கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை

Page 1

—)-=- |-| _ = -
-

Page 2

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை
சிலோன் விஜயேந்திரன் எம்.ஏ.
കff)
834 அண்ணா சாலை சென்னை 600 0002 தொலைபேசி 834505

Page 3
நூலாசிரியர்: சிலோன் விஜயேந்திரன், எம்.ஏ. நூல்: ஆசுகவி கல்லடிவேலுப்பிள்ளை
G) உரிமை பதிவு மார்கழி 1990
விலை; 10.00
ஒளிஅச்சுக்கோப்பு, அச்சிடல், வெளியீடு காந்தனகம், சீ34, அண்ணாசாலை, சென்னை-சீ. Cosroavavao; ovasos.

அவளுக்கு அர்ப்பணம்
எனது லட்சிய நாயகியின் நினைவுகள் என்னைத் தீண்டுகின்ற போது.
நான் உத்வேகத்தின் தாசனாகி விடுகின்றேன். அமர உலகின் ஆனந்தக் கனவுகள் என்னுள் மலர்கின்றன.
அவள்என் உள்ளுணர்வோடு ஒன்றியவள்; ஆத்மாவோடு சங்கமித் தவள்; கருத்தின் மாய விசையாய் மாறியவள்.
அவளே என்னை எழுத்துத்துறையில் இரண்டறக் கலக்கப் பண்ணி னாள். அவளே என்னை இலக்கிய தெய்வத்தின் நித்ய உபாசகனாகி மாற்றினாள். அவளே என் சீவியத்தைச் சுதந்திரப் பாதைகசூத் திசை திருப்பினாள்.
சக்கரவாகப் பட்சிகள் வான் சந்திரிகையில் திரள்கின்ற அமிர் தத்தை உண்டு ஆனந்திக்கின்றின. என் ஆத்மர் பிரிய தேவதையின் நினைவின் மதுமாந்தி மதுர சுகம் காண்கின்றது.
'பெண்ணின் வாழ்க்கை அன்பின் சரித்திரம்' என்று எங்கோ படித்திருக்கின்றேன். இக்கூற்றுக்கு இலக்கணமாகத் திகழ்ந்து, வானே கியவளின் மலரடிக்கு இந்நூல் அர்ப்பணம்.

Page 4
என்னுரை
காலங்கள்தோறும் ஈழத்தில் இன்றமிழைப் பேணுவான் வேண்டி நல்லறிஞர்களும், நற்கவிவாணர்களும் தோன்றி உள்ளனர். உள்ளனர்.
அத்தகையோரில் சென்ற நூற்றாண்டில் தோன்றிய ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையும் ஒருவர்.
ஈழத்து மக்கள் மன்றத்தில் எஞ்ஞான்றும் வாழும் வண்ணழாக
அன்னார் வீறுள்ள கவிஞராகவும், அஞ்சாமைமிக்க பத்திரிகை
ஆசிரியராகவும் விளங்கினார்.
ஆசுகவியின் ஆண்மைமிகு வரலாற்றைத் தாங்கும் இந்நூலை 'காந்தளகம் மூலம் வெளியிடமுன் வந்த க. சச்சிதானந்தன் அவர்கட்கு என்நன்றி.
பல்லாற்றானும் எனக்கு ஒத்துழைப்பு நல்கிய அருமை நண்பர் கள் ஆ.சி. பிரகாஷ், சைதை டாக்டர் தேவராசன் எம்.எஸ்.சி. டி.லிட். ஆகியோருக்கும் என் நன்றி.
26, டாக்டர் பெசன் வீதி ஐஸ்அவுஸ், சென்னை-14.
சிலோன் விஜயேந்திரன்.
 
 
 

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை 1. ஆசுகவி.
ಶ್ವೇಕ್ಗಿ ஒருவரே புலவர் என்பர் ஆன்றோர். ஆன்றோர் கூற்றுக்கொப்ப கடந்த நூற்றாண்டில் ஈழத்திரு நாட்டில் பிறந்த மஹா புலவரே ஆசுகவி கல்லடி வேலுப் பிள்ளையவர்கள்.
ஆசுகவியவர்கள் கவிமட்டுமல்லர்; உன்னத உரை நடைக் கர்த்தா சமத்காரமும், அஞ்சாமையும் மிக்க பத்திரிகையாளர்; இணையற்ற கண்டனக்காரர்; சிறந்த சரித்திர ஆய்வாளர்; உயர்ந்த சைவத் தொண் டர்; அதே ஞான்று பிறமதங்களையும் துவேஷக் கண்கொண்டு பார்க் காத பண்பாளர்; தனது காலத்தின் வித்வான்களாலேயே 'நிகரற்ற மேதை" எனக் கொண்டாடப்பட்டவர். ஈழத்தில் மட்டுமன்றி இந்தியா, மலாயா போன்ற தேசத்துப் பெரியார்களாலும் வித்தகர் என விதந் தோதப்பட்டவர்.
இத்துணைக் கீர்த்தி இருந்தென்ன? புலவர் காலமாகி சுமார் முப் பது வருடங்களாகின்றன. இது காறும் அவர் வரலாறு எழுதப்பட வில்லை. அன்னாரின் ஆன்ற கைங்களியங்கள் எடுத்துரைக்கப்பட வில்லை. இப்படியே இன்னமுங் கொஞ்ச்க்காலம் செல்லுமாயின் மகி மைசான்ற அந்தக்கவியின்பணிகள் எல்லாம் காலவெள்ளத்தில் அறவே அழிந்திடவுங் கூடும்.
சென்ற நூற்றாண்டில் ஈழத்தில் தோன்றிய ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம்பிள்ளை போன்ற பெரு மக்களோடு சமமாக வைத்து மதிக்கத்தக்க ஒரு உன்னத புருஷனின் வாழ்வையும், அன் னாரின் ஒப்பற்ற பணிகளையும் முழுமையாக எடுத்துரைக்கக் கூடிய வாய்ப்பில்லாவிட்டாலும் கிடைத்த சான்றுகளைக் கொண்டு உரு வாக்கப்பட்டதே இந்நூலாகும்.
w ஆசுகவியவர்கள் தம்து வாணாள் முழுவதையுமே ஒரு கவி யாகவும் பத்திரிகையாளராகவுங் கழித்தார். மிகவுஞ் சிரமத்தின் மத்தி யிலே ஓர் அச்சுக்கூடம் நிறுவி, 'சுதேச நாட்டியம்' என்ற பத்திரி கையைப் பன்னெடுங் காலம் அஞ்சாமையோடு நடாத்தி தம்து கனல் கக்கும் கண்டனங்களால் எதிரிகளைக் கதிகலங்கச் செய்தும், ரமணிய மான தமது வசனநடையால் தமிழ் வசனத்துறைக்குச் சிறப்பான முறை யில் தம் பங்கினைச் செலுத்தியும் இன்னமும் பல்லாற்றானும் பாங்கு மிகு பணிபுரிந்தார்.
அவர் உயர்ந்த ஆன்மிகக் கவிதைகளைப் பாடினார்; சிறந்த கண்டனக் கவிதைகளைத தீட்டினார். தனித்துவம் மிக்க நகைச்சுவைக் கவிதைகளையும் ஏராளமாக யாத்தார்.

Page 5
! м. சிலோன் விஜயேந்திரன்
ஆசுகவியவர்கள் சுமார் இருபது நூல்களை எழுதியிருக்கிறார்.
அந்நூல்களிற் பல அன்னாருடைய நுட்பமான அறிவுத் திறனுக்கு அணியெனச் சுடர்கின்றன.
அவரின் நூல்களில் “யாழ்ப்பாண வைபவ கெளமுதி" மிகச் சிறந்தது. யாழ்ப்பாணத்துச் சரித்திரத்தையும், யாழ்ப்பாணக் குடிகளை யும் அறிய விழைவார்க்கும், யாழ்ப்பாணத்தின் கண் உள்ள ஊர்களின் பெயர்க்" காரணங்களைத் தெரிந்துகொள்ளத் துடிப்பார்க்கும் புல வரின் ‘யாழ்ப்பாண வைபவ கௌமுதி ஒப்பற்ற ஓர் துணை நூலாகும்.
ஆசுகவியின் காலத்தில் வாழ்ந்த எந்தப் புலவருமே, தமிழ் ஞானத் திலுஞ் சரி, கண்டனந் தீட்டுந் திறனிலுஞ் சரி அவரை மிஞ்சியதாகத் தெரியவில்லை.
தனக்குச் சரிஎனப் பட்டதை யாருக்கும் அஞ்சாத விறோடு விள்ளுவதற்குப் புலவர் சற்றேனுந் தயங்கியவரல்லர்.
ஆசுகவியின் அஞ்சாமைப் பண்பும், "நெற்றிக் கண்ணைக் காட்டி னும் குற்றம் குற்றமே” என்றுரைக்க வல்ல "நக்கீரத் துணிச்சலும்" சில சந்தர்ப்பங்களில் அவரை சட்டத்தின்முன் குற்றவாளியாக நிறுத்தி யிருக்கிறது. அது போழ்தும் புலவர். கலங்கவில்லை; பின்வாங்க வில்லை. முடிவு? அன்னார் தனது வாணாளின் சில வருடங்களைச் சிறையிற் கழித்திட நேர்ந்தது. சிறையிலிருந்து மீண்ட பின்னும் அதே துணிச்சல், அதே வீரம்.
எவர்க்கும் அஞ்சாத துணிச்சலும், கடவுளைத் தவிர யாரையும் கும்பிட்டு வாழாத பேராண்மையும் புலவரின் இரத்தத்தோடு இரத்த மாக ஒடிய ஒப்பற்ற பண்பு. th)
புலவருடைய வாழ்வையும், எழுத்தினையும் எண்ணும்போது உண் மையாகவே மெய்சிலிர்க்கும்; ஆச்சர்யம், அலைமோதும்; இத்தகைய் வணங்காமுடிப் புலவரைப் ப்ெற்றமைக்காக என்றன் ஈழத்திருத் தாய்க்கு ஆயிரம் வந்தனங்கள் சேர்க.
ཁོང་ངོ་།།
2. சுதேச நாட்டியம்.
ஆசுகவி தம்து நாற்பத்திரண்டாம் வயதில், 1902ஆம் ஆண் டில் 'சுதேச நாட்டியம்' என்ற பெயரிலமைந்த சரித்திர கீர்த்தி மிக்க பத்திரியைத் தொடங்கினார்.
சுமார் முப்பது வருட காலமாகப் புலவர் அப் பத்திரிகையில் பெட்புமிகும் பணிபுரிந்தார்.

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை - 3 பத்திரிகை பிறந்த கதை
பத்திரிகை பிறந்த கதையை இதோ புலவர் புகல்கின்றார்:
எமது சுய பொறுப்பிலோர் அச்சியந்திரம் நாம் வைத்திருக்க வேண்டுமென்றும், அதில் எம்மதிகாரத்துள் ஒர் புதினப் பத்திரம் நடைபெற வேண்டுமென்றும், நெடு நாளாய் நம்முட் குடிப்புக்கிருந்த பேரவாவை அநுகூலப்படுத்த முயன்று, நாம் இலங்கையில் பற்பல பிரதான இடங்களிலும் இருக்கும் எமது நண்பராயுள்ள கனவான் களைச் சந்தித்தபோது, அவர்கள் மிக்க மரியாதையோடும் அன் போடும் அதுசரித்து உபசரித்து ஏற்ற உதவிசெய்து எம்மனத்தைத் தளர் வுறாது உற்சாகப்படுத்தினர்.
- a 0 - O பல பிரபுக்களும் அளப்பருமானந்த சந்துட்டியோடு வந்துகூடி ஏற்ற உதவியைச் செய்து எமக்குத் தைரியத்தை எழுப்பி விட்டார்கள்.
இவர்கள் உபகரித்த பணத்தைக் கொண்டே யாம் சென்ன பட்டணஞ் சென்று ஓர் அச்சியந்திரத்தையும் அதற்காம் சமஸ்தள பாடங்களையும் கொண்டுவந்து நம் அச்சியந்திர சாலையில் சேர்த்து விட்டு சென்ற ஆனி மீள் உ சனிக்கிழமை சுபமுகூர்த்தத்திலே முதல் முத்தீகரண வேலையை ஆரம்பித்தேம்.
கொள்கைப் பிரகடனம்
"சுதேச நாட்டியம்' பத்திரிகையின் கொள்கைப் பிரகடனத்தைப் பார்த்தால்தான் ஆசுகவியின் பேராண்மைத் திறனையும், "நாமார்க் கும் குடியல்லோம்' என்ற வீர நெஞ்சினையும் விளங்கிட முடியும்.
நெஞ்சில் உரமும் நேர்மைத் திறனுமற்ற இந் நாள் பத்திரிகை யாளர்கள், புலவர்தம் இதய திண்மை காணின் திடுக்குற்றுப்போவர்.
இதோ புலவரின் வீர கர்ஜனை:
A
எப் பிரபுக்களாயினும், எவ்வதிகாரிகளாயினும், எவ்வுத்தி யோகத்தராயினும், எக் குருவாயினும், எந் நண்பராயினும், எக் கலா ஞானிகளாயினும் நீதியற்ற கிரியைகளைச் செய்கிறவராய்க் காணப் படுவாராயின் அக்கிரியையும், அவர் கீழ் நிலையையும், எடுத்து வெளிப்படுத்த எதற்காயேனு மஞ்சி எம் மனஞ் சிறிதாயினும் பின் னிற்கப் போகிறதில்லை. இதுவே நடுநிலையும் பொதுநன்மையும் விரும்பும் பத்திரிகா லட்சணமாம்.
நன்கறிந்த கள்ளனொருவனை அவன் நண்பினால், அல்லது அச் சத்தினால் அல்லது பரிதானத்தினால் வியந்து மகா பிரபு, மகா யோக்கியன் என நாம் பிறர்க்கறிவித்து நம்புமாறு செய்வது தகுதியா வெனச் சிந்தித்துப் பாருங்கள்.

Page 6
4 சிலோன் வி ஜயேந்திரன்
இப் பத்திரிகை, நான் பிரபு, நான் யோக்கியன், நான் மேல்
மரபினன், நான் கலாஞானி, நான் அதிகாரி, நான் பெரு முத்தி
யோகன். நான் வெகு புத்திசாலி எனத் தற்புகழ்வார்க்கு என்றுஞ் சத் துருவாயிருக்கும்'.
நாமகரணம்
'சுதேச நாட்டியம்'என்ற பெயர் வைக்கப்பட்டதன் காரணத்தை புலவர் விளக்குகிறார்.
'இவ்வாறானோர் பத்திரிகையை நாம் நடப்பிக்க முயன்றிருப் பதை அறிந்தவரான நம் விசேஷ நண்பர் சிலர், "நேற்றிவ் ஒப்பீனி யன்” (Native Opinion) பத்திராதிபராயிருப்பாரை உமக்கு நண்பராக்கிக் கொண்டாலோ என்றும், உமது பத்திரிகையின் நாமமும் "நேற்றிவ் ஒப் பீனியன்' என்றும் எம்மோடு பரிகாச வாக்காய்ப் பேசியதை ஞாபகப் படுத்தவும், அவர் எம்மேற் கொண்ட தவறான எண்ணத்தை அவர்க் கெம் செய்கையால் காட்ட வேண்டு மென்றாஞ்சித்துமே "நேற்றிவ் ஒப் பீனியன்' என்னும் பெயரோடு. அப்பொருட் பொதிந்த 'சுதேச நாட்டியம்' என்னும் பெயரையும் இப் பத்திரத்திற்குச் சூட்டலாயினேம்.
ஆரம்பித்ததின் நோக்கம்
இறுதியாக பத்திரிகை ஆரம்பித்தது பற்றி மேலுஞ் சில சொல்லி முதல் இதழ் தலையங்கத்தை புலவர் பூர்த்தி செய்கிறார்.
"நாமிப் பத்திரிகையை ஒருவரைத் தூஷிக்கும் நோக்கமாயல்ல, எமது நயத்துக்காயும், பிறர்க்கு விசேஷ சற்புத்திகளையும், பிறதேச வர்த்தமானங்களையும், அறிவிக்கும் நோக்கமாகவுமே தொடங்கினேம்.
(சுதேச நாட்டியம் - 1902ஆம் ஆண்டு)
பத்திரிகையில் வெளிவந்தவை
ஆசுகவியின் 'சுதேச நாட்டியம்' பத்திரிகை பெறுமதி மிக்க பல விஷயங்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்தது.
பழமைக்கும் புதுமைக்கும் அப்பத்திரிகை ஒரு பாலமாகத் திகழ்ந் தது என்பின் அது மிகையன்று.
மேற்படி, பத்திரிகையில் புலவரின் ஆணித்தரமான கண்டனங் கள், பலதிறப்பட்ட கவிதைகள் உட்பட வேறு பல புலவர்களின் விஷ யங்களும் ஏராளமாக வெளிவந்தன.
சைவ சித்தாந்தம் பற்றிய கட்டுரைகள், பழந்தமிழ் இலக்கியம் பற்றிய கட்டுரைகள், பெரியார் வரலாற்றுக் கட்டுரைகள் போன்றவை மட்டுமன்றி புத்திலக்கிய வடிவங்களான நாவல்கள், நாடகங்கள், நூல்
விமரிசனங்கள் என்பனவும் வெளிவந்தன.

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை 5
மறுமலர்ச்சிக் கவிகளான பாரதியார், கவிமணி போன்றோரின் கவிதைகளையும் சுதேச நாட்டியம் மறு பிரசுரம் செய்தது.
ஆசுகவியின் மைந்தனும் தமிழ்-ஆங்கில எழுத்தாளருமான க.வே. சாரங்கபாணி அவர்களும் 'சுதேச நாட்டியம்' இதழில் மகாத்மா காந்தி, லாலா லஜபதிராய் போன்ற வீரத் தியாகிகள் பற்றி ஆவேச மான கட்டுரைகள் தீட்டியிருக்கிறார்.
இவ்வண்ணம் ஆசுகவியின் 'சுதேச நாட்டியம்'பத்திரிகை சுமார் முப்பது வருட காலமாகப் புலவரின் நிழலில் சிறப்போடு விளங்கியது.
பிற்காலத்தில் 'சுதேச நாட்டியம்'பத்திரிகை பல வருடங்களாக புலவர்க்கு உதவியாளராக இருந்த சி. நல்ல தம்பி என்பாரின் முழுப் பொறுப்பில் நடாத்தப்பட்டது.
'சுதேச நாட்டியம்' பத்திரிகையில் ஆசுகவி செய்த பணி மகத்தானது. அவருடைய மனோதிடம், கண்டனத் திறன், வசனநடை வசீகரம், கவிதா சாமர்த்தியம் யாவும் மேற்படி பத்திரிகை மூலமாகவே முழுமையாக தமிழ் க்கூறும் நல்லுலகிற்குப் புலனாயின.
சுதேச நாட்டியம்' பத்திரிகை அஞ்சாமையோடும், சாதனைகள் புரியும் வண்ணமும் பத்திரிகை நடாத்த வேண்டும் என்ற அவாவினர்க்கு ஆதர்சமாகத் திகழவல்ல மிகச் சிறந்த ஒரு பத்திரிகையாகும்.
அப் பத்திரிகையே ஆசுகவியின் இதயகீதம்; ஜீவமூச்சு சாதனைப்
பெட்டகம்.
3. உரைநடைச் செம்மல்
உரைநடை என்பது அரியகலை. இருப்பினும் அது எல்லா ருடைய கையிலும் அத்தகு கலைத் தன்மையைப் பெறுவதில்லை.
கவிதை எழுதுபவர் யாவரும் எவ்வண்ணம் கவிஞர் களாவதில் *லையோ, அதுபோன்றே உரைநடையைக் கையாள்பவர்கள் யாவரும்
அக்கலையில் நிபுணத்துவம் பெறுவதில்லை.
தமிழ் உரைநடையைப் பொறுத்தவரை சில சாதனைகளைப் புரிந்தவர்கள் பட்டியல் ஒன்றை நாம் தயாரிப்போமேயானால், அப்பட்டியலில் ஆறுமுக நாவலர், ஆசுகவி, மறைமலையடிகள், சுப்ரமணிய பாரதி, புதுமைப் பித்தன், சுத்தானந்த பாரதி, கு.ப.ரா., ச.து.சு.யோகி, கல்கி, லா.ச.ரா., அண்ணாதுரை, கலைஞர் போன் றோரின் நாமங்கள் இடம்பெற்றேயாக வேண்டும்.

Page 7
S சிலோன் விஜயேந்திரன்
மேற்படி உரைநடையாளர்களில், ஆசுகவியைத் தவிர மற்றவர் களுடைய பேர்கள் தமிழ் கூறும் நல்லுலகுக்கு மிகவும் அறிமுக மானவை. ஆண்ால் ஆசுகவியின் உரைநடைத் திறனை இன்னமும் ஓரளவுக்குத்தானும் இன்றைய தமிழர்கள் அறியமுடியாதிருக்கிறது.
காரணம் அவருடைய உரைநடத் திறனை வெளிச்சம் போட்டுக் காட்டவல்ல அன்னாரின் எழுத்துகள் இன்றைய சந்ததியார் முன் சமர்ப்பிக்கப்படாமையேயாகும்.
'சுதேச நாட்டியம்' இதழ்களைப் படித்துக் கொண்டிருந்தபோது, அதில் ஆசுகவியின் உரைநடைச் சிறப்பைக் கண்ணுற்ற போது எனக்கு
ஆச்சர்யமாக இருந்தது.
புலவருடைய உரைநடைப் பணி உண்மையில் மிக உயர்ந்ததாகும்.
ஈழத்தில் நாவலருடைய காலத்துக்குப்பின் நாவலரைப் போல் எடுப்பாகவும், லலிதமாகவும் உரை நடையைக் கையாண்டவர் ஆசுகவி என்றால் அது நூற்றுக்கு நூறு உண்மையான சேதியாகும்.
"உள்ளத்தில் உண்மையொளியுண்டாயின், வாக்கினில் ஒளி யுண்டாகும்" என்றான் புதுமைக் கவி பாரதி.
புதுமைக் கவியின் கூற்றுக்குச் சான்றாகத் திகழ்வது ஆசுகவியின் உரைநடையாகும்.
இந்நூலின் பல பகுதிகளில் புலவரின் உரை நடைச்சீரினைப் படிப்பவர்கள் உணர்ந்து கொள்ளக்கூடிய வாய்ப்பிருப்பதால் இப் பகுதியில் புலவரின் உரைநடைச் சிறப்புக்குச் சான்றாக ஒரு சிறிய பகுதியைத் தந்து அடுத்த அத்தியாயத்துக்குப் போவேன்.
'ஐக்கிய சங்காச மஞ்சசவைத் தர்க்கம்' என்ற தலைப்பிலமைந்த கண்டனக் கட்டுரையின் அக்கினிப்பொறி பறக்கும் ஒரு பகுதி, இது. இப்பகுதியில் உரைநடை எத்துணை ஜீவனோடு மிளிர்கிறது பாருங்கள்:
'சன்மார்க்கமுடைய பெற்றோரால் பால பருவந் தொட்டு நல்ல வளர்ப்பையடைந்து, கல்வி, நாகரிகம், பயின்று, தேசாபிமானம், பாஷாபிமானம், குலாபிமானம், மதாபிமானம் குடிபுகுந்த வாலிபர் கூடும் கூட்டங்களையும், அவர் கொண்டாட்டங்களையும் கண்ணுறாது செவியுற்ற நம் அயல்வாலிபருள் கல்விஅறிவு, உலகறிவு, பெரியோர் மதிப்பு, நற்பழக்க வழக்கம், மனஅடக்கம் இல்லாதவரும், பொய், பொறாமை, வஞ்சகம், அடுத்துக் கெடுத்தல், புறங்கூறல், குருநிந்தை, பெரியோர் நிந்தை உடையவரும், - பெற்றார், உற்றார், குரு ஆகி யோருக்குக் கீழ்ப்படிதலின்றி ஆணவநாய் நிகர்த்தலைந்து திரிபவரு மான சிலர், 'அவலை நினைத்துரலை இடித்தார் போல'த் தாமு மோர் சங்கங் கூடக் கருதி அதற்கு ஐக்கிய சங்கம் என்றும் முகவுரை யிட்டு ஓர் சங்கடச் சங்கந் தொடங்கினர்.

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை - 7
இச் சங்கத்தைத் தாபிக்க முயன்றது தம் நட்பை எட்டிக் கனி போல் வெறுத்துத் தம்மை மடுத்துக் கொண்டாடாது விடுத்த சன்மார்க் கமுள்ள சிலரைத் தூற்றவும் தம்முட் சிலரைப் போற்றவும், தம்மதி காரத்தையேற்றவும், தம் பழஞ் சலிப்பை மாற்றவும், இனித்தாம் முதல்வராய்த் தோற்றவுமாம். ܖ
பார்த்தீர்களா? உரைநடையென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இலக்கணம் கூறவல்ல இந்த உரைநடை இற்றைக்கு சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன் ஆசுகவியால் எழுதப்பட்டதாகும்.
இனி அடுத்த பகுதிக்குப் போவோம்.
ଷ୍ଟକ୍
4. கவிஞர் ஜனனம்
இப்பகுதியிலே புலவரின் பிறப்பு, இளமைக் காலம் கல்வி, இல் லறம் போன்றவை பற்றிய விவரங்களைத் தருகிறேன்.
ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை யவர்கள், யாழுப்பாணத்திலே - வலிகாமம் வடக்குப் பகுதியின்கண் அமைந்திருக்கும் வசாவிளான் என்ற சிற்றுாரிலே, சைவ வேளாண் மரபினர்களான கந்தப் பிள்ளை - வள்ளியம்மை தம்பதியின் மைந்தனாக 1860-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் தேதி பிறந்தார்.
வேலுப்பிள்ளை என்ற இயற்பெயரைக் கொண்ட புலவர் அவர் களின் இல்லத்தின் அண்மையிற் பெரிய கல்லொன்று காணப்பட்ட காரணத்தால் புலவரை எல்லாரும் 'கல்லடி வேலுப்பிள்ளை' என் றழைத்தாார்கள்.
இளமைக் காலம்
ஆசுகவி யவர்கள் இயல்பாகவே விவேகி, அவருடைய அந்த விவேகம், அன்னாருடைய பால்யகாலத்திலேயே பாங்காகச் சுடர் *விட்டது.
கவி தனது ஆரம்பக் கல்வியை அகஸ்டீன் என்பார்பாலும், பின்பு பலாலியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை என்பாரிடமும் பின்பு வளர்ந்து வாலிபரானதும், ஆவரங்காலைச் சேர்ந்த பெரும்புலவர் நமச்சிவாயம் என்பாரிடத்தும், அறிஞர் நெவின்ஷன் சிதம்பரப்பிள்ளை, புன்னா லைக் கட்டுவன் கதிர்காம ஐயர் ஆகியோரிடத்தும் கற்றுச் சிறந்த வித் துவத்தைப் பெற்றார்.

