கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உண்மை (மயில்வாகனம் அருணாசலம் அவர்களின் நினைவு வெளியீடு)

Page 1
மயில்வாகனம்
25 - OS
 

Г, Ј fї
அருணாசலம்
நளின்
வெளியீடு *
- 1903

Page 2

அமரர்
மயில்வாகனம் அருணாசலம்
அவர்களின்
நினைவு வெளியீடு
25 - 08 - 993

Page 3
*。
। ।
。 「

அயர்விலான் அஞ்சான் அனைவர்க்கும் அன்புடையான் துயர் கண்டு துஞ்சான் தொலைநோக்கு தானுடையான் மயிர்நீங்கின் கவரிமான் - மரகதத் தமிழ்தன்னை
உயிருக்குமேலா மதித்தான் - ம யில் வாசுனன் மைந்தன்,
r في اليا
*
} A.
י
リ『 | T1 *
பிறப்பு : இறப்பு : 15-1-1896 26-07-1993
அருணாசலம் அவர்கட்கு
இந்நூல்
சமர்ப்பணம்

Page 4

சமர்ப்பணம்
ஆண்டுகள் தொண்ணுாற்றி ஏழு அகவினை அடைந்த தந்தை நீண்ட தன் பயணத்தை முடித்துக்கொண்டு நிறைவோடு கண்ண பரிந்தார். அரைகுறை வாழ்வென்ற நிலையில்லாது வாழ்க்கைச் சாகரத்தின் கரை கண். திருப்தி கொண்டார்.
இவ்வுலகில் தான் ஆற்றும் கடமைகளைக் குறைபாடு இல்லாது நிறைவு செய்தேன் என்பதனை தன் குலக்கெழுந்துகளான எங்கள் வாழ்வை முன்னிறுத்தி திருப்தி கொண்டார்.
நாங்கள் எங்கள் சொந்தக் கால்களில் நிற்பதையும்-நாம் சார்ந்த துறை ஈளின் வாயிலாக மனித சமுதாயத்துக்கும்-நாட்டிற்கும் நாம் ஆற்றும் பணிகளையும் தன் விழிகளால் நேரில் பார்த்து-அறிந்து ஆறுதல் பெற்றார் மளக்குறை இல்லாது பூரண திருப்தியோடு மரணத்தைத் தழுவிக்கொண்டார்.
எங்கள் தந்தை விவாக-இறப்பு-பிறப்புப் பதிவாளராகக் கடமை யாற்றிய போதிலும்-உண்மையான விவசாயியாக வாழ்ந்தவர். களனியிலே படுத்துறங்கி-விளைபயிரை உயிராய்ப் பேணி-இளம்ை யிலே உழைப்பால் உயர்ந்தவர் கிராம சபைத் தலைவராகத் திகழ்ந் தவர். தன் கால்கள் சேற்றுக்குள் இருப்பதால் நாட்டில் சோற்றுக்குப் பஞ்சமில்லை எனப் பெருமைப்படுவார். செய்யுந் தொழிலைத் தெய்வமாகவும், அதன் திறமையைச் செல்வமாகவும், கொண்ட கடமையைப் பதவியாகவும் மதித்தார். அதன் காரணத்தால் அவரி வாழ்ந்த நாட்களில் செல்வப் பூரிப்போடு திகழ்ந்தார். செல்வாக், கோடு மிளிர்ந்தார். வறுமை அவர் வாழ்வில் குறுக்கிடவில்லை. சிறுமை அவரைத் தீண்ட முடியவில்லை.
எல்லோரதும் அன்புக்குப் பாத்திரமாக வாழ்ந்த அவரை மக்கள்
கிளிவெட்டி கிராமசபைத் தலைவராக்கி மகிழ்ந்தனர். பெருமைப் பட்டனர். கணப்பொழுதும் கடமையை மறக்காது செயற்பட்ட அவர் மக்களிடையே ஏற்படும் பிணக்குகளைத் தீர்க்கும் மாமனித னாக விளங்கினார் மக்களின் இன்ப துன்பங்களில் பங்கானனாகத் துலங்கினார். குன்றின் மேலிட்ட விளக்காக இருந்து மற்றயோர்க்கு வழிகாட்டினார். வளரும் சமுதாயம் கல்வி அறிவு பெறவேண்டும். புலரும் விடியலைத் தமதாக்கி மலரும் வாழ்வுக்கு மணமூட்ட வேண்டும் எனத் துரண்டினார். தன் பிள்ளைகளான ஈமக்கு உயரி கல்வி ஊட்டிதானே முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்.
سنس Il| صب

Page 5
பழந்தமிழ் இலக்கிய நூ* களில் ஈடுபாடும்-பற்றுறுதியும் கொண்ட அவர், சைவ சித்தாந்தத்திலே ஆழமான உணர்வுகளுக்குள் தன்னை ஆட்படுத்திக் கொண்டார். சைவமும்-தமிழும் தெய்வத்தின் அருட் கொடைகள்- அவை தழைத்திடின் ஒழுக்கம் நிலைத்திடும் என்பதை உணர்த்திட ஆரம்பக்கல்வி அடித்தளம் நன்கு அமைக்கப்பட்டு சிறுவர் களின் உள்ளத்தில் அறுகம்புல் போற் பதிக்கப்படல் வேண்டும் என்பது அவர் போதனையாக இருந்தது
எம்மை மத உணர்வில் இணைத்து-தமிழ் உணர்வில் பிணைத்துபொதுப் பணியில் திளைத்து நிற்க செய்தது அவரது தமிழ்ப் பற்றும்-மத நம்பிக்கையும்-அதன் பாற்பட்ட வழிகாட்டலுமே ஆகும்.
* வாழ்வாங்கு வாழ்ந்து-பிறர்வாழ வழிகாட்டி-தன் கடன்முடித்து இவ்வுலக உழைப்பின் பின் ஒய்வெடுத்துச் சென்றுவிட்ட எங்கள் தந்தையின் ஆன்மா அமைதிபெற, அவர் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட சைவ மத உணர்வின் ஆழத்தின் பிரதிபலிப்பாக. சைவ சித்தாந்தத்தை அறிந்து கொள்ளும் அடிப்படை விளக்கத்தின் நுழைவாயிலான திருவதிகை மனவாசங் கடந்தாரி அவர்களால் அருளப்பட்ட "உண்மை விளக்கம்" என்னும் நூலையும்-நீதி வழி நின்று நிறைவான வாழ்வுக்குத் தடம் காட்டும் உண்மை நிலையை விளம்பும் "நீதி வெண்பா" என்னும் பழந்தமிழ் இலக்கிய நூலையும் "உண்மை" என்னும் நூலாக அச்சேற்றி தந்தையின் பாதங்களில் காணிக்கையாக்கி உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம்; நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
இவ்வண்ணம் 65/16, கிங்ஸ் தோட்டம், அ. பாக்கியதுரை, வில்லூண்டி கந்தசாமி கோயில் வீதி, திருக்கோணமலை. 25-08-1993.

ம. அருணாசலம்
வரலாற்றுச் சுருக்கம்
அருண்ாசலமென்னும் அண்ணல் கிளிவெட்டி தருமோர் பிறவி, தனக்காக-ஒருநாளும் சேர்த்துப் புதைத்தே தெரியார், வரலாறு பார்த்தாரி பெறுவார் பயன்!"
அருந்தமிழ் ஈழம் அமைந்திடுங்காலை வருந்தலைநகராய் வாழ்த்துதற்குரிய திருமலை மண்சேர் தென்கீழ்த் திசையில் பெருவயல் வெளியும் பேர் வாய்க் காலும் அல்லைக் குளமும் அருங்குடியிருப்பும் தெல்லின் கொட்டும் நெடுங்கால் நடையும் முப்பழக் காவும் மூதூர்த் தொடுப்பும் அப்பால் வெருகல் அம் மாவலி யும் மூர்த்தியும் தலமும் முழுவதும் கொண்ட கீர்த்தி மருதக் கிளிவெட்டிதனில் பழந்தமிழ் மரபைப் பகர்வே லாயுதரி களங்கமில் மயில்வா கனமும் துணையாள் சின்னத்தங்கமும் சிறப்புறப் பயந்த நன் மனோன்மணியாள் நல்அருணாசலம் அன்னப்பிள்ளை ஆம்வைர முத்து பொன்தங்கம்ம" புகழ்சின்னத் தம்பி கனக சபை எனக் கண்டவருள்ளே சனம் கவர் அருனா சலம் கடந்திட்ட பதினைந்தாம் நாள் பதினோராம் திங்கள் உதித்தனர் ஆயிரத் தெண்ணுாற்றி அத் தொண்ணுாற்றாறெனும் தூய ஆண்டதனில்! கண்வளர்ந் தேனை கை மடி யெங்கும் நாளும் பிறையாய் நலத்தின் நிறைவாய் நாளுமோருடலாய் பொழுதுமோர்நிறமாய் வளர்ந்தும் தவழ்த்தும் வாரியே புழுதி அளைந்தும் நடந்தும் ஆடியும் ஓடியும் அஞ்சிலே பள்ளிசென் றகரம் பயின்றும் பிஞ்சிளங் காயாய் பேரிளம் வயதாய் கண்டோர் மயங்கும் கட்டிளங்காளையாய்

Page 6
கொண்டுமே உடலைக் குலவிடும் நாளில் கதிராசி வேலுப் பிள்ளைகள் தம்மகள் மதியோகம்மா மங்கையை மணந்தே நல்லறம் என்றே நாட்டினர்போற்றும் இல்லறம் தன்னில் இனிதாய் வாழ்ந்து தற்பாக்கியதுரை நம்தங்கத்துரை முத்துக்குமார பிள்ளை மக்களையும், பரமேஸ்வரி-சத்தி யேஸ்வரியம்மாள் ராஜராஜேஸ்வரி மருமக்களையும், தடேசசாஜன் சற்குனராஜன் திவநேசராஜன் தகுயுனிதவதி புஷ்பாஞ்சலியொடு பொன்னாம்சுமதி தர்மினி-அகிலன் தகுலோகாஞ்சலி மிதிவதனனுடன் மா பத்ம வதனன் குமரநல்வதனன் பிரேம வதனன் மன்மதனனாம் பேரரும்கண்டே, பெண்மணப் பதிவும் பிறப்பும் 3AD uʼiljuDmrai பதியும் தொழிலில் பலநாள் இருந்தும் அதில் ஒய்வடைந்தும் அவ்வூர்ச்சபையின் தலைவராயிருந்தும் தமிழணிக்கிளையின் தலைவராயிருந்தும் தமிழ் மக்களுக்காய் கலைஞரைச்சென்றே கண்டுரையாடியும் நிலைதளம் பாமல் நெடும்பணி புரிந்தே தொண்ணுற்றேழாண் டித்தொல் புவியின் மண்ணிலே வாழ்ந்துயர் மக்களைத் தந்தே உற்றார் உறவினர் ஊராருடனே மற்றோரிகலங்கிட மலைமன் நீங்கி இத்துயரி ஆண்டின் gronrub Ständs Grfietsy இருபத்தாறிலே ஏற்றவன் அழைப்பை விண்ணகம் செல்ல விடைகொடுத்தோம் நாம், அண்ணலார் ஆத்மா அடைகவே சாந்தி
- “தாமரைத்திவான்"

என தநதை
நாங்கிள் மூன்று சகோதரர்கள். இம் மூவரினதும் இன் றைய
திலைக்கு எங்கள தாய் தந்தையின் நிறைவான இடையறாத முயற்சி பும் அக்கறையுமே காரணம்,
நாங்கள் பிறந்த 1930களில் எங்கள் கிராமத்தின் ஒரே தொழில் வேளாண்மையே. கல்வி கற்பதன் நோக்கம் தமிழ மொழியை எழுத வாசிக்கத் தெரிந்து கொள்வதே. அரச மற்றும பிற துறை வீ ல தொழில் வாய்ப்புபபெற வேண்டுமென்பதறகாக கலவியை நாடிய வர்கள் இல்லையென்றே கூறலாம.
எங்கள் கிராமப்பாடசாலையில் ஐந்தாம் வகுப்பே ஆக உயர்ந்த தரம். இவ்வுயர் வகுப்பில சித்தியடைதல் போதுமானதாகக கரு தப்பட்டது, கல்விக்கான வாய்ப்பு அறற நிலையலும் இவ்வாறான ந்ேதனைச சூழலிலும் நாங்கள் உயர்கலdபெற வேண்டும எனவும தமிழ் மொழியுடன ஆங்கில மொழியும் கற்க வேண்டுமெனவும எங் கள தந்தை விரும்பியது அந்தாட்கவில ஒரு புதிய நோக்கே. கலவி யின் முக்கியத்துவத்தை தெளிவாக அறிநதருநது எங்களை ஊக்கு வித்ததோடு அவரும் தனது இறுதிக்காலம் வரை சமயம இலக்கி சபம் மற்றும் அரசியல் சார்ந்த நூலகள், சஞ்சிகைகள் பததிரிகைகள் ஆகியனவற்றை படித்துக் கொண்டே இருந்தார். இறுதிக்காலதநில மகாபாரதம, இராமாயணம், பகவத்கீதை ஆகியவறறில் மிகுந்த சடுபாடு கொணடிருந்தார். 97 வயதிலும் கண்ணாடி அணியாமல் வாகிக்குமளவிற்கு அவரின் கண்பார்வை தெளிவாக இருநதது.
எங்கள் கிளிவெட்டிக் கிராமத்தின் கிராமசபை அங்கத்தவராக தலைவராக, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளைத்தலைவராக சமூக மற்றும் அரசியல் பணியும், கிளிவெட்டி பூனிமுததுமாரிய மன் ஆலைய பரிபாலன சபையின் தலைவராக, கங்குவேலி சிவன் கோயில், மற்றும் அகஸ்தியஸ்தாபன நிர்வாக சபை உறுப்பினராக சமயப் பணியும், ஐக்கிய நாணய சங்கத்தின் தலைவராக, கூட்டுறவுப்பணி யும் ஆற்றியவர். அத்துடன் 30 வருடங்களுக்கு மேலாக விவாக, பிறப்பு - இறப்பு பதிவாளராகவும் பணி புரிந்தார்.
ஏழை மற்றும் சமிதாயத்தில் நலிவுற்ற மக்களுக்கு தனது ஆற் றலுக்கேற்ப முழுமனத்துடன் உதவியவர். தானதர்மச் செயல்கள் கொடுப்பவருக்கு மட்டுமல்ல அவரின் பின் சந்ததியினருக்கும் துணை நிற்கும் என்பது அவரின் நம்பிக்கை:
- 5 a.

Page 7
இறை நம்பிக்கை மிகுந்தவர். பூஜை, திருவிழா, பண்டிகை ஆலயங்களில் ஆகமமுறைப்படி சிறப்பாக நலட பெற வேண்டும் என் பதில் கண்ணும் கருத்துமாக இருந்ததோடு அவர் விரதம், உபவாசம் அனுஷ்டிப்பதை தீவிரமாகக் கடைப்பிடித்தவர். சைவத்திருமுறைகள் பன்னிரண்டையும் கற்றுணர்ந்தவர்.
மதங்கள் மற்றும் சான்றோர் கூறும் நற்குணங்கள், செயல்கள், நடத்தைகள், பண்புகள் நிறைவாகப் பின்பற்றப்பட வேண்டுமென்று எங்களுக்குக் கூறுவதோடு நின்று விடாமல் அவ்வழி வாழ்ந்தவர்,
இளம் வயது தொடக்கம் 89 வயது வரை - 1985ஆம் ஆண்டு எங்கள கிராம்ம வன்செயலால் பாரிய பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு மக்கள அனைவரும் இடம் பெயரும் வடிர - வேளாண்மையில் விருப போடு ஈடுபட்டிருந்தார்.
சோதிடத்தில் மிக நம்பிக்கை வைத்திருந்ததோடு அதில் புலமை யும் பெறறிருநதார். 97 வயதில் அதாவது 1993ஆம் ஆண்டில் தனது இவ்வுலக வாழ்வு நிறைவு பெறுகிறது என்பதை முன்கூட்டியே பல வருடங்களுக்கு முன் கூறியிருந்தார். இதன் பொருட்டு 1987ஆம் ஆண்டு தொடக்கம் சென்னையில் வசித் து வந்த எங்கள் தந்தை தனது ஈமக்கிரியைகளை திருக்கோணமலையில் வதியும் மூத்தபுதல் வனே செய்ய வேண்டும் என்று கூறி பிடிவாதத்துடன் நாடு திரும்பி திருக்கோணமலையில் எனது அண்ணன் வீட்டில் வாழ்ந்து வந்தார்.
உண்மை, ஒழுக்கம், நீதி, நேர்மை அன்பு, சேவை, கட்டுப்பாடு இறை நம்பிக்கை ஆகியனவற்றின் அடிப்படையிலேயே இவரின் செய லும் சிந்தனையும் அமைந்திருந்தன. இதனால் எங்கள் தந்தையின் வாழ்க்கை இறுதிவரை நல்லதாகவும் மகிழ்ச்சியானதாகவும் அமைந் திருந்தது.
அ. தங்கத்துரை

நினைத்து வாழ்கிறேன்
ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் நாங்கள் வசித்துவருவதால் கடந்த எட்டு வருடங்களாக என்தந்தையை நான் எனது மனைவி பிள்ளைகள் நேரில் தரிசிக்கும் வாய்ப்பினை இழந்திருந்தோம என்றாலும் அடிக்கடி பரிமாறிக்கொள்ளும் கடிதங்கள் மூலம் அவருடன் உரையாடினோம் உறவுகுன்றாது வாழ்ந்தோம்.
தன்து இவ்வுலக வாழ்வு 1993ம் ஆண்டில் முடிவுறும் என்பதை எப்போதோ எங்களுக்குக கூறி அதற்காக எங்களை தயார் செய் திருந்தபோதும் மறைவுச் செய்த கேட்டு நாங்கள அனைவரும் பெருந்துயருற்றோம். வதியும் நாட்டுச் சட்டங்கள் இங்கு வநது திரும்புவதை அனுமதிக்காத காரணத்தனால் அவரின் இறுதயாத் திரையில் எங்களால் பங்குகொள்ள முடியவில்லை.
அப்பா தனது இறுதி நாட்களை எங்கள் மூத்த அண்ணன், அண்ணி, மகள் ஆகியோரின் அன்பு உபசரிப்பிலும் கணகாணிபபிலும் கிழித்தபடியால் மகிழ்ச்சியாகவே இருந்தார். உற்றார் உறவினர் நண்பர்கள் பலர் அடிக்கடி அவரை வநது சந்தித்து அ ைபுசெலுததி உரையாடிச் சென்றதால் கவலையென்பதேயில்லாது வாழ்ந்தார்.
எனது மூத்த சகோதரர்கள் இருவரும் இளமை தொடக்கமே உயர் கல்விக்காகவும் பின்பு தொழில் காரணமாகவும் பிற இடங் &ளில் வாழவேணடிய நிலை ஏற்பட்டிருந்தது. நான் என தந்தையை பின்பற்றி வேளாண்மைச் செய்கையிலேயே ஈடுபட்டுவந்தபடியால் இளமை தொடக்கம் எனது 45ஆவது வயது வரை தந்தை, தாயுடன் ஒரே வீட்டில் ஒன்றாக வாழுகின்ற வாய்ப்பு கிடைத்தது. எனது மனைவி பிள்ளைகள் மீது அன்பு சொரிந்த என் தந்தைக்குப் பிரதி யுபகாரமாக பாசமும் மரியாதையும் அவர்களிடமிருந்து கிடைத்தது.
அவர் ஊட்டிய நற்கருத்துகளும், நற்பண்புகளும் எங்களை நல்
வழியில் இட்டுச் செல்கின்றன. என் அப்பாவைப் பற்றி நினைதது நான் பெருமைப்படுகிறேன்.
அ. முத்துக்குமாரபிள்ளை
(குமாரதுரை) டென்மார்க் 09-08-1993

Page 8
வ.
மூதறிஞர் அருணாசலம் gցաfr
காரேறு மூதூர் என்று புகழப்படும் கொட்டியாபுரப்பற்றில் கிளி வெட்டி பழம் பெரும் கிராமமாகும், இங்கு சைவத் தமிழ்க் குடும் பங்கள் பெருஞ் சிறப்புடன் வாழ்ந்தன. இங்கு திரு. மயில்வாகனம் அவர்களுக்கும் திருமதி சின்னத்தங்கம் அவர்களுக்கும் அருந்தவப் புதல்வனாக திரு. அருணாசலம் அவர்கள் 15 - 11 - 1896ல் பிறந் தார்கள். 8
இவர் இளமைப் பருவத்தில் தமிழையும் சைவத்தையும் நன்கு கற்றுத தோநதாசி, வயது வந்ததும் கமத்தொழிலில் முழுமையாக ஈடுபட்டுழைத்தார். சகல செல்வங்களோடும் சிறப்புற வாழ்ந்தார் கிளிவெட்டி அருணாசலத்தார் என்றால் எங்குமே தெரியும் அளவுக் குப் பிரபலயம் அடைந்தார்.
உரியகாலத்தில் கிளிவெட்டியூரைச் சேர்ந்த திரு. வேலுப்பிள்ளை அவர்களுக்கும் திருமதி கதிராகி அவர்களுக்கும் புத்திரியாகப் பிறந்த யோகம்மா அவர்களைத திருமணம் செய்து இனிதே இல்லறம் நடத் தினார். இக்காலத்தில் டாக்டர் பாக்கியதுரை, முன்னாள் மூதூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு. தங்கத்துரை, தற்போது டென் மார்ககில இருக்கும் திரு. முத்துக்குமாரபிள்ளை (குமாரதுரை) ஆகிய மூவரையும் புத்திரராகப் பெற்றார்.
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல் என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறளுக்கமைய மக் களை கற்றார் அவையின்கண் முந்தி இருக்கச் செய்துள்ளார். மக் களும்,
மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல் என்னும் திருக்குறளுக்கமைய நடந்து வருகிறார்கள். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், தந்தை சொல்மிக்க மந்திரமில்லை தந்தை தாய் பேண் என்னும் முதுமொழிகளைப் பேணி வாழ்கிறார் கள.
அருணாசலம் ஐயா தன் குடும்பத்துக்கும் தன் ஊருக்கும் மூதூர் முழுவதுக்குமே ஓர் மூதறிஞராக விளங்கினார். கல்வி அறிவு @ಆಜ್ಞೆ
--۔ & ۔م۔

கங்களில் சிறந்து முன்மாதிரியாக வாழ்ந்தார். வாழ்ந்ததால் மற்ற வர்களும் வாழ வழி காட்டினார், மூத்தோரி சொல் வார் த் தை அமிர்தம் எல்லோரும் அவர் சொற்கேட்டு நடந்தனர், எல்லோருக் கும் எப்போதும் உதவி செய்தார். மக்கள் தொண்டே மகேஸ்வரன் தொண்டு என்று வாழ்ந்தார். எல்லோரையும் இன்முகத்துடன் வர வேற்பார். இன்சொற்களையே கூறுவார். சிறந்த சமாதானப் பிரிய ராகவும் நல்ல ஆலோசகராகவும் வாழ்ந்தார்.
கிளிவெட்டிக் கிராமச் சங்கத் தலைவராகப் பொது மக்களால் தெரிவு செய்யப்பட்டு கிராம ஆட்சியை நேர்மையாகவும்திறமையாக வும் நடத்தி னா ரீ, அப்பகுதி மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றினார், கிளிவெட்டி மாரியம்மன் கோயில் மணியகாரராகவும் இருந்து கோயிற்பணிகளையும் சமயத் தொண்டு களையும் செவ்வனே செய்தார்.
இவரது அறிவாற்றலையும், தேர்மையையும் செல்வாக்கையும் அறிநத அரசியலார் பிறப்பு, இறப்பு விவாகப் பதிவாளராக இவரை நியமித்தனர். கடமையில் தவறாது திறம்படப் பல வருடங்கள பணி யாற்றி ஓய்வு பெற்றார்.
தொண்ணுற்றேழு வயது வரை சுகபெலமாக இருந்தார் என் பது பாராட்டுதற்குரியது. நாற்பது வயதிலேயே நாலு கண்களால் பார்க்கும் இக்காலத்தில் எங்கள் மூதறிஞர் அருணாசலம் ஐயா கண் னாடியின்ற இரண்டு கண்களால் புத்தகங்களை வாசித்து ஆனந்த மடைவார். பஞ்சாங்கம் பார்த்துப் பலன் கூறுவார். இந்த வயதி லும் என்னிடம் பஞ்சாங்கம் புத்தகங்கள் வாங்கிப் படித்தார். இதை எண்ணும் போது ஐயாவிடம் எனக்குப் பெருமதிப்பு, இதனால் நான் அடிக்கடி ஐயாவைப் போய்ப் பார்த்துப் பேசி மகிழ்வேன்,
மூதறிஞர் அருணாசலம் ஐயா அவரிகள் திருக்கோணமலையில் 26 - 7 - 1993ல் இவ்வுலகைவிட்டு சிவனடி சேர்ந்து சிவபதமடைந் தார். ஐயாவைப் பிரிந்து வருந்தும் மனைவி மக்கள் உற்றார் உற வினர் அன்பர்வள் அனைவரும் ஆறுதல் பெறவும், ஐயாவின் ஆத்மா சாந்தியடையவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்,
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க,
85. சாரதா வீதி திருக்கோணமலை பொ. கந்தையா 7. 8, 93 காந்தி ஆசிரியர் ,
- 9 -

Page 9
சமூக-சமய சேவையில் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார் திருக்கொட்டியாபுரபற்றில் மகாவலி நதி தன், கிளைகளால் அணைக்க, மருதமும், முல்லையும் தம் வளங்களைக் கொடுக்கும் கிளிவெட்டி எனனும் எழில் மிகும் கிராமத்தில் அமரர், அருனா சலம் அவர்கள் 15-11-1896 ஆம் ஆண்டில் பிறந்தார்கள். அன்பும், பண்பும் மிக்க தந்தை மயில்வாகனமும், அருமைத் தாய் சின்னத் தங்கமும், தமது அனபு மகனை பண்டைய பண்பாடுகளுடன் மிகவும் அன்பும் ஆதரவுமாய் வளர்த்து வந்தார்கள். உரியகர்லத்தில் விததி யாரமபம் தொடங்கி உள்ளூர் அரசினர் தமிழ் பாடசாலையில கல்வி கற்க வைததனர். தன் படிப்பை கிளிவெடடி அரசினர் தமிழ் பாடசாலையுடன காலத்திற்கு ஏற்ற சூழ்நிலையில் இவர் முடித்துக கொண்டாா. பின் விவசாயததைத தன மேலான வாழ்க்கைத தொழிலாக ஆரம்பித்தார். தனது ஊரவர் அனைவருக்கும் எடுத்துக் காட்டாக, ஒரு முனனோடி விவசாய யாக வாழ்ந்து வந்தார். வயது முப்பது ஆனதும் பெற்றார் அன்னாரின் முயற்சியையும, வளர்ச்சி யையும நன்கு கவனிதது தம் சொந்த ஊரில், போடியார் குடும் பததல் யோகம்மா என்னும பெண்ணை சிறப்புடன திருமணம செய்து வைத்தார்கள்.
இவர் இலலறத்தையும், நல்லறமாகப் பேணி அனைவருக்கும் உதவும் உத்தம குடும்பத்தினராக வாழ்ந்து வந்தாவி, "பெறும வற்றுள் யாம அறிவதில்லை அறிவறிந்த மக்கள் பேறு" என்ற வள்ளுவர் வாக்கின்படி, தம் சந்ததி வளர்ந்திடவும், பாக்கியதுரை, தங்கத்துரை, குமாரதுரை (முத்துக்குமாரபிள்ளை) ஆகிய துரைகள் மூவரைப் பெற்றெடுத்தார்கள். தன் அன்புக் குழந்தைகள் உள்ளூரில் ஆரம்பக்கல்வி கற்றபின் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய பிற இடங்களிற்கும், அவர்களை அனுப்பி உயர்கல்வி கற்பித்தார். "அவை யத்து முந்தியிருப்பச்செயல்" என்ற வள்ளுவர் வாக்கின்படி கல்வியில் காட்டிய முன்னோடி முயற்சிகளை அப்பிரதேச மக்களிற்கு எடுத்துக் காட்டாக அமைத்தவர் அமரர். அருணாசலம அவர்களேயாவர்.
தம் மைந்தர் மூவரின் இல்வாழ்க்கை முறையைத் திறம்பட நடத்த தாம் ஏற்றுக்கொண்ட மருமக்கள்மாரையும் அவர் தம் பேரபபிளளைகளையும் தினமும் பார்த்து மகிழ்ந்து வந்தாா அமரர் அருணாசலம் அவர்கள். சமூக சேவையிலும், சமய சேவையிலும் ஏனையோருக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார். அமரர் அவர்கள் கிளிவெட்டி கிராமசபை அக்கிராசனரி ஆகவும், கூட்டுறவுச்சங்க முகாமையாளருமாகவிருந்து நேர்மையுடனும், நீதி புடனும் தம் கடமைகளைத் திறம்படச் செய்து வந்தார். பெரியாகின்
- 10 -

நேர்மைத் திறமையை அறிந்த அரசினர் விவாகம், இறப்பு, பிறப்பு பதிவுகாரராக நியமித்தார்கள். கடந்த முப்பது ஆண்டுகளாக எவரும் குறையோ, குற்றமோ கூறமுடியாத வகையில தம் தோம்புதர் (பதிவாளர்) வேலைய்ை திறம்படச் செய்து முடித்தார். மக்கள் சேவைக்கு மதிப்புக் கொடுதது எவரிடமும் ஒரு சதமேனும் பெறாது, பிறப்பு, விவாகம், மனை இடம் வகுத்தல் போன்ற சாஸ்திரரீதியான குறிப்புக்களையும், உண்மைப்படி எழுதிக் கொடுதது மக்களிற்கு மனநிறைவையும் ஏற்படுததிய பெருமை அமரர் அருணாசலம் அவர் களையே சாரும்.
சமய சேவையிலும் தம் வாழ்நாளில் கூடிய பங்கைச் செலுத்திய அமரா அவாக்ளி கிளிவெட்டி முததுமtiயம்மன ஆலயப்பரிபாலன் சபைத தலைவராகவும் இருந்து அவ்வலயப் புலவரமைப்புககுட aAL TML0 a TASALSAALL SS q SATTT000 LL ETTACT S S ELETTLLLLLLL LLSqqMLL S ALAE ETTT S மேலும, கங்குவேல சிவ ைகோயில, அகததிய ஸ்தாபனம் போனற பழபமபரும் ஆலயங்களின் புனரமைப்புகளிறகும பூசை ஒழுங்கு களிற்குய பொறுப்பாவரால் திறுை அவயவப் பங்களனை அபிவருத த ககுட பொதும் பாடுபட்டாா அபரா அருணாசலம அவர்கள இபடகுதிவாழ் கிக்களிறகு ஓர் எடுததுக்காட்டாளராக வாழ்நது தம் குடும்பததின் ருககும் மக்கிவியறகும அவர் \செய்த சேவைகளை நாம of 6ā"[]), LD 49/Ush đ5 võ tư (LĐ{{-Lit ou •
கிளிவெட்டி முததுமாகியம்மன் ஆலய வருடாந்த திருவிழாக் காலத்தின்போது கோயில் தருப்பணி வேலைகளிற்காக, ஒலிபெருக்கி மூலம் ‘மக்கள கோயிலுக்கு வாருங்கள் பெண்கள் குடங்களைக் கொண்டுவாருங்கள்' எம்3று அவயு அழைப்பு விடுத்தவுடன் ஆண்க ளும்,பெண்களும் முண்டியடித்துக் கொண்டு, ஆலயத்திற்குப் பெரும் கூட்டமாய் தொண்டு செய்யவரும் காட்சியை, 1962இல் கிளிவெட்டி அரசினர் தமிழ் வித்தியாலயத்தின் அதிபராக இருந்த போது நான் நேரிலேயே கண்டேன். இவனும் அக்காலக் காட்சி என் கண்முன்னே சிலவேளை தோன்றுவதும உண்டு. அமரர் அவர்கள் சுத்தபோசன காரராகவும், சுவையான பt ல், தயிர் உண்பவராகவும் இருந்து எம்முடன் 97 ஆண்டுகள் நோய் நொடியின்றி வாழ்ந்து வந்தார்கள். இவ்வுலக வாழ்க்கை போதும் என்பதை உணர்ந்த இறைவன் 28-07-1993 இல் அமரர் அருணாசலத்தை ஆத்மசாந்திக்காகத் தம்முடன் அழைத்துக் கொண்டார்.
அன்னாரின் ஆத்ம சாந்திக்காக, நாமும் இறைவனை வேண்டு வோமாக;
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
செ. கதிர்காமத்தம்பி,
மூதூர். ஓய்வுபெற்ற அதிபர் I5-8-1993.
- ill

Page 10
காலஞ்சென்ற திரு. ம. அருணாசலம் அவர்களின் நினைவுச் செய்தி
நான் தி|புனித அந்தோனியார் வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த காலத்தில், கிளிவெட்டியில் முந் நாள் கிராம சபைத் தலைவராக இருந்த திரு. வினாயகமூர்த்தி போன்ற மாணவர்களும் எமது வித்தியாலயததல கல்வி கற்றனர், ஒருநாள் அவா களின் அழைப்பின் பேரில் வயல வளம் மிக்க மேற் படி கிராமத்திற்குச் சென்றபோது அவ்வூரின தோம்புதோராயிருந்த திரு, ம, அருணாசலம் வீட்டுககுப் போயிருந்தேன, அவர்களின் அன்பினால் ஏற்பட்ட தொடர்பு காரணமாக மேலும் பலமுறை அவர்களோடு நெருங்கிப் பழகக்கூடிய வாய்ப்புகளேறபட்டன.
கிராமங்களிலே ஒழுங்கான கல்வி கிடையாத அக்காலத்திலே, விாவியம் பாடக்கூடிய தமிழார்வம் மிக்கவர்கள் தோன்றிய இவ்வூரில் சிறந்த விவசாயியாய், தோம்புதோராய், கல்வியறிவு மிககவராய் விளங்கினார் அருணாசலம. தன்னைப் போலவே தன பிளளை களும் சான்றோராய் விளங்கவேண்டும் என்ற பேரவாவினால், பணச்செலவையும் பாராமல் பட்டினமனுப்பி கல்விச்செல்வத்தை யூட்டினார். இதன் பயனாக ஒருமைந்தனை டாக்டராகவும், இன் னொரு மைந்தனை அரசாங்க சேவையிலும் அமரச் செய்தாாe இவர்களைத் தொடர்ந்து இக்கிராமத்தில் கல்வியிலே ஆர்வம் கொண்ட பலர் கற்றுத்தேர்ந்து இன்று கல்விமான்களாக விளங்கு கின்றனர்.
இவர் மகனான திரு. அ. தங்கத்துரை மூதூர் பாராளுமன்ற பிரதிநிதியாயிருந்து இத்தொகுதி மக்களுக்கு அளப்பரிய சேவை யாற்றினார் என்பதை யாவருமறிவர், இறந்த இவரது தந்தையின் ஊக்க முயற்சியினால் இக்கிராமமே வளர்ந்து முன்னேற்றங் கண்டது:
இவர் தமது 97 வயதில் இறந்ததால் கிளிவெட்டி கிராம மக்கள் எல்லோரும் பிரிவாற்றாமையினால் துயருருகுகின்றனர். எனவே நாமெல்லோரும் இறைபதமடைந்த இவரின் ஆன்மா சாந்தி பெற்று இன்புற்றிருக்க வேண்டுவோமாக.
வ, பு, சி. பெர்ணான்டோ
ബ് 18 -ാം

6. சிவமயம்
உண்மை விளக்கம்
உண்மை விளக்கம் என்னும் நூல், மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கினுள் ஒன்று. சாத்திர நூல்களுள் திருவுந்தியாகும் திருக் களிற்றுப்படியாரும் மெய்கண்ட தேவ நாயனாரின் சிவஞான போதத் திற்குக் காலத்தால் முற்பட்டவை. எனவே, மெய்கண்ட தேவ நாயனார் அருளிச் செய்த சிவஞான போதத்தை அடியொற்றி எழுந்த நூல்கள் எனக் கூறத்தக்கவை ஏனைய பதினொரு சாத்திர நூல்களே இவற்றுள் சிவஞான சித்தியார், இருபா இருபஃது ஆகிய இரண்டும்: மெய்கண்ட தேவ நாயனாரின் நேரடி மாணவர் ஆகிய அருள் நந்திசிவம் அருளிச் செய்தவை. இவை தவிர, சிவப்பிரகாசம், திரு வருட்பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடு தூது, உண்மை நெறி விளக்கம் சங்கற்ப நிராகரணம்ஆகிய எட்டு நூல்களும், சந்தான ஆசாரியருள் ömresivas Taarnrésulu உமாபதிசிவம் அருளிச்செய்தவை. உண்மை விளக்கம் என்னும் இற் நூலைஅருளிச்செய்த ஆசிரியர் திருவதிகை மனவாசகங்கடந்தார்.
ஆசிரியர் மனவாசகங்கடந்தாரின் வரலாறு பற்றி நமக்கு ஏதும் தெரிய வரவில்லை. ஆயினும் இவர் மெய்கண்டாரின் நேரடி மாணாக்கரி நாற்பத்தொன் பதின்மருள் ஒருவர் என்று தெரிய வருகிறது. இவருடைய ஊர் திருவதிகை என்பது உய்த்துணரக் கிடக்கிறது
பெரும்பாலும் சைவ சித்தாந்தம் கற்பவர்க்கு அரிச்சுவடி போலப் பயன்படுபவை. உண்மை விளக்கமும், திருவருட்பயனும் ஆகும். சித்தாந்தப் பயிற்சிக்கு அடிப்படையாகத் தேவைப்படுகிற தத்துவங்கள் பற்றிய செய்திகள் இந்நூலில்தான் கூறப்படுகின்றன.
மனவாசகம் கடந்தார் தம் நூலைத் தொடங்குகிறபோதே 'வண்மைதரும் ஆகமதுரல் வைத்த பொருள் வழுவாது உண்மை விளக்கம் பற்றி எடுத்துக் கூறப்புகுவதாகத் தெரிவிக்கிறார். எனவே இந்நூலில் கூறப்பட்ட கருத்துக்கள் முழுவதுமே ஆகம நெறியில் எழுந்தவை என்பது புலனாகிறது.
ஆகமங்கள் : சைவ சித்தாந்தம் தனக்கு ஆதார நூல்களாக வேதங்கள், ஆகமங்கள் ஆகிய இரண்டையும் கொண்டுள்ளது. இவற்றுள் வேதங்கள் பொது நூல் என்றும். ஆகமங்கள் சிறப்பு நூல் என்றும் கொள்ளப்படும்;
- 13 - .

