கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ்ப்பாண அரச பரம்பரை

Page 1


Page 2


Page 3

யாழ்ப்பாண அரச பரம்பரை
விஜயகாலிங்கன்
முதல் நரசிங்கன் வரை
2731.
கலாநிதி க. குணராசா
வெளியீடு யாழ்ப்பாண அரச பரம்பரை வரலாற்றுக் கழகம் 19, 4/6, மிலாகிரிய அவென்யு, கொழும்பு - 4. இலங்கை,

Page 4
முதற் பதிப்பு: ஏப்ரல் 2000, G யாழ்ப்பாண அரச பரம்பரை வரலாற்றுக் கழகம். ஆசிரியர் : கலாநிதி க. குணராசா அச்சுப் பதிப்பு:யுனி ஆர்ட்ஸ் பிறைவேட் லிமிடெட்.
YĀRLPPĀNA ARASA PARAMPARAI (Dynasty of Jaffna Kings)
First Edition: April 2000
(O Dynasty of Jaffna Kings' Historical Society, Author: Dr. K. Kunarasa, B. A. Hons., (Cey.), M.A., Ph.D., SLAS. Printed by: Unie Arts (Pvt) Ltd,48B, Bloemendhal Road, Colombo 13. Sri Lanka.
Published by: DYNASTY OF JAFFNA KINGs' HISTORICAL SOCIETY 19, 4/6, Milagiriya Avenue, Colombo - 4.
• Sri Lanka.
Mail Order Fax (0065) 4548941 Spore e-mail: nachiiQsingnet.com.sg

பொருளடக்கம்
முன்னுரை
அத்தியாயம் : ஒன்று
வடவிலங்கை அரசும் புராதன மக்களும்
அத்தியாயம் : இரண்டு
வடவிலங்கை அரசின் மன்னர்கள்
அத்தியாயம் : மூன்று
சிங்கைநகர் அரசு
அத்தியாயம் : நான்கு
யாழ்ப்பாண இராச்சியம்: விஜய காலிங்கன்
அத்தியாயம் : ஐந்து
சங்கிலி செகராசசேகரனும் பரநிருபசிங்கனும்
அத்தியாயம் ஆறு
பரநிருபசிங்கன் பரம்பரை
அத்தியாயம் : ஏழு
விசயதெய்வேந்திரமுதலி
அத்தியாயம் : எட்டு
இளையதம்பி - நரசிங்கன்
உசாவிய நூல்கள்
பின்னிணைப்பு :
சுற்றார் உற்றார்
பக்கம்
O1
22
54
66
86
101
110
118
136
141

Page 5

முன்னுரை
“யாழ்ப்பாண அரச பரம்பரை - விஜயகாலிங்கன் முதல் நரசிங்கன் வரை என்ற இந்த ஆய்வு நூலை எழுத நேர்ந்த வரலாறு சுவையானது. யாழ்ப்பாண இராச்சியத்தினை ஆட்சிபுரிந்த மன்னர்களின் பரம்பரையினருக்கு என்னவாயிற்று? அவர்கள் மக்களோடு மக்களாக ஐக்கியப்பட்டு விட்டார்களா ? அல்லது முற்றாக வேரற்றுப் போனார்களா?’ என்ற வினாக்கள் என்னை நீண்டகாலம் அலைக்கழித்து வந்தன. அதற்கு விடைகாண அவாவிலிருந்தேன். யாழ்ப்பாண வரலாற்றில் தெளிவான காலகட்டத்து மன்னனாக விளங்கிய சிங்கைப் பரராசசேகரனின் மூன்று மனைவியருக்கும் பிறந்த பிள்ளைகளின் பரம்பரையினரின் வேர்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டேன். பரராசசேகரனின் நாடறிந்த மகன் பரநிருபசிங்கன்; அவனது மகன் பரராசசிங்கமுதலி; அவனது மக்களான எண்மருக்கு அவன் தனக்குச் சொந்தமான ஏழு ஊர்களையும், மகளுக்கு மாதகலையும் கொடுத்ததாக வரலாறு. கள்ளியங்காடு, அராலி, மல்லாகம், அச்சுவேலி, உடுப்பிட்டி, சண்டிருப்பாய், கச்சாய் ஆகிய ஏமூர்களில் பரநிருபசிங்கனின் பரம்பரையினர் இன்றும் வாழவேண்டுமென முடிவு செய்தேன். இந்த ஊர்களில் வாழும் வயோதிபர்களை விசாரிக்கத் தொடங்கினேன்.
இத்தருணத்தில் சிங்கப்பூரிலிருந்து எனக்கு ஒருநாள் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. “எனது பெயர் நரசிங்கன்” என அந்த அழைப்பு விழித்தது: “நாங்கள் பரநிருபசிங்கன் வழிவந்த விசயதெய்வேந்திரமுதலி பரம்பரையினர். மலேசியா, சிங்கப்பூர், அராலி, தொல்புரம், மாதகல் முதலான பகுதிகளில் வாழ்ந்து வருகின்றோம்"
“அவ்வாறாயின் உங்கள் மூதாதையர் அராலியைச் சேர்ந்தவர்களா ?” என்று வினவினேன். ஏனெனில், பரநிருபசிங்கனின் மகன் பரராசசிங்கமுதலியின் நான்காவது மகனான விசயதெய்வேந்திரமுதலிக்குக் கிடைத்த ஊர் அராலியாகும்.
"ஆமாம். எனது பேரனார் நன்னித்தம்பி அராலியைச் சேர்ந்தவரே” என்றார் நரசிங்கன்: “நாங்கள் இன்றும் எங்களது பெயர்களை எமது மூதாதையரின் பெயர்களாகவும் இணைந்த பெயர்களாகவும் கொண்டுள்ளோம். நீங்கள் விரும்பினால் என்னிடமுள்ள ஆவணங்களை அனுப்பி வைக்கின்றேன். அத்தோடு தொல்புரத்தில் வசிக்கும் எனது சகோதரி பூமாதேவியையும் அவரது கணவர் சட்டத்தரணி நடராஜாவையும் அராலியில் வாழும் எனது மூத்த தமக்கையார் தங்கத் தேவியையும், மாதகலில் வாழும் எனது தமையனார் அதிகார சிங்கனையும் தொடர்பு

Page 6
wi
கொண்டு விசாரியுங்கள். அவர்களும் தகவல்கள் தருவார்கள். உங்களுக்குத் திருப்தி ஏற்பட்டால் யாழ்ப்பாண அரசபரம்பரை என்றொரு நூலை எழுத வேண்டும். சிங்கப்பூர், மலேசியா வந்து எனது உறவினர்களையும் சந்தித்துப் பேசவேண்டும்"
எனக்கு முதலில் தயக்கமாகவிருந்தது; தேடிய விடயம் வலிய வந்தடைந்த மகிழ்ச்சியும் ஏற்பட்டது. "நீங்கள் கூறுபவை எனது ஆய்வின் வழி நிருபிக்கப்பட்டால், நிச்சயம் எழுதுவேன்” என ஒப்புக் கொண்டேன். ஆவணங்கள் ஆராயப்பட்டன. நூற்றுக் கணக்கானோர், முக்கியமாக வயோதிபர்கள் நேர்காணல் செய்யப்பட்டார்கள். ஓரளவு திருப்தி ஏற்பட்டதும், மலேசியா, சிங்கப்பூர் சென்று நரசிங்கன் வசமிருந்த ஆவணங்களையும் பார்வையிட்டேன். பரநிருபசிங்கனின் பரம்பரையினரெனக் கருதுவர்களையும் நேர்காணல் செய்தேன். எல்லாரும் ஒன்றையே சொன்னார்கள். தங்களது பரம்பரை வேர்களை அறுநூறு ஆண்டுகளாக மறவாது பேணி வருகின்ற சங்கதி என்னை வியப்பிலாழ்த்தியது. ஒவ்வொரு சரமகவியிலும் (கல்வெட்டு) தமது பரம்பரையைத் தெளிவாகப் பதிவு செய்து வருகிறார்கள்.
பரநிருபசிங்கனின் பரம்பரை வேர் ஒன்றினைக் காணநேர்ந்தமை எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அதன் விளைவு இந்த நூலாகும். இந்த நூலை எழுத ஊக்கந் தந்ததோடு, அதனைச் சிறப்பாக வெளியிடவும் முன்வந்திருக்கும் நரசிங்கன் அவர்களுக்கு நன்றிகள். பல்வேறு வழிகளிலும் இந்த ஆய்வுக்கு உதவிகள் புரிந்த திரு. திருமதி நடராஜா தம்பதிக்கும், மூதாட்டிதங்கத்தேவிக்கும், குறிப்பாக நடராஜாபூமாதேவி தம்பதியின் புத்திரர் கிரிதரனுக்கும் எனது நன்றிகள். நேர்காணலின் போதும் ஆவணப் பரிசோதனையின் போதும் என்னோடு ஒத்துழைத்த நரசிங்கனின் உறவினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
வணக்கம்
கலாநிதி க. குணராசா பதிவாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்
28.03.2000

அத்தியாயம் ஒன்று
வடவிலங்கை அரசும் புராதன மக்களும்
வரலாற்றுக் காலத்தில், யாழ்ப்பாண இராச்சியம் என்னும் பெயரால் நாம் அறியும் வட இலங்கை இராச்சியம், எப்போது தாபிக்கப்பட்டது என்பதைச் சரியாக அறிந்து கொள்வதற்கு இதுவரை சான்றுகள் கிடைக்கவில்லை" என நவீன வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். கல்வெட்டு ஆதாரங்கள், சாசன ஆதாரங்கள் இருந்தால் தான், இலக்கிய ஆதாரங்களின் மெய்மையை ஏற்றுக் கொள்ள முடியும் என்கின்றனர். பனையோலைகளில் எழுதிய நம் முன்னோர், செப்பேடுகளில் எழுதிப் புதைக்காது போயினராம். யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்றைக் கூறும் மூலநூல்களாக கைலாய மாலை, வையாபாடல், யாழ்ப்பாண வைபவமாலை ஆகிய மூன்றுங் கருதப்படுகின்றன. இந்நூல்களின் அடியொற்றியும், இத்துறை சார்ந்த பல்வேறு நூல்களின் துணைகொண்டும் கல்வெட்டுகள், சாசனங்கள், அகழ்வாராய்ச்சியின் பெறுபேறுகள் என்பனவற்றை ஆதாரமாகக் கொண்டும் காலத்திற்குக் காலம் பல நூல்களும் கட்டுரைகளும் வெளிவந்திருக்கின்றன. யாழ்ப்பாண வைபவ கௌமுதி (க. வேலுப்பிள்ளை - 1918), யாழ்ப்பாண வைபவ விமர்சனம் (சுவாமி ஞானப்பிரகாசர் - 1928), யாழ்ப்பாணச் சரித்திரம் (ஜோன்-1930), யாழ்ப்பாணச் சரித்திரம் (ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை-1933), யாழ்ப்பாணச் சரித்திரம் (செ. இராசநாயகம்-1933), Tamils and Ceylon (d. 6Tsu. B6, D556OTh), The Northern Kingdom (6T6f). EGLF sit-1960), யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம் (கா. இந்திரபாலா-1972) The King dom of Jaffna (F. LuğuopBT56öIT-1978), uLusTjhůLurr6OOTġ தமிழரசர் வரலாறும் காலமும் (பொ. ஜெகந்நாதன்-1987), யாழ்ப்பாண இராச்சியம் (சி. க. சிற்றம்பலம்-1994), பூநகரி தொல்லியலாய்வுகள் (ப. புஸ்பரட்ணம்) தொல்லியலும் யாழ்ப்பாணத் தமிழர் பண்பாட்டுத் தொன்மையும் (செ. கிருஷ்ணராசா-1998) ஆகிய நூல்கள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கன.
1. இந்திரபாலா, கா, யாழ்ப்பாண இராச்சியம் தோன்றிய காலமும் சூழ்நிலையும், இளங்கதிர்,
பேராதனை-1970, பக்கம்; 13,

Page 7
2 யாழ்ப்பாண அரச பரம்பரை
பதின்மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து தான் வடவிலங்கையில் தோன்றிய அரசானது யாழ்ப்பாண இராச்சியம் என அழைக்கப்படுகிறது. பண்டைய வடவிலங்கை அரசு எவ்வாறு அழைக்கப்பட்டது? தமிழர் காலத்து வடவிலங்கையை யாழ்ப்பாணம் என்னும் பெயரால் வழங்குவது ஒரு காலவழுவாகும். தீவின் வடபாகத்தில் ஆட்சி நடாத்தியவனை யாழ்ப்பாணத்து மன்னனென்று கூறுவதும் சரியன்று, என ஞானப்பிரகாசர் தனது நூலிற் கூறுகிறார். வட இராச்சியத்தில் வரலாற்றின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் என்ற பெயர் அதற்கு இருக்கவில்லை என்றே கூற வேண்டும். யாழ்ப்பாண இராச்சியத்தின் எல்லை மன்னாரிலிருந்து திருகோணமலை வரை வரைந்த கோட்டிற்கு வடக்கு பரந்த ஒரு பெரும்பிரதேசமாகும். வலிகாமம், தென்மராட்சி, வடமராட்சி, பச்சிலைப்பள்ளி, வன்னி நிலங்களும் பிற நிலங்களும் இதனுள் அடங்கியிருந்தன. சிலவேளைகளில் யாழ்ப்பாண இராச்சியத்தின் மேலாதிக்கம் கம்பளை வரை பரந்திருந்தது. சிலவேளைகளில் ஜயவர்த்தன கோட்டை வரை பரந்திருந்துள்ளது."
எனவே, யாழ்ப்பாண இராச்சியம் என்ற வடவிலங்கை இராச்சியத்தின் பண்டைய பெயர் என்ன? வடவிலங்கை நாகநாடு, சிங்கை நாடு (சிங்கைநகர்), மணவை (மணற்றி), ஈழம், உத்தரதேசம், தமிழ்ப்பட்டினம் எனப் பலவாறாக அழைக்கப்பட்டிருக்கின்றது. இலங்கையின் வடபெரும்பகுதி ஆரம்பத்தில் நாகதீபம் அல்லது நாகதீவு என அழைக்கப்பட்டுள்ளது. பின்னர் நாகதீவு என்ற பெயர் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குரிய பெயராக மாறியது. அவ்வேளை எஞ்சிய வடவிலங்கை உத்தரதேசம் என்று கூறப்பட்டது. உத்தரதேசத்தின் ஒரு பகுதியாக நாகதீவு அவ்வேளை இருந்தது. யாழ்ப்பாணக் குடா நாடு தீவு என்ற பெயருக்கேற்ப வரலாற்றுக் காலத்தில் பெருநிலத் தீவினின்றும் கடலால் பிரிக்கப்பட்டு ஒரு பெரிய தீவாக யாழ்ப்பாணக் குடாநாடு விளங்கியது. இன்று யாழ்ப்பாணக் குடாநாட்டை பெருநிலத்திணிவோடு சுண்டிக்குளம் மணல் அணை
ஞானப்பிரகாசர் சுவாமி, யாழ்ப்பாண வைபவ விமர்சனம், நல்லூர்-1928 இந்திரபாலா, கா. மே. கு.கட்டுரை, பக்கம்;41 மே.கு. கட்டுரை கோட்டகம கல்வெட்டுச் சான்று. யாழ்ப்பாண இராச்சியம், பதிப்பாசிரியர்; கி. க. சிற்றம்பலம், பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்-1992, பக்கம்:52-53 7. குணராசா, க, நல்லைநகர் நூல், யாழ்ப்பாணம் - 1987, பக்கம்;3.

யாழ்ப்பாண அரச பரம்பரை 3
இணைத்துள்ளது. பண்டைநாளில் யாழ்ப்பாண - ஆனையிறவுக் கடனீரேரியூடாகக் கலங்கள் வங்காள விரிகுடாவில் பிரவேசித்துள்ளன." காலகதியில் மணல் படிந்த சுண்டிக்குள நுழைவாயில் அடைபட்டது.
நாகதீவு என்ற பெயரை இப்பிரதேசம் பெறுவதற்கு காரணமாக அமைந்தவர்கள், இப்பிரதேசத்தின் பண்டைய குடிமக்களாக வாழ்ந்திருந்த நாகர் என்ற இன மக்களாவர். யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குத் தெற்கே நாகர்களின் குடியிருப்புகள் அமைந்திருந்த பிரதேசம் உத்தரட்டை அல்லது உத்தரதேசம் எனப்பட்டது. கதம்பநதி என்ற அருவியாற்றிலிருந்து கோகர்ணம் (திருகோணமலை) வரை இணைத்து ஒரு குவிவு வளைகோடு வரைந்தால், அந்தவளை கோட்டிற்கு வடக்கேயமையும். வடபிரதேசம் உத்தரதேசம் எனப்பட்டது. இந்த உத்தரதேசத்தில் மகாதீர்த்தம்(மாந்தை), குதிரைமலை (புத்தளம்), குருந்தை (முல்லைதீவு), பல்லவங்கம் (பதவியா), கோகர்ணம் (திருகோணமலை) முதலிய பகுதிகளில் தமது புராதன குடியிருப்புக்களை அமைத்து வாழ்ந்தனர். இவற்றைவிட உத்தர தேசத்தில் சிதறலாக ஆரண்யகமங்கள் (காட்டுக்கிராமங்கள்) காணப்பட்டன. நாகதீவும் உத்தரதேசமும் ஒருங்கே ஈழ மண்டலம் என அழைக்கப்பட்டது. நாகதீவில் கதிரமலையும் உத்தரதேசத்தில் மகாதீர்த்தமும், குதிரை மலையும் நாக குடியிருப்புக்களில் முக்கியமானவையாக விளங்கின.
பண்டைய இலங்கையின் வட பெரும்பகுதி நாகதீபம் எனவும், தென் பெரும்பகுதி தம்பண்ணை அல்லது தாமிரபர்ணி எனவும் இரு தெளிவான புவியியல் அலகுகளாக விளங்கின. கதம்பநதி எனப்படும் அருவி ஆற்றுக்கும் நாகபொக்கனை, திரிகூடம் எனும் பகுதிகளுக்கும் வடக்கேயுள்ள பிரதேசம் நாகதீபம் எனப்பட்டது. நாகதீபத்தில் யாழ்ப்பாணக் குடாநாடு, அதன் அயற்றிவுகள், மன்னார், வவுனியா, முல்லைதீவு முதலான பிரதேசங்கள் அடங்கியிருந்தன." கதம்பநதியையும் மகாவலி கங்கையின் சுழிமுகக் கிளையையும் இணைக்கும் தென்புற வளைகோட்டிற்குத் தெற்கே பரந்து கிடக்கும் இலங்கையின் நிலப்பரப்பு தாமிரபர்ணி எனப்பட்டது.
8. இராசநாயகம், செ, யாழ்ப்பாணச் சரித்திரம், வண்ணார்பண்ணை-1933
9. குணராசா.க, யாழ்ப்பாண இராச்சியத்தின் கதை, உரும்பிராய் இந்து கல்லூரி,
பவளவிழாமலர்;
10. குணராசா, க, குடியேற்றங்களால் இழந்துபோன தமிழ்ப் பிரதேசங்கள், முத்தமிழ்விழா
மலர், 1991, பக்கம் 130-131.

Page 8
4 யாழ்ப்பாண அரச பரம்பரை
இலங்கைத் தீவின் தென் பெரும்பகுதி தாமிரபர்ணி என்றழைக்கப்பட்ட வேளையில் வடபகுதி நாகதீபம் அல்லது நாகதீவு என வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் பூர்வகுடிகளான நாகர்கள் வாழ்ந்த பிரதேசம், பண்டைநாளில் நாகதீபம் எனப்பட்டது. இப்பெயர் குறிக்கும் ஆள்புலப்பரப்பு சுருங்கியும் விரிந்தும் ஆய்வாளர்களின் கண்டுணர்வுகளில் கூறப்பட்டுள்ளது. நாகதீபம் என்ற பெயர் சுட்டும் ஆள்புலம் நயினாதீவு எனச் சிலவிடத்தும், அவ்வாறன்று யாழ்ப்பாணக் குடாநாடு எனச் சிலவிடத்தும் கருதப்பட்டுள்ளது. எனினும், இலங்கைத்தீவின் வடபெரும் ஆள்புலத்தின் பண்டைய பெயர் நாகதீபம் எனக் கொள்வதே ஏற்புடையதாகவுள்ளது. வரலாற்றுக் காலத்தில் நாகதீபம் என்ற பிரதேசம் இலங்கையின் இன்றைய வடமாகாணத்தைக் குறித்தாக டபிள்யூ. கெய்கர் குறித்துள்ளார்." மகாவில்லாச்சியா (மதவாச்சி)க்கு வடக்கேயுள்ள பகுதியையே நாகதீபம் குறித்ததாக செலிக்மன் என்பார் கூற்று. இலங்கையின் வடபகுதியே வரலாற்றுக் கால நாகதீபம் என்பது பாக்கர் என்பவரின் முடிவு." மகாவம்சத்தில் நாகதீவு பற்றிய குறிப்புகள் பலவுள்ளன. இரு நாக மன்னர்களுக்கிடையிலான தகராறைத் தீர்த்து வைப்பதற்காகப் புத்தர் நாகதீவிற்கு இரண்டாவது முறையாக வருகை தந்தார் என மகாவம்சம் குறிப்பிடுகின்றது.“ வசபன் என்ற மன்னன் (கி. பி. 127-171) அனுராதபுரத்தை ஆண்ட காலத்தில் இசிகிரியன் என்பவன் நாகதீபத்தை ஆண்டதாக வல்லிபுரத்தில் கிடைத்த பொற்சாசனம் குறிப்பதிலிருந்து" இலங்கையின் வடபகுதி நாகதீபம் என வழங்கப்பட்டமை நிரூபணமாகின்றது.
எனவே குடிசார் வரலாற்று புவியியல் அடிப்படையில் திராவிட இனத்தின் பாரம்பரியத் தீவாக விளங்கிய இலங்கை, தனது ஒரு பெரும்பகுதியில் புதியதொரு இனத்தினைச் சேர்த்து கொண்ட சம்பவம் கி. மு. 483 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இருந்த லாடா நாட்டின் மன்னன் தன் நாட்டிற்கு உதவாதவர்கள் எனக் கருதிய தன் மகன் சிங்ஹல விஜயனையும் அவனது தோழர்கள் எழுநூறு
it. Geiger, W., Culture in Mediaeval Times,
Ed:by Heigz Bechert, 1960 page:108. 12. Parker, H., Ancient Ceylon, Colombo-1909, page: 14 13. Mahavamsa, Translated into English by Wilhelm Geiger-1950.
./Chapter 1; 46 & 47, page 6. 14. Paranavitna, S., Vallipuram Gold Plate, Epigraphia Zeylania, Vol.IV, p.237

யாழ்ப்பாண அரச பரம்பரை 5
பேரையும் மரக்கலமொன்றில் ஏற்றி நாடுகடத்தி விட்டான்." அவர்கள் தாமிரபர்ணி என்ற கொணாநதிக்கும் (காலஓயா) கதம்பநதிக்கும் (அருவியாறு) இடைப்பட்ட பிரதேசத்தில் வந்து சேர்ந்தனர். சிங்ஹல விஜயனின் வருகையுடன் இலங்கையில் சிங்கள மக்களது தோற்றம் ஆரம்பமாவதாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. அவை கூறத்தவறிய, செய்திகள் என்னவென்றால் விஜயனும் அவனது தோழர்களும் இலங்கையின் கரையில் இறங்கியபோது, இலங்கையில் நாகரிகத்தில் முன்னேறிய ஒரு மக்கட் கூட்டமும், பண்டைய வாழ்க்கை முறையைக் கைக்கொண்டு வாழ்ந்த ஒரு மக்கட்கூட்டமும் வாழ்ந்து வந்துள்ளன என்பதாம்."
பகைவராக வந்த சிங்களவர் ஓரளவு நாகரிமடைந்திருந்த மக்கள் வசத்தில் இந்த நாடு இருந்ததைக் கண்டனர்' எனப் பார்க்கர் என்பார் தன் புராதன இலங்கை என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்." இயக்கர் என்று வரலாற்று நூலில் கூறப்படும் இம்மக்கள் அரசியல் முறைகளுக்கு ஏற்ப வாழ்ந்தனர் என்று தோன்றுகிறது. அத்துடன் இவர்கள் நகரங்கள் என்று சொல்லக்கூடியதான, குறைந்தது இரண்டு குடியேற்றிடங்களைக் கொண்டிருந்தனர் என்றும் தோன்றுகிறது. ஐந்தாம்படை என்று நாம் இப்பொழுது கூறும் உட்பகையின் உதவி கொண்டு சிங்களவர் இம்மக்களை இலகுவில் தம் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர் எனத் தமது நூலில் ஏ.ஜி. ரணசிங்க என்பவர் குறிப்பிட்டுள்ளார்." இராமாயணம் போன்ற காவிய நூல்கள் இலங்கையில் நாகரிகமான ஒரு மக்கட் கூட்டத்தினர் வாழ்ந்து வந்த செய்தியினைக் கூறுகின்றன. சிங்கள இதிகாச வரலாற்றுப் பனுவலான மகாவம்சத்திலிருந்தே இலங்கையில் இயக்கர், நாகர் என அழைக்கப்பட்ட மக்கட் கூட்டத்தினர் வாழ்ந்துள்ளனர், என அறிய முடிகின்றது.
நாகர் எனப்படும் ஒரு மக்கட் கூட்டத்தினர் இலங்கைத் தீவில் நெடுங்காலமாகக் குடியேறி வாழ்ந்து வந்தார்கள் என்பதற்குப் பல
15. The Mahavamsa, Translated into English by W. Geiger, Colombo
1950 Chapter: VI: 39-47, pp. 53-54 16. கலாநிதி குணராசா, க. குடியேற்றங்களால் இழந்துபோன தமிழ்ப் பிரதேசங்கள்.
முத்தமிழ் விழா மலர், யாழ்ப்பாணம், பக். 129. 17. Parker H., Ancient Ceylon, London, 1909. 18. றணசிங்க, ஏ.ஜி, 1946-ம் ஆண்டு இலங்கைக்குடி மதிப்பு கொழும்பு - 1951 பக் 4

Page 9
6 யாழ்ப்பாண அரச பரம்பரை
ஆதாரங்களுள்ளன. இலங்கை வரலாற்றின் செய்திகளை அளிக்கும் பனுவலாகக் கருதப்படும் மகாவம்சம், கெளதம புத்தர் இலங்கைக்கு இரண்டாவது தடவை விஜயம் செய்தபோது, நாகதீவிலிறங்கி இரண்டு நாக அரசர்களின் பிணக்கைத் தீர்த்து வைத்தார் எனக் கூறுகிறது. மகோதரன், குலோதரன் என்ற இரண்டு நாக மன்னர்கள் ஒரு இரத்தின சிம்மாசனத்திற்காகப் பொருதினர். மகோதரன் நாகதீவின் அரசனாகவும், அவனது மருமகனான குலோதரன் கந்தமாதனத்தின் அரசனாகவும் விளங்கினர். இவ்விரு நாக மன்னர்களும் தத்தமது படைகளோடு பொருதியபோது, புத்தர் அவர்களைச் சமாதானப்படுத்தி வைத்தார். அவரது போதனையால் மனம் மாறிய நாக மன்னர்கள் இருவரும் இரத்தினச் சிம்மாசனத்தைப் புத்தருக்கே வழங்கி விட்டனர்." நாக மன்னர்களின் இச் சர்ச்சை பற்றி மணிமேகலைக் காவியமும் குறிப்பிட்டுள்ளது.* நாகதீவுக்கு, வெளியே தென்னிலங்கையில் இன்றைய களனிநதிக் கரையோரத்தில் அமைந்திருந்த கல்யாணி என்ற நாக அரசு பற்றியும் மகாவம்சத்தில் குறிப்புள்ளது. கல்யாணி இராச்சிய அரசனான மணியக்கியன் என்பவன், புத்தரின் போதனைகளை ஏற்றுப் பெளத்தத்தைத் தழுவினான்." மகாவம்சம் கூறுகின்ற இச்செய்திகளிலிருந்து இலங்கையில் நாக மக்கள் எனப்படுவோர் வாழ்ந்துள்ளனரென அறிய முடிகின்றது.
நாகர்கள் பண்பாடுடைய கலாசாரத்தைப் பேணியமக்கள் என்பதும், புத்தருடைய காலத்தில் இவர்கள்பெளத்தத்தைத் தழுவினர் என்பதும், மேலும் அவர்கள் புத்தருடைய காலத்தில் இலங்கையின் வடபாகத்தில் மட்டுமன்றி தென்மேற்குப் பகுதியிற் களனியாவரை பரவி வாழ்ந்தனர் என்பதும் தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. * கிடைக்கக்கூடிய இலக்கிய, பண்டைய தேசப் பட (தொலமி) ஆதாரங்களிலிருந்து இலங்கையின் பல பகுதிகளிலும் நாகர் குடியிருப்புக்கள் இருந்துள்ளன என அறியமுடிகின்றது. தேவிநுவர, நாகர் கோயில், திருக்கோயில் நனிகரி, தென்கிழக்கில் நாகதும, நயினாதீவு எனும் மணிபல்லவம், மதவாச்சி எனும் மகாவில்லாச்சி,
19. The Mahavamsa, op cit,. Chapter 1: 46-62, pp.6-7
20. மணிமேகலை, காதை 8, வரி 52-53
21. The Mahavamsa, op cit, Chapter 1:63-64, p.7
22. தனபாக்கியம், இலங்கையில் தொல்லியல் ஆய்வுகளும் திராவிடக் கலாசாரமும் -
மட்டக்களப்பு- 1988. பக்-26.

யாழ்ப்பாண அரச பரம்பரை 7
காங்கேசன்துறை எனும் ஜம்புகோளம், வல்லிப்புரப்பகுதி, நாகர்கோயில், குருந்தன் குளம், மிகிந்தலைப்பகுதி, நாகசதுக்கம், கந்தரோடை எனும் கதிரமலை, கரியாலை நாகபடுவான், மகாதீர்த்தம் (மாந்தை) முதலானவை நாகர் குடியிருப்புக்களாக விளங்கியுள்ளன.* இந்த ஆதிக் குடியிருப்புகள் ஒவ்வொன்றிற்கும் தந்தைவழிச் சமூக அமைப்பின் வழிமுறைப்படி, ஒவ்வொரு தலைவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்தான்*
ஆதிக்குடிகளான நாகர்கள் நாகவழிபாட்டுடன் தொடர்பு படுத்தப்படுகிறார்கள். சிந்துநதி நாகரிக காலத்திலிருந்து நாகவழிபாடு நிலவிவந்துள்ளது. இன்றும் இலங்கையில் இந்துக்கள் நாக வழிபாட்டை மேற்கொண்டு வருகின்றனர். ‘கிடைக்கின்ற ஒரு சில தகவல்களைக் கொண்டு நாகவழிபாடு ஆதி இலங்கையில் நிலவியிருக்கலாமென ஊகிக்கமுடியும்.*
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாகியான் என்ற நாடுகாண் பயணி, இலங்கையின் ஆதிக்குடிகள் பற்றித் தனது நூலில் எழுதியுள்ளார். அவரின்படி இந்தத்தீவில் ஆதியில் தேவதைகளும் நாகர்களும் இருந்தார்கள் என்றும் அவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வியாபாரிகளுடன் வர்த்தகம் நடாத்தி வந்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.* வர்த்தகம் நடாத்தக் கூடியளவிற்கு நாகர்கள் கலாசார மேம்பாடுடையவர்களாக விளங்கியுள்ளனர்.
சிங்கள வரலாற்றாசிரியர்கள் நாகர்களை மனிதர்களாக ஏற்கத் தயாராகவில்லை. மகாவம்சம் குறிப்பிடுகின்ற இயக்கர்,நாகர் என்போர் மனித வர்க்கத்தினரைக் குறிக்கவில்லையென மெண்டிசும்,* மகாவம்சத்திலும் மணிமேகலையிலும் நாகர் ஒருபோதும் மனித வர்க்கத்தினராகக் காட்டப்படவில்லை என பரணவிதானவும்" கூறியுள்ளனர். இவை சிரிப்பிற்குரிய
23. கலாநிதி குணராசா, க. மு. கு. கட்டுரை. பக்.131.
24. Navaratnam, C.S. Tamils and Ceylon, Jaffna, 1958
25. குணசிங்கம், செ, கோணேஸ்வரம், பேராதனை, 1973, பக். 44
26. Legge/Fa-Hieris Record of Buddhist Kingdom, Oxford, 1886, pp. 101-102.
27. Mendis, G.C., The Early History of Ceylon, Culcatta, 1946, p.8
28. Paranavitana, S., The Arya Kingdom in North Ceylon, JRASCB (NS),
Vol. VII, Pt, 11, 1961, pp. 181-182.

Page 10
8 யாழ்ப்பான அரச பரம்பரை
அவதானிப்புக்களாம். 'இயக்கர்களும் நாகர்களும் மனிதர்களாக ஆதி இலங்கையில் வாழ்ந்தார்கள் என்று கூறுவதில் தவறில்லை.* சிங்ஹல விஜயனின் வருகையுடன் தான் இலங்கைத் தீவில் மக்கட் குடியேற்றங்கள் ஆரம்பமாகின என்பதை வலியுறுத்துவதற்காக இத்தீவின் மூதாதையினரை அமானுஸ்யர்கள் என வலியுறுத்தியுள்ளனர் போலும்,
இலங்கைத் தீவின் ஆதிக்குடிகள் இயக்கர், நாகர் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட சங்கதியாகும். எனவே, ஈழத்தின் நாகரிக கர்த்தாக்கள் திராவிடரே என்பது புலனாகின்றது. இன்றைய சிங்கள - தமிழ்மொழி பேசுவோர் அவர்களின் சந்ததியினரே என்பதும் உறுதியாகின்றது. அத்துடன் இவ்விரு மொழி பேசுவோருக்கிடையே ஏற்பட்ட கலாசார வேறுபாடு ஈழத்தின் வரலாற்றுக் காலத்தில் பெளத்தமதத்தின் வருகையோடுதான் ஏற்பட்டது எனலாம். இங்குள்ள சிங்கள மக்களினதும் தமிழ் மக்களினதும் மூதாதையினர் ஒன்றுக்கு மேற்பட்ட திராவிட மொழிகளைப் பேசினாற்போல தெரிகின்றது. இவற்றுட் தமிழோடு சிங்களத்தின் மூதாதை மொழியாகிய எலுவும் காணப்பட்டது எனலாம். இந்த எலு மொழி பெளத்தம் வந்தபோது அதன் சமயமொழியாகிய பிராகிருதமாகிய பாளியுடன் கலந்தபோதே இன்றைய சிங்களமொழி உருவாகியது" அகழ்வாய்வுகள் மூலம் கிடைத்த தொல்பொருட் சான்றுகள் இலங்கையில் சிங்ஹல விஜயன் வருவதற்கு முன்னரே திராவிட மக்கள் தமக்குரிய கலாசாரத்துடன் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை நிரூபிப்பனவாகவுள்ளன.
ஆரியர்கள் வட இந்தியாவில் நிலைகொண்டபோது, திராவிடர்கள் ஆரியர்களால் நெருக்கப்பட்டு இந்தியாவின் தென்பாகத்திற்கும் இலங்கைக்கும் குடிபெயர்ந்தார்கள். அவ்வாறு இடம்பெயர்ந்த திராவிடர்களின் குடியேற்றம் நாகதீவில் மிகக் கூடுதலாக நிகழ்ந்திருத்தல் வேண்டும். தென்னிலங்கையில் சிங்ஹல விஜயனைத் தொடர்ந்து புதிய குடியேற்றங்கள் நிலைகொள்ளத் தொடங்கியவேளை, வடஇலங்கையில்
29. குணசிங்கம், செ.மு. குநூல். பக் 48. 30. கலாநிதி சிற்றம்பலம், சி, க, தமிழ் மக்களின் பாரம்பரியப் பிரதேசம், முத்தமிழ் விழா
மலர், 1991, பக், 163

யாழ்ப்பாண அரச பரம்பரை 9
திராவிடக் குடியேற்றம் வளர்வதாயிற்று." சேர். போல் பீரிஸ் என்ற அறிஞரின் கருத்துப்படி, விஜயன் பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வட இலங்கையில் குடியிருப்புகள் விருத்தியுற்றிருந்தன என்பதாகும். இந்தியாவிலிருந்து ஆக முப்பது மைல் கடலே வடவிலங்கையைப் பிரிக்கின்றது. அதனை இலகுவில் கலங்களில் தாண்டி வடவிலங்கையில் குடியிருப்புக்கள் உருவாகின.*
இலங்கைத் தீவின் ஆதிக்குடிகள் இயக்கர், நாகர் என்பவர்களாயின், இவர்கள் திராவிடர்கள் என்பதை நிரூபிக்கும் சான்றுகளாகப் பின்வருவன உள்ளன :
1. ஈமச்சின்னங்கள் 2. ஆதிப்பிராமிக் கல்வெட்டுக்கள் 3. ஆதிமக்களது சமய வழிபாடு
தொல்லியலாய்வுகள் மூலம் இன்று இக்கருத்தினை நிலைநாட்டிய பெருமை ஈழத்தின் மூன்றாம் தலைமுறை வரலாற்றாசிரியர்களுக்கும் தொல்லியலாய்வாளர்களுக்கும் உரியதாகும்.*
இலங்கையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே மனிதகுலம் நிலைபெற்றிருந்தது என்பதற்கு ஆதாரமாகப் பலாங்கொடைப் பகுதியில் அகழ்வாய்வின் மூலம் கிடைத்த புராதன மனிதரின் எழும்புச்
31 கலாநிதி குணராசா, க., குடியேற்றங்களால் இழந்துபோன தமிழ்ப் பிரதேசங்கள்.
முத்தமிழ் விழா மலர், 1991, பக் 130.
32. குணராசா. க. நல்லைநகர் நூல், பூபாலசிங்கம் வெளியீடு - 1987
33. இலங்கை வரலாற்றில் குறிப்பாக தமிழ்மக்களது வரலாற்றில் புதிய சிந்தனையும் கண்டு பிடிப்புக்களையும் எடுத்துக்காட்டிய மூன்றாம் தலைமுறை அறிஞர்களாக பேராசிரியர் சி. க.சிற்றம்பலம்,கலாநிதி செ.குணசிங்கம் கலாநிதி பொ. ரகுபதி,திரு.ப.புஸ்பரட்ணம், திருமதிஜி தனபாக்கியம்,திரு.செ.கிருஸ்ணராசா, திரு.எஸ். சத்தியசீலன் ஆகியோரை நான் கருதுகின்றேன். இவர்கள் துணிச்சலாகத் தமது கருத்துக்களைச் சுதந்திரமாக முன்வைத்துள்ளனர். இரண்டாம் தலைமுறைச் சேர்ந்த வரலாற்றறிஞர்களாக பேராசிரியர் கா. இந்திரபாலா, பேராசிரியர் எஸ். பத்மநாதன், திரு. வி. சிவகாமி, வேலனைப் பண்டிதர் பொ. செகந்நாதன், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, திரு. சி. எஸ். நவரத்தினம் முதலானோர் குறிப்பிடத்தக்கவர்கள். முதலாம் தலைமுறை வரலாற்றறிஞர்களாக சுவாமி ஞானப்பிரகாசர், முதலியார் செ. இராசநாயகம், திரு. டானியர் ஜோன், திரு. க. முத்துத்தம்பிப்பிள்ளை ஆகியோர் உள்ளனர்.

Page 11
10 யாழ்ப்பாண அரச பரம்பரை
சுவடுகள் ஆதாரமாகின்றன. நியாண்டல்தால் மனிதரின் சுவடொத்த இவை இலங்கையில் ஆதிமனிதர்கள் வாழ்ந்தனர் என்பதற்கு ஆதாரமாகின்றன. *
1.1. திராவிட மக்களது ஈமச் சின்னங்கள்
இலங்கையின் ஆதிக்குடிகளுக்குரிய கலாசாரம் பெருங் கற்காலக் கலாசாரம் என தொல்லியலாளர் இனங்கண்டுள்ளனர். இறந்தோரை அடக்கம் செய்வதற்காகப் பெரிய கற்களைப் பயன்படுத்தி ஈமச்சின்னங்களைப் புதைத்ததால் இது இவ்வாறு பெயர் பெற்றது எனலாம். இம்மக்கள் படைத்த ஈமச்சின்னங்கள் பல்வகைப்பட்டன. கல்லறைகள், கல்பட்டங்கள், கல்மேசைகள், நடுகற்கள் போன்றவற்றோடு, எவ்வித ஈமச்சின்னங்களுமின்றி அடக்கம் செய்தல் போன்றவை இவற்றுட் சிலவாகும். கடந்த நூற்றாண்டில் பாக்கர், திசாமகாராமப் பகுதியில் அகழ்வினை மேற்கொண்டபோது இத்தகைய தடயங்களைக் கண்டுபிடித்தார்." இத்தகைய ஈமச்சின்னங்களுக்கு மேலாகத் தாழி அடக்கமுறை திராவிடக் கலாசாரத்திற்குரிய ஒன்றாகும். மரணமடைந்த தலைவனைப் பெருந்தாழி (பானை) ஒன்றினுள் இட்டு, அவன் உபயோகித்த பொருட்களையும் கூடவே வைத்து புதைக்கின்ற ஈமத்தாழி/ முதுமக்கள் தாழி முறை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திராவிட மக்களது கலாசாரம் என்பது இன்று நிரூபணமாகி விட்டது.*
தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றுக்குத் தெற்குக்கரையில் அமைந்திருக்கும் ஆதிச்ச நல்லூரிற் கிடைத்த ஈமத்தாழி அடக்கமுறைகளைப் பழந்தமிழ் இலக்கியங்கள் திராவிடக் கலாசாரமாகக் காட்டியுள்ளன. இத்தகைய அடக்கமுறைகளை நிகர்த்த ஈமத்தாழிகள் இலங்கையில் புத்தளம் மாவட்டத்தில் பழைய தம்பபன்னியில் பொம்பரிப்பு எனுமிடத்திற் செய்யப்பட்ட தொல்லாய்வுகளின்போது கிடைக்கப்பெற்றன.”
34. கலாநிதி குணராசா, க, மு. கு. கட்டுரை. பக். 130 35. கலாநிதி சிற்றம்பலம், சி. க. மு. கு. கட்டுரை, பக். 162 36. கலாநிதி குணராசா க, மு. கு. கட்டுரை, பக். 130 37. Paranavitana, S., Archaeological Investigation Near Pomparippu'/

யாழ்ப்பாண அரச பரம்பரை 11
இந்நூற்றாண்டின் முற்பகுதியில் பொம்பரிப்பில் ஒரு தாழிக்காடு காணப்பட்டது. 1970இல் இதில் மேலும் பல அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தாழிக்காடு தமிழ்நாட்டுத் தாம்மிரவர்ணி ஆற்றுப்படுக்கையிலுள்ள ஆதிக்க நல்லூர்த் தாழிக்காட்டினைப் பெரிதும் ஒத்துக் காணப்படுகின்றது. 1969 இல் அனுராதபுரத்திலும் 1970 இல் கந்தரோடையிலும் 1980இல் மாந்தையிலும் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய அகழ்வுகள் விஜயன் கூட்டத்தினரின் ஆதிக்குடியேற்றம் நடந்ததாகக் கூறும் இடங்களிலெல்லாம் இப்பெருங்கற்காலக் கலாசாரம் நிலைத்திருந்ததை எடுத்துக் காட்டியுள்ளன.* ஆதிச்சநல்லூருக்கு எதிரேயமைந்த மாந்தையும் அரிக்க மேட்டிற்கு எதிரேயமைந்த பொம்பரிப்பும் ஒரே பிராந்தியம் எனக் கூறக்கூடியளவிற்கு இப்பெருங்கற்காலப் பண்பாட்டில் அதிக ஒற்றுமை இருப்பதாகத் தொல்லியலாளர் கூறுகின்றனர் என சிற்றம்பலம் கூறுகிறார். முதுமக்கள் தாழிகள் இலங்கையின் வேறு பல பகுதிகளில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஆனைக்கோட்டை, பரந்தன், இப்பன்கடுவ, பத்தியகம்பளை, கல்மனை, கித்துல்கல், குருவித்தை, பத்ததொம்பலென்ன முதலான பகுதிகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் திராவிட மக்களது குடியிருப்புகள் பரந்து நிலைத்திருந்தமையைச் சுட்டுகின்றன. 1985ஆம் ஆண்டு மேமாதம் 31ஆந் திகதி குஞ்சுப்பரந்தனில் என்னால் முதுமக்கள் தாழி ஒன்று அகழ்ந்தெடுக்கப்பட்டது.*
இது இப்பிரதேசத்தில் நிலைத்து நின்ற பண்டைய திராவிட நாகரிகத்தின் பழைமையைப் பறைசாற்றுகின்றன.
1. 2. ஆதிப் பிராமிக் கல்வெட்டுகள்
தென்னாசியாவில் எழுத்துக்களின் தோற்ற காலத்தையிட்டு முரண்பட்ட கருத்துக்கள் நிலவினாலும் கி. மு. 3ம் நூற்றாண்டளவில் அசோகன் ஆட்சியுடன் பிராமி என்ற வரிவடிவம் பரவலாகப்
38. கலாநிதி சிற்றம்பலம், சி. க., மு. கு. கட்டுரை, பக். 163 39. குணராசா, க, குஞ்சுப்பரந்தன் முதுமக்கள் தூது ஈழநாடு, 9.6.1985.
கிளிநொச்சியின் கதை,கந்தன்கருணை,மகாகும்பாபிஷேகமலர்,கிளிநொச்சி1988 பக்46

Page 12
12 யாழ்ப்பாண அரச பரம்பரை
பயன்படுத்தப்பட்டதற்குப் போதிய சான்றுகள் உள்ளன. இதை அசோகப் பிராமி எனவும், வடபிராமி எனவும் அறிஞர் அழைத்தனர். இதையொத்த வரிவடிவங்கள் சம காலத்தில் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அசோக பிராமியில் காணப்படாத தமிழுக்கே சிறப்பான இ, ம, ழ, ற, ன, ள போன்ற எழுத்துக்கள் காணப்படுகின்றன. இவை தமிழ்ப் பிராமி எனவும் திராவிடி எனவும் அழைக்கப்படுகின்றன." இலங்கையில் இதுவரை 1500 இற்கு மேற்பட்ட பிராமிச் சாசனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுட் பெரும்பாலானவை பிராகிருத மொழியிற் பெளத்தம் சார்ந்த செய்திகளைக் கூறுகின்றன. இச்சாசன மொழி இங்கிருந்த திராவிட எலு மொழியுடன் கலந்தே பிற்காலத்தில் சிங்கள மொழி தோற்றம் பெற்றது. தமிழ்நாட்டில் பிராமிச் சாசனங்கள் நன்கு ஆராயப்பட்டுள்ளன. இலங்கைச் சாசனங்கள் பலவற்றோடு ஒப்புநோக்கிச் சுட்டிக் காட்டியுள்ளனர். தமிழ்நாட்டு பிராமிச் சாசனங்கள், வடபிராமி எழுத்துக்களிலிருந்து வேறுபட்டுக் காணப்படுகின்றன. தென்னிந்திய இலங்கைப் பிராமி எழுத்துக்கள் வரிவடிவ அமைப்பில் ஒன்றுடன் ஒன்று ஒத்துள்ளன. இவற்றை ஆராய்ந்த சிங்கள ஆய்வாளர்களான ஈ.பி. பெர்ணாட்டோ, சத்தமங்கல கருணரத்தின, ஆரிய அபயசிங்க போன்றோர் பெளத்தமதத்துடன் வடபிராமி எழுத்துக்கள் அறிமுகமாவதற்கு முன்னரே, தமிழ் நாட்டிலிருந்து பரவிய தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் இலங்கையில் உபயோகத்தில் இருந்துள்ளன என்கின்றார்."
யாழ்ப்பாணத்தில் கிடைத்த மிகப் பழையசாசனம் கந்தரோடையிலே மட்பாண்ட ஒடொன்றில் பொறிக்கப்பட்டுக் கிடைத்த பிராமி எழுத்துச் சாசனமாகும். பிராகிருதமொழியில் இதன் வாசகம் பின்வருமாறு அமைந்துள்ளது: ததஹபத/ தத்தவின் பாத்திரம்.* கி. பி. 3 அல்லது 4 நூற்றாண்டைச் சேர்ந்த முத்திரைச் சாசனம் ஒன்று கந்தரோடையில் கிடைத்துள்ளது. செந்நிறக் கார்ணிலியன் முத்திரை ஒன்றில் விஷ்ணு பூதிஸ்ய/ விஷ்ணு பூதியனுடைய எனத் தென் பிராமி எழுத்திலே பொறிக்கப்பட்டுள்ளது.*
40. Mahadevan, I., Corpus of the Tamil Brahmi Inscriptions, Madras, 1916.
41. புஸ்பரட்ணம், ப, தமிழீழ நோக்கு, தொகுதி1, பகுதி 2, 1992.
42. இந்திரபாலா, கா, சிந்தனை 11-2பக், 158, யாழ் பல்கலைக்கழக வெளியீடு
43. இந்திரபாலா, கா. யாழ்ப்பாணத்துச் சாசனங்கள், இளங்கதிர், 1959, பேராதனை,
பக் 25-34.

யாழ்ப்பாண அரச பரம்பரை 13
ஆனைக்கோட்டையில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப் பட்டபோது ஒர் எலும்புக்கூடும், வெண்கலத்தாலான முத்திரை ஒன்றும் கிடைத்தன. இதன் வாசகம் கோவேந்தன்/கோவேதன்/கோவேதம் ஆகும்."
தமிழர் வரலாற்றுப் பாரம்பரியம் தொடர்ப்ாக மூலாதாரங்களைத் தேடும் பணி ஒன்றின்போது கந்தரோடையில் தமிழ்ப் பிராமி வரிவடிவம் பொறிக்கப்பட்ட கறுப்பு சிவப்பு மட்பாண்டத் துண்டுகள் சில கிடைத்தன. கறுப்பு, சிவப்பு மட்பாண்ட வகையைச் சேர்ந்த தட்டையான சட்டி ஒன்றின் விளிம்பில் மிகத் தெளிவாகப் பொறிக்கப்பட்டிருந்த சாசன வாசகம் ஒன்று கந்தரோடையில் உள்ள மேட்டு நிலப்பகுதியில் பொதுமக்களால் வெட்டப்பட்ட குழி ஒன்றினுள்ளிலிருந்து மீட்கப்பட்டது. அதில் குணி” என்று மிகவும் தெளிவாகப் பிராமி வரிவடிம் காணப்பட்டது. இது பிக்குணி என்ற தமிழ் பதத்தின் இறுதிப்பதமாக அமையக்கூடும், என செ. கிருஷ்ணராசா தெரிவித்தார். * இது கி. பி. 1ம், 2ம் நூற்றாண்டு தமிழ்நாட்டு வரிவடிவமுறையைத் தழுவியதாகவுள்ளது.
கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து இலங்கையிற் பயன்படுத்தப்பட்டு வந்த பிராமிச் சாசனங்களிலிருந்து தென்னிந்தியாவையொத்த அரசமுறைமை இங்கும் தோன்றியதை உறுதிப்படுத்தலாம். சாசனங்களில் காணப்படும் ஆய் (ஆய), வேள் (வேள) என்பன இலங்கையின் சிற்றரசர்கள் சூடிய பட்டங்களாகும். 'ள்' என்ற பிராமி எழுத்து தமிழ் மொழிக்கேயுரிய சிறப்பெழுத்தாகும். ஆய், வேள் என்ற சிற்றரசர்களைக் குறிக்கும் 40இற்கு மேற்பட்ட கல்வெட்டுகள் அனுராதபுரம், களனி, வவுனியா, பெரிய புளியாலங்குளம், திருமலை, மட்டக்களப்பு, பூநகரி ஆகிய விடங்களில் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து கி. மு. 3ம் நூற்றாண்டில், அனுராதபுரதத்திற்குத் தெற்கிலும் வடக்கிலும் பல தமிழ்ச் சிற்றரசுகள் இருந்தனவெனக் கூறமுடியும்."
y
44, Ragupathy, P., The Early Settlement in Jaffna, Madras, 1987. 45. வீரகேசரி வாரவெளியீடு, 11.04.93 46. புஸ்பரட்ணம், ப, மு. கு. கட்டுரை பக்.34

Page 13
14 யாழ்ப்பாண அரச பரம்பரை
இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிராமிக் கல்வெட்டுகளில் காணப்படும் பழைய திராவிட வடிவங்களான பருமக (பருமகன்/பெருமகன்) வேள், ஆய், பரத போன்றவை திராவிடக் கலாசாரத்திலிருந்து துளிர்ந்ததை எடுத்துக் காட்டுகின்றன." இலங்கையின் பழைய பிராமிக் கல்வெட்டுகளை ஆராய்ந்த சத்தமங்கல கருணரத்தின, இலங்கையின் பழைய பிராமிக் கல்வெட்டுகளில் தென்னிந்தியத் தமிழ்ப்பிராமி எழுத்துக்களே கையாளப்பட்டிருந்தன எனக் காட்டியுள்ளார். அசோகன் காலப் பிராமி எழுத்துக்கள் கி. பி. 1 ஆம் நூற்றாண்டளவில் தான் இலங்கைக் கல்வெட்டுகளில் இடம்பெறுகின்றன. இந்த இரு பிராமி எழுத்துக்களுக்கிடையிலான வேறுபாடுகளை இவர் எடுத்துக் காட்டுவதன் மூலம் தென்னிந்தியப் பிராமியின் பழைமை நிலையும் தெளிவாகப்பட்டுள்ளது.* மேலும், ஈழத்தின் ஆதிப்பிராமிக் கல்வெட்டுகளிற் காணப்படும் ஈழ, தமேட, தமேழ போன்ற பதங்கள் பற்றிக் குறிப்பிடுவது அவசியமாகின்றது." அண்மையில் பூநகரியில் கிடைத்த மட்பாண்ட ஒடுகளில் கிடைத்த ஈழ, ஈலா என்ற பிராமிய எழுத்துக்கள்," திராவிட மக்களது குடியிருப்புக்களை நிறுவும் சான்றுகளாகும்.
1. 3. சமய வழிபாடு
இலங்கையின் ஆதிமக்களான இயக்கர்கள் இயற்கை வழிபாட்டையும், நாகர்கள் நாகவழிபாட்டையும் சிவவழிபாட்டையும் கொண்டிருந்தனர். மகாவம்சம் தரும் தகவல்களுக்கு இணங்கப் பெளத்தமதம் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே, இயக்கர், நாகர் என்போரது வழிபாட்டு முறைகள், மரவழிபாடு, லிங்கவழிபாடு மற்றும், ஜைனம், பிராமணியம் ஆகிய மதக் கருத்துக்கள் காணப்பட்டன என அறியலாம்."
47. சிற்றம்பலம், சி. க. வரலாறு-9 பக். 20. 48. தனபாக்கியம், ஜி, மு. கு. நூல் - 9. பக்.36. 49. சிற்றம்பலம், சி. க., மு. க. கட்டுரை, பக். 164 50. புஸ்பரட்ணம், ப. சங்ககால ஈழம் தமிழர் பிரதேசங்களில் ஒன்றா?
வெளிச்சம்-1991, புரட்டாதி-ஐப்பசி, பக்.14 51. Paranavitana, S, Pre-Buddhist Religious Beleafs in Ceylon,
JRASCB XXXI, NO 82, 1909, pp. 302-28

யாழ்ப்பாண அரச பரம்பரை 15
பிராமிக் கல்வெட்டுகளிற் காணப்படும் இந்துமதப் பெயர்கள் இந்த நாட்டில் பெளத்தமதம் கால்கொள்ளுமுன்னர் இந்துமதமே மக்களின் மதமாக விளங்கியதையும் இந்த இந்துக்களில் பெரும்பான்மையினர் பெளத்தர்களாக மாறியதையும் எடுத்துக் காட்டுகின்றன. பெளத்தம் இந்த நாட்டில் கி. மு. 3ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் புகுத்தப்பட்டபோது, பெளத்தமதத்திற்கு அளிக்கப்பட்ட குகைத் தானங்களை எடுத்துக் காட்டும் பிராமி வடிவத்திலுள்ள கல்வெட்டுக்களிற் காணப்படும் இந்துப் பெயர்கள், பெளத்தர்களாக இவர்கள் மதம்மாற முன்னர் இந்துக்களாக இருந்ததை எடுத்துக் காட்டியுள்ளன.* கிடைக்கும் ஆதாரங்களில் இருந்து பார்க்கும் போது கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில், அதாவது ஆகக் குறைந்தது கிறிஸ்துவுக்கு முற்பட்ட 6ஆம் நூற்றாண்டிலிருந்து கிறிஸ்துவுக்கு முற்பட்ட 3ஆம் நூற்றாண்டுவரையுள்ள காலப்பகுதியில் இலங்கை மக்களில் ஒரு குறிப்பிட பகுதியினரிடையே இந்துமத நம்பிக்கை இடையீடின்றி இருந்து வந்திருக்கின்றதென்பதை அறியலாம்.*
இயக்க வழிபாடு அக்காலத்தில் பரவியிருந்த இயற்கை வழிபாட்டின் ஒரம்சம் என்பது உறுதி. ஆரம்பத்தில் கட்டப்பட்ட தாதுகோபங்கள், அன்று இயக்க வழிபாடு போன்றன செல்வாக்குப் பெற்றவிடங்களில்தான் கட்டப்பட்டிருக்கலாம். கி. பி. 4ஆம் நூற்றாண்டில் யக்ஷ காலவேலன் கோயில் அமைந்திருந்த இடத்தில் தாதுகோபம் ஒன்று கட்டப்பட்டதென மகாவம்சம் கூறுகிறது. யக்ஷ மகேஜன் கோயில் கொண்ட இடத்தில்தான் ஈழத்தின் முதல் தாதுகோபமாகிய தூபராம கட்டப்பட்டதாகப் பரணவிதான குறிப்பிடுகிறார்."
இயக்க வழிபாட்டோடு நெருங்கிய ஒன்றுதான் நாகவழிபாடு. இந்தியாவுக்கு ஆரியர் வருமுன் நிலவிய தஷ்யுக்களின் (திராவிடரின்) வழிபாடுகள் இவை எனப் பேர்க்கசன் என்பார் குறிப்பிட்டுள்ளார்." இந்தியத்
52. சிற்றம்பலம், சி.க, வரலாறு 7, பக்.20 53. குணசிங்கம், செ, கோணேஸ்வரம், பேராதனை, 1973, பக் 31 54. சிற்றம்பலம், சி. க., பண்டைய ஈழத்து யக்ஷநாக வழிபாடு. சிந்தனை, 1983, தொகுதி: 1 இதழ் 11, பக். 124-125 55. Fergusson, J. T., Tree and Serpent Worship in India, London, 1873