Page 8
8 ع சிலோன் விஜயேந்திரன்
இல்லற வாழ்வு
ஆசுகவியவர்கள் இருமுறை மணம் முடித்தவர். முதன் முதல் உரும்ப்ராயைச் சேர்ந்த ஆச்சிக்குட்டி என்பாரை மணம் செய்தார்.
விதியின் விளையாட்டால் அந்த அம்மையார் புலவர்க்கு வாழ்க் கைப்பட்ட சில வருடங்களில் காலமாகி விட்டார்.
தம் முதன் மனைவியை இழந்த புலவர் .பின்புஅந்த அம்மையா ரின் உடன்பிறந்த சகோதரியான ஆச்சிமுத்து என்பாரை மணம் முடித்
தாா. புத்திர பாக்கியம்
அறிவிலுயர்ந்த மக்களைப் பெறுவது யாவற்றிலுங் கீர்த்திமிக்க
காரியம் என்பார் வள்ளுவர்.
திருவள்ளுவர் கூறியதுபோல, அறிவிலுயர்ந்த நான்கு ஆண்பிள் ளைகளை இறைவன் புலவர்க்கு வழங்கினன்.
புலவரின் புதல்வர்களில் இன்று உயிரோடு இருப்பவர், அவரது இரண்டாவது புதல்வரான திரு.க.வே. நடராசா அவர்கள் மட்டுமே யாவார்.
அவரை யாவரும் அறிவர். ஈழத்தின் சிறந்த சட்ட மேதைகளில் ஒருவரெனக் கருதப்பட்ட அவர், சுதந்திர இலங்கையின் முதலாவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், பண்டாரவளைத் தொகுதியில் சிங்களரின் பேராதரவுடன் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்ட வராவார்.
புலவருடைய பிற புதல்வர்கள் பற்றியும் சில சொல்ல இருக்கிறது.
புலவரின் மூத்த புதல்வர் தமிழ்மக்களுக்குக் - குறிப்பாக வட மாகாணத் தமிழ் மக்களுக்கு மிகவும் அறிமுகமான சமூக பிரபலஸ்த ராக விளங்கி, மறைந்த க.வே. சுப்பிரமணியம் (கல்லடி மணியம்) ஆவார்.
ஈழத்தின் தமிழ் மறுமலர்ச்சி எழுத்தாளர்களுக்குத் தலை சிறந்த ஒரு முன்னோடியாக விளங்கி, 'நமது தாயகம்' 'சத்தியேஸ்வரி" ஆகிய சிறந்த நூல்களை எழுதியும், 'தமிழன்' என்ற இதழின் ஆசிரிய ராகவிருந்து அதனை வீராவேசமாக நடாத்தியும், தமிழைப்போலவே ஆங்கில பாஷையிலும் அற்புதமான எழுத்தாற்றலைப் பெற்றும் திகழ்ந் தவரான க. வே. சாரங்கபாணி அவர்கள் புலவரின் மூன்றாவது புதல் வராவார்.
காலஞ்சென்ற பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவினது குறிப்
பிடத்தக்கதோர் இலங்கை நண்பராக க.வே. சாரங்கபாணி அவர்கள்
விளங்கி இருத்தலை அமரர் நேரு இந்த எழுத்தாளர்க்கு எழுதிய கடி தங்கள் மூலம் நாம் அறியக்கூடியதாகவிருக்கிறது.

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை 9
இப்படியான சிறப்புகளுக்குரிய க.வே. சாரங்கபாணி அவர்கள், கொடிய காச நோய்க்குத் தமது முப்பத்தைந்தாவது வயதிலே அநியாய மாக பலியாகிவிட்டார்.
ஆங்கிலத்தில் சிறந்த எழுத்து வன்மையையும், கேட்பாரை மயக்க வல்ல பேச்சு வன்மையையும் பெற்றுத் திகழ்ந்தவரும், இலங்கை ராணுவத்தில் லெப்டிணன்டாகவும், பின்பு மாவட்ட பால் விநியோக மேற்பார்வையாளராகவும் கடமையாற்றியவருமான அமரர் ‘நயினார்’ க.வே. இரத்தினசபாபதி அவர்களும் புலவருடைய புகழ்பூத்த புத்திரர் களில் ஒருவரே யாவார்.
5. கண்டனங்கள் கீறக் கல்லடியான்
கண்டனம் எழுதுவதென்பது கோழைகளின் பணியன்று. வீரர்க்கே அப்பணி உரியது.
சென்ற நூற்றாண்டிலே அஞ்சாமைத் திறனோடு தமது எதிரி களைக் கதிகலங்கடித்த கண்டன மேதையே வேலுப்பிள்ளை யாவார்.
கண்டனந் தீட்டுவதில் ஆசுகவியின் ஆற்றல் ஈடு இணையற்ற தாகும்.
அவருடைய கண்டனங்களின் ஊடாக அன்னாரின் நெஞ்சுரத்தை யும், சொற் சிறப்பையும், உரைநடைத் திறனையும் நாம் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.
அழகான பாஷையிலே தயவு தாட்சண்யம் இல்லாது தம் எதிரி களைத் தாக்குவதில் நாவலரைப் போலவே நமது பாவலரும் முன்னணி யில் நிற்கிறார்.
தமக்குப் பிழையெனப் பட்டதை அப்பிழையை விட்டவர், 'எந்த மகானுபாவராக இருந்தாலும் நமக்கென்ன?’ என்ற துணிவோடு கண்டனக் கணைகளைத் தொடுத்தார் நம்புலவர்.
事
பேர்பெற்ற வித்வான்கள் எல்லாம் ஆசுகவியின் கண்டனக்கனை களைத் தாங்கமாட்டாது கிலிபிடித்துப் பதுங்கிய சேதியை நாம் அறியக் கூடியதாக விருக்கிறது.
கண்டனந் தீட்டுவதில் நம் புலவரின் ஆற்றல் எத்தகையது என்
பதனை நீங்கள் படித்தறியும் பொருட்டு சில கண்டனங்களைக் கீழே தருகிறேன்.

Page 9
10 சிலோன் விஜயேந்திரன்
கண்டனம் - 1 தலையற்ற சைவர் நிலையற்ற சைவர்
(யாழ்ப்பாணத்துச் சைவசமயிகள் பலர் ஒரு நல்ல தலைமை யில்லாது, ஊக்கத்துடன் உண்மைச் சேவை புரியாது, தமது சமயப் பணிகளைச் செய்வதை விட்டுவிட்டு பிற மத நிந்தனை செய்துநின்ற காலை, அதுகண்டு புலவர் தீட்டிய கண்டன. மிது. அவரே சொல்கிறார்,
"நாம் சமயத்தைக் கண்டித்துப் பேசவில்லை, சமயிகளையே பேசுகிறோம்’ என்று.
'நம் சைவசமயிகளான பிரபுக்களுக்கு நம் பேச்சுச் செம்பை யுருக் கிக் காதில் விடுதற்போற்' கடினமாயிருந்தாலும் சாந்த மனத்தோடு சரியோ பிழையோ எனச் சற்றுற்று நோக்குவாராயின் உண்மை புலப் படும்.
"எண்சாணுடம்புக்குஞ் சிரசே பிரதானம்' என்பதால் தலை விசேடமென்பது இனிது விளங்குகிறது. ஒவ்வொரு காரியத்துக்கும் தலைபோலொருவர் இருக்க வேண்டு மென்பதும் அங்ங்ணமில்லா விடில் அத்தொழில் இடையூறின்றிச் சித்தியுறாதென்பதும் யாவரும் அறிந்த விஷயம்.
பிரசைகளுக்கு அரசனும், சீஷருக்குக் குருவும், பிள்ளைகளுக்குப் பெற்றாரும், மாணவருக்கு ஆசிரியனும், பொதுச் சபைக்கு அக்கிரா சனப் பதியும், யுத்த சேனைக்குச் சேனாதிபதியும் தலையென மதிக்கப் படுவர். இவ்வாறான தலைவரைப் பெற்றுக் கீழ்ப்படிந் தொழுகாதவர், தம்நிலை தவறி அசைவடைந்து கெடுவரென்பது சத்தியமே. தலைஅற்ற சைவர் அசைவர் என்பினும் எங்கருத்தொன்றாம்.
நம் சைவசமயிகளுக்கு எக் காரியங்களிலாவது ஒரு தலைவரில ரென்பதும், இருப்பினும் அவர்க்கிவர் கீழ்ப்படிந்தொழுகுபவரல்ல ரென்பதுவும் இதனாலேயே, தலையற்ற சைவர் எனப்படுகின்றனர் என்பதும் எம்கருத்து.
எக்காரியங்களிலாவது என்றது மார்க்க காரியம் முதலாகிய (சுயா தீனமாய்த் தொடங்கும்) எவ்விதத் தொழில்களையுமென்க.
ஈண்டு நம்மால் எடுத்துப் பேசப்படுவார் நம் யாழ்ப்பாணச் சைவர் அன்றிப் பிறரல்லர். இவர்கள் கத்தோலிக்கக் குருமார், பாதிரி மாரிடத்திருந்தே 'கண்ட பாவனையிற் கொண்டை முடித்தாற் போற்’ சைவ வித்தியாசாலை சைவப் பிர்சங்கம், சைவ பரிபாலனசபை முதலி யன தாபிக்கத் தொடங்கினாரென்பதை ஒருவரும் மறுக்க வல்ல வரல்லர்.
யாழ்ப்பாணத்திலே பாதிரிமார் வந்து நிலையூன்ற முன் ஒரு சைவ
வித்தியாசாலை, ஒரு அச்சியந்திரசாலை, ஒரு சைவப் பிரசங்கம், ஒரு சைவ பரிபாலன சபை இருந்ததென்ப்தை நாம் கேள்விப்பட்டதில்லை.

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை 11
கத்தோலிக்கக் குருமார், பாதிரிமாரிலிருந்தே நம் சமயிகளுக்கு இக்கண் திறக்கப்பட்டதென்பதால் அவ்வாறிருப்பது இழிபென்றும், இருக்கப்படாதென்றும் நாம் சொல்லவில்லை.
துரியனிலிருந்து சந்திரன் ஒளியைப் பெறுதல் போல அவரிடத்தி லிருந்து ஒளியைப் பெற்ற நாம் அவர்களை எதிரிகளாக்கி அவர்களை யும், அவர்கள் மதத்தையும் நிந்தித்துக் கொடுக்குக் கட்டி மல்லாடத் துணிவதையே இருக்கப்படாத குணமெனச் சொல்லுகின்றேம்.
இருக்கப்படாதென்றலால் மதாபிமானம், கலாபிமானம், தேசாபி மானம் இருக்கப்படாதென நாம் சொல்லவில்லை. இவை இருக்க வேண்டுமெனச் சொல்லமுன்னே(றி) இருப்பவர் நாமே! மத நிந்தை, பெரியோர் நிந்தை இருக்கப்படா தென்பதும், மேற்கூறியவரோடு எதிர்ச் சாதிக்க நம் யாழ்ப்பாணச் சைவர் சிறிதுந் தகுதியுடையவரல்லரென் பதும் அப்படித் துணிதல் மலையை உடைக்கக் குரங்கு துணிதல் போலாம். ஆதலினது வெட்க மென்பதுமே எம் கருத்து. இதற்குக் கார ணம் ‘தலையற்றவர் நிலையற்றவர்' என நாம் முன்னெடுத்துக் கொண்ட படி இருப்பதே.
நம் சைவருள் ஒற்றுமை இருந்ததென்றும், இருக்கிறதென்றும் நம் சைவர் நம் சமய குருவுக்குக் கீழ்ப்படிந்தவர்படிகின்றவர் ரென்றும் நம் சைவர் எவ்விஷயத்திலாயினும் பிரிவின்றித் திடசித்தம் பூண்டிருந்தவர், இருக்கின்றவரென்றும் நாமொரு கணத்தினுஞ் சொல்லமாட்டோம். இவர்கள் முயற்சிகளெதுவும் 'ஆண்டாக்கள் கட்டும் மடமே."
உதாரணமாய்ச் சில விஷயத்தை எடுத்துக் காட்டுவேம்.
(க) யாழ்ப்பாணத்தில் முதன் முதல் தோன்றிய புதினப்ட்பத்திரிகை உதயதாரகை, இப்போது இதின் வயது சுமார் 60க்கு மேலாகிறது. இரண்டாவது தோன்றியது கத்தோலிக்கப் பாதுகாவலன். இதின் வயது இப்போது சுமார் 30க்கு மேலாகிறது.
இவ்விரு பத்திரங்களும் வெளிப்படுத்தப்பட வேண்டிய குறித்த காலங்களில் யாதோரிடையூறுமின்றி வெளிப்படுத்தப்பட்டு இந் நிமிஷம் வரையினும் நல்ல வளர்ச்சி அடைந்து வருகின்றது.
இவ்விரு பத்திரிகைகளையுங் கண்ட நம்சைவர் சிலர் கூடி முதல் தொடங்கிய பத்திரிகை பிந்திப் பிறந்த "இலங்கை நேசன்' தான் ஏன்று பசப்புவர்.
"இலங்கை நேசன்' என்ற இப்பாலன் பால் கொடுத்து எண் ணெய், தண்ணீர் கொடுத்துப் பாதுகாப்பாரின்றித் தன் பால வயதி லேயே இறந்து போயினன்.
இதன்பின் "விஞ்ஞான வர்த்தினி" என்றோர் பாலகி தோற்றி அச்சிறுமியும் இந் நோயினாலேயே பீடிக்கப்பட்டு இறந்துபோயினள்.

Page 10
12 சிலோன் விஜயேந்திரன்
இதன்பின் 'சைவ உதயபானு' என்றோர் சூரியக் குஞ்சு தோன்றி அதுவும் இந்நேரயினாலேயே பீடிக்கப்பட்டு காலத்துக்குக் காலம் சுய நிறமும் வேறுபீட்டுச் சிலநாட் சீவித்து வானிடு வில்லென மறைந்து போனது.
இம் முப்பத்திரங்களும் நடந்தேறிய காலத்தை ஒன்றாய்க் கூட்டி னும் பிறர்துணை பெறாது திடதைரியத்தோடு நமது நண்பர் டிரீ &F. தம்பிமுத்துப்பிள்ளை நடப்பித்து வரும் 'சன்மார்க்க போதினி" என் னும் பத்திரிகையின் காலத்தைக் கிட்டமட்டாது.
(உ) இனி இந்துக் கல்லூரி நிலையைப் பற்றியும் தமிழ்ச் சங்கத் தைப் பற்றியும், சைவ பரிபாலன சபையைப் பற்றியும் ஆராய்ந்து பார்ப்போம்.
வட்டுக்கோட்டைக் கல்லூரியின் கட்டடம் மிகப் பெரிதும், விசே டித்ததுமாய் யாது வேலைக் குறைவு மின்றி முடிந்திருப்பதையும், கத்தோலிக்க பத்திரிசியார் கல்லூரியும் இவ்வாறே முடிந்திருப்பதையும் நமது இந்துக் கல்லூரி பபிலோன் கோபுரம் போல் முற்றுறாது இன் னும் குறைவோடிருப்பதையும் உற்று நோக்கின் நாம் பேசுபவைகளின் உண்மை எளிதிற் புலப்படும்.
நமது இந்துக் கல்லூரி யாழ்ப்பாணத்திலும் இலங்கையில் பற்பல விடங்களிலும் வசிக்கும் சைவ சமயிகளிற் பெரும் பாலார் கூடி உப கரித்த பணத்தில் தொடங்கினது, பிரபுக்கள் எனச் சிலரைச் சங்கமாயும் அங்கமாயும் கொண்டது.
இச் சங்கத்தின் முன்னீட்டைக் குறித்து இவர்களுள் தோற்றிய நெரிவுகள் பலவாயிருந்தது. அதை ஈண்டு நாம் வெளிப்படுத்துவது அவசியமற்றதெனக் கருதி நிறுத்துகின்றேம்.
இது நிற்க. இச் சங்கமும், அங்கமும் எஞ்சினோரும் கூடியும் இக்கல்லூரி வேலை முற்றடையாதிருப்பதற்கு ஞாயமென்ன?
பட்டம் யாருக்கு?" என அச் சங்கத்திலொவ்வொரு வரும் தம் மைத் தம்மை வினவுவாரானதும், பெருந்தொகை பெரும் பிரபுக்களல் லாததுமே.
இக்குணம் எம்சமயத்தார் எம் சாதியார்க்குப் பூர்வ சதத்துவ மாயி ருப்பதே 'தலையற்றவ'ராய் யிருத்தற்குக் காரணமென்பேம்.
இச் சங்கத்திலுள்ள பிரபுக்களிற் பத்துப்பேர் அபிமானங் கொண்டு, ஐக்கியம் பூண்டு நன்மனத்தோடு ஒவ்வொருவரும் தங்கள் பொக்கற்றிலிருந்து இருநூறு பவுணை எடுத்து வீசிவிடில் இரண்டா யிரம் பவுணாகாதா? இத்தொகை இவ்வேலையை முடிக்கப் போதாதா? இவ்வாறு செய்வது பிரபுத்துவத்திற்குப் பங்கமான செய்கையா?
விக்றோரியாக் கல்லூரி என்னும் பெருங் கட்டடம் பணபலம், தேகபெலமில்லாத ஒரு வாலிப சிங்கத்தின் விடாமுயற்சியால்

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை 13
அவ்வளவில் முடிந்ததும், பிரபுக்கள் உத்தியோகத்தரான நம் சங்கத் தார் கூடியும் இந்துக் கல்லூரி இன்னும் நன்நிலை பெறாதிருப்பதும் "கன எலி கூடினால் மண்ணெடாது' என்ற தொன் மொழிக்கு உரை போலிருக்கும் தலையில்லாமையல்லவா?
2000 ரூபாவை வாயாற் கொடுத்தும் கையாற் கொடாதிருக்கும் கொழும்பு பிரபுக்கள் போற் பிரபுக்களின்றி நன்மனமும், விடாமுயற்சி யும் திடசித்தமுமுள்ள விற்றோரியாக் கல்லூரியின் மானேச சிங்கம் போல் ஒருவரிருந்தால் இக்கல்லூரி முற்றடையாதிருக்குமென்று எவர் சொல்லுவார்?
(து) இனித் தமிழ்ச் சங்கம், சைவ பரிபாலனசபை இரண்டிலுங் குறிக்கப்பட்டப் பிரமாணங்களென்ன?
ஆண்டு குறிப்பிட்டவாறு இச் சங்கம், சபை கூடுகிறதா?
நாமிவைகளைப் பேசுவதினால் நம்மில் நம் நண்பர் குறைகூற வேண்டாம்.
சமயத்தை நாம் கடிந்து பேசவில்லை; சமயிகளையே பேசுகிறோம்.
ஒருவரைக் கருதி நாம் பேசவில்லை. நன் மனத்தோடு பொது நன்மையெனப் பலரையுமே பேசுகின்றேம்.
(சு. நா. 1903ஆம் ஆண்டு)
கண்டனம் - 2 ஒரு பத்திராதிப மூடன்
(இக் கண்டனம், கையாலாகாத ஒர் பத்திராதிபரின் பொய்ம்மைக் கோலத்தைப் புலப்படுத்துகிறது.)
'விவேகத்தை தன்னிடத்தில் வைத்திருக்கிறேனென்று ஜியர்த்த எண்ணங் கொண்ட ஒரு பத்திராதிப மூடன், தன் சுயபாஷ்ையாகிய தமிழை வாசித்து உணரவுந் தேர்ந்து எழுதவுங் கற்றுக்கொள்ளாது பிறர் வரைந்து கொடுத்த அபவாதமான கடிதங்களைத் தன்வசனம் போற் பாசாங்கு காட்டித் தன் பத்திரிகையிற் தீட்டிப் பெரும் மேட்டி காட்டிப் படும்பாட்டை மிக விகனத்தோடு பத்திராபிமான நண்பர் களுக்கு எடுத்து வெளிவிடுவதே இம்முறைப் பத்திரிகையில் ஒரு விசேட புதினமாயிருக்கிறது.
ஒருவர் மேற்கொண்ட பகை காரணமாய் அவரை இழித்துச் சில. குத்திர மொழிகளையும், சிலேடை மொழிகளையும் சிலர் வரைந்து இக் கடிதம் பொது நன்மைக் குரிய கடிதம், சிவஞானம் போதிக்குங் கடிதம் என்றும் 'குருடனுக்கு இரும்புத் துண்டைத் தங்கத் துண்டென்று' சொல்லியவர் போற் சொல்லி இக்கடிதத்தையும் பாண பத்திரத்திலிம் முறை வெளிப்படுத்திவிடுமென்க.

Page 11
14 சிலோன் விஜயேந்திரன்
பத்திராதிப மூடன் அக்கடிதத்தில் யாது பொதிந்திருக்கின்ற”
தென்பதை யுணராது 'நுங்கு தின்றவன் தின்னக், கோழை சூப்பினவ ன்ேச்சு வாங்கிய" வாற்ாய்ப் பிறரிடத்திலிருந்து புதினப்பத்திரிகைக ளாலும், துண்டுப் பிரசுரங்களாலும் தன் குலத்தையும், பிறப்பையும் பேசக் கேட்டுத் திகிலடைந்து "பொறிக்குட் சிக்கிக் கண்பிதுங்கும் எலி போல்" விளித்து “கும்பிடப் போனவன் தலையிலே கோவிலிடிந்து விழவோ, தெய்வமே' என்று மாரடித்து அவஸ்தைப்படுகின்றனன்.
தன்னையும் பெரும் பிரபுக்கள், கல்விமான்கள், யோக்கியர்கள், சமயாபிமானிகள், நைட்டிகர்கள் போற் காட்டிக் கம்பீர உல்லாச சவாரிசெய்து திரிகின்றனன்.
கைலாசனை நேசித்து விசுவாசித்து அவன் வாக்குகளைத் தன் பத்திரத்தில் வெளிப்படுத்தினால் எல்லாரும் அவன் மதம் புகுவர் என் னும் வாளா கருத்துடையவனாயிருக்கிறான்.
நண்பீர்! இவ்வாறான ஒரு மூடனுள்ள படி யிருப்பானேல் அவனைக் குறித்து நாமனுதாபப்பட வேண்டியவர்கள் அல்லவா?
பத்திராதிபனாயிருப்பானேல் அவன் போதனை பலரைக் கெடுக்கு மல்லவா? அவனையும் அவன் பத்திரிகையையும் நாம் அருவருத்துத் தள்ள வேண்டுமல்லவா?
(சு. நா. 1904ஆம் ஆண்டு)
கண்டனம் = 3 சமாதான வினா
(இக் கண்டனம், கனல் கக்குகின்றது; அழகான நடையிலே ஜீவனுள்ள பாஷையிலே கவி கண்டனத்தைப் பெய்கின்றார்.)
சாமி! திமிரபாஸ்கர!! சென்ற இந்து சாதனத்தில், 'மத்தியஸ்தக் கர்த்தாவாகிய" எனத் தாம் திருவாய் மலர்ந்த வசனத்தின் உட்கருத் தென்ன?
எம்மோடு சிறிதும் பழகாத தாம், எம்மை நண்பா' என்றது எக் கருத்துக் கொண்டோ?
எம்மிற் றமக்கித்துணை நட்பேறியதற்கு ஏதுயாதோ? இவ்வழக்கு இடைக்குல வழக்கா? தலைக்குல வழக்கா? "சொல்ல மனமில்லை யென்றது எதனால்? தெரிந்ததை வெளி விடிலென்ன தோஷமென்றஞ்சினிர்?
சொன்னாலும்மைத்தொட்ட குறையும் கெட்ட குறையும் வெளிப் பட்டெட்டிவிடு மென்றஞ்சுகிறீரா?

