கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பண்டிதர் சபா ஆனந்தர் நினைவுப்பேருரை

Page 1
暈
譚鑫*曇華鑫
".
--
==
باسك
இணு
LJ9jiL2:5í GL B.A (Lord) BC
நினைவுட்
92,
அbனந்
ጋt _ | pp
一烹一 Չ9 - 05
豁
蠱 : ؟ حكايلي_="#
薔熹薔臺鑫華尋議
 

வில்
JIT ġeb6OJ551
O.L. (Madras)
பேருரை
- 2005
--
懿
燕
تسكي تظ 蠱惑眾蕊蕊蕊零華鑫

Page 2

இணுவில் w பண்டிதர் சபா ஆனந்தர்
B.A (Lond) BOL. (Madras)
நினைவுப்பேருரை
ཡོད

Page 3
e N
பேரறிஞர் பண்டிதர் சபா ஆனந்தர் அவர்களின் நினைவுப் பேருரை
“மன நிறைவான வாழ்வு”
வழங்கியவர் வைத்திய கலாநிதி வி ஜெகநாதன் அவர்கள்
ஆதிமனிதன் தொடக்கம் இன்றைய மனிதன் வரை எல்லோருமே 'மன நிறைவான வாழ்வு" வாழ்வதற்காக தங்களது வாழ்க்கையை பல விதமான முயற்சிகளிலும் பயிற்சிகளிலும் அர்ப்பணித்திருக்கின்றனர். மன நிறைவான வாழ்வே தமது நோக்கம் எனக் கருதி அக் குறிக்கோளுக்காக ஒவ்வொரு நாளும் தமது வாழ்க்கையை திட்டமிடுவதிலேயே அவர்களின் வாழ்நாட்களைக் கழித்து விடுகினி றனர் . மனநிறைவான வாழி வு என்றுமே ஒரு கேள்விக்குறியாகவே இருந்து விடுகிறது. வாழ்நாள் முழுவதும் அமைதியற்ற, மகிழ்ச்சியற்ற, மனநிறைவற்ற வீண் நாட்களாகவே முற்றுப்பெறுகின்றன. இந்த அவலநிலைக்கு காரணம் என்ன என்பதைக் கூட அறிய முடியாத நிலையிலே வாழ்க்கை முடிவடைந்து விடுகிறது. ஆகையினாலே "மனநிறைவான வாழ்வு" என்றால், எது மனநிறைவான வாழ்வு? அதைப் பெறுவது எங்ங்னம்? என்பனபற்றி சாதாரண மக்களாகிய நாங்கள் சிந்திப்பதற்கு பேரறிஞர் பண்டிதர் சபா ஆனந்தர் அவர்களின் இந்த ஞாபகார்த்த நிகழ்வு ஒரு அரிய சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கின்றது.
மனநிறைவான வாழ்வு எது என்று ஆராயும் போது ஒரு குறிப்பிட்ட தரமான வாழ்க்கை எல்லோருக்கும் மனநிறைவான வாழ்க் கையாக அமைய முடியுமா? ஒருவனுடைய நிறைவு இன்னொருவனுக்குக் குறைவாக அல்லவா அமைகின்றது! ஆகவே நிறைவும் குறைவும் வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு தரமுள்ளதாகத் தோன்றுகிறது. இவ் வேற்றுமைக்கு காரணம் அவரவருடைய மன நிலையே. ஆகவே மன நிறைவானஅல்லது
త్రలు வாழ்க்கைக்கு மனமே காரணம் என்ற رقاصہ ==ء

முதலில் உணருதல் அவசியம். அவ்வாறாயின், நிறைவோ குறைவே அவ்வாழ்க்கையை அனுபவிப்பது யார்? என்ற கேள்விக்குரிய பதிலையும் விளங்குவது இங்கே தேவைப்படுகின்றது. நான் மனநிறைவான வாழ்வு வாழ்கின்றேன் என்றால் இதிலே வாழ்கின்றவன் நான், நிறைவான வாழ்க்கையைக் கொடுப்பது எனது மனம் என்ற உண்மையும் வெளியாகின்றது. அப்படியாயின் யார் இந்த நான்? நான் யார்? என்ற கேள்வியை ஆராயும் போது எனக்கு மூன்று "தோற்றங்கள்" இருப்பது புலனாகின்றது. இதில் ஒன்று என்னைப்பற்றிய எண்ணம். இரண்டாவது பிறர்மனதில் என்னைப்பற்றிய எண்ணம். மூன்றாவது எனது உண்மையான சுயநிலை. பிறர் என்னைப்பற்றி சிந்திக்கும் போது எனது உடலின் தோற்றத்தைக் கொண்டும் அதற்குரிய பெயரைக் கொண்டும், நான் மற்றவர்களுடன் பழகும் விதத்தைக் கொண்டும் உருவப்படுத்துகின்றனர். என்னைப்பற்றி நான் எண்ணும் போது எனது மனோ நிலையைக் கொண்டே என்னைக் கணித்துக் கொள்கின்றேன். எனது குரங்கு மனம், அதன் விருப்பு வெறுப்புக்கள், அதன் எதிர்பார்ப்புக்கள், அது எனக்கு அமைத்துக் கொடுக்கும் இன்பங்கள், துன்பங்கள், எனது புத்தி ஆணவம் முதலியவற்றைக் கொண்டே நான் யார் என்ற கேள்விக்கு எனது விளக்கம் அமைகின்றது. இவை இரண்டிற்கும் அப்பாற்பட்ட மூன்றாவது நிலை தான் எனது உண்மையான நிலை, இயல்பான நிலை. அதாவது, நான் வெறும் உடலல்ல, மனமுமல்ல, புத்தி, ஆணவமுமல்ல, இவற்றிற்கும் அப்பாற்பட்ட பூரணமான நிலையான ஆனந்தமயமான "ஆத்மா” என்பதாகும். இந் நிலையில் நான் ஒரு சத்-சித்-ஆனந்த ஸ்வரூபம். பகவான் ரீ சத்திய சாயி பாபா அவர்கள் அடியார்களுக்குக் கூறுவது "நானும் கடவுள் நீயும் கடவுள் நான் கடவுள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நீயும் கடவுள் என்பது உனக்குத் தெரியாது." மனிதர்கள் கடவுள் தான் என்று அவதாரங்கள் கூறினாலும் அதை நம்புகின்ற நிலையில் மனிதன் இல்லை.
༄༽
ஆகவே மனிதன் என்பவன் உடல் மட்டுமல்ல, உள்ளம் மட்டுமல்ல, அவன் உடல், உள்ளம், ஆத்மா என்ற மூன்று பரிமாணங்களினதும் ஒருங்கிணைந்த, ஒத்திசைவுள்ள படைப்பு என்றும், இதில் உடல் வேறு, ஆத்மா வேறு என்று பிரித்துப்பார்க்க முடியாது என்றும் விளங்குதல் வேண்டும். இருந்த போதும், இம்மூன்று
الرـ -ܠ

Page 4
/ー
பரிமாணங்களிலும் உடல் ஒரு அசைவற்ற, مسدوم وصمم( இயங்கக்கூடிய, ஆற்றல்அற்ற, தன் நினைவு அற்ற ஒரு ஜடம் எனக் கருதலாம் , அது எமது வாழ்க் கைப் பயணத்திற்கு எமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் "வாகனம்". அத்தோடு மனிதன் தன்னை வெளி உல"த்தோடு தொடர்பு படுத்துவதற்கு உடல் ஒரு கருவியாகவும் அமைகின்றது. உயிரின் ஆதாரமான பிரான வாயு அதை வியாபிக்கும் போது அது தானும் உயிருள்ள ஒன்று போல் தனது பணிகளைச் செய்கின்றது. எவ்வாறாயினும் உடலின் நலனைப் பேணுவதும் அதனை ஆரோக்கியமான நிலையில் வைத்திருப்பதும் மிக அவசியம். ஏனென்றால் உடலின் பாதிப்பு மனதைப் பெரிதும் பாதிக்கின்றது. அப்படியாகும் போது மன நிறைவான, மகிழ்ச்சியான, அமைதியான வாழ்க்கை நாம் வாழ முடியாது.
ஆத்மா பூரணமானது, நிலையானது, தூய்மையானது, தெய்வீகமானது, எப்பொழுதும் ஆனந்த நிலையிலுள்ளது என வேதங்கள் விபரிக்கின்றன. அதுவே சத்சித் ஆனந்தம். இருந்த போதும் ஆத்மாவின் இவ்வுண்மை நிலையை எம்மால் உணரமுடியாமல் திரைபோட்டு மறைப்பது போல் மறைப்பது எமது மனமே. இந்த உண்மையை உணர முடியாமல் மனிதன் அன்றும், இன்றும், அமைதியும், ஆனந்தமும், மனநிறைவான வாழ்வும் தனக்கு வெளியே எங்கோ இருக்கின்றன என்ற மயக்கத்தோடு எங்கெல்லாமோ தேடி அலைகின்றான். இவ்வலைச்சலின் பிரதிப் பலனாக மண்ணிலும், விண்ணிலும் உள்ள பல பெளதீக உண்மைகளைக் கண்டு பிடித்ததோடு விஞ்ஞானத்திலும், தொழிநுட்பத்திலும் அதிசயிக்கக்கூடிய பாரிய முன்னேற்றங்களை அடைந்திருந்தும் மனிதன் தானே அமைதி வடிவம், அன்பின் இருப்பிடம், ஆனந்த சொரூபி, நிறைவான ஜீவன், அழிவற்ற ஆத்மா என்கின்ற உண்மைகளை உணர்ந்து கொள்ளாமல் , தனக்கு வெளியே உள்ள அமைதியின்மையில் அமைதியைத் தேடுகின்ற முயற்சியைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றான். இதற்கு மூல காரணம் பொன் பொருட்கள் மீது நம்பிக்கையும், அவற்றைத் தேடுவதில் உற்சாகத்தையும், விருத்தி செய்து கொண்டு ஆத்ம விசுவாசத்தை இழந்ததேயாகும். அகப்பார்வையை அபிவிருத்தி செய்யாது கேவலம் புறப்பார்வையிலேயே அதிகம் கவனம் செலுத்தப்படுகின்றது.
لر ܢܠ

எமது வாழ்க்கையின் இந்த அவல நிலைக்கு எமது ം
காரணம் என்கின்ற உண்மையைக் கூட ஊகித்துக்கொள்ள முடியாத நிலையில் ஒரு அவசர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆலயத்திற்கு சென்றாலும் ஆண்டவனைத் தரிசிப்பதற்குக்கூட நேரம் கிடைப்பதில்லை. அர்ச்சனை செய்வதற்காக அர்ச்சகரிடம் ரசீதைக் கொடுத்துவிட்டு நிற்கும் வேளை "கைத்தொலைபேசியில்" அழைப்பு வந்தால் பேசுவதற்கு ஏதுவாய் அப்பால் சென்று பேசி முடித்துவர அர்ச்சனை முடிந்து விடுகிறது. எமக்காக செய்யப்பட்ட அர்ச்சனை வேளையிலும் கூட ஆண்டவன் பால் எமது சிந்தனையைச் செலுத்த முடியாத அவசர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நவநாகரீகத்தின் வலிமையினால் கட்டுண்டு மனம் போன போக்கிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதனால் நிறைவான வாழ்வு, அமைதியான வாழ்வு, மகிழ்ச்சியான வாழ்வு, எமக்கு எப்போதும் கனவாகவே மறைந்து விடுகின்றது. இவையெல்லாவற்றிற்கும் மனமே காரணமென்றால் இந்த மனத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது? எவ்வாறு பணி படுத்துவது? என்ற கேள்விகள் எழுகின்றன. மனதை பண்படுத்துவதற்கு முதலில் மனதைப்பற்றிய விளக்கத்தை அறிவது அவசியம். இருப்பினும் மனம் என்றால் என்ன? அதன் வடிவம் என்ன? மனித உடலினுள் அது எங்கே இருக்கின்றது? அதன் அமைப்பு என்ன? போன்ற வினாக்களுக்கு விடைகாண்பது கடினம். இதன் காரணத்தால் அதற்குப் பல விளக்கங்கள் வரைவிலக்கணங்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. அகராதியைப் புரட்டிப்பார்த்தால் "மனம் என்பது ஒரு மனிதன் நினைப்பதற்கும் உணர்வதற்கும் அவன் உள்ளே இருக்கும் ஒன்று" என ஒரு தெளிவற்ற விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. மனம் என்பது எண்ணங்களின் திரட்டு. ஆசைகளின் கொத்து என்றும் விளக்கப்பட்டிருக்கின்றது.
அதில் எழும் எண்ணங்கள், ஆசைகள் நொடிக்கு நொடி மாறிக்கொண்டு, தாவிக்கொண்டு திரிவதால் அதைக் "குரங்குமனம்" என்றும் குறிப்பிடுகின்றோம். பகவான் ரீ சத்ய சாயி பாபா தனது தசரா அருளுரை ஒன்றில் மனதின் இயல்பை விளக்கும் போது இவ்வாறு கூறியிருக்கிறார்: "மனம் ஒரு விசித்திரமான வஸ்து. இதன் குறும்புச் செயல்கள் மிகவும் விசித்திரமானவை. இதற்குச் சொந்தமான இல்லை. எந்தப் பொருளை இது பற்றிக்கொள்கின்றதோ فتمنع
لر

