலுக்கான நிலத்தின் அளவில் அதிகரிப்பு ஏற் படுவதில்லை. அதற்குச் சாத்தியக் கூறுகளும் இல்ல. உலகின் மக்கள் தொகை இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில் 1650 மில்லியனாக இருந்தது. 1990 ஆம் ஆண்டளவில் 5346 மில்லியனாக அதிகரித் துள்ளது. இலங்கையின் மக்கள் தொகையோ 1871 ஆம் ஆண்டில் 2.4 மில்லியனாக இருந்து, 1981 ஆம் ஆண்டில் 14.5 மில்லிய னாகப் பெருகி, 2001 ஆம் ஆண்டில் ஆகக் குறைந்தது 20 மில்லியனாகப் பெருகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், உலக அளவிலோ, அல்லது இலங்கையிலோ, அல்லது உலகின் வேறெந்த நாட்டிலோ இருந்த நிலத்தின் அளவில் எதுவித பெருக்கமும் ஏற்படவில்லை. ஜப்பான், நெதர்லாந்து போன்ற ஒரு சில நாடுகளே, அதுவும் சில நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தினையே கடலில் இருந்து மீட்டுள்ளன. ஆனாற் கடலரிப்பு, பாலைவனத்தன்மையின் பரவல், உவர் நிலமாக்கம், நீர்தேங்கல், நகராக்கம், போக்குவரத்து விஸ்தரிப்பு என்பன வற்ற்ால் நாடுகள் விவசாய நிலங்களை இழந்து வருகின்றன. அத்துடன் உலகின் நிலப்பரப்பில் 1/3 பங்கே விவசாய நடவடிக் கைகளுக்கு ஏற்ற நிலப்பரப்பாக உள்ளது. ஏனைய நிலப்பரப்பு விவசாயத்திற்கு ஒப்பற்ற உலர்வலயமாகவோ, அல்லது குளிர்
200

இரசாயனப் பயன்பாடும்.
வலயமாகவோ, அல்லது கூடிய மழை பெய்யும் பிரதேசங் களாகவோ, அல்லது கற்பாறைப் பிரதேசங்களாகவோ காணப் படுகின்றன.
எனவே, ஏக்கருக்குரிய விளைச்சலை அதிகரிப்பதற்கு, இரசாயனங்களுடைய பயன்பாடு மிக அவசியமாக உள்ளது. பயிர்களை அழிக்கும் கிருமிகளை அழிக்கவும், மண்ணின் ஊட்டச்சத்தை அதிகரிக்கவும், கிருமி நாசினிகளும் செயற்கைப் பசளைகளும் பயன்படுத்தப்படுகின்றன.
இவ்வாறான இரசாயனங்களைப் பயன்படுத்தும் போது, இரண்டு வகையினதான இடர்கள் மக்களுக்கு ஏற்படுகின்றன. ஒன்று, விவசாயத் தொழிலாளர்கள் இந்த, இரசாயனங்களைப் பயிர்ச் செய்கைக்குப் பயன்படுத்தும் போது அவர்களின் உடலுக்கு ஏற்படும் தீங்குகளாகும். இரண்டாவது, இத்தகைய இரசாயனங்களைப் பயிர்களுக்குத் தெளித்து, அவற்றின் உற்பத்தி யினை உட்கொள்ளும் போது மக்களுக்கு ஏற்படும் ஆபத்துக் களாகும்.
இரசாயனங்களைப் பயன்படுத்தும் விவசாயத் தொழி லாளர்கள் இவற்றினைப் பயன்படுத்தும் போது, தகுந்த கையுறைகள், முக, மூச்சுக் கவசங்கள், மேலங்கி, காலுறைகள் என்பன வற்றைப் பயன்படுத்த வேண்டும். கைகளால் இரசாயனங் களைக் கலப்பதோ, தொடுவதோ, அல்லது உடலின் தோலில் படுவதோ உடனடியாகவோ, அல்லது நீண்ட காலத்திலோ பெரும் ஆபத்தை விளைவிக்கலாம். கடுமையான இரசாயனங் களால் உடனடியாகத் தோலிற் புண்கள் போன்றன ஏற்படலாம். ஆனால், அத்தோடு மாத்திரமன்றி, அவை தோலின் துளைகள் ஊடாக இரத்தத்திற் கலப்பதால், நீண்டகாலத்தில் எக்சிமா எனப் படும் தோல் வியாதிகள் ஏற்படக்கூடும். கடுமையான இரசாயனங்கள் அல்லாதவையும் உடலிற் பட்டு மயிர்த் துளைகள் மூலமாக இரத்தோட்டத்திற் கலந்து, சரும வியாதிகள் மாத்திரமன்றி, நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நோய்களையும், ஈரல் மற்றும் கண், இருதய பாதிப்பு நோய்களையும், கருக் கொள்ளலைப் பாதிக்கும் நோய்களையும் ஏற்படுத்தக் கூடியன. எனவே, கிருமிநாசினிகள், செயற்கை உரங்கள் யாவற்றையும் பயன்படுத்தும் போது, உடலின் எப்பாகமும் அவற்றுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளாத வகையிற் கவசங்கள், உறைகள் என்பனவற்றைப் பயன்படுத்துவது மிகவும் முக்கிய மானதாகும்.
201

Page 115
இன்றைய மலையகம்
இத்தகைய இரசாயனங்களைச் சேமித்து வைக்கும் களஞ் சியங்கள் இவற்றிற்காக மட்டும் தனித்துப் பயன்படுத்தப்படல் வேண்டும். உணவுப் பொருட்களை வைத்திருக்கும் களஞ்சியங் களில் இவற்றை வைத்திருக்கக்கூடாது. உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்களில் இவற்றை வைத்து விற்பனை செய்தலும் ஆபத்தை உருவாக்கக் கூடும்.
அநேகமாக இத்தகைய இரசாயனங்களைப் பற்றிய விபரங்கள், அவற்றைப் பயன்படுத்தும் முறை என்பன, அவற்றினை அடைத்து வரும் பெட்டிகள், கொள்கலன்கள், அல்லது உறைகளில் எழுதப்பட்டிருக்கும். எனவே, இவற்றைப் பயன் படுத்தும் தொழிலாளர்கள், அந்த எச்சரிக்கை அறிவுறுத்தல்களை நன்கு விளங்கி, மிகவும் அவதானமாக வழிமுறைகளைப் பின்பற்றிப் பயன்படுத்த வேண்டும். அப்படி அறிவுறுத்தல்கள் இல்லா விட்டாலோ, அல்லது அந்த இரசாயனம் பற்றி நன்கு அறிந் திராது இருந்தாலோ, அதனைப் பயன்படுத்தும் தொழிலாளியோ, அல்லது விவசாயியோ, எக்காரணத்திற்காகவும் அந்த இரசாயனத்தைக் கையாளக் கூடாது. இது அவருக்கு மாத்திர மல்ல, மற்றவர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கலாம். அனுமானங் களின் அடிப்படையில் இரசாயனங்களைக் கையாளுதல், பயங்கர விளைவுகளை ஏற்படுத்தலாம்.
இரசாயனங்களை அடைத்து வரும் உறைகள், அல்லது கொள்கலன்களை, உணவுப் பொருட்கள், அல்லது நீர் போன்ற வற்றைச் சேகரிக்கவோ, எடுத்துச் செல்லவோ பயன்படுத்தும் பழக்கங்கள் இந்நாடுகளில் உள்ளன. இதனை முற்றாகத் தவிர்க்க வேண்டும். அவற்றைத் திருப்தியான முறையிற் சுத்தப்படுத்தல் மிகவும் கடினமானதாகும். குறிப்பாக, சிறுவர்கள் சிறிய பிளாஸ்டிக் உறைகள், போத்தல்களை விளையாடப் பயன்படுத்துவதால், பல்வேறு விபத்துகளுக்கு உள்ளாகியுள்ளனர். வீடுகளில் இத்தகைய இரசாயனங்களை ஏனைய உணவுப்பொருட்கள், மருந்துகள் வைக்கும் இடங்களில் வைப்பதால், தவறுதலாகப் பயன்படுத்தப்பட்டு விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன. எனவே, தவறுகளே ஏற்பட முடியாத வகையில் இரசாயனங்களைத் தனியாக வைத்திருத்தலும், அவற்றின் கொள்கலன்கள், உறைகள் இரசாயனங்களின் பயன்பாட்டிற்குப் பின் முறையாக அழித்து விடுதலுமே பாதுகாப்பான முறைகளாகும். இதற்கு, அவற்றை நிலத்திற் புதைத்து விடுதல், அல்லது ஒதுக்கிடங்களில் விட்டு எரித்து விடுதல் போன்ற முறைகள் பாதுகாப்பானவையாகும்.
202

