கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அப்பலோ 11, 12

Page 1

* 、

Page 2

முதற் பதிப்பு: 1-8-1969 %prebril Laruli ա9ւյւր- 85-12-1969
வெளியிட்டது:
வெளியிடு:
விலக
சிவகுமரன் அச்சகம்
உரிமை ஆசிரியருடையது
விபரங்களுக்கு: திரு. ந. சிவபாதம்
தமயந்திப் பதிப்புகம்
அச்சுவேலி, f
CENTRAL NEWS AGENCES . .
95/74, Abdul Hameed Street
COLOMBO-2

Page 3
படிக்கு (p6iro.
அப்பலோ 11; இருவாரங்களில் விற்பனையானது. செய்தி அறிந்து ஆச்சரியப்பட்டேன். மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. பத்திரிகை விமர்ச்சனங்களைப் படித் த வர்கள் இன்றும் நூலுக்கு எழுதி வருகின்றனர். அவர்கள் ஆர்வம் என்ன இரண்டாம் பதிப்பை வெளியிடத் தூண்டியது. அப்பலோ 12 பயணத்தை யும் சேர்த்து வெளியிட்டால் அதிக பயனடைவர் என எண்ணினேன். அதுவரை காத்திருந்தேன்.இன்று அந்த எண்ணம் நிறைவேறிவிட்டது. இம்முறையும் அமோக ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்
அப்பலோ 11 விற்பனை செய்து உதவியவர் களுக்கும் - விமர்ச்சனம் வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர்களுக்கும் - இந்நூலே வெளியிட என்னுடன் தோன்றத் துணையாக நின்ற எனது நண்பர் எழுத்தா ளர், ஈழநாடு திரு. க. கணேசலிங்கத்திற்கும் என் நன்றி.
அப்பலோ 11,12 விண்வெளிப் பயண விபரத்தைத் தெரிந்து கொள்வதற்கு இனி என்னுடன் வாருங்கள். இதோ
தமயந்திப் பதிப்பகம் புத்தொளி அச்சுவேவி.

அப்பலோ 11
கண்டதில்லை; கேட்டதில்லை; முன்னுமில்லை; பின் னுமில்லை; இமயம் போன்ற மகத்தான சாதனை: மனுக் குலம் கண்டறியாதன சண்டோம் என்று அகம்களித் தனர். அமெரிக்க வீரர்கள் நீல், வ. ஆம்ஸ்ரோங். எட்வின் இ. ஆல்டிரின், மைக்கல் கொலின்ஸ் (Neil A, Armstrong, Edwin Aldrin, Michael Collins)Gibfi கொண்ட சந்திரப்பயணம் நூற்றுக்கு நூறு வெற்றி பெற்றது கண்டு உலகம் வியந்தது. உலக வரலாற்றில் முழு உலகத்தின் கவனத்தையும் ஈர்ந்த இந்நிகழ்ச்சி போல் வேருென்றும் இதுவரை கடந்த சில்லை. கற்பனை உண்மையானது. விஞ்ஞானிகள் கனவு மெய்யானது.
அண்ட வெளியை ஆட்கொள்ள வேண்டுமென்று ஆயிரமாயிரமாண்டுகளுக்கு முன் மனிதன் ஆசைப்பட் டான். இந்த ஆசையைக் கற்பனையிலும் காவியங்களி லும் காட்டினன். கதைகளில் வடித்தான். அது இன்று பொய்யாய்ப் பழங்கதையாயில்லாமல், மெய்யா ய்ப் புதுக் கதையாய் பாரோரால் பாராட்டப்படுகின்றது.

Page 4
2
விண்வெளிச் சகாப்தம் பற்றி 1609-ம் ஆண்டு முதன் முதல் சிந்தித்துத் தனது எண்ணக் கருத்தை மக்களுக்கு பிரசுரமொன்றின் மூலம் எடுத்துக் காட் டியவர் ஜோஹன் கெப்லர் (Johannes Kepler) அவரது கெப்லரின் கனவு (Kepler's Dream) என்ற பிரசுரம் விண்வெளிப் பயணம்பற்றிக் குறிப்பிடுகின்றது. இவ ரது ககனப் பயணம்பற்றிய கற்பனை 1961 சித்கீரை மாதம் ரூசியா விண்வெளி வீரர் யூரி ககாரின் (Yuri Gagarin) விண்வெளிப் பயணத்தை மேற்கொண்ட போது உண்மையானது. ககாரின் பெற்ற வெற்ரி விண்வெளிப்பயண விஞ்ஞானிகளுக்குப் புத்தூக்கத் தையளித்தது. சந்திரனில் மனிதன் காலடி வைப்ப தற்கு ககாரின் பயணம் வித்தட்டது. இன்று அவர் விதைத்த விதை முளையாகி, செடியாகி, மரமாகி, கனி யைத் தத்தது.
இந்தியாவுக்கு கடல் மார்க்கத்தைக் கண்டுபிடித் தார் கிறிஸ்தபர் கொலம்பஸ். ஆகர்ஷண சக்தியைக் கண்டுபிடித்தார் கலிலியோ. இவர்கள் தங்கள் கண்டு பிடிப்புக்களினல் சரித்திர புருஷர்களானர்கள். ஆனல் இவர்கள் சாதனையெல்லாம் பூமியிலிருந்து சாதித்த வையே. முன்பின் எவரும் கண்டறியாத விண்வெளிப் பயணத்தை திடசித்தத்துடன் மேற்கொண்டு வெற்றி யுடன் திரும்பிய வீ ரர் சாதித்ததோ உலகினும மாணப்பெரிது.
உலகில் முதலாவது ராக்கெட்டைச் செய்தவர் ஓர் அமெரிக்கர். அமெரிக்க பெளதிகத்துறைப் போத சிைரியர் ருெபேட்கொடாட் என்பவரே அதனே க் கண்டுபிடித்தார். 1926-ம் ஆண்டு மார்ச்மாதம் 26-க்

3
கிகதி பத்து அடி நீளமுள்ள வாகனமாக 48 ருத்தல் கிறையுள்ளதாக ஆரம்பமான ராக்கெட்யுகம் இன்று வளர்ச்சியடைந்து 365 அடிகள் வரை சென்றுவிட்டது. முப்பத்தாறு அடுக்கு மாளிகையின் உரம் இது. ராக் கெட்டின் நிறை 3000 தொன்.
16-7-69 புளோரிடா, ஜோன். எவ், கென்னடி விண்வெளித் தளத்தில் உள்ள விடுதியில் வீரர்கள் மூவரும் காலைப் போசனம் அருந்தியபின் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். அதன்பின் விண்வெளி உடைகளை அணிந்தார்கள். 363 அடி உயரம்; 3100 தொன் நிறையுடன் கம்பீரமாக கிற்கும் அப்பலோ சனி-5 வாகனத்துக்குள் வீரர்கள் சென் றர்கள்.
பிரயாணம் ஆரம்பிப்பதற்கு 2 மணித்தியாலம் இருக்கையில் முக்கோண வடிவிலான அப்பலோ 11 கட்டளேப் பகுதிக்குள் நுளைந்தார்கள். கதவு சாத்தப் பட்டது. அன்றிரவு 7-02 மணி. அமெரிக்க நேரப்படி காலை 9-32 மணி ஏவுகணை இயந்திரம் முடுக்கப் பட்டது. கேட்போரை நடுங்கவைக்கும் பேரொலி அதைத் தொடர்ந்து தீப்பிழம்பும் புகையும் ஏவுகணை யின் அடிப்பாகத்திலிருந்து எழும்பின. ஏவுகனே மேல் நோக்கிக்கிளம்பியது. முதலில் செங்குத்தாகப் பாய்ந்து பின்னர் கிழக்காகச் சரிந்து, முடிவில் அத்திலாந்திச் சமுத்திரத்திற்கு மேலாகச் சென்று மறைந்தது. பூமியி லிருந்து கிளம்பிய சுமார் 3 நிமிடங்களில் மணிக்கு 6000 மைல் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது.
பூமியிலிருந்து சுமார் 2 இலட்சத்து 40 ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள சந்திரமண்டலத் தரை

