கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவு மலர் (இராஜதேவி யோகநாதன்)

Page 1
எனது இல்லத்தலைவி திருமதி. இராஜே நினைவி
1. )
 

Hi
_-_ད༽ *). + →
• 心唔 诗 禮 3 而 * =suae 伍ic『』 配%3 — ), ,|

Page 2

%്
சிவமயம்
எனது இல்லத்தலைவி/எமது அன்புத்தாய்
திருமதி. இராஜதேவி யோகநாதன்
அவர்களின்
நினைவு மலர்
O. 995.
7/9, காமர்ஸ் அவென்யு, கொழும்பு - 06.
ܓܠ
//محے

Page 3

S
அமரர் இராஜ தேவி யோகநாதன்
தோற்றம் மறைவு
O. O.5. 94). 21. ՈԶ. 1995,
கோலாலம்பூர். கொழும்பு
திதிவெண்பா,
ஓங்கு MMருடம் ஊரும்புரட்டாதி தேங்கபர பக்கத்துவாதசி - விங்கு புகழ் மன்யோக நாதர் (Tாழ தேவிசிவன் தன்ாதப் போதிவEைந்தார்.
المحے

Page 4

பொயிட்டி சித்தி விநாயகர் பஞ்சகம் (கட்டளைக் கவித்துறை)
உயிருக் குறுதி பெறவிழை வீரெனில் ஒண்மருப்புப் பயிலும் பிரணவ ஆனைங் கொண்ட பரம்பொருளை வெயில்விட் டெறிக்கும் அயிற்கர வேளுக்கு முன்னவனைப் பொயிட்டிப் பதியுறை சித்திவி நாயகனைப் போற்றுமனே ஒடாய்ப் பதங்கள் உருத்தேயநாளும் பொருட்குலைந்து நாடாது நின்கழல் இந்நாள் வரையும் நடத்திவிட்டேன் வாடா மலர்ப்பதம் தந்தெனை யாள்பொயிட் டிப்பதிவாழ் ஏடாக வெற்பினில் பாரதம் தீட்டும் இறையவனே நெஞ்சினில் ஈரம் உரைக்கின்ற வாக்கினில் நேயம் உந்தன் செஞ்சரணம் உளம் தன்னில் பயின்றிடச் செய்திடுவாய் அஞ்சலி செய்து வழிபடுவாருக் கருள் மதத்தை எஞ்சவிலாது பொழியும் பொயிட்ட இளங்களிறே தாவரந் தாவென்று நித்தம் அடியவர் தாழ்ந்திறைஞ்சும் பூவலர் சோலை பொயிட்டிப் பதியுறை போதக உன் சேவடி தந்து விழிக்கடையாலருள் சிந்தி யெந்தன் பாவந் தொலைத்துன் அருக்கிலிருக்கப் பணித்தருளே.
பொல்லா மனத்தின னாயுல காசைப் பொருடல் வீழ்(வு) இல்லாத வாழ்வெனக் கீந்தருள் வாயுன் இணைமலர்த்தாள் அல்லாது வேறு கதியின்றி வாடும் அடியனுக்குச் சொல்லேர் அறிஞர் பயில் பொயிட் டிப்பதித் தூமணியே.
- பிள்ளைக் கவி வ.சிவாராஜசிங்கம்

Page 5
2.
சிவமயம்
தேவாரங்கள் :
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அருளியவை விநாயகர் வணக்கம்
1ம் திருமுறை இராகம் : செளராஷ்டிரம் பண் ; வியாழக்குறிஞ்சி தாளம்: ஆதி
திருச்சிற்றம்பலம்
பிடியதனுருவுமை கொள மிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும வரிடர் கடிகண பதி வர அருளினன் மிகு கொடை வடிவினர் பயில் வலிவலமுறையிறையே
திருச்சிற்றம்பலம்
s
திருநீற்றுப்பதிகம்
பண் - காந்தாரம் ༄། ། திருஆலவாய்
திருச்சிற்றம்பலம்
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்திலுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே
வேதத்திலுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு ஒதத் தகுவது நீறு உண்மையிலுள்ளது நீறு சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.
முத்தி தருவது நீறு முனிவரணிவது நீறு சத்தியமாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே.

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு சேணந் தருவது நீறு திருவால வாயான் திருநீறே.
பூச இனியது நீறு புண்ணியமாவது நீறு பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம் ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு தேசம் புகழ்வது நீறு திருவால வாயான் திருநீறே.
அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண்ணிறு திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.
எயிலது அட்டது நீறு இருமைக்கு முள்ளது நீறு பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறுஅயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திருநீறே.
இராவணன் மேலது நீறு எண்ணத் தருவது நீறு பராவண மாவது நீறு பாவம் அறுப்பது நீறு தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு அராவணங் குந்திருமேனி ஆல வாயான் திருநீறே.
மாலொ டயனறியாத வண்ணமு முள்ளது நீறு மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு ஏல வுடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு ஆலம துண்ட மிடற்றெம் ஆல வாயான் திருநீறே.
குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமுங் கூடக் கண்திகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு எண்திசைப் பட்ட பொருளா ரேத்துந் தகையது நீறு அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே.
ஆற்ற லடல்விடையேறும் ஆல வாயான் திருநீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன் தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணி யாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.
திருச்சிற்றம்பலம்

Page 6
2 ம் திருமுறை பண். பியந்தைக் காந்தாரம் இராகம் : நவரோஸ்
w தாளம் திருபுடை வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன்
மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்
உளமே புகுந்தவதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டு முடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.
3 ம் திருமுறை பண் - அந்தாளிக் குறிஞ்சி இராகம் - சாமா
தாளம் - ஆதி கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
பல்லூர்ப் பெருமணம் பாட்டு மெய்யாய்த்தில சொல்லூர்ப் பெருமணஞ் சூடலரே தொண்டர் நல்லூர்ப் பெருமணமேய நம்பானே.
3ம் திருமுறை தேவாரம் திருஞானசம்பந்தர் பண் ; கொல்லி
2. மண்ணில் நல்லவண்ணம் வாழல்ாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப் பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே
4ம் திருமுறை
திருநாவுக்கரசு நாயனார் அருளியவை திருவங்க மாலை பண் - சாதாரி இராகம் - பந்துவராளி
S. தாளம் - ரூபகம் தலையே நீ வணங்காய் - தலை
மாலை தலைக்கணிந்து தலையாலே பலி தேருந் தலைவனைத்
தலையே நீ வணங்காய்.

கண்காள் காண்மின்களோ -கடல்
நஞ்சுண்டகண்டன் றன்னை
எண்டோள் வீசிநின்றாடும் பிரான்தன்னைக்
கண்காள் காண்மின்களோ
செவிகாள் கேண்மின்களோ - சிவன்
எம்மிறை செம்பவள
எரிபோன் மேனிப்பிரான் றிற மெப்போதும்
செவிகாள் கேண்மின்களோ
மூக்கே நீ முரலாய் - முது
காட்டுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
மூக்கே நீ முரலாய்
வாயே வாழ்த்து கண்டாய் - மத
யானை யுரிபோர்த்துப்
பேய் வாழ் காட்டகத் தாடும் பிரான்றன்னை
வாயே வாழ்த்து கண்டாய்
நெஞ்சே நீ நினையாய் - நிமிர்
புன்சடை நின்மலனை
மஞ்சாடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய்
கைகாள் கூப்பித் தொழிர் - கடி
மாமலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்
கைகாள் கூப்பித் தொழிர்
ஆக்கை யாற் பயனென் - அரன்
கோயில் வலம் வந்து
பூக்கையாலட்டிப் போற்றியென்னாத விவ்
ஆக்கை யாற் பயனென்
கால்க ளாற் பயனென் - கறைக்
கண்டனுறை கோயில்
கோலக் கோபுரக் கோகரணஞ் சூழாக்
கால்களாற் பயனென்

Page 7
உற்றாராருளரோ - உயிர்
கொண்டு போம் பொழுது
குற்றாலத் துறை கூத்தனல் லாணமக்
குற்றாராருளரோ
இறு மாந்திருப்பன் கொலோ - ஈசன் பல்கணத் தெண்ணப் பட்டுச்
சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்று
இறுமாந்திருப்பன் கொலோ
தேடிக் கண்டு கொண்டேன் - திரு
மாலொடு நான் முகனும்
தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே தேடிக் கண்டு கொண்டேன்
திருச்சிற்றம்பலம்
5ம் திருமுறை
திருக்குறுந்தொகை இராகம் - பூர்விகல்யாணி தாளம் - ஆதி
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை யிணையடி நீழலே.
6ம் திருமுறை
திருத்தாண்டகம் தலம் : திருநல்லூர் இராகம் - அரிகாம்போதி பண் - குறிஞ்சி சுத்தாங்கமாகப் பாடுதல்
நினைந்துருகும் அடியாரை நையவைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்கவைத்தார் சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார் செழுமதியின் தளிர் வைத்தார் சிறந்து வானோர் இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப்பில்கி நனைந்தனைய திருவடி என்தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்லவாறே.

7 ம் திருமுறை
சுந்தரமூர்த்திநாயனார் அருளியது :
பண் - செந்துருத்தி இராகம் - மத்தியமாவதி
தாளம் - ஆதி மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி ஆளாயிருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங்கிருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே.
8ம் திருமுறை
பண் - முல்லை
1.
திருவாசகம் மாணிக்க வாசக சுவாமிகள் அருளியது
இராகம் - மோகனம் பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்
பரிந்து நீ பாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ திணியே.
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச் செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவ பெருமானே இம்மையே உன்னை சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவதினியே
வேண்டத் தக்க தறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ வேண்டும் அயன் மாற் கரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய் வேண்டி நீ யாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டினல்லால் வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே

Page 8
9ம் திருமுறை
திருவிசைப்பா
கருவூர்த்தேவர் பாடியது
பவளமால் வரையைப் பனிபடர்ந்தனையதோர்
படரொளி தரு திரு நீறும் குவளை மாமலர்க் கண்ணியும் கொன்றையும்
துன்று பொற்குழல் திருச்சடையும் திவள மாளிகை சூழ்தரு தில்லையுட்
திருநடம் புரிகின்ற தவள வண்ணனை நினைதொறும் என்மனம்
தழல் மெழுகு ஒக்கின்றதே. 9ம் திருமுறை
திருப்பல்லாண்டு சேந்தனார் பாடியது
சொல்லாண்ட சுருதிப் பொருள் சோதித்த
தூய் மனத் தொண்டருள்ளிர்
சில்லாணடிற் சிதையும் சில தேவர் சிறு நெறிசேராமே
வில்லாண்ட கனகத்திரள் மேரு விடங்கன்
விடைப் பாகன்
பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
10ம் திருமுறை திருமந்திரம்
திருமூலர் பாடியது
சிவசிவ என்கிலர் தீவினை யாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளும் சிவசிவ என்றிடத் தேவருமாவர் சிவசிவ என்னச் சிவகதி தானே.