இரசாயனப் பயன்பாடும்.
இரசாயனங்களைப் பயன்படுத்திய பின், கைகளை முறையாகச் சுத்தப்படுத்தாது உணவு உட்கொள்ளுதல், பானங் களைப் பருகுதல் என்பன ஆபத்தை விளைவிக்கின்றன. வேறு சில இரசாயனங்கள் - குறிப்பாக நிறத் தீந்தைகள் - போன்ற வற்றைப் பூசும் தொழிலாளிகள், அதிலிருந்து வெளிவரும் நச்சு வாயுக்களைச் சுவாசிக்க நேரிடுகிறது. சுவாசிக்கும் போது அந்த நச்சு வாயுக்கள் சுவாசத்துடன் கலந்து விடுகின்றன. இரசாயன வர்ணங்களைப் பூசும் போது, போதிய பாதுகாப்பில்லாவிடில் தோலிற் பட்டு மயிர்த்துளைகள் மூலம் இரத்தத்தில் கலந்து விடுகின்றன. எனவே, எல்லாவகையான இரசாயனங்களாலும் இத்தகைய ஆபத்துகள் உள்ளன என்பதனை, அவற்றைப் பயன் படுத்தும் தொழிலாளர்கள் அறிந்திருக்க வேண்டும்.
எனவே, இவை பற்றித் தொழிலாளர்கள் நன்கு அறிந்து எச்சரிக்கையாக இருப்பதுடன், அரசாங்கம் தொழில் வழங்கு பவர்களையும், இரசாயன உற்பத்தியாளர்களையும், விற்பனை செய்பவர்களையும் இவற்றில் கவனமாகச் செயலாற்றும்படி சட்ட விதிகளை உருவாக்கி, பாரபட்சமின்றி அமுல் செய்ய வேண்டும். இச்சட்டங்கள் தொழில் வழங்குபவர்களைப் பொறுத்த வரை இவ்விரசாயனங்களைத் தொழிலின் போதும் பயன் படுத்தும் தொழிலாளர்களுக்கு, போதிய பாதுகாப்புக் கவசங்கள், உறைகள் என்பவற்றை வழங்குமாறும், இரசாயனங்களைப் பாதுகாப்புடன் கையாளத் தேவையான வசதிகளை வழங்கி, அவற்றைப் பாதுகாப்புடன் கையாளுவதற்குத் தேவையான பயற்சிகள், அறிவித்தல்களை வழங்கவும், தவறுதலாகப் பாதிப்புக் குள்ளாகும் போது முதலுதவிச் சிகிச்சை வழங்கவும், உடனடியாக அடுத்த சிகிச்சைகளை வழங்கவும் தகுந்த ஏற்பாடுகளைத் தயாராகச் செய்து வைத்திருக்கவும் உத்திரவாத மளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களைப் பொறுத்து, அவை சட்டத்திற்குட்பட்ட வகையில் உற்பத்தி செய்யப்படுகின்றனவா என்பதனையும், கொள்கலன்களில் உள்ளூர் மொழியில் விளங்கக் கூடிய முறையிற் பாதுகாப்பாகப் பயன்படுத்தும் முறைகள் பற்றிய அறிவித்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றனவா என்பதனையும், இரசாயன உறைகள், கொள்கலன்களிற் பாதுகாப்பாக அடைக்கப் பட்டுச் சந்தைப்படுத்தப்படுகின்றனவா என்பதனையும் உறுதிப்படுத்துவனவாக இருத்தல் வேண்டும். விற்பனை நிலை யங்கள், இவற்றை ஏனைய நுகர்ச்சிப் பொருட்களை விற்கும் இடங்களில் வைத்து விற்பதனைத் தடை செய்தல் வேண்டும்.
s

Page 116
இன்றைய மலையகம்
இத்தகைய முன்னெச்சரிக்கைகள் மிக அவசியமானவை. இவற்றை அலட்சியப்படுத்துவதன் காரணமாக, ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்படும் விபத்துக்கள் பெருமளவினதாக உள்ளன. உதாரணமாக, இரசாயனங்களால் ஏற்படும் மரணங்களை எடுத்துப்பார்த்தால் இது புலனாகும். உலகில் உற்பத்தியாகும் இரசாயனங்களில் 25 வீதத்தினையே குறைவிருத்தி நாடுகள் பயன்படுத்துகின்றன. ஆனால் உலகில் இத்தகைய இரசாயனங்களின் பயன்பாட்டினால் ஏற்படும் மரணங்களில் 75 வீதமானவை குறைவிருத்தி நாடுகளிலேயே ஏற்பட்டுள்ளன. இதற்கு இரசாயனங்களைக் கவனமாக கையாளாமையே காரணமாகும்.
அத்துடன், சில இரசாயனங்களை உற்பத்தி செய்ப வர்கள், அவற்றின் பயன்பாட்டின் நன்மைகள் பற்றி மட்டுமே விளம்பரம் செய்கின்றனர். கவலையீனமாகப் பயன்படுத்தினால் ஏற்படும் ஆபத்துக்களை எடுத்துக் கூறுவதில்லை. கிருமிகளைக் கொல்லும் இரசாயனங்கள் மனிதரையும் கொல்லும் என்ப தனை, ஒரு சில விவசாயத் தொழிலாளர்கள் அறிய முடியாத வகையில் பாமரர்களாக இருப்பதும் வருந்தத்தக்கதாகும்.
1982 ஆம் ஆண்டு பான் இண்டர்நேஷனல் (PAN INTER NATIONAL) என்னும் 50 நாடுகளைச் சார்ந்த 200 நிறுவனங்களைக் கொண்ட சர்வதேச அமைப்பு மிக ஆபத்தான 12 இரசாயனங்களை இனங்கண்டது. அவற்றினைத் "தீயவைகள் பன்னிரண்டு” , (DERTY DOZEN) graituntrisair.
அல்டிரின், டிபிசிபி, டிடிரி, 2,4,5-ரி, 2,4டி, பராகுவேட், பராதியோன், குளோர்டேன், கேம்பீச்லர், குளோர்டிம்போம், லின்டேம், பென்டாகுளோரோபெனல் என்பனவே அத்தகைய ஆபத்தான 12 இரசாயனங்களாகும். இவை யாவும் எல்லா மேற் கத்திய நாடுகளிலும் இப்போது தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், இவற்றிற் சிலவே குறைவிருத்தி நாடுகளில் தடைசெய்யப் பட்டுள்ளன. இலங்கையிலும் இவற்றிட் சில இன்னும் பயன் பாட்டில் உள்ளன. அத்துடன், இவை வேறு பெயர்களில் குறைவிருத்தி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதும் உண்டு எனத் தெரிய வருகின்றது.
இரசாயனங்களை உணவுப் பயிர்ச்செய்கைக்காகப் பயன் படுத்தும்போது, சில சந்தர்ப்பங்களில் உணவுப் பொருட்கள் நச்சாக்கப்படுவதும் உண்டு. இது இரசாயனங்களால் ஏற்படும்
204