Page 5
4
யில் காலடி எடுத்துவைக்க வீரர்கள் சென்றுகொண் டிருந்ததை உலகம் அனைத்தும் உன்னிப்பாகக் கவ னித்தது. மக்கள் பயணம் வெற்றி பெற வேண்டும் மென்று ஆசைப்பட்டனர், பயணத்தில் என்ன நடக் குமோ என்று அஞ்சினர். ஊண்மறந்தனர்; உறக்கம் விட்டனர். டெலிவிஷன் முன்னும், வானெலி முன் னும் கண்களையும் காதுகளையும கூர்மையாக வைத் திருந்தனர்.
மூன்று கட்டங்களைக் கொண்ட சனி 5 ஏவுகணை ஆரம்பத்தில் விநாடிக்கு 15 தொன் எரிபொருளை ஏப்பம் வீ ட்ட வண்ணம் மணிக்கு 17, 500 ல்ை வேகத்தில் பூமியிலிருந்து கிளம்பிய 12வது நிமிடத் தில் 100 மைல் உயரத்திற்கு விண்வெளிக் கலத்தை எடுத்துச் சென்று பூமியை வலம் வரச்செய்தது. ஏவு கணையின் முதலிரண்டு கட்டங்களும் தீய்ந்துபோய் விட்டதால் ஏற்கனவே, உதறப்பட்டுவிட்டன. மூன்ற வது கட்டத்துடன் கலம் பூமிவலம் வந்தது. பூமியை இரண்டாவது தடவை வலம் வரும்போது விண்கலம் பூமியின் சுற்றுப் பாதையிலிருந்து பிய்த்துக் கொண்டு மணிக்கு 24,250 மைல் வேகத்தில் சந்திரனை நோக் கிச் சென்றது. இது இரவு 9-46ற்கு நடந்தது.
ஆதியும் அந்தமும் இல்லாத அண்ட வெளியில் பூமியிலிருந்து சுமார் 24 இலட்சம் மைல் தொலைவி லுள்ள சந்திரனை அப்பலோ 11ல் சென்ற வீரர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் பயணம் செய்தார்கள். விண்வெளிக் கப்பலே சக் தி ர ன் தன்னை நோக்ஓ மணிக்கு 5, 250 மைல் வேகத்தில் வந்தடையும்படி ஒரு சக்தியோடு இழுக்க ஆரம்பித்தது.

5
வீரர்கள் விண்வெளியில் பறந்து கொண்டே சில பணிகளைச் செய்தார்கள். விண்வெளிக் கப்பலைப் பரி சோதித்தார்கள் ஏ வு க ஃண காற்று மண்டலத்தை நோக்கிக் கிளம்பியபோது பாதிக்கப்படாமலிருப்பதற் காக பின்புறம் ஒரு பேழைக்குள் வைக்கப்பட்டிருந்த குட்டிக்கப்பல் வெளியில் எடுக்கப்பட்டு, முக்கோணக் கட்டளைப்பகுதியின் முன் பகுதியில் பொருத்தினர்கள் இதற்குப் பின்னர் ஏவுகணையின் மூன்ருவது கட்டமும் உதறித் தள்ளப்பட்டது.
குட்டிக் கப்பலை தன்முனையில் ஏந்திய வண்ணம் சந்திரனே நெருங்கிய அப்பலோ 11 தாய்க்கப்பல் அதனை 70 மைல் உயரத்தில் வலம்வரத் தொடங்கியது, சந்திரனின் ஈர்ப்பு வலையத்துக்குள் இலங்கை நேரம் 8-37 (19-7-69) இவர்கள் பிரவேசித்தனர். விண் வெளிக்கப்பல் இரண்டு மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை சக்திரனை வலம் வந்தது. கப்பல் சந்திரனின் மறுபகுதியைச் சுற்றும்போது விண்வெளி வீரர்களுக் கும் பூமிக்குமிடையில் எவ்வித வானெலித் தொடர் ւյւն கிடையாது. சந்திரன் இதனைத் தடைசெய்கிறது.
20-ந் திகதி மாலை 6-52 மணிக்கு நிலாவாகனத் தின் சாரதியான எட்வின் ஆல்டிரின் தாய்க்கப்பலி லிருந்து 36 அங்குல விட்டத்தையும், 18 அங்குலமீளத் தையுமுடைய குளாய் மூலம் தவழ்ந்து சென்று நிலா வாகனத்துள் புகுந்தார். மிகவும் பாரம் குறைந்த
உலோகங்களால் செய்யப்பட்டிருந்த அந்த நிலாவா
கனத்திலுள்ள எ ல் லா இயந்திரங்களும் சரியாக இயங்குகின்றனவா என்று பார்த்துக்கொண்டார்.

Page 6
6
22அடி 11 அங்குல உயரமுள்ளதும் 32,500 இருத்தல் நிறையையுடையதுமான நிலாவாகனத்திலுள்ள எல்லா இயங்கிரங்களும் ஒழுங்காக இருக்கின்றன என அவர் அறிவித்தார். அப்பலோ சந்திரனேப் பத்தாவது தட வையாக வலம் வந்து கொண்டிருந்த போதே அவர் தாய்க்கப்பலிலிருந்து நிலா வாகனத்திற்குள் நுளைந்து சென்ருர்,
அல்டிரினத் தொடர்ந்து நீல் ஆம்ஸ்ருேங் தாய்க் கப்பலிலிருந்து நிலாவாகனத்துள் புகுந்தார். பரிசே' தனை முடிந்ததும் விண்வெளி வீரர்கள் பூமிக்கு அறிவி த்தனர்.
“தாய்க்கப்பலிலிருந்து பிரியலாம்" என்ற உத்த ரவு கென டி முனையிலிருந்து கொடுக்கப்பட்டது நீல் ஆம்ஸ்ருேங் ஒருவெடியை வெடித்து நிலாவாக னத்தைத் தாய்க்கப்பலிலிருந்து பிரித்தரர். தாய்க்கப் பலையும் நிலாவாகனத்தையும் இணைத்து வைத்திருந்த 12 பூட்டுக்களும் இலேசாகத் திறந்து கொண்டன. கிலாவாகனம் தாய்க் கப்பலிலிருந்து பிரிந்தது. நிலா வாகனம் பிரிந்ததும் தாய்க்கப்பலும், நிலாவாகனமும் 40 அடி’ தூரத்தில் ஒன்றன்பின் ஒன்ருகச் சந்திர னேச் சுற்றிவந்தன. இருகப்பல்களும் சந்திரனின் பின் புறத்தில் வெவ்வேருகப் பிரிந்தன. நிலாவாகனமான ஈக்கிளுக்கு நான்கு கால்கள் அமைத்திருந்தார்கள் இறங்கும்போது அந்தக் கால்கள் பிரிந்துகொள்கின் றன. அவை 20 அடி உயரம் கொண்டவை. அவற்றில் வலுவான, அழுத்தமான ஸ்பிரிங்குகள் பொருத்தப் பட்டிருந்தன. எ க் த வித அதிர்ச்சியும் இல்லாமல் கப்பல் இறங்க ஸ்பிரிங்குகள் பயன்பட்டன.

7
20-ந் திகதி இரவு 11-22 மணிக்குத் தாங்கள் சந்திரனை நோக்கி இறங்கத் தயாராக இருப்பதாக eb ஆம்ஸ்ரோங் பூமிக்கு அறிவிந்தார்.
'ஜன்னல்மூலம் வெளியே பார்த்தோம்’ என்றும் அவர் கூறினர்.
“நிலைமை எப்படி இருக்கிறது?" கென்னடி முனே யிலிருந்து கேட்டனர். '
பிரயாண ஒழுங்குகள் யாவும் சரியாக இயங்கு கின்றன. இறங்குவதற்கு நாங்கள் தயாராக இருக் கிருேம். ள்ன்று நீல் ஆம்ஸ்ரோங் பதலளித்தார்,
“இறங்குங்கள்’ என்று கட்டளை கிடைத்ததும் தாய்க்கப்பலான கொலம்பியாவிடன் சேர்ந்து பறந்து சென்ற ‘ஈகிள் சந்திரனை நோக்கி இறங்க ஆரம் பித்தது. அப்பொழுது நேரம் இரவு 11-42. சக்தி ரத் தரையில் இறங்கும்போது நிலாவாகனத்தைச் செலுத் தும் பொறுப்பை அல் டிரின் ஏற்றுக்கொண் 7ர். “எங்கும் பாறைகளாக இருத்தத9 ல் இறங்கும் இடத் தைத் தெர்வு செய்ய வேண் டிய பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன்’ என்று அல் டிரின் அறிவித்தார். இவர்கள் சந்திரனல் இறங்கி க்செசி ண்டிருக்கும் போது தாய்க்கப்பலில் வீரர் கொலின்ஸ் தொடர்ந்து சந்திரனை வலம் வருகிருர், அவர் சந்திரனின் மறுபக் கத்தில் இருந்ததால் சந்திரனில் வீரர்கள் இறங்கிய நிகழ்ச்சி அவருக்குத் தெரியாது. அவர் அவர்களு டன் தொடர்பு கொள்ளவும் முடியாமல் போய்விட் டது. அவர் செலுத்தும் கலத்தில் டெலிவிஷன் வசதி செய்யப்படவில்லை.