Page 5
7. ཛོད༽
அந்தப் பொருளின் உருவத்தை இது அடைகின்றது. மனமே சுகம், மனமே துக்கம், மனமே நல்லது, மனமே தீயது, மனமே உடன்பாடு (positive) மனமே எதிர்மறை (negative) மனம் இரு விதமான பாத்திரங்களை ஏற்று நடிக்கக்கூடிய ஆற்றல் வாய்ந்தது"ஜோன் மில்டன் என்ற ஆங்கில எழுத்தாளன் தனது "பறடைஸ் லொஸ்ட்" என்ற நாவலில் "மனம் தனது நிலையில் நரகத்தைச் சொர்க்கமாகவும், சொர்க்கத்தை நரகமாகவும் ஆக்கும் வல்லமை உடையது” எனக்குறிப்பிட்டு இருக்கின்றார். மருத்துவவியல் ரீதியில் பார்க்கும் போது எமது உடற் கூற்றில் மனதை ஒரு அவயமாகவோ ஒரு குறிப்பிட்ட இயல்பு உடையதாகவோ கருதமுடியாதிருப்பினும் அது எமது மூளையோடு நெருங்கிய சம்பந்தம் கொண்டுள்ளதாய் அறியலாம். மூளையின் சில குறிப்பிட்ட பாகங்கள் தாக்கமடையும் போது எமது சிந்திக்கும் திறன் ஞாபக சக்தி முதலியன பாதிக்கப்படுகின்றது.
மனதை இன்னுமொரு கோணத்தில் பார்த்தால் அது ஒரு "கருவி" என்றும் கருதலாம். அதேபோல் எமது உடலின் ஐம்புலன்களும் கருவிகளே. வெளி உலகச் செய்திகளை அறிவதற்கு மனமும் புலன்களும் ஒன்றாகச் செயற்படவேண்டும். இதில் புலன்களை விட மனமே பிரதான கருவியாக இருந்து புலன்களை வழி நடத்தி அவற்றைக் கட்டுப்படுத்தி நடத்துதல் வேண்டும். அன்றி புலன்கள் பிரதான ஸ்தானத்தில் அமர்ந்தால் அது எம்மை வெளியுலக வாழ்க்கையின் மோகத்துடன் பிணைத்து விடுகின்றது. மனம் எந்நேரமும் புலன்களினுாடாக வெளி உலகப் பொருட்களின் ரூபம், ஒலி, மணம், சுவை, ஸ்பரிசம் முதலிய உணர்ச்சிகளைப் பரபரப்புடன் அங்கும் இங்கும் வேகத்துடன் பறந்து திரிந்து அனுபவிக்கும் கருவியாக உள்ளது. இதனால் வெளி உலக பொருட்கள் மீது எமக்குப் பற்றுதல் உண்டாகின்றது. இப்பற்றுதலினால் அப் பொருட்கள் மீது எமக்கு ஆசையும், அவற்றை மீண்டும் மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்ற அவாவும் ஏற்படுகின்றது.
மனதின் மர்மத்தை இன்னும் சற்று ஆழமாக ஆராய்ந்தால் மனமானது மூன்று மட்டத்தில் (levels) செயற்படுவதாகக் கொள்ளலாம். ஒன்று ‘அறிமனம்’ (Conscious mind) இரண்டாவது '99 9ILD607Lb' (Sub-Conscious mind) ep6öpT6ug 'o lusi
త్రం (super-conscious mind) لر
ES

སོ།༽
7. விழிப்பு நிலையில் நாம் இருக்கும் போது வெளி உலக செய்திகள் புலன்களினுாடாக அறிமனத்தைத் தாக்குகின்றன. அப்போது அறிதலும், புரிந்து கொள்ளலும் ஏற்படுகின்றன. அறிதலும் புரிந்து கொள்ளலும் எமது அடிமனதில் சிந்தனைகளை உருவாக்குகின்றன. சிந்தனைகள் உணர்ச்சிகளை ஏற்படுத்துகின்றன. உணர்ச்சிகள் செயல்களாக மாறுகின்றன. எல்லாச் சிந்தனைகளும் உணர்ச்சிகளும் செயல்களாக மாறுவதில்லை. ஒரு சில மட்டுமே இப்படி ஆகின்றன." ஏனைய சிந்தனைகள், உணர்ச்சிகள் மனதைவிட்டு அகன்று விடுகின்றன. செயல்கள் அனுபவங்களாகவும், அனுபவங்கள் மீண்டும் மீண்டும் ஏற்படும்போது பழக்கமாகவும் ஆகின்றன. பழக்கவழக்கங்களே எமது இயல்பை, குணசீலத்தை நிர்ணயிக்கின்றன. குண சீலத்தின் அடிப்படையிலேயே எமது நடத்தைகள் உருவாகின்றன.
THOUGHTS - FEELNGS-ACTIONS - HABITS - CHARACTER - BEHAVIOUR.
ஆகவே மனநிறைவான, குறைவான வாழ்க்கைக்கு எமது மனதிலே எழும் சிந்தனைகள் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. சிந்தனைகளைக் கண்காணிப்பதன் மூலம் எமது அறிமனத்தைக் கட்டுப்படுத்த முடியும். இதுவே மனநிறைவான வாழ்க்கையின் முதற்படி,
அடுத்து அடி மனத்தின் விளக்கத்தைப் பார்ப்போம். இது கடந்த > கால அனுபவங்களின் களஞ்சியம் எனக் கொள்ளலாம். இப்பிறப்பின் அனுபவங்கள் மட்டுமல்ல முற்பிறப்புக்களின் அனுபவங்கள் கூட இதில் சேகரிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. வெளி உலகத்திலிருந்து அறிமனத்தை வந்தடையும் செய்திகளை இனம் காண்பதற்கு அவற்றின் தன்மையை, இயல்பை உணர்வதற்கும் அடி அறிமனதில் ஏற்கனவே களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கும் அனுபவங்களே பயன்படுகின்றன. அடி அறிமனதின் இன்னுமொரு அம்சம் என்னவென்றால், எமக்கு மகிழ்ச்சியையும் இன்பத்தையும் கொடுத்த கடந்தகால அனுபவங்களை மீண்டும் மீண்டும் அனுபவிப்பதற்கான எண்ண அலைகளை, துண்டுதல்களை, உந்தல்களை அறிமனத்திற்குக் கொடுத்துக் கொணர் டிருப்பதாகும் . இவையே எமது ஆசைகளாக வெளிப்படுகின்றன. அதிக ஆசைகளை எழுப்பக்கூடிய அனுபவங்கள் அதிக அளவில் அடி அறிமனதில் தேங்கி இருந்தால் அதில் இருந்து
لر= ܢܓܠ

Page 6
/
எழும் ஆசை அலைகளுக்கு அறிமனம் அடிமையாகி விடுகின்றது. سمعه( அடி அறிமனதை அமைதியான, மகிழ்ச்சியான, நிறைவான வாழ்க்கையைக் கொடுக்கக் கூடிய சிந்தனைகளை, அனுபவங்களைச் சேகரிப்பதன் மூலம் சுத்தப்படுத்துவதனால், தூய்மைப்படுத்துவதனால் எமக்குப் பங்கம் விளைவிக்கக்கூடிய ஆசைகளைப் படிப்படியாகக் குறைத்துக் கொள்ளலாம். சேற்று நீர் தேங்கி இருக்கும் நீர்த்தேக்கத்தைச் சுத்தப்படுத்துவதற்கு அதனுள் சுத்தமான நீரைப் பாய்ச்சினால் கொஞ்சம் கொஞ்சமாக அழுக்கு நீர் வெளியேறி சுத்தமான நீர் தேங்கும். இவ்வண்ணம் அடி அறிமனம் துாய்மையாகத் தூய்மையாக அதிலிருந்து அறிமனத்திற்குச் செலுத்தப்படும் எண்ண அலைகள், தூண்டுதல்கள், உந்தல்கள் யாவும் துாயவை ஆகிவிடும். இப்படி ஆகும் போது அறிமனமானது சாதாரண புலன்களின் மூலம் அனுபவிக்கும் ஆசா பாசங்களின் பிடியிலிருந்து படிப்படியாக விடுபட்டு உயர் நிலையில் சிந்திப்பதற்கும், செயற்படுவதற்கும் ஆரம்பிக்கின்றது. இதனால் அறி மனம் செயற்படும் மட்டம் (eve) உயர் அறிமனத்தை நோக்கிச் செல்கின்றது.
உயர் அறிமனமே எமது உள்ளுணர்வுகளின், விழுமியங்களின், ஆத்மிக உணர்வுகளின் இருப்பிடம் எனக் கூறலாம். இதிலிருந்தே எமது "மனச்சாட்சியின் குரல்" (innervoice) எழுகின்றது. உயர் அறிமனத்தின் செல்வாக்கு அதிகரிக்க அதிகரிக்க எமது வாழ்க்கை ஆத்மீகப் பாதையில் அடியெடுத்து சீலங்கள், விழுமியங்கள் நிறைந்த அமைதியான மகிழ்ச்சியான நிறைவான வாழ்க்கையாக மாற ஆரம்பிக்கின்றது.
இதுவரை மனதின் மர்மத்தைப் பற்றி சற்று விரிவாக ஆராய்ந்தோம். இதிலிருந்து மன நிறைவான வாழ்வுக்கு மனமே காரணம் என்பது தெளிவாகின்றது.இருப்பினும் மனமே பல கோணங்களிலிருந்தும் எழும் பலவிதமான தாக்கங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. ஒரு புறம் உடலின் ஆரோக்கிய நிலை, இன்னொருபுறம் புலன்களின் தாக்கம், மறுபுறம் அடி அறிமனதிலிருந்து எழும் உந்தல்கள், ஆசைகள், இவற்றிற்கிடையே உயர் அறிமனதிவிருந்து அவ்வப்போது கேட்கும் மனச்சாட்சியின் அறிவுறுத்தல்கள். இவற்றினால் மனமானது ஒரு ‘தேள்கொட்டிய பைத்தியம் பிடித்த குரங்கு” போல் பரபரப்புடன் அங்கும் இங்கும் தாவிக்குதித்து அலைந்து திரிந்து சஞ்சலத்துள் மூழ்கிவிடுகிறது.
گر ܢܠ