இரசாயனப் பயன்பாடும்.
இரண்டாவது வகையான ஆபத்தாகும். உதாரணமாக, சில கிருமி கொல்லிகளைப் பயிர்களுக்குத் தெளித்த பின், குறிப் பிட்ட சில காலப்பகுதிக்குப் பிறகுதான் அப்பயிர்களை உணவுக்குப் பயன்படுத்தலாம். தவறுதலாகக் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் அவற்றைப் பயன்படுத்தியதால், பல உணவு நச்சாக்கல் பிரச் சினைகள் ஏற்பட்டன, காய்கறிப் பயிர்ச்செய்கையில் இது குறிப் பிடத்தக்க அளவிற் காணப்படுகிறது. கிருமி கொல்லியைத் தெளித்தவுடன், அல்லது போதிய அவகாசமின்றி அறுவடை செய்து சாப்பாட்டிற்குப் பயன்படுத்தி விபத்துக்குள்ளாகிய அனுபவங்கள் இலங்கையில் உண்டு. அதேபோல், மீனைப் பதப் படுத்திப் பாதுகாக்கப் போமலினைப் பயன்படுத்தி அதனை உண்டவர்களுக்கு ஏற்ப்ட்ட துன்பங்களையும் நாம் அறிவோம். சில வகையான இரசாயனங்களைக் காய்கறிகளில் பிழையாக, அல்லது கூடுதலாகப் பயன்படுத்தினால், அவை அவற்றில் தங்கி, பின்னர் அவற்றை உட்கொள்வதால் பல நோய்கள் எற்படுவ தாகவும் கூறப்படுகின்றது.
ஆபத்தான இரசாயனங்களைப் பயன்படுத்துவதால், உணவுப் பொருள்களால் ஏற்படும் நச்சுத் தன்மை, குறைவிருத்தி நாடுகளில் உள்ள மக்களை மாத்திரம்தான் பாதிக்கின்றது என்ற பிழையான முடிவுக்கும் எவரும் வரமுடியாது. ஏனெனில், மேற் கத்தைய நாடுகள், குறைவிருத்தி நாடுகளில் இருந்து பழவகைகள், காய்கறிகள், குடிபானங்கள், இறைச்சி வகைகள் இறக்குமதி செய்வதனை நாம் இங்கே மறத்தல் ஆகாது, ஜமெய்க்காவிலிருந்து வாழைப்பழமும், பிலிப்பைன்சிலிருந்து அன்னாசியும், ஆர்ஜென்டீனாவிலிருந்து இறைச்சியும், மேற்கத்தைய நாடு களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது ஒர் உதாரணமாகும். எனவே, இவற்றிற்குப் பயன்படுத்தும் இரசாயனங்களின் பாதகமான விளைவுகளாற் பாதிப்பிற்குள்ளாவதில் மேற்கத்தைய நாடுகள் புறநடையல்ல. எனவே, ஆபத்தான இரசாயனங்களை இங்கு குவிக்கும் விருத்தியுற்ற நாட்டினருக்கும் இத்தகைய வழிகளில் ஆபத்துக்கள் காணப்படுவதனை அவர்களும் அசட்டை செய்ய (uptglufgi.
இரசாயனங்களில் அநேகமானவை பெரும் தீங்கினை விளைவிப்பதனால், அவற்றின் பயன்பாட்டினை, இயன்றளவிற் குறைப்பதே நல்லது. ஆனால், அதனை இலகுவில் ஒழித்துவிட முடியாது. அதற்காக, இரசாயனங்களில் இருந்து மனித இனத் தைக் காப்பாற்ற முயற்சி செய்யாமல் இருக்கவும் முடியாது.
205 14

Page 117
இன்றைய மலையகம்
எனவேதான், அறிவியலாளர்கள் உடனடியாக உலகின் பல பாகங்களிலும் பின்வரும் முறைகளை ஊக்குவிக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். அவற்றில் முதலாவது, இரசாயனங்களை மிகவும் பகுத்தறிவு சார்ந்த முறையிற் பயன்படுத்துவதாகும். அதாவது, தேவையான அளவில் மாத்திரம் இரசாயனங்களைப் பயன்படுத்த வேண்டும். இலத்தீன் அமெரிக்க நாடுகளிலே தேவையான அளவினைவிட 40 வீதமான இரசாயனம் மேலதிக மாகப் பயன்படுத்தப்படுவதாக அறியப்பட்டுள்ளது.
இரண்டாவது, சரியான முறையில் இரசாயனங்களைப் பயன்படுத்துவதுடன், விவசாயிகளையும், தொழிலாளர் களையும், அவற்றைச் சரியான முறையிற் பயன்படுத்தப் பயிற்று வித்தல், இதன் மூலம் விபத்துக்களைக் குறைக்கலாம்.
மூன்றாவதாக, இரசாயனப் பாவனையின்றிக் கிருமி களைக் கூட்டுப்படுத்தும் முறைகளை அறிமுகப்படுத்துதல், இதற்குப் பயிர்களைப் பன்முகப்படுத்துவதும், சுழற்சிப் பயிர்ச் செய் கையினைப் பின்பற்றுதலும், நோய்களை எதிர்த்து வளரக் கூடிய, விதை வகைகளை அறிமுகப்படுத்துதலும் பொருத்த மானவை என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
இவற்றைவிட, பயிர்களை அழிக்கும் கிருமிகளின் இன விருத்தியினைத் தடை செய்யவும் வாய்ப்புக்கள் இருப்ப தனையும் அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். அதே வேளையில், இத்தகைய கிருமிகளை அழிக்கக்கூடியதான எதிரி உயிரினங் களை வளர்த்து அவற்றின் மூலமும் பயிர்களை அழிக்கும் கிருமிகளை அழிக்க முடியும். இவ்வாறு ரசாயனங்களை மாத் திரம் நம்பியிராமல், கிருமிகளை அழிக்க வழிகளிருப்பதாக அறிஞர்கள் கூறும் வழிவகைகளை அரசாங்கங்கள் தமது விவசாய ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் பரீட்சித்துப் பிரயோ கிக்க வேண்டியது அவசியமாகும். இத்தகைய பின்னணியில் இரசாயனங்களைப் பயன்படுத்தும் தொழிலாளர்களினதும், விவசாயிகளினதும் நன்மையினைக் கருத்தில் கொண்டு, அவர் களுக்காகப் பின்வரும் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியது முக்கியமாகும்.
1. காலத்திற்கு காலம் தொழிலாளர்களை மருத்துவப் பரிசோதனை செய்தல்.
2. தொழிற் சங்கங்கள் பாதுகாப்புக் கவச, உபகரணங்கள் தொடர்பாக நிருவாகங்களுடன் கூட்டு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளுதல்.
206

இரசாயனப் பயன்பாடும்.
3. தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு முறைகள் பற்றிப் போதுமான பயிற்சியளித்தல்.
4. தடை செய்யப்பட வேண்டிய மிக ஆபத்தான இரசாயனங்கள் மீது அரசாங்கம் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதித்துத் தடைசெய்தல்.
5. சுகாதாரப் பாதுகாப்பு மேற்பார்வைக் குழுக்களை வேலைத்தளங்களில் உருவாக்கிச் செயற்பட வைத்தல்.
Bibliography
1. Ceylon Workers Congress, Health Status of Plantation Workers in Sri Lanka, (Colombo) (1989)
2. Fredrich Ebert Stiftung, Use of Pesticides and Health Hazards in the Plantation Sector, (Colombo) (1988)
3. Lennant Fridland, (ed.), Safety Health and Working Conditions, Training Manual (Malaysia). (1984).
4. Trade Union Congress, Hazards at Work, TUC, guide to health and Safety, (London), (1988)
6ళ్నీ
207

Page 118

இன்றைய மலையகம்.
23. இன்றைய மலையகம்
இலங்கையில் வாழும் மலையகத் தமிழ் மக்களின் இன்றைய நிலை பற்றிய பொது மதிப்பீடு முக்கியமான ஒன்றாகும். ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு மேலாக இந்நாட்டில் வாழ்ந்து வரும் இம்மக்கள் பொதுப் பார்வை ஒன்றில் சமகால அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகிய துறைகளில் மிகவும் பின் தங்கிய ஒரு மக்கள் கூட்டமாக காணப்படுகின்றனர் என்பதே பொது வான ஒரு அபிப்பிராயமாகும். இன்றைய மலையகத்தின் இத்த கைய நிலைக்கு பொறுப்பான காரணிகள் பல உள்ளன.
இன்றும் (1993) பொரும்பாலான மலையக தமிழ் மக்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களாகவே வாழுகின்றனர். நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் ஒரு இலட்சம் மலையகத் தமிழ் மக்கள் உட்பட முழு இலங்கையிலும் ஏறத்தாழ 11 இலட்சம் மலையகத் தமிழ் மக்கள் வாழ்வதாகக் கணிப் பீடுகள் கூறுகின்றன. 1981 ஆம் ஆண்டளவில் நகரங்களில் வாழ்ந்த ஐம்பதினாயிரம் மக்களைத் தவிர்த்து ஏனையோர் பெருந் தோட்டங்களிலும், கிராமங்களிலுமே வாழ்ந்தனர். இவர்களின் குடியுரிமை நிலைமை, வருவாய் நிலைமைகள், கல்வி வளர்ச்சி, வாழ்க்கைத் தரம் என்பன பற்றிய மதிப்பீடுகள் முக்கியமான தாகும்.
209

