கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாத்தளை முதல் மலேசியா வரை

Page 1

و بالاختیاری نیست.
w
inities
AAAAAA
iki - i .

Page 2


Page 3

மாத்தளை முதல் மலேசியா வரை.
தமிழ்க்குரல் பதிப்பகம் P-15, ஐந்தாவது மெயின் ரோடு, இராமலிங்க நகர், உறையூர், திருச்சி - 620 003

Page 4
மாத்தளை முதல் மலேசியா வரை.
மாத்தளை சோமு
பயணக் கட்டுரை
C) ஆசிரியர்
முதற் பதிப்பு: மார்ச்,2000
பக்கம் 128 பிரதிகள் 1200
பதிப்பு: தமிழ்க்குரல் பதிப்பகம் P-15, ஐந்தாவது மெயின் ரோடு, இராமலிங்க நகர், உறையூர், திருச்சி - 620 003
விலை; 50, 00
வடிவமைப்பு வே. கருணாநிதி
அச்சிட்டோர்.
தி பார்க்கர் 293, அகமது வணிக வளாகம், இரண்டாவது தளம், இராயப்பேட்டை நெடுஞ்சாலை, சென்னை - 600 014. Ph, 8215684

இந்நூல்
மலேசிய மண்ணில்
தமிழை முன்னெடுத்து தமிழர்களுக்காக முன்னின்று
மறைந்த நல்ல நெஞ்சங்களுக்குச்
EF Lori LILI 6oo I Ln

Page 5

என்னுரை
மாத்தளையில் இருந்தபோது மலேசியா போக வேண்டும் என்று விரும்பினேன். அது கைகூடவில்லை. அது கூட நல்லதாய்ப் போய் விட்டது என்று இப்போது நினைக்கின்றேன். காரணம் நான் அப்போது மலேசியா போயிருந்தால் ஒரு படைப்பாளியின் பார்வையில் அனு பவங்கள் வாய்த்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் இன்று புலம் பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் வாழ்கிறபோது ஒரு படைப்பாளி என்ற முறையில் மலேசியப் பயணம் வாய்த்தது மிகவும் ஏற்புடையது. அது ஒரு தடவையல்ல - பல தடவை. இப்பயணத்தின் மூலம் மலேசியத் திருநாட்டில் தமிழின் பெயரால் தமிழர்களின் பெய ரால் பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதை நேரிலேயே கண்டேன்.
தமிழகத்திலும் இலங்கையிலும் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் இருந்த தமிழை உலகத் தமிழாக முன்மொழிந்தவர்கள் மலேசியத் தமிழர்கள். இஃது தீர்க்கதரிசனமான செயற்பாடு. இன்று உலகில் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் இருக்கிறார்கள். தமிழ் இன்று உலக மொழியாக இருக்கக் கூடிய தகுதியினைப் பெற்று விட்டது. ஆனால் அதனைத் தமிழர்கள் உணர்ந்திருக்கிறார்களா?
மலேசிய்த் தமிழர்களில் பலர் தமிழின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த உணர்வை எனது பயணத்தின் போது கண்டேன். அங்கு ஆறாம் வகுப்பு வரைத் தமிழில் பாடங்களைப் படிக்கிற தேசியத் தமிழ்ப்பள்ளிகள் இருக்கின்றன. ஆனால் தமிழகத் தில் ஐந்தாம் வகுப்பு வரைத் தமிழில் பாடங்கள் நடத்த அரசு போட்ட உத்தரவை எதிர்த்து வழக்குப் போடுகிறார்கள் இதுவே பெரிய முரண் பாடு. இவ்வாறான முரண்பாடு தமிழகத்திற்கும் ஏனைய நாட்டுத் தமி ழர்களுக்கும் இருக்கின்றன.
தாய்மொழி என்பது வெறும் வாய்மொழி மட்டுமல்ல: ஒரு இனத் தின் வேர்களை அடையாளம் காட்டும் கருவி. கருவிக்கு மேல் ஒரு
7

Page 6
மாத்தளை சோமு
ஆயுதம். அது தொலைந்தால் இனம் அழிந்து விடும். இது உணரப் பட்டுப் புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ்க் கல்விக்கான வேள்வி யைத் தமிழர்கள் தொடங்கியிருக்கிறார்கள். அதனை மலேசியாவிலும் கண்டேன்.
இக்கட்டுரைத் தொடர் மூலம் மலேசியா நாடு பற்றியும், மலேசிய மக்கள் பற்றியும், தமிழர்களின் கலை, இலக்கியப் பத்திரிகை முயற்சி கள் பற்றியும் என்னால் முடிந்த தகவல்களைத் திரட்டி எடுத்துச் சொல்லி யிருக்கின்றேன். இது படிக்கிறவர்களுக்கு ஒரு அறிமுகமாக இருக் கும் மேலும் இந்த அறிமுகமே சரியானதாக இருக்க வேண்டும் என் பதில் நிறைய அக்கறை காட்டினேன். இத்தொடர் மூலம் மலேசிய மண்ணில் தமிழை முன்னெடுத்தவர்களின் முகவரியைக் காட்டியிருக் கின்றேன். தமிழ்மொழி உலகின் பல நாடுகளிலும் வாழ்கிற தமிழர் களால் முன்னெடுக்க வேண்டிய ஒரு மொழி. சிங்களம், மலாய், இந்தி, உருது, வங்காளி போன்ற மொழிகளுக்கு அரசுகள் இருப்பதனால் கிடைக்கிற வசதி தமிழுக்கு இல்லை. எனவே தமிழ் மக்கள் தான் அந்த வசதிகளை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு முன் நிற்கின் றவர்கள் பலரை இந்தப் பயணக் கட்டுரையில் குறிப்பிட்டு எழுதி யிருக்கின்றேன். இது தேவையானது. மனிதர்கள் இல்லாமல் எதுவும் இல்லை. மனிதர்களுக்காகத் தான் எல்லாமே.
தமிழகம் அல்லது இலங்கை போகிறபோது மலேசியா எனக்கு வேடந்தாங்கல்'ஆகிறது. எனவே பல தடவை மலேசியா போயிருக் கின்றேன். இந்தப் பயணத்தின் போது பல மலேசியத் தமிழ் அரசியல் தலைவர்களையும் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. மலேசிய இந்தி யன் காங்கிரஸ் (ம.இ.கா) தலைவரும் அமைச்சருமான டத்தோ பூரீ சாமிவேல், ம.இ.கா.வின் துணைத் தலைவரும், துணை அமைச்சரு மான, டத்தோ சுப்ரமணியம் ஆகியோரைச் சந்தித்தேன். அவர்களோடு நேர் காணலும் செய்தேன். ஆனால் அவைகளைத் தனியே தர இருப் பதால் இந்தக் கட்டுரையோடு சேர்க்கவில்லை. அவைகளைத் தனியே தருவதுதான் சரியானது என்று நினைக்கின்றேன்.
முடிவாக இந்தப் பயணக் கதை மூலம் தமிழ் வாசகர்களுக்கு மலேசியா பற்றியும் அங்குள்ள தமிழர்கள் பற்றியும் அவர்களின் கலை, இலக்கிய, கல்வி முயற்சிகள் குறித்தும் என்னால் இயன்ற விபரங்க ளைத் தெரிவித்திருக்கின்றேன். இது இப்போதைக்குப் போதுமானது என நினைக்கின்றேன்.

மாத்தளை முதல் மலேசியா வரை. D
எனது மலேசியப் பயணத்திற்கு அடிக்கல் நாட்டிய அன்பான நண்பர் ஈப்போ கலாநிதி ந. முனியாண்டி அவர்களுக்கும் மற்றும் எழுத் தாள நண்பர் சை. பீர் முகம்மது, அமரர் இர. ந. வீரப்பன் ஆகியோ ருக்கும்,
இத்தொடரை இலங்கையில் தினகரன் ஞாயிறு இதழில் தொடராக வெளியிட்ட தினகரன் வார இதழ் ஆசிரியர் அவிர்களுக்கும், தினகர னில் வெளிவந்ததை இந்நூலுக்காகச் சிறிது விரிவுபடுத்தி மாற்றி எழுதி யிருக்கின்றேன்.) இந்நூலை அழகுற அச்சிட்ட சென்னை தி பார்க்கர் வே. கருணாநிதி அவர்களுக்கும் எனது அன்பான நன்றிகள் உரித்தா கட்டும்.
வழக்கம் போல் வாசகர்கள் இந்நூலை ஏற்றுப் போற்றுவார்கள் என நம்புகின்றேன்.
நன்றி! வணக்கம்!
அன்புடன் மாத்தளை சோமு 07-03-2000
MATHALAS0MU,2/ CIVICAVE, PENDEHILL, NSW - 245, AUSTRALA
9

Page 7

மாத்தளை
முதல்
மலேசியா
6) IGOT....
“மன்னிக்கவும். சென்னைக்கு சிட்னியில் இருந்து நேரடி விமான சேவை இல்லை. சிங்கப்பூரோ கோலாலம்பூரோ போய்த்தான் போக வேண்டும். உங்களின் திட்டம் என்ன?’ என்று புன்னகையை முகத் தில் தேக்கியவாறு ஒரு கேள்விளைத் தூக்கிப் போட்டாள் பிரயாண முகவரகத்தில் பணிபுரியும் வெள்ளைக்காரப்பெண்.
ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தேன். பல தடவை சிங்கப்பூர் போயாகிவிட்டது. மலேசியாவிற்குத்தான் இன்னமும் போகவில்லை, மலேசிய மண்ணைப் பார்த்து அங்கு வாழும் தமிழ் பேசும் நம்மவர் களைப் பார்க்க வேண்டும் என்ற ஒரு ஆசை பல வருடங்களாக இருக் கின்றது. இதுதான் அதற்குச் சரியான சந்தர்ப்பம். வாழ்க்கையில் இப் படியான சந்தர்ப்பம் அவ்வப்போது கதவைத் தட்டும் என்பார்கள். இதோ மலேசியா போக கதவு தட்டப்படுகிறது. விடக்கூடாது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூர் வழியாக சென்னை போக முடிவெடுத்து பயணச்சீட்டை உறுதி செய்து விட்டு மலேசியா சம்பந்த மான தகவல் பிரசுரங்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்குத் திரும்பி னேன்.
வீட்டில் தபாற் பெட்டியில் இரு கடிதங்கள் கிடந்தன. அதில் ஒன்று மலேசியாவில் இருந்து நண்பர் முனியாண்டி எழுதியிருந்த கடிதம். என்ன விந்தை! மலேசிய வழி பயணச்சீட்டை பதிவு செய்து விட்டு இப்போதுதான் வருகின்றேன். இங்கே என்னை வா என்று அழ்ைப்பது போல் மலேசியாவில் இருந்து கடிதம்!
.

Page 8
மாத்தளை சோமு
அவசர அவசரமாக அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்தேன் உள்ளே மலேசியத் திருநாடே- மலேசியத் தமிழர்களே என்னை அழைப்பது போல் அந்த நண்பரின் கடிதம்.
இந்தியா, இலங்கை போவதாக அறிந்தேன் மிக்க மகிழ்ச்சி. போகும் வழியில் மலேசியா வந்து போக வேண்டும் கட்டாயம். இது அன்பான அழைப்பு வரும்போது உங்களின் நாவல் பிரதிகள் பல எடுத்து வரவும் தங்களின் அன்பான வருகையை எதிர்பார்க்கின்றேன்.
எனக்கு அப்போதே மலேசியா போய் விட்ட உணர்வு. இன் றைய நவீன விஞ்ஞான வசதியில் நினைத்தவுடன் ஒரு நாட்டிற்கு விரைவாக போய் வரலாம். அதில் வியப்போதுமில்ல. ஆனால் ஒரு புதிய நாட்டிற்கு நாமாகப் போய் வருவதைவிட அங்குள்ள நண்பர் கள் அழைத்து அங்கு போய் வருவது பயன் தரக்கூடியது.
மாத்தளையில் இருந்த போது மலேசியா நாட்டிற்குப் போய் வரு வது எனக்கு ஒரு கனவாகவே இருந்தது. அந்தக் கனவு எனக்குள் ஜனித்தற்கு காரணமே மலேசியா நாட்டைப் பற்றி - அங்குள்ள தமி ழர்கள் பற்றி - தமிழ் ஆர்வம் பற்றி நான் அறிந்த செய்திகள் தான். 7 மாத்தளைக்கும் மலேசியாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் மாத்தளையில் இருந்த எனது வீட்டு வானொலி பெட்டியில் ஒலிபரப்புான மலேசியத் தமிழ் ஒலிபரப்பு என்னை மலேசிய மீது மோகிக்க வைத்தது. சிற்றலை வரிசையில் மாலை 4.30 மணிக்கு இலங்கை நேரம்) ஒலிபரப்பாகும் மலேசியத் தமிழ் ஒலிபரப்பை அவ் வப்போது நான் கேட்பேன். சுத்தமான தமிழும் சரியான உச்சரிப்பும் கலந்த அந்த தமிழ் என்னை உற்சாகப்படுத்தியது. முதலாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை மலேசியா அறிவு பூர்வமாக நடத்திய போது மலேசியா மீது கொண்ட ஆர்வம் மேலோங்கியது.
மலேசியாவில் முதலாவது தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத் தியதில் ஈழத்து தமிழ் அறிஞர் தனிநாயகம் அடிகளாருக்கும் பெரும் பங்குண்டு. மலேசியாவில் பல ஈழத்துத் தமிழர்கள் குடியுரிமை பெற்று யாழ் தமிழர்களாக அடையாளம் பெற்று வாழ்ந்து வருகிறார்கள். அவர் களின் உறவினர்கள் பலர் யாழ்-குடா நாட்டில் மலேசிய பென்சனி யர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். பல ஈழத்தமிழர்களுக்கு அங்கு தோட் டங்கள் கூட இருந்திருக்கின்றன. ஆயினும் ஏனோ மலேசியாவிற்கும்
c. 17

மாத்தளை முதல் மலேசியா வரை.
இலங்கைக்கும் இடையே தமிழ் சம்பந்தமான இலக்கிய கலை உறவு இருக்கவில்லை. இதற்குக் காரணமே மலேசியாவில் இருந்த ஈழத் தமி ழர்களுக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் இருந்த இடைவெளியே! அதேநேரத்தில் இலங்கையில் மலைகளின் உள்ளே இருந்த மாத்தளை நகரில் வாழ்ந்து கொண்டு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மலேசி யாவை நேசிக்க எந்தத் தடையும் எனக்கு இருக்கவில்லை.
மாத்தளையில் இருந்த வரை மலேசியா போகிற வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. 1984ல் சிங்கப்பூர் போய் வந்த போதும் மலேசியா போக முடியவில்லை. சிங்கப்பூரில் இருந்தவாறே மலேசியாவில் இருந்து வீசும் காற்றை சுவாசித்து விட்டு திரும்பிவிட்டேன். சிட்னி வந்த பிறகு தான் மலேசியா போகிற வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
அப்போதே மலேசியா போகும் திகதியைக் குறித்து நண்ப ருக்கு கடிதம் எழுதிப் போட்டேன். நண்பர் நரசிம்மன் முனியாண்டி சிட்னி பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்து கலாநிதி பட்டம் பெற்றவர். மலேசியாவில் பிறந்தவர். நான் இலங்கையில் பிறந்தவன். இருவரின் மூதாதையரும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். நாங்கள் இருவரும் தமிழராய் இருந்தபோதும் முதன்முதலில் சந்தித்தது ஆஸ்திரேலியா வில் அதுவும் சிட்னி மாநகரியத்தின் (சிட்னி சிட்டி கவுன்சில்) பொறி யியலாளராக கடமையாற்றும் ஆர் சண்முகானந்தன் வீட்டில். அவர் தான் எனக்கு நரசிம்மன் முனியாண்டியை அறிமுகம் செய்து வைத் தார். “இவர் மிஸ்டர் முனியாண்டி. கால்நடை, தொற்றுநோய் சம்பந்த மான பி.எச்.டி பட்டப் படிப்பை சிட்னி பல்கலைக்கழகத்தில் செய்து வருகின்றார். தமிழில் ஆர்வமானவர்.”
பதில் அறிமுகமும் நடந்தது. இருவரும் புன்னகையைப் பரி) மாறிக்கொண்டு கைகுலுக்கிக் கொண்டோம். எனக்கு மலேசிய நாட்டு முனியாண்டியைப் பார்த்ததுமே பிடித்துக்கொண்டது. அதற்கு கார ணம் அவரின் புன்னகை ததும்பும் முகம் மட்டுமல்ல முனியாண்டி என்ற பெயரோடு எனக்கிருந்த தொடர்புகள்
மாத்தளைத் தமிழரிடையே முனியாண்டி விலாஸ் - முனியாண்டி கோயில்' என்பன பிரசித்தமானது, இந்த இரண்டோடும் எனக்குத் தொடர்பு இருந்தது. முனியாண்டி விலாஸ் என்ற சாப்பாட்டுக் கடையை முனியாண்டி' என்பவர் வைத்திருந்தார். என் தாயார் சுகவினமீல்லாத போது வர்த்தகத்திற்கு மேலாக எங்களுக்கு அக்கறையோடு உணவு
3

Page 9
D மாத்தளை சோமு
கொடுத்தார். நகைச்சுவையோடு பேசுகிற அவரை மறக்க முடியாது. மற்றது முனியாண்டி கோயில், அது மாத்தளையில் எங்கள் வீட்டுக்குப் பின்புறம் ஒரு பெரிய அரச மரத்தின் கீழே இருந்தது. இந்த முனி யாண்டி'சைவக் கடவுள் ஆடு, கோழி, காணிக்கை இல்லை. இந்த முனி யாண்டி கோயில்தான் என்னைப் பொது நிகழ்ச்சிக்கு அறிமுக மேடை தந்த இடம். அங்குதான் சரஸ்வதிப் பூசையை மாணவர் முன்ன்ேற்ற சங்கத்தின் சார்பில் நானும் சில நண்பர்களும் நடத்த முனைந்தோம். அது பள்ளியில் படித்த காலம். அப்போது முடியாண்டிக்கும் சரஸ்வதி பூசைக்கும் என்ன உறவு? என்று கேட்டவர்களும் உண்டு. இப்படி இந்த முனியாண்டி என்ற திருநாமம் என்னோடு பலவகையில் தொடர் பாய் இருந்திருக்கிறது. இன்றும் இருக்கிறது. இன்று கடல் கடந்த பின்னரும் நட்பின் சின்னமாக மலேசியத் தமிழரிடையே ஒரு நண்ப ராக அந்த 'முனியாண்டி இருந்து வருகின்றார்.
சிட்னிக்கு மலேசியா முனியாண்டி வந்தது ஆஸ்திரேலிய அர சின் புலமைப் பரிசில் ஆய்வுத்துறைப் பட்டம் பெற. ஆனால் அவர் நமக்கெதற்கு உள்ளூர்த் தொடர்பு என்று ஒதுங்கவில்லை, நேரத்தை ஒதுக்கி அதனை சிட்னித் தமிழரின் தமிழ்க்கல்வி கலை சம்பந்தமாக முன்னின்று உழைத்திட முன்வந்தார். சிட்னியில் நடந்த ஐந்தாவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு (1992) சம்பந்தமான குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார்.
நண்பர் முனியாண்டியின் கடிதம் எனக்கு உற்சாகத்தைக் கொடுத் தது. மலேசியோ போக வேண்டும் என்பதில் உறுதி சேர்ந்தது.
மலேசியாவின் மாஸ் விமானத்தில் உட்கார்ந்தபோதே அந்நாட் டுக்குள் போய்விட்ட உணர்வு வந்தது. பயணிகளில் வெள்ளைத்தலை களே நிறைந்திருந்தன. வெள்ளைத் தலை என்றால் வயதானவர்கள் என்று எண்ணிவிடாதீர்கள். வெள்ளைக்காரர்களைத் தான் சொல்கி றேன். கறுப்பர்களை எண்ணிப் பார்க்கலாம். எனது பக்கத்து இருக்கை காலியாகவே இருந்தது. இன்னொரு பக்கத்தில் எனது மனைவியும் அவளுக்குப் பக்கத்தில் மகள் யாழினியும் உட்கார்ந்திருந்தார்கள். யாழினிக்கு நான்கு வயது. அவளுக்கு இதுதான் முதல் விமானப் பயணம் உற்சாகமாக இருந்தாள் ஜன்னலோரமாக உட்கார்ந்து வெளியே வேடிக்கைப் பார்க்க விரும்பினாள். எங்களுக்கு நடுப்பகுதி வரிசை கிடைத்ததால் ஜன்னலோர இருக்கை கிடைக்கவில்லை. யாழினியிடம்
C 4

மாத்தளை முதல் மலேசியா வரை. ()
விபரத்தைச் சொல்லி அவள் ஆர்வத்தை திசை திரும்பினேன். பணிப் பெண் கொடுத்து விட்டுப் போன ஒரு விளையாட்டுப் பொருளில் கவனத்தைச் செலுத்தினாள் அவள்.
விமானத்து இருக்கைகள் நிரம்பத் தொடங்கின. இன்னும் சில நிமிடங்களில் அந்த விமானம் புறப்படலாம், எனதுபக்கத்து இருக்கை காலியாகவே இருந்தது. கடைசி நேரத்தில் யாராவது வரலாம். அந்த யாராவது இந்த விமானப் பயணத்தின் போது பேசப் பழக சிரிக்கிற ஒரு பயணியாக இருந்தால் நல்லது. சில நேரத்தில் இதுபோன்ற பயணத் தில் பக்கத்தில் இருக்கிற பயணி சிரிக்க காசு கேட்பவராக அமைய லாம். இன்று என் பக்கத்து இருக்கைக்கு வரப் போகிற பயணி எத்த கையவரோ? என்ற யோசனையோடு இருந்தேன் நான். அப்போது ஒருவரை அழைத்துக் கொண்டு வந்தாள் விமானப் பணிப்பெண். அவர் எங்களைப் போலவே இருந்தார். ஒரு புன்னகையுடன் என் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்தார் அவர் பதிலுக்குப் புன்னகை யுடன் அவரைப் பார்த்தேன். அவரின் கண்களில் ஏக்கம் தெரிந்தது.
2
"ஐயாம் ரொம்சாமி புறம் மொரீசியஸ்.” என்றார் பக்கத்தில் இருந்தவர்.
'ரொம்சாமி இதென்ன புதுப்பெயர்? என்று புரியாமல் நான் விழித்த போது அந்த ரொம்சாமியே அந்த முடிச்சை அவிழ்த்து விட்டார்.
“நான் தமிழன் என் பெயர் ராமசாமி ஆனால் பிரெஞ்சு கலா சாரத்தின் விளைவால் ரொம்சாமி ஆகிவிட்டது. இப்படி பலர் மாட சாமி. மாட்சாமி. கந்தவேல் கான்டவல். என மாறிவிட்டனர்.”
அவர் ஆங்கிலத்திலேயே பேசினார். எனக்கு வியப்பு. தமி ழுக்கு அமுது என்றானே பாவேந்தர் பாரதிதாசன். அந்தத் தமிழ்ப் பெயர்களுக்கா இந்தக் கதி?
“உங்களுக்குத் தமிழ்த் தெரியுமா?’ தயக்கத்துடன் பதில் சொன் னார். “எனக்கு தமிழ் தெரியாது. ஆனால் ஆங்கிலம் பிரெஞ்சு மொழி கள் தெரியும். என் பிள்ளைகளுக்குத் தாங்கள் தமிழரென்றே தெரி யாது. அதனையிட்டு இன்று கவலைப்படுகின்றேன். எனவே இப்
5 D

Page 10
மாத்தளை சோமு
பொழுது நானே தமிழ்ப் படிக்க முயல்கின்றேன். கம்பியூட்டர் முலம் வீட்டில் தமிழ் படிக்க ஒரு புரோகிராம் வந்திருப்பதாக அறிந்தேன். அதனை மலேசியாவில் வாங்கப் போகின்றேன். தமிழ் எனக்குத் தெரி யாவிட்டாலும் அதன் வேர்கள் என் நெஞ்சில் இருக்கின்றன. பிரெஞ் சில் புலமை பெற்ற போதும் எனக்கு தமிழ்த் தெரியாதது எதையோ இழந்ததைப் போல் இருக்கின்றது”
அவர் கண்கள் லேசாய்க் கலங்கின. எங்கள் மூதாதையர் தமிழ் நாட்டின் இருந்து வந்தவர்கள். ஆனால் தாய் மொழியை மறந்துவிட் டார்கள். தாய்மொழியை மறந்து போனதால் எங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்கள். அதனால் பல அனர்த்தங்கள். எவ்வளவு புலமை யோடு பிரெஞ்சு பேசினாலும் எங்கள் நிறம் எங்களை அந்நியராக்கிக் காட்டுகின்றது.”
அவரின் அந்த வாக்குமூலத்திலிருந்து பல உண்மைகளை நான் புரிந்து கொண்டேன். வெளிநாட்டு வாழ்க்கை வினோதமானது. ஒரு வகையில் ஏக்கம் நிறைந்தது. சொந்தமண், சுற்றம், நட்பு, என்பனவற்றை இழந்துதான் இன்னொரு மண்ணை சொந்தமாக்க முயல்கின்றார்கள். இங்கு வாழ்க்கை வசதிகள் விரிந்து கொள்கின்ற போதும் நம்மவர் களின் இதய ஏக்கங்களைத் தவிர்க்க முடியாது, எங்கோ ஒரு நாட்டில் பிறந்து வளர்ந்து புதிய மண்ணில் புதிய பண்பாட்டோடு வாழ முனை கின்றபோது மன உளைச்சல்களைத் தவிர்க்க முடியாது. வெள்ளைக் காரர்களின் வாழ்க்கை முறை வித்தியாசமானது. பெற்ற மகனுக்கு அவன் விரும்பிய ஒரு புத்தகத்தை வாங்கிக் கொடுத்ததும் அதனைப் பெற்றுக் கொண்டு தகப்பனுக்கே 'தெங்கியூ' என்று நன்றி சொல்லி ஒதுங்கிப் போகிற மகனை இங்கு தான் பார்க்கமுடியும்.
கீழைத்தேய வாழ்க்கை குறிப்பாக தமிழரின் வாழ்க்கை முறை கள் உலக மனித இனத்திலேயே வித்தியாசமானது. உள்ளமும் உள் ளமும் பேசி பெருமிதம் கொள்கிற பாங்கு, உறவினர்கள் நண்பர்கள் வாழும் ஊர் என்று விரிகிற நட்புத்தன்மை, நல்லது கெட்டது என் றாலே சொந்தம், பந்தம், நட்பு கூடிப் பங்கு பெறுகிற காட்சி வேறு எங்கே காணமுடியும்? மேலை நாடுகளில் வாழ்கிற வெள்ளைக்காரர் களுக்கு இதயம் உண்டு. நல்ல எண்ணங்கள் உண்டு. ஆனால் அவர் கள் விரித்து வைத்திருக்கிற விஞ்ஞான யந்திர ஆட்சியில் அவர்களே அகப்பட்டு ஒரு யந்திரமாகிப் போய் விட்டார்கள். அதுதான் அவர் களுக்கும் புலம் பெயர்ந்த ஏனையவர்களுக்கும் உள்ள இடைவெளி.
16

மாத்தளை முதல் மலேசியா வரை. D
மேலை நாடுகள் என்றதும் நம்மவர்கள் சம்பளம், பதவி, வசதி, கார், விஞ்ஞான வசதிகள் என்பனவற்றைத்தான் மதிப்பிட்டு ஏங்கு கின்றார்கள். ஆனால் இங்கு மனிதனின் வாழ்க்கையில் இன்னொரு பக்கம் மங்கி மடிந்து கொண்டிருப்பதை எவரும் அறியவில்லை. கணவன் மனைவி பிணைப்பு, பிள்ளைகள் பெற்றோர் இணைப்பு, உறவினர்கள் சிநேகம், நட்பு யாசிப்பு யாவும் இந்த மேலை நாட்டு வாழ்க்கை முறையில் யந்திரமாகிவிட்டதை எவர் உணர்ந்தார்? இருக் கிற நம்மவரின் எல்லாக் குறைபாடுகளையும் பெருமூச்சுகளையும் ஏக்கங்களையும் இந்த மண்ணில் ஈட்டுகின்ற பொருள் எவ்வளவு லாவகமாக மறைத்து விடுகின்றது தெரியுமா? பொருட் சுகத்திற்காக பாரம்பரிய வாழ்க்கை, பண்பாடு, மொழி என்பனவற்றை இழக்கத் தயாராகி வருகின்ற ஒரு நிலையே இங்குண்டு. இது குறையல்ல. மனித இயல்பு முதலில் பொருமுகின்ற மனிதன் பிறகு எதனையும் ஏற்றுக் கொள்ளத் தயாராகி விடுகின்றான். எதனை இழந்தாலும் வெளிநாடு களில் வாழ்கின்ற தமிழர்கள் மொழிவழி பண்பாட்டை இழந்துவிடக் கூடாது. தமிழர்களுக்கே மொழிதான் அடையாளம். அதனை எக்கார ணம் கொண்டும் இழக்கக்கூடாது. இழந்தால் என்னவாகும் என்பதை பிஜித் தீவுகள், மொரீசியஸ், ஆப்பிரிக்கா போன்ற நாட்டுத் தமிழர் கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.!
விமானம் ஒடத் தொடங்கியது. யாழினி கை தட்டி மகிழ்ந்தாள். “உங்கள் பிள்ளை தமிழ் பேசுமா?”
எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. மகள் தமிழும் பேசுகின்றாள். ஆங்கிலமும் பேசுகின்றாள். “மம்மி லுக் பிளைட் கொயிங். நாங்கள் வீட்டில் தமிழில் தான் பேசுகின்றோம். ஆனால் தொலைக்காட்சி ஆங்கிலம் மட்டுமே பேசுகின்றது. இங்கே அதனைப் பார்த்துக் கேட்டு யாழினி ஆங்கிலத்தில் பேசுகின்றாள். இந் நாட்டிற்கு ஆங்கிலம் கட்டாய பாடம். ஆங்கிலம் மட்டுமே பேசுவது வேற்று மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்குப் பிரச் சனை. எவ்வளவு தான் வீட்டில் தமிழ் பேசினாலும் இந்த நாட்டின் சற்றுப்புற சூழ்நிலை தாய்மொழியை மறக்க வைத்து விடுகின்றது. இப்போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் போகின்றோம். திரும்பி வரும் போது தமிழ் நன்றாகப் பேசும், அந்த நம்பிக்கை பொய்யாகக் என்பது எனது நம்பிக்கை.”

Page 11
D மாத்தளை சோமு
எனது பதிலில் திருப்தியடைந்த அவர், உங்களைப் பற்றி எது வும் சொல்லவில்லையே? என்றார். நான் ஒரு தமிழ் எழுத்தாளன். இலக்கியவாதி என் பெயர்.
திடீரென்று அவர் முகத்தில் ஒரு பிரகாசம் ஏறியது. “நீங்கள் எழுத்தாளரா? உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. நீங்கள் எழுதிய புத்தகம் இருந்தால் ஒரு பிரதி தாங்களேன்.”
“புத்தகங்கள் எல்லாம் லக்கேஜ்ஜில் போட்டுவிட்டேன். இப் போது கையில் புத்தகம் இல்லை. மன்னிக்கவும்.”
அப்போது தான் கையில் சில பிரதிகள் வைத்திருக்கலாமே என்ற நினைப்புத் தோன்றியது. “உங்கள் முகவரியைக் கொடுங்கள். இந்தி யாவில் இருந்து அனுப்பி வைக்கின்றேன்.”
மொரீசியஸ்காரர் முகவரியைக் கொடுத்துவிட்டு எதுவும் பேசாது கண்களை மூடினார். தூக்கம் போலும் நான் கையோடு கொண்டு போன மலேசிய நாட்டின் வரலாற்றைச் சொல்லும் புத்தகத்தை விரித் துப் படிக்கத் தொடங்கினேன்.
ஒரு நாட்டிற்குப் போவதற்கு முன் அந்நாட்டைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். வெள்ளைக்காரர்கள் அதனை ஒரு கடமையாகச் செய்கின்றார்கள். புதிய நாட்டில் இறங்கும் போது அந்நாட்டின் மொழி யில் சில வார்த்தைகளாவது தெரிந்து பேச வேண்டும் என்பது அவர் களின் ஆசை.
நான் கொண்டு போன புத்தகத்தில் மலேசிய நாட்டின் வரலாறு மக்கள் மொழி என்பன பற்றி எல்லா விபர்ங்களும் இருந்தன. ஆவ லோடு அந்த விபரங்களைப் படிக்கத் தொடங்கினேன்.
ஆசியாவில் ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளுக்கு அடுத்த தாக வேகமாக முன்னேறி வரும் நாடான மலேசியா இன்று உலக நாடுகளின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. தென் கிழக்கு ஆசியாவில் முக்கிய பகுதியாகத் திகழும் மலேசிய தீபகற்பம் எனப் புகழப்படும் மலேசியா 3,32,965 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. ஒரு பகுதி தாய்லாந்தை எல்லையாகக் கொண்டது. இன்னொரு பகுதி இந்தோனீசியாவை எல்லையாகக் கொண்டது. சிங்கப்பூரோடு சிறிய எல்லையை ஜோகூர்மாரு என்ற இடத்தில் கொண்டிருக்கிறது.
18

மாத்தளை முதல் மலேசியா வரை. D
மலேசியக் கூட்டரசில் 13 மாநிலங்கள் இருக்கின்றன. எல்லா மாநிலங்களுக்கும் தனியான தலைநகரங்கள் இருக்கின்றன. பெரும் பாலன மாநிலங்களின் கூட்டரசுப் பிரதிநிதியாக சுல்தான்கள் இருக் கின்றார்கள். இந்த சுல்தான்களிலிருந்து ஒருவர் தெரிவு செய்யப்பட்டு கூட்டரசிற்குப் பேரரசர் ஒருவரும் உதவிப் பேரரசர் ஒருவரும் நிய மிக்கப்படுகின்றனர். கூட்டரசின் தலைநகராக கோலாலம்பூர் இருக் கின்றது.
பிரிட்டனின் ஜனநாயக முறைகளைப் பின்பற்றும் மலேசியாவின் நாடாளுமன்றத்தில் மலாய், சீனம், தமிழ், ஆகிய மொழிகளின் பிரதி நிதிகள் இருக்கிறார்கள். அரசியல் அதிகாரம் நிறைவேற்றுவது நாடாளு மன்றத்தின் மூலமே நடக்கிறது. பிரதமரே நாட்டின் தலைவர்.
மலேசியா நீர், கடல், நிலவளங்கள் கொண்டவை. தென்கிழக்கு ஆசியாவின் வெள்ளி கொழிக்கும் பூமி என்று சொன்னதற்குக் கார ணங்கள் உண்டு. மலேசியாவில் அதிகமான வெள்ளி உலோக உற்பத் தியும் அங்கு வழங்கி வரும் நாணயமான ரிங்கிட்டை வெள்ளி என்று அழைப்பதும் “வெள்ளி பூமி’ என்று அழைக்கப் பொருத்தமான ஆதாரங்களாகும்.
மலேசியாவில் மக்கள் தொகை மலாய்காரர்கள் 61 சீனர்கள் 30, இந்தியர்கள் 8 என்ற விகிதாசாரத்தில் மூவினத்தாரும் வாழ்கிறார்கள். இந்தியர்களில் தமிழர்களே இலங்கைக்கு அடுத்த இடத்தில் பெருந் தொகையினராக இருக்கிறார்கள்.
மலேசியாவிற்கு ஒரு சரித்திரம் உண்டு. தமிழர்கள் இன்று அங்கு வாழ்கிறார்கள் என்றால் அதன் மூலவேர் சோழ மன்னனால் இடப் பட்டது என்பது உலகத் தமிழர்களுக்குப் பெருமையான செய்தி மலேசியாவின் பல மாநிலங்களில் ஒன்றான ‘கெடா’ என்று இன்று அழைக்கப்படும் கடாரம் மாநிலம் தான் சோழனின் கால் பதிந்த பூமி.
3
‘சரவாக்” மாநிலத்தில் உள்ள நியா குகைகள் 50,000 ஆண்டுக ளுக்கு முன்னரே மனித வாழ்க்கை இருந்ததை அடையாளபுடுத்து கின்றன. ஆனால் அந்த மனித வாழ்க்கை இன்றைய மலாய்க்காரர் களுக்கு உரித்தானது அல்ல கறுப்பு நிறமுடைய மனிதர்களுக்குச்
19°ロ

Page 12
0 மாத்தளை சோமு
சொந்தமானது. இது பற்றிய ஆய்வுகள் தொடர்வதால் எதனையும் உறுதியாய் சொல்ல முடியவில்லை. 4000 ஆண்டுகளுக்கு முன் சீனா விலிருந்து இடம் பெயர்ந்து வந்த பழுப்பு நிற மங்கோலிய குடிகள் மலேசிய தீபகற்பத்தையும் அதனைச் சுற்றியுள்ள தீவுக் கூட்டங்களை யும் அடைந்தார்கள். இவர்களே பிற்காலத்தில் மலேசியர்களாக இந் தோனீசியர்களாக உருவெடுத்தார்கள். தொடக்கக் காலத்தில் அதிவாசி களின் சமயங்களும் பண்பாடும் மலாய் தீபகற்பம் முழுமையும் இருந் திருக்கின்றது. இந்திய உபகண்டத்தின் சமய, பண்பாடு செல்வாக்கு பிற்பாடு அதனோடு கலந்திருக்கிறது. 2600 ஆண்டுகளுக்கு முன்பா கவே இந்தியர்கள் குறிப்பாக தமிழகத்தில் இருந்து வர்த்தகர்கள் வந்து போயிருக்கின்றார்கள். புத்தரின் காலத்தில் பெளத்த மதம் காலூன்றத் தொடங்கியிருக்கிறது. மலேசியாவின் ஒரு பகுதியான கெடா மாநிலம் கடாரம் என அப்போது அழைக்கப்பட்டுள்ளது. அந்த கடாரம் பகுதியை இராஜேந்திர சோழன் கடல் கடந்து வந்து கைப்பற்றி புலிக்கொடியை நாட்டியுள்ளான். இதனை ஒரு செய்தியாகப் படித்துவிட்டுப் போகலாம். ஆனால் அந்தக் காலத்தில் காற்றை நம்பி கப்பல் ஒட்டி இந்த மாபெரும் சாதனை நடந்திருக்கிறது. கடலில் புயல் இல்லாதிருந்து இரவு பக லாக கப்பலில் பயணம் செய்தால் சீன நாட்டை அடைய 150 நாட்கள் ஆகும் என்று இராஜராஜ சோழன் காலத்தில் கணக்கிட்டுள்ளனர். அப்படியானால் சீனாவுக்குப் போகிற வழியில் கடாரம் செல்ல 500 நாட்களாவது ஆகியிருக்க வேண்டும். மேலும் அபாயகரமானதாக வும் பயங்கரங்கள் நிறைந்த இத்தகைய கடல் பயணத்தில் தான் கடா ரத்தை வென்று புலிக்கொடி நாட்டிய ராஜேந்திர சோழனின் சாதனை யைப் பார்க்க வேண்டும். போக்குவரத்து சாதனங்கள் மிகவும் அரிதான காலத்தில் அலை கடலை எதிர்த்து அதனை தன் ஆளுகைக்கு கொண்டு வந்து முன்னேறி பண்பாட்டைப் பரப்பும் ஆற்றல் தமிழனுக்கு இருந் திருக்கின்றது என்பதை அறிந்து பெருமை கொள்ளலாம். -
கடாரத்தைக் கைப்பற்றியது மட்டுமல்ல மலேசிய நாட்டிற்கு முதன் முதலாக நாகரிகத்தை அளித்ததே இந்தியாவின் தென்னாட் டுத் தமிழர்களே என்று கூறியுள்ளார் மேலை நாட்ட அறிஞரான ரோவன்ட் புரொடெல் என்பவர்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் தரை வழிப் பாதைகள் இருந்த மையால் மலேசியாவில் புத்த மதம் பரவியிருந்தது. இக்கால கட்டத் தில் பூரீவிஜயப் பேரரசின் ஆளுகைக்கு இப்பகுதி வந்தது. இந்த ஆட்சி
а 10

மாத்தளை முதல் மலேசியா வரை. ם
அரேபிய வர்த்தகர்களின் வருகையாலும் இஸ்லாம் மதத்தின் பரவ லாலும் சிதறத் தொடங்கியது. யுத்தங்கள் நடந்தன. மத மாற்றங்கள் நிகழ்ந்தன. ஜாவா மகா பாஜித் பேரரசு நிறுவப்பட்டது.
15ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தே பரமேஸ்வரா என்ற பட் டப் பெயருடன் தெமாசேத்' என்று அழைக்கப்பட்ட ஜாவானிய இள வரசர் சிங்கப்பூர்த் தீவை ஆண்டு வந்த பொழுது மலாக்கா அரசு உரு வாகியது. பிறகு தாய்கள் (Thais Siamese) அந்தத் தீவைக் கைப் பற்றிக் கொண்டு ஆண்டபோது தாயின் ஆளுநரைக் கொன்று விட்டு பரமேஸ்வரா அதனுடைய ஆட்சியாளரானார். தாய்லாந்தினர் அதற்குப் பழி வாங்கப் புறப்பட்டபோது பரமேஸ்வரா மலாக்காவுக்குத் தப்பி ஓடவேண்டியிருந்தது.
அப்பொழுது இஸ்லாம் செல்வாக்குப் பெறத் தொடங்கியது. அந் தக் காலத்திலே மலாக்கா ஒரளவு சுதந்திரம் இல்லாமல் இருந்தாலும் வடக்கு மலேசியாவில் உள்ள கெடா மாநிலத்தோடு ராஜ விசுவாசத் தோடு இருக்கக் கடமைப்பட்டிருக்கவும் அது சுமாத்திரா மாநிலமாகிய பஸைக்குக் கடமைப்பட்டிருந்தது. பரமேஸ்வரா உலக ஞானம் உடை யவர் என்பதால் சுமத்திராவின் முஸ்லீம் இளவரசியைத் திருமணம் செய்து மதம் மாறினார். மெஹத் இஸ்கந்தர் ஷா என்னும் பட்டப் பெயரைச் சூட்டிக் கொண்டார்.
பரமேஸ்வராவின் அரசு குறுகிய காலமே இருந்தது. அவரின் வாரிசு தம்மை மகாராசர் என்று அழைத்துக் கொண்டு பூரீ விஜய பெளத்த அரசர்களின் பட்டப்பெயரைத் திரும்பச் சூட்டிக் கொண்டு பழைய இந்து முறைப்படி ஆட்சி அமைத்தார். அந்த ஆட்சியும் சிறிது காலமே இருந்தது.
பிறகு மலாக்கா வெற்றி நடை போட்டது. மலேசியா முழுமையும் தன்னாட்சியின் கீழ் கொண்டு வந்தது. இக்காலக் கட்டம் மலாக்காவின் எழுச்சிக் காலம். துறைமுகத்தின் ஒரு பகுதி சீனர்களுக்கும், ஒரு பகுதி இந்தியர்களுக்கும். மற்றொரு பகுதி ஜாவாக்காரர்களுக்கும் இருந்தது. இக்கால கட்டத்தில் மலாக்கா துறைமுகம் கடற் பயணிகளிடையே உலகப் புகழ் பெற்றிருந்தது.
1498 ஆண்டு வாஸ்கொடகாமா இந்தியாவிற்கு வந்தார். 16 ஆண்டுகள் கழித்து போர்த்துக்கேயர்கள் மலாக்கா துறைமுகத்தில் நுழைய முற்பட்டனர். ஆனால் மலாக்கா ஆட்சியாளர்களால் அது முறி
21 DI

Page 13
D மாத்தளை சோமு
யடிக்கப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய படை பலத்தோடு வந்து போர்த்துக்கேயர் மலாக்காவைக் கைப்பற்றி னார்கள்.
போர்த்துகேயரின் வருகைக்குப் பிறகு மலாக்கா துறைமுகம் சோபை இழந்தது. 17ம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் டச்சுக்காரர்கள் மலாக்காவைக் கைப்பற்றினார்கள். அந்நியரின் வருகையால் மலாக்கா நகரமே வலுவிழந்தது. ஆயினும் கப்பல் துறைமுகம் என்ற பெயரை மலாக்கா இழக்கவில்லை. 1786ம் ஆண்டு பினாங்கு தீவை ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பனி வாடகைக்கு எடுத்து புதுத் துறைமுகத்தைக் கட்டியது. பினாங்கு துறைமுக வசதியால் மலாக்கா தனது கவர்ச்சியை இழந்தது.
1824) ஆண்டு மலாக்கவை பிரிட்டனிடம் கொடுத்தது டச்சு நிர் வாகம். அப்பொழுது சிங்கப்பூர், மலாக்கா, பினாங்கு என மூன்று அர சர்களே இருந்தன. மற்றைய பகுதிகளில் சுல்தான்கள் ஆட்சி புரிந்த னர். அவர்களுக்கும் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கும் சண்டை நடந்து கொண்டே இருந்தது. இந்தியாவில் நவாபுகளிடமும் மகாராஜாக்களிட மும் கையாண்ட தந்திரத்தை இங்கும் கையாண்டு பிரித்தாளும் கொள் கையின் மூலம் எல்லா மலேசிய மாநிலங்களையும் தமக்குக் கீழே கொண்டு வந்தனர்.
இரண்டாம் உலக யுத்தத்தின் போது மலேசியா ஜப்பானியரின் ஆட்சியில் இருந்திருக்கிறது. 1945ம் ஆண்டு ஜப்பான் மலேசியாவை பிரிட்டனிடம் ஒப்படைத்தது. அதனை மலேசிய மக்கள் விரும்பி னார்கள். அதற்குக் காரணம் ஜப்பானியரின் கொடுங்கோல் ஆட்சி. ஜப்பானிய ராணுவத்தினரால் எண்ணற்ற சீனர்கள் படுகொலை செய் யப் பட்டார்கள். தாய்லாந்துக்கும் பர்மாவுக்கும் இடையே அமைக்க, முற்பட்ட ஜப்பானின் ரயில் பாதையால் (மரண ரயில்வே என்பர்) ஆயிரக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் (குறிப்பாகத் தமிழர்கள்) இறந்திருக்கிறார்கள். (ஒரு லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் என்று ஒரு தகவல் சொல்லப்படுகிறது. அதனை உறுதி செய்ய முடியவில்லை) சீனர்களும் இறந்திருக்கிறார்கள். ஆனால் தமிழர்கள் இந்த மரண ரயில்வே சம்பவத்தில் உயிர்த் தியாகம் செய்தது இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது. ஆங்காங்கே சிதறிக் கிடக்கிற இச்சம்பவங்களை ஆய்வு செய்து நூல்களும் எழுதப்படவில்லை.
O 22