Page 14
16 யாழ்ப்பாண அரச பரம்பரை
துணைக் கண்டத்திலும் இயக்க வழிபாட்டிற்கான ஆதாரங்களுள. இது பண்டைய ஆரியர் அல்லாத மக்கட் கூட்டத்தினரின் சுதேச வழிபாட்டுமுறை. பிற்பட்ட இந்துமதக் கடவுள்களான சிவன், உமை, குபேரன் போன்றோரின் அம்சங்கள் பல மட்டுமன்றி, வழிபாட்டுமுறைகள், பக்தி மார்க்கம் போன்றனவும் இதனின்று வளர்ச்சி பெற்றவையே.* இயக்கர்கள் வழிபாடு ஆரியரல்லாதோர் வழிபாட்டுமுறை என்பதோடு, பிற்கால இந்துமதத்தில் முதற்தோன்றிய உருவச்சிலைகள் பலவும் பழைய இயக்கச் சிலைகளை ஒத்துக் காணப்பட்டன, என ஆனந்தக் குமாரசாமி குறிப்பிடுகிறார். ஈழத்தில் நிலவிய இயற்கை வழிபாட்டையும் உருவ வழிபாட்டையும் யக்ஷ வழிபாடு எனப் பாளி நூல்கள் அழைத்தன. இந்து மதத்திலுள்ள லிங்க வழிபாடும் ஒருவகையில் இவ்வழிபாட்டைச் சேர்ந்ததுதான்." இயற்கை வழிபாட்டின் இன்னொரு அம்சமாகச் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியனவும் வழிபடப்பட்டன என்பதை ஆதிப் பிராமிக் கல்வெட்டுகள் எடுத்துக் காட்டுவதாகப் பரணவிதான குறிப்பிடுகிறார்.* பெளத்தமதம் இலங்கைக்கு வருவதற்கு முன்னரேயே இந்த நாட்டில் சிவவழிபாடு நிலவியது எனக் கொள்ளலாம். பண்டுகாபயன், சிவலிங்கக் கோயில் ஒன்றைக் கட்டினான் என அறியக்கிடக்கின்றது. ‘சிவ என்று தொடங்கும் பெயரையும் சிவ என்று முடியும் பெயரையும் கொண்ட பலர் சாசனங்களிலிடம் பெற்றுள்ளனர். இவற்றிலிருந்து இந்துமதம் இலங்கையில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட ஒரு காலப்பகுதியிலாவது நிலவியது எனத் துணியலாம். தொல்லியற்றிணைக்களம் தொகுத்து வரிசைப்படுத்தி வெளியிட்ட சாசனங்களில், 63 சாசனங்களில் ‘சிவ என வருகின்றது."
ஈமச் சின்னங்கள், திராவிடப் பிராமிக் கல்வெட்டுகள், பண்டைய வழிபாட்டு மதம் முதலான ஆய்வுகளின் விளைவாக, இலங்கைத் தீவின் ஆதி மக்கள் திராவிடர் என்பது புலனாகின்றது. ஈழத்தின் நாகரிக கர்த்தாக்கள் இந்த ஆதித் திராவிடரே என்பது தொல்லியலாய்வாளரின் முடிவாகும்.
56. Coomaraswamy, A. K., The yakeas, New Delhi, 1971 57. சிற்றம்பலம், சி. க., பண்டைய ஈழயக்ஷ, நாக வழிபாடு,
சிந்தனை, 1983, தொகுதி 1 இதழ் 11,பக். 123 58. Paranavitana, S., Inscription of Ceylon, Colombo, 1970 59. குணசிங்கம், செ. மு. கு. நூல், பக் 27-31
தனபாக்கியம், ஜி, வங்க இளவரசர் விஜயனின் வரலாறும், இலங்கையிற் சிங்கள இன

யாழ்ப்பாண அரச பரம்பரை 17
1. 4. ஆரிய வம்சத்தினரா?
சிங்கள வரலாற்றாசிரியர்கள், சிங்கள மக்கள் ஆரியவம்சத்தைச் சேர்ந்தவர் என்றும் சிங்களமொழி ஆரியமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்றும் நிறுவமுயன்றுள்ளனர். ஆனால், மகாவம்சத்திலோ; சூளவம்சத்திலோ அவற்றையொத்த வேறு நூல்களிலோ சிங்கள மக்களை ஆரிய மக்கள் என்று குறிப்பிட்டில்லை. இந்நூல்கள் திராவிடரைத் தமிழர், பாண்டியர், கேரளர், சோழர், கன்னடர்கள், நாயக்கர்கள் எனக் குறிப்பிட்டது போலவே, சிங்கள மக்களைச் சீகளர்கள் எனக் குறிப்பிடுகின்றன." மகாவம்சம் குறிப்பிடுகின்ற விஜயனின் கதை, பாண்டுகாபயன் கதை என்ற ஐதிகக் கதைகள் மூலம் ஈழத்தின் இன்றைய நாகரிய கர்த்தாக்கள் இலங்கைக்கு வந்தரென விபரிக்கப்படுவது, இலங்கையில் நிகழ்ந்த குடியேற்றங்களைக் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். ஆனால், அவர்கள் ஆரியர்களென நிறுவமுயல்வது ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவில்லை. அதற்குரிய சான்றுகள் எங்குமில்லை. பெளத்தமதத்தின் வருகை வடஇந்தியாவிலிருந்து நிகழ்ந்ததாகையால், சிங்கள மூதாதையினரின் வருகையும் வடஇந்தியப் பிரதேசங்களோடு இனங்காணப்பட்டு, அவர்கள் ஆரியரென வலிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
கி.மு. 483 ஆம் ஆண்டு நிகழ்ந்த விஜயனதும் அவனது தோழர்கள் எழுநூறு பேரினதும் இலங்கை வருகைக்கு முன்னர், உண்மையான ஆரிய சேனாதிபதிகள் இலங்கைக்கு வந்துசென்றுள்ளனர். இராமன் என்ற ஆரியன், இராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட தன் மனைவி சீதையை மீட்டுச் செல்வதற்காக இலங்கைக்கு வந்தான். பாரதப் பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனன், அல்லியைக் கவர்ந்து செல்வதற்காக இலங்கையின் மேற்குக் கரையோர அரிப்புக்கு வந்தான். இயக்கப் பெண்ணான வள்ளியை மணம்முடிப்பதற்காக ஸ்கந்த என்ற ஆரியச் சேனாதிபதி, கதிர்காமம் (மாகம) வந்துசென்றான். ஆனால் இலங்கைக்கு வந்த விஜயனையும் தோழர்களையும் ஆரியர் என பாளி நூல்கள் எதுவும் குறிப்பிடவில்லை.
60. மொழி எழுத்துத் தோற்ற வளர்ச்சியும் நிலைகளும், மட்டக்களப்பு, 1989, பக்.30 61. செங்கையாழியான், குவேனி, தமிழ்த்தாய் வெளியீடு, யாழ்ப்பாணம். 1992

Page 15
18 யாழ்ப்பாண அரச பரம்பரை
மெண்டிசும், பரணவிதானவும் அவர்பின் வந்தவர்களும் ஆரியராக்க முயன்றுள்ளனர்.
விஜயனின் கதையை நிரூபிக்ககூடிய தொல்லியற் சான்றுகள் எதுவுமில்லை. கிடைத்த சான்றுகள் வட இந்தியாவிலிருந்து சிங்கள மக்களின் மூதாதையினர் இந்நாட்டிற்கு வரவில்லை என்பதையும், இந்நாட்டிற்கு நாகரிகத்தினை உருவாக்கியோர் தென்னிந்தியாவிலிருந்து ஈழம் புகுந்தனர் என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளன.
பெருங்கற்காலப் பண்பாடுபற்றி இலங்கையிற் பரவலாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சான்றுகள் இலங்கையின் நாகரிக வரலாறும், சிங்கள மக்களின் மூதாதையினரும் வடவிந்தியத் தொடர்பால் ஏற்பட்டதென்ற பாரம்பரியக் கருத்தை முற்றாக நிராகரித்துள்ளன. ஈழத்தில் ஆதிக்குடியேற்றம் நிகழ்ந்ததாகப் பாளி இலக்கியங்கள் குறிப்பிடும் பகுதிகளை உற்றுநோக்கும் போது பெருங்கற்கால மக்களது குடியிருப்புக்களையே பாளி நூல்கள் விஜயன் கூட்டத்தினரின் குடியிருப்புகள் என அழைத்துள்ளமை தெளிவாகின்றது என சிற்றம்பலம் குறிப்பிடுவது ஏற்கத்தக்கது. எனவே, வடவிந்தியக் குடியேற்றத்திற்குப் பதிலாக தென்னிந்தியக் குடியேற்றமே நடந்ததென்பதும், இம்மக்கள் அப்போது இங்கே காணப்பட்ட கற்கால மக்களின் கலாசாரத்தின்மேல் தமது கலாசாரத்தைக் திணித்தனர் எனவும் கொள்ளலாம். இங்கு காணப்பட்ட கற்கால மக்களே பாளி நூல்களில் இயக்கர்கள், நாகர்கள் என அழைக்கப்பட்ட அமானுஷ்யர்களாவர். எனவே ஈழத்தின் நாகரிக கர்த்தாக்கள் திராவிடரே என்பது புலனாகின்றது.*
சிங்கள விஜயனைத் தொடர்ந்து இலங்கைக்கு வந்த சீகளர், இங்கு வாழ்ந்த ஆதித்திராவிடரின் பிரதேசங்களில் குடியேற்றங்களை நிறுவி நிலைபெற்றதோடு, அம்மக்களுடனும் கலப்பினை ஏற்படுத்திக்கொண்டனர். பெருங்கற்காலத்தில் ஈழத்திலிருந்து வளர்ந்த மொழிகளாக எலு, தமிழ் என்பன விளங்கின். இயக்க மக்கள் எலுமொழியையும், நாகர்கள் தமிழையும் பேசினர். எலுமொழி பேசிய இயக்க மக்களுடன் தற்காலச் சிங்களமக்களின்
62. சிற்றம்பலம், சி. க., மு. கு. கட்டுரைகள் பலவும்.

யாழ்ப்பாண அரச பரம்பரை 19
மூதாதையினர் கலந்து பெளத்தத்திற்குமாற, பாளிமொழியின் தாக்கம் ஏற்பட்டுச் சிங்களமொழி உருவாகியது என்பது அறிஞர்களின் கருத்தாகும். வடநாட்டிலிருந்து வந்த பெளத்தமதக் கலாசாரத்தினால் எலுமொழி பேசிய திராவிட மக்களாகிய சிங்கள மக்களின் கலாசாரம் தனியான பாதையில் தமிழ் இந்து கலாசாரத்தை விட்டு விலகிச்சென்றது எனச் சிற்றம்பலம் கருதுகிறார்."
எனவே, பெளத்தமதத்தின் வருகைக்கு முன் இலங்கைத்தீவில் திராவிட ஆதிக்குடிகள் வாழ்ந்துவந்தனர். கி. மு. 483 இன்பின் அலையலையாக நிகழ்ந்த தென்னிந்தியக் குடியேற்றங்களும், சிலவிடத்து வடவிந்தியக் குடியேற்றங்களும் பெளத்தத்தின் வருகையும் பாளிமொழியும் புதியதொரு சிங்கள-பெளத்த கலாசாரத்தைத் தென்னிலங்கையில் உருவாக்கக் காரணமாயின. அதேவேளை தமிழ்-இந்து கலாசாரம் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் நிலைபெற்றது. ஆகவே, இலங்கைத்தீவு மொழிவாரியாக இரண்டு இனங்களுக்குரியதாக விளங்கி வருகின்றது.
வடவிலங்கை இராச்சியத்தின் பழைய பெயர்களில் குறிப்பிடத்தக்கது சிங்கை ஆகும். சிங்கை நகர் இதன் தலைநகரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கிரவர்த்திகள் பொதுவாகச் சிங்கைநகரத்தின் ஆட்சியாளர் என வர்ணிக்கப்பட்டனர். சிங்கை ஆரியன், சிங்கை தங்கும் ஆரியர் கோமான், சிங்கையெங்கோமான் எனப்பல வகைப்பட்ட விருதுகள் இம்மன்னர்களுக்கு இலக்கியத்திலும் சாசனத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன. செகராசசேகரம் என்ற மருத்துவ நூலிலே செயம்பெறு சிங்கை நாடன் செகராசசேகரன் என மன்னன் வர்ணிக்கப்பட்டுள்ளான். ஆகவே சிங்கை அல்லது சிங்கை நாடு என்ற பெயர் வடவிலங்கை கிராமத்தின் ஒரு பெயராக வழங்கியிருக்க வேண்டும்.* கொட்டகமக்கல்வெட்டில் சிங்கை நகராரியன்' என்று யாழ்ப்பாண மன்னன் குறிப்பிடப்பட்டுள்ளான்.
வடவிலங்கை இராச்சியத்தின் இன்னொரு பெயராக மணவை, மணற்றி, மணற்றிடல் என்பன இருந்துள்ளன. மணவை என்ற பெயரின்
63. சிற்றம்பலம், சி.க, தமிழ் மக்களின் பாரம்பரியம் பிரதேசம்,
முத்தமிழ்விழா மலர், 1991, பக்.13 64. இந்திரபாலா. கா., மு. கு. கட்டுரை பக்கம், 42

Page 16
20 யாழ்ப்பாண அரச பரம்பரை
திரிபுகளே ஏனைய பெயர்களாகும். யாழ்ப்பாண ஆரியச்சக்கிரவர்த்திகளை செகராசசேகரமாலை மணவை ஆரியவரோதயன், மணவையோர்கோன் செகராசசேகரமன், மணவை தந்தமால் எனக் குறிப்பிடுகின்றது. மணவை அல்லது மணற்றி என்ற பெயர் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குரிய பொதுப்பெயராக இருந்துள்ளது. அது பின்னர் இன்றைய மேற்குப் பகுதிக்குரியதாக மாறியது. அவ்வாறு மாறிய வேளையில் மணற்றி (மணல் ஊர்) என்ற அர்த்தப்படும் வகையில் வலி (மணல்) கம (ஊர்) எனச் சிங்களப்பெயராக உருமாறியது எனப்பல அறிஞர் கருதுவர்.
தமிழருடைய வடவிலங்கை இராச்சியம் பண்டைநாளில் ஈழம் என்ற பெயரைப் பெற்றிருந்தது. இப்பெயர் முழு இலங்கைக்கும் வழங்கிய ஒரு பெயராகும்.* பூநகரிப் பிரதேசத்தின் தொல்லியலாய்வின் விளைவாகக் கிடைத்த பிராமி மட்பாண்ட ஒடுகளில் ஈலா, ஈழ என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.* பூநகரிப்பிரதேசம் ஈழம் என்ற இராச்சியமாகக் கருதப்பட்டமைக்குரிய சான்றாக இதனைக் கருத இடமுண்டு. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டுகளில் இந்த இராச்சியம் ஈழம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விஜயநகர காலத்துத் தென்னிந்தியக் கல்வெட்டுக்களும் யாழ்ப்பாணத்தை ஈழம் என்றே குறிக்கின்றன."
வடவிலங்கை இராச்சியத்தை யாழ்ப்பண அரசு என அழைத்தமை, 15 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரேயாகும். 1435 இல் திருமாணிக்குழி எனுமிடத்தில் பொறிக்கப்பட்ட விஜயநகரக் கல்வெட்டிலே முதன் முதலாக யாழ்ப்பாணாயன் பட்டினம் என்ற பெயர் வடவிலங்கை இராச்சியத்திற்கும், ஈழம் என்ற பெயர் தென்னிலங்கை இராச்சியத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ளன. 15 ஆம் நூற்றாண்டுச் சிங்கள நூல்கள் ஆரியச் சக்கரவர்த்திகளின் அரசிருக்கையை "யாபாபடுன” என்று குறிப்பிடுகின்றன.
எவ்வாறாயினும், வடவ்விலங்கை இராச்சியத்தில் பல்வேறு குறுநில மன்னர்கள் ஆங்காங்கு ஆட்சி செலுத்தி வந்துள்ளனர் எனத் துணியலாம்.
65. Gnanapragasam, S. (p. (5. Sirsi, U3,5th; 303 66. புஸ்பரட்னம், ப. வடவிலங்கையில் சிங்கைநகர், யாழ்-1993 67. இந்திரபாலா. கா, மு. கு. கட்டுரை, பக்கம், 44
{

யாழ்ப்பாண அரச பரம்பரை 21
ஆரியர்கள் வட இந்தியாவில் நிலைகொண்டபோது, திராவிடர்கள் ஆரியர்களால் நெருக்கப்பட்டு இந்தியாவின் தென்பாகத்திற்கும், இலங்கைக்கும் குடிபெயர்ந்தார்கள். அவ்வாறு இடம்பெயர்ந்த திராவிடர்களின் குடியேற்றம், நாகதீவில் மிகக் கூடுதலாக நிகழ்ந்திருத்தல் வேண்டும்.* தென்னிலங்கையில் சிங்களக் குடியேற்றம் நிலை கொள்ளத் தொடங்கிய வேளை, வடவிங்கையில் திராவிடக் குடியேற்றம் வளர்வதாயிற்று. சேர். போல் பீரிஸ் என்ற அறிஞரின் கருத்துப்படி, விஜயன் பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வடவிலங்கையில் குடியிருப்புகள் விருத்தியுற்றிருந்தன என்பதாகும். இந்தியாவிலிருந்து ஆக முப்பது மைல் கடலே வடவிலங்கையைப் பிரிக்கின்றது. அதனை இலகுவில் கலங்களில் தாண்டி வடவிலங்கையில் குடியிருப்புகள் உருவாகின.° இலங்கையின் பல பாகத்தில், ஆதித் திராவிட மக்கள் சடலங்களைப் பெருந்தாழிகளிலிட்டு அடக்கம் செய்த முது மக்கள் தாழிகள் அகன்றெடுக்கப்பட்டுள்ளன. 1955 ஆம் ஆண்டு புத்தளம்-மறிச்சுக்கட்டி வீதியில் முது மக்கள் தாழி ஒன்றும், 1982இல் ஆணைக்கோட்டையிலும், 1984இல் குஞ்சுப்பரந்தனிலும்" இத்தகு முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இவை விஜயனின் வருகைக்கு முன்னரே திராவிட நாகரீகம் இங்கு நிலைபெற்றிருந்ததைக் காட்டி நிற்கின்றன.
கி. மு. 2 ஆம் நூற்றாண்டிலிருந்து யாழ்ப்பாணப் பகுதியில் மக்கள் குடியேற்றம் இருந்தது என்பதைத் தொல்பொருட் சான்றுகள் திட்டவட்டமாக நிறுவுகின்றன. கந்தரோடைப்பிரதேசத்திலே குடியேறியிருந்தமக்கள் பண்பாட்டு முன்னேற்றம் அடைந்தவர்களாக, கி. மு. நூற்றாண்டுகளிலிருந்து பிறநாடுகளுடன் தொடர்பு கொண்டு, எழுத்தின் உபயோகத்தையும் அறிந்து வாழ்ந்தனர் என இதே சான்றுகளைக் கொண்டு அறியலாம். இவ்வாறே யாழ்ப்பாணத்தின் பிற பகுதிகளிலும் முன்னேற்றமடைந்த மக்கள் வாழ்ந்திருக்க வேண்டும். எனவே வடவிலங்கை அரசு பல்வேறு பெயர்களால் வரலாற்றுக்காலத்தில் அழைக்கப்பட்டு வந்துள்ளது. இப்பிரதேசத்தின் தொல்குடியினர் நாகர்கள்,அவர்கள் திராவிட இனத்தவர்களெனத்துணியலாம்.
68. மே. கு.கட்டுரை, பக்கம்; 45 69. மே, கு. கட்டுரை, பக்கம், 46
70. குணராசா, க. குஞ்சுப்பரந்தன் முதுமக்கள் தாழி, ஈழநாடு-1994.

Page 17
அத்தியாயம் இரண்டு
வடவிலங்கை அரசின் மன்னர்கள்
இலங்கைத் தீவு முழுமைக்குரிய பெயராக இலங்காபுரி, ஈழம் எனும் பெயர்கள் பண்டைதொட்டு வழங்கி வந்துள்ளன. பல்வேறு பெயர்களினால் இலங்கை பூர்வ காலந்தொட்டே விளிக்கப்பட்டு வருகின்றபோதிலும் இவ்விரு பெயர்களும் இன்றுவரை நிலைத்து நிற்கும் சிறப்பினைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்காபுரி என்ற பழைய பெயரே இன்றைய லங்கா, இலங்கை என்ற நிரந்தர நாமங்களை ஏற்படுத்தியுள்ளது.
இலங்காபுரி பற்றிய ஆரம்பக் குறிப்பு, இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் வருகின்றது. குபேரனுக்காக விசுவகர்மன் என்ற தேவதச்சனால் அமைக்கப்பெற்ற இலங்காபுரி, பின்னர் குபேரனால் இராவணனுக்குக் கையளிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. இலங்கை என்ற பெயரால் இந்நாடு முழுவதும் இன்றுவரை அழைக்கப்படுவதே இலங்காபுரியின் மங்காத புகழை இன்றும் நிலைநிறுத்துகிறது. மேலைத்தேய நாட்டினர் இந்நாட்டிற் காலெடுத்து வைத்தது முதலாகவே இலங்கை என்ற பெயர் சைலன் (Zeilan) என்றும். சையிலன் (Sailan) என்றும் சிலோன் (Ceylon) என்றும் திரிவுபெற்று உச்சரிக்கப்படலாயிற்று'
ஈழம் என்ற பெயரால் இலங்கை அழைக்கப்பட்டமையை பண்டைய தமிழ் இலக்கியங்கள், பழைய கல்வெட்டுக்கள், புராதன காசுகள் என்பன உறுதிப்படுத்துகின்றன. பட்டினப்பாலை எனும் சங்க நூலில், 'ஈழத்துணவும் காழகத்து ஆக்கமும்’ என வருகின்ற வரி குறிப்பிடத்தக்கது.* திருப்பரங்குன்றப் பிராமிக்கல்வெட்டில் ஈழக்குடும்பிகன் என்பவனது பணிபற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.* பிற்காலத்தில் பாண்டிய
1. தனபாக்கியம் . ஜி. இலங்கையில், தொல்லியலாய்வுகளும் திராவிடக் கலாசாரமும்.
மட்டக்களப்பு, 1988, பக்கம் 54.
2. பட்டினப்பாலை, 190 - 192
3. இராமன். கே.வி, தொல்லியல் ஆய்வுகள், சேகர் பதிப்பகம். 1967

யாழ்ப்பாண அரச பரம்பரை 23
கல்வெட்டொன்றில் ஈழம் பற்றிய தகவலுள்ளது. இலங்கையில் அனுராதபுரத்தில் கிடைத்த கல்வெட்டொன்றில் ஈழக் காசுகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஈழக் காசுகளே சிங்கள மன்னர் பயன்படுத்திய சுகவனுக் காசுகள் எனக் கருதுவர். எவ்வாறாயினும், இலங்கையின் பிரதான வரலாற்று மூலகங்கள் எதிலும் இதுவரை இலங்கை, ஈழம் என்று அழைக்கப்பட்டதற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்டவில்லை. ஆனால் முதன்முதலாக ப. புஸ்பரட்ணம் என்பவரால் பூநகரியில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு மட்பாண்டப்பிராமிச் சாசனங்கள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை.
இவற்றுள் மூன்று எழுத்துக்களைக் கொண்ட முதலாவது சாசனம் பெருமளவு உடைந்து இருப்பதனால் அதனை ஒரு முழுச் சாசனமாகக் கொள்ள முடியாதிருக்கின்றது. ஆயினும் இதன் முதலிரண்டு எழுத்துக்களிற்கும் ஈழ என்ற ஒலிப்பெறுமானத்தைக் கொடுத்து'ஈழ என்று வாசிப்பது பொருத்தமானதாகத் தெரிகின்றது எனப் புஸ்பரட்ணம் குறிப்பிடுகிறார். இரண்டாவது சாசனம் ஈலா’ என்ற வாசகத்தைக் கொண்டது. இவை இரண்டும் ஈழத்தையே குறிப்பதாகக் கொள்ளலாம்.
ஈழம் என்றால் உலோகக்கட்டிகள், பொன் எனப் பலவாறாக அர்த்தப்படும். ஈழம் என்ற பெயர் வந்தமைக்கான காரணத்தை வரலாற்று ஆசிரியர் முதலியார் செ. இராசநாயகம் விளக்கியுள்ளார். இலங்கையில் வசித்த நாகரும் இயக்கரும் எலு வென்று இக்காலத்தில் பிழைபட வழங்கப்படும் ஈழு வென்னும் நிறைவற்ற பாஷையையே பேசி வந்தார்கள். அதனால் இலங்கைக்கு 'ஈழம்' என்றும் 'ஈழமண்டலம்' என்றும் பெயர் உண்டாயிற்று. ஈழம், சீழம் என மருவிச் 'சிஹழம் சிங்களம் என மாறியது. சீழம் என்ற பெயரிலிருந்தே சீழம்தீப், சேரண்டிப் எனும் அராபிய நாமங்களும், சிலாங், சிலோன்’ என்னும் மேலைத்தேயவரிட்ட பெயர்களும் வந்தன என
4. ARE. for 1901, No. 128 of 1901, 5II VII, No. 778.
5. Srisena, O.M.R., "Our Gold Kahavanu Coins and Currency'
Daily News, April 5 1985.
6. புஸ்பரட்ணம் . ப. , சங்ககால ஈழம் தமிழர் பிராந்தியங்களில் ஒன்றா? வெளிச்சம்,
யாழ்ப்பாணம், புரட்டாதி - ஐப்பசி 1991, பக்கம் 13 - 14
7. கழகத் தமிழ் அகராதி, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்
கழகம், சென்னை, 1989, பக். 144

Page 18
24 யாழ்ப்பாண அரச பரம்பரை
அவர் குறிப்பிட்டுள்ளார். ஈழம் என்ற பெயர் திரிபடைந்து சிறீ என்ற அடைமொழியுடன் சேர்ந்து சீகள என்ற பாளி வடிவமாகவும் சீம்கள என்ற வடமொழிவடிவாகவும் வளர்ச்சியடைந்தது என்பது ஏற்புடைய கருத்தாகுமெனச் சிற்றம்பலம் கருதுகிறார்.
பண்டைய இலங்கையின் வடபெரும்பகுதி நாகதீபம் எனவும், தென் பெரும்பகுதி தம்பண்ணை அல்லது தாமிரபரணி எனவும் இரு தெளிவான புவியியல் அலகுகளாக விளங்கின. ஏற்கனவே முதல் அத்தியாயத்தில் கூறியவாறு, கதம்ப நதி எனப்படும் அருவியாற்றுக்கும், நாக பொக்கனை திரிகூடம் எனும் பகுதிகளுக்கும் வடக்கேயுள்ள பிரதேசம் நாகதீபம் எனப்பட்டது. நாகதீபத்தில் யாழ்ப்பாணக் குடாநாடு, அதன் அயற்றிவுகள், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி முதலான பிரதேசங்கள் அடங்கியிருந்தன." கதம்பநதியையும் மகாவலிகங்கையின் கழிமுகக் கிளைகளையும் இணைக்கும் தென்புறவளை கோட்டிற்குத் தெற்கே பரந்து கிடக்கும் இலங்கையின் நிலப்பரப்பு தாமிரபரணி எனப்பட்டது.
எனினும், இலங்கைத் தீவின் புகழ்மிக்க பெயராகத் தாமிரபர்ணி மேலைத்தேய/ கீழைத்தேய அறிஞர்கள் பலராலும் தமது ஆவணங்களில் குறிக்கப்பட்டு வந்துள்ளமை கவனிக்கத்தக்கது. இலங்கைத் தீவின் தென்பெரும்பகுதிக்குரிய தாமிரபர்ணி என்ற பெயர், இலங்கை முழுவதற்குமுரிய பொதுப் பெயராகப் பயின்று வந்தமைக்குரிய காரணிகள் தெளிவானவை. மிகச்சிறந்த கடலோடிகளாக விளங்கிய கிரேக்க, ரோம, அராபிய வணிகர்களின் வர்த்தகக் கலங்கள் இந்து சமுத்திரத்தில் பிரவேசித்தபோது, காற்றினதும் நீரோட்டத்தினதும் மரக்கல உந்துகை கதம்ப நதி (அருவியாறு)க்கும் கல்யாணி நதி (களனி கங்கை) க்கும் இடைப்பட்ட தாமிரபர்ணியின் மேற்குக் கரையோரம் நோக்கியதாக இருந்துள்ளது. எனவே, மேலைத் தேயத்தவர்கள் அறிந்த பிரதேசமாகத் தாமிரபர்ணி விளங்கியமையால், இத்தீவின் பொதுப் பெயராக அதனைத் தமது தேசப் படங்களிலும் நூல்களிலும் குறித்துப் போயினர்.
8. இராசநாயகம். செ., யாழ்ப்பாணச் சரித்திரம், பூரீ சண்முகநாத அச்சகம், யாழ்ப்பாணம்,
1933, பக்கம் 11 - 12 . கலாநிதி சிற்றம்பலம். சி. க. ஈழத்தமிழர் வரலாறு, சாவகச்சேரி, 1994, பக் 6. 10. குணராசா. க., குடியேற்றங்களால் இழந்துபோன தமிழ்ப்பிரதேசங்கள், முத்தமிழ் விழா
மலர் - 1991 பக் 130 - 131.

யாழ்ப்பாண அரச பரம்பரை 25
கி.மு. 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஏராதோஸ்தீனிஸ், குளோடியஸ் தொலமி ஆகிய இரு வானவியல் புவியியல் அறிஞர்கள் அக்காலகட்டத்தில் வரைந்த தேசப் படங்களில் இலங்கைத்தீவு குறிக்கப்பட்டுள்ளது. ஏராதோஸ்தீனிஸ் தனது படத்தில் இலங்கைத் தீவை தப்ரோபேன்’ எனக் குறித்துள்ளார்; அவரது தேசப் படத்தைப் பின்பற்றி வரைந்த தொலமியும் இலங்கைத் தீவுக்கு தப்ரபேன்’ என்ற பண்டைய பெயரையே குறித்துள்ளார். தாமிரபர்ணி என்ற பெயர் கிரேக்க அறிஞர்களால் தப்ரோபேன்’ எனவும் தப்ரபேன்’ எனவும் உச்சரிக்கப்பட்டுள்ளது."
இலங்கையின் வரலாற்றுப்பனுவலாக் கொள்ளப்படும் மகாவம்சத்தில் தாமிரபர்ணிப் பிரதேசம், 'தம்பபன்ன’ எனக் குறிக்கப்படுகின்றது." தாமிரவர்ணி என்ற சமஸ்கிரத வார்த்தையின் பாளி மொழி உச்சரிப்பே தம்பபன்ன எனக் கொள்ளலாம்." தாமிரபர்ணி என்று இலங்கைத் தீவு முழுவதும் அல்லது தென் பகுதி மட்டும் அழைக்கப்பட்டமைக்குரிய காரணங்கள் பலவாகவுள்ளன. இலங்கையில் தென்கிழக்கே பாய்கின்ற தம்மன என்ற ஆற்றின் பெயரால் தம்பன்னி' என்ற பிரதேசப் பெயர் உருவாகியது என எச். பாக்கர் கருதுகிறார்." விஜயனும் தோழரும் இளைப்பாறும் பொருட்டு உள்ளங்கைகளை நிலத்தில் வைத்துக்கொண்டு உட்கார்ந்தபோது உள்ளங்கைகள் செம்புநிறமாக (தாமிரமாக) மாறியதால் அப்பகுதிக்குத் தம்பபன்னி' என்ற பெயர் உண்டானதாக ஐதிகக் கதையுள்ளது.*
இலங்கைத் தீவின் தென்பெரும்பகுதி தாமிரபர்ணி என்று அழைக்கப்பட்டமைக்கான ஏற்றுக்கொள்ளத்தக்க காரணமாக, இந்தியத் தமிழ்நாட்டு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் பாய்கின்றதாமிர்பரணி நதி வடிநிலப் பிரதேசத்தோடமைந்த தொடர்பின் விளைவைக் குறிப்பிடலாம்.
11 Brich, T. W. Maps Topographical and Statistical, Oxford University,
Press, 1967, p.2
12. The Mahavamsa, Translated into English by Wilhelm Geiger, 1950.
Chapter: VI: 47; Page 54.
13. தனபாக்கியம். ஜி. , மு. கு. நூல். பக்.10
14. Parker. H., Report on Archaeological Discoverises at Tissamaharama R.A.S.
Vol. VIII, No, 27, 1887. 15. The Mahavamsa, op. cit., Chapter: VII; 41,42, & 58

Page 19
26 யாழ்ப்பான அரச பரம்பரை
மேற்குக் கரையோர மலைத்தொடரில் உற்பத்தியாகின்ற தாமிரபரணி ஆறு, திருநெல்வேலி மாவட்டத்தின் புகழ்பெற்ற பண்டைய குடியிருப்புப் பகுதியான ஆதிச்ச நல்லூர் ஊடாகப் பாய்ந்து, மன்னார்க்குடாவில் இந்து சமுத்திரத்துடன் சங்கமமாகின்றது. இந்த ஆற்றுக்கு நேர் கிழக்கே இலங்கைத் தீவில் கொணாநதி (காலாஒயா) அமைந்துள்ளது. கதம்பநதிக்கும் (அருவியாறு), கொணாநதிக்கும் இடைப்பட்ட பிரதேசமே தாமிரபர்ணி என அறிஞர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது." ஆகவே, திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றுவடி நில மக்கள், பல்வேறு காரணங்களுக்காக இலங்கையின் மேற்குக் கரையோரத்தில் குடியேறி வாழ்ந்துள்ளனர். அவர்கள் தமது தாயகப் பெயரைத் தாம் குடியேறிய பகுதிக்குமிட்டனர் எனக் கொள்வது மிகவும் ஏற்ற காரணமாகும்.
சிங்கள வரலாற்ராசிரியரும் தொல்லியலாய்வாளருமான பரணவிதானவின் ஆய்வுக்கூற்று இதனை உறுதிசெய்யும். அவர் விஜயனின் வருகைக்கு முன்னரே முத்துக்குளிக்கவந்த தாமிரபர்ணிமக்கள் கதம்ப நதிக் கரையை அண்டிய பகுதிக்குத் தாமிரபர்ணி எனப் பெயரிட்டிருக்காலம் எனக் கூறிப் போந்தார்." மன்னார்க்குடா முத்துக்குளித்தலுக்குப் புகழ்பெற்ற முத்துச்சலாபமாகும். தாமிரபரணி ஆற்றின் தென்கரையோர ஆதிச்ச நல்லூரில் கிடைத்த ஈமத்தாழிகளை ஒத்தவையே, இலங்கையின் தாமிர பர்ணிப்பிரதேசத்தில் பொம்பரிப்பு எனுமிடத்தில் கிடைத்த ஈழத்தாழிகளாகும் எனத் தொல்லியலாய்வுகள் இன்று நிரூபித்துள்ளன." பொன்பரிப்பிற்
16. தாமிரபரணி ஆறு திருநெல்வேலியூடாக இலங்கைவரை ஓடியது என்றும், கடற்கோளினால் இலங்கை பிரிக்கப்படு முன்னர் தாமிரபரணி வடிநில மக்கள் இலங்கைத்தீவில் குடியேறினர் என்றும் சில வரலாற்றாசிரியர்கள் விளக்கியுள்ளனர். இது எவ்வகையிலும் ஏற்புடையதன்று. இந்தியத் திணிவினின்றும் இலங்கை பிரிவுற்ற மயோசீன்காலத்தில், புவியில் மனிதகுலம் தோன்றியிருக்காத நிலையில், மக்கள் இடப்பெயர்வு நிகழ்ந்ததாகக் கூறுவது பொருத்தமுடையதன்று. ஆனால், புவிச்சரிதவியலடிப்படையில் ஒரு நிலப்பாலம் இன்றைய இராமர் அணையில், இராமேஸ்வரத்தையும் தலைமன்னாரையும் இணைத்திருந்தது என்பது நிறுவப்பட்ட உண்மையாகும். இந்த நிலப்பாலத்தினூடாகத் தமிழகத்திலிருந்து இலங்கைத்தீவிற்கு புலப்பெயர்வு நிகழ்ந்துள்ளது எனக் கொள்ளலாம்.
17. Nicholas, C.W. and Praranavitana, S.A Concise History of Ceylon, Ceylon
University Press, 1961, p.24
18. Pramavithana. S., "Archaeological Investgations Near Pomparippu", Ceylon
Today, 5(II), November 1956

யாழ்ப்பாண அரச பரம்பரை 27
கிடைத்த சிறப்புமிக்க தொல்லியற்றடயங்கள் பாண்டி நாட்டுத் தாமிரபர்ணி மக்களுக்கும் இலங்கைத் தம்பபன்ன மக்களுக்குமிடையேயிருந்த கலாசார ஒருமைப்பாட்டை எடுத்துக்காட்டும் வரலாற்றேடுகள் எனின் மிகையாகாது. அத்துடன் இலங்கை வரலாற்று நூல்களில் மட்டுமன்றி இந்தியா, கிரேக்கம் முதலான நாட்டு இலக்கியங்களில் இருந்தும் கிடைக்கப்பெற்ற ஆதாரபூர்வமான குறிப்புகளிலிருந்து கி.மு.5ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே தாமிரபர்ணி என்ற நிலப்பரப்பின் பெயரால் இலங்கை பிறநாடுகளில் அறிமுகமாகியிருந்தது என்பது தெளிவாகின்றது."
இலங்கையின் வட பாகத்தில் நாகர் பரவி வாழ்ந்தது பேர்ல, தாமிரபரணியில் இயக்கர் எனப்படும் புராதனகுடிமக்கள் வாழ்ந்து வந்தனர்.
மகாவம்சத்தின்படி புத்தர் ஞானம் பெற்று ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் இலங்கைக்கு வந்திருந்தார். அவ்வேளை இலங்கையில் இயக்கர்கள் நிறைந்திருந்தனர். மகாநாகா தோட்டத்தில் இயக்கர்கள் குழுமியிருந்தபோது, அவர்கள் முன் தோன்றிய புத்தர், இயக்க மக்களது பயங்களை நீக்கி ரட்சித்ததாகக் குறிப்புள்ளது." தாமிரபரணிப்பிரதேசம் எங்கும் இயக்கர்கள் பரவி வாழ்ந்துள்ளனர். அருவியாற்றுக்கும் மகாவலி கங்கைக்கும் தெற்கே இவர்களின் குடியிருப்புகள் அமைந்திருந்தன. இவர்கள் மூன்று யோஜனா தூரம் நீளமும் அகலமும் கொண்ட மகாநாகா (மகியங்கனை) தோட்டத்தில் சடங்கு ஒன்றுக்காகக் கூடுவர் என மகாவம்சம் கூறுகிறது. விஜயனின் இலங்கை வருகையின்போது அவன் சந்தித்த இயக்ககுலராணிகுவேனி பற்றி தகவல்கள் மகாவம்சத்திலுள்ளன. விஜயன் - குவேனி கதை ஒரு கட்டுக்கதை என்றாலும், சிங்ஹல மூதாதையின் வருகையின்போது இலங்கையில் இயக்கர்களின் ஆட்சி நிலவியது என்ற உண்மை மறுப்பதற்கில்லை. 'இயக்கர்களின் புகழ்பெற்ற ஒரு நகரமாக சிறிஸ்தவத்து விளங்கியுள்ளது." எனினும், இராமாயணக் காவியம், தொலமியின் தேசப்படம், ஜாதகக் கதைகள் என்பனவற்றிலிருந்து இயக்கர்கள் வாழ்ந்த பிரதேசங்களாக திரிகூடம், இலங்காபுரி, அரித்தகிரி, யக்குரகல, லக்கல, நிகும்பிலாவனம், தூமரமக்க, விந்தனை, மகியங்கனை, சிறிஸ்துவத்து,
19. தனபாக்கியம். ஜி., மு. கு. நூல். பக் :1-13. 20. The Mahavamsa, op. Cit., Chapter 1 : 20-30. pp., 3 - 4. 21 lbid., Chapter VI: 32, p.57

Page 20
28 யாழ்ப்பாண அரச பரம்பரை
யக்குரே என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.* இவற்றோடு பொம்பரிப்பு தாமிரபர்ணி (நகரம்), கதிர்காமம் என்பனவற்றையும் இயக்கர் குடியிருப்புகளாகக் கொள்ளலாம். வடக்கேயுள்ள இயக்கச்சி எனுமிடத்தையும் இயக்கர் குடியிருப்பாகக் கருதவிடமுண்டு*
நாகதீபத்தை (வடவிலங்கையை) ஆண்ட தமிழ் மன்னர்கள் சில காலங்களில், தாமிரபரணி (தென்னிலங்கை) யையும் தம் ஆட்சிக்குட்படுத்தியிருந்துள்ளனர். அதேபோல தென்னிலங்கையை ஆண்ட சிங்கள மன்னர்கள் வடவிலங்கையைத் தம் ஆட்சியினுள் கொண்டிருந்துள்ளனர். இலங்கையைத் தமிழ் மன்னர்கள் அல்லது சிங்கள மன்னர்கள் ஆண்டபோதிலும், அதே காலகட்டத்தில் நாகதீபத்திலும் தாமிரபரணியிலும் குறுநில மன்னர்களின் ஆட்சி நிலவியிருதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
21. சிங்ஹல விஜயன் வருகை
கி. மு. 483 ஆம் ஆண்டு தாமிரபர்ணியில் வந்திறங்கிய விஜயனும் அவனது தோழர்களும் தென்னிலங்கையில் வாழ்ந்த இயக்கத்திராவிடரை வெற்றிகொண்டு பல குடியேற்றங்களை நிறுவிக் கொண்டனர். தாமிர பர்ணியின் இயக்ககுலத் தலைவியாக விளங்கிய குவேனி என்பவள், அதற்குத் துணைபோயினள். விஜயனும் தோழரும் இலங்கைக்கு வந்து குடியேற்றங்களை அமைத்தவிதம் மகாவம்சத்தில் விபரிக்கப்பட்டுள்ளது.*
வங்கதேச இளவரசி ஒருத்தி அரண்மனையை விட்டு வெளியேறி மகதநாடு நோக்கிச் சென்ற வணிகக் குழுவுடன் பயணப்பட்டாள். காட்டுவழியில் எதிர்ப்பட்ட சிங்கம் ஒன்று வணிகர்களைக் கொன்றுவிட்டு அவளைக் கவர்ந்து சென்று, இணைந்தது. அதனால், சிங்கபாகு, சீகசிவிலி என இரட்டைப் பிள்ளைகள் பிறந்தனர். சிங்கபாகுவுக்குப் பதினாறு
22. தனபாக்கியம். ஜி. , இலங்கையிற் தொல்லியலாய்வுகளும் திராவிடக் கலாசாரமும்,
மட்டக்களப்பு: 1988, பக். 245.
23. குணராசா. க., குவேனி, தமிழ்த்தாய் வெளியீடு, யாழ்ப்பாணம் - 1992
24. The Mahavamsa, Translated into English by Wilhelm Geiger, Colombo - 1950
Chapter VI : 1 - 74 VII : 1 - 28 Pages 51 to 61.

யாழ்ப்பான அரச பரம்பரை, 29
வயதானபோது அவன் தந்தையான சிங்கத்தைக் கொன்று தனக்குரிமையான வங்க நாட்டிற்கு மன்னனானான். தனது மனைவியாகத் தன் சகோதரியை மணந்து கொண்டான். சிங்கபுர என்ற ஒருநாட்டைத் தாபித்துக் கொண்டான். அவர்களுக்குப் பதினாறு தடவைகளில் இரட்டையராக முப்பத்திரண்டு பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் மூத்தவன் விஜயன் என்பவனாவான். இரண்டாமவன் சுமித்தன்.
விஜயன் மிக்க கொடூரமான நடத்தைகளையுடையவன். அவனும் அவனது தோழர்களும் தமது நாட்டு மக்களுக்கு மிகுந்த இன்னல்களைப் புரிந்தனர். இவனுடைய கொடிய செயல்களைக் கண்டு கோபமுற்ற நாட்டு மக்கள்அவனைக்கொன்று விடுமாறு மன்னனை வேண்டினார்கள். மன்னன் அவனைப் பலமுறை எச்சரித்தும் பயனற்றுப்போகவே, விஜயனையும் அவனது தோழர்கள் எழுநூறு பேரையும் பிடித்து, அவர்களது தலையில் அரைப்பங்கு தலைமயிரை வழித்து, கலமொன்றிலேற்றி கடல்வழி அனுப்பி விட்டான். அவர்களின் கப்பல் இலங்கையின் தாமிரபர்ணிக் கரையை வந்தடைந்தது.*
விஜயனின் கதை முற்றுமுழுதான கட்டுக் கதையாகும். விலங்கு ஒன்றுக்கும் மனித மகள் ஒருத்திக்கும் பிறந்த மன்னன் ஒருவனின் வழிவந்தவர்களாக விஜயனைக் காட்டுவதும், சிங்கள மக்களின் பரம்பரை அவ்வாறான சிங்கம் ஒன்றின் வழியானது என்று கூறுவதும் உண்மையில் சிங்கள மக்களுக்குப் பெருமை சேர்ப்பதாகாது. விஜயனின் கதை சிங்கள மூதாதையினரின் வருகையைக் குறிக்கும் குறியீடாகக் கருதலாம். எனினும், இக்கட்டுக் கதையின் தோற்றத்திற்குப் பெளத்த மத ஜாதகக் கதைகளே கருப்பொருளாக அமைந்தனவென வரலாற்றிஞர்கள் எடுத்து எடுத்துரைக்கின்றனர்"
தாமிரபர்ணியில் வந்திறங்கிய விஜயன், இயக்கத் தலைவியான குவேனியை மணந்துகொள்கிறான். இவர்களது திருமண விழா இயக்க மக்களது சிறிஸ்சவத்து நகரில் நிகழ்ந்தது. திருமணக் கொண்டாட் டத்திற்கென வந்திருந்த இயக்கர் அனைவரையும் குவேனியின்
25. The Mahavamsa, (yp.(e5.(5JTôib, gelg5lö5ITIJib VII : 6) urf : 42 Uö55tib : 58 26. Mendis. G.C., "The Vijayan Legend' Pranvitana Felictation Volume, Colombo -
1965. Pages 263 - 279.

Page 21
30 யாழ்ப்பாண அரச பரம்பரை
ஒத்தாசையுடன் விஜயனும் தோழர்களும் அழித்தொழித்தனர். குவேனி என்ற திராவிட மூதாதைப் பெண் தனது காதல் போதையால் செய்ததவறால் இயக்க மக்களில் ஒரு பகுதியினர் அழிந்தொழிய நேரிட்டது. *
குவேனியின் ஒத்தாசையுடன் இயக்க இன அழிப்பு நிகழ்ந்துபோனது. அதன் பின்னர் விஜயனுடைய அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்திற் குடியேற்றங்களை அமைத்து அக்குடியேற்றங்களுக்குத் தத்தமது பெயர்களை இட்டுக் கொண்டனர். அனுராத என்ற அமைச்சனால் மல்வத்து ஒயாவுக்கு (அருவியாறு / கதம்ப நதி) அண்மையில் அமைக்கப்பட்ட குடியேற்றம் அனுராதகம எனப்பட்டது. அனுராதகமத்திற்கு வடக்கே கணதற ஒயாவிற்கு அண்மையில், உபதிஸ்ஸ என்ற அமைச்சனால் அமைக்கப்பட்ட குடியேற்றம், உபதிஸ்ஸகம எனப்பட்டது. கலாஒயா (கொணாநதி) முகத்துவாரத்திற்கு அண்மையில் உறுவெல என்ற அமைச்சனால் அமைக்கப்பட்ட குடியேற்றம் உறுவெலகம எனப்பட்டது. விஜித என்ற அமைச்சனால் அமைக்கப்பட்ட குடியேற்றம் விஜிதகம எனப்பட்டது.* உண்மையில் இந்தக் குடியேற்றங்கள் நிறுவப்பட்ட பகுதிகள், முன்னரேயே சிறந்த குடியிருப்புகளாக விளங்கியுள்ளன என்பதும், ஈழத்தின் நாகரீகத்திற்கு வித்திட்ட திராவிட மக்களது சிறப்புமிக்க வதிவிடங்கள் அவை என்பதும் தொல்லியலாய்வுகள் மூலம் இன்று நிரூபிக்கப்பட்டுள்ளன.
எனவே, சிங்ஹல விஜயனே இலங்கையின் அடையாளங் காணப்படும் முதலாவது மன்னனாக முடிபுனைந்து கொண்டான். முடிசூடிக் கொள்ளுமுன் தென்னிந்தியாவின் பாண்டி நாட்டியிலிருந்தும் தனது அரசியாகப் பாண்டி இளவரசி ஒருத்தியையும். தனது எழுநூறு தோழர்களுக்கும் எழுநூறு பாண்டிய இராச்சியப் பெண்களையும் வரவழைத்துக் கொண்டதாக மகாவம்சம் கூறுகிறது.* சிங்கள நவீன வரலாற்றாசிரியர்கள் விரும்புமாப்போல விஜயனும் அவனது தோழர்களும் இந்தியாவின் வட புலங்களிலிருந்து இலங்கையில் குடியேறினர் எனக் கொண்டாலும், அவர்கள் வரும்போது இத்தீவில் இருந்தவர்களும், அவர்கள் வந்த பின்னர் வருவிக்கப்பட்டவர்களும் திராவிடர் என்பது நினைவிற்
27. செங்கை அழியானின் 'குவேனி' என்ற வரலாற்று நாவலில் இவை நன்கு
விபரிக்கப்பட்டுள்ளன. குவேனி, தமிழ்த்தாய் வெளியீடு, யாழ்ப்பாணம் - 1992
28. The Mahavamsa, (up.(5576i, 91585.TJh VII : 6) if : 43 - 45 ué,5th: 58
29. The Mahavamsa, மு.கு.நூல், அதிகாரம் VI வரி 49-50 பக்கம்: 59

யாழ்ப்பாண அரச பரம்பரை 31
கொள்ளத்தக்கது. பாண்டி நாட்டு இளவரசியுடன் வந்த 700 தோழியரும் விஜயனின் 700 நண்பர்களை மணந்ததாக மகாவம்சம் கூறும் செய்தியை நோக்கும்போதும், இவர்களே இந்நாட்டின் நாகரிக கர்த்தாக்கள் எனப்பாளி நூல்கள் கூறுவதை அவதானிக்கும் போதும், ஆதி ஈழத்து நாகரிக வரலாற்றில் தமிழ் மக்கள் பெற்றிருந்த முக்கியத்துவம் புலனாகின்றது. *
22 நாக சிற்றரசுகள்
இயக்க குழுக்கள் தமக்குள் பகைத்துக் கொண்டு பிரிவுற்று நின்றதால், தென்னிலங்கை சிங்ஹல விஜயனிடம் பறிபோனது. ஆனால் அவர்கள் வடக்கே நாகதீபத்தைக் கைப்பற்றவோ அங்கு தமது குடியேற்றங்களை நிறுவவோ இயலாது போய்விட்டது. விஜயன் கி.மு. 483 இலிருந்து கி. மு. 445 வரை இலங்கையின் மன்னனாக விளங்கினான் என மகாவம்சம் கூறுகின்றது. விஜயனின் வருகைக்கு முன்னரும், விஜயனின் காலத்திலும் ஆதிகால இலங்கையில் பல சிற்றரசுகள் இருந்துள்ளன என்று துணியலாம். ஏற்கனவே, முதலத்தியாயத்தில் விபரித்ததுபோல, தென்னிந்தியாவில் கி. மு. 1000 ஆண்டளவில் தோற்றம் பெற்ற திராவிட மக்களது பெருங்கற்காலப் பண்பாட்டின் தொல்லியற் சின்னங்களான ஈமத் தாழிகள், பிராமியக் கல்வெட்டுக்கள் இதனை நிரூப்பிக்கின்றன. இதுவரை கண்டறியப்பட்ட பிராமியக் கல்வெட்டுக்களில் வரும்பருமக (பருமகன்) கமணி, அய (ஆய்) வேள (வேள்) என்பன குறுநிலத் தலைவர்களையே குறிக்கின்றனவாம்.
இலங்கையின் ஆட்சிமையமாக அனுராதபுரத்தையே மகாவம்சம் முதலான பாளி நூல்கள் குறிக்கின்றன. அதே நூல்கள் அனுராதபுரத்திற்கு வடக்கேயும் தெற்கேயும் இருந்த சிறு இராச்சியங்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளன. உதாரணமாக இலங்கைத் தீவின் வட பாகத்தில் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் நாகதீவு (நாகதீபம்) எனும் ஓர் அரசு விளங்கியது. * நாகதீவின் மன்னர்களான மகோதரன், குலோதரன் என்போர் விளங்கியுள்ளனர்". நாகதீபத்தில் சிறப்பான சிற்றரசுகளாக கோகர்ணம்
30. சிற்றம்பலம். சி. க., ஈழத்தமிழர் வரலாறு, தொகுதி 1,
இந்துக்கல்லூரி, சாவகச்சேரி - 1994. பக் 5 - 6
31 The Mahavamsa, மு.கு.நூல், அதிகாரம் 1 : வரி : 47 பக்கம்: 6
32. The Mahavamsa, மு.கு.நூல், அதிகாரம் 1 : வரி : 48 - 51 பக்கம்: 6

Page 22
32 யாழ்ப்பாண அரச பரம்பரை
(திருகோணமலை), மகாதித்த (மாந்தை), மணிபல்லவம் (நயினாதீவு), நாவலந்தீவு (வலிகாமம்), கரியாலை நாகபடுவான் முதலியன விளங்கியுள்ளன. திரிகூடம், இலங்காபுரி, கோகர்ணம் எனப்பலபெயர்களால் திருகோணமலை அழைக்கப்பட்டு வந்துள்ளது. மாந்தை என்று புகழ்பெற்ற மாதோட்டம் மன்னாரிலுள்ளது. விஜயனின் அரசியும் 700 தோழிகளும் வந்திறங்கிய துறைமுகமாக மாந்தை குறிப்பிடப்படுகின்றது. பாளி நூல்கள் இதனை மாதித்த (மாக தீர்த்தம்) என அழைக்கின்றன.* மகாதித்த என்றால் பெருந்துறை எனப் பொருள்படும் எனச் சிற்றம்பலம் கருதினார். * மணிப்பல்லவம் பற்றிய சிறப்புக்கள் தமிழிலக்கிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. * வளைவணன் என்ற நாகமன்னன் ஆண்டநாடு இதுவென அறியப்படுகின்றது. யாழ்ப்பாணக்குடாநாட்டின் இன்றை வலிகாமம் பகுதி முன்னர் ஜம்புத்தீவு என அழைக்கப்பட்டது. ஜம்புத்தீவு என்றால் தமிழில் அதனை நாவலந்தீவு° எனலாம். தீவு என்ற பெயருக்கேற்ப வலிகாமம் முன்பு நாற்புறமும் கடலால் சூழப்பட்டிருந்தது. கிழக்கே உப்பாற்றையும் தொண்டமானாற்றையும் பிரித்து காலகதியில் நிலமேடு ஒன்று தோன்றியது என்பதைப் புவிச்சரிதவியல் அடிப்படையில் நிறுவமுடியும். இந்த நாவலந்தீவிலேயே மகாவம்சம் குறிப்பிடுகின்ற ஐம்புக்கோளப்பட்டினம் என்ற துறையுள்ளது. இதனூடாகவே சங்கமித்தை வெள்ளரசுக்கிளையுடன் ஈழம் புகுந்தாள்.' இன்றைய வன்னிப் பெருநிலப்பரப்பிலமைந்துள்ள பூநகரிப்பிரதேசக் கரியாலை நாகபடுவான், நாகபடுவான்வில்லு, குருந்தன்குளம் முதலான பகுதிகள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் புகழ்பெற்ற குடியேற்றங்களாக விளங்கியுள்ளன. பூநகரியில் அண்மையில் நிகழ்ந்த தொல்லியலாய்வுகள் இதனை நிரூபிக்கும் சான்றுகளைத் தந்துள்ளன.* எனவே, விஜயனின் ஆட்சிக்காலத்திலும், அதற்கு முன்னரும் நாகதீபம் என்றழைக்கப்பட்ட வடபிரதேசத்தில் பல குறுநில அரசுகள் இருந்திருக்க வாய்ப்புண்டு என்று துணியலாம்.
33. The Mahavamsa, p.g. EITsi, 95.siriya VII, 58: u55th : 60 34. சிற்றம்பலம் : சி. க. தமிழ் மக்களின் பாரம்பரியப் பிரதேசம்
முத்தமிழ் விழாமலர் - 1991 பக்கம் :162 35. மணிமேகலை, சுவாமிநாத ஐயர் பதிப்பு,
சென்னை: 1956, காதை 9, வரி 21 காதை 11 வரி 21 - 26. 36. மணிமேகலை, மே.கு.நூ. காதை : 25 வரி 12 - 13
காதை 28 வரி, 180 37. The Mahavamsa, (yp.çe5-g5JT6ü, geğ6Q85mtiJüíb XIX : 6)Jrfh : 23 uä5 : 130. 38. புஸ்பரத்தினம். ப. , வடவிலங்கையில் சிங்கைநகர், அருட்திரு. ஜி. ஏ. பிரான்சிஸ் யோசெப்
அடிகளார் மணிவிழாச்சபை வெளியீடு, 1993