11ம் திருமுறை
நக்கீரர் பாடியது
முருகனே செந்தி முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே - ஒருகை முகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான்.
12ம் திருமுறை
சேக்கிழார் பாடிய திருப்புராணம்
ஆலமே அமுதமாக உண்டு வானவர்க் களித்துக் காலனை மார்க்கண்டேயனுக்காகக் காய்ந்தனை அடியேற் -
இன்று ஞாலம் நின் புகழேயாக வேண்டும் நான் மறைகள் ஏத்தும் சீலமே ஆலவாயிற் சிவபெருமானே என்றார்.
திருச்சிற்றம்பலம்

Page 9
மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச்செய்த திருவாசகம் திருவாசகச் சிறப்பு
தொல்லை இரும் பிறவிச் சூழும் தளைநீக்கி அல்லலறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் என்னும் தேன்
8ம் திருமுறை
திருப்பெருந்துறை
சிவபுராணம் (கலி வெண்பா) திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அனேகன் இறைவன் அடிவாழ்க வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க கரம்குவிவார் ஒங்குவிக்கும் சீரோன்கழல் வெல்க ஈசன்அடி போற்றி எந்தை அடிபோற்றி தேசன்அடி போற்றி சிவன்சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னன்அடி போற்றி சீரார் பெருந்துறைநம் தேவன்அடி போற்றி ஆராத இன்பம் அருளும்மலை போற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அரு ளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஒயஉரைப் பன்யான் கண்ணுதலான் தன்கருணை கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார்கழல் இறைஞ்சி விண்நிறைந்து மண்நிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறைந்து எல்லை இலாதானே நின் பெருஞ்சீர்

பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்றறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறத்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றறேன் உய்யளன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே வெய்யாய் தணியாய் இயமானன் ஆம் விமலா பொய்ஆயின எல்லாம் போய்அகல வந்தருளி மெஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே ஆக்கம் அளவிறுதி யில்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே மாற்றம் மனம் கழிய நின்றமறை யோனே கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்களோர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப் புறந்தோல் போர்த்துஎங்கும் புழுஅழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலன்ஐந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்துஉள் உருகும் நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி நாயிற் கடையாய் கிடந்த அடியேற்குத்

Page 10
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனார் அமுதே சிவபுரனே பாசம்ஆம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம்கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கிஎன் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்துஎன்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின் நோக்குஅரிய நோக்கே நுணுக்குஅரிய நுண்ணுணர்வாய் போக்கும் வரவும் புணர்வும்இலாப் புண்ணியனே காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றுஇன்ப வெள்ளமே அத்தா மிக்காய்நின்ற தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வே மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேன் எம்ஐயா அரனேஓ என்றுஎன்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய் கெட்டு மெய்யானார் மீட்டுஇங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லல் பிறவி அறுப்பானே ஒவென்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து.
திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம் பட்டினத்தார் பாடல் உடற்கூற்று வண்ணம்
ஒருமட மாது மொருவனுமாகி இன்ப சுகந்தரு மன்பு பொருந்தி உணர்வு கலங்கி யொழுகிய விந்து ஊறுசு ரோனித மீது கலந்து பணியிலோர் பாதி சிறுதுளி மாது
பண்டியில் வந்து புகுந்து திரண்டு பதும மரும்பு கமடமி தென்று பார்வைமெய் வாய்செவி கால்கை களென்ற உருவமு மாகி யுயிர்வளர் மாதம் ஒன்பது மொன்று நிறைந்து மடந்தை உதரம கன்று புவியில் விழுந்து யோகமும் வாரமும் நாளும நிந்து மகளிர்கள் சேனை தரவணை யாடை மண்பட வுந்தியு தைந்து கவிழ்ந்து மடமையில் கொங்கை யமுத மருந்தி ஓரறி வீரறி வாகி வளர்ந்து ஒளிநகை யூற லிதழ்மட வாரும் வந்உமு கந்திட வந்துத வழ்ந்து மடியிலிருந்து மழலைமொ ழிந்து வாவிரு போவென நாமம் விளம்ப 9.6OLLO60of LUT60L uj6DIJ6)JL LDITL உண்பவர் தின்பவர் தங்களொட்டுண்டு தெருவிலிருந்து புழுதி யளைந்து தேடிய பாலரொடோடிநடந்து அஞ்சுவயதாகி விளையாடி விளையாடியே உயர்தரு ஞான குருவுபதேச முந்தமிழின்கலை யுங்கரை கண்டு வளர்பிறை யென்று பலரும் விளம்ப வாழ்பதி னாறு பிராயமும் வந்து மயிர்முடி கோதியறுபத நீல

Page 11
வண்டிமிர் தண்டோடை கொண்டை புனைந்து மணிபொணி லங்கு பணிகள ணரிந்து மாகதர் போகதர் கூடி வணங்க மதனசொ ரூப னிவனென மோக மங்கையர் கண்டு மருண்டு திரண்டு வரிவிழி கொண்டு சுழியவெறிந்து மாமயில் போலவர் போவது கண்டு மனதுபொறாம லவர்பிற கோடி மங்கல செங்கல சந்திகழ் கொங்கை மருவம யங்கி இதழமு துண்டு தேடிய மாமுதல் சேர வழங்கி ஒருமுதலாகி முதுபொருளாயி ருந்ததனங்களும் வம்பிலிழந்து மதனசு ந்த விதனமி தென்று வாலிப கோலமும் வேறு பிரிந்து வளமையு மாறி யிளமையு மாறி வன்பல் விழுந்திரு கண்களி ருண்டு வயதுமுதிர்ந்து நரைதிரைவந்து வாதவிரோத குரோதம டைந்து செங்கையினி லோர்த டியுமாகியே வருவது போவ தொருமுது கூனு மந்தியெ னும்படி குந்தி நடந்து மதிமழிந்து செவிதிமிர் வந்து வாயறி யாமல் விடாமல் மொழிந்து துயில்வரு நேர யிருமல்பொறாது தொண்டையு நெஞ்சு முலர்ந்து வறண்டு துகிலுமி ழந்து சுணையுமழிந்து தோகையர் பாலர்கள் கோரணி கொண்டு கலியுகமீதில் இவர் மரியாதை கண்டிடு மென்பவர் சஞ்சல மிஞ்ச கலகல வென்று மலசலம் வந்து கால்வழி மேல்வழி சார நடந்து தெளிவுமி ராமல் உரைதடு மாறி சிந்தையு நெஞ்சுமு லைந்து மருண்டு திடமு மழிந்து மிகவு லைந்து தேறத லாதர வேதென நொந்து

மறையவன் வேத னெழுதிய வாறு வந்தது கண்டமும் என்று தெளிந்து இனியென கண்ட மினியென தொந்த மேதினி வாழ்வுநி லாதினி நின்ற கடன்முறை பேசு மெனவுரை நாவு தங்கி விழுந்துகை கொண்டுமொ ழிந்து கடைவழி கஞ்சி யொழுகிட வந்து பூதமு நாலு சுவாசமு நின்று நெஞ்சுதடு மாறி வருநேரமே வளர் பிறை போல எயிறுமு ரோம முஞ்சடை யுங்சிறு குஞ்சியும் விஞ்ச மனதுமி ருண்ட வடிவுமி லங்க மாமலை போல்யம தூதர்கள் வந்து வலைகொடு வீசி யுயிர்கொடு போக மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து மடியில்வி ழுந்து மனைவிபு லம்ப மாழ்கினரேயிவர் காலம றிந்து பழையவர் காணு மெனுமய லார்கள் பஞ்சுப றந்திட நின்றவர் பந்தர் இடுமென வந்து பறையிட முந்த வேபிணம் வேக விசாரியு மென்று பலரையு மேவி முதியவர் தாமி ருந்தச வங்கழு வுஞ்சில ரென்று பணிதுகில் தொங்கல் களபம ணிந்து பாவக மேசெய்து நாறுமு டம்பை வரிசைகெ டாம லெடுமென வோடி வந்திளமைந்தர் குனிந்து சுமந்து கடுகிநடந்து சுடலைய டைந்து மானிட வாழ்வென வாழ்வென நொந்து விறகிடை மூடி யழல்கொடு போட வெந்துவி ழுந்து முறிந்துநிணங்கள் உருகியெலும்பு கருகிய டங்கி ஒர்பிடி நீறுமி லாதவுடம்பை நம்புமடி யேனை யினியாளுமே

Page 12
திருமதி இராஜதேவி யோகநாதன்
பிரபாவம்
மலர்மகளும் கலைமகளும் இணைந்து வாழும்
வளமுடையாழ்ப் பாணமரு வுரும்பராய்நற் குலமருவும்உயர்தோன்றல் மலேசியாவில்
குறைவிவிசைப் புகையிரதப் பகுதிதன்னில் இலகிடுநிர்வாகதத்தி யோகம்பூண்ட
ஏத்தரும்கீர் தம்பையா இராசையாவேள் நிலவுமதி முகஅன்னபூரணப் பேர்
நேரிழையைக் கைப்பிடித்தில் லறமேற் கொண்டார்.
அனமளித்தும் தனமளித்தும் அலந்தோர்க் கெல்லாம்
ஆதரவுபுரி யறங்கள் புவியிலாற்றி தினயிறைவன்பதம் தொழுத புண்ணியங்கள்
திரண்டொருபே ரெழில்வடிவா யுருக்கொண்டாங்கு அனநடைமின் பசுங்குழவி உதித்தகாலை
அகமகிழ்வெய் தியபெற்றோர் அன்பர்கூடி சனகம ளனையாட்கு இராஜ தேவி
எணநாம கரணஞ் செய்தின்புற்றாரே.
வளருமிளம் பிறையென்ன நாளோர் வண்ண மாய்வனப்பு மீக்கூர வளர்ந்துகிள்ளை மழலைமொழி கேட்டயலே வந்து கூட
மகிழ்ந்தவற்றி னோடுவிளையாட்டயர்ந்தே இளந்தென்றல் தவழுதல்போல் நடைபயின்று
இருமூன்றாண் டெய்தியநாள் பாடசாலைக் களமருவி அகரமுதல் தமிழ் நுகர்ந்து
களிப்புறுமாங்கில மொழியுங் கற்றலுற்றார்.
மன்னுமொன்யா ளாண்டுமலே சியாவைநீங்கி
வனப்புறுயாழ் நகரெய்தி மகளிர்க்கான மின்னுபகழ் வேம்படிக்கல் லூரிசார்ந்து
விருப்புடனே பயின்றுசா ரணரியக்கம் தன்னிலிணைந்திசை கொண்டு பாடசாலை சாரதிபர் ஆசிரியர் மதிப்புப்பெற்றார்.

இன்னவகை மன்னிவளர் கன்னிமாதுக்(கு)
எய்தியநன் மணப்பருவம் உணர்ந்து பெற்றோர் கன்னல்வரிச் சிலைபிடித்த மதனைநேரும்
கவினாரும் எழில் யோகநாதனென்னும் துனிலங்கை நிருவாக சேவைதன்னில்
துலங்குமுது பெரும்பதவி யினராய் மேவும் தன்னிகரில் ஆண்தகையை மணாளனாகத்
தம்மகட்குத் தேர்ந்துமணம் புணர்வித்தாரால்.
விருந்தொக்கல் தென்புலத்தார் தெய்வ மென்னும்
மேதகையோர்க் கன்றியருந் தவத்தினோர்க்கும் விருந்தோம்பி வேளாண்மை செய்தில் வாழ்வு
வித்தகத்தேர்தனையினிது நடாத்தியன்பு பொருந்திக்கண் ணிணையொன்றி ஒன்றேநோக்கும்
பொற்பதனில் உடலுயிரொன் றாய்க் கலந்தே அருமருந்து நிகர்மக்கள் நால்வர்த்தம்மை
அகிலமகிழ் வுறப்பயந்தே உயர்வுகொண்டார்.
கணனியியல் துறைதனிலே விசேட தேர்ச்சி
கைவரப்பெற்றத்துறையில் நிபுணராகி அணிதிகழும் பொறியியல ரானகல்வி
அறிவுதிகழ் ஹரிகரனை மணந்து லண்டன் திணிநகரின் வாழும்துஷ் யந்திநாமச்
செந்திருவைச் சிரேட்ட மகளாகப் பெற்றும் குணநிறையும் சுரேந்திராவெனும் பேர்கொண்ட
கொம்பனியின் இயக்குநரை மணம்புரிந்தே.
வளந்திகழும் கொழும்புநகர் தன்னில் வாழும்
மணிமயிலை யனையதம யந்திமாது செருங்கமல மலர்மங்கை தன்னைநேரும்
சீஐஎம் ஏப்பட்டப் படிப்பிலேதன் முழுமையொன்றிப் பயில்பிறித்தி வாப்பொற்பூவை
மொரட்டுவைப்பல் கலைக்கழகந் தனிலேகற்க உளமிசைந்து பொருளியலை ஆய்ந்துகற்கும்
உயர்குணத்து முகுந்தனெனும் பெயர்மதீபன்.

