கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தடங்கள் (மர்ஹும் ஏ. எல். அப்துல் மஜீது நினைவிதழ்)

Page 1
மர்ஹும் ஏ.எல்
 


Page 2


Page 3

'மர்ஹ"ம் ஏ.எல்.அப்துல் மஜீது அவர்களின்
15 வருட நினைவிதழ்
முற்போக்கு வாலிபர் மன்றம்,
கிண்ணிய
13. 11. 2002
நல்ல காரியங்கள் செய்தவர்கள் மரணத்திற்குஅஞ்ச வேண்டியதில்லை. இம்மைக்கும் மறுமைக்கும் பாலம் போன்றது. எனவே இறை சந்திப்புக்கு வழி வகுக்கும் மரணத்தை எப்படி வெறுக்க முடியும்.
அலி - (ரலி "மகனுக்கு"

Page 4
- - - - * மன்ஹாம் அப்துல் மஜீது அவர்களின் 15வது நினைவிதழ்
* இலவச விநியோகம்
* I Î J geroii 510
* முதல் பதிப்பு: நவம்பர் 2002
* மறு பதிப்பு டிசெம்பர் 2002
* அச்சிட்டோர் - ரெயின்போ நிருக்கோணமலை * முகப்போவியம்- அருள் பாஸ்கரன் ஆலங்கேணி * தொகுப்பு - கனகச ை - தேவகடாட்சம்
4523 ஆசிரிய சதுக்கம் - 2 வர்மலை, திருக்கோனமலை தொபே - 02-21423 * உரிமை - முற்போக்கு வாலிபர் மன்றம் கின்ைனியா திருக்கோணமலை மாவட்டம். இலங்கை
... . . . ہی۔ --- -། ན་
தக்கார் தகவிலர் என்பது அவர் அவர்
- - - r /్ళ}_!! எசசததால H|| 60IILILIHLD
(குறள்)
நினைவு தின ஏற்பாட்டுக் குழு ஜண்ட் ஏ.எச். அப்துல்றசீத் ஜனாட் ஏ.எம்.எம். இiளப்ாத்
fall ஏ.டபிள்யூ. எம். ஜிப்ரி IIL ரே, எளi க்ாம். நனப்ாள் regi52II II II ஜே.எம். இஸ்மத் ହିଂସ୍ରୋତାଃ ।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।। ஏ.எஸ்எம் தெளராத் ፳፲፬i(UIIII ] ஏ.கேனர் பாஜில் குத்துளi
-2-

மண்ணில்
15
நாவல்லான் நாட்டு நலங்காணுஞ் சேவையினான்
|மாவள்ளல் அன்பால் மதிப்புயர்ந்தோன் - நோவில்லா
அங்க அழைப்புடையான் அப்துல் மஜீதுதென்னும் ந பர் தலைவர் இவர்.
நன்றி - தியாகி 'ர்ெ

Page 5

m: (வாசலிலே 60 நிமிடங்கள்)
எல்லாப்புகழும் இறைவனுக்கு
பெருமிதம் கொள்கிறேன்!
பதினைந்து ஆண்டுகள் மறைந்தோடிய பின்னரும் மறைந்த என் தந்தையின் நினைவுகள் உயிரோடு வாழ்கிறதே ! கிடைத்தற்கரிய பேறு இது. என் தந்தை மக்களின் ஒருவனாக, மக்களின் வழிகாட்டியாக மக்கள் பெரும் தலைவனாக வாழ்ந்திருந்த காலங்களை Ló Gü UTTibéé)(336öT. இந்த வரலாற்று நாயகனுக்கு தனயனாக வாய்த்ததை உணர்ந்து அல்லாஹற்விற்கு நன்றி கூறுகிறேன். கிண்ணியா முற்போக்கு வாலிபர் மன்றம் எடுத்த அதிரடி முயற்சிக்கு நன்றிகள். இவ்வேட்டை தொகுத்துத் தந்த அன்புமிகு கனகசபை தேவகடாட்சம் அவர்களுடன், என் தந்தையாரோடு மிக நெருக்கமாக பழகிய பலர் இந்நாலில் சேர்ந்திருப்பது கண்டு மகிழ்வடைகிறேன். என் குடும்பத்தின் சார்பில் நன்றியும் கூறுகிறேன். சுவர்க்கங்களின் மேலான சுவர்க்கமான "ஜென்னத்துல் பிள் தெளஸில்' என் தந்தையை அல்லாஹற் நுழையச் செய்வானாக!
நாரே தக்பீர்- அல்லாஹ0 அக்பர்
என்றும் உங்களுடன் நஜீப் அப்துல் மஜீது
(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருக்கோணமலை & தபால் தொலைத் தொடர்புகள் பிரதி அமைச்சர்)
-3-

Page 6
திருக்கோணமலை மாவட்டத்தின் முதல் முஸ்லீம் பட்டதாரியாக!
-4-
 

(தொகுத்துச் சூடுகிறேன்' தொகுப்பாசிரியர்
கனகசபை - தேவகடாட்சம்
விடலைப் பருவத்தில் துடுக்காக அரசியல் பேசி துள்ளித் திரிந்த போது நான் சற்றேனும் எண்ணவில்லை.
பாசத்திற்கும் பெருமதிப்புக்கும் உரிய அரசியல் ஞானி (மர்கூம்) அமரர் அப்துல் மஜீது அவர்கள் இத்தனை விரைவாக எம்மை விட்டு அகலுவார் என்றோ, அன்னாரின் 15வது நினைவு வரலாற்றை நான் தொகுக்க வேண்டிய நியதி ஏற்படும் என்றோ!'
கிண்ணியா முற்போக்கு வாலிப மன்றத்தினர் எனை அணுகி இவ் ஏட்டை தொகுத்துத் தருமாறு அன்போடு கேட்ட போது பின்னடித்தேன்.
உள்ளுர விருப்பம் கொண்டாலும் அன்னாரது முழுக் கொள்கைகளையும், தீர்க்கதரிசனங்களையும் என்னல் பூரணமாய் தர முடியாது போய் விடுமோ என்ற அச்சம் தான் பிரதான காரணமாயிருந்தது.
மன்றத்தார் என்னை விடுவதாயில்லை. மறுக்கவும் என்னால் முடியவில்லை. இறைநாமத்தில் சுமையை சுமத்தி விட்டு, காலத்தின் கட்டளையை, காலத்தின் தேவை கருதி எழுது கோலை குற்ற ஆரம்பித்து விட்டேன்.
இதை ஒரு காவியமாய் கொள்ள வேண்டாம். ஆனால் பெரு நதிக்கான சிறு கிளை. அவர் வாழ்ந்த காலங்கள் ஒரு வரலாறு. அமரரின் தீர்க்கதரிசன எண்ணம் முழுவதிலும் தமிழ் - முஸ்லீம் நல் உறவு காலத்தில் அழியாது பேணிக் காப்பாற்றப் பட வேண்டுமென வியாபித்திருந்ததை,
இச்சிறு நூல் கட்டியம் கூறி நிற்கிறது. ஒரு ஏங்கும் ஆத்மாவின் உள்ளத்து ஆதங்கம் இங்கே ஓங்கி ஒலிக்கிறது.
இனங்களிடையே “ஒற்றுமை! ஒற்றுமை” என அறைகூவி அழைப்பு விடுக்கின்றது.
-5-

Page 7
அதையே நாம் கட்டிக் காக்க வேண்டும்
இச்சிறு ஏட்டில் தவறுகள் நேரிடலாம். பலதும் விடுபடலாம்! சினம் தணியுமாறு கேட்டு நிற்கிறேன். ஆனால் ஒரு உண்மை!
இவ் ஏடு, எதிர்கால காவிய நதிக்கு அணிசேர்க்கும் ஒருபுதிய ஊற்று!
இது முழங்கும் சங்கு ஒலிக்கும்மணி! சோதனை மிகு இப் பெரும் பணிக்காய் நெஞ்சுறுதியோடு எனைத் தேர்ந்து கொண்ட மன்றத்தினரை நெஞ்சமதில் பதிக்கிறேன்.
என் தமிழ் அன்னை தந்த மலர் கொண்டு தொகுக்கிறேன். ஆழி நடுவே அசையா சிகர மென சாசுவாதமாய் நின்றிருந்த 'அப்துல் மஜீது’ எனும் மரணத்தை வென்ற மானிடனுக்கு
நினைவின் நிழலாக இவ் ஆரமதை சாத்துகிறேன். நான் பெற்ற தமிழ், பதித்த அவர் தடங்கள் காட்டிச் செல்வதை உவகையுடன் சொர்க்கபதியில் அமர்ந்தவாறே மகிழ்வுற எனை வாழ்த்துவார் என்பதில் ஐயமில்லை. புகழ் யாவும் இறைவனுக்குக் காணிக்கையாக்குகின்றேன்!
நன்றி
அரசியல் தலைமையை நாம் தெரிவு செய்ய மறுத்தால் எதிர்காலத்தில் மடை திறந்து பாயும் இரத்த ஆற்றை கட்டுப்படுத்த முடியாது போய்விடும். (மர்ஹம் மஜீது அவர்களின் 77ம் ஆண்டு தேர்தல் )
/ )கருப் பொருள் •ر ܠ
s
s இனங்களை ஒன்றுபடுத்தும் ஒரு பொருத்தமான
-6-

Rog Hv
$టీ ** } My No.
မြွ} ጸfiጂ ጳጰጃ
ļ }
:lttptYtაuk 选、
fri எம். எச். மொஹொமட் டி. *
M.H. Mohamed MP,
" බස්නාහිර පුරද්ශ සංවර්ධන අමාතන ses
9: } 然{。核}}9 மேற்குப் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் திகதி }
INSER OF WESTERN REGION DEWAERONT Xafi
friday, November 08, 2002 MeSSage
I have great pleasure in sending you a Message to the Magazine to be published on the 15th Death Anniversary of Marhoom A.L. Majeed ( Former MP for Mutur and Deputy Minister for Broadcasting & Information).
I have known Marhoom Majeed for a considerable period of time. He was a very amiable and friendly person, who was always conscious about the needs of the people he represented.
I am happy that the progressive youth of Kinniya have taken the trouble to commemorate his Death Anniversary.
With the blessings of Almighty Allah I wish the function all success,
/ z ・ベ-一才 W.H. Mohorned M.P. Minister of Western Region Development

Page 8
s வாழ்த்துச் செய்தி)
5டந்த 1959ம்ஆண்டு மாஹம் ஏ. எல். அப்துல் மஜீது அவர்களினால் உருவாக்கப்பட்ட முற்போக்கு வாலிபர் மன்றம், அன்னாரின் 15ம் வருட நினைவு தினத்தை முன்னிட்டு வெளியிடவுள்ள நினைவு மலருக்கு செய்தியை வழங்கி வைப்பதில் நான் பெருமிதம் கொள்வதோடு, நன்றியுணர்வோடு தொழிற்பட்டு வருகின்ற இம் மன்றத்தாருக்கு எனது இதய பூர்வமாக நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நான் மர்ஹ"ம் அப்துல் மஜீது அவர்களை கடந்த 1960ம் ஆண்டு மார்ச் மார்ச் மாதம் முதன் முதலாகச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தேன். இதனைத் தொடர்ந்து அவர் மூதுார் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான பின்னர் அவருடனான தொடர்பு வலுவடையத் தொடங்கியது. இக்கால கட்டத்தில் தான் அவரும் நானும் இலங்கை வாழ் முஸ்லிம்களின் தலைவராகிய முன்னாள் கல்வியமைச்சர் கலாநிதி பதியுதீன் மஉற்முத் அவர்களைச் சந்தித்து, இந்நாட்டு முஸ்லிம்களின் நலன் கருதி ஆற்றப்பட வேண்டிய சேவைகள் பற்றி கலந்துரையாடுவோம். மர்ஹ"ம் அப்துல் மஜீது அவர்களின் இளமைத் துடிப்பும் முஸ்லீம் சமூகத்தின் உயர்ச்சிக்காக பணிகள் பல செய்ய வேண்டுமென்ற அவரது எண்ணமும் கலாநிதி பதியுதீன் மஉற்மூத் அவர்களின் மனதில் ஆழமாகப் பதியவே மர்ஹ"ம் அப்துல் மஜித்தை அழைத்து உரையாடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.
மர்ஹ"ம் அப்துல் மஜீது அவர்கள் தான் பதவி வகித்த காலப்பகுதியில் தனது தொகுதி மக்களுக்காக மட்டுமல்ல இலங்கை வாழ் அனைத்து மக்களுக்காகவும் பணி புரிந்தார். இவர் இம்மண்ணில் வாழ்ந்த காலப்பகுதியில் தீர்க்கதரிசனமாக எதிர் காலத்தில் நடைபெறக்கூடிய பல விடயங்கள் பற்றி தெரிவித்துள்ள கருத்துக்கள் இன்று என்னை வியப்புக்குள் ஆழ்த்துகின்றது. இந் நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு ஏதும் பிரச்சனைகள் என்றால் அங்கே நாம் மூதுார் மஜீத்தைத் தவறாது காணலாம்.
கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்கள், சகோதர தமிழ் இனத்தவர்களுடன் இரண்டறக் கலந்தே வாழ வேண்டுமென்றும்,
 

அவ்வாறில்லாவிட்டால் எமது உரிமைகளைப் பாதுகாக்க முடியாதென்றும் அவர் அன்றே குறிப்பிட்டார். மாஹம் அப்துல் மஜூது அவர் கள் அவரது கடைசிக் காலத் தரில் இஸ்லாமியப்பணிகளில் ஈடுபட்டு, கிண்ணியாவில் இஸ்லாமிய கலாசார நிலையமொன்றை நிறுவி, இங்கிருந்தே முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்கெல்லாம் மார்க்க ரீதியாக தீர்வு காணப்பட வேண்டுமென விரும்பினார். அது நிறைவேற முன்னே அவர் எம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.
மாஹம் அப்துல் மஜீது போன்ற சமுதாய உணர்வுமிக்க தலைவர்கள் இல்லாமல் போனதன் காரணமாக இன்று எம் சமூகத்தில் 'தடியெடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரன்’ என்ற நிலைக்கு முஸ்லிம்களின் தலைமைத்துவம் ஆளாக்கப்பட்டு விட்டது.
மர்ஹம் அப்துல் மஜீது அவர்களைப் பற்றியும் அவர் சமூகத்திற்காகச் செய்த பணிகள் பற்றியும் எழுதுவதென்றால் பக்கம் பக்கமாக எழுதலாம். அவ்வாறு எழுத காலம் தராததனால் ஒரு விடயத்தை மாத்திரம் கூறி முடிக்க விரும்புகின்றேன்.
முற்போக்கு வாலிபர் மன்றத்தினர் அன்னாருக்காக வருடாந்தம் நினைவு மலரை வெளியிடுவதோடு நின்று விடாது அவரது வாழ்க்கை வரலாற்றையும், அவரால் முஸ்லிம் சமூகத்திற்காகவும், நாட்டுக்காகவும் ஆற்றப்பட்ட சேவைகளையும் எதிர்கால சமூகத்தவர்களின் நலன் கருதி நுாலுருவில் ஆவணப்படுத்த முயற்சிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.
அல்ஹம்துலில்லாஹ்
எஸ். அலவி மெளலானா ஆளுனர், மேல் மாகாணம்