நேரே தோற்றினால் எமக்கும்மால் வருமிடரென்ன? ?
ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை 5
'ஒருபாற் கோடாமை சான்றோர்க்கணி" எனத் தம் போலும் சான்றோர்க்கும் கூறிய சிரேட்ட இலக்கணத்தை இங்கே எம் போல் வார்க் கிழுத்ததேன்? எம்மையுஞ்சான்றோர் வரிசையில் வைக்கிறீரா?
இடைக் குலமும், கற்பழித்தலும், புன்மதியும், விகட மொழியும், பெரியோர் நகையாடலும், தற் புகழ்ச்சியும், தனை யுணராமையும் அசங்கிருத வாக்கும், அலங்கார வெளிவேஷமும் உடைய சான் றோர்க்கு மெமக்கும் தூரம் மிகவே.
எம்மோடு பேசத் தாம் விரும்பில் ஏழை ஞானப்பிரகாசரையும் நியாய வாதியையும் கையிழக்கிவிட்டு எம்மோடு தொடங்குக, அற்றேல் அடங்குக.
(சு.நா. 1907ஆம் ஆண்டு)
கண்டனம் - 4 காவலனார் பித்தலாட்டம்
(இக் கண்டனமும் கவியின் கண்டனத் திறனுக்குச் சான்றாகத் திகழ்வதைக் காணலாம்.)
“நண்ப நீர்எதற்காய் எம்மை யிதிலிமுக்க விரும்பினிர்? அவ்விஷ யத்தில் 'கற்றறிந்த சிற்றுாரான்’ என்னாது எமது நாமத்துடன் நாம்
sy
உம்மையும் உம்குழுவினரையும் நாம் மதிப்பதற்கு உம்ழிபீமிருக் கும் விசேட வன்மை தானென்னவோ?
கத்தோலிக்கரை நாம் வியந்து கூறுபவைகளை சிரமேலிருத்திச் சான்றாய் கூறி எம்மைப் பலபோதில் வியந்து பாராட்டிய நீர், இப் போது எம்மை யிகழ்ந்து பரிகசிக்கக் கொடுக்குக் கட்டி முன்வந்திருப் பது உமதியற்கை குணத்தை விடப்படாதென்றா?
இக் குணமுடையரைக் கோளர் என்கவும், பழக்க வழக்கமற்ற பித்தலாட்டக்கார ரென்கவும் யார் பின்னிடுவர்?
இந்த ஊச்சாண்டிப் பேச்சைப் பேசி பரிகசிக்கவும், பயமுறுத்தவும், வீரப் பட்டமெடுக்கவும் புறப்பட்டீர்.
உம்மைப் போல் ஒரு மதிகெட்ட கீழ்மகன் பேசிற்றான் நாம் செய்வதென்ன?
ஞாயம் சொல்ல முடியாத போதிற் சீற்றங் கொள்வதும், தனக் கவசியமற்ற காரியத்தில் தான் தலையிடுவதும், எடுத்த விஷயத்தை விடுத்து ஏச்சுப் பேச்சிற் தொடங்குவதும், கேட்ட கேள்வியை உணராது ஏதோ வாயில் வருவதைப் பிதற்றிப் புருடா விடுவதும், நுமக் குரிய குணம் என்பதை சப்பாத்தோடு மெஸ்-றசல் சைவாலயத் திற் புகுந்தது தம் மதாசாரத்துக் கடாத செயலென மனம் நொந்

Page 12
16 சிலோன் விஜயேந்திரன் தெழுதிய “இந்து சாதனத்தார்க்கு," எழுதிய பித்தலாட்ட உத்தரமே காட்டும்" என நாமும் சொல்லுகின்றேம்.
யாழ்ப்பாணத்திற் கற்றவராய், பிரபுக்களாய் புறொட்டெஸ் தாந்துக் கிறிஸ்தவர், இஸ்லாம்மத லெவ்வைமார், பிரபுக்கள், புத்தர் முதலியோர் இருக்கவில்லையா?
அவரெல்லாம் கல்லாத, மார்க்க அறிவில்லாத மூடரென்றும் உம் போற் கத்தோலிக்கர் தான் கற்ற மகாத்துமாக்கள்' என்றும் துள்ளு கிறீர்.
அவர்கள் சைவருடன் இவ்வாறான சேட்டைகளுக்கு ஏன் தொடங்கு கிறதில்லை என்பதைச் சற்றே யோசிப்பீராயின் உமக்கு இந்த பித்த லாட்டம் ஒருபோதும் வரப்போவதில்லை.
நாம் கிறிஸ்தவ மார்க்கத்தையேனும், மற்றெந்த மார்க்கத்தை யேனும் இகழ ஒருபோதும் மனமேவப்படவில்லை என்பது உம்மாற் கவனிக்கப்பட வேண்டும்.
ஒருவரெழுத்தும், பேச்சும் எண்ணமுமொன்றாயிருந்து நன் மனத்தோடு எழுவதுதை நீரும் நும்மவரும் அவரெத்துக்கும் பேச்சுக்கும் எண்ணத்துக்கும் முழுமாறாய்த் திரித்து விளங்கியும், விளக்கியும் கொண்டு அவருடன் குஸ்திபோடத் தொடங்குவது அவரெழுதியதை பேசியதை, எண்ணியதை உணருமாற் றின்மையால் என்போமா? இயற்கை குணத்தால் என்போமா?
'இந்து சாதனம் மரியாதைக் கஞ்சி மவுனங் காட்டுவது போல் எல்லாருங் காட்டுவ ரென்றெண்ணுவது பேதமை.
ருஷிய சோவியத் அரசின் தலைவர்கள், ரோமாபுரியிலுள்ள கிறிஸ்தவ ஜகத்குருவாகிய போப் அவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்து ஒர் பத்திர மனுப்பியிருக்கிறார்கள்' என்ற விஷயத்தைப் பற்றிச் 'சுதேச நாட்டிய'த்திலிருப்பதை அதிலுள்ளபடி எடுத்து உமது பத்திரிகையில் வெளிப்படுத்தி விட்டு உங்கள் மத குருவும் எமது நண்ப ருமான பூரீ ஞானப்பிரகாச குருவானவரிடம், எழுதியவர் கருத்து
போப்பை கணப்படுத்துகிறதா, பரிகசிக்கிறதா என வினாவிப்பாரும்.
அல்லது கற்ற பிறரிடம் வினாவிப் பாரும். நரிவால் கொண்டு கிணறாழம் பார்க்க முடியாது.
நண்ப நாட்டுப் பத்திரிகை யொன்று கேட்டு விரண்டு நாட்டிக் கூத்தாடுகின்றது, என்று ஏதோ பெரும் பகிடி விடுகிறேனென்று புத்திகெட்ட சிறுபிள்ளைப் பேச்சுப் பேசினிரே? இதன் கருத்தென்ன? பிரயோசனமென்ன?
நண்ப! நீர் "இந்து சாதனம்' பத்திராதிபர் சொன்னாரே, “மெஸ்-றசல் சப்பாத்துடன் கோவிலுட் போனது ஆசார விரோதம்.' என்று அதை மறுத்துப் பேசவா!

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை 17
அல்லது "சுதேச நாட்டியத்தில்' போப்பைப் பற்றி எழுதியது தவறென மறுத்துப் பேசவா?
நேரே பத்திரமூலமாய்த் தோற்று வீராயின் நாமதில் தலையிடவும் அன்பு மரியாதையோடு பேசவும் ஆயத்தமே.
(சு.நா. 1928ஆம் ஆண்டு)
6. இதோ கவிதைகள்
கவிதை என்பது யாது? இக் கேள்விக்குக் கவியோகி சுத்தானந்தர், ‘கவிதை என்பது உள் ளுணர்வின் சொல்லோவியம்' என விறோடு விள்ளுவார்.
பேராசிரியர் க. சச்சிதானந்தன் அவர்கள், ‘கவிதை என்பது உயிரின் ராகம்' என்று ஆணித்தரமாகச் சொல்லுவார்.
கவிதை பற்றி யான் மேற்குறிப்பிட்ட அறிஞர்களினதும், இன்ன மும் பல புலமை சான்ற பெருமக்களினதும் கூற்றுக்கு இலக்கண மாகத் திகழ்வது ஆசுகவியின் கவிதைகளாகும்.
மணி மணியான சொற்களால் திவ்ய கவி செய்கிறார் எம் கவிஞர்.
முதற்கண் ஆசுகவியின் ஆன்மிகக் கவிதைகள் சிலவற்றைக் காண் போம்.
கந்தக் கடவுள் மேற் காதலாகி, கசிந்து கண்ணிர் மல்கி எம்புலவர் பாட்டிசைக்கிறார்.
சொற்கள் அழகாக விழுகின்றன; நடை நளினமாக அமைகின்றது. இதோ பாட்டு:
மாவைக் கந்தன்மேற் கவிதை (1)
என்முகம் பாரா திருப்பதற் கேழைநான்
என்னகுறை செய்தே னந்தோ யாதானு மொருகுறை இருப்பினும் மன்னிப்ப
தெந்தையுன் கடமை யலவோ

Page 13
18 சிலோன் விஜயேந்திரன்
புன்புலால் மதுவுண்டு நிரயவழி மால்புகுது
புலையருற வன்றி ஞானம் போதிப்ப வர்க்குநீ நண்புடை யனல்லவோ
போந்தமுன் வினைவ சத்தால் என் பையெனி லச்சுமை சுமந்திறக் கிக்கடைத்
தேறுநா ளெந்த நாள்தான் எவருக் குரைத்தழுவ திக்கலி யுகத்தினி
யேயிறைவ னெனக்கிலையா பொன்குலவு தெய்வானை குறவள்ளி கவமுப்
புரதகன சிவகு மர சீர் பொலிகாவை யுறுமாவை நகர்வாச முருகேச
புகழா றுமுக தேவனே.
(சு.நா:- 1906-1b ஆண்டு)
மாவைக் கந்தன்மேற் கவிதை (2)
சென்ம மெத்தனை முன்னெடுத்த தறியேன் தீமை
செய்த தெத்தனை முன்னறியேன் தேவர் முன் னெத்தனை பணிந்த தறியேன்சுகஞ்
சேர்ந்த தெத்தனை முன்னறியேன்” இன்ன லெத்தனை முன்னடைந்த தறியேன் பிறவி
யின்னு மெத்தனை யறிகிலேன் இகமீதிலே சிறியனே தனுபவிப்பநின்
இன்பஞ் சிறிது மறியேன்.
பின்னையெற் கேது தெரியும் ஞானமற்ற சிறு
பிள்ளைக்கு மெற்க மேதும் பேதமிலையே யிவை களறியாத நானுனைப்
பின்பற்ற வழியறிவனோ பொன்னுற்ற பொன்மருகனே புனித சரவணப்
பொய்கை விளையாடு குகனே பொலிகாவை யுறு மாவை நகர்வாச முருகேச
புகழாறு முகதேவனே.
(க.நா. 1906-ம் ஆண்டு)
கீழ்வரும் பாடல், ஆசுகவி சிறைத் தண்டனை பெற்றபோது, 'அச் சிறையிலிருந்து நல்லூர்க் கந்தனை எண்ணி நெஞ்சுருகிப் பாடியது.
நக்கீரர்க்கும், அருணகிரியார்க்கும், குமரகுருபரர்க்கும் தமிழீந்த குமரக் கடவுள், ஆசுகவிக்கும் அற்புதமாக வண்டமிழை வாரிவழங்கு கிறார்.

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை 19
கலநெஞ்சையுங் கரைய வைக்கும் கவிதை இது. நல்லூர்க் கந்தன்மேற் கவிதை (1)
அன்னையின் துணையைச் சிறுமையிலிழந்தென் னருத்துணை தன்னையே யடைந்து
ஆமெதற்கு கெனுமென் முகத்தினைப் பார்த்ததை
யாவிது வேண்டுமென் றினிய
கன்னலை நிகர்த்த குதலைவாய் மொழியாற் கருணையோ டென்னையே வேண்டுங் காதலா ரிருமைத் தருக்கும் நான் வளர்த்த
காதலன் றனக்குமா ரென்போல் மன்னுமஷ் விடத்தி லன்புளா ரெனவுள் வருந்தினேன் னவர் சுகங் கல்வி வண்மைநல் லொழுக்க முள்ளராய் வளர
வரந்தர வேண்டுமுன் புனத்தில் மின்னிய குலவள்ளியை விழைந்தெடுத்த
வேலவனே விமலனே நல்லை வேந்தனே கந்தா சேந்தனே சுவாமி வித்தகா வுனக் கடைக்கலமே நல்லூர்க் கந்தன்மேற் கவிதை (2)
சத்துருக் கணமுயிர் பறிக்க வரினுங் கொடிய
தண்டனை புரிந்து விடினும் தங்கபொன்மனை பூமி நீதியே வலாளரைத்
தான்பறித் தாள வரினும் சித்தமனு வளவெனினு மஞ்சா வணங்கா
முடித்தீர மன்னனென்று செப்பு பெயர் கொண்ட துரியோதனன் போலெனைச்
செப்பிடத் தெவ்வர் சங்கம் இத்தலத்தினில் வைத்ததெவ் வினையினுஞ் செயமெனக்
கீந்த தயாள சொரூபமே
ஈதுதரு ணத்திலென் மீது தயவற்றதென்
னென் பொய்க் குரம்பையிந்த
நத்துசிறை மனை பெற்றுழல வைத்ததும் நன்மைக் கெனக் கருதியோ நாயகா குறவள்ளி தேசிகா திருநல்லை
நகர் வாச முருகேசனே.
பக்திக் கவிதை வரிசையில் இறுதியாக புலவரின் "கதிரைமலைப்
பேரின்பக் காதல்' என்ற நூலின் கண் அமைந்துள்ள அற்புதமான சில பாடல்களைச் சுவைப்போம்.

Page 14
20 சிலோன் விஜயேந்திரன்
மாணிக்க கங்கை தனில் மருவி நீராடி யுள்ளங் காணிக்கை கொண்டிறைஞ்சக் காயமெடுத்தேனிலையே
(LumrL6ib 1 95)
வெட்டும் பகடேறி வெங்கூற்றன் வந்துயிரைக் கட்டும் பொழுதுவழி காணும் மிடங்காணேனே
(பாடல் - 102)
காலனைக் கண்டஞ்சி கலங்கி விழுமந்நேரம் வேலும் மயிலுமல்லால் வேறுதுணை காணேனே.
(umru Gü) -- 1 03)
முச்சுடராய் முத்தொழிலாய் முக்குணமாய் மூவுருவாய் மெய்ச்சுடராய் நிற்பதுவும் வீரவடிவேலவரே
(untu Gü - il 12)
மண்டலமாய்த் தண்புனலாய் வானகமாய் மாருதியாய் விண்டலமாய் நிற்பதுவும் வீரவடிவேலவரே
(பாடல் - 116)
தானா யுலகமெல்லாந் தன்செயலே தத்துவமாய் ஆன திருவிளையாட் டாடுவதும் வேலவரே
(urru6ö - I 24)
குருடர் விழிதெரியக் கூன்முடவர் கால்வழங்க மருட ரிருள்தீர வரங்கொடுக்கும் வேலவரே
(untLasibo - 128)
வேகமுள்ள தூதர்வரும் வேளையில் வேலாயுதமும் தோகைமயில் வாகனமுந் துணையாய் வெளிப்படுமே
(штLet - 1 57)
குன்றெறிந்த வேலோய் நின்கோலமலர்ச் சேவடிகள் என்றுமற வாம லிருக்க வரந்தாராயோ
(பாடல் - 220) இப்பிறப்பிற் சென்ம மொழிந்தெப்பிறப்பிற் போனாலும் அப்பிறப்பு முன்னடிமை யாக வரந்தருவாய்.
(ւյրւ6ն - 222) இனி நமது கவி, தமது வாத்சல்யத்துக்குரிய துணைவி மரண மடைந்த சந்தர்ப்பத்தில், நெஞ்சக் குருதியிற் பேனாவைத் தோய்த் தெழுதிய கண்ணீர்க் கவிதைகள் சிலவற்றைப் பார்ப்போம்.
நேச மனையாள் பிரிவாற் கவியின் நெஞ்சு துடித்தது; பூத்தது கவிதை, உள்ளுணர்வின் சொல் லோவியமாய் உயிரின் ராகமாய்.
கவிஞரின் கண்ணீர்க் காவியத்திலிருந்து இதோ பாங்கான சில பாக்கள்.

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை 21 GolauGrunt
-என்னென்று பாடுவே னென்னென்று சொல்லுவேன்
என்னென்று கையாலெழுதுவே - னென்னாசைக் கண்கண்ட பொற்கிளியே கையெறிந்தாயென்று மனம் புண்கொண் டழுந்திவிடும் போது. (l)
நெஞ்சம் பதைக்குதே நீடுடல்சோர் வேறுதே வஞ்சக்கண் ணானிர் வழியுதே - செஞ்சொற் குலைந்துதடு மாறுதே கோமளமே யென்னை உன்லந்திடநீ வைத்ததை யுன்னி. (2)
தேகமெலிவுற்றேனே சிந்தைநொந்து புண்ணாகிச் சோகமுற்று வாடிச் சுழன்றேனே - ஏகனடி கொண்ட வெனதாசைக் கோமளமே யென்னைவிட்டுப் பொன்றினா யென்ற பொழுது. (3)
நகமுந் தசையுமென நாமொன்றி வாழ்ந்த சுகவாழ்வை முன்பு துதித்தோர் - அகமுருகிப் பேடிழந்த வன்றிலெனப் பேசவெனை நீதனிவைத் தோடியதோ நீதி யுரை. (4) நீர்க்குமிழி வாழ்க்கையிென நெஞ்சறிந்தோர் சொன்ன வந்த, வார்த்தைக் குதாரணமாய் மாண்டாயோ - பூத்த வரி வண்டே பாடுங் குயிலேயென் பைங்கிளியே நானிருந்து வாடுவதோ நிற்கு மனம். (5)
அன்னந் தருவாரா ரன்புமொழி சொல்லுவாரார் இன்னலழித் தாறுதலெற் கீவாரார் - வன்னமுகங் காட்டிமகிழ் விப்பாரார் கண்மணியே முத்தி யன்பு பூட்டிநீ யென்னைவிட்ட போது. (6)
சொல்லையோ வுன்குழலின் சுந்தரத்தை யோதரளப் பல்லையோ நின்னுதலின் பான்மையையோ - அல்கலழி கண்ணையோ விற்புருவக்காட்சிழையோ நீயிருந்த அண்மையையோ சொல்லி அழ. (7)
சங்கக் கழுத்தையோ தங்குரத்தை யோவகட்டுத் துங்கத்தை யோவிடையின் றோற்றலையோ - பங்கயப்பா தத்தையோ வுத்தத் தகையையோ ஞானேந்த்ரி யத்தையோ சொல்லி அழ. (8)
நேசத்தை யோவெனக்கு நீயன் றுரைத்தவுப தேசத்தை யோபுரிந்த செய்கையையோ - மோசக் குணமகற்றி யென்னைக் குணப்படுத்தி வைத்த அருமையையோ சொல்லி அழ. (9)

Page 15
22
சிலோன் விஜயேந்திரன்
உன்முகத்தை யுன்மொழியை யுன்னுணவைக்காணாதுன் னண்ணன் பயணமுற்ற அவ்வருத்த - முன்னைப் பிரித்ததோ யான்கடிந்து பேசும்பேச் சுன்னைப்பிரித்ததோ அன்னமே பேசு. (10) தேனே செழுங்கனியே திவ்வியகண் டேநோக்க மானேயென் னாசை மணிவிளக்கே - மாணமரு மிப்பிறப்பி லென்னைமற வாதமயி லேயுனைநான் எப்பிறப்பிற் காண்ப திணி. (11)
விருத்தம்
என்னரிய ஆசைமுத்தே யினியமொழித்
தேனே யென்னிதய வாழ்வே கண்மணியே யனநடைச் செந்திருவேமா
மயிலே காருண்யம் பூத்த அன்னநடம் பயிறரு கற்பக தருவே
யருட்குன்றே யழகா ரென்னின் மின்னு மணிவிளக்கே நியெனைப் பிரிய
நான் சகிக்கும் வித் மெவ்வாறே. (1)
புதுவுடலம் புதுவிதயம் புதிய செய்கை
பொலிந்தபுது மகனென வெற்புகல நல்லோர் விதுவெனவென் னிதய மதி லுதித்து ஞானம்
மென்மொழி யாலின் மொழியால் விளக்கும்மானே எதுகுறைநான் புரிந்தேனேன்ற கன்றாய் தேனே
யானிறந்து சுடலை செல்லும் போதேயல்லால் இதுதுயர மொழிந் திருக்கேனம்மே பாவி
ஏழை யெனப்பட்டே னென்செய்குவேனே (2) உன்பணத்திற் பன்மடங்காம் பணமுங் காண்பே
னுன்னுற விற்பன் மடங்கா முறவுங் காண்பேன் உன்குலத்திற் பன்மடங்காங் குலமுங் காண்பே
னுன்றலத்திற் பன்மடங்காந் தலமுங் காண்பேன் உன்ற ரத்திற் பன்மடங்காந் தரமுங் காண்பே
னுன்னழகிற் பன்மடங்கா மழகுங் காண்பேன் உன்குணத்தை நிகர்த்த மங்கை தனையென் கண்க
ளொரு பொழுதுங் காண்பதில்லையுண்மைதானே (3)
கலந்து கொண்டாடியவர் தம்மைப் பிரிந்து வாழக்
கானகத் திற்றிரியுமதி குறைந்த புன்மை விலங்குமிக வருந்து மெனிலையோ வந்த
விலங்கல்ல நான் சகித்து விரிந்த மாசஞ் சலங்கழித்து வாழ்வேனோ செந்தில்வாழ்வே
சரவண சண்முக குகசாம்பவி குமாரா இலங்கு பவப்புவியிலுன் சோதனை யீதென்றா
லென் செய்வேனேழை யிதற்கென்செய்வேனே. (4)

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை.
இப்பிரசவத்தி லிறப்பேனா னென்றீண்
டிருந்த வயலவர்க்கு முறவினர்க்கு முன்னே சப்பரவை படிந்தவன் னெஞ்சேனுக்கும் நீ
சாற்றினாய் சாற்றிய போற் சாதித்தாயுன் றப்பறையின் மொழியிதினாற் பத்மினியென்று சாற்றவெவர் பின்னிற் பாருன்னைமானே எப்படி நான் மறந்திருப்பேன் பாவியானே
னென்செய்வே னேழை யிதற்கென் செய்வேனே.
இறக்கமுன்ன மிறப்பே னென்றிசைத்தவுன்வா
யிசையை நின்த்தழுவேனோ விறக்கமுன்னாள் மறக்கரிதர் யெனக்குப தேசித்த வந்த சி +
வாக்கியத்தை நினைத்தழுவேனோ நானுள்ள முறக்க வனித்திலனென நீயுரைத்த மோச
வுரையை நினைத் தழுவேனோ வுன்றனாவி துறக்கமுன்னி பட்ட வருத்தத்தை நாளுஞ்
சொல்லி யழுவேனோ வென்றோகை யாளே.
என்னைவிட்டு நீபிரிய வருமென்று நா
னிக்கவியை யுனக்கியற்றி நோவேனென்றும் முன்னொரு நாளெனும் நினைத்தேனல்லே னிந்த முடிபுவந்து முடியுமென்று முன்னைநாளி லன்னவாகன மிலரும் பிரமா செய்தா
னாமெனி லாரிடத்திலிதை யறைவே னென்முன் பின்னும் நீபிறந்து வந்தாலன்றி யென்னைப் பிடித்த துன்பம் விட்டகன்று பிரிந்திடாதே.
இனி ஆசுகவியின் இரண்டு சிறந்த கண்டனப் பாக்களைத் றேன்.
கவிதை: 1 உனக்கு
ஆசிரிய விருத்தம்
பொய்கோள் பொறாமை வஞ்சகமுடையவுன்னை யொரு
புண்ய புரு டோத்தமனெனப் புழுகி வெகு பெருமை பாராட்டுவாரற்ப பொருள்.
புனித வீனஞ் சிவமத
மெய்யறி வினம் பிக்கை பீன மருளாமை யுள
வீணனுனை யாழ்ப்பாண மேல் மிக்க பிரபாசார சீல மெய் பத்தியுள மெய்ஞ்ஞானவான் கொடைவளல்
23
(5)
(6)
(7)
தருகி

Page 16
24 சிலோன் விஜயேந்திரன்
செய்ய பெரியோ னென்று வீண்வாய் பசப்புவார்
தேசமறியக் குலத்திற் சிறிய வுனையுயர் குலச்சீமானெனப் பிறர்
திகைக்கப் பிதற்று வாரில்
வை யகத்திற் சிலர் வசிக்கின்றாரிவர் போல
மதியற்ற மடனென் றெனை மனதினி வைக்கிலுனை யாரென்று பிறறரிய
வைப் பவன் நானறிமினே. (1)
உன் பொறாமையினா லெனக் கென்ன கேடுவரு
முன் மரபையுன் நேர்மைய்ை உனது மனத்தைச் செகத்தறி யாதவச்டருக்
குள்ளபடி தெரிய வைக்க
என்னையே வும்பின்னை யென்ன செய்யுந் தாடி
எளி லங்கி லேயரு டையால் ஏமாப்பு நடையால் வெருண்டெனது மனமஞ்ச
லெக்கணமுமில்லை யிந்த
மன்னு புவியிற் சிங்கநரி கண்டு பயமுறு
வழக்கில்லை மயி லோந்தியின் வருகை கண்டஞ் சிடுவழக்கறிவை யொருவரொடு
வாளா பிதற்றி யென்னைத்
துன்பமுற வழிதேடு நீசனே தூசனே
தொன் மதியின் . வினைஞனே தோகை யாரூடனே கோவை நேர்மூடனே
தழுமிள் தென்றறி மினே. (2)
கவிதை; (2) உன்புத்திமதி
மன்விருத்தம் ஒருபொழுது முன்சங்க முன்மதந்தற்கெதி ருரைக்காமலும். நினவையை
உயரிந்து சாதனங் கண்டித் துரைக்க வெதி
ரோதிவா தாடியும் பின்
பெருமை பலநின் குருப்பாது காவலன்மீது
பேசியும் வந்தென்னைப் பேதையே நீகற் றறிந்த சிற்றுாரா வெனப்பித்த மதிபடைத்துச்

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை 25
செருவாட வாவென்ற வதுநீதியென்றி யார்
செப்பு மவனெனினும் நாட்டியமெனச் சுட்டாது
சிற்றுார வென விளித்தல்
தெருளு நீதியுமாக விதுவழி தணந்ததென் செப்பு தற்கும் முடுவில் தான் தெரியுமோ சிவலிங்க மிதுசெக்கிதென்றிதைச்
செப்பலா முவமை நிற்கே.
ஆசுகவியின் பாடல்கள் இந்நூலின் பிறபகுதிகளிலும் இடம் பெற் றிருக்கின்றன.
ஆதலால் புலவரின் இதய திண்மையைச் சீரோடு செப்புகிற பாடல் ஒன்றைத் தந்து இந்தப் பகுதியைப் பூர்த்திசெய்கிறேன்.
அச்சமென்ப திருப்பினு மில்லாமை சொல்லேன் அதிகநிதி வழங்கினு மில்லாமை சொல்லேன் பகூடித்துக் காயும்நா னில்லாமை சொல்லேன் பரிகசிப்ப வரைத் துணிந்து பரிகசிப்பேன்
இச் சகத்தி லிதினாலென் பாவைத்தக்கார்
ஏத்திமதித் தென்கவிக்கு மதிப்பு வைத்தார் கச்சமிது நிச்யமிது வெனக் கூறாது கவிஞரிதை மறுப்பதற்குக் கருதிடாரே.
I
ཁོདི་
7. சிறைவாசமும் ஆவேச அறிக்கையும் நமது ஆசுகவி 1910-ஆம் ஆண்டளவில் சிறை செல்ல நேர்ந்தது.
அது போழ்து தமது உற்றார், உறவினர், நண்பர்களுக்கு தம்து சுதேச நாட்டியம்’ பத்திரிகையின் ஊடாக விட்ட அறிக்கையானது கண்ணினால் எழுதப்பட்டதாகும்.
படிப்பதற்குச் சுவைமிக்க அந்த அறிக்கையை இங்குத் தருகிறேன்:
'என்னன்பான சினேகிதர்களே! உறவினர்களே! எனக்கு நேரிட்ட இந்தச் சிறையை நினைத்து நீங்கள் முகவாட்டத்தோடும், கண்ணி ரோடுங் காட்டும் விசனம் எனக்குப் பெருந்துக்கத்தையும், வெட்கத்தை யும் தருகிறது. நீங்கள் உலகத்தை நல்லாயறிந்திருந்தால் இேவ்வளவு விசனத்தை அடையமாட்டீர்கள்.