Page 13
திருக்குடும்பக் கன்னியரின் மடத்தில் கல்வி
தேர்ந்திலகும் அபர்ணாநன் நாமம்பூண்ட மருமலர்மென்குழல் மங்கை என்றின்னோரை
வாய்த்த செல்வ மகராகப் பெற்றுவந்தே பெருமைமிகு கணவனுக்கும் அரிதினின்ற
பிள்ளைகட்கும் வேண்டுவன தவறாதாற்றி உரிமையொடுங் கிழமை யொடும் அன்புபேணி
உற்றாரும் உறவினரும் தழுவிவாழ. 9
கட்டடநற் பகுதிதனில் சிறப்புமிக்க
'கணிப்புடைய பொறியியல ராகமேவி மட்டில்பணி யாற்றிநின்ற மகாலிங்கப்பேர்
மகிபனிதி இலங்கைவங்கி தனிலேமேலாம் இட்டமுடன் செயன்முகமை யாளராக
இலகுபுகழ் சிவலிங்கம் பினாங்குநாட்டின் பட்டமிகு சர்வகலா சாலைதன்னில்
பதவிIமிகு பேராசான் ரத்னலிங்கம். 10
நிதித்துறைப் பட்டயக் கணக்கர் புஷ்பலிங்கம்
நிகரிலன்புச் சோதரராயன்பு சேர்க்க கதிரியக்கத் தொழினுட்பவியலராகிக்
கனத்த புகழுடன் விளங்கு செல்வரத்ன மதிவலிசேர் மகிபனைநன் மணாளனாக
வரித்திட்ட ராசபூ ரணிமான் கற்றோர் துதிசெயுநல் லாசான்சங் கரப்பிள்ளைப்பேர்
சுந்தரனின் மனை ராஜேஸ்வரிப்பெண்மாதே.
இலண்டனுறு வைத்யகலா நிதியாய் மேவும்
சிவபாக்கிய நாதனது துணைவியான மலர்முகமார் ராஜமலர் என்போர் அன்பு
முற்றியசோ தரியாராய் உவகைகூட்ட இலகுமிசை சோதரர்தம் துணைவியாராய்ப்
இணைந்துறுமைத் துனிமாரும் பரிவுகூரும் தலமிகுசோ தரிமார்தம் கேள்வரான கணவன்மாரும்
தயவுமிகு மைத்துனரும் நயந்துபோற்ற. 它

அரசகட்டி டப்பகுதிப் பொறிஞராக
அமைந்த விளங்கிப் பேராயியற்கையுற்ற பெருமகன் சீர்க்கதிர்காம நாதன் முன்னாள்
பிறங்கு மிறை வரிமதிப்பீட்டாளராயும் அரும்பதவி வகித்திந்நாள் பகவான் சாயி
அருட்சர்வ கலாசாலை யாசானாகிப் பெரும்பணி யாற்றிடும் கணேச நாதனாடு
பெயரிலங்கு பொறியினர் கைலைநாதன். 13
என்னுமிவர் புக்ககமைத் துனர்களாகி
இணையுறவு கொண்டன்பு போற்றிமேவக் கன்னல் மொழித் தமயந்தி மகள் மூலம்செங்
கமலமுக அரவிந்த நாமம்பூண்ட இன்னமுத வடிவான பேரப்பிள்ளை
இனியசுக மழலை மொழியின்பம்சேர்த்துப் பன்னியிடையீடின்றிப் பக்கத் துற்றே
பகரரிய மகிழ்வூட்ட இனிது வாழ்ந்தே. 14
ஈன்றார்தம் அரவணைப்பும் உலகமேத்தும்
எழிலாரும் கணவனது தூய அன்பும் சான்றாண்மை மிக்கசகோ தரரின் பற்றும்
சமானமிலாப் புத்திரர்வாத் சலியத்தோடு ஆன்றோர்கள் பெருமதிப்பும் செல்வமெட்டும்
அணைவுற்று வாழ்ந்திட்ட ராஜதேவி ஊன்தூற்றும் உடலுலக வாழ்வை நீத்து
உமைபாகர் சிவசரண முவந்துற்றாரே. 15
தேற்றம்
பாளையாம் தன்மை செத்தும்
பாலனாம் தன்மை செத்தும் காளையாம் தன்மை செத்தும்
காமுறும் இளமை செத்தும் மீளுமிவ் வியல்பு மின்னே
மேல்வரு மூப்புமாகி நாளும் நாம் இறக்கின் றோமால்
நமக்குநாம் அழாத தேனோ.
- குண்டலகேசி -

Page 14
Message of Condolence from the Hon. Lakshman Jayakody Minister of Cultural and Religious Affairs
The tragic, untimely demise of Mrs. Rajadevi Yoganathan wife of Mr. R. Yoganathan, Additional Secretary, Cultural and Religious Affairs after a brief illness came as a rude shock to all the members of this Ministry. I am told that she participated actively in the inaugural Meeting of the Seva Vanitha of this Ministry held in August this year.
She hailed from a distinguished family from Malaysia. Her father late Mr. Rasiah was the Chief Administrative Officer of the Malaysian Railways. One of her brothers I am told is the first Malaysian to win the Coveted Rhodes Scholarship. Her family of choice was equally distinguished. Several of its members are men of no mean repute.
She was a devout Hindu who had an abiding interest in observing the lofty precepts of the religion without much publicity. She loved symplicity and despised ostentation. So much so her neighbours had never seen this lady even in the compound of her house.
She showered a love and kindness to tender and care for the children at the expense of her personal comforts.
She was a tower of strength to her husband in his various difficult assignments as a public servant.
May the Supreme Lord give the courage to her husband, children and her close relatives to get over the irreparable loss and derive solace by striving to measure up to her noble expectations.
Lakshman Jayakody, Minister of Cultural & Religious Affairs

MESSAGE of CoNdoleNCE of The HoN. DEpUTy MiNisTER PRof. A.V. SURAwEERA
Though her association with our Ministry was only brief the impression she left behind by her simple and unassuming ways and disarming smile has been indelible and lasting.
I refer to the demise of Mrs. Rajadevi Yoganathan wife of the Addl. Secretary of this Ministry on the 21st of September 1995 after a brief illness.
She was deeply religious and observed the lofty precepts of Hinduism without much publicity. She devoted her entire attention in bringing up her children and in the process sacrificed her own comforts.
She evinced an abiding interest in studying the problems of the members of the staff of this Ministry. This could be seen from the fact that within a couple of months of her husband's assuming duties at this Ministry she attended the inaugural meeting of the Seva Vanitha of this Ministry. Unfortunately she was over taken by illness and could not attend the 2nd Meeting of the Seva Vanitha.
She managed her home through thick and thin, sharing the worries and encouraging her husband and children in their onerous duties.
I wish Mr. Yoganathan and the children the courage to withstand their irreparable loss and seek solace in striving to live up to the ideals which were near and dear to her.
May her soul attain eternal bliss in moksha.
Prof.o A.V... Suraweera Deputy Minister:

Page 15
Late Mrs. Rajadevi Yoganathan
At the first month alms giving, with deep sympathy I wish to record a few things in memory of late Mrs. Rajadevi Yoganathan.
Her illustrious father late Mr. T. Rasiah, was Chief Administrative Officer of the Malayan Railways. Her brothers and sisters are all distinguished people. She married a member from a equally reputed family.
At school she had an excellent academic record and also excelled in sports. She represented the Vembadi Girls College, Jaffna in Athletics and Netball. She was also a Girl Guide of distinction in the College.
In her day-to-day life she was a devout Hindu and had an abiding interest in observing the religious precepts and practice without letting the outside world know about her deep religiousness. She was simple in her ways. She confined herself to the task of bringing up her children and in the process was rarely seen out of the 4 walls of the house.
She was a tower of strength to her husband in the various responsible public positions he has been holding over a period of 30 years.
On this sad occasion I wish the husband and the children the Jourage to withstand the irreperable loss of their wife/mother and derive solace by living up to her expectations.
May peace and happiness fill her life in her next life in Samsara.
W. R. B. Rajakaruna Secretary, Ministry of Cultural de
Religious Affairs

Message of Condolence from Lt. Gen. N. Seneviratne, VSV
I have known Mrs. Yoganathan since my association with Mr. Yoganathan in the North East Provincial council which dates back to 1991. She was an unassumuring and hospitable lady and a very much devoted wife and mother. Her concern for her children was so much that she sacrificed her holidays in Trincomalee with Yoga, to remain in Colombo for the sake of her children who were persuing their studies. The children lost their mother in the prime of their lives, when they needed her most. Her early demise is certainly a great loss to Yoga and the childiren.
May she rest in peace.
N. Seveviratne, Former Commander of the Army c. Former Governor North East Province.

Page 16
வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. இராசமனோகரி புலந்திரன் அவர்களின் செய்தி
அன்பின் இலக்கணமாய், பண்பின் உறைவிடமாய், தேவியக்கா என தேடிவரும் எம்மையெல்லாம், துயருற்றபோதும் மென்மையான இனிய குரலில் எமக்கு நல்லுபதேசம் கூறி வழிநடத்திய நீங்கள் 'மின்னாமல் முழங்காமல்” செய்த சேவை போதுமென்று பூவுலகை விட்டு அமைதியாக புது உலகம் சென்றீரோ?. சில காலம் படுக்கையில் இருந்தபோதும் "தங்கச்சியைக் காணவில்லை” வரும்படி கொடுத்த குரலுக்கு ஒடோடி வந்தேனே!. வாடித் துவண்டு பஞ்சணையில் சாய்ந்திருந்த வேளையிலும் நாம் அறியோம்!!.காலன் அருகே நின்றதை!.
மனிதருள் தெய்வப் பிறவியாய் வடிவெடுத்த எங்கள் தேவியக்கா உங்களை நாம் இனி எங்கே காண்போம் மறைந்துவிட்ட நாளிலே? கனிவிலே கொண்ட கோலம்!! எழுந்திருந்து நீங்கள் போட்ட கொண்டை அழகுக்கு மெருகூட்ட அற்புதமாய் வடிவெடுத்தீர். நிஜமென்று விழித்தபோது அமைதியாகத் துயில்கொண்டீர்.
துயருற்றுத் துவள்கின்றோம். இந்தப் பெரும் இடைவெளியில் எமக்கெல்லாம் ஆறுதல் கூற உம்மைப்போல் யாருளர்? உங்கள் கணவர் சிலையாய், செய்வதறியாது திகைத்து நிற்கின்றார். செல்வக் குழந்தைகளோ ஈடுசெய்ய முடியாத இழப்பிலே துடித்துத் துவண்டு ஏக்கத்தில் வாடுகிறார்கள். தெய்வ சன்னிதியில் உமது ஆத்மா சாந்தி பெறப் பிரார்த்திக்கின்றோம். அங்கிருந்து எம்மை வழிநடத்தும் தேவதையாக எங்கள் தேவியக்கா உருவெடுப்பார் என்று தெய்வ சன்னிதியில் வேண்டுகிறோம். தேவியக்கா! தேவியக்கா! என கூவி அழைக்கின்றோம். கேட்ட குரலுக்கு கனவில் ஒரு கதை கூற 6) umTJmTC:uumo ?
அன்புத் தங்கை, இராசமனோகரி புலந்திரன்

