கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: எம். சி. ஒரு சமூக விடுதலைப் போராளி

Page 1


Page 2


Page 3

எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
% C
هر
公氨。

Page 4
அறம்தான் ஆயுதங்களில் கூர்மையானது. ஆனால் அது நேர்மையானது அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு, அது யாரையும் தாக்காது. தாக்க ஆரம்பித்தால், அது தோற்காது.
- етib. 4. afiapoconurb

ΟTD.ά.
ஒரு சமூக விருதலைப் போராளி
எஸ். சந்திரபோஸ்
d
၉၄၈
32/9 esbarGoTebeo 6erebar
தமிழ்நாடு இந்தியா

Page 5
M. C. Oru Samooga Viduthalai Poaraali (A Study of M.C. as a Social Reformer)
Compiled and Edited by
S. Chandirabose
First Edition May 2008
Mithra : 156
ISBN 81 - 89.748 - 43 - 2
Publication Editor
Espo
Mithra Books are Published by Dr. Pon Anura
Pages : 296
Printed & Published by
Mithra Arts & Creations Pvt Ltd., 32/9 Arcot Road, Kodambakkam Chenna - 600 024. Ph : 2372 3182, 2473 5314 Email : mithrabooksGgmail.com

ordio. b5(8uTco
நுழைவாயில்
ம்ெ.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி. இந்த உண்மை பரந்துபடஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். எம்.சி எனப்பலராலும் அன்புடன் அழைக்கப்பட்ட எம்.சி. சுப்பிரமணியம் அமரராகி, அடுத்த ஆண்டின் விடியலிலே இரண்டு தசாப்தங்கள் பூர்த்தியாகின்றன.
இன்று அவருடைய போராட்டங்கள் பற்றியும், ஈழத்தில் ஒடுக்கப்பட்டோராக வாழ்ந்த சிறுபான்மைத் தமிழர்களின் நிமிர்வுக்கு அவர் ஆற்றியுள்ள பங்களிப்புப்பற்றியும் ஆழ்ந்தறியும் புதிய ஆர்வங்கள் தோன்றியுள்ளன. அவருடைய மகன் என்கிற முறையிலே, அவர் குறித்த படிப்பாய்வுக்கு உதவக்கூடிய ஆவணங்கள் தருமாறு என்னைக் கேட்கிறார்கள். இந்நிலையில் அவர் பற்றிய சற்றே விரிவான ஆவணமாக அமையும் இந்நூல் காலத்தின் தேவையென்றே கருதுகின்றேன்.
இது எம்.சி. என்கிற தனிமனிதனை அவதாரமாக உயர்த்தும் காவியமல்ல. இலங்கைத் தமிழர்களின் ஒரு காலகட்டத்தின் கறைபடிந்த வரலாற்றின் மீள்வாசிப்பாகவும் இஃது அமைகின்றது. இன்று உரிமைகளுக்காக ஆவேசமாகக் குரல் கொடுக்கும் அதே தமிழர்கள், ஒரு சாராரை அடக்கி ஒடுக்கி, அவர்களுடைய அடிப்படை உரிமைகளை மறுத்தார்கள் என்பது கடந்தகாலக் கசப்பான வரலாறாகும். அந்த ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது சுதந்திரத்திற்காகவும், சமத்துவத்திற்காகவும், சமநீதிக்காகவும் போராடியவரலாறும் இணைந்ததுதான் இருபதாம்

Page 6
நூற்றாண்டு இலங்கையின் வரலாறு. மறக்கப்படும் வரலாற்றின் பக்கங்களைப் படிப்பாய்வதற்கு ஓர் ஆவணம் தேவை.
சிறுபான்மைத் தமிழர் நடத்திய போராட்டங்களில் எம்.சி.யின் பங்கும் பணியும், அவர் இணைந்து செயலாற்றிய ஸ்தாபனங்களின் செயற்பாடுகளும், அதனால் வென்றெடுக்கப்பட்ட சாதனைகளும் முப்பத்தைந்து கட்டுரைகளில் பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிஞர்களினால் ஆராயப்பட்டுள்ளன. கட்டுரைகளிலே இடம்பெறும் கருத்துக்கள் அத்தனைக்கும் கட்டுரையாளரே பொறுப்பாளர் ஆவர்.
பல்வேறு காலகட்டங்களிலே வெளியான பத்திரிகைச் செய்திகள் சிலவும், அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் ஆண்டு மலரில் வெளியான தலைமை உரையும், செயலாளர்களின் அறிக்கையும் மறுபிரசுரஞ் செய்யப்பட்டுள்ளன. ஈழத்தின் பிரபல எழுத்தாளர் கே.டானியல் அமரத்துவம் அடைந்தபொழுது எம்.சி. அவர்களால் ‘ஈழநாடு’ பத்திரிகையில் எழுதப்பட்ட கட்டுரையும் சேர்க்கப்பட்டுள்ளது. மூலப் பிரசுரங்களுக்கு நமது நன்றிகள். எம்.சி.யின் நினைவஞ்சலியாகப் பிரசுரமான கவிதைகள் சிலவும் அநுபந்தத்திலே சேர்க்கப்பட்டுள்ளன. அக்கவிஞர்களுக்கும் நமது நன்றிகள்.
அநுபந்தத்தின் இணைப்பு இந்த நூலினை முழுமையாக்க உதவும் என நம்புகின்றோம்.
எம்.சி. அமரரான பத்தாம் ஆண்டின் நினைவாகத் தொகுத்து வெளியிடப்பட்ட எம்.சி. நம் சமூக விடுதலைப் போராளி என்கிற நூலே, இந்நூலின் கருமையப் பகுதியாக அமைகின்றது. அந்நூலின் வெளியீட்டுக் குழுவில் இடம்பெற்றுச் சகல ஆலோசனைகளும் வழங்கிய திருவாளர்கள் ஈ.வே. செல்வரத்தினம் இலங்கையன்), பொ. கனகசபாபதி. எம்.எஸ். அலெக்சான்டர், எஸ். திருச்செல்வம், பரமு சிவசுப்பிரமணியம் ஆகிய அனைவருக்கும் நமது நன்றிகள் உரியன. அந்நூலை வெளியிட்ட விசாலா பதிப்பகத்தின் பரமு சிவசுப்பிரமணியம் நமது நன்றிக்குரியவர். இந்நூலுக்குச் சிறந்த முன்னுரையை வழங்கியுள்ள திரு பிரேம்ஜி அவர்களுக்கும் நமது நன்றி உரித்தாகுக.
ஈழத்தமிழர் இனிவரும் காலங்களில் தம்மிடையே எவ்வித பாரபட்சமுமின்றி ஒரு தாய் மக்களாக அனைத்து மக்களின் சுதந்திரத்திற்கும், சமத்துவத்திற்கும், சமநீதிக்கும், பொருளாதார சுதந்திரத்திற்கும் ஒன்றுபட்டு உழைத்தல் வேண்டும் என்பதும் இந்நூல் வெளியீட்டின் பிறிதொரு நோக்கமாகும்.
இந்நூலின் இத்திருத்திய பதிப்பினை சென்னையிலுள்ள மித்ர வெளியீடு பிரசுரித்துள்ளது. அதன் ஸ்தாபகர் எஸ்.பொவைத் தமிழ் இலக்கிய உலகம் நன்கறியும். அவர் என் மாமாவும் ஆவர். இந்த நூலினை வடிவமைக்கும் அனைத்துப் பொறுப்பினையும் அவரிடமே ஒப்படைத்தேன். இதற்கு அவர் நமது நன்றியை எதிர்பார்க்கமாட்டார். அது தமது கடமை என்பது அவர் கட்சி. ஆனாலும், மித்ர நிறுவணத்தின் ஊழியர்களுக்கும் நாம் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளோம்.

stof GoDTib
சகல அடக்குமுறைகளுக்கும்
எதிராகச் சுதந்திரத்திற்கும், சமத்துவத்திற்கும்,
சமநீதிக்காகவும் போராடி அமரத்துவம்
ந்துவிட்ட மக்கள்
இந்நூல் சமர்ப்பணம்.

Page 7

03b8
"மன்னுரை
G3 חחழர் எம். சி. அமரத்துவமடைந்து பத்தாண்டுகள் நிறைவடைவதை ஒட்டி அன்னார் பற்றிய ஞாபகார்த்த நூல் வெளியிடப்படுவது பெரு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருகிறது. ஏனென் றால் அவர் ஒரு தனி மனிதர் என்ற எல்லையைக் கடந்து, ஒரு இயக்கமாக, ஒரு கருதுகோளாக, ஒரு வரலாற்று வெளிப்பாடாக, ஒரு சிமுதாயத்தேவையின் விசைச் சக்தியாகத் திகழ்ந்தவர்.
ஆகவேதான், எம். சி.யை நினைவுகூர்வது என்பது, அவரைப்பற்றிச் சிந்திப்பது என்பது, அவரது வரலாற்றுப் பாத்திரத்தையும் சாதனைகளையும் பதிவு செய்வது என்பது, அவர் எவற்றை எல்லாம் பூர்த்தி கரித்து நின்றாரோ அவற்றைப் பற்றிச் சிந்திப்பதாகும். அவற்றின் வெற்றிகள் பற்றியும், தோல்விகள், குறை பாடுகள் பற்றியும் ஆழமாக ஆய்வு செய்வதாகும். அவரது சமுதாய நோக்கங்களை, வாழ்க்கை இலட்சி யங்களை, அவர் விட்டுச்சென்ற பணிகளை முழுமைப் படுத்தி இறுதி வெற்றியை நோக்கி முன்னெடுத்துச் செல்வது பற்றி பிசகற்ற முறையில் புதிய சூழல்களுக்கும் யதார்த்தங்களுக்கும் ஏற்ப சிந்திப்பதும் செயல்படுவது மாகும். தோழர் எம். சி.யின் பணிகள், செயற்பாடுகள்
9

Page 8
அவற்றின் வீச்சால் சமுதாயத்தில், வரலாற்றுப் போக்கில் ஏற்பட்ட தாக்கங்கள் பற்றி இத் தொகுப்பில் எழுதியுள்ள நண்பர்கள் சிந்தனைத் தளத்திலும் அனுபவ வெளிப்பாட்டு நிலையிலும் நின்று விஸ்தாரமாகக் குறிப்பிட்டுள்ளார்கள். ஆகவே, அவை பற்றிய விளக்கங் களையும், விமர்சிப்புகளையும் தவிர்த்து எம். சி.யை நினைக்கும் தோறும் ஏற்படும் சில சிந்தாந்த - சமூகவியல் மனப்பதிவுகளை மட்டும் குறிப்பிடுவது பொருந்தும் என்று நினைக்கிறேன்.
தோழர் எம். சி.யை பிரதானமாக ஆறு பரிமாணங்களில்
நோக்கலாம்.
ஒன்று
இரண்டு :
மூன்று
தமிழ்ச் சமுதாயத்தின் சாபக்கேடான மிலேச்சத் தனமான சாதி ஒடுக்குமுறையை, தீண்டாமைக் கொடுமையை எதிர்த்து அந்த சமூகக் கொடு ரத்திற்கு இலக்கான ஒடுக்கப்பட்ட மக்களைத் தட்டியெழுப்பி, ஸ்தாபன ரீதியாகத் திரட்டிச் செயற்பட, போராட வைத்தமை. அந்தப் போராட்டத்தின் தானைத்தலைவனாக ஏறத்தாழ ஐந்து தசாப்தங்களாக, தனது இறுதி மூச்சு அடங்கும் வரை திகழ்ந்தமை.
சாதி ஒடுக்குமுறையை எதிர்த்துக் கிளம்பிய எம். சி. நாடு விடுதலை தவறி பாழ்பட்டுக் கிடப்பதை எதிர்த்து தேசிய ரீதியில் முகிழ்ந்து வந்த தேசிய விடுதலை இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டமை.
மகாத்மாகாந்தி தலைமையில் இந்தியாவில் பொங்குமாக் கடலாக அலையடித்து எழுந்த சுதந்திரப் போராட்டத்தின் வீச்சால் ஈர்க்கப் பட்ட எம். சி. இலங்கையிலும் அந்நிய ஆதிக் கத்தை எதிர்த்து மட்டுப்படுத்தப்பட்ட அளவி லேனும் எழுந்த இயக்கங்களுடன் தொடர்பு கொண்டார். நாடு அடிமைப்பட்டுக் கிடக்கும் வரை சமூக விடுதலை, சமூக நீதி, சமூக சமத்துவம் சாத்தியமற்றது என்று அவர் உணர்ந்தார்; அதற்கமையச் செயற்பட்டார்.
சமூக விடுதலையும் தேசிய விடுதலையும் தேசிய இனங்களின் உரிமைகளுடனும் இன சமத் துவத்துடனும் முன்னேற்றத்துடனும் பிரிக்கப்பட முடியாது இணைந்திருப்பதை உணர்ந்து செயற்
1O

நான்கு
பட்டமை. தமிழ்த்தேசிய இனத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் ஐக்கிய இலங்கையில் பிரதேச சுயாட்சியை ஈட்டுவது என்ற கருதுகோளை அவர் உறுதியாக ஆதரித்தார்.
சமூக விமோசனம், தேசிய விடுதலை, தேசிய இன சமத்துவம் தவிர்க்கப்படமுடியாத - பிரிக்கப் படமுடியாத வகையில் சமுதாய மாற்றத்துடன், சமுதாயத்தின் ஜனநாயக மாற்றத்துடனும் ஜன நாயக விஸ்தாரத்துடனும் பின்னிப் பிணைந் துள்ளது என்பதை உணர்ந்தமை. எனவேதான் இலங்கைச் சமுதாயத்திலும் தமிழ்ச் சமுதாயத் திலும் முற்போக்கு ஜனநாயக மாற்றங்களை ஏற்படுத்த ஈழத்துப் புரட்சியானது ஜனநாயக சட்டத்தின் கடமைகளை நிறைவேற்றப் போரா டிய இயக்கங்களுடனும், சமூக, அரசியல் சக்தி களுடனும் அதற்கான போராட்டங்களுடனும் அவர் தன்னைப் பிணைத்துக்கொண்டார்.
தன்னையும் தான் சார்ந்த சமூகத்தினரையும் அடக்கி ஒடுக்கிய சாதி ஒடுக்குமுறையையும் சுரண்டலையும் எதிர்த்து எரிசரமாக வெகுண் டெழுந்த எம். சி. தமிழ்ச் சமூகத்திலும் இலங்கைச் சமூகத்திலும் நிலவும் வர்க்க ஒடுக்குமுறையையும் சுரண்டலையும் எதிர்த்த தொழிலாளி வர்க்கப் போராட்டங்களிலும் தன்னை ஒரு செயற்படு போராளியாக இஒைனத்துக் கொண்டமை. வர்க்கச் சுரண்டலும் வர்க்க ஒடுக்குமுறையும் இருக்கும்வரை, சுரண்டல் அமைப்பை ஒழித்துக் கட்டும்வரை, சுரண்டலும் அனைத்து வடிவ சமூக ஒடுக்குமுறைகளும் ஒழிந்த ஒரு புதிய சமூக அமைப்பு-சோஷலிச சமுதாயம் தோன்றும் வரை, சாதி ரீதியான, இன ரீதியான, தேசிய ரீதியான ஏற்றத்தாழ்வுகளுக்கும், அசமத்துவங் களுக்கும், பாகுபாடுகளுக்கும் முற்று முழுதான, இறுதியான முடிவினைக் கட்டமுடியாது என்று உணர்ந்து, புதிய சமுதாயத்திற்கான போராட்டத் திலும், அந்தப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி நடத்திச் செல்ல வேண்டிய பாட்டாளி வர்க்கத்தின் கட்சியிலும் சேர்ந்து உழைத்தார்.
11

Page 9
சுரண்டலும் ஒடுக்குமுறையும், இவற்றை அடிப் படையாகக் கொண்ட சமூக அமைப்பும் உலக வியாபிதமானவை என்பதையும், ஆகவே இவற்றை ஒழிப்பதற்கான இயக்கமும் போராட் டமும் உலகளாவியவை என்பதையும் கண்டமை.
இதனால்தான் அவர் உலக சோஷலிஸ் அணி யுடன், உலகப் பாட்டாளி வர்க்க இயக்கத் துடன், உலகு தழுவிய புரட்சிகர சக்திகளுடன் உறவினை ஏற்படுத்திக்கொண்டார். இறுதி வரை பாட்டாளி வர்க்க சர்வதேசிய கோட் பாட்டுக்கு விசுவாசமாக இருந்தார்.
இந்த ஆறு பரிமாணங்களிலும் சிந்தித்த, செயற்பட்ட எம். சி, இவை ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல என்பதையும், மாறாக, இவை ஒன்றுக்கொன்று ஒத்திசைவானவை - அனுசரணை யானவை என்பதையும் கண்டு தெளிந்தார்.
இவரது இந்த சிந்தனைத்தெளிவும் செயற்பக்குவமும் பல
அரசியல் -
I.
சமூகப் படிப்பினைகளை முன்வைக்கின்றன.
ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காக, அதன் விமோசனத் திற்காக, சாதிப் பாகுபாடுகளை ஒழிப்பதற்காக, தீண்டாமை எனும் சமூக அனாச்சாரத்திற்குச் சமாதி கட்டுவதற்காகப் போராடும் அதேவேளையில், இந்தப் போராட்டத்தை இனத்தினதும் தேசத்தினதும் சர்வதேசத்தினதும் வர்க்கத்தினதும் விமோசனத் திற்கும் முன்னேற்றத்திற்குமான பொதுப் போராட் டங்களுடன் ஒத்திசைவாக இணைப்பது.
இனத்தினதும் தேசத்தினதும சர்வதேசத்தினதும் ஜன நாயக, முற்போக்கு, புரட்சிகர சக்திகளுடன் நட்பை யும் ஒருமைப்பாட்டையும் ஒத்துழைப்பையும் பேணு வதும் வளர்ப்பதும்.
ஒடுக்குமுறையின் ஒரு குறிப்பிட்ட வடிவத்தினால் பாதிப்புக்குள்ளானவர்கள் அந்த வடிவத்தை, அந்த ஒடுக்குமுறையை எதிர்த்து திடவுறுதியுடன் போராடும் பொழுதே, ஒடுக்குமுறையின் சுரண்டலின் பாகுபாடு களின் அனைத்து வடிவங்களையும் எதிர்த்துப் போராடுவதும், பல்வேறு ஒடுக்குமுறை வடிவங்களை எதிர்த்துப் போராடும் சமூக - வர்க்க சக்திகளுடன்
12

பரந்த அணியை உருவாக்குவதும், இந்தப் போராட் டங்கள் அனைத்தையும் ஒரு பொதுப் போராட் டத்தில் மிகச் சுளுவாக இணைப்பதும்.
சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் என்பது ஒரு சாதிப் பிரிவினர்க்கும் இன்னொரு சாதிப் பிரிவினர்க்கும் இடையில் நடைபெறும் மோதுதலோ அல்லது போரோ அல்ல. மாறாக, அது அடிப்படையில் சாதி முறைமையை உற்பவித்த சமூக அமைப்பை - நிலப் பிரபுத்துவ அமைப்பை எதிர்த்து நடத்தும் போராட்டமே என்பதை எம். சி. தெட்டத் தெளிவாக உணர்ந்திருந்தார். எனவேதான், நிலப் பிரபுத்துவத்தை, நிலப்பிரபுத்துவ சமூக உறவுகளை ஒழிப்பதற்கான போராட்டமாக சாதி ஒழிப்புப் போராட்டம் பரந்த பரிமாணத்தையும் விஸ்தாரணத் தையும் பெறவேண்டும் என்றும், இந்த சமுதாய மாற்றத்திற்காக முன்வரும் அனைத்துச் சாதிகளை யும் சமூகப் பிரிவுகளையும் சேர்ந்த ஜனநாயக - முற்போக்குச் சக்திகளுடன் பொது அணி உருவாக் கப்பட வேண்டும் என்றும் கருதிச் செயற்பட்டார்.
சமூகத்தின் அடிப்படை முரண்பாடுகளையும் உப முரண்பாடுகளையும் சரியாக இனம் காண்பதும், இந்த முரண்பாடுகளுக்கிடையிலான இடைத் தொடர்பு களையும் இடைச் செயற்பாடுகளையும் கண்டறிவதும்.
நிலப் பிரபுத்துவ அமைப்பில் நிலக்கிழார்களுக்கும் பண்ணை அடிமைகளுக்கும் இடையிலான முரண் பாடும், முதலாளித்துவ அமைப்பில் முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்குமிடையிலான வர்க்க முரண் பாடுமே பிரதான முரண்பாடுகள். இதில் ஒடுக்கும் வர்க்கம் தோல்வியுறுவதும், ஒரு வர்க்கமாக அது ஒழிந்துபடுவதும், மற்ற வர்க்கம் வெற்றி வாகை சூடு வதும் வரலாற்று நியதி. ஆனால் ஏனைய முரண் பாடுகளில், மக்களுக்கிடையிலான (சாதி, இனம், தேசம், பால்) முரண்பாடுகளில் மக்கள் அழிவதில்லை, அழிக்கப்படுவதுமில்லை. மாறாக, இந்த முரண்பாடு களுக்கு ஏதுவாக உள்ள காரணிகள் அகற்றப்படு கின்றன. அதாவது சாதி, இனம், பால் ரீதியான பாகுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்படுகின்றன. அன்னவருக்கும் சுதந்திரமும் சுயகெளரவமும் சமத்
13

Page 10
துவமும் வழங்கப்படுகின்றன. சாதியைப் பொறுத்த மட்டில் அது புதிய சமூக உறவுகளின் தோற்றத் துடன் காலப்போக்கில் தன்னியல்பாகவே மறைந்து விடும்.
ஏகாதிபத்திய ஆதிக்கத்தை, சுரண்டல் வர்க்கத்தை எதிர்த்த முரண்பாடுகளைத் தீர்ப்பதற்குக் கையாளப் படும் போர் உபாயங்களையும் போராட்ட முறை களையும், அதேபோல மக்களுக்கிடையிலான முரண் பாடுகளைத் தீர்க்கக் கையாளப்படும், கையாளப்பட வேண்டிய போர் உபாயங்களையும் போராட்ட முறைகளையும் பிசகின்றிக் கண்டறிவது.
ஏகாதிபத்திய ஒடுக்குமுறையை எதிர்த்து, சுரண்டல் வர்க்க ஒடுக்குமுறையை எதிர்த்து தேவையைப் பொறுத்து ஒடுக்கப்படும் மக்கள், சுரண்டப்படும் வர்க்கங்கள் சமாதானமான, சமாதானமற்ற வழி களைக் கையாள்வது அவசியமாகிறது. இதில்கூட, "நாங்கள் வன்முறையை விரும்பவில்லை. புரட்சியை மிகமிக சமாதான வழிகளில் ஈட்டவே விரும்பு கிறோம். ஆனால் சுரண்டும் வர்க்கம் எமக்கு எதிராகக் கொடிய அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடும் போது சுரண்டும் வர்க்கத்தின் வன்முறையைத் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர வன்முறை மூலம் எதிர்த்து நிற்கிறோம்” என்று முதலாவது வெற்றி கரமான பாட்டாளி வர்க்கப் புரட்சியின் தலைவர் 67618LŠi g)65Guud Glou6ofiaôr (Vladimir Ilyech Lenin) கூறியது மனம் கொள்ளத்தக்கது.
இதைச் சரியாகக் கிரகித்ததால்தான் எம். சி. மக்களுக் கிடையிலான முரண்பாடுகளைத் தீர்க்கும் போராட் டங்களில் வன்முறை வடிவங்களைத் தவிர்த்தார். சாதிக் கொடுமைகளை எதிர்த்த போராட்டங் களுக்குத் தலைமை தாங்கி நடத்திய அவர், அந்தப் போராட்டங்கள் சாதிப்பூசல்களாக, சாதிச் சண்டை களாக, சாதிச் சங்காரமாக மாறுவதைக் கோட்பாடு பூர்வமாகவே எதிர்த்தார். வன்முறைகள் தலை தூக்கிய வேளைகளில் அவற்றைக் கட்டவிழ்த்து விட்ட சாதிவெறியர்களைத் தனிமைப்படுத்திச் சாடிய போதிலும், அவை பரந்த பரிமாணத்தை எட்டு வதைத் தடுத்தார்.
14

இதன் அர்த்தம் மக்களுக்கிடையிலான முரண்பாடுகள் அடிப்படை முரண்பாடுகளோ, பகை முரண்பாடு களோ அல்ல என்பதும், இவற்றைத் தீர்ப்பதற்கான போராட்டங்கள் இதற்கமையவே இருத்தல் வேண்டும் என்பதுமாகும்.
Z எந்த ஒரு போராட்டமும் தர்ம நியாயமானதாக இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, அந்தப் போராட்டத்தின் நோக்கங்கள் தர்மமானவையாக இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, அந்தப் போராட்டம், அந்தப் போராட்ட முறைகள், போராட்ட நோக்கங்கள் தர்ம நியாயமானவைதான் என்பதை ஏற்கச் செய்யவேண்டும். இதனால்தான் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக் கான, சமத்துவத்திற்கான கோரிக்கைகளுக்கு, போராட்டங்களுக்கு தமிழ்மக்களின், இலங்கை மக்களின், சகல ஜனநாயக சக்திகளின் ஆதரவையும் நல்லெண்ணத்தையும் வென்றெடுக்க அவர் அயராது பாடுபட்டார். தனிப்பட்ட ரீதியில் ம்ட்டுமல்ல, இயக்க ரீதியிலும் பகைவர்களைக் குறைத்து நண்பர்களை, நேச சக்திகளை விஸ்தார மாக்கிக் கொண்டார். தனிமைப்படல் சுயஅழிவுகரமானது என்பதை நன்கு புரிந்து, கிரகித்துச் செயற்பட்டார்.
இந்த மிகச் சரியான, பிசகற்ற நிலைப்பாடுகளை, கோட் பாட்டு நிலைகளை எம். சி. யும் அவர் சார்ந்த அரசியல் சக்தி களும் எடுத்தபோதிலும் இரு விஷயங்களில் பாரதூரமான தவறுகள் இழைக்கப்பட்டன. A
ஒன்று : தமிழ்த் தேசியம் பற்றியது. இரண்டு : ஒற்றுமையும் போராட்டமும் என்ற தத்துவத்தின்
நடைமுறை பற்றியது. தோழர் எம். சி. யும் அவர் சார்ந்திருந்த அரசியல் இயக்கமும் மொழிச் சமத்துவத்திற்காகக் குரல் எழுப்பியபோதிலும், தமிழ்த் தேசிய இனத்தின் பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கையில் பிரதேச சுயாட்சி அமைப்பது என்ற கருதுகோளை முன்வைத்தபோதிலும், இவற்றிற்காக இறுதிவரை பற்றுறுதியுடன் போராடவில்லை.
இலங்கையின் சுதந்திரத்திற்காக நாட்டின் பல்வேறு இனங் களும் போராடின. இந்தப் போராட்டத்தில் தமிழினம் முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளது. இலங்கையின் முதலாவது தொழிற் சங்கத்தையும், விடுதலைக்கான முதலாவது தேசிய ஸ்தாபனத் தையும் உருவாக்கித் தலைமை தாங்கியவர் ஒரு தமிழரே.
15

Page 11
இருந்தும் அரசியல் சுதந்திரத்தின் மூலம் பெற்ற ஆட்சியதி காரம் அனைத்து இனங்களுக்கும் இடையில் பகிரப்படவில்லை. தமிழ் மாநிலத்தில் தமிழ் மக்கள் தமது விவகாரங்களைத் தாமே நிர்வகிப்பதற்கான அதிகாரப் பரவலாக்கம் செய்யப்படவில்லை. ஆட்சியதிகாரத்தில் அனைத்து இன மக்களதும் பங்கேற்றல் என்ற அடிப்படை ஜனநாயகக் கோட்பாடு புறக்கணிக்கப்பட்டது. பேரினத்தின் கரங்களில் அதிகாரம் குவிமையப்படுத்தப்பட்டது. தமிழ் மக்கள் அனுபவித்துவந்த உரிமைகள் கூட ஒன்றன்பின் ஒன்றாகப் பறிக்கப்பட்டன. தமிழ்ப் பிரதேசங்களில் தமிழர்களைச் சிறுபான்மையினராக்கும் கபட நோக்கில் சிங்களக் குடியேற்றங் கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டன. தமிழுக்கு ஆட்சி மொழி உரிமை மறுக்கப்பட்டு தனிச் சிங்களம் புகுத்தப்பட்டது.
இவை அனைத்தும் தமிழ்த் தேசியம் தோற்றம் பெற வழி வகுத்தன. உண்மையில் இது ஒரு வரலாற்று வளர்ச்சிப் போக்கே.
நாடு தழுவிய தேசியம் என்பது அனைத்து இனங்களினதும் நியாயமான அபிலாஷைகளின், வேறு வார்த்தையில் இனவழித் தேசியங்களின் சங்கமமாகும். மாமேதை லெனின் குறிப்பிட்டது போல, பல்வேறு தேசிய இனங்களின் அபிலாஷைகளை முழுமை யாக நிறைவு செய்வதன் மூலமே இது சாத்தியமாகும்.
தேசிய ஜனநாயகம் புரட்சியின் கடமைகளை நிறைவேற்று வதற்கான ஜனநாயக சக்திகளின் பரந்த முன்னணி கூட தேசிய சிறுபான்மை மக்களின், அனைத்து இன மக்களின் பங்குபற்றுதல் இன்றி முழுமை பெறமுடியாது.
வர்க்க ஐக்கியமும் கூட சகல இனங்களினதும் நியாயமான அபிலாஷைகளை உள்ளடக்காமலும், அனைத்து இனங்களையும் மதங்களையும் சேர்ந்த தொழிலாளர்களையும் விவசாயிகளையும் ஓரணியில் ஒன்று திரட்டாமலும் சாத்தியமில்லை.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக இடதுசாரி இயக்கம் தமிழ்த் தேசியம் பற்றி எதிர்மறை நிலைப்பாட்டையே எடுத்தது. தமிழ்த் தேசியத்தின் நியாயங்களையும் தர்மங்களையும், அதன் ஜனநாயக உள்ளடக்கத்தையும் கிரகித்து, ஏற்று அதை முழுத் தேசியத்தில் இணைப்பதற்குப் பதிலாக, இனவழித் தேசியத்தை ஆரோக்கிய மான வழியில் ஆற்றுப்படுத்துவதற்குப் பதிலாக அடிப்படைச் சித்தாந்த நிலைப்பாடுகளுக்கு முரணாக அரசியல் சந்தர்ப்பவாதம் கடைப்பிடிக்கப்பட்டது.
16

இதுவும் பூர்ஷ்வா ஆட்சியாளர்களின் பேரினவாதப் போக்குகளும் தமிழர்தேசியமும் தமிழர் உரிமைப் போராட்டமும் பின்னர் பிரிவினைவாத, வன்முறை வடிவத்தை - ஆயுதப் போராட்ட வடிவத்தை - எடுக்கக் கால்கோளாக அமைந்தன.
இதில் எம். சி. யும் மற்றும் தமிழ்த் தோழர்களதும் கட்சிக் கட்டுப்பாடு, ஐக்கிய முன்னணி, வர்க்கப் போராட்டம் என்ப வற்றின் பெயரால் இனப்பிரச்சினை விவகாரத்தில் சரியான நிலைப்பாட்டை எடுக்கத் தவறியமை சத்திய நேர்மையுடன் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
தமிழ்த் தோழர்களும், இடதுசாரி இயக்கமும் இனப்பிரச் சனையில் சரியான நிலைப்பாட்டை திடவுறுதியுடன் எடுத்திருந் தால் நாடு எதிர்கொள்ளும் பேரழிவுகளும் உயிரிழப்புகளும் தேசிய - மானுட - அவலங்களும் தவிர்க்கப்பட்டிருக்கலாம். இனப்பிரச்சினைக்கு ஜனநாயகத் தீர்வு காணப்பட்டிருக்கலாம்.
ஒற்றுமையையும் போராட்டத்தையும் பொறுத்தவரை ஈழத்துப் புரட்சியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு, ஜனநாயகக் கடமைகளை நிறை வேற்ற அனைத்து ஜனநாயக - முற்போக்குச் சக்திகளின் ஐக்கிய முன்னணியை உருவாக்குவது என்பது முற்றிலும் சரியான ஒரு நிலைப்பாடே. ஆனால், “ஒற்றுமையும் போராட்டமும்” என்ற லெனினிய கோட்பாடு சரியாகக் கையாளப்படவில்லை. முன் னணியிலுள்ள தேசிய பூர்ஷ்வா சக்திகளின் தவறான போக்குகளை எதிர்த்து விட்டுக்கொடுத்தலற்ற அரசியல் - தத்துவார்த்தப் போராட் டத்தை, நேசபூர்வமான போருபாயங்களைக் கையாண்டு தானும் நடத்துவதற்குப் பதிலாக தேசிய பூர்ஷ்வர தலைமைக்கு விட்டுக் கொடுக்கும், வளைந்து கொடுக்கும் தவறான நடைமுறை உபாயம் கையாளப்பட்டது. ஏனைய பலவற்றுடன் தேசிய இனப்பிரச்சனை யிலும் இடதுசாரிகள் தவறி விடுவதற்கு இதுவே காரணம். ஒற்றுமையும் போராட்டமும் என்ற தத்துவம் அரசியல் சந்தர்ப்பவாதத்தில் பிறழ்ந்தமையே பிரதான காரணமாகியது.
தமிழர் உரிமைப் போராட்டம் சமாதான வழியிலிருந்து சமாதானமற்ற வழிக்குத் திசைதிரும்புவதற்கு இதுவும் முக்கிய காரணியாக அமைந்தது. தமிழ் மக்கள் தமக்குத் தேசிய ரீதியில் நேச சக்திகள் இல்லை என்று கருதும் நிலைக்கு, தனிமைப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இந்த இரண்டு தவறுகளும் முழுமையாகவும் மெய்யாகவும் திருத்தப்படுவதும், தமிழ்த் தேசியம் குறித்து ஆக்கபூர்வமான நிலைப் பாட்டை மேற்கொள்வதும், தேசிய இனப்பிரச்சனைக்கு ஜன
17

Page 12
நாயகத் தீர்வு காணும் நிகழ்வைத் துரிதப்படுத்தி சமாதானத் தையும் ஜனநாயகத்தையும் மீள்நிறுவவும், தமிழ் மாநிலத்தில் தமிழ்த் தேசிய இனம் சுயாட்சி அமைக்கவும், ஆட்சியதிகாரத்தில் உரிய பங்காளியாக உயரவும், சாதி ஏற்றத் தாழ்வுகளை முற்றாக ஒழித்து சமத்துவத்தை தமிழ்ச் சமுதாயத்தின் வாழ்க்கை நெறி யாகவும் நடப்புத் தர்மமாகவும் ஸ்தாபிதமாக உதவுவதே, உழைப்பதே அமரர் எம். சி. யின் நினைவுக்கு அவர் சார்ந்திருந்த இடதுசாரி முற்போக்கு இயக்கம் செலுத்தக்கூடிய, செலுத்த வேண்டிய மெய்யான கெளரவமாகும்.
"துப்பாக்கி நிழலில் சாதிகள் மறைந்து கிடக்கின்றன, மரித்து விடவில்லை” என்று இத்தொகுதியிலுள்ள கட்டுரை ஒன்று கூறுகிறது.
துப்பாக்கிகளால் மட்டும் ஒரு சமூக நியதியை, வாழையடி வாழையாக வரும் சமூக வழக்கத்தை நிரந்தரமாக ஒழித்துவிட முடியாது. இதற்குப் பல நாடுகளின், குறிப்பாக புதிய சமுதாயத்தை உருவாக்க முயன்ற நாடுகளின் அனுபவம் வலுவான உதாரணங் களாகத் திகழ்கின்றன.
ஆகவேதான் எம். சி.யும், அவரது மகாசபையும் ஒழிக்கப் போராடிய சமூக ஏற்றத்தாழ்வுகளையும் சாதி முறைமைகளையும் எதிர்த்த போராட்டம் பல பரிமாணங்களில் - அரசியல், பொருளாதார, சமூக, உளவியல் மட்டங்களில் தொடர்ந்து திட உறுதியுடன் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.
எம். சி. விட்டுச் சென்ற இந்தப் பணியை இறுதி வெற்றியை நோக்கி எடுத்துச் செல்ல அனைத்து முற்போக்கு, ஜனநாயக மானுடநேய சக்திகளும் ஆழ்ந்து சிந்திப்பதும் கூட்டாகத் திட்டமிட்டுச் செயற்படுவதும் அவசியம்.
எம். சி. யின் இலட்சியங்கள், அபிலாஷைகள், ஆத்ம ஏக்கங்கள் நிறைவேற இந்தக் கடமையை தமிழ்ச் சமூகமும் மானுடமும் செய்தாக வேண்டும். இறுதியாக இன்னுமொன்று இங்கு அழுத்திக் குறிப்பிடப்படுவது அவசியம்.
"படாடோபமற்ற, தற்பெருமையற்ற, வஞ்சகமற்ற, சுய ஆசை
யற்ற சுத்தமான ஆத்மா” என்று இங்குள்ள ஒரு கட்டுரையில் எம். சி. இனம் காணப்படுகிறார்.
18

இந்த மானுடப் பெறுமானம்தான், மனித மகிமைதான் எல்லாவற்றிலும் மகத்தானது. இதுவே அரசியலில், சமூகசேவையில், பொது வாழ்வில் ஈடுபடுபவர்களின் மீறமுடியாத வாழ்க்கை நெறியாகவும், வாழ்வின் தர்மமாகவும் இருக்கவேண்டும். எம். சி. யிடமிருந்து இன்றைய - எதிர்காலத் தலைமுறைகள் கற்றுக் கொள்ள வேண்டிய தலையாய படிப்பினை இது. ஏனெனில், மனித தர்மமும் மானிட நேயமும் இன்றி எந்த இலட்சியமும், எந்தத் தத்துவமும் - அவை எவ்வளவுதான் மகோன்னதமான வையாக, தூய்மையானவையாக இருந்தாலும் - அர்த்தமற்றவையே.
எம். சி. பற்றிய இந்தத் தொகுப்பு அவர் பற்றிய, அவர் உருவாக்கம் பற்றிய, அவரது சிந்தனைகள், செயற்பாடுகள் பற்றிய, அவரைத் தோற்றுவித்த சமுதாயப் பகைப்புலம் பற்றிய மேலும் ஆழமான, காத்திரமான, இயக்கவியல் - சமூகவியல் ரீதியான விரிவான ஆய்வு நூல் ஒன்றுக்கு கால்கோள் அமைத்துக் கொடுக்க வேண்டும். அத்துடன் அவரது இயக்கமும் ஸ்தாபனமும் மீள் உயிர்ப்புப் பெற்று வீச்சாகச் செயற்படவும் வேண்டும்.
19

Page 13
ereo. 6 T
முன்னீடு
ம்ெ.சி.இலங்கையிலேதோன்றிய சமூகப்போராளிகளுள் ஒரு முன்னோடி முதன்மையானவர். யாழ்ப்பாண மாநிலத்தின் இருபதாம் நூற்றாண்டு சமூக வரலாற்றை எழுத முயலும் எவரும் எம்.சி.யின் பங்களிப்பினைச் சிரத்தையிற் கொள்ளாது தமது படிப்பாய்விற்கு முழுமை சேர்த்தல் சாலாது.
இருபதாம் நூற்றாண்டின் முதல் மூன்று கந்தாயங்களின் வரலாறு இலங்கைவாழ் யாழ்ப்பான வேளாளர்களின் அதிகாரத்தினதும், அந்த அதிகாரத்தினை என்றும் தம்முடன் தக்கவைத்துக் கொள்வதற்கு அவர்கள் மேற்கொண்ட செயற் பாடுகளினதும், உபவிளைவான அரசியல் நிலைப்பாடுகளினதும் வரலாறு என்றுதான் எனக்குத் தோன்றுகின்றது.
இந்த வரலாறு, சேர் பொன்னம்பலம் இராமநாதன் படித்த இலங்கையருக்கான ஏகபிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டதிலிருந்து துவங்குகிறது. தமிழர்களுடைய தலைவர்களெனத் தலைநிமிர்த்தியோர் சைவ வேளாளர்களுடைய அதிகார 6OLDurijssos.T சிக்காராகப் பிடித்துக்கொள்வதற்கான முயற்சிகளையே தமது அரசியலாக்கிக் கொண்டனர். சைவ வேளாளர்களின் அதிகாரம் என்பது தம் மத்தியில் வாழ்ந்த சிறுபான்மைத் தமிழர்களைத் தமது அடிமைக் குடிமைகளாக
20

அடக்கி ஒடுக்கி, அடிமைத்தனம் என்னும் நுகத்தடிகளிலே கட்டிவைக்கும் ஜாதித்துவத்திலிருந்துதான் பெறப்பட்டது. இது தேசவளமைக் காலத்திலிருந்தே தமது முதுசொம்மெனவும் பாராட்டி, ஆண்டு அநுபவித்தனர்.
ஆங்கில மொழிப் பயிற்சி காரணமாக, யாழ்ப்பாண வேளாளர் ஆங்கிலேயரின்கீழ் இடைநிலை அதிகாரப் பதவிகளைக் கைப்பற்றிச் சுகித்தது. அவர்களுடைய மேலாண்மைக்கு அலங்காரக் குஞ்சங்கள் சேர்ப்பதற்கு சிங்களக் கிராமங்களிலிருந்து ஆயாக்களையும் ‘போய் (boys)களையும் தருவத்துக் கொண்டார்கள்.
ஜீ.ஜீ. பொன்னம்பலம் முதலானோர் இலங்கைவாழ் தமிழர்களுள் பெரும்பான்மையினராக வாழ்ந்த இந்திய வம்சாவளித் தமிழர்களுடைய பிரஜா உரிமையைப் பறித்த செயலும் இந்த அதிகார வெறியின்பாற்படும். "காடு சுடும்" என்று நாடாளுமன்றத்தில் 'சவபால் பேசிய 'அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம், மாவைக் கந்தனைச் சிறுபான்மைத் தமிழர் தரிசிக்கலாகாது என்று சண்டித்தனஞ் செய்ததும் யாழ்ப்பாண வேளாளர்களின் ஆதிக்க வெறியின்பாற்படும்.
இந்த ஆதிக்க வெறியின் எதிர்வினையே 1983 ஆம் ஆண்டு அரங்கேற்றப்பட்ட ஈழத்தமிழர் சங்காரம். இந்த உண்மையை இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் பலர் மறந்து, தீக்கோழி சாகஸம் புரிதல் அவலக்கோலமே
சிங்கள இனவெறியர்கள் வேளாளத் தமிழர்களைக்கூட "பறைத் தமிழன்' என்று அழைத்தே, துரத்தித் துரத்தி அடித்தார்கள். இந்த சோகத்தை உலகெலாம் கொண்டு சென்று அகதி அந்தஸ்து பெற்று புதிய வாழ்க்கை துவங்கியோர், புலம்பெயர்ந்து செல்லுகையில் கடாசப்பட வேண்டிய யாழ்ப்பாண வேளாள மேட்டிமைகளின் அனைத்து நோய்களையும் சுமந்து சென்று பரப்பி வாழுதல் தமிழருடைய ஒட்டுமொத்த வாழ்வியலுக்கு ஆரோக்கியமானதல்ல.
இந்நிலையிலேதான், எம்.சி ஒரு சமூகப் போராளி என்கிற இந் நூல் முக்கியத்துவம் பெறுகிறது. இலங்கைத் தமிழர்களுள் மிக ஒடுத்தப்பட்ட ஒரு பகுதியினரின் விடுதலை நோக்கிய அனைத்து செயற்பாடுகளிலும், கலகங்களிலும் எம்.சி. முன்னுதாரணமான ஆழ்தடம் பதித்துள்ளார். இதனை மறுதலிக்கும் விதமாக புதிய யாப்பின்போது அவர் தமிழர் நலனைக் காட்டிக்கொடுத்த துரோகி என்றெல்லாம் பிரசாரம் செய்தல், அறியாமை சார்ந்தது; அபக்குவமானது: அயோக்கியத்தனமானது. தமிழர் உரிமைகளுக்காக வாதாடிய மேட்டுக்குடியினர், முதலில் தம் மத்தியிலே வாழ்ந்த சிறுபான்மைத் தமிழருக்கு சம உரிமை வழங்கப் படுதல் வேண்டும் என்கிற தார்மீகக் கடமையை ஏன் மறந்தார்கள் என்பதற்கான காரணங்கள் இன்றுவரை முன்வைக்கப்படவில்லை என்பதை நாம் உணருதல்
நிறபேதங்களுக்கு அப்பால், மொழி பேதங்களுக்கு அப்பால், கடின உழைப்பால் வளமான வாழ்க்கை அமைத்துக்கொள்ளலாம் என்கிற பொருளாதார மேம்பாடு சார்ந்த கலாசாரம் பேணப்படும் புலம்பெயர்ந்த நாடுகளிலே, நாம்
21

Page 14
தமிழர்கள் என்று கூறாது. நம் தமிழர்களுள் சாதி குறைந்தவர்களும் இருக்கிறார்கள் என்று காலாவதியான கொள்கைகளைப் பிரசாரம் செய்தல் எவ்வகையில் புத்தாயிரத்திற்குப் பெருமை சேர்க்கும்?
இன்றும் தமிழர்களுக்கு மத்தியில், சரிநிகர் சமானமாக வாழமுடியாத அபபாக்கியர்களான சிறுபான்மைத் தமிழர்களுக்கு கெளரவமான முகத்தைத் பெற்றுத்தருவதற்கு எம்.சி மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் பாடுகளும் புத்தாயிரத்தில் புதிய வெளிச்சத்தில் தரிசிக்கப்படுதல் வேண்டும்.
இலங்கை தமிழரசுக் கட்சி தமிழ் பேசும் இனம்' என்கிற கோஷத்தில் முஸ்லிம்களை இணைத்துக் கொள்ளலாம் என்று எடுத்த அரசியல் முயற்சி மிகப்பரிதாபகரமாகத் தோல்வியைத் தழுவிற்று காரியப்பர்களும், முஸ்தபாக்களும், மசூர் மெளலானாக்களும் வெட்கமின்றித்தந்தை செல்வாவின் முகத்திலே கரியைப் பூசித் தமது அரசியல் வியாபாரத்தை அமோகமாக நடத்தினார்கள்.
காலப்போக்கிலே தன்னைத் தேசியக் கட்சியாக மாற்றிக் கொள்ளு வதற்கான ஞானங்கள் பெரும்பாலானவற்றை எம்.சி. யின் அரசியல் செயற்பாடு களிலிருந்தும் நிலைப்பாடுகளிலிருந்தும் பெற்றார்கள் என்ற உண்மை ஈழத்தமிழர் வரலாற்றில் இடம் பெறாமை, வரலாறு எழுதுவதிலே நேர்மையும் நடுநிலைமையும் பேணப்படாமை காரணமாக இருக்கலாம். அறிவின் சந்நிதானத்திலே இந்த வழுக்கள் நேர் செய்யப்படுதல் வேண்டும்.
இலங்கை நாடாளுமன்றத்தில் சிறுபான்மைத் தமிழர்களின் பிரதிநிதியாக எம்.சி. சுப்பிரமணியத்தின் குரலே முதலில் ஒலித்தல் வேண்டும் என்பது சரித்திர நியதியாக அமைந்தது. கால் நூற்றாண்டு காலம் முழுநேர அரசியல் ஊழியனாக, யாழ் மண்ணிலே மார்க்ஸிய இயக்கத்தினை வளர்த்ததற்கான அங்கீகாரமாகவும் அஃது அமைந்தது. தனது சமூகத்தின் நிமிர்வுக்கு அவர் உழைக்க முடிந்த போதிலும், தன்னை நியமன உறுப்பினராக்க உதவிய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், நியமித்த அரசாங்கத்திற்கும் கீழ்ப்படிவுள்ள ஓர் உறுப்பினராக இயங்குதல் நாடாளுமன்ற அரசியல் பாராட்டும் மரபாகும். இதனை அறிந்திருந்த மேட்டுக்குடி அரசியல்வாதிகள், அவர் தமிழர் நலனைக் காட்டிக் கொடுத்தார் என்று தூஷண மழையை அவர்மீது பொழிவதற்குக் கொஞ்சமும் பின்னிற்கவில்லை. ஆனாலும் அந்த அகந்தையாளர் சிறுபான்மைத் தமிழனின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலித்தல் ஆகுமானது என்கிற ஞானத்தை எம்.சி.யின் நாடாளுமன்ற ஊழியத்திலிருந்தே பெற்றார்கள் என்கிற உண்மையை ஏற்றுக்கொள்ளவும் கூச்சப்படுகிறார்கள்.
மூப்பின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தின் கல்வி அதிகாரியாக எம்.சி.யால் முன்மொழியப்பட்ட இராஜலிங்கத்தை அவசர அவசரமாகத் தத்தெடுத்து தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கியதின் உண்மை வரலாறும், இப்பின்னணியில் மீள எழுதப்படவேண்டிய ஒன்றாகும். தமிழர் தேசியம் என்பதிலே சிறுபான்மைத் தமிழரும் இணைத்துக்கொள்ளப் பட்டார்கள்
22 .

என்று மேடைகளிலே பிரசாரம் செய்வதற்காக அவசரக் கோலத்திலே, தமிழரசுக் கட்சியினரால் செல்லத்துரை - நல்லையா - இராஜலிங்கம் ஆகியோர். தன்லைவர்களாக அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இவ்வாறு, தலைவர்களாக்கப்பட்ட அவர்கள் தனிப்பட்ட வகையில் ஆதாயம் பெற்றிருக்கலாம். அவர்களுடைய ஊழியத்தினால், சிறுபான்மைத் தமிழர்கள் வாழ்வியல் ரீதியில் அடைந்த நிமிர்வுகள் பற்றி ஒரு பந்தி எழுதுவதற்குக்கூட மூளையை மிகுந்த பிரயாசைகளுக்கும் கசக்குதல்களுக்கும் உட்படுத்த நேரிடும்.
இவற்றை நாம் கவனத்திலே எடுத்துக்கொள்ளும்பொழுது, ஈழத் தமிழர்களுடைய அரசியல் வரலாறு மீள்பார்வை செய்து, நடுவுநிலைமை பேணி, எதிர்காலத்தில் எழுதப்பட வேண்டிய ஒன்று என்பது புலப்படும். இந்த வரலாற்றின் நீட்சியாகத்தான் தமிழ் ஈழத்தின் போராட்ட வரலாறு அமையும். ஆறுமுகநாவலர், பொன்னம்பலம் சகோதரர்கள், ஜீ.ஜீ. பொன்னம்பலம் என வழக்கிலுள்ள வாய்பாடுகள் கிழித்தெறியப்பட்டு, தோழர் எம்.சி. சுப்பிரமணியத்தின் பெயரும் சேர்க்கப்படும் ஒரு புதிய வாய்பாடுதான் உண்மைத்தேடலுக்கான வழியைக் கோலும்.
இரண்டு பாடசாலைகளைத் தோற்றுவித்து, சைவ வேளாளரின் கல்வி முன்னேற்றத்திற்கு மட்டுமே உழைத்த ஆறுமுகநாவலரின் கல்வித்தொண்டு பற்றி உம்பாரமாக எழுதித் தள்ளியுள்ளார்கள். சிறுபான்மைத் தமிழர்கள் சமத்துவமும் சமநீதியும் சுகிக்கும் மனிதர்களாக எழுச்சி பெறுவதற்குக் கல்வி அபிவிருத்தியே திறவுகோலைத் தன்னகத்தே வைத்துள்ளது என்பதை அடிநாளிலேயே உணர்ந்து, சிறுபான்மைத் தமிழர் அதிகமாக வாழும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதிகளிலே பதினைந்து புதிய பாடசாலைகளை ஆரம்பித்தும், சிறுபான்மைத் தமிழர்கள் மத்தியிலே நூற்றுக்கணக்கான பயிற்றப்பட்ட ஆசிரியர்களை உருவாக்கியும், அவர்கள் மத்தியிலே கல்வி அதிகாரிகள் தோன்றிடச் சகாயித்தும் யாழ்ப்பாண மண்ணிலே, சிறுபான்மைத் தமிழர் மத்தியிலே, கல்வியின் மறுமலர்ச்சிக்கு அயராது உழைத்த எம்.சி.யின் பங்களிப்பும் இணைத்ததுவாக ஈழத்தின் தமிழர் கல்வி வரலாறு மீள எழுதப்படும் தேவையும் ஏற்பட்டுள்ளது. பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்' என்கிற பாரதி கனவைத் தமிழ்நாட்டில் காமராஜரும், ஈழத்தில் எம்.சி.யும் நனவாக்கினார்கள் என்கிற உண்மை அப்பொழுதுதான் வெளிச்சத்துக்கு வரும்.
வரலாற்றில் நேர்ந்துள்ள இந்த அசட்டைகளையும், பிறழ்வுகளையும் நேர்செய்து எழுதுவதற்கான ஓர் ஆவணமாக இந்நூல் அமைகின்றது. பல கட்டுரைகள் சம்பவங்களை நேரில் கண்டவர்களின் சாட்சியமாக (eye-Witness) அமைந்துள்ளன. எனவே, அவை நம்புதிறனுக்கு வலுச்சேர்க்கின்றன.
என்னுடைய சுயசரிதம் போன்றும், நான் வாழ்ந்த மண்ணினதும், சமூகத்தினதும் வரலாற்றினை சுமார் இரண்டாயிரம் பக்கங்களிலே விரியும் 'வரலாற்றில் வாழ்தல்' என்னும் நூலினை நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி வெளியிட்டேன். அந்நூல் ஓர் அறுபது ஆண்டு வரலாற்றின் ஆவணம்.
23

Page 15
அந்நூலில் பல்வேறு இடங்களில் எம்.சி. பற்றிக் குறித்துள்ளேன். அவை அவருக்குச் சொல் மாலை ஆட்டும் முயற்சியில் எழுதப்பட்டன அல்ல. அவரின்றி நான் இலக்கிய ஊழியனாய் உயர்ந்திருக்க முடியாது என்பதை நான் சத்தியமாகவே இங்கும் பிரசித்தப்படுத்துவதில் மனநிறைவு அடைகின்றேன். அவருடைய மகன் சந்திரபோஸின் வேண்டுகோளுக்கிணங்க அவற்றை ஓரளவு தொகுத்துத் தந்துள்ளேன். அது தனிக்கட்டுரையாகவே இந்நூலில் இடம் பெற்றுள்ளது.
எம்.சி. தீர்க்கதரிசனம் மிக்கத் தலைவன். கோஷதாரியாக அல்லாமல், களத்திலே தொண்டனாய், சேவகனாய், தோழனாய், நண்பனாய், நல்லாசிரியனாய், மந்திரியாய், பல பரிமாணங்களிலே, பல தசாப்தங்களாக நிமைப்பொழுதும் சோராது, உறுதியாகவும் தொடர்ச்சியாகவும் உழைத்தார். தன்னலங்களிலும் பார்க்க, தான் பிறந்த ஒடுக்கப்பட்ட சமூகம் சமத்துவமும் சமநீதியும் பெற்று உத்தம குடிமக்களாக உயருதல் வேண்டும் என்கிற ஊழியத்தையே தன் வாழ்க்கையின் அர்த்தமாக்கிக் கொண்டார். பேச்சிலும், செயலிலும், வாழ்க்கையிலும் எளிமையின் ஆராதனையாளராகவே வாழ்ந்தார். இவற்றினாலேதான், என் அத்தான் என்ற உறவுமுறைகளுக்கு அப்பாலாக அவர் ஓர் அபூர்வனாய் வாழ்ந்தார் என்று என் மனம் அஞ்சலி செய்கின்றது.
இந்த அஞ்சலி அணுக்கமானது: ஆத்மார்த்தமானது விசுவாசமானது. பதவிகள் எதுவுமே அவரிடம் நத்தாது. அவர் ஏற்றிய கல்வித் தீபத்தால் நிமிர்ந்து வாழும் பரமார்த்த தொண்டன் ஒருவனின் மனப்பூர்வமான அஞ்சலி,
24

உள்ளுறை
1. சமூக அசைவியக்கமும் அமரர் எம்.சி. அவர்களும்
காைநிதிசயா, விஜயராசா *** 27 2. எம்.சி. ஒரு வரலாற்றின்நாயகன்
ക. ക്രമസ്ക07 es 33 3. எம்.சி. நினைவிலே நிற்பவர்
ഗേffിu്ള കൽഭ്രൂ . 39 4. தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சிக்கு வித்திட்டவர்
என்.கே.ரகுநாதன் ... 43 5. எம்.சி. எனும் சமூகவாதி
@ബര് 55
6. எம்.சி. அரைநூற்றாண்டுச் சமதர்மவாதி
്റ്റം ശ്മ് ww. 61 7. எம்.சி.யின் கல்வித்தத்துவம்
எம்.என். அனைக்சான்டர் . 6ア 8. ஞாபகத்திலிருந்து சில குறிப்புகள்
ബം ക്രിഡ്ഢബി • 78 .
9. சிறுபான்மைத் தமிழ் மக்களின் விடிவெள்ளி
ச. வைரமுத்து 91 1O. 6Tib.d. 6T66T6pmob LDmLD6of 5ft.
gങ്ങുഴകീഴ്ത്തങ്ങിശ് 94 ..., 1. எம்.சி. ஒரு போராளி; மனிதநேயவாதி
வி.என். டராஜசிங்கம் 97 12. எம்.சி. சமூக விடுதலைப் போராளி
சி. சிற்றம்பனம் (காந்தி) «e se OO 13. பனை நிழலிலிருந்து பாராளுமன்றம் வரை எம்.சி.
என். வோையுதம் 8 O5 14. எம்.சி. சுப்பிரமணியம் ஒரு சமதர்மவாதி
பி. ஜே. அன்ரனி 11 Ο 15. எம்.சி. சுப்பிரமணியம்: வாழ்க்கைக்குறிப்பு
என். கந்தையா O 123 16. M.C. - Raja Collure M.P } { 129
எம்.சி. -ராஜா கொன்ரே எம்.பி.
17. எம்.சி. யும் உரிமை மறுக்கப்பட்டோரின் சமூக நகர்வும்
காைநிதிமா கருணாநிதி 134

Page 16
18. மக்கள் சேவையே மகேசன் சேவையாகக் கொண்ட காந்தியவாதி
மு. வடிவேன் 19. அமரர் எம்.சி. ஒரு யுக புருசன்
து. குததான் 20. தோழமைக்குரிய உண்மையான தொண்டன்
62ር .ጦUዕ፻፵፯õ ፰oJጠr 21. எனது தந்தையால் தோழர் என அழைக்கப்பட்டவர்
குநீதரசிங் ழாசிைங்கம்
22. தரணி போற்ற வாழ்ந்த தலைமகனே!
நிரோடின் சந்திரவிஜயகுமார்
23. தொண்டின் மறுவுரு தோழர் எம்.சி. சுப்பிரமணியம்
ore umanifasò
24. எம்.சி. எனப் பெயர் கொண்ட ஒரு மனிதன்
മ. തൈയ്കങ്ങഴ
25. மக்களுக்காகவே வாழ்ந்த எம்.சி.
& ക്രസ്ത്ര
26. ஏழைகளைச் சிரிக்க வைத்த தோழர்
M.G. duaốif
27. எம்.சி. ஒரு வியக்கத்தக்க மும்முனைப் போராளி
வன்னிபுரம் திருநாவுக்கரசு 28. மனித உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகங்களும் எம்.சி.யும் ராஜகுரீகாந்தன் 29. ஒடுக்கப்பட்ட மக்களின் ஏகத் தலைவன் எம்.சி.
62.paalunar 30. எம்.சி. என்றொரு தலைவன்
ஏன், கே, இராஜேந்திரம் 31. தமிழ் மக்களின் விடிவுக்காக போராடியவர்
வயிரமுத்துதிவ்யராஜன் 32. எம்.சி. என்றொரு மானிடன்
ஈழவன் 33. வைகறைப் பொழுது மீண்டும் வருவதெப்போது?
മം ഗ്രഖ0 IA 34. இலங்கை அரசியலும் சிறுபான்மைத்தமிழ் சமூகமும்
மு. பாக்கியநாதன்
35. வரலாற்றில் வாழ்தலில் எம்.சி.
ബ60/7
அநுபந்தங்கள்
139
143
147
151
154
156
168
175
179
183
186
191
2O1
2O4
214
218
224
232
259

aьбопб5 ашп. баштап
சமூக அசைவியக்கமும் அமரர் எம். சி. அவர்களும்
UTழ்ப்பாணத்துச் சமூக முரண்பாடுகளை விளங்கவும், விளக்கவும், அசைவியக்கங்களை ஏற்படுத் தவும், இரு பெரும் கருத்தியல் விசைகள் 1950ம் ஆண்டுப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டன. அவை,
(அ) காந்தியக் கருத்தியல் (ஆ) மார்க்சியக் கருத்தியல்
மேற்கூறிய இரண்டினதும் ஊட்டங்களால் வளம்பெற்ற ஒரு செயல்வினைஞராக (Activis) அமரர் எம். சி. சுப்பிரமணியம் விளங்கினார். ஒடுக்கப்பட் டோரை ஒன்றிணைப்பதற்குரிய பலம் பொருந்திய கருத்தியல் விசைகளாக இருந்த காந்தியமும், மார்க் சியமும், கோட்பாடு, நடைமுறை என்ற இரு தளங் களிலே இயங்கின. இருப்பு முதன்மையானது; சிந்தனை கள் இரண்டாவதாகக் கிளர்ந்தெழுவன என்ற மார்க்சிய அணுகுமுறை அமரர் எம். சி. அவர்களால் வலிதாக முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக்கொண்டு அதன் வழியாக ஒரு செயற்தொகுதி அமைப்பைக் கட்டி யெழுப்பியவராகவும் (System Builder), ஒரு காட்டுருவை 6ulg-6)J60)LD556).JIT356yib (Model Builder), 9y6upplg)TLT5

Page 17
orig03ureo O 28
ஒரு மார்க்கத்தைக் கண்டறிந்தவராகவும் (Pathfinder) அவர் விளங்கினார்.
யாழ்ப்பாணச் சமூக அசைவியக்கத்தை (Social Mobility)விளங்கிக் கொள்வதற்கு அமரர் எம்.சி. அவர்களின் வாழ்வும், பணிகளும் ஆய்வுக்குரிய தகுந்த குறியீடுகளாகவுள்ளன. அறிகை நிலையிலே காந்தியம், மார்க்சியம் முதலியவற்றை வேரூன்ற வைப்பதற்கு முயன்ற திருவாளர்கள் ஹன்டி பேரின்பநாயகம், கு. நேசையா, ஏ. ஈ. தம்பர், அ. வைத்திலிங்கம், மு. கார்த்திகேயன், ஐ. ஆர். அரிய ரத்தினம், வி. பொன்னம்பலம் முதலியோரிலும் வேறுபட்ட பரிமாணங்கள் அமரர் எம். சி. இடத்துக் காணப்பெற்றன. அமரர். எம். சி. அவர்கள் ஒடுக்கப்பட்டோரை விடுவிப்பதற்குரிய நேரடியான செயல்வினைஞராக விளங்கினார்.
இவருடைய செயல்வினைப் பண்புகள் பின்வரும் இயல்பு களைக் கொண்டிருந்தன.
அ. பிரச்சனை - நடைமுறைக் கோட்பாடு என்பவற்றின்
ஒன்றிணைப்பு.
நீதியிலே தொடங்கி நீதியிலே முடிவடையும் போக்கு,


Page 18
orgBurreo O 3O
உ. ஒடுக்கப்பட்டோர் மத்தியில் காரணங்காணும் திறன், தெறிசிந்தனை, திறனாய்வு மனப்பாங்கு, அரசியல் உணர்வு, அநீதிகளை உடைத்தெறியும் செயற்திறன் முதலியவற்றை வளர்ப்பதற்கு உதவியமை.
முறைசார் கல்வி நடவடிக்கைகள், முறைசாராக் கல்வி நடவடிக்கைகள் முதலிய முறைமைகளின் வழியாக ஒடுக்கப்பட்ட மக்களின் மேல்நோக்கிய சமூக அசைவியக்கத்துக்குத் தூண்டுதல் வழங்கினார். இவற்றின் தொடர்ச்சியும் வளர்ச்சியுமாகப் பல்கலைக் கழகங்களிலே ஒடுக்கப்பட்ட மாணவர்கள் கற்கும் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. ஆனாலும் நாட்டின் ஒட்டுமொத்தமான கல்வி முறைமை சமூக ஏறுநிரல் அமைப்புடன் இணைந்து நின்ற மையால், முழுமையான சமூக மாற்றம் என்பது எட்டப்பட முடியாம லிருந்த இடர்ப்பாட்டினையும் அவரது பட்டறிவால் அறிந்து கொள்ள முடிந்தது. அதாவது, இந்நாட்டின் கல்விமுறைமை உயர்ந்தோரியல் பண்புடையதாக (Elis) இருந்தமையால் வெவ்வேறு வரையறைகள் கொண்டிருந்தது.
யாழ்ப்பாணத்துக் கல்விச் செயற்பாடுகளை விரிவாக ஆராய்ந்து பார்க்கும்பொழுது, பள்ளிக்கூடங்களைவிட்டு அதிக தொகையினராக இடைவிலகுவோர், பள்ளிக்கூடம் செல்லாதோர் முதலியோர் ஒடுக்கப்பட்டோராயிருக்கும் நிலைமையும் அமரர் எம். சி. அவர்களால் அறியப்படமுடிந்தது.
ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதன் வாயிலாக இப்பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியும் என அவர் கருதினார்.
சமூக நிலை மாற்றத்தின் அனைத்துப் பண்புகளையும் தழுவிய அகல்வரி (Comprehensive) அணுகுமுறையை அவர் முன்னெடுத்தார். இவற்றின் கூட்டுமொத்த விளைவாக "ஒடுக்கப்பட்டோரின் வீரியம்” என்ற எண்ணக்கரு வளர்க்கப்படலாயிற்று. மூன்று தனிமங் களைக் கொண்டதாக அந்த எண்ணக்கரு வளமூட்டி வளர்க்கப் பட்டது. அவை
அ. ஒருமைப்பாடு (Unity)
ஆ, உறுதிப்பாங்கு (Stability)
இ. சாதியத்தை உள்ளடக்கிய வர்க்க நிலையான போர்
2-556) (Class Struggle)

31 9ே எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
ஒடுக்கப்பட்டோரின் மேம்பாட்டுத் தொடர்ச்சியில் ஒவ்வொரு கூறும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டிருந்தமையை (Inter connections of Successive Steps of Development) gy6.Ji 56öTL-pj5/Tir. gig5 அணுகுமுறையை முரணியல் பற்றிய அவரது உணர்வு வளப் படுத்தியது. யாழ்ப்பாணச் சமூக மாற்றம் பற்றிய பின்வரும் அறிக்கைக் கோலங்கள் அவரிடத்து வளர்ச்சியுற்றுக் காணப்பட்டன.
1. யாழ்ப்பாணச் சமூக மாற்றத்துக்கான தேவையை
விசைப்படுத்துதல்.
2. சமூகத்தின் கட்டமைப்பும் சாராம்சமும் எதிர் முரண்பாடுகளால் இணைக்கப்பட்டிருந்தமையைப் புலப்படுத்துதல்.
3. சமூகத்தின் போக்கு தானாகவே மாறாதென்றும், மாற்றப்பட வேண்டும் என்பதற்கான உணர்வுகளைப் புலப்படுத்துதல்.
4. உணர்வுகளை யதார்த்தத்தின் தெறிப்பாக்கி (Reflection
of Reality) Gau GMTrig56iv.
மேற்கூறியவற்றை அடியொற்றிய தலைமைத்துவப் பண்புகள் அமரர் எம். சி. அவர்களால் கட்டியெழுப்பப்பட்டன. அவரது தலைமைத்துவ ஆளுமை பின்வரும் பரிமாணங்களை வெளிக் காட்டியது.
1. ஒடுக்கப்பட்டோருக்குச் சாதகமானதும், பாதகமானது LDIT60T 67 Sir Gosfupcoptegs556061T (Opposing Systems) இனங்காணல். A. 2. யாழ்ப்பாணச் சமூகத்தின் முரண்படும் விழுமியங்
&56061Tg5 (Conflicting Values) ColgafayuGSgglpi).
3. சமத்துவம் என்ற ஆழ்ந்த எண்ணக்கருவை (Meaning of Equality) நடைமுறைத்தளத்திலும், கருத்துத் தளத்திலும் புலப்படுத்துதல்.
4. சமூகத்தில் அங்கீகரிக்கப்படாத பொறுப்புகளை
(Unrecognized Responsibility) geoTIsist Gigoi.
S. அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ளலைத்
(Learning from Experience) G56flayLJG5gglg56i.
6. ஒடுக்கப்பட்டோரின் பாதுகாப்புக்கான போராட்
g5605 (Struggle for Security) 66) iLIG5gglg56).

Page 19
örbig8uTeo O 32
Z சமூக நிறுவனங்களில் திறன்முனைப்புள்ள பங்கு
Lupp606u (Strategic Participation) (yp6óTGol6076556).
8. பொறுப்பியல் (Accountability) மிக்க நிர்வாகத்தை
ஏற்படுத்துதல்.
9. ஒடுக்கப்பட்டோரின் ஆளுமையையும், படைப்பாற்ற லையும் முழுவீச்சுடன் வெளிக்கொண்டு வருவதற் குரிய ஒன்றிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
மேற்கூறிய அகல் விரிபண்புகளைக் கொண்ட தலைமைத் துவத்தை அவர் முன்னெடுத்தமையால், இயக்கப்பண்புள்ள தலைமைத்துவத்தை அவரால் உருவாக்க முடிந்தது. "யாழ்ப்பாணச் சமூகத்தை வியாக்கியானம் செய்வதிலும், அதனை மாற்றி யமைப்பதே மேலானது" என்ற கருத்து அவரால் தொடர்ச்சியாக முன்மொழியப்பட்டது. இவற்றின் வாயிலாக நலிந்த பிரிவினருக் குரிய பலம் பொருந்திய புலக்காட்சி கட்டியெழுப்பப்பட்டது.
யாழ்ப்பாண சமூகத்தின் பொருள்சார் பெறுமானங்களை உருவாக்குவதில் ஒடுக்கப்பட்டோரின் பங்களிப்பானது உணர்வு பூர்வமாகத் தெரியப்படுத்தப்படலாயிற்று. உழைப்போரிடத்து ஏற்படுத்தப்பட்ட நுண்மதியாற்றல் பெருக்கம், பின்வரும் துறை களிலே தாக்கங்களை ஏற்படுத்தியது.
1. 2 göl uğ585;&# GolağFulu6ü)(typaÖop (Production Activity)
2. stepdid Gafugi Opaop (Social Activity)
3. அரசியற் செயல்முறை (Political Activity)
யாழ்ப்பாணத்துச் சமூக அசைவியக்கங்கள் ஆய்வாளர்களி னால் விரிவாக ஆராயப்படுகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களின்
வாழ்க்கையில் ஏற்பட்டுவரும் தொடர்ச்சியான மேம்பாடு, ஆய்வு களின் வழியாகச் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.

aь. ӨБператшп
எம். சி. ஒரு வரலாற்றின் நாயகன்
எம். சி. என்று நண்பர்களாலும், எம். சி. ஐயா எனப் பலராலும் அழைக்கப்படும் எம். சி. சுப்பிர மணியம் ஒரு வரலாற்று நாயகன். தொண்ணுறு வயதைத் தாண்டி நினைவுகள் மங்கிக்கொண்டு போகும் இந்நிலையில் அந்த வரலாற்றின் ஆரம்பம், அதில் எம்.சி.யின் ஈடுபாடு, எம்.சி.க்கு வழிகாட்டிய வர்கள், இணைந்து செயற்பட்டவர்கள் ஆகியோரை எனது நினைவிற்கு எட்டிய வரையில் இங்கு பதிவு செய்வது எனது தார்மீகக் கடமையாகும்.
இன்று தமிழ் மக்களின் அரசியலில் ஒரு புதிய சகாப்தம். சிங்கள இனவாதத்திற்கெதிரான போராட் டத்தில் தமிழன் என்ற ரீதியில் சாதியின் பெயரால் அடக்கப்பட்டவர்கள், நிலமற்றவர்கள், அடக்கி ஆண்டவர்கள், வசதிபடைத்தவர்கள் என்று வர்க்க, சமய, சாதி பேதமின்றி இணைக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழர்களின் நிலம் பறிபோகிறது. உயர்கல்வியில் ஒடுக்கப்படுகின்றான். பெரிய பதவிகள் பறி போகின்றன. தமிழன் இரண்டாந்தரப் பிரசையாக ஆக்கப்படுகின்றான். இதுவே தமிழ் மக்களின் கூக்குரல்! இதற்காக நாட்டுப்பிரிவினை கோரி வாலிபர்கள் போராடிக்கொண்டும், உயிர்த்தியாகஞ் செய்து கொண்டும் இருக்கின்றார்கள்.

Page 20
சந்திரபோல் O 34
அறுபது ஆண்டுகளுக்குமுன் இதே காரணிகளுக்காகத்தான் தமிழ் மக்களின் ஒரு பகுதியினர் யாழ்ப்பாண உயர்சாதியினர் எனத் தமக்கு முத்திரை குத்திக்கொண்டவர்களின் அடக்கு முறைக்கு எதிராகப் போராடத் தொடங்கினார்கள். இப்போராட் டத்திற்குத் தலைமை தாங்கியவர் எம். சி. என அழைக்கப்படும் எம். சி. சுப்பிரமணியம் ஆவார்.
வாழ்வதற்குச் சொந்த நிலமில்லை, ஆரம்பக் கல்வியே மறுக்கப் பட்ட நிலை, அடிமைத்தனமான வேலை வாய்ப்புகள், கோவில்கள், தேநீர்க் கடைகள், சுடலைகள் ஆகியவற்றில் பாரபட்சம். யாழ்ப் பாணத்து வேளாள இனம் இந்து சமய பின்புல ஆதரவோடு வீறாப்புடன் விளங்கிய காலகட்டம்.
சிங்கள இனவாதத்தால் கட்டவிழ்த்து விடப்படும் அக்கிரமங் களை அகில உலகும் கேட்கும்படியாக தமிழ் மக்கள் இன்று ஓங்கிக் குர்லெழுப்புகிறார்கள். இதே தமிழ்மக்கள் மத்தியில்தான், ஒரு பகுதியினரின் வீடுகள் கொளுத்தப்பட்டன. பொதுக் கிணறுகளில் நஞ்சு கலக்கப்பட்டது. நியாயம் கேட்டவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். சொந்தமான கொஞ்ச நஞ்ச நிலங்களும் பறிக்கப்பட்டன.
இவ் அநீதிகளுக்கெதிராக எழுந்த போராட்டத்திற்குத் தலைமை தாங்கி யாழ்ப்பாணத்துச் சாதி அமைப்பின் அக்கிரமங் களை, மனித உரிமை மீறல்களை முழு இலங்கைக்கும் அம்பலப் படுத்தியவரும் எம். சி தான்.
"தமிழ்மக்கள் மத்தியில் நிலவிய சாதி அமைப்பு நீதியற்றது" என்று, கொள்கை ரீதியான நிலைப்பாட்டை முதலில் எடுத்தது, இலங்கை இளைஞர் காங்கிரஸ் என்ற இயக்கம் ஆகும். முற் போக்குச் சிந்தனையுள்ள இதன் தலைவர்களும், திருவாளர்கள் எஸ். தர்மகுலசிங்கம், பொன். கந்தையா போன்ற இடதுசாரித் தலைவர்களும் சாதி ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தில் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்குத் தங்கள் ஆதரவை வழங்கினார்கள்.
'அடித்தால் திருப்பி அடி’ என்று அடக்கப்பட்ட மக்களுக்கு அறிவுரை கூறி உற்சாகப்படுத்தியவர் பெருமகன் எஸ். தர்மகுல சிங்கம். சீவல் தொழிலாளர்கள் வாழ்ந்த பருத்தித்துறை சாந்தா தோட்டம் கிராமத்தில் அவர்களின் வயிற்றில் அடிக்கும் நோக் கோடு அவர்களுக்கு ஊதியம் தரும் பனை மரங்களின் பாளை களை, தங்கள் ‘கைக்கூலிகளை வைத்து இரவோடு இரவாக வெட்டி எறிந்துவிட்டார்கள் இவ்வூர்ச் சாதிமான்கள். பாதிக்கப் பட்ட மக்கள் திரு. எஸ். தர்மகுலசிங்கத்திடம் சென்று முறையிட்

35 0 எம்.சி. ஒரு சமுக விடுதலைப் போராளி
டார்கள். "உங்கள் மரங்களை அவர்கள் வெட்டினால் அவர்களுக்கு வருமானம் கொடுக்கும் புகையிலை மரங்களை வெட்டுங்கள்” என்று ஆலோசனை கூறி அவர்கள் போராட வேண்டிய அவசியத்தை உணர்த்தியவர் தர்மகுலசிங்கம் அவர்களே ஆகும்.
இக்காலகட்டத்தில் சமத்துவத்தை வலியுறுத்த ‘சமபோசனம் இலங்கை இளைஞர் காங்கிரசால் ஒழுங்கு செய்யப்பட்டது. தென் பகுதி இடதுசாரித் தலைவர்களும் இதில் கலந்து கொண்டார்கள். எமது சமூகத்தின் சார்பாக திரு. ஜேக்கப் காந்தி, ஜி. எம். பொன்னுத்துரை, திரு. ஜே. போல் ஆகியோரோடு நானும் கலந்து கொண்டேன். இவ்வகையான அரசியல் சூழ்நிலைகளின் உந்து தலால் யாழ்ப்பாணம் பலாலி வீதியில், அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர்களால் 'சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்கம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. முழுச் சிறுபான்மைத் தமிழ் மக்களின் போராட்டங்களுக்கும் முன்னோடியான இச்சங்கம் இன்னும் யாழ் பலாலி பருத்தித்துறை வீதிச் சந்தியில் கம்பீரமாகக் காட்சி தருகின்றது.
சம்பத்திரிசியார் கல்லூரியில் ஆங்கிலப் படிப்பை இடை நிறுத்திவிட்டு திருகோணமலையில் ஆங்கிலக் கொம்பனியான ‘எலிபன்ட் கவுஸ்" இல் வேலையைப் பொறுப்பேற்றார் எம்.சி. அநியாயங்களைக் கண்டு குமுறும் உள்ளங்கொண்ட எம்.சி.யால் உத்தியோக வாழ்க்கையைத் தொடர முடியவில்லை. வேலையை உதறிவிட்டு யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார்.
யாழ்ப்பாணத்துச் சாதி அமைப்பிற்கு எதிராகப் போராடுவதே தன் வாழ்க்கையின் நோக்கமாக வரித்து 'சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்கத் தில் தன்னை இணைத்துக் கொண்டார். தன் சமூக மக்களுக்காக மட்டுமல்லாமல் முழு உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்காகப் போராடுவதற்காகக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இணைந்து கொண்டார். ச. ஐ. வா. சங்கத்தின் தலைவராக சமூகப் பிரச்சனைகளைக் கையாண்டு பெற்ற அனுபவங்களும், அச்சங் கத்தைச் சேர்ந்தவர்களின் ஆதரவும், பக்கபலமும்தான் அவரைச் சிறுபான்மைத் தமிழ் மக்களின் ஏகதலைவனாகப் பரிணமிக்க வழிவகுத்தது என்பதை அடித்துச் சொல்வேன்.
‘சாதிக்கு எதிரான போராட்டம் பரவலாக்கப்பட வேண்டும்; ஸ்தாபன ரீதியாக வலுப்பெறவேண்டும்’ என்ற தேவையை எம். சி.க்கு உணர்த்தியவர் பொ. கந்தையா அவர்கள். இவரின் அறி வுரையின் பெயரில்தான் ‘அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபை உதயமானது. பெரும்பான்மைச் சமூகத்திடமிருந்த பண, அரசியல், அதிகார பலங்களால் அடக்கப்பட்டு மெளனிகளாக

Page 21
சந்திரபோஸ் O 36
இருந்த சிறுபான்மைத் தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளுக்காகக்
குரல் எழுப்ப ஏதுவாக இருந்தது இம்மகாசபையே. அந்திம காலம்வரை இதற்குத் தலைமை தாங்கி வழிநடத்தியவர் எம். சி.
தமிழ் மக்கள் மத்தியில் நிலவிய சாதி அடக்குமுறையைக் கண்டும் காணாமல், பெரும்பான்மைச் சமூகத்தின் மனம் கோணாமல், இனவாத அரசியல் நடத்திய தளபதிகளும், எல்லைக் காவலர் களும், சிங்கங்களும் இன்று விலாசமிழந்து அரசியல் வனாந்தரத் துக்குள் எறியப்பட்டுள்ளார்கள். இத்தமிழினத்தின் அடக்கு முறைக்கும் அராஜகத்துக்கும் உட்படுத்தப்பட்டு சமூகத்தின் அடி மட்டத்தில் வாழ்ந்த மக்களின் விடுதலைக்காகத் தன் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் அர்ப்பணித்த எம். சி. ஓர் ஒப்பற்ற தலைவனாக தன் மக்களால் இன்றும் போற்றப்படுகிறார். மனைவி மக்களுக்கு மேலாக சமூக சேவைக்கு முன்னுரிமை கொடுத்தவர் எம். சி. மனிதநேயம் அவர் நெஞ்செல்லாம் நிறைந்திருந்தது.
தனிமனிதனான எம். சி. யிடம் சில அலாதியான பழக்க வழக்கங்கள் இருந்தன. இவருக்கு எதிரிகள் கிடையாது. இவர் யாரையும் வெறுப்பதில்லை. நகைச்சுவை உணர்வுள்ளவர், மகிழ்ச்சி யில் அட்டகாசமாகச் சிரிப்பார். அப்போது அவர் கண்கள் மூடிக்கொள்ளும். நின்று கதைக்கும்பொழுது அவரை அறியாமலே அவர் கால்கள் ஆடிக்கொண்டிருக்கும். தூய வெள்ளை வேட்டி வேட்டிபோல தோற்றமளிக்கும் சாரம்) 'நஷனலோடு’ எந்நேரமும் கம்பீரமான தோற்றம். உடைகளின் தூய்மையில் அதீத கவனம் பேணுவார்.
எம். சி. யின் ஆரம்பகால சமூக வாழ்வில் நான் நெருக்கமாக இணைந்து செயலாற்றியுள்ளேன். ஜேக்கப் காந்தி, ஜி. எம். பொன்னுத்துரை, ஜீ. நல்லையா, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆர். ஆர். பூபாலசிங்கம் எல்லோரும் மாலை வேளையில் என் வீட்டில் கூடிப் பேசுவோம். அரசியல், சமூக, பொதுப்பிரச்சனை களை மையமாகக்கொண்டு விவாதங்கள் நடுஇரவு வரை நீண்டு விடும். நோக்கம் ஒன்றென்றாலும், அணுகுமுறை வேறுபட்டால் அயலே அதிரும்படியான முழக்கங்களோடு சொற்போர் நடக்கும். எம். சி. ஜி. எம், காந்தி இவர்கள் உணர்ச்சிவசப்பட்டால் தொண்டை கிழியக் கத்திப் பேசுவார்கள். காந்தி தன் கைத்தடியால் எம். சி. யின் முதுகில் அடித்தும் இருக்கிறார். இறுதியில் சகோதரர் போலவே பிரிவோம். ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பும், நட்பும், மரியாதையும் வைத்திருந்தோம்.
க்ாந்தி ஐயா என்று எம் மக்களால் அன்போடு அழைக் கப்படும் ஜேக்கப் அவர்கள் உடுவிலைச் சேர்ந்தவர். யாழ்ப்

37 0 எம்.சி. ஒரு JŠpወ விடுதலைப் போராளி
பாணக் கல்லூரியில் பயின்றவர். சிறுபான்மீதி தீமிழர்களின் மூத்த தலைவர்களில் ஒருவர். மகாத்மா காந்தியின் கொள்கையால் ஆகர் சிக்கப்பட்டதால் மேலங்கி ஏதும் அணியாமல் கதர் வேட்டியும், கைத்தடியும் அவரது அடையாளச் சின்னங்கள். சூட்டும் கோட்டும் போட்ட கறுவாக்காட்டு சீமான்கள் ‘காந்தி’ பட்டம் பெறுமுன்பே காந்திப்பட்டம் பெற்று எளிமையாக வாழ்ந்து காட்டியவர் எங்கள் ஜேக்கப் காந்தி அவர்கள். “செனற்’ பதவிக்கு ஏற்ற தகுதிகள் இருந்தும் அதற்குத் தடையாக இருந்தது அவரது தோற்றமே. எதிர்க்கட்சியில் இருந்த சமயம் எஸ். டபிள்யூ ஆர். டி. பண்டாரநாயக்கா யாழ்ப்பாணம் வந்திருந்தார். எமது மக்கள் சார்பில் அவரை வரவேற்று ஆங்கிலத்தில் உரையாற்றினார் காந்தி வருங்காலப் பிரதமரே எனத் தீர்க்கதரிசனமாக அவரை வரவேற்றார்.
சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்கம், அகில இலங்கைச் சிறு பான்மைத் தமிழர் மகாசபை, வட இலங்கைக் கள்ளிறக்கும் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றில் தலைவர் உட்பட பல பதவிகள் வகித்து எமது சமூகத்திற்குச் சேவையாற்றிய பெருமகன் ஜேக்கப் காந்தி அவர்கள். இவரது ஆலோசனைகளையும், வழிகாட்ட லையும் எம். சி. தனது பொதுவாழ்வில் பெற்றுக்கொண்டார்.
ஜி. எம். என்று அழைக்கப்படும் திரு. ஜி. எம். பொன்னுத் துரை, எம். சி.யிலும் வயது கூடியவர். இருவரும் நெருங்கிய நண்பர்கள். எமது போராட்டத்தை ஆரம்பித்த முன்னோடிகளில் ஒருவர். மகாசபை, ச. ஐ. வா. ச. போன்ற ஸ்தாபனங்கள உருவாக எம். சி.யுடன் இணைந்து உழைத்தவர் ஆங்கிலத்தில் எழுத்து வல்லமையுடையவர். ஆங்கிலத்தில் மகஜர்’, பிரசுரங்கள் தயாரிப்பது இவரிடமே ஒப்படைக்கப்படும். அநீதியைத் துணிச்சலுடன் மோதும் ஒரு நேர்மையாளர். சம்பத்திரிசியார் கல்லூரியில் பயின்ற காலத்தில் தமிழ் கத்தோலிக்க சுவாமியார் ஒருவர் இவரிடம் "நீ என்ன சாதி?” என்று வினவ, “சகல ஜீவராசிகளும் சமமே என போதிக்கும் சிறிஸ்துவ சமயத்தின் பிரதிநிதியாகிய நீயே சாதி பேசுகிறாயே" என முகத்தில் அடித்தாற்போல் கூறிவிட்டு கல் லூரியை விட்டு வெளியேறியவர். அந்நாட்களிலேயே சீர்திருத்த மணம் செய்தவர். சமயங்களிலேயே சாதி ஒட்டியிருந்ததால் இறுதிவரை நாத்திகனாகவே வாழ்ந்தவர்.
தமிழ் ஈழம் நிர்மாணிக்கப்பட்டால் அதில் சாதி வேறு பாடும், வறுமையும் ஒழிக்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளை ஞர்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டத்தில் இணைந் துள்ளனர்.

Page 22
orbáßgBurdo O 38
அதே சமயம் சுயாட்சி கிடைக்கும் கட்டத்தில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வெளிநாடுகளில் வாழும் தமிழ் இன மேலாதிக்கவாதிகளும், பிற்போக்காளர்களும், தங்களைத் தயார் படுத்துகின்றார்கள். புதிய வடிவங்களோடு பொருளாதார ரீதியில் தம்மைப் பலப்படுத்தி வருகிறார்கள். எம். சி. யை நினைவுகூரும் இவ்வேளையில் எமது சமூகமும் இன்றைய அரசியல் நிகழ்வு களை அவதானித்து விழிப்புடன் செயல்படவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
துப்பாக்கி நிழலில் சாதிகள் மறைந்து கிடக்கின்றன, மரணித்து விடவில்லை. ஈழத்தமிழருக்கு சுயஆட்சி கிடைக்கும் பொழுது சகல அடக்குமுறைகளும் அற்ற ஒரு சமத்துவ சமுதாயம் மலரவேண்டும். அப்பொழுதுதான் அமரர் எம். சி.யின் ஆத்மா சாந்தியடையும். அதுவே நாம் அன்னாருக்குச் செய்யும் அஞ்சலியுமாகும்.