யாழ்ப்பாண அரச பரம்பரை 33
தாமிரபர்ணிப்பிரதேசமடங்கிய தென்னிலங்கை ஆள்புலத்தை விஜயன் கி.மு. 483 இலிருந்து கி.மு. 445 வரை ஆண்டான். அவனுக்குப்பின் பண்டுவாசுதேவா (கி.மு. 444 - 414), அபயன் (கி.மு. 414 - 394). பண்டுகாபயன் (கி.மு. 377 - 307), முத்துசிவன் (கி.மு. 307 - 247) ஆகிய மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர்." அதன் பின்னர் ஈழத்தின் புகழ்மிக்க மன்னனான தேவநம்பியதீசன் (கி.மு. 247 - 207) அரசகட்டிலேறினான்.
23 தேவநம்பியதீசன்
ஈழத்தின் வரலாற்றுக்காலம் தேவநம்பியதீசனின் ஆட்சியோடு ஆரம்பமாகின்றது. அனுராதபுரத்தினைக் தலைநகராகக் கொண்டு இம்மன்னனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஒற்றையாட்சி அமைப்பு வட கிழக்கு மாகாணங்கள் உட்பட ஈழம் முழுவதும் அனுராதபுர அரசின் இறுதிக்காலம் வரை (கி.பி. 10 ம் நூற்றாண்டுவரை) நீடித்திருந்தது எனப்பாளி நூல்கள் எடுத்தியம்புகின்றன. ஆனால் பாளிநூல்களை நுணுகி ஆராயும் போது வரலாற்றுக்காலத்தின் ஆரம்பத்தில் பல சிற்றரசுகள் காணப்பட்டதாகக் தெரிகிறது. இத்தகைய சிற்றரசுகள் பல நாடளாவிய விதத்தில் காணப்பட்டதைப் பிராமிக் கல்வெட்டுக்கள் எடுத்தியம்புகின்றன. *
தேவநம்பியதீசன் காலத்தில் இலங்கையின் வடபெரும்பகுதி உத்தரதேசம் என்றும், தென்பெரும் பகுதி தக்கன தேசம் என்றும் வழங்கலாயிற்று. நாகதீவு என்ற பெயர் யாழ்ப்பாணக்குடா நாட்டிற்குரியதாக ஆள்புலச்சுருக்கமடைந்தது. தேவநம்பியதீசன் காலத்தில் பல சிற்றரசுகள் வடக்கேயும் தெற்கேயும் நிலை பெற்றிருந்தாலும், அவை அனுராதபுர மன்னனின் ஆதிக்கத்தை ஏற்றிருந்தனவென உய்த்துணர முடிகின்றது.
தேவநம்பியதீசன் காலத்திலேயே இந்தியாவிலிருந்து பெளத்த மதத்துTதுவர்கள் இலங்கைக்கு வந்தனர். அசோகனின் தர்மத் தூதை எடுத்துவந்த மகிந்ததேரர், வெள்ளரசுக்கிளையை எடுத்துவந்த சங்கமித்ததேரி, முதலானோர் உத்திரதேசமூடாகவே இலங்கைக்கு வந்தனர். சங்கமித்ததேரி, ஜம்புக்கோளப்பட்டினமூடாகவே இலங்கைக்கு வந்துள்ளாள்."
39. Geiger. W., The Mahavamsa - Introduction,
Colombo - 1950 - Pages XXXVI
40. சிற்றம்பலம். சி. க., தமிழ் மக்களின் பாரம்பரியப்பிரதேசம்,
முத்தமிழ் விழாமலர் : 1991 பக்கம்: 165
41. The Mahavamsa, (up.5-5Ts), 915: XIX: 6) if :23 u&sh: 30

Page 23
34 யாழ்ப்பாண அரச பரம்பரை
அனுராதபுர மன்னனை நாடி, வடஇலங்கையூடாக நிகழ்ந்த வருகைகள் தடையின்றி நிறைவேற, அப்பிரதேசமும் அனுராதபுர மன்னனின் ஆதிகத்திற்குள் இருந்திருக்க வேண்டுமெனக் கொள்வதில் தவறில்லை. எனவே தான் தேவநம்பியதீசன் ஜம்புக்கோளப்பட்டினத்தில் ஸமுத்த - பண்ணை ஸாலா என்ற மண்டபத்தையும் ஜம்புகோள விகாரையையும் கட்டுவிக்க முடிந்தது. *
தேவநம்பியதீசன் காலத்தில் தென்னிலங்கையில் பலசிற்றரசுகள் காணப்பட்டுள்ளன. கல்யாணி(களனியா) உதிய என்பவனின் அரசாகவும், உரோகனைப்பகுதியில் (காஜரகமம்), சண்டனாகம ஆகிய விடங்கள் சத்திரிய வம்சத்தினரின் சிற்றரசுகளாகவும் விளங்கியுள்ளன. * காஜரகமத்தைக் கதிர்காமமென கெய்கரும், சண்டனாகமத்தைக் கல்லோயாப்பகுதி என சிற்றம்பலமும் இனம் காண்பர்.* கிழக்கிலங்கையில் சேருவில, சோம ஆகிய இடங்களில் முறையே, சிவ, அபய என்போரால் ஆட்சி செய்யப்பட்ட இரு சிற்றரசுகள் இருந்துள்ளன எனப் பிராமிக்கல் வெட்டுக்களிலிருந்து அறிய முடிகின்றது.* இச்சிற்றரசுகள் தமிழ்க்குறுநில மன்னர்களுடையனவாம்.
எவ்வாறாயின் இலங்கையின் பெருமன்னனாகத் தேவநம்பியதீசன் விளங்கியுள்ளான். ஈழத்து வரலாற்றில் பெளத்தமதத்தைக் கைக்கொண்டு தன் மக்களையும் பெளத்தத்தைத்தழுவ வைத்தமையால் புகழ்ந்துரைக்கப்படுகின்றான்.
2.4 சேனன், குத்திக்கன்
தேவநம்பியதீசன் வலிமை மிக்க மன்னனாக விளங்கியமையினால் நாட்டில் அமைதி நிலவியது. அதனால் பெளத்தமதம் நாடெங்கும் பரவமுடிந்தது. நாகதீவிலும் (யாழ்ப்பாணக் குடாநாடு) பெளத்தம் பரவியது. தமிழ்ப் பெளத்தர்கள் உருவாகினர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் கந்தரோடையில் காணப்படும் பெளத்த சின்னங்களும், வல்லிபுரப்பகுதியில்
42. The Mahavamsa, p.sTio, giấessTyuh XIX 26, 27, Lėšasih : 130 43. The Mahavamsa, p.sTio, gálasTIȚuh XIX : snurf : 54 - 55 Uėsasib : 132

யாழ்ப்பாண அரச பரம்பரை 3S
கிடைத்த பெளத்த சின்னங்களும் நாகதீவில் தமிழ்ப் பெளத்தர்கள் இருந்தமையைப் பறைசாற்றுகின்றன. கந்தரோடையில் கிடைத்த பிராமி எழுத்து கொண்ட பாத்திரமொன்றில் ததஹ பத' - தத்தவின் பாத்திரம் என்றும், “இன்னொன்றில் குணி என்றும் * குறிப்புள்ளது.
தேவநம்பியதீசன் காலத்தில் தமிழ்ச்சிற்றரசுகள் திறைசெலுத்தி வந்தன என ஊகிக்கலாம். இம்மன்னனது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து இருந்தன. கதிர்காம, சண்டானகமச் சத்திரிய மன்னர்கள், தேவநம்யதிசன் பணிப்பை ஏற்று புனித அரசமரக்கிளைகளை நாட்டல் விழாவில் கலந்து கொண்டுள்ளனர். அரமரக்கிளைகளை தத்தமது அரசிலும் நாட்டியுள்ளனர்.* கல்யாணிப்பிரதேச சிற்றரசு தேவநம்பியதீசனின் சகோதரன் (உதிய) என்பவனால் கைப்பற்றப்பட்டது. * காஜரகமம், சண்டனாகமச் சத்திரிய மன்னர்களைத் தேவநம்பியதீசனின் சகோதரன் மாகாநாகன் அழித்து தனதாட்சியை நிறுவியுள்ளான். * இவற்றிலிருந்து தேவநம்பியதீச மன்னனின் ஆதிக்கவிரிவு புரியும். நாகதீவு (யாழ்ப்பாணக் குடாநாடு) இந்த மன்னனின் ஆதிக்கத்தை ஏற்றிருந்துள்ள போதிலும், உத்தரதேசத்தின் குறுநில மன்னர்கள் சிலர் இதனால் வெறுப்படைந்திருக்க வேண்டும். அனுராதபுர மன்னனின் ஏகாதிபத்தியச்செருக்கும், அதற்கு மேலாக இந்துக்களாக விளங்கிய உத்திரதேசத்து மக்களைப் பெளத்தராக்கும் முயற்சியால் நாகதீவு மக்களின் ஒரு பகுதியினர் பெளத்தராகியமையும் வெறுப்பினை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இந்துவாக விளங்கிய தேவநம்பியதீசனின் மேலாதிக்கத்தை ஏற்ற இக்குறுநில மன்னர்களால், பெளத்த தேவநம்பியதீசனின் வல்லாதிக்கத்தை ஏற்க முடியாது போனது. அவ்வாறு கிளர்ந்தவர்களில் சேனன், குத்திக்கன் என்ற இரு சிற்றரசர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். 44. சிற்றம்பலம், சி. க., மு.கு.நூல் - பக்கம் :15 45. Paranavitana. S. Early Brahmi Inscriptions, Colombo - 1970 44. இந்திரபாலா. க, யாழ்ப்பாண இராச்சியம் தோன்றிய காலமும் சூழ்நிலையும்
இளங்கதிர், பேராதனை - 1969/70. பக்கம்: 14 45. வீரகேசரி, 1995 46. இந்திரபாலா.கா.:யாழ்ப்பாண இராட்சியம் தோன்றிய காலமும் சூழ்நிலையும் இளங்கதிர்,
பேராதனை - 1969/70 பக்கம்: 14 47. Gunawardana.P.A.L.H. An early Place in the evalution of political Institutions in
Ancient Sri Lanka, The Sri Lanka Journal of ets. Hunarities, Vol : VIII, No 142, 1982
48. Paramavitana. S. (Ed) History of Ceylon, Vol: 1, Part, 1,
Colombo - 1959 Chapter: 3

Page 24
36 யாழ்ப்பாண அரச பரம்பரை
தேவநம்பியதீசனின் மரணத்தின் பின்னர் பல தசாப்தங்களாக வடவிலங்கையைத் தம்மாதிக்கத்தின் கீழ் வைத்திருக்கச் சிங்கள மன்னர்களால் முடியவில்லை. மயூரசாம்ராச்சியத்தின் மாமன்னன் அசோகனின் படைப்பலமும் செல்வாக்கும் தேவநம்பியதீசனுக்கு இருந்ததால், தேவநம்பியதீசன் கால உத்திரதேசத்துக்குறுநில மன்னர்களும் உரோகணப் பிரதேசச் சிற்றரசர்களும் அனுராதபுரமன்னனின் ஆணையை ஏற்றிருந்தனர். தேவநம்பியதீசனின் மரணத்தின் பின்னர் இந்நிலையில் மாற்றம் காணப்பட்டது. தேவநம்பியதீசன் பெளத்தமதப்பரவலிற்கும், விகாரைகளைக் கட்டுவதிலும், தன் செல்வத்தில் பெரும்பகுதியைச் செலவிட்டான். இராணுவப் படைப்பலத்தைப் பெருக்குவதில் கவனம் செலுத்தவில்லை. அதனால் இந்த மன்னனின் மறைவின் பின்னர் உத்தரதேசத்துத் தமிழ் மன்னர்கள் அனுராதபுர அரசின் ஆணையை ஏற்காததோடு, அனுராதபுரத்திற்கு எதிராகத்தண்டெடுக்கவும் தலைப்பட்டனர். *
தேவநம்பியதீசன் கி. மு. 247 தொட்டு கி.மு. 207 வரை ஆட்சிபுரிந்தான். அவனின் பின்னர் உத்தியன் (கி.மு.207-197), மகாசிவன் (கி.மு. 197 - 187), சூரத்தீசன் (187 - 177) ஆகிய மன்னர்கள் அரசகட்டிலிலேறினர். சூரத்தீசன் என்ற சிங்கள மன்னன் அனுராதபுரத்திலிருந்து இலங்கையை ஆட்சி செய்த காலவேளையில், உத்தரதேசத்துக் குறுநில மன்னர்களான சேனன், குத்திக்கன் என்போர் அனுராதபுரத்திற்கு எதிராகப் படை நடாத்திச் சென்றுள்ளனர். அனுராதபுர மேலாதிக்கத்திற்கு எதிராக நிகழ்ந்த முதலாவது தண்டெடுப்பாக இது வரலாற்றிலுள்ளது.
இவர்கள் இருவரும் எங்கிருந்து படை நடாத்தினர்? உத்திரதேசத்தின் பூநகரிப்பகுதியில் செழிப்பான ஒர் தமிழரசு நிலவியிருந்துள்ளது.* அனுராதபுரத்தில் ஆட்சி செய்த தமிழ் மன்னர்களின் சாதனைகளை மறைத்தும் திரித்தும் கூறிய மகாவம்சம் இவர்களை ஆக்கிரமிப்பாளர், படையெடுப்பாளர், சோழமரபில் வந்தவர்கள், "
49. History of Ceylon, Part 1, Chapter IV, Page : 144
50. வரலாற்றாசிரியர் ப. புஸ்பரட்ணத்தின் பல கட்டுரைகளில் இது நிறுவப்பட்டுள்ளது.
51. ஆக்கிரமிப்பாளர்களைச் சோழராகக் குறிப்பிடும் மகாவம்சம் அவர்களைப் பாண்டியர்களாகக் கூறுவதில்லை. காரணம், சிங்கள மரபின் தாயாதிகள் பாண்டிய இளவரசி ஒருத்தியும், 700 பாண்டியப் பெண்களுமாவர் என்பதினாற் போலும்.

யாழ்ப்பாண அரச பரம்பரை 37
அக்கரையைச் சேர்ந்தவர்கள் எனக்கூறுகிறது. இதற்கு இவர்கள் அனைவரும் தமிழ் நாட்டிலிருந்து படையெடுத்து வந்து ஆட்சியைக் கைப்பற்றியவர்கள் என வரலாற்று ஆசிரியர்களால் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டிற்கும் இலங்கைக்குமிடையே வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலிருந்து நெருங்கிய வர்த்தகக் கலாசாரத் தொடர்புகள் இருந்து வந்துள்ளன என்பதில் சந்தேகமில்லை. இதைப் பாளி இலக்கியங்கள் மட்டுமின்றி சங்ககால இலக்கியங்களும், இலங்கை - தென்னிந்தியப் பிராமிக் கல்வெட்டுகளும், தொல்பொருட் சான்றுகளும் உறுதிப்படுத்துகின்றன. ஆனால் கி. பி. 6 ஆம் நூற்றாண்டு வரையான தமிழ்நாட்டு வரலாற்று மூலகங்களில் இலங்கையுடனான அரசியல் தொடர்பு பற்றியோ, படையெடுப்புகள் பற்றியோ எதுவித குறிப்பும் காணப்படவில்லை. அத்துடன் அத்தகைய ஒரு படையெடுப்பை இலங்கை மீது மேற்கொள்ளக் கூடிய அளவுக்குப் பலமான அரசுகள் தமிழ்நாட்டில் இருந்ததாகக் கூறுவதற்கும் இல்லை. மேலும், அனுராதபுரத்தில் ஆட்சிசெய்த தமிழ் மன்னர்களின் பெயர்களுக்கும் தமிழ்நாட்டில் ஆட்சிசெய்த மன்னர்களின் பெயர்களுக்குமிடையே அதிக ஒற்றுமை இருப்பதாகவும் தெரியவில்லை. இதனால் அனுராதபுரத்தின் மீது படையெடுத்த தமிழர்கள் அனைவரும் தமிழ் நாட்டிவிருந்து படையெடுத்தார்களா அல்லது இலங்கையின் இன்னொரு பிராந்தியத்திலிருந்து படையெடுத்தார்களா என்பது ஆய்வு செய்யப்பட வேண்டியதொன்றாகும். தென்னிலங்கையில் சிற்றரசர்களாக இருந்த பல மன்னர்களே பின்பு அனுராதபுர மன்னர்களாக மாறியதைப் பாளி நூல்களிலிருந்து அறிய முடிகின்றது.* அதேபோல வடவிலங்கையில் சிற்றரசர்களாயிருந்த சேனன், குத்திக்கன், எல்லாளன் போன்ற தமிழ் மன்னர்கள் பின்பு அனுராதபுர மன்னர்களாக மாறியதை நிறுவ வேண்டும்.
பூநகரிப் பிரதேசம் உத்தரதேசத்தில் முதன்மையான ஒரு அரசாக விளங்கியுள்ளது என்பதற்கு அண்மையில் இப்பிரதேசத்தில் கண்டு பிடிக்கப்பட்ட பிராமிச்சாசனங்கள் சான்றாகின்றன. பூநகரிப்பிராமி சாசனம் பற்றிக் கருத்துத்தெரிவித்த தமிழ்நாட்டின் முதன்மைச் சாசனவியலாளரான ஐராவரம் மகாதேவன் இச்சாசனம் கி.மு. 3ஆம் கி.மு. 2ஆம் நூற்றாண்டில்
52. புஸ்பரட்ணம்.ப,இலங்கையில் தமிழ்மன்னர்களின் ஆட்சி- ஒரு நோக்கு நினைவுபேருரை அமரர்
நா. கிருஸ்ணானந்தன், பொருளிதழ் - 3 பக்கம் : 4 53. புஸ்பரட்ணம் ப. , மே. கு. கட்டுரை, பக்கம் : 5

Page 25
38 யாழ்ப்பாண அரச பரம்பரை
சங்ககாலத்தை ஒத்த தமிழ்வேளரின் ஆட்சி வடவிலங்கையில் இருந்ததை உறுதிப்படுத்துகின்றது என்றார். * இப்பிராந்தியத்தில் ஓர் இராசதானி இருந்ததெனக் கருதக்கூடிய கட்டிட-அழிபாடுகள் உள்ளன. இதனை யாழ்ப்பாணத்திற்கு முன்னோடியான இராசதானியெனப் புஸ்பரட்ணம் கருதுகிறார். * ஈழ, ஈலா என்ற பிராமி எழுத்துக்களைக் கொண்ட இரு மட்பாண்ட ஒடுகள் பூநகரியில் கண்டெடுக்கப்பட்டன. இவை புராதன ஈழம் என்ற இடப்பெயர் தொடர்ந்தும் பூநகரிப்பிரதேசத்திற்கு ஈழவூர் என இடப்பட்டு பாரம்பரியமாக அழைக்கப்பட்டு வருகின்றது.*எனவே, சேனன், குத்திக்கன் என்போர் இங்கிருந்த அனுராதபுர அரசின் மீது படையெடுத்த குறுநில மன்னர்கள் எனக்கூற முடியும்.
எனவே, அனுராதபுரத்தைச் சூரத்தீசன் ஆண்டபோது, சேனன், குத்திக்கன் ஆகிய குறுநில மன்னர்கள் ஒருங்கிணைந்து, உத்திரதேசதிலிருந்து படைநடாத்தி வெற்றி கொண்டனர். இவர்கள் இருவரும் தமிழர்கள் எனவும், குதிரை வர்த்தகர்கள் எனவும், பெரும் சேனையுடன் வந்து சூரத்தீசனை வென்று, 22 ஆண்டுகள் இலங்கையை ஆண்டனர் எனவும் மகாவம்சம் கூறுகின்றது.56 கி.மு. 177 இலிருந்து கி.மு. 155 வரை இலங்கையில் சேனன், குத்திக்கன் ஆகிய தமிழ் மன்னர்களது ஆட்சி நிலைத்திருந்தது. கதம்பநதியை (அருவியாறு) அனுராதபுரநகருக்கு அருகாகப் பாய்வதற்குத் திசை திரும்பிய பெருமை சேனன், குத்திக்கன் ஆகிய மன்னர்களுக்கேயுரியது.*
தமிழ் மன்னரது ஆட்சி அனுராதபுரத்தில் நிலைத்தவேளை, சூரத்தீசனின் தமையனான மகாசிவனின் புதல்வர்கள் உருகுணைக்குத் தப்பி ஓடினர்.
அவர்களில் ஒன்பதாவது பிள்ளையான அசேலன் கி. மு. 155 ஆம் ஆண்டு படைநடாத்தி அனுராதபுரத்தைக் கைப்பற்றிக் கொண்டான். அவன் அனுராதபுரத்திலிருந்து 10 ஆண்டுகள் (கி. மு. 155 - கி.மு 145) அரசாட்சி
54. மே, கு. நூல், பக்கம் : 1.
55. புஸ்பரட்ணம், ப. , சங்ககால ஈழத் தமிழர் பிராந்தியங்களில் ஒன்றா?
வெளிச்சம் - யாழ்ப்பாணம். புரட்டாதி. ஐப்பசி - 1991 பக்கம் : 14 The Mahavamsa, மு.கு.நூல், அதிகாரம் XXI வரி 10,11,பக்கம் :142, 143
56. Histry of Ceylon, Colombo - Part 1, chapter III, Page; 144

யாழ்ப்பாண அரச பரம்பரை 39
புரிந்தான்." இவ்விடத்து ஒர் உண்மை நோக்குதற்குரியது. தமிழ் மன்னர்கள் உத்தரதேசத்திலிருந்து சேனையுடன் படைநடாத்தி அனுராதபுரத்தைக் கைப்பற்றும்போது சிங்கள அரச குடும்பத்தினர் தெற்கே உருகுணைக்குத் தப்பித் தலைமறைவாகினர். அதேபோல உருகுணைலிருந்து சிங்கள மன்னர்கள் அனுராதபுரத்தைக் கைப்பற்றும்போது, தமிழ் அரச குடும்பத்தினர் உத்தரதேசத்திற்குத் தப்பித் தலைமறைவாகினர்.
அசேலன் அனுராதபுரத்தைக் கைப்பற்றியபோது, அரச குடும்பத்தினர் சிலர் உத்தரதேசத்திற்குத் தப்பிச் சென்றனரெனத் துணியலாம். ஏலேலன் கூத்தில் (எல்லாளன்) வரும் ஈழசேனன் புத்திரன் ஏலேலன்' என்ற அடிகள் புதிய தகவல்களைத் தரக்கூடியது. அனுராதபுரத்தை 22 ஆண்டுகள் ஆட்சிபுரிந்த சேனனின் மகனா எல்லாளன்?
2. 5. எல்லாளன்
கி.மு. 3ஆம் நூற்றாண்டிற்கும் (கி. மு. 247) கி. மு. 1ஆம் நூற்றாண்டிற்கும் (கி. மு. 29) இடைப்பட்ட 220 ஆண்டுகால அனுராதபுர அரசின் வரலாற்றை நோக்கினால் இக்கால எல்லைக்குள் ஆட்சிபுரிந்த 19 மன்னர்களுள் 8 தமிழ் மன்னர்கள் 81வருடங்களுக்கு மேல் ஆட்சிபுரிந்ததைக் கண்டு கொள்ளலாம்.* ஆயினும், இக்கால வரலாற்றைப் பல அத்தியாயங்களில் கூறும் மகாவம்சம் தமிழ் மன்னர்களின் ஆட்சியைச் சில செய்யுட்களில் மட்டுமே கூறி முடிக்கின்றது. எல்லாளன் என்ற தமிழ் மன்னனை வெற்றி கொண்டதன் மூலம் சிங்கள இனத்தின் விடுதலை வீரனாக வருணிக்கப்பட்ட துட்டகாமினியின் 24 ஆண்டுகால ஆட்சியை843 செய்யுட்களில் கூறும் மகாவம்சம், 44 ஆண்டுகள் நீதி தவறாது ஆட்சி நடாத்திய எல்லாளனை 21 செய்யுட்களில் மட்டும் கூறுகிறது. இது ஒன்றே uT6f இலக்கியங்களில் தமிழ் மன்னர்களின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளமைக்குச் சிறந்த சான்றாகும்."
57. The Mahavamsa, முகுநூல், அதிகாரம் XXI வரி 12, பக்கம்: 143 58. குணராசா. க., ஈழத்தவர் வரலாறு, கொழும்பு - 1996,
பக்கம். 34. 59. Geiger W., The Mahawamsa - Introduction, Colombo, 1950. Page : XXXVII 60. புஸ்பரட்ணம். ப. , இலங்கையில் தமிழ் மன்னர்களின் ஆட்சி - ஒருநோக்கு.
நா. கிருஸ்ணனந்தன் நினைவுமலர், பொருளிதழ் 3. பக்கம் - 5.

Page 26
40 யாழ்ப்பாண அரச பரம்பரை
அனுராதபுரத்தைச் சேனன், குத்திகன் ஆகிய தமிழ் மன்னர்களிடமிருந்து கைப்பற்றிய அசேலன் என்பான், 10 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். கி. மு. 145 ஆம் ஆண்டு எல்லாளன், உத்திரதேசத்திலிருந்து பெரும்படையுடன் தண்டெடுத்து அனுராதபுரத்தைக் கைப்பற்றிக் கொண்டான். மீண்டும் இலங்கையின் ஆட்சி தமிழரிடம் வந்து சேர்ந்தது. எல்லாளனைச் சோழ இளவரசனாகவும், தென்னிந்தியாவிலிருந்து படையெடுத்து வந்தவனாகவும் பாளி இலக்கிய நூல்கள் கூறுகின்றன. ஆனால், அத்தகைய ஒரு சோழன் இருந்ததாகத் தமிழ்நாட்டு வரலாற்றில் ஆதாரங்கள் எதுவுமில்லை. இந்த மன்னன் உத்தரதேசத்தின் ஒரு பகுதியிலிருந்து அனுராதபுரத்தின் மீது படையெடுத்ததாகக் கொள்வதே ஏற்புடையதாகும். ஏனெனில் வவுனிக்குளத்தினை முதன்முதல் கட்டியவன் எல்லாளன் என அடையாளம் காணப்படுகிறது. உத்தரதேசக்குறுநில மன்னனாக எல்லாளன் முதலில் விளங்கியமையால் தான் வவுனிக்குளத்தை அக்காலவேளையில் அமைப்பிக்க அவனால் முடிந்தது என ஊகிக்கலாம்.
ஆங்கிலேய நாட்டவரான எச். பாக்கர் மகாவம்சத்தில் அனுராதபுரத்திற்கு வடக்கேயமைந்துள்ளதாகக் கூறப்பட்ட பெலிலாபியை பூநகரியின் தென்னெல்லையிலுள்ள பாலியாறு என அடையாளம் கண்டு இங்குள்ள வவுனிக்குளத்தின் ஆரம்பத் தோற்றம் எல்லாளனின் சாதனைகளில் ஒன்றாக இருக்கலாமெனக் கூறியுள்ளார்."
பாளி இலக்கியங்களில் எலாரா' என்று அழைக்கப்படும் தமிழ் மன்னன் ஏலேலன், எல்லாளன் எனத் தமிழில் அழைக்கப்பட்டு வருகிறான். உண்மையில் ஈழராஜா என்ற பெயரே பாளியில் எலாரா (எல்லாளன்) என மருவியதாகப் பேராசிரியர் வேலுப்பிள்ளை குறிப்பிட்டுள்ளார். ? இது ஏற்றுக் கொள்ளத்தக்க கருத்தாகும்.
எல்லாளன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான். இவனின் நீதி தவறாத ஆட்சியைப் புகழ்ந்துரைக்கும் பாளி நூல்கள், இவன்
61. புஸ்பரட்ணம். ப. மு.கு.கட்டுரை, பக்கம்: 5
Parker. H., Ancient Ceylon. London: 1909
62. வேலுப்பிள்ளை. ஆ. தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுபின்னணியும்,
யாழ்ப்பாணம். 1986

யாழ்ப்பாண அரச பரம்பரை 41
தவறான மார்க்கத்தினைத் (இந்து மதத்தினை) தழுவியவன் எனவும் கூறப் பின்நிற்கவில்லை.* இவன் தனது ஆட்சியில் பெளத்த மதத்திற்கு ஆதரவு அளித்த போதிலும், தன் பழைய மதநம்பிக்கையைக் கைவிடவில்லை என மகாவம்சம் கூறுகிறது.* பேராசிரியர் கைகர் இப்பழைய மத நம்பிக்கையென்பது இந்துமதத்தையே குறிப்பிடுவதாகக் கருதுகிறார்." எல்லாளன் பகைவர்க்கும் நண்பர்களுக்கும் சமநீதி வழங்கியதாகக் கூறும் மகாவம்சம், அவனது நீதிநெறிதவறாத ஆட்சியை மனுநீதிச் சோழனின் கதைகளோடு இணைத்து விபரித்துள்ளது.
எல்லாளனின் சயன அறையில் ஒர் ஆராய்ச்சிமணி கட்டப்பட்டிருந்தது. நீதி வேண்டுவோர் எந்தநேரமும் கேர்ட்டை வாசலில் தொங்கும் கயிற்றை இழுத்து இந்த மணியை ஒலியெழுப்பின் மன்னன் உடன்வந்து விசாரித்துத் துயர் தீர்ப்பான். எல்லாளனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் பிள்ளைகளாவர். ஒருநாள் ஒரு தேரில் திஸ்ஸவாவியை நோக்கி எல்லாளனின் மகன் பயணப்பட்டபோது, வழியில் பசுவுடன் படுத்திருந்த கன்றின் கழுத்தின் மேல் தேர்ச்சில் ஏறியதால், கன்று அவ்விடத்தில் இறந்துவிட்டது. தாய்ப்பசு ஆராய்ச்சி மணியை இழுத்து அடித்து எல்லாளனிடம் நீதி கேட்டது. எல்லாளன் தனது மகனின் தலையைத் தேர்க்காலிலிட்டு அதேவிதமான மரணமேற்படுத்தி நீதி வழங்கினான்."
பாம்பொன்றுக்கு இரையான குஞ்சையிழந்ததாய்ப்பறவை ஆராய்ச்சி மணியை அடித்தது. மன்னன் அந்தப்பாம்பினைப் பிடித்து வரச் செய்து, அதன் வயிறுகீறப்பட்டுக் குஞ்சு வெளியில் எடுக்கப்பட்டது. பின்னர் பாம்பு மரத்தில் தொங்கவிடப்பட்டது." ஒரு வயோதிபமாது வெயிலில் அரிசியைக் காயப் போட்டிருந்தபோது, பருவம் தப்பிப் பொழிந்த மழையால் அரிசி முழுவதும் பழுதடைந்து போனது. அவள் எல்லாளனிடம் முறையிட்டபோது, அவன் வருணனிடம் வாரத்திற்கொருதடவை இரவில் மட்டும் மழைபொழிய வேண்டுதல் விடுத்ததாக மகாவம்சம் வருணிக்கின்றது.*
63. சிற்றம்பலம் சி.க. ஈழத்தமிழர் வரலாறு; 1 சாவகச்சேரி - 1994. பக்கம் : 20 64. The Mahavamsa, (p.5-giri, 955.Tylis : XXI of : 34, usesth: 145 65. புஸ்பரட்ணம். ப. மு. கு. கட்டுரை பக்கம் 5 66. The Mahavamsa, p.g-grai, glésiriyin XII : 6) if : 15 - 18. 67. மே.கு.நூல், அதிகாரம் : XX11 வரி 1 19 - 20
68. மே.குநூல், அதிகாரம் : XXI வரி : 27 - 33
N

Page 27
42 யாழ்ப்பாண அரச பரம்பரை
எல்லாளனின் நீதி வழுவாமையைக் கூறமுயலும் இக்கதைகள் நம்பகமானவையல்ல. அவனது செங்கோலாட்சியைப் புலப்படுத்த மகாவம்சம் எடுத்துக் கொண்ட ஐதீகக்கதைகள் எனலாம். எனினும் மகாவம்சம் கூறுகின்ற ஒரு கதை எல்லாளன் சமயத்துறையில் பெளத்தத்திற்கு ஆதரவு அளித்தான் என்பதையும் போற்றிப் பாதுகாத்தான் என்பதையும் நிரூபிக்கின்றது.
எல்லாளன் தேரிலேறிச் சேத்தியகிரி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, தேரின் அச்சு தாதுகோபமொன்றில் பட்டு தாதுகோபத்திற்குச் சேதத்தை ஏற்படுத்தியது. மன்னன் தேரினின்றும் கீழே குதித்து, தனது தலையை உடனடியாகச் சீவிவிடுமாறு, அமைச்சர்களிடம் கூறினான். தெரியாமல் நிகழ்ந்தது அமைதியடைக, தூபத்தைத் திருத்தி விடுவோம்’ என்றனர் அமைச்சர்கள். பதினைந்து கற்களே சிதைவடைந்திருந்தன. அப்படியிருந்தும் அந்தத் தாதுகோபத்தைப் புனரமைக்க எல்லாளன் பதினையாயிரம் கஹாப் பணங்களைச் செலவிட்டான்°
2. 6. துட்டகாமினி
எல்லாளனின் ஏகாதிபத்தியம் இலங்கை முழுவதும் பரவியிருந்தது. கல்யாணி, உருகுணை ஆகிய இரு தென்னிலங்கைச் சிற்றரசுகள் எல்லாளனின் ஆட்சியை ஏற்றிருந்தன. கல்யாணி இராசதானியின் மன்னனான களனிதீசனும், உருகுணையின் மன்னனான காக்கவண்ணதீசனும் எல்லாளனின் மேலாதிக்கத்தை ஏற்று திறை செலுத்தி வந்தனர்." காக்க வண்ணதீசனின் அரசபரம்பரையை தேவநம்பியதீசனின் பரம்பரையோடு பிணைப்பதற்காகப் பாளிநூல்கள் முயல்கின்றன.
தேவனம்பிய தீசனின் சகோதரன் மகாநாகன் அனுராதபுரத்தின் சிம்மாசனத்திற்குரிமையுடைய இளவரசனாவான். அனுராதபுரத்தின்
69. மே.கு.நூல், அதிகாரம் : XXI வரி 121 - 26 70. Senaveratna, M. John, Dutugemunu, Shiha Publication,
Colombo - 1946. Page : 2

யாழ்ப்பாண அரச பரம்பரை 43
மணிமகுடம் தனது கணவனுக்குப் பின்னர் தனது மகனுக்கு வரவேண்டும் என்று கருதிய தேவனம்பியதீசனின் மனைவி, நஞ்சூட்டப்பட்ட மாங்கனி ஒன்றினை மாங்கனிகள் நிரம்பிய தட்டொன்றில் மிக மேற்கனியாக அடுக்கி மகாநாகனுக்கு அனுப்பி வைத்தாள். அந்த நஞ்சூட்டப்பட்ட கனியை அவ்வேளை மகாநாகனோடு நின்றிருந்த அவளது மகனே உண்டு இறக்க நேர்ந்தது. இந்தத் துர்மரணத்தினால் பயமுற்ற மகாநாகன் தனது மனைவி மக்களுடன் உருகுணைக்குத் தப்பியோட நேர்ந்தது. அங்கு மகாகமம் என்ற நகரத்தை உருவாக்கி உருகுணையின் மன்னனாகினான்." அவனைத் தொடர்ந்து அவனது மகன் ஜத்தலாயாதீசனும்; அதன்பின் அவனது மகன் கோதபயனும் உருகுணையின் மன்னராகினர். இவர்கள் பெரும் போராட்டத்தின் பின்னரே உருகுணையின் அரசராக முடிந்தது. கதிர்காமப் பிரதேசத்தின் சத்திரிய தமிழ் மன்னர்கள் பத்துப்பேரை அழித்து வெற்றி கொள்ள வேண்டியிருந்தது. தட்டுவம்சம் என்ற நூலின்படி இந்த சத்திரிய மன்னர்களை கோதபாயனே அழித்து வெற்றி கொண்டான் என்பதாகும். * அனுராதபுரத்திலிருந்து தண்டனைக்குப் பயந்து தப்பியோடிவந்த மகாநாகனுக்குத் தஞ்சமளித்த கதிர்காமக் குறுநில மன்னன் கமணியையும்" அவனது பத்துப்பிள்ளைகளையும் அழித்து உருகுணையின் இராசதானியைக் காக்கவண்ணதீசனின் தந்தை கோதபாயன் தனதாக்கிக் கொண்டான். சத்திரிய மன்னர்கள் பத்துப்பேரையும் அழித்தபோதிலும், கதிர்காமப் பகுதியில் அவர்களது ஆதிக்கம் சிறிதளவில் இருந்துள்ளது. பத்துச் சத்திரிய மன்னர்களின் மூத்தவனின் மகனான தர்மராஜா என்பவனின் மகன் மகாதீசன் என்பவன் இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் ஆதிக்கம் பெற்றிருந்துள்ளான். சத்திரிய மன்னன் ஒருவனின் மகளான இளவரசி அபி அனுரதி பற்றி பிராமிக் கல்வெட்டொன்றில் குறிப்புள்ளது."
எவ்வாறாயினும் தென்னிலங்கையில் காக்கவண்ணதீசனின் காலத்தில் உருகுணை ஒரளவு வலிமையுடைய இராசதானியாக விளங்கியுள்ளது. ஈழராஜா எல்லாளனின் மேலாதிக்கத்தையேற்று திறை செலுத்தி வந்தமையால், தமிழ் மன்னன் இதன் நிர்வாகத்தில் தலையீடு செய்யாதிருந்தான்.
71. The Mahavamsa, (p.5-BITs, 955ryth: XXII, airfi : 2-9, usash : 146-147 72. History of Ceylon, Chapter: 111 Page: 146 73. CISG, HI, PP. 99 - 100 74. The Mahavamsa, GOBEIT), Chapter: III Page : 147

Page 28
44 யாழ்ப்பாண அரச பரம்பரை
காக்க வண்ணதீசனின் பட்டத்துராணி, களனிதீசனின் மகள் விகாரைமகாதேவியாவாள்." இவளைக் காக்கவண்ணதீசன் மணந்த வரலாறு சுவையானது. களனிதீசனின் மனைவிக்கும், அவனது தம்பியான அய்ய உத்திகனுக்கும் கள்ளஉறவு இருந்தது. இந்த உறவு மன்னனுக்குத் தெரிந்ததும் உத்திகன் பயந்து நாட்டைவிட்டோடினான். பின்னர் தமையன் மனைவிக்கு ஒரு காதல் கடிதம் எழுதி, பிக்குவேடமணிந்த ஒருவனிடம் கையளித்து, அதனை அரசியிடம் சேர்ப்பிக்கு மார்க்கத்தையும் கூறினான். ஒவ்வொரு நாளும் அரண்மனைக்குப் பிச்சையேற்கச் செல்லும் தேரர் பின்னால் செல்லும்பிக்குகளுடன் சென்றபிக்குவேடமணிந்தவன், கடிதத்தை அரசியின் முன் தருணம் பார்த்து நழுவவிட்டபோது, அதனைக் கண்ணுற்ற களனிதீசன் கடிதத்தை எடுத்துப்படிக்க நேர்ந்தது. கோபமுற்ற மன்னன், பிரதமதேரர், வேடமணிந்த பிக்கு இருவரையும் கொன்று கடலில் வீசுவித்தான். அதனால், கடல் பொங்கிக் கல்யாணிமீது பரவியது. அதனைச் சாந்தப்படுத்துவதற்காகத் தனது மகள் மகாதேவியை ஒருவள்ளத்தில் ஏற்றிக் கடலில் விட்டு கடலிற்குக் காணிக்கையையாக்கினான். அந்த வள்ளம் மகாகமத்தின் கரையைச் சென்றடைந்தது. அவள் யாரெனக் கண்டுகொண்ட காக்கவண்ணதீசன், மகாதேவியைத் தனது பட்டத்துராணியாக்கிக் கொண்டான். அவள் கரையொதுங்கியவிடம் விகாரையொன்றுக்கு அருகாக இருந்தமையால், விகாரைமகாதேவி என அழைக்கப்பட்டாள்" மகாவம்சம் கூறுகின்ற இக்கதைகள் எவ்வளவு தூரம் சிங்கள இராஜபரம்பரைக்குப் பெருமை சேர்க்கின்றதோ அல்லது அபகீர்த்தியுண்டாக்குகின்றதோ என்பதைவிட, இக்கதைகளின் நம்பகத்தன்மை நிரூபிக்கப்படாத ஒன்று.
மகாவம்சத்தின் ஆசிரியரான மகாநாமதேரர், துட்டகாமினியைத் தனது நூலின் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டுள்ளார். அவனது வரலாற்றை விபரிக்கும்போது இரு அம்சங்களை வவியுறுத்தியுள்ளார். ஒன்று தமிழருக்கு எதிரான இனவாதக் கருத்துக்கள், மற்றையது பெளத்தத்திற்கு அவனாற்றிய சேவை. விகான்ரைமகாதேவி துட்டகாமினியைக் கருவில்
75. சிங்கள மன்னர்களினதும் அரசிகளினதும் பெயர்கள் பாளிநூல்களில் அவர்களது பட்டப்பெயர்களோடு அல்லது மக்கள் அவர்களை இழிவாக அல்லது புகழ்ச்சியாக அழைத்த பெயரோடு சேர்த்து வழங்கப்படுகின்றன. உதாரணமாக, அபயன், கோதாபயன், (குள்ள அபயன்) என்றும், காவந்ததீசன் காக்கவண்ணதீசன் (காகநிறத்தீசன்) என்றும், காமினி துட்டகாமினி (துஷ்டகாமினி) என்றும், மகாதேவி விகாரை மகாதேவி என்றும் அழைக்கப்படுகின்றனர்.
76. The Mahavamsa, type-BITsi, Chapter: XXII, surf : 13-22, Lisaith: 147

யாழ்ப்பாண அரச பரம்பரை 45
கொண்டிருந்தபோது அவளுக்கு ஏற்பட்ட ஆசைகள் பற்றி மகாவம்சம் விபரிக்கின்றது. பெருந்தொகையான பிக்குகளுக்கு வழங்கித்தானும் பருகக்கூடிய பெரியதொரு தேன் அடை வேண்டும் என்பது அவளது முதலாசை. ஈழராஜா எல்லாளனின் முதலாவது படைத்தளபதி ஒருவனின் தலையைச் சீவிய இரத்தம் தோய்ந்த வாளினைக் கழுவிய நீரை அருந்த வேண்டுமென்பது அவளது இரண்டாவது ஆசை, அனுராதபுரத்தின் வாடாத தாமரைகளால் மாலைகட்டி அணிய வேண்டும் என்பது அவளது மூன்றாவது ஆசை.” இந்த மசக்கை ஆசைகள் நிறைவேற்றப்பட்டன.
காக்கவண்ணதீசனின் நம்பிக்கைக்குரிய படைத்தளபதி வேலுசுமண என்பவன் விகாரைமகாதேவியின் இரண்டாவது விருப்பத்தை நிறைவேற்ற அனுராதபுரத்திற்கு அனுப்பப்பட்டான். அவன் தனது வாளினைக் கதம்ப நதிக்கரையில் மறைத்து விட்டு அரண்மனைக்குச் சென்று குதிரைகளைப் பராமரிக்கும் பணியில் சேர்ந்து கொண்டான். ஒருநாள் வாகா என்ற அரச குதிரையைப் பிறர் அறியத் தக்கதாகக் கடத்திக்கொண்டு புறப்பட்டான். இதனையறிந்த எல்லாளனின் படைத்தளபதி நந்தசாரதி அவனைக் கைப்பற்றக் கருதி தனது குதிரையில் விரைந்தான். காட்டிற்குள் மறைந்து நின்ற வேலுசுமண, நந்நசாரதி குதிரையில் வேகமாக நெருங்கியதும் தலையைச் சீவினான். நந்தசாரதியின் தலையுடன் இரத்தம் தோய்ந்தவாளை உருகுணைக்கு எடுத்துவந்த, விகாரமகாதேவியின் விருப்பத்தைப் பூர்த்திசெய்தான்" சீலமயமான வாழ்க்கையொன்றை மேற்கொண்ட விகாரமகாதேவிக்கு இப்படியான குரூர ஆசைத்தனம் ஏற்பட்டதென்று மகாவம்சம் குறிப்பிடுவதன் மூலம் அவளின் பாத்திரத்தைச் சிதைத்துள்ளது. துட்டகாமினியைத் தன்னிகரற்ற வீரபராக்கிரமம் வாய்ந்தவனாகக் காட்டுவதே மகாவம்சத்தின் நோக்கம். தமிழ் மக்களுக்கு இந்த வகையில் மகாவம்சம் மூலம் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என இலங்கை பாளி, பெளத்த பல்கலைக்கழகப் பேராசிரியர் கும்புருகமுவே விஜிஹிமி குறிப்பிடுகிறார்."
77. (p.e5-gris), Chapter : XXII, ourf. : 42-46, usua: 149-150.
78. Up-g-giri), Chapter : XXII, surf : 51-58, ué,5th : 150-151
79. கும்புருகமுவே வாகிரஹிமி, எல்லாளன் - காமினி யுத்தம்,
தினகரன் வாரமலர், 26.05.9676, பக்கம் : 24

Page 29
46 யாழ்ப்பாண அரச பரம்பரை
விகாரமகாதேவியினதும் காக்கவண்ணதீசனினது மூத்தமகன் காமினி அபயனாவான், இவன் தந்தையின் சொல்கேளாது இருந்தமையால் பிற்காலத்தில் துட்டகாமினி எனஅழைக்கப்பட்டான். அவனது தம்பியே சத்தாதீசனாவான். துட்டகாமினி கருவிலிருந்தே தமிழருக்கு எதிரானவனாக உருவாக்கப்பட்டான். விகாரமகாதேவி தமிழருக்கெதிரான துவேஷத்தை அவனுக்கு ஊட்டி வளர்த்தாள். ஒரு முறை காக்க வண்ணதீசன் தன்னிரு பிள்ளைகளிடமும் மூன்று வேண்டுகோள் விடுத்தான். பெளத்த சங்கத்தினருக்கு எப்பொழுதும் பணிவாக இருக்க வேண்டுமென்றும் சகோதரர்கள் இருவரும் ஒருவரோடொருவர் சண்டை பிடிக்கக் கூடாதென்றும், தமிழர்களோடு போர்புரியக் கூடாதென்றும் கேட்டுக் கொண்டபோது, முதலிரு வேண்டுகோள்களையும் ஏற்ற சகோதரர்கள் மூன்றாவது கோரிக்கையை ஏற்கவில்லை. துட்டகாமினி விரைந்து எழுந்து சென்று கட்டிலில் கால்களை முடக்கிப்படுத்துக் கொண்டான். தாய் வினவியபோது, வடக்கே மகாவலி கங்கைக்கு அப்பால் தமிழரும், தெற்கே சமுத்திரமும் நெருகும்போது, எப்படி நீட்டி நிமிர்ந்து படுக்க முடியும்? என்றானென மகாவம்சம் கூறுகிறது. *
27. எல்லாள - துட்டகாமினி யுத்தம்
காக்கவண்ணதீசனின் மரணத்தின் பின்னர் துட்டகாமினி உருகுணையின் மன்னனானான். காக்கவண்ணதீசன் தயார்ப்படுத்தி வைத்திருந்த பெரும் சேனையுடன், தான் தயார்ப்படுத்திய வீரர்களுடனும் அனுராதபுரத்தினை நோக்கிப் படை நடத்தினான். அவனுடன் திசமகராமை விகாரையைச் சேர்ந்த ஐந்நூறு பிக்குகளும், தாய் விகாரைமகாதேவியும் கூடவே சென்றனர். W
துட்டகாமினி எல்லாளனுக்கு எதிரான யுத்தத்திற்கு இனத்தோடு மதத்தையும் முன்வைத்தான். நான் அரச போகங்களுக்காக இந்த யுத்தத்தில் இறங்கவில்லை. பெளத்த சாசனத்தின் உன்னதத்திற்காகவே போர் தொடுக்கின்றேன்.' என்ற கவர்ச்சிகரமான சுலோகத்தையே அவன் முன்வைத்தான். உண்மையில் எல்லாளனுக்கு எதிராக சமய ரீதியாகவோ
80. The Mahavamsa, typesiri, Chapter: XXII, of : 78-86, uásh: 153, 154

யாழ்ப்பாண அரச பரம்பரை 47
இனரீதியாகவோ எதிர்ப்பு ஏற்பட எவ்வித அடிப்படையும் கிடையாது. நேர்மையும் பாராபட்சமின்மையும் கொண்ட நீதிமிக்க அரசன் அவன். எல்லாளன் போன்ற செங்கோல் அரசன் ஒருவனை முறியடிப்பது இலகுவல்ல. எனவேதான் அவன் அந்தக் கவர்ச்சிகரமான சுலோகத்தைப் பயன்படுத்தினான். பெளத்த பிக்குகள் யுத்தமொன்றுடன் தொடர்புபடும் சம்பவம் வரலாற்றில் இதுவே முதல் தடவை."
மகாவலிகங்கை மருங்கே எல்லாளனின் இராணுவத் தளங்கள் அமைந்திருந்தன. மகியங்கனையில் முதன் முதலாகத் தமிழ்ப் படையினருக்கும் துட்டகாமினியின் படைக்கும் சண்டை மூண்டது. அதனைத் தொடர்ந்து அம்பதீர்த்தம், சர்ப்பக்கோட்டை, அந்தரசொப்பம், நாளி சொப்பம், கச்சதீர்த்தம், கொத்த நகரம், நந்திக்கிராமம், விஜிதபுரம் முதலான தமிழரின் படையரண்களைத் தன் படைவலிமையாலும் தந்திரத்தாலும் துட்டகாமினி வெற்றி கொண்டான்.
அம்பதீர்த்தம் என்றவிடத்தில் அமைந்திருந்த எல்லாளனின் படையரணை, நான்கு மாதங்கள் முற்றுகையிட்டும், துட்டகாமினியால் வெற்றி கொள்ள முடியவில்லை. அம்பதீர்த்தத்தின் படைத்தளபதி தித்தம்பன் பெண்விடயத்தில் மிகவும் பலவீனமானவன். அப்பலவீனத்தைத் துட்டகாமினி தனது வெற்றிக்குப் பயன்படுத்திக் கொண்டான். தனது தாய் விகாரைமகாதேவியைத் தித்தம்பனின் முன் பார்வைக்கு நிறுத்தினான் என மகாவம்சம் கூறுகிறது.* மகாவம்சம் கூறுகின்ற இந்தச் சந்தேகக் குறிப்பிலிருந்து சரியான அனுமானத்தைப் பெறுவது கடினமெனவும், எனினும் திக்கா நூலின்படி எதிரியுடனான தாயின் திருமணத்திற்கு அரசியல்லாபம் கருதிய துட்டகாமினியின் சம்மதம் இருந்தது என மகாவம்சத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பாளரான கெய்கர் அந்நூலின் அடிக்குறிப்பில் குறித்துள்ளார்." இலங்கை வரலாறு என்ற நூலின் மூன்றாம் அத்தியாயத்தை எழுதிய வரலாற்றறிஞர் பரணவிதான, நான்கு மாதங்களாகியும் கோட்டையைக் கைப்பற்ற முடியாதுபோன துட்டகாமினி, தமிழ்ப்படைத்தளபதியின் பெண்
81. கும்புருகமுவே வாகிரஹிமி, மு.கு. கட்டுரை, பக்கம் : 24
82. up, es5. 5Tó), Chapter: XXV. 6uñ: 89, ué55ub : 170, 171 83. Geiger. W. Mahawamsa, - 1950. 9555 L, usasia: 171

Page 30
48 யாழ்ப்பாண அரச பரம்பரை
பலவீனத்தைப்பயன்படுத்திக் கொண்டானெனவும், துட்டகாமினி விரித்த பொறியில் தமிழ்ப்படைத்தளபதியை வீழ்த்துவதற்கு அவனின் தாய் விகாரைமகாதேவியே விரும்பி முன் வந்தாளெனக் குறித்துள்ளார்.*
அம்கதீர்த்தத்தைக் கைப்பற்றியபின்னர், சர்ப்பக்கோட்டை என்ற படையரணைத் துட்டகாமினி வெற்றி கொண்டான். இங்கு அகப்பட்ட ஏராளமான செல்வங்கள் படைவீரர்களிடையே பங்கீடு செய்யப்பட்டன. மகாவலிகங்கையின் வலதுகரையோரமாக முன்னேறிய சிங்களப்படை தமிழரின் பல அரண்களைத் தகர்த்து வெற்றிக்கொண்டு விஜிதபுரத் (பொலநறுவை) தைச் சென்றடைந்தது. எல்லாளனின் விஜிதபுரக் கோட்டை மிகவும் பலம் வாய்ந்தது. உயர்ந்த மதில்களையும் காவற் கோபுரங்களையும் கொண்டது. அகழிகளினால் சூழப்பட்டிருந்தது. விஜிதபுரத்தைக் கைப்பற்றுவதற்குச் சிங்களப்படைக்கு நான்கு மாதங்கள் எடுத்தன. அதனையடுத்து அனுராதபுரத்தை நோக்கி முன்னேறிய சிங்களப்படைகளை கிரிகலம், மகிளநகரம் எனுமிடங்களில் எல்லாளனது படை எதிர்கொண்டு தாக்கித் தோல்வியடைந்தது. துட்டகாமினி அதன்பின்னர் காசபர்வதம் எனுமிடத்தில் பாசறை அமைத்து ஒய்வெடுத்துக் கொண்டான். உருகுணையிலிருந்து படைபுறப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாகியிருந்தது. படையின் பலத்த அழிவுகள் ஏற்பட்டிருந்தமையால் வீரர்களுக்கு ஆறுதலளிக்க வேண்டி காசபர்வதத்தில் பாசறை அமைத்துத் தங்கினான். உருகுணையிலிருந்து ஆளணியைப் பெறவும், உணவுப் பொருட்களைப் பெறவும் இந்த ஒய்வு தேவைப்பட்டது என்பர்.
அனுராதபுரத்திலிருந்து தென்கிழக்கே பதினெட்டுமைல்கள் தூரத்தில் காசபர்வதம் அமைந்திருந்தது. எல்லாளனின் பிரதான படைத்தளபதிகளும் வீரர்களும் சிங்களப்படையை எதிர்கொள்ளத் தயாராகவிருந்தனர். காசபர்வதப் பாசறையைத் தமிழர்படை தீகஜந்து என்ற தளபதியின் தலைமையில் தாக்கியது. துட்டகாமினி போல வேடமணிந்த பல உருவங்கள் ஆங்காங்கு போரிட்டன. அதனால் அந்தப்போர் முனையில் உண்மையான துட்டகாமினியை அடையாளம் காண முடியவில்லை. தமிழ்த்
84. Paranavithna. S. History of Ceylon, Colombo -, Chapter 111, Page: 157

யாழ்ப்பான அரச பரம்பரை 49
தளபதி தீகஜந்து உண்மையான துட்டகாமினியை அடையாளம் கண்டு அவனை ஆவேசத்தோடு நெருங்கியவேளை, இடையில் புகுந்த
- 85
சிங்களத்தளபதி சூரநிமலனால் கொல்லப்பட்டான்.* தீகஜந்துவின் மரணத்துடன் தமிழர்படை தோல்வியைத்தழுவி பின் வாங்கியது.
சிங்களப்படைகள் அனுராதபுரத்தை நோக்கி முன்னேறின. அனுராதபுரம் முற்றுகையிடப்பட்டது. எல்லாளன் தனது அமைச்சரவையைக்கூட்டி ஆலோசனை நடாத்தினான். தானே எஞ்சியுள்ள தமிழர்படையை நடாத்திச் செல்வதென எல்லாளன் முடிவு செய்தான். அவ்வேளை துட்டகாமினியிடமிருந்து ஓர் அறைகூவல் தூதுவன் மூலம் விடுக்கப்பட்டது. எல்லாளனைத் தனிச்சமருக்குத் துட்டகாமினி அழைத்தான். அந்தச் சவாலை எல்லாளன் ஏற்றதன் மூலம் பெருந்தவறு செய்தான். எல்லாளன் 72 வயதுடை முதுமையெய்தியவன். துட்டகாமினியோ இளைஞன். துட்டகாமினி தனிச்சமருக்கு அழைத்தமைக்கும், அதனை எல்லாளன் ஏற்றமைக்கும் பல காரணங்கள் இருக்கலாம். உருகுணையிலிருந்து புறப்பட்ட சிங்களப்படை மகியங்கனையிலிருந்து காசபர்வதம் வரை ஒரு ஆண்டிற்கு மேலாக யுத்தம் செய்து இழப்பையும் களைப்பையும் அடைந்திருந்தது. அதேபோலவே தமிழர்படையின் நிலையும் இருந்தது. பெரும் அழிவின் இறுதியில் அனுராதபுரம் சிங்களப்படையால் முற்றுகையிடப்பட்டிருந்தது. வெற்றிக்கனி எவருக்குக்கிட்டுமெனத் தெரியாத நிலையில், இரு மன்னர்களும் தனிச்சமருக்கு ஒப்புக்கொண்டனர் என ஊகிக்கலாம்.
எல்லாளன் ஆயுதபாணியாகத் தனது மகாபர்வதம் என்ற யானையிலேறி, அனுராதபுர நகரின் தெற்கு வாயிலையடைந்தான். துட்டகாமினி தனது கண்டுலன் என்ற யானையிலேறி அவனை எதிர்கொண்டான். இருவருக்கும் கடுஞ்சமர் மூண்டது. ஆயுத யுத்தத்தில் எல்லாளனின் பலமோங்கியிருந்தமையால், துட்டகாமினி தனது யானையைத் தூண்டி எல்லாளனின் யானையைத் தாக்கினான். கண்டுலன் தனது வலிமையான தந்தங்களால் மகாபர்வதத்தை தாக்கியது. மகாபர்வதம் சரிந்த போது, துட்டகாமினி வீசியவேல் எல்லாளனைத் தாக்கியது. தமிழ்மாமன்னன் நிலத்தில் சரிந்து வீழ்ந்திறந்தான்.
85. The Mahawamsa, மு. கு. நூல், அதிகாரம் : XXV வரி 57-65, பக்கம், பக்கம்: 174

