கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவுப் பேருரை (பேராசிரியர் வி. செல்வநாயகம்)

Page 1
கொழும்புத் தமிழ்ச்சங்க வெ
ஈழத்துத் திறகு
பேராசிரியர் வி. செ
t பேராசிரியர் கலாநிதி அ
தய
யாழ்ப்பாணப்

ளியிடு - 16
ய்ைவு முன்னுேடி
Fல்வநாயகம் அவர்கள்
சண்முகதாஸ் அவர்கள் விழ்த்துறை
பல்கலைக்கழகம்,

Page 2

நினைவுப் பேரு  ைர
ஈழத்துத் திறனுய்வு முன்னேடி
பேராசிரியர் வி. செல்வநாயகம் அவர்கள்
Professor V. Selvanayagam
SRI LANKAN LITERARY CRITIC
ட பேராசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ்

Page 3
ஏப்ரல் 199)
விலை ரூபா 15
வெளியிடுவோர்
கொழும்புத் தமிழ்ச் சங்கம் 7, 57வது ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு-.ே
Printed by :
The Kumaran Press,
20, Dam Street, Colombo-2.

பேராசிரியர் வி. செல்வநாயகம் அவர்கள் தமிழ்த்துறை முன்னுட் தஃவர்,
பேராதனைப் பல்கலைக்கழகம்
-- uvon Lauran on EW en Li

Page 4

முன்னுரை பேராசிரியர் வி. செல்வநாயகம்
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகப் பதவியேற்ற பொழுது கொழும்புத் தமிழ்ச் சங்கம் செய்யவேண்டிய பணிகளில் ஒன்றாகப் புகழ்மிக்க இலங்கைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் நினைவாக நினைவுச் சொற்பொழிவுகளும் நிகழ்த்தி அவற்றைப் பிர சுரிப்பதோடு அவர் தம் நினைவாக அவர்களது உருவப் படங்களும் தமிழ்ச் சங்கத்தில் வைக்கப்படுதலும் வேண்டும் என்று விரும்பினேன். இவ்விருப்பத்தினைச் சங்கச் செயற்குழு ஏற்றுக்கொண்டது. இவர் களுள் முத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் பற்றிய பல நூல்கள் ஏற்கெனவே பிரசு ர மா கி ன. யான் முன்பு செயலாலாளராப் பதவி வகித்த பிரதேச அபிவிருத்தி இந்து சமய தமிழ் அமுலாக்கல் அமைச்சு அவர் நினைவாக என்றும் விளங்க வல்ல விபுலாநந்தர் கலைக்கூடத்தினை மட்டுநகரில் வண்ணமுறத் தாபித்தது. இப்பேராசிரியர்களில் எனது சமகால மாணவராயும் தமிழ் பேசும் உலகில் பெரும் செல்வாக்கைப் பெற்றதோடு தமது ஆற்றலால் தமக்கென்றே ஒரு பெரு மரபினை அண்மைக் காலத்தில் ஏற்படுத்திய பேராசிரியர் க. கைலாசபதி பற்றியும் பல நூல்கள் வெளியாகியமை மாத்திரமன்றி அவர் நினைவாக யாழ் பல்கலைக் கழக வளாகத்தில் கைலாசபதி மண்டபம் என்ற பெயரோடு கலைக் கூடம் ஒன்று அவர் ஞாபகத்தினை அறிவித்துக்கொண்டே இருக்கும். இவர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் பேராசிரியர்கள் க. கணபதிப் பிள்ளை, வி. செல்வநாயகம், சு. வித்தியானந்தன், ஆ. சதாசிவம் ஆகியவர்களுக்கு உரிய முறையில் யான் முன் கூறிய சிறப்புக்கள் செய்யப்பட வேண்டும் என்பதே எமது விருப்பமாகும். பல கார ணங்களுக்காகப் பேராசிரியர் சு. வித்தியானந்தனுக்கு ஞாபகச் சொற் பொழிவு, நூல் வெளியீடு, உருவப்படத் திரை நீக்கம் இவை இந்த வருடத்தில் சிறப்பாக நடைபெற்றன.
- iii -

Page 5
அடுத்துப் பேராசிரியர் வி. செல்வநாயகம் பற்றிப் பேராசிரியர் ஆ. சண்முகதாஸ் சிறந்த நினைவுச் சொற்பொழிவினைக் கொழும் புத் தமிழ்ச் சங்கத்தில் நிகழ்த்தினார். அதன் நூல் வடிவே இந்த நூலாகும்.
இலங்கைப் பல்கலைக் கழகத்தினை அதுவும் பேராதனைப் பல் கலைக் கழகத்தினை இந்த நூற்றாண்டின் ஐம்பது அறுபதுகளில் நினைத்துப் பார்ப்போருக்குப் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையையும் பேராசிரியர் வி. செல்வநாயகத்தையும் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. தமிழர்க்கென அமைந்த வெள்ளை வெளேரென்ற உடை அணிந்து நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையுமாய் இவ் விருவரும் வகுப்புக்கு வரும் கோல அழகை மாணவனாக இருந்து பார்த்து மகிழும் பெரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்த பேறாகும்.
இப்பேராசிரியர்கள் இருவரும் தமக்கென ஒரு முத்திரையை மாணி வர் மனதில் பதித்துச் சென்றவர்கள். பேராசிரியர் வி. செல்வநாயகம் எமது காலத்தின் ஈடு இணையற்ற ஆசிரியர் பாடங்களை ஆயத்தப் படுத்திக்கொண்டு வருவார். புதிது புதிதாகக் கருத்துக்கள் வெளிப்பட ஆணித்தரமாகப் பொருள் சொல்லிப் பாடங்களை நடாத்துவார். தம் பணியினைச் சிறப்பாகச் செய்த நிறைவோடு வகுப்பு முடிவில் செல்வார். தமிழ்ச் செய்யுள்ை அவரைப்போல் இன்னொருவர் வாசிக்க யான் கேட்கவில்லை. பேராசிரியர் கைலாசபதி மானசீகமாகச் செல்வநாயகத்தைப் பெரிதும் மதித்துப் போற்றினார் என்பதை அவரே சொல்ல நான் கேட்டிருக்கிறேன். அதனாற்போலும் கைலாச பதி செய்யுள் வாசிக்கும்பொழுது அதில் பேராசிரியர் செல்வநாயகத் தின் சாயலைக் காணக்கூடியதாக இருந்தது. கூரிய மதியால் எதை யும் வித்தியாசமாகப் பார்க்கும் திறமையும் இவ்விருவருக்கும் உள்ள இன்னெரு ஒற்றுமை என்பேன்.
தலைசிறந்த தமிழ் ஆசிரியர் என்பதோடு மாத்திரமன்றிப் பேரா சிரியர் செல்வநாயகம் மாணவரது ஒழுக்கம் (சீலம் பேணல் இவற் றிலும் கண்ணும் கருத்துமாய் இருப்பாார். தலைசிறந்த மாணவர் என்றுதான் காணும் மாணவரை அவர் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுப்பதோடு பல ஆலோசனைகளையும் அவர்க்கு வழங்கு வார். என்னையும், எனது சக மாணவரான ஆர். பாஸ்கரலிங்கத் தையும், புகழோடு விளங்கிய பிற்காலப் புவியியல் பேராசிரியர் சோ. செல்வநாயகத்தையும் தமது வீட்டுக்கழைத்து விருந்து செய்தமையை எம்மால் ஒரு காலத்திலும் மறக்க முடியாது.
- iv --

பேராசிரிய்ர் வி. செல்வநாயகம் ஒரு சிறந்த திறனாய்வாளர் நிறனாய்வு எப்படிச் செய்யப்பட வேண்டும் என்று சொல்வதோடு. கப்படிச் செய்வது என்று பல பாடங்களை எடுத்துத் தாமே அவற்றை விளக்கிப் பாட்டுச் சிறந்ததா இல்லையா என்று விளக்குவார்.
பாரதியாரின் "சின்னஞ் சிறுகிளியே - கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே என்னைக் கலிதீர்த்தே - உலகில் ஏற்றம்புரிய வைத்தாய்"
என்று தொடங்கும் பாடலை அவர் திறனாய்வு செய்து காட்டும் அழகினை என்றும் மறக்க முடியாது. அதேபோலத் தேசிக விநாயகம் பிள்ளையின் சூரியகாந்தி, கடல் போன்ற பாட்டுக்களையும் அநாயச மாகக் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துவார். . இவரின் சம காலத்தவராகிய டாக்டர் மு. வரதராசனார், அ. ச. ஞானசம்பந்தம் போன்றோர் இக்கலையில் நாட்டமுற்று நின்ற காலத்தில் பேராசிரி யர் செல்வநாயகமும் இக்கலையில் முனைந்து நின்று முன்னோடி யாகத் திகழ்ந்தார். V
பேராசிரியர் வி. செல்வநாயகம் எழுதிய தமிழ் இலக்கிய வர லாறு என்ற நூலும் அவர்தம் தமிழ் உரைநடை வரலாறு என்ற நூலும் மிகச் சிறந்த படைப்புக்களாகப் பல காலங்களுக்கு விளங் கும். அவர்தம் உரைநடை வரலாறு போன்ற நூல் தமிழில் வேறு இருப்பதாகத் தெரியவில்லை. பழைய உரைநடை ஆசிரியர்களின் உரையினைத் திறனாய்வு செய்து இது பேராசிரியரின் உரையின் இயல்பு, இது நச்சினார்க்கினியரது, இது இளம்பூரணரது, இது சேனாவரையரது என்று அவர்தம் சிறப்பியல்புகளை இனம் காட்டும் முறை தனித்துவம் உடையது. இந்நூல் பேராசிரியர் அவர்களது சிறப்பினைப் பல காலங்களுக்குப் பறை சாற்றி நிற்கும். பேராதனைத் தமிழ்ச் சங்கம் வெளியிடும் 'இளங்கதிர்' சஞ்சிகைக்கு மிகச் சிறந்த கட்டுரைகளை வழங்கி அச் சஞ்சிகைகளின் தகைமையினைச் சிறப் புறச் செய்வார். 1956 - 57ம் ஆண்டு "இளங்கதிருக்கு யான் ஆசிரிய ராக இருந்தபொழுது தனது சிறந்த கட்டுரை ஒன்றைத் தந்துதவிய தோடு, “பாரதிக்குப்பின்." என்ற தலைப்பில் ஒரு ஆய்வு முறை யினைப் புகுத்திப் பலருடைய கட்டுரைகளையும் பெற்றுக் கவிதை, வசனம், பிள்ளைப்பாட்டுப் போன்றவற்றின் வளர்ச்சியினை இம் மல ரில் வெளியிட வைத்தார் என்பது இங்கு குறிப்பிட வேண்டியதொன் றாகும்.

