கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இரட்சணிய யாத்திரிகம்

Page 1


Page 2
1978-سن-، ۰ یا b هر
பதிப்புரிமை பதிப்பகத்தாருக்கு
விலை: ரூ. 4-25
அச்சுப்பதிப்பு: திருமகள் அழுத்தகம் சுன்னுகம்
பொருள டக்கம்
நூலாசிரியர் வரலாறு
நூல் வரலாறு
கடைத்திறப்புப்
படல வரலாறு
கடைதிறப்புப் படலக்
கதைத் தொகுப்பு
கடைதிறப்புப் L. GR)
மூலமும் உரையும்
சிறப்புக் குறிப்புக்கள்
பயிற்சி விளுக்கள்
பக்கம் iii
V
Viii
xi
35
40

நூலாசிரியர் வரலாறு
இரட்சணிய யாத்திரிக நூலின் ஆசிரியர் சென்றி அல்பிரெட் கிருட்ணபிள்ளை ஆவர். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் இரட்டியாபுரம் என்னும் ஊரில் 1827ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது தந்தையார் சங்கரநாராயணபிள்ளை தாயார் தெய்வ நாயகி அம்மாள். இவர்கள் வைணவ சமயத்தினர். இவரது தந்தை யார் ஒரு புலவர். அவரே இவருக்கு ஆரம்பத்தில் தமிழ் கற் பித்தார். முதலில் மாவிக்கவாசதத் தேவரிடத்தும் பின்பு திருப் பாற்கடனுதக் கவிராயரிடமும் இலக்கணம் பயின்ருரி, வடமொழி யும் கற்ருர் இவரது இளமைப் பெயர் கிருட்ணன்.
இவரது காலத்தில் கிறித்தவ சமயப் பிரசாரம் தீவிரமாக இருந்தது. இவர் அதற்கு எதிர்ப்பான முடிற்சிகளிற் பங்குகொண் டார்; 1842 இல் இவருக்குத் திருமணம் நிகழ்ந்தது. 1852இல் சாயாபுரம் கிறித்தவக் கல்லூரித் தமிழ்ப்பண்டிதர் ஆயினர். மிசன் தலைவர் காட்டிய அன்பு இவரைக் கவர்ந்தது. ஆரம்பத்தில் கிறித்தவ போதனைகளில் இவருக்கு இருந்த வெறுப்பு நாளடைவில் நீங்கியது வேதாகமம் ஒன்றைப் பெற்று வாசித்துவந்தார் கிறித் தவ அறிஞர் தொடர்பு வளர்ந்தது, வைணவ மதப் பற்றுக் குறைந்தது.
உயர் இந்துக்கள் கிறித்தவர் ஆயினர். இவரது சகோதரரும் கிறித்தவர் ஆயினர் மோட்சயிரயாணம், ஆத்மவிசாரம் முதலிய நூல்களைப் படித்தார். இந்நூல்களின் ஆத்மீகக் கருத்துகள் இவரைப் பெரிதும் கவர்ந்தன. இவரின் உள்ளத்தில் இருந்த ஐயங்கள் நீங்கின. ஆயினும் இவரின் மனம் ஒருதிலைப்படவில்லை, பதவியில் விலகிச் சென்னையில் வாழ்ந்தார்: அங்கு பார் சிவல் துரையின் தொடர்பு கிடைத்தது. அவர் " தினவர்த்தமானி’ இதழுக்கு இவரின் உதவி பெற்றர். பிரசிடென்சிக் கல்லூரிக்கு உதவித் தமிழ்ப் பண்டிதராக நியமனம் பெற்ருர் 1858இல் கிறித்த சமயத்தில் சேர்ந்து கென்றி அல்பிறெட் என்னும் பெயர் பெற்ருர், இதன்பின் திருநெல்*ே:லிக் கிறித்தவக் கல்லூரித் தமிழ் ஆசிரியர் ஆனர், ஒய்வு நேரங்களில் ஆத்மீகத் திருப்பணிகள் செய்தார், கவிபாடும் ஆற்றலைக் கொண்டு கிறித்தவ சமயக் கீர்த் தனைகளை ஆக்கி உதவிஞர், தாம் முன் கற்ற 'பரதேசியின் மோட்ச பிரயாணம்" என்னும் நூலைத் தமிழில் மொழி செயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதனைப் பலர் ஊக்குவித்தனர். இதுவே "இரட்சணிய யாத்திரிகம்" என்னும் நூலாயிற்று. இதற்கு 14 ஆண்டுகள் ஆயின.

Page 3
1Vy
இரட்சணிய சமய நிர்ணயம், இரட்சணிய சரித்திரம், இரட் சணிய மனுேசரம், இரட்சணிய குறள், இலக்கண சூடாமணி, சாவிய தரும சங்கிரமம் ஆகிய நூல்களையும் இயற்றினர். இரட்சணிய மனுேசரம் என்பது பக்திப்பாக்கள், Luntrifuuri பிரார்த்தனை, அநுபூதி, சந்நிதி முறை முதலியவை அடங்கிய நூல். இரட்சணிய சமய நிர்ணயம் கிறித்தவ சமயச் சிறப்புக்களை விளக்குவது, காவிய தரும சங்கிரகம் ஏழு நூற்பாடங்களின் தொகுப்பு நூல். இவர் இரக்கம். பக்தி, வேதாகம அறிவு, விருந் தோம்பல், பரோபகாரம், வாய்மை ஆகிய இயல்புகள் உள்ளவர் இவரது புலமையினல் மகாவித்துவான் என்னும் பெரும் பெயர் பெற்ருர். தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மும்மொழியிலும் வல்லுநர், 1900ஆம் ஆண்டு இவ்வுலகை நீத்தார். சகல சிறப்பு களுடன் இவரது உடல் அடக்சம் செய்யப்பெற்றது. இவர் கிறித்தவ சமயத்திற்கும் தமிழிலக்கியத்திற்கும் பிற்காலத்தில் பெரும் பணி ஆற்றினர். இவரது அரிய பணிகள் காரணமாக இவரது பெயர் என்றும் நிலைத்து நிற்பதாகும்
உத்தியோக முயற்சியில்லாத ஓய்வு நேரங்களிலும் இரவு நேரங் களிலும் இந் நூலைப் பாடும் முயற்சியில் ஈடுபட்டார். இவரைக் கிறித்தவக் கம்பர் என்பர்

நூல் வரலாறு இரட்சணிய யாத்திரிகம்
தமிழிலே ஒவ்வொரு சமயத்தவர்க்கும் சிறந்த இலக்கிய நூல்கள் உள. கிறித்தவ சமயத்திற்காக உள்ள தமிழ் இலக்கியங்சளுள் இரட்சணிய யாத்திரிகம் சிறந்த நூல் கம்பராமாயணத்தைப் போலப் பெருங்காப்பிய அமைப்பு உள்ளது: இதற்கு முதனூல் ஆங்கிலமொழியில் உரைநடையில் ஜர்ன் பணியன்" என்னும் ஆங்கில அறிஞர் எழுதிய "பில் கிறிம் புருேகிறஸ்" (மோட்ச பிரயாணம்) என்னும் நூலாகும் சுவிசேச சத்திய வேதநூலும் இரட்சணிய யாத்திரிக நூலுக்கு ஆதார நூலாக உதவியது. இரட்சணிய யாத்திரிக நூல் வருவதற்கு முன் " பில்கிறிம் புருேகிறஸ் " என்னும் ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பாகத் தமிழில் வந்த "மோட்ச பிரயாணம்" என்னும் சிறு நூலே இரட்சணிய யாத்திரிகம் " வெளிவருவதற்குத் தூண்டுதல் அளித்தது. ஆகவே இரட்சணிய யாத்திரிகக் காவியத்திற்கு இங்கு குறிப்பிட்ட மூன்று நூல்களும் ஆதார நூல்கள் ஆகும்:
கிறித்தியன் என்னும் ஆத்மவிசாரியின் மோட்ச பிரயாணத்தை விளக்கிக் கூறுவது இந் நூல். ஒருவரைப்பற்றிய வரலாறுபோல அமைந்திருப்பினும் இஃது ஒர் உருவகக் கதையாகும். ஓர் ஆன்மா கிறித்தியணுக உருவகிக்கப் பெற்றுள்ளது. ஆன்ம ஈடேற் றத்தை விரும்பியோரது உள்ளத்தே அப்பேறு நிலைபெறும்படி கிறித்தவ சமயத்து நிகழும் பரிசுத்த யாத்திரையின் எல்லா நிகழ்ச்சி களையும் இந்நூல் விளக்குகின்றது. கடவுள் உலகத்தைப் படைத்து உயிர்களுக்கு எல்லா நன்மைகளையும் நாள்தோறும் கொடுத்து ஆண்டு வருகிருர் என்பதையும், கடவுளுக்கு ஆதிமுதல் விரோதி யான சாத்தான் என்பவன் மனிதர்களை மருட்டித் துர்ப்போதனை செய்து தேவ அரசுப் பிரமாணங்களை மீறச்செய்து உலக விடயங்களை ஊட்டித் தனது ஆட்சியை நிறுவினன் என்பதையும், சாத்தானின் ஆட்சியிலிருந்து மக்களை மீட்க இறைவன் கருதி மீறுதல்கள் மன்னிக்கப்படும் எனவும் நித்திய பேரின்பம் அருளப்படும் எனவும் அறிவித்துச் சுவிசேச மார்க்கத்தை நிறுவினர் என்பதையும், தமது குமாரரை உலகிற்கு அனுப்பிச் சுவிசேச மார்க்கத்தைப் புதுக்கி அவ்வழி வருவோர்க்குத் துணை நின்று நித்திய பேரின்பத்தை அடைவிக்கிருர் என்பதையும். சுவிசேச வழியிலே பரலே'க அரசை அடைந்தவர்களின் வரலாறுகளையும் ஏகதேச உருவமாக இந் நூல் புலப்படுத்துகிறது. மோட்ச யாத திரையின் விசேட தன்மைகளை உலக ஞானி ஒருவன் மேல் வைத்து இந் நூல் விளக்குகின்றது.

Page 4
νί
பேரருளாளரான கடவுளின் அருளால் தன்னையும் தனது பெரும் பாவத்தின் நிர்ப்பந்தத்தையும் அதஞல் வரும் பயங்கர முடிவையும் உணர்ந்து கலங்கி ஆன்ம இரட்சிப்பை விழைந்து சத்திய வேதத்தை வாசித்தும் குருவிடம் கேட்டும் இயேசு பெருமானே பாவத்தை அழிப்பவர் எனவும் அவரது இரட்சிப்பு நெறியே தனக்கு உதவும் எனவும் தெளிந்து அனைத்தையும் கைவிட்டு உறுதிகொண்டு குருவிடம் தீட்சை பெற்றுப் பரிசுத்த ஆவியின் அருளைப் பெற்றுத் தூய ஒழுக்கமும் வழிபாடும் உள்ளவஞய் சுவிசேச நின்றமை இடையிடையே தோன்றிய உறுதியின்மை-சோதனை - இடர்கள்ஆங்காங்கு கிடைத்த தேவதுணைகள், அதஞல் உண்டான நம்பிக்கைஅவன் ஆற்றிய கிரியைகள்-ஈற்றில் இயேசுபிரான் காட்சி தந்து தம்மை அடைவித்தமை-அவன் அடைந்த பேரானந்தம் ஆகியவை களை யாத்திரை முறையாக இந் நூல் விளக்குகின்றது.
இந் நூல் ஒரு பெருங் காப்பியம் ஆகும். ஆயின் பெருங் காப்பியத்திற்கு உரிய அங்கங்கள் யாவும் உள்ளதன்று. சுவிசேச மார்க்கத்திற்கு ஏற்காத சில அங்கங்களையும் அவசியமற்ற சில புனைந்துரைகளையும் இந் நூல் விலக்கியுள்ளது. தன்னிகரில்லாத் தலைவனை யுடைமை, நாற்பொருள் பயக்கும் நெறியுடைமை போன்ற அங்கங்களைக் கொண்டுள்ளது. " கூறிய உறுப்பிற். சில குறைந் திய லினும், வேறுபாடின்றென விளம்பினர் புலவர் " எனப் பெருங் காப்பியத்திற்கு விதி அமைந்துளது.
இந் நூல் சிறப்புப் பாயிரம், பதிகம் ஆகியவைகளையும், ஆதி பருவம்-குமாரபருவம்-நிதான பருவம்-ஆரணிய பருவம்-இரட். சணிய பருவம் எனனும் ஐந்து பருவங்களையும், வரலாற்றுப் படலம் முதலிய 47 படலங்களையும், 3776 செய்யுள்களையும் உடையது. இடையிடையே தோத்திரப் பதிகங்கள் உள்ளன; இத் தோத்திரப் பாடல்கள் 144 ஆகும், யமகம், திரிபு, சிலேடை முதலிய கவிகள் 21 AD or
இந் நூல் சிறந்த இலக்கிய நூல். காப்பியக் கதையை ஒட்டி இடந்தோறும் கிறித்தவ சமயக் கோட்பாடுகள் - பிரமாணங்கள் - உபதேசங்கள் - சுவிசேச நெறிப் பயன்கள் என்பன இடம் பெற்றுள்ளன.
நூல்வகை நான்கினுள் இந்நூல் மொழிபெயர்ப்பு நூல்வகை யினது.
அனைவர்க்கும் விளங்குதற்காகப் பெரும்பாலும் இயற்சொற்களை யும் எளிதாகப் பொருளுணரத்தக்க திரிசொற்களையும் வழக்கிலுள்ள வடசொற்களையும் இந்நூல் கொண்டது. மொழிபெயரிப்பு நூலென

曾魏
V11
உணராத முறையில் இயல்பான மூலநூல் போலச் சிறப்பான வகையில் அமைந்துளது.
இந்நூல் கம்பராமாயணத்தைப் போன்ற நடையும் அமைப்பும் உள்ளது; தமிழிலுள்ள சிறந்த பேரிலக்கியங்களொடு ஒன்ருக வைத்து மதிக்கும் சிறப்பு உடையது. காவிய இலக்கண வகையால் சிலப்பதிகாரத்தையும் உள்ளத்திற்குக் களிப்பு ஊட்டும் வகையாற் கம்பராமாயணத்தையும் பக்திச் சுவையாற் திருவாசவத்தையும் இறைவனுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள தொடர்பை விளக்கும் வகை யாற் திருக்கோவையாரையும் போன்றது;
படிப்போர் மனத்தைக் கவரவும் பரவசமாக்கவும், ^லக்கிய வளத்தை நுகரவும், ஆத்மீக அறிவு உணர்வு ஒழுக்கம் ஆகியவை களை விளைவிக்கவும் வல்ல அமைப்பை இந்நூல் உடையது
கிறித்தமதக் கருத்துக்களை இலக்கிய உணரிவொடு அறிவுறுத் துவதே இந்நூல் எழுந்தமைக்கான காரணம் ஆகும். "நாயேன் தன்னை ஒரு பொருளாகத் தடுத்தாண்ட கிறித்தியேசு சாமி செய்ய பொன்னனைய திருவடிக்குச் செந்தமிழ் மாளிகை ஒன்று புனைவான் எண்ணித் துன்னு நவரட்சணிய யாத்திரிக மலரெடுத்துத் தொடுக்க லுற்றேன்" என இந் நூற் சிறப்பாயிரத்துள் இந் நூலைப் பாடிய காரணத்தை ஆசிரியர் கூறியுள்ளார்
இந்நூலுக்கு நூல் ஆசிரியரே அரும்பத உரை எழுதியுள்ளார்; ஆங்கில நூலைத் தழுவி எழுதப்பெற்றதாயினும் ஆசிரியரின் கிறித்தவ வாழ்க்கை வரலாறே இந்நூல் எனவும் கூறுவர்.
இந்நூல் முதற் பதிப்பு 1894ஆம் ஆண்டு வெளியானது. நூற் சிறப்புப் பாயிரத்துள் கடவுள் வாழ்த்து, நூல் பாடிய காரணம், பயன் என்பன கூறப்பெற்றுள. இறைவன் திருக்குமாரர், பரிசுத் தாவி, திருச்சபைப் பெரியோர் ஆகியோரின் வாழ்த்துக்கள் கடவுள் வாழ்த்தில் உள்ளன. "பொற்புறழ் சீவரட்சணிய யாத்திரிகச் செம் பொருள், பாவரு செந்தமிழ்ப் பனுவ லாக்குவான், ஆவலிற் துணிந் தனன் அருட்டுணைக் கொண்டே" என நூலைப்பாடிய காரணத்தை ஆசிரியர் பாயிரத்துள் கூறினர், " இவ்வுலக காதை எண்டிசை புகழ நிற்கும் " எனத் தம் பேராவலையும் " வேதபோதங் கொண்ட பேராற்றலால்ே இப் பனுவல்" எனப் பாதிற்குத் துணையாயமைந்த பொருளையும், ‘வெற்றுநேரப் போக்காய்ப் புகல் வினுேதமுமன்று . சிற்றின் பத் திறம் திருத்திய காதையுமன்று, மற்றி தாத்தும ரட்சணை வழங்குமோர் மருந்தாம் " என நூல் நுதலிய பொருளையும், தீவினைச் சலதிவீழ்ந் தழியும் சீவரை, வீவிலாக கதிக்கரை வீடு சேர்க்குமோர், தாவரு புண்ணியத் தனி மரக்கலம், சீவரட் சணியயாத் திரிகம் தேர்மினே" என நூற்பயனும் கூறினர்,

Page 5
கடை திறப்புப் படல வரலாறு
கடை திறப்பு என்பதன் பொருள் :
கடை திறப்புப் படலம் என்பது வாயிற் கதவைத் திறத்தலைக் கூறும் பகுதி ஆகும். கடை - முடிவு ; எல்லை. இஃது ஆகுபெயராக அங்குள்ள வாயிற் கதவைக் குறிக்கிறது. திறப்பு-திறத்தல், இஃது ஈண்டு தொழிற்பெயர். படலம் - நூலின் உறுப்பு
பரணிநூற் கடைதிறப்பு :
சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்ருகிய பரணி நூலில் முதற்கண் உள்ள கடவுள் வாழ்த்துப் படலத்திற்கு அடுத்ததாக இக் கடை திறப்புப் படலம் அமைந்துள்ளது. கடவுள் வாழ்த்துப் படலம் நூல்கள் அனைத்திற்கும் முதற்கண் வருவது. அதனைவிட்டு நோக்கின் பரணி நூலின் முதற்படலம் கடைதிறப்புப் படலமேயாம். அன்றியும் பரணி நூலின் தோற்றுவாயாகவும் கடைதிறப்பு அமைகிறது.
பரணிநூற் கடைதிறப்பு என்பது அரசுக்காகப் போருக்குச் சென்று குறித்த காலத்தில் வராத நாயகரிடம் வெறுப்புற்று வாயிற் கதவைத் தாளிட்டு வீட்டுள் இருக்கும் மகளிரை, அவர்தம் நாயகரின் வரவைத் தெரிவித்து வாயிற் கதவைத் திறக்கும்படி புலவரொருவர் வேண்டுவதாக அமைந்தது. அம்மகளிரின் வெறுப்பை நீக்கி மகிழ் வூட்டற்காக அகவாழ்வியற் பண்புகளை அப்படலத்திற் பல பாடல் களால் உணர்த்திக் கதவைத் திறக்கும்படி கூறுகிருர், ஈற்றில் அவர்தம் நாயகர் பங்குகொண்ட போரின் வெற்றிச் சிறப்பை அம்மகளிர் கேட்டற்காகவேனும் கதவைத் திறக்கும்படி புலவர் வேண்டுகிருர், பொதுவாகப் பரணி நூலில் வரும் கடை திறப்புப் படலப் பாக்கள் மிக நயம் அமைந்தன. இப்பாடல்களின் நயம் பெரும் காப்பியப் பாடல்களின் நயங்களிலும் விஞ்சியுள்ளன எனலாம்,
பரணி நூல்கள் அரசர் முதலானேரால் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அவர்தம் போர் வெற்றி அரசியற் சிறப்பு கொடைப்பெருமை ஆகியவைகளைக் கூற வந்தன ஆதலிற் புறப் பொருட்கு உரியன. ஆயின் அந்நூல்களின் முதற்கண் வரும் கடை திறப்பு அகப்பொருட்கு உரியது. உயரிய உண்மைகளை நாட்டு மக்கள் உளத்தில் உளங்கொளச் செய்வதற்காக வகுக்கப்பெற்ற ஓர் உத்தி எனலாம்.