Page 9
கனவிலும் - நனவிலும் எங்கள் கல்புதனில் நின்றிலங்கும் ஓவியமே! கல்லறை எனும் கபுறறையில் -
கண்மூடித்துாங்குகிறாய் - ഉ_6ിങ്ങിങ്ങ് மண்மூடிக் கொண்டாலும் மன்னவனே, மஜிதே - எங்கள்
மனக் கதவு என்றும் மூடவில்லை.
மரண முற்றிர் உண்மைமக்கள் உணர்வீர் என்று - முன்னர் மலர் போன்ற வாயாலே மணிமொழிகள் பகன்றீர்! மிகப்பெரிய உண்மை.
ஓயாமல் எமக்குழைத்த உத்தமனே! எம்மைவிடுத்து பெரும்பயணத்தை ஏன்? தொடர்ந்தாய் உன் கண்ணொளியில் கதகதப்பில்
தலை நிமிர்ந்தோமே! எம் கண்களெல்லாம்
குளமாக
ஏன்? மாற்றி விட்டாய்.
நிழல் நீதான் என்றிருந்தோம் நீ கடல் நிலத்துக்குள்
முதுார் ஜெஸ்மின் மகனுாப்
நிழல் தேடப் போய் விட்டாய். அன்று
எம் கொடுமைக்கு முடிவு
35606TLITu
இன்று
எம்மைக் கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்? எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்பாயே! இதயம் தாங்க ஏது தலைவா? ஈழ மணித் திருநாட்டில் எங்கள் இதயதீபம் அணைந்து விட்டது. இதய கீதம் முடிந்து விட்டது. எங்கள் இல்லத்து விளக்கும் அணைந்து விட்டது. உள்ளத்து ஓவியம் உறங்கிக் கொண்டது.
கதியற்ற எங்கள் கலங்கரை விளக்கு கடலுக்குள் வீழ்ந்து விட்டது கண்ணும் அழுதது அந்த மண்ணும்
3)Kg535)
இந்த முத்துார் மண்ணும் அழுகிறது
உனை நினைத்து.
ஓ! இலட்சிய ()ேராசாவே என்றும் நீ எம்மிடத்தில் வாழத்தான் செய்வாய்.
-10
 

உன் சேவைகள்
என்றும்சாட்சி சொல்லத்தான் செய்யும். எங்கள் உறவோடு உதிரத்தோடும் உயிர் மூச்சோடும் கலந்து விட்டவனே!
உந்தன்
உடன் பிறப்புக்களாய் நாங்கள் இருக்கின்றோம்
உன் பாதச்சுவடுகளில் என்றும்
எங்கள் பணி தொடரும்.
நிலவு கூட நிரந்தரமாய் உறங்குவதில்லை. தலைவா மஜிட் நீயும் நிலாவாகத்தான் வாழ்ந்தாய். இனி எம் மனவானத்தில் நீ நிரந்தரமாகவே ஒளி வீசிக் கொண்டிருப்பாய்!.
“இலங்கையில் பெரும்பான்மை மக்களின் ஆதரவின்றி சிறுபான்மையான, தமிழ், முஸ்லீம் மக்கள் தங்கள்
மூலாதார உரிமைகளைப் பாதுகாக்க முடியாது. அதேவேளையில் சிறு பான்மை மக்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் இன்றிப் பெரும்பான்மை மக்கள் இந்நாட்டில் ஒரு நிலையான அரசாங்கத்தை அமைக்க முடியாது.”
(நன்றி - நமது திட்டம். 1970)
-அப்துல் மஜீது
-11

Page 10
1976-11-18ல் பாராளுமன்றத்தில் மர்ஹ"ம் மஜித் அவர்கள் ஆற்றிய உரையில் சிந்திய சில முத்துக்கள்!
இந்நாட்டின் விடுதலைக்கு முஸ்லிம்களும் போராடினர்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்நாட்டுக்கு வருகை தந்தவர்கள் அராபியர்கள். அவர்கள் இந்த நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கோடு இங்குவரவில்லை. இங்கு வந்த அவர்கள் இந்நாட்டில் உள்ள சிங்கள மக்களோடு அமைச்சரவையில் முக்கிய பதவிகளை வகித்து , சிங்கள மக்களோடு போர் முனைக் குத் தலைமை தாங் கரி, போர்த்துக்கேயரும் , டச்சுக்காரரும் , இந்நாட்டைக் கைப்பற்ற முயன்ற போதெல்லாம் சிங்கள மக்களோடு ஐக்கியப்பட்டு தேசிய விடுதலைக்குப் போராடினார்கள் என்பதை இங்கு நான் நினைவூட்ட விரும்புகின்றேன். அவர்கள் சிங்கள மக்களோடும், சிங்கள மன் னர் களோடும் தேசிய ரீதியாக ஐக் கரியப் பட்டு ஏகாதிபத்தியவாதிகளை எதிர்த்தார்கள்.
The one and minority community which has so far not been suspected by the majority community is Muslim community.
இந்நாட்டில் வாழ்கின்ற பெரும்பான்மை இனமான சிங்கள பெளத்த மக்களினால் சந்தேகிக் கப்படாத ஒரேயொரு சிறுபான்மைச் சமுதாயம் இருக்குமானால் அதுதான் முஸ்லிம் சமுதாயம் என்று இங்கு நான் வற்புறுத்திக் கூற விரும்புகின்றேன்.
இந்தச் சமுதாயம் இந்நாட்டின் தேசிய எழுச்சியில் பங்குபற்றியிருக்கின்றது. ஆனால் துரதிஷ்டவசமாக இந்தச் சமுதாயத்தில் தோன்றிய அரசியல்வாதிகள் இந்த முஸ்லிம் சமுதாயத்ததை காலப்போக்கில் கைப்பொம்மைகளாக மாற்றி மொழியற்ற ஒரு சமுதாயமாக, அரசியலை சிந்திக்காத ஒரு சமுதாயமாக ஆக்கிவிட்டிருந்தனர்.
-12

முஸ்லிம்களின் தாய் மொழியும் போதனா மொழியும் தமிழே
1960ம் ஆண்டிலிருந்து காலஞ்சென்ற பிரதமர் பண்டாரநாயக்கா அவர்களின் விடுதலைப் போராட்டத்துக்குப் பின் இந்தச் சமுதாயம் ஒரு சமுதாயமாகக் கணிக்கக்கூடிய அளவுக்கு சகல அந்தஸ்துக்களையும் பெற்று மாற்றம் காண ஆரம்பித்தது. 1960ம் ஆண்டில் முஸ்லிம் சமுதாயத்தில் அரசியல் தலைவர்களாக இருந்தவர்கள் தீர்க்கதரிசனமாக ஒரு முடிவுக்கு வரமுடியாத சூழலில் இருந்த போதிலும் கூட இந்நாட்டில் வாழும் முஸ்லிம் களின் மொழி தமிழ் , அதுவே அவர்களடைய போதனா மொழியாகவும் இருக்கவேண்டும் என்ற போராட்டத்தை நடத்தினோம் . இன்று அது ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. ஆகையால் தேசிய கல்வித் திட்டத்திலும் இந்நாட்டு முஸ்லிம்களின் தாய் மொழியான தமிழும் போதனா மொழியாக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலுள்ள எமது சிறுபான்மை இனம் மற்றொரு தேசிய சிறுபான்மை இனத்தோடு ஜக்கியப்பட வேண்டிய கால கட்டத்துக்கு வந்திருக்கின்றது என்பதைப் பகிரங்கமாகக் கூற ஆசைப்படுகின்றேன்.
முஸ்லிம்கள் இந்நாட்டில் சிறுபான்மையினர் ஆனால் உலகில் பெரும்பான்மையினர்.
தமிழரசுக் கட்சியினர் இந்நாட்டைப் பிரிக்க வேண்டும் என கோருகிறார்கள். அதற்கு காரணம், தமிழ்ச் சமுதாயம் அரசியல் விழிப்புப் பெற்று, இந்நாட்டின் பெரும்பான்மை இனத்தவர்கள் அனுபவிக்கும் உரிமைகளைப் போலவே தாங்களும் உரிமைகளை அனுபவித்து வாழ வேண்டும் என விரும்புவதே சம உரிமைப் போராட்டம் நடத்தி, அந்தப் போராட் டம் வெற்றி பெறாததினால் அந்த விரக்தி மனப்பான்மையினால் தான் ஜக்கிய இலங்கைக்கு மாறாக தனி நாடு வேண்டும் என்று கோருகின்றார்கள். இந்நாட்டில் வாழும் முஸ்லிம் சமுதாயம் என்ன செய்கிறது? இதைக் கேட்க
-13

Page 11
ஆசைப்படுகின்றேன் . இந்நாட்டின் முஸ்லிம் சமுதாயம்
இலங்கையில் சிறுபான்மையாக இருந்தாலும் கூட கலாசார ரீதியாக, மத ரீதியாக அவதானிக்கும் போது உலகில்
பெரும்பான்மையாக இருப்பதை நான் இங்கு சுட்டிக்காட்டாமல், இருக்க முடியாது. இந்தச் சமுதாயம் இந் நாட்டில்
அரசியல்மயப்பட வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.
இந்நாட்டு முஸ்லிம்கள் இரண்டாம்தரப் பிரஜைகளல்ல
அரசியல்வாதிகள் என்ன செய்கிறார்கள்? அரசியல் சில்லறைகள் இந்நாட்டில் மறுபடியும் ஒரு வகுப்புக்கலவரத்ததை1958ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தைப் போன்று -சிங்கள முஸ்லிம் மக்களிடையே ஏற்படுத்தத வேண்டும் என்ற நோக்கோடு மாணவர்களை “தம் பி அப்பட்ட எப்பா’ என்று கூற வைத்திருக்கின்றார்கள். பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் துக் ககரமானவை என்பதை ஒத்துக்கொள்கின்றேன். அதற்காகக் கண்டனம் தெரிவித்தால் ஒத்துக்கொள்ளலாம். ஆனால் கல்வியமைச்சர் ஒரு சிறுபான்மை இனத்தவர் என்ற காரணத்தினால் 'தம்பி அப்பட்ட எப்பா' என்று கூறினால் இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் சமுதாயம் அத்தகைய இரண்டாந்தரப்பிரஜையாக வாழக்கூடிய சூழ்நிலையில் இல்லை என்பதை நாம் இங்கு தெரிவிக்காமல் இருக்கமுடியாது. இதனை ஏற்படுத்தியது அரசுதான் என்று நான் சொல்லவில்லை. ஒரு சில அரசியல்வாதிகள் தங்கள் இலாபத்துக்காக இதனை உண்டாக்கியிருக்கின்றார்கள். சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்குமிடையே சமுதாயத்தை நாசப்படுத்தவே இப்படியாக சில அரசியல்வாதிகள் முனைந்து நிற்கின்றார்கள்.
பிற்போக்கு அரசியல்வாதிகளின் விஷமப் பிரச்சாரம்
இன்று இந்நாட்டில் வகுப்புவாதம் கிளறப்பட்டுள்ளது.
-14

இன்று நாட்டில்எங்கு பார்த்தாலும் விஷமத்தனமான கருத்துக்கள் பரப்பப்பட்டுள்ளன. கல்வியமைச்சர் அவர்கள் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக ஓர் இனத்தைப் பாதிக்கக்கூடிய அளவு. இந்த விஷமத்தனமான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசாங்கம் இதனைச் செய்வதாக நான் கூறவில்லை. பிற்போக்கான அரசியல்வாதிகள் இவ்விதம் பிரசாரத்தில் ஈடுபடுவதை அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும் என்பதை இங்கு வற்புறுத்தாமல் இருக்க முடியாது. இந்த நாட்டில் எவரெவர் வகுப்புவாத்ததை கிளறி விடுகிறார்களோ அவர்களை இந்த அரசாங்கம் தண்டிக்க வேண்டும். மாணவர்கள் தான் இந்நாட்டின் வருங்காலத் தலைவர்கள்.
இவர்களின் உள்ளங்களிலே வகுப்புவாத விதைகளை விதைத்தால் நிரந்தரப் பகைதான் விளையும்.
Communalism everywhere. There willbe a permanent enmity between the Muslime and the Sinhalese in this Country. இதற்காகவே இந்தச் சூழ்ச்சியைச் செய்கிறார்கள். இது பயங்கரமானதொன்று. இதை இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள்
பதில் தகவல் ஒலிபரப்பு அமைச்சராக ஜனாதிபதி வில்லியம் கொபல்லாவ விடம் பதவிப் பிரமாணம் செய்கையில் (1970)
-15

Page 12
(நெஞ்சிருக்கும் வரைக்கும்)
நினைவிருக்கும் )
விரிந்து கிடந்த விண்ணாங்கடிப் பரவலிலே பரந்து கிடந்த உப்புக் குறுமணலில் பட்டுத் தெறித்துக் கொண்டிருக்கிறது, விடியும் ஆதவனின் கதிர்.
மணலில் சில குறுங்கற்கள் பளபளத்து ஜொலிக்கின்றது. சில பலநிறஒளிக் கதிரை வீசிக் கொண்டிருந்தது. ஒளியின்றி பல ஊமையாய்க் கிடந்தது.
இரண்டு கண்கள் இமைக்க மறந்து பார்த்துக் கொண்டு
நிற்கிறது. பார்வையின் கோணங்கள் ஒவ்வொருவருக்கொரு விதம்.
ஆனால்,
வாலிப மிடுக்கேறிய சிந்தனைச் சிற்பி 'அப்துல் மஜீது'வின் பார்வை மட்டும் வேறுபட்டு இப்படி நின்றது.
ஒளி வீச மறுத்து ஊமையாய் கிடக்கும் கல்லாக, ஊராரின் கூலிகளாக,
அறியாமையை தலையில் சுமந்தவர்களாக, உலகத்தின் பெரும்பான்மை, உலக வணிகத்தின் சீமான்கள், இங்கே செல்லாக் காசாக, கடைச்சமூகமாக பின்னடைந்து கிடப்பது, அந்த இளைஞனின் உணர்வலைகளை உசுப்பிவிட்டுக் கொண்டிருந்தது. அந்த வெண்மணற்பரப்பிலிருந்து அவன் கண்கள் இன்னும் விடுபடவேயில்லை. நிலைக்குற்றியே நிற்கிறது. சூரியன் நகர, நகர பளபளப்பும் திசைமாறிக் கொண்டேயிருந்தது.
பல ஒளிர்வதை மறந்து மங்கிக் கொண்டன. அதிலே ஒரே ஒரு பளிங்கிக் கல்மட்டும் நாலாபுறமும் ஒளி விசி நின்றது. அதை 'தான்' என நினைத்துக் கொண்டான். பல திசைகளிலும் ஒளி வீசுபவனாக ஆக வேண்டுமென எண்ணிக் கொண்டான்.
அப்போது 'அதான்' ஒலிகேட்கிறது. உணர்வுகளின் ஜூவனா சத்துக் கள் பெருகி உடைபெருக்க ஆரம்பிக்கின்றன.
எரிமலையாய் எழும்பினான்.
-16
 
 

நபிவழி எம் வழி - தமிழ் மொழி எம் மொழி'
முஸ்லிம்களின் தாய்மொழி தமிழ்! தமிழ் கூறும் நல்லுலகத்தின் செவிகள் அதிரும்வரை கர்ஜித்தான். கள்ஜித்தான்
இறுதி மூச்சு விடும் வரை தமிழை அணைத்துக் கொள்வதென திடம் கொண்டான். சமூகத்து ஒளி விளக்காக மாறிக் கொண்டான். ஊர் வாலிபர்களை கவர்ந்திழுக்க தன் நாவன்மையை அஸ்திரமாக பிரயோகித்தான்.
அறியாமைக்கு விடிவு! பில்லி சூனியத்திற்கு முடிவு! வணக்கத்திற்குரியவன் இறைவன் மட்டுமே! சூளுரைத்தான்.
'பக்கத்துக் கடலில் மீன் பிடிக்க உரிமை இருப்பது போல் காடுகளை கழனிகளாக்க எமக்குரிமையுண்டு!’ என நில உரிமைக்காக கிளர்ந்தெழுந்த அந்த இளம் சிங்கத்தின் பின்னால் முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் அலை அலையாய் திரண்டனர். ".
அன்று தான் முற்போக்கு வாலிபர் மன்றமும் முகிழ்விடுகிறது. கபஸ்ரீகரம் செய்யப்பட்ட வானாறு வயல் நிலத்தை மீளப் பெறுவதற்காய் யுத்தம் ஒன்று ஆரம்பமானது. அதுவே, பெரும்பான்மை இனத்தவரின் நில ஆதிக்கத்திற்கும், திட்டமிட்ட குடியேற்றத்திற்கும் எதிராக எம்பகுதியில் கிளர்ந்த முதல் யுத்தம்.
சாந்தமும், பண்பும் கொண்ட தந்தையான முகமது சுல்தான் - அப்துல்லத்தீப் விதானையாருக்கு மகன் மஜீதின் செயல் அறவே பிடிக்கவில்லை.
மனம் நொந்தார். விதியை கடிந்து கொண்டார். துடிப்படக்கி பள்ளிக்கனுப்பும் நல்ல தந்தையானார் கிண்ணியா காற்றுக் கூட பட முடியாத, சுவாமி விபுலானந்தத்தால் தோற்றம் பெற்ற மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தில் சேர்க்கப்பட்டார். குருகுலம் வாவென அழைத்தது. குரு குல வாழ்வு நல்ல பழக்க வழக்கங்களுக்கு தீனி போட்டது.
வித்தியாலயத்தின் மாணவர் தலைவனான். அநீதிக்கான
-17