Page 6
பேராசிரியர் ஆ. சண்முகதாஸ் பல சேவைகளைத் தமிழுக்குச் செய்திருக்கிறார். அவற்றுள் தலைசிறந்த ஒன்றாக இப் பேருரை விளங்கும். முன்பு யாரும் முயலாத ஒன்றாகப் பேராசிரியர் வி. செல்வ நாயகத்தின் தகைமைகள் பலவற்றுள் ஒரு சிலவற்றையாவது தொகுத் துப் பேராசிரியரை எமது கண்முன்பு கொண்டுவந்து நிறுத்தியது ஒரு பெரிய சிறப்பு. அவர்பற்றிப் புதிய ஆய்வுகளைச் செய்வார்க்கு இது ஒரு முதல் நூலாக அமையும். மறக்க முடியாத பேராசிரியர் பண்புகளை நினைவுபடுத்தி அழகாகச் சொன்னதோடு, அவர்தம் பாரிய பங்களிப்பான திறனாய்வின் முன்னோடியாக அவரைக் கண்டு இனம் காட்டித் தமிழ் உலகினுக்கு அவர்தம் சேவைகளை நினைவு கூர வைத்துள்ளார்.
பேராசிரியர் வி. செல்வநாயகத்தின் அன்பினைப் பெற்ற LDT.gif வன் என்ற முறையில் இவ்வுரையினைப் பேராசிரியரின் பொன்னார் திருவடிகளில் வைத்துப் பூசிப்பது எம் கடன்.
செ. குணரெத்தினம்,
தலைவர், கொழும்புத் தமிழ்ச் சங்கம்,
மின் எரிபொருள் அமைச்சின்
இராசாங்கச் செயலாளர்.
- vi -

ஈழத்துத் திறனுய்வு முன்னுேடி பேராசிரியர் வி. செல்வநாயகம்
1. ஈழத்துக் கல்விப் பாரம்பரியம்
ஈழத்துக் கல்விப் பாரம்பரியத்தினை இரு பெரும் பிரிவுகளிலே நோக்கலாம். ஒன்று நாவலர் மரபு வழிவந்த கல்வியென்றும், மற்றை யது இலங்கைப் பல்கலைக்கழகம் வழிவந்த கல்விமரபென்றும் கூறலாம். நாவலர் வழிவந்த கல்வி மரபு நவீன விஞ்ஞான நோக்குடன் தொடர் புற்றதன்று. இவ்விடத்தில் இ. முருகையன் "கல்வியியல் நோக்கில் நாவ லர்' என்னும் கட்டுரையிலே (1979:17) w
* நவீன கல்வியியலின் நியமங்களையும் கருத்தோட்டங்களையும் நாவலர் பெருமானின் கல்விப் பணிகளுக்கும் கல்விக் கோட்பாடுகளுக் கும் நாம் பிரயோகிக்க முயலும்போது மிகவும் சாவதானமாக இருத்தல் வேண்டும். விஞ்ஞான, தொழில்நுட்ப விரிவுரைகளின் தாக்கம் நாவலர் காலத்தில் எமது தேசத்தில் அவ்வளவாக உண. ரப்பட்டவை அல்ல. அதனல் அதன் கூறுகள் நாவலரின் கல்விச் சிந்தனையில் இடம்பெறவில்லை. விஞ்ஞான நோக்குப் பற்றிய உணர்வோ அதன் நலந் தீங்குகள் பற்றிய எண்ணமோ நாவலரின் கவனத்துக்கு உட்பட்டவை அல்ல. ஆகையால் அவற்றை நாவ லரிடம் தேடுதல் பொருந்தாது"
என்று கூறியிருப்பது மனங்கொள்ளத்தக்கதாகும் நாவலருடைய கல்வி மரபு சுன்னகம்குமாரசுவாமிப் புலவர்,புன்னுலைக்கட்டுவன் கணேசையர், பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை ஆகியோரூடாக வந்து சேர்ந்தது.
இலங்கையிலே பல்கலைக் கிழகமொன்று அமைவதற்குமுன்னர் வட் டுக்கோட்டையிலே அமைந்த அமெரிக்கன் மிசனரிமாரின் * வட்டுக் கோட்டைச் செமினரி' ஒரு பல்கலைக் கழகக் கல்விப் பாரம்பரியத்தை ஈழத்திலே தொடக்கிவைத்ததெனலாம். விஞ்ஞான, தொழில்நுட்ப

Page 7
- ;) -
விரிவுகளின் தாக்கம் இச் செமினரிக் கல்வியிலே செறிவுற்றிருந்தது. 1823லே திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்ட இந்நிறுவனம் பல்கலைக்கழக அந்தஸ்துடைய கல்லூரியாக அமைந்தது. எனினும் இது ஒரு சமயத் தைச் சார்ந்த நிறுவனமாக அமைந்ததென்பது உண்மையே 19056) இலங்கைப் பல்கலைக்கழகச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 1921ல் கொழும் பிலே பல்கலைக்கழகக் கல்லூரி நிறுவப்பட்டது. இது 1942ல் இலங்கைப் பல்கலைக்கழகமாக மாறியது. இப் பல்கலைக்கழகக் கல்வி மரபு சுவாமி விபுலானந்தர், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, பேராசிரியர் வி. செல்வநாயகம், பேராசிரியர் சு. வித்தியானந்தன், பேராசிரியர் ஆ. சதாசிவம் ஆகியோரூடாக வந்துகொண்டிருக்கிறது.
பேராசிரியர் வி. செல்வநாயகம் மேற்குறிப்பிட்ட இரு கல்வி மரபு களையுஞ் சார்ந்தவராக அமைந்தார். இவர் நாவலர் கல்வி மரபிலே வந்த வித்துவசிரோமணி சி. கணேசையர் அவர்களிடம் கல்விகற்ற துடன் பல்கலைக்கழகக் கல்வி மரபுடைய அண்ணுமலைப் பல்கலைக்கழகத் தில் அறிஞர் நீ. கந்தசாமிப்பிள்ளை, நாவலர் சோமசுந்தரப் பாரதியார் ஆகியோரிடமும் பயின்ருர். இவ்விரு கல்வி மரபுகளும் இப்பேராசிரி யருடைய ஆளுமையினை உருவாக்கின என்பதை அவரிடம் றவர்கள் நன்கறிவர். அவருடைய எழுத்துக்களும் இதனை நன்கு பிரதி பலிக்கின்றன. பாரம்பரியக் கல்வி மரபுடனும் தொடர்புற்றிருந்த கார ணத்தினலே மேனட்டுச் சிந்தனைகளும் கோட்பாடுகளும்தான் எம் முடைய இலக்கியங்களின் திறன்களை அளவிடும் அளவுகோல்களென அவர் முற்ருகக் கொள்ளவில்லை. எம்முடைய இலக்கியங்களின் திறன் களை அளவிட எம்மவரே சில அளவுகோல்களைத் தந்துள்ளனர் என் பதை இவர்போன்றவர்களாலேயே உணரமுடியும்.
2. சிறிய வரலாற்றுக் குறிப்பு
பேராசிரியர் செல்வநாயகம் 1907ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் திகதி கொழும்புத்துறையில் வினசித்தம்பி-அலங்காரம் தம்பதி களுக்குப் பிறந்தார். அவருடைய ஆரம்பக்கல்வியும் இடைநிலைக் கல்வி யும் யாழ்ப்பாணம் புனித ஜோன்ஸ் கல்லூரியிலேயே நடைபெற்றன. பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகக் கல்லூரியிலே சேர்ந்து படித்து, லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய பரீட்சைகளிலே தேறிக் கலைமாணிப் பட்டம் (முதற்பிரிவினைப்) பெற்றர். பட்டம்பெற்றுச் சிலகாலம் இடைக்காடு இந்துக் கல்லூரியிலே ஆசிரியராகப் பணியாற்றினர். இக் கல்லூரியிலே கற்பித்துக்கொண்டிருக்கும் வேளையிலேதான் கணேசை யருடன் தொடர்புகொள்ளலாஞர். வித்துவசிரோமணி கணேசையரிட மும் பண்டிதர் வேதநாயகத்திடமும் மரபுவழிக் கல்வியைப் பெற்ருர், பின்னர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலே விரிவுரையாள

- 3 -
ராக நியமிக்கப்பட்டார். இங்கு கடமையாற்றிக்கொண்டிருக்கும் போதுதான் 1942ல் இலங்கைப் பல்கலைக்கழகத்திலே தமிழ் விரி வுரையாளராக நியமனம்பெற்றர். பின்னர் அண்ணுமலைப் பல்கலைக் கழகம் சென்று முதுமாணிப் பட்டம்பெற்றுத் திரும்பினுர்.
1940ல் கொக்குவிலிலே திருமணஞ்செய்துகொண்ட இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தன. மனைவி அருகிலே நின்று உணவு பரிமாற அதனை இரசித்துச் சாப்பிடும் கணவனைக் காண்பதென்ருல், பேராசிரியர் செல்வநாயகம் வீட்டுக்கே சென்றிருக்கவேண்டும். வீட்டுப் பொறுப்புக்கள் யாவற்றையும் அவரே மேற்கொண்டு செய்வது வழக்கம். நாளாந்த சந்தை விவரங்களையெல் லாம் நன்கு அறிந்துகொள்வார்.
3. பல்கலைக்கழக ஆசிரியராக
இலங்கைப் பல்கலைக்கழகத்திலே தமிழை ஒரு பாடமாகக் கற்றவர் எவரும் பேராசிரியர் செல்வநாயகத்தை இலகுவிலே மறந்துவிடமாட் டார்கள். தூய வெள்ளை வேட்டியும்,நாஷனலும்,சால்வையும் அணிந்து கம்பீரமாகப் பல்கலைக்கழக வளாகத்தினுள் திரியும் இவரை எல்லா மாணவர்களுமே நினைவில் வைத்திருப்பர். தமிழ்த்துறையைச் சார்ந்த இருவர் இத்தோற்றத்திலே வருவர். ஒருவர் பேராசிரியர் கணபதிப் பிள்ளை, மற்றவர் \பேராசிரியர் செல்வநாயகம். தமிழிலே புலமை பெற்ற இவர்கள், தூய தமிழ் உடையுடுத்தும் இவர்கள் சரளமாக ஆங் கில மொழியையும் பேசுவார்கள்.
வகுப்புகளுக்கு உரியநேரத்துக்கு வருவதும், குறிப்பிட்ட பாடத்தை மாணவர்கள் விளங்கிக்கொள்ளும் வகையிலே போதிப்பதும் எல்லா ஆசிரியர்களுக்கும் உரிய கடமைகளாகும். இவர் அக்கடமைகளிலே தவறுவது கிடையாது. மாணவர்களுடைய சிந்தனையைத் தூண்டுவதற் காக அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டும், சிலவேளைகளில் அவர் களைக் 'கிண்டல் பண்ணியும்" வகுப்புகளை நடத்துவது இவருடைய தனித் துவமான பண்பாகும். தமிழை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்கள் சிலருக்கு ஒரு தமிழ்ப் பாடலைச் சரியாக வாசிக்கத் தெரியாமலிருக்கும். இப்படியானவர்களை இனங்கண்டு வகுப்பிலே குறிப்பிட்ட பாடநூலில் உள்ள பாடல்களை வாசிக்கும்படி கேட்பார். இத்தகைய மாணவர் களுக்கு இவரைப் பிடிப்பதேயில்லை. எனினும் பேராசிரியர் தன் கடமை யிலிருந்து இம்மியும் தவறமாட்டார்.
மாணவர்களுடன் கருத்துமோதல் செய்வதிலே இவருக்கு நல்ல விருப்பம். கம்பராமாயண வாலிவதைப் படலம் எங்களுடைய காலத் தில் குறிப்பிட்ட பாடப்பகுதியாக அமைந்திருந்தது. அப்பகுதியினைப்