7 -N
ஆகவே இக்குரங்கு மனதை சஞ்சலமற்ற படிமானமான ஒன்றாக
மாற்றக்கூடிய, ஒருநிலைப்படுத்தக்கூடிய வழிவகைகளை இப்போது பார்ப்போம். மனநிறைவான வாழ்விற்கு மனக்கட்டுப்பாடு மிகவும் அவசியம் எனக் கூறுவது சுலபம் . அனாலி அதை நடைமுறைப்படுத்துவது கடினமானதாக இருந்தபோதும் அது இயலாத ஒன்றல்ல. தாவித்திரியும் ஒரு குரங்கைத் தந்திரமாகப்பிடித்து அதற்குக் கட்டுப்போட்டு, அலங்கரித்து தாம் சொன்னவை எல்லாவற்றையும் செய்வித்து மக்களை மகிழ்வித்து பணம் சம்பாதிக்கும் மனிதரை நாம் பார்த்திருக்கின்றோம். அதேபோல எமது குரங்கு மனத்தையும் கட்டுப்படுத்தி படிமானத்திற்குள் கொண்டுவந்தால் அதன் அடிமைகளாக நாங்கள் இல்லாமல் அதனை எமது ஆதிக்கத்திற்குள் கொண்டுவர முடியும். இராமாயணத்தில் வாயு பகவானின் புதல்வனாகத் தோன்றிய அனுமந்தன் குரங்கு உருவம் கொண்டவன். குரங்குகளின் தலைவனாக இருந்தவன். ஆனால் அவனோ இராம பக்தனாக ஆகி தனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் தனது தெய்வமாகிய இராமபிரானுக்குச் சேவை செய்வதிலும் எந்நேரமும் இராமனின் திருநாமத்தை உச்சரிப்பதிலும் அர்ப்பணித்து இருந்தமையால் குரங்கின் குணங்கள் அற்றுப்போய், மனிதனுக்கும் மேலான, தெய்வத்தின் ஸ்தானத்தை பெற்றுச் சிரஞ்சீவி ஆனான்.
ஆகவே மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கு எமது நாளாந்த வாழ்க்கையை ஆத்மீக சாதனையாக ஆக்கிக்கொள்வது ஒரு சிறந்த மார்க்கமாக அமைகின்றது. அவ்வாறாயின் ஆத்மீகம் என்றால் என்ன என்பதை ஒரளவு விளங்குவது அவசியம். ஆத்மீகம சமயம் அல்ல சமயம் ஆத்மீகத்தின் பாதை. ஆகையால் சமயங்கள் பலவான இருந்தாலும் குறிக்கோள் ஒன்றே. ஆத்மீகம் என்பது எமக்குள் இருக்கும் தெய்வீகத்தை உணர்தல்
எல்லா மனிதருள்ளும் தெய்வீகம் உள்ளது என்ற உண்மையை உணர்தல்
எல்லா உயிரினங்களுள்ளும் தெய்வீகம் உளது என்ற உண்மையை உணர்தல்
இப் பிரபஞ்சம் முழுதும் ஆணர் டவன் படைப்பு என்ற உண்மையினால் அப்படைப்புகள் எல்லாவற்றிலும் தெய்வீகம் உளது
என்ற உண்மையை உணர்தல் . r : لر

Page 7
སོ།༽
தெய்வம், அன்பு மயமானது. அன்பே அதன் இயற்கை. அன்பே அதன் இயல்பு. அன்பு வெறும் உணர்ச்சியல்ல. அது அளவிடமுடியாத சக்தி. படைப்புக்கள் யாவும் அன்பு என்னும் சக்தியினாலேயே சிருஷ்டிக்கபபட்டவை என்ற உண்மையை உணர்தல்
படைப்பிலே ஒன்று பலவாகியது என்ற உண்மையி அடிப்படையில் வேற்றுமையில் ஒற்றுமையை உணர்தல்
சிருஷ்டிக்குக் காரணமாகவும், ஆதாரமாகவும் சக்தியாகவும் இருந்தது, இருப்பது அன்பு என்ற உண்மையை உணர்தல்
இப்பிரபஞ்சத்தில் தோன்றிய யாவும் அன்பு என்னும் சக்தியினாலேயே இயங்குகின்றன என்ற உண்மையை உணர்தல் எமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களும் ஒவ்வொரு கலன்களும் இவ்வன்பு எனும் சக்தியினாலேயே இயங்குகின்றன என்ற உண்மையை விளங்குதல்
ஆகையினாலே மனிதனுடைய நாளாந்த வாழ்க்கையில் தன்னலமற்ற, துய, தெய்வீக அன்பை மையமாக வைத்துச் சிந்திக்கும் ஒவ்வொரு சிந்தனையும், உச்சரிக்கும் ஒவ்வொரு சொலி லுாமி , செய்யும் ஒவ்வொரு செயலும் ஆதி மீக சாதனைகளாகின்றன
அன்பிலே உருவாகும் சிந்தனைகளும், சொற்களும் உண்மையாகின்றன. சத்தியம் ஆகின்றன.
தன்னலமற்ற தூய அன்போடு செய்யும் செயல் யாவும் தர்மமாகின்றன.
அன்போடு கலந்த உணர்ச்சிகள் யாவும் அமைதியையும் சாந்தியையும் கொடுக்கின்றன.
அணி பிணி அடிப் படையிலே விளங்குகின்ற யாவும் அகிம்சையாகின்றன.
ஆகவே சத்தியம், தர்மம், சாந்தி, அகிம்சை இவைகளே மனித மேம்பாட்டு விழுமியங்கள். இவற்றுக்கு அடிப்படை ஆதாரமாக விளங்குவது அன்பு என்ற மேன்மையான விழுமியம்
இவ்வைந்து மனித மேம்பாட்டு விழுமியங்களையும் எமது நாளாந்த வாழ்க்கையில் எந்நேரமும் எல்லாக் கடமைகளிலும்
لر ܢܓܠ

/ ༄༽
எந்நிலையிலும் கடைப் பிடிப்போமானால் அதுவே ஆத்மீக சாதனைகளாக அமைகின்றன. இவ் விழுமியங்களை எமது வாழ்க்கையில் கடைப்பிடிப்பது கடினமான காரியமல்ல. ஏனெனில் அன்புதான் எமது இயற்கை, எமது இயல்பு, எமது மனட்சாட்சியின் ஆதாரம். விழுமியங்கள் யாவும் அன்பு என்கின்ற சக்தியை அடிப்படையாக, ஆதாரமாகக் கொண்டிருப்பதால் அவையாவும் எம் உள்ளே உறைந்திருக்கின்றன. அவற்றை வெளி உலகத்திலே தேட வேண்டிய அவசியமில்லை. சில ஆத்மீக சாதனைகள் மூலம் உள்ளே உறைந்திருக்கும் விழுமியங்களை வெளியே கொணர்ந்து எமது வாழ்க்கையை மிளிரச்செய்ய முடியும். அப்போது நாம் இதுவரை தேடி அலைந்த அமைதியான மகிழ்ச்சியான மனநிறைவான வாழ்வு எம்மைத்தேடி வரும்.
வாழ்க்கை ஒரு வேடிக்கையான விளையாட்டு. அதைத் தகுந்த முறையில் விளையாடினால் அது எம்மை உயர் நிலைக்குத் துாக்கிவிடும். இல்லாது விடின் அது எம்மைப் படுகுழியில் தள்ளி விடும். சிறுவயதில் நாம் அனைவரும் ‘ஏணியும் பாம்பும்” என்ற விளையாட்டை ஆடியிருக்கிறோம். பாம்பின் வாயில் அகப்பட்டுக் கீழே வருவதும் ஏணியின் அடிக்குச் சென்றால் மேலே எழுவதுமாக ஈற்றில் யார் ஆட்டத்தின் குறிக்கோளை முதலில் அடைகிறாரோ அவருக்கே வெற்றி. எமது வாழ்க்கையும் அதே போன்ற ஏணியும் பாம்பும் விளையாட்டுத் தான் . ஒவ்வொரு தடவையும் எதிர்மறைத்தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய காமம், குரோதம். மோகம், லோபம், மதம், மாச்சர்யம் போன்ற ராஜோகுணச் செயல்களில் ஈடுபடும் போதெல்லாம் எமது ஆன்மீக வாழ்க்கையில் கீழ் நோக்கி விழுவதும் , அன்பு, இரக்கம், காருண்யம், தன்னலமற்ற சேவை , மன்னிப்பு, பகிர்தல், பராமரித்தல் போன்ற சாத்வீக குணச்செயல்களில் ஈடுபடும் போது மேலே எழுவதுமாக வாழ் நாட்களை ஆடிமுடிக்கின்றோம். ஆகவே நாளாந்தம் எமது வாழ்க்கையில் ராஜோ, தமோ, சாத்வீக எண்ணங்கள் செயல்கள் மாறி மாறி ஏற்படுவதனால் எவை கூடுதலாக நடக்கின்றனவோ அவற்றைப் பொறுத்து நாம் எமது குறிக்கோளை அடைவதற்குரிய பாதையில் முன்னேறுவதும் அன்றி விலகிப் போவதும் நடக்கின்றன.
لا بـ ܢܠ
1

Page 8
z- மனித மேம்பாட்டு விழுமியங்களை வெளிக்கொணர்ந்து N வாழ்க்கையை மிளிரச்செய்வதற்கு ஏதுவான சில சாதனைகளை uTfjGuntLib.
01. இறை நம்பிக்கையை வளர்ப்பது 02. பிரார்த்தனை, ஜபம். நாளாந்தம் தவறாது செய்தல் 03. நாமஸமரணம்- இறைவனின் நாமத்தை உச்சரித்தல் 04. நாமசங்கீர்த்தனம்- இறைவனை புகழ்ந்து பாடுதல்- பஜனை,
பக்திப் பாடல்கள் 05. ஆத்ம சாந்தியை, பலத்தைக் கூட்டக்கூடிய தியானம் 06. அமைதியாக இருத்தல் , மெதுவான , இனிமையான இசை கேட்டல். இவை மனக்கிளர்ச்சியை குறைத்து அமைதி நிலையை மேம்படுத்துகின்றன. 07.'தினாச்சாரிய' - வாழ்க்கையின் நடைமுறை (Life Style)
வெளிநோக்கிலிருந்து உள்நோக்குடையதாக மாற்றுதல். 08. யோகப் பயிற்சி
09. தன்னலமற்ற, அண்டி நிறைந்த சிந்தனை, சொல், செயல். 10. சிந்தனை சொல்- செயல் மூன்றினதும் ஒத்திசைவு 11. தன்னலமற்ற சேவை
12. ஆசைகளை கட்டுப்படுத்தல்
இவற்றில் ‘ஆசைகளை கட்டுப்படுத்தல்” மிக முக்கியமான சாதனையாகக் கொள்ளுதல் வேண்டும். ஏனென்றால் எதிர்மறைத் தாக்கங்களை மனதிலே ஏற்படுத்தக்கூடிய ஆசைகள் அதிகளவு ஏற்படின் அவை எமது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தடையாக அமைகின்றன.
மனிதனுடைய வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி எற்படுகின்றன. இதிலே துன்பங்களுக்கு மூல காரணம் அவனுடைய மனதிலே எழுகின்ற ஆசைகளே. மனம் ஆசைகளுக்கு அடிமையாகும் r"002 நாம் எமது ஆத்மாவின் பிரகாசத்தை அறிய ಆ94519ه
它

ബ மறைப்பது போல் மறைத்துவிடுகின்றது. பரிந்த
ஒரு தடாகத்தில் சூரியனின் பிரதி விம்பத்தை, பிரகாசத்தை காணமுடியாது. தடாகத்தின் நீர் மட்டத்தில் பச்சை நிறமாக படர்ந்திருக்கும் பாசியை கையினால் சற்று அகற்றினால் அதன் கீழே உள்ள சுத்தமான தடாகத்தின் நீரும் அதனுள் சூரியனின் பிம்பத்தையும் காணலாம் ஆனால் பாசியை அகற்றிய கையை எடுத்துவிட்டால் மீண்டும் அதே இடத்தை பாசி மூடிவிடுகின்றது. இதேபோல் தான் சில வேளைகளில் நாம் எமது மனத்தை கட்டுப்படுத்துவதற்காக, தூய்மைப்படுத்துவதற்காக ஒரு சில தீய சிந்தனைகளை, தீயஉணர்ச்சிகளை, தீயசெயல்களை அகற்ற முற்பட்டாலும் மறுகணமே எமது மனம் அதே எண்ணங்களால், உணர்ச்சிகளால் சூழப்பட்டு விடுகின்றன. இருப்பினும் ஆசைகளை கட்டுப் படுத்துதல் மிக முக்கியமான ஒரு சாதனையாகத் தேவைப்படுகின்றது. ஏனெனில் ஆசை அளவற்றது. ஒரு ஆசையை நிறைவேற்றும் போது மேலும் பல ஆசைகள் தோன்றி வளர்கின்றன. இதனாலன்றோ ‘ஆசை அறுமின் ஆசை அறுமின் ஈசனோடாயினும் ஆசை அறுமின்’ என்று பாடப்பட்டிருக்கின்றது.
ஆசைகளை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானது. ஏனென்றால் பல ஆசைகள் தோன்றுவதனால் எந்த ஆசையைக் கட்டுப்படுத்துவது? எப்படிக் கட்டுப்படுத்துவது? எப்போது கட்டுப்படுத்துவது என்று பல பிரச்சனைக்குரிய கேள்விகள் எழுகின்றன. பகவான் ரீ சத்ய சாயி பாபா இதற்கு ஒரு நல்ல திட்டத்தை வகுத்து கொடுத்திருக்கின்றார். அவர் கூறியதாவது. ஆசைகள் எமது வாழ்க்கை பயணத்திலே சுமந்து செல்லும் சுமைகள் போன்றவை. சுமைகள் கூடினால் பயணம் கஷ்டமாக இருக்கும். சுமைகள் குறைந்தால் பயணம் சொகுசாக அமையும். பகவான் மேலும் கூறுவதாவது. நாம் ஆசைகளின் உந்துதலினால் வீண் விரயங்கள் பல செய்கின்றோம். ஆசைகளை கட்டுப்படுத்தும் முயற்சியில் முதற்படியாக இந்த வீண் விரயங்களை தடுப்பது அவசியம். இவற்றில் முக்கியமாக நான்கு விடயத்தில் வீண் விரயம் செய்வதைக் குறைக்கலாம், தடுக்கலாம். அவையாவன பணம், உணவு,நேரம், சக்தி இவற்றை வீண் விரயம் செய்யாது as பராமரித்து அதில் தேறுபவற்றை இல்லாதவர்க்கு