Page 11
"வேதநூல் சைவதுரல் என்று இரண்டே நூல்கள்
வேறுஉரைக்கும் நூல் இவற்றின் விரிந்த நூல்கள் ஆதிநூல் அநாதி அமலன் தகுநூல் இரண்டும்
ஆரணறுால் பொது சைவம் அருஞ்சிறப்பு நூலாம்"
என்று சிவஞான சித்தியார் சருக்கத்தில் ஆசிரியர் அருள்நந்திசிவம் கூறுகிறார்.
மூல ஆகமங்கள், காமிகம் முதலாக வாதுளம் ஈறாக இருபத் தெட்டு முன்பர். இவை தவிர, உப ஆகமங்கள் எனப் பேசப்படும் நூல்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. எனினும் மூல ஆகமங்களே பெரி தும் பாராட்டி ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இவை சிவபெருமானால் அருளிச் செய்யப்பட்டவை. எனவே இவை பிரமாண நூல்கள் ஆகும்
ச20: குரவர்களான திருரூானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோர் ஆகமகங்களைப் பற்றித் தம்முடைய பாடல்களில் குறிப்பிடுகிறார்கள்.
**தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம்
வகுத்தவன்" (திருஞான - திருவிற்கோலம்) **ஆகமச் செல்வனாரே' (திருஞான - திருவொற்றியூர்) * விண்ணினார் விண்ணின் மிக்கார்
வேதங்களுக்கும் அங்கம் பண்ணினார்"
(திருநாவு - திருவிடைமருதூர்) *அண்டனை அண்டரி தமக்கு ஆகம நூல் மொழியும் ஆதியை’ (சுந்தரர் - திருக்காளப்பேர்) அம்மானை ஆகம சீலர்க்கு அருள் நல்கும் பெம்மானை?
(சுந்தரரி - திருவாரூர் பரவையுள் மண்டளி) "அரவொலி ஆகமங்கள் அறிவாரி அறிதோத்திரங்கள்??
(சுந்தரர் - திருக்கைலாயம்) 'ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க"
(மாணிக்க - திருவாசகம் - சிவபுராணம்) "மன்னு மாமலை மகேந்திர மதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்"
(மாணிக்க-திருவாசகம்-கீர்த்தித் திருஅகவல்)
என்ற திருமுறைப் பகுதிகள் ஆகமங்களின் சிறப்பை உணர்த்துவன
- 14. -

வேதமுறையில் பயின்றும் ஒழுகியும் பொருள் உணர்ந்தும் வருகிற நெறிக்கு வேதாந்தம் என்று பெயர் வழங்குவர். நாளடை வில் வேதங்களின் நாற்பகுதிகளில் கடைசியாக வழங்குகிற உபநிட தங்களைக் குறிக்க வேதாந்தம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது: அதன் பின்னர் வேதாந்தம் என்னும் சொல் ஆதிசங்கரரின் ஏகான்ம வாதத்தைக் குறிக்கின்ற சொல்லாக இப்பொழுது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை மாதவச் சிவஞான முனிவர் தமது சிவஞான மாபாடியத்தில்
வேதாந்தம் என்பது யோகப் பெயரால் வேதத்தின் முடிபாகிய உபநிடதங்களைக் கூறும் உரூடிப் பெயரான் அவற்றை எடுத்துச் செய்த ஏகான்மவாத நூலைக் கூறும். ஆதலின் அவ்விரு வேறு வகை யும் தெரிந்து உணர்ந்து கொள்க’ என்று விளக்குகிறார். யோகப் பெயர் - காரணப் பெயர் உரூடிப் பெயர் - இடுகுறிப் பெயரி.)
ஆகமங்களைப் பிரமாணங்களாக ஏற்றுக்கொண்டு, அவற்றைப் பயின்றும் அவற்றின் வழி ஒழுகியும் வருவது ஆகமாந்தம் என்று வழங் கப்படும் ஆகமங்களுள்ளும் பாசுபத ஆகமங்கள், வைணவ ஆகமங்கள் போன்ற பல்வேறு வகைப்பட்ட பிரிவுகள் உண்டு. சைவ சமயத்தில் ஆகமம் என்று குறிப்பிடும் இடங்களில் எல்லாம் அச்சொல் சைவ ஆக மங்களையே உணர்த்தும்.
இவ்வாறு வேதாந்தம், ஆகமாந்தம் என்று இரண்டு வகையாகக் குறிப்பிடப் பெறினும் இவை ஒன்றிற்கொன்று மாறுபடுவன அல்ல இந்தக் கருத்தைத் திருமூலர் தமது திருமந்திரத்தில்,
"வேதமொடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல்
ஒதும் பொதுவும் சிறப்பும் என்று உள்ளன நாதன் உரை அவை நாடில் இரண்டு அந்தம் பேதமது என்பர் பெரியோர்க்கு அபேதமே"
என்ற பாடலின் மூலம் விளக்குகிறார். உண்மை விளக்கம் கூறும் ஆகம நூல் சைவ ஆகம நூலே என்பது தெளிவு.
ܘ.ܶ. ܚܤ ܀ 15 ܘܗܚܒ

Page 12
காப்பு விநாயகர் வணக்கம்
வண்மைதரும் ஆகமருநூல் வைத்தபொருள் 6Al (Lg6 TT உண்மை விளக்கம் உரைசெய்யத் - திண்மதம்சேர் அந்திநிறத் தந்திமுகத் தொந்திவயிற்று ஐங்கரனைப் பந்தமறப் புந்தியுள் வைப்பாம்.
சிவபரம்பொருளுடைய திருவருள் வளம் நிறைந்த ஆகம நூல் களின் பொருளை வழுவின்றித் தொகுத்து உண்மை விளக்கம் என்ற பெயரால் இந்த நூலினை உரைப்பதற்கு வலிமை மிக்க மதநீர் சொரி கின்ற, மாலைப் பொழுதின் சிவந்த நிறத்தையும், கொம்பினை யுடைய திருமுகத்தையும், பருத்த வயிற்றினையும், ஐந்து கரங்களையும் உடைய விநாயகப் பெருமானை நம் தளைகள் எல்லாம் அறும் பொருட்டுச் சித்தத்துள் இருத்தி வணங்குவோமாக,
திருவதிகை மனவாசகங்கடந்தார், உண்மை விளக்கம் என்ற இந்நூலைத் தொடங்கும் போது இடையூறு அணுகாதிருக்கும் பொருட்டு மூத்த பிள்ளையார் திருவடிகளை வணங்கித் தம் நூலைத் தொடங்குகிறார். இம் முதற் பாடலிலேயே தாம் கூறப் புகும் நூல் சைவ ஆகமங்களின் பொருள் வரையறையை வழுவாமல் எடுத்துச் சொல்லும் என்பதையும் ஆசிரியர் குறிப்பிட்டுவிடுகிறார்.
பொய்காட்டிப் பொய்யகற்றிப் போதானந்தப் பொருளாம் மெய்காட்டும் மெய்கண்டாய் விண்ணப்பம் - பொய்காட்டா மெய்யா! திருவெண்ணை வித்தகா சுத்தவினா ஐயா! நீ தான்கேட் டருள்.
இவை, இ9வ பொய் எனக் காட்டி, அப்பொய்களைச் சாராமல் அகற்றி உண்1ை2 அறிவாகிய பேரானந்தப் பொருளை :ெய் என்று எனக்குக் காட்டி என்னை உய்விக்கும் மெய்கண்ட சிவமே என் னுடைய பணிவான வேண்டுகோள். உண்மை தவிர வேறு எதனையும் காட்டாத மெய்யனே, திருவெண்ணெய்நல்லூரில் வீற்றிருக்கும் பேரறி ஞனே, என்னைத் தூய்மையான நெறியில் செலுத்தும்படி நான் கேட் கின்ற கேள்விகளை, ஐயனே, நீ செவிமடுத்து நான் உய்யுமாறு அவற் றிற்குரிய விடைகளைக் கூறி அருள்வாயாக.
மெய்கண்ட தேவ நாயனாரின் மாணாக்கர்களுள் ஒருவராகிய இந்நூல் ஆசிரியர், அவரிடம் முன்னமேயே பயின்றார். ஆயினும் மேலும் சில வினாக்களை எழுப்பி அவற்றிற்குத் தம் ஆசிரியரிடம் ஐயம் தெளியும்படி விடை கேட்பதாகத் தம் நூலை அமைத்துக் கொள் கிறார்g
«mma 16., ayrm .-

மெய்ப்பொருளை அறிய வேண்டுமானால் முதலில் செய்யத்
தகுந்தது :ொய்ப்பொருள் எது என்று கண்டு, அதனைவிட்டு நீங்கு வதே. உலகியலில்கூட வேண்டாதவற்றை ஒதுக்க வல்லவர்களே, வேண்டியவற்றைத் தேர்ந்தெடுக்க வல்லவர்கள் ஆவதைப் கான முடியும், சந்தையில் போய் கத்தரிக்காய் வாங்கும் ஒருவன் சொத் தையும், முற்றலும், அழுகலும் உடையகாய்களை ஒதுக்கிவிட்டு அதன் பிறகே நல்லவற்றைத் தேர்ந்து எடுப்பதைப் பார்க்கிறோம், மெய்ப் பொருள் இயலிலு: இதுவே முறைமை
சிவஞான மாபாடியத்துள் அதிகரணம் என்னும் சொல்லுக்குப் பொருள் விளக்கவந்த மாதவச்சிவஞான முனிவர் "தன்னாற் கறப் படும் பொருளும், அதன் கண் ஐயப்பாடும். அதற்குப் பிறர் கூறும் பக்கமும், அதனை மறுத்துக் கூறும் சித்தாந்தத் துணிபும், இயைபும் என்னும் இவற்றிற்கு நிலைக்களம் ஈண்டு அதிகரணம் எனப்படும்? என்று உரைக்கிறார். இதிலிருந்து முதலில் பொய்யைப் பொய் என்று கண்டு நீக்கிய பிறகே மெய்யைமெய் என்று கண்டு சார்தல் கூடும் என்பது விளங்கு கி ன் றது. தாயுமான அடிகளும் மெய்கண்ட தேவரைப் பாராட்டி வணங்கும் போது “பொய் கண்டார் கானாப் புனிதமெனும் அத்துவித மெய்கண்ட நாதaருள் மேவும் நாள் எந்நாளோ? என்கிறார். மற்றவர் கருத்தாகிய பரபக்கத்தை மறுத்து உண்மையை நிறுவுதலே சிந்தாந்தத் துணிபு.
இங்கு பொய் எனப்படுவது நிலையற்ற தன்மை உடையவற்றை மெய் எனப்படுவது, நிலைத்த தன்மை உடையவற்றை சத்து, சித்து ஆனந்தம் என்ற மூன்றும் இறைவன் இtல்புகளைக் குறித்து முறையே நிலையானது, அறிவே வடிவானது, மாறா இன்பம் தருவது என்ற பொருள்களைக் குறிக்கும் ஆகிரியராகிய மெய்கண்டார் போத ஆனந்தப் பொருளாகிய மெய்யைக் 8ா ட் ப. வ ல் ல வ f எனவே நிலையற்ற உலகியல் பொருள் கசிவிலே இன்பத்தைத்தேடி அலையும் மனிதர்களை, நிலைத்த இன்பம் தரும் அருள்வழியிலே இட்டுச் செல் லுகிற நல்லாசிரியர் ஆகிறார் மெய்கண்டதேவர்,
இறைவனே குரு வடிவம் கொண்டு உயிர்களுக்கு உண்மை ஞானத்தை உணர் த் து கிறான் என்பது சைவத்தின் கொள்கை ஆகவே குருவாகிய மெய்கண்டார் சிவமாகவே வழிபடப்பெறுகிறார். திருவெண்ணெய்நல்லூரில் மானிடத் திருவுருத் தாங்கி எழுந்தருளி யிருக்கிற மெய்கண்ட தேவரீ, எளிய உயிர்களையும் மெய்ப்பொருள் வழியிலே இட்டுச் செல்லும் சதுரப்பாடு உடையவர், ஆ:ைபினால் அவரை "வித்தகர்' என்று அழைத்தார். ,娜
= 17 ബ

Page 13
தாம் கேட்கும் கே ள் விகள், அதற்கு ஆசிரியர் அளிக் கும் விடைகள் ஆகிய இரண்டும் உயிர்களைத் தூய நெறியிலே செலுத்த வல்லன. ஆகையால் அவற்றை "சுத்தவினா" என்று கூறினார்.
கேள்விகள்
ஆறாறு தத்துவம் ஏது? ஆணவம் ஏது? அன்றேதான் மாறா வினையேது? மற்றிவற்றின் - வேறாகா நானேது? நீஏது? நாதன்நடம் அஞ்செழுத்துத் தான்ஏது? தேசிகனே! சாற்று.
அருள் ஆசிரியப் பெருந்தகையே! முப்பத்தாறு தத்துவங்கள் என்பன யாவை? ஆணவமலம் எனப்படுவதன் இயல்பும் தொழிலும் என்ன? என்னைஎக்காலத்தும் பற்றிக்கொண்டிருக்கின்ற வினைஎன்பது யாத? தத்துவங்களிலும், ஆணவத்திலும் வினையிலும் உழன்று என் இயல்பை அறியாமல் இருக்கின்ற நான் என்பதுதான் என்ன? குரு வடிவம் தாங்கி எழுந்தருளியுள்ள உன் திரு இயல்புகள் யாவை? நீ இயற்றுகின்ற திருக்கூத்துகளின் இயல்புகள் என்ன? உன் திருவைந் தெழுத்தின் சிறப்புக்கள் யாவை? உன் திருவடி நிழலை அடைவதாகிய வீடுபேற்றின் இயல்பு யாது? அருள்கூர்ந்து இவற்றிற்கெல்லாம் விடை கூறி அருள வேண்டுகிறேன்.
மேற்கூறிய எட்டுக் கேள்விகளுக்குள்ளும், சைவ சித்தாந்தத் தில் கூறப்படும் மெய்ப்பொருளியல் கருத்துக்களில் மிகப்பெரும் பாலானவை அடங்கிவிடுகின்றன. சைவசித்தாத்தம் இறை, உயிர், தளை என்ற முப்பொருள் உண்மை பேசுவது. இவை முறையே பதி, பசு, பாசம் எனப்படும். ஒப்பற்ற ஒரே இறைவன். எண்ணிலடங்கா உயிர்கள். இந்த உயிர்களைக் கட்டி நிற்கும் பாசங்களாகிய ஆணவம், கன்மம், மாயை என்ற தளைகள். இவற்றுள் மாயை என்பது தூய மாயை (சுத்தமாயை) தூவாமாயை (அசுத்த மாயை) என்று இரு வகையாகவும் பேசப்படுவதுண்டு
தத்துவங்கள் யாவும் மா யை யின் காரியங்கள், ஆ த லால் ஆணவத்தையும் வினையையும் தனித்தனியாக வினவிய ஆசிரியர் மனவாசகம் கடந்தார், மாயையைப் பற்றித் தளிக்கேள்வி தொடுக்க வில்லை. ஆயினும் தத்துவங்களைப் பற்றிக் கேட்ட கேள்வியில் மாயை யைப் பற்றிய கேள்வியும் தொக்கி நிற்கின்றது.
நான் ஏது என்ற கேள்விக்குப் பொதுவாக உயிர்களின் இயல்பு யாது? என்று பொருள் கொள்ளப்படும்
ー。I8、リー 。

நீ ரது என்பது இறை வ ணி ன் இயல்புகள் யாவை என்றே பொருள்படும். ஏனெனில் இறைவனே குருவடிவம் கொண்டு உயிரி களுக்கு மெய்ப்பொருளை அறிவிக்கிறான். ஆதலால் குரு வுக்கும் இறைவனுக்கும் வேறுபாடு இல்லை.
பாடலின் இறுதி அடியில், தான் ஏது என்பது அண்ணலார் திருவடிக் கீழ் உயிர் அமர்ந்திருக்கும் வீடு பேற்றைப் பற்றிய வினா வாகக் கொள்ளப்படும்.
ஆசிரியர் விடை கூற இசைந்தருளல்
உள்ளபடி இத்தை உரைக்கக் கேள் உன்தனக்கு வள்ளல் அருளால் அன்று வாய் மலர்ந்த - தெள்ளியசிர் ஆகமங்கள் சொன்ன அடைவிலே ஆனந்த யோகம் நிகழ் புதல்வன உற்று
பேரின்பத்தைத் தரக் கூடிய யோக வழியிலே பயில்கிற ஞானகி புதல்வனே, சிவபெருமான் தன் திருவருளால் முன்பு திருவாய் மலர்ந் தருளிய மலைவறத் தெளிந்த சைவ ஆகமங்களில் விளக்கிச் சொல்லப் பட்ட முறையில் நீ கேட்ட கேள்விகளுக்கான விடைகளை நான் உள்ள படி உரைக்கக் கேள். உற்றுக் கேள்:
சைவ சித்தாந்தத்தில் வீடுபேறு அடைய வேட்கையுறும் உயிர்க ளுக்கு நான்கு நெறிகள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றை மாணிக்கவாச கப் பெருமான் "சீலம், நோன்பு, செறிவு, அறிவு" என்று கூறுகிறார். அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் எனப்படும், இவற்றுள் சரியை என்பது திருக்கோவில் அலகிடுதல் (பெருக்கித் தூய்மை செய் தல்) மெழுக்கிடுதல் பூ மாலை கட்டுதல் போன்ற தொண்டுகளாம். கிரியை என்பது பெருமானுக்குப் பூசை முதலியன இயற்றுதலாம். யோகம் என்பது உள்ளத்தில் சிவபெருமானை நினைந்து சித்தத்தை சிவன்பாலே வைத்துத் தியானதெறியில் நிற்றலாம். ஞானம் என் பது இந்நான்கு நெறிகளுள்ளே உயர்ந்ததாய், ஞான நூல்களைக் கேட்டுச்சிந்தித்து, தெளிந்து நிட்டை கூடுதலாம். முதல் மூன்றுநெறி களில் நின்றார்க்கல்லது ஞானநெறி கை கூடுவதில்லை ஆதலால் "யோகம் நிகழ் புதல்வா" என்று கூறினார்.
ஆசிரியர்க்கு மானவர் ஞானக் குழந்தை ஆவதனால் புதல்வா என்று விளித்தார்.
இப்பாட்டின் மூலம் ஆசிரியர் கூறவிருக்கும் வி.ைகள் யாவும் சைவ ஆகமங்களிலே கூறப்பட்டுள்ள முறைமையிலே அமைந்திருக்கும் என்பதையும் தெளிவாக்கினார்.
swana 19--

Page 14
முப்பத்தாறு தத்துவங்கள் ஐம்பூதங்கள்
நாற்கோணம் பூமி புனல் நண்ணுமதி யின்பாதி ஏற்கும் அனல்முக்கோணம் எப்போதும் - ஆர்க்கும் அறுகோணம் கல் வட்டம் ஆகாயம்; ஆன்மா உறுகாயம் ஆம்இவற்றால் உற்று
இவ்வுடல் ஐம்பூகங்களான், அவற்றின் காரி யங் களால் ஆகியது. நிலம் நீர், தீ, வளி, விசும்பு என்பவை ஐம்பூதங்கள் எனப் படும். வடமொழியில் இவை பிருதிவி, அப்பு. தேயு, வாயு ஆகாயம் எனப் டும் ஐ பூதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அடை யாள : கூறப்படுப .
நிலம் நாற்கோன வடிவுடையது. நீர் பாதி நிலவு வடிவாயிருக்கும் நீயின் வடிவு (மக்கோணம். காற்று (வளி) அறுகோண வடிவாயி ருக்கும். ஆகாயம் வட்டவடிவமானது ஆன்மா தன் வினைக்கு ஈடாகப் பெறுகிற பருஉடல் இப்பூதங்களின் பரிணாமத்தால் விளைந்தது.
ஆசிரியர் தொல்காப்பியர், "நிலம், தீ, நீரி, வளி, விசும்பொறு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் (மரபியல்91) என்று குறிப்பிடுகிறார். இவ்ஐ’ பூதங்களும், நாம் காணும் நிலமும் நீரும், தீயும், பிறவும் போலல்லாது இவற்றின் நுட்பமாக, அடிப்படையாக உள்ளன. இங்கே இவற்றிற்குக் கூறப்படும் வடிவங்கள் யாவும் பருமையாய்க் சாணப்படும் நிலம் முதலியவற்றிற்கு அல்லாமல், அவற்றின் நுட்பப்பகுதிக்கரிய வடிவுகளாம். இவ்வடிவங்கள் குறியீடுகளாகக், கொள்ளப்படல் வேண்டும்.
வெட்ட வெளியில் நின்று சுற்றி உள்ள நிலவெளியைப் பார்க் குங்கால் அது நாற்புறமும் பரந்து கிடப்பதைக் காணமுடியும். துளி நீரில் வெளிச்சம் படும்போது அது பாதிச் சந்திரன் போன்ற தோற்றம் தரும், கொtந்துவிட்டு எரியும் தீ, அடி அகன்றும் நுனி சிறுத்தும் முக்கோண வடிவமாகத் தோன்றும். வெவ்வேறு திசைகளி விருந்து வீசும் காற்று குறுக்கும் நெடுக்கும் போவது ஒரு முக்கோணத் தின் மீது மற்றொரு முக்கோணத்தைக் கவிழ்த்து வைத்ததுபோல அறுகோணத்தை நினைவூட்ம்ே. பரத்து கிடக்கும் விசும்பு வட்ட வடிவத்தை நினைவூட்டு ஆயினும் குறியீடுகள், பொருள்? விளக்க மாகப் பெரும்பாலும் அமைவதில்லை என்பதையும் நினைவில் கொள்ளுவது தகும்,
سس 20 --

பூதங்களின் நிறமும் எழுத்தும்
பொன்பார், புனல் வெண்மை, பொங்கும் அனல் சிவப்பு, வன்கால் கருமை, வளர் வான் தூமம் - என்பார், எழுத்து ல வ ர ய அ அப் பார் ஆதிக்கு என்றும் அழுத்தமதாய் நிற்கும் அது.
நிலமாகிய பூதத்தின் நிறம் பொன்னிறம். நீர் வெண்ணிறம் பொங்கி எரிகின்ற தீயின் நிறம் செம்மை. வலிமை உடைய காற்று கருமை நிறம் உடையது. விரிந்து கிடக்கின்ற விசும்பு புகை நிறம் உடையது. இந்த ஐம் பூதங்களுக்கும் வித்து எழுத்துக்கள் (பீஜ அட்சரம்) முறையே ல. வ. ர. ய. அ. என்பனவாகும்.
அடிப்படை நிறங்களாக தம் முன்னோர் கொண்ட நிறங்கள் ஐந்து. அவை இங்கு ஐம் பூதங்களுக்கும் உரியனவாக பொன்மை, வெண்மை, செம்மை, கருமை, புகை நிறம் என்று உரைக்கப்பட்டன, "நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்னோர்கள் ஏத்த, மறைந்திருந் தாய் எம் பெருமான்" என வரும் திருவாசகத்தின் சிவபுராணப் பகுதி இவ்வைந்து அடிப்படை நிறங்களையே குறிக்கின்றது.
பூதங்களின் அடையாளம்
குறிகுலிசம், கோகனதம், கொள்சுவத்தி, குன்றா அறுபுள்ளி, ஆரமுத விந்துப் - பிறிவின்றி மண், புனல், தீக், கால், வானம் மன்னும் அடைவேயென்று ஒண் புதல்வா ஆகமம் ஓதும்,
6
மண்ணும் புனலும் தீயும் காற்றும் வானமும் என்னும் ஐம் பூதங்களுக்கும் முறையே அடையாளங்களாய் அமைவன வச்சிரா யுதம், தாமரைப்பூ, சுவத்திகம், அறுபுள் சி, அமுதத் துளி என்று சைவ ஆகமங்கள் கூறுகின்றன.
ஒவ்வொரு பூதத்திற்கும் வித்து எழுத்தும் குறியீடும் ந?ன் காவது, ஐந்தாவது பாடல்களில் கூறப்பட்டன. அவற்றின் அடை யாளங்கள் இப்பாடலில் கூறப்பட்டன. இவை யாவுக் சைவ ஆகமங் களில் உரைக்கப்பட்ட வண்ணமே இந்நூலிலும் தரப்பட்டுள்ளன. குலிசம் என்பது வச்சிராயுதம். இது திண்மையையும், வலிமை88 யும் குறிக்க நின்றது. கோகன தம் என்பது தாமரைப்பூ. நீர்ப்பூக்களில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுவது தாமரையே. சிவப்பிரகாசரும் "யூவெனப்படுவது பொறிவாழ் பூவே" என்று தால்வர் நான்மணி

Page 15
மாலையில் கூறுகிறார்: சுவத்தி என்பது இருதலை மேழி - இது சுவஸ்திகா எனப்படும். அறுபுள்ளி என்பது நான்காம் பாடலில் விளக்கப்பட்டது. வித்து என்பது பிந்து என்றும் வழங்கும். துளி என்று பொருள்படும்
பூதங்களுக்குரிய அதிதெய்வங்களும் அவர்களின் தொழில்களும்
பார்ஆதி ஐந்துக்கும் பன்னும் அதிதெய்வங்கள் ஆரர்? அயனாதி ஐவராம் - ஒரோர் தொழிலவர்க்குச் சொல்லுங்கால் தோற்றமுதல் ஐந்தும் பழுது அறவே பண்ணுவர்கள் பார். 7
நிலம் முதலாக ஐந்து பூதங்களுக்கும் சைவ ஆகமங்களிலே சொல்லப்பட்டுள்ள அதிதெய்வங்கள் யாரெனில் பிரமன் முதல் ஐவராம். அவர்கள் பிரமன், திருமால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்னும் ஐவர். இவர்கள் முறையே படைத்தல், காத் தல் ஒடுக்குதல், மறைத்தல், அருளுதல் ஆகிய ஐந்தொழில்களை
யும் செய்வார்கள்.
ஐவர் தொழில்
படைப்பன் அயன் அளிப்பன் - பங்கயக்கண் மாயன்; துடைப்பன் உருத்திரனும் சொல்லின் - திடப்பெறவே என்றும் திரோபவிப்பர் ஈசர் சதாசிவரும். அன்றே அநுக்கிரகர் ஆம் • 8
, பிரமன் படைப்பான். தாமரைபோன்ற கண்ணுடைய திருமால் காத்தல் தொழில் செய்வன். உருத்திரன் அழித்தல் தொழிலைச் செய்வன், உயிர்கள் பக்குவப்படுமாறு மகேசுரர் எப்பொழுதும் மறைத்தல் தொழிலைச் செய்வர். சதாசிவர் பக்குவப்பட்ட உயிர் களுக்கு வீடுபேறு தந்து அருள் பாலிப்பார்.
படைத்தல் என்பது, இல்லாத பொருளிலிருந்து ஒரு பொருளை உண்டாக்குதல் என்று பொருள் தராது உள்ள பொருளிலிருந்து மற்றொரு பொருளைத் தோற்றுவிப்பதே சைவசித்தாந்தக் கொள் கைப்படி படைத்தல் என்று கூறப்படும். சைவசித்தாந்தத்தின் அடிப் படைக்கொள்கைகளுள் ஒன்று சற்காரிய வாதம் எனப்படும். இதைச் சுருக்கமாக விளக்குவதானால் "உள்ளது போகாது இல்லாதது வாராது" என்று கூறலாம். அறிவியல் உலகமும் பொருள்கள் அழி யாத்தன்மை உடையன என்று கூறும் (Theory of indestructibility of matter). இப்படைத்தல் பிரமனுக்கு உரியது.
一 22一

காத்தல் என்பது படைக்கப்பட்ட பொருள்களை அவை அழியும் காலம் வரை முறைப்படுத்தி நிலைநிறுததுதல் இது திரும லின தொழில் எனப்பட்டது.
' படைத்துக் காக்கப்பட்ட உலகத்தை அதனதனுக்குரிய காலம் வரும்போது அழித்தல் உருத்திரனுக்கு உரிய தொழிலாகும்.
திரோ பவம் என்ற சொல்லுக்கு மறைத்தல் என்று பொருள் இது திரோதம் என்றும் திரோதானம் என்றும் கூறப்படும். இதறகு முன் கூறிய மூன்று தொழில்களும் உலகை தோககி நிகழவன. மறைத தல் என்பது உயிர்களை நோக்கிய தொழிலாகும. உயிர் கள பக்குவம அடையும்வரை இம்மறைததல் தொழில நிகழும். அப்போது அது நிரோதான சக்தி என வழங்கப்படும். உயிர்கள் பக்குவப்படட நிலையில் இததரோதான சகதயே சித்சத்தியாக மாறி உயிர்களுக்கு அருள்பாலக்கும். மறைததல் தொழில் மகேசுவரருக்கு உரியது.
: ነ
அநுக்கிரகம் என்ற சொல் அருள்புரிதல் என்று பொருள்தரும்,
பக்குவபபட்ட உயிர்களுக்குப் பாசத்தை நீக்கி, வீடு பேறழைகி
கொடுப்பது அருள்பாலித்தல ஆகும. இவ்வாறு அருமபாலபபவர்
சதாசிவர். கடைசியாகச் சொல்லபபட்ட மறைததலுமி அருளலும உயிர்களை நோக்கி நிகழ்வன,
மேலே கூறப்பட்ட ஐந்தும் சிருட்டி, திதி, சம்காரம், திரோ பவம், அநுக்கிரகம் எனறு வடமொழியில் வழங்கும். இவற்றை இறைவனின ஐந்தொழிலக்ள் (பஞ்சகருதத்யங்கள்) என்பர், இவற றுள காத்தலில விறைததலையும் அழித தலில அருவினையும் அடக்க முததொழில்கள் எனறு குறிக்கும் மரபும் உண்டு. படைத்தல், காத தல அழித்தல், மறைத்தல் என்ற நான்கையும் ஒன்றாகச் சோதது "பநதம்’ என்றும் கூறுவர். அருகில என்பதை "வீடு' எமது குறிபபா. இவ்வாறு கூறும்ம் பாது இறைவன் தொழில்கள இரண்டு எனச் சொல் லப்பெறும் "பந்தமும் வீடுதரும் பரமன்' என்று பெரியபுராணமும் "பந்தமுமாய் வீடுமாயினார்க்கு" என்று திருவாசகமும், *பந்தம் வீடு ஆயபத பதார்த்தங்கள் அல்லான்’ என்று சிவஞான சித்தியாரும் இவ்வழக்கை உறுதிப்படுத்துவன.
இங்குக் கூறப்பட்ட ஐந்தொழில்களுக்கும் ஒவ்வொரு அதி தெய்வம் விதிக்கப்பட்டுள்ளது எனினும் இவை யாவற்றையும் இயற்ற வல்லவன் பரம்பொருளாகிய சிவபெருமான் ஒருவனே. ‘ஐந்தொழிலு மேவித்தனி நடத்தும் எம்கோ" என்று குமரகுருபர முனிவர் இதனைக் கூறுவார்.
- 28 -

Page 16
பூதங்களின் குணமும் தொழிலும் மண் கடினமாய்த்தரிக்கும்; வாரி குளிர்ந்தே பதமாம்: ஒண் கனல்சுட்டு ஒன்றுவிக்கும்; ஒவாமல் - வண்கால் பரந்து சலித்துத் திரட்டும் பார்க்கில் ஆகாயம் 9 நிரந்தரமாய் நிற்கும் நிறைந்து,
மண் கடினமாகி யாவற்றையும் தாங்கும். நீர் குளிர்ச்சியாகப் பொருள்களை நனைக்கும் தீ வெப்பத்தோடு கூடிப் பொருள்களை எரித்து ஒன்று படுத்தும், காற்று பொருள்களைப் பரப்பவும், குவிக்கவும் செய்யும். வான் எல்லாப் பொருள்களிலும் கலந்தும் நிறைந்தும் |్మశ్రీ ఓజీ"
மிஸ்ணுதல் என்றாலே செறிதல் என்று பொருள். செறிவற்ற மண், ன6) (மணல் + அல்) என்று கூறப்படும். இந்த நிலம் கடினமாகி எல்லாப் பொருள்களையும் தாங்கி நிற்பதை இப்பாடலில் ஆசிரியர் குறிப்பிட்டார். அவ்வாறே மற்றைய நான்கு பூதங்களின் குணங்களும் தொழில்களும் கூறப்பட்டன
ஐந்து தன் மாத்திரைகள்
உள்ளபடி மாபூதம் ஒதினோம் உன்தனக்குக் கள்ளமிகும் ஐம்புலனும் கட்டுரைக்கில் - மெள்ளவே ஓசை பரிசம் உருவம் சுவை நாற்றம் ஆசைதரும் ஐம்புலனே ஆம் 1. i.
இதுவரையில் ஐம்பூதங்களின் வடிவு, நிறம், எழுத்து, அடை யாளம், அதிதெய்வங்கள், அத்தெய்வங்களின் தொழில்கள், பூதங் களின் குணமும், தொழிலும் எடுத்துச் சொன்னோம். இனிச் சைவ ஆகமங்கிளில் கூறப்பட்ட படி தன்மாத்திரைகள் எனப்படும் ஐம்புலன்கள் பற்றிக் கூறுகிறோம். அவை பூதங்களிலும் நுட்பமாக உள்ளவை. அவை ஓசை, ஊறு, உருவம், சுவை, நாற்றம் என்பன.
இத்தன்மாத்திரைகள் மிகநுட்பமாய், இன்ன தன்மை உடையது எனப்ரித்து அறியமுடியாத தன்மை உடையவை. இவை புலன் என்றும் கூறப்பட்டன. இத்தன்மாத்திரைகளிலிருந்தே காரியப்பட்டுத் தோன்றுவன ஐம்பூதங்கள். தன்மத்திரைகள் முறையே சப்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்று வடமொழியில் 6ழங்கும். ஐம் பூதங்களுள் இவை ஒன்றொன்றாய்க் கூடி ஐந்தாய் நிறையும் என்பது மரபு. அதாவது வானம் என்னும் நுண்ணிய பூதத்திற்கு ஓசை என்ற தன்மாத்திரையே உளது. அடுத்து வளி என்ற பூதம் ஓசையையும் உள்ளடக்கி ஊற்றுணர்ச்சியாய் நிற்கும். மூன்றாவதாகிய தீ, ஓசை ஊறு இரண்டையும் தன்னுள் கொண்டு உருவமாய்க் காட்சி தரும். நான்காவதாகிய நீர், ஓசை இவறு உருவம் என்ற மூன்றையும் உள்ள
r 24 -

டக்கிச் சுவையளவாய் நிற்பது. ஐந்தாவதாகிய நாற்றம், ஓசை வறு உருவம் சுவை இவற்றைக் கொண்டு நிலம் வடிவமாக நிற்கும். மிக நுண்ணிய பூதமாகிய வான் ஒற்றைத் தன் மாத்திரையே கொண் டிருக்க, மிகப்பருமையான நிலம் ஐந்து தன்மாத்திரைகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும்.
நுட்பத்திலிருந்து பருமை நோக்கிச்செல்லுகிற படிமுறையை திருநாவுக்கரசு நாயனார் தமது திருப்புள்ளிருக்குவேளுர்த்திருத்தாண் டத்தில்
* மின்னுருவை, விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு
வீசுங்கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்தீத் தன்னுருவின் மூன்றாய்த் தாழ் புனலின் நான்காய்த்
தரணி தலத்து அஞ்சாகி எஞ்சாத் தஞ்ச மன்னுருவை, வான் பவளக் கொழுந்தை, முத்தை வளரொளியை, வயிரத்தை, மாசு ஒன்றில்லாப் பொன்னுருவைப் புள்ளிருக்கு லேளுரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே, (6-54-5)
என்று விளக்கி அருளுகிறார். பருமையிலிருந்து நுட்பத்தை நோக்கிக் கூறும் முறைமையினை மாணிக்கவாசக சுவாமிகள் திருவாசகத்தின் போற்றித் திருஅகவவில்.
'பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நானகாய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி வளியிடை யிரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி வெளியிடை யொன்றாய் விளைந்தாய் போற்றி
V (வரி 137-141) என்று விரித்துரைக்கிறார்.
தன்மாத்திரைகள் தாமத அகங்காரத்தில் தோன்றுவன என்பர்
அறிவுப்பொறிகள்
ஞானேந் திரியங்கள் நன்றா உரைக்கக்கேள் ஊன மிகுபூதம் உற்றிடமா - ஈனமாம் சத்தாதி யை அறியும் தானம் செவி, தோல், கண் அத்தாலு மூக்கென்று அறி! 1.
ஞானேந்திரியங்கள் என்று சொல்லப்படும் அறிவுப்பொறி களின் இயல்பினைத் தெளிவாக விளக்கக் கேட்பாயாக. தாமத குணத்தை உடைய தன்மாத்திரைகளை இடமாகக் கொண்டு.
سس کمی مسس

Page 17
உலகியலை நோக்கிய ஓசை முதலிய ஐந்து பொருள்களையும் அறிவுப் பொறிகளே அறிந்துவரும். ஒலசி, ஊறு ஒவி, சுவை, நாற்றம் என்ற இவ்வைந்தும் சாது, தோல், கண். நாக்கு, மூக்கு இவற்றை இடமாகக் கொண்டு அறிந்துவரும்,
இப்பாட்டில் சத்தாதி என்பது ஓசை மூதலிய ஐந்து என்றும் தானம் என்பது இடம் என்றும் தாலு என்பது நாக்கு என்றும் பொருள்படும். காது, தோல், கண், நாக்கு, மூக்கு என்ற இவ் வைந்தும் வடமொழியில் முறையே சுரோத்திரம், துவக்கு, சட்சு, சிங்கவை கிரானம் எனப்படும். அறிவுப் பொறிகளை ஞானேந்திரி யங்கள் என்பர். இவை உடலை இடமாகக் கொண்ட உயிாக்கு அறிவு வரும் வாயில்கள். இவ்வாறு வருகின்ற அறிவு வரையறைக்கு உட் lull-gil
ஞானேந்திரியங்கள் சாத்துவிக அகங்காரத்தில் தோன்றின என்பர்,
பொறிகள் அறியும் வகை
வான்இடமாய் நின்றுசெவி மன்னும் ஒலியதனை ஈனமிகும் தோல்கால் இடமாக - ஊனப் பரிசந்தனை அறியும்; பார்வையின்கண் அங்கி விரவி உருவம்காணு மே, 12
ஓசை என்னும் தன்மாத்திரையை (வான்) இடமாகக் கொண்டு செவி என்னும் உறுப்பின் வழியாக ஓசையை அறிந்துவரும். ஊறு என்னும் தன் மாத்திரையை (கால-காற்று) இடமாகக்கொண்டு தோல் என்னும் உறுப்பின் வழியாக ஊற்று உணர்வைப் பெற்று" வரும். ஒளி என்னும் தன்மாத்திரையை (பார்வை) இடமாகக் கொண்டு கண்ணாகிய உறுப்பின வழியாக உருவத்தை அறிந்துவரும்,
ஐந்து அறிவுப் பொறிகளையும் அவை எவ்வாறு அறியும் என்ப தையும கூறத தொடங்குகினற ஆசிரியர், இபபாட்டில் முதல் மூன்றை மட்டும் கூறினார். மற்றைய இரண்டும் அடுத்த பாட்டில் கூறப்படுகின்றன,
நன்றாக நீர்இடமா நாஇரதம் தான் அறியும்; பொன்றா மணம்மூக்குப் பூஇடமா-நின்று அறியும் எற்றோதும் அன்றே இறைஆகமம் இதனை வென்றார் சென்றார்இன்ப வீடு
சுலை என்னும் தன்மாத்திரையை இடமாகக் கொண்டு நாக்கு
ஆகிய உறுப்பு சுவையை அறியும் நாற்றம் ஆகிய தன்மாத் திரையை இடமாகக் கொண்டு முக்கு என்னும் உறுப்பு மணத்தை
അ 26 -

அறியும், இவ்வாறு சிவபெருமானால் அருளப்பட்ட ஆகமங்கள் அறிவுப் பொறிகளையும் அவை செயல்படும் இடத்தையும் செயலால் நேரும் பயன்களையும் விளக்குகின்றன. இல் அறிவு உலகத்துப் பொருள்கள் மேல் படிந்து பெறும் அறிவு ஆகையினாலே இவை உயிரைப் புலன்வழிச் செலுத்தும். அவ்வாறு செல்ல விடாமல் வென்றவர்களே பேரின்ப வீடாகிய முத்தி நிலையைப் பெறுவார்கள்,
இதுவரை கூறப்பட்டவற்றைக் கீழ்க் கண்ட அட்டவணை வாயிலாக எளிதில் அறியலாகும். h
அறிவுப் பொறிகள் புலன் தன்மாத்திரைகள்
1 காது ஒசை வான்
2 தோல் apy கீால் - காற்று 3 கண் ஒளி நெருப்பு 4 நாக்கு *வை Šíř
5
மூக்கு நாற்றம் நிலம்
தொழிற் பொறிகள்
கண்ணுதல் நூல் ஒதியிடும் கண்மேந்திரியங்கள் எண்ணும் வசனாதிக்கு இடமாக - நண்ணியிடும் வாக்குப் பாதம் பாணி மன்னு குதம் உபத்தம் ஆக்கருதும் நாளும் அது. 14
சிவபெருமானால் அருளிச் செய்யப்பட்ட சைவ ஆகமங்கள் கூறும் தொழிற்பொறிகள் (கன்மேந்திரியங்கள்) ஐந்து ஆகும். இலவு முறையே பேச்சு, போக்குவரவு, இடுதலும் ஏற்றலும், கழிவுப் பொருட்களை வெளியேற்றுதல், கரு உயிர்த்தல் என்ற தொழில் க்ளைச் செய்யும். இவற்றுக்கு இடமாக நாக்கு, கால்கள், சைகள், எருவாய், கருவாய் ஆகியன விளங்கும்.
இத்தொழிற் பொறிகளை வாக்கு, பாதம், பாணி, பாயுரு உபத்தம் என்று வடமொழியில் வழங்குவர். இவை செய்யும் தொழில் களாவன பேச்சு (வசனம்), போக்குவரவு (கரினம்). இடுதலும்
ஏற்றலும் (தானம்), கழிவுப்பொருள்களை வெளியேற்றுதல் (விசர்ச் கம்), கருவுயிர்த்தல் (ஆனந்தம்) என்பனவாகும்.
* th 4 ܝ ܚܟܐܝܫܙ ܗ இவை இராசத அகங்காரத்தில் cதிகதி
ー。27ー

Page 18
தொழிற்பொறிகள் செயல்படும் வகை
வாக்கு ஆகாயம் இடமா வந்து வசனிக்கும்; கால் போக்காரும் காற்றிடமாய்ப் புல்கிஅனல் - ஏற்கும் இடும்கை: குதம்நீர் இடமா மலாதி விடும்; பார்இடம் உயத்தம் விந்து. 15
வாக்கு என்னும் பொறி ஓசை என்னும் தன்மாத்திரையின் இடமாக நின்று வாய் என்னும் உறுப்பின் துணைகொண்டு பேசும். கால்கள் என்னும் பொறி ஊறு என்னும் தன் மாத்திரையின் இட மாகப் போக்குவரவு செய்யும். கைகள் என்னும் பொறி ஒளி என்னும் தன் மாத்திரையின் இடமாக இடுதலும் ஏற்றலும் செய் யும். எருவாய் என்னும் பொறி சுவை என்னும் தன் மாத்திரையின் இடமாக நின்று கழிவுப்பொருள்களை வெளியேற்றும் கருவாய் என்னும் பொறி தாற்றம் என்னும் தன்மாத்திரையை இடமாகக் கொண்டு கருவுக்கு உரியனவற்றை வெளிப்படுத்தும்.
இங்குப் பொறிகள் என்று சொல்லப்படுபவை அந்தந்த உறுப் புக்களை அல்ல. ஐந்து வகையாகச் சொல்லப்பட்ட செயல்களைச் செய்வதற்கு உரிய தகுதிகளே ஆம், உறுப்புக் குறை உடையவர்களும் ஒருவாற்றால் செயப்படுவது உலகில் நாம் காண்பதே. கன்மேந் திரியங்கள் என்ற செயற்பொறிகள். நாம் செயல்படுவதற்கு, செயலாற்றலை வெளிப்படுத்துவதற்குத் துணை நிற்கின்றன.
செயற்பொறிகள் தொழில் தன்மாத்திரை 1 வாய் (பேச்சு) பேசுதல் வான் 2 கால்கள் போக்கும்-வரவும் காற்று 3 கைகள் இடுதலும் ஏற்றலும் தீ 4 எருவாய் கழிவுகளை வெளியேற்றல் நீர் 5 கருவாய் இன்பம் நிலம்
அகக் கருவிகள் அந்தக் கரணம் அடைவே உரைக்கக்கேள் அந்தமனம் புத்தியுடன் ஆங்காரம் - சிந்தை; இவை பற்றியது நிச்சயித்துப் பல்கால் எழுந்திருந்துஅங்கு உற்றது சிந்திக்கும் உணர். 16
அகக்கருவிகளை முறையாகச் சொல்லுவேன் கேட்பாயாக. அவை மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என நான்கு ஆகும். இவை நான்கும் முறையே ஒரு பொருளைப் பற்றும், பற்றிய பொருள்
حسیس 3938 ۔۔۔ --سم