Page 31
50 யாழ்ப்பாண அரச பரம்பரை
தனது தனிப்பட்டவீரம், வெற்றி என்பனவற்றுடன், தமிழ் ஈழக் குடிமக்களின் வீரம், வெற்றி, நல்வாழ்வு என்பனவற்றைத் தொடர்புபடுத்தியமையால், எல்லாளனின் தனிச்சமர் தமிழ் ஈழமக்களின் தோல்வியாயிற்று. தமிழரசு தோல்வியுற அனுராதபுரத்தில் சிங்கள அரசு எழுந்தது*
எல்லாளனின் உடல் உரியமரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்டது. அத்துடன், அவன் வீழ்ந்திறந்த இடத்தில் நினைவுச்சின்னமாகச் சைத்தியம் ஒன்றை துட்டகாமினி எழுப்புவித்தான். இச்சைத்தியத்தைக் கடக்கும் பவணிகள் வாத்திய ஒலியை நிறுத்திச் செல்லவேண்டுமென அவனால் இயற்றப்பட்ட கட்டளை நெடுங்காலம் பின்பற்றப்பட்டது. எந்த மனிதனாயினும் அவன் இளவரசனாக இருந்தாலும் சரி, சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரி இந்த வழியாகச் சிவிகையிலோ, மூடு பல்லக்கிலோ வரநேர்ந்தால் வாத்தியவொலிஎழுப்பக்கூடாது' என ஒரு தூணில் பொறித்து வைத்தான்." அதற்கிணங்க யானைகள் மீது சென்றவர்கள் இந்த இடத்தில் இறங்கி நடந்தனர். மேள வாத்தியங்களுடன் ஊர்வலஞ் சென்றவர்கள் இந்த ஞாபகச்சின்னத்தைக் கடக்கையில் வாத்தியங்களை நிறுத்தி மரியாதை செலுத்திச் சென்றனர்.
துட்டகாமினி அனுராதபுரத்தில் முடிசூடிக் கொண்டான். அவன் சிம்மாசனம் ஏறுவதற்கு முன் இலங்கையின் பலபகுதிகளிலும் ஆட்சிசெய்த முப்பத்திரண்டு தமிழ்க் குறுநில மன்னர்களை வெற்றி கொள்ள நேர்ந்தது.* எல்லாளன் இறந்தமையைக் கேள்விப்பட்ட அவனது மருமகன் பாலுகன் என்பான் 6000 படைவீரர்களுடன் அனுராதபுரத்தைத் தாக்கினான் என்றும், அப்படை தோல்வியடைந்தது என்றும் மகாவம்சம் கூறுகிறது. எல்லாளன் மரணமான ஏழாம்நாள் பாலுகன் அனுராதபுரத்தைத் தாக்கியதாகக் குறிப்புள்ளது.* எனவே, உத்தரதேசத்திலிருந்து (பூநகரி) பாலுகன் படையெடுத்து வந்திருக்க வேண்டுமெனத் துணியலாம்.
86. திருச்செல்வம். மு. ஈழத்தமிழர் இறைமை, காந்தளகம், 1977, பக்கம் : 56 87. Senaveratna, M. John Qup. (5. BoT65), XXV. 62 urfl: 75, ué565ub : 59 88. The Mahawamsa, மு. கு. நூல். அதிகாரம் : XXV வரி 175, பக்கம்: 175 89. மு. கு. நூல், அதிகாரம் : XXVவரி 78, பக்கம் : 175

யாழ்ப்பாண அரச பரம்பரை S1
துட்டகாமினி இலங்கையின் மாமன்னனாக முடிபுனைந்த பின்னர், பெளத்த தேரர்களிடம் தனது மனத்துயரை வெளியிட்டான். ஆயிரக்கணக்கானவர்களை எனது வாளுக்கு இரையாக்கியுள்ளேன். என்மனத்தில் அமைதியில்லை. என வினவுகிறான். பெளத்தத்தை நம்பாதவர்கள், பைசாச வாழ்க்கையை அனுஷ்டிப்பவர்கள், விலங்குகளுக்கு சமமாகக் கருதப்பட வேண்டியவர்கள்” எனச் சங்கத்தினர் கூறினார்கள். பரணவிதான தனது கட்டுரையில் இதனை துட்டகாமினியால் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் (தமிழர்கள்) பெளத்தத்தில் நம்பிக்கையில்லாதவர்கள், பாவம் செய்தவர்கள். விலங்குகளிலும் மேலானவர்களல்லர். இவர்களைக்
கொன்றதால் பாவம் சேராது." என விளங்குகிறார்.
2. 8. எல்லாளனிற்குப் பின்னர்
மாமன்னன் எல்லாளனின் 44 வருட நீதிநெறிதவறாத ஆட்சி, கி.மு.101 இல் முற்றப்பெற, சிங்கள ஆட்சி அனுராதபுரத்தில் அரசோச்சத் தொடங்கியது. காமினியைத் தொடர்ந்து கி.மு. 44 வரை அனுராதபுர சிம்மாசனத்தில் சிங்கள மன்னர்கள் அமர்ந்திருந்தனர். வட்டகாமினி என்ற மன்னன் காலத்தில் அனுராதபுரத்தின் மீது மீண்டுமொரு தமிழர் படையெடுப்பு நிகழ்ந்தது. வட்டகாமினி அனுராதபுரத்தில் ஆட்சி செய்த போது உருகுணையில் தீசன் என்ற குறு நில மன்னன் ஆதிக்கம் பெற்றிருந்தான் எனத் தெரிகிறது.? அவன் அனுராதபுர மன்னனுக்கு எதிராகக் ஆட்சியுரிமை வேண்டிக் கலகம் செய்ததாகத் தெரிகின்றது. அதேவேளை உத்தரதேசத்தை சேர்ந்த ஏழு தமிழ்க் குறுநில மன்னர்கள் மாந்தை வழியாக அனுராதபுரத்தை நோக்கிப் படையெடுத்தனர். இந்த ஏழு தமிழர்களைப் பாண்டியர்களாக வரலாற்றாசிரியர் சிலர் குறிப்பர். மகாவம்சத்தில் எவ்விடத்திலும் இவர்களைப் பாண்டியர்களாகக் குறிக்கவில்லை. இலங்கையின் குறுநில மன்னர்கள் அனுராதபுர ஆட்சியை ஏற்காது கிளர்ச்சி செய்கின்ற நிகழ்ச்சிகள் இலங்கை வரலாற்றில்
90. மு. கு. நூல், அதிகாரம் : XXV வரி 108, பக்கம்: 178 91. Paranavithna. S. History of Ceylon, Colombo - Chapter 111, Page : 162 92. The Mahawamsa, Colombo-1950. 91ésiryub : XXXIII, 6uft:38, uéesió: 231

Page 32
52 யாழ்ப்பாண அரச பரம்பரை
புதியனவன்று, தென்னிலங்கையில் தீசன் கிளர்ந்தெழுந்த போது வடக்கே ஏழு குறுநிலத்தமிழ் மன்னர்கள் போர்க்கோலம் பூண்டனர். இவர்களோடு உருகுணைத்தீசனும் சேர்ந்து கொண்டானெனத் தெரிகின்றது. இவர்கள் எண்மரும் சேர்ந்து ஆட்சியைத்தம்மிடம் ஒப்படைத்து விடுமாறு வட்டகாமினிக்கு ஒலையனுப்பினர்.*
வட்டகாமினி, உருகுணைத்தீசனோடு சமாதானம் செய்து கொண்டான். ஏழு தமிழ்க் குறுநில மன்னர்களின் படைகளைத் தடுத்து நிறுத்தி வெற்றி கொள்ளில், அனுராதபுர ஆட்சியைத் தீசனிடம் ஒப்படைப்பதாக ஒப்புக் கொண்டான். இதனையேற்ற தீசன், தமிழ்ப்படையோடு மோதி தோல்வியடைய நேர்ந்தது. உருகுணைப் படையை வெற்றி கொண்ட எழு தமிழ்க்குறுநில மன்னரின் படை அனுராதபுரத்தை நோக்கி விரைந்தது. கொலம்பலாகா என்றவிடத்தில் இருபடைகளும் சந்தித்து மோதிக் கொண்டன. வட்டகாமினி தோல்வியைத் தழுவி, பின்வாங்கி அரண்மனைக் கோடிதன்னிரு மனைவியரையும் புதல்வனையும் ஒரு தேரில் ஏற்றிக் கொண்டு வேகமாகத் தப்பியோடினான். தமிழர்படை துரத்தியதால் தேரின் வேகத்தைக் கூட்டும்பொருட்டுப்பாரத்தைக் குறைப்பதற்காக, அவன் தனது இரண்டாவது மனைவி சோமாதேவியைத் தேரினின்றும் இறக்கி விட்டுத்தப்பி ஓடிவிட நேர்ந்தது*
ஏழு குறுநிலத்தமிழ் மன்னரில் ஒருவன் சோமாதேவியைத் தன்னுடை மையாக்கிக் கொண்டான். மற்றொருவன் புத்தரின் ஜயக்கலத்தைத் தனதாக்கி கொண்டான். இந்த இருவரும் தமது பிரதேசங்களுக்கு மீண்டுசென்றார் எனவும், மிகுதி ஐந்து தமிழரும் அனுராதபுரத்தை 14 ஆண்டுகளும் 7 மாதங்களும் அரசாண்டனர் எனவும் அறியக்கிடைக்கின்றது. இந்த ஐந்து தமிழ் மன்னர்களாக புலகத்தன், பாகியன், பனையமாறன், பிணையமாறன், தாடிகன் என்போர் குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் ஒருவர் மாறி ஒருவர் அனுராதபுரத்திலிருந்து அரசாண்டனர் என அறியப்படுகின்றது. இவர்கள்
93. மே.கு. நூல், அதிகாரம் : XXXI, வரி : 40, பக்கம் 231 94. மே, கு. நூல், அதிகாரம் : XXXI, வரி :45-48, பக்கம் : 232

யாழ்ப்பாண அரச பரம்பரை 53
ஒருவரையொருவர் கொன்றே ஆட்சிபுரிந்தனரென* மகாவம்சம் குறிப்பிடுகின்றபோதிலும், இக்குறுநில மன்னர்கள் முறைவைத்து தமக்குள் அனுராதபுர சிம்மாசனத்தை அலங்கரித் தனரெனக் கொள்ளலாம்.
தாடிகன் அனுராதபுரத்தை ஆண்டபோது வட்டகாமினி மீண்டும் அனுராதபுரத்தைக் கைப்பற்றி மன்னனானான். தமிழ்க்குறுநில மன்னனால் கவர்ந்து செல்லப்பட்ட சோமாதேவியை மீளப்பெற்றுத் தனது ராணியாக்கிக் கொண்டான். வட்டகாமினியின் ஆட்சி கி.மு. 17 வரை நிலவியது. அதன் பின்னர் கி.பி. 9ஆம் ஆண்டுவரை சிங்கள ஆட்சி இலங்கையில் நிலவியதாக அறிய முடிகிறது. சோரநாகன் என்ற மன்னன் ஆட்சியிலிருந்த போது, அவனது மனைவியான அனுலாதேவியின் விபரீதக்காம ஆசையால் ஆட்சி அதிகாரம் பகிர்ந்து கொள்ளப்பட்டது. அனுலாதேவி தனது கணவனை நஞ்சூட்டிக் கொன்றபின், திசா என்பவனை மணந்து அவனை அரசனாக்கினாள். அதன் பின்னர் சிவா, வாதுகன், தீசன், நீலியன் என ஒவ்வொருவராக மணந்து மன்னனாக்கிப் பின்னர் நஞ்சூட்டிக் கொன்று இறுதியில் தானே நாட்டின் தலைமையை ஏற்றுக்கொண்டாள்." அவளது ஆசைக்கும் விருப்பத்திற்கும் 32 அரண்மனைக்காவலர் உட்பட்டரென வரலாறு கூறுகிறது. வாதுகன், நீலியன் ஆகிய இருவர் தமிழராவர். இவர்கள் அனுலாவுடன் அனுராதபுரச் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிந்துள்ளனர். ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது கிறிஸ்தாப்தத்திற்கு முந்திய வரலாற்றுக் காலத்தினை உள்ளடக்கிய 250 ஆண்டுகளில் மூன்றிலொரு பகுதியில் தமிழரின் ஆட்சி நடைபெற்றதைப் பாளிநால்கள் கூறுகின்றன எனலாம்."
95. மே, கு. நூல், அதிகாரம் : XXXI, வரி:56-61, பக்கம்: 233
96. மே, கு. நூல், அதிகாரம் : XXXIV, வரி 13-26, பக்கம் : 239
97. சிற்றம்பலம். சி. க. ஈழத்தமிழர் வரலாறு, இந்துக்கல்லூரி, சாவகச்சேரி, 1994,
பக்கம் : 21

Page 33
அத்தியாயம் : மூன்று
சிங்கைநகர் அரசு
வடவிலங்கையில் நாகர்களதும் அவர்களோடு கலந்து திராவிடர்களினதும் குடியிருப்புகள் வளர்வது, தென்னிலங்கைச் சிங்கள ஆட்சியாளருக்குத் தலையிடியைக் கொடுத்திருக்க வேண்டும். இந்தியாவுடனான Ց* Ց5 60 தொடர்புகளும் வட விலங்கைத் துறைமுகங்களூடாகவே (மாதோட்டம், ஜம்புக்கோளம்) நடந்து வந்தன. எனவே 6)- இந்திய ஆரியருக்கும் தென்னிலங்கை சிங்களவருக்குமிடையே திராவிடக் குடியேற்றங்கள் அமைவது களையப்பட வேண்டியதாகப்பட்டிருக்கும். உத்தரதேசத்தைத் (வடவிலங்கை) தக்கண தேசத்தின் (தென்னிலங்கை) ஆதிக்கத்தினுள் வைத்திருக்க விருப்பு எழுந்தது. அதனால், கி.மு. 1ஆம் நூற்றாண்டில் அல்லது அதற்கு முன்னர், தென்னிலங்கையிலிருந்து, ஈழ மண்டலத்தின் மீது பெரும் படையெடுப்பொன்று நிகழ்ந்திருக்க வேண்டும். அந்தக் கால கட்டத்தில், கந்தரோடை எனப்படும் கதிரமலையே ஈழ மண்டல ஆட்சியாளனின் தலை நகரமாக இருந்திருக்க வேண்டும்.
கந்தரோடையில் கிடைத்த மட்பாண்ட ஒடொன்றில் பொறிக்கப்பட்டுக் கிடைத்த பிராமி எழுத்துச் சாசனத்தின் வாசகம் பின்வருமாறு அமைந்துள்ளது. “தஹ பத” - தத்தவின் பாத்திரம், இதன் காலம் கி. மு. நூற்றாண்டு என்று எழுத்தின் அடிப்படையில் கூறலாம்.' கந்தரோடையில் நிகழ்ந்த அகழ்வாராய்ச்சிகளின் மூலம் கிடைத்த பெளத்த சின்னங்கள், இப்பகுதியில் பெளத்த மக்கள் நிலை கொண்டிருந்ததைச் சுட்டுகின்றன. h
எனவே, தென்னிலங்கை ஆட்சியாளர் கதிரமலையைக் கைப்பற்றியதும் அப்பிரதேசத்தில் வாழ்ந்தோரில் ஒருபகுதியினர் தொண்டமானாற்றைக் கடந்து வல்லிபுரப் பகுதியில் ஏற்கனவே குடியிருந்தோருடன் இவர்களும் சேர்ந்து குடியேறிக் கொண்டனர்.

யாழ்ப்பாண அரச பரம்பரை 55
லுல்லிபுரப்பகுதியிலும் அவர்களால், அமைதியாகத் தொடர்ந்து வாழ முடியவில்லை. கி. பி. 1ம் நூற்றாண்டில் அநுராதபுரத்திலிருந்து சிங்கள இராச்சியத்தை ஆண்ட வசப என்ற மன்னன் வல்லிபுரப் பிரதேசத்தை வெற்றி கொண்டு தன் அமைச்சன் ஒருவனை அப்பகுதியை நிர்வகிக்க நியமித்தான்.
வல்லிபுரத்திலிருந்து கி. பி. முதலாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பொற்சாசனம் கிடைத்துள்ளது. இச்சாசனம் பல வகையாலும் முக்கியத்துவம் வாய்ந்தது. கி. பி. முதலாம் இரண்டாம் நூற்றாண்டிலே யாழ்ப்பாணப் பகுதி நாகதீவு எனப் பெயர் பெற்றிருந்ததையும், அக்காலத்தில் அநுராதபுரத்திலிருந்து சிங்கள இராச்சியத்தை ஆண்ட வசப மன்னனுடைய (கி.பி. 67-11) ஆதிக்கத்திற்கு உட்பட்டு மன்னனின் அமைச்சன் இசிகிரயன் என்பவனால் அது நிர்வகிக்கப்பட்டது என்பதையும், வல்லிபுரப் பிரதேசத்தில் பெளத்தம் பரவியிருந்தது என்பதையும் இச்சாசனம் அறிவிக்கின்றது.
கந்தரோடையிலும், வல்லிப்புரப்பகுதியிலும் தொல்லியலாய்வின் பேறாகக் கிடைத்த சாசனங்கள் இப்பகுதிகளில் பெளத்தம் நிலை பெற்றிருந்தது என்பதை நிறுவுகின்றன. தமிழ்நாட்டின் பெளத்தம் பரவிய கால வேளையில் வடவிலங்கைத் தமிழர் பலரும் பெளத்தத்தை தழுவியிருப்பர். இத்திராவிடத் தமிழ்ப் பெளத்தர்கள் காலகதியில் தமது முந்தைய சமயத்திற்கு மாறியிருப்பர் அல்லது இவ்விடங்களை விட்டு இடம் பெயர்ந்திருப்பர் என ஊகிக்க முடியும்.
எனவே, கி. மு. 3ஆம் நூற்றாண்டிலிலும், கி. பி. 1ஆம் நூற்றாண்டிலும் வடவிலங்கையில் பெரும்பாலும் சிங்கள மன்னர்களது ஆதிக்கம் நிலவியது. அக்காலவேளையில் நாகதீவின் ஊர்ப்பெயர்கள் பலவும் சிங்களப் பெயர்களாகின. கொக்குவில், கோண்டாவில், மிருசுவில் என்பன இத்தகையன. சிங்கள ஆட்சியாளரின் கீழ் வடவிலங்கை கி. பி. 8ஆம் நூற்றாண்டு வரை அடிக்கடி உட்பட்டது. இடையிடையே தமிழ் மன்னர்களின் ஆதிக்கத்தினுள்ளும் அமைந்திருந்தது.
கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் (கி. மு. 259-210) வரை அநுராதபுரத்திலிருந்து ஆட்சி செய்த தேவநம்பிய திஸ்ஸ மன்னன் நாகதீவு

Page 34
56 யாழ்ப்பாண அரச பரம்பரை
உட்பட உத்தர தேசத்தைத் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டிருந்தான். அக்காலத்தில் அநுராதபுர இராச்சியத்தவர் கிழக்கிந்தியாவுக்குச் செல்வதற்குப் பயன்படுத்திய பிரதான துறைமுகமாக யாழ்ப்பாணத்து ஜம்புக்கோளத்துறை (தற்காலத்துச் சம்புத்துறை என அடையாளம் காண இடமுண்டு) இடம் பெற்றது. இங்கு தான் தேவநம்பிய திஸ்ஸ மன்னன் சங்கமித்தா தேரியை வரவேற்றான் என்றும், அவனால் இங்கு ஸமுத்தபண்ண-ஸாலா என்ற மண்டபமும், ஜம்புக் கோலா விகாரையும் கட்டுவிக்கப்பட்டன என்றும் அறிகின்றோம்."
கி. பி. 1ஆம் நூற்றாண்டில் உத்தரதேசத்தை வஸப என்ற சிங்கள மன்னன் தன் ஆட்சியின் கீழ் கொண்டிருந்தான். கி. பி. 2ஆம் நூற்றாண்டில் உத்தரதேசம் மஹல்லகநாக, கனிஷ்ட திஸ்ஸ ஆகிய சிங்கள மன்னர்களாலும், கி. பி. 3ஆம் நூற்றாண்டில் வொஹாரிகதிஸ்ஸ என்ற சிங்கள மன்னனாலும், கி. பி. 7ஆம் நூற்றாண்டில் 2ம் அக்கபோதி, சிலாமேகவண்ண ஆகிய சிங்கள மன்னர்களாலும் நிருவகிக்கப்பட்டது.*
கி. பி. 2ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்திலே ஸாலிபப்பத விஹாரை என்னும் பெளத்த நிறுவனத்தை மஹல்லகநாக (136-143) என்ற அநுராதபுரத்து மன்னன் கட்டுவித்தான் என்றும், அதே நூற்றாண்டில் அனுராதபுரத்திலிருந்து ஆண்ட இன்னொரு மன்னனாகிய கனிஷ்ட திஸ்ஸ (167-186) யாழ்ப்பாணத்தில் ஒரு கோயிலைத் திருத்தியமைத்தான் என்றும், 3ஆம் நூற்றாண்டிலே வொஹரிக திஸ்ஸ (209-231) என்ற அனுராதபுரத்து மன்னன் யாழ்ப்பாணத்திலிருந்து திஸ்ஸ விகாரையைச் சுற்றி மதிலமைப்பித்தான் எனவும் அறிகின்றோம். இதற்குப்பிற்பட்ட காலத்திலே 2ஆம் அக்கபோதி (604-614) என்ற அநுராதபுரத்து மன்னன் யாழ்ப்பாணத்திலிருந்த உண்ணலோமகாக் கோயில் என்ற நிறுவனத்தை ராஜாயதனதாது என்ற விகாரைக்குக் கட்டிக் கொடுத்தான் எனவும், அங்கிருந்த அமலதேசிய என்ற சைத்யத்துக்கு ஒருகுடையைத் தானமாக அளித்தான் எனவும் சூளவம்சத்தின் மூலம் அறிவதாக கா. இந்திரபாலா
1. இந்திரபாலா, கா. மு. கு. கட்டுரை பக்கம் - 14 1அ. கே. கு. கட்டுரை.
2. மே. க. கட்டுரை
3. மே.கு. கட்டுரை

யாழ்ப்பாண அரச பரம்பரை 57
என்ற வரலாற்று அறிஞர் கூறுகிறார். ஸிலாமேக வண்ண மன்னன் (619628) அனுராதபுரத்திலிருந்து ஆட்சி நடத்தியபோது யாழ்ப்பாணத்தையும் உள்ளடக்கிய பழைய மாவட்டமாகிய உத்தர தேசத்தை கிரிநாகன் என்பான் கைப்பற்ற முயற்சித்தான் எனவும், கிரிநாகனை ஸிலாமேக வண்ணன் உடனே அடக்கி, மீண்டும் உத்தர தேசத்தைத் தன் ஆணைக்குட்படுத்திக் கொண்டான் என்றும் மேலும் சூளவம்சத்தில் கூறப்பட்டுள்ளது. இந்நூலின் கூற்றின்படி உத்தரதேசத்தில் மீண்டும் ஒருமுறை அனுராதபுர மன்னனுக்கு எதிராகக் கிளர்ச்சி தோன்றியது. அப்போது 2 ஆம் மகிந்த மன்னனுக்கு (777-797) எதிராக உத்தர தேசத்து முதலிகள் கிளர்ச்சி செய்தனர்."
3.1. உக்கிர சிங்கன்
சிங்கள ஆட்சியாளனுக்கு எதிராகக் கிளர்ந்த இக்கிளர்ச்சிக்கு தலைமை வகித்தவன் கலிங்க தேசத்தவனாக மணற்றியில் குடியேறியிருந்த உக்கிரசிங்கன் என்ற தலைவனாவான் எனத் துணியலாம்.
நெடுங்காலம் இழந்திருந்த உரிமையை மீட்கும் வகையில் போரிட்டு நாகதீபத்தை உக்கிரசிங்கன் பெற்றுக் கொண்டான். இது நிகழ்ந்தது கி. பி. 785இல் ஆகும். வெற்றி கொண்ட உக்கிரசிங்கன், கதிரமலை (கந்தரோடை)யினைத் தலைநகரமாகக் கொண்டு உத்தர தேசத்தை ஆண்டு வந்தான்."
யாழ்ப்பாண இராச்சியத்தின் முதல் மன்னனாக உக்கிரசிங்கனையே அறியக் கிடக்கின்றது.
உக்கிர சிங்கன் கதிரமலையில் ஆட்சி செய்த காலத்தில், சோழ இளவரசியாகிய மாருதப்பிரவல்லி என்பாள் தீர்த்தயாத்திரை மேற்கொண்டு கீரிமலைக்கு வந்தாள். அவளை வலிந்து சிறைகொண்டு உக்கிர சிங்கன் மணந்து கொண்டான். அவளின் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து, மாவிட்டபுரத்தில் கந்தனுக்கு ஆலயம் சமைப்பித்தான். இந்தியாவிலிருந்து
4. மே. கு. கட்டுரை 5. குணராசா. க, நல்லைநகர் நூல், யாழ்ப்பாணம் - 1987, பக்கம் - 10. 6. யாழ்ப்பாண வைபவமாலை, குலசபநாதன் பதிப்பு, சுன்னாகம் - 1949,

Page 35
58 யாழ்ப்பாண அரச பரம்பரை
அக் கோயிலுக்குரிய விக்கிரகங்களையும் பெரிய மனத்துளார் என்ற பிராமனோத்தமரையும் வரவழைத்தான்' என யாழ்ப்பாண வைபவமாலை கூறும். உக்கிரசிங்கன் தலைநகராக விருந்த கதிரமலையை விட்டு, சிங்கை நகருக்குத் தனது தலைநகரை மாற்றிக் கொண்டான்."
3. 2. ஏன் தலைநகர் மாறியது ?
கந்தரோடை (கதிரமலை)யைவிட்டுத் தனது தலைநகரைச் சிங்கை நகருக்கு மாற்றியதற்கான காரணங்கள் தெளிவானவை. கந்தரோடைப் பிரதேசம் பெளத்தமத மக்களது முக்கிய பிரதேசமாக மாறியிருந்தது. அத்துடன் சங்கமித்தை தேரியின் வருகையின் பின்னர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த பெளத்த யாத்திரிகர்கள் ஜம்புக்கோளப்பட்டின (திருவடிநிலை) மூடாக வந்திறங்கினர். ஜம்புக்கோளப் பட்டினத்தின் விகாரையொன்றும் கட்டப்பட்டிருந்தது. இதனைவிட ஸாலிப்பத விகாரை, திஸ்ஸவிகாரை என்பனவும் நாகதீவில் அமைந்திருந்தன. கந்தரோடையோடு வல்லிபுரத்திலும் பெளத்தமத மக்கள் பரவியிருந்தனர். பெளத்தம் நாகதீபப் பிரதேசத்தில் பரவியிருந்த ஒரு காலகட்டத்தில், சிங்கள ஆட்சியாளரின் ஆதிக்கத்திலிருந்து உக்கிர சிங்கன் விடுவித்திருந்தான். தீவிரசைவனாக இவன் விளங்கியுள்ளான் என்பதை இவன் ஆற்றிய திருப்பணிகள் நிரூபிக்கின்றன. கீரிமலை நகுலேஸ்வரர் கோயில் இவனால் புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளது. இவனது மனைவியான மாருதப்புரவீகவல்லி மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலைக் கட்டுவித்தாள். யாழ்ப்பாண இராச்சியத்தில் சைவம் இழிவு நிலையிலிருப்பதைக் கண்டு புத்துக்கம் அளிக்க விரும்பிக் காசிப் பிராமணர்கள், பெரியமனத்துளார் என்ற அந்தணர் என்பவர்களை வருவித்துக் குடியிருத்தியுள்ளான். இந்தியாவிலிருந்து சில விக்கிரங்களை எடுத்து வரப்பட்டு இந்துக் கோயில்களில் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு உக்கிரசிங்கன் பல்வேறு முயற்சிகள் செய்தும், பெளத்தத்தினது செல்வாக்கு, கதிரைமலை, வல்லிபுரப்பகுதிகளில் நிலைகொண்டிருந்தது. அதாவது நாகதீபத்தின் மேற்குப் பகுதி, கிழக்குப் பகுதி என்பன வேற்றுமத ஆதிக்கத்திலிருக்க
7. மே, கு. நூல், பக்கம்- 18-23. 8. இராசநாயகம். செ. மு. கு. நூல், பக்கம் - 29

யாழ்ப்பாண அரச பரம்பரை 59
தென்பகுதி (யாழ்ப்பாணம்) மக்கள் விரும்பிக் குடியேறியிராத பிரதேசமாக விளங்கியது. இத்தகு நிலையில் தனது தலைநகரை இடம் மாற்றுவதற்கு உக்கிரசிங்கன் விரும்பினான். இதனையே முதலியார் செ. இராசநாயகம், உக்கிரசிங்கன் சிவவழிபாடுடையவனானபடியால், புத்தபள்ளிகள் நிறைந்த கதிரமலையிலும் சிங்கை நகரே சிறந்ததென நினைத்தான் போலும் என்கிறார். சைவம் சிறப்புறக்கூடிய புதியதொரு பிரதேசத்தை அவன் தெரிவு செய்ய விரும்பினமையின் விளைவே, சிங்கைநகர் புதிய தலைநகராக மாறியது.
3.3 சிங்கைநகர் எது?
உக்கிரசிங்கன் புதிய தலைநகர் ஒன்றினைத் தன் இராச்சியத்தில் உருவாக்க விரும்பி வன்னிப்பிரதேசத்தில் திக் விஜயம் ஒன்றினை மேற்கொண்டான். அவன் வன்னி மார்க்கமாகச் செல்லுகையில் வன்னியர்கள் ஏழுபேரும் எதிர்கொண்டு வந்து வன்னி நாடுகளைத் திறைகொடுத்து ஆள உத்தரவு கேட்டார்கள்." உக்கிரசிங்கன் அதற்குச் சம்மதித்தான். அப்பிரதேசத்தில் அவன் உருவாக்கிக் கொண்ட தலைநகர் சிங்கைநகராகும். வடவிலங்கை இராச்சியத்தின் தலைநகரின் பெயர் சிங்கை அல்லது சிங்கைநகர் எனச் செகராசசேகரமாலை, செகராசசேகரம், தகூழிணகைலாசமலை ஆகிய நூல்களிலே குறிப்பிடப்பட்டுள்ளது.ஆரியச் சக்கரவர்த்தி, ஒருவனைக் குறிப்பிடுகின்ற கல்வெட்டாக இலங்கையிலே கிடைத்துள்ள ஒரே ஒரு கொட்டகமக் கல்வெட்டிலும் சிங்கை நகரே ஆரியச் சக்கரவர்த்தியின் அரசிருக்கையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது." இப்பெயர் வருவதற்கான காரணத்தை ஆராய்வது பொருத்தமானது. ‘சிங்கைநகர்’ (சமஸ்கிருதம் - ஸிங்ஹ நகர) என்ற பெயர் கலிங்கநாட்டு நகரங்களுள் ஒன்றாகிய ஸிங்ஹபுரத்தின் தொடர்புடைய பெயர் என்று கொள்ள இடமுண்டு. கலிங்க நாட்டு வம்சங்களுள் ஒன்று கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு தொடங்கி பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையாவது ஸிங்கபுர என்ற தலைநகரிலிருந்து ஆட்சி நடத்தியது என அறிகிறோம் என
9. மே. க. நூல், பக்கம்-29. 10. யாழ்ப்பாணம் வைபவமாலை, மு. கு. நூல், பக்கம் - 14. 1. இந்திரபாலா. கா., மு. கு. கட்டுரை, பக்கம் - 49.

Page 36
60 யாழ்ப்பாண அரச பரம்பரை
இந்திரபாலா குறிப்பிடுகிறார்." சோழன் முதலாம் பராந்தகனின் தலைநகர்களில் ஒன்று சிங்கபுரமாகும். இம்மன்னன் ஈழத்தைத் தனது ஆட்சியின் கீழ் வைத்திருந்தான். உத்தரதேசத்திலும் இவனது ஆட்சி நிலவியது. அத்தலைநகரின் பெயர் இங்கு வழங்கலாயிற்று எனப் புஸ்பரத்தினம் கருதுகிறார்." ஆனால் சிங்கைநகர் என்ற பெயர், முதன்முதல் கதிரமலையிலிருந்து தலைநகரை வேறிடத்திற்கு மாற்றிப் புதிய தலைநகர் ஒன்றினை உருவாக்கிய உக்கிரசிங்கனின் பெயரைத் தாங்கி சிங்க(ன்) நகர் என விளங்கியிருந்தது எனக் கொள்வதே சாலப் பொருத்தமானது."
தமிழரசின் ஆரம்பத் தலைநகரான சிங்கை நகர் என்பது யாழ்ப்பாணத்திற்கு வெளியே வன்னிப்பிராந்தியத்தில் குறிப்பாகப் பூநகரியில் இருந்ததெனக் கூறமுடியும். வல்லிபுரப் பகுதியிலேயே சிங்கைநகர் இருந்ததெனவும், நல்லூருக்கு அருகில் இருந்ததெனவும் வரலாற்றாசிரியர்கள் கொள்வது ஏற்றதாகவில்லை. சிங்கைநகரை உக்கிரசிங்கன் பூநகரிப்பகுதியிலே நிறுவினான் என்பது பொருத்தமானது. ப. புஸ்பரட்ணத்தின் ஆய்வுகளில் இருந்து பூநகரிப் பிரதேசம் பண்டைய இராச்சியம் ஒன்றின் வளமான பிரதேசமாக விளங்கியிருக்கிறது எனத் தெரிகிறது. பூநகரிப் பிரதேசத்தில் கிடைத்த அகழ்வாராய்ச்சிப் பொருட்கள் இதனை நிரூபிக்கின்றன.
சிங்கள நூல்களிலிருந்தும் கம்பளைக் கல்வெட்டிவலிருந்தும் சிங்கைநகர் அலையெறியும் கடற்கரையோரத்தில் அமைந்திருந்தது எனத் தெரிகிறது. 'பொங்கொலி நீர்ச்சிங்கைநகராரியன்’ என கோட்டகமக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. யாழ்ப்பாணக் கடனீரேரி அன்று பொங்கு கடலாகவே விளங்கியது. சுண்டிக்குள மணல்தடை, ஆனையிறவு மணல் அணை, பண்ணைப் பாலம், பொன்னாலைப் பாலம் எதுவுமின்றி இந்து சமுத்திரத்தின் கிழக்கு-மேற்கு இணைப்பு, இக்கடனீரேரியைப் பொங்கு கடலாக வைத்திருந்தது." யாழ்ப்பாணக் குடா நாட்டின் தரைக்கீழ்
12. மே.கு. கட்டுரை, பக்கம் - 55.
13. புஸ்பரத்தினம் ப, மு. கு. நூல், பக்கம் -41
14. குணராசா க. ஈழத்தவர் வரலாறு, கொழும்பு-1996, பக்கம் - 60.
15. குணராசாக, நல்லூர்க் கந்தசுவாமி கோயில் வரலாற்றில் திருத்தம், வீரகேசரிவாரமலர்,
27.08.1995, பக்கம் 9.

யாழ்ப்பாண அரச பரம்பரை 61
நீர்வளத்தின் பயன்பாட்டை உணராத எமது மூதாதையினரான பண்டைய தமிழ் மக்கட் கூட்டத்தினர் தமக்குப் பரிச்சயமான தரைமேல் வடிகாலமைப்பைக் கொண்ட நதிகள் பாய்கின்ற வன்னிப்பிரதேசத்தை ஆரம்பத்தில் தமது வதிவிடங்களாகக் கொண்டிருந்தனர் எனக் கொள்ளலாம். பூநகரி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய பிரதேசங்களின் தரையமைப்பும் வடிகாலமைப்பும் நீர்ப்பாசனக்குளங்களை நிறுவிப் பயிர்ச்செய்கை பண்ணச் சாதகமான நிலமை அவர்களால் ஆரம்பத்தில் விரும்பப்பட்டிருக்கின்றது. தரைமேல் வடிகாலற்ற யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பிரதேசமானது, மணல்கிராமமாகவும் (வலிகாமம்), மணற்றியாகவும், (வடமராட்சி) எமது பண்டைய மக்களால் கருதப்பட்டு, விரும்பிக் குடியேற்றப்படாது இருந்தது. எனவே தமிழரது பண்டைய குடியிருப்புகள் யாழ்ப்பாணக்குடா நாடு தவிர்ந்த பெருநிலப்பரப்புகளில் கூடுதலாக அமைந்திருந்தன என்பதில் எவ்வித ஐயமில்லை."
சிங்கை நகரிலிருந்து அவனரசு செய்யுங்காலத்தில் நரசிங்கன் என்னும் ஒர் ஆண்மகவும் செண்பகவதி என்னும் ஒரு பெண்மகவும் பிறந்தார்கள். உக்கிரசிங்கனின் பின் நரசிங்கன், ஜெயதுங்க பரராசசிங்கன் என்னும் நாமத்துடன் அரசனானான். அவன் அரசியற்றும் நாளிலே யாழ்ப்பாடி என்னும் பாணகுலத்தவனொருவன். பரிசில் பெறுவான் வேண்டி அரசவைக்கு வந்து தனது திறமையைக் காட்டினான். அரசன் மகிழ்ந்து இப்போது கரையூர், பாசையூர் என்றழைக்கப்படுவதாகிய மணல் மேட்டைப் பரிசிலாகக் கொடுத்தான். யாழ்ப்பாடியும் உவகையுடன் ஏற்று, தன்னுார் சென்று தன்குலத்தவருடன் வந்து அவ்விடத்தைத் திருத்தி குடியேறினான். அவ்விடம் யாழ்ப்பாணம் என்றழைக்கப்பட்டது. அப்பெயர் பின் பறங்கிக்காரர் கட்டிய நகருக்காகி ஈற்றில் குடாநாடு முழுவதற்குமுரியதாகி விட்டது."
கண்தெரியாத ஒரு யாழ்ப்பாடிக்கு இசைக்குப் பரிசாகத் தனது இராச்சியத்திற்கு வடக்கே இருந்து ஒரு மணல்வெளியே தமிழ்மன்னன் ஒருவன் பரிசளித்ததாகக் கூறும் இச்சம்பவத்தின் உண்மை பொய்
16. குணராசா க, மு. கு. கட்டுரை, பக்கம் - 9. 17. மே. கு. நூல், பக்கம்- 29.

Page 37
62 யாழ்ப்பாண அரச பரம்பரை
எவ்வளவு என்பதை ஆராய்வதைவிடுத்து மணல் வெளியாகக் கருதப்பட்ட யாழ்ப்பாணம் வடக்கேயிருந்தது என்றால், அதைப் பரிசாகத் தந்த மன்னன் இருந்தவிடம் தென்நிலப்பரப்பாக இருந்தது என்பது ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதே."
3. 4. பாண்டியர் படையெடுப்பு
தென்னிந்தியாவில் தமிழரசுகள் வலிமை பெற்றிருந்த காலவேளைகளில் கடல்கடந்து இலங்கை மீது படையெடுப்புகள் மீண்டுந் தொடங்கின. சிங்கை நகரிலிருந்து ஜெயதுங்கன் வடவிலங்கையை ஆண்ட காலத்தில், முதலாம் சேனன் என்பான் அனுராதபுரத்திலிருந்து ஆட்சி செய்தான். பூரீமாற வல்லபன் (கி. பி. 815-862) என்ற பாண்டிய மன்னன் இலங்கைக்கு படையெடுத்து வந்து ஜெயதுங்கனை வென்றதோடு, சேனனையும் புறுமுதுகிடச் செய்து திறை பெற்றுச் சென்றான்."
ஜெயதுங்கனின் பின்னர் உத்தரதேசத்தை அவன் சந்ததியினரே ஆண்டிருக்கவேண்டும். அவர்கள் தென்னிந்தியத் தமிழரசர்களுக்கு அல்லது தென்னிலங்கைச் சிங்களவரசர்களுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருந்திருக்க வேண்டுமெனத் துணியலாம். ஒன்பதாம் நூற்றாண்டில் உத்தரதேசம், 2ம் கஸ்ஸப மன்னனின் ஆதிக்கத்தின் கீழ் உட்பட்டிருந்தது என்பதை கந்தரோடைக் கல்வெட்டியிலிருந்து அறியலாம் என கா.இந்திரபாலா குறிப்பிடுகிறார். மேலும் பத்தாம் நூற்றாண்டில் உத்தரதேசம் 4ஆம்'மஹிந்த என்ற சிங்கள மன்னனின் ஆதிக்கத்துட்பட்டிருந்தது. பத்தாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிலிருந்து ஒரு படையெடுப்பு யாழ்ப்பாணத்திலே நடைபெற்றபோது, அப்பொழுது அநுராதபுரத்தை ஆண்டு கொண்டிருந்த நான்காம் மஹிந்த மன்னன் (956-972) உடனே யாழ்ப்பாணத்துக்கு படையனுப்பி அப்பகுதியை மீண்டும் விடுவித்தான் என சூளவம்சம் கூறும். படையெடுப்பு நடாத்திய தென்னிந்திய மன்னன் சுந்தரசோழன் எனப்படும் 2ம் பராந்தகனாவான்." பின்னர் மீண்டும் கி. பி. 1003இல் ராஜராஜசோழன் இலங்கை மீது படையெடுத்து வெற்றி கொண்டான்."
18. குணராசா க, மு. கு. கட்டுரை, பக்கம் - 9. 19. இந்திரபாலா, கா., மு. கு. கட்டுரை. 20. இந்திரபாலா, கா, மு. கு. கட்டுரை. 21 மே, கு. கட்டுரை.

யாழ்ப்பாண அரச பரம்பரை 63
3. 5. சோழராட்சி
உருகுணை தவிர்ந்த பிறபாகங்கள் சோழராட்சிக்குட்பட்டன என்று சூளவம்சம் கூறுமிடத்து யாழ்ப்பாணப் பகுதியும் பொலநறுவையிலிருந்து ஆட்சி நடத்திய சோழருடைய ஆதிக்கத்திற்குள் அடங்கியிருந்தது என்பது மறைமுகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதினோராம் நூற்றாண்டில் சோழ ஆட்சியின் போது பொறிக்கப்பட்ட சில கல்வெட்டுகள் யாழ்ப்பாணத்தில் கிடைத்துள்ளன. முதலாவது சாசனம் முதலாம் ராஜேந்திரசோழன் காலத்தது. இது யாழ்ப்பாணக் கோட்டைக்குள்ளே கண்டுபிடிக்கப்பட்டது. வேறு இரு சோழராட்சிக் காலத்துச் சாதனங்கள் ஊர்காவற்றுறைக் கோட்டைக்குள்ளே கண்டுபிடிக்கப்பட்டன. இவை அனைத்தும் பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதியில் சோழராட்சி உத்திரதேசத்தில் நிலவியதை உறுதிப்படுத்துகின்றன.*
உத்தர தேசத்தை சோழரால் நியமிக்கப்பட்ட அரசுப் பிரதிநிதிகள் பலர் நிர்வகித்து வந்தார்கள் என நம்ப இடமுண்டு. கி. பி. 948 ஆம் ஆண்டளவில், புவனேகபாகு அல்லது புவனேசவாசர் என்பவர், சிங்கைநகர்ப் பகுதிக்குரிய அரசப் பிரதிநிதியாக இருந்திருக்கவேண்டும். (புவனேகவாகு தமிழ்ப்பெயர், வீரவாகு போல) இவன் சோழபராந்தகனின் பிரதிநிதியாக இங்கு நியமனம் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் கி. பி. 945 காலகட்டத்தில் சோழப் பராந்தகன் படையெடுத்து இலங்கைக்கு வந்து சிங்களவரசனான 4ஆம் உதயனைப் புறங்கண்டான் என்றும், சிங்கைநகர் அரசனைக் கொன்றான் என்றும் வரலாற்றுக் குறிப்புள்ளது.* இச்சோழ மன்னனின் பிரதிநிதியாகப் புவனேகவாகு சிங்கைநகரில் ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளான். ነ
பத்தாம் நூற்றாண்டிலே பார்சியாவின் அரசனான டோபாக் என்பவன், கர்ஷாஸ்ப் என்பவனின் தலைமையில் அனுப்பிய படை ஒன்று கலா என்ற துறையில் (கலா என்பது ஊர்காவற்றுறை-களபூமி) இறங்கி இருநாட் பயண தூரமுள்ள ஓரிடத்தில் வாகு வென்னும் அரசனை வெற்றி கொண்டது என்று அசேதி என்ற பார்சியன் கர்ஷாஸ்ப் நமா என்னும்
22. இந்திரபாலா கா. மு. கு. கட்டுரை 23. இராசாநாயகம் செ.மு. கு. நூல், பக்கம் - 33,

Page 38
64 யாழ்ப்பாண அரச பரம்பரை
கிரந்தத்தில் எழுதியுள்ளான். பத்தாம் நூற்றாண்டில் வாகு என்னும் பெயருடன் இலங்கை அரசரில் யாழ்ப்பான மொழிந்த பிறவிடத்தில் எவருமிருந்திலர்.* வாகு என்று பார்சிய நூல் குறிப்பிடும் மன்னன் அல்லது சிற்றரசன் இந்தப் புவனேகவாகுவாக இருக்கலாம்.
கி. பி. 10 ஆம் நூற்றாண்டளவில் பூநகரிப் பிரதேசம் சோழரின் ஆட்சிக்குட்பட்டிருந்தது என்பதற்கு ஆதாரங்களுள்ளன. அவ்வேளையில் அப்பிரதேசத்தின் சோழப்பிரதிநிதியாகவிருந்த புவனேகவாகு, பூநகரியில் இன்று விளங்குகின்ற நல்லூர் என்ற பகுதியில் தனது மாளிகையை அமைத்திருக்க வேண்டும், உண்மையில் இன்று கிடைக்கின்ற ஆதாரங்களிலிருந்து பூநகரியில் இன்று இருக்கின்ற நல்லூர் என்ற பிரதேசமே தமிழர் அரசின் புராதன நல்லூர் ஆகும் எனக் கொள்வதில் தவறு இல்லை. தென்னிந்தியாவில் பல ஊர்களுக்கு நல்லூர் எனப் பெயருள்ளது. ஆகவே, அத்தகைய ஒரு பெயர் பூநகரியிலுள்ள இந்தப் பிரதேசத்திற்கும் சோழரால் இடப்பட்டிருந்தது எனக் கொள்ளலாம்.* முதலாம் பராந்தகன் ஆட்சியில் தான் தமிழ்நாட்டிலுள்ள சோழமண்டலமும் மண்ணியாறும் இதன் தென் எல்லையிலுள்ள நல்லூரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகக் கூறப்பட்டுள்ளன. குஞ்சரமல்லன் என்ற பராந்தகனின் சிறப்புப்பெயர் மண்ணியாற்றின் மறுபெயராக அழைக்கப்பட்டது. பூநகரியில் இராசதானிக்குரிய கட்டிட அழிபாடுகளின் தென்னெல்லையில் சோழமண்டலமும், வடவெல்லையில் மண்ணியாறும் அதற்குச் சற்றுவடக்காக நல்லூர் என்ற இடமும் காணப்படுகிறது.*
பதினோராம் நூற்றாண்டில் இலங்கையிலிருந்து சோழரைத் துரத்தி விட்டு, இலங்கை முழுவதற்கும் முதலாம் விஜயபாகு (1055-1110) அரசனானான். அவன் ஆட்சிக் காலத்தில் வடவிலங்கை அவனாட்சியில் கீழ்ப்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து புராதன பௌத்த விகாரைகளுள் ஒன்றாகிய ஜம்புக் கோல விகாரையை புதுக்க அமைப்பித்தான் என சூளவம்சம் கூறுவதிலிருந்து இது உறுதிப்படுகின்றது."
24 மு. கு. நூல், பக்கம். 25. குணராசா க, மு. கு.கட்டுரை, பக்கம் -15, 26. புஸ்பரட்ணம் ப, மு. கு. கட்டுரை, பக்கம் - 15. 27. இந்திரபாலா கா, மு. க. கட்டுரை.

யாழ்ப்பான அரச பரம்பரை 65
விஜயபாகு இறந்த பின் கி. பி. 1110 ஆம் ஆண்டளவில் குலோத்துங்க சோழன், சோழராட்சியை மீண்டும் நிலைநாட்ட இலங்கைமீது படையெடுத்தான். அப்படைக்குத் தலைமை தாங்கி வந்தவன் கருணாகரத் தொண்டைமான் என்னும் தளபதியாவான்." அவன் யாழ்ப்பாணத்தைச் சிலகாலம் நிர்வகித்தான் என நம்ப இடமுள்ளது. இவனே தொண்டைமானாற்றைத் துறைமுகமாக்குவித்தான். தொண்டைமானாற்றில் விளைந்த தன்படுவான் உப்பை (தானாக விளையும் உப்பு) சோழ நாட்டிற்கு ஏற்றுவித்தான். உரும்பிராயிலுள்ள கருணாகரப் பிள்ளையார் கோயிலை இவனே அமைப்பித்தான்.*
பன்னிரண்டாம் நூற்றாண்டில், உத்திரதேச அரசு, தென்னிலங்கை ஆட்சியாளரின் ஆதிக்கத்தினுள் மீண்டும் உட்பட்டது. அவ்வேளை முதலாம் பராக்கிரமபாகு (கி. பி. 1153-1286) இலங்கையின் மன்னனாக இருந்தான். இதற்கு ஆதாரமாக நயினாதீவில் அகப்பட்ட கல்வெட்டொன்றும், தென்னிந்தியாவில் திருவாலங்காட்டிலே கிடைத்த கல்வெட்டொன்றும் ஆதாரமாகவுள்ளன. முன்னதில் ஊர்காவற்றுறையிலே நடைபெற்ற கடல் வாணிபம் பராக்கிரமபாகுவின், ஆதிக்கத்திற்குட்பட்டிருந்தது என்பதையும், பின்னதில் ஊறாத்துறை, மட்டிவில், வல்லிக்காமம் ஆகிய இடங்களிலே பராக்கிரம பாகுவின் கடற்படை நிறுத்தப்பட்டிருந்தது என்பதையும் அறிய முடிகின்றது."
பதின்மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை சிங்கை நகர் வட விலங்கையின் தலைநகராகவும், இந்த அரசு சோழரின் ஆதிக்கத்தினுள்ளும் இருந்தது.
28. இராசநாயகம், செ, மு. கு. நூல். 29. மு. கு. நூல். 30. மு. கு. நூல்.

Page 39
அத்தியாயம் நான்கு
யாழ்ப்பாண இராச்சியம்: விஜய காலிங்கன்
யாழ்ப்பாண இராச்சியத்தின் தொடர் வரலாற்றில் பதின்மூன்றாம் நூற்றாண்டு, மிக முக்கியமான காலகட்டமாகும். சுதந்திரத்தமிழ் இராச்சியம் நிறுவப்பட்டு நிலைகொண்ட காலமிதுவென வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவர். ஆரியச் சக்கரவர்த்தி எனச் சிறப்புப் பெயரோடு விதந்தோதப்படும் தமிழ் மன்னர்களின் ஆட்சிக்கால ஆரம்பமாக பதின்மூன்றாம் நூற்றாண்டு விளங்குகின்றது.
அவர்கள் இராமேஸ்வரத்துப் பிராமணவரச குடியிற் சம்பந்தஞ் செய்த பின், உபவீதம் அணிந்து, ஆரிய அரசர் என்ற நாமம் புனைந்து, இராமேஸ்வரத்தை தந்தேயத்தினாளுகைக்குட்படுத்தி, அதனால் சேதுகாவலன்' என்ற புதுப்பெயர் புனைந்து, விடைக்கொடியும் சேதுலாஞ்சனையும் பொறித்து, ஒருவர் பின் ஒருவராகப் பரராசசேகரன், செகராசசேகரன் எனச் சிங்காசனப் பெயர்கள் பூண்டு உலகம் போற்ற அரசு செலுத்தி வந்தார்கள்." என ஆரியச் சக்கரவர்த்தி நாமத்திற்கான காரணம் கூறப்படுகிறது.
4.1 கலிங்கமாகன்
கி.பி. 1215 ஆம் ஆண்டு கலிங்கமாகன் என்ற மன்னன் இலங்கையைக் கைப்பற்றி, 1236ஆம் ஆண்டு வரையும் இருபத்தோரு வருடங்கள் பொலநறுவையிலிருந்து ஆட்சி செலுத்தினான். இலங்கை வரலாற்றில் கலிங்கமாகனின் படைபெயடுப்பும் ஆட்சியும் மிக முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படக்கூடியது. கலிங்கமாகன் தென்னிந்தியாவிலிருந்து இருபத்தினாலாயிரம் தமிழ்க் கேரளப்படை வீரர்களுடன் வந்து பொலநறுவையை கைப்பற்றிக் கொண்டான்.
1. இராசநாயகம், செ, யாழ்ப்பாணச் சரித்திரம், யாழ்ப்பாணம் - 1933.

யாழ்ப்பாண அரச பரம்பரை 67
பொலனறுவை யுகத்தின் பிற்பகுதியில் ஏற்பட்ட அரசியற் குழப்பங்கள் மாகனின் வெற்றிக்குச் சாதகமாக அமைந்தன. இவன் தென்னிந்தியா விலிருந்து படையெடுத்து வந்தானா அல்லது உத்தரதேசத்தின் ஒரு பகுதியிலிருந்து தண்டெடுத்தானா என்பது ஆய்வுக்குரியது. இவனுடைய படைவீரர்களும் இவனுக்குதவியாக வந்த ஜயபாகுவின் படைவீரர்களும் தங்குவதற்கு அரசன் அமைந்திருந்த விடங்களாக ஊர்காவற்றுறையும் வலிகாமமும் அமைந்திருந்தனவெனச் சூளவம்சம் கூறுகிறது. இதனைப் பூஜாவலிய என்ற சிங்கள வரலாற்று நூலும் உறுதிப்படுத்துவதாக இந்திரபாலா குறிப்பிடுகிறார். இவற்றிலிருந்து உத்தரதேசத்தின் ஒரு பகுதியிலிருந்து மாகனின் படையெடுப்பு நிகழ்ந்ததாகக் கூறலாம். &
மாகன் பொலநறுவையில் தன் ஆட்சியை நிலைப்படுத்திக் கொண்டான். சிங்களவரால் தமிழரிடமிருந்து கைப்பற்றப்பட்டிருந்த நிலங்கள், சொத்துக்கள் என்பனவற்றை இவன் மீளப்பறித்துத் தமிழருக்குக் கொடுத்தான். இதனைச் சூளவம்சம் இவ்வாறு கூறும் : சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே தர்மமான சமத்துவம் பாராட்டிய எல்லாளனைப் போல மாகன் விளங்கவில்லை. இவன் தன் தமிழ்த்துணைவரிடம் விசேஷமாக அன்பு பாராட்டி அவர்களுக்கு வயல்களும், புற்றரைகளும், வீடுகளும், தோட்டங்களும், பணியாட்களும், மாடுகளும், எருமைகளும், தொகுத்துக் கூறுங்கால் சிங்களவரின் உடமைகள் யாவற்றையும் கொடுத்தான். அந்தோ, காலனின் பூதங்கள் போன்ற அந்தத் தமிழ்ப் பூதங்கள் இப்படியே இந்த இராச்சியத்தையும், சமயத்தையும் அழித்தனர் எனச் சூளவம்சம் புலம்பும். தமிழர் பிரதேசங்களைச் சிங்கள ஆதிக்கத்திலிருந்து மீட்டு இராசரட்டை எனப்படும் வடபகுதியில் குடியேறியிருந்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களைத் தென்புலம் பெயர வைத்தவன் மாகன் ஆவான் எனச் சில வரலாற்றாசிரியர் கருதுவர். பொலநறுவையைப் பாழாக்கி அங்கிருந்த புத்த பள்ளிகளையிடித்து,
2. சூளவம்சம் , 83-17.
இந்திரபாலா.கா, யாழ்ப்பாண இராச்சியம் தோன்றிய காலமும் சூழ்நிலையும், இளங்கதிர், பேராதனை - 1969/70 பக்கம் - 18.
4. சூளவம்சம்.
5. குணராசா, க. குடியேற்றங்களால் இழந்து போன தமிழ்ப்பிரதேசங்கள், முத்தமிழ்
விழாமலர்-1991, பக்கம் 132.

Page 40
68 யாழ்ப்பாண அரச பரம்பரை
புத்தபிக்குகளை அவ்விடத்திலிருந்து துரத்தி, வேறுமனேக கொடுந்தொழில்களைச் செய்து, பழிபாவத்திற்கு அஞ்சாதவனாய் பொலனறுவையில் அரசாண்டிருந்தானெனச் சிங்கள நூல்கள் குறிப்பிடுவதாக இராசநாயகம் குறித்துள்ளார். இவனை ஒரு வீரசைவனாகக் கூறும் வரலாற்றாசிரியர்கள் மட்டக்களப்பில் இம்மதம் வளர்ச்சியடைய இவன் ஆட்சிக் காலமே காரணம் எனவும் கூறுவர்." இவனை ஒரு தமிழ் மன்னனாகக் கூறும் மட்டக்களப்பு மான்மியம் இந்து மதத்திற்கு இவன் ஆற்றிய பணிகள் பற்றிச் சிறப்பாகக் கருத்துரைக்கின்றது. தவறான மதக்கொள்கையைப் பின்பற்றியவன் எனக்கூறும் சூளவம்சம் இவன் விகாரைகள், வழிபாட்டிடங்கள் முதலியவற்றைத் தனது படைவீரர்களின் வதிவிடங்களாக மாற்றினான் எனவும் கூறுகிறது."
கலிங்கமாகன் ஆட்சியில் சிங்கள மக்களும் பெளத்தமதமும் பெரிதும் பாதிப்புற்றன. ஆதரவை இழந்தன என்க கொள்ளலாம். அவர்களைப் பொறுத்தளவில் மாகன் பெருங்கொடுங்கோலனாக விளங்கியுள்ளான். இவனுடைய ஆட்சி தமிழருக்குச் சார்பாக இருந்ததனால் இவன் மீது வெறுப்படைந்த சிங்கள மக்கள் 250 ஆண்டுகள் தலைநகராக விளங்கிய பொலனறுவையைக் கைவிட்டு தென்னிலங்கை நோக்கி இடம் பெயர்ந்தனர். புதிய சிங்கள ஆட்சியின் தலைநகராகத் தம்பதெனியா உருவாக்கப்பட்டது. சிங்கள மக்கள் பாதுகாப்புக்கருதித் தெற்கு நோக்கித் தமது இராசதானிகளை காலத்திற்குக் காலம் அமைத்தபோது வடக்கே பலமான தமிழ் இராச்சியம் ஒன்று உருவாகியது.
கலிங்கமாகனின் ஆட்சியில் சிங்கள மக்களுக்கும் பெளத்தமதத்திற்கும் எதிராக நிகழ்ந்த சம்பவங்களின் எதிரொலி இராசரட்டைப் பிரதேசத்தில் மட்டுமன்றி உத்திரதேசத்தில் குறிப்பாக நாகதீபத்திலும் (யாழ்ப்பாணக் குடாநாட்டில்) எதிரொலித்துள்ளது என ஊகிக்க இடமுண்டு. வலிகாமம் (கதிரைமலை - கந்தரோடை, காசாத்துறை
6. இராசநாயகம், செ.மு. கு. நூல், பக்கம் 49
7. புஸ்பரட்ணம், ப, இலங்கையில் தமிழ் மன்னர்களின் ஆட்சி - பொருளிதழ் - 3.
யாழ்ப்பாணம் - பக்கம் 11
8. புஸ்பரட்ணம், ப, நாகரிகம் தென்மேற்குத் திசை நோக்கிய இடம் பெயர்ந்தமையும்,
இராச்சியங்கள் இடம்மாறியமையும், வரலாறு - 9, யாழ்ப்பாணம் 1992, பக்கம் - 57.

