கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மார்கழிப் பாராயணம்

Page 1
*玖 *) -!:-)----*玖|×|-} *
· |-Ĥ 歴|×
--
sae ----
|×
|- |- . . . ----
*
 

ILINGUUTLD,
யாழ்ப்பா

Page 2

gav uDanub
மார்கழிப் பாராயணம்
O திருப்பள்ளியெழுச்சி
C திருவெம்பாவை
C திருப்பொற்சுண்ணம்
O திருப்போரூர் முருகன்
திருப்பள்ளியெழுச்சி
O தொண்டரடிப் பொடியாழ்வார்
திருப்பள்ளியெழுச்சி
O
திருப்பாவை
-O-
அச்சுப்பதிவு: யூனிகாந்தா அச்சகம்
213, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்.

Page 3
6. மார்கழித் திங்கள்
மார்கழி, தமிழ் மக்கள் இசைபாடி இறைவனைப் போற்றும் மாதம், மார்கழி சிறப்பாக மகளிருக்குரியது. கன்னிப்பெண்கள் இத்திங்களில் முதல் நாள் தொடக்கம் நோன்பிருந்து இறைவன் அடியவரையே தாம் கணவராக அடையவேண்டும் என இறைவனிடம் வேண்டுவார்கள். பண்டைத்தமிழர் இதனைப் பாவை நோன்பு என்றனர்.
மார்கழி மாதத்து நன்னுள் திருவாதிரைநாள். பண்டு தொட்டே தமிழர் திருவாதிரை நாளில் இறைவனுக்கு விழா எடுத்துள்ளார்கள். முன்பணிப்பருவத்தில், மார்கழி மாதத்தில், திங்கள் மறுவோடு நிறைந்த திருவாதிரை நாளில், விரிநூல் அந்தணர் திருவாதிரைக்கு தெய்வமாகிய இறைவனுக்கு விழாத் தொடங்குவார்கள். இதனை ‘மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை, விரிநூல் அந்தணர் விழவு தொடங்க" என்று பரிபாடல் கூறும். − t
மார்கழி மாதத் திருவாதிரைக்கு முந்திய பத்து நாட் களும் மாணிக்கவாசகர் திருவண்ணு மலையில் தங்கியிருந்தார். விடியற்காலையில் மகளிர் நோன்பு நோற்றலைக் கண்டார். வீட்டை மெழுக்கிட்டு, அங்கு விளக்கேற்றி, வீதிவழி சென்று, தோழியரை அழைத்து, புனலாடிப் பாடிமகிழ்ந்த அவர்களின் உள்ளத்தில் நின்ற இறைவனின் நிறைவு உதடுகள் வழி தவழ்ந்ததைக் கண்டார். அவர்கள் பாடுவ தாகத் திருவெம்பாவையைப் பாடினர்.
மாதங்களில் மார்கழி போன்றவன் எனப் போற்றப்
படுபவன் கண்ணன். மார்கழி மாதத்தில் தெரிவையர் கண்ணன் புகழ் பாடுதற்கெனத் திருப்பாவையினை ஆண்டாள் அருளிச்செய்தார். மார்கழி மாதம் மதி
நிறைந்த நன்னுளில் நீராடப்போதுவிர்! நேரிழையீர்! என அழைப்பு விடும் முறையில் அமைந்துள்ளன அவரின் untdissoir.
இப்பாவைப் பாடல்களைப் பாடுதற்கு உரிய மாதம் மார்கழியே. தினமும் அதிகாலையில் இவை பாராயணம் செய்யப்படின் இறைவன் அருள் கிட்டும் எனச் சான்ருேர் கூறுவர். அடியவர்கள் இவற்றைப் பக்தியுடன் பாடுவார் களாக, பயன் பெறுவார்களாக வழிவழியாக முறைமுறை யாகத் தமிழரிடையே வழங்கிவரும் இந்நெறி சிதைவுருது வாழ்வதாக, வளர்வதாக.
5 - 2 - 8. மு. கணபதிப்பிள்ளை

6.
திருச்சிற்றம்பல்ம்
மணிவாசகர் அருளிய
திருப்பள்ளியெழுச்சி
-o-aspas-a- (திருப்பெருந்துறையில் அருளிச்செய்தது)
(உலகத் தோற்றத்தை திருவுளத்தடைத்து வயிந்தவசத்தி யைப் படைக்கத் தொடங்கும் அவசரம் திருப்பள்ளியெழுச்சி எனப்படும்.) , ʻ ʼ . ʻ , .. '' V * . . . . .
ஆசிரிய விருத்தம். திருச்சிற்றம்பலம்
போற்றியென் வாழ்முத லாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கிணை துணைமல்ர்கொண்டு) ஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும் '
எழில்நகை கொண்டு நின்திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே ஏற்றுயர் கொடியுடை யாயெனை யுடையாய் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.

Page 4
4 மார்கழிப் பாராயணம்
அருணனிந் திரன்றிசை யணுகினன் இருள்போய்
அகன்றது உதயநின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணலங் கண்ணும் திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகட லேபள்ளி யெழுந்தரு ளாயே. 2
f
கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஒவின தாரகை ஒளிஒளி உதயத்(து)
ஒருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.
இன்னிசை வீணைய ரியாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியின் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே. 4

திருப்பள்ளியெழுச்சி 5
பூதங்கள் தோறுநின் முயெனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்ன சிந்தனைக்கும் அரியாய் எங்கள் முன் வந் தேதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான் பள்ளி யெழுந்தரு 'ளாயே. 5
பப்பற வீட்டிருந் துணருநின் அடியார் பந்தனை வந்தறுத் தாரவர் பலரும் மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
வணங்குகின் முரணங் கின்மண வாளா செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே. 6
அதுபழச் சுவையென அமுதென அறிதற்
கரிதென எளிதென அமரரும் அறியார் இதுஅவன் திருவுரு இவனவன் எனவே
எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும் மதுவளர் பொழில்திரு வுத்தர கோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்ன எது எமைப் பணிகொழு மாறது கேட்போம்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே. 7