Page 9
/
உதவுவதில் செலவிட்டால் எப்போதுமே போதும் என்ற மனநிறைவும், மற்றவர்களுக்கு உதவினோம் என்ற மனத்திருப்தியும் ஏற்படும்.
இதுவரை ‘‘மனநிறைவான வாழ்வு” என்ற விடயத்தைப் பற்றிச் சிந்தித்தோம். இதில் மனநிறைவான வாழ்வு என்றால் என்ன என்பதன் விளக்கத்தையும், நிறைவும் குறைவும் ஒருவருடைய மனதின் தரப்படுத்தலே என்றும், மனதின் மர்மத்தின் விளக்கத்தையும், மனநிறைவான வாழ்க்கைக்குத் தடைகளாக இருப்பவை எவை என்றும், அவற்றுக்குரிய காரணங்களையும், அவற்றை அகற்றுவதற்கு ஏதுவான சில வழி வகைகளையும் ஆராய்ந்து ஓரளவு விளங்கிக் கொண்டடோம். அத்தோடு மன நின்றவான மகிழ்ச்சியான வாழ்வு வாழ்வதற்கு எமது நாளாந்த வாழ்க்கையின் மனித விழுமியங்களை அன்பு(பிரேமை), உணி மை(சத்தியம்), நன் நடந்தை(தர்மம்), அமைதி(சாந்தி) அகிம்சை மேம்படுத்தி மிளிரச்செய்வதும், ஆத்மீக சாதனைகளைப் புரிவதும் மிக முக்கியம் என்றும் அறிந்து கொண்டோம். இதில் அன்பு என்ற அடிப்படை விழுமியத்தின் முக்கியத்துவத்தையும், அது ஒரு மாபெரும் பலம் வாய்ந்த சக்தியென்றும் அன்பிலே உருவாகும் சிந்தனைகளும், அன்பு கலந்தவார்த்தைகளும், அன்புடன் செய்யும் செயல்களும், சிந்தனை, சொல், செயல் மூன்றினதும் ஒத்திசைவும், ஒற்றுமையுமே மனம் நிறைவான வாழ்வை எமக்கு கொடுக்க வல்லவை எனப்பார்த்தோம்.
இவற்றை எமது வாழ்க்கையோடு ஒன்றிணைத்து நல் வாழ்வு வாழ்ந்து மகிழ்வோமாக! -
- சுபம் -

பண்டிதர்க.சபா.ஆனந்தர் )
B.A.(Lond)B.O.L(Madras) đbìIIIñ6ilưiĩ6ìliljăumũ bìIJaJIII,
இணுவை மூதூர் ஒரு பழம் பெரும்பதி. இது கோயில்கள் நிறைந்த ஊர். இவ்வூரின் எல்லையில் கால் வைக்கும்போதே கோயில் களைக் காணலாம். கோயில் களின் மணியும் பண்ணிசையும் நாதஸ்வர கீதமும் மேளத்தின் முழக்கமும் துயில் கொள்வோரை அதிகாலையில் தட்டி எழுப்பும். காலைப் பொழுது மங்கலமாய் மலருகின்ற இணுவில் ஊரில் ஞானிகளும் அருளாளர்களும் தம் பாதச் சுவடுகளைப் பதித்து இதனைப் புண்ணிய பூமி ஆக்கியுள்ளனர். செம்மண் செறிந்த இவ்வூர் விவசாயத்துக்கு மிகவும் ஏற்றது. அதனால் முன்னாளில் விவசாயத்தைத் தமது வாழ்க்கைத் தொழிலாகப் பலர் கொண்டிருந்தனர். இணுவில் கிழக்கில் வாழ்ந்த கதிர்காமர் சபாபதி என்ற வேளாண் மரபினர் விவசாயத்துடன் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் ஆசிரியப் பணியும் ஆற்றினார். இவர் உள்;ர்ப் பிள்ளைகளுக்கு ஊர் நடுவே காய்த்த நறுங் கனியாயப் விளங்கினார். இதனால் இவரைச் சபாபதிச் சட்டம்பியார் என்று எல்லோரும் பொதுவாய் அழைத்ததுண்டு.
இணுவில் சிவகாமி அம்பாளைக் குலதெய்வமாகக் கொண்ட இப்பெரியார் காலை மாலைகளில் கடவுள் வழிபாட்டை முக்கிய பணியாய்க் கொண்டவர். இவர் அன்னை சிவகாமியிடம் அளவற்ற அன்பு பூண்டவர். அவ்வாறே இணுவில் நொச்சியம்பதி முருகனிடம் நீங்காத பக்தியுடையவர் இவரின் இல்லக்கிழத்தி பத்தாவுக்கேற்ற பதிவிரதை. இல்லற வாழ்வை இனிதாய்க் கழித்த சபாபதி பொன்னம்மா குடும்பத்தினர் தெய்வத் திருவருளால் பெற்ற பிள்ளைகள் நால்வர். அவர்களுள் நான்காவது மகனின் பெயர் ஆனந்தர். 06.10.1910 அன்று ஆனந்தர் பிறந்தபோது குடும்பத்தில்
༤ ཚེ་" புத்தூக்கம் தோன்றியது. ار

Page 10
ཛོད༽
f அடுத்தரின் இனிய பிள்ளையான ஆனந்தரை, நவரத்தினம் என்று அன்புடன் அனைவரும் அழைத்தனர். செல்லப் பிள்ளையாய் வளர்ந்த ஆனந்தர் தந்தையாரிடம் தமிழ் அரிச்சுவடியையும் தமக்கு அண்மையில் இருந்த பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் கற்றார். பின்னர் ஆங்கிலக் கல்வியின் பொருட்டு யாழ். இந்துக் கல்லூரியில் மாணவனாகச் சேர்ந்தார்.
கட்டைவண்டிக் காலத்தில் சாதாரண விவசாய குடும்பத்திற் பிறந்த ஆனந்தர் போதிய வாகன வசதி இல்லாததால் யாழ் இந்துக்கல்லுாரிக்கு நடந்து சென்றே கல்வி கற்றார். கல்லூரி நேரம் தவிர்ந்த வேளைகளில் தோட்ட வேலைகளுக்குத் தந்தையாருக்கு தமது உதவியதுடன் ஆலய வழிபாட்டிலும் கவனம் செலுத்தினார். இளம் வயதில் கோயில் வழிபாட்டில் ஈடுபட்ட வழக்கத்தால் முதுமை எய்திய காலத்திலும் ஆலயம் தொழுவதை அவர் விடவில்லை. தாம் தொழும் ஆலயங்கள் எத்தனை தொலைவில் இருந்தாலும் அங்கு சென்று வழிபட்ட பின்னரே மனநிறைவு கொள்வார். நல்லைக்கந்தனின் மகோற்சவ காலத்திலே விடியற்காலையில் நாள்தோறும் சென்று, அக் கோயிலின் வெளி வீதியை பிரதிட்டை செய்வது அவரின் வழக்கம். பின்னாளில் உத்தியோக இடமாற்றங்களாலும் முதுமையாலும் அதனைச் செய்ய அவரால் இயலாமல் போயிற்று. ஆயினும் ஆலயம் தொழுவதை இயன்றவரை செய்து கொண்டே இருந்தார்.
திரு சபா. ஆனந்தர் யாழ் இந்துக்கல்லுாரியில் தொடர்ந்து தனது ஆங்கிலக் கல்வியை கேம்பிறிச் சீனியர் வகுப்புவரை கற்று, 1930ம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் சித்தியெய்தினார். இத்தகைமையைக் கொண்டு இணுவில் சைவ மகாஜன வித்தியாசாலையில் 14.03.1932 அன்று ஆசிரியராக முதல் நியமனம் பெற்றார். அங்கு ஆசிரியாராய் இருந்தபோது கோப்பாய் அரசினர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையிற் சேர்ந்து பயிற்சி பெறும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அங்கு (1932-1934) பயிற்சி பெற்ற பொழுது ‘குருகவி வே. மகாலிங்கசிவம் போன்ற கல்விமான்களின் தொடர்பு வாய்க்கப் பெற்றதால் அவர்களிடம் ད། ས"t-P கேட்கும் பேறும் அவருக்குக் கிட்டியது. لر

z ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் தமது பயிற்சியை gs
பின்னர் மீண்டும் இணுவில் சைவ மகாஜன வித்தியாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியராய் சேர்ந்து குறுகிய காலம் கடமை ஆற்றினார். 31.10.1934 அன்று அவ்விடத்தை விட்டு நீங்கிவிட்டார். பின்பு சைவ வித்யாவிருத்திச் சங்க முகாமையில் இயங்கிய அனலைதீவு சதாசிவம் மகா வித்தியாலயத்திலும் ( 14.05.193520.09.1936) திருநெல்வேலி செங்குந்த துவிபாஷா பாடசாலையிலும் (செங்குந்தா இந்துக் கல்லுாரி 01.10.1936-20.01.1942) ஆசிரியப் பணி ஆற்றினார்.
இயல்பாகத் தமிழ்ப் புலமையும் மதிநுட்பமும் வாய்ந்த திரு. சபா ஆனந்தர் ஓய்வு நேரத்தை வினே கழிக்காது தக்காரிடம் சென்று பாடம் கேட்கும் வழக்கத்தை வளர்த்துக் கொண்டதால் யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் நடத்திய பால பண்டித, பண்டித பரீட்சைகளில் தேறி 1941 ஆம் ஆண்டில் தமிழ்ப் பண்டிதரானார். இப் பரீட்சைகளுக்குப் பாட ஆயத்தம் செய்த காலத்தில் சமய இலக்கியங்களையும், திருக்குறள் போன்ற அற நுால்களையும் தவத்திரு வடிவேல் சுவாமிகளிடம் கேட்டுத் தெளிந்ததாக நன்றிப் பெருக்குடன் திரு. ஆனந்தர் கூறுவார்.
கொஞ்சும் அழகு குடியிருக்க, கண்டோர் நெஞ்சம் களிப்புற வாழ்ந்த சபா. ஆனந்தர் திருமணப்பருவம் எய்திய வேளையில் இணுவில் தெற்கில் வசித்த திரு, திருமதி செல்லையா ஆனந்தியார் தம் பதியினாரின் தலை மகள் அன்னம்மா அவர்களை அறிஞர்களும், பெரியோர்களும், ஆசிகூறி 25.10.1941 அன்று மணம் முடித்து வைத்தனர்.
திருமண வாழ்விற் புகுந்த பின்னரும் "யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு' என்ற வள்ளுவர் வாசகம் ஆனந்தர் அவர்களின் அடிமனத்தை ஊக்குவித்தது. அதனால் சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கிய புலமைப் பரிசிலையும் பெற்று அப் பல்கலைக்கழகத்தில்
/
17