ix
பரணி நூல்களுள் ஒன்ருகிய தக்கயாகப் பரணியில் வரும்
கடைதிறப்பு, பரணிநூற் கடைதிறப்புப் படலத்திற்கு உரிய பொது அமைப்பை உடையதாயினும் ஏனைய பரணிநூற் கடை திறப்புகளி லும் சிறிது வேறுபாடு உள்ளது. ஏனைய பரணி நூல்கள் அரசர் முதலானுேரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டனவாதலின் அவைகளில் வரும் கடைதிறப்புப் படலம் உலக வாழ்வியற் சிறப்பை இலக்காகக் கொண்டது. தக்கயாகப் பரணி வீரபத்திரக் கடவுளைப் பாட்டுடைத் தலைவனுகக் கொண்டு அவரது பெருமையைக் கூறுவ தாதலின் அந்நூற் கடைதிறப்புப் படலம் தெய்வ வாழ்வியற் சிறப்பை இலக்காகக் கொண்டது. அக்கடவுட் பெருமைகளைக் கேட்டற்காக வாயிலைத் திறக்கும்படி தெய்வ மகளிரைப் புலவர் வேண்டுவதாக அப்படல ஈற்றுப் பாடல்கள் அமைந்துள.
'மீனம்புகு கொடிமீனவர் விழியம்புக ஒடிக்
கானம்புக வேளம்புகு மடவீர் கடைதிறமின்’
(கலிங்கத்துப்பரணி- கடைதிறப்பு)
'விண்ணிற் பகனர் தாம்துரக்கு மெல்லா விருளும் மீண்டுந்தம் கண்ணிற புகுந்த வகைபாட நன்பொற் கபாடம் திறமினுே”
(தக்கயாகப்பரணி-கடைதிறப்பு)
இரட்சணிய யாத்திரிகக் கடைதிறப்பு :
இரட்சணிய யாத்திரிக நூலில் கடை திறப்புப் படலம் பதின் மூன்றுவது படலமாகவுள்ளது. கடைதிறப்பு என்னும் படலப் பெயரும் இப்படலத்தில் 9-18 உள்ள பாடல்களும் பரணிநூற் கடைதிறப்பும் படலத்தை நினைவூட்டுவன. இப் பத்துப் பாடல் களும் பரணிக் கடைதிறப்புப் பாடல்களைப் போலக் கலித்தாழிசைகள் ஆகும். இப்பாடல் ஒவ்வொன்றும் பரணிக் கடைதிறப்புப் பாடல் களைப் போலக் "கடை திறமின்’ என ஈற்றில் முடிவுறுகின்றன. இக் கடைதிறப்புப் பாடல்கள் உலக அல்லலிலிருந்து விலகி மோட்ச யாத்திரையை மேற்கொண்ட ஆத்துமவிசாரி என்பான் திட்டி 6. urru978au அடைந்து தனது இறை விசுவாசத்தையும் விருப்பத்தையும் தெரிவித்துக் கதவைத் திறந்து வழி விடும்படி அவ்வாயிற் காவலா ளனை வேண்டுவனவாக அமைந்துள்ளன.
இப்படலத்தில் முதல் எட்டுப் பாடல்களும் ஈற்றில் 19-56 பாடல் களும் கலிவிருத்தப் பாக்கள் ஆகும். முதல் எட்டுப் பாடல்களும் ஆத்துமவிசாரி சுவிசேடகன் அறிவுரைப்படி திட்டிவாயிலை அடைந்
இ - i

Page 6
Σ.Κ.
ததைக் கூறுகின்றன. வாயினுட் புகத் தகுந்தவர்களையும் அல்லாத வர்களையும் இப்பாடல்கள் தெரிவிக்கின்றன. 19-56 உள்ள பாடல்கள் ஆத்துமவிசாரியை வாயிற் காவலன் உள்ளே அழைத்துச் சென்றதை யும் அறிவுரை பகர்ந்ததையும் தெரிவிக்கின்றன.
பரணிநூற் கடைதிறப்புப் படலம் அறம்முதல் மூன்றும் நுதலி யது. இந்நூற் கடைதிறப்புப் படலம் வீடு நுதலியது. புறத்திணைக் குரியது. பாடல்கள் சொன்னயம் பொருணயம் ஆகியனவும், அச்சம் மருட்கை இளிவரல் உவகை பெருமிதம் ஆகிய கவைகளும் உடையது. திருக்குறள் போன்ற முன்னைய நூற் கருத்து கள் இப்படலத்தில் இடம்பெற்றுள. கிறித்துமதச் சார்பு நூலில் உள்ளதனுல் கிறித்துமதக் கோ ட் பா டு களும் கருத்துகளும் இப்பட லத் தி ல் உள. அன்றியும் விவிலிய நூல் குறிப்பிடும் வரலாற்று நிகழ்ச்சிகள் சிலவும் இப் படலத்தில் இடம் பெற்றுள. சிறிய அமைப்புடையதாயினும் இப் படலம் நல்ல பயன்பாடு உள்ளது. நூலாசிரியர் வாழ்ந்த காலம் தமிழகத்தில் வடமொழி மிக்கு வழங்கிய காலமாதலினல் வடமொழிச் சொற்கள் இப் படலத்தில் விரவி வந்துள்ளன. இவை பெரும்பாலும் கிறித்தமதச் சார்பான சொற்களாகும். சமயக்கருத்துசஞம் இலக்கியக் கருத்துகளும் ஒன்றிணைந்து இப்படலத்தில் விளங்குகின்றன.

கடைதிறப்புப் படலக் கதைத் தொகுப்பு
சுவிசேசகன் அறிவுரைப்படி உலக வாழ்வியல் வ்ழியை விட்டுச் சுவிசேச வழியாற் சென்ற ஆத்தும விசாரி ஆகிய கிறித்தியன் திட்டி வாயிலை அடைகிருன். பரிசுத்த வாழ்வினர்க்கேயன்றிப் பாவங்கள் பல செய்த தனக்கு வாயில் திறக்குமோ என அவன் ஐயுறுகிருன். அங்கு எழுதப் பெற்றிருந்த "தட்டுங்கள் திறக்கப்படும் " என்னும் வாக்கியத்தைக் காண்கிருன். உலக வாழ்வில் தான் அடைந்த துன் பங்களையும் உய்நெறி நாடி வந்திருப்பதையும் ஆண்டவனின் விசு 'வாசி என்பதையும் கூறி வாயிற் கதவைத் திறக்கும்படி வாயிற் காவ
லனை வேண்டுகிருன்.
அவனது வேண்டுதலைச் செவிமடுத்த வாயிற் காவலன் அவனி டம் இரக்கமுற்று வாயிற் கதவைத் திறந்து அவனை உள்ளே விரைந்து அழைத்துச் செல்கிருன். அங்கு வருவார்க்குத் தேவ விரோதியாக உள்ள சாத்தான் பெருந்தீங்கு விளைவித்தலையும் அதனலேயே அவனை விரைந்து உள்ளே அழைத்ததையும் வாயிற்காவலன் கூறி அவனது வரலாற்றைக் கூறும்படி கேட்டான். தேவகுமாரராகிய கிறித்துவின் அழைப்பை ஏற்று அதனைத் தன் மனைவி மக்கட்குத் தெரிவித்ததை யும், அவர்கள் அதனை ஏற்காமையால் ஒருவழிப்படாது மனந் தளர்ந்ததையும், சுவிசேடகன் வந்து மனதைத் தெளிவித்து வழி காட்டியதையும், சுவிசேட வழியில் தன்னெடு வந்த மென்னெஞ்சன் என்பான் சேற்றில் லிழுந்து வீடு திரும்பியதையும், சகாயன் என் பான் சேற்றிலிருந்து வெளியேற்றி வழியைத் தெரிவித்ததையும், வழியிலே உலோக விவகாரி என்பான் வந்து நல்ல வழியென வேருெரு வழியைக் காட்டியதையும், காட்டினூடாக உள்ள அவ் வழியே சென்று உயரிய மலையை அடைந்ததையும் சுவிசேடகன் மீண் டும் வந்து தன்னைத் தடுத்து அது தீமைதரும் வழியெனத் தெரி வித்து முன்னைய வழியே செல்லும்படி செய்து திட்டிவாயிலை அடைந்து அதன்மேல் வழியை அங்கு அறிவாய் எனக் கூறியதையும் கிறித்தி யன் அக்காவலாளனுக்குக் கூறினன்.
ஆண்டவன் உலகம் உய்தற்காகத் தமது தேவகுமாரரான கிறித்துவை அனுப்பி முத்திவழியை அமைத்துள்ளமை, அதனை உலகவாழ்வைப் பெரிதாக நினைப்பவர் அறியாதிருத்தல், ஆபிரகாம் என்பார் உலக நன்மைகளைத் துறந்து தன்னை இறைவனுக்கு ஒப்புக் கொடுத்துத் தன் மகனையும் பலிகொடுத்தமை, மோசே என்பார் இறைவனுக்கு அடியவனகித் தன் அரசுரிமையையும் துறந்து பல

Page 7
Σii
துன்பங்களை அனுபவித்தமை, தானியேல் என்பார் இறைவனையே யன்றி உயிர்போகினும் பிறரை வணங்குவ்தில்லை என்னும் உறுதியி ஞல் பகையரசனுல் சிங்கம் இருந்த குகையில் அடைக்கப்பட்டமை, சாத்ராக் - மேசாக் - ஆபேத் நேகோ ஆகிய மூவரும் தானியல் என் பாரைப் போன்ற உறுதி கொண்டதனல் பகைவரால் எரியும் நெருப் பில் இடப்பட்டமை, ஸ்தேவான் என்பார் கிறித்துவைப்பற்றிச் சாட்சியம் பகர்ந்து அதனுல் பகைவரின் கல்லெறிக்கு ஆளாகி உயிர் விட்டமை, பவுல் என்பார் கிறித்துவிடம் பக்தி கொண்டு பல இடங் களுக்கும் சென்று பல துன்பங்களை அடைந்தமை, கிறித்துநாதர் பல துன்பங்களை அடைந்து உயிர் நீத்தமை, இவர்களைப் போலவே அநேக அடியார்கள் இறைவனின் மகிமைக்காகச் சொல்லற்கரிய வறுமை - இழிமொழி - அடி-உதை - கல்லெறி - சிறை ஆகிய துன் பங்களை அடைந்தமை, இவ்வாறு தேவகுமாரன் - தீர்க்கதரிசிகள் - அடியார்கள் ஆகியோரால் விளக்கம் பெற்ற சுவிசேச வழியின் பழைமை - தூய்மை ஆகிய பெருமைகள், முத்திக்குச் சுவிசேச வழியே நேர்வழி - ஏனையவை தீமையே தருவன என்பன போன்ற உண்மைகள் ஆசியவைகளைக் காவலன் கிறித்தியனுக்குத் தெளிவா தக் கூறினன். அப்போது தன்ஞெடு உள்ள பாவச் சுமையினல் தான் வருந்துதலையும் அதனல் தனக்கு அமைதியில்லாமையையும் தெரி வித்து அது நீங்கவும் இரட்சிப்பு உண்டாகவும் வழி கூறுமாறு கிறித் தியன் வாயிற்காவலனைக் கேட்டான். ' அவ்வழியே செல்லும்போது பெரியதோர் சிலுவை நாட்டப்பட்ட புண்ணிய் தலம் வரும். அங்கு அடைந்ததும் பாவம் அனைத்தும் நீங்கிவிடும். பாவ நீக்கத்திற்கு அதைவிட வேறு இடம் இல்லை. அதற்கு அப்பால் வீடு தோன்றும். அங்கு வியாக்கினி' என்னும் வேதநூலறிவினர் உளர். அவரிடம் சென்ருல் முத்திப்பாதைக்கு உரிய அனைத்தையும் விளக்கமாகச் சொல்லி வழிப்படுத்துவார்" என்று காவலாளன் கூறி விடை கொடுத் தான். கிறித்தியன் தனக்கு உதவிய இறைவனையும் அவ் வாயிற் காவலனையும் வாழ்த்தித் தன் மோட்ச பாதையில் சென்ருன்.

இரட்சணிய யாத்திரிகம் கடைதிறப்புப் படலம்
கிறித்தியன் திட்டிவாயிலே அடைந்தமை:
நள்ளுண் டாலுந லம்மஃ தன்றெனில் எள்ளுண் டாலுமி பூழிபுலை யன்னெனத் தள்ளுண் டாலுந்த யாபதி சித்தமென் றுள்ளுண் டாயவொ ரூக்கமொ டேகினன்
பதவுரை : நலம் நள்ளுண்டாலும் -நன்மைக் கண் விரும்பப்பட் டாலும் அஃது அன்று எனில் - அது கிடைக்கப்பெருமல்; எள்ளுண் டாலும் - நான் இகழப்பட்டாலும்; இழிபுலையன் என தள்ளுண் டாலும் - இழிவான தொழில்புரிவோன் என யான் விலக்கப்பட் டாலும் த பாபதி சித்தம் என்று - இஃது அருட்தலைவரான இறை வனின் விருப்பம் என எண்ணி; உள் உண்டாய ஓர் ஊக்கமொடுஉள்ளத்தில் உண்டாகிய ஒப்பற்ற துணிவுடன் ஏகினன் - சென்ருள்,
விளக்கவுரை: நள்ளுதல் - விரும்புதல். எள்ளல் - இகழ்தல் தள்ளல் - விலக்கல், உள் - உள்ளம் தயாபதி = தபா + பதிக இறைவன். தயா - தயை, வடமொழி. பதி-தலைவன் புலையன் = புலை + அன்- புலைத்தொழில் புரிவோன். சித்தம் - விருப்பம், உள்ளம். ஓர் - ஒரு ஒப்பற்ற, கிறித்தியன் ஏகினன் என்க. வீடு அடைதல் ஒன்றே அவனது குறிக்கோள் என்பதும், வேறு நன்மை தீமைகளைப் பொருட்படுத்திலன் என்பதும், அனைத்துச் செயலையும் ஆண்டவனின் செயலாக எண்ணினன் என்பதும், ஆண்டவனிடம் நம்பிக்கை உள்ள வன் என்பதும் இப்பாடல் உணர்த்திற்று.
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்டுஞ்சார்: எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்-செவ்வி அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார் கருமமே கண்ணுயி ஞர்,' " (நீதிகேறி விளக்கம்) 'நன்றே செய்வாப் பிழை செய்வாய்
நானே இதற்கு நாயக மே". (šaub) என வந்துள்ளமை காண்க. உள் - இடப்பெயர். V
நள், எள், நள் என்பன் முதனிலைத் தொழிற் பெயர்கள்

Page 8
ஒடு-உடனிகழ்ச்சிப் பொருளில் வந்த வேற்றுமை உருபு. உண்டு துணை வினை. ஆல் - எதிர்கால வினையெச்ச விகுதி: ar-th - Canol - &# சொல். ஓர் - குறுகல் விகாரம். கிறித்தியன் - தோன்ரு எழுவாய். 1
குன்று காலும்வெஞ் சாபக் கொழுங்கனல் முன்றி னின்றுமு டுகிச்சு ரஞ்செலீஇ வன்ருெ டர்ப்படு மான்விடு பட்டெனச் சென்று கூடினன் முன்விடு செந்நெறி. ப-ரை குன்றுகாலும் - மலையிலிருந்து வீசும் ; வெம்சாபக் கொழுங்கனல் - கொடிய சாபம் ஆகிய பெரும் நெருப்பு உள்ள; முன்றில் நின்று முடுகிச் சுரம் செலீஇ -இடத்திலிருந்து விரைந்து காட்டின் கண் Gafsi to; வன்ருெடர் படு மான் விடுபட்டு என - வலிமையுள்ள வயிைல் அகப்பட்ட மான் அதிலிருந்து விடு பட்டதைப்போல; முன்விடு செம்நெறி - முன்னே விட்டுச் சென்ற வீடுபேற்று வழியை சென்று கூடினன் - சென்று அடைந்தான்
வி-ரை : சாலுதல் - வீசுதல். கால் - வினைப்பகுதி. சாபம் - தீமை தரும் சொல். முன்றில் - இடம். சுரம் - காடு, கனல் - தீ. தொடரி - வலை சங்கிலி. தொடுக்கப்படுதலின் "தொடர்" என்ருர், படு - படுதல், அகப்படுதல். நெறி - வழி. வெஞ்சாபம், செந்நெறி கொழுங்கனல், வன்ருெடர் - பண்புத் தொகைகள், வெஞ்சாபக் கொழுங்களல் - உருவகம், பொதுத் தன்மை - கொடுமை. நின்று - ஐந்தாம் வேற்றுமை நீக்கற்பொருளில் வந்த சொல்லுருபு. என - உவமை உருபு. செலீஇ - உயிரளபெடை இறந்தகால வினையெச்சம். சுரம் செலீஇ - ஏழாம் வேற்றுமைத் தொகை படுமான், விடு நெறி. வினைத்தொகைகள், சாபத்தின் விடுபட்ட கிறித்தியனுக்கு வன்ருெடரில் விடுபட்ட மான் வின் உவமை. பொதுத்தன்மை - துன்பத்திலிருந்து விடுபடுதல், 2
ஊன்ம னத்திரு ளோடத் துரந்திடும் ஆன்ம ஞானத் தவிரொளி நாடியக் கான கத்தெவை யுங்கரு தாதுபோய் வானு றுங்கடை வாயிலை நண்ணினன். ப-ரை: ஊன்மனத்து இருள் ஓட-இழிந்த மனத்தின்கண் உள்ள அஞ்ஞானம் நீங்கும்படி துரந்திடும் - எதிர்த்துச் செல்லுகின்ற; ஆன்ம ஞானத்து அவிர் ஒளி நாடி - மெய்ஞ்ஞானத்தினுல் விளங்கு கின்ற இறை ஒளியை விரும்பி; அக் கானகத்து எவையும் கருதாதுவழியிலே இருந்த அக்காட்டிலே உள்ள ஒரு பொருளையும் விரும்பாது; போப் - நடந்துசென்று; வான் உறும் கடைவாயிலை நண்ணிஞன் - மோட்சத்திற்குச் செல்லும் வெளிப்புற வாயிலை அடைந்தான்.