மாத்தளை முதல் மலேசியா வரை. D
இது மலேசியாவில் மட்டுமல்ல வேறு பல நாடுகளிலும் நடந் துள்ளது. கடல் கடந்த தமிழர்கள் புகுந்த நாட்டிற்காக உழைப்பையும் உயிர்த் தியாகம் செய்தது பர்மா, மொரீசியஸ், பிஜி, இலங்கை போன்ற நாடுகளில் புரிந்து கொள்ளப்படவில்லை. இவற்றை வெளிப்படுத்தா தது நமது குறையும் கூட. தமிழர்கள் யார்? ஏன் கடல் கடந்தார்கள்? அதற்கு மூல காரணம் என்ன? புகுந்த நாட்டில் அவ்ர்கள் உழைப்பு. உயிர்க்கொடை என்பனவற்றைப் பட்டியலிட்டுக் காட்டியிருக்கின் றோமா? அவ்வாறு காட்டியிருந்தால் கடல் கடந்த தமிழரின் மூதா தையர் உழைப்பைக் குறைந்த விலைக்கும் பெற்றுக் கொண்டு விட்டு எம்மை வெறும் குடியேறிகள், கூலிகள் என்று சொல்வார்களா? இலங் கையில் உழைத்த தோட்டத்துத் தமிழர்களைத் தோட்டக்காட்டான் - கள்ளத்தோணி - வடக்கத்தியான் என்று இகழ்வாகச் சொன்னார்கள். இதே போன்று மலேசியாவில் ரப்பர், கொக்கோ தோட்டங்களில் வேலை செய்த தமிழர்களை கிலிங் என்று கேலியாக அழைத்தார்கள். இந்த கிலிங் என்று வார்த்தையின் பின்னால் ஒரு சரித்திரமே இருப்பதை அவர்கள் அறியவில்லை.
4
நாம் இந்த நாட்டுக்கு (மலேசியா) சாதாரணத் தொழிலாளர் களாக மட்டும் வரவில்லை. வர்த்தகர்களாகவும், அறிஞர்களாகவும், தொழில் நுட்பர்களாகவும், வைத்தியர்களாகவும், கலை பண்பாட்டு சின்னங்களை கற்றுக் கொடுப்பவர்களாகவும் வந்தோம். இப்படிக் கூறியிருப்பவர் மலேசிய இந்திய சமூகத்தின் மூத்த தலைவரான டான் பூரீ எஸ்.ஓ.கே. உனபதுல்லா அவர்கள். அவர் அப்படிச் சொன் னதற்குக் காரணம் இருக்கின்றது. தமிழர்களைப் பற்றிப் பொதுவாக சீனர்களும் மலாய்க்காரர்களும் படிப்பறிவில்லாத தொழிலாளிகளாக பிழைக்க மலேசிய நாட்டிற்கு வந்தவர்கள் என்று நினைத்துக் கொண் டிருக்கிறார்கள்.
இது தவறான கருத்து. மலேசியத் தமிழர்களுக்கு ஒரு வரலாறு உண்டு. அதனை மற்ற இனத்தவர்களும் அறியவேண்டும். அவ்வாறு அறிந்தால் தேச ஒற்றுமை உறுதியாகும். இதனை அறிந்துதான் மலே சியப் பிரதமர் மஹாதீர் முகம்மது மலாக்காவில் ஒரு மியூசியத்தை திறந்து வைத்த போது. பழைய சரித்தரத்தை நாம் தெரிந்து கொள்ள
23 D

Page 14
மாத்தளை சோமு
வேண்டும். அது முக்கியமானது. என்று கூறியிருக்கிறார். அவர் கூறி யது போல் மலேசியாவில் மலாய்காரரும் சீனரும் பழைய சரித்திரத்தை அறிந்தால் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்களின் மலேசிய வரலாறு தெரியவரும்.
ஆறாம் நூற்றாண்டில் கலிங்கர்களின் ஆட்சி மலேசிய தீபகற் பத்தில் பரவியிருந்தது. ஜாவா தீவு வரை அதன் ஆதிக்கம் இருந்தது. கலிங்கர்களின் வருகைக்குப் பிறகே ’கிலிங்' என்ற வார்த்தை வந்தது. கலிங்கரை அழைக்கப் பயன்பட்ட சொல்லே பிற்காலத்தில் இழிவு படுத்தும் நோக்கத்தில் உருமாறியது. இந்தக் 'கலிங்' என்ற சொல்லே மலேசியாவில் தமிழர்களை இழிவுபடுத்தும் சொல்லாக ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. மலாய்காரர்கள் வேண்டாத கேவலமான அந்நியன் என்பதாகவே 'கலிங்' என்ற சொல்லுக்கு அர்த்தம் கொண்டிருக்கிறார் கள். இன்று அந்த சொல்லின் உபயோகமே மறைந்துபோய் விட்டது.
மலாய்மொழியில் தமிழரை நினைவுபடுத்தும் வேறு பல சொற்கள் இருக்கின்றன. சோழர்களின் ஆதிக்கம் இருந்தபோது குலோத்துங்க சோழன் என்ற பெயரிலிருந்து துங்கன்' என்ற எழுத்துகள் மலாய் மொழிக்கு துங்கு என்று போயிருக்கிறது. துங்கு என்றால் இளவரசன் அல்லது மன்னன் என்று பொருள். சோழன் என்ற சொல் சூலான் என்று மாறியிருக்கிறது. இதனை உறுதிபடுத்த கோலாலம்பூரில் உள்ள ஒரு தெருவின் பெயரைக் கவனிக்கலாம். கோலாலம்பூரில் முக்கியமான ஒரு தெருவின் பெயர். ஜாலான் ராஜ சூலான் (ஜாலான் - வீதி). மேலும் சுல்தான்களின் பேரரசின் முடிசூட்டு விழாவில் தமிழ்ப் பாரம்பரிய சடங் குகள் இன்றும் இருக்கின்றன. காலம் உருண்டோடியதில் மலேசிய மண்ணில் சோழர் காலத்து தமிழர் பண்பாடு வெவ்வேறு வடிவத்தில் தங்கி விட்டது.
தமிழர்கள் ஒரு தலைசிறந்த சமுதாயமாகவே இந்த மண்டலத்து நாடுகளான மலேசியா, இந்தோனீசியா, வியட்நாம், கம்போடியா, லாவோஸ் போன்ற நாடுகளுக்கு வந்திருக்கிறார்கள். சோழன் கப்பல் ஒட்டிக் கடாரம் வந்தது ஒரு நாகரீக இனத்தின் அடையாளமே சோழ னுக்குப் பிறகு ஆங்கிலேயர் காலத்தில் தமிழர்கள் வந்தது இந்த நாடு களின் வளங்களைத் திருடிக் கொண்டு போக அல்ல. மாறாக உழைப் பைக் கொடுத்துத் தங்களின் கலை பண்பாடு காக்கவும் ரசிக்கவும் முற் பட்டார்கள். அச்சமயம் அவர்களின் அடையாளங்கள் வாழும் மண்
24

மாத்தளை முதல் மலேசியா வரை. D
ணில் வீழ்ந்து மற்றவர்களின் முகாமில் சென்று கலந்தன. இவை யெல்லாம் நமக்கு மட்டுமே தெரிந்த சரித்திரங்கள். இவைகளை மற்ற வர்களுக்கு எடுத்துக் காட்டவில்லை. இதனால் சரித்திரம் இல்லாத இனமாகக் குடியேறிய நாடுகளில் தமிழன் மற்ற இனத்தால் பார்க்கப் படுகின்றான்.
1957ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி மலேசியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. தீபகற்பத்தின் சுல்தான்கள் இணைந்த மலே சியக் கூட்டாட்சி உருவாகியது. அந்நாட்டின் முதல் பிரதமராக பதவி யேற்றவர் மலேசிய நாட்டின் தந்தை என்று அழைக்கப்படும் அமரர் துங்கு அப்துல் ரகுமான். இவர் உண்மையாகவே மன்னர் பரம்பரை யைச் சேர்ந்தவர். சோழன் ஆட்சி நடத்திய இன்றைய கெடா (கடாரம்) மாநில சுல்தானின் இளவரசர் அவர். இவர் சுதந்திர மலேசியாவில் வாழும் மூன்று இனத்தவர்களின் ஒத்துழைப்போடு புதிய ஆட்சியை உருவாக்கினார். முதலாவது அமைச்சரவையில் மலேசிய சீன சங்கத் தலைவர் தன்சியூசின்னை நிதி மந்திரியாகவும், மலேசிய இந்தியன் க்ாங்கிரஸ் தலைவரான விதி. சம்பந்தனைத் தபால் தந்தித் தொடர்பு அமைச்சராகவும் நியமித்தார் அவர்.
மலேசியா கிழக்குத் திசையில் உள்ள வளங்கள் நிறைந்த நாடு. வெப்ப மண்டல சொர்க்கம் என்ற போதும் அது வேகமாக முன்னேறி வருகின்றது. சீனர்கள் தமிழர்கள் ஆகிய மக்களின் உழைப்பு இதில் பெரும் பங்கு வகிக்கின்றது. மூவினங்களும் ஒற்றுமையாகத்தான் எத்தனை எத்தனை சவால்கள்?
சீன சார்பான கம்யுனிஸ்ட் கட்சிக்காரர்களின் தலை மறைவு கிளர்ச்சிப் போராட்டம். பின்னர் சீனர்களுக்கு எதிரான இனக்கலவரம். மறைந்த இந்தோனீசிய அதிபர் சுகர்னோவின் அகண்ட இந்தோனி சியக் கனவு என்பன மலேசியாவைச் சற்றுப் பின்னடைய வைத்தன. ஆனால் இன்று அவை பழங்கதை. பல மூன்றாவது உலக நாடுகள் வியக்கும் வகையில் முன்னேறி வருகின்ற மலேசியா வெள்ளி, தகரம், பெற்றோல் நிறைந்த நாடு. ரப்பருக்குப் பெயர் பெற்ற பூமி இன்று செம்பனைக்குப் பெயராகியிருக்கும் நாடு மலேசியா, இவையெல்லாம் ஒரு பக்கம். மறுபக்கம் குமுறல்கள் ஏமாற்றங்கள். போராட்டங்கள் நிறைந்தவை என்றால் நம்ப முடியுமா?
நம்பித்தான் ஆக வேண்டும்.
25

Page 15
மாத்தளை சோமு
பெரும்பான்மை மலாய்காரர்கள் முன்னேற்றத்திற்காக வகுக்கப் பட்ட சட்டங்களினால் சீனர்கள், தமிழர்கள் பல பிரச்சனையை எதிர் நோக்குகின்றார்கள் என்பது தான் உண்மை. பூமி புத்ரா. இது இப் போது மலாய் சொல். மூலவேர் வடமொழியில் இருந்து வந்திருக் கிறது. அதன் அர்த்தம் மண்ணின் மைந்தர்கள். அங்கு மண்ணின் மைந்தர்கள் மலாய்காரர்கள் மட்டுமே. எனவே அவர்களுக்குக் கல்வி, தொழில், வர்த்தகம் என்பனவற்றில் முன்னுரிமை உண்டு.
உதாரணமாக ஒரு வீடு வாங்கும்போது மலாய்க்காரர் மற்ற இனத் தைவிட 10 வீதம் குறைவான பணத்தையே செலுத்த வேண்டும். அவர் கள் வியாபாரம் செய்ய குறைந்த வட்டியில் வங்கிக் கடன். இத்தனை சலுகைகள் இருந்தும் மலாய்க்காரர்கள் சீனர்களோடும், இந்தியர்களோ டும் போட்டி போட்டாக வேண்டும். சீனர்களுக்கும் தமிழர்களுக்கும் எந்த சலுகையும் இல்லை. கல்வியில் கூட மேற்கல்வி மலாய் மொழி யில் படிக்க வேண்டிய கட்டாயம். அப்படியும் சீனர்கள். தமிழர்கள் . முன்னேறி வருகின்றார்கள். சீனர்கள் மலேசியாவில் வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கின்றார்கள். இதனை அவர்கள் மந்திரத்தில் சாதிக்க வில்லை. கடுமையான உழைப்பு: தமிழர்களும் அப்படியே. ரப்பர் தோட்டங்களில் உழைத்த தமிழர்கள் இன்று செம்பனைத் தோட்டங்க ளில் உழைக்கின்றார்கள். இந்த உழைப்புத்தான் தமிழரை, சீன்ரை மண்ணின் திட்டம் சோர்வடையச் செய்யவில்லை.
மலேசியா உழைப்பவருக்கு உவகையை சொந்தமாக்கும் நாடு. தென்கிழக்காசியாவில் அமைதியோடு ஜப்பானுக்கு அடுத்ததாக முன் னேறிவரும் நாடு. செம்பனை, ரப்பர் என மண்ணுக்கு வெளியே கிடைக்கிறதோடு மண்ணுக்குக் கீழே வெள்ளி, தகரம், ஈயம், பெட் ரோல் எனப் பல செல்வங்கள் கிடைக்கின்றன. இவை மலேசியா வின் ரிங்கிற் நாணய மதிப்பை உயர்த்தியிருக்கின்றது.
ஈயச் சுரங்களிலும், ரப்பர், செம்பனை தோட்டங்களிலும் பல் லாயிரக்கணக்கான தமிழர்கள் உழைக்கின்றார்கள். இந்த உழைப்பை பல மலாய்க்காரர்கள் உணர்ந்திருக்கின்றார்கள். ஆனாலும் இந்த உணர்வு பரவலாய் இல்லை. இதற்கு மலாய்க்காரர்களை மாத்திரம் குறை சொல் லக் கூடாது.
26

மாத்தளை முதல் மலேசியா வரை. 0
இதனை தமிழர்கள் மலாய்க்காரர்களுக்கு உணர வைக்கவில்லை. இக்குறை மலேசியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் தமிழகத்திலும் இருக்கின்றது.
வெறுமனே உழைப்பது மட்டும் பெரிதல்ல. உழைப்பின் பல னைப் பெறுவதோடு அதனை அடையாளப்படுத்தவேண்டும். அடை யாளம் காட்டப்படாததால்தான் பல தலைமுறைகளாக வாழ்ந்த மக்களை நாடற்றவராக்கினார்கள். இது இலங்கையில் நடந்தது. பத்து லட்சம் தமிழர்களை - தோட்டங்களில் வேலை செய்தவர்களை சுதந்திர இலங் கையில் நாடற்றவராக்கினார்கள். இதுபோன்ற சம்பவம் மலேசியா வில் நடக்காவிட்டாலும் இந்தியக் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள். இன்றும் இருக்கின்றார்கள். அவர்கள் அங்கு இருந்து உழைக்கலாம். ஆனால் குடும்பத்தை அங்கு அழைக்க முடியாது. மலேசிய அரசு குடி யுரிமை புதிய சந்தர்ப்பம் கொடுத்தபோது கண்களை மூடிக் கொண்டு நெஞ்சுக்குள் தமிழ் நாட்டை நினைத்துக் கொண்டே இருந்தவர்கள் தான் இந்தச் சிவப்பு அட்டைக்காரர்கள் அதாவது இந்தியக் கடவுச் சீட்டுக்காரர்கள்.
5
விமானம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இறங்கிய போது இரவு ஒன்பதுக்கும் மேல் இருக்கும். குடிவரவு 'கடன் களை முடித்துக் கொண்டு விமான நிலையத்தின் உள்ளே வந்து பொதிகளைத் தேடி யெடுத்து தள்ளுவண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தபோது ஒரு கை தோளைத் தொடவே திரும்பினேன்.
மெல்லிய புன்னகைக் கோடுகளுடன் நீங்கள் தானே சோமு? V என்றார் ஒருவர்.
எனக்கு ஆச்சரியம்."யார் இவர்? என் பெயர் இவருக்கு எப்படித் தெரியும்?.”
ஆம்' என்று சொல்லிவிட்டு, அவரையே பார்த்தேன் அப் போது தான் அவர் சொன்னார். “நான் முருகையா. ஈப்போ முனி யாண்டியின் அண்ணன்.”
“ஒ. நண்பர் முனியாண்டியின் சகோதரனா?”
27

Page 16
0 மாத்தளை சோமு
அவர் கையைக் குலுக்கி நட்பைச் சொன்னேன்.
“தம்பி! வெளியே இருக்கிறார் நான் பொலிசில் வேலை செய்வ தால் இங்கு வர முடிந்தது.” என்றவர் ஒரு தள்ளுவண்டியில் எனது சூட்கேஸ்களை எடுத்து வைத்தார். பிறகு அவர் அந்த தள்ளுவண்டி யைத் தள்ளிக் கொண்டு போக, நான் இன்னொரு தள்ளுவண்டியைத் தள்ளிக் கொண்டு போனேன். அதிலும் சில பொதிகள். சுங்க பரிசோத னைக்கு நீண்ட வரிசை இருந்தது. ஆனால் நண்பர் முருகையா எங் களை சோதனை இல்லாமல் அழைத்துப் போனார். சோதனை செய்ய வர்த்தக நோக்குடையவை எதுவும் இல்லை. என் பொதி நிறையப் புத்தகங்கள் தான் இருந்தன. மலேசியாவில் பொருட்களின் விலை குறைவு என்பதால் சிட்னியில் பொருட்கள் எதுவும் வாங்கவே யில்லை.
விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தோம். நண்பர் முனி யாண்டி ஓடிவந்து என்னைக் கட்டித் தழுவினார். கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். முனியாண்டியை கலாநிதி முனியாண்டியாகச் சந்தித்த தில் என் மனம் நிறைந்தது. நட்பு மனிதர்களுக்கு மாத்திரமே கிடைத்த அற்புத உணர்வு முகம் தெரியாமல் உருவம் தெரியாமல் உள்ளத் தின் எண்ணங்களை எழுத்தில் பார்த்து நட்புக் கொண்ட மனிதர்கள். முகம் தெரிந்து உள்ளம் அறிந்து நட்பு கொண்ட மனிதர்கள். சுயநலத் திற்கு மாத்திரம் நட்புக் கொள்ளும் மனிதர்கள். இம்மூன்று வகைக்கு மத்தியில் முனியாண்டியோடு கூடிய நட்பு முகம் தெரிந்து உள்ளம் அறிந்தது.
விமான நிலையத்திற்கு உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத் தலைவர் இர.ந.வீரப்பன் அவர்களும் வந்திருந்தார்.
அன்றிரவு முருகையாவின் வீட்டில் தங்கி, மறுநாள் காலை 'கிள்ளாங் என்ற ஊரில் இருக்கும் இரந. வீரப்பன் வீட்டிற்குப் போனோம். அவரின் வீடு இருக்கும் கிள்ளாங் பெரிய நகரம். தமிழர்கள் அதிக மாக வாழும் பகுதி.
தலைவர் வீரப்பன் தன் மனைவி மகன், மற்றும் மருமகளை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் ஓர் ஓய்வு பெற்ற தமி ழாசிரியர். அவரை நான்காவது முறையாகச் சந்திக்கின்றேன். முதல் சந்திப்பு. தமிழகத்தின் சேலத்தில்.
28

மாத்தளை முதல் மலேசியா வரை.
1984ம் வருடம் தமிழ்நாடு சேலத்தில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு நடப்பதாக தினத்தந்தி மூலம் அறிந்தேன். அப்போது திருச்சி யில் இருந்தேன். உடனே நானும் என்னோடு இலங்கையில் இருந்து வந்த மாத்தளை நகரைச் சேர்ந்த அம்பாள் கபே கணேசன் அவர்க ளும் சேலம் புறப்ப்ட்டோம்.
சேலம் போய் இறங்கியதுமே ஒரு ஆட்டோ பிடித்து மாநாடு நடக்கும் இடத்திற்குப் போனோம். அங்கு ஆங்காங்கே வண்ணத் துணிகள் காற்றில் அசைந்து எம்மை வரவேற்றன. மண்டப வாசலில் நின்று பார்த்தேன். ஒருவர் பெரிய மீசையோடு நின்று கொண்டிருந் தார். நான் இலங்கையில் இருந்து வருகின்றேன். மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். யாரைப் பார்க்க வேண்டும்?' என்று அவரிடம் கேட்டேன். அவர் நீங்கள் தலைவரைப் பாருங்கள். தலைவர் ஆறாம் இலக்க அறையில் இருக்கிறார். என்றார்.
ஆறாம் இலக்க அறையைப் பார்த்தேன். கதவு திறந்தே இருந் தது. ஒருத்தர் உள்ளே உட்கார்ந்திருந்தார். அனேகமாக அவர்தான் தலைவராக இருக்க வேண்டும். அவர் பார்வை கடுமையாக இருந்தது.
“தலைவர்” என்று இழுத்தேன். “நான் தான் தலைவர்” என்ன வேண்டும்?
“என் பெயர் மாத்தளை சோமு. ஒரு எழுத்தாளன். உங்கள் மாநாட்டில் பிரதிநிதியாகக் கலந்துகொள்ள வேண்டும்.”
“நீங்கள் முன்னர் பதிந்திருக்கிறீர்களா?” “இல்லை.”
ஏன் என்று கேட்காமல் பதியாவிட்டால் இடம் இல்லை என்று சொல்லி விட்டார்.
நான் திரும்பவும் சொன்னேன். “நான் ஒரு எழுத்தாளன். மாத் தளையைச் சேர்ந்தவன்.”
ஒரு விநாடி யோசித்தார். பிறகு என் பெயர் முகவரியைப் பதிந்து விட்டு மாநாட்டுப் பிரதிநிதி என்று ஒரு அட்டையை எனக்கும் என் னோடு வந்தவருக்கும் கொடுத்தார். அதனை நன்றியுடன் வாங்கியதும் அவர் சொன்ன வார்த்தை இதுதான்,
29

Page 17
D மாத்தளை சோமு
“நானும் மலையகத்தைச் சேர்ந்தவன் தான். இப்போது இருப் பது மலேசிய மலையகத்தில்.”
ஆர்வத்துடன் அவரைப் பார்த்தேன். அவர் விபரமாக பேசி னார். “ஆம் நான் பிறந்தது இலங்கை நுவரெலியாவில். பிறகு மலே சியா போய் அங்கேயே இருந்து விட்டோம். இப்போது மலேசியக் குடிமகன் நான்.”
அவரின் அந்தப் பதில் அவர் மீது எனக்கு இருந்த மதிப்பை மேலும் உயர்த்தியது. கடல் கடந்து குடியேறிய போதும் பிறந்த பூமியை அதிலும் நமது தந்தையர் பூமியை மறக்கக் கூடாது. இதனைத்தான் மகாகவி பாரதி தந்தையர் நாடெனும் போதினிலே என்று பாடுகின்றார். வீரப்பனுக்கு மலேசியா இன்று தாய் பூமி என்றால் தந்தையர் பூமி இலங்கை தான். இது அவருக்கு மட்டுமல்ல புலம் பெயர்ந்த தமிழர் களுக்கும் பொருந்தும் பூமிப்பந்தின் எல்லைக்கோடுகளின் எல்லை களையும் கடந்து தமிழன் இன்று உலகெங்கும் குடியேறியிருக்கின் றான். தேமதுரத் தமிழோசையை எல்லாக் கண்டங்களிலும் முழங்க விட்டிருக்கின்றான் தமிழன். அவன் தாயக பூமி இன்று புலம் பெயர்ந்த நாடுதான். தந்தையர் பூமி அவனின் மூதாதையர் நாடு. இன்றைய புதுத் தாயக செல்வச் செழிப்பில் தந்தையர் பூமியை மறந் தால் தாய்மொழியும் தாயகப் பண்பாடும் மறக்கும். இவ்விரண்டும் மறைந்தபின் என்ன தான் மீதமாய் இருக்கப் போகிறது செல்வத்தைத் தவிர?
நான் அந்த மாநாட்டில் கலந்து கொண்டேன். அங்கு தி.மு.க தலை வர் அன்பழகன், குமரி அனந்தன், தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகத் தலைவர் உமா மகேஸ்வரன் ஆகியோர் உரையாற்றினார்கள். நானும் பேசினேன்.
1987ல் வீரப்பன் சிட்னி வந்த போது இரண்டாவது தடவை யாகச் சந்தித்தேன். பிறகு 1992இல் சிட்னியில் ஐந்தாவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு நடந்தபோது அவரைச் சந்தித்தேன். அவர் பெரிய செல்வந்தர் அல்ல. ஆனால் இடைவிடாத முயற்சியினால் இன்று உலகின் பல்வேறு நாடுகளுக்கும் போய் அங்குள்ள தமிழர்க ளைச் சந்தித்திருக்கிறார். அந்த அனுபவத்தை வைத்து உலகத் தமிழர் என்ற நூலை அவர் எழுதியிருக்கிறார். அது தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பரிசு பெற்றது.
O 30,

மாத்தளை முதல் மலேசியா வரை. ta
உலகில் பல நாடுகளில் வாழ்கிற தமிழ் அறிஞர்களோடு தமிழ் ஆர்வலர்களோடு அவருக்கு நல்லுறவு உண்டு.
அதனைச் சாதித்தது மிக இலகுவாக. வெளிநாட்டுப் பயணம் போகிற போது சந்திக்கிற தமிழோடு சம்பந்தப்பட்டவர்களின் முகவ ரிக்கு அடிக்கடி கடிதம் எழுதுவார். அடிமேல் அடிவைத்து என்பது போல் கடிதம் மேல் கடிதம் எழுதுவார். அது அவரின் ஆயுதம். அது பலவற்றைச் சாதித்திருக்கிறது. போட்ட கடிதத்திற்கே பதில் எழுதாத வர்கள் மத்தியில் கடிதம் எழுதியே உயர்ந்திருக்கிறார் அவர் (கடை சியாக அவர் எழுதிய கடிதத்திற்கு பதில் எழுதத் தாமதமான போது அவர் இந்தியாவுக்குப் பயணம் போன போது பாண்டிச்சேரியில் அமரரானார்)
மலேசியாவில் வீரப்பன் வீட்டில் தங்கியது நல்ல அனுபவம். தான் வீட்டில் சேர்த்து வைத்திருக்கும் தமிழ் நூல்களைக் காட்டினார் அவர். அவற்றில் பல அரிதானவை. அவற்றைப் பார்த்ததில் எனக்கு ஆனந்த அதிர்ச்சியே ஏற்பட்டு விட்டது. அதிலிருந்து மீள்வதற்கு முன் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொடுத்தார். பார்த்தேன் இன்ப அதிர்ச்சி. அது நான் தேடிக் கொண்டிருந்த புத்தகம். உலகமே என் கையில் இருந்ததைப் போன்ற உணர்வு எனக்கு.
6
அந்தப் புத்தகம், 'ஏ.கே செட்டியார் எழுதிய 'உலகம் சுற்றிய தமிழன். விஞ்ஞான வளர்ச்சியடையாத காலத்தில் செட்டியார் உல கத்தைச் சுற்றி வந்த முதல் தமிழராவார். ஐந்து கண்டங்களுக்குப் போய் வந்து பயணக் கதை எழுதியிருக்கிறார். இந்தியாவில் இலங்கையில் தேடிக் கிடைக்காத நூல் அது. அற்புதமான நூல். இதுபோன்ற நூல் களை வீரப்பனார் அந்தச் சிறிய வீட்டில் வைத்திருக்கிறார். நம்மில் பலர் பெரிய வீடு கட்டியிருப்பார்கள். ஆனால் நூலகம் அந்த வீட்டில் இருக்காது. வெள்ளைக்காரர்கள் வீடு கட்டும் போது ஸ்டடி ரூம் தனி யாக வைத்துக் கொள்வார்கள். நூலகம் தனியாக இருக்கும் நூலகம் இல்லா வீடுகள் அபூர்வம். பருப்பு இல்லாமல் கல்யாணமா? கோயில் இல்லா ஊரில் குடியிருக்கலாமா? என்று படித்த நம்மவர்கள் நூலகம் இல்லா வீடு பாழகம்' என்பதை மறந்து போனார்கள்.

Page 18
D மாத்தளை சோமு
கிள்ளாங்' கோலாலம்பூருக்குப் பக்கத்தில் இருக்கும் பெரிய நகரம். இந்தியர்கள் குறிப்பாகத் தமிழர்கள் அதிகமாக வாழும் நகரம்.
ஒரு நாள் கிள்ளாங் நகரின் வீதிகளில் நானும் வீரப்பனும் நடந் தோம். தமிழகத்து நகரொன்றில் நடப்பது போன்ற தமிழ் மணம்! தமி ழர்கள் நடத்தும் துணிக்கடைகள், நகைக் கடைகள், பலசரக்கு கடை கள், பாத்திரக்கடைகள் என பல வர்த்தக நிலையங்கள் வீதியின் இரு பக்கத்திலும் இருந்தன. தமிழில் பெயர் எழுதி சீனர்கள் கூட நகைக் கடை வைத்திருந்தார்கள். சில கடைகளின் முன்னால் நடந்தபோது ஊது பத்தியின் மணம் மூக்கைத் தடவியது. ஒரு பத்திரிகைக் கடைக் குப் போய் மலேசியத் தமிழ் நாளிதழ்களான மலேசிய நண்பன், தமிழ் நேசன் ஆகிய இதழ்களை வாங்கினேன். எந்த நாட்டுக்குப் போனா லும் அந்த நாட்டுப் பத்திரிகைகளை வாங்குவது என் வழக்கம்.
தமிழகத்திற்கு அப்பால் மலேசியாவில் தமிழர்கள் வாழ்கிறார் கள். இவர்களை மூவகையாக பார்க்கலாம். ஒன்று. தமிழ் நாட்டிலிருந்து குடியேறிய தமிழர்கள். இரண்டு இலங்கையிலிருந்து குடியேறிய தமிழர்கள். மூன்று தமிழகம் திரும்பக் காத்திருக்கிற தமிழர்கள். இவர்களில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் அதிகம் இருப்பதால் தமிழக சாயல் எல்லா இடங்களிலும் இருக்கின்றது. இவற்றையும் மீறி ما)$aل சிய நாட்டுக்கு உரிய தனித்துவம் ஆங்காங்கே தெரிகின்றது. இன்று தமிழக சஞ்சிகைகளோடு போட்டியிடும் மலேசிய வார, மாத இதழ் கள் நிறைய வருகின்றன.
மலேசியாவில் தற்போது வானம்பாடி, நாயகன், குயில், அரும்பு, இதயம், நயனம், பயனீட்டாளர் குரல், சக்தி, செம்பருத்தி எனப் பல இதழ்கள் வருகின்றன. இவற்றில் பல வெற்றிகரமாகவே நடந்து வரு கின்றன. ஒரு எழுத்தாளரின் தகவல்படி இன்றும் மலேசிய நாளிதழ் ஞாயிறு பதிப்புகளிலும் வார மாத இதழ்களிலும் 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மாதந்தோறும் பிரசுரமாகின்றன. மாதம் ஒரு புத்தகமா வது அச்சு உருவில் வருகின்றது. மலேசியா கீழைத்தேய நாடுகளில் முன்னேறி வரும் நாடு என்பதால் பல கலை, இலக்கிய தமிழ் சம்பந்த மான முயற்சிகள். நிகழ்வுகள் இங்கு சாத்தியமாகின்றன. அதே நேரத் தில் மலேசியத் தமிழரின் வாங்கும் சக்தியும் அந்நாட்டு ரிங்கிற்றின் பெறுமதி தமிழகத்தில் பல மடங்காக இருப்பதால் கலை என்ற பெய ரில் சினிமாக்காரர்களின் படையெடுப்பும் அதிகமாக இருக்கின்றன.
O 32

மாத்தளை முதல் மலேசியா வரை. D
கோடம்பாக்கத்து நிழல் வியாபாரிகளின் சினிமா ஜாலங்கள் பெரிய அளவில் டிக்கெட் போட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை முன்னெடுக்க பல அமைப்புகள் இருக்கின்றன. இவற்றிலெல்லாம் பணம் பன்னும் காரியத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.
அடுத்த நாள் கோலாலம்பூரில் மலேசிய தமிழர்ப் பண்பாட்டுக் கழகத்தின் நிகழ்ச்சியொன்று நடந்தது. அதில் என்னைக் கலந்து கொள் ளும்படி அழைத்திருந்தனர். வீரப்பனோடு அந்த நிகழ்ச்சிக்குப் போனேன். ஒரு கட்டிடத்தின் மாடியில் கூட்டம். சிறிய தொகையினரே வந்திருந்தனர். ஆனால் உறுதியான கொள்கை படைத்தவர்கள் அவர் கள் என்பதை நிகழ்ச்சியின் போது கண்டேன். அந்தக் கூட்டத்திற்கு மலேசிய தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் பொதுச் செயலாளர் மு. மணி வெள்ளையன் தலைமை தாங்கினார். எங்களோடு ஈப்போவில் இருந்து வந்த நண்பர் முனியாண்டியும் சேர்ந்து கொண்டார்.
தமிழ் வாழ்த்து இறை வாழ்த்தாய் ஒலிக்க அந்தக் கூட்டம் தொடங் கியது. வரவேற்புரைக்குப் பின்னால் மணி வெள்ளையன் உரை நிகழ்த் தினார். “திருக்குறளே தமிழர்களுக்கு மறை. திருக்குறளை நமது சமய மாகக் கொள்ள வேண்டும். திருக்குறளைப் படிக்காதவன் தமிழனே இல்லை. எக்காலத்துக்கும் ஏற்ற கருத்து திருக்குறளில் உண்டு. தாய்ப் பாலை குழந்தைக்கு பால் கொடுக்கும் போதே தமிழ்ப் பாலையும் சேர்த்து புகட்ட வேண்டும். தமிழ்ப் பாலோடு திருக்குறளையும் சேர்க்க வேண்டும். திருக்குறள் ஒவ்வொரு தமிழர் வீடுகளிலும் இருக்க வேண் டும். திருக்குறள் தான் தமிழரை மனிதனாக்கியது. யாவரும் மனிதரே என்றது.”
மணி வெள்ளையன் ஒரு காப்புறுதி நிறுவன நிர்வாகி, தமிழன் மீதும், திருக்குறளின் மீதும் அன்பும் தீவிரமும் கொண்டவர். வாழ்க்கை யந்திரமாகக் கொண்டிருக்கிற மலேசியாவில் இதற்கெல்லாம் அவர் நேரம் ஒதுக்கி இருக்கிறார் என்றால் அவரின் பற்றினை எடுத்துச் சொல்லத் தேவை இல்லை.
மணி வெள்ளையனின் உரைக்கும் பிறகு திருக்குறளை நவீன இசைக் கருவியில் இணைத்து இசைத்துப் பாடினார்கள். அற்புதம்
கேட்க இனிமையாக இருந்தது.
கடைசி நிகழ்ச்சியாக எனது நூல் அறிமுகம் நடந்தது. என்னைப் பற்றி வீரப்பன் அறிமுகம் செய்து வைத்தார். கலாநிதி முனியாண்டி
33 а
s

Page 19
D மாத்தளை சோமு
சிட்னி அனுபவத்தைச் சொன்னார். இறுதியில் நான் பேசினேன். எனக் குத் தலைப்புத் தரப்படாததால் 'கடல் கடந்த தமிழ் - தமிழர்களைப் பற்றிப் பேசினேன்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழ் கடல் கடந்துவிட்டது. தென்கிழக்காசியாவில் கடாரம் வரைத் தமிழ் அரசாட்சி செய்ததற்கு கடல் கடந்ததுதான் காரணம். ஆனால் தீர்க்கதரிசனமற்ற பார்வை யுடன் சோழர்கள் கொடி போட்டார்களே தவிர மக்களைக் குடி யேற்றவில்லை. இதனால் தமிழகத்துக்கு அப்பால் ஒரு தீவில் கூட ஒரு அரசோ, ராச்சியமோ ஏற்பட வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
ஆங்கிலேயர்கள் தமது ஆட்சியின்போது தமிழர்களை இலங்கை, மலேசியா, தென்னாப்பிரிக்கா, பிஜி, மொரீசியஸ் ஆகிய நாடுகளில் தமிழர்களை குடியேற்றினார்கள். இதுகூடத் தமது பொருளாதார சாம் ராஜ்யத்தை, விரிவுபடுத்தும் நோக்கத்தில் நடைமுறைப் படுத்தப்பட் டது. இதனால் தமிழர்கள் சொல்லொணாத் துன்பத்தை அனுபவித் தார்கள். ஆனால் இன்று தமிழர்கள் உலகில் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் குடியேறி இருக்கிறார்கள். இங்கு தமிழ் எழுத்து, ஒலி, ஒளி ஆகிய துறையில் பிரகாசமாய் இருக்கின்றது. கனடாவில் சிங்கப்பூருக்கு அடுத்ததாக மிகப் பெரிய அளவில் தமிழர் இருக்கிறார்கள். பிரான்சில் இருந்து உலகத் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பாகின்றது. லண்டன் பாரிஸ் ஆகிய நாடுகளில் இருந்து உலகத் தமிழ் வானொலி ஒலிபரப் பாகின்றது. கனடா, பிரிட்டன், பிரான்ஸ் ஆஸ்திரேலியா ஆகிய நாடு களில் இருந்து 24 மணி நேர தமிழ் வானொலிகள் இருக்கின்றன. கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து வார இதழ்கள் வருகின்றன. மாத இதழ்கள் மலர்கின்றன. தமிழ் சொல்லிக் கொடுக்கும் பள்ளிகள் நடத் தப்படுகின்றன. தமிழை முன்னெடுக்கிற சைவ ஆலயங்கள் கட்டப் பட்டுள்ளன. இவையெல்லாம் ஒரு அரசாலோ நாட்டாலோ செய்யப் படவில்லை. இலங்கையில் இருந்து போன தமிழர்களால் செய்யப் பட்டன. தமிழகத்தில் இருந்துபோன தமிழர்களும் தமிழைப் பல, நாடுகளில் முன்னெடுத்தார்கள். ஆனால் அவர்களை ஈழத் தமிழர்கள் மிஞ்சி விட்டார்கள் என்பதே உண்மை. எது எப்படியோ மகாகவி பாரதி கண்ட கனவு நனவாகி வருகிறது.
தேமதுரத் தமிழழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் !

மாத்தளை முதல் மலேசியா வரை. D
அது பாரதியின் கனவு. ஆனால் அது இன்று தமிழ் மக்களால் நனவாகிவிட்டது.
மலேசியா தமிழை உலக மொழியாக்க அடையாளப் படுத்தக் காரணமான நாடு உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு அச்சாரம் போட்ட தேசம். அதனையிட்டு மலேசியத் தமிழர்கள் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.”
எனது பேச்சுக்குப் பிறகு மாத்தளை சோமு அவர்கள் நூல்கள் பல கொண்டு வந்திருக்கிறார். அதனை வாங்கி ஆதரியுங்கள். நீங்கள் அவரின் புத்தகங்களுக்கு கொடுக்கின்ற பணம் அவரின் பயணச் சுமையைக் குறைக்கும்' என்று கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இது எனக்குப் பிடிக்கவில்லை. ஒரு எழுத்தாளனை அவமானப்படுத்த இதைவிட வேறு வார்த்தைகள் தேவையில்லை. நான் உடனே ஒலி வாங்கியிடம் சென்று, “நான் புத்தகம் விற்பதற்காக இங்கு வரவில்லை. புத்தகங்களை விற்றுப் பயணச் சுமையைக் குறைக்க வேண்டிய கார ணம் எதுவுமில்லை. வர்த்தகம் செய்ய வேண்டுமென்றால் அதற்கு வேறு பொருட்கள் கொண்டு வந்திருக்கலாம். நான் தமிழையே கொண்டு வந்திருக்கின்றேன். தமிழில் எழுதிய சிறுகதை நாவல் நூல்களைக் கொண்டு வந்திருக்கின்றேன். நீங்கள் விரும்பினால் வாங்குங்கள். என் முகத்திற்காக வாங்க வேண்டாம். எனது நூல்களை வாசிப்பதானால் மட்டுமே வாங்குங்கள் என்று உரத்துச் சொன்னேன்.”
7
மலேசியா தென் கிழக்குப் பகுதியில் முன்னேறி வருகின்ற முதல் பத்து நாடுகளில் ஒரு செல்வந்த நாடு. அதே நேரத்தில் இங்குள்ள தமிழர் அமைப்புகள், தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், தமிழ் எழுத்தா ளர்கள் மீது நேசம் கொண்டவையாக இருக்கின்றன. தமிழைச் சுமந்து வருகின்றவர்களைப் பாராட்டி உபசரிக்க பல தமிழர்கள் முன்னிற் கிறார்கள். இவற்றைப் பயன்படுத்தி அவசர அவசரமாக நூல்களை அச்சிட்டு விற்று பணமாக்க தமிழகத்தைச் சேர்ந்த பலர் மலேசியா வந்து விடுகிறார்கள். இவர்களில் பிரபல்யமான பலரும் அடங்குவர். மலேசியாவிற்கு வருவதற்கான நோக்கத்திலேயே புத்தகங்களை அச் சிடுபவர்களும் உண்டு. முதல் தடவை வருகிற எழுத்தாளர்கள், கவி
35

Page 20
மாத்தளை சோமு
ஞர்கள், சொற்பொழிவாளர்கள் யாவரையும் நன்கு ஆதரிப்பார்கள். அதனை மனதில் வைத்துக் கொண்டு ஆறுமாத இடைவெளியில் மறு படியும் புத்தகங்களை அச்சிட்டுக் கொண்டு மலேசியாவில் இறங்கி விடுவார்கள் சிலர். வேறு சிலர் அங்குள்ள தமிழர்களின் வீடுகளைக் கூட புத்தகத்திற்காகத் தட்டியிருக்கிறார்களாம்.
மலேசியாவிற்கு எழுத்தாளர்கள் வந்தாலே புத்தகம் விற்கத்தான் வருகிறார்கள் என்ற ஒரு எண்ணம் ஒரு சிலரால் நிலைத்துவிட்டது. அந்த எண்ணத்தில்தான் என்னையும் புத்தகம் விற்க வந்தவர்களின் பட்டியலில் இணைப்பது போல் சொல்லிவிட்டார்கள். எனவே தான் அதனை மறுத்தேன். நமக்குத் தொழில் வேறு. எழுத்து எனது ஆத்ம தேடல். புத்தகம் விற்பது வர்த்தகம் அல்ல. அச்சு செலவை மீட்பதே.
எனது விளக்கத்திற்குப் பிறகு என் மீது நம்பிக்கை வந்தது போல் பார்வையாளர்கள் தாங்கள்ாகவே வரிசையில் நின்று எனது புத்தகங் களை வாங்கிக் கையெழுத்துப்போடச் சொல்லி வாங்கிச் சென்றனர். அன்று கொண்டு போன புத்தகங்கள் யாவும் முடிந்து போயின. பார் வையாளர்களில் பலரும் என்னிடம் வந்து பேசினார்கள். ஒருவர் அப் போது சொன்னார். −
“நீங்கள் ஒரு எழுத்தாளர். முதலில் உங்களையும் புத்தகம் விற் பவராகவே பார்த்தேன். ஆனால் உங்களின் விளக்கத்திற்குப் பிறகு தான் புத்தகமே வாங்கினேன். உங்களின் தன்னம்பிக்கை என்னைக் கவர்ந்தது.”
அங்கு என்னோடு தனிப்பட்ட முறையில் பேசிய பலருக்கும் இலங்கை இனப் பிரச்சனையில் ஒரு பற்றுதல் இருப்பது தெரிந்தது. இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் நிம்மதி நிரந்தரமாக வேண்டும் என்று அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.
அன்றிரவு கிள்ளாங்கில் வீரப்பன் வீட்டில் தங்கிவிட்டு அடுத்த நாள் ஈப்போவை நோக்கிய பயணத்திற்கான திட்டம் போடப்பட்டது.
அந்த புறவழி நெடுஞ்சாலையில்ஈப்போ என்ற நகரத்தை நோக்கி அந்தக் கார் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு குலுக்கல் இல்லை. அது முனி யாண்டியின் கார். அவர் தான் அந்தக் காரை ஒட்டிக் கொண்டிருந்தார்.
கார் கண்ணாடி வழியே வெளியே பார்த்தேன். என்ன அற்புத மான வீதி வாகனங்கள் போவதற்கும் வருவதற்கும் தனித் தனியாகப்
36