யாழ்ப்பாண அரச பரம்பரை 69
- காங்கேயன்துறை ஜம்புக்கோளப்பட்டினம் - திருவடிநிலை), வல்லிபுரம் முதலான பகுதிகளில் பரவி வாழ்ந்த சிங்கள பெளத்தர்களும் தமது பாதுகாப்புக்கருதி யாழ்ப்பாணக்குடாநாட்டைவிட்டு இடம்பெயர நேர்ந்தது என ஊகிக்கலாம். அதனால் தான் யாழ்ப்பாண இராச்சியம் தோற்றம் பெற்றபோது, அல்லது பூநகரின் சிங்கைநகரிலிருந்து தமிழர் இராச்சியம் யாழ்ப்பாணத்திற்கு இடம்மாறியபோது மக்கட் குடியேற்றங்களை யாழ்ப்பாணக்குடாநாட்டில் நிறுவநேர்ந்தது. மாகனின் பொலநறுவைக் கைப்பற்றலின் விளைவாக எப்படி இராசரட்டைச்சிங்கள மக்கள் தென்புலம் பெயர்ந்தார்களோ அதேபோல மாகனின் தோல்லியுடன் உத்தரதேசத் தமிழ் மக்கள் வடக்கு நோக்கி இடம்பெயர நேர்ந்துள்ளது. இதுபற்றிப் பின்னர் விரிவாக ஆராய்வோம்.
சோழர் மறைந்தாலும் சோழராட்சிஈழவரலாற்றில் குறிப்பாகத் தமிழர் வரலாற்றில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது. சோழராட்சியின் தவிர்க்க முடியாத விளைவு யாதெனில் ஈழத்தின் மதத்துறையிலும் பண்பாட்டுத் துறையிலும் இருந்து - பிராமண சைவசமய நடைமுறைகளும் திராவிடக்கலையும், கட்டிடக்கலையும் தமிழ்மொழியும் ஊடுருவி மிகப்பலம் வாய்ந்த முறையில் மேலோங்கியமையே, இக்காலந்தொட்டு ஈழத்தின் மீது தென்னிந்தியா செலுத்திய ஆதிக்கம் முற்றுமுழுதாக இந்துமத உள்ளடக்கத்தினையே கொண்டதாயிருந்தது. மாகனின் ஆட்சிக்காலத்தில் சைவசமயிகளும் தமிழரும் மேலாதிக்க மிக்க மக்களாக விளங்கினர். அதனால், பொலநறுவைக்கு வடக்கே இராசரட்டையில் வாழ்ந்த சிங்கள மக்கள் தென்புலம் பெயர்ந்ததுபோல, யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாழ்ந்த சிங்கள பெளத்தர்களும் குடாநாட்டைவிட்டு வெளியேறித் தென்புலம் பெயர நேர்ந்தது.
1236 ஆம் ஆண்டு 2 ஆம் பராக்கிரமபாகு என்ற சிங்கள மன்னன், கலிங்க மாகனைப் பொலநறுவையிலிருந்து துரத்தி விட்டான். அந்த யுத்தத்தில் கலிங்க மாகன் இறந்ததாக, ஆதாரமில்லை என்றும் அவன் வடவிலங்கைக்குத் தனது எஞ்சிய படைகளுடன் சென்றிருக்க வேண்டும்
9. சிற்றம்பலம், சி.க, தமிழ் மக்களின் பாரம்பரியப் பிரதேசம், முத்தமிழ் விழா மலர் - 1991
பக்கம் - 171

Page 41
70, யாழ்ப்பாண அரச பரம்பரை
என கா. இந்திரபாலா கூறுகிறார்." மதுரைக்கு இடம்பெயர்ந்திருக்க வேண்டுமெனச்சிலர் கருதுகின்றனர். எவ்வாறாயினும் 1236 ஆம் ஆண்டிலிருந்து 1242 ஆம் ஆண்டுவரை கலிங்கமாகன் எங்கிருந்தானென்பது தெளிவாகவில்லை. இக்குறித்த காலத்தில் வடவிலங்கையைப் பாண்டிமழவன் என்ற அதிகாரியே நிர்வகித்து வந்தானென்பது கயிலாயமாலையிலிருந்து புலனாகின்றது.
தென்னிலங்கைச் சிங்களவரசனின் அச்சுறுத்தல் ஆரம்பமானபோது பாண்டிமழவன் கயிலாயமாலையில் விபரித்தவாறு கரந்துறைந்திருந்த கலிங்கமாகனை வலிந்து அழைத்து வந்து விஜயகாலிங்க ஆரியச் சக்கரவர்த்தி என்ற நாமத்தோடு அரியணை அமர்த்தினான் என்று துணியலாம்.
பாண்டிமழவனைப்பற்றி கைலாயமாலை கூறுவனவற்றைப் புனைத்துரைகளென்றோ கற்பனைக் கதைகளென்றோ கொள்ள முடியாது." இவ்வாறு பாண்டிமழவனால் அழைத்துவரப்பட்டவன் விஜய கூழங்கைச் சக்கரவர்த்தி என யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது. யாழ்ப்பாண இராச்சியத்தின் முதலாவது ஆரியச் சக்கரவர்த்தி இவனே, விஜய கூழங்கை ஆரியச் சக்கரவர்த்தி என்றும் சிங்கை ஆரியன் என்றும் இவன் அழைக்கப்பட்டான். செகராசசேகரன் என்ற சிங்காசனப் பெயரையும் புனைந்து கொண்டான்.
யாழ்ப்பாண வைபவ விமர்சனம்' என்ற நூலில், சுவாமி ஞானப்பிரகாசகர் கூறுவது போல, விஜய கூழங்கை என்ற பெயர் விசயகாலிங்க என்ற பெயரின் திரிபாகும் எனக் கொள்ள வேண்டும்." முதலியார் செ.இராசநாயகத்திலிருந்து கா. இந்திரபாலா வரை இக்கூற்றின் மெய்மையை ஏற்றுக் கொள்கிறார்கள். விசயகாலிங்கன் என முடிவெடுக்கும் போது, விசயகாலிங்கனைக் கலிங்க மாகன் என அடையாளம் காண்பதில் சிரமமில்லை என வரலாற்றறிஞர்கள் கருதுகின்றனர்.
10. இந்திரபாலா, கா, மு.கு. கட்டுரை. 11 பத்மநாதன், எஸ். ஈழத்தமிழ் வரலாற்று நூல்கள், இளங்கதிர், பேராதனைப் .
பல்கலைக்கழகம் - - 1970. 12. ஞானப்பிரகாசர் சுவாமி, யாழ்ப்பாண வைபவ விமர்சனம், அச்சுவேலி - 1928.

யாழ்ப்பாண அரச பரம்பரை 71
கலிங்கமாகன் சிங்கைநகரின் மன்னனாக அமைந்ததால் சிங்கை ஆரியன் எனப்பட்டான். சிங்கைநகரிலிருந்து தலைநகரை மீண்டும் நாகதீபத்திற்கு (யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு) இடம்மாற்றிய பெருமை இந்தக் காலிங்க ஆரியச்சக்கிரவர்த்தியையே சேரும்.
4.2. புதிய தலைநகர் உருவாக்கம்
உக்கிரசிங்க மன்னன் கதிரமலை (கந்தரோடை) யிலிருந்து தனது தலைநகரைப் பூநகரிச் சிங்கைநகருக்கு மாற்றிக்கொண்டான். யாழ்ப்பாணக்குடாநாட்டில் பெளத்தமும் சிங்களவரும் ஆதிக்கம் பெற்றதால் இந்த தலைநகர் இடமாற்றம் நிகழ்ந்தது. மீண்டும் 13 ஆம் நூற்றாண்டில் இந்த நிலைமைமாறியது. நாகதீவிலிருந்து சிங்களவர்கள் தென்புலம் பெயர்ந்தனர். கலிங்கத்து மாகன் மீண்டும் உத்தரதேச மன்னனாகச் சிங்கைநகரில் முடிசூடிக்கொண்ட செய்தி, எஞ்சிய பெளத்த சிங்களவர்களையும் இடம்பெயரச் செய்திருக்குமென நம்பலாம்.
அக்கால நாகதீவில் தென்பகுதியில் இன்றைய நல்லூர்ப்பகுதியில் ஒரளவு வளர்ச்சி பெற்ற குடியேற்றம் ஒன்று காணப்பட்டிருக்க வேண்டும். யாழ்பாடிப் பரிசிலாகப்பெற்ற, யாழ்ப்பாணனால் உருவாக்கப்பட்ட குடியிருப்பு இதுவாகும். அதனால், இது யாழ்ப்பாணம் என்ற பெயரைப் பெற்றது. பதினைந்தாம் நூற்றாண்டிற்குப்பின் யாபாபட்டுன' எனவும், யாழ்ப்பாணம் எனவும் புகழ்பெறப்போகும் இந்த நகரம் முதலாவது ஆரியச்சக்கிரவர்த்தி காலத்தில் பெரியதொரு கிராமக்குடியிருப்பாக இருந்திருக்க வேண்டும். குடியிருப்புகளின் வளர்ச்சி அவ்வாறானதே.
வன்னிப்பிரதேசத்திலிருந்த சிங்கைநகரைப் புதியதொரு பிரதேசத்திற்கு, அதாவது குடாநாட்டிற்கு இடம்மாற்றுவதற்குப் பல்வேறு காரணங்களை வரலாற்று ஆவணங்களிலிருந்து ஊகித்தறிய முடிகின்றது. கலிங்கத்துமாகனின் படையெடுப்பினால் இராசரட்டையின் (வன்னியுட்பட) நீர்ப்பாசன நாகரீகம் அழிவுறநேர்ந்தது. பெளத்தத்தையும் சிங்களமக்களையும் இப்பகுதிகளிலிருந்து அகற்றும் நோக்கோடு இந்த வீரசைவனான கலிங்கத்துமாகன் எடுத்த நடவடிக்கைகள், ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளாக நன்கு பயிரிடப்பட்டு வந்த பரந்த வயல்நிலங்களை காடுபரவ வைத்தன. நீர்பாசனக்குளங்கள் கவனிப்பாரின்றி

Page 42
72 யாழ்ப்பான அரச பரம்பரை
சிதிலமடைந்தன. உத்தரரட்டையிலும் இராசரட்டையிலும் காட்டுநோய்களும் மலேரியாவும் மக்களைப்பிடித்து அழிவை ஏற்படுத்தின. வெள்ளப்பெருக்கும் வறட்சியும் இப்பகுதிகளில் சகசமாயின. மக்கள் செறிவாக வாழ்ந்த உலர்பிரதேசம், மக்கள் அரிதாக வாழும்பகுதியாக மாறியது. உத்தரதேசமும் இந்த நெருக்கடிக்குள்ளாகியது. அதனால், விசயகாலிங்கன் சிங்கைநகரிலிருந்து இராசதானியை வடக்கே நகர்த்த விரும்பியிருக்கலாம்.
ஆரம்ப வரலாற்றுக் காலத்தில் வன்னிப்பிரதேசத்தில் வரலாற்றுக் குடியேற்றங்கள் இருந்தன என்பதற்குச் சான்றுகளுள்ளன. இன்று இப்பிரதேசத்தில் பாழடைந்து கிடக்கும் நீர்ப்பாசனக்குளங்களும் நெல்வயல்களும் அழிபாடுகளும் இப்பிரதேசத்தின் வரலாற்றுக் காலக்குடியிருப்புகளை வலியுறுத்தும் சான்றுகளாகவுள்ளன. இப்பிரதேசத்தின் காடுகளிடையே சிதிலமடைந்து காணப்படும் குளங்களும் அவற்றின் முறிப்பு அணைக்கட்டுகளும் இப்பிரதேசத்தின் புராதன நீர்ப்பாசன நாகரீகத்தின் மேம்பாட்டைக் காட்டுவனவாகவுள்ளன. இப்பாழடைந்த வன்னிக் குளங்களின் நீர்ப்பாய் பரப்பில் வளர்ந்திருக்கும் இளங்காடுகள், கைவிடப்பட்ட வயல்களில் வளர்ந்த மீள்காடுகள் என்பதனைக் காட்டுகின்றன. இப்பாழடைந்த குளங்களையும் கைவிடப்பட்ட வயல்களையும் நோக்கும்போது இப்பிரதேசத்தில் மக்கட் குடியிருப்புகள் நன்கு அமைந்திருந்தமையைப் புரிந்து கொள்ள முடியும்."
இப்பண்டைக்குடியிருப்புகள் பலவும் பல்வேறு காரணங்களால் மக்களால் கைவிடப்பட்டு காடுகளால் மூடப்பட்டன. தென்னிந்தியப் படையெடுப்புகள் அடிக்கடி நிகழ்ந்தன. தென்னிலங்கையைக் கைப்பற்ற விரும்பிய படைவீரர்கள் வடவிலங்கையிலேயே பாசறை அமைத்துக் கொண்டனர். அதேவேளை தென்னிலங்கைப் படைகளும் இப்பிரதேசத்தினூடாக வடவிலங்ன்கயைத் தாக்க விரும்பின. இவை காரணமாக குடாநாட்டிற்கும் தென்னிலங்கைக்குமிடையில் நிலைமாறு வலயமாக அமைந்த வன்னிப் பிரதேசம் யுத்தகளமாக அடிக்கடி மாறநேர்ந்தது. இவ்வாறு அடிக்கடிநிகழ்ந்த போர்கள், மலேரியா போன்ற
13. யாழ்ப்பாண வைபவமாலை, குலசபாநாதன் பதிப்பு, சுன்னாகம்-1949 பக்கம் - 25. 14. குணராசா க. கிளிநொச்சியின் கதை, கந்தன் கருணை, கும்பாபிஷேக மலர்,
கிளிநொச்சி-1988, பக்கம் - 48.

யாழ்ப்பான அரச பரம்பரை 73
கொள்ளை நோய்களால் ஏற்பட்ட அழிவுகள், கடும்வறட்சி, வெள்ளப்பெருக்கு, இவை காரணமாக ஏற்பட்ட பஞ்சம்பசி என்பன யாவும் இந்தப் புராதன குளக்குடியிருப்புகளைக் கைவிட்டு மக்கள் வெளியேறக் காரணமாயின. இப்பிரதேசத்தில் பரவலாகக் குடியேறி வாழ்ந்த மக்கள் நான்கு திக்குகளாலும் குடிபெயர்ந்தனர். முக்கியமாக முல்லைத்தீவுக் கரையோரம், பூநகரிக்கரையோரம் என்பனவற்றிற்கும், அதிகமானோர் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கும் குடிபெயர்ந்தனர்."
சிங்கைபுரத்தைவிட்டு குடாநாட்டிற்கு இராசதானியை மாற்றிக் கொள்வதற்கு இன்னொரு காரணம், காலிங்க ஆசிரியச்சக்கரவர்த்திக்கு இயல்பாகவே சிங்கள மன்னனிடம் அடைந்த பெருந்தோல்வியின் தாக்கமும் தூண்டியிருக்கும் என ஊகிக்கலாம். தென்னிலங்கையிலிருந்து தாக்குதல்கள் தொடரலாம் என்ற அச்சம் காரணமாக வடக்கே பாதுகாப்பான ஓரிடத்தில் தலைநகரை மாற்ற அவன் விரும்பியிருக்கலாம். யாழ்ப்பாணஆனையிறவுக் கடனீரேரி இயற்கையான அகழிபோன்ற குடாநாட்டு இராசதானிக்கு அரணாக விளங்கியது. மக்களதிகரிப்பால் வன்னிப் பிரதேசத்திலேற்பட்ட நீர்ப்பற்றாகுறை, தரைக்கீழ்நீர்வளம் கொண்ட நன்னீர்ப் பிரதேசமான குடாநாட்டை நோக்கிநாடவைத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக தனது முன்னோர்களின் இராசதானியை மீண்டும் சைவச்சூழலில் தாபிக்க இம் மன்னன் விரும்பியுள்ளான்.
யாழ்ப்பாண வைபவமாலையின்படி விசயகாலிங்கனின் மந்திரியாகப் புவனேகபாகு என்பவன் இருந்திருப்பதாக அறிய முடிகின்றது." அவன் குடாநாட்டில் புதிய தலைநகரைத் தக்கவிடத்தில் தேர்ந்தெடுத்து உருவாக்கப்பணிக்கப்பட்டான். 'நல்லூர்ப்பகுதியிலே அரசிருக்கையை ஸ்தாபிக்கக் கருதி, சோதிடர்கள் தேர்ந்து சொல்லிய நன்மூசுடர்த்தத்தில் அஸ்திவாரம் போட்டு நாலுமதிலும் எழுப்பி வாசலும் ஒழுங்காய் விடுத்து மாடமாளிகைகளையும் கூட கோபுரங்களையும். கட்டுவித்து, நகர்ப்புகுந்ததாக வைபபமாலை கூறுகிறது." இதனையே கைலாயமாலையில் வரும் ஒரு தனிச்செய்யுள் பின்வருமாறு விளக்குகிறது."
15. குணராசா க, கரைச்சி பூநகரி, பச்சிலைப் பள்ளப்பிரதேசங்களின் நிலப்பயன்பாடும்
நீர்வளமும், முதுகலைமாணி ஆய்வுக் கட்டுரை, யாழ் பல்கலைக்கழகம் - 1984.
16. யாழ்ப்பாணம் வைபவமாலை, குலசபாநாதன் பதிப்பு, சுன்னாகம் 1949. பக்கம்- 25.
17. மே. கு. நூல், பக்கம் 26.
18. கைலாயமாலை, பக்கம் 23.

Page 43
74 யாழ்ப்பாண அரச பரம்பரை
இலக்கிய சகாப்த மென்னூற்றெழுபதா
மாண்ட தெல்லை
அவர்பொலிமாலை மார்பனாம் புவ
னேக வாகு
நலமிகு யாழ்ப்பாணத்து நகரி கட்
ழ வித்து நல்லைக்
குலவிய கந்த வேட்குக் கோயிலும்
புரிவித்தானே.
இத்தனிப்பாடலிலிருந்து மூன்று விபரங்கள் புலனாகின்றன. ஒன்று யாழ்ப்பாண நகரியைக் கட்டுவித்தவன் புவனேகவாகு, நல்லூர் கந்தசுவாமி கோயிலையும் இவனே கட்டுவித்தான். அது சக வருடம் எண்ணுாற்றெழுபதாமாண்டில் கட்டப்பட்டது எனலாம். யாழ்ப்பாண நகரி அமைக்கப்பட்ட ஆண்டின் மெய்ம்மையை முதலில் நோக்குதல் வேண்டும்.
யாழ்ப்பாண வைபவ விமர்சனம் என்ற சரித்திரநூலின் ஆசிரியரான நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் கருத்தின்படி, எண்ணுாற்றெழுபது என்பது 870 அன்று. ஆயிரமாகிய பேரெண்ணும் நூற்றியெழுபதும் சேர்ந்த கணக்காகுமெனத் தோன்றும். எண் என்றால் 1000. இந்த 1000+107 = 107. சக வருடம் 107 ஆம் ஆண்டு என்றால் அது கி. பி. 1248 ஆம் ஆண்டைக் குறிக்கும் என்பதாகும்." இந்த முடிவு சந்தேகத்திற்கு இடமின்றி ஏற்றுக்கொள்ளக்தக்கதாகும். இந்தக் குறித்த ஆண்டிற்கு முன் யாழ்ப்பாண நகரி இருந்தது என்பதற்கு எதுவித சான்றுமில்லை. 1242 ஆம் ஆண்டு வடவிலங்கையில் சிம்மாசனமேறிய காலிங்க ஆரியச்சக்கிரவர்த்தி, 1248 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாண நகரியை உருவாக்கி அங்கு தனது இராசதானியை அமைத்துக் கொண்டான் என்பது மிகப்பொருத்தமான முடிவாகும். எனவே, உக்கிரசிங்கன் காலத்தில் குடாந்ாட்டின் கதிரை மலையிலிருந்த தலைநகர் பெருநிலத்தின் சிங்கை நகருக்கு மாறியது. பின்னர் காலிங்க ஆரியன் காலத்தில் குடாநாட்டின் யாழ்ப்பாண நகரிக்கு மாறியது.
19. ஞானப்பிரகாசர் சுவாமி, யாழ்ப்பாண வைபவ விமர்சனம், நல்லூர் 1928 - பக்கம்.

யாழ்ப்பான அரச பரம்பரை 75
வீரசைவனான விஜயகாலிங்க ஆரியன் தான் புதிதாகக் கட்டுவித்த யாழ்ப்பாண நகரியிலும் இராசதானியிலும், ஆலயங்கள் பலவற்றை நிறுவியுள்ளான். அவன் தன் வழிபாட்டுத் தேவைக்காக கைலாயநாதன் கோயிலைக்கட்டுவித்தான். கயிலாயநாதருக்கும் உமையவளுக்குமென இருவேறான உயர்ந்த பெருங்கோயில்களையும் இவற்றோடு மூன்று சபைகள், பரிவாரத் தேவர்களுக்கான மாடங்கள், உக்கிராணசாலை, யாகசாலை, சுற்றுப்பிரகாரம், தேரோடும் வீதி, மடம், அன்னசத்திரம் முதலியவற்றையும் மிகச்சிறந்த முறையிலே அமைப்பித்தான் என்று சொல்லப்படுகின்றது.* அத்தோடு தனது தலைநகரின் கீழ்த்திசையில் வெயிலுகந்த பிள்ளையார் கோயிலையும், வடதிசையில் சட்டநாதர் கோயில், தையல்நாயகியம்மன் கோயில், சாலைவிநாயகர் கோயில் முதலியவற்றையும் கட்டுவித்தான்." இவற்றிற் சிலவற்றைப்பிற்காலத்திற் சிம்மாசனத்திலிருந்த பரராசசேகரன் கட்டுவித்ததாகக் கூறுவர். உண்மையிற் சிங்களப்படைகளால் அழிக்கப்பட்ட இக்கோயில்களைப் பரராசசேகரன் புனருத்தாரணம் செய்தான் எனக் கொள்வதே ஏற்றதாகும். யாழ்ப்பாண நகரிக்கு உத்தரதேச இராசதாளி மாறியதும், அது புதிய நகராகவும் புதிய இராசதானியாகவும் இருந்ததாலும், ஏற்கனவே குடாநாட்டிலிருந்து பெருந்தொகையான பெளத்தர்களும் சிங்களவரும் தென்புலம் பெயர்ந்துவிட்டமையாலும் புதிய யாழ்ப்பாண இராசதானிக்கு மக்கள் தேவைப்பட்டார்கள். நிலவளத்திற்கு ஏற்ப மனிதவளம் குறைந்து காணப்பட்டது. தென்புலம் பெயர்ந்த மக்களது தோட்டங்களும் வயல்களும் வதிவிடங்களும் மக்களின்மையால் தூர்ந்து போகத் தொடங்கின. எனவே, யாழ்ப்பாண இராச்சியத்தின் சமூக பொருளாதார அரசியற் படைப்பலத்தைக் கட்டியெழுப்புவதற்கு வேறிடங்களிலிருந்து மக்களைத் தருவித்துக் குடியேற்றங்கள் நிறுவுவது அத்தியாவசியமாகியது. எனவே யாழ்ப்பாண இராச்சியத்தின் முதல் மன்னன் விஜயகாலிங்க ஆரியன் தென்னிந்தியாவிலிருந்துமக்களை இங்கு குடியேற்ற வரவழைக்க நேர்ந்தது. இதனையே யாழ்ப்பாண வைபவமாலை, கைலாயமாலை முதலான நூல்கள் விபரிக்கின்றன.
திருநெல்வேலி, புலோலி, பச்சிலைப்பள்ளி, தொல்புரம், கோயிலாக் கண்டி, நெடுந்தீவு. பல்லவராயன் கட்டு, இணுவில், இருபாலை,
20. கயிலாயமாலை - பக்கம் 16-21 யாழ்ப்பாண வைபவமாலை, பக்கம் - 31-32. 21. வைபவமாலை, பக்கம் - 26.

Page 44
76 யாழ்ப்பாண அரச பரம்பரை
தெல்லிப்பளை, மயிலிட்டி முதலான ஊர்களில் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. வன்னியர்கள் குடியேற்றமும் நிகழ்ந்தது. கரிக்கட்டு மூலைப்பற்று, முள்ளியவளை, மேல் பற்று, மேற்குமூலை, கிழக்கு மூலை, திரியாய், கச்சாய், கட்டுக்குளம், திருக்கோணமலை, தம்பலகாமம், கொட்டியாரம், துணுக்காய், இத்திமடு, நெடுங்கேணி, நொச்சிமுனை, புல்வெளி, தனிக்கல் முதலான உத்தரதேசத்தின் பகுதிகளில் வன்னியர்கள் குடியேறினார்கள்.?
பொன்பற்றியூரைச் சேர்ந்த பாண்டிமழவன், சண்பகமழவன் ஆகியோர் திருநெல்வேலியில் குடியேறினர். அதேயூரைச் சேர்ந்த கனகமழவன் புலோலியிலும், கச்சூரைச் சேர்ந்த நீலகண்டன் பச்சிலைப் பள்ளியிலும், திருவொள்ளூரைச் சேர்ந்த கூபகாரேந்திரன் தொல்புரத்திலும், புல்லூரைச் சேர்ந்த தேவராயேந்திரன் கோயிலாக் கண்டியிலும், மதுராந்தகத்தைச் சேர்நத் இருமரபுந்துய்ய தனிநாயகன் நெடுந்தீவிலும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பல்லவராயன், பல்லவராயன் கட்டிலும், திருக்கோவிலூரைச் சேர்த்த பேராயிரமுடையான் இணுவிலிலும், மண்ணாடு கொண்ட முதலி இருபாலையிலும், காயல்பட்டினத்தைச் சேர்ந்த கனகராயன் தெல்லிப்பளையிலும், காவிரியூரைச் சேர்ந்த நரசிங்கதேவன் மயிலிட்டியிலும், வாலிநகரைச் சேர்ந்த செண்பகமாப்பாணன், சந்திரசேகரமாப்பாணன் ஆகியோர் தெல்லிப்பளையிலும் குடியேறினர்.* இக்குடும்பங்கள் தத்தமது அடிமை குடிமைகளுடன் அவ்விடங்களில் வந்து குடியேறினர். அத்தோடு தலையாரி முதலிய தலைவர்களை நியமிக்க விரும்பி, இமையான மாதாக்கனை வடபற்றுக்கும், வெற்றி மாதாக்கனைத் தென்பற்றுக்கும், செண்பக மாதாக்கனைத் கீழ்ப்பற்றுக்கும் நியமித்தான். வெற்றிமாத்தாக்கன் என்பவன் சேனைத் தளபதியாகினான்.*
சிங்கையாரியன் (விஜய காலிங்கன்) காலத்து யாழ்ப்பாணக் குடாநாட்டிலும், வன்னிப் பிரதேசத்திலும் ஏற்பட்ட தமிழர் குடியேற்றத்தின் பிரதான கட்டத்தையே கைலாயமாலை, வையாபாடல் ஆகிய நூல்கள் குறிப்பிடுகின்றன. இப்பிரதேசங்களின் ஆதிக்குடிகளான நாகர்களுடன்,
22. குணராசா க, மு. கு. கட்டுரை 23. கைலாயமாலை,பக்கம் 12-15, யாழ்ப்பாணம் வைபவமாலை பக்கம் - 27-29. 24. வைபவமாலை, பக்கம் - 30.

யாழ்ப்பாண அரச பரம்பரை 77
தென்னகத்திற்கும் ஈழத்திற்குமிடையில் பல நூற்றாண்டுகளாக நிலவிய தொடர்பின் விளைவாகவே ஈழத்தமிழகம் உருவாகியது. தென்னாட்டிலிருந்து ஈழத்திற்கு வந்த வணிகர் சிங்கள மன்னரின் அழைப்பில் வந்த தென்னாட்டுப் போர்வீரர், முத்துக்குளிக்க வந்த பரவர் முதலிய மீனவர், தமிழ் நாட்டிலிருந்து படையெடுத்து வந்த போர்வீரர் முதலியோரின் பிற்சந்ததியினரே ஈழத் தமிழ்க்குடிகள் ஆவர்.*
4. 3. சாவகமன்னன்
காலிங்க ஆரியச் சக்கரவர்த்திக்குப்பின் அவன் மகன் குலகேசரசிங்கையாரின் அரசகட்டிலேறினான் என வரலாற்றறிஞர் பலர் கூறியுள்ளனர். ஆனால் காலிங்க ஆரியச் சக்கரவர்த்திக்குப் பின் வடவிலங்கையை ஒரு சாவகமன்னன் ஆண்டுள்ளான் என்பதற்குச் சான்றுகளுள்ளன. கி. பி. 1247 ஆம் ஆண்டு சந்திரபானு என்ற சாவகன் (யாவா நாட்டைச் சேர்ந்தவன்) சிங்கள அரசின் மீது படையெடுத்தான். அவ்வேளை சிங்கள மன்னனாக விளங்கிய இரண்டாம் பராக்கிரமபாகு இந்தப் படையெடுப்பை முறியடித்துச் சந்திரபானுவைத் துரத்தியடித்தான்.
தெற்கிலங்கையில் தோல்வி கண்ட சந்திரபானு வடக்கிலங்கையில் வெற்றி பெற்று அங்கு தோன்றியிருந்த புதிய இராச்சியத்தின் ஆட்சியாளனாக மாறியிருக்கலாம் என இந்திரபாலா கருதுவது ஏற்புடையதாகும்.* எனவே காலிங்க ஆரியச் சக்கரவர்த்தியின் அரியணையைச் சந்திரபானு என்ற சாவக மன்னன் கவர்ந்து கொண்டான். அவனோடு வந்தவர்கள் குடியேறிய பகுதிகள் தாம் சாவகச்சேரி, சாவகன்சீமா, சாவகன்கோட்டை என வழங்கப்படுகின்றது. அவன் சிங்கள இராச்சியத்தை இரண்டாம் முறை தாக்குவதற்காக படை திரட்டினான். பதீ (பதவியா), குருந்தி (குருந்தனூர்) மாவட்டங்களிலும் பிற மாவட்டங்களிலும் வசித்த சிங்களவரைத் தன் பக்கத்தில் சேர்த்துக் கொண்டான் எனச்
25. பத்மநாதன் சி, ஈழத்தமிழ் வரலாற்றுநூல்கள், இளங்கதிர், பல்கலைக்கழகம், பேராதனை,
பக்கம்- 126,
26. இந்திரபாலா, கா., மு. கு. கட்டுரை.
27. மு. கு. கட்டுரை.

Page 45
78 யாழ்ப்பாண அரச பரம்பரை
சூளவம்சம் கூறுகிறது.' இவன் சிங்கள இராச்சியத்தின் மீது படையெடுப்பதற்கு முன்னர் 1258ல் சுந்தரபாண்டியன் சாவகனை வென்று திறைபெற்றுச் சென்றான். அவன் திறையை ஒழுங்காகச் செலுத்தாமையினால் 1262ல் ஜடாவர்மன் வீரபாண்டியன் சாவகமன்னனைத் தண்டிக்க அல்லது இரண்டாம் பராக்கிரமபாகுக்கு உதவ படையெடுத்தான். அவ்வேளை சாவகமன்னன் சிங்கள அரசன் மீது இரண்டாவது தடவையாகப் படையெடுத்துச் சென்றிருந்தான். அப்போரில் சாவகமன்னனின் தலையை வீரபாண்டியன் துண்டித்தான். அதன் பின் திரிகூடகிரியிலும் கோணாமலையிலும் இரட்டைக்கயல் இலச்சினையை வீரபாண்டியன் பொறிப்பித்தான்.* இந்த இலச்சினை இன்றும் திருக்கோணமலைக்
கோட்டை வாசலில் உள்ளது.
4. 4. குலசேகரசிங்கை ஆரியன்
கி. பி. 1262ம் ஆண்டில் சாவகமன்னன் போரில் இறக்கவே யாழ்ப்பாண அரசின் மன்னனாக காலிங்க ஆரியச் சக்கரவர்த்தியின் மகன் குலசேகரசிங்கை ஆரியன் (பரராசசேகரன் 1) முடிசூடிக் கொண்டான். குலசேகரசிங்கை ஆரியன் இராச்சியத்தின் நிர்வாக ஒழுங்கைச் சீர்படுத்தி நாட்டின் சமாதானம் நிலவ வழிசெய்தான். குலசேகரனையடுத்து அவனது மகனாகிய குலோத்துங்க சிங்கை ஆரியன் (செகராசசேகரன் - 2) கி. பி. 1284ல் அரசனானான். மன்னார்க் கடலில் முத்துக்குளிக்கும் உரிமை சிங்கை நகர் மன்னனுக்கே உரித்தாயிருந்தது. சிங்கள மன்னன் புவனேகவாகு என்பான் உரிமை பெறமுயன்றதால் குலோத்துங்கன் புவனேகபாகுடன் போர் செய்து உரிமையை நிலைநாட்ட நேர்ந்தது*
குலோத்துங்க சிங்கையாரியனை அடுத்து கி. பி. 1292ம் ஆண்டு விக்கிரம சிங்கையாரின் (பரராசசேகரன் - 2) அரசனானான். இவன் காலத்தில் தமிழருக்கும் சிங்களவருக்கும் மத வேறுபாட்டால் உத்தர தேசத்தில் கலவரம் மூண்டது. அரசன் கலவரத்திற்குக் காரணமான புஞ்சிபண்டாவையும் அவனைச் சார்ந்த பதினேழு பேரையும் பிடித்துச்
28. மு. கு. கட்டுரை. 29. இராசநாயகம், செ.மு. கு. நூல். 30. யாழ்ப்பாண வைபவமாலை - குலசபாநாதன் பதிப்பு, சுன்னாகம் 1949, பக்கம் - 36,

யாழ்ப்பாண அரச பரம்பரை 79
சிரச்சேதஞ் செய்வித்தான். கலவரம் அதனால் அடங்கியது." எனினும் இவன் காலத்தில் உத்தரதேசத்தில் வன்னிச் சிற்றரசுகள் உருவாகத் தொடங்கின.
கி. பி. 1302இல் யாழ்ப்பாண அரசின் மன்னனாக வரோதய சிங்கையாரியன் (செகராசசேகரன்-3) முடிதரித்தான். அவன் தனது இராச்சியத்தில் வாழ்ந்த சிங்களவருக்கும் தமிழருக்குமிடையே நல்லுறவை ஏற்படுத்தினான். இவன் காலத்தில் வன்னியர்கள் ஏற்படுத்திய குழப்பம் அடக்கப்பட்டது. கி. பி. 1325இல் வரோதயன் இறக்க, அவனது மைந்தன் மார்த்தாண்ட சிங்கையாரியன் (பரராசசேகரன்-3) அரசகட்டிலேறினான். இவன் காலத்திலும் வன்னியர் குழப்பஞ்செய்து அடக்கப்பட்டனர். இந்த அரசன் காலத்தில் இபன்பட்டுடா என்ற முஸ்லிம் பயணி யாழ்ப்பாணம் வந்தான். அங்கே ஆரியச் சக்கரவர்த்தியின் திரண்ட கடற்படையையும் செல்வத்தையும் கண்டு அதிசயித்தான்."
கி. பி. 1347இல் குணபூசணசிங்கையாரியன் (செகராசசேகரன்-4) முடிசூட்டினான். இவன் காலத்தில் யாழ்ப்பாணவரசில் அமைதியும் சமாதானமும் நிலவியது. இவன் பின் இராச்சியத்தின் அரசனான விரோதய சிங்கையாரியன் (பரராசசேகரன் 4) காலத்தில் நாட்டில் அமைதி நிலவிய போதிலும், வன்னியர் கலகம் இருந்தது. 'விரோதயன், பாண்டிய மன்னன் சந்திரசேகரன் என்பானுக்குப் படையுதவி, இழந்த பாண்டி நாட்டையும் முடியையும் மீட்டுக் கொடுத்துள்ளான்.?
4. 5. தென்னிலங்கை மீது படை
கி. பி. 1380ஆம் ஆண்டில் விரோத சிங்கையாரியனின் மகன் சயவீரசிங்கையாரின் (செகராசசேகரன்-5) யாழ்ப்பாண அரசின் சிங்காசனமேறினான். சயவீர சிங்கையாரின் காலத்தில், முத்துக் குளித்தல் சம்பந்தமாக எழுந்த பிரச்சினையில், தென்னிலங்கை மன்னர்களில் ஒருவனான புவனேகபாகு என்பானைப் போரில் வென்று, திறைபெற்று மீண்டான். பன்னிரண்டு வருடங்கள் தென்னிலங்கை
31. இராசநாயகம் செ. மு. கு. நூல். 32. மே. கு. நூல். 33. மே. கு. நூல்.

Page 46
80 யாழ்ப்பாண அரச பரம்பரை
மன்னர்கள் யாழ்ப்பாண அரசனுக்குத் திறை செலுத்தினர்.“ எனினும்,
கோட்டையின் அரசனாகவிருந்த அழகக்கோனார் என்பான் திறைசெலுத்த ஒரு கட்டத்தில் மறுத்ததோடு, சிங்கை நகர் அரசனால் இவனிடம் திறை வாங்கும்படி யனுப்பப்பட்ட ஏவலாளர்களைத் தூக்கிலிட்டுக் கொன்றான். அதனால் சயவீர சிங்கையாரியனின் பெரும்படை தரைமார்க்கமாக் கம்பளைக்கும், கடல் மார்க்கமாகக் கோட்டைக்கும் அனுப்பப்பட்டது. கம்பளையரசனான புவனேகபாகு அப்படைக்கு எதிர் நிற்க வஞ்சி ஒடி ஒளிந்தான்." கடற்படை தோல்வி கண்டு திரும்ப நேர்ந்தது.
கி. பி. 1410ஆம் ஆண்டளவில் ஜயவீர சிங்கையாரியன் இறக்க, குணவீரசிங்கையாரியன் (பரராசசேகரன்-5) முடிதரித்தான். இவன் காலத்தில் பராக்கிரமபாகு என்ற சிங்கள அரசன் திறைசெலுத்த மறுத்தான். அதனால் தென்னிலங்கைக்குப் படையெடுத்துச் சென்று சிங்களவரசைத் தோல்வி காணவைத்து, திறைபெற்று மீண்டான்.* இப்படையெடுப்புக்கு விஜயநகர மன்னன் படைகொடுத்து உதவியுள்ளான்.
4. 6. கனகசூரிய சிங்கையாரியன்
குணவீரசிங்கையாரியன் பின்னர் கி. பி. 1440இல் அவனது மகனான கனகசூரிய சிங்கையாரியன் (செகராசசேகரன் 6) அரசனானான். யாழ்ப்பாண இராச்சிய வரலாற்றில் இவனது காலம் குறிப்பிடத்தக்கது. ஏனெனில், கி. பி. 1215ஆம் ஆண்டிலிருந்து 1440ஆம் ஆண்டுவரை ஆரியச் சக்கரவர்த்திகள் கட்டிக்காத்த வடவிலங்கையின் விலை மதிப்பில்லாத சுதந்திரத்தை, தென்னிலங்கை மன்னனிடம் பறிகொடுத்தமையால் ஆகும்.
கனகசூரிய சிங்கையாரியன், வடவிலங்கையை ஆண்டவேளை, தென்னிலங்கையில் கோட்டை அரசனாக ஆறாம் பராக்கிரமபாகு என்பான் விளங்கினான். அவன் யாழ்ப்பாணத்து ஆரிய அரசர்கள் மீது மாறாத பகைமை கொண்டிருந்தான். தென்னிலங்கை மன்னர்களிடமிருந்து
34. இந்திரபாலா க, மு. கு. கட்டுரை. 35. மு. கு. கட்டுரை.

யாழ்ப்பாண அரச பரம்பரை 8.
யாழ்ப்பாண மன்னன் திறைபெற்று வருகின்றமையை அவனால் பொறுக்க முடியவில்லை. கம்பளை, றைகம, கோட்டை இராசதானிகளிலும் பார்க்க, யாழ்ப்பாணப் பட்டினத்தின் ஆரியச் சக்கரவர்த்தி சேனாபலத்திலும், பொருட்பலத்திலும் மேலோங்கியிருந்தான். அதனால் அவன் மலை நாட்டிலிருந்தும் கீழ்நாட்டிலிருந்தும் ஒன்பது துறைமுகங்களிலிருந்து திறைபெற்றான்." கம்பளை மன்னனை ஆரியச் சக்கரவர்த்தியொருவன் வெற்றிகொண்டதோடு நில்லாது கல்சாசனமொன்றில் தனது வெற்றியைப் பொறித்து மீண்டிருந்தான். கம்பளைக்கு அண்மையில் கோட்டகம எனுமிடத்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ்ச்சாசனம் அதனை நிரூபிக்கின்றது." இவற்றை பராக்கிரமபாகுவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
கோட்டை மன்னனாக கி. பி. 1415இல் ஆறாம் பாரக்கிரமபாகு அரசனாகிய பொழுது பல நூற்றாண்டுகளாகப் பலவீனமுற்றிருந்த சிங்கள இராச்சியம் மீண்டும் வலுப்பெற்றது. பராக்கிரமபாகு விவேகமும் ஆற்றலுஞ் சாதுரியமுங் கொண்ட அரசனாக விளங்கினான். இலங்கை முழுவதும் தன் மேலாதிக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டான். கண்டி இராச்சியம், வன்னிச் சிற்றரசுகள், யாழ்ப்பாண இராச்சியம் என்பனவற்றைக் கைப்பற்றியமை இவனுடைய சிறப்புமிக்க சாதனைகளாகும்.*
பராக்கிரமபாகு யாழ்ப்பாணத்தின் மீது (யாப்பாபட்டுன) படையெடுப்பதற்கான ஆயத்தங்களை ஆரம்பத்திலிருந்தே செய்தான். பதினைந்தாம் நூற்றாண்டுச் சிங்கள நூல்கள் ஆரியச் சக்கரவர்த்தியின்
36. பத்மநாதன் சி, யாழ்ப்பாண இராச்சியம் - ஆரியச் சக்கரவர்த்திகள் காலம், யாழ்
பல்கலைக்கழகம்- 1992, பக்கம் - 50. 37. கங்கணம்வேற் கண்ணினையாற்
காட்டினார் காமர்வளைப் பங்கயக் கையினாற்
திலோதம் பொங்கொலி நீர்ச் சிங்கை நகராரியனைச்
சேராவனுரேசர் தங்கள் மடமாதர் தாம் ! - (கோட்டகம சாசனம்) 38. பத்மநாதன் சி, மு. கு. நூல், பக்கம் - 55.

Page 47
82 யாழ்ப்பான அரச பரம்பரை
அரசிருக்கையை ‘யாபாபடுன” என்று குறிப்பிடுகின்றன.* 14ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழகத்தில் ஏற்பட்ட விஜயநகரப் பேரரசின் எழுச்சியும் ஈழத்தின் வடபகுதியில் அதனது ஆதிக்கப்படர்ச்சியும் ஆரியச் சக்கரவர்த்தியின் மேலானை ஈழத்தின் தென்பகுதிக்கு விஸ்தரிக்கப்படுவதைத் தடுத்தன." இவையும் பராக்கிரமபாகுவின் “யாபாபடுன” வெற்றிக்குக் காரணமாயின.
கி. பி. 1450ஆம் ஆண்டு தனது வளர்ப்புப் புத்திரனும், சேனாதிபதியுமான சப்புமல் குமரயா (செண்பகப் பெருமான்) என்பானை, ஆறாம் பராக்கிரமபாகு, பெரும் படையுடன் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற அனுப்பினான். சப்புமல் குமரயாவின் தந்தை மலையாள தேசத்திலிருந்து வந்த ஒரு பணிக்கனாவான். (யானையைப் பழக்குபவன்) ஆறாம் பராக்கிரமபாகு அவனை உபசரித்து, அவன் தேகவலியிலும் வாட்போர்த்திறத்திலும் ஈடுபட்டவனாய்த் தன் குலத்தினளாகிய ஒரு கன்னிகையை அவனுக்கு மணம் முடிப்பித்தான்." அவர்களுக்கு இரு புத்திரர்களும் ஒரு புதல்வியும் பிறந்தனர். இரு புத்திரர்களையும் பராக்கிரமபாகு தத்தெடுத்து அரண்மனையில் வளர்த்தான். அவர்கள் வலிமையும் வீரமும் கொண்டவர்களாக மாறினர். மூத்தவனாக சப்புமல் குமராயாவின் வலிமையும், படைத்திறனும் கோட்டை இராச்சியத்தில் அவனைப்பற்றி கணிப்பை ஏற்படுத்தின. பராக்கிரமபாகுவிற்கு இது கவலையைக் கொடுத்தது. ஏனெனில், அவனது சொந்த மகளான உலகுடையதேவியின் வயிற்றுப்பிள்ளை ஜெயவீரனுக்குத் தனக்குப்பின் கோட்டை அரசு கிடைப்பதற்கு சப்புமல்குமரயா தடையாக இருப்பானோ என அஞ்சி, யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றும் சிரமமான பணிக்குட்படுத்தினான் எனப் போர்த்துக்கேய வரலாற்றாசிரியர் குறித்துள்ளார்."
39. கோகில-சந்தேஸ, 236-264 இந்திரபாலா கா, யாழ்ப்பாண இராச்சியம் தோன்றிய
காலமும் சூழ்நிலையும், இளங்கதிர், பேராதனை - 1969/70 பக்கம் - 45. 40. சிற்றம்பலம் கி. க., தமிழ் மக்களின் பாரம்பரியப் பிரதேசம், முத்தமிழ் விழா மலர்-1992
பக்கம் - 173. 41. இராசநாயகம் செ, யாழ்ப்பாணர் சரித்திரம், யாழ்ப்பாணம் - 1933 பக்கம் 42. History of Ceylon, Colombo-1960. Chap.: 111, Page: 673.

யாழ்ப்பான அரச பரம்பரை 83
யாழ்ப்பாணத்தின் மீது படையெடுப்பதற்கு முன் சப்புமல் குமரயா யாழ்ப்பாண இராச்சியத்தின் எல்லைப் புறக்கிராமங்கள் பலவற்றைக் கைப்பற்றி, அவற்றிலிருந்து சிறைப்பிடித்தவர்களைக் கோட்டைக்குக் கொண்டுவந்து, எதிரியின் படைவலிமையை அவர்களிடமிருந்து அறிந்து கொண்டானென ராஜவலிய கூறுகிறது. கோட்டை இராசதானியின் பெரும்படை தரைமார்க்கமாக வடக்கு நோக்கி நர்ந்தது. கோகிலசந்தேஸ் என்ற நூலில் இப்படை நகர்ந்த வழி விபரிக்கப்பட்டுள்ளது. கோட்டையிலிருந்து மேற்குக் கரையோரமாகப் புத்தளம் பூநகரிக் கரைப்பாதை வழியே இப்படை முன்னேறியது.*
உத்தரதேசத்தின் பண்டைய தலைநகரான பூநகரிச் சிங்கைநகர் எதிர்ப்பட்டிருக்கும். சப்புமல்குமராயாவின் படை, சீரும் சிறப்போடும் செழித்து விளங்கிய பொங்கொலி நீர்ச்சிங்கை நகரைச் சிதைத்து அழித்தது. வன்னிப்பிரதேசத்தில் சப்புமல் குமரயாவின் படையை எதிர்த்து வன்னியர்கள் நிற்கவில்லை. அவர்கள் ஏற்கனவே கோட்டை மன்னனின் மேலாணையை ஏற்றிருந்தார்கள். சிங்களப்படைக்கும், தமிழ்ப்படைக்குமிடையிலான முதலாவது சண்டை சாவகக்கோட்டை (சாவகச்சேரி)யில் நிகழ்ந்தது. அங்கு விஜயநகர மன்னனது சேனா வீரர்கள் சப்புமல்குமரயாவின் படையை எதிர்கொண்டு தோல்வியைத் தழுவிக் கொண்டனர். அதன்பின் சிங்களப்படை யாழ்ப்பாணப் பட்டினத்தை வந்தடைந்தது." அவனது படைமுன் எதிர்நிற்கவியலாது, தமிழ்ப்படை தோற்றது. கனகசூரிய சிங்கையாரியன் தன்னிரு புதல்வர்களுடன் இந்தியாவிற் கோடிப்போனான்.
சப்புமல்குமரயா யாழ்ப்பாணத் தலைநகரிட் புகுந்து, மதங்கொண்ட களிறெனக் கண்டாரைக் கொன்று, அந்த நகர் ஆவணங்கலெல்லாம் இரத்த வெள்ளம் பாய்ந்தோடும் ஆறுகளாக்கி நகரில் விளங்கிய மாட மாளிகைகளை எல்லாம் இடிப்பித்து தரைமட்டமாக்கினான். யாழ்ப்பாண நகர் சிதைந்து போனது.*
43. மு. கு. நூல், பக்கம் 674. 44. குணராசாக, நல்லைநகர் நூல், யாழ்ப்பாணம் 1987. 45. இராசநாயகம், செ. மு. கு. நூல், பக்கம் - 74-75,

Page 48
84 யாழ்ப்பாண அரச பரம்பரை
அவ்வேளை நல்லூர்க் கந்தசுவாமி கோயிலும் தகர்த்தெறியப்பட்டது. கி. பி. 1248ஆம் புவனேகபாகு எனும் அமைச்சரால் முதன்முதல் கட்டப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி கோயில், கி. பி. 1450 ஆம் ஆண்டு சப்புமல்குமாரயாவின் படையெடுப்பால் தகர்த்தழிக்கப்பட்டது. தான் புரிந்த பாவத்திற்குப் பரிகாரம் தேடுவான் போன்று, யாழ்ப்பாண நகரியை மீண்டும் புதுப்பித்த சப்புமல்குமரயா, அழிந்து போன கந்தசுவாமி கோயிலையும் மீண்டும் ஆக்கினான்." சப்புமல்குமரயா என்ற செண்பகப் பெருமாள் தமிழ்க்குருதி தன்நாளங்களில் ஒடக் கொண்டவனாதலாலும் தமிழுற்பத்தியாளனேயாகிய அளகேஸ்வரன் காலந்தொட்டு ஜயவர்த்தன கோட்டையிலே வழிபாடு பயின்று வந்தமையாலும், கோகில சந்தேசமுடையார் அவனைப் புத்தமதத் தாபகரெனப் புகழ்ந்தோதிய விடத்தும் தமிழ்ப் பிரசைகளுக்கிதமாய்த் தமிழ்த் தெய்வ வழிபாடுகளை யாழ்ப்பாணத்தில் வளர்த்திருப்பான் என்பதிற் சிறிதும் சந்தேகமன்று என சுவாமி ஞானப்பிரகாசர் குறிப்பிடுகிறார்." .
ஆரியச் சக்கரவர்த்தியோடு செண்பகப் பெருமாள் கடும்போர் நிகழ்த்திய நாட்களில் அரண்களும் இராசதானியும் பெரிதும் அழிவுற அவற்றைச் செண்பகப் பெருமாள் திருத்தியமைத்தானென்றே கொள்ள வேண்டும். சப்புமல்குமரயா யாழ்ப்பாணப்பட்டினத்தில் கோட்டைகளையும் காவலரண்களையும் அமைத்தான் என்று ராஜவலிய சொல்வனவும் இக்கருத்துக்கு ஆதாரமாகவுள்ளன.*
ஆரியச் சக்கரவர்த்திகளின் பழைய தலைநகரமாக விளங்கிய யாழ்ப்பாண நகரி பாழாய் விட்டமையினால், இவன் நல்லூரைத் தலைநகராக்கிக் கொண்டான். உண்மையில் பதினைந்தாம் நூற்றாண்டிலேயே நல்லூர் தலைநகரமாக மாறியது.
46. மு. கு. நூல், பக்கம் 73. 47. ஞானப்பிரகாசர் சுவாமி, யாழ்ப்பாண வைபவ விமர்சனம், அச்சுவேலி - 1928. 48. பத்மநாதன் ச, ஈழத்து வரலாற்று நூல்கள், இளங்கதிர், பேராதனை - 1970.