Page 7
8
ஈகிள் நிலாவாகனம் சந்திர மண்ணில் இறங்குமுன் சந்திரனின் மேற்புறத்திலிருந்து கிளம்பிய பெரும் புழுதிப்படலம் கிலாவாகனத்தின் ஜன்னலை முற்ருக மறைத்துவிட்டது.
நிலாவாகனத்தின் கண்ணுடிகள் மூலம் சந்திர னின் தரையைத் தாங்கள் அவதானிப்பதாக அல்டி ரின் பூமிக்கு அறிவித்தார். அதிகாலை 1-15 மணிக்கு ஈகிள் சந்திரனின் தரையிலிருந்து 1000 அடி உயர த்தில் காணப்பட்டது. முதலில் வெள்ளை வெளே ரெ னமேன்மையாகத் தென்பட்ட சந்திரனின் மேற்பரப்பு கிலாவாகனம் கீழ்நோக்கி இறங்கக் குழிகளும் கற் பாறைகளும் நிரம்பிய இடமாக இருந்தது என அறி வித்தனர். சரியாக 1-35 மணிக்கு நிலாவாகனத்தின் வேகத்தை பூச்சியமாக்கும் ருெக்கட் தீர்க்கப்பட்டது. அதன்பின் நிலாவாகனம் சந்திரனின் கவர்ச்சியால் மட்டும் இயக்கப்பட்டு நிலாத்தரையை நோக்கி மெது வாக கிறங்கியது. 21-7-99 சரியாக அதிகாலை 1-48 மணிக்கு நிலாவாகனம் அம்புலித் தரையில் இறங்கி யது. நிலாவாகனம் சக்திரனைத் தொட்டவுடன் பூமிக்கு egygyüLJLüull- (Ipg 6i Gaun lig 60 g "Tranquility base here. the Eagle has landed.” “og 6. Lg5 dia Lai) இது. ஈகிள் இறங்கிவிட்டது.’ 16-7-69 அட்டலோ புறப்பட்டு 102 மணித்தியாலம் 45 நிமிடம் 40 விகா டிகளின் பின் ஈகிள் சந்திரனில் இறங்கியது.
நிலாவாகனத்துக்கு இரு பக்கங்களிலும் நின்று இவர்கள் இருவரும் படம் பிடித்தனர். தொடர்ந்து ஏராளமான படங்கள் எடுத்தனர். அப்படங்களை டெலிவிஷன் மூலம் அமெரிக்க நிலையத்திற்கு அனுப்பி

9
வைத்தனர். எங்கு பார்த்தாலும் பல வர்ணங்கள் கண்ணுக்குப் படுவதாகவும், அழகாக இருப்பதாகவும் கீல் ஆம்ஸ்ருேங் கூறினர். ... '
சந்திரனில் வாகனம் இறங்கியதும் 6 மணி 21 கிமிடம் இரண்டு வீரர்களும் வாகனத்துக்குள்ளேயே இருந்து ஒய்வெடுத்தனர். அவர்கள் ஓய்வெடுக்கும் போது நாம் சந்திரன் பற்றியும் சந்திரமண்டல இடத் தை இதற்குமுன் சென்று தெரிவு செய்தவர்கள் பற் றியும் நினைவில் நிறுத்தவேண்டும்.
சந்திரமண்டலப் பிரயாணமோ சுமார் 2,40,000 மைல்கள். இந்தப் பிரயாணத்தின் போது அப்பலோ எங்கும் தங்குவதில்லை. எரிபொருள் எரிக்கத் தாம திப்பதில்லை. அப்பலோ 11 பூமியிலிருந்து 25,000 மைல் வேகத்தில் பிரயாணம் செய்து 2,16,000 மைல்களைக் கடந்ததும் விண்வெளிக் கப்பல் சந்திர னின் ஆகர்ஷண சக்திக்கு உட்பட்டு சந்திரமண்டலத் தைகோக்கித் திரும்புகிறது. சந்திரன் உருண் ைடவடி வானது. பூமியிலிருந்து சந்திரன் ஆகக் கிட்ட உள்ள தூரம், 221,463 மைல், பூமியிலிருந்து ஆகக் கூடிய தூரம் 252,710 மைல்) அதன் விட்டம் 2,160 மைல். திண்மம் பூமியின் அளவு பங்கு. ஈர்ப்பு பூமியின் அளவு பங்கு. பூமியைச் சுற்றிவருதல் 27 தினங் களுக்கு 1 தடவை. பூமியைச் சுற்றிவரும் வேகம் 2,287 மணித்தியாலம். சுற்றிவரும் காலம் 27 தினங் களுக்கு 1 தடவை. பூமியிலுள்ள 14 தினங்கள் சந்திரனிலுள்ள ஒரு தினத்திற்குச் சமமானது. பூமி யின் கான்கில் ஒரு பங்குடையது. சத்திரன் , றை குறைவானது. காற்று இல்லாதது. பூமியைப் போலவே

Page 8
10
சந்திரனிலும் அதற்கென ஒளி கிடையாது. குரியணி லிருந்தும் பூமியின் பிரதிபலிப்பிலிருந்துமே அது ஒளி பெறுகிறது. சந்திரனிலிருந்து ஒளி பூமிக்கு வருவதற்கு 1செக்கன் எடுக்கும். சந்திரனில் காணப்படும் மிக உயர்ந்த மலை 30,000 அடி உயரமுள்ளது. சங்கிரனில் பகல் வேளையில் 250 பாகை பரன்ஹைட் வெப்பநிலை யும் இரவில் 270 பாகை குளிரும் இருக்கும். மனித னது சாதாரண வெப்ப நிலை 96.4 பாகைபரன்ஹைட் ஆணுல் சந்திரனில் விண்வெளி ஆடை அணிந்த வீரர் பூமியில் தமது வீட்டில் இருப்பது போன்ற தட்ப வெட்ப நிலையிலேயே இருப்பர் சந்திரனின் வரைப் படத்தை முறையாக முதலில் வரைந்தவர் 300 வருடங் களின் முன்னர் வாழ்ந்த ஜொஹானெஸ் என்பவர்.
முதலாவது விண்வெளி வீரர் ருசியரான யூரி ககாரின். இவரே முதன் முதல் விண்வெளிப் பயணத் தைச் செய்தவர். அதன்பின் அமெரிக்க முதலாவது விண்வெளி வீரர் என்ற பெருமை ஜோன் கிளென் எனபவரைச சாரும.
அப்பலோ 11 விண்வெளி யாத்திரைக்கு முன் அப்பலோ 8 ல் மூன்று விண்வெளி விரர் பூமிய லிருந்து சந்திரனுக்குச் சென்று 70 மைல் துரத்தில் அதைச் சுற்றிவிட்டுத் திரும்பினர் Y968 டிசம்பர் மாதம் 24-ந் திகதி போர்மன், லோவெல், ஆண்டர்ஸ் என்ற மூவரும் சென்ற ராக்கெட்டின் பெயர் சனி5 அதாவது அப்பலோ 8. இது 147 மணி நேரத்தில் சுமார் 5 இலட்சம் மைல்கள் சந்திரமண்டலப் பிரயாணம் செய்தபின் பசுபிக் கடலில் குறித்த நேரத்தில் 11 வினுடிகளுக்கு முன்னதாக இறங்கியது.

11.
1969 மே மாதம் 18-ந் திகதி இரவு 10,19
மணிக்கு தனது 8 நாள் பயணத்தைத் தொடர்ந்தது அப்பலோ 10. இக்கப்பலிலும் மூன்று வீரர்கள் சென் றனர். இவர்கள் சந்திரமண்டலத்தை நன்கு கவனித்து சக்கிரமண்ணில் மனிதன் இறங்கும் இடத்தைத் தெரிவு செய்தனர். இக்கப்பற் பயணத்திற்குச் செல விட்ட தொகை 260 கோடி ரூபாய். இதுவே முதன் முறையாக விண்வெளித் தோற்றங்களை வண்ணப் படங்களாக டெலிவிஷனில் காட்டியது. மே மாதம் 23-ந் திகதி மாலை 5.33 மணிக்கு தாய்க்கப்பலிவி ருந்து பிரிந்து குட்டி விண்வெளிக் கப்பல், சந்திரனி லிருந்து சுமார் 9 மைல் உயரம் வரை இறங்கி வட்ட மிடத் தொடங்கிப் பூமிக்குப் பல தகவல்களை அனுப்பி அப்பலோ 11ன் வெற்றிக்கு உதவினர். அப்பலோ 10 விண்வெளிக் கப்பல் பூமியை வந்து அடைந்தபோது அதன் வேகம் மணிக்கு 72,800 மைல்களாக இருந் தது. ஒரு விநாடிக்கு ஒன்றரை மைல் வேகம்.
சந்திரவாகனத்தில் ஒய்வெடுத்த இருவீரர்களும் சந்திரனில் இறங்குவதற்கு ஏற்ற உடைகளே அணிக் தனர். இதனைச் “சின்ன வெளிப் பெட்டி” என அழைக்கின்றனர். இதன் நிறை 120 ருத்தலாகும் இதனுள் திரவங்கள், மின்கலங்கள், வானெலிக் கரு விகள் முதலியன இருந்தன. இவ்வானெலிக் கருவிகள் மூலமே உரையாடல்கள் கடாத்தப்பட்டன. "பிளிஸ் என்று அழைக்கப்படும் உயிர் காப்புக் கருவி இவ் வீரர்களிடம் உண்டு. பூமியில் அது 85 இருத்தல் நிறையுள்ளது. சந்திரமண்டலத்தில் அதன் நிறை 16 இருத்தலாகும். சந்திரமண்ணில் வீரர்கள் நிற்கும்