இன்னது என்று உறுதிப்படுத்தும், உறுதிப்படுத்தப்பட்ட பிறகு அதனால் விளைவது இன்பமா துன்பமா என்று பல்கால் ஒருப்பட்டு எழும். அதன் பின்னர் அதன் விளைவுகளைச் சிந்திக்கும்.
அறிவுப் பொறிகள் (ஞானேந்திரியங்கள்) செயற்பொறிகள் (கன்மேந்திரியங்கள்) ஆகிய பத்தும் உடலின் வெளிப்புறத்தில் இருப்பதனால் அவை புறக்கரணங்கள் எனப்படும். மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய நான்கும் உடலுக்கு வெளியே புலப் படாமல் உள்ளே இருப்பதனால் அவை அகக்கரணங்கள், உட்கரணங் கள், அந்தக்கரணங்கள் என்று வழங்கப்படும்.
இக்கால உடற்கூற்று அறிவியலாளர்கள் மனம் என்ற ஒன்று தனியாக இருப்பதாக ஏற்றுக்கொள்வதில்லை. உள்ளம், மனம், நினைவு என்பவையெல்லாம் மனித மூளையின் செயல்களாகவே கொள்ளுகின்றனர்; உளவியல் நூல் வல்லவரிகள் உளத்தை இரு கூறாகப் பிரித்து நினைவு மனம் (Conscious mind) என்றும், நினை விலிமனம் (Subconscious mind) எனவும் இருவேறு வகைப்படுத்து கிறார்கள்: ஆகம மரபில் இவை நான்காகப் பேசப்படுகின்றன.
மனதில் ஒரு பொருள் நம் எதிரில் இருப்பதாகத் தட்டுப்படுவது முதல்நிலை. அப்போது ஒரு பொருள் "உள்ளது" என்ற உணர்வு தவிர வேறு எதுவும் இல்லை. இதையே மனம் பற்றுகிறது என்று ஆசிரியர் கூறுகிறார். அடுத்த நிலையாக அந்தப் பொருள் "இன்னது தான்" என்று துணிவது புத்தி "இது பச்சையாக இருக்கிறது. திரட்சி யாக இருக்கிறது" இன்னும் பல்வேறு அடையாளங்களைக் கொண்டு இது மாங்காய் என்று புத்தி உறுதிசெய்கிறது. மூன்றாவது நிலை யாக "மாங்காய் புளிப்பு எனவே பச்சையாக உண்ணவேண்டாம் மாங்காய் சமையலுக்கு உதவுமே?" என்றெல்லாம் பல்வேறு வகை யாக ஒருப்பட்டு எழுந்து காணப்பட்ட பொருளின் நன்மை தீமை களை அல்லது தேவை. தேவையின்மை ஆகியவற்றைத் தன்னோடு பொருத்திப் பாாப்பது அகங்காரம். "இந்த மாங்காயை விலை கொடுத்து வாங்கி மதிய உணவுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்றோ அல்லது "இந்த மாங்காய் தேவையில்லை" என்றோ சிந்தித்து ஒரு முடிவுக்கு வருவது நான்காவது நிலை. அதனை செய்வது சித்தம். இவ்வாறு நான்கு அகக்கருவிகளுக்கும் செயலும் விளைவும் நான்கு தரப்படும்.
சொன்னதும் சொல்லத் தொடங்குவதும்
ஒதியிடும் நாலாறும் உற்று ஆன்ம தத்துவம் என்று ஆதி அருள்நூல் அறையுங் காண் - தீதுஅறவே வித்தியா தத்துவங்கள் தம்மை விளம்பக்கேள் உத்தமனே! நன்றா உனக்கு, 17
سسہ 29 سے

Page 19
நான்காவது பாடல் தொடங்கிப் பதினாறாவது பாடல் முடிய விரித்துக் கூறப்பட்ட இருபத்துநான்கும்கூடி ஆன்மதத்துவங்கள் என்று சைவாகமங்கள் கூறும் , இதன்பின்னர், உனக்கு மயக்கம் நீங்கும்படியாக வித்தியா தத்துவங்கள் என்று கூறப்படும் ஏழனை யும் பற்றி எடுத்துரைப்பேன் கேட்பாயாக.
பூதங்கள் ஐந்து, தன்மாத்திரைகள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, கன்மேந்திரியங்கள் ஐந்து, அந்தக்கரணங்கள் நான்கு ஆகமொத் தம் இதுவரை கூறப்பட்ட தத்துவங்கள் இருபத்து நான்கு. இவை அனைத்தும் சேர்ந்து ஆன்ம தத்துவங்கள் எனப் பெயர் பெறும். இவற்றை அடுத்து வித்தியா தத்துவங்கள் எனும் தலைப்பில் ஏழு தத்துவங்கள் கூறப்படும்.
ஆன்: தத்துவங்களாகிய இருபத்து நான்கும் "போக்கிய காண்டம்" என்று பெயர்பெறும். அதாவது நுகர்ச்சிக்கு உரிய தொகுதி,
சைவசித்தாம்தக் கொள்கைப்படி ஆன்மாகிகள் எண்ணிறந்தவை. அவை படைக்கப்படாதவை எனவே அழிவில்லாத நித்தியப் பொருள் கள். முதல் நிலையில் இவ்வான்மாக்கள் எல்லாப் பெருங்கேட்டுக்கும் காரணமாகிய ஆணவ மலத்தால் பிணிக்கப்பட்டு இருளில் மூழ்கிக் கிடக்கும். இந்த நிலை "கேவலநிலை" எனப்படும்.
சிவபெருமான், தன்பெருங் கருணையினாலே, ஒவ்வொரு ஆன் மாவுக்கும், உடல், கருவி, உலகம், நுகர்ச்சிப்பொருட்கள் ஆகிய வற்றைத் தந்தருளுகிறான். இவை தநு, கரணம், புவனம், போகம் என்று வடமொழியில் வழங்கப்படும்
செயலற்றுக்கிடந்த ஆன்மா, உடலையும், கருவிகளையும் பெற்று, உலகில் வாழ்ந்து நுகர்ச்சிப் பொருள்களைத் துய்க்கும் நிலை "சகலநிா ல" என்று வழங்கும். ‘துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்று வாய் நீ" என்ற அப்பரி தேவாரப் பகுதி இச்சகல நிலையைக் குறிக்கிறது.
சகலநிலையில் துய்ப்பதற்கும் உணர்வதற்கும் ஆன்மாக்கள் தகுதி பெறுவதற்கு, வித்தியா தத்துவங்களின் துணை இன்றியமை யாதது. எனவே இதுவரை ஆன்மதத்துவங்களை விளக்கிய ஆசிரியர் இதை அடுத்து வித்தியா தத்துவங்களைப் பற்றிக் கூறத் தொடங்கு கிறார்.
سے۔۔ 30 ء سس۔

வித்தியா தத்துவங்கள்
காலம் நியதி கருதும் கலைவித்தை ஏல அராகம் புருடனே மாயை - மால் அறஏழ் சொன்னோம் அடைவாகச் சொன்னஇவை தம் உண்மை உன்னி உரைக்கும்நாம் உற்று. 18
சைவ ஆகமங்களுள் கூறப்பட்டபடி வித்தியா தத்துவங்கள் என்பன ஏழு ஆகும். "மயக்கம் நீங்குமாறு அவற்றின் பெயர்களை வரிசையாகச் சொல்லுகிறேன் அதனை உற்றுக் கேட்பாயாக. காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை என்ற ஏழும் வித்தியா தத்துவங்கள் ஆகும்,
இப்பாட்டில் வித்தியா தத்துவங்கள் ஏழும் வரிசையாகப் பெயர் சுட்டிக் கூறப்பட்டுள்ளன. அவற்றின் தொழில் பற்றி வரும் பாட்டில் கூறுகின்றார் ஆசிரியரி,
வித்தியா தத்துவங்களின் தொழில்
எல்லை பலம்புதுமை எப்போதும் நிச்சயித்தல் அல்லல் தரும் கிரியை ஆன்மாவுக்கு - ஒல்லை அறிவு ஆசை ஜம்புலனும் ஆரவரும் காலம் குறியா மயக்கு என்று கொள் 19
ஆன்மாவுக்கு வினையின் பயனாக வரும் நுகரிவுகளை இத்துணை அளவு என வரையறுப்பது காலதத்துவம். அது மூன்றாக வழங்கும். அம்மூன்றாவன எல்லை (முடிவு). பலம் (நிகழ்வது), புதுமை (எதிர் காலம்) எனப்படும். அதை அடுத்தது நியதி தத்துவமாகும். நியதி தத்துவம், ஈட்டிய வினையின் பயனை அதனைச் செய்தவனுக்கே சென்று சாருமாறு நியமிக்கும். கலை என்னும் தத்துவம் உயிரின் செயலாற்றலை மலமறைப்பிலிருந்து சிறிதே நீக்குவதாகும். இதனால்
தத்துவம் உயிருக்கு அறிவாற்றலை ஒரு சிறிது விளக்கி நிற்கிறது. அராகம் என்னும் தந்துவம் உயிருக்கு விழைவாற்றலைச் சிறிது வழங்கும். இவ்வைந்து தத்துவங்களுடனும் கூடி ம்ேபுலன்களையும் நுகரும் தகுதியைப் பெற்ற உயிர், புருடதத்துவம் என்று பெயரி பெறும் இந்நிலையில் உயிரின் அறிவை உலகை நோக்கிச் செலுத்தி கைவிளக்கினைப் போலச் சற்றே ஒளிதந்து அறிவை விளக்கியும் மயக்கியும் வருவது மாயை எனப்படும் தத்துவம்
வித்தியா தத்துவங்கள் ஏழும் இவ்வாறு வரிசைப்படுத்தி மொத்தமாகக் கூறப்பட்டனவேனும் இவற்றை வகைப்படுத்திச் சொல்லும்போது காலம் நியதி என்ற இரண்டும் ஒரு தொகுதியாக
അs $1 :

Page 20
வும், கலை வித்தை அராகம் என்ற மூன்றும் மற்றொரு தொகுதி யாகவும் புருடன் மாயை எனப்படுவன தனித்தனியாகவும் கூறப் படும். இதன் விரிவையும் இவ்வாறு கூறப்படுவதற்கான காரணங்களை யும் காண்பதற்கு முன் மேலே கூறப்பட்ட வரிசையில் ஒவ்வொரு தத்துவமும் உயிருக்கு எவ்வாறு பயனளிக்கின்றன என்பதை முதலில் காண்போம்.
காலம் எனப்படுவது இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூவகைப்படும் என்பது யாவரும் அறிந்த ஒன்று. உயிரின் நுகர் வோடு இவற்றைப் பொருத்திப் பார்த்தால் இம்மூன்றும் உயிரின் அனுபவத்திற்குத் துணைநிற்பது தெளிவாகும். எத்தனை கொடிய துன பமாயினும் அதற்கு ஒரு முடிவு உண்டு. அவ்வாறே எத்தனை அரிய இன்பமாயினும் அதற்கும் ஓர் எல்லை உண்டு. இந்த அனு பவங்கள் முடிந்தபிறகு முற்செய்த வினையின் பயனாக உயிர் தன் நுகர்ச்சியில் மாற்றத்தைப் பெறுகிறது. அது நிகழ்காலம். துன்பம் மாறி இன்பம் வருகிறது. இன்பம் மாறித் துன்பம் தொடருகிறது. இந்த நிகழ்வும் எல்லையில்லாது நீட்டித் திருப்பதன்று. இதற்கும் ஒரு முடிவு உண்டு. அதன்பின்னர் எதிர்காலத்தில் இன்பம் மிகுதியாதலும், இன்பம் மாறித் துன்பமாதலும் அல்லது துன்பம் மிகுதியாதலும் அல்லது துன்பம் 18ாறி இன்பம் பிறத்தலும் காண்கிறோம். எனவே: எதிர்காலம் நிகழ்காலப் பயனிலிருந்து மாறிப் புதுமையைக் கொண்டு வருகிறது. இவை இப்பாடவில் எல்லை பலம் புதுமை என்ற சொற் களால் குறிக்கப்பட்டுள்ளன.
உலகியலில் "குடை நிழலிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடை மெலிந்து ஒர் ஊர் நண்ணினும் நண்ணுவர்" என்றும் "செல்வம் சகடக்கால் போல வரும்" என்றும் "பொருளற்றார்பூப்பரி ஒருகால், என்றும் கூறப்படுவன கால தத்துவத்தின் தொழிற்பாட்டைக் குறிப்பன.
நியதி என்னும் தத்துவம் செய்த வினைகளின் பயனைச் செய்த வனுக்கே ஊட்டும் இறைவனின் வரையறை. ஒருவன் செய்த வினை யின் பயன் அவனுக்கே அன்றி, வேறு எவருக்கும் சென்றடைவ தில்லை. அப்படிச் சென்றடைவதானால் அது நீதி ஆகாது.
இதனை விளக்க வந்த மாதவச் சிவஞான முனிவர் தமது சிவ ஞானமாபாடியத்துள் "ஆன்மாக்கள் உயர்ந்த போகத்தின் விழை வும், இழிந்த போகத்தின் வெறுப்பும் உடையரி அன்றே; அதனால் பிறரால் ஈட்டப்படும் நல்வினைப் பயனைக் கவரவும், தம்மால் ஈட்டப் படும் தீவினைப்பயனை நீக்கவும் எண்ணுதல் உடைமையின், அங்ங்ணம் ஆக ஒட்டாது அவர் அவரால் ஈட்டப்படும் வினையின் பயனை அவர் அவரே நுகருமாறு அரசர் ஆணை போல் நியமித்து நிறுத்துவது
- 32 m

நியதித்துவம் என்க நியதி, பால், ஊழ், தெய்வம் விதி என்பன ஒரு பொருட் கிளவி" என்று விளக்குகிறார். இதே கருத்தினைச் சேக்கிழார் பெருமான், பெரியபுராணத்துள் சாக்கிய நாயனார் வரலாறு கூறுமிடத்து,
**செய்வினையும் செய்வ:னும் அதன் பயனும் கொடுப்பானும் மெய்வகையால் நான்காகும் விதித்த பொருள்" எனக்கொண்டே * 'இவ்வியல்பு சைவநெறி அல்லவற்றுக்கில்லை" என உவ்வகையால் 'பொருள் சிவன்" என்று அருளாலே உணர்ந் தறிந்தார்’ என்று விளக்குகிறார்.
அடுத்து வருவது கலை என்னும் தத்துவம், இங்கு பலன் படுத்தப்படும் கலை என்ற சொல் 'ஓவியக்கலை", இசைக்கலை என்ற சொற்களில் பயன்படும் பொருளின் வழங்கப்படுவதன்று. கலை என்பது "கலித்தல்" என்ற சொல்லின் அடியாகப் பிறந்தது. கலித்தல் என்பது நீக்குதல் செலுத்துதல் என்ற பொருள்களைத் தரும் ஆணவ மல இருளில் முற்றிலும் அழுந்திக் கிடந்த உயிரின் அறியாமையைச் சற்றே விலக்கி உயிரைச் செயலாற்றல் உடயதாகச் செய்வதால் இந்தத் தத்துவம் கலை எனப்பட்டது. இவ்வாறு ஆணவ மலத்தின் வலிமையைக் கெடுத்து உயிரின் செயலாற்றலை விளக்குவதன் மூலம் உயிர் நுகர்ச்சிக்குத் தகுதி உடையதாகிறது.
அடுத்துவரும் தத்துவம் வித்தை எனப்படும். இது கலை என்னும் தத்துவத்தால், செயலாற்றும் தன்மை பெற்ற உயிர்க்கு ஓரளவுக்கு அறிவாற்றலைத் தந்து அதனால் அறிவிற்குத் துணையாய் நிற்கும்.
அடுத்த தத்துவமாகிய அராகம் என்பது உயிரின் விழை வாற்றலைச் சற்றே விளக்கமுறச் செய்து அதன் தொடர்ச்சிக்குத் துணையாய் நிற்கும். v ;
இதுவரை வித்தியா தத்துங்களில் ஐந்தினைப் பற்றிய செய்திகள் கூறப்பட்டன " இவற்றுள் ஐாலமும் நியதியும் ஒரு தொகு தியாகவும் கலை வித்தை அராகம் ஆகிய மூன்றும் இன்னொரு தொகுதி பாகவும் கொள்ளப்படுமாயினும் இவற்றுள் முற்திச் செயல்படும் தொகுதி யாது? உயிரின் செயல், அறிவு, விழைவு ஆகிய மூன்றும் விளக்கம் பெறத் தொடங்கிய அளவில்தான், உயிர் நுகர்வதற்கு: ஐ.ரீயதாய்ப் பக்குவம் பெறுகிறது. எனவே இத்தொகுதியே முதலில், செயல்படுகிறது என்று கூறத் தோன்றும். ஆயினும், கால தத்துவமே முதலாவதாகக் கொள்ளப்படும்.
இதனை மாதவச் சிவஞான ஐதணிவர் தமது சிவஞான மாபாடி
யத்துள் மிக விரிவாகப் பல தடைவிடைகளால் நிறுவிக் காட்டுகிறார். அதைச் சுருக்கமாகச் சொன்னால், "காரிய மாத்திரைக்குக் காலம்
sin: 33 شبسته

Page 21
காரணம் ஆகலின், கலை முதலியன தோன்றுதற்கும் காலம் வேண்டு தலால் என்க" என்று விளக்குகிறார்.
மேலே கூறிய ஐந்தும் உயிருக்கு வாய்த்த பிற கருவிகளைப்போல இடை இடையே செயல்பட்டுச் சேர்தலும் நீங்குதலும் உடையன ஆகா, எக்காலத்தும் இவ்வைந்தும் ஆன்மாவின் உடனாகக் கஞ்சுகம் போலப் பந்தித்து நிற்கும் என்பர். கஞ்சுக:h என்பது சட்டை என்ற பொருளைத் தரும். இவ்வைந்தும் சேர்ந்து "பஞ்ச கஞ்சுகம்" என்று உபசரித்துக் கூறப்படும்.
கலை முதலிய பஞ்ச கஞ்சுகத்துடன் கூடி நுகர்ச்சிக்குத் தகுதி :ெற்று நின்ற ஆன்மா உலகியல் நுகர்வில் நாட்டம் கொண்டு ஐக் பெரும் துன் உங்களுக்கு ஆளாகி புருட தத்துவம் என்று பெயர் பெற்று நிற்கும். இந்த புருட தத்துவமே வித்தியா தத்துவங்கள் ஏழினுள் ஆறாவதாக வைத்து எண்ணப்படும்.
ஐம்பெரும் துன்பங்கள் வடமொழியில் பஞ்சக்கிலேசம் எனப் படும். இவற்றை மாதவச் சிவஞான முனிவர்.
"அகித்தத்தை நித்தமென்றும், அசுத்தத்தைச் சுத்தமென்றும் துன்பத்தை இன்பமென்றும், தானல்லாத பொருளைத் தானென்றுத் திரிசக் காணும் உணர்வாகிய அவிச்சையும், அது பற்றி அவற்றை யானென மதிக்கும் ஆங்காரமும், அதுபற்றி எனக்கிது வேண்டு மென்னும் அலாவும், அதுபற்றி அப்பொருட்கட் செல்லும் ஆசையும், அதுபற்றி அதன் மறுதலைக்கட் செல்லும் கோபமும் என இவை. இப்பஞ்சக்கிலேசமே பும்ஸ்துவமலம் என்று ஓதப்படும். இவ்வைந் தினையும் மூன்றாய் அடக்கிக் 'காமம் வெகுளி மயக்கமிவை மூன்றனாமங் கெ.க்கெடு நோய்' என்றார் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரும் ' என்று விரித்துரைக்கிறார்.
வித்தியா தத்துவம்களில் ஏழாவது வைத்தெண்ணப்படுவது மாயை ஆகும். இது காரியமாயை.
ஏகான்மவாதத்தில் மாயை எனப்படுவது உள்பொருளும் Syačviny இல்பொருளும் அன்று. அப்படி ஒரு பொருள் இருக்கக் கூடுமா எனின் அது 'அநிர்வசனீயம்' என்று பதில் தருவர். அநிர்வசனீயம் என்பதற்கு இன்னதென்று வரையறுத்துக் கூற இயலாத தன்மை உடையது என்பது பொருள்.
சைவசித்தாந்தத்தில் மாயை என்பது உள்பொருள். இதனைச் சிவஞானசித்தியார் சுபக்கத்தில் ஆசிரியர் அருள் நந்திகிவம்.

"நித்தமாய் அருவாய் ஏகநிலையதாய் உலகத்திற்கோர் வித்துமாய் அசித்தாய் எங்கும் வியாபியாய் விமலனுக்கோரி சத்தியாய் புவன போகந் தனுகரணமும் உயிர்க்காய் வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமுஞ் செய்யு மன்றே"
என்று விளக்குகின்றார். சைவசித்தாந்தத்தில் மாயையின் தொழில் மயக்குவது மட்டுமே என்பதில்லை. அதன் தொழில்கள் பலவற்றுள், மயக்குவதும் ஒன்று "விடியும் அளவும் விளக்கு அணையது மாயை' srsivumff auf mu56ab.
மாயை தூயமாயை, தூவாமாயை, பிரகிருதிமாயை என்ற மூன் றாகவும் பகுத்துச் சொல்லப்படும். அவற்றுள் தூவா மாயை இங்கு வித்தியா தத்துவங்கள் ஏழனுள் ஒன்றாகக் கொள்ளப்படுகிறது.
சுத்த தத்துவங்கள்
வித்தியா தத்துவங்கள் எழும் விளம்பினோம் சுத்தமாம் தத்துவங்கள் சொல்லக்கேள் - நித்தமாம் சுத்தவித்தை ஈசுரம்பின் சொல்லும் சதாசிவம்நல் சத்திசிவம் காண் அவைகள் தாம். 20
இதுவரை வித்தியா தத்துவங்கள் என்று கூறப்படும் ஏழினையும் விளக்கமாகச் சொன்னேன். இனி சுத்த தத்துவங்கள் என்றும் சிவ தத்துவங்கள் என்றும் வழங்கப்பெறும் ஐந்தினனயும் பற்றிக் கூறுகிறேன் கேட்பாயாக. அவைகள் முறையே சுத்த வித்தை என்பதும், ஈசுரம் என்பதும் சதாசிவம் என்பதும் சத்தி என்பதும் கிவம் என்பதும் ஆகும்.
இங்குக் கூறப்படும் சுத்த தத்துவங்கள் ஐந்தும் சுத்த மாயை பிலிருந்து தோன்றுவன. இங்குக் கூறப்பட்டுள்ள வரிசை முறை பருமை நிவையிலிருந்து நுண்மையை நோக்கி அமைந்துள்ளது.
சுத்த தத்துவங்களின் இயல்பு
சுத்த வித்தை ஞானமிகும் தொன்மையாம் ஈசுரந்தான்
அத்தன் தொழில் அதிகம் ஆக்கியிடும் - ஒத்தல் இவை
சாதாக்கியம் என்றும். சத்திசிவம் கிரியை
ஆதார ஞான உருவாம். 21
அறிவு, செயல், ஆற்றல்கள் ஏறியும் குறைந்தும் நிற்கும் நிலை யில் சுத்த தத்துவங்கள் ஐந்தாகக் கூறப்படுகின்றன. செயல் குறைந்து அறிவு மிகுந்து நிற்கும் நிலை சுத்தவித்தை என்றும், செயல் மிகுந்து அறிவு குறைந்து நிற்கும் நிலை ஈசுரதத்துவம் என்றும், செய
- 35 -

Page 22
லும் அறிவும் ஒத்துள்ள நிலை சதாசிவம் என்றும் (சாதாக்கியம்),செய ல"ற் ஐலே வடிவாய் இருக்கும் நிலை சக்தி தத்துவம் எள்நும் அறிவாற்றலே வடிவாய் இருக்கும் நிலை சிவதத்துவம் என்றும் கூறப்படும்.
சுத்த தத்துவங்கள் என்று இங்குக் கூறப்படுவன இறைவனது நிலையைக் குறித்தன அல்ல. உயிர்களின் பொருட்டு இறைவனின் ஆற்றல் விளங்கித் தோன்றும் நிலையே இப்பாடலில் கூறப்பட் டுள்ளன. இறைவனின் ஆற்றல்கள் மூன்று அவை இச்சை, ஞானம், கிரியை என்று கூறப்படும் விழைவு, அறிவு, செயல் என்பன. இவற்றுள் இச்சாசத்தி எனப்படும் விழைவு ஆற்றல் எப்போதும் ஒரே தன்மையாய் நிற்க மற்றைய இரண்டாகிய ஞானமும் கிரியை யும் ஏறிட்டும் குறைந்தும் வரும். அவை மிகுந்தும் குறைந்தும் நிற்கும் நிலைகளில் அவற்றிற்கு உரிய பெயர்கள் இப்பாடலில் வினக் dou.
ஆணவமும் வினையும்
ஆறாது தத்துவமும் சொன்னோம் அடைவாக மாறா மலமிரண்டும் வாசொல்லக் கூறில் அறியாமை ஆணவம் ; நீ யானசுக துக்கம் குறியா வினைஎன்று கொள். 22
இதுவரை ஆன்ம தத்துவங்கள் இருபத்துநான்கும் வித்தியா தத்துவங்கள் ஏழும், சிவதத்துவங்கள் ஐந்தும் ஆக பொத்தம் முப்பத் தாறு தத்துவங்களை விளக்கினேன். இனி மாறாத ஆணவம் கன்மம் எனப்படும் மலங்கள் இரண்டைப் பற்றியும் விரித்துச் சொல்லுவேன் கேட்பா ஆாக, உன்னிலிருந்து பிரித்து அறி%ாத விதத்தில் நீயே ஆக நிற்கும் அறியாஜ0 ஆணவமலம் எனப்படும். அது போல நீயாகவிே நிக்கும் இன்பத் துன்பங்கினை &னக்குக் கொடுப்பது வினை என்று செல்லப்படும் கண் மtலtாதுக்
சைவசித்தாந்தத்தில் முப்பெrgள் உண்மை கொள்ளப்படும் இவை இறை. உயிர், தளை என்பன இவை முறையே பதி, பசு. பாசம் எனவும் வழங்கும், பாசம் (தளை) என்ப ைமூன்று, அவை ஆணவம், கன்மம், மாயை என மூன்றாகும். இவற்றுள் இப்பாடலில் ஆணவமும் கன்பமும் பேசப்படுகின்றன.
ஆணவம் என்ற சொல் இக்கால வழக்கில் செருக்கு என்ற பொருளில் பயன் படுத்தப்பட்டு வருகிறது. சைவசித்தாந்தத்தில் ஆனவt என்பது, தோற்றமில் காலந்தொட்டு உயிர்களைப் பற்றி நிற்கும் குற்றத்தைக் குறிப்பிடும் சொல். ஆணவத்திற்கு இரண்டு.
, سن 36 -س-

வகைப்பட்ட வன் ஈ:கள் உண்டு. ஒன்று உயிரின் அறிவை முற்று முழுக்க மறைத்து உயிரை அதியமைச்ப வடிவாகி ஆக்கும் வலிமை, இதனை ஆவாரக சத்தி என்பர். அதாவது மலைத்து. தடுத்து நிற்கும் ஆற்றல் இரண்டாவது ஆற்றல் அதேநிேயா மிகா சக்தி என்று கூறப்படும். இது உயிர்விளின் விருபபததில் ைஉயர்த்த பொருள்களினிடத்துச் செல்லவிடாமல், இழிந்த பொருள்களிடத்துச் செலுத்தும் வலிமை. எனவே, கீழ்நோக்கிச செலுத்தும் ஆற்றல்,
ஆணவமலம், காரிய வேறுபாட்டால் ஏழு வகைப்படும் என்று மாதவச் சிவஞான முனிவர் எடுத்துரைப்பாா, அவை மோகம், மதம், அராகம், கவலை, தாபம், வாட்டம், விசித திரம் என்பன வாம். ஆணவமலம் என்பது ஒன்று உண்டு என்ற கொள்கை சைவ சித்தாந்தததிற்கே உரியது. சிவஞான சித்தியார் ஆணவங்கிலத்தின் gu Gou. ..",
"ஒன்றதாய் அநேகசத்தி உடையதாய் உடனாய் ஆதி பன்றதாய் ஆன்மாவின் தன அறிவொடு தொழிலை யார்த்து தின்று போத திருத்துவத்தை நிகழ்ததிச் செம்பினிற் களிம்பு
ஏய்ந்து என்றும் அஞ்ஞானம் காட்டும் ஆணவம் இயைந்து நின்றே."
என்று விளக்குகிறது. ஆணவமலம், இருள்மலம் என்றும், மூலமலம் என்றும் சகசமலம் என்றும், இன்னும் பிறவாறும் வழங்கப்பெறும்,
ஏற்ப அவற்றின் பயன் இறைவன் ஆணையால் செய்த உயிர்களையே வந்து பற்றும் என்பது. வினைக்கொள்கை பொதுவாக இந்திய மெய்ப் பொருளியலில் பல்வேறு சமயங்களால் ஏற்றுக்கென வட் பட்ட கொள்கையே ஆயினும், சைவசித்தாந்தத்தில் கூறப்படும் வினைக்கொள்கை தணிததன்மை உடையது. ஆசீகம், சமணம் போன்ற சமயங்கள் விலைக்கொள்கையை ஏற்றுக் அல்; ஸ்கின்றன. அச்சமயங்கள், வினையின் பயனே வினையைச் செய்தவ&னச சென்று பற்றும் என்ற கொள்கை உடையன.
சைவ சித்தாந்தத்தில் அவ்வாறு கொள்வதில்லை. வினை அறிவற்ற பொருள் , எனவே, அதுவோ, அதன் பயனோ தாமே சென்று செய்தவர்களைப் பற்றும என்பது பொருந்தாது என்பது சைவ சிந் தாந்தத்தில் கூறப்படும் உண்மை, சிவஞானபோதம் இரண்டாம் சூத்திரத்தின் இரண்டாய் அதிகாரத்தில் வரும் எடுத்துக் காட்டுச் செய்யுளில் மெய்கண்டதேவநாயனார். "அவ்வினை யைப் பேரர மல் ஊட்டும் பிரானின் நுகராரேல் ஆர்தாம் அறிந்து ஆணைப்பாசி ஆங்கு' என்று இக்கருத்தை வலியுறுத்துகிறார்,
. - 37 mm.

Page 23
வினை இரண்டு வகைப்படும்; அவை நல்வினை தீவினை என்பன. நல்வினை புண்ணியம் என்றும் தீவினை பாவம் என்றும் வழங்கப்படும் இவ்வினைகளின் பயனாக உயிர்களுக்கு இன்பமும் துன்பமும் வரும்.
வினைகள் மூன்று வகையாகவும் பிரித்துக் கூறப்படும். அவை சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம் என்பனவாம். முன்பே ஈட்டப்பட்டு உயிர்களால் அனுபவிக்கப்படவேண்டிய வினைகளின் தொகுதி தொல்வினை (சஞ்சிதம்) ஆகும். இவ்வாறு கிடக்கும் வினைத் தொகுதியில், இப்பிறவியில் நுகர்ந்து கழிக்குமாறு இறைவனால் நிய மிக்கப்பட்ட வினைப்பகுதி நுகர்வினை (பிராரத்தம்) என்று பெயர் பெறும். நுகர்வினையின பயனை அநுபவிக்கும்போது கூட உயிர்கள் மேலும் வினையை ஈட்டிக் கொள்கின்றன. இவ்வாறு சட்டப்படும் வினை ஏறுவினை (ஆகாமியம்) என்று வழங்கும்.
5T sõT UT?
ஆறாறு தத்துவமும் ஆணவமும் வல்வினையும் மாறா அருளால் வகுத்துரைத்தீர் - வேறாகா என்னை எனக்கு அறியக் காட்டீர் இவை கண்டேன் உன்னரிய தேசிகரே உற்று. 23
நினைப்பதற்கரிய திருவருள் ஞானம் கைவரப்பெற்ற ஆசிரியப் பெருமானே, என் மீது கொண்ட மாறாத திருவருளால் முப்பத்தாறு தத்துவங்களையும் ஆணவமலத்தையும் கன்மமலத்தினையும் அவற்றில் இயல்புகளையும் வகைப்படுத்தி விளக்கி அருளினீர்கள். அவற்றைப் பற்றி நாறும் தெளிவாகக் கண்டுகொண்டேன். இனி இவற்றினின்றும் வேறாக நிற்கும் என்னியல்பை உயிரின் இயல்பை நான் அறியுமாறு காட்டி அருளுவீராக.
இப்பாடலில் மாணவர் ஆசிரியரிடத்திலே இரண்டாவது பாடலில் கேட்ட் கேள்விகளில் நான்காவதை மீண்டும் நினைவுறுத்தி விடை கூறி அருளுமாறு வேண்டிக்கொள்கிறார். உயிரின் இயல்பு என்பது இந்த இடத்தில் ஆன்மாவின் இயல்பு என்று பொருள்படும்.
உயிரின் இயல்பு நன்றா உரைக்கக்கேள் நல்லசித்தின் முன் அசித்து இங்கு ஒன்றாது சித்து அசித்தை ஓராது - நின்று இவற்றை அன்றே பகுத்து அறிவது ஆன்மாவே என்று மறை குன்றாமல் ஒதும் குறித்து 24
ஆசிரியர் கூறுகிறார்; உயிரின் இயல்பை நன்றாக உரைப்பேன் கேட்பாயாக, தூய்மையான அறிவே வடிவான இறைவனின் முன்னரி
-س- 38 " س

அறிவற்ற பொருள்கள் விளங்கித் தோன்றாது. அப்பரம்பொருள் அவ்வறிவற்ற பொருள்களைச் சுட்டி அறியாது. எனவே, தொன்று தொட்டே இவ்வறிவற்ற பொருள்களில் பொருந்தி நின்று. அதன்
பொருளும் அறிவில்லாப் பொருளும் ஆகிய இவற்றை ,ெ வ்வேறாய்ப் பகுத்து அறிவதற்கு உரிமை உடையது உயிர் என்னும் ஆன மாவே. உயிர் அறிவற்ற பொருளும் ஆகாது. நிறைந்த அறிவுடைப் பொருளும் ஆகாது. அவற்றிற்கு இடைப்பட்டது என்று சைவ ஆகமங்கள் கூறுகின்றன.
சித்து என்பது அறிவுடைப் பொருள். அசித்து என்பது அறிவில் லாத பொருள். உயிர் ஒருவகையால் அறிவுடைப் பொருளாயினும் உணர்த்தினாலன்றி உணராத தன்மை உடையது. அதன. லூம், மாயையின் காரியங்களான கருவி கரணங்களின்றி உயிரால் அறிய இயலாது ஆதலாலும் அதனை சிதசித்து (சித்து+அசித்து) அல்லது சதசத்து (சத்து + அசத்து என்பர்.
உயிர் மாயையின் காரியங்களான உடல், கருவி, உலகம், நுகர்ச் சிப்பொருள் என்பனவற்றோடு டொருந்தி நின்றே அறிந்தும் அனுப வித்தும் வருவதால் அது தன்னை வேறு என்று அறியும் வலிமையற்று நிற்கிறது. நல்லாசிரியர் ஒருவரால் அறிவுறுத்தப்பட்ட பிறகே உயிரி தன்னியல்பை அறியும் அறிவைப் பெறுகிறது. உணர்த்த உணர்தல் உயிரின் இயல்பு.
தத்துவங்களின் இயல்பு
தத்துவங்கள் ஆறாறும் தம்மைத்தாம் என்றறியா எத்தம்மை என்னில் இயம்பக்கேள் - சுத்தமாம் ஆறுசுவையும் அறியாவே தம்மைத்தாம் கூறில் அவையிவைபோலக் கொள். 25
மேற்கூறப்பட்ட முப்பத்தாறு தத்துவங்களும் தம்மைத்தாம் இன்னது என்றோ, இவ்வியல்பினை உடையது என்றோ அறிந்து கொள்ளமாட்டா. இது எவ்வாறு எனின் உணவுப் பொருள்கள் ஆறு சிவைகளை உடையன. அந்தச் சுவைகளே தம்மை இன்ன சுவை என்று அறிவதும் இல்லை, சுவைப்பதும் இல்லை. அதுபோல என்க.
உணவுகள் இளிப்பு, கசப்பு, உப்பு, புளிப்பு துவர்ப்பு. காரம் என ஆறுவகைச் சுவைகளை உடையன. இவற்றுள் எந்தச் சுவையும் தான் இன்னசுவை என்று அறிவதில்லை. அதுபோலவே, தத்துவங் களும் தான் இன்ன தத்துவம், தன் தொழில் இது என்று அறிவ தில்லை. இதிலிருந்து தத்துவங்கள் எல்லாம் அறிவற்ற பொருள்களே என்பதும் அவை தம்மைத்தாம் அறிவதில்லை என்பதும் கூறப்பட்டது
سـ 39 سه

Page 24
தத்துவங்களை அறிய வல்லது உயிரே
ஆறு சுவையும் அருந்தி அவை தம்மை வேறு ஒருவன் கூறியிடும் மேன்மைபோல் - ஆறாறும் ஒன்று ஒன்றா நாடியுணர்ந்து ஒதில் அதில் உற்று அறிவாய் நின்றபொருள் தானே காண்நீ. 26
ஆறு வகைப்பட்ட சுவையுடைய உணவுகளை அவற்றிலிருந்து வேறாகிய ஒருவன் அருந்திப் பார்த்து இது இன்ன சுவை என்று கூறு வதைப்போல் தத்துவங்கள் முப்பத்தாறையும் ஒவ்வொன்றாக உணர்ந்து அவற்றோடு பெ*தத்தி அவற்றை அறிகின்ற அறிவுடைப் பொருளாய் நிற்கின்றவனே உயிர் எனப்பட்ட நீ ஆவாய்.
தத்துவங்களைப் பொருந்தி இருந்தாலும், தன்னையே தத்துவம் என்று தவறாக நினைத்துக் கொண்டிருந்தாலும் உயிர் அறிவுடைப் பொருள். எனவே, உயிரி ஒன்றே தத்துவங்களையும் அறியும். அவற்றின் தன்மையையும் அறியும். அவற்றின் பயன்களையும் நுகரும். உயிரின் அறிவு சிற்றறிவு. இறைவன் ஒருவனே முற்றறிவுடையவன். உயிரி உணர்த்த உணர்கின்ற ஆற்றலுடையது. அது தத்துவங்களுள் ஒன்றாகாமல் அவற்றை அறியும் இயல்பு உடையது.
இறைவனின் இயல்பு - வேறாதல்
குன்றா அருளாலே கூறினிர் என்வடிவு பொன்றாத நும் உருவம் போதியிர் - நின்று அருக்கன் கண்ணுக்குக் காட்டுமாப் போலே உனதறிவின் நண்ணி அறிவித்திடுவோம் நாம். 27,
"குறைவற்ற பேரருளால் உயிராகிய என் வடிவத்தை எனக்கு விளக்கினீர். இனி அழிவற்ற உமது இயல்பை இன்னதென்று எனக்கு அறிவுறுத்துவீராக” என்று மாணவர் கேட்கிறார். அதற்கு விடையாக ஆசிரியர் "சூரியன் கண்ணுக்கு வேறாய் நின்று தன் ஒளியால் உல கத்துப் பொருள்களை விளக்கி அக்கண்ணுக்குக் காட்டுவது போல் நாம் உனக்கு வேறாய் நின்றும் உனது அறிவோடு பொருந்தி நின்று உனக்கு அறிவிப்போம்" என்று கூறுகிறார்.
இப்பாடல் இரண்டு பகுதிகளை உடையது. முதற்பகுதி மாணவர் கேட்கின்ற கேள்வி. இரண்டாம் பகுதி ஆசிரியர் தருகின்ற விடை. நூலின் இரண்டாவது பாடலில் ஐந்தாவது கேள்வியாக வருகிற "நீ ஏது?" என்ற கேள்வியையே இங்கு மீண்டும் மாணவர் நினைவுபடுத்து கிறார். ஆசிரியரின் விடையின் ஒரு பகுதி இந்தப்பாடலின் பிற்பகுதி யிலும் அதன் தொடர்ச்சி இதனை அடுத்து வரும் இரண்டு பாடல் களிலும் கூறப்படுகின்றன.
- 40 as