- 3 -
LLLSSS TT SS SSTT TSS0LLS L LLTLSSTLLTTS qLLLT LES 0LL LTS TT LT SS அறிவு, ஆன்மஞானம்; உயிர் தன்னையும் உலகையு அஃலவனையும் பற்றிய உண்மைகளைத் தரும் அறிவு, வான்-மோட்ச .த. உறுதல் - பொருந்துதல். கடைவாயில் - வாயிற்கடை இலக் காப் போலி. ஊன், வான்-ஆகுபெயர்கள். இருள் நீங்கிய இடத்தே ஒளி தான்றும் என்பதும், மெய்யறிவினலே இறை ஒளியைக் காணலா 1 என்பதும், ஒன்றை விரும்பிய ஒருவன் ஏனைய பொருள்களை விரும்புதல் ஆகாது என்பதும், உலகப் பொருள்கள் ஐம்புல உணர்வுக்கு உரியன என்பதும், ஐம்புல உணர்வு இருப்பின் மெய்யறிவு வெளிப்படாது என்பதும், மெய்யறிவு இல் வழி இறை ஒளியைக் காண்டல் இயலாது என்பதும் உணர்க. அவிர்ஒளி-வினைத்தொகை. உயிர்வாழ் உலகைக் கானகம் என உருவகித்தார். ஆன்மா - வடசொல். எவையும் என்பதில் உம்உயர்வு சிறப்பு. நாடிய க நாடி + அ அ - கட்டு,
திட்டிவாயில் நுழைதற்கு உரியவர்: '
இடுக்க வாயி லெதிர்ந்தத னுட்புக அடுக்கு மோவெனக் காசையை வேரறப் படுக்கு நர்க்கும் பருமித்த தூலத்தை ஒடுக்கு நர்க்கும லாலென வுன்னினன்.
ப-ரை இடுக்க வாயில் எதிர்ந்து - ஒடுக்கமான வாயில் அவன் முன்னே தோன்றியது; ஆசையை வேர் அறப் படுக்குநர்க்கும் - உலக விருப்பத்தை முற்ருக விட்ட துறவிகளுக்கும்; பருமித்த தூலத்தை ஒடுக்குநர்க்கும் -பருமனன உடலை ஒடுக்கிய யோகியர்க்கும்; அலால் - அல்லாமல் : அதனுள் புக - அந்த வாயிலின் ஊடாகச் செல்ல; எனக்கும் அடுக்குமோ என - இவ்விரு திறத்தும் சேராதி உலக வாழ்வில் உள்ள எனக்கும் இயலுமோ என உன்னினன்எண்ணினுன்
வி-ரை: இடுக்கு- மிக ஒடுக்கிய இடம். அடுத்தல்-பொருத் துதல் படுத்தல்-அழித்தல், உன்னுதல்-நினைத்தல், தூலம்கண்ணுக்குப் புலனவது. சண்டு ஆகுபெயராய் உடலைக் குறித்தது* மோட்சபாதை ஞானிகளுக்கும் யோகியர்க்குமே கிடைக்கும். உலகப்பற்றினர்க்குக் கிடையாதது. இடுக்க வாயில்-திட்டிவாயில் தூலத்தை ஒடுக்குதல் உலகப்பற்று இன்மையாலாம். தூலத்திை ஒடுக்கச் சூக்குமம் பற்றிய உண்மைகள் வெளிப்படும். அலால்” அல்லால் தொகுத்தல் விகாரம், ஓ - எதிர்மறை இடுக்க = இடுக்கு + அ = குறிப்பு வினைப் பெயரெச்சம். படுக்குநர், ஒடுக்குநர் என்ப வைகளில் "ந்" - பெயரிடைநிலை. d

Page 9
- 4 -
உருக்கு மாரரு ளோங்கிய வேந்தஞேர் திருக்கு மாரனைச் சிந்தையு ளேதரித் திருக்கு மாரண ரேயிக லியாவையும் ஒருக்கு மாற்றல ரொல்லும வர்க்கரோ. u - any : உருக்கும் ஆர் அருள் ஓங்கிய வேந்தன் - உள்ளத்தைக் கவருகின்ற மிக்க அருள் நிறைந்த இறைவனது; ஒர் திருக்குமாரணைஒப்பற்ற மகளுகிய இயேசு பெருமானை ; சிந்தையுளே தரித்து இருக்கும். உள்ளத்திலே பதித்து வைத்திருக்கின்ற ஆரணரே - வேதவழி நிற்கும் பெரியோர்களே இகலி யாவையும் ஒருக்கும் ஆற்றலர் - எதிர்ப்புகளை நீக்கும் ஆற்றல் உள்ளவர்; அவர்க்கு ஒல்லும் - அவர்க்கு இது பொருந்துவதாம். w
வி-ரை: உருக்குதல் - இளகச் செய்தல். தரித்தல்-நிலைநிறுத்தல் ஆரணம் - வேதம். இகல் - பகை. ஒருக்குதல் - வெல்லுதல். ஒல்லுதல்- தகுதியாதல். இறைவன் முழு உலகினேயும் அருளினல் ஆள்பவர் ஆதலின் " அருள் ஓங்கிய வேந்தன்" எனவும், இயேசு பெருமான் இறைவனின் ஒரே திருமகன் ஆதலின் " ஒர் திருக் குமாரன்" எனவும், சத்தியவேதத்தைப் பின்பற்றுநர்க்கு எதிர்ப்புகளை வெல்லும் மெய்யறிவும் இறையருளும் கிடைத்தலால் "ஆரணரே இகல் யாவையும் ஒருக்கும் ஆற்றலர் " எனவும் அவன் கூறினன். ஆரணரே என்பதில் "ஏ " - தேற்றம் அரோ-ஈற்றசை. ஆர் - உரிச்சொல்.
திருடர் வஞ்சகர் காமிகள் செல்வமார் குருடர் மற்ருே ருரிமையைக் கொள்ளைகொண் முருடர் கோபிகண் மூர்க்கர்கு தர்க்கராம் புருடர்க் கீண்டு புகலரி தாகுமால்.
ப-ரை: திருடர் வஞ்சகர் காமிகள் - கள்வரும் ஏமாற்றித் தீமை செய்வோரும் பேராசைக்காரரும்; செல்வம் ஆர் குருடர் - செல்வம் நிறைதலினல் அறிவு பிறழ்ந்தவரும்; மற்ருேர் உரிமையைக் கொள்ளை கொள் முருடர் - பிறரது பொருளைக் கவரும் முரட்டு இயல்பினரும்: கோபிகள் - கோபமுள்ள வரும் மூர்க்கர் - கொடியவர்களும்: குதர்க்கராம் புருடர் - விதண்டாவாதம் செய்பவரும் ஈண்டுமோட்சத்திற்கு உரிய இந்தத் திட்டிவாயிலின்கண் புகல் அரிதாம்புகுதல் இயலாதது ஆகும்.
வி-ரை: காமிகள் - காமத்தையுடையவர். காமம்-ஆசை கோபி - கோபத்தையுடையவர், குதர்க்கம் = கு + தர்க்கம் கதர்க்க முறை அல்லாதது. கு-எதிர்ப்பொருள் உணர்த்தும் முன்னீடு திருடர் முதலியோர் பாபிகள்; கோபிகள் முதலியோர் அறிவிலிகள்.

- S -
ஆதலின் இவர்கள் அனைவரும் மோட்ச பிரயாணத்திற்குத் தகுதி யற்றவராவர். " செல்வம் வந் துற்றகாலத் தெய்வமும் சிறிதுபேணுரி சொல்வன அறிந்து சொல்லார்" எனக் குசேலோபாக்கியானம் கூறுதலின் செல்வரைக் குருடராக உருவகித்தார். எண்ணும்மை தொக்கு வந்தது. புருடர் - வடமொழித் திரிபு, ஆல்-ஈற்றசை "லள. . . . மெலிமேவின் னனவும்" என நன்னூல் கூறுதலின் கொள் + முருடர் க கொண்முருடர்" என ஆயிற்று. 6
திட்டிவாயிலுள் நுழையும் முறைமை:
- என்று சிந்தித் தருகுற வேழைகாள்
நின்று தட்டுமி னிங்கிடு நீள்கத வென்று பித்தியெ Nலுறத் தீட்டிய மன்றல் வாசகங் கண்டும னக்கொளா.
ப-ரை: என்று சிந்தித்து - எனச் சிந்தனை செய்து அருகு உறஅக் கதவின் பக்கத்திற் செல்ல; ஏழைகாள் - அறிவில் வறியவர் களே ! நீள் கதவு நின்று தட்டுமின் - நீண்ட கதவை நின்று தட்டுவீ ராக நீங்கிடும் - கதவு திறக்கும் என்று பித்தி எழில் உற - எனக் சுவரிலே அழகு பொருந்த தீட்டிய மன்றல் வாசகம் கண்டு - எழுதிய இனிய வாக்கியத்தைக் கண்டு; மனங்கொளா - மனத்திலே பதித்து.
வி - ரை: ஏழை - வறியவர். பித்தி - சுவர். எழில் - அழகு. மன்றல்-இனிமை. உறுதல் - பொருந்துதல், வினைத்திரி சொல். கொளா = கொள் + ஆ = கொண்டு; உடன்பாட்டுத் தெரிநிலை வினை யெச்சம் இறந்த காலம் செய்யா என்னும் வாய்பாடு. ஆ - வினை யெச்ச விகுதி. மனம் + கொளா = மனக்கொளா. ஏழைகள் என்பது விளிப்பொருளை உணர்த்துமிடத்து ஈற்றயல் நீண்டது. தட்டுமின் - முன்னிலைப் பன்மை வினைமுற்று. "தட்டுங்கள், அது திறக்கப்படும் " என்பது வேத வாக்கு இச் செய்யுள் குளகம். அடுத்த செய்யுளொடு முடிவுறின் குளகம் எனப் பெயர்பெறும், 7
திட்டி வைத்தனர் தேவர்பி ரானென உட்டெ விந்துணர் வொன்றியொ டுங்கியே கிட்டி யாங்குகி ளர்பொற்க பாடத்தைத் தட்டி னனின் றினையன சாற்றியே. ய -ரை: தேவர் பிரான் திட்டிவைத்தனர் என - தேவர்களுக் குத் தலைவராகிய இறைவன் திட்டிவாயிலை அமைத்தான் என்று: உள் தெளிந்து உணர்வு ஒன்றி ஒடுங்கிக் கிட்டி -உள்ளத்திலே தெளி வுற்று அறிவு ஒருமையுற்று அருகிலே சென்று ஆங்கு கிளர் சபா

Page 10
- 6 -
டத்தை - அங்கே உள்ள அழகிய கதவை: இணையண சாற்றி தட்டினுள்பின்வருவனவைகளைச் சொல்லித் தட்டினன்.
வி-ரை உணர்வு-சிந்தன. கிளர்தல் - விளங்குதல். கபாடம்கதவு. இனையன - இவைபோல்வன (பின்வருவன). சாற்றுதல்சொல்லுதல். ஒன்றுதல் - பொருந்துதல். திட்டி-நுழைவாயில். உள் + தெளிந்து = உட்டெளிந்து. ‘லளவேற் றுமையிற் றடவும் அல்வழி அவற்ருே டுறழ்வும் வலிவரினம்" (நன்னூல் 227). *ணளமுன் டணவும் ஆகுத் தநக்கள்" (நன்னூல் 237) என்னும் இலக்கண விதிகளின்படி நிலைமொழியீற்று ளகரமும் வருமொழி முதல் தகரமும் டகரங்கள் ஆயின. கிளர்தல், சாற்றுதல் என்பன வினைத்திரி சொற்கள். முதல் ஏகாரம் தேற்றம், இரண்டாம் ஏகாரம் æfðspsde • 8
திட்டிவாயில் திறக்கும்படி கிறித்தியன் முறையிடல் :
மாய வுலக மயக்கறுத்து
வரையாக் கிருபை தந்தளித்த தூய பெருமான் றிருவடிக்குத்
தொழும்பன் கபாடந் திறமினே. ப-ரை: மாய உலக மயக்கு அறுத்து - பொய்யான உலக வாழ்வின் ஆசையை விளக்கி வரையா கிருபை தந்து அளித்தஅளவிலாத கருணையைத் தந்து காப்பாற்றிய தூய பெருமான் திருஅடிக்கு தொழும்பன் - பரிசுத்தரான இறைவனது திருவடிகளுக்கு யான் அடியவன் கபாடம் திறமினுே - கதவைத் திறப்பீராக.
வி-ரை மாயம் - பொய், மயக்கம் - ஆசை. தொழும்பன் - அடியவன். வகை - அளவு. தன்னை முற்ருக இறைவனிடம் ஒப்புக் கொடுத்தான் ஆதலின் * பெருமான். தொழும்பன்" எனவும், இறைவனின் உயர்வும் தன் எளிமையும் தோன்ற " பெருமான் திருவடிக்குத் தொழும்பன் " எனவும், தூய அடியவர்க்கே அக் கதவு திறக்கும் ஆதலினுல் அத்தகையன் எனத் தன்னை அறிமுகம் செய்து * கபாடந் திறமின் " எனவும் கூறினன். வரையா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், ஓ - ஈற்று அசை, 9
ஆசா பாசக் கொடுஞ்சுழலி
லசப்பட் டுலைந்தே னருளணுக நாச தேசந் துறந்துவந்தே
ஞயேன் கபாடந் திறமினே.

-س- 7 س
ப-ரை நாயேன் - நாய் அனைய யான் ஆசாபாசக் கொடுஞ் சுழலில் அகப்பட்டு உலைந்தேள் - உலகப் பற்று ஆகிய கொடிய சுழற் சியில் அகப்பட்டு வருந்தினேன் அருள் அணுக - இறைஅருள் கிடைத்ததனல்; நாச தேசம் துறந்து வந்தேன் - அழிவுக்குரிய உல கத்தை விட்டு வந்தேன்; கபாடந் திறமின் - கதவைத் திறப்பீராக,
வி-ரை; பாசம் - பெரும்பற்று, சுழல்-சுழல் காற்று. நீர்ச் சுழி. நாசம் - அழிவு ஆசை + பாசம் = ஆசாபாசம், வடமொழிச் சந்தி. அணுக - செயவென் வாய்பாட்டு வினையெச்சம், காரணப் பொருளில் வந்தது. நாயில் உள்ள இழிந்த தன்மைகள் இருந்த தஞற் தன்னை 'நாயேன்" என்ருர் அதன் தன்மைகளாவன: அவாவுற்று அலைந்து திரிதல். இழிந்த பொருள்களை உண்ணல். 10
உள்ளந் திரும்பிக் குணப்படுமி
னுய்வீ ரென்ன வுவந்துரைத்த
வள்ளல் திருவாக் சுதுகேட்டு
வந்தேன் கபாடந் திறமினே.
ப - ரை: உள்ளந் திரும்பிக் குணப்படுமின் - மனம் மாறி நல் வழிப்படுங்கள்; உய்வீர் என்ன உவந்து உரைந்த - பிழைப்பீர் எனக் கருணையுற்று அருளிய வள்ளல் திருவாக்கு கேட்டு வந்தேன் - கிறித்து பெருமானது தேவ வார்த்தைகளைக் கேட்டு வந்தேன்; கபாடந் திறமினுே - கதவைத் திறப்பீராக; -
வி - ரை: வள்ளல் - பொருளை வரைவின்றிக் கொடுப்பவர். திரு - தெய்வத்தன்மை. இயேசுநாதர் அருளை வரைவின்றி வழங்கு கின் முர் ஆதலின் " வள்ளல்" என்ருர். உள்ளந் திரும்பிக் குணப் படுதலாவது - பாவச் செயல்களைச் செய்யாமல் தேவகிருபைவழி நிற்றல். தெய்வத் தொடர்பானவைகளைத் "திரு” என்னும் அடை கொடுத்துக் கூறுதல் மரபு. அது - சாரியை. என-என்ன = இடைச் சொல் விரித்தல் விகாரம். கருணைகொண்டு கூறியது ஆதலின் " உவத்து உரைத்த " என்ருர். l
கல்லேன் சுருதி நலம்புரியக்
கருதேன் பாவம் கசந்திடேன் பொல்லே னெனினும் வந்தடைந்தேன் போகேன் கபாடற் திறமினே. ப-ரை: சுருதி கல்லேன் - வேதம் படித்திலேன் நலம் புரியக் கருதேன் - பிறருக்கு நன்மை செய்ய நினைத்திலேன் பாவம் கசந் திடேன்- பாவஞ் செய்தலை வெறுத்திலேன்; பொல்லேன் - கொடி யவன்; எனினும் வந்து அடைந்தேன் - ஆயினும் இங்கு வந்து சேர்ந் தேன் போகேன் - திரும்பிச் செல்லேன் கபாடம் திறமின்கதவைத் திறப்பீராக.

Page 11
- 8 -
வி-ரை: சுருதி-வேதம் செவியாற் கேட்கப்பெற்று வந்த மையின் இப்பெயர் வந்தது. நலம் - நன்மை, கசத்தல் - தீயதென வெறுத்தல். சுருதி கற்றல், நலம்புரிதல், பாவம் கசந்திடல் ஆகிய நற்செயல்களைச் செய்யாமையின் தன்னைப் 'பொல்லேன்" என்ருன். மோட் சப் பயணத்தில் உள்ள உறுதியைப் புலப்படுத்தற்காகப் "போகேன்" என்ருன், ஏன் -தன்மை ஒருமை வினைமுற்று விகுதி. 12
ஆருக் கொடிய பசிதாக
மடங்கத் தணிய வருளளிக்கும் மாருக் கருணை வரதன்பால்
வந்தேன் கபாடத் திறமினே. ப - ரை: ஆரு கொடிய பசிதாகம் அடங்க தணிய - தணிதல் இல்லாத கொடுமையான பசியும் தாகமும் வலிமையற்று நீங்க அருள் அளிக்கும் - தேவ அருளை வழங்கும் : மாருக் கருணை வரதன் பால் வந்தேன் - குறைவுபடாத கருணை உள்ள இறைவனை நாடி வந்தேன்; கபாடம் திறமின் - கதவைத் திறப்பீராக.
வி - ரை: ஆரு = ஆறு + ஆ+அ = ஆறு கல். ஆ- எதிர்மறை அவிகுதி, அடங்குதல் - வலி கெடல். வரதன்-மேலோன் : இறைவன். தணிதல் - குறைதல். பசிதாகம் - உம்மைத் தொகை. பால் - ஏழாம் வேற்றுமை உருபு இடைச்சொல். சருணை மாரு எனினும் பொருந்தும். கொடிய - குறிப்புவினைப் பெயரெச்சம். ஆரு, மாரு - ஈறுகெட்ட எதிர்மறைத் தெரிநிலைவினைப் பெயரெச்சங்கள். H 3
பாவ மீறிவளர் காடு துற்றியலை
பட்ட முங்கியயர் பாவியான் சீவ மாநதியி னிர ருந்தவதி
தேட்ட முண்டுகடை திறமினே. ப-ரை: யான் பாவம் மீறி வளர் காடு துற்றி - இங்கு வந்த யான் பாவம் மிகுந்து வளருகின்ற காட்டிலே சென்று அலைபட்டு அழுங்கி அயர் பாவி - அலைந்து வருந்துகின்ற பாவி; சீவமா நதியின் நீர் அருந்த அதி தேட்டம் உண்டு-மோட்சம் என்னும் பெரிய ஆற்றின் நீரைப் பருக மிக்க ஆசை இருக்கிறது; கடை திறமின் - வாயிலைத் திறப்பீராக.
வி- ரை: மீறுதல் - மிகுதல். துற்றுதல் - அடைதல். அழுங்கு தல் - வருந்துதல், அயர்தல் - சோருதல், சீவன் - அழியாதது மோட்சம். அருந்துதல்-பருகுதல். தேட்டம்-விருப்பம். வளர் காடு, அயர் பாவி - வினைத் தொகை. உண்டு - இருதிணை ஐம்பால் மூவிடப் பொதுக்குறிப்பு வினைமுற்று, பாவி-பாவங்களை உடையவன். கடை என்பது ஆகுபெயர் , 14

- 9 -
நீதி யாதிபர்சி னந்த கிக்குநெறி
நின்று தப்பியிந்நெ றிப்படீஇ மாத யாபரன டித்தொ மும்புசெய
வந்த பாவிகடை திறமினுே.
ப - ரை: நீதி ஆதிபர் சினம் தகிக்கு நெறி நின்று - நீதிக்குத் தலைவராகிய இறைவனது கோபம் எரிக்கும் தீயவழியிலே சென்று: தப்பி இந் நெறிப்படீஇ - பின்பு விலகி மோட்சபாதை என்னும் இவ்வழியை அடைந்து மா தயாபரன் அடித்தொழும்பு செய வந்த பாவி - பெரும் கருணையுள்ள இறைவனது திருவடிகளுக்கு அடிமைத் தொண்டுசெய்ய வந்த பாவி; கடை திறமின் - வாயிலைத் திறப்பீராக.
வி - ரை ஆதிபர்-இறைவன் ஆளுபவர். தகித்தல் - எரித்தல்: படீஇ - அடைந்து சொல்லிசை உயிரளபெடை தெரிநிலை வினையெச் சம். மா-பெரும், தயை-இரக்கம், அடித்தொழும்பு - முழு அடிமை, சினம் - எழுவாய்ப் பொருள். நின்று-இறந்த காலத் தெரிநிலை வினை யெச்சம், தயை + பரன் = தயாபரன், வடமொழிச் சந்தி. 15
சேரு மாகொடிய தீவி னைத்திரள்சு
மந்தி ளைத்தளிகொள் சீவநற்
தாரு நீழலிலொ துங்கி யுய்யவரு
தமியன் யான்கதவு திறமினே.
ய -ரை: சேரு மா கொடிய தீவினைத் திரள் சுமந்து இ2ளத்து - வந்து சேர்ந்த பெரிய கொடிய பாபச் செயற் சுமையினைச் செய்து சோர்வடைந்து அளிகொள் சீவநல் தாரு நீழல் ஒதுங்கி - இரக்கத் தைக் கொண்டுள்ள உயிர்நெறியாகிய நல்ல மரநிழலிலே ஒதுங்கி யிருந்து உய்யவரு தமியன் யான் - உயிர் தப்புதற்காக வந்த ஒருவன் யான் கதவு திறமின் - கதவைத் திறப்பீராக.
வி-ரை : மா - பெரிய, திரள் - குவியல், அளி - இரக்கம். மியன் - தனி ஒருவன். பாவச்செயலின் கொடுமை தோன்ற மாகொடிய " எனவும், அதன் மிகுதி தோன்றத் "தீவினைத்திரள்" எனவும் அதனை அனுபவித்த துன்ப நிலை தோன்ற தீவினைத்திறன் சுமந்து இனத்த? எனவும், உதவியின்மை தோன்றத் "தமியன் எனவும், சீவநெறியின் நற்பயன் தோன்ற "அளிகொள் சீவ நற்தாரு எனவும் கூறினர். சீவநெறியை "நல்தாரு நிழல்" என உருவகித்தார். * அளிகொள் " என்பதனை இரண்டிடத்தும் அடையாகக் கொள்க. தமியள்=தமி+அள் 6