Page 5
6 மார்கழிப் பாராயணம்
முந்திய முதல்நடு இறுதியும் ஆனய்
மூவரும் அறிகில ரியாவர்மற் றறிவார் பந்தணை விரலியு நீயுநின் அடியார்
பழங்குடில் தொறும் எழுந் தருளிய பரனே செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி அந்தண ஞவதுங் காட்டிவந் தாண்டாய்
ஆரமு தேபள்ளி யெழுந்தரு ளாயே. 8
விண்ணகத் தேவரு நண்ணவு மாட்டார்
விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள் மண்ணகத் தேவந்து வாழச் செய்தானே
வண்திருப் பெருந்துறை யிாய்வழி அடியோம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே, கடலமு தேகரும் பேவிரும் படியார் எண்ணகத் தாய் உலகுக் குயிரானுய்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே. 9
புவனியிற் போய்ப்பிற வாமையில் நாள்நாம்
போக்குகின் ருேம்அவ மேயிந்தப் பூமி சிவன் உய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித் திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம் அவன்விருப் பெய்தவு மலரவன் ஆசைப்
படவுநின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும் அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமு தேபள்ளி யெழுந்தரு ளாயே. . 10
திருச்சிற்றம்பலம். (இந்தத் திருப்பதிகத்தை நாள்தோறும் அதிகாலையில் பாராயணஞ் செய்வோர், சிவப்பிரகாசத்துக்குப் பாத்திரராகி, ஆணவமலமும் அணுவணுவாகத் தேயப் பெறுவர்.)

6
சிவமயம் திருவெம்பாவை திருவண்ணுமலேயில் அருளியது.
சக்தியை வியந்தது
(சக்திகளாவார் அம்பிகை, கணும்பிகை, கெளரி, கங்கை, உமை, பராசக்தி, ஆதிசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி, என ஒன்பதின்மராவர்.
வெண்ட2ளயான் வந்த இயற்றரவிணைக் கொச்சகக் கலிப்பா
(துயிலுணர்த்துதல் )
திருச்சிற்றம்பலம்.
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்நுன் ஏதிேனும் ஆகாள் கிடந்தாள் என்னே! என்னே!
ஈதேயெந் தோழி பரிசேலோர் எம்பாவாய்.
இது "மனுேன்மணி" என்னுஞ் சக்தி, சர்வபூததமனி யென்னுஞ் சக்தியைத் துயிலெமுப்பியதாகக் கூறப்பட்டது. 7

Page 6
8 மார்கழிப் பாராயணம்
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம் பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சிசி யிவையுஞ் சிலவோ விளையாடி ஏசும் இடம்ஈதோ விண்ணேர்கள் ஏத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந் தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனர்க்கன்பார்யாம் ஆர் ஏலோர் எம்பாவாய். 2 (இது "சர்வபூததமனி" யென்னுஞ்சக்தி, பலப்பிரமதனி யென்னுஞ்சத்தியைத் துயிலெழுப்பியதாகக் கூறப்பட்டது.1
முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெ திரெழுந்தென் அத்தன் ஆனந்தன் அமுதனென் றள்ளூறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியிர் பாங்குடையீர் புத்தடியோம்புன்மை தீர்த்தாட்கொண்டாற் பொல்லாதோ எத்தோநின் அன்புடைமைபெல்லோம் அறியோமோ சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனே
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய், 3
இது "பலப்பிரமதனி ' யென்னுஞ் சத்தியும் அவளுடன் வந்தவர்களும் பலவிகரணியென்னுஞ் சக்தியைத் துயிலெழுப் பியதாகக் கூறப்பட்டது.1
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்ருே
வண்ணக்கிளிமொழியார் எல்லாரும்வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே

திருவெம்பாவை 9
விண்ணுக்கொரு மருந்தை வேதவிழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம் உண்ணெக்கு நின்றுருகயாம்மாட்டோம் நீயேவந்
தெண்ணிக்குறையில் துயில் ஏலோர் எம்பாவாய்.
இது 'பலவிகரணி" என்னும் சத்தியும், அவளுடன் வந்தவர்களும் கலவிகரணியென்னுஞ் சத்தியைத் துயிலெழுப் பியதாக்க் கூறப்பட்டது.
மால் அறியா நான்முகனும் காண மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும் பால்ஊறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய் ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் கோலமும் நம்மையாட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென் ருேலம் இடினும் உணராய் உணராய் காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்.
(இது 'கலவிகரணி" என்னுஞ் சத்தியும், அவளுடன் வந்த வர்களும் காளி என்னும் சத்தியைத் துயிலெழுப்பியதாகக் கூறப்பட்டது,)
மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணுமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றே
வாண்ே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்

Page 7
*10 மார்கழிப் பாராயணம்
ஊனே உருகாய் உனக்கே உறுமெமக்கும்
ஏனேர்க்கும் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்,
இது assif' யென்னுஞ் சத்தியும் அவளுடன் வந்த வர்களும் ரெளத்திரி யென்னுஞ் சத்தியைத் துயிலெழுப்பிய தாகக் கூறப்பட்டது.1
அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னளன் ஞமுன்னந் தீசேர் மெழுகொப்பாய் என்னுனை என்னரை யனின்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னேங்கேள் வெவ்வேறய் இன்னந் துயிலுதியோ வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.
இது 'ரெளத்திரி" என்னுஞ் சத்தியும், அவளுட்ன் வந்தவர்களும் ஜ்யேஷ்டை யென்னுஞ் சத்தியைத் துயிலெழுப் பியதாகக் கூறப்பட்டது.)
கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினுேம் கேட்டிலையோ வாழியீதென்ன உறக்கமோ வ்ாய்திறவாய்
ஆழியான் அன்புடமை ஆமாறும் இவ்வாருே ஊழி முதல்வனுய் நின்ற ஒருவனை
ஏழைபங் க்ாளனையே பாடேலோர் எம்பாவாய்.
இது"ஜ்யேஷ்டை" என்னுஞ் சத்தியும், அவளுடன் வந்த வர்களும் வாமை என்னுஞ் சத்தியைத் துயிலெழுப்பியதாகக் கூறப்பட்டது.) :