"நாம்" என்று இப்பாடலில் வருவது ஆசிரியர் கூற்றாக அமைத் துள்ளது. எனினும், இந்த இடத்தில் அது இறைவனையே குறித்து தின் றது. ஏனெனில் பக்குவம் பெற்ற உயிர்களுக்கு இறைவனே குருவாக வந்து உணர்த்துவான் என்பது சைவ சித்தாந்தக் கொள்கை. ஆதலின், குருவுக்கும் இறைவனுக்கும் வேற்றுமையில்லை என்று கொள்ளப்படும்,
உயிருக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு வடமொழியில் அத்துவிதம் என்ற சொல்லாலே குறிக்கப்படும். இச்சொல்லுக்கு நேரடி யான பொருள் இரண்டறநிற்றல் என்பதாகும். இப்பாடலிலும் இதை யடுத்த இரண்டு பாடல்களிலும் சைவசித்தாந்த நெறியில் ’அத்துவிதம், என்ற சொல் எவ்வாறு பொருள் கொள்ளப்படும் என்பதை ஆசிரியர் மனவாசகம் கடந்தார் விளக்கி அருளுகிறார். சைவசித்தாந்தத்தில் இறைவன் உயிரின் வேறாகவும், உயிரோடு ஒன்றாகவும், உயிரின் உட னாகவும் நின்று அருள் பாலிப்பான் என்று கூறப்படும். இம்மூன்றினுள் இறைவன் உயிரின் வேறாக நிற்றலை இப்பாடலில் ஆசிரியரி ஓர் உவமையின் வாயிலாக எடுத்துக் காட்டுகிறார்.
வெகு தொலைவிலே இருக்கிறது சூரியன் ஆனால் அந்தச் சூரிய
ளின் ஒளி பொருள்களின் மீது படிந்தால் அல்லது கண்களால் பொருள் களைக் காண இயலாது. சூரியன் வேறு கண் வேறு கண் எவ்வளவு தான் கரிய பார்வை உடையதாயினும் தன்னிலிருந்து வேறுபட்ட " தாகிய சூரியனின் ஒளியின்றிக் கண்ணால் எதையும் காண இயலாது. சூரியனின் ஒளியோடு கண்ணொளி பொருந்தும் போது, கண்ணுக்குக் காணும் ஆற்றல் உண்டாகிறது. அதைப்போலவே இறைவனும் உயி ருக்கு வேறாய் நின்று ஆனால், உயிரின் அறிவோடுபொருந்தி அறிவுக் கும் பேருதவியைச் செய்து வருகிறான்.
இறைவனின் இயல்பு - ஒன்றாதல்
அன்றியும் கேள் ஆன்மாவால் ஆய்ந்து அறியும் ஐம்பொறிகள் இன்றி அறியா இலையென்ன - நின்றது போல் ஒவாமல் உன்னை உணர்த்துவோம் உன் அறிவில் மேவாமல் மேவி நாமே. 28
மேலும் கேட்பாயாக உயிரின் உதவியால்தான் ஐம்பொறிகளும் பொருள்களையும், அவற்றின் இயல்புகளையும் ஆராய்ந்து அறியும். உயிர் இல்லாவிட்டால் ஐம்பொறிகளும் குறைபாடு ஏதும் இல்லாவிட் டாலும் பொருள்களை அறியமாட்டா. இவ்வாறு ஐம்பொறிகளும் அறி வதற்கு உயிர் அவற்றோடு ஒன்றாகி நின்று அறிவது போல் நாம் உன் அறிவில் இடைவிடாமல் பொருந்தாமல் பொருந்தி நின்று உன் அறிவைச் செயல்படுத்தி வருவோம்.
ー 4Iー

Page 25
இத்தப் பாடலில் இறைவனும் உயிர்களும் ஒன்றேயாய் நிற்கும் தன்மை விளக்கப்படுகிறது. ஒருவன் பொருள்களை எவ்வாறு அறிகி றான் என்று கேட்டால், ஜம்பொறிகளின் வழியாக அறிகிறான் என்று தான் பதில் கூறவேண்டும். கண்டு கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் அறிவு பொறிகளின் வாயிலாகத்தான் நிகழ்கின்றது என்பது உண்மையே. ஆயினும் இவ்ஐம்பொறிகளுடன் உயிர் பொருந்தி நின றால் அல்லது இப்பொறிகள் செயல்படுவதில்லை என்பதையும் கண் கூடாகக் காண்கிறோம். உயிர் பிரிந்த உடலில் பொறிகள் கெடாமல் இருந்தும் அறியும் தொழில் நிகழ்வதில்லை என்பது யாவரும் அறிந் ததே. எனவே அறியும் தன்மை உயிருக்கு உள்ளதேயன்றிப் பொறிக ளுக்கு இல்லை என்பது விளங்கும். அதைப் போலவே, உயிர்க்கு உயி ராய் நிற்கும் இறைவன், ஆன்மாவுடன் பொருந்தாமல் பொருந்தி நின்று அதற்கு அறிவித்து அருள்பாலிக்கிறான். அதாவது பொறிகளுக்கு உயி ரின் துணை எவ்வாறு இன்றியமையாததோ அவ்வாறே, உயிர்களுக்கு இறைவனின் துணை இன்றியமையாதது,
இறைவனின் இயல்பு - உடனாதல்
அக்கரங்கட்கு எல்லாம் அகரஉயிர் நின்றாற்போல் மிக்க உயிர்க்கு உயிராய் மேவினோம் - எக் கண்ணும் நில்லா இடத்து உயிர்க்கு நில்லாது அறிவென்று நல் ஆகமம் ஒதும்நாடு 29,
எழுத்துக்களில் எல்லாம் அகர உயிர் எவ்வாறு அவற்றோடு இயைந் தும் அவற்றை இயக்கியும் நிற்கிறதோ அவ்வாறு எண்ணற்ற உயிரிகளி னிடத்திலே நாம் பொருந்தி இயைந்தும் இயக்கியும் எங்கும் நிறைந்து விளங்குகின்றோம் அவ்வாறு நிற்கவில்லையானால் அவ்வுயிர்களுக்கு அறிவு நிகழாது என்று சிறந்த சைவாகமங்கள் எடுத்துரைக்கின்றன;
இந்தப் பாடலில் இறைவன் உயிர்களுடன் உடனாக நிற்கும் தன்மை விளக்கப்படுகிறது. முந்தைய பாடல்களில் போல இதிலும் ஆகி ரியர் நாம் என்று கூறுவது, ஆசிரியருக்கும் இறைவனுக்கும் வேறுபாடு இல்லாமையால் இறைவனையே குறிப்பதாகக் கொள்ளவேண்டும்
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு" என்ற திருவள்ளுவப் பெருந்தகையின் முதல் குறட்பாவிலும், "அகர உயிரி போல அறிவாகி எங்கும், நிகரில் இறை நிற்கும் நிறைந்து என்ற திருவருட்பயனின் முதல் திருப்பாட்டாலும் இப்பாடல் கருத்து மேலும் விளக்கம் பெறுவதை அறியலாம். "அ" என்னும்
- 42 -

உயிர் எழுத்து உதடுகளிைத் திறந்து வாக்ைகீகாந்த உடனே இயல் பாகப் பிறக்கிறது. மற்ற எல்லா உயிர் எழுத்துக்களையும் மெய் எழுத்துக்களையும் உயிர்மெய் எழுத்துக்களையும் ஒலிக்கும் போதும் அகர ஒலி அவற்றோடு கலந்தே நிற்கும். பரிமேலழகர் திருக்குறளுக்கு எழுதிய உரையில் "இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை" என்கிறார். "அக்கரங்கள் இன்றாம் அகர உயிர் இன்றேல்” என்று இக்கருத்து சிவஞான போதம் இரண்டாம் நூற்பாவில் எடுத்துககாட்டுச் செய்யுளிலும் கூறப்பட்டுள்ளது.
அத்துவிதம் என்பது இந்திய நாட்டில் வழங்கிவரும் தத்துவங் களாலும் சமயங்களாலும் பல வேறு வகையாகப் பொருள் கொள்ளப் பட்டிருக்கிறது. மற் ைதுச் சமயங்களில் கூறப்பட்ட பொருள்களைவிடச் கித்தாந்த சைவத்தில் கூறப்பட்டதே சிறந்த பொருள் என்று விளக்குவதற்கு இம்மூன்று பாடல்களாலும் ஆசிரியர் உவமைகள் தருகின்றார்
ஒரு சாரார் அத்துவிதம் என்பதற்கு "இரண்டற்றது. எனவே ஒன்று" என்று பொருள் கொண்டு, பொன்னும் பொன்னால் செய்யப் பட்ட அணிகலன்களும் தமக்குள் வேறுபாடற்றவை அதுபோலவே இறைவனுக்கும் உயிருக்கும் வேறுபாடு இல்லை என்பர். இவர்கள் கொள்கை அபேதம் எனப்படும். s
மற்றொரு சாரார். சொல்லும் அதன் பொருளும் போல இறைவனும் உயிரும் ஒருவகையால் வேற்றுமைப்பட்டு, மற்றொரு வகையால் வேற்றுமைப்படாது இருப்பதுதான் அத்துவிதம் என்ற நிலை என்பார்கள். இவர்கள் கொள்கை பேதாபேதம் எனப்படும்.
மூன்றாவது வகையினரி, இரண்டற்றது என்று சொல்லும் போதே இரண்டு பொருள் உள்ளன என்பது தெளிவாகிறது. ஆதலால் நேர்மாறான இருளும் வெளிச்சமும் போன்ற தன்மை உடைய பொருள்கள் உயிர்களும் இறைவனும் என்று கொள்ளுகிறார், கள் இவர்கள் கொள்கை பேதம் எனப்படும்.
சைவசித்தாந்தம், பொருள் தன்மையால் வேறுபட்டும், கலப் பினால் ஒன்றுபட்டும். உயிர்க்கு உயிராகும் தன்மையால் உடனாகவும் நிற்கின்ற நிலையே அத்துவிதம் என்று கூறப்படும் என்று கொள்கிறது. அதற்காகவே இங்கு மூன்று உவமைகள் சொல்லப்பட்டன
சிவஞான போதத்தில் இரண்டாம் சூத்திரத்தில் மெய்கண்ட தேவ நாயனார் இக்கொள்கையை விளக்குகிறார். மேற்கூறப்பட்ட வேறாய், உடனாய், ஒன்றாய் என்ற ஒவ்வொரு கருத்துக்கும் ஓர் எடுத்
- 4 -

Page 26
துக்காட்டு வெண்பா அருளிவிட்டு இம்மூன்றையும் ஒருங்கே வலியு றுத்துவதற்காலி நான்காவது எடுதிதுக்காட்டு வெண்பா ஒன்றினை அருளியுள்ளார். அதன் முதற்பகுதி,
"அரக்கொடு சேர்த்தி யனைத்தவக் கற்போல் உருக்கி உடங்கியைந்து நின்று - பிரிப்பின்றி . ...'
的
என்பதாகும். பொன்னின் மாற்றை அறிவதற்குப் பொன் வாணி கரிகள் ஒரு கல்லைப் பயன்படுத்துவார்கள். அது உறைகல் என்றும் கட்டளைக்கல் என்றும் சொல்லப்படும் அரக்கை உருக்கி அதனோடு கற்பொடியையும் சேர்த்து இக்கட்டளைக்கல் தயாரிக்கப்படுகிறது. இந்தக் கல்வில் அரக்கு எது கற்பொடி எது என்று ரிேத்துக் கூற இயலாது. அதே நேரம் இரண்டில் ஒரு பொருள் இல்லாவிட்டாலும் அது கட்டளைக்கல்லாகப் படி ன்படாது. இரண்டும் சேர்ந்தே பயன்: தரும். இப்பகுதிக்கு உரை வகுத்த மாதவச் சிவஞான முனிவரி "கலப்பாய் நிற்றலான் உலகேயாம் என்பாரி. "உடங்கு இயைந்து" எனவும், பொருள் தன் மை யா ல் வேறு நிற்றலால் தானேயாம் என்பார், "நின்று" எனவும், உயிருக் குயிராய் நிற்றலால் தானே யுலகாம் என்பார், "பிரிப்ன்ேறி" எனவும் கூறினார். உலகு என்றது ாண்டு உயிர்களை" என்று விளக்கி அருளுகிறார். சைவ சித்தாந்தத் தில் கூறப்படும் அத்துவிதம் சுத்த அத்துவிதம்' என்று வழங்கப்படும்,
நாதன் நடனம்
நற்றவத்தோர் தாம் காண நாதாந்தந்து அஞ்செழுத்தால் உற்று உருவாய் நின்று ஆடல் உள்ளபடி - பெற்றிடநான் விண்ணார் பொழில் வெண்ணெய் மெய்கண்டநாதனே தண்ணார் அருளாலே சாற்று 30
விண் அளாவிய பொழில்கள் நிறைந்த திருவெண்ணெய் நல் லூரில் குடிகொண்டு அருளிய மெய்கண்டநாதனே. தவம் செய்த நல்வவர்கள் காணுமாறு நாதத்தின் முடிவில் திருவைத்தெழுத்து மந்திரத்தால் அமைந்த உருவோடு இறைவன் ஆடி அருளுகின்ற நட னத்தை உள்ளவாறே நான் அறியும் வகையில் எனக்கு அருளிச்செய் வீராக.
சிவபெருமான் மேற்கொண்டு அருளிய மகேசுர மூர்த்தங்களுள் மிகுந்த சிறப்புடையது, அவன் ஆடல் வல்லானாசக் காட்சிகொடுத்து அருளுவது. அழகு மிகுந்த இத்தோற்றம் அருள் நிறைந்ததும், பொருள் பொதிந்ததும் ஆகும். கூத்தப்பெருமானின் திருக்கோலத்தில் ஈடுபட்டு சமயகுரவர்களும், சந்தான குரவர்களும், மற்றும் பல அரு ளாளர்களும் கசிந்து கசிந்து பாடியுள்ளார்கள். திருநாவுக்கரசர் பெருமான், "குணித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமின்
ܗܘܐ 44 ܝܫܘܚ

சிரிப்பும் பணித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண் ணிறும் இனித்தமுடைய எடுத்த பொற்பrதமும் காணப்பெற்றால் மணித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே" என்றுபாடி அருளிய திருப்பாட்டு அம்பலவாணப் பெருமானின் அருள் பூத்தை நம் அகக்கண் முன் கொண்டுவரும்.
மேலே இரண்டாவது பாடலில் கேட்கப்பட்ட கேள்விகளில் ஆறாவது கேள்வியை ஆசிரியர் மனவாசகம் கடந்தார் மீண்டும் நினை வுறுத்துகிறார்.
நடனத்தின் விளக்கம்
எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே நட்டம் புதல்வா நவிலக்கேள் - சிட்டன் சிவாயநம என்னும் திருவெழுத்து அஞ்சாலே அவாயம் அறநின்று ஆடுவான். 31
ஞானப் புதல்வனே, சிவபெருமானின் திருநடனத்தைப் பற்றிக் கூறுகிறேன் கேட்பாயாக. எட்டுடன் இரண்டும் கூட்டிய பத்து என்னும் குறியீடு உயிரைக் குறிக்கும். அவ் உயிரில் சிவபெருமான் வீடுபேற்றை அருளவல்ல 'சிவாயநம என்னும் திருவைந்தெழுத்தால் திருமேனி தாங்கி, உயிர்களின் துன்பம் தொலையுமாறு தன் பெருங்கருணை யினால் திருநடனம் புரிந்தருளுகிறான்.
சிவாய நம என்பது திருவைந்தெழுத்து. இதில் ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கும். எழுத்தே பொருளைச் குறிப்பதனால், திருவைந்தெழுத்தை ஒதுவதை " இந்தியும் நண்பகலும் அஞ்சு பதம் சொல்வி" என்று பாடுகிறார் சுந்தரமூர்த்தி நா8:ஜார். சி என்பது சிவத்தையும், வ என்பது திருவருளாகிய சத்தியையும் ய என்பது ஆன்மாக்களாகி உயிரையும், ந என்பது மறைப்பாற்ற லையும், ம என்பது மலத்8ை4ம் குறிப்பனவாகும். இவற்றுள் உயிரும் குரிய குறியீடு A ஆகும். முற்காலத்தில் வழங்கி வந்த தமிழ் எண் வரி சையில் பத்து என்னும் எண்னைக் குறிக்கும் குறியீடு ப என்பதாகும். எனவே, எட்டும் இரண்டும் கூட்டினால் வருகிற பத்து என்ற குறியீடு இப்பாட்டில் உயிர்களைக் குறித்து நின்றது. உயிர்களே அம்பல மாகவும் உயிர்களின் பிறவித் துன்பத்தை நீக்கும் பெருங்கருணையே திருநடனத்தின் பயனாகவும் கொண்டு சிவ&ெருமான் ஆடல்புரிந்து அருளுகிறான் என்று விளக்குகின்றார் ஆசிரியர்.
அம்பலக்கூத்தனின் திருமேனி
ஆடும் படிகேள் நல்அம்பலத்தான் ஐயனே! நாடும் திருவடியிலே நகரம் - கூடும்
மகரம் உதரம் வளர்தோள் சிகரம் பகரும் முகம் வாமுடியப் பார். 32
سس ,45 سس

Page 27
மாணவனே, அம்பலவாணப் பெருமான் திருக்கூத்து ஆடும் முறைமையைக் கேட்பாயாக, அவனுடைய திருவடியில் ந என்ற எழுத்தும், திருவயிற்றில் ம என்ற எழுத்தும் அவனது திருத்தோள் களில் சி என்ற எழுத்தும் திருமுகத்தில் வ என்ற எழுத்தும், அவனது திருமுடியில் ய என்ற எழுத்தும் இருப்பதாகச் சைவ ஆகமங்கள் கூறு கின்றன.
திருவைந்தெழுத்து மந்திரம் இப்பாடலில் நமசிவாய என்ற முறைமையில் கூறப்பட்டுள்ளது. ஆடும் திருமேனியின் அங்கங்கள் ஒவ்வொன்றும் திருவைந்தெழுத்தே என்ற கருத்து இந்தப்பாடலில் விளக்கப்பட்டிருக்கிறது.
கூத்தனின் மற்றொரு கோலம்
சேர்க்கும் துடிசிகரம் சிக்கனவா வீசுகரம் ஆர்க்கும் யகரம் அபயகரம் - பார்க்கில் இறைக்கு அங்கி நகரம் அடிக்கீழ் முயலகனார் தங்கும் மகரமது தான். 33
இறைவனாகிய அம்பலவாணப் பெருமான் உடுக்கையை ஏந்தி யுள்ள திருக்கரம் சி என்ற எழுத்தினையும், வீசிய திருக்கரம் வ என்ற எழுத்தையும், அஞ்சாதே என்று அமைத்த திருக்கரம் ய என்ற எழுத் தையும் அனல் ஏந்தியுள்ள திருக்கரம் ந என்ற எழுத்தையும், முயலகன் மீது ஊன்றியுள்ள திருவடி ம என்ற எழுத்தையும் குறிப்ப தாக அமையும்.
மேற்பாட்டில் நமசிவய என்ற வரிசையில் சொல்லப்பட்டதை மற்றொரு முறைமையில் சிவயநம என்ற வரிசையில் எடுத்துரைக்கப் ul-L-35.
சுடரும் திருவாசியும்
ஓங்காரமே நல் திருவாசி உற்று அதனில் நீங்கா எழுத்தே நிறைகடராம் - ஆங்காரம் அற்றார் அறிவர் அணி அம்பலத்தான் ஆடல்இது பெற்றார் பிறப்பற்றார் பின். 34
ஓங்காரமாகிய பிரணவ மந்திரமே அழகிய திருவாசியாகும். அதனுள் என்றும் நீங்காமல் நிற்கும் திருவைந்தெழுத்தே ஒளி நிறைந்த சுடஏாகும், யான் எனது என்ற செருக்கு அற்றவர்களே இவ் வுண்மமையை அறிவார்கள். அம்பலவாணப் பெருமானின் அழகு நிறைந்த இந்த ஆடலை அறிந்து தரிசிக்கும் பேறு பெற்றவர்கள் இனிப் பிறவாத தன்மையை எய்தியவர்கள் ஆவாரிகள்,
جسے 46 سے

ஊன நடனம்
தோற்றம் துடியதனில் தோயும் திதி அமைப்பில் சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமா ஊன்று மலர்ப்பதத்தில் உற்ற திரோதம் முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு. 35
உடுக்கு ஏந்திய திருக்கரத்தில் படைத்தலும் அமைத்த திருக் கரத்தில் காத்தலும், அனல் ஏந்திய திருக்கரத்தில் அழித்தலும், ஊன்றியிருக்கின்ற திருவடியில் மறைத்தலும், எடுத்து வீசிய திருவடி யில் அருளலும் என்று இவ்வாறு இறைவன் செய்யும் ஐந்தொழில் களும் கூத்தப்பெருமானது திருவடிவிலே அர மை ந் திருக்கின்றன என்பதை அறிவாயாக,
இந்தப் பாடல் மிகவும் புகழ்பெற்ற பாடலாகும், சைவசம யத்தை அறியாதவரும், இறைவன் பால் பத்திமை இல்லாதவரும் ஆகிய வேற்று நாட்டவரிகளும் நடராஜப் பெருமானின் எழில் பொங்கும் திருமேனியில் தம் உள்ளத்தைப் பறிகொடுத்தனர். அதன் உட்பொருளை அறியாதிருந்தும் அத்திருமேனியில் சடுபாடு கொண்
-68rti.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆனந்த கென்டிஷ் குமாரசாமி என்னும் அறிஞர் மேல்நாட்டவர்களுக்கு நடராஜத்திருமேனியின் தத்துவத்தை விளக்குவதற்காக ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதினாரி. அந்த நூலில் உண்மை விளக்கத்தின் பகுதிகளாய் இப்பாடல்களை ஆங்கிலத்தில் விளக்கியுள்ளார். அந்த நூலின் பெயர் "The Dance of Siva' 6r6šrusi 6lb.
இறைவன் இயற்றும் ஐந்தொழில்களும் உயிர்கள் மீது அவன் கொண்டகருணையினால்தான். உலகத்தின் படைப்பு, காப்பு, ஒடுக்கம் ஆகியவற்றோடு தொடர்புபடுத்தி அவனுடைய ஐந்தொழிலையும் விளக்கும்போது அது ஊன நடனம் என்று குறிப்பிடப்படும்.
ஞான நடனம் மாயை தனை உதறி வல்வினையைச் சுட்டு மலம் சாய அமுக்கி அருள்தான் எடுத்து - நேயத்தால் ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல் தான் எந்தையார் பரதம்தான். 36
பக்குவம் பெற்ற உயிர்களுக்கு மாயை என்னும் மலத்தை நீக்கி வலிமை மிக்க கன்மமலத்தைச் சுட்டு எரித்து. இருள் மலமாகிய ஆணவ மலத்தை அதன் வலிமை கெடும்படி செய்வித்து, அவ்வுயிரி களைத்தன் திருவருளினால் எடுத்து எல்லையற்ற பேரின்பக்கடலில் மூழ்குவித்தலே எங்கள் பிரானாகிய ஆடல்வல்லான்தன்பெருங்கருணை யினால் நிகழ்த்துகின்ற திருக்கூத்து ஆகும்3
- 47 അ

Page 28
இப்பாடலில் இறைவனது திருநடனம் பக்குவம் பெற்ற உயிரி களுக்கு விளைவிக்கும் பேரின்பம் பற்றிக் கூறப்படுவதால் இது ஞான நடனம் எனப்படும். :ாயை தனை உதறி என்பதனால் உடுக்கு ஏந்திய திருக்கரம் குறிக்கப்பட்டது. வல்வினையைச் சுட்டு என்பதனால் அனல் ஏந்திய திருக்கரம் குறிக்கப்பட்டது. மலம் சாய அமுக்கி என்ற சொற் களால் இறைவனின் ஊன்றிய திருவடி குறிக்கப்பட்டது. அருள்தான் எடுத்து என்பதால் எடுத்த பொற்ாேதம் குறிக்கப்பட்டது.
ஆனந்த நடனம் மோனந்த மாமுனிவர் மும்மலத்தை மோசித்துத் தான் அந்த மானிடத்தே தங்கியிடும் - ஆனந்தம் மொண்டு அருந்த நின்று ஆடல் காணும் அருள்மூர்த்தியாக் கொண்ட திரு அம்பலத்தான் கூத்து. 37
உரை யவிந்த நிலையிலே நிற்கிற உயரிய முனிவர்களின் மும் மலத்தை நீக்கி, அவர்கள் தற்போதத்தை விட்டொழித்த எல்லையில் மலரும் பேரின்பத்தை வாரி வழங்குவற்காக அருள் வடி வான சிவகாமி அம்மை அவ்ஆனந்தக்கூத்தை இடைவிடாமல் கண்டு உயிர் களுக்கு அதன் பயனை வழங்கும்படி தில்லைமன்றுள் அம்பலவாணப் பெருமான் நிகழ்த்துவது ஆனந்தக் கத்தாகும்.
தில்லை அம்பலத்தில் இறைவன் ஆடுகின்ற எல்லையில் கணிப் பெரும்கூத்து, ஆனந்தக் கூத்து எனப்படும். இதனை உயிர்கள் நேரே தரிசிக்கும் ஆற்றல் அற்றவை. ஆதலால் சிவகாமி அம்மை, அத்திருக் கூத்தைத் தான்கண்டு, மன்னுயிர்த்தொகுதிக்கு அதன் பயனை மறித் துத்தந்து அருளுகிறாள் என்பது இப்பாடலில் விளக்கப்பட்டது. இக் கருத்தைச் சிதம்பர மும்மணிக் கோவையில் குமரகுருபர முனிவர்.
"இத்தொழில் ஐந்தும் நின்மெய்த் தொழிலாகப் பாலுண் குழவி பசுங்குடர் பொறாது என நோயுண் மருந்து தாய்உண் டாங்கு மன்னுயிர்த் தொகுதிக்கு இன்னருள் கிடைப்ப வையம்ஈன்று அளித்த தெய்வக் கற்பின் அருன்சூல் கொண்ட ஐயரித் தடங்கண் திருமாண் சாயல் திருந்திழை கான சிற்சபை பொலியத் திருதடம் புரியும் அற்புதக் கூத்த ..."
என்று விரிவாகக் கூறியருளுகிறார்.
கூத்தினை வழிபட்டோர் பெறும் பேறு பினர்இடமா நின்று மிகுபஞ்சாக் கரத்தால் உரைஉணர்வுக்கு எட்டா ஒருவன் - வரைமகள்தான்
காணும் படியே கருணையுருக் கொண்டாடல் பேணும் அவர்க்கு உண்டோ பிறப்பு. 38
- 48

சொல்லுக்கும் மனதுக்கும் எட்டாதவனாகிய சிவபரம்பொருள் அருளையே இடமாகக் கொண்டு மலை அரசன் மகளாகிய அன்னை கண்டு இன்புற உயர்ந்த திருவைந்தெழுத்தாகிய அருள் திருமேனி கொண்டு ஆடும் திருநடனத்தைப் பேணி வணங்குபவர்களுக்கு மீண்டும் பிறவியில்லை,
சிவபெருமான் ஆடுகின்ற அம்.லமும் அருள். அவனுடைய திருமேனியே அருள். அவன் நடனத்தை உயிர்களின் உய்வுக்காகக் கண்டு வழங்கும் அன்னையும் அருள் அவன் இயற்றும் ஐந்தொழில் களும் அருள். அதன் பயனும் உயிர்களின் பிறவிப் பிணியை நீக்கு கின்ற அருள். எனவே, எல்லாமே திருவருள். பார்த்திடின் அருளே எல்லாம் என்றார் அருள் நந்தி சிவனாரும். -
மாணவரின் உரை
நாதாந்த நாடகத்தை நன்றாஅருள் செய்தீர் ஒதீர் எழுத்து அஞ்சும் உள்ளபடி - தீதுஅறவே அஞ்செழுத்து ஈதாகில் அழியும் எழுத்தாய்விடுமோ தஞ்ச அருள்குருவே சாற்று 39
நாதத்தின் முடிவிலே, சிவபெருமான் ஆடுகின்ற திருக்கூத்தைத் தெளிவாக உணர்த்தியருளினீர் எனக்குப் புகலிடமாக விளங்குகின்ற அருன் ஆசிரியப் பெருமானே. இனித் திருவைந்தெழுத்தைப் பற்றி அது உயிர்கனின் தளைகள் கெடுவதற்குத் துணையாவது பற்றி, விளக்க வேண்டுகிறேன். எழுத்துக்கள் அழியும் தன்மையுடையன என்பார்கள். திருவைந்தெழுத்தும் அழியும் எழுத்தாமோ? தெரிவித்து அருளுவீராக,
நூலின் இரண்டாம் பாடலில் தொடுக்கப்பட்ட வினாக்களில் ஏழாவது வினாவை மீண்டும் நினைவுறுத்துகிறது இப்பாடல் இந்த வினாவுக்கு விடை வருகின்ற ஐந்து பாடல்களிலும் ஆசிரியரால் எடுத்து விளக்கப்படுகிறது.
திருவைந்தெழுத்து நிலையானது
உற்ற குறியழியும் ஒதுங்கால் பாடைகளில் சற்றும் பொருள்தான் சலியாது - மற்றதுகேெ சிவன், அருள், ஆவி, எழில்ார் திரோத, மலம் ஆசில் எழுத்து அஞ்சின் அடைவாம்.
எழுத்துக்கள் என்பன வரிவடிவக் குறியீடுகள். சொல்லப் போனால் மொழிகளில் உள்ள எழுத்துக்களும் அவற்றுக்கான வரி வடிவங்களும் அவற்றால் ஆன சொற்களும் சொற்களால் குறிக்கப்
سے 49 -ـــــــ

Page 29
படும் பொருள்களும் மாறியும், அழிந்துப் போகும் இயல்பை உடை யன். ஆனால் திருவைந்தெழுத்து முறையே எழில் நிறைந்த இறைவனை யும், திருவருளையும், உயிரையும், மறைப்பாற்றலையும் மலங்களையும் குறிப்பன ஆகையால் அப்பொருள்களும் தோற்றுக்கேடுகள் அற்றன திருவைந்தெழுத்தும் என்றென்றும் நிலைபேறு உடையது. 2。
அட்சரம் என்ற வடசொல்லுக்கு அழியாதது என்பது பொருள் வேதங்களை நித்தியப் பொருள் என்றும் வேதங்கள் ஒரு இ. ராலும் இ4ற்றப்படாதுதாமே தோன்றின என்பதும் மீமார்சகர்கள் கருத்து. அவர்கள் வேதங்களை "அபெளருஷயம்" என் பர். இச் சொல்லுக்கு ஒருவராலும் செய்யப்படாதது என்பது பொருள். எனவே வேதங்களின் அடிப்படை அலகுகளான எழுத்துக்களும் அழி வற்றவை என்று கொண்டனர் போலும். விசவ சித்தாந்தத்தில் இறை வன் ஒருவனே ம7றுபடாமல் நிலைத்திருக்கும் நித்தப் பொருள். மற் றையவை எல்லாம் தோற்றம், நிலை, இறுதி என்ற முத்தொழிலுக்கு உட்பட்டு மாறி மீண்டுய வரும் இயல்புடைய பொருள்கள்.
எழுத்துக்கள் நிலையில்லாதவை எனினும் இங்கே அவ் எழுத்துக் களால் சுட்டப்படும் பொருள்கள் அழிவற்றவை என்பதனால் திருவைந் தெழுத்து அழியாத இயல்பு உடையது என்பதை ஆசிரியர் வற்புறுத்திக் கூறுகிறார். சிவப்பிரகாசம் "அத்தம் ஆதிகள் இலாத அஞ்செழுத்து, என்று கூறுவது காண்க, அவ்வாறே திருவருட் பயனில் ஆசிரியர் உமாபதி சிவம்.
*ஏகன் அநேகன் இருள்கருமம் மாயை இரண்டு ஆ8இவை ஆறு ஆதிஇல்” என்று கூறுகிறார். இவை ஆறும் தோற்றம் இல்லாதவை, ஆகையி னாலே அழிவும் இல்லாதவை.
திருவைந்தெழுத்தை ஒதும்முறை
வேன் அருள் ஆவி திரோதம் மலம் ஐந்தும் அவன் எழுத்து அஞ்சின் அடைவாம் - இவன் இன்றி நம்முதலா ஒதில் அருள் நாடாது நாடும் அருள் சிம்முதலா ஒது நீ சென்று. 4t
சிவன், திருவருள், உயிர், மறைப்பாற்றல், மலம் ஆகிய ஐந்தும் மூறையே வெயநம என்ற ஐத்தெழுத்துக்களின் பொருளாகும். எனவே, 'ந' என்ற எழுத்தை முதலில் வைத்துத் தொடங்கித் திருவைந்துெ ழுத்தை ஓதி'ல் திருவருள் வெளிபட்டுத் தோன்றாது ஞான ஆசிரிய னால் உணர்த்தப்பட்ட முறையினைக் காடப்பிடித்து, "சி" என்ற எழுத்தை முதலினில் வைத்துத் தொடங்கி சிவாதம் என்று ஓதுவா யா கில் திருவருள் விரைவில் தோன்றி அருள் பாலிக்கும்.
ܗ 50 ܚܒܫܡܝ

எழுத்துக்கள் ஐந்தெனினும், அவற்றின் வரிசை முறைபற்றித்
திருவைந்தெழுத்து தூலபஞ்சாக்கரம், சூக்கும பஞ்சாக்கரம். அதி சூக்கும பஞ்சாக்கரம் என்று பல்வேறு வகைப்படுத்திக் கூறப்பெறும் நமசிவாய என்பது தூலபஞ்சாக்கரம். கிவாயநம என்பது சூக்கும பஞ் சாக்கரம். அதிசூக்கும பஞ்சாக்கரத்தில் நம என்ற எழுத்துக்கள் விடப்பெறும். திருவைந்தெழுத்தைத் தக்க ஆசிரியரி லாயிலாக உப தேசிக்கப்பெற்றே ஒதுதல் வேண்டும். எனவே அவற்றின் விரிவுகள் நூல்களில் கூறப்படா.
'சிவம் முதலே யாமாறு சேரு மேல் தீரும்
பவமிது நீ யோதும் படி" என்று திருவருட்பயணில் இக்கருத்து விளக்கப்பட்டது.
திருவைந்தெழுத்தை ஒதுவதன் பயன் அண்ணல் முதலா அழகார் எழுத்து ஐந்தும் எண்ணில் இராப்பகல் அற்று இன்பத்தே-நண்ணி அருளானது சிவத்தே ஆக்கும் அணுவை இருளானது தீர இன்று. 42
திருவைந்தெழுத்தினை, அண்ணலாகிய சிவபெருமானைக் குறிக்கும் "சி" என்ற எழுத்தை முதலாகக் கொண்டு இடைவிடாது ஒதிவந்தால், அப்பொழுது திருவருள் உயிரை நண்ணி வந்து ஆனவ மலத்தின் வலிமடங்கிப் போகுமாறு செய்து இரவும் பகலும் என்று கூறப்படும் கேவல, சகல நிலைகளிருந்து அகற்றி எல்லையற்ற சிவானந்தப் பெருங்கடலில் சேர்க்கும்,
உயிர் கேவலம், சகலம் சுத்தம் என்ற மூன்று நிலைக்கு உட்படும். இவற்றுள் கேவலம், சகலம் என்ற இரண்டையும் நீக்கி உயிரை சுத்த நிலைக்கு இட்டுச்செல்வது திருவைந்தெழுத்தே என்பது இப்பாடலில் விளக்கப்பட்டது. கேவலம், சகலம் ஆகிய இருநிலைகளும் பதினேழாம் பாடலில் விளக்கப்பட்டுள்ளன.
ஒதும் முறையை வலியுறுத்தல்
ஆதிமலம் இரண்டும் ஆதியா ஒதினால்
சேதியா மும்மலமும் தீர்வாகா.போதம் மதிப்பரிதாம் இன்பத்தே வாழலாம் மாறி விதிப்படி ஒது அஞ்செழுத்துமே. 43
திருவைந்தெழுத்தை ஒதுகின்றபொழுது மறைப்பு ஆற்றலைக் குறிக்கும் ந என்ற எழுத்தும், மலத்தினைக் குறிக்கும் ம என்ற எழுத்தும் முதலில் வருமாறு ஒதினால் வலிமைமிக்க மூன்று மலங்களும் களைந்து எறியப்படமாட்டா, மாறாக "சி" என்ற இறைவனைச்
- 51 -"

Page 30
குறிக்கும் எழுத்தை முதலாகக் கொண்டு விதிப்படி ஒதினால் தற் போதம் நீங்கிப் பெறுவதற்கரிய வீடு பேற்றைப் பெற்று மாறில்லா இன்பத்தில் வாழலாம்.
முன் பாடலில் சொல்லப்பட்ட கருத்தை இப்பாடலில் மீண்டும் வலியுறுத்துகிறார். திருவைந்தெழுத்தை நமசிவாய என்ற வரிசைப்படி ஒதுவோர்க்கு எல்லா நன்மைகளும் கிட்டுமாயினும் அவ்வரிசை, மலங்களை முதலாவதாகக் கொண்டு ஒதப்படுதலால் மும்மல நீக்கத் திற்குத் துணையாகாது என்பர்.
உலகின் மீது உவர்ப்புத் தோன்றிப் பிறவிப் பிணியை அறவே நீக்குவதற்கு முனைபவர்கள் சில:ாயநம என்று இறைவனைக்குறிக்கும் முதல் எழுத்தோடு தொடங்கி ஓதினால் அது வீடுபேற்றைத் தரும் • இவ்வாறு ஒதுகின்ற முறைமையில் இம்மந்திரம் முத்திப்பஞ்சாக்கரம் என்றும் குறிப்பிடப்பெறும்.
திருவைந்தெழுத்தின் பெருமை
அஞ்செழுத்தே ஆகமமும் அண்ணல் அருமறையும் அஞ்செழுத்தே ஆதிபுராணம் அனைத்தும் - அஞ்செழுத்தே ஆனந்த தாண்டவமும் ஆறாறுக்கு அப்பாலாம் மோனந்தமாமுத்தியும். 44
சிவபெருமானால் அருளிச் செய்யப்பட்ட ஆகமங்கள் யாவும் திருனவத்தெழுத்தின் பெருமையை விளக்குவன அரிய மறைகளும் விவ்வ*றே திருவைந்தெழுத்தின் பெருமையைப் பேசுவன. பழைய புராணங்களும் திருவைந்தெழுத்தின் உயர்வையே விளக்ாதவன. கூத்தப் பெருமானுடைய ஆனந்தத் திருநடனமும் திருவைந்தெழுத் தின் உட்பொருளைத் தெரிவிப்பதே. எல்லாத் தத்துவங்களையும் கட ந்த உரை அவித்த ஞானத்தின் விளைவான வீடுபேறும் திருவைந் தெழுத்தால் விளையும் பெரும் பயனே,
இப்பாடலில் திருவைந்தெழுத்து மந்திரத்தின் பெருமையை ஆசிரியர் விளக்குகிறார். விரிந்து கிடக்கின்ற ஆக:ங்கள். மறைகள், புராணங்கள், இவை யாவற்றுள்ளும் நின்று ஒளிரும் மந்திரம் திரு வைந்தெழுத்தே ஆனந்தத் தாண்டவமும் மோனமுடிவில் விளங்கும் பரமுத்தியும் திருவைந்தெழுத்தே.
இத்தகைய பெருமை உடைய மந்திரத்தை சைவசமய குரவர் சளாகிய நால்வரும் பல்வேறு இடங்களில் தமது திருப்பாடல்களில் எடுத்தக் கூறியுள்ளவர். மூவர் முதலிகளும் நான்கு பதிகங்களில் திருவைந்தெழுத்தின் பெருமையைப் பாடியுள்ளனர். திருஞான சம்பந்தர் நமச்சிவாயப்பதிகம் ஒன்றும் பஞ்சாக்கரப்பதிகம் ஒன்றும்
- 52 na

அருளிச் செய்துள்ளார். திருநாவுக்கரசு நாயனாரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் ஒவ்வொரு பதிகம பாடியுள்ளனர். அவையும் நமசிவாயப் பதிகங்களே. மாணிக்கவாசகப் பெருமான் தமது திருவாசகத்தை "நமசிவாய வாழ்க" என்றே தொடங்கியருளுகிறார்.
முத்தி நிலை
முத்தி தனை அடைந்தோர் முந்துபழம் போது அங்கி வித்தகமாம் விணை இவையிற்றின் - ஒத்த இரதம் மணம் வெம்மை எழில்நாதம் போல விரவுவர் என்று ஒதும் விதி, 45
சித்தாந்த சைவத்தில் கறப்பட்ட முத்தி நிலையை அடைந்து பெருமககள கனியில் சுவைபோலும், மலரில மணம் போலும், தீயில் சூடு போலும், வீணையில் இன்னிசை போலும் சிவபெருங்: லுடன் வித்துவிதமாய்க் கலந்து தன்முனைப்பு அமறு இருப்பாாகள் என்று சைவாகமங்கள் ஒதுகினறன.
இரண்டாம் பாடலில் தான் ஏது? என்று கேட்ட எட்டாவது வினாவிற்கு விடையாக இடபாடல் தொடங்கி எட்டுப் பாடல்களால் முத்தியின் இயல்பும் சிறப்பும் முப்பொருள நிலையும் போன்றவற்றை ஆசிரியா விளக்குகிறார். முந்து பழம், போது, அங்கி, வித்தகமாகம் வினை என்ற நான்கையும் பாடலின் முதல பகுதியில் சொல்லி அவற்றின் க்வை, மணம், வெப்பம், ஓசை ஆகியவற்றைப் பாடலின் பிற்பகுதியில் நிரல்பட அமைத்தார்.
பழம்வேறு பழத்தின் சுவை வேறு. எனினும் பழத்திலிருந்து சுவை தனிப்பட்டு நிற்பதன்று. மலர் 2ே:று பலரின் மணம் வேறு. ஆயினும் மலரிலிருந்து மணம் வேறுபட்டு நிற்பதன்று. தீ வேறு தீயின வெப்பம் வேறு. ஆயினும் தீனின்று தனித்து துவப்பம் வேறு பட்டு நிற்பதில்லை. வீணை வேறு; அதிலிருந்து எழுகின்ற இன்னிசை வேறு ஆயினும் இன்னிசை தனித்து நிற்பதில்லை. இவ்வாறே முத்தி படைத்தோர் சிவத்தோடு விரவி இரண்டற நிற்பர்.
மற்றொரு எடுத்துக்காட்டு
தத்துவங்கள் எல்லாம் சகசமாய் ஆன்மாவில் பெத்தத்தில் நிற்கின்ற பெற்றி போல் - முத்திதனில் சித்தமலம் அற்றார் செறிந்திடுவர் என்று மறை சத்தியமாய் ஒதியிடுந்தான. 46 கட்டுநிலையில் உயிர்கள் தத்துவங்களுடன் இயைந்து நின்று
செயல்படுகின்றன. அந்நிலையில் உயிர்தான் வேறு தத்துவககள் வேறு என்று உணர்ந்து கொள்ள முடியாதபடி அவற்றினிடையே உள்ள
as 53 -

Page 31
கலப்பு விளங்குகிறது. மும்மலங்களும் நீங்கப்பெற்ற ஞானியரி சிவத் தோடு பொருந்துவதும் இத்தகையதோரி கலப்பே. இந்த உண்மையை சைவ ஆகமங்கள் உறுதியாகக் கூறுகின்றன:
சகல நிலையில் உயிர்கள் தன்னை வேறு என்று உணர்வதில்லை; தத்துவப் பொருள்களுக்கும் தமக்கும் வேற்றுமையில்லை என்றே கருது கின்றன. படிமுறையே வளர்ச்சி பெறறு ஞானம் முதிரும்போதுதான உலகத்துப் பொருள்கள் வேறு ஆண்மாவாகிய தான் வேறு என்று உணருகின்ற அறிவு உதிக்கின்றது. அதுவரையில் தன் தனித்தன் மையை உணராது தானே தததுவங்களாய், தத்துவங்களே தானாய் நிற்கின்ற கலப்பு நிலை, தன்னை உணர்நது தலைவன் தாளைத்த லைப்படும் போது முற்றிலும் மாறி விடுகின்றது. இந்நிலையில் தானும் தலைவனுல் வேறு அற நிற்கும் கலப்புநிலை தோன்றுகின ADgi. S5trl LDiT6ä sy-j5 oli "ஆணவத்தோடு அத்துவிதமான படி மெயஞ்ஞானததாணுவினோடு அததுவிதம் சாரும் நாள் எந்நாளோ" என்று இருநிலைகளையும் சேரவைதது விளக்குகிறார்.
இதற்கு முந்திய பாட்டில் கூறப்பட்ட விளக்கம் ஒரு புடை விளக்கமாகவே அமைகிறது என்று கருதுகிற ஆசிரியர், இப்பாடலில் முத்திநிலையை மேலும் தெளிவுறுததுவதற்காக இனனொரு எடுத்துக் காட்டைத்தந்து அருளியுள்ளார். பழமும், மலரும், தீயும் வீணை யும் பொருள்கள. சுவையும மனமும், வெபபமும், ஓசையும குணங்கள, இதே உறவுதான் முத்திநிலையில் இறைவனுககும் உயிர்களுக்கும் உள்ளது, என்று கொணடால இறைவன பொருள் என்றும், உயிர்கள் அப்பொருளின குணங்கள என்றும் சிலர் கருதக்கூடும் என்பதனால் இறைவனும் உயிர்களும் வெவ்வேறு பொருள்களே. ஆனால் அவற் றிடையே உள்ள கலப்பு பிரித்தறிய இயலாத கலப்பு என்று விளக்கு வதற்காக இந்த எடுத்துக்காட்டு ஆசிரியரால் அருளப்பட்டது.
ஆதவன்தன் சந்நிதியில் அம்புலியினார் சோதி பேதமற நிற்கின்ற பெற்றிபோல் - நாதாந்தத்து அண்ணல் திருவடியில் ஆன்மா அணைந்து இன்பக் கண்ணில் அழுந்தியிடும் காண், 47
திங்களிடத்தில் உள்ள ஒளி, கதிரவன் ஒளியின் முன் விளங்கி நிற்கமாட்டாமல் அடங்கிப் போகின்ற தன்மையைப்போல் முத்தி நிலை அடைந்த ஆன்மாக்கள் நாதாந்தத்தின் விளங்குகின்ற சிவபெரு மானுடைய திருவடியில் தம்முனைப்பை இழந்து பேரின்பத்தில் மூழ்கி இருப்பார்கள்,
a 54 m.