Page 8
ہنس 44 ح
படிப்பித்து முடித்தபின்னர், வாலிவதை தொடர்பாக மாணவர்களு டைய கருத்துக்களை அறிவதற்காகக் கடைசி இரண்டு விரிவுரை நேரங் களிலும் அப்பகுதி தொடர்பாக மாணவர்கள் எந்தக் கேள்வியும் கேட் கலாம் என்று வாய்ப்புக் கொடுத்தார். ஒரு மாணவன் 'இராமன் வாலியைக் கொன்றது பிழையான காரியம்" என்று கூறினன். அதற்கு அவர் "அது பிழைதான், அதற்கென்ன?" என்று திருப்பிக்கேட்டார். இப்படியே மாணவர்கள் ஒவ்வொருவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அவரும் திருப்பிக் கேள்விகள் தொடுத்தார். ஏன் இப்படி அவர் திருப் பித் தம்மிடம் கேள்விகளைத் தொடுகிருர் என்பதன் உண்மையை உண ராத மாணவர்கள், அவர் தங்களைக் கேலிபண்ணுகிருர்’ என்றே நம் பினர். எந்த மாணவனுக்கோ, மாணவிக்க்ோ தன்னுடைய கேள்விக் குப் பதிலளித்து வாதிடக்கூடிய ஆற்றல் உண்டா என்பதை அவர் அறிய முயன்ருர், ஆற்றல் உள்ளவர்களும் தப்பபிப்பிராயம் காரணமாக அவ ருடைய வகுப்புகளிலே பேசாமல் இருந்துவிடுவது உண்டு.
வகுப்புகளுக்கு ஒழுங்காக வராதவர்கள், குறிப்பிட்ட பாடங் களைப் படிக்காமல் வகுப்புக்கு வருபவர்கள் இவருடைய கண்டிப் புக்கு உட்படுவார்கள். தமிழ் இலக்கியப் பாடல்களையோ, தொல்காப் பிய இலக்கணத்தையோ, இலக்கிய விமரிசனத்தையோ இவர் கற்பிக் கும்போது மாணவர்களுக்குத் தெளிவான விளக்கம் ஏற்படவும் அவற்றையொட்டி மேற்கெண்டு சிந்திக்கத் தூண்டும்படியும் விளக்கங் கள் கொடுத்துக் கற்பிப்பார். அவர் எதனைப் படிப்பித்தாலும், அப் பாடந் தொடர்பான சிந்தனைத் தெளிவு அவரிடமிருந்தது. இதனுல் மாணவர்களின் சிந்தனையை அவருடைய கற்பித்தல் ஒருபோதும் குழப்பமடையச் செய்வதில்லை. சிந்தனைத் தெளிவில்லாத ஆசிரியர்கள் சிலர் தாமும் குழம்பி, மாணவர்களையும் குழப்பிவிடுவர்.
பேராசிரியரிடம் தமிழைச் சிறப்புப் பாடமாகப் படித்தவர்கள் அவ
ருடைய கற்பித்தல் திறனை நன்கு அறிவர். தொல்காப்பியம் பொருளதி காரத்துக்கு நச்சினுர்க்சினியருடைய உரையினை நுண்ணுய்வுசெய்து அவர் கற்பித்ததுபோல எவருமே கற்பிக்கமுடியாதெனப் பல பெரியவர் கள் இப்பொழுதும் கூறிக்கொள்வார்கள். 'உச்சிமேற் புலவர்கொள் நச்சினர்க்கினியர்' என மரபுவழிச் கல்வியாலே ஏற்றுக்கொண்ட பேரா சிரியர் செல்வநாயகம், அதே மரபில் வந்த நக்கீரப் பார்வையினை நச் சினர்க்கினியருடைய உரையிலே செலுத்தத் தவறவில்லை. பொருளதி காரச் சூத்திரங்கள் சிலவற்றுக்கு எழுதப்பட்டுள்ள நச்சினர்க்கினி யரின் முரண்பட்ட உரைகளைச் சுட்டிக்காட்டி "மாணவர்களாகிய நீங் கள் எங்களுடைய விரிவுரைகளைச் சிலவேளைகளிலே பிழையாகக் குறிப் பெடுப்பதுபோல, இவ்வுரைப்பகுதிகளும் நச்சினர்க்கினியருடைய யாரோ ஒரு மாணவனல் எழுதப்பட்டிருக்கவேண்டும்” என்று கூறுவார்.

உரைகளிலே காணப்படும் முரண்பாடுகளை இனங்கண்டு விளக்கும் அதே வேளையில் இவ்வுரைகளின் சிறப்புப் பண்புகளையும் மாணவர்கள் உண ரும் வகையிலே கற்பிப்பார்.
சிந்தனை விருப்பும் இரசனையும் உடைய மாணவர்களுக்கு அவருடைய இலக்கியத் திறனுய்வு வகுப்புகள் சுவையுடையனவாக அமைவன. அப் படி இல்லாதவர்களுக்கு அவை வேப்பங்காயாகவே இருப்பதுண்டு. ஏதா வது ஒரு பாடலை உரத்து அப்பாடலோசைக்கேற்ப வாசிப்பார். அப் பாடல் நல்ல பாடலா அல்லது கூடாத பாடலா என்று ஒவ்வொரு மாண வராகக் கேட்பார். நல்ல பாடலென்ருே, கூடாத பாடலென்ருே கூறி னல், அதற்குரிய காரணங்களைக் கூறும்படி கேட்பார். இலக்கியத்தைப் பகுத்துணர்ந்து சுவைக்கக்கூடிய பயிற்சியினை மாணவர்களுக்கு அளிப் பதே இப்பெரியாருடைய நோக்கமாயிருந்தது. இலக்கியத்தைச் சுவைக் கத்தெரியாமல் அ தி லே சமூகவியல், வரலாற்றியல் தரவு களை மட்டும் தேடுகின்ற நிலையுடைய இக்காலத்திலே பேராசிரியர் செல்வநாயகத்தினுடைய இலக்கியத் திறனய்வுப் பயிற்சியினை எம் போன்ற மாணவர்கள் இன்று திரும்ப அசைபோடுவதுண்டு.
ஆசிரியருக்குரிய துணிவு, சிந்தனைத் தெளிவு, கண்டிப்பு, தான் கரு தியவற்றை மறைக்காமல் கூறுதல், மாணவர் கருத்து வளர்ச்சியைத் தூண்டுதல் எனப் பல்வேறு பண்பு நலன்களைக் கொண்டவர் பேராசிரி யர் செல்வநாயகம். இத்தகைய ஆசிரியரிடம் நாம் படிப்பதற்குச் கொடுத்துவைத்திருக்கவேண்டும்" என்று எண்ணுவதுண்டு. ஆனல் அவரைத் தமிழ்த்துறை நன்கு பயன்படுத்தவில்லை என்ற குறையும் சில ராலே கூறப்படுவதுண்டு. மரபுவழிச் சிந்தனையும். நவீன சிந்தனையுங் , கொண்ட மிகச்சிறந்த பல்கலைக்கழகத் தமிழாசிரியர் பேராசிரியர் செல்வநாயகம் என்பதனை எவரும் மறுக்கமாட்டார்கள் என்றே நான் நம்புகிறேன்.
4. இலக்கிய வ ரலாற்ருசிரியர்
தமிழ் இலக்கிய பரப்பினை தெளிவாகத் தெரிந்து கொண்டு, அதன் வளர்ச்சிக் கட்டங்களைப் பாகுபாடு செய்து, அப்பாகுபாட்டுக்கான அடிப் படைகளுள் அரசியல் மாற்றங்களை முதன்மைப்படுத்தி, ஒவ்வொரு பகு தியினையுஞ்சார்ந்த இலக்கியங்களின் பொருளமைதிக்கான காரணிகளைச் சுட்டி அவ்விலக்கியங்களின் வடிவ அமைதி, மொழிப்பிரயோகம் ஆகிய வற்றையும் விளக்கி எழுதப்பட்ட ஒரு தமிழ் இலக்கிய வரலாற்று நூலு க்கு ஆசிரியராக அமைந்தவர் பேராசிரியர் வி. செல்வநாயகம். இவரு டைய இந்நூலே தமிழ்நாட்டிற் பலரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களுக்கு மாதிரியாக அமைந்தது. ஆனல், இத்தமிழ்