திருவெம்பாவை 11
நீராடச் செல்லுதல்
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே உன்னைப் பிரானுகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எங்கணவர் ஆவார் அவருகந்து
சொன்னபரிசே தொழும்பாய் பணிசெய்வோம் இன்னவகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.
I இந்தத் திருப்பாசுரம் முதல் அனைத்தும் நவசக்திகள் தம்மிற்றமே கூறினவாகும்.)
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார். புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணுேரும் மண்ணுந் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்தன் கோயிற் பிணப்பிள்ளைகாள்
ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர்உற்ருர் ஆர் அயலார் ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக் கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போல்
செய்யா வெண்ணிமுடி செல்வா சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய எமையேலோர் எம்பாவாய்.

Page 8
12 மார்கழிப் பாராயணம்
நீராடுதல்
ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடுங் கூத்தன்இவ் வானுங் குவலயமும் எல்லோமுங்
காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைத்துடையான் பொற்பாதம்
ஏத்தி யிருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்.
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால் தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினுல்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநஞ் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்.
காதார் குழையாடப் பைம்பூண் கலனடக்
கோதை குழலாட வண்டின் குழா மாடச் சீதப் புனலாடிச் சிற்ற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச் சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப் பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன் பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

திருவெம்பாவை 13
ஒரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாய்ஒவாள் சித்தம் களிகூர நீரொருகால் ஒவாநெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணுேரைத்தான்பணியாள் பேரரையற் கிங்ங்னே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள் வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்.
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையா விட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னைச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்அருளே
யென்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்.
செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பநம் பாலதாக் கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை நங்கள் பெருமானப் பாடி தலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்

Page 9
14 ܖ - -- மார்கழிப் பாராயணம்
அண்ணு மலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணுேர் முடியின் மணித்தொகை வீறற்றற்போல் கண்ணுர் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணுர் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப் பெண்ணுகி ஆணுய் அலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணுகி மண்ணுகி இத்தனையும் வேருகிக் கண்ணுர் அமுதமுமாய் நின்ருன் கழல்பாடிப்
பெண்ணேயிப்பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.
வேண்டுகோள்
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென் 7றங்கப் பழஞ்சொல் புதுக்குமெம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போங்கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க எங்கை- யுனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல்பகல் எங்கண் மற்றென்றுங் காணற்க இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழில் என் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.
வாழ்த்து போற்றி அருளுகநின் ஆதியாம் பாதம்
போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள் போற்றி யெல்லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் போற்றியெல்லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றியெல்லாவுயிர்க்கும் ஈரும் இணையடிகள்
போற்றிமால் நான்முகனும் காணுத புண்டரிகம் போற்றியாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்.
திருச்சிற்றம்பலம்

திருப்பொற்சுண்ணம்
ஆனந்தமனுேலயம் தில்லையிலருளிச் செய்யப்பட்டது.
அறுசீரடியாசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
முத்துநற்றமம் பூமாலைதூக்கி
முளைக்குடந்தூபநற்றிபம் வைம்மின் சத்தியுஞ்சோமியும்பார்மகளு
நாமகளோடுபல்லாண்டிசைமின் சித்தியுங்கெளரியும்பார்ப்பதியுங்
கங்கையும்வந்துகவரிகொண்மி னத்தனையாறனம்மானைப்பாடி
யாடப்பொற்சுண்ணமிடித்துநாமே.
பூவியல்வார்சடையெம்பிரார்க்குப்
பொற்றிருச்சுண்ணமிடிக்கவேண்டு மாவின் வடுவகிரன்னகண்ணிர்
வம்மின்கள்வந்துடன்பாடுங்கள் கூவுமின்ருெண்டர் புறநிலாமே
குனிமின்ருெழுமினெங்கோனெங்கூத்தன் றேவியுந்தானும்வந்தெம்மையாளச்
செம்பொன்செய்சுண்ணமிடித்துநாமே.

Page 10
16 திருப்பொற்சுண்ணம்
சுத்தரநிறணிந்தும்மெழுகித்
தூயபொன்சிந்திநிதிபரப்பி யிந்திரன்கற்பகநாட்டியெங்கு
மெழிற்சுடர் வைத்துக்கொடியெடுமி னந்தரர்கோணயன்றன்பெருமா
ஞழியானதனல்வேலன்ருதை யெந்தரமாளுமையாள்கொழுநற்
கேய்ந்தபொற்சுண்ணமிடித்துநாமே.
காசணிமின்களுலக்கையெல்லாங் காம்பணிமின்கள்கறையுரலை நேசமுடையவடியவர்க
ணின்றுநிலாவுகவென்றுவாழ்த்தித் தேசமெல்லாம்புகழ்ந்தாடுங்கச்சித்
திருவேகம்பன்செம்பொற்கோயில்பாடிப் பாசவினையைப்பறித்துநின்று
பாடிப்பொற்சுண்ணமிடித்துநாமே.
அறுகெடுப்பராயனும்மரியு
மன்றிமற்றிந்திரனேடமரர்
நறுமுறுதேவர்கணங்களெல்லா
நம்மிற்பின்பல்லதெடுக்கவொட்டோஞ்
செறிவுடைமும்மதிலெய்தவில்லி
திருவேகம்பன்செம்பொற்கோயில்பாடி
முறுவற்செவ்வாயினிர்முக்கணப்பற்
காடப்பொற்சுண்ணமிடித்துநாமே.