(BuI&fuă é. vedopardo
எம்.சி. நினைவிலே நிற்பவர்
அமரர் திரு. எம். சி. சுப்பிரமணியம் அவர் களை அவருடைய மகனும், எனது மாணவனுமாகிய திரு. சந்திரபோஸ் மூலமே எனக்குத் தெரியவந்தது. நான் சிறுவனாக இருந்த காலத்தில் திருகோண மலைக்குப் பீற்றர் கெனமனுடன் வந்த இவரை எம். சி. சுப்பிரமணியம் என அன்று பெயரளவிலே அறிந்துகொண்டேன். 1965க்குப் பின்னர் வட்டுக் கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் பட்டதாரிப் பிரிவில் சந்திரபோஸ் மாணவனாக என்னிடம் கற்றபொழுது நானும் என் மனைவியும் அவருடைய குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புள்ளவர்களானோம்.
எம். சி. கொள்கைப் பிடிப்புடைய, கொண்டது விடாத பண்புடையவர். எடுத்த கருமத்தை எப்படி யாவது முடிக்க வேண்டுமென்ற முயற்சியுடையவர். ஒரு தலைவருக்குரிய பண்புகளைக் கொண்டவராக அவர் விளங்கினார். இதனாலேயே இன்றும் அவர் நினைவுகூரப்படுகின்றார்.
புலம்பெயர்ந்த எம் மக்கள் தாங்கள் வாழ்ந்த இடங்களை அடிக்கடி எண்ணிக்கொள்வது வியப்பல்ல. அத்தகைய எண்ணங்களின் வடிகால்கள் பலவாறாக அமைகின்றன. புலம்பெயர் இலக்கியங்கள், பண்பாட்டு, விழாக்கள், நாட்டிலிருந்து வந்தவர்களை வரவழைத்து

Page 23
சந்திரபோஸ் O 40
சிறப்புச் செய்தல், நீத்தார் நயப்பு என்பன சில எடுத்துக் காட்டுகள். எம். சி. பற்றி வெளிவரவுள்ள மலர் ஒரு வகையில் நீத்தார் நயப்பு ஆகும்.
அமரர் எம். சி. வாழ்ந்த காலம் பல்வேறு சமூக ஒடுக்கு முறைகள் நிறைந்த காலமாகும். இவர் போன்றவர்கள் கொள்கை அடிப்படையிலும் அரசியல் அடிப்படையிலும் சமூக ஏற்றத் தாழ்வுக்கு எதிராகச் செயல்பட்டனர். இச்செயல்பாடு கே. டானியல், டொமினிக் ஜீவா, செ. கணேசலிங்கன் போன் றோருடைய இலக்கிய ஆக்கங்களுக்குப் பக்கபலமாயிற்று. அவற்றி னுடைய சமூகத் தாக்கத்தினை இன்று நாம் உணருகிறோம். அன்றிருந்த சமூக ஏற்றத்தாழ்வின் வீறு இன்றில்லை. அந்த வீறு அடங்குவதற்குக் காரணமாயிருந்தவற்றுள் அமரர் எம். சி. யின் செயற்பாடும் ஒன்றாகும்.
நீண்டகாலமாக ஒரு மகாசங்கத்தினுடைய தலைவராக ஒருவர் இருப்பதென்றால் அவரிடம் தலைமைப் பண்புகள் பல இருக்கவேண்டுமென நம்பலாம். அமரர் எம். சி.யிடம் இப்பண்புகள் இருந்த காரணத்தாலேயே மகாசங்கத் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கக் கூடியதாயிருந்தது.
ஒருபகுதி மக்களுடைய கஷ்டங்களுக்கும், அக்கஷ்டங் களைத் தீர்த்துவைக்கக்கூடிய நிறுவனங்களுக்குமிடையே எம். சி. எப்பொழுதுமே இருப்பார். தங்கள் கஷ்டங்களை உரிய இடங் களிலே உரிய முறையிலே கூறி நிவாரணந் தேடித்தரும் ஒருவர் என அவரை நம்பி வாழ்ந்த பலரை எனக்குத் தெரியும். யாரும் கதைக்க வந்தால், கண்ணை மூடிக்கொண்டே அவர் பேசுவார். ஆனால் எல்லாவற்றையும் கிரகித்துக்கொண்டேயிருப்பார். அவரை நான் முதல் முறை சந்திக்கவிருந்தபோது, சந்திரபோஸ் முன்னேற்பாடாக எனக்குக் கூறியது, "அப்பா கண்ணை மூடிக் கொண்டு கதைப்பார். அவர் வேறு தியானத்தில் இருக்கிறார் என்று நீங்கள் நினைத்துவிட வேண்டாம்” என்பதாகும். யாழ்ப் பாணம் பல வருடங்களுக்கு முன் வேறுபட்ட நிலையிலேயே இருந்தது. சாதிவேறுபாடு முனைப்புப் பெற்றிருந்த காலம். தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் ஒன்றுதிரண்டு நிறுவன ரீதியாக நடவடிக்கைகளிலே இறங்கினாலன்றி, சாதி வேறுபாட்டுக் கொடுமைகளைத் தீர்க்க முடியாமலிருந்தது. இந்த வகையிலே ஒரு தொழிற்சங்கவாதியாகக் கூடிய தகைமைகளைக் கொண்ட எம். சி. அவர்கள். அம்மக்களை முன்னின்று வழிநடத்தலானார். வட இலங்கைக் கள்ளிறக்கும் தொழிலாளர் சங்கத்தின் பொதுக் காரியதரிசியாக இருந்து, ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களின் நலனுக்கும் மேம்பாட்டிற்கும் உழைத்தார். தமிழ் எழுத்தாளர்கள்

41 9 எம்.சி. ஒரு சமுக விடுதலைப் போராளி
ஒருபுறம் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை, இன்னல்களை, வாழ்வு நெறிகளை எழுத்துக்களிலே வடித்துப் பரிகாரம்தேட, மற்றொரு புறம் தொழிற்சங்க ரீதியாக எம். சி. போன்றவர்கள் உழைத்து வந்தனர். இலங்கைத் தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதிநிதியாக இவர் 1961இல் சோவியத்யூனியன் முதலாய நாடுகளுக்குச் சென்று வந்தார்.
அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகாசபையிலும் இவர் முக்கிய பங்கு கொண்டு பல பணிகளை ஆற்றியுள்ளார். தன்னுடைய சமூகத்தினருக்குத் தொண்டாற்றுவதிலேயே தன் னுடைய வாழ்நாளை இவர் செலவிட்டுள்ளார். நான் யாழ்ப் பாணக் கல்லூரியிலே படிப்பித்த காலத்தில் அடிக்கடி இவ ருடைய வீட்டிற்குச் செல்வதுண்டு. அங்கு அவருடைய மனைவி மக்களைப் பெரும்பாலான சந்தர்ப்பங்களிலே கண்டு கலந்துரை யாடி வருவதுண்டு. இவரை வீட்டிலே சந்திப்பது அரிது. பல ருடைய விடயங்களுக்காகப் பல்வேறு இடங்களுக்குச் சென்று வருவது இவருடைய வழக்கம். மகன் சந்திரபோஸ் மூலமாக அவருடைய பல்வகைப்பட்ட சமூகத் தொண்டுகள் பற்றியும் அறிய வாய்ப்பேற்பட்டது.
பணம்பொருள் அபிவிருத்திச்சபை ஈழத் தமிழரின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு சிறிய அளவிலேனும் பங்களிக்கக் கூடியதொன்றாகும். அதனுடன் தொடர்புள்ள தொழிலாளர் களின் நலன்களைப் பேணவும், அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் வாய்ப்புகள் கொண்ட சபை அது. அச்சபையின் அமைப்புப் பற்றியும் அதன் ஆக்கத்திறன்கள் தொடர்பாகவும் எம். சி. அவர்கள் கிாலத்துக்குக் காலம் தன் னுடைய கருத்துக்களைக் கூறி வந்துள்ளார். தனக்குச் சரியெனப் பட்டதையும், அதனால் தன்னைச் சார்ந்தவர்களுக்கு நன்மை கிட்டும் எனக் கண்டதையும் விடாப்பிடியாக அரசுக்கு எடுத்துக் கூறுவதிலே அவர் தயங்குவதில்லை. சாதாரணமாக அவருடன் பேசும்பொழுது அவரிடம் ஒரு குழந்தைப்பிள்ளைத்தனம் தெரியும். ஆனால் தொழிற்சங்க ரீதியான நடவடிக்கைகளிலும், தன்னைச் சார்ந்தோருக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கூறும்போதும் அவரிடம் மிகுந்த கடுமை தென்படும்.
நாங்கள் எம். சி. வீட்டிற்குப் பலதடவை சென்றுள்ளோம். சந்திரபோஸ் சிலகாலமாகப் பதுளைவாசியாகிவிட்டார். அவர் யாழ்ப்பாணம் வந்தவுடன் எங்களை வந்து சந்திப்பார். அப்பொழு தெல்லாம் அடிக்கடி அவர் வீட்டுக்குச் செல்வதுண்டு. வீட்டிலே எம். சி. எவ்வித ஆரவாரமுமின்றி ஒரு யோகியைப் போல

Page 24
சந்திரபோஸ் O 42
தனியே ஒதுங்கியிருப்பார். "இவர் இப்படித்தான் இருப்பாரோ" என்று நான் சந்திரபோஸிடம் கேட்டதுண்டு. "கோபம் வந்தால் பெரிய அட்டகாசமாயிருக்கும்” என்றார் சந்திரபோஸ்,
எம். சி. என்னும் அரசியல்வாதியைவிட சமூகத் தொண் டனையே எனக்கு நன்றாகத் தெரியும். சமூகத் தொண்டன் ஒருபோதும் மரணிப்பதில்லை. அவன் தொண்டுகளாலே பலன டைந்த வலுவிழந்த மக்கள் மனங்களிலே என்றும் வாழ்ந்து கொண்டிருப்பான். எம். சி. அவர்களும் இத்தகு தன்மை வாய்ந் தவர். “தொண்டாற் பொழுதளந்த தோழர்” என இவருடைய சமூகத் தொண்டின் தன்மையினைத் துலக்கி 'மல்லிகை’ இதழ் தலையங்கமிட்டுள்ளது. தாழ்ந்த மக்களின் அடிப்படை உரிமை களுக்காக நிறுவன ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் உழைத்த எம். சி. அவர்கள் அம்மனிதர்களின் அன்புக்குரியவராக அவர்கள் மனங்களிலே வாழ்ந்து கொண்டிருப்பார்.
இலங்கைத் தமிழ்த் தலைவர்களுடைய வரலாறு எழுதப் படும்போது, அமரர் எம். சி. சுப்பிரமணியம் அவர்களுடைய பெயரும் அவ்வரலாற்றில் இடம்பெறும் என்பதிலே ஐயமில்லை.

என். கே. ரகுநாதன்
தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சிக்கு வித்திடீடவர்
1947ம் ஆண்டில் இலங்கையில் முதலாவது பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பருத்தித்துறை தொகுதிக்கு, சகல மக்களாலும் *ஜெயம்’ என்று அன்பாக அழைக்கப்பட்ட இளம் சட்டத்தரணி சி. தர்மகுலசிங்கம் போட்டியிட்டார். தேர்தலில் அவர் தோல்வியடைந்தாலும், பரவலாக அதிக வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்துக்கு வந்தார். தொகுதியிலுள்ள அடிப்படை வசதிகளற்ற மக்கள் உட்பட, சகல தாழ்த்தப்பட்ட மக்களும் ஜெயத்துக்கே வாக்களித்தனர். இயல்பாகவே சேவை மனப்பான்மை படைத்த ஜெயம், சட்டக் கல்லூரியில் படித்தகாலை "லங்கா சமசமாஜக்கட்சிக் கொள்கைக்குத் தன்னை அர்ப்பணித்து தேர்தலிலும் தன்னை இனங் காட்டிக்கொண்ட காரணத்தால் பேராதரவைப் பெற்றுக்கொண்டார்.
வெள்ளையர் ஆட்சியை எதிர்த்தும், சுதந்திரத்தை முன்னெடுத்தும் "சூரியமல்’ இயக்கத்தை ஆரம்பித்த நமது தேசபக்தர்களில் சிலர் சிலகாலம் தாமதித்து ஆரம்பித்த அரசியல் கட்சிதான் "லங்கா சமசமாஜக் கட்சி, அக்கட்சியின் "ட்ரொட்ஸ்கியவாதக் கொள் கையை ஏற்றுக்கொள்ள முடியாத “மார்க்ஸிய வாதிகளான டாக்டர் எஸ். ஏ. விக்கிரமசிங்கா, பீற்றர் கெனமன், எம். ஜி. மென்டிஸ் போன்றவர்கள்

Page 25
சந்திரபோல் 44
சமசமாஜக் கட்சியிலிருந்து பிரிந்து 1943இல் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபித்து பணியாற்றத் தொடங்கினர். கொழும்பிலும் அதன் பின் பிற நகரங்களிலும் வேர்விடத் தொடங்கிய கம்யூனிஸ்ட் கட்சி, யாழ்ப்பாணத்திலும் கிளையொன்றைத் தொடக்கி இயங்கத் தொடங்கியது. தோழர்கள் அ. வைத்திலிங்கம், மு. கார்த்திகேசன். எஸ். இராமசாமி ஐயர், எம். சி. சுப்பிரமணியம் போன்ற இளைஞர்கள் இப்பணியை முன்னெடுத்துச் சென்றனர்.
ஆரம்ப காலத்தில் அவர்களின் கட்சிப் பிரசாரம் மதிற் சுவர்கள் மூலமாகவே ஆரம்பித்தது. சுவரொட்டிகளை அச்சடிப்ப தற்குப் பணவசதி இல்லை. அதனால் சுலோகங்களைத் தாள் களில் எழுதிச் சுவர்களில் ஒட்டுவது, சுவர்களில் மையினாலே எழுதுவது; இவைதான் பிரசாரச் செயற்பாடு. யாழ். பஸ் நிலை யத்தைச் சுற்றியுள்ள சுவர்களிலும் யாழ்ப்பாணக் கொன்வென்ற்’ (கன்னியர் மடம்) கட்டடத்தைச் சுற்றியுள்ள மதில்களும் அதிக அளவில் இதற்குப் பயன்படுத்தப்பட்டன. கார்த்தி, ஐயர், எம். சி. இவர்களுடன் சேர்ந்து அரசடி இராசையா, டானியல், ஜீவா, நீர்வை பொன்னையன் போன்ற வயதிற் குறைந்த இளைஞர் களும் இப்பணியில் ஈடுபட்டனர். சுவர்களில் கை உயரத்துக்குக் கீழே, பலவித சுவரொட்டிகளும் நோட்டீசுகளும் ஒட்டப்பட்டு அல்லது எழுதப்பட்டு விடுமாகையால், இனி கை உயரத்துக்கு மேலேதான் விளம்பரம் செய்யவேண்டும். இராமசாமி ஐயர் கைகளால் தனது முழங்கால்களைப் பிடித்துக்கொண்டு தன் தோள்களைக் கொடுக்க, விடலை ஒன்று அத்தோளிலே ஏறி நின்று, மேற்சுவரிலே ஒட்டுவேலை அல்லது எழுத்து வேலை நடைபெறும். இராமசாமி ஐயர் மூச்சிழுக்கத் தொடங்க எம். சி. சுப்பிரமணியம் தன் தோளைக் கொடுத்து உதவுவார்.
இப்படியான அர்ப்பணிப்போடும் ஊக்கத்தோடும் கம்யூனிஸ்ட் கட்சியை முன்னெடுக்கக் கடும் உழைப்பு உழைத்த தோழர் களுக்கு பருத்தித்துறைத் தேர்தல் முடிவு - சி. தர்மகுலசிங்கம் பரவலாகப் பெற்ற வாக்குகள் - ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. சமசமாஜக் கட்சியிலிருந்து பிரிந்து, கம்யூனிஸ்ட் கட்சியை ஆரம்பித்த சில ஆண்டுகளில் இது நடைபெற்றதால், கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்களை அணிதிரட்ட வேண்டுமென்ற பரிமாணம் பெற்றுத் தோழர்களைச் செயலாற்றத் தூண்டியது. இந்த அடிப்படையில், யாழ். கம்யூனிஸ்ட் கட்சி, தோழர் எம். சி. சுப்பிரமணியத்தைப் பருத்தித்துறைக்கு அனுப்பி வைத்தது.
எம். சி. யை அப்படி அனுப்பி வைப்பதற்கு அனுகூலமான பின்னணி ஏற்கனவே அமைந்திருந்தது. எம். சி. வாழ்ந்து வந்த ரயில் பாதையோடு அண்டிய சேணிய தெரு என்னும் பகுதிக்கு

45 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
அணித்தாயுள்ள பலாலிவீதி, ஆரியகுளத்தடியில் சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்கம் என்ற பெயரில் ஒரு சமூக முன்னேற்ற நிறுவனம் இயங்கி வந்தது. அதை நிறுவியவர்களில் எம். சி. சுப்பிரமணியம், ஜி. எம். பொன்னுத்துரை (ஆஸ்பத்திரி வீதி), காந்தி என்றழைக்கப்படும் உடுவிலைச் சேர்ந்த எஸ். ஆர். ஜேக்கப் (நீண்ட தாடியும் நாலு முழ கதர்வேட்டியும் தோளில் ஒரு துண்டும், கைத்தடியும்தான் இவரது தோற்றம்) ஆகியோருடன், அச்சங்கத்தின் சுற்றுவட்டத்தில் வசித்த சண்முகம் செல்லையா, தம்பிஐயா என்றழைக்கப்படும் எஸ். எம். இராசேந்திரம், எஸ். இராசையா, கே. இராசையா இவர்களுடன் இன்னும் பலர் அடங்குவர். அனைவரும் துடிப்புள்ள இளைஞர்கள்.
வில்லூன்றி மயானத்தில் ஒரு பிரேதத்தின் இறுதிக் கிரியை களை நடத்திக் கொண்டிருந்த சமயம், முதலி சின்னத்தம்பி என்ற ஓர் இளம் குடும்பத்தவரைச் சாதி வெறியர்கள் சுட்டுக் கொன்ற கொடுங்கோன்மை, யாழ்ப்பாணச் சரித்திரத்தில் ஓர் இழிந்த கறையாய் படிந்துள்ளது. சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதிகளான எம். சி. உட்பட முன் சொன்ன வாலிபர்களின் சேவைக்குக் கிடைத்த சவாலாக இது அமைந்தது! இந்த இளைஞர்கள் அந்த இழப்பினையிட்டு சற் றேனும் பின்வாங்காது, சுடப்பட்டு வீரமரணம் எய்திய முதலி சின்னத்தம்பியின் சடலத்தையும் அதே வில்லூன்றிக்கே எடுத்துச் சென்று இறுதிக் கிரியைகளை நடத்தினர். மேலும் தொடர்ந்து தம் சமூக சீர்திருத்தப் பணியினை முன்னெடுத்தனர்.
இதன் பிரதிபலிப்பாகத் தியாகி முதலி சின்னத்தம்பியின் உறவினர் வாழ்ந்து வந்த பருத்தித்துறையிலுள்ள சந்தாதோட்டம் என்னும் கிராமத்தில், அதன் அயற் கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களும் ஒன்று சேர்ந்து நல்வழி ஐக்கிய சேவாசங்கம் என்றொரு சங்கத்தை அமைத்துப் பணியாற்றினர். அக்கால கட்டத்தில் பிரதம மந்திரியாக இருந்த டி. எஸ். சேனநாயக்காவின் அரசாங்கத்தில் நமது சங்கத்தைச் சேர்ந்த முதலியார் ஏ. பி. இராசேந்திரா என்பவர் செனட்டராயிருந்தார். யாழ்ப்பாண சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்கம், பருத்தித்துறை நல்வழி ஐக்கிய சேவாசங்கங்களின் விசேட மாநாடுகளில் செனட்டர் இராசேந்திரா பிரதம விருந்தினராக அழைக்கப்படுவார். சிறு பான்மைத் தமிழர்களின் பிரச்சனைகளை அவர் செனட்சபை மூலம் அரசாங்கத்துக்கு எடுத்துச் சொல்லித் தீர்வுகாண முயற்சித்திருக்கிறார். வில்லூன்றி மயானம் சிறிது காலத்தின் பின் சகல மக்களின் பாவனைக்கும் உரியதான பங்களிப்பைச் செய்தமைக்கு செனட்டர் இராசேந்திராவுக்கு முக்கிய இடமுண்டு.

Page 26
சந்திரபோஸ் 46
செனட்டரை அடிக்கடி சந்தித்து அவரை இயங்கச் செய்தவர் எம். சி. சுப்பிரமணியம்தான்.
நல்வழி ஐக்கிய சேவாசங்கத்தின் செயலாளராகப் பணி யாற்றியவர், வராத்துப்பளை என்னும் அயற்கிராமத்தைச் சேர்ந்த கவிஞர் பசுபதி ஆவார். காலப்போக்கில் வராத்துப்பளை என்ற அந்தக் கிராமத்தில், கவிஞர் பசுபதியுடன் இக்கட்டுரை ஆசிரியர் உட்பட மற்றும் இளைஞர்களும் சேர்ந்து ஒரு வாசிகசாலையை உருவாக்கினர். திராவிடர் கலைமன்றம் என்று அதற்குப் பெயர். சிறந்த தமிழறிஞரும் பகுத்தறிவுவாதியுமான புலோலியூர் கந்த முருகேசனிடம் தமிழ் கற்ற பசுபதியின் தமிழ்ப் பற்றினால் அந்தப் பெயர் சூட்டப்பட்டது. சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்கம், நல்வழி ஐக்கிய சேவாசங்கம், திராவிடர் கலை மன்றம் போன்ற சங்கங்களும், மற்றும் பல கிராமங்களில் இயங்கி வந்த சங்கங்களும் இணைந்து வெளியிட்ட மூச்சுத்தான், பின்நாளில் அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபை என்னும் பெயரில் வீறுகொண்டு எழுந்த ஸ்தாபனம்.
தொடக்க காலத்தில் இச்சங்கத்தின் முக்கிய பதவிகளைப் பலர் வகித்தபோதும், பின்நாளில் பல சாதனைகள் நிறை வேற்றப்பட்ட காலத்தில் தலைவராக எம். சி. சுப்பிரமணியம், இணைச் செயலாளர்களாக கவிஞர் க பசுபதி, இ. வே. செல்வரத்தினம், பொருளாளராக சி. ஈ. குணரத்தினம் மற்றும் துணிவுகொண்ட இளைஞர்கள் பணியாற்றினர்.
வில்லூன்றி மயானத் தியாகத்தோடு தொடங்கிய தாழ்த்தப் பட்ட மக்களின் உரிமைக்கான போராட்டம், ஆலயப் பிரவேசம், பாடசாலைப் பிரவேசம், தேநீர்க்கடைப் பிரவேசம் என்று விரி வடைந்து நடந்துகொண்டிருந்தது. எம். சி. சுப்பிரமணியம் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தொண்டராயிருந்தமையால் மேற்படி பணிகள் அகில இலங்கை சிறுபான்மை தமிழர் மகாசபைக் கூடாக முன்னெடுத்துச் செல்லப்படுவது கட்டாயமாகவிருந்தது.
இத்தகைய பின்னணியின் அடிப்படையில்தான் பருத்தித் துறை தொகுதி மக்களை - விசேடமாக தாழ்த்தப்பட்ட மக்களை கம்யூனிஸ்ட் கட்சிக்கு அணிதிரட்டும் பொறுப்பினை முன்வைத்து, கட்சி அதனை எம். சி. சுப்பிரமணியத்திடம் ஒப்படைத்தது.
எம். சி. என்னிடம் வந்தார். சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்கம், நல்வழி ஐக்கிய சேவாசங்கம், சிறுபான்மைத் தமிழர் மகாசபை போன்றவற்றினால் எம். சி.க்கும் எனக்கும் ஏற்பட்ட தொடர்புடன், தனிப்பட்ட முறையில் அவருக்கும் எனக்கும் இன்னொரு பிணைப்பும் இருந்தது. நான் தமிழ் மூலக் கல்வியைப்

47 9ே எம்.சி. ஒரு சமுக விடுதலைப் போராளி
பூர்த்தி செய்தபின், ஆங்கிலம் படிப்பதற்கு கல்லூரியில் சேர்த்து வைத்தவர் எம். சி. தான். எம். சி. யின் மைத்துனரான பிரபல எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரை, சம்பத்திரிசியார் கல்லூரியில் படித்துக்கொண்டு, அங்கு மாணவர்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சிப் பத்திரிகையான ‘தேசாபிமானி' விற்றுக்கொண்டிருந்ததன் காரண மாக, அப்போதைய அதிபர் வண. லோங்க் அடிகளாரால் அப்புறப்படுத்தப்பட்டார். எம். சி, பொன்னுத்துரையை பரமேஸ் வராவில் சேர்த்த கையோடு, எனக்கும் அங்கு அனுமதி பெற்றுத் தந்தார். பரமேஸ்வராவில் கல்வி கற்ற முதலாவது தாழ்த்தப்பட்ட மாணவன் எஸ். பொன்னுத்துரை; இரண்டாவது மாணவன் என். கே. ரகுநாதன். லண்டன் கேம்பிறிட்ஜில் பல மார்க்ஸிய வாதிகளோடு கல்வி கற்றுத் திரும்பிய திரு. சிவபாதசுந்தரம், பரமேஸ்வராவில் அதிபர் பொறுப்பை ஏற்ற கையோடு, எம். சி. இந்தப் பங்களிப்பைச் செய்ய வாய்ப்புக் கிடைத்தது. முதலாவது பாராளுமன்றத் தேர்தல் முடிந்த மறு ஆண்டு, யாழ்ப்பாண நகரசபைத் தேர்தல் (அப்போதுதான் உள்ளூராட்சி சபைகள் தொடங்கப்பட்டன) நடைபெற்றது. எம். சி. அத்தேர்தலில் போட்டியிட்டார். கம்யூனிஸ்ட் அபேட்சகராகப் போட்டியிட்டார். வீட்டில் சும்மா இருந்த என்னை, அவர் தேர்தல் வேலை களுக்காக அழைத்திருந்தார். நான் ஒரு மாத காலம் அவர் வீட்டில் தங்கியிருந்து, துண்டுப் பிரசுரங்கள் எழுதுவது, சுவரொட்டிகள் தயாரிப்பது, அவற்றை ஒட்டுவது, வீடுகளுக்குச் சென்று ஆதரவு தேடுவது போன்ற பணிகளில் ஈடுபட்டேன். எம். சி. தேர்தலில் வெற்றியடையவில்லை. இத்தகைய பிணைப்புகளின் அடிப்படையில் தான் எம். சி. என்னிடம் வந்தார். வடமராட்சியில் கட்சி வகுப்புகள் நடத்தவேண்டு மென்று கேட்டுக்கொண்டார்.
எமது வாசிகசாலையோடு உறவுள்ளவர்கள் அனைவரும் இடதுசாரிப் போக்குள்ளவர்கள் என்பதனாலும் வாசிகசாலைக் கட்டிடம் என் குடும்பத்துக்குரியதனாலும் நான் மனநிறைவுடன் ஒப்புக்கொண்டேன்.
வாசிகசாலை என்னுடைய வீட்டுக்கு முன்பாக எங்களின் காணியில் அமைந்துள்ள, மண்சுவரும், தகரத்தால் வேய்ந்த கூரையும் கொண்ட சிறிய கட்டிடம். எனது அண்ணன் சிறிது காலம் பலசரக்குக் கடையொன்றை நடத்தி, அது பலன் தராததால் கைவிடப்பட்ட நிலையில்தான், அதனை வாசிக சாலை ஆக்கினோம். இரண்டு அறைகள். முன்னுக்குப் படிப்பகம். பின்னுக்கு புத்தகங்கள், பத்திரிகைகள் சேகரித்து வைக்கும் அறை. நான் ஆசிரியப் பணிக்குச் செல்வதற்கு முந்திய காலம். வாசிப் பதில் பெரும் ஆர்வத்தோடு எழுத்துத் துறையிலும் நடைபயின்ற

Page 27
aríbá998umelo 48
காலம். அதனால் என் சீவியம் இந்த நூல்நிலையத்திலேயே அமைந்தது. வீட்டில் சாப்பாடு, குளியல், துணி துவைப்பு இவைதவிர மிகுதி வேலைகள் முழுவதும் - இரவுத் தூக்கம்வரை - வாசிகசாலையில்தான்! யாழ்ப்பாணப் பட்டினத்திலிருந்து கட்சி வகுப்புகள் நடத்த வரும் தோழர்கள் தங்கிச் செல்ல திராவிடர் கலை மன்றம் பெரும் வாய்ப்பாக அமைந்தது.
மாதத்துக்கு இரண்டு என்று கட்சி வகுப்புகள் நடை பெற்றுக் கொண்டிருந்தன. வாசிகசாலையைச் சேர்ந்த வாலிபர் களுக்கு மட்டுமல்ல, வகுப்புகள் சந்தா தோட்டம், பழைய தெரு என அப்போது அழைக்கப்பட்ட தும்பளை தெற்கு, கொத்தி யாவத்தை, அல்வாய், கோணந்தீவு என்று பல இடங்களிலும் நடக்கும். தோழர்கள் கார்த்திகேசன், ஐ. ஆர். அரியரத்தினம், இராமசாமி ஐயர், அ. வைத்திலிங்கம் போன்றோர் வந்து வகுப்பு களை நடத்தினர். வேறு கட்சிப் பணிகளுக்காக ஆர். ஆர். பூபால சிங்கம், மலாயாவிலிருந்து வந்த ஒரு தோழர் கனகசிங்கம் போன் றோரும் இடைக்கிடை வருவார்கள். பின்நாளில் பொன்னம்பலம் கந்தையா இடையிடையே வந்து கட்சி வகுப்புகளை நடத்தி னார். இளம் சட்டத்தரணி எஸ். ஜெயசிங்கம், பருத்தித்துறைக்கு வந்தபின் அடிக்கடி வந்தார். எம்.சி.யும் சிலவேளை வந்து போவார். மூன்று நான்கு மைல் தூரம் உள்ள இடங்களில் வகுப்புகள் நடக்கும். இரவு வேளைகளில்தான் வகுப்புகள்! வகுப்புகள் முடிந்து தோழர்களை நான் சைக்கிளில் ஏற்றி வருவேன். இரவில் அவர்களை என்னோடு தங்கவைத்து உபசரித்து, மறுநாள் யாழ். அனுப்புவேன்.
எம். சி.க்கும் எனக்குமிடையிலிருந்த உறவு மேலும் விரிவடைய மற்றொரு சந்தர்ப்பமும் அமைந்தது. நான் ஆசிரிய ராக 1956 இலிருந்து கொழும்பில் படிப்பித்தேன். எம். சி. கட்சி அலுவல் மற்றும் தோழர்கள், நண்பர்களின் அரச திணைக்கள அலுவல்களுக்காக அடிக்கடி கொழும்புக்கு வருவார். அவருடைய மனைவியின் தம்பி, தங்கையர் வசித்த பகுதியிலே நானும் வசித்தேன். எம். சி. கொழும்பு வந்து அவர்களுடன் தங்குவார். என்னுடனும் தொடர்பு கொள்ளுவார். பணிமனை அலுவல்களுக்காக என்னையும் அழைத்துச் செல்வார். இப்படியே எங்கள் உறவு வலுவடைந்தது.
1962 அளவில், கம்யூனிஸ்ட் கட்சி சர்வதேச மட்டத்தில் பிளவடைந்தது. பீற்றர் கெனமன் தலைமையில் ரஷ்யத் தலைமைத் துவ கட்சியும் இயங்கத் தொடங்கிற்று. எம். சி. பீற்றர் கெனமன் தலைமையிலான கட்சியில் நிலைகொண்டார். புரட்சி வேகங் கொண்ட இளந்தலைமுறையினரில் பெரும்பாலானோர் சீனக்

49 9 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து உத்வேகத்துடன் பணியாற்றினர். முன்னர் தொடங்கி, பிசுபிசுத்த நிலையிலிருந்த தாழ்த்தப்பட்டோர் தேநீர்க்கடைப் பிரவேசம் போன்ற போராட்டங்கள் முன் னெடுத்துச் செல்லப்பட்டன. பன்றித்தலைச்சி அம்மன் கோயில் போராட்டம், சங்கானைப் போராட்டம், சில இடங்களில் தேநீர்க் கடைப் பிரவேசம் போன்றவை இவ்விளைஞர்களுக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்தன.
1968இல் பிரசித்திபெற்ற மாவிட்டபுரப் போராட்டம் நடைபெற்றது. பிரபலம் பெற்ற கணித மேதையும், பாராளுமன்ற உறுப்பினருமான சி. சுந்தரலிங்கம் கோயில் மூலஸ்தானத்தில் பொல்லுகள், வாள்கள் போன்ற ஆயுதங்களையும், தனக்கருகில் அடியாட்களையும் வைத்துக்கொண்டு, ஆலய வாசலில் கரிய திருமேனியராகப் பக்தர்களை வழிமறித்து நந்தி போல நின்று கொண்டிருந்தார். சகல தமிழ் எம்.பி.க்களும் அந்த அடங்காத் தமிழனுக்கெதிராக அறிக்கை விடமுடியாத நிலை, அத்துடன் மறை முகமாகக் கோயிலைத் திறந்து விடும்படி குரல்கொடுத்தால், சாதிமான்கள் அடுத்த தடவை தங்களுக்கு வாக்களிக்கமாட்டார் களே என்ற அடிப்படை நோக்கில் வாய் மூடிக்கொண்டிருந் தார்கள்.
'பிற்போக்குவாதி ஒருபோதும் உடனடியாகப் பணிந்து போகமாட்டான்’ என்ற மாஓ-சேதுங் கோட்பாட்டின்படி, போராட்டத்தைத் தொடர்ந்து மாவிட்டபுரக் கோயில் உடனடி யாகத் திறந்துவிடப்படாவிட்டாலும், அடுத்த ஆண்டில் அது சகலருக்கும் திறந்துவிடப்பட்டதற்கு, மக்கள் புரட்சிகரப் பாதையில் அணிதிரண்டமையே காரணம் என்பதை எவராலும் மறுக்க (poll Isgil.
சண்முகதாசன் தலைமை தாங்கிய புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் என்ற பெயரில் ஓர் அமைப்பினை உருவாக்கி, அந்த அமைப்பினில் தாழ்த்தப் பட்ட மக்கள் மட்டுமல்ல, சமூக மாற்றத்தில் ஆர்வம் கொண்ட சகல மக்களையும் ஒன்றிணையச் செய்து மாவிட்டபுரக் கோயிலைத் திறக்கச் செய்தது மட்டுமல்ல - அந்தப் போராட்ட இயக்கமே, எம். சி. சுப்பிரமணியத்தைத் தமிழர் மகாசபை மூல மாகவும் அவரது கட்சியூடாகவும் முன்பு ஆரம்பித்து பூரண வெற்றி யடையாத தேநீர்க்கடைப் பிரவேசம், பாடசாலைப் பிரவேசம், ஆலயப் பிரவேசம், சுடுகாட்டுரிமை போன்ற மனித உரிமைப் போர்களையும் வெற்றியீட்ட வைத்தது என்பது வரலாற்றுண்மையாகும். இந்த இயக்கத்தை வழிநடத்திச் சென்ற எஸ். ரி. நாகரத்தினத்தின் பணியை யாரும் மறக்க முடியாது.

Page 28
ars&JOBurdo 5O
எம். சி. சுப்பிரமணியத்தை இங்கே புறக்கணித்து விட்டேன் என்று யாரும் கருதவேண்டியதில்லை. அவர் பங்களிப்பை இங்கே சொல்ல வருகிறேன். அது என்னவென்றால், இந்தப் போராட் டங்களிலெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்கள் வெற்றியீட்ட அத்தி வாரமாயமைந்தது, எம். சி. சுப்பிரமணியம் ஆரம்ப நாட்களில் அவர்கள் நெஞ்சில் விதைத்த மர்க்ஸிய விதையேயாகும். பின் நாளில் அவர் ரஷிய கம்யூனிசவாதப் போக்கிற்கு திசைதிரும்பி னாலும் அவர் விதைத்த மார்க்ஸியக் கருத்துக்களில் முளைவிடத் தொடங்கியவர்கள், புரட்சிகரக் கருத்துக்களின் முனைப்பால் வீறு கொண்டிருந்தமையாலேயே யாழ்ப்பாணச் சமுதாயத்தைப் பூரண மாகவல்ல - ஒரளவுக்காவது பழைய பிற்போக்குக் கொள்கை களிலிருந்து திசைதிருப்ப முடிந்தது. இந்தப் பெருமையை நாம் எம். சி. சுப்பிரமணியத்துக்கு மனநிறைவோடு வழங்கவேண்டும்.
பொன்னம்பலம் கந்தையா, பருத்தித்துறைத் தொகுதியில் 1952இல் போட்டியிட்டுத் தோற்றாலும், 1956இல் அமோக வெற்றி யீட்டினார். தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு இடதுசாரிப் பாராளுமன்ற உறுப்பினர். தமிழ்மக்களின் பிரச்சனை களைப் புதிய கண்ணோட்டத்தில் கண்டு சிறுபான்மைத் தமிழர்களின் விடிவுக்கும் குரல் கொடுத்தவர். பலராலும் பாராட்டப் பட்டவர். அவரது வெற்றிக்கு எம். சி. அத்தொகுதியில் மார்க் ஸிய கருத்துக்கள் பரவ வழி அமைத்ததும் ஒரு காரணமாகும்.
தாழ்த்தப்பட்ட சிறுவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பாடசாலைகளில் அவர்களையும் அனுமதிக்க வேண்டுமென்று கோரிய வேளை, 60களில் கல்வி அமைச்சராகவிருந்த டபிள்யூ தகநாயக்காவின் உதவியால், தாழ்த்தப்பட்ட பிள்ளைகள் படிப் பதற்கென வசதியற்ற பகுதிகளில் 11 பாடசாலைகளைத் தொடக்கி வைத்தார். உள்ளூராட்சி சபைகளின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவுக்காகப் பாடுபட்டார்.
எம். சி. இளமைக் காலத்திலிருந்தே தன் வாழ்வுக்காக ஒரு தொழிலும் செய்யாமல், கட்சிப் பணி, சமூக சேவை என்று தன் வாழ்வை அர்ப்பணித்தவர். அவர் யாழ். நகரசபைக்குப் போட்டி யிட்ட வேளை, தேர்தல் பணிகளுக்காக ஒரு மாதம் அவர் இல்லத்தில் தங்கியிருந்தபோது அவர் குடும்பத்தோடு தொடர்பான பல போக்குகளைக் கண்டறிய முடிந்தது.
திருமணம் செய்தாயிற்று. பிள்ளைகளும் இரண்டொருவர் பிறந்து விட்டனர். மகாசபை வேலை, கட்சி வேலை, சமூகப்பணி இவைதான் அவருடைய வாழ்க்கைமுறை. இவற்றையெல்லாம் பொறுமையோடு அனுபவித்த அவருடைய துணைவி லசுஷ்மி ஒரு

51 9 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
தெய்வம். அவரோடு உரத்துக் கதைக்கவே மாட்டார் சாந்த லசுஷ்மி.
அவருக்கும் மேலான ஒரு மகாதெய்வந்தான், எம். சி. நமது சமூகத்துக்கு சேவை செய்யத் துணை நின்றது என்பதை நான் இங்கு பெருமையோடு தெரிவிக்கிறேன். அவருடைய அக்கா விசாலாட்சிதான் அந்த மகாதெய்வம்! கடவுள் கொடுத்த வரம் என்று சொல்வார்கள். அவருக்குப் பிள்ளை பிறக்காமல் செய்ததே அவருக்குக் கடவுள் கொடுத்த வரம் பிள்ளைகள் இல்லாமையால் தான் விசாலாட்சி என்ற அந்த மகாதெய்வம், எம். சி. என்ற தொண்டனை நமது சமூகத்துக்குப் பணியாற்ற வளர்த்து ஆளாக்கி அருள் புரிந்தது.
விசாலாட்சி அம்மா எந்நேரமும் கண்டிப்புதான்! எந்த நேரமும் கடும் போக்குத்தான்! இந்தக் குரூரங்களுக்கிடையிலும் "சாப்பிட்டிட்டுப் போடா!” என்ற அச்சுறுத்தல். எம். சி. தலை யையும் சொறிந்துகொண்டு, காலையும் ஆட்டிக்கொண்டு இவை அவருடைய இயல்பான பழக்கங்கள்) காசை எதிர்பார்த்துக் கொண்டு நிற்பார். ஏச்சுப் பேச்சோடு காசும் அவர் கையில் வந்துவிடும். எம். சி.யின் துணைவியாரையும் பிள்ளைகளையும் விசாலாட்சி அம்மா தான் பெற்ற பிள்ளைகளைப் போலவே இறுதிக்காலம் வரை அன்பாகப் பராமரித்து வந்தார் என்பது மதிப்பிடற்கரிய தியாகப் பண்பாகும். அவரது கணவர் ஐயம்பிள்ளையும் எவ்வித முகக்கோணலுமின்றி மனைவியின் குடும்பப் பராமரிப்பினை அங்கீகரித்தார். இத்தனைக்கும் அவர்கள் பணம். படைத்தவர்கள் அல்லர் விறகுகாலை ஒன்றை வைத்து நடத்தி அதிலிருந்து கிடைக்கும் ஊதியத்திலிருந்தே அவர்கள் வாழ்க்கை நடந்துகொண்டிருந்தது.
யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு பாடசாலையில் படிப்பித்துக் கொண்டிருக்கிறேன். லஞ்ச ஊழல் பணமோசடியில் திளைத்த ஓர் அயோக்கிய அதிபருக்கெதிராகப் போராட்டம். நான் அந்தப் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளரானதால் கண்ணை மூடிக்கொண்டிருக்க முடியாத நிலை. சாதியைச் சொல்லி காரியங்கள் சாதிக்கக்கூடிய உத்தியோகத்தர்கள் கத்தோலிக்கர் களில் இருக்கும்போது எதைச் செய்ய முடியாது? எனக்கு அடிக்கடி தூர இடங்களுக்கும் இடமாற்றங்கள். நானும் என் வல்லமையாலும் நேர்மைத் திறனாலும் அவற்றை ரத்துச் செய்து கொள்வேன்.
கொழும்பில் முஸ்லிம் பாடசாலை ஒன்றில் நான் படிப் பித்துக் கொண்டிருந்தபோது ஒரு யாழ்ப்பாணத்துச் சாதிவெறி

Page 29
rSpyBunreko O 52
யனின் குரூரத்தனமான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது.
நான் அப்பாடசாலையில் பிரதி அதிபராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அதைச் சகிக்க முடியாத அந்த ஆசிரியப் பெருந்தகை, அங்குள்ள மற்ற ஆசிரியரிடமும் அதிபரிடமும் கோள்குண்டணிகள் சொல்லி என்னைப் புறம்தள்ள முயற்சிகள் செய்தார். எஸ். எஸ். சி. வகுப்பு மாணவர்களிடம், “ரகுநாதன் மாஸ்ரருடைய ஆட்களை நாங்கள் எங்கள் வீட்டுக்குள் எடுக்க மாட்டோம். வெளியில் வைத்து சிரட்டையில்தான் தேத்தண்ணி குடுக்கிறனாங்கள்!” என்றெல்லாம் சொல்லியுள்ளார். இந்தக் கொடூரத்தை, அப்போது நான் எம். சியிடம் சொன்னதுதான் தாமதம், என்னை அப்பாடசாலையிலிருந்து கொழும்பிலுள்ள பிரபலமான மகா வித்தியாலயத்திற்கு மாற்றம் செய்வித்தார்.
சிறுபான்மைத் தமிழர் மகாசபையும், தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கமும் உயிர்த்துடிப்போடு செயற்பட்ட காலங் களில் நடைபெற்ற சில சின்னத்தனமான காரியங்களையும் இங்கு பதிவு செய்யவேண்டியுள்ளது. மகாசபை தொடங்கப்பெற்ற நாட் களில், வடஇலங்கை முழுவதுமுள்ள சிறுபான்மைச் சமூகங்களின் தலைவர்கள், புத்திஜீவிகள் அனைவரும் மகாசபையில் இணைந்து பணியாற்றினர். ஆனால் காலஞ் செல்லச் செல்ல வெவ்வேறு காரணங்களின் அடிப்படையில் சிலர் தூர விலகியதை நாம் அவதானிக்க முடிகின்றது. கம்யூனிஸ்டான எம். சி. சுப்பிரமணியம் மகாசபைத் தலைவரான பின்னர், பொதுவுடைமைச் சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாத கத்தோலிக்கர் என்ற வகையில் பின் நாளில் செனட்டராயிருந்த ஜி, நல்லையா (சுண்டிக்குளி), யோவேல் போல் (தெல்லிப்பளை) போன்றோரை இந்த வரிசையில் குறிப்பிடலாம். மற்றொரு பகுதியினர் வதிரியைச் சேர்ந்தவர்கள். இவர்களுள் ஆசிரியர்களான சைவப்புலவர் சி. வல்லிபுரம், ஆ. ம. செல்லத்துரை, கே. டி. மாணிக்கம், அல்வாயைச் சேர்ந்த முருகேசு போன்றோரைக் குறிப்பிடலாம். வதிரியைச் சேர்ந்தவர்கள் நசியல் போக்கினைக் காந்தியம் என்று கருதிக்கொண்டு - காந்தியத்தின் தூய்மைக்குக் களங்கமாய்ச் செயல்பட்ட சம்பவங்களை இங்கு எடுத்துச் சொல்ல வேண்டியுள்ளது. k
மகாசபையின் மாநாடு ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. சகலரும் பங்குபற்றிய முழுநாள் மாநாடு. அவ்வேளை எழுத் துலகில் கால் பதித்து மேடைகளிலும் பேசிக்கொண்டிருந்த கே. டானியல், டொனிமிக் ஜீவா ஆகிய இளைஞர்களும் அம்மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கச் சந்தர்ப்பம் கொடுத்திருந்தார்கள். இருவரும் உணர்ச்சிவசமாகப் பேசி சபையினரின் கைதட்டல்களையும்

53 9 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
பெற்றிருந்தார்கள். இறுதியில் பேசத்தொடங்கிய வதிரியைச் சேர்ந்த ஒரு ஆசிரியப் பெருந்தகை “டானியல் வெளுத்துக் கட்டினார், ஜீவா வெட்டித்தள்ளினார்” என நக்கல் சிலேடையில் பேசினார். இதன் அர்த்தம் என்ன என்பதை நான் சொல்லத் தேவையில்லை. "எல்லோரும் மேடை ஏறுவதா, எல்லோரும் மேடையில் பேசுவதா’ என்பதுதான் அதன் தாத்பரியம்! மாநாடு முடிந்தபின் எம். சி. அந்த காந்தியவாதி ஆசிரியரை அணுகி தனது கண்டனத்தைத் தெரிவித்தார். உணர்ச்சிவசப்பட்டு ஜீ. எம். பொன்னுத்துரை தன் கரத்தினை நீட்டிவிட்டார். இதன்பின்னர் வதிரித் தலைவர்கள் மெல்ல மெல்ல ஒதுங்கத் தொடங்கினர்.
மாவிட்டபுரப் போராட்டம் நடைபெற்றபோது, சகல மக்களும் அங்கு திரண்டு காந்திய வழியில் சத்தியாக்கிரகம் செய்தார்கள். அப்போது முன்சொன்ன காந்தி பக்தர், ஒர் அறிக்கை வெளியிட்டார். "தும்புகள், துரும்புகள், தம்பட்டக் கம்புகள் எல்லாம் சமூகசேவை செய்ய வெளிக்கிட்டிட்டுதுகள்!" என்பது அந்த அறிக்கையில் ஒரு வசனம். இதன் அர்த்தத்தை நான் சொல்லிவைக்க விரும்புகிறேன். தும்பு என்பது பனைநார். அதிலிருந்துதான் பனை ஏறுவதற்குதவியான தளைநார் செய்வது. மரமேறித் தொழில் செய்யும் சாதியினரைக் குறிப்பிடத்தான் தும்புகள் என்ற சொல் பாவிக்கப்பட்டது. துரும்புகள் என்பது சலவைத் தொழில் செய்யும் சாதியினரைக் குறிக்கும் சொல். தம் பட்டக்கம்புகள் என்பது மேளமடிக்கும் தடி, பறைமேளமடி க்கும் சாதியைக் குறிப்பிடச் சொல்லப்பட்டது. தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டவர்களின் நெஞ்சுக்குள்ளேயே சாதித் தடிப்புச் சுடர் தெறிக்கும்போது பிறகு எதற்கு தீண்டாமை ஒழிப்பும், ஆலயப் பிரவேசமும்? என்று எண்ணத் தோன்றுகிறது.
சிலநாட்கள் செல்ல அதே காந்தி பக்தர் மற்றொரு அறிக்கை வெளியிட்டார். “கோயிலுக்குள் நுழைந்துதான் ஆண்டவனை வணங்க வேண்டுமென்று கட்டாயமில்லை. ஆசாரசீலர்கள் எங்கேயிருந்தும் ஆண்டவனை வணங்கலாம்தானே” என்று சாதி வெறியர்களின் கொடூரத்தனத்துக்கு ஆதரவாக இந்த அறிக் கையை விடுத்தார். சைவ உணவுக்காரரான இந்த ஆசாரசீலர், கதர் அணிந்துகொண்டு தன்னிலும் எட்டுப் பத்து வயது குறைந்த ஒரு தும்பு இளைஞன் வீட்டுக்கு அடிக்கடி சென்று, அங்கு கள் அருந்தி, இறைச்சி, மீன் கறியுடன் உணவும் புசித்து வந்தவர் என்பது இரகசியமான சங்கதி! யாழ்ப்பாணச் சாதிமான்கள், உழைக்கும் வர்க்கமான நமது மண்ணின் மைந்தர்களைத் தீண்டத் தகாதவர்கள் என்று ஒதுக்கி வைப்பதை எதிர்த்து நமது மக்கள் போர் தொடுத்த வேளை, நமக்குள்ளேயே சாதிபார்த்து நக்கல்

Page 30
சந்திரபோல் 54
அடிக்கும் மேலான சேவைக்காக, இந்த உத்தமருக்கு ஊர்மக்கள் சமூகஜோதி என்ற பட்டம் வழங்கிக் கெளரவித்துள்ளார்கள். சுதந்திரப் போராட்ட வீரரான காந்தியடிகளின் சமூக சீர்திருத்தக் கொள்கைகளில் மிக முக்கியமானவை தீண்டாமை ஒழிப்பும், மது ஒழிப்பும்! காந்தியடிகள் இன்றிருந்தால் அவரைச் சுட்டுக் கொல்ல கோட்ஸேக்கள் தேவைப்பட்டிருக்காது. அவராகவே தூக்குப் போட்டுச் செத்திருப்பார்!
இந்த இலட்சணத்தில் எம். சி. சுப்பிரமணியத்துக்கு எதுவித பட்டமும் வழங்கப்படாததுதான் பெருமைக்குரிய விடயம். காலம் முழுவதும் நமது மக்களின் சேவைக்கெனவே தன்னை அர்ப்பணித்த எம். சி. அமரத்துவம் அடைந்து பத்தாண்டுகள் கழிந்தபின்னரே, புலம்பெயர்ந்து அந்நிய தேசத்தில் வாழும் அவரது நண்பர்கள் அவரை அடையாளப்படுத்தும் ஒரு நூலை வெளியிட்டிருக்கிறார்க ளென்றால், அதுவும் அவரது தன்னடக்கப் பண்பாட்டின் சின்ன மாகவே அமைகின்றது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
1970இல் சிறிமா அம்மையார் பதவிக்கு வந்தபோது எம். சி. யின் தன்னலமற்ற சமூகப்பணியை இனங்கொண்டு அவரை நியமன எம். பி. ஆக்கினார். அக்காலகட்டத்தில் எனக்கும் அவருக்கும் தொடர் பற்றுப் போன காரணத்தால், அவர் ஆற்றிய பணிகளை என்னால் எடுத்துச் சொல்ல முடியவில்லை. எமது சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்குத் தொடர்ந்து தன் பங்களிப்பை வழங்கியிருந்தார்.
மொத்தமாக நோக்குமிடத்து, எம். சி. சுப்பிரமணியம் வாழ் நாள் முழுதும் தம்மை மக்கள் பணிக்கு - விசேடமாக இலங்கைத் தமிழர்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கென அர்ப்பணித்தது உண்மை. ஆனால் இடைக்காலத்தில் அவர் தன் கட்சிக்குக் கட்டுப்பட்டு, எந்த மக்களுக்குச் சேவை செய்தாரோ அந்த மக்களின் உரிமைப் போராட்டத்தில் இணைந்து போராட முடியாத நிலைக்கு ஆளானார். பழைமைவாதிகளால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள், தமக்குரிய நியாயமான உரிமைகளை சமா தான வழிகளில் பெற்றுக்கொண்டதாக வரலாறே இல்லை. இந்த நிலையில் எமது மக்கள் வீறுகொண்டெழுந்து போராடி, பூரணமாக இல்லாவிட்டாலும் குறிப்பிடத்தக்க உரிமைகளை வென்றெடுத்ததற்கு எம். சி. சுப்பிரமணியம் ஆரம்பகாலத்தில் அவர்களது நெஞ்சில் விதைத்த மார்க்ஸிய சித்தாந்தக் கருத்துக்களே காரணம் என்பதை எவரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது!

Sooreopasudů
எம்.சி எனும் சமூகவாதி
எம். சி. என்றால், அது எம். சி. சுப்பிர மணியந்தான் என்றளவிற்குத் தாயகத்துத் தமிழர்களி டையேயும், ஏன் - சிங்கள அரசியல்வாதிகளுக் கிடையேயும் பிரபல்யமடைந்து வாழ்ந்த அமரர் எம். சி. சுப்பிரமணியம் அவர்கள் மறைந்து பத்து வருடங்களாகின்றன. அப் பத்துவருட நிறைவையொட்டி எடுக்கப்படுகின்ற ஞாபகார்த்த அஞ்சலி நிகழ்ச்சியில் வெளியிடப்படுகின்ற ஞாபகார்த்த நூலிற்கு இக்கட்டு ரையை வரைவதில், அவருடன் ஐம்பதுகளிலும், அறுபது களிலும் சமூகசேவையிலும், இடதுசாரி அரசியலிலும் சேர்ந்து தொண்டாற்றியவன் என்ற வகையிலும் பெருமையும் மிக மகிழ்ச்சியும் அடைகின்றேன்.
இவரை நான் நாற்பதுகளின் பிற்பகுதியிலிருந்து அறிவேன். 1948-ல் இடம்பெற்ற நாட்டின் முதலாவது பொதுத் தேர்தலில் இலங்கை கொம்யூனிஸ்ற் கட்சி யின் சார்பில் பருத்தித்துறைத் தொகுதியில் போட்டி யிட்ட அமரர் பொ. கந்தையா அவர்களுக்கு ஆதரவு தேடிப் பிரசாரம் செய்ய வந்தபொழுதுதான் முதன் முதலாக அவருடன் தோழமை ஏற்பட்டது. இலங்கையின் வட பகுதியில், குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் சமூக, பொருளாதார, கல்வி ரீதியாகப் பின்தள்ளப்பட்ட-அதாவது தாழ்த்தப்பட்ட சிறு

Page 31
சந்திரபோஸ் O 56
பான்மைத் தமிழ்மக்களின் மேம்பாட்டிற்காகப் பாடு படுவதற்கென 1942ல் காலஞ்சென்ற யோவேல் போல், முதலியார் இராசேந்திரா, வதிரி சூரனார் ஆகிய எமது பெரியோர்களால் சிறுபான்மைத் தமிழர் மகாசபை ஆரம்பிக்கப்பட்டது. அதன் பன்னிரண்டாவது ஆண்டு விழா 1955ல் வதிரி தேவராளி இந்துக்கல்லூரியில் நடை பெற்றபோது என்னையும் காலம்சென்ற ஆ ம. செல்லத்துரை அவர்களையும் இணைச் செயலாளர்களாக மகாநாட்டில் தெரிந்தார்கள். இந்த மகாநாட்டில் எம். சி. யின் பெயர் மகா சபையின் தலைவர் பதவிக்குச் சிலரால் பிரேரிக்கப்பட்டது. ஆனால் எம். சி. அதை ஏற்க மறுத்துவிட்டார். காலஞ்சென்ற செனேற்றர் நல்லையா அவர்களின் பெயரும் பிரேரிக்கப்பட்டது. அவரும் ஏற்க மறுத்துவிட்டார். இவர்கள் இருவரும் போட்டி யில்லாமல் தெரியப்படுவதையே விரும்பினார்கள். அப்பொழுதே அரசியற் போட்டிகள் எம்பெரியோர்களுக்கிடையேயும் தலை காட்டத் தொடங்கிவிட்டன என்பது அறியக்கிடைத்தது. இறுதியில் டாக்டர் ஆனந்தம் பிலிப்தலைவராக ஏகமனதாகத் தெரியப் பட்டார். எம். சி. அவர்களும் செனேற்றர் நல்லையா அவர்களும் சபையின் நிர்வாகசபை அங்கத்தவர்களாகப் போட்டியில்லாமல் தெரிவு செய்யப் பட்டார்கள் இம்மகாநாட்டிலிருந்து எம். சி. யுடன் தொடர்பு மேலும் அதிகரித்தது. இதன் காரணமாக எம். சி. யின் குணாதிசயங்கள், பண்பாடு ஆகியவற்றை நெருக்கமாக அறியும் வாய்ப்புகள் எனக்குக் கிடைத்தன.
1957ல் இடம் பெற்ற மகாசபையின் பதினான்காம் வருடாந்தர மகாநாட்டிற்கு நிர்வாகசபையின் ஏகமனதான தீர்மானத்துக்கு அமைய அப்பொழுது அரசாண்டு வந்த எஸ். டபிள்யூ ஆர். டி. பண்டாரநாயக்கா அவர்களின் மந்திரிசபையில் சமூக சேவை உதவி அமைச்சராக இருந்த எம். பி. டி. சொய்சா அவர்களை மகா நாட்டிற்குச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தோம். அன்றைய அரசியல் சூழலில் அரச மந்திரி ஒருவரை உத்தியோக ரீதியாக அழைக்க முடியாது. என்றாலும், மகாசபையின் நிர்வாகசபையின் தீர்மானத்துக்கமைய மகாநாடு அன்று காலை மந்திரி அவர்களை யாழ். புகையிரத நிலையத்திற்குச் சென்று அழைப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. புகையிரத நிலையத்திற்குத் தலைவர், செய லாளர்கள், பொருளாளர் மற்றும் சில நிர்வாகசபை அங்கத்தவர் களும் போய் அழைத்து யாழ். வாடி வீட்டில் மந்திரி அவர்களை விடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் தலைவரோ, இணைச் செயலாளர் திரு. ஆ ம. செல்லத்துரையோ, ஜி. நல்லையா அவர்களோ தீர்மானத்திற்கமைய வராமையால் எம். சி.யும், பொருளாளர் வீ. எஸ். போலும், நானும் புகையிரத நிலையத்திற்குப் போனோம்.

5ア 9ே எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
அங்கு ஜனக்கூட்டம் கொடிகளுடனும், பறை மேளம் அடித்துக்கொண்டும் வழிமறிப்புச்செய்து நின்றார்கள். நாங்கள் ஏதோவிதமாகப் பொலிஸ் உதவியுடன் மந்திரியை அழைத்துக் கொண்டு யாழ். வாடி வீட்டிற்குப் போகாமல் காங்கேசன்துறை வாடி வீட்டில் மந்திரி அவர்களைச் சேர்த்துவிட்டு யாழ். திரும்பினோம். மகாநாடு நடைபெற இருந்த யாழ். நகரமண்டபத்தை வாலிபர்களும் மற்றையோரும் முற்றுகையிட்டபடி "மந்திரியே திரும்பிப் போ” என்ற சுலோகங்களைத் தொனித்தவாறு நின்றார்கள்.
இறுதியில், காலை பத்து மணிக்கு ஆரம்பிக்க இருந்த மாநாடு, உதவி மந்திரி அவர்கள் இல்லாது பன்னிரண்டு மணிபோல் ஆரம்பித்தது. அதில் எம். சி. அவர்கள் ஏகமனதாகத் தலைவராகவும், கே. பசுபதியும், நானும் ஏகமனதாக இணைச் செயலாளர்களாகவும், சி. ஈ. குணரத்தினம் பொருளாளராகவும் தெரியப்பட்டோம். அன்று மாலை உதவி மந்திரி அவர்களை எனது பேரனார் வீட்டிற்கு அழைத்து எம். சி. யின் தலைமையில் வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினோம். இதை நான் கூறுவதற்கான முக்கிய காரணம் ஒன்று உண்டு. நான் உண்மையில் உதவி மந்திரி அவர்களை மகாநாட்டிற்கு அழைத்ததை தனிப்பட்ட முறையில் விரும்பாதிருந்தும், நிர்வாக சபையினால் ஜனநாயக ரீதியாக எடுக்கப் பட்ட தீர்மானத்திற்கமைய நடந்தேன் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எம். சி. யைப் பொறுத்தவரையில் சிறுபான்மைத் தமிழர்களின் சமூக, கல்வி, பொருளாதார மேம்பாட்டிற்கு நாம் அரசையே எதிர்பார்க்க வேண்டும் என்ற கொள்கைக்கமைய அவர் தன்னை வழிநடத்திக்கொண்டார் என்றே கருதவேண்டும். மகா சபையின் தலைமையை எம். சி. அவர்கள் ஏற்றுகொண்டபின், அதாவது 1957லிருந்து மகாசபையின் பொற்காலம் ஆரம்பமாயிற்று என்றே கூறவேண்டும்.
இக்காலகட்டத்தில் எஸ். டபிள்யூ ஆர். டி. பண்டாரநாயக் காவின் அரசாங்கத்தில் டபிள்யூ. தகநாயக்கா கல்வி மந்திரியாக இருந்தபொழுது பருத்தித்துறைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அமரர் பொன். கந்தையா அவர்களின் உதவி கொண்டு யாழ் குடாநாட்டில் கல்வி வசதியின்றி வாழும் சிறு பான்மைத் தமிழ்ப் பிள்ளைகளின் ஆரம்பக் கல்வி வசதிக்காக அந்தந்தப் பகுதியில் இருபது வரையிலான அரசாங்க ஆரம்பப் பாடசாலைகளை ஆரம்பித்ததுவும் அல்லாமல், அவற்றில் கற்றுக் கொடுப்பதற்கென ஏறக்குறைய நூறு க பொ. த சாதாரண, க பொ. த உயர்தர தகைமை பெற்ற சிறுபான்மைத் தமிழர்களுக்கு ஆசிரிய நியமனமும் பெற வழிவகுத்தார். அத்துடன் ஆசிரிய தகைமை பெறாத ஏறக்குறைய முப்பது வரையிலான சிறுபான்மைத் தமிழர்களை சலுகை

Page 32
rößgBum eo O 58
அடிப்படையில் ஆசிரியக் கல்லூரியில் சேர்த்து, பயிலுவதற்கான வாய்ப்புகளையும் பெற்றுக்கொடுத்த பெருமை எம். சி. யையே சாரும்.
அப்பாடசாலைகளிற் சில இன்று மகா வித்தியாலயங்களா கவும், எல்லாப்பிள்ளைகளும் எந்தவித வேறுமாடுமின்றி சேர்ந்து படிக்கவும், அதேபோன்று எல்லா ஆசிரியர்களும் பணிபுரியும் வகையிலும் பரிணமித்து வருகின்றன. இதை அப்பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் எத்தனை பேர் அறிவார்களோ தெரியாது. இதைப்பற்றி நாம் எல்லோரும் பெருமைப்படாமல் இருக்கமுடியாது. அத்துடன் நில அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் காணி அமைச்சின் உதவி கொண்டு யாழ். குடாநாட்டிலும் வன்னிப்பகுதியிலும் குடியேறி வாழ்வதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத் துள்ளார்.
1957ல் நடைபெற்ற பதிநான்காவது மகாநாட்டின்பொழுது ஏற்பட்ட குழப்பங்களாலும் எம். சி. அவர்கள் தலைமையை ஏற்ற தாலும் மகாசபையில் பிளவுகள் ஏற்பட்டன. இடதுசாரிக் கொள்கையை ஆதரிப்பவர்கள் மகாசபையுடன் ஒட்டிக்கொண் டார்கள். மற்றவர்கள் பிரிந்து சிறுபான்மைத் தமிழர் ஐக்கிய முன்னணி என்ற இயக்கத்தை ஆரம்பித்தார்கள். ஜி. நல்லையா, ஆ. ம. செல்லத்துரை, ஆ கணபதிநாதன், க. மு. முருகேசு ஆசிரியர் போன்றவர்கள் முக்கியமானவர்கள். இவர்களில் பலர் தமிழரசுக் கட்சி சார்புடையவர்கள் என்றே கூறவேண்டும். அத்துடன் ஒரு சிலர் வள்ளுவர் மகாசபையை உருவாக்கிச் செயற்பட்டார்கள். இதில் முக்கியமானவர் காரை நகரைச் சேர்ந்த திரு ஐயம் பிள்ளை ஆசிரியர் அவர்களே.
1960களில் உலகரீதியாக கொம்யூனிசத்தில் ஏற்பட்ட தத்துவ ரீதியான பிளவுகளால் சீன கொம்யூனிச அணி, ரஷ்ய கொம்யூனிச அணி எனப் பிளவுபட சிறுபான்மைத் தமிழர் மகாசபையிலும் மேலும் பிளவு ஏற்பட்டது. சீனக் கொம்யூனிசம் சார்பான பிரபல முற்போக்கு எழுத்தாளர் கே. டானியல், கே. பசுபதி, எஸ். ரி. நாகரத்தினம் ஆகியோர் பிரிந்து சென்று சிறுபான்மைத் தமிழர் வெகுஜன இயக்கத்தை உருவாக்கி, தீண்டாமை ஒழிப்பு, ஆலயப் பிரவேசம் போன்ற பணிகளில் ஈடுபட்டார்கள். இப்பிளவுகள், பிரிவுகள் ஏற்பட்டும் எம். சி. மகாசபைத் தலைவர் என்ற முறையில் தன்னைத் தேடிவந்தவர்களுக்கெல்லாம் அந்த இயக்கம், இந்த இயக்கம் என்று பாராமல் சேவை செய்யும் பக்குவத்தைக் கொண்டிருந்தார் எனக் கூறின் மிகையாகாது.
அரசியல் வேறுபாடுகளால் ஒரு சமூக இயக்கம் பிளவு படக்கூடாது என்ற அடிப்படையில், 1958ல் மகாசபையின் உத்தி

59 9 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
யோகப் பதவியை வகிப்பவர்கள், எந்த அரசியற் கட்சியிலும் அங்கம் வகிப்பவர்களாக இருக்கக்கூடாது என்ற தீர்மானத்தை மகாசபையின் பொதுச்சபையின் கூட்டத்தில் விவாதித்தபொழுது, கே. டானியல், கே. பசுபதி போன்ற கொம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் வெகுவாக எதிர்த்தார்கள். ஆனால் தலைவர் எம். சியோ கொம்யூனிசக் கட்சியின் அங்கத்தவராக இருந்தும் அத்தீர்மானம் பற்றித் தனது கருத்தைக் கூறவில்லை. தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபொழுது தோல்வியே கண்டது.
இன்னும் ஒருமுறை, அதாவது 1960ல் பொதுத்தேர்தலின் போது, கோப்பாய் தொகுதியில் போட்டியிட்ட திரு. க. நல்லதம்பி அவர்கள் மகாசபையின் நிர்வாகசபை அங்கத்தவர் என்ற முறையில் தனது தொகுதியில் தன்னை ஆதரித்து மகாசபை பிரசாரம் செய்யவேண்டும் என்று கேட்டபொழுது, மகாசபை இதில் தலை யிடக்கூடாது; அங்கத்தவர்கள் தங்கள் தங்கள் விருப்பப்படி வாக் குரிமையைப் பயன்படுத்தலாம்; அத்துடன் மகாசபை எந்த வகை யிலும் இத்தேர்தல் பிரசாரத்தில் ச்டுபடக்கூடாது என்று வாதாடி னார்கள். வாக்குக்கு விடப்பட்டபொழுது அது தோல்வி கண்டது. இத்தீர்மானத்தைப் பொறுத்தவரையில் தலைவர் நடுநிலை வகித்தார். இத்தேர்தலில் கொம்யூனிசக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் போட்டிக்கு நின்றமையாலேதான் இத்தீர்மானம் தோல்விகண்டதென்றே கூற வேண்டும்.
1959ல் இடம் பெற்ற மகாசபையின் பதினாறாவது வருடாந்தர மகாநாட்டில் பொது நிர்வாகசபையில் தோல்வி கண்ட இணைச் செயலாளர்கள் என்ற முறையை பொதுச் செயலாளர், நிர்வாகச் செயலாளர் என்ற முறையாக மாற்றம் பெறவேண்டும் என்ற தீர் மானம் மகாநாட்டில் திரும்ப எடுக்கப்பட்டு அதிகப்படி வாக்கு களால் வெற்றி கண்டது. அதற்கமைய நான் பொதுச் செயலா ளராகவும், கே. பசுபதி நிர்வாகச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டோம். இதையிட்டு ஆத்திரமடைந்த மகாசபையில் முக்கிய இடம் வகித்தவர்களும் முற்போக்கு அரசியல் இலக்கியம் பேசினவர்களும், எழுதியவர்களுமாகிய ஒருசிலர் 'வல்லைமுணி” எனும் “றோனியோ’ செய்யப்பட்ட அனாமதேய அஞ்சல் பிரசுரம் ஒன்றை. 1960ல் யாழ். நகரில் நடைபெற்ற முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மகாநாட்டின்பொழுது தபால்மூலம் வெளியிட்டார்கள். அதில் தங்கள் சொந்த பந்தங்கள் பற்றி வசைபாடியது மட்டு மல்லாமல் என்னைப்பற்றியும் வசைபாடியிருந்தார்கள். இக் கபடச் செயலால் நான் மகாசபையிலிருந்து விலகவேண்டி இருந்தது. இருந்தாலும் எம். சி. யுடன் இருந்த தொடர்பு அறவில்லை.

Page 33
öib፰ሀ®ሀmdb O 60
1970-ல் எம். சி. நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றுக் கொழும்புக்கு வந்தபொழுது அவரை கோட்டை புகையிரத நிலையத்தில் மாலைபோட்டு வரவேற்றவர்களில் நானும் ஒருவன். இந்நியமனம் இதுநாள் வரைக்கும் நீங்கள் ஆற்றிய சமூக சேவைக் கான பரிசு என்றும் இந்நியமனம் இனிமேலும் நீங்கள் அதிக அளவில் சமூக சேவையில் ஈடுபடுவதற்கான உந்துசக்தியெனவும் கூறி வாழத்தினேன். எம். சி. ஒரு கபட வஞ்சகமற்ற சமூகவாதி. அவர் அணியும் உடைபோலத்தான் அவர் மனம் வெள்ளை. அவர் கொம்யூனிஸ்ட் கட்சியில் அங்கம் வகித்தாலும் சமூக சேவைக்கே முதலிடம் கொடுத்தார். அரசியலுக்கு இரண்டாம் இடத்தையே கொடுத்தார். அதற்கு அமையவே மகாசபையை நடத்திவந்தார். வீடு, குடும்பம் ஆகியவற்றைக் கவனிக்காமலே தன்னைச் சமூக சேவை யில் ஈடுபடுத்தின அவருக்கு எதிரிகள் இல்லை என்றே கூற வேண்டும். அன்று எமக்கென இயக்கங்களை ஆக்கித் தீண்டாமை போன்ற சமூகக் குறைபாடுகளை நீக்கப் பாடுபட்டோம். ஆனால் இன்றோ விடுதலைப் போராளிகள், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இப்பணியில் இலகுவாக சமூகப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கின்றனர் என்பதை அறியும்போது என்னைப் போன்ற வர்கள் மகிழ்ச்சி அடையாமல் இருக்கமுடியாது. இதையிட்டு வாழ் நாள் முழுவதும் சமூக சேவையில் ஈடுபட்ட எம். சி. யின் ஆத்மா குதூகலித்துக் கொண்டே இருக்கும் என்பது திண்ணம். சமூகவாதி சமதர்மவாதியாகவே இருப்பான். இது எம். சி. க்கு மிகப் பொருத்தம்.

எஸ். பத்மநாதன்
எம்.சி. அரைநூற்றாண்டுச் சமதர்மவாதி
தமிழகத்தின் சேய் போன்ற யாழ்ப்பாணக் குடாநாட்டில் நீண்ட காலமாகப் புரையோடிப்போயி ருந்த சாதிப்பாகுபாடு அங்கு வாழ்ந்த மக்களை வேறுபடுத்திக் கோடிட்டுப் பிரித்தும் வந்துள்ளது. பஞ்சமர், தீண்டத்தகாதவர், ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், உரிமை மறுக்கப்பட்டோர், சமூகக் குறைபாடுடையோர், குடிமைகள், அரசினர்கள், நசுக்கப் பட்டோர், கண்டநிண்டதுகள் என்றெல்லாம் புதுப் புதுப் பெயர்களில் நாமகரணமிடப்பட்டு அழைக்கப் பட்ட இவர்கள் செழிப்புள்ள அக் குடாநாட்டில் உள்ள உயர்குடிப்பிறப்பாளர் என்று தம்மைத்தாமே முத்திரை இட்டுக் கொண்டோர் மனதில் மட்டும் வரண்டு கிடந்தனர். இவ்வாறான சூழ்நிலையில் சக்திமிக்க போராளியாகவும், சமதர்மவாதியாகவும் தன்னை உருவாக்கிக்கொண்டு வாழ்ந்த எம். சி. சுப்பிர மணியம் அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வில் ஒரு மைல்கல். தமிழர்களின் சமூகப் பெயர்ச்சிக்கு உதவிய சமதர்மவாதி. தேசிய ரீதியில் போற்றப்பட்ட அரசியல்வாதி.
ஆங்கிலம் படித்து ஆங்கிலேயருக்கு அடி
வருடிகளாக மாறி அரச உத்தியோகங்களில் நுழைந்தது மேலை நாட்டினரின் ஆடைகளை அணிந்து

Page 34
arbá6g(Burdo O 62
வாழ்ந்தவர்கள் மத்தியில் கதர்த் துணி கட்டிச் சால்வை அணிந்து, வெள்ளை வெளேர் என்று காட்சி தந்து, கால்நடையாகவும், ‘சைக்கிளிலும் யாழ்ப்பாணம் முழுவதும் சென்று சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்த ஒருவர்தான் எம். சி. உடல்மீது கத்தியும் கல்லும் ஊறு செய்தாலும் அச்சமில்லை என்ற புது வேதம் படைத்து, நிலப்பிரபுத்துவ மக்கள் மத்தியில் துணிந்து நின்று சமூகமொன்றின் எழுச்சிக்காகப் பாடுபட்ட எம். சி. மறைந்து பத்தாண்டுகள் மறைந்துவிட்டன என்பதை நம்பமுடியவில்லை.
அஞ்சாநெஞ்சமும், ஆணித்தரமான சமதர்மக் கோட்பாடும், சமூகசேவை உணர்வும் நிறைந்த எம். சி. யாழ்ப்பாணத்தில் ஒரு தொழிலாளி குடும்பத்தில் கனிஷ்ட புதல்வனாக 27-09-197ல் பிறந்தார். இவர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் கல்வி கற்பதற்காகக் கடுந்தவம் இருந்தவர். தகப்பனாரின் விருப் பப்படி மெதடிஸ்ட் திருச்சபையினர் நடத்தி வந்த சேணியதெரு மெதடிஸ்ட் தமிழ்க் கலவன் பாடசாலையில் நிலத்தில் இருந்து படித்தவர். கல்விமான்கள் வாழ்ந்த அப்பூமியில் கல்விக்காக நிலத் தில் இருந்து படித்த இம் மேதாவியின் ஆற்றலை அவதானித்த தகப்பனார் ஆங்கிலம் கற்பிக்க விருப்பம் கொண்டு, புனித சம்பந் திரிசியார் கல்லூரியில் சேர்த்துவிட்டார். பல சிரமங்களுக்கு மத்தியில், சாதித் துவேசங்களுக்கு நடுவில் “மெட்ரிக்குலேசன்’ வகுப்பு வரை கல்வி பயின்றார். எனினும் சமூகசேவை உணர்வு மேலீட்டால், தனது சமூகத்தின் மேம்பாட்டிற்காகப் பல நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தார். தொழில் காரணமாகத் திருமலை சென்று பின்பு அரச லிகிதர் சேவையில் சேர்ந்தாலும் அதனை விட்டு மீண்டும் யாழ்ப் பாணம் வந்து தீவிரமாகச் சமூகப் பணியில் ஈடுபடலானார்.
படாடோபமற்ற, பெருமை-வஞ்சகமற்ற, ஆசையற்ற, சுத்தமான ஆத்மா என்று பலராலும் அடையாளம் காணப்பட்ட எம். சி.யின் வாழ்வு புனிதமானது. இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடிய டாக்டர் அம்பேத்கார் போன்று, சமூகத்தில் தாழ்ந்திருந்த தமிழர்களைத் தன் சொற்பொழிவுகளால், கருத்துக்களால் தட்டி எழுப்பி நிமிர வைத்துக் கல்விச் சிந்தனைகளை ஊட்டி மக்களை வளர்த்த இத்தலைவரின் சிறப்புக்கள் பலவாகும்.
இவரது அரைநூற்றாண்டுச் சமதர்ம வாழ்வினை ஆராய்ந் தால் முன்னிலை வகிப்பது இவரது சமதர்ம இலட்சியம்தான். ஆரம்பம் முதல் இறக்கும் வரை ஒரு கோட்பாட்டுடன் வாழ்ந்த தனிப்பெரும் இலட்சியவாதியான இவர் பிறந்த சமூகத்தின் காரணமாகவும், சமூக விடுதலை வேட்கை காரணமாகவும், 1947ல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கிய உறுப்பினராகச்

63 9 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
சேர்ந்துகொண்டதுடன், இந்நாட்டின் இடதுசாரி இயக்கத்தில் முக்கிய முற்போக்குச் சக்திகளுடன் சேர்ந்து பணியாற்றினார். தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற இவர் தனது சிந்தனைகளைப் பிற்பட்ட மக்கள் மத்தியில் கூடு தலாகப் பரப்பினார். இந்நாட்டினைச் சமதர்ம இலட்சியத்திற்கு இட்டுச் செல்வதற்கு இவர் செயற்பட்ட விதம் மிக உயர்ந்தது.
இவரை ஒரு சமதர்மவாதி என்று இனம் கண்டுகொள் வதில் முக்கிய பங்களிப்பு இவரது தீண்டாமை ஒழிப்பு நடவடிக் கைகளாகும். நிலப்பிரபுத்துவத்தின் மிச்சசொச்சமான சாதி யமைப்பில் மிகவும் கொடூரமாகச் சுரண்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வேண்டி ‘ஸ்தாபனரீதியாக அணி திரட்டியது இவரது முக்கிய செயலாகும்.
இவரது காலத்தில் பல்வேறு சமூக எழுச்சி மன்றங்கள் தளைக்க ஆரம்பித்தன. கிராமிய மட்டங்களில், பிரதேச மட்டங் களில், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பல நிறுவன அமைப்புக்கள் உருவாகி வந்தன. வடமராட்சி சன்மார்க்கசபை, சிறுபான்மைத் தமிழர் முன்னேற்றக் கழகம், திருவள்ளுவர் மகாசபை, அருந்ததியர் சங்கம் என்றெல்லாம் உருவாகிய பல மன்றங்களை ஒன்றிணைக்கப் பல நடவடிக்கைகளை எடுத்து கண்ட வெற்றியினால் 1942ல் *அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையை உருவாக்க உழைத்தார். இந்திய யாப்பினை உருவாக்கிய டாக்டர் அம்பேத்காரின் வழி நின்று சாதி ஒழிப்பிற்குப் பாடுபட்ட இவரது சிந்தனை வரலாற்று நிகழ்வுகளில் மிக உயர்ந்தது.
1942-ல் அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகா சபையை உருவாக்க உழைத்து, 1957-ல் அதன் தலைவராக விளங்கி அவர் செய்த சேவைகள் பலவிதம். தீண்டாமை ஒழிப்பு இவரது போராட்டங்களில் மிக உயர்ந்தது. இறந்த ஒருவரின் உடலை மயானத்தில் எரிப்பதற்கே உரிமையில்லாது வாழ்ந்த சமூகத்தில், ‘வில்லூன்றி மயானப் போராட்டம்' முதன்மை வாய்ந்தது. தேநீர்க் கடைப் போராட்டம், ஆலயப் பிரவேசப் போராட்டம், பாட சாலைகளில் சமவாய்ப்புப் போராட்டம் என்று பல்வேறு செயற் பாடுகளை முன்னெடுத்துச் சென்றார். ஆண்டாண்டு காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டுள்ள உரிமை குறைந்த மக்களுக்காகக் குரல் கொடுத்தார். இதனால்தான் மக்கள் இவர் பின்னால் திரண் டனர். சாதி வேறுபாடு இல்லை, எல்லோரும் சமத்துவமான வர்கள் என்று வாக்கு வேட்டைக்காக மேடைகளில் பேசியவர் களிடம் துணிந்து போராட்டம் நடத்தியதன் மூலம் ஒரு விழிப் புணர்ச்சியை ஏற்படுத்தியவர்.

Page 35
சந்திரபோஸ் O 64
சமூகத்தின் மாற்றத்துக்கும், மறுமலர்ச்சிக்கும் அடிப்படை கல்விச் சிந்தனையை ஏற்படுத்துவதே என்பதில் அவருக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்கள் தலைநிமிர்ந்து வாழக் கல்வியே சிறந்த சாதனம் என்ற வகையில் ஆரியகுளம் சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்கத்தினை நிறுவி, சனி, ஞாயிறு தினங்களில் தானே முன்னின்று கற்பிக்க ஆரம்பித்தார். இலவச வகுப்புக்களே இவை யாவும். உண்மையில் இச் சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்கம்தான் முதல்முதலில் தீண்டாமை ஒழிப்பில் ஈடு பட்டது என்பதனை உணரமுடியும். சமூக வேலைத் திட்டங்களும், கல்விச் சேவைகளும் இங்கிருந்தே பிறந்தன. ஈழத்தின் பிரபல எழுத்தாளர் எஸ். பொ. முதல் பல எழுத்தாளர்கள், பேச்சாளர் களின் மூல இடமும் இதுதான்.
தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சியில் “கிறிஸ்தவ மிசனரிகள்’ உதவி புரிந்த வேளையில் இதனைச் சாதகமாக்கிச் சமூக சேவை செய்யப் புறப்பட்ட எம். சி. படிப்படியாக பாடசாலை களில் பிள்ளைகளது சம ஆசனங்களுக்கான போராட்டத்தினை ஆரம்பித்தார். கல்வி அறிவு அற்று, மூடப்பழக்கங்களில் மூழ்கி யிருந்த மக்களுக்காகக் குடாநாட்டின் பல பகுதிகளிலும் சன சமூக நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டன. பல தீக்கிரையாக்கப் பட்டபோதிலும் தொடர்ந்து முயற்சி செய்து மகாத்மாகாந்தியின் ‘ஆதாரக்கல்வி வழி நின்று எழுத்தறிவு ஊட்டப் பாடுபட்டார். இந்த அடிப்படையில் இவரது முயற்சியால் 1957-க்கும் 1959-க்கும் இடையில் பதினான்குக்கும் மேற்பட்ட தமிழ்க் கலவன் பாட சாலைகள் உதயம் பெற்றன. குட்டியபுலம், தெல்லிப்பளை, கட்டு வன்புலன், கரவெட்டி, மட்டுவில், மந்துவில், புலோலி, அச்சுவேலி போன்ற கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான கல்வி நிலை யங்கள் உருவாகின. ஒலைக் கொட்டில்களில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகள் பின்பு வித்தியாலயங்களாகத் தரம் உயர்ந்தன.
இவ்வாறாகப் பாடசாலை முயற்சிகளில் சிறுபான்மைத் தமிழ் வாலிபர்கள் பலர் ஆசிரியர் வாய்ப்பினைப் பெற்று, ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளிலும் அனுமதி பெற்றுச் சிறந்த ஆசிரியர் களாகி மாணவர்களைப் பயிற்ற உதவினார். ஆசிரியர்களை உருவாக்கியது மட்டுமின்றி, "யாழ்ப்பாணம் ரசிக ரஞ்சனசபா’வில் தாழ்த்தப்பட்ட கலைஞர்களுக்குச் சம சந்தர்ப்பம் வழங்கப் பாடு பட்டதுடன், சனசமூக நிலையங்களுக்கிடையில் விளையாட்டுப் போட்டிகளை ஏற்படுத்தி விளையாட்டு வீரர்களையும் உருவாக் கினார். சமூகத்தின் விடுதலைக்கு மாணவர் கல்வி வளர்ச்சி, ஆசிரியர் பயன்பாடு, கலைஞர்களின் பெருக்கம், விளையாட்டுத் திறன் போன்ற பல்முகச் சிந்தனைகளை ஒன்றாக வளர்த்தபடி

65 O 6ů.éfi. 695 orgpas sa6apadeoů (Burgraf
யாலேதான், பின்தங்கிய சமூகங்களுக்கிடையே ஒரு சமூகப்பெயற்சி, சமூக மேம்பாடு உருவாகியது. இவரது இப்பணியினால்தான் இன்று பல கல்வியியலாளர்களை, கலைஞர்களை, கல்விக்கூடங்களைத் தாழ்த்தப்பட்ட மக்கள் பெற்றார்கள்.
சமூக சீர்திருத்தவாதி எம். சி. என்றவகையில் இவரது சேவைகள் பலவிதம். தாழ்த்தப்பட்டவர்களின் சுயமரியாதையைப் பேணிக்காத்த முதல்வர் என்றவகையில் இவரது சிந்தனைகள் பல. இடதுசாரி இயக்கத் தொடர்பு, சமதர்மக் கோட்பாடு, தமிழ்நாட்டு இந்திய அரசியல்வாதிகளின் சித்தாந்தம் அனைத்தும் திரண்ட ஒரு வடிவமாக நின்ற எம். சி. எதனையும் வாயளவில் சொல்பவரல்ல. வாழ்ந்து காட்டியவர். வாழ்நாள் முழுவதையும் மக்களுக்காக அர்ப்பணித்தவர். A.
சமூக ஏற்றத்தாழ்வுப் போராட்டத்தில் பல இடர்ப்பாடுகளைக் களைய முயன்ற வேளையில், ஆலயப் பிரவேசம், தேநீர்க் கடைப் பிரவேசம் இரண்டும் விஸ்வரூபமெடுத்தன. காலத்தால் அழியாத அவரது சமூக உணர்வூட்டல், போராட்டங்களுக்கு வலுவூட்டியது. பல கருத்தரங்குகள், வெகுசன எழுச்சிப் போராட்டங்கள் மூலம் சமஉரிமை, சாதி ஒழிப்புப் போராட்டங்கள் வலுவடைந்த வேளையில், பல பிரச்சனைகள் ஏற்பட்டன. பலர் கொலை யுண்டனர். பலரது வீடுகள் கொளுத்தப்பட்டன. இவர் அத்தனை கொடுமைகளையும் எதிர்த்து முகம்கொடுத்தார். பலர் ஒத்துழைப்பது போல் நடித்தனர். இவர்களை மாற்றத் தனது முழுத் திறனையும் பயன்படுத்தினார். அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகா சபைத் தலைவர், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர், இடதுசாரி அரசியல் தொடர்பாளர், கே. டானியல், டொமினிக் ஜீவா, எஸ். பொ, என். கே. ரகுநாதன், பிரேம்ஜி, இளங்கீரன், தெணியான், எஸ். அகஸ்தியர் போன்ற எழுத்தாளர்களின் தோழன் என்ற வகையில் பல சாதகமான விளைவுகள் இவருக்கு ஏற்பட்டன.
எம். சி. ஒரு சிறந்த அரசியல்வாதி என்பதற்கு இவருக்குக் கிடைத்த பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒரு சான்றாகும். 1970-ல் ஆட்சிக்கு வந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டர சாங்கத்தில் இவருக்கு உரிய இடம் கிடைத்தது. நீண்ட காலப் பொதுச்சேவையில் ஈடுபட்டுள்ள இவரைக் கெளரவித்து பாராளு மன்ற உறுப்பினராக்கிய வேளையில், யாழ்ப்பாணம் திரும்பிய எம். சி.க்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. "எனக்கு வழங்கப் பட்ட உறுப்பினர் பதவி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்குக் கிடைத்த பரிசாகும்” என்று தன் உரையில் குறிப்பிட்ட இவரின் பெருந்தன்மை அன்று உணரப்பட்டது.