திரு. கணேசநாதனின் இரங்கற் செய்தி
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக திருமதி யோகநாதனை எங்களுக்குத் தெரியும். கிளிநொச்சியில் யோக D.R.0 வாக இருந்த நாட்களில் அவரின் இல்லத்தைத் தாண்டிச் செல்லும் நாங்கள் அவ்விடம் செல்லாமல் போவதில்லை. யோகா வீட்டில் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன, கட்டாயம் நாங்கள் உணவருந்தித்தான் செல்ல வேண்டும். இது திருமதி யோகாவின் அன்புக்கட்டளை. பரந்த மனமுடைய அம்மணியின் விருந்தோம்பல் பண்பு அத்தகையது. மெல்லிய உருவம் உடையவரானாலும், திடமான சிறந்த முடிவுகளை எடுத்து குடும்பத்தை நல்வழி நடாத்தும் அதிசிறப்புக் கொண்டிருந்தார். குடும்பத்தின் அச்சாணியாக இருந்த அன்னாரின் மறைவு யோகாவிற்கும் பிள்ளைகளுக்கும் பேரிழப்பாகும். வார்த்தைகளால் ஆறுதல் கூறுவதற்கில்லை. மறைந்த திருமதி யோகாவின் ஆத்மா சாந்தி அடைவதாக.
சொ. கணேசநாதன் ஆளுநர் அலுவலகம் திருகோணமலை, 3 ፲0,95

Page 17
கலாசார சமய அலுவல்கள் அமைச்சின் மேலதிகச் செயலாளர் எஸ்.எச்.எம் ஜமீல் அவர்களின் செய்தி
திருமதி ராஜதேவி யோகநாதன் அவர்களின் மறைவு, ஈடுசெய்ய முடியாத ஓர் இழப்பாகும். தனது 55 ஆவது வயது நிறைவுறும் முன்னரே அவர் இவ்வுலகை விட்டு சடுதியாக மறைந்தமை அவரது அன்புக் கணவன், ஐந்து குழந்தைகள், உற்றார், உறவினர், சுற்றத்தார். தெரிந்தோர் அனைவரையும் ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்திய ஒரு சம்பவமாகும்.
உலகிற் பிறந்த அனைவரும் முந்தியோ, பிந்தியோ என்றோ ஒருநாள் இறப்பர் என்பது நியதி. யாக்கை நிலையாமையைப் பற்றி உலகின் அத்தனை மதங்களும், தத்துவங்களும் மிகத் தெளிவாக எடுத்து கூறுகின்றன. ஒருவர் இறந்தபின்பு அவர் நினைவாக நிலைத்து நிற்பதும், மறுவுலக வாழ்வை நிர்ணயிப்பதும் அவர் உயிருடன் வாழ்ந்த காலத்தில் செய்த நற்கிரியைகளே ஆகும். நற்கிரியைகளில் மேலானது படைத்தவனைப் பணிந்து அவனது கட்டளைப்படி நடந்து, கணவன், மனைவி, மக்கள், உற்றம், சுற்றம், அண்டியோர் அனைவரையும் அனுசரித்து, ஆதரித்து நடப்பதேயாகும்.
இவ்வகையில், மலேசியாவில் உயர் பதவி வகித்த ரீ. ராசையா அவர்களின் அருமைப்புதல்வி ராஜதேவி அவர்கள் தனது இவ்வுலக வாழ்வினைப் பூரணத்துவமுடையதாக்கிச் சென்றுள்ளார் எனக் கூறலாம். மட்டக்களப்பு அரசாங்க அதிபராக ஒரு தசாப்தத்துக்கு மேலாகவும், வடக்கு - கிழக்கு மாகாண சபையில் அமைச்சுச் செயலாளராகப் பல வருடங்களும் இக்கட்டான காலங்களில் தமது கணவர் யோகநாதன் பொறுப்புவாய்ந்த உயர் பதவிகளை வகித்த காலங்களிலெல்லாம் பக்கதுணையாக விளங்கி இல்லத்திலே சுமுகமான சூழ்நிலையை உருவாக்கியதன் மூலம் தமது கணவனின் உத்தியோக வாழ்க்கை சிறப்படைய உதவினார். இறப்பதற்குச் சில தினங்களுக்கு முன்னர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற வேளைகளில் அவரது பிள்ளைகள் அவர்மீது காட்டிய பரிவும், பாசமும், அக்கறையும், அவர் தமது பிள்ளைகளை எவ்வாறு பேணி வளர்த்துள்ளார் என்பதைத் துலாம்பரமாகக் காட்டின.
அவர் மறைவினால் துயறும் கணவன், பிள்ளைகள் அனைவரும் ராஜதேவியின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவார்கள் என்பது திண்ணம்.
எஸ். எச்எம் ஜமில்
மேலதிகச் செயலாளர்

வட கிழக்கு மாகாண சபை பிரதி தலைமைச் செயலாளர் சி.த. மார்க்கண்டு அவர்களின் செய்தி
அமரத்துவம் - இராஜதேவி யோகநாதன்
திரு. இராமசுவாமி யோகநாதன் உடனான தொடர்பு பேராதனைப் பல்கலைக்கழகக் காலத்தில் இருந்து வருகின்றது. அதற்கு முன்பதாக தமையன் திரு. ஒப்பிலாமணி கணேசநாதனின் மாணாக்கருள் ஒருவராக சிறிது மாதங்கள் இருந்தேன். இக்குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு, யோகாவும், எழுதுபவரும் கிளிநொச்சியிலும் துணுக்காயிலும் அரச சேவையில் பணியாற்றும் போது ஏற்படத் தொடங்கியது. யோகாவின் தாயார் நான் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் சென்றுவரும்போது, தங்கும் போது தன் பிள்ளையாக நேசமுடன், பரிவுடன் கவனித்தார்.
கடந்த செப்டெம்பர் 21ம் திகதியன்று திருமலையில் இருந்து கொழும்பு புறப்பட ஆயத்தம் செய்யும் போது தொலைபேசி மணி அடித்தது. எடுத்தபோது மறுபக்கத்தில் ஒரு குரல் கேட்டது. அது யோகாவினுடையது. விம்மி விம்மி அழுத போது , நாத் தழுதழுத்தது. சொற்கள் பேச வரவில்லை. "என்ன நடந்தது? ஏன் இப்படி அழுகின்றீர்கள்” எனக் கேட்ட போது உடன் நம்ப முடியாத, சோகச் செய்தியை - இழவுச் செய்தியைக் கூறினார். கலங்கினோம்; அதிர்ச்சியடைந்தோம்; என் மனைவியோ உடன் அழுது விட்டார். O
ஒன்றரை மாதத்திற்கு முன் ஒரு நண்பரின் மகளின்திருமண நிகழ்ச்சியின் போது இருகுடும்பத்தினரும் சந்தித்து அதிக நேரம் உரையாடினோம். அப்போது
அவருக்கு ஏதேனும் வருத்தம் உள்ளது என்பது தென்படாதிருந்தது.
விசாரித்ததில், கிடைத்த செய்தியில் அன்றைய தினம் வீடு திரும்பியதுமே வருத்தம் வெளிப்படத் தொடங்கியது.
மின்னாமல் முழங்காமல் சிவசோதியுடன் சேர்ந்து விட்டார்.
திருமதி இராஜதேவி யோகநாதன் இல்லத்தலைவனுக்கு ஏற்ற, பொருத்தமான இல்லத்தரசி. இதனாலன்றோ திருமணங்கள் சொர்க்கத்தில் நிர்ணயிக்கப்படுகின்றன என்றார்கள். தாரமும் குருவும் தலைவிதிப்படி என்றாலும், எடுத்த காவடியை இறக்கும் மட்டும், தலையிடி,பிரச்சினை இன்றி இல்லக்கருமங்கள் நடந்தேறவேண்டும்.

Page 18
தாயினதும், சகோதரியினதும் அருமை பெருமைகளை அறிந்தோர்களே அறிவர்.
எனக்கு ஒரே ஒரு சகோதரி 1 அவரும் 3 வயது சிறுமியாக கதிர்காமக்கந்தனைத் தரிசிக்கச் சென்றவேளையில் கந்தனே பறித்துக்கொண்டான்.
திருமதி இராஜதேவி யோகநாதனை நான் என் உடன் பிறவாச் சகோதரிகளில் ஒருவராகவே மானசீகமாக எண்ணி நடந்துவந்தேன்.
சகோதரி, விசாலமான மனப்பான்மையும் உயர்ந்த உள்ளமும் கொண்ட, காவு அறியா, உத்தமி. குணத்தின் குன்று என்றால் அது மிகையாகாது. பொருத்தமானது. இல்லாள் இல் இருக்க இல்லாதது ஒன்றும் இல்லை. யோகா, கந்தோரும், “டெனிஸ்சும்” ஆனால் யோகா கவலையில்லாமல் திரிய, சகோதரியோ குடும்பத்தை நடத்தினார். யோகா சிறப்படைய மாசற்ற மனைவியே மறைமுகமாக மட்டற்ற உதவிகளை வழங்கினார்.
எதையும் தாங்கும் இதயம் கொண்டவர். பூமாதேவி போன்று பொறை உடையவர். தனக்குள் விசயங்களை வைத்து, மற்றவர்கட்கு இடையூறு இன்றி வாழ்ந்தவர்.
பெண்ணிற் பெருந்தகை. பெண்ணிற்கான அத்தனை அணிகலங்களையும் இயல்பாகவே அமையப்பெற்றிருந்தார். எதனால் பெண் உலகம் பெருமையடையுமன்றோ? தெய்வப்பிறவி.
கணவர், இல்லத்தின் இராசா என்றால், மனைவியோ இல்லத்தின் அரசி, யோகாவின் யோகம் மாண்புடைய இராஜதேவியைத்தன் இல்லத்தின் அரசியாகப் பெற்றது. பெயரும் - இராஜ தேவி - பொருத்தம் காணப்படுகிறதல்லவா? அன்பான மனைவி மாத்திரமா ? இல்லை இல்லை. பாசமான தாயும் கூட.
என்றும் புதியவர்களை, நண்பர்களை, உற்றார் உறவினர்களை இன்முகத்துடன் அழைத்து, உபசரித்து, அதில் நிறைவு, ஆனந்தம் கொண்டார்.
தமிழ், சைவப் பண்பாட்டுக் கலாசாரத்தை இம்மியும் பிசகாது கைக்கொண்டு வந்தார்.

மாமியார் போற்றிப் புகழும் மருமகளாகவும் திகழ்ந்து நற்பெயர் பெற்றார்.
இல்லத்தின் இருள் கெடுக்கும் தூண்டுசுடர் மாதாசியாக, அகல்விளக்காகவும் கூட வாழ்ந்தார்.
செல்வத்தின் மத்தியிலே, மலாயா நாட்டில் பிறந்து வாழ்ந்து ஈழம் திரும்பிவந்து வாழ்க்கைப்பட்டபோதும் யாதும் செருக்கின்றி, பெருமையின்றி பணிவுடன், எளிமையுடன் தூய்மையாக வாழ்வு நடத்தினார். இதனால் குடுபத்திற்கு நற்பெயரும் பெரும் கீர்த்தியும் சம்பாதித்துக்கொடுத்தார்.
சிவ வழிபாட்டில் ஈடுபாடு கொண்டு விரதங்களை மேற்கொண்டார், செல்லப்பசுவாமிகளும் கொழும்புத்துறைச்சீடர் யோகசுவாமிகளும் நாளும் நல்லை நகர் அடைந்த கந்தன் - முருகன் - சண்முகன் - கடம்பன் -ஆனைமுகன் தம்பி - தெய்வானை வள்ளி மணாளன் - கலியுக வரதனை வழிபட்டு வந்தார்.
எத்தனை எத்தனை நாள் என்னை அன்புடன் ஆதரித்து அன்னமிட்டாய், ஆறுதல் அளித்தாய், தேறுதல் கூறினாய்.
எத்தனை ஆண்டுகள் இப்பூவுலகில் வாழ்ந்தது என்பதைவிட வாழ்ந்த காலத்தில் என்ன செய்யப்பட்டது தான் பெரியது. இருந்தபோது உன் கடமைகளை சான்றோர் புகழ நடத்தினிர்
ஒற்றுமையான குடும்பத்துக்கு, ஆனந்தமான குடும்பத்துக்கு ஒளிகொடுத்த திரி அணைந்துவிட்டது.
யோகநாதனின் அரச சேவையில் பதவி உயர்வுகளைப் பெற்று குறுகியவட்டத்தில் இராது நாடளாவிய தேசியமட்டத்தில் பணிபுரிய அவரின் இராசி பக்கபலமாக இருந்தது.
தீபம் அணையமுன் பிரகாசமாக சுடர்விடும். அப்படி இக்குடும்ப வாழ்வு தழைத்தோங்கும் போது இவரின் மறைவு, ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
இனி, இறைவனே யோகநாதனின் சேவைக்கும், பிள்ளைகளின் படிப்பு
முன்னேற்றத்துக்கும் வேண்டிய அருளையும் சக்தியையும் மனோபலத்தையும் கொடுப்பாராக.
பிறந்தோர் இறக்கத்தான் வேண்டும் - இது நியதி நேற்றுள்ளவன் -