Page 12
- 10 -
கொடிய ரிற்கொடிய புலைய ரிற்புலைய
ஞயி னுங்குமர நாயகன் அடிய ருக்கடிய னக வந்திவண
கைந்த என்கதவு திறமினே ப - ரை: கொடியரில் கொடியன் - கொடியவர்களுள் கொடியவ ரூகவும், புலையரில் புலையன் - இழிந்தவர்களுள் இழிற்தவனுகவும்: ஆயினும் - இருந்தாலும், குமரநாயகன் அடியவருக்கு அடியன் ஆகதிருக்குமாரரான இயேசுநாதரது அடியவர்களுக்கு அடியவனக: வந்து இவண் அடைந்தனன் - வந்து இந்த இடத்தை அடைந்தேன் கதவு திறமின் - கதவைத் திறப்பீராக.
வி - ரை: கொடியர் - பாவிகள். புலையர் - இழிசெயலாளர். குமரன் - மகன். இவண் - இவ் இடம் அண்மைச் சுட்டுப்பெயர். இல் - ஏழாம் வேற்றுமை உருபு. ஆயினும் - விகற்பப் பொருளில் வந்த இடைச்சொல். குமரநாயகன் - குமரஞகிய நாயகன்; பண்புத் தொகை அடைந்தனன் - தன்மை ஒருமைத் தெரிநிலை வினைமுற்று. தனது இழிநிலை தோன்ற கொடியரிற் கொடிய புலயரிற் புலையன் எனக் கூறிஞர். உம் - இழிவு சிறப்பு. " அடியார்க்கும் அடியேன்" என நம்பியாரூரர் கூறியதும் காண்க. 17
நிருப னிதியினி லத்தி பூழிந்துபலி
நேர்ந்தி ரட்சையரு ணேமியாஞ் சருவ லோகசர ணியனை நம்பிவரு
தமியன் யான்கதவு திறமிஞே.
ப-ரை: நிருபன் நீதியின் நிலத்து இழிந்து-உலக மன்னனள இறைவனின் இரட்சிப்பு நீதியிஞல் பூவுலகிற் பிறந்து பலி நேர்ந்துதம்மைப் பலியாக ஒப்புக்கொடுத்து: இரட்சை அருள் - உலகிற்கு இரட்சிப்பை அருளுகின்ற; நேமியாம் சருவலோக சரணியன - இறைவனின் ஆணையினுல் உளவாகிய எல்லா உலகங்களுக்கும் அடைக்கலம் அளித்தற்காக உள்ள இயேசுபெருமான நம்பிவரு தமியன் யான் - விசுவாசித்து வருகின்ற அடியவன் பான்; கதவு திறமினே - கதவைத் திறப்பீராக.
வி-ரை: நிருபன்- அரசன், நேமி-ஆணைச்சக்கரம் Firsår - அடைக்கலம், இரட்சை, சருவம், லோகம் - வடமொழித் திரிபுகள். நிருபன் + நீதி = நிருபனிதி “னலமூன் றனவும் .ஆகுந் தநக்கள் (நன். 237) என்னும் விதியின்படி வருமொழி நகரம் னகரமாக, "குறிலணை வில்லா னனக்கள் வந்த நகரந் திரிந்துழி நண்ணும் கேடே" (நன், 210) என்னும் விதிப்படி நிலைமொழி ஈற்று ணகரம்

- 11 -
வெட்டது. அரும் + நேமி = அருணே மி. லள. மெலி மேவின் எனவும், (நன். 227) என்னும் விதிப்படி நிலைமொழி சற்று ளகரம் னகரமாக, "ணளமுன் டனவும் ஆகும் தநக்கள்" (நன். 237) என்னும் விதிப்படி வருமொழி நகரம் னகரமாக, நிலைமொழியீற்றில் வந்த னகரம் நன். 210 விதிப்படி கெட்டது. 8
கதவு திறத்தல் :
இன்னவித மாகவுரை யாடியெழி லாரும் வன்னமணி வாயில்செறி மாண்கதவு தட்டி உன்னிநண யோலமிட வுள்ளுருகி யுள்ளா மன்னுகடை காவலன் மருங்குற வணைந்தே.
ய - ரை: இன்ன விதமாக உரையாடி - இவ்வாறு தன் நிலை மையைச் சொல்லி எழில்ஆரும் வன்ன மணிவாயில் செறி மான் கதவு தட்டி - அழகு நிறைந்த நிறமளிகள் அமைந்த திட்டிவாயிலில் உள்ள சிறந்த கதவைத் தொட்டு; உன்னி நனி ஒலம் இட - இறைவனை நினைத்து மிகவும் உரத்து முறையீடு செய்ய உள்ளா மன்னு கடைகாவலன் உள் உருகி மருங்கு உற அணைந்து - உள்ளே உள்ள வாயிற் காவலன் உள்ளம் இரங்கித் தேவ கட்டளையை நினைத்து: அக்கதவின் அயலிலே வந்து,
வி - ரை: ஆர்தல் - நிறைதல். வன்னம் - நிறம். மாண் - மகிமை. செறிதல் - அடைத்திருத்தல். உள்ளா = உள் + ஆ உன்னல்நினைத்தல். மன்னுதல் - நிலைபெறுதல். நனி - மிகவும்; மருங்கு - பக்கம். எழில், வன்னம் - பெயர்த்திரி சொற்கள். உற்றுதல், உள்ளல், மன்னுதல். வினைத்திரி சொற்கள் ஒலம் - உரத்துக் கூவி அழைத்தல். மாண், நனி - உரிச்சொற்கள் இட = இடு + அ ை செயவென் வாய்பாட்டு நிகழ்கால வினையெச்சம். H 9
எஞ்சலிலு ணர்ச்சிபரி தாபமித யத்தில் விஞ்சவுள மற்றதிவன் வாய்மொழி விளக்கும் வஞ்சமில ஞமென மனக்கொள மதித்தே அஞ்சலென வொல்லையி னருட்கடை திறந்தான். ப-ரை எஞ்சல் இல் உணர்ச்சி பரிதாபம் இதயத்தில் விஞ்ச உள- குறைதல் இல்லாத உணர்வும் இரக்கமும் உள்ளத்தில் அதிக மாக உள; வஞ்சம் இலம் - கபடம் இல்லாதவன்; இவள் வாய் மொழி விளக்கும் - இவனது வார்த்தைகள் இவைகளைத் தெளிவு படுத்துவன; என மனக்கொள மதித்து ஏ - என்று தன் மனத்தில் பொருந்த எண்ணி அஞ்சல் என ஒல்லையில் அருள்கடை திறந்தான்

Page 13
vas 12 ܡ பயப்படாதே எனச் சொல்லி விரைவில் அருளுக்கு உரிய வாயிற் கதவைத் திறந்தாள்
வி-ரை: எஞ்சல் - குறைதல், இதயம் - மனம், விஞ்சுதல்மிகுதல். ஒல்லை - விரைவு. வஞ்சம், உணர்ச்சி - பண்புப் பெயர்கள் • இல் - ஈறுகுறைந்த குறிப்புவினைப் பெயரெச்சம். உள - அஃறிணைப் பன்மைப் படர்க்கைக் குறிப்பு வினைமுற்று. இலன் - உயர்திணை ஆண்பாற் படர்க்கைக் குறிப்பு வினைமுற்று. என (1) இடைச்சொல்; 2) வினையெச்சம், ஏ-தேற்றம். மற்று-இடைச்சொல் அது - சாரியை. வாய்மொழி, அருட்கடை - ஆரும் வேற்றுமைத்தொகைகள், அஞ்சல் - வியங்கோள் வினைமுற்று, கதவைத் தட்டுதல், வாயிற் கதவு திறத்தல் என்பன முறையே கிறித்தியன் ஆண்டவனை நோக்கி இடைவிடாது செய்த செபம். கதவு திறத்தல் ஆண்டவன் அருள் வெளிப்படுதலைக் குறிப்பது: 20
வாயில்திற வுண்டிட மலர்ந்தவ னசம்போல் நேயன்வ தனந்திகழ நேயமொடு நோக்கி ஆயென வெதிர்ந்தனையெ னையவிவண் செய்ய தீயன்வர வொல்வது கொல் யாதுனது சித்தம்.
ப - ரை : வாயில் திறவுண்டு இட-திட்டிவாயிற் கதவு திறக்கப் பெற்றதும் மலர்ந்த வனசம்போல் - உடன் விரிந்த தாமரைப் பூவைப்போல நேயன் வதனந் திகழ - மோட்சப் பிரயாணத்தில் விருப்புக் கொண்ட கிறித்தியனின் முகம் மகிழ்வுடன் விளங்க : நேயமொடு நோக்கி-கிறித்தியன் அன்புடன் வாயிற்காவலனை நோக்கி; என் ஐயனே - என் மதிப்புக்கு உரியவனே ஆய் என எதிர்ந்தனை - என் தாய் போல முன்னிலையாக வந்தனை ; இவண் - இங்கு வெய்ய தீயன் வர ஒல்வது கொல் - கொடிய பாவி வரத் தகுமோ உனது சித்தம் யாது - உனது விருப்பம் பாது?
வி-ரை: வனசம்-தாமரை. நேயம் - அன்பு. ஆய்-என் தாய். ஒல்வது-தகுவது, சித்தம்-உள்ளம் ; விருப்பம், வதனம்-முகம்: ஐயன் - தலைமையானவன். உண், இடு- பகுதிப் பொருள் விகுதிகள்: என, போல் - உவமை உருபுகள். ஒடு - மூன்ரும் வேற்றுமை உருபு. திறவுண்டிட வர, திகழ- வினையெச்சங்கள், கொல்-இடைச்சொல் : ஐயப்பொருள். யாது-வினப் பொருளில் வந்தது. ஒல்வது - தொழிற் பெயர், எதிர்ந்தனை - முன்னிலை ஒருமை வினைமுற்று. நேயன் வத னத்திற்கு மலர்ந்த வனசம் வண்ண உவமை அணி. "ஆயென எதிர்த் தனை" என்பது பயன் உவமை அணி. ஐய - அண்மைவிளி. வனசம்பொருளாகுபெயர் 罗丞

-س- l3 --س-
வாயிற் காவலன் உரைத்தல் :
என்றுவின வக்கடுகி யீண்டுவரு கென்: முன்றிலி னகத்துற விழுத்துமுறை யாகப் பொன்றினி கடைத்தலை யடைத்துநனி பூட்டிப் பின்றையிது கேளென வியப்பினெடு பேசும்.
ப-ரை என்று வினவ - இவ்வாறு கிறித்தியன் சொல்ல; சுடுகி ஈண்டு முன்றினில் அகத்து உற வருகென்ன இழுத்து என்ன - விரைந்து இங்கே வாயிலின் உள்ளே பொருந்த வருக என்று : காவலன் சொல்லிக் கிறித்தியன உள்ளே அழைத்து பொன்திணி கடைத்தலை முறையாக அடைத்து நனிபூட்டி - அழகு பொருந்திய வாயிற் கதவை முன் இருந்ததுபோல அடைத்து இறுகப்பூட்டி பின்றை-பின்பு ; இதுகேள் என்ன வியப்பினெடு பேசும் - வியப் புடன் காவலன் சொல் வான்.
வி-ரை கடுகி-விரைந்து. முன்றிலின் அகம் - வாயிலுக்கு உட்புறமாகவுள்ள இடம். பொன்றிணி = பொன் + திணி. பின்றைகாலத்தை உணர்த்தும் இடைச்சொல். செய்யும் என்னும் வினைமுற்று பல்லோர்படர்க்கை, முன்னிலே, தன்மை ஒழிந்த இடங்களில் வரும் ஆதலின் பேசும் எனக் கூறிஞர். அகத்துற இழுத்தமை காவலனின் அன்புள்ளத்தை உணர்த்துகிறது. 22
நெருங்குறுமிவ் வாயில்புக நேடிவரு வோரை வெருக்கொள வெருட்டிவிசி கம்பல விடுத்தே முருக்குமல கைக்கிறைவன் மொய்ம்பினெடு தங்குந் துருக்கமித னுக்கருகு தோன்றுவது காண்டி.
ப-ரை நெருங்கு உறும் இவ் வாயில் புகநேடி வருவோரைசெறிவாகப் பொருந்திய இந்தத் திட்டிவாயிலினுள் புகுவதற்கு விரும்பி வருபவரை ; வெருக்கொள வெருட்டி - பயப்படும் படி பயமுறுத்தி விசிகள் பல விடுத்து - அம்புகள் பல விடுத்து முருக் கும் அலகைக்கு இறைவன் மொய்ம்பினெடு தங்கும் - துன்புறுத்தும் பேய்களுக்குத் தலைவனன சாத்தான் வலிமையுடன் தங்குகின்ற துருக்கம் இதனுக்கு அருகு தோன்றுவது காண்டி - கோட்டை இல் வாயிலுக்குப் பக்கத்தில் இருப்பதைப் பார்ப்பாய்.
வி-ரை: நேடி-விரும்பி. நே + ட் + இ. நே - விரும்பு. வெருஅச்சம். விசிகம் - அம்பு. அலகை – பேய். மொய்ம்பு-வலிமை. துருக்கம் - கோட்டை. காண்டி - முன்னிலை ஒருமை வினைமுற்று. காண் + ட் + இ. வருவோர் - வினையாலணையும் பெயர் &3

Page 14
- 14 -
இங்கபய மிட்டகுரல் யாதென வெதிர்ந்தே அங்கவன் வெருண்டுனை யடர்த்துயி ரழித்து நுங்குவனெ னக்கருதி நொய்தினி விழுத்தேன் சங்கையற வுன்னிலை தணைப்புகறி யென்றன்.
ப - ரை: இங்கு அபயம் இட்ட குரல் யாது என- இங்கு அடைக்க்லம் எனக் கூவிய சத்தம் பாருடையது என ; அககு அவன் வெருண்டு - அவ்விடத்தில் அச்சாத்தான் கோபித்து உனை அடர்த்து உயிர் அழித்து - உன்னே வருத்தி உயிரைக் கொன்று நுங்குவன் எனக் கருதி நொய்தினில் இழுத்தேன் - உண்பான் என எணணி விரைவில் இழுத்தேன்; சங்கை அற உன் நிலைதனைப் புகறி என்ருன்- சந்தேகம் விலகும்படி உனது வரலாற்றைக் கூறு என்று கூறிஞன்.
வி- ரை : அபயம் - அடைக்கலம் அடர்த்தல் - வருத்துதல்: நுங்குதல் - உண்ணல். நொய்தினில் - விரைவாக. புகறி = புகல் + த் + இ - முன்னிலை ஒருமை வினைமுற்று. வாயிற்காவலன் என்ருர் என முடிக்க, அங்கு -இவ்வாயிலுக்கு அப்பால், "அடர்த்து உயிர் அழித்து நுங்குவன்" என்பது சாத்தானின் கொடுமையையும், நொய்தினில் இழுத்தேன்" என்பது காவலனின் அன்பு உள்ளத்தை பும் உணர்த்தின. உனை - தொகுத்தல் விகாரம். நுங்குவன்-படர்க்கை வினைமுற்று, அற - செயவென் வாய்பாட்டு வினையெச்சம். 4
வாயிற்காவலன் செய்த பேருதவியைக் கிறித்தியன் பாராட்டல்:
நேசனுரை கேட்டுள நடுங்கியிவ ணேர்ந்த மோசமக லத்துணைபு ரிந்தசெயன் முன்னிப் பேசரிய பேரருள் பிறங்குபிணி யாய ஈசனை வழுத்தியி தியம்புவன் விசாரி.
ப-ரை: நேசன் உரை கேட்டு - காவலனின் வார்த்தையைக்
கேட்டு உளம் நடுங்கி-மனத்திற் பயங்கொண்டு : இவண் நேர்ந்த மோசம் அகலத் துணை புரிந்த செயல் முன்னி-இவ் விடத்தில் நிகழக் கூடிய அபாயம் நீங்கும் படி துணை செய்த கருணைச் செயலை எண்ணி : பேசு அரிய பேர் அருள் பிறங்கு- சொல்லுதற்கு அரிய அருள் விளங்கு கின்ற பிணியாய ஈசனை வழுத்தி - பற்றுக்கோடாக உள்ள இறை வனைத் துதித்து; விசாரி இது இயம்புவன் - ஆத்தும விசாரி பின்வருவதைக் கூறுவாள்.
வி - ரை: நேசன் - அன்புள்ளவன். இவன் - இவ்விடம், அண் மைச் சுட்டுப் பெயர். மோசம் - அபாயம், முன்னுதல்-சிந்தித்தல். பிறங்குதல் - விளங்குதல். பிணித்தல்-கட்டுதல் இறைவன் தம்

- 15 -
கருனையிருல் எல்லையிட்டு உயிர்களைக் காத்தலின் "பிணியாய ஈசன்" ாள் முன். விசாரித்தல் - ஆராய்தல், ஆன்மா துன்பத்தின் நீங்கி இன்பம் பெறற்குரிய வழியை ஆராய்ந்த தஞல் "விசாரி" எனப் பெயர் பெற்றன். அரிய- குறிப்பு வினைப்பெயரெச்சம். பேசுதல் என்னும் தொழிற்பெயர் விகுதி குன்றி " பேசு " என முதனிலைத் தொழிற் பெயர் ஆயிற்று, ‘தேவன் மிகுந்த இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையும் உள்ளவர்" என்பது வேதமொழி. 25
வெய்யவல கைக்கெனை விலக்கியுயிர் வீயா துய்யவிவ ணுய்த்தவுத விக்குதவி யுண்டோ
ஜயவுத வாதொருவ ராற்றுமுத விக்கு வையகமும் வானகமு மாற்றலரி தாமால்.
வ-ரை ஐய- வாயிற் காவலரே வெய்ய அலகைக்கு என விலக்கி- கொடிய சாத்தானுக்கு அகப்படாமல் என்னை விலக்கி : உயிர் வியாது உய்ய இவண் உய்த்த உதவிக்கு - உயிர் அழியாமல் உய்யும்படி இந்த இடத்திற்குச் சேர்ப்பித்த உதவிக்கு உதவி உண்டோ - கைம்மாருகச் செய்யத்தக்க உதவி எதுவும் இல்லை உதவாது ஒருவர் ஆற்றும் உதவிக்கு - முன் தமக்கு உதவி செய்யாத ஒருவர்க்கு இன்ஞெருவர் செய்யும் உதவிக்கு வையகமும் வானக மும் ஆற்றல் அரிதாம் - பூமியும் ஆகாயமும் கைம்மாருகக் கொடுப்பினும் இவை அவ்வுதவிக்குச் சமம் ஆகாவாம்.
வி-ரை வீதல் - இறத்தன். ஆற்றுதல் - செய்தல். வையகம் - பூமி. வானகம்-தேவ உலகு. ஆற்றல் - ஒப்பாதல், அரிது - இல்லை. " உயிர் வீயாது உய்த்த உதவி" தலையாய உதவி ஆதலின் ' உதவி உண்டோ " என்ருன். உண்டோ என்னும் விஞ எதிர்மறைப் பொரு ளைப் பயப்பது. ஓ- எதிர்மறைப் பொருள். உம் - எண்ணும் மை அரிது - குறிப்புவினைமுற்று. ஆம் - சாரியை ஆகும் என்னும் வினை முற்றின் தொகுத்தல் விகாரம் எனினுமாம். ஆல்-ஈற்றசை. ஆற்றல் - தொழிற்பெயர். வெப்ப - பெயரெச்சம். உய்ய - வின் யெச்சம். "செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வாளகமும் ஆற்றல் அரிது’ என்னும் திருக்குறட் (101) கருத்து ஈண்டு இடம் பெற்றுள்ளது. உய்த்த-பிறவிக்ாப் பெயரெச்சம். 26
ஆதலின ருங்குரவ நிற்குதவு கைம்மா றேதுமிலை நிற்கிரியை யாவுமறி தக்க மாதகைய வேந்தனருண் மல்கிடுமு னக்கென் ருேதியளி யேனிலையு ரைப்பலினி யென்ன.