திருப்பொற்சுண்ணம் 17
உலக்கைபலவோச்சுவார்பெரிய
ருலகமெலாமுரல்போதா தென்றே கலக்கவடியவர் வந்துநின்ருர்
காணவுலகங்கள் போதாதென்றே நலக்கவடியோமையாண்டுகொண்டு
நாண்மலர்ப்பாதங்கள்குடத்தந்த மலைக்குமருகனைப்பாடிப்பாடி
மகிழ்ந்துபொற்சுண்ணமிடித்துநாமே. 6
சூடகந்தோள்வளையார்ப்பவார்ப்பத்
தொண்டர்குழாமெழுந்தார்ப்பவார்ப்ப நாடவர் நந்தம்மையார்ப்பவார்ப்ப
நாமுமவர்தம்மையார்ப்பவார்ப்பப் பாடகமெல்லடியார்க்குமங்கை
பங்கினனெங்கள்பராபரனுக் காடகமாமலையன்னகோவுத்காழு
காடப்பொற்சுண்ணமிடித்துநாமே. கம்
வாட்டடங்கண்மடமங்கைநல்லீர்
வரிவளையார்ப்பவண்கொங்ன்க்பொங்கத் தோட்டிருமுண்டத்துதைந்திலங்க
சோற்றெம்பிரானென்றுசொல்லிச்சொல்லி நாட்கொண்டநாண்மலர்ப்பாதங்காட்டி
நாயிற்கடைப்பட்ட நம்மையிம்மை யா ட்கொண்டவண்ணங்கள் பாடிப்பாடி
யாடப்பொற்சுண்ணமிடித்துநாமே. 8

Page 11
18 மார்கழிப்பாராயணம்
வையகமெல்லாமுரலதாக
மாமேருவென்னுமுலக்கைநாட்டி மெய்யெனும் மஞ்சணிறையவட்டி
மேதகுதென்னன்பெருந்துறையான் செய்யதிருவடிபாடிப்பாடிச்
செம்பொன்னுலக்கைவலக்கைபற்றி யையனணிதில்லைவாணனுக்கே
யாடப்பொற்சுண்ணமிடித்துநாமே. 9
முத்தணிகொங்கைகளாடவாட
மொய்குழல்வண்டினமாடவாடச் சித்தஞ்சிவனெடுமாடவாடச்
செங்கயற்கண்பனியாடவாடப் பித்தெம்பிரானெடுமாடவாடப்
பிறவிபிறரொடுமாடவாட வத்தன்கருணையொடாடவாட
வாடப்பொற்சுண்ணமிடித்துநாமே. 0.
மாடுநகைவாணிலாவெறிப்ப
வாய்திறந்தம்பவளந்துடிப்பப் பாடுமினந்தம்மையாண்டவாறும்
பணிகொண்டவண்ணமும்பாடிப்பாடித் தேடுமினெம்பெருமானைத்தேடிச்
சித்தங்களிப்பத்திகைத்துத்தேறி யாடுமினம்பலத்தாடினனுக்
காடப்பொற்சுண்ணமிடித்துநாமே. 11

திருப்பொற்சுண்ணம் 9
மையமர்கண்டனவானநாடர்
மருந்தினைமாணிக்கக்கூத்தன்றன்னை
யையனையையர்பிரானைநம்மை
யகப்படுத்தாட்கொண்டருமைகாட்டும்
டொ ய்யர்தம்பொய்யனமெய்யர்மெய்யைப்
போதரிக்கண்ணினைப்பொற்ருெடித்தோட்
பையரவல்குன்மடந்தைநல்லீர் مي.
பாடிப்பொற்சுண்ணமிடித்துநாமே. 【2
"மின்னிடைச்செந்துவர்வாய்க்கருங்கண்
வெண்ணகைப்பண்ணமர்மென்மொழியீ ரென்னுடையாரமுதெங்களப்ப
னெம்பெருமானிமவான்மகட்குத் தன்னுடைக்கேள்வன்மகன்ற கப்பன்
றமைய னெம்மையன்ருள்கள்பாடிப் பொன்னுடைப்பூண்முலைமங்கைநல்லீர்
பொற்றிருச்சுண்ணமிடித்துநாமே. 13
சங்கமரற்றச்சிலம்பொலிப்பத்
தாழ்குழல்சூழ் தருமாலையாடச் செங்கனிவாயிதழுந்துடிப்பச்
சேயிழையீர் சிவலோகம்பாடிக் கங்கையிரைப்பவராவிரைக்குங்
கற்றைச்சடைமுடியான் கழற்கே பொங்கியகாதலிற்கொங்கைபொங்கப்
பொற்றிருச்சுண்ணமிடித்துநாமே. 14

Page 12
20 மார்கழிப்பாராயணம்
ஞானக்கரும்பின்றெளியைப்பாகை
நாடற்கரியநலத்தை நந்தாத் தேனைப்பழச்சுவையாயினனைச்
சித்தம்புகுந்துதித்திக்கவல்ல கோனைப்பிறப்பறுத்தாண்டுகொண்ட
கூத்தனைநாத்தழும்பேறவாழ்த்திப் பானற்றடங்கண்மடந்தைநல்லீர் s
பாடிப்பொற்சுண்ணமிடித்துநாமே. 15
ஆவகைநாமும்வந்தன்பர்த ம்மோ
டாட்செய்யும்வண்ணங்கள்பாடிவிண்மேற் றேவர்களுவிலுங்கண்டறியாச்
செம்மலர்ப்பாதங்கள் காட்டுஞ்செல்வச்
சேவகமேந்தியவெல்கொடியான்
சிவபெருமான்புரஞ்சொற்றகொற்றச்
சேவகநாமங்கள்பாடிப்பாடிச்
செம்பொன்செய்சுண்ணமிடித்துநாமே. 15
தேனகமாமலர்க்கொன்றைபாடிச்
சிவபுரம்பாடித்திருச்சடைமேல் வானகமாமதிப்பிள்ளைபாடி
மால்விடைபாடிவலக்கையேந்து மூனகமாமழுச்சூலம்பாடி
யும்பருமிம்பருமுய்யவன்று போனகமாகநஞ்சுண்டல்பாடிப்
பொற்றிருச்சுண்ணமிடித்துநாமே. 17