Page 9
12
போது நான்கு மணிக்கியாலங்களுக்கு இந்த உயிர் காப்புக் கருவி பாதுகாப்பளிக்கும். இது பிராணவாயு வை அளிப்பதோடு உடலின் உஷ்ணத்தையும் பாது காத்துக்கொள்ளும்.
ஈகிள் கலத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒன்பது படிகள் கொண்ட ஏணிவழியே மெல்ல அடி எடுத்து வைத்தார் ஆம்ஸ்ரோங். அகில உலகமும் என்ன நேருமோ ஏது ஆகுமோ என்று அங்க லாய் த்தது. நிமிடத்துக்கு நிமிடம் விநாடிக்கு விநாடி மனித மனம் இரு புக் கொள்ளாமல் தவியாய்த்தவித்தது. ஆம்ஸ் ரோங் எண்ணினர். ஒன்பது-எட்டு-ஏழு-ஆறு ஐந்து-காலு-மூன்று-இரண்டு-ஒன்று. டுே ரம் காலை 8 மணி 26 நிமிடம் 20 விநாடி. அதோ அதோ ஆம்ஸ்ரோங் தனது இடது பாதத்தை சந்திர மண்ணில் வைத்து சரித்தர புருஷரானர்.
அம்புலித்தரையில் அடி எடுத்துவைத்த ஆம்ஸ் ரோங்கின் காலடியை முதலில் உணர்ந்து கென்னடி முனேயில் உள்ள ஹ"ஸ்டன் கட்டுப்பாட்டு கிலேயத் துக்கு அறிவித்தவர் ஆஸ்திரேலியா விண்வெளித் தொடர்பு நில்லயத்தைச் சேர்ந்த திரு. ருெபேட் ரெயிலர் ஆகும். இவர் அமெரிக்க விண்வெளி நிறுவனத்தின் கட்டுப்பாட்டு அதிகாரியாகக் கடமையாற்றுகினருர்,
மனிதன் சந்திரமண்ணில் காலடி எடுத்து வைத்த செய்தி உலகம் முழுவதும் பறந்தது. பொன்னை புது யுகம் பிறந்தது. அணுக்குண்டு யுகம் மறைந்து சந்திர யுகம் பிறந்திருப்பதாக மக்கள் மெய்மறந்து பேசிக் கொண்டனர். விண்ணவரும் மண்ணவரும் போற்றிப்

13
புகழ்ந்தனர். செய்தி கேட்ட மாத்திரத்தில் ஆர்த்தனர்; வேர்த்தனர்; தடித்தனர்; சிலிர்த்து மெய்மயிர் போர்த் தனர் மாவீரரின் மகத்தான சாதனையை வாயார வாழ்த்தி நெஞ்சார மகிழ்ந்தனர். எல்லா மனிதரும் சக்தரமண்ணில் தாம் காலடி எடுத்து வைத்ததாக எண்ணி மகிழ்ச்சி வெள்ளத்தில், புகழ்ச்சியின் உச்சா ணிக்கொப்பில் தாவிநடந்தனர்.
அகிலத்தில் நின்று ஆகாயத்தை அண்ணுக்து பார்த்து 'அம்புலி அம்புலி வா வா வா’ என்று அழுங் குழந்தைக்கு விளையாட்டுக்காட்டிய மனிதன் அந்த அம்புலியின் உலகத்திலே அடி எடுத்துவைத்து அதன் மடியில் தவழ்ந்து அள்ளி எடுத்து அரவணைத்து முத்தமிட்டு அகமிக மகிழ்ந்த நாள் மனிதனல் என்றும் மறக்கமுடியாத பொன்னுள்; நன்னுள்; அம்புலியை வெற்றி கொண்ட ஆம்ஸ்ரோங் தேவனல்ல; மனிதன் 7ேற்பதாவது வயதை நோக்கி வீறுநடை போடும் மனிதன்,
ஆம்ஸ்ரோங் சந்திரமண்ணில் நின்று செய்திகளை அனுப்பிக்கொண்டிருந்தார். அவர் அங்கிருந்து கொண் டுசொன்னர் சரி; சரி; இங்கு மனிதன் வைப்பது அவ னது சிறு காலடி, அதே நேரத்தில் மனித குலமனைத் தும்முன்னேற்றப்பாதையில் பெற்றிருப்பது ஒரு பெரிய பாய்ச்சல்” மனிதன் முன்னேறவில்லையானல் ஆம்ஸ் ரோங் வைத்த காலடி இன்றும் என்றும் வெறுங் கன வாக அல்லவா இருக்கும்.
கிலாமனிதன் ஆம்ஸ்ரோங்கைத் தொடர்ந்து 30 கிமிடங்களின் பின் அல்டிரின் சந்திரமண்ணில் காலடி

Page 10
14
எடுத்து வைத்தார். அம்புலியின் வெண்மை கலந்த கொக்கோ நிறப் புழு தி யில் நீல் ஆம்ஸ்ரோங்கும் எட்வின் அல்டிரினும் 2 மணி 55 நிமிடங்களைக் கழித் தார்கள். ஆம்ஸ்ரோங் திட்டமிட்டதற்கும் அதிகமாக 15 நிமிடம் எடுத்து சந்திரமண்ணில் 2 மணி 55 நிமி டங்களைச் செலவிட்டார். அல்டிரின் அங்கு 1 மணி 54 நிமிட நேரம் மட்டுமே உலாவினர்.
சந்திரமண்ணில் தங்கியிருந்த ஒவ்வொரு நிமிடத் திற்கும் 15 கோடிடாலர் பணம் செலவாகியுள்ளது. 167 இருத்தல் நிறையுள்ள ஆம்ஸ்ரோங் சந்திரமண் ணில் 27 முத்தல் எடையுள்ளவராகக் காணப்பட்டார்.
சந்திரனில் இறங்கியதும் முதல் வேலையாக மண் 9 கல் என சுமார் 100 இருத்தல் பொருட்களை வெட்டி அதற்கான பையில் போட்டனர். காலடி அடையாளங் களே ஒரு அங்குல ஆழத்துக்குச் சந்திர தரையில் பதிய வைத்தனர்.
கற்பாறைகளை வெட்டினர். அ  ைவ கடினமாக இருந்தன. வட்டவடிவான சந்திரக்கல் ஒன்றையும் எடுத்தனர். எங்கும் மணல் இருப்பதாகவும், ஒட்டும் தன்மையுள்ளதாகக் காணப்படுவதாகவும் கூறினர். பாறைகள் அழகாக இருப்பதாகவும் 5 அடி தொடக் கம் 50 அடிவரையும் உயரமுள்ள கற்கள், 20 அடி தொடக்கம் 30 அடி வரையும் உயரமாக இருக்கும் கற்கள் இருப்பதாகவும் கூறினர். சுற்றிவர மலைகள் காணப்படுவதாகவும் தகவல் அனுப்பினர்.
தமது கண் ணு க்கு எட்டிய தூரம் வரையில் பாறைகளாகவே தோன்றுகின்றன என்றும் ஆம்ஸ்

15
ருேங் தெரிவித்தார். பூமி மிகவும் பெரியது; பிரகாச மானது; அழகானது என்று சந்திரனில் இறங்கிய ஆம்ஸ்ருேங் வர்ணித்தார். எல்லா நிறங்களையும் உரு வங்களையும் கொண்ட கற்கள் சந்திரனல் இருப்பதா கவும் கூறினர்.
சந்திரனில் கடப்பது கங்காரு துள்ளுவது போன் றது என்று அல்டிரின் வர்ணித்தார். சந்திரனின் ஈர்ப்பு விசைகுறைவாக இருப்பதனல் ஒவ்வொரு அடி எடுத்துவைக்கும் போதும் துள்ளித் துள்ளிப் போவ தைப் போன்ற உணர்ச்சி ஏற்பட்டதாக அல்டிரின் கூறினர். சந்திர நிலத்தின் நிறத்தை ‘சாம்பர் நிறம் சேர்ந்த கொக்கோ நிறம்’ என்று ஆம்ஸ்ருேங்வர்ணித் தாா.
சந்திரனின் மேற்பரப்பில் வரலாற்று முக்கியத்து வம் வாய்ந்த தங்களது காலடி அடையாளங்களை ஒரு அங்குல ஆழத்துக்குச் சந்திரத்தரையில் பதிய வைத்தனர். m
தாம் இருவரும் இறங்கிய ஒருமணிநேரத்துக்குப் பிறகு, நிலாக்கலத்தில் சொற்கள் பொறிக்கப்பட்ட உலோகத் தகட்டைத் திறந்து வைத்து அதனை வாசித் asm i egit 6iv Gugliu. “Here men from the planet earth first set foot upon the moon, July 1969 A. D. We came in peace for all man kind.' *பூமிக் கோளத்திலிருந்து வந்த மனிதர்கள் சந்திர னில் முதலாவது அடி எடுத்துவைத்தது இந்த இடத்தில்தான். கி. பி. 1969 யூலை. நாம் மனித சமூகத்தின் சமாதானத்துக்காக இங்கு வந்தோம்."