Page 119
இன்றைய மலையகம்
19 ஆம் நூற்றாண்டின் மத்திய காலம் முதல் இந்தியா விலிருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்து வந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களாகவும், துறைமுக, வீதியமைப்பு தொழி லாளர்களாகவும், வியாபாரிகளாகவும் வாழ்ந்த அனைவரையும் உள்ளடக்கி, இந்நூற்றாண்டின் மத்திய காலப் பகுதியில் (1948) அவர்களை குடியுரிமையற்றவர்களாக்கும் பாராளுமன்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவ்வாறு இழந்த குடியுரிமை யினை 1988 ஆம் ஆண்டே மலையகத் தமிழ் மக்கள் மீண்டும் பெற்றனர். 1948 ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டு வரை இம்மக்களின் குடியுரிமையினை மீண்டும் பெறுவதில் முன்னின்று செயல்பட்ட நிறுவனங்களில் குறிப்பிடத்தக்கதும் முக்கிய மானதுமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) " காணப்படுகின்றது. இம்மக்களின் குடியுரிமையினை 1948 ஆம் ஆண்டில் நீக்கிய அரசு, ஐக்கிய தேசிய கட்சி (ஐ.தே.க.) அரசாகும். 40 வருடங்களின் பின் அவ்வாறு குடியுரிமையினை நீக்கிய ஐக்கிய தேசியக்கட்சி அரசே முழுமையாக இப்போது (1988) குடியுரிமையினை மலையகத் தமிழ் மக்களுக்கு வழங்கு வதற்கான சட்டத்தினையும் இயற்றியுள்ளது. இது கவனிக்கத் தக்க முக்கிய சம்பவமாகும். இவ்வாறு இல்லாதொழிக்கப்பட்ட குடியுரிமையினை மீண்டும் பெற்றெடுப்பதில் முக்கிய பங்கினை இ.தொ.க. வகித்தது மாத்திரமின்றி, இக்குடியுரிமையினை மீண்டும் பெற்றெடுத்த வரலாறே அக்கட்சியின் வரலாற்றின் பெரும் பகுதியினைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.
1970 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிகளில் ஏற்பட்ட நிலச் சீர்த்திருத்தத்தின் விளைவாக கண்டி, மாத்தளை, கேகாலை மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக் கணக்கான மலையகத் தமிழ் மக்கள் நாட்டின் வடக்கு, கிழக்கு மாவட்டங்கள் நோக்கி இடம் பெயர்ந்தனர். 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் நாட்டின் மத்திய, தென், மேற்கு மாவட்டங்களில் ஏற்பட்ட இனக்கலவரங்கள் மேலும் பல்லாயிரக்கணக்கான மலையகத் தமிழ் மக்களை வடக்கு, கிழக்கு மாவட்டங்கள் நோக்கி இடம்பெயரச் செய்தது. 1958 ஆம் ஆண்டு இனக்கலவரத்தில் பின்னரேயே இத்தகைய குடிப்பெயர்வுகள் ஆரம்பித்து விட்டன எனலாம். இவற்றின் காரணமாக இன்று ஏறத்தாழ ஒரு இலட்சம் மலையகத் தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் வாழுகின்றனர். எனையோர் நாட்டின் ஏனைய மாவட்டங்களில் குறிப்பாக தேயிலை, இறப்பர் பெருந்தோட்ட பயிர்ச் செய்கை பிரதானமாக இடம் பெறும் மாவட்டங்களிலேயே வாழு
20

இன்றைய மலையகம.
கின்றனர். 1981 ஆம் ஆண்டில் காணப்பட்ட மாவட்ட ரீதியான மலையகத் தமிழ் மக்களின் குடிப்பரம்பல் பற்றிய தரவுகள் இந்
நூலின் முதலாவது கட்டுரையில் இடம் பெற்றுள்ளன. இலங் கையில் குடியுரிமை பெற்ற ஒரு சிலர் 1983 ஆம் ஆண்டின் பின்னர் இந்தியாவில் சென்று குடியேறியுள்ளனர். அத்தகையோரில்
பெரும்பாலானோர்கள் அங்கேயே நிரந்தரமாக வாழ விரும்பு வதாகவும் தெரிய வருகிறது.
1981 ஆம் ஆண்டு குடிமதிப்பீட்டின் படி மலையகத் தமிழ் மக்கள் 8,18,000 பேர் அப்போது இலங்கையில் வாழ்ந்தனர் எனத்தெரிய வருகிறது. இவர்கள் இந்தியத் தமிழர் என அக்கணிப்பீட்டில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை பொருத்து ஒரு மாறான தகவலும் அம்மதிப்பீட்டில் உள்ளது. இவர்களின் எண்ணிக்கை 10,31,000 பேராக இருக்க வேண்டும் என குடிமதிப்பீட்டுத் திணைக்களம் தனது 1981 ஆம் ஆண்டு பொது அறிக்கையில் கூறியுள்ளது. இதற்கு 2,13,000 பேர் தாம் இலங்கை குடியுரிமை பெற்றதன் காரணமாக தம்மை இலங்கைத் தமிழர் என பதிவு செய்துக் கொண்டமையே காரணமெனப் படுகிறது. 1981-ஆம் ஆண்டின் பின்னர் இன்று வரையான (1992) 11 வருட கால இயற்கை அதிகரிப்பினை, வருடாந்த அதிகரிப்பு 1.3 வீதம் (அட்டவணை 1:3) என்ற அனுமானத்தில் கணித்துப் பார்த்தால் இக்காலப்பகுதியில் ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் பேர் அதிகரித்திருப்பார்கள். இக்காலப் பகுதியில் (1981-92) இந்தியா சென்றவர்கள் என 108,000 பேரை (அட்டவணை 1.5) கழித்துப் பார்த்தாலும் இப்போது (1992) அவர்களின் எண்ணிக்கை 10.7 இலட்சமாக இருக்கலாம் என அனுமானிக்கலாம். இவ்வெண்ணிக்கையில் வடக்கு கிழக்கு மாவட்டங்களில் வாழும் ஒரு இலட்சம் பேர், நாட்டின் நகரப் பகுதிகளில் வாழும் 60,000 பேர் ஆகியோரை கழித்துப் பார்த் தாலும் எஞ்சிய ஒன்பது இலட்சம் பேர் பெரும்பாலும் பெருந் தோட்டங்களிலும் மிகச் சிறிய அளவில் ஏனைய கிராமப் பகுதிகளிலும் வாழ்வதாகக்கொள்ளலாம்.
1964 ஆம் ஆண்டு உருவாகிய சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்திய பிரஜாவுரிமை பெற்ற ஏறத்தாழ 80,000 பேர் இன்றும் (1992) தாயகம் திரும்பாமல் இலங்கையிலேயே இருப்ப தாக கூறப்படுகின்றது. எனவே இவ்வாறு இந்தியராக பதிவு செய்து கொண்டவர்களைத் தவிர்த்த அனைத்து மலையகத் தமிழ் மக்களும் இலங்கையின் 1988 ஆம் ஆண்டு டிசம்பர் மாத
2.

