கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அன்னம் பாலிப்பு (அன்னலெட்சுமி இராஜநாதன்)

Page 1


Page 2

«Θ6δί60ιό υφοδύυ
அமரர் திருமதி. அன்னலெட்சுமி இராஜநாதன்
அவர்கள்
25.10. 2006 665o இறைவனடி சேர்ந்தமை குறித்த நினைவு மலர்
25.11, 2006

Page 3

மண்ணகம் போற்ற மதிப்புற வாழ்ந்து விண்ணகத் திறைவன் திருவடியடைந்த
2006
அமரர் திருமதி அன்னலெட்சுமி இராஜநாதன்
திதி வெண்பா அந்திபகல் தொழும் வியஆண்டின் ஐப்பசி வளர்திங்கள் கந்தவிரத சதுர்த்திதிதி நன்னாளில் - புந்திநிறை முன்னவன் குஞ்சரவன் மலர்ப்பதத்தே நண்ணியதும் அன்னலட் சுமித்தாயாள் தவம்,
ー

Page 4

திருச்சிற்றம்பலம்
விநாயகர் துதி
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.
தேவாரம்
தாயினும் நல்ல தலைவரென்றடியார் தம்மடி போற்றிசைப் பார்கள் வாயினும் மனத்தும் மருவிநின் றகலா
மாண்பினர் காண்பல வேடர் நோயிலும் பிணியுந் தொழிலர்பால் நீக்கி நுழைதரு நூலினர் ஞாலங் கோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரே
திருவாசகம்
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச் செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்து அருளுவது) இனியே
5

Page 5
திருவிசைப்பா
ஒளிவளர் விளக்கே உலப்பிலா வொன்றே
உணர்வுசூள் கடந்ததோர் உணர்வே தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே!
சித்தத்துள் தித்திக்கும் தேனே! அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே
அம்பலம் ஆடரங்காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே
திருப்பல்லாண்டு
பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான் மாலுக்குச் சக்கரம் அன்று அருள் செய்தவன் மன்னிய தில்லை தன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே பல்லாண்டு கூறுதுமே
திருப்புரோணம்
ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள அளப்பருங் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆகக் குணம்ஒரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே யாக இந்துவாழ் சடையான் ஆடும்ஆ னந்த எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்தபேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்

アー
திருப்புகழ்
பக்தியால் யானுனைப் பலகாலும் பற்றியே மாதிருப் புகழ்பாடி முத்தனா மாறெனைப் பெருவாழ்வின் முத்தியே சேர்வதற் கருள்வாயே உத்தமா தானசற் குணர்நேயா
ஒப்பிலா மாமணிக் கிரிவாசா வித்தகா ஞானசத் திணிபாதா
வெற்றி வேலாயுதப் பெருமாளே.
வாழ்த்துப்பாடல்
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான்மறை யறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.
திருச்சிற்றம்பலம்
ག།

Page 6
『ー
- ܬ
கோளறு திருப்பதிகம்
திருச்சிற்றம்பலம்
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்
னுளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே, (O1)
என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க
எருதேறி யேழை யுடனே பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
னுளமே புகுந்த அதனால் ஒன்பதொ டொன்றொடேழு பதினெட் டொடாறு
முடனாய நாள்க ளவைதாம் அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. (O2)
உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து
வுமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென்
னுளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதுார்தி செயமாது பூமி
திசைதெய்வ மான பலவும் لام
அருநெறி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. (O3)
لهم:

- ܬ
மதிநுதல் மங்கையோடு வடபா லிருந்து
மறையோது மெங்கள் பரமன் நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென்
னுளமே புகுந்த அதனால் கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
கொடுநோய்க ளான பலவும் அதிகுண நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. (O4)
நஞ்சணி கண்டனெந்தை மடவாள்த னோடும்
விடையேறு நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென்
னுளமே புகுந்த அதனால் வெஞ்சின அவுணரோடும் முருமிடியு மின்னும்
மிகையான பூத மவையும் அஞ்சிடும் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே, (O5)
A.
வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர்
மடவாள்த னோடு முடனாய் நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தெ
னுளமே புகுந்த அதனால் கோளரி யுழுவையோடு கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. (O6)

Page 7
- ܬ
ག།
செப்பிள முலைநன் மங்கையொரு பாகமாக
விடையேறு செல்வ னடைவார் ஒப்பிள மதியுமப்பு முடிமே லணிந்தெ
னுளமே புகுந்த அதனால் வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும்
வினையான வந்து நலியா அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. (O7)
வேள்பட விழிசெய்தன்று விடைமே லிருந்து மடவாள்த னோடு முடனாய் வான்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தெ
னுளமே புகுந்த அதனால் ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடு
மிடரான வந்து நலியா ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே, (O8)
பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறு மெங்கள பரமன் சலமக ளோடெருக்கு முடிமே லணிந்தெ னுளமே புகுந்த அதனால் மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும் அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. (O9)
هـ
10

ག།
கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன் மத்தமு மதியுநாக முடிமே லணிந்தென்
னுளமே புகுந்த அதனால் புத்தரொ டமணைவாதி லழிவிக்கு மண்ணல்
திருநீறு செம்மை திடமே அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே, (O)
தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொ னெங்கும் நிகழ நான்முக னாதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன் தானுறு கோளுநாளு மடியாரை வந்து
நலியாத வண்ண முரைசெய் ஆனசொல் மாலையோது மடியார்கள் வானில்
அரசாள்வ ராணை நமதே. (11)
திருச்சிற்றம்பலம்

Page 8
திருவாலவாய்த் திருநீற்றுப்பதிகம்
திருச்சிற்றம்பலம்
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே. (0)
வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு ஓதத் தகுவது நீறு உண்மையிலுள்ளது நீறு சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் திருநீறே. (02)
முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு சித்தி தருவது நீறு திருமால வாயான் திருநீறே. (O3)
காண வினியது நீறு கவினைத் தருவது நீறு பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு சேணந்தருவது நீறு திருவால வாயான் திருநீறே. (O4)
பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம் ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு தேசம் புகழ்வது நீறு திருவால வாயான் திருநீறே. (O5)
الم.
اهت  ܼܲܬ
12

アー ག།
அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு வருத்தந் தணிப்பது நீறு வான மளிப்பது நீறு பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும் வெண் நீறு திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே. (06)
எயிலதூ அட்டது நீறு இருமைக்கு முள்ளது நீறு பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு அயிலைப் பொலிதரு சூழத் தால வாயான் திருநீறே. (07)
இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே. (08)
மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு ஏல வுடம்பிடர் தீர்க்கு மின்பந் தருவது நீறு ஆலம துண்ட மிடடெற்றெம் ஆல வாயான் திருநீறே. (09)
குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமுங் கூடக் கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு எண்டிசைப் பட்டபொருளா ரேத்துந் தகையது நீறு அண்டத் தவர்பணிந் தேத்து மால வாயான் திருநீறே. (10)
ஆற்ற லடல்விடை யேறு மாலவா யான்திரு நீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன் தேற்றித் தென்ன லுடலுற்ற தீப்பிணி யாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே. (1)
திருச்சிற்றம்பலம்
13