Page 13
(8 JTU AIL’LLíb கூடவே SJ tibi JLDT60Igb).
இறுதியில் கிண்ணியா சீனடியில் முடிந்தது. அங்கிருந்து நேராக கிண்ணியா!
தந்தையார், தலையில் அடித்து ஒப்பாரி வைக்கத் தொடங்கினர். தலைவிதியை எண்ணி வெகுவாக நொந்து கொண்டார். கட்டி அடிக்கும் வயதும் கடந்ததால், தட்டி அணைக்கும் தந்திரத்தால் வென்றாள்.
தந்தையின், உபதேசம் அவள் இதயத்தில் ஊன்றியது. மீண்டும் கல்விக்காக, அதே சுவாமி விபுலானந்தரின் பாசறையான திருக்கோணமலை இந்துக் கல்லுாரியில் சேர்க்கப்பட்டார். அங்கேயும் மாற்றமில்லை. ஆனால் கல்வியையும் கைவிடவில்லை. ஆங்கிலக் கல்வியோடு உயர் பரீட்சையில் சிறந்த சித்திகளுடன் வீடுநோக்கினார். அரச உத்தியோகங்கள் தேடி வந்தும் அப்போது அதற்குள் முடங்க அவர் நினைக்கவில்லை. இன்னமும் அறியாமைகளிலிருந்து ஊர் விடுதலை பெறவில்லை என்பது அவள் உள்ளத்தை முள்ளாகத் தைத்தது.
பழையபடி வேதாளம் முருங்கை மரத்தில்! ஊரின் சகல காறுவாறுகளை யெல்லாம் அடக்கும் விதானையாருக்கு தன் மகனை அடக்க முடியாது வெட்கித்துக் கொண்டார்.
துடிப்பை திருமணத்தால் கட்டி விடலாம் என எண்ணம் கொண்டு அதை நிறைவேற்றினார். எண்ணியதற்கு எதிராக அதிகரிக்கத் தொடங்கியது. முடிவாக பட்டப்படிப்பு என்ற போர்வையில் தன் மகனை இந்தியாவுக்கு அனுப்ப முடிவெடுத்தார். திருச்சி ஜமால் கல்லுாரி , பூனா வாதியாக் கல்லுாரி, அவைகளின் இடை நடுவே, தி.மு.கவுடன் தொடர்பு எம்.ஜி.ஆர், கருணாநிதி, அண்ணாவுடனான நட்புகள். நிறைவாக சென்னை இராஜதானிக் கல்லூரியிலே பட்டப்படிப்பு நிறைவு.
பெரிய கிண்ணியாவில் ஆரம்பித்த கல்வி சென்னையில் போய் தரித்தது. தன்மகன் தறுதலை’ என எண்ணிய தந்தைக்கு, சமூகத்தின் தலைவிதிகளை மாற்றுபவனாக ஆகப் போவதைக் காணவிடாமல் தந்தையை காலன் கவர்ந்தான்.
திருக்கோணமலையின் முதல் முஸ்லீம் பட்டதாரியாக வெளிவந்த கிண்ணியா அப்துல் மஜீது.
நாடுகாணும் அரசியல் தலைவனாகவோ,
-18

யதார்த்தத்தை நோக்கி வீறு நடை போடுபவராகவோ, இனபேத மின்றி நேசிக் கப்டுபவராகவோ, முஸ்லீம்களுக்கான தனி அடையாளத்தை நிர்ணயிப்பவராகவோ, தேசத்து வரலாற்றிலே மூதுாரை செதுக்குபவராகவோ, எதிர்காலத்தில் திகழ்வார் என எழுதிய இறைவனைத் தவிர வேறு எவருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை.
59ம் ஆண்டு நடுப்பகுதி கிண்ணியா ஊரே ஒன்று கூடி பட்டதாரி மஜீத் அவர்களை உரிமையுடன் வரவேற்றுக் கொண்டது. அதற்கு நன்றி தெரிவித்துப் பேசிய உரையில் இக்பாலின் தத்துவத்தை, மேற்கோளாக காட்டிய போது புத்தி ஜீவிகள் சிந்திக்க ஆரம்பித்தனர். -
'சிலவேளை உயிர் வாழ்வது வாழ்க்கையாகும். சில வேளைகளில் உயிர் கொடுப்பதும் வாழ்க்கையாகும்.
இத் தர்க் கதரிசனம், பிற்காலத்தில் தனக்கே நிதர்சனமாகுமென அப்போ எண்ணிப் பார்த்திருப்பாரா?
அதே ஆண்டிலே கிண்ணியா மகா வித்தியாலயத்துக்கு பிரதி அதிபராகி விட்டார். இந்தப்பதவியில் நிரந்தரமாக தங்க இஷ டமில்லை. தன் சிந்தனைகளை செதுக்க இது பொருத்தமில்லையென உணர்ந்திருந்தார்.
இந்த வேளை 1960ம் ஆண்டு தேர்தல் வந்தது. தேர்தலில் தையல் இயந்திரத்தின் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டார். துணிவாக எதிர் கொண்டார்.
தம்பலகமம், கிண்ணியா, மூதுார், கந்தளாய், வெருகல் வரை பரந்து கிடந்தது, இரட்டை அங்கத்தவர்தொகுதியான மூதூர்.
மக்கள் மத்தியில் அறியப்படாத முகம். தேர்தல் மேடைகள் அமைக்க ஆட்கள் இல்லை. தலைமை வகிக்க எவரும் இல்லை. முதலீடு செய்ய முதலாளிமார் இல்லை. ஆனால் நாவிலே வன்மை இருந்தது. வார்த்தைகளுக்கு உயிர் இருந்தது.
வியர்வை இரத்தமாக சொட்டும் வரை உறுதியுடன் இயங்கும் மனோவலிமை இருந்தது.
ஆனால் தேர்தலில் தோல்வியே பரிசாகக் கிடைத்தது. மனம் தளரவில்லை. இனி இது தான் பாதை என தீர்க்கமாக முடிவு செய்தாயிற்று. -
" * -19

Page 14
எதிர்பாராத நிகழ்வு. வெற்றி பெற்ற ஐ.தே.கட்சி அரசு அமைக்க முடியாத தோல்விகண்டது.
அதே 60ம் ஆண்டு ஜீலையில் மீண்டும் ஒரு தேர்தல். கட்சியில் இணைந்து போட்டியிட்டால் வலிமை அதிகமாகும். என்றெண்ணி தமிழரசுகட்சி தலைமைப்பீடத்தை அணுகினார். பெறுமதி அறியாது நிராகரிக்கப்பட்டமை, ஒரு துர்கால நிகழ்வே. அரும் மாங்கனி கை நழுவிவிட்டது.
மாற்று வழியின்றி பூரில.சு. கட்சியில் இணைந்தார். தேர்தலில் 'அப்துல் மஜீது என்ற சிந்தனையாளனுக்கு அமோக வெற்றி. ஆனால் கட்சியை என்றுமே கருத்தில் கொண்டதில்லை. போட்டுக் களற்றும் உடையாகவே கட்சியை கருதினார். அரசியலில் தனக்கென பாதையை சமைத்தார்.
விவேகம், வேகம், தீர்க்கதரிசனம் இவை மூன்றையும் தாங்கிய அந்த உதய தாரகை அரசியல் வானில் சுதந்திரமாய் பவனி வந்தது.
60களில் ஆரம்பித்த அவரது அரசியல் பயணம் தொண்டனாக, நல் இலக்கியவாதியாக, பொது மராமத்து அமைச்சராக, தகவல் ஒலிபரப்பு பிரதி அமைச்சராக, திருக்கோணமலை மாவட்ட அரசியல் அதிகாரியாக, நீண்டு பரிணாமமைந்து 77களில் கட்டாய ஓய்வு கண்டது.
ஆனால் அந்திம காலம் வரை அவரிடமிருந்த அரசியல் சித்தாந்தத்துக்கு என்றுமே ஒய்விருந்ததில்லை. வன்முறைகள் உச்சமாய் வெடித்த காலங்களில் துணிச்சலுடன் சுதந்திரமாய் அவர் வாகனம் மட்டும் ஊர்ந்து திரிந்தது. ஒளிரும் இத்தாரகையின் எழுச்சிமிகு தொடர்ச்சிப் பயணமதை இந்நூலின் 6j60)6OTuj பக்கங்கள் அதிகமாய் பேசும். இத்தோடு விடை பெறவிழைகிறேன். இருப்பினும், இறுதியாக உங்களோடு சில வார்த்தைகள்! “இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.” இன்று வரை அவர் பணிபற்றி ஊரே சொல்லிக் கொண்டிருக்கிறது.
அமரர் மஜீத்தை அறிந்த, அவர் பால் வரிந்து கொள்ளப்பட்ட, அவர் காலத்தில் வாழ்ந்த எவருமே அவர் நாமம் உச்சரிக்காமலில்லை. அவரை எண்ணாமலும் இல்லை
-20

இதற்கு பல காரணங்கள்!
'மஜீது என்ற ஒளி அணைந்த அன்றிலிருந்து இன்று வரை அந்த இடைவெளி வெறுமையாகவே உள்ளது. இந்தப் "பஞ்சம்' நிரந்தரமாகி விடுமோ என்பது தான் அவர் பால் ஈர்க்கப்பட்ட மக்களின் ஏக்கம் - ஆதங்கம். இது எவரையும் புண்படுத்தக் கூறப்படவில்லை. புதிதாக வரும், வந்த, பாராளுமன்ற உறுப்பினர்கள் அமரர் மஜித் அவர்களின் பாணியை தங்களில் பதிக்காமலில்லை. ஆனால் செயலில் வீரமோ, வெற்றியோ காண்பதரிது. மக்கள் மனதில் ஆழப் பதிந்து கொள்ள முடியாது திண்டாடுவது கண்கூடு.
தேர்தலுக்கு முன்னும், பின்னும் மக்களோடு நடந்து கொள் வதரில் ஏற்படும் முரணி பாடுகள் இதற்கு மூலகாரணமாகின்றது. மக்களுக்கான சேவை என்பது வெறும் கானல் நீர் தான். உண்டு விட்டு எறியும் எச்சில் இலைகளாக நோக்குகின்றார்கள்.
அரசியலில் அப்துல் மஜீது விட்டுச் சென்ற தடங்களில் கற்க வேண்டிய கல்வி அதிகம் உண்டு. நாணயத்திற்கு இரு பக்கங்கள் போல மானிட வாழ்விற்கும் இரு பக்கங்கள் உண்டு. ஆனால் அமரர் (மர்ஹம்) மஜீது அவர்களின் வாழ்வில் என்றுமே இரு பக்கங்கள் இருந்ததில்லை. அரசியலே வாழ்வாகவும், வாழ்வே அரசியலாகவும், ஒன்றிணைத்து வாழ்ந்திருந்தார். அதனால் தான், அவர் உள்ளங்கையில் தன் தொகுதியின் படம் வரைந்து வைத்திருந்தார்.
மக்கள் நலனில் உண்மை அக்கறை கொண்டிருந்தார். தன் தொகுதியில் வாழும் நாற்பதாயிரம் மக்களையும் மனதில் பதித்து வைத்திருந்தார். இனமத பேதங்களுக்கப்பால் ஒவ்வொரு குடும்பத்திலும் 'ஒருவனாக வாழ்ந்திருந்தார்.
இதனால் தான் இந்த மானுடம் இன்று வரை ஒவ்வொருவரது இதயத்தினுள்ளும் சிறைபட்டு சிரஞ்சீவியாக வாழ்கின்றது. தான் விட்டுச் சென்ற மரிச் சப் பணிகள் தொடரப்படுகிறதா என ஏக்கத்துடன் பார்த்து நிற்கிறது அந்த ஆத்மா.
'ஒதுவீராக’! இஸ்லாத்தின் முதல் இறைமொழியானது மானிட காலம் வரை உயிர்ப்பாய் வாழும் என்பது உறுதியென்றால்,
-21

Page 15
அறியாமை அகற்றப்பட வேண்டும். வறுமையில் வாடும் மாணவ செல்வங்களுக்கு கல்வி வழிகாட்ட முன்னோடிகள் முன் வரவேண்டும். அமரர் அவர்களின் பெயரால் ஏழைக்கல்விக்கான ஓர் அறக்கட்டளை நிதியம் ஸ்தாபிக்கப்பட வேண்டுமென இந்நாளில் திட சங்கற்பம் கொள்ளல் வேண்டும். ஆறப்போடாது விரைவாக அமைத்திடலும் வேண்டும்.
அதுவே அவள் ஆதம சாந்திக்கான வழி. அன்னயாவினும் புண்ணியங்கோடி ஆங்கோ ரேழைக் கொழுந்தறிவித்தல்.’ (பாரதி) எல்லாம் வல்ல இறைவன் அன்னாருக்கு மோட்ச வாசலை திறந்தருளுவானாக!
ஒரே பார்வையில் அமரர் (மர்ஹ"ம்)அப்துல் மஜீது அவர்களின் அரசியல் பிரவேச காலக் குறிப்புகள்.
தற  ைம யரிரு நீ து ம
பாராளுமன்ற உறுப்பினர்
பிறப்பிடம்
கட்சி
ஆண்டு
தேர்தல் தொகுதிகள்
டி. ஏகாம்பரம்
ஏ.எல்.அப்துல்மஜிது
(டி. ஏகாம்பரத்தின்
திருமலை
கிண்ணியா பூரீல.சு.க
90ijб9)шиш
தமிழரசுக்கட்சி
டுத்து 23.6.62ல்
1960
1960
இடைத்
இரட்டை அங்கத்தவ
இரட்டை அங்கத்தவர்
தேர்தல்)
ஏ.எல்.அப்துல்மஜீத் கிண்ணியா ஹீல.சு.க 1962 இரட்டை அங்கத்தவர் எம்.ஈ.எச். (p5 bLDg
அலி கிண்ணியா தமிழரசுக்கட்சி 1962 இரட்டை அங்கத்தவர்
ஏ.எல்.அப்துல்மஜிதுகிண்ணியா |ழரீல.சு.க. 1962 இரட்டை அங்கத்தவர்
எம்.ஈ.எச்.முகம்மது
அலி கிண்ணியா தமிழரசுக்கட்சி 1962 இரட்டை அங்கத்தவர்
ஏ.எல்.அப்துல்மஜிது கிண்ணியாழரீல.சு.க 1970 இரட்டை அங்கத்தவர்
அ. தங்கத்துரை கிளிவெட்டி தமிழரசுக்கட்சி 1970 இரட்டைஅங்கத்தவர்
நேயமுடன்
கனகசபை தேவகடாட்சம் (மல்லிகைத்தீவு - மூதுர்)
22

