கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: Saravanamuttu Chellappah

Page 1
2 21 | SARAVAN CHEL LA
1882 - 1
 

ר - ר சங்கம் !
| gեն
ம்
מחד 4. ח
1曼f*

Page 2

முதலியார் சரவணமுத்து செல்லப்பா
கொழும்புத்
தமிழ்சி சங்க
கைத்திமிகு அன்பளிப்பாக இந்நூல் வழங்கியவழி
புலவர் சிவங் கருகுல usTsior ques இரத்மலான
நினைவு மலர்

Page 3
= = |
H
. . . . . . .
s
 

|- |
|
(
முதலியார் சரவணமுத்து செல்லப்பா

Page 4

முதலியார் சரவணமுத்து செல்லப்பா அவர்கள்
அண்மையிலே இறைவனடி சார்ந்த முதலியார் சர வணமுத்து செல்லப்பா அவர்கள், யாழ்ப்பாணக் கடைசி மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர். சிங்கையாரி யச் சக்கரவர்த்தியின் ஏக புதல்வியான வேதவல்லியின் மரபிலே இவர் தோன்றினர். மாதகலிலே தோன்றிக் கல்விச் சுடர் பரப்பிய பெருந்தகை அம்பலவாணப் புலவரவர்களின் பூட்டனுர் இவர்.
இவர் சிறந்த அறிவாளியாகவும், குணக்குன்முகவும், நெறி திறம்பாத உளம் படைத்தவராகவும் விளங்கினர் சிறந்த பத்திமானகவும், சான்றேனகவும், சமூகத் தொண் டனுகவும் இவர் திகழ்ந்து நாட்டுமக்களின் உள்ளங்களி லெல்லாம் இன்றும் உறைகின்ருர்,
1882-ஆம் ஆண்டு பங்குனிமாதம் ஞாயிற்றுக்கிழமை
யன்று, மீனலக்கின உதயத்தில் பூரட்டாதி நட்சத்திரம் கூடிய சுபவேளையிலே இவர் தோன்றினர்.

Page 5
Gol)
ଗନ୍ଧ கு சனி Gas GରଥF வெ
சந் புதன் 5
SLSSqqSqSSqSSSS S கிரக நிலை
1 6
10 8 7
இளமைக் காலத்திலே இவர் மிகுந்த திறமையுடன் கல்வி கற்று விசேட சித்திகளும் பல பெற்று விளங்கியமையால் வட்டுக்கோட்டை அமெரிக்கன் மிஷன் பாடசாலையிலே சேர்க் கப்பட்டார். கல்கத்தாப் பல்கலைக்கழகப் புகுமுகத்தேர்வுக்கு" ஆயத்தஞ் செய்துகொண்டிருந்த வேளையிலே, சிறைச்சாஆலச் திணைக்களத்திலே ஓர் எழுதுவினைஞர் பதவி இவரை நாடி வருவதாயிற்று. இவர் அதனை 1903 இல் ஏற்றுத் திறம் படப் பணியாற்றி வந்தார். இவருடைய திறமையையும் நேர்மையையும் கண்ட மேலதிகாரிகள் இவருக்குக் காலத் துக்குக் காலம் பதவியுயர்ச்சி அளித்துக்கொண்டிருந்தார்கள். 1935-ஆம் ஆண்டிலே, யாழ்ப்பாணச் சிறைச்சாலைப் பதில் அதிபராக நியமிக்கப்பட்ட இவர், அவ்வாண்டு முடிவதற் கிடையிலேயே சிறைச்சாலை அதிபராக நிறுவப்பட்டார். ஏறக்குறைய 38 ஆண்டுகள்வரை சிறைச்சாலைத் திணைக்

3
களத்திற் பணியாற்றிய இவர் 21-3-1942-இல் அரசாங்க சேவையிலிருந்து இளைப்பாறிக்கொண்டார். சிறையாளர் சிறையினின்று வெளியேறுங் காலத்தில் அவர்கள் அத் தொழில்களைப் புரிந்து நல்வாழ்க்கை வாழுவதற்கு வழி கோலி, சிறையாளருக்குக் கைத்தொழிற் பயிற்சியால் சிறை யிலிருக்கும் வேளையிலும் ஊதியங்கிடைக்குமாறு வழிகள் வகுத்தமைத்தார். இதை அத் திணைக்களத்திலே முதன் முதலாகப் புகுத்தி வெற்றிகண்டவர் இவரேயாவர். அர சாங்க சேவையிலிருந்து இளைப்பாறியபின், இறுதிக் காலத் திலே, அரசினர் அமைத்த முதியவர் இல்லமொன்றினுக் குக் கெளரவ முகாமையாளராக இவர் விளங்கிப் பணி புரிந்து கொண்டிருந்தார். 1958-ஆம் ஆண்டிலே தென்னிந் தியாவிலுள்ள திருத்தலங்களையும் சிறப்பாகக் காசியையும் தரிசிக்கச் சென்று மீண்டார்.
இவர் அரசாங்க சேவையில் இருந்த காலத்திலே இவரது நற்சேவைகளை மதித்து, 1934-ஆம் ஆண்டில் 'முகாந்திரம்" என்ற பட்டத்தினையும், 1938-ஆம் ஆண்டிலே ‘முதலியார்’ என்ற பட்டத்தினையும் அரசினர் அளித்து கெளரவித்தனர்.
1939-ஆம் ஆண்டிலே தமது வாழ்க்கைத் துணைவியா ராய் விளங்கிய நாகரத்தின அம்மையாரவர்கள் இவ்வுலக வாழ்க்கை நீத்தபின், இவர் தாமே தந்தையாகவும் தாயா கவும் விளங்கி, தமது பிள்ளைகளைக் கண்ணை இமை காப்பது போலக் காத்து நல்ல நிலையிலிருக்குமாறு வைத்தார். புதல் வர் க ஞ ம் அ ர சா ங் க சே வை யி ல் உ ய ர் ப த வி களை வகித்துச் செல்வத்துடனும் சிறப்புடனும் வாழ்கின்
fD6offT.
X

Page 6
ஓம்:
திருச்சிற்றம்பலம்
சரவணமுத்து செல்லப்பாமேற் பாடிய கையறுநிலைச் செய்யுள்
புலவர் திரு. சிவங். கருணுலய பாண்டியனுர் அவர்கள் பாடியது.
நேரிசையாசிரியப்பா
உயிர்வாழ் வோரை யுள்குவார் தம்மினும் உயிர்நீத் தோரை யுள்குவார்க் கம்ம உள்ளத் தூய்மையு முணர்வு முளவாம் எள்ளற் கரியா னின்னுயிர் நீத்தான்
செல்லப் பாவெனுஞ் சிறப்பியற் பெயரோன் 5 இருசார் மரபு மேற்ற முடையோன் செருமேம் பட்டுச் செங்கோ லோச்சி மருவார் தம்மை வணக்கிவண் டோட்டுப் பெண்ணையங் கான்றரு பெருவளஞ் சான்ற பண்ணையங் குடிசேர் பழமை வாய்ந்த O யாழ்ப்பாண் வளாக மொருகுடை நிழற்றிய ஆரியச் சக்கர வர்த்தியின் மரபிற் சீரிய வீற்றுச் சிங்கை யாரிய மன்ன னருமை மகளா ராகி மன்ன மாதகன் மடப்பம் புரந்த 15 நன்ன ராளனை நன்மணந் தழீஇய வேத வல்லியார் கொடிவழி மேவிய