Page 9
RAMAKRISHNAMISSION ს PhეJ8 - 2ნჭვეწ38 წ43ზეე (Ceylon Branch) Email - fkomCey@elji ekak 40, Ramakrishna Road. Colombo 6.
qAS aaAM SAMSLSeLeeSaLLLLSSSLALAALLLLLAALLLLLAMMeAeLALMMLSSMSLALLSMSLMLMSMLALSLALALeLeLALASLLALLASMLMLLeALSLSSSMSMLSSeeSLMLMLSLSLALeLeLeLMLMLMLMMLMLMMSeLeSLLLLS MSMMMMeAeLMMeSeeLeeSALALALLMSMSMLMMLSLSLaTAqLSMLSeLMLMLeLeMLLSMLMSaAeALAMSL SSTqALASLkLeLSA
இரங்கல் செய்தி
யாழ்ப்பாணம் கந்தரோடையைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி அன்னலெட்சுமி இராஜநாதன் அவர்கள் தனது 81 வது வயதில் இறையடி எய்திய செய்தியை அறிந்து, அவர்கள் ஆன் மசாந்திக்காகப் பிரார்த்திக்கிறோம்.
அமரர் அன்னலெட்சுமி இராஜநாதன் அவர்கள் இறைபக்தியும், சமயப்பற்றும் கொண்டவர். அவரது பேரப் பிள்ளைகளான செல்வன் பிரசன்னாவருண், செல்வி அனுஷலா ஜனனி, செல்வி ஜயிஷ்னி, செல்வன் துவாரகேஷ் மற்றும் செல்வி பிரிதிவினி எங்கள் மிஷன் சமய பாடசாலை மாணவர்கள் ஆவர். திருமதி அன்னலெட்சுமி அவர்களின் வழிகாட்டலில் இப்பேரப்பிள்ளைகள் சமயத்தில் ஆர்வம் கொண்டவர்களாக விளங்குவதைக் காணமுடிகிறது.
பிறந்தவர் இறப்பது உலகின் நியதி' என்ற உண்மையை கீதையில் பகவான் கூறியிருந்தபோதிலும், உடன்பிறந்தாரது மறைவு பெருந்துயரத்தை அளிக்கத்தான் செய்கிறது. அதைத் தாங்கிக்கொள்ளும் சக்தியையும் பகவான்தான் அளிக்கவேண்டும். காலஞ்சென்ற திருமதி அன்னலெட்சுமி இராஜநாதன் அவர்களது குடும்பத்தாருக்கு எங்கள் இதயபூர்வமான அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, பகவான் அந்த நொந்த உள்ளங்களுக்கு அமைதியைத் தர வேண்டுமெனவும் பிரார்த்திக்கிறோம்.
a/ ( ھی بخشتے

Page 10
உண்மைத் தரிசனம்
-கம்பவாரிதி இ. ஜெயராஜ்
உலகம் நிலையாமையை நிலையாய்க் கொண்டது. தோற்றிய பொருள் அனைத்தும் அழியும். அழிவென்பது ஒடுங்குதலே. எதிலிருந்து ஒன்று வெளிப்படுகிறதோ, அதனுள்ளேயே அது மீண்டும் பொருந்துகிறது. வெளிப்படுவது பிறப்பு
உட்செல்வது மரணம்.
எல்லாப் பிறப்பின் முன் ஒரு மரணமும்,
எல்லா மரணத்தின் பின் ஒரு பிறப்பும் உண்டு.
முத்தி கிட்டும்வரை இதுவே கதி.
ஒவ்வொரு பிறப்பிலும் அகங்காரம் மமகாரமாக,
பற்று வளர்கிறது.
நான் என்பது அகங்காரம்.
எனது என்பது மமகாரம்.
நான் என்ற எண்ணம், எனது என்ற எண்ணத்தை வளர்க்கும்.
எனது என்ற எண்ணம், நான் என்ற எண்ணத்தை வளர்க்கும்.
நான் என்பது உயிரா? உடலா? மனமா? புத்தியா?
இவையேதும் இல்லை.
நான் என்பது ஆணவம்.
உயிர் உணர்வாய் உரைப்பர் சிலர்.
ஆணவ மறைப்பில் உயிர்த் தரிசனம் இல்லை.
ஆதலால் நான் என்பது ஆணவமே! நான் எனும் அகங்காரம் பொய்,
ஆதலால் அதிலிருந்து பிறக்கும், எனது எனும் மமகாரமும் பொய்.
நானும் பொய் எனதும் பொய்.
இதுவே மெய்.
இம்மெய் உணராதவரை,
هـ - ܬ
16

நானும், எனதும் ஒன்றையொன்று வளர்க்க, பற்றால் பாதிப்புறுவோம்.
பற்றுள்ளவரை பிறப்பும் துன்பமே, இறப்பும் துன்பமே. இத்துன்பம் கடப்பது எப்படி? மெய்யைத் தரிசித்தால் பொய் அழியும். அல்லது? பொய்யை அழித்தால் மெய் தரிசிக்கப்படும். துன்பம் நீங்க பொய்யழித்து மெய்யைத் தரிசிப்பதே ஒரே வழி. தரிசிக்க முயல்வோம். துன்பம் கடப்போம்.
米 米 米 அன்னை அன்னலட்சுமி இராஜநாதன், நிறைவாழ்வு வாழ்ந்து இவ்வுலகு நீங்கினார். மக்கள், மருமக்கள், பேரர்கள் என, அனைவரையும் அன்பால் அரவணைத்த அவ் அன்னை, ஏக்குற்று அவர்கள் நிற்க இறையடி எய்தினார். அனைத்துத் தாயாரும் அன்புருவானவர்களே. ஆயினும் இத்தாய் அருள் எனும் நிலைக்கு, தன் அன்பை உயர்த்தியவர். கனவிலும் பிறர்க்குத் தீமை எண்ணாக் கருணை உள்ளம். அதிரப் பேசியறியாத அருள் வடிவு. எந்நேரமும் இறைத் தியானம், இவையே அவ் அன்னையின் அடையாளங்கள். உளத்தின் உயர்வுக்கேற்ப, தன் சந்ததியை உயர்த்தி சாந்தி அடைந்தார். அவ் அன்னை எனும் அரிய விருட்சத்தின், விழுதுகள் எங்கள் கழகத்தையும் காவல் செய்கின்றன. அவர் விதைத்த அன்பு விதைகள், - அவர் சந்ததியில் விருட்சமாகி விரிந்து, உலகிற்கு இன்னும் பலகாலம் பயன் செய்யும் என்பது திண்ணம். அந் நற்றாயின் ஆத்மசாந்திக்காக,
கழகத்தார் அனைவரும் பிரார்த்திக்கிறோம்! 6
‘இன்பமே எந்நாளுந் துன்பமில்லை”
+++
17