Page 17
26 சிலோன் விஜயேந்திரன்
என்வீடு போல மறியல்வீடும் கல்வீடு, ஒட்டால் வேயப்படட தென்றும், மறியல் வீட்டிலும் குற்றவாளிகளாய் என்போல் அனேக பிரபுக்களும், செல்வரும், படித்தவரும், வீரவான்களும், நட்டா முட்டி களும் இருக்கின்றார்கள் என்றும், ஒருநாள், ஒரு வாரம், ஒரு வருடம் முதல் 25, 30 வருடச் சிறையும் இருக்கின்றார்கள் என்றும் ஆண்கள் மாத்திரமல்லாது பெண்களும் இக்கதியை அடைந்திருக்கிறார்கள் என் றும் நானறிவேன்.
என் சகோதரரே!
மறியல் வீட்டில் உண்ணச் சோறும், நிர்வாணத்தை மறைக்க ஒரு உடையும், படுக்க ஒரு பாயும், நோய் தீர்க்க நல்ல வயித்தியனும், குடிக்க, குளிக்க நல்ல தண்ணிரும், படித்துக் கொள்ளச் சில புத்தகங் களும், இருக்கின்ற தென்பதும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
மறியல் வீட்டில் நானடையக் கூடாததாயிருப்பது சுயாதீனம் (தன்னிட்டம்) ஒன்றே, இப்படியானால் நீங்கள் காட்டும் விசனம் அறியாமையின்பாற்பட்டதன்றோ?
சகோதரரே!
உலகத்திலுள்ள ஒவ்வொன்றுக்கும், ஒவ்வொரு அந்தம் (வயசு) உண்டு என்பதை நீங்களறிவீர்கள். அப்படியானால் என் செல்வாக்கும் இத்தகையதுதானென்று நீங்கள் ஆறிக்கொள்ள வேண்டியதே புத்தி.
'சுகமுந் துக்கமும் சுழலும் சக்கரம்" ஆதலின் நான் என்பகவா னால் நற்சுகம் பெற்று இச் சிறையைக் கழித்துக் கொண்டு இன்னும் உங்களன்பான சமூகத்தை நிச்சயமாய்ப் பெறுவேனென்றும், பின்னும் நன்னிலையிலிருப்பேனென்றும் தைரியமாய் நம்புங்கள்.
ஆனால், கோட்டிற் குற்றப்பட்டவரெல்லாம் அயோக்கியரென் றும், குற்றத்திற்குப் பாத்திரவான்களென்றும் நினையாதீர்.
யாழ்ப்பாணத்திலுள்ள ஒவ்வொரு பிரபுக்களையும், யோக்கி யரையும் என் சிறுவயது முதல் ஆராய்ச்சி என்ற கொத்தால் நான் நல் லாய் அளந்து அறிந்திருக்கிறேன். ஆதலால், இதில் யாதேனும் இழிவு இருப்பதாய் நான் எட்டுணையும் யோசிக்கவும், விசனப்படவுமில்லை. நான் சோதிடத்திலும், சகுனம், கனவு என்பதிலும் மிக்க நம் பிக்கை யுடையேன். இவைகளால் இற்றைக்கு 8-9 மாதங்களுக்கு முன்பே, எனக்குச் சிறைச்சாலைத் தண்டம் வருமென்று அறிந்திருந் தேன். இதை என் ஒக்கலாரும், நண்பருமாயுள்ள பலரறிவர். ஆதலால், இது பிராரத்துவப்படி எனக்கு நேர்ந்ததென்று நான் ஆறுதலுள்ளவனா யிருக்கிறேன்.
என் பிரிய சகோதரரே சினேகிதரே! பதினாறு வயது முதல் எழுபது, எண்பது வயதையுடையவரும் குருடர், முடவர் முதலிய

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்னை 27
அங்கபங்க முடையவரும், பெண்களும், மூன்று வருடத்திற்கு மேற்பட்ட சிறையைப் பெற்றுத் தங்கள் மனத் தைரியத்தினால் அத் தண்டனைக் கடலை நீந்திக் கரையேறுகின்றாரெனில் ஆண்டகையான நான் மன வருத்தப்படுவது எவ்வளவு இழிபாகும்?
உள்ளபடி இது எனது சாதகப் பலனாயுள்ளது.
இக் குற்றத்தில் நான் குற்றமுடையவன்தானோ அல்லவோ, என்று இனி நான் சொல்வதிற் சபலமில்லை.
நேர்மையையும், பிரபுத்துவத்தையுங் கொண்ட எங்கள் யூரித்துரை மாருக்கும், கருணையையும், நீதியையுங் கொண்ட நீதிபதியவர்களுக்கும் இதன் உண்மை தெரியாது.
அவர்கள் விளக்கத்தின்படி - சட்டத்தின்படி தங்கள் கடமையைச் செய்தார்கள்.
பரம்பொருளான நீதிபதி (கடவுள்) இவ்விஷயத்திலறிந்த உண்மை. மெஸ். கனகசபை அவர்களும், சாத்திரி சின்னையாவும் நானு மறிவோம்.
அதற்கு அந்தக் கடவுள்முன் யார் குற்றவாளியோ, யார் தண் டத்தை யுடையவரோ என்று நானும் அவர்களுமே அறிவோம்.
என் சகோதரரே சினேகிதரே! தேசாபிமானிகளான இந்திய பிரபுக்கள், பூரீமான்திலகர், சிதம்பரப்பிள்ளை முதலானோர் சிறைச் சாலைத் தண்டத்தை அடையவில்லையா?
என்னிதய விசுவாச நேசரும், பரோபகார குணப் பிரபுக்களுமான பத்துப்பேர் குற்றப் பணத்திற்கு உதவி செய்வார்களென்றும், அதனால், நான் எனக்கு நேர்ந்த விபத்தினோர் பாகத்தை நிச்சயமாய்க் கழித்து கரையேறுவேனென்றும் பூரணத்தோடு காத்திருக்கின்றேன்.
இஃதிங்ங்ணமிருக்க, என் சகோதரரே கருப்பையிற் குல தெய்வம் பெற்ற என் முக் குழந்தைகளைப் பற்றி நான் சிறிதுந் துயரப்பட வில்லை. அவர்கள் தலைமேல் அவரவர் தெய்வத் திருப்படங்கள் இருக் கின்றன.
நூற்றுக் கணக்கான இனத்தவர் சிரத்திலும், உள்ளங்கையிலும், உரத்திலும் அவர்கள் இருக்கும் தகைமையடைவரே!
என் பெருமான் அவர்களைப் பாதுகாத்து எளியேன் முகத்தில் விழிக்கச் செய்வர்.
என் சிறுவர் சுகத்தையும் என் சுகத்தையும், வேண்டி என்னன்பில் வளர்ந்து கற்பிக்கப்பட்ட மகன் ஒரு துறையுஞ் செல்ல வழியின்றி இடைநிலையில் நிற்க வந்ததே எனக்கொரு துக்கமென்பேன்.
என்பகவான் என்னை இந்தச் சிறையிலே வருந்தாமலும் யாதொரு நோய்வாய்ப்படாமலுங் காத்து ரட்சிப்பாரென்று நான் நம்புகிறேன்.

Page 18
28 சிலோன் விஜயேந்திரன்
என் உறவினராய், என் சிநேகிதராய் உள்ள நீங்கள் என் வாழ் விலுந் தாழ்விலும் பங்கு பூண்டு, எனக்காய் உதவிபுரிந்து, புரிகின்ற என்னிதய விசுவாச நேயர்கள் யாவருக்கும் "என்றுங் கடமைப்பட்டவர் களாய் இருக்க வேண்டுமென்பது என் கோரிக்கை.
நான் நற் சுகத்துடன் உங்களை வந்து சந்தித்துக் கொண்டாட எம்பகவான் கிருபை செய்வாராக."
(சு.நா.-1910)
ஆசுகவி சிறையில் சில வருடங்களைப் போக்கிய சந்தர்ப்பத்திலுங் கவிஞராகவே அங்கு மிளிர்ந்தார்.
ஆனந்த பாஷை பேசுகிற பட்சிகளைக் கூண்டில் அடைத்துவிடுவதன் மூலமாக அவற்றின் குரலுக்கு எப்படித் தடை போட்டுவிட முடி யாதோ, அது போன்றே புலவரைச் சட்டமானது சிறையில் தள்ளியபோதும், அந்தச் சடச் சட்டத்தால் அவரின் இதயத்திலிருந்து பொங்கிப் பிரவகித்த கவிதைப் பெருக்கைத் தடுத்து நிறுத்த முடிய வில்லை.
சிறையிலும் நாத்திகரையும் ஆத்திகராது மாற்றவல்ல வடிவேலன் மீது நமது கவி பாட்டிசைக்கிறார்.
ஆம்! நல்லைக் கந்தன் பேரிலும், கதிர்காமக் கந்தன் பேரிலும், மாவைக் கந்தன் பேரிலும் அவர் ஆனந்தக் கவிதைகள் செய்கிறார்.
அவர் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாக ஊற்றெடுக்கின்றன. சின்னப் புஷ்பங்கள் போல் மலர்ந்து மனமோகன சுகந்தத்தை வாரி வழங்குகின்றன.
சிறையில் நம் புலவர், பாட்டிசைத்தது மட்டுமல்லாது, பாட்டிலக் கணப் போதகராகவும் விளங்கினார்.
வதிரியைச் சேர்ந்தவரும், தமிழ்ப் புலவருமான க.வே. சின்னப் பிள்ளை என்பார் சிறையில் ஒரு கைதியாக இருந்த சந்தர்ப்பத்தில், அதே சிறையில் கைதியாக வந்த ஆசுகவியின்பால் நட்பு பூண்டனர். அந்தப் புலவரின் கவியrர்வங்கண்டு வாழ்த்திய ஆசுகவி, அன்னா ருக்கு யாப்பில்க்கணத்தை முறையாகப் போதனை செய்து அன்னாரின் கவித்திறனை வளர்த்தரில் . ۰۰۰ - ۰ برای
கவிக்கு பயன் நல்கிழது.
'ನf
இவ்வண்ணமாக சிறைச்சாலையும் செந்தமிழ், நின்லயமாக ஆசு
- حہ (لاٹھی “
 

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை 29 8. ஆசுகவியின் நூல்கள்
ஆசுகவியவர்கள் தமது நீண்ட வாணாளில், சுமார் இருபது நூல்களை எழுதியுள்ளார்.
அவற்றில் சில நூல்களே இந்நாள் கிடைக்கக் கூடியதாகவிருக் கின்றன.
அவரெழுதிய நூல்களில் பெரும்பாலான நூல்கள் கண்டன நூல், கடவுள் துதி நூல், சரித்திர ஆய்வு நூல் என்கிற பிரிவினுள் அடங்கும்.
அன்னார் தீட்டிய தலைசிறந்த சரித்திர ஆய்வு நூலே "யாழ்ப் பாண வைபவ கௌமுதி' யாகும்.
அந்நூல் புலவரின் சரித்திர ஆய்வுப் புலமைக்குச் சிறந்த சான்றாக விளங்குகிறது.
யாழ்ப்பாண மக்களின் மூதாதையர் பற்றியும், யாழ்ப்பாணச் சாதிப் பின்னணிகளையும், ஊர்களின் பெயர்க் காரணங்களையும் புலவர் மிக நுட்பமாகத் தமது நூலிலே விளக்கியுள்ளார்.
A.
"யாழ்ப்பாண வைபவ கௌமுதி' நூலைப் புலவர், சுவாமி ஞானப்பிரகாசர், வேலுப்பிள்ளை போன்ற கல்விமான்களின் துணை பெற்றே எழுதியுள்ளார்.
ஆசுகவியின் உழுவலன்பரும், அந்நாளைய முன்னணிச் சட்ட மேதையுமான ஐசக். தம்பையா அவர்களே அந் நூல் பிரசுரத்திற்குப் பேருதவி புரிந்தார். அந்நூலும் ஆசுகவியால், ஐசக். தம்பையா அவர் களுக்கே அர்ப்பணஞ் செய்யப்பட்டிருக்கிறது.
புலவரின் நூற் பணிக்கு அழியாத சான்றாக எஞ்ஞான்றும் நிற்க வல்ல அந்நூல் பற்றி புலவர் கீழ்க்கண்டவாறு வெண்பா ஒன்று பாடியுள்ளார்:
"உன்தேசத் தின்புகழை யுன்பாஷை யின்புகழை உன்சாதி யின்புகழை யோர்த்துயர்த்தும் - என் பெரிய புத்தமிர்தை நேர்புத்தகமோ பெரிதுன்கைப் பத்துறசா லோபெரிது பார்.' புலவரின் அரிய ஆய்வின் பயனாக வெளிவந்த "யாழ்ப்பாண வைபவ கௌமுதி' நூல் மிக அரிதாகவே இன்று கிடைக்கிறது.
அரிய அந்த ஆய்வுநூலைப் புதிதாகப் பதிப்பித்து வெளியிடுவது மிக அவசியமான ஒரு பணியாகும்.
இன்று கிடைக்கக்கூடியதாக விருக்கிற புலவருடைய பிற நூல் களிலே, 'கதிரமலைப் பேரின்பக் காதல்", "மேலைத் தேய மதுபான வேடிக்கை கும்மி”, “உரும்பராய் கருணாகர விநாயகர் தோத்திரப் பாமாலை" போன்ற நூல்கள் பொருளழகும், சொல்லழகும் கொண்டு
திகழ்கின்றன.

Page 19
30 சிலோன் விஜயேந்திரன்
9. ஆசுகவியும் அவர்காலத்து அறிஞர்களும்
கல்லடி வேலரின் புத்திக் கூர்மைக்கும், ஆன்ற புலமைத் திறனுக் கும், இயல்பான கவிதையாற்றலுக்கும் அவர்காலத்தைச் சேர்ந்த அறி ஞர்களிடமிருந்து மிகுந்த பாராட்டும், மதிப்பும் கிடைத்தன.
அதே ஞான்று அவரோடு சில அறிஞர்கள் சொற்போர் தொடுத் துப் பரிதாபகரமாகத் தடுமாறி விழுந்ததையும் ஆதாரபூர்வமாக நாம் அறியக்கூடியதாக விருக்கிறது.
நிற்க். புலவர் காலத்து அறிஞர்களுக்கும் புலவருக்குமிருந்த தொடர்பை கிடைத்த சான்றுகளைக் கொண்டு உள்ளது உள்ளபடியே
இந்தப் பகுதி தரப்படுகிறது.
உடுப்பிட்டி அ. சிவசம்புப் புலவர்
சிவசம்புப் புலவர் மஹா வித்வான்; அவர் ஆறுமுக நாவலரின் நெருங்கிய தோழர் நாவலர் அவர்களாலேயே, ‘புலவர்' என்று அழைக்கப்பட்டு, பட்டம் வழங்கப் பெற்ற கவி சிரேஷ்டர்.
அத்தகைய சிவசம்புப் புலவர் ஆசுகவியின்பால் மிகுந்த அன்பும் ஈடுபாடும் மிக்கவர்.
'பாம்பின் கால் பாம்பறியும்" என்பர். அது போன்று கற் றவரைக் கற்றவரே யல்லாது மற்றவரும் அறிவரோ?
இதோ பாருங்கள்! ஆசுகவியின் கீர்த்தியை சிவசம்புப் புலவர் விண்டுரைக்கும் விழுமிய கவிதையை:
நீர்பூத்த செஞ்சடில முக்கட் பிரான்சமய நியமப் பரம்பரையினா னிதிகிளர் கந்தப்ப வேணெடிது முன்னுற நிரப்பியதவத்து தித்தா னெறியுறச் செந்தமிழ்க் கலைபலவுணர்ந்து சுவை நீடுகவிபாடு நிபுணன் நிரைமலர்ப் பொழிறிகழ் தரும்வயவை யம்பதியி னிலமகள்
குலத்துதித்தா
னேசமீட் டியவொருசு தேசநாட் டியமறிஞர் பேசநாட் டியமதியினான் நேரறுந் துரகரத மூரும்வேற் பிள்ளை.
இவ்வாறாக ஆசுகவியைப் போற்றிப் பூரிக்கிறார் சிவசம்புப் புலவர்.
சிவசம்புப் புலவர் ஆசுகவியைக் க்ாட்டிலும் ஆண்டால் மூத்தவர்; அன்னார் மறைந்தபோது தமது பத்திரிகையான 'சுதேச நாட்டியத் தில் உருக்கமான சில குறிப்புகள் எழுதினார் ஆசுகவி.

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை 31 நா. கதிரைவேற்பிள்ளை
புலோலியைச் சேர்ந்த நா. கதிரைவேற்பிள்ளை மிகச் சிறந்த அறிஞர்; ஆறுமுக நாவலரின் அப்பழுக்கற்ற சீடர் நாவலருக்குப் பின் அந்தப் பெரியாரின் அடிச்சுவட்டைப் பின்பற்றிச் சைவத்தையுந் தமிழையும் போற்றிக் காத்த புலவர்மணி, ‘தமிழ்த் தென்றல்' திரு.வி.க. வின் ஆசான். i
எல்லாவற்றுக்கும் மேலாக ஈழ்த் தறிஞர்கள் பேராற்றலைத் தமிழ் நாட்டிலும் நிரூபித்தவர் வரிசையில் அவரும் ஒருவர்.
இவ்வாறான கீர்த்தி பெற்ற நா. கதிரைவேற்பிள்ளை அவர் களுக்கும் நமது ஆசுகவிக்கும் நிகழ்ந்த முதல் சந்திப்பு மிக அற்புதமான தாகும்.
பருத்தித்துறைப் பகுதியிலுள்ள தும்பளை என்னும் சிற்றுாரில் ஒரு கூட்டம். «V
சபையில் கற்றவர்கள் குழுமி இருக்கிறார்கள். நா. கதிரைவேற்பிள்ளை கம்பீரமாகப் பேச ஆரம்பிக்கிறார்:
. 'தும்பளை என்கிற இப்பகுதியிலே உண்மையான அந்தணர் குலத் தார் எவருமே கிடையாது."
கூட்டத்திலிருந்த தும்பளைப் பகுதி அந்தணர்கள் அசந்து போனார்கள்.
கதிரைவேற்பிள்ளை தொடர்கிறார்: இதுபற்றி எவருடனும் யான் தர்க்கிக்கத் தயாராக விருக்கிறேன். ஆனால், ஒன்று; என்னோடு வார்த்தையாடவல்ல சாமர்த்தியமும், துணிவும் மிக்கவர்கள் இங்குள்ளார்களா என்ன?
கூட்டத்திலிருந்து ஒரு குரல் கம்பீரமாக ஒலித்தது: "புலவரே பொறும்; உம்மோடு வார்த்தையாட யான் வல்லேன்." நா. கதிரைவேற்பிள்ளை குரல்வந்த திக்கைப் பார்க்கிறார். அந்தக் குரலுக்குரியவர்? வேறு யாருமல்ல; அவர் நம் ஆசுகவிதான்.
ஒருகணம் நா. கதிரைவேற்பிள்ளை திகைக்கிறார்; மறுகணம் தம் வழமையான நிலைக்குத் திரும்பி,
"நீர் என்னோடு வார்த்தையாட ஆயத்தமா? சரி; அதற்கு முன்பு, நான் சொல்லப் போகிற சம்ஸ்கிருத் வாசகம் ஒன்றுக்கு நீர் பொருள் பகரவேண்டும்."

Page 20
32 சிலோன் விஜயேந்திரன் கூட்டத்தார் இரண்டு சிங்கங்கள் மோதுவதைப் பார்த்தவண்ண மிருந்தார்கள்.
சில வினாடிகள் சபையில் மெளனம் நிலவியது. ஆசுகவியே, மெளனத்தைக் கலைக்கிறார்: 'உமது வாசகம் ஒருபுற மிருக்கட்டும்; நான் சொல்கிறேன் ஒரு சம்ஸ்கிருத வாசகம், அதற்கு முதற்கண் நீர் விளக்கஞ் சொல்ல வல்லீரா?
நா. கதிரைவ்ேற்பிள்ளை அலட்சியமாக ஆசுகவியைப் பார்க் கிறார்.
“சரி, அறையும் உமது வாசகத்தை' என்கிறார். ஆசுகவி சொல்கிறார்.
திடீரென நா. கதிரைவேற்பிள்ளையின் முகத்திலே இனந்தெரி யாத பதட்டம் படர்கிறது.
அந்தப் பதட்டத்தின் காரணம்?
ஆசுகவி போட்ட சமயோஜித முடிச்சை நா. கதிரை வேற்பிள்ளை யால் அவிழ்க்க முடியவில்லை.
ஆனைக்கும் அடி சறுக்கும் அல்லவா?
சபையிலிருந்தவர்கள்ஆசுகவியைப் பெருமிதத்தோடு பார்க்கிறார் கள்.
சிறந்த புலமையும், யார்க்கும் தலைசாயாத மிடுக்கும் மிக்க நா. கதிரைவேற்பிள்ளை நம் அசுகவியைக் கட்டி அணைக்கிறார்; ஆவேசத் துடன் சொல்கிறார்:
"நீர் சமயோஜித புத்திமிக்க புலவர் காணும்.'
சபையிலிருந்த அனைவருங் ‘கல்லடியான் வாழ்க’ என்று ஆனந்த ஆரவாரம் செய்கிறார்கள்.
அன்றே நா. கதிரைவேற்பிள்ளையும் ஆசுகவியும் நண்பர்கள் ஆகி விட்டனர்.
பின்பொரு சமயம்:
அருட்சோதி இராமலிங்கரின் சீடர்களில் ஒருவர், அருட்சோதி இராமலிங்கருக்கும், நாவலர் பெருமானுக்கும் ஏற்பட்ட அருட்பாமருட்பா பிரச்சனையின் தொடர்பாக நாவலர் பெருமானையும், அவ ருடைய மெய்யன்பரான நா. கதிரைவேற்பிள்ளை போன்றோரையும் படுகேவலமாகத் தாக்கி பிரசுரம் ஒன்றை வெளியிட்டார்.

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை 33
அப்பிரசுரத்திற்கு எதிராக - அருட்சோதி இராமலிங்கரின் சீடர் கள் கதிகலங்கும்படியாக ஆசுகவியவர்கள் ஒரு கண்டனத்தைத் தமது பத்திரின்கயில் வெளியிட்டார்.
அதுகண்டு அது போழ்து தமிழகத்திலிருந்த நா. கதிரைவேற் பிள்ளை பெருமிதமுற்றார்.
அன்னார் தமது எண்ணத்தை எழுத்தாக்கி 'சுதேச நாட்டியம்' பத்திராதிபரான ஆசுகவிக்கு எழுதிய கடிதத்தில், ஆசுகவியை 'கனம் பொருந்திய சுதேச நாட்டிய பத்திராதிபரின் தத்துவ உணர்வும், நடு நிலை தவறாத பாங்கும், தன்னாலும், தமிழகத்தைச் சேர்ந்தோராலும் விதந்தோதப்பட்டது' என்று புகழ்கிறார்.
1906ஆம் ஆண்டு நா. கதிரைவேற்பிள்ளை அந்தக் கடிதத்தைத் தீட்டினார்.
அக் கடிதம் தீட்டிய சில ஆண்டுகளுக்குப்பின் புகழ்மிக்க பெரு மகனும், ஆசுகவியின் அன்பருமாகிய அன்னார் சிவன் சேவடி சேர் கிறார்.
மறைமலையடிகள் கேண்மை
தனித் தமிழ் ஏந்தலும், சிறந்த ஆய்வாளருமான மறைமலை யடிகளுக்கும், ஆசுகவிக்கும் ஏற்பட்ட நட்பு சிறப்பானதாகும்.
அடிகளார் இலங்கை வந்திருந்த சமயம்:
தமிழர்களின் மொழி, நாகரிகம், சமயம் என்பன ஆரியர் கலப் பில்லாதும் மிளிர வல்லன, என்கின்ற கொள்கையினை உயிர் மூச் சாக்கி உழைத்த மறைமலையடிகளாரின் ஆய்வுகள் அவர் காலத்தின் பல அறிஞர்களுக்குப் பிடிக்கவில்லை.
அவரது ஈழத்து வருகையை எதிர்பார்த்திருந்த அடிகளாரின் "ஈழத்துக் கொள்கை எதிர்ப்பாளர்களும், அடிகளார்மீது கோபா வேசத்தோடு கண்டனக்கணைகளைத் தொடுத்தார்கள்.
அவர்களில் வித்வ சிரோமணி சி. கணேசையரும் ஒருவர்.
கணேசையர் மறைமலையடிகளார் மீது தொடுத்த கண்டனத்திற்கு மறுப்பாக கனல்கக்கும் ஒரு கண்டனத்தை ஐயர்மீது தொடுத்தார் ஆசுகவி.
அக் கண்டனத்தில், "மறைமலை யடிகளின் ஆராய்ச்சி தமிழின் த்ொன்மையையும், தமிழரின் தனித்துவத்தையும் உலகினுக்குக் காட்டிட வேண்டுமெனும் வேணவாவின் பாற்பட்டதென்றும், அத்தகைய ஒரு சிறந்த தமிழ்த் தொண்டரை - ஆய்வாளரைத் தாக்க முயல்வது ஆண் மையற்ற ஒரு செய்கை' என்றும் குறிப்பிட்டார்.