திருப்பொற்சுண்ணம் 2.
அயன்றலை கொண்டு செண்டாடல்பாடி
யருக்கனெயிறு பறித்தல்பாடிக் கயந்தனைக்கொன்றுரிபோர்த்தல்பாடிக்
காலனைக்காலாலுதைத்தல்பாடி யியைந்தனமுப்புரமெய் தல்பாடி
யேழையடியோமையாண்டுகொண்ட நயந்தனைப்பாடிநின்முடியாடி
நாதற்குச்சுண்ணமிடித்துநாமே. 18
வட்ட மலர்க்கொன்றைமாலைபாடி
மத்தமும்பா டி மதியும்பாடிச் சிட்டர்கள்வாழுந்தென்றில்லைபாடிச்
சிற்றம்பலத்தெங்கள்செல்வம்பாடிக் கட்டி யமாசுணக்கச்சைபாடிக்
கங்கணம்பாடிக்கவித்த கைம்மே லிட்டுநின்ருடுமரவம்பாடி
யீசற்குச்சுண்ணமிடித்துநாமே. 19
வேதமும்வேள்வியுமாயினர்க்கு
மெய்மையும்பொய்மையுமாயினர்க்குச்
சோதியுமாயிருளாயினர்க்குத்
துன்பமுமாயின் பமாயினர்க்குப்
பாதியுமாய்முற்றுமாயினர்க்குப்
பந்தமுமாய்வீடுமாயினர்க்குப்
காதியுமந்தமுமாயினருக்
காடப்பொற்சுண்ணமிடித்துநாமே. 20
திருச்சிற்றம்பலம்

Page 13
� -- ஓம் முருகா
யூனி சிதம்பரசுவாமிகள் அருளிய
திருப்போரூர் முருகன் திருப்பள்ளியெழுச்சி
(திருப்போரூர் சந்நிதிமுறை )
திருமலி குணதிசை அருணன் நல் உதயம் செய்தனன்; இருவினைச் சமமல பாகப் பருவம துடையவர் தமதுளம் எனவே
பாரகம் விளங்கின; அவர் குணக் கிரிமேல் அருளொளி வீசிநின் றிலகுமுன் பதம்போல்
அருக்கனும் குணதிசைப் பொருப்பெழுகின்றன் இருளறு குறுமுனி பரவிய போரூர்
இறையவ ணேபள்ளி எழுந்தருளாயே.

திருப்பள்ளியெழுச்சி 23
ஆடுறு மணியில் சிறைவிரித் ததன்மேல்
அருளொளி திகழநீ எழுந்தருள் முறைபோல் பீடுறு மரகதக் குரகதம் பூண்ட
பெருந்தடந் தேர்மிசை எழுந்தனன் கதிரோன்; வாடுறு தாமரை நினதருள் அடைந்த
மாதவர் முகமென மலர்ந்தன எங்கும் ஏடவிழ் மலர்ப்பொழில் பொதுளிய போரூர்
இறையவ னேபள்ளி எழுந்தரு ளாயே. 2
பகரரு சுடர்விடும் உனதயில் கண்ட
பதகர்தம் மனமெனச் சுரர்மனம் எனவே புகருடு மழுங்கின விகCதம் ஆகிப்
பொலிந்தன முளரிகள் தடந்தோறும்; உனது திகழ்பதம் அடைந்தவர் உயிர்ச்சிறு போதம்
தேய்ந்தன மதியொழி தேய்ந்தது; குணபால் இகலறு கதிரெழு கின்றது போரூர்
இறையவ னேபள்ளி எழுந்தருளாயே. 3
என்றனைக் கைப்பிடித் தாளுறும் இறைவன்
எழில்பெறு மலர்விழி மலர்ந்தெழு சமயம் உன்றன துளவிருள் போக்குவன் நோக்கால்
ஒல்லையில் வருகென எல்லினைக் கூவி நின்றன திருங்கொடி அழைத்துறு முறைபோல்
நீடுறு மனதோறும் கூவின மிகவும் இன்றென ஆண்டுகொண் டருளிய போரூர்
இறையவ ணேபள்ளி எழுந்தரு ளாயே. 4

Page 14
24 மார்கழிப் பாராயணம்
மன்மதன் விருதுகள் ஊதின பொழில்வாய்
மாயவன் கரப்படை தொனித்ததுன் எதிரே; தென்மலி மலரவன் ஊர்திகள் தடத்துச்
சிலம்பின; நின்கொடி பதவெச் சரிக்கை பன்முறை பண்ணுவ போல்மனை தோறும்
பாழியங் குரலொலி காட்டின அருளால் என்மல இருள்தோறும் ஆரிய போரூர்
இறையவ ணேபள்ளி எழுந்தரு ளாயே.
கின்னரர் கிம்புரு டர்களொடு கெருடர்
கெந்தரு வர்கள் சித்தர் வித்தியா தரரும் மன்னிய முரசதிர் சிகரியின் வாய்தல்
வந்தனர் ஐந்தொழில் வாத்தியம் தொணிந்தார் பொன்னில மடவார் இந்நில மடவார்
புரிந்தனர் நாடகம் இருந்தகை மயில்போல் இன்னருள் பொழிமுகி லேதிருப் போரூர் இறையவ ணேபள்ளி எழுந்தரு ளாயே.
வானவர் புகழ்நவ வீரர்கள் ஒருபால்
மால்வரை யன கண நாதர்கள் ஒருபால் தீனமில் எண்டிசைப் பாலகர் ஒருபால்
தேவர்கள் முனிவர்கள் பாதலர் ஒருபால் தானம துதவிய கரங்கொடு பாரி
சாவநன் மலர்மழை பொழிந்தனர் பணிந்தே ஏனலம் புண்மலி சாரலம் போரூர்
இறையவ னேபள்ளி எழுந்தரு ளாயே.