மாத்தளை முதல் மலேசியா வரை. 0
பான்தகள். அடுத்த நூற்றாண்டின் வாகனைத் தொகையைக் கணக் கிட்டது போல் அகலமான பாதைகள். ஒரு நாட்டின் விதி, வீதியில் இருக்கிறது என்பது எங்கோ கேட்ட ஒரு மொழி. மலேசியாவின் வீதிகளில் அதன் எதிர்காலம் நான்றாக இருக்கும் என்பது போன்ற அடையாளம் தெரிகின்றன.
“மெள்ள நண்பரிடம் பேச்சுக் கொடுத்தேன். அற்புதமான வீதி கள்.”
காரை ஒட்டிக் கொண்டே முனியாண்டி சொன்னார். “இதனை இலகுவாக சாதிக்கவில்லை. நாங்கள் ஈப்போவுக்கும் கே. எல்லுக்கும் (கே.எல் என்பது கோலாலம்பூரின் சுருக்கம்) பழைய வீதி சிறிய பெரிய நகரங்களைத் தொட்டுப் போகும். இன்றும் இருக்கிறது அது. முன் பெல்லாம் அதில் போவது நரக வேதனை. கே.எல்.லில் காரியம் பார்க்க வேண்டுமென்றால் முதல் நாளே போய்விட வேண்டும். பயண நேரம் 6 முதல் 9 மணி நேரம் எடுக்கும். இன்று 3 முதல் நாலு மணி நேரம் புதிய பாதையில். இது எங்களுக்கு மிக வசதியாக இருக்கிறது. ஆனால் இந்த வசதிக்கு நாம் பணம் கொடுக்காத வேண்டும்.”
éé 9.
ஏன்?.
“ஹைவேயில் நுழையும் போது டோல் கேட்டில் ஒரு சீட் தரு வார்கள். அதனை ஹைவேயை விட்டு வெளியேறும் போது கேட்டில் கொடுத்தால் பயணம் செய்த தூரத்தைக் கணக்கிட்டு டோல் டெக்ஸ் கட்டச் சொல்லுவார்கள். அது கொஞ்சம் சுமையாக இருந்தாலும் புதிய வசதியான வீதியை நினைத்துச் சாந்தியடைவோம்.”
கார் வேகமாக ஓடியது. பாதையின் இரு புறமும் சிறிய பெரிய மலைக் குன்றுகள். ஆங்காங்கே பனை மரம் போன்ற செம்பனை மரங்கள். மலேசியாவின் தேசிய வருவாயில் அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் முக்கிய பொருட்களில் இந்த செம்பனை மரங்களும் அடங்கும்.
நான் முனியாண்டியிடம் “காரை கொஞ்சம் நிறுத்துங்கள்.” என்றேன்.
“செம்பனை மரங்களைப் படம் பிடிக்க வேண்டும் அலுர் காரை நிறுத்தவில்லை.”
37 DI

Page 21
ா மாத்தளை சோமு
“போட்டோ தானே பிடிக்கவேண்டும்? ஈப்போ போனதும் ஒரு செம்பனை தோட்டத்திற்கே அழைத்துப் போகின்றேன்.”
நான் காரில் கிடந்த அன்றைய மலேசிய நண்பர் தினசரியைப் படிக்கத் தொடங்கினேன்.
காரை ஒரு இடத்தில் நிறுத்தினார் நண்பர். அது தேசிய நெடுஞ் சாலையில் பயணிகள் ஒய்வெடுக்க கட்டப்பட்ட ஒரு அழகான இடம். திட்டம் போட்டுக் கட்டப்பட்டிருந்தது. சீனா, மலாய், தமிழ் உணவு. குளிர்பானங்கள் வாங்கிட சிறிய கடைகள் வாங்கிய உணவைச் சாப் பிட மேஜை இருக்கைகள், தொலைபேசிகள் நவீன கழிவறைகள்,
“என்ன சாப்பிடுகிறீர்கள்?”
நான் ஒரு விநாடி யோசித்துச் சொன்னேன்.
“மலாய் உணவாய் வாங்குங்கள்.”
நண்பர் உடனே இரண்டு சிறிய உணவுப் பொட்டலத்தை வாங்கி
வந்தார். ஒன்றை என்னிடம் கொடுத்தார். பிரித்தேன். கொஞ்சம் வெள்ளைச் சோறு. கொஞ்சம் நெத்திலி மீன். அரை முட்டை சாப் பிட்டுப் பார்த்தேன். சுவையாய் இருந்தது.
“இதன் பேரு?”
“நாசிலெமா. மலாய்க்காரர்களின் பிரியமான காலை நேர உணவு காலையில் தான் கிடைக்கும்.”
இருவரும் சாப்பிட்டு டீ குடித்து விட்டு வெளியே வந்தோம். அப்போது நண்பர் சொன்னார்.’பரமேஸ்வரா காரைப் பாருங்கள்.”
அந்தக் காரைப் பார்த்தேன். அது மலேசியாவில் உற்பத்தியா கும் கார். மலேசியாவில் பல பெயர்களில் கார்கள் உற்பத்தியாகின்றன. கோலாலம்பூரில் மனிதர்களை விட கார்களே அதிகம். என்பார்கள். உண்மையும் அதுதான். காலை மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் உங்கள் கார் மாட்டினால் அப்புறம் கோயில் தேர் போல் தான் நகரும் கோலாலம்பூர் வாகன நெரிசல் இன்று மட்டுமல்ல எதிர் காலத்தில் பெரிய பிரச்சனையே.
'ஈஸ்வரா'.
நல்ல பெயர். சோழர் கடாரத்தை ஆண்ட போது மலேசியாவில் தங்கிவிட்ட சொற்கள். ஈஸ்வரா என்பது சிவனுக்கு ஒரு பெயர். இறை

மாத்தளை முதல் மலேசியா வரை. ()
நாமம். அதனால் அந்தப் பெயரை காருக்கு வைக்கக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். அரசும் அது குறித்து ஆலோசனை செய்து வருகிறதாம். ஆனால் ஈஸ்வரா கார்கள் கோலாலம்பூர் வீதி களில் ஒடுகின்றன.
நான் யோசித்தேன். முருகன், பிள்ளையார்"சிவன், அம்மன், கிருஷ்ணன் என பல இறைவன் பெயரில் வைத்திருக்கிற இந்துக்கள் "ஈஸ்வரா என்ற பெயரில் ஒடுகிற காரையா எதிர்க்கப் போகிறார்கள்? அவர்கள் எதிர்க்கவில்லை. பின் யார்? மலாய்க்காரர்கள். அவர்கள் எதிர்ப்பதன் நோக்கம் வேறாய் இருக்கலாம். ஆனால் இறைவனின் திருப்பெயர்களை பொருள் தேடுகிற சந்தையில் உலாவ விடக் கூடாது என்பதில் பலருக்கு உடன்பாடு உண்டு. மதுபானக் கடைக்கு கடவுளின் பெயர் வைப்பது எவ்வகையில் சரியானது? தமிழ்நாட்டில் "வைன்' கடைக்கு இறைவனின் பெயர் வைத்திருக்கிறார்கள். ஒரு மதுபானக் கடைக்காரர் அவர் அதனை பக்தியின் நிமித்தம் செய்தேன் என்று வாதாடலாம். ஆனால் இறைவனைக் கேவலப்படுத்த இதைவிட அவ ருக்கு வேறு வழி தெரியவில்லை போலும், வர்த்தக நிலையங்களுக்கோ, வர்த்தகப் பொருட்களுக்கோ இறைவனின் திருப்பெயர்கள் வைப் பதை நான் விரும்பவில்லை. எனது தந்தையார் துணிக்கடைக்கு திரு முருகன் ஸ்ரோர்ஸ்' என்று வைத்ததையே நான் மாற்றலாம் என்ற போது அவர் மறுத்துவிட்டார். முருகன் மீது அதிக பக்தி கொண்ட வர் அவர் வீட்டிலேயே விதவிதமான முருகனின் படங்களை மாட் டியவர். ஆனால் தமிழர்களுக்கு எதிரான 83ம் ஆண்டு இனக் கல வரத்தின் போது மிகுந்த கவலையுடன் முருகன் ஓவியம் வரைந்த கடையின் விளம்பரப் பலகையை கழட்டி வைத்தார் அவர்.
8
ஒடிக் கொண்டிருந்த காருக்குள் குளுமை இருந்தபோதும் வெளியே பரவியிருந்த வெய்யில் கடுமையென்பதை உணரக் கூடிய தாய் இருந்தது. கார் ஈப்போவை நெருங்கிக் கொண்டிருந்தது. காரை ஒட்டிய நண்பர் முனியாண்டி 'பகல் உணவிற்குப் பிறகு தமிழ்க்குயில் கலியபெருமாளை வீட்டில் போய் ஏற்றிக் கொண்டு போகலாம். அதற்கு முன்னர் வழியில் சில காட்சிகள் பார்ப்போம்' என்றார். கார் இப்போது ஒரு முச்சந்தியில் திரும்பி புதிய பாதையில் ஓடியது. சில
39 DI

Page 22
மாத்தளை சோமு
கிலோ மீட்டர் தூரம் சென்றதுமே அது ஒரு பரந்த வெளிபோல் தோன் றியது. வீதியை ஒட்டி இரு பக்கத்திலும் அதள பாதாள பள்ளம். செம் மண் நிறைந்தது. ஒரு இடத்தில் காரை நிறுத்தி நண்பர் இறங்கினார். நானும் இறங்கினேன். குளுமை மறைந்து வெய்யில் தேகத்தில் பட்டது. வியர்வைத் துளிகளாய் தேகத்தில் பூக்கக் கூடும். கடுமையான வெய்யில்.
“வெய்யில் கடுமையாக இருக்கிறதே?”
“இது ஈப்போ வெய்யில். இங்கு வெயில் கடமைதான்.” என்ற முனியாண்டி ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டினார். பார்த்தேன் ஏதோ ஒரு சுரங்கத் தொழில் நடக்கும் இடமாய் தெரிந்தது. எப்போதோ வேலைகள் நடந்ததற்கு அடையாளமும் இப்போது எதுவும் இல்லை யென்பது போன்றும் தோன்றியது.
“இது ஈயச் சுரங்கத் தொழில் நடந்த பிரதேசம் ஈப்போ ஈயத் திற்குப் புகழ்பெற்ற நகரம். இத்தொழிலில் சீனர்கள்தான் ஈடுபட்டிருந் தார்கள். இவர்களால் பொருளாதாரம் பெருகியது. மலேசியாவில் அதிக விலையுள்ள கார்கள் ஈப்போவில் தான் அதிகம். உலகிலேயே அதிக மான விஸ்கி குடிப்பவர்கள் ஈப்போவில் தான் அதிகமாம். மலேசி யாவின் இரண்டாவது பெரிய நகரம். தமிழர்கள் இங்கு அதிகமாக இருக்கிறார்கள். என்று நண்பர் முனியாண்டி ஈப்போ நகரத்தைப் பற்றி ஒரு திருப்புகழ் பாடினார்.” ܫ
ஈப்போ நகரத்தில் தான் அவர் கால்நடை மருத்துவத்துறை ஆய்வு நிலையத்தில் பணி புரிகின்றார். முனியாண்டி கைக் கடிகாரத் தைப் பார்த்து “நேரம் ஆச்சே குயிலார் தேடிக்கிட்டு இருப்பாரே.” என்று சொல்லிவிட்டுக் காரை நோக்கி நடந்தார். அவரைப் பின் தொடர்ந்தேன்.
கார் ஈப்போவின் புறநகர் பகுதிக்குள் நுழைந்து ஒரு இடத்தில் நின்றது. காரைவிட்டு இறங்கி வீடுகளைப் பார்த்தேன். வீடுகள் வித் தியாசமாய் இருந்தன. வீடுகள் தனித் தனியாக இருந்த போதும் ஒன் றோடு ஒன்று தொடர்பு கொண்டவையாக இருந்தன. இத்தகைய வரிசை வீடுகள் லண்டனில் அதிகம். அதே அமைப்பில் அவைகள் கட்டப் பட்டிருந்தாலும் ஆடம்பரமானவை. ஆனால் ஆஸ்திரேலியாவில் பெரும்பான்மை வீடுகளைத் தனித்தனியாகப் பார்த்த எனக்கு இது வித்தியாசமாய் இருந்தது.
o 40

மாத்தளை முதல் மலேசியா வரை. ()
வீட்டின் வாசலில் சிறிய தோட்டம். மலர்ச் செடிகள், ஊஞ்சல். உள்ளே போனால் தமிழ்க்குயில் கலியபெருமாள் என்னைக் கண்ட தும் கரம் கூப்பிக் கட்டித் தழுவினார். பிறகு என் மனைவியை வர வேற்றுவிட்டு மகள் யாழினியைத் தூக்கிக் கொஞ்சினார்.
எனக்கு பழைய நினைவுகள் மொய்த்தன. சிட்னியில் ஒரு தமிழ் இலக்கிய விழா நடத்த நானும் நண்பர்களும் முனைந்தபோது முனி யாண்டி அவர்கள் தமிழ்க்குயில் கலியபெருமாள் பற்றி எடுத்துச் சொல்லி, அவரைச் சிறப்பு பேச்சாளராக வைக்கலாமே! என்று ஒரு ஆலோசனை சொன்னார். ஏற்கனவே மலேசியா நாட்டிற்குப் போக வேண்டும் என்றும் அங்குள்ள தமிழர்களோடு உறவு கொள்ள வேண் டும் என்றும் விரும்பிய எனக்கு அந்த ஆலோசனை மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஆனால் மலேசியாவில் இருந்து கலியபெருமாள் அவர் களை அழைப்பதென்றால் பயணச் சீட்டிற்கான பணத்தை கொடுக்க வேண்டுமே! அது எவ்வாறு சாத்தியம்? என்று யோசித்தேன். நடக் கப்போவது முழுக்க முழுக்க இலக்கிய விழா. அதற்கு சிட்னியில் தமிழர்களிடையே ஆதரவும் எதிரொலியும் எப்படி இருக்குமோ? என்று பயந்தேன். معر
அப்போது முனியாண்டி என்னை தைரியப்படுத்தினார். 'எனக்கு கலியபெருமாள் அவர்களை பல வருடமாகத் தெரியும். அவர் நடத் திய திருக்குறள் வகுப்பில் அவர் எனக்கு ஆசிரியர். கருத்தோடு கவர்ச்சியாக பேசுவார். பயப்படவேண்டாம். அவரின் பேச்சு எல் லோரையும் கவரும். -
அதற்குப் பிறகு நானும் அவரும் ஆளுக்கு 500 டாலர் போட்டு மொத்தம் 1000 டாலர் பயணச் சீட்டிற்காக அனுப்புவதாக முடிவு செய் தோம். ஆனால் அன்று இரவு நான் தூங்காமல் யோசித்தேன். 500 டாலர் தருவதாக சொன்னேனே இது சரியான முடிவா?. அடுத்தநாள் முனியாண்டிக்கு தொலைபேசியில் பேசினேன். மலேசியாவில் இருந்து யாரும் வேணாம். இங்குள்ளவர்களை வைத்து விழாவை நடத்துவோம்!
6 9.
६J६ा? “500 டாலரைப் பற்றி யோசிக்கிறேன்.” “உங்களுக்குப் பயமாய் இருந்தால்-டிக்கெட்டுக்கான முழுப்
பணத்தை நானே போடுகிறேன்.” என்று முனியாண்டி சொன்னதும்
4 D

Page 23
0 மாத்தளை சோமு
எனக்கு தர்ம சங்கடமாகியது. ஒரு நல்ல நண்பர் சொல்வதைக் கேட் கத்தானே வேண்டும்?
“சரி. கலியபெருமாள் மலேசியாவில் இருந்து வரட்டும். நான் 500 டாலர் தருகின்றேன்.”
எங்கள் இருவரின் ஏற்பாட்டில் மலேசியாவில் இருந்து தமிழ்க் குயில் கலியபெருமாள் சிட்னிக்கு வந்தார்.
அவர் சிட்னிக்கு வந்தபோது என் மனைவி மருத்துவமனையில் முதல் பிரசவத்திற்காக இருந்தாள். யாழியினியும் பிறந்துவிட்டாள். என்ற போதும் சிட்னியில் தமிழர்கள் அதிகமாக இருக்கிற ஹோம் புஷ் என்ற (Home Bush) இடத்தில் மாநில அரசுப் பள்ளியில் சிட்னி யின் முதலாவது (ஏன் ஆஸ்திரேலியாவின் என்று கூட சொல்லலாம்) இலக்கிய விழாவை (1991ல்) நடத்தினோம். புத்தகக் கண்காட்சி, கவி யரங்கம், கருத்தரங்கம், சிறப்புச் சொற்பொழிவு என ஒரு நீண்ட நிகழ்ச்சியே நடந்தது. தமிழ்க்குயில் கலியபெருமாள் நீண்ட உரை நிகழ்த்தினார்.
அவர் அன்று பேசும் போது இரவு ஒன்பது மணியிருக்கும் அரு மையான பேச்சு. தமிழின் பெருமை, தமிழ் உணர்வு என்பன அடுக் கடுக்காய் வந்தன. நேரம் போவதே தெரியாமல் அமைதியாகக் கேட் டுக் கொண்டிருந்தார்கள். மலேசிய நாட்டிலிருந்து இவ்வளவும் அற் புதமாய் அருமையாய் தமிழில் பேச தமிழர் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு பதிலாகவே அவர் உரை இருந்தது.
அந்த விழா முடிந்ததும் பல தமிழ் அன்பர்கள் குறிப்பாக எழுத் தாளர் நா. மகேசன் என். கணபதிப்பிள்ளை, மா. அர்ச்சுன மணி, கலாநிதி பா. நல்லதம்பி, எஸ். பாலேந்திரா, எஸ் சுந்தர் ஈஸ்வரன், ம. தனபால சிங்கம், சுரேஷ், இளங்கோ, ஆர். சண்முகானந்தன், இ. விஜய ரட்ணம் எனப் பலர் தமிழ்க்குயிலார் அருகே வந்து அன்பு பாராட்டி பேசினார்கள். எல்லோரும் விருந்துண்ண அவரை அழைத்தார்கள். அவர்கள் எல்லோரும் சிட்னியில் தமிழ்பட - மேம்பட மட்டுமல்ல. தமிழ் ஒலிக்க உழைத்து வருபவர்கள். அதில் எஸ். பாலேந்திரா, என் கணபதிப் பிள்ளை ஆகியோர் ஹோம்புஷ் என்ற இடத்தில் அரசுப் பள்ளியில் சனிக்கிழமை தோறும் தமிழ்க்கல்வி (1991) நிலையம் என்ற பெயரில் தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்து
வருபவர்கள்.
47

மாத்தளை முதல் மலேசியா வரை.
விழா முடிந்ததும் மண்டபத்தை ஒப்படைப்பதற்காக ஓடிக் கொண் டிருந்த என்னைத் தடுத்து நிறுத்தினார் என். கணபதிப்பிள்ளை.
“மலேசியாவில் இருந்து கலியபெருமாள் வந்திருக்கிறார். இவ ருடைய பிளைட் டிக்கெட்டுக்கு என்ன செய்தீர்கள்?”
அவர் கேட்டதில் நியாயம் இருந்தது. அந்த விழா நடத்த எவரி டமும் பணம் சேர்க்கவில்லை. விழாவுக்கு கட்டணமும் இல்லை. நான் உடனே நண்பர் முனியாண்டியை அழைத்து விஷயத்தை சொன்னேன். அவர் உடனே கணபதிப் பிள்ளையோடு பேசினார்.
“நானும் சோமுவும் ஆளுக்கு 500 டாலர் போட்டு டிக்கட் வாங் கித்தான் அவரை அழைத்தோம்.”
“இதை முன்பே சொல்லியிருக்கக் கூடாதா?’ என்று வருந்தி னார் கணபதிப் பிள்ளை. பிறகு கலியபெருமாள் அவர்களையும் எங்
களையும் விருந்துண்ண அழைத்தார். ஒருநாள் கணபதிப்பிள்ளை
அவர்களின் வீட்டிற்கு விருந்துண்ணப் போயிருந்தோம். அங்கு பலர் இருந்தார்கள். எல்லோரும் பேசினார்கள். விருந்து முடிந்தது. என் கையில் டாலர் நோட்டுகளைக் கொடுத்தார்கள். எண்ணிப் பார்த்தேன். 150 டாலர். அதே போன்று ஈழத் தமிழர் கழகத்தின் செயலாளர் வா. சுரேசின் வீட்டில் விருந்து நடந்தது. அங்கும் போனோம். ஈழத்தமிழர் கழகத்தின் சார்பில் ஒரு தொகை கொடுத்தார்கள். ஆர். சண்முகானந் தன் அவர்கள் 50 டாலர் கொடுத்தார். இப்படியே 1000 டாலர் சேர்ந்து விட்டது நாங்கள் அத்தொகையை கலியபெருமாளிடம் கொடுத்தோம். அவர் அந்த தொகையை முனியாண்டியிடம் கொடுத்து, “நீங்கள் டிக்கெட்டுக்காக போட்ட தொகையை எடுத்துக் கொள்ளுங்கள்” என் றார். நான் முனியாண்டியைப் பார்த்தேன். கலிய பெருமாள் தமிழ் அறிஞர். அவர் நன்றாகப் பேசுவார். அவரால் நஷ்டம் வராது என்று அவர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. *. v.
ஈப்போவில் முனியாண்டியின் வீட்டில் பகல் உணவு விருந்தில் கலந்துகொண்டேன். முனியாண்டியின் மனைவியார் அறுசுவை உணவு களைப் பரிமாறினார். எனது மனைவியும் அவரும் நண்பர்கள். முனி யாண்டி அவர்கள் கலாநிதிப் பட்டப் படிப்பினை சிட்னியில் மேற் கொண்ட போது அவர் சிட்னியில் இருந்தார். சிட்னி நினைவுகளைப் பரிமாறிக் கொண்டபோது முனியாண்டிகைக் கடிகாரத்தைக் காட்டினார்.
43

Page 24
0 மாத்தளை சோமு
“இன்னும் 3 மணிநேரம் இருக்கிறது போகிற வழியில் செம் பனை பார்க்கலாமா?” என்று கேட்டார் அவர் “பார்த்துட்டா போவுது.” என்றார் கலியபெருமாள்.
9
செம்பனை மரங்கள் தென்னை மரத்தின் தம்பியாய் பனை மரத் தின் அண்ணனாய் ரப்பர் மரங்களைப் போல் வரிசையாக கிளை பரப்பி நின்றன. தூரத்தில் இருந்து பார்த்தால் ஆயிரக்கணக்கான மனிதர்கள் குடைகளை விரித்துக் கொண்டு நிற்பது போல் தெரியும். சூரிய வெளிச் சம் நிலத்தில் விழாதவாறு செம்பனை மரங்களின் கிளைகள் ஒன்றை யொன்று கைகோர்த்ததைப்போல் நெருங்கியிருந்தன. ஒரு காலத்தில் ரப்பர் மரங்கள் நின்ற மண்ணில் இன்று செம்பனை மரங்கள். அந்த மரங்களிலிருந்து பலாப்பழங்களைப் போல் தோற்றமுடைய செம் பனை பழங்களிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யால் மலேசிய நாட்டிற்கு நல்ல வருமானம். −
எல்லோரையும் ஏற்றிக் கொண்டு கார் புறப்பட்டது. காரை முனி யாண்டி ஒட்டினார். அவரின் பக்கத்தில் கலியபெருமாள் இருந்தார். நான் பின்னால் இருந்தேன் பழைய நினைவுகன்ளப் புதுப்பித்தார் முனியாண்டி
சிட்னியில் இயங்கும் தமிழ் மன்றம், ஈழத் தமிழர் கழகம், சைவ மன்றம் என்பன பற்றியெல்லாம் கேட்டார். நான் விபரங்களை ஒவ் வொன்றாகச் சொன்னேன். இன்று சிட்னியில் தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க ஏழுக்கும் மேற்பட்ட தமிழ்கல்வி நிலை யங்கள் இருக்கின்றன. சிட்னி முருகன் கோயில் கட்டட வேலைகள் (1999ல் அக்கோயிலுக்கு குடமுழுக்கும் நடந்து விட்டது) தொடங்கி விட்டன. 24 மணிநேர தமிழ் வானொலி ஒன்றை இன்பத்தமிழ் ஒலி என்ற பெயரில் பாலசிங்கம் பிரபாகரன் என்பவரால் நடத்தப்படுகின் றது என்ற விபரங்களைச் சொன்னேன்;
சித்தியவானுக்கு மூன்றரை மணிக்கெல்லாம் போய் விட்டோம். நாலரைக்குத்தான் கூட்டம். எனவே நேரத்தைப் போக்க ஷோப்பிங் செண்டருக்குப் போய்ப் பார்த்தோம். மலேசியாவில் சிறு நகரங்களில் கூட பெரிய வணிக வளாகத்தைக் கட்டி வைத்திருக்கிறார்கள். நான்கு
D 44

மாத்தளை முதல் மலேசியா வரை. 0
மாடிகளையும் சுற்றிப் பார்த்துவிட்டு கீழே வந்தபோது கலியபெரு மாள் ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தார்.
“எதுவும் வாங்கவில்லையா?”
“வாங்க ஆசைதான். வாங்கத் தொடங்கினால் நீண்டுவிடும். எல்லா நிகழ்ச்சிகளும் முடிந்த பிறகு வாங்கலாம் என்றிருக்கின்றேன்.”
ஏதாவது கடிக்கவும் குடிக்கவும் ஒரு சீனரின் தேநீர் கடைக்குப் போனோம். சீனரின் கடையை நம்பி எந்நேரமும் சாப்பிடப் போகலாம். சீனர்கள் எந்நேரமும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். எனவே அங்கு ஆளுக்குக் கொஞ்சம் நூடுல்ஸ் சாப்பிட்டு டீ குடித்துவிட்டுக் கூட்டத்திற்குப் போனோம். அந்தக் கூட்டம் சித்தியவான் டின்டிங்ஸ் இந்தியர் சங்க மண்டபத்தில் நடக்கிறது. மண்டபத்தில் போட்டிருந்த நாற்காலிகளில் நிரம்பியிருந்தது கூட்டம். ஒரு இலக்கியக் கூட்டம். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அங்கு வந்திருந்தார்கள். அந்தக் கூட்டத்தை மஞ்சோங் தமிழ் எழுத்தாளர் வாசகர் இயக்கம் நடத்துகிறது.
அந்தக் கூட்டத்திற்கு ஆசிரியர் ஆர். கிருஷ்ணன் தலைமை தாங் கினார். வரவேற்புரை திருக்குறள் சுப. சுப்பையா. அறிமுக உரை கலிய பெருமாள். ஆஸ்திரேலிய நாட்டைப் பற்றியும் அங்குள்ள ஆதிவா சிகள் பற்றியும் சுமார் ஒரு மணிநேரம் பேசினேன். பிறகு கலந்துரை யாடல் நடந்தது. பல்வேறு கேள்விகள் கேட்டார்கள். அதற்கான பதிலை சொன்னேன்.
இறுதியாக கோமு என்று அழைக்கப்படும் கோ. முனியாண்டி இன்னொரு முனியாண்டி) என்பவர் நன்றியுரை கூறினார். தரமான ஒரு எழுத்தாளர். சில சிறுகதைகளை மாத்திரமே எழுதியிருக்கிறார். ஆனால் அதைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை. அடக்கசாமி'யாக இருந்தார். மனிதனுக்கு அடக்கம் தேவைதான். ஆனால், தன்னைப் பற்றி தான் எழுதிய சிறுகதையைப் பற்றி எதுவுமே சொல்லாத அடக் கம் தேவையா? இப்படி எழுதும் நானே அவரோடு 'எழுத்துப்பற்றி பேசவில்லை, அதற்குக் காரணம் அவர் எழுத்தாளர் என்பதே எனக் குப் பிறகுதான் தெரிந்தது.
கூட்டம் முடிந்ததும் பார்வையாளர்களில் பலர் என்னிடம் கை யெழுத்துப் போடச் சொல்லி எனது நூல்களை வாங்கினார்கள். எனக்கு
45 D

Page 25
மாத்தளை சோமு
அதில் பரிபூரண மகிழ்ச்சி. நூல்களின் வெளியீட்டு விழாவில் முகத் திற்காகவும் பதவிக்காகவும் வாங்கப்படுகிற புத்தகங்கள் அதிக விலை கொடுக்கப்படுகின்ற போதிலும் எவரும் அந்த புத்தகங்களைப் படிப்ப தாகத் தெரியவில்லை. அதுகூட வற்புறுத்தி வாங்கப்படுகிறது. நிஜமான வாசகர்களே உள்ளவிலை கொடுத்து புத்தகம் வாங்கும்போது அவர் கள் நூல்களைப் படித்துப் பார்க்கிறார்கள் என்பது உறுதியாகின்றது. இந்நடைமுறையைத்தான் நான் விரும்புகின்றேன்.
Fப்போவுக்கு கார் ஓடியது. காரில் இருந்த கலியபெருமாள் அவர்கள் சொன்னார். “நாளை ஒரு கூட்டுறவு சங்கம் நடத்தும் தோட் டத்திற்குப் போகலாம். மலேசிய தோட்டப்புற மக்களின் வாழ்க்கை யைப் பார்க்கலாம்.” எனக்கு அச்செய்தி உற்சாகம் தந்தது. இலங் கைத் தோட்டப் புறங்களை விட மலேசியத் தோட்டப் புறங்கள் முன் னேறியவை என்று நான் படித்த செய்திகள் சொல்லின, அவைகளை நேரில் பார்க்க வாய்ப்புக் கிடைக்கிறதே!
பொழுது விடியும் போதே கோபத்துடன் சூரியன் வந்தான் சுங்கை சிப்புட் என்ற ஊரில் இலக்கியக் கூட்டம் இருந்தது. அங்குள்ள பூரீ சுப்பிரமணியர் ஆலயத் திருமண மண்டபத்தில் திரு. அமுசு ஏகாம் பரம் அவர்கள் அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். அவர் அப்பகுதியில் தமிழ், இலக்கிய முனைப்புகளுக்கு ஆதரவு கொடுத்து வருபவா.
சுங்கை சிப்புட் மலேசிய மலையகத்து நகர்களில் ஒன்று. தமிழர் கள் அதிகமாக வாழ்கின்ற பகுதி. 1957ல் சுதந்திரம் மலேசியாவின் அமைச்சரவையில் இடம்பெற்ற வீதி, சம்பந்தன் நாடாளுமன்றத்திற்கு உறுப்பினராகத் தெரிவான தொகுதி. இன்றைய மலேசிய இந்தியன் காங்கிரஸ் தலைவரும் அமைச்சரும்மான டத்தோ பூரீ சாமிவேலு வின் தொகுதி. காலை உணவை முடித்துக் கொண்டு தோட்டத்தையும் அங்கு வேலை செய்யும் தமிழர்களையும் பார்க்கக் கிளம்பினோம்.
கலியபெருமாள் எங்களோடு வந்தார். எங்களை ஏற்றிக் கொண்ட கார் ஒரு தோட்டத்தின் கேட்டுக்குள் நுழைந்தது. அது தமிழர்களால் உருவாக்கப்பட்ட கூட்டுறவுச் சங்கத்தின் தோட்டம். இந்த இடத்தில் தலைவர் அமரர் சம்பந்தனைப் பற்றிச் சொல்ல வேண்டும்.
DI 46

மாத்தளை முதல் மலேசியா வரை. D
சுதந்திர மலேசியாவின் முதல் அமைச்சர் வீதி, சம்பந்தன். அது வும் மலேசியாவின் தந்தையென்று சொல்லப்படுகிற பிரதமர் துங்கு அப்துல் ரகுமானின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார். அக் காலத்தில் மலேசிய இந்தியன் காங்கிரசின் தலைவராகவும் இருந்தார். தோட்டப்புற மக்களின் மேம்பாட்டுக்காக கூட்டுறவு சங்கத்தை உண் டாக்கி அந்தக் கூட்டுறவு சங்கத்தில் தமிழர்களைப்பங்குதாராக்கி பல பெரிய தோட்டங்களை விலைக்கு வாங்கினார். அவ்வாறு வாங்கப்பட்டு இயங்கும் ஒரு கூட்டுறவு சங்கத் தோட்டத்துக்குத்தான் நாம் வந்திருக் கிறோம்.
கேட்டிலிருந்த காவலாளி தோட்டக் காரியாலயம் இருக்கும் இடத்தைக் காட்டினார். கலியபெருமாளும். முனியாண்டியும் முன்னே நடக்க நான் கெமராவைத் தோளில் மாட்டியவாறு பின்னே நடந்தேன். சில நிமிடங்களில் தோட்டக் காரியலாயத்திற்குள் நுழைந்தோம்.
முனியாண்டி காரியாலயத்தில் இருந்த ஒருவரிடம், “இவர் ஆஸ் திரேலியாவில் இருந்து வந்திருக்கிறார். தோட்டத்தைப் பார்க்க வேண் டும் என்கிறார். பார்க்கலாமா?.” என்று கேட்டார்.
“நீங்கள் மனேஜரிடம் கேளுங்கள்.” என்றார் அவர்.
தோட்ட மனேஜர் அறைக்குள் போனோம். மனேஜர் எனது கெம ராவை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஒரே வரியில் மறுத்துவிட்டார்.
“தோட்டத்தைப் பார்க்கணும்னா நீங்க கே. எல்.லில் இருக்கும் தலைமை அலுவலகத்தில் அனுமதி வாங்கணும்.”
அனுமதி மறுத்தது கூட விதிமுறை என்று சொல்லலாம். ஆனால் அவர் எங்களை நடத்திய விதம் திருப்தியானதல்ல.
முனியாண்டிக்கு லேசான கோபம். “நான் ஈப்போவில் இருக் கிறேன். இவர் தமிழ்குயில் கலியபெருமாள். இவர் இந்த நாட்டு விருந்தினர். கூட்டுறவுச் சங்கத்தைப் பற்றிப் பெருமையாகச் சொல்லி அழைத்து வந்தோம். அனுமதிக்கு கோலாலம்பூர் போக வேண்டு மென்றால் முடியாத காரியம். போன மாதம் கூட ஒரு கூட்டுறவு சங்கத் தோட்டத்தைப் போய்ப் பார்த்தோம். எந்தப் பிரச்சனையும் இருக்க வில்லை. அனுமதி கிடைத்தது.”
“இந்த தோட்டத்தில் நான்தான் மனேஜர். மற்ற தோட்டத்தைப் பற்றி எனக்குத் தெரியாது. என்னோட பேசவே நீங்கள் அனுமதி எடுத்
47 о,

Page 26
D மாத்தளை சோமு
திருக்கணும். உங்களை உள்ளே விட்டதே தவறு.” என்று கோபமாக பேசினார் தோட்டத்து மனேஜர்.
அந்த மனேஜரின் பேச்சு வெள்ளையர்கள் ஆண்ட காலத்தில் தோட்டத்தில் நடந்த ஆட்சியை ஞாபகப்படுத்தியது. மனேஜர் தமிழர் தான். தமிழர் என்றால் தவறு செய்ய மாட்டாரா என்ன? முனியாண்டி ஏதோ சொல்ல முயன்றார். கலியபெருமாள் அதனைத் தடுத்துவிட்டு சொன்னார். “பேராக்கில் ஒரு தோட்டமா இருக்கு? மத்தத் தோட்டத் துக்கு (பேராக் - மாநிலம்) போகலாமே!”
எல்லோரும் தோட்டத்தை விட்டு வெளியே வந்தோம். அப் போது ஒருவர் எங்கள் பின்னால் ஓடிவந்தார். கலியபெருமாள் அருகில் வந்ததும் சொன்னார். "ஐயா! உங்களை எனக்குத் தெரியும். இந்தத் தோட்டத்தில் நடந்த ஊழல்களைக் கூட்டுறவுச் சங்கம் விசாரிச்கிட்டி ருக்கு. கெமராவோட வந்திருக்கீங்க. மனஜேர் பயந்திட்டாரு. நீங்க பக்கத்திலே ஒரு தோட்டம் இருக்கு போய்ப் பாருங்க”
அவரை யார் என்று விசாரிப்பதற்குள் அவர் போய் விட்டார்.
முனியாண்டி கோபமாக இருந்தார். 'சம்பந்தன் நல்ல மனசோட கூட்டுறவு சங்கத்தை உருவாக்கி தோட்டங்களை விலைக்கு வாங்கி னாரு ஆனா இப்படிப்பட்ட மனேஜர்கள் இருந்தால் சம்பந்தனின் லட்சியம் எப்படி நிறைவேறும்?
O
எல்லோரையும் ஏற்றிக் கொண்டு கார் புறப்பட்டது. முனியாண்டி காரை ஓட்டிக்கொண்டே தோட்டத்து மனேஜரை திட்டிக்கொண்டே வந்தார். அப்போது கலியபெருமாள் சொன்னார். “நாங்க எல்லாரும் கே.எல். ல. இருந்து வந்திருக்கோம்னு மனேஜர் நெனைச்சிட்டாரு. தோட்டத்தில பிரச்சனையா இருக்கிற நேரம் ஏதாவது போட்டோ பிடிச்சி பேப்பர்ல போட்டா இன்னும் பிரச்சனைன்னு நினைச்சிட்டாரு மனேஜர்.” நான் உடனே சொன்னேன். “என் பெரிய கெமராவைப் பார்த்து மனேஜர் பயந்திட்டாரோ"
“ஒரு வேளை தராசு பத்திரிகைப் போட்டோகிராபர்னு நினைச் சாரோ? கலியபெருமாள் சொன்னார் தராசு" என்ற பெயரில் வெளி
D 4

மாத்தளை முதல் மலேசியா வரை. D
வந்த மலேசியப் பத்திரிகை தமிழ்மணியை ஆசிரியராகக் கொண்டு வரும் இதழ். மலேசியத் தமிழர்களிடையே இருக்கிற சமூக அரசியல் (தராசு இப்போது வருவதில்லை) பிரச்சனைகளைப் படம் பிடித்துக் காட்டும் தமிழ் இதழ்.
கலியபெருமாள். இறுதியாகப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத் தார். “இது நல்ல அனுபவம். உங்கள் கட்டுரையில் எழுதலாம்.”
முப்பது நிமிடம் ஓடிய கார் ஒரு தோட்டத்தின் கேட்டருகே நின்றது. நண்பர் முனியாண்டி மட்டும் காரை விட்டுக் கீழே இறங்கி தோட்டக் காரியாலயத்திற்குப் போனார். “நீங்கள்ளாம் காரிலேயே இருங்க நான் மட்டும் அனுமதி கேக்கிறேன்.”
பத்து நிமிடத்தில் முனியாண்டி திரும்பினார். “அனுமதி கிடைத்து விட்டது. ஆனால் அனுமதி கொடுத்தது யார் என்று வந்து பாருங்க.”
எனக்கு ஆச்சரியம்.
காரியாலயத்திற்குள் நுழைந்தோம். அங்கே எங்கள் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்த தோட்ட மனேஜர் ஒரு சீனர். அந்தத் தோட்டமும் கூட்டுறவுச் சங்கத்தைச் சேர்ந்தது. சீன மனேஜர் எங்களை கைகுலுக்கி வரவேற்று என்னிடம் ஆஸ்திரேலியாவைப் பற்றிக் கேட் டார். நான் சிட்னியில் இருந்து வந்ததாகச் சொன்னேன். அவர் தனது நண்பர் மெல்போனில் இருப்பதாகச் சொன்னார். மெல்போர்னுக்கும் சிட்னிக்கும் 950கிலோ மீட்டருக்கும் மேல் இடைவெளி உண்டு என்ற தும் அவர் ஆச்சரியப்பட்டார்.
“சரி. இங்கே என்ன பார்க்க வேண்டும்?” முனியாண்டி சொன்னார். “செம்பனைக் காய்களில் எப்படி எண் ணெய் எடுக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.”
"அப்படியா?” என்ற அந்த சீன மனேஜர் பெல்லை அழுத்தி“குட் வாட்டரை அழைத்து வா” என்று ஒருவரை அனுப்பி வைத்தார்.
சில நிமிடங்களில் ஒரு இளைஞன் அந்த சீனர் முன்னே வந்து நின்றான்.
“இவர்தான் மிஸ்டர் குட் வாட்டர். இவரோடு போங்க எல்லாம் காட்டுவார்.” என்றார் அந்த சீன மனேஜர். எங்களுக்கு அந்த இளை ஞனின் பெயர் வித்தியாசமாக இருந்தது. ஏனெனில் வெள்ளைக்
49

Page 27
மாத்தளை சோமு
காரர்கள்தான் இந்த மாதிரிப் பெயர்களை வைத்துக் கொள்வார்கள். தோட்டக் காரியாலயத்தை விட்டு வெளியே வந்ததும் இளைஞர் எங் களுக்குள் இருந்த புதிரை விடுவித்தார்.” என் பெயர். நல்ல தண்ணீர். அதைத்தான் குட் வாட்டர்னு மனேஜர் சொன்னார். நல்ல மனுசர்.”
அந்த சீனர் நல்ல மனிதர் என்பதை அவரைச் சந்தித்ததுமே உணர்ந்தேன். முந்திய தோட்டத்தில் தமிழ் நிர்வாகி கொடுத்த வர வேற்பு நினைவுக்கு வந்தது. இந்தத் தோட்டமும் கூட்டுறவு சங்கத் தைச் சேர்ந்தது. ஆனால் இந்த சீனர் தலைநகர் கோலாலம்பூருக்குப் போய் அனுமதியெடுத்து வ்ரச் சொல்லவில்லை. கேட்டதும் அனு மதி கொடுத்து விட்டார். ஒன்று புரிந்தது. இங்கே. தமிழரோ, சீனரோ எந்த உயர்வு பதவியில் இருந்த போதும் அவர்கள் மனிதர்களாக இருந்தால் பிரகாசிப்பார்கள் இந்த சீன நிர்வாகியைப் போல்.
முனியாண்டி மலாய் மொழியில் சீனரோடு பேசி நன்றி சொல்லி விட்டு வந்தார். அவரால் ஒரு தமிழன் தோட்ட நிர்வாகியாக இருந்து அனுமதி தரமறுத்ததை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை.
குட் வாட்டர் என்கிற நல்ல தண்ணீர் எங்களோடு கைகுலுக்கி விட்டு பேசினான். “என் பேரு. நல்ல தண்ணீர் என் பேரே ஒரு கேள் விக்குறி. எனக்கு இந்தப் பேரே பிடிக்கல்ல. பேரை மாத்த யோசிச் சேன். அப்பா வேணாம்னு சொல்லிட்டார். ஆண்பிள்ளை இல்லா மல் பத்து வருடத்துக்கு பின்னாடி நல்ல தண்ணீர் முருகனை வேண் டியதால் நான் பிறந்தேன். உடனே முருகனை நினைச்சி நல்ல தண் ணிர்னு வைச்சிட்டாரு. என்னுடைய அப்பா.”
அப்போதுதான் கலியபெருமாள் சொன்னார். “நல்ல தண்ணீர்ங் கிற இடத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் இருக்கிறது. அந்த முருகன்தான் தம்பியைப் பார்த்ததும் நினைவுக்கு வருவது நல்லது தானே?.”
நல்ல தண்ணீர் என்கிற அந்த இளைஞன் புன்னகையை சிந்தி விட்டு, “என்ன என்ன பார்க்கணும் சொல்லுங்க. என்று கேட்டார். நான் உடனே சொன்னேன். முதலில் தோட்ட மக்களின் வீடு களைப் பார்ப்போம். பிறகு செம்பனையில் இருந்து எண்ணெய் எடுப் பது பற்றியும் செம்பனை வளர்ச்சி பற்றியும் பார்ப்போம்!
சிறிது நடந்தோம். அங்கே வரிசையாய் வீடுகள். ஆனால் இலங் கையிலுள்ள தோட்ட லயங்கள் போல் இல்லை. ஒவ்வொரு வீடும்
O 50

மாத்தளை முதல் மலேசியா வரை. o
தனியான நிலப்பரப்பில் கட்டப்பட்டிருந்தது. பல படுக்கை அறை களைக் கொண்ட வீட்டின் முன்னே மரம், மலர்ச்செடிகள் இருந்தன. ஒரு வீட்டின் உள்ளே சென்று பார்த்தேன். உண்மையில் மலேசியத் தோட்டத் தொழிலாளர்கள் அதிர்ஷ்டசாலிகள். அந்த நாட்டு அரசும் தலைவர்களும் அவர்களின் உழைப்பைப் புரிந்துகொண்டு போற்றி யிருக்கின்றார்கள். மலேசியத் தோட்டத் தொழிலாளர்களின் வசதிகள் பெருக மலேசிய இந்தியன் காங்கிரஸ் தலைவர் சம்பந்தன் கடுமை யாக உழைத்திருக்கின்றார் என்பதும் விளங்கியது.
அந்த வீடுகளைச் சுற்றிக் காட்டிய நல்ல தண்ணீர், தோட்ட மக் களின் வசதிக்காக விளையாட்டு மைதானம், நூலகம், ஆலயம், பள் ளிக் கூடம் என்பன இருப்பதாகச் சொன்னார்.
“மின்சாரம் உண்டா?”
“எல்லாத் தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளுக்கும் மின்சாரம் உண்டு. இங்கு காசு போட்டு பேசுகிற பொதுத் தொலைபேசி அமைக்கப் பட்டுள்ளது. இந்த மின்சாரம் வந்த பிறகு தோட்ட தொழிலாளர் களின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால்.” என்று இழுத்தார் நல்ல தண்ணீர்.
என்ன என்பது போல் அவரையே பார்த்தேன். அவர் தொடர்ந்து பேசினார். “இங்கு எல்லா வசதியும் உண்டு. ஆனால் படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமையால் விதியையும் வாழ்வையும் நொந்து கொண்டிருக்கிற தமிழர்களே இங்கு அதிகம். என் தந்தையின் முயற்சியால் நான் படித்தேன். எனக்கு மலாய், ஆங்கிலம், சீனம் பேச முடியும். ஆனால் நம்மவர்கள் சிலர் சினிமா பார்ப்பதில் காட்டகிற ஆர்வத்தை கல்வியில் காட்டுவதில்லை. மூட நம்பிக்கைகளை இன்னும் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.” நல்ல தண்ணீரின் கவலை பெருவாரியான தமிழ் மக்களின் நிலையைக் காட்டுவதாக இருந்தது.
எல்லோரும் நல்ல தண்ணீர் பின்னே நடந்தோம். போகிற வழி யில் செம்பனையைப் பற்றி ஒரு புராணமே சொன்னார் நல்ல தண்ணீர்.
'தென்னை மரத்துக்கு தம்பி போலவும் பனை மரத்துக்கு பங் காளி போலவும் இருக்கும் இந்தச் செம்பனை (Palm Oil) மரத்துக்கு கிளை கிடையாது. இதன் தாயகம் ஆப்பிரிக்கா. விதை போட்டு
5