Page 21
,34 சிலோன் விஜயேந்திரன் ,
பேரிடிபோற் தாக்கிய ஆசுகவியின் கண்டனங் கண்டு ஐயர் அமைதியானார்.
ஆசுகவி, தம்மீது வைத்த அபிமானங் கண்டு மறைமலையார் இதயம் பூரித்தார்.
தமது இலங்கை யாத்திரையில், இரண்டு தினங்களை ஆசுகவி யின் இல்லத்திலேயே அவர் செலவிட்டார்.
புலவரின் கண்டனந் தீட்டுந் திறனையும், சம்பாசணைப் ப்ெட் பினையும், 'சுதேச நாட்டியம்' பத்திரிகைப் பணியையும், கவித்துவத் தையும் மனமுவந்து பாராட்டினார் மறைமலையார்.
சேர். பொன். இராமநாதன்
பெருமை சான்ற பணிகளுக்காகத் தன் வாணாளை ஈந்த சேர். பொன். இராமநாதன் அவர்களும், ஆசுகவிபால் மிகுந்த மதிப்பும், அன்புங் கொண்டவர்.
'சுதேச நாட்டியம்' பத்திரிகையில் ஆசுகவி எழுதிய வீரம் செறிந்த கட்டுரைகளைக் கண்டு அவற்றால் கவரப்பட்டு ஆசுகவியின் மதிநுட்பத்தையும், துணிகரத்தையும் மெச்சி மகிழ்ந்தார் இராமநாதன் அவர்கள்.
புலவரும், இராமநாதன் அவர்கள்பால் மிகுந்த அன்பும், மரி யாதையும் மிக்கார் என்பதனை, 'சுதேச நாட்டியம்' பத்திரிகையில் புலவர் எழுதிய சில குறிப்புகள் வாயிலாக நாம் அறியலாம்.
நீர்வேலி சங். சிவப்பிரகாச பண்டிதர்
புலவரின் மாட்சி வியந்த பிற அறிவாளரில், நாவலரின் அன்பர் களில் ஒருவரும், பெருமேதிையுமான நீர்வேலி சங். சிவப்பிரகாச பண்டிதரும் ஒருவர்.
அப்பெரியார் பாடிய கீழ்வரும் பாடலைப் பார்த்தால் அன்
னாருக்கு ஆசுகவிபால் உள்ள மதிப்புப் புலனாகும்.
தெண்டிரைதழ் மண்டலத்துத் தேசமெலா நேசமுலாய்க் கண்டுகுண மண்டினரைக் காதலித்து - மிண்டுமத பாபியரை லோபியரைப் பாரிலகங்காரிகளைத் தாபமுறத் திக்கரித்துத் தண்டித்துங் - கோபமின்றி
மாசிலருள் வீசியே மாசபைக ளேறுசு
தேசநாட்டி யப்பேர் திகழ்கின்ற - வாசகசீர்ப் பத்திரத்து நல்லதிபன் பற்பலதே சப்பெரியோர் மித்திரனாய் நின்று விளங்குபவன் - சுத்தவளம் வைத்த வயாவிளான் வைப்புறுகந் தப்பிள்ளை உத்தமசற் புத்திரனா மொப்பில்லான் - வித்துவசீர்ச் சற்குணவே லுப்பிள்ளை.
இவ்வண்ணமாக ஆசுகவியை வாழ்த்திச் செல்கிறார் பண்டிதர்.

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை 35 சுவாமி ஞானப்பிரகாசர்
சுவாமி ஞானப் பிரகாசர் ஆசுகவியின் அத்யந்த நண்பர்.
"யாழ்ப்பான் வைபவ கௌமுதி' நூலைப் புலவர் எழுதிய காலை, சுவாமிஜி செய்த உதவி மிகச் சிறந்ததாகும்.
இவ்வுதவி பற்றி ஆசுகவி தமது நூலில் நன்றிப் பெருக்கோடு குறிப்பிடுகின்றார்.
சுவாமிஜியும், ஆசுகவியும் நண்பர்களாக இருந்த போதிலும் சில சந்தர்ப்பங்களில் இருவர்க்கும் பலத்த கருத்து மோதல்கள் ஏற்பட்டதும் உண்டு.
சைவ சமயத்தைப் பழித்து, சைவமக்களைக் கிறிஸ்தவர்களாக்கும் முயற்சிகளில் சுவாமி ஞானப்பிரகாசர் பங்கு கொண்டும், பங்கு கொண்டவர்களுக்கு ஒத்தாசை புரிந்தும் வந்த சந்தர்ப்பங்களில் ஆசுகவி கடுங் கோபங் கொண்டு சுவாமி ஞானப்பிரகாசர் மீது தமது கண்டனக் கணைகளைத் தொடுத்தார்.
அந்தக் கண்டனங்கள் ஆசுகவியின் சைவசமயப் பற்றைத் தெட்டத் தெளிவாகக் காட்ட வல்லன
நவநீதக் கிருஷ்ண பாரதியார்
பெரும் புலவரான நவநீதக் கிருஷ்ண பாரதியார், ஆசுகவியிடத்து நீங்காத அன்பும், மரியாதையும் மிக்கவர்
ஆசுகவியின் மதிநுட்பமும், அஞ்சாமையும் பாரதியின் நெஞ்சை ஈர்த்தன.
ஆசுகவியின் மறைவின் போழ்து நவநீதக் கிருஷ்ண பாரதியார் கீழ் வரும் பாடலைப் பாடித் தமது அன்பரை விதந்தோதுகிறார்:
மலைமலிந்த பெருவெள்ளம் பாய்ந்ததெனச் சொற்
பொருட்கள் மலிந்து பாயும் கலைமலிந்த நிமிடகவி மாற்றாரும் தம் பிழையைக்
கருத்திற் கொண்டு நிலைமலிந்த ஒழுக்கநெறி நிகழச் செய் எழுத்தாளன்
நேர்மை குன்றான் சிலைமலிந்த எழுத்தென்ன வேற்பிள்ளை புகழுடலம்
சிறந்து வாழி.
நான் மேற் குறிப்பிட்ட அறிஞர்களோடு, குருகவி மகாலிங்கசிவம், தெல்லியூர்ப் பாவலர் தெ. துரையப்பா பிள்ளை போன்றோரும் ஆசு கவிமீது நேயங்கொண்ட நெஞ்சினராவர்.

Page 22
36 சிலோன் விஜயேந்திரன் 10. தமிழர்களை நோக்கி ஆசுகவி
ஆசுகவி 'சுதேச நாட்டியம்' பத்திரிகையில் தீட்டிய கட்டுரைகள் மிகச் சிறப்பு வாய்ந்தனவாகும்.
அக் கட்டுரைகளைப் படிக்கின்றபோது புலவரின் தீர்க்கதரிசனத் திறனும், மதி நுட்பமும் எமக்குத் தெளிவாகத் தெரிகின்றன.
புலவரின் இரு கட்டுரைகளை முழுமையாக இங்கே தருகிறேன்.
கட்டுரை-1
இங்கிலிஸ் பர்ஷை
"இப் பாஷை இக்காலத்தில் அரச பாஷையாயிருப்பதினாலும்,
அறிவுக்கும் நாகரிகத்திற்கு மேற்றதான அனேக காரியங்கள் இப்
பாஷையைக் கற்றுக் கொள்வதால் பெறத் தக்கதாயிருப்பதினாலும்,
இப் பாஷையை நாம் கற்க வேண்டியது அகத்திய மென்பதை நாம்
மறுக்கவில்லை.
ஆனால், நந்தாதை, மூதாதையோர் யதா பூர்வமாய் வழங்கிய பாஷையாய், நன்மார்க்க போதனைகளைத் தன்னுட் கொண்டிருக்கிற பாஷையாய், இதர பாஷானுசாரிகளாலும் மிக இனிய பாஷை என நன்கு பாராட்டப்பட்ட, படுகின்ற, படற் பால பாஷையாகிய தமிழ்ப் பாஷையை அடியோடே நிறுத்திவிட்டு இங்கிலீஸ் பாஷையைக் கற் பதையே ஈண்டு மறுக்க மனமேவப்பட்டோம்.
சுயபாஷையாகிய நந்தமிழ்ப் பாஷையை, வழுவின்றிப் பேசவும், எழுதவும், வாசிக்கவும் அதிலுள்ள அரிய காரியங்களை வாசித்து ஆராய்ந்து விளங்கிக் கொள்ளவும் பழகிக் கொள்ளாது இங்கிலீஸ் பாஷையைக் கற்றுக் கொள்ள விரும்புவது போலும் வெட்கமான காரி யம் வேறென்ன? w
இரு பாஷைகளையும் கற்க காலம்போதாதே என்றும், தமிழ்ப் பாஷையைக் கற்பதால் சபலமென்ன என்றும் சொல்லக் கூடுமாயின் இவ்விரு பாஷைகளையுமினிது கற்றவரெனப் பெயர் விளங்கிய மகான் கள் நம்மூரில் முன்னிருக்க வில்லையா?
அன்னிய தேசத்தையும், அன்னிய மதத்தையும் உடையவரான எல்லீஸ், போப்பு, வீரமாமுனிவர் முதலாய மிகப்பலர் நம் தமிழ்ப் பாஷையிலும், சமஸ்கிருதபாஷையிலும் மிக்க பாண்டித்தியம் உடைய வராய் சில நூல்களுக்குக் கர்த்தாவாயிருந்தாரெனில் நம்பாஷையைப் பேச வெட்கமுறும் நம்மவரை யார் சிரியார். இவர் நம்பாஷையிற் சபலம் இல்லை என்பதை அறியாது கற்றுவிட்டாரா?
இப்போது உத்தியோகத்திலிருப்போருட் சிலர் தமிழ்க் காகிதங் களை வாசிக்க இயலாதவராய்ப் பிறரிடம் கொடுத்து வாசிப்பதையும்,

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை 37
சிலர் தமிழ்க் காகிதம் என்றவுடன் வெறுப்போடு மேசைமேற் சுழற்றி வீசிவிட்டதையும் சிலர் தமிழ்ப் பத்திரிகை வாசிப்பதும், எடுப்பதுவும் சங்கையீனம், அது வீட்டுப் பெண்களுக்கே ஏற்ற தென்றதையும், சிலர் தமிழ் பேசத் தெரியாது சிங்களவர், இங்கிலீஸ்காரர், பறங்கிகள் பேசுந் தமிழ் போற் பேசியதையும், நாம் பேசியதை விளங்காது ஆமாச் சொன்னதையும் நாமே கண்ணாரக் கண்டும், காதாரக் கேட்டுமிருக் கிறோம்.
சபையிலெழுந்து ஒரு விஷயத்தைப் பேசத் திராணியில்லாமை யால் மெளனஞ் சாதிக்கின்றார் சிலர்.
அமெரிக்காவிலிருந்து வந்த பாதிரிமார்களும், பிரான்சர், இத் தாலியரான கத்தோலிக்கக் குருமாருள்ளும் அனேகர் செந்தமிழில் தெவிட்டாத தெள்ளமுதம் போற் செய்யும் உபந்நியாசத்தை இவர் போலார் கண்டும் வெட்கமடையாதிருப்பது நூதனமான காரியமே.
இங்ங்ணம் ‘கஞ்சிக்குப் பயறு' கலந்தவாறாய்ச் சொற்ப இங் கிலீசைக் கற்றுக்கொண்ட சிலர், முழுதும் இங்கிலீசரின் நடை, உடை, பாவனைகளைப் பின்பற்றுவாராய்த் தமிழரைக் காணவும், அவருள் சட்டை, தொப்பி, சப்பாத்து இல்லாருடன் பேசவும் நாணி மறை கின்றனர்.
இது மட்டுமல்ல அவருடன் பேசுவதையும், அவரை 'நீர் யார்?" எனக் கேட்பதையும் இங்கிலீசிலேயே கேட்கின்றனர்.
கேட்கும்போதும் மனுஷரைப் போற் குணம் பூண்டு தாழ்மை, மரி யாதையோடு கேட்கின்றனரா?
கட்டுக்ககப்படாது வன்னிக் காட்டில் வசித்த நாம்பன், கட்டுள்ள கப்பட்ட அடுத்த நாட்களிற் சீறி”மூகத்தை.ஒருபுடை சாய்த்துக் கண் களை வெட்டிக், கிட்டுஷ்ாரை முட்டப் போவது'ப்ோன்ற “வெறிக் குணம் பூண்டே கேட்கின்றனர்":t, . |
i ''
ܬܼ ܝ ܼܙ ܪܵܫܝܢ ܃ ܂ ܐ ܐ
கட்டுரை-(2) திவு &તિ) . . ; *
}jኗ?
யாழ்ப்பாணத்திற்கு வேண்டிய அவசியங்கள்:
(1902 -Br .۶)، ه به نام 67 ۶۰۰۰9" !
"ኁ ፡ ....
s a s '9க்தட்ட கல்வி, தமிழ்க் ് உச்சநிலைக்கு வ்ரத்த்க்கிந்துக்களைச் செய்து வரல் வேண்டும். ه) نه'.*"_
^
i ki: . l,
நமது சுதேச (தமிழ்) பாஷையில் கைத்தொழில், விவசாயம், வர்த் தகம் ஆதியன விருத்தியட்ையத்தக்க-சாஸ்திரங்கள் (சயன்ஸ்) விரிவா யில்லை. இங்கிலீஸ் பாஷையில் அவை அமோகமாயுண்டு.
அவற்றை நமது சுதேச பாஷையிற் கொண்டுவரல் வேண்டும். இங்கிலீஸ் படிக்கிறவர்கள் எல்லாரும் இதற்காக அப் பாஷையை விரும்பவில்லை. . . . .

Page 23
38 சிலோன் விஜயேந்திரன்
உத்தியோக மொன்றையே விரும்பிக் கற்கிறார்கள். சிலர் தமிழிற் சொற்பமேனும் கற்பியாது பால்யவயதில் தம் புதல்வர்களை இங் கிலிஸ் படிக்கவே அனுப்புகிறார்கள்.
தன் சுயபாஷையைப் பற்றி ஒன்றும் தெரியாதவன் அறிஞர்களால் மூடனாக மதிக்கப்படுவான்.
இப்படியுள்ளவர்கள் தம் புதல்வரை விட்டு, அந்நியப் புதல்வரைத் தூக்கித் தோள்மேல் வைத்தவர்களுக்குச் சமானரல்லவா?
நம்மவருட் சிலர் தமிழ்ப் பாஷையைப் பேசவுங் கூசகிறார்களே இவர்கள் ப்ேதமையை என் சொல்வேம்.
சுதேச பாஷையிலேயே உயர்தரக் கல்வி கற்கும்படி நமது பிள்ளை களை ஏவவேண்டும். தமிழ்ப்பாஷைக் கல்வி யாழ்ப்பாணத்திலே குறைந்துவருகிறது.
இலக்கணவறிவோடு தமிழில் நல்லாய்த் தேர்ச்சியடையும் பிள்ளை கள் இக்காலத்தில் மிகக் குறைவேயாம்.
கல்வியே எல்லாவற்றுக்கும் சிறந்த சாதனம். அக்கல்வியறிவைக் கொண்டே கைத்தொழில், வர்த்தகம், விவசாயம் ஆதியன வோங்கும். ஓங்கவே தேசம் உயருமல்லவா?
உதர்ரணமாக யப்பான் தேச உன்னத நிலையைப் பாருங்கள். எதனால் வந்தது? கல்வியறிவின் உன்னத நிலையையுடைய மேதாவியர்
களாலல்லவா?
11. ஆசுகவியின் நாவல்
(s. gr. - 1909)
விமரிசனங்கள்
இத்தலைப்பைப் படிப்பார்மாட்டு நிச்சயம் மலைப்பே ஏற்படும்.
"என்ன ஆசுகவி நாவல் விமரிசனம் எழுதினாரா?' என்றே அன்னார் கருதுவர்.
ஆசுகவி 'நொறுங்குண்ட இதயம்', 'அரியமலர்' ஆகிய இரண்டு நாவல்களுக்கு விமரிசனங்கள் எழுதியுள்ளார்.

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை - 39
அவருடைய அந்த ஆறு படிக்கின்றபோது மிகுந்த ஆச்சர்யமும், ஆனந்தமும் ஏ னறன.
இந்நாளில் வாழ்கின்ற எமது தமிழ்ப் புலவர்களில் மிகப்பலரே, 'நாவல், சிறுகதைகள் என்பனவும் இலக்கியங்களாமோ?’ என்று கிணற்றுத் தவளைக் கூச்சல் போடுகையிலே, இற்றைக்கு சுமார் அறுபது வருடங்களுக்கு முன்பே, “நாவலை இலக்கியமெனக் கருதி விமரிசனம் செய்ய விழைந்தது ஆசுகவியின் முன்னேற்றச் சிந்தனைக்கு
ஒப்பற்ற சான்றல்லவா?
'நொறுங்குண்ட இதயம்,' 'அரியமலர்' ஆகிய இரு நாவல்
களுக்கு விமரிசனம் எழுதியதோடமையாது புலவர் அவர்கள், தமது
பத்திரிகையில் வேறு பல நாவல்களையும், நாடகங்களையும், வெளி யிட்டும் புதிய இலக்கியத்திற்குச் சேவை புரிந்திருக்கிறார்.
இவை மட்டும் அல்லாது, இற்றைக்கு சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் உரும்பரான்யைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் வெளி யிட்ட சிறுகதைத் தொகுதி ஒன்றுக்கும் ஆசுகவி முன்னுரை எழுதி யுள்ளார் என்றும், அந்நூல் முன்னுரையிலே, "இவ்வாறான புதிய இலக்கியங்கள் வருவது மிகவும் விரும்பத்தக்கது' என்று குறிப்பிட்டிருக் கிறார் என்றும் ஒரு செய்தியை இரசிகமணி கனக. செந்திநாதன்
என்னிடம் சொன்னார்.
துரதிர்ஷ்டவசமாக ஆசுகவி முன்னுரை எழுதிய அந்தச் சிறுகதைத் தொகுதி இது போழ்து என் கைக்குக் கிட்டவில்லை.
இனி புலவரின் நாவல் விமரிசனங்களைப் பார்ப்போம்.
நாவல்-1 நொறுங்குண்ட இதயம்
இம் முகவுரையுண்ட, 267 பக்கங் கொண்ட, 20 நவ நாமாதி காரஞ் துடிய கற்பனா சரிதமொன்று எமது நண்பரால் எமது பார் வைக்கு அனுப்பப்பட்டது.
நவரசமென எச்சாதியாரும், எம் மார்க்கத்தாரும், எப்பாலாரும் மனமுவந்து, விதந்து, வியந்து பேசுந் தகுதியுள்ள இப்புத்தகத்தை இயற் றினார். இக்கால நியாய துரந்தரரவைக் கரியேறெனக் கீர்த்தியுற்று விளங்கும் எமதரிய நண்பர் மெஸ். ஐசக் தம்பையா அவர்களின் பாரி யாராய், நூற்கவி கூறும் புலவ சிகாமணியும், வாசாட சிங்கமுமான மெஸ், JWB குமாரகுலசிங்க முதலியார் அவர்களின் கனிஷ்ட புத்திரி யாய், வலிகாமம் வடக்கு மணியக்காரன் மெஸ். R.R.B குமாரகுல சிங்கம் அவர்களின் கனிஷ்டியாய் விளங்கும் செளபாக்கியவதி மங்கள நாயகம் என்னும் பெண்மணியே.

Page 24
40 சிலோன் விஜயேந்திரன்
இப்புத்தகத்திலுள்ள ஒவ்வொரு சொற்களும் சரித்திரத்திற் கேற்ற இலகுவான, இனிய சொற்களாய் எழுதப்பட்டிருப்பதையும், போதனை யாவருள்ளத்தையும் கவர்ந்து கொள்ளும் தகைமையினதாயிருப்பதையும் நாம் வியப்பது, "பொற் குடத்துக்குப் பொட்டிடுமாறு' போலாம் என்றுள்ளி அதை யொழிக்கின்றேம்.
நம் யாழ்ப்பாணப் பெண்மணிகளுள், ‘கற்ற பெண்டிர்க்கு விளக்கு' என்னும் பிராகிருத சாக்கியாய் இவ்விதமான ஒரு இனிய போதனையுள்ள பெரிய கற்பனா சரிதத்தை மன அடக்கத்தோடு முதன் முதல் செய்தவர் இவரேயெனில் இதை நம் தேயத்தார், நம் சாதி
யார்வியந்து பாராட்டுவது நூதனமாகமாட்டாது.
மேற்படி நாயகம், நாயகர் இவ்வித நவமான புத்தகங்களை லோகோபகாரமாயியற்றுதலின், நாயகம் அவர் தொழிலைப் பின்பற்றி யொழுகத் துணிந்தது நன்மையும், வியப்பும் என்றுரைக்க யார் பின்னிப்பரோ.
இப் புத்தகத்தை இயற்றிய இப் பெண்மணி நற்குடிப் பிறப்பும், நல் வளர்ப்பும், சற்குணவதிகளுக்குரிய சமஸ்தலக் குணங்களும் மன அடக்கம், உலகறிவு கல்வியறிவாகிய புஷ்கரங்களும் உடையவரென் பதை இந்நூற் போதனா சாரமும், நூலின் மற்றைய சீர்த்திகளும் யார்க் கும் "அங்கையினெல்லிக் கணி' போல் விளக்குதலின் வேறு சான் றிண்டு வேண்டிய அவசியமின்றாம்.
இந்நூல் சகலராலும் நன்கு மதிக்கப்பட்டு, ஆக்கியோர் கருதிய பயனையளிக்கவும், இவர் மேன் மேலும் இவ்வித நன் முயற்சிகளை யாண்டனுகூலமெய்தவும், சகல அட்டைஸ்வரியங்களும் பெற்று மங் கள நாயகியாய் வாழவும் பெருமான் கிருபை பாலிப்பாராக,
ஆர்படியா ரார்வியவா ரார்மகிழா ராச்சரிய மாரடையார் நீதிமன்னை சேக்கு மனத்தாரி னிருதயவன் பார் நாயஞ் செய் நொறுங்குண்ட இருதய' மென் றோது மிதை.
(சு.நா. - 1924)
நாவல்-2
அரியமலா இம்முக நாமங் கொண்டு அச்சிடப்பட்டு வெளியான ஒரு புத்தகம் நமக்குக் கிடைத்தது.
இதனை இயற்றியவர் "நொறுங் குண்ட இதயம்' என்னும் கற்பனா சரிதத்தின் ஆசிரியையும், இப்போது பினாங்கில் அப்புக் காத்துவாய் விளங்கும் பாரிஸ்டர் மெஸ். ஐசக், தம்பையா அவர்களின் அன்பான மனைவியும், எங்கள் வலிகாமம் வடக்கு மணியக்காரன்

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை 41
கனம் R.RB குமாரகுலசிங்கம் ஆகியோரின் அரிய சகோதரியுமாகிய மங்களநாயகம்.
இக்கற்பனா சரித்திரம் 'அரிய மலர்' என்னும் பெயருள்ள தேவபக்தி வாய்ந்த ஒர் கன்னிகையைக் குறித்தும், இக் கன்னிகை தன் தகப்பன் சந்திரசேகரரின் இரண்டாந் தாரத்து மனைவியான ஒர் கபடியாலும், அவளது சகோதரன் செல்லப்பா என்னும் ஓர் வம்புக் குணமுள்ள துட்டனாலும். அடைந்த கஷ்ட நஷ்டங்களைக் குறித்தும் பின்னர் கதாநாயகி யின்தேவபக்தியின் பெருபேற்றால் அனுப்பப் பட்ட, யோக்கியதை யுள்ள, மனசாட்சி நிறைந்த செகராச னென்னும் ஒரு வாலிபனாற் பாதுகாக்கப்படுவதையும், கதாநாயகி தான் அருமை யாய் வளர்த்த நெல்லி என்னும் நாயினாற் காக்கப்பட்ட விதங்களும் எழுதப்பட்டிருக்கின்றன.
தமிழ்மணம் வீசப்பெற்ற எச்சமயத்துப் பெண்கள் பிள்ளைகளென் கினும் இச் சரித்திரத்தை வாசிப்பாரெனில் மிகுந்த ஆச்சர்யத்தையும், ஆத்திரத்தையும் அடையாதுவிட மாட்டார்களென்பதும், இப்புத்த கத்தை வாசிக்கத் தொடங்கினோர்முற்றாக வாசியாது 'கீழ்வைக்க மனமொருப்படாரென்பதும் எமது சித்தாந்தம். ஆதலின், இப்புத்தகம் ஒவ்வொரு குடும்பத்தவர் கையிலும் நிச்சயம் இருக்கவேண்டிய ஒன்றா மென்பதை இதனை வாசிப்போர் நன்கறிவர்.
செந்தமிழ்க் கனிரசம் பொலிந்த இச்சரிதத்தின் கற்பனாலங் கிர்தத்தின் வாயிலாக இந்நூலாசிரியரின் ஈசுவர பத்தியும் நன்கு புலப் படுவதால் நாம் இவை குறித்து அதிகம் விதந்து, வியந்து கூறுகில் “பொன்னின் குடத்துக்குப் பொட்டிட்ட' வாறாகு மென்றுள்ளி இவ் வளவில் விடுகின்றேம்.
(சு.நா. )
12. ஆசுகவியின் தேச ஒருமைப்பாட்டுச் சிந்தனை
(கீழ்வரும் ஆசுகவியின் கட்டுரை, அவரின் தேசப் பற்றையும் , ஏழைகள்கள்பால் அவருக்கிருந்த வாஞ்சையையும் வனப்புறச் சொல் கிறது.)
கடவுள் உண்டென நம்பும் மக்கள் யாவரும் அக் கடவுளுக்குப் பல துறைகளினாலும் தொண்டாற்ற முற்படுகின்றனர்.