திருப்பள்ளியெழுச்சி - 25
மறைமுடி உணர்ந்தவர் மறையவர் அடியார்
வருபரி சாலகர் அரசர்கள் வணிகர் குறைவறு வளவர்கள் மற்றுளர் எவரும்
குழுமியே வடமொழி தென்மொழிப் பாவால் நிறைதய வுடன்நினைப் புகழ்ந்துநின் றேத்தி நீளுறு தண்டெனப் பணிந்தெழுகின்ருர் எறிமணி அருவிகள் சொரிகிரிப் போரூர்
இறையவனே பள்ளி எழுந்தருளாயே. 8
விலையறு நவமணி மாலைகள் கொணர்ந்தார்
வெயில்விடு குலிசகே யூரங்கள் கொணர்ந்தார் அலகறு மணிசெறி மகுடங்கள் கொணர்ந்தார் ஆழிம தாணிகள் நூபுரம் கொணர்ந்தார் நிலைபெறு கவரிதழ் நேத்திரங் கொணர்ந்தார்
நிறைந்துளம் வேண்டிய பெறவுறப் பணிந்தார் எலையறு பெருவரம் அருள்செயப் போரூர்
இறையவனே பள்ளி எழுந்தருளாயே. 9
ஐங்கரம் கொடுதழு வுறநினை ஒருகொம்
பானையுள் மகிழ்ந்தது; முக்கணம் பொருப்புன் பங்கய முகவணி கண்டுகண் களிப்பப்
பரிவொடு நினைந்தது; பனிவரை உயிர்த்த செங்கயல் விழிப்பசும் பிடிநினை மடிமேல்
சேர்த்தருட்பால்தரத்திருவுளத்துனும்; ஈண்(டு) எங்களை ஆண்டுகொண்டருளிய போரூர்
இறையவனே பள்ளி எழுந்தரு ளாயே. 10
வேலும் மயிலுந் துணை.

Page 15
G.
தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய திருப்பள்ளியெழுச்சி
தனியன் திருவரங்கப் பெருமாளரையர் அருளிச் செய்தது.
மண்டங்குடியென்பர் மாமறையோர் மன்னியசீர் தொண்டரடிப்பொடி தொன்னகரம் - வண்டு திணர்த்தவயல் தென்னரங்கத் தம்மானை பள்ளி யுணர்த்தும் பிரான் உதித்தவூர்.
யூனி ரங்கநாதனைத் துயிலுணர்த்துதல்
கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான் கனையிரு ளகன்றது காலையம் பொழுதாய் மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம் வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி எதிர்திண்ச நிறைந்தனர் இவரொடும் புகுந்த இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும் அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும் அரங்கத்தம்மா! பள்ளி யெழுந்தருளாயே!

திருப்பள்ளியெழுச்சி 27
கொழுங்கொடி முல்லையின் கொழுமல ரணவிக்
கூர்ந்தது குணதிசை மாருதம் இதுவோ எழுந்தன மலரணைப் பள்ளிகொள் ளன்னம்
ஈன்பனி நனைந்த தம்மிருஞ் சிறகுதறி விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வ்ாய்
வெள்ளெயிறுற அதன் விடத்தி னுக்கனுங்கி அழுங்கிய ஆனையினருந்துயர் கெடுத்த
அரங்கத்தம்மா! பள்ளி யெழுந்தருளாயே! 2
சுடரொளி பரந்தன சூழ்திசை யெல்லாம் துன்னிய தாரகை மின்னெளி சுருங்கிப் ப்டரொளி பசுத்தனன் பனிமதி இவனே
பாயிரு ளகன்றது பைம்பொழிற் கமுகின் மடலிடைக் கீறி வண்பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ அடரொளி திகழ்தரு திகிரியந் தடக்கை
அரங்கத்தம்மா! பள்ளி யெழுந்தருளாயே! 3
மேட்டிள மேதிகள் தளைவிடும் ஆயர்கள்
வேய்ங்குழலோசையும் விடைமணிக்குரலும், ஈட்டிய இசைதிசை பரந்தன வயலுள் :
இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை, வாட்டிய வரிசிலை வானவ ரேறே!
மாமுனி வேள்வியைக் காத்து அவயிரதம் ஆட்டிய அடுதிற லயோத்தியெம் மரசே!
அரங்கத்தம்மா பள்ளி யெழுந்தருளாயே! 4

Page 16
28 மார்கழிப் பாராயணம்
புலம்பின புட்களும் பூம்பொழில் கிளின்வாய்
போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி கலந்தது குணதிசைக் கனைகட லரவம்
களிவண்டு, மிழற்றிய கலம்பகம் புனைந்த அலங்கலத் தொடையல் கொண்டு அடியிணை பணிவான்
அமரர்கள் புகுந்தனர் ஆதவின் அம்மா! இலங்கையர்கோன் வழிபாடு செய்கோயில்
எம்பெருமான் பள்ளி யெழுந்தருளாயே! 5
இரவியர் மணிநெடுந் தேரோடும் இவரோ!
இறையவர் பதினெரு விடையரும் இவரோ? மருவிய மயிலினன் அறுமுகன் இவனே
மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி புரவியோடு ஆடலும் பாடலும் தேரும்
குமரதண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம் அருவரையனையநின் கோயில்முன் இவரோ?
அரங்கத்தம்மா! பள்ளி யெழுந்தருளாயே! 6
அந்தரத் தமரர்கள் கூட்டங்கள் இவையோ அருந்தவ முனிவரும் மருதரும் இவரே? இந்திர ஞனையும் தானும்வந் திவனே?
எம்பெருமான் உன்கோயிலின் வாசல் சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திருவடித் தொழுவான் அந்தரம் பாரிடமில்லை மற்றிதுவோ?
அரங்கத்தம்மா! பள்ளி யெழுந்தருளாயே!