Page 19
இப்போது இருந்தவன் மறைந்து விட்டான் என்னும் பெருமையுடையது இவ்வுலகு.
சகோதரியே, இனி எப்பிறப்பில் உன்னைக்காண்பேன்.
அம்மணியின் திடீர் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் அன்புக்கணவர், பாசமுள்ள பிள்ளைகள் குடும்பத்தாருக்கு யோகரின் வாசகங்களைக் கூறுவதல்லாமல்
வேறு எவ்வகையில் யான் தேறுதல் கூறமுடியும்?
"எல்லாம் எப்பவோ முடிந்த காரியம்”
யாவும் உண்மை’ ஒரு பொல்லாப்பும் இல்லை” யாமறியோம்"
அன்னாரின் ஆத்மா இறைவனின் பாதார விந்தங்களில் மோட்சம்
அடைவதாக.
ஓம் சாந்தி , ஒம் சாந்தி, ஓம் சாந்தி
சி.த. மார்கண்டு. இ.நி.சே. பிரதி தலைமைச் செயலாளர் (நிதி)
வடகிழக்கு மாகாண சபை (முன்னால் அரச அதிபர், வவுனியா)

கொழும்பு சைவ மங்கையர் கழகத் தலைவி திருமதி. சிவானந்தினி துரைசுவாமி அவர்களின் செய்தி
காலஞ்சென்ற திருமதி இராசதேவி யோகநாதன்
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ்வுலகு"
என்ற வள்ளுவப் பெருமானின் குறளுக்கு இணங்க 1995 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ம் நாளன்று இவ்வுலக வாழ்வு நீத்து எம்பெருமானின் திருவடி சேர்ந்தார்.
காலன், இவ் வம்மையாரை இப்பூவுலகைவிட்டுப்பிரித்தாலும், என் கண்முன் இருப்பது சாந்தி வடிவமாகிய ஓர் இன்சொல் ஆன்மா. மனைமாட்சி அனைத்தையும் ஒருங்கே கொண்டு மனைத்தக்க மனையாளாக விளங்கிய இவ்வம்மையார் இல்வாழ்வின் பண்பும் பயனுமான அன்பும் அறனும், சாந்தமும் இவரது இல்வாழ்வின் குறைவற்ற செல்வமாக இருந்தன. நல்லதொரு மனைவியாக, அன்பிற்கு இலக்கணமாக, சிறந்த குடும்பத்தலைவியாக, பாசம் சொரியும் தாயாக விளங்கினார் இம்மாதரசி.
கற்புள்ள மகளிருக் குரிய பண்புகள் ஒருங்கே அமையப் பெற்று தனது அன்புக் கணவர், கலாசார சமய அலுவல்கள் அமைச்சின் மேலதிகச் செயலாளராகத் திகழ்வதற்கும், குழந்தைகளின் முன்னேற்றத்திற்கும் பெரிதும் உறுதுணையாக விளங்கினார். தனது இல்லத்தரசியை இழந்து தவிக்கும் திரு. யோகநாதன் அவர்களும், அன்பு அன்னையை இழந்து நிற்கும் குழந்தைகளும் ஆறித்தேற எல்லாம் வல்ல இறைவன் அருள்வாராக.
சிவானந்தினி துரைசுவாமி. தலைவி சைவமங்கையர் கழகம் கொழும்பு

Page 20
"Thevy". A Profile by her first Cousin
Mrs. Rajadevi Yoganathan popularly known to her friends and relatives as Thevy passed away on the 21st of September 1995 in Colombo, Sri Lanka. Her sudden demise at the age of 55 came as a rude shock to all who had associated with her.
I being a first cousin of hers, had known her from her infancy. Her father the late Mr. T. Rasiah was an executive in the Malayan railways. Her mother Mrs. Annapooranam Rasiah is my mother's younger sister.
Thevy was born in Kuala Lumpur, Malaysia on 6th May 1940. The country was then under the British Rule. We too were in Seramban, Malaysia a town about 45 miles South of Kuala Lumpur. I well remember the days when my mother went to Kuala Lumpur to assist her sister during the confinement. When the Japanese troops invaded Malaya both our families evacuated to the Kajang rubber Estate which is about 15miles south of Kuala Lumpur. We stayed together in the estate for nearly one and a half months.
Thevy was the fifth child in the family of eight children. She has two elder brothers, two elder sisters, two younger brothers and a younger sister. Her parents had a soft corner for her as according to the popular belief "Even if you beg the Lord, it is difficult to bring forth the fifth child as a female".
After the end of the Second World War, when the British had reoccupied Malaya, all of us came to Sri Lanka. (then Sri Lanka was not affected by the war and it appeared to be a peaceful country.) Owing to the hardships we underwent during the war days her parents left her five elder children in Sri Lanka under the care of our Grand Mother and returned to Malaysia. Thevy and her two elder sisters had their education at the Vembadi Girls High School, Jaffna. When the time was ripe for her marriage, her parents were back in Sri Lanka. She married Mr. Yoganathan according to the liking and wishes to her parents on the 31st of May 1965. Their wedding day is still fresh in my mind. This loving couple were blessed with four daughters and a son. Here too according to her liking

the fifth child is a female. Two of her daughters are happily married. She was fortunate that her second son-in-law Suren is in Sri Lanka and she was able to see and carry her first grand child Arvind.
One beauty in the family is that I have never seen them quarrelling. When one complains the other keeps quiet and vice versa. I consider them as "Silent Sign Posts". Again when someone narrates stories about others she absorbs everything like a blotting paper and keeps it to herself. I also noticed that her children expect her to do everything for them and she takes pride in doing so. Now I can understand their present feelings.
Thevy lost her father in Malaysia on 15th of January 1984. Her mother and eldest sister are in Jaffna. Her eldest brother is in Colombo. She also has a brother in Malaysia, a brother and sister in Canada and the youngest brother and sister are in U.K. The news of her sudden death would have come as a terrible shock to all of them.
God has willed that she had played her part well in this world and had recalled her. I remember her telling Yoga that she being the fifth female child, there should be no shortcomings in the family. May her Soul rest in peace.
To you Yoga - we share your grief at the loss of a lovable wife and to you her children - we join you in mourning at the loss of a precious
mother.
V. Vigneswaran
87, Palaly Road, Retd. District Manager; Kandarmadam, Bank of Ceylon. Jaffna, Sri Lanka.
11-10-95.
குமாரசாமி சோமசுந்தரம்,
பணிப்பாளர், தமிழ் பிரிவு,
தேசிய கல்வி நிறுவகம்,
மஹரகம.

Page 21
அணையாத தீபம்
முகுந்தனின் அறிமுகத்தில் அன்னையாக நாம் சந்தித்த அந்த நல்லுள்ளம், இதமொழி பேசி, துயருடையாருக்கு ஆறுதற் புத்தி கூறி, தன் தயவுநிறை நெஞ்சத்தால் எங்கள் மத்தியில் அன்பிற்கு வடிவமாகி, பண்பிற்கோ சிகரமாகி பரிவிற்கு உறைவிடமாக திகழ்ந்து இன்று பாதிவழிதனில் பாரினில் எம்மை விட்டு உறவறுத்த செய்தி கேட்டு செய்வதறியாமல், வாய்பேசமுடியாமல், நிலைநடுங்கி நிற்கின்றோம்.
ஆனால் எங்கள் உள்ளங்களிலோ அவரது நிைைனவுகள் கல்லறையாக கட்டப்பட்டுவிட்டன. எமது செவிகளிலோ அவரது தேனினும் இனிய குரல் சரணங்களாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன. கண்ணிர் கசியும் எம்மூடிய விழிகளுக்குத் தெரிகிறது அந்த அமைதியான அணையாத தீபம்
வாழ் வெனும் பரவையில் வழியே காட்டிய கலங்கரை விளக்கம் காற்றினால் அணைவதா ?
மரணத்தை ‘மறைவு' என்று சொல்வதே அதன் வேதனையை குறைக்கத்தான் ஆனால் அந்த மறைவே எம்மை பாதித்திருக்கும் இவ் வேளையில் முகுந்தன் மற்றும் குடுபத்தினர் கண்டு கொண்ட இந்த பேரிழப்பை வெறும் அனுதாபச் சொற்களினால் ஆறுதல் சொல்ல இயலாது என்பது நாம் அறிந்ததே எனினும்
குடம்பை தனித்தொழியப் புட்பறத் தற்றே உடம்போடு உயிரிடை நட்பு
என்ற வள்ளுவ மொழியினால் எம்மையும் அவரது இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினரையும் தேற்றி அமரரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக!
முகுந்தனின் நண்பர்கள்.

முப்பொருள் உண்மை
- குமாரசாமி சோமசுந்தரம்
சைவசமயம் மிகத் தொன்மை வாய்ந்தது.அது தமிழர் நெறியாக, அவர்களுடைய வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து, மலர்ச்சி பெற்று வந்துள்ளது. தமிழ் மக்களின் வாழ்க்கையிலிருந்து மலர்ந்த சைவ நெறி, அவர்களின் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தி வந்ததோடு மட்டுமல்லாமல், வாழ்க்கைத் தத்துவம் ஒன்றினையும், பெருமை மிக்கதாக வழங்கியது. அதுவே, சைவ சித்தாந்தம் ஆகும். அதன் பொருள், சைவசமயத்தின் முடிந்த முடிபு எனக் கொள்ளப்படுகின்றது. சைவமக்களின் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து பெற்ற முடிபுகள் , சைவ சித்தாந்தத் தத்துவமாக வழங்கப்பட்டுள்ளன. அதனால் வரட்டுத்தன்மையோ, முரட்டுப் போக்கோ சைவசித்தாந்த தத்துவத்தில் இல்லை. வாழ்க்கையில் எல்லோராலும் மேற்கொள்ளக்கூடியதும், அறிவியலுடன் இசைந்து செல்லக் கூடியதுமான சிறப்பினை சைவசித்தாந்தம் கொண்டுள்ளது.
சைவசித்தாந்தத்தின் அடிப்படை உண்மைகளாக முப்பொருள்கள் விளங்குகின்றன. பதி, பசு, பாசம் என்ற மூன்றுமே அந்த முப்பொருள்களும் ஆகும். பதி என்பது கடவுள் ; பசு என்பது உயிர் ; பாசம் என்பதால் ஆணவம், கன்மம், மாயை, எனும் மும் மலங்கள் என முப்பொருள்களை விளக்குவர். உள் பொருள் அல்லது உண்மைப் பொருள் என இவற்றை முடிந்த முடிபாகக் கொள்வதிலும், தருக்கமுறையில் எடுத்து விளக்குவதிலும் சைவசித்தாந்தம் தனிச்சிறப்புப் பெறுகின்றது.
சைவசித்தாந்தம் என்னும் பதம்,முதன் முதலில் தமிழில், திருமூலராலேயே திருமந்திரத்தில் எடுத்தாளப்பட்டுள்ளது. "மேலான தற்பரங் கண்டுள்ளோர் சைவசித்தாந்தரே" எனத் திருமந்திரத்தில் வருகின்றது. பதி, பசு, மும்மலங்கள் பற்றிய குறிப்புக்களும் திருமந்திரத்தில் இடம் பெற்றுள்ளன. பின்னர், பன்னிருதிருமுறைகளில் சைவசித்தாந்த உண்மைகள் விரவியுள்ளமையைக் காணலாம். சைவசித்தாந்தத்தின் முறையானதும், சாத்திரரீதியானதுமான வளர்ச்சி மெய்கண்ட சாத்திர நூல்களின் தோற்றத்துடனேயே இணைந்து ஏற்படலாயிற்று.
Lu5
அநாதியான, நித்தியமான,உண்மையான பொருள்கள் எனச் சைவசித்தாந்தம் கோடிட்டுக் காட்டுகின்ற பதி, பசு, பாசம் ஆகியவற்றுள், பதியே பரம் பொருளாகவும் முதற் பொருளாகவும், முடிவான உள் பொருளாகவும்