Page 11
வரன்முறை கிளர்த்தல்.
முக்கன் சிவனை முதற்கண் இறைஞ்சுவோம்! இலங்கை நாட்டின் கிரீடமென நல் எழிலாய் இலங்கும் யாழ்ப்பாணம், ஈழத்து நல் ஊராம் கந்தரோடை, கந்தன், சிவன் காக்கும் நன்ஊர். காராள் வேளான் கச்சித நன் குடிமரபில், கதிர்காம சிங்கம், காமாட்சிப்பிள்ளை தம்பதிக்கு நன்மகளாய்ப் பிறந்த அன்னவூெட்சுமி இலட்சுமியே! நற்குணமும் பக்தியும் பொறுமையும் இனிமையும் பொற்பார் பெண்மையுமாய், ஊரார்க்கோ செல்லம்' யாழ்மண்ணின் உபசரிப்பு, ஓர்மம், அஞ்சாமை உயிரெல்லாம் தன்னதாய் உள்மிருத்தும் உயர்மனத்தாள்
கந்தசஷ்டி என்ன, சதுர்த்தி எனும் நாளென்ன சைவ மரபைத் தலையாய்ப் பேணிவந்த மகள். தாய்மையே தன் இயல்பானாள் - தயை உணர்வால்! திருமண வயதெய்த திருமலை வாழ் இராஜநாதன் தன்குடிக்கு அரசியாய் அன்னலெட்சுமியைத் தேர்ந்திட்டான். திருமணம் ஆனதுமே, அண்ணனின் தாயில்லாப் பிள்ளைகளை அன்னவளின் கரங்கொடுத்து "காத்திடம்மா" என்றுரைத்தான். "புதுத்தாலி கழுத்திலே; ஐந்து பெறா மக்கள் கையிலே!" எதுவரினும் ஏற்றுநிற்கும் தமிழச்சிப் பெருங்குணத்தால், தாயில்லாக் குஞ்சுகள் ஐந்தையும், தன் செட்டைக்குள் அணைத்துச் சீராய் வளர்த்தவள், தாய்மையிலே சீமாட்டி திருமலையில் இராஜநாதன் நன்மனைக்கு வருவோரோ வெளிநாட்டு, உள்நாட்டு இலக்கியத்துப் பெரியோர்கள், உறவினர்கள் நாளும் நடக்கும் விருந்துபசாரங்கள்!
யாழ்ப்பாணச் சமையலின் அனைத்துச் சுவைகூட்டிப் பரிவான பாசமும் காட்டிப் போஷித்த அன்னையிவள். அன்னபூரணி, அன்னலெட்சுமி இலட்சுமியே! எல்லாப் பணிகளையும் இனிதாய் ஏற்றுச் சீர்செய்து தன் உதரப் பிள்ளைகளாய் ஐவரைப் பெற்றெடுத்தாள். மூத்தவன் மகேந்திரன் சிங்கப்பூரினிலே வாழுகிறான். ஜெயரஞ்சனி அவன் மனைவி, பேர்த்தியராய் அபிராமி கிருத்திகா இருவரைக் கண்டு மனம் நிறைவுற்றாள். இரண்டாம் மைந்தன் லோகேந்திரன் கல்வி கற்று ஏ.ஐ. மாக்கான் மாக்கார் கணக்காய்வாளர் நிறுவனத்தின் முகாமையாளர், கணக்கியல் கற்ற யோகேஸ்வரியை மணம் செய்ய, பிரசன்னாவருண், அனுஷலா பிறந்தனர். மூன்றாம் செல்வமைந்தன் ரவீந்திரவர்மன்' ரஜனியை மணந்து, பட்டயக்
கணக்காளர் பதவிகொண்டான். தன் குடும்ப வாரிசென ஆரணியைப்
18

பெற்றான். குமுதரஞ்சனி எனும் மகள் சட்டத்தரணி; துறைமுக
அதிகாரசபைப் பொறியியலாளன் நந்தகுமார் அவள் கணவராக, பிரதிவினி' பிறந்தாள் கலிதீர்க்க: கடைக்குட்டிப் புதல்வி பூணீரஞ்சனி செல்லம்தான் பட்டயக் கணக்குத் துறையில் தேறச் செய்தாள். சட்டத்தரணி விஷ்ணுகாந்தன் மணமகனாய்ச்சேரப் பேர்த்தி ஐயிஷ்னி, பேரன் துவாரகேஷ் பிறந்தனரினிதே பேரர் பேத்திகளைச் செல்லங்கொட்டிச் சீராட்டினாள்.
அத்தனையும் செய்து கொண்டே உலகநடப்புகள், இத்தனையும் பிசகாமல் எப்படியும் அறிந்திடுவாள். புத்தகங்கள் கண்டால் படித்தன்றே முடிப்பாள். வீட்டுச் சோலையிலே மாமரமும் செழுமரங்கள், பூச்செடிகள், கொல்லையிலே காய்கறிச் செடிகளென இயற்கையை ரசிப்பவள், காகம் குருவி எனப் பறவைகளுக்கு அரிசிக் குறுணல் இடுவாள். இது மட்டுமல்ல
கொல்லையிலே வந்து போகும் பாம்புக்கும் பால் வைத்துப் பருகுமட்டும் பார்த்து நின்று வால் சென்று மறையும் வரை காத்து நிற்பாள். காகம் குருவியென்ன. பாம்புமே நம் ஜாதி என்று பாரதிக்கும் மேலாகப் பரவசமாய்ப் பார்த்து நிற்பாள்!
யாரேனும் துன்பமெனத் துவண்டு நின்றுவிட்டால் "விழிக்குத் துணை திருமென்மலர்ப் பாதங்கள் மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் பழிக்குத் துணை முருகனின் பன்னிரு தோள்கள் வழிக்குத் துணை வடிவேலும் அவன் மயூரமும் என்று சொல்லி, முருகன் தியானம்' சொல்லுங்கோ!" என்றும், 'மூவிரு முகங்கள் போற்றி' என்று மனசிலை சொல்லுங்கோ' என்றும் எல்லோருக்கும் உணர்த்தி, மனந்தேற வழி சொல்வாள். முதுமை வந்து சேர, முக்காலும் எப்போதும் இறைவனையே சிந்தித்து விரதங்கள் செய்வதும் கந்தசஷ்டி, தேவாரமென்று பாராணம் செய்து தன்னை இறையுணர்வில் இருத்தியவள்! அன்னலெட்சுமி அவள் லட்சுமியேதான்! எடுத்த கருமங்கள் முடிந்ததென எண்ணியே கந்தனுடன் தன்னையும் அர்ப்பணம் ஆக்கிக்கொண்டாள் எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! நீர் துடித்து அவள் பிரிவால் துவண்டுவிட வேண்டாமே! துயர் உறுதல் வேண்டாமே!
கமலினி செல்வராசன் +++
19

Page 12
Our Mother
There is a popular saying that “God cannot appear in person and speak with every human being on the earth". Hence he created
"Mothers'.
In simple words, it means, “Mother is Goddess'. We believe this to be true as we have realized this through our Loving Mother, who was not only a mother, but also was A Teacher, Guide, Philosopher and Everything to us. Not only to us, to our children as well, after the death of our father.
She taught us to be Religious, Obedient, Sincere and Honest in all our deeds and acts.
Our mother was a real “Prayer Warrior'. We have so many memories of hearing her pray, and there have been times we have literally seemed to feel her prayers for us when we were in dangerous or difficult situations. Call us mystical, but there is just something about a mother's prayers
Our mother has endured many trials in her life, and sometimes, we admit, we've questioned why, this wonderful woman should be inflicted with so many circumstances that to us, seem unfair and unjustified. But these trials have not broken her. Instead, she seemed to grow stronger and lovelier with time.
We still do not want to accept that she has departed this world. She still remains in our heart as a fresh flower that bloomed today. In the entire world there is no other, to take the place of Our Beloved Mother: -
20

We want to convey the beauty, the kindness, the strength, the warmth of this remarkable lady, and we can't seem to find the right words to really do it.
Dear Amma,
We all want you to know that how much we love you.
For all of us, . You are a Heroine
Yours, Mahen, Logu, Ravi, Devi and Sri
+++
Messenger:
Outpouring of genuine Love
Trusts in God.
Heart sets in things abover Earthly saint.
Rescuer of the way world.
+++
Our mother is always with us. She's the whisper of the leaves as we walk down the street. She's the smell of bleach in our freshly laundered socks. She's the cool hand on our brow when we're not feeling well. Our Mother lives inside our laughter. She's crystallized in every tear drop we shed. She's the place we came from ... our first home. She's the map we follow with every step we take. She's our first love and our first heartbreak, and nothing on earth can separate us from her... Not time ... not space ... not even death
i Temple Bailey (O 1933
21