Page 120
இன்றைய மலையகம்
குடியுரிமை சட்டத்தின்படி இலங்கை பிரஜைகளாவார்கள். இவர்கள் முன்னர் போன்று குடியுரிமை சான்றிதழ் பெற வேண்டும் என்பது கட்டாயமல்ல. தாம் இந்திய பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்காதவர்கள் என்பதனை உறுதிப்படுத்தும் வகையில் சத்தியக் கடுதாசி எனப்படும் ஆவணம் ஒன்றினையும் ஏனைய பிறப்பு, வாழ்விடம் என்பதனை நிரூபிக்கும் ஆவணங்களையும் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அவர்கள் இந்நாட்டு பிரஜைகளாக அங்கீ கரிக்கப்பட அருகதையானவர்கள் என சட்டம் கூறுகின்றது. நெடுங்காலமாக சிறுபான்மையினராக நடாத்த்ப்பெற்று, நாடற்ற வராக இன்னல்களுக்கு உள்ளாகிய ஒரு மக்கள் குழுவினது இன்னல்களை அரச அதிகாரிகள், சட்டம் ஒன்று இயற்றப்பட்டதனை மாத்திரம் காரணமாகக் கொண்டு துயர் தீர்க்க முன் வருவார்கள் என நம்ப முடியாது. எனவே கிடைக்கப்பெற்ற இவ்வுரிமையினை நடைமுறைப்படுத்துவதில் இச்சமூகத்தின் நலனில் அக்கறை கொண்ட அனைத்து சக்திகளதும் முழுமையான முயற்சியும் ஒத்துழைப்பும் இதற்காக தேவைப்படுகின்றது. இதற்கு இச்சமூக மக்களின் புரிந்துணர்வே யாவற்றையும் விட அத்தியாவசிய மாக தேவைப்படுவதொன்றாகும்.
மலையகத் தமிழ் மக்கள் முன்னர் இழந்து, இப்போது பெற்றுள்ள குடியுரிமையினால் ஏற்படக் கூடிய நன்மைகள் யாதென சற்று விபரமாக அவதானித்தல் பொருத்தமாகும். முதலாவது இவர்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் வாக்குரிமைக்கு தகுதியுடையவராகின்றனர். பிரதேச சபை, மாகாண சபை, பாராளுமன்றம் ஆகியவற்றிற்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல்கள், ஜனாதிபதி தேர்தல் ஆகியவற்றில் இவர்களுக்கு வாக்களிக்க உரிமை உண்டு. ஜனநாயக ஆட்சியினையும், உரிமைகளையும் உறுதிச் செய்து கொள்வதற்கு தேர்தலில் பங்குகொள்வதன் முக்கியம் பொருத்து இக்கட்டுரையில் விபரிப்பது பொருத்தமற்றதாகும். ஆயினும் மலையக மக்கள் தமது வாக்குகளை முதலீடு செய்து பிரதான அரசியல் கட்சிகளிடம் செல்வாக்குப் பெறுவது குறித்த கருத்து முக்கியமாகும். தேர்தலின் போது வாக்கு வேட்டையில் ஈடுபடும் அரசியல் கட்சிகள் மலையகத் தமிழ் மக்களின் ஆறரை இலட்சம் வாக்குகளை உதாசீனம் செய்ய முடியாது. இவ்வாக்குகள் மலையகத் தமிழ் மக்களை இலங்கையின் அரசியலில் செல்வாக்குப் படுத்தும் ஒரு சக்தி என்னும் கருத்தினை நாம் குறைவாக மதிப்பிட முடியாது. மலையகத் தமிழ் மக்களின் பிரதான பிரச் சினைகளைத் தீர்க்க முன் வரும் கட்சி ஒன்றினை இவர்கள் ஆதரிக்க
212

இன்றைய மலையகம்.
பேரம் பேசும் வகையில் இவர்கள் அரசியல் ரீதியாக ஒன்று பட்டிருக்க வேண்டும். இதன் முக்கியத்துவத்தினை யாவரும் அறிவார்கள். கடந்த தேர்தல்களின் (1989) போது இவர்களில் ஏறத்தாழ 3/, இலட்சம் பேரே வாக்காளராக தம்மை பதிந்து கொண்டிருந்தனர். அதில் ஏறத்தாழ 21 இலட்சம் வாக்குளை ஒருமித்த வகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் இணக்கம் கொண்டிருந்த ஐக்கிய தேசிய கட்சிக்கு அளித்ததன் காரணமாக இன்று (1992) பாராளுமன்றத்தில் ஐந்து மன்னலயகத் தமிழ் பிரதிநிதிகள் காணப்படுவதுடன் அவர்களில் மூவர் அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாக்குகள் இரு மடங்காக அதிகரித்து பதியப்பட வாய்ப்புக்கள் உள்ளன. அவ்வாறு பதியப்பெற்று, ஒன்றுபட்ட தலைமைத்துவத்தின் கீழ் தேர்தலில் வாக்களிக்க பேரம் பேசப்படுமேயானால் மலையகத் தமிழ் மக்கள் இந்நாட்டின் அரசியலில் பெறக்கூடிய அரசியல் அதிகாரங்களும், செல்வாக்குகளும் நிச்சயமாக அதிக மாவதுடன் அது இச்சமூகத்தின் அரசியல் ரீதியிலான முன்னேற்றத் திற்கு பெரும் பயனுடையதாக அமையும். உதாரணத்திற்கு கடந்த பிரதேச சபை (1991) தேர்தலை நினைவு கூறலாம். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா, அம்பேகமுவ ஆகிய இரண்டு பிரதேச சபைகளுக்கும் தனது சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டியது. இதற்கு பெரும்பான்மை கட்சியான ஐக்கிய தேசிய கட்சியுடன் செய்து கொண்ட பேரம் சாதகமாயிருந்தது. நாட்டில் சிங்கள வாக்காளர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பகுதிகளில் ஐ.தே.க. சின்னத்தில் இ.தொ.கா. வேட்பாளர்கள் போட்டி யிட்டனர். அதேபோல், மலையகத் தமிழ் மக்கள் பெரும்பான்மை வாக்காளராக இருந்த இவ்விரு தொகுதிகளிலும் ஐ.தே.க. வின் வேட்பாளர்கள் இ.தொ.கா. சின்னத்தின் கீழ் போட்டியிட்டனர். இது அரசியல் அதிகாரம், செல்வாக்கு என்பனவற்றை அதிகரிக்கும் அதே நேரத்தில், பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பேதத்தினை குறைக்கும் போக்கிற்கும் வழி வகுக்கும். இத்தகைய நிலைமைகளின் வளர்ச்சிக்கு மலையகத் தமிழ் மக்கள் அரசியலில் ஒன்றுபட்டு செயல்படும் நிலைமை மிக அவசியம். அற்ப காரணங்களின் அடிப்படையில் இவர்கள் பிளவுபடாது ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபட்ட சக்தியாக செயல்படுவது காலத்தின் தேவை என்பது மாத்திரமின்றி சிறுபான்மையினரைப் பொருத்து என்றும் மிக முக்கியமானதும் அத்தியாவசியமானது மான தேவை என்றும் கூறலாம்.
23

Page 121
இன்றைய மலையகம்
இப்போது பெறப்பட்டுள்ள குடியுரிமையானது இவர்கள் அரசியலில் பிரவேசிப்பதற்கான அனுமதிப் பத்திரமாக பயன் படும் அதே வேளையில், ஏனைய பல பொருளாதார தேவை களுக்குமான அரச அனுமதி எனவும் கூறலாம். நிலங்கள் கொள் வனவு செய்வதற்கும், அரசு நிலம் வழங்கும் போது விண்ணப் பிப்பதற்கும், இலங்கையருக்கு மாத்திரம் என ஒதுக்கப்படும் தொழில்களில் ஈடுபடவும், பிறநாடுகளுக்கு சென்றுவர தேவை யான கடவுச் சீட்டுகள் பெறவும் இக்குடியுரிமையே இவர்களை தகுதிமிக்கவர்களாக்குகிறது.
இது தொடர்பாக இவர்கள் தமது பிறப்பு, விவாகம், இறப்பு, தேசிய அடையாள அட்டை, பாடசாலை சான்றிதழ்கள் மற்றும் தொழில் தொடர்பான ஆவணங்களை பேணிப் பாதுகாப்பதில் கூடிய கவனமும் அக்கறையும் செலுத்த வேண்டி யுள்ளது. 1948 ஆம் ஆண்டு குடியுரிமை சட்டத்தின் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பித்தோரில் இலட்சக்கணக்கானோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட அவர்களிடம் தேவையான ஆவணங்கள் இல்லாதிருந்தமையும் ஒரு முக்கிய காரணமாக காட்டப்பட்டது. எனவே ஆவணங்களின் முக்கியத்துவம் இங்கே அறியக்கூடியதாயுள்ளது.
மலையகத் தமிழ் மக்களின் வருமானம் பரம்பல் நிலைமைகளை அவதானிக்கும் போது இவர்களே இலங்கையில் மிகவும் தாழ்ந்த வருவாய் மட்டங்களில் காணப்படுகின்றனர். நகர, கிராமப் புறங்களை தவிர்த்து, பெருந்தோட்டங்களிலேயே ஏறத்தாழ ஒன்பது இலட்சம் மலையகத் தமிழ் மக்கள் வாழ் கின்றனர். இவர்களில் மிகப் பெரும்பான்மையினரானவர்கள் விவசாயத் தொழிலாளர்களாகவே காணப்படுகின்றனர். இதனால் இவர்களுடைய வருமானம் மிகவும் குறைவாகவே உள்ளது. இதுபற்றி மத்திய வங்கியின் நுகர்வோர் நிதியம் பற்றிய அளவீடு மற்றும் தனிப்பட்ட ஆய்வாளர்கள் பலரது ஆய்வுகள் என்பன போதிய தகவல்களை அளித்துள்ளன. 1981 ஆம் ஆண்டில் தனிநபர் வருவாய், இலங்கையின் நகரப் பகுதிகளில் ரூபா 11.654/- ஆகவும் கிராமங்களில் ரூபா 8572/- ஆகவும் காணப் பட்ட போது பெருந்தோட்ட தெழிலாளர்களுக்கு அது ரூபா 5600/- ஆகவே காணப்பட்டது. ஆகவே ஏறத்தாழ 90 வீதத்திற்கும் அதிகமான மலையகத் தமிழ் மக்கள் தமது வருவாயினைப் பொருத்தமட்டில் ஏனைய குழுக்களை விட மிகவும் தாழ்ந்த நிலையிலேயே காணப்படுகின்றனர்.
214