ஏத மில்லா வின்றமிழ்ப் புலவருங் கைலாய நாயகி கணவரும் வளஞ்சேர் சிறுவிளான் மாதகற் செல்வரு மாகிய அம்பல வாணர்தம் பூட்டனு மாயினுன் அம்பல வாணர்தம் பொரு ளாகியப் பண்டத் தரிப்பூர்க் கோயிற் பற்றுக் கொண்ட வுடையா னகிக் குன்ருச் சிறுவிளான் குறிச்சிச் செல்வத் தொல்குடிக் காளிங்க ராயன் மரபி னேழாங் காளிங்க ராயன் காதற் புதல்வி ஆரு மிராச சூரியன் பெயர்த்தி கைலாய நங்கையைக் கடிமண னயர்ந்த தவசிப் பிள்ளை பெயரனு மாயினன் தவசிப் பிள்ளை தன்சே யாகிய சரவண முத்து தன்குடிக் கியைந்த தண்டிகைச் செகநா தன்வழி வந்த விதானை விசுவ நாதன் குலமகள் வள்ளி யம்மையை மன்றல் வேட்டீன் றள்ளி யேந்திய வருண்மக வாயினன் மாணிக் கம்பார் வதிசெல் லம்மா ஆணிப் பொன்னெனு மாச்சிக் குட்டி அட்ச லிங்க மாகுமிவ் வைவரும் அச்சமி லிவனெடு முடன்பிறப் பாவரிம் மெச்சலுற் ருர்க்கு வேலுப் பிள்ளையுஞ் சின்மொழி மடந்தை சேதுப் பிள்ளையும் நன்மழை யோதி நாக முத்துவும் அம்மா ஞரு மத்தை மாருமாய்த் தம்மா ராயினர் சாற்றிய விவருள் வியன்றெருச் செப்ப மேற்பார்ப் போனென முயன்றெழு மரசியா முயற்சி வல்ல
20
25
30
35
40
45

Page 7
6
சபாபதிப் பிள்ளையைத் தகுமணஞ் செய்து மைதவழ் மாட வண்ணுர் பண்ணை ஐயனர் கோயி லடியில் வாழ்ந்த நாக முத்து நல்கிய வொரு தனி நாக ரத்தின நங்கைகைப் பற்றிப் புகழ்வுற வில்லம் பொலிய வாழ்ந்து மிகவினி தாக வீற்றிருந் துயர்ந்த செல்லப் பாதன் றிருமனை விளக்காய் அல்லற் பாடெலா மழியத் தோன்றிய மல்லற் பால்வினை மாண்பய னய்வரு மில்லக் கிழத்திபான் மக்க ளெழுவரைப் பெற்றெடுத் தினிது பேணிமகிழ் வுற்ருன் சுற்றநன் குவப்பச் சுடரு மிவர்தாஞ் சிவேசு வரியா விராச சூரியன் மகேசு வரியொடு காளிங்க ராயன் செல்வ ராய னிரத்தினே சுவரி கனகே சுவரியிக் கவின்மிகு திருவினர் இவரொடு குலவு மிவன்றன் னிளமையில் வட்டுக் கோட்டை வைப்பகம் வளருங் கட்டுப் பாடுடைக் கல்லூ ரிக்கட் பொருட்பாற் கல்வி விருப்பாற் கற்றுத் தெருட்பா லுறுவுNச் சிறைக்கோட் டத்தின் எழுத்துவினை யாள னெனமுதற் புக்குப் பழுத்துவரு திறமை நேர்மை பார்த்த சிறைக்கோட் டத்துச் சீர்வினைத் தலைவர் முறைப்பா டின்றி முறைமுறை யாக உயர்நிலை யளிப்ப வுயர்ந்துபோந் தீற்றிற் பெயர்வறத் தானே பேணிய துறைக்குத் தலைவனு மாகித் தான்சிறைக் கோட்டத் திருத்தம் பலவுஞ் செய்து கைதியர்
50
55
60
65
70
75

வருத்தந் தீர்க்கும் வழியுங் கோலித் தக்க வரசியற் றலைவர் பலரான் மிக்க புகழுரை மேவப் பெற்றிவ் விருபதாம் நூண்ருண் டெழுந்து மூன்ருய் வருவதாம் யாண்டு வரவு தொடங்கி •a முப்பத் தொன்பதி யாண்டு முயற்சிசெய் தொப்பத் தன்ருெழி லோய்வுபெற் றிருப்புழி வாழ்நாள் வறிதே பாழ்போ காமே வீழ்நா வின்றி விண்ணகம் போற்றும் இறைவழி பாடு மினனுா ழியமும் பொறையொடு பயின்று பொழுது போக்கினன் சிறைக்கோட் டத்திவன் செயலாற்று கின்றுழிச் சீற்ற முடைய சிறைக்கை தியரும் ஆற்றப் புகழு மன்னேற் கரசியன் முதலியார்ப் பட்டமு முகாந்திரத் தோடு பதவியோ டளித்துப் பரிவுகாட் டியது தன்ருெழின் முழுதுந் தலைமேற் பொறுத்தும் இன் ருெழில் பேணு மில்லக் கிழத்தி முப்பத் தெட்டியாண் டொப்ப மகிழ்ந்திருந் தப்பே ருலக மடையப் பெரும்பிரி வாற்ரு மையெனு மல்லல் பொறுத்துந் தூற்ரு மேதன் றுகளறு மக்களைப் போற்றி வளர்க்கும் பொறுப்புப் பொறுத்துங் கடமை யாற்றுதல் கடனெனக் காட்டி மடமை மாந்தர்க்கு வழிகாட் டியவன் செல்லப் பாவெனிற் செல்லுமச் சொல்லே சொல்லற் பாலதோர் குறையிவ னில்லான் ஒய்வுக் காலமு முழைப்புக் காலமாய் வீவுக் கூங்கண் வேந்து நடவு முதியோ ரில்ல முகாமை யென்னும்
80
85
90
95
100
105

Page 8
8
பெருமைத் தொண்டும் பேணினன் பின்னர் மறுமைக் காகும் வழியெனக் கருதித் தென்ன ரிந்தியத் திருக்கோ யில்களின் முன்னர்க் கண்டுகைம் முகிழ்த்துவழி பட்டான் அன்புறு தன்னுடை யருமை மனைவியின் என்பினை யேந்தி யிமையோர் வாழுங் காசி சென்று கங்கையி லிட்டுப் பூசி யிறுதிக் கடனும் போற்றினன் தேவா ரந்திரு வாசகச் செய்யுளும் ஆழ்வார் பாடலு மார்வ மீதூர்ந் தடுத்தடுத் துருகி யெடுத்தெடுத் தோதுவான் குலந்தருஞ் செல்வந் தந்திடுமென வரும் வலந்தரு மணித்திரு வாய்மொழிச் செய்யுளை உள்ள மினிப்ப வோதுவ தோவான் - எள்ள வருவன யாதுஞ் செய்யான் பொற்புறு மின்சொற் பொறுமை முதலிய பற்பல வாகிய நற்பண்பு வாழும் உறையு ளாகி யொழுக்கந் திறம்பாது நிறைநெஞ் சினணுய் நெறிப்படு மாடவர்க் கெடுத்துக் காட்டா யிலங்கினன் மாதோ தொடுத்துக் கடவுளைத் தொழுது செவிவாய் மடுத்துப் பெரியோர் வாய்ச்சொற் பருகுவான் இவனுடை மக்கண் மருமகர் மருகியர் தவமுடை மையிற் றக்கவாழ் வுடையர் இராசகு ரியனே விலங்கை வங்கியிற் பராவுற வுயர்ந்த பதவியும் படிப்பொடு தக்க வொழுக்கந் தாங்கடைப் பிடிக்கு மக்கட் செல்வ மாட்சியு முடையன் காளிங்க ராயனே கல்வித் துறையிற் கழகக் கல்வி காண்வினை யாளன்
11 5
120
25
1 3 0
135

பழகப் பெற்ற பயன்படு வாழ்க்கையன் செல்வ ராயனே திருவளர் யாழ்ப்பாண் மருத்துவக் கோட்ட மாண்வினை திருத்துங் கருத்துறு செய்தொழிற் கடமை வல்லான் அவனுடை வாழ்வு மழகிய திங்ங்னம் நவையிலா மூவரும் நல்வாழ் வுடைய மணமலி கூந்தன் மகளிரு மவரை மணனயர் மனளர் மாணிக்க வாசகர் சின்னை யாவு மையாத் துரையும் · பொன்னுத் துரையு மென்னுமிந் நால்வரும் அன்ன லட்சுமி பதுமா வதியொடு நீலாம் பிகையென நேரிழை மடந்தையர் மேலார் புகழு மின்னேர் நல்லார் மருகியர் மூவரும் வளமை சான்ற வைத்திய லிங்கம் விக்கிரம சிங்கம் பால சிங்கம் ஐயாத் துரையொடு சபாபதிப் பிள்ளை பொன்னுத் துரையெனத் தொக்க நன்மரு மக்க ளறுவரும் தக்க நெறிச்செல் சனகன் வியாசன் வசிட்ட னென்ன வழங்குவோ ராகிய தன்னுடன் பிறந்தோன் றந்த மூவரும் அன்னவன் அட்ச லிங்கமு மேனைச் சுற்றமு மன்பு தொடர்ந்து நிற்றல் பெற்றநன் னண்பரும் பிரிவாற் றது நெடிது புலம்ப நீணில வாழ்க்கை கொடிது கொடிதெனக் குறிப்பான் போல எல்லார் தம்மையு மறந்துபோ யந்தோ கல்லார்க் கெய்தாக் கடவு ளடிநிழல் செல்லப் பாபோய்ச் சேர்ந்தான் வாரான் செல்லப் பாவே யன்றியுந் தெரியின்
140
145
五50
155
160
65