ஏ.எல். அப்துல் மஜீத்
(తా தொகுதியின் முதல்வர்
உலக வரலாற்றில் , மனிதர்கள் படைத்த
வரலாறுகளுண்டு. வரலாறுகள் படைத்த மனிதர்களுமுண்டு. இந்த வகையில் காலத்தால் அழியத வரலாற்றுச் சிறப்புடையோர் LI 6\ò si 2 60o (6. ஆனாலும் ஒரு சிலரே அடிக் கடி நினைவுகூரப்படுகின்றனர். இலங்கைத் திருநாட்டில் நம்மிடையே அழியாப் புகழ் ஈட்டிக் கொண்டோரிடையே தனக்கெனத் தனியானதோர் இடத்ததை வரித்துக்கொண்டவர் மர்ஹ"ம் ஏ.எல்.ஏ.மஜீத் என்றால் அது மிகையாகாது. மூதுார்த் தொகுதியில் முஸ்லீம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்டுள்ள கிண்ணியா பதியில் கண்ணியமான ஒரு குடும்பத்தில் பிறந்த அவர் தமது இளம் பராயத்திலேயே தம்முள் புதைந்து கிடந்த சிறப்பியல்புகளை வெளிக்காட்டத் தொடங்கியதோடு, அவற்றைப் படிப்படியாக வளர்த்துக் கொள்வதில் காட்டிய ஈடுபாடு வியக்கத் தக்கதாகவே இருந்து வந்தது.
நாங்கள் இருவரும் பள்ளித் தோழர்களாகவே அறிமுகமானோம். எமக்கிடையே நிலவிய பாசமும் பிணைப்பும் இறுக்கமாகவே இருந்தன, வளர்ந்தன. அத்தோடு நாங்கள் ஒரே பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், நோக்கமும் சிந்தனையும், அதன் வளர்ச்சியிலும், மேம்பாட்டிலும் இணைப்பானதொன்றாக இருந்ததனால் எமது செயற்பாடுகள் துல்லியமாகவே பரிணமித்தன. நாங்கள் சேர்ந்த இரு வெவ்வேறு துறைகளும் இம்முயற்சியில் தாமாகவே அமைந்து விட்டன. நான் இணைந்து கொண்ட ஒலி பரப்புத்துறையும், அவள் வரித்துக் கொண்ட அரசியல் துறையும், பொது மக்களுடன் மிக நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்ததால் எங்களின் பரந்த செயற்பாடுகளுக்கு அவை துணைபோயின. இலக்கியத்துறையில் அவர் கொண்டிருந்த ஈடுபாடு அபாரமானது. கிண்ணியாவில் அவர் முதல் தடவையாக ஏற்பாடு செய்து மிக வெற்றிகரமாக நடத்தி முடித்த இஸ்லாமிய மகா நாடே பின்னர் கலாநிதி அல்ஹாஜ் எம். எம். உவைஸ் அவர்களின் விடா முயற்சியால் உலக இஸ்லாமிய தமிழ் ಟ್ವಿಟ್ಟುಕಿತ್ மாநாடு ஆரம்பத்தில்

Page 16
திருச்சியிலும் பின்னர் சென்னை காயல் பட்டணம் போன்ற தமிழ் நாட்டு நகரங்களிலும், இலங்கையிலும் நடைபெறுவதற்கு வித்திட்டதென்றால் அது மிகையாகாது. இம் முன்னோடி முயற்சி அன்னாருக்கு ஈடு இணையற்ற புகழை இறுதிவரை தேடித்தந்தது. முஸ்லிம்களின் தனித்துவமான கலை கலாசாரத் துறைகளைப் பிரதிநிதித்துவப் படுத்தும் விதத்தில் தமது
மண்ணில் ஒரு கலாச்சார நிலையம் அமையவேண்டும் என கனவு கண்டார். அதற்காக அரும்பாடு பட்டு கம்பீரமாகக் காட்சியளிக்கும் ஒரு நிலையத்தைக் கட்டி எழுப்பியுள்ளார். ஆனாலும் அது முற்றுப்பெறத நிலையில் அவர் மறைந்தது துர்ப்பாக்கியமே! நம்மிடையேயுள்ள ஆர்வமுள்ளவர்களும், துடிப்புள்ளவர்களும் இதனைப்பூரணப்படுத்தி நல்ல முறையில் இயங்க வைப்பதற்கு உதவி செய்ய வேண்டுமென்பது எனது பேரவா.
ஏ.எல்.ஏ யிடமிருந்த துணிவும் செயற் திறனும் அலாதியானவை. வியக்கத்தக்க அளவில் அவரிடம் காணப்பட்டன. அவரின் நல்ல பல செயற்பாடுகளுக்கு முட்டுக் கட்டை போடுவதையே தமது தொழிலாகக் கொண்ட ஒரு சிலரும் இருந்து வந்துள்ளார்கள் என்பதை நான் அறிவேன். அதையெல்லாம் அவள் அந்த அளவிற்கு பொருட்படுத்தவில்லலை. கருமமே கண்ணாயிருந்தார்.
மக்கள் சேவை, இனங்களுக்கிடையே செளஜன்யம் ஆகியவை நிறைந்திருந்தது. எனினும் குறிப்பாக மூதுார்த் தொகுதியில் அது குவிந்திருந்தது. தமது தொகுதியின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்குமாக அவர் தம்மையே அர்ப்பணித்துக் கொண்டார்.
முஸ்லிம்களின் தலைவர்களாகக் கொழும்பிலிருந்து செயற்பட்டு வந்த சேர்.ராசிக் பரீத், டொக்டர் எம்.கே.எம். கலீல், கலாநிதி பதியுதின், முஹம்மத் எம்.எச்.முகம்மத், ஏ.எம்.ஏ அசீஸ் போன்றோருடனும், தொழிற்சங்கவாதிகளான ஏ. அஸிஸ், அலவிமெளலானா மற்றும் பலரோடும், அரசியல் வேறுபாடின்றி மிக நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தார்.
ஏ.எல்.ஏ. ஒரு சிறந்த மேடைப் பேச்சாளருங்கூட எந்தஒரு விஷயத்தையும் தெளிவாக எடுத்துப் பேசக்கூடியவர். சொல்ல வேண்டிu கருத்தை எந்தவித தயக்கமின்றி ஆணித்தரமாக
24

எடுத்துச் சொல்லக்கூடிய ஆளுமையுடையவர். கன்னித் தமிழை அழகாக கையாளுவார்.
ஒலி பரப்புத்துறைக்கு அவர் ஆற்றிய பங்குப்பணி அளப்பரியது. அதிலும் குறிப்பாக முஸ்லிம் சேவைக்கு புதிய பதவிகள் பலவற்றை உருவாக்கியதோடு மட்டுமின்றி சமய நிகழ்ச்சிகள் பலவற்றை புகுத்துவதற்கும், ஒலிபரப்பும் நேரத்தை நீடிப்பதற்கும் அவர் உதவி உள்ளார். ஒலிபரப்புத் துறையில் நாங்கள் இருவரும் சேர்ந்திருந்த கால கட்டத்தில் முஸ்லிம் சேவையில் இடம் பெற்ற நிகழ்ச்சிகளின் உயர்தரம் இன்றும் ஏனையோரால் சிலாகித்துப் பேசப்படுகின்றது. அரசியலில் தாம் சார்ந்திருந்த ழரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு அப்பழுக்கற்ற ஆதரவைத் தந்திருந்த போதிலும் , முஸ்லிம்களின் நலனை அவர் என்றுமே பேணிக்காத்து வந்திருக்கின்றார்.
அப்துல் மஜீத் அவர்கள் ஓர் அலாதியான அரசியல்வாதி. நம்பிக்கையோடும், மன உறுதியோடும் , துணிச்சலோடும், அஞ்சா நெஞ்சனாக வாழ்ந்து அளப்பரிய சேவைகள் புரிந்த அன்னாரின் மறைவு ஒரு துன்பியல் சம்பவமாகும். இந்நாள் வரை அதற்கான பின்னணியோ, சூத்திரதாரியோ, உடந்தையானவர்களைப் பற்றியோ சரியான தகவல் கிடைக்காதது அதிர்ச்சியும் வேதனையும் தருவன எனினும் இழப்பினை ஈடு செய்யத்தான் முடியுமோ?
அவர் நாமம் மக்கள் மத்தியில் அன்றும், இன்றும்,
என்றும் நிலைத்திருக்கும் என்பது உறுதி.
வி. அப்துல் கபூர், இலங்கை ஒலி-பரப்புக்கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முதற் பணிப்பாளர்"
-25

Page 17
கிண்னியா மகாவித்தியால அதிபராக 1959
“காயிதே மில்ல்த்" அல்ஹாஜ் பதியுதீன் மஹற்முத் அவர்களுடன் (1974)
-26
 
 

மரணத்திற்குப் பின்
6ir
மறக்கப்படுவதுண்மை நீயே உனது மரணத்திற்குப் பின்னர் தான் அடிக்கடி பேசட் படுகின்றாய் வாசமுள்ள வார்த்தைப் பூக்களால் உன்னைச் சும்மா ஒரு போதும் சோடிக்க நான் விரும்பேன்! ஏனெனில் நீ! அர்த்தமுடன் வாழ்ந்த அப்துல் மஜிது! அனைவரும் விரும்பிய அரசியற் சற்குரு 1960 ബി வீசத் தொடங்கிய அரசியற் தென்றலே! நீ நின்று விட்டபின் அரசியற் புழுக்கங் கூடி அனைவருக்கும் அவதி! நீ இருந்திருந்தால்
S666 சந்தித்துப் பேசுவதிலேயே சந்தோஷம் பெற்றிருப்போம்! அந்தச் சர்க்கரைப் பொழுதுகளில் உன்றன் சாணக்கியத்தைகண்டு மகிழ்ந்திருப்போம் - நீ சாதிக்கும் திறன்களைக் கண்டு வியந்திருப்போம் இந்த தேசமே தெரிந்து வைத்திருக்கும் எங்கள் தலைவனே!
இடித்தோய்ந்த 8
ཡ་མཚོན་
டுச் சென்ற ெ இன்னும் காலியாகவே கிடக்கிறது!
வற்றிடம்
பொம்மையாக அல்லாது எப்போது? உண்மையாக ஒருவன் உன்னைப்போல் வரப் போகிறானோ? நீ கொல்லப்பட்டபின் ஏற்பட்ட வருத்தமும் மேலே சொல்லப்பட்டது போல் “வேலைகாரன்” என்று விமர்சிக்கும் அளவில் ஒருவன் வரவில்லை என்ற வருத்தமும் ஆறிச் சுகங்காண - இன்னும் ஒளடதம் கிடைக்கவில்லை! வீடுகளுக்கு மட்டுமல்ல மூலை முடுக்கெல்லாம் வெளிச்சந் தந்தவனே! நீ இறந்து போனாலும் சிறந்து போனவன்!
நாங்கள்
மறந்து போகாத மானிடன் ஆனவன்! மனிதன் இம்மண்ணில் கடைசியாகக் காணப் பேரலு
மரணத்தை யன்றி
வேறொன்றில்லை!
எனினும்
உன்னை நினைக்கும்
பொழுதுகளில்
இன்றைக்குங் கூட
எங்கள் கைலிகள்
நனைந்து கொள்கின்றன!
ஏ.எம்.எம்.அலி
2002.09.2
-27

Page 18
(அவரது இலக்கிய முகம்)
எம். எஸ். அமானுல்லா
மாஹூம் அப்துல் லத்தீப் - அப்துல் மஜீது அவர்கள் தனது உம்றா கட்மையை நிறைவேற்றுவதற்காக சவுதி அரேபியா சென்றபோது மக்காவிலிருந்து எனக்கொரு Picture post card அனுப்பினார். அதன் பின்புறத்தில் ஒரு வசனம், "உண்மை உள்ளங்கள் உறங்குவதில் லை’ அவரது சொந்தக் கையெழுத்தில் எழுதி ஒப்பமிட்டு அன்புடன் தபால் செய்திருந்தார். அதன்கீழ் 1986.11.13 என திகதியும் இட்டிருந்தார்.
அந்த திகதியும் அவர் எழுதி இருந்த வசனமும் என்னை நீண்ட நாட்கள் நித்திரையின்றி வாட்டி எடுத்தன. ஏனெனில் ஓராண்டு தள்ளி அதே திகதியில் அவள் அகால மரணமாகி நீண்ட உறக்கத்திலாழ்ந்தார்.
அவர் மறைவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே என்னிடம் அவரத சில ஆசைகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார். அவற்றில் இரண்டு அவரது மறைவுக்குப் பின்னர் அவரது குமாரரால் நிறைவேற்றி வைக்கப்பட்டன. மற்றுமொரு ஆசை இன்று வரை நிறைவேற்றப்படாமலேயே இருக்கின்றது. . . . . . . . . . 1972ம் ஆண்டில் மூதுர்ரில் இஸ்லாமியக் கலைவிழா *ந்டைபெற்ற போது மக்கள் தலைவர் மஜீது என்னும் நூல் வளியிட்டு வைக்கப்பட்டது. அது அவரது வாழ்க்கைச் சுருக்கம். க்கிலங்கையின் சிறுகதை பிதாமகன் என வருணிக்கப்பட்ட ஒரு பிரபல எழுத்தாளரால் எழுதப்பட்டது. மிக அழகான வடிவம் அது. ஆயினும் 40 பக்கங்களில் மிகச் சுருக்கமாக - அவசரம் அவிசரமாக எழுதி - வெளியிடப்பட்டிருந்தது. அவரது வாழ்க்கை யின் ஒவ்வொரு பருவத்திலும் நிகழ்ந்த முக்கிய நிகழ்ச்சிகளை அது ஆவணப்படுத்தி இருந்தது.
அதனை அடியொற்றி தனது வாழ்க்கை வரலாறு மிக விரிவாக எழுதப்படல் வேண்டும் என அவர் மிக அவாக் கொண்டிருந்தார். தன்னுடைய வரலாற்றோடு கிண்ணியாவின் அரசியல் வரலாறும் பின்னிப் பிணைந்திருக்கிறது என்பது அவரது கருத்தாக இருந்தது.
அது மட்டுமல்லாது எதிர்காலத்தில் மாவட்டத்தின்
-28

அரசியலைத் திட்டமிடுபவர்களுக்கு தனது வரலாறு பல பரிமாணங்களை உருவாக்கிக் காட்டும் என்பதும் அவரது நம்பிக்கையாக இருந்தது.
இது தொடர்பாக பல நிகழ்ச்சிக் குறிப்புகளை ஆவணப்படுத்த எனது அருகாமையை அவர் விரும்பினார். 1989ல் பொதுத் தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுப்பதற்கிடையில் இவற்றைத் தயார் படுத்திவிட அவர் சித்தங்கொண்டார். அவரது எதிர்பார்ப்பு பூரணமாக நிகழ்வதற்கிடையில் அவரை மரணம் தழுவிக் கொண்டது. இதனால் அவரது எழுத்திலேயே பெற்றுக் கொள்ளத்தக்கதாக இருந்த பல ஆவணக் குறிப்புக்கள் கிடைக்காமலேயே போய் விட்டது துரதிஸ்டமாகும்.
ஆயினும். அவரது வாழ்க்கை வரலாறு எழுதப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. அவரது சிந்தனைகள் மனிதாபிமானம் சார்ந்திருந்தது. அரசியல் காய் நகள்த்தலில் சாணக்கியம் இருந்தது. எதிராளிகளையும் அரவணைத்துச் செல்கின்ற நட்புரிமை இருந்தது. எதிர் காலத்தைச் சரியாகத் திட்டமிடுகின்ற தீர்க்கதரிசனமானது அவரது பல செயல்களில் விரவிக் கிடந்தது. தனது இருப்பை எல்லாக்காலத்திலும் வலுவுடன் வெளிகாட்டி நின்ற செயற்பாடுகள் இருந்தன. தமது மண்ணில் முளைக்கும் குருத்துக்கள் எவ்வாறான கருத்துக்களையும் கொள்கைப் பிடிப்புக்களையும் கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு தனது வாழ்க்கையையே அவர் புத்தகமாக்கிக் காட்டினார். எனவே அவரது அரசியல் கருத்தால் வசீகரிக்கப்பட்டவர்கள்; அவரது ஆவணங்களை தற்போதும் கைவசம் வைத்திருப்பவர்கள் மறைந்திடுவதற்கு முன்னால் அவை சேகரிக்கப்பட்டு எழுதப்படல் (8660őT(Bb.
அவர்முற்று முழுதாக அரசியல்வாதி என வாதிப்போர் உண்டு. இனங்களுக்கிடையில் செளஜன்யத்தையும் நேச பாவத்தையும் வளர்த்தெடுப்பதே அவரது தலையாய பணியாக இருந்தது என்போரும் இருக்கின்றனர். சிறந்த பேச்சாளனாக இருந்தது அவரது சிறப்பியல்புகளில் முக்கியமானதாக இருந்தது.
ஆனால். இவற்றையெல்லாம் மீறி அவருக்குள் ஓர் இனிமையான இலக்கியமுகம் ஒன்று இருந்ததை பலர் அறிந்திருக்க
-29