Page 22
கொள்ளப்படுகிறது. பதியே அனைத்தையும் ஆளுகின்ற ‘சிவம்' என்னும் செம்பொருள் ஆகும்.
சைவசமயிகளின் முழுமுதற் கடவுளாக சிவன் விளங்குகின்றார். உலகத்திற்குக் கர்த்தா சிவபெருமான். முழுமுதற் கடவுள் எனும் கொள்கையைச் சைவசித்தாந்தமே முன்வைத்துள்ளது. திருமூலரின் பின்வரும் திருமந்திரப் பாடல் இக்கருத்தை வலியுறுத்துகிறது.
"சிவனொ டொக்குந் தெய்வம் தேடினும் இல்லை அவனொ டொப்பார் இங்கு யாவரும் இல்லை புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னும் தவனச் சடைமுடித் தாமரை யானே'
திருவள்ளுவர், “ஆதி பகவன் முதற்றே யுலகு" என்பதாலும் சம்பந்தர் "ஏக பொருந்தகை ஆய பெருமான்” என்பதாலும் "மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே முறைமையால எல்லாம் படைக்கின்றானே” என்னும் அப்பர் திருவாக்கினாலும், உலகிற்குக் கர்த்தா ஒருவர் இருக்கின்றார் என்றும், அம் முதல்வர் சிவன் என்றும் அறியமுடிகின்றது. அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதும் உறுதியாகின்றது.
சைவசித்தாந்த முதனூலாகிய சிவஞானபோதம் முதல் சூத்திரத்திலேயே, மெய்கண்டார், உலகத்திற்குக் கர்த்தா சிவன் என்ற கருத்தை முன்வைத்துள்ளமை நோக்கற்பாலது. அச் சூத்திரம் பின்வருமாறு :
அவனவள் அதுவெனும் அவை மூ வினைமையின் தோற்றிய திதியே ஒடுங்கிமலத்துளதாம் அந்தம் ஆதி என்மனார் புலவர்”
சிவஞானபோதச் சூத்திரம் தரும் பொருளை மேலும் விளக்கி, விரிவாகவும் தெளிவாகவும் தருகின்றது அதன் வழி நூலாகிய சிவஞான சித்தியார்,"உலகைத் தருபவன் ஒருவன் வேண்டும்” என்று முன்மொழிந்து, அவ்வாறாக "உலகைத் தருபவனொருவன் உளன்” என்ற சித்தாந்த உண்மையை ஆதார பூர்வமாக, அந்நூலின் ஆசிரியர் அருணந்தி சிவாச்சாரியர் நிறுவுகிறார். கடவுள் உலகின் கர்த்தா, உலகம் காரியம்; அந்த உலகம் தோன்றி,நிலைத்து, ஒடுங்குவதாக உள்ளது; அவற்றைப் புரிபவரும் சிவம் ஆகிய கடவுளே என்னும் உண்மைகளும் தெளிவாக்கப்படுகின்றன.

உமாபதி சிவாசாரியார், இயற்றிய திருவருட்பயன், முதலாவது அதிகாரத்தில் மேலாகிய கடவுளின் இயல்பு கூறப்படுகிறது. இறைவன் அறிவே உருவானவன்; வேறு எதற்கும் நிகரில்லாதவன்; எல்லா உலகிலும், உயிர்களிலும் நீக்கமறக் கலந்து உள்ளவன். எங்கும் வியாபித்திருக்கும் தன்மையிலும் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கும் நுண்மையிலும், உயிர்கள் மீது கொண்டுள்ள பேரருளிலும் தனக்கு ஒப்பில்லாதவன் இறைவன். ஆக்கி எவையும் அளித்து ஆசுடன் அடங்கப் போக்கும் தொழில்களைப் புரிபவன். அருவம், உருவம், அருவுருவம் என்னும் மூன்று திருமேனிகளைக் கொண்டவன். தனக்கு மேலொருவன் இல்லாதவன். தேவர்களாலும் காணப்படுவதற்கு அரியவன். சகலருக்கும் சுகத்தைச் செய்பவன். இறைவன் ஆன்மாக்களின் பிறவிப் பிணியைத் தீர்க்கும் மாமருந்து ஆகவும் விளங்குகிறான்.
முழுமுதற் கடவுள் ஆகிய பரமசிவத்தை சொரூப நிலையிலும், தடத்நிலையிலும் வைத்து விளக்கம் தரப்படுகிறது. சொரூப நிலையில் குணங்குறிகள் அற்று அவற்றைக் கடந்தும் சிவம் உள்ளது. இந் நிலையில் சிவம் தத்துவ உண்மைப் பொருளாகக் கொள்ளப்படுகிறது. பரிபூரணம் நிறைந்தும் உள்ளது. எல்லாவற்றையும் கடந்து நிற்கும் நிலை சொரூப நிலையாகும் . இந் நிலையில், இறைவனுக்கு எந்தவொரு உருவமோ , நாமமோ, அன்றித் தொழிலோ கிடையாது. சொரூப நிலையில் சிவம் என்று பரம் பொருள் அழைக்கப்படுகிறது.
தடத்தநிலை, உருவவழிபாட்டை அடித்தளமாக கொண்டது. சிவன் என்னும் பெயரைப் பெறுகிறார். குணவியல்புகளுடன் கூடியுள்ளர். உருவ, அருவ, அருவுருவத் திருமேனிகளைத் தாங்கியவராய் உயிர்களுக்கு அருள் புரிகின்றார்.
"அகளமாய் யாவரும் அறிவரது அப்பொருள் சகளமாய் வந்தது.” எனத் திருவுந்தியார் குறிப்பிடுகிறது. சகளம் என உருவத்திருமேனி குறிப்பிடப்படுகிறது. ஆன்மாக்களில் சிவன் கொண்ட அளப்பெருங் கருணையினால் ஐந்தொழில்களைப் புரிகிறான்.
"நாம் இந்தச் சரீரத்தை எடுத்தது கடவுளை வணங்கி முத்தியின்பம் பெறுதற் பொருட்டேயாம்” என்கிறார் நாவலர் பெருமான். தனு, கரண, புவன, போகங்களைச்சிவன் ஆன்மாக்களுக்கு வழங்கியுள்ளமை அவற்றின் மேல் கொண்ட அளவற்ற கருணையினால் ஆகும். இவையாவும் இறைவனின் அருட்செயல்கள். ஆமாக்களின் ஈடேற்றத்தின் பொருட்டே இவையாவும் நிகழ்த்தப்படுகின்றன.
சமய வழிபாட்டையும், தத்துவத்தையும் இணைப்பதாக, இறைவனின் இவ்விருநிலைகளையும் சைவசித்தாந்தம் காட்டுகிறது எனலாம்.

Page 23
உயிர்கள்
பசு அல்லது உயிர், பதியைப் போன்று அநாதியானதும், நித்தியமானதுமான பொருள். உயிர்கள் எண்ணிறந்தவை; என்று முள்ளவை. ஆன்ம கோடிகள் என்று வர்ணிக்கப்படுவதிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.
ஆன்மாக்கள் படைக்கப்பட்டவையல்ல, அநாதியானவை. பசு என்பதற்குக் கட்டுண்டது அல்லது பந்திக்கப்பட்டது என்று பொருள் கூறுவர்.
"உயிரெனப் படுவதிந்தவுடனின் வேறுளதா யுற்றுச்
செயிருறு மிச்சா ஞானச் செய்திகளுடைய தாகிப்
பயில்வுறு மின்ப துன்பப் பலன்களு நுகரும்" என்கின்றது சிவஞான சித்தியார்.
ஆன்மாவை ஆண்வமலம் பீடித்திருக்கின்றது. ஆன்மா எந்த நிலையிலும் தனித்து நிற்பது இல்லை. ஆணவ மலத்தைச் சார்ந்து அதனால் பிணிக்கப்பட்டிருக்கும் அல்லது இறைவனைச் சார்ந்து முத்திநிலையில் இருக்கும் ஆன்மா சார்ந்திருக்கும் பொருளின் இயல்பை உடையதாயிருக்கும்.
பாசத்தைச் சார்ந்த நிலையில் ஆன்மா மூவகைப்பட்டிருக்கும். ஆணவ மலத்தை மாத்திரம் சார்ந்த விஞ்ஞான கலர், ஆணவம், கன்மம் ஆகிய மலங்களினால் பீடிக்கப்பட்ட பிரளயாகலர்; ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களினாலும் பந்திக்கப்பட்டுள்ள சகலர் என்போர் இம் முத்திறத்தாரும் ஆவர். இவ் வுலகில் வாழ்கின்ற நாம் சகலர் என்ற வகையில் அடங்கும். மும் மலபந்தம் இருக்கும் வரை பிறப்புக்கள் தொடரும், பிறப்பதற்கே ஆளாகி இறப்பவர்கள் சகலர்.
“பொறியின்றி ஒன்றும் புணராத புந்தி" என உயிர் பற்றி உமாபதிசிவம் கூறுகிறார். ஐம் பொறிகளின் உதவியின்றி ஒன்றையும் அறியமாட்டாதது ஆன்மா. உயிர் அறிவித்த வழியே அறியும் ஆற்றல் கொண்டது. எனவே தான் இறைவனின் திருவருட்சக்தியால் கிடைக்கப்பெறும் உடம்பு, கரணங்கள் முதலியவற்றின் துணையை கொண்டே அறியவல்லது என்கின்றனர்.
ஆணவப் பிணிப்பிலிருந்து விடுவித்து ஆன்மாவுக்கு விடுதலை வழங்கி, என்றும்நீங்காத பேரின்பத்தில் திளைக்கச் செய்யும் பெருநோக்குடனேயே இறைவன் அதற்கு உடம்பு முதலியவற்றைக் கொடுக்கிறான். உயிர், உடம்பினை எடுத்தலே பிறப்பு, அதனோடு இருத்தலே உலக வாழ்க்கை, அதனை விட்டு நீங்குதலே இறப்பு எனப்படும். செய்த வினைகளுக்கு ஏற்பப் பிறவிகளை இறைவன் வழங்குகிறான். வினைகள் அனுபவிக்க பட்டுத் தீரும் வரை பிறவிகள் தொடரும், இன்ப, துன்பங்களும் நிகழும். பிறவித் தொடரைப் பெரும் சமுத்திரத்துக்கு ஒப்பிடுவர்.