Page 13
ཚམe །
அம்மா என்றவுடன் எனக்கு ஞாபகம் வருவது பின்வரும் பாடல்தான்
விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள் மெய்மை குன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.
நான் முதன் முதலாக பெற்றோர் பாதுகாப்பை நீக்கி கணக்கியல் பட்டப்பயிற்சி செய்ய கொழும்புக்குச் செல்லப் புறப்பட்ட போது அம்மா என்னை அழைத்து நீ எப்போதும் இப்பாடலை மறவாமல் சொல்லி வா உன்னை அண்டும் துன்பம், துயரம் என்பன உடனடியாக விலகிச் செல்லும் எனக் குறிப்பிட்டார். இதனை நான் இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றேன்.
எமது இளமைக் காலம் தொட்டு சகோதரர்கள் ஐவருக்கும் அம்மா சொல்லிக் கொடுத்ததெல்லாம் கல்வி, பணிவு, நேர்மை, இறைபக்தி என்பனதான். அத்தோடு மட்டுமன்றி சகோதரர்களுக்கிடையே ஒற்றுமை, பாசம், ஒருவரையொருவர் விட்டுக் கொடுக் காது பழகுதல் என்பனவுமாகும்.
செல்வந்தராக எமது தந்தையை மணமுடித்து பல்வேறு காரணங்களால்
தோளோடு தோள் நின்று எமக்கு என்றும் அழியா கல்விச் செல்வத்தை ஊட்டி வாழ்வின் உயர்நிலைக்கு ஏற்றிச் செல்வதில் அம்மா, அப்பாவின் பணி மறக்க முடியாதது.
அம்மா எம் அனைவருக்கும் மட்டுமின்றி மனைவியை இழந்து ஐந்து பிள்ளைகளுடனிருந்த எமது தந்தையின் சகோதரரின் பிள்ளைகளுக்கும் தாயாக இருந்தார். நாம் நினைவறிந்த காலத்தின் பின் தான் அவர்கள் எமது ஒன்றுவிட்ட சகோரர்கள் என்ற உணர்வே ஏற்படும் அளவிற்கு எம் அனைவரையும் ஒரு வயிற்றில் பெற்ற பிள்ளைகளாக அவர் வளர்த்திருந்தார். '
நான் தொலைபேசியிலோ அல்லது நேரிலோ அம்மா உங்களுக்கு என்ன வேண்டும்?' எனக் கேட்டால் அவரிடமிருந்து வரும் பதில் இதுதான்.
22

'எனக்கு என்னடா வேண்டும் நீங்களனைவரும் ஒற்றுமையாக சந்தோஷமாக இருந்தால் அதுவே எனக்குப் போதும்'
தனக்கென எதையும் விரும்பாமல் தான்பெற்ற பிள்ளைகளுக்காகவும், பேரப்பிள்ளைகளுக்காகவும் வாழ்ந்து மறைந்த தெய்வம் அவர்
யாரோ ஒரு பெரியவர் கூறியிருந்தார். கடவுளால் ஒரே நேரத்தில் எல்லா இடத்திலும் இருக்க முடியாமல் தனது பிரதிநிதி ஒருவரை நியமித்தார். அத்தம் பிரதிநிதி தான் அம்மா.
அதற்கு உதாரணமாக வாழ்ந்து இவ்வுலகை விட்டு மறைந்தாலும் எம் நினைவில் என்றென்றும் மறையாது ஒளிவிளக்காய் சுடரும் எமதருமை அம்மாவின் ஆன்மா சாந்தியடைவதாக!
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
ரவீந்திரவர்மன் (மகன்)
+++ Loуіпg Арратта,
We are going to miss you very much. You have been part of our lives for so long, looking after us when we were younger, telling us stories about religion and culture and showering us with love.
Despite us not seeing you all the time, you were a major part of our lives and its hard to imagine you have gone. You lived a long and fruitful life and one thing I have learnt from you is the importance of living a healthy life. I will always remember you telling me to go to bed early and to rise early and I will remember seeing you meditate before bed each night. Thankyou for everything арратта.
Abiramy Mahendran.
(Grand Daughter)
23

Page 14
பெற்றால் தான் பிள்ளையா?
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்' இவை பகவான் கிருஷ்ணரின் வாக்கு.
நாம் சகோதரர் ஐவர்.
தாயை இளவயதில் இழந்தவர்கள். தாய்பாசத்தை இழந்தவர்கள் அல்ல காரணம் தாய்க்குத் தாயாய் தாய்மைக்கு மேலாக தன்பிள்ளை போலவே எம்மைக் காத்து
வளர்த்த தெய்வத்தாய் எமது அப்பாவின் தம்பியாரின் துணைவியார்.
அவர் எமக்கு சிற்றன்னையல்ல - அன்னையேயாவார் கருணையின் வடிவம். எம்மை அவர் கடிந்து கட்டளையிட்டது கிடையாது. அன்பே உருவான அவருக்கும் ஐந்து பிள்ளைகள் இருந்தனர் அவர்கள் வேறு நாம்வேறாக அம்மா என்றும் எண்ணியதில்லை.
நற்பண்புகள் அனைத்தையும் நாம் அறியவைத்தார். ஒரு கூட்டுக்குஞ்சுகளாகத் தன் இறக்கைக்குள் மூடி வளர்த்தார் பத்துப்பேருக்கும் திருமணம் செய்வது தன் பணியெனக்கொண்டு அதனை பண்புற நடத்திப் பாகுபாடு அற்ற முறையில் பார்த்து மகிழ்ந்தவர்.
அவ்வன்புத் தாய் பேரக்குழந்தைகளிற் கூடப் பேரன்பு காட்டியவர் ஆனால் அவர்களிற் கூட வேறுபாடு காட்டியது கிடையாது. அது அவருக்குத் தெரியாது. அவர் இன்னும் சிலகாலம் வாழ்ந்திருக்கலாம்.
இறைவன் அழைத்திட்டார்.
24

அங்கும் அவர் அன்பின் வடிவத்தை வெளிப்படுத்துவார் என்பதில் ஐயமில்லை.
அவரது இழப்பை நிறைவு செய்ய எவராலும் முடியாது, ஆனால், அவரது நினைவை எம் நெஞ்சத்தால் மறக்கவும் முடியாது. அத்தெய்வத்தாய் எம் உள்ளக்கோவிலில் தெய்வமாகவேயுள்ளாள்.
உமக்கென ஒரு காணிக்கை நாம் அளிக்கவேண்டுமேயாகில் நீ காட்டிய அன்பை பாசத்தை, வேறுபாடற்ற உறவை நாமும் பின்பற்றுவதேயாகும். அதனை நிச்சயம் நிலைநிறுத்துவோம் என்பதனை உறுதியுடன் உரைக்கின்றேன்.
பிறருக்காக உம்மை அர்பணித்த நீங்கள் இறைவனடியில் இன்புற்று
வாழ்வீர்களாக!
உங்கள் ஆன்மா சாந்தி பெற ஆயிரம் ஆயிரம் பிரார்த்தனைகளைக் கூறி அஞ்சலிசெய்கின்றோம்.
அன்பு மகள். சீமா விக்ரம்
------
My appamma was the kindest and most sweet tempered person I have known. I never once saw her lose her temper, and though I didn't get to spend nearly enough time with her, when she was with me, she showed me everyday in every way just how much we meant to each other. I was blessed to have such a loving grandmother in my life. I'll carry the memory of her loving embrace with me for always.
Kiruthiga Mahendran (Grand Daughter)
هـ +++ ܒ ܬ
25