திருப்பள்ளியெழுச்சி 29
வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மாநிதி கபிலை ஒண் கண்ணுடி முதலா எம்பெருமான் படிமக்கமலம் காண்டற்கு
ஏற்பனவாயின கொண்டுநன் முனிவர், தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
தோன்றினன் இரவியும் துலங்கொளி பரப்பி, அம்பர தலத்தில் நின்ற கல்கின்றது இருள்போய்
அரங்கத்தம்மா! பள்ளி யெழுந்தருளாயே! 8
ஏதமில் தண்ணுமை ஏக்கம் மத்தளி
யாழ்குழல் முழவமோடு இசைதிசை கெழுமி" கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கந்தருவ ரவர் கங்குலு GoGMTổavnruh மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடித் தொழுவான் ஆதலில் அவர்க்கு நாளோலக்கம் அருள
அரங்கத்தம்மா! பள்ளி யெழுந்தருளாயே 9
கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன விவையோ
கதிரவன் கனைகடல் முளைத்தன னிவனே, துடியிடையார் சுரி குழல் பிழிந்து தறித்
த கிலுடுத் தேறினர் சூழ்புன லரங்கா. தொடையொத்த துவளமும் கூடையும் பொலிந்து தோன்றியதோள் தொண்டரடிப்பொடி யென்னும் , அடியனை அளியனென் றருளியுன் ugå
காட்படுத்தாய் பு:விழும்பு stra Gut. 10

Page 17
6. ஆண்டாள் அம்மையார் அருளிய திருப்பாவை
தனியன்கள் உய்யக்கொண்டார் அருளிச் செய்தவை
அன்ன வயல்புதுவை யாண்டாள்-அரங்கற்குப் பன்னு திருப்பாவைப் பலபதியம் - இன்னிசையால் பாடிக் கொடுத்தாள்நற் பாமாலை பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே! தொல்பாவை பாடியருள வல்ல பல்வளையாய்! -நாடிநீ வேங்கடவற்கு என்னை விதியென்ற இம்மாற்றம் நாம்கடவா வண்ணமே நல்கு.
எட்டடி நாற்சீர் ஒருவிகற்பக் கொச்சகக் லிப்பா
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னளால்
நீராடப் போதுவீர்! போதுமினே நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமியர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை யிளஞ்சிங்கம் r கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.

திருப்பாவை 3
வையத்து வாழ்வீர்க்ாள் ! நாமும்நம் பாவைக்கு செய்யும் கிரியைகள் கேளிரோ, பாற்கடலுள் பையத் துயின்ற பரம னடிபாடி
நெய்யுண்ணுேம் பாலுண்ணுேம் நாட்காலே நீராடி மையிட் டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றேதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.
ஓங்கி யுலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினல் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயலுகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்,
ஆழி மழைக்கண்ணு 1 ஒன்று நீ கைகரவேல் ஆழி யுள்புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி ஊழி முதல்வ னுருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து தாழாதே சாங்க முதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

Page 18
32 மார்கழிப் பாராயணம்
மாயனை மன்னு வடமதுரை மைந்தன.
தூயபெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்ததாமோதரனை து யோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினல்பாடி மனத்தினல் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.
புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில் வெள்ளை விழிசங்கின் பேரரவம் கேட்டிலையோ பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
கீசுகீசென்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின் பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறுங்குழ லாச்சியர், மத்தினல் ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ ?
நாயகப் பெண்பிள்ளாய் ! நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ ?
தேசமுடையாய் ! திறவேலோ ரெம்பாவாய்.

திருப்பாவை 33
கீழ்வானம் வெள்னென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ள்ைகளும் போவான் போகின்றரைப் போகாமல் காத்து டின்னேக் −
கூவுவான் வந்துநின்றேம் கோது குலமுடைய பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு மாவாய் பிளந்தான மல்லரை மாட்டி : தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவா வென்முராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் மாமான் மகளே ! மணிக்கதவம் தாழ் திறவாய்
மாமீர்! அவளை யெழுப்பீரோ? உன்மகள்தான் ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ? ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ மாமாயன் மாதவன் வைகுந்த னென்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய். 9
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனுய்!
மாற்றமும் தாராரோ? வாசல் திறவாதார் நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணிபனல் பண்டு ஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றம் உனக்கே பெருந்துயில்தான் தந்தானே ? ஆற்றல் அனந்த லுடையாய் அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்.

Page 19
34 மார்கழிப் பாராயணம்
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்ருர் திறலழியச் சென்று செருச்செய்யும் குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே! புற்றர வல்குல் புனமயிலே போதராய் சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட சிற்றதே பேசாதே செல்வப் பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோ ரெம்பாவாய். 11
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி நினைத்து முலைவழியே நின்று பால்சோர நனைத்தில்லம் சேருக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றி சினத்தினல் தென்னிலங்கைக் கோமானைச்செற்ற மனத்துக் கினியானைப் பாடவும் நீவாய்திறவாய் இனித்தா னெழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய். I
புள்ளின்வாய் கிண்டானைப் பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய் பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி யெழுந்து வியாழ முறங்கிற்று புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணிஞய்
குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே பள்ளிக் கிடத்தியோ? பாவாய்? நீநன்னளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.