Page 9
- ) ബ
நாட்டு அறிஞர்கள் எவரேனும் இவ்வுண்மையைத் தங்களுடைய நூல்க ளில் எவ்விடத்திலேனும் குறிப்பிடாது விட்டுள்ளனர். தமிழ்நாட்டுஅறி ஞர்களுடைய இம் ‘மாரிசத்'தனத்தைப் பேராசிரியர் கா. சிவத்தம்பி தன்னுடைய கட்டுரையொன்றிலே குறிப்பிட்டுச் செல்கிருர், பேராசிரி யர் செல்வநாயகம் சிலப்பதிகாரம் மணிமேகலைக் காப்பியங்களின் 35rravi b _uribgó “Date of cilappatikaram and manimekalai” GT Gör Glogg கட்டுரையினை 1948ல் எழுதினர். (University of Ceylon Review Vol. 111) இக்கட்டுரையிலே மொழிப் பிரயோகங்களை அடிப்படையாக கொண்டு மணிமேகலையின் காலம் சிலப்பதிகாரத்துக்குப் பிற்பட்டது எனப் பேராசிரியர் நிறுவியுள்ளார்.1961ல் மணிமேகலையின் காலம் என் னும் நூலை எழுதிய சோ. ந. கந்தசாமி என்பவர் பேராசிரியர் குறிப் பிட்ட அதே காரணிகளைக் காட்டி மணிமேகலை சிலப்பதிகாரக் காலத் துக்குப் பிற்பட்டதெனக் கூறியுள்ளார். ஆனல், தன்னுடைய நூலில் எவ்விடத்திலேனும் பேராசிரியருடைய கட்டுரையைக் குறிப்பிட்டா if i2h). g.g. Lipsis, Vaiyapuri pillais Dating of Cilappatikaram' 6tair னும் கட்டுரையை (1976) எழுதிய பேராசிரியர் சிவத்தம்பி,
"As for thc linguistic variations between the two works the Con sensus is to take. Cilappatikaram as Pre-Manimekalai. Chelva nayagam raised this point. Kandasamy reiterated it, unfortunately
with no mention what soever to the earlier writing of Chevana yagam.
என்று குறிப்பிட்டுச் சென்றுள்ளார்.
இலக்கிய வரலாறு" என்னுந் தொடர், இலக்கியங்களுடைய வர லாறு எனவும் இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்ட வரலாறு எனவும் பொருள்படும். தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்கும்மாண வர்கள் இலக்கியங்களுடைய வரலாற்றிலே சிறப்பாக ஈடுபடுவர். இலக் கியங்கள் வழி வந்த வரலாற்றிலே வரலாற்றியல் மாணவர்கள் சிறப் பாக ஈடுபடுவர். பேராசிரியர் செல்வநாயகம் தமிழ் கற்கும் மாணவர் களுக்காகவே இலக்கிய வரலாறு எழுதினர். எனவே, அவர் இலக்கியங் களுடைய வரலாற்றினையே எழுதினர். இந்த வரலாற்றின் மூலமாக தமிழ் இலக்கியங்கள் எவையெவை என அறிதலுடன் இலக்கிய இரசனை யையும் மாணவர்களுக்கு ஊட்ட முடியும். பேராசிரியருடைய நூல் இவ் விரு பணிகளையும் செய்தன.
வரலாறு என்ருல் அதற்கொரு காலப்பகுப்புத் தானக வந்தமைந்து விடும்.இலக்கிய வரலாற்றுக்கும் காலப்பகுப்பு இன்றியமையாததாகும்.

-- 7 س
தமிழ் இலக்கிய வரலறுகளை எழுதியவர்கள் எவ்வகையான காலப்பகுப் புக்களை என்ன அடிப்படையிலே மேற்கொண்டனர் என்பதை இங்கு சுருக்கமாகத் தருகிருேம். y
தமிழ் இலக்கிய வரலாறு பற்றி முதன் முதல் சிந்தித்தவர் சி. வை. தாமோதரம் பிள்ளையாகும். அவருடைய பாகுபாடு, அபோத காலம், அக்ஷர காலம், இலக்கண காலம், சமுதாய காலம், அநாதார காலம், சமணர் காலம், இதிகாச காலம், ஆதீன காலம் என அமைகின்றது. இப்பாகுபாட்டின் பொருத்தமின்மை பற்றிப் பிற்காலத்தவர் குறிப்பிட் டனவற்றையெல்லாம் தொகுத்து மனேன்மணி சண்முகதாஸ் (சி.வை. தாமோதரம்பிள்ளை ஒர் ஆய்வு, 1983, பக். 168-171) கூறியுள்ளார். இவருக்குப் பின்னர் எழுந்த இலக்கிய வரலாற்று நூல்களின் காலப்பகு ப்பு அடிப்படைகளைப் பின்வருமாறு நோக்கலாம்.
(BN) பொதுவாகத் தமிழ் இலக்கிய வளர்ச்சிப் போக்கினை ஆதி காலம், மத்திய காலம், நவீன காலம் என வகுத்தல். கமில் ஸ்வெ லெபில் (1957),அ. சிதம்பரநாதன் செட்டியார்(1958), மு.வரதராசன் /1972), தேவ நேயப் பாவாணர் (1979) ஆகியோருடைய எழுத்துக் களிலே இத்தகைய பாகுபாடு காணப்படுகின்றது.
(ஆ) சமய நோக்கினை முக்கிய அடிப்படையாகக் கொண்டு காலப் பகுப்பினை மேற்கொள்ளுதல். எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை (1904), எம். சிறிணிவாச ஐயங்கார் (1914) மறைமலையடிகள் (1930), கா.சுப்பி மனியபிள்ளை (1930) ஆகியோருடைய காலப்பகுப்பு இவ்வகையிலேயே அமைகின்றது.
(இ) தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அடிப்படையான சில நிறுவனங் கள், இயக்கம், போக்குகள், இலக்கிய வடிவங்கள் ஆகியனவற்றின் பின் னணியிலே எஸ். வையாபுரிப்பிள்ளை (1957), திரு. திருமதி ஜேசுதாசன் (1961), ந. சுப்பிரமணியம் (1981) ஆகியோர் காலப் பாகுபாட்டினைச் செய்துள்ளனர்.
(ஈ) அரசியல், சமயம், நிறுவனம், இலக்கிய வடிவம் என்னும் அடிப்படையிலே மு அருளுசலம் காலப் பாகுபாட்டினை மேற்கொண் டுள்ளார்.
1. கா. சிவத்தம்பி தன்னுடைய தமிழில் இலக்கிய வரலாறு என் னும் நூலில் தமிழ் இலக்கிய வரலாற்றுக் காலப்பகுப்பு செய்தவர்கள் வரிசையிலே றொதேட் கால்டுவேல் அவர்களைக் குறிப்பிடுகிருர்.

Page 10
- 8 -
(உ) இலக்கியத்தின் வழி வரலாறு என்ற அடிப்படையிலே கா. சிவத்தம்பி (1988). 1. ஆரம்பம் முதல் கி. பி 600வரை, 2. கி. பி. 600 முதல் கி. பி. 1400வரை, 3. கி. பி. 1400 முதல் கி. பி. 1800வரை, 4. கி.பி. 1800 முதல் இற்றை வரை என நான்கு பிரிவுகளாக வகுக்கின் დyrT -
மேற்காட்டியவர்களினின்றும் வேறுபட்ட நோக்கினை உடையவரா கப் பேராசிரியர் செல்வநாயகம் அமைந்தார். அவர் "சங்கம்" என் னும் நிறுவனத்தையும் தமிழ்நாட்டு அரசியல் மாற்றங்களையுமே தன் னுடைய தமிழிலிலக்கிய வரலாற்றுக் காலப் பகுப்புக்கு அடிப்படை களாகக் கொண்டார். கி. பி. ஆரும் நூற்ருண்டுடன் தொடங்கும் பல் லவ மன்னர்களுடைய ஆட்சிபோன்று, அதற்குமுன்னர் சேரரோ, சோழரோ, பாண்டியரோ, களப்பிரரோ நீண்டகால நிலையான ஆட்சி யினை அமைக்கவில்லை. அத்துடன் சங்க இலக்கியச் செய்யுட்களை ஆராய்ந் தால், அவற்றிலே குழுத் தலைவர்கள் நிலையிலிருந்து அரசர் என்ற நிலைக்கு மாற்றமடையும் அரசியல் வளர்ச்சிபற்றிக் குறிப்பிட்டிருப் பதைக் காணலாம். எனவே, பல நூற்ருண்டுகளுக்குமுன் இறையனர் களவியல் உரைகாரர் குறிப்பிட்ட சங்கம் என்னும் நிறுவனத்தை அடிட் படையாகக் கொண்டு கி. பி. 600 வரையிலான தமிழிலக்கிய வரலாற் றுக் காலத்தைச் ‘சங்ககாலம்" என்றும், “ சங்கமருவிய காலம்" என்றும் பேராசிரியர் செல்வநாயகம் பாகுபாடு செய்தார். ஏனையவை பல்லவர் காலம், சோழர் காலம், விஜயநகர-நாயக்கர் காலம், ஐரோப்பியர் காலம் என அரசியல் மாற்றத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண் டுசெய்யப்பட்ட பாகுபாடுகளாகும். நவீன நோக்கினை ஒரளவு அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களுக்கெல்லாம் பேராசிரியர் செல்வநாயகத்தினுடைய தமிழ் இலக்கிய வரலாறு (1951) காலத்தால் முந்தியதாகும். பேராசிரி யருடைய தமிழ்ப் பணிகளுள் இத்தகைய நூலை எழுதித் தமிழுலகுக்கு அளித்தமையுடன் பின்வந்த பல தமிழ் இலக்கிய வரலாற்ற சிரியர் களுக்கும் வழிகாட்டியாக அமைந்தமை மிகச் சிறந்த பணியெனலாம்.
பேராசிரியரின் தமிழ் இலக்கிய வரலாறு நூலின் அமைப்பு மாண வர்களுக்கு ஒவ்வொரு காலப்பகுதியின் இலக்கி பங்களையும், அவை தோன்றிய காலப் பின்னணியினையும், அவ்விலக்கியங்களுடைய பொருள், செய்யுள், மொழி ஆகியனவற்றையும் தெளிவாக விளங்கும் வண்ணம் அமைந்துள்ளது. அவ்வமைப்பு விவரம் பின்வருமாறு:-