Page 11
தமிழ்வழி பற்றிய ஆய்வினைச் செய்து B.O.L. பட்டம் ۱ سوره
மகிழ்ந்தார். இணுவிலைச் சேர்ந்த ஒருவர் இத்தகைய புலமைப்பரிசிலைப் பெற்ற முதல் பட்டதாரி என்ற பெருமையும் இவருக்குண்டு. இவர் சென்னையில் பயின்ற காலத்தில், புகழ்பூத்த தமிழ் ப் பேராசிரியர்களான S. வையாபுரிப் பிள்ளை, R. P.சேதுப்பிள்ளை. V. வெங்கடராசு ரெட்டியார் போன்ற கல்விமான்களிடம் கற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. கீழைத்தேச மொழியில் கலைமாணிப் பட்டம் பெற்றதால் தமிழ், ஆங்கிலக் கல்வி அறிவுடன் வடமொழி அறிவும் இவர் பெற்றுக் கொண்டார்.
புலமைப் பரிசில் கல்வியை முடித்து பின்னர் ஈழம் திரும்பிய ஆனந்தர், சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் ஆசிரியராக நியமனம் பெற்றார். அக்கல்லுாரியில் (01.02.1945-31.10.1951) தமிழ், சமயம், புவியியல், கணிதம், ஆங்கிலம் போன்ற பல்வேறு பாடங்களைக் கற்பித்து நற்பெயர் ஈட்டியதால் கல்வித் திணைக்களம் அவருக்கு விசேட பதவி அளித்து 01.11.1948 முதல் சம்பள உயர்வும் வழங்கியது. திரு ஆனந்தர் அவர்களின் புலமை யாழ்குடா நாட்டில் மட்டுமன்றி ஈழத்தின் பிற மாவட்டங்களுக்கும் தெரிய வந்தது. அதனால் வெளிமாவட்டங்களில் இருந்து அவருக்கு அழைப்புக்கள் வரத்தொடங்கின. இலக்கிய விழாக்கள், சமய விழாக்கள், பட்டிமன்றங்கள், கவியரங்குகள், நாடகமேடைகள் என்றிவை போன்ற பல நிகழ்ச்சிகளில் ஆனந்தர் பங்கு கொண்டு சிறப்பித்துள்ளார். சிறு வாக்கியங்களை மெதுவாகத் தொடுத்து கட்டுரை எழுதுவதிலும் இரட்டுற மொழிந்து உரையாற்றுவதிலும் ஆனந்தர் மிகவும் வல்லவர். அவரது பேச்சை எவ்வளவு நேரமும் சலிப்பின்றிக் கேட்டுக் கொண்டிருக்கலாம். அதனால் இலங்கை வானொலியும் அவரைப் பயன்படுத்தத் தவறியதில்லை.
கல்வி உலகில் புகழ்பூத்த மலராய்த் திகழ்ந்த ஆனந்தரின் சேவை வெளிமாவட்டத்துக்கும் தேவைப்பட்டதால் நாவலப்பிட்டி கதிரேசன் கல்லுாரியில் அதிபராக இவர் நியமனம் பெற்றார். இவர் 1950 ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக்கழக B.A

s. பெற்றிருந்ததால், உயர்ந்தோர் هc،٦ ميوو மதிக்கப்பெற்றதில் வியப்பொன்றும் இல்லை. நாவலப்பிட்டி கதிரேசன் கல்லுாரியில் அதிபராய் இருந்து நற்பணி ஆற்றிய காலப்பகுதி(01.11.1951-31.12.1963) இவருக்கு உயர்ந்த பெருமையைத் தேடிக் கொடுத்தது. பின்னர் இவரது சேவைகள் புசல்லாவை சரஸ்வதி வித்தியாலயத்திலும்(01.01.1964-30.06.1966) இடம் பெற்று அதிபர்ப் பதவியில் நற்பெயர் ஈட்டினார். திரு.சபா. ஆனந்தர் 06.10.1970 அன்று கல்விப்பணியில் நயினாதீவு மகாவித்தியாலய அதிபராக ஓய்வு பெற்றபோது அறிஞர் உலகம் அவரது நீண்டகாலக் கல்விச் சேவையைப் புகழ்ந்து பாராட்டியது.
கல்வி உலகிலும், அறிஞர் குழாத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பெருமதிப்பீட்டிய திரு. சபா. ஆனந்தர் பிறந்தகத்திலும் வேட்டகத்திலும் தம்மாலான பங்களிப்பை ஈர்ந்து குடும்ப உயர்வுக்காகப் பெருமுயற்சி செய்துள்ளார். அத்துடன் கோயில் தொண்டுகள் அறப்பணிகளிலும் முன்னின்று உதவியுள்ளார்.மேலும் 'உழவார் உலகத்து ஆணி என்ற பொய்யா மொழியை நினைத்து உழைத்த பெருமையும் இவருக்குண்டு. மாடு,மனை, மக்கள், சுற்றம், யாவும் நிறைவுறப்பெற்று வாழ்ந்த சபா ஆனந்தர் யுவ ஆண்டு மாசி மூன்றாம் நாள் வியாழன் இரவு 2 மணியளவில் அபரபக்கத்துவாதசியும் பூராடநட்சத்திரமும் பொருந்தி வந்த புண்ணியப்பொழுதில் (16.02.1996-2a.m) இயற்கை எய்தியமை அறிஞர் உலகுக்கு ஒரு பேரிழப்பாகும்.
பண்டிதர் சபா ஆனந்தர் அவர்களின் வாழ்க்கைச் சிறப்பை நினைக்குமிடத்து
"மன்னா உலகத்து மன்னுதல் குறித்து
தம் புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே' என்ற புறப்பாடல் வரிகளை மீளச்சிந்தித்தல் சாலப் பொருந்தும்.
一ノ - ܠ

Page 12
அமரர் சபா ஆனந்தரின் அமரத்துவ
வெண்பா ஆண்டுயுவ மாசிமுன் றாய(கரு நாளபரம் பூண்ைட துவாதசி பூராடம்- நீண்டபுகழ் மேவுசபா. ஆனந்தர் மின்னுசடைச் சங்கரனின் சேவடியைச் சேர்ந்த தினம்
இத்தகை சிறந்த இசைமிகு நாளில் அத்தன் அடி.சபா ஆனந்தர் பெற்றார் உத்தம குணத்தன் உயர்கலைச் செல்வன் பத்தி மிகுந்த பணிபறி வாளன் தமிழும் சைவமும் தழைத்திட வேண்டும் நமதெதிர் கால நற்சமு தாயம் தருமம் வாய்மை தணர்னருள் நீதி வருமனத் தூய்மை மாசிலாக்ககலவி மலைவிளக் காக வளர்ந்து பொலிந்த நிலைபெற வேண்டும் நிறைகலைச் செல்வம் மலரவேண் டுமெனும் மனமும் மனத்தில்
நிலவுமச் செயரும் நிகழ்த்திய பெரியோன் கல்விச் சேவைக் கனமிகு மதிபராய்ச் சொல்வளத் தாலே சுரந்திடும் சேவைகள் ஆற்றிய சீமான் அன்புச் சிந்தையன் போற்றிடும் இணுவில் பொலிமஞ் சப்புரக் கந்தனைத் துதித்துக் கருணையும் பெற்றான் பந்தனை யறுத்தான் பரகதி யடைந்தான்
அண்ணாண் ஆன்மா அமிர்தா னந்தப் பொன்னருள் பொருந்தப் போற்றுவோம் சாந்தி
அருட்கவி சி விநாசித்தம்பி
ரீநாகவரத நாராயணர் தேவஸ்தானம்
நாகேஸ்வரம் - அளவெட்டி
- -- ܪܓܠ
Y

/ ༄༽
செயற்கரிய செய்வர்
பெரியார்
இணுவிற் பதியை ஒளிமயமாக்கியவர்களில் அமரர் சபா ஆனந்தர் குறிப்பிடத்தக்கவர். ஆசிரியராகவும், அதிபராகவும் அறிவுரை பகர்ந்து நல்வழிப்படுத்தும் குருவாகவும் இவர் வாழ்ந்தார். நாவலப்பிட்டியில் கதிரேசன் கல்லூரியில் அதிபராக இருந்த காலத்தில் எம்மை வரவேற்று உரையாற்ற வைத்து உபசரித்து அனுப்பிய நிகழ்வு இன்றும் என்னுள்ளத்தில் பசுமையாக இடம்பெற்றுள்ளது. தான் கற்ற அறிவெனும் ஒளியில் ஆயிரம் ஆயிரம் சுடர்களை ஏற்றிவைத்து கல்வி உலகையும் கடமையுணர்வையும் ஆத்மீக எண்ணங்களையும் மேலோங்கச் செய்தவர் இப்பெரியார். ஆண்டுகள் பலவாக வாழ்ந்த பொழுதும் புன்முறுவல் மாறாத முகத்துடன் உறுதியான வார்த்தைகளால் அனைவரையும் நெறிப்படுத்திய பெருைைம இவருக்குண்டு. இப்பெரியாரின் இறுதிக்காலத்தில், அதாவது கடந்த ஆண்டிலே கூட இணுவிற் பதியில் சைவசமயம் சம்பந்தமான நிகழ்ச்சிகளிலே கலந்து ஆசியுரை வழங்கிய புண்ணியவான் இவர். எனவே மனத்தாலும், வாக்காலும், காயத்தாலும் ஒன்றுபட்ட அஞ்சலியை பெரியாரின் திருவடிகளுக்குச் சமர்ப்பிப்பதில் திருப்தியடைகின்றேன்.
'ஒருவரின் கடமைச் செயல் மற்றவரின் மனதை நிறைவு செய்வதாயிருந்தால் அதுவே கடமையின் பரிசாகும்’
சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி தலைவர் துர்க்காதேவி தேவஸ்தானம்
- - தெல்லிப்பள்ை
ار ܢܓܠ
2能

Page 13
Z - - ཛོད༽
“ஒளிவளர் விளக்காய் விளங்கிய
கல்விமானி”
ஒளிவளர் விளக்காய் ஒப்பிலா அறிஞராய் அகவையில் மூத்தோனாய் இணுவையூரை அலங்கரித்த ஆனந்தர் ஐயா அமைதி கொண்டு விட்டார் என்ற செய்தி மிகுந்த வேதனைக்குரியது கல்வியில் வல்லோனாய் நல்லாசிரியனாய் கடுஞ்சொல் அல்லனாய் ஈரநெஞ்சினனாய் ஈடு இணையற்று வாழ்ந்த ஆனந்தர் ஐயாவின் பெருமைகள் சொல்வி முடிக்கக் கூடிய ஒன்றல்ல, "நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்னும் நல்லருள் வார்த்தைக்கு அமையப் பலரைக் கல்விக் கடலில் நனைத்து மேன்மையுறச் செய்தவர். அதனாலேயே சேந்தனார் இறைவனை "ஒளிவளர் விளக்கே' என உயர்பொருளில் சொல்வது போல் சபா. ஆனந்தரின் ஆளுமைக்கு ஆட்பட்டுக் கடன் பட்டவர்கள் அவரைப் புகழ்ந்துரைக்கும் வேதவாக்காக "அவரால் நாம் அறிவு பெற்றோம். எம்மால் எம்மாணக்கர் ஒளி பெற்றனர்”என்பர்.
இணுவிலைப் பொறுத்தவரையில் சபா ஆனந்தர் என்னும் விளக்கு பேரொளியாகி அகலப் பிரகாசித்து வளர்ந்து கொண்டே வருகிறது எனலாம். தகைமையாளன் கற்ற பின் நிற்கும் தகவுக்கு ஏற்ப திசை தெரியாதிருந்த ஏழை மாணாக்கருக்கு கலங்கரை விளக்காகி என்றும் கடவுளாய் கதியாய் போற்றும் உத்தம நிலையில் அவர் கல்விச்சேவை ஊர் அறிந்தது உலகம் அறிந்தது முற்கால குருகுலவாசம் போல், தான் கடமை ஆற்றிய அத்தனை ஊர்களிலும் அவர் இல்லம் விளங்கிய சிறப்பினை பலரும் போற்றுகின்றார்கள் வடமாநிலக் கல்வி அதிபதியாக விளங்கிய மணிவிழாக் கண்ட சுந்தரலிங்கம் முதல் பல அறிஞர்கள் இவரது பாசறைக்குள் வளர்க்கப்பட்டுப் பர்ணமித்தவர்கள்.
கல்விச் சேவையோடு ஆன்மீகப் பணிகளிலும் இலக்கிய வளர்ச்சியிலும் இசை, நாடகத்துறைகளிலும் இவருக்கு உறவு மிக நெருக்கமாய் இருந்தது. ஆதலால் அக்காலத்து யாழ்ப்பாண மேடைகளில் ஆனந்தரின் ஆற்றல்கள் பெரிதும் படித்தவரையும் பாமரரையும் கவர்ந்திருந்தது.
'உவப்பத் தலைக்கூடி உள்ளப பிரிதல்
لابد "அனைத்தே புலவர் தொழில் ܢܠ
Ν
مس.. س - سسسسسس - - -<ه