Page 19
Dif. Il'Îrég6ïs. -
1979ம் ஆண்டு என்று ஞாபகம். காயல் பட்டினத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு நடக்க இருந்தது. ஜனாப். ஏ.எல். அப்துல் மஜீது அவர்களையும் ஒரு போராளராக அழைத் திருந்தார் கள் . அத்துடன் விழா மலராகிய "பிறைகொழுந்தில்” வெளியிட ஓர் ஆய்வுக்கட்டுரை ஒன்றும் கேட்டிருந்தார்கள். கடலலைகளின் செல்லமாக தாலாட்டும் சீதளக் காற்றும் இணைந்து உருவாக்கியிருந்த ரம்மியமான சூழலில் தோனா’ இல்லத்தில் ஆய்வுக்கட்டுரை தயாராகிறது.
“சிறப்பான வரலாறு கண்ட இலங்கை முஸ்லிங்கள்’ காட்டாற்று வெள்ளம்போல வார்த்தைகள் வந்து கொண்டிருக்கின்றன. வார்த்தைப் பின்னல்களோடு வலுவான கருத்துக்களும் வரலாற்றுப் பதிவுகளும் எவ்வித தடையுமின்றி வந்து விழுகின்றன. அந்த வேகத்துக்கு ஈடுகொடுத்து எழுத முடியாமல் நான் முறுவலித்த போது, தனது கைச்சின்னி விரலை கீழுதட்டில் நுழைத்துக் கொண்டு அவர் சிரித்த காட்சி இன்னும் எனது மனதிற்குள் பூச்சிதறலாய் இனிக்கிறது.
அந்தக் கட்டுரை பிறைக் கொழுந்தில் பிரசுரிக்கப்பட்டு அறிஞர் பெருமக்களால் பெரிதும் பராட்டப்பட்டது.
1964ல் கண் ணியா மண் ணில் இஸ் லா மரியக் கலைவிழாக்களின் தொடர்ச்சியின் முதலாவது விழா அரங்கேறுகிறது. வெறும் களியாட்ட கண்கவர் நிகழ்ச்சியாக மட்டும் அதனை முடித்துவிட அவர் விரும்பவில்லை. இலக்கிய அந்தஸ்துமிக்க ஒரு பெருவிழாவாகவே அதனை அவர் திட்டமிட்டார். அவரது சிந்தனைக்குச் செயல் உருவம் கொடுப் தற்கு வசதியாக மர்கூம்.எம்.ரீ.ஏ.ஜபார், மர்கூம் எஸ்எம்.ஹனிபா, ஜனாப் எம்.ஐ.எம்.தாகிள் எள்ளிட்ட அறிஞர் பேரணியும் அந்த விழா வெகுவாகக் கவர்ந்தது எனலாம். பின்வரும் செயற்பாடுகள் அவரது இலக்கிய முகத்தை துலாம்பரமாக எடுத்துக் காட்டியது. அ) விழாவின் சிறப்புமலராக “தியாகி” வெளியிடப்பட்டது. அதன் இலக்கிய உள்ளீடுகள் இன்றும் இலக்கியக் காரர்களால் சிலாகிக்கப்படுகிறது. ஆ) ‘அன்ைனல் கவிதைகள் . கவிதைத் தொகுப்பு நூலும் இந்த விழாவிலேயே வெளியிடப்பட்டது. கவிஞர் அண்ணல்
-30

அவர்கள் கிழக்கிழங்கையின் மகத்தான கவிஞர். அற்புதமான சொல்லாடலோடு கவிதை படைக்கின்ற அழகுக் கவிஞர் அவர். அவரது இலக்கிய ஆக்கமொன்று இந்த விழாவில் வெளியிடப்பட்டது தமிழ் ஆக்க இலக்கித்துறைக்கு கிடைத்த பெரு வெற்றியாகும். இ) நாடகம் உள்ளிட்ட தமிழின் பலவேறு துறைகளிலும் சாதனை படைத்த இலக்கிய பெருமக்களை ஒருங்கே விழாவுக்கு அழைத்து பொன்னாடை போர்த்தி பொற்கிழி வழங்கி, புதிய வரலாற்றொன்றை அன்றேஅவர் தொடக்கி வைத்தார்.
1972ல் மூதுாரில் இரண்டாவது இஸ்லாமியக் கலைவிழா ஆரம்பமானது. அல்-ஹாஜ் ஏ.ஜே.றபீக் அவர்களும் நானும் இணைச் செயலாளராகக் கடமை புரிந்தோம். இலவச கத்னா, றிபாயா றாத்திபு, சீன டி சிலம் படி போன்ற ல் வேறு கலைநிகழ்ச்சிகள் உட்பட இலக்கிய நிகழ்வுகளும் அங்கே அரங்கேற்றப்பட்டன.
தியாகி' மலரின் தொடர்ச்சியாக மூதுார் கலைவிழாவிலும் "கள்பலா” என்னும் நினைவு மலர் வெளியிடப்பட்டது. காத்திரமான இலக்கிய உள்ளடக்கமும் அதன் வடிவமும் பலரையும் வெகுவாகக் கவர்ந்தது. இந்த மலர்த் தயாரிப்பிலும் வெளியீட்டு நிகழ்ச்சிகளிலும் மர்கூம் அப்துல் மஜீத் அவர்கள் பெரும் பங்காற்றினார். இவ்வாறான சந்தர்ப் பங்களின் போது வெளியிடப்படும் நினைவு மலர்களில் இருந்து இது முற்றிலும் வேறுபட்டிருக்க வேண்டும் என்பதில் அவள் மிகப் பிடிவாதமாக இருந்தார். இதற்காக கனதியான படைப்புகளை தேடிட் பிடித்து உள்ளடக்கச் செய்வதில் அவர் கடுமையாக உழைத்தார்.
மூதுார் கலைவிழாவில் நான் மேலே குறித்த “மக்கள் தலைவர் மஜீது' என்னும் அவரது வாழ்க்கைச் சரிதம் சிறு நுாலாக வெளியிட்டு வைக் கப்பட்டது. பிற்காலத்தில் எழுதப்படப்போகும் அவரது வாழ்க்கைச் சரித நூலுக்குஅது ஓர் அடிக்குறிப்புக் கையேடு டோல அது அமைந்திருந்தது.
1974ல் தோப்பூரில் வெகு விமரிசையாக ஏற்ாடு செய்யப்பட்டிருந்த இஸ்லாமியக் கலைவிழாவிலும் பல நூல்களை வெளியிட்டு தனது இலக்கியப் பங்களிப்புகளை நல்கினார். ஜனாட்கள் எஸ். றபீக் , ஏ.ஜே. தாகிர் , எஸ். எம். சகீத்
-31سه

Page 20
போன்றவர்களை செயலாளராகக் கொண்ட அந்த கலைவிழாவை அந்த ஊரே பெருமையுடன் நடத்தி முடிந்தது. இங்குதான் ’அறபாத்” என்னும் இலக்கியக் கருவுலம் வெளியிட்டு வைக்கப்பட்டது. நான் இவ்வாறு குறிப்பிடுவதற்கு காரணம் இருக்கின்றது. ஏனைய வெளியீடுகள்ல் இருந்து அது சற்று வேறுப்பட்டிருந்தது. கிண்ணியா கலைவிழாவில் கலைக்குத் தொண்டாற்றிய பெருமக்கள் கெளரவிக்கப்பட்டது போல இங்கும் ஒரு நிகழ்வினை அவள் நிகழ்த்திக் காட்டினார். அகில இலங்கை ரீதியாக அவர் ஒரு சிறுகதைப் போட்டியை ஏற்பாடு செய்தார். திக்குவல்லை கமால், எஸ்.ஐ.நாகூர்கனி போன்ற தற்போதைய இலக்கிய சாம்பவான்கள் 27 வருடங்களுக்கு முன்னர் படைத்தளித்த சிறுகதைகள் பரிசளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டன. இந்தச் சிறுகதைகளையும் 'அறபாத் மலரில் பிரசுரித்து மலருக்கு கனம் சேர்த்தார்.
அத்துடன் நில்லாது எமது பிராந்தியங்களில் மிக மதிப்புக்குரியவராகக் கருதப்படும் மூதூர் மற்றும் தோப்பூர் அரபுக்கல்லுாரிகளில் அதிபராகக் கடமையாற்றிய அல்ஹாஜ் எம்.ஏறகுமான் அவர்களால் எழுதப்பட்ட இஸ்லாமிய சன்மார்க்க நுால் ஒன்றும் தோப்பூர் கலைவிழாவில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தின் போது அவரால் எழுதப்பட்ட ‘இலங்கை முஸ்லிங்களின் வரலாறு' என்னும் நுாலொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது. முஸ்லிங்களின் வரலாற்றுப் பரிமாணங்கள் பலவற்றை அவர் ஆதாரத்துடன் எழுதி இருந்தார்.
1972ல் மூதுார் மத்திய கல்லுாரி தனது பொன்விழாவை கொண்டாடிய போது தனது செலவிலேயே "அன்னை” என்னும் மலரை வெளியிட்டு வைத்தார். கொழும்பு ரஞ்சனா அச்சகத்தில் அச்சான மலரின் புரூப் திருத்தும் பணிகளையும் அவரே மேற்கொண்டது ஓர் இனிமையான அனுபவம். அச்சமயத்தில் அவர் தகவல் ஒலிபரப்புத்துறை பிரதி அமைச்சராக இருந்தார். , இவ்வாறு எந்தப்பக்கம் திரும்பினாலும் தன்னிடம் ஓர் இலக்கிய மனம் ஒன்று மறைந்திருப்பதை அவர் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். எல்லா அரசியல்வாதிகளிடமும் காண இயலாத ஒரு சிறப்பு இயல்பு இதுவாகும்.
-32

மூதுார், கிண்ணியா, தோப்பூர் உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் கிராமங்களிலும் அவர் முற்போக்கு வாலிபர் மன்றங்களை அமைத்து வந்தார். அவற்றின் வாயிலாகவே மேற்குறித்த சகல இலக்கிய நிகழ்வுகளையும் அவர் அரங்கேற்றினார். ஆனால். வெளியிட்டு வைத்த பல இலக்கியக் கருவூலங்கள் அழிந்து வருகின்றன. அந்தப் பிரதிகளை தேடி எடுப்பதில் கூட பல சிரமங்கள் இருக்கின்றன. அவரது இலக்கிய முயற்சிகள் - ஆக்கங்கள் அனைத்தையும் ஒரு தொகுதியாக பதிப்பித்து ஆவணப்படுத்தல் பயன் அளிக்கும் என்பது எனது அபிப்பிராயம் ஆகும்.
1970 - 1977 காலப்பகுதிகளில் அரச பாராளுமன்ற அங்கத்தவராக இருந்த அவர் தகவல் ஒலிப்பரப்புத்துறைப் பிரதி அமைச்சர் பதவி, மாவட்ட அரசியல் அதிகாரி ஆகியவற்றை ஒருங்கே வசித்து வந்தார். இரவில் ஊள் உறங்கிடும் அந்த நசியில் 'நகர்வலம் வருவார். அப்போது அருகில் அவருடன் நடந்து வருபவர்களிடம் ஒரு வார்த்தையை அவர் அடிக்கடி வினவிக் கொண்டு இருப்பார்.
“இந்த ஊர் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது. நான் விழித்திருக்கின்றேன். நான் உறங்கிடும் ஒரு நாள் வரும். அந்த நாளில் இந்த ஊர் விழித்திருக்குமா?’ - இது அவர் கேள்வி.
விழித்திருக்கிறதா?.
1960ம் ஆண்டு பராளுமன்றத்தில் மர்ஹ"ம் மஜீத்
ஃ மூதூர் தொகுதியில் வாழும் தொழிலாளிகளுக்கும் முதலாளிகளுக்கும்
இடையிலான இரும்புத் திரை உடைக்கப் படவேண்டும். * எமது கலாசாரம் க.பா ஃ ஜக்கியம், நம்பிக்கை, கட்டுப்பாடு, தியாகம், பொறுமை ஆகிய பஞ்ச
இலட்சியங்கள் வாழ்வின் அடிப்படையாகும. * இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள். அவர்கள்
சமூக சிந்தனையுடன் செயல் பட வேண்டும். * ஒரு மஜீது போனால் ஒன்பது மஜிதுக்கள் உருவாக்கப்படுவார்கள்.
-33

Page 21
(கிண்ணியாவின் கல்விபற்றிய ஒரு பதிவு)
LDாஹஉம் அப்துல் லத்திப் மஜீத் அவர்கள் இளம், வயதிலேயே மொழிவளமிக்க பேச்சாளராகவும் ஆளுமை மிக்க அரசியல் வாதியாகவும் முகிழ்வதற்கான முற்கூற்றுக்களுடன் மிளிர்ந்தார். எமது தாய் தந்தையள் பெரிய கிண்ணியா முஸ்லிம் ஆண்கள் பாடசாலையினதும் பெண்கள் பாடசாலையினதும் தலைமை ஆசிரியர், தலைமை ஆசிரியையாக சேவையாற்றிய காலமது (1945-1955). மாஹ"ம் மஜீத் அவர்களின் மனைவியாகப்
பின்னர் வாய்த்தவரும் எமது தாயாரிடம் அப்போது கல்வி
கற்றது எனக்கு நன்கு ஞாபகம் இருக்கிறது.
மiஹ"ம் அப்துல் மஜீத் அவர்கள் எனது தந்தையாரிடம் நேரிடி மாணவராயிருக்கவில்லையெனினும் அவரோடு நிரம்ப தொடர்பு கொண்டவராயிருக்கிறார். திராவிட இயக்க இலக்கியங்களைப் படித்து இளம் பேச்சாளராகவும் துடிப்பு மிக்க பேச்சாளராகவும், முற்போக்கு கொள்கைகளைக் கொண்டவராகவும் திகழ்ந்த மஜீத் அவர்களை ஐயா, “தொண்டன்’ எனப் பெயர் சூட்டி அழைத்தார். மாஹ"ம் மஜீத் அவர்களின் பட்டப்படிப்புப்பற்றி ஐயா என்னிடம் கூறிய விடயம் அதிகம் பேருக்கு தெரிந்ததாக இல்லை. இச்சந்தர்ப்பத்தில் அதனைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அக்காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவர் வசதிகளெல்லாம் இருக்கவில்லை. உள்ளக மாணவராக வர மஜீத் அவர்களுக்குப் பல தடைகளிருந்தன. எனவே எமது தந்தையார், அவர், பட்டதாரியாக வேண்டுமெனில் இந்தியாவுக்குச் செல்ல வேண்டுமென எண்ணினார். ஐந்து
நாட்களாக ஒவ்வொரு நாளும் எமது தந்தையார் அப்துல் லத்தீப்
விதானையார் அவர்களைச் சந்தித்து மகனை இந்தியாவுக்குப் படிக்க அனுப்பும்படி வேண்டினார். ஐந்தாவது நாள் ஒரு தொகைப் பணத்தைக் கொடுத்து நீங்கள் என்னாவது செய்துகொள்ளுங்கள் மாஸ்டர் என்று கூறினாராம். உடனே ஐயா அப் பொழுது முன் னை நாள் பாராளுமன்ற உறுப்பினராகஇருந்த மள்ஹாம் ஏ.ஆர்.எம்.அபூபக்கள் அவர்களுடன் அமரர் மஜீத் அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்.