திருப்பாவை 35
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின காண் செங்கல் பொடிக்கூறை வெம்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயிலில் சங்கிடுவான் போதந்தார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய்! எழுந்திராய் நாணுதாய்! நாவுடையாய் சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணுனைப் பாடேலோ ரெம்பாவாய். 14
எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ! சில்லென்றழையேன் மின் நங்கைமீர்! போதருகின்றேன் வல்லை உன் கட்டுரைகள் பண்டேஉன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதா னயிடுக ஒல்லைநீபோதாய் உனக்கென்ன வேறுடைமை எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்தெண்
(ணிக்கொள் வல்லான கொன்ருனை மாற்ருரை மாற்றழிக்க
வல்லானை மாயனப் பாடேலோ ரெம்பாவாய்.
நாயகனய் நின்ற நந்த கோபனுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர்சிறுமிய ரோமுக்கு அறையறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம்! துயிலெழப் பாடுவான் வாயால் முன்னம் முன்னம் மாற்றதே அம்மா! நீ
நேயநிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய். 16

Page 20
36 Drriřsílů பாராயணம்
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய் கொம்பனர்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுருய் அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த
உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய் செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேல்ோ ரெம்பாவாய். 17
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னுய்
கந்தம் கமழும் குழலீ கடைதிறவாய்!
“வந்து எங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தா மரைக்கையால் சீரார்வளையொலிப்ட
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். 18
குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்சயத்தின் மேலேறி கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய் மைத்தடங் கண்ணினய்! நீ உன் மனளனை
எத்தனை போதும் துயிலெழவொட் டாய் காண் எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாபால்
தத்துவ மன்று தகவேலோ ரெம்பாவாய். 19

திருப்பாவை 37
முப்பது மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய் செப்பமுடையாய் திறலுடையாய்! செற்ருர்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய் செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறும்ருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே! துயிலெழாய் உக்கமும் தட்டொழியும் தந்து உன்மணளன
இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய், 20
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்ருதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுருய்
ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்ருர் உனக்கு வலிதொலைந்து உன்வாசற் கண் ஆற்ருதுவந்து உன்னடி பணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய், 31
அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான
பங்கமாய்வந்து நின்பள்ளிக்கட்டிற் கீழே சங்கமிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிண்கிணி வாய்செய்த தாமரைப் பூப்போலே செங்க்ண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தியனு மெழுந்தாற்போல் அங்கனிரண் டுங்கொண் டெங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாப மிழிந்தேலோ ரெம்பாவாய். 22

Page 21
S8 மார்கழிப் பாராயணம்
மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரியசிங்க மறிவுற்றுத் தீவிழித்து வேரிமயிர்பொங்க எப்பாடும் போர்ந்துதறி
மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு போதருமாபோலே நீயூவைப் பூவண்ணு உன்
கோயில் நின்று இங்ங்னே போந்தருளி கோப்புடைய சீரியசிங் காசனத் திருந்து யாம்வந்த
காரிய மாராய்ந்த தருளேலோ ரெம்பாவாய். 23
அன்றிவ் வுலக மளந்தா யடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்ருய் திறல்போற்றி பொன்றச் சகட முதைத்தாய் புகழ்போற்றி கன்றுகுணிலா வெறிந்தாய் கழல்போற்றி குன்று குடையா வெடுத்தாய் குணம்போற்றி வென்று பகைகெடுக்கும் நின்கையில்வேல் போற்றி என்றென்றுன் சேவகமே யேத்திப் பறைகொள்வான்
இன்று யாம்வந்தோ மிரங்கேலோ ரெம்பாவாய். 34
ஒருத்தி மகனய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகன யொழித்து வளர தரிக்கிலனுகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். 25

திருப்பாவை 39
மாலே மணிவண்ணு மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டிலையேல் ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பா டுட்ையனவே சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையா யருளோலோ ரெம்பாவாய். 26
கூடாரை வெல்லும் சீர்க்கோவிந்தா உன்றன்னைப் பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம் நாடு புகழும் பரிசினல் நன்ருக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடையுடுப்போ மதன்பின்னே பாற்சோறு மூட நெய்பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய், 27
கறவைகள் பின்சென்று காணஞ்சேர்ந் துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்றன்னைப் பிறவி பெருந்தனை புண்ணியம் யாமுடையோம் குறைவொன்று மில்லாத கோவிந்தா உன்றன்னேடு உறவேல் நமக்கு இங்கொழிக்க வொழியாது அறியாத பிள்ளைகளோ மன்பினுல் உன்றன்னேச் சிறுபேரழைத்தனவும் சீறியருளாக
இறைவா நீதாராய் பறையேலோ ரெம்பர்வாய். 29

Page 22
40 மார்கழிப் பாராயணம்
சிற்றஞ்சிறு காலே வந்துன்னைச் சேவித்து உன் பொற்றமரையடியே போற்றும் பொருள் கேளாய் பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துநீ குற்றேவலெங்களைக் கொல்லாமற் போகாது இற்றைப் பறைகொள்வா னன்றுகாண் கோவிந்தா
எற்றைக்குமேலேழ் பிறவிக்கும் உன்றன்னேடு உற்ருேமே யாவோம் உனக்கே நாமாட்செய்வோம்
மற்றை நங்காமங்கள் மாற்றேலே ரெம்பாவாய். 29
வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப் பறைகொண்ட வாற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்டெரியல் பட்டபிரான் கோதைசொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பா ரீரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்றின்புறுவ ரெம்பாவாய். 30
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
வாழ்த்து நானிலமுந் தான் வாழ நான்மறைகள் தாம்வாழ மாநகரின் மாறன் மறைவாழ - ஞானியர்கள் சென்னியணி சேர்துப்புல் வேதாந்த தேசிகனே இன்னுமொரு நூற்றண் டிரும்.


Page 23
6%]2

ཁ། 《《 காந்தா அச்சகம்,
محصےح^محصے
ல ரூபா 3-75