Page 15
பெயருக்குப் பொருத்தமாகப் பலருக்கு அன்னமிட்ட திருமதி. அன்னலட்சுமி இராஜநாதன்
யாழ்ப்பாணம் கந்தரோடையைப் பிறப்பிடமாகக் கொண்ட காலஞ்சென்ற கதிர்காமசிங்கம் காமாட்சிப் பிள்ளை தம் பதிகளின் புதல்வியும் திருகோணமலை சுப்பிரமணியம் இராஜநாதனின் மனைவியுமான இவர் 25.10.2006 ல் அமரத்துவம் அடைந்தார் என்பதைக் கேள்வியுற்றபோது மிகவும் வேதனையாக இருந்தது. அவர் மிகவும் அன்பு உள்ளம் கொண்ட பெண்ணாக வாழ்ந்தவர்.
அன்னார் திருகோணமலை திரு.சு. இராஜநாதன் அவர்களை 1948 ம் ஆண்டு திருமணம் செய்த நாள்முதலாக திருக்கோணமலை வித்தியாலயம் வீதி றோஜா வயல் (Rose Field) என்ற தனது கணவருக்கு அப்போது சொந்தமாக இருந்த வீட்டில் செல்வச் செழிப்போடு தன் வாழ்க்கையை ஆரம்பித்தார்.
அடக்கம், பொறுமை, இரக்கம், அமைதி என்பவற்றின் பிறப்பிடமாக வாழ்ந்த இவர் திருமணமான புதிதிலேயே ஐந்து குழந்தைக்குத் தாயாக வேண்டிய பொறுப்பையும் மனமகிழ்ச்சியுடன் வலிந்து ஏற்றுக் கொண்டார். ஆம்! மனைவியை இழந்து தன் ஐந்து குழந்தைகளுடன் தன் சகோதரனோடு கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த திரு. சுப்பிரமணியம் ஞானகணேஷனின் மூன்று பெண் குழந்தைகளையும் இரண்டு ஆண்குழந்தைகளையும் தன் குழந்தைகளாக நினைத்துப் பாசத்துடனும், நேசத்துடனும் வளர்த்து ஆளாக்கிய பெருமையும் இவரையே சாரும். "பிறர் பிள்ளை தலை தடவத் தன் பிள்ளை தானே வளரும்" என்பார்கள். அதற்கேற்ப இவரது பிள்ளைகள் ஐவரும் மிகவும் உன்னதமான பதவிகளை வகித்து வாழ்கிறார்கள் என்பது ஈண்டு குறிப்பிடக் கூடியது.
திருமணத்தின்பின் ஒரு சில வருடங்கள் கழித்து சில தனிப்பட்ட காரணங்கள் நிமித்தம் திருகோணமலை நகராண்மைக் கழகத்தில் எழுதுவினைஞராகக் கடமையாற்றிய இவரது கணவர் இடமாற்ற நிமித்தம யாழ்ப்பாணம் செல்ல, திரும்பவும் தன் சொந்த ஊரில் வாழத்தொடங்கினார்.
لهم - ܬ
26

யாழ்ப்பாணத்தில் இவரது குழந்தைகள் மிகவும் கெட்டித்தனமாகப் படித்து முன்னேறினர். இதையடுத்து இவரது கணவரும் ஓய்வு பெற எல்லோரும் கொழும்புக்கு இடம்மாறினர்.
இவரது பிள்ளைகளில் திருவாளர்கள் மகேந்திரன், லோகேந்திரன் இரவீந்திரவர்மன், பூநீரஞ்சனி ஆகியோர் கணக்காளர்களாகவும் குமுதரஞ்சனி வழக்கறிஞராகவும் கடமையாற்றுகின்றனர். அதேபோல இவர்களுடைய துணைவர்களும் நல்ல பதவியில் உள்ளனர் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. அனைவரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர் என்றால் அமரர் திருமதி. அன்னலெட்சுமியின் சாதனையை என்ன வென்று கூறுவது.?
இவரது கணவர் சு. இராஜநாதனின் தாய் திருமதி சு. தையல்நாயகி அவர்களின் உடன்பிறப்புக்கள்தான் ஈழத்தின் பிரபல தமிழ் அறிஞர் திரு தி. த. கனகசுந்தரம்பிள்ளையும் ஈழத்தின் முதல் நாவலை எழுதியவருமான திரு.தி.த. சரணமுத்துப் பிள்ளையும் காலஞ்சென்ற முகாந்திரம் த.பாலசுப்பிரமணியனுமாவார்.
இக்கட்டுரையை நான் எழுதும்போது தற்செயலாக என்னைச் சந்திகவந்த இவர் வளர்த்து ஆளாக்கிய பெறாமக்களில் மூத்தவரிடம், உங்கள் ஆசையம்மா பற்றித்தான் ஒரு நினைவுச் செய்தி எழுதுகிறேன் என்று நான் கூற, "அக்கா எங்களை வளர்த்து ஆளாக்கியது பற்றியும் குறிப்பிட்டுவிடுங்கள்" என்றபோது, நான் உண்மையில் திகைத்தேன். இந்த நாட்களில் இப்படியும் ஒரு பிறவியா என்று. உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம்.
நானும் ஒன்றை இவர் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். எனது தாயார் இளவயதில் என்னை விட்டுப் பிரிந்தபோது இவருடன் நானும் ஒரு சில வருடங்கள் தங்கி அவரது அன்பினாலும் பாசத்தினாலும் என் பாரிய இழப்பை மறந்திருந்தேன் என்பதே.
இவர் செய்த நல்ல செயல்கள்தான் இவரை அதிககாலம் நோய்வாய்ப்பட வைக்காமல் இறைபாதம் சேர வைத்ததாகும்.
هـ  ܼܲܬ
27

Page 16
இவருக்கு எட்டுப் பேரக் குழந்தைகளும் உள்ளனர். அவர்களையும் பாசத்துடன் வளர்த்து ஆளாக்கி தன் பாரிய கடமையை முடித்துச் சென்றுவிட்டார். இவரது மறைவு இவரது குடும்பத்தினருக்கு பாரிய இழப்பாகும்.
ஓம் சாந்தி
157 டைக் வீதி உடன் பிறவாச்சகோதரி திருகோணமலை தமிழ்மணி கலாபூஷணம் சிறுகதைச்சிற்பி
பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கன்.
+ + + Tribute To My Darling Grandma
Though I Had The Opportunity To Be With My Paternal Grand Mother Only For A Few Years, I Have Pleasant Memories Of Her Life. Also, I Have Heard Lot About My Grandmother Through My Father.
As I Remember She Always Seemed Very Pleasant And Sweet With Her Lovely Smile On Her Face All The Time. She Always Encouraged Her Grand Children To Study Well. As She Did For Her Own Children. She Had A Special Place In Her Heart For All The Grand Children. She Loved Having Them All Around And Attending To Their Needs. She Never Got Tired In Working For Them. She Was A Pure Vegetarian And A Very Pious Lady, She Used To Relate A Lot Of Religious Stories And Wanted Her Grand Children To Be God Fearing.
Though Tender Hearted She Never Held Grudge Against Anyone, She Had Nothing But Love In Her Heart
I Am Sure She Is Now In Heaven And Young Again.
Aarani Rabendravarman,
Toronto, Canada +++ d
28

பண்பும், பாசமும் உள்ள என் அன்பு சகோதரிக்கு, -
அக்கா என்னை ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு மறைந்து விட்டீர்கள் என் கணவர் என்னை விட்டு பிரிந்த துயர் நீங்கு முன் மற்றோர் இடியாக வீழ்ந்தது உங்கள் மறைவு. உவ்விடம் கூடிய விரைவில் வருவேன்; உங்களை வந்து பார்ப்பேன் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன்; இறைவனையும் வேண்டினேன்; அது கனவாக போய் விட்டது.
அக்கா நான் சிறு பிள்ளையாக இருந்த போது நீங்களும் அண்ணாவும் அன்பு காட்டி அரவணைத்தீர்கள். ஆசானாக இருந்து கல்வி புகட்டி, பாடசாலைக்கு அழைத்துச் சென்று வேண்டிய உதவி எல்லாம் செய்வீர்கள். பல கதைகள் சொல்லி அதன் மூலம் பல அறிவுரை கூறுவீர்கள். பாடசாலையில் சிறந்த மாணவியாகவும், இனிய சுபாவம் உள்ளவராகவும், அருமையான பிள்ளைகள் பேரப்பிள்ளைகளைப் பெற்று நிறைவான வாழ்வு வாழ்ந்தீர்கள். என் பிள்ளைகளையும் உங்கள் பிள்ளைகள் போல் பாவித்து அன்புகாட்டி அறிவுரை கூறுவீர்கள். அவர்களுக்கு பெரியம்மா என்றால் தனிப்பாசம். எல்லோரிடமும் இன்முகத்துடன் பழகி அன்பு காட்டி வாழ்ந்தமையால் எல்லோருக்கும் உங்கள் மறைவு பேரிழப்பாக இருக்கிறது. நீங்கள் எங்களை விட்டுப்பிரிந்தாலும் உங்கள் பிள்ளைகள் காட்டும் அன்பு, பாசம் மூலம் உங்களைக் கண்டு ஆறுதல் பெறுகிறேன். உங்கள் ஆத்மா சாந்தியடைய விநாயகப்பெருமான் அருள்புரிவாராக!
அன்புத்தங்கை ராசம்.
+- +- +
தானத்தில் சிறந்த தானம்
அன்னதானம்