திருச்சி ஜமால் மொகைதீன் கல்லூரியில் சிறிது காலம் கல்வி கற்ற பின்னர் பூனாவுக்கு சென்று 'இன்டர் மீடியட்' முடித்துப்பின்னர் சென்னை பிரசிடன்சி (இராஜதானி) கல்லுாரியில் இளம் கலைமானிப்பட்டத்தினை (பீ.ஏ) 1959ல் நாடு திரும்பினார். எமது தந்தையார் அவர்கள் கிண்ணியாவின் முதலாவது பயிற்றப்பட்ட தமிழாசிரியர் ஆவார்கள். அதே போன்று கிண்ணியாவின் முதலாவது பட்டதாரியாக அப்துல் மஜீத் அவர்களும் எமது மூத்த சகோதரியும் இந்தியாவில் கற்றுத் தேறினார்கள்.
எமது தந்தையார் திருக்கோணமலை மாவட்டத்தின் முதலாவது முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த பட்டதாரியினை உருவாக்குவதிலும், தனக்குப் பின்னர் கிண்ணியாவில் இருந்து முதலாவது முஸ்லிம் பயிற்றப் பட்ட தமிழாசிரியர்கள் (ஜனாப்-இஸ்ஸகாக், மர்ஹ"மஎம்.என்.எம். இப்றாஹிம் (காசிம்பாவா) இவர்களைத் தொடர்ந்து மர்ஹம் எம். என். எம். சாலிஹற் (அண்ணல்) வெளிவரவும் நேரடிக் காரணியாகக் திகழ்ந்தார் என்பதையும் எம் இனங்களுக்கிடையே தேவையற்ற விரிசல்களை உருவாக்கப் பலரும் முனையும் இவ்வேளையில் பதிவு செய்ய விரும்புகின்றேன்.
எனது ஐயா கூறுவார்கள், அவர் தலைமையாசிரியாராக சேவை புரிந்த காலத்தில், “வாத்தியார் இவர்களுக்குப் படிச்சுக் குடுக்காதீங்க, படிச்சுக்குடுத்தா பொறகு உங்களையே கேள்வி கேட்பார்கள்’ என்று கிண்ணியாவின் அக்காலத்துப் பெரிய நிலச்சுலாந்தர் ஒருவர் கூறுவாராம். அதே பெரியாரின் பெயரை வேறு காரணங்களுக்காகக் கொண்டு இப்பொழுது ஒரு பாடசாலை பெரிய கிண் ணியாவில் இயங்குவதாகக் கேள்விப்படுகின்றேன். விசித்திரமான கிராமம் எமது கிராமம்.
-காசிநாதர் சிவபாலன். (சட்டத்தரணி)
-35

Page 22
  

Page 23
அரசியல் பிரவேசம்
இந்தியா சென்று பட்டப்படிப்பை மேற்கொண்ட போது பல பெரியார்களை கண்டு பழகி அவர்கள் நல்லாசிகளையும் பெற்றாள். திருக்கோணமலை மாவட்டத்தின் முதல் முஸ்லீம் பட்டதாரியாக நாடு திரும்பினார். 3 மாத அதிபர் சேவையின் பின் 1960 ம் ஆண்டில் அரசியலில் குதித்தார். மூதுார் தொகுதியின் பிரதிநிதியாக பாராளுமன்றம் சென்றார். அவரின் திறமையால் மூ துTர் தொகுதயரின் தலைவித மாற்றியமைக்கப்பட்டது. இலங்கை மட்டுமல்ல சர்வதேச ரீதியில் மூதுார் தொகுதி எல்லோராலும் பேசப்பட்டது.
முதுார் தொகுதியின் பொற்காலம்
மஜீத் அவர்கள் தனது 28வது வயதில் பாராளுமன்றம் சென்ற அவர் தனது செயல் திறன், சொல்வன்மை அயராத உழைப்பால் வளம் கொளிக்கச் செய்தார். துணிவுடன் எடுத்த காரியத்தைச் செயல்படுத்தினார். சாதி மத பேதமின்றி ஏழை எளியவர்களின் காவலனாக மக்களுடன் மக்கள் தலைவனாகக் காட்சி தந்தார். ஒரு உண்மையான மக்கள் தலைவன் மக்கள் மத்தியில் எளிய உடையில் என்றும் இனிவனாகக் காட்சி தருவானி. இதற்கு உதாரணமாக அன்பு மஜித் திகழ்ந்தார். அவர் அடிக்கடி சொல்வார் - மற்றவர்களுக்கு வாழ்வளிப்பதால், bTib 6). Typ60)6J Gub6)Tib. (We earn Life by giving it to others) சரியெனப் பட்டதை துணிவுடன் செய்யும் பண்பு. முடியாத காரியம் கிடையாது என நினைப்பவர். எல்லோரையும் கட்டியணைத்து நேசிக்கும் பண்பாளர் எப்போதும் மக்கள் கூட்டம் தன்னை சூழ்ந்திருக்க வேண்டுமென நினைப்பவர். அவரின் நாட்டம் போல் அவரது, மரணச்சடங்கில் கிண்ணியா கண்டிராத மக்கள் வெள்ளம் திரண்டிருந்தனர்.
மர்ஹ"ம் அப்துல் மஜீது அவர்கள் அஞ்சா நெஞ்சன், ஆற்றல் மிக்கவன், கனிவானவன். துயர் துடைக்கும் வள்ளல். இளமையிலிருந்தே அநீதியை எதிர்ப்பவன். எல்லோரும் வாழவேண்டுமென நினைப்பவர்.
கடமை - கட்டுப்பாடு - கண்ணியம் ஐக்கியம் - தியாகம் என்பது அவரின் பஞ்சசீலக் கோட்பாடு.
தனது அரசியல் வாழ்க்கையில் 1960 -77 வரை
-38

அளப்பெரிய சேவைகள் செய்தார். திருமலை மாவட்டம் எங்கும் 'மஜீது நாமம் பொறியாத இடங்களில்லை. V அடிக்கடி அவர் சொல்வார் - “நான் இல்லா விட்டாலும் என் சேவைகளை இங்குள் ள கல லும் மணி னும் கவிபாடிக்கொண்டே இருக்கும்.”
பாராளுமன்றப் பிரதிநிதியாக பிரதியமைச்சராக அரசியல் அதிகாரியாக ஆற்றிய சேவைகள் ஏராளம். பாராளுமன்றத்தில் உள்ளும் வெளியிலும் பல சரித்திரம் படைத்தார். உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு, உலக இஸ்லாமிய கலை விழா முதலிய சர்வதேசிய விழாக்களில் பங்குபற்றி சிறப்புரைகள் வழங்கி பாராட்டுக்கள் பெற்றார். அவர்களின் அரசியல் வாழ்க்கை முதுார் தொகுதியின் பொற்காலமாக திகழ்ந்தது. 'எனக்குக் கிடைக்கும் பெருமைகள் இந்த மண்ணின் மைந்தர்களுக்கு உரியது' என்பார்.
இவரின் சேவையின் அழியா சின்னங்களாக கட்டை பறிச்சான் பாலம் - அல்லை கந்தளாய் பாலம் - வேதத் தீவு அணைக்கட்டு - வீதிகள், கட்டிடங்களி, பாடசாலைகள், ஆகும்.
சமுகப்பணிகள்.
அப்துல் மஜீது அவர்கள் மிகவும் சமூகப் பற்று உடையவர். ஒரு சமூகத்தைப் பற்றிய சிந்தனையுடன் இளைஞர் முற்போக்கு மன்றங்களை அமைத்து பொதுப்பணி செய்தார். கலை கலாசார விழாக் கள், முத் தமிழ் விழாக்கள், பட்டிமன்றங்கள், கருத்தரங்குகள், நடமாடும் சேவைகளி, என பலதும் செய்து மக்களுக்கு அரசியல், சமூகப் பணி பயிற்சிகள் அளித்தார். தனி மனிதனை விட சமூகம் மேலானது.
என்னைப் பழிக்கலாம் எனது சமூகத்தை அவமதிக்க அனுமதிக்க முடியாது. எனவே தான் பாராளுமன்றத்தில் கண்டன முழக்கம் செய்தார். சிறுபான்மை சமூகங்களின் உரிமைக்காக t JT(6LiÚLTh.
முதுார் தொகுதியின் இருண்ட காலம்.
1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில் மக்கள் அடிமைப்போல் தொண்டு செய்த அப்துல் மஜித்தை மக்கள் புறக்கணித்து துாக்கி எறிந்தள்கள். இருந்தும் அன்னார் - 1977
-39

Page 24
- 87 காலப்பகுதியில் மக்களுடன் ஒன்றாக கலந்து தொண்டுகள் செய்தார். 1977ம் ஆண்டு பொதுத் தேர்தல் காலத்தில் கூறினார். - மூதுார் தொகுதியில் 3 முஸ்லீங்கள் தேர்தலில் நின்றார்கள். உங்களை பாதுகாக்கும் பொருத்தமான தலைவனை தெரிவு செய்து கொள்ளுங்கள் - தவறினால் ஒரு காலம் வரும். இரத்தாறு ஓடும். கங்கையில் பிணங்கள் மிதந்து வரும் எங்களைக் காக்க தலைவன் இருக்க மாட்டான்.
அவள் கூறிய தீர்க்க தரிசனமான கூற்றுக்கள் எல்லாம் அண்மைக்காலத்தில் நடந்தன. தமிழ் முஸ்லிம் ஐக்கியம் db L955TébablLJL (36.607(6LD. (Unity among diversity) 61601 99.535.9 வலியுறுத்துவார்.
ஆனால் 1983க்கு பின் தமிழ் முஸ்லீம் ஐக்கியம் சிதறுண்டது. அகதிகளாக்கப்பட்டோம். கூடி வாழ்ந்த மக்கள் துன்பப் படுவதை சகிக்காது மஜீது அவர்கள் முன் வந்து உதவிகளை இயன்ற மட்டும் செய்தார். இதனை பார்க்கப் பொறுக்காத சிலர் அன்னாரை இந்த மண்ணை விட்டே அகற்றி விட்டாள்கள்.
இறுதி ஆசை s
இறக்கு முன் மர்ஹ"ம் அப்துல் மஜீது அவர்கள் இறுதியாகச் செய்ய நினைத்த பணி - அடுத்த நாள் சனிக்கிழமை மூதுார் பள்ளிவாசல் தலைவர்களின் பெயர்பட்டியலை தயாரித்து திருமலையில் IPKF (இந்திய அமைதிப்படை) அதிகாரிகளைச் சந்திப்பது. .
மூதுார் பிரதேச தமிழ் முக்கியஸ்தர்கள் பட்டியல் அடங்கிய முக்கியஸ்தர்களை ஒன்று கூட்டி தமிழ் முஸ்லீம் சகவாழ்வை வலியுறுத்தல்.
அடுத்து மூதுார் வந்து மக்களிடம் விளக்கமளித்து, ஆறுதல் கூறி அமைதியாக தமிழ் முஸ்லீம்கள் வாழ ஆலோசனை வழங்கல். ஆனால் அவரின் கடைசி ஆசை நிறைவேறவில்லை. இறக்கு முன் அவரிடம் மூதுார் பற்றிய வசனமே வாயில் வந்தது.
அன்னாருக்கு, இறுதியாக இந்த மண் கொடுத்த பரிசு மூன்று துப்பாக்கிச் சூடுகள். ஆற்றளுள்ள சிந்தனையாளன் என்பதற்காக - தலையிலும் -
-40

அடுத்தது சொல்லின் செல்வன் என்பதால் வாயிலும் - கடைசிவேட்டு அஞ்சா நெஞ்சன் + எதையும் தாங்கும் இதயம் கொண்டவன் என்பதால் மார்பிலும் பெற்றார்.
"நான் கோழையல்ல” என மண்ணில் சாய்ந்தார். சரித்திரம் படைத்த பல பெரியார்கள் இவ்வாறே தங்களது சாவைத் தழுவிக் கொண்டனர். மர்ஹ"ம் அப்துல் மஜீது அவரின் சரித்திரம் மக்கள் மனதில் என்றும் நிலைத்து நீடிக்கும் என்பதில் இந்த நிகழ்வுகள் நிருபிக்கட்டும்.
மர்ஹ"ம் AL அப்துல் மஜீத் அவர்கள் நம் எல்லோரின் அன்புக்கும் பாசத்திற்கும் பாத்திரமானவராக இருந்தார். அதுபோல் இறைவனுக்கும் அன்னாரை தனது அளவற்ற அன்புக்கும் அருளுக்கும் பாத்திரமான இனிய அடியனாக ஏற்றருள்வானாக. அவரின் ஈடேற்றத்திற்கும் ஆத்ம சாந்திக்காகவும் நாம் எல்லோரும் இறைவனை வேண்டிநிற்போமாக! ஆமீன்.
S.M. she gasm
(தலைவர் பூரீல.சு.கட்சி - மத்திய குழு மூதூர் - ஓய்வு பெற்ற LITLJIT6060 93шт)
அறிவு என்பது வித்து என்றால் அமல் என்பது அதன்பயிரென்றால் "இக்கிலாஸ்' (உளத் தூய்மை) அதற்குரிய நீராகும்.
- இமாம் கஸ்ஸாலி - எண்ணக் குவியல் -
-41

Page 25
(நினைவுக் கவிதை)
அப்துல் லத்தீபின்
அருந்தவப் புதல்வராய் அவனியில் அவதரித்தார்
அப்துல் மஜீத் என்பார். கிண்ணியாக் கிராமம்
கீர்த்தி பெற வேண்டுமென்று கொள்ளை ஆசை கொண்டார்
− கொள்கையில் வெற்றி கண்டார்.
கல்விப் பணி புரிந்திடவே
கடமையில் ஈடுபட்டார் கல்லூரி அதிபராகக்
காலடியும் வைத்துவிட்டார். அல்லல் படும் மாந்தரின்
நிலை காண அவள் நெஞ்சு
அயராது அழுததன்று.
மூதுார்த் தொகுதியின்
முது பெரும் தலைவனாய் முத்து பிறந்தது போல்
பிறந்தார். வீரம் நிறை கல்வி நெஞ்சங்களே
விரைந்து வாருங்கள் என்றார். பாரம் நிறைந்த பணி பாராளுமன்ற
உறுப்பினர் ஆனார்.
சிம்மக் குரல் கேட்டு
சிந்தையில் கொண்ட பலர் தம்மைக் காக்க வரும்
தலைவனைத் தெரிந்து கொண்டார். சீரற்ற பாதைகளைச்
செப்பமிட வேண்டு மென்றார் சிறுவர்கள் கல்விக் கூடம்
சீரமைக்க வேண்டி நின்றாள். எட்டினார் குரலை
- 42

எட்டுத் திக்கும் அவர் குரலில் கட்டியம் பேச வந்தார்
கனபேர் அவர் வழியில்
முஸ்லீம் மக்களெல்லாம்
முழு மூச்சாய் தக்பீர் சொல்லி
முழங்குக நாரே தக்பீ
அல்லாஹ? அக்பர்' என்றார்
காடுகள் வெட்டி அங்கே
கழனிகள் ஆக்க வந்தார் மாடுகள் மேய்க்க அல்ல
மனிதர்கள் வாழ என்றார். எண்ணிரெண்டாண்டு காலம்
இவர் பணி நிகழ்ந்ததங்கே கண்ணிலும் மிகுந்து மூதுார்
மக்களின் மூச்சேயானார்.
முஸ்லீம்கள் தமிழ்த் தாயின்
மூத்த புதல்வியின் மக்கள் என்றார்
முரசாக நின்ற அவர் மூச்சையும்
விட்டுச் சென்றார்.
பாவிகள் யாரோ அவரை
படு கொலை செய்திட்டாரே நாவினாற் சொல்ல ஒண்ணா
நஷ்டங்கள் புரிந்திட்டாரே. கிண்ணியா மண்ணின் வாசம் - அவர்
ரெத்தத்தில் வீசுதங்கே எண்ணிய உடனே அவர்
’பிரிவினால் ஏங்கு தங்கே,
திருமதி, றாஹிலா மஜித்துான் 280/R, முள்ளிப் பொத்தானை
-43

Page 26
முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியுடன் (வீற்றிருப்பவர்கள் இரா.நெடுஞ்செழியன், அமரர் மு. சிவசிதம்பரம் உட்பட)
சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற வேளை
... 44
 
 