Page 15
- 16
ப-ரை: ஆதலின் அருங்குரவ - ஆதலால் அரிய பெரியவரே! நிற்கு உதவு கைம்மாறு ஏதும் இலை - நினக்குச் செய்யத் தக்க பிரதி உதவி எதுவும் இல்லை; நின் கிரியை அறிதக்க மா தகைய வேந்தன் அருள் - நின் செய்கையை அறிய வல்ல பெரும் மகிமை உள்ள இறைவனின் கிருபை ; உனக்கு மல்கிடும் என்று ஓதி - உனக்கு நிறையும் என்று பாராட்டி அளியேன் நிலை இனி உரைப்பல் என்ன - சிறியேனது வரலாற்றைக் கூறுவேன் என்று சொல்லி,
வி-ரை: குரவர் - பெரியோர். கைம்மாறு - பதில் உதவி, கிரியை - செயல். அறிதக்க - அறியத்தக்க. மல்குதல் - நிறைதல். அளியேன் - அன்புசெய்யத்தக்கவன். தகைய = தகைமை + அ = குறிப்பு வினைப் பெயரெச்சம். நீ + கு = நின் + கு = நிற்கு. இலை = இல்லை தொகுத்தல் விகாரம் இரு திணை ஐம்பால் மூவிடங்களுக்கும் பொதுவான குறிப்பு வினைமுற்று. அளியேன் - தன்மை ஒருமைப் பெயர். உரைப்பல் = உரை + ப் + அல் = தன்மை ஒருமை எதிர்கால வினைமுற்று. இனி - காலம் உணர்த்தும் இடைச்சொல். என்னு = என் + ஆ = செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். சாத்தா னிடம் அகப்படாமல் உயிர் காத்தவன் ஆதலின் வாயிற் காவலனை "அருங்குரவ " எனவும், தன் எளிமை தோன்ற " அளியேன்" என வும் கூறிஞன். 27
கிறித்தியன் தன் வரலாறு கூறுதல் : a
விளம்பரமடுத்ததும் வெருண்டுமனை மக்கட் குளம்பட் வுரைத்ததுமொரீஇமதிமயங்கி தளம்பிய துமாங்குசுவி சேடனுரை தந்து வளமபெற விடுத்ததுமிவ் வாயிலுறு கென்று. ப-ரை: விளம்பரம் அடுத்ததும்-கிறித்து பெருமானது அறிவிப் பைக் கேட்டமையும ; வெருண்டு மனை மக்கட்கு உளம் பட உரைத்த தும் - துன்பத்திற்குப் பயந்து அவரருள் ம்றிவிப்பை மனைவிக்கும் மக்க ளுக்கும் அவர்தம் உள்ளத்திற் பதியும்படி சொல்லியமையும்; ஒரீஇ மதி மயங்கித் தளம்பியதும் - அவர்கள் அதனை உணராமையால் அவர்களை விடுத்துப் புத்தி தடுமாறித் தளர்வுற்றமையும்; ஆங்கு சுவி சேடன் உரை தந்து வளம்பெற இவ்வாயில் உறுக என விடுத்ததும்அத்தகைய வேளையில் நற்போதகர் அறிவுரை தந்து பேரின்பம் பெறுதற்காக இந்தத் திட்டிவாயிலை அடைக என அனுப்பியதையும்
வி-ரை : அடுத்தல் - அடைதல், மடுத்தல் எனினுமாம்: மடுத்தல் - கேட்டல். ஒரீஇ - விலக்கி ; உயிரளபெடை செய்து என்னும் வாய்பாட்டு வினையெச்சம். மதி - புத்தி. மனை - மனைவி :

- 17 -
ஆகுபெயர்: ஆங்கு - காலத்தை உணர்த்தும் இடைச்சொல். சுவிசேடன் - சுவிசேடத்தைப் போதிப்பவர். உறுதல் - அடைதல் உறுக க உறு + க = வியங்கோள் வினைமுற்று என்னு - என் + ஆக செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். இயேசுவின் அறிவிப் பைத் தெளிவாகத் தான் கூறிஞன் என்பான் "உளம்பட” எனவும், மனைவிமக்கட் பற்று ஒருபுறமும் பேரின்ப விருப்பு ஒருபுறமும் ஈர்க்க மனம் இருபுறமும் அலைந்து வருந்தியது ஆதலின் "மதிமயங்கி" எனவும்: மோட்சம் நிலையான பேரின்பத்தைத் தருதலின் அதனை அடைதலை வளம்பெற" எனவும் கூறினன். வாக்கியம் முடிவுருமையினுல் இச் செய்யுள் குளகச் செய்யுள். வாயில் - வழி. 2.
பெருஞ்சுமை யொடேவழி பிடித்ததுமென் னெஞ்சன் விரும்பியுடன் வந்துநொதி வீழ்ந்துளம் வெரீஇப்பின் திரும்பியது மன்றுதவி செய்துகரை யேற்றி உரம்பயில் சகாயன்விவ ரித்தது முணர்ந்தே.
ப-ரை: பெருஞ்சுமையொடு வழிபிடித்ததும் - பெரும் துன்பச் aestoy L-cír இவ்வழிப் பயணத்தை மேற்கொண்டதையும்; மென் நெஞ்சன் விரும்பி உடன் வந்து நொதி வீழ்ந்து - உறுதியற்ற உள்ளத்தன் தானே விரும்பி என்னுடன் இப் பிரயாணத் தில் வந்து இடர்ச்சேற்றில் வீழ்ந்து உள்ளம் வெரீஇப் பின் திரும்பி பதும் - உள்ளம் பயந்து பின்பு திரும்பிச் சென்றதுவும் உரம் பயில் சகாயன் உணர்ந்து அன்று உதவி செய்து கரையேற்றி விவ ரித்ததும் - திடம் கொண்ட சகாயன் என்பான் என் நிலையை அறிந்து அந் நேரத்தில் உதவி செய்து அத் துன்பத்திலிருந்து விடுவித்துச் செல்லும் இவ்வழியை விளக்கிக் கூறியதும் ; உணர்ந்து - அறிந்து. வி-ரை நொதி - சேறு. உரம் -வலிமை. சகாயம்-உதவி தன் பாவங்களதும் இடர்களதும் மிகுதியை உணர்த்துவான் "பெருஞ் சுமை" எனவும், தான் கொண்ட முயற்சியில் தளர்ந்த ஒருவனை * மென்னெஞ்சன்" எனவும், எதிர்ப்பட்ட இடர்களை விலக்கி உதவி யவனை "உரம் கொண்ட சகாயன்' எனவும், அவன்செய்த உதவியைப் பாராட்டுவான் "கரையேற்றி" எனவும், வழியைத் தெளிவாக்கினுள் என்பான் "விவரித்து" எனவும் கூறினன். மென்னெஞ்சன், சகாயன் என்பன முறையே வேத நம்பிக்கை இல்லாதவரையும், திடநம்பிக்கை உள்ளவரையும் குறித்தலின் உருவகங்களாம். இச்செய்யுளும் குளகச் செய்யுள். மோட்ச பிரயாணத்தின்போது எதிர்ப்பட்ட பேரிடர்ப் பாட்டை நொதி" என உருவகித்தார். 29
@ー2

Page 16
- 18 -
உவப்பொடு வரும்பொழுது லோகவிவ காரி அவபேயனெ னக்குறுகி யாரணிய முய்க்க நிவப்புறு கிரித்தல் நெருங்கியது நேர்ந்த தவப்பய னெனச்சுருதி தந்தமுனி வந்தே.
ப-ரை உவப்பொடு வரும்பொழுது - மகிழ்ச்சியுடன் இவ் வழியிலே வரும்போது; லோக விவகாரி - உலகப் பற்றினன் ஒருவன் வந்து அவப்பயன் எனக் குறுகி ஆரணியம் உய்க்க - பான் செய்த பாவப்பயன் ஆகி இடையிலே வந்து பயனற்ற காட்டுவழியே அனுப்ப நிவப்பு உறு கிரித்தலை நெருங்கியதும்- அங்கு உயர்ந்து உள்ள மலைச்சிகரம் அடைந்ததையும்; நேர்ந்த தவப்பயன் என - யான் செய்த தவத்தின் பயன் எனச் சொல்லத்தக்கதாக சுருதி தந்த முனி வந்து-வேத போதனைகளைச் செய்த குரவர் வழியிலே வந்துகு
வி-ரை உவப்பு - மகிழ்ச்சி ; நம்பிக்கை. விவகாரி - விவகாரம் உள்ளவன். விவகாரம் - நடத்தை, தொடர்பு. அவம் - வீண், ஆரணியம் - காடு. நிவப்பு - உயர்வு. கிரி - மலை. சுருதி - வேதம், ஈண்டு- வேத வழியைக் குறித்தலின் ஆகுபெயர். லோகம் - உலகம், உலோக விவகாரி, சுருதி தந்த முனி என்னும் தொடர்கள் அவர் களின் இயல்புகளை அறிவுறுத்துகின்றன. உலோக விவகாரி இடையில் வந்து தீமை விளைவித்த பொறுப்பை உணர்த்துவான் "அவப் பயன் எனக் குறுகி" எனவும், சுருதிதந்த முனி இடையூறு நீக்கி ஆற்றுப்படுத்தியதினுல் "தவப்பயனென வந்து" எனவும் கூறிஞன். ஏ - தேற்றம். வழிக்கு இடையூருக மலை உயர்ந்து நின்றமையிஞல் நிவப்புறு கிரித்தலை" எனக் கூறினன். மோட்சத்தை நாடும் ஒருவனுக்கு இடையில் வரும் பெரும் தடையை மலையாக உருவகித்தார். சுருதி தந்த முனி - சுவிசேடகன் எனினுமாம். 30
மீண்டுவழி பற்றென வெகுண்டுமதி சொல்லித் தூண்டியினி மற்றவை துலங்கவொளி துன்னும் காண்டகு கடைத்தல் கழித்தறிதி யென்ன ஈண்டியது மிவ்வென வெடுத்தினி தியம்பி.
ப-ரை: வெகுண்டு-அவர் கோபங்கொண்டு; மீண்டுவழி பற்று என மதி சொல்லித் தூண்டி - மீண்டும் முந்திய வழியே செல்க எனப் புத்தி சொல்லி ஊக்குவித்து; இனி மற்று அவை - இதன்மேல் ஏனைய விபரங்களை துலங்க ஒளி துன்னும் - தெளிவாக ஒளி வீசு கின்ற காண்தகு கடைத்தலை கழித்து அறி என்ன - சாணத்தக்க திட்டிவாயிலைக் கடந்து சென்று அறிக என்று சொல்ல சண்டியதும் - அங்கு வந்தமையையும் இவ் என எடுத்து இனிது இயம்பி - இவ்வாறு எனத் தெளிவாகச் சொல்லி.

- 19 -
வி-ரை : பற்றுதல் - தொடர்தல் மதி - புத்தி, துலங்குதல்விளங்குதல் தூண்டுதல் -ஊக்குவித்தல். துன்னுதல் - நெருங்குதல், கழித்தல் - கடத்தல். ஈண்டுதல் - அடைதல். இவ் என - இவ்வாறு என மீண்டு உமீள் + ட்+உ. என்ன = என் + (இ)ள் + அ; இவை இறந்தகால வினையெச்சங்கள். மற்று-இடைச்சொல் பிறிது எனும் பொருளைக் குறித்தது. அறிதி - முன்னிலை ஒருமை விண்முற்று அறி + த் + இ. த் - எழுத்துப்பேறு. இனிது - குறிப்பு வினைமுற்று வினையெச்சப்பொருள் கொண்டது. விரைந்து கூறினன் என்பார் "இவ் என" எனவும், தெளிவாகக் கூறினன் என்பார் "இனிது இயம்பி" எனவும் கூறிஞர். V− 3.
பின்னிடுமென் னெஞ்சனிம பேசுவதெ வன்கொல் மன்னுசுவி சேசகள் மறுத்தெதிர் வரானேல் என்னிலைவி ரைந்துகிெடு மெங்குரவ வெல்லாம் உன்னத வருட்டுணையி லுற்றநல மென்ருன்.
ப-ரை: எம் குரவ - எமது பெரியவரே ! பின் இடும் மெசி நெஞ்சன் நிலை - பிரிந்து பின் தம்கிய மென்னெஞ்சன் நிலமையைப் பேசுவது எவன்கொல்-பேசிப் பயன் இல்லை; மன்னு சுவிசேசகன் மறுத்து எதிர் வரானேல்-நிலையுள்ள வேதக்குரவரி மீண்டும் வரா விடில் என் நிலை விரைந்து கெடும் - எனது நிலமை விரைவாக அழியும்; எல்லாம் - யான் இதுவரை அடைந்த பயன் யாவும்: உன்னத அருள் துணையின் உற்ற நலம் - உயர்ந்த இறைவனின் அருளது துணையினல் அடைந்த நன்மைகளேயாம்; என்ருள் - என்று கூறினன்
வி-ரை பின் இடல் - பின் தங்குதல், மென் நெஞ்சன் - பிரயா ணத் தொடக்கத்தில் கிறித்தியனுடன் வந்தவன், என் நெஞ்சன் எனப் பொருள்கொள்ளலுமாம், மறுத்து - மீண்டு. உன்னதம்உயர்வு. எவள் " என்னும் விஞ பயன் இல்லை" என்னும் பொரு ளைத் தந்துள்ளது. கொல் - அசைநிலை. நலம் -பண்புப்பெயர். உறுதி யான உள்ளம் உடையவன் ஆதலின் "மன்னு சுவிசேசன்" எனவும். நன்மை செய்து காத்தவன் ஆதலின் " எம்குரவ" எனவும், இறைவ னின் அருள் உயர்ந்தது ஆதலின் "உன்னத அருள்" எனவும் கூறினன். ¥m፥ 3. வாயிற் காவலன் அறிவுரை கூறுதல்:
ஆத்தும் விசாரிவர லாறினிது கேட்டே மாத்தகைய வேந்தனை வழுத்தியுள் மகிழ்ச்சி பூத்தினைய சொன்மதி புகட்டிடுவ தானுன் காத்துவழி காட்டுகடை காவல னவற்கே.

Page 17
- 20
ப-ரை: ஆத்தும விசாரி வரலாறு இனிது கேட்டு-கிறித்தியனின் வரலாற்றைத் தெளிவாகக் கேட்டு; மா தகைய வேந்தனை வழுத்திபெரிய அருள் நிறைந்த உலகிற்கு அரசஞன இறைவனைத் துதித்து உள் மகிழ்ச்சி பூத்து - மனதில் மகிழ்ச்சி கொண்டு : காத்து வழி காட்டு கடை காவலன் - வருபவர்களைக் காத்துத் தக்க வழியைக் காட்டும் வாயிற் காவலன்; அவற்கு - கிறித்தியனுக்கு இணைய சொல்மதி புகட்டுவது ஆனன் - பின்வரும் அறிவுரைகளைச் சொல்லத் தொடங்கினன்.
வி-ரை: ஆத்துமவிசாரி - ஆத்துமாவின் நன்மையை விசாரணை செய்பவன் கிறித்தியன். ஆத்துமா - உயிர். தகைய=தகைமை + அக தகைமைபுள்ள. வழுத்துதல் - துதித்தல். பூத்தல் - மலர்தல். இணைய-இத்தகைய. தகைய இளைய எ ன் பன குறிப்புவினைப் பெயரெச்சங்கள். மதிசொல் என்பது சொல்மதி என இலக்கணப் போலி ஆயிற்று. சொற்கள் முன்பின்ஞரக மாறிவருதல் இலக்கணப் போலி. அவற்கு = அவள் + கு. இறைவன் அளவிடற்கரிய சிறப்பு களை உடையவராதலின் "மாத்தகைய" எனவும், உலகத்திற்குத் தலைவன் ஆதலின் "வேற்தன்" எனவும், மோட்சவழிக்கு ஆற்றுப் படுத்துவதில் மகிழ்பவள் ஆதலின் " உள்மகிழ் பூத்து “ எனவும் கூறிஞர் ஆசிரியர். s
மீக்குலவு முத்திநக ரத்திறைவன் மேஞட் கோக்குமர னைப்பலி கொடுத்துநமை வேண்டி வாக்குமண மெட்டரிய மாபரசு கத்தை ஆக்கின ரதனருமை யார்புகல வல்லார்.
ப-ரை: மீ குலவு முத்தி நகரத்து இறைவன் - மேலாக உள்ள முத்தி உலகிற்குத் தலைவராகிய கடவுள்; நமைவேண்டி - எங்களின் நன்மையை விரும்பி; மேல்நாள் கோ குமரனைப் பலி கொடுத்து - முற்காலத்தில் தலைவராகிய தமது மகனேப் பலியாகக் கொடுத்து: வாக்கு மனம் எட்டு அரிய - சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டாத உயர்ந்த மா பர சுகத்தை ஆக்கினர் - சிறந்த பெரிய முத்தி இன் பத்தை அமைத்தார்: அதன் அருமை புகல வல்லார் யார் - அம் முத்தியின் பத்தின் சிறப்பைச் சொல்ல வல்லார் யாரும் இலர்.
வி - ரை: மீ - மேல். குலவுதல்-விளக்குதல். மேஞள் = மேல்+ நாள்: கோ-அரசன். வாக்கு-சொல். பரம்-மேலாம் நிலை. புகலல்விளக்கிக் கூறுதல். நம்மை என்பது தொகுத்தல் விகாரம் பெற்று நமை" என ஆயிற்று. பலி-காணிக்கை. எல்லாவற்றிலும் உயர்வுள்ள தாதலின் "மீக்குலவு முத்தி" எனவும், சொல்லாற் கூறவும் மனதால் நினைக்கவும் இயலாதது ஆதலின் "வாக்குமனம் எட்டரிய" எனவும் கூறிஞர். "யார் வல்லார்" என்னும் விஞ "யாரும் இல்லை" என்னும் விடையைத் தந்தது. 34