வளர்பிறைக் காலத்தில் நிலவு இரவில் தோன்றும், அப்போது அதிலிருந்து எழும் தண்ணிய ஒளி மக்களால் தனித்துக் காணப்படும். தேய்பிறைக் காலத்து நிலவு பகலில் ஞாயிற்றின் ஒளியே. டு கூட வானில் தோன்றுகின்றபோது, கதிரவன் ஒளியின் முன் நிற்கமாட் டாத நிலவின் ஒளி பகல் ஒளியில் அடங்கிப்போம். இவ்வாறே, பெருங் கருணையினனான சிவபெருமான் திருவடியடைந்த முத்தான்மாக்கள் தம்முனைப்பு அடங்கி சிவப்பேரொளியில் மூழ்கி அது ஒன்றே விளங்கித் தோன்றத் தாம் தம்மை இழந்து நிற்பார்கள்.
திங்களும் இருக்கக், கதிரவனும் இருக்கக் கதிரொளியே மேம் பட்டு நிற்பதுபோல சிவபெருமானும் முத்திபெற்ற ஆன்மாக்களும் இருப்பவும் சிவப்பேரொளியே மிக்குத் தோறுைம என்பது இந்த எடுத்துக்காட்டால் விளக்கப்பட்டது,
முத்தியின் இயல்பு
சென்றிவன்தான் ஒன்றில் சிவபூரணம் சிதையும் அன்றி அவன்தான் ஒன்றும் எனில் அந்நியமாம்-இன்றுஇரண்டும் அற்றநிலை ஏதென்னில் ஆதித்தன் அந்தன்விழிக்
குற்றமற நின்றதுபோல் கொள். 48
உயிர் சென்று சிவபெருமானோடு பொருந்துவதே முத்திநிலை என்று கொண்டால், கட்டுநிலையில் உயிர் 8வம்பருமாடைமிருந்து தனிதது நின்றது என்று ஆகும். அதனால் சிவபெருமான் விக்கும் நிறைந்தவன் என்ற கொள்கைக்கு இழுக்கு ஏற்படும். அவ்வாறிலலை. சிவபெருமான்தான் உயிர்களிடதது dந்து பொருந்துவான எனில் கட்டுநிலையில் உயிரினும் வேறாகச சிவபெருமான் இருந்தனன் என்று கொள்ளப்பட்டு என்றென்றும் சிவனே உயிர்ததுணை என்ற கொள்கை மறுக்கப்படும. இந்த இரண்டும் அறமநிலை எத்தகையது எளில் புரை படர்ந்த கண்ணையுடைய ஒருவன அப்படலம விழியிலிருந்து நீங்கிய உடனே பாக்கும் திறம் பெறறுச் சூரியன ஒளியையும அவ் ஒளியால் மற்றைப் பொருள்களையும் பாக்கும் திறன் மiபறுவது போன்றது என்று கொள்க.
'உலகெலாம் ஆகி றோய் உடனுமாய் ஒளியாய் ஒங்கி. தலைவனாய்.நின்றனன் நீங்காது எங்கும்" என்பது சிவபரம் பொருளைக் குறித்துச் சிவஞான சித்தியார் தகும் விளக்கமாகும் சிவபெருமான் நீக்கமற நிறைந்தவன். பார்க்கும் இடம் எங்கும் நிறைந்த பரிபூரணன். இவ்வாறு இருக்கும் நிலையில் உயிர்கன் தளை களால் பிணிக்கப்பட்டிருக்கும்போது அவனுடைய வியாபகத்திற்கு வெளியே இருக்கும் என்று கொள்வது குற்றமாகும். உயிர்கள் சென்று சிவனைப் பொருந்தின என்று கூறுவதும், சிவபெருமான் சென்று உயிரி
- 53 -

Page 32
களைப் பொருந்தினான் என்று கூறுவதும் பிழையாகும். அப்படியர் னால் முந்தி நிலையில், உயிர்கள் சிவபெருமானின் பேரருள் வெள் ளத்தில் மூழ்கி என்றென்றும் இன்புற்று இருக்கும் நிலைக்கு எதனை உவமை கூறலாம் என்று ஆசிரியர் தடையை எழுப்பி விடையும் தருகிறார்.
ஞாயிறு ஒளிவடிவானது. அதன் ஒளி தடையின்றி எங்கும் பரவுகிறது. ஆயினும் விழிகளில் படலம் படர்ந்து, பார்க்கும் திறனை இழந்துபோன ஒருவனுக்கு ஞாயிற்றின் ஒளிக்கதிர்கள் தெரிவதில்லை. இது ஞாயிற்றின் குற்றம் அனறு, பார்க்க இயலாதவனின் விழிகளின் குறple. கிறநத மருத்துவன் ஒருவனால் விழியில் படர்ந்துள்ள படலம் நீக்கப்பட்ட உடனே கண் ஒளியும் ஞாயிற்றின் ஒளியும் இயைந்து, பார்வையற்றிருந்த அவன் பார்வை பெறுகிறான். சிவபெருமான் ஞாயிறு, சிவபெருமானின் திருவருள் ஞாயிற்றின் கதிர்கள். கண் ஆன்மா, கண்ணை மறைத்திருக்கும படலம், ஆணவமாகிய மலம். படலம் நீங்கிய உடன் தடை நீங்குகிறது. இதுவே இங்கு ஏற்புடைய உவமையாகும். இதனை மனத்துட் கொண்டு குமரகுருபரமுனிவர் தமது கந்தர்கலிவெண்பாவில், "ஆணவமான படலம் கிழித்து அறிவிற் கானரிய மெய்ஞ்ஞானக் கனகாட்டி" என்று இறைவனின் பேரருள் திறத்தைக் கூறுகிறார்.
முத்தி நிலையில் முப்பொருள் வினா
வாக்கு மனம் இறந்த வான் கருணை யாளன்உருத் தாக்கறவே நிற்கும் தனிமுதல்வா - நீக்காப் பதியினைப் போல்நித்தம் பசு பாசம் என்றாய் கதியிடத்து மூன்றினையும் காட்டு. (9
சொல்லுக்கும் மனத்துக்கும்எட்டாது தூய்மையான கருணையே வடிவமாக விளங்குகின்ற பெருமாளே, உலகப்பொருள்களால் பிணிக்கப்படாமல் இருக்கின்ற ஒப்பற்ற தன்மையுடைய ஆசிரியப் பெருமானே, முப்பொருள்களாகிய பதி, பசு, பாசம் ஆகிய மூன்றும் என்றும் அழியாத நித்தப் பொருள்கள என்று விளக்கினீர். முதநி நிலையில் இந்த மூன்று பொருள்களும் எவ்வாறு இருக்கும் என்பதனை நான் புரிந்துகொள்ளும் வண்ணம் எனக்கு விளக்கி அருளுவீராக.
"பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில் பதியினைப் போல் பக பாசம் அநாதி" என்பது திருமந்திரம். சைவ சித்தாந்தக் கொள்கை யின்படி இறை, உயிர், தளை எள்ற மூன்றும் நித்தப்பொருள்களே: அதாவது இவை மூன்றும் தோற்றமில் பொருள்கள். தோற்றமில் பொருள்களை அநாதி என்ற சொல்லால் குறிப்பர். தோற்றமில்லை, எனவேஇவற்றுக்கு அழிவுமில்லை.முத்திநிலையில் உயிர்கள் இறைவனை அடைந்து ஈறில்லா இன்பத்து விளங்கும் அப்போது உயிரி தன் தனித்
سے 56 سے

தன்மையை இழந்து சிவனேயாக மாறுவதனால் உயிர் என்ற பொருள் இல்லாது போகுமா? உயிரைப் பற்றி நின்ற குற்றமாகிய மலம் உயிர் சிவத்துடன் பொருந்தித் தூய்மை நிலை அடைந்து விடுவதால் பற் றுக் கோடு இன்றி அழிந்து போகுமா? இவ்வாறு எழும் ஐயங்களை விளக்கி அருளுமாறு தம் ஞான ஆசிரியரை மாணவர் வேண்டிக் கொள்கிறார்.
முத்திநிலையில் முப்பொருள் - விடை
முத்திதனில் மூன்று முதலும் மொழியக் கேள் சுத்த அனு போகத்தைத் துய்த்தல் அணு - மெத்தவே இன்பங் கொடுத்தல் இறை, இத்தை விளைவித்தல் மலம் அன்புடனே கண்டுகொள் அப்பா. Se
முத்தி நிலையில் இறை உயிர் தளை ஆகிய முப்பொருள்களும் எவ்வாறு இருக்கும் என்பதைச் சொல்லக் கேட்பாயாக. துன்பக் கலப்பு இல்லாத பேரின்பத்தை நுகர்ந்து மகிழ்வது உயிர். அத்தகைய பேரின் பத்தை உயிருக்கு வழங்கிக கொண்டிருப்பது இறை, அவ் வின்பத்தை விளைவித்து நிற்பது தளை.
சைவ சித்தாந்த மெய்ப்பொருளியலில் பதி பசு பாசம் என்ற முப் பொருள்களும் நிந்தப்பொருள்கள். முத்திநிலையில் இவற்றுள் ஏதே னும் ஒன்று இல்லாது போகுமா? என்பது கேள்வி சில தத்துவ ஆகிரியர்கள் சிவான்மா என்பது ஒன்று இல்லையாகிப் பரமான்மா என்ற ஒன்றே இருக்கின்ற நிலை முத்திநிலை என்பர். இவர்கள் ரகான்மவாதிகள் எனப்படுவர். இந்தக் கொள்கை சைவ சித்தாந்தத் துக்கு ஏற்புடையது அன்று.
மற்றும் சிலர் முத்தி நிலையில் ஆன்மா தனக்கே உரிய ஆனந்தத் தைத்தானே அனுபவித்துக்கொண்டிருக்கும் என்று கொள்ளுவார்கள். இவர்கள் ஆன்மாந்தவாதிகள் எனப்படுவர். இந்தக் கொள்கையும் சைவசித்தாந்தத்துக்கு உடன்பாடு அன்று. ஆனந்தம் என்பது ஆன்மா இறைவனிடமிருந்தே பெறக்கூடியதே அன்றி ஆன்மாவுக்கு உரிய குனங்களில் ஆனந்தமும் ஒன்று என்பது சைவசித்தாந்திகளால் ஏற் றுக்கொள்ளப்படுவதில்லை.
வேறு சிலர் முத்தி நிலையில் ஆன்மா சிவத்தோடு சமமாக இருக் கும். சிவபெருமானால் இயற்றப்படும் ஐந்தொழில்களையும் முத்தி படைந்த ஆன்மா இயற்றும் வல்லமை பெற்றிருக்கும் என்று கூறுவர் இவர் கள் சிவசமவாதிகள் என ப் படு வ ரி. முத்தி நிலையிலும் ஆன்மா, ஆன்மாவாகவே இருக்கும். சிவம், சிவமாகவே இருக்கும். பரம் பொருளின் தன்மையை, இயல்பை, ஆற்றலை உயிர் ஒருபோதும் எய்த முடியாது என்பது சைவ கித்தாந்தம் கூறும் உண்மை,
سے 57 سے

Page 33
மலம் தோற்றமில் காலந்தொட்டே உயிரைப் பிணித்து அதனை அணுத் தன்மைப்படுத்தி எல்லாப் பெருங்கேட்டிற்கும் காரணமாக விளங்கும் என்று சைவ சித்தாநதம் கூறுகிறதே. அந்த மலம் முத்தி நிலையில் எவ்வாறு இருக்கும் என்பது அடுத்த கேள்வி.மலத்தின் பிடிப்பு உயிருக்குக் கட்டு நிலையில் தளையாக இருக்கும். சிவபெருமான் அரு ளால் மலத்தின் நீக்கம் உயிரிகளுக்கு சிவானந்தம் பேரின்பத்தை முத்தி நிலையில் நல்கும் என்பது சைவ சித்தாந்தம் கூறும் விளக்கம், இதுவே "இததை விளைவித்தல் மலம்' என்ற சொற்களால் குறிப்பிடப்பட்டது
சுருக்கமாகச் சொல்வதானால், முத்திநிலையில் முப்பொருள்களா கிய இறை, உயிர், தளை ன்ற மூன்றும் உள்ளன. இறைஷ்ன் முத்தி யடைந்த உயிர்களுக்கு பேரா ஒழியாப் பிரிவில்லா மறவர் நினையா அளவிலலா மானா துன்பததை வழங்கிக கொண்டிருப்பான, உயிா அத தகைய பேரின்பததை இடைவிடாமல் நுகாந்து கொண்டிருக்கும், திரு வருளால வலிமடங்கிய மலம் தன நீககததால் இந்த இன்ப விளைவிற குக காரணமாக நிற்கும், "நின்று போத்திருத்துவததை நிகழ்த்திச் வசம்பினில கவிம்பு ஏயதது" என்ற அருளநநதி சிவனாரின் தருவககு துணுகி உணரத தக்கது,
முத்திக்கு வழி
அப்பா இம்முத்திக்கு அழியாத காரணந்தான் செப்பாய் அருவாலே; செப்பக்கேள் - ஒப்பில் குருலிங்க வேடம் எனக்கூறில் இவை கொண்டார் கருவொன்றி நில்லார்கள் காண். 5
"ஞானத் தந்தையே, இத்தகைய முத்தியை அடைவதற்கு அழி யாத நெறியை அருள் கூர்ந்து தெரிவிப்பீராக’ என்று மாணவா வேன டுகிறார், ஆசிரியர் ‘ஒப்பற்ற குருவழிபாடும், லிங்க வழிபாடும். அடி யார் வழிபாடும் ஆகிய இவையே முத்திக்கு உரிய நெறி, இவற்றைதி தவறின்றிச் செய்து வருபவர்கள் மீண்டும் பிறவாத நிலையை அடை வார்கள்" என்று மறுமொழி கூறுகிறார்.
சைவ சமயத்தில் வழிபாடுகள் மூன்று வகையாகக் கொள்ளப்படு கின்றன. முதலாவது, ஞான ஆசிரியரை வழிபடுதல்,இவ்வாறு வழிபட்டு வீடுபேறு அடைந்தோா அப்பூதியடிகள், பெருமிழலைக் குறுமபா ஆகிய தாயன்மார்கள். லிங்க வழிபாடு என்பது ‘காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய், நீள்நாகம் அணிந்தார்க்கு நிகழ் குறியாம்" சிவலிங்கத்தினை முறைப்படி வழிபடுதல், இவ்வாறு வழிபட்டு வீடுபேறு அடைந்தவர்கள் கண்ணப்பநாயனார்.
ــ 558 سم

சண்டேச நாயனார் முதலிய பலர், சங்கம வழிபாடு என்பது அடி யார்களை வழிபடுதல் ஆகும். சிவனடியார்களை வழிபட்டு வீடுபேறு அடைந்தவர்கள் மெய்ப்பொருள் நாயனார். காரைக்கால் அம்மை யாரி போன்ற பலர்.
சிவஞான சித்தியாரில் குரு வழிபாட்டையும் சங்கம வழிபாட் டையும் "சங்கமம்" என்ற தலைப்பில் அடக்கி, லிங்க வழிபாட்டை "தாபரம்" என்ற தலைப்பில் அடக்கி,
"தாபர சங்கமங்கள் என்றிரண்டு உருவினின்று
மாபரன் பூசை கொண்டு மன்னுயிர்கரு அருளை வைப்பன்" என்று இக்கருத்து விளக்கப்பட்டுள்ளது:
முத்தித் தலைவரின் பத்தி
கற்றாமனம் போல் கசிந்து கசிந்தே யுருகி உற்று ஆசான் லிங்கம் உயர்வேடம் - பற்றாக முத்தித் தலைவர் முழுமலத்தை மோசிக்கும் பத்திதனில் நின்றிடுவா பார். 52
தாய்ப்பசு தன் கன்றினிடத்து அன்பு பாராட்டுவதுபோல் உள் ளம் கசிந்து, மனம் உருகி குரு லிங்க சங்கம வழிபாட்டில் தீராத ஆர்வம் கொண்டு உறைத்து நிற்பதே பத்தி நெறி ஆகும். இதுவே மிலத்தை முழுவதும் அகற்றுகின்ற வழியும் ஆகும்,
தன்னலமற்ற தாய் அன்பிற்கு எடுத்துக்காட்டு, தாய்ப்பசு தன் கன்றினிடத்தே காட்டுகின்ற அன்பு, திருவாசகத்தில் மாணிக்கவாசகர் *கற்றா மனம்போலக் கசிந்து உருக வேண்டுவனே' என்று வேண்டு வதும், காளத்திமலையில் குடுமித்தேவரை விட்டுப்பிரிய மனமில்லா மல் கண்ணப்பநாயனார் தயங்குவதை சேக்கிழார் பெருமான் “கன்று அகல் புளிற்றாப் போல்வார்' என்று கூறுவதும் இங்கே நினைக்கத் தகும்.
olíř உடலைவிட்டு நீங்கிய பிறகே முத்திப்பேறு அடைய முடி யும் என்பது ஒருசாரார் கொள்கை. இது விதேக முத்தி அதாவது தேகத்தை விட்டொழித்தபின் பெறுகிற முத்தி என்று கூறப்படும்,
சைவசித்தாந்தத்தில் சீவன்முத்தி அதாவது இவ்உலகத்தில் வாழ் கின்றபோதே முத்திநிலை எய்துதல் கூடும் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அத்தகைய பெருமக்கள் சீவன்முத்தர் என்று அழைக்கப்படுவர். அவர்கள் இவ்உலகில் வாழ்வது தம்பொருட்டு
ത്ത് 59 -

Page 34
அன்று பிறருக்கு வழிகாட்டி அருள்பாலிக்கும் பொருட்டே. எனவே முத்திநிலை அடைந்தபின்பும் குருலிங்க சங்கம வழிபாட்டில் இடை விடாத பற்றுக்கொண்டு தteக்கென வாழாப் பிறர்க்கு உரியாளராக அவர்கள் வாழ்வார்கள்.
மாணவரின் நன்றி
வாழ்ந்தேன் அருட்கடலே வற்றாப் பவக்கடலில் வீழ்ந்தே அலையாமல் மேதினியில் - சூழ்ந்து விடா வெண்ணெய்ச் சுவேதவன மெய்கண்ட நாதனே உண்மைத் தவப்பயனே உற்று. S3
திருவெண்ணெய்நல்லூரில் எழுந்தருளியிருந்து சுவேதவனப் பெருமான் என்னும் பிள்ளைத் திருநாமம் பெற்ற மெய்கண்டதாத னாக விளங்கி அருளும் ஞான ஆசிரியப் பெருந்தகையே, தங்கள் அருள் உபதேசங்களைச் செவிமடுத்துப் பின்பற்றியதன் பயனாக இவ்வுலகில் மீண்டும் மீண்டும் எல்லையில்லாத பிறவிக்கடலில் மூழ்கி அழுந்தாமல் உம்முடைய திருவடிகளைப் பற்றி உண்மைத் தவப் பயனாகிய நற்கதியைப் பெற்றேன். அருட்கடலே, உம்திருவடிகளுக்கு என் நன்றியும் வணக்கமும்,
سه 60 است.
 

கணபதி துணை
நீதி வெண்பா
மூலமும் உரையும்
காப்பு
மூதுணர்ந்தோ ரோதுசில மூதுரையைப் பேதையேன் நீதிவெண்பா வாக நிகழ்த்துவேன் - ஆதிபரன் வாமான் கருணை மணியுதரம் பூத்தமுதற் கோமான் பெருங்கருணை கொண்டு.
இதன் பொருள். பேதையேன் - அறிவில்லாதவனாகிய டான். - ஆதிபரன் - முதற் கடவுளாகிய சிவபெருமானுடைய - வாமம் மான்இடப்பாகத்திலே பொருந்திய உமாதேவியார், - கருனை ட்ரிை உதரம்பூத்த - அருளினாலே தமது திருவயிற்றினின்றுந் தோன்று வித்த - முதல் கோமான் பெரும் கருணை கொண்டு - மூத்த பிள்ளை யாகிய விநாயகக் கடவுளுடைய பெருமையாகிய அருளினால்முதுணர்ந்தோரி ஒது சில மூதுரையை - பேரறிஞர்கள் சொல்லிய சில நீதிமொழிகளை - நீதிவெண்பா ஆக நிகழ்த்துவேன் - நீதி வெண்பா என்னும் நூலாகப் பாடுவேன் என்றவாறு,
атиоћ என்பது வாம் எனக் கடை குறைந்து நின்றது.
இதனது தாற்பரியம். யான் நீதிவெண்பாவைப் பாடுதற்கு
விநாயகக் கடவுள் துணை என்பதாம்.
nuo 6 --

Page 35
தாமரைபொன் முத்துச் சவரங்கோ ரோசனைபால் பூமருதேன் பட்டுப் புனுகுசவ்வா - தாமழன்மற் றெங்கே பிறந்தாலு மெள்ளாரே நல்லோர்கள் எங்கே பிறந்தாலு மென்.
இ - ள். தாமரை - தாமரையும், - பொன்-பொன்னும், - முத்து - முத்தும், - சவரம் - சாமரையும், - கோரோசனை,-கோரோசனையும்பால் - {:சுவின்) பாலும், - பூமருதேன் - பொலிவாகிய தேனும், . பட்டு - பட்டும்,- புனுகு - புனுகும். சவ்வாது -சவ்வாதும்,-ஆம்அழல். எரிகின்ற நெருப்பும் (ஆ&Rஇவைகள்),கனங்கே பிறந்தாலும் எள்ளாரே - எந்த இடத்திலே பிறந்தாலும் (ஒருவரும்) இதழார்களல்லவா? - (அவையே: ல) - நல்லோர்கள் காங்கே பிறந்தாலும் என் - நல்லவர்கள் எங்கே பிறந்தாலும் இகழப்படமாட்டார். எ-று. மற்று அசை,
இ.ம். நல்லோரி இழிந்த சாதியிற் பிறந்தாராயினும் நல்லவ ராகவே மதிக்கப்படுவரீ, எ-ம்.
அரிமந் திரம்புகுந்தா லானை மருப்பும் பெருகொளிசேர் முத்தும் பெறலாம் - நரிநுழையில் வாலுஞ் சிறிய மயிரெலும்புங் கர்த்தபத்தின் தோலுமல்லால் வேறுமுண்டோ சொல்.
இ - ள், அரிமந்திரம் புதந்தால் - சிங்கத்தின் குகையிற்போனால்,. ஆனை மருப்பும் - யானைக் கொம்புகளையும், பெருகு ஒளிசேர் முத்தும் பெறலாம் - மிகுந்த ஒளியையுடைய முத்துக்களையும் பெற்றுக்கொள்ளலாம். - நரி நுழையில் - நரியினுடைய குழியில்,-
சிறிய வாலும் - எளிய வால்களும், - மயிர் - மயிர்களும், - எலும்பும் - எலும்புகளும், - கர்த்தடத்தின் தோலும் அல் லால் - சழுதையின் தோல்களுமல்லாமல் - வேறும் உண்
டோ சொல் . வேறு (உயர்ந்த) பொருளும் உண்டோ நீ சொல் en frumrés. 67 - gy.
இ-ம் பெரியோரை அடுத்தால் உயர்வும், சிறியோரை அடுத்தால் இழிவும் உண்டாம். எ-ம்.
அறிவன் பகையேனு மன்புசேர் நட்பாஞ் சிறுவன் பகையாஞ் செறிந்த - அறிவுடைய வென்றி வனசரன்றான் வேதியனைக் காத்தான்முன் கொன்றதொரு வேந்தைக் குரங்கு.
- به سفهٔ 62 مست.

இ - ள். அறிவன் ப ைகபேனுல் - அறிவுள்ளவன் பகைவனா னாலு:ல்,- அன்பு சேர் நட்பு ஆம் - அன்புபொருந்திய நட்பைப் பாராட்டுவன் - சிறுவன் பகை ஆம் - மூடன் (சினேகனானாலும்) பகையையே பாராட்டுவன் i - முன் - முன்னாளில், - செறிந்த அறிவு வென்றி உடைய வனசரன் - மிகுந்த அறிவையும் வெற்றியையும் உடைய ஒரு வேடன்,-வேதியனைக் காத்தான். ஒரு பிராமணனைக் (கொலையினின்று)காப்பாற்றினான்-குரங்கு ஒரு வேந்தைக் கொன்றது -(அறிவில்வாத ஒரு) குரங்கு ஒர் அரசனைக் கொன்றது. எ-று. தான் அசை.
இ-ம் அறிஞருடைய பகையினும் மூடருடைய சிநேகந் துன்பஞ் Goar uiuuqui. GT-b. -
ஓர் அரசன் ஒரு பிராமணனுக்கு ஒரு மாணிக்க ரத்தினத்தைக் கொடுத்து, "நீ போகிற வழியில் திருடர்கள் இருக்கவுங் கூடும்: ஆதலால் இதைவிழுங்கி ஊருக்குப் போய்க் கக்கி எடுத்துக்கொள்" என்று சொன்னான். அதை அறிந்த ஒரு வேடன் பிராமணனைத் தொடர்ந்து போய்க் காட்டுவழியில் மறித்து, "உன் வயிற்றிலிருக்கும் மாணிக்கத்தைத் தா" என்று பயமுறுத்தினான். பிராமனன் அது என் கயிற்றினுளில்லை உன் வயிற்றினுள்ளே தான் இருக்கின்றது? என்றான். இப்படி இவர்கள் இருவரும் வழக்கிட்டுக் கொண்டிருக்கும் போது, அந்தவழியிலே வந்த திருடரிகள் அவ்விருவர் வயிற்றையும் இறிப் பார்க்கு படி முயன்றார்கள். வேடன் "பிராமணன் இறக்கும்படி நேர்ந்ததே" என்று இரங்கி, "நாங்களிருவரும் விளையாட்டாகப் பேசினோம் உங்களுக்குச் சந்தேசம் உண்டானால் முன்னே என் வயிற்றைச் சோதியுங்கள்" என்றான்.திருடர்கள் அப்படியே சோதித்து, வேடனுடைய வயிற்றில் மாணிக்கம் இல்லாமையினாற் பிராமணனை விட்டு விட்டார்கள்.
ஒர் அரசன் தான் வளர்த்த குரங்கின் கையில் வாளைச் கொடுத்து, "இவ்விடத்தில் யாரையும் வரவொட்டாமற் காத்திரு என்று சொல்லி அதைக் காவலாக வைத்து, நித்திரை செய்தான், அரசன் மேலே ஒ* ஈ வந்திருக்கக் கண்டு குரங்கு அதனை வெட்ட அரசன் இரண்டு துண்டாய் இறந்தான். (3)
மென்மதுர வாக்கால் விரும்புஞ் சகங்கடின வன்மொழியினாலிகழு மண்ணுலகம்-நன்மொழியை ஒதுகுயி லேதங் குதவியது கர்த்தபந்தான் ஏதபரா தஞ்செய்த தின்று.
, سے 63 سیسے

Page 36
இ-ஸ். சகம் - பூமியிலுள்ளவர்கள்.--மெல் மதுர வாக்கால் விரும் பும் - (ஒருவருடைய)மென்மையாகிய இன்சொல்லைக் கேட்டலினால் விரும்பிப் புகழ்வரி,-மண்ணுலகம் - அப்பூமியிலுள்ளோர்-கடினவல் மொழியினால் இகழும் - கடுமையாகியவன் சொல்லைக் கேட்டலினால் (வெறுத்து) இகழ்வர்.-நல்மொழியை ஒது குயில் ஏது உதவியது - நல் விசையைக் கூவுகின்ற குயில் (உலகத்தாருக்கு) எதனைக் கொடுத்தது? - கர்த்தபம் ஏது அபராதம் செய்தது - (வன்மையாகக் கத்துகின்ற) கழுதை என்ன பிழையைச் செய்தது? - இன்று(இரண்டும்) இல்லை. எ - று. இங்கு, தான் அசை,
இ-ம். உலகத்தார் இன்சொல்லைக் கேட்டுப் புசழ்இர். வன் சொல்லைக் கேட்டு இகழ்வர். எ-ம்.
பகைசேரு மெண்ணான்கு பற்கொண்டே நன்னா வகைசேர் சுவையருந்து மாபோற் - றொகைசேர் பகைவரிட மெய்யன்பு பாவித் தவராற் சுகமுறுத னல்லோர் தொழில்.
இ-ஸ். நல் நா - நல்ல நாக்கு, - பகை சேரும் எண்ணான்கு பல் கொண்டே - பகையையுடைய முப்பத்திரண்டு பற்களையும் (துணை யாகக்) கொண்டே என வகைசேர் சுவை அருந்து மாபோல் - பலவகைப் பட்ட உணவுகளை உண்ணுந் தன்மைபோல, - நல்லோர் தொழில் - நல்லவர்களுடைய செய்கை, - தொகைசேர் பகைவரிடம் மெய்யன்பு பாவித்து - மிகுந்த பகைவர்களிடத்தில் மெய்யன்பைப் பாராட்டி - அவரால் சுகம் உறுதல் - அவர்களால் (தாம்) இன்பத்தை அடைத 6vnh. 6r - g.
இ. ம், நல்லோர்கள் பகைவர்களிடத்தும் அன்பு பாராட்டி, அவராற் சுகம் அடைவர் எ ம்.
நாக்கினிடத்துப் பல்லுக்குள்ள பகைமையாவது அதனைச் லே வேளை கடித்தல்,
காந்தனில் லாத கணங்குழலாள் பொற்பவமாஞ் சாந்தகுண மில்லார் தவமவமாம் - ஏந்திழையே அன்னையில்லாப் பிள்ளை யிருப்ப தவமவமே துன்னெயிறில் லாரூண் சுவை. இ - ள். ஏத்து இழையே - ஏற்திய ஆபரணங்களையுடைய பெண்ணே,  ைகாந்தன் இல்லாத கனம் குழலாள் பொற்பு அவம் ஆம் -
محسس 64 =سسة

நாயகனில்லாத பாரமாகிய கூந்தலையுடைய டெண்ணின் அழகு வீணாம்,-சாந்த குணம் இல்லார் தவம் அவம் ஆம்-பொறுமைக்குணம்
இல்லாதவர்களுடைய தவம் வீணாம், - அன்னை இல்லாப் பிள்ள்ை இருப்பது அவம் - தாயில்லாப் பிள்ளை இருப்பது வீணாம். - துன் எயிறு இல்லார் ஊண் சுவை அவம் - நெருங்கிய பற்களில்லாதவ்
ருடைய போசனச் சுவை வீணாம். எ - று. ஏ அசை.
இ-ம். நாயகனில்லாமையினாற் பெண்களுக்கும், பொறுமையில் லாமையினால் தவம் செய்வோர்க்கும், தாயில்லாமையினாற் பிள்ளை களுக்கும், பல்லில்லாமையினால் உண்பவர்களுக்கும் இன்பமில்லை. ст - tb.
வருத்தவளை வேயரசர் மாமுடியின் மேலாம் வருத்த வளையாத மூங்கில் - தரித்திரமாய் வேழம்பர் கைப்புகுந்து மேதினியெல் லாந்திரிந்து தாழுமவர் தம்மடிக்கீழ்த் தான்.
இ - ள். வருத்த வளை வேய் - வளைக்க வளைகின்ற (இளைய) மூங்கில்-அரசர் மாமுடியின் மேல் ஆம் - அரசர்களுடைய பெருமை யாகிய முடிக்கு மேலே (சிவிகைக்கொம்பாய்) உயர்வை அடையும், - வருத்த வளையாத மூங்கில்-வளைக்க வளையாத(முற்றிய)மூங்கில், -- தரித்திரமாய் வேழம்பர் கைப்புகுந்து - தரித்திரப்பட்டுக் கழைக்கூத் தாடிகளுடைய கையிற் போய், - மேதினி எல்லாம் திரிந்து - பூமியெங் கும் உலைந்து.-அவர் அடிக்கீழ்தாமும்-அவர்களுடைய காலின் கீழா இழிவை அடையும், எ - று. தம், தான் விசை
இ-ம். இளமையில் வருத்தப்பட்டுக் கற்றவர் பெருமையடைவரி; அப்படிக் கல்லாதவர் சிறுமையடைவர். எ - ம், (7)
நொய்தாந் திரணத்தி னொய்தாகும் வெண்பஞ்சின் நொய்தா மிரப்போ னுவலுங்கால் - நொய்யசிறு பஞ்சுதனி னொய்யானைப் பற்றாதோ காற்றணுக அஞ்சுமவன் கேட்ப தறிந்து.
இ - ள், நுவலுங்கால் - சொல்லு மிடத் து, - இர ப் போ ன் - வாசகன், - நொய்து ஆம் திரணத்தின் நொய்து ஆகும் வெண் பஞ்சின் - நொய்ம்மையாகிய துரும்பினும் நொய் ம் மை யு .ை ய வெண்பஞ்சினும் - நொய்து ஆம் - (மிக) நொப்ம்மையுடையவனாம் - காற்று - காற்றானது, - நொய்ய சிறு பஞ்சுத வின் நொய்யானை

Page 37
பற்றாதோ - தொய்ம்மையாகிய எளிய பஞ்சைப் பார்க்கினும் (மிகர் நொய்ம்மையுடையவனாகிய இவனை அடித்துக் கொண்டு போகாதோ (எனின்) - அவன் கே , , து அறிந்து அணுக அஞ்சும் - அவன் (ஏதேனும்) கேட்பான் என்பதை அறிந்து (அது அவனுக்குக்) கிட் உப்போதற்குப் டப்படும். எ - று.
இ - ம், இரப்பவர் மிகவும் எளியவர். எ - ம். (8)
ஒருபோது யோகியே யொண்டளிர்க்கை LDr.G இருபோது போகியே யென் - திரிபோது ரோகியே நான்குபோ துண்பா னுடல்விட்டுப் போகியே யென்று புகல்.
இ~ள். ஒள் தளிர்க்கை ம தே - ஒள்ளிய தளிர்போலுங்கைகனை டைய பெண்ணே உ ஒருபோது போஇ . ஒரு பொழுது salaray) யோகிக்கும், ட இருபோது போகி - இரு பொழுது (உணவு) போகிக் கும் உரியன. - என்ப . என்று அறிஞர் சொல்லுவர். - திரிபோது 62-67 ji? Går QBrrrgga, - முப்பொழுதுண்பவன் வியாதியாளனே, ட A576* & Ger73, alleierzysraë, உடல் விட்டுப் போகியே என்று புகல் - நான்கு பொழுது உண்பவன் இறப்பவனே சின்று சொல் வா யா க. 7ெ * ஏ அதுை.
இ - ம். யோகிக்க ஒரு கால போசனமும் போகிக்கு இரண்டு கால போசனமும் உரியன: மூன்று கால போசனம் நோயையும் தான்கு கால போசனம் மரணத்தையும் செய்யும், ன - ιδε (9)
கண்ணிரண்டே யாவர்க்குங் கற்றோர்க்கு மூன்றுவிழி எண்ணுவிழி யேழாகு மீவோர்க்கு - நண்ணும் அநந்தந் தவத்தா லருண்ஞானம் பெற்றோர்க் கநந்தம் விழியென் ,שמ(.
இ - ள். பாவரிக்கும் கண் இரண்டே. எல்லாருக்கும் கண்கள் இரண்டே (ஆயினும்), - சிற்றோர்க்கு மூன்று விழி - கற்றவர்க்கு மூன்று கண்களாம் ட ஈவோர்க்கு எண்ணு விழி ஏழாகும் - கொடை யாளர்களுக்குக் கணக்கிடப்படுங் கண்கள் ஏழாம். - நண்ணும் அரந் தம் சித்தால் - பொருந்திய (பலனைக் கொடுத்த விடத்துப் பசு புண்ணரியங்கள் போல) அழியாத சரியை கிரியை யோகங்களால், ”*ருள் ஞானம் பெற்றோர்க்கு - திருவடி ஞானத்தைப் பெற்றவர்
سہی۔ 66 ست۔

களுக்கு விழி அநந்தம் என்று அறி. கண்கள் அளவில்லாதன என்று அறிவாயாக. எ - று,
இ - ம். மறுஉருள்ளே கற்றோரும், அவரினும் ஈகையாளரும் அவரினும் ஞானிகளும் சிறந்தவர். எ - ம்
கற்றவர்க்குக் கண்கள் இரண்டோடு கல்வியையும், ஈவோர்க்கு நகக்கண்கள் ஐந்தையும், சேர்த்து முறையே கண்கள் மூன்றெனவும் ஏழெனவும், ஞானிகள் எல்லாவற்றையும் அறிதலினால் அவர்களுக் குக் கண்கள் அநந்தம் எனவும் கூறினார். (10)
உற்றபெருஞ் சுற்ற முறநன் மனைவியுடன் பற்றிமிக வாழ்க பசுவின்வால் - பற்றி நதிகடத்த லன்றியே நாயின் வால் பற்றி நதிகடத்த லுண்டோ நவில்,
இ- ள், உற்ற பெரும் சுற்றம் உற - பொருந்திய பெரிய உறவி னர் சூழ, - நன் மனைவியுடன் பற்றி மிக வாழ்க - நன் மனையர் ளோடு கூடி மிக வாழுக, - பசுவின் வால்பற்றி நதி கடத்தல் அன்றி - பசுவின் வாலைப் பிடித்துக்கொண்டு ஆற்றைத் தாண்டுவ தல்லாமல்,-நாயின் வால் பற்றி நதி கடத்தல் உண்டோ - நாயின் வாலைப் பிடித்துக்கெண்டு ஆற்றைத் தாண்டுவதுண்டோ? - நவில் - நீ சொல்வாயாக. எ - று. ஏ அசை.
இ - ம். தன் மனையாளல்லாத மற்றைப் பெண்களோடு கூடி வாழ்தல் துன்பத்துக்கேதுவாகும். எ - ம். (11)
ஆசைக் கடியா னகிலலோ கத்தினுக்கும் ஆசற்ற நல்லடியா னாவானே - ஆசை தனையடிமை கொண்டவனே தப்பா துலகந் தனையடிமை கொண்டவனே தான்.
இ - ல் ஆசைக்கு அடியானே - ஆசைக்கு அடிமைப்பட்ட வனே. - அகில லோகத்தினுக்கும் ஆசு அற்ற நல் அடியான் ஆவான் - எல்லா வுலகங்களுக்கும் குற்றமற்ற நல்ல அடிமையா வன், - ஆசைதனை அடிமைகொண்டவனே - ஆசையைத் தனக்கு அடிமையாகக் கொண்டவனே - உலகந்தனைத் தப்பாது அடிமை கொண்டவன் - உலகத்தைத் தவறாமல் (தனக்கு) அடிமையாகப் பெற்றுக்கொண்டவன். எ - று. ஏ, தான் அசை,
இ - ம். ஆசையில்லாதவனுக்கு உலகம் வசப்படும் எ-ம். (12)
- 67- -