Page 36
சந்திரபோஸ் O 66
எம். சி. ஒரு சமூகவிடுதலைப் போராளியாகக் காலம் முழுதும் வாழ்ந்துள்ளார். ஒரு சமூகமொன்றின் விடிவிற்காகச் சாதிக் கொடுமையை நீக்கப் புறப்பட்டு அதற்காக சிறுபான்மைத் தமிழர் மகாசபையைத் தோற்றுவித்தார். அதனுரடாக, சமூகத்தின் பல்வேறு உரிமைப் போராட்டங்களையும் நிகழ்த்தினார். கல்விச் சீர்திருத்தத்தின் மூலமாகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு தன்னம்பிக்கையை வளர்த்த தலைவராகவும் விளங்கினார். கிராமிய மட்டத்தில் இருந்து புரட்சிகர சிந்தனைகளைத் தோற்றுவித்து, தாழ்ந்து கிடந்த சமூகத்தினை நிமிர்த்தியதுடன், அரசியல் செல்வாக்கினைப் பயன்படுத்தி ஒரு சமூகத்தின் விடுதலைக்கு உதவிய போராளியாவார். இவரது சிந்தனைப் புரட்சியின் விழுதுகளே விருட்சங்களாகி இன்று தேசிய விடுதலைக்கும், சமத்துவத்திற்குமான போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்
அரை நூற்றாண்டு காலம் சமதர்மவாதியாக, பின்தங்கிய சமூகத்தின் விடுதலைப் போராளியாக, நாட்டின் அரசியல் அறிஞராக, பல இனங்களின் தேசியத் தோழராக விளங்கிய் எம். சி. ஒரு காலகட்டத்தின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் ஓங்கிய குரலாக ஒலித்த இவர், அமைதி யான வழியில் சமூகமாற்றத்துக்கு வித்திட்டார். இவரைப் போன்ற ஒரு கர்மவீரனைக் காண்பதற்கு நீண்ட காலம் எடுக்கலாம்.

eb.eredo... é96aesočibaronečTLň
எம்.சி.யின் கல்வித்தத்துவம்
"உன்னையே நீ அறிவாய்" - சோக்கிரட்டீஸ்,
எம். சி. சுப்பிரமணியம் சிறுபான்மைத் தமிழரின் சிறந்த தலைவன். சோக்கிரட்டீஸ் என்ற கிரேக்க தத்துவ ஞானியின் வழியிலே சிந்தித்து தன் கல்விச் சிந்தனை களைச் செயலாக்கி சிறுபான்மைத் தமிழர் மத்தியிலே ஒளியேற்றிய சிறந்த தலைவன், எழ். சி. என்ற இரண் டெழுத்தால் அழைக்கப்பட்டு பத்தாண்டுகளுக்கு முன் அமரராகிய எம். சி. சுப்பிரமணியம் என்றால் அது மிகைப்படக் கூறியதாகாது.
பெளத்தம் கூறுவது "கல்வி என்பது ஒன்று மில்லை, தன்னை அறிவதே ஆகும்” (“Education is nothing but self realization”). gigi, FT356GT "Le Gô6ör 35GvGớiš தத்துவத்தோடு ஒத்துப் போவதைக் கண்டார் எம். சி. தன்னை அறிந்தார், அதிலிருந்து தனது சூழ்நிலையை, தனது சமூகத்தை அறிந்தார். அதற்கு நிவாரணம் தேடினார். இதனாலே அவருடைய கல்வித் தத்துவம் அவரின் வாழ்வாக, வாழ்க்கைக் கல்வியாக மாறியது. சிறுபான்மைத் தமிழர் தம் கல்வி வளர்ச்சியிலே, எம். சி. ஒரு மைல்கல். அவரிடமிருந்து பெற்ற கல்விச் சிந்தனைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

Page 37
origg(Bunëto O 68
எம். சி. சுப்பிரமணியத்தின் பின்புலம் அவரது கல்விச் சிந்தனைக்கு ஆதாரமாகும். அமரர் எம். சி. சுப்பிரமணியம் 27-09-1917ல் யாழ்நகரில் பிறந்தார். இவரது தந்தையார் முத்தர் கணபதிப் பிள்ளை. தாயார் திருமதி கண்ணாத்தாள் கணபதிப் பிள்ளை. இவருடைய மூத்த சகோதரிகள் திருமதி விசாலாட்சி ஐயம் பிள்ளை, திருமதி பாக்கியம் செல்லையா ஆவர். மூன்றரை வயதிலே தாயாரை இழந்த இவர் தந்தையின் வழிகாட்டலிலும், சகோதரிகளது அரவணைப்பிலும் வளர்ந்து வந்தார். இவரது சகோதரி யான திருமதி விசாலாட்சி ஐயம்பிள்ளை தம்பதிகளுக்குப் பிள்ளைப் பாக்கியம் இல்லாத காரணத்தால், இவரையே அரிய சகோதரனாய், தமது அருமைப் பிள்ளையாய் நேசித்து வளர்த்து வந்தனர்.
இவருடைய ஐந்து வயதில் யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலடியில் உள்ள மெதடிஸ்த கிறிஸ்தவ பாடசாலையில் சேர்க்கப்பட்டார். சாதிக்கொடுமை பிஞ்சு உள்ளங்களையும் பாதித்தது. உயர்சாதிப் பிள்ளைகள் என்று கருதப்பட்டோர் மட்டும் மேசை வாங்கில் இருந்து படிக்க, சிறுபான்மைத் தமிழ்ப் பிள்ளைகள், நிலத்திலேயிருந்து படிக்கவேண்டும். எம்.சி.யும் அந்நிலையிலே நிலத்தில் இருந்தே படித்தார். இந்நிலையில் பாடசாலை செல்ல மறுத்த எம்.சி.யை அவரது தந்தை கணபதிப்பிள்ளையும் திரு. சின்னத்தம்பி என்பவரும் அப்போதைய தலைமையாசிரியரின் அனுசரணையுடன் வாங்கு மேசைகள் வாங்கிப் பாடசாலைக் களித்தனர். இதனாலே சிறுபான்மைத் தமிழ்ப்பிள்ளைகள் ஏனை யோருடன் சரிசமமாக இருந்து படிக்கும் நிலை ஏற்பட்டது. நல்ல உள்ளம் கொண்ட அத்தலைமை ஆசிரியரை எம். சி. பிற்காலத்தில் நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளார்!
தமிழ்மொழி கூறும் ஒன்றேகுலம்’ என்பதும் சாதியிரண் டொழிய வேறில்லை, இட்டார் பெரியோர் இடாதோர் இழி குலத்தோர் என்பன எல்லாம் எங்கே போனதோ அறிய முடிய வில்லை. ஈழத்திருநாட்டில் சைவத்தையும், தமிழையும் வளர்க்க உதவியர் நாவலர். “வித்தியாதானத்திற்குச் சமமான தானம் ஒன்று மில்லை. அதுவே எல்லாத் தானங்களிலும் சிந்தது" என்று வித்தியா சாலை நிறுவப்பட்டது. சுதேச கல்விக்கு வித்திட்டு கல்விக்கு சிறந்த வரைவிலக்கணம் கூறிய நாவலர் தேசவளமைச் சக்திக்குட்பட்டு சாதியம் பேசி தமிழ் மக்களில் ஒரு சாரார் கல்வி உரிமையினை, சமூக உரிமைகளை மறுத்தார். அவர் எழுதிய சைவ வினா விடை களில் சாதிகள் அப்பட்டமாய்க் காட்டப்பட்டன, கற்பிக்கப்பட்டன. கல்விக்குச் சிறந்த வரைவிலக்கணம் கூறிய இவரே, தான் ஆரம்பித்த பாடசாலையில் தமிழரில் ஒருசாராருக்கு அனுமதி மறுத்தது விந்தை யிலும் விந்தை. சிறுபான்மைத் தமிழருக்கு யாழ் பட்டணத்திலே

69 O 6Tib.d. (3d) argpa, 68(Boj66of (8tury ref
உள்ள கிறிஸ்துவ பாடசாலைகளே கைகொடுத்தன. கிராமங்களிலே அடிமை - குடிமை முறை அப்படியே இருந்தது. எம். சி. அவர்கள் தனது கல்வியை யாழ் சம்பத்திரிசியார் கல்லூரியிலேயே தொடர்ந்தார். "இலண்டன் மற்றிகுலேசன்’ (London Matriculation) பரீட்சை வரை கற்றபின், அரசாங்க சேவையில் சேர்ந்தாலும், தான் பிறந்த சிறுபான்மை இன மக்களின் துன்பம், துயரம், இடர் என்பன இவரைப் பதவிகளை உதறித் தள்ளிச் சமூக சேவையில் ஈடுபட வழிவகுத்தன. இவருடைய அக்காவும், அத்தானும் (வளர்த்த தாய் தந்தை, இவரது மனைவி லெட்சுமி சுப்பிரமணியமும் இவருடைய சேவை மனப்பாங்கை ஆதரித்து வீட்டுப் பொறுப்பைத் தாமே பார்த்தனர். இதனாலேயே இன்றைய எம்சியை நாம் தரிசிக்க முடிந்தது. அவரது தத்துவம் பற்றிப் பேசமுடிகிறது.
சமூக ஏற்றத் தாழ்வுகள், கிராமங்களிலேயே மிகக் கொடூரம். பெண்கள் மேற்சட்டை போட இயலாது. சிலர் துணிந்து போட முயன்றபோது, கொக்கைத்தடியிலே சத்தகம் கட்டிக்கிழித்து மான பங்கப்படுத்திய கதைகளும் உண்டு. அன்றைய யாழ் சமூகம் சிறு பான்மைத் தமிழனைப் படிக்கவிடவில்லை, நினைத்த உடுப்புக் களையும் அணியவிடவில்லை. உயர் சாதியினர்கள் எனத் தம்மைக் கருதியவர்களைக் கண்டால் தோளில் போடும் துண்டினைக் கழற்றி கமக்கட்டுக்குள் வைத்த கதைகளும் உண்டு. சிறுபான்மைத் தமிழரில் ஒரு சாரார் விடியுமுன் தொழிலுக்குச் செல்லுதல் வேண்டும். விடியுமுன் வந்திட வேண்டும். போகும்போதும் வரும்போதும் காவோலையைக் கட்டி இழுத்துக்கொண்டு வருதல் வேண்டும். ஏனெனில் அவர்கள் முழிவியளம் (காலையில் காணுதல்) கூடாதாம்; வீடுகளில் அடிமை வேலை, வெளியுலகில் எவ்வித கணிப்பும் இன்றி மாடுமாதிரி உழைத்த பாட்டாளி வர்க்கம், மதிப்பின்றி வாழ நேர்ந்த கதி எம்.சி. யின் மனதை வாட்டியது. உழைக்கும் வர்க்கம் சுரண்டப்பட்டது. குடும்ப வாழ்விலும், மேற்சாதியினர் எனக் கூறுவோர் சொல்வனவே செய்யப்படவேண்டும். இதனாலே ஏற்பட்ட பிரச்சனைகளால் தண்டிக்கப்பட்ட சிறுபான்மைத் தமிழர்கள் ஏராளம். குடுமி கட்டியதற்காகக் குடுமி அறுக்கப்பட்டோர் பலர். மேற்சாதி எனப்படுவோர் சாவீட்டுச் சோறு இரக்கப் போகா மைக்காகச் சில சிறுபான்மைத் தமிழர் பெற்ற சவுக்கடிகள் பல. இதனாலே பலர் மதம் மாறியதும், தென்னிலங்கைக்கு ஒடிக் குடி யேறியதும் உண்டு. இவைகள் எல்லாம் எம்.சி.யின் மனதைப் பாதித்தன. சமூக ஏற்றத்தாழ்வுக்குச் சாவு மணி அடிக்கப் புறப்
ll - Tf T.
"உனக்கே நீ உண்மையுள்ளவனாக இரு” (ரூசோ) (To thine ownself be true) என்ற தத்துவ உணர்வால் உந்தப்பட்டு, கல்வியே

Page 38
SpyBunrefo O 7O
சிறுபான்மையினரின் அமிர்தம் என்று எண்ணினார் எம். சி. அவர்கள்
(Education is the Ambrosia for Minority Tamils). 6Tib. சி.யின் கல்விக்கொள்கை:
1. கல்வியே தீண்டாமையை ஒழிக்கும்.
2. கல்வியே ஒடுக்கப்பட்டவர்களுக்குச் சமத்துவத்தை
ஏற்படுத்தும்,
3. கல்வி என்னும் கருவியே சிறுபான்மைத் தமிழருக்கு சமூக இசைவாக்கம் உள்ள விருத்தி, கலாச்சார விழிப்புணர்வு ஏற்படுத்தி, சாதியத்தை ஒழிக்கும்.
4. இவை எல்லாவற்றிற்கும் மேலாகச் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாடடையக் கல்வியே வேண்டும் என்று கருதினார்.
5. கல்வியைச் சிறுபான்மைத் தமிழர் எந்த வழியிலாவது
பின்பற்றிப் பெறவேண்டும்.
"உள்ளத்தாற் பொய்யாது ஒழுகின்; உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்” (குறள் 294)
இதனை எம். சி. இறுதிவரை கடைப்பிடித்தார். அவருடைய உள்ளத்தை அவருடன் பழகியவர் நன்கு அறிவர். எல்லோருக்கும் உதவுவதில் அவர் நல்ல ‘சமாரித்தன்’ (Samarian) ஆவார். இதனால் அவர் எவ்வாறு உதவலாம் என்று சிந்தித்தபோது, ஸ்தாபன அமைப்புகள் வேண்டும் என்பதை உணர்ந்தார். இதனாலே இவருடைய செயற்பாடுகள் சிறிதளவில் தொடங்கிப் பெரிதாக வளர்ந்தன; சிறுபான்மைத் தமிழர் தம் வாழ்விலே ஒளியேற்றியன.
*அனைவருக்கும் கல்வி” என்று சோக்கிரட்டீஸ் மொழிய, அவருடைய சீடர் பிளாட்டோ ஆரம்பத்தில் முரண்பட்டார். சோக்கிரட்டீஸ் ஒரு சமையல்காரனை அழைத்து, வினா முறையிலே அவனிடம் கேட்டு “பைதகரளின் தேற்ற உண்மைகளை" அவன் வாயாலேயே கேட்டறிந்தார். இக்கருத்தை உள்வாங்கிய எம். சி. பிராமணியம் கூறும் அந்தணர்- அரசர்- வைசியர் அல்லது வியா பாரிகள்- சூத்திரர் என்று கூறிய வர்ணாசிரம தர்மப் பாகுபாட்டை அறவே ஒழிக்க விழைந்தார். சூத்திரருக்குக் கல்வி கற்பிப்பதே பெரிய பாவம் என்று பிராமணியம் கூறிய காலம், சூத்திரரில் வேளாளரும் அடங்குவர். இதனை மாற்றியமைத்த பெருமான்களும் உண்டு. பெரிய சூத்திரர், சின்ன சூத்திரர் என்று, தம்மைப் பெரிய சூத்திரராக (மனுதர்மத்திற்கு பிழையான வியாக்கியானம் அளித்து) மாற்றியமைத்த வர்களின் உரைநடைச்சிறப்பினும், ஒவ்வாத கருத்துக்கூறி

71 O 6, b.f. 6d fgpas 66 papeof (8Lury Tes
மானுடத்துள் பிரிவு ஏற்படுத்தியதாலேயே தமிழரில் பலர் கிறிஸ்தவப் பாடசாலைகளுக்குச் சென்றனர். தமிழையும் சைவத்தையும் வளர்க்கின்றோம் என்று சிறுபான்மைத் தமிழரைக் கற்கவிடாது தாக்கியதாலேயே, மானிடம் கூறும் மனித உரிமை நாடி சிறு பான்மைத் தமிழரும், வர்ணப் பாகுபாட்டினால் பாதிக்கப்பட் டோரும் கிறிஸ்தவம் கூறும் தர்மத்திற்கும், கிறிஸ்தவ பாடசாலை களுக்கும் சென்றனர். யாழ்ப்பாணக் கல்லூரியிலே சிறுபான்மைத் தமிழ்ப்பிள்ளை ஒன்றைச் சேர்த்ததால் பாடசாலை மாணவர் முதல் ஆசிரியர் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட முனைய, "நீங்கள் எல்லோரும் பாடசாலையை விட்டுப் போனாலும் சிறுபான்மைத் தமிழன் ஒருவனை நான் படிப்பிப்பேன்" என்ற பிக்னல் பாதிரியார் போன்றவர்களின் உண்மை நிகழ்வையும், உள்ளத் தூய்மையினையும் எம். சி. கூறுவார். அவர் எந்த வழியிலும் சாதியம் தகர்த்து சமத்துவம் காணவே தூண்டினார்.
படிக்கும் காலத்திலேயே எம்.சி. தனது அக்கால நண்பர்
களான திரு. க. இராசையா, திரு. சிவகுரு (மாணிக்கம்), திரு. ஜீ எம். பொன்னுத்துரை ஆகியோருடன் சேர்ந்து ஒரு இரவுப் பாட சாலையை இலவசமாக நடத்தினார். இதன் விஸ்தரிப்பே 'ஆரிய குளம் சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்கம்’ ஆக உருவாகியது. இவர்களது பாடசாலையில் கற்றோர் இன்று உலகிலே பெரிய தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களாக, பல்வேறு உயர்பதவிகளில் உள்ளவர்களாக மிளிர்வதைக் காணலாம். அக்காலத்திலே தனி மனிதர்களாக முற்போக்குக் கருத்துக்களை முன்வைத்த சிறு பான்மைத் தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டதனை எம். சி. அறிவார். இதனால் ஸ்தாபன ரீதியிலே சிறுபான்மைத் தமிழர்களை முன்னேற்ற வேண்டும் என்று பல ஸ்தாபன அமைப்புக்களிலே அங்கத்தவராகி உழைத்தார். இவருடைய செயற்பாடுகள்:-
1. சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்கம் 2. அடக்குமுறை ஒழிப்புச் சங்கம் 3. சிறுபான்மைத் தமிழர் மகாசபை 4. சிறுபான்மைத் தமிழர் ஐக்கிய முன்னணி 5. வடஇலங்கைக் கள்ளிறக்கும் தொழிலாளர் சங்கம்
போன்ற ஸ்தாபன அடிப்படையில் துலங்கின. சாதியம் சார் அடுக்கண்மப்புக்கும், வர்க்க அடுக்கமைப்புக்குமிடையே நேர்க்
குணம் உண்டு என்பதை உணர்ந்தார். இவரது உள்ளத்தின் நாதமே - சிறுபான்மைத் தமிழரின் சாதிய விழிப்புணர்வும்

Page 39
சந்திரபோஸ் O 72
தகர்ப்புமாகும். அதற்குக் கல்வி என்ற ஊடகமே பயன்படும் என எண்ணினார்.
யாழ்ப்பாணத்திலே பின்தங்கிய கிராமங்கள் பலவற்றுக்கும் செல்லும்போது, கல்வியெனும் பயிர் வளர்க்க வாசிகசாலைகள் அமைக்கத் தூண்டியுள்ளார். இதனாலே யாழ் ஆரியகுளம் சன சமூகநிலையம், மந்துவில், மந்திகை, கரவெட்டி கிழக்கு, கரணவாய், துன்னாலை, மட்டுவில், ஆனைக்கோட்டை, அஞ்சனந்தாழ்வு, கொட்டடி, அரியாலை மேற்கு போன்ற இடங்களில் பல்வேறு கிராமங்களிலும் வாசிகசாலைகள் அமைக்கப்பட்டன. இதனால் சிறுவர் கல்வி மட்டுமல்லாது முதியோர் கல்வியும் ஊக்குவிக்கப் பட்டது. இவரது முயற்சியினால் அமைக்கப்பட்ட வாலிப முன்னணிகளினாலும், சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் கிளைகளினாலும் உருவாகிய சிறுபான்மைத் தமிழ்த் தொண்டர்கள் வளரும் தலைவர்கள் ஆகினர். அவர்கள்தம் முயற்சியால் ஒவ்வொரு கிராமத்திலும் கல்வி விழிப்புணர்வு ஏற்பட்டது. இவருக்கு முன்னும் கல்வியில் கரிசனை காட்டிய செனட்டர் முதலியார் இராஜேந்திரா, திரு. யோவல் போல், திரு. சூரன் ஆகியோர், மற்றும் இவருடன் இணைந்து திருவாளர்கள் ஜி. நல்லையா, சி. ஈ. குணரெத்தினம், ஈ. வி. செல்வரத்தினம், கே. நடராசா போன்றோரின் கல்விச் சமூக சேவைகளும் ஆராயப்படவேண்டியவை. இச்சமூக முன்னோடி களிலே, கல்வி, சமூக, அரசியல் வழிகளிலே மிகக் கணிப்புப் பெற்றவர் எம். சி. என்பதை என்றும் சாதியத்தால் ஒடுக்கப்பட்ட உலகம் மட்டுமின்றி, அனைவரும் ஏற்றுக்கொள்வர்.
சமூகத்தின் வளர்ச்சிக்கு அரசியல் ஆதாரம் வேண்டும் என்பதில் ஆணித்தரமான நம்பிக்கையுடையவர் எம். சி. கல்வியைச் சிறுபான்மைத் தமிழர் பெற, அதில் தொடர, அதன் மூலம் வேலை வாய்ப்புப் பெற அரசியலும் அவசியம் எனக் கூறினார்.
எம். சி.யிடம் ஏற்பட்ட சாதிய விழிப்புணர்வு, புரட்சிகர உணர்வின் கிளம்பலாகி, அவரைத் தாபன ரீதியிற் செயற்பட வைத்தது. கல்வியால் பெறும் விழிப்புணர்வும் சோசலிசக் கட்ட மைப்புமே பூரண பண்பாட்டுப் புரட்சி ஏற்படுத்தி, தொடு வானத்து விடிவை நோக்கிச் சிறுபான்மைத் தமிழர் வெற்றி நடை போட வழிவகுக்கும் எனக் கருதினார்.
தாள் ஆற்றித் தந்த பொருள்எல்ல7ம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு”
- குறள் 212
வள்ளுவர் கூறும் வேளாண்மை, வேளாளன் என்பதன் கருத்து

73 9 எம்.சி. ஒரு சமூக விடுத்லைப் போராளி
உணர்ந்தவர்கள் சாதியம் பற்றிப் பேசமாட்டார்கள் என்பது எம். சியின் எண்ணம். வேளாண்மை, மற்றவர்களுக்கு விவசாயத்தால் பெற்ற பொருளைக் கொடுத்து உண்ணுதல் என்பதைக் கருதும்.
“வேளாளன் என்டான் விருந்திருக்க உண்ணாதான்.”
(திரிகடுகம் 12)
பிங்கலம் கூறும் கருத்து, “யாருக்கும் ஏவல் செய்வோர்” எனக் கூறுகிறது. சோசலிசம் செல்வப் பங்கீட்டை, பொருட் பங்கீட்டை சமத்துவம், சகோதரத்துவம், பங்கீடு பேணும் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து இறுதிவரை அதிலேயே இருந்து சேவை ஆற்றினார்.
எம். சியின் கல்விச் செயற்பாடுகள், அவர் சார்ந்த, அவரால் உருவாக்கப்பட்ட ஸ்தாபனங்களின் வழி நின்று ஒடுக்கப்பட்டவர் களின் கல்வி, பொருளாதார, சமூக மேம்பாட்டுக்குப் பெரும் பேற்றை அளித்தன. எம். சி. அவர்கள், திரு. யோவல் போல், திரு. சூரன், திரு. ஜி. நல்லையா போன்றோரின் ஒத்துழைப்போடு வடமராட்சி சமூக சேவா சங்கம், சன்மார்க்க சபை, திருவள்ளுவர் மகாசபை போன்ற சங்கங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபை உருவாகியது. அதன் தலைவராக மக்களால் ஏகமனதாகத் தெரியப்பட்டமை, சிறு பான்மைத் தமிழர் வாழ்வின் பொற்காலம் என்றே கூறவேண்டும். வட இலங்கை கள்ளிறக்கும் தொழிலாளர் சங்கத்தின் பொதுக் காரியதரிசியாக இருந்து, பாட்டாளிகள் துயர் தீர்க்கப் பாடுபட்டார். அரசியல் நோக்கில், சிறுபான்மைத் தமிழர் சிலர் பிரிந்தபோதும், அவர்களை ஒன்றிணைக்கும் ஊடகத்தை அமைக்க தோழர் குலேந்திரன் துன்னாலை), அலெக்சாந்தர் ஆசிரியர், செல்லத் துரை ஆசிரியர் போன்றோரைச் சமாதான இணைப்புக் குழு வாக்கிச் செயற்படச் செய்து, சிறுபான்மைத் தமிழர் ஐக்கிய முன்னணி ஏற்படுத்த வழிகோலினார்.
எம். சி. அவர்கள் தான் வாழ்ந்த காலத்திலே தமிழ்ச் சமூகத்திலே பின்வரும் சாதிக் குறைபாடுகளைக் கண்டார்.
1. சிறுபான்மைத் தமிழர் இறைவழிபாட்டிற்காக ஆண்டவன் கோயிலுக்குச் செல்லக்கூடாது, சமவழிபாட்டுச் சுதந்திரமின்மை.
2. வடபகுதியில் சில சைவப் பாடசாலைகள், கல்லூரி களில் சிறுபான்மைத் தமிழர் படிக்க, படிப்பிக்க அனுமதி மறுக்கப்பட்டமை.

Page 40
சந்திரபோல் O 74
3. பொது உணவு விடுதிகளில் சம ஆசனம் மறுக்கப்
பட்டமை.
4. பொதுக் கிணறுகளில் தண்ணிர் அள்ளுவதற்குத் தடை
5. அரசாங்கக் காரியாலயங்களில் சிறுபான்மைத் தமிழர்
சேவை பெறுவதற்கு இழுத்தடிப்பு.
சிறுபான்மைத் தமிழர் கல்வி வரலாற்றிலே திரு. யோவல் போல், திரு. எஸ். ஆர். ஜேக்கப் (காந்தி), திரு. ஏ. பி. இராசேந்திரா, திரு. சூரன் போன்றோர் சிறுபான்மைத் தமிழர் கல்வியில் சமத்துவம் பெற அரும்பாடுபட்டனர். எம். சி. அவர்கள் தான் சார்ந்த கம்யூனிஸ்ட் கட்சி மூலமும், சமூகத் தாபனங்களின் மூலமும் பல்வேறு கல்விப் பிரச்சனைகளுக்கு நிவாரணம் தேட முயன்றார். அக்காலச் சமூக முறை இவர்களது முயற்சிகளுக்கு ஆப்பு வைத்தது. ‘டொனமூர் ஆணைக்குழு’, ‘சோல்பரி ஆணைக்குழு’ போன்ற வற்றிற்குப் பல்வேறு சிபாரிசுகள் செய்தனர். சிபாரிசு செய்துவிட்டு வரும்வழியில் டி. ஜேம்ஸ், திரு. கணபதிப்பிள்ளை, ஜி. நல்லையா, எம். சி. போன்றோர் தாக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. இத்தரு ணத்தில் சேர் பொன்னம்பலம் இராமநாதன் போன்ற தலைவர்கள், வாக்குரிமை படித்த மக்களுக்குத்தான் வழங்கப்படவேண்டும் என்றும், அன்று படிக்காத மாடுபோல் உழைக்கும் பாட்டாளி வர்க்கத்திற்குக் கிடைக்காத வண்ணம் பரிந்துரை செய்தனர். திரு. யோவல் போல் போன்றோர் இதற்கு மாறாகச் சாட்சிய மளிக்க, ‘கமிஷன்”, “வாக்குரிமையை இன்று படிக்காத மக்களுக்கு வழங்காதுவிடின் அவர்கள் என்றும் வாக்குரிமையைச் சரியாகப் பயன்படுத்த அறியமாட்டார்கள் என்றும், வழங்கினால் காலப் போக்கில் சரியாகப் பயன்படுத்துவார்கள்” என்றும் கூறிச் சர்வசன வாக்குரிமை வழங்கியது. இது கல்வி விருத்திக்கு, சமூக சமத்துவத் துக்கு ஆதாரமான வரப்பிரசாதம் எனலாம். சாதிக்கொடுமைகள் பாடசாலைகளில் தலைவிரித்தாடியபோது, இவர் எடுத்த நடவடிக் கைகளே சகல பாடசாலைகளிலும் சாதிபேதம் பார்க்கக்கூடாது என்று சட்டம் ஏற்பட வழிகோலிற்று. தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காகக் குரல் கொடுக்கும் ஜனதர்ம போதினி” என்ற பத்திரிகையையும் அப்போது திரு. யோவல் போல் போன்றோர் வெளியிட்டனர். யாழ் நகரிலேயுள்ள கிறிஸ்தவ கல்லூரிகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி வழங்கின. இராமகிருஷ்ண மிஷனரியினால் யாழ் நகரில் ஆரம்பிக்கப்பட்ட வைத்தீஸ்வரா வித்தியாலயம் தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடமளித்தது. கிறிஸ்தவ பாடசாலைகளில் சிறுபான்மைத் தமிழர் சேர்கிறார்கள் என்பதால் வதிரியிலே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒர் இந்துப் பாடசாலை வேண்டுமென குரல் ஒலித்தது. இதன்

75 9 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
பலனாக வதிரி திரு. கா. சூரன், சிவசம்பு வைத்தியர், அல்வாய் வேலர் சோதிடர் போன்றோரின் முயற்சியால் ஓர் இந்துப் பாட சாலை உதயமாகி, இன்றைய தேவரையாளி இந்துக் கல்லூரியாக வளர்ந்துள்ளது.
இருப்பினும் யாழ். நகரில் உயர் கல்லூரிகளிலும், கிராமந் தோறும் உள்ள பாடசாலைகளிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி கற்பதில் உள்ள இடைஞ்சல்களை உணர்ந்து, அதற்கு ஆவன செய்ய எம். சி. தயாரானார். 1956ல் எஸ். டபிள்யூ ஆர். டி. பண்டார நாயக்காவின் தலைமையில் அரசாங்கம் அமைக்கப்பட்டபோது, சிறுபான்மைத் தமிழர் மகாசபை மூலம் பல வேண்டுகோள்களை விடுத்தார். பருத்தித்துறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பொன். கந்தையா அவர்களின் ஆதரவுடன், அக்காலத்தில் கல்வி அமைச்சராக இருந்த டபிள்யூ. தகநாயக்கா அவர்களால் தாழ்த்தப் பட்ட தமிழர்கள் கல்வி கற்க வசதியாக ஏறக்குறைய பதினைந்து பாடசாலைகள் நிறுவ உத்தரவு பெற்றார். அந்தந்தக் கிராமங்களிலே வசிக்கும் சிறுபான்மைத் தமிழர்களின் உதவியுடனும், கே. நடராசா ஆசிரியர், திரு. இராசகோபால் ஆசிரியர், திரு. தவசிப்பிள்ளை ஆகியோரின் அனுசரணையுடனும் சாவகச்சேரித் தொகுதியிலும், ஏனைய தொகுதிகளில் உள்ள சில கிராமங்களிலும் பாட சாலைகள் அமைக்கப்பட்டன.
இப்பாடசாலைகள் தொடங்கியபோது சில எரிக்கப் பட்டன. தமிழ்த் தலைவர்களில் சிலர், இத்தகைய பாடசாலைகள் அவசியமில்லை என்றும் கூறினர். அரசுக்கும் முறையீடு செய்தனர். இவை சாதீயத்தைக் கூட்டும் என்றனர். சாதியத்தின் பெயரால், சிறுபான்மைத் தமிழ் மாணவர்கள் பாடசாலைகள் மட்டத்தில் "கூட்டுக் கலைத் திட்டங்களிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டனர். ஈடுபடமுனையும் மாணவர்களை இம்சைப்படுத்தினர். இவ்வேளை யிலே கலாநிதி சபா. ஜெயராசா அவர்கள், திரு. எஸ். சந்திர போஸ் எழுதிய "தாழ்த்தப்பட்ட சிறுபான்மைத் தமிழரின் கல்வி வளர்ச்சி’ எனும் நூல் முகவுரையில் குறிப்பிட்ட அடிகள் சிந்திக்கப் பாலன. இலங்கையில் கல்வி ஆணைக்குழுக்கள் காலத்துக்குக் காலம் நியமிக்கப்பட்டாலும், தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மேம் பாட்டுக்கான உருப்படியான பூட்கைகளோ, பரிந்துரைகளோ வறியதாகக் காணப்படுகின்றன’ என்ற மெய்மையைச் சுட்டிக் காட்டுவது தவறாகாது.
இந்நிலையில் எம். சி. அவர்கள் சிறுபான்மைத் தமிழரின் கல்வி பற்றிச் சிந்தித்துச் செயற்பட்டதால், அன்றைய சிறுபான்மைத் தமிழ்ப் பிள்ளைகளுக்கு அனுமதி அளிக்காத கல்விச்சபைத் தலைவர்களினதும், தமிழ்த் தலைவர்களினதும் எதிர்ப்பை எதிர்

Page 41
சந்திரபோஸ் O ア6
நோக்கவேண்டியிருந்தது. இதனை சாதியத்தின் கொடுமை என்போமா? அன்றைய வாக்குத் திரட்டும் தாகம் என்போமா ? அன்றேல், சர்வதேச மனித உரிமையை மறுத்தல் என்போமா ? எது எப்படியிருப்பினும், எம். சியினது கல்விப்பணி சிறுபான்மைத் தமிழரைக் கல்வியில் ஈடுபடவைத்தது. அப்பாடசாலைகளில் படித்து முன்னேறிய பலர் மனித உரிமைக்காகப் பாடுபட்டனர். நீதிக்கும் சமத்துவத்திற்குமான போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டனர். கல்வியை எல்லோரும் பெற சிறு சிறு இராப் பாட சாலைகள் அமைத்து, கிராமங்களிலேயே கல்வியொளி பரவ வழி காட்டினார்.
எம். சி. அவர்களின் முயற்சியினால் கல்வி அமைச்சர் டபிள்யூ தகநாயக்காவினால் இருபத்துமூன்று சிறுபான்மைத் தமிழ்ப் பட்ட தாரிகளுக்கு ஆசிரிய நியமனம் கிடைத்தது. இருநூற்றுக்கும் மேற் பட்ட சிறுபான்மைத் தமிழர் பாடசாலைகளில் கல்வி கற்பித்தது மட்டுமின்றி, மேலதிக ஆசிரியர் பயிற்சியும் பெற வாய்ப்பளித்தது.
கல்வியிலே எம். சி. கண்ட பொற்காலம் பல்வேறு கிராமங் களிலும் இளைஞர்கள் மத்தியிலே மறுமலர்ச்சி ஏற்படுத்தியது. 'ஜோன் டூயி’ கண்ட ‘வாழ்க்கை மையக் கல்வி’ சிறுபான்மைத் தமிழர் மத்தியிலே ஏற்பட எம். சியின் கல்விச் சிந்தனை உதவியது. எம். சியின் வழியிலே உதயமான சிறுபான்மைத் தமிழர் விடுதலை முன்னணி, அதன் தலைவர் சீ. ஈ. குணரத்தினம், செல்வராசா அலெக்ஸ்சான்டர், கே. செல்லத்துரை, இ. மாசிலாமணி, கோபாலன், எம். செல்லத்தம்பி அதிபர், சி. பாலசிங்கம் ஆசிரியர் போன்றோர் கல்வி ஆணைக் குழுக்களுக்கும், பல்கலைக்கழக ஆணைக் குழுவுக்கும் சிபாரிசுகள் செய்தனர். கல்வி கற்றோர் வேலை பெற உள்ளூர் மகாசபைக் குழுக்கள் அமைக்கப்பட்டுத் தகவல்கள் பெறப்பட்டன. அதன்மூலம் எம். சி. தான் நியமன எம்.பி. ஆக இருந்த காலத்திலும், அதன் பின்பும் கல்வியால் சிறு பான்மைத் தமிழர் வளர, தொழில்வளம் பெற பாடுபட்டார். கவின்கலையில் சிறப்புற்ற சிறுபான்மைத் தமிழர்கள், அன்றைய யாழ் இரசிக ரஞ்சன சபையில் பங்குபெற உழைத்தார். இன்று ஈழத்திலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் எல்லாம் சிறுபான்மைத் தமிழர் பங்குபற்றிச் சிறப்புப் பெறுகின்றனர்.
ஈழத்தில் சிறுபான்மைத் தமிழர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரும்பான்மைத் தமிழர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் சில நல்லுள்ளமும் முற்போக்குச் சிந்தனையும் கொண்ட கல்வியாளர்கள் சிறுபான்மைத் தமிழர் கல்வி வளர்ச்சியில் தமது ஆதரவினை நல்கினர். இவர்களை எம். சி. என்றும் மறந்திலர். அமரர் நெவில்

アァ 9 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
செல்லத்துரை, தோழர்கள் எஸ். தர்மகுலசிங்கம், பொன். கந்தையா, வி. பொன்னம்பலம், ஐ. ஆர். அரியரத்தினம், அ. வைத்திலிங்கம், மு. கார்த்திகேசன், வண. சுவாமி மத்தியூ வண. பிக்னல் பாதிரியார், திருவாளர்கள் ‘ஹன்டி’ பேரின்பநாயகம், ஏ. ஈ. தம்பர், சிவபாத சுந்தரம், ஒறேட்டர்’ சுப்பிரமணியம், எஸ். அம்பிகைபாகன், எஸ். சீ. வைரமுத்து போன்றோர் சிறுபான்மைத் தமிழ் மக்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிய நல்லியல்பு கொண்டோர் பலரிற் சிலர் ஆவர்.
எம். சி. கண்ட கல்வித் தத்துவம், 'மனிதனை மனிதனாக'
மதிக்கச் செய்து, அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவு கல்வி என்னும் ஊடகத்தால் உருவாகவும் வழி சமைத்தது. சமூகத் தொண்டன் ஒருபோதும் மரணித்ததில்லை, அவன் செய்த தொண்டு களாலே மக்கள் மனதில் என்றும் வாழ்கின்றான். சமூகத் தொண் டாலே உயர்ந்த எம்.சி. கண்ட கல்வித் தத்துவம், “பகுத்துண்டு பல்லுயிர் ஒம்பி, மனிதனை மனிதனாக்கி, எல்லோரும் என்றும் வளமான வாழ்வு காண்பதாகும்.”

Page 42
erelo. S5b6ardbaub
ஞாபகத்திலிருந்து சில குறிப்புகள்
பத்தாண்டுகளுக்கு முன்னர் அமரத்துவ மடைந்த ஈழத்தமிழரின் அரசியல் தலைவர்களில் ஒருவரான திரு எம். சி. சுப்பிரமணியம் அவர்களைப் பற்றிய ஞாபகக் குறிப்புகளை எழுதப்புகும் வேளையில், கடந்த மூன்று தசாப்த கால நினைவுகள் என்னுள் மோதுவது தவிர்க்க முடியாதது. இந்த நினைவுகள் தனிப்பட்ட முறையானவையன்று. ஈழத்தமிழரின் சமூக், அரசியல் போராட்டங்களுடன் சம்பந்த மானவை. ஆதலால் இந்தக் குறிப்புகள் வெறுமனே அமரர் எம். சி. சுப்பிரமணியம் அவர்களைப்பற்றிய தாகவன்றி, அவரது காலத்து முக்கிய நிகழ்வுகளுடன் சம்பந்தப்பட்டவையாகவிருக்கும்.
“எம். சி. அவர்களின் மறைவின் நான்காம் நாள், 1989ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் திகதிய 'முரசொலி" தினசரியில் இதயநாதம் மகுடத்தில் நான் தீட்டிய ஆசிரிய தலையங்கத்திற்கு இந்த மலரின் வேறொரு பக்கத்தில் ஆசிரிய தலையங்கம் முழுமையாக மறு பிரசுரம் செய்யப்பட்டுள்ளது) "எம். சி ஒரு மைல் கல்” என்று தலைப்பு இட்டிருந்தேன். அதன் இறுதிப் பகுதியில், “இன்றைய அவசர மரண யுகத்தில் ‘எம். சி சுப்பிரமணியம் அவர்களின் மரணச் செய்தி வெறுமனே "காலமானார்’ பட்டியலில் ஒன்றாக

79 O எம்.சி.ஒரு சமூக போராளி
இருக்கலாம். ஆனால், அவர் அடியொற்றிய பாதை என்றும் நிலைத்து நிற்கும் என்பது நிச்சயம்” என்று சுட்டியிருந்தேன்.
மேற்குறிப்பிட்ட இரண்டு விடயங்களும், அவர் மறைந்து ஒரு தசாப்தம் பூரணமாக முடிவுற்ற வேளையிலும், தமிழீழம் பல அனர்த்தங்களைச் சந்தித்தபோதிலும் அசைக்கமுடியாத கூற்று களாக நிலைத்து நிற்பதை என்னால் அவதானிக்க முடிகின்றது.
இதற்கான முக்கிய காரணம் ‘எம். சி” அவர்களின், அவர் சார்ந்த சமூகம் பற்றிய தூரநோக்கும் அரசியல் தீர்க்கதரிசனமுமே.
அமரர் சுப்பிரமணியம் அவர்கள் ஒரு கம்யூனிஸவாதி; அதன் சித்தாந்தங்களை வன்மையாக வரித்துக்கொண்ட நேர்மையான கொள்கைவாதி; சமூக சேவைக்காக அரசாங்க லிகிதர் பதவியைத் துறந்தவர்; அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் தலைவராக நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இருந்தவர்; அந்த மக்களுக்காக ஒரு டசின் பாடசாலைகளையும், இருநூறுக்கும் அதிகமான ஆசிரியர்களையும் நியமனம் செய்தவர்; சமூகப் போராட்டங்கள் பலவற்றை முன்னின்று நடத்தியவர்; பூரீலங்கா நாடாளுமன்றத்தில் ஏழாண்டுகள் நியமன எம்.பி.யாக இருந்தவர் என்பவை அனைவருக்கும் தெரிந்தவை. இவை பற்றிய விரிவான பல கட்டுரைகள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. இந்த மலரிலும் அதன் விரிவாக்கங்கள் இடம்பெறலாம். ஆதலால் எனது பார்வையைச் சற்றே வெளிப்புறமாக்க முனைந்துள்ளேன்.
எனது பத்திரிகைத்துறை வாழ்க்கையை முக்கியமான மூன்று காலகட்டங்களாகப் பிரித்துப் பார்த்தால், அவை மூன்று தளங் களைக் கொண்டவையாக அமையும். 1960களில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகி, 1970களில் கொழும்பில் வளர்ந்து, 1980களில் தமிழீழத்தில் முதிர்ச்சி பெற்றது. இந்த மூன்று காலகட்டங்களில் அமரர் ‘எம். சி’ அவர்களுக்கும் எனக்குமிடையில் வளர்ந்த மெருகேறிய தொடர்பும், நாங்கள் எமக்கிடையே பேணிவந்த நல்லுறவும் ஒருசிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கலாம். எழுத்தாளர் (அமரர்) கே. டானியல், யாழ் சென். ஜோன்ஸ் கல்லூரி கனிஷ்ட பிரிவுத் தலைமையாசிரி யராக இருந்த திரு. எஸ்.பி. ஜீவானந்தம், மல்லிகை ஆசிரியர் நண்பர் டொமினிக் ஜீவா, திரு. பி.ஜி. அன்ரனி, ‘எம். சி” அவர் களின் புதல்வர் சந்திரபோஸ் என்று கைவிரல்களுக்குள் அடங்கக் கூடியவர்களாகவே இவர்கள் இருப்பர்.
1966ம் ஆண்டில் யாழ்ப்பாணம் ‘ஈழநாடு’ பத்திரிகையில் அதன் அலுவலக நிருபராக (StafReporter) எனது எதிர்காலத்துக்கு அரிச்சுவடி வரைந்தேன். அப்போது மாதச் சம்பளம் 165 ரூபா. இன்றைய பதினையாயிரத்துக்கும் மேலானது அன்றைய 165 ரூபா.

Page 43
சந்திரபோஸ் O 8O
யாழ்ப்பாணக் குடாநாட்டில் சாதிப் பிரச்சனை தலைவிரித்துத் தாண்டவமாடிய காலம் அது. தினசரி எங்காவது ஏதாவது - பல சிறுபான்மையினர் படுகொலை செய்யப்பட்டது உட்பட - நடை பெற்றுக் கொண்டேயிருக்கும். கத்தி வெட்டுச் சம்பவங்களே அதிகமாகவிருக்கும். எவராவது சுடப்பட்டுவிட்டால் குடாநாடு அல்லோலகல்லோலப்படும். ‘ஈழநாடு’வின் முதற்பக்கத் தலைப்புச் செய்தியாக அது வெளிவரும்.
இவ்வாறான சம்பவங்களால், ஒரு பத்திரிகையாளன் என்னும் வகையில் அடிக்கடி ‘எம். சி” அவர்களை நான் சந்திக்க நேரிட்டது. அப்போது மகாசபையின் பிரதான சக்தியாக அவர் இருந்தார். எந்தளவில் என்னை நம்பிச் செய்திகளை வழங்கலாம் என்பதில் அவருக்குப் பிரச்சனை இருந்திருக்கலாம். நடிகமணி வயிரமுத்து, எழுத்தாளர்கள் டொமினிக் ஜீவா, கே. டானியல், வீரகேசரிப் பத்தி ரிகையின் யாழ்ப்பாண நிருபராகவிருந்த செல்லத்துரை அண்ணர் இப்படித்தான் அவரை எல்லோரும் அழைப்போம்) ஆகியோருடன் எனக்குப் பல வருடங்களாக இருந்த நெருங்கிய தொடர்பினால், ‘எம். சி” அவர்களுக்கு என்னில் ஒரு நம்பிக்கை ஏற்பட்டதாகவே என்னால் கருத முடிகின்றது. அதனால், "அடுத்த நாட்களில் தாங்கள் என்ன செய்யத் திட்டமிட்டிருக்கின்றோம்; எப்போது எந்த ஆலயத் தில் அல்லது தேநீர்க் கடையில் பிரவேசம் நடைபெறும்” என்ற விபரங்களையும் எனக்குத் தந்துள்ளார்.
அப்போது (1966 - 1969) ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியராக இருந்த ஹரன் ஐயா இவர் ஒரு பிராமணர்; தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்), செய்தி ஆசிரியராகவிருந்த எஸ். எம். கோபாலரத்தினம் ஆகியோருக்குக்கூட எந்தத் தகவலையும் கொடுக்கமாட்டேன். ஆனால், சம்பவம் நடைபெறும் இடத்திற்கு எல்லோருக்கும் முதலாவதாகச் சென்றுவிடுவேன். இதனால் முக்கிய நிகழ்வுகளை நேரடியாகப் பார்த்து செய்தியை முந்திக் கொடுக்கும் வாய்ப்பு ஈழநாட்டுக்குக் கிடைத்தது. மறுபுறத்தில், பொலிஸ் அதிகாரிகளின் சந்தேகப்பார்வைக்கு உட்பட்டதும் உண்டு. சிறுபான்மைச் சமூகத்தின் உரிமைப் போராட்டத்தில், உயர்சாதித் தமிழரின் பக்கம் சாய்ந்து செயற்பட்டவர்களுள் சங்கானை பொலிஸ் இன்ஸ்பெக்டர் மென்டிஸ், யாழ்ப்பாணம் இன்ஸ்பெக்டர் காளைல் டயஸ், இவர்களுக்குத் தலைமை தாங்கிய உதவிப் பொலிஸ் சுப்பிரின்டெண் டென்ட் ஆர். சி. தவராஜா ஆகியோர் முக்கியமானவர்கள். பொலிஸாருடன் நேருக்கு நேர் நின்று போராடும் ஒரு தளபதியாக ‘எம். சி” அவர்கள் செயற்பட்டதைப் பல சந்தர்ப்பங்களில் நான் நேரில் பார்த்துள்ளேன். (மாவிட்டபுரம் ஆலய விடயம் பற்றிய பகுதியில் இதனை விரிவாகக் குறிப்பிடுவேன்)

81 O 6TB.o. 8dB fgpa, 6a(Baseboof (Burg ref
சங்கானையில் நிற்சாமம் என்ற இடத்திலும், சாவகச்சேரியில் மந்துவில் என்ற இடத்திலும் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள் அக்காலத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் அதிர்ச்சியளித்த நிகழ்வுகள் கொல்லப்பட்டவர்கள் சிறுபான்மைத் தமிழர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு கொலைகளும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இடம்பெற்றவை. பல்லாயிரக்கணக்கான சிறுபான்மை மக்கள் வீட்டுக்கு வெளியே வரமுடியாது அச்சமடைந்திருந்தனர். கொலை காரரைத் தேடுவது என்ற பெயரில் பாதிக்கப்பட்ட மக்களையே பொலிஸார் மேலும் நசுக்க ஆரம்பித்தனர். கொலைப் பட்டியலில் வேறு பிரமுகர்களின் பெயர்களும் இருப்பதாகப் பேச்சடிபட்டது.
இரண்டு கொலைகள் நடைபெற்ற இடங்களுக்கும் உடனடியாக, பத்திரிகைப் பாணியில் சொல்வதானால் - ஸ்தல விஜயம் செய்த முக்கியஸ்தர்களில் 'எம். சி” அவர்கள் முக்கிய மானவர். பொலிஸாரின் அனுமதி பெற்றே பத்திரிகையாளனாக என்னால் செல்ல முடிந்தது. அப்போது அங்கு நடைபெற்ற ஒரு சம்பவம் மறக்க முடியாதது. ஏற்கனவே அங்கு சென்றிருந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தவராஜா, “எம். சி” அவர்களிடம் சென்று, “நிலைமை நன்றாகவில்லை; பொலிஸ் பாதுகாப்பின்றி நீங்கள் இங்கு வந்தது ஆபத்தானது" என்று கூற, "பொலிஸ் பாதுகாப்புடன் வருவதுதான் ஆபத்தானது' என்று நெற்றியில் அடித்தாற்போல அவர் அளித்த பதில் எவரும் எதிர்பார்த்திராதது. அவரது மனத் திடத்தையும் துணிச்சலையும் இது அனைவருக்கும் தெரியவைத்தது.
இவ்வாறான கொலைகளாலும், அனர்த்தங்களாலும் “எம். சி' அவர்கள் ஆட்டம் காணவில்லை. தன்னிலையை அவர் இழக்கவுமில்லை. அவரது க்ண்டன அறிக்கைகளும், உரைகளும் நிதானமாக, சாத்வீகத்தன்மையைப் புலப்படுத்துபவையாகவே அமைந் திருந்தன. குடாநாட்டில் அவர் பங்குபற்றிய பல கூட்டங்களை இதற்கு உதாரணம் காட்டலாம். கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ்ப் பத்திரிகைகளே தம்மைக் காப்பாற்றும் பாணியில் சாதிப் பிரச்சனை விடயச் செய்திகளை மறைத்தும் புதைத்தும் வெளி யிட்டன. இப்படியான சூழ்நிலையில், குடாநாட்டிலிருந்து பிரசுரமாகிய ஒரேயொரு பத்திரிகையான ‘ஈழநாடு"வின் நிலைமை எப்படியிருந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.
இத்தகைய நெருக்கடிகளுக்குள்ளும், திரு. எம். சி. சுப்பிர மணியம் அவர்களுடன் நான் நடத்திய பேட்டியை முழுமையாக ஒரு பக்கத்தில் ‘ஈழநாடு' பிரசுரித்தது. எந்த இடத்திலும் ‘வெட்டு’ எதனையும் செய்யாது பிரசுரம் செய்ததை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாகவிருக்கின்றது. ஈழநாடு அலுவலகத்துக்குத் தனது சைக்கிளில் வந்து ஆசிரிய பகுதியில் கடமையாற்றிய ஒவ்வொரு

Page 44
cyfb6dyGBuHello O 82
வருக்கும் நன்றி சொன்ன இவரது உயர்ந்த பண்பை அனைவருமே வியந்தோம்.
மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் ஆலயப் பிரவேசப் போராட்டம் ஒரு வரலாற்று நிகழ்ச்சி. சுமார் ஒரு மாதமாக ‘ஈழநாடு’ வின் அனைத்துப் பக்கங்களையுமே இச்செய்திகள் ஆக்கிரமித்தன. நானும், நண்பர் யோகநாதனும் இவரும் அப்போது அலுவலக நிருபராக இருந்தவர்; 1996ம் ஆண்டில் ‘ஈழநாடு’வின் ஆசிரியர் பதவி இவருக்குக் கிடைத்தது) அதிகாலையிலேயே மாவிட்டபுரம் சென்று விடுவோம். திருவாளர்கள் எம். சி. சுப்பிரமணியம், வெகுஜன எழுச்சி இயக்கத் தலைவர் எஸ். ரி. நாகரத்தினம் (சுன்னாகம்) ஆகியோர் இப்போராட்டத்தில் முதன்மை வகித்தனர். பல நூற்றுக் கணக்கான சிறுபான்மைச் சகோதரர்கள் உயிராபத்தையும் பொருட் படுத்தாது தங்கள் உரிமைக்காகப் போராடிக் கொண்டிருந்தனர். ஆலயக் குருக்களின் வலதுகரமாக அடங்காத் தமிழர் முன்னணித் தலைவர் திரு. ஸி. சுந்தரலிங்கம் பகிரங்கமாகச் செயற்பட்டார். இவர்களுக்கான சகல ஒத்துழைப்பையும் (பாதுகாப்பு என்ற பெயரில்) உதவிப் பொலிஸ் சுப்பிரின்டெண்டென்ட் தவராஜாவும் அவரது குழுவினரும் வழங்கினர். எல்லாமே ‘பச்சையாகத் தெரிந்தன. பொலிஸார் எப்போதும் காடைத்தனத்தைக் கட்டவிழ்த்துவிட்ட வண்ணமிருந்தனர். எங்கும் மயான அமைதி நிலவும். இவைகளைக் கண்டு ‘எம். சி” அசைந்து விடுவதில்லை. நேரடியாகவே தமது ஆட்சேபங்களைத் தன்னந்தனியாக வந்து பொலிசாரிடம் எடுத்துக் கூறுவார். சிலசமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார்.
ஆலய முன்மண்டபத்தில் மூடப்பட்ட கதவுகளின் முன்னால் அமர்ந்திருக்கும் சாத்வீகப் போராட்டக்காரர்களுக்கு மதிய போசனம் பார்ஸலாக வழங்கப்படுவது வழக்கம். ஒரு சோற்றைத்தானும் நிலத்தில் சிந்தாது ஒழுங்காகப் போசனத்தை அவர்கள் உண்டு முடிப்பார்கள். ஆலய மண்டபமாதலால் அசுத்தம் ஏற்படாத வகையில் தாவர போசன உணவையே அங்கு வழங்க வேண்டு மென்பதில் கண்டிப்பாகவிருந்த ‘எம். சி' அவர்கள், அதனைச் செயல் வடிவத்திலும் நிரூபித்து வந்தார். ஆனால், முட்டைக் கோதுகளும் மீன் முட்களும் அடங்கிய சாப்பாட்டுப்பார்ஸல் கடதாசிகளைப் பொலிஸார் ஒரு நாளிரவு ஆலய முகப்புப் பகுதியிலிருந்து மீட்டனர். ஆலயப் பகுதிக்கு அசூசையை ஏற்படுத்தும் வகையில் ஆலயப் பிரவேசப் போராட்டக்காரர் நடந்துகொண்டதாகவும், இந்துக் களல்லாதவர்கள் உட்பிரவேசிக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சுமத்தி, அடுத்த நாள் அங்கு சென்றவர்களை ஆலய முன்பகுதிக்குச் செல்ல விடாது பொலிஸார் மறிப்புப் போட்டுவிட்டனர்.
விடயம் உடனடியாக ‘எம். சி” அவர்களின் கவனத்துக்குக்

83 9 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
கொண்டு செல்லப்பட்டது. அங்கு விரைந்து வந்தார். பொலிஸ் இன்ஸ்பெக்டர் புசல்ல என்பவர் மிகக் கடுமையாக ‘எம். சி யுடன் நடந்துகொண்டார். அதற்கு அவர் பயந்துவிடவில்லை. மிகப் பொறுமையாக, குறிப்பிட்ட பார்ஸல் கடதாசிகளைத் தாம் பார்க்கப் போவதாகக் கூறினார். அவைகள் முன்னால் கொண்டு வரப்பட்டன. அனைத்தும் சிங்களப் பத்திரிகைகள். ஒன்றுகூடத் தமிழ்ப் பத்தி ரிகைகள் அல்ல. மாவிட்டபுரம் ஆலயப் பகுதியில் கடமைக்கு நின்ற பொலிஸாருக்கு விநியோகிக்கப்பட்ட சாப்பாட்டுப் பார்ஸல்கள் சுற்றப்பட்ட கடதாசிகளே அவைகள் என்பதை அந்தப் பொலிஸ் மூளைக்கு மிக இலகுவாக எடுத்துச் சொல்ல ‘எம். சி” அவர்களுக்கு வெகுநேரம் பிடிக்கவில்லை.
நல்லதொரு சட்டவாதியாக வந்திருக்க வேண்டிய ஒருவர், சிறந்த சமூகவாதியாகிவிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஓங்கிய குரல் இவருடையது.
அப்போது வடபகுதிக்கான பொலிஸ் சுப்பிரின்டெண்டென்பாக இருந்தவர் திரு. ஆர். சுந்தரலிங்கம். நயினாதீவைச் சேர்ந்த பெரியார் இராமச்சந்திராவின் புதல்வர் இவர் Religious Digest என்னும் ஆங்கில மாத சஞ்சிகையின் ஆசிரியராகவிருந்தவர் பெரியார் இராமச்சந்திரா. தந்தையிடமிருந்த ஆன்மீக சிந்தனை சுந்தரலிங்கம் அவர்களிடம் தாராளமாக இருந்தது. அதனால் ஆலயப் பிரவேசக்காரர்களுக்குத் தொல்லை கொடுப்பதை அவர் விரும்பவில்லை. தார்மீக ஆதரவை அவர்களுக்கு வழங்கியபோதிலும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநிறுத்துவது இவரது பொறுப்பாகவிருந்தது. காங்கேசன்துறைப் பொலிஸாரின் உதவியுடன் தண்ணிர் பாய்ச்சும் இயந்திரத்தினால் ஆலய முன்பகுதியை இறைத்துச் சேறாக்கி சத்தியாக்கிரகிகளின் வருகையைத் தடுக்க முனைந்த பெருந்தகை ‘அடங்காத் தமிழன்’ ஸி. சுந்தரலிங்கம். அதனை வன்மையாகக் கண்டித்து சத்தியாக்கிரகி களுக்கு உதவியவர் பொலிஸ் சுப்பிரின்டெண்டென்ட் ஆர். சுந்தரலிங்கம். சுந்தரலிங்கத்துடன் நெருங்கிப் பழகிய பத்திரிகையாளரில் நானும் ஒருவன் என்று சொல்வதைவிட, அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு பத்திரிகையாளனாக அவர் பிரதி பொலிஸ் அதிகாரியாகவிருந்து ஓய்வுபெறும் வரை இருந்தேன் என்று சொல்வதே சரி. இந்த நட்பின் பலனாகப் பலதடவைகள் "எம். சி’ அவர்களின் சமாதானத் தூதுவனாகப் பின்னணியிலிருந்து செயற்பட நேர்ந்தது மாவிட்டபுரம் பிரச்சனை எத்தனையோ இழுபறிகளின் பின்னர், ஆலய வீதியில் வைத்து இரு சுந்தரலிங்கங்களும் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, அப்போது அரசாங்க அதிபராகவிருந்த வேர்ணன் அபயசேகரா முன்னிலையில் நடைபெற்ற ஒப்பந்தமொன்றுடன் முடிவுபெற்றது. எந்தச்

Page 45
elág8urdo O 84
சுந்தரலிங்கம் வென்றார் என்பது தெரியவரவில்லையாயினும், ‘எம். சி” அவர்கள் தலைமை தாங்கிய போராட்டம் வெகுஜன எழுச்சியை ஏற்படுத்தியதை எவராலும் மறுக்க முடியாது. நீதிமன்றத் திலும் நீதிக்கு வெற்றி கிடைத்தது.
எனக்குத் தெரிந்த யாழ்ப்பாணச் சமாசாரங்களை வைத்தே அமரர் எம். சி. சுப்பிரமணியம் அவர்கள் பற்றிய நூலொன்றினை எழுதலாம். கட்டுரையின் விரிவஞ்சி யாழ்ப்பாண விடயங்களை இத்துடன் நிறுத்திவிட்டு அடுத்த களமான கொழும்புக்குச் செல்கின்றேன்.
1969ன் பிற்பகுதியில் "லேக்ஹவுஸ்’ பத்திரிகை நிறுவனத்தில் சேர்ந்தேன். தினகரன் ஆசிரிய பீடத்தில் நியமனம் கிடைத்தது. திரு. இ. சிவகுருநாதன் அவர்கள் ஆசிரியராகவிருந்தார். முப்பது வருடங்களுக்கும் மேலாக இங்கு ஆசிரியராகவிருந்த 'ஜாம்பவான்’ இவர். இவரது சாதனையை இலங்கையில் இதுவரை எவருமே முறியடிக்கவில்லை. 1970ம் ஆண்டில் பூரீலங்கா அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. முதன்முறையாக மூன்றிலிரண்டு பெரும் பான்மையுடன் ஒரு அரசு பதவிக்கு வந்தது. பூரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவாக லங்கா சமசமாஜக் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் சேர்ந்தன. இடதுசாரிகள் பலரும் அமைச்சர்களாயினர். இச்சந்தர்ப் பத்தில் ஆறு நியமன எம். பி.க்களுக்கான ஸ்தானங்களில் ஒன்று கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கப்பட்டது. கட்சியின் தலைவரான டாக்டர் எஸ். ஏ. விக்கிரமசிங்கா, செயலாளர் பீட்டர் கெனமன் ஆகியோர் வைத்திருந்த நன்மதிப்பினால் எம். சி. சுப்பிரமணியம் அவர்கள் எம். பி.யாக நியமனமானார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் யாழ். பிரதேசக் கிளையிலிருந்த சில உயர்சாதித் தமிழர் இதனை மனப்பூர்வமாக ஆதரிக்கவில்லை என்பதை ‘எம். சி. அவர்களே நன்கறிவார். இடதுசாரித் தத்துவத்தைச் சிலர் தங்கள் நாவுடன் மட்டுமே வைத்திருந்தனர் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.
1970ல் இன்னொரு சம்பவமும் நிகழ்ந்தது. யாழ்ப்பாணம் பொலிஸ் சுப்பிரின்டெண்டென்டாகவிருந்த திரு ஆர். சுந்தரலிங்கம், கொழும்பில் புதிதாக உருவாக்கப்பட்ட குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவின் தலைவராகப் பதவி உயர்வுடன் இடமாற்றம் பெற்றார். இதனால் இவர்கள் இருவருக்குமிடையிலான தொடர்பு பேணப் படலாயிற்று
சிறுபான்மைத் தமிழர்களைப் பொறுத்தளவில் இது ஒரு பொற்காலமாக அமைந்தது. தமிழரசுக் கட்சியினர் திரு. (அமரர்) ஜி. நல்லையா அவர்களை முன்னர் செனட்டராக நியமித்ததை ஒரு

85 O 6Ib.A. gap orgpas aGBoanao (BungAra
சாதனையாக்கி, மேடைகளில் கூறிவந்த காலமது. எம். சி. சுப்பிர மணியம் அவர்கள் எம். பியாக நாடாளுமன்றம் சென்றது இதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. 1977ல் உடுப்பிட்டித் தொகுதி திரு. த இராசலிங்கம் அவர்களுக்குக் கூட்டணியால் வழங்கப்பட்டதற்கு இதுவே காரணமாக அமைந்திருக்கலாம். கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாகவே "எம். சி. நாடாளுமன்றம் சென்றிருந்தாராயினும், ஒரு அரசியற் கட்சியின் குரலாகவன்றி நலிவுற்ற ஒரு பகுதி மக்களின் குரலாகவே அவர் என்றும் ஒலித்தார். அந்தக்காலப் பகுதியில் 'தினகரன்’ பத்திரிகையின் சபை நிருபர்களில் ஒருவராக நானும் இருந்தேன். தற்போது மட்டக்களப்பு மேயராகவிருக்கும் செழியன் பேரின்பநாயகம், லண்டனில் வசிக்கும் பொன். பாலசுந்தரம், அமரரான கந்தையா திரு (தீவுப்பகுதி முன்னாள் எம். பி. வி. நவரத்தினம் அவர்களின் சகோதரரின் புதல்வர்) ஆகியோரும் சபை நிருபர்களாகப் பணியாற்றிய வேளை அது. அநேகமாக யாழ்ப் பாணத்து எம். பி. மாரின் உரைகளை நானே எழுதுவதுண்டு, யாழ்ப் பாணத்து அரசியற் பின்னணி கூடுதலாகத் தெரிந்தவன் என்ற காரணத்தினால்,
இப்போது போல ஞாபகமிருக்கின்றது 1970 ஜூன் மாதம் 7ம் திகதிய தினம். எம். சி. சுப்பிரமணியம் அவர்கள் நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்த நாள்.
அதே வெள்ளை உடை, கறுப்புக் கண்ணாடி; சிரித்த முகம். ஆனால் தலையில் தொப்பி மட்டுமில்லை. அவ்வேளையில் பத்திரி கையாளர் கலரியில் (Press Gallery) எனக்குப் பக்கத்தில் ‘ஒப்சேர்வர்" சபை நிருபர் காமினி வீரக்கூனும் (தற்போதைய கொழும்பு ஐலண்ட் பத்திரிகை ஆசிரியர்), “டெய்லி நியூஸ்" சபை நிருபர் நெவில் டி. சில்வாவும் (டெய்லி நியூஸ் ஆசிரியராகவிருந்த பிரபல பத்திரி கையாளர் மேர்வின் டி. சில்வாவின் இளைய சகோதரர்) அமர்ந்திருந்தனர்.
திடீரென்று நெவில் MCisnow MP (எம். சி. இப்போது எம். பி) என்று எதுகை மோனையில் பகிடி விட்டார். அனைவருமே வாய்விட்டுச் சிரித்தனர்.
திடீரென்று காமினி என்னிடம் வந்து மதிய போசன இடை வேளையின்போது ‘எம். சி" யைத் தாம் சந்திக்க வேண்டுமென்ற விருப்பத்தைத் தெரிவித்தார். அத்தோடு, "அவருக்கு ஆங்கிலம் தெரியுமா?’ என்ற சந்தேகத்தையும் எழுப்பினார். இதற்கான பதிலை உடனடியாக நான் கூற விரும்பவில்லை. அவரே அறிந்துகொள் ளட்டுமே என்று விட்டுவிட்டேன்.
மத்தியானச் சந்திப்பு இடம்பெற்றது. நானும் அருகிலிருந்தேன்.

Page 46
ráfag (Burdo O 86
காமினி வீரக்கூன் எதிர்பார்த்திருக்காத வகையில் தரமான ஆங்கிலத்தில் 'எம். சி பல விளக்கங்களையும் கொடுத்தார். காமினியும் விட்டு வைக்கவில்லை. 'எம். சி. (M.C) என்ற முன்னெழுத்துக்கள் பற்றி ஆராய்ச்சி ஆரம்பமானது. சிறுபான்மைத் தமிழர் (Minority Community - MC) மகாசபையின் தலைவர் பதவி கிடைத்ததால்தான் M.C. என்ற முன்னெழுத்துக்கள் வந்தனவா என்பதே காமினி தொடுத்த கடைசிக் கேள்வி. இதனை அவர் கிஞ்சித்தும் எதிர்பார்த் திருக்கவில்லை. சிறிது சினம் கொண்டாலும், சிரித்தவாறே அவை தமது தந்தையினதும் அவரது தந்தையினதும் பெயர்களின் முதலெழுத் துக்கள் என்று விளக்கம் கொடுத்தார். தமிழர்கள் மத்தியில் விதானையார், மணியகாரன், மேயர், ஜே.பி. ஆகிய பதவி வழிப் பெயர்கள் உண்மையான பெயருக்கு முன்னாக இருப்பது வழமையாதலால்தான், தாம் அந்தக் கேள்வியைக் கேட்டதாக நண்பர் காமினி விளக்கம் கொடுத்தார். என்னதான் சொன்னாலும் காமினியின் 'பத்திரிகையாளன்’ மூளையை அவர் மனந்திறந்து பாராட்டினார். அதுமட்டுமன்றி நேரடியாகவே அதனைத் தெரிவித்த காமினியின் நெஞ்சுரத்தையும் வியந்து விளாசினார்.
நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு விவாதங்களிலும் உரை யாற்றும் எண்ணம் ‘எம். சி. அவர்களுக்கு எப்போதும் இருந்த தில்லை. சில எம். பி.மார் தங்களுடைய பெயர் எப்போதும் பத்திரிகைகளில் வரவேண்டும் என்பதற்காகத் தம்முடன் சம்பந்தா சம்பந்தமில்லாத விடயங்களிலெல்லாம் நாடாளுமன்ற விவாதங்களில் தலையிட்டு உரையாற்றுவர். சிலர் தமது பேச்சுக்கள் பத்திரிகை களில் முக்கியத்துவம் பெற்று வரவேண்டுமென்பதற்காக எங்களைத் துரத்துவர். ஆனால் ‘எம். சி. அவர்கள் தம்முடன் சம்பந்தமான விவாதங்களில் மட்டுமே பங்குபற்றுவார். அல்லது தமக்குத் தெரிந்த விடயங்களில் மட்டுமே பேசுவார். இதனால் இவரது பெயர் நாடாளுமன்ற சபைப் பதிவேடான “ஹான்சார்ட்டில் இடம்பெற்றது குறைவு. பத்திரிகைகளில் இடம்பெற்றதும் மிகக் குறைவு. பேச்சை விட செயலில் அதிக நம்பிக்கை கொண்டவர். ஆனால் சபை விவாதங்களை அமர்ந்திருந்து ஆழமாகக் கேட்டு உணர்வார். காரசார மான சில விவாதங்களைக் காதைக் கூர்மையாக்கி, கண்களை மூடியவாறு அவர் ரசிக்கும் விதம் அலாதியானது. எதிர்க்கட்சி அங்கத்தவர்களின் மனம் நோகாதவாறு விடயங்களை எடுத்துச் சொல்வது அவரது பாணி. ஆதலால், இவர் சபையில் உரையாற் றுகையில் அனைவரும் அமைதியாகிச் செவிமடுப்பர்.
உடுவில் எம். பி. யாகவிருந்த காலஞ்சென்ற வி. தர்மலிங்கம்
மட்டும் அடிக்கடி இவரது உரைகளைத் தடுத்து ஏதாவது கேள்வி களைக் கேட்பார். வேண்டுமென்றே தம்மைத் திசை திருப்ப

a7 9 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
எடுக்கப்படும் முயற்சி இது என்பது அவருக்குத் தெரியும். சிரித்துக் கொண்டே பதில் கூறாது நழுவிவிடுவார். சபைக்கு வெளியே ‘எம். சி’யின் நல்ல கூட்டாளியாக இருந்தவர் இதே தர்மர்'தான். வேறு யாராவது எம். பி.மார் ‘எம். சி.யைச் சபையில் தாக்க முற்பட்டால், அதனை முறியடிப்பவரும் இதே 'தர்மர்'தான். பல சமயங்களில் எம். பிக்களின் வாசஸ்தலமான சிராவஸ்திக்கு இருவரும் ஒரே வாகனத்திலேயே பயணம் செய்ததைக் கண்டிருக்கின்றேன்.
மறக்க முடியாத மற்றொரு சம்பவம்.
இடம் நாடாளுமன்றச் சமகால மொழிபெயர்ப்பாளர்களின் அறை, நண்பர் சுந்தா (வி.பி. சுந்தரலிங்கம்), திரு. தம்பிப்பிள்ளை, திரு. சுப்பிரமணியம் ஆகியோர் அப்போது மொழிபெயர்ப் பாளர்களாகக் கடமையாற்றிக் கொண்டிருந்தனர். தமிழ் எம். பி. மாரும் என்னைப் போன்ற சபை நிருபர்களும் இங்கு அடிக்கடி ஒன்று கூடுவோம். அரட்டை அறையாகவும் இது மாறுவது வழக்கம். ஒருசமயம் தர்மரும் எம். சியும் நாங்கள் சிலரும் இருந்து தமிழரசுக் கட்சியின் சமபந்தி போசனம் பற்றி அளவளாவினோம். யாழ்ப்பான உதவி மேயராக இருந்தவர்களில் ஒருவரான திரு. என். ரி. செல்லத்துரை தமிழரசுக் கட்சியின் வைரத் தூண்களில் ஒன்றாக மிளிர்ந்தவர். சிறுபான்மைத் தமிழர் சமூகத்தவர். ஆரியகுளம் சந்திக்கு அருகிலுள்ள சிறாம்பியடி ஒழுங்கையில் இவரது வீடு இருந்தது. ‘எம். சி’யின் அயலவரும்கூட.
என். ரி. செல்லத்துரை அவர்களது வீட்டில் தமிழரசுக் கட்சியினர் சமபந்தி போசனம் செய்து சாதிப் பாகுபாட்டினை முடித்ததாக தர்மர் உரத்துக் கூறி விமர்சித்தார். அன்றுதான் ‘எம். சி' அவர்களுக்குக் கோபம் வந்ததை நான் பார்த்தேன். திடீரென்று எழுந்தார். மிக ஆக்ரோஷமாக தர்மரைப் பார்த்து, "உண்மையான சமபந்தி போசனம் என்பது இரண்டு கைகளையும் வீசுவதாக இருக்க வேண்டும். வேளாளர் வீட்டிற்குச் சிறுபான்மை யினரை அழைத்துச் சாப்பாடு கொடுப்பீர்களா? அப்படிச் செய்தால் தான் சமபந்தி போசனம் உண்மையானதாகும். சும்மா அரசியல் பித்தலாட்டம் செய்யாதீர்கள்" என்று சொன்னார். கோபம் வந்தால் பேசும்போது கண்களை இறுக மூடிக்கொள்வார். அன்றும் அப்படித்தான்.
தர்மர் வாயடைத்து விட்டார். பொல்லுக் கொடுத்து அடி வேண்டியது போன்று அமைந்து விட்டது. அதுவும், எங்கள் பலர் முன்னிலையில் இப்படியொரு தாக்குதல்!
என்றாலும் தர்மரின் நல்ல குணங்களில் ஒன்று, எப்படியாவது சிரித்துச் சமாளித்து விடுவது. “எம். சி. ஒரு லோயராக (lawyer)

Page 47
சந்திரபோல் O 88
வந்திருந்தால் ஜி. ஜி. விழுந்திருப்பார்” என்பது அன்றைய தர்மரின் வாக்குமூலம். சபையிலிருந்து கூட்ட ஆரம்ப மணி அடித்தது. இருவரும் ஒன்றாகவே சபைக்குள் நுழைந்தனர்.
எம். சி. அவர்கள் எம். பி. யாக இருந்த வேளையில் எனது நெஞ்சில் ஆழமாகப் பதிந்த விடயமொன்றினையும் பகிர விரும்பு கின்றேன். இவரது குடும்ப உறவினர் ஒருவர் பொலிஸ் உதவி இன்ஸ்பெக்டர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். சகல பரீட்சை களிலும் சித்தி பெற்றாலும் இறுதித் தெரிவில் அரசியல் இருந்தது. அப்போது, பாதுகாப்புப் பிரதி அமைச்சராகவிருந்தவர் லசுஷ்மண் ஜெயக்கொடி இவரே அந்த அரசியல் ஆதிக்கம் கொண்டவர். எம். சி அவர்கள் இத்தெரிவில் தமது அரசியல் செல்வாக்கைப் பெரிதும் பயன்படுத்த விரும்பவில்லை. எல்லாம் ஒழுங்காக நடைபெறுமென்ற நம்பிக்கை அவருக்கிருந்தது. தகுதிக்கான இடத்தை அவர் எதிர்பார்த் திருந்தார் என்றும் சொல்லலாம்.
எம். சி.யின் குடும்பத்தவருக்கு நியமனம் கிடைக்கவில்லை. அதன் பின்னரே காரணத்தை அறிய அவர் முயற்சித்தார். பெருஞ் சாதிக்காரர் (கொவிகம) என்னும் திமிர் தமிழ் மக்களிலும் பார்க்க சிங்களவரிடையேதான் தீவிரமாகவிருந்தது என்பதை அப்போது புரிந்துகொள்ள முடிந்தது. எம். சியின் குடும்ப உறவினரிலும் பார்க்கத் தகுதி குறைவான தமிழர் ஒரிருவர் வேளாளர்களாக இருந்ததால் அந்தப் பட்டியலில் பொலிஸ் உதவி இன்ஸ்பெக்டராக நியமனம் பெற்றனர்.
அப்போது அமைச்சராகவிருந்த லசுஷ்மண் ஜெயக்கொடி தற்போதைய பூரீலங்கா அரசாங்கத்தில் கலை, கலாசார அமைச்சராக இருப்பதும், இவரது நிர்வாகத்திலே மத விவகாரங்களும், சாஹித்திய மண்டல’ என்னும் இலக்கிய விவகார திணைக்களம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
1977ம் ஆண்டிற்குப் பிறகு இவரது நடவடிக்கைகள் பெரும்பாலும் தமிழீழப் பிரதேசத்துள் அமைந்துவிட்டன. உடல் நலம் குன்றியதாயினும் இன நலனும், சமூக நலனும் இரத்தத்தில் ஊறி யிருந்ததால் அவைகளின்பாலான தமது ஈடுபாட்டை வெளிக் காட்டிக் கொண்டேயிருந்தார்.
1983 இனக்கலவரத்தின் பின்னர் நான் மீண்டும் யாழ்ப்பாண வாசியானேன். "ஈழமுரசு"வின் ஆசிரியராக ஆரம்பமான தமிழீழப் பத்திரிகைப் பணி, 'முரசொலியின் ஆசிரியராக மாற்றம் பெற்றது. இக்காலத்தில் முன்னைய அரசியல், கலை, இலக்கியத் தொடர்புகள் புத்துயிர் பெற்றன. இவர்களுள் முக்கியமானவர்களாக டானியல், எம். சி. சுப்பிரமணியம், டொமினிக் ஜீவா, நடிகமணி வயிரமுத்து,

89  ெஎம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
பேராசிரியர்கள் சு. வித்தியானந்தன், கா. சிவத்தம்பி, சொக்கன், சிற்பி, கல்வயல் குமாரசாமி, சசிபாரதி, கலாநிதிகள் சபா. ஜெயராசா, அ. சண்முகதாஸ் என்று நீண்டு செல்லும். எம். சி. அவர்களுடனான சந்திப்பு மாலை வேளைகளில் வெலிங்டன் சந்தியிலிருந்த அமரர் டானியலின் கராஜில் நடைபெறும். வேறு பல இடதுசாரி இலக்கியக்காரர்கள் (பெனடிக்ற் பாலன், நவாலியூர் பரமலிங்கம், பொ. பொன்ராசா போன்றோர்) அவ்வப்போது பங்குபற்றுவர்.
நாற்பதுக்கும் அதிகமான இயக்கங்களின் தர்பாரினால் மூத்த அரசியல்வாதிகளும், மக்களின் விடுதலைக்காகப் போராடிய மூத்தவர்களும் அடங்கியிருந்து வாசிக்க வேண்டியிருந்தது. தம்மை இடதுசாரிச் சிந்தனையாளர்கள் என்று கூறிக்கொண்ட சில இயக்கங் களின் தலைவர்கள், தங்களது சண்டித்தனத்தை இவர்களுக்கு எதிராகவே காட்டிக்கொண்டிருந்தனர். மக்களால் அவர்கள் அன்னியப்படுத்தப்பட்டதால் ‘பிச்சை வேண்டாம், நாயைப் பிடி’ என்றவாறு அவர்கள் ஒட்டம் பிடித்ததை மறப்பதற்கில்லை. மக்களைப் பாதிக்கும் ஏதாவது ஒரு விடயம் தொடர்பாக அறிக்கை விடுவதற்குக் கூட ‘எம். சி’ போன்றவர்கள் உரிமை இழந்திருந்ததை நான் நன்கறிவேன். பத்திரிகையாளன் என்னும் வகையில் உதாரணங் களாகப் பல விடயங்களை முன்வைக்க முடியும்.
எம். சி. அவர்கள் ரஷ்ய சார்பும், டானியல் அவர்கள் சீன சார்பும் கொண்ட கம்யூனிஸ்டுகளாக இருந்ததையும், பல விடயங்களில் இவர்கள் கருத்து மோதல்களில் ஈடுபட்டதையும், இதற்குச் சிலர் களம் அமைத்துக் கொடுத்ததையும் அக்கால அரசியலில் ஈடுபட்டவர்கள் அறிவர். ஆனால் அவர்கள் தமக்குள் எந்தப் பகைமையுமின்றி நல்ல நண்பர்களிாகவே இயங்கி வந்தனர். டானியலின் கராஜுக்கு வருவதையும் அங்கு நண்பர்களுடன் அமர்ந்து அளவளாவுவதையும் ‘எம். சி. அவர்கள் பொழுது போக்காகவன்றி, ஆத்மார்த்தமான உறவுடன் மேற்கொண்டு வந்ததை நானறிவேன். டானியலின் திடீர் மறைவு ‘எம். சி. அவர்களின் உள்ளத்தை வெகுவாகப் பாதித்ததையும் நானறிவேன். "வேரோடி விலத்தி முளைத்தாலும் தாய் வழி தப்பாது’ என்று ‘எம். சி. அவர்கள் கூறிய வார்த்தைகள் காதுக்குள் கேட்கின்றது.
டானியல் மறைந்த ஐந்தாவது ஆண்டில் எம். சி. சுப்பிர மணியம் அவர்களும் மறைந்து விட்டார். இருவருமே சிறிது காலச் சுகயினத்தின் பின்னர் மறைந்தனர். இவரது இறுதிச் சடங்கின் போது எழுத்தாளரும் "மல்லிகை ஆசிரியருமான டொமினிக் ஜீவா நிகழ்த்திய இரங்கலுரையின் ஒரு பகுதி காலத்தில் பதிவானது. “எந்த வில்லூன்றி மயானத்தில் சிறுபான்மையினரின் உடலைத் தகனம் செய்யக் கூடாதென்று சாதிவெறி தலை விரித்தாடியதோ,

Page 48
av5d6g08unrefo O 90
அதே வில்லூன்றி மயானத்தில் அமரர் எம். சி.யின் உடல் இன்று தகனம் செய்யப்படுகின்றது” (ஆதாரம் முரசொலி 7 01 1989) என்பதே ஜீவாவின் வார்த்தைகள்.
இதே வில்லூன்றி மயானத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் சிறுபான்மைச் சமூகப் பெண்மணி ஒருவரின் சடலத்தைத் தகனம் செய்ய ஊர்வலமாக எடுத்துச் சென்ற வேளையில் பெருஞ்சாதிக் காரரின் துப்பாக்கிச் சூட்டுக்கு முதலி சின்னத்தம்பி அநியாயமாகப் பலியானார். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் பல வருடங்கள் போராடி எதிரிக்குத் தண்டனை பெற்றுக் கொடுத்தவர் ‘எம். சி’ அவர்கள். கடமையைச் சரியாகச் செய்தால் உரிமையை நியாயமாகப் பெறலாம் என்பதற்கு இது சான்று. காலம் தானாக மாறுவதில்லை.
1989 ஜனவரி 16ம் திகதிய 'முரசொலி”யில் நான் எழுதிய ஆசிரிய தலையங்கத்தின் இறுதிப் பகுதியில் "அவர் அடியொற்றிய பாதை என்றும் நிலைத்து நிற்கும்’ என்று வலியுறுத்தியிருந்தேன். எங்கள் கண்களின் முன்னால் இது நடைபெற்றுள்ளது. இந்தத் தசாப்த முக்கியமான காலகட்டத்தின்போது யாழ்ப்பாணக் குடாநாடு விடுதலைப் புலிகளின் நிர்வாகத்திலும் ஆட்சியிலும் இருந்தது. அவ்வேளையில் அமரர் ‘எம். சி” அவர்கள் நாடிய சமதர்மக் கொள்கை அங்கு கடைப்பிடிக்கப்பட்டது. திருமணம், மரணம் ஆகிய சடங்குகளின்போது காலங்காலமாகச் செயற்படுத்தப்பட்டு வந்த கொத்தடிமைத்தனம் நீக்கப்பட்டிருந்தது. சாதி அமைப்புக்குச் சாவுமண அடிக்கப்பட்டிருந்தது.
ஆனால், எந்தக் கொள்கையை ‘எம். சி’ சாகும்வரையும் கடைப்பிடித்து வந்தாரோ, எந்த அரசாங்கத்தில் அவர் எம். பி. யாக இருந்தாரோ, அந்தக் கட்சி அங்கம் வகிக்கும் அதே பூரீலங்கா அரசு யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பின்னர் சாதிக் கொடுமையும், சாதித் திமிரும் அங்கு மீண்டும் புகுத்தப்பட்டிருப்ப தானது, தமிழினத்தை அழிப்பதில் அவர்களுக்கிருக்கும் ஆவேசத்தை மட்டுமின்றி சிங்கள பெருஞ்சாதிக்காரரின் சாதிவெறியையும் எடுத்துக்காட்டுகின்றது.
இதனால், “எம். சி. தலைமையில் முன்னெடுத்துச் செல்லப் பட்ட சமூகப் போராட்டம் பல்லாண்டுகளுக்குப் பின்தள்ளப் பட்டுள்ளது என்று சொன்னால் அது தவறாக இருக்காது.

o. 60pg
சிறுபான்மைத் தமிழ் மக்களின் விடிவெள்ளி
உலகில் தோன்றும் மனிதர்கள் எல்லோரும் புகழோடு தோன்றுவதில்லை. மனிதருள் மாணிக்கமாகத் திகழ்பவர்கள் ஒருசிலரே. இந்த வரிசையில் அரசியல், சமூக, பொருளாதார வரலாற்றில் உலகறிந்த ஒரு மேதையாக, அரசியல்வாதியாகத் திகழ்ந்து மறைந்த உத்தமர் அமரர் எம். சி. சுப்பிரமணியம் அவர்கள். சேற்றில் முளைத்த செந்தாமரையாக உலக அரங்கில் ஒளிவிட்டுத் திகழ்ந்த "ஆபிரகாம் லிங்கின்’ போன்ற பெருந்தலைவர் வரிசையில் அமரர் எம். சி. சுப்பிர மணியமும் மக்களால் நினைவிலிருத்திப் போற்றப் படுகின்றார்.
‘எம். சி’ என்று பாமர மக்கள் தொடக்கம், பாராளுமன்றம் வரை அன்போடும், ஆசையோடும் அழைக்கப்பட்ட எம். சி. சுப்பிரமணியத்தின் அரசியல் வாழ்வு பல போராட்டங்களைக் கண்டது. சமுதாய விடுதலைக்காகவும், கல்வி முன்னேற்றத்திற்காகவும் அவர் பல அதிசயிக்கத்தக்க போராட்டங்களை முன்னெடுத்து வெற்றி கண்டவர்.
ஒரு காலத்தில் வடக்கில் சாதிக்கொடுமை தலைவிரித்தாடிய போது அதனால் ஒரு பகுதி மக்கள் ஒடுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு வந்தனர்.