இன்றைய மலையகம்.
இவ்வாறு இவர்களின் வருவாய் தாழ்ந்த நிலையில் காணப்படுவதற்கு முதல் காரணம் இவர்கள் பயிற்றப்படாது சாதாரண விவாசய தொழிலாளர்களாக தொழில் புரிவதே யாகும். அபிவிருத்தியில் தாழ்ந்த நிலையில் காணப்படும் ஒரு நாட்டில் அரசியல் பலமற்ற உடலுழைப்பு தொழிலாளர்கள் மிகவும் குறைந்த வருவாயினைப் பெறுவது ஆச்சரியத்திற் குரியதல்ல.
விவசாய தொழில்கள் தவிர்ந்த ஏனைய தொழில்களில் ஈடுபட்டுள்ள மன்லயகத் தமிழ் மக்கள் பற்றிய விபரங்கள் குறைவு. ஆயினும் சில தொழிற்சங்க பிரமுகர்கள், மூத்த ஆசிரியர்கள், மற்றும் மூத்த அலுவலர்கள் போன்றோரிடம் நேரடியாக பேசிப் பெற்ற தகவல்கள் மூலம் பின்வரும் உத்தேச மதிப்பீடு ஒன்றினை செய்யக் கூடியதாயிருந்தது (1992).
க.பொ.த. (சாதாரணம்) தகுதியுடனான ஆசிரியர்கள் 2,000 பேர் க.பொ.த. (உயர்தரம்) தகுதியுடனான ஆசிரியர்கள் 750 பேர்
பட்டதாரி ஆசிரியர்கள் 300 G3 uri பெருந்தோட்ட/வர்த்தக நிறுவன அலுவலக கிளார்க் மற்றும் கல்வி கற்ற சாதாரண உத்தியோகத்தர்கள் 3,000 பேர் இடைமட்ட தொழில்நுட்ப பயிற்சி மிக்க
தெழிலாளர்கள் 1,250 G3 uri போலிஸ் உத்தியோகத்தர்கள் 500 G8 usi
மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கணக்கியலாளர்கள், அரசாங்க உயரதிகாரிகள், பல்கலைக்கழக ஆசிரியர்கள். மற்றும்
வங்கி அதிகாரிகள் 300 G3 Luri மொத்தம் 8, 100 GL1 ri உத்தேச விலகல் 800 Guri மொத்தம் 8,900 . Guri
இத்தரவுகள் உத்தேச மதிப்பீடுகளே தவிர வேறில்லை. இவை அனுமானத்தின் அடிப்படையில் செய்த அதிகபட்ச மதிப் பீடுகளாகும். இவர்களை விட நகரங்களில் வாழும் 15,000 இற்கு உட்பட்ட பலதரப்பட்ட மலையகத் தமிழ் வியாபாரிகளையும் சேர்த்துக்கொண்டால் 24,000 பேரே விவசாய தொழிலாளர்கள் அல்லாததும் ஒரளவு கூடிய வருவாய் பெறும் தொழில்களில் ஈடுபட்டுள்ளதாக கூறலாம். இவர்களும் இவர்களில் தங்கி யுள்ளவர்களுமான 1,20,000 பேரைத் தவிர்த்த ஏனைய எட்டு லட்சத்து தொன்னூராயிரம் (8,90,000) பேரினதும் வருமானம்
215

Page 122
இன்றைய மலையகம்
ஆகக் குறைந்தபட்ச தேவைகளைத்தானும் பூர்த்தி செய்ய இயலாத மட்டத்திலான தாழ் நிலையிலேயே காணப்படு கின்றது.
இவ்வாறு வருவாயில் தாழ்நிலையில் காணப்பட கல்வியில் இச்சமூகம் மிகவும் பின்தங்கியிருப்பதுவும் மிக முக்கிய காரணமாகும். பெருந்தோட்டங்களில் வழங்கப்பட்ட கல்விச் சேவை மிகவும் பின்தங்கியதாகும். தோட்டப் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னரும் கூட திருப்தியான நிலைக்கு இன்னும் உயரவில்லை. பல வகுப்புகளைக் கொண்ட பாடசாலைகள் பல இன்னும் ஒராசிரியர் பாடசாலையாகவே இயங்குகின்றன. பெருந்தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்தியில் பங்கு கொண்டுள்ள 'சீடா நிறுவனத்தின் நடவடிக் கைகளை மதிப்பீடு செய்யும் இலண்டன் பல்கலைக்கழக கல்வியியல் பேராசிரியர் அஞ்செலா லிட்டில் (Angelaide) என்பவர் பெருந்தோட்ட கல்வி பற்றி குறிப்பிடுகையில் (1993) தோட்டப் புறங்களில் ஆரம்ப கல்விக்கான வசதிகளும் கூட இன்னும் பூரணத்துவமாகவில்லை. தேசத்தின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையிலும் கூட இங்கே விருத்திக்கு இன்னும் பெருமளவு இடமுண்டு என கருத்து தெரிவித்துள்ளார். இதிலிருந்து தோடப்புற கல்வி வசதிகள் பற்றிய அனுமானங்களை நாம் வளர்த்துக் கொள்ள முடியும்.
அரசாங்கத்துடன் இப்போது மலையகத் தமிழ் தலை வர்கள் இணைந்திருப்பதால் சில விருத்திகள் ஏற்பட்டுள்ளன. அமைச்சர் தொண்டமான் தனது தேர்தல் தொகுதிக்கு அரசின் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்படும் 25 இலட்ச ரூபாவையும் மலையகத் தமிழ் பாடசாலைகளின் அபிவிருத்திக்காக ஒதுக் கியமை அவ்வாறான ஒரு குறிப்பிடத்தக்க விருத்தி நடவடிக்கை யாகும். சுவீடன் (சீடா) அரசாங்கம் வழங்கியுள்ள சில அபிவிருத்தி நடவடிக்கைகள் மலையகப் பாடசாலைகளில் சில அடிப்படை பெளதீக வசதிகளை உயர்த்தியுள்ளன. இவற்றை விட அரசாங்கத்தின் ஒரு சில அபிவிருத்தி நடவடிக்கைகளும் இட்ம்பெற்றுள்ளன. இருந்த போதிலும் தேவைகளுடன் ஒப்பிடு கையில் இன்றைய (1992) வேகத்தில் இன்னும் 25 வருடங் களாவது தொடர்ந்தால் தான் குறைந்தபட்ச கல்வி வசதி களாவது மலையக தமிழ் பாடசாலைகளுக்கு வந்து சேரும் என நம்பலாம். இன்று மலையக மக்களின் வாக்குரிமை தகுதி காரணமாகவும் எண்ணிக்கை காரணமாகவும் அரசு தனது
216