Page 9
O
உலகந் தோன்றிய வூழி முதற்ருெட் டலகின் மாந்த ராவிபோ யினரே 170 இறவாது வாழ்வார் யார்கொலோ விதனை மறவாது நோக்க வல்லி ராயின் இன்று நாளை யென்னது நாடொறும் நன்று செய்ம்மின் நன்றல விடுமின் மன்று குளிக்கும் வள்ளலை வழுத்துமின் 175 புறங்கூ றன்மின் பொய்யுரை யன்மின் அறங்கூ றவைக்கள னகலா தணுகுமின் பெரியார்ப் பேணுப் பிழைசெய் யன்மின் உரியார்க் குதவி யுவப்பொடு செய்ம்மின் சுற்ற மோம்புமின் றுணவர்ப் பேணுமின் 180 செற்றங் கடிமின் சிறுசொல் விலக்குமின் வறியார்க் கிரங்கி வண்பொரு nமின் சிறியார்க் குறவு செய்யா தொழிIன் ஊனுரண் டுறமின் உயிர்க்கொலை நீங்குமின் வாணுார் திங்கள் வளர்முடித் ] 8 ፵ தேனுரர்க் கொன்றையன் றிருவருள் நுமக்கே
கட்டளைக் கலித்துறை
1. பொல்லாரும் புல்லரு மல்கிய வையத்திற் புல்
லொழுக்கங் கல்லாத செல்லப்பா போன்றரை நல்லோர்கள்
காணலுறிற் செல்லாத கோடை வெயிலிற் றிரிந்து திரிந்து வெயில் புல்லாத நல்ல மானிழல் பெற்றது போன்றதுவே.

இறையொன்று முள்ள மெவர்பாலு மின்சொ லிடர்
வரினும் முறையன்றிச் செல்லா வொழுக்க முதியவர் முற்பணிவு குறையின்றிச் செய்யுங் கடமை யுணர்ச்சி குறளைகூழுப் பொறை யொன்றுந் தோற்றம் முதலியார் செல்லப்பா
.பூண்பனவே و. * *
ஆசிரிய விருத்தம்
விண்ணவர் போற்ற நல்ல விருந்தெனச் சென்ற வையன் மண்ணவர் மகிழ நின்ற செல்லப்பா மரபு வாழ்க நண்ணவர் நலிவுந் தீய நல்குரவொன்று மின்றி
எண்ணமு மினிது பெற்றீண் டெனைவரும் வாழ்க - மாதோ.
பிறப்பு
வெண்பா
முதலியார் செல்லப்பா முன்னும் பிறப்பு நுதலின்யாண் டாயிரமெண்ணுாற்றெண்பத் திரண் திங்கண்மூன்முவது சேர்நாள்பத் தொபஃ தங்கண்மா ஞாலத் தகம்
இறப்பு
கலித்துறை
கொல்லமியாண் டாயிரத்து நூற்றுமுப்பத் தைந்து செல்லலுறு வைகாசித் திங்களிரு பத்தைந் தல்லலறு மவ்வுலகத் தண்ணலடி சாரு முல்லைநகைச் செல்லப்பா முதலியார் செலவே.

Page 10
“ஒப்பிலுயர் செல்லப்பன்”
பாங்காக யாழ்ப்பாண நாட்டினை அரசாண்ட
பரநிருப சிங்கன் வழியே பண்புடன் வந்தவன் பன்னுமுயர் சிறுவிளானைப் பதியதாய்க் கொண்ட செம்மல் n வீங்கிநிறை ஈசனை வந்தித்து வாழ்தலே
விளங்குமிப் புவியில் வாழும் மேலான மாந்தர்க்கு நல்லவழி யெனவுன்னி
மின்னுகதிர் காமம் காசி தாங்கருள் கொழித்திடும் புண்ணிய தலங்களைத்
தரிசித்து மேன்மை பெற்றேன் தாவுபல வழிதோறும் ஓயாது பாய்கின்ற
தடுக்கரிய மனக் குரங்கை ஓங்குபெரு யோகத்து நிட்டையால் வென்றவன்
ஒதரிய குணத்தின் குன்றம் ஒப்பிலுயர் செல்லப்ப னிறைவனடி எய்தினன்
ஒன்றுபுகழ் வாழ்க நிதமே.
பேராசிரியர், கலாநிதி க. கணபதிப்பிள்ளை.

யாழ்ப்பாணம், மாதகல் சிறுவிளான் வாசரும் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் மறியற்சாலை அதிபராயிருந்து இளைப்பாறியவருமாகிய முதலியார் திரு. சரவணமுத்து செல்லப்பா அவர்களின்
தேகவியோகங் குறித்த
இரங்கற் பாக்கள்.
(அரியால, பண்டிதர். திரு. மு. அருணுசலமவர்கள் கூறியவை)
வெண்பா
சீர் பெருகு சார்வரி சேர் வைகா சிச்செவ்வாய் வாரம் வளர்மதி பன் மூன்று - நேரார் சரவண முத்துதவு சற்குணன்செல் லப்பா
பரகதி சேர்ந்த பகல்

Page 11
நேரிசையாசிரியப்பா
உலகெலாம் போற்றுநல் லுத்தமர் தோன்றலால் அலகிலாப் புகழ்பெறு மாசியாக் கண்டத் தென்பாற் றிசையிற் சேர்ந்திடு தீவா மன்னிடு மிலங்கை மங்கைதன் சிரமெனப் பாவலர் சாற்றிடு பண்ணியாழ் பாணம் மேவிய வலிகம மேற்கினில் திகழும் தெங்கொடு பூகம் தீங்கனிக் கதலி பங்கமில் தாலம் பலாவொடு பல்கி செந்நெற் செய்கள் சிறப்பொடு மன்னும் கன்னல் வயல்பல துள்ளிடு மோர்பால் சிவனுறை கோவில் சேயருள் கோட்டம் பவமகல் சத்தியாம் பார்வதி நிகேதனம் உய்வகை மாணவர்க் குரைத்திடு மோச்சர்வாழ் சைவநல் வித்தியா சாலைகள் பற்பல செந்தமிழ்ப் பாவலர் சீராங்கிலந் தேர்வோர் முந்திய வாரிய மொழிதனைப் பயின்றேர் வாழ்தரு மாதகல் மருகினில் பொருந்தும் தாழ்விலா வளம்பல தழைத்திடு கின்ற வறுமையில் லவர்பலர் வாழுறு மூராம் சிறுவிளான் றன்னிற் சேர்ந்திடு குடிகளுள் சிங்கை யாரியன் சீர்பெறு மகளாம் மங்கையாம் வேத வல்லியின் வழியினில் காளிகா தேவி கழலிணை மறவாக் காளிங்க ராயன் கண்ணிய மரபில் முன்னிரை யோடு மூவாறடி மையும் மன்னிடும் வேளாண் குலத்தினில் வந்தோன் அம்பல வாணன் அடியிணை போற்றும் அம்பல வாணப் புலவரின் அருஞ்சுதன்