Page 28
0 மாத்தளை சோமு
முளைக்க 55 நாட்களாகும். பிறகு அதனை இரண்டு முதல் ஆறு மாதத்தில் தோட்டங்களில் நடுவார்கள். சரியாக 3 வருடத்தில் இந்த மரத்தில் செம்பனைப் பழங்கள் கிடைக்கும். இதிலிருந்துதான் எண் ணெய் எடுக்கப்படுகிறது. பழங்கள் பார்க்க பலாப்பழம் போல் பெரிய அளவில் இருக்கும் செம்பனைப் பழங்களை வெட்டிக் கீழே இறக்கு வார்கள்.
செம்பனை மரங்களை வரிசையாக நட்டிருப்பார்கள். ஒரு தடவை பார்த்த மரத்தை மறு தடவை பார்க்க இரண்டு வாரங்களாகும். ஒவ் வொரு ஆறு மாதமும் கவ்வாத்து வெட்டுவார்கள். அனேகமாக அதிக தண்ணீரை இந்த மரங்கள் உறிஞ்சுவதால் சதுப்பு நிலத்தில் நடுவார்கள். ஒரு ஏக்கருக்கு செம்பனைப் பழங்கள் 6 தொன் முதல் 12 தொன் வரை கிடைக்கும். ஒரு தொன் எண்ணெயின் மொத்த விலை 1200 டாலர். இன்று இதுதான் மலேசியவுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரு கிறது. பிளாஸ்டிக் வருகையால் ரப்பர் மரங்களை நீக்கி விட்டு அந்த இடங்களில் செம்பனை மரங்களை நட்டு வருகின்றார்கள்.
செம்பனைப் பழ்ங்களிலிருந்து எண்ணெய் எடுக்கிற தொழிற் சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தபோது கலியபெருமாள் அங்கு வந்திருந்த ஒருவரை எனக்கு அறிமுகம் செய்தார்.
“இவர்தான் அமுசு. ஏகாம்பரம். சுங்கை சிப்புட் இலக்கியக் கூட்டத்தை ஏற்பாடு செய்கிறார்.”
நான் அவருக்கு வணக்கம் தெரிவித்தேன். பதில் வணக்கம் வரவேற்புச் செய்தார் அவர் பிறகு எங்களோடு அவரும் வந்தார்.
இப்போது மலையாக குவிந்து கிடந்த செம்பனை பழங்களைப் பார்த்தோம். தொழிற்சாலையிலிருந்து எண்ணெய் வாடை காற்றில் மிதந்தது. ஒரு செம்பனை ப்ழத்தை அமுசு. ஏகாம்பரம் தூக்கிக் காட் டினார். அவர் தூக்கிய முறையிலேயே அந்தப் பழம் பாரமானது என் பதை தெரிந்து கொண்டேன். எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்து விட்டு காரின் அருகே வந்தோம். மனதுக்குள் அந்த சீன நிர்வாகிக்கு நன்றி சொன்னேன். எங்களை வழியனுப்ப நல்ல தண்ணீர் வந்தார். அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன்.
“இந்தத் தோட்டத்தில் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள்? சீனர்கள், மலாய்க்காரர்கள் வேலை செய்கிறார்களா?”
D 52

மாத்தளை முதல் மலேசியா வரை.
“இந்த தோட்டத்தில் சீனர்கள், மலாய்க்காரர்கள் இல்லை. பெரும் பான்மையானவர்கள் தமிழர்கள். ஆனால் பங்களாதேசிகள் இருக்கி றார்கள்’
நான் மிகுந்த ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தேன். பங்களர் தேசிகள் வேலை செய்கிறார்களா? என் கேள்விக்குமுனியாண்டி ஒரு நீண்ட பதிலைத் தந்தார்.
மலேசியத் தோட்டப் பகுதித் தமிழர்களிடையே ஒரு பரவலான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இது மலேசிய நாட்டில் ஏற்பட்ட விழிப் புணர்வின் தாக்கமேயாகும். இப்போதைய மலேசியப் பிரதமர் டாக்டர். மஹாதீர் அவர்களின் புதிய வழிகாட்டுதலில் மலேசியாவில் புதிய தொழிற்சாலைகள் புதிய தொழில் நுட்பங்களில் தொடங்கப்பட்டுள்ளன. நகரங்களை இணைக்கின்ற பாதைகள் நவீனமாகி விட்டன. பெரிய கிராமங்கள் நகரங்களாக மாறி வருகின்றன. கடுமையாக உழைப்பவர் களுக்கு எல்லாம் சொந்தம் என்றாகியது.
பிரதமர் டாக்டர் மஹாதீரின் மந்திரி சபையில் தமிழர், சீனர்களும் இடம்பெற்றுள்ளனர். சொல்லப் போனால் பிரதமரின் தேசிய முன்ன னியில் பல கட்சிகள் இருக்கின்றன. மலேசிய இந்தியன் காங்கிரஸ், (மஇகா) மலேசிய சீனக் கட்சி என்பன அதிக முக்கியமானவை. இப் போதைய பிரதமர் மூவினத்தையும் அனுசரித்து ஆட்சி செய்து வரு கின்றார்.
2020ல் மலேசியாவை சக்திமிக்க நாடாக மாற்ற வேண்டும் என் பது அவர் கனவு. அது இப்போதே திட்டமாகச் செயல்படத் தொடங் கியிருக்கிறது. இதில் உருவான வளர்ச்சி மாற்றங்கள் மலேசியா முழு மைக்கும் பரவியுள்ளது. தோட்டங்களிலும் பரவியுள்ளது. இதனால் பல தமிழ் மக்கள் தோட்டங்களை விட்டு நிரந்தரமாக வெளியே வந்து புதிய பாதையை அமைத்துக் கொண்டனர். எனவே தோட்டங்களில் வேலை செய்ய ஆள் பற்றாக்குறை ஏற்படவே பங்களாதேஷ் நாட்டி லிருந்து தொழிலாளர்கள் கொண்டு வரப்பட்டனர். அவ்வாறு கொண்டு வரப்பட்டவர்களே பல தோட்டங்களில் வேலை செய்கிறார்கள்.
53

Page 29
п மாத்தளை சோமு
முனியாண்டி அவர்கள் கொடுத்த பதிலில் ஒன்றைப் புரிந்து கொண்டேன். தோட்டங்கள் தான் நமது பரம்பரையின் தொட்டில் என்று நம்ப வைத்தவர்களின் எண்ணத்தை மாற்றி தொழிலாளர்கள் புதிய வழி தேடும் அளவுக்கு கல்வியும் விழிப்புணர்வும் தற்போது இருக்கிறது. நாட்டின் அரசியலும் அதை அங்கீகரிக்கிறது. மேலும் அவர்கள் விட்டுச் சென்ற இடங்களுக்கு வெளிநாட்டில் இருந்து மக் களைக் கொண்டு வருகிறார்கள் என்றால் அந்தத் தொழில் வருமானம் மிக்கது என்பதும் புரிகிறது.
நல்ல தண்ணீர் என்கிற அந்த இளைஞனுக்கு நன்றி சொல்லி விட்டு புறப்பட்டோம். கார் சுங்கை சிப்புட் நகருக்கு வந்து ஒரு வீட்டின் முன்னே நின்றது. எங்களோடு வந்த அமுசு. ஏகாம்பரம் அவர்கள் எங்களுக்கு தர இருந்த பகல் உணவின் ஏற்பாட்டுக்காக தன் வீட்டுக் குப் போய் விட்டார்.
அந்த வீட்டிற்குள் எங்களை கலிய பெருமாள் அழைத்துச் சென் றார். அது சுங்கை சிப்புட் பெரியவர் அமுசு. பெரிய சாமியின் வீடு.அவர் சுங்கை சிப்புட்டில் முக்கியமானவர். மலேசியாவில் தமிழுக்கும் கலை களுக்கும் தொண்டு செய்தவர். அவரின் தந்தையார் மகாத்மா காந்தி யின் பெயரில் இருக்கும் கல்விக் கூடத்துக்கு இரண்டு ஏக்கர் நிலம் நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார். தந்தையின் வழியில் தொண் டைத் தொடங்கிய அவரின் முயற்சியால் கவியோகி சுத்தானந்த பார தியார், கிருபானந்த வாரியார், கி.வா. ஜகந்நாதன், முன்னாள் ஐ.நா. தலைவி திருமதி விஜயலட்சுமி பண்டிட் ஆகியோர் சுங்கை சிப்புட் நகருக்கு வந்திருக்கிறார்கள். உலகின் பல நாடுகளுக்குச் சென்று வந்த அவர் கப்பல் வாங்கி ஒரு கம்பனியை நடத்தியிருக்கிறார்.
எழுபத்தைந்து வயதான பெரியவர் அமுசு. பெரியசாமியைச் சந்தித்துப் பேசிவிட்டு அவரின் தம்பி அமுசு. ஏகாம்பரத்தின் வீட்டிற் குப் போனோம். வீட்டில் தடயுடலாக விருந்துக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அந்த வீடு அமைந்திருந்த இடம் இயற்கை யின் ஆட்சியில் இருந்தது. எனக்கு மாத்தளை நகரின் ஞாபகம் வந் தது. அந்த சுங்கை சிப்புட் நகரம் மாத்தளையைப் போல் தோட்டங்கள் நிறைந்த பகுதியாகும். , - .
விருந்து தொடங்குவதற்கு முன் அமுசு. ஏகாம்பரம் தன் மனைவி பிள்ளைகளை அறிமுகப்படுத்தினார். மனைவி இலங்கையைச் சேர்ந் தவர். கண்டி மாவட்ட கலஹா நகரைச் சேர்ந்தவர்.
O 54

மாத்தளை முதல் மலேசியா வரை.
ஒரு சுவையான விருந்தை உண்டு விட்டு சிறிது நேரம் ஒய்வெடுப் பதற்காக உட்கார்ந்தோம். கலியபெருமாளும் முனியாண்டியும் கண் களை மூடிக்கொண்டு தியானம் செய்வதைப் போலிருந்தார்கள். நான் கண்களை மூடினால் தூங்கி விடுவேன் என்பதால் அன்றைய ஆங் கிலப் பத்திரிகையைப் பிரித்துப் பார்த்தேன். ரப்ப்ர் மரத்தைப் பற்றி அற்புதமான தகவல்கள் வந்திருக்கின்றன.
எப்போதும் மிதப்பிலே கவனம் கொண்ட மீன் பிடிகாரனைப் போல் தகவல் சேகரிப்பதிலேயே கவனம் கொண்டவன் நான். எந்த நாட்டுக்குப் போனாலும் உடனே அந்த நாட்டுப் பத்திரிகைகள் வாங்கு வேன். மலேசியாவில் இருந்த காலத்தில் என்னால் தமிழ் ஆங்கில தினசரிகள் விற்பனை கூடியிருக்கும் என்று எண்ணுகின்றேன். இன்று காலை வாங்கிய பத்திரிகையிலே அந்த அற்புத தகவல்.
மலேசியாவுக்கு 1877ம் ஆண்டு வெள்ளைக்காரனான ஹென்றி வித்ஹாம் என்பவரால் பிரேசில் நாட்டு அமேசன் காட்டுப் பகுதியில் இருந்து 22 ரப்பர் விதைகள் திருடப்பட்டு கொண்டு வரப்பட்டன. பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு ஜாலன் அம்பாங் என்ற இடத்தில் பரிட்சார்த்தமாக விதைகள் நடப்பட்டன. 1899ல் முழுமையான ரப்பர் மரங்கள் உண்டாகியிருந்தன. ஜாலான் அம்பாங் என்ற இடம் தான் ரப்பர் தொழிலில் உலக தலைநகராக மாறியது. ரப்பர் தொழிலில் வேலை செய்வதற்காக இந்தியாவில் இருந்து குறிப்பாக தமிழ் நாட்டிலிருந்து மக்கள் வரவழைக்கப்பட்டார்கள்.1905ல் 130 தொன் ரப்பரை மலேசியா பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்தது. 1912ல் ரப்பரின் தாயகமான பிரே சிலை விட மலேசியா உற்பத்தி செய்தது.
மலேசியாவின் சிறந்த ரப்பர் உற்பத்திக்கு வந்த நாட்டின் கால நிலையும் தமிழர்களின் உழைப்பும் காரணங்களாகும். இன்று இந்தோ னேசியா, தாய்லாந்து, வியட்நாம், பூரீலங்கா, இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் ரப்பரை உற்பத்தி செய்தபோதும் மலேசியாதான் அதில் முன்னணியில் இருக்கிறது. ரப்பர் உற்பத்தி மூலம் அந்நிய செலா வணி மலேசியாவுக்கு நிறையவே கிடைக்கிறது. பிளாஸ்டிக்கின் வரு கையால் ரப்பரின் வருமானம் குறைந்ததால் மலேசியா செம்பனை (Palm Oil) மரங்களை நட்டு எண்ணெய் வர்த்தகத்தில் தீவிரமாக இறங் கியது. இன்று பல ரப்பர் தோட்டங்கள் செம்பனைத் தோட்டங்களாகி விட்டன.
55

Page 30
a மாத்தளை சோமு
ஒரு குட்டித் தூக்கம் போட்ட கலியபெருமாள் கண் விழித்து என்னைப் பார்த்தார். “தூங்கலியா?”
“நான் தூங்கினா கூட்டத்துக்கு வர முடியாது. உங்களைப் போல் குட்டித் துக்கம போட முடியவில்லை. எனவே ரப்பர் மரத்தைப் பற்றி வந்த கட்டுரையைப் படித்தேன்.”
முனியாண்டி குட்டித் தூக்கத்தில் இருந்தார்.
“ஈப்போவில் ஒரு நூற்றாண்டுக்கு மேலான ரப்பர் மரம் இருக் கிறது போய்ப் பார்ப்போம்.” என்றார் கலியபெருமாள்.
“அப்படியா? ரப்பர் மரங்கள் பார்த்திருக்கின்றேன். ஆனால் நூற்றாண்டுக்கு மேல் இருக்கும் ரப்பர் மரத்தை பார்த்ததில்லை. பார்ப்போம்.” என்றேன் நான்.
இரவு ஏழு மணிக்கு சுங்கை சிப்புட் சுப்பிரமணியர் ஆலயத் திருமண மண்டபத்தில் கூட்டம். கலியபெருமாள் தலைமை. மலேசிய இந்து சங்கப் பேரவையின் சுங்கை சிப்புட் கிளையின் சார்பில் அமுசு. ஏகாம்பரம் அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். கோயில் மண்டபத்தில் நடந்த அந்த இலக்கியக் கூட்டம் எனக்குப் புதுமையாக இருந்தது. இலக்கியக் கூட்டம் என்றாலே கதவை மூடிக் கொள்ளும் ஆலயங்கள் மத்தியில் இந்த ஆலயத்தின் இலக்கிய நேசம் பாராட்டுக்" குரியது. அந்தக் கூட்டம் மூடிய இரவு பத்தரையாகி விட்டது. அதன் பிறகு எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டு கலியபெருமாள் வீட்டிற்குப் போனோம். அங்கு உணவு வகைகளைப் பரிமாறக் காத் திருந்தார் கலிய பெருமாள் அவர்களின் மனைவி. அவரும் பல சிறு கதைகளை எழுதியிருக்கிறார்.
இரவு உணவுக்கு பத்தரைக்கு வந்ததற்கான காரணத்தைச் சொன்னேன்.
கலியபெருமாளின் மனைவியார் சிரித்துக் கொண்டே என்னு டைய கணவனும் ஒரு எழுத்தாளர் பேச்சாளர். இது புதிய விடயம் அல்ல. பழக்கமானது தான். சொல்லப் போனால் இன்று நேரத்தோடு வந்து விட்டீர்கள். பொதுவாக சனி, ஞாயிறு,திங்களில் இரவு சாப்பாடு உண்பதே நள்ளிரவில் தான்.
D. S.

மாத்தளை முதல் மலேசியா வரை. D
கலியபெருமாள் அவர் மனைவி சொன்னதைக் கேட்டு புன்னகை புரிந்தார். அது தான் அவரதும் பதில் போலும்.
2
அந்தப் பூங்காவின் பெயரைப் பார்த்ததும் எனக்குள் இன்ப அதிர்ச்சி. ஈப்போ மாநகர எல்லைக்குள் நகரோடு ஒட்டியிருக்கிற ஒரு பூங்கா. அது ஒரு தமிழரின் பெயரைத் தாங்கி நிற்கிறது. திரும்பவும் அந்தப் பெயரைப் பார்த்தேன். டி. ஆர். சீனிவாசகம் பூங்கா. நான் அதைப் பற்றிக் கேட்பதற்குள் முனியாண்டியே விளக்கம் கொடுத்தார்.
ஈப்போவில் இந்திய மக்களின் குறிப்பாகத் தமிழரின் அரசி யலை முன்னெடுத்து சென்றவர் டி.ஆர். சீனிவாசகம். அவர் நினை வாக இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பூங்காவைச் சுற்றிப் பார்த்தோம். அப்போது எங்களோடு வந்த பெருமாள் ஒரு மரத்தைக் காட்டி என்னிடம் கேட்டார்.
“இந்த மரத்தின் பெயர் தெரியுமா?”
“தெரியாது.”
“சரி. ஒரு விடுகதை சொல்கிறேன். இந்த மரத்தின் பெயரும் ஒரு ஊரின் பெயரும் ஒன்று.”
நண்பர் முனியாண்டி புன்னகைத்தார். அவருக்குப் பெயர் தெரியும் போல.
மீண்டும் சொன்னேன். “நீங்களே சொல்லி விடுங்கள்.
“இந்த மரத்தின் பெயரும் ஈப்போ. இதன் பட்டை நஞ்சுத் தன்மை கொண்டது. வேட்டையாடுபவர்கள் இந்த மரத்தின் பட்டையை அரைத்து ஊசியில் தடவி விசுவார்கள். ஊசி குத்தப்பட்ட மிருகம் சில நிமிடத்தில் விஷம் பரவி கீழே விழுந்து விடும்.” என்றார் பெரு மாள். அவரை காலைதான் முனியாண்டி அறிமுகம் செய்து வைத்தார். அவ்வப்போது முனியாண்டிக்கு நட்பு அடிப்படையில் காரை ஓட்டி உதவுவார் அவர். இன்று முழுக்க காரை ஓட்டப் போவதும் அவர் தான.
57

Page 31
D மாத்தளை சோமு
ஈப்போ மரத்தைப் பார்த்துக் கொண்டிருந்த என்னை முனியாண்டி அழைத்தார்.
“இன்னும் ஒரு மரத்தைப் பார்க்க வேண்டும் 100 ஆண்டு வய தான் ரப்பர் மரம். வேகமாக பார்த்து விட்டு வாங்க.”
கார் சிறிது தூரம் ஓடி ஒரு இடத்தில் நின்றது. காரைவிட்டு இறங் கிப் போனோம். 100 ஆண்டுகள் ஆகியும் தலை நிமிர்ந்து நிற்கும் ரப்பர் மரத்தைப் பார்த்தோம். ரப்பர் மரங்களுக்கு ஈப்போ வட்டாரம் புகழ் பெற்றது. மலேசியாவில் முதன் முதல் ரப்பர் உற்பத்தி செய்த இடமே ஈப்போதான்.
100 ஆண்டுகள் ஆன அந்த ரப்பர் மரத்தைப் பார்த்தேன். இன் னும் அது கம்பீரமாகவே பத்து தசாப்தம். நான்கு வெள்ளி விழா. இரண்டு பொன்விழா. என்று சொல்லக் கூடியதாக 100 ஆண்டுகள் கடந்தும் நெடிதுயர்ந்து நிற்கின்றது அம்மரம். சுற்றி வரக் கட்டிடங் களின் மத்தியின் ஒரு அரசு அலுவலகத்தின் முன்னே ஒரு நினைவுச் சின்னமாக நிற்கிற அம்மரத்தின் மீது வெய்யில் அதிகமாக பட வாய்ப் பில்லாமல் போய்விட்டது. வெய்யில் ரப்பர் மரத்திற்குப் பிடித்த மானது. தேயிலைக்கு மழை பிடிக்கும். வெய்யில் பிடிக்காது.
அங்கிருந்து ஒரு அழகான கட்டிடங்களைக் கொண்ட ஒரு கல் லூரிக்குப் போனோம்.
“இது லண்டனில் இருக்கிற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைப் போன்று கட்டப்பட்ட கல்லூரி.” என்றார் முனியாண்டி
லண்டனுக்கு நான் போனதில்லை (1995). எனவே கேம்பிரிட்ஜ் போல் கட்டப்பட்ட அந்தப் பிரிமியம் மெடிக்கல் காலேஜ் கட்டிடத் தைப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டேன்.
அந்தக் கல்லூரியைப் பார்த்து விட்டு பகல் உணவுக்காக ஒரு இடத்திற்குப் போனோம். அந்த இடத்தை "கிட்டங்கி என்று அழைத் தார்கள். நகரத்தார் செட்டியார்கள் அதிகமாக அந்தப் பகுதியில் இருந்த போது தமிழ் மணத்தோடு அது இருந்தது. இன்று அவர்களின் தொகை குறைந்த போதும் அந்தப் பெயர் அவர்களை நினைவு படுத்திக் கொண்டிருக்கிறது.
அந்தக் கிட்டங்கியில் இருந்த இந்தியர்கள் சங்க மண்டபத்தில் இயங்கியது ஒரு உணவகம். ஒரு தமிழ்க் குடும்பம் அதனை நடத்து
D 58

மாத்தளை முதல் மலேசியா வரை.
கிறது. இலைச் சாப்பாடு. சமையல் 'செட்டி' நாட்டை ஞாபகப்படுத்து கிறது. காரம், மனம், குணம் என்பனவற்றோடு சாப்பிட்டு விட்டுப் புறப் பட்டோம். வெளியே சூரியன் கோபமாக வானில் இருந்தான். நல்ல வெய்யில்.
அடுத்து நாங்கள் ஈப்போவின் முக்கிய சுற்றுலா பகுதியாக இருக் கும் ஒரு சீனக் கோயிலுக்குப் போனோம். அந்தக் கோயில் ஒரு பெரிய கற்பாறையோடு அமைக்கப்பட்டிருந்தது. உள்ளே போனேன். பெரிய புத்தர் சிலை கற்பாறையில் செதுக்கப்பட்டிருந்தது. உள்ளே பயபக்தியோடு நடந்தபோது ஒரு இடத்தில் இருந்த சிலையைப் பார்த்து வியந்தேன். அதனை உற்றுப் பார்த்தேன். கையில் வீணை. சீன முகத்தில் பெண் உருவம்.
பெருமாள் சொன்னார். “இதுதான் சீன சரஸ்வதி.”
அவர் சொன்னது சரி. உண்மையிலேயே அது சீன சரஸ்வதி தான். சீனர்கள் கல்விக்கு இந்துக்களைப் போல் விளங்கும் தெய்வம். அதே போன்று சீனக் காளியும் சிலையாய் அங்கிருந்தது. அதனையும் பார்த்துவிட்டு தேவையான படங்களைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தோம். வெளியே வெள்ளைக்காரப் பயணிகளை ஏற்றிய சொகுசு பேருந்து அந்த சீனக் கோயிலுக்குள் நுழைந்தது.
இந்த சீனக் கோயிலைப் பார்க்கின்ற போது மலேசியாவில் சீனர் கள் பழைமையான இந்த மண்ணோடு நன்கு வேர் ஊன்றிய சமூகமாக இருக்கிறதே? என்று முனியாண்டியிடம் கேட்டேன். அவர் அதற்கு ஒரு நீண்ட விரிவுரை செய்தார்.
மலேசியாவில் சீனர்கள் இரண்டாவது பெரும்பான்மையினர். அவர்கள் இந்துக்களைப் போல் இறைவழிப்பாட்டில் தீவிரம் உடைய வர்கள். புத்த சமயத்தவர்கள். சடங்கு சம்பிரதாயம் கொண்டவர்கள். சோதிடம், பில்லி, சூனியம், மந்திரம் என்பனவற்றில் நம்பிக்கை கொண்டவர்கள். ஆனால் கடினமான உழைப்பாளிகள். ஒரு தொழில் என்றால் முழுக் குடும்பமுமே சேர்ந்து உழைக்கும். விதவிதமான உணவு வகைகளைப் படைத்து மக்களைத் தம் பக்கம் இழுப்பவர்கள்.
ஒரு காலத்தில் மலாய்க்காரர்களுக்கும் சீனர்களுக்கும் இடையே கசப்புணர்வு உண்டாகி இனக்கலவரமே வந்தது. அது நீண்ட காலத் திற்கு முன்பு. இன்று அப்படியான பிரச்சனைகள் இல்லை,
59 DI
b

Page 32
D மாத்தளை சோமு
இரு சமூகத்திடையேயும் கசப்புணர்வு உண்டு. கல்வியில் மேம்பட் டாலும் சீனர்கள் என்பதால் பதவி உயர்வு கிட்டாமை. இஃது மலே சியத் தமிழர்களுக்கும் பொருந்தும். மலாய் மொழியில் மேற்படிப்பு. பூமி புத்ராக்களுக்கு (மலாய்க்கரார்கள்) மாத்திரமே சலுகை என்பன அதற்குக் காரணங்களாகும்.
ஒரு மலாய்க்காரர் மலாய் மொழி மட்டும் படித்தால் போதுமா னது. தமிழர் தமிழும் மலாயும் ஆங்கிலமும் சீனர், சீனம் மலாய் ஆங் கிலமும் படிக்க வேண்டும். இந்நிலையிலும் சீனரும் தமிழரும் பெருஞ் சாதனைகளைச் செய்து வருகிறார்கள். மலாய்க்காரர்கள் தாய்மொழி மட்டும் படித்து அறிவு பெற்றபோதும் சர்வதேசத்தோடு கை குலுக்க முடியாது தவிக்கிறார்கள். ஆங்கிலம் தெரியாத மலாய் டாக்சி டிரைவர் களால் வெளிநாட்டுப் பயணிகள் பல சங்கடத்தை அனுபவித்து (என் னையும் சேர்த்து) தவித்திருக்கிறார்கள்.
தாய்மொழி அவசியம், இதில் மறுப்பில்லை. தாய்மொழி மட்டும் என்கிற போது எல்லைகள் சிறுத்தும் போகின்றன. இதனைக் காலங் கடந்து உணர்ந்த இப்போதைய பிரதமர் டாக்டர் முகமது மஹாதீர் ஆங்கிலம் எல்லோரும் படிக்க வேண்டும் என்று சொல்லத் தொடங்கி யிருக்கிறார். அவரும் ஒரு மருத்துவ (MBBS) டாக்டர். ஆங்கிலம் தெரியும்.
மீண்டும் காரில் ஏறி தைப்பிங் என்ற இடத்திற்குப் போனோம். இம்முறை காரை ஒட்டியது முனியாண்டியே. எனக்காக விடுமுறை எடுத்திருந்தார். V−
என் சிந்தனை சீனர்களையே சுற்றி வந்தது. மாத்தளையில் எனக் குத் தெரிய ஒரு சீனர்தான் பல் கட்டும் கிளினிக் வைத்திருந்தார். இரண் டாம் உலகப்போரின் போது சீனர்கள் வீதி வீதியாகப் பட்டுத்துணி விற்றதாக என் அப்பா சொல்வார். கொழும்பில் விரல்விட்டு எண்ணக் கூடிய சீனர்கள் இருக்கிறார்கள். முதன்முதலில் அதிகமான சீனர்களை நேருக்குநேர் சிங்கப்பூரில் பார்த்தேன். ஆஸ்திரேலியா வந்த பிறகு தான் அவர்களைப் பலவகையில் உணர்கின்றேன். சிட்னியில் வெள் ளைக்காரர்கள் மத்தியில் சீன உணவே பிரசித்தம். சிட்னியில் நூற்றுக் கணக்கான சீன உணவகங்கள் இருக்கின்றன. சீன உணவகம் இல்லாத கிராமப்புற நகர் இல்லை என்பது போல் ஆஸ்திரேலியாவின் எல் லாப் பகுதிகளிலும் கால் பதித்திருக்கிறார்கள் அவர்கள்.
O 60

மாத்தளை முதல் மலேசியா வரை.
சீன மொழியில் பல நாளிதழ்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து வருகின்றன. சிட்னியில் ஒடும் ரயில்களில் உட்கார்ந்து சீனமொழி நாளிதழ்களைப் படிக்கிற சீனர்கள் இருக்கிறார்கள். ஒரே இடத்தில் சீனர் கள் அடுத்தடுத்து கடைகள் திறந்திருக்கிறார்கள். அவர்களின் அந்த ஒற்றுமை, புரிந்துணர்வு ஒரு பலத்தைக் கொடுத்துள்ளது. ஆனால் தமி ழர்கள்? அவர்களிடம் எல்லாம் இருந்தும் ஒற்றுமை புரிந்துணர்வு மட்டும் இல்லை. இதனால் அவர்களது முன்னேற்றத்திற்கு அவர்களே தடையாக இருக்கிறார்கள்.
3
மலேசியாவின் இயற்கை எழில் கொண்ட நகரங்களில் தைப் பிங் நகரமும் ஒன்று. ஒரு காலத்தில் ஈயச்சுரங்கம் நிறைந்த இந்நகரம் இன்று பார்ப்போர் வியக்கும் வண்ணம் மக்கள் போற்றும் அழகிய சிறிய நகரமாகக் காட்சியளிக்கிறது. வெளிநாட்டுப் பயணிகளையும் வரவழைக்கும் எழில் கோலத்துடன் விளங்கும் லேக் கார்டன் இந் நகரில் இருக்கிறது. தமிழர்கள் வாழ்கிற பூமி. மலேசியத் தமிழ் எழுத் துக்கும் இலக்கியத்துக்கும் உந்து சக்தியாக இருக்கும் பிரதேசம். அங்கு ஒரு கலந்துரையாடல் ஏற்பாடாகியிருந்தது.
மாலை நேரத்தில் தைப்பிங் தமிழர் சங்கத்தின் ஏற்பாட்டில் அருள் மிகு நாகமுத்து மாரியம்மன் கோயில் அன்னை வண்ணத் திருக் கோல அரங்கில் இலக்கியக் கலந்துரையாடல். அதற்குத் தலைமை தாங்கியவர் தைப்பிங் தமிழறிஞர் தமிழ்ச்சீலர் மா.செ. மாயதேவன். தமிழக எழுத்தாளர் வல்லிக்கண்ணனை ஒத்த உருவம். வயதில் சற்று வல்லிக்கண்ணனை விட இளையவர், எழுத்தாளர், மலேசியா வரு கிற எழுத்தாளர்கள். கவிஞர்கள். தைப்பிங் வந்தால் அவரைப் பார்க் காமல் போக மாட்டார்கள்.
கலந்துரையாடல் திங்கட்கிழமை நடைபெற்ற போதும் மண்ட பத்தில் கூட்டம் நிறைந்திருந்தது. கோயில் மண்டபத்தில் நடந்த அந்த இலக்கியக் கூட்டம் எனக்குப் பிடித்திருந்தது. அதே நேரத்தில் என் நினைவுகள் சற்றுப் பின்னோக்கி ஓடின. மாத்தளையில் இருந்தபோது முத்து மாரியம்மன் கோயிலில் ஒரு நூலகம் திறக்கக் கேட்டபோது அதற்கு மறுப்பும் பிறகு அதற்கெதிராகப் போராடியதும் நினைவுக்கு வநதது.
6

Page 33
0 மாத்தளை சோமு
மலேசிய சிறுகதை எழுத்தாளர் ந. வரதராஜனின் வரவேற்புரைக் குப் பிறகு தமிழ்ச்சீலர் மா.செ. மாயாதேவன் தலைமை உரையாற்றி
60.
“ஆஸ்திரேலிவாயில் இருந்து தமிழகம் செல்லும் வழியில் மலே சியாவுக்கு வந்திருக்கும் எழுத்தாளர் மாத்தளை சோமுவை தைப்பிங் நகரம் அன்புடன் வரவேற்கிறது. தைப்பிங் நகரம் தமிழ் இலக்கியத் திற்கும் எழுத்திற்கும் பாடுபட்டவர்களை வரவேற்கத் தயங்காத நக ரம். தைப்பிங் நகரத்திற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் எழுத்திற்கும் பாடு பட்டவர்களை வரவேற்கத் தயங்காத நகரம். தைப்பிங் நகரத்திற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் இருபது வருடத்திற்கு மேற்பட்ட நல்லுறவு உண்டு. இன்று இந்நகரில் மலேசியாவின் முன்னணி எழுத்தாளர்கள், கவிஞர்கள் பலர் இருக்கிறார்கள். எழுத்தாளர் மாத்தளை சோமு சாகித் திய அக்டமி பரிசில் பெற்ற நாவலின் பிரதிகளைக் கொண்டு வந்திருப் பதாக அறிகின்றோம். அதுபற்றி அவர் முன்னரே எமக்குத் தெரிவித் திருந்தால் புத்தகங்கள் விற்பனைக்கு ஏதுவான நடவடிக்கை எடுத் திருக்க முடியும் என்று சொன்ன போது, எழுத்தாளர் சொன்ன பதில் என்னை ஆச்சரியப்பட வைத்தது.”
ஒரு விநாடி பேச்சை நிறுத்தி என்னைப் பார்த்தார், தமிழ்ச்சீலர் மாயதேவன். பிறகு பேசினார். “புத்தக விற்பனைக்காக நான் வர வில்லை. மலேசியாவைப் பார்க்க, குறிப்பாகத் தமிழர்களை சந்திக்க இங்குள்ள தமிழ் எழுத்து முயற்சிகளைப் பற்றி அறியவே வந்திருக் கிறேன் என்று என்னிடம் சொன்னார் மாத்தளை சோமு.”
இதனைக் கேட்டு நான் மகிழ்ந்தேன்.
“கடந்த காலங்களில் புத்தக விற்பனையே நோக்கமாகக் கொண்டு பலர் வந்தார்கள். அவர்களை வேறு வழியின்றி நாங்கள் ஆதரித்தது வேறு கதை. அனால் அவர்களில் இருந்து இந்த எழுத்தாளர் மாறு பட்டிருப்பது நமக்கு இன்பமாக இருக்கிறது. மேலும் நாங்கள் தர மான இலக்கியம் படைப்பவர்களை என்றும் ஆதரிப்பவர்களாக இருக் கின்றோம்.” என்றார். ra
அடுத்ததாக நான் பேசினேன். ‘எழுத்தாளன் எழுதுவதோடு தனது கடமை முடிந்துவிட்டதாக நினைக்கக் கூடாது. எழுத்தாளனுக் கும் சமூகக் கடமை உண்டு. அதனை அவன் செய்தாக வேண்டும்.
62

மாத்தளை முதல் மலேசியா வரை. D
மகாகவி பாரதி கவிதை எழுதுவதோடு நிற்கவில்லை. தான் வாழ்ந்த காலத்தில் நாட்டின் சுதந்திரத்திற்காகவும் போராடினான். பாரதி, நாட்டு விடுதலைக்காக பாடினான். பாரதிதாசன் சமூக விடுதலைக்காகப் பாடி னான். பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம் உழைப்போரின் விடு தலைக்காகப் பாடினான். இதேபோன்று இன்றைய எழுத்தாளர்கள் இந்த சமூகத்தைப் பற்றிச் சிந்தித்து எழுத வேண்டும். கற்பனை இலக் கியங்கள் காகிதங்களாகி விடும். எழுத்தாளர்கள் தங்கள் பேனாவை சமூக விடுதலையைச் செய்யக்கூடிய ஆயுதமாக எண்ண வேண்டும். அந்த ஆயுதத்தினால் தமிழ் இனத்தில் விடுதலைக்கு உதவ முடியும். எழுத்தாளன் - சரியான எழுத்தாளன் - ஒரு டாக்டரைப் போல் - பொறி யியலாரைப் போல் - ஒரு கட்டிடக் கலைஞன் போல் - மிக முக்கிய மானவன்.”
நான் பேசி முடிந்ததும் கலந்துரையாடல் நடந்தது. பல கேள்வி கள் கேட்டார்கள். இறுதியில் என் வசமிருந்த புத்தகங்களைப் பெற்றுக் கொண்டார்கள். இரவு தமிழ்ச்சீலர் மா.செ. மாயாதேவன் இல்லத்தில் விருந்து நடந்தது.
மறுநாள் இரவு ஈப்போ வள்ளலார் சங்கத்தின் சார்பில் ஒரு சந் திப்பு நடந்தது. தமிழ்க்குயில் கலியபெருமாள் தலைமை தாங்கினார். வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஜோதி வழிபாட்டை அறிமுகம் செய்தவர். சாதியற்ற மனித நேயத்துடன் புதுவழியைக் காட்டியவர். வள்ளலார் அருளிய திருவருட் பா ஐந்தாம் திருமுறை என்று சொல் லப்பட்ட போதும் அவரை தமிழகமோ தமிழர்களோ பெருவாரியாகப் புரிந்து கொள்ளவில்லை. பலருக்கு அவரின் சரிதமே தெரியாது. மாத்தளை முத்துமாரியம்மன் கோயிலில் தேர்த் திருவிழா உற்சவத் துக்குப் பேருரை செய்ய வந்த ஒருவர் மூலமே வள்ளலார் எனக்கு அறிமுகமானார்.
அப்போது நான் படித்துக் கொண்டிருந்தேன். மாத்தளை முத்து மாரியம்மன் கோயிலில் தேர்த்திருவிழா உற்சவ காலங்களில் பேருரை நடக்கும். ஒருதடவை தமிழகத்திலிருந்து கிரிதாரி பிரசாத் என்பவர். வந்து தொடர் உரை நிகழ்த்தினார். அவர் ஓய்வு பெற்ற நீதிபதி. பூர் வீக பூமி வட்இந்தியா. ஆனால் தமிழ் மீதும், தமிழ் இலக்கியங்கள் மீதும் ஆழமான அறிவு கொண்டவர். அவர் ஒருநாள் வள்ளலாரின் ஒருமைப்பாடு என்ற தலைப்பில் பேசினார். அருமையான பேச்சு. என் வாழ்வில் அப்படி ஒரு ஆழமான பேச்சை அதற்கு முன்னர் கேட்கவே
63 ロ

Page 34
D மாத்தளை சோமு
இல்லை. அன்றுதான் வள்ளலாரை நான் அறிந்தேன். வள்ளலார் பக் தித் துறையில் நவீன சிந்தனையாளர். ஆன்மீகத்தில் ஆழமானவர்கள். உருவ வழிபாட்டுக்கு அப்பால் போக முடியும்; போக வேண்டும் என்று விரும்பியவர். வள்ளலாருக்கு மலேசியா முழுவதும் தொண் டர்கள் இருக்கிறார்கள். வள்ளலாரின் பல மன்றங்கள் அங்கு இயங்கி வருகின்றன.
கலியபெருமாள் என்னருகே வந்து நாளை அதிகாலை பினாங்கு போக வேண்டும் என்று ஞாபகப்படுத்தினார்.
பினாங்கு பலரும் அறிந்த ஒரு நகரம். வெகுகாலத்திற்கு முன்பு ச்ென்னையில் இருந்து முன்பு பினாங்குத் தீவுக்கு கப்பல் ஓடியது. அக் கப்பலில் கலைஞர் டி.கே. சண்முகம் அவர்களின் நாடகக் குழு சென் னையில் இருந்து போயிருக்கிறது. கப்பல் சேவை இருக்கும் போது நாடகக் குழு, நாதஸ்வரக் குழு, கிராமியக் கலைக்குழு எனப் பலக் குழுக்கள் மலேசியாவிற்கு குறைந்த செலவில் போகக் கூடியதாக இருந்தது. இன்று அந்தக் கப்பல் சேவை இல்லை. இந்தக் கப்பலில் தான் மலேசியாவில் சிகப்புக் கடவுச் சீட்டோடு இருக்கிற தமிழர்கள் (சிகப்பு கடவுச் சீட்டு - இந்தியக் கடவுச் சீட்டு) அடிக்கடி தமிழகம் போய் வந்தார்கள். அவர்கள் அத்தனை பேரும் குறைந்த வருமானம் உள்ள தொழிலாளர்கள். இன்று அவர்கள் பல வருடங்களுக்கொரு முறைதான் போய் வருகிறார்கள். பெரும்பாலான அவர்களின் குடும் பம் தமிழகத்தில்தான் இருக்கிறது. இதே போன்ற ஒரு கப்பல் சேவை இலங்கையில் தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையே நடந்தது. அது மனிதர்களை மட்டுமல்ல. அவர்களின் துயரத்தை - துன்பத்தை - ஏக்கத்தை சுமந்து சென்ற கப்பல் சேவையாகும்.
− பதினாறு வருடங்களுக்கு முன்புவரை அந்தக் கப்பல் சேவை
மூலம் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் தாயகம் திரும்பும் தோட்டத் தொழிலாளர்கள் இந்தியா போனார்கள். இன்று அந்தக் கப்பல் சேவை இல்லை. கடைசியாக தலைமன்னாரில் இருந்து இராமேஸ்வரம் போன கப்பலில் நான் ஒரு பயணியாக இந்தியா போனேன். அப்போது என் னைப் போன்றவர்களுக்கு அந்தக் கப்பல் சேவை தமிழகம் போக குறைந்த செலவில் உதவியது. ஆனால் அந்தக் கப்பல் சேவை நடந் ததே தாயகம் திரும்பும் அந்த தமிழர்களுக்காக என்பது பலருக்குத்
64

மாத்தளை முதல் மலேசியா வரை. D
தெரியாது. தலைமன்னாரில் அந்தத் தமிழர்கள் தாயகம் திரும்புவதற்கு
கடல் தண்ணீர் அதிக உப்பானதற்கு அவர்களின் அந்த அழுகையும் காரணமாய் இருக்கலாம். இன்று அதே கடலில் சொந்த பூமியில் இனப் பிரச்சனை காரணமாக வாழ முடியாது. படகுகளில் அகதிகளாகப் போன தமிழர்களின் கண்ணீரும் ரத்தமும் சங்கமமீாகியிருக்கின்றன.
4
மலேசியாவின் வட பகுதியில் ஒரு அழகான தீவு தான் பினாங்கு இத்தீவு போர்த்துக்கேயர், டச்சுக்காரர் ஆங்கிலேயர் ஆகிய அந்நியர் களுக்கு தென் கிழக்காசிய நாடுகளில் கால் பதிக்க ஒரு வசதியான துறைமுகமாய் விளங்கியது. இது மலேசியாவுக்கு உட்பட்ட தீவாக இருந்த போதும் 1988ம் ஆண்டு வரை இத்தீவிற்கு ஏனைய பகுதிக ளுடான தொடர்பு படகு சேவை மூலமே நடந்தது. ஒரு காலத்தில் வெளிநாட்டுப் பயணிகளின் நடமாட்டமும் வர்த்தகமும் சிறந்து விளங் கிய இப்பினாங்கு தீவில், சீனர்கள் பெரும்பான்மையாக இருந்ததால் மலேசிய அரசு பாராமுகமாய் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதனை உறுதிபடுத்தும் விதத்தில் பினாங்கிற்குப் பக்கத்தில் உள்ள இன்னொரு தீவான லங்காஜியை முன்னேற்றவும் வெளிநாட்டுப் பய ணிகளைக் கவரவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகச் செய்திகள்
வாசலாக பினாங்கு முக்கிய தீவாக இருப்பதால் அதன் முக்கியத்துவம் குறையவில்லை. பினாங்கிலிருந்து தரைப்பாதை வழியாக தாய்லாந்து போவதில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு எப்போதும் உற்சாகம் தான். இதனால் வெளிநாட்டுப் பயணிகள் வந்த வண்ணமே இருக்கிறார்கள்.
பினாங்குத் தீவு காலம் காலமாக சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க மாக இருந்தமையால் அதன் முக்கியத்துவம் அரசியல் ரீதியாக குறைந் ததே தவிர வேறு எந்த இழப்பும் அதற்கு இல்லை. சிறிய தீவானாலும் அழகான தீவு. பார்க்கப் பரவசமான தீவு சோழர் காலத்தில்கூட இத் தீவு புகழ் பெற்றிருக்கிறது. சோழர் கால் பதித்து ஆண்ட கடாரம் என்று அழைக்கப்படும் இன்றைய கெடா மாநிலம் இத்தீவுக்கு அருகில் தான் இருக்கிறது.
65 D.