r என்ற வள்ளுவரது வாக்கிற்கு அமைய அவரது உரைகள் இருந்தன. இனி "இவரது உரையினை எப்போது கேட்கலாம்' என்ற மன ஆதங்கத்தை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு நகைச்சுவையோடு கூடிய நல்லுரைகளாக அமைந்தன. ஆங்கிலத்திலும் மிகுந்த புலமை கொண்ட ஆற்றலாளனாக விளங்கிய இவர், சேக்ஸ்பியர் போன்ற மேலைத் தேச அறிஞர்களின் நூல்களைக் கற்றுத் தெளிந்து, அவற்றில் உள்ள நயப்புரைகளைச் சபையிலே இரு மொழி அறிவோடும் பேசும் போது அவையில் உள்ள மக்கள் ஏங்கி இரசிப்பதை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கண்ட இளஞ்சந்ததியினர் இப் பழுத்த அறிஞரை விதந்து போற்றுவதை நாம் கண்டு அனுபவித்தோம். இத்தகைய மேதாவியின் இழப்பு இணுவிலுக்கு மட்டுமல்ல ஈழநாட்டிற்கே பேரிழப்பாகும். தள்ளாடுகின்ற வயதிலும் எல்லோர் வீட்டு இன்ப துன்பங்களிலும் கலந்து அறிவுரையும் ஆறுதலும் அளித்த நன்னயம், இணுவையூர் பதியில் நடைபெற்ற திருமுறைப் பெருவிழாவில் இணுவை மக்களே திரண்டு பேரறிஞர் விருது வழங்கி இணுவையூரின் மூத்தோனாய் அவருக்குப் பட்டாபிடேகம் செய்து கெளரவித்து மகிழ்ந்தார்கள். அன்றைய அவரது உரை மேடையில் பேசிய கடைசி உரை "இணுவைக் கந்தனின் விதியில் நீவிர் தந்த கெளரவம் எல்லாம் கந்தவேளுக்கே சொந்தம், முருகவேளுக்கு மீளா அடியவனாய் சின்ன வயது முதல் இருந்தமையால் கிடைத்த பலன்" என்று தனது நிறைவுரையை ஆற்றி மகிழ்ந்தார்.
இன்று ஊரிழந்து, உறவிழந்து, உற்ற கோயில்கள் இழந்து அல்லலுறும் எமக்கு உத்தமர் இவரின் இழப்பும் பெரும் வேதனையே என் செய்வோம். இறைவனின் நியதிக்கு எல்லோரும் கட்டுப்பட்டவர்களே. அவனது அழைப்பை ஏற்ற ஆனந்தர் ஐயாவின் ஆத்மா சாந்தி பெறப் பிரார்த்திப்போமாக,
3,477
"செஞ்சொற்செல்வர்” ஆறு. திருமுருகன்
കെ 0قوق ۔ ۔gygfli(.............نی T(up tot தணுவ r! :

Page 14
/ இணுவில் சபா. ஆனந்தர் N
எனது ஆப்த நண்பர் சபா. ஆனந்தர் நல்லதொரு ஆசிரியரும் அதிபருமானவர். பூர்வபுண்ணியத் தொடர்பால் சிறந்ததொரு மனைவியையும் பெற்றார். நல்லவர் தீயவர் என்பது அவரவர் எச்சத்தால்(பிள்ளைகள்) அறியப்படும் என்கின்றது வள்ளுவம். கெங்காதரன், பாலழறீதரன், பால வடிவேற்கரன், கார்த்திகைக்குமரன், பாலமுரளிதரன் பாண்டவர்போல ஐவருடன் ஆனந்தகெளரி, ஆனந்தரமணி இரு செல்வப் புத்திரிகளோடு எழுவரும் நல்லநிலையிலுள்ளனர். எப்போதும் சிரித்த ஆனந்த முகம், பீடுநடை, எல்லோருடனும் கனிவான பேச்சு, நல்லதொரு மாணவர் கூட்டம், வாலிபத் தோற்றம். மேலும், யாழ்ப்பாண அரசன் சிங்கபரராசசேகரன் தமிழ்நாட்டு மன்னர்க்கு விண்ணப்பித்து வந்த பெருமக்களில் பேராயிரமுடை யானும் குடிகளும் இணுவிலில் குடியமர்த்தப்பட்டதாக யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது. கி.பி 134ல் இலங்கை மன்னன் கசபாகு கொண்டு வந்த கண்ண்கி சிலைகளிலொன்று மக்கள் குடியிருப்பு இணுவிலில் தாபிக்கப்பட்டதாக சேரன் செங்குட்டுவன் வரலாற்று நூல் கூறுகிறது. இணுவில் புராதன பெருமை மிக்க கிராமம். '.
புறநானுாற்றில் வரும் தனிப்பாடலொன்று, வயோதிப வயதிலும் வாலிபத் தோற்றம் எப்படியையா உங்கட் கு? என்று கேட்டபோது பிசிராந்தையார் என்னும் புலவரின்
யாண்ைடு பலவாக நரையில ஆகுதல் யாங்கு ஆகியர்என வினவுதிர் ஆயின் மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர் யான் கண்டனையர் என்இளைஞரும் வேந்தனும் அலலவை செய்யான் காக்கும் அதன்தலை ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்யான் வாழும் ஊரே என்ற புறப் பாடல் நண்பர் ஆனந்தர் அவர் கட்கும் மிகப் பொருத்தமானதே. மகள் ஆனந்தரமணியின் பிரிவு தான் அவரைப் பெரிதும் வருத்தி வலுவிழக்கச் செய்து விட்டதெனலாம். ኣ
1929ல் ஆரம்பமான கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் 1932-34 ஆண்டுக் காலப் பயிற்சி மாணவரானோம். அதிபர் அ. பொன்னையா கண்டிப்பான பேர்வழி. நீண்ட காற்சட்டையும் மேலங்கியும் தலைப்பாகையும், தூய வெண்ணிறம், உப அதிபர் எஸ்.கே. இராசசிங்கம் (கரவெட்டி)
\ ಹಾಆಶಿಪಿ (மட்டக்களப்பு) மோசஸ் முருகேசு (உடுவில்), மட்டுவி)
24

s
ண்டிதர் வே. மகாலிங்கசிவம், கோப்பாய் எஸ்.ஆர் கனகசபை, ،ܝܘܚ ` கோன் வித்தியாதரிசி உடற்பயிற்சி, பரம்-சங்கீத, டேவிற் தம்பையா கைவேலை அனைத்துப் பேராசிரியர்களும் வெண்ணிற உடையே.
அத்தனை 40 பேரைக் கொண்ட 1ம், 2ம் வகுப்பு மாணவர் 80 பேரும் 'யூனிபோம்” கண்டிப்பு முஸ்லிம் மாணவர் கூட குறியில்லாத வெள்ளைச் சாரமும், வெள்ளை நாஷனலுமே எமது வகுப்பில் ஆங்கிலம், தமிழ் எஸ்.எஸ்.சி., கேம்பிரிஜ் சீனியர் வகுப்புகளில் சித்தியடைந்த ஆசிரியராயிருந்தவர்களும் ஆசிரிய கலாசாலைப் பிரவேச பரீட்சையிலும் தேறியோரே பயிற்சிக்குச் சேர்க்கப்பட்டனர். மலாயில் உத்தியோகமாயிருந்து கட்டாய லீவில் அனுப்பப்பட்ட 35-40 வயதுடைய நால்வருமிருந்தனர். பரீட் சையில் ஆனந்தர் எப்போதும் முதன்மை வகித் தமையால் பேராசிரியர்கள் முதற் கொண் டு சக மாணவர் எல லாரதும் நன்மதிப்பிற்குடையவராய் இருந்தார். கலாசாலைக் கைப்பாந்தாடக் குழுவிற்கும் முதல்வர். அவர் கற்பித்த செங்குந்தா, சாவகச்சேரி இந்துக்கல்லூரி போன்றவற்றிலும் நாவலப்பிட்டியில் அதிபராயிருந்த போதும் மாணவர் ஆசிரியர், பெற்றார் அனைவரது பெருமதிப்பிற்கு உடையவராய் பிரபல்பயம் பெற்றிருந்தார். a
1987ல் இந்திய அமைதிப் படையினரிடம் அகப்பட்டுக் கொண்ட இவர் மொழியறிவு காரணமாக உயிர் தப்பமுடிந்தது தன் நண்பர்கள், மாணவர்கள் தவறு செய்தவிடத்து அவர்கட்கு வேண்டிய புத்திமதிகள் நயமாகவும் பயமாகவும் கூறி நல்வழிபடுத்திய பெருமையும் இவர்க்குண்டு. 'நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு”. இதனால் இவரிடம் குருபக்தியுடைய மாணவர் கூட்டம் இருந்தது.
இந்திரனே - சந்திரனே என்று முகமன் பேசும் பழக்கமும் ஆனந்தரிடம் கிடையாது என்பதனை யான் நன்கு அறிவவேன். "இளைஞர் இவர் எமக்கு இன்னம் யாமென்று புனையினும் புல்லெனும் நட்பு”. இவர் நமக்கு இத்தன்மையவர்: நாம் இவருக்கு இத்தன்மையுடையம் என் பேசினும் நட்பு அற்பமாகவே முடியும்” இவர் செய்த தொண்டு இல்லற தர்மம் மேற்கொண்ட வித்தியா தர்மம் தொடர்ந்து இவரைப் பாதுகாக்கும்.
இவர் ஆன்மா சாந்தி பெறவும், இவரது குடும்பத்தார் அனைவரும் நல்வாழ்வு பெறவும் பிரார்த்திப்போமாக.
க.இ.குமாரசாமி ஓய்வு பெற்ற அதிபரும் சமாதான நீதிபதியும்
)கோ ܢܠ

Page 15
7.
ஐயன்திரு வடியடைந்திர் ஐயசபா
உலகுவப்ப வாழ்ந்தாய்! வாழி རྗོད༽
பெற்றவரும் பிள்ளைகளும 'பிறந்தமண்ணும்
பெருமைபெறச் சிறந்துவாழ்ந்து கற்றவர்கள் மத்தியிலோர் கலங்கரையாய்க்
காண்கினிய சான்றோனாகி நற்றமிழில் துறைதோய்ந்த நல்லறிஞனாகியே
நாடரிய பணிகளாற்றி உற்றதுணை யாயெவர்க்கும் ஊருணியாய்
உலகுவப்ப வாழ்ந்தாய் வாழி
அறியாமை இருளகற்றும் ஆசாற்கும்
ஆசானாயப் அறிவைட்டி நெறிகாட்டும் கல்லூரி பலவற்றின்
நிகரில்லா அதிபனாகி குறிகொண்ட கல்விமான் கள்பலரை
உருவாக்கி உலகம்உய்யும் செறிவுடைய சேவையால் சிறந்தீர்நிர்
செந்தண்மை யாளவாழி
சைவநெறி தழைத்தோங்கும் தன்னிகரில்
இணுவைநகர் மண்ணின்மாண்பால்
பொய்யில்சிவன் அடியனாயப்ப் புவிமதிக்கப் புண்ணியங்கள் எண்ணில்செய்தே
உய்யுநெறி காட்டியுயிர்க் குறுதுணையாய்
சைவாசாரங்கள் பேணி
ஆனந்தரே நிர்வாழி சைவப்புலவர் சு.செல்லதுரை அதிபர், மெய்கண்டான் ம.வி இளவாலை
لد =