Page 49
சந்திரபோல் O 92
இதனால் சிறுபான்மைத் தமிழ் மக்களில் 'சிறுபான்மை இனமென ஒரு இனம் தாழ்த்தப்பட்டு, கல்வி, சமூக, பொருளாதாரத்தில் ஒதுக்கப்பட்டு வந்தது. இதனை அனுபவரீதியாக உணர்ந்த ‘எம். சி” அவர்கள் தனது இளவயதிலேயே இவ்விலங்கை உடைத்தெறிய முனைந்தார்.
சோஷலிச அமைப்பு மூலமே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடுதலை பெற்றுத்தர முடியுமென்ற அவரது முடிவு அவரை இடதுசாரிக் கட்சியில் இணைய வைத்தது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னைச் சேர்த்துக்கொண்ட ‘எம். சி’, கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பீடத்தில் தனக்கென நிலையான இடத்தையும் மதிப்பையும் சம்பாதித்துக் கொண்டவர். சிறுபான்மை இனத்துக்குக் கதவடைப்பு செய்யப்பட்ட ஆலயப் பிரவேசம், தேநீர்க்கடைப் பிரவேசம் போன்ற பல போராட்டங்களை முன்னெடுத்து களத்தில் நின்று போராடினார். அவரால் உருவாக்கப்பட்ட சிறுபான்மைத் தமிழர் மகாசபை இப்போராட்டங்களை மக்கள் முன் வைத்தது. இதன் பயனாகப் பல ஆலயங்களின் கதவுகள் சகலருக்கும் வழி பாட்டுக்குத் திறந்துவிடப்பட்டன. உயர்சாதியினர் என்று முத்திரை குத்திக் கொண்டவர்களும் கூட ‘எம். சி’யுடன் இணைந்து அவரது போராட்டத்திற்குத் தோள்கொடுத்தனர் என்றால் மிகையாகாது.
1970ல் பிரதமர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்காவின் சிறிலங்கா சுதந்திரக்கட்சி இடதுசாரி கூட்டு முன்னணி ஆட்சியின் போது நியமன எம். பியாகப் பாராளுமன்றத்தில் பிரவேசித்த எம். சி. அவர்கள் சகல சமூக மக்களுக்கும், தனது சாதனைகளைப் பொது வாக்கிச் சமூக, கல்வி, பொருளாதார மறுமலர்ச்சியை உருவாக்கினார்.
சொந்த நிலமின்றி, குடியிருக்க வீடின்றி நெடுங்காலமாகப் பிறரின் தயவில் வாழ்ந்து வந்த சிறுபான்மைத் தமிழ் மக்களுக்குச் சொந்தத்தில் நிலமும், வீடமைப்புத் திட்டங்கள் மூலம் வீடுகளும், விவசாயம் செய்வதற்கு விவசாயத் திட்டங்கள் மூலம் காணிகளும் பெற்றுக் கொடுத்து, நிலமற்றவர்களுக்கு விமோசனம் பெற்றுக் கொடுத்தார். உடையார்கட்டில் அவரால் உருவாக்கப்பட்ட கூட்டுறவு விவசாயத் திட்டம் இதற்கோர் சான்றாகும். ஆரம்ப காலத்தில் இவ்விவசாயத் திட்டத்தில் நான் செயலாளராக இருந்து எம். சி. யின் இலட்சியத்தில் பங்காற்றியமையைப் பெரும் பேறாகக் கருதுகிறேன்.
சிறுபான்மைத் தமிழ் மக்களின் கல்வியில் அவர் அதிக கவனம் செலுத்தினார். இதன் பயனாகப் பல பாடசாலைகளை உருவாக்கி, அரசினால் அங்கீகாரம் பெற்று பல ஆசிரியர்களையும் நியமித்து வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்து

93 9 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
ஊக்கமூட்டி வந்தார். இதன் பயனாகவே இன்று சிறுபான்மைச் சமுதாயம் பல்வேறு துறைகளிலும் முன்னேறிப் பல தலைவர் களையும், கல்விமான்களையும், உயரதிகாரிகளையும் தோற்று வித்துள்ளது.
இந்தியாவில் அம்பேத்கார் பிற்பட்ட மக்களின் விடுதலைக் காகத் தன்னை அர்ப்பணித்துப் போராடி வந்தமை போல், ஈழத்திலும் ஒரு “அம்பேத்கார்’ போன்று ‘எம். சி” அவர்கள் தனது வாழ்நாளை தனது சமுதாயத்திற்காகவே அர்ப்பணித்தவர். 'எம். சி. காலத்திலேயே சாதிவேற்றுமை அருகத் தொடங்கியதென்பது பெருமைக்குரியது.
மிகவும் எளிமையாகவே வாழ்ந்த திரு. எம். சி. சுப்பிரமணியம் அவர்கள் அமரராகிவிட்டபோதிலும், அவர் விதைத்த ‘விதைகள்’ இன்று பயிராகி அறுவடையாகிக் கொண்டிருக்கின்றன. அன்னாரின் நினைவுகள் காலத்தால் அழியாதவை.

Page 50
geog aligooduečr
எம்.சி. என்றொரு மாமனிதர்
நான் சிறுவனாக இருக்கும்பொழுது எனது தகப்பனார் துரைச்சாமியைப் பார்க்க அடிக்கடி இருவர் வருவார்கள். அவ்விருவரும் ஒன்றாகவே வருவார்கள். அவர்களில் ஒருவர் நல்ல வெள்ளை நஷனலும் கோடுகளற்ற வெள்ளைச் சாரமும் உடுத்திருப்பார். நீலப் பிளாஸ்ரிக் கவர்போட்ட தொப்பியும் இவரிடமிருக்கும். சைக்கிளின் பின்பக்கத்தில் “தேசாபிமானி’ பத்திரிகைக் கட்டுகளும் இருக்கும். நான் ஒருநாள் எனது தகப்பனாரிடம் இவர் பற்றி வினவியபொழுது அவர் தான் எம். சி. என்றழைக்கப்படும் எம். சி சுப்பிரமணியம் என்றும், மற்றவரை ஐ. ஆர். அரியரத்தினம் மாஸ்டர் என்றும் சொன்னார். இவ்விருவரும் இலங்கை கம்யூ னிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் அடிக்கடி வந்து “தேசாபிமானி’ பத்திரிகையைக் கொடுத்துவிட்டு சிறிது நேரம் இருந்து கதைத்துவிட்டுச் செல்வார்கள். இத்தனைக்கும் எனது தகப்பனார் பெரும் படிப்பாளியு மல்லர், வெறும் தொழிலாளியே.
நாளடைவில் நான் வளர்ந்து, படித்து பொலிஸ் திணைக்களத்தில் குமாஸ்தாவாக வேலைக்குச் சேர்ந்தேன். கட்சி ரீதியாக அவரோடு சேர்ந்து பழகும் வாய்ப்பு எனக்கு அவ்வளவு கிட்டவில்லை.

95 0ே எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
இதற்கிடையில் “தேசாபிமானி'யிலும், பின்பு ‘புதுயுகத்திலும் நான் சில கதைகள் எழுத ஆரம்பித்தேன். தினகரனிலும் எனது சிறுகதைகள் வர ஆரம்பித்தன. இது 1961ம் ஆண்டிற்குப் பின்புதான்.
1967ம் ஆண்டு நான் யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு கொழும்பிலிருந்து மாற்றலாகி வந்தேன். அப்பொழுது “பொலிசாருக்கு எதிரான முறைப்பாடுகள்’ பற்றிய விடயங்களைக் கவனிக்கும்படி எனக்குப் பணிக்கப்பட்டது. இது முக்கியமான விடயமென்பதால் நான் பொலிஸ் அத்தியட்சகரை அடிக்கடி சந்திக்க வேண்டியிருந்தது. அநேகமாக நான் பொலிஸ் அத்தியட்சகரின் அறையினுள் நுழையும்போதெல்லாம், திரு. எம். சி. சுப்பிரமணியம் அவர்களும் அவருடன் இருப்பார். அப்பொழுது அவர் பாராளுமன்ற நியமன உறுப்பினராக இருந்தார். அப்பொழுது யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகராக இருந்தவர் திரு. ஆர். சுந்தரலிங்கம் என்பவராவார். இவரின் தந்தையார் இராமச்சந்திரன் என்பவர் புகையிரத திணைக்களத்தில் கணக்காளராக இருந்தவர். prld6007 Lostfausair Ludisi. “HINDUISM IN A NUTSHELL 6T6irp புத்தகத்தின் ஆசிரியர். இதன் பிரதியொன்று பொலிஸ் அத்தியட் சகளினால் எனக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டது.
இந்தக் காலப்பகுதியில்தான் ஆலயத்தின் பிரவேசங்கள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. இதில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் திறந்து விடப்பட்டது. திரு. எம். சி. சுப்பிர மணியம் அவர்களின் பெருமுயற்சியினாலும் வெகுஜன இயக்கத் தலைவர் எஸ். ரி. நாகரத்தினம் அவர்களின் அயராத உழைப் பாலுமே மாவிட்டபுரம் கோயில் பிரவேசம் முக்கியம் வாய்ந்தது. சமூகக் குறைபாட்டுச் &l lib (Social Disabilities Act) 6Tairp 56,760p. பாராளுமன்றில் கொண்டுவந்து அதைச் சிட்டமாக்குவித்த பெருமை “எம். சி". ஐயா அவர்களையே சாரும்.
அக்காலத்தில் சாதியின் நிமித்தம் பொலிசார் பல அடாவடித்தனங்களில் ஈடுபட்டனர். ஒரு தடவை, ஊர்காவற்றுறைப் பொலிஸில் மிகவும் சாதிவெறிபிடித்த "பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் இருந்தார். இந்த "பொலிஸ் சார்ஜன்ட் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞனை சாதியின் நிமித்தம் பழிவாங்க நினைத்து, அவன் மீது சங்கக் கடையில் திருடியதாக ஒரு பொய்க் குற்றத்தைச் சுமத்தி நடுச்சாமத்தில் அவன் வீட்டிற்குச் சென்று, அவ்வாலிபனை நித்திரையினின்றும் எழுப்பிக் கைகளைப் பின் பக்கமாக விலங்கிட்டு, தாய், தகப்பன், சகோதரர்களுக்கு முன்பாக மிகவும் மோசமாக நையப்புடைத்து, பின்பு இரண்டு வாரங்களுக்கு ‘றிமாண்ட்" செய்தார்.

Page 51
orig03ureo O 96
“டேய், நான்தான் அடிச்சது. ஏலுமெண்டால் உங்களுடைய அவன் எம். சி.யைக் கொண்டு ஏதும் செய்யேலுமெண்டால் செய்து பாருங்கோ பாப்பம்” என்று அவ் இளைஞனைப் பார்க்கச் சென்ற உறவினரிடம் மேசையில் அடித்துச் சொன்னாராம் அந்த சாதித் திமிர் பிடித்த "பொலிஸ் சார்ஜன்ட்'.
எம். சி. ஐயா அவர்கள் இதைப்பற்றி எழுத்து மூலம் பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்திருந்தார். பொலிஸ் அத்தியட்சகர் சுந்தரலிங்கம் அவர்கள் என்னை அழைத்து "எம். சி. பொய் சொல்லமாட்டார். இதைப்பற்றி நடவடிக்கை எடுக்கவும்” என எனக்குப் பணித்தார். இத்தனைக்கும் நான் எந்தச் சமூகத்தவன் என்பதும் பொலிஸ் அத்தியட்சகருக்கு நன்றாகத் தெரியும்.
எம். சி. ஐயா அவர்களின் முறைப்பாட்டின்மீது நான் மிகவும் நேர்மையான நடவடிக்கைகளை மிகவும் துரிதமாக எடுத்த பொழுது அந்தப் “பொலிஸ் சார்ஜன்ட் பொறியில் சிக்கிய எலி போல சிக்கித் துடிக்கத் தொடங்கினார். இறுதியில் ஏதும் செய்ய வழியின்றி எம். சி. ஐயாவைத் தேடி பலாலி வீதியில் இயங்கிக் கொண்டிருந்த அவரின் காரியாலயத்திற்குப் பல தடவைகள் வந்து மன்னிப்புக் கேட்டதன் பேரில் இந்த மன்னிப்பு சம்பந்தப்பட்ட இளைஞனிடமும் கேட்கப்பட்டு அவன்மீது போடப்பட்டிருந்த பொய் வழக்கும் வாபஸ் பெறப்பட்டதன் பேரிலும்) அந்தப் 'பொலிஸ் சார்ஜன்ட்' மீதான புகார் வாபஸ் பெறப்பட்டது.
எம். சி. ஐயா அவர்களின் நேர்மையில் பொலிஸ் அத்தியட்சகர் சுந்தரலிங்கத்திற்கு நம்பிக்கை இருந்தது. இதுபோன்றே இவர்மீது யாழ்ப்பாண அரசாங்க அதிபர் விமல் அமரசேகராவும் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்.
காலை தொடக்கம் மாலை வரை அயராது தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்காக உழைத்தவர் திரு. எம். சி. ஐயா அவர்கள்.
இந்த ‘எம். சி. என்ற மாமனிதனின் பெயர் எத்தனையோ நெஞ்சங்களில் குடிகொண்டு நிலைபெற்று இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
இப்பெருமைக்கு நிச்சயமாக அவரின் பாரியாரும் சகோதரியும் என்றென்றும் உரித்துடையவர்கள்.

ad.oretót. ugrgőiklabb
எம்.சி. ஒரு போராளி மனிதநேயவாதி
எம். சி. என எல்லோராலும் அன்புடனும் தோழமையுடனும் அழைக்கப்பட்ட தோழர் எம். சி. சுப்பிரமணியம் ஒரு இடதுசாரி, பொதுவுடைமைவாதி, ஒடுக்கப்பட்ட மக்களின் தானைத்தளபதி, ஒரு குழந்தைத் தன்மையுள்ள மென்மையான மனிதநேயன். எல்லோ ருடனும் நட்பு பாராட்டும் எளிமையுடையவர். அமரராகிப் பத்து வருடங்கள் சென்றாலும் அவருடன் பழகியவர்களின் ஞாபகத்தில் இன்றும் வாழ்பவர். இப்படிப் பலவாறு அவரை அன்புடன் நினைவு é9n UGUITLD.
எனது மாணவப் பருவத்திலேயே அவரை கூட்டங்களுக்கு அழைத்துப் பேசவைத்திருக்கின்றேன். போராளியாக - நியமன உறுப்பினராக - நட்புடை யவராகப் பல பரிமாணங்களில் அவரது நினைவுப் பதிவுகள் என்னிடமுண்டு. வாழ்க்கையில் இரண்டு வகை இருக்கின்றது. ஒன்று, நம்பிக்கைமிக்க வெற்றி கரமான வாழ்க்கை, மற்றொன்று, எதையும் நம்பாமல், துணிந்து நில்லாமல் அவநம்பிக்கையோடு வாழும் துவண்ட வாழ்க்கை. ஆனால் நம்பிக்கை என்பது எளிதான காரியமல்ல. சூழ்நிலைகள் மாறும். இதில் ஏற்ற இறக்கங்களைக்கண்ட - கொண்ட கொள்கையில்

Page 52
சந்திரபோஸ் O 98
நம்பிக்கைகொண்ட - அதற்காக வாழ்ந்த வாழ்க்கை, தோழர் எம். சி. யினது. காலந்தோறும் மதிப்பீடுகளில் மாற்றம் ஏற்படவே செய்கிறது. அமரராகிப் பத்தாண்டு கழிந்தாலும் எம். சி. இன்றும் ஒரு போராளியாகவே மதிப்பீடு செய்யப்படுகிறார்.
“உலகத்தில் உள்ள மக்கள் இந்த இருபதாம் நூற்றாண்டிலே எவ்வளவோ அதிசயங்களைச் செய்து கொண்டிருக்கின்ற காலத்தில் நாம் என்ன செய்கின்றோம் என்றால் இப்போதுதான் சாதி ஒழிய வேண்டும் என்று பேசுகின்றோம்" எனப் பெரியார் ஈ. வே. ரா. 1961ல் சென்னையில் பேசினார். ஆனால் அதற்கு முன்னரேயே தோழர் எம். சி. சாதி ஒழிப்புப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி வழி நடத்தினார் என்ற பெருமை கொள்கிறார். ஒழுக்கம், அறநெறிகள், மனிதநேயம் ஆகியவற்றில் மிகுந்த பற்றுடைய எம். சி. தாழ்த்தப்பட்ட சமூகத்தினரல்லாத சமூகத்திலுள்ள வறிய பிரிவினருக்கும் தனது சேவையை நல்கினார் என்பது என்போன்ற சிலருக்குத் தெரியும். அடிக்கடி பிரச்சனைகளைப் பற்றிக் கூறும்போது, "விரும்பாத சூழ் நிலைகளை எதிர்கொள்வதைத் தவிர்க்கவோ, தள்ளிப்போடவோ முயற்சித்து எந்தப் பிரச்சனையையும் தீர்க்கமுடியாது. தள்ளிப் போடுவதினாலும் தவிர்க்க நினைப்பதினாலும் பிரச்சனையின் தீவிரம் அதிகமாகிவிடும்” எனக் கூறுவார். தங்களுடைய உரிமைகளைக் கேட்கிற, அநியாயத்தைத் தட்டிக்கேட்கிற மக்கள் எங்கும் எம். சி. யிடம் முறையிடுவதைப் பார்த்த அனுபவமுண்டு.
அவரிடம் போராட்ட அனுபவமுண்டு. அவரிடம் போராட்ட அனுபவங்களைக் கேட்கும்போது, "சிலவற்றில் வெற்றி கிடைத்தது. சிலவற்றில் எப்படி வெற்றி கிடைத்தது, சிலவற்றில் எப்படி வெற்றி பெறுவது என்ற பாடத்தைக் கற்றுக்கொள்ளுகிறோம்’ என்று எளிமையாக உண்மையைச் சொல்வார். மேலும் சமத்துவத்திற்கான போராட்டம் எந்த வடிவிலும் எந்த இடத்திலும் வந்துகொண்டே தானிருக்கும். சாதி இழிவுகளை நீக்கும் சமத்துவ நடிவடிக்கை இன்னும் முதலிடத்தைப் பெறவேண்டுமென்பார். அவர் நம் கலாச்சாரத் தூண்களின் தடித்த தனங்களை எண்ணி மனச் சோர்வில் ஆழ்ந்து கலங்கியதை, எந்த ஆலயத் திறப்புப் போராட் டங்களில் ஈடுபட்டபோதும் நான் கண்டதில்லை. தோழர்கள் எம். சி. யும், ஆர். ஆர். பூபாலசிங்கமும் கொழும்பு வருவது என்னைப் போன்ற இளம் தோழர்களுக்கு குஷி. இவர்களிருவரும் 1974ல் மாத்தறையில் நடைபெற்ற இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மகாநாட்டில் பங்குபற்றித் தமிழ்த் தோழர்களை நகைச்சுவையில் ஆழ்த்தியமை, இன்றும் பசுமையாக எம் மனத்தில் மறக்கமுடியாது பதிந்துள்ளது. அம்மகாநாடு ‘தேசிய இனங்களுக்கான சுயநிர்ணய உரிமை’ என்ற கருத்துருவத்தை இலங்கையில் முதன்முதலில்

99 9 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
அறிமுகப்படுத்திய மகாநாடு. அதில் எம்.சி.யின் பங்களிப்பும் கணிச மானது. இதுவே இனப்பிரச்சனைக்கான ஒரே தீர்வாக - காலங் கடந்தாலும் - அமையப்போகிறது.
1980க்குப் பிறகு நாங்களெல்லாம் செந்தமிழர்களாகி விட்டதால் அடிக்கடி சந்திக்கமுடியாமல் போனாலும், யான் தனிப்பட்ட முறையில் சந்தித்தபோது "நீ வேறு சாதி, நான் வேறு சாதி என்று ஆவேசமாய் அரிவாள் தூக்கி வெட்டிக் கொல்லும் எல்லோரும் ஒரே சாதி அது மிருகசாதி இது சகல இனங்களுக்கும் பொருந்தும்" என வேதனைப்பட்டார்.
அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது வெளிப்பட்ட கருத்துகள் பின்வருமாறு:- "அறம்தான் ஆயுதங்களில் கூர்மை யானது, ஆனால் அது நேர்மையானது. அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு அது யாரையும் தாக்காது. தாக்க ஆரம்பித்தால் தோற்காது” “உலகில் எந்த இளைஞர்களும் சீரழிக்கப்படுவதை நாம் ஏற்கமுடியாது. நமது இயக்கத்தின் இறுதி இலட்சியம் மனித விடுதலை, மனித சமத்துவம். அதன் ஒரு கட்டம்தான் தமிழர் விடுதலை. உலகத்தில் எல்லா விடுதலை சக்திகளோடும்தான் நாம் கைகோர்த்துக்கொள்ள வேண்டும்” என்பார் எம். சி.
ஆமாம். எம். சி. நீயும் ஒரு சமூகவிடுதலைப் போராளி; ஒரு மனிதநேயவாதி. வாழ்க உங்கள் நாமம்.

Page 53
é. affbDifbLueoib (abmfib65)
எம்.சி. சமூக விடுதலைப் போராளி
அமரர் எம். சி. சுப்பிரமணியம் அவர்கள் ஒரு தலைசிறந்த சமூக விடுதலைப் போராளி என்பதை யாவரும் அறிவர். எமது சமூக மேம்பாட்டுக்காக அயராது அல்லும் பகலும் உழைத்த ஒரு மாமனிதன்
96) III.
அவரோடு சேர்ந்து பல சமூக விடுதலைப் போராட்டங்களில் பங்குபற்றியவன் என்ற முறையில் இந்தத் தலைசிறந்த மாபெரும் விடுதலைப் போராளி யைப் பற்றி நான் அறிந்தவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் எண்ணத்துடன் இச்சிறு கட்டுரையை வரைகிறேன்.
எம். சி. சுப்பிரமணியம் அவர்கள் யாழ் பற்றிக்ஸ் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம்; அதாவது 1934ம் ஆண்டளவில் என நினைக்கிறேன்; அப்பொழுதிருந்தே எமது சமூகச் சிறார்களைக் கல்வியில் மேம்பட்ட நிலைக்குக் கொண்டுவர வேண்டுமென்ற எண்ணம் அவர் மனதில் துளிர்விட ஆரம்பித்து, யாழ்ப்பாணம் பலாலி வீதியில் சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்கம் என்ற ஒரு சங்கத்தை ஆரம்பித்தார்கள். இச்சங்கத்திற்கு அக்காலத்தில் கணபதி இராசையா, ஆழ்வார்

1Ο1 9 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
சிவகுரு (மாணிக்கம்), ஆழ்வார் செல்லையா, ஆழ்வார் சண்முகம் என்போர் இவருக்குப் பக்கத் துணையாக நின்று உதவி புரிந்தார்கள். வாலிபர் சங்கத்தில் எம். சி. அவர்கள் எம்மைப் போன்ற சிறுவர்களுக்குப் பாடம் சொல்லித் தந்து உதவினார்.
சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்கம் தொடங்குவதற்கு யாழ்ப் பாணம் கரையூரில் (குருநகர்) திரு. யோவேல் போல் அவர்கள் தலைமையில் 1925ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒடுக்கப்பட்டோர் சங்கம்’ ஒரு உந்துசக்தியாக விளங்கிற்று. இச் சங்கத்திற்கு முதலியார் இராசேந்திரம், கொய்யாத்தோட்டத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை (யாழ், பரியோவான் கல்லூரி, இலிகிதர்), திரு. ஜேக்கப் காந்தி என்போர் தம்மாலியன்ற அனைத்தையும் செய்தனர்.
இவ்வாறாக எமது சமூக முன்னேற்றத்திற்காகப் பல வழிகளிலும் உழைத்த திரு. எம். சி. சுப்பிரமணியம் அவர்கள், அடக்கி ஒடுக்கப்பட்ட சிறுபான்மைத் தமிழர்களுக்காக ஒரு ஸ்தாபனம் தேவை என்பதை உணர்ந்து அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகாசபை என்னும் ஸ்தாபனத்தை 1941ம் ஆண்டு ஆரம்பித்தார். இந்த ஸ்தாபனத்தில் ஆழ்வார் செல்லையா, ஜேக்கப் காந்தி, ஜி. எம். பொன்னுத்துரை, கணபதிப்பிள்ளை, இராசேந்திரம் (தம்பிஐயா), சி. குணரத்தினம், சண்முகம் இராசையா (அரசடி, முதலியார் இராசேந்திரம், ஜி. நல்லையா, ஆசிரியர் அல்பேட் (உடுவில்) முதலியோரும் இன்னும் வதிரியைச் சேர்ந்த கவிஞர் செல்லையா, ஆசிரியர் மாணிக்கம், சைவப் புலவர் வல்லிபுரம் முதலியோரும், பருத்தித்துறையைச் சேர்ந்த இன்னும் பலரும் உறுதுணையாக இருந்து இம் மகாசபையை நடத்தி வந்தனர்.
மகாசபைக்கு திரு ஈ. வீ செல்வரத்தினம் பொதுக்காரியதரிசி யாகவும், திரு. கே. பசுபதி (ஆசிரியர்) நிர்வாகக் காரியதரிசியாகவும், தலைவர் எம். சி. சுப்பிரமணியத்திற்கு உறுதுணையாக நின்று உழைத்தனர். மகாசபைக்கு திரு. சி. குணரத்தினம் பொருளாள ராகவுமிருந்தார். காலக்கிரமத்தில் இம் மகாசபை நிர்வாகத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வேறு பலர் காரியதரிசியாகவும், தனாதி காரியாகவும் பதவி வகித்தனர்.
மகாசபை மிகவும் நன்றாகச் செயற்பட்டு வளர்ந்து வந்த காலத்தில், எமது சமூகத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் இறந்த பொழுது அவரின் சடலத்தை எரிப்பதற்காக வில்லூன்றி மயானத் திற்குக் கொண்டு சென்றபொழுது, அப்பெண்மணியின் எரிந்த சடலத்துக்கான காடாத்துப் பண்ணும் சடங்கை நடத்தவிடாது உயர்சாதி எனப்படுவோர் நமது சமூகத்தவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இச்சம்பவத்தில் முதலி சின்னத்தம்பி என்பவர்

Page 54
Figured O 102
கொல்லப்பட்டும், எமது சமூகத்தைச் சேர்ந்த பலர் காயப்பட்டு மிருந்தனர். பின்பு, இம் மயானத்தில் இறந்த முதலி சின்னத்தம்பியின் மரணக்கிரியைகளைச் செய்ய பொலிசார் இடம் கொடுக்காததனால் பின்பு இக்கிரியைகள் காக்கைதீவு மயானத்தில் செய்யப்பட்டது. இது சம்பந்தமான வழக்கில் திரு எம். சி. சுப்பிரமணியம் அவர்கள் தம்மாலியன்றவரை போராடினார். எமக்காக வாதாட எந்தவொரு வழக்கறிஞரும் முன்வராதபோது, திரு. சி. தர்மகுலசிங்கம் (பருத்தித்துறை) அவர்களின் உதவியோடு இவ்வழக்கை நடத்தி வென் றெடுத்து எதிரிகளுக்குத் தண்டனையைப் பெற்றுக் கொடுத்தார். இதற்கான நிதியுதவிகளை எமது சமூகத்து மக்கள் சேர்த்து வழங்கினர். ஆனால், திரு தர்மகுலசிங்கம் அவர்கள் இவ்வழக்கிற்கு எந்தவொரு பணத்தையும் பெற்றுக் கொள்ளவில்லையென்பதை மிகவும் நன்றிக் கடனோடும், பெருமையுடனும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
அக்காலத்தில் எமது மக்களுக்கு ஒரு சங்கக் கடை தேவையாக இருந்ததை உணர்ந்த திரு. எம். சி. சுப்பிரமணியம் அவர்கள் 1943ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதியன்று ஆரியகுளத்தடியில் ஒரு சங்கக் கடையை ஆரம்பித்தார். இச்சங்கத்திற்குத் தலைவராக திரு. ஆரிய பத்திரனவும், செயலாளராக திரு எம். சி அவர்களும், தனாதிகாரியாக ஆழ்வார் செல்லையாவும் செயற்பட்டனர். இச்சங்கத்திற்கு முகாமை யாளராக (மனேஜராக) திரு. இராசேந்திரம் பதவி வகித்தார்.
திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் பருத்தித்துறைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபொழுது, சோல்பரி பிரபு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். அப்பொழுது பருத்தித்துறையில் மிகவும் பின்தங்கிய கிராமமாகிய கன்பொல்லை, கரவெட்டிக்கு அவரை அழைத்துச் சென்று எமது மக்களின் துன்பியல் வாழ்க்கை யையும், உயர்சாதி மக்களால் எவ்வாறு துன்புறுத்தப்பட்டார்கள் என்பதையும் அவருக்குக் காட்ட முற்பட்டபொழுது, பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்கள் பல சாக்குப் போக்குச் சொல்லி அவரை அக்கிராமத்திற்குச் செல்லவிடாது தடுத்தார். இருந்தபொழுதும் பின்பு சோல்பரிப் பிரபுவின் பிரதிநிதிகள் பொலிசார் சகிதம் அக்கிராமத்திற்குச் சென்றபொழுது அம்மக்கள் இருந்த யதார்த்தமான நிலைமையைப் பார்த்து படமெடுத்துச் சென்றனர். இதைப் பொறுத்துக் கொள்ளமுடியாத உயர் சாதியினர் பின்பு அக்கிராமத்து மக்களை அடித்துத் துன்புறுத்தினர். சோல்பரி பிரபுவின் பிரதிநிதிகளை அக்கிராமத்திற்குக் கொண்டுபோய் அம்மக் களின் அவல வாழ்க்கையை எடுத்துக் காண்பிப்பதில் முன்னின்றவர் திரு. எம். சி. அவர்களும், மகாசபையைச் சேர்ந்த வதிரி, பருத்தித் துறை, உடுவில், யாழ்ப்பாணத்து முக்கிய பிரமுகர்களும், அப்போ திருந்த முற்போக்காளரும்தான்.

கதிர்ச்சங் 103 **ó意亂 器 முக விடுதலைப் போராளி
எமது மக்கள் தேநீர்க் கடைகளில் மிகவும் மோசமாக நடத்தப் பட்டனர். அவர்களுக்கு போத்தல்களிலேயே தேநீர் வழங்கப்பட்டது. இந்த அவலநிலை ட் வேண்டும் என்று எண்ணிய எம். சி. யுடன் இலங்கைக் கொம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகர்களான வி. பொன்னம்பலம், அ. வைத்திலிங்கம், மு. கார்த்திகேயன், விஜயா னந்தன், குமாரசாமி முதலியோர் முன்னின்று அவரோடு தேநீர் கடைகள் பலவற்றை எமது மக்களுக்காகத் திறந்துவிட உழைத்தனர்.
எமது மக்களை அக்காலத்தில் ஆலயங்களுக்குள் செல்ல விடாது உயர் சாதியினர் எனப்படுவோர் தடுத்தனர். இவ்வால யங்களை எமது மக்களுக்கும் திறந்துவிட வேண்டும், எமது மக்களும் ஆலயத்துள் சென்று கடவுளை உயர்சாதியினர் எனப்படுவோர் போல வழிபடவேண்டும் எனக் கோரிக்கை விடுத்து, பல போராட் டங்களை முன்னின்று நடத்தி வெற்றியும் கண்டவர் எம். சி. இவ்வாலயப் பிரவேசப் போராட்டத்திற்குச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையோடு, வெகுசன இயக்கமும் திரு. எஸ். ரி என். நாகரெத் தினத்தின் வழிநடத்தலில் பல போராட்டங்களை நடத்திற்று. இதில் மிகவும் பிரசித்தி பெற்றது மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் பிரவேசமாகும்.
மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் பிரவேசத்தில் எமது போராட்டத்திற்கு முழுமுதல் எதிரியாகச் செயற்பட்டவர் முன்னை நாள் வவுனியா எம். பி. யும் பிரபல பேராசிரியருமான திரு. சி. சுந்தர லிங்கம் அவர்களாகும். இக்கோயிலைத் திறந்துவிடும் போராட்டம் 1967ம் ஆண்டளவில் நடைபெற்றது. அப்பொழுது வடமாகாண பொலிஸ் அத்தியட்சகராக திரு. ஆர். சுந்தரலிங்கமும், அரசாங்க அதிபராக திரு. விமல் அபயசேகராவும் யாழ்ப்பாணத்தில் கடமை யாற்றிக் கொண்டிருந்தனர். மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலைத் திறந்து விடுவதற்கான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது திரு. சி. சுந்தரலிங்கம் எமது மக்களைக் கோயிலுக்குள் செல்லவிடாது தடுத்துக் கொண்டிருந்தார். நாம் எம். சி. அவர்களின் தலைமையில் கோயில் முன்றலில் இருந்து சத்தியாக்கிரகம் செய்த பொழுது மனிதாபிமானம் அற்ற முறையில் தண்ணிர் இறைக்கும் இயந்திரம் மூலம் நாம் இருந்து சத்தியாக்கிரகம் செய்த இடமெல்லாம் தண்ணிரைப் பாய்ச்சினர். இந்த மனிதாபிமானமற்ற செயலை மிகவும் வன்மையாகப் பொலிஸ் அத்தியட்சகர் சுந்தரலிங்கம் கண்டித்து அச்செயலை உடனடியாக நிறுத்தினார்.
திரு. எம். சி. அவர்களினதும் வெகுஜன இயக்கத் தலைவர் எஸ். ரி. என். நாகரெத்தினத்தின் முயற்சியாலும் எட்மன் சமரக்கொடி அவர்களின் ஒத்துழைப்பாலும் இப்போராட்டம் வெற்றியடைந்து, திரு. சி. சுந்தரலிங்கம் அவர்களை உயர்நீதிமன்றம் குற்றவாளி

Page 55
சந்திரபோல் O 1O4
எனக் கண்டு தண்டனை வழங்கி, அவரின் முயற்சியை முறியடித்து, எமது மக்களின் வழிபாட்டிற்காகத் திறந்துவிட ஆவன செய்த திரு. எம். சி. ஒரு பெருமனிதன் ஆவார். இம்முயற்சிக்குப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா, லக்ஷமண் ஜெயக்கொடி முதலியோர் பல வழிகளில் எமக்கு ஒத்துழைப்பு வழங்கினர். கள்ளிறக்கும் தொழிலாளர் களுக்கென ஒரு சங்கம் தேவையென உணர்ந்த எம். சி. அவர்கள் ‘வடஇலங்கை கள்ளிறக்கும் தொழிலாளர் சங்கத்தை ஏற்படுத்தினார். உயர்சாதி மகனான 'பிலாக்கொட்டைத் தம்பையா என்ற பெரு மகனான இவரின் தலைமையில் இச்சங்கம் இயங்கியது. செயலா ளராக "பேப்பர்’ செல்லையா செயற்பட்டார்.
எமக்கு யாழ்ப்பாணத்தில் வாசிகசாலை ஒன்று தேவையென உணர்ந்து 1967ம் ஆண்டு பருத்தித்துறை வீதி, பலாலிவீதிச் சந்தியில் சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்கமும் வாசிகசாலையும் என ஒன்றை அமைத்துக் கொடுத்தார். இதற்கு திரு. ஆழ்வார் செல்லையா என்பவர் காரியதரிசியாக இயங்கி வந்தார்.

отво. Свамеопщоко
பனை நிழலிலிருந்து பாராளுமன்றம் வரை எம்.சி.
எம். சி. என யாழ்ப்பாணத்தில் நன்கு அறியப்பட்ட சுப்பிரமணியம் அவர்கள் யாழ்ப்பாணத் தலித்துகளின் போராட்ட முன்னோடி சமூக விடுதலை யின்பால் ஈர்க்கப்பட்டு அதிலே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். நானூற்றி ஐம்பது வருடம் மேற்கு ஐரோப்பிய பிடியில் சிக்கி தனது உருவத்தைச் சிதைத்துக் கொண்ட ஈழமண்ணுக்கு 1948ல் வழங்கப்பட்ட பெயரள விலான சுதந்திரம் நாட்டில் ஒடுக்கி வைத்த மக்களின் மீதான நாணயக் கயிறு தளர்ந்து போகவும் இடமளித்தது. தேர்தல், தன்னாட்சி என்று வந்தபோது தலித்துகள் தமது பங்குகள் பற்றி சிந்திக்கத் தொடங்கினார்கள்.
1833ல் கோல்புறுரக் கால அரசியற் சீர்திருத்தச் சட்டமும் 1957ல் பிரதமர் பண்டாரநாயக்கா கொண்டு வந்த சமூக சீர்திருத்தச் சட்டங்களும் தலித்துகளுக்கு எந்தவித முன்னேற்றங்களையும் அளிக்காத காகித எழுத்துச் சட்டங்களாக இருந்த நிலையில் தலித்துகள் போராட்டத்தின் அவசியம்பற்றி உணரத் தலைப் பட்டனர். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பங்களில் தொடங்கிவைக்கப்பட்ட அன்னியருக்கு எதிரான போராட்ட காலமாக வரலாற்றில் பதிவு பெற்றுள்ளது. 1930களில் இந்திய தேசியக் காங்கிரஸ் காந்தி - நேரு

Page 56
O Oes
தலைமையில் யாழ்ப்பாணம் வரை வியாபித்திருந்த காலத்தில் விடுதலை வேட்கைமிக்க எம். சி. காந்தி குல்லா அணிந்து அவர்களுடன் இணைந்து செயற்பட்ட இளைஞன். அனுபவரீதியாக காந்தீயம் சமூகவிடுதலைக்கு சரிவராது எனக்கண்டு மார்க்சீய வழிகளில் நாட்டம் கொண்டான்.
இந்திய உபகண்டத்தில் தலித்துகளின் மிகம்ோசமான நிலைகளை யாழ்ப்பாணம் கொண்டிருக்கவில்லை. காரணம், தலித்துகளின் பூர்வீகத் தன்மை, அறிவியல் ரீதியான தேடல்கள், கல்வி வளர்ச்சி, அத்தோடு தேச வளமைகளில் ஆளப்பட்ட பூர்வீக நிலை என்பனவாகும். ஒல்லாந்தர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட உரோமன் டச்சுச் சட்டங்களின்படி எழுதப்பட்ட பட்டயங்களில் தலித்துகளைக் குறிப்பிட்ட தொழில்களைச் செய்யும் கட்டா யங்களை ஏற்படுத்திவிட்டார்கள். மன்னர்கால தேசவழமை விரும்பியவர் விரும்பியபடி வேறு தொழில்களைச் செய்ய இடமளித்தது. இது சிங்கள நாட்டிலும் கிழக்கு மாகாணத்திலும், வடக்கே தீவுப் பகுதியிலேயும் தொடர்ந்து காணப்பட்டது.
ஒல்லாந்தர் காலத்தில் அவர்களின் அடிவருடிகளாகச் செயற் பட்ட, தங்களை உயர்சாதி வேளாளராக அன்னியருக்கு அறிமுகம் செய்த ஒரு கலப்புச் சாதியினர் தேசபக்தியற்றவர்களாகச் செயற் பட்டதுடன் தலித்துகளைக் கீழே தள்ளி சமூக வெளியை அகட்டி விட்டார்கள். காணி உறுதி முறை அறிமுகப்படுத்தப்பட்டு அரச காணிகள் முழுவதையும் எழுதி எடுத்துத் தமக்காக்கிக் கொண்டார்கள். வரலாறுகளைத் திரித்துத் திரித்து தமக்கு ஏற்றவாறு வைபவமாலை எழுதி அன்னியருக்குக் கொடுத்து தமது தகைமை களை உயர்த்தினார்கள். இதனால் சில பூர்வீகக் குடிகள் தமது தகுதிகளை இழந்தனர். இவைகள் பற்றிய எனது தேடல்களில் பெறப்பட்ட விடயங்களில் இலங்கையின் பூர்வீகக் குடிகள் தமிழ்தான் பேசினார்கள் என்பதும், சிங்களவர் அல்ல என்பதும் தெரியவருகிறது. இதுபற்றிய விடயங்களைச் சில சஞ்சிகைகள் மூலம் வெளிக் கொணர்வேன். தலித்துகளுக்கு பாராளுமன்ற சட்டங்கள் சமூக மாற்றங்களைக் கொடுக்காத நிலையில் அவர்கள் மார்க்சீய போராட்ட வழிகளை நாடுவது தவிர்க்க முடியாததாகியது. சிறுவனாயிருந்த காலத்தில் பெருமாள் கோவிலடி கிறிஸ்துவ சன்மார்க்க சபையே எம். சி. யைத் தரையில் இருந்து படிக்க வைத்த தென்றால், யாழ்ப்பாணச் சைவப் பள்ளிகளில் எம். சி. படியேறி னாலே தீட்டு என்ற நிலை, மார்க்சீயம் பற்றி அறியும் நிலை தலித்து களுக்கு ஏற்பட்டபொழுது காந்தீயப் போராட்ட வடிவம் மாற்றம் பெற்று புரட்சிகர மார்க்சீயம் பற்றிய சிந்தனைக் கருவூலங்கள் வளர்ச்சி பெற்றன. இதன்விளைவாக "சிறுபான்மைத்தமிழர் மகாசபை”

1O7 9 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
உதயமானது.
இச்சபை பிரதமர் எஸ். டபிள்யூ ஆர். டி. பண்டாரநாயக்கா கொண்டுவந்த சட்டங்களை நடைமுறைப்படுத்தும் வேலையில் தீவிர அக்கறை காட்டிற்று. முன்னணித்துவ தலைமை எம். சி. போன்ற வர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சுடலையில் பிரேதம் எரிப்பதில் சமத்துவம், கிணற்றிலே தண்ணிர் அள்ளுவதில் சமத்துவம், பாட சாலை வாங்குகளில் சமத்துவம், தேநீர்க்கடை சமத்துவம், பொது இடங்களில் சமத்துவம் என்னும் விடயங்களில் போராட்டங்களை மகாசபை முன்னெடுத்தபோது "கலப்புச் சாதியினர்" மூர்க்கமாக எதிர்த்தனர். பல இடங்களிலும் வன்முறை தலைதூக்கி தலித்துகள் அடக்கப்பட்டனர். 1957-1963 காலகட்டத்தில் இவை நடைபெற்றன. இதே காலத்தில் 1963-ல் சர்வதேச மார்க்சீய அணி பிளவுபட்டது. முன்னர் ட்ரொட்ஸ்கிய வாதத்தினால் பிளவுபட்டவர்கள், இப்போது மொஸ்கோ சார்பு, சீன சார்பு என்ற வகையில் பிளவுபட்டனர். பீட்டர் கெனமன் தலைமையில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியும் இரண்டானது. பீட்டர் கெனமன் மொஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராகவும், சண்முகதாசன் மாவோ தலைமை யிலான புரட்சி அணியின் செயலாளராகவும் இரண்டுபட எம். சி. கெனமன் அணியினை ஆதரித்தார். யாழ்ப்பாணத்தில் ட்ரொட்ஸ்கிய வாதம், ரஷ்ய சார்பு அணி, சீன சார்பு அணி என இடதுசாரிகள் மூன்று அணியாயினர். சண் தலைமையின் கீழ் அணிதிரண்ட எஸ். ரீ என். என எல்லோராலும் அறியப்பட்ட நாகரத்தினம், கே. டானியல், வீ. ஏ. கந்தசாமி, ஏ. கே. சுப்பிரமணியம், செந்தில்வேல் என்போர் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் எனும் தலித்திய அமைப்பை உருவாக்கி புரட்சிகர போராட்ட முறைகளைத் தேர்ந் தெடுத்தனர். இது புரட்சிக் கருத்துகளை விதைத்து "கலப்புச் சாதி” யினருக்குப் பதிலடி கொடுக்கத் தொடங்கியது. 1966-ம் ஆண்டு மாபெரும் பேரணி ஒன்றை சுன்னாகத்தில் இருந்து யாழ்ப்பாணம் வரை நடத்தி, தலித்துகளைக் கிளர்ந்தெழச் செய்தது. பிரசித்திபெற்ற மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயப் பிரவேசப் போராட்டம் வரலாற்றுப் பதிவு பெற்றது.
1966-லிருந்து 1970-வரை வெகுஜன இயக்கம் யாழ்ப்பாணத்தில் சாதனை படைத்தது. இதே காலகட்டத்தில் எம். சி, டொமினிக் ஜீவா போன்றோர் ரஷ்ய சார்பு அணியிலேயே இருந்தமை கடுமை யாக விமர்சிக்கப்பட்டது. எம். சி. யைப் பொறுத்தவரை காந்தீயத்தை மறுதலித்து புரட்சிக்கு புறப்பட்டவர். ரஷ்ய கம்யூனிஸ்க் கருத்தை ஏற்று பாராளுமன்றப் பாதையில் கெனமன் பின் நின்றது ஒரு பாரிய தவறு என்று விமர்சிக்கப்பட்டார். எம். சி. யின் தர்மசங்கடத்தைவிட தமிழ் காங்கிரஸ், தமிழரசின் நிலையும் தலித்துகள் விடயத்தில்

Page 57
சந்திரபோஸ் O 108
மோசமாக அம்பலமானது. கலப்புச் சாதிகள் சார்பான பாராளுமன்ற பிரதிநிதி அமிர்தலிங்கம் மாவிட்டபுரத்தை வியட்நாம் என பாராளு மன்றத்தில் வர்ணித்தார். தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் பல விடயங்களில் "மகாசபை"யைவிட வேறுபட்டது. மகாசபை தலித்துகளுக்கு மட்டுமான சபையாகவும், தலைமை கொடுத்த எம். சி. பாராளுமன்றவாதியாகவும் இருந்தார். ஆனால் வெகுஜன இயக்கம் தலித்துகளுக்கு மட்டுமல்லாது முற்போக்கு எண்ணங் கொண்ட பலருக்கும் புரட்சி அணிகளுக்கும் தளமானதோடு பாராளுமன்ற வாதத்தை நிராகரித்த புரட்சித் தலைமையையும் கொண்டிருந்தது. அதனால், சாதனை படைத்தது. ஆயினும் வெகுஜன இயக்க ஆயுள் அதிக காலம் நீடிக்கவில்லை.
1970-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பூரீலங்கா, சமசமாச, கம்யூனிஸ்ட் (மாஸ்கோ) கூட்டணி அமோக வெற்றியீட்டியபோது எம். சி. நியமன உறுப்பினராக பாராளுமன்றம் சென்றார். இதிலே முக்கியமான ஒரு விடயத்தைக் குறிப்பிடவேண்டும். அதாவது சிறிமாவோ அரசு தோழர் சண்முகதாசனையும் நியமன உறுப்பி னராக நியமிக்க ஆலோசித்தது. தொழில் மந்திரி பதவி வழங்கப் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் சண் அமைச்சர் பதவியை ஏற்க மறுத்துவிட்டார். பின்னர் ஒரு வினாவுக்கு விளக்கமளித்தபோது, “அமைச்சர் பதவி மூலம் தொழிலாளருக்கு எதுவும் செய்யமுடியாது; அதைவிட ஒரு புரட்சியைக் காட்டிக் கொடுக்க நான் தயாரில்லை" எனக் கூறினார்.
எம். சி. - எம். பி. ஆனபோதும் பாராளுமன்றம் மூலம் பெரிய விடயங்களைச் சாதிக்க முடியாமற் போனது ஏன்? தலித்திய போராட்டங்களைத் தீவிரமாகத் தொடரவில்லை! யாழ்ப்பாணத்தில் காணியில்லாமல் இரவல் குத்தகைக் காணிகளிலிருந்தவர்களுக்கு அவற்றைச் சொந்தமாக்கச் சட்டமூலம் கொண்டுவரவில்லை! மேலும், என். எம். கொண்டு வந்த மரவரி முறை ஒழிப்பு மசோதா வையும் பனம் பொருட்சபை அறிமுகத்தையும் பாராளுமன்றத்தில் எம். சி. எதிர்த்துப் பேசினார். ஆனாலும் வாக்களிப்பில் கட்சிக் கட்டுப் பாட்டின்படி மசோதாவை ஆதரித்து வாக்களித்தார். அதற்கான தர்க்க நியாயங்களை இக்கட்டுரை மூலம் விபரிக்க முடியாது.
1970-1977 காலத்தில், எம். சி. பாராளுமன்றத்தில் பதவி வகித்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த சில திடீர் மாற்றங்கள் பற்றி இங்கு குறிப்பிட வேண்டும். 1971-ஏப்ரல் சேகுவேரா கிளர்ச்சி யாழ்ப் பாண புரட்சிகர அரசியலையும் உலுப்பிவிட்டது. விளைவு, சண் தலைமையிலான புரட்சி அணி இரண்டாகப் பிளவுபட்டது. வடபிரதேச செயலாளர் வீ. ஏ. கந்தசாமியும் இன்னும் பல முக்கிய முன்னணி உறுப்பினர்களும் தன்னை விட்டுப் பிரிந்ததும் புரட்சிகர

109 0 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
சக்திகள் பலவீனப்பட்டன. அதனால் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கமும் பலவீனப்பட்டு செயல் குன்றியது. இது எம். சி. க்கு ஒரு நல்லகாலம் என்றே கூறலாம்.
ஏன் என்றால் எம். பி. யாயிருந்த நேரத்தில் வெகுஜன இயக்கம் தனது தலித்திய போராட்டங்களைத் தீவிரப்படுத்தியிருந்தால் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எம். சி. தர்மசங்கடமான நிலையில் இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவித்திருப்பார். எம். சி பற்றிய விமர்சனங்கள் ஒருபக்கமிருக்க, தலித்துகள் போராட்டங் களை முன்னெடுத்து பாராளுமன்றம் சென்று, பின்வந்த உடுப்பிட்டி இராசலிங்கம் பாராளுமன்றம் செல்ல வழி காட்டி பலவித வெற்றிகளைக் கண்ட எம். சி. ஒரு மனித நேயமிக்கவர்.
1972-1973-ஆம் ஆண்டுகளில் நான் கெக்கிராவையிற் பணி யாற்றியபோது காரிலே செல்லுகின்ற சமயங்களில் என்னுடன் தங்கி அன்றைய அரசியல் பற்றிப் பேசிச்சென்ற நாட்கள் இன்னும் பசுமையாக என் மனத்தில் இருக்கின்றன. இருவேறு கருத்துக்களைக் கொண்டிருந்த எங்கள் இருவரிடமும் ஏதோ ஒரு புரிந்துணர்வும் நேயமும் இருந்தது. இலைமறை காயாக அரசியலிலிருந்தபோதும் வெகுஜன இயக்க போராட்டக் காலங்களிலும் அதைத் தொடர்ந்த காலங்களிலும் மட்டுவில், அரியாலை, இருபாலை, ஆனைக்கோட்டை, சுன்னாகம் என அலைந்து பாணும் சம்பலும் சாப்பிட்டு இரவில் கலந்துரையாடல் செய்து இலட்சிய ஏக்கங்களுடன் திரிந்த எனக்கும் எம். சி. க்கும் ஏன் ஒரு மனித நேயம் இருக்க முடியாது?
இலட்சியங்களைச் சுமந்த தலித்துகள் இறுதிவரை விடியலை நோக்கிய தேடலில் புதிய கருத்துக்களுடன் புதுமைகளைச் சுமந்து முன்னேற வேண்டும் என்பதின் தாத்பரியமே எம். சி. யை அவ்ர் அமரத்துவமடைந்து பத்தாவது ஆண்டில் நினைவு கூருவதாகும்.
இலட்சியங்கள் ஈடேறும்வரை அரசியற் களங்களிலும் கலை இலக்கிய அரங்குகளிலும் எம். சி, டானியல், டொமினிக் ஜீவா, எஸ். பொ. போன்றோர் மீண்டும் மீண்டும் விமர்சிக்கப்பட்டுக் கொண்டே இருப்பர். வந்து போவர்; உச்சாடனம் செய்யப்படுவர்.
புதிய தலைமுறையின் தமிழ்ஈழப்பயணத்தில் கைகோர்த்துச் செல்லும் தலித்துகளின் உண்மையான பூரணத்துவமான விடுதலை யானது ஈழத்தமிழினத்தை இனி யாரும் பிரிக்கமுடியாது என்ற அளவுக்கு இறுக்கமான கட்டுக்கோப்பான சமூகமாக்கும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது.

Page 58
LS.G8g. ©eór6
எம்.சி. சுப்பிரமணியம் ஒரு சமதர்மவாதி
நிலப்பிரபுத்துவத்தின் மிச்ச சொச்சமாக ஈழத்துத் தமிழரிடையே காணப்பட்ட சாதியமைப்பு ஒடுக்கு முறைகளினால் மிகக் கொடூரமாகச் சுரண்டப் பட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக அம்மக் களைத் தாபன ரீதியாக அணிதிரட்டி, அவர்களுக்கு விடுதலை வேட்கையை ஊட்டி, ஈழத் தமிழர்களிடையே சமத்துவத்திற்கான, சமநீதிக்கான போராட்டங்களை முன்னெடுத்துச் சென்று பல சாதனைகளைப் படைத்தவர் அமரர் எம். சி. சுப்பிரமணியம் அவர்கள்.
இன்று அவர் எம்மத்தியில் இல்லாதபோதும் அவரால் சாதிக்கப்பட்ட சாதனைகளான, வென்றெ டுக்கப்பட்ட உரிமைகளும், வேலைவாய்ப்பு வசதிகளும், பொது இடங்களில் சமத்துவமும், பொருளாதார உயர்ச்சியும் எமது மக்களால் அனுபவிக்கப்பட்டும், எடுத்தாளப்பட்டும் வருகின்றன. இவைகள் யாவும் தோழர் எம். சி. சுப்பிரமணியம் அவர்களை என்றென்றும் நினைவூட்டும்.
ஈழத் தமிழர்களிடையே இன்று சாதிப்பாகு பாடுகள் இல்லை; கலப்புத் திருமணமெல்லாம் நடைபெறுகின்றன என்று அடித்துச் சொல்லி வாதிடும், “உயர் ஜாதியினர்’ என்று தம்மை முத்திரை குத்திக் கொள்ளும் ஒரு சாரார் மட்டுமன்றி, இதுவரை

111 9 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
காலமும் தாழ்த்தப்பட்டு, ஒடுக்கப்பட்டு, அடிமைகளாக, மனித உரிமைகளை அனுபவிக்க முடியாது வாழ்ந்து வந்து தமது விடுதலைக்காகப் போராடி உயிரை, உடலை, உடைமைகளை இழந்து, அவர்களால் பெற்றுக்கொண்ட உரிமைகளை இன்று அனுபவிக்கும் அச்சமூகத்தில் இருந்து தோன்றிய புதிய விழுதுகள் ‘சாதியம்’ சம்பந்தமாக எழுப்பும் வியப்பான கேள்வி களுக்கு மத்தியில், எம். சி. என்று பெருமையாகவும், அன்புடனும் அழைக்கப்பட்டு வந்த தோழர் எம். சி. சுப்பிரமணியம் அவர்களின் சேவைகளை நினைவு கூரவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
ஒரு நாட்டின் அல்லது பிரதேசத்தின் சரித்திரத்தில் நம்மால் ஜீரணிக்க முடியாத பகுதிகளை மூடிமறைத்துவிட்டால் புதிய சரித்திரம் படைத்து விடலாம் என்று எண்ணுவது மூடத்தனமாகும். வரலாற்றின் கசப்பான பகுதிகளும் பதிவுசெய்யப்படும்போதுதான் எதிர்காலத்தில் எமது சமூகத்தில் அத்தகைய கசப்பான சம்பவங்கள் ஏற்படாது விலக்கி ஆரோக்கியமானதொரு சமூகத்தை உருவாக்க (Քւգեւյւb.
எனவே, ஈழத் தமிழர்களிடையே நிலவி வந்த சாதிக் கொடுமை களையும் அடக்குமுறைகளையும் எடுத்துக் கூறினால்தான் அத்தகைய கொடுமைகளும் அடக்குமுறைகளும், எதிர்காலத் தமிழ் சமூகத்தில் இடம்பெறாது பார்த்துக் கொள்ள முடியும்.
விவசாயக் கூலித் தொழிலாளர், கள்ளிறக்கும் தொழிலாளர், நகரசுத்தித் தொழிலாளர், சிகையலங்கரிப்பாளர்கள், சலவைத் தொழிலாளர் ஆகிய ஐவகைத் தொழிலில் ஈடுபட்ட தமிழ் மக்களையும், அவர்களைச் சார்ந்த குடும்பங்களையும் "பஞ்சமர்’ எனப் பாகு படுத்தித் தாழ்த்தித் தீண்டத்தகாதோர் என ஆக்கினார்கள், அன்ற்ைய தமிழர்கள் மத்தியில் மேட்டுக்குடி மக்களாக வாழ்ந்த வசதிபடைத்த ஆளும் வர்க்கத்தினர். இம்மக்கள் அரசியல் சுதந்திரங்களோ, பொரு ளாதாரச் சுதந்திரங்களோ அற்று அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டு, அடிமைக் குடிமக்களாக அண்மைக்காலம் வரை நடத்தப்பட்டனர். பரம்பரை பரம்பரையாக உயர்ஜாதியினர் எனத் தம்மைக் கூறிக்கொண்ட தமிழ் மக்களின் கொத்தடிமைகளாக நசுக்கி வைக்கப்பட்டிருந்தனர்.
சொந்த நிலமற்றவர்களாக உழைப்புக்கு ஏற்ற ஊதியமற்றவர் களாக, எழுத்தறிவு பெறமுடியாதவர்களாக, பொதுவிடங்களில் சுதந்திரமாக நடமாட முடியாதவர்களாக, ஆலயத்திற்குள் சென்று ஆண்டவனை வழிபட முடியாதவர்களாக, தாம் விரும்பும் ஆடை அணிகளை அணிய முடியாதவர்களாக உயர் சாதியினரெனத் தம்மைக்

Page 59
aršá6p8urdo O 12
கூறிக்கொண்டோரால் நடத்தப்பட்டனர். இவற்றை எதிர்த்தவர்கள், மீறியவர்கள் மிலேச்சத்தனமாகத் தாக்கப்பட்டனர்; உயிருடன் எரிக்கப்பட்டனர். அவர்கள் வாழ்ந்த குடிசைகள் எரிக்கப்பட்டன. பொதுக் கிணறுகளில் நீர் எடுப்பது தடுக்கப்பட்டது. இப்படியான சூழலில்தான் எம். சி. என்ற ஒரு சமூக விடுதலைப் போராளி உருவானார்.
ஆரம்ப காலத்தில் எம். சி. அவர்கள் காந்தீயக் கொள்கை யினால் ஈர்க்கப்பட்டவராக இருந்தார். ஆனால் பிற்காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை, தொழிலாளர் - விவசாயிகளின் புரட்சிமூலம் அமைக்கப்படும் ஆட்சி மூலமே சாத்தியமாகும் என் பதனை உணர்ந்தார். இதனால் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவராக இணைந்து, திருவாளர்கள் அ. வைத்திலிங்கம், ஐ. ஆர். அரியரத்தினம், மு. கார்த்திகேசு, இராம சாமி ஐயர், பொன். கந்தையா ஆகிய முற்போக்குச் சிந்தனை யாளருடன் சேர்ந்து சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், வர்க்க முரண்பாடுகளையும் நீக்கி நாட்டில் சமதர்ம ஆட்சிமுறை ஏற்பட நாளெல்லாம் உழைத்தார். அத்துடன் தாழ்த்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் பலரை இக்கட்சியில் இணையச் செய்து சமூக விடுதலைப் போராட்டத்தை புதிய உத்வேகத்துடன் முன்னெடுத்துச் சென்றார். இக்காலகட்டத்தில், 1942ல் அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகாசபை உருவாக்கப்பட்டது. ஆரம்பகாலத்தில் திரு. யோவேல் போல் அவர்கள் தலைவராக இருந்து சமூக விடுதலைப் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றார். இவருடன் திருவா ளர்கள் முதலியார் இராஜேந்திரா, டி. ஜேம்ஸ், வி. டி. கணபதிப் பிள்ளை, எம். சி. சுப்பிரமணியம், ஜேக்கப் காந்தி ஆகியோரும் இணைந்து செயலாற்றினர். 1957 ஜூன் 9ம் திகதி நடைபெற்ற மகாசபையின் 14ம் ஆண்டு மாநாட்டின்பொழுது திரு. எம். சி. அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அன்றிலிருந்து அவர் அமரராகும்வரை மகாசபையின் தலைவராகவும் சிறுபான்மைத் தமிழர்களின் தந்தையாகவும் இருந்து பல உரிமைகளை வென்றெடுக்க அரும்பணியாற்றி வந்தார்.
சிறுபான்மைத் தமிழர் பிள்ளைகளின் கல்வி முன்னேற் றத்திற்காக, கல்வி வளர்ச்சிக்காகப் பாடசாலைகள் ஆரம்பிக்கப் பட்டன. இப்பாடசாலைகளில் படிப்பிப்பதற்காக கல்வி கற்றுத் தேர்ந்த சிறுபான்மைத் தமிழ் இளைஞர்களில் பல நூற்றுக்கணக்கா னோருக்கு ஆசிரிய நியமனம் கிடைக்கச் செய்தார். சிறுபான்மைத் தமிழர்கள் பலர் சமாதான நீதிவான்களாக நியமிக்கப்பட்டனர். சாதி வெறியர்களாகவும் சாதிப் பாகுபாடுகளைக் காப்பாற்றி அடியொற்றி வாழ்பவருமாய் அக்காலத்தில் கிராம விதானைமார் இருந்தனர்.

113 9 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
இவர்களின் எதேச்சாதிகார நடவடிக்கைகளைத் தடுத்து அவை களிலிருந்து விடுபட வசதியாக, உதவியாக கல்வி கற்ற சிறுபான்மைத் தமிழர் பலர் கிராம சேவகர்களாக நியமிக்கப்பட்டனர்.
இவ்வாறான நடவடிக்கையினால் சிறுபான்மைத் தமிழர் பல அடக்குமுறைகளிலிருந்து விடுபட வழியேற்பட்டது. பொது இடங்களில் சாதி காரணமாகச் சிறுபான்மைத் தமிழர்கள் புறக்கணிக் கப்பட்டு வந்தனர்.
உதாரணமாக, இந்துக் கோயில்களுக்கு உள்ளே சென்று வணங்க முடியாது. கோயிலுக்கு வெளியே நின்றுதான் வணங்க வேண்டும். தேநீர்க் கடைகளில் தேநீர் குடிப்பதென்றால் பழைய கறை பிடித்த பாற்பேணி அல்லது போத்தலில்தான் தேநீர் வழங்கப்பட்டது. தரையில் இருந்தே சாப்பிட வேண்டும். சலவைக்கடை, சிகை அலங்கார நிலையம் என்பனவற்றிலும் சாதிப்பாகுபாடே. உயர் ஜாதியினருக்குச் சேவை செய்ய மட்டுமே இவை இயங்கின.
இவ்வாறான சாதிப்பாகுபாட்டுக்கு எதிராக சிறுபான்மைத் தமிழர் மகாசபை போராட்டங்கள் நடத்தியது. அப்போராட்டங்களை எம். சி. ஐயாவே தலைமை தாங்கி நடத்தினார். போராட்டங்களுக்கு முற்போக்கு மனமுடைய பெரும்பான்மைத் தமிழர் ஒத்துழைப்பும் கிடைத்தது. தோழர் சண்முகம் இராசையா (அரசடி, நல்லூர்) தோழர் செல்லையா (துன்னாலை) போன்றோர் அவருடன் முன்னின்று உழைத்தனர். எம். சி ஐயா அவர்களுக்கு காலஞ்சென்ற ஏ. ஈ. தம்பர், ஹன்டி பேரின்பநாயகம், ஒறேட்டர் சுப்பிரமணியம், திரு. சிவபாத சுந்தரம் போன்ற முற்போக்கான படித்த மக்கள் ஒத்துழைப்பு வழங்கினர். இவர்களின் சேவைகள் பல வழிகளில் சிறுபான்மைத் தமிழரின் போராட்டங்கள் வெற்றியளிக்க உதவின.
1956ம் ஆண்டளவில் அப்போது அரசாங்க அதிகாரியாக இருந்த பூரீகாந்தாவின் பெருமுயற்சியினால் முதன் முதல் நல்லூர் கந்தசுவாமி கோயில் சிறுபான்மைத் தமிழரின் வழிபாட்டுக்குத் திறந்துவிடப்பட்டது.
1956ம் ஆண்டில் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட 'சமூகக் குறைபாடுகள் ஒழிப்புச் சட்டத்தில் பல குறைபாடுகள் இருந்த படியால் ஏனைய இந்துக் கோயில்கள் திறந்துவிடப்பட முடியாமலிருந்தது.
இலங்கை அரசாங்கத்திடம் மகாசபையினால் விடுக்கப்பட்ட நீண்டகால கோரிக்கைகளில், செனற் சபையிலும், பாராளுமன்றத் திலும் சிறுபான்மைத் தமிழருக்குப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட

Page 60
Øቻፅ፰፱®umédo O 114
வேண்டும் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வந்தது.
1970ம் ஆண்டு ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தபோது எம். சி. ஐயா அவர்கள் நியமன உறுப்பினராக முதன் முதலாக நியமிக்கப் பட்டார். ஐயாவின் நியமனத்தால் சிறுபான்மைத் தமிழர் வாழ்வில் புது அத்தியாயம் உருவாக்கப்பட்டது. சிறுபான்மைத் தமிழரின் குரல் பாராளுமன்றத்தில் முதன் முதலாக ஒலிக்கத் தொடங்கியது. பாராளு மன்ற நியமனம் கிடைப்பதற்கு அவரின் நீண்டகால சமூகசேவையும், கம்யூனிஸ்ட் கட்சியும், குறிப்பாகத் தோழர் பீற்றர் கெனமனும் காரணமாக இருந்தனர்.
1972ம் ஆண்டு தோழர் பீற்றர் கெனமனின் ஆலோசனையின் பேரில் அமைக்கப்பட்ட குழுவினரால் 1956ம் ஆண்டு கொண்டுவரப் பட்ட சமூகக் குறைபாடுகள் சட்டம் திருத்தப்பட்டு வலுவுள்ள சட்டமாக ஆக்கப்பட்டது. இச்சட்டத் திருத்தத்தின் பின்னரே பிரசித்தி பெற்ற மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில், கும்பிளாவளவுப் பிள்ளையார் கோயில் போன்றவை சிறுபான்மைத் தமிழரின் வழி பாட்டுக்குத் திறந்து விடப்பட்டன.
அக்காலத்தில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் மேற் கொள்ளப்பட்ட ஆலயப் பிரவேசப் போராட்டம் மிகப் பிரசித்தி பெற்ற போராட்டமாகும். ஆலயப் பிரவேசப் போராட்டம் எம். சி. ஐயாவின் தலைமையில் சிறுபான்மைத் தமிழர் மகாசபையாலும் எஸ். ரி. நாகரெத்தினம் தலைமையில் வெகுசன இயக்கத்தினாலும் நடத்தப்பட்டது. சாதி வெறியர்கள் போராட்டத்திற்கு எதிராக அடங்காத் தமிழர் முன்னணித் தலைவர் சி. சுந்தரலிங்கம் தலைமையில் அணி திரண்டனர்.
அக்காலத்தில் காங்கேசன்துறைப் பாராளுமன்றப் பிரதிநிதியாக இருந்தவர் தமிழரின் தந்தை என அழைக்கப்படும் அமரர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களாகும். அவர் தாம் கிறிஸ்தவர் என்ற காரணம் காட்டி இப்போராட்டத்திற்கு ஆதரவு நல்குவதிலிருந்து விலகியிருந்தார். ஆனால் இப்போராட்டம் கம்யூனிஸ்டுகளின் போராட்டம் எனக் கூறியதுதான் வியப்புக்குரியது. இந்நிலையில் திருத்தப்பட்ட சமூகக் குறைபாடுகள் ஒழிப்புச் சட்டத்தின் உதவி கொண்டு சிறுபான்மைத் தமிழர்களை ஒன்று திரட்டி வடமாகா ணத்தில் இருக்கும் பல இந்து ஆலயங்களை சிறுபான்மைத் தமிழர் களின் வழிபாட்டுக்குத் திறந்துவிட மகாசபையினால் முடிந்தது.
மகாசபையின் நடவடிக்கைகளும் போராட்டங்களும் சிறு பான்மைத் தமிழர்களின் வாழ்வில் பல அழியாத சரித்திரங்களை உருவாக்கியுள்ளன.

115 )ே எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
O பள்ளிக்கூடங்களை உருவாக்கியமை.
O ஆசிரியர்களை உருவாக்கியமை.
GD சமாதான நீதிவான்களை உருவாக்கியமை.
O தேநீர், சாப்பாட்டுக் கடைகளைத் திறக்கச்
செய்தமை.
O “ சிறுபான்மைத் தமிழ்ப் பிள்ளைகளை சகல பாடசாலைகளிலும் பாரபட்சமின்றி அனுமதித்தமை.
O கல்வி அதிகாரிகளாக எம்மவரை நியமித்தமை.
O இந்துக் கோயில்களில் வழிபாட்டுச் சுதந்திரம்.
O நிலமற்ற மக்களுக்கு அரச காணிகளைப் பெற
உதவியமை.
Ο மரபு ரீதியான தொழில்களை விடுத்து, புதிய
கைத்தொழில்களில் ஈடுபடச் செய்தமை.
ஒரு காலத்தில் எமது சமூக ஆசிரியர்களை பாடசாலையில் நியமனஞ் செய்யவே கல்வி அதிகாரிகளும் தொடக்கப் பாடசாலை நிர்வாகிகளும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதற்கெதிராக மகாசபை மூலம் போராடி எம்மவர்களை எல்லாப் பாடசாலைகளிலும் நியமிக்கச் செய்தோம். முதன் முதலாக வடமாகாணத்தில் திருவாளர்கள் ஈ. வி. செல்வரத்தினம், ரி. இராஜலிங்கம் போன்ற வர்களைக் கல்வி அதிகாரிகளாக நியமனம் செய்யச் செய்தோம். திரு. ரி. இராஜலிங்கம் அவர்கள் வடமராட்சிப் பகுதியில் கல்வி அதிகாரியாகக் கடமை ஆற்றினார். வடமராட்சிப் பகுதி சாதி அடக்கு முறைக்குப் பெயர்பெற்ற இடமாகும். இவரே 1977இல் உடுப் பிட்டித் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப் பட்டார். எம். சி. ஐயா அவர்கள் பாராளுமன்றத்தில் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்ட காலத்தில் தமிழர்கள் மத்தியில் புதிய சிந்தனைகள் தோன்றத் தொடங்கின. அதாவது தாமாகவே முன்வந்து சிறுபான்மைத் தமிழர் ஒருவரை ஒரு தொகுதியில் தேர்தலுக்கு நிறுத்தி அவரை வெல்லச் செய்து தமிழர் மத்தியில் சாதிப்பாகுபாடுகள் இல்லை எனக் காட்டத் தலைப்பட்டனர். அவ்வாறான முயற்சியே திரு. ரி. இராஜலிங்கம் அவர்களை உடுப் பிட்டித் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் தேர்தலுக்கு நிறுத்தி வெல்லச் செய்தமை ஆகும்.

Page 61
சந்திரபோஸ் O 16
இங்கு நாம் கவனிக்க வேண்டியது யாதெனில், மகாசபை எம்மவர்கள் பலரை எமது சமூக விடுதலைக்கு உழைக்க உருவாக் கியது. ஆனால் பலர் தமது சுயநலப் போக்கினால் மகாசபையின் இலட்சியத்தையும் நோக்கத்தையும் சிதறடித்து விட்டனர். உதாரணம்திரு. ரி. இராஜலிங்கத்தை கல்வி அதிகாரியாக நியமனம் பெற வழி வகுத்து கல்விப்பகுதியில் இருந்துவந்த சாதி அடக்குமுறைகளையும் ஆதிக்கத்தையும் முறியடிக்க முயற்சி செய்தோம். இராஜலிங்கம் தொடர்ந்து அப்பதவியில் இருந்திருந்தால் வடமாகாண கல்விப் பணிப் பாளராக மட்டுமன்றி வடக்கு கிழக்கு மாகாண கல்வி கலாசார செயலாளராகவும் வந்து சரித்திரம் படைத்திருக்க முடியும். அவர் மட்டுமன்றி, அவரைப் பிழையாக வழிநடத்தியவர்களும் அப் பார தூரமான பிழையை உணர்ந்ததாகத் தெரியவில்லை.
மகாசபையின் பொதுக் காரியதரிசியாகவும் எம். சி. ஐயாவின் செயலாளராகவும் கடமையாற்றியபோது துணிவுடன் பல காரி யங்களை என்னால் ஆற்றமுடிந்தது. குறிப்பாக, பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்கள் பல எமது மக்களின் வழிபாட்டுக்குத் திறந்து விடுவதற்கு துணிவான பல நடவடிக்கைகளை எடுத்தேன். வல்வெட்டித்துறை அம்மன் ஆலயம், துன்னாலை வாரிவளவுப் பிள்ளையார் கோவில் போன்றவைகளைக் குறிப்பிடலாம். வல்வெட்டித்துறை சிவன் கோயில் வழிபாட்டுக்கு முயற்சித்தபோது சாதி வெறியர்கள் என்னைக் கத்தியால் குத்த முயற்சித்ததோடு ஆலயக் கதவுகளை அடித்துச் சாத்திவிட்டனர்.
சாதி வெறியர்களினால் எம். சி. ஐயாவின் உயிருக்குப் பலமுறை அச்சுறுத்தல்கள் ஏற்பட்டன. சோல்பரி கொமிசன் வட பகுதிக்கு விஜயம் செய்தபோது வடமராட்சியில் வாழ்ந்த எம்மவரின் நிலைமையை அவர்களுக்குக் காட்டச் சென்றிருந்தபோது, சாதி வெறியர்கள் சிலர் கொலை செய்வதற்கு முயன்றனர். அவர்கள் முயற்சியிலிருந்து தப்பிக்கொண்டார்.
அவர் எம். பி. யாக இருந்த காலத்தில், 1974ம் ஆண்டிலே உடுப்பிட்டியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துவிட்டு அவரது காரில் யாழ்ப்பாணம் திரும்பி வரும் வழியில் கைக்குண்டு ஒன்று வீசப்பட்டது. கைக்குண்டு இவர் கார் பொனட்டில் விழுந்து வெடித்தது. முன்கண்ணாடி முற்றாக சேதமாகி காரில் வந்தவர்கள் யாவரும் சிறு சிறு காயங்களுக்கு உள்ளானோம். கண்ணாடியில் குண்டு வெடித்திருந்தால் காரில் பயணம் செய்தவர்கள் யாவரும் மரணித்திருப்போம். காரில் சாரதியுடன் நானும் ஐயாவும் முன் ஆசனத்திலும், பின் ஆசனத்தில் தோழர்கள் அ. வைத்திலிங்கம், டொமினிக் ஜீவா அவர்களும் அமர்ந்திருந்தனர். இத்தாக்குதல் பற்றி வடபகுதி அரசியல்வாதிகள் மட்டுமன்றி அவர்கள்

117 0ே எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
எடுபிடிகளும், அத்தாக்குதல் தவறுதலாக நிகழ்ந்தது; அருளம்பலம் எம். பி. என நினைத்துத் தாக்கப்பட்டுவிட்டது எனக் கதை கட்டி விட்டனர். சாதி வெறியர்கள் அக்காலத்தில் இடதுசாரிகளுக்கு எதிராக இருந்தனர். வடபகுதியைப் பொறுத்தவரை முற்போக்கு என்பது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
எம். சி. ஐயா மகாசபைத் தலைவராகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய ஸ்தாபகராகவும் இருந்தபடியால் வடபகுதியில் மட்டுமன்றி இலங்கையின் பல பாகங்களிலும் பிரபலமானவராக இருந்தார்.
வடபகுதி சாதிவெறியர்களுக்கு எம். சி. ஐயா அவர்கள் சிம்ம சொப்பனமாகவே இருந்தார். அக்காலத்தில் எங்கு சாதிக்கலவரம் நடந்தாலும் அப்பகுதிக்குத் துணிந்து விரைந்து சென்று உரிய நட வடிக்கைகளை எடுத்தார். Α
வடபகுதி அரசியல் தலைவர்களுக்கு எம். சி. ஐயா ஒர் கேள்விக்குறியாகவே இருந்து வந்தார். காலஞ்சென்ற பிரதமர் எஸ். டபிள்யூ ஆர். டி. பண்டாரநாயக்கா, அவர் துணைவியார் சிறிமாவோ பண்டாநாயக்கா தொடக்கம் தென்னிலங்கையில் சிங்களத் தலைவர்கள் பலரும் எம். சி. ஐயாவைத் தெரிந்து வைத்திருந்தனர்.
சிறுபான்மைத் தமிழர் மகாசபை தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி, சமூக, பொருளாதார அரசியல் விடுதலைக்காகவே ஸ்தாபிக்கப்பட்டது. மகாசபையின் போராட்டங்களினால் பலவாறான வெற்றிகளை அவர்கள் பெற்றுக்கொண்டனர். மகா சபையின் தலைவராக நீண்டகாலமாக எம். சி. ஐயா இருந்துவந்தார். அவரின் தலைமையில் தேநீர்க்கடைப் போராட்டம், ஆலயப் பிரவேசப் போராட்டம் என்பன நடத்தப்பட்டன. தேநீர்க் கடைகளில் இருந்துவந்த சாதிப்பாகுபாடுகள் அகற்றப்பட்ட போதும் ஆலயப் பிரவேச முயற்சிகள் சாதி வெறியினரால் முறியடிக்கப்பட்டிருந்தன.
இந்துக் கோயில்களில் அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் சாதி காரணமாக கோயில்களுக்குள் சென்று வழிபாடு செய்ய முடியாது தடுக்கப்பட்டு வந்தனர்.
சாதிப்பாகுபாடுகளை ஒழிக்க வேண்டுமென்ற நோக்குடன் தமிழரசுக் கட்சியினால் 1954ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் சமூகக் குறைபாடுகள் ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போது ஆட்சியிலிருந்த எஸ். டபிள்யூ ஆர். டி. பண்டாரநாயக் காவின் அரசாங்கத்தினால் அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Page 62
சந்திரபோஸ் O 118
இச்சட்டத்தைத் தயாரித்து உருவாக்கியவர்கள் வடபகுதி சட்ட மேதைகள்தான். வேண்டுமென்றேதான் ஒட்டை ஒடிசல்களுடன் இச் சட்டத்தை உருவாக்கினார்களோ தெரியாது. இச்சட்டம் எந்தவித பலனையும் அளிக்கவில்லை. மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் ஆலயப் பிரவேசத்தை அப்போதைய அடங்காத் தமிழர் முன்னணித் தலைவர் திரு. சுந்தரலிங்கம், துரைசாமிக் குருக்கள் என்போர் தடுத்து நிறுத்தினர். இச்சட்டத்தினால் அவர்களை ஒன்றும் செய்ய முடி யாமல் போனது. ஆலயப் பிரவேச முயற்சிக்கு எதிராக திரு. சுந்தர லிங்கம் அவர்கள் Privy Councilக்குச் சென்று வழக்காடி வென்றார்.
இச்சட்டத்தைத் திருத்தி வலுவுள்ள சட்டமாக்கும்படி மகாசபை பின்பு வந்த அரசாங்கங்களைக் கோரியபோதும் அக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
1956ஆம் ஆண்டளவில் அப்போது யாழ்ப்பாணத்தில் அரசாங்க அதிபராக இருந்த பூரீகாந்தா அவர்களின் முன்முயற்சியால் (யாழ்ப் பாணம்) நல்லூர் கந்தசாமி கோயிலில் ஆலயப் பிரவேசம் நடை பெற்றது. அப்பிரவேசத்தில் எம். சி. ஐயாவும், மகாசபையைச் சேர்ந்த பலரும், ஏனையோரும் பங்குபற்றி ஆலய வழிபாடு செய்தனர். அதன் பின்னர் இன்றுவரை நல்லூர் ஆலயத்தில் சகலரும் சென்று வழிபட்டு வருகின்றனர். நல்லூர் கந்தசாமி ஆலயத்தை முன்மாதிரியாகக் கொண்டு வடபகுதியிலுள்ள ஏனைய ஆலயங்களும் சிறுபான்மைத் தமிழரின் வழிபாட்டுக்குத் திறந்துவிடப்படலாம் என எதிர்பார்த்த போதும் அது நடக்கவில்லை.
எனவே, மகாசபை ஆலயப் பிரவேசம் தொடர்பான பல போராட்டங்களை நடத்தியது. தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் பன்றித் தலைச்சி அம்மன் கோயிலில் ஆலயப்பிரவேசம் செய்ய முயற்சித்தது. வெற்றியளிக்கவில்லை. 1965 - 66 ஆண்டளவில் மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலில் ஆலயப்பிரவேசம் செய்ய மகா சபையினரும், தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தினரும் தனித்தனியே போராட்டம் நடத்தினர். சாத்வீகமான சத்தியாக்கிரகப் போராட்டம், அவ்வாலயப் பிரவேசத்தை திருவாளர் சி. சுந்தரலிங்கமும், துரை சாமிக் குருக்களும் சேர்ந்து மூர்க்கத்தனமாக எதிர்த்தனர். அப்போது காங்கேசன்துறைத் தொகுதி பாராளுமன்றப் பிரதிநிதியாக திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்கள் இருந்தார்கள். நாட்டின் பிரதமராக டட்லி சேனநாயக்கா அவர்கள் இருந்தார்கள். இப்பிரச்சினை நாடு முழுவதுமே அறிந்த பெரியதொரு பிரச்சினையாக இருந்தபோதும், நாட்டின் பிரதமரோ, தொகுதி பாராளுமன்றப் பிரதிநிதியோ இதில் தலையிட்டு தீர்க்க முயற்சிக்கவில்லை. சிறுபான்மைத் தமிழர் பல

19 9 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
வேண்டுகோள் விட்டும் எவரும் செவிசாய்க்கவில்லை. ஆலயப் பிரவேசப் போராட்டம் சாதி வெறியர்களினால் முறியடிக்கப்பட்டது.
1970ஆம் ஆண்டு திருமதி. பூரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் மக்கள் முன்னணி அரசாங்கம் பதவிக்கு வந்தது. சிறு பான்மைத் தமிழர் மகாசபையின் நீண்டகாலக் கோரிக்கையான அரசியல் பிரதிநிதித்துவம் நிறைவேற்றப்பட்டது. அதாவது மகாசபைத் தலைவர் எம். சி. ஐயா அவர்கள் பாராளுமன்ற நியமன உறுப்பின ராக இலங்கைச் சரித்திரத்தில் முதன் முறையாக நியமிக்கப்பட்டார். பாராளுமன்ற அரசியல் பிரதிநிதித்துவமற்ற அநாதைகளாகவே எமது மக்கள் நீண்டகாலமாக இருந்து வந்தனர். இந்நியமனம் அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்தது.
1971ஆம் ஆண்டு எம். சி. ஐயாவின் தலைமையில் மகாசபையின் உபதலைவர்களான மார்ட்டின் செல்லையா, துரைசிங்கம், நிர்வாகச் செயலாளர் செல்லையாவுடன் நானும் ஒரு குழுவாகச் சென்று வீடமைப்பு அமைச்சர் தோழர் பீட்டர் கெனமன் அவர்களைப் பேட்டி கண்டு, 1957ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சமூகக் குறை பாடுகள் ஒழிப்புச் சட்டத்தில் (Social Disabilities act) உள்ள குறை பாடுகளை விளக்கி அச்சட்டத்தைத் திருத்தி வலுவுள்ள சட்டமாகக் கொண்டு வந்தால் மட்டுமே வடபகுதியில் நிலவிவரும் சமூகக் குறை பாடுகளை ஒழித்துக் கட்டுவதோடு, இந்து ஆலயங்களில் சிறு பான்மைத் தமிழரின் வழிபாட்டு உரிமைகளை நிலைநாட்ட முடியு மென்றும் அவரிடம் விளக்கிக் கூறினோம். எமது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் அவர்கள் உடன் கமிட்டியொன்றை அமைத்து உரிய திருத்தங்களைச் செய்து, சட்டத்தை வலுவுள்ள சட்டமாக ஆக்கினார். அச்சட்டத் Sossib Ayarded Social Disabilities act of1971 எனப்பட்டது. இச்சட்டத்திருத்தம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டாலும் வடபகுதியிலுள்ள பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்கள் பல மகாசபையின் வேண்டுகோளுக்கு இணங்க சுமுகமாக சகலரினதும் வழிபாட்டுக்குத் திறந்துவிடப்பட்டன.
வழமைபோல் மாலை நேரத்தில் காரியாலயத்தில் இருக்கும் போது எம். சி. ஐயாவுடன் பல்வேறு பிரச்சினைகள் பற்றி கலந்துரை யாடுவதோடு, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் தீர்மானிப் போம். ஒருநாள் மாலை திருத்தப்பட்ட சமூகக் குறைபாடுகள் ஒழிப்புச் சட்டம் பற்றி கலந்துரையாடும்போது மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் திறந்து விடப்பட்டுள்ளதோவென்று எப்படி அறியலாம் என்று கேட்டார். "போய் பார்த்துத்தான் அறியவேண்டும்" என்றேன்.