ர்ெஹும் அப்துல் மஜீது-ஒரு நவீன அரசியல் கலாசாரத்தின் பிதாமகன்,
LDர்ஹும் அப்துல் மஜீது அவர்கள், வாலிபனாகத் தமிழ்
நாட்டில் கல்வி பயிலும் போதே திராவிட முன்னேற்றக் கழகச் சிற்பிகளான அண்ணாத்துரை, கருணாநிதி, நெடுஞ்செழியன், முரசொலிமாறன், போன்றோருடனும், சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்.எஸ்.ன்ஸ்.ராஜேந்திரன் போன்ற பிரபல நடிகர்களுடனும் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார். 1960ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்தப் பிணைப்பு பல ஆண்டுகள் நிலவின.அவர்களின் கருத்தியல்கள் அவரைக் கவர்ந்தன. துடிப்பும், துணிவும், தீாக்கதரிசனமும் கொண்ட இளைஞனாக இருந்த அப்துல் மஜீது அவர்களுக்கு தமிழகம் ஒரு பயிற்சிப் பாசறையாக விளங்கியது. திராவிட முன்னேற்றக் கழக அரசியல் சித்தாந்தங்கள் அவரது சிந்தனையில் ஊறித் திளைத்திருந்தன.
அவர் இக் கோட்பாடுகளால் கவரப்பட்டு தனது உளரீதியாகச் செயற்படும் ஆவலோடு இருக்கிறார் என்பதை அவர் கிண்ணியாவிலிருந்து தனது ஆத்ம நண்பர்களுக்குப் பக்கம் பக்கமாக வரைந்த மடல்கள் எடுத்துக் காட்டின.
அதன் காரணமாகவே அவர் தன் படிப்பை முடித்துக் கிண்ணியாவுக்குத் திரும்பியதும், கிடைத்த பாடசாலை அதிபர் பதவியையும் துறந்து அரசியலில் பிரவேசித்து மிகக் குறுகிய காலத்தில் மகத்தான வெற்றிகளை ஈட்டிக்கொண்டார்.
இதுபோன்ற ஒர் அரசியல் முன்பயிற்சி திருகோணமலை மாவட்டத்தில் தலையெடுத்த எந்தவொரு அரசியல்வாதியிடமும் இருக்கவில்லை. சந்தர்ப்பம் சூழ்நிலைகளாலும், எதிர்பாராத விபத்துகளாலும் தோன்றிய அரசியல் வாதிகளையே நாம் இங்கு காண்கிறோம். எனவே தான் அப்துல் மஜீது அவள்கள் நவீன அரசியல் கலாச்சாரத்தின பிதாமகனாகத் திகழ்ந்தார்.
அவர் தன்னை ஒர் அரசியல்வாதியாகக் கருதிய அதே வேளையில், சமூக, பொருளாதார, பண்பாடு, இவைகளுடன் இலக்கியச் சீர்திருத்தவாதியாகவும் வரித்துக் கொண்டார். அவர்
தன்னை ஒரு மக்கள் தொண் டனாகவே முற்றிலும்
-45

Page 27
மாற்றிக்கொண்டார். தன்னை மக்களில் ஒருவனாகவே கருதினார். அவரது அரசியல் கலாசாரம் எப்பொழுதும் சாதாரண வாக்காளனை-பொது மகனைச் சுற்றிப் படர்ந்ததாகவே அமைந்திருந்தன. அவர் என்றும் தன்னை ஒரு சாதாரண குடிமகனாகவே மக்கள் தொண்டனாகவே எண்ணித் தொழிற்பட்டார். இதன் தாற்பரியத்தை அவள் சிலவேளைகளில் மக்கள் பிரச்சினைகள் பற்றி உரையாற்றும் போது தேம்பி தேம்பி அழுது கண்ணி விட்டதன் மூலம் உணரக்கூடியதாக இருந்தது. எக்காரணம் கொண்டு அவர் மக்களை விட்டும் ஒதுங்கிப் போகவில்லை. எப்பொழுதும் மக்கள் மத்தியில் இருப்பதையே விரும்பினார். மக்களின் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் ஒரு வழிகாட்டியாகவே இருந்தார். மக்கள் மத்தியில் தலையெடுத்த சாதாரண குடும்பப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நீதிபதியாகவும் திகழ்ந்தார்.
தன் மனைவி, மக்கள், உற்றார், உறவினர்களை விட சாதாரண குடிமக்களையே வாஞ்சையோடு நேசித்தார். இது போன்ற சிறந்த பண்புகள் அவரிடம் காணப்பட்டமையினாலேயே மக்களும் அவரை தம் தலைமகனாக - தொண்டனாக மதித்தனர்.
ஒர் அரசியல்வாதி, இலக்கியவாதியாகவும் இருப்பது மிக அரிது. ஆனால் அப்துல் மஜீது அவர்கள் இரண்டிற்கும் துாண்டாமணி விளக்காக ஜொலித்தார். அதனாலேயே அவள் ஈழத்தின் முதலாவது இஸ்லாமிய இலக்கிய கலை விழாவை 1964 ஒக்டோபரில் நடத்தினார். பல இலக்கிய நூல்களை வெளியிட்டார். மூத்த இலக்கியவாதிகளைப் பாராட்டி கெளரவித்தார்.
அவர் காட்டிய வழியைத்தான் பின்னாட்களில் பலர் பின்பற்றி வேறு பல இடங்களில் இஸ்லாமிய இலக்கிய விழாக்களை நடாத்தியுள்ளனர். இன்றும் நடாத்தி வருகின்றனர். வாழும் போதே இலக்கியவாதிகளையும் கலைஞர்களையும் வாழ்த்திக் கெளரவித்த பெருமை மஜீது அவர்களையே சாரும். மற்றவர்கள் அவர் காட்டிய வழியையே பின்னர் தொடர்ந்தனர்
இது போன்று அவரால் கால் கோளிடப்பட்ட நவீன அரசியல் கலாசாரம் கிழக்கிலு: வடக்கிலும் தலையெடுத்த

பலருக்கு முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் அமைந்தது. புதிய அரசியல் கட்சிகளைத் தோற்றுவிக்க முனைந்த சிலர் அப்துல் மஜீது அவர்களின் நவீன அரசியல் கலாசாரத்தைப் பின்பற்றியே செயற்பட்டனர் என்பது வரலாறாகும்.
எனவே அவள் தமிழகத்தில் பெற்று வந்த உயர்கல்வியும் அரசியல் சாணக்கியமும் சமயோசித ஆற்றலும் இலங்கையில் ஒரு நவீன அரசியல் கலாசாரத்தைத் தோற்றுவிக்க உதவியது. அது மட்டுமல்ல அரசியல் கற்றுக் குட்டிகளுக்கும் முன்னோடியாக அமைந்தது.
1960 ஆம் ஆண்டு கிண்ணியாவின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. முன்னர் தேர்தல் காலத்தில் மட்டும் தமது பாராளுமன்ற பிரதிநிதியைக் கண்ட மக்கள் 1960 ஆம் ஆண்டின் பின் தினமும் தமது பிரதிநிதியைத் தம் மத்தியில் கண்டனர். தமது தேவைகளை நிறைவு செய்து கொண்டனர். ஆகவே அப்துல் மஜீது அவர்கள் இந்நாட்டில் ஒரு நவீன அரசியல் கலாசாரத்தை தோற்றுவிப்பதில் வெற்றி 3560öLITT.
அவள் எம்மை விட்டுப் பிரிந்து 15 ஆண்டுகள் கடந்தாலும் அவரால் ஏற்படுத்தப்பட்ட நவீன அரசியல் கலாசாரம், அதன் அடிச்சுவடுகள் இன்னும் மறையவில்லை. மக்கள் மனங்களில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
அவரது 15வது மறைவு தினத்தை நினைவு கூர்ந்து, அன்னாருக்கு "ஜென்னத்துல் பிரதவஸ்' எனும் சொர்க்கத்தை அல்லாஹற் கொடுக்கப் பிரார்த்திக்கிறேன்.
ஆமீன், ஆமீன் யாறப்பில் ஆலமீன்.
-எம்.ஐ.எம். தாஹிர்.
ஃ ஈழமணி நாட்டில் வாழும் பத்து இலட்சம் முஸ்லிம்களின் பாரம்பரியம்,
தனித்துவம் பேணிப்பாதுகாக்கப்படல் வேண்டும். (1970) ஃ பக்கத்துக் கடலில் மீன் பிடிக்க உரிமை இருப்பது போல் பக்கத்து காடுகளை வெட்டி கழனிகளாக்க எமக்கு உரிமையுண்டு. (1965)
(பராளுமன்றத்தில் மாஹ"ம் மஜீத்!)
-47

Page 28
நான் கண்ட அப்துல்மஜீத் நடுங்காத ஒரு வீரன்!
நான்கண்ட அப்துல்மஜீத்
நலம் செய்த அருந் தொண்டன்! நான்கண்ட அப்துல்மஜித்
நல்லதொரு பேச்சாளன்! நான்கண்ட அப்துல்மஜித்
நடமாடும் நூல் நிலையம்! நான்கண்ட அப்துல்மஜீத்
நம்'ம.வி” - முதல் அதிபர் நான்கண்ட அப்துல்மஜீத்
நம்"கிண்ணி யா'மைந்தன்! நான்கண்ட அப்துல்மஜித்
நடுங்காத தனித்தலைவன்!" நான்கண்ட அப்துல்மஜித்
நடுவுநிலைத் தீர்ப்பாளன்! நான்கண்ட அப்துல்மஜித்
நலம்செய்யும் பண்பாளன் நான்கண்ட அப்துல்மஜீத்
நடிக்காத ஒரு மனிதன்! நான்கண்ட அப்துல்மஜித்
நலம் செய்யும் நோக்குடையோன்! நான்கண்ட அப்துல்மஜித்
நம்சமூக வழிகாட்டி! நான்கண்ட அப்துல்மஜீத்
"நாயகத்தின்’ வழி சென்றோன்! நான்கண்ட அப்துல்மஜித்
நாட்டுக்கு ஒரு முதல்வன்! நான்கண்ட அப்துல்மஜித்
நகைச்சுவையாய் பேசுபவன்! நான்கண்ட அப்துல்மஜீத்
நாமெல்லாம் ஒன்றென்போன்!
-48

நான்கண்ட அப்துல்மஜித்
நாளெல்லாம் பொதுநோக்கன்! நான்கண்ட அப்துல்மஜித்
நம்தேச விடிவெள்ளி! நான்கண்ட அப்துல்மஜித்
நலிந்தோரின் சுமைதாங்கி! நான்கண்ட அப்துல்மஜித்
நம் உறவுக் கொருபாலம்! நான்கண்ட அப்துல்மஜித்
நீசர்க்கு கூரியவாள்! நான்கண்ட அப்துல்மஜித்
நல்லவர்க்கு உயர் நண்பன்! "நான்கண்ட அப்துல்மஜித்
நடுங்காத ஒரு வீரன்!”
கவிமணி: அ. கெளரிதாசன்! ஆலங்கேணி கிழக்கு. கிண்ணியா.
(ம.வி என்பது மகா வித்தியாலயத்தின் மட்டாக்கம்.)
m m m m
"அல்லாஹ்வுக்காகச் செய்கிறேன் பிறர் பாரட்டுவதற்காக அல்ல”
என்று எண்ணிச் செய்தால் அச் செயல் நற் செயலும்
சிறப்பிற்குரிய செயலுமாகும்.
- இமாம் கஸ்ஸாலி (ரஹற்) .
LLLLLL LL LSLLLLL LSL LLLLL L LLLLL LLL LLL LLL LLLL LL LLLLLL
-49

Page 29
(சரித்திரமாகிய ფ2(Uს சரித்திரம்) -
ஏ. நஜிமுதின் - முதுார்.
ஒரு தலைவனுக்குப் பல பண்புகள் இருக்க வேண்டும். அறிவு, திறமை, மொழியாற்றல், துணிவு, தீர்க்கதரிசனம், ஆழமான பார்வை, தோற்றம் என்ற அனைத்து பண்புகளும் நிரம்பிய தனிப் பெருந்தலைவர்தான், மர்ஹ"ம் அப்துல் மஜீத்.
தலைவர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள் என்ற கருத்துக் கொப்ப திருக் கோணமலை மாவட்ட முஸ்லிம்களின் சமூக சூழல் - குறிப்பாக முழுக்க முழுக்க முஸ்லிம்களைக் கொண்டு இம் மாவட்ட முஸ்லிம்களின் தலைநகராக விளங்கும் கிண்ணியாவின் சமூகக் களமே இத்தலைவனை உருவாக்கியது. அவர்தான், இன்று நினைப்பினும் கண்களைக் குளமாக்கும் காவியத் தலைவர் மர்ஹம் அப்துல் மஜீத்.
அவரது அரசியற் பிரவேசம், 1960ம் ஆண்டு நிகழ்ந்தது. இலங்கையின் அரசியல் வரலாற்றில், இரண்டு பாராளுமன்றத் தேர்தல்கள் நடந்த ஆண்டு இதுவாகும். இரண்டாவது நடைபெற்ற தேர்தலில் தான் இரட்டைத் தொகுதியான மூதுாரின், ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இவர் தெரிவானார். 1977ம் ஆண்டுவரை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றும் சந்தர்ப்பம் இவருக்குக் கிடைத்தது. இந்தப் பதினேழு ஆண்டு காலத்திற்குள் மாவட்ட அரசியல் அதிகாரியாக, பிரதி அமைச்சராக, பதில் அமைச்சராக கடமையாற்றி சிறுபான்மை இனமொன்று எதிர்பார்க்கும், அதி உயர்ந்த அரசியல் ஸ்தானத்தினை இவர் பெற்றார்.
இக்கட்டுரையின் நோக்கம், இவர் சரித்திரமாகக் காரணமான இவரிடமிருந்த தனித்திறமைகள சிலவற்றை இனங்காட்டும் முயற்சியாகும். அவரோடு மிக நெருக்கமாக பழகிய அன்பின் அனுபவத்தின் வெளிப்பாடுகளே உங்களோடு பகிர்கின்றேன்.
இவர் பிரதியமைச்சராக இருக்கின்ற பொழுது மூதுார் வந்தால் அடிக்கடி தோப்பூர் செல்வார். கிண்ணியா ஆதரவாளர்கள் கூட, இவரைத் தேடி ሟቛm " · தோப் பூர், வந்ததை

எண்ணிப்பார்க்கின்றேன். “மூதுார் என்னுடைய இருதயம்" தோப்பூர் என்னுடைய மூச்சு’ என அடிக் கடி சொல் வார். இவர் மூதுாரிலிருந்து, தோப்பூர் செல்கின்ற பொழுது அவரது வாகனத்தின் பின்னால், திருகோணமலை மாவட்டத்தில் பணிபுரியும் பல அதிகாரிகளின் வாகனங்களும், தொடராகச் செல்லும், நீர்ப்பாசனப் பொறியியலாளர், கட்டடப் பொறியியலாளர் தொழினுட்ப உத்தியோகத்தர்கள், பாதுகாக்க அதிகாரிகள் சகிதம், மக்கள் பிரச்சனைக்காண அவள் பவனி செல்லார்.
மல்லிகைத்தீவு சந்தியிலே அந்த வாகனங்கள் தரிக்கும். அங்கு அமைந்திருந்த சிங்கள சகோதரர் ஒருவரின் வீட்டிலே G(5 கலந்துரையாடல். அதன் பின்னே தொடரணியாக வாகனங்கள் பட்டித்திடலிற்குள் செல்லும். அங்கே திருவாளர் சின்னத்தம்பி ஜே.பி.யின் வீட்டில் மாம்பழம் வெட்டப்பட்டு வந்தோர் வரவேற்கப்படுவர். பின்னர் தான், தோப்பூர்ப் பயணம் இடம்பெறும். ஏறக்குறைய பத்து கிலோ மீற்றர் பயணத்தின் மூலமாக 'இன ஒற்றுமை'கான விதைகளை, பல நூறு தடவைகள் இந்த அப்துல் மஜீத் வீசினார். அவரது காலத்தில் முதுார் பிரதேசத்திற்குள் தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை கலங்கரை விளக்கமாயிருந்தது. இங்கே முஸ்லிம் களும் , தமிழர் களும் “பரிட்டும் , தேங்காய்ப்பூவும்போல ” என அடிக்கடி குரலெழுப்பி, எமக்குக் காவலனாக அத்தலைவன் நின்றான். அவர் எம்மோடு தொடர்ந்து வாழ்ந்திருந்தால் - அரசியல் அதிகாரம் இல்லாவிட்டாலும் கூட எம்மிடையே ஏற்பட்ட இன உரசல்கள் ஏற்பட்டிருக்கவே (Upi)UJT95].
மூதுாரின் மையவாடி மதில் விவகாரம், பாராளுமன்றம் வரை சென்று விட்டது. திருகோணமலை மாவட்ட அரசியல் அதிகாரியாகப் பணியாற்றுகின்ற பொழுது, முஸ்லிம்களின் மையவாடிக்கு நிதி ஒதுக்கீட செய்திருந்தார். பல இனங்கள் வாழ்கின்ற ஒரு பிரதேசத்தில், ஓர் இனத்தின் மையவாடிக்கு மாத்திரம் அரசநிதி எவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட முடியும் என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்தார். மையவாடிக்கு, தான்நிதி ஒதுக்கவில்லை என்றும், அல் லைக் குளம் திருந் துவதற்கே தான் நிதி ஒதுக்கீடுசெய்ததாகவும் நிரூபித்தார். குளம் திருத்தியதை, சேறு அள்ளியதை எவ்வாறு, யாரால் நீருபிக்க முடியும் என்பதற்காக
-51