Page 38
ஆனந் தணர்மகளி ரன்பாங் குழந்தைவதை மானந் தரும்பிசி வார்த்தையிவை - மேனிரையே கூறவரு பாவங் குறையா தொவ் வொன்றுக்கு நூறதிக மென்றே நுவல்.
இ - ள் ஆன் - பசுவையும், - அந்தணர் - பிராமணரையும், - மகளிர் - பெண்களையும், அன்பு ஆம் குழத்தை - அன்பையுடைய குழந்தையையும் - விதை - கொல்லுதலும், -மானம் தரும் பிசி வார்த்தை இவை - இகழ்ச்சியைத் தருகின்ற பொய்யும் ஆகிய இவை கள், -மேல்" நிரையே கூற வருபாவம் குறையாது - மேலே வரிசை பாகச்சொல்ல வருகின்ற பாவங்குறைய மல், - ஒவ்வொன்றுக்கு நூறு அதிகம் என்று நுவல்-ஒன்றுக்கு ஒன்று நூறு மடங்கு அதிகம் என்று சொல்வாயாக. எ-று. ஏ அசை,
இ-ம்: பசுக்களையும் பிராமணர்களையும் பெண்கவையும் குழந் தைகளையும் கொல்லுதலும், பொய்- கூறுதலும் ஆகிய இவற்றால் வரும் பாவங்கள் ஒன்றுக்கொன்று நூறுமடங்கதிகம் எ-ம் (13)
பெற்றமையு மென்னாப் பெரியோரும் பெற்றபொருண் மற்றமையு மென்றே மகிழ்வேந்து - முற்றியநன் மானமில்லா வில்லாளு மானமுறு வேசியரும் ஈண முறுவா ரிவர்.
இ - ள். பெற்று அமையும் என்னாப் பெரியோரும் - ( பொரு ளைப்) பெற்றுத் திருப்தியடையாத பெரியோர்களும்; - பெற்ற
பொருள் மற்று அமையும் என்று மகிழ் வேந்தும் - கிடைத்த பொருள்
இனிப் போதும் என்று திருப்தியடையும் அரசினும்,- முற்றிய நல் மாணம் இலா இல்லாளும் - மிகுந்த நல்ல நாணம் இல்லாத மனை யாளும், - மானம் உறு வேசியரும்-நாண மடைகின்ற பொதுப் பெண்களும் (ஆகிய). - இவர்-இவர்கள்.-ஈனம் உறுவார் - தாழ்வை அடைவார்கள். எ-று. ஏ அசை.
இகம்" கிடைந்த பொருளிலே திருப்தியடையாமையினாற் யெரியோர்களுக்கும், அதிலே திருப்தியடைதலால் அரசருக்கும் நாணமில்லாலமயினாற் பெண்களுக்கும், அதனையுடைமையால் வேசிகளுககும், தாழ்வுண்டாகும். எ-ம்.
- 68 , sa

கற்றோர் கனமறிவர் கற்றோரே கற்றறியா மற்றோ ரறியார் வருத்தமுறப் - பெற்றறியா வந்தி பரிவாய் மகவைப் பெருந்துயரம் நொந்தறிகு வாளோ நுவல். 14
இ. ஸ். கற்றோர் கனம் கற்றோரே அறிவரி - படித்தவர்களுடைய பெருமையைப் படித்தவர்களே அறிவார்கள் - கற்று அறியா மற்றோர் அறியார் - படித்தறியாத மூடர்கள் அறியமாட்டார்கள். வருத்தம் உறப்பெற்று அறியா வந்தி - வருத்த முண்டாகப் (பிள்ளையைப்) பெற்றறியாத மலடியானவள் - பரிவாய் மகவைக பெறும் துயரம் நொதது அறிகுவாளோ - வருத்தப்பட்டுப் பிள்ளை யைப் பெறுந்துன்பத்தைத் (தான்) துன்பப்பட்டறிவாளோ? - நுவல் நீ சொல்வாயாக. எ - று,
,)15(.கற்றவருடைய பெருமையைக் கற்றவரே அறிவர். எ-ம் و قد-(ق
செய்யு மொருகருமந் தேர்ந்து புரிவதன்றிச்
செய்யின் மனத்தாபஞ் சேருமே - செய்யவொரு
நற்குடியைக் காத்த நகுலனைமுன் கொன்றமறைப் பொற்கொடியைச் சேர்துயரம் போல்.
இ-ள். செய்யும் ஒரு கருமம் - செய்யவேண்டிய ஒரு தொழிலை, தேர்ந்து புரிவது அன்றி - யோசித்துச் செய்வதல்லாமல், செய்யின் - யோசியாமற்) செய்தால், - முன் - முன்னாளிலே - செய்ய ஒரு நல் குடியைக் காத்த - செப்பமாகிய ஒரு நல்ல வீட்டைக் கத்துக்கொண் டிருந்த,-நகுலனைக்கொன்ற - கீரிப்பிள்ளையைக் கொன்ற, - பொன் மறைக்கொடியைச் சேர்துயரம் போல் - அழகிய பிராமணப் பெண் னைச் சேர்ந்த துன்பத்தைப் போல, - மனத் தாபம் சேரும் - மனத் துயரம் உண்டாகும், எ - று, ஏ விசை.
இ-ம். முன்பு நன்றாக யோசிய மற் செய்யும் காரியம் பின்பு துன் , பத்தைக் கொடுக்கும். எ-ம்.
ஒரு பிராமண ஸ்திரீ புத்திரவாஞ்சையினால் ஒரு கீரிப்பிள்ளையை , வளர்த்துவரு நாளில், அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அவள் ஒரு நாள் அக்குழந்தையைத் தொட்டிலில் கிடத்திவிட்டு ஸ்தானத்திற்குப் போயினாள். அப்பொழுது ஒரு பாம்பு குழந்தைக்குக் கிட்டப் போகக் கீரிப்பிள்ளை பாம்பைக் கடித்துக் கொன்றுவிட்டு, ஸ்நானஞ்செய்து வந்த பிராமணஸ்திரிக்கு முன் இரத்தம் தோய்ந்த வாயுடன் ஓடிப்
- 69 -in

Page 39
போயிற்று, அவள் தன் குழந்தையைக் கீரிப்பிள்ளை கடித்ததாப் எண்ணி, அதைக் கொன்றுவிட்டு உள்ளே வந்து தன் குழந்தை உயிரோ டிருத்தலையும் பாம்பு துண்டாய்க் கிடத்தலையும் கண்டு, தானும் உயிரைவிட்டாள். w (16)
நாவி னுணியி னயமிருக்கிற் பூமாதும் நாவினிய நல்லோரு நண்ணுவார் - நாவினுணி ஆங்க டினமாகி லத்திருவுஞ் சேராண்முன் ஆங்கே வருமரண மாம்.
இ - ள், நாவின் நுனியில் ஈயம் இருக்கில் - நாக்கு நுனியில் இன் சொல்லிருந்தால், - பூமாதும் நா இனிய தல்லோரும் நண்ணுவாரி - இலக்குமியும் இன்சொல்லையுடைய நல்லோரும் பொருந்துவர். -- நாவின் நுனி கடினம் ஆம் ஆகில் - தாக்கு நுனியிலே வன்சொல்லிருந் தால், - அத்திரு சேராள் - அந்த இலக்குமி பொருந்தமாட்டாள். - ஆங்கு மரணமும் வரும் - அப்பொழுதே இறப்பும் வரும் - முன் - இதனை அறிவாயாக. எ - று. ஏ. ஆம் அசை.
இ - ம். கடுஞ்சொற் சொல்லுவோருக்குத் தரித்திரமும் மரண மும் வரும். எ - ம் (17)
ஈக்கு விடந்தலையி லெய்துமிருந் தேளுக்கு வாய்த்த விடங்கொடுக்கில் வாழுமே - நோக்கரிய பைங்கணரவுக்கு விடம் பல்லளவே துர்ச்சனருக் கங்கமுழு தும்விடமே யாம்.
இ - ள், ஈக்கு விடம் தலலயில் எய்தும் - ஈக்கு விஷம் தலையிலி ருக்கும். -- இரும் தேளுக்கு வாய்த்தவிடம் கொடுக்கில் வாழும் - (கொடுமையிற்) பெரிய தேளுக்குப் பொருந்திய விஷம் அதன் கொடுக்கிலிருக்கும்.-நோக்க அரிய பைங்கண் அரவுக்கு விடம் பல் அளவே - பார்த்தற்கும் அரிய பசுமையாகிய கண்களையுடைய பாம் புக்கு விஷம் பல்லிலிருக்கும்- சீதுர்ச்சனருக்கு அங்கம் முழுதும் விடமே ஆம் - துட்டர்களுக்கு உடம்பு முழுதும் விஷமேயாயிருக்கும்: எ - று. ஏ அசை, தாம்
இம் துட்டர்கள் தீமையே உருவமாயிருப்பரி. எ-ம். (18)
- 70 -

துர்ச்சனரும் பாம்புந் துலையொக்கி னும்பாம்பு துர்ச்சனரை யொக்குமோ தோகையே-துர்ச்சன தாம் எந்தவிதத் தாலு மிணங்காரே பாம்புமணி மந்திரத்தா லாமே வசம்.
இ - ள். தோகையே மயில் போல்வாளே, - துர்ச்சனரூம் பாம்பும் துலை ஒக்கினும்-துட்டரும் பாம்பும் (தீமை செய்யும்) அளவிலே நிகர்த் தாலும், - பாம்பு துர்ச்சனரை ஒக்குமோ - பாம்பு துட்டரை ஒப் பாகுமோ - (ஒப்பாகாது. ஏனெனில்), துரீச்சினர் எந்த விதத்தாலும் இனங்கார் - துட்டர் எந்த விதத்தாலும் வசப்படார், - பாபபு மணி மந்திரத்தால் வசம் ஆம் - பாம்பு மணி மந்திரங்களால் வசப்படும், எ - று. தாம் ஏ அசை
இ-ம், துட்டரி பாம்பினுங் கொடியர். எ-ம். (19) .
கொம்புளதற் கைந்து குதிரைக்குப் பத்துமுழம் வெம்புகரிக் காயிரந்தான் வேண்டுமே - வம்புசெறி தீங்கினர்தங் கண்ணிற் றெரியாத தூரத்து நீங்குவதே நல்ல நெறி.
இ ல ள். கொம்பு உளதற்கு ஐந்து (முழம்) - கொம்புள்ள மிருகத் துக்கு ஐந்துமுழத் தூரமும் - குதிரைக்குப் பத்துமுழம் - குதிரைக்குப் பத்துமுழம் - குதிரைக்குப் பத்துமுழத் தூரமும், - வெம்பு கரிக்கு ஆயி ரம் (முழம்) வேண்டும் - வருத்துகின்ற யானைக்கு ஆயிர முழத்தூரமும் (விலகல்) வேண்டும் - வம்பு செறி தீங்கினர் தம் கண்ணில் - கொடுமை மிகுந்த துட்டருடைய கண்ணுக்கு, - தெரியாத தூரத்து நீங்குவதே நல்ல நெறி - புலப்படாத தூரத்திற் போவதே நன்மையாம். எ - று. தாம், ஏ அசை. (20)
இ - ம், துட்ட யிருகங்களுக்கு வழி விலகிப் போதல் வேண்டும்: துட்டர்களுக்கு அவர் கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் நீங்கிவிடல் வேண்டும். எளம்.
அவ்விய நெஞ்சத் தறிவில்லாத் துர்ச்சனரைச் செவ்விய ராக்குஞ் செயலுண்டோ-திவ்வியநற் கந்தம் பலவுங் கலந்தாலு முள்ளியது கந்தங் கெடுமோ கரை.
.71 ۔۔۔

Page 40
இ-ள், அவ்விய நெஞ்சத்து அறிவு இல்லாத் துர்ச்சைைர - அழுக் காறு பொருந்திய மனத்தையுடைய அறிவில்லாத துட்டரை -- செவ் வியர் ஆக் கும் செயல் உ ண் டோ - நேர்  ைம யுடைவராக்குதற்குரிய செய்கைகள் உ ள வோ (இல்லை) ட உள்ளியது கந்தம் - உள்ளியினுடைய (துர்க்) கந்தம் - திவ்விய நல் கந்தம் பலவும் கலந்தாலும் கெடுமோ - பரிசுத்தமாகிய நற்கத்தங் கள் பலவற்றையும் சேர்த்தாலும் நீங்குமோ? - கரை - நீ சொல்வா 4ாக எ - று.
இ - ம், துட்டருக்கு நல்லறிவைப் போதித்தாலும், நல்லவரா! கார், எ - ம், 2
துன்னு மிருமலுந் துர்ச்சனரு மொக்குமே மன்னு மினிமையான் மாறாகிப் - பன்னுங் கடுவுங் கடுநேர் கடுமொழியுங் கண்டாற் கடுக வசமா கையால்,
இ - ள். துன்னும் இருமலும் துர்ச்சனரும் - மிகுகின்ற இருமலும் துட்டரும், - மன்னும் இனிமையால் மாறு ஆகி - நிலையான இனிமை யினால் மாறுபட்டு, - பன்னும் கடுவும கடுநேர் கடு மொழியும் கண் டால் - (முறையே சொல்லபபடுங் கசப்பையும் நஞ்சுபோலுங் கடுஞ் சொல்லையுங் கண்டால், - கடுக வசம் ஆகையால் - சீக்கிரத்தில் வச. படுதலால், - ஒக்கும் - ஒப்பாகும். எ - று. ஏ அசிை.
இ - ம் இருமல் தித்திப்பினால் அதிகரித்தலும் கசப்பினால் அடங்கு தலும் போலத், துட்டரி இன்சொல்லால் மிஞ்சுதலும் வன்சொல் லால் அஞ்சுதலுமுடையராவர். எ - ம், இனிமை என்றது தித்திப் பையும் இன்சொல்லையும். 墨2
செங்கமலப் போதலர்ந்த செவ்விபோ லும்வதனந் தங்கு மொழிசந் தனம்போலும் - பங்கியெறி கத்தரியைப் போலுமிளங் காரிகையே வஞ்சமனங் குத்திரர் பால் மூன்று குணம். இ - ள். இளம் காரிகையே - இளமையாகிய பெண்ணே, குத் திரரி பால் - வஞ்சகர்களுக்கு - வதனம் - முகம், - அலர்ந்த செவ்வி செம் கமலப்போது போலும் - அலர்ந்த பக்குவத்தையுடைய செந்தா பரைப் பூ வை ப் போ ல அழகுள்ளதாயிருக்கும். -- தங்குமொழி - (இனிமை) தங்கிய வார்த்தை, - சந்தனம் போலும் - சந்தனத்தைப்
سے 722

போலக் குளிர்ந்ததாயிருக்கும், - வஞ்சமனம் - கபடத்தையுடைய மனம், - பங்கி ஏறி கத்தரியைப் போலும் - மயிரை அறுக்கின்ற கத் தரியைப் போலக் கொ டி தா யிருக்கும், - மூன்று குனம் - (இவை அவர்களுக்குரிய) மூன்று குணங்களாம். எ - று.
இ - ம். வஞ்சகர்களுடைய முகமும் சொல்லும் நல்லன போலக் காணப்பட்டாலும், அவர் மனம் மிகக் கொடியதாயிருக்கும். எ - ம் 23
நீசனோ நீச நீனையுங்காற் சொற்றவறு நீசனே நீச னவனையே - நீசப் புலையனா மென்றுரைக்கும் புல்லியனே மேலாம் புலையனா மென்றே புகல்.
இ - ள். நினை யுங் கால் - யோசிக்கும் பொழுது, - நீசனோ நீசன் - (சாதிப்) புலையனோ புலையன். - சொல் தவறும் நீசனே நீசன் - சொன்னசொற் றவறுகின்ற புலையனே புலையன். - அவ னையே - (சொற்றவறுபவனை விட்டு) அந்தச் சாதிப் புலைய னையே, - நீசப் புலையன் ஆம் என்று உரைக்கும் புல்லியனே - இழி வினையுடைய புலையனாகும் என்று சொல்லுகின்ற கீழ்மகனே - மேலாம் புலையன் ஆம் என்று புகல் - பெரும்புலையனாவான் என்று நீ சொல்வாயாக. எ - று. ஏ அசை,
இ - ம், சொன்ன சொற்றவறுவோன் புனையனிலும் தாழ்ந்த வன்ாக மதிக்கப்படுவான், எ - ம். 24
ஞானமா சார நயவா ரிடைப்புகழும் ஏனைநால் வேத மிருக்குநெறி - தான்மொழியிற். பாவநிறை சண்டாளர் பாண்டத்துக் கங்கைநீர் மேவுநெறி யென்றே விடு.
இ - ள். ஞானம் ஆசாரம் நயவாரிடை - ஞானத்தையும் ஆசா ரத்தையும் விரும்பாதவரிடத்தில். - புகழும் நால் வேதம் ஏனை இருக்கும் நெறி - புகழப்படுகின்ற நான்கு வேத கீ க ரூம் மற்றை (ஞானசாத்திரங்களும்) இருக்கு முறைமையை - மொழியில் - (எது போலும் என்று) \oசான்னால், - பாவம் நிறை சண்டாளர் பாண் டத்து - பாவம் மிகுந்த நீசர்களுடைய பாத்திரத்தில், - கங்கை நீர் மேவு நெறி என்றே விடு - கங்கா தீர்த்தம் இரு த் த ல் போலும் ான்றே துணிவாயாக, ள - று. தான் அசை,
இ-ம். நல்லறிவொழுக்கங்கள் இல்லாதவருடைய வேதமுதலிய சாத்திரவுனரிச்கி பழிக்கப்படும். எ-ம். (U)
--سسه 73 ,ر به «س-

Page 41
குணநன் குணராக் கொடியோ ரிடத்திற் குணநன் குடையார் குறுகார் - குணமுடைமை நண்ணாச் சமண நகரத்திற் றுரசொலிக்கும் வண்ணானுக் குண்டோ வழக்கு.
இ - ள், குண ந  ைகு உணராக் கொடியோரிடத்தில் - குன நன்மையை அறியாத துட்டரிடத்தில் - கு5ை நன்கு உடையார் குறு கார் - குணநன்மை யுடையோர் சேரமாட்டார் - குணம் உடைமை நண்ணாச் சமண நகரத்தில் - (வஸ்திரம் உடுக்குங்) குணமில்லாத சம ணர்களிருக்குப பட்டணததில், - தூசு ஒலிக்கும் வண்ணானுக்கு வழக்கு உண்டோ - வஸ்திரத்தை வெளுக்கின்ற வண்ணானுக்கு வேலையுண்டோ (இல்லை,) ன - று.
இ-ம் துட்டர்களிடத்துத் தமிக்கு ஒரு தொழிலும் இல்லாமை யால் நல்லோர் அவரை அணுகார். எ-ம். (26)
ஆனை மருப்பு மருங்கவரி மான்மயிரும் கான வரியுகிருங் கற்றோரு -மானே பிறந்தவிடத் தன்றிப் பிறிதொருதே சத்தே செறிந்தவிடத் தன்றோ சிறப்பு.
இ=ள். மானே - பெண்ணே,-ஆனை மருப்பும் - யானைக் கொம் பும்.-அரும் கவரிமான் மயிரும் - அருமையாகிய கவரிமானின் மயிரும், - கான வரி உகிரும் - காட்டில் வாழும் புவியின் நகமும், - கற் றோரும் - வித்துவான்களும், சிறப்பு - சிறப்பை (அடைதல்).- பிறந்த இடத்து,அன்றி - பிறந்த இடத்தில் மாத்திரமல்லாமல் - பிறிது ஒரு தேசத்தே - வேறொரு தேசத்தின் கண், - செறிந்தஇடத்து அன்றோ - சேர்ந்த இடத்திலல்லவா? எ-று.
இ - ம், வித்துவான்களுக்கு எங்குஞ் சிறப்புண்டாம். எசும், (27)
தலைமயிருங் கூருகிரும் வெண்பல்லுந் தத்த நிலையுடைய மாணவரு நிற்க - நிலைதவறாத் தானத்திற் பூச்சியமே சாரு நிலைதவறுந் தானத்திற் பூச்சியமோ தான்.
இ - ள். தலைமயிரும், - கூரி உகிரும் - கூர்மையாகிய நகமும்,- வெண் பல்லும் - வெண்மையாகிய பல்லும், - தத்தம் நிலை
- 74

யுடைய மாணவரும் - தக்கள் தங்கள் நிலை தவறாத மாணிகளும், - நிற்கும் நிலை தவறாத் தானத்தில் பூச்சியமே - நிற்கவேண்டிய நிலைமை தவறா த இடத்தில் பூசிக்கப்படுவனவே - சாரும் நிலை தவறும் தானத்தில் பூச்சியமோ - பொருந்திய நிலைமை தவறு மிடத்திற் பூசிக்கப்படுவனவோ (அல்ல.) எ-று. தான் அசை,
இ-ம். தத்தம் நிலையினின்று தவறுவோர் அவமதிக்கப்படுவர். от-и). (28)
வென்றி வரியுகிரும் வெண்கவரி மான்மயிருந் துன்றுமத யானைச் சுடர்மருப்பு - நின்றநிலை வேறுபடி னுஞ்சிறப்பா மெய்ஞ்ஞானி நின்றநிலை வேறுபடி னுஞ்சிறப்பா மே.
இகள். வென்றி வரி உகிரும்-வெற்றியையுடைய புலிநகமும்,- வெண்கவரிமான் மயிரும் வெண்மையாகிய கவரிமானின் மயிரும்,- துன்றுமத யானைச் சுடர் மருப்பும் - மிகுந்த மதத்தையுடைய யானை யின் ஒளிபொருந்திய கொம்பும்,-நின்ற நிலை வேறு படினும் சிறப்பு ஆம்-(தாம்முன்) இருந்த இடத்தினின்று வேறுபட்டாலும் சிறப்பை அடையும் - (அவைபோல),- மெய்ஞ்ஞானி -மெய்ஞ்ஞானியானவன், - நின்ற நிலை வேறுபடினும் சிறப்பு ஆம்-தான் நினற நிலையினின் றும் வேறுபட்டு எத் தொழிலைச் செய்தாலும் சிறப்பை அடைவன் 6T-j. I sy60ár.
இ-ம். தத்தம் நிலையினின்று தவறுவோர் அவமதிக்கப்படுவர். T-b. (29)
அன்னை தயையு மடியாள் பணியுமலர்ப் பொன்னி னழகும் புவிப்பொறையும் - வள்னமுலை வேசி துயிலும் விறன் மந் திரிமதியும் பேசி லிவையுடையாள் பெண்.
இ-ள். பேசில்-சொல்லின், -அன்னை தயையும் - தாயைப்போலும் , அன்பும்,-அடியாள் பணியும்-பணிவிடைக்காரியைப்போலுந் தொண் , டும்-மலர்ப் பொன்னின் அழகும்-செந்தாமரைப் பூவிலிருக்குஞ் , சீதேவியைப்போலும் அழகும்.-புவிப்பொறையும் - பூமியைப்போலும் பொறுமையும்,-வன்னமுலைவேசி துயிலும் - அழகிய தனங்களையுடைய வேசியைப்போலும் போகமும், - விறல் மந்திரி மதியும் வலிமையை
aan -75 -...--

Page 42
யுடைய மந்திரியைப்போலும் புத்தியும் (ஆகிய), -இவை உடையாள் பெண்-இக்குணங்களையுடையவள் மனைவியாதற்குரியவள். எ-று,
இ-ம். மனையாள் தயை முதலிய நற்குணங்களையுடையளா யிருத்தல் வேண்டும். எ-ம். (30)
பெண்ணொருத்தி பேசிற் பெரும்பூமி தானதிரும் பெண்ணிருவர் பேசில்விழும் வான்மீன்கள்-பெண்மூவர் பேசி லலைசுவரும் பேதையே பெண்பலர்தாம் பேசிலுல கென்னாமோ பின்.
இ-ன். பேதையே-பெண்ணே,-பெண் ஒருத்தி பேசில் பெரும் பூமி அதிரும்-ஒருபெண் பேசினால் பெரிய பூமி அதிரும் - பெண் இருவர் பேசில் வான் மீன்கள் விழுப -இரண்டு பெண்கள் பேசி னால் ஆகாயத்திலுள்ள நகூடித்திரங்கள் உதிரும், - பெண் மூவர் பேசில் அலை சுவறும்-மூன்று பெண்கள் பேசினாற் சமுத்திரம் வற்றும், -பெண் பலரி பேசில் பின் உலகு என் ஆமே?-பெண்கள் பலர் பேசினால் பின்பு உலகம் என்ன பாடு படுமோ! எ-று தான், தாம் ayedésf.
இ-ம், பெண்கள் பலர் கூடி வசனித்தாற் பெருங்கேடு விளையும், 6T-ha (31)
என்னே கிரேதத் திரேணுகையே கூற்றுவனாந் தன்னேர் திரேதத்திற் சானகியே - பின்யுகத்திற் கூடுந் திரெளபதியே கூற்றாங் கலியுகத்தில் வீடுதொறுங் கூற்றுவனா மே,
இ - ள். கிரேதத்து இரேணுகையே கூற்றுவுன் ஆம்-கிரேத யுகத்தில் இரேணுகையே யமனம் -திரேதத்தில் தன் நேர் சானகியே (கூற்றுவன் ஆம்) - திரே தயுகத்தில் தனக்குத்தானே ஒப்பாகிய சீதையே யமனாம்.-பின் யுகத்தில் கூடும் திரெளபதியே கூற்று ஆம் - அதற்கடுத்த துவாபரயுகத்திற் பொருந்திய திரெள பதியே யமனாம். - கலியுகத்தில் வீடுதொறும் கூற்றுவன் ஆம் - கலியு கத்தில் வீடுகள் தோறும் யமனாம்-என்னே - (இஃது) என்ன ஆச்சரியம். எ - று, ஏ அசை
இ - ம் கலியுகத்திற் பெண்கள் பெரும்பாலும் கொடியரா யிருப்பர். எ-ம்: (32).
- 76 -

கர்ப்பூரம் போலக் கடலுப் பிருந்தாலுங் கர்ப்பூர மாமோ கடலுப்புப் - பொற்பூரும் புண்ணியரைப் போல விருந்தாலும் புல்லியர்தாம் புண்ணியரா வாரோ புகல்.
இ - ள். கடல் உப்பு - கடலில் உண்டாகும் உப்பானது.-- கர்ப்பூரம் போல இருந்தாலும் - (உருலத்தாற்) கர்ப்பூரம் போல இருப்பினும், -கடல் உப்பு கர்ப்பூரம் ஆமோ - அவ்வுப்புக் கர்ப்பூர மாகுமோ (ஆகாது அதுபோல)-புல்லியர் - பாவிகள் - பொற்பு ஊரும் புண்ணியரைப்போல இருந்தாலும் - (வேடத்தினால்) அழகு மிகுகின்ற புண்ணியரைப்போல இருப்பினும்,-புண்ணியர் ஆவாரோ - புண்ணியர்களாவரோ,-புகள் - நீ.சொல்வாயாக. எ - று. தாம் அசை M
இ - ம். பாவிகள் வேடமரத்திரத்தாற் புண்ணியராகாரி. 6r-h. (3JJ
சீலமில்லா னேதேனுஞ் செப்பிடினுந் தானந்தக் கால மிடமறிந்து கட்டுரைத்தே - ஏலவே செப்புமவ னுந்தானே சிந்தைநோ காதகன்று தப்புமவ னுத்தமனே தான்.
இ - ள். சீலம் இல்லான் ஏதேனும் செப்பிடினும் . ஒழுக்க மில்லாதவன் யாதாயினும் (தீயதைச்) சொன்னாலும், தான் அந்தக் காலம் இடம் அறிந்து - தான் அவன் சொல்லிய காலத் தையும் இடத்தையுத் தெரிந்து-ஏல கட்டுரைத்துச் செப்பும வனும் - அவன் சொல்லியகற் கேற்ப உறுதிமொழிகளைச் சொல்லி (அவனுக்குப் பதில் கொடுப்போனும் -தான் சிந்தை நோகாது அகன்று தப்பு மவன் (உம்) - (அவன் சொல்லிய தீயவார்த்தையால்) தான் மனம் வருந்தாமல் நீங்கி (அவனுக்குத்) தப்பிப்போகின்ற வனும் (ஆகிய இந்நற்குணங்களையுடையவன்)- உத்தமனே - மேலான வனே. எ - று. தான், ஏ அசை,
இ-ம்: ஒழுக்கமில்லாதவன் சொல்லுந் தீயவார்த்தையால் மனம் வருந்தாமல், அவனுக்கிசைய உறுதிமொழிகளைச் சொல்லி விலகிப் போகின்றவன் மேலானவன். எ-ம் ... " (34).
سس۔ 77 بسم

Page 43
சிற்றுணர்வோ ரென்றுஞ் சிலுசிலுப்ப ரான்றமைந்த முற்றுணர்வோ ரொன்று மொழியாரே-வெற்றிபெறும் வெண்கலத்தி னோசை மிகுமே விரிபசும்பொன் ஒண்கலத்தி னுண்டோ வொலி.
இ - ள், சிறு உணர்வோர் என்றும் சிலுசிலுப்பர் - அற்ப அறிவினையுடையோர் எப்பொழுதும் படபடத்துப் பேசுவர்.-- ஆன்று அமைந்த முற்றுணர்வோர் ஒன்றும் மொழியார் - (கல்வி யினால்) நிறைந்து அடங்கிய பேரறிவுடையோர் (படபடத்து) ஒன்றும் பேசார். - வெற்றி பெறும் வெண்கலத்தின், ஓசைமிகும் - வெற்றியையுடைய வெண்கலத்தில் ஒசைமிக வுண்டாம். -- விரி பசும் பொன் ஒண் கலத்தின் ஒலி உண்டோ - விரிந்த மாற்றுயர்ந்த பொன்னாலாகிய ஒள்ளிய பாத்திரத்தில் (அவ்வளவு) ஒசையுண்டோ (இல்லை. எ - று. ஏ அசை,
இ - ம். மூடர் படபடத்துப் பேசுவர், அறிஞர் அங்ஙனம் Guayrim rio. Gr - i. (35)
உள்ள பொழு தேது முவந்தளிப்ப தல்லாலோர் எள்ளளவு மீய விசையுமோ - தெள்ளுதமிழ்ச் சீரளித்தோ னுண்டநாட் சேர்மேகத் துக்கருந்த நீரளித்த தோமுந்நீர் நின்று.
இ - ள். உள்ள பொழுது ஏதும் உவந்து அளிப்பது அல்லால் - (தம்மிடத்துப் பொருள்) இருக்கும்பொழுது (தம்மால்) இயன்றதை மகிழ்ந்து தானஞ் செய்வதல்லாமல்.-ஓர் எள் அளவும் ஈய இசை யுமோ - (அப்பொருள் இல்லாதபொழுது) ஓர் எள்ளளவாயினும் தானஞ் செய்ய முடியுமோ (முடியாது). - முந்நீர் - சமுத்திரமானது.-- தெள்ளு தமிழ்ச் சீர் அளித்தோன் உண்ட நாள் - தெளிந்த தமிழுக் குச் சிறப்பைக்கொடுத்த அகத்தியமுனிவர் (தன்னைக்) குடித்த காலத் தில்,-நின்று - (வற்றாமல்) நின்று, சேர் மேகத்துக்கு அருந்த நீரி அளித்ததோ - (தன்னிடத்து) வந்த மேகத்துக்கு உண்ணும்படி ஜலத் தைக் கொடுத்ததோ (இல்லை.) எ - று.
இ - ம். யாவரும் பொருள் உள்ளபொழுதே தானஞ்செய்தல் வேண்டும். எ - ம்,
அகத்தியமுனிவர் தமிழுக்குச் சிறப்புச் செய்தது, அதற்கிலக் சனஞ் செய்தது. (36)
سی۔ 78' سس

பேதையரைக் கண்டாற் பெரியோர் வழிவிலகி நீதியொடு போத னெறியன்றோ - காது மத மாகரத்த யானை வழிவிலகல் புன்மலந்தின் சூகரத்துக் கஞ்சியோ சொல்.
இ - ள், பெரியோர் - அறிஞர்கள்.-பேதையரைக் கண்டால் - மூடரைக்கண்டால்,-நீதியொடு வழி விலகிப் போதல் நெறி அன்றோ - ஒழுக்கத்தோடு (தாம் அவருக்கு) வழி விட்டு விலகிப் போதல் முறைமையல்லவா - காது மதம் மாகரத்த யானை - கொல்லுகின்ற மதத்தையும் பெரிய துதிக்கையையும் உடைய யானை யானது,-வழி விலகல் - வழி விலகிப்போதல், - புன் மலம் தின் சூகரத்துக்கு அஞ்சியோ - எளிய மலத்தை உண்கின்ற பன்றிக்குப் பயந்தோ?-சொல் - நீ சொல்வாயாக. எ - று.
இ - ம், மூடரி இழிந்தவராதலால், அறிஞர் அவருக்கு வழி விலகிப்போதல் முறை. எ - ம். (37)
மந்திரமுந் தேவு மருந்துங் குருவருளுந் தந்திரமு ஞானந் தருமுறையும் - யந்திரமும் மெய்யென்னில் மெய்யாய் விளங்குமே மேதினியிற் பொய்யென்னிற் பொய்யாகிப் போம்.
இ - ள். மேதினியில் - பூமியில், - மந்திரமும் - மந்திரங்களும், -ம் தேவும் - தெய்வமும்,-மருந்தும் - ஒளஷதங்களும்,-குரு அருளும் - ஆசாரியருடைய அநுக்கிரகமும்,-தந்திரமும் - சாத்திரங்களும்,- ஞானம் தரு முறையும் - ஞானோபதேசமும்,- யந்திரமும் - சக்கரங் களும்,- மெய் என்னில் மெய்யாய் விளங்கும் . உண்மையென்று நம் பினால் உண்மையாய்ப் பயனைக் கொடுக்கும்-பொய் என்னில் பொய் ஆகிப்போம் - பொய்யென்று நம்பாமல் விட்டாற் பயனைக் கொடுக்கமாட்டாவாம், எ - று. ஏ அசை
இம் மந்திர முதலியவைகள் மெய்யென்று நம்புவோர்க்குப்
பயனைக் கொடுக்கும்; நம்பாதவர்க்குப் பயனைக் கொடுக்க மாட்டா. எ - ம் (38)
ஈசனெதிர் நின்றாலு மீசனருள் பெற்றுயர்ந்த நேசரெதிர் நிற்ப தரிதாமே - தேசுவளர் செங்கதிர்முன் னின்றாலுஞ் செங்கதிர வன்கிரணந் தங்குமண னிற்கரிதே தான்.

Page 44
இ. ஸ். தேசு வளர் செங்கதிரி முன் நின்றாலும் - ஒலி வளர் கின்ற செம்மையாகிய கிரணங்களையுடைய சூரியனுக்கு முன்னே (வெய்யிலுக்கு அஞ்சாது) நின்றாலும், - செம் கதிரவன் கிரணம் தங்கும் மணல் நிற்க அரிது - (அந்தச்) சூரியனுடைய கிரணம் பட் டுச் சூடுகொண்ட ம ன லில் நிற்க இயலாது (அதுபோல). - ஈசன் எதிர்நின்றாலும் - சிவபெருமானுக்கெதிரே(பகைத்துநின்றாலும்)ஈசன் அருள் பெற்று உயர்ந்த நேசர் எதிர் நிற்பது அரிது - சிவபெருமா னுடைய அருளைப்பெற்று மே ன் மை ய டை ந் த அடியாரெதிரே (பகைத்து) நிற்பதரிது. எ - று. ஆம் ஏ. தான் அசை.
இ - ம். சிவபெருமானுடைய அருளைப்பெற்ற மெய்யடியார் பகை சகித்தற் கரியது. எ - ம். 39
முற்று மிறைசெயலே முற்றிடினுந் தன்னருளைப் பெற்றவர்தம் பாலே பெரிதாகும் - பற்றுபெருந் தாபத் திடத்தே தழன்றிடினு நற்சோதி தீபத் திடத்தே சிறப்பு.
இ - ள். நல் சோதி - நல்ல ஒளியானது. - பற்று பெரும் தாபத் திடத்தே தழன்றிடினும் - பற்றுகின்ற பெரிய காட்டுத் தீயினிடத்தே பிரகாசித்தாலும், - சிறப்பு தீபத்திடத்தே - (அதற்குச் சிறப்புத் தீபத்தினிடத்தேயாம் (அதுபோல). - இறை செயலே முற்றும் முற் றிடினும் - சிவன் செயலே எங்கும் நிறைந்திருந்தாலும் - தன் அருளைப் பெற்றவர் தம்பால் பெரிது ஆகும் - தம்முடைய அரு ளைப் பெற்ற அடியாரிடத்தில் மிகுதியாம், எ - று. ஏ. அசை,
இ. ம். சிவன் செயல் அவருடைய அடியாரிடத்தில் மிக விளங் கும். எ - ம். 40
கன்னியரைப் பொன்னாண் கழிந்தோரை மற்றயலார் பன்னியரை மாயப் பரத்தையரை - முன்னரிய தாதியரை நல்லோர் தழுவநினை யார்நரகத் தீதுவரு மென்றே தெரிந்து.
இ - ள். நல்லோர் - அறிஞர், - நரகத் தீது வரும் என்று தெரிந்து -நரகத்துன்பம் வரும் என்று அறிந்து, - கன்னியரை - கன்னிகை களையும், - பொன் நாண் கழிந்தோரை - பொன்னாலாகிய மங்க லியம் நீங்கிய விதவைகளையும், - அயலார் பன்னி யரை  ைபிறர்
سمسم 809 * سسسس-.

மனைவியரையும், - மாயப் பரத்தையரை - வஞ்சனையுடைய வேசி களையும், - முன்ன அரிய தாதியரை - இச்சிக்கத்தகாத தாசிகளை யும், - தழுவ நினையார் - சேர நினைக்கமாட்டார். எ - று. மற்று, ஏ அசை,
இ - ம். அறிவுடையோர் பாவத்துக்குப் பயந்து வியபிசாரஞ் செய்ய நினையார். எ - ம். 41
தன்னை யளித்தா டமையன் மனைகுருவின் பன்னியரசன் பயிறேவி - தன்மனையைப் பெற்றா விரிவரைவர் பேசி லெவருக்கு நற்றாய ரென்ரே நவில்.
இ - ள். பேசில் - சொல்லில், . தன்னை அளித்தாள் - தன்னைப் பெற்றவளும், - தமையன் மனை - தமையன் மனைவியும், - குரு வின் பன்னி - குருபத்தினியும், - அரசன் பயில்தேவி - அரசன் மனைவி யும், - தன் மனையைப் பெற்றாள் - தன் மனைவியினுடைய தாயும் (ஆகிய), - இவர் ஐவர் - இந்த ஐந்து பேரையும், - எவருக்கும் நற் றாயர் என்றே நவில் - எல்லாருக்கும் பெற்ற தாய்மார் என்றே Gafntiour unts. 67 - d.
இ - ம். தமையன் மனைவி, குருபத்தினி, அரசன் மனைவி மாமி ஆகிய இவர்களைத் தம்மைப் பெற்ற தாயர்களாக மதித்தல் GatsäGh. sr - b
வாவியுறை நீரும் வடநிழலும் பாவகமும் ஏவனைய கண்ணா ரிளமுலையும் - ஓவியமே
மென்சீத காலத்து வெம்மைதரும் வெம்மைதனில்
இன்பாருஞ் சீதளமா மே.
இ - ள், ஓவியமே - சித்திரப்பாவை போன்றவளே. - வாவி உரை நீரும்'- தடாகத்திலுள்ள ஜலமும், - வட நிழலும் - ஆலமர நிழலும் - பாவு அகமும் - பாபுகற் கோட்ட (உள்) வீடும். - ஏ அனைய கண்ணாரி இளமுலையும் - அம்புபோலுந் கண்களையுடைய் பெண்களது இளமையாகிய தனமும், - மென் சீத காலத்துவெம்மை தரும் - மென்மையாகிய சீதள காலத்தில் வெப் பத் தைக் கொடுக் கும், - வெம்மை தனில் - உஷ்ண காலத்தில், - இன்பு ஆரும் சீதனம்
سس 81 است.