தவசிப் பிள்ளை யுடையார் தந்தருள் பவமகல் சரவண முத்துவாம் பண்பன் விசுவநா தர்தரு விளங்கிழை நல்லாள் வசையிலா வழகுறு வள்ளியம் மாளை மணந்துமே பெற்றிடு மாண்பமை மகனே குணநிறை குன்று கோதிலாக் குரிசில் பைந்தமிழ் ஆங்கிலம் பயின்றநற் புலவன் சந்ததம் முருகன் தாளிணை மறவான் இருபத் தொன்ரு யியைந்திடு மகவையிற் திருவளர் யாழ்நகர் ஜெயிலினிற் சேர்ந்து செய்திடு பணிகளின் றிறமுறை கண்டு உய்வகை போற்றி யுவப்புடைக் கொழும்பு மாநகர் மறியற் சாலையின் மன்னனுக் கோமகர் கொணர்ந்தார் குரிசிலு மங்நுண் முப்பத் தொன்ருண்டு முறை திறம் பாவகை செப்பருஞ் செயல்பல செயல் முறை யாற்றிப்பின் யாழ்நகர் பொருந்திடு மிருஞ்சிறைச் சாலையில் ஏழாண் டதிபணுப் யிருந்திளைப் பாறினனே இவன்றன். சபாபதி தாளிணை சந்ததம் போற்றும் சபாபதிப் பிள்ளை தந்திடு புதல்வி யிந்திரை யெழிலாள் மந்திரி போல்வாள் பைந்தமிழ் பயிலிற் பண்புணர் மாது நாகரத் தினப்பேர் நங்கைநல் லாளை யாமுறை வேட்டே யாற்றிய வறணுல் மைந்தர் மகளிர் ஒன்பதின் மராக விந்நில வுலகிற் கீந்தனள் அவரே. இலங்கை றயில்வே லிகிதராய்ப் பொருந்தும் தலம்புகழ் ஐயாத் துரைதன் மனைவி சிவனடி சிந்தைசெய் சிவைஸ் வரியே

Page 12
6.
தவம்பல சார்ந்திடு தலைவனுய் விளங்கும் இராச சூரிய வியற்பெயர் பெற்றேன் இராசர் போற்ற விலங்கை வங்கியின் மானே சராயிவண் வண்டொழில் புரிவான் மானேர் விழியாள் மகேஸ்வரி யொருத்தி பொன்னினை நேர்வாள் பூமகட் பொறையாள் சின்னையப் பேர்பெறு சிருப்பரை மணந்தாள் காளிங் கராயனம் கண்ணியப் பெயரோன் யாழ்நகர் வித்தியா கந்தோர் லிகிதனுள் உண்மைசால் அடிஷனல் O, A, ஆணுன் தண்டமிழ் தேர்வோன் தண்ணளி யுடையான் செல்வ ராயப்பேர் சேயவன் ருனே எல்லவரும் புகழ யிந்நகர் அரசினர் வைத்திய சாலையின் மன்று நிர்வாக உத்தியோ கணகி யுவப் புற்றனன் வரத்தினில் மிக்காள் இரத்தினேஸ் வரியாள் தரத்தினிற் சிறந்த மின் சாரப் பகுதிச் சுப்பிறின் டனகத் தொண்டு செய்திடும் ஒப்பரும் பொன்னுத் துரைதன் னுயிர்த்துணை ஞானேஸ் வரியாம் ஏந்திழை யொருத்தி தானே யொன்பதிற் முரணி விட்டாள் ஏயர்றவிக் (Air Traffic) கோன்ருே லராயிவர் தூயன் தாய்மைக் குணநிறை சரவண பவன்மனை பராவினர்ப் போற்றும் பண்பினைக் கொண்டாள் இராசேஸ் வரியாம் இலங்கிழை நல்லாள் கமத் தொழிற் பகுதியின் கருமங்களா ற்றியே யமைவுறு பாமின் அதிபராப் அமரும் மாணிக்க வாசக மன்னனை மணந்தாள் ஆணிப்பொன் னம்பலன் அடியிணை தொழுவாள் கனகேஸ் வரியெனும் காரிகை யாளே

இனசன மாயிவண் உற்றனர் பலரே சைவமா னவர்தா முய்வகை தொண்டுசெய் சைவவித் தியாவிர்த்திச் சங்கமா னேச்சர் பதவிமுன் பரித்திடு பண்புடை யாளன் சதமகன் நிகரு தானுதி பதியாம் அட்ச லிங்கற் கமைவுறு தம்பி; இச்சகம் துதிக்க யின் சொலே பகர் வான் வாய்மையின் அணியே தூய்மையின் விளக்கே தாய்மையின் குன்றே சற்குண வொளியே செல்லப்ப முதலிச் செம்ம ருனே நல்லுலக வாழ்வு நசையுடைத் தென்று சிந்தையிற் றெளிந்து சிவனடி வாழ்த்தி எழுபத் தொன்பதாய் யியைந்திடு வயசில் தொழுத கையினய்ைத் துதிபல சாற்றி வான வர் விமான மேறி யீனவில் சிவன்ரு விரிணை சேர்ந்தனனே.
ஆண்மக்கள் பிரலாபம்
கலித்துறை
தந்தை மகற் காற்றுந் நன்மைதான் பூவிற் சபையகத்தே முந்தி யிருப்பச் செயலெனும் முப்பான் மொழிப்படியே எந்தமை யேற்றிடு மெந்தாய் இவண்நாம் ஏங்கியழ இந்திரன் சொர்க்கத்தே யேகினை யீதிவண் ஏற்பிலதே
வாய்மையின் மன்ன வளர்மதி நேர்தரு மாண்புலவ தாய்மையின் குன்றே சமநிலை சேர்தரு தாயகமே தூய்மையின் தீபமே சொல்வன்மை தேர்ந்திடு சுந்தரனே சேயவர் நாமலறச் சென்றனை யிச்செயல் சீரிலதே

Page 13
8.
பெண்மக்கள் பிரலாபம்
வெண்பா
தாயர்தாம் விட்டகலத் தந்தையுந் தாயுமாகி நாயனேம் என்றும் நலியாதே - தூயராய் நாம் வாழ வைத்தருள்செய் நற்றந்தாய் இப்போழ்து ஏமமுற வோர்சொல் இயம்பு
மங்கையராய் இந்நிலத்து மக்கள் நாம்போற்றியிட
துரங்கமுறு மெங்கணவர் தொண்டுசெய-மங்காத
கீர்த்தியுடன் வாழ்ந்திடுவாய் சென்றயே வெந்தாய்நீ தீர்த்தருளெந் துன்பந் தெரிந்து.
பைந்தொடியர் நாமென்றும் பார்த்திரங்க நீயகன்று இந்திரன் சொர்க்கத் திணைந்தனையால் - செந்தமிழ் தேர் எந்தாய் நீ நந்துன்ப மேகியிட வாய்திறந்து தந்திடுவாய் யோர்சொற் றணி:
தேற்றம்
வெண்பா
மன்னர் மகீபதிகள் மன்பதையாய் மண்ணுலகிற் றுன்று முயிர்கள் தொலைந்திடுமால் - இன்றுமிதை யெண்ணுதே நீவி ரிரங்குகின்றீர் அஃதொழிIன் எண்ணுமின் ஈசன்ருள் g{۔ . . . . . . 007یل- ......... ..............
. م

9
இலங்கைச் சிறைச்சாலேத் திணைக்களத்தில் நெடுங்காலம் பணியாற்றி இளைப்பாறியிருந்தவரும் யாழ்ப்பாணத்துச் சிறுவிளான் பதியை
வாழிடமாகக் கொண்டவருமான
முதலியார் ச. செல்லப்பா அவர்களின்
இரங்கற் பாக்கள்.
திரு. செ. வேலாயுதபிள்ளை அவர்கள் இயற்றியது.
தோற்றமும் மறைவும்
வெண்பா
ஆயிரத்தெண் ணுாற்றெண்பத் தொன்றில் அவனிமிசை
மேவியெழு பத்தொன்பான் யாண்டிருந்து-தூயபுகழ் நாட்டி இறைவன்முள் நண்ணினன் செல்லப்பா "
வீட்டு நெறியை விழைந்து.