Page 11
16
இதன் கீழே ஒரேவரிசையில் விண்வெளி வீரர்கள் ஆம்ஸ்ருேங், ஆல்டிரின், கொலின்ஸ், ஆகிய மூவர தும் கையெழுத்துக்கள் உள்ளன. இதற்குக் கீழே அமெரிக்க ஆட்சித்தலைவர் ரிச்சாட் நிக்ஸன் கையெ ழுத்து உள்ளது. இத்தகட்டின் மேல்ப் ப்க்கத்தில் உலகின் கிழக்கு மேற்குப் பகுதிகள் இருவட்டங் களுக்குள் வரையப்பட்டுள்ளன. இதில் உள்ள்வை அனேத்தும் ஆங்கிலத்தில் உள்ளன.
இதனை வைத்தபின்னர் அமெரிக்கக் கொடியை அங்கு நாட்டினர். அங்கு காற்று இல்லாதனல் கொடி பறக்து கொண்டிருப்பதைக் காட்ட ஒரு கம் பியை மேற்பக்கத்தில் பொருத்தினர்.
சந்திர மண்டலத்தில் வீ ரர் கள் விட்டுவந்த பொருள்கள், சந்திரத்தரையில் இறங்க உபயோகித்த ஈகிள் என்ற வாகனம் - சந்திரனுக்குச் சமாதான தூதுபோவது போன்ற படம் பொறிக்கப்பட்ட பத்க்கம் -ரூஷிய விண்வெளி வீரர்களான யூரி ககரின் கோமரொவ், அமெரிக்க விண்வெளி வீரர் கிரிசட், சப்பி, ஒயிட் ஆகிய 5 வீரர்களின் நினைவைக் குறிக் கும் பதக்கங்கள்-முதல் மனிதன் சந்திரனில் இறங் கியதைக் குறிக்கும் பட்டயம்-அமெரிக்கக்கொடி-நில அதிர்ச்சிக் கருவி-லேசர் ஒளிக் கண்ணுடி, இக் கருவிகள் இரண்டும் முக்கியமானவை.
சிறிய அளவில் செய்யப்பட்ட ஒரு வானெவி ஒலிபரப்புக் கருவி. ஒருவருட காலத்துக்கு இக்கருவி தானகவே இயங்கும். பூமியிலிருக்கும் விஞ்ஞானி

17
களுக்கு இக்கருவி சந்திரனிலிருந்து ஒலிபரப்பும் அம் புலியில் நில அதிர்வு ஏற்பட்டால் அதனைப் பூமிக்கு இக்கருவி அஞ்சல் செய்யும். சீஸ்மோ மீட்டர் என இதற்குப் பெயரிட்டிருக்கின்றனர்.
லேசர் ஒளிக் கண் ணு டி கள் பொருத்தப்பட்ட மற்றுமொரு கருவியை விண்வெளி வீரர்கள் நிலாத் தரையில் வைத்தனர். நிலாவிலிருந்து கொண்டே இக்கருவி ஒலிபரப்பும். சந்திரத்தரையில் அவ்வப் போது நிகழும் சம்பவங்களைப் பூமியிலிருக்கும் விஞ்ஞா னிகள் அறிய இது உதவும்.
சூரிய மண்டலக் காற்றுக்கலவைகளைச் சேகரிக் ' கும் கருவியையும் அங்கு வைத்தார்கள். இக்கருவியை அவர்கள் ஆராய்ச்சிக்காகத் தம்முடன் எடுத்து வந் தனர்.
சந்திர சகோதரர்கள் இருவருடனும் அமெரிக்க ஜனதிபதி கிக்சன் தொலைபேசி மூலம் பேசினர். “இந்த தொலை பேசிப் பேச்சுச் சரித்திர முக்கியத்துவம் வாய்த் தது. இது எவ்வளவு மகத்தான சாதனை என்பதை அமெரிக்க மக்களுடன் சேர்ந்து உலக மக்கள் அனை வரும் அங்கீகரிப்பர் என்பது கிட்சயம்’ ஆம். அவர் பேச்சு உண்மையானது. கிரந்தரமானது. மக்களால் ஏகோபித்து வரவேற்கத்தக்கது.
நிலாவில் இறங்கிய ஈக்கிள் என்ற குட்டிக் கப் பல் இருபகுதிகளைக் கொண்டது. கீழ்ப்பகுதி இறங்கு வதற்கும் மேல்பகுதி ஏறுவதற்குமாகத் தனித் தனி இயந்திரங்களைக் கொண்டுள்ளது. குட்டிக் கப்பல்

Page 12
18
சத்திரனிருலிந்து புறப்படுகையில் கீழ்ப்பகுதியை அங் கேயே விட்டுவிட்டு மேல்பகுதியுடன் மாத்திரமே கிளம் பியது.
கிலாக் கூடத்துக்குள் ஏறியதும் அதன் கதவைச் சாத்தி, உட்புறத்தை ஆக்சிஜன் வாயுவினல் நிரப்பி னர். அதன் பின்பு தம்முதுகிலிருந்த “சின்னவெளிப் பெட்டி’ யைக் கழற்றி விட்டனர். இறங்கும்போது அணிந்திருந்த காலணிகளையும் அங்கு படம் பிடித்த விலையுயர்ந்த கமிராவையும் வெளியே எறிந்தனர். கிலாத்தரையிலிருந்து மண்ணையும் கல்லையும் தோண்டி அள்ளும் கரண்டிகள் போன்ற சில கருவிகளையும் அவர்கள் ஏற்கனவே கிலாத்தரையில் விட்டுவிட்டனர்.
21-ந் திகதி இரவு 11.25 மணிக்கு நிலாவாக னம் தரையைவிட்டுக் கிளம்பி 22 மணித்தியாலங் களின் பின் குட்டிக்கப்பல் சந்திரனிலிருந்து 70 மைல் தூரத்தில் பறந்துவந்த தாய்க்கப்பலுடன் இணைந்தது. 22-7-69 மாலை 3.02 மணிக்கு நிலாவாகனத்துடன் இணைந்தது. பூமிக்குத் திரும்பும் பிரிவு கமாண் ட் மொடியூல் எனப்படும். இப்பிரிவு வளிமண்டலத்தின் ஊடாகப் பிரவேசித்தபோது வெப்பமேற்றத்துக்குள் ளாகாதவாறு அதை விஷேட படலம் காப்பாற்றும், இது 3500 பாகைவரை உறிஞ்சும் இயல்புடையது இதனல் கப்பலுக்கு அல்லது அதில் பிரயாணம் செய் பவர்களுக்குத் தீங்கு எதுவும் நேராது.
பூமியை நோக்கி கலம் மணிக்கு 22,000 மைல் வேகத்தில் வந்தது. இந்த வேகத்தில் கலம் காற்று மண்டலத்துள் நுழையும் பொழுது ஏற்படும் உராய்வு

19
காரணமாகக் கலத்தின் வெப்பநிலை மிகவும் உயர்ந்து விடும். கலம் காற்று மண்டலத்தில் செங் குத் தாக இறங்கினுல் அதிக உராய்வு காரணமாக வெப்ப நிலை உயர்ந்து கலம் தீப்பற்றிவிடக்கூடும். அதிகச் சாய்வில் இறங்கினல் கலத்தின் கடும் வேகம் காரணமாகப் பூமியின் ஈர்ப்பை விடுத்து வெட்ட வெளியில் எங் காவது ஓடிவிடக் கூடும். அதனல் செங்குத்தாகவும் இறங்காமல், அதிகச் சாய்வாகவும் இறங்காமல் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் கலம் காற்று மண்டலத்தில் இறங்கியது. அப்பொழுது கலத்தின் வெளிப்புற வெப்ப நிலை 5000 பாகை பரன்ஹைட்டாக இருக்கும் ஆனல் கலத்தின் உட்புற மிதமான வெப்பநிலை 80 பாகை பாரன்ஹைட் மட்டும் இருக்கும்.
பூமியிலிருந்து 24,000 அடி உயரத்தில் கலம் வரும் பொழுது ஒரு மிதவைக் குடை (Parachute) விரிந்து கலத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தியது. கலம் சுமார் 10,000 அடி உரயத்தை வந்தடைந்த பொழுது மூன்று பெரிய மிதவைக் குடைகள் விரிந்து கலம் பூப்போலப் பசிபிக் கடலில் இறங்கத் துணை செய்தது. விண்ணில் கிளம்பியபொழுது 4000 தொன் நிறையுள்ள கலம் பூமிக்குத் திரும்பியபொழுது 5 தொன் நிறையுள்ளதாகத் திரும்பி வந்தது. 24-7-69 இரவு 10.19 மணிக்கு பசுபிக்கடலில் வந்து இறங் கினர்.
பசுபிக் பெருங்கடலில் வந்து இறங்கியதும் மீட் புக் குழுவினரில் ஒருவர் உடனே விண்வெளி விமா னிகளுக்கு "உயிரியல் தனிமை உடைகள்’ எனப்படும் ஒரு தனிவகை உடைகளைக் கொடுத்தார். அதை