Page 45
ஆம் - இன்பத்தைச் செய்கின்ற சீத ளத் தை த் தரும் எ - று ( ya)4.
இ - ம், தடாகநீர் முதலியவைகள் சீதளகாலத்தில் உஷ்ணத்தை யும், உஷ்ண காலத்திற் சீதளத்தையும் கொடுக்கும்.எ - ம். (43)
உற்றதொழில் செய்வோர்க் குறுபஞ்ச மில்லையாம் பற்றுசெபத் தோர்க்கில்லை பாவங்கள் - முற்றும் மவுனத்தோர்க் கில்லை வருகலகந் துஞ்சாப் பவனத்தோர்க் கில்லை பயம்.
இ - ள். உற்ற தொழில் செய்வோர்க்கு உறுபஞ்சம் இல்லை - (தமக்கு) இயைந்த தொழிலைச் செய்பவர்களுக்கு வருகின்ற தரித்தி ரம் இல்லை, - பற்று செபத்தோரிக்கு பாவங்கள் இல்லை - (மன அன்போடு) பொருந்திய செபத்தையுடையவர்களுக்குப் பாவங்கள் இல்லை. - முற்றும் மவுனத்தோர்க்கு வருகலகம் இல்லை - மிகுந்த் மெளனமுடையவர்களுக்கு வ ரு கின்ற கலகம் இல்லை - துஞ்சாப் பவனத்தோரிக்குப் பயம் இல்லை - நித் திரை செய்யாத விண்ணுல சத்திலிருக்கும் தேவர்களுக்குப் பயம் இல்லை. எ - று. ஆம் அசை
இ - ம். தொழில் செய்வோர்க்குப் பஞ்சமும், செபஞ் செய் வோரிக்குப் பாவமும். மெளனிகளுக்குக் கலகமும், தேவர்களுக்குப் பயமும் இல்லை.எ - ம். (44)
ஆபத்து வந்தா லரும்பொருடான் வேண்டுமே ஆபத்தேன் பூமா தருகிருந்தால் - ஆபத்து வந்தா லவளு மருவாம லெப்பொருளும் அந்தோ வுடன்போ மறி.
இ - ள். ஆபத்து வந்தால் அரும் பொருள் வேண்டுமே . (ஒருவ னுக்கு) ஆபத்து வந்தால் (அதனை நீக்கிக் கொள்ளுதற்குக் கருவி யாகிய) அரிய திரவியம் வேண்டுமல்லவா. - பூமாது அருகு இருந் தால் ஆபத்து என் - சீதேவி (அவனுக்குக்) கிட்ட இரு நீ தா ல் ஆபத்து ஏன் (வரும்) - ஆபத்து வந்தால் அவளும் மருவாமல் - ஆபத்து வந்தால் அந்தச் சீதேவியும் (அவனிடத்து) இ ரா மல் நீங்குதலால், - எப்பொருளும் அந்தோ உடன் போம் - (அவனிடத்து முன்னுள்ள எப்பொருள்களும் ஐயோ (அவளோடு) கூடப் போய் விடும் - அறி - நீ இதனை அறிவாயாக. எ - று, தான் அசை,
இ - ம். ஒருவனுக்குக் கஷ்டகாலம் வரும்பொழுது செல்வம் அழியத் தரித்திரம் வரும். எ - ம். (45)
ത്ത് 82 =

இன்ன றரும்பொருளை யீட்டுதலுந் துன்பமே பின்னதனைப் பேணுதலுந் துன்பமே - அன்ன தழித்தலுந் துன்பமே யந்தோ பிறரிபால் இழத்தலுந் துன்பமே யாம். இ-ள். பொருளை ஈட்டுதலும் துன்பமே-பொருளைச் சம்பாதித் தலும் துன்பமே.-பின் அதனைப் பேணுதலும் துன்பமே - பின்பு அதனைப்பாதுகாத்தலும் துன்பமே,~அன்னது அழித்தலும் துன்பமேஅதனைச் செலவழித்தலுந் துன்பமே, பிறர் பால் இழத்தலும் துன்மே ஆம் - பிறரிடத்து (அதனைக்கொடுத்து) இழத்தலும் துன் பமேயாம்,-அந்தோ இன்னல் தரும்-ஐயோ (பொருள் எப்பொழுதும்) துன்பத்தைதி தரும். எ-று.
இ-ம் பொருளைச் சம்பாதித்தல் காப்பாற்றல் முதலியவற் றின: லே துன்பம் உண்டாகும். எ.ம்: (46)
தானே புரிவினையாற் சாரு மிருபயனுந் தானே யனுபவித்த றப்பாது - தானுாறு கோடி கற்பஞ் சென்றாலுங் கோதையே செய்தவினை நாடிநிற்கு மென்றார் நயந்து. இ - ள். கோதையே - பெண்ணே, -தான் புரி வினையாலே இரு பயனும் சாரும் - (ஒருவனுக்குத் தான் செய்த இரு வினையினால் இன்பத்துன்பங்களாகிய இரண்டும் வரும்,-தானே அனுபவித்தல் தப்பாது - (அவைகளைத்) தானே அனுபவித்தல் தவறாது-செய்த வினை - (ஒருவன்) செய்த இருவினைகளும்.நூறு கோடி கற்பம் சென்றாலும் - நூறு கோடி கற்பகாலங் கழிந்தாலும் - நயந்து நாடி நிற்கும் என்றார் - (செய்த அவனை) விரும்பித்தேடி நிற்கும் என்று (அறிஞர்) சொன்னார். எ - று, தான் அசை. ی
இ - ம். இருவினைப் பயன்களாகிய இன்பத்துன்பங்கள் செய் தவனைச் சென்றடைதல் தப்பாது. எ - ம் (47)
தூய வறிவினர்முன் சூழ்துன்ப மில்லையாங் காயும் விடங்கருடற் கில்லையாம் - ஆயுங்காற் பன்முகஞ்சேர் தீமுன் பயில்சீத மில்லையாந் துன்முகனுக் குண்டோ சுகம்.

Page 46
இ - ள். ஆயுங்கால் - ஆராயுமிடத்து,-ஆ? யும் விடம் கருடற்
இல்லை - கொல்லுகின்ற விஷம் கருடனுக்கு (ஒன்gஞ் செய்வது) இல்லை (அதுபோல,-தூய அறிவினர் முன் சூழ் துன்பம் இல்லை - சுத்தமாக்கிய மெய்ஞ்ஞானமுடையவருக்கு வருந்துன்பம் (ஒன்றுஞ் செய்வது } இல்லை.-பல் முகம் சேர்தீமுன் பயில் சீதம் இல்லை - ஏழு நடக் ளையுடைய அக்கிணிக்குப் பொருந்திய குளிர்ச்சி இல்லை அேதுபோல)-துன்முகனுக்குச் சுகம் உண்டோ - துட்டறுக்கு இன்பம் உண்டோ (இல்லை.) ள | று. ஆம் அசை,
இ - ம் ஞானிகளுக்கு துன்பமும், மூ.ரூக்கு இன்பமும் இல்லை. 67 - ιο (48)
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க லென்றிவரோ டின்புறத்தா னுண்ட லினிதாமே - அன்புறவே தக்கவரை யின்றித் தனித்துண்ட றான்கவர்மீன் கொக்கருந்த லென்றே குறி.
இ - ன். தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் என் இவரோடு - பிதிரரும் தெய்வமும் விருந்தினரும் சுற்றத்தாரும் என் செ8ல்லப்பட்ட (இவர்களுக்குக்கொடுத்து) இவர்களோடு-தாள் இன்பு உற உண்டலே இனிது ஆம் - தானும் இன்பம் மிக உண்ணு தலே நல்லதாம்.-அன்பு உறத் தக்கவரை இன்றித் தனித்து உண்டல் - அன்புண்டாகும்படி தகைமையையுடைய இவர்களுக் குக் கொடாமல் தான் மாத் திர ம் உண்ணுதல், - கொக்குதா சவர் மீன் அருந்தல் என்றே குறி - கொக்கானது தான் கவர்ந்த மீனைத் (தனித்திருந்து) உண்ணுதல் (போலும்) என்றே எண்ணுவர் பாக. எ - று. ஏ அசை,
இ-ம். தென்புலத்தார் முதலாயினோருக்குக் கொடாதுண்ணும் உண்வு இழிவுள்ளது. எ - ம். (49)
இந்திரவி நீள்கிரன மெங்கு நிறைந்தாலும் இந்திரவி காந்தத் திலகுமே - இந்திரவி
நேத்திரத்தோ னெங்கு நிறைந்தாலு நித்தனருள்
நேத்திரத்தோர் பாலே நிறைவு.
இ-ள். இந்து இரவி நீள் கிரணம் எங்கும் நிறைந்தாலும் - சந்திர சூரியர்களுடைய நீண்ட கிரணங்கள் எவ்விடங்களிலும் நிறைந்திருந்
- 84 -
 
 
 
 
 

தாலும், - இந்து இரவி காந்தத்து இலகும் - சந்திரகாந்தம்,சூரியகாந் தம் என்னுங் கற்களில் (வெளிப்பட) விளங்கும் (அதுபோல). - இந்து
இரவி நேத்திரத்தோன் எங்கும் நிறைந்தாலும் - சந்திர சூரியர்களைக்
கண்களாகவுடைய சிவபெருமான் எங்கும் வியாபித்திருந்தாலும், - நித்தன் நிறைவு - நித்தியராகிய அக்கடவுள் வெளிப்பட வியாபிததிருத் தல், - அருள் நேத்திரத்தோர் பாலே - அருட்கண்ணையுடைய களாகிய ஞானிகளிடத்தே யாம். எ-று. ஏ அசை.
இ-ம், சிவபெருமான் எங்கும் வியாபித்திருப்பினும், ஞாளிகளிடத் தில் வெளிப்பட்டு விளங்குவர். எ-ம, (50)
தாமோ தரன்முதலோர் சாதனுால் சாற்றுவதும் பூமேலோர் பொன்றுவதுங் கண்டோமே - நாமுடலை நேசிப்ப தென்னோ நிலையாகுஞ் சங்கரனைப் பூசிப்ப தென்றே புகல்.
இ-ள். தாமோதரன் முதலோர் சாதல் நூல் சாற்றுவதும்-விஷ்ணு முதலாகிய தேவர்கள் இறத்தலை நூல்கள் சொலனுதலையும். - பூமேலோர் பொன்றுவதுய காங்டோமே - பூமியிலுள்ள மனிதர்கள் இறப்பதையும் (முறையே காதாலும் கண்ணாலும்) அறிந்தார்ம - நாம் உடலை நேசிப்பது என் - நாம் (நிலையில்லா இந்த) உடம்பை விரும்பிப் பாதுகாப்பது என்ன அறியாமை - சங்கரனைப் பூசிப்பதே நிலை ஆகும் என்று புகல் - சிவபெருமானை அருச்சனை செய்வதே (செய்யத்தக் $) நிலையான சிவபுண்ணியம் என்று சொல்வாயாக. எ=று.
و كفه ثقة إلي ج3
இ-ம். நிலையில்லாத உடம்பைப் பாதுகாப்பதை விட்டு நிலை புள்ள கிவபூசையைச் செய்க. எ-ம். (l),
அரசி னிலையதனி னக்கிரத்தி னின்று விரைய விழுதுளியே போலும் - புை ஆக்கைவிடா முன்ன மரன்பாதம் பூசித்தல் நோக்கனன் றென்றே நுவல். இ-ன். அரசின் இலையதளின் அக்கிரத்தின் நின்று - கிரசிலையி னுணியிலிருந்து, - விரைய விழுதுளியே போலும் - (தங்காது) விரைந்து விழுகின்ற திவலையையே யொக்கும், - புரை உடைய ஆக்கை Goodular முன்னம் - (தங்காது விரைந்தழியும்) குற்றத்தையுடைய உடம்பு நீங்கு
 ை85  ை

Page 47
தற்கு முன்னே. - அரன் பாதம் பூசித்தல் . சிவபெருமானுடைய திரு வ்டிகளைப் பூசனை செய்தலும், - நோக்கல் - தரிசித்தலும், - நன்று என்றே நுவல் - நல்லதென்றே சொல்வாயாக. எ - Ա.
இ-ம். நிலையாத உடம்பு அழியுமுன்னே சிவார்ச்சனை செய்ய வேண்டும். எ-ம். (52)
சத்தியத்தை வெல்லா தசத்தியந்தா ணிள்பொறையை மெத்திய கோபமது வெல்லாது - பத்திமிகு புண்ணியத்தைப் பாவமது வெல்லாது போரரக்கர் கண்ணனைதான் வெல்லுவரோ காண்.
இ - ள். போரி அரக்கர் கண்ணனை வெல்லுவரோ - போரைச் செய்கின்ற இராசுடிதர்கள்' விஷ்ணுவை வெல்வாரிக்ளோ (வெல்ல மாட்டார்) அதுபோல, அசத்தயம் சத்தியத்தை வெல்லாது - பொய் மெய்யை வெல்லாது-மெத்திய கோபமது நீள்போறையை வெல்லாது - மிகுந்த கோபம் மேலான பொறுமையை வெல்ல மாட்டாது;-பாவமது பத்தி மிகு புண்ணியத்தை வெல்லாது - பாவமானது அன்பு மிகுகின்ற புண்ணியத்தை வெல்லமாட்டாது.-- காண் - (இதனை நீ) அறிவாயாக. எ - று. தான் 96.8F.
இ-ம். பொய் மெய்யையும், கோபம் பொறுமையையும், பாவம் புண்ணியத்தையும் வெல்லமாட்டா, எ-ம். (53)
பொற்பறிவில் லாதபல புத்திரரைப் பேறலினோர் நற்புதல்வ னைப்பெறுத னன்றாமே-பொற்கொடியே பன்றிபல குட்டி பயந்ததினா லேதுபயன் ஒன்றமையா தோகரிக்கன் றோது.
-இ - ள். பொன் கொடியே - பொன்மயமாகிய கொடிபோல் வாளே,-பொற்பு அறிவு இல்லாத பல புத்திரரைப் பேறலின் - அழசைச்செய்யும் அறிவில்லாத பல புத்திரரைப் பெறுவதிலும்ஓர் நல் புதல்வனைப் பெறுதல் நன்று ஆம் - ஒரு நல்ல புத்திரனைப் பெறுதல் நல்லதாம்.-பன்றி பலகுட்டி பயந்ததினால் பயன் ஏதுபன்றி பலகுட்டிகளைப் பெற்றதனாற் பிரயோசனம் Աn 5»- கரிக் கன்று ஒன்று அமையாதோ - யானைக்கன்று ஒன்று போதாதோ, -ஒது - நீ சொல்வாயாக. எ-று. ஏ அசை,
இ-ம்: அறிவில்லாத பல புதல்வரைப் பெறுதலினும் அறிவுள்ள ஒரு புதல்வனைப் பெறுதல் நல்லது. எ-ம் (54)

அத்திமலரு மருங் காக்கை வெண்ணிறமுங் கத்துபுனன் மீன்பதமுங் கண்டாலும் - பித்தரே கானார் தெரியற் கடவுளருங் காண்பரோ மானார் விழியார் மனம்.
இ - ள். பித்தரே - (பெண்களுடைய மனத்தை அறியலாம் என்கின்ற) அறிவிலிகளே,-அத்தி மலரும் - அத்திப் பூவையும்.-- காக்கை அரும் வெண் நிறமும் - காக்கையினிடத்து அருமையாகிய வெள்ளை நிறத்தையும், - கத்து புனல் மீன் பதமும் ஒலிக்கின்ற கடலிலே மீனின் அடிச்சுவட்டையும்-கண்டாலும் - பார்த்தாலும் - மான் ஆர் விழியார் மனம் - மான்போலும் (மருண்ட) பார்வையை யுடைய பெண்களின மனத்தை,-கான் ஆர் தெரியல் கடவுளரும் காண்டரோ - வாசனை பொருந்த ப மாலையையுஸ்டய தேவர்களும் அறிவார்களோ எ-று.
இ-ம். பெண்களுடைய மனத்தை அறிதல் எவர்க்கும் அரிது. Ֆrnւb.
(55
காளவிடப் பாந்தள் கருடனையுங் கட்டுமோ வாளெரியைக் கட்டுமோ வன்கயிறு - நீளும் பவமருளும் பாசம்வெம் பஞ்சேந் திரியஞ் சிவயோகி யைப்பிணியா வே.
இ - ன். காள விடம் பாந்தள் கருடனையும் கட்டுமோ . கருமையாகிய நஞ்சையுடைய பாம்பு கருடனையும் கட்டுமோ - (கட்டாது).-வன் கயிறு வாள் எரியைக் கட்டுமோ - வலிய கயிறு ஒளியையுடைய நெருப்பைக் கட்டுமோ (கட்டாது இவைபோல),- நீளும் பவம் அருளும் பாசம் வெம்பஞ்சேந்திரியம் - மிகுகின்ற பாவத்தைக் கொடுக்கும் பாசங்களும் கொடிய ஐம்பொறிகளும்,- சிவயோகியைப் பிணியா - சிவயோகியைத் துன்பஞ் செய்யமாட்டா,
T - d. 9 godf
இ-ம். சிவயோகிகள் பாசங்களினாலும் ஐம்பொறிகளினாலும் துன்பப்படார், எ-ம். (56)
புத்தியொடு முத்திதரும் புண்ணியத்தா லன்றியே மத்தமிகு பாவத்தால் வாழ்வாமோ - வித்துபயிர் தாயாகி யேவளர்க்குந் தண்புனலா லல்லாது தீயால் வளருமோ செப்பு.
r 87 =

Page 48
இ-ள். வாழ்வு-நல்வாழ்வானது.-புத்தியொடு முத்திதரும் புண் னியத்தால் அன்றி - போகமோ கூrங்களைக் கொடுக்கின்ற புண்ணியத் தினால் (உண்டாகும்) அல்லாமல்-மத்தம் மிகு பாவத்தால் ஆமோஅறியாமையால் வளர்கின்ற பாவத்தினால் உண்டாகுமோ! -வித்து பயிர்-விதைத்துண்டாக்கும் பயிர்-தாய் ஆகி வளர்க்கும் தண் புன லால் அல்லாது-தாயைப்போலத் (தன்னை) வளர்க்கின்ற குளிர்ச்சி யாகிய நீரினால் (வளர்வது) அல்லாமல்,-தீயால் வளருமோ செப்புநெருப்பினால் வளருமோ சொல்வாயாக எ-று. ஏ அசை.
இ-ம். இன்பம் புண்ணியத்தினாலன்றிப் பாவத்தினாலுண்டா காது. எ-ம். (579.
சிவனே சிவனே சிவனேயென் பார்ப்பின் சிவனுமையா ளோடுந் திரிவன் - சிவனருளாற் பெற்றவிளங் கன்றைப் பிரியாமற் பின்னோடிச் சுற்று பசுப்போற் றொடர்ந்து.
இ-ள். சிவன் - சிவபெருமானானவர், - சிவன் அருளால்-தம் முடைய அருளினால், - சிவனே சிவனே சிவனே என்பார் பின் " சிவனே சிவனே சிவனே என்று மூன்றுதரஞ் சொல்லுபவர்களுக்குப் பின்னே, -பெற்ற இளம் கன்றை-(தான்) பெற்ற இளமையாகிய கன்றை. - பிரியாமல் பின் ஓடிச் சுற்று பசுப்போல் - விட்டு நீங்காமற் பின்னே ஓடிச் சுற்றித் திரிகின்ற (தாய்ப்) பசுவைப்போல,- உமை யாவோடும் தொடர்ந்து திரிவன் - உமாதேவியாரோடும் இடை விடாது கூடத்திரிவர். எ-று.
இ-ம். சிவபெருமான் தம்முடைய திருவருளினால் தமது திரு நாமத்தை மூன்றுதரம் உச்சரிப்பவரைப் பிரியாமல் இரசுழிப்பர்" எ-ம். (58)
தாமுங்கொடார் கொடுப்போர் தம்மையுமீ யாதவகை சேமஞ்செய் வாருஞ் சிலருண்டே - யேமநிழல் இட்டுமலர் காய்கணிக ளிந்துதவு நன்மரத்தைக் கட்டுமுடை முள்ளெனவே காண். இ-ள். ஏமம் நிழல் இட்டு-இன்பத்தைத் தரும் நிழலைச் செய்து, மலர் காய் கணிகள் ஈந்து உதவும் நல்மரத்தை - புஷ்பங்களையும் காய்களையும் பழங்களையும் கொடுத்துதவிசெய்கின்ற நல்ல விருக்ஷத் தை, கட்டும் உடை முள் என - சூழ்ந்த உடைவேல் முள்
ܗܹܗܘܗܝ܂ 88 -

ளைப்போல, தாமும் கொடார்-தாமும் (ஒன்றுங்) கொடாராய், - கொடுப்போர் தம்மையும் ஈயாதவகை சேமம் செய்வாரும் சிலர் உண்டு-கொடுப்போரையும் கொடாத வண்ணந் தடுப்பவருஞ் சிலர் உளர்.காண் - அறிவாயாக. எ-று. ஏ அசை.
இ-ம். தாமுங் கொடாது கொடுக்கின்ற பிறரையுந் தடுக்கும் பாதகர் பயன்படும் விருகத்தைச் சூழ்ந்த உடைவேல் முள்ளைப் போல்வர். எ-ம். (59)
ஆயுமலர்த் தேன்வண் டருந்துவது போலிரப்போர் ஈயு மவர்வருந்தா தேற்தலறந் - தூயவிளம் பச்சிலையைக் கீடமறப் பற்றி யரிப்பதுபோல் அச்சமுற வாங்க லகம்.
இ - ள். வண்டு ஆயும் மலர்த்தேன் அருந்துவது போல் - வண் டானது ஆராயப்படுகின்ற (அலரும் பக்குவத்தையுடைய) பூவில் (அதனை வருத்தாது) தேனை உண்ணுவதுபோல, - இரப்போர் - யாசகர்கள், - ஈயும வர் வருந்தாது ஏற்றல் அறம் - கொடுப்போர். வருந்தாவண்ணம் (இவர் குறிப்பறிந்து) யாசித்தல் தருமமாம். -- இடம் - புழுவானது - தூய இளம் பச்சிலையை பற்றி அற அரிப் பது போல், சுத்தமாகிய இளைய பச்சிலைய விடாது முழுதும் அரிப் பது போல - அச்சம் உற வாங்கல் அகம் - (கொடுப்போபி) அச் சப்டடும்படி (அவரைத் துன்பஞ் செய்து) வாங்குதல் பாவமாம் of p.
இ - ம் தாதாவை வருத்தாது வாங்குவது புண்ணியமும்அவனை வருந்தி வாங்குவது பாவமுமாம். எ - ம்- 6
மாதா மரிக்கின் மகனாவி னற்சுவைபோந் தாதா வெனிற்கல்வி தானகலும் - ஒதினுடன் வந்தோன் மரித்துவிடில் வாகுவலி போமனையேல் அந்தோ விவையாவும் போம்.
இ உள். ஓதின் - சொல்லில், - மாதா மரிக்கின் மகன் நாவின் நல் சுவை போம் - தாயிறந்தாற் புத்திரனுக்கு நாவினது நல்லசுவை கெடும், - தாதா எனில் கல்வி அகலும் - பிதா இறந்தாற் கல்வி கெடும். - உடன் வந்தோன் மரித்துவிடில் வாகு வலிபோம் - சகோ தரன் இறந்தாற் புயவலி கெடும் - மனையேல் அந்தோ இவை பாவும் போம் - மனைவி இறந்தால் ஐயோ! (மேற்சொல்லிய இவை கள் எல்லாம் கெடும். எ உறு தான் அசை,
ബ 89 -

Page 49
இ - ம் தாயில்லாத சிறுவனுக்குப் போசன சுகமும், பிதா இல்லாத சிறுவனுக்குச் கல்வியும், சகோதரன் இல்லாதவனுக்குத் தைரியமும், மனைவியில்லாதவனுக்கு எல்லாச் சுகமும், கெடும். எ - ம். (61)
ஒதுபொருள் கண்டோர்க் குறுமாசை நீதியிலாப் பாதகரைக் கண்டோர்க்குப் பாவலாஞ் - சீதமலர் கண்டோர்க் குறும்வாசங் கற்றமைந்த நற்றவரைக் கண்டோர்க் குடனாங் கதி.
இ - ள். ஒது பொருள் கண்டோர்க்கு ஆசை உறும் - சொல்லப் படுந் திரவியத்தைப் பார்த்தோர்க்கு (அதில்) ஆசை மிகும், - நீதி இலாப் பாதகரைக் கண்டோர்க்கு பாவம் ஆம் - ஒழுக்கமில்லாத பாதகர்களைப் பார்த்தவர்களுக்குப் பாவம் உண்டாம், - சிதம் மலர் கண்டோாக்கு வாசம் உறும் - குளிச்சியாகிய பூக்களைப் பார்த்த வர்களுக்கு (அவற்றின்) வாசனை உண்டாகும், . கற்று அமைந்த நல் தவரைக் கண்டோர்க்கு கதி உடன் ஆம் - படித்து அடங்கிய நல்ல தவமுடையோரைத் தரிசித்தவாக்கு மோக்ஷம் உடனே கிடைக் கும் எ - று.
இ - ம். பாதகரைப் பார்தலாற் பாவமும், தவத்தரைத் தரிசித் தலாற் புண்ணியமும் உண்டாகும், எ - ம், (63)
பாவிதனந் தண்டிப்போர் பாலாகு மல்லதருள் மேவுசிவ னன்பர்பான் மேவாதே - ஒவியமே நாயின்பா லத்தனையு நாய்தனக்கா மன்றியே தூயவருக் காகுமோ சொல்.
இ - ள். ஓவியமே - சித்திரப்பாவை போல்வாளே, - பாவிதனம் - பாவியினுடைய திரவியம், - தண்டிப்போர் பால் ஆகும் அல்லது - தண்டனை செய்து வாங்குந் துட்டரிடத்துச் சேரு மல்லாமல், - அருள் மேவு சிவன் அன்பர்பால் மேவாது - அருளைப் பொருந்திய சிவனடியாரிடத்துச் சேராது; - நாயின் பால் அத்தனையும் நாய் தனக்கு ஆம் அன்றி - நாயின்பால் முழுதும் நாய்க்கு உதவுமேயன்றி. -- தூயவருக்கு ஆகுமோ சொல் - சுசியையுடைய மனிதருக்கு உதவுமோ Galafr6.ajn untas. 67 - ty. ST esysos. . . '
-- 90 -

இ-ம். பாவியுடைய திரவியம் துட்டருக்கு மாத்திரம் உபயோ கப்படும், எ - ம். (63)
பொன்னுங் கரும்பும் புகழ்பாலுஞ் சந்தனமும் சின்னம் படவருத்தஞ் செய்தாலும் - முன்னிருந்த நற்குணமே தோன்று நலிந்தாலு முத்தமர்பால் நற்குணமே தோன்று நயந்து.
இ - ள்; பொன்னும் கரும்பும் புகழ் பாலும் சந்தனமும் - பொன்னையும் கரும்பையும் புகழப்படுகின்ற பாலையும் சந்தனத் தையும்,- சின்னம்பட வருத்தம் செய்தாலும் - துன்பப்படும்படி வருத்தினாலும்-முன் இருந்த நற்குனமே தோன்றும் - (பின்னும் அவைகளிடதது) முன்னிருந்த (ஒளியும் தித்திப்பும் வாசனையும் ஆகிய) நற்குணங்களே (மிகுந்து) வெளிப்படும், - (அவைபோல்)- உத்தமர் பால் - நல்லோரிடத்து.-நலிந்தாலும் - (அவரை) வருத்தப் படுத்தினாலும்,- நற்குணமே நயந்து தோன்றும் - (முன்னுள்ள) நல்லகுனமே மிகுத்து காணப்படும். எ - று,
இ - ம், தல்லோரை எப்படி வருத்தப்படுத்தினும், அவர் தம் முடைய நற்குணம் வேறுபடார். எ - ம், (64)
வேசியரு நாயும் விதிநூல் வயித்தியரும் பூசுரருங் கோழிகளும் பொன்னனையாய் - பேசிலொரு காரணந்தா னின்றியே கண்டவுட னேபகையாங் காரணந்தா னப்பிறப்பே காண்.
இ - ள். பொன் அணையாய் - சீதேவியை ஒப்பானவளே.- பேசில் - சொன்னால்,-வேசியரும் - பொதுப்பெண்களும், - நாயும் - நாய்களும்,- விதி நூல் வயித்தியரும் - ஆயுள்வேதத்தை அறிந்த வைத்தியர்களும்,-பூசுரரும் - பிராமணர்களும்,- கோழிகளும் - கோழி களும்,-ஒரு காரணம் இன்றி கண்ட உடனே பகைஆம் காரணம் ” ஒரேதுவுமின்றித் (தம்முள் ஒருவரையொருவர்) கண்டவுடனே விரோதமாதற்குக் காரணம்,-அப்பிறப்பே - அந்தப் பிறப்பின் குணமே, - காண் - (இதனை நீ) அறிவாயாக. எ - று. தான் ஏ அசை விதி நூல் - ஆயுள்வேதம்.
இ - ம், ஆன்மாக்களுக்குப் பிறவிக்குணம் இயற்கையாயுள்ளது. 67 - sh (65)
- 9 -

Page 50
அன்னமனை யாய்குயிலுக் கானவழ கின்னிசையே கன்னன்மொழி யார்க்கழகு கற்பாமே - மன்னுகலை கற்றோர்க் கழகு கருணையே யாசைமயக்
கற்றோர்க் கழகுபொறை யாம்.
இ - ள். அன்னம் அணையாய் - அன்னப்பகதி போல்வாளே,- குயிலுக்கு ஆன அழகு இன் இசையே - குயிலுக்குப் பொருந்திய அழகு இனிய இசையேயாம்,-கன்னல் மொழியார்க்கு அழகு கறபே ஆம் - கரும்புபோலும் (இனிமையாகிய) சொற்களையுடைய பெண் களுக்கு கீழகு கற்பேயாம், - மன்னுகலை கற்றோர்க்கு அழகு ககுனையே - நிலைபெற்ற நூல்களைப் படித்தவர்களுககு அழகு அருளேயாம்,~ஆசை மயக்கு அற்றோர்க்கு அழகு பொறை ஆம் - அவாவையும் மயக்கத்தையும் நீங்கிய ஞானிகளுக்கழகு பொறுமை штиb. Ст - дplз
இ - ம், பெண்களுக்குக் கற்பும், படித்தோர்க்கு இரக்கமும் ஞானிகளுக்குப் பொறுமையும் அழகைச் செய்யும். எ - ம், (66)
இதமகித வார்த்தை யெவர்க்கேனு மேலாம்
இதமெனவே கூறப்த மன்றே-இதமுரைத்த
வாக்கினா லேரண்ட மாமுனியுஞ் சோழனொடு
தேக்குநீர் வீழ்ந்தொழிந்தான் சேர்ந்து.
g- எவர்க்கேனும் (நல்லவர் தீயவர் ஆகிய) யாவர்க்காயினும்,- மேல் ஆம் இதம் என - மேலாகிய நன்மை என்று. - இதம் அகித வார்த்தை கூறல் இதம் அன்று - (முறையே) இன்வத்துன்பங்களைப் பயக்கின்ற சொற்களைச் செ7ல்லுதல் நன்மையன்று, (ஏனெனில்),- ஏரண்ட மாமுனியும் - ஏரண்ட மகாமுனிவரும்-இதம் உரைத்த வாக்கினால் - (தாம்) இதமாகச் சொல்லிய சொல்லால்,-சோழ னோடு சேர்ந்து தேக்கு நீரீ வீழ்ந்து ஒழிந்தான் - சோழராசனோடு கூட மிகுந்த ஜலத்தில் வீழ்நது இறந்தார். (ஆதலால்) எறு.
இ-ம், நல்லவர்க்கு இதவசனமும் தீயவர்க்கு அகிதவசனமும் உறுதியைச் செய்வனவாயினும், அவை எல்லாரிடத்துஞ் சொல்லத் தக்கன் வல்ல, எ-ம்.
முன்னொரு காலத்தில், காவேரியாறு திருவலஞ்சுழி என்னுந் தலத்துக்குச் சமீபத்திலே பூமிக்குட் சுழித்துக்கொண்டு போயிற்று. சோழராஜன் அதைக்கண்டு துன்பமடைந்து அதனை ஏரண்டமா
- 9 -

முனிவருக்குச் சொல்ல, அவர் அந்தச் சுழியில் ஒரு முடித்தலையை அல்லது ஒரு சடைத்தலையைக் கொடுத்தால் ஆறு உள்ளே சுழித் திரங்கா8ல் மேலே பிரவாகிக்கும் என்றார். அரசன் ஆறு பெருகி உலகம் செழித்தல் வேண்டும் என்னுங்கருணையினால் அந்தச் சுழியில் விழுந்தான். அதைக் கண்ட அம்முனிவர் நம்முடைய சொல்லினா லல்லவா அரசன் இறந்தான் என்று துக்கித்துத், தாமும் அச்சுழியில் விழுந்து இறந்தார். (67
இத்தரையோர் தம்மி லிருவரே மேலானோர் சித்திரச வாதி சிவயோகி - முத்தனையாய் நல்குரவு முற்பவமு நாசம் புரிவாரே அல்லவரே வீரியக் கீடம்.
இ - ள். முத்து அணையாய் - முத்துப்போல்வாளே. - இத்தரை யோரி தம்மில் இருவரே மேல் ஆனோர் - இந்தப் பூமியிலுள்ள மானுடரில் இருவரே மேலானவர்கள் (அவர் யார் யார் எனில்).-- சித்தி ரசவாதி சிவயோகி - சித்தியையுடைய ரசவாதியும் சிவயோகியு மாம் (என்ன காரணத்தினால் மேலானவர் எனின்), “ நல்குரவும் உற் பவமும் நாசம்புரிவார் - (இந்த இருவரும் முறையே) தரித்திரத்தையும் பிறவியையும் கெடுப்பவராவர் (அதனால்) அல்லவரே வீரியக் கீடம் - இவரல்லாதவர்களே இந்திரியத்தாலான புழுக்கள். எ-று. ஏ அசை
இ-ம். இரசவாதி செல்வத்தை அடைதலாலும், சிவயோகி மோ கூடித்தை அடைவதாலும், இவர் இருவரும் மேலாணலராக மதிக் கப்படுவர். எ-ம். (68)
அற்றசிவ யோகிக் கருஞ்சின்ன மூன்றுண்டு பற்றலகை யுன்மத்தர் பாலரியல் - முற்றுரச வாதிக்குச் சின்னமூன் றுண்டே மகிழ்போகம் ஈத விரவாமை யென்று.
இ-ன். ^ற்ற சிவயோகிக்கு - (எல்லாப் பற்றுக்களையும் விட்ட சிவயோகிக்கு, - பற்று அலகை உன்மத்தர் டாலர் இயல் (என்று) . பிசாசரும் உன்மத்தரும் பாலரும் ஆகிய இவர்களுடைய குணங் களென்று, - அரும் சின்ன்ம் மூன்று உண்டு - அருமையாகிய அடை யாளங்கள் மூன்று உள்ள்ன - முற்று ரசவாதிக்கு - மேலான ரசவாதிக்கு, - மகிழ் போகம் ஈதல் இரவாமை என்று - மகிழ்ச்சியை புடைய அநுபவங்களும் கொடையும் பாசகஞ் செய்யாமையும் என்று, சின்னம் மூன்று உண்டு. அடையாளங்கள் மூன்றுள்ளன. எ - று.
y esparo.

Page 51
இ~ம். இங்கே சொல்லப்பட்ட மும்மூன்று குணங்களினாற் சிவ யோகியையும் ரசவாதியையும் அறிந்துகொள்ளலாம். எ-ம். (69)
வல்லவர்பாற் கல்வி மதமா ணவம்போக்கும் அல்லவர்பாற் கல்வி யவையாக்கும் - நல்லிடத்தில் யோகம் பயில்வா ருயர்ந்தோ ரிழிந்தோர்கள் போகம் பயில்வார் புரிந்து.
இ-ள். வல்லவர் பால் கல்வி மதம் ஆணவம் போக்கும் - மேலோ ரிடத்திலுள்ள கல்வி அறிவின்மையையும் அகங்காரத்தையும் கெடுக் கும்; - அல்லவர் பால் கல்வி அவை ஆக்கும் . கீழோரிடத்துள்ள கல்வி அவைகளை உண்டாக்கும். -- உயர்ந்ாேதர் தல் இடத்தில் யோகம் பயில்வார் - மேலோர் நல்ல தானத்திலிருந்து யோகப்பயிற்சி செய்வர், - இழிந்தோாகள் புரிந்து போகம் பயில்வார் - கீழோர்கள் விரும்பிப் போகங்களை அநுபவிப்பர். எ - று.
இ-ம். மேலோர் கல்வி நற்குணங்களை யுண்டாக்குதலால் அவர் யோகத்தை விரும்புவர்; கீழோர் கல்வி தீக்குனங்களை உண்டாக்குத லால் அவர் போகத்தை விரும்புவர். எ - ம். (70)
தீயவர்பாற் கல்வி சிறந்தாலு மற்றவரைத் தூயவரெ றெண்ணியே துன்னற்க - சேயிழையே தண்ணொழிய மாணிக்கஞ் சர்ப்பந் தரித்தாலு நண்ணுவரோ மற்றதனை நாடு.
இ-ள். சேயிழையே - செப் ப மா கிய ஆபரணத்தையுடைய பெண்ணே - தீயவர் பால் கல்வி சிறந்தாலும் - பொல்லாதாரிடத் திற் கல்வி மிக விருந்தாலும், - அவரைத் தூயவர் என்று எண்ணித் துன்னற்க - அவரை நல்லவர் என்று நினைத்துச் சேரா தொழிக, - சரிப்பம் தண் ஒளிய மாணிக்கம் தரித்தாலும் - (துட்டகுணமுள்ள) பாம்பு குளிர்ச்சியாகிய ஒளியையுடைய (நல்ல) மாணிக்க ரத்தினத்தை வைத்திருந்தாலும், அதனை நண்ணுவரோ - (மாணிக்கத்தை விரும்பி) அப்பாம்பை அடைவாரோ - நாடு (நீ இதனை) யோசிப்பாயாக. எ-று. எ, மற்று அசை.
இ-ம். தீயவர் மிகுந்த கல்வியுடையராயிருந்தாலும் அவரோடு பழகுதல் ஆகாது. எ-ம். (71)
- 94 -

ஊரு ரெனும்வனத்தே யொள்வாட்கண் மாதரெனுங் கூரூர் விடமுட் குழாமுண்டே - சீரூர் விரத்திவை ராக்ய விவேகத் தொடுதோல் உரத்தணியத் தையாவென் றோது.
இ - வி. ஊர் ஊர் எனும் வனத்தே - (நாம்) சஞ்சரிக்கின்ற தேசம் என்னுங் காட்டில், - ஒள் வாள் கண் மாதர் எனும் ஒள்ளிய வாட் படை போலுங் கண்களையுடைய பெண்கள் என்று சொல்லப்படும், .கூர் ஊர் விடம் முள் குழாம் உண்டு - கூர்மை மிகுந்த நச்சுமுள்ளின் கூட்டங்கள் உள்ளன, சீர் ஊர் விரத்தி - சிறப்புமிகுந்த ஞானியான வன், - விவேக வைராக்ய தொடுதோல் - விவேகத்தோடு கூடிய நிராசையாகிய செருப்பை, - உரத்து அணிய - மனமாகிய காலில் இட்டுக்கொள்ளுதலால், - தையா என்று ஒது - (அம்முட்கள் அவ ணுக்குத்) தைக்கமாட்டா என்று சொல்வாயாக. எ - று. ஏ அசை,
இ-ம். ஞானிகள் நிராசையுடையவர்களாதலால், அவர்களுக்குப் பெண்ணாசை யில்லை, எ-ம். (72)
போற்று குருகிளைஞர் பொன்னாசை யோர்க்கில்லை தோற்றுபசிக் கில்லை சுவைபாகந் - தேற்றுகல்வி நேசர்க் கிலைசுகமு நித்திரையுங் காமுகர்தம் ஆசைக் கிலைபயமா னம்.
இ-ள். பொன் ஆசையோர்க்கு - பொருளாசையுடையோர்க்கு, - போற்று குரு கிளைஞர் இல்லை - துதிக்கப்படுகின்ற ஆசாரியரும் சுற்றத்தாரும் இல்லை, - தோற்று பசிக்கு சுவை பாகம் இல்லை - உண்டாகின்ற பசிக்கு ருசியும் சமையற்பக்குவமுமில்லை. - தேற்று கல்வி நேசர்க்கு சுகமும் நித்திரையும் இலை . (மனத்) தெளி வைக் கொடுக்கின்ற கல்வியில் விருப்பமுடையவர்களுக்கு சுகமும் நித்திரையும் இல்லை,-காமுணர்தம் ஆசைக்கு பயம் மானம் இலைதூரித்தர்களுடைய பென்னாசைக்கு அச்சமும் அவமானமும் இல்லை. 6T-ty
இ-ம் உலோபிகளுக்குக் குருவும் சுற்றமும். பசியுடையோர்க்குச் சுவையும் பாசமும், கல்வியில் விருப்பமுடையோர்க்குச் சுகமும் நித் திரையும், காமுகர்களுக்குப் பயமும் அவமானமும், இல்லை. எ-ம். (73)
- 95 മ്മ