- 21 -
இத்தகைய சிற்சுக மியைந்திட விழைந்தோர் பித்துலக, நச்சுறுபி ராந்தியை விடுத்தே செத்தொழியு மாறிழி யுடற்குவரு சேதம் எத்துணைய வாயினுமோ ரெட்டுணையு மெண்ணுர்.
ய - ரை: இ தகைய சித் சுகம் இயைந்திட விழைந்தோர் - இத்தன்மையான முத்தி இன்பத்தைப் பொருந்திட விரும்புவோர் : பித்து உலக நச்சு உறு பிராந்தியை விடுத்து - அறியாமை நிறைந்த இவ்வுலக இன்பத்தைப் பொருந்தும் மயக்கத்தை நீக்கி செத்து ஒழியுமாறு இழி உடற்கு வரு சேதம் - இறந்து அழியும் இழிந்த உபஅலுக்கு வரும் அழிவு : எத்துணைய ஆயினும் ஓர் எள் துணையும் எண்ணுர் - எந்தப் பெரிய அளவினதாக இருப்பினும் ஓர் எள் அளவு சிறிதேனும் பொருட்படுத்தார்.
வி-ரை: சித் - அறிவு. விழைதல் - விரும்புதல். பித்து - அறி யாமை; பைத்தியம். நச்சுதல் - விரும்புதல். பிராந்தி - மயக்கம். சேதம் - அழிவு. துணை - அளவு. எட்டுணை - எள் + துணை வி எள் அளவு; மிகச் சிறு அளவு. எண்ணுதல் - மதித்தல். முத்தியிள்ப உயர்வை உணர்த்தற்காகச் "சித்சுகம்" எனவும், உலக இழிவு புலப் படப் "பித்துலக . . பிராந்தி" எனவும், உடலின் இழிவு புலப்படச் "செத்தொழியும் உடல்" எனவும் கூறினர். விழைந்தோர் - வினையா லணையும் பெயர்: எழுவாய். எண்ணர் - பயனிலை,
உகப்புறு பெருங்கிளை யொடேயுரிமை யுள்ள இகப்பய னெவற்றையு மிகந்திறை வனுக்கே அகப்பலி கொடுத்தனன் அன்றியொரு பேரும் மகப்பலி கொடுக்கவு மறுத்திலனேர் வள்ளல். ப-ரை: ஓர் வள்ளல் - ஒப்பற்ற வள்ளன்மையுள்ள ஆபிரகாம் என்பவர் உவப்பு உறு பெரும் கிளையொடு - மகிழ்வுக்கு உரிய தன். பெரிய சுற்றத்தவரையும்; உரிமை உள்ள இகப்பயன் எவற்றையும் இகழ்ந்து - தனக்கு மரபுவழி உரிமையாக வந்த உலகச் செல்வம் அனைத்தையும் கைவிட்டு இறைவனுக்கு அகப்பலி கொடுத்தனன் - கடவுளுக்குத் தன்னே முழுமையாக ஒப்புக்கொடுத்தார்; அன்றி ஒருபேரும் மகப்பலி கொடுக்கவும் மறுத்திலன் . அதுவேயல்லாமல் தன் ஒப்பற்ற ஒரே ஒரு மகனையும் காணிக்கையாகக் கடவுளுக்குக் கொடுக்கவும் இணங்கினன்
வி-ரை: உகப்பு - மகிழ்ச்சி, கிளை - சுற்றம், இகம் - இவ் உலகம், மகவு - மகன். பேறு - செல்வம், இகத்தல் - விலக்குதல், இகப் பயன் -இகம் + பயன், பலி-உணவு, அகம் - உள்ளம், அகப்பலி, முகப்பலி-இரண்டாம் வேற்றுமை உருபு தொக்கது. ஏ-தேற்றம்,

Page 18
- 22
உ -ம் : (1) முற்றும்மை, (2) உயர்வு சிறப்பு. ஆக்கம் பலவுந் தரும் விருப்பு அருச் சுற்றம் என்பார் "உகப்புறு சுற்றம்" எனவும், "உரிமை யுள்ள" அனைத்துப் பொருள்களையும் ஒப்புக்கொடுத்த சிறப்புத் தோன்ற முற்றும்மை கொடுத்து "இசுப்பயன் எவற்றையும்" எனவும், தன்னையும் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தார் என்பார் "அகப்பலி" எனவும், ஒரேயொரு மகன் என்பார் ஒரு பேரும் மகவு" எனவும். தனக்கு உரிய அனைத்தையும் தன்னையும் கொடுத்த சிறப்புத் தோன்ற ஒர் வள்ளல்" எனவும் கூறிஞர். பலிகொடுத்தல் - உணவாக ஒப் படைத்தல். "ஒருவன் என்னைப் பின்பற்றிவர விரும்பிளுல் அவன் தன்னைத் தான் வெறுத்துத் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக் கடவள்" (மாற். 3:84) என்பது வேதமொழி: ஆபிரகாம் இறைவன் கட்டளைப் படி தன் நாட்டையும் இனத்தை பும் விட்டு காஞன் நாட்டிற்குச் சென்ருன் இறைவன் கட்டளைப்படி தன் ஒரே மகன் ஈசாக்கு என்பவனை மோரியா நாட்டு மலையில் கடவுளுக்குப் பலியிட இனங்கினள் என்பது பழைய வரலாறு. 36
இந்நிலம் வியந்திடு மெகிப்திறைமை பூண்ட மன்னுரிமை யாவையு மனக்கொள வரைந்தாண் டின்னலுறு நல்கிளையோ டெண்ணில்பல துன்பம்
பன்னரிய நிந்தையு முழந்தனனேர் பத்தன்.
ப-ரை: ஓர் பத்தன் - இறைவனுக்கு அடிபவன் ஆகிய ஒருவன்: இ நிலம் வியந்திடும் எகிப்து இறைமை பூண்ட- இவ் உலகம் மிகப் புதழும் எகிப்து நாட்டின் அரசனுக ஆளுகின்ற; மன் உரிமை யாவையும் மனக்கொள வரைந்து - அரச உரிமை அனைத்தையும் மன நிறைவுடன் விளக்கி; ஆண்டு இன்னல் உறு தள் கினையோடு - அந்நாட்டில் துன்பம் அடைகின்ற தன் இனத்தோடு எண்ணில் பல துன்பம் - அளவில்லாத துன்பற்களையும் பன் அரிய நிந்தையும் உழந்தனன் - சொல்லுதலுக்கு இயலாத அவமதிப்புகளையும் அனுப வித்தான்.
வி-ரை நிலம் - பூமி வியத்தல் - புகழ்தல் இறைமை - தலைமை அரசுரிமை. வரைதல் - விலக்குதல். உழத்தல் - அணுப வித்தல். பன்னுதல்-சொல்லுதல் எண், பன் என்பன முதனிலைத் தொழிற் பெயர்கள். தொழிற் பெயர் விகுதிகள் தொக்கு வந்தன எண்ணுதல், பன்னுதல் என வரும்
ஒர் பத்தன் என்றது மோசேயை இறைவனிடம் மிக்க பக்தி புள்ளவன் ஆதலின் இவ்வாறு கூறினர். மிகப் பழைய காலத்தில் பாலத்தீன நாட்டை ஆண்டவன். இஸ்ரவேல இனத்தவன். எகிப்து நாட்டின் அரண்மனையில் வளர்ந்தவள் அந்நாட்டு அரசுரிமை இவனுக்கு இருந்தது. தன் இனத்தவர் அடிமைகளாக அந்நாட்டில் அடைந்த துன்பங்களைக் கண்டு மனந்தாங்காது தன் அரசுரிமையை விட்டுத் தன் இனத்தவரை அழைத்துக்கொண்டு பாலத்தீன நாட்டை

- 23 -
அடைந்தான். இதஞல் இவன் பல துன்பங்களே அனுபவித்தான். இவக்ளப்பற்றிய செய்திகள் "பழைய ஏற்பாடு" என்னும் நூலில் allarg 37
துங்கவுல காதிபர் துணைப்பதம் லாலென் அங்கமரி யப்பெறினு மாவியுகு மேனும் எங்கனவி லும்பிற விறைஞ்சுகில னென்ருச் சிங்கமுறு வெங்குகை முடங்கினனேர் தீர்க்கள்.
* ப-ரை: ஓர் தீர்க்கன் - தீர்க்கதரிசி ஒருவன்; துங்க உலக அதிபர் துணைப்பதம் அலால் - பெருமை உள்ள உலகிற்குத் தலைவராகிய இறைவனது இருபாதங்களை அன்றி; என் அங்கம் அரியப் பெறினும் - எனது உடலைப் பிளந்தாலும்; ஆவி உகுமேனும் - உயிர் நீங்குவ தாயினும்; எம் கனவிலும் பிற இறைஞ்சுகிலன் என்ஞ -எம் கனவி லேனும் பிறரைத் தொழேன் என்று சொல்லி; சிங்கம் உறு வெம்
குகை முடங்கினன் - கிங்கம் வாழ்கின்ற கொடிய குகை புள்
கிடந்தான்.
வி-ரை: துங்கம் - உயர்வு. அதிபர் - தலைவரி. துணை - இரண்டு, 4தம் - பாதம்3 அங்கம் - உறுப்பு, ஆவி - உயிர். இறைஞ்சுதல் - துதித்தல்" என்ன - என்று வெம் - கொடிய முடங்குதல்- புறத்தே போகாது உள்ளே தங்குதல்; உகுதல் - நீங்குதல் . தீர்க்கதரிசிஇறப்பு, நிகழ்வு, எதிர்வு ஆகிய முக்கால நிகழ்ச்சிகளை அறிபவன். ஈண்டு தீர்க்கள் என்றது தானியேல் என்பவனையாம். தானியேல் யூதேயா நாட்டு இளவரசன். இவனை நெபுகாத் நெசாரி என்னும் அரசன் பாபிலோனுக்குச் சிறையாகக் கொண்டு சென்ருள். பொற் சிலையை வணங்கும்படி அவன் கட்டளையிட்டான். இறைவனை யன்றிப் பிறபொருள்களை வளங்கேன் என இவன் மறுத்தான். அதஞல் அவன் இவனைச் சிங்கம் உள்ள கு  ைக யு ள் விட்டான். இறைவனின் அருளால் சிங்கம் இவனை ஊறு செய்யவில்லை. "பழைய ஏற்பாடு” என்னும் நூலில் இவனைப்பற்றிய செய்திகள் உள.
பதமலர் - உருவக அணி உம் - எதிர்மறை. எள்ளு - செய்யா என்னும் வாய்பாட்டுத் தெரிநிலைவினையெச்சம், 38
இந்தன மடுக்கிய விருங்கொடிய சூளைக் கொந்தழன் மடுத்தவிறை கோபமென மூண்டு வெந்தெரி யவத்தழவில் வீசியெறி போதுஞ் சிந்தனை கலங்கிலர் திடீங்கொளுமுச் சித்தர். ப-ரை திடம்கொளும் முசித்தர்-உறுதிகொண்ட சித்தர் மூவரி இந்தனம் அடுக்கிய - விறகு அடுக்கிய இரும் கொடிய சூளை - பெரிய கொடிய சூளையின் கொற்து அழல் இறை கோபம் என மூண்டு -

Page 19
- 24 -
தொகுதியான நெருப்பு இறைவனது கோபம் போல உண்டாகி வெற்து எரிய - பரந்து எரிய அ தழலில் வீசி எறிபோதும் - அந்த நெருப்பில் வீசி எறிகின்ற வேளையிலும் சிந்தனை கலங்கிலர் - உள் ாம் தளர்ந்திலர்:
வி~ரை: இந்தனம் - விறகு, சூளை - பெரிய அளவில் நெருப்பு எரிதற்காக விறகு அடுக்கிய அமைப்பு, கொத்து "சொந்து" என மெலித்தல் விகாரம், அழல், தழல் - நெருப்பு. உம் - சிறப்பும்மை, இரும் - பெரிய சித்தர் கலங்கிலர் என்க. சித்தர் - சித்தத்தை உடையவர். சித்தம் - அறிவு, சண்டு சித்தர் மூவர் - சாத்ராக், மேசாக், ஆபேத் நோகோ. இவர்களையும் நெபுகாத் நெசார் தானிய லுடன் காஞன் தேசத்திலிருந்து பாபிலோனுக்குக் கொண்டு சென்றன். அவன் கட்டளைப்படி பொற்சிலையை இவர்கள் வணங்காத படியால் நெருப்பில் இடப்பட்டனர். ஆயினும் இவர்களை நெருப்பு ஊறு எதுவும் செய்யவில்லை. இச்செய்தி 'பழைய ஏற்பாட்டில்" உள்ளது. 39
அவ்வியன் மனத்தினர மார்க்கவெறி கொண்டு வல்லியமெ னக்குழுமி வன்கன்மழை சிதறி கொல்லியம லைந்துமொரு கோட்டமில ஞகி நல்லியன்மொ ழிந்துயிர்வி டுத்தனனேர் நம்பன்.
ப-ரை: ஓர் நம்பன் - அடியவன் ஒருவன் அவ்வியன் மனத் தினரி - பொருமையுள்ள மனத்தினராய் அமார்க்க வெறி கொண்டு - தீயவழியில் மதங்கொண்டு: வல்லியம் எனக் குழுமி-புலிபோலப் பலரி சேர்ந்து; வன்கல் மழை சிகறி- கொடிய கற்களை மழைபோல வீசி; கொல்லிய மலைந்தும் - கொல்வதற்கு துன்புறுத்தியும்; ஒரு கோட்டம் இலன் ஆகி - ஒரு தளர்வும் இல்லாதவராய் நல் இயல் மொழிந்து உயிர் விடுத்தனன் - நன்மை தரும் அறிவுரைகளைக் கூறிற் தன் உயிரை aúdu "mr6âr.
வி-ரை: அவ்வியம்-பொருமை, அவ்வியன் என மொழியீற்றுப் போலி ஆயிற்று. அமார்க்கம் = அ+மார்க்கம், மார்க்கம் அல்லா தது. அ - அன்மைப் பொருள், மார்க்கம் - நெறி, வெறி - மதம், வல்லியம் - புலி. கன்மழை = கல் + மழை. உருவகம். கொல்லியசெய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்; எதிர்காலம். மலைதல் - எதிர்த்தல். கோட்டம் - வளைதல்; தளர்வு. நல்லியல் = நல்+இயல். இயல் - இயல்பு: அறிவுரை,
ஓர் நம்பன் - ஸ்தேவான்; கிறித்துவின் அடியவன். அப்போத் தலர்சளால் தெரிவுபெற்ற ஏழு விசாரணையாளருள் ஒருவன். கிறித்துவைக் குறித்து உறுதியாகச் சாட்சி கொடுத்தார் அதனுல்

- 25 -
பகைவர் இவரை நகரத்திற்கு வெளியே கொண்டு சென்று இவர்மீது கல் எறிந்து கொன்ருர்கள். அப்போது "ஆண்டவரே இவர்கள் மேல் இப்பாபத்தைச் சுமத்தாது இரும்" (அப். 7,60) எனக் கூறி ஞர். இவ்வரலாறு "புதிய ஏற்பாட்டில் உள்ளது: 40
நாடுநகர் காடுக. லாறுபல நண்ணி நீடுபல மோசமடி நிந்தையெறி காவற் கூடமெனு மாகொடிய கூறரிய சாவின் பாடுபல பட்டனனேர் பத்திவயி ராக்யன்,
ப-ரை: ஓர் பத்தி வயிராக்கியள் - கிறீந்து பெருமானிடம் பக்தி வைராக்கியம் உள்ள பவுல் என்பார்; நாடு நகர் கடல் ஆறு பல தண்ணி - நாடுகள் நகர்கள் காடுகள் கடல்கள் ஆகிய பலவ்ற்றை அடைந்து; நீடுபல மோசம் அடி நிந்தை எறி காவற்கூடம் எனும் - நீண்ட பல துள்பங்களையும் அடிகளையும் இகழ்ச்சிகளையும் கல் எறி களையும் சிறைக்கூடம் முதலிய; மா கொடிய கூறு அரிய - மிகவும் கொடியவையும் கூறுதற்கு அரியனவும் ஆகிய; சாவின் பாடுபல பட்டனன் - இறப்புக்கு உரிய பல துன்பங்களை அனுபவித்தான்.
வி-ரை: நண்ணுதல் - அடைதல், மோசம் - துன்பம், காவற் கூடம் - சிறைக்கூடம், கூறு-கூறுதல்; முதனிலைத் தொழிற்பெயர். பாடு - துன்பம், வயிராக்கியன் - வைராக்கியம்; வட சொற் திரிபு. படுதல் - அனுபவித்தல். வைராக்கியன் பாடுபல பட்டனன். மாகொடிய, கூறரிய - அவர் அனுபவித்த துன்ப மிகுதியை உணர்த்துவன. மத்தேயு முதலிய கிறித்து வின் பன்னிரு சீடர்களும் யூதேய நாட்டினர். இவர்களுக்குப் பின் பிற இனத்தவ ரும் கிறித்துவின் சீடராயினர். அத்தகையவருள் பவுல் என்பவரும் ஒருவர் கிறித்துவின் வழியை நிலைநாட்ட உழைத்தவர்களுள் ஒருவர். அதனுல் கிறித்துவின் பகைவர்களின் வெறுப்புக்கு ஆளா ஞர். அவர்கள் இவருக்குப் பல துன்பங்களைச் செய்தனர். அப்போஸ்தலர்களுள் இவரும் ஒருவர். 4.
அம்புவியு வந்தலைய கற்தையர் குரைத்த வம்புமொழி யைப்புரியு பாதியை மதிக்கா தும்பர்மகி மைத்திறமு வந்துயிர் விடுத்தார் செம்பொருள்தெ ரிந்தகுரு தேசிகர் செகத்தில்,
ப-ரை: செகத்தில் செம்பொருள் தெரிந்த குருதேசிகர் - உலகின்கண் மெய்ப்பொருள் வெளிப்படுத்திய ஞானகுருவாகிய கிறித்து பெருமாள்; அம்புவி உவந்து அலை அகந்தையர் குரைத்த்உலக வாழ்வை விரும்பி அலையும் செருக்கு உள்ளவர் சொல்லிய;

Page 20
- 26 -
வம்பு மொழியை புரி உபாதியை மதிக்காது - இகழ்ச்சி வாரித்தை களையும் துன்பங்களையும் பொருட்படுத்தாது; உம்பர் மகிமைத் திறம் உவந்து - தேவதூதர்களின் மகிமைப் பயன்களை விரும்பி alíř cíG948 smrti - Li, o-amur sílil Artř:
வி-ரை : அம்புவி - பூமி அகற்தை - செருக்கு, ஆணவம்: வம்பு மொழி - உண்மையில்லாத வார்த்தை உம்பர் - தேவர்; செம்பொருள் - மெய்ப்பொருள், இறைவன். உபாதி - துன்பம். மகிமை - அருள். திறம் - பயன். தேசிகர் - குரு குருதேசிகர் - குருமாருக்குக் குரு. செகம் - பூமி. குரைத்தல் - கத்துதல். அல் அகந்தையர். குவரத்த, வம்புமொழி என்பன கிறித்துவைப் பழித் தவர்களின் இழிவு மிகுதியை உணர்ந்தின. 'செம்பொருள் கள் டார் வாய்ச் சொல்" என்பது திருக்குறள், புரி உபாதி, அல் அகந்தையர் - விளைத்தொகைகள். 4
கல்லெறி கடுஞ்சிறை கசப்புமொழி கட்கம் நல்குரவு வாரடியில் நைந்துயிர் நடுங்கப் புல்லரிய கான்புதர் பொருப்புமுழை புல்லி எல்லையில் கடுந்துயர மெய்தின ரநேகர்.
ப-ரை: அநேகர்-அடியார் பலர்; கல் எறி கடும்சிறை கசப்பு மொழி கட்கம் நல்குரவுவார் அடியில் நைந்து - கல் எறி, கொடிய சிறை, கொடுஞ்சொல், வாள், வறுமை, கசையடி ஆகியவைகளால் மிக வருந்தி; உயிர் நடுள்க - உயிர் துன்புற புல் அரிய கான் புதர் பொருப்பு முழை புல்லி- செல்லுதற்கு அரிய காடு, பற்றை, மல், குகை முதலியவைகரெ அடைந்து எல்லை இல் கடும் துயரம் எய் தினர் - அளவு இல்லாத கொடிய துன்பங்களை அடைந்தனர்.
வி-ரை : கட்சம் - வாள். நல்குரவு- வறுமை நைதல் - வருந் துதல். புல்லல் - தழுவுதல், தங்குதல். கான் - காடு. பொருப்புமலை. முழை - குகை, கட்கம் என்பது ஆயுதங்களினுற் தண்டனை கொடுத்தமையைக் குறிக்கின்றது. கொள்கை உறுதிக்காக வாழ்வை அர்ப்பணித்தமையின் உளவு உடையின்றி வறுமைக்கு ஆளாயினர் வறுமை மிகக் கொடியது ஆதலின் கல்லெறி, வாரடி ஆகியவைக ளொடு வைத்துக் கூறிஞர். கான்புதர், பொருப்பு, முழை என்பன மிக்க துன்பந் தருவன. "புல்லரிய கான்புதர்.புல்லி", "எல்லையில் கடுத்துயரம்" என்பன அவர்கள் அடைந்த துன்பமிகுதியை உணர்த் தின வாரடியில் - வேற்றுமை மயக்கம். ஐந்தன் உருபு மூன்ரும் வேற்றுமைக்கண் வந்தது: "இல்" உருபைக் கல்லெறி ஆகிய சொற்க ளொடும் சேர்க்க கல்லெறி முதலியவற்றிலும், கான் முதலியவற் றிலும் "உம்" தொக்கது. 43