Page 25
42 சிலோன் விஜயேந்திரன்
ஈசன் ஆன்மாக்கள் தோறும் பரந்து செறிந்து எள்ளுக்குளெண்
ணெய்போல் இருப்பான். "நடமாடுங் கோயில் நாதனிருப்பிடம்"
என்றார் ஆன்றோரும்.
தேசமென்பது மக்கள் பலர் ஒருங்கு சேர்ந்து வாழுமிடமேயாகும்.
மக்கள் வாழுமிடமே தேசமாதலின், அம்மக்கள்தோறும் சசன் அந்தர்யாமியாய் நிற்கின்றானாதலின், அம்மக்கட்குச் செய்யுத் திருப் பணியே தேசத் திருப்பணியாகும்.
பலதுறையிலும் தேசம் முன்னேற்றமடையச் செய்வதே தேசத் திருப்பணியாகும்.
தேசத்திலுள்ள ஏழைமக்கள் பசிப்பிணியில் வருந்த, தேசத் தொண்டு செய்கிறோ மென்று சும்மா பிதற்றிக் கொண்டிருப்பதால் ஆம் பயன் யாது?
இவ்வாறிவர்கள் செய்வது ஒருவித போலி மதிப்பையடைவதற்கே யன்றி வேறொன்றுக்காயுமல்லவென நாம் திண்ண்மாய்க் கூறுவோம். தேச முன்னேற்றத்திற்கு அத் தேசத்தில் வாழும் மக்களுள்ளத்தில் நல்லறிவும், நல்லுணர்ச்சியும் எய்தப் பெறல் வேண்டும்."
இவை யெய்துதற்கு அந்நாட்டில் வதியும் அறிஞர் பிரசாரஞ் செய் தல் வேண்டும். ஈசனுக்குத் தேசத் திருப்பணியே சிறந்ததோர் திருப் பணி யாமெனச் சிந்தையிலுன்னி அவ்வழி நின்று தொண்டிாற்ற அறிஞர் ஒருப்படல் வேண்டும்.
"அடிக்கு மேலடி யடித்தால் அம்மியும் நகரும்" என்றாங்கு , தேசத்தில் வதியும் பாமர மக்கள் உள்ளமாகிய நன்நிலத்தில் பிரசார மாகிய வித்தை அறிஞர்தூவுவாராயின் அவ்வித்து, நாளடைவில் முளைத்து வளர்ந்து செழித்தோங்கி பூத்துக் காய்த்துக் கணியெனும் நனிபெரும் பயனை அளிக்கு மென்பது ஒருதலைப் துணிபு.
தேசநலத்தை அவாவும் அறிஞர் ஒற்றுமை வழிநின்று கடனாற்றல் வேண்டும். அவ்விதம் ஆற்றுவான் கண்ட பாமர மக்களும் அவ் வண்ணம் ஒற்றுமை வழியில் நின்று கடனாற்ற முற்படுவர்.
செல்வம் படைத்தோரும் அச் செல்வத்தின் ஓர் பாகத்தைத் தேச கைங்கரியத்துக்கென அர்ப்பணம் பண்ணல் வேண்டும். பண்ணி னன்றோ தாம் படைத்த செல்வந்தனப் பயனாம் புண்ணியப் பேறெய்து வர்.
அறிஞரும், வறிஞரும் இவ்வழி ஒருப்பட்ட மனத்தினராய் நின்று கடனாற்றித் தேசத்தை முன்னணியில் நிற்கச் செய்ய ஈசனடியை யாம் வேண்டுதும்.
இதுகாறும் தேசத் தொண்டு எத்தகைய தென்பதையும், அது எவ்விதம் ஆற்றப்பட வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறினம்.

ஆசுகவி கல்லடி வேலுப்பின்னை 43
இனி நம்து தேசத்திற்கு நம்மாற் செயற்பாலனவாகிய தொண்டு களெவையென ஆராய்வாம்.
நமது நாட்டில் இப்போதுவசிப்பவர் சிங்களவர், தமிழர், சோன கர், பறங்கியர் என நாற்படுவர்.
இந் நால்வகை மக்கள் கூட்டமும் சகோதர நேயம் பூண்டு தாய் நாட்டின் சேவைசெய்ய வேண்டும்.
இந்தியரும் நமது நாட்டில் வசிக்கின்றனர் தான். ஆனால், அன் னோரை நாம் 'தமிழர்" என்ற தனித்தொகுதியிற் சேர்த்துள்ளோம். தமிழர்களுக்குள் இந்தியர், இலங்கையர் என்ற பேதம் வேண்டாம். நமது நாட்டில் வதியும் நால்வகை மக்கள் கூட்டமும் ஒன்றோ டொன்று ஒருமைப்பட்ட மனத்தினராய் வாழ்க்கை நடத்தலோடமை யாது, தத்தம் சமூகத்தின் கண்ணுள்ள தீய வழக்கங்களை அறவே களைய வ்ேண்டும்.
கொலை, களவு, விபசாரம் ஆகிய மூன்றும் ஒரு சமூகத்தினுள் ளும் இருக்கவே கூடாது. இன்ன பல தீமைகளே ஒரு சமூகத்தினரைத் தாழ் நிலையில் வைத்திருப்பது.
ஆலய்ஞ் செல்வதாலும், விழாச் செய்வதாலும், நாம் ஈசனுக்கு கந்த திருப்பணி செய்துவிட்டோமென எண்ணலாகாது.
தேசத்திருப்பணி செய்வோருக்கண்பும், அமைதியும் வேண்டும். இன் சொல் வழங்குதல் வேண்டும். புகழ் விருப்பம் இருக்கக்கூடாது. தைரிய சித்தம் வேண்டும். வாக்குச் சாதுர்யம் மிகுந்திருத்தல் நலம். விடாமுயற்சி யும் வேண்டற்பாலது. சிறப்பாக ஏழை மக்களிடத்தே நாட்டம் செலுத்திவர வேண்டும்.
இலங்கை மாதாவின் இணையடி வாழ்க.
(சு.நா. - 1928 )

Page 26
44 சிலோன் விஜயேந்திரன் 13. கொய்த மலர்கள் ஆசுகவி எழுதிய கவிதைகளும், கட்டுரைகளும் எண்ணற்றவை. ஆனால், எமக்குக் கிடைத்தவை சொற்பமானவையேயாகும்.
கிடைத்த யாவற்றையும் இந்நூலிலே அடக்குவது இயலக்கூடியதன்று. நீங்கள் கடந்த சில அத்தியாயங்களில் புலவரின் கட்டுரைகள் சிலவற்றைப் பார்த்திருப்பீர்கள்.
"கொய்த மலர்கள்' என்ற இந்தப் பகுதியிலே புலவரின் நல்ல கட்டுரைகள் சிலவற்றின் முக்கியமான பகுதிகளையும், சில கவிதை களையும் தருகிறேன். கட்டுரை-1 இவர்கள் மனுஷரல்லவா?
கொழும்பு துறைமுகத் தொழிலாளர் இன்னமும் ஒரு முடிவுக்கு வரவில்லை.
இவர்கள் நாளொன்றுக்குப் பதினொரு மணித்தியால வேலை செய்தும் பெறும் வேதனம் மிகக் குறைவே.
இந் நிலையில் தமது பெண்டிர், பிள்ளைகளை "எல்லாவற்றுக்கும் காசு' என்னும் கொழும்பில் பாதுகாப்பதெப்படி?
இங்கிலாந்தில் சுரங்கத் தொழிலாளர் நாளொன்றுக்கு எட்டு மணித்தியால வேலைசெய்ய முடியாதெனக் குழப்பியது போலிவர்கள் குழப்பவில்லையே!
தாங்கள் செய்யும் பதினொரு மணித்தியால வேலைக்கும் நீதியான சம்பளம் வேண்டுமென்பதே இவர்களது கேள்வி.
ஆங்கிலங் கற்று அரசாட்சியினரின் கீழ் கடமைபுரியும் காற் சட்டைக்காரருக்கு வருடந்தோறும் சம்பள மேற்றப்பட்டு வருகின்றதே! இரண்டுமற்ற ஏழைகளாகிய இவர்கள்மீது துறைமுக அதிகாரிகள் இரக்கங் காட்டி, நீதியாக வேதனத்தைக் கொடுப்பதே பரோபகாரச் செயலாகும்.
(சு.நா. - 1927)
கட்டுரை-2 பணமுள்ள பாக்கியவான்களே யாது செய்கின்றீர்கள்? பரோபகாரமில்லாத ஜென்மமே பாழ். ஒருவன் சகல சாஸ்திர சம்பன்னனாயும், அசகாய துரனாயுமிருந்தாலும் அவன் பரோபகார சூனியனாயிருந்தானாகில் அவனுடைய ஜென்மம் வியர்த்தமே.

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை 45
ஒவ்வோருவருந் தங்களுடைய பிரமாணத்திற் கியல்பாய் பரோப காரஞ் செய்தல் பாரமான காரியமல்ல.
நாம் பிறருக்குபகாரஞ்செய்து அவ்வுபகார பலனை அவர்கள் அனுபவிக்கிறபோது நமக்குண்டாகிற ஆனந்தம் பரமானந்த மாயிருக்கு மென்பதுண்மையான வசனமாதலால், பரோபகாரத்துக்குச் சமமான இகபர பாக்கியம் யாதொன்றுமில்லை என்பது மறுக்கப்படாத சத்திய மேயாகும்.
கனவான்கள் தரித்திரர்கட்கு அன்ன வஸ்திர தானங்களைச் செய் யலாம். ፆ
வித்துவான்கள் எளிய பிள்ளைகளுக்கு வித்தியாதானஞ் செய்ய லாம்.
வியாதியுள்ளவர்களுக்கு ஆரோக்கியமுள்ளவர்கள், விசாரித் தனேக பரிகாரங்களைச் செய்யலாம்.
இவ்வண்ணமே புத்திவான்கள், பலவான்கள், ஏழைகள் முதலி யோர்களும், அவரவர்கள் திறமைக்குத் தக்கப்பிரமாணப்படி பரோப காரஞ் செய்யக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள்.
காலமானது ஓயாமலோடிக் கொண்டிருப்பது மன்றி அக்காலமே யாவற்றுக்கும் மூலமாயுமிருக்கிறது.
அதுவும் கணம், விநாடி, நாழிகை, முகூர்த்தம், சாமம், பகல், இரவு, நாள், வாரம், மாதம், வருடம் எனப் பற்பலப்பட்டும் பேதித்து நிகழ்வதனாலேயே நம்முடைய சீவிய காலமும் நடை பெறுகின்றது.
மேலும் நாம் கற்ற சாஸ்திரங்களும், வித்தைகளும், கீர்த்திகளும், சம்பாதித்த திரவியங்களும் மின்னல் போல் மறைந்து தொலைந்து போகிறதை அன்றுமின்றும் அறிந்தே வருகின்றோம்.
புண்ணிய மொன்றே சதாகாலமும் நம்முடன் இணைபீரியாமல் தொடர்ந்து சர்வசாட்சாத் கடவுளின் அனுக்கிரகத்திற் சேர்க்குமென்ப துண்மை. ஆதலினாலே, புண்ணியத்தைப் போல் நமக்குற்றதுணை யாதொன்றுமில்லை.
(சு.நா. -- 1904)
கட்டுரை-3 பூரீவர்மாவும் ஆத்மபோதினியும்
I KO V ஒரு மார்க்கத்தை நிலைநிறுத்துகின்றவர், யுக்தி அநுபவ பிரமாண்ங்களைக் கொண்டு தாம் கருதிய மார்க்கத்தை யாரும் நம்பும் படி சாதுர்யவசாலமாய்ப் பேசித் தாபிப்பதே இலட்சணமும் முறையு DinTeguh. -

Page 27
46 சிலோன் விஜயேந்திரன்
வேறொரு மார்க்கத்தை எடுத்து நிந்திப்பது மரியாதையும் முறையு மென்று யாருஞ் சொல்லார்.
தம் மதத்தை வியப்பதும், பிறர் மதத்தை நிந்திப்பதும் எவர்க்கு மெளியசெயல்.
e a கிறிஸ்தவர் நம்மார்க்கத்தை நிந்திப்பதால் நம் மார்க்கம் அழிந்துபோகிறதும், நம்மவர் கிறிஸ்துவ மார்க்கத்தை நிந்திப்பதால் அம்மார்க்கம் அழிந்து போகிறதுமில்லை.
(சு.நா. - 1907)
கட்டுரை-4
தேகஸ்திதியும் புண்ணிய கிருத்தியங்களும்.
தேகமோ நிலையற்றது. நிராதாரமாய்ள்ளது. சுக்கிலசோணி தங்க
ளால் உண்டாயது. அன்னபாணிாதிகளால் விருத்தியடைவது. காலை
யில் உண்ட அன்னம் சாயங்காலம் நசிக்கும், உடனே பசிக்கும், மீண் டும் உண்ணாவிடின் மெய் குலையும்.
ஆதனால், சரீரம் அநித்திய மென்றும், அது கருமத்தால் வருவு தென்றும் எண்ணி சன்மமடையாமையின் பொருட்டு நற்க்ருமம் செய் தல் வேண்டும்.
கருமத்தால் வந்த தேகத்தை யாருடைய தெனலாம்? அதனை வீணே சுமந்து மெலிகின்ற சீவனது எனலாமா? கருப்பமுண்டுபண்ணும் தந்தையினது எனலாமா? பத்துமாதம் சுமந்து நிற்கும் பெற்ற தாயினது எனலாமா? தாயைப் பெற்றவனாகிய மாதா மகனது எனலாமா? பிதா மகனது எனலாமா? விலைகொண்டு அடிமைகெரீண்டவனது எனலாமா? சாம்பர் செய்யும் அக்கினியினது எனலாமா? அல்லது ஈர்த்து அயிலும் நரியினது எனலாமா?
சீவன் போயினபின்பு புழுவாகவும், விஷடையாகவும், சாம்பராக வும் அழியும் சரீரம் ஒருவரதும் அன்றெனும் உறுதியை யாரும் ஒர்ந்து சரீரத்தில் ஆசை வைக்காமல் பகவத் சம்பந்தப்பட்ட காரியங்கன்ளப் புரிதல் வேண்டும்.
(சு.நா. - 1908)

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை 47
கட்டுரை-5 காந்தியும் கதரும்
a w u O or மகாத்மாவின் யாழ்ப்பாண தரிசனம் யாழ்ப்பாணச் சரித் திரத்தில் ஓர் விசேட ஸ்தானத்தைப் பெற்றுவிட்டது. யாழ்ப்பாண வாசிகளுக்குப் புத்துயிரளித்துவிட்டது. கதர்மீது ஆர்வத்தையும், அபி மானத்தையுமூட்டிவிட்டது.
போனது போக, இனியாவது மகாத்மா கேட்டுக் கொண்டபடி கதராடையையே நம்மவர்கள் அணிவார்களாக,
ஐரோப்பிய உடைகளை முற்றாய் நம்மவர் நீக்க வேண்டும். உஷ்ண பிரதேசங்களில் வசிக்கும் நமக்கு அவ்வுடுப்புகள் வேண்டிய தில்லை. கதருடையே நமது சீதோஷ்ண நிலைக்கு ஏற்றது.
வழக்கறிஞர்களும், உத்தியோகஸ்தரும், கோடு கச்சேரிகளுக்குப் போகும்போது கதருடையையே உடுத்துவார்களாக,
ஐரோப்பிய உடையோடுதான் கோடு, கச்சேரி முதலிய உத்தி யோகஸ் தலங்களுக்கு வரவேண்டுமென்று அரசினர் பிரமாணம் விதித் திருக்கிறார்களா என்ன?
பின்னையேன் இவர்கள் கதர் அணிந்துகொண்டு தமது கடமை யைப் பார்க்கக்கூடாது?
ஐரோப்பிய உடையிலும் அந் நாகரிகத்திலும் நம்மவர்கள் ஏன் இத் துணை மோகங் கொண்டிருக்கிறார்களென்ப தன் காரணம் நமக்கு விளங்கவில்லை.
- நம்மவர் மகாத்மா காந்தியை உள்ளபடி மதிப்பவராயிருந்தால் கதருடையையே எப்பொழுதும் உடுத்த வேண்டும்.
(க.நா. - 1927)
நீங்கள் மேற்படித்த ஐந்து கட்டுரைப் பகுதிகளும் ஆசுகவியின் பன் முகப்பட்ட சிந்தனை ஆற்றலுக்குச் சான்றுகளாக விளங்கக்கூடியவை.
இனி புலவரின் மூன்று கவிதைகளைத் தந்து "கொய்த மலர்கள்' என்ற இப்பகுதியை முடிக்கிறேன். கவிதை - 1
குருபிரபு குலவான் விவேகி யோக்கியனென்று
கூறி வெகுவேஷ மிட்டுக் கொஞ்சமு மிரங்காது வஞ்சகம் கோள்படிறு
கொண்டுல கினோரை ஏய்த்து வருபொருள் கவர்ந்து சம்பிரமமாகத்தம்
வயிற்றினை வளர்க்கு நீச மட்டிகளின் மெய்நிலையையே வருமறிந்தவர்கள்
வலையிலே சிக்குறாமல்

Page 28
48 சிலோன் விஜயேந்திரன்
கருணை புரிவாய் குமரகுருபர வீராறெளிற்
கைய கிரவுஞ்ச மென்னும் கற்பக வயிற் றொட்ட வப்பசுப்பரமணிய
கந்த செந்தூர் நிவாசா புரு கூதர் முதலான தேவருங்குகவென்ப
போற்று வரபர பலமணி பொலிகாவை யுறு மாவைநகர் வாசமுருகேச
புகழாறு முக தேவனே.
(s.15/T. - 1907)
கவிதை - 2
வேதனைச் சிறைவைத்த விமல சண்முக வெற்றி
வேலாயுதா விசாகா வீரமா யூரகுழ காகடம் பாபணிவி நரணசர் வணபவ குகா காதக மருஞ் சூர சிரசமா ராகார்த்தி
கேயா சிலம் பாமதி கங்கைமைந் தாசம்பு தந்த மைந்தாசகல
கலையின் மைந்தாசுகந்தா சீததுள பாதிதிரு மான்மருக வென்றுனது.
திருநாம மோதி யடியேன் தெய்வமே யேழைமுன் வாவெனும் வேளையுன்
தரிசன மெனக் கருளுவாய்
பொலிகாவை யுறுமாவை நகர் வாசமுருகேச
புகழாறு முக தேவனே.
(சு.நா. - 1907)
கவிதை - 3
காகமானது கோடி கூடி நின்றாலு மொருகல்லின்
முன்னெதிர் நிற்குமோ, கயவர் பலர்கூடி நின்றாலு நெறியுடைய வொரு கற்றவ்ர் முன்னெதிர் நிற்பரோ சாகமொரு கோடிகூ டித்துள்ளினும் புலிதனைப் பகைத்திட வல்லதோ தன்பெலனை யறியாதவிடு காலிபல சேர்ந்து தக்கவர் தரிக்கு முடியைப் போகிப்ப துண்டு கொல் லோதற்கெறுக்கோ
ண்டு புழுகித் தெருத் தெருவெலாம் பூலோகபர லோக நாதனா னென் றொருவர் புகலிலவர் நாதராமோ நாகத்தை நேர குண தீரத்தரே யொருவர்நன்றி அறியாத மடரே, நகையாடு . சங்கத்தரே கர்த்தரே நல்வழி கடைப்பிடியுமே
(சு.நா.-1908)

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை 49 14. நானாவிதச் சம்பவத் திரட்டு
ஆசுகவியின் வாழ்வில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நடந்த சில சுவையான-நானாவிதமான சம்பவங்களை இப் பகுதியில் திரட்டித் தந்திருக்கிறேன். சிங்கப்பூர் வழக்கு விவகாரம்
நமது புலவரின் 'சுதேச நாட்டியம்' பத்திரிகை, அந் நாளில் இலங்கை பூராவுமல்லாது, இந்தியா, மலாயா, போன்ற தேசங்களிலும் பரவி புலவரின் பாண்டித்தியத்தைப் பரப்பியது.
சிங்கப்பூரைச் சேர்ந்த சந்தாதாரர்கள் சிலர் ஒழுங்காகச் சந்தாத் தொகையைச் செலுத்தாதபடியினால் அப்பணத்தைப் பெறும் பொருட்டு புலவர் சிங்கப்பூர் போனார்.
புலவர்மாட்டு மிகுந்த மதிப்பும், அன்புங் கொண்ட சிங்கை பிரபுக்களும், கல்விமான்களும் அவரை மிகுந்த வாத்சல்யத்தோடு வர வேற்றனர்.
சிங்கையில் ஒரு கருமிச்செட்டி இருந்தார். அவரிடமிருந்து சந்தாப் பணத்தைப் பெறுவதன் பொருட்டு அக் கருமிச் செட்டியின் வீடு போனார் புலவர்.
கருமிக்குப் புலவர் வரப்போகும் விஷயம் தெரிந்துவிட்டது.
முன்னேற்பாடாக அந்தக் கருமி, யார் வந்தாலும் காட்டும்படி ஒரு விளம்பரப் பலகையில் குறிப்பிட்ட வாசகத்தை எழுதி வைத்துவிட்டு வெளியே போய்விட்டார்.
புலவர் கருமிவிடு நுழைந்து “எங்கே வீட்டுக்காரன்” என்றார்.
'அவர் இல்லை; வருபவர்களுக்கு இதைக் காட்டும்படி சொன் னார்' என்று சொன்ன வேலையாள், விளம்பரப்பலகையைப் புல வர்க்குக் காட்டினான்.
புலவர் விஷயத்தைப் படித்தார். அதில்
'காசு தண்டலுக்காய் யாழ்ப்பாணத்திலிருந்து வருபவரானாலுஞ் சரி, வந்து உள்ளூரில் வசிக்கிறவரானாலுஞ் சரி நம்ம கிரகத்தினுட் பிரவேசிக்கக்கூடாது' என்று எழுதப்பட்டிருந்தது. '
அந்த வாசகத்தின் கீழே தாயுமானவருடைய அருட்பாடலொன்று மிருந்தது. அது- a
"எவ்வுயிரு மென்னுயிர் போ
லெண்ணி யிரங்க வுனின்
தெய்வ வருட் கருணை
செய்வய் பராபரமே" என்ற பாடல்.

Page 29
50 சிலோன் விஜயேந்திரன் புலவர்க்குத் தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை.
* சம்பந்தா சம்பந்தமில்லாத சங்கதிகள் எழுதப்பட் டிருக்கின்றன?
பணியாளைக் கோபமாகக் கேட்டார் புலவர்.
y
"இங்கு வருபவர் யாராக விருந்தாலும் இதைக் காட்டும்படி எசமான் உத்தரவு?"
"ஓ அப்படியா?"
புலவர் பலகையை மறுபுறம் புரட்டினார்’ எழுதுகோலை எடுத் த்ார்; எழுதினார்:
"தட்டி யுண்ணுஞ் செட்டியிடம் தண்டுபவர் இங்கிருந்தால் மட்டி யவ ரென்றே மதிப்பேன் பராபரமே”
புலவரின் பாட்டின் பலன்? குறிப்பிட்ட அந்தச் செட்டி புலவர்மீது வழக்குத் தொடுத்தார்.
வழக்கின்போது வழக்காளியின் நியாய துரந்தரரின் கேள்விகளுக் குச் சமத்காரமாகப் பதில் கொடுத்தார் புலவர்.
தீர்ப்பின்போது நீதவான் வழக்கின் எதிரியான புலவரின் அறிவுத் திறனை வியந்து, "அவர் வழக்காளியைப் பகிடி பண்ணி எழுதியதை, பாரதூரமான நிந்தையாக எடுக்க முடியாது' எனக் கூறி வழக்காளி யின் விளம்பரப் பலகையில், அவரின் உத்தரவில்லாமல் புலவர் எழுதிய குற்றத்திற்காக வெள்ளி 25ஐ ஒரு சிறுகுற்றமாக விதிக் கிறேன்' என்றார்.
கோலாலம்பூரிலிருந்து வெளிவந்த 'த்மிழ் நேசன்' பத்திரிகை, "நீதிபதி குற்றஞ்சாட்டி வெள்ளி 25ஐ அபராதமாக விதித்ததில் நியாயந் தவறிவிட்டார் என்று எழுதியது.
அழகம்மா கும்மி
"அழகம்மா கும்மி" என்ற நூல், ஆசுகவி எழுதிய பிரச்சனைக் குரிய நூல்களுள் ஒன்று.
அந்நூலின் கண்ணுள்ள கும்மிப் பாடல்களை யாழ்ப்பாணத்துக் கிராமங்களில் இருக்கும் முதியவர்கள் இன்னமும் ஞாபகத்தில் வைத் துப் பாடிவருவதோடு, அப் பாடல்களின் சொல்லழகையும், அதனைப் பாடிய கல்லடியாரின் துணிச்சலையும் வியந்து நிற்றலையும் யாம்
566).