- 9 -
(அ) சங்ககாலம்: (1) முச்சங்கங்கள், (2) சங்கச் செய்யுளும் பொருள் மரபும்: அன்பினைந்திணை, கைக்கிளை - பெருந்திணை, புறத்திணை (3) எட்டுத்தொகையும் பத்துப் பாட்டும், (4) சங்கப் புலவரும் சங்க இலக்கியப் பண்பும்.
(ஆ) சங்கமருவிய காலம்: (1) அரசியல்நிலை, (2) பண்பாட்டு நில (3) சமயநிலை, (4) நூல்கள், (5) உரைநடை இலக்கியம், (6) இலக் கியப் பண்பு.
(இ) பல்லவர் காலம்: (1) பல்லவர் காலத்துத் தமிழ்நாடு, (2) &ւD Այ நிலை, (3) கலை வளமும் இலக்கியப் பண்பும், (4) பக்திப்பாடல்கள், (5) பிற நூல்கள், (6) உரைநடை நூல்கள்.
(ஈ) சோழர் காலம்: (1) அரசியல் நிலை, (2) சமய நிலை, (3) இலக்கியப் பண்பு, (4) திருமுறைகளும் நாலாயிர திவ்விய பிரபந்தங்களும், (5) காவியங்கள், (6) சிற்றிலக்கியங்கள், (7) இலக்கண நூல்கள், (8) சைவசித்தாந்த நூல்கள், (9) உரைநூல்கள்.
(உ) நாயக்கர் காலம்: (1) அரசியல் நிலை, (2) சமய நிலை, (3) இலக் கியப்பண்பு, (4) பிரபந்தங்கள், (5) இலக்கியங்கள், (6) உரையாசிரி யர்சுள், (7) தமிழை வளர்த்த அரசர்களும் ஆதீனங்களும்.
(ஊ) ஐரோப்பியர் காலம்;- (1) அரசியல்நிலை, (2) சமய நிலை (3) இலக்கிய பண்பு, (4) உரை நடையிலக்கியம், (5)செய்யுள் இலக் கியம், (6) நாடக இலக்கியம்.
(எ) இருபதாம் நூற்றண்டு: மக்கள் வாழ்க்கை முறையிலே மாற் றம், பொது மக்களுக்குரிய காலம், பாரதி முதலான கவிஞர்கள், தமி ழுரை நடை வளர்ச்சி, நாவல், சிறுகதை, இலக்கிய விமர்சனம், நாடக இலக்கியம்.
இந்நூலின் அமைப்பிலே ஆங்காங்கே சில குறைகளும் தென்படு கின்றன. இருபதாம் நூற்ருண்டுத் தமிழிலக்கியம் பேராசிரியராலே இன்னும் விளக்கமாக எழுதப்பட்டிருக்கலாம் என்று குறை கூறப்படுவ துண்டு. ஆனல், பேராசிரியர் இந்நூலை எழுதிய காலத்தினை நாம் அவ தானிக்க வேண்டும். 1951ல் இந்நூல் அச்சிடப்பட்டு வெளி வந்தது. இந்த நூற்றண்டின் அரைப்பகுதிக் கால த் தை அடிப்படையாகக் கொண்டே இப்பகுதியை அவர் எழுதியதால், அத்துணை விரிவாக அவ ராலே எழுதியிருக்க முடியாது. நாயக்கர் காலத்திலே "பிரபந்தங்கள்" என்று ஒரு பகுதியிலே கூறி விட்டு, அடுத்து வரும் பகுதியினை 'இலக்கியங் கள்" என்று அழைக்கிருர், அப்படியானுல் பிரபந்தங்கள் இலக்கியங்க

Page 11
سے 10 سے
ளல்லனவா என்ற ஐயம் ஏற்படுகின்றது. ஈழத்திலிருந்து முதன் முதல்
எழுந்த தமிழ் இலக்கிய வரலாற்று நூல் என்ற பெருமையிலும், தமிழ கத்து அறிஞர்கள் பலருக்கு வழி காட்டியாக அமைந்த நூல் என்ற பெருமையிலும் இது போன்ற சிறு குறைகளெல்லாம் மறைந்து போய் விடுகின்றன. பேராசிரியர் செல்வநாயகத்தின் இந்நூல் தொடர்பாகக் கா. சிவத்தம்பி தன்னுடைய தமிழில் இலக்கிய வரலாறு (பக். 131-32)
மாகும்
என்னும் நூலிலே கூறியிருப்பதை இங்கு குறிப்பிட வேண்டியது அவசிய
இக்கால கட்டத்தில் (அதாவது, ஐம்பதுகளில்) தென்னிந்தியப் பல் கலைக் கழகங்களில் கலைமாணி (B.A.) ப் பட்டத்துக்கான தமிழ்ப் பாட நெறியில் இலக்கிய வரலாறும் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட் டதாகும். காலஞ் சென்ற பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின் தீட்சண்ணிய நோக்குக் காரணமாக நாற்பதுகளிலேயேஇப்பாடம், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ், பொது, சிறப்புத் தமிழ்த் தேர்வுகளில் இடம் பெற்றது. அங்கு அப்பாடத்தினை முதன் முத லிற் படிப்பித்த வி. செல்வநாயகம், இதற்கான ஒரு பாடப் புத்த கத்தின் தேவையை அறிந்தவராய் படிப்பித்தல் காரணமாக அத்தகைய ஒன்றினை எழுதுவதற்குத் தகுதியுடையவராகவிருந் தார்.அவர் எழுதிய ‘தமிழ் இலக்கிய வரலாறு" எனும் நூல், தமிழ் இலக்கியத்தின் வரலாற்றைத் தமிழ்நாட்டின் அரசியல் நிகழ்ச்சிக ளின் பின்னணியில் வைத்துக் காட்டிற்று. முன்னர் சமண காலம், தேவார காலம், காப்பிய காலம், இடைக்காலம் எனக் குறிப் பிடப்பெற்றவை, இவர் நூலில் சங்கம் மருவியகாலம், பல்ல' வர் காலம், சோழப் பெரு மன்னர் காலம், விஜய நகர நாயக்க மன்னர் காலம் எனக் குறிப்பிடப்பட்டன. செல்வநாயகத்தின் நூலின் திறனை வையாபுரிப்பிள்ளை முதல் ஜேசுதாசன், அருணா சலம் வரை பல அறிஞர்கள் போற்றியுள்ளனர். இந்நூல் இதன் பின்னர் வந்த பாடப்புத்தகங்கள் பலவற்றுக்கு மாதிரியாக அமைந்தது. பின்வந்த பாடப்புத்தக ஆசிரியர்கள் பலர் எடுத்த இடத்தைக் கூறாது, பாடப்புத்தக ஆசிரியர்களுக்குரிய பண்பு தவ றாது, இவருடைய கால வகுப்பு முறைமையினைத் தமதாகப் பயன் படுத்திக் கொண்டனர்,

- I -
பேராசிரியர் செல்வநாயகத்தின் பங்களிப்பின மிகப் பொருத்த மாகக் கா. சிவத்தம்பி மதிப்பீடு செய்துள்ளார்.
5. "தமிழ் உரைநடை வரலாறு' ஆசிரியர்
தமிழ் இலக்கிய வளர்ச்சிப் போக்கினே மாணவர்களுக்குக் கற் பித்ததாலும், ஆய்வு செய்ததாலும், தமிழ் மொழி செய்யுள் மரபி லிருந்து உரைநடை மரபுக்கு ஐரோப்பியருடைய வருகையின் பின் னர் மாற்றமுற்றதை நன்கு உணர்ந்த பேராசிரியர் செல்வநாயகம் தமிழ் உரைநடையின் வரலாற்றை நுணுகி ஆராயலானர். தக்க சான்ருதாரங்களுடன், உரைநடை வளர்ச்சிப் படிகளை இனங்காட்டி, அவற்றை இறுக்கமான நல்ல தமிழ் நடையிலே விளக்கி எழுதியுள் ளார். பேராசிரியருக்குக் கலாநிதிப் பட்டம் இல்லை எனச் சில கட் டங்களிலே குறிப்பிடப்பட்டதுண்டு, இத் "தமிழ் உரைநடை வர லாறு" நூலினை அக்காலத்திலே அவர் ஏதாவதொரு பல்கலைக் கழ கத்துக்குச் சமர்ப்பித்திருந்தால், உடனடியாக அவருக்குக் கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டிருக்கும். இவ்வுண்மையை உணர்ந்தபடியாற்ருன் இலங்கைப் பல்கலைக்கழகம் அவரைப் பேராசிரியராக நியமித்தது.
"உலகிலுள்ள எந்த மொழியிலாயினும் இலக்கியம் தோன்றும் பொழுது அது செய்யுள் வடிவத்திலேயே முதலிற்றே ன்றுகின்றது. பாட்டைத் தொடர்ந்து உரைநடை வெளிவருகின்றது. எனவே தமிழ் மொழியிலும் முதலிலே தோன்றியது பாட்டு என்றும் அதனைத் தொடர்ந்து உரைநடை தோன்றிற்றென்றும் கொள்ளுதல் பொருத்த " முடையதாகும்.” இவ்வாறு தன்னுடைய உரைநடை வரலாற்றினைத் தொடங்குகிருர் பேராசிரியர் செல்வநாயகம். தமிழ் உரைநடைப் ப ர ப் பினை ஐந்து கா ல க் க ட் ட ங் க ள |ா க ப் பகுத்து ஆராய்கின்ருர், அக்காலங்களாவன: சங்ககாலம் , களவியலுரைக் காலம், உரையாசிரியர்கள் காலம், ஐரோப்பியர் காலம், இருபதாம் நூற்ருண்டு.
கி பி. 6ம் நூற்ருண்டு வரையிலான காலப்பகுதியில் எழுந்த உரை நடை வகைகளைச் சங்ககாலம் என்னும் காலப்பகுதியிலே பேராசிரியர் ஆராய்கின்றர். தமிழிலிலே ஆரம்பத்தில் உரைநடை தோன்றியபோது அது செய்யுளை ஒத்ததொரு நடையாகவே அமைந்திருக்கவேண்டுமென் னும் கருத்து முன்வைக்கப்படுகின்றது. தன்னுடைய இக் கருத்துக்குப் புறநானூறு, சிலப்பதிகாரம் ஆகிய நூல்களிலிருந்து சான்ருதாரங்கள் காட்டுகின்ருர், புறநானுாற்றில்,