- 27 -
இன்னவித மாகவிசு வாசிக ளிகத்தில் பன்னரிய பாடுபல பட்டனர் பரத்தே மன்னுமகி மைக்கென வதைந்துயிர் மடிற்தார் இந்நிIைமி சைக்குருதி பேகரி யியம்பும்.
ப-ரை: இன்னவிதமாக விசுவாசிகள் இகத்தில் - இப்படியாக தேவநம்பிக்கை உள்ளவர்கள் இந்த உலகத்தில் : பன் அரிய பாடு LLLLLL LLLLLLLTL L LT J TTT0LTTTT STTLLTTTT S S LLLLLLTTTTT LLL0LS TTTHHL விந்தனர்; பரத்தே மன்னும் மகிமைக்கு என - பரமண்டலத்தில் நிலைபெற்றுள்ள இறைவனின் மகிமைகளுக்காக; வதைந்து உயிர் மடிந்தார் - துன்புற்று உயிர் விட்டனர்; இந்நிலம் மிசை குருதியே கரி இயம்பும் - இப்பூமியில் அவர்கள் சிந்திய இரத்தமே சாட்சி சொல்லும்,
cá0- sing: cáớranroth - [5 thi đảm os, g) sử - gì6ỉioj6ve5... tuprtb. - S LELTT T TTS LLTLSSLLLLLL LL LLLLLS TTLTTS LLTcJTTLTS L0TTTLS அடைதல். வதைதல்-உடல் வருந்துதல். மடிதல் - இறத்தல். மிசை” மேல் ஏழாம் வேற்றுமை உருபு. கரி - சாட்சி. இயம்புதல் - கூறு தல். வதைந்து - தன் விகிா வினெயெச்சம். எண் - இடைச்சொல். அரிய - குறிப்புவினைப் பெயரெச்சம். கிறித் துவும் அவரைப் பின் பற்றியவர்களும் ஆரம்பத்தில் பல இடங்களிலும் அடைந்த துன் பங்களை இச் செய்யும் உணர்த்துகிறது. 44
மற்றிதனை பற்பமும தித்திலன்மென் னெஞ்சள் முற்றுலக சாலவள நூடுமுழு குற்ருன் துற்றுமோர் நறுங்கனி யெனச்சுவை விழைந்தே பற்றியெரி யுஞ்சுடர் விழும்பல பதங்கம்.
ப - ரை மென்நெஞ்சன் - உறுதியான அறிவு பெருத மனத் தினன் ; மற்று இதனை அற்பமும் மதித்திலன் - இதுவரை சொல்லிய, உண்மைகளைச் சிறிதும் சிந்தித்திலன்; துற்றும் ஓர் நறுங்கனி என சுவை விழைந்து - பொருந்திய ஒரு நல்ல கனியென்று சுவையை விரும்பி பல பதங்கம் - பறவைகள்; பற்றி எரியும் சுடர் விழும்பரந்து எரிகின்ற விளக்கில் விழுந்து இறப்பன: அவை போல முற்று உலக சால அளறு ஊடு முழுகு உற்ருன் - சூழ்ந்துள்ள உலகத்து அதிகமான ஆசைச் சேற்றின் கண் முற்ருக அமிழ்ந்தினன்
வி - ரை சால - மிகுதிப்பொருள் தரும் உரிச்சொல் துறுதல் - நெருங்குதல். பதங்கம் - பறவை. பதங்கம் விழும் என இணைக்க நெஞ்சு - அறிவு, ஆகு பெயர். நெஞ்சன் - உறுப்பால் வந்த காரணப் பெயர். நறுங்களி - பண்புற்தொகை, அளறு - சேறு, இஃது உலக

Page 21
- 28 -
வாழ்வுச் சுவையைக் குறித்தலின் உருவகம். " பதங்கம் நறுங்கனி எனச் சுவை விழைந்தே பற்றியெரியும் சுடர் விழும்" -எடுத்துக்காட்டு உவமை. உலக ஆசையாளருக்குப் பறவையும், உலக ஆசைகளுக்குச் சேறும், துன்பங்களுக்குச் சுடரும் உவமைகள். அதுபோல என்பது தொக்கு நின்றது. உலகம் என்பது உலக ஆசைகளைக் குறித்தலின் ஆகுபெயர். ஊடு - ஏழாம் வேற்றுமை உருபு. 45
மிச்சின்மிசை லெளகிக விகாரமுறு குக்கல் சிச்சியென வோடுமது தேர்கிலை திகைத்திட் சச்சுறுகு ரைப்பைநனி யஞ்சினைய மார்க்கப் பிச்சரென வேகிளைபி றங்கல்வழி பேணி.
ய - ரை மிச்சில் மிசை இலௌகிக விகாரம் உறு குக்கல் - எச்சில் உணவை உண்ணும் உலக ஆசை கொண்ட நாயை சிச்சி என ஒடும் - சீ சீ எனச் சத்தம் இட்டால் பயந்து அது ஒடும் ; அது தேர்கிலை-அதனை அறிந்திவாய்; திகைத்திட்டு அச்சம் உறு குரைப்பை நணி அஞ்சினை - கலக்கமடைந்து பயமுறுத்தும் சத்தத்திற்கு மிக அஞ்சினய் பிறங்கல் வழி பேணி . இம் மலை வழியே வந்தும் : அமார்க்கப் பித்தர் என ஏகின - நெறியில்லா அறிவில்லார் போல இடையில் வழிவிலகிச் சென்றன.
வி - ரை: மிச்சில் - உண்டு எஞ்சிய உணவு. மிசைதல் - உன் ணல். இது வினைத் திரிசொல். இலௌகிகம் -உலகச்சார்பு. விகாரம்மாறுபாடு குக்கல் - தாய் தேர்தல் - தெளிதல், அச்சம் என்பது அச்சு எனக் குறுக்கல் விகாரம். குரைப்பு - குரைத்தல். தொழிற் பெயர்: மார்க்கம்-நெறி. பிச்சர் -பித்தர். இடைப்போலி. பிறங்கல்மலை. எகினை, நேர்நிலை-முன்னிலை ஒருமை வினைமுற்றுகள். உலக வாழ் லாம் ஆசையை எச்சிலாகவும், அதனை விரும்பியவன் நாயாகவும், நல் லுணவை முத்தியின்பமாகவும், அறியாதார் வார்த்தைகளைக் குரைப்பு எனவும் உருவகித்தார். திகைத்தல் - மயங்குதல். கிச்சிகுறுக்கல் விகாரம் ; அருவருப்பை உணர்த்தும் இடைச்சொல்; மல் வழி என்பது கிறித்துவின் வழியையும், அச்சுறு குரைப்பு அவ ரொடு மாறுபட்டார் வார்த்தைகளையும் குறிக்கும் 46
அந்நெறி பிடித்துயி ரவிந்தவ ரநேகர் செந்நெறி கதித்தசி மயஞ்சிதறு தீயால் தொன்னெறி விளக்குசுவி சேசநெறி தூய
இந்நெறி விடுத்தவரீ டேறும்வகை யின்ருல்.
ப-ரை அ நெறி பிடித்து அநேகர் - அல்லாதார் கூறும் வழி யைப் பின்பற்றிச் சென்று செந்நெறி கதித்த - செம்மையான நெறி

- 29 ساند.
உண்டாக்கிய சிமயம் சிதறு தீயால் - மலையுச்சி சக்கிய நெருப்பினுல்; உயிர் அவிந்தவர் அநேகரி - உயிர் விட்டவர் பலர் : சுவிசேச நெறி தொல் நெறி விளக்கும் - சுவிசேச நெறி பழைய வழியைத் தெளி வாக்கும் ! தூய இ நெறி விடுத்தவர் - தூய இந்த வழியை விட்ட வர் - தூய நெறியான சுவிசேச வழியை விட்டவர் ஈடேறும் வகை இன்று - உய்யும் வகை இல்லையாகும்.
வி-ரை : அவிதல் - இறத்தல். செந்நெறி - செவ்விய வழி: நியாயப் பிரமாண வழி. சி மயம் - மலையுச்சி. தொன் னெறி = தொன்மை + நெறி. ஈடேறல் - உய்தல். ‘அந்நெறி பிடித்து உயி ரவிந்தவர் அநேகர்" என்பதனல் பிறர் கூறிய நெறியால் பயனில்லை என்பதும் இந்நெறி விடுத்தவர் ஈடேறும் வகையின்ருல்" என்பதனல் இந்நெறியால் பயன் உண்டு என்பதும் அறிவுறுத்தினர். இந்நெறி, அந்நெறி என்பன முறையே கிறித்து காட்டிய நெறி, அவரின் பகைவர் காட்டிய நெறி ஆகியவைகளைக் குறிப்பன ஆல் - சற்றசை, A7
வெவ்வியக ராவயிறு புக்கியுயிர் மீண்ட செவ்வியினை யொத்திவ ணிறுத்தனை சிருரைக் கெளவியலை பூசைமுறை காண்டியது போலுந் தைவிகம காகிருபை தாங்குவது நம்மை.
ப-ரை: வெவ்விய கராவயிறு புக்கு உயிர் மீண்ட - கொடிய முதலையின் வயிற்றினுட் புகுந்து பின்பு உயிருடன் வந்த செவ்வியை ஒற்று - செவ்விய இயல்பைப் போன்று இவண் இறுத்தனை - இவ் விடம் வந்தனை; பூசை சிருரைக் கெளவி அலை முறை காண்டி - பூனையானது தன் குட்டிகளைக் கெளவிக்கொண்டு இடந்தோறும் அலைவதனைப் பார்த்திருப்பாய்; அது போலும் - இதுவும் அது போன்றது: தைவிக மகா கிருபை நம்மைத் தாங்குவது போலும் - தேவனின் பெரிய கருணை எங்களைப் பொறுப்பேற்கும்.
வி-ரை: கரா - முதலை. சிருர் - சிறுவர் பூசை - பூன. தைவிகம்-தெய்வம் இறுத்தல்-அடைதல். வெவ்விய=வெம்மை + இ+அ. அயூைசை - வினைத்தொகை. பெரும் ஆபத்திலிருந்து தப் பினய் என்பான் "வெவ்விய கரா வயிறு புக்கியுயிர் மீண்ட செவ்வி யினை ஒத்து இவண் இறுத்தனை" என்ருள்: இதிலுள்ள உவமை வினையுவமை, தைவிக மகா கிருபை நம்மைத் தாங்குதற்குப் பூசை சிருரைத் தாங்குதல் உவமை, இதுவும் வினையுவமை தைவிகம் - தெய்விகம்; வடசொல் (8

Page 22
- 30 -
ஆதலின ருந்துணைவ வாற்றரிய சும்மை சோதனைய எக்கணிடர் துற்றியடு போதும் ஆதிமுதல் வன்றிருவ ருட்டுணைய வாவி மேதகைய சீவநெறி விட்டுவில கேலே.
ய - ரை: ஆதலின் - ஆதலிஞல்; அருந்துணைவ - அரிய சகோ தரனே, ஆற்று அரிய சும்மை சோதனை அலக்கண் இடர் துற்றி அடுபோதும் - தாங்குதற்கு அரிய பாரம் சோதனை துன்பம் அபாயம் ஆகியவை நெரும்வெருந்திய போதிலும் : ஆதி முதல்வன் திரு TTT TT STTLLTTT STTTTTT TTTTL LTLLLLLLL LLLLLLLT TTLLLLLLLLS S மேதகைய சீவநெறி விட்டு விலகேல் - மகிமை உள்ள முத்திவழியை விட்டு விவகாதே.
sfi - any : sôgså) - #m tẽe5.g ở. vĩ tử so La - turprib. sojov &&alưதுன்பம். துற்றுதல் - நெருங்குதல். அவாவுதல் - வேண்டுதல். சீவ நெறி - முத்திநெறி, அனைத்து உயிர்களும் இறைவனின் பிள்ளைகள் ஆதலின் ஆத்தும விசாரியைத் திட்டிவாயிற் காவலன்' துணைவன்" எனவும், மோட்ச பிரயானத்தை மேற்கொண்டமையின் "அருந் துணைவன்" எனவும், மோட்ச பிரயாணம் உயிர்கள் உய்வதற்கு வழி காட்டலின் அதனைச் "சீவநெறி" எனவும் கூறினன். உம் - எதிர்மறை, விலகேல்-எதிர்மறை வினைமுற்று துணைவ - அண்மை விளி 49
என்றினைய வாறு சொலி பெம்பியிது மார்க்கம் வென்றியர சன்பணி விதிப்படி பிதாக்கள் நன்றியறி தீர்க்கருயிர் நல்குந மிளங்கோ பின்றையடி யாரிவர் புதுக்கினர் பிறங்க. ப-ரை : என்று இனைய ஆறு சொல்லி - என இவ்வாறு அறி வுரை கூறி, எம்பி - தம்பியே இது பார்க்கம் - இதுவே வழி வென்றி அரசன் பணி விதிப்படி - வெற்றியைத் தரும் இறைவன் இட்ட கட்டளைப்படி; பிதாக்கள் நன்றி அறி தீர்க்கர் உயிர் நல்கு நம் இளங்கோ - ஆதித் தந்தையர்களும் நன்மையை அறிந்த தீர்க்கதரிசி களும் உலகத்திற்காகத் தம் உயிரைக் கொடுத்த தேவகுமாரராகிய இயேசு பெருமானும்; பின்றை அடியார் இவரி - பின்வந்த அடிய வர்களும் பிறங்கப் புதுக்கினர் - விளக்கமுற வழிகாட்டியுள்ளனர். வி-ரை: எம்பி - எமது தம்பி. அரசன் - இறைவன். நன்றிநன்மை இளம் கோ - இயேசுநாதர். பிள்றை-பின்பு. பிறங்குதல் - விளங்குதல். பிறங்க - விளையெச்சம்; புதுக்கினர் என்றும் விண்முற் ருெடு முடிந்தது. எம்பி - அண்மை விளி, பிதாக்கள் - ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே, தீர்க்கதரிசகள்-தானியேல், சாமுவேல் முதலியோர். ஆதியில் வழியை வகுத்தவர் ஆதலின் "பிதாக்கள்? என்ரு வி. அறிதீர்க்கன் - வினைத்தொகை, 50

- 31
நேர்வழி நெருக்கவழி நின்மல நகர்க்குச் சேர்வழிதி கைப்பில்வழி சிவவழி சீர்சால் ஒர்வழியி தன்றியிலை யுண்மைவழி கும்பிப் பேர்வழிய துற்றலைபி ராந்தரு மநேகர்.
ப-ரை: நின்மல நகர்க்குச் சேர்வழி நேர்வழி - அழுக்கு இல் லாத இறைவனின் இடத்திற்குச் செல்லும் வழி நேரான வழி: நெருக்க வழி - நெருக்கமான வழி; சீவ வழி - உயிர்கள் உய்வதற் கான வழி; சீர்சால் ஓர் வழி - சிறப்புப் பொருந்திய ஒப்பற்ற வழி: இது அன்றி உண்மை வழி இல்லை - இந்த வழியை விட்டு நல்ல வேறு வழி எதுவும் இல்லை; கும்பிப் பேர்வழி அது உற்று - நரகத் திற்கு உரிய பெரும் வழியை அடைந்து அலை பிராந்தர் அநேகர் - அல்கின்ற பித்தர்கள் பலர் ஆவர்.
வி-ரை: நின் மலம் = நிர் + மலம் = மலம் இல்லாமை "நிர்" என்பது எதிர்மறைப் பொருள் தரும் முன்ஒட்டுச்சொல். இல்லை - இருதிணை ஐம்பால் மூவிடங்கட்கும் பொதுவான குறிப்பு விக்ன முற்றுச் சொல்; இலை எனத் தொகுத்தல் விகாரம் ஆயிற்று. கும்பி - நரகம் அது - சாரியை பிராந்தர் - பித்தர். உம் - எச்சவும்மை. எழுவாப் - பிராந்தர். பயனிலை - அநேகர். பெயர்ப்பயனிை 5.
பாவச்சுமை நீங்கும் வகையைத் தெரிவிக்கும்படி கிறித்தியன் காவலன வேண்டல் :
இக்குறிம னக்கொடினி யேகுகென வுள்ளம் நெக்குருகு நேயனெடு வேதியணி கழ்த்தும் தக்கநெறி சார்வலைய தாங்கரிய தாமிப் பொக்கணம் விழுந்திலது புண்ணியமு னக்கே. ப - ரை: இக்குறி மனக்கொடு இனி ஏகுக என - இக் குறிக்கோளை மனதிற்கொண்டு இளிச் செல்வாயாக என்று உள்ளம் நெக்கு உருகு நேயனெடு வேதியன் நிகழ்த்தும் - உள்ளம் மிக உருகும் அன்பினனன வாயிற் காவலனிடம் கிறித்தியன் சொல்லுவான் ஐய தக்கநெறி சார்வல் - அன்பனே தக்க இந்த நெறியே செல்வேன் ; தாங்க அரிது ஆம் இப் பொக்கனம் விழுத்திலது - தாங்குதற்கு இயலாத இச் சுமை என்னைவிட்டு அகலவில்லை ; உனக்கே புண்ணியம் - இது விலகும்படி செய்வையாயின் அதனுல் உனக்குப் புண்ணியம் ஆகும்: வி - ரை: மனக்கொடு = மனம் + கொண்டு ஏழாம் வேற்று மைத் தொகை, கொடு - தொகுத்தல் விகாரம். கொடினி = கொடு+ இனி, ஏகுகென  ைஏகுக + என ஏகுக - வியங்கோள் வினைமுற்று.