யாழ்ப்பாண அரச பரம்பரை 85
யாழ்ப்பாணத்தை வென்ற புகழ் சிங்கள நாடெங்கும் பரவிப் பேரானந்தத்தை விளைவித்தது. இவ்வெற்றியைப் புகழ்ந்த கோகில சந்தேச வெனும் குயில்விடு தூதைப்பாடிய சிங்களப் புலவர் ஒருவர் சப்புமல்குமரயாவை ‘ஆரிய வேட்டையாடும் பெருமாள்' எனப் புகழ்ந்துள்ளார்.* சப்புமல்குமரயா யூரீ சங்க போதி புவனேகபாகு என்னும் சிம்மாசனப் பெயரோடு யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னனானான்.
சிறிசங்கபோதி புவனேகவாகு, நல்லூரிலிருந்து உத்தரதேசத்தை பதினேழு வருடங்கள் ஆட்சி செய்தான். கி.பி. 1467ஆம் ஆண்டு அவன் தென்னிலங்கைக்குத் திருப்பிச் செல்ல நேர்ந்தது. அவனுடைய வளர்ப்புத் தந்தை ஆறாம் பராக்கிரமபாகு இறந்து போக, அவனது பேரன் ஜெயவீரன் கோட்டைக்கு அரசனானான். அதனை விரும்பாத பூரீசங்க போதி புவனேகவாகு, விஜயவாகு என்பவனை யாழ்ப்பாணத்தின் அரசனாக்கி விட்டு, கோட்டைக்கு மீண்டு ஜெயவீரனைக் கொன்றுவிட்டு, அரசகட்டிலேறினான். தருணத்தை எதிர்பார்த்துத் திருக்கோவிலூரில் கரந்துறைந்திருந்த கனகசூரிய சிங்கையாரியனும் அவனது இரு புதல்வர்களும் சேனைகளுடன் வந்து விஜயபாகுவைக் கொன்று, இழந்த இராச்சியத்தை மீட்டுக் கொண்டனர். கனகசூரியசிங்கை ஆரியன் இழந்த மணிமுடியை மீண்டும் தரித்துக் கொண்டான்.
49. இராசநாயகம் செ. மு. கு. நூல், பக்கம் -74,

Page 49
அத்தியாயம் :ஐந்து
சங்கிலி செகராசசேகரனும் பரநிருபசிங்கனும்
5.1. சிங்கைப்பரராசசேகரன்
யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னர்களில் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவன், கனகசூரியசிங்கை ஆரியனின் மூத்த மகனான பரராசசேகரன் ஆவான். சப்புமல்குமரய என்ற செண்பகப் பெருமாள் யாழ்ப்பாண இராச்சியத்தைத் தன் வலிமையின் கீழ் கொண்டுவந்த வேளை, தந்தையான கனகசூரியசிங்கை ஆரியன் தனது இரு புத்திரர்களான பரராசசேகரனையும் செகராசசேகரனையும் அழைத்துக் கொண்டு திருக்கோவிலூருக்கு ஒடிச் சென்றான் என்பதை ஏற்கனவே பார்த்தோம். பரராசசேகரன் போர்ப் பயிற்சியில் சிறப்புற்று விளங்கினான். செகராசசேகரன் போர்ப் பயிற்சியோடு கலைப் பயிற்சியிலும் மிக்க திறன் கொண்டிருந்தான். இவர்கள் யாழ்ப்பாணத்திற்குப் படையோடு மீண்டு சிங்கள ஆட்சியாளனை வெற்றி கொண்டனர். கணககுரிய சிங்கை ஆரியன் இழந்த ஆட்சியை மீண்டும் ஏற்றுக் கொண்டான். அவன்பின் அவனது மூத்த மகனான பரராசசேகரன் கி.பி.1478 ஆம் ஆண்டு சிங்கைப் பரராசசேகரன் என்ற சிம்மாசனப் பெயரோடு யாழ்ப்பாண இராச்சியத்தின் மணிமுடியை ஏற்றுக் கொண்டான்.
யாழ்ப்பாணவரசு தோற்றம் பெறக் காலாக விளங்கிய விஜயகாலிங்க ஆரியச் சக்கரவர்த்தியிலிருந்து (கி.பி. 1236) கணககுரிய சிங்கை ஆரியன் வரையிலான (கி. பி. 1477) கால இடைவெளியில் பதினொரு மன்னர்கள் ஆரியச் சக்கரவர்த்திகள் என்ற பெயரோடு ஆட்சியிலிருந்துள்ளார்கள். இவர்கள் ஒருவர் மாறி ஒருவர் பரராசசேகரன் என்னும் செகராசசேகரன் என்னும் சிம்மாசனப் பெயர்களையும் கொண்டிருந்தார்கள். ஆனால், கணகசூரிய சிங்கை ஆரியன் தனது இரு புத்திரர்களுக்கும் நேடிரயாகவே பரராசசேகரன், செகராசசேகரன் என்ற பெயர்களைச் சூட்டியதன் மூலம், பெயர்களின் பின்னர் வழங்கப்பட்டுவந்த ஆரியன் அல்லது ஆரியச்

யாழ்ப்பாண அரச பரம்பரை 87
சக்கரவர்த்தி என்ற பட்டம் கனகசூரிய சிங்கை ஆரியனோடு வழக்கொழிந்து போனது. கி. பி. 1478 இல் யாழ்ப்பாண அரசின் அரியணையில் பரராசசேகரன் ஏறியபோது, அவனுக்கு ஒரு சிம்மாசனப் பெயர் தேவைப்பட்டது. அதனால், பரராசசேகரனும் செகராசசேகரனும் தங்களுக்குரிய சிங்கையாரியப் பட்டத்தைச் சிங்கை எனச் சுருக்கித் தங்களின் பெயர்களின் முன்னிறுத்தி சிங்கைப் பரராசசேகரன், சிங்கைச் செகராசசேகரன் என்றாக்கிக் கொண்டனர்.” நல்லூரை மேலும் சிறப்புமிக்க நகராக்கிய பெருமை சிங்கைப் பரராசசேகரனைச் சாரும்.
சப்புமல் குமரயாவின் படையெடுப்பால் அழிவுற்ற தேவாலயங்களை இவன் புனருத்தாரணம் செய்திருப்பதாகக் கொள்ளவிடமுண்டு. விஜயகாலிங்க ஆரியனால் கட்டப்பட்ட கோயில்களை இவனே அமைத்ததாக வரலாற்று மயக்கமுள்ள போதிலும், சட்டநாதர் கோயில், வெயிலுகந்த பிள்ளையார் கோயில், கைலாயநாதர் கோயில், வீரமாகாளியம்மன் கோயில் என்பவனவற்றை இவன் மீண்டும் புனரமைத்தான் எனக் கொள்ளல் வேண்டும். அத்தோடு கி. பி. 1248 ஆம் ஆண்டு காலிங்க ஆரியச் சக்கரவர்த்தியின் மந்திரியாகவிருந்த புவனேகவாகுவால் கட்டப்பட்ட நல்லூர்க் கந்தசாமி கோயில், இன்று முத்திரைச்சந்தையும் கிறிஸ்தவ தேவாலயமும் காணப்படுமிடத்தில் அமைந்திருந்தது. அக் கந்தசாமி கோயிலுக்கு அண்மையில் ஒர் ஏரி அமைப்பித்து, யமுனா நதியின் திவ்விய தீர்த்தத்தைக் காவடிகளிற் கொணர்வித்து அவ்வேரிக்குள் பெய்வித்து, அதனை (யமுனாரி) யமுனா ஏரி எனப் பெயர் தந்தழைத்தான்." அந்தப்ப கரவடிவ யமுனாரி இன்றும் சங்கிலித் தோப்பில், நல்லூரில் உள்ளது. பராமரிப்பின்றி சில மடைந்து வருகின்றது.
5.2 தமிழ்ச் சங்கம்*
சிங்கைப் பரராசசேகர மன்னன் காலத்தில், தமிழ்ச் சங்கம் மீண்டும் நிறுவப்பட்டது. பரராசசேகர மன்னனின் தம்பியாகிய சிங்கைச்
1. யாழ்ப்பாண வைபவமாலை, குலசபாநாதன் பதிப்பு, இந்து சமய கலாசார அலுவல்கள்
திணைக்களம், 1995. பக்கம் : 50
2. கலாநிதி குணராசா க, ஈழத்தவர் வரலாறு, கொழும்பு - 1996 பக்கம் : 18
3. இராசநாயகம், செ, யாழ்ப்பாணச் சரித்திரம், யாழ்ப்பாணம் - 1933. பக்கம் : 77

Page 50
88 யாழ்ப்பாண அரச பரம்பரை
செகராசசேகரன் சிறந்த தமிழறிஞனாக விளங்கியமை, தமிழ்ச் சங்கத்தை மீண்டும் நிறுவ வாய்ப்பானது. புலவர்களையும் தமிழ் வித்துவான்களையும் ஒருங்கு சேர்த்து, கழகம் நிறுவி, வித்துவான்களுக்கு வேண்டிய சன்மானங்கள் செய்து தமிழ் மொழியைப் பொன்போற் போற்றி வளர்த்து வந்தான்." செகராசசேகரன் கல்வித்துறையெல்லாம் கடைபோகக் கற்ற மகாபண்டிதன். அவன் ஊர்கள் தோறும் பாடசாலைகள் அமைத்து அங்கே சிறுவர்களையெல்லாம் கல்வி பயில்வித்தான். நல்லூரில் அவன் அமைத்த தமிழ்ச் சங்கத்தில் சோழ பாண்டி தொண்டை மண்டலங்களினின்றும் வரவழைத்த பண்டிதர்களோடு, ஈழநாட்டிலுள்ள புலவர்களும் அடங்கினர். செகராசசேகரன் தானும் செகராசசேகரமென்னும் சோதிட நூலை விருத்தப் பாவாற் செய்தான். பரராசசேகரம் என்னும் ஒரு வைத்திய நூலையும் தனது தமையனாகிய அரசனின் பெயரினாலியற்றுவித்தான்."
பரராசசேகரம் என்ற வைத்திய நூல், செகராசசேகரம் என்ற சோதிட நூல், இரகுவம்சம் என்ற காவிய நூல் என்பன பரராசசேகரன் காலத்தில் இயற்றப்பட்டவை என வைபவமாலை கூறும். பரராசசேகரனின் மருமகனாகிய அரசகேசரி என்பான், காளிதாசனின் இரகுவம்சம் என்ற வடமொழி நூலைத் தமிழில் பாடல்களாக்கி நூலாக்கினான். அந்த நூலைத் திருவாதவூருக்குக் கொண்டுபோய் அங்குள்ள தமிழறிஞர் சபையிலே அரங்கேற்றினான். யாழ்ப்பாண இராச்சியத்தில் அங்குமிங்கும் பல அறிஞர்கள் ஒருவர் பின்னொருவராகத் தோன்றினர். செகராசசேகரன் பின்னும் பாண்டி நாட்டிலும், மற்றைய ஆதினங்களிலுமிருந்து பல சாஸ்திர நூல்களை எடுப்பித்துச் சேதுக்கரையிலிருந்து எழுதுவோர்க்குப் படிகட்டி எழுதுவித்துக் கொண்டுவந்து அந்நூல்களை இந்நாட்டிலே அதிகமாய் விருத்தியாக்கினான். இவற்றால் யாழ்ப்பாண இராச்சியத்தில் கல்வி விருத்தியடைந்தது.” பரராசசேகரன் உலா என்ற நூலும் இக்காலத்தில்தான் யாக்கப்பட்டதென எண்ணவிடமுண்டு."
4. மு. கு. நூல், பக்கம் :77
5. முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ, யாழ்ப்பாணச் சரித்திரம், யாழ்ப்பாணம் - 1933 பக்கம்:45
- 46
6. யாழ்ப்பாண வைபவமாலை, மு. கு. நூல், பக்கம் : 49 - 50
7. க. வே. யாழ்ப்பாண வைபவ கௌமுதி, யாழ்ப்பாணம் - பக்கம் :28
8. இராசநாயகம், செ, மு. கு. நூல், பக்கம் :78

யாழ்ப்பாண அரச பரம்பரை 89
சிங்கைப் பரராசசேகரனுடைய அரசாட்சிக் காலத்தில் அவனாற்றிய பணிகள் வியந்துரைக்கத்தக்கன. யாழ்ப்பாண இராச்சியத்தை முப்பத்திரண்டு வட்டங்களாகப் (பெரும் கிராமங்களாக) பிரித்து அவற்றை நிர்வகிக்க முப்பத்திரண்டு தண்டாதிகாரிகளையும் நியமித்திருந்தான். நீதி விசாரணைக்காகப் பஞ்சாய மெனப்படும் சபைகளையும் தாபித்திருந்தான். யாழ்ப்பாணத்தில் ஒரு பெரிய அன்ன சத்திரத்தை அமைத்திருந்தான். மன்னனின் தம்பியாகிய செகராசசேகரன் இராமேஸ்வரத்தில் அதேபோல ஒர் அன்னசத்திரத்தைத் தாபித்தான். செகராசசேகரன், மன்னனின் ஆதரவுடன் கிராமங்கள் தோறும் வைத்திய சாலைகளை அமைத்திருந்தான். கள்ளியங்காட்டில் மருந்துமாமலை வனம் எனும் மூலிகைத் தோட்டம் ஒன்றினை நிறுவியிருந்தான்.*
5. 3. அரச குடும்பம்
‘சிங்கைப் பரராசசேகரன் யாழ்ப்பாண அரசின் மனனனாக முடிசூடுமுன் சோழ வம்சத்தைச் சேர்ந்த இராசலட்சுமியம்மாள் என்னும் பெண்ணை மணம் செய்து பின் பட்டத்து ராணியாக்கிக் கொண்டான். மேலும் பொன்பற்றியூர் வேளாளர் மரபில் முடிதொட்ட வேளாளரென்னும் பாண்டிமழவன் குலத்தில் பிறந்த அரசகேசரி" என்பானின் மகள் வள்ளியம்மை என்பாளைத் தன் இரண்டாவது மனைவியாக்கிக் கொண்டான். இவர்களோடு மணவக்குடியிற் பிறந்த மங்கத்தம்மாள் என்பவளைத் தன் வைப்பாட்டியாக்கிக் கொண்டான்." சிங்கைப் பரராசசேகரனின் மனைவியர் மூவர் மூலமாக அவன் எட்டுப் பிள்ளைகளை வாரிசாகப் பெற்றான். பட்டத்துராணியான இராசலட்சுமி அம்மாள் மூலம் சிங்கவாகு, பண்டாரம் எனுமிரு புதல்வர்களையும், இரண்டாவது மனைவியான வள்ளியம்மை மூலம் பரநிருபசிங்கன், மேலும் இரு ஆண்மக்கள், ஒரு மகள் ஆகிய நால்வர்களையும்," மங்கத்தம்மாள் மூலம்
8(அ) முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ, மு. கு. நூல், பக்கம்:46
9. இந்த அரசகேசரி, இரகுவம்சத்தைத் தமிழாக்கியவனல்லன்.
10. யாழ்ப்பாண வைபவமாலை, மு. கு. நூல், பக்கம் : 48
11 பரநிருபசிங்கனின் இரு தம்பிமார், ஒரு சகோதரி ஆகியோரின் பெயர்களை அறியமுடியவில்லை. எனினும், சிங்கப்பூர் இளையதம்பி (அராலியில் பிறந்தவர்) யின் வம்சாவளியை ஆராய்ந்த போது, பரநிருபசிங்கனின் சகோதரி பெயர் மரகதவல்லி என அறியக்கிடக்கின்றது. இந்த மகரகதவல்லியே ரகுவம்சம் பாடிய அரசகேசரி மணந்து, சிங்கைப் பரராசசேகரனுக்கு மருமகனாகவும், பரநிருபசிங்கனுக்கு மைத்துனனாகவும் மாறினான் என அறியக்கிடக்கின்றது.

Page 51
90 யாழ்ப்பாண அரச பரம்பரை
சங்கிலி", பரவை எனும் இரு பிள்ளைகளையும் அடைந்திருந்தான். சிங்கைப் பரராசசேகரனுக்கு ஆறு ஆண்மக்களும், இரு பெண்மக்களுமாக எட்டுக் குழுந்தைகள் இருந்தனர். ஆனால், போர்த்துக்கேய நூல்களைக் GöTGöT6 Gıd56.Jğgölde,göl UGöTLTyıh (Vagru Tucuri Pandarao), சியங்கேரி (Ceyankeri) எனவிரு பெயர்கள் அறியக் கிடக்கின்றன. வைபமாலை யார் பரநிருபசிங்கன் என்றழைக்கின்ற மூன்றாவது இளவரசனைப் போர்த்துக்கேயரான பாதர் குவேறோஸ் (QueyroZ) வக்கிரத்துக்குறி பண்டாரம் என்கிறார். இப்பெயர் ஒருவேளை வரோதய சிறீபண்டாரம் போலும். இது பரநிருபசிங்கனின் அரசுக்குரிய பெயராகலாம் அல்லது வீட்டுப் பெயருமாகலாம்." சியங்கேரி என்பது சங்கிலியைக் குறிப்பிடுகின்றது. குவேறோஸ் குறிப்பிடுகின்ற சியங்கேரி என்ற இந்தச் சங்கிலி, சிங்கைப் பரராசசேகரனின் மகனல்லன்; யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி மன்னனான சங்கிலி குமாரனையே குறிக்கின்றது.* யாழ்ப்பாண வைபவ மாலையார் பரராசசேகரின் மகனான சங்கிலியையும், போர்த்துக்கேய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்ற யாழ்ப்பாணவரசின் கடைசி மன்னனான சங்கிலிகுமாரனையும் ஒருவரென மயங்கி எழுதியுள்ளார். இவ்விரு சங்கிலிகளுக்குமிடையில் ஒரு நூற்றாண்டு காலமும் ஐந்து அரசர்களுமிருந்துள்ளனர்."
சிங்கைப் பரராசசேகர மன்னனின் பிற்காலம் மிகவும் துயர்நிறைந்ததாக இருந்துள்ளது. கடைசி மகனான சங்கிலியே அத்துயரத்திற்குக் காரணமாயினான். சங்கிலியின் குணவியல்புகளை வரலாற்றாசிரியர்கள் திருப்திகரமாக எடுத்துரைக்க வில்லை. சிங்கைப்பரராசசேகர மன்னனின் பிள்ளைகளுள், ‘சங்கிலி என்பவன் கபடசிந்தையும், கடுவிவேகமும், அஞ்சாக்குணமும், துஷ்ட நடையும் உள்ளவனானான்." 'சங்கிலியென்பவன் ஆண்மையிலும் படைக்கலப் பயிற்சியிலும் சிறந்து சாதுரியமும் கபடோபாயமும் வல்லவனாய்
12. வைபவமாலையின்படி மங்கத்தம்மாளுக்குச் சங்கிலி என்றொரு மகனே இருந்தான் என்பதாகும். யாழ்ப்பாணச் சரித்திரம் எழுதிய ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, மங்கத்தம்மாள் வயிற்றில் சங்கிலி யென்றொரு புத்திரனும் பரவையென்றொரு புத்திரியும் பிறந்தார்கள், (பக்கம் : 45) என்கிறார். 13. சுவாமி ஞானப்பிரகாசர், யாழ்ப்பாண வைபவ விமர்சனம்,
அச்சுவேலி - 1928. பக்கம் : 17. 14. கலாநிதி குணராசா. க. ஈழத்தவர் வரலாறு, மு. கு. நூல், 1996. பக்கம்: 87 15. Natesan. S., The Northern Kingdom, History of Ceylon, Colombo - 1960. 16. யாழ்ப்பாண வைபவமாலை, மு. கு. நூ, பக்கம் : 50

யாழ்ப்பாண அரச பரம்பரை 91
விளங்கினான்." 'சங்கிலி, போர்த்துக்கேய எழுத்துக்களில் கண்முன் ஒர் கொலைபாதகனும் கொடுங் கோலனுமாய் விபரிக்கப்படுகின்றான். தனக்கு முந்திய அரசனைத் தென் புலஞ்சேர்த்து, அவ்வரசனது உண்மையான ஊழியர்கள் இரண்டாயிரவரையும் போரிற்கொன்று அரியணையில் ஏறிக் கொண்டான் எனக்காணப்படுகின்றது."
5. 4. பரநிருபசிங்கன்
சிங்கைப் பரராசசேகர மன்னன் தனக்குப் பின் யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆட்சியுரிமை மூத்த மகன் சிங்கவாகுவைச் சேரவேண்டுமெனக் கருதி, அவனைப் பட்டத்து இளவரசன் (பிரதி ராஜா) ஆக்கினான். தானே அரசுரிமை பெறவேண்டுமென நினைத்திருந்த சங்கிலி ஒரு சமயத்தில் சிங்கபாகுவை நஞ்சூட்டிக் கொன்றான். இதனைச் சங்கிலிதான் செய்தான் என்பது எவருக்கும் புலப்படவில்லை.” இந்தச் சம்பவத்தை வரலாற்றாசிரியரான டானியல் எஸ். ஜோன்,'ஓர் மனையிற்தின்று, ஓரிடத்தில் கற்று, ஒரு களரியில் விளையாடி, ஒரு மாளிகையிற்றுயின்று வருங்காலத்தில் அரசனின் மூத்த குமாரனாகிய சிங்கவாகுவுக்கு சண்டாளனாகிய சங்கிலி நஞ்சூட்டிக் கொன்றான். எனக் கடுமையாகக் கூறிச்செல்வார்?
சிங்கவாகு அகால மரணமடையவே, அரசன் தன் இரண்டாவது குமாரனாகிய பண்டாரத்திற்கு இளவரசப்பட்டம் சூட்டினான். பண்டாரத்திடம்
அரசை ஒப்படைத்துவிட்டு, மூத்த மகன் இறந்த சோகத்தை மாற்றுமாறு தீர்த்த யாத்திரை மேற்சென்று சங்கிலியோடு கும்பகோணத்தையடைந்தான்.”*
அங்கு சோழ தேசத்தரசன்° பட்டத்துத்தேவியோடு வந்திருந்தான். அங்கு
17. முத்துத்தம்பிப்பிள்ளை - ஆ. மு. கு. நூல், பக்கம் : 45 18. யாழ்ப்பாண வைபவ விமர்சனம், மு. கு. நூல், பக்கம் 14 19. வைபவமாலை, மு. கு. நூல், பக்கம் 55
செ.இராசநாயகம், மு. கு. நூல், பக்கம் 82 20. டானியல் . எஸ். ஜோன், யாழ்ப்பாணச் சரிதரம், தெல்லிப்பளை, 1929. பக்கம்: 27 21 முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ, மு. கு. நூல், பக்கம் : 50 22. சோழதேசத்தரசன் என்பது எவ்வளவு பொருந்தும் எனத் தெரியவில்லை. ஏனெனில், யாழ்ப்பாண இராச்சிய காலம் விஜயநகர எழுச்சிக்காலமாகும். கும்பகோணச் சிற்றரசனாக அல்லது தலைவனாக இருக்கலாம். இச்சோழன் தஞ்சாவூர் சரித்திரப்படி (Tanjore Gazettes) அச்சுதப்பனாதல் வேண்டும். அவன் நாகபட்டினத்தில் பாரசீகரோடு யுத்தம் செய்ததாகக் கூறப்படுகின்றது. பரராசசேகரன் எனும் பெயரைச் சிலாவாசன விற்பன்னர் பாரசீகர் என விபரீதமாக வாசித்தாராதல் வேண்டும் என யாழ்ப்பாண சரித்திர ஆசிரியர் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை கருதுகிறார்.

Page 52
92 யாழ்ப்பாண அரச பரம்பரை
சங்கிலி செய்த குழப்பத்தினால் அவனையும் மன்னன் பரராசசேகரனையும் பரிவாரங்களையும் சோழ இராசன் பிடித்துச் சிறையிலிட்டான்.* பரநிருபசிங்கன் இதைக் கேள்விப்பட்டுக் கனன்றவனாய், ஒரு படையுடன் சென்று தந்தையையும் தம்பியையும் சிறைமீட்டு வந்தான். உடலில் கடும் காயங்கள் ஏற்பட்டும் அவற்றினைப் பொருட்படுத்தாது போராடி வெற்றி கொண்டான்.* பரநிருபசிங்கனின் இந்த வெற்றி, சிங்கைப் பரராச சேகர மன்னனை அவன்பால் பெரும் உவகை கொள்ள வைத்தது.
5. 5. ஏழுரதிபன்
யாழ்ப்பாணம் வந்தவுடன் மன்னன் பரநிருபசிங்கனை அழைத்துக் கணவரிசைகள் கொடுத்துக் கெளரவித்தான். அவன் காட்டிய பராக்கிரமத் திற்காகவும், அரசின் கெளரவத்தினைக் காப்பாற்றியமைக்காகவும் அவனுக்கு யாழ்ப்பாண இராச்சியத்திலுள்ள ஏழு பெருங் கிராமங்களைத் தாமிரசாசனஞ்செய்து (செப்புப் பட்டயத்தில் எழுதி) அக்கிராமங்களுக்குப் பரநிருபசிங்கனை அதிபதி யாக்கினான். கள்ளியங்காடு, சண்டிருப்பாய், அராலி, அச்சுவேலி, உடுப்பிட்டி, கச்சாய், மல்லாகம் ஆகிய ஏழு கிராமங்களுக்கும் பரநிருபசிங்கன் எழுராசா வாகினான். செப்புத்தகட்டிலேபட்டயமும் எழுதிக் கொடுத்து, அரசாட்சியில் இரண்டாம் அதிகாரமுடையவனாகவும் ஆக்கியமையைச் சங்கிலியால் பொறுக்க முடியவில்லை. எப்படியாவது ஆட்சியை அபகரித்துவிட வேண்டுமென்பதில் சங்கிலி திடமாகவிருந்தான். சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துச் சூழ்ச்சியாளர் களுடன் காத்திருந்தான்."
பரநிருபசிங்கன் அவனது சிறிய தந்தையார் செகராசசேகரன் போன்று வைத்தியத்தில் மகா பண்டிதன். கண்டியரசனின் மனைவி அநேக வைத்தியரால் மாற்றமுடியாத வயிற்று வலியால் வருந்தினாள். அதனால்
23. யாழ்ப்பாண வைபவ கௌமுதி, மு. கு. நூல், பக்கம் : 30 - 31.
24. சோழமன்னனைச் சிறைப்படுத்தி, மூன்று மாதங்கள் அந் நாட்டை ஆண்டதாகவும், பின்னர் திறைபெற்று யாழ்ப்பாணம் மீண்டதாகவும் யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது.
25. இந்த ஏழுர்வரலாறு எல்லாச் சரித்திர நூல்களிலும் யாழ்ப்பாண வைபவ மாலையைத்
தழுவி மீளக் கூறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண அரச பரம்பரை 93
கண்டியரசன், பரராசசேகரனுக்கு ஒலையனுப்பி, தன் மனைவியின் வயிற்று வலியை நீக்கத்தக்க வைத்திய பண்டிதர் ஒருவரை அனுப்பி வைக்குமாறு வேண்டினான். மன்னன், பரநிருபசிங்கனைக் கண்டிக்கு அனுப்பி வைத்தான். அவன் கண்டிக்குச் சென்று கண்டி ராணியின் நோயை ஒரே மருந்தினால் மாற்றி தன் வைத்தியத்திறனை நிரூபித்தான். கண்டி மன்னன் பெருமகிழ்வடைந்து, அனேக வரிசைகளும், யானைகளும், இரத்தினச் சிவிகைகளும் கொடுத்து மகிழ்ந்தான். பரநிருபசிங்கன் கண்டியிலிருந்து நல்லூருக்கு வருவதற்கிடையில் இராச்சியத்தில் இன்னோர் அசம்பாவிதம் நடந்தேறியது.
'கண்டிக்குச் சென்ற பரநிருபசிங்கன் வருவதற்கு முன்னர் யாழ்ப்பாண அரசை எப்படியுந்தான் கவர்ந்து ஆளவேண்டுமென்று உள்ளத்திலெண்ணிய சங்கிலி, பட்டத்து இளவரசனான சிங்கவாகுவைக் கொன்றவாறு, அவன் தம்பி பண்டாரத்தையுங் கொன்று அரசைக் கவர எண்ணியிருந்தான்* ஒருநாள் பண்டாரம்பூந்தோட்டத்தில் நிராயுதனாய்த் தனியே உலாநின்றதைக் கண்டு மறைவிலே நின்று அவனை வாளினால் வெட்டிக் கொலை செய்தான்? அந்தப் பழியை வன்னியர்கள் மேல் சுமத்தி யாழ்ப்பாண இராச்சியத்தின் அரசன் தானெப்பறைச்சாற்றி அரசை அபகரித்து கொண்டான். முதுமையிலே தளர்ந்த மன்னனான பரராசசேகரனும் சங்கிலிக்கு அஞ்சிப் பேசாதிருந்தான். கி. பி. 1519 ஆம் ஆண்டு யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னனாகச் சங்கிலி செகராசசேகரன் முடி புனைந்து கொண்டான். பரராசசேகரன் சங்கிலியிடத்துண்டான அன்பின் பெருக்கால் அவன் செய்த துரோகத்தையும் பொருட்படுத்தாது ஒன்று மறியான் போல வாளாவிருந்தனன்’ என்பார் முதலியார் செ. இராசநாயகம். *
கண்டியினின்றும் திரும்பி வந்த பரநிருபசிங்கன் சீற்றங் கொண்டவனாகத் தனக்குரித்தாய வாரிசுரிமையை நிலைநாட்ட முயன்றான். ஆனால், மணிமுடி தரித்துக் கொண்ட சங்கிலியின் அதிகாரத்தின்முன் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. தன் பாதங்களில் பணிந்து
26. யாழ்ப்பாண வைபவ கௌமுதி, மு.கு. நூல், பக்கம் :32 27. யாழ்ப்பாண வைபவ மாலை, மு. கு. நூல், பக்கம்: 57 28. இராசநாயகம், செ. மு. கு. நூல், பக்கம்: 83

Page 53
94 யாழ்ப்பாண அரச பரம்பரை,
ஆசிவேண்டி, இன்சொற்களால் குளிர்வித்த சங்கிலி செகராசசேகரனின் வார்த்தைகளுக்குப் பலியாவதைத் தவிர வேறு மார்க்கம் அவனுக்கு இருக்கவில்லை. 'வன்னியர்களின் சூழ்ச்சியால் பண்டாரம் இறந்தார். உமது நன்மை கருதியே நான் இராச்சியத்தைக் கைக்கொண்டேன். உமது ஆலோசனைப்படியே நான் இராச்சியத்தை நடத்துவேன்’ என்ற வார்த்தைகளுக்குப்பரநிருபசிங்கன் இணங்க நேர்ந்தது.'இனிநாமிருவரும் ஒத்தரசு செய்வோமானால் பகைவருக்கு அஞ்ச வேண்டுவதில்லை. என்னைப் பெயருக்கு அரசனாக வைத்துக் கொண்டு அரசை நீயே அமைச்சனாக விருந்து நடாத்துவாயாக. அரசிறையைச் சமமாகப் பங்கிட்டுக் கொள்வோம். உமக்குரிய ஏழு கிராமங்களுக்கும் நீரே அரசன்' என்ற சங்கிலியின் சொற்களுக்குப் பரநிருபசிங்கன் உடன்பட நேர்ந்தது. *
பரநிருபசிங்கனுக்கு ஒரு மகன் பரராசசிங்கன் ஆவான். பரராசசிங்கனைத் தனக்குரித்தான ஏழு கிராமங்களுக்கும் அதிபதியாகப் பரநிருபசிங்கன் நியமித்துவிட்டு சங்கிலியின் அரசபையில் அரசனாக பரநிருபசிங்கன் அமர்ந்து கொண்டான். பரநிருபசிங்கனுடன் சங்கிலி வாய்மூலம் செய்து கொண்ட எழுதாத உடன்படிக்கை சிறிதுகாலம் நிலைத்தது. அதிகாரிகளையும் படைவீரர்களையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த சங்கிலி, பரநிருப சிங்கத்திற்குக் கொடுத்து வந்த வருமானப்பங்கை நிறுத்தினான். அதற்குப் பதிலாக அமைச்சருக்குரிய வேதனத்தை வழங்கத் தலைப்பட்டான். அத்தோடு பரராசசிங்கத்தின் ஏழுர் ஆட்சியிலுந் தலையிடத் தொடங்கினான். இந்த மாற்றங்கள் பரநிருபசிங்கனையும் அவனது மகன் பரராசசிங்கனையும் மிகவும் பாதித்தன. தாங்கள் ஏமாந்துபோனதை உணர்ந்தனர். எப்படியாவது இழந்துபோன அரசுரிமையைப் பெற்றே தீரவேண்டுமென முடிவு எடுத்தனர்.
5.6. முதலிப்பட்டமும் மடப்பளிப்பட்டமும்
‘சிங்கைப் பரராசசேகரனும் பரநிருபசிங்கனும் அவன் மகன்
பரராசசிங்கமும் தங்களுக்குச் சங்கிலி செய்த வஞ்சனைகளையெண்ணி
யெண்ணி மனம் புண்ணாயினர். சங்கிலியை அடக்குவோமென்றால்
29. மு. கு. நூல், பக்கம்: 84 30. யாழ்ப்பாண வைபவமாலை, மு. கு. நூல், பக்கம் : 58

யாழ்ப்பாண அரச பரம்பரை 95
சேனைகள் அவன் வசமிருந்ததால் இயலாதவர்களானார்கள். அதேவேளை யாழ்ப்பாண இராச்சியத்தில் பரநிருபசிங்கனுக்கு மக்களிடையேயிருக்கின்ற அபிமானம் சங்கிலிக்குக் கலக்கத்தைக் கொடுத்தது. வடமராட்சியில் ஏற்பட்ட கலவரமொன்றினை அடக்கி விட்டுத் திரும்பி வருகையில் இருபாலை எல்லையைக் கடந்தவுடனே வாத்தியக்காரர் அப்பிரதேசம் பரநிருபசிங்கனுக் குரியதென்பதால் வாத்தியத் தொனியை நிறுத்தினார்கள். * அச்சம்பவம் சங்கிலிக்குப் பரநிருபசிங்கன் மீது வெறுப்பினை ஏற்படுத்தியது. பரநிருபசிங்கன் வசமிருந்து ஏழு கிராமங்களையும் தனதாக்கச் சங்கிலி விரும்பியும், அக்கிராமங்களுக்குரிய உரிமை பரநிருபசிங்கனிடம் செப்புப்பட்டயமாக விருந்ததால் இயலாதுபோயிற்று. மேலும், பரராசசேகரன் வன்னியரைத்துணையாகக் கொண்டு பரநிருபசிங்கணுக்கு முடி சூட்ட எண்ணங்கொண்டிருந்தான்* என்பதும் சங்கிலிக்குச் சற்றுக் கலக்கத்தைக் கொடுத்ததால், தான் நிறுத்தி வைத்த அரசவருமானப் பங்கை மறுபடியும் பரநிருபசிங்கனுக்குக் கொடுக்கவும் கிராமங்களின் அதிகாரத்தைப் பரராசசிங்கனுக்குக் கொடுக்கவும் சம்மதித்துச் சமாதானம் செய்து கொண்டான். அத்தோடு பரநிருபசிங்கனுக்கும் பரராசசிங்கனுக்குமுள்ள இராச நாமங்களை மாற்றி வேறுபட்டத்தைச் சூட்டி வைக்க வேண்டு மென்று ஆலோசித்து வடதிசை வேளாரின் முதலிப்பட்டத்தை அவர்களின் பெயர்களிறுதியிற் சேர்த்து பரநிருபசிங்கமுதலி பரராசசிங்கமுதலியெனத் தானெழுதி வைத்துக் கொண்டான்’*
அரசவாரிசிலிருந்து பரநிருபசிங்கனையும் பரராசசிங்கனையும் பிரித்துத் தனிமைப்படுத்தும் செயலில் சங்கிலி கவனம் செலுத்தியுள்ளான். ஒரு கட்டத்தில் பரராசசிங்கனுக்கு மடப்பளி’ என்னும் பட்டத்தை வழங்கினான். “உங்கள்பின் உங்கள் சந்ததியினருக்குத் தலைமுறை தலைமுறையாக இவ்வதிகாரம் நிலையாகநிற்க ஒர் பட்டம் சூட்டிவைக்க விரும்புகின்றேன். ஐஞ்நூறு கிராமத் தலைமையேற்றுக் காப்பாற்றுதல்
31. மு. கு. நூல், பக்கம் : 62
32. மு. கு. நூல், பக்கம் : 63
33. யார்ப்பாண வைபவ கௌமுதி, மு. கு. நூல், பக்கம்: 36 இந்த முதலிப் பட்டம் பின்னர்
பரராசசிங்கனின் பிள்ளைகளுக்கும் அவர்களின் சந்ததியினருக்கும் வழங்கி வந்த W− தென்பது குறிப்பிடத்தக்கது. பறங்கியர் காலத்தில் முதலிப் பட்டம் நிர்வாகத் தலைமைக்குரிய பட்டமாகவும் மாறியது.

Page 54
96 யாழ்ப்பாண அரச பரம்பரை
என்னும் கருத்தில் மடப்பளி எனும் பட்டத்தை வழங்குவதாகச் சங்கிலி அறிவித்தான்."
யாழ்ப்பாண மன்னர்களிடையே மிக நினைவு கொள்ளப்படும் மாமன்னனாகச் சங்கிலி விளங்கி வருகிறான். பரராசசேகரனின் பட்டத்துராணியில்லாத ஒருத்திக்கு, மகனாகப் பிறந்த சங்கிலி, தனக்கேற்பட்ட வைப்பாட்டி மகன்’ என்ற வசையை நீக்க, தன் மூத்த சகோதரர்களை (பட்டத்து ராணியின் பிள்ளைகளை) அழித்து யாழ்ப்பாண இராச்சியத்தின் சிம்மாசனத்திலேறினான். எனினும் இறுதிவரை யாழ்ப்பாண அரசு போர்த்துக்கேய அந்நியரின் ஆதிக்கத்தின் கீழ்ச் செல்லவிடாது போராடிய சுதந்திர வீரனாகக் கருதப்படுகிறான்."
போர்த்துக்கேய நூல்கள் சங்கிலியைப் பற்றிக் கடுமையாகக் குறிப்பிடுவதற்குச் சில காரணங்களிருந்தன. கொடியவன், கொலைகாரன், கொடுங்கோலன் எனக் குற்றம் சாட்டுகின்றன. சங்கிலி ஆரம்பத்திலிருந்தே போர்த்துக்கேயரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவனாகவும் அவர்களுடன் தொடர்பு கொண்டோரைத் தண்டிப்பவனாகவுமிருந்தான். உண்மையில் சங்கிலி ஒர் ஆளுமை மிக்க மன்னனாகவும், நாட்டுணர்வுமிக்க தலைவனாகவும் தீர்க்கதரிசனமும் கடும்போக்கும் கொண்ட ஒர் ஆட்சியாளனாகவும் நடந்து கொண்டான். எனத் தெரிகின்றது.* போர்த்துக்கேயர் 1505 ஆம் ஆண்டே கோட்டை இராசதானிக்கு வந்திருந்த போதிலும் அவர்கள் யாழ்ப்பாணத்துடனான தொடர்பை 1543 ஆம் ஆண்டிலேயே கொள்ள முடிந்தமைக்குச் சங்கிலி மன்னனின் எதிர்ப்பே காரணமாகும்.
34. மு. கு. நூல், பக்கம் : 36. கலிங்க தேசத்து மடப்பளியூரிலிருந்து வந்த அரச குடும்பத்தவர்களே மடப்பள்ளியர் என்று வழங்கப்டடனர் என யாழ்ப்பாண வைபவ விமர்சனத்தில் ஞானப்பிரகாசர் குறிப்பிடுவார். மடப்பம் : ஐநூறு கிராமத்தலைமை; அளி:காத்தல். வைபவமாலை ஆசிரியர் மயில்வாகனப்புலவர் கருதுவது சரியானதே. ஐநூறு கிராமங்களைக் காப்பவன் மடப்பளி, பிற்காலத்தில் மடைப்பள்ளி'எனத்திரிந்து அரச குடும்பங்களுக்குச் சமையல் செய்தவர்களின் சந்ததியார் எனக்கூறுவர்.
35. முதலாம் சங்கிலி மன்னனைப் பற்றி நிறையவே இலக்கிய ஆக்கங்கள்
வெளிவந்துள்ளன. பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின் சங்கிலி (நாடகம்), சொக்கனின் துரோகம் தந்த பரிசு, (நாடகம்) செங்கை அழியானின் நந்திக்கடல் (நாவல்) கவிஞர் காரை சுத்தம்பிள்ளையின் சங்கிலியம் (காவியம்) குறிப்பிடத்தக்கன.

யாழ்ப்பாண அரச பரம்பரை 97
5. 7. மன்னார்ப் படுகொலைகள்
தென்னிலங்கையில் ஆதிக்கம் பெற்ற போர்த்துக்கேயர், யாழ்ப்பாண அரசைத் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரச் சந்தர்ப்பம் பார்த்திருந்தனர். கி. பி. 1542 ஆம் ஆண்டு பிரான்சிஸ் சவேரியர் என்ற போர்த்துக்கேய மதகுரு மன்னாருக்கு வந்து, 600 பேரைக் கிறீஸ்தவர்களாக மதம் மாற்றம் செய்தார். அதனைக் கேள்வியுற்ற சங்கிலி மன்னன், படையுடன் மன்னார் சென்று மதம்மாறிய மக்களையும், மதம் மாற்றிய குருவையும் சிரச்சேதம் செய்வித்தான். அத்துடன் யாழ்ப்பாணத்திற் பல கலகங்களுக்குங் காரணராயிருந்த பெளத்த சிங்களரையுமகற்ற வேண்டிக் குறித்த தவணைக்குள்ளே தனது இராச்சிய எல்லைக்கப்பாற் செல்லுமாறு கட்டளை செய்து, அவர்கள் பள்ளிகளையும் இடித்துத் தள்ளினான். அநேக சிங்களக்குடிகள் வன்னிப் பிரதேசத்திற்கும் கண்டி நாட்டிற்கும் சென்றார்கள்."
மன்னாரில் மதம்மாறியவர்களையும் மதப்பிரசாரம் செய்த குருவையும், மன்னாரின் அரசியல் நிர்வாகியாகவிருந்த இளஞ்சிங்கம் என்பவனையும் சங்கிலி கொன்றமை மதம் பற்றியதன்று. அரசியல் பற்றியதே எனச் சில வரலாற்றாசிரியர் கருதுகின்றனர். மதம் மாறியவர்கள் போர்த்துக்கேயரின் ஊடுருவல்களுக்கு வழி செய்வார்கள் என எண்ணியே சங்கிலி அவ்வாறு செய்தான். சங்கிலியின் நடவடிக்கை ஆனது அரசியல் கண்ணோட்டத்திலும் சமகாலத்தில் போர்த்துக்கேயரால் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்களையும் கருதற்கொண்டு பார்க்குமிடத்து முற்றுமுழுதாக நியாயமற்றது எனக் கூறமுடியாதுள்ளது. *
சங்கிலி மன்னன் எக்கட்டத்திலும் போர்த்துக்கேயரை யாழ்ப்பாண இராச்சியத்தில் நிலை கொள்ளாது தடுப்பதில் முழுக்கவனத்தோடு திட்டவட்டமான கொள்கையோடுமிருந்துள்ளான் என்பது அவனது செயல்களிலிருந்து புலனாகின்றது. 1545 ஆம் ஆண்டு சீதவாக்கை, கண்டி,
36. கிருஸ்ணகுமார், திருமதி சோ. யாழ்ப்பாண மன்னர்களும் போத்துக்கேயரும்,
யாழ்ப்பாண இராச்சியம், யாழ் பல்கலைக்கழகம் - 1992, பக்கம்: 67.
37. இராசநாயகம், செ. மு. கு. நூல்.
38. கிருஸ்ணகுமார், திருமதி சோ, மு. கு. நூல், பக்கம் : 69.

Page 55
98 யாழ்ப்பாண அரச பரம்பரை
அரசர்களுடன் இணைந்து போர்த்துக்கேயருக்கு எதிராகக் கோட்டைக்குப் படையனுப்பிச் செயற்பட்டான். அதில் வெறறி காண முடியவில்லை. 1552 இல் விதியபண்டார என்பவன் கோட்டை மன்னனுடனும் போர்த்துக்கேயருடனும் பகைத்துக் கொண்டு யாழ்ப்பாணம் வந்த போது அவனைச் சங்கிலி தன்னுடன் இணைத்துக் கொண்டான். வீரமாகாளியம்மன் கோவிலில் நிகழ்ந்த ஒரு கலவரத்தில் விதிய பண்டார இறக்க நேர்ந்தது.
5. 8. போர்த்துக்கேயப் படையெடுப்பு
மன்னாரில் நிகழ்ந்து முடிந்த துயரச் சம்பவதற்காகப் பழிவாங்கும் பொருட்டு,கி. பி. 1543 இல் போர்த்துக்கேயப் படை யாழ்ப்பாணத்திற்குப் புறப்பட்டது. இப்படைக்குமாட்டின் அல்போன்சோதே சௌசா என்பான் படைத் தலைவனாக வந்தான். அவனது கப்பல்கள் நெடுந்தீவில் ஒதுங்கியபோது, பரநிருபசிங்கன் அவனை நாடிச் சென்று உதவிகோரினான். சங்கிலி செகராசசேகரன் வழங்கிய திரவியத்தால் திருப்தியடைந்த மாட்டின் அல்போன்சோதே சௌசா படையுடன் திரும்பிச் செல்ல நேர்ந்தது. வக்கிரதுக்குறி பண்டாரம் எனப் போத்துக்கேயரால் அழைக்கப்பட்ட பரநிருபசிங்கன், சங்கிலி மன்னனுக்கு பயந்து கோவைக்கு ஒட நேர்ந்தது. அரசுரிமையைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் பரநிருபசிங்கன் கத்தோலிக்க மதத்தையும் தழுவிக் கொண்டான். இருந்தும் யாழ்ப்பாண இராச்சியத்தின் சிம்மாசனத்தில் அமர அவனுக்கு இறுதிவரை சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
இரண்டாம் முறை கி. பி. 1560 ஆம் ஆண்டு கொன்ஸ் தாந்தீனு தே பிறகன்சா என்றும் தளபதியின் தலைமையில் போர்த்துக்கேயப் படை 77 கப்பல்களுடன் கரையூரில் வந்திறங்கியது. தமிழர்படை எவ்வளவு எதிர்த்தும் போர்த்துக்கேயப்படைநல்லூரைநோக்கிமுன்னேறுவதைக் தடுக்கமுடியவில்லை. நல்லூர் நகர் முழுவதும் பறங்கிப்படைகளால் சூறையாடப்பட்டது. இளவரசனின் மனைவியும் அரண்மனைப் பெண்களும் போர்த்துக்கேயரினால் கைது செய்யப்பட்டனர். சங்கிலி மன்னன் கோப்பாய்க்குத்தப்பி ஓடி அங்கிருந்த காவல் அரணை அடைந்தான். போர்த்துக்கேயத்தளபதிபிறகன்சா சங்கிலிமன்னனைப் பிடிக்கும் நோக்குடன் கோப்பாய்க்குச் சென்றபோது, சங்கிலி மன்னன் பச்சிலைப்பள்ளிக்குப்பின்வாங்கிச் சென்றான். போர்த்துக்கேயப்படை தொடர்ந்து

யாழ்ப்பாண அரச பரம்பரை 99.
போரிட முடியாத நிலையில், சங்கிலி மன்னனுடன் ஒர் உடன்படிக்கை செய்துகொள்ள நேர்ந்தது. அந்த ஒப்பந்தப்படி சங்கிலி போர்த்துக்கேயருக்குத் திறையாக ஆண்டுதோறும்12கொம்பன் யானைகளையும் 1200 பதக்குப்பணமும் தர ஒப்புக்கொண்டான். அத்துடன்மன்னார்த்தீவைபோர்த்துக்கேயரிடம் விட்டுக் கொடுக்கவும் ஒப்புக் கொண்டான்* இந்த ஒப்பந்தப்படி சங்கிலி மன்னன்
திறைசெலுத்தியதாகத் தெரியவில்லை.
பிறகன்ஸா மன்னாரைக் கைப்பற்றி அங்கு ஒரு கோட்டையைக் கட்டிக் கொண்டான். திருக்கேதீஸ்வரம் இடிக்கப்பட்டு, அதன் கற்களும் இக்கோட்டையையமைக்கப் பயன்படுத்தப்பட்டன. மன்னாரில் கத்தோலிக்க மதத்தைப் பரப்புவது இலகுவாகியது. மன்னாரில் முத்துக்குளிக்கும் பகுதிகள் பறங்கிகள் வசமாகின.
முதலாம் சங்கிலி 1565 ஆம் ஆண்டுவரை ஆட்சி செய்தான் எனக் கொள்ளலாம். 1564 ஆம் ஆண்டு சீதவாக்கை மன்னன் மாயாதுன்னைக்கு ஆதரவாகவும் போர்த்துக்கேயருக்கு எதிராகவும் வடக்கர் படையொன்றினைச் சங்கிலியனுப்பியிருந்தான். எவ்வாறாயினும் போர்த்துக்கேயரிடம் இறுதிவரை சங்கிலி போராடியுள்ளான். அவனை அவர்களால் கைப்பற்ற முடியவில்லை.
சங்கிலி செகராசசேகரனுக்குப் பின் புவிராசபண்டாரம், காசிநயினார் அல்லது குஞ்சு நயினார் (1565), பெரியபிள்ளை செகராசசேகரன் (1570), புவிராசபண்டாரம் பரராசசேகரன் (1582), எதிர்மன்ன சிங்ககுமாரன் (1591), சங்கிலிகுமாரன் செகராசசேகரன் (1616) ஆகிய ஆறு மன்னர்கள் யாழ்ப்பாணத்தின் ஆட்சியாளர்களாக விளங்கினர். யாழ்ப்பாண இராச்சியத்தில் நிகழ்ந்த உள்நாட்டுக் குழப்பத்தினாலும், போர்த்துக்கேயரின் அரசியல் தலையீட்டினாலும் இந்த மன்னர்கள் நிலையாகத் தொடர்ந்து ஆள முடியாது போனது. புவிராச பண்டாரம், இரு தடவைகள் மன்னாரைத் தாக்கிப் போர்த்துக் கேயரைத்துரத்த முயன்றும், இயலாது போயிற்று.
39. இராசநாயகம், செ.மு. கு. நூல், பக்கம்: 109.

Page 56
100 யாழ்ப்பாண அரச பரம்பரை
5.9. சங்கிலிகுமாரன் செகராசசேகரன்
கி. பி. 1591 இல் போர்த்துக்கேயர் மூன்றாவது தடவையாக, அந்திரே பூர்த்தாடு தே மென்டோன்சா என்னும் படைத் தலைவனைப் பெரும்படையுடன் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்தனர். தமிழர் படையுடன் பறங்கியர் படையும் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கும் வீரமாகாளியம்மன் கோவிலுக்குமிடையில் மோதின. தமிழர் படை தோல்வியைத் தழுவ நேர்ந்தது. பூர்த்தாடு, பெரியபிள்ளையின் மகனாகிய எதிர்மன்னசிங்கனை மன்னனாக்கி மீண்டான். எதிர் மன்னசிங்கன் கி. பி. 1616 இல் மரணமடைய சங்கிலிகுமாரன் செகராசசேகரன் அரியணையிலமர்ந்து கொண்டான். இவனே யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி மன்னனாவான்.
கி. பி. 1620 ஆம் ஆண்டு போர்த்துக்கேயரின் இறுதிப் படையெடுப்பு நிகழ்ந்தது. இப்போர்த்துக்கேயப் படையெடுப்புக்கு பிலிப்தே ஒலிவேறா என்பவன் படைத் தலைமை தாங்கினான். இப்படையெடுப்பில் தமிழ் வீரர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டார்கள். சங்கிலி குமாரன் குடும்பத்துடன் சிறைப்பிடிக்கப்பட்டு, கோவைக்கு அனுப்பப்பட்டான். அங்கு அவனைச் சிரச்சேதம் செய்தார்கள். சிங்கை ஆரிய அரச பரம்பரை அவனது மரணத்துடன் அழிந்து போனது.
யாழ்ப்பாண இராச்சியத்தின் தேசாதிபதியாக பிலிப்தே ஒலிவேறா தன்னை நியமித்துக் கொண்டான். அவன் காலத்தில் நல்லூர் கந்தசுவாமி கோயிலுட்பட பல சைவக்கோயில்கள் அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. அவற்றைக் கொண்டு யாழ்ப்பாணக் கோட்டை கட்டப்பட்டது.
பல நூற்றாண்டு காலமாகச் சுதந்திரத்தை பேணி பாதுகாத்து வந்த தமிழர் இராச்சியத்தில், கி. பி. 1621 ஆம் ஆண்டு, சுதந்திர சூரியன் அஸ்தமித்தது.

அத்தியாயம் ஆறு
பரநிருப சிங்கன் பரம்பரை
6.1 பரநிருக சிங்கன்
சிங்கைப் பரராசசேகர மன்னனின் பின்னர், யாழ்ப்பாண அரசின் ஆட்சிக்குரிய மைந்தனாகப் பிறந்தும், அந்த அதிர்ஸ்டம் கிட்டாமல் அரியணையை இழந்த பரிதாபத்திற்குரியவனாகப் பரநிருபசிங்கன் விளங்குகின்றான். பாண்டிமழவன் மரபிற்பிறந்த அரசகேசரி என்பவனின் புதல்வி வள்ளியம்மையின் நான்கு மக்களில் மூத்தவனாகப் பிறந்தும், சங்கிலியின் சூழ்ச்சியால் அரசகட்டிலேற முடியாது போயிற்று. பரநிருபசிங்கனுக்கு இருதம்பிகளும் ஒரு தங்கையும் இருந்தனர். யாழ்ப்பாண வரலாற்று நூல்களில் பரநிருபசிங்கனின் சகோதரர்கள் பற்றி அறிய முடியவில்லை. ஆனால், சங்கிலி செகராசசேகரனுக்குப்பின்னர் யாழ்ப்பாண இராச்சியத்தின் அரசர்களாக, அரசுரிமை கொண்டவர்களே இருந்துள்ளனர். சிங்கைப்பரராச சேகரமன்னனின் பட்டத்துராணி பெற்ற பிள்ளைகளான சிங்கவாகு, பண்டாரம் ஆகியோர் அவமாக மரணிக்க நேர்ந்தது. அவர்களுக்குப் பிள்ளைகள் இருந்ததாக வரலாற்று ஆதராங்களில்லை; சங்கிலிக்கு ஒரு பட்டத்துமகன் இருந்தான். போர்த்துக்கேயரிடம் தோற்ற சங்கிலி, அவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, தனது மகனான பட்டத்துக் குமாரனையும் முதலிமார் இருவரையும் பிணையாகப் போர்த்துக்கேயருடன் அனுப்பநேர்ந்தது. பட்டத்துக்குமாரனும் அவன் மனைவியும் கோவைக்குக் கொண்டு செல்லப்பட்டு, 1571 இல் பட்டத்துக் குமரன் மரணமடைந்தான். எனவே, முடிக்குரிய உரிமை மிக்கவர்களாகவும் சங்கிலிக்குச் சமதையாவும் விளங்கியவர்கள் பரநிருப சிங்கனும் ஆவனது தம்பிமார்களுமாவர். சங்கிலியின் மரணத்திற்கு முன்னரே பரநிருபசிங்கன் இறப்பினைத் தழுவ நேர்ந்தமையால், சங்கிலியின் மரணத்தின் பின்னர்
1. இராசநாயம். செ. யாழ்ப்பாணச் சரித்திரம், வண்ணார்பண்ணை 1933. பக். 107.

Page 57
102 யாழ்ப்பாண அரச பரம்பரை
யாழ்ப்பாண அரசின் சிம்மாசனத்திலமர்ந்த காசிநயினார், பெரியபிள்ளை செகராசசேகரன் ஆகியோர் பரநிருபசிங்கனின் தம்பிமார்களாக இருந்திருக்கக்கூடும் என ஊகிக்கலாம். பரநிருபசிங்கனின் ஒரே சகோதரியான மரகதத்தம்மாள், காளிதாசரின் மேகதூதத்தைத் தமிழில் ரகுவம்சமெனப்பாடிய பெரும் புலவன் அரசகேசரியை மணந்திருந்தாள். பரநிருபசிங்கத்தின் மைத்துனணும் பரராச சேகரனின் மருமகனுமாகிய அரசகேசரி' என யாழ்ப்பாண வைபமாலையாரின் குறிப்பிலிருந்து அறியலாம். பரநிருபசிங்கனுக்கு பரராசசிங்கன் என்றொரு மகன் இருந்தான் என்பதற்கு நூலாதாரங்களுள்ளன.
பரநிருபசிங்கன் போர்க்கலையிற் சிறந்து விளங்கியுள்ளான். கும்பகோணத்தில் தஞ்சாவூர்ச் சோழனால் சிறைபிடிக்கப்பட்ட பாராசசேகர மன்னனையும், சங்கிலியையும், பரிவாரங்களையும் படைநடத்திகடும் காயமடைந்த நிலையிலும் சிறைமீட்ட பெருமை பரநிருப சிங்கனுக்குரியது. மேலும், பரநிருபசிங்கன் நாடறிந்த பெரும் வைத்திய சிகாமணியாக விளங்கியுள்ளான். கண்டி மன்னனின் பட்டத்து ராணியின் வயிற்று வலியை (சூலை நோய்) த் தீர்த்து வைத்துப் புகழும் பரிசில்களும் பெற்றுள்ளான். கண்டியில் பரநிருப சிங்கன் இருந்த காலவேளையைப் பயன்படுத்திச் சங்கிலி யாழ்ப்பாண அரசை அபகரித்துக் கொண்ட போது, முதலில் வெகுண்டெழுந்தாலும் பின்னர் களநிலமைகளைப் புரிந்து செயற்பட்டுள்ளான். சங்கிலியின் கபடநடத்தைகளுக்கு இணங்கிப் போய், மந்திரிப்பதவியை ஏற்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டபின் வேறு வழி அவனுக்கு இருக்கவில்லை. பிரதி ராஜாக்களான சிங்கவாகுவையும் பண்டாரத்தையும் அழித்த சங்கிலியால் தனது உயிருக்கும் ஆபத்து வரலாம் என்றபயம் அல்லது சங்கிலியின் பின்னால் இணைந்து கொண்ட படையினரின் ஆதரவின்மை அல்லது சில வரலாற்றாசிரியர்கள் சொல்வது போல தம்பிமேல் வைத்த பாசழ் அல்லது உண்ணாட்டுக் கலவர நிலமை என்பவற்றில் ஒன்றோ பலவோ பரநிருபசிங்கனை அடங்கிப் போக வைத்துள்ளது.
2. யாழ்ப்பாண வைபவமாலை, குலசபாநாதன் பதிப்பு, இந்து சமய கலாசார அலுவல்கள்
திணைக்களம் - 1995. பக். 49 - 50

யாழ்ப்பாண அரச பரம்பரை 103
சங்கிலி செகராசசேகரனின் ஆரம்ப நடவடிக்கைகள் பரநிருப சிங்கனைத் திருப்தியடைய வைத்தன. சிங்களக் கலகம்,மறவர் ஏற்படுத்திய கலகம், வன்னியரின் சூழ்ச்சிகள் என்பனவற்றைச் சங்கிலி கடுரமான முறையில் அடக்கினான். பரநிருப சிங்கன் வீரனாயினும், கொடுரமான வழிமுறைகளைக் கையாண்டு தீர்வு காணும் பண்பினனல்லன். அரச வருமானம் ஆரம்பத்தில் சமமாகப் பங்கிடப்பட்டமை, தந்தையால் செப்புப்பட்டயமிட்டு வழங்கப்பட்ட ஏழு கிராமங்களின் ஆட்சியதிகாரத்தில் தலையிடாமை என்பன பரநிருபசிங்கனுக்கும் சங்கிலிக்கும் ஆரம்பத்தில் அபிப்பிராய பேதங்களை ஏற்படுத்தவில்லை. ஆனால், பரநிருபசிங்கனின் செல்வாக்கு வளர்வதைக் கண்ட சங்கிலி, அவர்களை அரசகுலத்தவரென்ற தகுதியிலிருந்து நீக்கக் கருதி முதலி' என்ற பட்டத்தையும் மடப்பளி என்ற பட்டத்தையும் அவர்களுக்கு வழங்கிய போதும், ஏழு கிராமங்களின் ஆட்சியதிகாரத்தில் தலையிட்டபோதும் அரசவருமானப் பங்கை மாற்றி அமைச்சருக்குரிய சம்பளமாக்கியபோது சங்கிலியின் சுயநலத்தைப் புரிந்து கொண்டான்.
பரநிருபசிங்கனுக்கு அவனுடைய தந்தை சிங்கைப் பரராசசேகரனின் ஆதரவு என்றுமிருந்தது. தனக்கு எதிராகப் பரநிருபசிங்கன் கிளர்ந்தெழ நேராது சங்கிலி பார்த்துக் கொண்டான். வன்னியருடன் சேர்ந்து கூடுதலாகப் பரநிருபசிங்கனும் பரராசசேகர மன்னனும் உறவாடுவதை அறிந்ததும், நிறுத்திவைத்திருந்த அரச வருமானப் பங்கையும் ஏழுர் ஆட்சியதிகாரத்தையும் மீளவும் வழங்கிச் சமாதானமாக்கிக் கொண்டான். எனினும் சங்கிலியோடு மிக அவதானமாகவே பரநிருபசிங்கன் நடந்து கொண்டான்.
பரநிருபசிங்கன் தன்னைச் சங்கிலி நஞ்சிட்டுக் கொல்லச் சூழ்ச்சி செய்திருக்கிறானெனக் கேட்டுத் தனது மடைப்பள்ளிக்குச் (அடுக்களைக்கு) சங்கிலியின் அரண்மனையிலிருந்து எவரும் செல்லலாகதெனக் கட்டளையிட்டான். இராச பந்திக்குரிய உயர்குல வேளாளருள்ளே விசுவாசமுள்ளவர்களைத் தெரிந்தெடுத்து மடைப்பள்ளியதிகாரிகள், உக்கிராணகாரர்களாக நியமித்து முன்னிருந்தவர்களையெல்லாம் நீக்கினான். அம்மடைப்பள்ளி அதிகாரிகள் உக்கிராணகாரர்களுக்கு இராச மடைப்பள்ளியாரென்றும், தனது குமாரனுடைய மடைப்பளியாருக்குக் குமார

Page 58
104 யாழ்ப்பாண அரச பரம்பரை
மடைப்பள்ளியாரென்றும். மந்திரசங்கத்தாருடைய மடைப்பள்ளி உத்தியோகத்தருக்கு சர்வமடைப்பள்ளியாரென்றும் பட்டமளித்தான். இராசமடைப்பள்ளியாரும் குமாரமடைப்பள்ளியாருமே பரநிருபசிங்கனுக்கும் அவன் மகன் பரராசசிங்கனுக்கும் உறுதிச் சுற்றமாய் விளங்கினார்கள்'
பரநிருபசிங்கன் முன்னர் இராச்சியத்தையும் பின்னர் அரசிறையிற் பாதியையும் இழந்து சங்கிலியிடம் படிச்சம்பளம் பெற்று இழிந்ததகையிலிருந்த போதே உயர்குல வேளாளரைத் தெரிந்தெடுத்துத் தனக்கு உக்கிராசனகாரர்களாகவும் மடைப்பள்ளியதிகாரிகளாகவும் நியமித்து அவர்கட்கு மடைப்பள்ளியார் (அட்டிற்காரர்) என்னும் பட்டங்கட்டினன் என்பதும், அரச மகிமையிலும் பரிவரத்திலும் யாதுக்குறைபடாது வாழ்ந்த பரராசசேகரன் முதலிய முடிமன்னர் மாட்டுமடைத்தொழிலிலே அமர்ந்திருந்த மக்கட்கு மடைப்பள்ளிப்பட்டம் அளிக்கப்பட்டமையும் வெகுவிந்தையாகும். *
பரநிருபசிங்கன் மகன் பரராசசிங்கனுடைய ஏழு புத்திரர் வழியும், ஏகபுத்திரி வழியும் தோன்றிய பின்னோரும், பரநிருபசிங்கன் தம்பிமார் இருவர் வழி தோன்றினோரும், சகோதரி அரசகேசரி மனையாளுடைய சந்ததியாரும் மடப்பள்ளியாரென்று இன்றுவரையும் அறியப்படுகின்றனர் என்பதும், அவர்கள் நல்லூர், கல்வியங்காடு, மல்லாகம், மாதகல், சண்டிருப்பாய், அராலி, அச்சுவேலி, உடுப்பிட்டி, கச்சாய் முதலிய கிராமங்களிலும் அயற் கிராமங்களிலும் இருக்கிறார்களென்பதும் உலகப்பிரசித்தமாகும். சங்கமர், சாலியர், பரதேசிகள், பாணர், அகம்படியாராகியோர் உலாந்தாக்காரர் காலத்தே தம்மை மடப்பள்ளியாரென்று எழுதுவித்து வந்தமையால், அவர்கள் சங்கு மடப்பள்ளியார், சருகு (சிறு)மடப்பள்ளியாரென்று இழித்துக் கூறப்பட்டாரென்பதும் உற்று நோக்கத்தக்கது. அன்னோர் தம்மை வேளாளரென்று எழுதுவிக்காதுவிட்டது வேளாளர் அக்காலத்தே இறுக்க வேண்டியிருந்த அதிகாரவரியென்னும் இறைக்கு அஞ்சியே போலும்
3. முத்துத்தம்பிப்பிள்ளை. ஆ, யாழ்ப்பாணச் சரித்திரம், யாழ்ப்பாணம் - 1993. பக், 61 4. க. வே. யாழ்ப்பாணம் வைபகெளமுதி, வசாவிளாள் - 1918. பக். 38 5. மு. கு. நூல். பக். 39