Page 12
-- 12 سسسسسه
"மூத்தோர் மூத்தோர்க் கூற்ற முய்த்தெனப்
பாறர வந்த பழவிறற் ருயம்
எய்தின மாயி னெய்தினஞ் சிறப்பென."
எனத் தொடங்கிச் செல்லும் பாடலடிகள் புலப்படுத்தும் ஒசை சாதா ரண பேச்சோசையைக் கொண்டதாய் அமைகின்றது எனக் குறிப்பிடும் ஆசிரியர், சிலப்பதிகாரத்தில் இடம்பெறும்
*கயலெழுதிய இமய நெற்றியின்." எனத் தொடங்கும் உரைப் பகுதி பாட்டுப்போல அமைகின்றது எனக் குறிப்பிடுவர். இச்சான்று களாலே 'உரைநடை தோன்றுகின்ற காலத்துச் செய்யுள் நடைக்கும், அவ்வுரை நடைக்கும் உள்ள பேதம் பெரிதன்று. காலஞ் செல்லச் செல்ல அவற்றிற்கிடையேயுள்ள வேறுபாடு கூடிக்கொண்டு போகின் றது" என்று அவர் கூறக்கூடியதாயுள்ளது. தொல்காப்பியர் செய்யுள் வகைகளுள் ஒன்ருக உரைநடையைக் குறிப்பிட்டதன் காரணமும் இத ஞலே தெளிவுறுத்தப்படுகின்றது.
இவ்வாறு உரைநடையின் தோற்றத்தினை நோக்கிய ஆசிரியர் பின் னர் எழுந்த உரைநடை நூல்களிலே பயின்றுவந்த உரைநடையின் பண்புகளையும், அப்பண்புகளுக்கான பின்னணிக் காரணிகளையும் நுணுகி ஆராய்ந்து கூறுகின்ருர் . கி. பி. 8ம் நூற்றண்டுக்குப் பின்னர் எழுந்த இறையனர்களவியலுரையிலே காணப்படும் இரண்டுவகையான நடைகளை இனங்கண்டு அவற்றுக்கு உதாரணங்கள் தந்து விளக்கியிருப்
பது சிந்தனைக்கு விருந்தளிக்கின்றது. * (அவள்) சந்தனமும் சண்பக மும் தேமாவும் தீம்பலவும் ஆசினியும் அசோகமும் கோங்கும் வேங்கையும் குரவமும் விரிந்து-கண்டாள்" என்னும் உரைப்பகு
தியை உதாரணங்காட்டி,
'இவ்வுரைப் பகுதியின்கண் இடையிடையே எதுகை மோனை முதலிய ஓசைப் பண்புகள் வாய்ந்த சொற்ருெடர்கள் வந்துள்ளன. அவற்றைப் பொருளறிந்து படிக்கும்போது செய்யுளொன்றைப் படிக்கும் நேரத்தில் எம்மிடத்தில் உண்டாகும் உணர்ச்சி எத்தகையதோ அத்தகையதோர் உணர்ச்சி எம்மனத்தில் எழுகின்றது"

- 1 ) അ
என்று கூறி அவ்வுரைப்பகுதியை ஒரு பாடல் வடிவாகத் தந்துள்ளமை அவருடைய இரசனைத் திறனையும்,திறனய்வுப்போக்கினையும் காட்டுகின் றது. இன்னேருவகையான உரைப்பகுதியும் இறையனர்களவியலுரை யிலே இடம்பெறுகின்றது. அது ' என் பயக்குமோ இது கற்க எனின் வீடு பேறு பயக்கும் என்பது. என்னை இது களவியலன்றே, இது கற்க வீடு பேறு பயக்குமாறு என்னை' என அமையும் உரைப்பாங்காகும். **ஆசிரியன் மாணவனுக்கு ஒன்றை விளக்கும்போது எழுப்பும் கடாக் களும் அவற்றிற்கு அவன் கூறும் விடைகளும் பேச்சில் எவ்வாறு அமை யுமோ அவ்வாறே எழுத்திலும் அமைதலை" இத்தகைய உரைநடை காட்டுவதாகப் பேராசிரியர் கூறுவர்.
ஒவ்வொரு காலத்து உரைநடை வகைகளை இலக்கியச் சான்ற தாரங்கள் மூலம் வகைப்படுத்திக் காட்டுகின்ருர், ஒவ்வொரு வகை நடையின் தனித்துவமான பண்புகளை இனங்கண்டு, அத்தகைய நடை யிஞலே ஏற்படக்கூடிய பயன்களையும் சுட்டிச்செல்கிருர், உதாரணமாக, இருபதாம் நூற்றண்டுத் தமிழ் உரைநடைபற்றிக் கூறும்போது,
'இனி இக்காலத்து உரைநடையிற் காணப்படும் பண்புகள் சில
வற்றை நோக்குவோம். சமுதாய வாழ்க்கையிலே பொதுமக்கள்
சிறப்பிடம் பெற்று விளங்குகின்ற இக்காலத்தில் அம்மக்கள்
படித்துப் பொருளறிதற்கு ஏற்ற ஒரு நடைவகை உருவாதல் இயல்பாகும்.அந்நடையிற் காணப்படும் சிறப்பியல்புகளுள்
கடினமான சந்தி விவகாரங்களின்றி மொழிநடை அமைதல், பேச்சு வழக்கிலுள்ள சொற்கள், சொற்ருெடர்கள், இலக்கண
அமைதிகள் என்பன இடம்பெறுதல், ஆங்கில மொழியிற் கையா
ளப்பட்ட குறியீட்டு முறைகள் பயின்றுவருதல் போல்வன சில
வாகும்'
என இக்கால உரைநடையின் இயல்புகள் சுட்டப்படுகின்றன. இலக்
கியத் திறனுய்வினை, பிற்காலத்தில் திறனய்வாளர்களெனச் சிறப்புற்ற
க. கைலாசபதி, கா. சிவத்தம்பி போன்றவர்களுக்கும் வேறு பல பெருந்
தொகையான மாணவர்களுக்கும் கற்பித்தும், அத்துறைபற்றி எவரும்
சிந்திக்காத காலத்திலே சிந்தித்தும், ஆய்வுகளும் மேற்கொண்டார். பேராசிரியர் செல்வநாயகம். அத்துறை தொடர்பான முயற்சிகளுள்
முதற்படியான முயற்சிதான் இலக்கியங்களுடைய வரலாற்றை fless aif)
வாகவும் நுணுக்கமாகவும் நோக்குவதாகும். தமிழ் இலக்கிய வர
லாற்றை முழுமையாகத் தரிசித்து எழுதிய பேராசிரியர், தமிழ் உரை
நடையின் வரலாற்றை நுணுக்க ஆய்வாக மேற்கொண்டார்.

Page 13
6. திறனுய்வுக் கட்டுரையாளர்
இன்று எழுத்துலகிலே ஒரு துரதிர்ஷ்டமான நிலை காணப்படு கின்றது. அது என்னவெனில், இலக்கியங்களின் திறன்களை ஆய்ந்து எழுதுபவர்களை விடுத்துத் திறனுய்வு பற்றி எழுதுபவர்களையே திறனுய் வாளர் எனக் கொள்ளும் சிலருடைய மனுேபாவமாகும். பேரா சிரியர் செல்வநாயகம் இலக்கியங்களின் திறன்களை ஆராய்ந்தும் எழுதி யுள்ளார்; இலக்கியத் திறனுய்வுபற்றியும் எழுதியுள்ளார். அக்கட்டு ரைகளை ஒரளவு கால வரன்முறையிலே நோக்கலாம். பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்க மலரான இளங்கதிர் இவருடைய பல கட்டுரைகளை வெளியிட்டது. “சொல்லும் பொருளும்” (மலர் 6, பக். 91-104, 1953-54) என்னும் கட்டுரை இலக்கியத்துக்குச் சொல்லினுடைய, சொற்பொருளினுடைய இன்றியமையாமைபற்றி யும், சொற்பொருள் என்னென்ன வகையிலே உணரப்படுகின்றது என்பது பற்றியும் கூறுகின்றது.
'இவ்வாறே, இலக்கியத்திற்குச் சொல் கருவியாகின்றது. ஆகவே, இலக்கியத்தைக் கற்று அனுபவிக்க விரும்புவோர்க்குச் சொற் பொருளறிவு இன்றியமையாததாகின்றது . கவிதையில் அமைந்து கிடக்கும் அனுபவப்பொருள் புலவனுடை யது. ஆனல், அவன் கருவியாகக் கொண்ட சொல் அவனுக்கும் எமக்கும் பொதுவாயுள்ளது. அதன் உதவியைக் கொண்டுதான் கவிதையில் அவன் குறித்துள்ளதை நாம் அறியவேண்டியிருக் கின்றது."
எனச் சொல்லினுடைய முக்கியத்துவத்தைச் சுட்டிச்செல்கிருர். “சொல் ஒலிவடிவு வரிவடிவுடையது. அது பொருளொடு புணராத விடத்தும் சொல்லெனப்படாது" எனச் சொல்லினுடைய பண்பு கூறப்படு இன்றது. சொற்பொருளுக்கும் சமுதாய மக்களுக்குமிடையேயுள்ள தொடர்பு குறிக்கப்படுகின்றது. காட்சிப் பொருள், கருத்துப் பொருள் என்ற அடிப்படையிலும், செம்பொருள், சுவைப்பொருள் என்ற அடிப்படையிலும் சொல்லும் பொருளும் இக்கட்டுரையிலே நோக்கப் படுகின்றன. 'பாட்டும் ஓசையும்" (இளங்கதிர், மலர் 7 பக். 114-22 1954-55) என்னும் கட்டுரையிலே கவிதைக்கு இன்றியமையாத ஒசைபற்றிக் கூறுகிருர்,
சொற்களின் பொருள் எமக்குப் புலப்படாத இடத்தும் பாட்டின் ஓசையைக் கொண்டே அதன் கண் பொருந்தியுள்ள சுவையைக் கிரகித்துக்கொள்ளலாம். இந்தத் தத்துவத்தை உரைநடை, பாட்டு என்பனவற்றில் மட்டுமன்று, சாதாரண பேச்சிலும் நாம் கண்டு தெளியலாம்." مر