இதற்கு முடிவு இல்லாமலில்லை. சைவசித்தாந்தம், பிறவிக்கடலைத் தாண்டி உயிர்கள் இறைவனடி சேர்வதற்கு வழி கூறுகின்றது. அரிதாகிய மனிதப் பிறவியை எடுத்த போது, மனம் மொழி,மெய்யினால் இறைவனை வழிபாடுசெய்து, சைவ சீலங்களை வாழ்வில் மேற்கொண்டு வருதலால் முத்தி சித்திக்கும் ; பிறவி நீங்கும் என்பது சைவசித்தாந்த நிலைப்பாடு. ஆன்மா, விடுதலை பெறுவதற்கென்றே இறைவனால் வழங்கப்பட்ட அரிய வாய்ப்பு இந்த மனிதப்பிறவி. ஆனால் நாம் வந்த வேலையை மறந்து, கிடைத்த சந்தர்ப்பத்தையும் துர்ப்பிரயோகம் செய்தால், துன்பங்கள் நேர்வது தவிர்க்க முடியாதது ஆகிவிடுகின்றதே. இறைவனை வழிபட்டு, இருவினைகளை அனுபவித்து,அவற்றின் தொடர்பையறுத்து இறுதியில் ஆணவத்தை நீக்கிவிடுதல் மூலம், விமோசனம் பெற்று மரணமிலாப் பெருவாழ்வினை எய்துதலே உயிரின் இலட்சியம் ஆகும். மலம் நீங்கும் போது, உயிர் சிவத்தைச் சார்ந்து, சார்ந்ததன் வண்ணமாகிவிடுகின்றது. உயிரும் சிவமும் ஒரு பொருளாய் அத்துவிதப்பட்டிருக்கும். இதனை சைவசித்தாந்தம் முத்திநிலை என்கிறது.
பாசம்
பதி, பசு போன்று பாசமும் அநாதியானது என்கிறார் திருமூலர். ஆன்மாவை பாசம் பந்தித்து நிற்கிறது. அதனால் ஆன்மாவிற்கு இன்னொருபெயர் பசு ஆகும். ஆணவம்,கன்மம், மாயை எனப் பாசம் மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை மலங்கள் என்றும் அழைப்பர். மலங்கள் என்பன அழுக்குகள். அழுக்குகள் உயிரைப் பற்றியிருக்க, உயிர் தம்மையும் அறியாது, தலைவனாகிய பதியையும் அறியாது சங்கடப்படுகின்றது. அறியாமையால் ஆன்மா தடுமாற்றம் அடைகிறது. இம்மலங்களினின்றும் ஆன்மா விடுதலை பெறும் போதே முத்தியை பெறுகிறது. மலபந்தங்களினின்றும் விடுபடுதல் என்பது சுலபமான காரியமன்று.
ஆணவத்தை மூல மலம் என்பர். ஆன்மாவின் அறிவை மயக்கியும், மறைத்தும் அதனை அல்லல் படுத்துவது ஆணவம், “நான்"எனது” என்னும் அகந்தை, மமதைகளை மனிதரில் உண்டாக்கி, அவர்களைக் கர்வம், செருக்கு உடையோர் ஆக்குந் தொழிலை ஆணவம் செவ்வையாகச் செய்து வருகிறது. புராண இதிகாசங்களில் வருகின்ற சூரபன்மன், இராவணன் முதலியோர் ஆணவத்தின் சொரூபங்களாகப் படைக்கப்பட்ட பாத்திரங்கள்.
அறியாமையே துன்பங்களுக்குக் காரணம். அறியாமையைத் தருவது ஆணவம். ஆணவத்தின் குணங்களாக மோகம், மதம், அராகம், கவலை, தபம், வாட்டம் , விசித்திரம் என்பனவற்றைக் கூறுவர். மனிதப் பண்புகளுக்கு மாறான குணங்கள், பண்புகளுக்கு ஆதாரம் ஆணவம், ஆணவம் நீக்கப்படவேண்டியது முத்திக்குமட்டுமல்ல; வையகத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்கும் தேவையே. இவ்வுலகில் ஏற்படுகின்ற பிரச்சினைகள், முரண்பாடுகள் அனைத்திற்குமே மனிதரிடம் காணப்படுகின்ற ஆணவமுனைப்புக்களே காரணமாகும்.

Page 24
கன்மம் என்பது செயல், வினையென்றும் கூறுவர். நல்வினைகள், தீ வினைகள் என இரண்டு வகைப்படும். பிறவிக்குக் காரணம் ஆகக் கன்மவினைகள் அமைகின்றன. பிறப்பின் விளைவு துன்பமே. இப்பிறப்புகளில் நல்வினை. தீவினை இரண்டும் ஆன்மாக்களைப் பந்திப்பயனவே. இவ்விரு வகை வினைகளையும் சமமாக ஒப்பு நோக்கும் இருவினையொப்பு மலபரிபாக நிலையே ஆன்மாக்களின் இறுதி இலக்காகிய முத்தியின்பத்தைப் பெறுவதற்குச் சைவசித்தாந்தம் காட்டும் வழியாகும்.
மாயை, உலகும், உடல்களும் தோன்றுவதற்கும் ஒடுங்குவதற்கும் காரணம் ஆகும். மாயை என்பது பொய்த் தோற்றம் என்ற கருத்தே பரவலாகக் கொள்ளப்படுகின்றது. இறைவனுக்குச் சத்தியாயும்; ஆன்மாக்களுக்குத் தனு, கரண, புவன, யோகங்களுமாய் மாயை விளங்குகின்றது. மயக்கத்தையும் அளிக்கும் மலமாகவும் உள்ளது எனினும், ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு அவற்றிற் தேவையானவற்றை வழங்குவது மாயையே ஆகும்.
பாசங்களினின்றும் ஆன்மாக்கள் பெறும் விடுதலையே அவற்றின் இறுதி இலக்காகும். சைவசித்தாந்தம் தரும் அணுகுமுறைகள், முப்பொருள் விளக்கம் போற்றுதற்குரியன.

மார்கழி நோன்பு
“மாதர் அறங்கள் பழமையைக் காட்டிலும் மாட்சி பெறச் செய்து வாழ்வமடி” என்று பெண்கள் விடுதலைக்கும்மிபாடிய மகாகவி பாரதியார், தம் நாட்டு வணக்கப் பாடலிலே, பாரத தேசத்தைத் தாயாக உருவகித்துப் பாடுகிறார். அக்கவிதையில் அன்னையர் தோன்றி மழலைகள் பேசியதையும் அவர் கன்னியராகி நிலவினில் ஆடியதையும் தம் பொன்னுடல் இன்புற நீர் விளையாடியதையும் எண்ணிப் பார்க்கும் இனிய கற்பனையில் இறும்பூதெய்திய பின்,
மங்கய ராயவர் இல்லறம் நன்கு
வளர்த்தது மிந்நாடே - அவர்
தங்க மதலைக ளின்றமு தூட்டித்
தழுவியதிந்நாடே - மக்கள்
துங்க முயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்தது மிந்நாடே"
என்று குதூகலிக்கிறார். பெண்கள் இல்லற வாழ்வினை இனிதே நடத்துவதையும் அழகிய குழந்தைகளை வருந்திப் பெற்று வளர்ப்பதையும் தம் பிள்ளைகள் பெருமைபெற்று விளங்க வேண்டுமென்று நேர்த்திக் கடன்கள் வைத்துக் கோயில்களை வலம்வந்து வழிபடுவதையும் பாரதியார் எம் மனக்கண்முன் தத்ரூபமாகக் கொண்டுவந்து நிறுத்துகிறார்.
தங்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணைவர்கள் வாய்க்க வேண்டும் என்றும் குடும்ப வாழ்வு குறைவற்றதாய் அமையவேண்டுமென்றும் பிள்ளைகள் சான்றோர்களாய்ச் சிறக்க வேண்டுமென்றும் இறைவனிடத்துப் பெண்கள் இரக்கிறார்கள். அவ்வாறு இறைவனை வேண்டி இரப்பது அறிவியலுக்கு ஒவ்வாத மூட வழக்கமாகத் தோன்றலாம். ஆயினும், எதிர்பாராத வகையில் இடர்களும் ஏமாற்றங்களும் நோய்களும் மரணங்களும் சம்பவிக்கும் உலகவாழ்வில், அவ்வாறு ஆண்டவனிடத்து வேண்டிக்கொள்வது புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றேயாகும்.
"எல்லாம் இங்கோர் சூதாட்டம்
இரவும் பகலும் மாறாட்டம் வல்லான் வகுத்த விதியேபோல்
வாழும் மனிதர் கருவிகளாம்" என்று உமர் கையாமும்,

Page 25
காயோடு கனியோடுபூபிஞ்சு வாழ்விலே
காலனும் தூதுவர ஜாலமே செய்வதேன் காயா புரிக்கோட்டை கற்கோட்டை யல்லவே
கணத்திலே உயிர்வேறு உடல்வேறு செய்வதேன்" என்று இராமலிங்கவள்ளலாரும்,
அச்சமும் துயருமென்றே - இரண்டு
அசுரர்வந் தெமையிங்கு குழ்ந்து நின்றார் துச்சமிங் கிவர்படைகள் - பல
தொல்லைகள் கவலைகள் சாவுகளாம்" என்று மகாகவி பாரதியாரும் கூறியிருப்பதை இங்கு எண்ணிப் பார்க்கலாம்.
தொல்லைகள் கவலைகள் சாவுகளிற் சிக்காது வாழ்வினை நடாத்த விழைவது மனிதவியல்பு. அத்தகைய வாழ்வினை வேண்டிப் பல்வேறு நோன்புகளைப் பெண்கள் நோற்கிறார்கள் என்றால், குடும்ப வாழ்விலும் சமுதாய வாழ்விலும் அவர்களுக்கு அமைந்துள்ள இடம் எத்தகைய முக்கியத்துவம் உடையது என்பதை அது காட்டுவதாகும். இல்லறம் நன்கு நடைபெறுவதற்கும் குடும்பம் குறைவின்றி விளங்கவும் சமுதாய ஒழுங்கும் நாட்டு வளமும் இன்றியமையாதவை என்பது சொல்லாமலே போதரும். சமுதாய அமைதிக்குக் குடும்ப அமைப்பு எவ்வளவு முக்கியமானது என்பது குறித்து இன்று பலவிடங்களிற் பேசப்படுகிறது. குடும்ப அரவணைப்பினை இழந்த இளைஞர்கள் சமுதாயங்களின் சீரழிவிற்குக் காரணமாயிருப்பதை உலகின் பல பகுதிகளிற் காணக்கூடியதாகவுள்ளது. குடும்பச் சூழலிற் பிள்ளைகள் வளர்வதனால் விளையத்தக்க சமுதாய நன்மைகள் குறித்து இன்று பலர் உரக்கப் பேசுகின்றனர்.
நல்ல குடும்பத்தையும் நாட்டுவளத்தையும் வேண்டிப் பெண்கள் நிகழ்த்திய விரதங்களிலே மார்கழி நோன்பு விதந்து குறிப்பிடத்தக்கது. மார்கழி மாத மதிநிறைந்த நன்னாளில் கொட்டும் பணியையும் குளிரையும் பொருட்படுத்தாது சிற்றஞ்சிறு காலையிற் துயிலெழும் கன்னிப்பெண்கள் தம் தோழியரையும் துயிலுணர்த்தி உளத்தூய்மையுடன் ஒன்று கூடி இறைவனைப் பாடியவாறு நீராடி அவன்முன்னர் தம் வேண்டுதல்களை முன்வைப்பதைத் திருப்பாவை, திருவெம்பாவை ஆகிய இலக்கியங்கள் சித்தரிக்கின்றன.
கன்னிப் பெண்கள் மார்கழி நீராடி உத்தம நாயகர்களையும் நாட்டுவளத்தையும் வேண்டிப் பாவைநோன்பு இருக்கும் வழக்கமொன்று தமிழ்நாட்டில் நீண்ட காலமாக நிலவியமைக்கான சான்றுகளாக ஆண்டாள்