Page 63
சந்திரபோஸ் O 12O
"நான் போய்ப் பார்த்தால் என்ன?” என்றார்.
"இல்லை ஐயா. நான் முதலில் போய்ப் பார்த்துவிட்டு வருகிறேன். பின்னர் நீங்கள் போகலாம்” என்றேன்.
அடுத்தநாள் காலையில் மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலுக்குப் போவதென முடிவெடுக்கப்பட்டது.
அடுத்தநாள் காலையில் நேரத்தோடு எழும்பி தோய்ந்து குளித்துவிட்டு வெள்ளை வேட்டி கட்டி, சால்வையும் போட்டுக் கொண்டு பஸ் ஸ்டாண்டுக்குப் புறப்பட்டேன்.
முதல்நாள் இரவு வீட்டில் விபரமாக எல்லாம் கூறியிருந்த படியால் எதுவித எதிர்ப்போ தடங்கலோ இன்றி நேரத்தோடு புறப்பட முடிந்தது.
762ஆம் நம்பர் கீரிமலை பஸ்ஸில் ஏறிப் புறப்பட்டேன். மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலில் இறங்கி கோயில் கிழக்கு வாசல் பக்கம் போனேன். அப்போது, இப்போது உள்ள படியல்ல. கிழக்கு வாசல் பக்கமாகவே கோயிலுக்குப் போகலாம். போகும்பொழுது துரைசாமிக் குருக்களும் வேறு சிலரும் கோயில் வாசலின் இடது பக்கமாகக் கதைத்துக்கொண்டு நிற்பதை அவதானித்தேன்.
நான் நேரே கிணற்றடிக்குப் போய், தண்ணிர் அள்ளி கை, கால் முகம் கழுவிக்கொண்டு கிணற்றடியிலிருந்த திருநீற்றை நெற்றியிலும், கைகளிலும், நெஞ்சிலும் இட்டுக்கொண்டு சால்வையை அரையில் கட்டிக்கொண்டு கோயில் உள்பக்கம் சென்றேன். கோயிலுக்குள் பக்தர்கள் ஆங்காங்கே காணப்பட்டனர். மூலஸ்தானத்தில் தீபம் எரிந்துகொண்டிருந்தது. ஏனைய பக்தர்களுடன் ஒருவனாகத் தொழுதுகொண்டு கோயிலின் உட்பிரகாரத்தைச் சுற்றிவந்தேன். வரும்பொழுது கோயில் திருத்த வேலைகளுக்கான பொருட்கள் ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்துக் கொண்டு நின்றேன். அப்போது துரைசாமிக் குருக்கள் நான் நின்ற பக்கமாக என்னை நோக்கி வருவதை அவதானித்தேன். அவரை நோக்கி கை குவித்து வணக்கம் தெரிவித்தேன். அவர் என்னை உற்றுப்பார்த்துக் கொண்டு நின்றமையால் "என்ன ஐயா, திருப்பள்ளி வேலைகள் எல்லாம் முடியாமல் தடைப்பட்டுப் போய் இருக்கிறதா?” என்றேன், அங்கு குவிக்கப்பட்டிருந்த பொருட்களைக் காட்டி
"ஆம்" என்று தலையாட்டியவர் என்னைப் பார்த்து “எங்கிருந்து
வருகிறீர்?" என்று கேட்டதும் “யாழ்ப்பாணத்தில் இருந்து வருகிறேன். நேற்றுக் கனவில் கந்தசாமியார் தோன்றி, தன்னை வந்து வழிபடச்

121 9 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
சொன்னார். அதுதான் காலையில் புறப்பட்டு வந்தேன்” என்றேன். “சரி” என்று சொல்லி தலையாட்டிவிட்டு என்னைக் கடந்து சென்றார்.
நான் திரும்பவும் மூலஸ்தானம் வரை சென்று வழிபட்ட பின்னர் பஸ்சில் புறப்பட்டு யாழ் நகர் வந்து சேர்ந்தேன்.
அன்று பின்னேரம் எம். சி. ஐயா காரியாலயத்திற்கு வந்தபோது நடந்தவைகளைக் கூறினேன்.
“ஆலயத்திற்கு முன்னால் எந்தவித தடைகளும் போடப் பட்டிருக்கவில்லை. ஆலயம் பக்தர்களுக்குத் திறந்துவிடப்பட்டபடியே இருக்கிறது. பக்தர்களும் வந்துபோய்க்கொண்டு இருப்பதனால் நீங்கள் போய் வரலாம்” என்றேன்.
அடுத்தநாட் காலை எம். சி. ஐயா மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலுக்குச் சென்று வழிபட்டுவிட்டு வந்தார். தான் மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்குச் சென்று வழிபட்டுவிட்டு வந்த செய்தியை அப்போது வடபகுதி பொலிஸ் அத்தியட்சகராக இருந்த திரு ஆர். சுந்தரலிங்கம் அவர்கட்கு டெலிபோன் மூலம் சொன்னார்.
ஆலயத்தில் எந்தவித தடைகளும் போடப்பட்டிருக்கவில்லை என்றும், சட்டத்திருத்தம் உண்மையான மாற்றத்தையும், வெற்றி யையும் கொண்டு வந்திருக்கின்றதென்றும் கூறி, பொலிஸ் அத்தி யட்சகர் என்றவகையில் அவர்கள் ஆலயப் பிரவேச காலத்தில் எமக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்தார்.
அப்போது தினபதி தமிழ்ப் பத்திரிகை தமிழ்மக்கள் மத்தியில் பெரும் இடத்தையும், வரவேற்பையும் பெற்ற பத்திரிகையாக இருந்து வந்தது. அதற்குக் காரணம் யாழ்ப்பாண நிருபராக இருந்த அர்சரத் தினம் அவர்களாகும். யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் என்ன நிகழ்ச்சியாக இருந்தாலும் அதைப் பரபரப்பான முக்கிய நிகழ்ச்சியாக சுடச்சுட தினபதியில் வெளிக்கொண்டுவந்து விடுவார்.
எம். சி. ஐயா மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலுக்குச் சென்று வழிபட்ட செய்தியை அறிந்தவுடன் தேடி வந்துவிட்டார். எம். சி. ஐயாவிடம் எல்லாம் கேட்டறிந்து அடுத்தநாள் தினபதி பத்திரிகையில் முன்பக்கச் செய்தியாக பெரிய கொட்டை எழுத்தில் "எம். சி. மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலில் வழிபட்டார்” என்று வெளிவரச் செய்துவிட்டார். இச்செய்தி யாழ்ப்பாணத்தில் ஒரு பரபரப்பான செய்தியாக இருந்ததுமல்லாமல், வரவேற்பைக் கொண்ட செய்தி யாகவும் காணப்பட்டது. ஆனால் விடயம் இத்துடன் நின்றுவிட வில்லை. அடுத்தநாள் மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலின் பிரதம

Page 64
őÍág8urdo O 122
குருவான துரைசாமிக் குருக்கள், ‘எம். சி. சுப்பிரமணியம் கோயிலுக்கு வரவுமில்லை, வழிபடவுமில்லையென மறுப்பறிக்கை ஒன்றைத் தினபதியில் வெளியிட்டார்.
எம். சி. ஐயா அவர்கள் சிறுபான்மைத் தமிழர்களுக்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியன. அவரது சேவைகள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியன. எம். சி. ஐயாவின் தொண்டினைத் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டியவர்கள் அவரால் உருவாக்கப்பட்ட எம்மவர்களே.
எம். சி. ஐயா அவர்களின் உருவச்சிலை ஒன்று வடமாகாணத் தில் நிறுவி அவரை நினைவுகூருதல், அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் பாரிய கடமையாகும்.
அவர் நாமம் என்றும் நிலைத்திருக்கும்.

எஸ். கந்தையா
எம்.சி. சுப்பிரமணியம் வாழ்க்கைக்குறிப்பு
அமரர் எம். சி. சுப்பிரமணியம் 27, 09. 1917இல் யாழ்நகரில் பிறந்தார். இவர், திரு. முத்தர் கணபதிப் பிள்ளை-திருமதி. கண்ணாத்தாள் கணபதிப்பிள்ளை ஆகியோரின் கனிஷ்ட புத்திரர் ஆவார். திருமதி விசாலாட்சி ஐயம்பிள்ளை, திருமதி பாக்கியம் செல்லையா ஆகியோர் இவரது சகோதரிகள் ஆவர். மூன்றரை வயதில் தனது தாயாரை இழந்த இவர் தந்தையின் வழிகாட்டுதலிலும் சகோதரிகளினது அரவணைப்பிலும் வளர்ந்து வந்தார்.
இவரது சகோதரியான திருமதி விசாலாட்சி ஐயம்பிள்ளை தம்பதியருக்கு பிள்ளைப் பாக்கியம் இல்லாத காரணத்தால் இவரையே தமது சகோதரனுக்கு சகோதரனாகவும் பிள்ளைக்குப் பிள்ளையாகவும் வளர்த்து வந்தனர்.
இவர் ஐந்து வயதுப் பராயம் அடைந்தபொழுது யாழ்ப்பாணப் பெருமாள் கோயிலடியில் அமைந்திருந்த வேதப்பள்ளி என வழங்கப்பட்ட “மெதடிஸ்த மிஷன்” ஆரம்பப் பாடசாலையில் ஆரம்ப கல்விக்காக இவர் தந்தையாரால் சேர்க்கப்பட்டார். அக்காலத்தில் அப்பாடசாலை கிறிஸ்தவ பாடசாலையாக இருந்த பொழுதிலும், சிறுபான்மைத் தமிழர்களின் பிள்ளைகள் மண்தரையில் இருந்தே கல்வி பயில வேண்டிய நிலை

Page 65
orbipBurdo O 124
இருந்தது. உயர்ஜாதிப் பிள்ளைகளாகக் கருதப்பட்டோர் மட்டுமே மேசை வாங்குகளில் இருந்து கல்வி கற்றனர். ஆயினும் இச்சந்தர்ப் பத்தில் எம். சி. அவர்களின் தந்தையும் இவரது உறவினரான கன்னாதிட்டி சின்னத்தம்பி என்பவரும் தமது இரு பிள்ளை களுக்கும் ஏனைய தாழ்த்தப்பட்ட சில பிள்ளைகளுக்கும் தாமே வாங்கு மேசைகள் செய்து ஏனைய பிள்ளைகளுடன் சமத்துவமாக இருந்து படிக்கும் நிலையை உருவாக்கினர். இக்காலத்தில் இப்பாடசாலையின் தலைமை ஆசிரியரின் நல்லெண்ணம் காரணமாகவும் இவ் ஏற்பாடு அக்காலத்தில் செய்யப்பட்டது.
1927ம் ஆண்டு அண்ணல் மகாத்மா காந்தி அவர்கள் யாழ்ப் பாணத்துக்கு வருகை தந்தபோது யாழ்ப்பாணம் மணிக்கூண்டு வீதி வழியாக ஊர்வலமாக யாழ் நகர மக்களால் அழைத்துவரப்பட்ட பொழுது பாடசாலை மாணவருடன் மாணவராக அணிவகுத்து நின்று வரவேற்பில் கலந்து கொண்டிருந்த சிறுவன் எம். சி. யை அண்ணல் காந்தி தம் அருகில் அழைத்து தம் கையிலிருந்த மாதுளம் பழத்தினை அவருக்கு அளித்து ஆசீர்வாதம் செய்தார். எதிர்காலத்தில் எம். சி. ஒரு சிறந்த சமூகத் தொண்டனாக வருவார் என்பதனை அண்ணல் காந்தி தம் தீர்க்கதரிசனத்தால் அறிந்திருந்தாரோ, அல்லது அவரது ஆசிதான் எம். சி. யை சிறந்த சமூகத் தொண்டனாக்கியதோ என்பது ஆய்வுக்குரிய விடயம்.
எம். சி. அவர்கள் சிறப்பாகக் கல்வியில் கொண்டிருந்த ஆர்வம் காரணமாக ஆரம்பக் கல்வியை 5ம் வகுப்புவரை மெதடிஸ்த மிஷன் ஆங்கிலப் பாடசாலையில் முடித்துக்கொண்டு, சம்பத்திரிசியார் கல்லூரி என்று சொல்லப்படும் "சென் பற்றிக்ஸ்' கல்லூரிக்கு உயர் கல்விக்காகச் சென்றார். அங்கு இவர் கல்வி, விளையாட்டுக்களில் சிறந்து விளங்கினார். தான் கல்வி கற்கும் காலத்திலே சமூக சீர்திருத்தக் கொள்கைகளை உள்வாங்கிக் காணப்பட்டார். தமிழினத்தில் காணப் படும் சமூகக் குறைபாடுகளும் உயர்வு தாழ்வுகளும் மூடப் பழக்கங்களும் நீக்கப்பட வேண்டுமாயின் அனைவரும் கல்வி கற்க வேண்டும், அனைவருக்கும் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பதனை உணர்ந்து தமது மாணவப் பருவத்திலேயே தமது நண்பர்கள், சுற்றத்தவர்கள், அயலவர்கள் ஆகியோருக்கு இரவுப் பாட சாலை அமைப்பொன்றை இலவசமாக நடத்தி வந்தார். இவருடன் திரு. க. இராசையா, திரு. சிவகுரு மாணிக்கம் (retired railway guard), திரு. ஜி. எம். பொன்னுத்துரை ஆகிய அக்கால நண்பர்களும் இணைந்து செயலாற்றினர். இவ்வாறு நடத்தப்பட்டு வந்த இரவுப் பாடசாலை அமைப்பு வளர்ச்சி பெற்று ஆரியகுளம் சன்மார்க்க வாலிபர் சங்கமாக உருவாகியது. மற்றும் இவ்வாசிகசாலை இன்றும் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி பலாலிவீதி சந்தியில் கம்பீரமாக

125 0 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
நிற்கின்றது. பிற்காலத்தில் இச்சனசமூக அமைப்பு இரு கிளைகளாகப் பிரிந்து ஆரியகுளம் சந்தியிலும், பலாலி வீதி பருத்தித்துறை வீதி சந்தியிலும் இயங்கி வருகிறது.
யாழ் சென். பற்றிக்ஸ் கல்லூரியில் மெற்றிகுலேஷன் (Maniculation) வகுப்புவரை கல்வி கற்று பின்னர் Ceylon Cold Stores இலும், அதன் பின்னர் அரசாங்க லிகிதர் சேவையிலும் கடமையாற்றிய இவர் இலங்கையிலும் இந்தியாவிலும் எழுந்த சுதந்திரப் போராட்டங் களினால் கவரப்பட்டுத் தமது தொழிலை இராஜினாமாச் செய்து பொது வாழ்வில் சேவை செய்ய ஆரம்பித்தார்.
ஆரம்பத்தில் அகில இந்திய காங்கிரசிலும், அகில இலங்கை காங்கிரஸ் மகாசபையிலும் தம்மை இணைத்துக்கொண்ட எம். சி. அவர்கள் காலப்போக்கில் காங்கிரசார் போராட்டம் அரசியல் அதிகாரத்தில் வெள்ளைத் துரைக்குப் பதிலாக கறுப்புத் துரை அமர உதவுமேயன்றி அனைத்து மக்களது உரிமைகளையும் வென்று எடுக்கும் ஒரு அமைப்பாக மலராது; அடக்கி ஒடுக்கப்பட்டு உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு ஒர் நிரந்தர விடுதலையைத் தேடித் தராது என்பதனை இனம் கண்டு, மனிதகுல விடுதலைக்காகவும் அனைத்து மக்களின் சமத்துவத்திற்காகவும், சகோதரத்துவத்துக்கும் சிறந்தது என அறிந்து அதனை ஏற்று தம்மை கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைத்துக் கொண்டார். அகில இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்ப் பிராந்திய ஸ்தாபக உறுப்பினர்களுள் ஒருவராகத் திகழ்ந்து தமது இறுதி மூச்சுவரை தாம் சார்ந்த ஸ்தாபனம் மூலம் மனுக் குலத்திற்காக உழைத்தார்.
1944 - தை மாதம் செல்வி இலட்சுழி செல்லையா என்ற மாதினை திருமணம் செய்துகொண்டு இல்வாழ்வில் திளைத்து நான்கு ஆண் பிள்ளைகளுக்கும், மூன்று பெண்பிள்ளைகளுக்கும் தந்தையானார். "தாரமும் குருவும் தலைவிதி" என்போர் பெரியோர். எம். சி. ஐயாவுக்கு வாய்த்த மனைவியின் அரும் குணங்களே அன்னா ரின் தொண்டுகளுக்கெல்லாம் அடிநாதமாக விளங்கியது என்றால் அது மிகையாகாது.
எம். சி. ஐயா ஒரு சிறந்த தொழிற்சங்கவாதியாகத் திகழ்ந்தார். வடஇலங்கை கள்ளிறக்கும் தொழிலாளர் சங்கத்தின் பொதுக் காரிய தரிசியாக இருந்து, நசுக்கப்பட்ட தொழிலாளர்களின் நலனுக்கும் மேம்பாட்டிற்கும் உழைத்தார். இன்று கள்ளிறக்கும் தொழிலாளர்களின் சந்ததியினரின் உயர்நிலைக்கும் வளமான வாழ்வுக்கும் வட இலங்கைக் கள்ளிறக்கும் தொழிலாளர் சங்கத் தலைவராக இருந்த ஜேக்கப் காந்தியினதும் எம். சி. ஐயாவினதும் கடின உழைப்பே காரணமாகும். அகில இலங்கைத் தொழிலாளர் சம்மேளனத்துடன்

Page 66
சந்திரபோஸ் O 126
இணைந்து பணியாற்றியதன் பலனாக பலமுறை இந்தியாவுக்கும் 196இல் சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் இலங்கையின் தொழிற்சங்க சம்மேளத்தின் பிரதிநிதியாகச் சென்று எம் நாட்டுத் தொழிலாளர்களின் நிலைகளைப் பற்றி அங்கு உணர்த்தியும், அந்நாட்டுத் தொழிலாளர் நிலைபற்றி அறிந்தும் வந்தார்.
இலங்கைவாழ் தமிழ் மக்களிடையே நிலவிய சமூகக் குறை பாட்டின் காரணமாக தமிழ் மக்களிடையே காணப்பட்ட சாபக் கேடான தீண்டாமையை ஒழிக்கவும் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் நிலையை உயர்த்தவும் உரிமைகளை வென்றெடுக்கவும் அவர்கள் தனி வாழ்விலும் பொது வாழ்விலும் சமத்துவமாக நடத்தப்படவும் கல்வி, நில உரிமை, தொழில் வாய்ப்பு, ஆலயங்களில் வழிபாட்டுச் சுதந்திரம், சம ஆசனம், சமபோசனம் ஆகிய வாய்ப்புகளை ஏற்படுத்தவும், இவற்றின் அடிப்படையில் மனித உரிமைகளை வென்றெடுக்கவும் அயராது அல்லும் பகலும் உழைத்து இலங்கை முழுவதும் பரந்து பட்டு வாழ்ந்த அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவரானார். மக்கள் தொண்டு என்றால் என்ன என்பதற்கு உதாரண வடிவமே எம். சி. என்று பலரும் போற்றும் வண்ணம் வாழ்ந்த இவர் தனி மனிதனாக நின்று தொண்டாற்றாது ஸ்தாபன ரீதியாக இணைந்தே தொண்டாற்றினார்.
ஆரியகுளம் சன்மார்க்க வாலிபர் சங்கம், வட இலங்கை கள்ளிறக்கும் தொழிலாளர் சங்கம், அகில இலங்கை சிறு பான்மைத் தமிழர் மகாசபை, சிறுபான்மைத் தமிழர் ஐக்கிய முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கை தொழிலாளர் சம்மேளனம், இலங்கை-சோவியத் நட்புறவு சங்கம் என பல்வேறு ஸ்தாபனங்களுடன் இணைந்து எல்லா மக்களும் எல்லாம் பெற்று இன்புற்று வாழும் நல்லதோர் சமுதாயம் உருவாக வேண்டும் என்ற இலட்சியத்துடன் அயராது உழைத்தார். இவர் இருமுறை யாழ் மாநகரசபைத் தேர்தலில் 14ம் வட்டாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் அபேட்சகராக நின்றபொழுதிலும் அக்காலத்தில் நிலவிய சாதிப்பாகு பாடுகள் காரணமாகவும், நிலப் பிரபுத்துவ சிந்தனைகளாலும் வெற்றி வாய்ப்பினை சொற்ப வாக்கு வித்தியாசத்தில் இழந்தார்.
இதே போன்றே 1960களில் இலங்கை பாராளுமன்றத்தின் மேற்சபையான செனற்சபை உறுப்பினர்களுக்கான தேர்தலிலும் சொற்ப வாக்கு விகிதாசார வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இவ்வாறான தோல்விகளினால் என்றுமே எம். சி. ஐயா துவண்டவர் அல்லர். தோல்விகள் யாவும் அவரை மீண்டும் மீண்டும் சமூகப் பணியில் முன்னைவிட முனைப்பாக ஈடுபட வைத்தது. பதவியைத் தேடி ஓடியவரல்ல எம். சி. ஐயா. கடமைகளை நாடி ஓடியவர். அவரது கடமை உணர்வும்

127 9ே எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
தன்னலமற்ற சேவை மனப்பான்மையும் அவரை நாடி பாராளுமன்ற உறுப்பினர் பதவி வந்தடைய ஏதுவாயின.
“ിക7ഖബഖങഖങ് (കന്നബിയെബ് പ്രy@ക7ഞ്ഞ് പ്രyഖഞ്ഞുഞ്ഞ് இகல்வெல்லல் ய7ர்க்கும் அரிது"
என்ற வள்ளுவன் வாக்குக்கு அமைய வாழ்ந்து 1970 முதல் 1977 வரை இலங்கைப் பாராளுமன்றத்தின் நியமன அங்கத்தவராக பதவியில் அமர்ந்து தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்கு மட்டுமன்றி முழுத் தமிழ் சமுதாயத்துக்குமே தொண்டாற்றினார். பாராளுமன்ற உறுப் பினராகப் பணியாற்றிய காலத்தில் சமூகக் குறைபாடு ஒழிப்புச் சட்டம், கூட்டுறவு முறையிலான கள்ளிறக்கும் தொழிலாளருக்கான அமைப்புகள், நிலமற்ற விவசாயத் தொழிலாளருக்கான நில உடைமை, கல்வியில் சமவாய்ப்பு, வேலையற்ற இளைஞருக்குத் தொழில் வாய்ப்புகள், வீடமைப்புத் திட்டங்கள் என்பன இவரது அயராத பணியால் செயல் வடிவம் பெற்றன.
1977இல் இலங்கை அரசியலில் மாற்றம் ஏற்பட்ட பின்னர், தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தபின்னரும் உடல் நிலை குன்றும் வரை அயராது சமூகப் பணியும், தாம் சார்ந்த அரசியல் கட்சிப் பணியும் புரிந்துவந்தார்.
1956இல் SWRD பண்டாரநாயக்கா தலைமையில் அரசாங்கம் அமைக்கப்பட்ட பொழுது தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களின் கல்வி வளர்ச்சிக்காகப் பாடசாலைகளை ஆரம்பிக்கும் பணியில் ஈடுபட்டார். அந்நேரத்தில் கல்வி அமைச்சராக இருந்த டபிள்யூ. தகநாயக்கா அவர் களால் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்கள் கல்வி பெற வசதிகள் அற்ற, வசதிகள் மறுக்கப்பட்ட கிராமங்களில் 15 பாடசாலைகள் ஆரம்பிக்கப் பட்டு இன்று அவை அரசாங்கப் பாடசாலைகளாக இயங்கி வருகின்றன. ஆரம்பத்தில் இவை தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்காகவே என்று ஆரம்பிக்கப்பட்டபோதிலும் இன்று முழுத்தமிழ் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கும் தொண்டாற்றி நிற்கின்றன.
தொகுதி
1. குட்டியபுலம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை - கோப்பாய் 2. கட்டுவன்புலம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை - காங்கேசன்துறை
3. சண்டிலிப்பாய் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை - மானிப்பாய்
4. சுதுமலை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மானிப்பாய்
5. அச்சுவேலி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை - கோப்பாய்
6. புலோலி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை பருத்தித்துறை

Page 67
சந்திரபோஸ் O
10.
11.
12.
13.
14.
15.
இமையானண் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை - பருத்தித்துறை வசந்தபுரம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை - காங்கேசன்துறை மந்துவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை சாவகச்சேரி
மட்டுவில் தெற்கு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை- சாவகச்சேரி
சரசாலை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை UA சாவகச்சேரி வரணி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை சாவகச்சேரி கைதடி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை சாவகச்சேரி
வெள்ளாம் பொக்கட்டி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை - சாவகச்சேரி
பொன் கந்தையா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை- மானிப்பாய்
இப்பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் சில உயர் ஜாதி வெறியர்களாலும் மாற்றுக் கட்சியினர்களாலும் தீக்கிரையாக்கப் பட்ட சம்பவங்களும் உண்டு
எம். சி. ஐயா உடல்நலக்குறைவினால் 1989ம் ஆண்டு ஜனவரி
12ம் திகதி யாழ் வைத்தியசாலையில் அமரத்துவம் அடைந்தார்.

Raja Collure M.P.
M.C.
It is 15 years since Comrade M.C. Subramaniam departed his life. Popularly known as M.C., he devoted almost his entire adult life to the cause of emancipating the toiling people of the country and more particularly those of the Jaffna District. He was one of the foremost leaders of the Jaffna District of the Communist Party of Sri Lanka for over 40 years and served the Central Committee of the party as an active member for well over 20 years.
Born to a poor and humble family on September 27th 1917, M.C. began work as a clerk in the Government Clerical service having passed the London Matriculation Examination from St. Patrick's College, Jaffna where he distinguished himself as a bright student. In a few years he decided that it was not his calling in life and entered the trade union movement as a fulltime functionary in the capacity of the North Sri Lanka Toddy Tappers Union which affiliated itself to the Ceylon Trade Union Federation (now known as the Ceylon Federation of Trade Unions).

Page 68
சந்திரபோஸ் O 13Ο
M.C. was also instrumental in founding the Minority Tamils Maha Sabha of which he was elected the President. Through the Maha Sabha and the trade union movement he led the toddy tappers into struggles that helped win for them many a basic right and made much headway in the struggle to end social discrimination of the Minority Tamils under the caste system in the Northern province. The militant struggles led by him contributed to the uplift of the social and economic conditions of the Minority Tamils who had being long oppressed.
Through his social, political and trade union activities in association with such eminent leaders of the Communist Party of Sri Lanka as P. Kandiah (former MP), A. Vaidylingam, M. Karthigesan and others he contributed immensely to the growth and influence of the party in the Jaffna District during his day.
In recongnition of his services to the cause of the Minority Tamils he was appointed as a Member of Parliament by the SLFP - LSSP - CP United Front which came to power in 1970. During his tenure as a Member of Parliament he ventured to defend and promote the rights and interests of not only the Minority Tamils but also those of all working people in the country.
M.C. also represented the country as a trade union leader by leading delegations of the Ceylon Federation of Trade Union to India and the former Soviet Union.
His untimely death on 12th January, 1989 deprived Sri Lanka of a leader who fought relentlessly for an end to caste discrimination in Sri Lanka, worked for the betterment of the social and living conditions of the people of Sri Lanka and stood firmly for the unity of Sri Lanka and its people. He will be long remembered as a patriot who espoused the cause of the emancipation of the working people - socialism until his last breath.

Ingm 6:abmedbG8U 6Tib.ú.
தோழர் எம். சி. எம்மை விட்டுப் பிரிந்து பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டன. எம். சி. என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் இவர், தனது முழு வாழ்வையும் உழைக்கும் வர்க்கத்தின் சமூக விடுதலைக்காகவும், நலவாழ்வுக்காகவும், குறிப்பாக வட பகுதி மக்களுக்காகவே செலவழித்தார். 40 ஆண்டு களுக்கு மேலாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வடபகுதித் தலைவராகவும், 20 ஆண்டுகளாக துடிப் புள்ள மத்தியக் கமிட்டி உறுப்பினராகவும் செயல்பட்டு வந்துள்ளார். Af
1917 செப்டெம்பர் 27ல் சாதாரண வறிய குடும்பத்தில் பிறந்தார். சென். பற்றிக்ஸ் கல்லூரியில் கல்வி பயின்று லண்டன் மெற்றிக்குலேசனில் சித்திபெற்று சில ஆண்டுகள் அரசாங்க லிகிதர் சேவையில் கடமை யாற்றினார். கல்வி கற்கும்போது சிறந்த புத்திக்கூர்மை யுள்ள மாணவனாக விளங்கினார். சில ஆண்டுகளில் இது தனக்கு தொழில் அல்ல என்று முடிவுகட்டி, முழு நேர தொழிற்சங்கவாதியாக, வடக்கின் கள் இறக்கும் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகச் செயல்பட்டார். இந்தச் சங்கம் அன்று இலங்கைத் தொழிற்சங்க சம்மேளனத்தோடு இணைந்திருந்தது. இன்றைய இலங்கைத் தொழிற் சங்கங்களின் சம்மேளனம்)

Page 69
சந்திரபோஸ் O 132
சிறுபான்மைத் தமிழர் மகாசபையை ஸ்தாபிக்கும் பணியில் முக்கியஸ்தராக இருந்தார் எம். சி. இவர் பின்னர் இதன் தலை வராகவும் தெரிவு செய்யப்பட்டார். சிறுபான்மைத் தமிழர் மகா சபையின் ஊடாகவும், தொழிற்சங்க இயக்கத்தின் ஊடாகவும் கள்ளிறக்கும் தொழிலாளர்களை உரிமைக்காகப் போராட வைத்தார். இத்தகைய போராட்டங்களினால் இவர்கள் தங்கள் அடிப்படை உரிமைகளை வென்றெடுத்தார்கள். இது வடக்கில் வாழ்ந்த சிறு பான்மைத் தமிழ் மக்கள் அங்கு நிலவிய சாதி முறைகளிலிருந்து விடு பட்டு சமூக ஏற்றத் தாழ்வுகளிலிருந்து விடுபட வழிவகுத்தது.
நீண்ட நெடுங்காலமாக ஒடுக்கப் பட்டு வந்த மக்கள் தாங்கள் அனுபவித்து வந்த சமூக, பொருளாதார நிலைப்பாட்டில் பாரிய மாற் றத்தைக் கொண்டுவர இவரால் வழிநடத்தப்பட்ட புரட்சிகரப் போராட்டம் பெருமளவு உதவியது.
இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரும் தலைவர்களான முன்னாள் பருத்தித்துறைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் பொன். கந்தையா, அ. வைத்திலிங்கம், மு. கார்த்திகேசன் போன்றோர் களின் செல்வாக்கினாலும், தொடர்பினாலும் இவரின் சமூக, பொருளாதார, தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டது. இந்த நடவடிக்கைகளால் வடபகுதியில் கட்சியை பெருமளவில் வளர்க்க முடிந்தது.
சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு இவர் ஆற்றிய பணியை கருத்தில் கொண்டு, 1970ல் ஆட்சிக்கு வந்த பூரீலங்கா - சமசமாஜ - கம்யூனிஸ்ட் இடதுசாரி முன்னணி அரசு இவரைப் பாராளு மன்றத்திற்கு நியமன அங்கத்தவராக நியமித்தது. இவர் தனது பாராளுமன்ற நடவடிக்கைகளினால் சிறுபான்மைத் தமிழர்களின் உரிமையை மாத்திரமன்றி, ஒட்டுமொத்தமான தொழிலாள வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாப்பதிலும், முன்னேற்றுவதிலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டார்.
எம். சி. அவர்கள் ஒரு தொழிற்சங்கத் தலைவராக இந்த நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்தியாவிற்கும், சோவியத் யூனி யனிற்கும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்குத் தலைமை தாங்கி இலங்கைத் தொழிற்சங்கத்தின் சார்பில் சென்று வந்துள்ளார்.

133 9ே எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
இலங்கையின் சாதிப்பாகுபாடுகளுக்கு எதிராக சளைக்காது போராடி சாதிக் கொடுமையை ஒழிக்கப் போராடிய ஒரு பெரும் தலைவர் 1989 ஜனவரி 12ல் மறைந்தது எங்களுக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. இவர் சமூக வாழ்க்கை முறையை முன்னேற்று வதில் பாடுபட்டதோடு, இந்த நாட்டின் ஐக்கியத்திற்காகவும் மிகவும் உறுதியுடன் செயல்பட்டார். இவர் ஒரு தேசபக்தனாக என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பார். அந்த அளவிற்கு தொழிலாள வர்க்கத்தின் விடுதலைக்காக, சோசலிசத்திற்காக சாகும்வரை போராடியவர் இவர்.

Page 70
аъбоп595 оп. аъФбоолп565
எம்.சி. யும் உரிமை மறுக்கப்பட்டோரின் சமூக நகர்வும்
மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் எம். சி. சுப்பிரமணியம் அவர்கள் 1970-77 காலப்பகுதியில் ஆட்சி செய்த அரசாங்கத்தில் நியமன உறுப்பினராக இருந்தவர். இடதுசாரி அரசியலில் நீண்டகாலமாகப் பங்கேற்று தொழிலாளர் வர்க்கம் மற்றும் உரிமை மறுக்கப்பட் டோர் எனச் சுட்டப்படும் பிரிவினரின் விடுதலைக்கும் மேம்பாட்டுக்கும் பாடுபட்டவர். அத்தகைய கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் இலங்கையின் ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கத்தினர் முதலாளித்துவ அமைப்பின் ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலிலிருந்து விடுதலை பெற்று, சமத்துவ சமுதாயத்தில் கெளரவமான உறுப்பினராக வாழ முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர். இதற்காகவே அவர் இலங்கைப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்து அதன் தேசியத் தலைவர்களுடன் இணைந்து செயற் பட்டார். பொதுவுடைமைக் கட்சியில் தீவிர ஈடுபாடு காட்டினார். சமூக மேம்பாடு என்ற ஒன்றையே கருத்திற் கொண்டு செயல்படும் திரு. சுப்பிரமணியத்தை மக்கள் இயக்கத்தின் முக்கிய தலைவராகவும் பிரமுகராகவும் உற்று நோக்கும்பொழுது, உரிமை மறுக்கப்பட்டோரின் சமூக நகர்வில் அவருடைய பங்களிப்பு நிறைந்து காணப்பட்டுள்ளமை அவதானத் திற்குரியது.

135 0 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
யாழ்ப்பாணச் சமூகத்தின் சமூக அடுக்கமைவில் சாதி முறையின் முக்கியத்துவம் இன்னும் முற்றாகக் கைவிடப்படவில்லை. மேலோட்டமான பார்வையில் காலம் மற்றும் இட அடிப்படையில் ஏற்பட்ட மாற்றங்களுடன், சாதியமைப்பு முறை தகர்ந்து வருவதாக அவதானங்கள் தெரிவித்தாலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவை வெவ்வேறு வடிவங்களில் தலைதூக்குவதனை மறைக்க முடியாது. இத்தகைய கொடுரமான சமூகவியற் பிரச்சினையினின்றும் விடுபடு வதற்குச் சமூகத்தலைவர்கள், சமூகச்சீர்திருத்தவாதிகள், கற்றோர் யாவரும் முன்னின்று சவால்களை எதிர்கொண்டபோதிலும் அவை ஒரளவுக்கே முன்னேற்றகரமான விளைவுகளைத் தந்துள்ளன. இதனைத் தொடர்ந்து எம். சி. அவர்களின் காலத்தில் நிகழ்ந்த போராட்டங்களும் சமரசங்களும் பல நல்விளைவுகளைத் துரிதமாகப் பெற்றுத் தந்தன.
திரு. சுப்பிரமணியம் அவர்களின் அரசியற் செயற்பாடுகள் உரிமை மறுக்கப்பட்டோரின் அந்தஸ்து மேம்பாட்டுக்கு வழிகோலின. இலங்கையின் அரசியல் வரலாற்றில், குறிப்பாகத் தமிழ் மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவ வரலாற்றில் சிறுபான்மைத் தமிழர் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படுவது அரிதிலும் அரிதாக இருந்தது. இச்சூழ்நிலையில் எம். சி. யின் அரசியல் பங்கேற்பும், கொண்ட கொள்கையில் தீவிர ஈடுபாடும், கட்சி நடவடிக்கைகளில் முழுமையான பங்கேற்பும் நன்கு இனங்காணப்பட்டமையால் 1970களில் ஒரு நியமன உறுப்பினராக வரும் வாய்ப்பு இவருக்குக் கிட்டியது. உரிமை மறுக்கப்பட்டோரின் அரசியல் உரிமையில் இது ஒரு மைல்கல். உரிமை மறுக்கப்பட்டோரின் அரசியல் என்னும் காரணியினூடாகத் தம்மை வலுவூட்டுவதற்கு இந்நியமனம் ஓர் அடித்தளமாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணச் சூழ் நிலையில் அனைத்துத் தமிழருக்கும் மொழி, தனித்துவம், கல்வி மற்றும் அரசியல் உரிமைகள் என்ற பொதுப்பிரச்சினைகள் இருந்த வேளையில், உரிமை மறுக்கப்பட்டோர் எதிர்நோக்கிய விஷேட பிரச்சினைகளைப் பாராளுமன்ற மட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்த அவர்கள் மத்தியிலிருந்து பிரதிநிதிகள் உருவாக வேண்டியதன் அவசியத்தைத் திரு எம். சி. சுப்பிரமணியத்தின் நியமனம் நிரூபித்துக் காட்டியது. இதனைத் தொடர்ந்து வந்த காலப்பகுதியில் தமிழர் கூட்டணியின் சார்பில் திரு. த. இராசலிங்கம் உடுப்பிட்டித் தொகுதியில் போட்டியிடுவதற்கும், அமோகமான வெற்றியீட்டு வதற்கும் வாய்ப்புக் கிட்டியது. உரிமை மறுக்கப்பட்டோரின் சமூக அந்தஸ்து உயர்வதற்கும் உரிமையுடன் பிரச்சினைகளை முன்வைப் பதற்கும் இவை வழிவகையாக அமைந்தன. இவற்றின் விளைவாகவே, பிற்காலத்தில் தேர்தல்கள் வரும்போதெல்லாம் உரிமை மறுக்கப்பட்

Page 71
சந்திரபோஸ் O 136
டோருக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கவனம் பெற்றது. அக்கோரிக்கையை மற்றவர்கள் தட்டிக் கழிக்க முடியாத நிலைமையும் உருவாயிற்று. இத்தகைய அடிப்படை உரிமை யானது எதிர்காலத்தில் சமூக நகர்வு துரிதமாக இடம்பெறப் பல்வேறு பரிமாணங்களில் வித்திட்டது.
சமூக நகர்வினை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளுள் ஒன்று கல்வி என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும். சர்வதேச சமூகங் களில் இதற்குரிய சான்றுகள் பலமானதாகவுள்ளன. யாழ்ப்பாணத்துச் சமூகத்தைப் பொறுத்தவரையில் கல்வி என்னும் அடிப்படை உரிமை நீண்ட காலமாகவே அச்சமூகத்தில் ஒருசாராருக்கு மறுக்கப் பட்டிருந்தது. உரிமை மறுக்கப்பட்ட மக்கள் தொகுதியினர் கல்வியில் வறியவர்களாக இருந்தார்கள். இவ்வறுமை பொருளாதார வறுமைக்கும் காரணமாயிற்று. வறுமைக்கும் அறியாமைக்கும் இடை யேயான தொடர்புகள் நெருக்கமானவை. வறுமை அறியாமைக்கும், அறியாமை வறுமைக்கும் பரஸ்பரம் பங்களிப்பு செய்கின்றன.
நீண்டகால அவதானமும், அதன் விளைவான அனுபவங்களாலும், உரிமை மறுக்கப்பட்டோர் சிக்கலான வாழ்க்கைச் சுழியிலிருந்து விடுபடவேண்டுமாயின், அவர்களுடைய கல்வி வாய்ப்புக்கள் விரி வாக்கப்பட வேண்டும் என திரு. சுப்பிரமணியம் உணர்ந்தார். இலங்கையிலே இலவசக் கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அத்திட்டமானது இன, மொழி, மத, சாதி மற்றும் வர்க்க வேறு பாடின்றி எல்லோரும் கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்புகளைத் திறந்துவிட்டது. ஆயினும் அதன் பயன்களை உரிமை மறுக்கப் பட்டோர் முழுமையாக அனுபவிப்பதில் தடைகள் பல இருந்து வந்தன;
இவர்களுக்கான வாய்ப்புகள் குடாநாட்டின் சில பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. அல்லது வறுமையின் காரணமாக பலர் இடையில் பாடசாலையை விட்டு விலகினர். சில கிராமங்களிலே பாடசாலைகள் இருக்கவில்லை. இந்த நிலைமைகளைப் பற்றி நன்கு உணர்ந்துகொண்ட திரு. சுப்பிரமணியம் கல்வி முதலீட்டில் கவனம் செலுத்தினார். பாடசாலைகள் இல்லாத கிராமங்களைத் தெரிவு செய்து 15 பாடசாலைகளை நிறுவினார். அவை இன்று அரசாங்கப் பாடசாலைகளாக உள்ளன. இப்பாடசாலைகள் இன்று தமிழ்ச் சமுதாயத்தின் கல்வி மேம்பாட்டுக்கு முக்கிய பங்காற்றி வருகின்றன.
இவற்றைவிட கிராமிய மட்டத்தில் மக்கள் எழுச்சின்ய ஏற்படுத்தக் கூடிய முறைசாராக் கல்வி நிகழ்ச்சித் திட்டங்கள்,

137 O 6 b.f. SQL regpab 6GB5ero6olů (Burgresif
பெண்கள் கல்வி நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. கல்வியுடன் அரசியல் வாய்ப்பினையும் பயன்படுத்தி ஆசிரியர் பதவி, கல்வி நிருவாகம் போன்றவற்றில் அதிகரித்த அளவில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்தார்.
திரு. சுப்பிரமணியத்தின் காலத்தில் இவற்றினை அனு பவித்தோர் இப்போது தமது அடுத்த சந்ததியினருக்கும் வழிகாட்டி வருகின்றனர். கல்வியில் பெற்ற விழிப்புணர்வு, உரிமை மறுக்கப் பட்டவர்கள் மற்றவர்களில் தங்கியிருக்காத மனவுறுதியைத் தோற்று வித்தமை சமூக நகர்வுக்கான இன்னொரு உத்வேகத்தை தூண்டுதலை வழங்கியுள்ளது. இவற்றினை அவதானிக்கும்பொழுது, உரிமை மறுக்கப்பட்டோரின் பிரச்சினை தீர்வதற்கும் வாழ்க்கைத்தரம் மற்றும் அந்தஸ்து மேம்பாட்டுக்கும் கல்வி வளர்ச்சி உறுதுணையாக அமையும் என்ற அவரது சிந்தனை வீண்போகவில்லை.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் உரிமை மறுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்விடப் பரம்பலை புவியியல் ரீதியாகப் பார்க்கும் போது, அவை அந்த மக்களின் சுதந்திரமான பொருளாதார விருத்திக்கு வழிகோலவில்லை. அத்தகைய இடங்கள் சுய உழைப் பினைப் பயன்படுத்துவதற்குப் பொருத்தமற்ற மேட்டு நிலங்களாகவும், நீர் வசதி குறைந்த கட்டாந்தரைகளாகவும், கற்கள் நிறைந்த பூமி யாகவும் இருந்தன. மாறாக, வேளாண்மை நிலங்களில் கூலிக்கு வேலை செய்வோராக, உழைப்புச் சுரண்டலை அறிந்தும் அதனை விலக்க முடியாதவராகவும் இருந்தனர். மேலும் உழைப்புக் கட்டுப் பாட்டினைப் பற்றி அறியமுடியாத நிலையைப் பேணிவந்தது. 1960 களின் பின்னர், இலங்கையின் பொருளிாதார அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து, தொழிற்கட்டமைப்பிலும் மாற்றங்கள் உருவாகின.
புதிய தொழில் வாய்ப்புகளுக்கு கற்றவர்களின் தேவை அதிகரித்தபோது, கல்வியினைப் பெற்றுக்கொள்வதன் மூலம் அவற்றினை அடையலாம் என்ற விழிப்புணர்வு உண்டாயிற்று. உரிமை மறுக்கப்பட்டோருக்கான வழிகாட்டல்களில் ஓர் உத்வேகம் பிறந்ததனால், கல்வியில் ஈடுபாடு காட்டினார்கள். இதேவேளையில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தினூடாக உறுதி செய்யப்பட்டமை யால், கற்றவர்கள் பரந்த அளவில் வேலைவாய்ப்பைப் பெற்று தொழில்சார் நகர்வினைப் பெற்றுக்கொண்டனர். மரபுரீதியாக இருந்துவந்த தொழிற்கட்டமைப்பின் கட்டுப்பாடுகள் விலகத் தொடங்கின. உரிமை மறுக்கப்பட்டோரின் திறமையும் ஆற்றலும் வெளிப்படத் தொடங்கின. திரு. சுப்பிரமணியத்தின் காலம்

Page 72
சந்திரபோல் O 138
இத்தகைய செயற்பாட்டிலும் கணிசமான பெறுபேறுகளைப் பெற்றுத்தந்தது.
மேற்கூறியவற்றைத் தொகுத்து நோக்கும்பொழுது, திரு. சுப்பிர மணியம் அவர்களின் காலம் அரசியல் உரிமை, பாராளுமன்றப் பிரதிநிதித்துவம், கல்விக்கான வாய்ப்புகள், தொழில் அமைப்பில் ஏற்பட்டுவந்த மாற்றங்களைக் கல்வி மேம்பாட்டின் மூலம் பெற்றுக் கொள்ள உதவியமை போன்ற காரணிகள் சமூக நகர்வுக்கான தூண்டுதல்களை வழங்கின எனலாம். உரிமை மறுக்கப்பட்ட மக்கள் இச்சந்தர்ப்பங்களை மேலும் முன்னெடுத்துச் சென்று தமது தனித்துவத்தை நிலைநாட்டப் பாடுபடவேண்டும். இவை தொடர்பாக மேலும் பல ஆய்வுகள் நடைபெற்று, நிலைமைகளை அறியத்தந்து, மக்கள் விழிப்புணர்வு பெறச் செய்தலே, எமது சமூக விடுதலைக்கு உழைத்தவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாக இருக்கும்.

p. a goodb
மக்கள் சேவையே மகேசன் சேவையாகக்கொண்ட காந்தியவாதி
எம். சி. ஐயா என அன்போடும் உரிமையோடும் எம்மால் அழைக்கப்பட்ட அப்பெரியார் மறைந்து பதினான்கு வருடங்கள் நிறைவை நினைவுகூரும் இவ்வேளையில் அவரினதும் அவர் சார்ந்த அமைப்பு களினதும் சேவையால் சமூகம் அடைந்த சிறப்புகளைக் கோடிட்டுக் காட்டுவது எமது கடமையெனக் கொள்கிறேன்.
எம். சி. ஐயா அவர்களும் அவரேரடிணைந்து தொண்டாற்றிய பலரினதும் சேவைகளின் ஆரம்ப காலத்தில் சிறுபான்மைத் தமிழ் மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள், சமூகத்தில் அவர்கள் அனுபவித்த இன்னல்கள் எவ்வாறானவை, அக்கால சமூக அமைப்பு முறைகள் கிராமப்புற மக்களை என்ன நிலையில் வைத்திருந்தன ? இவ்வாறான நடைமுறைகளை இன்றைய இளைஞர் தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும், அறிவு பெறவேண்டும், முன்னு தாரணமாகக் கொள்ளவேண்டும், சமுதாயச் சிந்தனை பெறவேண்டும் என்ற செயற்பாடுகள் கருதியே இதனை எழுத முற்படுகிறேன். சிலர் கூறுவதுபோல் பழையதையெல்லாம் கிளறி நாற வைப்பதற்காகவல்ல; அனுபவ அறிவை இக்கால இளைஞர் சமூகம் பெறுவதற்காகவுமேயாகும்.

Page 73
சந்திரபோஸ் O 140
இவ்வேளையில் எனது இளம்வயதில் நான் எம். சி. ஐயாவைச் சந்தித்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொண்டு இதனைத் தொடரலாம் என நினைக்கிறேன்.
அவ்வேளை எனது வயது இருபதைத் தாண்டி ஒருசில வருடங்கள் இருக்கும். நான் வாழ்ந்த பகுதி, அக்கால காங்கேசன் துறைத் தொகுதியில் அமைந்த பிற்படுத்தப்பட்ட கிராமமாகும். பிரபல தலைவர்களாகக் கருதப்படுபவர்கள் இத்தொகுதியின் பிரதி நிதிகளாக இருந்துள்ளனர். அவர்களில் ஒருவர் வீட்டிற்கு ஒருநாள் இரு நண்பர்களுடன் சென்றிருந்தேன். அவ்வேளை சிலர் வீட்டின் உள்ளே கதிரையில் இருந்தனர். சிலர் வெளியே கைகட்டியவாறு நின்றதையும் அவதானித்தேன். தெரிந்த ஒருவருடன் கதைத்துக் கொண்டு நடப்பவற்றையும் அவதானித்துக்கொண்டு நின்றேன். வீட்டின் உள்ளிருந்து குறித்த தலைவர் வந்தார். உள்ளே இருந்தவர்களை உள்ளே வைத்தும், வெளியே நிற்பவர்களை வெளியே வந்தும் உரையாடிச் சென்றதை நண்பர்களுடன் கண்ணுற்று உறுதிப்படுத்தி வெளியேறினோம்.
இத்தொகுதியில் பொதுமக்களால் நன்கு அறியப்பட்ட பொதுவுடைமை பிரமுகர் திரு. வ. பொன்னம்பலம் அவர்களையும் அவரது செயற்பாடுகளையும் அவதானிக்க விரும்பி நண்பருடன் அவரது இல்லம் சென்றேன். பொதுமக்களை அனுசரிக்கவென அவரது இல்லத்தில் அமைந்திருந்த தலைவாசல் என அழைக்கப்படும் ஒரு மண்டபத்தில் வேறுபாடற்று சகலரும் அமரவென ஆசனங்களும் போடப்பட்டிருந்தன. நாம் சென்று அவ்வாசனங்களில் இருந்தோம். தோழர் VP யும் வந்திருந்து உரையாடிக்கொண்டிருந்தார். அவ்வேளை அவ்வூர்வாசிகள் இருவர் அங்கே வந்து குறித்த மண்டபத்திற்கு வெளியே நின்றனர். இதனை அவதானித்த தோழர் அவர்களை அழைத்து உள்ளே வந்து இருக்குமாறு பணித்தார். அவர்கள் தலையைச் சொறிந்துகொண்டு, “இல்லையாக்கும், நாம் வெளியே நிற்கிறோம்” என்று கூறினர். உடனே அவர், "நீங்கள் உள்ளே வந்து இருந்தால் மட்டுமே உங்களுடன் கதைப்பேன், மறுத்தால் சென்றுவிடுங்கள்” எனக் கூறினார். அவர்களும் மறுக்க முடியாது வந்திருந்தனர். இவ்விரு நிகழ்வுகளும் எமது மனதில் பசுமரத்தாணிபோலப் பதிந்திருந்தன.
இதன்மூலம் திரு. வ. பொன்னம்பலம் அவர்கள்பால் கவரப்பட்ட நான் அவருடன் கூடிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டேன். இவ்வாறு தொடர்பு கொண்டிருந்த வேளை, ஒருநாள் என்னிடம் "நீர் பங்குபற்றிச் செயற்படவேண்டிய ஒரு இடம் இருக்கிறது. அங்கு உம்மை அழைத்துச் சென்று ஒருவரிடம் ஒப்படைக்கப் போகிறேன்" என்றார். நானும் ஒப்புக்கொண்டேன். எனவே, அவர் தனது வாகனத்தில் அழைத்துச் சென்று யாழ்ப்பாணம்

141 0 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
புகையிரத வீதிக்கருகே கைகாட்டிக் கம்பத்திற்கருகே வாகனத்தை நிறுத்தி, இருவரும் இறங்கியதும் "தோழர் எம். சி" என அழைத்தார். அவ்வேளை கதர் உடை அணிந்த ஒருவர் வந்து எங்களை அழைத்துச் சென்று உரையாடினார். அவ்வேளை எனது விபரங்களைக் கூறி, இவரை உரிய முறையில் மகாசபையில் பயன்படுத்துமாறு அறிமுகப் படுத்தி வைத்தார். இந்நிகழ்வு நடந்து சில வாரங்களில் மகா சபையின் 14வது மகாநாடு நடைபெற்றது. அதில் நானும் ஒரு பொது நிர்வாகசபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு மகாசபையுடன் எனது உறவை வலுப்படுத்திக் கொண்டேன்.
கைகட்டி வாய் பொத்தி, இட்ட பணியை மறுக்காது செய்து அடிமை வாழ்வே இறைவனால் வழங்கப்பட்ட வாழ்வு என நம்பி பணிந்து வாழ்வதே பாதுகாப்பானது என்னும் எண்ணக்கருத்துக்கு முற்றிலும் மாறாக, நீங்களும் சகல வகையிலும் சமத்துவமாக வாழ உரிமையுள்ளவர்கள் என உணரவைத்த அமைப்பாக எம். சி. ஐயா தலைமையில் அமைந்த சிறுபான்மைத் தமிழர் மகாசபை செயற்படத் தொடங்கியது. இதனை வலியுறுத்திய அரசியல் சக்தியாக இடதுசாரி அரசியலில் பற்றுறுதி கொண்டு மகாசபையை வழி நடத்தியமை சிறுபான்மைத் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெரும் பேறாகும்.
முதலில் கல்வி அறிவு பெற்ற சமூகமாக சிறுபான்மைத் தமிழ்ச் சமூகம் மாறவேண்டுமென பேரவாக்கொண்ட தலைவரும் மகா சபையும் அரசின் அங்கீகாரத்தோடு பதினைந்து வரையான பாட சாலைகளை அமைத்ததுடன், அவற்றுக்கான ஐந்நூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களையும் நியமித்து பாரிய எதிர்ப்புகளின் மத்தியிலும் நடைமுறைப்படுத்தினார். இதற்குப் பக்கித்துணையாக இருந்த அக்காலப் பருத்தித்துறைத் தொகுதிப் பாராளுமன்றப் பிரதிநிதி தோழர் பொன். கந்தையா அவர்களையும் நினைவு கூரவேண்டும். சமூக மேம்பாட்டிற்காக மகாசபையால் அவரது காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அனைத்து கருமங்களிலும் எம். சி. ஐயா அவர்களுக்கு கைகொடுத்து உதவியுள்ளார். இவ்வாறே இடதுசாரி அரசியல் எம்மையும் மனிதராக்கியது என்பதைக் கூறிவைக்க விரும்புகிறேன்.
சமூக மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு வாய்ப்பான இடங்களில் எல்லாம் தனியான கூட்டுறவு சங்கங்கள், சனசமூக நிலையங்கள் அமைத்ததுடன் கிராம சேவகர்கள், சமாதான நீதி பதிகள் நியமித்தும் உதவினர். சமாதான நீதிவான் கையொப்பம் பெறுவதற்காக சிறுபான்மை மக்கள் பட்ட இன்னல்களை தமது நாவல் ஒன்றில் தோழர் டானியல் புட்டுக்காட்டியதை கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Page 74
er66g8urdo O 142
எமது மக்கள் சேவையில் முன்னின்றுழைத்த மகாசபையும், தலைவரும் கிராமங்கள் தோறும் சென்று சிறு சிறு கருத்தரங்குகள் வைத்து மக்கள் மத்தியில் சமத்துவம், விழிப்புணர்வு, முற்போக்குச் சிந்தனை, பொருளாதார, சமூக சிந்தனை ஆகிய கருத்துக்களை விதைத்தனர். இக்கருமங்களில் தலைவருடன் முன்னின்றுழைத்த முன்னோடிகளில் தோழர் டானியல், அரசடி சி. இராசையா, டொமினிக் ஜீவா, காந்தி சிற்றம்பலம், தவசிப்பிள்ளை, S.TN. நாகரத்தினம் ஆகியோர் சிலராவர். இவ்வாறு பலவற்றாலும் சிந்திக்க முற்பட்ட மக்கள் பொது இடங்களில் சமத்துவம் நிலைநாட்ட முற்பட்டனர். அனுமதி மறுக்கப்பட்ட தனியார் பாடசாலைகள், அரசாங்கப் பாடசாலையானதும் நிர்ப்பந்தத்தில் அனுமதி வழங்கினர். ஆனால் ஆலயங்கள், தேநீர்க் கடைகள், சலூன்கள் என்பன சமத்துவம் வழங்க மறுத்தன. இதனால் விழிப்புணர்வும் சமத்துவ வேட்கையும் கொண்ட மக்கள் அணிதிரண்டு பிற்போக்குக் கெதிரான போராட்டத்தை முன்னெடுத்தனர். பல ஆண்டுகள் தொடர்ந்த இப்போராட்டத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாது பின்வாங்கினார்கள் சாதி வெறியர்கள்.
எம். சி. ஐயா அவர்களை என்றும் நினைவில் வைத்திருக்கக் கூடிய பெருமைக்குரிய செயற்பாடு ஒன்று என்னவெனில், அதுதான் சமூகக் குறைபாடுகள் ஒழிப்புச் சட்டத் திருத்தம். 1974ஆம் ஆண்டு இதன் பிரதிபலிப்பு தொடர்பாக ஏற்பட்ட ஒரு விடயத்தைக் கூறி இதனை நிறைவு செய்யலாம் என நினைக்கிறேன். தெல்லிப்பளையில் அமைந்திருந்த சலூன் ஒன்று அனுமதி மறுத்த காரணத்தால் நீதிமன்ற விசாரணைக்குட்பட்டது. நீதி எமக்குச் சார்பாகத் தீர்க்கப்பட்டும் அவர் இணங்காது பிறிவிக் கவுன்சிலுக்கு மீள் மனுப்பண்ணியிருந்தார். இந்நிலையில் புதிய திருத்தம் வந்ததும் அதன் அடிப்படையில் கடையில் சமத்துவ உரிமைகோரிச் சென்றனர். அவர் மறுத்ததும் அதன் அடிப்படையில் பொலிஸில் முறைப்பாடு கொடுத்தனர். பொலிசார் அவரைப் பிடித்து காவலில் வைத்து நீதிபதி விசாரணைக்குட் படுத்தினர். இதனால் கலக்கமுற்ற உரிமையாளர் எம்மை அணுகி எமது சமத்துவக் கோரிக்கையை நடைமுறைப்படுத்துவதாக இணங்கிச் செயற்படுத்தினார். இதன்பின்னே சமரசமாக இணங்கி விடுதலை பெற உதவினோம். இவ்வாறே ஆலயங்கள் பலவும் பிரவேசத்திற்கு இணங்கினர். பிரித்தானிய நீதிமன்றம் வரை சென்ற வரும் அவருக்கு வழிகாட்டியவருமான அடங்காத் தமிழரையும் அடக்கிய ஒரு சட்டத்தை ஆக்கி உதவிய தலைவரை சமுதாயம் உள்ளளவும் நினைவு கூரவேண்டுமெனக் கூறி நிறைவு செய்கிறேன்.

lo குகதாஸ்
அமரர் எம்.சி. ஒரு யுக புருசன்
தோழர் எம். சி. நம்மை விட்டுப் பிரிந்து 15 ஆண்டுகளாகிவிட்டன. அவர் இன்னமும் எங்கள் மனதில் இருக்கின்றார். இதற்கு என்ன காரணம்? நினைத்துப் பாருங்கள். வடக்கில் சாதி அடக்குமுறை எவ்வளவு மோசமாக இருந்தது என்பதைப் பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளோம். இந்த மோசமான அடக்கு முறைகளை எதிர்த்துப் போராட, ஒன்றுபட்ட ஒரு சக்தி அணியாகத் திரளவேண்டும் என்பதை வற்புறுத்தியவர் அமரர் எம். சி. இதற்கான ஒரு அணியை கட்டுக் கோப்புடன் கட்டி வளர்த்த பெருமை எம். சிக்கு உண்டு.
எம். சி. அவர்கள் ஒரு கம்யூனிஸ்ட் வடக்கில் கம்யூனிஸ்ட் கட்சி அங்குரார்ப்பணம் செய்வதற்கு முன்னரே கம்யூனிஸ்ட் கட்சிப் பிரசாரத்தில் ஈடுபட்டு செயல்பட்டுவந்த மூவரை நாம் என்றும் மறக்க முடியாது. புத்தகக்கடை பூபாலசிங்கம், நல்லூர் இராமசாமி ஐயர், சிறுபான்மைத் தமிழர்கள் மத்தியில் தோன்றிய போராளி எம். சி. அவர்கள். இவர்கள் மூவரும் காலையில் யாழ் பஸ் நிலையத்திற் கருகாமையில் உள்ள பூபாலசிங்கத்தின் ட'தகக் . . கடையில் சந்தித்து அரசியலை அலசி ஆராய் வார்கள். மாக்ஸிசப் பிரச்சாரத்தை மக்கள்

Page 75
cyffbfffig CBurTedo O 144
மத்தியில் கொண்டு செல்லும் யுக்தியைக் கையாள்வார்கள்.
இவர்கள் மூவரும் வடக்கில் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப் பட்டதும் அங்கத்தவர்களானார்கள். இறக்கும்வரை இவர்கள் மூவரும் அதில் அங்கத்தவர்களாகவே இருந்தார்கள். அன்றைய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களான பொன். கந்தையா, மற்றும் கார்த்திகேசன் போன்றோருடன் நெருங்கி உறவாடிக் கட்சியைக் கட்டி வளர்த் தார்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனையாற்தான் சிறு பான்மைத் தமிழர் மகாசபை உருவானது என்று சொன்னால் அது மிகையாகாது.
கம்யூனிஸ்டுகள் பல ஸ்தாபனங்களை ஆரம்பிக்க முன்னின்று உழைத்தார்கள். தொழிற் சங்கங்கள் உருவாகின. சமூக ஸ்தாபனங்கள் உருவாகின. அப்படியான ஒரு ஸ்தாபனமாகவே சிறுபான்மைத் தமிழர் மகாசபையும் உருவானது.
இந்தச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் தலைமைப் பொறுப்பை தோழர் எம். சி. 1956களில் ஏற்றுக்கொண்டார். அந்தக் காலப் பகுதியில்தான் வடக்கில், பருத்தித்துறைத் தொகுதியில் இருந்து ஒரு கம்யூனிஸ்ட் பாராளுமன்றத்திற்குத் தெரிவானார். அவர் வேறுயாருமல்ல, அவர்தான் பொன். கந்தையா.
பொன். கந்தையா சாதிவெறி பிடித்தவர்கள் மத்தியில் வாழ்ந்தவர். தாழ்த்தப்பட்ட மக்களின் கஷ்டத்தை நேரில் கண்டவர். இந்தக் கொடுமைக்கு எதிரான போராட்டத்தின் அவசியத்தை உணர்ந்தவர். எம். சி. அவர்களின் தலைமையில் பல போராட் டங்களை முன்னெடுக்கப் பணித்தார். போராட்டங்கள் ஆரம்ப மானது. அரச ஊழியர்களினதும், பொலிசாரினதும் உதவிகள் கிடைக்கவில்லை, கந்தையாவின் உதவியுடன் எம். சி. அவர்கள் உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நிலைமையை விளங்கப்படுத்தி நியாயத்தைப் பெற்றுக் கொண்டார்கள். ஊழல் நிறைந்த அதிகாரிகள் மாற்றப்பட்டார்கள்.
தேநீர்க்கடைப் பிரவேசம். அன்று தேநீர்க் கடைகளில் மிகவும் மோசமான முறையில் சிறுபான்மைத் தமிழர்கள் நடத்தப்பட்டார்கள். தேநீர்க் கடைகளில் கறல்பிடித்த மூக்குப் பேணியிலும், போத்தலிலும் தான் தேநீர் பரிமாறப்பட்டது. காசு கொடுத்துப் பெற்ற தேநீரைக்கூட இருந்து குடிக்க முடியாத நிலை. உணவுகள்கூட நிலத்தில் இருந்தே உண்ணவேண்டும். இந்த இழிநிலை மாறவேண்டும்; மாற்றப்பட வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்தது.

145 - 9 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
இதற்காக தோழர் எம். சி தலைமையில் தோழர்கள் கார்த்திகேசன், வ. பொன்னம்பலம், ஐ. ஆர். அரியரத்தினம் போன் றோர்களின் வழிகாட்டலில் சாத்வீகப் போராட்டம் ஆரம்பமானது. ஆயிரக்கணக்கான சிறுபான்மைத் தமிழர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். தேநீர்க் கடை முதலாளிகளுடன் சமரசப் பேச்சுக்கள் ஆரம்பமாகின. முடிவில் தேநீர்க் கடைச் சொந்தக் காரர்கள் சமத்துவம் பேண இணங்கினார்கள். முதலில் வீ. எஸ். எஸ். கே. யும், சுபாஸ் கபேயும் திறக்கப்பட்டது. மெது மெதுவாக இந்த இழிநிலை முடிவுக்கு வந்தது. இது எம். சி. யின் தலைமைக்குக் கிடைத்த பெருவெற்றி
இதுபோன்று ஆலயங்களில் சமத்துவமாக வழிபடப் போராட்டம் தொடங்கியது. முதலில் நல்லூர் கந்தசுவாமி கோயிலை அனைவருக்கும் திறந்துவிடப் போராடினார்கள். போராட்டம் பலித்தது. ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்று கோயில்கள் திறந்துவிடப்பட்டன.
கல்வியில் பின்தங்கி இருந்தார்கள் சிறுபான்மைத் தமிழ் மக்கள். கிராமப்புறப் பள்ளிகளில் அனுமதி மறுக்கப்பட்ட காலம். இதைக் கண்ணுற்ற தோழர் கந்தையா இவர்களுக்காகப் பல அரசினர் பாட சாலைகளை ஆரம்பிக்க வழிகோலினார். அப்படி ஆரம்பித்த பாட சாலைகளில் இயன்றவரை சிறுபான்மைத் தமிழர்கள் மத்தியில் உள்ள படித்தவர்களை ஆசிரியர்களாக்கினார். இதனால் பலன் பெற்ற சிறு பான்மைத் தமிழ் மக்கள் தோழர் கந்தையாவையும் எம். சி. யையும் என்றும் நினைவில் வைத்திருக்கின்றார்கள்.
தோழர் எம். சி. யின் திறமையைக் கண்ட தோழர் கந்தையா இவரை அன்றைய மூதவைக்கு உறுப்பினராக்க முயற்சித்தார். முற்போக்கு எண்ணங் கொண்ட சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர் களும், கம்யூனிஸ்டுகளும் இவரைத் தெரிவு செய்ய முயற்சித்தார்கள். சாதிவெறி பிடித்த சில பாராளுமன்ற தமிழ் உறுப்பினர்களால் வேறு ஒருவர் போட்டிக்கு நிறுத்தப்பட்டார். முடிவில் எம். சி. ஒரு வாக்கினால் தோல்வியடைந்தார். இதைக்கண்டு அவர் மனம் நோகவில்லை. அவரின் பொதுப்பணி, மக்கள் போராட்டங்கள் தொடர்ந்தன.
இவரின் திறமையைக் கண்ட சிறிமாவோ, பதியுதீன், இலங்க ரத்தினா போன்றவர்கள் இவரை பாராளுமன்றத்திற்கு நியமன அங்கத்தவராக நியமிக்க சம்மதம் தெரிவித்தார்கள். அதன் பின் னணியில் தோழர் பீட்டர் கெனமன் செயல்பட்டார். இவர் நியமன உறுப்பினராக பாராளுமன்றத்தில் 1970ல் இருந்து 1976 வரை தனது

Page 76
ers&gGBurdo O 14.
மக்களின் நலனுக்காக பல சேவைகள் செய்துள்ளார். சாதிக் கொடுமைக்கு எதிரான சட்டவாக்கத்தைக் கொண்டுவரப் பாடு பட்டார். சாகும்வரை பொதுப்பணியில் ஈடுபட்டிருந்தார். உண்மையில் இவர் சிறுபான்மைத் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய விடிவெள்ளி. இவர் ஒரு யுக புருசன். ஒரு பொதுவுடைமைவாதி. வாழ்க இவர் நாமம்.

6Loafé an
தோழமைக்குரிய உண்மையான தொண்டன்
தலையில் தரித்த கதர்க் குல்லாவுடனும், கதர் உடையுடன் கூடிய தோற்றத்துடனும் அந்தக் காலத்தில் யாழ்ப்பாண நகரத்தின் பிரதான வீதிகளில் ஒருவர் சைக்கிளில் வலம் வந்துகொண்டிருந்ததை அவதானித்து வந்துள்ளேன்.
நானோ வளரிளம் பருவத்து இளைஞன்.
இவரைப் பற்றி உருவத்தில் தெரிந்திருந்ததே தவிர, மேற்கொண்டு விபரமேதும் அப்போனிதக்குத் தெரிந் திருக்கவில்லை. தெரிந்து கொள்ளக்கூடிய சந்தர்ப்பமும் எனக்குக் கிடைக்கவில்லை.
இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தின் உச்சகட்ட காலம். 1942ஆம் ஆண்டு என நினைக்கிறேன்.
காந்தி, நேரு பற்றி நமது பத்திரிகைகளும் அடிக்கடி செய்திகளை வெளியிட்டு வந்துள்ளன. அந்தச் சுதந்திரப் போராட்ட வேட்கையை மனசில் கொண்டு மனநிறைவுடன் இந்திய சுதந்திரப் போராட்ட நிலையை மானசீகமாக ஆதரித்து வந்தவர். இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் இவர் பெரிதும் மதித்துப் போற்றியவர் சுபாஸ் சந்திரபோஸ் அவர்களே. அவரே இவர் விரும்பிய முன்னோடி.

Page 77
ers6g8urdo O 148
இந்தக் காலகட்டத்தில்தான் நான் இளைஞனாக இருந்தபோது தெருக்களில் அவர் சைக்கிளில் போவதை அடிக்கடி பார்த்திருக்கிறேன்.
பின்னர் இலக்கிய நண்பர்களான எஸ். பொன்னுத்துரை, டானியல் ஆகியோரின் நட்புக் கிடைத்தது. அந்தக் காலத்தில் ஆசிரியக் கலாசாலைக்கு விண்ணப்பம் கொடுத்துவிட்டுப் பூபால சிங்கம் புத்தகக்கடையில் முன்வாங்கில் அமர்ந்திருந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்தவர்தான் என்னையும் எஸ். பொவையும் அறிமுகப்படுத்தி வைத்த ஆர். ராஜகோபாலன் அவர்கள்.
இந்தப் பின்னணியிலேயே தோழர் கார்த்திகேசனை அவரது விக்டோரியா வீதி இல்லத்தில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. அந்தக் காலத்தில்தான் பிரபல எழுத்தாளரான கே கணேஷ் அவர்கள் யாழ்ப்பாணம் வந்திருந்தார். யாழ்ப்பாணத்தில் சில மாதங்கள் தங்கியிருந்தார்.
அமரர் ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களினது தமிழ்க்காங்கிரஸ் என்ற அரசியல் இயக்கம் கொடிகட்டிப் பறந்த காலமது.
அந்தக் காலகட்டத்தில்தான் தமிழகத்தின் பிரபல கம்யூனிஸ்ட் தலைவரான தோழர் ப. ஜீவானந்தமும் யாழ்ப்பாணம் வந்திருந்தார். பல கூட்டங்களில் உரையாற்றினார். இப்படியான காலகட்டப் பின்னணியலேதான் முதன்முதலாக யாழ் மாநகர சபைக்குத் தேர்தல் நடைபெற்றது.
கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இருவர் இரு தொகுதிகளில் போட்டியிட்டனர். தோழர் கார்த்திகேசன் வண்ணார்பண்ணை தொகுதியிலும், தோழர் எம். சி. 14ஆம் வட்டாரமான ஸ்டேசன் வட்டாரத்திலும் அபேட்சகர்களாக நின்று போட்டியிட்டனர்.
எனது வீடும் தொழிற்கூடமும் 14ஆம் வட்டாரத்திற்குள் அமைந்திருந்தன. அதாவது எம். சி. அவர்கள் வேட்பாளராக நின்ற வட்டாரமது.
எனக்கோ படு உற்சாகம் என்னைப் போன்றவர்களுக்கு அன்று ஒட்டுப்போடும் வயதில்லை. இருந்தும் வெகு உற்சாகமாக வேலை செய்தோம்.
வடபுலத்துத் தமிழ் வரலாற்றிலேயே பஞ்சமர் குலத்தைச் சேர்ந்த ஒருவர் மாநகர சபைத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டி யிட்டது இதுவே முதல் தடவையாகும். நகரமெங்கும் ஒரே பரபரப்பு.
உயர்குடிப் பிறப்பினர் இதை ஒரு சவாலாகவே ஏற்றுக் கொண்டனர்.
女 பகலாக தேர்தல் வேலை களை கட்டத்
வு 西

149 9 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
தொடங்கிவிட்டது.
எதிர்பார்த்த வண்ணம் தோழர் எம். சி. வெற்றி பெறவில்லை. ஒரு வட்டாரத்தில் வெற்றியை நிலைநாட்டிக் குதூகலிப்பதல்ல, கட்சியின் நோக்கம். இறுகிக் கட்டிதட்டிப் போயுள்ள சமூக அமைப்பைச் சற்று அசைத்துப் பார்ப்பதுதான் இந்தப் போட்டியின் நோக்கமாகும். அதேபோலத் தோழர் கார்த்திகேசனும் தமது மாநகர சபைத் தொகுதியில் தோற்றுப் போய்விட்டார்.
ஆனால், ஒரு பெரிய வெற்றி என்னவென்றால், இதனால் இளந்தலைமுறையினர் இடதுசாரிக் கருத்தோட்டத்தினருடன் இணைந்து செயல்பட ஆரம்பித்தனர். குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள் பகுதியைச் சேர்ந்த ஆர்வமும் அக்கறையுமுள்ள இளம் பருவத்தினர் தமது சமூக விடுதலைக்கு வழி பிறந்துவிட்டதாகக் குதுரகலித்தனர்; கொண்டாடினர். A.
தொடர்ந்து, அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகா சபை புதுத் துடிப்புடன் இயங்கிவரத் தொடங்கியது. எம். சி. அதன் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். தொடர்ந்து செயல்பட்டார்.
நானும் டானியலும் மகாசபையுடன் இணைந்து பிணைந்து செயல்படத் தொடங்கினோம்.
மகாசபையின் தினசரி வேலைத் திட்டத்தில் அதீத ஆர்வமும் ஒத்துழைப்பும் காட்டி இயங்கி வந்தவர் டானியலாவார். பலப்பல உட் கிராமங்களுக்கெல்லாம் சென்று மேடையமைத்து ஒடுக்கப்பட்ட பெரும் பகுதி மக்களின் ஆத்ம குரலைப் பிரசாரப்படுத்தி வந்தவர்களில் டானியல் அவர்களின் பங்கு மிகப் பெறுமதி மிக்கதாகும்.
தோழர் பொன். கந்தையா பருத்தித்துறை தொகுதியின் பாராளுமன்ற அங்கத்துவம் பெற்றதற்கு தோழர் எம். சி. யின் கடும் உழைப்பிற்கு ஈடுசோடாக எழுத்தாளர் டானியல் மிகப் பெரிய பங்களித்தவர் என்பது இன்றுவரைக்கும் தோழர்கள் நினைவில் வைத்திருக்கும் செய்தியாகும்.
தோழர் எம். சி. என்பது தனிமனிதரின் பெயரல்ல. அது ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைக்குப் பாடுபட்ட கூட்டுழைப்பு: நண்பர்களின் குறியீட்டு நாமமாகும் அது.
கடைசிவரை தான் நம்பிய நோக்கத்திற்காக உழைத்தவர் மாத்திரமல்ல, தனது உழைப்பின் பெறுபேறுகளை, அறுவடைகளைத் தனது வாழ்நாட்களிலேயே நேரில் தரிசித்தவர் அவர்.
பருத்தித்துறையில் ஒரு பிரசாரக் கூட்டத்திற்குச் சென்றுவிட்டு

Page 78
சந்திரபோசிஸ் O 1s0
நட்ட நடுச்சாமத்தில் யாழ்ப்பாணம் நோக்கித் திரும்பிக் கொண்டிருந் தோம், நாம் ஐவர்.
வல்லைவெளியைக் கடந்து கொண்டிருந்தது, நாம் பயணித்துக் கொண்டிருந்த வண்டி அந்தக் கார்கூட மக்கள் அவரது சேவையைப் பாராட்டி அன்பளிப்புச் செய்த வாகனம்.
திடீரென ஒரு கையெறி குண்டு நமது வாகனத்தை நோக்கி வீசப்பட்டுப் பெருஞ் சத்தத்துடன் வெடித்து, நம்மை மலைக்க வைத்தது. நாமனைவரும் தொலைந்தோம் என எண்ணிக் கொண்டேன்.
தோழர்கள் எம். சி, வைத்திலிங்கம், அன்ரனி மாஸ்டர், சிங்களத் தோழரும், ‘அத்த” சிங்களத் தினசரியின் ஆசிரியருமான எச். ஜி. எஸ். ரத்னவீர, நான் ஆகியோர் வண்டியிலிருந்து தூக்கி வீசப்பட்டோம்.
காரோட்டி வந்த சாரதி ஒரு மூலையில் தெருவோரம் ஒதுக்கப் பட்டுப் போய்க் கிடந்தார். மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்கியது.
அந்தக்கணத்தில் நான் நினைத்தேன்; எல்லாமே முடிந்துபோய் விட்டது என யோசித்தேன்.
ஆனால் சிறுசிறு காயங்களுடன் அந்தப் பெரிய குண்டெறி வன்முறையிலிருந்து நாமனைவரும் ஏதோ ஒருவகையில் தப்பித்துக் கொண்டோம். பெரிய அதிசயம் அது!
சன சந்தடியே அற்ற அந்த அத்துவான வெறிச்சோடிய வெளியில் நிமிர்ந்து நின்றுகொண்டே "ஆரடா, அவன்? டேய்! துணிச்சல் இருந்தால் முன்னால் நிண்டு செய்யுங்கோடா! ஒளிச்சு நிண்டுகொண்டு குண்டெறியிறீங்களே, இதுதானாடா உங்கட வீரம்" எனக் குரல் கொடுத்தார், நம்மவர்.
அதுதான் எம். சி!
அந்த அவல வாழ்வுடன் போராட்டம் நடத்திச் சாதிச் சனியங்களுடன் சமர் செய்து மறைந்த தோழர் எம். சியுடன் சமகாலத்தில் நானுமொரு தோழனாக அவரால் கணிக்கப்பட்டேன் என்பதே எனக்கும் என் பின்சந்ததியினருக்கும் போதும், போதும்.

ந்ேதரசிங் பூபாலசிங்கம்
எனது தந்தையால் தோழர் என அழைக்கப்படவர்
அவை எனது பள்ளிப் பருவ நாட்கள். காலையில் அல்லது சாயங்காலங்களில் அடிக்கடி ஒருவர் வீடு தேடி வருவார். சைக்கிளில் வரும் அவர் "தோழர் பூபால் இருக்கிறாரா?” என வாசலில் இறங்கியதும் வீட்டின் முன்னால் யார் தென்பட்டாலும் அவர்களை விசாரித்துக் கொள்வார்.
அவர் சாதாரணமானவராகவே காட்சி தருவார். அவரது சைக்கிள் கூடைக்குள்"சிவப்பு எழுத்தில் தேசாபிமானி என்ற பத்திரிகை தலைநீட்டிக் கொண்டிருக்கும்.
சில சமயங்களில் யாழ்ப்பாணம் கடைத்தெருவில் அமைந்துள்ள பூபாலசிங்கம் புத்தகசாலைக்கும் மாலை நேரங்களில் வந்து போவார்.
எனது தகப்பனார் அங்கிருந்தால் இருவரும் மிக ஆழமாக தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் பற்றிக் கவனமாக உரையாடுவார்கள்.
அந்த இளம் வயதில் இவர்கள் பேசுவது எனக்கொன்றுமே விளங்காது. புரியாது.
அப்பாவின் நீண்டகால நண்பர் என்பதை

Page 79
of 55g(Bustelo O 152
அவர்கள் பழகும் முறையில் வைத்து ஓரளவு புரிந்துகொண்டேன்.
பின்னால்தான் அவரது பெயரைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. தோழர் எம். சி. எனச் சகலராலும் அழைக்கப்பட்ட ‘அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகா சபை'யின் தலைவர் எம். சி. சுப்பிரமணியம் அவர்தான் எனத் தெளிவு பெற்றேன்.
பார்வைக்கு மிக மிக எளிமையானவர்.
என்னைப் போன்ற இளந் தலைமுறையினரை மதித்துக் கெளரவித்து பேசி, உரையாடுவார்.
எந்தவித பந்தாவுமற்ற மனிதர்.
எனது பள்ளிப் படிப்பைப் பற்றியும் பொழுதுபோக்கு விவகாரங்கள் பற்றியும் அடிக்கடி விசாரித்துக் கொள்வார்.
தனது நெருங்கிய தோழரின் மூத்த மகன் எனப் புரிந்து வைத்துள்ள அவர், வழி தெருக்களில் என்னைக் கண்டபோதிலும் சைக்கிளை விட்டு இறங்கி, என்னுடன் ஏதாவது கதைத்துவிட்டுத் தான் செல்வார்.
இது அவர் என் அப்பாவின் தோழமைக்குக் கொடுத்துள்ள மரியாதை என்பதை இப்போது புரிந்து, புளகாங்கிதம் அடைகின்றேன்.
மூன்று தடவைகளுக்கு மேல் நமது பூபாலசிங்கம் புத்தகசாலை அக்கினி பகவானின் நேரடிப் பார்வைக்கு உட்படுத்தப்பட்டுச் சிதைக்கப்பட்டது. எரியூட்டப்பட்டது.
அந்தச் சொத்து அனைத்தும் எரியூட்டப்பட்ட காலகட்டத்தில் தோழர்கள் பலர் நேராக வீடு தேடி வந்து ஆறுதல் சொல்லி மன அமைதிப்பட வைத்தனர். அவர்களில் முக்கியமானவர் எம். சி. அவர்கள்.
"தோழர் பூபால்!” என இவர் எனது தந்தையைப் பெயர் சொல்லி அழைக்கும் விதமே ஒருவகைப் பாசமும் தோழமையும் கலந்த அழைப்பாகவே மிளிரும். அப்படியே எனது அப்பாவும் இத்தகையவர்களின் உண்மைத் தோழனாகவே கடைசிவரையும் மிளிர்ந்தார்.
இதை எனது அப்பாவின் இறுதிச் சடங்கில் நேரடியாக நான் கண்டுகொண்டேன்.

153 O 6b.6fl. 8aDorepas 69C656Dooû (Burgrefl
எனது தகப்பனார் மொஸ்கோ போய் வந்த சமயம் இவர் எங்களது வீடு தேடி வந்து நேரில் அப்பாவைப் பாராட்டி வாழ்த் தியதை என்னால் இன்றும்கூட மறக்க முடியவில்லை.
தனது தோழர் பூபாலசிங்கத்தின் மூத்த புதல்வன் நான் என்கின்ற கணிப்பில் அவர் என்மீது தனி அக்கறை காட்டி வந்தார். கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளர் தோழர் பீட்டர் கெனமன், சமசமாஜக் கட்சிச் செயலாளர் தோழர் லெஸ்லி குணவர்த்தன, பூரீலங்கா சுதந்திரக் கட்சிச் செயலாளர் ரி. பி. சுபசிங்ஹ ஆகியோர் கூட்டாக யாழ்ப்பாணம் வந்திருந்த சமயம், இம்மூவரும் இரவு விருந்துக்கு நமது வீட்டுக்கு வந்திருந்தனர். இதை ஒழுங்கு செய்தவர்களில் முக்கியமானவர் எம். சி. சுப்பிரமணியம் அவர்களே. எம்மைத் தேசிய ரீதியாகக் கெளரவித்தார்.
எங்களது முழுக் குடும்பமுமே அவரை நேசித்தது. அவரது மறைவைக் கேள்விப்பட்டதும் எமது சொந்த இரத்த உறவுக்காரர் ஒருவரின் பிரிவை நினைத்து வருந்தித் துயரப்பட்டது போல, எனது குடும்ப அங்கத்தவர் ஒவ்வொருவரும் துக்கம் அனுஷ்டித்தனர்.
அத்தகைய ஒருவர் எனது தகப்பனாரின் அத்தியந்த நண்பனாக, மதிப்புக்குரிய தோழனாக இருந்து வந்துள்ளார் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் எண்ணிப் பார்க்கும்பொழுது என் நெஞ்சு பெருமிதத்தால் புளகாங்கிதம் அடைகின்றது.

Page 80
பேரன்
SGTaser of Sodsalue of
தரணி போற்ற வாழ்ந்த தலைமகனே!
தீண்டாமை எனும் தீயினால் தமிழினம் தீய்ந்திடா - வண்ணம் தடைகளைத் தகர்த் தெறிந்து தரணி போற்ற வாழ்ந்த தலைமகனே!
சமத்துவம் சன்மார்க்கம் தழைத்திடவே சாதித் தளையைக் - களைந்து சமதர்மவாதியாய் சாதித்து தரணி போற்ற வாழ்ந்த தலைமகனே
தீண்டாமை எனும் சாக்கடையில் திராவிடன் திணறித் தவிக்கையில் - அவனை மீண்டெழுந்து தலை நிமிரவைத்து தரணி போற்ற வாழ்ந்த தலைமகனே!
இலட்சியமாய் வாழ்ந்து இறுதிவரை போரிட்டு - இறுதியிலும் சாதித்து, சாதனை வீரனாய் தரணியில் வாழ்ந்த தலைமகனே!

155
0 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
ஆயுதம் இன்றி அகிம்சையால் ஆலயக் கதவை அகலத் திறந்திட - வைத்த அணையில்லா அஞ்சா வீரனாய் தரணியில் வாழ்ந்த தலைமகனே!
தடைகள் பல திரண்டினும் எழுவரின் தந்தையாய் மட்டும் - இலாது எவர்க்கும் வழிகாட்டும் ஆசானாய் தரணியில் வாழ்ந்த தலைமகனே!
தேடி வந்தடைந்த பதவியினை மீட்சி பெற்று தமிழினம் - வாழ்ந்திட அர்ப்பணித்து அழியா புகழுடன் தரணி போற்ற வாழ்ந்த தலைமகனே!
தரணி போற்ற வாழ்ந்த தலைமகனே! சாதிப் பேயிற்கு சங்கு ஊதிய சாணக்கியனே உம் சாதனை - நித்தமும் சங்கொலியாய் சகலமெங்கும் ஒலித்திடுமாக.

Page 81
оп. шпеобkab
தொண்டின் மறுவுரு தோழர் எம்.சி.
இன்றைய சமாதானச் சூழலிலும், ஈழத்துப் பஞ்சமர்கள் ‘நமக்கும் விடியுமா?’ எனப் பெருமூச்சைக் கக்குகின்றனர். மனச்சாட்சியோடு இவர்களது இன்றைய பிரச்சினைகளை உள்வாங்கும் எந்தவொரு தமிழனும் அவைகளை நியாயப்படுத்துவதற்குத் தயங்கான். பேரினவாதிகளின் நிலப்பசிக்கு முகங்கொடுத்து, ஆத்தலைந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களில் கணிசமான பகுதியினர் பஞ்சமரே! அர்த்தமற்ற யுத்தப் பிரகடனத்திற்குப் பெருவிலை கொடுத்தவர்களும் இவர்களே! அமைதியான வாழ்வை, உயிரை, தொழிலை, கல்வியைத் தாரை வார்த்து இவர்கள் படும்பாடு சொல்லி மாளாது!
ஈழத்தை மூவகையான அந்நியர்கள் கபளிகரம் செய்து கொண்டது வரலாறு! அந்நியர் ஆதிக்கத்தில் கூட அவர்களது எந்தவிதமான திணிப்புகளையும் கையேந்தாது தமிழனது பண்பாடு, கலாசார, கலைக் கோலங்களைக் காத்து வருபவர்கள் இந்நாட்டுப் பஞ்ச மர்களே! இருந்தும் இந்த அசல் தமிழர்கள் தமது சொந்த நாட்டவர்களால் அந்நியரைவிடப் படுமோச மாகவே கணிக்கப்படுகின்றனர். இதுவேதான் பஞ்சமரை ‘நமக்கும் விடியுமா?’ என அபசுரமிசைக்க வைக்கிறது.