一函15一
என்று பேராசிரியர் கூறியுள்ள உண்மையினை உணர்ந்துகொண்டால் புதுக்கவிதையின் போக்கினைக் கிரகித்துக்கொள்வது இலகுவாயிருக்கும்.
பேராசிரியருடைய "வழக்குஞ் செய்யுளும்" (இளங்கதிர், மலர் 14. பக். 128-35, 1961-62) என்னுங் கட்டுரை வரலாற்று முக்கியத்து வம் வாய்ந்தது. அறுபதுகளில் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர் சளிடையே * மரபு" தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் இடம் பெற்றன. ஒரு சாரார் தமிழிலக்கியங்களில் பேச்சு வழக்கு இடம் பெறக் கூடாதென அபிப்பிராயப்பட்டனர். இன்னெரு சாரார். பேச்சு வழக்கினை உபயோ கித்து இலக்கியங்கள் படைத்தனர். அத்துடன் பேச்சு வழக்குத் தமிழி லக்கியங்களிலே உபயோகிக்கப்பட வேண்டும் என்று அபிப்பிராயமும் தெரிவித்தனர். இம்மரபுப் போராட்டம் தொடங்குவதற்குச் சற்று முன்னர் தான் பேராசிரியர் தன்னுடைய "வழக்குஞ் செய்யுளும்" கட் டுரையிலே,
*பேச்சு வழக்கில் உள்ள மொழி தான் வாழும் மொழி; அதற்கு உள்ள ஆற்றலை அவதானித்து அறிந்து, அதனைப் பயன்படுத்திக் கொள்கின்றவனே சிறந்த எழுத்தாளனுகின்ருன்"
என்று இலக்கியத்திலே பேச்சு வழக்கின் உபயோகத்தின் தேவையினை எடுத்துக்காட்டியுள்ளார். அது மட்டுமன்றி, இத்தகைய தேவையை உணராதவர்கள் இரு வகைப்பட்டவர்களெனவும் பாகுபடுத்தியுள் ளார்: (1) வழக்கொழிந்த சொற்கள், சொற்ருெடர்கள், இலக்கண மரபுகள் ஆகியனவற்றைக் கையாளும் எழுத்தாளர், (2) முற்காலத் தமிழ் மொழி தான் இலக்கண வரம்புடையது; இக்காலப் பேச்சு வழக் குக்கு அத்தகைய இலக்கண வரம்பு இல்லையென்பவர். இவ்விரு சாரா ருடைய கருத்துக்களும் பிழையானவை என்பதை தகுந்த ஆதாரங்களு டன் பேராசிரியர் காட்டியுள்ளார். M
திறன்பல செறிவுற்றுள்ளன எனத்தான் கருதிய செய்யுட்கள்,உரை நடை, இலக்கிய வடிவம் ஆகியனவற்றைப் பேராசிரியர் பகுப்பாய்வு செய்து தெளிவான நடையிலே கட்டுரைகள் எழுதியுள்ளார். '5Lலோ சை? (இளங்கதிர்) மலர் 10, பக். 86.94, 1957-58) என்னுங் கட் டுரை சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டியதொன்ருகும். ராஜம் அய் யர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம் என்னும் நாவலிலிருந்து ஓர் உரை பகுதியினைத் தெரிந்தெடுத்து, அதனைத் திறனய்வு செய்து, அதிலே காணப்படும் நலன்களை ஆசிரியர் விவரிக்கின்ருர், கவிதையிலே நலன் களைக் கண்டு கூறும் மரபே நம்மிடையே நீண்ட காலமாக இருந்து வந் தது உரை நடையிலும் அத்தகைய நலன்களைக் காணலாம் என்பதை,

Page 14
سے 16 سس۔
"நயச் சிறப்புக்கள் பாட்டில் இருத்தல் போல உரை நடை பிலும் உண்டு. ஒன்றைத் தர்க்க முறைப்படி ஆராய்ந்து, காரண காரியத் தொடர்பு உளதேல் அதனை எடுத்துக் காட்டித் தெளிவாகக் கட் டுரைத்தற்கு உரை நடை பெரும்பாலும் கையாளப்படுகின்ற தெனினும், கவிதையைப் போல் கற்பனையுருவங்களே அமைத்தற் கும் உணர்ச்சி பேதங்களை வெளிப்படுத்துவதற்கும் பயன்படுத்தப் படுகின்றது. அத்தகைய இடங்களில் அது பாட்டின் பண்புகள் சிலவற்றைத் தன்னகத்தே கொண்டு விளங்குதலைக் காணலாம். ? . என்னும் அவருடைய கூற்றுக்கள் எடுத்துக் காட்டுகின்றன. நாவலிலே இடம் பெறும் ஒரு பாத்திரம் கடலோசையைக்கேட்டுக் கூறுவதாக இவ் வுரைப்பகுதி அமைகின்றது. கடலோசை சோகத்தினை உணர்த்துவதா கக் கூறும் நாவல் ஆசிரியர் பல வகைப்பட்ட சோகங்களுக்கி டையே காட்டும் வேறுபாடுகளை நன்கு உணர்ந்து,அவற்றுள் உச்சமான சோகம் எதுவென்பதை உணர்த்துகின்ருர் என்பதை எடுத்துக்காட்டும் பேராசி ரியர் செல்வநாயகம், அதனை நாவலாசிரியர் எப்படி உணர்த்துகின்ருர் என்பதனை,
"சோகங்களுக்கிடையேயுள்ள வேறுபாடு (Contrast) இப்பந்தியிலே குறிப்பாகச் (1mplied) சொல்லப்படுகின்றது. புத்திரனை இழந்த பிதாவின் சோ மும்”, “புருஷனை இழந்த மனைவியின் சோகமும்’ சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டவை. அது தனி மனிதனது தனித் துயரம் (1ndividual grief) அர்ச்சுனன் போர்ககளத்தில் அடைந்த சோகம் மகத்தானது; அது சர்வத்தையும் இழந்த அல் லது இழக்கப் போகின்ற ஒருவனது பெருந்துயர் (universal grief)"
என்னும் பகுதியினைப் படிப்பதன் மூலம் உணர முடிகின்றது. 5tலோசை" என்னும் கட்டுரை ஈழத்துத் திறனய்வு வரலாற்றிலே முக்கிய மான இடத்தைப் பெறக்கூடியது. உரைப்பகுதியைத் திறனுய்வு செய்து காட்டிய முன்னுேடி எனப் பேராசிரியர் செல்வநாயகத்தைக் குறிப்பிடு வதிலே எவ்வித தவறும் இல்லை. ۔۔۔۔
திறனுய்வாளன் இலக்கியங்களின் திறன்களை மட்டும் ஆராய்பவ னல்ல. அவற்றிலுள்ள குறைகளையும் தக்க சான்றுகளுடன் எடுத்துக் காட்டவல்லவன். பேராசிரியர் செல்வநாயகம் தேசிக விநாயகம் பிள்ளை பாடிய "கடல்" என்னும் கவிதையினை எடுத்துப் பகுப்பாய்வு செய்து, அதனிடையே காணப்படும் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டியுள்ளார். அவர் எழுதிய ‘கடல்" (இளங்கதிர், மலர் 9, பக். 80.86, 1956-57) என் னுங் கட்டுரையிலேயே இத்தகையதிறனுய்வினை மேற்கொண்டுள்ளார். குழந்தைக்காக எழுதப்பட்ட இப்பாடலைப் படிக்கும் போது, தே.வி.தன் னைக் குழந்தையாகவே பாவனை பண்ணிப் பாடவில்லை என்பதற்கு அப் பாடலிலிருந்தே பல ஆதாரங்கள் காட்டப்படுகின்றன.

கம்பனிலேயிருந்து இரண்டு பாடல்களை எடுத்துப் பகுப்பாய்வு செய்து,அவற்றின் நலன்களை "கண்ணுற்றன் வாலி'(இளங்கதிர் மலர் 11 பக் 48-154,1958-59) என்னுங் கட்டுரையாகவும், கப பணில் ஒருபாட்டு? (இளங்கதிர், மலர் 16, பக். 109-113. 1963-64) என்னும் கட்டுரையா கவும் எழுதியுள்ளார். இராம பாணத்தால் வீழ்ந்து விட்ட வாலி முன்
னர் இராமன் வருகின்ற போது, வாலியினுடைய உ ண ர் வு களைக் கம்பன் ‘கண்ணுற்ருன் வாலி' என்னும் செய்யுள் மூலம் எப்படிப் புலப்படுத்துகிருன் என்பதை முதற் கட்டுரை விவரிக்
கின்றது. "இச்செய்யுளில் ம ரு ட் கை, வெகுளி, இளிவரல் ஆகிய சுவைகள் மு  ைற யே அ  ைமந்திரு த் த ல் T கண்டு இன்புறற்பாலது. இவ்வாறு வாலியில் மனே பாவத்தையும் அவனிடத்தே தோன்றிய மூவகை மெய்ப்பாடுகளையும் ஒரு பாட்டிலே தெளிவுறக் காட்டும் ஆற்றல் கம்பன் முதலான பெரும் புலவர்களுக்குத் தான் உண்டு’ எனக் கட்டுரையை முடித்து வைக்கிருர், சுந்தரகாண்டத்தில் அசோகவனத்திலிருந்த சீதை முன் அனுமான் தோன்றிப் போது சீதைக் கேற்பட்ட ஐயத்தினை உணர்த்துவதாக,
**அரக்கனே ஆக வேறேர் அமரனே ஆக அன்றிக் குரக்கினத் தொருவனே தான் ஆகுக, கொடுமையாக இரக்கமேயாக, வந்திங் கெம் பிரான் நாமஞ் சொல்லி உருக்கின னுணர்வைத் தந்தானுயிர் இதினுதவி யுண்டோ"
என்னும் பாடலைக் கம்பன் அமைக்கிருன். இப்பாடலின் திறன்களைநன்கு ஆராய்ந்து கூறும் கட்டுரையாகக் கம்பனிலே ஒரு பாட்டு" என்னுங் கட் டுரை அமைகின்றது. கம்பன் “கொடுமையாக", "இரக்கமேயாக’ என் னும் இரு தொடர்களை உபயோகித்ததின் உட்பொருள் கட்டுரையிலே தெளிவுறுத்தப்படுகின்றது. ‘அரக்கனே குரங்கு வடிவில் வந்து என்னு டைய இறப்பினைத் தடுப்பதென்முல், அவனுடைய நோக்கம் வேறுபட் டதே. அது கொடுமையானது. தேவர்க்ளில் ஒருவன் இவ்வாறு வந்து நான் இறப்பதைத் தடுப்பானுயின், அது தங்களுடைய உய்வுக்காகவே இருக்கும், எனவே அதுவும் கொடுமையானதே. வானரங்களில் ஒருவன் தான் வந்து இச்செயல் செய்தானயின் அது உண்மையில் இரக்கத்தின லேயாகும்" என்று சீதை எண்ணுவதாக இப்பாடலினடிப்படையிலே பேராசிரியர் இக்கட்டுரையிலே கூறியிருப்பது நயத்தற்குரியது.
பேராசிரியருடைய திறனுய்வுப் போக்கினையும் இலக்கியங்களிலே அவருக்கிருந்த ஈடுபாட்டினையும், குறை காணின் அவற்றைத் தக்க ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டும் தன்மையினையும் "புறநானுாற்றில் ஒரு பாட்டு" (இளங்கதிர், மலர் 12, பக். 84-88, 1959-60) என்னுங் கட்டுரை எடுத்துக் காட்டுகின்றது, ‘களிறு கடை இயதாள், கழலுரீஇய திருந்தடி.." எனத் தொடங்கும் புற நானூற்றுப் பாடலே இக்
س-- 7 I -س