இயற்றிய திருப்பாவையும் மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையும் திகழ்கின்றன. நாட்டு மக்களிடைப் பிரசித்தி பெற்றிருந்த ஒரு வழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பக்தி இயக்கத்தை முன்னெடுக்க வல்லதோர் இலக்கிய வடிவத்தை வைணவரான ஆண்டாளும் சைவரான மாணிக்கவாசகரும் உருவாக்கிக் கையாண்ட சிறப்பு மெச்சத்தக்கதாகும்.
பாவைநோன்பு சம்பந்தமான செய்திகள் திருப்பாவையில் எடுத்துக் கூறப்படுமாற்றினை ஆழ்ந்து நோக்குமிடத்து, புதியதோர் இலக்கிய வகையினை அறிமுகப்படுத்தும் பிரக்ஞை ஆண்டாளுக்கு இருந்ததுபோல் தோன்றுகிறது. மார்கழி நோன்பு நிகழ்த்தும் பெண்கள், நாராயணன் நமக்கே பறை தருவான்’ என்று உறுதியோடு எதிர்பார்ப்பதைத் திருப்பாவையில் அவதானிக்கலாம். பறை தருவான்' என்ற தொடருக்கு அருள் பாலிப்பான் என்றோ அல்லது கைங்கரியம் செய்யும் பேற்றினை நல்குவான் என்றோ பொருள்கொள்ளவியலும்.
பையத் துயின்ற பரமன் அடி பாடி, நெய்யுன்னோம் பாலுண்னோம் நாட்காலை நீராடி மையிட் டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி.”
என்ற திருப்பாவை அடிகளின் வாயிலாக அகப்புறத் தூய்மையினாலும் நற்கருமங்களினாலும் இறைவனை வசப்படுத்த முயன்ற மேன்மை புலப்படும். நோன்பின் பயனாகத் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்யும் என்றும் 'நீங்காத செல்வம்' நிறையும் என்றும் எதிர்பார்க்கப்படுவதிலிருந்து பரந்த பொதுநலப்பிரக்ஞை விளங்குகின்றது. கண்ணனை வழிபடுவதால் ஏலவே செய்த பாவங்களும் இனிமேலே செய்யப்படுகின்ற பாவங்களும் தீயினில் தூசுபோல் அழிந்தொழியும் எனப்படுகிறது. தொகுத்து நோக்குமிடத்து, சகல துன்பங்களும் தீர்ந்து சகல சௌபாக்கியங்களும் வாய்க்க கண்ணன் கடாட்சம் உதவும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் அக்கடாட்சம் வேண்டப்படுகிறது.
ஆண்டாளுடைய திருப்பாவையிலே கண்ணனது சிறப்புக்கள் விளக்கப் படுகின்றன. மாணிக்கவாசகருடைய திருவெம்பாவையில் சிவனதும் சத்தியினதும் சிறப்புக்கள் விளக்கப்படுகின்றன. திருவெம்பாவையிலும் மழைபொழியவும் நலம் திகழவும் வேண்டப்படுவதைப் பார்க்கலாம். சிவனடியாரைக் கணவராகப் பெறவேண்டும் என்றும் அவ்வாறு பெற்றால் “என்ன குறையும் இலோம்" என்றும் பெண்கள் கூறுவது சைவபக்தி உணர்வுக்கு அழுத்தம் தருவதாகும்.

Page 26
இவ்விரு நூல்களும் மார்கழி நோன்பைத் தழுவியெழுந்த சமயப் பிரபந்தங்கள். மார்கழி நோன்பு பெண்களுக்குச் சிறப்பாக உரியது. அதன் முதலாவது நோக்கம் நல்ல கணவரை அடைதல் ஆகும். திருவெம்பாவையில் சிவனடியாரைக் கணவராக அடையுவேட்கை வெளியிடப்படுகிறது. திருப்பாவையில் கண்ணனைத் தலைவனாகப் பெறவேண்டும் என்ற விருப்பத்தை ஆயர்பாடிக் கன்னியர் வெளியிடுகின்றனர். பரமாத்ம - ஜீவாத்மத் தொடர்பை அது குறிக்கும் 66.
s மார்கழி நோன்பின் இரண்டாவது நோக்கம், வீடும் நாடும் செழிக்க மழை வேண்டல். விவசாய நி"*ரிகத்திலே பெருமுக்கியத்துவம் பெறுவது மழை என்பது அனைவரும அறிந்ததே, உயிர் வாழ்க்கை நீரின்றி அமையாது என்பதும் மனங்கொள்ளப்பட வேண்டியதாகும். திருப்பாவையிலும் திருவெம்பாவையிலும் மழைபெய்து நாடு செழிக்கவேண்டும் என்ற விருப்பம் வெளியிடப்படுகிறது.
திருப்பாவை, திருSவம்பாவை ஆகிய இரு பிரபந்தங்களிலும் வருகின்ற பெண்கள் உருவ அழகும் உள்ளத் தூய்மையும் பக்தி வைராக்கியமும் மதிநுட்பமும் நகைச்சுவை உணர்வும் *டையவர்களாய்த் திகழ்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக, தீமையை விலக் நன்மையை வளர்க்கும் பண்பினராகவும் அதன்
பொருட்டு வலியமுயற்சிகளையும் வழிபாடுகளையும் மேற்கொள்பவர்களாகவும் மிளிர்கின்றனர்.
பேராசிரியர் சி. தில்லைநாதன்
தமிழ்த்துறைத் தலைவர், பேராதனை ப்கலைக்கழகம்

&.
தேவாரங்களும் பணிகளும்
சி. குமாரசாமி, எம்.ஏ. தேவாரப்பண்ணிசை மன்றம்,கொழும்பு
தேவாரங்கள் பண்முறையில் ஒதப்படுவன, கீர்த்தனைகள் இராகமுறையில் பாடப்படுவன. பண்கள் முந்தியவை. இராகங்கள் பிந்தியவை.
பண்கள் சங்ககாலத்தில் இருந்து எமக்குக் கிடைத்துள்ள இசை மரபாகும். தமிழர், நிலத்தினை ஐந்தாகப் பிரித்தார்கள். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்திணைகளுக்கும் ஏற்ற பண்களை வகுத்தார்கள் பாணர்கள். இவர்கள் “யாழ் எனும் இசைக்கருவியினை சாசித்துத் தாமும் சேர்ந்து பாடி வந்தார்கள். இப்போதும் சிலர் வீணையினை வாசித்த வண்ணம் தாமும் சேர்ந்து பாடுவதை நாம் காணலாம். வீணையின் முன்னோடியான வாத்தியம் தான் யாழ் என்பது தெளிவு. மனிதக் குரலுடன் ஒத்துப்போகும் யாழ் வாத்தியம் பல வகைப்பட்டதாக இருந்துள்ளது. சீர் யாழ், பேரி யாழ், மகர யாழ், சகோட யாழ், செங்கோட்டு யாழ் என வழக்கிலிருந்துள்ளன என்பதை முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் ஆராய்ச்சி நூலான “யாழ் நூல்" மூலம் நாம் அறியலாம்.
திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் முதலியோர் தேவாரங்களை அருளிச் செய்த போது இசையுடனேயே பாடினார்கள். அசைத்தமிழாகவே அவர் தம் நாவிலிருந்து தேவாரங்கள் வெளிவந்தன. இக்காலத்தில் மெட்டுக்களுக்கு ஏற்றவாறு பாடல்கள் ஆக்கப்படுவதை நாம் காண்கிறோம். தேவாரங்கள் அக்காலத்தில் உள்ள பண்களில் பாடப்பட்டன. யாழ் நூலில் ஐந்தாம் அத்தியாயம் “பண்ணியல்" என்றும் ஆறாவது அத்தியாயம் "தேவாரவியல்" என்றும் அடிகளார் வகுத்துள்ளார்கள்.
திருஞானசம்பந்தரின் அற்புதப் பாடல்கள் பலவுள. சிலவற்றை மட்டு தருகிறோம். பூம்பாவையை உயிர் பெறச் செய்த தேவாரம் அமைந்த பண் “சீகாமரம்" ஆகும். இதற்குரிய இக்கால இராகம் நாதநாமக்கிரியை ஆகும்,
மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக் கட்டிட்ட கொண்டான் கபாலீச்சரமமர்ந்தான் ஒட்டிட்ட பண்பின் உருத்திரபல் கணத்தார்க்கு அட்டிட்ட காணாதே போதியோ பூம்பாவாய்”

Page 27
இது இரக்கத்துக் குரிய பண். அதே இராக்ஷத்திலமைந்த “பன்னெடு நாளாய்” என்ற பாடலை திருமதி எம்.எஸ். சுப்புலஷ்மி அவர்கள் “சகுந்தலை" யில் பாடியதை நினைவுகூருவோம். அடுத்தபடியாக "புனல்வாதம்” செய்த போது பாடிய தேவாரம் கெளசிகப் பண்ணில் அமைந்தது.
"வாழ்க அந்தணர் வானவர் ஆணினம் விழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக ஆழ்க தியதெலாம் அரன் நாமமே குழ்க வையகமுந் துயர் தீர்கவே” இதற்குரிய இராகம் பைரவியாகும்.
அப்பர் அடிகள், அப்பூதிஅடிகளின் மகனை உயிர்பெறச் செய்த அருளிய பதிகம் "இந்தளப் பண்ணில் அமைந்தது.
ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர் வரை
ஒன்று கொலாம் உயரும் மதி குடுவர்
ஒன்று கொலாம் இடு வெண்தலை கையது
ஒன்று கொலாம் அவர் ஊர்வது தானே"
இது மாயாமாளவகெளளை இராகத்தில் பாடப்பட்டது. அவரைக்கல்லுடன் கட்டிக் கடலில் இட்ட போது அவர் “சொற்றுணை வேதியன் சோதி வானவன்” என்ற பதிகம் பாடினார். “காந்தார பஞ்சமம்” பண்ணில் அமைந்த கேதாரகெளளை இராகத்தில் நாம் இப்பாடலைப் பாடுகிறோம். கல் தெப்பமாக மிதந்து அப்பரைக் கரைசேர்த்தது. என்னே! தமிழ் மறையின் மகிமை ! !
சுந்தர மூர்த்தி நாயனார் தமது கண்பார்வையை இழந்து நின்ற போது காஞ்சியில் ஏகாம்பர நாதரை வணங்கிப் பாடிய தேவாரம் "தக்கேசிப் பண்ணில்"
அமைந்தது. இதற்குரிய இராகம் "காம்போதி” என்ற பழம் பெரும் இராகம். இது கைலை நாதனைக் கவர்ந்த இராகம் என அறிகிறோம்.
ஆலந்தானுகந் தமுது செய்தானை ஆதி யையமர் தொழு தேத்தும் சிலந் தான்பெரிதுமுடையானைச் சிந்திப் பாரவர் சிந்தையுளானை ஏல வார் குழ லாளுமை நங்கை என்று மேத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம் காணக் கண்ணடி

இடக் கண்பார்வையைப் பெற்ற சுந்தரர் திருவாரூருக்குச் சென்று மற்றக் கண்பார்வையினையும் ஈய்ந்தருள வேண்டிப் பாடிய தேவாரம்" மீளாயடிமை” என்ற “செந்துருத்திப் பண்”ணில் உள்ள தேவாரம். “செந்துருத்திப் பண்’ சுந்தரர் மட்டும் கையாண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குரிய இராகம்மத்தியமாவதி”
எனப்படும்.
“சிவபாதசேகரன்” எனக் காரணப்பெயர் பெற்ற முதலாம் இராசராசச் சோழ மன்னன் தேவாரங்களை அழிவினின்றும் காப்பாற்றியதோடு அமையாது சைவாலயங்களில் அவை கட்டாயமாகப் பாடப்படவேண்டும் என்றும் கட்டளை யிட்டுள்ளான்.
ஆனால், எமது ஆலயங்களில் இத் தமிழ் வேதங்கள் எவ்வளவு தூரம் கையாளப்படுகின்றன என்பது சிந்தனைக்கும் திருத்தத்துக்குமுரியதன்றோ !!

Page 28
நன்றி நவிலல்.
எமது இல்லத் தலைவி, நோயுற்று இருந்த வேளையில் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தோர்க்கும், இறுதிச் சடங்குகளில் நேரிற் கலந்து கொண்டவர்களுக்கும், மலர்வளையங்கள், அனுதாபச் செய்திகள் அனுப்பியோருக்கும், நாம் துயருற்றிருந்த போது அனைத்து வழிகளிலும் பங்கு கொண்டு உதவி ஒத்தாசைகள் புரிந்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.
கணவர், பிள்ளைகள், மருமக்கள்.
Acknowledgement
We the family members of late Mrs. Rajadevi Yoganathan, Sincerely thank and express our deep gratitude to all those who visited the Nursing Homes and wished Speedy recovery, participated in the last rites, sent messages of condolence, floral tributes, attended the funeral and were a source of comfort and strength at the hour of grief
Husband, Children & Sons - in-law.


Page 29
OFFSET BY UNIE AR

S (PVT) LTDTEL 330195