Page 23
- 32
வேதியன் - வேதத்தை ஒதுபவன்; சார்வல் - தன்மை ஒருமை வினை முற்று. அல் - தன்மை ஒருமை விகுதி. பொக்கணம் - சுமை ஏ - தேற்றம், உம் - உயர்வு சிறப்பு. புண்ணியம் என்னும் பயனிலை ஆகும், வரும் எனத் தோன்ருப் பயனிலை கொண்டது. சுமை என்பது பாவங்கள். இஃது உருவகம். 53
வேறுநினை வில்லைவெரிந் மீதறவு மேன்மேல் ஏறுசுமை யான்மிகவி கிளத்தனனெ னக்கோர் ஆறுதலு மில்லையினி யஞ்சலென நின்போல் தேறுதல் செய் வாருமெதிர் வார்கொல்தெரி யேனல். ப-ரை: வேறு நினைவு இல்லை - வேறு நினைவு எனக்கு இல்லை; வெரிந் மீது அறவு மேன்மேல் ஏறு சுமையால் மிக இளைத்தனன் - முதுகின்மேல் மிகவும் மேலும் மேலும் வருகின்ற பாரத்தினுல் மிகவும் இளைத்தேன்; எனக்கு ஓர் ஆறுதலும் இல்லை - எனக்கு ஒருவகை அமைதியும் இல்லை; இனி அஞ்சல் என நின்போல் தேறுதல் செய் வாரும் - இனிமேல் அஞ்சாதே என உன்னைப்போல் ஆறுதல்மொழி சொல்வாரும் இல்லை எதிர்வார் கொல்-வருவார்களா? தெரியேன் - அறிந்திலேன்.
வி-ரை: வெரிந்-முதுகு. நகர ஈற்றுச் சொல். கொல் - ஐயப் பொருளில் வந்தது. தேறுதல் - தொழிற் பெயர். ஆல்-ஈற்றிசை, தன் ஆற்ருமை நிலையினை இவ்வாறு கூறி வெளிப்படுத்தினுள் மிக விளைத்தனன் = மிக + இளைத்தனன். 53
கிறித்தியனின் பாவச்சுமை நீக்கும் வழியை
வாயிற்காவலன் கூறுதல்:
யாதினியி யற்றுவலி ரட்சைபெற வென்ஞ ஒதலும்ம லங்கலையி ருங்குருசு யர்த்த மாதலம டுக்கினுன வன்சுமடு வல்லே போதரும லாதொருவர் போக்கமுடி யாதால்,
ப-ரை இரட்சைபெற இனி யாது இயற்றுவல - இரட்சிப்பைப் பெறுதற்கு இனிமேல் யாது செய்வேன்; என்ன ஓதலும் - என்று கிறித்தியன் சொல்லுதலும் மலங்கலை - வருந்தாதே; இரும் குருக உயர்த்த மாதலம் அடுக்கிள் - பெரிய சிலுவை நடப்பெற்ற மகிமை தங்கிய இடத்தை அடையின்; உன வன் சுமடு வல்லே போதரும்உனது கொடிய பாவச்சுமை விரைவாக நீங்கும்; அலாது ஒருவர் போக்க முடியாது - இவ்வாறன்றி வேருெருவர் இச்சுமையை நீக்க Qplgates

--سے 33 --س۔
வி-ரை இரட்சை - இரட்சிப்பு. என்ன - என்று. மலங்கல் - வருந்துதல் குருசு - சிலுவை. தலம் - இடம். சுமடு - சுமை, போதரும் = போதல் + தரும் = விலகும். இயற்றுவல் - தன்மை ஒருமை வினைமுற்று. உம் - எச்சவும்மை. மலங்கலை - முன்னிலை ஒருமை வினைமுற்று, அடுக்கின் - எதிர்கால வினையெச்சம். இது போதரும் என்னும் வினைமுற்றெடு முடிந்தது. ஆல் - ஈற்றசை பாவச்சுமைகளை நீக்கும் பெருமையால் " இருங்குரிசு ", "மாதலம் " எனக் கூறினன், 54
இப்பகல்க Nந்திடுமுன் னிந்நெறியி னேர்சார் மெய்ப்பொருள் விளக்குபவன் வீடெதிர்வை யங்குறி றப்பனுவ லாளணுே டமர்ந்துவின வுங்கால் எப்பரிசு நன்குறவி சைப்பனியல் பென்ன. ப - ரை: இ பகல் கழிந்திடுமுன் - இந்தப் பகல் வேளை நீங்கமுன்: இ நெறியதின் ஓர் சார் - இவ் வழியின் ஒரு பக்கலில் மெய்ப் பொருளைத் தெளிவுபடுத்தும் வியர்க்கினி என்பவனது வீட்டை நேரில் காண்பாய் அங்கு உற்று அப் பனுவலாளன் ஒடு அமர்ந்துஅங்கு சென்று அந்த அறிஞனெடு இருந்து வினவுங்கால் - கேட் டால் எப் பரிசு நன்கு உற இசைப்பன் - எல்லாத் தன்மைகளையும் நன்கு பொருந்தச் சொல்லுவான் இயல்பு என்ன - அஃது அவனது இயல்பு என்று சொல்லி,
வி-ரை: சார் - பக்கம். எதிர்வை - காண்பாய். பனுவல்-நூல் வேதம், பரிசு - தன்மை இசைத்தல் - சொல்லுதல். எதிர்வை - முன்னிலை ஒருமை வினைமுற்று. வினவுங்கால்-எதிர்கால வினையெச்சம். வேத நூலறிவில் வல்லவன் ஆதலின் ' பனுவலாளன்" என்ருன் வியாக்கியானம் செய்பவர் வியாக்கிணி. வியாக்கியானம்- விளக்கம் இவருக்குப் பரிசுத்த ஆவி எனவும் பெயர் 55
கிறித்தியன் இறைவனை வாழ்த்திப்
பிரயாணத்தைத் தொடர்தல்:
சோகமற நன்மொழிதொ குத்தினைய கூறி ஏகுகென வாசிவிடை யீந்தனன்வி சாரி ஒகையொடு மஞ்சலியொ முக்கமுறை நல்கி மாகநக ராதிபனை வாழ்த்திவழி போனன். ப-ரை சோகம் அற நன்மொழி தொகுத்து இனைய கூறி -
கிறித்தியனது கவலை நீங்கும்படியாக நல்ல அறிவுரைகளை ஒருங்கு
இணைத்துச் சொல்லி ஏகுக என ஆசிவிடை சந்தனன் - செல்வா
Q-3

Page 24
- 34 -
பாக என வாயிற்காவலன் வாழ்த்தி விடை கொடுத்தான் விசாரி அசையொடும் அஞ்சலி ஒழுக்கமுறை நல்கி - கிறித்தியன் மகிழ்ச்சி பொடு தன் வணக்கத்தை உரிய நன்முறையாக வாயிற் காவலனுக் குதி தெரிவித்து மாக நகர அதிபனை வாழ்த்தி வழி போனன் - விண்ணுலகிற்குத் தலைவராகிய இறைவனை மனமொழி காயம் மூன்றி குலும் துதித்து மோட்சப் பிரயாண வழியைத் தொடர்ந்தான்;
வி-ரை: சோகம் - கவ.ை ஏகுகெனவாசி மஏகுக+ என+ஆசி; ஒகை - மகிழ்ச்சி. அஞ்சலி - வணக்கம் மாகம் - விண். அதிபன்இறைவன். புதிய முயற்சியை மேற்கொள்ளுங்கால் வாழ்த்தி விடை கொடுத்தல் மரபு. என்றும் பேரின்பமான மோட்சத்தில் விருப் பத்தை உண்டாக்கி இடையில் வந்த இடர்களை நீக்கி இறைவன் உதவுதலினுலும் பிரயாணத்தை நிறைவேற்ற இறைவன் அருள் வேண்டுமாதலிகுலும் ஒரு முயற்சியைத் தொடங்கும்போது இறை வண் வாழ்த்துதல் மரபு ஆதலாலும் இறைவனின் அருளின்றி எதுவும் அசையாதாதலினலும் "மாகநக ராதியன வாழ்த்திவழி போனன்” என்ருர் ஆசிரியர். இது புலவர் கூற்று; 56

சிறப்புக் குறிப்புக்கள்
இப் படலத்து வரும் உவமைகள்:
வன்ருெ டர்ப்படு மான்விடு பட்டென" "மலர்ந்த வசனம் போல " இருங்கொடிய சூளைக் கொந்தழல் மடுத்த இறை கோபமென" * சுமார்க்கப் பிச்சரென " * வல்லிய மெனக் குழுமி" * கராவயிறு புக்கியுயிர் மீண்ட செவ்வியினை ஒத்து " "எள்ளுண்டாலும் இழிபுலையன் என " t "நறுங்கனி யெனச் சுவை விழுந்து பற்றி எரியும் சுடர் விழும்
பல பதங்கம்* " சிருரைக் கெளவி அலைபூசை முறை. . . போலும்"
உருவகங்கள்:
* வெஞ்சாபக் கொழுங்கனல் ", * ஊன் மனத்திருள் " *ஆன்மஞான அவிரொலி " ஆசாபாசக் கொடுஞ்சுழல்" " வன்கண் மழை சிந்தி".
இப் படலக் கதைப் பாத்திரங்கள்:
கிறித்தியன், சுவிசேடகன், மென்னெஞ்சன், உலோக விவகாரி திட்டிவிட வாயிற் காவலன், அலகைக் கிறை, சகாயன்.
இப் படலம் குறிப்பிடும் பெரியோர்கள்:
இயேசுக் கிறித்து, ஆபிரகாம், மோசே, தானியேல், சாத்தாக், மேஷாக், ஆபேத்நேகோ. ஸ்தேவான்.
இப்படலம் குறிப்பிடும் வரலாற்றுச் செய்திகள் w
"இகப்பயன் எவற்றையும் இகந்து. . . . . .
மகப்பயன் கொடுக்கவும் மறுத்திலன் ஓர் வள்ளல்" " . எகிப்திறைமை பூண்ட மன்னுரிமை யாவ்ையும் மனக் கொள வரைந்து ஆண்டின்னலுறு தன்கிளையோடு கண்ணில் ப்ல துன்பும் பன்னரிய துன்பும் உழந்தனன் ஓர் பத்தன்" " துங்க உலகாதிபர் துணைப்பதமலால் . . . . .
எங்கனவிலும் பிற இறைஞ்சுகிலன்"என்னச்"சிங்கமுறு"வெங் குகை முடங்கினன் ஒர் தீர்க்கன்"

Page 25
வெந்தெரியத் தழலில் வீசியெறி போதும் சிந்தை கலங்கிலன் திடங்கொளு மூவர்" அவ்விய மனத்தினர் அமார்க்கவெறி கொண்டு. . .
கொல்லிய மலைந்தும் கோட்டமில னகி நல்லியன் மொழிந்துஉயிர் விடுத்தனன் ஒர்நம்பன்" * நாடுநகர் காடுகடல் ஆறுபல நண்ணி
பாடுபல பட்டனன் ஒர் பத்திவயிராக்யன்" "அம்புவி யுவந்துஅலை அகந்தையர். . . . . . ------------ "... . . . . . e-lutsson udsåsts உம்பர் மகிமைத் திறம் உவந்து உயிர் விடுத்தார் செம்பொருள் தெரிந்த குருதேசிகர் செகத்தில் " * கல்லெறி கடுஞ்சிறை கசப்புமொழி கட்கம்
நலகுரவு வாரடியில் நைந்துஉயிர் நடுங்க
எல்லையில் கடுந்துயர் எய்தினர் அநேகர்" திருக்குறட் கருத்து வந்த தொடர்கள்
" உதவாதொருவர் ஆற்றுமுதவிக்கு வையகமும் வானகமும்
ஆற்றல் அரிது" * செம்பொருள் தெரிந்த தேசிகர்." இப்படலத்து வந்த வடமொழிச் சொற்கள்:
தயாபதி, ஆன்மஞானம், தூலம், ஆரணியம் கிருபை, ஆசா பாசம், தஹிக்கு, ஜீவதாரு, சருவலோக, விசிகம், சஹாயன், விவ காரி, சுவிசேஷம், கன்மம், ஆத்தும விசாரி, பரசுகம், பத்தன், தீர்க்கன், வயிராக்யன், தேசிகர், ஜெகம், விசுவாசி, us ši Fuh, தைவிகம், சோதனை, ஜீவ, மார்க்கம், பிராந்தர், ரக்ஷை, புருடர், குதர்க்கர், சுருதி. இறைவனைக் குறிக்கும் சொற்கள்:
அருளோங்கிய வேந்தன், மாதகைய வேந்தன், நீதியாதிபதி, மாதயாபரன், வள்ளல், நிருபன், முத்திநகரத் திறைவன், உல காதிபர், ஆதிமுதல்வன், மாநகராதிபன், தூயபெருமான், கருணை வரதன், தேவர்பிரான், வென்றியரசன். இயேசு பெருமானைக் குறிக்கும் சொற்கள்
குமாரநாயகன், கோக்குமரன், திருக்குமாரன், வள்ளல், குருதேசிகர், சருவலோகசரணியன், நம்இளங்கோ,

இப்படலக் கதாநாயகன் கிறித்தியன் இயல்புகளேக் குறிக்கும் தொடர்புகள் : " தயா பதி சித்தமென்று உள்ளுண்டாயவொ ரூக்கமொடு
ஏகினன்" * ஆன்ம ஞானத்து அவிரொளி நாடியக் கானகத் தெவையுங்
கருதாதுபோய் வானுறுங் கடைவாயிலை நண்ணினுன் " "தூய பெருமான் திருவடிக்குத் தொழும்பன்" "ஆசாபாசக் கொடுஞ்சுழல் அகப்பட்டுலைந்தேன் அருளணுக
நாசதேசந் துறந்தேன் நாயேன்” "வள்ளல் திருவாக்கது கேட்டுவந்தேன்" "கல்லேன் சுருதி நலம்புரியக் கருதேன் பாவஞ் கசந்திடேன்.
பொல்லேன் எனினும் போகேன்" - "ஆருக் கொடிய பசிதாக மடங்கத் தணிய .
கருணை வரதன்பால் வந்தேன்" * பாவம் மீறியலை காடுதுந்நி யலைபட் டழுங்கிஅயர்
பாவியான் ஜீவமாநதியின் நீரருந்த அதிதேட்டமுண்டு" * நீதியாதிபர் சினந்தகிக்கு நெறிநின்று தப்பி
நெறிப்படீஇ மாதயாபரன் அடித்தொழும்பு செயவந்த பாவி' " சேருமா கொடியதீ வினைத்திரள் சுமந்து இளைத்து
ஜீவநற்தாரு நீழல் ஒதுங்கி உய்யவரு தமியன்" * கொடியரிற் கொடியன் புலையரிற் புலையன் ஆயினும்
குமாரநாயகன் அடியருக்கு அடியன்’ " சருவலோக சரணியனை நம்பிவரு தமியன்” * இடுக்கவாயில் எதிர்ந்து அதனுட்புக் அடுக்குமோ வெணக்கு" * எஞ்சலில் உணர்ச்சி பரிதாபம் இதயத்தில் விஞ்சஉள
இவன் வாய்மொழி விளக்கும் வஞ்சமிலனும்" "ஈசனை வழுத்தி இயம்புவன் விசாரி" * விளம்பரம் அடுத்தது . மனமக்கட்கு உளம்பட உரைத்தது
ஒரீஇ மதிமயக்கித் தளம்பியது,
சுவிசேசன் உரைதந்து வளம்பெற விடுத்தது" * பெருஞ்சுமையோடு வழிபிடித்தது. . . .நொதி வீழ்ந்தது" * உதவிசெய்து கரையேற்றி உரம்பயில் சகாயன் விவரித்தது"
உலோக விவகாரி உய்க்க. கிரித்தலை நெருங்கியது" "சுருதிதந்த முனிவந்து மீண்டுவழி பற்றென மதிசொல்லித் தூண்ட...ஈண்டியதும்"

Page 26
- 38 -
* தக்தநெறி சார்வல் ஐய தாங்கரியதாம் இப்
பொக்கணம் விழுத்தியது; வேறு நினைவில்லை" * வெரிந் மீதறவும் ஏறுசுமையான் மிகவிளைத்தனன்" * எனக்கோர் ஆறுதல் இல்லை அஞ்சலெனத் w தேறுதல் சொல்வாரும் உளர்கொல் யாதினி" "இயற்றுவல் இரட்சைபெற வீடெதிர்வை ஏகுகென" 'ஒகையொடும் அஞ்சலி ஒழுக்கமுறை நல்கி மாநக ராதியனை வழுத்திவழி போனன்" சில கதைப் பாத்திரங்களின் இயல்புகள்:
சுவிசேடகன் : * நேர்ந்த தவப்பய னெனச்சுருதி தந்தமுனி
வெகுண்டுமதி சொல்லித் தூண்டி" " மன்னு சுவிசேடகன், "உரம்பயில் சகாயன்' * கதவுதட்டி நனிஓலமிட" திட்டிவாயிற் காவலன்
"உள்ளுருகி உள்ளா மன்னுகடைக் காவலன்" "காத்துவழி காட்டு கடை காவலன்" "உள்ளம் நெக்குருகு நேயன்" saunäSof : V
"மெய்ப்பொருள் விளக்குபவன், பனுவ லாளன்" மென்னெஞ்சன் : பின்னிடு மென்நெஞ்சன்" உலோகவிவகாரி: "உலோக விவகாரி அவப்பயனெனக் குறுகி அலகைக்கு இறை : ۔۔
" நெருக்குறு வாயில் நேடி வருவோரை வெருக்கொள வெருட்டி விசிகங்பல விடுத்து முருக்கும்", "துருக்கம் மொய்ப்பினெடு தங்கும்", "குரல் யாதென எதிர்ந்து வெகுண்டு அடர்ந்து உயிர் அழித்து நுங்குவன்". இப்படலத்தில் வரும் கிறித்தசமயக் கருத்துக்கள்:
" ஓர் திருக்குமாரனைச் சிந்தையுளே தரித்து இருக்கும் ஆரணரே
இகல் யாவையும் ஒருக்கும் ஆற்றலர்" " திருடர் வஞ்சகர் காமிகள் செல்வமார் குருடர் மற்ருேர் உரிமை யைக் கொள்ளை கொள் முருடர் கோபிகள் மூர்க்கர் குதர்க்கராம் புருடர்க்கு ஈண்டு புகல் அரிதாகும் " * ஏழைகாள் நின்று தட்டுமின் நீங்கிடும் நீள் கதவு"
உள்ளந் திரும்பிக் குணப்படுவீர் உய்மின்" "மாய வுலக மயக்கறுத்த வரையாக் கிருபை தந்தளித்த தூய
பெருமான் "

- 39 -
ஆருக் கொடிய பசிதாகம் அடங்கத் தணிய அழுதுளிக்கும் மாருக் கருணை வள்ளல்" * நிருபன் நீதியின் நிலத்திழிந்து பலிநேர்ந்து இரட்சையருள்
நேமியர்ம் சருவலோக நாயகன்" " மன்னு சுவிசேடன் மறுத்தெதிர் வரானேல் என்னிலை விரைந்து
கெடும்? * இறைவன் மேஞள் கோக்குமரனைப் பலிகொடுத்து நமை வேண்டி வாக்குமனத்து எட்டரிய மாபரசுகத்தை ஆக்கினர்"
"நற்சுகம் இயைந்திட விழைந்தோர் பித்துவாக நச்சுறு பிராந் தியை விடுத்தே . . . . . . .உடற்குவரு சேதம் எத்துணைய வாயினும் ஒரெட்டுணையும் எண்ணுர்"
* தொன்னெறி விளக்கு சுவிசேடநெறி தூய இந்நெறி விடுத்த
வர் ஈடேறும் வகை இன்ருல் "
* தைவிக மகா கிருபை தாங்குவது நம்மை"
• உலகாதிபர் துணைப்பதமலால் அங்கம் அரியப் பெறினும் ஆவி யுகுமேனும் கனவிலும் பிற இறைஞ்சுகிலர்"
* விசுவாசிகள் இகத்தில் பன்னரிய பாடுபல பட்டனர் பரத்தே மன்னு மகிமைக்கென வரைந்து உயிர் மடிந்தார்" - * மிச்சின்மிசை லெளகிக விவகாரம் உறுகுக்கல் சிச்சீஎன ஒடும் " " ஆற்றரிய சும்மை சோதனை அலக்கண் இடர் துற்றியடு போதும் ஆதி முதல்வன் திருவருட்டுணை அவாவி மேதகைய சீவ நெறி விட்டுவிலகேல் " இது மார்க்கம் வென்றியரசன் பணி விதிப்படி பிதாக்கள் நன்றி யறி தீர்க்கர் உயிர்நல்கு நம் இளங்கோ பின்றை யடியார் இவர் புதுக்கினர் பிறங்க"
* நேர்வழி நெருக்கவழி நின்மல நகர்க்குச் சேர்வழி திகைப்பில் வழி சீவவழி சீர்சால் ஓர்வழி இதன்றியிலை உண்மைவழி கும் பிப் பேர்வழி துற்றிஅலை பிராந்தரும் அநேகர்" * இருங்குருசு உயர்த்த மாதலம் அடுக்கின் வன்சுமடு வல்லே
போதரும்; அலாது ஒருவர் போக்க முடியாது"
* பனுவலாளருேடு அமர்ந்து வினவுங்கால் எப்பரிசு நன்குற
இசைப்பன் இயல்பு." س

Page 27
=
40 - - - يص
3.
i.
O.
இப்படலம் கூறும் கதை நிகழ்ச் இப்படலத்தில் அமைந்துள்ள இல
இப்படலத்தில் வரும் கிறித்த சம
கடை திறப்பு என்னும் பெயர் என்பதை ஆராய்க,
இந்நூலாசிரியரின் புலா மயாற்ற? ஆராய்க்,
இடஞ்சுட்டி விளக்குக: "ஜீவமாநதியின் நீரருந்த அதி "ஐய, உத வாதொருவர் ஆற் வெப்கமும் வானகமும் ஆற்ற " மற்றவை துலங்க ஒளிதுன்னு
கிடைத்தக் கழித்தறிதி"
இப்படலத்துக் கதாநாயகனின் கு
இரட்சணியயாத்திரிக ஆசிரியரின் துணேகொண்டு விளக்குக.
பின்வருவனவற்றை விளக்குக. திட்டிவாயில், வியாக்கினி, சுவி
இப்படலத்தில் வரும் செய்யுள்நடை நூலாசிரியர் காலத்தை மதிப்பிடுத

சியைத் தொகுத்து எழுதுக,
க்கிய வளத்தினே எடுத்துக் காட்டு,
யக் கருத்துக்களே எடுத்துக் காட்டுக.
இப்படலத்திற்குப் பொருந்துமா
ல இப்படலத்தின் துணேகொண்டு
திேட்டம் உண்டு " று முதவிக்கு வரிது"
ம் கான்டகு
ன இயல்புகளே ஆராய்க.
புலிமையாற்றலே இப் படலத்தின்
GFLAGGä
சொற் பிரயோகங்கள் என்பன இந் ற்கு உதவும் வகையினே ஆராய்க.