Page 52
நன்றறியாத் தீயோர்க் கிடங்கொடுத்த நல்லோர்க்குந் துன்று கிளைக்குந் துயர்சேருங் - குன்றிடத்திற் பின்னிரவில் வந்தகரும் பிள்ளைக் கிடங்கொடுத்த அன்னமுதற் பட்டதுபோ லாம்.
இ-ள். நன்று அறியாத் தீயோர்க்கு இடம் கொடுத்த நல்லோரிக் கும்-உபகாரத்தை நினையாத துட்டருக்கு இடங்கொடுத்த நல்லவர் களுக்கும்,-துன்று கிளைக்கும் துயரி சேரும்-நெருங்கிய (அவருடைய) சுற்றத்தார்க்கும் துன்பம் உண்டாம். (அது எது போலும் எனில்).-- முதல்-முன்னாளில்,--குள் மிடத்தில் இரவில் வந்த கரும்பிள்ளைக்கு இடங்கொடுத்த அன்னம்-மலையிலே இராத்திரியில் வந்தகாகத்துக்கு (இருக்க) இடங்கொடுத்த அன்னப்பகதியானது, -பின் பட்டதுபோல் ஆம்-பின் (அதனால்) அ3:-ந்த துன்பத்தைப் போலாம். எ-று.
இ-ம், உபகாரத்தை நினையாத, துட்டருக்கு இடங்கொடுத்த நல்லோர் அவராலே தங்கிளையோடு துன்பத்தை அடைவர். எ-ம்.
எ:ைாாலும் ஏறமுடியாத ஒரு பெரிய மலைக்குகையில் ஓர் அரச அன்னம் அன்னப்பட்சிகளோடு வாசஞ்செய்து கொண்டிருக்கும் போது, ஒருநாளிரவு பெருமழையினால் வருந்திய ஒரு காக்கை தான் இருக்க இடங்கேட்டது. மந்திரியாகிய அன்னம் காக்கைக்கு இடங் கொடுக்கலாகா தெஸ்து சொல்லவும், அரசவன்னம் அதன் சொல்லைக் கேளாமற் காக்கைக்கு இடங்கொடுத்தது. காக்கை அன்றிரவில் அங்கே தங்கி எச்சமிட, அவ்டிெச் சத்திலிருந்து ஆலம்வித்து முளைத் தெழுந்து, பெரிய விருகூடி மாகி, விழுதுகளை விட்டது. ஒரு வேடன் விழுதுகளைப் பற்றிக்கொண்டு அம்மலையிவேறிக் கண்ணிவைத்து அன்னங்களைப்பிடித்தான். (74)
மனம்வேறு சொல்வேறு மன்னுதொழில் வேறு வினைவேறு பட்டவர்பால் மேவும் - அனமே மன்மொன்று சொல்லொன்றுவான்பொருளு மொன்றே கனமொன்று மேலவர் தங் கண்.
இ-ன். அனமே-அன்னம்போல்வாளே.- வினை. வேறுபட்டவர் பால்-அநீதியாகிய செயல்களைவுடைய கீழோரிடத்து, - மனம் வேறு ச்ொல் வேறு மன்னு தொழில் வேறுமேவும் - மனம்வேறும் வாக்கு வேறும் பொருந்திய செய்கை வேறுமாயிருக்கும். கனம் ஒன்று மேல வர் தம் கண்-கனம் பொருந்திய மேலோரிடத்தில், - மனம் ஒன்று சொல் ஒன்று வான்பொருளும் ஒன்றே - மனமும் ஒன்று வாக்கும் ஒன்று பெருமையாகிய செயலும் ஒன்றேயாம் எறு:
مسير 96 . تمس

இ-ம். கீழோருக்கு மனஞ்சொற் செயல்கள் வேறுபட்டும், நல் லோருக்கு அவை ஒற்றுமைப்பட்டு மிருக்கும். எ-ம். (75)
கண்ணுக் கினிய சபைக்குமணி கற்றோனே விண்ணுக் கினியமணி வெய்யோனே - வண்ணநறுஞ் சந்த முலையாள் சயனத் தினியமணி மைந்தன் மனைக்கு மணி.
இ-ள். சபைக்கு கண்ணுக்கு இனிய மணி கற்றோனே-சபைக்குக் கண்ணுக்கினியதாகிய இரத்தினம் வித்துவானே,-விண்ணுக்கு இனிய மணி வெய்யோனே- ஆகாயத்துக்கு இளிதாகிய இரத்தினம் சூரியனே. சயனத்து இனிய மணி வண்ண நறும் சந்த முலையாள்-சயனத்துக்கு இனிய இரத்தினம் அழகிய நறுமணம் பொருந்திய சந்தனத்தை அணிகின்ற தனங்களையுடைய மனைவியாம், -மனைக்கு மணி மைந் தள்-வீட்டுக்கு இரத்தினம் சிறுவனாம். எ-று.
இ-ம். சபைக்கு வித்துவான்களும், ஆகாசத்துக்குச் சூரியனும், சயனத்துக்கு மனைவியும், வீட்டுக்குப் புதல்வனும் அழகைச் செய்வர். ст-цѣ. (76)
பாலினீர் தீயணுகப் பால்வெகுண்டு தீப்புகுந்து
மேலுநிர் கண்டிமையு மேன்மைபோல் - நூலினெறி உற்றோ ரிடுக்க ஒனுயிர்கொடுத்து மாற்றுவரே மற்றோர் புகல மதித்து.
இ-ன், பாலின் நீர் தீ அணுக - பாலோடுகூடிய நீரை நெருப்பு அணுகிச் கூட, - பால் வெகுண்டு தீப்புகுந்து - பாலானது (பொறாது) பொங்கி நெருப்பினுட் புகுந்து (அதனை அவித்து),-மேலும் நீர் கண்டு அமையும் மேன்மை போல் - பின்னும் நீரைக்கண்டு (தான்அடங்கும் மேன்மையைப்போல்,~நூலின் நெறி உற்றோர்-நூல்விதிப் படி நடக்கின்ற பெரியோர்கள், - இடுக்கண்-(தம்மை அடுத்த பிறருக்கு வந்த ) ஆபத்தை, மற்றோர் புகல-பிற நல்லோரி (தம்மைப்) Lalp) மதித்து உயிர் கொடுத்தும் மாற்றுவர்- (நமக்குறுதி இதுவென்று) நினைத்துத் (தம்முடைய) உயிரைக் கொடுத்தும் நீக்குவர் "எ - று, ஏ அசை,
இ-ம், மேலோரிகள் தம்முயிரைக் கொடுத்தும். தம்மை அடுத்த நல்லோர்க்கு வந்த ஆபத்தை நீக்குவர். எ-ம். (77)
پ۔ 97.سست

Page 53
அந்தோ புரமெரித்த வண்ணலடி யார்பொருள்கள் செந்தீ யினுங்கொடிய தீகண்டாய் - செந்தீயை நீங்கிற் சுடாதே நெடுந்தூரம் பேனாலும் ஏங்கச் சுடுமே யிது.
இ-ள். புரம் எரித்த அண்ணல் அடியார் பொருள்கள்-முப்புரங் கிளை எரித்த சிவபெருமானுடைய அடியார்களுடைய திரவியங்கள்செம்தீயினும் கொடிய தீ கண்டாய்-சிவப்பாகிய அக்கினியிலும் பார்க்கக் கொடிய அக்கினி என்று அறிவாயாக" -செம் தீயை நீங்கில் சுடாது-செம்மையாகிய நெருப்பை நீக்கினால் (அது)சுடாது, அந்தோ -ஐயோ!-இது (சிவனடியார் திரவியமாகிய) இந்நெருப்பு. - நெடும் தூரம் போனாலும் ஏங்தச் சுடுமே-அதிக தூரம் போனாலும் ஏங்கும் படி சுடுமே" எ-று. ஏ அசை.
இ-ம், நீங்கினாற் சுடாத நெருப்பைப் பார்க்கிலும், நீங்கி னாலுஞ் சுடுஞ் சிவனடியார் திரவியாபகாரம் கொடியது. எ-ம். (78)
நிந்தையில்லாத் துடியவரு நிந்தையரைச் சேரிலவர் நிந்தையது தம்மிடத்தே நிற்குமே - நிந்தைமிகு தாலநிழற் கீழிருந்தான் றன்பா லருந்திடினும் பாலதெனச் சொல்லுவரோ பார்.
இ - ள். நிந்தை இலாத் தூயவரும் நிந்தையரைச் சேரில் - இக முப்படாத மேலோரும் இசுழப்படுங் கீழோரைச் சேர்த்தரல், - அவர் நிந்தையது தம்மிடத்தே நிற்கும் - அவருக்குரிய இகழ்ச்சி தம்மிடத் தும் நிலை பெறும்:- நிந்தை மிகு தால நிழல் கீழ் இருந்து ஆன் பால் அருந்திடினும் - இழிவு மிகுந்த பனையிநிழலிலிருந்துபசுவின் பாலைக் குடித்தாலும், - அது பால் எனச் சொல்லுவரோ - அதனைப் பாலென்று சொல்லுவார்களோ - பாரி - (இதனை) ஆலோசிப்பா பாக. எ - று. ஏ அசை; தன் சாரியை. -
இ - ம், கீழோருடைய சகவாசத்தால் மேலோர் இகழப்படுவ்ர். T - the (79)
கன்னமே பூரித்த காயத்தோர் தஞ்செவியிற் றம்மநுரல் புக்காலுந் தங்காதே - சன்மமெலும் புண்டு சமிக்குநா யூணாவி னெய்யதனை உண்டு சமிக்குமோ வோது.
ـــــــــ 98 سے وہ

இ - ள்: கன்மமே பூரித்த காயத்தோரி செவியில் - பாவமே நிறையப்பெற்ற சரீரத்தையுடைய பொல்லாதோருடைய காதில், ட கன்ம நூல் புக்காலும் தங்காது - தருமசாஸ்திரம் உபதேசிக்கப்பட் டாலும் (மனத்தில்) தங்காது:- சன்மம் எலும்பு உண்டு சமிக்கும் நாய் - தோலையும் எலும்பையும் உண்டு திருப்தியடையும் நாயா னது, - ஆவின் தெய் ஊண் அதனை உண்டு சமிக்குமோ - பசு நெய் கலந்த உணவை உண்டு திருப்தியடையுமோ! - ஒது - சொல் வாயாக. எ - று. தம் சாரியை ஏ அசை. சர்மம் சன்மம் என் றும், சுஷ்மித்தல் என்றும், ஆயின. சர்மம் - தோல், சுஷ்மித்தல், பொறுத்தல் அஃதாவது இங்கே திருப்தியடைதல்3
இ - ம். பாவிகளுக்குத் தர்மசாஸ்திரத்தை உபதேசித்தாலும், அது அவர் மனத்திலே தங்காது: எ - ம். (80)
பெண்ணுதவுங் காலை பிதாவிரும்பும் வித்தையே எண்ணி றணம்விரும்பு மீன்றதாய் - நண்ணிடையிற் கூரியநற் சுற்றங் குலம்விரும்புங் காந்தனது பேரழகு தான் விரும்பும் பெண்.
இ - ள். பெண் உதவுங் காலை - பெண்னை விவாகஞ்செய்து கொடுக்கும் பொழுது, - பிதா வித்தை விரும்பும் - (அவளுடைய) தகப்பன் (கணவனுடைய) கல்வியை விரும்புவான்: ஈன்றதாய் எண் இல் தனம் விரும்பும் - பெற்றதாய் அளவிறந்த திர வியத் தை விரும்புவாள்:- இடையில் நண் கூரிய நல் சுற்றம் குலம் விரும்பும் - (இவர்களுக்கு) இடையிற் பொருந்திய மிகுந்த நல்ல சுற்றத்தார் குலத்தை விரும்புவர்,- பெண் - (அப்) பெண்ணானவள், - காற் தனது பேரழகு விரும்பும் - நாயகனுடைய பேரழகை விரும்புவாள், எ - று. ஏ. தான் அசை.
இ - ம். ஒரு பெண்ணை விவாகஞ்செய்து கொடுக்கும் போது பிதா நாயகனுடைய கல்வியையும், தாய் செல்வத்தையும், சுற்றத் தார் குலத்தையும், பெண் அழகையும் விரும்புவது இயற்கை; (81)
எ சு ம்.
காந்துநறும் புண்ணைக் கலந்தீ விரும்புமே வேந்தர் தனமே விரும்புவார் - சாந்தநூல் கல்லார் பகைசேர் கலகம் விரும்புவார் நல்லார் விரும்புவார் நட்பு,
س-- 99 سسسس

Page 54
இ - ள், ர காந்தும் நறும் புண்ணை கலந்து விரும்பும் - சயா னது காந்துகின்ற மனத்தையுடைய புண்ணைச் சேர்த்து (அதனை) விரும்பும், - வேந்தர் தனமே விரும்புவார் - அரசர் செல்வத்தையே விரும்புவாரி - சாந்த நூல் கல்லாரி பகை சேர் கலகம் விரும்பு வாரி - அடக்கத்தைக் கொடுக்கும் நூல்களைப் படியாத மூடசி பகையை உண்டாக்குகின்ற கலகதிதை விரும்புவார் - நல்லார் நட்பு விருப்புவார் - நல்லவர் சிநேகத்தை விரும்புவார். எ - று. ஏ. அசை
இ - ம். அரசர் செல்வத்தையும், மூடர் கலகத்தையும், நல்லோர் சிநேகத்தையும் விரும்புவர். எ - ம். (82)
கற்றைக் குழலார் கவினெல்லா மோர்மகவைப் பெற்றக் கணமே பிரியுமே-கற்றருளை வேட்ட பெரியோர் பெருமையெலாம் வேறொன்றைக் கேட்ட பொழுதே கெடும்.
இ - ன். கற்றைக் குழலார் கவின் எல்லாம் - கூட்டமாகிய கூந்தலையுடைய பெண்களுடைய அழகு முழுதும், -ஓர் மகவைப் பெற்ற அக்கணமே பிரியும் - ஒரு குழந்தையைப் பெற்ற அப் பொழுதே நீங்கும்-(அதுபோல)--கற்று அருளை வேட்ட பெரியோர் பெருமை எலாம் - (ஞான நூல்களைப்) படித்துக் (கடவுளுடைய) திருவருளை விரும்பிய ஞானிகளுடைய பெருமை முழுவதும்.--வேறு ஒன்றைக் கேட்ட பொழுதே கெடும் - (அவ்வருளல்லாத) வேறொன் றைக் கேட்டவுடனே அழியும், ள - று. ஏ அசை.
இ - ம். விஷயப்பற்றுடைய ஞானிகள் இழிவை அடைவர். எ - ம். (83)
சீலங் குலமடியா டீண்டிற் கெடுங்கணிகை ஆலிங் கனந்தனநா சம்மாகும்-நூலிழந்த வல்லிதழு வக்குறையும் வாழ்நாள் பிறர்தாரம் புல்லினர்க்கெல் லாநலமும் போம்.
இ - ள். அடியாள் தீண்டில் சீலம் குலம் கெடும் - தாசியைச் சேர்ந்தால் ஒழுக்கமும் சாதியும் கெடும். - கணிகை ஆலிங்கனம் தன தாசம் ஆகும் - பொதுப்பெண்ணைச் சேர்ந்தாற் பொருள் அழியும்நூல் இழந்த வல்லி தழுவ வாழ் நான் குறையும் - திருமங்கிலியம் நீங்கிய விதவையைச் சேர்ந்தால் ஆயுசு குறையும்.-பிறர் தாரம் புல்லினர்க்கு எல்வா நலமும் போம் - பிறர் மனைவியரைச் சேர்ந்த வர்க்கு எல்லா நன்மையும் கெடும். எ - று.
حسے 1100 سیمس

இ - ம் தாசியை விரும்புவோருக்கு ஒழுக்கமும் குலமும் வேசியை விரும்புவோருக்குத் திரவியமும், விதவையை விரும்பு வோர்க்கு ஆயுகம், பிறன் மனையாளை விரும்புலோர்க்கு எல்லா நலமும் அழியும். எ - ம் (84)
சத்தியமெக் காலுஞ் சனவிருத்த மாகுமே எத்தியபொய் பார்க்கு மிதமாகும்-நத்தியபால் வீடுதொறுஞ் சென்று விலையா மதுவிருந்த வீடுதனி லேவிலையா மே.
இ - ள். நத்திய பால் வீடு தொறும் சென்று விலையாம்  ை (உடமபை) வளர்க்கின்ற பால் வீடு தோறும் போய் விலைப் படும்-சத்தியம் எக்காலும் சன விருத்தம் ஆகும் - (உயர்வாகிய) உண்மை எப்பொழுதும் (இழிந்த) சனங்களுக்கு வெறுப்பைத் தருவ தாயிருக்கும்-மது இருந்த விடுதனில் விலை ஆம் - இழிந்த) கள்ளுத் தானிருந்த வீட்டில் விலைப்படும்-எத்திய பொய்யாாக்கும் இதம ஆகும் - மயக்குகின்ற (இழிவாகிய) பொய் (அந்தச் சனங்கள் எல்லாருக்கும் விருப்பத்தைத் தருவதாயிருக்கும். எ - று. ஏ அசை,
፰ - ሡb• இழிசனங்கள் வெறுததலால் மெய்க்கு இழிவும் அவர் விரும்புதலாற் பொய்க்கு உயர்வும் இல்லை. எ-ம். (88)
நல்லொழுக்க மில்லா ரிடஞ்சேர்ந்த நல்லோர்க்கு நல்லொழுக்க மில்லாச்சொ னண்ணுமே-கொல்லும்விடப்
பாம்பெனவுன் னாரோ புழுதையே யானாலுந் தூம்பமரும் புற்றடுத்தாற் சொல்.
இ - ள். நல் ஒழுக்கம் இல்லார் இடம் சேர்ந்த நல்லோரிக்கும் - தீயொழுக்கமுள்ளவருடைய இடத்தை அடைந்த நல்லொழுக்கமுள்ள வர்களுக்கும்.-ரல் ஒழுக்கம் இல்லாசி சொல் - நண்ணும் - இழிவாகிய சொல் உண்டாகும், - தூம்பு அமரும் புற்று அடுத்தால் - துவாாத்தை புடைய புற்றுக்குச் சமீபத்திற் கிடந்தால், - பழுதையே ஆனாலும் - வைக்கோற் புரியேயாயினும், - கொல்லும் விடப்பாம்பு என உன்னாரோ - (அதனை) கொல்லுகின்ற நஞ்சையுடைய பாம்பு என்று நினையாரோ,-சொல் - நீ சொல்வாயாக. எ - று. ஏ அசை,
3.
இ - ம், தீயொழுக்கமுடையோருடைய இடத்தைச் சேர்ந்த நல் லொழுக்கமுடையோரையும் உலகத்தார் தீயொழுக்கமுடையவராகச் சொல்வர்.எ-ம். (86).
- 101 -

Page 55
வாக்குநயத் தாலன்றிக் கற்றவரை மற்றவரை ஆக்கைநயத் தாலறிய லாகாதே-காக்கையொடு நீலச் சிறுகுயிலை நீடிசையா லன்றியே கோலத் தறிவருமோ கூறு.
இ - ள். கற்றவரை மற்றவரை - படித்தவரையும் படியாதவரை யும்,-வாககு நயத்தால அன்றி - (அவர்களுடைய சொல்லின் நயத் தினாலன்றி. - ஆக்கை நயத்தால் அறியல ஆகாது- வடிவழகினால் அறியக்கூடாது; காக்கையொடு நீலச் சிறு குயிலை - காகத்தையும் கரு நிறத்தையுடைய சிறிய குயிலையும், -க நீடு இசையால் அன்றி - (அவைகளினுடைய) நீண்ட குரலால் (அறிதல்) அல்லாமல், - கோலத்து அறிவருமோ - உருவததினால் அறிதல் கூடுமோ? - கூறு - நீசொலவாயாக, ல ள நு. ஏ அசை,
* இ-ம். இவர் படித்தவர் இவர் படியாதவர் என்பதை அவரவர் சொலலாலன்றி வடிவததாலறுதல் கூடாது. எ - ம். (87ル
ஆசையெனும் பாசத்தா லாடவர்தஞ் சிந்தனை வசுமனை யாந்தறியில வீழ்த்தியே-மாசுபுரி மாயா மனைவியரா மக்கண மகவென்னும் நாயாற் கடிப்பித்த னாடு.
இ - ன் மாசு புரி மாயா மனைவியர் - குற்றத்தைச் செய்கின்ற கெடத. மனைவியராகிய வேடர்-ஆடவர் தம் சிந்தைதனை - ஆடவர்களுடைய மனமாகிய விலங்கை;~ஆசை எனும் பாசத்தால் . ஆசை எனகின்ற கயிற்றினால்,-வீசும் மனை ஆம் தறியில் வீழ்த்தி - உலையச்செய்கின்ற இல்வாழ்க்கையாகிய தூணிற்கட்டி,-மக்கள் மகவு என்னும் நாயால் கடிப்பித்தல் - ஆண்மக்கள் பெண்மக்கள் என்கின்ற நாய்களாற் கடிப்பித்தலை-நாடு - நீ நினைப்பாயாக -- ஆ - இஃதென்ன கொடுமை எ = நு, ஏ அசை,
இ - ம் ஒருவன் இல்லாச்சிரமத்தில் துர்க்குணமுடைய மனைவி மக்களால் வருந்துதல், விலங்கு வே-ரிடத்தில் அகப்பட்டு நாய் களாற் கடிக்கப்படுதல் போலும். எ - ம். (88)
தானறிந்தோ ருக்குதவி தன்னா லமையுமெனில் தானுவந்தீத றலையாமே-ஆனதனாற் சொன்னாற் புரிதலிடை சொல்லியும்பன் னாண்மறுத்துப் பின்னாட் புரிவதுவே பின். . .
"" ست 102 نات

இ - ள். தான் அறிந்தோருக்கு - தான் பழகிய ஒருவருக்கும் உதவி தன்னால் அமையும் எனில் - உதவி (செய்யத்) த ைனால் இயலுமாயின்.--தான் உவந்து ஈதல் தலை ஆய் - (அவர் கேட்கு முன்) தான் (அவருடைய குறிப்பையறிந்து அவ்wதவில்ய) மகிழ்த்து செய்தல் முதலாம-ஆனதனால் - ஆதலினால்-சொன்னால் புரிதல் இடை - (அவf) கேட்ட பின் செய்தல் இடையாம்.--சொல்லியும் - (அவர்) கேட்டும், -பல் நாள் மறுத்து - பல நாட் (செய்யாது.) - மறுத்து.-பின் நாள் புரிவது பின் - அதன் பின்பு செய்வது கடை யாம், எ - று. ஏ அசை.
இ-ம். கேளாமற் செய்தல், கேட்டபின் செய்தல் கேட்ட பின்னும் மறுத்துச் செய்தல் என்னும் மூவகை உதவியும் முறையே முதல் Q69 - 4s6d - 67 Göpy God FITGVG) uLu Guib. ST-LÔ. (89)
உற்ற மறையகத்தி னுய்க்குமவ னுத்தமனே மற்றம் மறைபகர்வோன் மத்திமனே - முற்றிழையே அத்த முறலாற் புகல்வா னதமனென விததகநூ லோதும் விரித்து.
இ–ள், முற்று இழையே-(தொழில்) முற்றிய ஆபரணத்தையுடை யவளே,-உற்ற மறை அகததில் உய்க்குமல்ன் உத தமன்-(தன செவி யிற்) பொருந்திய இரகசியத்தை (ஒருவருக்கும் வெளிவிடாமல தன்) மனத்தில் அடக்கிவைத்திருப்பவன் உத்தமன் - அ பறுை பகா வேன் மத்திமன - அந்த ரகசியத்தைப (பிறாக்குச்) சொல்லுச்வான .ததி மன்.-அத்தம் உறலால் புகலவன அதமன் எண்-பெருளைப பெறு தலினால் (அவ்விரகசியத்தைச்) சொல்லுவோன அதமன் என்று. வித்தக நூல் விரித்து ஒதும்-நல்லறிவைப் போதிக்கின்ற நூல்கள் விரித்துச் சொல்லும், எ-று. ஏ. மற்று அசை, -
இ-ம். இரகசியத்தைச் சொல்லாதவர் உத்தமர் சொல்லுவோர் மத்திமர் பொருள் வாங்கிக்கொண்டு சொல்லுர்வார் அதமn. எ-ம். (90) உத்தமர்தா மீயுமிடத் தோங்குபனை போல்வரே மத்திமர்தாந் தெங்குதனை மானுவரே-முத்தலரும் ஆங்கமுகு போல்வா ரதம ரவர்களே தேங்கதலி யும்போல்வார் தேர்ந்து.
இ-ன். உத்தமர் தேர்ந்து சயுமிடத்து ஓங்கு பைைபோல்வர்உத்தமர் (பிறருடைய குறிப்பை) அறிந்து கொடுக்குமிடத்து உயர்ந்த
- 103 -

Page 56
பன்ையைப் போல்வர்-மத்திமர் தெங்குதனை மாறுவர் - மத்திமர் தென்னமரத்தைப் போல்வார்,- அதமர் முத்து அலரும் கமுகு போல் வார்-அதமர்கள் முத்துப்போல அலருகின்ற கமுகைப்போல்வர்,- அவர்களே தேம் கதலியும் போல்வார்-அந்த அதமர்களே தித்திப் பாகிய வாழையையும் போல்வர், எ-று. தாம், ஏ, ஆம் அசை.
இம் கொடையாளர் கொடுக்கும் தன்மைகளினால் உத்தமர் மத்திமர் அதமர் என மூவகைட்படுவர். எ-ம்.
பனை தனக்கொருவர் நீர் விட்டு வளர்க்காமலிருக்கப் பயனைக் கொடுத்தல்போல உத்தமர் தம்மை ஒருவர் கேளாமலிருக்கக் குறிப் பறிந்து கொடுத்தலினாலும், தென்னை சிலகாலம் நீர்விட்டு வளர்க் கல் புயனைக் கொடுத்தல்போல மத்திமர் தம்மை ஒருமுறை கேட்ட வுடன் கொடுத்தலினாலும், வாழையும், கமுகும் அடிக்கடி நீர்விட்டு வளர்க்கப் பயனைக் கொடுத்தல்போல அதமர் பலமுறை கேட்டபின் கொடுத்தலினாலும், இம்மரங்கள் மூவகைக் கொடையாளர்களுக்கும் உவமானமாயின. (91)
எல்லோர் தமக்கு மினிதுதவ லன்றியே நல்லோர் தமக்குதவி நாடாரே-வல்லதரு நாமநிதி மேக நயந்துதவ லன்றியே தாமுதவி நாடுமோ சாற்று
இ-ன், நல்லோரி-மேலோரி, -எல்லோர் தமக்கும் இனிது உதவல் அன்றி-(தாம்) எல்லாருக்கும் மகிழ்ச்சியோடு கொடுப்பதல்லாமல், - தமக்கு உதவி நாடார்-(அவர்களிடத்துத்) தமக்குப் பிரதியுபகாரத்தை விரும்பார் - வல்லதரு நாம நிதி மேகம்-(கொடையில்) வல்ல கற்பக விருகூடிமும் பெருமையையுடைய சங்கநிதி பதுமதிதிகளும் மேகங்களும்,. நயந்து-உதவல் அன்றி-(தாம் பிறருக்கு) விரும்பிக் கொடுப்பதல் லாமல் -தாம் உதவி நாடுமோ-தாம் (அவர்களிடத்துப்) பிரதியுப காரத்தை விரும்புமோ?-சாற்று. நீ சொல்வாயாக. எ-று. ஏ அசை.
- ம். மேலோர் பிரதியுபகாரத்தை விரும்பாது கொடுப்பர். GT - Lb. − (92)
வெய்யோன் கிரண மிகச்சுடுமே வெய்யவனிற் செய்யோன் கிரணமிகத் தீதாமே - வெய்யகதிர் எல்லோன் கிரணத் தெரியினிலு மெண்ணமில்லார் சொல்லே மிகவுஞ் சுடும்.
104 -

இ - ள், வெய்யோன் கிரணம் மிகச் சுடும் . சூரியகிரணம் மிகச் சுடும், - செய்யோன் கிரணம் வெய்யவனில் மிக தீது ஆம் - அக்கினி யின் காத்தி சூரிய கிரணத்திலும் மிகக் கொடியதாயிருக்கும். வெய்ய கதிர் எல்லோன் கிரணத்து எரியின்Cலும் - வெம்மையாகிய ஒளியை யுடைய சூரிய கிரணத்திலும் அக்கினியிலும் ப்ார்க்க, - எண்ணம் இல்லார் சொல்லே மிகவும் சுடும் - நல்லறிவில்லாத மூடருடைய (தீய) சொல்லே மிகவும் சுடும். எ - று. ஏ அசை.
இ - ம், துட்டருடைய தீச்சொற்கள் நெருப்பினுங் கொடியன. EST - ib. (93)
திங்க ளமிர்த கிரணமிகச் சீதளமே திங்களினுஞ் சந்தனமே சீதளமாம் - இங்கிவற்றின் அன்பறிவு சாந்த மருளுடையார் நல்வசனம் இன்பமிகுஞ் சீதளமாமே.
இ - ள். திங்கள் அமிர்த கிரணம் மிகச் சிதளம் - சத்திரனுடைய அமிர்த கிரணம் மிகவுங் குளிர்ந்தது, - சந்தனமே திங்களினும் சித ளம் ஆம் - சந்தனமே சந்திரனிலும் குளிர்ந்ததாம், - அன்பு அறிவு சாந்தம் அருள் உடையார் நல்வசனம் - அன்பும் அறிவும் பொறுமை யும் அருளும் உடையோருடைய இனிய வாரித்தை,  ைஇவற்றின் இன்பம் மிகும் சீதளம் ஆம் - இந்த இரண்டைப் பார்க்கிலும் இன் பத்தை மிகச் செய்கின்ற குளிர்ச்சியுள்ளதாம் எ - று. ர. இங்கு e26.Já.
இ - ம்: அன்பு முதலிய நற்குணங்களுடையோருடைய இன் சொற்கள் மிகுந்த இன்பத்தைக் கொடுக்கும், எ , ம், (94)
சீராம்வெண் ணிற்றுத் திரிபுண் டரம்விடுத்தே பேராண முத்தி பெறவிரும்பல் - ஆரமிர்த சஞ்சீ வியைவிடுத்தே சாகா திருப்பதற்கு நஞ்சே புசித்ததுபோனாடு.
இ - ன். சீர் ஆம் வெண்ணிற்றுத் திரிபுண்டரம் விடுத்து - ஐக வரியமாகிய வெண்மையையுடைய விபூதியினாலே திரிபுண்டரந் தரி யாது (வேறொன்றைத் தரித்து) - பேர் ஆன முத்திபெற விரும் பல் - மேன்மையாகிய மோக்ஷத்தை அடையும்படி (ஒருவன்) ஆசைப் படுதல், - சாகா திருப்பதற்கு - சாகாதிருத்தற்கு - ஆர் அமிர்த சஞ்சீவியை விடுத்து - அருமையாகிய அமுத சஞ்சீவியை உண்ணாமல் -நஞ்சே புதித்தது போல் நாடு - தஞ்சையே உண்ணுவது போலும் GrašvpGaur umri ST - pye y Jay GoIF.
’’س۔ 105 ہے

Page 57
இ - ம், முத்தியை விரும்புவோர் விபூதியினாலே திரிபுண்டரந் தரித்தல் வேண்டும், எ - ம் (95)
செந்தா மரையிரவி சேருதயம் பார்க்குமே சந்திரோ தயம்பார்க்குந் தண்குமுதங்-கந்தமிகும் பூவலரப் பார்க்கும் பொறிவண் டரனன்பர் தேவரவைப் பார்ப்பர் தெளிந்து.
இ-ள். செந்தாமரை சேர் இரவி உதயம் பார்க்கும்-செந்தாமரை வருகின்ற சூரியனுடைய உதயத்தைப் பார்க்கும்,-தண் குமுதம் சந்தி ரோதயம் பார்க்கும்-குளிர்ச்சியாகிய ஆம்பல் சந்திரோதயத்தைப் பார்ககும்-பொறி வண்டு கந்தம் மிகும் பூ அலரப் பாாக்கும்-புள் ளியையுடைய வண்டு வாசனை மிகுகின்ற பூக ஆள் அலர (அவற்றைப்) பார்ககும்.அரன் அன்பர் தெளிந்து தே வரவைப் பார்ப்பர்-சிவன டியார்கள் (கேட்டல் சிநதித்தல்களால்) தெளிந்து, சிவபெருமான் (தமது தியானத்தில்) எழுந்தருளி வருதலைத் தரிசிப்பர் எ-று
V 99&F,
இ-ம். மெய்ஞ்ஞானிகள் சிவப்பேற்றை விரும்புவர். எ-ம். (96)
வில்லமறுகுக் கொவ்வா மெனமலர்க ணால்வரெனும் நல்லவன பர்சொற்கொவ்வாந்ான் மறைகள்-மெல்லிநல்லாய் ஆமந் திரமெவையு மைந்தெழுத்தை யொவ்வாவே சோமசுந்த ரற்கென்றே சொல.
இ-ன் மெல்லி நல்லாய்-மெல்லிய இயல்பினையுடைய பெண்னே, -சோமசுந்தரற்கு - உமாதேவயாரோடுகூடிய பேரழகராகிய சிவ பெருமானுக்கு, மெல் மலர்கள் வில்லம் அறுகுக்கு ஒள்வா-மென்மை யாகிய புஷ்பங்கள் வில்வத்துக்கும் அறுகுக்கும் ஒப்பாகா- நான் மறைகள்-(தாம் அருளிச்செய்த) தான்கு வேதங்களும் - நால்வர் எனும் நல்ல அன்பர் சொற்கு ஒவ்வா- (திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் முதலிய) நால்வர் என்கின்ற மெய்யடியார்கள் அருளிச் செய்த தேவார திருவாசகங்களுக்கு ஒப்பாகா-ஆம் மந்திரம் எவை யும் ஐந்தெழுத்தை ஒவ்வா-(சுத்தமாயையில்) உண்டாகிய மந்திரங் கள் எல்லாம் (தமது திருவுருவாகிய பூரீ பஞ்சாக்ஷரத்துக்கு ஒப் பாகா-என்று சொல்-என்று சொல்வாயாயாக. எ-று, ஏ அசை.
இ-ம். சிவபெருமான் வில்வத்திலும் அறுகிலும் தேவார திரு வாசகங்களிலும் பூரீ பஞ்சாக்ஷரத்திலும் அதிக பிரீதியுடையவர். 6Trub. (97)
= 10 ത്ത്.

கல்லார் பலர்கூடிக் காதலித்து வாழினுநூல் வல்லானொருவனையே மானுவரோ-அல்லாரும் எண்ணிலா வான்மீ னிலகிடினும் வானகத்தோர் வெண்ணிலா வாமோ விளம்பு.
இ-ஸ் கல்லார் பலர் கூடிக் காதலித்து வாழினும் - படியாத மூடர் பலர் கூடி (ஒகுவரையொருவரி) விரும்பி வாழ்ந்தாலும், - நூல் வல்லான் ஒருவனையே மானுவரோ-கல்வியில் வல்ல ஒருவனையே ஒப்பாவரோ?-வான கத்து-ஆகாயத்தில்..அல் ஆகும் எண் இலா வாள்மீன் இலகிஎனும்-இரவில் நிறைந்த அளவில்லாத நகடித்திரங் கள் விளங்கினாலும், -ஓர் வெண் நிலா ஆர்யா - ஒரு வெண்மை யாகிய சந்திரனுககு ஒபபாகுமோ, - விளம்பு - நீ சொல்வாயாக, 6T-7.
இ-ம், மூடர் பலர் கூடினாலும் ஒரு வித்துவானுக்கொப்பாகார். 6T-lb. (98)
சந்தனத்தைச் சேர்தருவுந் தக்க மணங்கமழுஞ் சந்தனத்தைச் சார்வேய் தழல்பற்ற - அந்தவனந் தானுமச் சந்தனமுந் தன்னினமு மாள்வதன்றித் தானுங் கெடச்சுடுமே தான்.
இ-ள். சந்தனத்தைச் சேர் தருவும் தக்க மணம் கமழும்-சந்தன மரத்தைச் சேர்ந்த (யற்றை) மரங்களும் தகுதியாகிய (அச்சந்தன) மணம் கமழப் பெறும்,-சந்தனத்தைச் சார்வேய் - சந்தனமரத்தை அடுத்த மூங்கிலானது ,-தழல் பற்ற-நெருப்புப் பற்றிக் கொள்ள (அதனால்),-அந்த வனம் தானும்-(தனக்கிடமாகிய) அந்தக்காடும், -அச் சந்தனமும்-அந்தச் சந்தன மரமும்,-தன் இனமும் மாள்வது அன்றி-தன் சாதியாகிய மூங்கில்களும் எரிவது அல்லாமல்,-தானும் கெடச் சுடுமே-தானும் அழியும்படி சுடுமே எ-று, தான் அசை,
இ - ம். பெரியோரை அடுத்த சிலர் அவராற் பெருமையடைவர்;
சிலர் அவரைக் கெடுப்பதன்றித தாமுத் தம்மினத்தோடு கெடுவர். 6T - ub. (99)
கங்கைநதி பாவஞ் சசிதாபங் கற்பகந்தான் மங்க லுறும்வறுமை மாற்றுமே-துங்கமிகும் இக்குணமோர் மூன்றும் பெரியோ ரிடஞ்சேரில் அக்கணமே போமென் றறி.
سے ... 107 سے

Page 58
இ - ள், கங்கை நதி பாவம் - கங்கை நதி பாவத்தையும், - சசி தாபம் - சந்திரன் வெப்பத்தையும், -கற்பகம் மங்கல் உறும் வறுமை மாற்றும் - கற்பகவிருக்ஷம் (எல்லா நலங்களையும்) கெடும் படி செய்கின்ற வறுமையையும் போக்கும்.--பெரியோரிடம் சேரில் - பெரியோரிடத்திற் சேர்ந்தால், -இக்குணம்ஒர் மூன்றும் அக்கணமே போம் - இந்தக் குனம் மூன்றும் அப்பொழுதே நீங்கும் -(அதுமாத் திரமா!).துங்கம் மிகும் என்று அறி. (பலவகை) உயர்வும் மிக அண்டாகும் என்று அறிவாயாக. எ - று. தான், ஏ அசை,
இ - ம். பெரியோரை அடுத்தவருக்குப் பாவமும் தாபமும் வறு மையும் நீங்குதலன்றி, மேன்மையுமுண்டாம். எ - ம், (100)
(நீதிவெண்பாவுரை முற்றிற்று)

கண்ணிர் அஞ்சலி !
கிளிவெட்டி ம. அருணாசலம் அவர்கள்
“நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் என்றும் சிவன் தாள் நினை" என்பது போல் அன்றும் இன்றும் என்றுமே "மக்கள்" என்ற நினைப்புடன் எங்கிருந்தாலும் "மக்களின் தொண்டே மகேசன் தொண்டென எக்காலத்திலும் எவரானாலும் Ꮉ "உடுக்கை இழந்தவன் கைபோல் உதவி இடுக்கண் களையும் எமது தங்கத்தின் தந்தையே, அருணா சலப் பெரியாரே, முந்தைப் "பதிவால் மிக மூத்தோரே அன்பின் துணையாள், அருமைப் புதல்வர், அன்பு மருகியர், அரிய நற்பேரர் இரங்கவும், யாமெலாம் ஏங்கவும் விட்டே பிரிந்தே சென்றீர்? பேசுதற்கறியோம் ! தங்களின் "ஆத்மா” சாந்தியடைந்திட எங்கும் நிறை பொருள் இறைஞ்சி நின்றோமே !
இவ்வண்ணம்,
புதுக்குடியிருப்பு மக்கள் விகாரை வீதி - திருமலை 28-07-93
അ 109 ഷ

Page 59
கண்ணிர் அஞ்சலி
பிறப்பு: 15-11-1896 ՁյDւնւյ: 26-07-1993
தமிழீழ தாயகத்து திருகோணமலை மாவட்டம் கிளிவெட்டி கிராமத்துதித்து தொண்ணுாற்று ஏழாண்டு உயர்வான நிலையோடு மதிப்போடு வாழ்ந்து s புகழான நன் மக்கள் தரணிக்காய் தமிழுக்காயீந்து வளமான சுகமோடு பலகாலம் புவியில் உறவாகி இன்று இறையோடு ஒன்றாகி மண்வாழ்வு நீத்த
மயில்வாகனம் அருணாசலம்
பெரியார்க்கு எங்கள்
பலமான இதயங்களின்
பண்பான அஞ்சலிகள் சாந்தி ! சாந்தி 11 சாந்தி !!!
தமிழர் விடுதலைக் கூட்டணி அமிர்தலிங்கம் நினைவுப்பணிக் கழகம்
حس۔ 10.J، جیس۔

நன்றி நவிலுகின்ற்ோம்
எங்கள் குடும்பத்தின் மூத்ததலைவர் சிவபதம் அடைந்த செய்தி கேட்டு தங்கள் துயரத்தையும் அனுதாபத்தையும் நேரிலும், தந்தி, தொலைபேசி, கடிதம் மற்றும் பிற வழிகளிலும் தெரிவித்து ஈமக் கிரியைகள் சிறப்பாக நடைபெற அனைத்துதவிகளையும் நல்கிய, பங்கு பற்றிய உற்றார் உறவினர் நண்பர்கள் அன்பர்கள் அனை வருக்கும் நினைவு வெளியீடாம் "உண்மை" எனும் நூலுக்கு இரங்கல் செய்தி அனுப்பி ஆதரவு அளித்த அன்பர்களுக்கும் ம்ற்றும் சகலவழிகளிலும் உதவி புரிந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எங்கள் உளம் நிறைந்த நன்றி.
இவ்வண்ணம்.
மக்கள், Aருமக்கள், பேரப்பிள்ளைகள்
an III me

Page 60


Page 61
KUMARAN PRESS, 2
 
 

1, Dan Tn Street, Colonubo-12.