Page 35
D மாத்தளை சோமு
பினாங்கில் ஒரு இலக்கியச் சந்திப்பு இருந்தமையால் அங்கு போய்த் தங்கிச் சுற்றிப் பார்க்கக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது. என் னோடு மனைவி யாழினி ஆகியோரும் வந்திருந்தார்கள். எங்களின் தங்கும் வசதி - இலக்கியக் கூட்டம் என்பனவற்றை மலேசியாவின் பிரபல எழுத்தாளர் ரெ. கார்த்திகேசு அவர்கள் செய்திருந்தார். அவர் பினாங்குப் பல்கலைக் கழகத்தில் தகவல் துறையில் (1995) பிரதான விரிவுரையாளராகப் பணிபுரிகின்றார்.
பினாங்கில் தமிழர்கள் அதிகமாக இருந்த போதும் இலக்கியச் சந்திப்பிற்கு குறைந்த எண்ணிக்கையிலேயே கூட்டமிருந்தது. மிகக் குறுகிய கால அழைப்பு என்பதால் கூட்டம் குறைவு என்று சொல்லப் பட்டபோதும் இலக்கியக் கூட்டமென்றால் தமிழர் வாழும் இடமெல் லாம் இதுதான் உண்மையான நிலை. பல லட்சம் மக்கள் வாழ்கிற சென்னை மாநகரில் கூட இலக்கியச் சந்திப்பு என்றால் பெரிய கூட்டம் கூடாது. சிறுகதை, நாவல் படிக்கிற வாசகர்கள் கூட நமக்கென்ன வேலை என்பது போல் ஒதுங்கி விடுகிறார்கள். இலக்கியம் என்ற சொல் சமூகத் தில் அச்சுறுத்துகிற சுமையாகத் தெரிகிற சொல்லாக மாறிவிட்டது.
எனக்கென்னவோ பினாங்குக் கூட்டம் நிறைவானதாகத் தெரிந் தது. 40 லட்சத்துக்கு மேல் மக்கள் வாழ்கிற சென்னையில் இலக்கியக் கூட்டத்துக்கு 40 பேர்தான் வருவார்கள். அதனோடு பார்க்கிற போது இது பரவாயில்லை. பினாங்கைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் வந்திருந்தார்கள். கவிஞர் கரு. திருவரசு தலைமை தாங்கினார். மலே சிய நாடு அறிந்த வண்ணக்கவிஞர். பினாங்கில் நடக்கும் இலக்கிய முயற்சிகளில் முன்நிற்பவர். வண்ணக்கவிஞர் கரு, திருவரசு தலைமை உரையில், எத்தனையோ இலக்கியக் கூட்டம் பினாங்கில் நடந்திருக் கிறது. ஆனால் இது வித்தியாசமானது. ஆஸ்திரேலியாவில் இருக்கிற ஒரு இலங்கை எழுத்தாளரோடு சந்திப்பு இன்று நடக்கிறது. வழக்க மாகத் தமிழகப் படைப்பாளிகளோடு தான் கூட்டம் நடக்கும் இம்
எழுத்தாளர் கலாநிதி ரெ. கார்த்திகேசு, “மலேசியாவில் ஒரு மலை யகம் இருப்பதுபோல் இலங்கையில் ஒரு மலையகம் உண்டு. அந்த மலையகத்தைப் பற்றிப் பல சிறுகதைகள், நாவல் எழுதியவர். இவர்” என்று என்னை அறிமுகப்படுத்தினார்.
66

மாத்தளை முதல் மலேசியா வரை. ()
பதிலுரையில் நான், “இலங்கை மலையகத்தை வைத்து எழுதி னேன். இன்று நான் புலம் பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் இருக்கின் றேன். எனவே எனது பார்வைக்களம் மாறி நிற்கிறது. எழுத்தாளன் வாழும் பகுதி மக்களின் பிரச்சனைகளைத்தான் எழுத வேண்டும், அதை நான் இப்போது செய்கின்றேன்.” என்றேன். பிறகு அங்கு வந்திருந்தோரின் கேள்விகளுக்குப் பதில் கொடுத்தேன்.
இரவு பினாங்கில் தங்கினேன். மறுநாள் ஒரு டாக்சியில் பினாங்
நாட்டைச் சேர்ந்த இளைஞனும் வந்தார். வாடகைக் கட்டணத்தைக் குறைப்பதற்காகப் பலரை இப்படிச் சேர்த்து ஏற்றிக் கொள்வார்கள். டாக்சியில் போனது நல்லதாய்ப் போய் விட்டது. பார்க்க வேண்டிய இடங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்தில் இருந்தன. டாக்சி பிரச்சனை இன்றி எல்லா இடத்துக்கும் அழைத்துச் சென்றது.
ஆயர்தம் என்னும் புத்தர் கோயிலுக்குப் போனோம். அது மிகப் பெரியது மட்டுமல்ல மலேசியாவில் உள்ள புத்தர் கோயில்களில் மிகச் சிறந்தது. பத்தாயிரம் மிகச் சிறிய புத்தர் வடிவங்களைக் கொண்ட இந்த ஆலயத்தைக் கட்டி முடிக்க 20 ஆண்டுகள் சென்றுவிட்டன. பினாங் போகிற எவரும் இதனைப் பார்க்காமல் வரமாட்டார்கள்.
இன்னொரு புத்தர் கோயிலைப் பார்த்தோம். அது தாய்லாந்துக் கட்டிடக் கலையில் கட்டப்பட்டது. உலகத்தில் நீளமான தங்கமுலாம் பூசிய புத்தர் சிலையை இங்கு பார்க்கலாம். இந்தக் கோயிலின் வாச லில் இருந்த உலக வடிவான உருண்டை பலரைக் கவர்ந்தது. அதே போன்று பர்மியப் பாணியிலான புத்தர் கோயிலையும் பார்த்தோம், பினாங்கு பல அந்நிய மன்னர்களின் காலடிபட்ட இடமாகையால் பல நாட்டு கலாசார சாயலிலான புத்தர் கோயில்களும் இத்தீவில் அமைந் துள்ளன. இதுபோக பறவைகள் சரணாலயம், பூங்கா என்பன நின்று நிதானமாய் பார்க்கிறவர்களுக்காகக் காத்திருக்கின்றன.
அந்த டாக்சி குறிக்கப்பட்ட நேரத்தில் பினாங்கில் முக்கிய இடங் களைச் சுற்றிக் காட்டிவிட்டு இறக்கிவிட்டது. என்னோடு வந்த அரே பிய இளைஞரும் டாக்சியை விட்டு இறங்கினார். டாக்சியில் போன போது அந்தச் சவுதி இளைஞர் எதுவும் பேசவில்லை கேட்ட கேள் விக்குத் திக்கித்திக்கி மிக மெதுவாய் ஆங்கிலத்தில் பதில் வந்தது.
67

Page 36
D மாத்தளை சோமு
ஹோட்டலுக்கு நான் திரும்பிய போது அதன் பொறுப்பாளர் என்னி டம் கேட்ட கேள்வி யோசிக்க வைத்தது.
99 “பாம்புக் கோயில் போனீங்களா? “இல்லை. “பாம்புக் கோயிலைப் பார்க்காமல் பினாங்குப் பயணம் பூர்த்தி
2 யாகதே?
99 “அப்படியா? என்ன செய்யலாம்?
‘விடிந்தால் இங்கிருந்து டாக்சி போகும். உங்களை ஏற்றி விடு கின்றேன். போகிறீர்களா?”
“இவ்வளவு தூரம் வந்து அந்தப் பாம்புக் கோயிலைப் பார்க்கா மல் போவதா?. சரி” என்றேன்.
விடிந்ததும் டாக்சி வந்தது. நாங்கள் ஏறினோம். முன்னே டிரை வர். அருகே அந்த சவுதி இளைஞர். வெறும் புன்னகையே வார்த்தை யாக விரிந்தது.
பினாங்கு நகரிலிருந்து ஒன்பது மைல் தொலைவில் அந்த பாம் புக் கோயில் இருந்தது. சோர் ஆ கோங் என்னும் சீன முனிவர் கோயி லில் தான் பாம்புகள் ஆங்காங்கே படுத்துப் பார்க்க வருபவர்களைக் கண்டு மிரளாமல் எவருக்கும் தொந்தரவு தராமல் சுருண்டு கிடக்கின் றன. ஒரு மண்டபத்தில் பெரிய மலைப்பாம்பு இரும்பு வலைக்குள் கிடந்தது. அதற்கு அந்தக் கோயிலுக்கு வருவோர் கோழிகளை இரை யாக - காணிக்கையாகக் - கொடுக்கின்றார்கள்.
என்னோடு வந்த சவுதி இளைஞன் தட்டுத் தடுமாறி ஆங்கிலத் தில் பேசினான். தாய் மொழியைத் தவிர வேறு மொழி படிக்காதவன். தாய் மொழியை மட்டும் படிக்கிறவர்கள் கடல் கடந்தால் ஊமையாகி விடுகின்ற காட்சியை அவன் நினைவு படுத்துவது போல் மெளனமா கவே இருந்தான். ஒரு மனிதன் தாய் மொழியைக் கட்டாயம் படிக்க வேண்டும். ஆனால் தாய் மொழியை மட்டும் படிக்கக் கூடாது. இது வெளிநாடுகளில் வாழ்கிற தமிழர்களுக்குப் பொருந்தும்.
ஒரு தனியார் பேருந்தில் பினாங்கிலிருந்து ஈப்போவுக்குத் திரும்பி வந்தேன். பினாங்கில் இருந்தபோது ஈப்போவில் நடக்கும் தமிழ்
C

மாத்தளை முதல் மலேசியா வரை. D
எழுத்தாளர் மாநாட்டில் கலந்து கொள்ள என்னை அழைத்தார்கள். மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கங்களின் தேசியப் பேரவையின் சார் பில் மாநாடு இரு நாட்கள் நடந்தன. அதில் தலைமை உரையை கு. பாலசுப்பிரமணியம் அவர்கள் நிகழ்த்தினார்.
அம்மாநாட்டு திறப்புரையை மலேசிய இந்தியன் காங்கிரஸ் தேசி யத் துணைத் தலைவர் டத்தோ. க. குமரன் ஆற்றினார். மண்டபம் நிறைந்த கூட்டம். நிகழ்ச்சிநிரல் நீண்டதால் எனது உரையை சுருக்கிக் கொண்டேன். அங்கு பல எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் சந்தித்தேன். பினாங்கிலிருந்து கவிஞர் கரு. திருவரசு வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் ஒருவர் என்னை வந்து சந்தித்தார்.
“உங்க நாவலை வாசிச்சேன் மகிழ்ச்சி ஆனாலும் ஒரு கேள்வி
நெஞ்சில்.” м
- “கேளுங்க?”
“தைப்பிங்ல நாவல் வாங்கினேன். நல்லா இருக்கு. ஆனா கொச் சைத் தமிழ்ல எழுதியிருக்கீங்களே! கதா பாத்திரங்கள் பேசுவதைத்பூ, தான் சொல்கிறேன்.”
நான் அதற்குப் பதில் சொன்னேன். “எனது கதாபாத்திரங்கள் பேசுகின்ற மொழியை எப்படிப் பேசுகிறார்களோ அதைத்தான் எழுதி யிருக்கேன்” யதார்த்த இலக்கியம் அதைத்தான் செய்யும். இதைத் தான் புதுமைப்பித்தன் ஜெயகாந்தன் ஆகியோர் செய்திருக்கிறார்கள். எனக்கும் அதில் நம்பிக்கை உண்டு எழுதுகிறேன்.
“இதனால் மொழி சிதையாதா?”
“பலகோடி தமிழர்கள் எழுதுவதற்கும் பேசுவதற்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது பேசுவது ஒருவகை. எழுதுவது ஒரு G60) 95. இது தமிழில் மட்டுமல்ல எல்லா மொழிகளிலும் உண்டு. இதனால் மொழிச்சிதைவு ஏற்பட வழியில்லை. அதே நேரத்தில் கலப்பில்லாத தமிழில் எழுதுவதை விரும்புகின்றேன்.”
அவர் அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை. அவருக்கு என் பதிலில் திருப்தி ஏற்பட்டிருக்கும். அவர் தனித்தமிழ் பற்றிக் கேட்ட தற்கு மலேசியாவில் திராவிடக் கட்சிகளின் அபிமானிகள் முன்னெ டுத்த தனித்தமிழே முக்கிய காரணமாகும். 19களில் சமஸ்கிருதம் கலந்த
69 о

Page 37
E'மாத்தளை சோமு
தமிழே முன்னணியில் இருந்தது. பிற்பாடு திராவிடக் கட்சிகள் கலப் புத் தமிழுக்கு எதிராக ஒரு மொழி யுத்தத்தையே தொடங்கின. அதன் எதிரொலி மலேசியாவிலும் அங்குள்ள தமிழர்களிடையே புகுந்தது.
5
மலேசியத் தமிழர்கள் தமிழகத்தோடு அதிகமான கலாசாரத் தொடர்பு வைத்திருந்தார்கள். திராவிடர் கழகம் மற்றும் திராவிடர் முன்னேற்றக் கழகம் போன்ற அரசியல் கட்சிகளின் செல்வாக்கு தமி ழிலும் இலக்கியங்களிலும் இருந்தன. தமிழகத்துக்கு அப்பால் தமிழில் அதிகமான படைப்புகள் மலேசியாவில் வெளிவந்த போதிலும் அவை யெல்லாம் ஏதோ ஒரு இறக்குமதி வழிவந்த பாணியையே பின்பற்றின. திராவிட எழுத்துக்களில் ஈர்க்கப்பட்டவர்கள் தனித்தமிழ் பாணியை பின்பற்றினார்கள். பிறகு மு.வ. அவர்களின் எழுத்துவழி போனார்கள். புதுமைப்பித்தனை சில எழுத்தாளர்களே ஆகர்சித்துக் கொண்டார்கள்.
1940ன் நடுப்பகுதிகளில் மலேசியாவில் இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்களாக கவிஞர்களாக முன்னணி வகித்தவர்கள் தமிழா சிரியர்கள். அவர்களின் படைப்பாற்றலையும் குறைத்து மதிப்பிட முடி யாது. ஆயினும் தரமான மக்கள் சார்ந்த இலக்கியங்கள் உருவானது 1960களில்,
எனக்கு முதன்முதலில் மலேசியாவின் தரமான சிறுகதைகளை அடையாளம் காட்டிய இலக்கிய மாத இதழ் எழுத்தாளர் நா. பார்த்த சாரதியின் தீபம் மற்றும் சென்னை வாசகர் வட்டம் வெளியிட்ட அக்கறை இலக்கியம் தொகுதியில் இருந்த சிறுகதைகள்.
இன்று தமிழகத்துக்கு அப்பால் அதிகமான சஞ்சிகைகள், பத்தி ரிகைகள் அதிகமாக மலேசியாவில்தான் வெளிவருகின்றன. ஆண்டு தோறும் சிறுகதை, நாவல், கட்டுரை என்பனவற்றை உள்ளடக்கி 50க் கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகின்றன. எழுதுவதில், நூல் வெளி யிடுவதில் புதிய உற்சாகம் மலேசியாவில் இன்றும் தெரிகின்றது. தமி ழகத்துக்கு அப்பால் தமிழ் இலக்கியம், எழுத்து போன்ற துறைகளில் புதிய நோக்கையும் புதிய பாதையையும் வகுத்து முன்னெடுத்ததில் மலேசியத் தமிழ் உலகிற்கு பெரும்பங்கு உண்டு. இதனை அடையா
O 70

மாத்தளை முதல் மலேசியா வரை.
ளப் படுத்தியதே முதலாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு. அது மலேசியாவில் தான் நடந்தது.
ஈப்போவில் இருந்து கிள்ளாங் போகிற பேருந்தில் இடம் கிடைக் காததால் கோலாலம்பூர் பேருந்தில் ஏறினேன். கோலாலம்பூர் போய் கிள்ளாங் போக வேண்டும். கிள்ளாங் ஒரு புறநகர் பகுதியில் உள்ள பெரிய நகர். தமிழர்கள் அதிகமாக வாழும் இடம். சிலாங்கூர் மாநிலத் தின் தலைநகர் கிள்ளாங்கில் எனக்கு ஒரு சகலை (சகலர்) இருந்தார். என் மனைவியின் தங்கை கணவர். அவருக்கு எழுத்தில் ஈடுபாடு இல்லாதபோதும் என்னை ஒரு எழுத்தாளராக அறிந்து நட்புக் கொண் டார். அவர் படித்தது மலாய் மற்றும் ஆங்கில மொழியில். தமிழ் பேசத் தெரியும்.
கிள்ளாங்கில் இருந்தபோதுதான் எழுத்தாளர் ப.கு. சண்முகம் அவர்களைச் சந்தித்தேன். அவர் சில சிறுகதைகளே எழுதிய போதும் மலேசிய சிறுகதைகளின் தரத்தை உயர்த்திக் காட்டியவர். காலத்தின் மாற்றம், தொழில், குடும்பம் என்பன அவரின் பேனாவுக்குச் சிறை யிட்டன. எழுதும் ஆசை அவர் நெஞ்சில் இருந்தபோதும் எழுதும் நேரம் அவருக்கு வாய்க்கவில்லை.
அவரோடு பேசியபோது, பேச்சுவாக்கில் நீங்கள் எல்லாம் எழு . தாமல் இருப்பது தவறு என்றேன். அதற்கு அவர் நீண்ட பதிலைக் கொடுத்தார். “உங்களைச் சந்தித்த பிறகுதான் எழுத வேண்டும் என்ற எண்ணமும் எழுத்தாளன் என்ற உணர்வும் வருகின்றது. நீங்கள் எல் லாம் ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டு எழுதுகிறீர்கள். பாராட் டுக்குரியது. நாங்கள்தான் எங்கோ போய்க் கொண்டிருக்கிறோம். நாங் கள் என்று சொன்னதற்குக் காரணம் என்னைப் போன்று பல எழுத்தா ளர்கள் என் காலத்தில் எழுதியவர்கள் இருக்கிறார்கள். ஒரு காலத் தில் பத்திரிகைகளில் வாசகர்களிடம் ஒரு வேகம் இருந்தது. எழுதி னார்கள். எழுதியவை பத்திரிகைகளில் வந்ததோடு சரி. புத்தகமாக வரவில்லை. மலேசியப் பத்திரிகைக்கு எழுதிய நான், தமிழகப் பத்தி ரிகைகளுக்கும் எழுதினேன். பதிலே இல்லை. தமிழகப் பத்திரிகைகள் மலேசிய எழுத்தாளர்களுக்கு சரியான ஆதரவைக் கொடுக்கவில்லை. மலேசியாவில் விற்பனையைப் பெருக்கமட்டும் முன்னின்றார்கள். இலக்கிய ரீதியாக ஒரு இடைவெளி எங்களுக்கும் தமிழகத்திற்கும் இருந்தது. இன்றும் இருக்கிறது”
7

Page 38

மாத்தளை முதல் மலேசியா வரை. D
என்ற புராதன மருத்துவ நூலில் சிலம்பப் பயிற்சி, குதிரைப் பயிற்சி மூலம் ஒருவரின் உடல் வலுவடையுமென்றும் கபத்தினால் உண்டா கும் வியாதிகளைப் போக்கிடுமென்றும் வாயுவினால் ஏற்படும் வயிற்றுக் கோளாறுகள் நீங்குமென்றும் உடலில் நல்லபசி ஏற்படு மென்றும் வயிற்றுவலிகள் தோன்றாதொழியும் என்றும் கீழ்கண்ட செய்யுளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. v
சிலம்ப முதல் மல்யுத்தம் தேசிநடை கொள்ளின் பலம்பாவம் மெய்யிறுகும் பன்னத் - துலங்குபசி உண்டாம் கபவாத மோடுவலி சூலையும் போய் பண்டாம் மலமிறங்கும் பார்.
சிலம்பாட்டம் என்பது கம்பை வைத்து மட்டும் விளையாடுவ தல்ல. சுருள் வாள், ஈட்டி, கட்டாரி, சங்கிலி, மான் கொம்பு வைத்தும் இந்த விளையாட்டை விளையாடலாம். சிலம்பாட்டத்தின் முக்கியத் துவம் அதன் அடி வரிசை ஏழுகாலடி வரிசை. ஒவ்வொரு அடிக்கும் தனித்தனிப் பெயருண்டு. அதுபோல தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதி யிலும் சிலம்பத்தில் கர்நாடக வரிசை, கரடிகை, புலிக்காவடி, துலுக் காணம், மல்வடம், பனையேற மல்லு, வீரத்திரவிய வரிசை, அய்யங் கார் வரிசை, ஓரடி வரிசை என்று கம்பைச் சுழற்றுவதில் விதவித மான முறைகள் உண்டு.
முன்பு போர்ச் சிலம்பம் இருந்தது. அதைப் போருக்கு மட்டும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இரண்டாவது அலங்காரச் சிலம்பம். திருவிழாக்களிலும் முக்கிய நிகழ்ச்சிகளிலும் கம்பைப் பலவிதமாகச் சுழற்றுவது. தீச்சிலம்பம் இரவு நேரத்தில் சிலம்புக் கம்புடன் நெருப் புத்துணியை இணைத்துச் சுழற்றுவது.
தமிழ்நாட்டில் வேலூரில் ஒரு கோட்டை இருக்கிறது. அந்தக் கோட்டையில் நுழைந்தவுடன் சிலம்புக்கூடம் இருக்கிறது. செஞ்சிக் கோட்டை புதுக்கோட்டையிலும் சிலம்பக் கூடங்களுடன் சிலம்பத் திற்கென்று தனி ஆயுதங்களும் இருக்கின்றன.
இன்றுமிருக்கிற பழங்காலச் சிலம்பக் கூடத்தில் உயில் சிலம் பம் இருக்கிறது. வித்தியாசமான இந்தச் சிலம்பத்தைச் சுழற்றினால் காற்றில் உஸ் என்ற சப்தம் எழுகிறது.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல தமிழர் வாழும் பல நாடுகளில் சிலம் பாட்டம் உயிரோடு இருக்கிறது என்றால் அதற்கு சினிமாவே காரணம்.
73 ロ

Page 39
D மாத்தளை சோமு
சொல்லப் போனால் மறைக்கப்பட்டிருந்த இக்கலைக்கு சினிமா தான் அவ்வப்போது விளம்பரம் கொடுத்தது. மலேசியாவில் இந்தக் கலைக்கு இப்போது முறையான மரியாதை கொடுத்து மறுபடியும் புத் துணர்வு கொடுத்து வருவது மலேசியச் சிலம்பக் கழகம். அதற்கு மலேசியாவில் 120 கிளைகள் இருக்கின்றன. (1996) சிலம்பக் கலையை ஒரு வாத்தியார் மூலம் கற்க குறைந்தது இருபது மாதங்களாகின்றன. தொடக்கக் காலத்தில் தலைப்பாகையுடன் விளையாடப்பட்ட சிலம் பாட்டக் கலைக்கென்று இன்று தணிச்சீருடை வந்திருக்கிறது. மலேசி யாவில் இதனைப் பல முனைகளிலும் பணியாற்றி மலேசிய சிலம்பக் கழகம் வெற்றி கண்டிருக்கிறது. அதன் இப்போதைய பணி இந்த விளையாட்டை சர்வதேச அரங்கிற்கு கொண்டு போவது தான்.
சிலம்பத்தைப் பற்றி நினைத்தபடியே மலேசிய சிலம்பக் கழகத் தின் தலைமைச் செயலாளர் இரா. மாசிலாமணி அவர்களைச் சந்திக்கப் போய்க் கொண்டிருந்தேன்.
6
“நீங்க சிட்னியிலிருந்து வந்திருப்பதாகப் பத்திரிகை செய்தியில் பார்த்தேன்.” என்றார் மாசிலாமணி, அவர் மலேசிய பெற்றோலியக் கழகத்தில் மிக முக்கிய பணியில் இருப்பவர். மலேசியத் தமிழர்களி டையே நன்கு அறிமுகமானவர். அவரும் பல நண்பர்களும் இணைந்து உருவான மாஜி ஜெயா கூட்டுறவு சங்கம் பல ஆண்டு தேக்கத்திற்குப் பிறகு இன்று நம்பிக்கையோடு செயற்படத் தொடங்கியுள்ளது.
“நான் ஒரு எழுத்தாளனாக அதுவும் புலம் பெயர்ந்த எழுத்தாள னாக மலேசியா வந்து உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின் றேன்” என்றேன் நான். அப்போது அவர், “ஈப்போவில் இருந்து முனி யாண்டி உங்களைப் பற்றி எனக்கு பெக்சில் தகவல் கொடுத்திருக்கிறார். உங்களைச் சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி. சிலம்பத்தை ஆஸ்திரேலி யாவில் அறிமுகம் செய்யலாம்னு நெனைக்கின்றேன். அது சம்பந்த மாக எங்களின் நடவடிக்கைகளை சொல்கின்றேன்” என்றார்.
அவர் சிலம்பக் கலையை சர்வதேச தரத்திற்கு முன்னெடுக்க வேண்டிய பணியை விளக்கினார். “சர்வதேச சிலம்பாட்டக் கழகம் மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து இயங்குகிறது.
D. 74

மாத்தளை முதல் மலேசியா வரை. D.
மலேசியா, இந்தியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ் ஆகிய நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன. சிலம்பத்தின் ஜன்ம பூமியான தமிழகத்தில் முதல் உலகப் போட்டியை நடத்த வேண்டும் என்பது சர்வதேச சிலம்பாட்டக் கழகத்தின் விருப்பம். இதற்காக 1993ம் ஆண்டு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனடி நவம்பர் மாதம் 19, 20, 21 திகதிகளில் சென்னையில் தமிழக அரசின் செலவில் அப்போட் டியை நடத்துவதென்று முடிவானது. அதற்காக 64பேர் கொண்ட ஒரு குழுவும் உருவானது. அப்போதைய தமிழகக் கல்வி அமைச்சர் அதன் தலைவர். முதல் உலக சிலம்பப் போட்டி கல்வியமைச்சர் தலைமையில் சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த கூட்டத்தில் முடிவாகி அறிவிப்பு வெளியானது.”
போட்டிக்கான ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக பத்து நாட் களுக்கு முன்பே சென்னை வந்த சர்வதேச சிலம்பக் கழகச் செயலர் மாசிலாமணிக்கு அதிர்ச்சி. தமிழக முதல்வரின் அனுமதி கிடைக்காத தால் போட்டியை ஒத்தி வைக்குமாறு கல்வி அமைச்சர் கூறிவிட்டார்.
மீண்டும் 1994 ஜூன் 10, 11, 12 தேதிகளில் அந்தப் போட்டியை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மறுபடியும் பல அணி களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் முதல்வரின் தேதி கிடைக்காததால் போட்டியை ஒத்தி வைக்குமாறு அமைச்சர் கேட்டி ருந்தார்.
அதே நேரத்தில் மற்ற நாடுகளைச் சேர்ந்த அணிகள் சென்னை வருவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டன. அமைப் பாளர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி. என்ன செய்வதென்று தவித்த போது வி.ஜி. சந்தோஷம் கை கொடுக்க வி.ஜி.பி. தங்கக் கடற்கரையி லேயே போட்டி நடத்தப்பட்டது. கடந்த 18 மாதங்களாக மாசிலாமணி 12 முறைக்கு மேல் சென்னை வந்து போயிருக்கிறார். அப்படியும் தமிழக அரசின் அங்கீகாரம் கிடைக்கவில்லை. இருந்தும் 1998ம் ஆண்டு மலேசியாவில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி யில் சிலம்பம் சேர்க்கப்பட்டது. இது இக்கலைக்குக் கிடைத்த முதல் சர்வதேச மரியாதை அடுத்த 2000ம் ஆண்டில் சிட்னியில் நடக்கும் ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சிகளில் கண்காணிப்பு விளையாட்டாக வாவது இந்த சிலம்பு வரவேண்டும் என்பதே தமது விருப்பம். புலம் பெயர்ந்த தமிழர்கள் தான் உதவ வேண்டும்.
75

Page 40
0 மாத்தளை சோமு
மாசிலாமணி பேசி முடிந்ததும் அவரிடம் கேட்டேன். “புலம் பெயர்ந்த தமிழர் என்ற ரீதியில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?”
“சிலம்புாட்டத்தை அறிமுகம் செய்ய ஒரு சிலம்பக் கழகத்தை தொடங்க வேண்டும். சிலம்பம் பழகுவதற்கு ஆசிரியரை நாங்கள் தரு வோம். இதற்கு தாங்கள் உதவவேண்டும்.
முற்றிலும் புதிய சூழ்நிலையில் அங்கு வாழ்ந்து வருகிறோம். இருந்தாலும் என்னால் ஆன முயற்சிகளை செய்வேன்’ என்றேன்நான்
நாங்கள் விடைபெறும் போது எனது புத்தகங்கள் அவரிடம் போக சிலம்பம் பற்றிய புத்தகங்கள் ஓர் ஒலிப்பதிவு நாடா என்வசம் சேர்ந் தன. இது சிலம்பத்தைப் பற்றிய புத்தகம். மற்றது சிலம்பப் பாடல். எங் கள் கழக வரலாறு அடங்கிய கசெட் அந்த ஒலிப்பதிவு நாடாவை காரில் ஏறியதும் ஓடவிட்டபோது ஒலித்த பாடல் அற்புதமாக இருந்ததை உணர்ந்தேன். பாடலின் வரிகள் தெளிவாக இருந்தன. பாடலுக்கான இசை நேர்த்தியாக இருந்தது. அந்தப் பாடலின் தொடக்க வரிகள்.
நமது கலை அது சிலம்பக் கலை - அதை கற்றவர் மனதில் அச்சமில்லை இடது நிலை இது வலது நிலை - உன் உடலில் தெரியுது புதிய கலை.
இந்தப் பாடலை எழுதியவர் சிலம்ப ஆசிரியர் வீ மாதேவன் இசைமெருகூட்டியவர் ச. நல்லதம்பி. பாடலை அற்புதமாய் பாடிய வர் மலேசியாவின் பாடகர் சிவகுரு.
எங்கள் கார் பயணம் முடியும் வரைத் திரும்பத் திரும்ப அந்தப் பாடலைக் கேட்டேன். சிலம்பக் கலையைத் தூக்கி நிறுத்த அந்தப் பாடலே மிகப்பெரிய உந்து சக்தியாகும்.
எந்த நாட்டுக்குப் போனாலும் எனக்குத் தெரிந்த மொழிகளில் வருகிற நாளிதழ்கள், வார இதழ்களை வாங்கிப் படிப்பது எனது வழக் கம். அதில் எனக்கு பரிபூரண மகிழ்ச்சி கிடைக்கும். காலையிலேயே அங்கு வெளியாகும் இதழ்களை கடையில் வாங்கி விடுவேன்.
தமிழகத்துக்கு அப்பால் மலேசியாவில் இருந்து வரும் நாளி தழ்கள் தூய தமிழ் என்று சொல்வதை விட கலப்படம் இல்லாத தமி
76

மாத்தளை முதல் மலேசியா வரை.
ழைப் பயன்படுத்துகின்றன. புதிய சொற்களை அறிமுகம் செய்கின் றன. கணனியில் அச்சுக் கோர்த்துப் பல நிறங்களில் பதித்து தமிழில் நாளிதழ்கள் முதன் முதலில் மலேசியாவில் இருந்துதான் வெளியா கின. இன்றும் அங்கும் இரு பிரபலமான நாளிதழ்கள் வெளியாகின்றன. ஒன்று தமிழ்நேசன் மற்றது மலேசிய நண்பன். மூன்றாவதாக தின முரசு, நாளிதழாக வெளிவருகிறது. முதலில் பழமையான தமிழ் நேசன் நாளிதழைப் பார்ப்போம்.
75 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிற நாளிதழ் தமிழ் நேசன். இது 1924ல் செப்டெம்பர் மாதம் 10ம் திகதி தமிழ்ச் செல் வரான அமரர் கி. நரசிம்ம ஐயங்காரல் நிறுவப்பட்டது. மலையாண்டி செட்டியார் தான் இதன் உரிமையாளர். இலங்கையில் வீரகேசரி என்ற புகழ்பெற்ற நாளிதழை தொடங்கிய வரும் ஒரு செட்டியாரே. தமிழகத்திற்கு அப்பால் குடிபோன நாடுகளில் எல்லாம் நாட்டுக் கோட்டை செட்டியார் சமூகத்தவர்கள் முருகன் மீது பற்றுக்கொண்டு முருகனுக்குக் கோயில் கட்டினார்கள். தமிழின் மீது பற்றுக்கொண்டு இலங்கை, மலேசிய நாடுகளில் நாளிதழ்களைத் தொடங்கினார்கள்.
தமிழ் ஆர்வம் மிக்க நரசிம்ம ஐயங்கார் தனக்கு குழந்தைகள் இல்லாமையினால் தமிழ் நேசனையே குழந்தையாக எண்ணி நடத்தி *ன்ார். மேலும் அக்காலத்தில் தொழிற்சங்கங்கள் இல்லாத நிலையில் அவர் நடத்திய தமிழ் நேசனே மலேசியத் தமிழ் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை முன்னெடுத்தது.
1942ம் ஆண்டு ஜனவரி மாதம் 11ம் திகதி ஜப்பானிய படைகள் கோலாலம்பூர் நகருக்குள் இறங்கியபோது கோலாலம்பூரில் இருந்த பத்திரிகைகள் யாவும் மூடப்பட்டு விட்டன. ஆனால் தமிழ் நேசன் மட்டும் வெளியாகியது. ஒரு தடவை ஜப்பானிய சக்கரவர்த்தி பிறந்த நாளையொட்டி அவரது முழு உருவப்படம் முதல் பக்கத்தில் தமிழ் நேசனில் பிரசுரமாகியது. ஆனால் ஜப்பானிய இராணுவ அதிகாரி கள் அதனைத் தங்கள் சக்கரவர்த்திக்குச் செய்த ஒரு அவமரியாதை யாகக் கருதிவிட்டார்கள். கோபங்கொண்ட ஜப்பானிய இராணுவ அதிகாரி ஒருவர் நேசன் காரியாலயத்துக்கு வந்து சகலருக்கும் சம்ப ளக் கணக்குகளைத் தீர்க்கச் சொல்லிவிட்டு எல்லோரையும் வெளியே வரச் சொல்லி நேசன் காரியாலயத்தையே இழுத்துப் பூட்டினார். இரண்டு
77

Page 41
மாத்தளை சோமு
நாட்கள் நேசன் வரவில்லை, பிறகு நேசன் ஆசிரியரை அழைத்த ஜப்பா னிய இராணுவ அதிகாரி சாவியைக் கொடுத்து நேசனைத் தொடர்ந்து பிரசுரிக்க அனுமதி கொடுத்தார். மீண்டும் தமிழ்நேசன் வெளியானது. இருநாட்கள் வராத தமிழ் நேசன் மீண்டும் வெளிவந்தது அப்போது, மலேசிய பத்திரிகை உலகில் பெரிய ஆச்சரியத்தைக் கிளப்பியிருந்தது.
7
அந்தத் தமிழ் நேசன் இன்றும் நாள் தோறும் வந்து கொண்டிருக் கிறது. இன்று அதன் உரிமையாளர் மலேசிய இந்தியன் காங்கிரஸ் (மஇகா) தலைவரும் அமைச்சருமான டத்தோ பூரீ சாமிவேலு அவர் களின் துணைவியார் டத்தின் பூரீ இந்திராணி அவர்கள். அதன் ஆசி ரியர் வி. விவேகானந்தன். 1995 அவரை ஒருநாள் நேசன் அலுவல கத்தில் சந்தித்தேன். சுருக்கமாக என்னை அறிமுகம் செய்து கொண்டு எனது சிறுகதைகள், நாவல் அடங்கிய பிரதிகளைக் கொடுத்தேன், பல்வேறு பணிகளுக்கிடையில் என்னோடு மனம் திறந்து பேசினார். அடிக்கடி அவரை அழைத்த தொலைபேசி அழைப்புக்கு பதில் சொல் லிக் கொண்டே பேசினார். ஒரு பேட்டி போல் எங்கள் உரையாடல் தொடர்ந்தது.
தமிழ் நேசனில் ஆசிரியராக இருப்பதையிட்டு நான் பெருமைப் படுகின்றேன். தமிழகத்தின் சிறுகதை எழுத்தாளர் கு. அழகிரிசாமி ஆசிரியராகப் பணிபுரிந்த இதில் நானும் ஆசிரியராக (1994) பணிபுரி வதில் எனக்குப் பெருமையே, மேலும் அதன் 70வது ஆண்டு மலர் வெளிவரும்போது நான் ஆசிரியராக இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி”
அப்போது ஒரு கேள்வியைக் கேட்டேன். “இலங்கையில் வீர கேசரி, தினகரன். இந்தியாவில் தினமணி, தினத்தந்தி போன்ற நாளி தழ்களுக்கு உள்ள பாரம்பரிய வரலாறு, பின்னணி தமிழ் நேசனுக்கு உண்டு என நினைக்கின்றேன். அதுபற்றி விளக்கம் தருவீர்களா?”
தங்கு தடையின்றிப் பதில் கொடுத்தார் விவேகானந்தன். “70 ஆண்டுக் கால வரலாறு தமிழ் நேசனுக்கு உண்டு. மலேசியத் தமிழர் களின் இந்தியர்களின் அரசியல், கல்வி, இலக்கியம், வரலாறு, பொரு ளாதாரம் என்பனவற்றில் தமிழ் நேசனின் பங்கு கணிசமானது. ஒரு காலத்தில் தமிழ் நேசன் மலேசியத் தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்
а 7',

மாத்தளை முதல் மலேசியா வரை."
சங்கமாக பணிபுரிந்திருக்கிறது. அவர்களின் உரிமை, சம்பள உயர்வு போன்ற போராட்டங்களில் செய்திகளை முன்னெடுத்து வெற்றி காணச் செய்திருக்கிறது. மலேசியச் சிறுகதை, கவிதை, நாவல் போன்ற துறைக ளில் தரமான படைப்புகள் தோன்ற களம் விரித்துக் கொடுத்திருக்கிறது. “மலேசியாவில் எப்போதும் இரு நாளிதழ்களுக்குப் பரவலான ஆதரவு தமிழர்கள் மத்தியில் இருக்கின்றன. முன்னர் தினமணி, தமிழ் மலர் வெளிவந்து நின்று போயின. ஆனால் இன்று மலேசிய நண்பன் தமிழ் நேசனுக்கு மாற்றாக வெற்றிகரமாக வெளிவருகின்றது. எனவே மலேசிய நண்பன் தமிழ் நேசனுக்குப் போட்டியாக இருக்கிறதா?”
அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல ஒரு விநாடி யோசித்தார். அந்த யோசனையை வெட்டியது தொலைபேசி அழைப்பு தொலை . பேசி ஓய்ந்ததும் மிகப் பக்குவமாக பதில் கொடுத்து ஒரு நாளிதழ் ஆசிரியர் என்பதை நிரூபித்தார். “மலேசியாவில் எப்போதும் இரு தமிழ்த் தினசரிகளுக்கு வாசகர்கள் உண்டு. எனவே மலேசிய நண்ப னும் தமிழ் நேசனும் தொடர்ந்து வருகிறது. மலேசிய நண்பனால் எங்கள் விற்பனை குறையவில்லை. அதற்காக அவர்கள் விற்பனை அதிகரிக்கவில்லை என்று சொல்லமாட்டேன். மேலும் தமிழ்நேசன் மட்டும் தான் சிங்கப்பூருக்குள் நுழையும் தமிழ் நாளிதழ். எனவே இங்கு இரண்டு இதழ்களும் போட்டி போடுகின்றன. என்று சொல்ல முடியாது. போட்டியென்றால் வெற்றி தோல்வி உண்டு. இங்கு இரு பத்திரிகைகளும் வெவ்வேறு திசையில் இருந்து வெளிவருகின்றன. எனவே போட்டிக்கு இடம் இல்லை.”
“எதிர்காலத்தில் தமிழில் செய்தி இதழ்களைப் படிக்கத் தமிழ் தெரிந்தவர்கள் இருக்கமாட்டார்கள் என்று மலேசியாவில் சிலர் சொல் கிறார்களே?”
“இது பல ஆண்டுகளாக சொல்லப்படுகிற செய்தி. தமிழ் தெரி யாதவர்கள் இங்கு தமிழர்களாக இருக்கிறார்கள். அவர்களை நினைத்து சொல்லப்பட்ட செய்தி அது. மலாய் மொழியில் உயர் கல்வி கற்க வேண்டி இருப்பதால் தமிழைப் படிக்காமல் விடுபவர்கள் உண்டு என்ற போதும் தமிழ் இதழ்களை நிறுத்துகிற அளவுக்குப் போகாது என்று நினைக்கின்றேன்.”
நான் அந்தப் பதிலை மறுத்து அவரோடு விவாதிக்கவில்லை. ஆனால் எனக்கு அந்த பதிலில் திருப்தி இல்லை அடுத்தநூஜ்ரங்கம்
79

Page 42
O மாத்தளை சோமு
டில் தமிழ் இதழ்கள் வருவது கேள்விக்கு உரியது தான். பல தமிழ் வீடுகளில் தமிழ் இதழ்களே வாங்கப்படுவதில்லை. பல இளைய சந் ததியினர் தமிழ் படிப்பதேயில்லை. இந்நிலையில் பதில் சொல்ல முடியாமல் தான் இருப்பதாகப் பலர் சொன்னார்கள். நான் பலரோடு பேசியபோது மலேசியாவில் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் பல்வேறு தொழிலில் இருக்கிறார்கள். அவர்கள் தொகை 50 ஆயிரத்துக்கும் அதிகமாகும். அவர்களில் பலர் மலேசியாவில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களை வாங்கிப் படிக்கிறார்களாம். அதனாலும் தமிழ் இதழ் களின் விற்பனை அதிகமாக இருப்பதாகச் சொன்னார்கள்.
கடந்த பத்து ஆண்டுகளுக்குமுன்னே கனடா, சுவீடன், நோர்வே, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் வெளியான பல முக்கிய இதழ்கள் நின்று போய் விட்டன. பல இடங்களில் ஆண்டுக்கு ஒரு தடவை இலக்கிய மலர் மட்டும் வெளியாகின்றது. கனடாவில் பிரான் சில் வார இதழ்கள் வருகின்றன. வேறுபல செய்தி இதழ்கள் இலவச மாய் வருகின்றன. கனடாவில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட வார இதழ்கள் வருகின்றன. ஆஸ்திரேலியாவில் மாத இதழ் ஒன்றும் மாத மிருமுறை இதழ் ஒன்றும் வருகின்றன. ஆனால் அடுத்த தலை முறை யில் இவைகள் தொடருமா என்பதுதான் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பெரிய கேள்வியாகும். ஆங்கிலமே அங்கு மொழியாகவும் கல்வி மொழியாகவும் மாறிவிடும் போது இக்கேள்வி நியாயமானது தானே.?
தமிழ் நேசன் ஆசிரியரிடமிருந்து விடை பெற்றபோது தமிழ் நேசன் 70 வது ஆண்டு மலர் ஒன்றினை கொடுத்தார். அரிய தகவல்கள் கொண்ட அம்மலரை பிறகு படிக்கலாம் என்று எண்ணிக் கொண்டே தமிழ்நேசன் காரியாலயத்தை விட்டு வெளியே வந்தேன். ஒரு டாக்சி பிடித்து மலேசிய நண்பன் காரியாலயத்திற்குப் போவதற்காக டாக் சியை எதிர்பார்த்தேன். வீதியில் பல டாக்சிகள் ஓடின. என் கண்ணில் பட்ட டாக்சியெல்லாம், மலாய்க்காரர் டிரைவராக இருந்ததால் நிறுத்த வில்லை. மலாய் டாக்சி டிரைவர்களுக்கு ஆங்கிலம் தெரியாததால் யோசித்தேன். நாமொன்று நினைக்க அவர்கள் வேறு ஒன்று நினைத்து டாக்சி ஒட்டினால் என்ன செய்ய முடியும்? இதற்கு முன் பல அனுப வம் உண்டு. எனவே ஒரு தமிழ் டாக்சி டிரைவரை எதிர்பார்த்தேன். பல நிமிடங்களின் பின், ஒரு டாக்சி கிடைத்தது. டிரைவர் தமிழர்.
80

மாத்தளை முதல் மலேசியா வரை.
நிறுத்தினேன். டாக்சி நிற்க ஏறிக்கொண்டேன் மலேசிய நண்பனுக்கு போகணும் என்றேன்.
a y புன்னகையுடன் “யாரைப் பார்க்க போநீங்க?' என்று கேட்டார் அந்த டாக்சி டிரைவர்.
“மலேசிய நண்பன் ஆசிரியர் ஆதி குமணின்”அந்த டிரைவர் முகத்தில் மேலும் பிரகாசம் ஆதி. குமணன் சாரையா? “அவர் எங் களுக்கெல்லாம் நம்பிக்கை நட்சத்திரம். அவரைப் பத்திரிகை ஆசி ரியருக்கு மேல ஒரு வழிக்காட்டியாப் பார்க்கிறோம்.”
மலேசிய நண்பன் அலுவலகத்தில் என்னை இறக்கிவிட்டு அந்த டாக்சி ஓடியது. மேல் மாடியில் இருந்த மலேசிய நண்பன் அலுவல கத்திற்குப் போனேன். என்னை அறிமுகம் செய்து விட்டு ஆசிரியர் ஆதி. குமணனைப் பார்க்க வேண்டும் என்றேன். ஆசிரியர் ஊரில் இல்லை. தமிழகத்தில் இருக்கிறார். நீங்கள் பாதாசன் அவர்களோடு பேசுங்கள் என்றார்கள்.
மலேசிய நாட்டின் தமிழ் உலகம் அறிந்த மணிக்கவிஞர் பாதா சன் அவர்களை அவரின் அறையில் சந்தித்தேன். அவர் மரபுக்கவி ஞர். திராவிட இயக்கத்தின் தாக்கத்தில் உருவானவர். தமிழகத்தின் தனித்தமிழ் இயக்கத்தின் வீச்சு மலேசியாவிலும் இருந்ததால் அங்கு மரபுக் கவிஞர்கள் ஏராளம். அங்கு வருகிற வார, மாத இதழ்களைப் பார்த்தால் மரபுக் கவிதைகள் நிறைய அங்கு வருகின்றன. அது பற்றி யெல்லாம் அவரோடு பேசினேன். புதுக்கவிதையைப் பற்றிக் கேட்ட போது மணிக்கவிஞர் இதமாகப் பதில் கொடுத்தார்.
“புதுக்கவிதைக்கு நான் எதிரியல்ல. மரபை வைத்தே புதுக் கவிதையை எழுதலாம். மரபு தெரிந்து புதுக்கவிதை எழுதினால் அது நீடித்து நிற்கும். மலேசியாவில் மரபுக் கவிஞர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள். அவர்களின் கவிதைகள் மற்ற நாடுகளைவிட அதிக எண்ணிக்கையில் இங்கு வருகின்றன. எங்கள் மலேசிய நண்பன் ஞாயிறு இதழில் மரபுக் கவிதைகளும் வருகின்றன. புதுக் கவிதையும் வருகின்றது. மரபுக் கவிஞர்களை பட்டியல் போடுவதே முடியாத காரியம் ஒருவரைச் சொல்லி மற்றவரைச் சொல்லவில்லை. என்றாகி விடும். எல்லா மலேசியத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து மலேசிய தமிழ்க் கவிதைக் களஞ்சியம் என்னும் பெரிய நூலை கவிஞர் முரசு நெடுமாறன் அவர்கள் தொகுத்துக் கொண்டிருக்
8 O

Page 43
மாத்தளை சோமு
கிறார். அந்நூல் வந்தாலே (அந்நூல் 1998ல் அழகாக பெரிய அளவில் வெளிவந்து விட்டது) மலேசியாவின் தமிழ் மரபுக் கவிஞர்கள் எவர் எவர் என்பது தெரியும். முடியுமானால் அவரைச் சந்தியுங்கள்.”
நான் அடுத்த கேள்விக்குப் போனேன். “மலேசிய நண்பன் தொடங்கி குறுகிய காலம் தான் ஆகிறது. இதனை வெற்றிகரமாக எவ்வாறு சாதிக்க முடிந்தது?”
“ஆசிரியர் ஆதி குமணன் அவர்களின் தீவிர உழைப்பும் அதிக நம்பிக்கையும் தான் முக்கியக் காரணம். ஆசிரியருக்கு பத்திரிகைத் துறையில் நீண்ட கால அனுபவம் உண்டு. எல்லோரையும் கவரும் தன்மை உண்டு. எனவே மலேசிய நண்பன் சாதனைப் பட்டியலில் இருக்கிறது. இன்று தினமும் சரி, ஞாயிறும் சரி, மலேசிய நண்பன் தான் அதிகமாக விற்கின்றது. மக்கள் ஆதரவும் அதிகரித்தமையால் மக்கள் ஓசை என்ற ஞாயிறு இதழ் எங்கள் நிறுவனத்தில் இருந்து வரு கிறது. இதற்கெல்லாம் மூலவேர் ஆசிரியர் ஆதி. குமணன் தான்”
அந்த நேரத்தில் டாக்சி ஒட்டிய தமிழர் ஆதி. குமணன் அவர் களைப் பற்றிச் சொன்னதை நினைத்துப் பார்த்துக் கொண்டேன்.
“வாங்க தண்ணி சாப்பிடுவோம்” என்ற பாதாசன் எழுந்து நடந் தார். நான் அவரைப் பின் தொடர்ந்தேன். அவர் தண்ணீர் சாப்பிடு வோம் என்றதும் வேறுவிதமாய் எண்ணிவிடாதீர்கள். மலேசியாவில் சிங்கப்பூரில் தண்ணி சாப்பிடுவோம் என்பது குளிர்பானம் மற்றும் தேநீர் காப்பி குடிப்பதைத்தான். தமிழ்நாட்டில் இலங்கையில் தண்ணி என்றாலே வேறு அர்த்தம் மது அருந்துவதைத்தான் அப்படிச் சொல் வார்கள்.
8
தேநீர் குடித்துவிட்டு திரும்ப அலுவலகம் வந்ததும் பாதாசன் ஆஸ்திரேலியாவைப் பற்றி, அங்குள்ள தமிழர்களைப் பற்றி தமிழ்க் கல்வி, தமிழ் இலக்கிய முயற்சி பற்றிக் கேட்டார். ஆஸ்திரேலிய ஆதி வாசிகள் பற்றியும் கேட்டார். அதற்கான பதில்களைக் கொடுத்தேன். அவைகளை விரிவாக எழுதப் போனால் இக்கட்டுரையின் தலைப் புக்கு மாறாகி விடும் என்பதால் ஒரே ஒரு கேள்வியை மாத்திரம் அவசியம் என்பதால் இங்கு குறிப்பிடுகின்றேன். கேள்வி இதுதான்.