Page 14
20
குலமுறை கிளத்தலும் குணநலமுரைத்தலும் ஆசிரியப்பா
மன்னிய சிறப்பின் மணிகிளர் இலங்கைச் சென்னி யென்னத் திகழ்யாழ்ப் பாண மங்கல நாட்டை மனுமுறை யாண்ட சிங்கை யாரியச் சக்கர வர்த்தி மகளென வளமார் மாதகற் பதியிற். புகழொடு பொலிந்த பூங்கொடி வேத வல்லி யென்னும் மெல்லி நல்லாள் ஐந்நூ றுாருக் கதிபனும் மடப்பம் என்னுந் தோன்றற் கின்றுணை யாகி இல்லற மோம்பி இருந்துழி யவடன் . மல்லன் மரபினில் மாதக லாங்கண் வந்தோன் அம்பல வாண னென்னுஞ் செந்தமிழ்ப் புலவன் சிறுவிளான் போந்து காதன் மனைவி கைலாச நாயகி தீதில் புதல்வர்ப் பேறெய்த நோற்றுச் செந்தூர் இறைவன் சேவடி பரவிச் சிந்தை மகிழச் சேயர் இரு வரைப் பெற்றிவ் வாழ்வின் பெரும்பய னுற்ருன்; மற்றவர் தம்மிற் கோணேச னென்பான் மனையற முனிந்து வினையற முயன்று மாணியாய் வாழ்ந்து மாண்டனன்; அவன்றன் முன்னவன் தவசிப் பிள்ளை யென்போன் துன்னிய பண்டத் தரிப்பெனும் பதியில் உடையா ராயிருந் துயர்புகழ் கொண்டோன் கொடையா லுயர்ந்தோன் சிறுவிளா னுறைத்த
2
舒
10
I 5
20

இராச சூரியர் காலிங்க ராயனின் உரைசால் மகளை உவப்பொடு மணந்து சரவண முத்தும் சேதுப் பிள்ளையும் நாக முத்தும் வேலுப் பிள்ளையும் என்னும் நால்வர் மக்களைப் பெற்று நன்னர் வாழ்க்கை நடாத்தின னங்கே தண்டிகைச் செகநா தன்மர புதித்தோன் எண்டிசை போற்றும் இசைபெறு செம்மல் சிறுவிளான் விதானையாச் சீரொடு வாழ்ந்தோன் உறுபொரு ளாளன் உயர்குணத் தோன்றல் விசுவநா தனென விளங்கும் பெயரோன் சிசுவெனப் பெற்றுச் சீரொடு வளர்த்த செழுங்கொடி செந்தமிழ் ஆங்கிலந் தேர்ந்தும் பாங்குறு கைப்பணிப் பயிற்சி பெற்றும் ஓங்கிய பண்புக் குறைவிட மாக வயங்கிய செல்வி வள்ளி யம்மையைச் சரவண முத்தெனச் சாற்றிய நம்பி திருமணம் புரிந்து சீரொடு வாழ்ந்துழி மற்றவர் தமக்கு மகனென வந்தோன், குற்றமில் குணத்துக் குலக்கொடி போல்வார் மாணிக்கம் பார்வதி மங்கைசெல் லம்மா வாணுதல் ஆய்ச்சிக் குட்டியிந் நால்வர் சோதரி மாராய் ஆதரங் காட்டவும் அட்ச லிங்கமென் றறையு மண்ணன் பட்சங் காட்டவும் பாங்காய் வளர்ந்தோன், செல்லப் பாவெனுஞ் செழும்பெயர் பூண்டோன், கல்விக் காகக் கல்லூரி சென்று கருத்தொடு பலகலை கற்றுத் தேறி இருபத் திரண்டாண் டகவையில் இலங்கை அரசினர் நடாத்திய அருஞ்சிறைச் சாலையில்
2
30
35
40
45
50
55

Page 15
22
எழுது வினைஞன் எனுந் தொழில் ஏற்றுப் பழுதில் நெறியாற் பணிபுரிந் துயர்ந்தோன்; அத்தை நாக முத்துபெற் றெடுத்த வித்தகச் செல்வி விளங்கெழிற் றிருவாம் பாகுறழ் மொழியாள் நாகரத் தினத்தை இல்லற மென்னும் நல்லற மோம்பற் கின்றுணை யாக இனிதுகைப் பிடித்தோன்; மனைக்கொரு விளக்காய் மங்கலப் பொருளாய் வள்ளுவன் கண்ட வாழ்க்கைத் துணையாய் இருந் தமிழ்ப் பண்பே திருந்திழை யாயோர் உருவெடுத் தாலென உயர்தவப் பெண்மணி வருவிருந் தோம்பி வளத்தக வாழ்ந்து காப்பன காத்துக் கடிவன கடிந்து மாப்புகழ் புரிந்து மனையற மோம்பலால் ஏறென இகழ்வார் எதிரே நடக்கும் வீறு பெற்று விளங்கினேன்; புவியில் இராச சூரியர் காலிங்க ராயன் செல்வ ராசன் எனப் பெயர்பெற்ற செல்வப் புதல்வர் மூவரோ டின்னும் சிவேஸ்வரி மகேஸ்வரி இரத்தினேஸ் வரியே இராசேஸ் வரிபொடு கனகேஸ் வரியென் றிப்பெயர் பூண்ட புதல்வியர் தமையும் மக்கட் செல்வமாய் மாண்புறப் பெற்றுத் தக்கவ ராக்கித் தன்கடன் முடித்தோன்; மாண்ட மனைவியை மனத்தில் இருத்திப் பூண்ட வொழுக்கம் பொய்யா தென்றும் நேர்மையும் அறனும் நீதியும் அன்பும்
சீர்மையும் பண்பாய்க் கொண்டு திகழ்ந்தோன்;
அரச சேவையில் ஆற்றல் நாட்டி உரைபெறு முயர்வெலாம் உரிமையிற் பெற்றும்
60
65
70
75
80
85

முகாந்திரம் முதலியார் எனுஞ்சிறப் பிரண்டும் முறை முறை யெய்தியும் பெருமிதங் கொண்டோன்; சிறையுறு மாக்கள் சீருற விழைந்து வெலிக்கடைச் சிறையில் வெற்றியோ டன்னர் நலத்தகு தொழில்பல நயமாய்ப் பயின்றிடத் 90 தொழிற் பிரிவொன்றைத் தொடக்கி வைத்தோன், இளைப்பா றியபினும் சளைக்சா தன்பாய்ச் சமூகத் தொண்டு செய்து மகிழ்ந்தோன்; அரியும் சிவனும் வேறலர் என்னும் பொருளின் உண்மை தேறியோன் புண்ணிய 95 பதிபல சென்றும் நதிபல குளித்தும் பதியருள் வேண்டிப் பரவியோன் இந்நாள் மக்கள் புலம்பவும் ஒக்கல் இரங்கவும் - மண்ணக வாழ்வை விட்டுக் கண்ணுதல் இறைவன் கழலடைந் தனனே. 100
மக்கள் புலம்பல்
(விருத்த ம்)
பொன்பெற்றேம் புகழ்பெற்றேம் கல்விபெற்றேம்
பொற்பாரும் வாழ்க்கையிலும் வெற்றிபெற்றேம் மன்பெற்ற அவை தனிலே மதிப்புப் பெற்றேம்
மற்றெம்மை யாளாக்கி வைத்தாய் நீயே இன்புற்றுன் அருள்நிழலில் இருந்துவந்தேம்
இறந்தாயே இனியுன்னை எங்குக்காண்பேம் அன்புற்ற அப்பாவோ அல்லல் வந்தால்
அறிவுரைகள் ஆரெமக்குக் கூறுவாரே?

Page 16
24
சுற்றத்தார் புலம்பல்
(விருத்தம் ) குற்றமே புரிந்து வாழுங் குணமுளார் சூழலுற்றும் செற்றமும் சினமும் நின்பாற் சேர்ந்திடக் கண்டேமல்லேம் இற்றைநாள் வரையு முன்றன் இன்முகங் காணப்பெற்றேம் உற்றவா நின்போ லெங்கட் குறுதுணை இனியாருண்டே ?
தேற்றம்
(கட்டளைக் கலித்துறை) மன்ன வுலகத்து மன்னும் புகழ்நாட்டி மக்களோடு செந்நாப் புலவன் குறளினிற் செப்பிய வாழ்வுமுற்றிப் பொன்னட் டவர்தொழப் போயடைந்தானிறை பூங்கழற்கே என்னே யிரங்குவ திவ்வாழ்வு யார்க்கு மொளிதருமே.