யாழ்ப்பாண அரச பரம்பரை 105
சங்கிலி செகராசசேகானின் நடவடிக்கைகள் பொது மக்களுக்குப் பாதகமாக அமையத் தொடங்கிய போது, அவனை அரசாட்சியிலிருந்து நீக்கவேண்டியதன் அவசியத்தைப் பரநிருபசிங்கன் உணர்ந்தான். அதனால், போர்த்துக்கேயருடன் இரகசியமாகத் தொடர்பு கொள்ள நேர்ந்தது. போர்த்துக்கேயத்தளபதி மாட்டின் அப்பொன்சோதே சௌசா என்பான் 1543 இல் நெடுந்தீவில் வந்திறங்கிய செய்தியை அறிந்த பரநிருபசிங்கன் அவனிடஞ்சென்று சங்கிலியரசனை இராச்சியத்தினின்றும் நீக்கித் தன்னையரசனாக்கினால், தான் போர்த்துக்கேயருடைய வியாபாரம், சமய விருத்தி முதலியவற்றிற்கு வேண்டிய உதவி புரிவதாக வாக்களித்தான். அப்போன்சோ அதற்குடன்பட்டவனாக நடித்துப் பரநிருப சிங்கனிடமிருந்து முத்துக்களைக் கவர்ந்ததுமன்றி, அதற்குப் பின்னங்கு வந்த சங்கிலிக்குத் தான் படையெடுத்து வந்ததாக அச்சுறுத்தி திரவியத்தை அவனிடம் பற்றிக் கொண்டு சென்றான்' 1546இல் போர்த்துக்கேயத் தளபதி மிகேல் பெறேறா என்பன் முன் தன்னுதவியை நாடின பரநிருபசிங்கத்தைக் கிறிஸ்தவனாக்கி யாழ்ப்பாணவரசை அவனுக்குக் கொடுக்கவெண்ணங்கொண்டு, கொழும்புத் தேசாபதியின் அனுமதியைப் பெற்றான். அவன் ஊர்காவற்றுறைக்கு வந்து பரநிருபசிங்கனை அழைத்து, அவனுமவன் குடும்பத்தாருந் தம் மதத்தினராகின் தாம் யாழ்ப்பாணவரசைக் கைப்பற்றி கொடுப்பதாக வாக்களித்தான். அவனது பேச்சினைப் பரநிருபசிங்கன் நம்பவில்லை. தானும் தன் பரிவாரமும் கோவைக்குக் சென்று போர்த்துக்கேயப்பிரதிநிதியுடன் ஒர் உடன்படிக்கை செய்தபின்பே கிறிஸ்தவர்களாவோமென்று கூறினான். மிக்கேல் பெறேறா அதனை ஏற்காது விடைபெற்றுச் சென்றான்'
பரநிருபசிங்கனின் பிற்கால வரலாறு இருவிதங்களாக விபரிக்கப்பட்டு வருகின்றது. ஒன்றில் அவன் கோவைக்குத்தப்பியோடி அங்கு மரணமடைந்தானெனத் தெரிகின்றது. மன்னாரில் சங்கிலி செகராசசேகரன் நடாத்திய கோரக் கொலைகளின் பின்னர் நல்லூர்ப்பட்டணத்தில் சங்கிலிக்கு மாறாயும், உண்மையில் அரசுரிமை கொண்ட பரநிருபசிங்கனை அரியாசனத்தில் ஏற்றும் நோக்கமாகவும் உள்ளூர்க்கலகமொன்று நடந்தது'
6. இரசநாயகம். செ. மு. கு. நூல், பக்.93 7. மு. கு. நூல், பக். 95 - 96 8. யாழ்ப்பாண வைபவவிமர்சனம், மு. கு. நூ. பக். 17

Page 59
1106 யாழ்ப்பாண அரச பரம்பரை
இதையறிந்த சங்கிலி கிறிஸ்தவர்களாயிருந்த சிலரில் ஐயுற்று, அவர்களைக் கைப்பற்றிச் சிரச்சேதஞ் செய்ததுமன்றிப் பரநிருபசிங்கனுக்கும் அவ்விதக் கொடுஞ்செயலைச் செய்ய நினைத்து, அவனைச் சிறைப்படுத்தத் தெண்டித்தான். ஆனால் பரநிருபசிங்கன் அதற்குத்தப்பித் தன்பரிவாரங்களுடன் பறங்கிகள் வசித்த சந்தோமுக்குப் போய் (மயிலாப்பூர்) அவனின்றுங் கரை மார்க்கமாகக் கோவை சென்று, பறங்கியரின் உதவியை வேண்டிநின்றான். பறங்கித் தேசாதிபதி அவனை நட்புடன் வரவேற்று, அவனுக்கு வேண்டிய உதவிபுரிவதாயும், யாழ்ப்பாணவரசைக் கவர்ந்து ஈவதாயும் வாக்களித்து, அந்நகரிலே சென். போல் எனும் கோவிலில் வசிக்கச் செய்தான். அங்கே அவன் கிறிஸ்தவனாகி மரிக்கும் வரை இருந்தான்' " பரநிருபசிங்கன் யாழ்ப்பாணச் செங்கோலைக் கைக் கொள்வதற்கு அர்ச்சியசிஷ்ட சவேரியாரின் துணையையுந் தேடிக் கொண்டனன். போர்த்துக்கேயருக்கு அந்நாட்களில் இருந்த பல தொல்லைகளின் நிமித்தம் உடனே யாழ்ப்பாண அலுவலைக் கையாள முடியாமற் போய்விட்டது."
பரநிருபசிங்கனின் இறுதிக்காலம் பற்றிய பிறிதொரு வரலாறுமுள்ளது. பரநிருபசிங்கனுக்கும் போர்த்துக்கேயப்பறங்கிகளுக்கு மிடையிலான தொடர்பு ஊர்காவற்றுறையின் தலைவன் காக்கை வன்னியனூடாகவே இருந்தது. முதல்முறை யுத்தத்தில் தோல்வியடைந்த பறங்கிகள், காக்கை வன்னியனின் தூண்டுதலால் மீண்டும் படையெடுத்தார்கள். பரநிருப சிங்கனும் அதுவே சரியான தருணமென அறிவித்தான். அந்த வரலாற்றை யாழ்ப்பாணச் சரித்திர ஆசிரியர் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை பின்வருமாறு விமர்சிக்கிறார். பறங்கிகள் உடனே போருக்காயத்தராகிப் பின்னே செல்லக் காக்கை வன்னியன் முந்திச் சென்று, விடியுமுன் நல்லூரையடைந்து பரநிருபசிங்கனோடு கலந்து, மீண்டு மாறுவேடம் பூண்டு, பறங்கிச் சேனையினுள்ளே புகுந்தான். பறங்கிகள் சேனை சூரியோதயத்தில் மேலைக்கோட்டை வாயிலைச் சென்று வளைத்தது. அது கேட்டுச் சங்கிலியும் படை திரட்டிக் கொண்டு
9. இரசநாயகம், செ. மு. கு. நூல். பக்.98 10. யாழ்ப்பாண வைபவவிமர்சனம், மு. கு. நூ. பக். 18

யாழ்ப்பாண அரச பரம்பரை 107
ஆயத்தமாய்க் கோட்டை வாயிலை அடைந்தான். அதற்கிடையில் பரநிருபசிங்கன் கபடமாகச் சேனாதிபதியிடம் ஒருவனையனுப்பி, ஓர் உபாயம் சொல்வதற்காக ஒரொற்றன் வந்து கீழைக் கோட்டை வாயிலில் காத்து நிற்கின்றான் என அவனுக்கு அறிவித்தான். அதுகேட்ட சேனாதிபதி அவ்வொற்றனைநாடிக் கீழைத் கோபுரவாயிலை அடைந்தான். இங்கே காக்கை வன்னியன் வெளிப்பட்டுச் சங்கிலியைக் காணச் செல்வான் போன்று செல்ல, சங்கிலி அவன் வரவைக் கண்டுள்ளம் பூரித்து, ஆருயிர்த் துணைவனாதலின் இச்சமயம் வந்தனையெனக் கள்ளஞ் சிறிது மெண்ணாது எதிரோடித் தழுவினான். வஞ்சகத் துரோகியாகிய காக்கை வன்னியன் எதிர்தழுவிய கையிரண்டையுங் கொண்டு. நெகிழவிடாது கட்டிப்பிடித்துக் கொண்டான். பறங்கிகள் ஒடி சங்கிலியைப் பிடித்துக் கட்டிவிலங்கிட்டனர். " படையினருக்கு கட்டளையிடச் சேனாதிபதி அவ்விடத்தில்லை. பறங்கிப் படையினரின் முன் நிற்கேலாது தமிழர் படை தோல்வி கண்டதும். சங்கிலி சிரச்சேதஞ் செய்யப்பட்டு மரணமடைய நேரிட்டது. எனினும், சங்கிலியைச் சிறைசெய்து கோவைக்கு அனுப்பி விட்டுப் பரநிருபசிங்கனுக்குப் பட்டங்கட்டி அரசு செய்யவிடுத்து மன்னாரை மாத்திரம் தமக்குரியதாக்கிக் கொண்டு மீண்டனரென்றும், கோவை நகரிலேயே சங்கிலி கொல்லப்பட்டானென்றும் கூறுவாருமுளர். *
பரநிருபசிங்கனும் பறங்கிகளும் முன்னே இரகசியமாகப் பொருந்திக் கொண்டபடி பறங்கிகள் பரநிருபசிங்கனைத் திறையரசனாக்கி அவன்மகன் பரராசசிங்கனை அவனுக்குக் கீழ் எழுரதிபனாக்கினார்கள். பரநிருபசிங்கன் ஒன்பது வருடங்கள் அரசு செய்து அதன்பின் இறந்தான். அவன் இருக்கும் வரையும் பறங்கிகள் சமயவிஷயத்திலும் பொருள் விஷயத்திலும் கொடுங்கோல் செலுத்தாது ஒருவாறு அதிகாரஞ் செய்து வந்தார்கள். அவன் இறந்தவுடன் பறங்கிகன் நல்லூர்க் கோட்டையைத் தமது வாசஸ்தானமாக்கினார்கள். அவன் மகன் பரராசசிங்கனைப் பறங்கிகள் முதன் மந்திரியாக்கினார்கள். அவன் கல்வியறிவிலும் ஒழுக்கத்திலும் விவேகத்திலும் இராச்சியோபாயத்திலும் மிகச் சிறந்தவன். அதனால் அவன்
1 முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ.மு. கு. நூல். பக். 68 - 69 12. மு. கு. நூல், பக். 71

Page 60
108 யாழ்ப்பாண அரச பரம்பரை
பறங்கிகளுக்கும் குடிகளுக்கும் உவப்புடையவனாக விளங்கினான். பறங்கிகளும் அவனுடைய எண்ணப்படியே பெரும்பாலும் அரசு புரிந்து வந்தார்கள். அவர்கள் அவனை மிகக் கண்ணியமாக நடாத்தினார்கள். *
6.2. பராராசசிங்கன் பிள்ளைகள்
பரராசசிங்க முதலிக்கு ஏழு ஆண்பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையுமாக எண்மர் இருந்தனர். உரிமைப்படி பட்டத்து இளவரசனாக இருந்திருக்க வேண்டிய பரராசசிங்க முதலி, தனக்குத்தன் தந்தை பரநிருபசிங்கனால் அளிக்கப்பட்ட கல்வியங்காடு, மல்லாகம், சண்டிலிப்பாய், அராலி, அச்சுவேலி, உடுவில், கச்சாய் ஆகிய ஏழு கிராமங்களுக்கும் அதிபனாக விளங்கி வந்துள்ளான். ஏழுரதிபன் என்ற ஆட்சியதிகாரத்தைக் கூடச் சரிவரச் செய்ய, சங்கிலியின் அரச அதிகாரம் அடிக்கடி தடைப்படுத்தியுள்ளது. பரநிருபசிங்கன் இறந்ததும் யாழ்ப்பாண இராச்சியத்தின் மந்திரியாகப் பரராசசிங்கன் நியமிக்கப்பட்டான். அவ்வேளை தனக்கு உரித்தாக விளங்கிய ஏழுகிராமங்களையும் தனது ஆண்மக்கள் எழுவருக்கும் ஒவ்வொன்றாகப் பகிர்ந்து கொடுத்தான். மூத்த மகன் அழகாண்மைவல்ல முதலிக்குக் கல்வியங்காட்டை வழங்கினான். இரண்டாம் குமாரனாகிய தனபால சிங்கமுதலிக்கு மல்லாகத்தைக் கொடுத்தான். மூன்றாம் குமாரனாகிய வெற்றிவேலாயுத முதலிக்கு சண்டிருப்பாயைக் கொடுத்தான். நான்காம் குமாரனாகிய விசய தெய்வேந்திர முதலிக்கு அராலியைக் கொடுத்தான். ஐந்தாங் குமாரனாகிய திடவீரசிங்க முதலிக்கு அச்சுவேவியைக் கொடுத்தான். ஆறாங்குமாரனாகிய சந்திரசேகர முதலிக்கு உடுப்பிட்டியைக் கொடுத்தான். ஏழாங்குமாரனாகிய இராசரத்தின முதலிக்குக் கச்சாயைக் கொடுத்தான். * இவர்கள் தத்தமக்கு வழங்கப்பட்ட கிராமங்களில் குடியேறி, அந்தக் கிராமங்களின் நிர்வாக அதிகாரிகளாக (முதலிகளாக) விளங்கியுள்ளனர். போர்த்துக்கேயர் காலத்தில் முதலி என்றபட்டம், நிர்வாக அதிகாரிகளைக் குறிப்பதாக விருந்தது.
13. மு. கு. நூல், பக். 73 - 74 14. மு. கு. நூல். பக். 74

யாழ்ப்பாண அரச பரம்பரை 109
பரராசசிங்கனுக்கு வேதவல்லி என்றொரு மகள் இருந்தாள். போர்த்துக்கேயர் பறங்கிகள் காலத்தில் வல்லமைமிக்க அதிகாரியாக பரராசசிங்கன் விளங்கியமையால், மாதகல் என்ற கிராமத்தைத் தன் மகள் வேதவல்லிக்கு வழங்கி, மாதகல் வேளாண் தலைவனும், பரராசசிங்கன் பள்ளியதிபனுமாகிய இராசேந்திர முதலியின் மகனான லமுதலி என்பவனுக்கு அவளை விவாகம் செய்து கொடுத்தான்.
யாழ்ப்பாணச் சரித்திரம் நூலின் ஆசிரியர் முதலியார் செ. இராசநாயகம் இந்த ஏழு அதிகாரிகளின் நியமனத்தைப் பின்வருமாறு கூறுவர். அரச குடும்பத்தைச் சேர்ந்தோர் எழுவர் ய்ாழ்ப்பாணத்திற் பலவிடங்களிலும் அதிகாரிகாளக்கப்பட்டனர். அவர்களுக்கு வேளாளருக்குரிய முதலிப்பட்டத்துடன், தம்மரபை நிலைநிறுத்தும் பொருட்டு அவர் முன்னோர் வசித்த விடமாகிய கலிங்க தேசத்து மடப்பள்ளி எனுமூரின் பெயரினையே என்றும் நினைவு கூர்வதற்காக, மடப்பளியாரெனுங் குலப்பட்டமுமிடப்பட்டது. "
நல்லூரில் போர்த்துக்கேயாட்சிக் காலத்தில் நிர்வாகத்திற்கு மேற்கூறிய பரராசசிங்கனின் புத்திரர்களான முதலிகள் பெரும் உதவியாக விளங்கியுள்ளனர். தம்மளவில் தம்மாட்சி பிரதேசத்தின் தலைமைத்துவ அதிகாரத்துடன் அவர்கள் திருப்தி கண்டதாகத் தெரிகின்றது.
15. இராசநாயகம். செ. மு. கு. நூல் பக். 16.

Page 61
அத்தியாயம் : ஏழு
விசயதெய்வேந்திரமுதலி
பரநிருப சிங்கனுக்கு, யாழ்ப்பாண இராச்சியத்தின் அரசனான பரராசசேகரனால் வழங்கப்பட்ட ஏழு கிராமங்களில் ஒன்று அராலியாகும். அந்தப் பெருங்கிராமத்தை நிர்வகிக்கின்ற பொறுப்பினை பரநிருபசிங்கனின் மகனான பரராசசிங்கன் தனது நான்காவது குமாரனாகிய விசயதெய்வேந்திரமுதலிக்குக் கொடுத்தான். பரநிருப சிங்கனின் மரணத்திற்குப் பிறகு யாழ்ப்பாண இராச்சியத்தின் நிர்வாகத்தைப் பறங்கியர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். பெயருக்கு ஒவ்வொரு அரசகுலத்தவனை அமைச்சனாக அல்லது பிரதிநிதியாக வைத்து ஆட்சி நடாத்தியுள்ளனர். அவ்வகையில் பரராசசிங்கன் அமைச்சனாக அமைந்தபோது, தனது அதிகாரக் கிராமங்களைத் தனது குமாரர்களுக்கும் வழங்கி, அக்கிராமங்களின் ஆட்சியதிகாரிகளாக அவர்களை நியமித்தான்.
விசயதெய்வேந்திரமுதலி அராலியில் தனது குடும்பத்துடன் குடியேறியபோது, அராலியில் ஏற்கனவே அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் குடியேறியிருந்தது. பரநிருபசிங்கனின் சகோதரியான மரகதவல்லி, தனது கணவனான புலவன் அரசகேசரியுடன் அராலியில் ஏற்கனவே குடியேறியிருந்தாள். நல்லூர்த் தலைநகரில் சங்கிலி மன்னனுக்கும் பரநிருபசிங்கனுக்குமிடையிலான இராச்சியப் பிணக்குகளினின்றும் விலகியிருக்க விரும்பியவனாக அரசகேசரி இருந்திருக்கவேண்டும். அராலியின் வனப்பும், வளமும் புலவனான அரசகேசரியை விரும்பிக் குடியேற வைத்திருக்குமென்பதில் ஐயமில்லை. அராலியின் உண்மையான ஆட்சியதிகாரியாக பரராசிங்கனின் நான்காவது புத்திரன் விசய தெய்வேந்திரமுதலி அராலியில் குடியேறியபோது, அவனை அவனது மைத்துனன் சிதம்பரநாதமுதலி வரவேற்றான்.

யாழ்ப்பாண அரச பரம்பரை 111
கி. பி. 1525 அளவில் நல்லூரிலிருந்து அரசகேசரி குடும்பம் அராலிக்கு இடம் பெயர்ந்து சென்று அங்கு நிரந்தரமாக வசிக்கத் தொடங்கியது. அவர்களுக்கு வீரசுந்தரமுதலி என்றொரு மகன் இருந்ததாக அறியப்படுகின்றது. இந்த வீரசுந்தரமுதலி அராலியின் அரசிறை வருமானங்களைச் சேகரிப்பதற்கு அதிகாரம் கொண்டவனாக விருந்துள்ளான். வீரசுந்தரமுதலியின் மகனே சிதம்பரநாத முதலி ஆவான். விசயதெய்வேந்திரமுதலி அராலிக்கு வந்தபோது வரவேற்று அதிகாரப் பொறுப்பை சிதம்பரநாதமுதலி அவனிடம் கையளித்தான். அதனால் தாயாதிச் சண்டைகள் தவிர்க்கப்பட்டன. அராலியினின்றும் காலத்திற்குக் காலம் சேகரிக்கப்பட்ட அரசிறை வருமானம், நல்லூருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.
கி. பி. 1620இல் தொடங்கிய போர்த்துக்கேயர் தனியரசாட்சியில், முதற்சேனாதியான பிலிப்தே ஒலிவேறா நல்லூரை உறைவிடமாகக் கொண்டான். நல்லூர்க் கந்தசுவாமி கோயிலையிடித்து, அக்கோயிற் கற்களைக் கொண்டு (யாழ்ப்பாணக்) கோட்டையையும் (பறங்கித்தெரு) வீடுகளையும் கட்டினான். யாழ்ப்பாணத்திலிருந்த சைவ வைணவ ஆலயங்கள் எல்லாவற்றையும், தரை மட்டமாக இடிப்பித்தான். இதையறிந்த கோயிலதிகாரிகளும் அர்ச்சர்களும் தத்தம் கோயில் விக்கிரகங்களைக் கிணறுகளிலும் குளங்களிலும் போட்டு மறைத்தார்கள். யாழ்ப்பாணத்தினின்றுத் தமக்கெட்டிய மற்றும் பிறவிடங்களிலெல்லாம் உள்ள புத்த சைவ ஆலயங்கள் எல்லாவற்றையும் சமயம் வாய்த்தும் பறங்கியர் இடித்து நாசமாக்கி விட்டனர்'
'ஒலிவேறா, போர்த்துக்கேயர் கைக்கொண்ட கத்தோலிக்க கிறிஸ்து மதமே மெய்ச்சமயமென்றும், மற்றைய சமயங்களெல்லாம் பசாசு வணக்கமுடையனவென்றே பிடிவாதமும் உள்ளவனாகையால், யாழ்ப்பாண வாசிகள் எல்லாரும் அச்சமயத்தையே கைக்கொள்ள வேண்டுமென்று பிரசித்தஞ் செய்தான். அதனால் கிறிஸ்து சமயம் முன்னினுமதிகமாகப் பரவியது. யாழ்ப்பாணம் பறங்கிகள் கைப்பற்றி பன்னிரண்டு வருடங்களுள்
1. இராசநாயகம், செ, யாழ்ப்பாணச்சரித்திரம், யாழ்ப்பாணம், 1933. பக்: 131

Page 62
112 யாழ்ப்பாண அரச பரம்பரை
20 அரசகுடும்பத்தினருக்குட்பட்ட 52,000 பேர் கிறிஸ்தவராயினரென கைறோஸ் என்ற போர்த்துக்கேயச் சரித்திரவாசிரியர் கூறுகின்றார். எவருக்குங் கிறிஸ்துமதம் அனுட்டித்தாலன்றி அதிகாரத் தலைமை உத்தியோகங்கள் கிடையா' அராலித் தலைமையதிகாரி விசய தெய்வேந்திரமுதலி இதற்கு விதிவிலக்காக அமையவில்லை. எனினும், பெரும்பாலானோர் கிறிஸ்துவர்களாக பயத்துக்கும் பதவிக்குமாக நடித்துள்ளரென அறியப்படுகின்றது. ‘அந்தரங்கமாகத் தங்கள் தெய்வங்களை வழிபடுவதையும் சைவ ஆசாரங்களையுஞ் சனங்கள் கைவிட்டாரல்லர். தங்கள் தங்கள் வீட்டுச் சுவர்களிலும் வளவுகளிலும் மரத்தடியிலும் ஒவ்வோர் அடையாளங்களை வைத்து வழிபட்டு வந்தனர். விரத காலத்தில் சாப்பிட்ட வாழையிலைகளைக் கூரைகளிலும் வேலிகளிலும் மறைவாக ஒளித்துச் செருகி வந்தனர்”.* புறத்தில் கிறிஸ்தவனாகவும் அகத்துள் சைவனாகவும் விசய தெய்வேந்திர முதலி குடும்பம் வாழ நேர்ந்தது.
‘போர்த்துக்கேயப் பறங்கியர் இனிமேல் இராசகுடும்பத்தார் தம்பெயரோடு . இராசவெனும் பட்டப் பெயரைச் சேர்த்து வழங்கலாதெனத் தடுத்து முதலி என்னும் தஞ்சாதிப் பட்டப்பெயரையொட்டியே வழங்கல் வேண்டுமெனச் சட்டம் செய்தார்கள். அவர்கள் பரராசசிங்கனுக்குக் கொடுத்த முதன் மந்திரிப் பதவியை அவன் இறந்த பின்னர் பிறருக்குக் கொடாது நிறுத்திவிட்டனர். ஆனால் அதற்குப் பதிலாக யாழ்ப்பாண இராச்சியத்தை நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரித்து அந்த நான்கு பிரிவுகளுக்கும் நான்கு மாதாக்ககர்களை (இராணுவ அதிகாரம் கொண்ட அதிகாரிகள்) நியமித்ததாகத் தெரிய வருகின்றது. யாழ்ப்பாண இராச்சிம் போர்த்துக்கேயராட்சியில் நான்கு பிரிவுகளாக விளங்கியது. வலிகாமம் (மேல்நாடு), தென்மராட்சி (தென்நாடு), வடமராட்சி (வடநாடு), பச்சிலைப்பள்ளி (கீழ்நாடு) என அவை அழைக்கப்பட்டன. இந்தப் பதவிகள் பரராசசிங்கனின் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்குமே கிடைத்தன. கச்சாய்ப் பெருங்கிராமத் தலைவனாக விளங்கிய பரராசசிங்கனின் ஏழாவது
2. மு.கு.நூல். பக் 133 - 134 2அ. முத்துத்தம்பிப்பிள்ளை .ஆயாழ்ப்பாணச்சரித்திரம், வண்ணார்பண்ணை. 1933. பக்:77 3. மு.கு.நூல். பக்:76

யாழ்ப்பாண அரச பரம்பரை 113
குமாரனாகிய இராசரத்தினமுதலியின் மகன் சோழசிங்கச் சேனாதிராசமுதலியை யாழ்ப்பாண இராச்சியத்தின் கிழக்கு நாட்டிற்கு (பிரதேசத்திற்கு) மாதாக்கனாக்கினார்கள். கள்ளியங்காடு பெருங்கிராமத்தின் தலைவனாக விளங்கிய பரராசசிங்கனின் முதலாவது குமாரனாகிய அழகாண்மைவல்ல முதலியின் 85.60TT இராசவல்லபமுதலியை யாழ்ப்பாண இராச்சியத்தின் தென்நாட்டிற்கு மாதாக்கனாக்கினார்கள். அச்சுவேலிப் பெருங்கிராமத்தின் தலைவனாக விளங்கிய பரராசசிங்கனின் ஐந்தாவது குமாரனாகிய திடவிரசிங்க முதலியின் மகனான குமாரசூரிய முதலியை யாழ்ப்பாண இராச்சியத்தின் வடநாட்டிற்கு, மாதாக்கனாக்கினார்கள். அராலிப் பெருங்கிராமத்தின் தலைவனாக விளங்கிய பரராசசிங்கனின் நான்காவது குமாரனாகிய விசயதெய்வேந்திர முதலியின் மகன் பரநிருபசிங்க முதலி சிறுவனாக இருந்தமையால், யாழ்ப்பாண இராச்சியத்தின் மேற்கு நாட்டிற்கு விசயதெய்வேந்திரமுதலியே மாதாக்கனாக நியமிக்கப்பட்டான். இந்த நான்கு மாதாக்கர்களும் பறங்கிகளுடைய எண்ணப்படி குடிகளை வசமாக்கி அதிகாரஞ் செய்து வந்தார்கள்'
‘தமிழரசர் காலத்தில் தேசம் முழுவதும் அரசனுடைய காணியேயென்றிருந்தது. குடிகள் அரசனுடைய வாரக்காரர் போலக் காணிகளை ஆட்சி பண்ணினாரன்றி சொந்தக்காரரெனவன்று, இதன் நிமித்தமே அரசன் சகல நிலப்பலன்களிலும் ஆறிலொன்றுக்கு உரிமையுடையவனான்' இதனை வசூலிக்கும் கடமை முதலிகளுக்குரிய தாக விருந்தது. தமிழரசர்கள் காலத்திலிருந்த வரிமுறைகள் : தொடர்ந்தும் போர்த்துக்கேயரால் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஆண் பிள்ளைகள் சகலரும் வரி செலுத்த வேண்டிய கடமை, அதிகாரிவரி முதலியவை வசூலிக்கப்பட்டன. கிராமங்களை ஆள நியமிக்கப்பட்ட அதிகாரிகள் (முதலிகள்) அக்காலம் அரசவேதனம் பெறாமல், அதிகாரி வரியாலேயே சம்பளமிறுக்கப்பட்டனர்" இந்தவரிகளை முதலிகளுக்குக் கீழ் பணியாற்றும் பண்டாரப்பிள்ளைகள் என்போர் அறவிட்டனர்.
4. மு.கு.நூல். பக் 76 5. ஞானப்பிரகாசர் சுவாமி, யாழ்ப்பாண வைபவ விமர்சனம், அச்சுவேலி - 1975.பக் 169 6. காவே, யாழ்ப்பாண வைபவ கௌமுதி, வசாவிளான் - 1918,பக்.75 - 76

Page 63
114 யாழ்ப்பாண அரச பரம்பரை
பலசாதிகள் அரச ஊழியத்துக்குட் பட்டவர்களாகவிருந்தனர். இதுவே இராசகாரியக் கடமையாகவிருந்தது. யாழ்ப்பாணத் தேசவழமை சிதையாது, பேணுவது, குறிப்பாக முதுசம், சீதனம், தேடிய தேட்டம் என்பனபற்றிய ஒழுங்குமுறைகளைப் பேணுவது முதலிகளுக்குரிய கடமையாகவிருந்தது. அராலி விசயதெய்வேந்திர முதலி இந்தப் பணிகளை அராலிப் பெருங் கிராமத்தில் செய்ததோடு, வலிகாமப் (மேல்நாடு) பிரதேசம் முழுவதும் சரிவர நடைபெறுவதை மேற்பார்வை செய்பவனாகவும் விளங்கினான்.
போர்த்துக்கேயர் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் தீவுகளையும் 32 கோயிற் பற்றுக்களாகப் பிரித்து, பற்றுக்கொரு கோயிலாக அமைத்தபோது, அராலிப்பெருங்கிராமம் தனது பிரதேச முக்கியத்துவத்தைச் சற்று இழக்கநேர்ந்தது. வலிகாமத்தில் பதினான்கு கோயிற்பற்றுக்கள் அமைத்தன. அவற்றிலொன்றான வட்டுக்கோட்டைக் கோயிற்பற்றுக்குள் அராலிக் கிராமமும் உள்வாங்கப்பட்டது. அராலியில் சைவச்செல்வாக்கு மிகுந்திருந்தமையால், வட்டுக்கோட்டை கோயிற்பற்றாக்கப்பட்டதெனலாம்.
அராலி விசயதெய்வேந்திர முதலிக்கு திருத்தமான தோம்பு ஒன்றினை அராலிக் கிராமத்திற்கு ஏனைய பிரதேசங்கள் போன்று பேணும் கடற்பாடிருந்தது. ‘காணிகளில் பெயரும், பரப்பும், உடையவன் பெயரும், அரசிறைவரியும், சாதிகளும், அச்சாதிகள் பிரதானிகளுக்குச் செய்ய வேண்டிய ஊழியமும், செலுத்த வேண்டிய வரிகளும் விபரமாக எழுதப்பட்டிருந்தன. இப்புதுத் தோம்பின் பின் வருமானம் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது. புகையிலைவரி, மரவரி, சாயவேர்வரி, ஆயவரி, சாராய வரி, சோலைவரி என்பனவும் முதலிகளின் மேற்பார்வையில் அறவிடப்பட்டன.
விசயதெய்வேந்திர முதலியின் மரணத்திற்குப் பின்னர், அராலிப் பெருங்கிராமத்தின் அதிகாரியாக அவனது மகன் பரநிருபசிங்க முதலி (பூட்டனாரின் பெயர்) நியமிக்கப்பட்டான். அக்கால வேளையில் யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் கைப்பற்றியிருந்தனர். 'ஒல்லாந்தர் காலத்தில்
7. இராசநாயகம் . செ.மு.கு.நூல். பக் 147

யாழ்ப்பாண அரச பரம்பரை 15
முதலியாரின் கடமைகள், தத்தம் பிரிவுகளில் நடக்கும் சங்கதிகளை விசாரித்துக் காலத்துக்குக்காலம் அறிக்கைப் பத்திரம் அனுப்புவதும், அந்தப் பிரிவுகளில் எவ்வெவ் வேலைகள் நடாத்த வேண்டுமோ அவற்றை நடாத்துவித்தலுமேயாம். அவ்வகையில் ஒல்லாந்தர் காலத்தில் முதலிகளிடமிருந்த பல அதிகாரங்கள் பறிக்கப்பட்டு, முதலிகளுக்கு மேலான பதவி ஒன்றினை மேயொறால் (இறைச்சுவர்) ஏற்பத்தி அவர்களுக்கு வழங்கபட்டது. தலைவரி, நிலவரி, நெல்வரி முதலியவற்றை அறவிடும் அதிகாரம் மேயொறாலுக்கும், அவற்றை அறவிட்டு கையளிக்கும் பணி முதலியார்களுக்குமாகவிருந்தன. அதற்குச் சம்பளமாக அராலி பரநிருபசிங்க முதலிக்கு, ஏனைய முதலியார்களுக்குக் கிடைப்பது போன்று பத்துப் பணமும் ஒரு பறை அரிசியும் கிடைத்தன. அத்தோடு பரநிருபசிங்க முதறி என்நேரமும் எவ்விடத்திலுந் தலைப்பாகை அணிந்து கொள்ளலாமென்றும், தண்டிகை பல்லக்குகள் வைத்திருக்கலாமென்றும், போகுமிடமெங்கும் குடை கவிழ்துப் போகலாமென்றும் உத்தியோக வரிசைகள் வழங்கப்பட்டிருந்தன.
அராலி பரநிருபசிங்கமுதலிக்கு நிர்வாகத்தில் உதவியாக விருந்தவன், விக்கிரமசிங்கமுதலி ஆவான். மரகதவல்லி - அரசகேசரி வழிவந்த சிதம்பரநாத முதலியாரின் மகனே விக்கிரமங்க முதலியாவான். பரநிருபசிங்கமுதலிக்குப் பின்னர் அராலிப் பெருங்கிராம அதிகாரியாக பரநிருபசிங்க முதலியின் மகன் விஜயேந்திரமுதலி பொறுப்பேற்றான். விஜயேந்திர முதலி காலத்தில் ஒல்லாந்தரால் யாழ்ப்பாணத் தேசவழமைச் சட்டநூல் ஒன்று யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்டது. “யாழ்ப்பாணம் ஒல்லாந்தத் திஸ்ஸாவையான கிளாஸ் ஐசாகஸ் (ClaaSz Isaacs) என்பவனால் யாழ்ப்பாண வழக்கங்களெல்லாம் ஒருங்கு சேர்த்து, ஒரு நியாயப்பிரமாண நூலாக வெளியிடப்பட்டது. அந்நூலிற் கூறப்பட்டிருக்கும் வழக்கங்கள் உண்மையானவையென்று, அந்நாள் யாழ்ப்பாணத்திலிருந்த முதலிமார் 12 பேர் கைச்சாத்திட்டிருக்கின்றனர்" அவர்களுள் அராலி விஜயேந்திரமுதலியும் ஒருவராவார். நீதிபரிபாலனத்தில் யாழ்ப்பாணத் தேசவழமை நூலிற் கூறப்பட்டிருக்கும் சுதந்திரங்களும் ஆதன உரிமையும்,
8. மு.கு.நூ. பக்: 174 9. மு.கு.நூ. பக்: 179

Page 64
அத்தியாயம் : எட்டு
இளையதம்பி - நரசிங்கன்
சிங்கைப் பரராசசேகரின் மகனான பரநிருப சிங்கன் அரச பரம்பரையில் வழிவந்த விஜயேந்திர முதலியின் மகள் ரதிக்கும் பரநிருப சிங்கனின் சகோதரி மரகதவல்லி - அரசகேசரி பரம்பரையில் வந்த அம்பலவாணரின் மகன் சேதுப்பிள்ளைக்கும் அராலியில் திருமணம் நடந்த வேளை யாழ்ப்பாணம் ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டிருந்தது. 1795ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆந் திகதி ஆங்கிலேயக் கேர்ணல் பீற்றர் றெயினாஸ் ஸ்ரூவார்ட் தலைமையில் கப்பற் படைத்திரளொன்று பருத்தித்துறையில் இறங்கியது. வெகு இலகுவாகத் திருகோணமலை பிரரெட்ரிக் கோட்டையையும், மட்டக்களப்புக் கோட்டையையும் கைப்பற்றிக் கொண்ட மகிழ்வோடும், ஆணவத்தோடும் ஸ்ரூவர்ட்டின் படை பருத்தித்துறையில் இறங்கி அணிவகுத்து யாழ்ப்பாணக் கோட்டையை நோக்கி முன்னேறியது. 28, செப்டம்பர், 1795 ஆம் ஆண்டு, யாழ்ப்பாணக் கோட்டை ஆங்கிலேயப் படையால் முற்றுகையிடப்பட்டது. கேர்னல் ஸ்ரூவார்ட், கோட்டைக்குள் இருப்போரைச் சரணடையுமாறு செய்தி அனுப்பினான். ஒல்லாந்தக் கம்மந்தாராக அவ்வேளை யாழ்ப்பாணக் கோட்டையில் இருந்த கம்மாந்தர் றாகெட் (Raket) எதுவும் செய்யமுடியாத நிலையில் ஆங்கிலேயரிடம் யாழ்ப்பாண அரசைக் கையளித்துச் சரணடைந்தான். யாழ்ப்பாணம் ஆங்கிலேயர் வசமாகியது.
8. 1. அம்பலவாணர் சிதம்பரப்பிள்ளை
அம்பலவாணருக்குத் தன் பரம்பரை தெரிந்திருந்தது. இலங்கைப் பரராசசிங்கனின் ஒரே மகளான மரகதவல்லி - அரசகேசரியின் வழியில் வந்த வீரசுந்தரமுதலி, சிதம்பரநாதமுதலி, விக்கிரம சிங்க முதலி வம்சம் என்பது புரிந்திருந்தது. அவருடைய தந்தை விக்கிரமசிங்க முதலியுடன் முதலிப்பட்டம் அற்றுப் போனதால், அவர் வெறும் அம்பலவாணராக விளங்கினார்.
1. இலங்கை, யாழ்ப்பாணக் கோட்டை வரலாறு, யாழ்ப்பாணம் - 1995. பக் 41-42

யாழ்ப்பாண அரச பரம்பரை 119
அன்னாருடைய மகன் சேதுப்பிள்ளை அராலி, கொட்டைக்காட்டுப்பகுதிகளில் வேளாண்மை நில புலங்களைக் கொண்டிருந்தான். பரநிருப சிங்கன் பரம்பரையில் வந்த பரராஜசிங்க முதலி, விசய தெய்வேந்திர முதலி பரநிருப சிங்கமுதலி, விஜயேந்திர முதலி வழிவந்த ரதியை மணக்க நேரிட்டதால், மேலதிகமாகச் சீதனச் சொத்தாகவும், நிலபுலன்கள் ஆடு, மாட்டுப் பட்டிகள் என்பன சேர்ந்தன. சேதுப்பிள்ளைக்கும் ரதிக்கும் பிறந்த ஒரேமகன் சிதம்பரப்பிள்ளை ஆவார். சிதம்பரப்பிள்ளை தனது முன்னோர்கள் போல ஆட்சியதிகாரத்தில் இல்லையென்றாலும், செல்வத்திலாவது உயர வேண்டுமென்ற எண்ணங்கொண்டிருந்தார். அதனால் நல்லதொரு வியாபாரத்தில் ஈடுபட்டுப் பொருள் சேர்க்க விருப்பங் கொண்டார்.
அக்கால வேளையில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இயங்கிய பிரதான சந்தைகளில் ஒன்று சங்கானை ஆகும். யாழ்ப்பாணக்குடா நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சங்கானைச் சந்தைக்கு வியாபாரிகள் வந்தனர். அத்தோடு சங்கானையில் நிலபுலன்களை வாங்கிக் குடியேறவுந் தலைப்பட்டனர். சங்கானைச் சந்தை புகையிலை வாங்கல் - விற்றலில் முதன்மை பெற்றிருந்தது. ஊர்காவற்றுறை முக்கிய கப்பல்துறையாக விளங்கியதுடன், வடக்கன் மாடுகள் வாங்கும் - விற்கும் பெரும் சந்தையாக விளங்கியது. அதேபோல் சங்கானை பெரும் புகையிலைச்சந்தைகளில் ஒன்றாக விளங்கியுள்ளது. இங்கிருந்து பாடமிடப்படும் புகையிலைச் சிப்பங்கள் பார வண்டில்கள் மூலம் ஊர்காவற்றுறைக்கு எடுத்துவரப்பட்டு மலையாளத்திற்கு ஏற்றுமதியாகின. இவ்வாறான புகையிலை வியாபாரத்தில் ஈடுபடும் எண்ணங் கொண்ட சிதம்பரப்பிள்ளை, அராலியிலிருந்து சங்கானைக்குத் தன் குடியிருப்பை மாற்றிக் கொண்டார். சங்கானையில் காணிபூமிகளை வாங்கி, வேளாண்மை செய்தலோடு புகையிலை வர்த்தகத்திலும் ஈடுபட்டார்.
யாழ்ப்பாண இராச்சியத்தின் அரசிறை வரலாற்றில் புகையிலை மிக முக்கியமான ஒரு பண்டமாகப் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலத்தில் விளங்கியுள்ளது. புகையிலைக்கு விதிக்கப்படும் வரிமூலம் அதிக வருமானம் அரசுக்குக் கிடைத்து வந்தது. புகையிலை வரியும் குத்தகையாய் விற்கப்பட்டது. குத்தகைக் காரனைத்தவிர, ஒருவரும் புகையிலை விற்கப்படாதெனவும் பிறதேசங்களிலிருந்து புகையிலை வியாபாரத்துக்கு வருவிக்கப்பட்டால் அதைக் குத்தகைக்காரனுக்குகே விற்றுவிட வேண்டும்

Page 65
120 யாழ்ப்பாண அரச பரம்பரை
எனவும், அவனுடைய உத்தரவுச் சீட்டு இல்லாமல் எவரும் புகையிலை வைத்திருக்கப்படாதெனவும், வேளாளரும் பரதேசிகளும் (பிற தேசத்தவர்) தங்கள் உபயோகத்துக்கு மாத்திரம் வேண்டிய புகையிலை வைத்திருப்பதே யொழியச் சந்தையில் விற்கப்படாதெனவும், களவாகக் கொண்டு வரப்பட்டால் தண்டத்துக்குரியதெனவும் கட்டளையிருந்தது. *
8.2. புகையிலை வர்த்தகம்
யாழ்ப்பாணக்குடாநாட்டில் புகையிலை மூலம் அதிக அரசிறை கிடைத்ததால், புகையிலைச் செய்கையை ஊக்குவிப்பதில் ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் அதிக கவனம் செலுத்தியுள்ளனர். புகையிலைச் செய்கையை விருத்தி செய்யும் நோக்கமாக முற்பகுதியில் வரி அறவிடாது காலந்தாழ்த்தி அறவிடப்பட்டது. தொடக்கத்தில் புகையிலை விளையுங் காணியைத் தோம்பிற்பதிந்து. பின்பு புகையிலை விளையாதுவிடினும் உயர்ந்தவரி அறவிடப்பட்டது. பின் சனங்களின் வேண்டுகோளுக்கிணங்கிப் பயிர்செய் நிலங்களாகத் தோம்பிற் பதிந்து, புகையிலை விளைவித்தால் மாத்திரம் அவ்வரி அறவிடப்பட்டது. இவ்வரியால் வருடந்தோறும் 7000 இறையால் வருவாயாயிற்று. பிற தேசங்களிலிருந்து வரும் புகையிலைக்கு 100க்கு 30 வீதம் வரி அறவிடப்பட்டது."
சங்கானையில் குடியேறிய சிதம்பரப்பிள்ளை புகையிலை வர்த்தகத்திலீடுபட்டு விரைவாக முன்னேறினார். அக்காலத்தில் யாழ்ப்பாணப்புகையிலை மலையாளத்திலும் மலாயா நாட்டிலும் மிக்க விருப்புடன் வாங்கப்பட்டது. யாழ்ப்பாணப்புகையிலையில் பத்தில் ஆறுபங்கு மலையாளத்திற்கும் பத்தில் மூன்றுபங்கு மலாய்க்கும் (அச்சீன்), ஒருபங்கு காலிக்கும் ஏற்றுமதியாகின. மலையாளத்தில் யாழ்ப்பாணப் புகையிலைக்கு இருந்த கேள்வியால் களவாகவும் இங்கிருந்து ஏற்றுமதியாகியது. இந்த மலையாள வர்த்தகத்தைச் சீர் செய்யும் நோக்குடன் யாழ்ப்பாண மலையாள வர்த்தகக் கம்பனி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது. இந்த மலையாள வர்த்தகக்
2. இராசநாயகம், செ. யாழ்ப்பாணச் சரித்திரம், யாழ்ப்பாணம் - 1933 பக் 150 3. மு. இ. நூல் பக் 215

யாழ்ப்பாண அரச பரம்பரை 121
கம்பனியின் கிளையொன்றினை சங்கானையில் ஸ்தாபிப்பதில் சிதம்பரப்பிள்ளை முன்னின்று உழைத்துள்ளார். சிதம்பரப்பிள்ளை, முதலியார் பரம்பரையினராதலால், மக்களும் அரசும் அவருடைய சொற்களுக்கு மிக்க மதிப்பளித்தன. மலையாள அரசன் யாழ்ப்பாணப் புகையிலை வர்த்தக விடயத்தில் காலத்திற்குக் காலம் பிரச்சினைகளைத் தோற்றுவித்தபோது, யாழ்ப்பாணத் தேசாதிபதிகளான நோர்த்பிரபுவும், சேர். தோமஸ் மெற்லாண்ட்டும் கூடியவரை பேசி இணங்கக் கண்டனர். யாழ்ப்பாண மலையாளப் புகையிலைக்கம்பனி சார்பில் சிதம்பரப்பிள்ளை மலையாளம் சென்று பேசி இணக்கங்கண்டும் திரும்பியுள்ளார்.
சிதம்பரப்பிள்ளையின் இல்லம் தொட்டிலடி சங்கானையில் இருந்தது. சங்கானையில் பல நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலம் அவரது தேடிய தேட்டமாகியது. சிதம்பரப்பிள்ளைக்கு இராமலிங்கம் என்றொரு மகன் இருந்தார். இராமலிங்கம் தனது தந்தைக்குச் சொந்தமான வயல்களைப் பயிரிட்டுப் பராமரிப்பதிலும், வர்த்தகத்திலும் தந்தைக்கு உதவியாகவும் விளங்கினார். தந்தையால் கொள்வனவு செய்யப்படும் புகையிலையைத் தரம்பிரித்துச் சிப்பமாகக் கட்டும் பணியை இராமலிங்கம் மேற்பார்வை செய்து நிறைவேற்றுவித்தார். 150 இறாத்தல் முதல் தரப்புகையிலையும், 168 இறாத்தல் இரண்டாந் தரப்புகையிலையும் கொண்ட 318 இறாத்தல் நிறையுள்ளதாகப் புகையிலைச் சிப்பங்கள் கட்டப்பட்டன. இப்பணி இராமலிங்கத்திற் குரியதாகவிருந்தது.
சிதம்பரப்பிள்ளைக்குப் பின்னர் இராமலிங்கம் தந்தையின் தொழிலை மேற்கொண்டார். தந்தையிலும் பார்க்க இராமலிங்கம் பரோபகாரச் சிந்தையுள்ளவர். கடும்பஞ்சம் ஒன்று ஏற்பட்டபோது, தனது நெற்களஞ்சியத்திலிருந்த நெல்லை சங்கானை, அராலி மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்துள்ளார். தானும் அப்பங்கீட்டில் ஒருபங்கை மட்டும் எடுத்துக் கொண்டார் என்பது இராமலிங்கத்தின் தயாளசிந்தைக்குரிய உதாரணமாகும். அது மாத்திரமன்றி இவர் கடவுள் பக்தியுள்ளவராக விளங்கினார். சங்கானைப் பிள்ளையார் கோயிலக்கு தனது காணியில் ஒன்பது பரப்பினை வழங்கியுள்ளார். இங்கோயிலின் ஆறாவது நாள் திருவிழா இன்றும் இராமலிங்கம் சந்ததியினரே செய்து வருகின்றனர்.

Page 66
22 , யாழ்ப்பாண அரச பரம்பரை
8. 3. குட்டித்தம்பித்துறவி
இராமலிங்கத்திற்கு நன்னித்தம்பி, முதலித்தம்பி, குட்டித்தம்பி என மூன்று புத்திரர்களிருந்தார்கள். மூத்தவர் நன்னித்தம்பி, தொல்புரத்தைச் சேர்ந்த மரகநாச்சியார் என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். நன்னித்தம்பி குடும்பம் குறித்துப் பின்னால் விரிவாக நோக்குவோம். இராமலிங்கத்தின் இரண்டாவது புத்திரன் முதலித்தம்பிக்கு உமாவதி, சின்னத்தங்கம் என இரு பிள்ளைகள் இருந்தனர். முதலித்தம்பியின் இளைய சகோதரனான குட்டித் தம்பி திருமணம் செய்து கொள்ளவில்லை. துறவு மனப்போக்குடைய பிரமச்சாரியாக வாழ்ந்துள்ளார். கோயில்கள், வழிபாடு, சமய சிந்தனை, தியானம் என்பவற்றில் அவர் காலம் கழிந்துள்ளது. குட்டித் தம்பித்துறவி வருடாவருடம் கால்நடையாகக் கதிர்காம யாத்திரை செய்வது வழக்கம். ஒரு தடவை கதிர்காம யாத்திரையின் போது மட்டக்களப்புக் குமிழமுனையிலுள்ள அவரது தந்தை இராமலிங்கத்திற் குரித்தான ஒரு வீட்டில் தங்கியிருந்தபோது, கனவு ஒன்றினைக் கண்டார். அக்கனவில் சிவபெருமான் காட்சி தந்து அங்குள்ள கிணற்றில் சிவன் சிலா விக்கிரகம் ஒன்றுள்ளது. அதனை எடுத்துச் சென்று ஆலயம் ஒன்றமைத்து வழிபாடு செய்து வருவாயாக எனத் தெரிவித்தாராம். குட்டித்தம்பி விழித்தெழுந்து, சிலரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு குறித்த கிணற்றினை அடைந்து, நீர் இறைத்துப் பார்த்தபோது சிவவிக்கிரகம் ஒன்று அங்கிருக்கக் கண்டனர். சிவ விக்கிரகத்தை எடுத்துக் கொண்டு குட்டித்தம்பியார் திரும்பி யாழ்ப்பாணம் வந்தார். தொட்டிலடி சங்கானையில் தந்தையார் இராமலிங்கம் வசித்த வீட்டுவளவில் ஒரு சிறு குடிலமைத்து அதில் தான் எடுத்து வந்த சிவவிக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தார். நித்தம் பூசை செய்து வந்தார். இராமலிங்கத்தாரின் வீட்டு வளவில் வாழ்ந்திருந்த நன்னித்தம்பி குடும்பத்தினர் அந்த வளவைச் சிவனுக்கும் குட்டித் தம்பிக்கும் வழங்கி விட்டு தொல்புரத்தில் வேறு ஒரு வீட்டிற்கு இடம்மாற நேர்ந்தது.
நன்னித்தம்பிக்கும் அவரது மனைவி மரகதநாச்சியாருக்கும் குட்டித்தம்பியின் செயற்பாடுகள் திருப்தியைத் தரவில்லை. குற்றம் பொறுக்காத சிவனை ஒரு குடிலில் வைத்துப் பராமரிப்பது அவர்களுக்கு உவப்பானதாகத் தெரியவில்லை. எனவே, அந்த வளவில்

யாழ்ப்பாண அரச பரம்பரை 123
குடிலிருந்தவிடத்தில் சற்றுப் பெரிதாக ஒரு மண்டபத்தை நிறுவியதோடு, மரகத நாச்சியாரும் ஊர்மக்களுமாகச் சேர்ந்து ஒரு அம்பாள் விக்கிரகத்தையும் செதுக்குவித்து, சிவவிக்கிரகத்திற்கு அருகில் பிரதிஷ்டை செய்து விட்டனர். மறுநாள் குட்டித்தம்பியும் சிவவிக்கிரகமும் காணாமற் போயினர். குட்டித்தம்பி, சிவவிக்கிரகத்தைத் தன்னுடன் எடுத்துக் கொண்டு தென்னிந்தியாவிற்கு இரவோடிரவாக வள்ளம் ஏறிவிட்டார் எனப் பின்னர் தெரியவந்தது. அம்மன் பிரதிஸ்டை செய்யப்பட்ட அச்சிறு கோயிலின்று மூளாய் சின்ன அம்மன் கோயிலென விளங்குகின்றது. மரகதநாச்சியாரும் அவரது உறவினர்களும் நித்தம் இக்கோயிலுக்கு வந்து தரிசித்துச் செல்வர். பத்து நாட் திருவெம்பாவை மிகச்சிறப்பாக இக்கோவிலில் நடைபெறும். o
விபரிக்கப்படுகின்ற அரச பரம்பரைக் குடும்பத்தில், மரகதநாச்சியார் மிக முக்கியமானவர். நன்னித் தம்பியினுடைய துணைவியாக வாழ்ந்து நிறை பெற்றனர். மரகத நாச்சியார் தொல்புரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் கணபதிப்பிள்ளையின் நான்கு பிள்ளைகளில் ஒருவர். மாரிமுத்து என்ற ஒரு தமையனாரும், சின்னப்பிள்ளை, சங்கரப்பிள்ளை என்ற இரு தம்பிமாரும் மரகதநாச்சியாருக்கு இருந்தனர். மரகதநாச்சியார், நன்னித்தம்பியின் தந்தை வழி உறவினள் ஆவார்.
நன்னித்தம்பிக்கும் அவரது மனைவிக்கும் ஐந்து பிள்ளைகளிருந்தார்கள். செல்லத்துரை, அப்பாச்சி, விசாலாட்சி, இளையதம்பி, கந்தசாமி என்பவர்களாவர். செல்லத்துரை தொல்புரத்தில் சொந்தத்தில் பெண்ணெடுத்து செல்லம்மா, இராசலிங்கம் என்றிரு மக்களைப் பெற்றிருந்தார். இளைய தம்பியின் இரண்டாவது அண்ணரான அப்பாச்சி, கைதடியில் யோகம்மா என்பவரை மணம் செய்திருந்தார். அப்பாச்சி இளமையிலேயே மரணமடைய நேர்ந்தது. விசாலாட்சி வித்துவான் வேலுப்பிள்ளையைத் திருமணம் முடித்திருந்தார். இவர்களுக்குப் பர்வதபத்தினி என்றொரு மகள் இருந்தாள். நன்னித்தம்பியின் பிள்ளைகளில் கந்தசாமி, அவருடைய சிறிய தகப்பனார் குட்டித்தம்பி மாதிரி பிரமச்சாரியாகவே காலத்தைக் கழித்து விட்டார். இவர்கள் அனைவரும் வேளாண் தொழிலைப் பிரதானமாகச் செய்து வந்தனர்.