Page 30
அவ்வாறு மறுப்புத் தெரிவித்து, மூதுார் மக்களின் மையவாடிக்கு மதில் அளித்தார் அவர். மஜீத் மதில்' என இன்றும் அங்கு பெயர் மின்னுகின்றது. 1977ம் ஆண்டைய தேர்தலில், அன்னார் பேசியதை, இன்றும் கலங்கிய கண்களோடு, உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன். “என் அன்பான சகோதரர்களே. எனக்கு ஏன் ஏசுறீங்க? நீங்கள் மகிழ்ச்சிகரமாக வாழ நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்தித் தந்தேன். குளங்களை அமைந்து, விவசாய முயற்சிகளுக்கு வழி சமைத்துத் தந்தேன், வேலையற்ற வாலிபருக்கு, வேலை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தேன். கல்லும், மண்ணும் கவிபாடும் கட்டடங்கள் பல தந்தேன். படிக்கின்ற மாணவர்களுக்கு மகாவித்தியாலயங்கள் தந்தேன். இருட்டிலே திரியக் கூடாது என்பதற்காக மலைநாட்டிலிருந்து மின்சாரம் கொண்டு தந்தேன். பாதைகள் பல தந்தேன், பாலங்கள் தந்தேன். இதோ இருக்கின்ற மூதுார் வெளிவீதி. தமிழ் மக்கள் வாழும் இறால் குழியினையும், மூதுார் முஸ்லிம்களையும் இணைக்கும் இந்த வீதியினை, நீங்கள் கற்பனை செய்ய முடியாத அளவு உருவாக்கித் தந்தேன். எல்லாவற்றையும் விட, உயிரில்லாத எம் சகோதரர்களை அடக்கம் செய்யும் மையவாடிக்கும் மதில் கட்டித் தந்தேனே. இதற்காகவா எனக்கு ஏசுறீங்க.?”
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களைப் பயிற்றுவிக்கும் பயிற்சிக் கல்லுாரி களுத்துறையிலே அமைந்துள்ளது. தோப்பூரைச் சேர்ந்த சகோதரர் ஒருவர், போட்டிப்பரீட்சை சித்தியடைந்து இப்பயிற்சி நெறியினை மேற்கொள்ள களுத்துறை சென்றார். அங்கே, சிங்கள மொழி மூலமே பயிற்சி நடைபெற்று வந்தது. சென்றவருக்கு, சிங்களம் மூலம் பயிற்சி பெற மொழியாற்றல் போதாது. அவருக்காக, தமிழ் மொழி மூலப் போதனாசிரியர் ஒருவரை 'கெசற் மூலம் கோரச் செய்தார். அவருக்காக, முஸ்லிம் ஒருவரை போதனாசிரியராக நியமிக்கச் செய்தார்.
1965ம் ஆண்டுகூடிய பாராளுமன்றத்திலே, முதலாவது உரையினை நிகழ்த்துகின்ற போது அப்துல் மஜீத் அவர்கள், 'அல் ஹம் து’ சூறா ஓதினார். சிங்கள நாடொன்றின் பாராளுமன்றத்தில், அல்ஹம்து சூறாவினை ஒதி, தனது கலாச்சாரத்தினைப் பிரகடனப்படுத்திய இத்தலைவன் விட்டுச் சென்ற இடைவெளி இன்னும் நிரப்பிப் படவில்லை.
-52

1977ம் ஆண்டைய பொதுத்தேர்தல் மேடைகளில் அவர் இப்படி முழக்கம் செய்தார். “நான் இல்லா விட்டால் இங்கே இரத்த ஆறு ஓடும், என்னைத் தேடுவீர்கள், அப்பொழுது நான் இருக்க மாட்டேன்.” என்ன ஆழமான, தீர்க்க தரிசனமாக, சக்திமிக்க வார்த்தைகள்.
இன்று இம் மகான் எம்மோடு இல்லை. மந்திரியாக, பாராளுமன்ற உறுப்பினராக இவர் எம்மோடு இருக்கத் தேவையில்லை, சாதாரண மனிதராக இருந்தாலும், அவர் தனித்திறன்கள் பலவற்றைக் கொண்டு, எத்தனையோ இன்னல்களைத் தவிடு பொடியாக்கி இருப்பார். 1977ம் ஆண்டு, தேர்தலில் அவள் தோல்வியடைந்தாலும், அவர் மெளத்தாகும் வரை எந்த ஓர் ஆதரவாளனும் அவரை விட்டு விலகவில்லை. கோழி குஞ்சுகளை தன் சிறகுகளுக்குள் வைத்திருப்பது போல், அனைவரையும் அவர், தம் ஆற்றலினால் தன்னோடு வைத்திருந்தார். ஐக்கியத் தேசியக் கட்சி ஆட்சி புரிகின்ற பொழுது நடைபெற்ற மாவட்ட சிங்கள மக்களை உதய சூரியனுக்கு வாக்களிக்கச் செய்த இவருடைய சக்தி தான் என்ன. இன்றும் நான் யோசிக்கின்றேன். 'அந்தத் துப்பாக்கி ஏன் முழங்கியதென்று? சரித்திரமாக வாழ்ந்த அவர், நமக்கு சரித்திரமாகி மறைந்து விட்டார். ."
O மரணத்தைப் படைத்தவன் இறைவன். . அவனே உயிரோட்டத்தையும் படைத்தான். O O A u r O O) மரணத்திற்கும் வாழ்விற்கும் அவனே அதிபதி. O O இரண்டிற்கும் அவன் எல்லையிட்டுள்ளான். O படைத்த அனைத்தையும் அரை விநாடியில் அழிக்கும் O பேராற்றல் படைத்தவன் O O O
O O அலி (ரலி) O
மகனுக்கு
-53

Page 31
இனி ஒருவன்
வருவனோ!
தரித்தர மண்ணில்
துாங்கியெழுந்த
சரித்திரம் படைத்த
சந்தனத் தருவே!
அறியாமைப் பேயினை அச்சப்படுத்திய
அறிஞனே! அண்ணலே!
உந்தன் சிந்தனை
விதைகளே புதுவாழ்வுக்கு
பயிரானது வயிறு
பதைத்திட்ட வறுமைச்சூடு
பனியாய்க் குளிர்ந்தது
விடியாத இரவுகளை
உதய மாக்கிய வைகறையே
'முடியாது’ என்றொரு
வார்த்தைக்கு முற்றாணவனே!
'விழி நோக்கிய விரிகடல்
உங்கள் உயிர்க்கரு செழிப்புறு காடெல்லாம்
உங்கள் கழனித்திரு” என்றோதி கருப்பிருள்
போக்கிய புதுமையே நன்றே செய வாயென
செப்பிய நாவ(ல்)லனே
-54
 
 

செப்பிய செயலும் சிரம்
பணியா உரமும் உப்பிய உணர்வும்
அணியாய்க் கொண்டு முத்தமிழ் முழக்கிய
போதெல்லாம் எங்கள் சித்தமெலாம் செதுக்கிய
கலைச் செல்வனே.
துாரப் பார்வையில்
'மண்பசையினை ஆரத் தழுவிய அமுத
சுரபியே! அண்ணலே! ஐந்தடி இமயமே!
அணையா தீபமே! உந்தனடி பாதையினை
ஒப்புக் கொள இனி ஒருவன் வருவனோ?! 'உயிர் மூச்சு தருவன்’ என்றொருவன்
எகிறிக் குதிப்பனோ..?
எஸ்.ஏ. முத்தலிப்
ல் நமது அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க பொருத்தமான பிரதி நிதித்துவம் தெரிவு செய்யப்பட வேண்டும்.
(1975ம் ஆண்டு பராளுமன்றத்தில் மர்ஹ"ம் மஜீத்!)
-55.

Page 32
ரபிதத்துல் ஆலமுல் இஸ்லாமி நிறுவன தலைவரும் அரச பல்கலைக்கழக உபவேந்தருமான டாக்டர் அப்துல்லாஹ் ஒமர் நஸிட் அவர்களுடன்
م56
 

O O (நிரந்தரமாய் நீ வாழ்வாய்)
முதுார் முகையதின் பலபேரும் போற்றிடவே பார்மீதில் பகலவனாய் வலம் வந்து எம் வாழ்வின் வரலாற்றை மாற்றியவர் நலம் காணும் திட்டங்கள் நமக்கெல்லாம் அளித்திட்ட நிலம் வாழ்ந்த நிழல்மரமே நீசரிந்து போனாயோ
உற்றாராய் அனைவரையும் உவந்தேற்ற உயர்மனமே மற்றோரும் மதிக்கின்ற முற்றத்து மல்லிகையே நற்றவமாய் நாம்பெற்ற நல்லபெரும் நாயகனே குற்றமென்ன செய்தோம் நாம் கூறாமல் ஏன்சென்றாய்?
கண்ணியம் கடமையுடன் கட்டுப்பா டென்றோதி மண்மீதில் மக்கள்பணி மகிழ்வுடனே புரிந்தவரே கிண்ணியா பதிபிறந்து கிழக்கிலங்கை முழுவதுமே புண்ணியங்கள் பலபுரிந்து புகழ்பெற்ற பெருமகனே
எத்திக்கும் எம்மூரை எல்லோரும் அறிந்திடவே தித்திக்கும் தீந்தமிழின் தெவிட்டாத இலக்கியங்கள் வித்தாக விதைத்திங்கு விழாக்களினை எடுத்தென்றும் புத்துயிரை அளித்ததினால் புரட்சிகளைப் புரிந்தவரே
வளமான சொல்லாற்றல் வரமாகப் பெற்றதினால் களமிறங்கி அரசியலில் கயமைகளை ஒழித்தவரே தளராத உறுதியுடன் தனித்துவத்தை நிலைநாட்ட உளமார உழைத்திங்கு உயிர்நீத்த உத்தமரே
நட்டமுடன் நாமெல்லாம் நலிந்து வாழும் நிலைகண்டு திட்டமிட்டு தினந்தோறும் தீர்வுதனை நீதேடி பட்டதுயர் அறியாமல் பாசத்தை உணராமல் துட்டர்குண்டு உம்முடலைத் துளைத்ததுவும் நீதியன்றோ.
நித்திரையில் நாமிருக்க நீமட்டும் விழிந்திருந்து
பத்திரமாய்க் காத்திட்ட பாசத்தை நினைக்கையிலே
சித்திரமாய் உம்முகமும் சிந்தனையில் முன்தோன்ற
நித்தமெங்கள் நெஞ்சத்தில் நிரந்தரமாய் நீவாழ்வாய்
-57

Page 33
ரெலாறுகளின் பதிவுகள் சமூக மாற்றங்களுக்கும். வளர்ச்சிகளுக்கும் மிக அத்தியாவசியமாகிறது. எம்மிடையே வாழ்ந்த காலங்களில் கலங்கரை விளக்காக ஒளிர்ந்தவர்கள் கட்டாயம் மீள் நினைவுகளுக்கு உட்படுத்தப் LIL6) (86.666 (6tb. அவ்வழியே, காலங்கள் பல கடந்தும், பேதங்களுக்கப்பால் * மறைந்த எம் மன்றத்தின் காப்பாளர் மர்ஹ"ம் ஏ.எல் அப்துல் மஜீது அவர்கள் நினைக்கப்படல் காலத்தின் கட்டாய தேவை. • இவற்றிற்கு இணங்க அவர் பற்றிய 15வது நினைவிதழ்" வெளிவருவது பொருத்தமாகுமென நம்புகிறோம். அவர் கடந்து வந்த பாதைகளின் தடங்கள்’ எமக்கான பாடங்கள் பலதை சிந்திச் செல்கிறது - சிந்திக்கவைக்கிறது இச் சிறு நூலுக்கான ஆக்கங்கள், ஆசிச் செய்திகள், அச்சுருவாக்கிய "ரெயின்போ மற்றும் இப்பணிகளுக்கெல்லாம் முன்றின்று உழைத்த நன் மக்கள் அனைவருடனும், இந்நூலை ஒழுங்காக்கி, வடிவமைத்து, தொகுத்து வழங்கிய எழுத்தாளர் திரு. கனகசபை- தேவகடாட்சம் அவர்களுக்கும் எம் மன்றம் நன்றி வழங்குவதில் பெரிதும் ஆனந்தமடைகிற்து. மீண்டும், இத் தியாகியின் பல நினைவு நிகழ்வுகளில் நாம் சந்திப் போம் என உறுதி கூறி, "ஜென்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உன்னத சுவன பதியில் அன்னாருக்கு சிறப்பான இடம் கிடைக்கப்பிரார்த்தித்து விடைபெறுகிறோம். V, ”ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்” ஏ. எச் அப்துல் ரசீத் (சமாதான நீதிவான்)
செயலாளர்
முற்போக்கு வாலிபர் மன்றம்
கிண்ணியா.
-58
 


Page 34


Page 35
இந்நாட்டில் பொதுவான பிரச்சனை இதை யாரும் தட்டிக்கழிக்க முடியாது களைத் தீர்க்கவேண்டிய பொறுப்பு அ லாமல் இருக்கமுடியாது. முகப்லிகளின் பல தடவை எடுத்து காட்டியிருக்கின் னைகளை திர்ப்பதற்குப் பொருத்தமான அரசும் ஒப்புக்கொள்கிறது. அதிவிரைவி விக்கின்ற அத்தனை அந்தஸ்துக்கலுநர். பட்ட துடிபாக ஜாபிதாவிலே சேர்க்க தில் உள்ள சிரேஸ்ட அமைச்சர்கள் : சிறுபாண்மை மக்களுடைய பிரச்சனைக கின்ற மக்கலுநடைய எண்ணங்களைபு டக்கூடிய அளவுக்கு அரசு தானாகே முன்வரவேண்டும்.
(1-11-197 பாராளுமன்றத்தில் மர்ஹவும் ஏ.எல். அப்துல் ம
 

கள் சிறுபான்மை மக்களுக்கு உள்ளது. சிறுபான்மை மக்களின் இப்பிரச்சினை சைச்சார்ந்துள்ளது. என்பதைச் சொல் ர் பிரச்சினைகளை இந்த அரசிடம் நாம் றோம். சிறுபாண்மை பாக்களுடய பிரச்சி வழியைக் காரை வேண்டும் என்பதை ஸ் இன்று தfழ், முஸ்லிம் மக்கள் அணுப அத்தனை உரிமைகளும் அங்கீகரிக்கப் ப்பட வேண்டும் என்று இந்த அரசாங்கத் Fடறுகின்றார்கள். நான் கூறுகின்றேன், 10ளத் தீர்ப்பதற்கு இந்த நாட்டில் வாழ் i அபிலாண்டிகளையும் பிரதிபலித்துக் காட வ இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு
ஜீது