25
டெ
O இஃது
யாழ்ப்பாணம், மாதகற் பதியைச் செனன தேயமாக் கொண்டவரும், சிங்கையாரியச் சக்கரவர்த்தி மகள் வேத வல்லித் தாயாரின் திருமரபும் சிறுவிளானுரர்க் காலிங்க ராயன் இராச சூரிய முதலியார் கோத்திரமுங்கலந்த இரு மரபுந் துய்ய தொல்குடிப்பிறப்பினரும், ம ைக ஸ்வரிய மகெளதாரிய மகாப்பிரபுவும் இலங்கையரில் சிறைச்சாலை சுப்பிறின்றன் பதவியை முதன்முதலாகப் பெற்றுக் கடமை யாற்றி இளைப்பாறிய சகல சற்குணசம்பன்னரும் திரு சரவண முத்து உடையார் அவர்களின் த வ ப் புத் தி ர னு மாகிய திரு. செல்லப்பா அவர்களின் திடீர் மறைவைக் குறித்த நினைவுமலர்.
கரவையூர் நாடகக்கவிமணி திரு. எம். வீ. கிருஷ்ணுழ்வார் அவர்கள். இயற்றியது.
மறைவுநாள்
வெண்பா
சார்வரியாண் டா6ரிமதி தங்குதிர யோதசியே சேர்புதனட் சந்திரனுந் தேய்ந்துவர -சீர்பெருகும் மாத கலூர்ச் செல்லப்ப மாமதனர் சிற்பரனின் பாத நிழல் கண்டான் பரிந்து.

Page 17
26
தொண்ணுாறு சீர்க்கழி நெடிலடி
ஆசிரிய விருத்தம்
திருமருவு செங்குவளை மலர்மருவு மோடையிற்
செறிவாளை குதிகொண்டு மேற் தெங்குகமு காடநற் பைங்குலைகள் சீத்திடுஞ்
செல்வமலி யீழதேயத் தென்னிலங் கைப்பதியில் மின்னுயாழ்ப்பாணமாஞ்
செந்தமிழ்த் திருநகரினைத் திரமேவு முயராச தானியாய் நால்வகைச்
சேனைகளுநின் ருர்த்திடச் செங்கோல் பிடித்தாண்ட ஜெகராச சேகரத்
திருநாம தேயமுடைய சிங்கையா ரியசக்ர வர்த்தி முன்செய்தவச்
செல்வியாய் வந்த புதல்வி செந்திருவை நிகர்வேத வல்லிக்கு நாயகன்
தேர்ந்தெடுக் கும்வகையிலே Y சிறிதும் தயங்காது தன்மரபி னுந்தூய
சீர்த்தியுறு கோத்திரமெனச் சித்தம் பொருந்திமக களத்தந்த மாதகற்
ஜெயமேவு ராசமரபும் திசையெங்கு மிசைபெருகு சிறுவிளா னுரர்தந்த
செல்வத் தவக்குபேரன்

27
செப்புகா லிங்கரா யன்ராச சூரியச்
சீர் முதலி யாரின்மரபும் சேர்ந்ததா விருமரபு மேதூய தென்றுலகு
சீராட்டு முயர்குடியிலே திக்கெட்டு மெட்டுபுகழ் விட்டவம்பலவாண
செந்தமிழ்ப் புலவர்மணியின் சிரேஷ்டமக ஞனதவ சிப்பிள்ளை யுடையாருந்
தேவியும் புரிதவத்தாற் திருவுரு வெடுத்தசர வணமுத்து வுடையார்
செனித்தார் மகத்வமுடனே அருமருவு மளகையழ கேசனென விரவுமரி
யான சரவணமுத்துமன் அளிதுன்று குவளையந் தொடைநின்று புரள்மார்ப
ஞம் விசுவநாதர் சுதையாம் அங்கயற் கண்ணணங்காம் வள்ளி யம்மைதனை
அங்கிசான் ருய்மணந்தே அனங்கனும் ரதியுமென விணங்கியில் லறவாழ்வில்
அதிபுகழ் படைத்துநின்றே அரனரை யம்பிகையை யைங்கரனை அறுமுகனை
அரிதன்னை மறவாமலே அனுதினம் மலர்தூவி யடியேந்தி யழுதுதொழ
தர்ச்சித்த பெறுபேறென அம்புவி விளங்கவுய ரந்தர மிழிந்துவந்
தவதாரஞ் செய்தபுதல்வன்

Page 18
28
அமரேச நிகர்சபா பதிப்பிள்ளை யும்தேவ
அன்னையென மன்னுமெழிலார் ஆரணங் காம்நாக முத்தம்மையும் பெற்ற
வருந்ததிக் கற்புநெறியாள் அரிவையர்கு லத்திறைவி நாகரத்தினநாம
அம்மைதனை வேட்டதலைவன் அமுத மொழி யுதவிடுஞ் சிவேஸ்வரிப் பூவைதனை
அந்தமிகு சிலோன் பாங்கிலே ஆண்மைசெறி மானேசராம் ராசசூரியரை
அழகார் மகேசுவரியை
அரசாங்க கல்விலாக் காக்காரியாலயத்
தமருதவி யதிபரெனவே அறையவரு காலிங்க ராய தருவைக் கீர்த்தி
யண்ணுமா வைத்யசாலை ஆர்வமுறு நிர்வாகக் கார்யதரி சிப்பதவி
யாளனயோங்கு திறல்சேர்
மருமருவு நற்செல்வ ராயனைத் திருவனைய
மங்கைரத் னேஸ்வரிதனை மண்ணுெருவி விண்சென்ற ராசேசுவரி மின்னை
மாதுகண் கேஸ்வரியினை மாதவமிருந்துமணி மக்களா யீன்றுபுவி
மதித்திடத் திகழ்ந்த தந்தை மகிமைசெறி பலசைவ வித்யால யங்கட்கு
மாமுகா மைக்காரணுய்

29.
மதியூட்டு மிந்துசாதன விதழ் தனக்கு முயர்
மாட்சியுறு மானேசராய் மண்டுபுகழ் கொண்டவட் கூடியலிங்க மகிபனெடு
மாதாவினெரு கும்பியில் மண்டலமதிக்கவே யொக்கப் பிறந்தகுல
மணியான நற்சோதரன் மட்டற்ற சுற்றப் பெருக்குடைய பண்டைமா
மரபினிலுFத்த பெரியான் மாசற்ற செந்தமிழு மாங்கிலமு மாராய்ந்து
மாந்திய கலாபண்டிதன் மருவாரை நிக்கிரக ரகுராம னிவனென்ன
வலனடு கீர்த்தியுடையான் மாண்புடைய மூர்த்திதல தீர்த்ததல யாத்திரையில்
மண்டிக் கிடந்து வடியான் மால்மருக ஞனகதிர் காமவடி லேவனின்
மலரடிக் கன்புமிக்கான் மனையாளை யன்றிமறு மாதரைத் தழுவிடா
மற்புயா சலமகிபன் மாணுயிரி ழக்கவரி னும்நின்ற நிலையிலே
மாருத சத்யவந்தன் மாதாப் பிதாப் பெரியர் குரவோரைத் தெய்வமென
மதித்துவந் திக்கு மருணன் தருமருவு கொடை வாய்மை நடுநீதி யாதியன
தங்கிய மணிப்பெட்டகம்

Page 19
30
தகைமைசெறி யிருபத்தியொருவயதிலே சிறைச்
சாலைதனி லுத்தியோகந் தாங்கி வெகுவிரைவிலே யுயர்வெய்தி யாட்சியிற்
தனிப்புகழ் படைத்த நிபுணன் சங்கைசெறி லங்கையரில் முதற்சுப்பி றின்றணுய்த்
தராதரம் பெற்ற மகிபன் சரியாக வொரு முப்ப தாண்டுகள் தொடர்ச்சியாய்த்
தலையாய கொழும்பு நகரில் தண்கடமை யாற்றியாழ் நகரிலுமொ ரேழாண்டு
தங்கியே பணியாற்றினேன். சாற்றறிய கைத்தொழில் தனைச்சிறைச் சாலையிற்
தாபித்த பெருமையுடையான் தரித்திர வயோதிபர்கள் சாலைக்கு மதிபராயத்
தண்பதவி பெற்ற சுகுணன் தன்நேச வாலிபர்கள் பலபேரை யுத்யோக
தானத்தில் வைத்த தருமன் தண்கடலையின்று குருமைதான மென்றுலகு
சாற்றவே வைத்த புனிதன் தாவியே சிறைசென்ற பேர்களிற் கயவரைத்
தண்டித் தடக்கிய நரன் சக மீது நிகரொருவ ரில்லாத செல்லப்ப
தாணுவிவ் வுலகை யொருவித் தாக்கிவரு நோயிற் படுக்காமல் அவுடதஞ்
சற்றுமுட் கொண்டிடா மற்