157 9ே எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
பஞ்சமர்களது இதயத்தைச் சுடும், சாதிய இலக்கோடு நிகழ்ந்த சம்பவங்களைத் தொகுத்துப் பார்க்கும் எந்தவொரு மனிதாபிமானச் சிந்தனையாளனும், பஞ்சமர்களது அடிப்படை உரிமைகள் எவ்வண்ணம் மேலாதிக்கச் சாதிகளால் காவு கொள்ளப்படுகின்றன வென்பதைத் துல்லியமாகப் புரிந்து கொள்ளலாம்.
பஞ்சமருக்கான கல்வி மறுப்பு இன்னும் நாசுக்காக நடை முறைப்படுத்தப்படுகிறது. அரச நிறுவனமான புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியில் பஞ்சம மாணவனொருவன் ஆதிக்க சாதியைச் சார்ந்த ஆசிரியரொருவரால் தனது கற்றலை இழந்தான். இந்த மாணவன் த லதீபன். தற்போதைய யாழ் நகர பிதாவான செல்லன் கந்தையன் அவரது கடமை நேரத்தில் பணிமனைக்குள் வைத்துத் தாக்கப்பட்டார். இது மட்டுமல்ல! இன்னும் பல! எழுபதுகளில் பஞ்சம போராளிகளால் நடாத்தப்பட்ட ஆலயப் பிரவேசம் யாழ் குடாவைக் கலக்கியபோதும், இன்னமும் பல நூற்றுக்கணக்கான ஆலயங்கள் பஞ்சமர்களுக்கு வழிபாட்டுச் சுதந்திரத்தை மறுத்து வருகின்றன. பஞ்சம அகதிகள் பாவித்த கிணறுகளுக்குள் இரணியத் தனமாக மலம் கொட்டப்பட்டது. விடுதலைப் புலிகள் தலையிடு வார்கள் என்ற அச்சத்தால் மெளனித்து, பஞ்சமரது பாவனைக்கு விடப்பட்ட கோயில் கிணறுகள், புலிகள் இடம் பெயர்ந்ததும் பஞ்சமரது பாவனைக்கு மறுக்கப்பட்டுள்ளன. அரச செலவில் அமைக்கப்பட்டு வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்களில் பஞ்சமர்கள் குடியமர மறுக்கப்பட்டு, சமத்துவபுரங்களின் உண்டாக்கல் தடங்கல் படுத்தப்பட்டுள்ளது. இப்படி, இப்படி எத்தனையோ!
புலம் பெயர்ந்தோர் இலக்கியம் சாதி இனி மெல்லச் சாகு மென ஆருடம் பேசியது. வேற்றிடம், வேற்று மொழி, வேற்றுப் பண்பாடு, கலாச்சாரம், சாதிய முறைமைகளை உடைக்குமெனக் கருத்தியல் மாற்றத்தைக் காட்டியது. ஆனால், தமிழரது வர்த்தக நிறுவனமொன்றில் வேலைக்கமர்த்தப்பட்ட பஞ்சமப் பெண் ஒருத்தி, காலப்போக்கில் அவளது சாதி அடையாளம் துருவிக் கண்டுபிடித்தபின் வெளிநாட்டில் வேலையிலிருந்து நீக்கப்பட்ட தாகப் புலம் பெயர்ந்தோர் இலக்கியம் இன்று வாக்குமூலம் தந்துள்ளது. ஆனானப்பட்ட எஸ். பொன்னுத்துரையையே நக்கலடிக்கு மளவிற்கு அதன் கருத்துத் தளம் மாறுபட்டுவிட்டது. எஸ். பொ. வின் ‘பனியும் பனையும்’ என்ற சிறுகதைத் தொகுப்பு குறித்து உயிர் நிழல் (ஒக்.2000) இப்படிக் கூறுகிறது. ‘எஸ். பொ. யாழ் மேலாதிக்க மனோபாவத்தில் அன்றில்லாமல் பனையை யாழ் ஒடுக்கப்பட்ட தலித்துகளின் சின்னமாகக் கருதினாரோ தெரியவில்லை’ இப்படி யாகப் புலம்பெயர் இலக்கியம் பனையைச் சாதிமயப்படுத்துகிறது. தொகுப்பின் தலைப்பில் “பனை’ என்ற சொல் வந்ததற்கு இப்படி

Page 82
ryBurreko O 158
யானதொரு ஒப்புவமை. இப்பொழுது ‘வடலி’ என்றொரு சிறு சஞ்சிகை புகலிடத்தில் வீச்சாகப் புறப்பட்டுள்ளது. அதற்கும் எப்படியான வரவேற்பென்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!
இவைகளைத் தவிர எமது அயல்வீட்டில் நிகழ்ந்துகொண்டி ருக்கும் தலித்துகளுக்கு எதிரான அடாவடித்தனங்கள், ஈழத்துப் பஞ்சமர்களுடைய குமுறல்களை வேகப்படுத்துகின்றன. வாழ்க்கையை நெறிப்படுத்தும் வேதங்களின் தாய்வீடு இந்தியா! இந்து, பெளத்த சமயங்களின் பிறந்த மண் மகாத்மா காந்தி, விவேகானந்தர் போன்ற உலகப் பெரியார்களை மானுடத்திற்கு அளித்ததும் அந்நாடே. தலித்துகளான, ஏ. எல். நாராயணனை குடியரசுத் தலைவராகவும், காமராஜ் நாடாரை அந்நாட்டின் அதிகார பீடத் தலைமைகளை உண்டாக்குபவராகவும், அம்பேத்காரை அந்நாட்டின் அரசியல் சட்ட வரைஞராகவும் ஏற்றுக் கொண்டதும் இந்தியாவே!
இருந்தும், தலித்துகளுக்கு அங்கு நடந்துவரும் மிருகத்தனமான வதைகள் இங்குள்ள பஞ்சமரது சிரசைக் கிறுகிறுக்க வைக்கின்றன. தலித்துகளுக்கு மனித உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. மலம் தீத்தப்பட்டுள்ளது. கொடூரமாக எரியூட்டிக் கொல்லப்பட்டிருக் கின்றனர் தலித்துகள். இக்கொடுமைகளைத் தாங்க முடியாது அங்குள்ள தலித்துகளும் கொந்தளிக்கின்றனர். அலை அலையாக ஒன்று சேருகின்றனர். அமைப்புகள் ஈசல்போல் கிளம்புகின்றன. சாதியக் கொடுமைகளை பரம்பல் செய்வதற்காக ஏராளமான பத்திரிகைகள், சஞ்சிகைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதனால், உலகளாவிய தாழ்த்தப்பட்ட மக்களின் இன்றைய நிலைமைகளைப் புரிதல் செய்து பஞ்சமர்கள் உறுமுகின்றனர். ‘நமக்கும் விடியுமா?’ என்ற கோஷம் திண்மமாகின்றது! ஒடுக்கப்பட்டு நசுங்கிக்கொண்டிருக்கும் பஞ்சமர்களது மனோ நிலை இப்படி இருக்கச் சாதி முறையை அழிக்க முடியாது. அது தேச வளமையால் உருவாக்கப்பட்ட முறைமை எனப் படித்த மேலாதிக்க வர்க்கத்தினர் இன்றும் சொல்லிச் சொல்லிப் பஞ்சமரை அச் சுறுத்துகின்றனர். சாதியத்தின் தொடர்ச்சியான இருத்தலை வற்புறுத்துகின்றனர்!
இன விழுமியங்களின் புகழ்பாடும் தமிழனது சாதி முறைமை இத்தகைய தளத்தில் விரிந்துகொண்டு போகும் இக்காலகட்டத்தில் அதற்கான போராட்டங்களைத் தோற்றுவித்துத் தனது வாழ்க்கைப் பயணத்தைச் சாதி ஒழிப்பிற்கெனவே அர்ப்பணித்த தோழர் எம். சி. சுப்பிரமணியத்தின் தொண்டைச் சுமந்த வாழ்வில் சற்றுத் தோயல் பொருத்தமாக இருக்கும். அத்தோடு அவரது நினைவு தினம் ஜனவரி 12ல் என்பதும் குறிப்பிடத்தக்கதே! சாதி அனுட்டானத்தில் கைதேர்ந்த யாழ்ப்பாணச் சமூகத்தை வியாக்கியானம் செய்வதிலும்

159 9 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
அதை மாற்றி அமைப்பதே மேலானதென எம். சி. கோஷித்தார். இதையே தனது வேதமாக மதித்தார். உதாரணங்களைவிட உணர்வுகளே முக்கியமென்பதற்கமையத் தனது சக தோழர்களை புத்துணர்வு களோடு சிந்திக்க வைத்தார்.
அவரால் நேசிக்கப்பட்ட அன்றைய பஞ்சமர்களின் குறைபாடு களைத் தகுந்த முறையில் அளவிடும் தராசாக விளங்கினார். ஆவணங்களில் கையொப்பத்திற்குப் பதிலாகப் பெருவிரல் அடையாளமிடுபவர்கள் பஞ்சமர்கள் மத்தியிலே அநேகம் பேர் இருந்தனர். எனவே, இத்தகைய நிலையிலிருந்தும் அவர்களை மீட்கும் மீட்பராக அவர் இயங்கினார். பஞ்சமர்களது கல்வித் தளத்தை உணர்த்துவதன் மூலமாகத் தனது செயற்பாட்டை நிறைவேற்ற முனைந்தார். பஞ்சமருக்கு அடைக்கப்பட்ட கல்விக் கதவுகளைத் திறக்க வைப்பதற்கான போராளியாக மாறினார்.
எம். சி. லண்டன் மெற்றிக்குலேசன் பரீட்சையில் சித்திபெற்ற கல்விமான். அத்தகைமை அவருக்கு அரச எழுதுவினைஞராகும் தகைமையைச் சித்தித்தது. ஆனால், அந்தச் சுகபோகத்தை அவர் அனுபவிக்கவில்லை. அரச எழுதுவினைஞராக இருந்திருந்தால் அவரை யாழ்ப்பாணச் சமூகம் பெரியதோர் அந்தஸ்திற்கு உயர்த்தி இருக்கும். ஏந்தி எடுத்திருக்கும். ஆனால் அவர் அதில் நிலைக்க வில்லை. தான் சார்ந்த மக்களின் நலனுக்காக உழைப்பதற்குத் தன்னை அர்ப்பணித்தார். மக்களுக்காக வாழ்பவர் என்றும் மக்களால் மதிக்கப் படுபவர் என்பதிலும் கரிசனை கொண்டார்.
எம். சி. யின் கல்விக்கும் சாதி இடக்காகவே இருந்தது. அவரது ஆரம்பக் கல்வியைத் தொடக்கிய சேணிய தெரு மிசனரிப் பாட சாலையில் அவரையும் அவரது பந்துக்கிளையும் மண் நிலத்தில் இருத்திக் கற்பித்தனர். இது எம். சி. யின் தந்தையாருக்குப் பிடித்தமாக இருக்கவில்லை. தனது செலவில் தனது மகனும் ஏனைய பஞ்சம மாணவர்களும் இருந்து படிக்க வசதியாகத் தளபாடங்களை வாங்கிக் கொடுத்தார். எம். சி.யின் இளம் உள்ளம் இத்தாக்கத்தை அன்றே நெஞ்சில் நிறுத்தியது. பிற்காலத்தில் கல்வி சார்ந்த பணிகளுக்கு அவர் முக்கியத்துவம் காட்டியதற்கும் இதுவே உந்துசக்தியாகவும் இருந்திருக்க வேண்டும்.
"வித்தியா தானத்திற்குச் சமமான தானம் ஒன்றுமில்லை அதுவே எல்லாத் தானங்களிலும் சிறந்தது" என பூரிலழரீ ஆறுமுக நாவலர் கூறினார். இக்கருதுகோளோடு யாழ்ப்பாணத்தில் பல பாடசாலைகளை நிறுவினார். ஆனால், இப்பாடசாலைகளில் பஞ்சமருக்குப் படிப்பதற்கு இடம் தரப்படவில்லை.

Page 83
eri sajGBurdo O 16O
சீ டபிள்யூ டபிள்யூ கன்னங்கராவின் இலவசக் கல்வித் திட்டம் கூட, பஞ்சமர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு, உரிய முறையில் பயன்படுத்த முடியாமலிருந்தது. பாடசாலைகளில் கடமை புரிந்த ஆசிரியர்கள் மேலாதிக்கச் சாதியராக இருந்தனர். இவர்கள் பஞ்சம மாணவர்களைக் கல்வியில் ஊக்கப்படுத்தவில்லை. இந்த மாணவர்களது படிக்கும் புத்தகங்கள் களவாடப்பட்டு அழிக்கப் பட்டன. இதனால் பெற்றோர்கள் தமது சொந்தத் தொழில்களைப் பழக்கி அவர்களைப் பால்ய வயதிலேயே தொழிலாளிகளாக்கினர். இதனால் பஞ்சமர்கள் கற்கும் விகிதம் மிகவும் வறிதாகவே இருந்தது. படிப்பை இடையில் கைவிடுபவர்களும் பஞ்சமர்களாகவே இருந்தனர்!
தொழிலைத் துறந்த எம். சி. பஞ்சமருக்குக் கல்வி புகட்டும் சேவையில் ஈடுபட்டார். முதியோருக்குக் கல்வி புகட்டினார். அவரால் தாபிக்கப்பட்ட ஆரியகுளம் சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்கத்தில் வகுப்புகள் நடத்தினார். இப்படிப்பட்ட வகுப்புகளில் படித்தவர்களில் இன்றைய இலக்கிய உச்சமான, எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரையும் (எஸ்பொ) ஒருவர். எம். சி. யின் ரியூசன் குறித்து எஸ். பொ. சொல்லும்போது:
"இங்கிலீசு சொல்லித்தாற சாட்டிலை மனிசன் வாட்டு வாட் டென்று வாட்டுவார். Dictation சோதினை என்றால் உயிர் போகும். ஒவ்வொரு பிழைக்கும் கலப்படமில்லாத சித்திரவதை, பணம் பெற்றதில்லை. சமூகத்தின் இளந்தலைமுறையினர் கல்வியில் முன்னேற வேண்டுமென்ற சமூகப் பிரக்ஞையுடனும் சேவா உணர்ச்சி யுடனும் படிப்பித்தார். ஒருவகைத் தர்மாவேசம்!” என்கிறார் எஸ்.பொ.
எனவே, வித்தியாதானம் செய்ததில் ஆறுமுக நாவலரை விட, எம். சி. யே முக்கியமானவர் எனலாம்! பின்தங்கிய கிராமங்களில் பாடசாலைகளை அமைப்பதற்கு அரசிடம் போதிய நிதி இருக்க வில்லை. இதனால் கிராமங்களில் பாடசாலைகள் குறைவாகவே இருந்தன. ஆனால், நகரங்களில் அரசின் ஏற்பாட்டிலும் பாட சாலைகள் இயங்கிக் கொண்டிருந்தன. நிதி வசதியிருந்த குடும்பங்கள் தமது பிள்ளைகளை நகரப் பாடசாலைகளுக்கு அனுப்பி உயர் கல்வியைக் கொடுத்தனர். இது வறிய அடித்தட்டு மக்களுக்கு முடியாதிருந்தது. இத்தகைய கிராமங்களில் பாடசாலைகளை நிறுவி, கணிசமான மாணவர்கள் அதில் கற்பிக்கப்பட்டால் அத்தகைய பாடசாலைகளுக்கு அரசின் அங்கீகாரம் கிடைக்குமென அரசு முடிவு செய்தது. இதனால் சிங்களக் கிராமங்களும் பயன்பெற்றன. எம். சி. யின் விடாமுயற்சியால் பஞ்சமர்கள் வாழ்ந்த பின்தங்கிய கிராமங்களில் பாடசாலைகள் எழுந்தன. பஞ்சமச் சிறுவர்கள் கல்வியைப் பெற்றனர்.

16 )ே எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
இதுவும் மேட்டுக் குடியினருக்கு அளலைக் கொடுத்தது. இந்தப் பாட சாலைகள் பலவற்றிற்குத் தீயூட்டினர். இதை நெஞ்சில் இருத்தித்தான் நாவலாசிரியர் கே. டானியல் யாழ்ப்பாண நூலகம் தீயிடப்பட்டு நாசமாக்கப்பட்டபொழுது உயர்சாதிகள் மத்தியில் எழுந்த ஆக்ரோசத்தைக் கண்டு, "அன்று தாழ்த்தப்பட்ட சிறுவர்கள் படித்த பாடசாலைகளைக் கொளுத்தியபோது ஏற்படாத ரோசம் இப்பொழுது எப்படி வந்ததென நெற்றியடி கொடுத்தார். இருந்தும் எம். சி. யின் ஆவேசம் தணிந்து விடவில்லை. கொளுத்தக் கொளுத்தப் பீனிக்சுகள் போல பாடசாலைகள் எழுந்தன வேலையற்றிருந்த படித்த இளைஞர்கள் இப்பாடசாலைகளில் ஆசிரியர்களாகக் கடமை புரிந்தனர். இவர்களது பணி ஆரம்பத்தில் சிரமதானமாக இருந்தது. அதற்கான நயத்தைப் பின்னர் பெற்றனர். இவர்களுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனங்கள் கிடைத்தன. ஆசிரியர் கலாசாலைக்குச் சென்று ஆசிரியர் பயிற்சியைப் பெறும் தகைமையையும் பெற்றனர்.
எம். சியின் இத்திட்டம் திறம்படச் செயற்பட உறுதுணையாக இருந்தவர் அமரர் டபிள்யூ தஹநாயக்க யாழ்ப்பாணத்திற்கு 15 பாட சாலைகள் மேலதிகமாகக் கிடைத்தன. பஞ்சமருக்காக அமைக்கப் பட்ட இப்பாடசாலைகளில் தற்பொழுது சகல சாதியினரும் கலந்து படிக்கின்றனர். இதுதான் உண்மையான கல்வி தானம்! இன்று எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரையின் தமிழ்ப் புலமையும், எழுத் தூழியமும் உலகப் பிரசித்தமானது! இதைத் தமிழுலகு மறுக்காது. எஸ்.பொ.வின் இந்த வளர்ச்சியில் எம். சி. க்கும் பங்குண்டு எஸ். பொன்னுத்துரை புனித பத்திரிசியார் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபொழுது, வடமாகாண ஆசிரியர் சங்கம் (NPTA) நடத்திய பரீட்சையில் திறமைச் சித்தியைப் பெற்றார். பாடசாலை நிருவாகம் இவரது விவேகத்தைக் கனம் செய்யும் பொருட்டு, எஸ் பொவை கனிஷ்ட பொதுத் தராதர வகுப்பிற்கு, (SSC) வகுப்பேற்றல் செய்தது. அந்த மாணவப் பருவத்தில் எஸ். பொ. பொதுவுடைமைக் கட்சியின் சித்தாந்தங்களில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். கட்சியின் ஏடான தேசாபிமானி என்ற பத்திரிகையைக் கல்லூரியில் தனது மாணவ நண்பர்களுக்கு விநியோகிக்கத் தொடங்கினார்.
புனித பத்திரிசியார் கல்லூரி கத்தோலிக்க திருச்சபையின் நிருவாகத்தில் இயங்குவது கட்டுப்பாடுகளை இறுக்கமாகக் கடைப் பிடிப்பது எஸ். பொ. வின் இந்த நடவடிக்கையை நிருவாகம் ஏற்றுக் கொள்ளவில்லை. "மதம் மக்களுக்கு அபின்” என லெனின் சொல்லி இருக்கிறார். அவரது கொள்கைகளைப் பரம்பல் செய்யும் தேசாபி மானிப் பத்திரிகையைப் பார்ப்பதற்கே வெறுப்படைபவர்கள். எனவே, எஸ். பொ.வின் திறமையைக் கூடப் பொருட்படுத்தாமல் அவரை கல்லூரியிலிருந்து விலக்கியது. இக்கையறு நிலையில் எஸ்.

Page 84
சந்திரபோஸ், O 162
பொ.விற்கு எம். சி. தான் கை கொடுத்தார். அங்கும் எஸ். பொ. சாதனை புரிந்தார்! அப்போதைய அதிபராக சிவபாதசுந்தரம் என்பவரை எம். சி அணுகி, எஸ். பொ. பரமேஸ்வராக் கல்லூரியில் படிப்பைத் தொடர வழி செய்தார். இக்கல்லூரியில் கற்கும் சந்தர்ப்பம் பெற்ற முதல் பஞ்சம மாணவன் எஸ். பொ. தான்! இரண்டாவது மாணவன் தானென என். கே. ரகுநாதன் சொல்கிறார். தக்க தருணத்தில் எஸ். பொ.விற்கு எம். சி. யின் உதவி கிடைத்திருக் காவிடின் தமிழ் இலக்கிய உலகு சிறந்ததொரு படைப்பாளியை இழந்திருக்கும்! எஸ். பொ. வின் வாழ்வும் வேறு விதமாக அமைந் திருக்கலாம்!
தோழர் எம். சி. சுப்பிரமணியத்தின் சாதியப் போராட்டங்களில்
அவரது பெயரை மிகவும் ஆழப் பதிய வைத்தது வில்லூன்றி மயானச் (1944) சூட்டு வழக்கு. வள்ளியம்மை என்ற பஞ்சமப் பெண்ணின் பிரேதத்தை வில்லூன்றி மயானத்தில் எரிக்க வந்தவர்களை மேட்டுக் குடியினர் துப்பாக்கியால் சுட்டபொழுது முதலி சின்னத்தம்பி என்ற பஞ்சமன் குண்டுபட்டு நிலத்தில் சரிந்தான். இக்கொலையை எம். சி. யால் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. அக்காலத்தில் பொலிஸ், நீதித்துறை ஆகியன ஆதிக்கச் சாதிகளின் கைப்பொம்மையாக இருந்தன! இருந்தும், இந்த மனிதாபி மானமற்ற கொலைக்குத் தீர்வைப் பெற எம். சி.யும் அவரது நண்பர்களும் நீதிமன்றம் சென்றனர். இதை எதிர்பார்க்காத மேட்டுக்குடி வேளாளர் அசந்து போயினர். திரைமறைவில் பல தில்லுமுல்லுகளைச் செய்தனர். பஞ்சமருக்காக வாதாட வழக்குரை ஞர்களுக்குத் தடை போட்டனர். ஆனால் நீதிக்காக வாதாட ஒருவர் முன்வந்தார்!
se "உங்கள் மரங்களை அவர்க்ள் வெட்டினால், அவர்களுக்கு வருமானம் கொடுக்கும் புகையிலைச் செடிகளை நீங்கள் அரிவாளால் வெட்டுங்கள்" -இப்படிக் கூறிப் பஞ்சமர்கள் மத்தியில் போர் வெறியைக் கிளப்பியவர் எஸ். தர்மகுலசிங்கம். இவர் ஒரு சமதர்ம வாதி. இவர்தான் பஞ்சமரின் பக்கம் நின்று அவர்களுக்காக வாதிட்டார். வழக்கு பஞ்சமருக்குச் சார்பாகவே தீர்வைக் கொடுத்தது. எம். சிக்குக் கிடைத்த பெருவெற்றி இது. கொலைஞர் களுக்கு சிறைத் தண்டனை கிடைத்தது. இந்தத் தர்மகுலசிங்கம் இறந்த பொழுது யாழ்ப்பாண மக்கள் "எங்கள் அருந்தலைவர் தர்மகுலசிங்கம் மறைந்தாரே, எங்கெங்கு தேடினிலும் அவரைப் போல் தங்கம் கிடைக்காதே" என நெகிழ்ந்தனர்.
° இந்தச் சம்பவத்திற்குப் பின்னரும் வில்லூன்றி மயானம் பஞ்சமரது பாவனைக்கு விடப்படவில்லை. ஐம்பதுகளில்தான் பஞ்சமர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்கு முன் ஆரியகுளப் பகுதி

163 0 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
யிலிருந்து ஒரு பிரேதம் சுடக் கொண்டு வரப்பட்டபொழுது, அதையும் வில்லூன்றி மயானத்திற்குக் கொண்டு வந்து விடுவார் களோவென்ற அச்சத்தில் பொலிஸ் உதவி நாடப்பட்டது. கொட்டடிச்சந்தி, கடற்கரை வீதிச்சந்தி, மயானம் என்பவற்றி லெல்லாம் பொலிஸ் படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். ஆனால் பிரேதம் வேறு மயானத்திற்குக் கொண்டுபோகப்பட்டது. கொட்டடி யைச் சேர்ந்த திரு. சோ. இராசரெத்தினம் செட்டியாரின் நிருவாகத்தில் வில்லூன்றி மயானம் இருந்தபொழுது, கொட்டடியைச் சேர்ந்த பொக்கன் தம்பிப்பிள்ளை என்பவர் இறந்தார். ஊரவரின் வேண்டுகோள் ஏற்கப்பட்டு இவரது பிரேதம் இம்மயானத்தில் எரிக்க அனுமதி வழங்கப்பட்டது.
பின்னர், இதே மயானத்தில் (1989 - 01 - 12) எம். சி.யின் பிரேதமும் வெந்தது!
அன்றைய காலகட்டத்தில் எம். சியால் விடிவு காணப்பட வேண்டிய ஏராளமான பொதுப் பிரச்சினைகள் நிலவின. பொதுக் கிணறுகளில் பஞ்சமர்கள் நீரள்ள முடியாது. தேநீர்க் கடைகளில் உட்கார்ந்து போசனம் அருந்தவோ தேநீர் பருகவோ முடியாது. இந்தப் பரிதாப நிலையைக் கண்டு மனம் வெதும்பிய தோழர் மு. கார்த்தி கேசன் "குறள் படிக்கும் தமிழனுக்கு கறள் பேணிகளில் தேநீர்!’ என வெகுண்டார். பஞ்சமர்கள் பாவிக்கும் பேணிகள் கிருமிகள் உண்டாகக்கூடிய வகையில் அழுக்கானவையாக இருந்தன. யாழ்ப் பாண நகர மத்தியில் இருக்கும் சத்திரக் கிணற்றில் பஞ்சமர்கள் நீரள்ள முடியாது. ஏழைத் தொழிலாளிகள் கட்டப்பட்டிருந்த வக்கில் கொண்டு வரும் மாடுகளை நீர் பருகச் செய்து, தாம் தண்ணிர் பருகுவதற்கு எந்த ஆசீர்வதிக்கப்பட்ட 4 தீட்டற்ற திருக்கரம் வருமென காத்திருப்பர். இன்னும், ஆண்டவனின் சன்னிதிகளில் நந்தனார் குருபூசை நாளன்று கூட பஞ்சமர்கள் உட்சென்று, "சற்றே விலகும் பிள்ளாய்” எனப் பஞ்சமனான நந்தனை எற்றுக்கொண்ட ஆதி சிவனை வழிபட அனுமதி இல்லை. இவைகளை வென்றெடுக்க எம். சி. யின் மனம் கொதித்தது. புரட்சி விதைகள் ஊன்றப்பட்ட பஞ்சம வாலிபர்கள் அங்குமிங்குமாகத் தேநீர்க் கடைகளுக்குள் புகுந்து கட்டுப்பாடுகளை உடைக்க எத்தனித்தனர். இதனால் கைகலப்புகளும் ஏற்பட்டன. கொலைகளும் விழுந்தன.
ஆனால், இவ்விஷயத்தை யாழ்ப்பாண மேயர், மறைந்த அல்பிரட் துரையப் பாவுக்கு எம். சி. நயமாக எடுத்துரைத்து இதில் மேயரை பிரவேசிக்க வைத்தார். மேயரின் தலையீட்டால் யாழ் நகரில் தேநீர்க் கடைகள் சில, பஞ்சமருக்குத் திறந்து விடப்பட்டன. ஆனால், கிராமங்கள் மரபைக் காத்து வந்தன. பஞ்சம போராளிகளின் இடைவிடாத போராட்டங்களால் நாளடைவில்

Page 85
சந்திரபோஸ் O 164
அவைகளும் தமது கண்களைத் திறந்தன. இதில் கே. டானியல், டொமினிக் ஜீவா, கணபதி இராசையா (அரசடி) ஆகியோரது பங்களிப்பு சிலாகித்துச் சொல்லக் கூடியது.
அங்குமிங்குமாக எரிந்தும் நூர்ந்தும் கொண்டிருந்த சாதிய எதிர்ப்புப் போராட்டங்களை ஒருங்கிணைத்து ஒரே இயக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு எம். சி. முயற்சித்தார். வடமராட்சி சமூக சேவா சங்கம், ஆரியகுளம் சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்கம், திருவள்ளுவர் மகாசபை ஆகியவை பஞ்சமர்களது வழி நடத்தலில் இயங்கி வந்த பஞ்சமர் அமைப்புகளாகும். இவைகளின் ஒருங்கிணைப்பே (1942) சிறுபான்மைத் தமிழர் மகாசபை. 1957- ல் எம். சி. சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் தலைவரானார். அவரது தலைமையின் கீழ் இயங்கிய காலமே இதன் பொற்காலமெனலாம்! திரு. ஈ. வி. செல்வரத்தினம் இலங்கையன்), கவிஞர் பசுபதி ஆகியோர் செயலாளர்களாக எம். சி. க்குத் துணை நின்றனர்.
காந்தியத்திற்குள் விழுந்து, எழுந்துதான் இன்று பலர் பொதுப்பணிக்கு வந்துள்ளனர். இதற்கு தோழர் எம். சி. சுப்பிரமணியமும் விதிவிலக்கல்ல! இவர் குல்லா அணிந்து காந்தியவாதியாகக் கொஞ்ச காலம் தன்னை இனங்காட்டியவர். ஆனால், அவர் சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு காந்தியம் பரிகாரமாகாது எனத் தெளிந்து மார்க்ஸியவாதியானார். 1943-ல் இயக்கம் கண்ட கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். இவரது சரித்திரத்தைத் துலங்கவைத்ததில் இக்கட்சிக்கு பெரும் பங்குண்டு. தோழர்கள் மு. கார்த்திகேசன், பீற்றர் கெனமன், எஸ். ஏ. விக்ரமசிங்கா, வைத்திலிங்கம், பொன். கந்தையா ஆகியோரது நெருங்கிய நட்பும் இவருக்குத் தேறியது.
தோழர் கார்த்திகேசனை யாழ்ப்பாண அமைப்பாளராக நியமித்த கம்யூனிஸ்ட் கட்சி எம். சி.யை வடமராட்சி அமைப்பாளராக்கியது. நகரச் சூழலில் பயணித்த எம். சி.க்கு கிராம வாழ்க்கையை அறிதல் செய்வதற்கு இந்த நியமனம் பெரும் வாய்ப்பைக் கணிய வைத்தது. எம். சியோடு சேர்ந்து கே. டானியல், டொமினிக் ஜீவா ஆகிய எழுத்தாளர்களும் கிராமங்களுக்கு இழுபட்டனர். இதனால் பெற்ற பட்டறிவுதான் பிற்காலத்தில் கிராமத்தவர்களைத் தட்டி எழுப்பக்கூடிய படைப்பாளிகளாக இவ்விருவரையும் உண்டாக்கியது.
பஞ்சம சமூகங்களுக்குத் துடிப்பான முழுநேரத் தலைவனொருவன் கிடைத்ததை உள்வாங்க முடியாத ஆதிக்க சாதிகள் எம். சி.யைக் கொலை செய்வதற்கும் முயற்சித்ததுண்டு!

165 9 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
சங்கானை, நிச்சாமம், மந்துவில் போன்ற கிராமங்களில் வெடிக்கும் சாதிக் கலவரங்கள் குறித்தும், பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காகவும் எம். சி. பயணிப்பதுண்டு. இப்படி ஒருநாள் வடமராட்சிக்குச் சென்று திரும்புகையில் அவர் பயணித்துக் கொண்டிருந்த காருக்குக் கைக்குண்டொன்று வீசப்பட்டது. குறி தவறிக் காரின் போனற்றில் விழுந்து வெடித்தது. குண்டைச் சற்று வீச்சாக எறிந்திருந்தால் அது கண்ணாடியில் பட்டு வெடித்திருக்கும். காருக்குள் இருந்தவர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள். எம். சிக்கு அருகில் முன் ஆசனத்தில் அமர்ந்திருந்தவர் இன்றைய மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா. கொலைஞர்களின் திட்டம் நிறைவேறி இருந்தால், நீண்ட 38 ஆண்டுகளாக, தடங்கலில்லாது மல்லிகை சஞ்சிகையை வெளியிட்ட நாடு ஈழம் என்ற சாதனையை இந்நாடு இழந்திருக்கும். அத்தோடு, தொண்டிற்கு இலக்கணமாக வாழ்ந்த எம். சி. யின் உயிரும் காவு போயிருக்கும்.
தனது கொள்கைகளைப் பின்பற்றுபவர்களை தன்னோடு, தேடி அரவணைப்பதில் எம். g. சமர்த்தர். இந்த அணுகுமுறைதான், சர்வதேசரீதியில் கொம்யூனிஸ்ட் கட்சி (1960களில்) பிளவுண்டபொழுது, தனது முகாமிலில்லாது, மாற்று முகாமிலிருந்த கே. டானியல், எஸ். ரி. நாகரத்தினம் ஆகியோரோடும் எம். சி.யைத் தோழமை கொண்டிருக்க வைத்தது. அவர்கள் சீன அணி. இவர் மொஸ்கோ அணி. முகாங்களைக் கணக்கிடாது, எந்த இலக்கை நோக்கிப் போராடுகின்றனர் என்பதையே கவனித்தார். "ஊர் கூடித் தேர் இழுப்பதுதான் வெற்றிக்கு அடிக்கல் என நினைத்தார். அன்றைய தாழ்த்தப்பட்ட மக்களின் முக்கிய பிரச்சினைகளான ஆலயப் பிரவேசம், தேநீர்க் கடைப் பிரவேசம் என்பவற்றில் அவர்களோடு சேர்ந்து தானும் வடம் பிடித்தார். மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் (1968- ல்) போராட்டத்தில் மலையொன்றுடன் மோதினார். கணக்கியல் பேராசிரியரான சி. சுந்தரலிங்கம் பஞ்சமரின் ஆலயப் பிரவேசத்தை எதிர்த்து நின்றார். ஆனால் போராட்டத்தில் பஞ்சமரே வென்றனர்!
தமது வாக்குரிமை பறிக்கப்பட்டது யாழ்ப்பாணத்தாரின் ஆதரவுடன்தானென இன்னமும் D68) GoNU), 36 மக்கள் வெதும்புகின்றனர். இதே வகையில் யாழ்ப்பாணத்து பஞ்சமரையும் வாக்குரிமையற்றவர்களாக்க மேல்தட்டு வர்க்கம் வியூகம் வகுத்தது. பஞ்சமருக்குப் புள்ளடியிடப் போதிய அறிவில்லையென அதிகாரிகளுக்குப் பரிந்துரைத்தது. ஆனால், டொனமூர் ஆணைக்குழுவுக்கு எம். சி. நிலைமையைத்

Page 86
சந்திரபோல் O 166
தெளிவுபடுத்தி, இம்மக்களுக்கு வாக்குரிமை இருந்தால்தான் அவர்களது அடிமட்ட நிலையிலிருந்தும், அவல வாழ்விலிருந்தும் அவர்களால் மிதக்க முடியுமென வாதிட்டார்.
ஆணைக்குழு ஆலோசனையை ஏற்றது. இதன் பின்னர்தான் பஞ்சமர்கள் வேட்பாளர்களாகவும் மிதந்தனர். கிராமசபைகள், நகர சபைகள் என்பனவற்றில் உறுப்பினராகினர். இதே திசைவழி - இன்று செல்லன் கந்தையன் என்பவரை யாழ்ப்பாண நகர பிதா வாக்கியது.
1970-ம் ஆண்டில் தோழர் எம். சி. சுப்பிரமணியம் இலங்கைப் பாராளுமன்றப் பிரதிநிதியானார். அன்றைய சிறிமாவோ பண்டார நாயக்காவின் கூட்டு அரசாங்கம் எம். சி. க்கு கெளரவத்தைக் கொடுத்து இலங்கை தாழ்த்தப்பட்ட தமிழரின் முன்னேற்றத்தில் கரிசனை காட்டியது. இந்த எம். பி. பதவியைக் குறித்து எம். சி. கூறும்பொழுது, "எனக்கு வழங்கப்பட்ட எம். பி. பதவி ஒடுக்கப்பட்ட தமிழ்மக்கள் தம் உரிமைகளுக்காக நடத்திய போராட்டத்திற்குக் கிடைத்த பரிசு” என தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டங்களை மேன்மைப்படுத்தினார். தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கிடைத்த இந்த உறுப்புரிமை உடுப்பிட்டி ரி. இராஜலிங்கத்தோடு தடைப்பட்டது, இன்றைய பஞ்சமருக்கு ஆதங்கத்தைத் தருகின்றது. தொடர்ந்திருந்தால் பஞ்சமருக்கு அதிகமான பயன்களை நுகரக்கூடியதாக இருந் திருக்கும்! அக்கறையுள்ள பெரியோருக்கு இது சமர்ப்பணம்! தனக்குக் கிடைத்த இப்பதவியைத் தன்னை அலங்கரித்து அழகுபடுத்தும் ஒரு சாதனமாக எம். சி. கொள்ளாமல், அதையொரு தொண்டின் கருவியாகப் பயன்படுத்தினார். பஞ்சமச் சாதிகள் சார்ந்த கல்வி மான்கள் கல்வி அதிகாரிகளாக நியமனம் பெற்றனர். சமாதான நீதிவான்கள் உதயமாகினர். இதனால், பஞ்சம சாதிகள் தமது வாழ் விலும் மினுக்கம் கண்டனர். சிந்தனை மலர்ச்சி பெற்றனர். அவர் களது சிந்தனைத் தளம் பர்வான சிந்தனைகளை நோக்கி நகர்ந்தது
வர்க்க சிந்தன்ைகளில் நாட்டம் கொண்ட எம். சி. பஞ்சம தொழிலாளர் மத்தியில் வர்க்க இணைப்பை உண்டுபண்ணும் பொருட்டு தொழிற்சங்கங்களை உண்டாக்கினார். இந்த வகையில் அமைக்கப்பட்டதுதான் கள்ளிறக்கும் தொழிலாளர் சங்கம். இதனால் தமது சாதிக்குள்ளேயே தொழிலாளர்கள் சுரண்டப்படுவது தடுக்கப் பட்டது. இச்சங்கத்தின் செயலாளராக இருந்து எம். சி. ஆற்றிய பணிகள் என்றுமே மறக்க முடியாதவை! இதன்மூலம் பெற்ற ஊட்டம்தான் இன்று தெங்கு பனம் பொருள் கூட்டுத்தாபனம் தொழிலாளர்களை சூறையாடாதிருக்கத் துணை நிற்கிறது. எம். சி. யின் ஆலோசனைகள் பனை அபிவிருத்திச் சபைக்கு நிறையவே உதவி இருக்கின்றன.

167 9 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
அமரர் எம். சி. சுப்பிரமணியம் 27-09 -197 -ல் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். முத்தர் கணபதிப்பிள்ளை, கண்ணாத்தாள் தம்பதியின் கனிஷ்ட புத்திரர். இவருக்கு இரு சகோதரிகள். தனது மூன்றாவது அகவையில் அன்னையை எம். சி. இழந்தார். சகோதரியான விசாலாட்சி ஐயம்பிள்ளையின் அரவணைப்பில் வளர்த்தெடுக்கப் பட்டார். திருமதி விசாலாட்சி ஐயம்பிள்ளைக்குப் பிள்ளைகள் இல்லாததால், சகோதரனுக்குப் பெற்ற தாயின் உணர்வலைகள் ஏற்படாதவாறு, மிகுந்த வாரப்பாடோடு வளர்த்தெடுத்து, எம். சி. யை மற்றவர்கள் பின்பற்றி நடக்கக்கூடிய பெருந்தலைவராக்க முடிந்தது. எம். சி. க்குத் திருமணம் இலட்சுமி செல்லையாவோடு 1944- தையில் நிகழ்ந்தது. தனது கணவனின் மணமறிந்து இவர் சேவித்த தன்மையும் எம். சி. வாழ்வில் உச்சங்களைத் தொட உதவியதெனலாம்.
நிறைவாக, எம். சி. அடிமட்ட மக்களின் எழுச்சிக்குத் தனது சுக போகங்களை அர்ப்பணித்தும், இன்றுவரை அவருக்கு ஒரு நினைவுச் சின்னம் யாழ்ப்பாணத்தில் இல்லாதிருப்பது, பஞ்சம சமூகங்கள் கூட எம். சி. யை மறந்துவிட்டதோவென ஐயப்பட வைக்கிறது என்றாலும், அவரது மகன் எஸ். சந்திரபோஸ் தொலைநோக்கோடு "எம். சி. ஒரு சமூக விடுதலைப் போராளி” என்ற கட்டுரைத் தொகுதி நூலை வெளி யிட்டிருப்பது தந்தை பெய்த உணர்வுத் துளிகள் மகனில் இன்னமும் வற்றவில்லையென்பதை நினைக்க வைக்கிறது. அது மட்டுமல்லாது, தானாடாவிட்டாலும் தன் சதை ஆடுமென்பதை வலுப்படுத்துகிறது! : نة
எம். சி. ஐயா! துப்பாக்கி நிழலில் சாதிகள் இப்போ மறைந்து கிடக்கின்றன - மரித்துவிடவில்லை. துப்பாக்கியால் மட்டும் ஒரு சமூக நியதியை, வாழையடி வாழையாக/வரும் சமூக வழக்கத்தை நிரந்தரமாக ஒழித்துவிட முடியாது எனச் சாதிமான்கள் பஞ்சமரை அச்சுறுத்துகின்றனர். எனவே, பஞ்சமரின் இந்நிலையில் உமது தொண்டு அவர்களுக்குத் தேவை! உம்மை மனதார விரும்பி அழைக் கின்றோம். வருவீரா!

Page 87
க. செல்லத்துரை
எம்.சி. எனப் பெயர் கொண்ட ஒரு மனிதன்
சாதியின் பெயரால் தமிழர்களில் ஒரு சாராரை அடக்கி ஒடுக்கி உண்ண உடுக்க சுதந்திரமாக முன்னேற விடாது இம்சித்த காலமது. எம். சி. தனது பாடசாலை வாழ்விலேயே வேறுபாடு காட்டிய வேதனையால் குமுறிக் கொண்டிருந்தவர். ஒடுக்கப்பட்ட மக்களின் விடு தலைக்காகத் தான் பார்த்த உத்தியோகத்தையே உதறித் தள்ளிவிட்டுச் சேவையில் இறங்கினார். சமரச சமத்துவ நீதிக்காகத் தூரதரிசன நோக்கோடு பாடுபட்டார்.
வில்லூன்றிச் சுடலையில் வேறுபாடுகாட்டி சுட்டுக் கொல்லப் பட்ட தியாகி முதலி சின்னத்தம்பியின் அவலச் சாவினால் விடுதலை வேட்கை கொண்ட எம். சி. அக்கொலை வழக்கை முன்னின்று பேசி வெற்றியும் கண்டார். தோழர் தர்மகுலசிங்கம், செனற்றர் முதலியார் இராசேந்திரம் ஆகியோர் ஆற்றிய பணி அளப்பரியது. இதனால் எழுச்சி கொண்ட சிறுபான்மை பெரியார் களையும், பலாலி வீதியிலுள்ள செல்லையா, சண்முகம் போன்ற வேறு பெரியார்களையும், இளைஞர்களையும் இணைத்து 'சன்மார்க்க இளைஞர் வாலிப சங்கம்’ என்னும் சபையை ஆக்கி அதன் உதவியோடு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கலானார். பல பாகங்களிலிருந்து முதலியார் இராசேந்திரா, தெல்லிப்பளை யோவேல் போல், வதிரி சூரனார்,

169 9 எம்.சி. ஒரு சமுக விடுதலைப் போராளி
ஞா. நல்லையா, கே. கணபதிப்பிள்ளை, டீ. யேம்ஸ் மூப்பர், யேக்கப் காந்தி, ஜி. எம். பொன்னுத்துரை, ஆ. ம. செல்லத்துரை, கே. எம். முருகேசு, கே. பசுபதி, கே. மாரிமுத்து, சித்தங்கேணி நடேசு, காளவன் நடேசு போன்ற வேறு பல பெரியார்களும் சேர்ந்து ஒடுக்கப்பட்ட ஊழியர் சங்கம்’, ‘சன்மார்க்க வாலிப சங்கம்’, ‘வள்ளுவர் மகாசபை என்பவற்றை இணைத்து இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையை ஆக்கி இயக்கிய முன் னோடிகள் எனலாம். எம். சி, நல்லையா, ஆ. ம. செல்லத்துரை, முருகேசு, பசுபதி போன்றோர் சிறுபான்மை மக்கள் மத்தியில் பிரசாரங்களை வலுப்படுத்தினர். பருத்தித்துறைத் தொகுதியில் இடதுசாரித் தலைவரான பொன். கந்தையா 1948, 1952 ஆகிய ஆண்டுகளில் போட்டியிட்டுத் தோற்றபோதும் மேலும் இளைஞர் களைத் தன் கொள்கையில் இணைத்த காலமது.
எம். சி. ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கு இந்திய விடுதலை இயக்கத்தில் கால் வைத்தவர்; எமது மக்களின் விடுதலைக்கு மார்க்ஸியப் பாதையே சரியானதென உணர்ந்து, அப்பாதையில் இணைந்து செயற்படத் தொடங்கினார். இவ்வேளையில் பருத்தித் துறையில் இடதுசாரியில் போட்டியிட்ட தோழர் பொன். கந்தையா, அ. வைத்திலிங்கம், எம். கார்த்திகேசன், ஐ ஆர். அரியரத்தினம், இராம சாமி ஐயர், வீ பொன்னம்பலம் போன்ற முற்போக்குக்கட்சியினர் எம். சி. அவர்களுக்குக் கைகொடுத்தனர். தமது இடதுசாரிக் கொள்கை களைத் தளமாக வளர்த்தனர். முற்போக்குச் சித்தாந்தங்களை இளைஞர்களுக்குப் புகுத்தி எம். சி. யின் தலைமையைப் பலப்படுத் தினர். முற்போக்குச் சக்தி கொண்ட வடமராட்சி மக்கள் தமிழ்ப் பகுதியில் ஒரேயொரு கம்யூனிசப் பிரதிநிதியாக தோழர் பொன். கந்தை யாவ்ைத் தெரிந்து எழுச்சியை ஏற்படுத்தினார். பருத்தித்துறைத்தொகுதி வாரியாக துன்னாலை எஸ் செல்லையா. கே தங்கவடிவேலு, எஸ் போக
மு. செல்லத்தம்பி, மு. செல்லப்பாக்கியம், கே தங்கமணி, தெணியான், வ. சின்னத்தம்பி, ஆ, வன்னியசிங்கம் போன்ற இன்னும் பல முற் போக்குக் கொள்கையினரும் சேர்ந்து பொன். கந்தையாவின் வெற்றிக் காக எம். சி. அவர்களின் பாதையில் நின்று செயற்பட்டனர். இவர் களனைவரும் அகில இலங்கைச் சிறுபான்மை தமிழர் மகாசபையை வடமராட்சியில் பலப்படுத்தி மகாசபையின் வரலாற்றில் முக்கிய தளம் பதித்தனர். எம். சி. யின் பாதையில் நின்ற கே. டானியல், டொமினிக் ஜீவா, பசுபதி, இளங்கீரன். எஸ். பொ, எஸ். அகஸ்தியர், தெணியான், என். கே. ரகுநாதன் போன்றோர் தம் முற்போக்கு எழுத்துக்களாலும், பேச்சாலும், ஆராய்ச்சிக் கட்டுரைகளாலும், கவிஞர் செல்லையா, கவிஞர் பசுபதி, கவிஞர் ஐயாத்துரை, புலவர் வல்லிபுரம் போன்றோர் தம் கவிதைத் திறத்தாலும், நடிகமணி வி.

Page 88
erbág(8ufredo O 17Ο
வைரமுத்து, அண்ணாச்சாமி ஆசிரியர், கே. தங்கமணி, கே. நற்குணம் போன்றோர் நாடகமேடைப் பாட்டுக்கள் மூலமும், அரசடி இராசையா, ஆ தில்லையம்பலம், ஆரியகுளம் கதிர்காமு, சூ, ஞானப் பிரகாசம், சி. தியாகராசா ஏரம்பு போன்ற வீரர்கள் கிராமப்புற இனமோதல்கள், வான் கலாட்டாக்களுக்கு முத்திரைச் சந்தியிலும், ஆரியகுளச் சந்தியிலும், யாழ் பஸ் ஸ்டாண்டிலும், அச்சுவேலியிலும் வைத்துப் பதில் கொடுத்தனர். இதனால் வேகம் கொண்டிருந்த இனக்கலவர தாக்கங்கள் நெகிழ்ந்தன எனலாம்.
எம். சி. ஆலோசனை ந்டாத்தவும், கூட்டங்கள் கூட்டவும் வதிரி கடை முதலாளிமாரும், அரசடி குழந்தை அண்ணர் அவர்களும் பலாலி றோட்டு சண்முகம் அவர்களும் இடம்தந்து பெரும் பங்கு வகித்தார்கள். மகாசபை பல வழிகளில் எம். சி. யின் தலைமையில் சிறுபான்மை மக்களைத் தட்டி எழுப்பி முன்னேற்றுவதைக் கண்டு சகிக்காத பெரும்பான்மைக் கட்சித்தலைவர்கள் வழமையான தமது பிரித்தாளும் சாதுரியத்தைக் கைக்கொண்டு ஞா. நல்லையா அவர்களை எம். சிக்கு மாறாகப் போட்டு செனற்றர் ஆக்கியும், கே எம். முருகேசு அவர்களை தமிழரசுக் கட்சியின் உபதலைவராகவும் போட்டுத் தம்பக்கம் இழுத்தனர். ஆ கணபதிநாதன், ஆ ம. செல்லத் துரை, யே. எஸ். சுந்தரம், சாவகச்சேரி கே நடராசா, இராமலிங்கம் ஜே. பி, கு. மாரிமுத்து போன்றோர் பிரிந்து சென்றவர்களாகும்.
எம். சியோ மகாசபையின் 14ஆம் ஆண்டு மகாநாட்டில் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார். அவர் இ. வே. செல்வரட்ணம், கே. பசுபதி ஆகியோரை இணைச் செயலாளர்களாகவும், சி. இ. குணரட்ணம் அவர்களைப் பொருளாளராகவும் கொண்டு வலுவான நிர்வாகசபை ஒன்றையும் அமைத்து வேகமாகச் செயற்படத் தொடங்கினார். மகாசபையின் கிளைகளை அமைத்தார். யாழ்ப் பாணத்தில் பல பாகங்களிலிருந்தும் பி. ஜே அன்ரனி, எம். வடிவேலன், கே. திருநாவுக்கரசு, தெல்லிப்பளை ஆறுமுகம், கே. கே. எஸ். செல்வராசா, பண்டத்தரிப்பு செல்லையா, கே. நல்லதம்பி, கே. தவசிப்பிள்ளை, இராசகோபால், வேலணை ஆறுமுகம் ஜே. பி., கைதடி நடராசா, எம். பொன்னுத்துரை, பத்தைமேனி பொன்னுத்துரை போன்ற பலரும், வடமராட்சி மகாசபை உறுப்பினர்களும் உணர்ச்சி பொங்க கோஷங்கள் எழுப்பி, ஊர்
இக்காலம் உண்மையில் மகாசபையில் ஓர் பொற்காலம் எனலாம். இவர்களே ஆலயப் பிரவேசம், தேநீர்க் கடை பிரவேசம், பாடசாலைகள், பொதுநிலையங்களிலுள்ள தடைகளை நீக்கப் பாடுபட்ட இளந்தலை முறையினர் எனலாம். நான் படித்துவிட்டு வேலை தேடிய காலமது.
1955ஆம் ஆண்டு எம். சி, நல்லையா, ஆ ம. செல்லத்துரை, எம்.

71 9 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
கே. முருகேசு ஆகியோர் எனது கரணவாய் மண்டான் கிராமத்துக்கு வந்து ஒரு கூட்டம் வைத்தனர். மக்கள் ஆரவாரத்தைக் கண்ட எம். சி. உடனடியாக அடுத்த மகாசபை நிர்வாக சபையில் என்னை ஒர் உறுப்பினராக்கிக் கொண்டார். நானும் அவர் பாதையில் செயற்பட ஆரம்பித்தேன். அடிக்கடி என்னிடம் சைக்கிளிலே வந்து தொண்டை மானாறு கிருஷ்ணபிள்ளை ஆசிரியரைத் தொட்டு, கம்பர்மலை கே தங்கவடிவேலு, தோழர் தலைவர் தங்கராசா, கோபால் துரைசிங்கம், எஸ். யோகசாமி முதல் சமரபாகு, வதிரி, அல்வாய், கூவில், வராத்துப் பளை ஈறாகவுள்ள தேர்ழர்கள், மகாசபை அங்கத்தவர், கள்ளிறக்கும் தொழிலாளர் வரை சந்தித்து தன் சேவையில் உறங்காத ஜீவன் எம் சி சேவையின் வடிவமே எம். சி. அவரின் தூய உள்ளம், சேவையின் பாலுள்ள இலட்சியத் தாகம், விடுதலைப் பற்று யாரிடமும் காண முடியாதவை. எங்கே சாதிக்கொடுமைகள் ஏற்பட்டனவோ அங்கே எம். சி.யைக் காணலாம். மந்துவில் மீசாலை தியாகி காட்டுவாடி இரத்தினத்தை வெட்டிக் கொன்றபோதும், முகமாலையில் மரத்தால் இறங்கவிடாமல் வெட்டியபோதும், நிச்சாமம் கலவரத்தின்போதும் நேரில் சென்று வேறுபல இனக்கலவரங்களிலும் முகங்கொடுத்து கலங்கிய மக்களுக்கு பல வழிகளிலும் கைகொடுத்த சம்பவங்கள் பற்பலவாகும்.
வடமராட்சியில் கரவெட்டி கிழக்கு, கரவெட்டி மேற்கு, நெல்லியடி இராசகிராமம் போன்ற இடங்களில் வீடெரிப்புக் கலவரங்களின்போது உடனிருந்து அவர் பணிகளைக் கண்டவன் என்றவகையில் பணி செய்வதற்கு எம். சி.க்கு நிகர் எம். சி. யே என்பேன். பொலிசுக்கும், கோர்ட்டுகளுக்கும் வந்து வழக்குகளிலும் தலையிட்டு விடுதலைக்கு வழிகோலிய போராளி எம். சி. தோழர் பொன். கந்தையாவின் வெற்றி சிறுபான்மை மக்களின் வாழ்வில் ‘ஓர் ஒளிக்கீற்று’ எனலாம். அவர் தன் பாராளுமன்ற கன்னிப் பேச்சிலே, வடபகுதியில் ஒடுக்கப்பட்டோர் அனுபவிக்கும் கஷ்டங்களை விளக்கி, சிறுபான்மையினரை மேம்படுத்தும் "சட்டத்தையும் பாராளு மன்றத்தில் நிறைவேற்றினார். 56இல் கல்வி மந்திரியாகவிருந்த கலாநிதி தகநாயக்கா அவர்களை எம்சிக்கு அறிமுகம் செய்து சிறுபான்மைத் தமிழரின் கல்வி, பொருளாதார முன்னேற்றத்துக்கு வித்திட்ட பெருமை தோழர் பொன். கந்தையாவையே சாரும். எதிர்காலத்தில் எம். சி. அவர்கள் பாராளுமன்றப் பிரதிநிதியாக நியமிக்கப்பட வித்திட்டவரும் அவரே!
எம். சி. அவர்கள் கல்வி மந்திரி கலாநிதி தகநாயக்கா அவர்களுடன் தொடர்பு கொண்டு, ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி வாசனை பெறவும், 500க்கு அதிகமான இளைஞர்கள் தொழில்

Page 89
obóg68uwdo O 172
வாய்ப்புப் பெறவும், பல ஆசிரியர்கள் பயிற்சி பெற்று அதிபர் களாகவும் வழி செய்தார். பலதுறைகளிலும் தொழில் வாய்ப்புக் களையும், இடமாற்றங்களையும், வேலைத்தளங்களிலே எம்மவர்க் கிருந்த தாக்கங்களையும் தளர்த்தி பாதுகாப்புகள் தந்தார். நிலப்பிரபுத் துவமே கல்வி, பொருளாதார, சமூக வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது என்பதைக் கண்டு அரச காணிகளைப் பெற்று நம்மவர் கூட்டாகச் சென்று குடியேற வழிசமைத்தார்.
தோழர் பொன். கந்தையாவின் விசுவாசத்துக்குரியவன் என்ற காரணத்தினால் உள்நாட்டமைச்சரைக் காணச்சென்றபோது பலாலி வீதி க இராசையா அவர்களின் காரில் சென்ற எம். சி, நல்லையா, அரசடி இராசையா, யோவேல் போல், ஜே. டீ ஆசீர்வாதம் ஆகியோ ருடன் மந்திரியைக் கண்டபோது நானும் உடனிருந்த வாய்ப்பை நினைக்க மகிழ்ச்சி தருகிறது. கொழும்பிலுள்ள முன்னோடிகளும் மகாசபையின் வளர்ச்சியில் பங்குபற்றினர் என்பது காணக்கூடியதாக இருந்தது. எஸ். செல்லையா இணைப்பாளராகவும், ஆ குலேந்திரம் தலைவராகவும், மு. செல்லபாக்கியமும் நானும் இணைச் செயலாள ராகவும் இருந்து கிளையைச் சிறப்பாக இயக்கி எம். சி. அவர்களின் அன்புக்குரியவனாக இருந்து பலவழிகளிலும் பலருக்கு உதவி செய்த திருப்தியும் எனக்குண்டு. பலருக்கு சமாதான நீதிவான் பதவிகளைப் பெற்றுக் கொடுத்து எம்மவர் கெளரவத்தை மேம்படுத்திய எம். சி, பல இடங்களில் கல்லடியும், சொல்லடியும், பொல்லடியும் பட்ட பெரியார். இவர் வடமராட்சியிலே ஒரு கூட்டத்தில் பங்குபற்றிவிட்டு, மக்கள் அன்பளித்த அவரது காரிலே சென்றபோது சாதிவெறி கொண்ட விஷமிகள் வல்லைவெளியிலே அவர் காருக்கு குண்டெ றிந்தனர். ஏழைமக்களுக்குதவிய தர்மம் அவரை எதுவித காயமுமின்றிக் காப்பாற்றியது. உடன் சென்றோர் சிறு காயங்களுடன் தப்பினர். ரெயில் றோட்டருகால் எம். சி. வரும்போது காரினில் அடிக்க வந்த எதிரியை நாயன்மார்கட்டுப் பாலசிங்கமும் நாங்கள் சிலரும் தேடிப் பிடித்து அவரிடம் ஒப்படைத்தபோது அவனை மன்னித்து எங்களை ஏசிக்கலைத்த சம்பவத்தை நினைக்கும்போது, தனக்கு எதிரிகள் என்று எவரும் இல்லை என்ற தூய நம்பிக்கையும், பொறுமையும் அவரிடம் எடுத்துக்காட்டாக உள்ளன.
அவர்தம் மனைவி இலச்சுமி அம்மையாரும், அக்கா விசாலாட்சி அன்னையும் அவர் சேவைக்கு உரமிட்ட தேவதைகள். அவர்தம் இலட்சியத்தில் அணுவேனும் பிசகாமல், சிறுபான்மைத் தமிழர் உயர்வே மூச்சாகக் கொண்டு மகாசபையின் ஆயுட்காலத் தலைவராகவிருந்து பணிசெய்த மாமனிதர்.
சர்வதேச ரீதியாக கம்யூனிஸ்ட் அணி பிளவுபட்டபோதும், வல்லைமுனி என்று றோணியோ செய்த கஞ்சல் ஏடு சிலர் மனதைக்

173 9 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
கருக்கியபோதும் மனம் வெதும்பிய எம். சி. யைத் தேற்ற அவர் ஆலோசனைக்கிணங்க ஆ. குலேந்திரம், கலாநிதி எம். எஸ். அலெக்சாந்தர் (தற்போது கனடா) மு. செல்லப்பாக்கியம் ஆகியோ ருடன் நானும் சேர்ந்து எடுத்த சமாதான முயற்சியில் உதயமானது தான் 'சிறுபான்மைத் தமிழர் விடுதலை முன்னணி” என்னும் ஸ்தாபனம் தலைவராக சி இ குணரத்தினம், பொதுச் செயலாளராக எம். எஸ். அலெக்சாந்தரும், செயலாளராக நானும் இன்னும் இ. மாசிலாமணி, மு. செல்லத்தம்பி, சி. பாலசிங்கம் போன்று வேறுபல ஆசிரியர்களும், மகாசபை இணைஞர்களும் அங்கத்துவமாக இயங்கி பெரும்பான்மைத் தமிழரில் சில முற்போக்காளர்கள் அரசுக்குச் செய்த சிபார்சின் மூலம் பல துறைகளிலும் ஆயிரக்கணக்கா னோருக்குத் தொழில் வாய்ப்புக் கிடைத்தது. காரணம், மகாசபை இளைஞர்களின் முயற்சியும், எம். சி. அவர்களின் ஆசியுமேயாகும்.
காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை ஆளணி முகாமை யாளர் பதவி இலகுவானதொன்றல்ல. அதில் சி. இ. குணரட்ணம் அவர்களை நியமித்து எம்மவர்களுக்கு உதவ ஏ. வி. சந்திரசேகரமும் (அமைப்பாளர்), எம். எஸ். அலெக்சாந்தரும் எடுத்த முயற்சி அளப்பரியது எமது இளைஞர்களின் தொழில் வாய்ப்பைக் கண்டு வாழ்த்திய பெருந்தகை எம். சி. தமது பாதையில் நின்று சமூகப்பணி செய்தோரை என்றும் அவர் வாழ்த்தத் தவறியதேயில்லை. அரசியல் காரணங்களினாலும் தனிப்பட்ட குறை காரணமாகவும், என் அன்புக்குரிய ஆசிரியரும் கரணவாய் மணியக்காரன் தோட்டப் பாடசாலை உடன் ஆசிரியருமான ஒருவரை வெளிமாவட்டத்துக்கு எம். சி. மூலம் மாற்றியபோது அவரிடம் முறையிட்டு மனம் வருந்தி னேன். செயலாளராக இருந்த பி. ஜே. அன்ரனியைவிட்டு உடன் ரத்துச் செய்ததின்மூலம் கட்சி நலனை விடச் சமூக நலமே அவரிடம் மேலோங்கி நின்றது என்பதை எவருக்கும் என்னால் எடுத்துக்காட்ட முடியும். அவர் நேரிய செயல்களுக்கு அரசியற் தலைவர்கள் முதல் க. நடராசா அவர்கள் தமிழரசுக் கட்சியூடாக தென்மராட்சியிலும் பல பாடசாலைகளை ஆக்கினார். அப்போது மந்திரியாக இருந்த கலாநிதி என். எம். பெரேரா, விசுவநாதன் ஆகிய இடதுசாரிகள் துணையோடு கைதடி வடிசாலை, பணம்பொருட் கூட்டுறவுச் சங்கங்கள், பனை அபிவிருத்திச்சபை போன்றவற்றை நிறுவி பனை மரத்தைச் சுற்றி வாழ்ந்த மக்களின் மிளிர்ச்சிக்கு வழிகாட்டியபோது எம். சி. அவர்களும் அதை வரவேற்று ஊக்கப்படுத்தியதை அறிவோம். யார், யார் செய்தாலும் சேவையை மதித்துப் போற்றி வழிகாட்டி உதவும் பண்பியல்புகள் கொண்டவர் எம். சி. கதாசிரியர் கே டானியல் சீனக் கொம்யூனிசக் கட்சியில் பிரிந்து செயல்பட்டபோதும் அவர் பழைய நேச உறவை மறவாது பழகிச் சிரித்து மகிழ்ந்த தன்மை அவரின் பெருந்தன்மையையே

Page 90
J(8ureo O 174
காட்டியது.
எஸ். ரி. என். நாகரத்தினம் தலைமையில் மாவிட்டபுரம் சத்தியாக்கிரகப் போராட்டம நடைபெற்றபோது தன் தோழர்களுடன் சென்று பங்குபற்றி உணர்வலைகள் சேர்ந்த அறிக்கைகள் விட்டதன் பலனே அடுத்த ஆண்டில் மாவிட்டபுரம் சிறுபான்மைத் தமிழர் உள்ளே சென்று வழிபட சமமாக எல்லோருக்காகவும் திறந்து விடப்பட்டது.
எம். சி. என்ற இரண்டெழுத்துச் சொல் எல்லா மூலை முடுக்கு களிலும் முழங்கியது. அவர் சாதி வேற்றுமை, உலகத் தொழிலாளர், விவசாய பாட்டாளி வர்க்க விமோசனத்துக்காக அயராது குரல் கொடுத்தவர். தான் கொண்ட இலட்சியத்தில் முழுமூச்சுடன் இறுதிவரை அணுவேனும் பிசகாமல் மகாசபையின் ஆயுட்காலத் தொண்டனாக, தலைவராக, விடுதலை வீரனாகச் செயற்பட்ட மாமனிதர். இன்றைய இளைய சந்ததியினர் அவர் சேவையைப் பெற்ற கடனாளிகள். இப்படிப்பட்ட மாமேதைக்கு யாழ் நகரில் ஒரு சிலை தோன்றும் என்பது நிச்சயம்.
எம். சி. யின் தியாகத்தினால் சாதிமுறை தளர்ந்தபோதும், அது எங்கும் நீறுபூத்த நெருப்பாக உள்ளது என்பது உண்மை. சிங்கள இனவெறி தாக்கத்தினால் புலம்பெயர்ந்தோர்கூட கண்ணுக்கெட்டாத இன்னோர் நாட்டிலும் சாதி தலைவிரித்தாடுகிறதென்றால் அது துர்அதிர்ஷ்டமே. தமிழன் உள்ளளவும் திருந்துவான் என்பது கேள்விக்குறி. அன்பு, பண்பு. மனிதநேயம், மனச்சாட்சி, தெய்வீகக் கோட்பாடுகள் என்பன அருகிச் சருகாகி வருகின்றன. மற்றவர்களைப் படிக்கட்டாகப் பாவித்து மேலேறியோர் மற்றவர்கள் மேலே வரக் கூடாதென்று தாங்கள் ஏறிச்சென்ற ஏணியையே காலால் உதைத்து வீழ்த்துகின்ற சுயநலமிகள் காலமிது. நாங்கள் என்றும் ஆள்பவர்களை ஆக்குபவர்களாகவும், வெறும் வாக்கு வங்கிகளாகவும் மாத்திரமன்றி தன் கையே தனக்குதவியென சிறுபான்மையினருக்கு ஏற்பட இருக் கும் எதிர்கால இருளைப் போக்க ஓர் அரசியற் தலைமை நிச்சயம் வேண்டும். கைகொடுக்க எம். சி. போன்ற மனிதப் புனிதர்கள் இன்றில்லை. இது காலத்தின் கட்டாயத் தேவை.

த. இராசகோபால்
மக்களுக்காகவே வாழ்ந்த எம்.சி.
யாழ் நகளின் முக்கியமான பெருமாள் கோயிலை யண்டிய பகுதியில் புகைவண்டி காங்கேசன்துறையை நோக்கிச் செல்லும் பாதையின் ஒரத்தில் இருமருங்கும் ஒழுங்கைகளுக்குட்பட்ட முக்கோணக் காணியில் அமரர் எம். சி. சுப்பிரமணியம் அவர்களின் வீடு அமைந் திருந்தது. அவர் வீட்டு முன் கைகாட்டி இருந்தது. அவ்வீட்டுக்கு அண்மையில் இருந்த சேணிய தெரு மெ. மி. பள்ளியில் ஆரம்பக் கல்வியைக் கற்றது போல் பிற்காலத்தில் நாங்களும்/ படித்தோம். அவரின் மைத்துனர்களான தம்பியையா, சின்னத் துரை, எஸ் பொ, ஆகியோரும் ஆரம்பத்தில் படித்துக் கொண்டிருந்தமையால் திரு. எம். சி. யை அறிந்திருந்தோம். அவர் எங்களிலும் பலவயது மூத்தவராயிருந்தார். அப்போது அவரிடம் பேசுவதற்கு பயப்படுவோம்.
அவர் வீட்டுச் செல்லப்பிள்ளை போல இரு சகோதரிகளுக்கு ஒரு சகோதரனாக இருந்துள்ளார். பெரியளவு வசதி இல்லாவிட்டாலும் அவர் குடும்பத் தினர் இவரை ஆங்கிலக் கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைத்தனர். அக்காலத்தில் பெரிய குடும்பத்துப் பிள்ளைகள், வசதிபடைத்தவர்கள்தான் ஆங்கிலக் கல்வியை மேற்கொள்ள முடியும். வசதியற்ற, பின்தள்ளப்பட்ட பிள்ளைகளுக்கு அந்த வாய்ப்புகள்

Page 91
சந்திரபோஸ் O 176
கைகூடுவதில்லை. எதிர்நீச்சல் அடித்து எம். சி. படித்த காலத்தில் ஒடுக்கப்பட்ட பகுதிகளிலிருந்து புறப்பட்ட திரு. யோவேல் போல், சுண்டுக்குளி கணபதிப்பிள்ளை, காந்தியென அழைக்கப்பட்ட ஜே. ஆர். யேக்கப், ஜேம்ஸ் மூப்பர் போன்ற ஆரம்ப காலப் பெரியோர்கள் கிறிஸ்தவ கல்லூரிகளில் கல்வி கற்க முடிந்ததால் இன்றைய பிற்பட்ட சமூகங்களுக்கு பெரியளவில் சமத்துவ வாய்ப்புகள் இலகுவாகக் கிடைக்கப் பெற்றது என்பது பெரிய சாதனையாகும்.
இவர்களில் ஒருவராகத் தெரிந்த எம். சி மற்றவர்களிலும் பார்க்க வித்தியாசமானவராக இருந்தார். அவர் வேலைவாய்ப்புப் பெற்று அதில் நிரந்தரமாகத் தங்காமல் வீட்டுக்குத் திரும்பியவர். அவருக்கும் உத்தியோகத்துக்கும் ராசி ஏற்படவில்லை. அக்காலத்தில் சீர்திருத்த எண்ணங்கொண்டவர்கள் இந்திய விடுதலை இயக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தமையால் காந்தியப் போக்குடை யவர்கள் மாத்திரம் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கு ஆதரவாளர்களாக இருந்தார்கள். அப்போதெல்லாம் எம். சி. வெள்ளைக் கதர் உடை தரித்துத்தான் நடமாடுவார். ஹன்டி பேரின்ப நாயகம், ஈழகேசரி பொன்னையா போன்றவர்களும் இடதுசாரி எண்ணங்கொண்ட சட்டத்தரணிகள் ஜெயன் என அழைக்கப்பட்ட தர்மகுலசிங்கம், நாகலிங்கம் (செனட்டர்) அட்வக்கேட் சிற்றம்பலம் போன்றவர்கள் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் கூட்டங்களில் பங்குபற்றவும் உதவவும் முன்னின்றமை குறிப்பிடத்தக்கது.
சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் பல போராட்டங்களை நடத்துவதற்கு இடதுசாரிகளான சமசமாஜக்கட்சி, பொதுவுடைமைக் கட்சி என்பன நல்லாதரவு கொடுத்ததினாலும் தேநீர்கடைப் பிரவேசம், ஆலயப் பிரவேசம் ஆகியவற்றைச் சாதிக்க முடிந்தது.
தென் இந்திய அரசியல் சமூக மாற்றங்கள் யாழ் மக்கள் கொள்கைகளிலும் காலத்துக்குக் காலம் மாற்றங்களை ஏற்படுத்தும். வர்ணாசிர தர்மத்தின் பேரால் பிராமணர் மற்றும் உயர்வகுப் பினரின் கொள்கைகளை எதிர்த்து சுயமரியாதை இயக்கத்தை உருவாக் கியதையும், சாதிய வெறியைக் கண்டித்துப் போராட்டங்கள் நடத்தியதையும் எம். சி, ஜி. எம். பொன்னுத்துரை, வதிரியைச் சேர்ந்த கோவிந்தசாமி போன்றவர்கள் ஆதரித்தனர். அதனால் பெரியாரை அழைத்துப் பல கூட்டங்களை நடத்தியபோது கல்லெறிகளையும் சந்திக்க நேர்ந்திருந்ததை எம். சி. அவர்கள் மூலம் அறியமுடிந்தது.
1947ஆம் ஆண்டு யாழ் நகரசபைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் M. கார்த்திகேசனும், எம். சி.யும் போட்டியிட்டனர். அப்போதுதான் எனக்கும் எம். சிக்கும் அதிக நெருக்கம் ஏற்பட்டது. அந்நாட்களில் அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தது போல அன்று

177  ெஎம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
நான் சமசமாஜக் கட்சியின் ஆதரவாளனாக இருந்துள்ளேன். எனினும் என்னாலான பணிகளை அவருக்குச் செய்துள்ளேன். விளம்பரங்கள், படங்கள், சின்னங்களை மற்ற ஆதரவாளர்களுடன் சேர்ந்து உருவாக்குவது, பிரசாரத்துக்குப் பயன்படுத்தல் போன்றவைகளைச் செய்து வெற்றிபெறக் கனவு கண்டோம். இருந்தும் முடிவு எமக்கு ஏமாற்றத்தைத் தந்த அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டோம்.
எம். சி. அவர்கள் தோல்வியைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை. அதன் பின்பு சோர்வோ, ஒதுங்கியிருக்கும் போக்கோ இல்லா மல், தான் சார்ந்த கட்சிப் பணியிலும் முன்னைய பல தலைவர்கள் ஒதுங்கியிருக்கும் சி. பா. த ம. சபையை வழிநடத்தி போராட்டங்களை நடத்துவதிலும் சளைத்திருக்கவில்லை. பொதுச்சேவையில் ஈடுபட்ட தினால் தனக்கு மனைவியுண்டு, பிள்ளைகள் உண்டு என்ற நினைவு கூட இல்லாமல் அலைந்த காலத்தில் அவரின் சகோதரியே குடும்பப் பொறுப்புக்களைச் சுமந்து வழிநடத்தினார். எம். சி. அவர்களை ஊதாரி, பொறுப்பில்லாதவன், உருப்படாதவன் என்று பலர் எள்ளி நகையாடியதுண்டு. எனினும் அவர் ஒரு காலத்தில் பாராளுமன்ற அங்கத்தவராக நியமனம் பெற்றபோது தூர நின்ற உறவினரும் மற்றவர்களும் உறவை நட்பைக் கூறிக்கொண்டு வலம் வந்ததுண்டு. தன்னை எதிர்த்தவர்களை, புறங்கூறியவர்களை வெறுக்காமல் அவர் கள்ன் குறை நிறைகளையும் பெறுமையுடன் கேட்டு உதவுவதைப் புறக்கணிக்கவில்லை. சிலரிடம் கடுகடுப்பாகப் பேசி அவர்கள் ஏமாற்றத்துடன் போய்விட்டால் பின்பு அதற்காக மிகக் களிவிரக்கப் பட்டு அழைத்துச் சமாதானப்பட்டுக் கொள்வதைப் பல தடவைகள் பார்த்துள்ளேன்.
வடபகுதியில் தேர்தலில் நேரடியாக நின்று ஒரு பிரதிநிதியைத் தானும் பெறமுடியாத சூழலில் மூன்று லட்சம் மக்களுக்கு மேற்பட்ட சிறுபான்மையினர் சிதறுண்டு வாழ்ந்தனர். தேர்தல் முறை அவர்களுக்குப் பாதகமான முறையில் அமைந்திருந்தது. ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கங்களும் இக்குறைகளைக் கண்டுகொள்வதில்லை. இதைப்பற்றிக் கண்டுகொள்ளாதவர்களாகப் பெரும்பான்மையாக உள்ள மற்ற சமூக அரசியல்வாதிகள் இவர்களின் வாக்குகளைப் பெற்று தமது தேவைகளுக்குப் பயன்படுத்துவதுடன், இவர்களுக்கு அரசியல் ரீதியாக எதனையும் செய்வது கிடையாது. இது அன்றிலிருந்து இன்றுவரை வளர்ந்துவிட்ட எழுதாத வழக்காகவே இருந்து வருகிறது. அவர் பாராளுமன்ற பிரதிநிதியானதும் காலமெல்லாம் புறக்கணிக்கப் பட்ட மக்களின் குறைகள் எல்லாம் சமுத்திரமாகக் கரைகடந்து உடைப்பெடுத்து நிற்பதைக் கண்டு ஏமாற்றமுற்ற நிலையில் கவலை யடைந்தார். தொழிலின்மை, தொழில் செய்ய நிலமின்மை, படித்து விட்டு விகிதாசாரத்துக்கான

Page 92
erb6eg CBu Teddio O 178
வேலையின்மை, சாதிக் கட்டுப்பாட்டினால் சமூக அந்தஸ்தில்லாத அடிமை வாழ்வு முறைகளில் இருந்து முன்னேறத் துடிக்கும் இளந் தலைமுறைக்கு எப்படிப் பதில் சொல்வது. தன்னால் முடிந்ததைச் செய்து, முடியாதவற்றைச் செய்ய முடியாததினால் பலரின் குறைகூறலுக்கு ஆளாகவேண்டி இருந்தது. பாராளுமன்றக் காலம் முடிவடையும்வரை சிறுபான்மை தமிழர் மகாசபையின் கிளைகள் நன்கு செயல்பட்டு வளர்ச்சியடைந்திருந்தும் அரசு மாறியதும் சபை மாத்திரமன்றி அதன் பின்னணியில் ஊக்கங் கொடுத்த முற்போக்குச் சக்திகளும் ஒய்ந்துவிட்டன.
பின்னாளில் அவரை வாட்டிய நோய்கள் தலைதுாக்கியதும், நாட்டில் வேறுவிதமான போராட்ட முறைகள் ஏற்பட்டதும் ஒதுங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
1987ஆம் ஆண்டின் பின்பகுதியில் இந்திய சமாதானப்படை இருந்த காலத்தில் ஏற்பட்ட இடப்பெயர்வால் எங்கு செல்வதென்று நகர மக்கள் அல்லல்பட்டபோது முற்றிய நோயுடன் அவரும் இடம் பெயர்ந்தார். பின் ஒருநாள் கடும் சுகவீனமுற்றிருக்கிறதாக அறிந்து சந்திக்கச் சென்றபோது பேசமுடியாத நிலையில் பட்ட கஷ்டங் களைக் கூறினார். அந்தச் சந்திப்பே இருவரின் இறுதிச் சந்திப்பாக அமைந்தது.
ஆரம்பத்திலிருந்தே பகுத்தறிவுக் கொள்கை, சீர்திருத்தக் கொள்கையினால் உந்தப்பட்ட அமரர் எம். சி. சுப்பிரமணியம் மார்க்சிச நம்பிக்கை உடையவராய் கட்சிக்குக் கட்சி தாவாமல் உறுதியாக ஒரே கட்சியில் கட்சியின் தலைமைக்கு மதிப்பளித்து கொள்கைப் பிடிப்புடையவராய் வாழ்ந்தார்.
யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் பெரிய கடையொன்றைத் திறந்து இந்தியாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்து மொத்த, சில்லறை விற்பனைக் கடையொன்றை யுத்தகால ஆரம்பத்தில் நடத்தியபோதும், போதியளவு நமது மக்கள் ஆதரவு வழங்காததால் சிறிது காலத்தில் மூடவேண்டிய நிலை ஏற்பட்டது. அதனை மாத்திரம் அவர் தொடர்ந்து நடத்தி பிரபல வியாபாரியாக வந்திருந் தால் பின்தங்கிய மக்களின் நல்ல தலைவர் ஒருவர் இல்லாமல் போயிருப்பார்.

M.G. Luear
ஏழைகளைச் சிரிக்க வைத்த GBTypňr “M.C.”
தமிழ் பேசும் சிறுபான்மை மக்களை தலை நிமிர்ந்து வாழவைத்த காலஞ்சென்ற தோழர் M.C. சுப்பிரமணியத்தை ஏழைமக்கள் என்றும் மறக்கவும் மாட்டார்கள்; மறந்துவிடவும் முடியாது. அன்னாரின் மறக்க முடியாத தொண்டுகளை என்றும் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. தமிழ் பேசும் சிறு பான்மை தமிழ்மக்களின் செல்லப்பிள்ளை மாதிரி M.C. என்று சிறுபிள்ளைகளிலிருந்து பெரியோர்வரை அவரது வீட்டிலிருந்து வீதிவரை செல்லமாக அழைத்த தோழர்தான் இந்த M. C. அவர்களின் லட்சியப் பாதை மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டலாக இருக்கிறது. மறைந்த சிறுபான்மை மக்களின் தலைவர் M. C. அவர்கள் ஒரு சிறந்த சோசலிசவாதியாக, சிறந்த கம்யூனிஸ்டாக வாழ்ந்து காட்டிய மாபெரும் அரசியல் ஞானி துவக்கத்திலிருந்து அவரது ஆயுட்காலம் முடியும்வரையிலும் ஒரு கம்யூனிஸ்டாகவே இருந்தார். வாழ்ந்தார். இறந்தார். இலங்கை வாழ் முஸ்லிம்களின், முற்போக்கு இலட்சிய வாதிகளின் ஒப்பற்ற தோழனாகத் திகழ்ந்தார். குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்களில் முற்போக்கு இலட்சிய வாதிகளை ஒன்று திரட்டி ஓர் இயக்கமாகக் கட்டி வளர்த்த பெருமை தோழர் M. C. அவர்களையே

Page 93
சந்திரபோல் O 18O
சாரும். இலங்கை முஸ்லிம்களின் முற்போக்கு இயக்கங்களுக்கு தலைமை தாங்கி வழிநடாத்திய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தோழர் இளங்கீரனுக்கும் தோழர் M.C. அவர்களுக்கும் நெருங்கிய தொடர்புகளுள்ளன. யாழ்ப்பாண முஸ்லிம்களை முற்போக்கு இலட்சியப் பாதைக்கு வித்திட்டவர்களும் இவர்களே.
எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் சந்தித்து எங்களது தேவை களை நிறைவேற்றக்கூடியவர்தான் இந்த M.C. இவரிடம் கோபம் என்ற ஒன்று காணக்கிடையாத பொக்கிஷம் என்றும் எப்போதும் ஒரு மழலையைப் போல சிரித்துக் கொண்டே தனது அனைத்துக் காரியங் களிலும் ஈடுபடுவார். அரசியல் என்னும்போது அவரது ராஜதந்திரம் போற்றக்கூடிய ஒன்றாகும்.
ஒருமுறை யாழ்ப்பாணத்தில் ஒர் மறக்க முடியாத அரசியல் நிகழ்வொன்று நடந்தது. அகில இலங்கை முஸ்லிம்களின் ஒப்பற்ற தலைவரும், இஸ்லாமிய சோசலிச முன்னணியின் ஏக தலைவரு மாகிய Dr. அல்ஹாஜ் பதியுதீன் மஹ்முத் அவர்கள் யாழ்ப்பாண இஸ்லாமிய சோசலிச முன்னணியின் அழைப்பை ஏற்று யாழ் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திகதியும் குறிக்கப்பட்டு புகையிரதம் மூலம் வருவதாகவும் ஏற்பாடாகியிருந்தது. இலங்கையில் U.N.P அரசு நடக்கிறது. யாழ்ப்பாண முற்போக்குச் சக்திகளை ஒன்று திரட்டி புகையிரத நிலையத்தில் பிரமாண்டமான ஏற்பாடு செய்யப் பட்டு இஸ்லாமிய சோசலிச முன்னணியினரும் கம்யூனிஸ்ட் கட்சி யினரும், லங்கா சமசமாஜக் கட்சியினரும் மற்றும் முற்போக்கு சக்தி களும் ஒன்று திரண்டு நிற்கின்ற வேளையில் மதியம் இரண்டு மணியளவில் யாழ்தேவி புகையிரதம் மூலம் ‘பதி வருகை தந்தார்.
இடதுசாரித் தலைவர்களாகிய தோழர் M.C. சுப்பிரமணியத்தின் தலைமையின் கீழ் V. பொன்னம்பலம், M. கார்த்திகேசு மாஸ்டர், வைத்திலிங்கம் மாஸ்டர் போன்ற வேறு இடதுசாரித் தலைவர்களும் எழுத்தாளர்களும் சாதிமத பேதமில்லாமல் சகல மக்களும் ஒன்று திரண்டு யாழ்தேவியில் வருகை தந்த “பதி அவர்களை வரவேற்று சகல மரியாதைகளும் செலுத்தி மாலைகளும் அணிவிக்கப்பட்டன. இவை அனைத்தும் புகையிரத நிலையத்திலேயே நடைபெறுகின்றன. அந்நேரம் பொலிஸாரின் கெடுபிடிகள் காணப்பட்டாலும், அதன் மத்தியில் ‘பதி அவர்களை ஊர்வலமாக அழைத்துச் செல்ல பொலி சாருடன் விவாதித்துக் கொண்டிருந்த வேளையில் "பதி அவர்கள் “எங்கே M.C. யைக் காணவில்லை?” என்று கேட்கும் போதே

181 9 எம்.சி. ஒரு சமுக விடுதலைப் போராளி
"வருகிறேன் வருகிறேன்" என்று மக்களையும் அழைத்துக்கொண்டு ‘பதியையும் கட்டியணைத்துக்கொண்டு “ஊர்வலத்தைத் தொடர பொலிசார் தடுக்கின்றார்கள். மீறிப் போகப்போகிறேன். நீங்களும் வரவேண்டும்" என்றார். அந்த நேரத்தில் "பதி அருகாமையில் இருந்த மூதூர் முதல்வர் மஜீத் M.P அவர்கள் M.C. யைப் பார்த்து "ஊர் வலத்தைத் தொடர்வோம். பயப்படாதீர்கள்” என உரத்த குரலில் கூறினார். ஊர்வலம் MCதலைமையில் செல்ல முடியாதவாறு பொலி சார் தடுத்து அடிதடியில் இறங்கினார்கள். இதனைத் தொடர்ந்து முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து “அல்லாஹ" அக்பர், அல்லாஹ" அக்பர்’ என்ற கோஷத்தை வானம் உயர எழுப்பினார்கள். மற்றவர்கள் ‘பதி வாழ்க’, ‘பதி வாழ்க’ என முழங்கினார்கள். எல்லோரும் ஒன்று திரண்டு வேன்களிலும், கார்களிலும் முஸ்லிம் வட்டாரத்தை அடைந்தார்கள். அங்கு வருகை தந்த அனைவருக் காகவும் யாழ் இஸ்லாமிய சோசலிச முன்னணியின் சார்பாக மதியபோசனம் வழங்கப்பட்டது. M.C. அவர்கள் உட்பட அனைவரும் பங்குபற்றிவிட்டு ‘பதி அவர்களும் இடதுசாரித் தலைவர்களும் ஒரு மணித்தியாலம் மட்டும் மந்திராலோசனை நடத்தி ஜின்னா மைதானத்தில் நடக்கும் கூட்டத்தில் பங்குபற்றுவதாகக் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்கள்.
அன்று மாலை ஜின்னா மைதானத்தில் மாபெரும் கூட்டம் இஸ்லாமிய சோசலிச முன்னணித் தலைவரான M. அப்துல் மஜீத் தலைமையில் நடத்தப்பட்டது. அதில் முதல் முதன் "பதி அவர்கள் மேடையில் அமர்ந்திருக்கும் M.C. யைப் பார்த்து "சிறுபான்மை மக்களின் ஏகப்பிரதிநிதியாக உங்கனிளயே நானும், T. B. இலங்கரத்னாவும் நியமன M.Pயாக நியமிக்கத் தீர்மானித்துள்ளோம். நிச்சயமாக நாங்கள் அடுத்த முறை அரசாங்கம் அமைத்தால் M.C. அவர்கள் M.P ஆவார்கள்” என்று கரகோஷத்தின் மத்தியில் ‘பதி” அவர்கள் முழங்க முஸ்லிம்கள் அல்லாஹ" அக்பர்’ என்ற கோஷத்தை எழுப்பினார்கள். இதே நிலையில் பூரீமாவோ பண்டாரநாயக்கா ஆட்சிபீடம் ஏற M.C. அவர்கள் M.P ஆனார்கள். "பதி அவர்களும் M. C. அவர்களும் மிகவும் நெருக்கமாகப் பழகினார்கள். Dr. அல்ஹாஜ் பதி அவர்கள் கல்வி அமைச்சரானார். சிறுபான்மை மக்களுக்கு நிறைய நியமனங்கள் கொடுத்து ஆதரவும் வழங்கி அவர்களை தலைநிமிர வைத்தவர்தான் இந்த M.C. இன்னும் அரசியல் வாழ்வில் M.C. யைப்பற்றி நிறைய எழுதலாம்.

Page 94
g56g8urdo O 182
இன்னொரு முக்கிய விடயம் - M.C. அவர்கள் M.P ஆனதும் யாழ்ப்பாணத்தில் மாநகரசபை மண்டபத்தில் ஒரு வரவேற்புக் கூட்டம் நடந்தது. அதில் M.C. அவர்கள் தனக்கும் தனது சிறுபான்மை மக்களுக்கும் Dr. அல்ஹாஜ் பதியுதீன் மஃமூதும், T. B. இலங்க ரத்னாவும் மிகவும் முயற்சி எடுத்துத் தன்னை MPஆக்கியதற்கு நன்றி தெரிவித்து அவர்களை மக்கள் கரகோஷத்தின் மத்தியில் வாழ்த்திப் புகழ்ந்தார்.
இதுமட்டுமல்ல, M P ஆக இருந்த காலத்தில் எப்படி
இருந்தாரோ அப்படியே வாழ்ந்தும் காட்டினார். நடையிலும்,
சைக்கிளிலும் சவாரி செய்தே தன் சேவைக் காலத்தை முடித்தார்.
வழியில் போகும் மக்களுக்கு மரியாதை செய்வார். தன்னைத் தேடி வருபவருக்கு சலிக்காமல் தொண்டு செய்வார். M.P யாக
இல்லாத காலத்திலும் தனது சேவையைத் தொடர்ந்தார். எப்போதும்
சிரித்த முகத்துடனே சளைக்காமல் பதில் கூறுவார். என்றும் அவர்
நாமம் தொடர்ந்து ஒலிக்கட்டும். M. C யின் நாமம் வாழ்கவென
வாழ்த்துகின்றேன்.