இன்றைய மலையகம்.
விகிதாசார கொள்கையின் அடிப்படையில் 5.6 சதவீத பிரதி நிதித்துவத்தை தொழில் வாய்ப்புகளில் மலையக தமிழ் மக்களுக்கு வழங்க முன் வந்துள்ளது. இத்தகைய அரச கொள்கையின் வளர்ச்சி இயல்பாக ஏற்பட்ட ஒன்றல்ல. அரசியலில் மலையக தமிழ் மக்களின் ஒன்றுபட்டதும் ஏகோபித்ததுமான தலைமைத் துவமும் அத்தலைமைத்துவத்தின் கீழ் தமது வாக்குகளை தம்மை அனுசரணையுடன் பார்க்க வற்புறுத்தப்பட்ட அரசுக்கே அளிப்ப தென்ற கொள்கையினை பின்பற்றியதனாலுமே ஏற்பட்ட ஒன் றாகும். 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல், ஜனாதிபதி தேர்தல் ஆகியவற்றிலும் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் மலையகத் தமிழ் மக்கள் அளித்த வாக்குகளில் பெரும்பாலானவை இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடன் அரசியல் இணக்கம் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கே வழங்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தலில் ஐ.தே.க.இன் சின்னத்தின் கீழ் போட்டியிட்ட இ.தொ.கா. வேட்பாளர்கள் ஏறத்தாழ 2,45,000 வாக்குகளை பெற்றிருந்தனர். கொழும்பு மாவட்ட இ.தொ.கா. வேட்பாளர் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டிருந்தார். ஆயினும் விகிதாச் சார தெரிவில் ஐ.தே.க.க்கு 14 பிரதிநிதிகளை தெரிந்துகொள்ள வாய்ப்பு இருந்தபோது இலங்கை தொழிலாளர் காங்கிரசிலிருந்து இருவரை அக்கட்சி தெரிவு செய்தது.
மலையகத் தமிழ் பாடசாலைகள் சிறந்த கல்வியினை வழங்குவதற்கு அங்கே போதிய வசதிகளுடன் பாடசாலை கட்டி டங்கள், பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் போன்ற வசதிகள் தேவை. அதே நேரத்தில் தமது பிள்ளைகளை குறைந்தது 16 வயது வரும் வரையிலாவது பாடசாலையில் படிக்க வைக்க பெற்றோர்களுக்கு வருவாய் வசதிகள் தேவை. துரதிஷ்டவசமாக இவை, மலையகத் தமிழ் மக்களைப் பொருத்து போதியளவில் இல்லை. கல்விக்கான பெளதீக வசதிகளை பூர்த்தி செய்ய அரசு ஒரு சில நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் அது இன்றைய தேவையுடன் ஒப்பிடுகையில் போதாததாகும். இதனை முழுமை யாக்க மக்கள் தமது வாக்குப் பலத்தில் நம்பிக்கை வைத்து ஒன்றிணைந்து கடந்த தேர்தல்களில் போன்று செயல்படுவதன் மூலம் அரசியலில் பேரம் பேச வேண்டியுள்ளது. அதே நேரத்தில் பெற்றோரது வருவாய் நிலைமைகளும் உயர வேண்டிய தேவைகளும் உள்ளன.
மலையகத் தமிழ் மக்கள் கல்வியில் எந்தளவுக்கு பின் தங்கியுள்ளனர் என்பதனை இனங்காண குறிகாட்டி ஒன்றுண்டு.
217

Page 123
இன்றைய மலையகம்
அண்மையில் (1992) மலையகத் தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் அமைக்கப்பட்டது. அது பற்றி பத்திரிகை செய்திகள் மூலம் பிரபலப்படுத்தப்பட்டது. அதில் ஏறத்தாழ 100 பட்டதாரிகளே இன்று வரை அங்கத்தவராகியுள்ளனர். பெரும் முயற்சிகள் மேற் கொள்ளும் பட்சத்தில் அது 250 ஆக உயரலாம் என எதிர்பார்க் கப்படுகிறது. ஆகக் கூடிய பட்ச மதிப்பீட்டில் அது 600 பட்ட தாரிகளுக்கு மேல் இருக்க முடியாது என நம்பப்படுகிறது. பதினொரு இலட்சம் மக்கள் மத்தியில் பல்கலைக்கழக பட்ட தாரிகள் 600 பேர் மாத்திரம் உள்ளனர் என்பது கல்வியில் இச் சமூகம் எந்தளவிற்கு பின்தங்கியுள்ளதென்பதனை எடுத்துக்காட்டும் ஒரு குறிகாட்டியாக கொள்ளப்படலாம். இதைத் தவிர்த்துப் பார்த்தாலும் பாடசாலையில் பதினோராம் ஆண்டு கல்வியினை பூர்த்தி செய்தோர் எண்ணிக்கையும் குறைவாகும். கடந்த சில வருடங்களில் அரசு தோட்டப் பாடசாலைகளுக்கு ஆசிரியர் களை நியமிக்க தீர்மானித்த போது பொருந்தோட்ட தொழி லாளர்களின் பிள்ளைகளுக்கே முன்னுரிமை கொடுக்க முன்வந்த போதிலும், தேவைப்பட்ட ஆயிரம் வெற்றிடங்களுக்கு ஐநூறு பேரே தகுதியுடையவர்களாகக் காணப்பட்டனர். பெரும் பாலான மலையகத் தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் சித்தி பெறுவதில்லை. இதற்கு மலையகத் தமிழ் பாடசாலைகளில் இப்பாடங்களைப் போதிக்க போதிய பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் இல்லாமையே முதன்மை யான காரணமாகும். கணிதம் சித்தி பெறாத மாணவர்கள் உயர் கல்விக்கு தகுதியற்றவர்களாவது மாத்திரமன்றி க.பொ.த. (சாதாரண) தகுதியுடனான தொழில்களுக்கும் தகுதியற்றவர்கள் ஆகின்றனர். எனவே பாடசாலை மட்டத்தில் வழங்கப்படும் கல்வியில் சில விருத்திகள் ஏற்பட்டாலும் அது தேவைகளைப் பொருத்தமட்டில் போதாததாகும். ஐந்தாம் ஆண்டுடன் பெரும் பான்மையான மாணவர்கள் படிப்பை விட்டுவிடுகின்றனர். தொழிலாளர்களின் வறுமை நிலையும், யாவற்றிற்கும் மேலாக கல்வியின் முக்கியத்துவம் பற்றிய புரிந்துணர்வில் பற்றாக் குறையுமே இதற்கு முக்கிய காரணங்களாகும். யாவற்றையும் விட பாடசாலைகளில் காணப்படும் வசதிகள் மாணவர்களை கவருவதாக அமைய வேண்டும். இன்று (1993) இலங்கையில் கல்விச் சேவை இலவசமாக இருப்பதுடன் மாத்திரமன்றி இலவச புத்தகம், இலவச பகலுணவு, இலவச சீருடை என்பவற்றை கொண்டதாகவும் உள்ளது. இவ்வசதிகள் மலையக பாடசாலை களிலும் இருந்த போதிலும், போதியதும் பயிற்றப்படாதது
28

இன்றைய மலையகம்.
மான ஆசிரியர்களும், வகுப்பறை வசதிகளும் இன்றும் பற்றாக் குறை நிலையிலேயே உள்ளன. இவற்றை மலையகத் தமிழ் மக்கள் யாவரும் முழுமையாக உணருதலும், தமது சந்ததியினர் கல்வியில் முன்னேறி அதன் மூலம் ஒரு மத்திய தர வகுப்பினராக உயரச் செய்யும் முயற்சிகளே இன்றைய அத்தியாவசிய உடனடி தேவைகளாகும்.
இவை யாவற்றையும் கவனத்தில் கொண்டு நோக்கும் போது மலையகத் தமிழ் மக்கள் இன்று அரசியல், பொருளா தாரம், சமூக துறைகளில் எந்தளவுக்கு பின் நிற்கின்றனர் என்பது புலனாகும். இவர்களது பிரச்சினைகள் இலங்கையில் வாழும் ஏனைய சமூகங்களின் பிரச்சினைகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் அடிப்படை தேவைகள் பற்றிய பிரச்சினைகளாகும். தமது தேவைகள், குறைபாடுகள் அதனால் தோன்றும் பிரச் சினைகள் என்பன எவை, என்பதனைக் கூட நன்கு அறிந்து கொள்ளாதவர்களாக இருக்கின்றனர். 1988-ஆம் ஆண்டு வரை அடிப்படையான குடியுரிமைகளும் இல்லாதிருந்தனர். நூற்றைம்பது ஆண்டுகள் குடியேற்றவாதிகள் பொருளாதார அமைப்பின் பிடியில் நாடு சிக்குண்டிருந்தபோது "மலிவான கூலிகளாகச் சுரண்டப்பட்டு, உழைக்கும் மனித இயந்திரங் களாக நடாத்தப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் வாழ்க் கையிலே இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னரும் விடிவு ஏற்படவில்லை. மாறாக அரசியல் உரிமையற்றவர்களாக்கப்பட்ட தோடு, அதன் தொடர் விளைவாக பொருளாதார, சமூக வாழ் விலும் பின்னடைந்தனர். எனவே பத்தொன்பதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதிகளில் இந்தியாவின் தென் மாநிலங்களில் நிலவிய வறுமை, பஞ்சம் என்பவற்றால் துன்புற்ற நிலமற்ற குடியானவர்கள் இந்நாட்டின் பெருந்தோட்டங்களுக்கு தொழி லாளர்களாக வந்தபோது காணப்பட்ட தாழ்ந்த சமூக பொரு ளாதார நிலையில் இருந்து குறிப்பிடத்தக்க அளவில் எவ்வித முன்னேற்றங்களையும் அடையாதவர்களாகவே இன்றும் காணப் படுகின்றனர். இக்காலப் பகுதியில் மலேசியா, பீஜி, மொறிசியஸ், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்ற தொழி லாளர்களின் வாழ்க்கைத் தரங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங் களுடன் ஒப்பிடுகையில் இவர்களுடைய நிலை மிகவும் திருப்தியற்றதாகவே காணப்படுகின்றது.
எனவே 1988-ஆம் ஆண்டில் சட்ட ரீதியாக வழங்கப் பட்டுள்ள குடியுரிமையினை நடைமுறைப்படுத்தவும், அதனால்
29