Page 13
20
அணிந்ததும் விண்வெளி விமானிகள் மீட்புக் கப் பலான “ஹோனட்’ மேல் தளத்தில் இருந்த ஒரு பெரிய மோட்டார் வண்டியில் ஏறினர். அந்த வண் டியும் அவர்களைப் பூமியின் சூழ்நிலையிலிருந்து தனியே பிரித்துக் 'குவாரண்டையின்’ செய்யத் தயார் செய் யப்பட்டதொன்ருகும்.
இந்த வண்டி, டெக்லாஸ் மாகிலத்தில் ஹ"ஸ் டன் நகரிலுள்ள விண்வெளிப் பயணத் தலைமை ேேலயத்து நிலாவரவு ஆய்வுகூடத்திற்கு விமானத்தில் கொண்டு போகப்பட்டது. அங்கு தான் இவர்கள் 21 நாட்கள் தனிமையில் வைக்கப்பட்டனர்.
பசுபிக்கில் வந்த வீரரை அமெரிக்க ஜனதிபதி நிக்சன் வரவேற்கச் சென்ருரெனினும் அவர், அவர் களை நேரில் கைகுலுக்கி வர வேற்க முடியவில்லை. தமது மழலைமொழிக் குழந்தைகளுடனும், ஆசை மனே வியர்களுடனும் கொஞ்சிக் குலாவும் வாய்ப்பிருக்க வில்லை. அவர்கள் நோய்தடுப்பு முகாமில் வைக்கப் பட்டுப் பரிசோதிக்கும் வரை அவர்களை எவரும் கிட்ட கெருங்கமுடியாது.
கிலா வீரரை வரவேற்ற பெருமைக்குரியவர்கள் இருவர், ஓர் எஞ்சினியர். ஒரு டாக்டர். ஜனதிபதி கிக்சன் கண்ணுடிப் பெட்டிக்குளிருந்த அவர்களைக் கையசைத்துப் புன் முறுவல் செய்து வரவேற்றர். பூமி யிலிருந்து புறப்பட்டு மீண்டும் பூமிக்கு வெற்றி வீரராக வந்துசேர எடுத்தநேரம் 135 மணி 17 கிமிடங் களாகும், ---
- 0:0:-

அப்பலோ 12
1969 கார்த்திகை 14-ந் திகதி மீண்டும் இரண்டாவது தடவையாக இ ன்  ைற ய மனிதன் உள்ளம் திங்களை நோக்கித் திரும்பியது,
அப்பலோ 12 புறப்படுவதைப் பார்க்க மக்கள் கெனடிமுனையில் குழுமியிருந்தனர். அன்று இரவு 9-52 மணிக்கு அப்பலோ 12 நிலா உலாவை ஆரம்பித்தது. இந்த ராக்கெட் 365 அடி உயரமானது. 56 அடுக் குமாளிகையின் உயரமிருக்கும். இதன் முழு நிறை 2,900,000 கிலோகிராம் அப்பலோ 12 நிலா வாகனத் தின் பெயர் இன் ரபிட். தாய்க்கப்பலின் பெயர் யங்கிள் கிளிப்பர். இடிமுழக்கத்துடன் மழை கொட்டியது. மின்னலையும், மழையையும் பொருட் படுத்தாமல் பிரயாணம் திட்டமிட்டபடி ஆரம்பிக்கப் பட்டது. சாள்ஸ் கொன்ராட் (Charles Contrad) Jegy6) Gör 36ör (Alan Bean) fiáját m . GóðIT Gö7 (Rich ard Cordon) மூவரும் மதியைநோக்கிப் புறப்பட்ட போது உலகம் மீண்டும் இரண்டாவது தடவையாக அவர்கள் சாதனையைக் காணத் துடித்தது. 37 கோடி

Page 14
22
யே 50 இலட்சம் டாலர் செலவில் சென்ற அப்பலோ 12 சந்திரனுக்கு மனிதனின் 37-வது பிரயாணமா கும். மனிதன் விண்வெளியில் உலாத்தொடங்கி 8 ஆண்டுகளில் அமெரிக்கா 21 விண்வெளிப்பயணத் தையும் ரூ சி யா 15 விண்வெளிப் பயணத்தையும் மேற்கொண்டன.
அமெரிக்கா 23 விண்வெளி வீரரையும் ரூசியா 21 விண்வெளி வீரரையும் சந்திரமண்டலப் பயணத்தை ஆராய அனுப்பியிருந்தன.
அப்பலோ 12 புறப்படுவதற்குமுன் சில இடை யூறுகள் வற்பட்டன. அதனல் பிரயாணம் பின்போ டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஐதரசன் எரி பொருள் தாங்கியில் ஏற்பட்ட கசிவு, மழையும் காற் றும் இடியும் மின்னலும் ஏற்பட்டுப் பாதகமான கால ஜூல-புறப்படுவதற்குச் சிலகிமிடங்களின் முன் ஏற் பட்ட மின்சாரக்கோளாறு - இயந்திரங்களில் ஏற் பட்ட அதிர்வு போன்றவற்ருல் பிரயாணத்திற்குத் தடை ஏற்படக்கூடும் என எண்ணியபோதிலும் பிர யாணம் திட்டமிட்டபடி ஆரம்பிக்கப்பட்டது.
புறப்பட்ட ஐந்தாம் நாள் 18-க் திகதி அம்புலியை அப்பலோ வட்டமிடத் தொடங்கியது. முதலில் முட்டை வடிவப் பாதையிலும் பின்னர் வட்டப் பாதையிலும் சென்றது.
19-ந் திகதி மக்கள் பரபரப்படைந்தனர். அவர் கள் அன்று சந்திர வீரர்கள் தரையில் இறங்கும் காட்சியை டெலிவிஷனில் காணவும், வானெலியில்

23
கேட்கவும் தயாராகினர். அம்புலியைப் பத்தாவது முறை வட்டமிடுகையில் நிலாவாகனம் தாய்க்கப்பலி லிருந்து பிரிந்து சந்திரத்தரையை நோக்கிச் சென்றது. 19-ந் திகதி காலை 9-42ற்கு தாய்க்கப்பலான யங்கி கிளிப்பரிலிருந்து நிலா வாக்னமான இன் ரபிட்டைப் பிரிப்பதற்கான ராக்கெட் சுடப்பட்டது.
பகல் 12-15 மணிக்கு நிலாவாகனம் அம்புலித் தரையை நோக்கி மெதுவாக இறங்கியது. சரியாக 12-25 ற்கு நிலாவாகனம் சந்திரத்தரையிலுள்ள புயற் கடலில் இறங்கியது. பல நூற்ருண்டுகளுக்கு முன் வானியல் விஞ்ஞானிகள் வைத்த பெயர்தான் அப் பலோ 12 இறங்கிய புயற்கடல். இவர்கள் பார்த்த தொலைநோக்கிகள் சந்திரத்தரையை சமவெளிகளாக வும், நீர்நிலைகள் போலவும் காட்டின. அதனல் சந் திரத்தரையைப் புயற்கடல் பகுதியென்றும், அமைதிக் கடல் பகுதியென்றும் பெயரிட்டனர். அப்பலோ 11 வீரர்கள் இறங்கிய இடத்துக்கு 830 மைல் தூரத்தில் அப்பலோ 12 இறங்கியது. மிலா வாகனம புயற்சட லில் இறங்கியபொழுது புழுதி நிறைந்திருந்தது. இப் புழுதியைத் தள்ளும்கருவி வீரர்களிடமிருந்தது. லோ வாகனம் தரையில் இறங்கியதும் தலைமை விமானி கொன் ராட் “மிகச்சிறந்த முறையில் இறங்கிவிட் டோம். திட்டமிட்ட இடத்தின் நடுவில் இறங்கியுள் ளோம். இதை கம்பவே முடியவில்லை. நம்பமுடியா தளவுக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கின்றது” என்று கூறினர்.