மாத்தளை முதல் மலேசியா வரை. D
“மலேசிய எழுத்துக்களை அங்கீகரிப்பதில் தமிழகம் அக்கறை காட்ட வில்லையென்று சொல்லப்படுகின்றதே. அதுபற்றிப் புலம் பெயர்ந்த எழுத்தாளர் என்ற அடிப்படையில் உங்கள் கருத்து?”
இது முக்கியமான கேள்வி. ஆனால் என்னிடம் ஏன் பதில் கேள் வியை பாதாசன் கேட்டாரோ தெரியாது எனினும் பதில் கொடுத் தேன். “உங்கள் கேள்வியில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் இதனையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்காமல் நமது முயற்சிகளை நாம் தான் முன்னெடுத்துப் போக வேண்டும். அதனை ஒழுங்காக செய்யாமல் குறை சொல்வது தவறு. முதன் முதலில் எழுத் துக்களை நான் அனுப்பி வைத்தேன். பிறகு பல எழுத்தாளர்களை இதழ் ஆசிரியர்களை சந்தித்தேன். பிறகுதான் எனது சிறுகதைகள் புத்தகங்களாக வந்தன. மதுரை மீனாட்சி பதிப்பகம் எனது இரு சிறு கதைத் தொகுதிகளை வெளியிட்டது. இதற்காக எவரின் சிபார்சையும் நாடவில்லை. நானாகவே இதனைக் கையாண்டேன். இதற்காக நான் கடும் உழைப்பை மேற்கொண்டேன். இன்று ஒரு அடையாளம் எனக்கு இருக்கிறது. இதுபோன்று மலேசிய எழுத்தாளர்களும் முயற்சி செய்ய வேண்டும். சென்னையில் இருந்து வந்த தீபம் மலேசிய மலரை வெளி யிட்டது. வாசகர் வட்டம் அக்கறை இலக்கியம் பிரசுரித்தது. மேலும் தமிழகத்தில் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் இங்கு அடிக்கடி வருகின்றார்கள். அவர்களை நோக்கி மலேசிய எழுத்துக்கள் பற்றிய கேள்விகள் வீசப்பட வேண்டும். மலேசியாவை வர்த்தக சந்தையாக எண்ணுகிற கலை இலக்கியவாதிகளை அடையாளப்படுத்த வேண் டும். இதற்கு மேலாகத் தரமான சிறுகதைகளைத் தொகுத்து புதுப்புது நூல்களை வெளிக்கொணர வேண்டும்”
எனது பதிலை செவிமடுத்த பாதாசன், உங்களின் தோட்டக் காட்டினிலே என்ற சிறுகதைத் தொகுப்பை படித்திருக்கின்றேன். அதன் முன்னுரைதான் இந்தக் கேள்வியைக் கேட்கத் தூண்டியது” என்றார். எனக்குப் பெரிய ஆச்சரியம்.1980களில் மலையகத்து சிறுகதைகளை அமரர் கைலாசபதி அவர்களின் முன்னுரையோடு அந்தச் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டதற்கு உரிய காரணத்தையே அறிந்து இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கலாம். அந்த சிறுகதைத் தொகுதி இலங்கை மலையக மக்களின் எழுத்துக்களை அடையாளப்படுத்த வேண்டும் என்று தான் வெளியிடப்பட்டது. அந்த நோக்கமும் நிறைவேறியது.
83

Page 44
மாத்தளை சோமு
சிறுகதைகளும் ஒரு இனத்தை அடையாளப்படுத்துகிறது என்பதற்கு
அந்தத் சிறுகதைத் தொகுதியும் உதாரணமாகும்.
“ஆசிரியரை எப்போது சந்திக்கலாம்?” “ஆசிரியர் தமிழகத்தில் ஒரு நிகழ்ச்சிக்காகப் போயிருக்கிறார்.
அடுத்த வாரம் வரலாம். உங்கள் வருகையை அவரிடம் சொல்லி வைக் கின்றேன்” என்ற அவர் தனது வீட்டு தொலைபேசி இலக்கங்களைக் கொடுத்தார். பிறகு அவரிடம் சொல்லிவிட்டு அதே கட்டிடத்தில் இருக் கிற மக்கள் ஓசை என்ற வார இதழ் அலுவலகத்திற்குச் சென்று அதன் ஆசிரியர் குரு (1998) அவர்களைச் சந்தித்தேன்.
மக்கள் ஓசை ஞாயிறு தோறும் கலை, இலக்கியம், அரசியல், சினிமா எனப் பலதரப்பட்டவற்றையும் முன்னெடுக்கிற ஒரு அருமை யான இதழ். மலேசிய எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் களத்தை விரித்துக் கொடுக்கிற பத்திரிகை. மலேசிய நண்பன் மலேசிய தமிழ் வாசகர்களுக்கு வாராவாரம் வழங்கிவரும் இன்னொரு அருமையான இதழ்.
“மலேசியாவில் ஏற்கனவே இரு நாளிதழ்கள் ஞாயிறு மலர்களை வெளியிடுகின்றன. மேலும் வாராவாரம் சஞ்சிகைகள் வேறு வருகின் றன. இந்நிலையில் மக்கள் ஒசைக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?” எனது அந்தக் கேள்விக்கு உற்சாகத்துடன் பதில் கொடுத்தார். குரு. “மக்கள் ஒசையின் பாணி தனித்துவமானது. இந்த இதழுக்கு அன்றாடச் செய்தியை முன்னெடுக்கிற அவசியம் இல்லாமையினால் செய்திக் கட்டுரை, சிறுகதை, தொடர்கதை, கவிதை, கட்டுரை, சினிமா எனப் பக்கங்களை அழகுபடுத்த முடிகின்றது. எனவே ஏனைய பத் திரிகைகளை வாங்குகிறவர்களும் மக்கள் ஓசையை வாங்குகிறார்கள். மேலும் எங்களுக்குச் சுதந்திரமாக இயங்க மதிப்புக்குரிய ஆதி. கும ணன் அவர்கள் அனுமதியளித்துள்ளார். எனவே மக்கள் ஓசை பல ரைக் கவர்ந்துள்ளது. மலேசிய எழுத்தாளர்கள், கவிஞர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பும் இதன் மூலம் கிடைத்துள்ளது.”
“இதன் விற்பனை வேறு எந்த பத்திரிகைக்கும் போட்டியாக இருக்காதா?”
“நிச்சயம் இருக்காது இதன் அமைப்பு உள்ளடக்கம் எல்லாம் வித்தியாசமானது. எனவே இது எந்தப் பத்திரிகைக்கும் போட்டியாக இல்லை இது தனித்துவமானது”
O 4

மாத்தளை முதல் மலேசியா வரை. ()
மக்கள் ஓசை ஆசிரியர் குருவைச் சந்தித்து விட்டு வெளியே வந்த போது ‘வாங்க’ என்று என்னை வரவேற்றார் அன்புச்செல்வன். அவர் ஒரு எழுத்தாளர். தரமான சிறுகதைகளை எழுதியிருக்கிறார். அந்தச் சிறுகதைகள் நூலாக வந்திருக்கின்றன. தற்போது மக்கள் ஒசையில் பணிபுரிகின்றார்.
“மக்கள் ஒசைக்கு நீங்க எழுதலாமே” என்றிகேட்டார் அன்புச் செல்வன்.
“நிச்சயம் எழுதுகிறேன். சிட்னி திரும்பியதும்.” “உங்களுக்கு எழுத எப்படி நேரம் கிடைக்கிறது?” இதுபோன்ற கேள்வியை பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள்.
“நேரத்தை நானே தேடிக் கொள்கிறேன். எழுதுவதில் எனக்கு பெரிய திருப்தி கிடைக்கிறது. எனவே தினமும் சிறிது நேரமாவது எழுதுவேன்”
அன்புச் செல்வனிடம் விடைபெற்றுக் கொண்டு மலேசிய நண் பன் காரியாலயத்தை விட்டு வெளியே வந்து ஒரு டாக்சி பிடித்து தராசு என்ற வார இதழ் ஆசிரியர் தமிழ்மணியைப் பார்க்கப் புறப்பட்டேன்.
தராசு இதழ்களை சிட்னியில் இருந்தபோதே நான் பார்த்திருக் கின்றேன். தமிழகத்தில் இருந்து வெளிவருகிற ஜீனியர் விகடன், நக் கீரன் போன்ற புலனாய்வு இதழ்கள் போல மலேசிய அரசியல் சமூ கச் சம்பவங்களை விமர்சிக்கிற வாரஇதழ். இதன் சில இதழ்கள் அரசி யலை விமர்சிப்பதில் எல்லை மீறிப் போனதும் உண்டு. இது எனது கருத்தல்ல. மலேசிய நண்பர்கள் சொன்ன கருத்தாகும்.
தராசு இதழ் அரசியல் சம்பந்தமாக வெளியிடும் கருத்துகள் உள் நாட்டுப் பிரச்னைகளைக் கொண்டதால் நான் ஒரு வெளிநாட்டிலிருந்து போயிருக்கிற பயணி என்பதால் அதனைப் பற்றிய எனது க்ருத்துக் களைத் தவிக்கின்றேன். ஆனால் சமூகத்தின் மேம்பாட்டில் கருத்தாய் இருக்கிற ஒரு எழுத்தாளனின் எதிர்ப்பும் தாக்குதலும் சமூகத்தின் மேம்பாட்டுக்கு உதவும் என்பதில் சந்தேகமே இல்லை. இதனை இரு தரப்பாரும் ஜனநாயக வழியில் எதிர்கொண்டால் ஆக்க பூர்வமான பலன்கள் ஏற்படும்.
தராசு அலுவலகத்தில் ஆசிரியர் தமிழ்மணி அவர்களை சந் தித்தேன். ஏற்கனவே அவரோடு தொலைபேசியில் என்னைப் பற்றி
85

Page 45
மாத்தளை சோமு
அறிமுகம் செய்திருந்தால் என் பெயரைக் கேட்டதும் உற்சாகமானார் தமிழ்மணி. “வாங்க உங்கள சந்திக்கனும்னு நெனைச்சிகிட்டிருந் தேன். நீங்களே வந்திட்டீங்க.”
நான் தமிழ் மணியைப் பார்த்தேன். பெருத்த உருவம். சற்றுக் குட்டையான உயரம். கம்பீரமான மீசை, மலேசிய தமிழ் இளைஞர் களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த அமரர் சா ஆ அன்பானந் தன் அவர்களின் வழி வந்தவர் அவர்.
“உங்களின் தராசு இதழ்களைப் பார்த்திருக்கின்றேன். தராசு வரு வதால் நீங்கள் நினைக்கிற மாற்றங்கள் வந்துவிடும் என்று நினைக் கிறீர்களா?”
தமிழ்மணி முதலில் ஒரு புன்னகையைச் சிந்திவிட்டுப் பதில் கொடுத்தார். “ஒரு எழுத்தாளன் தனி நபர்களைப் பற்றி சிந்திப்பவன் அல்ல. சமுதாயமே முன்னேற வேண்டும் என்று நினைப்பவன். அந்த நினைப்புதான் எழுத்துக்களாக வருகின்றன. அவைகள் பலரைத் தாக்கக் கூடும். அதனையிட்டு எனக்குக் கவலையில்லை. என் கவலை இந்த சமுதாயத்தைப் பற்றியதே.”
அவரின் எழுத்துக்கள் தராசு இதழில் வெளிவந்த போது பிரச்ச னைகள் உருவானது நிஜம். அதனால் நீதிமன்றத்திற்குப் போக வேண்டி வந்தது. மட்டுமல்ல சிறைச்சாலைக் கதவுகளை எட்ட வேண்டியும் இருந்திருக்கிறது. நச்சுத் திராவக வீச்சை அவர் முகம் எதிர் கொண்ட தும் நிஜம். எந்த நாடென்றாலும் நியாயத்தை பத்திரிகையாளர்கள் எழுதினாலே பிரச்சனை. அமெரிக்காவில் ஒரு பத்திரிகையாளனால் ஜனாதிபதியையே பதவி இறக்க முடிகிறது. இத்தனைக்கும் நாடாளு மன்ற ஜனநாயகம் தான் அங்கும் இருக்கிறது. ஏனைய நாடுகளிலும் அதே நாடாளுமன்ற ஜனநாயகம் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. ஆனால் ஆசிய நாடுகளில் இருக்கிற அரசியல் தலையீடு அச்சுறுத் தல் பயமுறுத்தல் என்பன நாம் சரியான, முறையான ஜனநாயகத்தை நோக்கி இன்னும் காலடியே எடுத்து வைக்கவில்லையோ என எண் ணத் தோன்றுகிறது. འང་
தமிழ்மணியிடம் ஆஸ்திரேலியாவில் இருந்து வெளிவரும் தமிழ் உலகம் (மாத இதழ் இப்போது வருவதில்லை) சிட்னி பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கம் வெளியிடும் காலாண்டுச் சஞ்சிகை கலப்பை ஆகிய இதழ்களை (1995) கொடுத்து விட்டு வந்தேன்.
36

மாத்தளை முதல் மலேசியா வரை. 0
பிறகு பல தடவை மலேசியா போனபோது தமிழ் மணியைப் பார்க்க முடியாமல் போய் விட்டது. அந்தக் கால கட்டத்தில் தராசு இதழ் நின்று போக, தினமுரசு' என்ற நாளிதழின் ஆசிரியரானார். அதில் உதவி ஆசிரியராக கு. தேவேந்திரன் என்ற இளைஞர் பணி புரிந்தார். அவர் தராசு' இதழிலும் பணிபுரிந்தவர். தமிழ்ழணிக்கு உறுதுணை யாக இருந்தவர். தமிழ்மணியின் ஆவேசம் லட்சியம் - சீறிப் பாயும் எழுத்து யாவும் தேவேந்திரனை உற்சாகப்படுத்தியது. நான் எப்போது மலேசியா போனாலும் அவரோடு பேசுவேன். கடைசியாக மலேசியா போனபோது அவர் மக்கள் ஒசையில் பணிபுரிவதாக செய்தி வந்தது. அதே நேரத்தில் தினமுரசு நாளிதழ் வெறுமனே ஒரு செய்தி இதழாக மாறியிருந்தது. தராசு தமிழ்மணியை தினமுரசு நாளிதழிலில் காண வில்லையென்று அவரின் முன்னாள் வாசகர்கள் சொன்னார்கள். எனக்கு எதுவும் புரியவில்லை. எனவே விடைகாண தேவேந்திரனோடு தொலைபேசியில் பேசினேன். என் கொள்கை அப்படியே இருக் கிறது. நான் மாறவில்லை மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. அது பற்றி கருத்துச் சொல்வது ஜனநாயகம் அல்ல. இப்போது மக்கள் ஒசையில் ஆதி குமணன் அவர்களின் வழிகாட்டலில் பணிபுரி கின்றேன்.” என்று சொன்னார். அதற்கு மேல் எதுவும் நான் கேட்க வில்லை.
19
அந்தப் புத்தகக் கடையைப் பார்த்ததும் நான் பிரமித்துப் போனேன். அங்கே பல்வேறு தலைப்புகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் குவிந்திருந்தன. சிட்னியில் ஆங்கிலப் புத்தகக் கடை களை புத்தகக் கடல் என்று சொல்லலாம். அதேபோன்று ஒரு புத்தகக் கடையை அதுவும் மலேசியாவில் பார்த்தது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. மேற்றிசை நாடுகளில் மக்கள் புத்தகங்களுக்குக் கொடுக் கிற மரியாதை அபரிமிதமானது. புத்தகத்த்ை வாசிப்பதும் அதனை நேசிப்பதும் பண்பாடு உள்ள மனிதனின் செயலாகும். இயந்திர மய மான வாழ்க்கை முறை இருந்தபோதும் ஒடும் ரயிலில் பறக்கும் விமா னத்தில் புத்தகம் வாசிப்பது அவசியம் என மேற்கத்திய நாடுகளில் கருதுகிறார்கள்.
சிட்னியில் ஒரே புத்தகக் கடையில் சகல பிரசுர பீடங்களின் புத்தகங்களும் விற்பனைக்கு வருகின்றன. தமிழகத்தின் தலைநகர்
87 DI

Page 46
மாத்தளை சோமு
சென்னையில் மட்டுமல்ல மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் உள்ள புத்தகக் கடைகளில் வேறு வழியைப் பின்பற்றுகிறார்கள். தாங் கள் வெளியிடுகிற புத்தகங்களை மாத்திரமே முன்னெடுக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணமே தமிழகத்தில் புத்தகங்களை வெளியிடும் பதிப்பகபே விற்பனையாளராகவும் இருப்பதுதான். அவர்கள் மற்றப் பதிப்பகங்களைத் தொடுவதே இல்லை.
சென்னையில் பல எழுத்தாளர்களின் புத்தகங்கள் வாங்க வேண்டு மானால் அங்கும் இங்கும் ஓடவேண்டும். தர்மமிகு சென்னையிலேயே இதுதான் விதியென்றால் திருச்சி, மதுரையில் சொல்லவே வேண்டிய தில்லை. ۔
ஒருமுறை திருச்சி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் புத்தகக் கடையில் இருந்தேன். அப்போது ஒருவர் எழுத்தாளர் தமிழ் வாணனின் தன் முனைப்பு நூல்களை வாங்கும் ஆர்வத்தில் விசாரித் தார். கடை மேலாளர் சொன்ன பதில் திடுக்கிட வைத்தது. பதில் இது தான். தமிழ்வாணணின் புத்தகங்களுக்கு நீங்கள் சென்னைதான் போக வேண்டும், திருச்சியில் எங்கும் கிடைக்காது!
நான் கவலையோடு புத்தகம் கேட்டவரை பார்த்தேன் எனது பார் வையின் அர்த்தம் புரிந்தது போல் பேசினார்". நான் மலேசியாவில் இருந்து வர்ரேங்க. புத்தகம் வாங்கிட்டுத் திருச்சி வழியா கொழும்பு போய் கோலாலம்பூர் போவணும். புத்தகத்துக்காக சென்னை போக முடியாதுங்க”
அந்த மலேசியக்காரர் கடையை விட்டு வெளியே போனார். அதன் பிறகு அந்தக் கடை மேலாளர் சில விபரங்களை எடுத்துச் சொன்னார்.” பல பதிப்பகங்கள் தங்கள் புத்தக வெளியீட்டையும் விற்பனையையும் குடும்ப வர்த்தகமாக வைத்திருக்கின்றன. வெளி யிலே விற்பதற்கு தகுந்த கழிவு தருவதில்லை. இதனால் தான் இந்தப் பிரச்சனை’
இந்தியாவில் மலையாளிகளிடம் புத்தகம் வாங்கி படிப்பதில் இருக்கிற ஆர்வம் தமிழர்களிடம் இல்லை. புத்தக வியாபாரமே கஷ்ட மானது. அதிலும் புதுப்புத்தகங்கள் வெளியிடுவது மிகவும் கஷ்ட மானது. தமிழ்நாட்டில் பிரபல்யமானவர்களைத் தவிர ஏனையவர்கள் புத்தகம் போடப் பதிப்பாளர்கள் படியேறிக் களைத்தவர்கள் தான்.
86 (ם

மாத்தளை முதல் மலேசியா வரை.
சாகித்தியப் பரிசு பெற்ற மீரானின் 'சாய்வு நாற்காலி' என்ற நாவலை மறுபதிப்பு வெளியிட பதிப்பகங்கள் இல்லை. பல தரமான எழுத்தா ளர்களின் படைப்புகளைப் புரட்டிப் பார்க்க எவரும் தயாராய் இல்லை. மேலும் புத்தக விற்பனை ஆரோக்கியமானதாக இல்லை. பல எழுத் தாளர்களும் படைப்பாளிகளும் தமிழக அரசு நூலாக கொள்வனவை நம்பித்தான் புத்தகமே வெளியிடுகிறார்களாம்.”
ஒரு பதிப்பகத்தார் என் காதிலே சொன்னதை இங்கே தருகின்றேன்.
ஒரு புதிய புத்தகத்தின் பிரதிகள் 1000 அல்லது 1200 அச்சிடுகின் றோம். இதில் 600 பிரதிகள் நூலகத்திற்காக வாங்குகிறார்கள். உதார ணமாக 1000 பிரதிகள் அச்சிட்டால் நூலகக் கொள்வனவு 600 போக மீதி 400. இந்த 400ஐத்தான் விற்க வேண்டும். இதனை விற்கவே பல வருடம் ஆகும். நூலகக் கொள்வனவும் இலகுவில் கிடைத்துவிடாது. இதில் அரசியல் வேறு! இதில் வெற்றி கண்டால் 600 பிரதிக்கான உரிமம் கிடைக்கும். அதற்கு அவர்கள் நிர்ணயித்த பெறுமதி தான் கிடைக்கும். சர்வதேச தரத்திற்கு புத்தகத்தை அச்சிட்டாலும் நிர்ணயித்த தொகை தான் கிடைக்கும். அதுவும் பல மாதமாகும். ஆனால் ஆங்கிலப் புத்த கங்களுக்கு பிரசுரகர்த்தா போட்ட விலையிலேயே உரிமம் கிடைக் குமாம். தமிழுக்குத்தான் இப்படி
தற்போது முதலமைச்சர் (1999) கலைஞர் ஆட்சியில் சில மாறு தல்கள் வந்துள்ளன. ஆயினும் அது போதாது என்பது புத்தக வெளி யீட்டாளர்களின் கருத்தாகும். அதற்கு உதாரணமாக சாகித்திய விருது பெற்ற நாவலான 'விசாரணைக் கமிஷன் என்ற நூலினைச் சொல்ல லாம். இந்நூலுக்கு நூலாக கொள்வனவு உரிமம் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் பிரபல எழுத்தாளர் சாயாவனம் சா. கந்தசாமி எழு திய நூல் இது.
தமிழகத்தில் நூல்களை வெளியிட்டவன் என்ற அனுபவத்தில் நான் கண்ட சில உண்மைகளை கீழே தருகின்றேன்.
1 நூலகக் கொள்வனவை நம்பியே புத்தக வெளியீடுகள்
2 தமிழகம் முழுமைக்குமான சங்கிலிக் கோர்வையான விற்பனை
இல்லை.
3 புத்தக வெளியீடு ஒரு கலாசாரம். அது அர்த்தத்தோடு, முன்
னெடுக்கப்படவில்லை.
89 D

Page 47
D மாத்தளை சோமு
4. நூலகங்கள் மிகக் குறைவு, இருக்கிற நூலகத்தில் கூட தமிழுக்
கான சரியான அடையாளம் இல்லை.
5 ஒரு நகரில் எல்லாப் பதிப்பகத்தின் நூல்களையும் வாங்க முடி
யாத நிலை.
6 பல தரமான நூல்கள் நூலகப் புத்தகக் கொள்வனவு முன்னு ரிமை கிடைக்காது என்பதால் மறுபிரசுரமே செய்யப்படுவ தில்லை. Y.
இவையெல்லாம் மாற வேண்டுமானால் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட வேண்டும். தாய் மொழிக் கல்வி கட்டாயம் ஆக வேண்டும். தாய் மொழி விடுத்து வேற்று மொழியில் கற்பது - தாய் மொழி தாய் நாடு மறந்த மக்கள் கூட்டத்தையே உருவாக்கும். அந்தக் கூட்டத்தில் தமிழ் நூல்களை எப்படி விற்பது?
அந்தப் புத்தகக் கடையை ஒரு தடவை சுற்றி வந்து விட்டு மலே சியத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் வைக்கப்பட்டிருந்த பகு தியில் நின்று நிதானமாய்ப் புத்தகங்களைப் பார்த்தேன். அங்கே பல மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் நாவல்கள், சிறுகதைகள், புத்தகங் களாக இருந்தன. அவைகள் அரு ஜிவானந்தன், மா.இராமையா, ரெ. கார்த்திகேசு, சாமி. மூர்த்தி, வீ. செல்வராஜ் ஆர். சண்முகம், சை. பீர் முகம்மது, மைதீ. சுல்தான் ஆகிய எழுத்தாளர்கள் எழுதியவை. பிறகு அந்த எழுத்தாளர்களின் புத்தகங்களை வாங்கிக் கொண்டேன். அப் போது ஒரு எண்ணம் என நெஞ்சில் எழுந்து நின்றது.
மலேசியாவில் தமிழகத்திற்கு அப்பால் இலங்கைக்கு அடுத்த தாக தமிழில் நல்ல படைப்புகள் வந்திருக்கின்றன. ஆனால் அவர்க ளுக்குத் தமிழகத்தில் மாத்திரமல்ல தமிழர் புலம் பெயர்ந்த நாடு களில் எல்லாம் சரியான அறிமுகம் கிடைக்கவில்லை. அதனை நாம் ஏன் செய்யக் கூடாது? அந்தக் கணமே மலேசியத் தமிழ் எழுத்தா ளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து வெளியீடுவது என முடிவு எடுத்துக் கொண்டேன். பிறகு மலேசியாவில் வெளிவரும் தமிழ் இதழ் களில் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுக் கப் போவதாக செய்தியும் கொடுத்தேன். விரல் விட்டு எண்ணக் கூடிய எழுத்தாளர்களே என்னோடு தொடர்பு கொண்டார்கள். ஆயி னும் நான் சோர்ந்து போகவில்லை. பல எழுத்தாளர்களுக்கு கடிதம் போட்டேன். எல்லோரிடமிருந்தும் பதில் வரவில்லை. ஆனால் எழுத்
D 90

மாத்தளை முதல் மலேசியா வரை.
தாளர் சை. பீர்முகம்மது அவர்கள் எழுதிய கடிதம், தமிழகத்தில் தங்கி இருந்தபோது என் வசம் சேர்ந்தது. அது எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. ஆனால் அந்த உற்சாகம் மட்டும் மலேசிய சிறுகதைத் தொகுதியை வெளியிடப் போதுமானதாக இருக்கவில்லை. ஏனைய எழுத்தாளர்கள் தொடர்பு கொள்ளாததால் புத்தகம் அச்சு செலவு வேறு என்னை பயமுறுத்தியதால் புத்தகம் போடும் யீோசனையை தற்காலி கமாக தள்ளி வைக்க முடிவெடுத்த போது ஈப்போவில் இருந்து முனி யாண்டி எழுதிய கடிதம் என்னைப் பயமுறுத்தியது.
அந்த கடித வரிகள் இதுதான். புதிய புத்தகங்களோடு (எல்லை தாண்டா அகதிகள் - அவர்களின் தேசம்) ஆஸ்திரேலியா போகிற வழியில் மறுபடியும் மலேசியா வருவதாக எழுதியிருந்தீர்கள். உங்க ளின் வரவு ஆவலோடு எதிர்பார்க்கக் கூடியதே. ஆனால் நீங்கள் இங்கு வந்தால் மலேசிய சிறுகதையைப் பற்றி பல்வேறு கேள்விகள் எழலாம். எனவே மலேசிய சிறுகதைத் தொகுதியை கட்டாயம் நூலாக்கி வாருங்கள்! -
அந்தக் கடிதத்தைப் பார்த்ததும் எப்படியாவது புத்தகம் போட வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்குப் பிறகு உருவானது தான் மலேசியத்தமிழ் உலகச் சிறுகதைகள் என்ற சிறுகதைத் தொகுதி. இதில் எழுத்தாளர்கள் ப.கு. சண்முகம், சாமி மூர்த்தி, சை. பீர்முகம்மது. ரெ. கார்த்திகேசு, ஆர். சண்முகம், பி.ஸ். பரிதிதாசன், மா.இராமையா, அரு. சு. ஜிவானந்தம், மைதீ. சுல்தான், பூ அருணாசலம், வேலன் செல்லையா, ஜனகா சுந்தரம், திருமதி தெய்வானை, திருகிம் ஆகி யோரின் சிறுகதைகள் தொகுக்கப்பட்டன. இது ஒரு முன்மாதிரியான முயற்சி. என்பார்வைக்கு வந்த சிறுகதைத் தொகுதிகளில் இருந்து இச்சிறுகதைகளைத் தெரிவு செய்தேன். இதனை விட மலபார் குமார், அன்பு செல்வன், கோவிந்தசாமி, ந. மகேஸ்வரி, மனஹரன், கோ. முனியாண்டி, எம். ஏ. இளஞ்செல்வன் ஆகியோரின் சிறுகதைகள் என் பார்வையிலேயே படவில்லை. அழகான முறையில் மலேசியத் தமிழ் உலகச் சிறுகதைகள் அச்சிடப்பட்டது. அதில் பின் இணைப்பாக ‘மலேசியத் தமிழ் இலக்கியம் ஒரு நினைவோட்டம்’ என்ற தலைப் பில் மலேசியாவின் மூத்த எழுத்தாளர் மா. இராமையா எழுதிய கட் டுரை சேர்க்கப்பட்டது. புத்தகத்தை சென்னையில் உள்ள வே. கரு ணாநிதி அழகாக அச்சிட்டுக் கொடுத்தார். அவர் இன்று புத்தகப் பதிப்பில் பல சிறந்த முயற்சிகளைச் செய்து தமிழில் நேர்த்தியான
9 DI

Page 48
D மாத்தளை சோமு
புத்தகங்களை கொண்டு வந்திருக்கிறார். எனது பல நூல்கள் அவ ரால் பதிப்பித்துக் கொடுக்கப்பட்டவை. சொல்லப் போனால் பல நூல் கள் வெளியிட ஊக்கம் தந்தவர். அவரும் ஒரு புலம் பெயர்ந்த தமி ழரே!. இலங்கையில் உள்ள மீன் பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பு என்ற நகரைச் சேர்ந்தவர் அவர்.
மலேசியத் தமிழ் உலகச் சிறுகதைகள் என்ற நூலினைப் பார்த்த பல மலேசியத் தமிழர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். இவன் விற்கமட்டுமல்ல வாங்கவும் நோக்கம் கொண்ட ஒரு எழுத்தாளன் என்று என்னை அடையாளப்படுத்தினார்கள். அந்த அடையாளம் தான் எனக்கு மலேசியத் தமிழரிடையே ஒரு சிநேகிதத்தை கொடுத்தது.
20
மலேசிய வானொலியில் நேர்காணல் நிகழ்ச்சிக்காக ஈப்போ முனியாண்டி என்னை மலேசிய வானொலி நிலையத்திற்கு அழைத் துச் சென்றார். அந்த மலேசிய வானொலி நிலையக் கட்டிடத்தைப் பார்த்த போது எனக்கு பழைய நினைவுகள் நெஞ்சில் மொய்க்கத் தொடங்கின. மாத்தளையில் இருந்தபோது மாலை 4.30 மணிக்கு மலேசிய வானொலி ஒலிபரப்பைக் கேட்பேன். இரண்டரை மணி நேர வித்தியாசம். அப்போது இரவு ஏழு மணி மலேசியாவில், செய்தி வாசிப்பார்கள். தூய்மையான தமிழ். இப்படி சொல்வது கூட மிகைப் படுத்தப்பட்டதாக இருக்கலாம். கலப்பற்ற பொருத்தமான வார்த்தை களுடன் கூடிய தமிழ்ச் செய்திகள். தமிழகத்துத் தமிழ் அறிஞர்களே வியந்து பாராட்டுகிற வார்த்தைகளை வானொலியின் நிகழ்ச்சிகளில் சேர்த்தமை பாராட்டுக்குரியது. இன்று (1999) 21 மணிநேர தமிழ் ஒலி பரப்பு நடத்தும் மலேசியாதான் முதன் முதலில் தமிழில் FM என்று அழைக்கப்படும் பண்பலைகளில் நிகழ்ச்சிகளைத் தொடங்கியது.
எங்களே ஒலிப்பதிவுக் கூடத்திற்கு அழைத்துச் செல்ல ஒலி பரப்பாளர் மைதீ. சுல்தான் வந்திருந்தார். அவர் மலேசியத் தமிழ் உலகம் அறிந்த ஒலிபரப்பாளர். எழுத்தாளர். கவிஞர். அவரிடம் என்னை முனியாண்டி அறிமுகம் செய்து வைத்தார். அவர் உடனே சிறுகதைத் தொகுதி போடப் போவதாகப் பத்திரிகையில் செய்தி படித் தேன். நல்ல முயற்சி. எனது சிறுகதைத் தொகுதியைத் தருகின்றேன். தகுதி கண்டால் சிறுகதையைச் தெரிவு செய்யுங்கள் என்று சொல்லி
D 92

மாத்தளை முதல் மலேசியா வரை. D
விட்டு ஒரு சிறுகதைத் தொகுதியைக் கொடுத்தார். அதனை நான் மறுக்காது புன்னகையோடு வாங்கிவிட்டு சொன்னேன்.
“உங்களது இந்தச் சிறுகதைத் தொகுதியை நான் புத்தகக் கடை யில் வாங்கிவிட்டேன். இது சிட்னியில் உள்ள தமிழ் நூலகத்திற்குக் கொடுக்க உதவும்”
மைதீ. சுல்தான் முகத்தில் ஆச்சரியக் குறிகள். “ரொம்ப வேகமாக இருக்கீங்களே. மாத்தளை சார்”
அவருக்கு எனது நாவலைக் கொடுத்தேன். நாவலை வாங்கிய மைதீ. சுல்தான் “கையெழுத்துப் போட்டுக்குடுங்க” என்றார். நான் உடனே கையெழுத்திட்டு அவரது கையெழுத்துக்காக அவரது புத்த கத்தை நீட்டிய போது மறுபடியும் புன்னகைத்துக் கொண்டே, “புத்த கத்தை திறந்து பாருங்க” என்றார். நான் அந்தப் புத்தகத்தை திறந்த பார்த்தேன். உள்ளே அவரின் கையெழுத்து கம்பீரமாகத் தெரிந்தது!
எனது புத்தக அறிமுக நிகழ்ச்சிகளில் பலர் என்னிடம் கையெ ழுத்தைப் புத்தகங்களில் வாங்கினார்கள். ஒரு புத்தக அறிமுகத்தின் போது ஒரு வயதானவர் என்னிடம் வெள்ளைப் பேப்பரை நீட்டி கை யெழுத்துக் கேட்டார். அவர் கையில் புத்தகம் இல்லை.
“புத்தகம் வாங்கலியா?”
“இந்தக் கூட்டத்துக்கு வரவே ஆறு ரிங்கிட் செலவழிச்சிருக்கேன். ஓய்வு பெற்றவன். புத்தகம் வாங்க வருமானம் போதாது. உங்க பேச்சை கேட்டேன். உங்க ஞாபகமாக இந்த கையெழுத்து இருக்கட்டுமே”
நான் உடனே ஒரு நாவலை எடுத்துக் கையெழுத்துப் போட்டு “என்னுடைய அன்பளிப்பா இதை வைச்சிக்குங்க” என்று சொல்லிக் கொடுத்தேன்.
முற்றும் முழுதான எழுத்து, சிறுகதை சம்பந்தமான பேட்டியை எடுத்தார் மைதீ. சுல்தான். பேட்டி முடிந்ததும் மைதீ. சுல்தான் மலே சிய வானொலி நிலையத்தைப் பற்றிச் சொன்னார்.
“மலேசியாவில் காமன் வெல்த் நாடுகளின் (98) விளையாட்டு போட்டிகள் நடைபெற இருக்கின்றன. அதனை முன்னிட்டு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ஒலி, ஒளிபரப்புக் கூடங்கள் கட்டப்
93 D

Page 49
D மாத்தளை சோமு
பட்டு வருகின்றன. அது முடிவடைந்தால் உலக ஒலிபரப்பே நடத்த லாம்.”
போலோ மலேசியா' என்பது மலாய் வார்த்தையில் ஒரு கோஷம். அதன் அர்த்தம் மலேசியாவினால் முடியும் என்பதே. அதனை நிரூ பிப்பது போல் காமன்வெல்த் நாடுகளின் விளையாட்டுப் போட்டி களை மலேசியா நடத்திக் காட்டியது. உலகிலேயே உயரமான கட்டி டம் ஒன்றையும் கோலாலம்பூரில் கட்டினார்கள். இதன் பின்னணியில் மலேசியத் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பது உற்சாகமானது. மேலும் உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய விமான நிலையத்தை பல்வேறு முணுமுணுப்புகளுக்கும் இடையில் மலேசிய அரசு கட்டி விட்டது. அதனைப் பார்க்கிறபோது போலோ மலேசியா! என்ற வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன.
திரும்பவும் ஈப்போ போனேன். அங்கு பாவாணர் மன்றம் ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. பெரியவர் காரியர் மற்றும் மனோகரன் ஆகி யோர் முன்னின்று நடத்திய நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங் கியவர் குறிஞ்சிக்குமரன் என்று அழைக்கப்படும் சா.சி. சுப்பையா. அவர் மரபுக் கவிஞர். தனித்தமிழில் பற்றானவர். ஆயினும் நவீன இலக்கியத்தோடு தொடர்பு கொண்டவர். அவர் தனது தலைமை உரை யில் மாப்பசானைப் பற்றிக் குறிப்பிட்டார். பிறகு நான் பேசினேன்.
ஆடம்பரமில்லாத அந்த நிகழ்ச்சியை நான் விரும்பினேன். ஒரு எழுத்தாளனை நேசித்து நடந்த கூட்டம். கடைசி வரை எல்லோரும் இருந்து ஆதரித்த நிகழ்ச்சி. சினிமாவுக்கு அப்பால் எழுத்தையும் எழுத்தாளர்களையும் நேசித்த மனிதர்கள் சங்கமித்த நிகழ்வு
அடுத்த நாள் கெமருன் மலை என்ற இடத்தில் நடக்க இருந்த கலந்துரையாடலுக்குப் போனேன். வழக்கம் போல் முனியாண்டி காரில் அழைத்துச் சென்றார். கெமருன் மலை மலேசியாவில் புகழ் பெற்ற இடம். மலேசியாவின் ஊட்டி (தமிழ்நாடு) அல்லது நுவரெலியா இலங்கை) எனச் சொல்லலாம். குளுமையான பகுதி. உருளைக் கிழங்கு, காய்கறிகள், பழங்கள் எனப் பல வகைகள் அங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. பெரிய நிலப்பரப்பில் தேயிலை உற்பத்தியா கிறது. மலேசியாவின் ஏனைய பகுதிகளில் வெய்யில் காயும் போது மக்கள் இந்த மலைக்கு வந்து போகிறார்கள்.
D 94

மாத்தளை முதல் மலேசியா வரை. D
அந்தக் கலந்துரையாடலின் சகல ஏற்பாடுகளையும் கெமருன் மலை அம்முச்சியப்பன் செய்திருந்தார். மிகக் குறைவான மக்கள் தொகையே அந்த மலையில் இருந்ததால் கூட்டம் சிறியதாக இருந் தது. ஆனால் அவர்களின் ஆர்வம் அந்த கெமருன் மலை போல் உயரமானது.
இலக்கியக் கூட்டம் தொடங்கும் போதே குளிரத் தொடங்கியது. கூட்டத்திற்கு வந்திருந்த பலர் மப்ளர் சுவிட்டர் போர்வையோடு இருந்தார்கள். அவர்களைப் பார்க்கும்போது கொடைக்கானல் வாசி களின் நினைவு வந்தது.
கூட்டம் முடிந்து காரில் ஏறியபோது ஒரு சிறிய பொதியை என் கையில் திணித்தார். நான் என்ன என்பது போல அம்முச்சியப்பனைப் பார்த்தேன். “ஒண்ணுமில்ல. கெமருன் மலைத் தேயிலை.” என்றார் அவர் தேயிலைப் பிரதேசத்தில் பிறந்து வளர்ந்து இன்று ஆஸ்திரே லியாவில் இருக்கிற எனக்கு அந்தத் தேயிலைப் பொதியை மறுக்க மனம் வரவில்லை. அன்போடு வாங்கிக் கொண்டேன். பிறகு அந்தத் தேயிலை இந்தியாவுக்குப் போய் மலேசியா வந்து ஆஸ்திரேலியா விற்கு வந்தது அம்முச்சியப்பனுக்குத் தெரியாது.
தமிழகத்திலிருந்து சிட்னி திரும்பும் வழியில் மறுபடியும் மலே சியாவிற்குப் போனபோது வழக்கம் போல் எனது சகலர் வீட்டிலேயே தங்கினேன். அவருக்குத் தமிழ் எழுத்து இலக்கியம் என்பனவற்றில் ஆர்வம் இல்லாத போதும் எனக்கு நிறைய உதவிகளைச் செய்தார். மலேசியா போகும் போதெல்லாம் அவர் இல்லத்தில் தங்கியதால் தங் கும் செலவு சுமையாக இருக்கவில்லை.
இந்தத் தடவையும் நூல் அறிமுகம் எழுத்தாளர் சந்திப்புகள் நடந்தன. கோலாலம்பூரில் ரெ. கோ. மையத்தின் ஏற்பாட்டில் தன் முனைப்புப் பயிற்சியாளர் ரெ.கோ. ராசு அவர்கள் மாலைத் தென்றல் என்னும் நிகழ்ச்சியில் கடல் கடந்த தமிழர்கள் என்ற தலைப்பில் என்
னைப் பேச வைத்து நூல்களை அறிமுகம் செய்து வைத்தார். அந்
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ரெ.கோ. ராசு நீங்கள் மலேசியாவிற்கு எப்போதும் வந்தாலும் என்னோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் நிகழ்ச்சியை இந்த மையத்தில் (Centre) வைக்கின்றேன் என்று சொல்லி விட்டு, அவர் நடத்திவரும் தன் முனைப்பு இதழான ‘உயர் வோம்’ என்ற இதழைக் கொடுத்தார். அது தன் முனைப்பைத் தூண்
95

Page 50
D மாத்தளை சோமு
டும் இதழ். நான் பள்ளியில் படித்த போது தமிழ்வாணனின் தன் முனைப்புக் கட்டுரைகள் எனக்கு உற்சாகத்தைத் தந்தன.
தன் முனைப்பு இன்று உரத்த குரலாக மலேசியாவில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மலேசியத் தமிழ் இதழ்களைப் பார்த்தால் அங்கு காதர் இப்ராகிம் தன்னம்பிக்கை பால சுப்பிரமணியம், எனப் பலர் தன் முனைப்பு பயிற்சிகளை நடாத்தி வருவது தெரியும். தமிழக தன் முனைப்பாளர் எம்.எஸ். உதயமூர்த்தி தன்முனப்பு சொற்பொழிவுக் காக மலேசியா வருவாராம். கல்வியை இடையிலேயே நிறுத்திக் கொண் டவர்களுக்கும் மற்றும் சினிமா, தொலைக்காட்சி மது போன்றவற்றுக்கு அடிமையாகி விட்டவர்களுக்கும் இதுபோன்ற தன்முனைப்பு பயிற்சி கள் அவசியமானவை, மேலும் ஒவ்வொரு மனிதருள்ளும் முடங்கிக் கிடக்கிற திறமைகளை, ஊக்கங்களை, தன் முனைப்புப் பயிற்சிகள் வெளியே கொண்டு வந்துவிடும்!
ஈப்போவில் இந்த முறையும் ஒரு இலக்கியச் சந்திப்பு நடந்தது. அதில் ஒன்றை மட்டும் வாசகர் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். அது ஈப்போவில் பாவாணர் மன்றம் நடத்திய நிகழ்வுதான். அங்கு நான் விரும்பாத ஒரு நிகழ்வு நடந்தது. பாவாணர் மன்றத்தினர் எனக் குப் பொன்னாடை போர்த்தி புதினத்தென்றல்' என்ற ஒரு பட்டத்தைக் கொடுத்தார்கள். ஏற்புரையின்போது நான் சொன்ன பதில் ஈப்போ பாவாணர் மன்றத்தினருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கலாம்.
“எனக்குப் பட்டங்களில் நம்பிக்கை இல்லை. ஆனால் நீங்கள் அன்பின் மிகுதியால் வழங்குவதனால் அதனை ஏற்கின்றேன். என் றாலும் இதனைப் பயன்படுத்துகிற உரிமை என்னையே சார்ந்தது. இனிமேல் இந்தப் பட்டத்தை நான் பயன்படுத்த மாட்டேன்’ என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்லிவிட்டேன். ஆனால் அவர்கள் என்னைக் குறிப்பிடும் போதெல்லாம் ‘புதினத்தென்றல்’ மாத்தளை சோமு என்றே குறிப்பிட்டார்கள். பட்டங்களும் புகழாரங்களும் மலிந்து போய் விட்ட இந்தத் தமிழ்ச் சமூகத்தில் உண்மையான படைப்பாளி இந்தப் பட்டங்களை விரும்பமாட்டான். பட்டங்களை சூடிக் கொள் வதும் அதனை மேவுவதும் தமிழ் நாட்டிலிருந்து ஏற்றுமதியான ஒரு வியாதி. இது திராவிட அரசியல் காற்றில் கலந்துவந்த ஒன்று. இதன் எல்லைகள் மலேசியாவிலும் இருக்கின்றன. நல்ல திறமையானவர் களும் கூட அமெரிக்கப் பல்கலைக்கழகம் என்று வரக்கூடியதான ஒரு
O 96