Page 17
Periamma, I Wonder
I wonder if I could be patient enough to raise five children plus another fivel
I wonder if I could speak softly enough to calm down all around mel
I wonder if I could get up early in the morning and do all chores in the house daily, all year long!
I wonder if I could be the same size and weight life longs
I wonder if I could get the best for my children based on all sort of sacrifices!
I wonder if I could be a doctor, philosopher, teacher and mother to not only my children, nephews and nieces but also to their children
I wonder if I could lead a life like a Yogi and still be attached to all around mel
I wonder if I could express my feelings in life in the same way as Periamma did
I wonder if I am travelling forwards or backwards in today's World!!!
Gowri Nirmalendran (Granddaughter)
لهر +++ ܒ ܬ
30

அணையா அருள் விளக்கு
ஆசையம்மா! நாங்கள் உங்களை நாடி ஓடி வரும்போதெல்லாம்
நீங்கள் காட்டிய பாசமும் பரிவும் பாரில் இனிமேல் எமக்கில்லை!
அன்பைச் சொரிந்து அணைத்த கரம் சாய்ந்துவிட்டது
உமது ஒவ்வோர் செயல்களிலும் மிளிர்ந்து உயர்ந்து விளங்கிய பண்புகளை எண்ணி எண்ணிப் பார்க்கின்றோம்!
அது எதிர்காலத்தில் எமக்கில்லையே என ஏங்குகிறோம்!
ஆசை அப்பா சென்ற பாதையை ஆவலுடன் எதிர்பார்த்து அவர் பின்னே, அவரிடத்துக்கே அடைந்துவிட்டீர்கள் ஆனால் எம்மை ஆறாச் சோகத்துள் நுழைத்துவிட்டீர்கள் இதுதான் இயற்கை என்பதையும் புரியவைத்துள்ளீர்கள்
நீங்கள் விட்டுச் சென்ற வெற்றிடம் வேறு எவராலும்
நிரப்பமுடியாதது என்பது உண்மை!
நீங்கள் எமக்கு சொல்லித்தந்த ஒற்றுமை என்ற பாடத்தை நாம் எல்லோரும் ஒன்றாகக் கடைப்பிடித்து உமக்கு என்றும் காணிக்கையாக்குவோம்!
அலைகள் ஓய்வதில்லை!
هـ + + -+ ܒ ܬ
31

Page 18
P. உங்கள் எண்ணமும் எம்மைவிட்டு ஓயாது
எதிர்காலத்தில் எமது இல்லத்தில் இடம் பெறும் எல்லா வெற்றிகளிலும்
எல்லா சந்தோசங்களிலும் எல்லா விழாக்களிலும் பொதுவாக எல்லாவற்றிலும் நீங்களும் எம்முடன் இருப்பதாகவே எண்ணுவோம்!
ஆசையம்மா எங்களை வாழ்த்துகின்றார் என்றே கருதுவோம்!
உங்களை என்றும் துதித்து வாழவும் நீங்கள் இறையடி இணையவும் இறைவனை வேண்டுகின்றோம்!
அமுதகெளரி ரமணராஜன் (பேர்த்தி)
+++
அம்மம்மா!
நீ கதைகள் எத்தனை எத்தனை - இனிதே கூறி மகிழ்விப்பாய் - உன் இனிமையான கருத்துள்ள கதைகளை இனி என்று நான் கேட்பேனோ? யாரிடம் தான் கேட்பேனோ?
-செல்வி. ஜயிஷ்னி விஷ்னுகாந்தன் (பேர்த்தி)
له= 7 - ܬ
32

ག།
Loving Tribute To Our Dearest Amma.
Our asaiamma who we lovingly called "Amma " has left her earthly adobe and gone to Gods santuary. She was much more than a mother to us. According to devine interpretation in several religions books which say thus "more are the children of caring and considerate than the children of another mother"This has been true in the wife of our Asaiamma' I relate the following insident to prove this.
Our Asai amma' came into our family in 1947 when we lost our mother and our father was everything to us. She married my father's brother - uncle (Assai appah) and took the responibility of us as well. She brought us up like her own caring, guiding, protecting, advising and leading us in the correct path. All these aspects in her life was due to the love and affection which she revealed and which bound us together. She had her own children as well but she showed no difference in treating all of us alike. We were all like children in one family and grew together. But separated when we had to go in different ways to be settled in life. Such was Asai amma who was a dear mother to us this confirms the fact of her devotion. Our Asai amma is no more but her memory still lingers on and it will be a permanent mark left in our lives. May her loving soul rest in peace at the feet of the creator Lord Shiva.
Loving, Seema Wickram
(Niece) +++
33

Page 19
பெரியம்மா - அன்பின் இருப்பிடம்
வானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழ பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய் ஆனைமுகனைப் பரவி அஞ்சலி செய்விப்பாம்.
25.10.2006 எங்களுக்கெல்லாம் ஒரு துன்பகரமான நாள். ஐந்து பேருக்குச் சொந்த அம்மா, எங்கள் அறுவருக்கும் அன்புப் பெரியம்மா, எத்தனையோ உறவுகளுக்கு அருமை ஆசையம்மா, இன்னும் பல பேர்களுக்கு இனியமாமி என்று பல்வேறு உறவுகளின் உள்ளங்களில் எல்லாம் உள்ளத்தால் பொய்யாதொழிந்ததால் நிறைந்து நின்ற எங்கள் பெரியம்மா திருமதி அன்னலெட்சுமி ராஜநாதன் அவர்கள் மண்ணக வாழ்வை, நீத்து விண்ணகம் எய்திய நாள். அன்று கந்தசஷ்டி விரத சதுர்த்தி நாள். இந்த நன்னாளில் இவர் கடைப்பிடித்த அன்பும் அறனும் நிறை, இறை பக்திநிறை வாழ்க்கைக்கு இறை அங்கீகாரமாகத் தான் இறையடி சேரும் பேறு பெற்றார் என்பது வெளிப்படை
பெரியம்மா தன் தங்கையாகிய எங்கள் அம்மா இராஜலட்சுமி மீது அளவுகடந்த பாசம் கொண்டிருந்தார். ஆகவே அவர் எங்கள் அறுவர் மீதும் அதே பாசம் கொண்டிருந்தது இயல்பானதே ஆயிற்று. பெரியம்மா ஐந்து பிள்ளைகளையும் பெற்று முடித்த பின்பே எங்கள் அம்மா எங்களைப் பெறத் தயாரானார். ஆகவே மகேன் அண்ணா, லோகன் அண்ணா, ரவி அண்ணா, தேவி அக்கா, பூரீ அக்கா ஐவருக்கும் நாங்கள் அறுவரும் குட்டிப் பிள்ளைகளாக, செல்லப் பிள்ளைகளாக, சொந்த சகோதரர் போல வளர்வதற்குப் பெரியம்மா எங்கள் மீது கொண்டிருந்த அளவில்லாப் பாசமும் ஆதாரசக்தியாக விளங்கியது. இவர்கள் ஐவரும் எங்கள் அறுவரிலும் காட்டும் பாசம், பரிவு, அக்கறைக்கெல்லாம் ஆதி காரணகர்த்தா பெரியம்மாதான். எங்கள் மீது மாத்திரமல்லாது, குஞ்சு மாமாவின் பிள்ளைகள், ஆசையம்மா என அவரை உரிமை கொள்ளும் சீமாக்கா, செல்ல்க்கா, தாமி அக்கா, ராசம் மாமா என எத்தனையோ அன்பு உள்ளங்களில் அவர் நிலையான நீங்காத இடம் பிடித்ததற்கு
அவரது அன்பு, பரிவு, நாவடக்கம், தருமசிந்தனை, சகிப்புத்தன்மை,
34