ஆசுக்வி கல்லடி வேலுப்பின்ளை 5.
"அந்த நூலின் கண்ணுள்ள பாடல்களை யாரும் பாடக்கூடாது என அந்நாளில் தடைவிதிக்கப்பட்டது. இருப்பினும் அந்தத் தடைகண்டு பயந்து மக்கள் மெளனிகனாகிவிடவில்லை. அவர்கள் முன்னையதைக் காட்டிலும் புதிய ஆர்வத்துடன் புலவரின் கும்மிப் பாடல்களைப் பாட ஆரம்பித்துவிட்டார்கள்.
படித்த மேதாவிகளால் மட்டுமல்லாமல், சாதாரண பொதுமக்க ளாலும் போற்றி செய்யப்பட்ட சென்ற நூற்றாண்டின் ஈழத்துப் புலவர் களுள் கல்லடி வேலுப்பிள்ளை முதல்வர் என்றால் அது முற்றிலும் உண்மையாகும்.
அதனாற்றான், 'ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையை அறியா தார் அறியாதாரே' என்று புகன்றார் யாழ்ப்பாணத்து அறிஞரொரு வர்.
புலவரின் சமயோஜித புத்தி
புலவரின் சமயோஜித புத்திக்குக் கீழ்வரும் சம்பவமே தகுந்த எடுத்துக்காட்டாகும்.
புலவர் தேகபலம்மிக்க வாலிபராக விளங்கிய காலமது. உடுப்பிட்டியைச் சேர்ந்த நாட்டாண்மைக்காரன் ஒருவன், புல வரைத் தாக்க எத்தனிக்க புலவர், அவனை அடித்து நொறுக்கிவிட்
ri.
சில காலம் சென்றது. புலவர் தமது வீட்டுத் தேவைக்காகப் பனை மரங்கள் சில பெறுவதற்காகக் கரவெட்டி போய் ஒழுங்கை வழியாகத் திரும்பி வந்துகொண்டிருந்தார்.
அவர் வந்த ஒழுங்கை உடுப்பிட்டியில் புலவரிடம் அடிபட்ட நாட்டாண்மைக்காரனின் வீட்டருகில் வந்தது.
போச்சடாப் போச்சு. அதோ புலவரின் எதிரி குறிப்பிட்ட அந்த ஒழுங்கையின் ஒருபுறம் அமர்ந்தபடி தனது பணியாட்களிடம் ஏதோ வேலை வாங்கிக்கொண்டிருக்கிறான்.
பார்த்தார் புலவர் திடீரென ஒரு பதட்டம்; தக்க சமயத்தில் அவர் விவேகம் கைகொடுத்தது.
சமயோஜிதமாக அவர் செயற்பட ஆரம்பித்தார். “எப்படி மச்சான்? என்ன கையில்? ஒ மாதுளம் பழமா? எனக் கும் கொஞ்சங் கொடுத்தாலென்ன"
புலவரின் பகைவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பழைய கோபம் மறைந்தது. புலவர்க்குப் புன்னகையோடு மாதுளம் பழத்தைக் கொடுத்தான்.

Page 30
52 V சிலோன் விஜயேந்திரன்
“புத்திவான் பலவான்' என்பது எத்துணை உண்மையானது பர்ர்த்தீர்களா?
ஆசுகவியும் ஒரு டம்ப்ாச்சாரியும்
ஆசுகவியும் இன்னுமொரு புலவருமாகக் கொழும்புப் பக்கத்தி லுள்ள ஒரு நண்பரிடம் போனார்கள்.
அந்த நபர் ஒரு அந்நிய நாகரிக மோகி; டம்பாச்சாரி.
அவர் தன் வீட்டிலிருந்தபடியே யாரையோ கன்னா பின்னா வென்று ஏசிக்கொண்டிருந்தார்.
'மடயன் மரியாதை தெரியாதவன், நவீன நாகரிகம் உண்டா அவனிடம்?"
இதைக் கேட்டுக்கொண்டிருந்த புலவர்க்குத் திக்கென்றது.
"அப்படியானால் சுதேச உடை அணிந்த எம்மையும் இவர் தாழ் வாகத்தான் கருதுவார் போலும்?"
நெஞ்சுக்குள் புலவர் நினைத்தார் வார்த்தைகள் பிறந்தன.
'நண்பரே உடையை வைத்து ஆளை மதிக்காதேயும், உமது தந்தை சுதேச உடையுடன் உம் எதிரில் வந்துவிட்டால், 'ஐரோப்பிய உடையில்லையே' என்றுதான் நீர் நினைப்பீர் போலும் அவரைத் தூஷிக்கவும் கணிவீர் போலும்?' என்று அந் நண்பர்க்கு நைசாக ஒரு தட்டுத் தட்டி, 'இத்தகைய நாகரிகப் பித்தும், டம்பாச்சாரித் தனமும் ஆகாதய்யா ஆகாது' என்ச் சொன்னர்ர்.
புலவரின் வார்த்தைகள் நாகரிக மோகியான நண்பரின் இதயத் தைத் தைத்தது.
"புலவரே! உண்மைதான் நீங்கள் சொல்வது." எனக் கூறித் தவற்றை உணர்ந்து வருந்தினார் கொழும்புக் கனவான்.
எமது தமிழர்கள் பலர் இந்நாள் போல் அந்நாளிலும் நிரம்பவும் மேனாட்டு நாகரிகப் பித்தர்களாகவும், ஆங்கில தாசர்களாகவும் இருந்தனர்.
ஆசுகவி இத்தகைய மூடர்கள் பற்றிக் கீழ்க்கண்டவாறு மனம் நொந்து எழுதினார்.
'தங்கள் குழந்தைகளை அப்பு, ஆச்சி, அப்பா, அம்மான், அக்கா, அண்ணா என எம் பெற்றோர் எம்மை அழைக்கப் பழக்கினார்கள். ஆனால், இப்போதோ பப்பா, மம்மா, அங்கிள், சிஸ்டர், பிரதர் எனப் பழக்கி வருகின்றனரே! என்னே இவர்களுடைய அடிமைப் புத்தி?"

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை 53
குழி உடையாரும் புலவரும்
"குழி உடையார்' என அழைக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் இளமை யிற் புலவரைப் படிப்பித்தாராம்.
ஒருநாள் குழி உடையார் புலவரைப் பார்த்து, 'நீர் ஒரு கூரன்' என்று சினந்துரைத்தார்.
புலவர்க்கு வந்தது கோபம்; “இந்தக் கூராற் கிண்ட குழி வரும்" என்றார் அவர்.
ஒரு சட்டவாதியும் ஆசுகவியும்
சட்டம் படித்துத் தேறி, வழக்கறிஞர்களாகவும் நீதிபதிகளாகவும் இருப்பாரில், மனச்சாட்சிக்கும், கடவுள் நியாயத்துக்கும் பயந்து தொழில் புரிவார் எத்துணை பேர்?
அன்றுஞ் சரி, இன்றுஞ் சரி முறை கோடியோரே சட்டத் துறை யில் மிகப் பலர் இருக்கிறார்கள்.
அவர் ஒரு நியாயவாதி; அவர் என்ன செய்கிறார்? வாதியிட மிருந்து குறிப்பிட்ட வழக்கொன்றுக்காகப் பணம் பெறுகிறார். பின்பு பிரதி வாதியிடமிருந்தும் குறிப்பிட்ட அந்த வழக்குக்காகவே பணம் பெறுகிறார்.
சீ எத்தனை பெரிய அநியாயம் இது?
இத்தகைய துரோகிகளை - மனச்சாட்சியற்ற மதோன்மத்தர்களை நாம் என்ன செய்யலாம்?
இதோ, தமது காலத்தில் இப்படி வாழ்ந்த ஒரு சத்தியத்தின் எதிரிக்கு ஆசுகவி, தம் பாவால் கொடுக்கும் சாட்டையடியைப் பாருங் கள்:-
குலமெழிய நீசனோ குடிவெறியனோ கெறுக்
கொண்ட நட்டா முட்டியோ கோதில்சிறி ராமர் தூதுவனோ குணங்கெட்ட
குட்டுணிக் காவாலியோ நலமிலா மூதேவி ஏறுவா கனமோ
நடப் பெண்கண் மனையில் நாயோ, நன்றியறி யாத வொரு பூதமோ
உயிர் கொலும் குழுப் பன்றியோ உலகெலாம் நகையாட வோடேந்தி உண்கின்ற
வுணர்வில் பிச் சைக் காரனோ, உடையற்ற பித்தனோ லுத்தனோ பிறரை யூம் பிச்சீ வனஞ்செய் பவனோ

Page 31
54 சிலோன் விஜயேந்திரன்
அளவிலா தேழைகளை யேய்து வயிறோம்பு மொரு
அசடனோ அதிபகலிலே,
அறிவிலார் பொருள் கவரும் ஒரு கள்வனோவென்று
அறைகுவேன் குமர வேளே!
புலவரின் இப்பாடலைக் கண்ட அந்தச் சட்டமேதை உற்ற நிலை யாதாயிருந்திருக்கும்?
புலவரும் சுருட்டும்
புலவர்க்கு, சுருட்டு புகைப்பதென்றால் ஒரே குஷி.
திடீரென ஒருநாள் புலவர்நினைத்தார்; “இன்றிலிருந்து இந்தச் சுருட்டு புகைக்கும் பழக்கத்திற்குக் கும்பிடுபோட வேண்டும்.
தமது உறுதியில் புலவர் வெற்றி பெற்றாரா?
இல்லவே இல்லை. பட்டணம்போன அவர், ஒரு மணி நேரத் திற்குள் ஒரு வருடம் சுருட்டு புகைக்காதது போன்ற உணர்ச்சியைப் பெற்றவராகி, போன இடத்தில் சுருட்டும் பெறமுடியாத சூழ்நிலையில் ஒரு ரூபாவுக்கு மேற் செலவழித்துச் சுங்கானும், புகையிலையும் வாங் கிக்கொண்டு -
"சீ சுருட்டை வழக்கம் போல் கொண்டுவராமல் கடைசியில் சுங் கானுக்கும், புகையிலைக்கும் ஒரு ரூபாவுக்கு மேல் செலவாகிவிட்டதே' என்ற மனத் தாங்கலுடன் வீடு திரும்பினார்.
போலிப் புலவர்களை நோக்கி.
"கொட்டாவி விட்டதெல்லாங் கூறுதமிழ்ப் பாட்டாச்சே' என்று, தமிழ்க் கவிதைத் துறையில் போலிப் புலவர்களின் பிரவேசங் கண்டு கொதித்தெழுந்து பாடுகிறார் புதுமைப்பித்தன்.
அவரைக் காட்டிலும் ஆவேசமாக போலிப் புலவர்களுக்கு எதி ராக ஆசுகவி சக்திமிக்க ஒரு எறிகுண்டைச் செய்து வீசுகிறார்.
கலைமகள் முகத்திற் கரிபூசுகிற போலிப் புலவர்களை நோக்கி நம்புலவர் வீசிய அந்தச் சக்திமிக்க எறிகுண்டு இதோ: முன்னே ஒரு கவிக்கு முன்னூறும் நானூறும் பொன்னே கொடுப்பர் புலவர்க்கு - இந்நாளில் வாசிக்க அறியாத வம்பர் வடிக்கின்றார் காசுக்கஞ் நூறு கவி. மின் வேகத்தில் ஒரு வெண்பா
பட்டப்பகல் வேளை; நெருப்பாக வெயில் எரிக்கிறிது; நிவிற்றிக் கொல்லை என்னும் ஊரிலுள்ள தமது அன்புத் தோழரான டாக்டர்

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை 55
ஒருவரின் இல்லம் நுழைகிறார் ஆசுகவி. தமது நண்பரின் பசிக்கு ஒடியற்கூழ் கொடுக்கிறார் டாக்டர்.
புலவர் விடைபெறப் போகும் வேளை. டாக்டர் சொல்கிறார்.
"புலவரே! தங்கள் வருகையின் நினைவாக ஒரு பாடல் உடன் சொல்வீர்களா?”
"ஒ இதோ!' புலவர் பாடுகிறார்.
அல்லையுற்று இரத்தினபுரியண்டி யப்பாலே நிவிற்றிக்
கொல்லையடைந் தலுப்புக் கொண்டதற்கு - கல்லடியான்
வண்டாரும் மாலையணி மற்புயச் சுப்பையனுடன் கொண்டாடினான் ஒடியற் கூழ்.
Wକ୍
I 5. அமரகவி பாரதியும் ஆசுகவியும்
பாரதி தமிழ்க் கவிதையைத் திசைதிருப்பிய பெருமகன்; மந்திரத் தமிழால் மாணிக்கக் கவிசெய்த உயர்கவி, 'சுதேசமித்திரன்', 'இந் தியா’ போன்ற பத்திரிகைகளில் அஞ்சாமையோடு பணியாற்றி தாம் சிறந்த கவிமட்டுமல்லர், உன்னத பத்திரிகையாளர் என்பதையும் மெய்ப்பித்தவர். w
பாரதி கவிஞராக மட்டுமல்ல - பத்திரிகையாளராக மட்டுமல்ல ஒப்பற்ற உரைநடைச் சிற்பியாகவுந் துலங்கியவர்.
பாரதியின் உரைநடை புதுவெள்ளமாய்ப் பொங்கி வருகிறது; அழகான சொற்கள் மிடுக்காக மின்னுகின்றன.
அவர் உள்ளத்தில் உண்மையொளி வாய்க்கப்பெற்ற வரகவி, கம்ப னுக்குப் பின் தமிழுக்குக் கிடைத்த மஹா கவி.
அமரகவி பாரதிக்கும், தம்நாட்டு ஆசுகவி கல்லடி வேலுப்பிள் ளைக்கும் சில விஷயங்களில் அற்புதமான ஒற்றுமை இருக்கின்றது. அவற்றை ஆதாரபூர்வமாக ஒப்பீடு செய்து பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
பாரதியும், ஆசுகவியும் பாவலர்கள் மட்டுமல்லர், யார்க்கும் அஞ் சாத தீரத்தோடு பத்திரிகைப் பணியாற்றிய எழுத்தாளர்கள்.

Page 32
56 சிலோன் விஜயேந்திரன்
தமிழ் உரைநடைக்கு ஒவ்வொரு கோணத்தில் நின்று எடுப்பையும், எழிலையும் பெய்தவர்கள்.
தத்தம் தாய்ப்பாஷையாகிய தமிழும், தமிழர்களும் காலத்தோடு சேர்ந்து முன்னேற வேண்டுமெனக் கனவு கண்டவர்கள்."
குறுகியமொழி, இன உணர்வுகளின் கைதிகளாகிவிடாமல், தேசம் - உலகம் என்ற விரிந்த லட்சியத்துடன் தமது எண்ணங்களை ஒட விட்டவர்கள்.
கடவுளையும், சத்தியத்தையும் ஒருபோதும் மறவாத மனோபாவங் கொண்டவர்கள்.
இத்யாதி விஷயங்களில் இரண்டு புலவர்களுக்கு மிடையில் நெருங் கிய ஒற்றுமை இருக்கிறது.
அவற்றை இங்கு விளக்கமாகச் சொல்வதற்கு முன், இரண்டு புல வர்களினதும் காலத்தையும், அக் காலத்தின் குழலையும் எடுத்துரைப் பதே முறை.
காலம்
ஆசுகவி 1860-இல் பிறந்தவர். பாரதி 1882-இல் பிறந்தவர். பாரதியைக் காட்டிலும் ஆசுகவி இருபத்திரண்டு வயது மூத்தவர்.
பாரதி அநியாயமாக தமது முப்பத்தொன்பதாவது வயதில் - 1921-இல் மாண்டுபோனார்.
ஆசுகவி நீண்ட ஆயுளைக் கொண்டவர். அவர் தமது எண்பத்து நான்காவது வயதில் - 1944-இல் மரிக்கிறார்.
இருப்பினும் இரண்டு கவிகளின் சாதனைப் பணிகளும் ஒரேகால கட்டப்பகுதியில்தான் சுடர்விட ஆரம்பிக்கின்றன.
'பாரதியார் தமது இருபத்திரண்டாவது வயதிற்குள் சமஸ்தானப்
புலவர், தமிழாசிரியர் ஆகிய இரண்டு பணிகளிலே ஈடுபட்டு அவை
இரண்டையும் தள்ளிவிட்டு பத்திரிகைத் தொழிலை நாடி சென்னைக்கு வந்தார்.
(பெ. தூரன் - பாரதி தமிழ்)
ஆம்! பாரதி சென்னைக்கு வந்த பின்புதான் அவரது லட்சிய வாழ்
வின் வசந்தகாலம் ஆரம்பிக்கிறது; அவரது ஆற்றல் பூரணமாக விரி கிறது.
அவர் 1904-ஆம் ஆண்டு 'சுதேச மித்திரன்' பத்திரிகைக்கு உதவியாசிரியராக நியமனம் பெறுகிறார்.

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை 5
அதற்கு இரண்டு ஆண்டுகளின் பின்னர், "இந்தியா' என்னும்
பத்திரிகைக்குத் தாமே ஆசிரியராகி. உணர்ச்சிமிக்க தம் பத்திரிகைப் பணியைத் திறனுறத் தொடர்கிறார்.
இதற்கிடையில் "சக்கரவர்த்தினி” என்னும் பத்திரிகையும் அவ ரால் நடாத்தப்படுகிறது.
இப்படியாக புரட்சி எண்ணங் கொண்டவரான பாரதியின் பத்தி ரிகைப் பணி, அவரது இருபத்திரண்டாம் வயதில் - 1904-இல் ஆரம் பமாகியது. VR
நமது ஆசுகவியின் தீரமான பத்திரிகைப்பணி 1902-இல் பாரதி பத்திரிகைப் பணிக்கு வருவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பே ஆரம்பமாகிவிடுகிறது.
பாரதி இலட்சிய தாகங் கொண்டு கவியாக மலர்ந்த ஞான்று இந்தியாவில் சுதேசப் பற்று கொழுந்துவிட்டெரிந்தது.
லோகமான்ய திலகர், கவி அரவிந்தர், விபின சந்திர பாலர் போன்ற சிங்கங்கள் தேசப்பற்றை விடுதலை வேட்கையைப் பாரத நாடெங்கும் பரவச் செய்தனர்.
அத்தகைய புரட்சி வாதிகளின் நிழலிலே பாரதியின் உத்வேக சொப்பனங்கள் உருவாகின.
பாரதியின் காலகட்டத்து இந்தியாவையும் இலங்கையையும் ஒப்பீடு செய்து பார்க்கையில் இந்தியாவைப் போல தன்னை அந்நியரிடமிருந்து விடுவிக்க இலங்கை ஆவேசமான ஒரு ஜீவ மரணப் போராட்டத் திற்குத் தன்னைத் தயாராக்கிக் கொண்ட சூழ்நிலையில் இருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஆனபடியால் இந் நாட்டு ஆசுகவிக்கு, பாரதி போல் ஆவேச மாகத் தேச விடுதலைப் போராட்டத்தினைத் தூண்டுகிற எழுத்தினை எழுதிடக்கூடிய வாய்ப்புகள் இல்லாது போயிற்று.
இருந்தாலும் பாரதி போல நம் புலவரும் பாஷைப் பற்றும், தேசப் பற்றும், கடவுள் பற்றும் கொண்ட கவிஞரே என்பது வெள்ளிடைமலை.
இருவர் நோக்கில் தமிழும், தமிழரும்
நந்தமிழ்ப் பாஷையைப் புறக்கணித்து, ஆங்கில பாஷை மோகத் திலே ஆழ்ந்திருந்த மக்கள் இரு பாவலர்களுடைய காலத்திலும் தமிழ கத்திலும், இலங்கையிலும் இருந்தார்கள்.
அத்தகைய அந்நிய பாஷைப் பித்தர்கள் தமிழின் மேன்மை புரி யாது, தமிழரின் நாகரிகத்திண்மை யுணராது வாழ்ந்த போலி வாழ் வானது. அமரகவிபாலும், ஆசுகவிபாலும் மிகுந்த ஆவேசத்தைக் கிளப்பிவிட்டது.

Page 33
se - சிலோன் விஜயேந்திரன்
சமுதாய பிரக்ஞையோடு, தமது காலத்தில் பாமரராய், விலங்கு களாய் வாழ்ந்த தமிழர்களைத் தட்டி எழுப்பித் தமிழின் மேன்மை உணர்த்தப் பாரதி பாடுகிறார்:
'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவ தெங்குங் காணோம்! பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சி சொலப் பான்மைகெட்டு நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்வீர் தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்"
மேற்காணும் பாடல், தமிழ்ப் பாஷையின் உயர்வினை உணர்த் துவதோடமையாது அந்நாளைய தமிழர் தம் இழி நிலையையும் இயம்பு கிறது.
'தமிழ்' என்ற தலைப்பிலே 1916-இல் தமது பத்திரிகையிற் கீழ்க் காணும் வாறெழுதினார் பாரதி;
“உலகத்திலுள்ள ஜாதியார்களிலே, ஹிந்து ஜாதி அறிவிலே மேம் பட்டது. இந்த ஹிந்து ஜாதிக்குத் தமிழர்களாகிய நாம் சிகரம்போல விளங்குகிறோம். எனக்கு நாலைந்து பாஷைகளிலே பழக்கமுண்டு. இவற்றிலே தமிழைப்போல வலிமையும், திறமையும், உள்ளத் தொடர்
பும் உடைய பாஷை வேறொன்றுமேயில்லை.
(பெ. தூரன் - பாரதி தமிழ்)
இப்படியாகப் பாரதி, தமிழின் மேன்மையைக், கண் மூடிக்கிடந்த தமிழ்ச்சாதிக்குப் பகர்கிறார்.
ஈழநாட்டின் ஆசுகவி அவர்களும், நம்நாட்டில் சுயபாஷைப் பற் றற்று அந்நிய பாஷை மயக்கத்திற் கிடந்த கறுப்புத்துரைமாருக்குச் சரி யான சாட்டையடி கொடுக்கிறார்.
பாரதியாருக்கு முன்பதாகவே ஆசுகவி இக்கருத்தினைக் கழறுவது குறிப்பிடத்தக்கது.
"இங்கிலீஸ் பாஷை' என்ற மகுடத்தில் ஆசுகவி எழுதிய கட்டுரை யில், கீழ்க்காணும் வாறு அவர் எழுதுகிறார்.
- - - 'நந்தாதை, மூதாதையோர் யதாபூர்வமாய் வழங்கிய பாஷை யாய், நந்தேய பாஷையாய், நம்மார்க்க போதனைகளைத் தன்னுட் கொண்டிருக்கிற பாஷையாய், இதர பாஷானுசாரிகளாலும் மிகஇனிய பாஷை என நன்கு பாராட்டப்பட்ட, படுகின்ற, படற்பால பாஷை யாய் உள்ள நம்சுய்பாஷையாகிய தமிழ்ப்பாஷையை அடியோடே நிறுத்திவிட்டு இங்கிலீஸ் பாஷை கற்பதையே ஈண்டு மறுக்க மனமே வப்பட்டோம்.'
(சு.நா. 1902)

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை 59
மதுரமான தமிழ் மொழியின் மேன்மையினை உன்னாது வாழ்ந்த கருத்துக் குருடர்களுக்கு இரண்டு கவிகளும் தமிழின் மேன்மையினை உணர்த்தியதோடமையாது, தமிழ்மொழியானது காலத்துக்கேற்ற முன்னேற்றத்தைக் காணே மன்றும் எடுத்துரைத்தார்கள்.
'காளிதாஸன்” என்ற புனைபெயரில், 'தமிழ்' என்ற தலைப்பில் பாரதி தம் பத்திரிகையில் 1916இல் எழுதியது கீழ்வருமாறு:
'தமிழ் நாட்டில் உண்மையான கல்வி பரவ வேண்டுமானால் சகல சாஸ்திரங்களும் தமிழ்பாஷை மூலமாகவே கற்றுக்கொடுக்க வேண்டு மென்ற கொள்கையை நமக்குள்ளே அறிவுடையோரெல்லோரும் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதனை அனுஸரணைக்குக் கொண்டு வருவதற்குத் தக்கபடி நமக்குள்ளே சக்தி பிறக்கவில்லை.
ஐரோப்பிய ஸ்திரியான மிஸ்ஸஸ். பெஸண்ட் கூடச் சில தினங் களின் முன்பு பெங்களூரில் செய்த பிரசங்கமொன்றிலே, தமிழ்ப் பாஷையை மிகவும் வியந்துகூறி, நாமெல்லோரும் தமிழ்ப் பயிற்சியில் தக்கபடி சிரத்தை செலுத்தாமல் இருப்பது பற்றி வருத்தப்பட்டிருப்ப தாகத் தெரிகிறது.
இப்படி நம்மைப் பார்த்துப் பிறர் இரங்கும்படியான அவமான நிலை விரைவில் நீங்கவேண்டுமென்று தேவர்களை வணங்குகிறோம்.'
(பெ. தூரன் - பாரதிதமிழ்)
பாரதியின் கீழ்க்காணும் பாட்டும் இக் கருத்தினையே தெளிவாகப் பேசுகிறது:
'பிறநாட்டு நல்லறிஞர் சாஸ்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும். இறவாத புகழுடைய புது நூல்கள்
எம் மொழியில் இயற்றல் வேண்டும். மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
பேசுவதிலோர் மகிமையில்லை. திறமான புலமையெனில் வெளிநாட்டார்
அதைவணக்கம் செய்தல் வேண்டும்.
(தேசிய கீதம்) இனி தமிழ் வளர்ச்சிக்கு ஆசுகவி என்ன சொல்கிறாரென்று பார்ப்போம்.
"யாழ்ப்பாணத்துக்கு வேண்டிய அவசியங்கள்' என்ற மகுடத் திலே அமைந்த கட்டுரையில் அவர் சொல்கிறார்:
"கல்வி, தமிழ்க் கல்வி உச்சநிலைக்கு வரத்தக்க ஏதுக்களைச் செய் துவரல் வேண்டும்

Page 34
60 சிலோன் விஜயேந்திரன்
நமது சுதேச பாஷையில் கைத்தொழில், விவசாயம், வர்த்தகம் ஆதியன விருத்தியடைத்தக்க சாஸ்திரங்கள் (சயன்ஸ்) விரிவாயில்லை.
w
இங்கிலீஸ் பாஷையில் அவை அமோகமாயுண்டு. அவைகளை நமது சுதேசபாஷையிற் கொண்டுவரல் வேண்டும்.
(சு.நா. - 1909)
இவ்வண்ணமாக பாரதியும், ஆசுகவியும் தமிழ்ப் பாஷையின் ét களைச் செப்பி, தமிழைக் காலத்தோடு முன்னேற்றுவதற்காக புரட் சிக் கருத்துகளைத் தூவுகிறார்கள்.
இருகவிகளினதும் பிறமத மதிப்பு
பாரதியும் ஆசுகவியும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் இருந்த
போதும் இறுதிவரை பிறமதங்களைச் சற்றேனும் நிந்தனை செய்ய முற்படவில்லை.
பாரதியார் காலத்து இந்தியாவில் மத சமரச மனப்பான்மை தீவிரமாக உருவாகி வந்தது.
"இந்தியா ஒரு தேசம், அதன் பல்வேறு மத மக்களும் ஒன்று திரண்டு தாய் நாட்டின் விடுதலைக்காய் போராட வேண்டுமென்ற உணர்வு விரவி நின்ற காலம் பாரதியுடையது.
தேச விடுதலை வேட்கை என்ற குறிக்கோள் தன்னியல்பாகவே பாரதிகாலத்து இந்திய நாட்டில் மதசமரசமனப்பான்மையை உருவாக் கியது.
மேலும் ராமகிருஷ்ணர், இராமலிங்கர், விவேகானந்தர், தயா னந்த சரஸ்வதி போன்ற அருட் பெரியார்களும் மதசமரசத்தை இந்தி யாவில் தோற்றியிருந்தார்கள்.
அன்னை நாட்டின் சூழ்நிலையும், பெரியவர்கள் வளர்த்துப் போன மதசமரச உணர்வும் பாரதியைப் பாதித்து அவரை மதசமரச மனப்பான்மை மிக்கவராக மாற்றியதில் அத்துணை ஆச்சர்யம் இல்லை.
ஆனால், ஈழத்தில் ஆசுகவியின் துழநிலை அத்தகையயதன்று.
கிறிஸ்தவரும், க்ததோலிக்கரும், சைவரும் கீரியும் பாம்புமாய் நின்று போர்புரிந்த ஒரு காலச் சூழலில் பிறந்தவர் ஆசுகவி.
இருந்தபோதிலும் அவர் எந்தச் சந்தர்ப்பத்திலுமே பிறமதங்களை நிந்தனை செய்யவில்லை. சைவ மதத்தவர் பிறமதங்களைத் தாக்கிப் பேசுவதாலும், பிறமதத்தவர்கள் சைவர்களைத் தாக்கிப் பேசுவதாலும் எந்தப் பயனுமே இல்லை என்றோர்ந்து உண்மையான சைவராக, சமரசத் திலகமாக வாழ்ந்த தனிப்பெரும் மனிதர் ஆசுகவி.