மாத்தளை முதல் மலேசியா வரை. படி
محبر
பெயர் வைத்துக் கொண்ட நிறுவனத்திற்குப் பணம் கட்டி டாக்டர் பட்டம் பெற்று விடுகின்றார்கள். இதனை கூரையில்லாப் பல்கலைக் கழகம் என்று சொல்வார்கள். இந்தப் பட்டங்களில் யாருக்கு என்ன மரியாதை? நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற நடைமுறைதான். மேலை நாடுகளில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் இதுபோன்ற பட்டங் களை தொட்டுப் பார்க்காதவர்களாகத் தான் இருக்கிறார்கள். பொது வுடைமைக்கு வரைவிலக்கணம் தந்த காரல்மார்க்ஸ், மாக்ஸிம் கார்க்கி, லியோ டால்ஸ்டாய், நமது பாரதி புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் ஆகியோரெல்லாம் பட்டங்களைச் சூட்டிக் கொண்டார்களா என்ன?
மேற்றிசை நாடுகளில் இந்தப் பட்டங்களை சுமக்கிற சிந்தனையே இல்லை. வீட்டு வாசல் முகப்பில் கற்களில் பெயரோடு பட்டங்களைப் பொறித்து வைக்கிற பழக்கம் இல்லை. தனிமனிதத் துதி இல்லை. இது ஒரு வகையில் ஞானம் பெற்ற நிலை. இதனால் அவர்களால் எத னையும் சாதிக்க முடிகிறது. ஆனால் நாம் (தமிழர்கள்) இப்போது தான் சாதிச் சண்டைகளை மதக் கலவரங்களைத் தொடங்கியிருக் கிறோம். இதனைக் கடந்து மனித நேயமானவர்களாக மாற முதலில் சட்டம் ஒழுங்கை விட மேற்றிசை நாடுகளில் இருக்கிற சமூக ஞானம்" நமக்கு அவசியம். அது என்று வருமோ?
2
மலேசியாவுக்குப் பல தடவை போன போதும் தமிழகத்தில் இருந்து (1995) சிட்னிக்கு திரும்பும் வழியில் இரண்டாவது தடவையாக போனபோது தான் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதை களைத் தொகுத்து அச்சிட்ட மலேசியத் தமிழ் உலகச் சிறுகதைகள் என்ற சிறுகதைத் தொகுதியின் பிரதிகளோடு போயிருந்தேன். அத் தொகுதியில் இடம்பெற்ற சிறுகதைகளை எழுதியவர்களோடு கடிதம் மூலமும் தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டேன். அவர்களில் சை. பீர் முகம்மது, மா. இராமையா, ரெ. கார்த்திகேசு, ப. கு. சண்மு கம், பரிதிதாசன், மை. தீ. சுல்தான் ஆகிய எழுத்தாளர்களைத் தவிர மற்றவர்கள் என்னோடு எந்தத் தொடர்பும் கொள்ளவில்லை. நான் பதிப்பாளர் இல்லை. ஆனால் முதலீடு செய்து அந்த சிறுகதைத் தொகு தியை வெளியிட்ட எனது சுமையைக் குறைக்க எழுத்தாளர்களிடம் தலா பத்து பிரதிகள் வாங்கிக் கொள்ளும்படி கேட்டிருந்தேன். பத்து
97 D

Page 51
D மாத்தளை சோமு
பிரதி யென்கிறபோது ஆளுக்கு 100 வெள்ளிகள் ஆகின்றன. ஆனால் நான் எதிர்பார்த்த நம்பிக்கை வரவில்லை. இந்த இடத்தில் எங்கள் எழுத்துக்களை அங்கீகரிக்கவில்லையே என்று சொல்லிக் கொண்டி ருந்த சில எழுத்தாளர்கள் இந்தத் தொகுதியைக் கண்டு கொள்ளவில் லையே என்று கவலை கொண்டேன். அத்தொகுதிக்கான அறிமுக நிகழ்வுகூட எங்கும் நடைபெறவில்லை. நான் கலந்து கொள்ளப்போன நிகழ்ச்சிகளில் நானே அச்சிறுகதைத் தொகுதிகளை விற்றேன். அதற் காகப் போகிற இடமெல்லாம் புத்தகப் பொதிகளை ஏற்றி இறக்கிப் பட்ட கஷ்டத்தை எவர் அறிவார்? ஆயினும் நான் வெளியிட்ட சிறு கதைத் தொகுயைப் பெரிதாகப் போற்றி என்னைச் சிலாகித்துப் பாராட்டியவர்களை நினைவுபடுத்தத்தான் வேண்டும்.
நான் சிறுகதைத் தொகுதியின் பிரதிகளோடு வந்து விட்டதாக அறிவித்ததுமே எழுத்தாளர் மா. இராமையா, ஆர். என். வீரப்பன் மூலமாகவும் ரெ. கார்த்திகேசு, மைதீ. சுல்தான், பி. எஸ். பரிதிதாசன், பூ அருணாசலம், ஜனகா சுந்தரம் ஆகியோர் வெவ்வேறு சந்தர்ப் பங்களிலும் பல பிரதிகளைப் பெற்றுக் கொண்டு ஆதரித்தார்கள். ஆனால் எழுத்தாளர் சை. பீர்முகம்மது அவர்கள் இது சம்பந்தமாக என்னைச் சந்தித்துப் பேச நான் தங்கியிருந்த கிள்ளாங் வீட்டிற்கே வந்து விட்டார். அதற்கு முன்னர் அவரை நான் பார்த்தது இல்லை. அவர் தீபம் என்ற மாத இதழில் எழுதிய மலேசியக் கடிதங்களைப் படித்திருக்கின்றேன். வெண்மணல் என்ற சிறுகதைத் தொகுதியில் அவர் எழுதிய சிறுகதைகளைப் படித்திருக்கின்றேன். ஆனால் அவ ருக்கு என்னைத் தெரியுமோ என்னவோ?
காலை பத்தரை மணிக்குப் பீர்முகம்மது வந்தார். வண்டியை நிறுத்திவிட்டு என்னை ஏற இறங்கப் பார்த்தார். பிறகு கை குவித்து வணக்கம் என்றார். பதில் வணக்கம் செய்தேன்.
உங்களை நான் கேள்விப்பட்டதில்லை. என்னைத் தாங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்கள் கடிதத்தைக் கண்டதும் எனக்குப் பெரிய யோசனை. இங்கு பலர் என்னை மறந்து விட்டார்கள். நானும் எழுவ தில்லை. எழுத்தை நிறுத்திப் பல வருடங்களாகி விட்டன. தொழிலில் முழுக்கவனம். முழு நேரத்தை விழுங்கும் குத்தகைத் தொழில். இந் நிலையில் எழுத்தாளன் பீர் முகம்மதுவை யார் நினைத்துக் கொண்டி ருப்பார்கள். எப்போதோ அச்சேற்றிய வெண்மணல் வீட்டில் தூங்கு
D 98

மாத்தளை முதல் மலேசியா வரை.
கின்றது. இப்படியான நிலையில் உங்களின் கதை தெரிவு செய்ததாக எழுதப்பட்ட கடிதம் எனக்குப் புதிராய் இருந்தது. ஆஸ்திரேலியாவில் இருந்து மலேசியா வந்து தமிழகம் போய் மாத்தளை சோமு கடிதம் எழுதுகிறாரே! இவர்யார்? எப்படி இருப்பார்? என நினைத்தேன்.என்னை விட வயதானவராய் இருப்பீர்கள் என்ற நினைத்தேன். ஆனால் நீங் கள் இளமையோடு இருக்கிறீர்கள். புத்தகம் கொண்டு வந்தீர்களா?”
“ஆம்”என்று சொல்லி விட்டு 15 பிரதிகள் கொடுத்தேன். அதற் குரிய தொகையை பீர்முகம்மது கொடுத்து விட்டார். பிறகு அவருக்கு நன்றி தெரிவித்து “உங்களின் கடிதம் என்னை உற்சாகப்படுத்தியது.” என்று சொன்னேன் நான்.
அப்போதுதான் அவர் சொன்னார்."நான் கோலாலம்பூர் போகி றேன். நீங்களும் வந்தால் பேசிக் கொண்டே போகலாம்.”
ஒரு எழுத்தாளனோடு அல்லது ஒரு இலக்கியவாதியோடு மனம் விட்டும் பேசிப் பல வருடங்களாகி விட்டன. இன்று இவரோடு போனால் பேசலாம். நான் மறப்புச் சொல்லாமல் அவரின் வண்டி யில் ஏறி உட்கார்ந்தேன். வண்டி ஓடத் தொடங்கிய போது வண்டிக் குள் குளுமை பரவியது.
மலேசிய வெய்யில் சில நேரத்தில் தலைக்கு மேல் நெருப்பைக் கொட்டிவைத்தாற் போல் சூடாக இருக்கும். இதனைத் தவிர்க்க பஸ் வண்டிகள் யாவும் குளுமை செய்யப்பட்டுள்ளன. தனியார் கார்களில், டாக்சிகளில் இதே குளுமை இருக்கும். என்னதான் வெப்பம் இருந்த போதும் நாடு சொர்க்கமாகத் தெரியும். இதனால் தான் மலேசியாவை வெப்ப மண்டலச் சொர்க்கம் என்கிறார்கள்.
வண்டியை ஒட்டிக் கொண்டே பீர்முகம்மது என்னிடம் கேட் டார். “மலேசியாவில் பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். பலர் எழு திக் கொண்டிருக்கிறார்கள்.”
நான் எழுதுவதே இல்லை. எனது சிறுகதையை ஏன் தெரிவு செய்தீர்கள்?”
“உங்களைத் தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியாது. தரத்தின் அடிப்படையிலேயே உங்களின் சிறுகதையைத் தெரிவு செய்தேன். அதற்கு உங்களின் வெண்மணல் சிறுகதைத் தொகுதி உதவி செய்தது.”
99 D

Page 52
D மாத்தளை சோமு
“என்னைப் பலரும் மறந்து விட்டார்கள், அதற்கு காரணம் எழு தாமல் இருப்பது உங்களைப் பார்த்த பிறகு ஒரு சந்தோசம் வருகிறது.”
நான் இடை மறித்துச் சொன்னேன்.” அந்த மகிழ்ச்சி நீடிக்க வேண்டுமானால் நீங்கள் எழுத வேண்டும். தினமும் ஒரு பக்கமாவது எழுத முயற்சிச்க வேண்டும். உங்கள் எழுத்துத்தான் உங்களோடு என்னைப் பேச வைக்கிறது. நமது அடையாளமே எழுத்துத்தான். தொடர்ந்து எழுதுங்கள்.”
“நீங்கள் ஒரு எழுத்தாளராய் இருந்து கொண்டு என்னை எழு துங்கள் என்று சொல்கிறீர்கள். வேறு எவரும் இப்படிச் சொன்ன தில்லை.”
“நான் எழுத்தாளன் என்பதை விட, முதலில் ஒரு மனிதன். அதில் எனக்கு மகிழ்ச்சியே’ மதம் இனம் கடந்த ஒரு மனிதனால் தான் பலரையும் நேசிக்க முடியும். நான் தொடக்கக் கல்வி பெற்றது ஒரு இஸ்லாமிய ஆரம்பப்பள்ளி. அங்கே படித்தபோது முகமது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளின் போது பச்சைக் கொடி அசைத்து அரபு சுலோகங்கள் சொல்லி ஊர்வலம் போனவன் நான்”
அப்போது தான் பீர்முகம்மது சொன்னார்."நான் மதத்தால் முஸ்லீம் ஆக இருந்தபோதும் மொழியால் தமிழனே! எனக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்தவர்கள் மலேசியாவில் இருந்த யாழ். ஆசி ரியர்களே. நானும் மதம், இனம் கடந்த மனிதனே.”
ஒரு ஹோட்டலில் பகல் உணவை முடித்துக் கொண்டு இரு வரும் காரில் ஏறினோம். கார் ஓடவில்லை ஆனால் யந்திரம் ஓடியது. அதனால் காரின் உள்ளே குளுமை பரவியது. அந்தக் குளுமையில் என்னைப் பேட்டி கண்டார் பீர்முகம்மது. எங்களின் உரையாடலை சிறிய ஒலிப்பதிவுக் கருவி பதிவு செய்தது.
மறுபடியும் வண்டி ஓடியது. அப்போது பீர்முகம்மதுவைப் பார்த் துக் கேட்டேன். “நீங்கள் ஏன் ஆஸ்திரேலியா வரக்கூடாது? உங்கள் புத்தக அறிமுகத்தை நான் செய்கின்றேன். சிட்னியில் சிறிய இலக்கிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. வாருங்கள். நாட்டையும் பார்த்தது (ဇီးဖုဓါ இருக்குமே”
“குத்தகைத் தொழில் ஓய்வு கிடைப்பது அரிது ஆனாலும் முயன்று பார்க்கிறேன்” என்றார் பீர்முகம்மது.
а 100

மாத்தளை முதல் மலேசியா வரை.
மலேசியாவில் இரண்டாவது தடவையான என் பயணத்தை முடித்துக் கொண்டு சிட்னி திரும்பிய நான் பீர்முகம்மதுவோடு தொலை பேசியில் தொடர்புகொண்டு அவரை சிட்னி வரும்படி அழைத்தேன். அவரும் ஓய்வு தேடிக்கொண்டு 1996ல் மார்ச் மாதம் மெல்லிய குளிரில் சிட்னி வந்து இறங்கினார்.
சிட்னி, மெல்போர்ன் நகர்களில் பீர் முகம்மதுவின் வெண்மணல் சிறுகதைத் தொகுதியின் அறிமுக நிகழ்வுகள் நடந்தன. சிட்னியில் நானே, சிட்னி தமிழ்க்குரல் என்ற அமைப்பின் ஆதரவோடு புத்தக வெளியீட்டை நடத்தினேன். மெல்போனில் முதலில் புத்தக வெளி யீடு நடத்துவது கஷ்டமாக இருந்தது. பிறகு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த ஜெயக்குமார் அவர்களோடு தொடர்புகொண்டு ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தது மனதுக்கு இதமாக இருந்தது. சிட்னி யும் மெல்போனும் வெவ்வேறு திசைகளில் இருப்பதை விட இரு நகரங்களுக்கான தூரம் மிகமிக அதிகம் இரு நகரங்களுக்கான இடை வெளி சுமார் 950 கிலோ மீட்டராகும். எனவே இரு நகரங்களில் எழுப்பப்படுகிற முயற்சிகள் பலவேளைகளில் மாநில எல்லைகளையே தாண்டாது. இந்நிலையில் எழுத்தாளர் பீர்முகம்மதுவின் புத்தக அறி முகம் இரு நகரங்களில் நடந்தது. இங்குள்ள தமிழர்களின் தமிழ் மற்றும் தமிழ் எழுத்து மீதான ஆர்வத்திற்கு சான்றாகும். இங்கிருந்தபோது இங்குள்ள தமிழர்களின் ஏக்கங்களை உணர்வுகளைப் புரிந்து கொண் டார். மலேசியா திரும்பியதும் எனக்கு கடிதம் போட்டார். அந்தக் கடிதத் தின் வரிகள் இதுதான். 'வெண்மணல் சிறுகதைத் தொகுதி அச்சிட்டு இங்கு வெளியீடு காணாமல் கிடந்தது. அதன் வெளியீட்டை சிட்னியில் செய்தீர்கள். உங்களுக்கு எவ்வாறு நன்றி செய்வது? மேலும் எழுதாமல் இருந்த என்னை எழுத வைத்தீர்கள்!
பல வருடங்களாக எழுதாமல் இருந்த பீர்முகம்மதுவை எழுத வைத்ததில் வெற்றி கண்டேன். அதன் அடையாளமாக ஆஸ்திரேலிய பயணத்தை அடிப்படையாகக் கொண்டு கைதிகள் கண்ட கண்டம் என்ற பயணக்கட்டுரையை எழுதினார். அது பிற்பாடு ஒரு நூலாய் வெளி வந்தது.
மூன்றாவது முறையாக மலேசியாவுக்குப் போயிருந்தேன். அச் சமயம் அவள் வாழத்தான் போகிறாள்' என்ற நாவல் நூலின் வெளி யீட்டை கோலாலம்பூர் டத்தோ சோமா மண்டபத்தில் பீர்முகம் மதுவே முன்னின்று நடந்தினார். அதில் எனது நீண்ட நாள் ஆசை
101 a

Page 53
மாத்தளை சோமு
நிறைவேறியது அந்த ஆசை என்னவோ என்று நீங்கள் கேட்கலாம். பல எழுத்தாளர்கள், கவிஞர்கள் நூல்களை வெளியிட்ட அதே டத்தோ சோமா மண்டபத்தில் எனது நூலும் வெளியிட வேண்டுமென்று மட் டும் நான் ஆசைப்படவில்லை. மாறாக மலேசியத் தமிழர்களின் கெளர வத்தைத் தூக்கிப்பிடித்து நிறுத்தியது போல் கோலாலம்பூர் நகரில் மலேசியத் தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பில் உருவான தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான விஸ்மா துன்சம்பந்தன் என்ற பெயரில் வான் உயர நிற்கிற அடுக்குமாடிக் கோபுரக் கட்டிடத் தில் எனது நூல் வெளியீடு காண வேண்டுமென்று விரும்பினேன். (அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தில் ஒரு அரங்கமாய் இருப்பது தான் டத்தோ சோமா மண்டபம்) இதேபோன்று மலேசியத் தமிழர்கள் பெரு மைப்பட்டுக் கொள்ளக்கூடிய இன்னொரு சிறிய மண்டபம் கோலா லம்பூரில் இருக்கிறது. அது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற் குச் சொந்தமான கட்டிடம் அதனை மட்டுமல்ல வேறு பல சாதனை களை சாதித்துக் காட்டிய ஒரு சாதனையாளரைத்தான் நான் அடுத்து சந்திக்க இருந்தேன். m
22
நாலு எழுத்தாளர்கள் ஒன்று சேர்ந்தால் எட்டுக் கோணல்கள் உரு வாகும் என்பார்கள். ஏனைய துறைகளிலும் பார்க்க எழுத்துத் துறை யில் தான் தத்துவ மோதல்கள் - கருத்து முரண்பாடுகள் அதிகம். இது நிஜம்நிலைமை இப்படி இருக்கிறபோது எழுத்தாளர்களை ஒன்று திரட்டி சங்கம் நடத்தி அந்தச் சங்கத்திற்குச் சொந்தக் கட்டிடம் வாங்கியது சாதனை தானே? எட்டுக் கோடி மக்கள் வாழ்கிற தமிழகத்தில் தலை நகர் சென்னையில் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்திற்கு நின்று பேசச் சொந்த நிலமே இல்லை. இத்தனைக்கும் எழுத்தாளர்கள், கவிஞர்கள் பலர் தமிழக அமைச்சரவையில் இருந்திருக்கிறார்கள். ஆனால் மலே சியாவில் கோலாலம்பூரில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு சொந்தமான கட்டிடம் இருக்கிறது. இது மலேசிய தமிழ் எழுத்தாளர் கள் பெருமைப்பட வேண்டிய ஒன்று. இதனைச் சாதித்தவர் மலேசியத் தமிழர் எழுத்தாளர் சங்கத் தலைவர் ஆதி குமணன் அவர்கள். அவர் மலேசியத் தமிழ் உலகம் அறிந்த எழுத்தாளர் - மலேசிய நண்பன் ஆசிரியர். மலேசியத் தமிழ்ப் பத்திரிகை உலகத்திற்கு மட்டுமல்ல. மலேசியத் தமிழர்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்பவர்!
O2

மாத்தளை முதல் மலேசியா வரை.
ஒரு சாதாரண பத்திரிகையாளனாக அறிமுகமாகி கடும் உழைப்பில் படிப்படியாக முன்னேறி இன்று மலேசிய நண்பன் மற்றும் மக்கள் ஓசை பத்திரிகைகளை வெளியிடும் நிறுவனத்தின் சொந்தக்காரராக வும் இருக்கின்றார். அவரை பீர்முகம்மதுவோடு மலேசிய நண்பன் அலுவலகத்தில் சந்தித்தேன்.
“உங்களைச் சந்திக்கப் பல தடவை முயன்றும் முடியாமல் போய் விட்டது”
ஆதி. குமணன் ஆச்சரியத்தில் என்னைப் பார்த்தார். அதன் அர்த்தம் என்னை இலகுவில் பார்க்கலாமே! என்பதாய் இருக்கலாமே!
நான் புன்னகைத்து விட்டுச் சொன்னேன். “நான் இங்கு வந்த போது நீங்கள் தமிழகத்தில்.”
எனது நூல்கள் சிலவற்றையும் நான் தொகுத்த 'மலேசியத் தமிழ் உலகச் சிறுகதைகள் என்ற புத்தகத்தையும் கொடுத்தேன். அவர் உடனே எடுத்துப் பார்த்த புத்தகம் மலேசியத் தமிழ் உலகச் சிறுகதைகள்.
“இது நீங்கள் தொகுத்ததா?”
G 92
.Dاکہ
“மாத்தளை என்பது ஊரின் பெயரா?”
“மாத்தளை என்பது ஊரின் பெயர் மட்டுமல்ல; நான் பிறந்த ஊர். கண்டி என்ற புராதனச் சிறப்பு வாய்ந்த நகருக்கு அண்மையில் இருக்கிறது.”
பிறகு ஆதி குமணன் ஆஸ்திரேலியத் தமிழர் பற்றி அவர்களின் கலை, இலக்கிய, இதழ்கள். தமிழ் வானொலி முயற்சி பற்றியெல்லாம் விபரமாகக் கேட்டார். நீண்ட நேரமாக அதுபற்றி உரையாடினோம். ஆனால் அவ்வப்போது வந்த தொலைபேசி அழைப்புகளும், மலே சிய நண்பன் நாளிதழ் என்பதால் செய்தி சம்பந்தமான ஆலோசனைக்கு வரும் உதவியாசிரியர்கள் வருகையும் எங்களின் உரையாடலை நிறுத்தி நிறுத்தி வைத்தன. அதனால் எங்கள் உரையாடலில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டதை உணர்ந்த அவர் அடுத்த முறை வரும் போது முன்னரே அறிவித்து விடுங்கள். நின்று நிதானமாக பேச உதவும்.” என்றார்.
O3 D

Page 54
மாத்தளை சோமு
ஆதி. குமணனிடம் விடை பெற முயன்றபோது அவர் ஒரு பெரிய புத்தகத்தை கையெழுத்திட்டுக் கொடுத்தார். அந்தப் புத்தகம் எழுத்தாளர் சிவசங்கரி தொகுத்த இலக்கிய மூலம் இந்திய இணைப்பு என்ற தொகுதியாகும். மெள்ளப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தேன். உள்ளே இப்புத்தகத்தை அச்சிட நிதியுதவி செய்த திரு ஆதி குமணன் அவர்களுக்கு நன்றி என அச்சிடப்பட்டிருந்தன. அருமையான புத் தகம். கேரளம், கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநில எழுத்துக்களை அறிமுகம் செய்து தொகுக்கப்பட்டது. சிவசங்கரியின் ஓர் அருமையான முயற்சிக்கு கடல் கடந்து மலேசியத் திரு நாட்டிலி ருந்து ஆதி. குமணன் கைகொடுத்தது தரமான எழுத்து முயற்சிக்கு மலேசியத் தமிழர்கள் மீண்டும் முன்னணி வகிப்பதற்குச் சான்றாகும்.
மலேசிய எழுத்துக்களை நேசிக்கும் ஆதி. குமணன் மலேசிய எழுத்தாளர்களின் நூல்கள் வெளியீட்டிற்கு தலைமை தாங்குவதோடு அந்த எழுத்தாளரின் படைப்புக்கு பெரிய நிதியும் கொடுத்து உதவு வார். இதனால் பல எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை வெளி யிட முடிந்தது.
திரும்பவும் ஆதி. குமணனைச் சந்திக்க விரும்பினேன். அந்த விருப்பம் எனது முலஸ்தானம் - நான்காவது உலகம் ஆகிய நூல் களின் அறிமுக விழாவில் நிறைவேறியது. அன்றைய கூட்டத்திற்கு தலைமை தாங்கியது ஆதி குமணன். அதனை ஏற்பாடு செய்தது மலே சிய பட்டிமன்றக் குழு சார்பாக மணிவாசகம் அவர்கள். அந்தக் கூட் டத்தில் பகிரங்கமாக ஒரு செய்தியை முன்வைத்தார் ஆதி குமணன்.
“மாத்தளை சோமுவின் புத்தக வெளியீடு மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் நடைபெறுவதாக அறிவிப்பு வந்ததும் சிலர் என் னிடம் வந்து வெளிநாட்டு எழுத்தாளருக்கெல்லாம் புத்தகம் வெளி யீடு செய்ய வேண்டுமா? என்று கேட்டார்கள். இங்கே புத்தகம் வெளி யிடுவது வியாபாரமாகிவிட்டது. எனவே வெளிநாட்டினருக்கு புத்தக வெளியீடு வேண்டாம் என்று பலர் வற்புறுத்தினார்கள். ஆனால் வானொலியில் பேசிய மாத்தளை சோமு நான் பணத்தைத் காட்டிலும் உங்கள் அன்பு மனத்தையே பெரிதாக மதிக்கின்றேன். அது மட்டு மல்ல நமது எழுத்து முயற்சிகளை அறிந்தவராக அறிமுகம் செய்ப வராக, இருக்கிறார். எனவே அவரின் எழுத்துக்களை இலக்கிய அறி முகமாகவே செய்கின்றேன்.”
04

மாத்தளை முதல் மலேசியா வரை. D
அப்போதுதான் எனது அந்த நூல் வெளியீட்டில் ஆதி குமணன் கலந்து கொண்டு பேசியது ஒரு உண்மையான இலக்கியவாதிக்கு அவர் கொடுத்த கெளரவம் என்பதை உணர்ந்தேன்.
அன்று கடுமையான மழை பெய்தது. அந்த மழையிலும் இலக் கிய ரசிகர் கூட்டமாக மண்டபத்தில் இருந்தனர். அந்தக் கூட்டம் மிகச் சிறப்பாக விரைவாக நடந்து முடிந்தது. நாங்கள் மண்டபத்தை விட்டு வெளியே வந்த போது வெளியே மழை பெய்தது. மழை விட்டபோது பலர் மண்டப வாசலுக்கு வந்தார்கள். கூட்டம் முடிந்ததைக் கேள்விப் பட்டு ஆச்சரியப்பட்டார்கள். ஒரு இலக்கிய கூட்டம் அதுவும் ஒரு புத்தக வெளியீடு குறுகிய காலத்தில் சிறப்பாக நடந்தது இதுவே முதல் முறை எனவும் சொன்னார்கள். ஒரு அன்பர் ஏக்கப் பெருமூச்சு விட்ட வாறு உங்க பேட்டியை வானொலியில் கேட்டு விட்டுத்தான் இங்கே வந்தேன். ஆனால் கூட்டம் முடிந்து விட்டதே! என்று சொல்லி விட்டு என்னிடம் புத்தகங்களை வாங்கிக் கொண்டு போனார்.
அடுத்த நாள் அதிகாலையிலேயே ஒரு தொலைபேசி அழைப்பு. அழைத்தவர் எழுத்தாளர் பரிதிதாசன்.
“நேற்றைய கூட்டத்துக்கு என்னால் வர முடியவில்லை. மன்னிச் சிக்குங்க. உங்க புத்தகங்கள் வேணும்” பரிதிதாசன் எழுத்தாளனாக இருந்த போதும் இன்னொரு எழுத்தாளனின் படைப்புகளை மதிக்கத் தெரிந்தவராக இருந்தார். ஏற்கனவே நான் மலேசியாவில் வெளியிட்ட எல்லா நூல்களையும் வாங்கியவர். மலேசியத் தமிழ் இலக்கிய உலகச் சிறுகதைகள் தொகுதியின் பிரதிகள் பல பெற்றவர். இவைகளை சிறப் பாகக் குறிப்பிடுவதற்கு சில எழுத்தாளர்கள் நான் தொகுத்த சிறுகதைத் தொகுதியைக் கூடக் கண்டும் காணாதது போல் இருந்ததும் காரணமா கும். மலேசியா சென்றபோதெல்லாம் நேசக்கரம் நீட்டிய பரிதிதாசன் வேறு சந்தப்பத்தில் என்னைச் சந்தித்தபோது குமுறினார்.
எழுத்தாளன் என்பவன் சாதிகளுக்கு அப்பாற்பட்டவன். ஆனால் இங்கேயும் எழுத்தாளனின் சாதி பார்த்து கைகோர்த்துக் கொள்கிற ரகசியங்கள் இருக்கின்றன. அதனால் பல எழுத்தாளர்கள் ஒதுக்கப் படுகிறார்கள்.
அவரின் குமுறல் அனுபவத்தின் வெளிப்பாடாக இருந்தாலும் அதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. தமிழ் நாட்டிலேயே சில தனியார் நிறுவன எழுத்து சம்பந்தப்பட்ட பரிசு சாதி ரீதியில் கொடுத்
105

Page 55
மாத்தளை சோமு
ததாகச் சொல்லப்படுகிறது? அஃது நிஜமானால் வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒன்று. சாதி தமிழினத்தின் சாபக்கேடு!.. இச்சாதிக்கு தமிழ் நாட்டில் அரசியல் ரீதியாக எண்ணெய் ஊற்றி வருவது மிகக் கேவல மானதும் கலலையானதும் கூட சாதியின் பெயரால் சங்கம் என்று சிந்திப்பதிேமனித நேயமான நாகரிகம் மிக்க மனிதனின் அடையாளம் அல்ல. இன்றைய நவீன விஞ்ஞானம் தோழனாக மனிதனை நேசித் துக் கொண்டிருக்கிறபோது அடையாளம் இல்லாத உருவம் இல்லாத இந்த சாதியை வைத்துக் கொண்டு அரசியல் சமூக, கல்வி, இலக்கியத் துறைகளில் சதிராடுவது புதிய நூற்றாண்டின் மிகப் பெரிய பாவம் மட்டுமல்ல; காட்டு மிராண்டித்தனமும் கூட இதற்கெதிராக இன்றும் மனித நேயமிக்க எழுத்தாளர்கள், படைப்பாளிகள் போராடவேண்டி யிருக்கிறது.
23
கடந்த சில ஆண்டுகளாக எனக்கு மலேசியாவுக்குப் போகிற வாய்ப்பு அதிகமாகவே இருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் போகிற வழியில் மலேசியா போவது சுலபமாய் இருப்பதுதான் கார ணம் என்பதிலும் பார்க்க, அங்கிருக்கிற நண்பர்களும் உறவினர்களும் முக்கிய காரணம் என்பதே சரியனாதாகும். கோலாலம்பூரில் இருக்கும் பத்திரிகையாள நண்பர்களும் எழுத்தாளர்களும் கிள்ளாங்கில் இருக் கின்ற எனது சகலரும் அவரின் குடும்பத்தாரும் ஈப்போவில் இருக்கிற நண்பர் முனியாண்டியும் எப்போதும் என் வருகையை ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். எனவே மலேசியா போகிறபோது ஈப்போ போய் வருவது எனது வழக்கமாகிவிட்டது. இம்முறையும் ஈப்போ போன போது நண்பர் முனியாண்டி ஒரு புதிய இடத்தைப் பார்க்க என்னைக் கூட்டிப் போனார்.
அது சமீபத்தில் சரித்திரப் பிரசித்தி பெற்ற இடமாகியது. அதன் கதையை முனியாண்டி காரை ஒட்டிக் கொண்டே சொன்னபோது வியந்த போனேன். அது மனைவி மீது கொண்ட காதலுக்காக ஒரு வெள்ளைக்கார கணவன் கட்டத் தொடங்கி முடிவுறாமல் நின்று போன இன்னொரு தாஜ்மஹலைப் பற்றிய கதை.
காதலுக்குத்தான் எத்தனை பெரிய சக்தி? மதம், மொழி, இனம், நாடு போன்ற எல்லைகளைத் தாண்டி நிற்கக் கூடிய சக்தி இந்தக் காத
to 106

மாத்தளை முதல் மலேசியா வரை. p
லுக்குத்தான் உண்டு. ஒரு பெண்னைக் காதலிப்பது அவளைக் காதலி யாக்க. அந்தக் காதலியைக் காதலிப்பது அவளை மனைவியாக்க. அந்த மனைவியைக் காதலிப்பது வாழ்க்கையை இன்பமாக்க. இங்கே மனைவி மீது கொண்ட காதலினால் மலேசியாவில் ஒரு தோட்டத்தில் ஒரு பெரிய மாளிகையைக் கட்டத் தொடங்கினார். ஒரு வெள்ளைக் காரர். அவர் பெயர் வில்லியம் கெலிஸ்மித், Y፥ பிரிட்டனில் ஸ்கொட்லாண்ட் டலாஸ் என்ற இடத்தில் பிறந்து 20 வயதில் மலேசியாவிற்கு வந்தார். இது 1890 ல் நடந்தது. மலேசியாவில் ஈப்போ பகுதியில் ரப்பர் தெழிலில் ஈடுபட்ட வில்லியம், கிண்டா கெலாஸ் என்ற தோட்டத்திலேயே தன் மனைவிக்கு ஒரு மாளிகை கட்டத் தொடங்கினார். பிரிட்டிஷ் சாம்ராச்சியம் பரந்து இருந்ததால் அவருக்கு பல வேலைகள் பிரச்சனை இல்லாமல் போனது. மாளி கையை எப்படிக் கட்ட வேண்டும் என்று என்ணியபடியே தன் வேலை
களைச் செய்தார்.
1915ல் சென்னையில் இருந்து 70 தமிழ்த் தொழிலாளர்களை "மலேசியாவுக்குக் கொண்டு வந்து கட்டிடவேலையைத் தொடங்கி னார். அந்தக் கட்டிடத்திற்கு மிகவும் தரமான கற்கள், பளிங்கு கற்கள் என்பனவற்றை இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டன.
உலக யுத்தம் நடந்து முடிந்து 1918ல் ஐரோப்பாவெங்கும் பரவிய ஸ்பானிங் காய்ச்சலால் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்ததன் எதி ரொலி மலேசியாவிலும் ஒலிக்க, கட்டிடத் தொழிலாளர்கள் பயந்து போனார்கள். எனவே அவர்கள் ஒரு ஆலயம் கட்டிப் பிரார்த்தனை, செய்ய வேண்டும் என்று வில்லியத்திடம் கேட்டார்கள். வில்லியம் யோசித்து விட்டு ஆலயம் கட்ட அனுமதி கொடுத்ததோடு தன்னு டைய ஆசையையும் சொன்னார். .
அவருடைய ஆசை இதுதான். கட்டப் போகிற கோயிலின் கோபுரத்தில் என்னைப் போன்ற வெள்ளைக்கார துரையின் உருவம் வைக்கப்பட வேண்டும் என்பதை அது.
அந்த தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து ஒரு மகா மாரியம்மன் கோயிலைக் கட்டினார்கள். சிறிய கோபுரமும் எழுந்தது. அந்தக் கோபுரத்தில் வில்லியம் சொன்னபடி காக்கிச்சட்டை தொப்பியோடு ஒரு வெள்ளைக்கார துரையின் உருவம் சிலையாக வைக்கப்பட்டது.
107 D.

Page 56
மாத்தளை சோமு
வில்லியத்திற்கு மகன் பிறந்தான். மாளிகையின் வேலைகள் துரிதமாகின. ஆனால் வில்லியத்தின் விதி வேறு விதமாய் சிந்தித்தது. 1926ல் லண்டனுக்குப் போன வில்லியம் நுரையீரல் வீக்க நோயி னால் இறந்து போனார். அவருடைய மரணத்தினால் மாளிகையின் கட்டிட வேலைகள் நின்று போயின. மலேசியாவில் தனியே வாழ விரும்பாத வில்லியத்தின் மனைவி அந்த மாளிகைத் தோட்டம் எல்லாவற்றையும் விற்று விட்டு லண்டனுக்குப் பயணமானார். இன்று மழையில் நனைந்து வெய்யிலில் காய்ந்து போய் நிற்கிறது. ஒரு மாளிகைக்கான கட்டிடம், அது கட்டி முடிக்கப்பட்டிருந்தால் மனைவிக் காக கட்டப்பட்ட இன்னொரு தாஜ்மகால் ஆகியிருக்கலாம்!
அந்த இடம் ஈப்போவில் இருந்து 30 நிமிட காரோட்டத்தில் பத்து கஜா என்ற இடத்தில் இருக்கிறது. இன்றைக்கும் அதனைப் பார்க்க பயணிகள் மலேசியாவின் ஏனைய பகுதிகளிலிருந்து வந்த வண்ணம் இருக்கிறார்கள். பயணிகளின் வசதியை முன்னிட்டு வாகனங்கள் நிறுத் தவும் பூங்காவும் விடுதியும் அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அந்த மாளிகை அப்படியே தான் இருக்கிறது. அங்கே போய் வருகிற எல்லோருடைய மனதிலும் அந்த மாளிகையை செப்பனிட்டு ஏன்
கட்டி முடிக்கக் கூடாது? என்று கேள்விதான் மேலோங்கி நிற்கிறது.
அந்த மாளிகையை சுற்றிப் பார்த்து விட்டு வருகிற வழியில் அந்த தொழிலாளர்கள் கட்டிய மகாமாரியம்மன் கோயிலையும் பார்த்தோம், அந்தக் கோயிலின் கோபுரத்தில் இருந்த ஒரு சிலையைத் தேடினேன். அது வில்லியம் விரும்பிய சிலை. காக்கிச்சட்டை தொப்பியோடு நிற்கிற வெள்ளை துரையின் உருவம் சிலையாக இன்றைக்கும் அந்தக் கோபுரத்தில் இருக்கிறது. அதைப் பார்த்தபோது என் நெஞ்சில் எழுந்த வார்த்தைகள் இவைகள்தான். ஒரு துரை நினைத்த மாளிகை கட்ட முடிக்கப்படலில்லை. ஆனால் அதே துரையின் ஆசையை இந்தியா வில் இருந்து வந்த தொழிலாளர்கள் நிறைவேற்றி விட்டார்களே!
ஆயதவார் - சித்தியவான் என்ற மலேசிய ஊர்களின் பெயரை உச்சரித்தாலே எனக்கு கே. மு என்கிற கோ. முனியாண்டி மற்றும் மணஹரன் ஆகிய இரு எழுத்தாளர்களின் நினைவு வருவதோடு கூடவே அவர்கள் வைத்திருக்கிற நவீன இலக்கியச் சிந்தனை என்ற அமைப்பின் நினைவே வரும் எழுத்துத் தேடலில் புதிய புதிய எழுத்துக் களைப் படிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்ட அவர்கள் அங்கே
O 08

மாத்தளை முதல் மலேசியா வரை.
ஒரு வாசகர் கூட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அவர்கள் நடத்து கிற கலந்துரையாடலில் இலக்கிய நிகழ்வில் ஆடம்பரம் இருக்காது. மாறாக எழுத்தின் மீதும் - எழுத்தாளர் மீதும் மரியாதை இருக்கும்.
அந்த நவீன இலக்கியச் சிந்தனை அமைப்பினர் எனது 'கறுப்பு அன்னங்கள் சிறுகதைத் தொகுதியின் அறிமுக நிகழ்வை ஆயதவார் காஸ்மீர் உணவகத்திலே இரவு உணவோடு வைத்தார்கள். புதிய முயற்சி அருமையான கூட்டம். கடைசி வரை அந்தக் கூட்டத்தில் காஸ் மீர் உணவக உரிமையாளர் முகமதுஜலால்தீன் அவர்கள் இருந்தார். புத்தகம் வாங்கினார். வர்த்தகத்திற்கு அப்பால் தமிழ் மீது தமிழ் சார்ந்த முயற்சிகளுக்கு அவர் அப்பகுதியில் உதவியாக இருக்கிறார் என்ற செய்தி பிறகுதான் எனக்குத் தெரியவந்தது.
மறுநாள் கோமுவோடு பங்கோர் தீவிற்குப் போனேன். மீன்பிடிக்கு புகழ்பெற்ற சிறியதீவு இயற்கை தாலாட்டும் இடம். அங்கு தமிழர்களும் வாழ்கிறார்கள். ஒரு தமிழ்ப் பள்ளியும் இருக்கிறது. லிமுட் என்ற இடத் தில் இருந்து பெரிய படகில் தான் போக வேண்டும். அந்தத் தீவை நெருங்கும் போது கடலோரமாக இருக்கிற ஒரு கோயில் தெரிந்தது.
“என்ன கோயில்?’ என்று கேட்டேன். “அது காளியம்மன் கோயில், நாளை திருவிழா. சரியான கூட்டம் இருக்கும். அதனால் தான் இன்று வந்தோம்.”
“நாளை என்ன விஷேசம்?” “நாளைதான் மாசிமகம்.” மாசி மகம்' என்றதும் எனக்கு மாத்தளை, முத்து மாரியம்மன் தேவஸ்தான தேர்த் திருவிழா நினைவுக்கு வந்தது. மாசி மகத்தன்று இலங்கையிலேயே ஐந்து தேர் ஓடுவது மாத்தளையில்தான்.
ஒரு விநாடி என் சிந்தனை மாத்தளை சென்று திரும்பியது. பங்கோர் தீவுக்குப் போய் விட்டுத் திரும்பிய போது மணஹரன் காரோடு காத்திருந்தார். அவர் பள்ளி ஆசிரியர். வேலை முடித்து எங்களைக் காண வந்தார். அவர் சில சிறுகதைகளே எழுதிய போதும் பெயர் சொல்லக் கூடியவை.
“உங்கள் சிறுகதைகளைப் போலவே பெயர் வித்தியாசமாக இருக்கிறதே! இது புனைபெயரா?.”