7. A. ༄༽
இணுவைuம்பதி மும்மொழி வல்ல
食 负 演 禽 முன்னாள் கல்லூரி அதிபர்
பண்டிதர் சபா.ஆனந்தர் அவர்கள்.(B.O.L.,B.A.London) உயர்ந்த பேரறிவாளன். இணுவிலம்பதியில் சிறப்புக்குக் காரணமான சிலரில் முன்வரிசையில் வைத்து எண்ணப்படுபவர் என்பது யாவராலும் ஒப்புக்கொள்ளத்தக்க ஒன்று. 1910ஆம் ஆண்டில் சட்டம்பியார் சபாபதிப்பிள்ளையும், அவர் பத்தினியாரும் செய்த தவத்தால் நாலாம் மகனாகப் பிறந்தவர். பெற்றார்போல் இவரும் இணுவில் சிவகாமி அம்மைமீது மிகுபத்திமானாக விளங்கினார். தந்தையார் இவரின் ஆரம்ப வயதிலேயே காலமானதால் தாயரும் உடன்பிறந்த சகோதரரும் இவரை ஆங்கிலம் படிப்பிக்கும் அவாவினால் யாழ் இந்துக்கல்லூரியில் படிக்க வைத்தனர். கேம்பிரிச் சீனியர் வகுப்பில் சித்தியெய்திய இவர் மூன்று வருடங்கள் தம்மிடம் கற்கவந்த பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கற்பித்து வந்தார்.
1937ல் அவரும் நானுஞ்சேர்ந்த படித்து, தென்னிந்திய தமிழ்ச்சங்கம் நடாத்திய 0இளந்தமிழ்ப் புலவர்0 பரீட்சையிற் சித்தியெய்தினோம். கல்வி கற்பதில் ஆர்வம்கொண்ட திரு.ஆனந்தர் யாழ் ஆதி.பா.வி.சங்க பண்டித வகுப்பில் சித்தியெய்தி யாவராலும் பாராட்டப்பட்டார். மும்மொழி வல்லவரானபடியால் அரசின் புலமைப்பரிசில் பெற்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் B.O.L என்ற பட்டத்தைப் பெற்றார். இணுவில் சைவமகாஜன, செங்குந்த இந்து, சாவகச்சேரி இந்து முதலான கல்விநிலையங்களில் உதவியாசிரியராக இவர் ஆற்றிய பணிகள் மகத்தானவை. நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரியில் பல வருடங்கள் அதிபராகக் கடமையாற்றி அங்கிருந்து புசலாவையிலும் ஈற்றில் நயினாதீவு கல்லூரியொன்றில் அதிபராயிருந்து . ஓய்வுபெற்றார்.
ஓய்வுபெற்றவர் சும்மா இருக்காமல் இணுவில் மஞ்சத்தடி, விவேகானந்தா சனசமூகம் நடத்திய முதியோர் கல்வி படிக்கும் வகுப்பை நடாத்தி (சுமார் 9 வருடம்) அவர்களாற் பாராட்டப் பெற்றார். மேலும் பல சொற்பொழிவுகளைப் பாடசாலைகளிலும் சங்கங்களிலும் நடத்திய அவர் எந்தவிஷயம் எடுத்தாலும் அவ்விஷயத்தை நன்றாகச் சுவைபடப் பேசுவதில் வல்லவராயிருந்தார். மறந்தும் மற்றவர்ைத் தாக்காமலே பேசிப் பாராட்டைப் பெறுவார். கடைசிக் காலத்தில் கோயில் வழிபாட்டிலும், இணுவில் அன்பர்களைச் சந்திப்பதிலும் காலத்தைக் கழித்த இவர் அடியேனைக் கவிதை பாடச்செய்வதிலும், பக்தி இலக்கியஞ் செய்வதிலும் தூண்டியவர். இவரது இழப்பு இணுவிலுக்குப் பெரும் நட்டமெனலாம்.
கவிஞர் வை.க.சிற்றம்பலம்
/" ... ܓܠ

Page 16
/ ਨ dFLIT 9,605g5/T
B.A.(Lond)B.O.L(Madras)
பெரியார் சபா.ஆனந்தர் அவர்களுக்கும், இணுவில் அரசோலை விநாயகர், மஞ்சத்தடி அருணகிரிநாத சிவசுப்பிரமணியர் தேவஸ்தானத்திற்கும் அவர் இளம்பராயம் தொட்டே நிறையத் தொடர்புண்டு.
இப்பெரியார் பண்டிதர் சோதனையில் சித்தியடைந்தபின் முதன்முதலாகச் சமயச்சொற்பொழிவு நிகழ்த்திய இடம் இம்முருகன் கோயிலாகும். இவர் முதன்முதலாகப் பெரியார் வேலாயுதர் சன்னியாசியார் அவர்களால் மலர்மாலையிடப்பட்டுக் கெளரவிக்கப்பட்டதும் இச்சந்நிதானமேயாகும், எனப் பெரியார் சபா.ஆனந்தர் அவர்கள் அடிக்கடி கூறுவார். இதன்பின்பு தமது வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் இலங்கையில் பல பாகங்களில் நடைபெற்ற சமய இலக்கிய நிகழ்வுகளில் பல ஆயிரக் கணக் கான மலர் மாலைகளால சூட் டிக் கெளரவிக்கப்பட்டதாகப் பெரியார் அன்பொழுகக் கூறுவார்.
கடந்த 9 வருட்களுக்கு மேலாக அவர் நோய் வாய்ப்படும் தறுவாயப் வரை ஒவ்வொரு கிழமையும் சனி, ஞாயிறு இருதினங்களிலும் திருக்குறள், தேவார-திருவாசக வகுப்புகள் நடாத்துவதற்கு மூலகாரணமாக அமைந்தவர் பெரியார் சபா.ஆனந்தராவர். இவ்வகுப்பில் சமய இலக்கியங்களில் கூடியநாட்டமுள்ள அறிஞர்கள் ஒன்று கூடிய சற்சங்கமே நடாத்துவார்கள். அவை ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும்.
பெரியார் ஆனந்தர் அவர்கள் இக்கிராமத்தில் ஓர் தலைசிறந்த
சமூக சேவையாளர் ஆவர். இவர்பங்குபற்றாத குடும்ப நிகழ்வுகள் இல்லையென்றே கூறலாம். ஒவ்வொரு குழந்தையுடனும்
لر ܢܠ

ബ காட்சியே ஓர் அற்புத நிகழ்ச்சியாகும். ༄ས་
அரசோலை விநாயகர், மஞ்சத்தடி முருகன் ஆலயத்தில் நடைபெறும் சமயநிகழ்வுகள் அத்தனையிலும் அவர் பங்குகொள்ளத் தவறுவதில்லை. அதேபோல மஞ்சத்தடி கிராம முன்னேற்றச் சங்கத்தால் ஒழுங்குசெய்யப்படும் சமய இலக்கிய நிகழ்வுகள் யாவற்றிலும் அவர் வாழ் நாள் பூராகவும் பங்குகொண்டு இக்கிராம வளர்ச்சியில் அயராது பாடுபட்ட ஒர் மூத்த பேரறிஞராவார் என்பதைக் குறிப்பிடமுடியும்.
இவர் மறைவு எமது தமிழ் பேசும் சமூகத்தின் பெரிய இழப்பாகும். இவர் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போமாக.
வணக்கம்
கா.வைத்தீஸ்வரன் அரசோலை விநாயர் மஞ்சத்தடி அருணகிரிநாத சிவசுப்பிரமணியர் தேவஸ்தானம் மஞ்சத்தடி கிராம முன்னேற்றச்சங்கம் சார்பாக
இணுவில் 10.03.1996

Page 17
ܢܓܠ
ཛོད༽
ஆனந்தண் பிரிவுநினைந்தவலமுறும் சிநஞ்சம்
கலித் தாழிசை
இணையிலியென் றுலகுபுகழ் இணுவைவளம் பதியான்
இருபுடைவேற் கணணியரோ டியங்குமெழில் விசாகன் துணையடிகள் மறவாத தூயனெமர் நேயன்
தொன்மைமிகு தமிழுணர்ச்சி துளும்புளத் தூயன் அணையுமவர்க் கரும்நண்பன் ஆர்வமொடு வரவேற்
றன்பருளும் ஆசாரத் தின்பமுறும் அண்ணல் ஆனந்தன் பிரிவுநினைந் தவலமுறும் நெஞ்சம்
தேவலருந் தமிழினிமை தெவிட்டஉரை வழங்கும்
செவ்வியினான் பவ்வியமும் பணிவுமொளிர் நடையான் மேவலரும் வாயடங்க விடுக்குமியல் வல்லான்
மெய்த்தவிறற் கலைஞான வித்தகன்தன் பரிவால் நாவனகர்க் கதிரேசன் கல்லூரி யதனில்
நம்மையணைத் தாதரித்து நலங்கள்பல புரிந்தோன் ஆனந்தன் பிரிவுநினைந் தவலமுறும் நெஞ்சம்
தொட்டதெலாம் பொன்னாக்குந் தூயமலர்க் கரத்தான் சோர்வின்றிப் புரிபணியால் தூரதரி சனத்தால் வெட்டவெறுங் கொட்டிலையும் விண்ணளவு ஓங்கும் மேதகைய கல்லூரி யாக்கிவிடும் விகிர்தன் பட்டறிவு கண்டதிது பார்புகழுஞ் சாவை
பழுதில்சீர் நாவல்நகர்க் கல்லூரி சான்றாம் விட்டகுறை ஏதுமுண்டோ வேறெதுவோ அறியோம்
விண்ணடைந்து மண்ணவரை வேதனையி லாழ்த்தும் ஆனந்தன் பிரிவுநினைந் தவலறும் நெஞ்சம்
பண்டிதர் மு.கந்தையா ஏழாலை
گرے

O O རྗོད་ மாபெரும் அறிஞர் பண்டிதர் சபா ஆனந்தர் எங்கள் நாட்டில் தோன்றிய மாபெரும் அறிஞர்களுள் ஒருவர். சிறந்த தமிழறிஞரும் கல்விமானும் ஆவர். சிறந்த பண்பாளர். அனைவரொடும் அன்பாகப் பழகுபவர்.
தம்மை வெளிப்படுத்தாமல் வாழ்வாங்கு வாழ்ந்த தத்துவ அறிஞர். அனைவரதும் நன்மதிப்பைப் பெற்றவர்.
இவர் தமிழும் சைவமும் வளர்த்த இணுவில் ஊரினர், நல்லறிஞர் மரபில் தோன்றியவர். இவரது தந்தை அக்காலத்தில் சிறந்த தமிழறிஞராக விளக்கினார். தமது தந்தையார் வழியில் இருவரும் ஆசிரியர் ஆனார்.
ஆசிரியர் பயிற்சி பெற்று தமது ஊர்ப் பாடசாலையில் ஆசிரியரான இவர், பின்பு சைவ வித்தியாவிருத்திச் சங்கம் நடத்திய யாழ். செங்குந்தா வித்தியாலயத்தில் ஆசிரியரானார். இங்கு ஆசிரியராக இருந்த போது பண்டிதத் தேர்வில் சித்தி பெற்றார். பின்பு பீ.ஏ.தேர்வில் சித்திபெற்றார். கல்வி அமைச்சுக் கல்விப் புலமைப் பரிசில் பெற்று சென்னைப் பல்கலைக் கழகம் நடத்திய பி.ஓ.எல் கற்கை நெறியிற் சேர்ந்து அத் தேர்வில் சித்தி பெற்றார்.
பின்பு சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரியின் அதிபராகப் பொறுப்பேற்று அக்கல்லூரியின் வளர்ச்சிக்கு உதவினார். பின்பு நயினாதீவு தமிழ் மகா வித்தியாலயத்திலும் அதிபராக இருந்தார்.
பல பிரதேசங்களில் ஆசிரியராகவும், அதிபராகவும் பணிபுரிந்ததி னால் பல பிரதேசத்தவரோடு பழகவும், அப்பிரதேசத்து மாணவர் களின் கல்வி உயர்வுக்கு உதவவும் இவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் இவரிடம் கற்றுப்பயன்
७०#errone", لر

Page 18
ཛོད༽
7. இவர் கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்பச் சொற்பொழிவு ஆற்றுவதில் வல்லவர். அகில இலங்கைச் சைவ இளைஞர் மகாநாடு போன்ற பெரும் மகாநாடுகளில் சொற்பொழிவு ஆற்றியுள்ளார். கலைச்செல்வி முதலாய பல சஞ்சிகைகளிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர்கள் காலத்தில் குல.சபாநாதன், கலைப்புலவர் நவரத்தினம் முதலாய நல்லறிஞர்கள் பலர் இருந்தனர். இவர்கள் அனைவரதும் நன்மதிப்புக்கு உரியவராக இருந்தார்.
காஞ்சிபுரம் மெய்கண்டார் ஆதினத்து முதல்வர் ஒருமுறை இலங்கை வந்தார். இவர் ஆதீன முதல்வராக முன் சென்னையில் புகழ்பெற்ற தழிழ்த்துறை ஆசிரியராக இருந்தார். இதனால் ஆதீன முதல்வர் பண்டிதர் சபா ஆனந்தரின் சிறப்பாற்றல்களை எம்மிடம் தெரிவித்தார். பண்டிதர் சபா ஆனந்தர் தம் ஆசிரியப் பணியோடு சமய, சமூகப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தார். ஆசிரியராக இருந்த தொடக்க காலத்தில் இளைஞர் சேவா சங்கத்தை நிறுவி இதன் தலைவராக இருந்து உதவினார். இச்சங்க ஆதரவில் சிறப்புச் சொற்பொழிவுகள் இணுவை சிவகாமி அம்மை ஆலயத்தில் சில ஆண்டுகள் தொடர்ந்து நிகழ்ந்தன. அறிஞர் பலர் இவருக்கு உதவியாக இருந்தனர்.
எம்மிடம் பெரும் நன்மதிப்பும் பற்றும் உள்ளவர். தமிழ், சமய, சமூக, கல் வித்துறைகளில் பணியாற்றுவதற்கு எம்மை வழிப்படுத்தினார். தாய்போலவும், தந்தை போலவும், நண்பன் போலவும் அனைவருக்கும் உதவினார்.
வள்ளுவர் வழியில் தம் பிள்ளைகளைச் சிறந்த கல்வியாளராகவும் பண்புள்ளராகவும் வழிப்படுத்தியுள்ளார். அதிபர் பணியில் இருந்து பெற்றபின்பும் சமய, சமூகப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.
لري ܢܠ