ஒற்றுமை உணர்வு, சதா தெய்வ சிந்தனை, ஆதியாம் சீரிய நற்பண்புகளே
காரணங்களாகும். சுற்றத்தைப் பேண்பவள் தானே பெண். அந்த விதத்தில் பெரியம்மா பெண்மைக்குப் பெருமை சேர்த்தார்.
அவருடைய இழப்பானது நேற்றிருந்த நல்லவர் இன்றில்லை என்று பார்க்கையில் ஈடு செய்ய முடியாததாகும். அம்மா அடிக்கடி சொல்லுவார், கந்தரோடை அருளானந்த பிள்ளையார் மீது இளமையில் பெரியம்மா பெரும் பக்தி கொண்டிருந்தார் என. அந்தப் பிள்ளையாரின் பாதாரவிந்த்தைத் தான் பெரியம்மா அவருக்குகந்த சதுர்த்தி நாளில் அடைந்து விட்டார் என்ற நினைவில் அமைதி அடைவோமாக. இவர் வாழ்ந்து காட்டிய விதத்திலே, இவர் இறுதிவரை போற்றி வாழ்ந்த சதா இறை நினைவு அன்பு, பரிவு, சுற்றம்பேணல், நாவடக்கம், சகிப்புத் தன்மை ஆகிய சீரிய நற்பண்புகளாக கைக் கொண்டு வாழ்வதால் தானே இவரது ஐந்து பிள்ளைகளும் மற்றவர் போற்ற நல்வாழ்வு வாழ்கின்றார்கள். ஆகவே தொடர்ந்தும் தெய்வ சிந்தனையோடு அவர் காட்டிய, நம்மில் விதைத்து விட்டுச் சென்ற நல்ல பண்புகளோடு தொடர்ந்து வாழ்வதே நாம் அவருக்குச் செய்யும் கைம்மாறும், அஞ்சலியும், வழிபாடும் ஆகும்.
எல்லோரும் நன்றே வாழ்க
துய்யதோர் மறைகளாலும் துதித்திடற் கரியசெவ்வேள் செய்யபேரடிகள் வாழ்க சேவலும் மயிலும் வாழ்க வெய்யசூர் மார்பு கீண்ட வேற்படை வாழ்க அன்னான் பொய்யில் சீர் அடியர் வாழ்க வாழ்க இப் புவனமெல்லாம்.
அன்புப் பெரியம்மாவை உள்ளத்தில் என்றும் வைத்துப் போற்றும் உஷா, உமா, சசி, ராஜன், சிவகுமார், சித்ரா
+++
هـ - ܬ
35

Page 20
Dear Appamma,
Some people wonder if one person can Really make a difference in the world, But I think it's possible Because I've seen the difference you Made in the lives of those around you. You didn't just talk of making the World a better place You did something about it By reaching out and giving your time When others needed you!
You were a wonderful example of What a caring person should be And your warmth and compassion Always have come shining through. You are a special person Who knew the gentle art of giving. Who made the world around us A gracious and inviting place to be.
How can I ever put into words the laughter And sunshine, the extra delight that I've felt in my heart for having You for my grandmother All through you have brought Special joy with your sweet way of being, You've chosen to look on the bright side of life And always taught me a new way of seeing This comes to say I LOVE YOU
Anushala Janani Logenthiran
(Grand Daughter) h +++
36

நினைவறிந்த நாள்முதலாய் மறவாத ஒன்றென்றால் - அன்னையுன் முகமல்ர்ந்த புன்னகையே முதற்கண்ணாய் மனமேகும் மனமுவந்துன் மக்கட்கும் மாந்தர்க்கும் நீ செய்த பரிவு மிக்க பணிவிடைகள் அடுத்தடுத்து நினைவாகும் - இவை அனைத்தையுமே இழந்திட்ட உன் அன்பு கண்ட நெஞ்சமெல்லாம் பிரிவதில்லை எம் நினைவலைகள் என மனதைத் தேற்றலுடன், நீ புகுந்திட்ட சொர்க்கமதுன் நல்வரவால் செழிப்பாகும் எனவுணர்ந்த பூரிப்பில் உனதிழப்பைத் தாங்குகிறோம். அம்மா நீ செய்த அன்பனைத்தும் அருளாகி - மீண்டும் பிறவாத வரமுனக்கு இறைவழங்க வேண்டுகிறோம்!
நேமிநாதன் நவநீதன் (மருமகன்) +++ அம்மம்மா!
நீங்கள் ஒரு தெய்வம் போல! நீங்கள் எங்களுக்கு தேனமுதூட்டி வளர்த்தீர்கள்! எல்லோரையும் விட எம்மை நன்கு கவனித்தவரும் நீங்களே! ஆதலால், உங்களை என்றென்றும் மறக்க மாட்டோம்!
-செல்வன். துவாரகேஷ் விஷ்னுகாந்தன்
(பேரன்) +++ அம்மம்மா தேடுகிறேன் உங்களை
பாடசாலை விட்டு நான் வரும் வரை வழி மேலே விழி வைத்து பாசத்தோடு வரவேற்று அன்போடு அரவணைத்து நன்கே உபசரிப்பீர்கள்! இன்று உங்கள் உபசரிப்பு இன்றி ஏங்குகிறேன்! - உங்கள் பாசமுகம் தேடுகிறேன்!
- பிரிதிவினி நந்தகுமார் +++ (பேர்த்தி)
37

Page 21
அமரர். திருமதி. அன்னலெட்சுமி இராஜநாதன்
இந்த சமுத்திரத்தின் முத்தென இலங்கிடும் இலங்கை. இம் மணித்திரு நாட்டின் எழில் முடியாய் விளங்கும் யாழ்ப்பாணம். அத்திரு நாட்டின் வரலாற்று வளம் பெற்ற கந்தரோடை பார் போற்றும் புகழ்பூத்த பழம் பதியான கந்தரோடையில் கதிர்காமசிங்கம் காமாட்சிப்பிள்ளை தம்பதிகளுக்கு மகளாக 1925 ஆம் ஆண்டு அன்னலெட்சுமி அவனியில் அவதரித்தார்.
இல்லறமாம் நல்லற சேவையில் திரு. இராஜநாதனுடன் செந்தமிழும் சீர்பெருகு சைவமும் தழைத்தோங்க இணைந்து இனிது வாழ்ந்தனர். இவர்களிருவரும் இல்லறமாம் நல்லறத்தின் பயனாக மகேந்திரன், லோகேந்திரன், ரவீந்திரவர்மன், குமுதரஞ்சனி, பூநீரஞ்சனி ஆகிய அரும்செல்வங்களை பெற்றெடுத்து அகமகிழ்ந்தனர்.
அன்னவர் அன்னையாகவே சகலரையும் அரவணைத்து வாழ்ந்தவர். எவரையும் எடுத்தெறிந்து பேசாத குணம் கொண்டவர். மென்மையிலும் மென்மையான தோற்றம் கொண்டவர்; நிதானமான பார்வை கொண்டவர்; என்றும் புன்முறுவல் பூக்கும் தாமரை வதனமுடையவர்; ஆர்ப்பாட்டமற்ற ஆழமான அமைதி, அடக்கமான பேச்சு; மற்றவர்களின் ஆற்றல் கண்டு அகமகிழ்பவர்; எல்லோருக்கும் நல்லவராய் சுற்றம் புடை சூழ எல்லோரையும் அரவணைத்துச் செல்பவர், அமைதியாய் தானிருக்கத் தெரிந்தவர்; யார் என்ன சொன்னாலும் பொறுமையாய் கேட்பவர்; நிறைகுடம் தளம் பாது. நானும் அன்னையவளிடம் கண்ட நிறைவு இதுதான்.
மண்ணில் மாணிக்கமாய் வாழ்ந்து இன்று விண்ணுலகை அடைந்து விட்ட அன்னை அன்னலெட்சுமி ஆத்மா சாந்தியடைவதாக!
வீற்றிருந்தாள் அன்னை, வீதிதனில் இருந்தாள்! கேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் - பால்தெளிக்க எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல் எல்லாம் சிவமயமே யாம்.
- பட்டினத்தார் -
சி.வி. விவேகானந்தன். +++
38