வல்லிபுரம் திருநாவுக்கரசு
மும்முனைப் போராளி
இன்றும் இலங்கை அரசியல் அகராதியில் தமிழர் ஒரு சிறுபான்மை இனம் என்றே அழைக்கப்படுவது வழக்கம். இந்த சிறுபான்மை இனத்துக்குள் ஒரு “சிறு பான்மையாக இனங்காணப்படும் குறைந்த சாதியினர். இந்த மக்கட் பிரிவினர் தொடர்பான பாகுபாடுகள், கொடுமைகள் குறிப்பாக வடக்கில் தலைவிரித்தாடிய காலத்தில் அவர்கள் பல்வேறு வழிகளில் ஒரங்கட்டப் பட்டு, சிறுமைப்படுத்தப்பட்டு அடக்குமுறைகளுக்கும், வன் முறைகளுக்கும் ஆளாக்கப்பட்டது வரலாறு. தேநீர், சாப்பாட்டுக்கடைகளில் புறக்கணிப்பு, கோவில்களுக்குள் சென்று வழிபட முடியாது, சில பிரபல பாடசாலைகளில் கதவடைப்பு, ஏன்பேரூந்துகளின் இருக்கைகளில் இருந்து பயணிக்கவே (plglu Islgi.
ஆண்டாண்டு காலமாக சமூக மாற்றங்கள் எதுவும் ஏற்படாத நிலையில், பொறுத்தது போதும் என்று கிளர்ந்தவர்களில் பிரதான முன்னோடியாக எம். சி. திகழ்ந்தவர். அவர் மிகுந்த திடசங்கற்பத்துடன், அர்ப்பணிப்புடன், பற்றுறுதியுடன் தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவுக்காக உழைத்தவர். "சிறுபான்மைத் தமிழர் மகாசபை' என நிறுவனப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட்ட விடியல் பயணத்தில் தலைமைப்

Page 95
offg(8urreo O 184
பாத்திரத்தினை 4 தசாப்தங்களுக்கு மேலாக எம். சி.
வகித்தவர். இந்த மக்களின் கல்வி வளர்ச்சிக்காக புதிய பாட சாலைகள் அமைத்தல் அடங்கலாக அரும் பணியாற்றியவர்.
ஆலயம் மற்றும் தேநீர்க் கடைப் பிரவேசப் போராட்டங்கள் ஆங்காங்கே நடத்தப்பட்டதற்கு எம். சி. உந்துசக்தியாயிருந்து வழி நடத்தினார். ஆலயப் பிரவேசப் போராட்டத்தைப் பொறுத்தவரை, குறிப்பாக மாவிட்டபுரம் போராட்டத்தை எடுத்துக் கொண்டால் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அப்போராட்டத்தில் எம். சி. வகித்த திடகாத்திரமான, துணிச்சலான பாத்திரம் மறக்க முடியாத தாகும். பிந்திய காலத்தில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வெகுவாகச் சிதைக்கப்பட்ட இக்கோயிலுக்குள் சிறுபான்மைத் தமிழர் தலைகாட்ட முடியாது என அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் தலைமையில் நடத்தப்பட்ட அடாவடித்தனங்களை முறியடித்த பெருமை எம். சி. யையே சாரும் என்றால் அது மிகையல்ல.
இன்னும் சொன்னால், எம். சி. சிறுபான்மைத் தமிழரின் விடிவுக்காக மட்டுமே போராடியவர் அல்ல. ஒரு முன்னோடி மாக்ஸிசவாத இடது சாரியாக, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினராக தமிழரின் இனவிடுதலைப் போராட்டத்துக்கும் உழைத்தவர் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. 1956இல் பருத்தித் துறை தொகுதியில் பொன். கந்தையா வெற்றியீட்டியதற்கு எம். சி. ஆற்றிய பங்களிப்பானது குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல. அதே வருடம் பண்டாரநாயக்காவின் தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிராக பொன். கந்தையா மற்றும் பீற்றர் கெனமன் போன்ற கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் குரல் ஓங்கி ஒலித்ததற்கு கட்சியின் தலைமைப்பீடத்திலிருந்த எம். சியும் ஒரு பங்காளி என்பதையும் யாவரும் உணரவேண்டும். அது மட்டுமல்லாமல், அவர் ஒரு தொழிற் சங்கவாதியாகவும், கள்ளிறக்கும் தொழிலாளர் சங்க முக்கியஸ் தராகவும் தொழிலாள வர்க்கத்தின் உரிமைக்காகவும் அயராது உழைத்தவர்.
எனவேதான், ஒட்டுமொத்தமாக எம். சி. சிறுபான்மைத் தமிழரின் விடிவுக்காக, தமிழினத்தின் விடுதலைக்காக, தொழிலாள வர்க்கத்தின் மேம்பாட்டுக்காக அயராது உழைத்த ஒரு முழுமையான "மம்முனைப் போராளி என்பது உண்மையில் மெச்சுவதற்குரியதாகும்.
"ஆக்கம் அதர்வினைய7ய்ச் செல்லும், அசைவில7 ஊக்கம் உடை/7ன் உழை"
எனும் வள்ளுவர் வாக்குக்கு அமைய, 1970களில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் எம். சி. யைத் தேடிவந்தது. எம். சி. எம். பியாகப்

185 O 6b.f. sqD vespas sa(Basebeof (8Lungres
பதவி வகித்த காலத்தில் எல்லா மக்களுக்காகவும் பாரபட்ச மின்றிப் பணியாற்றியுள்ளார். கைமாறாக மக்கள் அவருக்கு ஒரு சிறந்த வாகனத்தை அன்பளிப்புச் செய்தனர்.
இந்தியாவில் தலித் மக்கள் தலைவராயிருந்த அம்பேத்கார் சாதிச் சாபக்கேட்டை எதிர்த்து மதம் மாறினார். இலங்கையில் இடது சாரியாகிய எம். சி. மதம் மாற வேண்டிய தேவை இருக்கவில்லை. இதயசுத்தியான போராட்டங்கள் மூலம் மற்றவர்கள் மத்தியில் மன மாற்றம் கொண்டு வருவதே அவரின் நோக்கமாயிருந்தது.
இந்தவேளையில் இலங்கைத் தீவின் அனைத்தின மக்களும் இன்னொரு இனத்தை அடக்கும் எந்தவொரு இனமும் சுதந்திர மாயிருக்க முடியாது என கார்ல்மார்க்ஸ் கூறிவைத்ததை நினைவு கூர்ந்து நன்கு புரிந்து கொள்வது பெரிதும் நன்மை பயக்கக்கூடிய தாயிருக்கும். எம். சி. யின் தன்னலமற்ற வாழ்க்கை வியக்கத்தக்கதென நினைவு கூர்ந்து விடைபெறுகிறேன்.

Page 96
ராஜOநீகாந்தன்
ഥഞ്ഞി, உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகங்களும் எம்.சி. யும்
ஈழத் தமிழ் இனத்தின் விடுதலைக்கான போராட்டம் உச்ச நிலைக்கு அசைவியக்கம் பெற்றுள்ள காலகட்டத்தில் தோழர் எம். சி. சுப்பிரமணியம் பற்றிச் சிந்திப்பதும் அவர்பற்றிய நினைவுகளை இரைமீட்டதும் சாலப் பொருத்தமானது. தோழர் எம். சி. சுப்பிரமணியம் எம்மைவிட்டுப் பிரிந்து ஒன்றரை தசாப்தங்கள் கடந்து விட்டன. இந்நிலையில் தோழர் எம். சி. சுப்பிர மணியத்தின் பல்வேறு பரிமாணங்கள்பற்றி விரிவாகப் பேசப்படுவது காலத்தின் அவசிய தேவைப்பாடாகவும் உள்ளது.
ஈழத் தமிழினம் தனது விடுதலைக்கான நியா யங்கள் குறித்து சர்வதேச மட்டத்தில் உரத்த குரலெழுப்பி வரும் வேளையில் தனது இனத்தில் ஒரு சமூகத் தினரை விலங்குகளைவிடக் கேவலமான நிலையில் பல நூற்றாண்டு காலமாக அடக்குமுறைக்கு உட்படுத்திவந்த அவலநிலையை வசதியாக மறந்துவிட முடியாது.
மிக அண்மையில் யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் கந்தையன் அவர் பிறந்த சமூகத்தின் பெயர் சொல்லி மூர்க்கமாகத் தாக்கப்பட்டமையும், இதற்கான பதில்வினைகள் எவையுமே இற்றை நாள்வரை தமிழினத்தின் பாதுகாவலர்கள் எவராலும்

187 )ே எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
மேற்கொள்ளப்படாமையும் இக்கூற்றிற்கு மேலும் வலுச் சேர்க்கின்றன. ஒரு நகர பிதாவின் நிலையே இவ்வாறிருக்கும் போது சாதாரணர்களின் நிலை எவ்வாறிருக்குமென்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.
ஈழத் தமிழினத்தில் மனித உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகத் தினர் கடந்த சில தசாப்தங்களுக்கு முன்னர்வரை நல்ல வீடுகளில் வாழ முடியாதவர்களாக, பாடசாலைக் கல்வியினைப் பெறமுடியாத வர்களாக, தூய உடை உடுக்கமுடியாதவர்களாக, செருப்பணிய முடியாதவர்களாக, கோயிலுக்குள் சென்று வழிபாடுகளை நிகழ்த்த முடியாதவர்களாக, போசனசாலைகளில் அமர்ந்து உணவுண்ண முடியாதவர்களாக, தமது நியாயபூர்வமான விருப்புக்களைக்கூட நிறைவேற்ற முடியாதவர்களாக, அநியாயங்களுக்கு எதிராகக் குரலெழுப்ப முடியாதவர்களாக அடக்கியொடுக்கி வைக்கப்பட்டிருந் தார்கள். யாழ்ப்பாண ஒழுங்கைகள் சிலவற்றில் இவர்கள் காவோலை களைக் கட்டிக்கொண்டு நடமாடவைக்கப்பட்டார்கள்.
தமிழையும் சைவத்தையும் காத்தவரெனப் போற்றிக் கொண் டாடப்படும் பூரீலயூரீ ஆறுமுகநாவலர் இச்சமூகத்தினரை மனிதர் களாகக்கூட மதிக்கக்கூடாதென்பதை தனது "சைவ வினாவிடையில்" தெளிவாகப் பதிவுச்ெய்துள்ளார்.
காலத்திற்குக் காலம் இவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்த தமிழ்ச் சொற்கள் சமூகவியலாளர்களால் பதிவுசெய்யப்பட வேண்டும். குடிமைகள், சண்டாளர்கள், எளியதுகள், கண்டது நிண்டதுகள், தூமைகள், கீழ்சாதியினர், கீழ்குலத்தவர்கள், தீண்டத் தகாதோர், தாழ்த்தப்பட்டவர்கள், இழிசனர்கள், உரிமையற்றவர்கள், பஞ்சமர்கள், உரிமை மறுக்கப்பட்டவர்கள், ஹரிஜனங்கள், சிறு பான்மைத் தமிழர், தலித்துக்கள் போன்ற இச்சொற்கள் அனைத்தும் ஈழத் தமிழினத்தைத் தலைகுனிய வைக்கும் தமிழ்ச் சொற்களாகும். தற்போதைய சமூக விஞ்ஞான நோக்கில் 'ஈழத் தமிழினத்தில் மனித உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகம்’ என்ற பதம் இன்றைய காலத்தில் இம்மக்களைக் குறிக்க உகந்ததாக உள்ளது.
ஈழத் தமிழினத்தின் இந்தச் சமூகக் கொடூரங்கள், இம் மக்களால் நிகழ்த்தப்பட்ட பல்வேறு வடிவங்களிலான போராட்டங்களினாலும் இவர்களை அடக்குமுறைக்கு உட்படுத்திவந்த சமூகங்களைச்சேர்ந்த சில பெரியோர்களின் செயற்பாடுகளினாலும் படிப்படியாக மாற்ற மடைந்துவந்த காலப்பகுதியை பெருமட்டாக மூன்று கட்டங்களாக வகைப்படுத்தலாம்.
முதலாவது கட்டம், போர்த்துக்கேயர் மற்றும் ஆங்கிலேயரின் வருகை, கிறிஸ்துவ மதப் பரப்புகைக் காலம். கல்வியறிவினூடாகவும்:

Page 97
சந்திரபோஸ் O 188
பொருளாதார விடுதலையூடாகவுமே அடிமைத்தளையை அறுக்கலா மென்றுணர்ந்த சில சமூக முன்னோடிகளின் முயற்சிகள் ஓரளவு பயனளிக்கத் தொடங்கின. வதிரி, தேவரையாளி சைவ வித்தியா சாலையின் ஸ்தாபகர் காத்தான் சூரனின் பணிகள் இம் மார்க்கத்தில் எடுத்து வைக்கப்பட்ட முதல் அடிகளில் சில எனக் கொள்ளப் படலாம். இவரால் எழுதப்பட்ட சுயசரிதையில் இக்காலப்பகுதியில் இச்சமூகத்தினரின் நிலை பற்றிய பல தகவல்கள் விரிவாகப் பேசப்பட்டுள்ளன.
இரண்டாவது கட்டம், இந்திய தேசிய விடுதலைப் போராட்டக் காலம். இந்திய தேசிய விடுதலை இயக்கங்கள் அடக்குமுறைகளுக்கு எதிரான உணர்வலைகளை ஈழத்திலும் உற்பவித்தன. குறிப்பாக, மனித உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகம் நிறுவனரீதியான அமைப் பொன்றைப் பெற்றது. 1942ஆம் ஆண்டில் “அகில இலங்கை சிறு பான்மைத் தமிழர் மகாசபை" தோற்றுவிக்கப்பட்டது. காந்தியவாதம், அஹிம்சைப் போராட்டம் என்பவை செறிவான பரவலைப் பெற்றிருந்தன. ஏனைய பலரைப்போல எம். சி. சுப்பிரமணியமும் ஆரம்பநாட்களில் காந்தியக் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தார்.
மூன்றாவது கட்டம், மார்க்ஸியக் கொள்கைகளும் இடதுசாரி இயக்கங்களும் யாழ்ப்பாணத்தில் கால்பதிக்க ஆரம்பித்த காலம். 1943ஆம் ஆண்டில் யாழ் மாவட்டத்தில் தோழர்கள் அ. வைத்தி லிங்கம், மு. கார்த்திகேசன், எஸ். இராமசாமி ஐயர், எம். சி. சுப்பிர மணியம் ஆகியோர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக் கிளையை ஸ்தாபித்தனர். வடமராட்சியில் இடதுசாரிக் கொள்கைகளை முதலில் விதைத்த தோழர் சி. தர்மகுலசிங்கம் (ஜெயம்) 1947ஆம் ஆண்டில் பருத்தித் துறைத் தொகுதியில் இலங்கையின் முதலாவது பாராளு மன்றத் தேர்தலில் போட்டியிட்டார். இவருடைய சிந்தனை விதைப் புக்கள் 1956ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் பருத்தித்துறைத் தொகுதியில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டி யிட்ட தோழர் பொன் கந்தையாவை வெற்றிபெற வைத்தன. மனித உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகத்தினர் பேரணியாகத் திரண்டு இவருடைய வெற்றிக்கு ஆதரவளித்தார்கள். தோழர் எம். சி. சுப்பிர மணியம் இத்தேர்தற் பிரசார நடவடிக்கைகளில் முழுமூச்சுடன் ஈடுபட்டார். 1957ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கை சிறு பான்மைத் தமிழர் மகாசபையின் பதிநான்காவது மகாநாட்டில் தோழர் எம். சி சுப்பிரமணியம் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
1956ஆம் ஆண்டில் எஸ். டபிள்யூ ஆர். டி. பண்டாரநாயக் காவின் அரசாங்கத்தில் "சமூகக் குறைபாடுகள் ஒழிப்புச் சட்டம்" நிறை

189 9ே எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
வேற்றப்பட்டது. இதுவே பல நூற்றாண்டுகாலம் மனித உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகத்தின் அடிமைத் தளையை அறுக்கும் முதலாவது சட்ட வடிவமாக அமைந்தது. இதே ஆண்டிலேயே நல்லூர் கந்தசாமி கோயிலும் ஏனைய சில கோயில்களும் அனைத்து மக்களின் வழி பாட்டிற்காகத் திறந்து விடப்பட்டன.
தோழர் எம். சி. சுப்பிரமணியம் தலைமைப் பொறுப்பேற்றதும் இடதுசாரிக் கொள்கைகளாலும் நடைமுறைகளாலும் ஆகர்சிக்கப் பட்ட பெருமளவு இளைஞர்கள் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலு மிருந்து சிறுபான்மைத் தமிழர் மகாசபையில் இணைந்துகொண்டனர்.
கல்வியின் மூலமும் பாரம்பரிய குலத்தொழில்களை மாற்றி பொருளாதார மேம்பாட்டினை ஈட்டுவதன் மூலமுமே இச்சமூகத்தின் அடிமைத் தளைகளை நிரந்தரமாக உடைத்தெறியலாமென்பதை உணர்ந்தறிந்து இந்த இலக்குகளை அடைவதற்கான திட்டங்கள் தோழர் எம். சி. சுப்பிரமணியத்தின் வழிகாட்டல்களுடன் வகுக்கப் பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக இருந்த டபிள்யூ. தகநாயக்கா மற்றும் ஏனைய அமைச்சர்கள் பல்துறை ஆதரவுகளை வழங்கி னார்கள். மிகக் குறுகிய காலத்தில் கோப்பாய், மானிப்பாய், பருத்தித்துறை, காங்கேசன்துறை, சாவகச்சேரி ஆகிய தொகுதிகளில் பதினைந்து பாடசாலைகள் ஈழத் தமிழினத்தில் கல்வி உரிமைகள் மறுக்கப்பட்ட மாணவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டன.
தோழர் எம். சி. சுப்பிரமணியம் 1970 ஜூன் 27ஆந் திகதி ஏழாவது பாராளுமன்றத்தில் நியமன அங்கத்தவராக நியமிக்கப் பட்டார். இக்காலப்பகுதியில் தோழர் எம். சி.சுப்பிரமணியம் மற்றும் இடதுசாரித் தலைவர்கள் ஆகியோரின் தூண்டுதலின்பேரில் சிரேஷ்ட அமைச்சர் தோழர் பீற்றர் கெனமனின் ஆலோசனைக்கிணங்க அமைக்கப்பட்ட குழு "1956ஆம் ஆண்டின் சமூகக் குறைபாடுகள் ஒழிப்புச் சட்டத்தின்” குறைபாடுகளை ஆராய்வதற்காக நியமிக்கப் பட்டது. இக்குழுவின் பரிந்துரைகளின் பேரில் இச்சட்டம் திருத்தப் பட்டு வலுவுள்ளதாக்கப்பட்டது.
இச்சட்டத்தின் மூலமும் நல்ல சிந்தனைகளைக் கொண்ட தமிழ் கல்விமான்கள், அரசியற் தலைவர்கள், இடதுசாரிப் போக்கு களைக் கொண்ட அரசாங்கங்கள் என்பவற்றின் பலம் மிகுந்த ஆதரவுகளின் மூலமும் இச்சமூக முன்னோடிகளின் இடையறாத போராட்டங்களின் மூலமுமே ஈழத் தமிழினத்தில் மனித உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகங்கள் குறிப்பிடத்தக்களவு முன்நகர்வுகளை அடையப்பெற்றுள்ளன.

Page 98
orbpyBureso O 190
இந்த சமூக அசைவியக்கங்களில் தோழர் எம். சி. சுப்பிரமணி யும் வகித்த பாகம் காலாதி காலத்திற்கும் நினைவுகூரத்தக்கது.
"அடிமை விலங்கறுப்பே7ம் - அதில் ஆயுதங்கள் செய்திடுவோம் கொடுமை மிக மலிந்த - இக்
குவலயத்தை ம7ற்றிடுவோம்.”
தலித் தமிழ் இலக்கிய முன்னோடி கே டானியல் நினைவை யொட்டி தோழர் எம். சி. சுப்பிரமணியம் 1986 04, 20 "ஈழநாடு” வாரமலரில் எழுதியிருந்த கட்டுரையில் வடித்தளித்த இக்கவிதை வரிகள் எம். சி.யின் மனக்கருவூலத்தைத் துல்லியமாக வெளிப் படுத்துகின்றன.

தெபிையான்
ஒடுக்கப்பட்ட மக்களின்
ஏகத் தலைவன் எம்.சி.
யாழ்ப்பாணக் கலாசாரம் கந்தபுராண கலா சாரம் என யாழ்ப்பாணத் தமிழர்களில் ஒரு பகுதியினரால் மிக மேன்மைப்படுத்திப் பேசப்பட்டு வருகின்றது. நாவலர் பரம்பரையில் வந்த பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையினால் யாழ்ப்பாணத்தாருடைய கலாசாரம் ‘கந்தபுராண கலாசாரம்’ என்னும் கருத்து நாற்பதுகளில் முன்வைக்கப்பட்டது. கந்தபுராண கலா சாரம் என்று எதனை வலியுறுத்தினார் என்பது தெளி வில்லாமலே இருக்கிறது என கலாநிதி எஸ். சிவலிங்க ராஜா “யாழ்ப்பாணத்து வாழ்வியற் கோலங்கள்’ என்ற தனது நூலில் குறிப்பிடுகின்றார். ‘கந்தபுராண கலாசாரம்" என்னும் பண்பாட்டுக் கருத்தியலை முன்வைத்த பண்டிதமணியே அதுபற்றிய தெளிவான ஒரு விளக்கத்தைக் கொடுக்காதபோதும் அதனை ஒரு வெகு உயர்ந்த பண்பாடாகப் பேசிக்கொள்வது யாழ்ப் பாணத்தாரின் நடைமுறையாக இருந்து வருகின்றது. தனக்கு விளங்காத ஒன்றை மிக உயர்வானதாக ஒருவர் சொல்வதற்கு அல்லது உயர்வானதாக இருக்கும் எனக் கருதுவதற்கு, குறிப்பிட்ட அக்கருத்தினை உணர்ந்து கொண்டு விட்டதாகப் பாவனை பண்ணுவதன் மூலம் தனது தகுதியை உணர்த்திக் காட்டுவதுதான் அடிப்படை நோக்கமாக இக்காலத்தில் இருந்து வருகின்றது. எது

Page 99
சந்திரபோஸ் O 192
எவ்வாறாயினும் கந்தபுராண் கலாசாரம் என்றால் என்ன? கந்த புராணம் கலாசார நூலா? அல்லது மதச் சார்புடைய நூலா? இந்த வினாக்களுக்கு ஆழமாக விடை காண்பது இக்கட்டுரையின் பிரதானமான நோக்கமன்று. ஆயினும் கந்தபுராண கலாசாரத்தை உடைய சமூகமெனக் குறிப்பிடப்படும் யாழ்ப்பாணச் சமூகம் பற்றிய அடிப்படையான தெளிவினைப் பெற்றுக்கொள்ள வேண்டியது இங்கு அவசியமாகின்றது.
கந்தபுராணம் என்பது மதச் சார்புடைய ஒரு நூல். அதுவும் இந்து மதத்துக்குரியதான புராண நூல். இந்த நூலின் வழிவருகின்ற கலாசாரம், யாழ்ப்பாணத் தமிழரின் கலாசாரமாக ஒருபோதும் அமைய முடியாது. தமிழராக இருக்கும் கிறிஸ்தவர்களும், தமிழ் பேசும் முஸ்லீம்களும் யாழ்ப்பாணத்து மக்களாக இன்று வாழ்ந்து வருகின்றார்கள். கந்தபுராண கலாசாரம் எனக் குறிப்பிடப்படும் யாழ்ப்பாணத்து இந்து மதக் கலாசாரத்துக்குள்ளே கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் எந்த வகையிலும் இடம்பெற இயலாது. யாழ்ப்பாணத்துக் கலாசாரம் கந்தபுராண கலாசாரமாக, அதாவது இந்து மதக் கலாசாரமாகக் குறிப்பிடப்படுவதால், இந்துக் கலாசாரத் தினால் புறக்கணிக்கப்பட்டுவரும் யாழ்ப்பாணத்து ஒடுக்கப்பட்ட மக்களும் இந்தக் கலாசாரத்துக்குள் அடங்குகின்றவர்களாக இருக்க முடியாது. எனவே கந்தபுராண கலாசாரம் என்பது யாழ்ப்பாணத் தமிழர் கலாசாரமன்று. யாழ்ப்பாணத்து உயர்சாதி இந்துக்களின் கலாசாரமே யாழ்ப்பாணக் கலாசாரமாக மிகத் தந்திரமாக முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
இந்தக் கலாசாரத்தினால் புறந்தள்ளப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக யாழ்ப்பாண நகரத்தில் தோன்றியவர்தான் எம். சி. சுப்பிரமணியம் அவர்கள். எம். சி. என எல்லோராலும் மதிப்புரிமையுடன் அழைக்கப்பெற்ற சுப்பிரமணியம் ஒருவர்தான், இந்து கலாசாரச் சாதி வெறியினால் ஒடுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட மக்கள் அனைவரினாலும் ஏற்றுக்கொள்ளப்பெற்ற ஏகத் தலைவராக விளங்கினார். ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்து வந்த-மதம், சாதி, கொள்கைப் பிரிவுகளுக்கு அப்பால் இந்த மக்கள் எல்லோரும் எம். சி. யைத் தவிர, இன்னொருவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை என்பது இங்கு மனங்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். இத்தகைய ஒரு தலைமைத்துவத்தை எம். சி. எவ்வாறு பெற்றுக் கொண்டார் என்பதனைத் தெளிவாக நோக்குவதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர் ஆற்றிய அரும் பணிகளை ஒரளவு இன்ங்கண்டு கொள்ளலாம். w
எம். சி. என்ற சமூகவிடுதலைப் போராளியின் சாதியத்துக்கு எதிரான சிந்தனை ஊற்று அவர் தந்தையார் கணபதிப்பிள்ளை

193 9 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
வழியாகவே அவரது இளவயதில் கண் திறந்திருக்கின்றது. எம். சி. தனது ஆரம்பக் கல்வியைக் கிறிஸ்தவப் பாடசாலையில் ஆரம்பித்த வேளையில் அக்கால நடைமுறைக்கிணங்க, தரையில் அமர்ந்திருந்து கல்வி கற்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார். தமது மந்தைக்கு ஆட்சேர்க்கும் அரும் பணியைச் செய்வதற்காகவே பாடசாலைகளை நிறுவிய கிறிஸ்தவர்கள் தமிழ்மக்கள் மத்தியில் இருந்து வந்த சாதிய வரம்புகளைப் பேணி வந்தார்கள். உத்தியோக வசதி வாய்ப்பு களுக்காக முன்னின்று கிறிஸ்தவர்களாக மதம் மாறிய உயர்சாதியின ரெனப்படுவோர் கிறிஸ்தவர்கள் மத்தியிலும் சாதி வரன் முறைகளைப் பேணிப் பாதுகாப்பதில் மிகத் தீவிரமாகச் செயற்பட்டார்கள். இந்தத் தீவிரத்தன்மை காரணமாகவே கிறிஸ்தவப் பாடசாலை களிலும் ஒடுக்கப்பட்ட சமூகத்து மாணவர்கள் தரையில் இருந்து கல்வி கற்க வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது. அத்தகைய அவமதிப்பினை ஏற்றுக்கொள்ள எம். சியின் தந்தை கணபதிப் பிள்ளையும் அவர் உறவினரான கன்னாதிட்டி சின்னத்தம்பியும் இணைந்து, தமது செலவில் ஆசனங்களைச் செய்துகொடுத்து, அந்த ஆசனங்களில் எம். சி. யும் ஒடுக்கப்பட்ட சமூகத்து ஏனைய பிள்ளைகளும் அமர்ந்திருந்து கல்வி கற்பதற்கான ஏற்பாட்டினைச் செய்தார்கள்.
1928ஆம் ஆண்டில் சமஆசனம், சகபோசனம் என்னும் இயக்கத்தை அமெரிக்க மிஷனரிமாரின் உதவியுடன் சகல அரசியல் வாதிகளையும் அழைத்து திரு. யோவேல் போல் உடுவில் பெண்கள் கல்லூரியில் ஆரம்பித்து வைத்தார். (சுப்பிரமணியம் சந்திரபோஸ் - 20ஆம் நூற்றாண்டில் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சி 1989) இதனை வன்மையாக எதிர்த்தவர் சேர் பொன். இராமநாதன், 79 கிராமச் சங்கப் பிரதிநிதிகளுடன் அன்றைய வெள்ளைக்காரத் தேசாதிபதியைச் சந்தித்து சாதி அமைப்பினைப் பேணும் முறையிலான பாடசாலைகளை வலியுறுத்தினார். 04, 11 1929இல் நூற்றுமுப்பத்தொரு "சைவப் பெரியார்கள்’ யாழ்ப்பாணம் நீகல் தியேட்டரில் இந்து மகாசபையின் தலைமையில் ஒன்று கூடி கோப்பாய் அரசினர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையை உயர்சாதி யினரின் தனி ஸ்தாபனமாக்குமாறு தேசாதிபதிக்கு மனுச் செய்தனர். இந்தப் பிரச்சினை காரணமாக தேவரையாளிச் சமூகத்தைச் சேர்ந்த வடஅல்வை முருகேசனார் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் கல்வி பெறும் வாய்ப்பினை 1929இல் இழந்து போகின்றார். இத்தகைய சாதிவெறி பிடித்த யாழ்ப்பாணத்துச் சமூகச் சூழலில் 1922ஆம் ஆண்டு தான் கற்ற கிறிஸ்துவப் பாடசாலையில் எம். சி. சமஆசனத்தில் அமர்ந்து கல்வி கற்றமை சாதியத்துக்கு எதிராகச் சிறுவயதிலேயே அவர் பெற்றுக்கொண்ட முதல் வெற்றி எனலாம்.

Page 100
சந்திரபோஸ் O 194
மகாத்மா காந்தி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த 1927இல் எம். சி. பத்துவயதுப் பாடசாலை மாணவனாக இருந்து, மாணவர்கள் வரிசையாக நின்று வழங்கிய வரவேற்பில் பங்கு கொண்டார். காந்தியின் வருகையுடன் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் கல்வி கற் பதற்கும் சமஆசனம் பெறுவதற்குமெனத் திறந்து வைக்கப்பெற்ற பாட சாலைகள் காந்திஜி யாழ்ப்பாணத்து மண்ணை விட்டுக் கிளம்பிச் சென்றவுடன் அத்தனை பாடசாலைகளும் தீக்கியைாக்கப் பட்டன. யாழ்ப்பாண மண்ணில் தீக்கியைாக்குதல் என்பதும் சாதிக் கொடுமையின் பெயரினாலே ஆரம்பத்தில் இடம்பெற்று வந்திருக் கின்றது. இக்கொடுமை நிகழுகின்ற சமயத்திலும் எம். சி. சமஆசனம் பெற்றுக் கல்வி கற்று வந்தார் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.
யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கல்லூரியில் கல்வி கற்று, அரச உத்தியோகத்தில் அமர்ந்து, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீது கொண்ட அக்கறை காரணமாக அரச உத்தியோகத்தைத் துறந்தார். சமூக அக்கறை கொண்டவர்களின் ஆதர்சமாக அக்காலத்தில் விளங்கிய இந்தியக் காங்கிரசின் கொள்கைவழிப்பட்டவராகத் திகழ்ந்தார். தலையில் காந்திக் குல்லா அணிந்துகொண்டார். அகிம்சை, சாத்வீகம் என்பவற்றை வழிமுறையாகக் கொண்டு அடிநிலை மக்களின் வாழ்வில் விடிவினைத் தோற்றுவிக்கலாம் என்று நம்பினார். இந்த நம்பிக்கையின் காரணமாக அகில இலங்கைக் காங்கிரஸ் மகாசபையில் இணைந்து செயற்பட்டார். காலப்போக்கில் இந்த அகிம்சையினாலும் சாத்வீகத்தினாலும் அடிநிலை மக்களின் வாழ்வில் ஒரு விமோசனம் கிட்டப்போவதில்லை என்பதனைக் கண்டுகொண்டார். இந்தத் தெளிவானது காந்தியத்தை அடுத்து மிகத் தீவிரமாக எழுந்த திராவிட அலையின் சீர்திருத்தக் கருத்துக்களால் அடித்துச் செல்லாதவாறு அவரைத் தடுத்தது. அடிநில்ை மக்களின் விமோசனத்துக்கான மார்க்கம் காந்தியமல்ல; திராவிடக் கழகத்தார் முன்வைத்த சமூக சீர்திருத்தமுமல்ல; சமுதாய மாற்றம் ஒன்றே இந்த மக்களின் விடுதலைக்கான ஒரே வழி; அந்த வழி மார்க்சிச வழி என்பதைக் கண்டுகொண்டார். 1945இல் வடபுலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது அக்கட்சியுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்த எம். சி. 1989இல் மறையும்போதும் கம்யூனிஸ்டாகவே மறைந்தார்.
1956ஆம் ஆண்டு பருத்தித்துறைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராக கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பொன். கந்தையா தெரிவு செய்யப்பட்டார். கம்யூனிஸ்டுகளுக்குச் சாதகமாக அமைந்த இந்தச் சூழ்நிலையில் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் இணைக்கும் பொது நிறுவனமாக அக்காலத்தில் விளங்கிய அகில

195 w− 9 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் தலைவராக 1957இல் எம். சி. தெரிவு செய்யப்பட்டார். எம். சி. தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்ட பின்னர், மகாசபை கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கத்துக்கு உட்பட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டுத் தவறானதல்ல. 57க்கு முன்னரே இதற்கான போராட்டம் ஆரம்பித்து 57இல்தான் கம்யூனிஸ்டுகளின் கையில் நிர்வாகப் பொறுப்பு வந்து சேர்ந்தது. சமூகத்தில் அடிநிலை மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையைப் பெறுவதற்கு கம்யூனிஸ்ட் கொள்கைவழிசார்ந்த மார்க்கத்தைத் தவிர வேறு வழியில்லை என்பதனை அதற்கு முற்பட்ட கால வரலாறு மிகத் தெளிவாக உணர்த்தி நின்றது. இதனால் அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் முக்கிய பதவியை வகித்து வந்த காந்தியவாதிகளான ஆ. ம. செல்லத்துரை, க முருகேசு ஆகியோர் மகாசபையில் இருந்து ஒதுங்க வேண்டிய சூழ்நிலை உருவானது.
இவர்கள் காந்தியம், சைவம், கல்வி என்பவற்றால் சமூக அங்கீகாரத்தைப் பெற்றுவிடலாம் என்று நம்பினார்கள். காந்தியம் தோற்றுப் போய்விட்டது என்பதைக் கடந்த கால அனுபவத்தின் மூலம் இவர்கள் ஏற்றுக்கொள்ளத் தவறியமை இவர்கள் இழைத்த மாபெருந்தவறு என்றே சொல்லவேண்டும். இந்தத் தவறு காரணமாகவே எம். சி: போன்று ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவ ராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க தலைமைத்துவத்தைப் பெற்றுக்கொள்ள இயலாது போயிற்று. எம். சி. யின் மிகப் பெரிய பெருந்தன்மை இவர்கள் மீதும் இறுதிவரை மதிப்பும் மரியாதையும உடையவராக வாழ்ந்தவர் என்றே கூறலாம். ஆனால், எம். சி. யைச் சூழ்ந்து நின்றவர் சிலர் 'வல்லையில் முனிகளாகப் பொது நிறுவனத்தைச் சிதைக்கும் பெரும்பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த முனிகள் இன்றும் கல்லெடுத்து வீசும் தமது பழைய பணிகளை, சேட்டைகளைச் செய்து கொண்டே இருக்கின்றனர்.
பருத்தித்துறைப் பாராளுமன்ற உறுப்பினராக பொன். கந்தையா தெரிவு செய்யப்பட்டு வந்தபின்னர் யாழ்ப்பாணச் சமூகத்தில் பல மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. கம்யூனிஸ்டுகள் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள், கோயில்களை இடிப்பவர்கள் என்ற தொனியிலான பிரசாரங்கள் தேர்தல் காலத்தில் இடம்பெற்றன. இந்தக் கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு ஆலய விவகாரங்களில் இடம்பெறுவது சைவத்துக்கே இழுக்கென்னும் கருத்தினை முன்வைத்து காந்தியவாதிகளான ஆ ம. செல்லத்துரை, க. முருகேசு, கவிஞர் மு. செல்லையா, சைவப்புலவர் சி. வல்லிபுரம் ஆகியோர் யாழ்ப்பாணச் சமூகத்தின் உயர்நிலையில் இருந்த பெரியார்களை மெல்ல அணுகினர். இவர்கள் எடுத்துக்கொண்ட பெருமுயற்சியின்

Page 101
சந்திரபோல் O 196
பேறாக, அப்பொழுது அரசாங்க அதிபராக இருந்த பூரீகாந்தாவும் இன்னும் பெரியார்களும் முன்னின்று 1956ஆம் ஆண்டு நல்லூர் கந்தசாமி கோயில், வண்ணை வைத்தீஸ்வரன் கோயில், பெருமாள் கோயில் ஆகிய நகரத்து ஆலயங்கள் மூன்றினையும் சகல மக்களும் சென்று வழிபடும் வண்ணம் திறந்து வைத்தார்கள். ஈழத்து மண்ணில் இடம்பெற்ற முதலாவது ஆலயப் பிரவேச நிகழ்வு இதுவேயாகும்.
ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றை எழுதுகின்றவர்கள் முதன் முதலாக ஆலயப் பிரவேச முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கொண்டவர்களின் பெயர்களை இருட்டடிப்புச் செய்து வருகின்றனர். சிலர் மாவிட்டபுரத்தில் இருந்தே ஆலயப் பிரவேசப் போராட்டத்தை ஆரம்பித்ததாகச் சொல்ல முற்படுகின்றார்கள். இவ்வாறு செய்வது வரலாற்று மோசடி என்பதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டியது அவசியமாகின்றது. 1956இல் மாவிட்டபுர ஆலயப் பிரவேசப் போராட்டம் ஆரம்பிக்கும் வரை வேறு எந்தவொரு கோயிலுக்குள்ளும் ஒடுக்கப்பட்ட மக்கள் சென்று வழிபாடு செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் அகிம்சை வழியிலான போராட்டமும் முன்னெடுத்துச் செல்ல இயலாது தோற்றுப் போனதை இது உணர்த்துவதாக அமைந்தது.
மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலில் இடம்பெற்ற ஆலயப் பிரவேசப் போராட்டம் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத் தினாலேயே தீவிரமாக முன்னெடுத்துச் செல்லப்பட்டது. இந்தப் போராட்டத்தில் அகில இலங்கைச் சிறுபான்மை தமிழர் மகா சபையும் அதன் தலைவர் எம். சி. யும் பங்காளிகளாக நின்று செயற் பட்டார்கள் என்பது மறுக்க முடியாத ஓர் உண்மை. இதன் தொடர்ச்சியாகவே 1973இல் பொலிகண்டி கந்தவனநாதர் ஆலயப் பிரவேசம் நியமன எம். பியாக இருந்த எம். சி. யின் தலைமையில் நடைபெற்று முடிந்தது. அந்த ஆலயப் பிரவேச நடவடிக்கைகளை தெணியான், எஸ். கே இராசேந்திரன் ஆகிய இடதுசாரிகளும் ஏனைய சிலரும் இணைந்து நின்று செயற்பட்டு எம். சி. யின் தலைமையில் வெற்றிகரமாகச் செய்து முடித்தனர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகளைச் சாத்வீக வழிகளில் பெற முனைந்து காந்தியவாதிகளால் மாத்திரமன்றி, போராடிப் பெறுகின்ற மாக்சிசவாதிகளினாலும் பூரணமாகப் பெற்றுக்கொள்ள முடிய வில்லை என்பதற்கு, வடபிரதேசத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இன்னுந் திறந்துவிடப்படாத நூற்றுக்கணக்கான ஆலயங்கள் சாட்சி யங்களாக விளங்குகின்றன.
இந்த நிலையில் மதமாற்றத் தடைச்சட்டம் ஒன்று கொண்டுவரப்பட இருப்பது இந்த நாட்டில் இடம்பெறும் இன்னொரு கேலிக்கூத்தென்றே சொல்லலாம். வறுமையும் சமூகப்

197 9 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
பின்னடைவும் காரணமாகவே தமிழ்மக்களில் மதம் மாற விரும்பு கின்றனர். இவர்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்து மக்களாகக் காணப்படுகின்றனர். இவர்களை இந்துக்களாக மதித்து, சமத்துவமாக ஆலயங்களுக்குள் அனுமதிக்கும் எண்ணம் இல்லாதவர் மதமாற்றத் தடைச்சட்டம் ஒன்றினைக் கொண்டுவந்து இந்த மக்களைத் தொடர்ந்தும் தங்கள் அடிமைகளாக வைத்துக் கொள்ள எண்ணு கின்றார்கள் என்றே சொல்லலாம்.
எம். சி. மனிதநேயம் மிக்க ஒருவராக விளங்கினார். முழு மனித இனத்தின் விடுதலைக்காகப் போராடும் மார்க்சிசச் சிந்தனையாளனாக அவர் செயற்பட்டார். பரந்து விரிந்த இந்தச் சிந்தனையும் செயற் பாடுமே தன்னைச் சூழவுள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் அவலநிலை கண்டு அவர் உள்ளம் கொதிக்கச் செய்தது. ஒடுக்கப்பட்ட மக்கள் சாதியத்தின் பெயரால் எங்கெல்லாம் துன்புறுத்தப்பட்டார்களோ அங்கெல்லாம் அந்த மக்களைப் பாதுகாப்பதில் முனைப்புடன் எம். சி. நின்றார். கம்யூனிஸ்ட் கட்சி, சிறுபான்மை தமிழர் மகாசபை என்பவற்றோடு யாழ் நகரில் எம். சி. வாழ்ந்து வந்தமையும் அவர்தம் சமூகமும் அவருக்கு வச்சிர பலத்தை வழங்கி வந்தன. யாழ் குடா நாட்டில் எங்காவது ஒரு கிராமத்து மூலையில் சாதிவெறி கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களைத் துன்புறுத்தும் ஒரு சாதிமான் அக்காலத்தில் யாழ் நகரத்துக்குள் போய் வருவதற்குத் துணிவின்றி அஞ்சினான். அதனால் குடாநாடு முழுவதும் சாதியக் கொடுமை தலைதூக்க இயலாத ஒரு சூழ்நிலை இருந்து வந்தது. அந்த யாழ் நகரத்தில்தான் நகரத்தின் கெளரவம்மிக்க முதற் பிரசையான ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த மேயருக்கு, இன்னொரு மாநகர உறுப்பினர் சாதிப் பெயர் சொல்லி கைநீட்டி அடித்த சழ்பவம் கடந்த ஆண்டு அரங்கேறி இருக்கின்றது.
ஒடுக்கப்பட்ட மக்களின் இருள் சூழ்ந்த வாழ்வில் ஒளியேற்றக் கருதி பதினைந்துக்கு மேற்பட்ட பாடசாலைகளை யாழ் குடா நாட்டின் பல பகுதிகளிலும் நிறுவி கல்விப் பரம்பலை எம். சி. ஏற்படுத்தினார். அத்தோடு, படித்துவிட்டு வேலையற்றிருந்த இந்தச் சமூகத்து வாலிபர்கள் பலருக்கு புதிதாகத் தாம் நிறுவிய பாட சாலைகளில் ஆசிரிய நியமனம் செய்து கொடுத்து, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் புதிய ஒரு மலர்ச்சியைத் தோற்றுவித்தார்.
எம். சி. யை அணுகுவதற்கு இடையில் இன்னொரு “சிண்ணும் எந்தக் காலத்திலும் தேவையாக இருந்ததில்லை. அவர் எல்லோர் மத்தியிலும் எளிமையான ஒரு தலைவனாகவே இருந்து செயற்பட்டு வந்தார். அதே சமயம் மிகவும் கண்ணியமான அரசியல்வாதியாகவும் இருந்தார் என்பதற்கு ஒரு சம்பவத்தை உதாரணமாகச் சொல்லலாம்.

Page 102
öቻib፰ሀ®umeio O 198
எம். சி. பாராளுமன்றத்தில் நியமன உறுப்பினராகக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இடம்பெற்றமை, தமிழ்மக்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருந்த தமிழ்க் கட்சிகளுக்கு ஒரு நெருக்கடியை உருவாக்கியது. ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு அக்கட்சிகள் ஆளாயின. இந்த இக் கட்டான சூழ்நிலை காரணமாக 1977 தேர்தலில் த. இராசலிங்கம் தமிழர் கூட்டு முன்னணியின் சார்பில் உடுப்பிட்டித் தொகுதியில் தேர்தலில் பேட்டியிடுவதற்கு அவர்களால் நிறுத்தப்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சி பொன். குமாரசாமி அவர்களை உடுப்பிட்டித் தொகுதி வேட்பாளராக நிறுத்துவதற்குத் தீர்மானித்தது. இந்தத் தீர்மானத்தை உடுப்பிட்டித் தொகுதியில் இருந்த ஒடுக்கப்பட்ட சமூகத்துக் கம்யூனிஸ்டுகள் வன்மையாக எதிர்த்துப் பார்த்தார்கள்.
இதனால் உருவான சிக்கலைத் தீர்க்கும் பொறுப்பினை கம்யூனிஸ்ட் கட்சியின் உடுப்பிட்டிக் கிளையிடமே விட்டு விட்டார்கள். கர வெட்டியில் இருந்த பொன். குமாரசாமி இல்லத்தில் இரண்டு இரவுகள் தொடர்ந்து விவாதித்தும் நிலைமையில் மாற்றம் ஏதுமே ஏற்படவில்லை. மூன்றாவது தினம் யாழ். கம்யூனிஸ்ட் கிளையில் இருந்து எம். சி. அவர்களைக் கரவெட்டிக்கு அனுப்பிவைத்தார்கள். எம். சி. யின் வருகையுடன் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டு, பொன். குமாரசாமியே கட்சியின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற அபிப்பிராயம் பரவலாக அடிபட்டது. ஆனால், எம். சி. தனது செல்வாக்கையோ அரசியல் ஆதிக்கத்தையோ செலுத்தாது, சக தோழர்களின் கருத்துக்களை நன்கு செவியுற்று, இறுதியில் இராசலிங்கத்துக்கு எதிராக பொன். குமாரசாமியை நிறுத்துவதில்லை என்ற தீர்மானத்துக்கு வந்தார்.
இந்த விவாதம் நடந்து கொண்டிருந்த மூன்று இரவுகளும் நடுச்சாமம் தாண்டியபிறகும் இராசலிங்கம் தமது வீட்டில் தெணியான், எஸ். கே. இராசேந்திரம், செ. சதானந்தன் ஆகிய மூவரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து கண்விழித்துக் காத்திருந்தார் என்ற உண்மை பலருக்குத் தெரியாது. மூன்றாவது தினம் இரவு அவர்கள் மூவரையும் சந்தித்த பிறகுதான் இராசலிங் கத்தின் உறக்கத்தில் அமைதி தோன்றியது. உடுப்பிட்டித் தொகுதியில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்துவந்த கம்யூனிஸ்டுகள், தேர்தலில் வெற்றி பெற்றபின் இராசலிங்கம் வெளியிட்ட கருத்துகள், செயற்பாடுகள் கண்டு தாங்கள் செய்த தவறினைக் காலங்கடந்து உணர்ந்து கொண்டார்கள். அத்துடன் இப்பகுதியைச் சேர்ந்த கம்யூனிஸ்டுகள் என்று கருதப்பட்டவர்களுள் தெணியான், எஸ்.

199 9 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
கே. இராசேந்திரம் தவிர ஏனையோரும் சந்தர்ப்பவாதிகளாக மாறிப் போனார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சி, அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகா சபை என்பவற்றின் பக்கபலத்துடன் சாதிக் கொடுமைக்கு எதிராக எம். சி. எடுத்த நடவடிக்கைகள் பல வெற்றிகளைச் சம்பாதித்துக் கொடுத்திருக்கின்றன. எம். சி. யின் சமூக விடுதலைப் போராட்டங் களுக்கு உறுதுணையாக முற்போக்குச் சிந்தனையுள்ள உயர்சாதியினர் எனப்படுவோர் சிலரும் இருந்து வந்திருக்கின்றார்கள் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அதேசமயம் இடதுசாரிச் சிந்தனையாளர்கள் எனத் தம்மை இனம்காட்டிக் கொண்ட சிலர், சாதி விடயங்களில் உதட்டளவில் முற்போக்காளர்களாகக் காட்டிக் கொண்டார்கள் என்பதை மறந்து போவதற்கில்லை. தமது குடும்பத்து வைபவத்தில் நிலப்பாவாடை விரித்து நடந்து சென்ற முற்போக் காளர்களும், ஒடுக்கப்பட்ட மக்கள் சமத்துவமாகச் சென்று வழிபடு வதற்கு ஆலயக் கதவுகளைத் திறந்துவிட வேண்டுமெனக் கிராமம் கிராமமாகப் பிரசாரம் செய்துவிட்டு, தமது கோயிலை மாத்திரம் திறக்காமல் வைத்துக் கொண்டிருக்கும் முற்போக்காளரும், ஒடுக்கப் பட்ட சமூகத்தில் பிறந்தவன் என்ற ஒரே காரணத்தால் தனது வீட்டிற்குள் அனுமதிக்காத முற்போக்காளரும் இந்த மண்ணில் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
ஆயுதக் குழுக்கள் இந்த மண்ணிலே காலூன்றிய பின்னர் சாதியத்துக்கு எதிரான போராட்டங்கள் முடக்கப்பட்டுவிட்டன. போராட்டம் முடங்கிவிட்டதனால் சாதியம் அழிந்துவிட்டது என்று யாரும் சொல்லிவிட முடியாது. சாதிவெறி பதுங்கிக் கிடந்து சந்தர்ப்பம் வாய்க்கும்போது இடையிடையே தலைகாட்டிக் கொண்டு தான் இருக்கிறது. தலைகாட்டும் சாதிவெறிக்கு எதிராகப் போராட்டம் என்று தற்போது மேலெழும் பயம் காரணமாக, அப்படி எந்தப் பிரச்சினையும் இன்று இல்லாதது போன்ற ஒரு பாவனை எங்கும் செய்யப்பட்டு வருகின்றது.
இதற்கு நல்லதொரு உதாரணம் இன்று நான் சொல்லலாம். 1962 ஆம் ஆண்டு கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலையில் மாணவனாக நான் இருந்தபோது, டொமினிக் ஜீவாவுக்கு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்ததைக் கண்டு மனம் பெறுக்காத பண்டிதர் “நாவி தனுக்குச் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்திருக்கிறது” என்று சாதி சொல்லி நக்கலடித்ததை என் காதால் கேட்டிருக்கிறேன். இவ்வாறு அக்காலத்தில் மாணவர்கள் மத்தியில் அற்பத்தனமாகச் சாதி பேசியவர் ஒரு தமிழ்ப் பண்டிதர். நாவலர் பரம்பரையில் வந்தவர். (அவரிடம் கல்வி கற்றதனால் நானும் நாவலர் பரம்பரையில் வந்தவன்தான்!) யாழ்ப்பாணத்துக் கந்தபுராண

Page 103
afég(8urdo O 2OO
கலாசாரத்தின் பிரதி நிதியாக விளங்குகின்றவர். இன்று 2004ம் ஆண்டு ' - அது நடந்து நாற்பத்தியிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், பல்கலைக்கழகத்தில் ஒரு துறைத் தலைவராக இருக்கும் கலாநிதி ஒருவர் விரிவுரை நடத்தும் வகுப்பறையில் சாதியம் பற்றிப் பேச வேண்டிவரும் சந்தர்ப் பங்களில் எல்லாம், “வெள்ளான்தான் பெரிய சாதி அதை ஆரும் மறுக்கேலாது. மற்றவனெல்லாம் வெள்ளாருக்குக் கீழேதான்” எனப் பெருமையோடு சொல்லிக் கொண்டிருக்கின்றார். இதுதான் புலமை சார் மானிடவியல் நோக்கு. அவரது அமுதவாக்கினைக் கேட்டுக் கொண்டிருக்கும் மாணவர்கள் வாய் திறந்து மூச்சுவிடாமல் இருக்கின்றார்கள். வாய் திறந்தால் அந்த மாணவன் பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேறும்போது பட்டம் ஒன்றைப் பெற்றுக் கொண்டு செல்லவியலாது போகும். கணினி யுகத்தில் இந்தக் கலாநிதி யாருடைய பிரதிநிதி? யாழ்ப்பாணக் கந்தபுராண கலாசாரத்தின் இன்றைய வாரிசு இவரல்லவா? இதுபோன்ற பல நிகழ்வுகளை இன்னும் எடுத்துச் சொல்லலாம். இவைகள் யாவும் இந்த மண்ணில் இன்னும் பல எம். சி. க், களின் தேவையை உணர்த்துகின்றன அல்லவா!
இறுதியாகக் கவிஞர் எழில்வேந்தனின் கவிதை ஒன்றை எம். சி. க்குச் சமர்ப்பணமாக்குகின்றேன்.
"ஊருக்குள்ளே சாதியில்லை ஒப்புக் கொள்ளல7ம் - அது
உள்ளத்திலே ஒளிந்திருக்கே
6767,607 Z veoavenova/7Zb.
தொற்று நோய்க்கும் தொழு நோய்க்கும் மருந்து கண்டோமே முற்றிப்போன சாதி நோய்க்கு மருந்து கண்டே7ம77 - அதை முழுவதும7zப் எரித்துச் ச7ம்பல்
a 60/7aias Ga/6aiva/7ZO/7.'

ordio.(8as. Syr(sgabsorb
எம்.சி. என்றொரு தலைவன்
நான் நினைக்கிறேன், அப்பொழுது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்திமூன்று, ஒரு சனிக்கிழமை பிற்பகல் ஐந்து மணியிருக்கும். நான் கல்லூரி விடுதி யிலிருந்து எனக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்வதற்காக யாழ் நகர் பெரிய கடைப் பகுதிக்குச் சென்றிருந்தேன். அங்கு வீதியில் ஒருவர் பத்திரிகை விற்றுக் கொண்டிருந்தார். நீண்ட வெள்ளை நஷனலும், தூய்மையான வெள்ளைச் சாரமும், தடித்த பிறேம் கொண்ட மூக்குக்கண்ணாடி அணிந்தும், ஒருவகைப் பொலித்தீனால் கவர் போடப்பட்ட தொப்பியும் அணிந்திருந்தார். அப்பொழுது நான் மார்க்சிய சித்தாந்தத்தைக் கற்பதில் ஆர்வம் கொண்ட காலம். தேசாபிமானி, போர்வாள் ஆகிய இரு பத்திரிகைகளையும் அவரிடம் பெற்றுக் கொண்டேன்.
அப்பெரியார் வேறு யாருமல்லர். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், எமது சமூகத்தினைப் பீடித்துள்ள சாபக்கேடான சாதி ஒடுக்குமுறையை, தீண்டாமைக் கொடுமையை எதிர்த்து, அந்தச் சமூகக் கொடூரத்திற்கு ஆளான ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்களைத் தட்டியெழுப்பி சமூக விடுதலைப் போராட்டத்தின் முன்னணித் தலைவனாக அரை நூற்றாண்டுக்கு

Page 104
சந்திரபோஸ் O 2O2
மேலாகச் செயற்பட்ட, எல்லோராலும் எம். சி. என அழைத்து வரப்பட்ட அமரர் எம். சி. சுப்பிரமணியம் ஆவர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் விமோசனத்திற்காக, சாதிப்பாகு பாடுகளை ஒழிப்பதற்காக, தீண்டாமை என்னும் கொடுமைக்குச் சாவுமண அடிப்பதற்காக போராடும் அதேவேளையில் இனத் தினதும், தேசத்தினதும், குறிப்பாக தொழிலாளர் வர்க்கத்தினது மேம்பாட்டுக்காகப் போராடவும் அவர் பின்நிற்கவில்லை.
1956இல் எஸ். டபிள்யூ ஆர். டி பண்டாரநாயக்கா தலைமையில் அரசாங்கம் அமைக்கப்பட்டபொழுதுதான் சிறுபான்மைத் தமிழ் மக்களின் கல்வி வளர்ச்சி அடைந்தது. இக்காலத்தில் தோழர் எம். சி. யின் கடும் முயற்சியினால், பருத்தித்துறைப் பாராளுமன்ற உறுப்பின ராக இருந்து வந்த அமரர் பொன். கந்தையாவினது ஆதரவுடன் எமது சமூக மக்கள் கல்வி பெற வசதியற்ற கிராமங்களில் சுமார் 15 பாடசாலைகளை அமைத்துக் கொடுத்தார். இவற்றுள் இரண்டு வட மராட்சிப் பகுதியில் உள்ள புலோலி, இமையாணன் ஆகிய கிராமங் களில் இன்றும் சிறப்பாக இயங்கி வருகின்றன. இப்பாடசாலைகளை அமைத்ததன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலிருந்து நூற்றுக்கணக்கான ஆசிரியர்களை நியமிக்க வாய்ப்பு ஏற்பட்டது.
1956இல் இருந்து 1960 வரைக்கான காலப்பகுதியில் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைக்கு ஆண்டுதோறும் 30இல் இருந்து 50 வரையிலான சிறுபான்மைத் தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். இவற்றை அமரர் எம். சி செய்ய முற்பட்டபோதெல்லாம் அன்றைய தமிழ் அரசியல் தலைவர்கள் இடையூறு விளைவித்தமை எம்மால் மறக்க முடியாத ஒன்றாகும்.
சிறுபான்மைத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் 1956ஆம் ஆண்டு ஒரு முக்கிய காலமாகும். இவ்வாண்டில்தான் முதன் முதல் இலங்கைப் பாராளுமன்றத்தில் சமூகக் குறைபாடுகள் ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டமும் போதிய வலுவுள்ள தாக அமையவில்லை. ஆதலினால் 1972இல் தோழர் பீற்றர் கென மனின் ஆலோசனையின் பேரில் 1956ஆம் ஆண்டு கொண்டுவரப் பட்ட சட்டம் திருத்தப்பட்டு, வலுவுள்ள சட்டமாக ஆக்கப்பட்டது. இதன் பின்னரே பல ஆலயங்கள் உரிமை மறுக்கப்பட்ட மக்களுக் காகத் திறந்து விடப்பட்டும், தேநீர்க் கடைகளில் மற்றவர்களுடன் சமத்துவமாக அமர்ந்து உணவு சாப்பிடவும் வசதி ஏற்பட்டது.
வடமராட்சிப் பகுதியிலும் ஒருசில ஆலயங்களை தாழ்த்தப் பட்ட மக்களுக்காகத் திறந்துவிட எமக்குத் துணையாக தோழர் எம். சி. யும் அந்நேரத்தில் மகாசபையின் செயலாளராக இருந்து வந்த தோழர் பி.ஜே. அன்ரனியும் இருந்தார்கள்.

2O3 0 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
வடமராட்சியில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் வளர்க்கப் பெரும் பங்காற்றியவர் தோழர் எம். சி. அவர்கள்தான்.
1972ஆம் ஆண்டு கூட்டுறவுத்துறை புனரமைக்கப்பட்டதன் பின்னர் கட்டைவேலி-நெல்லியபடி ப நோ. கூட்டுறவுச் சங்க எல்லைப் பரப்பில் எமது சமூக மக்களுக்கென ஒரு கூட்டுறவுக் கிளையை எமது வதிரிக் கிராமத்தில் திறப்பதற்கு சங்கத் தலைவர் திரு. த. சிதம்பரப்பிள்ளை ஆசிரியரின் ஆலோசனையுடன் நான், தோழர் எம். சி. மற்றும் தோழர் வீ பீ ஆகியோரைக் கேட்டபோது, ஆரம்பிக்க இருந்த தடைகள் எல்லாவற்றையும் முறியடித்து எமது மக்கள் சொந்த இடத்திலேயே தங்களுக்குத் தேவையான பாவனைப் பொருட்களைப் பெறுவதற்கு உறுதுணையாக இருந்தார்கள்.
இறுதியாக, கடந்த சில வாரங்களாக பெளத்தர்களாலும், இந்துக்கள் சிலராலும் மதமாற்றம் தடைசெய்யப்பட வேண்டும் என்ற கோஷம் பெரிதாக எழுப்பப்பட்டு வருகின்றது. இச்செயல் மறை முகமாக உரிமை மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களைப் பாதிப் படையச் செய்யும். இதன்மூலம் திறந்த சில ஆலயக் கதவுகள் மீண்டும் பூட்டப்படலாம். அதனைத் தட்டிக் கேட்பதற்கு, தலைமை ஏற்று போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அமரர் எம். சி. இல்லாமை எமக்கு பெரும் இழப்பாகும். இப்படிப்பட்ட சந்தர்ப்பங் களில் பாதிக்கப்பட்ட மக்களை போராட்டத்தில் வழிநடத்த அமரர் எம். சி. போன்ற தலைவர்கள் எம் மத்தியில் தோன்றவேண்டும்.

Page 105
வயிரமுத்து - திவ்யராஜன்
தமிழ்மக்களின் விடிவுக்காகப் போராடியவர்
ஊற்றுநீர் ஒன்று
கிணறுகள் வேறு வேறு எரித்தால் பிடிசாம்பல்
எரியிடங்கள் வேறு வேறு புதைத்தால் ஆறடிமண்
புதையிடங்கள் வேறு வேறு கடவுள் ஒன்று
வணங்கிடங்கள் வேறு வேறு
சாமிகாவ ஒரு கூட்டம் தேரிழுக்க தனிக் கூட்டம் பூஜை செய்ய ஒரு சாதி பூக்கட்ட ஒரு சாதி பறையடிக்க ஒரு சாதி தவிலடிக்க மறு சாதி மயிர் வெட்ட ஒரு சாதி பயிர் செய்ய ஒரு சாதி மீன் பிடிக்க ஒரு சாதி இரும்படிக்க ஒரு சாதி கழிவகற்ற ஒரு சாதி துணி துவைக்க ஒரு சாதி ஆடை நெய்ய ஒரு சாதி பாடை சுமக்க ஒரு சாதி மரமேற ஒரு சாதி

2O5 0 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
மரவேலைக்கு மறுசாதி எண்ணெய் வடிக்க ஒருசாதி மண்ணைக் குழைக்க மறுசாதி நகை செய்ய ஒரு சாதி வகை வகையாய்ப் பல சாதிகள்.
இவ்வாறே எண்ணுக்கணக்கற்ற சாதிப் பிரிப்புகளால் பின்னப் பட்டது எங்கள் ஈழத் தமிழ்ச் சமுதாயம். நிலமானியத்தின் வேலைப் பிரிப்புகளாய் மட்டும் இந்தச் சாதிப் பிரிப்புகள் இருக்கவில்லை. மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வினை நிறுவியது. உயர்வும் இழிவும் பேசியது. மனிதரை இழிசனராய், தீட்டுத் துடக்குள்ளோராய், தீண்டத் தகாதோராய் ஒதுக்கியது. வேற்றுமையை வளர்த்தது. மனித நேயத்தைக் குழிதோண்டிப் புதைத்தது.
ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டம் இலட்சத்துக்கும் மேல் உயிர்களை விழுங்கித் தொடர்கிறது. இருப்பிடங்களை இழந்து அகதிகளாய் மக்கள் அலைகிறார்கள். போக்குவரத்துத் தடைகள், உணவு விநியோகத் தடைகள், பட்டினிச் சாவுகள். இருந்த உரிமை களையும் இழந்த நிலை, மக்களின் உயிரிழப்புகள் பற்றி எவருக்கும் அக்கறை இல்லை. பேச்சுவார்த்தை என்பது வெற்றுப் பேச்சுகளாயும் வெற்று வார்த்தைகளாயும் நீளுகின்றன. இந்தப் பேச்சுவார்த்தைகளில் உலகநாடுகள் தமது சொந்த நலன்களை மையமாய் வைத்துக் கொண்டு கண்ணாம்பூச்சி விளையாடுகின்றன. ஒருபுறம் சமாதானப் பேச்சு மறுபுறம் ஆயுத விநியோகம், ஆயுதப் பயிற்சிகள். பொதுமக்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். பேயரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள். M
ஈழத்தமிழரின் விடுதலைபற்றி சிரத்தையுடன் சிந்திப்பவர்கள் அந்த விடுதலைப் போராட்டம் வெற்றிபெறக்கூடிய விதத்திலான சமூக மாற்றங்களை உருவாக்கவேண்டும். சமூகரீதியில் ஏற்றத் தாழ்வு களையும் ஒடுக்குமுறைகளையும் வேற்றுப் பிரிப்புகளையும் வைத்திருக்கக்கூடிய ஒரு சமூகம் விடுதலைக்குரிய தார்மீக பலத்தை இழந்துவிடுகிறது.
சாதியம் ஒழிந்துவிட்டதா?
சாதியம் மறைந்துவிட்டது; சாதியம் பற்றிப் பேசுபவர்கள்தாம் அதைப் புதுப்பிக்கிறார்கள் என்ற ஒரு கருத்தினை சிலரும் சில விடுதலை இயக்கங்களும் முன்வைத்தன. இதில் உண்மை உள்ளதா?

Page 106
arbefy8umeo
O 2O6
தாயகத்தில் பொருளாதார ஆதிக்கத்தின் அம்சமாக இதன் தொடர்ச்சியைக் காணலாம். சுரண்டலுக்கான கருவியாக இன்னும் இது செயற்படுகிறது. உயர்சாதியினர் நிலச் சொந்தக்காரர்களாக, பணபலம் உள்ளவர்களாக இருக்க, ஒடுக்கப்பட்டோர் சொந்தநிலம் இல்லாதவர்களாக பணபலம் குறைந்தோராக, கூலிகளாக இருக்கும் நிலைமைகளைப் பொதுவில் காணலாம். (விதிவிலக்குகள் உண்டு)
பொருளாதார சமத்துவத்தின் மூலமே இதை மாற்றமுடியும். தொழில்களில் மாற்றம் வந்தும் சாதிய அடையாளம் மாறவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களில் இன்று உயர் கல்விகற்று கணக்காளர், பொறியியலாளர், டாக்டராக, எழுது வினைஞராக, ஆசிரியராக இருக்கும் பிள்ளைகளின் சாதி அவர்களின் தந்தையார், பாட்டனார், பூட்டனார் செய்த தொழில்களின் சாதியினூடாகவே இன்றும் அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது. பல தலைமுறை களைக் கடந்தும் சாதியால் அடையாளப்படுத்தப்படுதல் தொடர்கிறது. மாறாக, புலம்பெயர்ந்த தேசங்களில் பணம் சம்பாதிக்கும் நோக்கில் உயர் வெள்ளாளர் என்போர் மீன்கடை வைத்து மீன் வெட்டுகிறார்கள், சிகையலங்கரிப்பு நிலையங்களை நடத்துகிறார்கள், சுத்திகரிப்பு வேலைகளைச் செய்கிறார்கள். ஆயினும் அங்கு அவர்கள் தாம் இன்னும் உயர்வெள்ளாளர் என்றே சொல்லிக்கொள்கிறார்கள். ஒடுக்கப்பட் டோரைப் பொறுத்தவரையில் மூன்று தலைமுறைகட்கு முந்திய தொழிலோடு இணைந்த சாதிப்பெயர் சுட்டப் படும் அதேவேளை நிகழ்காலத்தில் உயர்வேளாளர் என்போர் செய்யும் தொழில்களால் அழைக்கப்பட்டு, அதனோடு இணைந்த சாதிப்பெயர்களால் அவர்கள் அழைக்கப்படுவதில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். புலம்பெயர்ந்து வாழும் இடங்களில் உயர்வேளாளர் என்போர் மட்டுமே சாதியை வெளிப்படையாகச் சொல்லுகிறார்கள்.
பேசிச் செய்யும் திருமணங்கள்:
(அகமணமுறை) பேசிச்செய்யும் திருமணங்களைத் தீர்மானிப்பதில் சாதி

2O7
9 எம்.சி. ஒரு சமூக விடுதலைப்போராளி
பிரதான பங்கை வகிக்கிறது. தாயகத்தில் மட்டுமன்றி தமிழர் புலம்பெயர்ந்து வாழும் இடங்களிலும் இது மிகக் கடுமையாகப் பார்க்கப் படுகிறது. புலம்பெயர்ந்த தேசங்களில் வேற்று இனங் களுக்குள் தமது பிள்ளைகள் காதலித்துக் கலியாணம் செய்தாலும் பரவாயில்லை; “எளியன் சாதிகளுக்குள்" கட்டக்கூடாது என்று சாதித் தடிப்புள்ள பெற்றோர்கள் வெளிப்படையாகவே சொல்லுகின்றார்கள். இதனடிப் படையில் பல காதலர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். ஓரறையில் ஒன்றாய்ச் சேர்ந்து வாழ்ந்த ஜோடிகள் சாதி தெரிந்தபின் வேறாகப் பிரிக்கப்பட்டு வேறு திருமணங்கள் செய்யப்பட்ட சம்பவங்கள் பல சாதியின் பேரால் நடந்துள்ளன. ஒருத்திக்கு ஒருத்தன். ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப்பண்பாடு எல்லாம் சாதியத்துக்கு முன் குப்பையில்!
மதத்தைவிட சாதி முக்கியம்.
திருமணத்தைப் பொறுத்தவரை மதம் மாறினாலும்
பரவாயில்லை, சாதி மாறக்கூடாது என்பதில் தமிழர்கள்
கவனமாக இருக்கிறார்கள்.
தாயகத்தில் இன்னும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத்
திறக்கப்படாத பொது இடங்கள் இருக்கின்றன.
O சுடலைகள் வேறுவேறாக இன்னும் பாவனையில்
உள்ளன. A.
O கோயில்கள் கம்பிவேலிகள் போடப்பட்டு எல்லோரையும் வெளியே நிறுத்தி போலிச் சமத்துவத்தைப் பேணுகின்றன.
O தெப்பக்குளங்கள், எளியன் சாதிகள் இறங்கிவிடும் என்பதற்காகக் கம்பி வேலிகளும் கம்பி வலைகளும் போட்டு மூடி வைக்கப்பட்டுள்ளன.
O கோயில் உள்வேலைகளில் எளியன் சாதிகள் பங்குபற்ற முடியாமல் விதிகளும், குழுக்களும் இருக்கின்றன.
O அன்னதான மடங்களில் எளியன் சாதிகள் சமைக்க முடியாது. அவர்கள் சமைத்தால் உயர்சாதியினர் சாப்பிட மாட்டார்கள்.

Page 107
சந்திரபோஸ்
O 208
O வேறு வேறு சாதிகளுக்கு வேறுவேறான அன்னதான மடங்கள் இன்றும் பேணப்படு கின்றன.
O சில பொதுக் கிணறுகள் சாதிகளுக்கு உரியதாய் வேறுவேறாக இன்றும் இருக்கின்றன. வேறுவேறாய் பாவிக்கப்படுகின்றன.
யுத்தம், பேரழிவுகள், உடைமை இழப்புகளுக்குப் பின்னாலும் சாதியுணர்வுகள் மறையவில்லை. அகதிகளாய் இடம்பெயரும் உயர்சாதியினர், உயர் சாதியினர் வாழும் பகதிகளையும், இல்லங்களையும் தேடி ஒதுங்குகிறார்கள். இழிசாதியினர் என அடையாளங் கண்டால் அவர் களை அண்டவிடாது ஒதுக்குகிறார்கள்.
அகதிகள் முகாம்களிலும் சாதி பார்க்கப்படுகிறது.
கிணறுகளில் அவர்கள் தண்ணீர் அள்ளவிடாமல் குப்பை கூளங்கள் போடப்பட்டுள்ளன.
இழிசனரை வெளியே இருத்துதல்.
ஏதும் தேவை கருதி வரும் இழிசனரை வீட்டுக்குள்ளே அழைத்து உபசரிக்காமல் வெளியே முற்றத்தில் நிற்கவைத்து அனுப்பும் போக்கு இன்றும் இருக்கிறது. சொந்த வீட்டுக்குள் அழைப்பதும், விடுவதும் உபசரிப் பதும் சொந்த விருப்பத்தின் பாற்பட்டதாக நியாயம் சொல்லப்படுகிறது. மறுபுறம் விருந்தோம்புதல் தமது தமிழ்ப்பண்பாடு என்று பெரிதாகச் சொல்லிக் கொள் கிறார்கள். குறுக்கே நிற்பது சாதியே!
தொழில் மகத்துவமும் தொழிற் சமத்துவமும்.
தொழில் ரீதியாக இழிவாக நோக்குதல், இழிவாக நடத்துதல் இன்னும் தொடர்கிறது. தொழிற் சமத்துவம் இன்னும் இல்லை. ஈழத்தமிழரின் பொருளாதார விடுதலையில் பனையும், கடலும் பெரிது. பனை ஏறுபவர்களையும், மீன் பிடிப்பவர்களையும் குறைந்த சாதியினராய்ப் பார்க்கும் பார்வையில் இன்னும் மாற்ற மில்லை. இதனால் மரமேறுபவர்களின் தொகையும், மீன்பிடிப்பவர்களின் தொகையும் குறைந்து வருகிறது.
இன்றும் மீன் பிடித்தவனின் சந்ததியே மீன்பிடிப்பதும்,

209
0 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
10.
மரமேறியவனின் சந்ததியே மரமேறுவதும், முடிவெட்டி யவனின் சந்ததியே முடி வெட்டுவதும், துணி வெளுத் தவனின் சந்ததியே துணி வெளுப்பதும் சாதியத்துக்கு அப்பால் தொழில்கள் கொண்டுவரப்படாமைக்கான உதாரணங்களாகும்.
புலம்பெயர்ந்த தேசங்களில் தொழில் ரீதியாக தாயகத்தில் கழிக்கப்பட்ட பல்வேறு தொழில்களைச் செய்தாலும் உயர்சாதிக் கவசத்தை இவர்கள் கழற்றவில்லை. மேலங்கி களைப் போட்டுக் கொண்டு இந்தத் தொழில்களைச் செய்கிறார்கள். கூடுவிட்டுக் கூடு பாய்வது போல் மேலங்கிகளைக் கழற்றியபின், மீண்டும் உயர் வெள்ளாளர் ஆகிவிடுகிறார்கள்.
கோயில்கள்.
கோயில்கள் சாதியத்தின் காவலரண்களாக விளங்கு கின்றன. சடங்குகளும் மூடத்தனங்களும் இதற்குச் சேவகம் செய்கின்றன. வேதங்கள், வர்ணாசிரம தர்மங்கள், புராணப் புளுகுகள் இதற்கு மேலும் உதவுகின்றன.
தொடர்ந்து சாதியத்தைப் பேணுதல். ஒவ்வொரு சாதியினரும் தங்கள் தங்கள் அளவில் சிறிதாயும், பெரிதாயும் அறிந்தும் அறியாமலும் பல வழிகளிலும் சாதியத்தை தொடர்ந்தும் பேணிவரு கிறார்கள். உயர்சாதிப் பகுப்புகளுக்குள்ளேயாயினும் ஒடுக்கப்பட்ட சாதிப் பகுப்புகளுக்குள்ளேயாயினும் திருமணக் கலப்புகள் ஏற்படாமை இதன்பாற்பட்டதே தங்கள் தங்கள் சாதிக்குள் திருமணம் செய்தல், கொண் டாடுதல் சுமுகமானதும் பாதுகாப்பானதும் என்ற எண்ணமும் இதற்கு ஒரு காரணமாயிருக்கலாம்.
ஈழத்தமிழர் மத்தியில் இன்னும் சாதிப் பாகுபாடுகள் இருப்பதற்கான பல்வேறு உதாரணங்களை இதுபோன்று நாம் அடையாளம் காணமுடியும். ஆகவே, சாதீயம் ஒழிந்து விட்டது என்பது உண்மைக்குப் புறம்பானது.
மிக நீண்டகாலமாக இடம்பெற்று வந்த பல்வேறு போராட்டங்களால் சாதீயத்தின் கொடுரம் சிதைக்கப் பட்டு, உக்கிரம் குறைக்கப்பட்டதே அல்லாமல் சாதீ யத்தின் வேர்கள் இன்னும் சாகவில்லை.

Page 108
சந்திரபோஸ் O 2Ο
தமிழ் ஈழ விடுதலைக்கான அத்திவாரம்
தமிழ் ஈழ விடுதலைக்கான அத்திவாரம் சாதீய ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டமே. சாதிப்பிரிப்புகளால் கூறுபட்டுக் கிடந்த ஒரு சமூகத்தை ஒற்றுமைப்படுத்துவதற்கு இது உதவியது. மக்கள் மத்தியிலிருந்த அடிமை குடிமை முறைகளை இது பெரிதும் மாற்றியது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வி, பொருளாதார விடுதலைக்கு இது உந்து சக்தி அளித்தது. தமிழர்க்கிடையே சமத்துவத்தை நிலைநாட்ட இது பாடுபட்டது.
இதற்கு முன்னின்று உழைத்த இளைஞர் காங்கிரஸ், ஒடுக்கப் பட்டோர் ஊழியர். சங்கம், வடமராட்சி சமூகசேவா சங்கம், ஆரியகுளம் சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்கம், திருவள்ளுவர் மகாசபை-இவை ஒன்றிணைந்து உருவாக்கிய சிறுபான்மைத் தமிழர் மகாசபை, தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் முதலிய சமூக அமைப்புகளையும் பின்னணியில் நின்று உதவிய இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழரசுக்கட்சி, சமசமாஜக்கட்சி முதலிய கட்சி களையும் நாம் நன்றியுடன் நினைவுகூர வேண்டும். இதில் தலைமை தாங்கி முன்னின்று உழைத்த அனைத்துத் தலைவர்களையும், ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் தமது உயிரை அர்ப் பணித்த அனைத்துப் போராளிகளையும் பொதுமக்களையும் மரியாதை செலுத்தி வணங்குதல் வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் வழி நடத்துதலில் வர்க்க சிந்தனையுடன், சித்தாந்தத்துடன் சாதீய ஒடுக்கு முறைக்கெதிரான அனைத்து முற்போக்கு சக்திகளையும் ஒன்றி ணைத்து உயர்சாதியைச் சேர்ந்த பல தலைவர்களினதும், மக்களதும் பங்களிப்புடன் சாதிக் கண்ணோட்டத்துக்கும் அப்பால், மக்கள் சக்தியை முதன்மைப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கப் போராட்டமானது (1966-72) எமது ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆதாரமான பல்வேறு படிப் பினைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இனப்பிரச்சனையை ஒருபோதும் இனவாதக் கண்ணோட்டத்தில் வெற்றிகொள்ள முடியாது என்ற உண்மையை இதிலிருந்து நாம் தெளிந்துகொள்ள முடியும். சில சிங்கள அரசியல்வாதிகளின் பங்களிப்புகளையும் இதில் நாம் நினைவுகூர முடியும். 1931 டொனமூர் கமிசனின் சர்வஜன வாக்குரிமை, டபிள்யூ டபிள்யூ. கன்னங்கராவின் இலவசக் கல்வி, 1956 சமூகக் குறைபாடுகள் ஒழிப்புச் சட்டம் - 1972ல் அதன் திருத்தம், 1960களில் அரசின் உதவியுடன் மகாசபையால் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உருவாக்கப்பட்ட அரச பாடசாலைகளும் ஆசிரியர் நியமனங்களும், செனட்டர் நல்லையாவின் நியமனம், 1970ல் எம். சி. சுப்பிரமணியம் அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர் நியமனம், ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலான சமாதான நீதிவான் நியமனங்கள்,

211 0 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி பிற உத்தியோக வாய்ப்புகள் சாதீய விடுதலைக்கு உதவி செய்தன.
மறுபக்கத்தில் ஐந்தாம் குரவர் எனப் போற்றப்படும் ஆறுமுக நாவலரும், தனிப்பெருந் தலைவர்கள் எனப் பெயர்பெற்ற சேர். பொன். இராமநாதன், ஜீ. ஜீ. பொன்னம்பலம், அடங்காத் தமிழன் சீ. சுந்தரலிங்கம் போன்றோரும் எப்படி சாதீயத்தைக் காப்பாற்ற உழைத்தார்கள் என்பதையும் மறந்துவிட முடியாது. இதுபோன்ற இதய சுத்தியற்ற போலியான தலைமைகளை இனங்காணவும் அவர்கள்பால் எச்சரிக்கையாக இருக்கவும் தமிழ்மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். ஈழவிடுதலையை முதலில் அடைவோம், சமூக ஒடுக்குமுறைகள் பற்றிப் பின்னால் பார்ப்போம் என்ற நிலைப்பாடு தவறானது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். சாதீயத்தின் வேரினை அறுத்தல் A.
சமூக விடுதலையின் முழுமை அந்த இனத்தின் விடுதலைக்குப் பலம் சேர்க்கும் என்பதால் சாதீயத்தின் வேரினை அறுத்தல் ஈழத் தமிழினத்தின் விடுதலையின்பால் நாட்டம் கொண்ட அனைத்து மக்களினதும் கடமையாகும்.
சாதீயச் சமுகத்தின் உட்கட்டுமான மாற்றமும் அதன் சமூக விடுதலையும் பின்வரும் அடிப்படைகளில் எட்டமுடியும்.
1. ஒடுக்கப்பட்ட - பஞ்சப்பட்ட மக்களுக்கான பொருளா தார விடுதலைக்கான திட்டங்களை உருவாக்கிச் செயற் படுத்துதல்.
2. அடிப்படைக் கல்வியறிவைப் பெறுதலைக் கட்டா
M
யப்படுத்துதலும் உயர்கல்வி, தொழிற்கல்விகளை வழங்குதலும்.
3. தொழில் வாய்ப்புகளை அதிகரித்து வருவாயை
உயர்த்துதல்.
4. நிலமற்றோர்க்கு நிலத்தைப் பங்கீடு செய்தல்.
.5. தொழில் மகத்துவத்தைப் பேணுதல்
O விரும்பியவர் விரும்பிய தொழிலை முழுநேர வேலை யாகவோ, பகுதிநேர வேலையாகவோ செய்யலாம். இதற்கென தேவைப்படும் பயிற்சிகளை தொழிற்கல்வி மூலம் வழங்கவேண்டும். இதனால் சாதி அடிப்படையில் தொழில் செய்தல் மாற்றப்படும்.
O தொழில்களின் தரத்தை உயர்த்துதல் நவீன, விஞ்ஞான தொழில் நுட்பங்களின் மூலம் தொழில்களின் தரத்தை

Page 109
ofb6 g08 unredo
O 212
0.
உயர்த்துதல்.
தாயகத்தில் இன்னும் சாதி அடிப்படையில் பொதுமைப் படுத்தப்படாது இருக்கும் பொது இடங்களை மேலும் காலதாமதமின்றி பொது மக்களுக்காகத் திறந்துவிடுதல், கம்பி வேலிகளை இட்டு ஒரு எல்லைக்கப்பால் உயர் சாதியினர் என்போரையும் ஒடுக்கப்பட்டோர் என் போரையும் ஒன்றாய் வெளியே நிறுத்தி சமத்துவமாய்த் திறந்து விட்டதாய் ஏமாற்றும் அனைத்துக் கோயில் களதும் கம்பி வேலிகளை அகற்றி உண்மையான சமத்துவத்துக்கு வழிகோலல். கம்பிவேலிகள் போட்டு மறிக்கப்பட்டிருக்கும் அனைத் துத் தெப்பக்குளங்களையும் திறந்து விடல். பொதுக் குளங்கள், பொதுக் கிணறுகள், பொதுச் சுடலைகளில் சாதியடிப்படையிலான வேறுபாடுகளை உடனே நிறுத்துதல். கோவில்களுக்குள்ளே நடைபெறும் அனைத்து அலுவல் களிலும் அனைவரும் பேதமின்றிப் பங்குபற்றச் செய்தல், குறிப்பிட்ட சாதிக்குரியதாய் அந்தப் பிள்ளைகளை மட்டும் கொண்டு இயங்கும் அனைத்துப் பாடசாலை களிலும் அனைவரும் கலந்து பயிலச் செய்தல், சூழ உள்ளவர்கள் அண்மையில் உள்ள பாடசாலையிலேயே ஆரம்பக் கல்வியைப் பெறவேண்டும் என்பதை கண்டிப் பாக நடைமுறைப்படுத்துதல். சாதிப் பெயர்களைக் கையாளுவதை முற்றாக ஒழித்தல், பத்திரிகைகளில் வரும் திருமண விளம்பரங்கள், அந்தி யேஷ்டி மலர்கள், மரண அறிவித்தல்கள் போன்றவை. மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆய்வுக்கட்டுரைகளும், வரலாற்றுப் பதிவுகளும் விலக் காக இருக்கலாம். சாதிப் பெயர்களால் இழிவு செய்வோர்மீது சட்ட நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்கல். (பண ரீதியில் இருப்பது நல்லது) பேசிச் செய்யும் திருமணங்களில் மாற்றம் கொண்டு வரல்,
சாதி, சமயம் (கடவுள் ஒன்றே என்றுதானே எல்லாரும் சொல்கிறார்கள்), சாதகம், சீதனம் (பெண் - ஆண் இரு

23
9 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
12.
3.
வரையும் இழிவு செய்கிறது) போன்ற பிற்போக்குத் தனங்கள் விலக்கப்பட்டு கல்வியறிவு, ஒழுக்கம் முதலிய வற்றிற்கு முதன்மையளித்தல்.
பேச்சுத் திருமணங்களுக்குப் பதிலாக காதல் திரு மணங்களை ஊக்குவித்தல். காதல் திருமணம் சாதீ யத்தை உடைக்கும் முக்கிய அலகாக இருக்கிறது. இதனால் பிறக்கும் குழந்தைகள் எந்தச் சாதியும் இல்லாமல் மனிதராய் அடையாளப்படுத்தப்படும். சாதி அடையாளம் இல்லாத எதிர்காலச் சந்ததி உருவாகும். புலம் பெயர்ந்த தேசங்களில் வாழும் தமிழர்களின் ஊர் ஒன்றுகூடல்கள் சாதி ஒழிப்பிற்கான கருவியாக மாற்றப்பட வேண்டும்.
புலம்பெயர்ந்து குடியேறிய மூத்த தலைமுறையினரின் (தாத்தா, பாட்டி, பெற்றோர்) சாதீய உணர்வுகளை இங்கு பல்லின மக்களுடன் சேர்ந்து வளரும் இளஞ்சந்ததி முற்றாக மறுதலித்தும், நிராகரித்தும் மனிதாபிமானத்தை முதன்மைப்படுத்திய வாழ்க்கையை மேற்கொண்டு வாழவேண்டும். சாதியின் அடிப்படையில் தமது காதலை நிராகரிக்கும் பெற்றோரின் பாசம் என்ற விலங்கை உடைத்து துணிவுடன் தமது காதல் வாழ்வை முன்னெடுக்க வேண்டும். உண்மையான பிள்ளைப் பாசம் உள்ள பெற்றோர் காலவோட்டத்தில் ஏற்றுக் கொண்டு தமது புதிய சந்ததியைக் கொஞ்சிக் குலாவுவர் என்பது நிதர்சனம்.
t சமூக இயக்கங்களும், விடுதலையை நேசிக்கும் அனைத்து அமைப்புகளும், உலகெங்கும் ஈழத் - தமிழீழத் தேசியத் தின் - விடுதலைக்காய் குரல்கொடுக்கும் அனைத்து மக்களும் சேர்ந்து தமிழர் மத்தியில் மிச்ச சொச்சமாய் இருக்கும் சாதிவேர்களை அறுப்பதற்கு இணைந்து பணி யாற்றுவதன் மூலம் ஈழ விடுதலைக்கு வலுவூட்ட முடியும். ஈழத்தமிழினத்தின் விடுதலையின் உண்மையான அர்த்தங்களைக் கொண்டுவர முடியும்.