Page 15
24
1967-ம் ஆண்டு சித்திரை மாதம் சந்திரனுக்கு அனுப்பப்பட்ட சேர்வயர் 3 என்ற கோளிற்கு 750 மீற்றர் குறுக்கே நிலாவாகனம் இறங்கியதும் குறிப் பிடத் தக்கது. நிலாவின் தரையில் கலம் இறங்கி 4 மணி 34 கிமிடமானபின் தரையில் காலடி எடுத்து வைப்பதற்கு ஆயத்தமானர்கள். அப்போது கொன் ராட்டின் தலைக்கவசத்தில் இருந்த ஈரலிப்புத்தன் மையை உணர்ந்து கொண்டார். இந்த ஈரலிப்புத் தன் மை யை அகற்றுவதற்கும் நிலாவாகனத்தைச் சரிப்படுத்துவதற்குமாகத் திட்டமிட்டதிலிருந்து 39 நிமிடம் பின்போட வேண்டியேற்பட்டது.
3 அடி விட்டமுள்ள நிலாவாகனக் கதவைத் திறந்துகொண்டு கொன்ராட் வெளியே வந்தார். நிதா னமாக ஒன்பது படிகளேயும் கடந்து நிலாத்தரையில் காலடி எடுத்து வைத்தார், மாலை 5.15 மணிக்குத் தரையில் கால்வைத்து நிலாவில் உலாவிய மூன்ரு வது மனிதரானர். இருபத்தேழு கிமிடங்கள் கழித்து நான்காவது மனிதராக இறங்கினர் அலன் பீன், சுமார் 34 மணித்தியாலங்கள் தரையில் நடமாடினர் இருவரும்.
தரையில் இறங்கியதும் கிலாப்புழுதியில் கால் அதிகம் புதையவில்லை என்று அறிவித்தார் கொன் ராட். அம்புலித்தரையில் இறங்கிய இருவரும் தாய்க் கப்பல் சந்திரனை வலம் வந்து கொண்டிருந்ததைக் கண்டனர். அதைச் செலுத்திக் கொண்டிருந்த விமானி ரிச்சாட் கோடனுடன் கதைத்தனர். நீல் ஆம்ஸ் ரோங் முதன் முதல் காலடி எடுத்து வைத்தபோது தாய்க்கப்பலைப் பார்க்கமுடியாமல் இருந்தது. கொன்

25.
ராட் தரையில் காலடி எடுத்து வைத்தபோது சந்திர மண்ணின் முதல்மனிதனன ஆம்ஸ்ருேங் ஹ"ஸ்ட னிலுள்ள விமான ஆராய்ச்சிக் களத்தில் இருந்தார் பிரயாணத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டால் அவரிடம் ஆலோசனை கலப்பதற்காக அவர் அங்கு அமர்த்தப் பட்டிருந்தார்.
அம்புலியில் இறங்கியதும் செய்த முதல் வேலை 8 அடி உயரமான கம்பத்தில் அமெரிக்கக் கொடியை ஏற்றியதாகும். கல் மண் என்பவற்றையும் சேகரித் தனர். சுமார் 3 மணி நேரம் நடமாடி விட்டு கிலாக் கலத்திற்குத் திரும்பினர்.
20-க் திகதி காலை 9.17 க்கு இரண்டாவது தடவையாக இறங்கி பி. ப. 1 மணிவரை உலாவித் திரிந்தனர். இரண்டாவது இறங்கியது திட்டமிட்ட தற்கு 13 மணி முன்னதாக நிகழ்ந்தது. 100 கிலோ கிராம் நிறையுள்ள அம்புலிக் கற்கள், உதிர்ந்த மணல் தூசி ஆகியவை 5 பைகளில் சேகரிக்கப்பட்டன. அன்று சுமார் 2 கோடியே 20 இலட்சம் அமெரிக்க டாலர் பெறுமதியான ஆராய்ச்சி நிலையத்தை அங்கு அமைத்தனர். இந்த அப்பலே9 2 பயணத்தில் இந்த ஆராய்ச்சி நிலையத்தை அமைப்பதே முதல் கோக்க மாயிருந்தது. அல்செப் (AlSep) என்ற இந்த ஆய்வு 260 இருத்தல் கிறையுள்ளது. சக்திரத்தரை பில் இதன் நிறை சுமார் 45 இருத்தல் வரை இருக் கும். பூமியிலிருக்கும் போது உள்ள நிறையிலும் பார்க்க சந்திரனில் அப்பொருளின் கிறைச் பங்கு குறைவா கவே இருக்கும். இவ் ஆய்வுகூடம் 5 புதிய கருவிகளே

Page 16
26
உள்ளடக்கியுள்ளது. இவ் ஐந்து கருவிகளும் ஒரு வருட காலத்திற்குப் பூமிக்குப் பல பயனுள்ள தக வல்களைக் கொடுக்கும்.
நிலாவில் வைக்கப்பட்ட இக்கருவிகளின் விபரங்கள்.
1.
அம்புலித்தரையின் அதிர்வுகளைப் பதிவு செய்யும் கருவி. அண்டக் கற்கள் அம்புலித்தரையில் வந்து விழும் மோதலினுலும், நிலாத் தரையின் எரிமலே குமுறலினலும் உண்டாகும் அதிர்ச்சியினை ஒரு d5(56.8 L Boy Gd thuylb. (Passive Seismic)
அம்புலியின் காந்த மண்டலத்தை அளவிடும் காந்தமானி (Snap 27)
அம்புலிமீது வந்து வீசும் சூரியக் காற்றின் அணுத் துகள்களே ஆராயும் கருவி. (Spectro meter)
நிலாத்தரையின் பாறைகளிலிருந்தும் உள்ளிருக் தும்குரியக் காற்றின் அணுத்துகள்களிலிருந்தும் வெளிக்கிளம்பக்கூடிய நுண்ணிய அளவான
வாயுக்களை அளவிடும் கருவி, (Lunar Surface Magneto meter)
அம்புலித்தரையைச் சுற்றி மிதக்கக் கூடிய மின்
ஏற்றமுள்ள துகள்களை அளக்கும் அயனிக் கருவி (Ion Detector)
1967-ம் ஆண்டு சித்திரை மாதம் தரை இறங்கிய
சேவயர்-3 கோளை இருவரும் சென்றடைந்தனர். மனிதனல் அனுப்பப்பட்ட ஒரு பொருளை அம்புலித்

27
தரையில் மனிதன் கண்டது இதுதான் முதற்தடவை. அங்கிருந்த குன்று ஒன்றுக்குள் இருவரும் இறங்கினர். அதற்குள் சீமெந்து போன்ற தூசி இருப்பதாக அவர்கள் அறிவித்தனர். அதன்பின் சேவயர்-3 ன் பாகங்களை வெட்டி எடுத்தனர். இக்கருவி பூமிக்கு சுமார் 6815 டெலிவிஷன் படங்களை அனுப்பிவைத் தது. சேவயர்-3 விழுக்கிருந்த இடத்திலிருந்து 600 அடி தூரத்தில் இன்ரபிட் கிலாவாகனம் இறங்கியது.
இருதடவைகளும் 7 மணித்தியாலங்கள் கட் மாடிய இரு வரும் அப்பலோ 13, 14 இறங்கும் இடங்களையும் தெரிவுசெய்து படம் பிடித்தனர். திராட்சைப்பழத்தைப் போன்று பெரிய கண்ணுடிப் போளை ஒன்று காணப்பட்டதாகத் தெரிவித்தனர். அருகில் ஒருபாறை இருப்பதாகவும். அதன் நிழல் அழகாக இருப்பதாகவும், சூரிய ஒளியில் நிற்கும் போது பூமியில் நிற்பதைப் போன்றே இருப்பதாகவும் தெரிவித்தனர். ஒருகல் இருக்கின்றதென்றும் அது கருங்கல்லைப் போலத் தோற்றமளிப்பதாகவும் பளிங்கு போன்றிருப்பதாகவும் கூறினர். நிலத்தை மெதுவாக விரலால் தட்டினல் சிறு சிறு துணிக்கைகள் எங்கும் சிதறுவதாகவும் அவை கிட்டத்தட்ட இரண்டு மூன்றடி தூரத்திற்குப் பரவுவதாகவும் தகவலனுப்பினர்.
* தரையில் விழுந்தோம். குனிந்தோம். எழும்பும் போது ஒருவருக்கொருவர் உதவினுேம், துள்ளிவிளை யாடினுேம், ஒடினேம். ஓடும்போது ஒட்டைச்சிவிங்கி ஓடுவது போல் இருக்கின்றது’ என் றெல்லாம் சொல்லி மகிழ்ந்தனர்.