3.
சயனத்தி லேநித்ரை செய்பவர்கள் போலினிது
சாய்ந்துதன் னவிநீத்துத் தாவுமதி சோதிநதி யாதிவதி நீதிபதி
தாளடி யடைந்தன னரோ.
கலித்துறை (கவிக்கூற்று) வாடாத சோதி வதனமும் வாடும் வறிஞருக்குக் கோடாமல் வாரிக் கொடுக்குங் கரங்களும் கோளுரைகள் நாடாத வாயும் பொலிந்திடு செல்லப்ப நாயகனைப்
பாடாத பாவலர் மண்மே லிருந்து பயனில்லையே.
பொதுக் கலித்துறை
பார்கொண்ட மாதவம் பாழ்போக வீகை படிவிலக ஏர்கொண்ட சற்குணம் மாண்டே யொழிய வெழின்மறைய ஊர்கொண்ட கீர்த்தி குடிபோக வுண்மை யொழிந்தழியச்
சீர்கொண்ட செல்லப்ப மேலோன்விண் ணுட்டினைச் சேர்ந்
(தனனே
நாட்டித் தருமம் நலிந்தது வாய்மை நழுவியது வீட்டிற் றுயரம் மலிந்தது வீரம் விலகியது பாட்டிற் குகந்த புகழ்குன்றி மாய்ந்தது பாழெருமை மாட்டிற் திரியு மெமன்வஞ்ச வுள்ளம் மலர்ந்ததுவே.

Page 20
32.
பார் முற்றுங் கொண்ட புகழ்நாக ரத்தினப் பாவைதனந் தேர் முற்றுங்கொண்ட செல்லப்பா வெனுமத னேருழவர் சீர் முற்றுங் கொண்ட நன்மாதகல் நாட்டினிற் தீர்துயரில் வூர் முற்றுமோ கொண்ட தில்லையம்மா முற்றுலகமுமே சைவம் பிழைத்தது சத்தியம் மாண்டது சற்சமய தெய்வங்களோடி யொழித்தன செல்வம் சிதறியது பொய்யும் பெருத்தது செல்லப்ப சீலன் புவியை விடப் பெய்யும் மழையும் பிழைத்த தென்ருலென்ன பேசுவதே வேதனழ விமையோரழக் கூற்றுவன் விம்மியழச் சீதரன் தேம்பியழச் சிவனரழச் சேணுலக மாதரெல்லா மழச் செல்லப்ப நாமன் மறைந்தனணுல் பூத லம்பட்ட துயரை யெவ்வாறு புகல்வதுவே
தேற்றம் விருத்தம் கறந்தபால் முலைக்காம்பிற் புகுவதுண்டோ ?
கடைந்த வெண்ணெய் மோருடனே கலப்பதுண்டோ ? இறந்தவுடல் தன்னிலுயிர் வருவதுண்டோ ?
இரவிமதி தெற்குவடக் குதிப்ப துண்டோ ? பிறந்ததெல்லா மிறக்குமெனப் பெரியோர் சொன்ன
பேதமிலா வாசகமும் பொய்ப்பதுண்டோ ? அறஞ் சிறந்த செல்லப்பா மறைந்த தற்காய்
அழுவதென்னே துயர்விடுத்திங் காறுவீரே.
சுபம்.


Page 21

Mrs. Nagaratnam Chellappah

Page 22

33
A BRIEF OUTL NE OF THE LIFE
OF THE LATE
Mudaliyar Saravanamuttu Chellappah
n the fulness of time, Mudaliyar S. Chellappah has passed away from our midst, and it is fitting now that one should look back on the life of a man who was respected and loved not only within the confines of his immediate family circle, but also within the larger sphere of the society in which he lived and moved and had his being.
Saravanamuttu Chellappah sprang from an illustrious Jaffnese family, descended from the ancient Tamil kings; but unspoiled by his heritage, and giving evidence of those qualities of humility which characterised his entire life, at an early age he made up his mind that whatever the privilege of birth he would begin life at the bottom of the ladder. And so it was that a man who was to retire as a Superintendent of Prisons began his career as a clerk in the Prisons, Department.
It is not easy nowadays to imagine how arduous and limited a career in the public service was in the early decades of this century under the colonial regime, least of all for a prison official. Not only were opportunities for advancement limited, but modern concepts of prison administration which have removed the loathing from this type of work, were then only tentatively considered. Mudaliyar Chellappah was quick to realise that compassion for his fellow humans had its endur

Page 23
34
ing rewards. When the time arrived in 1935 for him to be promoted to the rank of Superintendent it was an ample recognition not merely of his devotion to his duty, but also an appreciation of the humane ideals which he brought into play in the execution of his duty. To Mudaliyar Chellappah (he was made a Muhandiram in 1934 and a Mudaliyar in 1938) must go a large share of the credit for the organisation of the industrial section of the Welikade Prison, which has set many an unfortunate man on the road to rehabilitation.
Finally in 1942 after 38 years of service, not only to the state but also to his fellow men, he retired. Bereaved as he now was by the passing away of his beloved wife, he consciously set about taking her place in the life of his children, and he did not relax his efforts in their behalf even when finally settled in life, they left the shelter of the parental roof. His solicitude for his family then found expression in his fondness for his grandchildren, who in their formative years are being subjected to the severe stress of the present social upheaval. Believing sincerely as he did in God, Mudaliyar Chellappah was a deeply religious man, well versed in the literature and practice of his religion. Friends say of him that he would not go to bed or wake up in the morning without speaking God's name. And so deep was his piety that for several months at a time he undertook courses of religious exercises at Kataragama.
Two years before his death, when he was 77 years of age, with the eager anticipation and energy of a man of lesser years, he undertook what must have been an arduous pilgrimage to the holy places of Northern India. To an

35
intellectual and devout Hindu as he was, fewer things in this world could have given him such great joy as to worship by the sacred banks of the Ganges and in Benares. As a true devotee would, he savoured both the plunge into the icy waters of the Ganges and the torturous climb during the heat of the noonday up the five hundred steps that lead to the hill temple at Thirukalukunram.
When death finally claimed him, it claimed him swiftly, when yet none of his faculties had been impaired, when his intellectual vigour was yet undiminished by his advanced years, and what must indeed have been most dear to him, when he was surrounded by affectionate children and grandchildren. Even as in life he showed consideration to all he knew, so also death when it came showed consideration towards him. His passing has removed from our midst a distinguished elder and a gentle friend,
大

Page 24

ć/oilules

Page 25

39
Late Mudaliyar Saravanamuttu Chellappah
y the death of Mudaliyar S. Chellappah, the Tamil community loses one of its distinguished elders. He hailed from a much respected family in Jaffna and his character and devotion to work enabled him to rise to the position of Superintendent of Prisons before he retired. His main interest after retirement, especially in later life, had been to promote the welfare and rehabilitation of the famil Community which had fallen on evil days. He felt and re-acted like a young man whenever the hardshpis and disabilities of fellow Tamils were recounted. A man of regular habits, of gentle disposition and deep piety. he won the affection and respect of all with whom he came in contact.
When in 1958 took long leave out of the island with a view to visit North India and Kashmir, he offered to join me if I would go with him to Benares, Brindavan and other places. of pilgrimage. I readily consented and when my children saw us off at the Fort Railway Station, their special injunction to me was that I should carefully look after him. I think I did look after him, as a son would his father. He was 77 at the time.
Despite his age, he was intellectually and mentally very alert and discussions with him on a variety of subjects were a perennial joy. Widely read in English and steeped in Tamil classical especially religious literature it could