Page 67
124 யாழ்ப்பாண அரச பரம்பரை
8. 4. இளையதம்பி
நன்னித்தம்பியின் மூன்றாவது மகன் இளையதம்பி ஏனையோரிலும் பார்க்க வித்தியாசமானவராக விளங்கினார். கமத்திலோ, விவசாயத்திலோ அவருக்கு அவ்வளவாகக் கவனம் இருக்கவில்லை. ஆனால், அவருடைய தந்தையார் அவரை அழைத்துக் கூறுகின்ற பரம்பரைக் கதைகளில் மிக்க ஆர்வம் காட்டினார். தான் பரநிருபசிங்கமன்னன் பரம்பரையில் வந்தவன் என்பதில் இளையதம்பிக்கு அடங்காத பெருமிதம் இருந்தது. பரநிருப சிங்கன் எனது முதாதை, பரராச சிங்கன் எனக்கு எள்ளுப்பேரன். அராலி விசயதெய்வேந்திர முதலி எனது கொள்ளுப்பேரன். பரநிருபசிங்கமுதலி, விஜயேந்திர முதலி வம்சத்தில் வந்தவன் நான்’ என்று தனக்குள் கூறிக்கொள்வாராம். பதினைந்து வயதிலேயே தான் பழைய அரசபரம்பரையின் உச்சத்திற்கு உயர்ந்து விடவேண்டுமெனக் கனவு கண்டார். 1894ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி இளைய தம்பி தொல்புரத்தில் பிறந்தார். அவ்வேளை யாழ்ப்பாணத்தின் அரசாங்க ஏஜண்டாக துவைனம்துரையிருந்தார். யாழ்ப்பாணப் பகுதியில் 11 மணியக்காரரும், 109 உடையாரும், 8 அடப்பனும், 168 விதானைமாரும் நிர்வாகம் செய்து வந்தனர். ஆறுமுக நாவலர் பெருமான் சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றிய காலம். ஆறுமுக நாவலரும் கிறிஸ்தவப் பாதிரிமாரும் சண்டப்பிரசண்டமாகச் சமயப் போர்களை எழுத்தாலும், சொற்பெருக்குகளாலும் நிகழ்த்திய காலவேளை, இளையதம்பியின் இளமைக் காலமாக இருந்தது. பதினைந்து வயது வரை இளையதம்பி, சங்கானையில் இருந்தார். இரக்க சிந்தையுள்ள அவரிடம் சொற்கேளாமை, முரட்டுத்தனம், பிடிவாதம் என்பன இளமையிற் காணப்பட்டன.
இது இவ்வாறிருக்க நன்னித்தம்பிக்கு வட்டுக்கோட்டையைச் சேர்ந்த வயித்திலிங்கம் என்பவர் உற்ற நண்பராக விளங்கினார். அவர் ஆங்கிலப் புலமை வாய்ந்தவர். யாழ்ப்பாணத்தில் ஆங்கிலக் கல்வி கற்றோர் அரச உத்தியோகங்களில் வேலைக்கு அமர்ந்தனர். யாழ்ப்பாணத்தில் முன்னர் காட்டியபடி ஆங்கிலக்கல்வி அதிகரிக்க அதைக் கற்றோர் உத்தியோகந்தேடி இலங்கையின் பலபகுதிகளுக்கும் இந்தியா ஆகிய இடங்களுக்குச் சென்று சிறந்த உத்தியோகங்கள் பெற்று ஐஸ்வரியமடைந்து வந்தனர். அத்துடன் யாழ்ப்பாணத்திலே கல்வி கற்ற வாலிபர் சிங்கப்பூர், ஐக்கியமலாய் நாடு என்பனவற்றிற்கும் செல்வராராயினர். 1855ஆம் ஆண்டு வட்டுக் கோட்டைச்

யாழ்ப்பாண அரச பரம்பரை 125
செமினாரி நிறுவப்பட்டபின் ஆர். பிரக்கன்றிட்சு ஆகியோரைத் தலைவராய்க் கொண்டு ஸ்தாபிக்கப்பட்ட வட்டுக்கோட்டை ஆங்கில மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று அரங்கேறியவரும் வட்டுக் கோட்டை வாசகருமாகிய மு. வயித்திலிங்கம் என்பவரே முதல் சிங்கப்பூருக்குச் சென்று உத்தியோகம் பெற்றுச் செம்மையாய் நடந்து அனேக வாலிபரையழைத்து அவர்கள் உத்தியோகம் பெற உதவி செய்தனர். அதனால் அவர் சிங்கப்பூர் வயித்திலிங்கம் என்றழைக்கப்பட்டார். அவரைப் பின்பற்றி யாழ்ப்பாணத்து வாலிபர் அநேகர் அங்கே சென்று உத்தியோகம் பெற்று அங்கே குடிபதிகளாய்ச் சீர்சிறப்பாக வாழ ஆரம்பித்தனர். வர வர அங்கே செல்லும் யாழ்ப்பாணிகர் தொகை அதிகரித்தது. அதனால் ஐக்கிய மலாய் நாட்ட்ைச் சேர்ந்த கோலாலம்பூர் சின்ன யாழ்ப்பாணமென்று அழைக்கப்படுகிறது. இவர்கள் மூலம் யாழ்ப்பாணத்துக்கு வருஷந்தோறும் பெருந்தொகைப் பணம். அனுப்பப்படுகின்றது."
நன்னித்தம்பியின் மூத்த மகன் செல்லத்துரை, இளையதம்பியின் தமையன், வட்டுக்கோட்டை ஆங்கில மகாவித்தியாலயத்தில் ஆங்கிலக் கல்வி கற்றார். பதினாறு வயதுவரை அங்கு கற்றபின், இருபதாவது வயதில் வள்ளியம்மை என்ற பெண்ணைத் திருமணம் செய்து வைத்தனர். அவர்களுக்குச் செல்லம்மா, இராசலிங்கம் என்றிரு பிள்ளைகள் இருந்தனர். அவ்வேளை சிங்கப்பூரிலிருந்து முன்னர் குறிப்பிட்ட சிங்கப்பூர் வயித்திலிங்கம் யாழ்ப்பாணம் வந்தார். நன்னித்தம்பி வீட்டிற்கும் நட்புக்கருதி வந்திருந்தார். அங்கு நன்னித்தம்பியின் மூத்தமகன் செல்லத்துரை ஆங்கிலக் கல்வி கற்று வாலிபனாக இருப்பதைக் கண்டு, தன்னுடன் சிங்கப்பூருக்கு வரும்படியும், உழைத்து முன்னேற்றத்தகுந்தவிட மென்றும் கூறி, திரும்பிப் போகும்போது செல்லத்துரை, அவருடைய மனைவி, இரு பிள்ளைகளாகியோருடன் கப்பல் ஏறினார்.
செல்லத்துரை சிங்கப்பூரில் நல்லதொரு உத்தியோகத்திலமர்ந்தார். தனது மகளான செல்லம்மாவைச் சிங்கப்பூரில் புகையிரத நிலையமொன்றின் அதிபராக (ஸ்ரேசன் மாஸ்டர்) விளங்கிய செல்லப்பா என்பவருக்குத் திருமணம் செய்து வைத்தார். 1914ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வந்த தமையனார் செல்லத்துரையுடன், இளையதம்பி சிங்கப்பூருக்கு ஒரே
4. க. வே. யாழ்ப்பாண வைபவகௌமுதி, வசாவிளான் - 1918. பக் - 294-295,

Page 68
126 யாழ்ப்பாண அரச பரம்பரை
பிடிவாதமாகப் பயணப்பட்டார். ஆங்கில அறிவில்லாவிடில் சிங்கப்பூர், மலாயாவில் சாதாரண கூலித்தொழிலாளியாகத்தான் தொழில் பார்க்க வேண்டும். இந்தியர்கள் கூலித் தொழிலாளிகளாகவும், யாழ்ப்பாணத்தவர்கள் இரண்டாவது துரைமார்களாகவும் உத்தியோகம் பார்ப்பதற்கு ஆங்கிலக் கல்வியறிவு வேறுபாடுதான் காரணம். அதைப்புரிந்து கொள், என்று எவ்வளவு அறிவுரை கூறியும் இளையதம்பி அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. சிங்கப்பூருக்குத் தமையனாருடன் கப்பலேறினார். அப்போது இளையதம்பிக்கு வயது இருபது.*
சிங்கப்பூரில் தெலுங்கு முதலாளி மூர்த்தி என்பவர் நடாத்திய ரேஷன்கடையொன்றில் வேலைக்குச் சேர்ந்தார். வியாபாரத்தின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொண்டார். இருபத்திரண்டு வயதில் தானே சொந்தமாக வியாபாரம் செய்யத் தொடங்கினார். பேச்சுவல்லமை, நம்பிக்கை, சிரித்த முகம் என்பன அவரைப்படிப்படியாக வியாப்ாரத்தில் உயர்த்தி விட்டன. இருபத்திரண்டு வயதிலேயே கார் ஒன்றையும் வாங்கிக் கொண்டார். அதன் பின் யாழ்ப்பாணம் திரும்பி வந்தார்.
சிங்கப்பூர் இளையதம்பி, மாதகலைச் சேர்ந்த சுந்தரவல்லி எனும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமணம் மாதகலிலும் தொல்புரத்திலும் சிறப்பாக நடந்தேறியது. சுந்தரவல்லி பெயருக்கேற்ற அழகான, அமைதியான பெண். பரநிருபசிங்கனின் மகனான பரராச சிங்கனுக்கு ஏழு குமாரர்களும் வேதவல்லி என்றொரு மகளும் இருந்தனரென ஏற்கனவே கண்டோம். அந்த வேதவல்லி மாதல் இராசேந்திரமுதலி மகன் தனபாலமுதலியைக் கலியாணம் செய்திருந்தாள். மாதகலையே பரநிருப சிங்கன் வேதவல்லிக்கு வழங்கியிருந்தானென்பது வரலாறு இந்த வேதவல்லி பரம்பரையில் பிறந்தவரே இளையதம்பியன் தர்மபத்தினியான சுந்தரவல்லியாவார். வேதவல்லியின் கணவர் தனபால முதலி பறங்கிகள் காலத்தில் மாதகல் முதலியாகக் கடமையாற்றியவர். அவருடைய மகன் ஒல்லாந்தர் காலத்தில் முதலியாராகக் கடமையாற்ற, அவருடைய மகன் தில்லையம்பலம் ஆங்கிலேயர் காலத்தில் உடையாராக மாதகலில் கடமையாற்றியுள்ளார். உடையார் தில்லையம்பலத்தின் மகன் சுப்பிரமணியமாவார். அவர் சிற்றம்பலம், அவர் மகன் வன்னித்தம்பி
49. Pugalenthi. Sr., Indian Pioneers of Singapore, B.J. Time International -
1998. Page : 50

யாழ்ப்பாண அரச பரம்பரை 127
(கற்கண்டர்), அவர் மகன் கணபதிப்பிள்ளை, அவர் மகன் உடையார் வன்னித் தம்பியின் மகள் சுந்தரவல்லி ஆவார். தில்லையம்பலத்தாரோடு உடையார் பதவி நிறைவுற்ற போதிலும் அவர் வழி வந்தோர் உடையார் பரம்பரையினராகவே மதிக்கப்பட்டடுள்ளனர். *
சுந்தரவல்லியை அழைத்துக் கொண்டு சிங்கப்பூர் வந்த இளையதம்பி, 327, புக்கிதிமா வீதியிலுள்ள மாளிகையில் குடியமர்ந்தார். இளையதம்பிக்கும் சுந்தரவல்லிக்கும் 5 பிள்ளைகள் பிறந்தார்கள். தங்கத்தேவி, விசாலாட்சிதேவி, தனலட்சுமிதேவி, இரத்தினதேவி, விஜயேந்திரன் என நான்கு குமாரத்திகளும் ஒரு மகனும் அவர்களாவார். கடைசிப் பிள்ளையான விஜயேந்திரனின் பிரசவத்தின்போது சுந்தரவல்லி மரணத்தைத்தழுவ நேர்ந்தது. 1930, செப்டம்பர் மாதத்தில் சுந்தரவல்லி இவ்வுலக வாழ்வைத் துறந்தார்.
சுந்தரவல்லியின் அஸ்தியை எடுத்துக் கொண்டு, முப்பத்தோராம் நாள் அந்தியேட்டிக் கிரியையை மாதகலில் செய்து ஆஸ்தியைக் கீரிமலையில் கலக்கும் விருப்புடன் இளையதம்பி யாழ்ப்பாணம் மீண்டார். விரும்பியவாறு சடங்குகளைச் செவ்வனவே செய்து முடித்தார். உறவினர்கள் வற்புறுத்தியதாலும் தாயற்ற ஐந்து பிள்ளைகளின் நலன் கருதியும் இளையதம்பி, சுந்தரவல்லியின் ஒன்றுவிட்ட சகோதரியான தங்கம்மாவை மறுமணம் செய்து கொண்டார். தங்கம்மாவிற்கு அப்பொழுது வயது பதினெட்டு. மாதகல் வேதவல்லி தனபாலமுதலி பரம்பரையில் வந்த வைத்திலிங்கம் நாகாள் ஆகியோர் ஈன்றெடுத்த தவப்பிள்ளைகள் சுப்பையாபிள்ளை, வீரகத்திப்பிள்ளை ஆகியோர். இவ்வாறு சரித்திரப் புகழ் வாய்ந்த மாதகலில் தமிழ் நாடு சென்று வியாபார வழியில் செல்வத்தைத் தேடிய நுணைசைப்பதிக் குகனுக்குக் கந்தபுராணம் படித்து, கந்தனே கதி யென்று வாழ்ந்து வந்த வயித்திலிங்கம் சுப்பையாபிள்ளை, முத்து என்ற மைத்துணியை மணம் புரிந்து இரண்டாவது மகளாக 1912ஆம் ஆண்டில் தங்கம்மாள் அவர்களைப் பெற்றெடுத்தனர். அவருக்கு பராசக்தி, பார்வதிப்பிள்ளை என இரு சகோதரிமார் உள்ளர்.
5. உடையார் வன்னித்தம்பி, மாதகல் கம்யூனிஸ்ட் கந்தசாமியின் மாமனார். 6. தங்கம்மாள் இளையதம்பி, திருவடிப்பேறு பாடல்கள்.

Page 69
128 யாழ்ப்பாண அரச பரம்பரை
இளையதம்பி - தங்கம்மாள் தம்பதியினருக்குப் பதினொரு பிள்ளைச் செல்வங்கள் உள்ளனர். மூத்த தாரப்பிள்ளைகளோடு சேர்க்கில் மொத்தம் பதினாறு பேராவர். பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு என்பதற்கு வேறு அர்த்தம் இருப்பினும் இளையதம்பிக்கு அதன் நேரடி அர்த்தம் சாலப் பொருந்தும். பரநிருபசிங்கன், விக்கிரமசிங்கன், பரமேஸ்வரிதேவி, மகேஸ்வரிதேவி, அதிகாரசிங்கன், நிற்சிங்க சேனாதிராஜா, பூமாதேவி, நரசிங்கன், மரகத நாச்சிதேவி, இளைய சிங்கன், இராஜசூரன் எனப்பதினாறு மக்கட் செல்வம், ஏழு ஆண்மக்களும் நான்கு பெண்மக்களுமாகச் சிறப்பாக வாய்த்தது. தங்கம்மா தான் பெற்ற பிள்ளைகளுக்கும், முதல் தாரமாக வாழ்க்கைப்பட்டுத் தன் தமைக்கை பெற்ற பிள்ளைகளுக்கும் நல்லதொரு தாயாக வாழ்ந்துள்ளார்.
இளையதம்பி சிங்கப்பூரில் மட்டுமன்றி மலேசியாவிலும் சொத்துக்களைக் கொண்டிருந்தார். அக்காலத்தில் இவ்விரு நாடுகளிலும் புகழ் பூத்த வர்த்தகராகவும், தொழிலதிபராகவும், செல்வந்தனாகவும் விளங்கியுள்ளார். அவருடைய பிரதான தொழில் இன்சூரன்ஸ் முகவராக விளங்கியமையாகும். சிங்கப்பூரிலிருந்து பினாங் வரை அவர் இன்சூரன்ஸ் ஏஜன்டராகக் கடமை பார்த்தார். நியூசிலாந்து இன்சூரன்ஸ் கம்பனி, ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பனி, ஒவசீஸ் இன்சூரன்ஸ் கம்பனி, காதே (Cathay) (சீனா) இன்சூரன்ஸ் கம்பனி, ஒரியன்ரல் இன்சூரன்ஸ் கம்பனி, கிரேட் ஈஸ்டன் இன்சூரன்ஸ் கம்பனி என்பனவற்றின் முகவராக இவர் பணிபுரிந்தார். இவருக்கு இவற்றின் மூலம் கிடைத்த பங்குப்பணம் (கமிஷன்) மட்டுமே இவரை கோடீஸ்வரராக்கப்போதுமானது. இத்தோடு தனது தொழிற்றிறனை நிறுத்திக் கொள்ளவில்லை. காணி - சொத்து (Real Estate) பரிமாற்றத் தரகிலும் ஈடுபட்டார். சிங்கப்பூர் மேசிங், பினாங், கோலாலம்பூர் முதலான பல விடங்களிலும் சொத்துக்கள்ை மலிவாக வாங்கித் திருத்தம் செய்து இலாபத்திற்கு விற்பது இவரது தொழிலாகவிருந்தது. சிங்கப்பூரிலிருந்து பினாங் நோக்கிக் காரில் புறப்பட்டார் என்றால், போகும் பிரதான நகரங்களில் இவரை எதிர்பார்த்து தரகர்கள் காத்திருப்பார்கள். அவருடைய வக்சோல் 40 காரைக் கண்டதும், வழிமறித்துவிற்பனைக்குள்ள காணி, வீடு, கடைகள் பற்றிய தகவல்களைச் சொல்லுவார்கள். அவர் அவற்றை உள்வாங்கிக் கொண்டு தனது பயணத்தைத் தொடர்வார். திரும்பி வரும்போது எதனை வாங்குவது.

யாழ்ப்பாண அரச பரம்பரை 129
எதனை விற்பதென முடிவு செய்திருப்பார். அவர் முடிவுகள் என்றும் தோல்வி கண்டதில்லை. காசுக்கடன் வழங்கல், வாகனங்களை வாங்கி விற்றல், தங்கச்சந்தை நிலபரமறிந்து வாங்கி விற்றல், வைரக்கல் விற்பனை போன்ற பல்வேறு தொழில்களை இளையதம்பி கவனித்துச் செய்தார். தனியொரு மனிதனாக இவ்வளவையும் அவர் ஆற்றியுள்ளார். தனது நேரத்தைப் பொன்போலப் பயன்படுத்தியுள்ளார். கலியாணம், இழவுவீடு போன்ற முக்கிய சடங்குகளுக்கு மட்டும் உறவினர் வீடுகளுக்குச் செல்வார். அவசியம் நேரில் வாசலில் நின்று பேசிவிட்டுத் திரும்பி விடுவார். அவருடைய வியாபாரத்தில் 60 சதவீதம் செட்டிமாருடன் இருந்தது. அதனால், அவர்களின் வியாபார சுளிவு நெளிவுகள் இவரில் ஊறிவிட்டன. அதிகாலை வேளைகளில் துறைமுகத்திற்குச் சென்று பொருட்களை வாங்கி தரகு நிலையில் விற்பனை செய்வதும் இவரது வழக்கம். மலேசியாவில் இளையதம்பிக்கு ரப்பர் தோட்டங்கள் சொந்தமாக விருந்தன.
இளையதம்பியின் சொத்துக்கள் யாழ்ப்பாணம், சிங்கப்பூர், மலேசியா ஆகிய பல்வேறு பிரதேசங்களில் இருந்தன. மலேசியாவில் ஜலான் செலாங்கூர், ஜலான் பஞ்சாலா ஆகியவிடங்களில் அவருக்குச் சொந்தமான வீடுகளிருந்தன. மேசிங் நகரில் கடற்கரையோரத்தில் விடுமுறையைக் கழிப்பதற்கான உல்லாசவீடு ஒன்றிருந்தது. இந்த வீடு பின்னர் யுத்தகாலத்தில் எரிக்கப்பட்டழிந்து போனது. அவ்வேளையில் அங்கு நின்றிருந்த அவரது வக்சோல்கார், களவாடப்பட்டுக் காணாமற் போயிற்று. இளைய தம்பியுடன் ஒரே நேரத்தில் நான்கு கார்கள் இருந்ததுள்ளன. அத்தனைக்கும் அவருக்குக் கார் ஓட்டத் தெரியாது. இரண்டு றைவர்கள் மாறி மாறிக்கார்களை அவரது தேவைக்கும் குடுபத்தேவைக்கும் ஏற்ப ஒட்டி வந்துள்ளனர்.
இளைய தம்பியின் சொத்துக்களை விபரிக்கில் அது ஒரு நீண்ட பட்டியலாக அமையும். மூளாயில் பூதாரன் வளவு, வில்லப்புவயல், குமாரன் புலம்வளவு, நவக்கிரி வளவு, தொல்புரத்தில் தாழைக்கனியப்பை வளவு, பருத்தியோலை வளவு, வேலா தோட்டம், வெட்டுக்காடு வளவு, மாதகலில் சின்னத்தங்கரைவளவு, காராவேட்டை வளவு, பிரான்காடு, கோணாவளை, அந்தியடிவளவு, காயாவத்தை பாலவின் வளவு, மான்தம்பிராய்வளவு, கூடாவிளாத்திவளவு, அறுக்கோட்டை வளவு, கம்பன் தோட்டம், அன்னை

Page 70
130 யாழ்ப்பாண அரச பரம்பரை
வளவு, அறுகோணவளவு, யாதும்பை வளவு, சில்லாலையில் ஊரிப்பிட்டி வளவு, காரையோடைவளவு, வெள்ளைமாந்துண்டி வளவு, பண்டத்தரிப்பில் வீமனோலை வளவு, சிக்காவித்திலின் வளவு, சூளாவை சிவாலானை வளவு, சோகைவிராவை வளவு முதலானவை இளையதம்பியின்முதுச, சீதன, தேடிய தோட்டக்காணிகளாகும். இவை தோட்டங்களாயும், வயல்களாகவும், குடியிருப்புக் காணிகளாகவும் விளங்கின. இன்று இவற்றினை இவரது பிள்ளைகள் ஆண்டனுபவித்து வருகின்றனர்.
இளையதம்பி சாதி ஆசாரங்களை நன்கு இறுகக் கடைப் பிடிப்பவர். மிகவும் கண்டிப்பானவராக இறுதிவரை விளங்கினார். ஒழுக்கமானார். சாப்பாடு, தொழிற்பணிகள் என்பன குறித்த நேர ஒழுங்கின் படி கடைப்பிடிப்பார். தனது பிள்ளைகளையும் அவ்வாறான கட்டுப்பாட்டினுள் வளர்த்துள்ளார். அதிகாலை 5 மணிக்குப் பிள்ளைகள் எல்லோரும் எழுந்துவிட வேண்டும். காலைக்கடன்களை முடித்து, குளித்து, நெற்றியில் விபூதிதரித்து சாமியறைக்குவரவேண்டும். வழிபாடு முடிந்ததும் அவரவர் தத்தமக்குரிய பாடங்களைப் படிக்க வேண்டும். சங்கீதம், வயலின் கலைகளைப் பெண்பிள்ளைகளுக்குக் கற்பித்திருந்தார். காலையில் நிச்சயமாக அவர்கள் அவற்றில் பயிற்சி எடுக்க வேண்டும். தவறில் தந்தையின் தண்டனைக்குள்ளாக நேரிடும். கண்டிப்பு நிறைந்த பாசமுள்ள தந்தையாக அவர் விளங்கியுள்ளார். சமயச் சடங்குகளில் தவறாது கலந்து கொள்ளும் இயல்பினர். தைப்பூசம், பொங்கல் போன்ற விசேஷ தினங்களில் எங்கிருந்தாலும் சிங்கப்பூருக்கு வந்துவிடுவார். அவருடைய இல்லத்திற்கு மந்திரிமாரிலிருந்து செட்டிமார்வரை அனைவரும் வந்து போவார்கள். சிங்கப்பூரிலிருந்து யாழ்ப்பாணம் வந்து தங்கும்போது யாழ்ப்பாணத்தின் பிரமுகர்கள் பலர் வருவார்கள்.முன்னாள் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் ழரீகாந்தா, இளையதம்பியின் பால்ய நண்பர்.
இளைய தம்பியின் சிங்கப்பூர் நாட்களில் உலக மகாயுத்தம் ஆரம்பமாகிவிட்டது. சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகள் அமெரிக்க, பிரித்தானியரினதும் ஜப்பானினதும் போர்க்களமாக மாறிவிட்டிருந்தது. வீதிகளில் இராணுவ நடமாட்டம் நிறைந்திருந்தது. அதனால் தனது பிள்ளைகளில் சிலரை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி, உறவினரோடு தங்கியும், பாடசாலை விடுதிகளில் தங்கியும் கல்வி கற்பித்துள்ளார்.

யாழ்ப்பாண அரச பரம்பரை 131
யாழ்ப்பாணத்திற்கு அனுப்பியமைக்கு இன்னோர் காரணம்,பிள்ளைகள் தமிழ் கற்கவேண்டுமென்பதுமாகும். அவ்வகையில் பரநிருபசிங்கன் அதிகாரசிங்கன், பரமேஸ்வரிதேவி, பூமாதேவி, மகேஸ்வரிதேவி, சேனாதிராசா ஆகியோர் யாழ்ப்பாணத்தில் சிறுவயது முதலே தங்கிப் படித்தவர்களாவார்கள். மகேஸ்வரிதேவி 14 வயதில் இளவாலை புனித திருக்குடும்ப மடப் பாடசாலையில் விடுதியில் தங்கிப் படித்துள்ளார். பிள்ளைகள் படிப்பில் முதலாவதாக வந்தால், இளையதம்பி அவர்களுக்குப்பரிசில் வழங்குவார். இப்பிள்ளைகளின் கல்வியில் இளைய தம்பி அயராது கவனம் செலுத்தினார். தமிழிலுனர் ஆர்வம் பிள்ளைகள் தமிழைப்படிக்க வேண்டும்.
8.5. இளையதம்பி பிள்ளைகள்
இளையதம்பியின் மூத்தமகள் தங்கதேவி தனது ஏழுவயதில் தாயார் சுந்தரவல்லியை இழந்தார். பதினெட்டு வயதான சிறியதாய் தங்கம்மாதான் அதன்பின் அவருக்குத் தாயாக இருந்தார். தங்கத்தேவி சட்டத்தரணியான விஜய தெய்வேந்திரன் என்பவரை மணந்தார். அவர்களது திருமணம் மிக ஆடம்பரமாகத் தொல் புரத்தில் நடந்தேறியது. முப்பத்தொரு நாட்கள் திருமணவிழா நடந்ததாகக் கூறப்படுகின்றது. இவர்களுக்கு கெளரி என்றொரு மகளும், திருவருள்சோதி என்றொரு மகளுமுள்ளனர். தங்கத்தேவி இன்று அராலி கொட்டைக் காட்டில் 73வயது மூதாட்டியாக மகள் கெளரியுடன் வாழ்ந்து வருகிறார்.
இரண்டாவது மகளான விசாலாட்சி தேவி, மாதகலில் பிறந்தார். மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆரம்பக்கல்வியைக்கற்று, பின்னர் சிங்கப்பூரில் ஆங்கிலக் கல்வியைப் பெற்றவர். இவர் ஞானத்துரை தியாகராஜா என்பவரைத் திருமணம் முடித்ததார். தியாகராஜா அஞ்சல் அலுவலக அதிபராகச் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் கடமையாற்றினார். இவருக்கு முதல்தார மனைவி மூலம் பூலோகராசன் என்றொரு மகனுண்டு. விசாலாட்சி தேவிக்கு பூவின்பராசன் என்றொரு மகனும், புவனேசச்செல்வி என்றொரு மகளும் பிறந்தனர். புவனேசச்செல்வி இளவயதிலேயே காலமாகிவிட்டார். விசாலாட்சிதேவி 1988இல் உலக வாழ்வை நீத்துவிட்டார்.

Page 71
132 யாழ்ப்பாண அரச பரம்பரை
மூன்றாவது புத்திரியான தனலட்சுமிதேவி, மூர்த்தி என்பவரை விவாகம் செய்து கொண்டார். அவர்களுக்குச் சுந்தரவல்லி, மங்கையர்க்கரசி என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இன்று சிங்கப்பூரில் தனது சொந்த வீட்டில் அமைதியாக வாழ்ந்து வருகிறார். 70 வயது. நான்காவது இரத்தினதேவி, சிறிய தாயாருடன் தங்கியிருந்தார் பின்பு கனகரத்தினம் என்பவரைக் கரம்பற்றினார். அவர்களுக்கு நன்மலர் தவமலர், கணேஸன், புஸ்ப செல்வமலர், புவனேஸ்வரன் என ஐந்து குழந்தைகளுள்ளனர். ஐந்தாவது மகன் விஜயேந்திரன் விஜயமலர் என்ற பெண்ணை மணந்து சாமினி, ரஞ்சினி என குழந்தைகளையுடையார். ஆர்கஸ் அட்வரஸ்ஸிங் தனியார்துறை நிருவனம் (Pte. Lte) ஏஜன்சியில் முகாமைத்துவப் பணிப்பாளராக விளங்கிய விஜயேந்திரன் இளவயதிலேயே காலமாகிவிட்டார். இன்று இளையதம்பி - சுந்தரவல்லி தம்பதியின் இருபெண்பிள்ளைகளில் தங்கத்தேவி இலங்கையிலும், தனலட்சுமிதேவி சிங்கப்பூரிலும் வசித்து வருகின்றனர்.
இளையதம்பி - தங்கம்மா தம்பதிக்கு மொத்தம் பதினொரு குழந்தைகள். மூத்தவருக்குத் தனது மூதாதையின் நாமமான பரநிருபசிங்கன் என்ற பெயரை இளையதம்பி சூட்டியிருக்கிறார். பரநிருபசிங்கன், சாந்தாதேவி என்ற பெண்ணை மனைவியாக்கிக் கொண்டுள்ளார். அவர்களுக்கு ஈழமாதேவி, ஈழராஜசிங்கன், ஈழசிங்கதேவி என மூன்று குழந்தைகளுள்ளனர். பரநிருபசிங்கன் சிங்கப்பூரில் வர்த்தகராகக் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
இரண்டாவது புத்திரன் விக்கிரமசிங்கன் இலக்கிய அறிவு மிக்கவர். திருக்குறளில் கரை கண்டவர். பல நூல்களை ஆக்கியுள்ளதோடு பலரின் நூல்களை வெளியிட்டும் உள்ளார். சிங்கப்பூரில் பெரியதொரு புத்தகசாலை யொன்றினை நடாத்தி வருகின்றார். அவர் உரும்பிராயைச் சேர்ந்த சீதாதேவி என்ற பெண்மணியைத் திருமணம் செய்துள்ளார். சீதாதேவி சிங்கப்பூர் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகக் கடமையாற்றி வருகிறார். அவர்களுக்குத் தங்கம் என்றொரு மகள். தனது தாயாரின் பெயரை விக்கிரமசிங்கன் மகளுக்குச் சூட்டியுள்ளார்.
மூன்றாவது பிள்ளை பரமேஸ்வரி ஆவார். பரமேஸ்வரியின் கணவர் இந்திரசித், மலேசியாவில் ஓர் இஞ்சினியராவார். பரமேஸ்வரி

யாழ்ப்பாண அரச பரம்பரை 133
இன்று ஒய்வுபெற்ற ஆசிரியை. இந்திரசித் உரும்பிராய் ஊரெழுவைச் சேர்ந்த டாக்டர் அரசரெத்தினத்தின் மகனாவார். இந்திரசித் பரமேஸ்வரி தம்பதிக்கு அன்புக்கரசி, அரசா என்றிரு பிள்ளைகள் உள்ளனர்.
இளைய தம்பி - தங்கம்மா தம்பதியின் நான்காவது புத்திரியாகிய மகேஸ்வரிதேவி, தனது ஆரம்பக் கல்வியைச் சிங்கப்பூரிலும், இடைநிலைக் கல்வியை இளவாலைத் திருக்குடும்பக் கன்னியர்மடத்திலும், பின்னர் உயர்கல்வியைச் சிங்கப்பூரிலும் பெற்றார். எழுத்துவல்லமை பெற்ற படைப்பாளியாதலால் யாழ்ப்பாணம் பற்றியொரு நூலையும், சமையற்கலை பற்றிச் சில நூல்களையும் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளார். ஆசிரியையாகக் கடமையாற்றும் மகேஸ்வரிதேவி, நவரத்தினம் எனும் விஞ்ஞானப்பட்டதாரியைத் திருமணம் புரிந்துள்ளார். நவரத்தினம் ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் வல்லை கூட்டுறவு ஆஸ்பத்திரியில் கடமையாற்றியுள்ளார். இன்று சிங்கப்புரில் விஞ்ஞான ஆசிரியராகப் பணிபுரிகின்றார். இலிதாதேவி என்றொரு மகளுள்ளாள்.
ஐந்தாவது பிள்ளையான அதிகாரசிங்கன் கல்வி கற்றதும், தன் இளமைக்காலத்தைக் கழித்ததும் மாதகலில்லாகும். மாதகலில் இளைய தம்பிக்குரித்தான நிலபுலன்களைச் செய்கை பண்ணி வருகின்றார். பேரனார் நன்னித்தம்பி, கொள்ளுப் பேரன் இராமலிங்கம் போன்று அதிகாரசிங்கன் வேளாண்மையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். அவர் மாதகலைச் சேர்ந்த தங்கராஜா என்பவரின் மகள் சரஸ்வதியை விவாகம் செய்துள்ளார்.
இளையதம்பி - தங்கம்மாவின் ஆறாவது பிள்ளை நித்சிங்க சேனாதிராஜா ஆவார். சண்டிருப்பாயைச் சேர்ந்த விஜயரட்ணம் என்பவரின் மகள் சாந்திதேவியைத் திருமணம் செய்துள்ளார். சாந்திதேவி யாழ்ப்பாணம் புகழ்பெற்ற வைத்தியராக விளங்கிய டாக்டர் வெற்றிவேலுவின் மருமகள் ஆவார். விக்னேஸ்வரன் அவர்களின் மகனாவார்; சிங்கப்பூரிலுள்ளார்.
இளையதம்பி தம்பதியின் ஏழாவது குழந்தை பூமாதேவி ஆவார். இவர் சட்டத்தரணியாகிய நடராஜாவை மணம் புரிந்திருக்கிறார். நடராஜாவின் குடும்பப் பாரம்பரியம் இளையதம்பியின் பரம்பரைக்கு

Page 72
34 யாழ்ப்பாண அரச பரம்பரை
நிகரானது. நடராஜாவின் தந்தையார் சண்டிருப்பாயின் பிரபல அப்புக்காத்து தியாகராசா ஆவார். சண்டிருப்பாய்க் கிராமத்தின் அதிகாரியாக விளங்கிய அதிகார் பிறைசூடும் பெருமாள், நடராஜாவின் பேரன். அதிகார் வெற்றிவேல் நடராஜாவின் கொள்ளுப்பேரன், அதிகார் குமாரவேல் அவரது எள்ளுப்பேரன், பூமாதேவி - நடராஜா தம்பதிக்குக் கிரிதரன், நீரஜாக்ஷி என இரு பிள்ளைகளுள்ளனர். இளைய தம்பியின் தொல்புர மூதாதைக்காணியில் வாழ்ந்து வருகின்றனர்.
புகழ் பூத்த இளையதம்பி தம்பதியின் எட்டாவது பிள்ளை நரசிங்கன் ஆவார். தந்தை இளையதம்பியின் குணவியல்புகளையும், தாயார் தங்கம்மாவின் பரிவுணர்வுகளையும் ஒருங்கே கொண்டவர். சிங்கப்பூரில் தொழிலதிபராகவும் உள்ளார். காணி - சொத்து வாங்கல் விற்றல் பணியில் தந்தையார் போல ஈடுபட்டுள்ளார். அவர் தனது காணி - வாங்கல் விற்றல் தொழிலை இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா முதலான பலநாடுகளிலும் மேற்கொண்டு வருகிறார். சிங்கப்பூரில் 'இளையா’ என்ற வர்த்தகப் பெயரில் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் கம்பனியொன்றின் நிர்வாக முகாமையாளர் ஆவார். சிங்கப்பூர் வர்த்தக விருத்திச் சங்கத்தினரால் (Singapore Trade Development Board) ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச உணவு உற்பத்திக் கண்காட்சியில் காலத்திற்குக் காலம் பிரதிநிதியாகக் கலந்து வருகின்றார். அவருடைய மனைவி மீனாம்பிகை ஒரு டாக்டர். பண்ணாகம் ஆறுமுகத்தின் மகளாவார். சிங்கப்பூரில் மீனாரா வைத்தியசாலையை நடாத்தி வருகின்றனர். இளையதம்பியின் நேர் வாரிசாகக் காணப்படுகின்றார். நரசிங்கன் - மீனாம்பிகை தம்பதிக்கு இளையதம்பி, இளையநாச்சி என இரு பிள்ளைகளுள்ளனர். தனது மூத்த மகனுக்குத் தன் தந்தையின் பெயரையே நன்றியுடன் சூட்டியுள்ளார். மகன் இளையதம்பி சிங்கப்பூர் தேசிய இராணுவத்தில் கட்டாய சேவைப்பணியிலுள்ளார். இப்பணி நிறைவுற்றதும் பிரபல பல்கலைக் கழகமொன்றில் பொறியியல் மாணவராகச் சேரவுள்ளார். நரசிங்கனின் மகள் இளையநாச்சி சிங்கப்பூரின் அதிசிறந்த பாடசாலை இரேபெள்ஸ் தொடக்க கல்லூரியின் விஞ்ஞானப் பிரிவு மாணவியாவார்.

யாழ்ப்பாண அரச பரம்பரை 135
இளையதம்பி தம்பதியின் ஒன்பதாவது பிள்ளையான மரகநாச்சிதேவி ஒய்வு பெற்ற ஆசிரியராகச் சிங்கப்பூரில் வசிக்கிறார். இக்குடும்பத்தின் பத்தாவது பிள்ளை இளையசிங்கன் ஆவார். அவர் ஒரு வைத்தியர். டாக்டர் இளையசிங்கன் இப்போது இந்தியாவில் தனது மனைவி டாக்டர் பிரபாவுடனும் சூரியதேவன், இளைய தேவன் ஆகிய இரு பிள்ளைகளுடனும் வாழ்ந்து வருகிறார். பதினோராவது பிள்ளையான இராஜசூரன், கோப்பாயைச் சேர்ந்த சுசீலா என்ற பெண்ணை மணந்து குடும்பமாகச் சிங்கப்புரில் வசித்து வருகின்றார். இவர்களுக்குத் தங்கம்மாள், சரவணன், இளையரூபன் என மூன்று பிள்ளைகளுள்ளனர்.
யாழ்ப்பான இராச்சியத்தின் அரசபரம்பரை அற்றுப் போய்விடவில்லை. மக்களோடு மக்களாக அவர்கள் இரண்டறக்கலந்து விட்டாலும் அவர்களின் பரம்பரைப் பெருமைகளைப் பேணுகின்ற வைராக்கியம் அவர்களிடமுள்ளது. யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் அரச பரம்பரையின் எச்சங்கள் சிதறிப் போய் உள்ளன. அன்றைய அரசபரம்பரையின் வேர்களைத் தேடி அடையாளம் காணும் முயற்சியே இந்நூலாகும்.

Page 73
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
உசாவிய நூல்கள் தமிழ் நுல்கள்
கைலாயமாலை - சா. வே. ஜம்புலிங்கம்பிள்ளை பதிப்பு, சென்னை - 1939. வையாபாடல் - கலாநிதி க. செ. நடராசா பதிப்பு கொழும்பு - 1980. யாழ்ப்பாண வைபவமாலை - குல.சபாநாதன் பதிப்பு, சுன்னாகம் - 1949. செகராசசேகரம் - ஞானப்பிரகாச யந்திரசாலை, அச்சுவேலி - 1932. செகராசசேகரமாலை - இ. சி. இரகுநாதையர் பதிப்பு, கொக்குவில் - 1942 வையா - ஞா. ஞானப்பிரகாசர் பதிப்பு, அச்சுவேலி - 1921. யாழ்ப்பாணச் சரித்திரம்- எஸ். ஜோன், யாழ்ப்பாணம் - 1882. யாழ்ப்பாண வைபவம் கௌமுதி - க. வேலுப்பிள்ளை, வசாவிளான் - 1918, யாழ்ப்பாண வைபவம் - சி. பாலசுப்பிரமணிய சர்மா பதிப்பு, சங்கானை - 1927. யாழ்ப்பாண வைபவ விமர்சனம்- சுவாமி ஞானப்பிரகாசர், அச்சுவேலி - 1928. யாழ்ப்பாணச் சரித்திரம் - டானியல் ஜோன் (முதல்பாகம்) யாழ் - 1930. யாழ்ப்பாணக் குடியேற்றம் - சிவானந்தன், யாழ்ப்பாணம் - 1932. யாழ்ப்பாணச்சரித்திரம் - ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, யாழ்ப்பாணம் - 1933. யாழ்ப்பாச் சரித்திரம் - முதலியார் செ. இராசநாயகம், யாழ்ப்பாணம் - 1933 யாழ்ப்பாணச் சரித்திரம் - ஆங்கிலேயர் காலம். செ.இராசநாயகம், யாழ்ப்பாணம் - 1935. தமிழரின்பூர்வ சரித்திரமும் சமயமும்-சுவாமி ஞானப்பிரகாசர், அச்சுவேலி - 1932. இலங்கைவாழ்தமிழர் வரலாறு- பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, பேராதனை - 1956 யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம் - கா. இந்திரபாலா, யாழ். தொல்பொருளியற் கழகம், கண்டி - 1972 நல்லூர்க் கந்தசுவாமி கோயில் - 1,11-ழரீலழரீ ஆறுமுகநாவலர் - 1875, நாவலர் பிரபந்தத் திரட்டு (இரண்டாம் பாகம்) வித்தியாதுபாலன யற்திரசாலை, சென்னை - 1955. நல்லூர்க் கந்தசுவாமி - குல. சபாநாதன், நல்லூர் தேவஸ்தாபன வெளியீடு - 1971 யாழ்ப்பாணத் தமிழரசர்வரலாறும் காலமும் - பொ. செகந்நாதன் யாழ். இலக்கியவட்ட வெளியீடு - 1987
நல்லைநகர்நூல் க. குணராசா, பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடு யாழ்ப்பாணம் - 1987 யாழ்ப்பான இராச்சியம் - பதிப்பாசிரியர் கலாநிதி சி. க. சிற்றம்பலம், யாழ். பல்கலைக்கழக வெளியீடு, திருநெல்வேலி - 1992 வடவிலங்கைல சிங்கைநகர் - ப புஸ்பரத்தினம், அருட்திரு. ஜி. ஏ. பிரான்சிஸ் யோசெப் அடிகளார் மணிவிழாச்சபை வெளியீடு, யாழ்ப்பாணம் - 1993 புத்தளம் வரலாறும் மரபுகளும் - ஏ. என். எம். ஷாஜஹான், ஆசியா (ASSeay) கொழும்பு - 1992
கோணேஸ்வரம் - செ. குணசிங்கம், பேராதனை - 1973,

27.
28.
29.
30.
3.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
1
&
யாழ்ப்பான அரச பரம்பரை 137
இலங்கையிற் தொல்லியலாய்வுகளும் திராவிடக் கலாசாரமும் - ஜி. தனபாக்கியம் - மட்டக்களப்பு - 1988. தமிழரின் பூர்வீக சரித்திரமும் சமயமும் - நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர். கத்தோலிக்க அச்சகம், யாழ்ப்பாணம் - 1932. மட்டக்களப்புத் தமிழகம் - வீ. சி. கந்தையா, யாழ்ப்பாணம் - 1964. தமிழர் வரலாறும் இலங்கை இடப்பெயர்வு ஆய்வும் - கதிர்தணிகாசலம், சரவணா பதிப்பகம் சென்னை - 1992 இலங்கை வாழ்தமிழர் வரலாறு - பேராசிரியர். க. கணதப்பிள்ளை பேராதனை - 1956 ஐரோப்பியர் பார்வைலஇலங்கை - நா.மயில்வாகனம், யாழ்ப்பாணம் - 1974. மட்டக்களப்பு மான்மியம் - பதிப்பு எஃப்.எக்ஸ். சி. நடராசா, கொழும்பு - 1962. வன்னியர் - சி. பத்மநாதன், பேராதனை - 1970. செகராசசேகரமாலை - இ. சி. இரகுநாதையர் பதிப்பு, யாழ்ப்பாணம் - 1942 செகராசசேகரம் - ஞானப்பிரகாச யந்திரசாலை, அச்சுவேலி - 1932. ஈழத்தமிழர்இறைமை - மு. திருச்செல்வம், காந்தளம், யாழ்ப்பாணம், மூன்றாம் பதிப்பு - 1983 பச்சிலைப்பள்ளி கரைச்சி பூநகரிஆகிய பிரிவுகளின் நீர்நிலப்பயன்பாடு - குணராசா, முதுகலைமாணி ஆய்வுக்கட்டுரை (அச்சில் வெளிவராதது) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் - 1984. ஈழத்தவர் வரலாறு - கலாநிதி, க. குணராசா, பூபால சிங்கம் புத்தகசாலை வெளியீடு - 1996, யாழ்ப்பாணக் கோட்டை வரலாறு - க. குணராசா, கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம் - 1995. தொல்லியலும் யாழ்ப்பாணத் தமிழர் பண்பாட்டுத்தொன்மையும், செல்லையா கிருஷ்ணராசா - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் - 1998.
ஆங்கில நூல்கள்
Mahavamsa, (ed.) W. Geiger, Colombo - 1950 Culavamsa, (ed.) W. Geiger, London - 1925 A True and exact Description of the Great Island of Ceylon - Phillip Baldeaus. The Temporal and Spiritual Conquest of Ceylon - F. de. Queyron, Translated by : Fr. S. G. Perera, Colombo - 1930 Tamils and Ceylon - C.S. Navaratnam, , Jaffna - 1958. The Northern Kingdom - S. Natesan. History of Ceylon, Vol. I, Part: II Colombo - 1960. The Kingdom of Jaffna - S. Pathmanathan, Colombo - 1978. Political History of the Kingdom of Kotte - G. P. V. Somaratne, Colombo. A, History of Ceylon, S. G. Perera, London - 1948.
0. Dutugemunu, - John M. Senaveratne, Colombo - 1946.

Page 74
138
1. 12. 13. 14. 15. 16. 17. 18. 19.
20. 21. 22.
23. 24.
25.
26. 27.
28. 29.
யாழ்ப்பாண அரச பரம்பரை
Ceylon and the Hollanders, - P. E. Pieris, Colombo - 1948. History of Ceylon, - (ed) Paravavithana, Part I & II, Colombo - 1960. Ancient Jaffna - C. Rasanayagam, Madras - 1926. Early History of Ceylon - G. C. Mendis, Colombo - 1954. Vanni and Vanniyas, - C. S. Navaratnam, Jaffna - 1960. A History of Sri Lanka - K. M. De. Silva, Colombo - 1981. Manuel of Wanni, - J. P. Jewis, Colombo - 1985. Ancient Irrigation Works in Ceylon-R. L. Brohier (Part I & II) Colombo - 1935. A Critical Survey of Land Settlements and Land Development in the Northern Province of Sri Lanka, Dr. K. Kunarasa, Ph.d. Thesis (Unpublished), University of Jaffna - 1991. The Dutch Forts of Sri Lanka - W. A. Nelson, Colombo - 1984. Ancient Ceylon, - H. Parker, London - 1909. IIIustration and Views of Dutch Forts in Ceylon, 1602 - 1796, R. K. de Silva and W. G. M. Beurner, London - 1988. Tamil Cultural in Ceylon, - M. D. Raghvan Colombo. Early Settlement in Jaffna - An Archaeological survey, P. Ragupathy, Madras - 1987. Dutch Power in Ceylon - (1665- 1687) S. Arasaratnam, Amsterdam – 1958. Early History of Ceylon, - G. C. Mendis, Colombo - 1954. A. Concise History of Ceylon.
C. W. Nicholas and S. Paranavithana, Ceylon University Press - 1961. Discovering Ceylon, - B. L. Brohier, Colombo - 1973. Indian Pioneers of Singapore - S. R. Pugalenthi, Singapore - 1998.
தமிழ்க் கட்டுரைகள்
யாழ்ப்பாணச் சாசனங்கள் - கா. இந்திரபாலா, இளங்கதிர், பேராதனை - 1959. யாழ்ப்பாண இராச்சியம் தோன்றிய காலமும் சூழ்நிலையும் - கா. இந்திரபாலா, இளங்கதிர், பேராதனை - 1970. ஈழத்து வரலாற்று நூல்கள் - ச. பத்மநாதன். இளங்கதிர், பேராதனை - 1970. நல்லூரும் தொல்பொருளும் - வி. சிவசாமி, ஒளி சஞ்சிகை, யாழ்ப்பாணம் - 1974 யாழ்ப்பான இராச்சியத்தின் கதை - க. குணராசா, வித்தியா சஞ்சிகை, உரும்பிராய் இந்துக்கல்லூரி பவளவிழா மலர் - 1986. இலங்கைல தமிழ் மன்னர்களின் ஆட்சி - ப புஸ்பரத்தினம், பொருளிதழ் - 3, திரு. நா. கிருஸ்ணானந்தன் நினைவுமலர். தமிழ்ச் சாசனங்களும் ஈழவரலாற்று ஆராய்ச்சியும் -கலாநிதி ச. பத்மநாதன், இளந்தென்றல், தமிழ்ச்சங்கம், பல்கலைக்கழகம் - 1972

10.
11.
15.
16。
18.
19.
20.
21
23.
24.
25.
26.
27.
யாழ்ப்பாண அரச பரம்பரை 139
குடியேற்றங்களால் இழந்து போனதமிழ்ப்பிரதேசங்கள் - க. குணராசா, முத்தமிழ விழாமலர், யாழ்ப்பாணம் - 1991 தமிழ் மக்களின் பாரம்பரியப்பிரதேசம் - கலாநிதி சி. க. சிற்றம்பலம் முத்தமிழ் விழாமலர், யாழ்ப்பாணம் - 1991 யாழ்ப்பான இராச்சியத்தின் தலைநகர் - ப புஸ்பரட்ணம், முத்தமிழ் விழாமலர், யாழ்ப்பாணம் - 1991 இலங்கையில் இந்துமதம் - ஆரியச் சக்கிரவர்த்திகள் காலம் - கலாநிதி சி. பத்மநாதன், சிவத்தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள் தெல்லிப்பழை - 1985. கிளிநொச்சியின் கதை - கலாநிதி. க. குணராசா. கந்தன் கருணை, கந்தசுவாமி கோயில் மஹா கும்பாபிஷேகமலர், கிளிநொச்சி - 1988. ஈழமும் இந்து மதமும் -(1250 - 1505) கலாநிதி சி. க. சிற்றம்பலம், சிந்தனை, யாழ். பல்கலைக்கழகக் கலைப்பீடம் - 1984. சானனத்துத் தமிழ் இலக்கியம் - கலாநிதி. ஆ. வேலுப்பிள்ளை, இளங்கதிர், பேராதனை - 1959. சங்ககால ஈழம்தமிழர் பிராந்தியங்களில் ஒன்றா? - ப. புஸ்பரட்ணம், வெளிச்சம், யாழ்ப்பாணம், புரட்டாதி - ஐப்பசி - 1991 பிராமி எழுத்துக்கள் ஒரு வரலாற்று நோக்கு - ஆ. தேவராசன் தேசிய தமிழ்ச் சாகித்திய விழா மலர் - 1991 கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முந்திய வன்னிநாடும் தொல்லியற்சான்றுகளும் - கலாநிதி சி. க. சிற்றம்பலம், பண்டார வன்னியன் விழாமலர், வவுனியா - 1982. அடங்காப்பற்று வன்னிமைகள் - கலாநிதி, சி. பத்மநாதன், பண்டாரவன்னியன் விழாமலர், வவுனியா - 1982 புகழ்பூத்த வன்னிமண்ணின் காவலர்கள் - முல்லைமணி. வே. சுப்பிரமணியம், பண்டாரவன்னியன் விழாமலர் - 1982. நல்லூர்ப் பெரிய கோயில் - கலாநிதி, கந்தையா குணராசா, நல்லைக்குமரன் மலர், மாநகராட்சி, யாழ்ப்பாணம் - 1993 வன்னியும் வன்னியரும் - சி. எஸ். நவரத்தினம், திருக்கேதீஸ்வரம் திருக்குடத்திருமஞ்சன மலர் மன்னார் - 1996. நல்லூர் கந்தசுவாமி கோயில் வரலாறல் திருத்தம் -கலாநிதி. க. குணராசா, வீரகேசரி வாரமலர், கொழும்பு - 1993, யாழ்ப்பாணத்துக் கல்வெட்டுக்கள், - பேராசிரியர் கா. இந்திரபாலா, சிந்தனை, பேராதனை- 1969, கந்தரோடையிற் கிடைத்த ஒரு பிராமிச்சாசனம் - போராசிரியர் கா. இந்திரபாலா, யாழ்ப்பாணத் தொல்பொருளியற் கழகச் சஞ்சிகை, - 1993 குஞ்சுப்பரந்தன்முதுமக்கள் தாழி - க. குணராசா, ஈழநாடு வாரமலர், யாழ்ப்பாணம் - 96.1985܂. யாழ்ப்பான நகரம் - க. குணராசா. எழில்மிகு யாழ்ப்பாணம், மாநகரசபை நூற்றாண்டு விழாமலர், யாழ்ப்பாணம் - 1974.

Page 75
40
யாழ்ப்பாண அரச பரம்பரை
ஆங்கிலக் கட்டுரைகள்
The Ariya Kingdom in North Ceylon S. Paranavithane, JRASCB, Vol. VIII, Part II.
On the History of Jaffna from the Earliest Period to the Dutch ConquestSimon Asie Chetty, JRASCB Vol: ICeylon Gazetter, Colombo - 1834.
The Temple of Candaswamy, Jaffna Sir Alexander Johnstone's Manuscripts, CALR Vol: II, Part:III
A Memoir of Mrs. H. W. Widslow, Combining A Sketch of Ceylon Mission - Miron Winslow, New York - 1835.
Memorie Of Laurens Pye, Sophia Peiters, Colombo - 1910.
Memorie of Ry clof Van Goens, Sophia Pieters, Colombo - 1910.
Wallipuram Gold Plate Inscription of the reign of Vasabha, S. Paranavithana, Epigraphia Zeylanica, Vol : IV, No. 29, 1934- 1942.
The Brahmi Inscriptions of Ceylon S. Paranavithana, Colombo - 1970.
Nagadipa and Buddhist Remains in Jaffna, Paul Peries, JRAS (CB), Voll:XVII, NO. 70 and XXVIII No: 72


Page 76
யாழ்ப்பாண அரச
விஜயகாலிங்க ஆரியச் குலசேகரசிங்கை ஆரி குலோந்துங்கசிங்கை ஆ விக்கிரமசிங்கை ஆரிய வரோதயசிங்கை ஆரி மார்த்தாண்டசிங்கை குணபூசணசிங்கை ஆ வீரவரோதய சிங்கை அ ஜெயவீரசிங்கை ஆரிய குணவீரசிங்கை ஆரிய கனகசூரியசிங்கை ஆ
Y சிங்கைப் பரராசசே
- I -- இராசலட்சுமி அம்மாள் வள்ளியம்மை
一 。 சிங்கிவாகு பண்ட்ாரம் பரநிருபசிங்கன் மகன் LO
அழகாண்மை தனால விெற்றி விசய்தெய் திடவீர்சிங்க சந்திர்சே வல்லமுதலி சிங்கமுதலி வேலாயுத வேந்திர - முதலி மாப்பான
முதலி முதலி (ல் முதலி இராசவல்லப إكي குமார சூரிய முதலி பரநிருபசிங்கமுதலி முதலி
விஜயேந்திரமுதலி
" -
நன்னித்தம்பி
十 மரகதநாச்சியார் செல்ல்த்துரை அப்ய்ச்சி விசாலாட்சி இளையதம்
十 十 வள்ளியம்மை யோகம்மா
+ சுந்த்ரவல்லி
தங்க்தேவி விசாலாட்சிதேவி தனலட்சுமி -- -- 十 விஜயதெய்வேந்திரன் தியாகராஜா ஏரம்பமூர்த்தி
கெளரி பூவிபராஜன் சுந்தரவல்லி
திருவருட்சோதி மங்கையர்க்கரசி
I F.품 C 望、 s (9 坠
鸣距王 9 苷 6e 6 è
lb 3i (s Sg) gb 9 蠶_羈嶺博 蠻劃|也善豎醫|驚翼 蠶|劃 蠶|獸 器葛-鑒+藍|疆一慕+疆|崇岳一* 9િ_9- ·, || 器器「雷°藝|獸丁蟹°盛|亞爾丁計+望| 葛一盤+望。」邑*莖 |望 疆墨醬罰* 堊。疆|*靈響影|曾蠶器|量。影|勳 鸟兽 • à.1 ܬ܊ 麗 坠 E... 鬱 ·|확

பரம்பரை க்கிரவர்த்தி (1236)
ன் (1240) ரியன் (127) år (1292) ன் (1302) பூரியன் (1325) ரியன் (1347) fusiT ன் (1380) ör (1410)
யன் (1440) கரன் (1478)
Aal- . . . . .
மங்கததமமாள - கன் மரகதவல்லி #fါ၏ UJ60)6
೨೮ಕ್ಟಿಕಆಗಿ வீரகந்த்ரமுதலிーI சிதம்பரநாதமுதலி கர இராசரத்தின வேதவ்ல்லி (அராலி) ST முதலி --
தனபாலமுதலி விக்கிரமசிங்கமுதலி
அம்பலவாணர் + கதிரிப்பிள்ளை
சேதுப்பிள்ளை
தம்பரப்பிள்ளை
இராமலிங்கம்
முதலித்தம்பி كفايلون
கிருஷ்ணர்
一1 பி கந்தசாமி உமையவதி கமலாவதி
+ சிவபாதம்
二 . . . இரத்தினதேவி விஜய்ேந்திரன் 十ー -- கனகரத்தினம் விஜயமலர்
நன்மலர் ஷாமினி தவமலர் ரஞ்சினி கனேஸ்வரன் +. புஷ்பசிவமலர் தங்கமமா புவனேஸ்வரன்
6e Sg) இ9) Գ (3) 虽|蕾堡。有|粤 劃.劃體置.璽寶墨|密訓劃量上劃|體體 蠶 露劃輯爭劃勳「讚「劃*劃寵雷劃璽劃「雷蒙 盤尾 弱 *轟°劃轟*爭下副

Page 77


Page 78

முத்திரைச் சந்தியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் - புராதன நல்லூர்க் கந்தசுவாமி கோயிலிருந்தவிடத்தில் அமைந்துள்ளது.

Page 79
நல்லூரிலுள்ள மந்திரி மனையின் இன்றைய தோற்றம்
 

யமுனாஏரியின் இன்றைய நிலை

Page 80
''''''] 1. Es
JE FLUTT FI
தா
ங்கிலித்
TT
ல்
ரசமாளிகை வாயி
岛
T.Li'ElauTI #L'ylisiTG7016ʻlT யார் கோயில்
 

|-
-
|-
|- ----
(i)
த பிள்ளையார் கோபி
站
வெயிலுக
தர் கோயில்
நல்லூர்ச் சட்டநா

Page 81
வல்லிபுரம் கிருஷ்ணர் கோயிலின் இன்னொரு தோற்றம்
 

ED
를
目
தொண்டைமானாறு சன்னதி முருகன் கோயில்

Page 82
-
ܕ ܕܗ
புராதன சிலா விக்கிரகங்கள்
பருத்தித்துறை தெருமூடி மடம்
 
 

يرة
யாழ்ப்பான கோட்டை முனியப்பர் கோயில்
மாதகல் நுணசை முருக
* கோயில்

Page 83
பறாளை முருகன் கோயில்
1 ܒ .
E.
E.
들
பறாளை விநாயகர் கோயில்
 
 

剧 “山 出
聂 國神聖 -H= 压
콘F-----
ல்
ன் கோபி
FT
Tோய முருகன
{ւր

Page 84
-
மூளாய் அம்மன் கோயில் ஆலயக்கிணறு, (இளையதம்பி குடும்ப உபயம்)
(படங்கள் போட்டோ அரவிந்)
 
 

錄
நன்னித்தம்பி இளையதம்பி

Page 85
E.
-크 BB
국 虫
罕
击
 
 
 
 
 
 
 

விலாசாட்சி தேவி
தனலட்சு மிதே fil இரத்தினதேவி

Page 86
விஜயேந்திரன்
விக்கிரமசிங்கன்
பI நிருபசிங்கன்
பரமேஸ்வரிதேவி
 
 
 
 
 
 
 

நிற்சிங்கசேனாதி
ராஜன

Page 87

இளையசிங்கன்

Page 88
(3)IRÍIT@ ș1009.IIIII] film
ク
quico IIIII]ấîılın
 
 


Page 89


Page 90
DYNASTY OF
DYNASTY OF JAFFNA Dr. Sengaliazhiyan Kunarasa ' of Jaffna Kings' dynasty from 1 KunaTasa was bonin 194li the Peradeniya University and in Geography,
He is a prolific Writer and a field. To his credit he has w three accomplishments in the Dr. Kunarasa Was awardet Shahithiya Academy Award novels and short storics. H IRAW U NE RAPPAYANIK KADDARU were translated named THE BEAST Was published.
He is also an author of Geography.
As a senior officer in the SI he at present dispatches his Asst. Govt. Agent of Nallur.
ISBN 955-845S-00-8
 

JAFFNA KINGS
KINGS - A valuable Work of which narratics briefly the story 215 to 2000, Dr. Sengaiazhiyan 1 Jaffna. He is a graduate from later on obtained his Doctorale
Well-known critic in the literary written thirty-seven novels and
sphire of fictional history.
di Inore than sewen times by the for his achievement in Writing is collection of short stories, KAL and one of his no Well, into Sinhala and another novel translated into English and
Several textbooks written OT
i Lanka Administrative Service, duties as Divisional Secretary
- SWA,