7. ཛོད་
“பெரியோரை வியத்தலும் இலம்
சிறியோரை இகழ்தலர் அதனிலும் இலம் ' எனப் புறநானூற்றுப் புலவன் கூறியது பண்டிதரின் கோட்பாடாக இருந்தது.
பண்டிதர் சபா ஆனந்தரினால் ஊரும் சமூகமும் நாடும் உயர்வு பெற்றுள்ளன. இவரது ஊனுடம்பு மறைந்தாலும் புகழுடம்பு என்றும் நிலைபெற்று நிற்கும். இவரது பலதுறைப் பணிகளைத் தொடர்வது அனைவரதும் கடமையாகும். ‘அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்” எனப் புறநானூறு அறிவுறுத்துகின்றது.
க.இ.க.கந்தசுவாமி பொதுச்செயலாளர் கொழும்புத் தமிழ்ச் சங்கம்

Page 19
/
சிவப்பேறு பெற்ற செம்மல்
இணுவையம்பதி பெற்றெடுத்த கல்விப் பெருந்தகைகளுக்கெல்லாம் திலகமாகத் திகழ்ந்து, எம்போன்ற பல பண்பாளர்களைத் தாம் வாழ்ந்த சமூகத்திடம் விட்டுச் சென்று தக்கவராகிய பெருமையும் பெற்றுவிட்டார் அமரர் உயர்திரு சபா ஆனந்தர் அவர்கள்.
இலக்கிய புலத்தில் பெருமைபெற்ற அமரர் ஆனந்தர் அவர்கள் செங்குந்தா இந்துக்கல்லூரி, சாவகச்சேரி இந்துக் கல்லூரி, நாவலப்பிட்டி கதிரேசன் மகாவித்தியாலயம், புசல்லாவை சரஸ்வதி வித்தியாலயம், நயினை மகா வித்தியாலயம் ஆகிய கல்விச் சோலைகளில் ஆசானாக, அதிபராக அறிவொளி வீசிய ஞானச் சுடர்.
சிறந்த பேச்சாளராக, இயைபுடைய கூட்டுறவாளராக, முதிர்ந்த சமயசீலராக, மாணவர் கலங்கரை விளக்கமாக வாழ்ந்து காட்டிய அமரர் ஆனந்தர் அவர்கள் கல்வி உலகில் தமக்கென்ற ஒரு நிலையான முத்திரையையும் பதித்துக் கொண்டார்.
தயது பிள்ளைகளைப் போன்றே தம்மை அணைந்து கற்ற மாணவர்களையும் நேசித்ததன் பயனாகவே அண்மையில் தாம் உருவாக்கிய மாணவண் இல் லத்தில் வாழ்ந்து, ஈற்றில் அம்மனையிலேயே தேகவியோகம் பெற்று அதனால் மாணவர் உலகில் பெருமையையும் அமரர் ஆனந்தர் அவர்கள் ஈட்டிக் கொண்டார்கள்.
அமரர் ஆனந்தர் அவர்களின் ஆத்மசாந்திக்கும் அன்னாரின் பிரிவாற்றாமையால் துயருறும் மனைவி மக்களுக்கும் இணுவையம்பதி ரீ சிவகாம சுந்தரி அம்பாளும், இணுவை நொச்சியம்பதி முருகனும் அருள்பாலிக்க வேண்டுமென்று இறைஞ்சுவதுடன், கூத்தப்பிரான் தம் திருப்பாக நிழலில் பொருத்தி வாழும் பேரானந்தப் பெருவாழ்வை அளிக்க வேண்டுமென்றும் பிராத்திப்போமாக.
இரா. சுந்தரலிங்கம்
முன்னைநாள் வடமாநிலக் கல்விப் பணிப்பாளர்
செல்வானந்த வாசம் யாழ்ப்பான பல்கலைக்கழக மேலவை உறுப்பினர் இணுவில் மேற்கு
گرے مقابتها

སོ།༽
A. Noble Soul
It was a terrific shock to me. when I came across the name of the late Mr. Saba Ananther, my most respected neighbour, in the obituary column of the Sunday edition. "The Virakesary”
Mr. Saba Ananther's name is synonymous with Inuvil, a peaceful hamlet in Jaffna, famed for Spirituality and traditional culture. Going Doun memory lane Glimses of his past life flash in my mind. A perfect gentleman without any flaw in his behaviour, character and personlity is no more.
Mr. Saba Ananther's versatility in every sphere of his polished life, can be attributed to the sound education he received in his motherland and abroad. His bachelor's degree in London and his degree in Oriental Languages in Madras speek well of his fluency in Tamil, English, and Sanskrit.
He was a strict disciplinarian, an able administrator and a dedicated teacher during his tenure in the Ministry of Education. Past students and parents of Kathi resan college, Nauva lapitiya and Saras uvathy Maha Vidyalaya, Pusellauva uvill never forget the untiring and selfiessness serUice, he rendered to the hill country community. Befor he doffed his pads he served as principal at Nainativu Maha Vidyalaya. One is reminded of Oliver Goldsmith's "Village School Master” when people from all walks of life approached him for sound aduice, to sort out their problems.
Retirement didn't seclude him from puplic life. He devoted his time to spiritual, cultural and literary activitis. It was a feast to the ear when he chaired the 'Kaviaragam, a forum in the form of debate in verse.
\ لر

Page 20
He also availed himself to students when they ཡོད༽
proached him for help in English, ulithout accepting anything in kind.
Above all he was an active farmer, always toiling hard in the sun scorched earth. It was a familiar sight to see him pedalling his bicycle, uith a touvel wrapped around his head, a sickle in his hand and carrying his farm produce in the carrier of his bicycle; thereby displaying his abherence to the dignity of labour.
Such is the greatness of this unassuming, egoless and noble gentleman, who having settled all his children comfortably in life, breathed his last, after a brief illness, leauing behind an indelible mark in our hearts.
May Pallappa Vairavar, his chosen deity bless his soul uith peace and eternal bliss.
OM SHANTY
C. Kamalaharan
Colombo Hindu College
Bambalapitiya.

அறிவலுயர்ந்த வங்கள் பாட்டா
பாட்டா எனும் பதத்திற்குரிய பெரியவர் - எம் பாசங்களைச் சொத்தாய்க் கொள்ள உரியவர்! பரிவுடனே பாடம் பல சொன்னவர் - தம் பண்பாலே ஊரில் உயர்ந்த உத்தமர்!
வருங்கால வாழ்வுக்கு வழிகள் சொன்னார். மொழி வளமிக்க அவர் திறனால் பண்டிதரானார்! குருவாக எம் குலவிளக்காக நின்றார்! குன்றின் ஒளி விளக்காகத் தரத்தில் வென்றார்!
ஆசானாய்ப் பலருக்கு அருள் புரிந்தவர்! அறிவுரையால் ஊரவரின் அன்புக்குரியவர்! ஆசைமிக்க பாட்டாவாய் எமக்கானவர் - எம்மை ஆழ்ந்த துயரில் ஆழ்த்திவிட்டு விண்ணடைந்தவர்!
வையத்திலே வாழ்வாங்கு வாழ்ந்த பாட்டா - இன்றும் வாழ்கின்றார் எம் மனதில் வழி காட்டியாக! வருங்காலம் ஒளிமயமாய் எமக்கமைய - அவர் வழித்துணையாய் எமக்கமைவார் இறைவன் அருளால்!
பேரணர் - ஆ.இ.வாமலோசனன் பம்பலப்பிட்டி இந்தக்கல்லூரி
27/63, பெரகும்பா பிளேஸ் 6ѣлqршby- б
N

Page 21
Z= རྗོད༽
எமது பாட்டாவின் நகைச்சுவை
மறைந்த எமது பாட்டா பெரிய கல்விமான் மட்டுமல்ல, நல்ல நகைச்சுவையாளரும் கூட அவருடன் கூட இருந்த சில வருடங்களில் நடந்த சில சுவையான சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.
நான் மிகவும் சிறுவனாயிருந்த வேளை, அம்மா இன்னுமொரு குழந்தை பெறத் தயாராக இருந்தார். நானும் அண்ணாவும் ஆண் குழந்தைகள் என்பதால் பாட்டா உட்பட அப்பா, அம்மாவும் அடுத்தது பெண் குழந்தையையே விரும் பினார்கள் . அப்போது பாட்டா என்னையும் , அண்ணாவையும் அழைத்து ஒளைவைப் பாட்டியின் பாடலொன்றை மாற்றிப் பின்வருமாறு தினமும் பாடச் சொல்லுவார்:
'பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம் செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு
தங்கச்சி பாப்பா ஒன்று தா!”
எப்படியிருக்கிறது ஒளவையின் பாடல்? ஆனால் எனக்குப் பின் பிறந்ததோ தம்பி! பாட்டாவும் கொஞ்சம் வெட்கிப் போனார்!
நான் அவரை அன்புடன் “பாட்டா” என்றழைத்தால் உடன் அவர் சொல்வார் ‘ஒமடா-நான் பாட்டா”(Bata) செருப்புத்தான” என்று!
மேலும், ஒருநாள் நாங்கள் மூவரும் சற்று ஆடம்பரமாக
لر ܢܠ

s
உடையணிந்து கோவில் திருவிழா ஒன்றுக்குச் சென்ற போது, பாட்டா எம்மை அழைத்து நகைச்சுவையாக ‘நான் ஒரு சாதாரண ஆசிரியர்விவசாயியின் மகன்’ உங்கள் அப்பாவோ ஒரு பிரபலமான பிரின்சிப்பலின் மகன்'நீங்களோ” பாங்கரின்"(Banker) பிள்ளைகள்! உங்களுக்கென்ன குறை” என்றார். அவ்வேளையில் சிறுவர்களாகிய எமக்கு தகைமை மிக்க ‘பிரின்சிபல்” யாரென்பதை கண்டுபிடிக்க சற்று நேரமாகியது.
அவரின் வழிகாட்டலினாலும், வாழ்த்துக்களாலும் தான் நாம் மூவரும் இன்று கல்லுாரிக் கலை நிகழ்ச்சிகளிலும், வானொலியில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறோம்.
இன்றைய போர்க்கால சூழ்நிலையில் அன்னாரது இறுதிக் காலத்தில் அவரின் இன்ப துன்பங்களில் பங்கேற்க முடியா திருந்தமை மிகவும் மனவருத்தத்தைத் தருகிறது!
பேரன்- ஆ.இ. திருச்செந்தூரன்
27\63, பெரகும்பா பிளேஸ், கொழும்பு - 06

Page 22
7. ート
புண்ணியவான்
அப்பா என்று நினைக்கின்றபோது கற்பூரமாய்க் கம கமக்கின்றார் தகப்பனார். வீடுபேறு எய்திய செய்தி அறிந்ததில் இருந்து தேறமுடியாமல் தவிக்கின்றோம்.அப்பாவின் செய்தி கேட்டுக் கிடைத்த அநுதாப உரைகளை அறிந்ததிலிருந்து பாட்டாவின் மூக்குப்பொடி வாசனையா அல்லது அவரது புகழ் வாசனையா பெரிது எனப் பேரப் பிள்ளைகள் வினா எழுப்புகிறார்கள். எம்மை வையத்துள் வாழ்வாங்கு வாழவைக்க அப்பா அடித்து அரவணைத்து பொருள்சேர்த்து புகழ்சேர்த்து விட்டுப் புண்ணியவானாகச் சிவன் சேவடி சேர்ந்துள்ளார்.
தனது பிள்ளைகளிலும் மேலாக ஊரார் பிள்ளைகள் மீது அன்புச்செலுத்தினார் என்பது நாம் இல்லை என்ற தாக்கமில்லாது தனது மாணாக்கர் குழாத்துடன் இறுதிநாட்களைக் கழித்து இறுதிமரியாதையைப் பெற்றுக் கொண்டார் என்பதிலிருந்து வெளிப்படுகின்றது. எமது தந்தையார் எம் நெஞ்சின் கருவறைக் கருவூலமாக அமர்ந்து விட்டார். அப்பாவின் ஆத்மாசாந்திப் பிரார்த்தனையில் அனைவரையும் கலந்து கொள்ள வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
அம்மா, சகோதரி சகோதரர், மருமக்கள், பேரமக்கள் சார்பில் ஆ. இரகுபதி பாலபுரீதரன் (இலங்கை வங்கி கொழும்பு)
الر
ܢܓܠ


Page 23