Page 110
яpeedb
எம்.சி. என்றொரு மானிடன்
எம். சி. புத்தருமல்ல, புனிதருமல்ல, ஆனால் மனிதர். மானிட நேயம் கொண்டு மக்களுக்காக உழைத்த மானுடன், சொல் ஒன்று செயல் ஒன்று என்று வாழும் அரசியல்வாதியாக அல்லாது, முழுமையான முழுநேர சமூகசேவையாளராகவே வாழ்ந்தார்.
தாம் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தில் நிலவிய சாதி அடக்குமுறைகளுக்கும், சமூகக்கொடுமைகளுக்கும் எதிராக உரிமைக் குரல் கொடுத்தார். அடக்கி ஒடுக்கப் பட்டு, மனித உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகங்களின் விடுதலையே இவரது தாரக மந்திரம். சமத்துவமே இவரது பேச்சு, சுதந்திரமே இவரது மூச்சு, சாதீய ரீதியில் மட்டுமன்றி, வர்க்கரீதியில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் ஓங்கி ஒலித்தார். இனவாத சிந்தனைகள் அற்று இலங்கையில் வாழும் சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள், பறங்கியர் அனைவரும் வர்க்கரீதியில் ஒன்றுபட்டு சமத்துவமாக வாழவேண்டும் என்ப தனையே தமது சுவாசமாகக் கொண்டார். இதனால் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபன உறுப்பினராக இணைந்து வாழ்நாள் முழுவதும் உண்மையான கம்யூனிஸ்டாகவே வாழ்ந்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதெல்லாம் தமிழ்,

215 O 6Tb.á. 625 orgpa 6í(Bgerbooů (BurJT6f
முஸ்லீம் தோழர்களுடன் உட்கட்சிப் போராட்டங்களிலும் ஈடுபட்டார். ஆயினும் பெரும்பான்மைத் தோழர்களின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டிய சந்தர்ப்பங்களையும் சந்தித்தார்.
சர்வதேச அரங்கில் 1960 களில் கம்யூனிஸ்ட் முகாம் ரஷிய சார்பு சீனச்சார்பு என இரண்டு முகாம்களாகப் பிரிந்தது. இலங்கைக் கம்யூனிஸ்டுகளும் இரு முகாம்களாகப் பிரிந்தனர். ரஷிய சார்பு கம்யூனிஸ்ட் கட்சியிலேயே எம். சி. தொடர்ந்தார். ரஷிய சார்பு கம்யூனிஸ் கட்சியை திரிபுவாதிகள் என சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சி யினர் குற்றம் சாட்டினர். சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சியினை அதிதீவிர வாதிகள் என்றும், அதிதீவிரவாதம் சிறுபிள்ளைத்தனம் என்றும் ரஷிய சார்புக் கட்சியினர் குற்றம் சாட்டினர். இன்று மீண்டும் ஒரே கட்சியாகவே கம்யூனிஸ்ட் கட்சி இலங்கையில் இயங்கி வருகின்றது.
ஈழத் தமிழ்மக்கள் இன்று சொல்லொணாத் துன்பங்களுக்குள் உழல்வதற்கு ஒட்டு மொத்தக் காரணமும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள பேரினவாத அரசுகளே என்று கூறுவதுடன் நின்று விடுகின்றார்களே தவிர ஈழத்தமிழர்களும் ஒரு காரணம் என்ற உண்மையை இலகுவில் மறந்து விடுகின்றனர். இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து 1970ம் ஆண்டுவரை தமிழ்மக்களின் சிந்தனைகளும், தமிழ்மக்களின் தலைவர்களாகப் பவனி வந்தோரும், தமிழ் வாக்காளப் பெருமக்களும் காரணம் என்பதனை வசதியாக மறந்துவிட்டனர். தமிழ்மக்கள் உண்மையில் தமிழ் அரசியல்வாதி களாலேயே ஏமாற்றப்பட்டார்கள். தமிழ்த்தலைவர்களாகப் பவனி வந்தோரும் தமது சுயநல, சுகபோகத்திற்கே அரசியலைக் கருவியாகப் பயன்படுத்தினார்களே தவிர தமிழ் மக்களுக்கோ, சிறுபான்மை மக்களுக்கோ ஒரு நிரந்தர தீர்வினைத் தேடித்தரும் கொள்கையினைக் கடைப்பிடித்ததாகத் தெரியவில்லை. ஒட்டுமொத்த சிறுபான்மையோர் நலன்களை விட தாம் சார்ந்த வர்க்க நலனையே கட்டிக்காக்க முற்பட்டனர்.
தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, அடங்காத் தமிழர் முன்னணி என்று தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறக் கட்சிப் பெயரில் கவர்ச்சியைக் காட்டினர். தமிழ்மக்களின் வாக்குகளைப் பெற்று சிங்கள அரசியல்வாதிகளுடன் கூடிக்குலவி தங்கள் வர்க்க நலன் சார்ந்த கூட்டுகளை ஏற்படுத்திக்கொண்டு மந்திரி பதவிகளைச் சுகித்தனரே தவிர சாதாரண தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறை வேற்றவில்லை. அமரர் காவலூர் திரு. நவரெத்தினம் முன்வைத்த சுய ஆட்சிக் கொள்கையையோ, சுயாட்சிக் கழகத்தையே இந்தத் தமிழ்த் தலைவர்கள் எள்ளி நகையாடினர். தமிழ்மக்களும் சுய ஆட்சிக் கழகத்தை அங்கீகரிக்கவில்லை. தமிழரசுக் கட்சியினர் பல அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேடைகளில் மக்களைக் கவரும்

Page 111
சந்திரபோஸ் O 216
வண்ணம் சொற்சிலம்பம் ஆடினர். இரத்தத்திலகம் இட்டுக் கொண்டனர். தமிழ் மக்களையும், தமிழ் இளைஞர்களையும் உணர்ச்சி கொள்ளச் செய்தனர். ஆனால் இவை அனைத்தும் உள்ளத்தூய்மை யுடன் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. பதவிக்கு வரவேண்டும் என்ற உள்நோக்கே இருந்தது.
இன்று இடதுசாரிகள் வகுப்புவாதியாகிவிட்டார்கள் என இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியையும், லங்கா சமசமாஜக் கட்சியையும் தமிழ்மக்கள் குறைகூறுகின்றனர். அவர்கள் கூற்று உண்மையே ஆயினும், 1947ம் ஆண்டிலிருந்து லங்கா சமாசமாஜக் கட்சியினரும் 1970 வரை இந்நாட்டின் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவென அக்கட்சிகளால் முன்வைக்கப்பட்ட மொழிக்கொள்கை சுயநிர்ணய உரிமை, பிரதேச சுயாட்சியினை ஏற்று இலங்கைத் தமிழ் மக்கள் தேர்தலில் இக்கட்சிகளுக்கு வெற்றிவாய்ப்பினைத் தந்தார்களா? கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒரே ஒரு பிரதிநிதியாக பருத்தித்துறைத் தொகுதியில் பொன் கந்தையா தெரிவு செய்யப்பட்டபோதிலும் அதனைக் கட்சிக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகக் கருத முடியாது. அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபொழுது தமிழ் மக்கள், சிறுபான்மையோரின் உரிமைக்காகப் பல வழிகளிலும் பாடு பட்டு உழைத்தார். 1970 வரை இடதுசாரிகளின் கொள்கைகள் இலங்கை வாழ் சிறுபான்மை சமூகத்தாலோ, பெரும்பான்மை சமூகத்தாலோ ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது போன இடதுசாரிகள் கொள்கையில் தடம் புரண்டது உண்மையே.
தமிழ் மக்களது தெரிவுகள் சாதீயம், சமயம், வர்க்கம் என்ற வரையறைக்குள்ளேயே நின்றுவிட்டன. இன்று இந்நிலை ஆயுதப் போராட்டங்கள் காரணமாக மாற்றம் பெற்று வருகின்றது. இந்த ஆயுதப் போராட்டங்கள் ஏற்படக் காரணமாக அமைந்தவை இடதுசாரிக் கட்சிகளால் முன்வைக்கப்பட்ட அரசியல் சித்தாந்தம், தாழ்த்தப்பட்ட தமிழர்களின் சமத்துவத்திற்கான போராட்டம், சிங்கள பேரினவாதத் தின் அடக்குமுறைகளும், உரிமை மறுப்புக்களுமேயாகும்.
எம். சி. கம்யூனிஸ்ட் கட்சியுடனும், அகில இலங்கைச் சிறு பான்மைத் தமிழ் மகாசபையுடனும் ஸ்தாபனரீதியில் செயற்பட்டு சிறு பான்மைத் தமிழர்களின் வாழ்வில் சமத்துவம் ஏற்படப் பலவழி களிலும் உழைத்தார். 1970 முதல் 1977 வரை நியமன உறுப்பினராக இலங்கைப் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த காலத்தில், தீண்டாமை ஒழிப்புச் சட்டத் திருத்தம், பனம்பொருள் அபிவிருத்திச் சபை போன்ற சட்டமூலங்களை ஆதரித்து சமூக சமத்துவத்தையும், தொழில் மகத்து வத்தையும் ஏற்படுத்தினார். நிலமற்ற ஏழைமக்களுக்கு நிலம், பல்வேறு வேலை வாய்ப்புக்கள், தொழில் வளர்ச்சிகள் போன்றவற்றை சிறுபான்மைத் தமிழர்களுக்கு மட்டுமன்றி சகல தமிழ்மக்களுக்கும்

217 9 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
மனிதாபிமானமுடன் செய்துவந்தார்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவிலும் அங்கம் வகித்து தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும், பிரதேச சுயாட்சிக்காகவும் இறுதிவரை போராடியே வந்தார். தனக்கு வழங்கப் பட்ட நியமன உறுப்பினர் பதவியினை தனது சமூக மக்களின் சேவைக்காகவும், தமிழ் மக்களுக்கிடையில் சமத்துவம் ஏற்படுத்தவும் அர்ப்பணித்தார். பதவிக்காலத்தில் பலநாடுகளைச் சுற்றி வந்தவர் அல்ல. ஒருமுறை மட்டுமே தொழிலாளர் கூட்டமைப்பின் சார்பில் இந்தியாவுக்கு தொழிலாளர் பிரதிநிதியாகச் சென்று வந்தார். 1975ல் கனடாவில் நடைபெற்ற கண்காட்சிக்குச் செல்ல தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றக் குழுவில் எம். சி. யும் இடம்பெற்றிருந்தபோதிலும், எம். சி. கனடா செல்ல மறுத்துவிட்டார். மகனையும், கடைசி மகனையும் உடன் அழைத்துச் செல்லும் வாய்ப்பு கிடைத்தபோதிலும், குடும்ப உறவுகளும், நண்பர்களும் கனடா சென்று வருமாறு கூறிய போதிலும், எம். சி, "நான் பாராளுமன்றப் பிரதிநிதியானது கனடா செல்ல அல்ல, கண்காட்சி பார்க்க அல்ல; எனது சமூக மக்களுக்குச் சேவை செய்யவே" என்று கூறினார். சமூக சேவையாகப் பாராளு மன்றப் பதவியைக் கருதியபோதிலும் சில சந்தர்ப்பங்களில் ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்தைப் பாதிக்கக்கூடிய, பாராளுமன்றம் இயற்றிய ஒருசில சட்டங்களுக்குக் கை உயர்த்த வேண்டிய கட்சிக் கட்டுப்பாடு இருந்தமைக்காக வருத்தப்பட்டதும் உண்டு.
எல்லோரும் முழுமையானவர்களோ, யோக்கியர்களோ அல்ல. மகாத்மாக்களே பல தவறுகளை விட்டிருக்கின்றனர். சாமானியனான எம். சி. தன் தவற்றைத் தான் உணர்ந்தார். தவறினை உணர்ந்தவன் தான் முழுமனிதன். அவனே எம். சி. ஏன்றொரு மானிடன்.

Page 112
.ബb
வைகறைப்பொழுது மீண்டும் வருவதெப்போது?
LD/7னுடர் அனைவரும் சுதந்திரமானவர் களாகவே பிறக்கின்றனர். கெளரவம், உரிமை என்பவற்றின் அடிப்படையில் அவர்கள் அனைவரும் சமமானவர்கள்.
67226041/Gap. 706)/hiraja/6ian 2/f,0A2a2aeyb சுதந்திரங்களுக்கும் அவர்கள் உரித்துடையவர்கள்.
அவர்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான சகல உரிமைகளையும் கொண்டவர்கள்.
1948ஆம் ஆண்டு மார்கழி மாதம் 10ஆம் நாள், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் முன்வைக்கப் பட்ட மனித உரிமைகள் பிரகடனத்தின் முதல் மூன்று பிரிவுகளின் சாராம்சங்கள் இவை. இப்பிரகடனம் சமர்ப்பிக்கப்பட்ட காலம், மனித வரலாற்றில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்திய ஒரு பொற்காலம். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான இக்காலப் பகுதியிலேயே உலக நாடுகளில் தேசிய எழுச்சிகள் வீரியத்துடன் தலைதூக்க ஆரம்பித்திருந்தன. நாடுகள் பல, காலனித்துவக் கைவிலங்குகளைத் தகர்த்தெறியத் துவங்கியிருந்தன. அநேக ஆசிய, ஆப்பிரிக்க, தென்ன மெரிக்க நாடுகள் பலவும் சுதந்திரத்தின் சுகந்தத்தை முகர ஆரம்பித்தன. இதன் ஓர் அங்கமாகத்தான்

219 9 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
இந்தியாவும் இலங்கையும் பிரித்தானியர் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றுக்கொண்டன. இந்த விடுதலை பற்றிய கற்பனையில் திளைத்த மகாகவி பாரதி,
பறையருக்கும் இங்கு தீய புலையருக்கும் விடுதலை பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை
எனப் பாடிக் களித்தான்! ஆயினும் இவ்வாறாக அந்நியர் ஆட்சியிலிருந்து விடுபட்ட எமது நாடுகளில் வாழ்ந்த மக்கள் அனைவருக்கும் உண்மை விடுதலை கிடைத்ததா? மனித உரிமைகள் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டவாறு வேற்றுமைகள் ஏதுமின்றி, எல்லா உரிமைகளும் சுதந்திரங்களும் கிடைக்கப்பெற்றவர்களாக அனைத்து மக்களும் கெளரவத்துடன் வாழ அனுமதிக்கப் பட்டார்களா? திறமைகொண்ட, தீமையற்று தொழில் புரிந்து யாவரும், தேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ அனுமதிக்கப் பட்டார்களா என்றால், அதுதான் இல்லை! பதிலாக கொதி எண்ணெயின் அகோரம் தாங்கமுடியாமல், எரி நெருப்பினுள் துள்ளிக் குதித்த கதை போன்று - விதேசிகளின் விலங்கறுத்துச் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்ட இவர்களுள் ஒருசாரார், சுதேசிகளின் தந்திரப் பொறிக்குள் அகப்பட்டுக் கொண்டனர். ஈழத் தமிழர் தாயகத்தில் உள்ள சுமார் 35 சதவீத மக்கள் உரிமைகள் மறுக்கப்பட்ட வர்களாகவே தொடர்ந்து வாழ்ந்து வந்தனர். இவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஒளி விளக்காகத் தோன்றியவர்தான் அமரர் எம். சி. சுப்பிரமணியம் அவர்கள்.
A யாழ்ப்பாண மண்ணின் சாபக்கேடான சாதீயத்தின் கொடு ரங்களைச் சிறுவயதிலிருந்தே கண்டும் கேட்டும் அனுபவித்தும் வளர்ந்தவர் எம். சி. அவர்கள், சாதி எனும் அந்தக் கெட்ட வியாதிக்கு அகிம்சை என்ற சித்த வைத்தியமே சிறந்ததென அவரும் நாற்பதுகளின் ஆரம்பத்தில் நம்பினார். ஆயினும் நாட்பட்டுப்போன வியாதிக்கு நாட்டு வைத்தியம் உடனடி நிவாரணமாகாது என்பதை அவர் உணர்வதற்கு நீண்ட நாட்கள் எடுக்கவில்லை. இதே நாற்பதுகளின் பிற்பகுதியில் மனம் மாறியவராய், மார்க்ஸியம் என்ற வேற்று நாட்டு மாற்று மருந்தின் மீது அவர் நம்பிக்கை வைக்கலானார்.
தனி மனிதன் ஒருவனது அல்லது அவனது வழித்தோன்றல் களது அல்லது அவர்கள் வழியாக வந்த பரம்பரையினரது சமூக அந்தஸ்தில் ஏற்படும் நகர்வினையே சமூக அசைவியக்கம் எனச் சமூகவியலாளர் கூறுவர். இச்சமூக அசைவியக்கமானது அடிமைச் சமூகங்களிலும், கடுமையான சாதி அமைப்புக்குள் அகப்பட்டிருக்கும்

Page 113
dróg(Burdo O 22O
ஒடுக்கப்பட்ட சமூகங்களிலும் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை. இவ்வாறே யாழ் குடாநாட்டில் உரிமைகள் மறுக்கப்பட்டு வந்த மக்களுக்கு, மேல்நோக்கிய சமூக அசைவியக்கம் ஏற்படுவதற்கான வழிகள், நீண்ட காலமாகத் திட்டமிட்டே அடைக்கப்பட்டிருந்தன. இந்த அடைப்புக் கைங்கரியத்திற்கு சைவத்தையும் தமிழையும் தம்மிரு கண்களாகப் போற்றிப் பேணி வந்த ஆறுமுகநாவலர், ஐயா பொன்னம்பலம் இராமநாதன், அடங்காத் தமிழர் சுந்தரலிங்கம் ஆகியோர் அடங்கலான, உரிமைகள் கிடைக்கப் பெற்ற யாழ்ப்பாணப் பெருமக்கள் பலர் அளித்த பங்களிப்புகள் கணிசமானவை. இந்தத் தடித்த தமிழ்ப் பெருங்குடி மக்களால் கட்டியெழுப்பப்பட்டு வந்த சாதிச் சனியனைச் சங்காரம் செய்து, உரிமைகள் மறுக்கப்பட்ட மக்கள் சமூகத்தில் மேல்நோக்கிய சமூக அசைவியக்கம் ஏற்படுவதற்கு உந்து விசையாக அமைந்தவர்களுள் முக்கியமானவர் எம். சி. அவர்கள்.
அதேசமயம் கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் யாழ் குடா நாட்டின் சாதி நுகத்தடியில் அடிமைகளாக வாழ்ந்து வந்த மக்களின் வாழ்வில் விடிவை ஏற்படுத்தவென முயற்சிகளை மேற்கொண்ட, உரிமைகள் கிடைக்கப்பெற்ற சமூகத்தைச் சேர்ந்த பெருமக்கள் பலரது பங்களிப்பையும் இங்கு மறக்க முடியாது. ஜெயம் என்று எல்லோ ராலும் அந்நாட்களில் அன்பாக அழைக்கப்பட்டு வந்த தோழர் தர்மகுலசிங்கம், காத்திகேசன் மாஸ்ரர், வைத்திலிங்கம் மாஸ்ரர், ஹன்டி பேரின்பநாயகம், இராமசாமி ஐயர், ஒறேற்றர் சுப்பிரமணியம், பொன். கந்தையா, வி. பொன்னம்பலம், சண்முகதாசன் போன்ற இடதுசாரிச் சிந்தனைகொண்ட பெருமக்கள் பலர் இதற்கெனத் தமது தனிப்பட்ட வாழ்க்கையில் செய்த தியாகங்கள் அளப்பரியன. இவர்கள் யாவரும் மார்க்ஸிய சிந்தனையால் ஈர்க்கப்பட்டவர்கள். எல்லார்க்கும் எல்லாமென்று இருப்பதான இடம்நோக்கி இந்த வையம் இயங்க வேண்டும் எனக் கனவு கண்டவர்கள். தாம் கண்ட கனவை நனவாக்க வென நாளும் பொழுதும் அயராது உழைத்தவர்கள். மார்க்ஸிய சித்தாந்த விதைகளைத் தமிழர் பிரதேசங்களில் விதைப்பதற்கென வியர்வை சிந்தியவர்கள்.
ஆயினும் மார்க்ஸிய சிந்தனைகளைச் சாதாரணர் மத்தியில் பரப்பி, அதனை மக்கள் மயப்படுத்துவதில் ஒரளவேனும் வெற்றி கண்டவர்களாக தர்மகுலசிங்கம், வி. பொன்னம்பலம், எம். சி. சுப்பிர மணியம் ஆகியோரையே கொள்ளலாம். ஏனையோர் போன்று தத்துவ ஆசான்களாக மட்டும் இருந்துவிடாமல், இம்மூவரும் தத்தமது தனிப்பட்ட குணாதிசயங்கள் காரணமாக, மக்களோடு மக்களாகக் கலந்து மார்க்ஸிய சிந்தனைகளை நடைமுறைப்படுத்தினர். மண்ணில் இறங்கி, அந்த மண்ணைக் கையாலும் காலாலும் அளைந்து, ஏழை எளிய மக்களை அரவணைத்து, அவர்களின் அபிமானத்தைப்

221 9 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
பெற்றனர். இம்மூவரிலும் விசேடமாக தாம் சார்ந்த மக்களது விடுதலைக்கெனத் தமது மக்களுள் ஒருவராக இணைந்து நின்று போராடியவர் எம். சி. அவர்கள். இந்த வகையில் ஏனைய இடதுசாரித் தலைவர்களிலிருந்து தன்மைகளிலும் தகைமைகளிலும் இவர் வேறுபட்டு நிற்கக் காணலாம்.
ஒடுக்கப்பட்ட மக்களது விடுதலைக்காகப் போராட்டங்களை மேற்கொண்டபோதும் அதனை ஒருபக்கத் தன்மை கொண்ட சாதிப் போராட்டமாக மட்டும் எம். சி. அவர்கள் முன்னெடுக்கவில்லை. பதிலாக எமது மண்ணில் நீண்ட காலமாக வேரூன்றிப் போயிருந்த நிலப் பிரபுத்துவ அமைப்பை மாற்றியமைப்பதன் மூலமே சாதி யகங்காரக் கொடுமைகளைக் களையலாம் என அவர் நம்பினார். இதன்போது அவர் ஒரு சாதித் துவேஷியாக ஒருபோதும் செயற்பட்ட தில்லை. மாறாக ஒரு வர்க்கபேத விரோதியாகவும் ஒரு சமூக விடுதலைப் போராளியாகவுமே விளங்கினார் என்பது முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். மறையும்வரை மார்க்ஸியவாதி யாகவே வாழ்ந்த அவர், மார்க்ஸிய வழியினூடான சாதிப் போராட்டத்திலேயே நம்பிக்கை வைத்தார். அதற்கென ஏற்றத் தாழ்வற்றதான சமூக மாற்றத்தில் விருப்புடைய, சகல மக்களுடனும் இணைந்து நின்று போராடினார். எம். சி. அவர்கள் இவ்வாறு முன்னெடுத்துச் சென்ற போராட்டங்களுக்கு சிறுபான்மைத் தமிழர் மகாசபையும், அதன் தலைமைப் பதவியும் பல வழிகளில் உரம் சேர்த்து வந்துள்ளன என்பதுவும் மனங்கொள்ளத் தக்கது.
அனைத்துலக மட்டத்தில் கம்யூனிஸ் முகாம் பிளவுபட்டதன் பின்னர், வர்க்கப் போராட்டங்களை யாழ் மண்ணில் வழிநடத்து வதில் இடைஞ்சல்கள் பல உணரப்பட்டன. விளைவாக அவற்றைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்குச் சாதிப் போராட்டங்கள் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. இவ்வாறான போராட்டங் கள் வன்செயல் வடிவத்தை எடுத்தபோது, எம். சி. அவர்கள் அதனை விரும்பவில்லை. வன்முறைகளின் கொடூரங்களையும் வேண்டாத விளைவுகளையும் உணர்ந்தறிந்துகொண்ட இவர், இடதுசாரிச் சிந்தனை கொண்ட தமிழ் மக்கள் பலரது உதவியுடன் அந்த வன்செயல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டார்.
உரிமைகள் மறுக்கப்பட்டு வந்த மக்களது வாழ்வில் வெளிச்சம் வீசாதிருப்பதற்கான இரண்டு முக்கிய காரணிகளாகக் கல்வியையும் பொருளாதாரத்தையும் எம். சி. அவர்கள் இனங்கண்டார். இவ்விரு காரணிகளையும் அம்மக்கள் பெறுவதற்கான வசதி வாய்ப்புகளை அவர் தமது அரசியல் செல்வாக்கு வழியாக ஏற்படுத்திக் கொடுத்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக்கென 10 பாடசாலைகள் யாழ் குடா

Page 114
சந்திரபோல் O 222
நாட்டின் பல பகுதிகளில் நிறுவப்பட அவர் காரணமாக இருந்தார். ஆசிரிய நியமனங்கள், ஆசிரிய பயிற்சிக் கலாசாலை அனுமதிகள் போன்ற வாய்ப்புகளை அவர்களுக்குத் தேடிக்கொடுத்தார். வெவ் வேறு அரச உத்தியோகங்களை அவர்கள் பெற உதவினார். இவற்றிற்கு மேலாக சமூகக் குறைபாட்டுச் சீர்திருத்தச் சட்டத்தைத் திருத்தியமைத்து ஆலயப் பிரவேசம், தேநீர்க்கடைப் பிரவேசம் என்பவற்றை அவர் முன்னின்று நடத்தி வெற்றியும் கண்டார். இவ்வாறான பல சமூகப் பணிகளின்போதும் இனம், மதம், சாதி, அந்தஸ்து என்ற வேறுபாடு இன்றி, சகல மக்களுடனும் நல்லுறவைப் பேணி, கைகோர்த்து நின்று, தனது இலட்சியங்களுக்காகப் போராடி னார். ஒரு தொழிற்சங்கவாதியாகவும் ஏழைத் தொழிலாளிகளின் பேசுகுரலாகவும் வாழ்ந்து, ஒடுக்கப்பட்ட சகல இனங்களையும் மதங்களையும் சாதிகளையும் சார்ந்த மக்களுக்காக உழைத்த எம். சி. அவர்களை, இக்கால சமூக வரலாற்று ஆய்வாளர்கள் தமது பதிவு களில் செளகரியமாக மறந்து மறைத்து வருவது வருத்தத்திற்குரியது.
எம். சி. அவர்கள் தமது இளம் வயதிலிருந்தே தம்மைத் தேடிவந்த வசதிகள் வாய்ப்புகளை ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் துறந்தவர். அரச உத்தியோகத்தைக் கைவிட்டமையும், அரசாங்க செல்வாக்கை தமது சொந்த வாழ்க்கையை மேம்படுத்த பயன்படுத்தாமையும், தமக்கென்றோ தமது சந்ததிக்கென்றோ சொத்துக்கள், சுகங்களைச் சேர்த்து வைக்காமையும் அவர் செய்த தியாகங்களுக்கான சில உதாரணங்களாகும். ஆனால் ஒருவரது தேட்டங்கள் அல்ல - தியாகங்கள்தான் அவரைச் செல்வந்தர் ஆக்குகின்றன. அந்த வகையில் அமரர் எம். சி. அவர்களும் பொருளாதாயத் தேட்டங்களற்ற ஒரு செல்வந்தராகவே வாழ்ந்து வந்தார். ஏழை மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைப்பதற்கெனப் பல தியாகங்களைச் செய்த ஒரு செல்வந்தராகவே திகழ்ந்தார்.
உரிமைகள் மறுக்கப்பட்டோர் கிளர்த்தெழுந்து போராடும் போதுதான் விடுதலையின் கதவு தகர்த்தெறியப்படும் என்பது வரலாறு. சுதந்திரத்தின் கதவு ஒருபோதும் தானாகச் சும்மா திறப்ப தில்லை. இது எமது இனப் போராட்டத்துக்கு மட்டுமன்றி சாதி, சமய, நிற, வர்க்க ரீதியிலான சகல போராட்டங்களுக்கும் பொருந்தும், இந்த வகையில் இன்றைய ஈழத்தமிழின விடுதலைப் போராட்டத் திற்கும் சாதிப் போராட்டமே முன்னோடியாக இருந்துள்ளது என்பதை எமது சமூக வரலாற்றை நன்கு தெரிந்தவர்கள் ஒப்புக் கொள்வர். இந்தச் சாதிப் போராட்டத்தை முன்நின்று நடத்திய எம். சி. அவர்களை இனவிடுதலைப் போராட்டம் வீறுகொண்டுள்ள இன்றைய காலகட்டத்தில் மீண்டும் நினைவுகூர்வது சாலப் பொருத்தம்தான்!

223 0 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
இதேவேளை இனவிடுதலைப் போராட்டத்தால் ஈழத் தமிழர் பலராலும் துடக்குச் சமாச்சாரமாகக் கருதப்பட்டு வந்த சாதி செத்துவிட்டது என்பது சுத்தப் பொய். இதனை நிரூபிக்கவென உள்நாட்டு, வெளிநாட்டு உதாரணங்கள் ஏராளம் உண்டு கண்ணுக்குப் புலப்படாத கண்டல் காயமாக, சாதி இன்னமும் எமது ச ந்தில் மறைவாக வாழ்ந்து வருகின்றது என்பதுவே உண்மை. சாதியின் பெயர் சொல்லி யாழ் நகரின் முதல் குடிமகனான நகர பிதாவுக்குக் கைநீட்டி அடித்த சம்பவம் எமது யாழ் மண்ணில்தான் நடந்தேறியுள்ளது. சாதியைக் காரணங் காட்டி இன்னமும் திறந்து விடப்படாத கோயில்களும் எமது மண்ணில் நிறையவே உண்டு. இந்நிலையில் இந்த சமூக அநீதிகளை நீக்கப் போர்க்கொடி தூக்கிய - சாதிக் கொடுமையைச் சங்காரம் செய்யவெனச் சங்காய் முழங்கிய துணிச்சல் மிக்க தலைவர் எம். சி. அவர்களது தேவை இன்னமும் பெரிதாகவே உணரப்படுகின்றது. இவ்வாறாக அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டவராய், விடிந்தும் விடியாத கும் இருளுக்குள் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களின் துயர் துடைக்க இன்னுமொரு எம். சி. வருவதெப்போது? இந்தச் சமூகத்தவர் தம் வாழ்வில் எம். சி. அவர்களின் வடிவையொத்த வைகறைப் பொழு தொன்று மீண்டும் வருவதெப்போது? - என்றெல்லாம் எதிர்பார்ப் பதில் இன்னமும் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது!

Page 115
மு. பாக்கியநாதன்
இலங்கை அரசியலும் சிறுபான்மைத் தமிழ் சமூகமும்
கிடந்த பன்னிரண்டாவது பாராளுமன்ற கூட்டத் தொடரின் ஆரம்பத்தின் போது புதிய சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட கெளரவ ஜோசப் மைக்கல் பெரேரா அவர்களை வாழ்த்திப் பேசிய அமைச்சர் ரவூப் ஹக்கிம் அவர்கள் சபாநாயகர் பிறந்த சமூகத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட முதலாவது சபாநாயகர் என்று குறிப்பிட்டுப் பேசினார். பின்னர் பேசிய அனுரா பண்டாரநாயக்கா அவர்கள் பேசும்போது, "அது அப்படியல்ல; எனது தாயாரது காலத்திலேயே அவரது சமூகத்திலிருந்து சபாநாயகர் ஒருவர் தெரிவு செய்யப் பட்டுள்ளார்’ என்று தெரிவித்தார். இக்கட்டுரையில் இதனைக் குறிப்பிடுவதன் நோக்கம், பெரும்பான்மை இனத்தில் உள்ள சிறுபான்மைச் சமூகங்களை மதித்து அவர்களையும் மேன்மைப்படுத்த தென்னிலங்கை ஒருநாளும் பின்நிற்பதில்லை என்பதனை மீண்டும் சொல்லி வைத்துள்ளார்கள். தென்னிலங்கை அரசியலில் இதற்கு ஜனாதிபதியாகவும் பல அமைச்சுகளை அலங்காரம் செய்த அமைச்சர்களாகவும் நாம் பலரைக் கண்டுள்ளோம். ஆனால் இவர்கள் அரசியலில் புகுந்ததோ அன்றி அரசியலில் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்ததோ அவர்கள் சாதி ஒடுக்கு முறைகளுக்காகப் போராடி கிடைத்ததல்ல. சிங்கள

225 0 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
அரசியல் கட்சிகள் அந்தந்த சமூகங்களை அரசியல் ரீதியில் திருப்திப்படுத்துவதற்காகச் செய்த நடவடிக்கைகளும் அல்ல.
சிங்கள இனத்தில் சமூகரீதியாக சாதிப்பாகுபாடு கலியாணம் தவிர்ந்த (தற்போது இதுகூட அருகி வந்துவிட்டது) ஏனைய சமூக பொது நடவடிக்கைகளில் காட்டப்படாததனால் சிங்கள இனத்தின் சிறுபான்மை இனங்கள் அரசியல் பிரதிநிதித்துவத்தினை இலகுவில் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. ஆனால் சிங்கள சமூகத்துடன் ஒப்பு நோக்கும்போது தமிழ் சமூகத்தில் அரசியல் அந்தஸ்தினைத் தமிழ் அரசியல் தலைமைகளிடம் கேட்டுப் பெற வேண்டிய நிலையிலேயே சிறுபான்மைத் தமிழ் சமூகம் இருக்கின்றது. அப்படிக் கேட்கும்போதுகூட அது புறக்கணிப்பு நிலையிலேயே உள்ளது என்பது இன்றுள்ள யதார்த்தமாகும்.
தமிழ் அரசியல் வரலாற்றினைப் பொறுத்த்வரையில் இப்படியாக மிக உயர்ந்த ஸ்தானங்களுக்கு சிறுபான்மைத் தமிழர் சமூகம் வருவதென்பதும் அல்லது அவர்கள் வர முயலும்போது தடைக்கற்களாக உயர் சமூகம் என்றுமே செயற்பட்டு வருவதும் இன்று நேற்றல்ல, தொடர்ந்து நடைபெறும் ஒரு செயற்பாடாகவே நடைபெற்று வருகின்றது. 1950ம் ஆண்டுகளிலே முதன் முதலாகப் படித்த சிறு பான்மைத் தமிழ் சமூகத்திலிருந்து முதன் முதலாக முதலியார் இராஜேந்திரா அவர்கள் செனட்டராகத் தெரிவு செய்யப்பட்டார். இதனை அடுத்தே 1960 ஆம் ஆண்டுகளிலே திரு. ஜி. நல்லையா அவர்களை இலங்கையின் இரண்டாவது சபையான செனற் சபைக்கு தமிழரசுக் கட்சி நியமித்திருந்தது.
1947 ஆம் ஆண்டிலிருந்து தென்னிலங்கையில் தோன்றிய இடதுசாரிக் கட்சிகளான் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி ஆகியன யாழ் குடாநாட்டில் வேரூன்றத் தொடங்கின. இதனை படித்த நடுத்தர வர்க்க, சில முற்போக்கு எண்ணங் கொண்ட உயர்குலம் என்று கூறிக்கொள்ளும் யாழ்ப்பாணத் தமிழ் அரசாங்க உத்தியோகஸ்தர்களும், அக்காலத்தில் பல்கலைக் கழகத்தில் தென்னிலங்கை இடதுசாரித் தலைவர்களுடன் படித்தவர் களும், அவர்களுடன் சேர்ந்து தொழில் பார்த்த அவரது கொள்கை களால் ஈர்க்கப்பட்டவர்களும் யாழ்ப்பாணத்தில் இக்கட்சிகள் தமது நடவடிக்கைகளைத் தொடங்க காரணகர்த்தாக்களாக இருந்தனர். யாழ்ப்பாண நிலவுடைமைச் சமுதாயத்திலே இருந்து சாதீயக் கொடுமைகள் காரணமாக அங்கு சிறுபான்மைத் தமிழ் சமூகம் சமூக ரீதியிலும், அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்தளவிற்கு தீண்டத்தகாதவர்களாக இச்சமூகம் ஒதுக்கப்பட்டிருந்தது.

Page 116
obgcurreo O 226
முற்போக்குக் கொள்கைகளைக் கொண்ட இடதுசாரிக் கட்சிகளுக்கு, தமது கட்சிகள் நிலை கொள்ளுவதற்கு இச்சமூகம் ஒரு நிலைக்களனாக இடம் கொடுத்தது என்றால் அது மிகையாகாது. இக்கட்சியின் சிங்களத் தலைவர்களோ அன்றி உள்ளூர் தலைவர் களோ இச்சமூகத்தினரை சரிசமமாக நடத்த முற்பட்டதினால் இச்சமூகத்தின் பெரும் பகுதியினர் இடதுசாரிக் கட்சிகளுக்குப் பின் அணிதிரண்டிருந்தனர். இதன் காரணமாகவே சிறுபான்மைச் சமூகத்தினர் அதிகமாக வாழும் வடமராட்சியின் பருத்தித்துறைத் தொகுதியில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக திரு. பொன். கந்தையா அவர்கள் 1956ல் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். சிறுபான்மைத் தமிழர்கள் அணிதிரண்டால் அரசியலில் எதனையும் சாதிக்கலாம் என்பதனை வடமராட்சி சிறுபான்மைச் சமூகம் இலங்கை தமிழ் அரசியலுக்கு முதன் முறையாக உணர்த்தியிருந்தது.
1943 ஆம் ஆண்டிலே சிறுபான்மைத் தமிழர் மகாசபை என்ற அமைப்பு பல்வேறுபட்ட ஒதுக்கப்பட்ட சமூகத்தினரைச் சேர்த்து ஆரம்பிக்கப்பட்டிருந்தது. கட்சி வேறுபாடின்றி கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜக் கட்சி மற்றும் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் இந்த அமைப்பில் அங்கத்துவம் வகித்தனர். ஆனால் தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு இச்சமூகத்தில் அங்கத்தவர்களோ அன்றி ஆதரவாளர்களோ இருக்கவில்லை. காரணம், இக்கட்சி யாழ்ப் பாண நிலவுடைமைச் சமுதாய சாதீய அடக்குமுறையின் சின்னமாக அக்காலத்தில் விளங்கியதாகும். காலம் செல்லச் செல்ல மகாசபை யானது பல கட்சி அமைப்பிலிருந்து விடுபட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கிற்குட்பட்டது. இதன் பின்பு மகாசபையின் தலைமைப் பொறுப்பினை ஏற்றிருந்தவரும் நீண்டநாளைய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினருமான திரு. எம். சி. சுப்பிரமணியம் அவர்கள் பாராளு மன்ற நியமன உறுப்பினராக கம்யூனிஸ்ட் கட்சியால் தெரிவு செய்யப் பட்டு 1970ம் ஆண்டு அமைக்கப்பட்ட கூட்டரசாங்கத்தில் அங்கம் வகித்தார். முதன் முதலாக பாராளுமன்றத்திற்குச் சென்ற சிறுபான்மைச் சமூகத்தினைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினராவார்.
இவர் உறுப்பினராக இருந்த காலத்தில் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர் களால் செய்ய முடியாத பலப் பல வேலைகளையும் சேவைகளையும் இச்சமூகத்திற்காகச் செய்தார். இவரின் இந்த நியமனம் தமிழர் விடுதலைக் கூட்டணியினரை விழித்தெழச் செய்தது. இதன்பின்பு யாழ் மாநகர சபையில் திரு. என். ரி. செல்லத்துரை அவர்களும் அதன் பின்பு திரு. சேவியர் அவர்களும் உதவி மேயர்களாக நியமிக்கப்பட்டனர். இப்படியாக கஞ்சிக்கு பயறு போட்டது போல இங்கொன்றும் அங்கொன்றுமாக

227  ெஎம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
ஒருசில அரசியல் நியமனங்கள் தமிழரசுக் கட்சியாலும் அதனைத் தொடர்ந்து கூட்டணியாலும் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் ஒப்பீட்டளவில் யாழ் மாவட்டத்தில் சிறுபான்மைச் சமூகம் மூன்றில் ஒரு பங்கு சனத்தொகையைக் கொண்டதாக அக்காலத்தில் இருந்தது. அதற்கேற்ப அரசியல் பிரதி நிதித்துவம் வழங்கப்படவில்லை.
தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாகி 1977ம் ஆண்டில் வட்டுக்கோட்டைத் தீர்மானமாகிய முடிந்த முடிவாகிய தமிழீழத் தீர் மானத்தினை எடுத்தபோது தென் இலங்கைக்கும், முழு உலகிற்கும் ஒரு பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு தமிழ்த் தலைமைகள் தள்ளப் பட்டிருந்தன. அதாவது தமிழினத்திற்குள்ளேயே பல் சாதிகளை வைத்து அவர்களை அடக்குமுறையில், சாதியைச் சொல்லி ஒதுக்கி வைத்து இருக்கின்றீர்களே ! உங்களுக்கு, சிங்களவர்கள் ஒதுக்கு கின்றார்களே, சம உரிமை மறுக்கப்படுகின்றதே என்று அவர்களிடம் இருந்து பிரிந்து செல்லும் உரிமையைக் கேட்க என்ன தார்மீகம் இருக்கின்றது? இதற்கு விடை காணவேண்டிய கூட்டணித் தலைமை உடனடியாகச் சிந்தித்து 1977ம் ஆண்டுத் தேர்தலிலே உடுப்பிட்டித் தொகுதியிலே திரு. த. இராஜலிங்கம் அவர்களை மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்தது. இந்த வெற்றிக்கு இயக்கங்களின் தோற்றுவாயாக விளங்கிய தமிழ் இளஞர் பேரவையின் தீவிர பிரசாரமும் முக்கிய காரணங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. வடமராட்சி மக்கள் இரண்டாவது முறையாகவும் சாத னையைச் செய்தார்கள். முதலாவது பொன். கந்தையாவையும் இரண்டாவது இராஜலிங்கத்தினையும் தெரிவு செய்ததாகும்.
யாழ் மாவட்டத்தில் தேர்தலில் நிற்புவர்கள் யாவரும் சொந்தச் சொந்த ஊர்கள் உள்ள தொகுதிகளிலேயே நிற்பார்கள். ஆனால் 1977ம் ஆண்டு இதற்கு மாறாக, தனது ஊரும், தான் பாராளுமன்ற உறுப்பின ராக நின்று இரண்டு முறை வென்ற தொகுதியாகிய உடுப்பிட்டித் தொகுதியை தவிகூ வின் தலைவர் திரு. மு. சிவசிதம்பரம் அவர்கள் மனமுவந்து இராசலிங்கம் அவர்களுக்கு விட்டுக் கொடுத்திருந்தார். இது சிவா அவர்களின் பெருந்தன்மையையும் அவரின் குடும்பச் சிறப்பையுமே காட்டுகின்றது. இவரது பேரன் சித்தமணியம் என்பவர், சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த வதிரி சூரன் அவர்கள் முதன் முதலாக இச்சமூகத்திற்கென பாடசாலை ஒன்றை வதிரியில் உருவாக்க நினைத்தபோது அதற்கு உதவி ஒத்தாசை புரிந்ததோடு மாத்திர மில்லாமல் பண உதவியும் புரிந்த முற்போக்கான எண்ணங்கள் கொண்ட குடும்பத்தில் வந்தவராவர். அதனாலேயே இப்படியான முற்போக்கு எண்ணத்தினை இவர் கொண்டிருந்தார் என்பதனை இது காட்டுகின்றது. இக்காலத்திலே சிறுபான்மைத் தமிழர்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட காலம் என்பதனைக் கருத்தில் கொள்ள வேண்டும்

Page 117
சந்திரபோஸ் O 228
அத்தோடு சிவா அவர்களின் இளமை அரசியல் கம்யூனிசத்திலேயே தொடங்கியது. அடுத்ததாக இந்த ஆண்டுத் தேர்தலிலேயே சிவா அவர்கள் நல்லூர்த் தொகுதியில் போட்டி போட்டு வெற்றியும் பெற்றார். சொந்தத் தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாறி வெற்றியும் பெற்றது கூட உடுப்பிட்டித் தொகுதியில் செய்யப்பட்ட மாற்றத்தினாலேயே. இது தமிழ் அரசியல் வரலாற்றிலே ஒரு புதிய அத்தியாயத்தைத் தோற்றுவித்தது. இதன் பின்பே அமுதர் காங்கேசன் துறையிலும் மாவை திகாமடுல்லையிலும் தேர்தலில் நிற்கக்கூடிய துணிவினைக் கொடுத்தது.
இதன் பின்பு ஏற்பட்ட சூழ்நிலை மாற்றங்கள் இப்போக்கு களில் ஒரு மந்த நிலையினை ஏற்படுத்தியிருந்தது. அதாவது 1983ம் ஆண்டிற்குப் பின் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும் இயக்கங்களின் தோற்றங்களும் சமூகரீதியான சாதீய ஒடுக்கு முறைகளில் ஒரு மந்த நிலையை ஏற்படுத்தியுள்ளதென்றே கூறவேண்டும். இது அரசியல் ரீதியில் எதுவித விடிவினையும் தேடுவதாகவோ அன்றி அதனை ஒழிக்க நடவடிக்கை எடுத்ததாகவோ யாரும் கூறிவிட முடியாது அல்லது அது அடங்கிவிட்டதோ அன்றி ஒடுங்கி விட்டதென்றோ கூற முடியாது. இன்றும் அணைந்து போகாமல் புகையோடு மேலே சாம் பலாகவும் உள்ளே நெருப்பாகவும் உள்ளது. கடந்த கால இயக்க வரலாறுகள் கூட சாதீய நடவடிக்கைகளுக்கு சமரசம் தேடுவதாகவே இருந்ததே அன்றி அதனை ஒழிக்கும் நடவடிக்கையில் எந்த இயக்கம் தானும் ஈடுபாடு காட்டியதாக அண்மைய வரலாறு இல்லை. பல கோயில் பிரவேசங்களில் கூட இரு பகுதியினரும் பிரவேசிக்கக் கூடாது என்ற உத்தரவுடன் சமரசங் காணப்பட்டதனைக் கண்டோமே அன்றி ஐக்கிய நாடுகள் சபையினால் பட்டயத்தில் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளதும், அன்றி இலங்கை அரசியலமைப்பில உறுதிப்படுத்தப் பட்டதுமான அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் கூட இங்கு பல விடயங்களில் பேணப்படவில்லை.
கடந்த பொதுத் தேர்தலின்போது யாழ் மாவட்டத்திலும் கொழும்பிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக தலா ஒருவர் நிறுத்தப்பட்டனர். அவர்களை நிறுத்துவதற்குக் கூட பெரும் இழுபறி நிலையிலேயே அவர்களுக்குரிய நியமனத்தினைப் போராடிப் பெற வேண்டிய நிலை இருந்தது. தலைமைகளின் மனமாற்றத்தினால், இந்த சமூகத்தில் உள்ளவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்ற பரந்த நோக்கினால் இந்த நியமனம் கொடுக்கப்படவில்லை. வேறொரு யதார்த்தத்தினை இச்சந்தர்ப்பத்தில் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். யாழ் குடாநாட்டின் வெகுஜன இடப்பெயர்வின்போது பல குடும்பங்கள் கொழும்பு, தென் இலங்கை, இந்தியா, மேற்கு நாடுகள், இதனைவிட பலர் வன்னிக்கும் இடம் பெயர்ந்து

229 9 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
இருந்தனர். யாழ்ப்பாண மொத்த சனத்தொகையில் ஏறத்தாழ அரைவாசிப் பகுதியினரே யாழ்ப்பாணத்தில் தற்போது வாழு கின்றனர். ஆனால் தற்போது வாழும் சனத்தொகையில் ஏறத்தாழ அரைப்பங்கினர் சிறுபான்மைத் தமிழ் சமூகத்தினர் தற்போது யாழ்ப் பாணத்தில் வாழ்கின்றனர். இது இவ்வாறிருக்க அவர்களுக்கு ஒரு அரசியல் நியமனம் வழங்குவதில் கூட பழையபடியான இழுபறி நிலையே மீண்டும் காணப்பட்டது. உண்மையின்படி நோக்கின், இச் சமூகத்திற்கு தற்போதைய சனத்தொகை அடிப்படையில் குறைந்தது நான்கு பிரதிநிதித்துவமாவுதல் கிடைக்க வேண்டும். ஆனால் அப்படி யான நிலைமைகளுக்கு தலைமைகள் இடம் கொடுக்கவில்லை. ஈபிடிபி கூட பத்தோடு பதினொன்றாக ஒருவரை நிறுத்தியிருந்தது. ஆனால் அவரை இதயசுத்தியுடன் முன்னிலைப்படுத்தி பிரதிநிதி ஆக்குவார்களா?
யாழ் மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற யாழ் மேயர் ரவிராஜ் அவர்களின் இடத்திற்கு ஒரு மேயரைத் தெரிவு செய்யும் சந்தர்ப்பம் வந்துள்ளபோது உதவி மேயராக இருப்பவரை மேயராகத் தெரிவு செய்வதே மரபு. ஆனால் ஒரு வஞ்சனையுடன் அவரது சமூகத்தினை அடி மனதில் வைத்து தட்டிக்கழிப்பு நடை பெறுகின்றது. அது மட்டுமல்ல. தேர்தலில் நியமனம் கிடைக்காத தனால் முன்னாள் உதவி மேயருக்கு தற்போதைய மேயர் பிரதி நிதியாகும் பட்சத்தில் மேயர் பதவி வழங்குவதாக கூட்டணியால் உறுதி மொழி வழங்கப்பட்டும் தலைமையின் விருப்பமான ஒருவருக்கு இப்பதவியினை வழங்கும் நோக்குடன் பொதுச்சபையினைக் கூட்டியே இதனை வழங்க வேண்டும் என்ற சாக்குப் போக்கு கூறப்படுகின்றது. அது மட்டுமல்ல, இன்னும் மூன்று மாதங்களில் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெற இருப்பதனால் இந்த நியமனம் இப்போது தேவையில்லை என்ற ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகின்றது.
அடுத்ததாக கடந்த தேர்தலின்போது இச்சமூகத்தின் வாக்கு வங்கி சூறையாடப்பட்ட விதம் இங்கு குறிப்பிடப்பட வேண்டும். ஈபிடிபியின் வாக்கு வங்கி இச்சமூகத்தினை மையப்படுத்தியதாகவே இருந்தது. இன்றைய யுத்த சூழ்நிலையால் பொருளாதார ரீதியில் நலிவு பெற்ற இந்தச் சமூகமும், கரையோர வாழ் சமூகமும் இவர்களது வாக்கு வங்கிக்கு ஆதாரமாக அவர்களால் எதிர்பார்த்து செயற்பட்டார்கள். இதனை மையமாக வைத்து அரசாங்க புனர்வாழ்வு நிதியினைப் பயன்படுத்தி யாழ் மாவட்ட 3000 சீவல் தொழிலாளர்களுக்கு விபத்து காப்புறுதி செய்யப்பட்டது. இதே புனர்வாழ்வு அமைச்சானது வட மாகாணத்தில் உள்ள ஏனைய மாவட்டங்களான கிளிநொச்சி, முல்லைத் தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள சீவல் தொழிலாளர்களுக்கு இந்த வரப்பிரசாதத்தினை மறுத்தது. காரணம்,

Page 118
yöSp(8uT6o O 230
ஈ.பி.டி.பி. இந்த மாவட்டங்களில் தாம் வெல்ல முடியாதென்ற அவ நம்பிக்கையுடன் இருந்ததேயாகும். சீவல் தொழிலாளர்களுக்கு தலா ரூபா 3000 வீதம் புனர்வாழ்வு நிதியென்று வழங்கப்பட்டது. அத் துடன் இவர்களுக்கு புதிய சைக்கிள்களும் வழங்கப்பட்டன. இதே விதமான உதவிகளே மீனவ சங்கங்களின் அங்கத்தவர்கள் பலர் தென் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டு பல வரப்பிரசாதங்கள் அவர் களுக்கு வழங்கப்பட்டன. இப்படியாக இச்சமூகங்கள் விலைக்கு வாங்கப்பட்டன. அவர்களது நன்றி உணர்விற்கு சோதனை வைத்தனர். எங்கு பலவீனமான பகுதி உள்ளது என்று பார்த்து அங்கு தட்டப் பட்டது. எனினும் கரையோர சமூகம் தனக்கென ஒரு பிரதிநிதியைத் தக்க வைத்துக் கொண்டது. ஆனால் சிறுபான்மைத் தமிழ் சமூகம் ஏமாந்துவிட்டது; ஏமாற்றப்பட்டு விட்டது. கூட்டணிகூட 1977ல் இராச லிங்கத்திற்குச் செய்த பிரசாரம் போல் தங்கவேலுக்குச் செய்யவில்லை. மாறாக அவருக்கு எதிரான பிரசாரங்களில் ஒருசில கூட்டணியினர் ஈடுபட்டதாக அறியக்கிடக்கின்றது. தங்கவேலுக்கு நியமனம் வழங்கு வதில் பின் நின்றவர்கள் எதிராகச் செயற்பட்டதில் வியப்பேதுமில்லை. மேற்கூறப்பட்டவைகள் உணர்த்தி நிற்கும் நிலைப்பாட்டினை சிறுபான்மைச் சமூகம் ஆழமாக யோசித்து தனது நிலை பற்றி ஒரு தீர்க்கமான முடிவிற்கு வரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகாலவரையும் எதுவித அரசியல் தலைமையும் இல்லாதிருந்த இச்சமூகத்திற்கு ஒர் அரசியல் அமைப்பு தேவை என்ற நிலை காலத்தின் தேவையாக இருக்கின்றது. முன்பு இயங்கிய சிறுபான்மைத் தமிழர் மகாசபை கூட இயங்காமல் விட்டு ஏறத்தாழ இரண்டு தசாப்தங்களாகின்றன. விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தில் இன்று சிறு பான்மைக் கட்சிகள் பல முன்னெப்போதும் இல்லாத அளவில் தமது பிரதிநிதிகளைப் பெற்றுள்ளபோதும், கணிசமான சனத்தொகையில் உள்ள சிறுபான்மைச் சமூகத்திற்கு இன்று பிரதிநிதிகள் எதுவும் பெற முடியவில்லை. தமிழ் கட்சிகள் இச்சமூகத்திற்கு போதிய பிரதிநிதித் துவம் வழங்காது விட்டால், இவர்களுக்கு ஒரு அரசியல் கட்சி கட்டாயம் தேவையானது என்பதனைக் காலம் உணர்த்தியுள்ளது. இதனை காலம் செய்து வைக்கும்.
நான்கு கட்சிகளில் ஒன்றுதானும் தங்கள் பிரதிநிதிகளில் ஒரு வரையாவுதல் இச்சமூகத்திற்கு வழங்குவார்களா? சிவா அவர்கள் தேசியப்பட்டியலுக்கு நியமிக்கப்பட்டபோது அவர் சுகவீனத்தில் உள்ளவர், வயது வந்து விட்டது, அவரால் இயங்க முடியாது, அதனை எனக்குத் தா உனக்குத் தா என போட்டா போட்டியிட்டதனை அண்மையில் நேரில் கண்டோம். இக்கட்டுரை மூலம் ஒரு பகிரங்க வேண்டுகோளை விடுக்க விரும்புகிறேன். அதாவது சிவா அவர்களால் இப்பிரதிநிதித்துவம் அவரது சுகவீனம் காரணமாகவோ அன்றி

231 9 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
அவரது வயது காரணமாகவோ செய்ய முடியாதவிடத்து இதனால் ஏற்படும் வெற்றிடம் சிறுபான்மைத் தமிழ் சமூகத்தாலேயே நிரப்பப் பட வேண்டும். நான்கு கட்சிகள் கூட்டு மொத்தமான முடிவினை இதில் எடுக்கவேண்டும். உடுப்பிட்டியில் தனது தொகுதியை மன முவந்து கொடுத்து சிறுபான்மைச் சமூகத்தினை மதித்த சிவா மீண்டும் தனது பதவியை இவர்களுக்கு வழங்கி தனது பெருந் தன்மையைக் காட்டி கூட்டணிக்கும் பெருமை சேர்ப்பாரா?
இக்கட்டுரையின் தாற்பரியம் இன்று ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையினைக் குழப்பியடிப்பதோ அன்றி அதில் குளிர் காய்வதோ அல்ல. அன்றி ஆயுதப் போராட்டத்தின் இன்றைய கால மாற்றத் தினைக் கொச்சைப்படுத்துவதோ அல்ல. இது இன்று ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழலில் இச்சமூகத்தின் காலத்திற்குரிய தேவையே.

Page 119
esateko. 6un
வரலாற்றில் வாழ்தலில்
எம்.சி.
என் ஆங்கிலக் கல்வியின் முதல் ஆசான் ‘நல்லையா அண்ணை’, ‘லண்டன் மெற்றிக்குலேஷன்' படித்த அவர், சேணிய தெருவில் எதிர்வரிசையில், தென்திசையில், மூன்றாவது வீட்டில் குடியிருந்தார். சின்னண்ணன் இங்கிருந்து கல்லெறிந்தால் அவருடைய வீட்டு முற்றத்தில் விழும். என் அக்கா லட்சுமியை அவர் கல்யாணம் செய்தபொழுது எனக்கு வயசு பதினொன்று. அதிலிருந்து அவர் என் அத்தான். சமூகப் பிரக்ஞையும், சாதியத்திற்கு எதிரான விழிப்புணர்ச்சியும் அவர் மூலமே பெற்றேன். இயல்பாகவே அவரிடம் தலைமைத்துவக் குணங்கள் பொருந்தி இருந்தன. நிறையவே வாசித்துத் தமது அறிவையும் மனசையும் விசாலப்படுத்தியவர். பிற்காலத்தில் அவருடைய வீடு, கம்யூனிஸ்டுகளுக்கான பயில்கூடமாகவும் விளங்கியது. காங்கேசன் துறையிலிருந்து வரும் ரயில்களை அனுமதிக்கும் கைகாட்டி மரம் ஒன்று அவர் வீட்டு எதிரில் உண்டு. இதன் காரணமாக காலப்போக்கிலே, அக்காவுக்கு ‘கைகாட்டி’ என்கிற அடைமொழி ஒட்டிக் கொண்டது! ‘கைகாட்டி அக்கா’ என்று அவர் செல்லமாக அழைக்கப்பட்டார்.
丸、

233 9 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
"தம்பி, உன்னைக் கொக்கா தேடிக் கொண்டிருக்கிறா." என்று சொல்லிச் செல்லுகிறார் பாக்கியம் மாமி. அவர் அத்தானின் சின்னக்கா. பேப்பர் செல்லையாவின் மனைவி. அக்காவின் அழைப்புக்குத் தவணையிடும் அதிகாரம் எனக்குக் கிடையாது. அவவுடைய சிற்றேவல்களைச் செய்வதற்கு வேறு ஆள் கிடைக்காவிட்டால், இத்தகைய அழைப்பு வரும்.
அக்காவின் வீட்டுக்கு விருந்து வந்திருக்கிறது. விருந்தாளி தயிர் விரும்பிச் சாப்பிடுவாராம். வாங்கிவர ஆள் இல்லை. எனவே, நான் உதவ வேண்டும். ஐயம்பிள்ளை மாமாவின் சைக்கிளை எடுத்துச் செல்லலாம். சைக்கிள் கிடைத்தால், எந்தத் தூரமும் கால் எட்டுக்குள் என்று நினைக்கிற வயசு, வின்ஸர் தியேட்டர் தாண்டி, கே.கே.எஸ். வீதியிலுள்ள 'மிட்டாய்க்கடைச் சந்தி'யடியில் அக்கா சொன்ன பிரகாரம் தயிர் வாங்கிக் கொண்டு மீண்டேன். A.
யாழ்ப்பாண விருந்துகளிலே தயிர் பரிமாறப் படுவதில்லை. அடுப்பிலே காரம் சேர்க்காத வெள்ளைக் குழம்பு தயாராகிக் கொண்டிருக்கிறது. நிச்சயமாக விருந்தாளி யாழ்ப்பாணத்துக் காரனல்ல" என்று நிச்சயித்துக் கொண்டேன். அந்தக் காலத்தில், அக்காவின் குசினிக்கு பனைமட்டை வரிச்சுத்தான் சுவர். அது அமைத்திருக்கும் “கிறாதி'களின் ஊடாக அத்தானுடன் உரை யாடிக் கொண்டிருந்த அந்த விருந்தாளியை எட்டிப் பார்த்தேன். விறாந்தையில் அமர்ந்திருந்த அத்தான், அடுக்களையிலிருந்த என்னைப் பார்த்துவிட்டார். "பொன்னுத்துரை, இங்கை வாரும்!” என்று அழைத்தார்.
நான் அடுக்களையிலிருந்து வெளியேறி, அவர்கள் அமர்ந்து உரையாடிய விறாந்தையை நோக்கி நடந்தேன். மூன்று நான்கு படிகள் ஏறித்தான் விறாந்தையை அடையலாம்.
அது அத்தானின் பழைய வீடு. இரண்டு அறைகளும், பெரிய விறாந்தையும் கொண்ட ஒட்டு வீடு. பெரிய அறை பூஜை அறையாகவும் பயன்பட்டது. அந்த அறைக் கதவின் நிலைக்கு மேலே, சுவர்மீது, பென்னம் பெரிய லசுஷ்மி படம் ஒன்று தொங்கிக் கொண்டிருக்கிறது. அந்தப்படத்தை அகற்ற விசாலாட்சி மாமி அனுமதித்ததில்லை. அவதான் அத்தானின் மூத்த அக்கா, ஐயம்பிள்ளை மாமாவின் மனைவி அவர்கள்தான் அத்தான் வீட்டில் மூத்தவர்கள்; அவரின் போஷகர்கள். அவர்களுடைய பணப்புழக்கங்கள் அனைத்தும் பெரிய அறையில் நடைபெறும். சின்ன அறைதான் அத்தானின் படுக்கை அறை. விறாந்தையில் அத்தானின் புத்தக

Page 120
eurbá6g08urteko O 234
அலுமாரிகளும், மேஜையும் இருந்தன. நண்பர்களுடன் அமர்ந்து பேசுவதற்கான கதிரைகளும், ஒரு சாய்வு நாற்காலியும், சார்ந்து அமருவதற்கான முதுகுவைத்த பெரிய வாங்கு ஒன்றும் உண்டு. அத்தான் எதிலும் தூசு துப்பரவு. எல்லாவற்றையும் தினமும் துடைத்து அழகாகவும் ஒழுங்காகவும் வைத்திருப்பார். சுவரிலே மாட்டப்பட்டிருந்த ஏனைய சுவாமி படங்கள், வீட்டைப் பார்த்தது போலக் கட்டப்பட்டிருந்த மண்டபத்திற்கு இடம் மாற்றப்பட்டிருந்தன. விறாந்தையிலே அத்தான் தனக்கு இஷ்டமான படங்களை மாட்டியிருந்தார். சுபாஸ் சந்திரபோஸ், மகாத்மாகாந்தி, பாரதியார், லெனின் ஆகியோருடைய பெரிய கலர்ப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன. தனது நண்பருடன் பெரியார் ஈ.வே.ரா. வைப் பார்க்க ஈரோடு சென்றபொழுது எடுத்த புகைப்படங்களும் ஆங்காங்கே தொங்கின. மேஜைக்கு மேலே, சுவரிலே, திருமணத்தின்போது அக்காவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட பெரிய ‘என்லார்ஜ்டு புகைப்படம் அலங் கரித்தது. இந்தியத் தலைவர்களுள் அத்தான் நேதாஜியையும் பகத்சிங்கையுமே அதிகம் விரும்பினார். அவருக்குப் பிறந்த மூத்த மகனுக்கு அவர் சந்திரபோஸ் என்றே பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
"நான் உங்களுக்குச் சொன்ன மச்சான் இவன்தான்” என்று என்னை அறிமுகஞ் செய்து வைத்தார். அவர் என்னைத் திரும்பிப் பார்த்தார்.
நல்ல கறுவல். பயில்வான் மோஸ்தர் உடற்கட்டு. கதர்த் துணியில் பைஜாமாவும் அரைக்கை சேர்ட்டும் அணிந் திருந்தார். ஐதான தலைமுடி. ஸ்டாலினின் மீசையைப் பிரதிசெய்து ஒட்டி வைத்தது போன்ற பெரிய மீசை. ஆனால், பரந்த சிநேகம் பரப்பிய முகம். அசாதாரண ஒளி வீசும் கண்கள்: அற்புதக் கனிவு.
"ஒகோ, "அவள் அழகி ஆனால். கதாசிரியர் இவர்தானா?” என்று கேட்டு, என்னைப் பார்த்து, குரல் எழுப்பிச் சிரித்தார். அவருடைய சிரிப்பு தொற்றுநோய் போன்றது. நானும் சிரித்தேன். அந்தச் சிரிப்பிலே இருவரும் ஒன்றினோம். இந்தச் சந்திப்பு, என் எழுத்து வாழ்க்கையில், பாரிய தடத்தினைப் பதிக்கும் என்பது நான் எதிர்பார்க்காத ஒன்று.
அத்தான் அவரை எனக்கு அறிமுகப்படுத்தினார்: "இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுள் முக்கிய மானவர். தோழர் ப. ஜீவானந்தம்"
*

235 9 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
இந்நிலையில் எனக்குப் பரமேஸ்வராக் கல்லூரியில் அனுமதி கேட்டது எனத் தோழர் கார்த்தியும் அத்தானும் தீர்மானித்தார்கள். இக்கல்லூரி இலங்கை அரசியல் வானில் தேசியத் தலைவராகப் புகழ்பூத்த சேர் பொன்னம்பலம் இராமநாதனால் நிறுவப்பட்டது. யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் தேசாதிபதியிடம் கல்லூரி களைக் காட்டி, இவையே நமது பெறுமதிமிக்க தொழிற் சாலைகள்’ என்று அவர் கூறினாராம். யாழ்ப்பாண மக்களுக்கு உயர் கல்வி மட்டுமே வேலை வாய்ப்பு களுக்கும், அதன் மூலம் பொருள் வளத்திற்குமான உத்தரவாதம் என்பதை இப்படிப் பூடகமாக உணர்த்தினார் எனப் பெருமையாகப் பேசிக்கொண்டார்கள். ஆனால், இந்துச்சூழலில் நடத்தப்பட்ட அனைத்துக் கல்லூரிகளிலும் சிறுபான்மைத் தமிழர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டே வந்தது. யாழ்ப்பாணம் பேணிய இக்கட்டித்த வைதீகப் பாதுகாப்புக்குத் துணைபோன பரமேஸ்வராக் கல்லூரியில் அனுமதி கிடைக்குமா?
கல்லூரிக்கு என்னை அத்தானே அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தார். சீனியர் பரீட்சை முடிவுகள் வெளிவரவில்லை. நான் சித்தியடைவேன் என்கிற நம்பிக் கையின் பேரிலே, என்னை எச்.எஸ்.ஸி. வகுப்பிலே சேர்த் துக் கொள்வதாகக் கூறினார். "நீர் கம்யூனிஸ்ட் பிரசாரம் செய்வதற்கு இங்கு தடையில்லை, ஆனால், ஒன்று. இக்கல்லூரி இந்து சமயச் சூழலிலே இயங்குதல் வேண்டும் என்று இதன் ஸ்தாபகர் விரும்பினார். இதன் காரண மாகவே, இக்கல்லூரி வளவில், அதோ தெரியும் பரமேஸ் வரர் கோயிலைக் கட்டிவைத்தார். வெள்ளிதோறும், முதற்பாட நேரத்திலே அக்கோயிலில் விசேட பூஜை நடைபெறும். அந்தப் பூஜையிலே கலந்து கொள்வது, இங்கு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயக் கடமையாகும். அந்த பூஜைகளுக்கு ஒழுங்காகச் செல்ல வேண்டும்’ என்றார்.
நான் நாஸ்திகக் கொள்கை உடையவன் என்பதை அறிந்திருந்ததினால், இதனை அழுத்திச் சொன்னார். நான் மெளனமாக இருந்தேன். “பொன்னுத்துரை! இந்தக் கல்லூரியிலே அனுமதிக்கப்படும் முதலாவது சிறுபான் மைத் தமிழன் நீர் என்பதிலே பெருமை இல்லை. யாழ்ப்

Page 121
சந்திரபோல் O 236
பாணத்தின் வைதீகங்களை உடைத்து, இந்தக் கோயி லுக்குள் ஆலயப் பிரவேசம் செய்யும் முதலாவது ஆளும் நீர்தான். இதனால் ஏற்படக்கூடிய அனைத்துப் பிரச்சி னைகளுக்கும் நான் பொறுப்பேற்கின்றேன்" என்று கனிவுடன், ஆனாலும் கண்டிப்பான குரலிலே கூறினார். பலரும் அறிய, ஆரவாரங்கள் எதுவுமின்றி, யாழ்ப் பாணத்தின் கட்டித்த ஜாதிவெறியைத் தகர்த்து, முதலாவது ஆலயப்பிரவேசம் செய்யும் வாய்ப்பு இவ்வாறுதான் எனக்குக் கிட்டுவதாயிற்று. இது என் சாதனையல்ல.
தோழர் கார்த்தியும் சிவபாதசுந்தரமும் ஆழமாக விவாதித்து எடுத்த முடிவாகும் எனப் பின்னர் அத்தான் என்னிடம் சொல்லியிருக்கின்றார். தோழர் கார்த்தி, தமது கம்யூனிஸ் ஊழியத்திலே எத்தனையோ வெற்றிகள் சாதித்தார். அவற்றுள் முதலாவது சமூகவெற்றி இதுவாகும். பின்னாளிலே, ஜாதியத்துக்கு எதிரான போராட்டங்கள் பற்றிய வரலாறு எழுதியவர்கள், இந்த நிகழ்ச்சியைச் சொல்லவில்லை. ஆயிரம் மைல் யாத்ரா கூட, முதலாவது காலடி நடப்பதி லேதான் துவங்குகின்றது என்பது பொதுவான அநுபவம்.
நான் பரமேஸ்வராக் கல்லூரியில் அனுமதிக்கப் பட்டமையும், அதன் மூலம் முதல் ஆலயப்பிரவேசம் நடத்தியமையும், ஆறுமுக நாவலருக்கும் முன்பிருந்தே யாழ்ப்பாண மண்ணிலே கண்ணும் கருத்துமாகப் பேணப்பட்ட கட்டித்த வைதீகத்திலே ஓர் ஒட்டையை ஏற்படுத்தியது. ஒரு சிறிய தகர்வே. உண்மை. ஆனால், பெரிய மாற்றங்களுக்கான சமிக்ஞையை ஏற்படுத்திய ஒரு தகர்வு. தகர்க்கப்பட வேண்டிய வைதீகத்திலே ஒரு சிறிய வெடிப்பினை ஏற்படுத்தியது! இவ்வாறுதான் அப்பொழுது நாங்கள் விளங்கிக் கொண்டோம். இந்த முன்னோடி நிகழ்ச்சிகளை மறந்தும், மறைத்தும் முற்போக்கு எழுத்து ஜீவிகள் வரலாறுகள் சோடித்தல் அறஞ்சார்ந்ததல்ல.
சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதிலும், அவர் களுடைய அடிப்படை மனித உரிமைகளை வென்றெடுப்பதிலும், முன்னணித் தானை வீரனாகவும், இயல்பான தலைவனாகவும் செய்ற்பட்டவர் அத்தானே. வீட்டில் நல்லையா என்று அழைக்கப் பட்டார். அவர் முத்தர் கணபதி சுப்பிரமணியம் என்கிற தமது பெயரை எம்.ஸி. சுப்பிரமணியம் என எழுதுவார். பின்னர், சமூக ஊழியனாய், கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டனாய்த் தமது வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொண்டபொழுது ‘எம்.ஸி.

237 9 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
என்கிற பெயரிலே அவர் சகலராலும் அறியப்பட்டார். ஒடுக்கப் பட்ட இனத்தின் விடுதலைக்கான அனைத்து வழிகளைப் பற்றியும் அவர் சிந்தித்திருக்கிறார். சமூகப் பிரக்ஞைகளையும் அக்கறை களையும் வளர்த்தெடுப்பதிலே அவர் எப்பொழுதும் ஒரு தொண்டனாய் உற்சாகத்துடன் ஈடுபட்டமையும் எனக்கு ஆதர்ஷமாக அமைந்தது. அவருடைய பட்டறையிலே உருவாகி யவன் என்கிற மதிப்பினை இன்றளவும் நெஞ்சாரப் போற்று கின்றேன். அவருடைய உறவும் தொடர்பும் ஏற்பட்டிருக்காது போனால், என் வாழ்க்கைப் போக்கு வேறுவிதமாக அமைந்தி ருத்தல் சாத்தியமே. அவருடைய ஊழியத்தின் வெற்றிக்கான சான்றுகளுள் நானும் ஒருவன். அது என் தனித்துவத்துக்கும் உதவி உள்ளது.
* چ
இருபதாம் நூற்றாண்டின் இருபதுகளின் பிற்கூறிலே மகாத்மா காந்தி இலங்கைக்கு வருகை தந்தார். அவர் யாழ்ப்பாணத்துக்கும் வந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின்போது, மாணவர்கள் இருமருங்கும் திரண்டு நிற்க, மணிக்கூண்டு வீதியால் நடந்து சென்றார். இதனை நினைவுகூரும் விதத்தில், பிற்காலத்தில், மணிக்கூண்டு வீதி மகாத்மா காந்தி வீதி என்று மறுநாமகரணம் செய்யப்பட்டது. அந்த வரவேற்பு வைபவத்தில் அத்தான் பத்து வயதுச் சிறுவனாகக் கலந்து கொண்டார். இதனை அவர் அக்காள் விசாலாட்சி மாமி பெருமையுடன் நினைவுகூருவார். அத்தான் காந்தியவாதியாக வாழ்ந்த காலத்தையும் நான் அறிவேன். தூய்மை யான, வெண்மையான, கதர் ஆடைகளையே அவர் அக்காலத்தில் அணிந்தார். தமது ஆடைகளை அவரே சலவை செய்வார். தொழில் நுட்பம் அறிந்த சலவைத் தொழிலாளி போலச் செயற்படுவார். வெண்மையை உறுதிப்படுத்த அளவாக நீலம் போடுவார். அவர் சலவையில் ஈடுபட்டால், யாரும் கிணற்றடிப் பக்கம் போக முடியாது. அவர் எதையும் முழுமையாகச் செய்து முடிப்பதிலே மகா ஈடுபாடு காட்டுவார். ஆனாலும், இப்பொழுது, நிகழ்ச்சிகளை மீள் பரிசீலனைக்கு உட்படுத்தும்பொழுது, அத்தானின் அரசியல் ஊழியமும் தலைமைத்துவமும் வரலாற்று நிகழ்வுகள் பலவற்றின் தாக்கங்களினாலும் உருவாகியதை அறிந்து கொள்ளலாம். இந்தக் கோணத்திலே, சிறுபான்மைத் தமிழர்களுடைய விமுக்தி எழுச்சி ஆவணப்படுத்தப்படவில்லை. பின்னால் "முளைத்த’ தலைவர்கள் சமகால அரசியல் தேவைகளை மனதிலே கொண்டு, எம்.ஸி.யின் பங்களிப்பினை முக்கியப்படுத்த விரும்பியதுமில்லை. கால

Page 122
சந்திரபோல் O 238
ஒட்டத்திலே, நேரிய ஆவணப்படுத்தலுக்கான வாய்ப்பு அருகிவருவதை உணருகின்றேன். சிலவேளைகளிலே இந்த உண்மைகள் பிரசித்த மாகாமலே மறைந்துபடுமோ என்கிற கவலை என் வசத்து.
* kr
சிமூகப் பிரக்ஞையுள்ள கலைஞன் என்று தன்னைப் பெருமையுடன் அறிமுகப்படுத்தும் ஒருவன், தன்னை உருவாக்கிய சமூகப் பின்னணியின் வரலாறு கூறாது, தன் வரலாற்றினை நேர்மையாகச் சித்திரித்தல் இயலாது என்பது என் தளம்.
இலங்கையில் தமிழர் ஒரு சிறுபான்மை இனம். சிங்களப் பேரினவாதத்தின் அரை நூற்றாண்டு கால அடக்குமுறைக்கு எதிராகத் தமிழர் நடத்தும் ஆயுதப் போராட்டம் இந்நூற்றாண்டின் எழுச்சிமிகு காவியமாகும். விடுதலைப் போரின் உக்கிரத்திற்குப் புதிய முகமும், இனமானப் போருக்கு ஒரு புதிய பரிமாணமும் சேர்த்தது. சங்ககாலத்தின் புறப் பாடல்களின் பாடுபொருள்கள் யதார்த்தமானவையே என்கிற எண்ணத்தை நாட்டியது. இந்த விடுதலைப் போரினை மறந்தோ, மறைத்தோ இருபதாம் நூற் றாண்டின் தமிழர் வரலாறு எழுதப்படுதலும் சாத்தியமில்லை. இந்தப் பொற்பங்களை ஏற்றுக்கொள்ளுபவர்கள்கூட, சிறுபான்மைத் தமிழர்கள் மனிதனின் அடிப்படை உரிமைகளைச் சுகிப்பதற்கு "கொவிகம’ தமிழர்களுடன் நீண்ட போராட்டம் நடத்த நேர்ந்தது என்கிற உண்மையைப் பிரசித்தப் படுத்துவதற்குக் கூச்சப்படுவது எதனால்? இந்த முரண்பட்ட நிலைப்பாடு சத்தியத்தினை எதிர் கொள்ள இன்னமும் தமிழ் நெஞ்சங்கள் பக்குவப்படவில்லை என்பதற்கான சான்றாகவே விளங்கிக் கொள்ளுகின்றேன். இந்தப் பக்குவமின்மை அன்றேல் கமுக்கம் தகர்க்கப்படுதல் வேண்டும். அப்பொழுதுதான் சகல தமிழ் மக்களுடைய அர்ப்பணிப்புப் போராக தமிழ் இனத்தின் விடுதலைப் போர் விரிவும் உக்கிரமும் அடையும் என விளங்கிக் கொள்ளுகின்றேன். மேலும், என் சாதி யாரின் விடுதலை நோக்கிய ஏக்கங்களும், எழுச்சிகளும், சாதனை களும் இணைந்து என் இலக்கிய ஊழியத்தினை ஆரம்ப கட்டங் களிலேனும் அர்த்தமுள்ள தாக்கியுள்ளன. அந்த அர்த்தங்களுக்கு விசுவாசம் பூணுதலும் சத்தியத்தின் பாற்படும்.
女 s
சிறுபான்மைத் தமிழர்களுடைய பொருளாதாரத்திலே ஒரு மாற்றத்தினைக் கொண்டுவர உதவியது மரவரி முறையாகும்.

239 0 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
இலங்கையின் grai)6OTL பகுதிகளிலே உள்ளது போன்ற 'தவறணை’ முறையை நீக்கி, யாழ் குடாநாட்டில் “மரவரி முறை அமுலாக்கப்படுதல் வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து, உரிய இடங்களிலே மகஜர்கள் சமர்ப்பித்து, தமது கோரிக்கைக்கு அரசியல் ஆதரவும் தேடிச் சாதனை நிகழ்த்தியவர் 'பிலாக்கொட்டை’ தம்பையா. அவருக்கு உறுதுணையாக இயக்கத்தினை முன்னெடுத்துச் சென்றவர் "பேப்பர்’ செல்லையா. இவர் எம்.ஸி.யின் இளைய அக்காவான பாக்கியத்தைக் கல்யாணம் செய்தவர். சேணியதெருவில் நான் குடியிருந்த வீட்டுக்கு, வடதிசையில் மூன்றாம் வீட்டில் அவர் குடியிருந்தார்.
மரவரி முறை கொண்டு வந்து சேர்த்த பொருள் வளம் ஏனைய தொழிற்துறைகளிலும் கசிந்து வளம் தருதல் இயல்பு. யாழ்ப்பாண நகரத்தின் பல பகுதிகளிலும் சிறுபான்மைத் தமிழர் சொந்தத்திலே காணிநிலம் வாங்கினார்கள். பணக்காரப் புள்ளிகள் அவர்கள் மத்தியிலே தோன்றினார்கள். என் மாமாக்கள் இருவரும் அவ்வாறு கணிக்கப்பட்டார்கள். அத்தகையவர்கள் பணம் வாங்கக்கூடிய சலுகைகளையும் செளகரியங்களையும் தமதாக்க விழைந்தனர். இது வாஸ்தவமாகவே கட்டுடைத்தலை நிகழ்த்தியது. சிறுபான்மைத் தமிழ்ச் சமூகத்தின் பெண்கள் ஒரு காலத்தில் 'ரவுக்கை அணிவதற்கு அனுமதிக்கப்பட்டதில்லை. என் வளரிளம் பருவகாலத்திலே கூட, கிராமப்புறங்களிலே, சிறுபான்மைத் தமிழர் சமூகங்களைச் சேர்ந்த பெண்கள், 'குறுக்கட்டு’ என மேல் வரிச்சு இழுப்பது போல சேலையைக் கட்டுவதின் மூலமே தமது மார்பகங்களை மறைப்பதைக் கண்டிருக்கின்றேன். இவர்கள் 'ரவுக்கை, அணியும் நாகரிகத்தினை மேற்கொண்டபொழுது, வக்கிர மனம் கொண்ட மேல்சாதிக்காரர், "கொக்கைச் சத்தங்கள்’ பயன்படுத்தி அந்த ரவுக்கைகளைக் கிழித்து அவமானப்படுத்திய சம்பவங்கள் பற்றி ஆச்சியின் உரையாடல்கள் மூலம் அறிந்துகொண்டேன். எனவே, அவர்கள் 'ரவுக்கை' அணிந்து திரிதல் கூடக் கட்டுடைத்தலாகக் கருதப்பட்டது. யாழ்ப்பாண நகரத்தில் இந்த மாற்றங்கள் பெரிதுபடுத்தப்படவில்லை. நான் நல்லூரிலே பிறந்தபோதிலும், கற்றலும் கல்வி விருத்தியும் சேணியத் தெருவில் வாழ்ந்த காலத்திலேயே சம்பவித்தன. அடுத்து கன்னாதிட்டி வீதியில் * அப்பையாவுடன் வாழ்ந்த காலத்தில், யாழ்ப்பாண மண்ணிலிருந்து தூரந்தூரமாக விலகவும் துவங்கிவிட்டேன். சேணியதெருவிலே வேளாளக் குடும்பங்கள் என்று இரண்டே இரண்டுதான் வாழ்ந்தன. கன்னாதிட்டி வீதியிலும் அவ்வாறே. இவ்விரு வீதிகளிலும் சேணியர், சாயக்காரர், தட்டார், தச்சர் ஆகிய சாதியாரே பெருந்தொகையில் வாழ்ந்தார்கள். இவை அனைத்தும், யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த

Page 123
öቻß፰ሀ®ሀዘemb O 24O
அசைவியக்கத்தின் பாற்படும். இவை குறித்த ஆய்வுகளோ ஆவணங்களோ நமக்குக் கிடைக்கவில்லை. இத்தகைய ஆய்வுகளிலே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எதிர்காலத்திலாவது சிரத்தை ஊன்றுமா?
* *
தீண்டாமை ஒழிப்பிலே சத்திய அக்கறை ஊன்றி, தேடல்கள் பல நிகழ்த்தி, தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் எம்.ஸி. சுப்பிரமணியம். ஆனாலும், அவருடைய பாடுகளும் பணிகளும் வரலாற்று ஆவணமாகத் தொகுக்கப் படவில்லை. அவருடைய பாடுகளும் என்னுடைய இலக்கியப் பயணத்திற்குப் பாதை வகுத்துத் தந்தன. அந்த அளவில் அவருடைய வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதி என்னுடையதுமாகின்றது. காந்தியவாதியாகவும், கதராடைப் பிரியராகவும், சமூகத் தொண்டினையும், தீண்டாமை ஒழிப்பையும் யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்துச் செல்வதிலுள்ள சிக்கல்களை அவர் விரைவிலேயே உணர்ந்திருத்தல் சாத்தியம். தீண்டாமை ஒழிப்பு என்பது அவரைப் பொறுத்தவரையில் கவர்ச்சியான கோஷமல்ல, அஃதே அவருடைய வாழ்க்கையினதும் ஊழியத்தினதும் மையப் புள்ளி!
*
என் எட்டாம் வயதில் அவரிடம் ஆங்கில ரியூஷன் பெறச் சென்றேன். தினமும் அதிகாலைச் சந்திப்பு நான்கு ஆண்டுகளின் பின்னர் என் அக்கா லட்சுமியை விவாகஞ் செய்தார். அதனால் அத்தானும் ஆசானும் என்கிற உறவு என் வாழ்க்கைப் பயணம் திசை மாறியபோதிலும், 1984ஆம் ஆண்டுவரை இந்த உறவு மகா ஆரோக்கியமானதாக நிலைத்திருந்தது. பின்னாள்களிலே இருவரும் தோழர்களும், நண்பர்களுமாகவே பழகினோம். என் அண்ணன் மார்கள் அவரை ‘அத்தான்' என்றழைத்தபோதிலும், நான் ‘எம்.ஸி என அழைத்துப் பழகினேன். இந்த உரிமை கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியத்தினால் மலர்ந்தது என விளங்கிக் கொள்ளுகின்றேன்.
எம்.ஸி.யின் வீட்டு விறாந்தை கலகலப்பாகவே இருக்கும். ப. ஜீவானந்தத்தைச் சந்தித்த அதே விறாந்தையில், வேறு சிலரை முன்னர் பார்த்திருக்கிறேன். அவர்களுள் இருவர் முக்கிய மானவர்கள். ஒருவர் காந்தி ஜேக்கப். இவரைப் பற்றி முன்னர் சொல்லியுள்ளேன். மற்றவர் ஜி. எம். பொன்னுத்துரை. மூவரும் ஆங்கிலத்திலும் உரையாடுவார்கள். ஜி. எம். பொன்னுத்துரை ஆஸ்பத்திரிவீதியில் மணிக்கூடுகளும், கைக்கடிகாரங்களும் திருத்தும்

241. 9 எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
கடை ஒன்றினை வைத்திருந்தார்.
மூவரையும் ஒருசேர நினைவு கொள்ளுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இவர்கள் மூவரும் சிறுபான்மைத் தமிழர்கள் மத்தியிலே சமூகப்பிரக்ஞையை ஊட்டுவதற்காக, ஆரியகுளத் தடிக்கு அண்டையிலுள்ள பலாலி வீதியில் சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்கம் ஒன்றினை உருவாக்கினார்கள். பலாலி வீதியில் வாழ்ந்த க. இராசையா, ஆழ்வார் செல்லையா, ஆழ்வார் சிவகுரு (மாணிக்கம்), ஆழ்வார் சண்முகம் ஆகிய பலரும் இதற்கு அநுசரணை யாக உழைத்தார்கள். இந்தச் சன்மார்க்க சபை அயலில் ஏற்பட்ட விழிப்புணர்ச்சியின் காரணமாக, பலாலி வீதியில் பெண்மணி ஒருவர் இறந்த பொழுது, அவருடைய சடலத்தை வில்லூன்றி மயானத்தில் எரித்தனர். சுடலையிலே ஜாதீயம் எரியட்டும் என்கிற ஆவேசம். காடாத்துக்குச் சென்றபொழுது, ஜாதீயத்தின் காவந்துகாரரான வேளாளர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதிலே முதலி சின்னத்தம்பி என்கிற இளம் குடும்பஸ்தர் பலியானார். சாதிக் கொடுமைகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட நீண்ட போராட்டத்தின் ஆரம்பக் குறியீடாக இந்த நிகழ்ச்சி என் பிஞ்சு மனசிலே நிலைத்துள்ளது.
徽 紫 *
இந்தச் சம்பவத்தின் பின்னர் சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்கத்தின் செயற்பாடுகள் விரிவுபடுத்தப்படுவதாயிற்று. சமூகப் பிரக்ஞையை வாலிபர்கள் மத்தியில் மட்டுமன்றி, மாணவர்கள் மத்தியிலும் ஏற்படுத்துதல் வேண்டும் என்று அவர்கள் தீர்மானித் தார்கள். இதன் செயற்பாடாக மாணவர் தேர்ச்சிக் கழகம் ஒன்று நிறுவப்பட்டது. மாணவர்கள் மத்தியிலே பேச்சு வன்மையையும் எழுத்து வன்மையையும் வளர்த்தெடுத்தல் வேண்டும் என்பதிலே எம்.ஸி, ஜி. எம். பொன்னுத்துரை, சிவகுரு (மாணிக்கம்) ஆகியோர் அக்கறை பூண்டனர். மாணவர் தேர்ச்சிக்கழகம் பிரதி ஞாயிறு தோறும் கூடியது. இக்கூட்டங்களிலே மாணவர்கள் பேசும்படி ஊக்குவிக்கப்பட்டார்கள். அவர்களுடைய எழுத்து ஆற்றலை வளர்ப்பதற்காக, "ஞானோதயம்’ என்கிற கையெழுத்துப் பத்திரிகை நடத்தப்பட்டது. "ஞானோ