Page 26
40
not have been otherwise. He wielded a facile pen and, fike the man he was, his handwriting was neat and steady till the penultimate day of his death.
In between our travels and while relaxing in hotels, often occupying the same room, I came to know more of the real man. His reminiscences of his career in the prisons Department convinced me that he was a man of high integrity and exceptional courage who would not brook injustice, favouritism or indiscipline. I have no doubt that he was a loyal and exemplary Government servant for the very reason that on occasions he would dare to confront his superiors (sometimes morally his inferiors) with the Plain and unvarnished truth and like St. Paul say 'O King Agrippa,
was not disobedient unto the heavenly vision''.
There was another gentle and humane aspect to his character which was a revelation to me. Although his wife had pre-deceased him by several years, his love and devotion to her memory were unique and bordered almost on worship. It did not require much imagination for me to appreciate that she too had been a devoted wife and mother. The prime reason for the Mudaliyar's desire to go to Sacred Benares had been to discharge his obligation to his dear departed especially his wife and his parents. Equal too was his tender concern for his children. Although they had long left
the parental roof, he often wished that all of them, both boys and girls, had done equally well in life.
What profoundly affected my regard and affection for the Mudaliyar was his deeply religious nature. It may be truly said of him that he lived and moved and had his

4.
being in God. He would not go to bed or wake up in the morning without uttering God's name, be it Siva, Sivaya, or Narayana. His religious faith and enthusiasm were such that he defied the icy cold of the Ganges in the early mornings both at Kasi (Benares) and later at Prayag, at the confluence of the Ganges and the Jamuna. also remember how at his age and in the blazing heat of noon he climbed the 500 perpendicular stone steps to the hill temple at Thirukalukunram with bare feet, although I had to do it with my socks on.
Although born a Hindu and a Saivite, it appeared to me that with the maturity of age, he developed a more Catholic outlook towards his religion, so much so that one could not really say whether he was a devotee of Siva or of Narayana. He would refer to this new experience of his and I would remark that it was all to the good and that in my view a true Hindu should probably not see any difference between the Upasana of Siva and that of Vishnu.
He would repeat by heart the hymns of the Alvars with the same sense and emotion with which he did the Thevarams and the soul-stirring Thiruvasakam of St. Manickavasagar. His children and grandchildren would undoubtedly like to know, if they already do not know, what was his truly favorite hymn. I think it was the following hymn by the Vaishnavite Saint (Nammalvar) which ran as follows:-
கண்ணன் துதி
குலந்தரும்; செல்வந் தந்திடும்; அடியார்
படுதுய ராயின வெல்லாம் நிலந்தரம் செய்யும்; நீள்விசும் பருளும்;
அருளொடு பெருநிலம் அளிக்கும்; வலந்தரும்; மற்றுந் தந்திடும்; பெற்ற
தாயினும் ஆயின செய்யும்; நலந்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன்
நாராயணு என்னும் நாமம்.

Page 27
42
Mudaliyar Chellappah is no more. Although physically of very modest proportions, he was truly a giant among men. His memory will be fragrant for a long time among those who know him well and those whom he loved much.
D. R. GUNASEGARAN1 20-6-60

43
The late Mudaliyar Saravanamuttu Chelappah
ith the passing away of the late Mudaliyar Chellappah, a great landmark of the older generation has been removed from the Tamil social life. Born of parents who belonged to an illustrious family of land owners and Chief Headmen of Mathagal, llavalai and Siruvilan, he maintained the glorious traditions of his ancestors throughout his life.
When he was reading in the Calcutta Entrance Class at Jaffna College, he joined as a clerk the Prisons Department then known as the Convicts Department and was attached to the Jaffna Jail. He was soon marked out for his studious devotion to his duties and was transferred to the Central Jal in Colombo where he came under the direct surveillance of Major de WILDT who was then the Inspector General of Prisons. He was absorbed into the uniformed staff and he perfomed his duties with such remarkable ability and industry that he earned quick merit promotions over many of his seniors. His services became so indispensable for Head Office administration that he was retained there for over 30 years, a unique record for any Field Officer of the Department. This gave him the opportunity for the first time in the history of jail life of convicted persons to utilise them in some good and productive work whereas previously they were employed in uncongenial and undignified jobs irrespective of their stations in life prior to their commitments. Mudaliyar Cellappah organised an industrial section in the

Page 28
44
Welikade Prisons and utilised the various talents of the prisoners in turning out articles of utility useful to many Government Departments. This section which owed so much to the inventive genius of Mudaliyar Chellappah has developed today to such an extent that it has not only become an earning Department of Government with the production of valuable articles mostly furniture and other office equipment but it has also provided opportunities to the convicts to make a useful living on their release. In this respect it might be stated with some sense of pride that he had long, long ago anticipated the recommendations of the Gratien Report on Prison Reforms and the present policy of Government to deal with prisoners in a humane way. In recognition of his meritorious services and the great initiative he displayed in making useful reforms in Jail life, he was promoted as Superintendent of Prisons in 1935 and transferred to Jaffna. He was also honoured by Government with the titular rank of Mudaliyar in 1938. He retired in march 1942 full of honours and with the satisfaction that he had rendered a human and reformatory service in his long association with people who were convicted for various crimes. He spent his years of retirement in honorary social work, principally as the Honorary Manager of the State Home for the Aged, a work best suited to his human qualities and innate love for the suffering people.
I had the privilege of knowing Mudaliyar Chellappah for over thirty five years both as his colleague in the public service and in social life after my retirement. He w- s an embodiment of courtesy, kindness and gentility with an ever-smiling face and I have not known a single occasion

45
when any harsh word came from his mouth, in spite of the fact that he had in his public service been associated with various grades of human specimens whom he had to control and discipline with some sternness. His life is an example of the hereditary greatness and nobility prevailing over certain methods of conduct one had to adopt in the exercise of his duties.
I am happy that he has left 3 sons who are holding high positions in life and have imbibed all the gentle qualities of their revered father.
K. KANAGARAÏNAM.

Page 29
46
he death of Mudaliyar Chellappah has created a void in the social life of the Tamil community in Ceylon.
I had the privilege of knowing Mudaliyar Chellappah for several years, both as a colleague in the public service and later in retired life as one deeply interested in the religious, social, and cultural life of the community.
He joined the public service in a comparatively junior capacity, and by dint of hard work, unceasing enterprise and devotion to duty reached the highest position open to Ceylonese in the Prisons Department during his period of service. In recognition of his efficient and meritorious service, the Government conferred on him the coveted rank of Mudaliyar.
In retired life he took a great deal of interest in the religious, social and cultural life of the community, and he was greatly loved and respected by the people.
Personally, by reason of my close association with him, I was greatly benefited in my religious outlook and practices. I feel sure that numerous other friends and acquaintances of his will have the same experience to relate.
May his soul rest in peace.
M. VETHAVA NAM.
Rajasingha Road. Wella watte,
30th Jure, 1960

47
Copy of a letter dated 10th, February, 1942 from the then Inspector-General of Prisons, Mr. C C. Schokman
No. D-PF. Prison Head office Colombo, 10th February, 1942.
Dear Mudaliyar Chellappah,
wish to take this opportunity of expressing on the
occasioh of your forthcoming retirement from the Public Service, my thanks for and appreciation of your good work, loyal co-operation and devotion to duty during your long service of 38 years in the Prisons Department.
The Department has good reason to be proud of your record of service which commenced on the 13th October, 1903, in the rank of guard and ends on the 20th March, 1942, in the rank of Superintendent and desire to convey to you the good wishes of both myself and those of your colleagues in service for your welfare in the well-earned years of retirement which lie ahead. With kind regards and cordial good wishes. ܐ
Yours sincerely, Sgd : C. C. SCHOKMAN.
吃 Inspector - General of Prisons
x

Page 30
48
Extract of a letter dated 21st. June 1960 from Mr. V. N. Pillai., Commissioner of Prisons, to one of the sons,
(ས་ When I was Supdt. of Prisons, Colombo, the late Mudaliyar Chellappah was the Chief Jailor at Welikade Prison. recollect that he was a devoted, loyal and conscientious officer. He was most liked by the staff and had the reputation of being fair and just in
his dealings. I have pleasant recollections of his period of service in the Department.
believe he was the first Prison Officer who rose from the sub-ordinate grades to Staff rank in the Department.
Sdg: V. N. PILLAI.
-மெய்கண்டான், கொழும்பு.


Page 31