Page 124
இன்றைய மலையகம்
தாம் பெற வேண்டிய உரிமைகளை பெற்றுக்கொள்ளவும், இவர்கள் அரச நிறுவனங்களை வற்புறுத்த தமது "அரசியலில் ஒற்றுமை" என்ற உபாயத்தில் முழுமையாக நம்பிக்கை வைக்க வேண்டும். பிரார்த்தனை, தொழிற்சங்க நடவடிக்கை போன்ற சாத்வீக போராட்டங்களே இச்சமூகத்தின் இன்றைய பொருளா தார, சமூக அரசியல் சூழ்நிலைகளைப் பொறுத்து சாதக மானதும், பொருத்தமானதுமான அரசியல் போராட்ட அணுகுமுறைகளாகும். அரசியலில் ஒற்றுமைப்படும் சமகாலத்தில் இன்றைய மலையகத் தமிழ் மக்கள் தம்மை ஒரு மத்திய தர வகுப்பினராக உயர்த்திக்கொள்ள கல்வித்துறையில் முழு ஆர்வத் தினையும் செலுத்துவதே அவர்களது எதிர்கால சபீட்சத்திற்கான ஒரே வழியாகும்.
_6ళ్నీ
220


Page 125
இன்றைய மலையக
usa sa
இன்
| Du Louis L. இன்றைய மலையகம் இன்றைய மலையகம்
இன் աաաաատա - இன் மலையம்
இன்றைய
இன் இன்ற ॥ இன்றைய மலையகம்
In Italini () ist Du Lauuzin இன் L | |
6) նորյա տոքսաելի இன்றைய மலையகம்
us Glavnu unapaluzi இன்ற է որյա որոթյա-լի Gallazz JLLJ LJJLJL LLLLL இன்றைய மலையகம்
॥ Բրետորյա աբորատի, | pulpinautuzii LU இன்றைய மலையகம் bywyddail, a இன்றைய sue இன்று
॥ இன்றைய Gledanpu ulogu usta HILL LLLLLLL II இன்றைய மலையக GANDU LDDAILL இன்
LL Բ) - արյա լո ասա են GRIGODINULDULJELI
iീളം இன் இன்ற
ീ| L(1)||5|| இன்றைய மயகம் இன்றைய மலையகம் Ag. I Lisan, NA இள் որյա Լորի նաեւ Glitt. Inariusú, Gli Ilalai LI LI LI இன்றைய மலையகம் இன்றைய மலையகம் இன்று |L இன்றைய மலையகம் இன்றைய மலையகம் III இன்றைய மலையகம் இன் LEIDDILLIEEL
|L இன்றைய esul- இன்றைய மலையகம்
Siriu would இன்றய மயகம்
இன்றைய மலையகப் GRDDL LDD LLEL L Gla U La UE III இன்றை LDEDIGILLIEL Gellir gan Du Llaniou wasti இன்றைய மலையகம்
III GETRIJD LIIDUDALJE இன்றைய மலையகம் / Sinulasi இன்றைய மலையகப் இன்ற
இன்றைய மலையகம் GFRIDADEILDADA. La Sii.
இன்றைய bu இன்றைய aul. A இன்றை
இன் sue இன் cu இன்ற
 
 
 
 

LLL It LL இன்றைய மலையகப்
usa இன்றைய
இன்றைய மலையகம் இன்றைய மலையகம் இன்றைய soul. இன்றய மலை ...A. இன்றைய II । இன்றைய
। Laula, NA இன்றைய at A இன்றைய
இன்றைய ... இன்றைய மலையகப் இன்றைய
It இன்றைய மலையகம்
LI LIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII ն) այլ տունաելն இன்றைய
இன்றைய மலையகப் இன்றைய மலையகப் | இன்றைய ...A. இன்றய
G) simpunan Busin இன்றைய மலையகப்
|L இன்றைய
இன்
॥ இன்றைய Z
ன்ெ LDLIII Gellir yn De Dannu Llais in இன்
Զտեգորա Լետոյատեւ ਮ॥1॥ |GDu Lloegr, Llain SIGILOJ ILI LINDELLI CELI இன்றைய I u III Stengu indon La
டுன் Lill Lili GULDLI இன்றைய
இன்றைய மாயகம் இன்றைய மலையகம் இன்றை மலையகம் இன் | இன்றைய
இன்றைய மலையகம் இன்றைய மலையகம் | || || Na LLANINA இன்றைய led இன்றைய ܘܗ .
LLILLI இன் LI LI LI LI இன்றைய
॥ இன்றைய மலையகப் . uas இன்றைய ... . இன்றய GironunDrusi ॥ .ܣܘܝܕ ബി. । ... A இன்றை
|

Page 126
இந்நூலாசிரியர், மா.செ
பிடமாகக் கொண்டு ஆரம்பக் கல் பேராதனை பல்கலைக்கழகத்தில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் யாளராகச் சேர்ந்தார். பின்ன பொருளாதார புவியியலில் முது துடன், பொதுநலவாய புலமை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் மூ திட்டமிடலில், முது - அறிவியல் பெற்றதோடு, பட்டய நகர தி பட்டார். தற்போது பேராதனை துறை சிரேஷ்ட விரிவுரையா6 பல்கலைக்கழக கல்லூரியின் கின்றார்.
கடந்த 15 வருடங்களாக சமூக, பொருளாதார, அரசியல் ஆக்கங்கள் இந்நூலில் வெளிய தரங்குகளில் - பிரித்தானியப்ா, டென்மார்க், சுவிட்சர்லாந்து, ெ லாந்ந்து, சிங்கப்பூர் ஆகிய நாடு களும், பொருளாதாரம், புவியிய திட்டமிடல், தொழிலாளர் பிர பொருளாதாரப் பிரச்சினைகள் வேலைத்தள பிரச்சினைகள் போன் கட்டுரைகளை சமர்ப்பித்த அனு நூற்றுக்கணக்கான தொழிலாள பங்கு கொண்டும், நடாத்தியுள்ள சிந்தனைகளை விரிவுபடுத்தியு பிள்ளை தம்பதிகளின் மூத்த பு
 

முகம்
மூக்கையா, மலையகத்தைப் பிறப் வியினை கம்பளையிலும், பின்னர் கலைமாணிப் பட்டத்தையும் பெற்று, 9 1971-ஆம் ஆண்டு விரிவுரை கொழும்பு பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தினைப் பெற்ற ப் பரிசு பெற்று, பிரித்தானியாவில், முன்று வருடங்கள் பயின்று, நகரத் - மாணி (எம்.எஸ்.ஸி) பட்டத்தினை ட்டமிடலாளராகவும் அங்கீகரிக்கப் ாப் பல்கலைக்கழகத்தில் புவியியல் ாராகவும், வடமாகாண இணைந்த பணிப்பாளராகவும் கடமையாற்று
மலையகத் தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் பற்றி இவர் செய்த ாகின்றன. பல்வேறு சர்வதேச கருத் பிரான்ஸ், நெதர்லாந்து, இத்தாலி, ஜர்மனி, மலேசியா, லிபியா, தாய் களில் கலந்து கொண்ட அனுபவங் 1ல், அபிவிருத்திப் புவியியல், நகரத் சினைகள் அவர்களுடைய சமூகப் தேயிலை தொழிலின் போக்கு ற பல்வேறு துறைசார்ந்த ஆராய்ச்சிக் ாவமும் கொண்டவர். மலையகத்தில் ர் நலம் சார்ந்த கருத்தரங்குகளில் மை இவருடைய மலையகம் பற்றிய ள்ளது. இவர் மா. செல்லமுத்து 16V6IIs st 6M (T/I. .