Page 15
கட்டுரையில் பகுப்பாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது. பொருளே இலக்கிய வடிவத்தை நிச்சயிக்கின்றது என்னும் உண்மை இக்கட்டுரை யாலே தெளிவுறுத்தப்படுகின்றது. சங்கப் புலவர்கள் அ க வ ற் பாவினையும் வஞ்சிப் பாவினையும் தாம் எடுத்துக் கொ ண் ட  ெப ா ரு வினை ப் புலப்படுத்தப் பொ ரு த் த மு ற உபயோ கித்துள்ளனர் எ ன் ப  ைத இப்பாடலிலே இடம் பெறு ம் அக வல், வஞ்சியடிகளையே சான்ருகக் காட்டி விளக்கங் கொடுக்கின்றர். இப்பாடலுக்கு உரை எழுதியுள்ளார் உச்சி மேற் புலவர் கொள் நச்சி ஞர்க்கினியர். அவ்வுரையிலேயே குறை காணுகின்றது செல்வநாயகத் தின் நக்கீரப்பார்வை. மன்னனுடைய வீரச் சிறப்பினைக் கூறுகின்ற இப் பாடலிலே “மா மறுத்த மலர் மார்பு" என்னும் அடி இடம் பெறுகின் றது. இப்பாடலடிக்கு உரை கூறிய நச்சினர்க்கினியர் "திருமகள் பிறர் மார்பை மறுத்தற்கு ஏதுவாகிய பரந்த மார்பு’ எனப்பொருள் கொண் டுள்ளார். இது தவருண உரை எனக்கொள்ளும் பேராசிரியர் செல்வ நாயகம், மன்னன் மார்பிலே திருமகளுறைவதாகக் கூறும் மரபு பிற் காலத்தது என்றும், வீர மன்னனுடைய மார்பு பற்றிக்கூறும்போது இப் படிக் கூறுவது பொருத்தமில்லை என்றும் வாதிடுவார். அவர் இப்பாட லடிக்குக் கொள்ளும் பொருள் மிகப் பொருத்தமாக அமைவதைக்காண லாம். "மா" என்ருல் 'திருமகள்" என நச்சினர்க்கினியர் பொருள் கொள்ள வில் நாண்" என்று பேராசிரியர் பொருள் கொள்கின்ருர், வீரஞகிய அம் மன்னன் எண்ணிலாத் தடவைகள் வில்லை வளைத்து பகை வர் மேல் அம்புகள் தொடுத்திருப்பான். அவ்வறு வில்லை வளைக்கின்ற போது, அதன் நாண் அவனுடைய மார்பிலே உராய்ந்து செல்லும், மலர் போன்றது அவனுடைய மார்பு; எனவே அந்நாண் உராய்வு அம் மார்பிலே மறுவினை ஏற்படுத்துகின்றது என்று ‘மா மறுத்த மலர்மார்பு' என்னும் செய்யுளடிக்குப் புத்துரை வகுத்துள்ளமை கண்டு இன்புறற் பாலது.
தமிழில் எழுந்த இலக்கியங்களிலே காணப்படும் இலக்கிய மரபினைத் தன்னுடைய இலக்கிய வரலாற்று நூலிலே சுருக்கமாகக் குறிப்பிட்டுள் ளார். அவற்றுட் சிலவற்றை விவரித்து விளக்கமாகத் தனித்தனிக் கட் டுரைகளாக எழுதியுள்ளார். சங்க இலக்கிய மரபினை "Tradition in Early Tamil Poetry” (University of Ceylon Review Vol. XXIV, 142, 1966, PP. 106-114) என்னுங் கட்டுரை விளக்குகின்றது. சங்க இலக்கியத் திணைக் கோட்பாடு பற்றியும் இக்கட்டுரையே முதன் முத லாகப் புதியதொரு கருத்தினை முன் வைத்ததெனலாம்.
The tradition of having five divisions in akam or love originated at a time when people lived in all the five regions, Paalai, Mullui, Kutinji, Marutham and Neithal in the Tamil land. During
- 18 -

the time of Kapilar and Paranar the people of Paalai had moved into the more fertile regions of Kutinji and Mullai for permanent Settlement, and therefore, the theme of separation had to be modified to fit into the new pattern of society that occupied only four of the five natural regions. Therefore, the paalaiththinai or Separation in love, which was meant earlier for the people of the Paalai region was considered appropriate during the time of Kapilar and Paranar for the men of the hilly tracks who had to go to distant places through the arid Paalai region in search of their livelihood. This change in paalaith thinai had occured by the time of Kapilar and Paranar. This is only an example to show how the early tradition of love poety was changing as the life of people was changing in the early days.
என அவர் எழுதியுள்ள பகுதியினைப் படித்துப் பார்ப்பின் சங்க இலக்கிய கத்திணை மரபு எப்படி மக்கள் வாழ்க்கைக்கேற்ப மாறி வந்துள்ளது என்பதை அறியக்கூடியதாயுள்ளது. இத்தகைய மரப் மாற்றத்தினை ஒழுங்காக அறிந்து கொள்வதற்குத் தற்போது எம்மிடமுள்ள எட்டுத் தொகை பத்துப்பாட்டு நூல்களிலேயுள்ள செய்யுட்கள் வரலாற்றடிப் படையிலே புதிதாக நிரைப்படுத்த வேண்டும் என்பதை Therefore, this change in the tradition and the stages by which it took place cun not be traced historically as long as the poems in the eight Anthologies and the ten idylls are not arranged in their chrono. logical order. Until Tamil scholars take to this a spect of study seriously, the history of early Tamil poetry cannot be traced என்னும் மேற்காட்டிய கட்டுரைப் பகுதியிலே குறிப்பிட்டுள்ளார். துர திர்ஷ்டவசமாகப் பேராசிரியர் குறிப்பிட்டஇப்பணி இன்னும் முற்றுப் பெறவில்லை. புறநானூறு என்னும் தொகுதியிலே காணப்படும் பாடல்கள் எல்லாம் ஒரேகாலத்தவை எனக் கூறமுடியாதுள்ளது. நெல்லரிசிப் பண் பாட்டுக்கு முன்னரே எழுந்த பாடல்களும் இத்தொகை நூலிலே இடம் பெற்றுள்ளன என்பதை இவ்விடத்திலே குறிப்பிட விரும்புகின்றே ன.
தமிழிலக்கியங்களிலே பக்திப் பாடல்கள் சிறப்பான இடத்தைப் பெறுகின்றன. இப் பாடல்களிலே காணப்படும் இலக்கி ப மரபினையும், தமிழிலக்கிய மரபுப் பின்னணியிலே இப்பாடல்கள் வகிக்கும் இடத்தினை யும் "தமிழிலக்கியமும் பக்திப்பாடல்களும்’ (கணேசையர் நினைவுமலர் 1960) என்னும் கட்டுரை விபரிக்கின்றது. ',
حـــــــ 19 سس۔

Page 16
7. Աpւգ6ւյ6ՓՄ
இலங்கைப் பல்கலைக்கழகம் இரண்டு தமிழ்ப் போக்குகளை 2. (T5 வாக்கியது. ஒன்று திராவிட மொழியியல், நாட்டாரியல், இலக்கணம், நாடகம் என்னும் துறைகள் தழுவிய பேராஓரிய கணபதிப்பிள்ஜா போக்கு. மற்றையது இலக்கிய விமரிசனம், நடையியல் என்னும் துறை கள் தழுவிய பேராசிரியர் செல்வநாயகம் போக்கு. ஈழத்திலே தலை யாய விமரிசகர்களை உருவாக்கிய ஆசான் இவராகும். ஆணுல், g ராவது இதுவரை தம்முடைய இலக்கியத் திறனய்வுப் பயிற்சக்கு இவர் காரணமாயிருந்தாரென்று எங்கேனும் தெளிவாகக் கூறியதாயில்லை. இது விசனிக்கத்தக்கதே. தமிழ் இலக்கிய வரலாறு என் ருெரு நூலை எழுதி ஈழத்துக்குப் புகழ்தேடித் தந்தவர் ‘இலங்சைப் பல்கலைக்கழகத் திலும் கேரளப் பல்கலைக்கழகத்திலும்தான் அறிவியல்ரீதியான தமி ழிலக்கிய ஆய்வுகள் நடைபெறுகின்றன" என்று 1968ல் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி ம7 நாட்டிலே கமில் ஸ்வெலெபில் குறிப்பிட் டார். அப்படி அவர் குறிப்பிட்ட அறிவியல்ரீதியான தமிழிலக்கிய ஆாாய்ச்சி இலங்கைப் பல்கலைக் கழகத்திலே நடைபெறுவதற்குக் காரணமாயிருந்தவர்களுள் பேராசிரியர் செல்வநாயகமும் ஒருவ ராவார். அவர் செய்த இலக்கியப் பணி எல்லோராலும் நினைவுகொள்ள வேண்டியது. மறந்தவர்களுக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கம் இந்நினை வுரை மூலம் நினைவூட்டுகின்றது.
உசாத் துணைகள்
1. சிவத்தம்பி கார்த்திகேசு, தமிழில் இலக்கிய வரலாறு, நியூசெஞ்சுரி
புக் ஹவுஸ், சென்னை, 1988, 2. மனேன் மணி சண்முகதாஸ் சி. வை. தாமோதரம்பிள்ளை.ஓர் ஆய்வு"
முத்தமிழ் வெளியீட்டுக் கழகம், யாழ்ப்பாணம், 1983 3. முருகையன், இ. , 'கல்வியியல் நோக்கில் நாவலர்" . நாவலர் நூற் றண்டு மலர் பூரீலழரீ ஆறுமுக நாவலர் சபை, யாழ்ப்பாணம், 1979 Luis. Il 7-26.
Sivathamby, K., “Vyapuripillai's Dating of Cilappathikaram””
Vidyoday a Journal of Arts. Science and Letters, Vol. 5 Nos. 1&2, 1972-76, p. p. 1-12.
ܚ- 20 ܘܚ


Page 17
--

(,
|- " ( -LL