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை 6i
சுத்த சைவராகப் பிறந்து, சைவாசாரங்களைப் பேணி, சைவசமய வள்ர்ச்சிக்காக முன்னின்று உழைத்த ஒருவர், மதவாதிகள் யாவரும் மல்லுக் கட்டிக்கொண்டிருந்த் ஒரு துழநிலையில் மதசமரச மனப்பான் மையோடு வாழ்ந்தது எத்துணை பெரிய காரியம்!
இதுவரையும் யாம், தமிழ் மொழியின் மேம்பாட்டை உணர்த்தி, காலத்தோடு அம்மொழி முன்னேற வேண்டிய அவசியத்தை உணர்த்தி மணிக்கவி பாரதியாரும் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையும் எடுத் துரைத்தவற்றை ஆதாரபூர்வமாகப் பார்த்தோம்.
இரண்டு கவிகளும் பிறமதங்களை மதித்து நடந்தவற்றையும் தெளி வாகக் கண்டோம்.
இனி பாரதியாருடைய உரைநடைப் பணியையும், ஆசுகவியின் உரைநடைப் பணியையும், சற்றுப்பார்ப்போம்.
இருவரதும் உரைநடைப்பணி
தமிழ் உரைநடை வளர்ச்சிக்காக இரண்டு கவிகளும் பெருமைப் படத்தக்க அளவிற் செயற்பட்டிருக்கிறார்கள்.
இரண்டு கவிகளின் உரைநடைகளும் ஜீவகளையோடு பொலி கின்றன.
முதற்கண் “சித்தக் கடல்' என்னும் மகுடத்தில் 1915இல் பாரதி எழுதிய கட்டுரைப் பகுதியில் அவரின் வசன கீர்த்தியைப் பார்ப்போம்.
‘மண்ணையும், காற்றையும், கடலையும் எத்தனை யுகங்கள் ஒரே வடிவத்தில் வைத்துக் காப்பாற்றுகிறாய்? பராசக்தி, எனது கருவி காரணங்களிலே, நீ பரிபூரணமாக ஸந்நிதி கொண்டு என்னையும் அங் நுனமே காக்க வேண்டும்.
இன்பமில்லையா?
பராசக்தி, இந்த உலகத்தின் ஆத்மா நீ. உனக்கு அறிவில்லையா? உனக்குக் காது கேட்காதா?
நாள்தோறும் உன்மீது பாட்டுப் பாடுகிறேன். நான் கேட்கும் வரங்களையெல்லாம் கொடுத்துவிடக்கூடாதா?
பராசக்தீ, ஓயாமல் கவிதை எழுதிக்கொண்டிருக்கும் படி திரு வருள் செய்யமாட்டாயா? கடன்களெல்லாம் தீர்ந்து தொல்லையில் லாதபடி என் குடுப்பத்தாரும், என்னைச் சார்ந்த பிறரும் வாழ்ந் திருக்க, நான் எப்போதும் உன்புகழை ஆயிர விதமான புதிய புதிய பாட்டுக்களில் அமைக்க விரும்புகிறேன். உலகத்தில் இதுவரை எங்கு மில்லாதபடி அற்புதமான ஒளிச் சிறப்பும், பொருட் சிறப்பும் உடைய பாட்டொன்று என்வாயிலே தோன்றும்படி செய்யவேண்டும்.
(பெ. தூரன்-பாரதி தமிழ்)

Page 35
62 - ݂ ݂ ݂ சிலோன் விஜயேந்திரன்
இனி ஆசுகவியின் உரைநடைத் திறனுக்கு அவர், "ஈழகேசரி" இதழிலெழுதிய 'சிந்தையின் நிறைவே செல்வம்" என்ற கட்டுரையின் ஒரு பகுதியைச் சான்றாகத் தருகிறேன்.
'பரந்து சுருண்ட மயிரும், கிழிந்த கரிந்த உடையும், நடந்து அயர்ந்த கால்களுமுடையவர்களாய், ஒடேந்தி, உணவேற்றுத் திரியும் எத்தனையோ பேரை நாங்கள் காண்கிறோம். அவர்களுக்கு உண் பதற்கு உணவில்லை; உடுப்பதற்கு உடையில்லை; வசிப்பதற்கு மனை யில்லை; அவர்கள் வறுமைப் பிணியால் வருந்துபவர்களே.
வானளாவிய மாடங்களும், ஏகமும் பரந்த வயல்களும், திக்கின் அந்தம் தெரியாத தோப்புகளும், கணக்கற்ற கறவைக் கூட்டங்களும், ஏவலாளர்களும் உடையவர்களின்ன பலரை நாங்கள் காண்கிறோம்.
அவர்களுக்கென்ன குறை? அலங்காரமான மாளிகை படுக்கப் பஞ்சணை உடுக்கப் பீதாம்பரம் அவர்கள் காலால் நடந்தேயறியார். அவர்களுடைய வயல்கள், தோட்டங்களின் வருமானங்கள் எவ்வளவு அவர்கள் மகா செல்வர், - கோடி சீமான்கள்.
இந்த உலகத்தில் "பணமில்லாதவன் பிணம்”. ஒவ்வெர்ருவரும் பிறரைப் பார்த்து, "அவருக்கு மாத வருமானம் ஐயாயிரம் ரூபா கொழும்பில் வீடுகளும், கடைகளுமுண்டு; கண்டியில் ஒரு பெரிய தேயிலைத் தோட்டமிருக்கிறது' என்று கூறி, வாய்நீர் வடிப்பதுமல் லாமல், பொறாமையுங் கொள்ளுகின்றனர், அம்மட்டல்ல; "எனக்கும் அப்படியிருந்தாலோ’ என்று பெரிய இச்சையுமடைகின்றனர்.
மிக வறியவனாயிருந்த ஒருவன் பெருஞ் செல்வனாகிவிட்டா னென்று வைத்துக் கொள்ளுவோம். அவனுக்கு இச்சை அடங்காது. 'இன்னும் ஆயிரம் வந்தாலோ; இருக்கும் வீட்டிலும் பார்க்க பெரி யவோர் மாளிகை இருந்தாலோ’ என்று ஆசைப்படுகின்றான்.
உலகத்தில் மேன்மை பெற்றுப் பல தேசங்களை தன் கீழ் அடக்கி யாளும் அரசனைப் பாருங்கள். அவனும் இன்னும் இரண்டு தேசங் களை நான் கூடுதலாக ஆக்கிரமித்தாலென்ன! எனது சேனைகளை இன்னும் பலப்படுத்தினாலென்ன என்று ஆசைக் கடலிலேயே ஆழ் கின்றான். அவனுக்குப் பஞ்சன்ணயிருந்தென்ன நன்மை? நாடுகளிருந் தென்ன நன்மை? மாடிகளிருந்தென்ன மனநிறைவு? உண்டியால், உடையால் பெண்டிரால், பிள்ளையால்பெற்ற பேறென்ன? மனம் நிறைவுபடாதொழிந்தால், மற்றெவையும் நிறைவுபடும்ா?”
(ஈழகேசரி-1942)
நீங்கள் மேற்கண்ட வசனபகுதி ஆசுகவியின் வசனந்தீட்டும் வல்ல ம்ைக்கு சிறந்த சான்றல்லவா?
இது போலவே பாரதியின் வசனகீர்த்தி, "ஞானரதம்', 'சந்திரி கையின் கதை" போன்ற படைப்பிலக்கியங்களிலே ஒப்பற்று ஒளிர் கிறது.

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை 63
இதுகாறும் கூறியவற்றால் இரு கவிகளும், தமிழையும், தமிழ ரையும் நோக்கிய விதத்திற் காணக்கிடக்கும் ஒருமைப்பாட்டையும், இருவரும் ஒருபோதும் பிறமதங்களை நிந்திக்காதவர்கள் என்ற முறை யில் அன்னார்களுக்கிடையேயுள்ள ஒற்றுமைப் பாங்கையும், த்மிழ் உரைநடைக்குப் புத்தொளி பெய்ததில் இரு புலவர்களின் பங்கையும் நாம் தெளிவாக உணரலாம்.
பாரதியின் எழுத்துகள் பெரும்பாலும் இன்று நூலுருப் பெற்று, யாவரும் அறியக்கூடிய விதத்தில் இருக்கிறது. இதுபோலவே ஆசு கவியின் எழுத்துகளும் முழுமையாக நமக்குமுன் இருந்தால் இவ்விரு புலவர்களையும் மேலும் பல கோணங்களில் ஆராய்வதற்கும், இருவர் மாட்டுங் காணப்படும் ஒருமைப்பாட்டுச் சிந்தனைகளை, மேலும் விஸ் தாரமான முறையில் இனங் காணுவதற்கும் மார்க்க மேற்படுமென்பது
நிச்சயம்.
16. ஆசுகவியின் அந்திமகாலம்
இதுவே இந்நூலின் இறுதி அத்தியாயம்.
இந்த அத்தியாயத்திலே ஆசுகவி தமது எழுபதாவது வயதளவில் எழுதிய “என் எழுபது வயதுக்குட் கண்ட மாற்றங்கள்' என்ற குறுங்கட்டுரையும், கவியின் அந்திமகால விவரமும், 'ஆசுகவி பற்றி" என்ற பகுதியும், இந்நூலை ஆக்கியோனின் முடிவுரையும் இடம் பெறுகின்றன. “என் எழுபது வயதுக்குட் கண்ட மாற்றங்கள்'
"என் எழுபதாம் வயதான இந்த 1931-க் கிடையில் நான் முன்கண்ட இலட்சக் கணக்கான பெண்களையும் ஆண்களையும் காண முடியவில்லை. அவர்கள் முக உருவங்களும் என் நினைவுக்குத் துரித்து விட்டன.
நான் கண்ட வீடு, வாசல்களையும் காணவில்லை. அந்த இடங் களிற் பல வெற்றிடமாயும், பல்வேறு விதமான வீடுள்ள காணி களாயும், பல தோட்டங்களாயும் இருக்கக் காண்கின்றேன்.
அந்த நாட்களின் ஒழுங்கை நெடு வழிகளுட் பல வேற்றுருவாய் மாறிவிட்டன.
ஆண் பெண் உடைகளும், நகைகளும், பேச்சுகளும், செயல் களும், தேசவழக்கங்களும் மாறுதலாய்விட்டன.

Page 36
64 சிலோன் 'விஜயேந்திரன்
w குலாசாரம், மதாசாரங்களும் மாறுதலடைந்துவிட்டன.
அந் நாட்களில் கண்ட உண்ட உணவுகளும் அருவருக்கப்பட்டு மறைவாகிவிட்டன. தேகப்பியாச விளையாட்டுகளும் கனவு போலாகி விட்டன.
பெற்றோர், ஆசிரியர், குருமார், முதியோர் முதலியோர்க்குப் பண்ணிவந்த மரியாதைகளும் மிக வித்தியாசமாய்விட்டன.
விவாக முறைகளும் தன்னிட்ட நிலையில் மாறிவிட்டன. செம்பு நாணயம், வெள்ளி நாணயம், கடுதாசி நாணயங்களும், முத்திரைகளும் பல தோற்றமாய் மாறிவிட்டன.
பள்ளிக்கூடங்கள், ஆலயங்களும், அவைகளில் நடைபெறும் கல்வி வணக்கங்களும் வேற்றுருப் பெற்றுவிட்டன. ஒலையில் எழுதத் தெரிந் தவரைக் காணுவது அரிதாய்விட்டது.
அப்பு, ஆச்சி, அத்தான் ஆகிய சொல் வழக்குகளும் வேறாய் மாறிவிட்டன.
கோடு, கச்சேரி பிரமாணங்களும் அதிக மாறுதலடைந்து விட்டன. பிரதேச வியாபாரக் கைத்தொழிற் பொருட்களில் நான் இதுவரை கண்ட மாற்றங்களுக்கோ அளவில்லை.
இன்னும் எத்தனை மாற்றங்கள் உண்டாகுமென்று யாராலுஞ் சொல்லமுடியாது.
என் மரணத்திற்கு, இன்னுமெத்தனை நிமிஷமிருக்கிறது. மணித்தி யாலமிருகிறது. நாளிருக்கிறது. வருஷமிருக்கிறதென்று தீர்மானிக்க முடியாது.
அப்படியிருப்பின் அஞ்ஞான்றும் காணக்கூடிய மாற்றங்கள் பல இருக்குமென்பது பிரத்தியட்சம்.
ஆனால், இன்னுஞ் சில வருடங்களுள் எத்தனை மாறுபாடுகள் நிகழுமென்பதை எங்கள் பின்மக்களே காண்பர்.”
(சு.நா. 1931) மேலுள்ள கட்டுரையை எழுதி, பதின்மூன்று வருடங்கள் சென்ற பின்பே புலவர் வாழ்வு பூர்த்திபெறுகிறது. அந்திமகாலம்
உதயரவியின் சொர்ணஜோதியிற் பூத்து விரிகின்ற மோகன புஷ்பங்கள், அந்திமாலையிலே பொலிவிழந்து நிலம் வீழ்கின்றன.
இதுவே இயற்கையின் நியதி, காலத்தின் லீலை; வல்லமைகளின் கர்த்தாவான கடவுளின் கைங்கர்யம்.

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை 65
பிறந்தவர் யாவரும், யாவையும் இறப்பதுறுதியல்லவா? அந்த இறப்பு ஆசுகவியின் எண்பத்தினான்காவது வயதில், 1944இல் அவர்க்கு வந்தது.
“என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே'
என்றார் திருமூலர்.
அதுவே ஆசுகவியின் வாழ்வின் தாரகமாகும்.
ஆசுகவியின் கவிதைகளில், ஆன்மிகக் கவிதைகளே மிக அதிக மானதாகும்.
தமது நீண்ட வாணாளில் கடவுளே கதி என்று வாழ்ந்தார் ஆசுகவி.
தமது எண்பத்து நான்காவது வயதிலே, தாம் பிறந்த ஊராகிய வயாவிளானிலே, தாம் பிறந்த இல்லத்திலேயே, வீரனாகப் பிறந்து விரனாக வாழ்ந்து வீரனாகத் தம் வாழ்வை முடிக்கிறார் அந்த வணங் காமுடிப் புலவர்.
ஆசுகவி பற்றி.
a p s a இவர் ஒரு கண்டனப் புலி. நினைத்தவுடன் பாடும் தெய்வீக சக்தி மிக வாய்க்கப்பெற்றவர். n
பேராசிரியர் ஆ. சதாசிவம். ('ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்' நூலில்) se பிள்ளையவர்களுடைய தமிழ்நடை ஒரு தனிரகத்தைச் சேர்ந் தது. இக் காலத்து மறுமலர்ச்சி இயக்கக்காரர் பிள்ளையவர்களைத் தமக்கு வழிகாட்டியாகக் கொள்வார்களாக,
..வரகவி மகாலிங்கசிவத்திற்கு பிள்ளையவர்களிடத்தில் அதிக அன்பும் மதிப்பும் உண்டு. சோமசுந்தரப் புலவருடைய கட்டளைக் கலித்துறையையும், பிள்ளையவர்களது ஆசிரிய விருத்தத்தையும் மகா லிங்கசிவம் சுவைத்து, அநுபவித்துப் பன்முறை கூறியுள்ளார்.
நமது பிள்ளையவர்கள், இயற்கைப் புலவர் வரிசையில் வைத்து
மதிக்கப்படுதற்குரியவர். தமிழ் இலக்கிய மறு மலர்ச்சிக்கு அங்குரார்ப் பணம் செய்தவர்களில் பிள்ளையவர்களும் ஒருவர்.
ஈழகேசரி நா. பொன்னையா
(ஈழகேசரி-1944)
இன்னும் ஒருவரைப்பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்.
சாதாரண மக்கள் கவியாக -விகடக்வியாக-சாதாரண மனிதனின்
அபிலாஷைகளைப் பாடும் கவியாக இருந்த ஆசுகவி வேலுப்பிள்ளை
தாம் அவர்.

Page 37
66 சிலோன் விஜயேந்திரன்
. . . . . அவருடைய பெரு முயற்சியாக “யாழ்ப்பாண வைபவ கெளமுதி' என்ற பெருநூல் விளங்குகிறது.
இரசிகமணி கனக. செந்திநாதன் ("ஈழத்து இலக்கிய வளர்ச்சி" நூலில்)
கண்டனத்திற் கைதேர்ந்த காள மேகம்
கருதுதமிழ்க் கன்னிகைமோ கத்தால் ஈழ மண்டலத்தில் வயவையென்னும் சிற்றுார் தன்னில் வந்துதித்தான் எனக்கவிகள் ஏங்கி நிற்கத் தண்டமிழில் இடிகுமுற மின்னல் பாயச்
சரசரென வசைமாரி பொழிந்து நிற்கும் வண்டமிழ்வேற் பிள்ளையென்னும் கவிஞா! நின்னை
மறந்திடுமோ தமிழுலகம் மறவா தன்றே!
- வழக்கறிஞர் வ. இராசநாயகம்.
முடிவுரை
ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை அவர்களின் வாழ்வில் நடை பெற்ற நிகழ்ச்சிகளை ஒன்றுகூட விட்டுப் போகாமல் எடுத்துக் கூறு வதல்ல இந்நூல்.
அவரின் வாழ்வின் முற்பகுதியில் (1860-1901) நடைபெற்ற பல நிகழ்ச்சிகளை துரதிர்ஷ்ட வசமாக யான் அறியக்கூடியதாயிருக்க வில்லை.
அம் முயற்சியில் யான் எத்தனையோ மடங்கு ஆர்வத்துடன் ஈடு பட்டும் பூரணமான பலன் கிடைக்கவில்லை.
இருந்தபோதும், ஒன்றுமட்டும் நிச்சயமாகத் தெரிகிறது; அதாவது ஆசுகவியின் வாழ்வில் அவர் உன்னதமான சாதனைகள் பல புரிந்த ஒரு காலப் பகுதி இந்த நூற்றாண்டின் தொடக்கப் பகுதியிலே - 1902இல் தான் ஆரம்பிக்கிறது.
அந்தப் பகுதியில்ே தான் அவரது "சுதேச நாட்டியம்" ஆரம்பமா கிறது.
அவரின் தலைசிறந்த ஆராய்ச்சி நூலான “யாழ்ப்பாண வைபவ கெளமுதி' நூலும் அவரின் சுதேச நாட்டியக் காலத்தில் வெளிவந்த தேயாகும்.
புலவரின் மேதாவிலாசத்தையும், கண்டனந் தீட்டும் வல்லமை யையும், கவிதா சாமார்த்தியத்தையும், உரைநடைத்திறனையும் நாம் அறிவதற்கு 'சுதேச நாட்டியம்'இதழ்களே பேருதவி புரிகின்றன.
"சுதேச நாட்டியம்' இதழ்களின்பேருதவியினாலேயே இந் நூலும்
உருவாக்கப்பட்டது.

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை 67
இந்நூலிலே யான், ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை அவர்களின் வாழ்வையும், பணியையும் நடுநின்று விமரிசனஞ் செய்திருப்பதாகவே கருதுகிறேன்.
இந்நாள்வரை மிகப்பலரால் ஒரு ‘விகடகவி' என்ற அளவில்தான் கல்லடி வேலுப்பிள்ளை அவர்கள் தமிழ் உலகத்திற்கு அறிமுகஞ் செய் யப்பட்டிருக்கிறார்.
புலவருடைய 'சுதேச நாட்டியம்' பத்திரிகைப் பிரதிகளைப் படித்துப் பார்த்தால்தான் அவருடைய பன்முகப்பட்ட தனித்துவமான சாதனைத் திறனை நாம் அறிந்து கொள்ள முடியும்.
இந்நூலைப் படிப்பவர்கள் ஆசுகவியின் பன்முகப்பட்ட சாதனைத் திறனைப் புரிந்து கொள்ளக்கூடியதாகவும், ஈழத்துப் புலவர் வரி சையில்-பத்திரிகையாளர் வரிசையில்-உரைநடை வித்தகர் வரிசை யில்-கண்டன மேதைகள் வரிசையில்-சரித்திர ஆய்வாளர் வரிசை யில் ஆசுகவியின் ஸ்தானம் எத்துணை தனித்துவமானது என்பதனை உணர்ந்து கொள்ளக்கூடியதாகவும், இருந்தால் அதுவே இந்நூலை ஆக்கியோனுக்கு இதய நிறைவைத் தரவல்லதாகும்.
வருங்காலத்தில் மேன்மேலும் விசாலமான முறையில் ஆசுகவியின் பணிகளை ஆராய விழைவார்க்கு, சர்வ வல்லமையுள்ள கடவுள் பூரண சக்தியைக் கொடுப்பாராக.

Page 38
சிலோன் விஜயேந்திரன் நூல்கள்
விஜயேந்திரன் கவிதைகள் . அவள் (நாவல்) ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை வாழ்வும் பணியும். செளந்தர்ய பூஜை (சிறுகதைகள்) பிர்ேமதியானம் (வசன கவிச்சித்திரம்) பாரதி வரலாற்று நாடகம். கவிஞர் கம்பதாசன் வாழ்வும் பணியும் அண்ணா என்றொரு மானிடன். உலக நடிகர்களும் நடிகமேதை சிவாஜியும். நேசக்குயில்.
. சிலோன் விஜயேந்திரன் கவிதைகள்
தொகுத்த நூல்கள்
l
கல்லடி வேலன் நகைச்சுவைக் கதைகள். கலைஞர் திரை இசைப்பாடல்கள். கம்பதாசன் கவிதைத்திரட்டு. கம்பதாசன் காவியங்கள். கம்பதாசன் திரை இசைப்பாடல்கள்.
கம்பதாசன் நாடகங்கள்.
. கம்பதாசன் சிறுகதைகள்.
لها


Page 39
'கம்பதாசன் பாடல்க: திரையுலகில் எத்துணை ஆ நண்பர் சிலோன் விஜயே "கம்பதாசன் மறையவில் போலிருக்கிறது
-தமிழக முதல்வர்
கண்ணீரிலும், இரத்தத் ருக்கிற இலங்கைத் தீவிே শীতল காட்சியளிப்பது பு
 
 

ளைத் தொகுத்தளித்து அவர் ற்றல் காட்டினார்' என்பதை பந்திரன் விளக்கி இருப்பது }GATIFU"" STGOT முழக்குவக
கலைஞர் மு. கருணாநிதி
திலும் நனைந்து கொண்டி ல இப்படியொரு நல்ல கிழ்ச்சி தருகிறது.
உவமைக் கவிஞர் சுரதா