அன்றலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா!
எனை ஆரத் தழுவும் உன் ஸ்பரிசம் - மிகு வாஞ்சையொடு உச்சி மோரும் அன்பு முத்தம் ஓர வாய் நீட்டி நீ மீட்டும் புன்னகை எத்தனை நான் இவை இழந்துவிட்டேன்
அத்தனையும் உன் தூய பாசமம்மா கஞ்சமில்லாப் புன்னகை தான் - நீ அணியும்
பஞ்சமில்லாப் பொன் நகையே!
வஞ்சமில்லா வாழ்த்தம்மா - இன்றும் நெஞ்சமெல்லாம் நிறைஞ்சிருக்கு எண்பத்தோராண்டு வாழ்க்கை
பண்பாட்டோடு சேர்க்கை
கண்பட்டோரை வாழ்த்தி - புகழ்
விண்பட்டோரை போற்றி - நிறைந்தது எண்பத்தோராண்டு வாழ்க்கை
நீ
துதியாத் தினமும் - சாமியறை மிதியாத் தினமும் - கதைகள் பல படியாத் தினமும் - என் வாழ்வில்
அறியாத் தினமே
Hospital மணம் அறியா - ஏன் பனடோலின் நிறம் அறியா
நோய் என்றால் என்ன தெரியா
வந்த போததுவும் அறியா?
I
உயிராகி
39

Page 22
கருவாகி
உடலாகி - உலகேகி
அழகாகி
DeOOTLDIT35
கருவுற்று - உலகாள
உயர்வானோர்
ஐவர் ஈந்தே மகிழ்வாகத் தினம் வாழ்ந்தே மனமெங்கும் தினம் வாழ மாறில்லாப் பெருவாழ்வு - மீளப் பிறப்பின்றிப் பெற்றிட்டாய்!
米 米 米
அன்று உன் கை பற்றி
நான் குலுக்க
ஈசனின் பணிப்பில்
சீவனின் சிரிப்பாய்
நீ புரிந்த கடைப்
புன்னகை - அப்பம்மா
அன்றலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா کوه മ"
ప్ర్రస్త صحصے
(பேரன்)
"உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது - அதை
எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது" - கவிஞர் வாலி.
+++
40

GREATNESS OF ASCETICS
21. Saintly disciples are objects of glory the Testaments eulogize
22. Glory of the ascetics count higher than all those who lived and left this world
23. Discerning and righteous perception of matter and spirit brightens and glorifies the world,
, , , ; نمي
: ! श्रृं; 24. Mental strength controls the senses those, who are the seeds of SaneS f - A
كثير dfie themesor 25. Powers of self control are the themes of fables on destruction of the wicked
3. ° 3.
26. Rarer deeds are signs of greatness, 8. y/ lesser mortals achieve no success سمتیہ y
كفر و هي كمي مهمتينيسس
>*-->
27. Name and fame are for those, who diligently émploy their senses of taste sight touch sound and smell ყვჭჭაჯჯჭჭ:
శశీణి ৪ ა2:: fr ჯ38:88:88:. ఆగా * --- ک 28. Wisdom and glory of the great are reflected ঃপ্ত: in the scriptures of their land visioneer re
29. Anger of those who have reached heights of character though rare and momentary, is unbearable
30. Who tread the path of righteousness with grace, love and affection are fit to minister to the souls
41

Page 23
ャー ག།
நன்றிகள்!!
எங்கள் அன்புத் தெய்வமாகிய அமரர். திருமதி. அன்னலெட்சுமி இராஜநாதன் அவர்கள்
வைத்தியசாலையில் இருந்த வேளையில் உதவி புரிந்தவர்களுக்கும், ஆறுதல் கூறியவர்களுக்கும், பின்னர் மரணச் செய்தி கேட்டு ஓடோடி வந்து உதவியவர்களுக்கும், வீட்டிற்கு வந்து ஆறுதல் வார்த்தைகள் கூறியவர்களுக்கும், தினமும் வந்தெம் துயரில் கலந்து கொண்டு சகல வழிகளிலும் உதவியவர்களுக்கும். இறுதி ஊர்வலத்தில் கலந்திருந் தோருக்கும், அந் தியேட்டிக் கிரியைகளிலும், ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் பங்கு கொள்ளும், அன்பு இதயங்கள் அனைத்திற்கும் எங்கள் உளமார்ந்த நன்றிகளை அன்புடன் கூறிக்கொள்கிறோம். அத்தோடு அமரர். அன்னலெட்சுமி இராஜநாதன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கவிதையாக்கித் தந்த திருமதி. கமலினி செல்வராசன் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
நன்றி - வணக்கம்
A
* ܬܬܐ"
திரு.திருமதி. மகேந்திரன் திரு.திருமதி. நந்தகுமார் திரு.திருமதி. லோகேந்திரன் திரு.திருமதி. விஷ்ணுகாந்தன் திரு.திருமதி ரவீந்திரவர்மன் மற்றும் பேரப்பிள்ளைகள்.
مـ - ܬ

r
过9因心4ure到!ജ്ഞ Iഢp(ഔk്பழிைத்gெ ự9șeŲnỗ乍99硕毛与-ழ9யின்1999)г9 ш10999 fe0,quíssiko 19的gius C制3행e:Q9பூப01திெgai|g9යි)Ųrtoq,9??).IITTg)ழ98இப்ாகுே 十十十十十 ழ99இடிரிழ98ஒரிேெழ9ரபாகுப்திர்ேபூ9ம்டி90ஒgஐஐய(95)டி90ழிழ்கிற01 塔e闽u自%u响· 十 On中니C98城u仁宗3ரயeப்பரபி)gio Zioelokoņose)rī09 oặ1998
|
||
•
leweisepıņpīıldıııop + quot;upaluoso
q1871@ış9 oqino

Page 24


Page 25
மாதா பிதா தெய்வம்=
அன்னையும் தந்தையும் தெ பெற்றவர்களுக்குச் சேவை ெ ஏனெனில், உடலில் ஓடும் கு இவை எமக்கு அவர்கள் ஈந்த இதற்காக அவர்களிடம் நன்ற
 
 

IGNII. சய்தலே முடிவான நிறைவாகும். ருதி, உணவு, பனம், அறிவு த கொடை. ரீயுணர்வைக் காட்ட வேண்டும்.
- பகவான் பூஜீ சத்திய சாயி பாபா (25-12-1998 ஆற்றிய அருளுரை)
ாலிக்கு0ே7