Page 17
28
20-ந் திகதி இரவு 7.40 மணிக்கு நிலாத்தரை யைவிட்டுப் பூமிக்குக் கிளம்பினர். நிலாவாகனம், மேலேகிளம்பும் ராக்கட்டைத் தீர்த்து பறந்து வந்து யங்கி கிளிப்பருடன் இரவு 11.32 மணிக்கு இணைந்து மூவருமாகச் சந்திரனை வலம் வந்தனர்.
நிலாவாகனமாகிய இன்ரபிட்டை இருவரும் நட மாடிய இடத்திலிருந்து 45 மைல்களுக்கப்பால் வீசி எறிந்தனர். அன்று அதிகாலை 3.20 மணிக்கு நிலா வாகனம் சந்திரனில் வீசப்பட்டது. அம்புலித்தரையில் விழுந்த நிலாவாகனம் ஒரு குழியை உண்டாக்கியது. இக்குழி 6 மீட்டர் நீளம் 4 மீட்டர் அகலம் 6 மீட்டர் ஆழமுள்ளதாயிருந்தது. இக் கலத்தை வீசினல் செயற்கைச் சந்தர நடுக்கத்தை ஏற்படுத்தலாமென விஞ்ஞானிகள் முடிவுசெய்தனர். கலம் தரையில் விழுந்தபோது கோவில் மணி அடித்து ஓயும்போது கேட்கும் நாதம் போல் ஒருவித நாதம் 40 நிமிடங் களுக்குக் கேட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதுபோன்ற நாதம் பூமியில் நில அதிர்வு ஏற்படும் போது கேட்பதில்லை என்றும் இதல்ை சந்திரனைப் பற்றிய புதிய உண்மைகள் தெரியவரும் என்றும் அறிவித்தனர்.
மூன்று வீரர்களையும் தாங்கி வந்த 12,250 இருத்தல் நிறையுள்ள விண்கலம் மணிக்கு 29000 மைல் வேகத்தில் பூமியை நோக்கி வந்து 25.ந் திகதி அதிகாலை 2.28 மணிக்கு தென்பசுபிக்கில் இறங்கியது
ஹெர்னெட் மீட்புக்கப்பலை வீரர்கள் சென்ற டைந்தனர். இக்கப்பலில் இருக்கும்போது ஜனதிபதி கிக்சன் மூவருக்கும் காப்டன கப் பதவி உயர்வு வழங்கி வாழ்த்தினுர்,

29
இப்பயணத்தின்போது டெலிவிஷன் கமிரர் இயங்க மறுத்ததே இப்பயணத்தில் ஏற்பட்ட குறையாகும். ஒரு சிறிய ஸ்குறுாறைவர் இருந்திருந்தால் இதனை இயங்கச் செய்திருக்க முடியுமென்று கூறினர் கொன் ராட். வீரர்கள் பூமிக்குத் திரும்பும்போது வானில் இருந்தவாறே பத்திரிகை கிருபர்களுக்குப் பேட்டிய ளித்துப் பேசினர்.
அப்பலோ 12 அப்பலோ 11 ஐ விட இரு நாட்கள் கூட எடுத்தது. அப்பலோ 11 தரையைச் சுற்ற 30 தடவை வட்டமிட்டது. இதற்கு 59 மணி 43 நிமிடம் சென்றது. அப்பலோ 12, 45 தடவை வட்டமிட்டது. இதற்கு 88 மணி 56 கிமிடம் எடுத்தது.
உலகில் வறுமையும் பிணியும் பிறகஷ்டங்களும் கிறைந்துள்ளன. சில தேசங்களில் பட்டினி கிடந்தும் சாகின் ருர்கள். இவர்கள் துன்பத்தைத் துடைக்க முன் வராது கோடானு கோடி ரூபாய்களை எங்கோ கிடக்கும் மனிதர் வாழமுடியாத நிலாவை நாடி ஒடு வதற்குப் பயன்படுத்துவதேன். என்று அதிகமான வர்கள் கேள்விக்குரல் எழுப்புகிருர்கள். ஆகாய விமா னத்தைக் கண்டு பிடித்த ரைட் சகோதரர்கள் சில நிமிடங்கள் மட்டும் காற்றில் பறந்தபோதும் இப்படித் தான் மக்கள் கேட்டிருப்பார்கள். ஆனல் இன்று மனிதன் பலவகை விமானங்களிலும் விண்வெளிக் கலங்களிலும் வானத்தை ஆட்கொண்டு வருவது அவர்கள் அன்று செய்த முயற்சியின் பயனன் ருே? பொறுத்திருந்து பார்ப்போம்; எதற்கு வீண் சந்தேகம்,
OOO

Page 18
வருங்கால விண்வெளிப் பயணம்
பூமியின் உப கோள்கள் பலவற்றிற்கும் மனிதனை அனுப்பும் கிட்டம் இன்னும் பத்தாண்டுகளில் உண் மையாகிவிடும். அப்பலோ 13,14, 15 அம்புலிப் பய ணம் 1970-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடக்கும். இவர்கள் மொத்தம் 32 மணி நேரம் அம்புலியில் தங்குவர். ஆனல் அப்பலோ 12ன் வேலையையே அனேவரும் செய்வர்.
1970 மார்ச் மாதம் 12-ந் திகதி அப்பலோ 13 புறப்படும் போது அதில் ஜேம்ஸ் லோவல், தொமஸ் மாரிங்கிலி, பிரட் கெயில்ஸ் என்போர் செல்ல இருக் கின்றனர். சந்திரனில் மிகவும் முக்கியமான விஞ் ஞானத் தகவல்களைத் தரக்கூடிய மழைக்கடற் பகுதி யில் அப்ப லோ 13 இறங்க இருக்கின்றது. அப் பலோ 12 இறங்கிய புயற்கடல் பகுதியிலிருந்து இந்த மழைக்கடற் பகுதி 120 மைல் தொலைவில் இருக் கின்றது. விண்வெளி வீரர்கள் மூவரும் 9 மணி நேரம் நிலாவில் உலாவுவார்கள்.
அப்பலோ 16, 17, 18, 19, 20 புறப்பட்டு திரும் பிப் பூமிக்கு வருவதற்கு 16 நாட்கள் எடுக் கும். 1971-ம் ஆண்டு இரு மரினர் கிரகங்களைச் செவ் வாய்க்கிரகம் நோக்கி அனுப்ப அமெரிக்கா திட்ட மிட்டுள்ளது. செவ்வாயை 10 நாட்கள் மரினர் வலம் வந்து பின் செவ்வாய்த் தரையில் ஆய்வுகருவிகளை இறக்கி ஆராய்ச்சி நடத்தும் வைக்கிம்’ திட்டம் ஆரம் பமாகும்.

31.
1986 ல் செவ்வாயில் மனிதனை இறக்க அமெ ரிக்கா இப்போதே முயற்சித்து வருகின்றது. இதற் காக முற்றிலும் அணுசக்தியால் இயங்கும் விண் வெளிக் கப்பலை அமெரிக்கா உருவாக்கி வருகின்றது.
அப்பலோ 19 ல் கொண்டு செல்லப்படும் ருேவர் (Rover) என்ற கார் சந்திரத்தரையில் ஒட்டு வதற்கு எடுத்துச் செல்லப்படும். மின் விசையால் இயக்கப்படும் நான்கு ருேவர் கார்களை ச் செய்வதற்கு அலபாமாவிலுள்ள கம்பனி ஒன்றிடம் ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது. இது 400 இருத்தல் பாரமு டையது. பாரமான சாமான்களையும், விண்வெளி உடைகளையும் கொண்டு தரையில் ந ப மா டுவது விண்வெளிப் பயணிகளுக்குக் களைப்பைத்தரும். இப் படியான கார் அவர்களுக்கு அதிகம் உதவக்கூடும். இருபதாம் நூற்றண்டின் ஆரம்பத்தில் இருத்த வண் டிபோன்ற தோற்றத்தை இது உடையதாயிருக்கும் இது நிலாத்தரையில் மூன்று மைல் துரம் வரை செல் லும். இதன் வேகம் மணிக்கு 5 முதல் 10 மைல் வரை இருக்கும். ரப்பர் ரயச் பொருத்தப்பட்ட நான்கு சக்கரங்கள் உடையது. இக்கசர் மூலம் 120 மைல்கள் சந்திரத்தரையில் பிரயாணம் செய்து பல விஞ்ஞானப் புதுமைகளைக் காண விண் வீரர்கள் தயாராகி வருகின் ரூர்கள்.

Page 19
* இலங்கையில் சந்திரக்கல் 24
2,500 கோடி வருடத்திற்கு முற்பட்டதும் சுமார் 250,000 மைல் தூரத்திலிருந்து அப்பலோ 11 வீரர்களால் கொண்டுவரப்பட்டதுமான சக் திரக்கல் கொழும்பு தேசிய நூதனசாலை யில் 1969 டிசம்பர் 17 18ந் திகதி களிலும் கண்டியில் 21, 22 தி க திகளிலும் பொது
மக்கள் பார்வைக்கு
வைக்கப்பட்டது.
大 大 大
அம்புலி வீரர் ஆம்ஸ்ருேங் லொஸ்ஏஞ்சரி லிருந்து பாங்கொக் சென்றுகொண்டி ருந்தபோது 20 - 12 - 69 கட்டு நாயக்க விமான நிலையத்தில் சிறிது நேரம் உலாவி தேனீர் அருந்திச் சென்ருர்.


Page 20
7-ம் வகுப் ify
வெளிவந்துவிட்
ஜிபரங்களுக்கு: தமய
 

பு முதலாம் பருவ கவியல்
ஞ - விடை
டது வில் சதம் 85
பந்திப் பதிப்பகம்,
அச்சுவேலி,