Page 57
மாத்தளை சோமு
புன்னகை உதிர்த்த அவர் சொன்னார். “எனக்கு வைக்கப்பட்ட பெயர் மனோகரன். ஆனால் பெயரை எழுதிய மலாய் அதிகாரி மண ஹரன் என்று எழுதி விட்டாராம். அதுவே இன்று பெயராகி விட்டது”
அடுத்த நாள் ஈப்போவில் பேரா மாநில சிலம்பக்கழகமும்,பேரா மாநில பவர் (Power) இயக்கமும் இணைந்து ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தன. நிகழ்ச்சி பேரா மாநில இந்தியப் பத்திரிகையாளர்கள் சங்க மண்டபத்தில் நடந்தது. இந்தியப் பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு சொந்தமாக கட்டிடம் இருக்கிற செய்தி எனக்கு உற்சாகத்தையும் ஆச்சரியத்தையும் கொடுத்தது.
அந்தக் கூட்டத்தை சிலம்பக் கழகத்தின் சார்பில் நண்பர் ந. முனியாண்டியும், பேரா மாநில பவர் சார்பாக சித. நாராயணனும் முன் னின்று நடத்தினார்கள். அவர்களுக்கு உதவியாக இரத்தினலிங்கம், கிருஷ்ணன் மற்றும் பெருமாள் ஆகியோர் நின்றார்கள்.
கூட்டம் முடிந்ததும் சித. நாராயணன் என்னிடம் வந்து, “நீங்கள் எப்போது வந்தாலும் எங்கள் பவர் அமைப்பு உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது” என்றார்.
“ரொம்ப நன்றி. அதற்கு முன்னர் பவர் என்று ஆங்கில எழுத் துக்களை நினைத்துப் போட்டியிருக்கிறீர்கள். 'பவர்' என்ற சொல்லே தமிழ் கழக அகராதியைப் பார்த்தால் 'பவர்' என்ற சொல்லுக்கு 'ஒரு கொடியின் கீழ் திரண்டு நிற்றல், கொடியைத் தாங்கிய கூட்டம்' என்று அர்த்தம் போட்டிருக்கிறார்கள். நீங்கள் இலக்கியக் கொடியைத் தாங் கிய கூட்டம்” என்று சொன்னேன் நான்.
சித நாராயணன் முகத்தில் மகிழ்ச்சி. அவர் ஓய்வுபெற்ற வானொலி அறிவிப்பாளர். எழுத்தாளர். கவிஞர். ஈப்போவில் இலக்கியம் சம்பந்தமாக முன்னின்று வருகிறார்.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் மாதந்தோறும் சிறுகதை சம்பந்தமான கருத்தரங்குகளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தி வருகின்றது. அதில் மலேசியாவில் வெளிவரும் சகல இதழ்களின் சிறுகதைகளும் தெரிவு செய்யப்பட்டு விமர்சனம் செய்யப்படுகின்றது முடிவில் சிறந்த சிறுகதைக்குப் பரிசு வழங்கப்படுகின்றது. இதுவரை 50க்கு மேற்பட்ட சிறுகதைக் கருத்தரங்கு நடந்திருக்கிறது. அது நல்ல முயற்சி தரமான சிறுகதைப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும். சுருக்க
O 10

மாத்தளை முதல் மலேசியா வரை. D
மாகச் சொன்னால் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பணி பாராட்டுக்குரியது. அதில் பணிபுரிகிற ஆதி. குமணன், இப. இராஜேந் திரன், கவிஞர் பாதாசன், அன்புச் செல்வன், சை. பீர்முகம்மது, முத் தமிழ் செல்வன் ஆகியோர் வெகுவாகப் பாராட்டுக்குரியவர்கள்.
நான் மலேசியாவில் இருந்த போது ஒரு புறநகர்ப் பகுதியில் நடந்த சிறுகதைத் கருத்தரங்கிற்கு எழுத்தாளர் டாக்டர் (மருத்துவம்) சி. சொக்கலிங்கம் அவர்களோடு போயிருந்தேன். எங்களோடு சமீப காலமாக எழுதாமல் இருக்கிற எழுத்தாளர் அவர்களும் வந்திருந்தார். மிகத் தரமான சிறுகதைகள் சிலவற்றை அவர் எழுதியிருந்தார். உடல் மட்டும் நனைகிறது என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டிருக் கிறார். டாக்டர் சி. சொக்கலிங்கம் அவர்கள் பல நூல்களை வெளி யிட்டிருக்கிறார். அவரே நூல்களை வெளியிடுகிறார். நிறைய வாசிக் கிறார். அவரை பார்க்க அவரின் கிளினிக்கிற்குப் போனபோது தர மான இலக்கிய இதழ்களான காலச்சுவடு, கணையாழி, செம்பருத்தி, தாமரை ஆகியன அவரின் மேஜையில் கிடந்தன. ஜெயமோகனின் விஷ்ணுபுரம், பொன்னீலனின் புதிய தரிசனங்கள் ஆகிய நாவல்களை வாசிப்பதற்கு வைத்திருந்தார். என்னோடு பேசும் போது ஒரு இலக் கியவாதியாகவே இருந்தார்.
அந்தச் சிறுகதைக் கருத்தரங்கு மிகச் சிறப்பாக நடந்தது. எழுத் தாள மன்றத்தின் சார்பில் செயலாளர் (1998) பாதாசன் எழுத்தாளர் அன்புச் செல்வன், முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் கருத்தரங்கை நெறிப் படுத்தினார்கள். முதலில் இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளைப் பற்றிய ஆய்வு செய்யப்பட்டது. பிறகு அம்மாத மிகச் சிறந்த சிறு கதை, தெரிவு செய்யப்பட்டது. கடைசியாக சிறுகதை சம்பந்தமான எனது அனுபவங்களை பகிர்ந்தேன். கருத்தரங்கு முடிந்த பிறகு சுவை யான உணவு வழங்கப்பட்டது. இக்கருத்தரங்கை விடாது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திவருகிறது. இதனால் தரமான சிறு கதைக்கான அடித்தளம் போடப்பட்டு வருகிறது. யந்திர மயமான வாழ்க்கை சூழலில் தொலைக்காட்சி சினிமா என்பனவற்றை துறந்து அந்தக் கருத்தரங்குக்கு பார்வையாளர்கள் வந்தது ஆரோக்கியமான எதிர்காலம் மலேசியத் தமிழ் சிறுகதைக்கு இருப்பதை எடுத்துக் காட் lԳեւմՑl.
கருத்தரங்கு முடிந்து நாங்கள் காரில் திரும்பினோம். அந்தக் காரை ஓட்டியது டாக்டர் சொக்கலிங்கம். நாங்கள் மூவரும் எழுத்தா

Page 58
0 மாத்தளை சோமு
ளர்கள் என்பதால் காரினுள் ஒரு இலக்கியக் கலந்துரையாடலே நடந் தது அதில் சிறுகதை, நாவல் இலக்கிய சஞ்சிகைகள் பற்றியெல்லாம் ஆழமாகப் பேசினோம். சுபமங்களா என்ற தமிழக கலை இலக்கிய இதழ் நின்று போனது ஏகோபித்த கவலையாக வந்தது. எழுதாமல் இருப் பது சரியானதல்ல என்ற செய்தி, எழுத்தாளர் கோவிந்த சாமியிடம் போய்ச் சேர்ந்தது. எழுத்தாளர்கள், படைப்பாளிகள் இப்படி ஒன்றாக அடிக்கடி உரையாட வேண்டும் என்ற டாக்டரின் ஆசை வெளியே வந்தது. நானோ இது போன்ற சந்திப்பும், கலந்துரையாடலும் எங்கே எப்போது கிடைக்கும் என்ற ஏக்கத்தைத்தான் வெளிப்படுத்த முடிந்தது.
24
மலேசியாவுக்குப் போகிற ஒவ்வொரு முறையும் மலாக்காவுக் குப் போக முடியாமல் போய்விட்டது. இந்த முறை மலாக்காவுக்கு எப் படியும் போக வேண்டுமென்று விரும்பினேன். அதற்கு காரணம் உண்டு. மலாக்காவில் 500 ஆண்டுகளுக்கு முன்பே குடியேறிய மலாக்கா செட்டிகளை எப்படியாவது சந்திக்க வேண்டும், அதைப் பற்றி இந் தத் தொடரில் எழுத வேண்டும் என்ற ஆசையே அந்தக் காரணம்.
உலகம் முழுவதும் காலத்திற்கு காலம் மக்களின் இடப்பெயர்வு ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இதற்குச் சமூக, அர சியல் சமய பிரச்சனைகள் காரணமாய் இருக்கலாம். இன்றும் இதே காரணங்களினால் இன்றைய விஞ்ஞான உலகத்தில் வேகமாகவும் விவேகமாகவும் புலம்பெயர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன, பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் காற்று வீசுகிற திசையை நம்பிப் புலம் தேடிப் போனவர்களும் உண்டு அவர்கள் தான் இன்று மலேசியாவில் மலாக்காவில் இருக்கிற மலாக்கா செட்டிகள்.
கோலாலம்பூரில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்தில் மலாக்கா இருக்கிறது. பேருந்தில் போனால் விரைவாக சுற்றிப் பார்க்க முடியாது. காரில் போனால் விரைவாக சுற்றிப் பார்க்கலாம். சகலைக்கு வர்த்தக நிலையத்தை திறக்க வேண்டும். அவரால் வர முடியாது. எனவே யாருடைய காரில் போகலாம் என்று யோசித்தபோது தொலை பேசி என்னை அழைத்தது. பேசினேன் மறு புறத்தில் ஒரு குரல். “அந்தனி பேசுரேன். நேத்து நீங்க பேசினதா வீட்டுல சொன்னாங்க.
O 12

மாத்தளை முதல் மலேசியா வரை.
உங்கள பார்க்கனும்.”நான் அவரிடம் “மலாக்கா போக யோசித்துக் கொண்டிருக்கிறேன்” என்றேன்.
“இதுக்கா யோசிக்கிறீங்க? இன்னும் ஒரு மணிநேரத்தில் உங்க வீட்டுல இருக்கிரேன். அங்கிருந்து மலாக்கா போவோம். இதனை முன்பே சொல்லக் கூடாதா? என்று சொல்லிவிட்டு கடைசியாக கொஞ் சம் உரத்துச் சொன்னார். சிட்னி வந்த போது முன்பின் தெரியாத என் னைக் கவனித்தீர்களே”
அந்தனி மலேசிய, சிங்கப்பூர் தொலைக்காட்சிக்கு தமிழ் நிகழ்ச்சி கள், திரைப்படங்கள் கொடுப்பவர் அவர். தமிழ் நேசன் நாளிதழ் விளம் பர முகாமையாளர் சைமனோடு வந்தபோது அவரோடு சிட்னி வந் தவர். நேரம் கிடைத்த போது சிட்னியை சுற்றிக் காட்டினேன். அதை மனதில் வைத்துக் கொண்டு சொன்னார்.
அடுத்த மூன்று மணி நேரத்தில் மலாக்காவில் இருந்தேன். மலாக்கா நீரிணையில் அமைந்திருக்கும் கடலோர நகரம் 1400ம் ஆண் டில் கட்டப்பட்டது. போர்த்துகேயர் கைப்பற்றிய பிறகு டச்சு கைக் குப் போய் 1824ல் பிரிட்டிஷ் கொடி ஏற்றப்பட்டது. போர்த்துகேயர் ஆட்சியிலே வர்த்தகம் செய்ய செட்டிமார்கள் இந்தியாவில் இருந்து குடியேறியிருக்கக் கூடும். கடலோர துறைமுகமானதால் அது உறுதி யானதாக இருக்கும். அவர்களே இன்றைய மலாக்கா செட்டிகள்.
இன்று அந்த மலாக்கா செட்டிகள் தாய்மொழி இழந்தவர்களாக அதே நேரத்தில் தமது பண்பாட்டு அடையாளங்களை இன்னமும் அடை காத்தவர்களாக வாழ்கிறார்கள். விநாயகர் படத்தைத் தங்கள் வீட்டு வாசலில் ஒட்டி வைத்திருக்கிறார்கள். 1781ம் ஆண்டு கட்டப் பட்ட பூரீ பொய்யாத விநாயகர் மூர்த்தி கோவில் இன்றைக்கும் அங்கே இருக்கிறது. அதில் மலாக்கா செட்டி இனத்தவர்களின் கோயில் என்ற செய்தியும் இருக்கிறது.
மலாக்காவின் பிரதான நகர் பகுதியில் இருந்த அவர்கள், இப் போது வேறு வேறு பகுதிகளுக்கு குடி மாறியிருக்கிறார்கள் தாய் மொழி இழந்ததால் ஏற்பட்ட இடைவெளியை அவர்கள் உணர்ந்திருக்கிறார் கள். இழந்ததை மீளப் பெற முயன்று வருகிறார்கள்.
இன்று பல்வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்து பிறகு தாய் மொழி யில் அக்கறை காட்ட விரும்பாத தமிழர்கள், மலேசியாவிற்குப் போய்
13 d

Page 59
D மாத்தளை சோமு
தங்கள் வேர்களை ஏக்கத்துடன் தேடிக் கொண்டிருக்கிற இந்த மலாக்கா செட்டிகளை ஒரு தடவை சந்திப்பது நல்லது.
மலாக்காவைச் சுற்றிப் பார்த்தோம். உலகம் முழுவதும் பயணி கள் வருகிற பிரதேசம் அது. முதன் முதல் மலாக்காவை கைப்பற்றி புனரமைப்புச் செய்தது போர்த்துக்கேயர் என்பதால் போர்த்துக்கேய பாணி கிறிஸ்தவ ஆலய கட்டிகங்கள் நிறைய அமைக்கப்பட்டுள்ளன. 17536) 35LŮUL LOGADT&55 IT Gg56àu TGJouluuð (Christ Church Melaka) அங்கே இருக்கிறது. கடலோரக் கோட்டையும் அந்நகருக்கு சிறப் பளிக்கிறது. மலேசியா போகிறவர்கள் பார்க்க வேண்டிய ஒரு நகரம்
.lوقتگی
எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்து விட்டு கோலாம்பூர் திரும்பிய போது இரவு எட்டு மணி வரும் வழியில் யாழ்ப்பாணத்தவர் கூட்டு றவுச் சங்கம் என்ற விளம்பரப் பலகையை ஒரு கட்டிடத்தில் பார்த் தேன். அதுபற்றி அந்தனியிடம் கேட்டேன் அவர் சொன்ன பல தக வல்கள் வியப்பாயிருந்தன. -
மலேசியாவிற்கு இலங்கையில் இருந்து வெள்ளையர் ஆட்சி காலத்தில் அரசு வேலைக்குப் போனவர்கள் இலங்கைத் தமிழர்கள். அவர்கள் சுதந்திரத்திற்கு முந்திய மலேசியாவில் அரசு வேலைகளில் இருந்தார்கள். சுதந்திரத்திற்குப் பிறகு அங்கேயே தங்கிவிட்டார்கள். இவர்களின் இன்றையநிலை கேள்விக்குரியதாக இருக்கின்றது. அவர் கள் இந்தியாவில் இருந்து வந்த தமிழர்களில் இருந்து தாங்கள் வேறு பட்டவர்கள் என்று எண்ணி வாழ்ந்தவர்கள். அந்த எண்ணங்களி லேயே தங்கள் அடையாளத்தை சரியாக நிலை நிறுத்தாமல் தனித் துப் போனார்கள் பெரிய அளவில் இந்தியத் தமிழர்களுக்கும், இவர் களுக்கும் விரிசல்கள் இல்லாது போனாலும், இரு தரப்பினரும் ஒருத் தரை ஒருத்தர் உணரலாம். அங்கீகரிக்காமல் போனதில் முரண்பாடு கள் உண்டாயின. இதனால் ஏற்கனவே படித்த சமூகமாய் வாழ்ந்த இந்த இலங்கைத் தமிழர்களிடையே ஒரு தனித்த போக்கு காணப்பட் டது. எனவே இவர்கள் தனித்து விடப்பட்டார்கள். இன்று ஆங்கிலம், மாலய் மொழிகள் மாத்திரமே தெரிந்தவர்களாய் மாறிப் போனவர் கள். இளைய தலைமுறையினருக்குத் தமிழ் தெரியாது. மூத்தோர் தனி யான கோயில் கட்டி வைத்திருக்கின்றார்கள். கலப்புத் திருமணங்கள் நடந்திருக்கின்றன. பலருக்கு இலங்கையோடு தொடர்பே இல்லை.
DJ 1 14

மாத்தளை முதல் மலேசியா வரை. ()
அந்தனி சொன்ன தகவல்கள் சரியானவை என்றே நினைக்கின் றேன். பல தடவை மலேசியா போனபோது கலந்து கொண்ட நிகழ்ச் சிகளில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதாக இலங்கையில் இருந்து குடியேறிய எவரையும் சந்திக்க முடியவில்லை. அவ்வாறு சந்தித்த வர்களும் தங்களை ஆழமாய் அடையாளப்படுத்தவில்லை.
ஈப்போவில் அதிகமான ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள். அங்கே தான் நான் ஒரு ஈழத்தமிழரைச் சந்தித்தேன். பெயர் குமார். அவரின் மூதாதையர் ஊர் யாழ்ப்பாண குடா நாட்டிலே இருக்கிறது. அவரோடு பேசுகின்றபோது அடிக்கடி மூதாதையரின் ஊரைப் பற்றிச் சொல்லு வார். அப்போதெல்லாம் அவரின் ஏக்கத்தை புரிந்து கொள்வேன். நான் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்தபோதும் என்னை ஈழத்திலிருந்து வந்தவனாகவே நினைத்துக் கொள்வார். அவருடைய நினைப்பில் ஈழம் இருந்தாலும் அவரின் பேச்சு சராசரி மலேசியத் தமிழனைப் போல் மாறிவிட்டது. அவரைப் போல் பல ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் மலேசியாவில் பெரும்பான்மையாக இருக்கிற தமிழ் நாட்டுத் தமிழர்களோடு கலந்து போனார்கள். அதில் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள். ஆனால் தனித்துவம் என்று நினைத்துக் கொண்டு எவரோடும் சேராமல் வாழ்ந்த ஏனைய ஈழத் தமிழர்கள் இன்று தாய்மொழி இழந்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மலாக்கா செட்டிகளை பின்பற்றும் பரம்பரையினரோ என எண்ணத்த தோன்றுகிறது. இவர்கள் யாவரும் ஏனைய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு எச்சரிகையாக இருக்கிறார்கள். தாய் மொழியை இழந்துவிட்டதற்காக அவர்கள் இன்று வருந்துகிறார் கள். அது காலம் கடந்த கவலை. ஆனால் அந்த கவலையை மற்றவர் கள் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளலாம்.
மலேசியாவில் ஆறாம் வகுப்பு வரை தமிழில் எல்லாப் பாடங் களையும் படிக்கிற வாய்ப்புண்டு. நாடெங்கும் அந்த வாய்ப்பைத் தேசி யத் தமிழ்ப் பள்ளிகள் தருகின்றன. இப்பள்ளிகளில் பெரும்பாலும் தோட்டப்புற, வசதி குறைந்த தமிழில் ஆர்வம் கொண்டவர்களின் பிள்ளைகள் தான் படிக்கின்றார்கள். நகர்ப்புற பிள்ளைகள் பெரும் பாலும் ஏனைய பள்ளிகளில் படிக்கின்றார்கள். தமிழ் பேசத் தெரி யாத தமிழரின் பிள்ளைகள் அங்கும் உண்டு.
தாய்மொழிக் கல்வி என்பது அவசியமானது. இதனையிட்டு மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. உலகில் உள்ள கோடிக்கணக்கான
115

Page 60
D மாத்தளை சோமு
பிள்ளைகள் தாய்மொழியில் படிக்கின்ற போது நமது தமிழ்ப் பிள்ளை களுக்கு தாய்மொழிக் கல்வி மறுப்பது எந்த வகையில் நியாயம்.
25
சமூக வன்முறையையிட்டு நாம் கவலை கொள்ளாமல் இருக்க முடியாது. அதனை நாம்தான் களைய வேண்டும். அதற்கு முதற்படி யாக விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். நகர்ப்புறங்களில் வசதி குறைவாக வாழ்கிறவர்கள் மத்தியில் கல்வியைத் தொடருகிற வசதி இல்லை. கல்வி கிடைக்காத இளைய சமூகம்தான் வன்முறையில் ஈடுபடுகிறது. பத்தோங்காளி என்பவனை வீரானாக சிலர் நினைக்கி றார்கள். காளி கொள்ளையடித்தான். அதில் கொஞ்சத்தை ஏழைக்கு கொடுத்தான். அதனால் மாவீரனாகி விடமுடியாது. அவனை பொலி சார் சுட்டுக் கொன்றபோது அவன் படத்தை போட்ட டீ சேர்ட்டுகளை இளைஞர்கள் சிலர் அணிந்திருந்தனர். அதில் பத்தோங் காளி கமிங் எகைன் என்ற வாசகம் இருந்ததாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக் கின்றன. பத்தோங் காளி திரும்ப வரலாம். ஒரு மனிதனாக அதுவே சரியான தீர்வு. எனவே இளைய தலைமுறையினர் மத்தியில் விழிப் புணர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும்.
அது மலேசியாவில் வாழ்கிற இந்திய சமூகத்து இளைஞர்க ளிடையே இருக்கிற சமூக குழு மோதல்கள் பற்றிய ஒரு கருத்தரங்கில் செவிமடுத்த சமூக ஆய்வாளரின் உரை.
மலேசியாவில் இந்திய குறிப்பாக தமிழ் மக்களிடையே இளைய தலை முறையினர் எதிர் நோக்குகிற சமூகப் பிரச்னைகள் அதிகமாக இருப்பதை பத்திரிகைச் செய்திகள் மூலமாகவும் நண்பர்கள் மூல மாகவும் தெரிந்து கொண்டேன். பகிரங்கமாக மோதிக் கொள்கிற அள வுக்கு குழுக்களும் இருக்கின்றன. இந்தத் குழுக்களின் பெயரைக் கேட்டால் தமிழ் சினிமா அவர்களிடையே வேரூன்றியிருப்பது நன் றாகத் தெரியும். குழுக்களின் பெயர் பாட்சா குழு, அமரன் கோஷ்டி, தளபதி கேங், சத்திரியன் குழு, படையப்பா முன்னனி என விரிகின் றன. இந்தக் குழுக்களின் பெயர்களே தங்களின் பிடித்தமான தமிழக சினிமா நடிகரை மனதில் வைத்துக் கொண்டு உருவானவை. இக் குழுக் களுக்குத் தனித்தனியே அடையாளங்கள் உண்டு. ஆனால் அந்தக்
- I lá

மாத்தளை முதல் மலேசியா வரை. )
குழுவில் இருந்தவர்கள் மனித அடையாளங்களை இழந்தவர்கள் என்பதை மறந்தே போனார்கள். இல்லாவிடில் சமூக வன்முறை வழியை அவர்கள் அரவணைத்திருக்க மாட்டார்கள்.
மலேசியாவில் இந்தியத் தமிழர்கள் இருவகையினர். இந்தியாவில் ஒரு காலும் மலேசியாவில் ஒரு காலும் என வாழ்பவர்கள் அவர்கள். இந்தியாவை மனதில் வைத்துக் கொண்டு வாழ்பவர்கள் சிறுபான்மை. இவர்கள் இந்தியக் கடவுச் சீட்டில் வாழ்பவர்கள். மற்றவர்கள் மலேசி யாவிலேயே தங்கி விட்டவர்கள். அவர்களில் நகர்ப் புறத்தில் சிறிய இடங்களில் வாழ்கிற தமிழ் மக்களிடையே தான் இந்தக் குழு பிரச்ச னைகள். இவையெல்லாம் விரல்விட்டு எண்ணக் கூடியவை என தமிழ் வட்டாரம் சொல்கிறது. ஆனால் வழக்கம் போல் பத்திரிகைகள் (தமிழ் அல்ல) பெரிதுபடுத்தி வருகின்றன. இருந்தபோதிலும் இவைகளைக் களைய வேண்டும். என்ற எண்ணத்தில் சில நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. சமூகத்திலே வசதிகள் விரியும்போது வேறு வேறு பிரச்னைகள் வேறு வேறு ரூபத்தில் வந்து விடுகின்றன.
மலேசியாவில் கடுமையாக உழைத்தால் முன்னேற முடியும். ஆனால் சிலர் உழைப்பதைத் துறந்து வசதிகளை அனுபவிப்பதற் V− காகக் குறுக்கு வழிகளைத் தேடுகிறார்கள். இந்தக் குறுக்கு வழியாளர் கள் தான் இந்தக் குழுக்களாக விரிகின்றார்கள். இவ்விரிவாக்கத்தை தடுத்து நிறுத்த கல்வியிலே கவனம் செலுத்த வேண்டும்.
'சமூகத்தின் உள் விவகாரங்களில் நாம் மூழ்கியிருப்பதால் இந் திய மாணவர்களின் கல்வித் திறனை ஒரு பரந்த கண்ணோட்டத்தில் நாம் ஆராய்ந்து பார்க்க முடியாமல் போய்விட்டது” என்கிறார் மலே சிய தேசியப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் டாக்டர் அ.இராம சாமி அவர்கள்.
கடந்த பத்தாண்டுகளில் முறையான இழப்பீடு கொடுக்காமல் ஏராளமான தோட்டங்கள் விற்கப்பட்டு விட்டன. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேறு இடங்களில் புது வாழ்க்கையைத் துவக்குவ தற்குத் தேவையான நிதி வசதி இல்லாமல் விடப்பட்டனர். இத்தொழி லாளர்கள் நகர்ப்புறங்களில் தஞ்சமடைந்ததையொட்டி அவர்களின் வாழ்வும் கல்வியும் கேள்விக் குறிகளாயின. இவர்களின் எதிர்காலத் தையிட்டு தற்போது சிந்திக்கத் தொடங்கி அதற்கான முயற்சிகளில் பல மலேசிய இந்திய அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.
17

Page 61
மாத்தளை சோமு
கருத்தரங்கு முடிந்ததும் கிள்ளாங் திரும்பினேன். வீட்டில் குமார் என்பவர் அழைத்தாகச் செய்தியும் தொலைபேசி எண்களும் இருந் தன. உடனே அந்த தொலைபேசி எண்களோடு தொடர்பு கொண் டேன். தமிழிலும் சிங்களத்திலும் கலந்து பேசினார்.
“என்னைத் தெரியலியா? நான்தான் மாத்தளே குமார்.” அப்போது தான் மெல்லிசாய் ஞாபகம் வந்தது. மாத்தளையில் எங்கள் வீட்டருகே இருந்தவர். குமார என்கிற குமார்.
“மலேசியாவுக்கு எப்போது வந்தாய்?” மறுபக்கம் குமார் சிரிக்கிற சத்தம் கேட்டது. “ஐந்து வருடமாய் மலேசியாவில் தான் இருக்கிறேன். கடைசி யாக நாம் சந்தித்துப் பத்து வருடம் இருக்கும்.”
நான் ஆச்சரியத்துடன் அவரைக் கேட்டேன். "அப்படியா? எனது தொலைபேசி என் எப்படிக் கிடைத்தது?” “மலேசிய நண்பன் பேப்பர் பார்த்தேன். போட்டோ பார்த்ததும் நண்பரிடம் செய்தியை வாசிக்கச் சொல்லி விசயத்தை அறிந்தேன். பிறகு மலேசிய நண்பனுக்குப் போன் செய்து விபரம் எடுத்தேன். நாளை பார்க்க முடியமா?”
“இன்று திங்கள். நாளை செவ்வாய். எந்த நிகழ்ச்சியும் இல்லை. பார்க்கலாம்.”
செவ்வாய் காலையிலேயே குமார் என்னை அழைத்துக் கொண்டு காரில் போனார். “திருமணம் ஆகிவிட்டதா?”
பதில் சொல்லாத குமார் புன்னகைத்தான். “ஏன் சிரிக்கிறாய்?” வீட்டிற்கு வா நான் சிரித்ததற்குப் பதில் தெரியும்
குமாரின் வீட்டிற்குப் போனேன். அங்கே ஒரு தமிழ்ப் பெண் புன்னகையோடு என்னை வாங்க என்று கைகூப்பி வரவேற்றாள். நான் பதில் வணக்கம் செய்து விட்டுக் குமாரைப் பார்த்தேன். அப் போது தான் குமார் சொன்னான். “அவள் என் மனைவி. மலேசியா வில்தான் திருமணம் ஆகியது”
O 8

மாத்தளை முதல் மலேசியா வரை.
ஒரு விநாடி வியந்தபோது கல்யாண படக்கொத்தை நீட்டினான் குமார். புரட்டிப் பார்த்தேன். ஒரு படத்தில் பட்டுவேட்டியோடு குமார். என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். மதங்கள் வேறான போதும் மொழிகள் புரியாத நிலையிலும் எல்லை களைத் தாண்ட முடியாத போதும் காதல் என்பது எல்லாவற்றையும் வென்று விட்ட பொதுவான மனித வேதமாக இருக்கிறது.
26
புதிய நூற்றாண்டின் முதல் தமிழர் திருநாளை ஈப்போ நகரில் இருபத்தியெட்டு அமைப்புகள் இணைந்து வெகு சிறப்பாக நடத்திய போது என்னையும் அதில் கலந்து சிறப்பிக்குமாறு அழைத்தார்கள். தமிழகத்தில் இருந்து ஒரு இலக்கியவாதியாக குமரி அனந்தன் சிறப் புப் பேச்சாளராக வந்திருந்தார். காலையில் இருந்தே நிகழ்ச்சிகள் நடந்தன. இளைய தலைமுறையினர் பங்கெடுத்த பேச்சுப் போட்டி, பாடல் போட்டி என்பனவற்றை பார்த்தபோது, தமிழகத்திற்கு அப் பால் தான் தமிழ் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை நிரூபிப்பது போல் மொழி, உச்சரிப்பு என்பன இருந்தன.
மலேசியாவில் தமிழர்கள் மட்டுமல்ல, பத்திரிகைகள், சஞ்சிகை கள், வானொலி ஆகிய மக்களைச் சென்றடையும் ஊடகங்கள் கூட தமிழ் உச்சரிப்பில், எழுத்தில் கலப்பில்லாத தமிழை பயன்படுத்துவது மகிழ்ச்சிக்குரியது மட்டுமல்ல போற்றுதலுக்குரியது. தமிழகத்திலோ பத்திரிகைகள், சஞ்சிகைகள், தொலைக்காட்சிகள் என்பன கூட ஆங் கிலக் கலப்பான சொற்களைத் தாராளமாக பயன்படுத்துகின்றன. ஒரு வீதியிலே பேசிக்கொண்டு போகிற மனிதனுக்கும் ஒரு ஊடகத்திற்கும் (Media) வித்தியாசம் மட்டுமல்ல, பாரம்பரிய கடமையுண்டு. ஆனால் தமிழகத்தில் பத்திரிகைகளில் ஆங்கிலம் கலந்து பேசுவது போல் எழுதுகிறார்கள் உதாரணம் கவர் ஸ்டோரி, ஸ்பொட் நியூஸ், தொலைக் காட்சியிலே நிகழ்ச்சி நடத்துபவர்கள் ஆங்கிலத்தை சர்வ சாதாரண மாக தமிழ் சொற்களோடு கலந்து பேசி நிகழ்ச்சி நடத்துக்கிறார்கள். இப்படியே போனால் தமிழின் நிலை என்ன ஆகுமோ?.
மலேசியாவில் தமிழின் மேன்மைக்கு ஒரு வரலாறு உண்டு. தமிழை முன்னெடுத்தலில் தமிழர் திருநாள் நிகழ்ச்சிக்கு முக்கிய பங்குண்டு.
19

Page 62
* 0 மாத்தளை சோமு
மலேசியாவும், சிங்கப்பூரும் இணைந்து மலாயாவாக இருந்த போது கோலாலம்பூர் பல்கலைக் கழகத்தில் இந்திய மொழியாக சமஸ் கிருதம் கொண்டுவர முயற்சி நடந்தபோது சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழ் முரசு நாளிதழ் ஆசிரியர் கோ. சாரங்கபாணி கொதித்தெழுந்து சமஸ்கிருதத்திற்கு எதிராகப் போராடி தமிழை கொண்டு வந்தார். அவர் உருவாக்கியது தான் தமிழர் திருநாள் ஆண்டு தோறும் தை மாதத்தில் நடக்கும் இத்திருநாள் தமிழுக்கும் தமிழருக்கும் முகவரி காட்டிய நாள். மலேசியாவெங்கும் இத்தமிழர் திருநாளை அக்கறையோடு கொண்டாடி வந்தார்கள். இடையில் சில காலம் தொய்ந்து போயி ருந்த இந்தத் தமிழர் திருநாள் வழக்கறிஞர் மதியழகன், தமிழ்க்குயில் கலிய பெருமாள், கலாநிதி முனியாண்டி ஆகியோரின் முயற்சியால் மறுபடியும் தொடங்கப்பட்டது. இப்போது மறுபடியும் மலேசியா எங் கும் தமிழர் திருநாள் நடக்கத் தொடங்கியிருக்கிறது.
ஈப்போ தமிழர் திருநாளைத் தொடங்கி வைத்த தலைவர் எம். மதியழகன் அவர்கள், “தமிழர் திருநாள் என்பது வெறுங் கலைக் கூத்து என்று எண்ணிவிடக் கூடாது மொழிக்கும் இனத்திற்கும் உரம் சேர்க்கின்ற திருநாள்” என்று தலைமையுரை ஆற்றினார்.
ஈப்போ வழக்கறிஞர் எம். மதியழகன் நல்ல சிந்தனையாளர். 28 இயக்கங்களை ஒன்று திரட்டி தலைமை தாங்குகிறார் என்றால் அது இலகுவானதல்ல; பாராட்டுக்குரியது. ஈப்போவில் தமிழ் தமிழ் சார்ந்த நிகழ்வுகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வருபவர். அவருடைய மிக நெருங்கிய நண்பராக இருப்பவர் எனது நண்பர் கலாநிதி ந. முனி யாண்டி அவர்கள்.
அன்றையத் திருநாளில் முத்துப் பதித்தது போல் மறைந்த துன் சம்பந்தன் அவர்களை நூற்றாண்டு மாமனிதர் என பிரகடனம் செய்து அதற்குரிய கெளரவத்தை அமரர் துன் சம்பந்தனின் துணைவியார் தோபுவான் உமா சம்பந்தன் அவர்களிடம் கையளித்தனர்.
அதற்கு முன்னதாக மூதாட்டி உமா சம்பந்தன் அவர்கள் மண் டபத்திற்குள் நுழைந்தபோது அந்த மண்டபத்தில் இருந்த பொதுமக் கள் யாவரும் எழுந்து நின்று கொண்டிருந்தார்களே அந்தக் காட்சி என் கண்களை கலங்க வைத்தன. மனிதர்கள் பிறக்கிறார்கள் - வாழ்கிறார் கள் - மறைகிறார்கள் அவர்களில் எத்தனை பேர் மக்கள் மனதில் நின்றனர்? எனக்கு பழைய பாடல் நினைவுக்கு வந்தது.
20

மாத்தளை முதல் மலேசியா வரை.
வாழ்ந்தவர் கோடி ! மறைந்தவர் கோடி ! மக்கள் மனதில் நின்றவர் யார்?
அந்தப் பாடலிலேயே பதில் வருகிறது. தாயகம் காத்தவரும், மானம் காத்தவரும் சரித்திரப் பெயரோடு இருப்பார்கள். என்பதே அந்தப் பதில். அதனை அமரர் துன் சம்பந்தன் இன்றும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
சில நாட்களுக்குப் பிறகு தலைநகர் கோலாலம்பூரில் டத்தோ சோமா மண்டபத்தில் மறுபடியும் ஒரு மேடையேறும் வாய்ப்பு மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் ஆதி குமணன் அவர்களால் கிடைத்தது. அந்தக் கூட்டம் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்களுக் காக கூட்டப்பட்ட ஒரு நிகழ்வு. மண்டபம் நிறைந்த கூட்டம் அதில் என்னைப் பேச வைத்தார் ஆதி. குமணன். குமரி அனந்தனை 'தமி ழகமாகவே நினைத்து எனது உள்ளக் குமுற்ல்களைக் கொட்டினேன்.
“தமிழின் சிறப்பை உயர்வை தமிழகத்திற்கு அப்பால் உணரப் பட்டுள்ளது. இன்று தமிழ் 25 நாடுகளில் பேசப்பட்டுகின்றது. பாரதி கண்ட கனவு நினைவானது போல் தமிழ் உலகத் தமிழ் மொழியாக மாறி வருகிறது. தமிழ்நாட்டுக்கு அப்பால் தமிழ் ஆரோக்கியமாக இருக் கிறது புலம்பெயர்ந்த தமிழர்கள் தான் தமிழை முன்னெடுக்கிறார்கள். ஆனால், தமிழகம் தமிழ்மொழியில் பின் தங்கிவிட்டது.
முதல் 24 மணிநேர தமிழ் வானொலி கனடாவிலும் இரண்டாவது ஆஸ்திரேலியாவிலும் தொடங்கப்பட்டது. இன்று பல 24 மணிநேர தமிழ் வானொலிகள் இருக்கின்றன. பிரான்சில் தொலைபேசி அட் டையில் தமிழும் இருக்கிறது. கனடாவில் ஒரு வங்கியில் தமிழ் தெரிந் தவர்களுக்கு வேலைவாய்ப்பு என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் தமிழை ஒரு பாடமாகப் படித்து அதன் புள்ளி களை கணக்கிட்டு பல்கலைக்கழகம் போவதற்கு அரசு முன்வந்துள் ளது ஆனால் தமிழகத்தில் ஐந்தாம் வகுப்பு வரை எல்லாப் பாடங் களையும் தமிழில் படிக்க உத்தரவிட்டதை எதிர்த்து வழக்கு போடு கிறான் என்றால் தமிழை எதிர்க்கின்றான் என்றல்லவா அர்த்தம்?
ஒரு இனம் அழிய ஆயுதமோ, குண்டுகளோ கத்திகளோ தேவை யில்லை. தாய்மொழி அழிந்தால் போதும். அதனை தமிழகத்தில் நடை
121

Page 63
மாத்தளை சோமு
முறைப்படுத்துகிறார்களோ என அஞ்சுகிறேன். தொலைக்காட்சி, பத் திரிகை, வானொலிகளில் ஆங்கிலக்கலப்பு தமிழ் உச்சமாகிவிட்டன. தமிழும் இல்லாத ஆங்கிலமும் இல்லாத இரண்டும் கலந்த தமிங்கலம் என்ற மொழி உருவாகி வருகிறது. ஆனால் தமிழன் புலம் பெயர்ந்த மலேசியா மற்றும், ஏனைய நாடுகளில் தான் தமிழ் காக்கப்பட்டு வரு கிறது.”
முதலாவது தமிழ் மாநாட்டை உலகத் தமிழ் மாநாடாகக் கண்ட வர்கள் மலேசியர்கள். அன்று சேரன் கால் பதித்த இமய மலையில் மகேந்திரன், மேகனதாஸ் என்ற இரு மலேசியத் தமிழர்கள் கால் பதித்து, கொடி நாட்டிய செய்தி தமிழகத்திற்கு தெரியவில்லை என்பது மன துக்கு வருத்தமாக இருக்கிறது. நாங்கள் தமிழகத்தை நேசிக்கின்றோம். ஆனால் அங்குள்ள ஊடகத்துறை (MEDIA) சினிமாவைச்சுற்றி சுற்றி வருகின்றது. இதனால் ஒரு சராசரி தமிழ் இளைஞனுக்கு ஒரு நடிகை யின் காலில் இருக்கிற மச்சம் தெரிகிறது. ஏனைய நாட்டுத் தமிழர் பற்றிய எதுவும் தெரியவில்லை. இது தமிழகத் தமிழர் உலகத் தமிழ ரைப் பார்க்கிற பார்வைக்கு வரவில்லை என்று தானே அர்த்தம்?”
என்னைத் தொடர்ந்து குமரி அனந்தன் பேசியபோது, மலேசியத் தமிழர்களான மகேந்திரனும் மோகனதாசும் வெள்ளிப் பனிமலையான இமயத்தின் உச்சியில் கால் பதித்த முதல் உலகத் தமிழர்களாக வாழ் வது கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். அவர்களைத் தமிழகம் கெளரவிக்கத் தூதுவனாக இருப்பேன்’ என்று குறிப்பிட்டார். எனக்கு ஆச்சரியம். இமயத்தில் மலேசியத் தமிழர்கள் கால் பதித்து ஓராண் டுக்கு மேலாகியும் தமிழகம் இன்னும் திரும்பிப் பார்க்கவில்லை! அது தானே குமரி அனந்தனின் செய்தி. தமிழகத்திற்கு அப்பால் தமிழன் செய்த சாதனை கூட தமிழகத்திற்குத் தெரியவில்லையா? இந்த ஓராண்டு காலத்தில் வாய்ச்சொல் வீரர்களும் கவிப்பேரரசுகளும், மலேசிய மண் ணுக்கு வராமலா போனார்கள்? அவர்களுக்கு இது தெரியவில்லையா? அந்த வீரர்களுக்கு சென்னையில் பாராட்டுக் கூட்டம் நடத்த மனசில் லையா? மலேசியத் தமிழர்களை குத்தகை கொடுப்பாளர்கள் என்று எண்ணி விட்டார்களா? மேற்கண்ட கேள்விகள் மலேசியாவில் பலரின் நெஞ்சில் குமிறியவை. அந்தக் குமுறல் நியாயமானவைதான். இம யத்தில் சேரன் கொடி பதித்தது கதையாகத்தான் படித்தோம். ஆனால் நிஜமாகவே முடிந்த நூற்றாண்டில் இரு மலேசியத் தமிழன் கால் பதித்
D 22

மாத்தளை முதல் மலேசியா வரை. D
திருக்கிறானே. இது வரலாறு அல்லவா..? அந்த வரலாற்றை அக்கினி என்ற புதுக்கவிதை கவிஞரின் (மக்கள் ஓசை சுகுமார்) வரிகளில் பார்ப்போம்.
இமயவரம்பும்
எரிமலை முகமும்
எங்கள் பிடியில் !
இமைக்கும் கணமும்
யுகத்தின் கணமும்
எங்கள் பிடியில் !
எங்கள்
சரித்திரம்
இனி குப்பைகள் அல்ல!
எங்கள்
சமுதாயம்
இனித் தொப்பைகள் அல்ல!
பியந்தும் நைந்தும் நொந்தும் போன கடந்த காலத்தைக் கழற்றி வீசு !
வெற்றி முழங்கும்
வீரம் வணங்கும்
நிகழ்காலத்தை
நிகழ்த்திக் காட்டு !
மலேசியாவால் எல்லாமும் முடியும் என்பதை உணர்த்துகின்ற
வகையில் ‘மலேசியா போலே (Malaysia Boleh என்று சொல்வது வழக்கம், அதைப் போல் மலேசியத் தமிழர்களால் பல சாதனைகளைச் செய்ய முடியும் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகின்றார்கள். புதிய புதிய சிந்தனைகளில் முன்னணியில் இருக்கின்றார்கள். தமிழக கிராமிய வீர விளையாட்டான சிலம்பம் உலக விளையாட்டாக மாற மலேசியாவில்தான் அதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இன்று சர்வ தேச சிலம்ப விளையாட்டை நடத்த முயன்று வருகிறார்கள். அது விெற்றி பெறும் ஏனென்றால் மலேசியத் தமிழரின் முயற்சி.
23

Page 64
மாத்தளை சோமு
அன்றையச் செய்தி இதழைப் பார்க்கின்றேன். பல செய்திகள். மரபுக் கவிதைக்கு ஒரு மாநாடு. இலங்கை இந்திய, சிங்கப்பூர் மரபுக் கவிஞர்கள் வருகை என ஒரு செய்தி.
இம்மாநாட்டை நடத்தக் கவிஞர்கள் பாதாசன், காரைக்கிழார், முத்தமிழ்ச் செல்வன் ஆகியோர் முனைந்து நிற்கிறார்கள். காரைக் கிழார் மலேசியத் தமிழ் உலகு அறிந்த கவிஞர். மலேசிய நண்பன் நாளிதழுக்கு அருகிலேயே அச்சகம் நடத்தி வருபவர் என்னைக் கண்டபோது மரபுக்கவிதை மாநாட்டுத் தேதியைக் கொடுத்து இத் தேதிகளில் மலேசியா வழியாகப் பயணம் இருந்தால் வாருங்கள் என்று அழைத்ததை மிகப் பெரிய பாக்கியமாகக் கருதுகின்றேன்.
நான் மரபுக் கவிதைகள் எழுதாவிட்டாலும், வாசகன் என்ற ரீதி யில் மாநாடு வெற்றியடைய வாழ்த்தினேன்.
இன்னொரு செய்தி.
சிலம்பக் கழகத்தின் 20வது மாநாட்டில் 20 ஆண்டுகள் மலேசிய சிலம்பக் கழகத்தில் பணிபுரிந்த மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தின் உப தலைவரும் மலேசிய நண்பன் நாளிதழ் தலைமை நிருபரு மான பெ.இராஜேந்திரனுக்கப் பாராட்டு. ம.இ.கா. வின் உதவித் தலை வரும் துணையமைச்சருமான டத்தோ சுப்ரமணியம் அவர்கள் தலை மையில் அந்நிகழ்ச்சி நடந்தது.
இன்னொரு செய்தி.
பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் மலேசியா வருகிறார்.
இவ்வாறு பல்வேறு முனைகளிலும் மலேசியத் தமிழர்கள் துடிப் புடன் பணிபுரிந்து வருகிறார்கள். அந்தத்துடிப்புதான் தமிழை நிஜமாகவே நேசிக்கிற - தமிழர்களை இணைக்கின்ற - ஒரு பாலமா கத் திகழ்கின்றது. இந்தப் பாலத்தைத் தவறாகப் பயன் படுத்தியவர் களும் உண்டு.
தமிழகத்திலிருந்து தங்களின் 'வார்த்தைகளை - நூல்களை விற்க மட்டும் சிலர் வந்து போனார்கள். அவர்களுக்கெல்லாம் அரவ ணைப்பு இனி இருக்காது என்பது பிந்திய செய்தி. இனிமேல் தங் கள் முயற்சிகளைப் பாராட்டாத அதற்காக 'வாய்ச்சொல்' அருளாத எவரினது படைப்புகளையும் எவரையும் ஆதரிக்க முடியாது என் பது பல மலேசியத் தமிழ் நெஞ்சங்களின் மானசீகமான முடிவாகும்.
124 נם

மாத்தளை முதல் மலேசியா வரை. 0
விமானம் சிட்னியை நோக்கிப் பறந்த போது எண்ணங்கள் காட்சிகளாக நெஞ்சில் விரிந்தன.
பல தடவை மலேசியா வந்த போதும் என்னை ஒரு படைப் பாளியாக மதித்து திரும்பவும் நீங்கள் வரவேண்டும் என்பது எனது அன்புக்குரிய மலேசியத் தமிழ் நெஞ்சங்களின் வேண்டுகோளாக இருந்ததே எனக்குப் பரிபூரண திருப்தியைத் தந்தது.
OOO
125 Сј

Page 65
0 மாத்தளை சோமு
12á
மாத்தளை சோமுவின் இதர நூல்கள்
நமக்கென்றொரு பூமி - சிறுகதைகள் -
அவன் ஒருவனல்ல. - சிறுகதைகள் -
இலங்கை நாட்டுத் தெனாலிராமன் கதைகள்
அந்த உலகத்தில் இந்த மனிதர்கள் - சாகித்திய விருது பெற்ற நாவல் -
எல்லை தாண்டா அகதிகள் இலங்கை சுதந்திர இலக்கிய அமைப்பின் (விபவி) சிறந்த நாவலுக்கான (1994) விருது பெற்றது
அவர்களின் தேசம் தமிழ்நாடு வில்லி தேவசிகாமணி நினைவுப் பரிசு பெற்ற சிறுகதைத் தொகுதி
அவள் வாழத்தான் போகிறாள்
- நாவல் -
நான்காவது உலகம் - குறுநாவல் -
மூலஸ்தானம் இலங்கை சுதந்திர இலக்கிய அமைப்பின் (விபவி) சிறந்த நாவலுக்கான (1998) விருது பெற்றது
கறுப்பு அன்னங்கள் - சிறுகதைகள் -
மாத்தளை முதல் மலேசியா வரை - மலேசியப் பயணக் கட்டுரை -


Page 66
  

Page 67

sae (FTT):
saesae% )
,
خحیح حیح حیح۔
S.
----
No. trae
西门 :

Page 68

· · · · · ·*
·
sae
WWW.
o,
ዘቚጛ##藏
:

Page 69
3 } , R 3

|×.
| |×
|- |-
|× |No.
|
|
|-
|-
|×
\,
)
|
\,
,

Page 70


Page 71
ܠ ܐ .
|